அந்த பையில் இருந்தது உயிர் எடுக்கும் காலன் என்று அங்கு இருந்த குழந்தைகள் பலர் அறிய வாய்ப்பு இல்லை என்றாலும், போலீஸ் உடையில் இருவரை கண்டதும், அவர்கள் பார்வை தங்கள் மேல் திரும்பியதும், அந்த பையையும் அதில் உள்ள பொருட்களையும் கண்டு அவர்களே திகைப்பதை கண்ட சிறுமிகளுக்கு அங்குள்ள சூழ்நிலை புரிய அழ ஆரம்பித்தனர்.
“அந்த பொண்ணு எங்கே?”என்றார் வீரேந்தர்.
வீரேந்தரின் சிம்ம குரல், அமைதியை தத்து எடுத்திருந்த அந்த வகுப்பறையில் சிங்கத்தின் கர்ஜனையாய் ஒலிக்க அங்கிருந்த ஆசிரியருக்கும்,மாணவிகளுக்கும் கை,கால் நடுங்கவே ஆரம்பித்தது.
அவர் சாதாரணமாய் பேசினாலே எதிரே இருப்பவருக்கு கிலி பிடிக்கும்.
இப்போ டென்ஷனில் உட்சபட்சமாய் அவர் குரல் உயர,கேட்டவரின் இதயம் ரயில் கடக்கும் பாலம் போல் தடதடக்க ஆரம்பித்தது.
“எந்த பொண்ணு சார்?”என்றார் வகுப்பாசிரியை ஒருவழியாக தன்னை சமாளித்து கொண்டு.
அவருக்கும் யார் என்றே தெரியாது தானே!…
அந்த பெண்ணின் முகத்தை பார்ததது ப்ரீத்தி மட்டுமே.
வீரேந்தர் பார்வை ப்ரீத்தி மேல் திரும்ப,”அங்கிள்!…அந்த பொண்ணு இன்னைக்கு க்ரீன் கலர் காக்ரா சோலி அணிந்து இருந்துச்சு.கிளாஸ் வேற போட்டு இருந்தாள்.
தலையில் பிரெஞ்சு பின்னல்.சுருள் கேசம்.ரெட் நிற ஸ்லிப்பர்,தலையில் இடது பக்கம் மெர்மைட் ஹேர் கிளிப் போட்டு இருந்தாள்.” என்று அங்க அடையாளம் சொன்ன ப்ரீத்தியின் கவனிப்பு திறனை கண்டு அங்கு இருந்தவர்களுக்கு வியப்பே ஏற்பட்டது.
நுணுக்கமாய் அந்த பெண்ணை ப்ரீத்தி நோட் செய்து இருந்தால் மட்டுமே, தலை அலங்காரம் முதல் கால் செருப்பு வரை விரிவாய் சொல்வது சாத்தியம்.
இது அத்தனையும் அவள் கவனிக்க இருந்த அவகாசமே ஐந்து வினாடிக்கும் குறைவு தான்.
ஜெஸ்ஸி இவளுடன் பேசி விட்டு போனிற்குள் தலையை நுழைத்து கொள்வதற்கும், ஓடும் அந்த அரக்கனை துரத்தி கொண்டு ஓடுவதற்கும் இடைப்பட்ட நொடிகளில் இது அத்தனையும் ப்ரீத்தி கவனத்தில் பதிந்தது இருக்கிறது.
ப்ரீத்தி சொன்ன அடையாளங்களை கண்டு கொண்ட கிளாஸ் டீச்சர்,
“அது யாஷ்வி ஆச்சே.இன்னைக்கு அவளுக்கு பிறந்த நாள்…சாக்லேட் கொடுத்துட்டு வரேன் என்று இப்போ தான் மத்த கிளாஸ்க்கு போய் இருக்கா.
அவ ரொம்ப நல்ல பொண்ணு …நல்லா படிக்கிறவ… கிளாஸ் டாப்பர் சார். அவ இது மாதிரி எல்லாம் செய்ய மாட்டா.”என்று அவர் சொல்ல அந்த பெண்ணை தேடி கொண்டு ஒவ்வொரு வகுப்பிற்கு ஓடினார்கள் அங்கு ப்ரீத்தியுடன் வந்தவர்கள்.
இவர்களின் தேடுதலுக்கான பலன் என்னவோ ஸிரோ தான்.
எங்கு தேடியும் யாஷ்வியை காணவில்லை என்றதும் அவர்களுக்கு பயம் பிடித்து கொண்டது.
“எப்படி அந்த பெண் மாயமாய் மறைய முடியும்?… எங்கு தேடியும் காணோமே!…” என்றார் வீரேந்தர்.
“மேடம்!…அந்த பொண்ணு யாஷ்வி போட்டோ இருந்தா ரெகார்டஸ்ல இருந்து எடுத்து கொடுங்க.”என்ற சரண் பிரின்சிபால் உடன் அலுவலக அறையை நோக்கி ஓடினான்.
வேறு எங்காவது தேட வேண்டும் என்றால் அதற்கு அந்த யாஷ்வி புகைப்படம் தேவை தானே!.
“சார்!… எங்க ஸ்கூல் அது மாதிரி ஸ்கூல் இல்லை சார் …இது எல்லாம் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஆகிடும் சார் ….இது வெளியே தெரியாமல் ப்ளீஸ் சார்.” என்று கெஞ்சியவாறு ஓடி கொண்டு இருந்தார் அந்த பிரின்சிபால்.
ஒருத்தர் செய்யும் தவறுக்கு, ஒட்டுமொத்த ஸ்கூல் மீதும் தான் கரும்புள்ளி விழும்.
‘இதை கூட கவனிக்காமல்….’ என்ற பேச்சு தான் எழும்.
‘உங்களை நம்பி தானே என் பிள்ளைகளை அனுப்பினேன்.’ என்ற குற்றச்சாட்டு பெற்றோர்கள் பக்கம் இருந்து வரும்.
போக போவது இவர் வேலை மட்டும் இல்லை,வகுப்பு ஆசிரியரின் வேலையும் தான்.
‘அந்த பள்ளியா?… அது தான் போதை மருந்தினை சப்ளை செய்தது….’ என்று பேச்சு எழுந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
அந்த பள்ளியில், ஸ்பெஷல் கிளாஸ் வைத்து ‘போதை மருந்தினை தயாரிப்பது எப்படி?….’ என்று வகுப்பு எடுத்தது போல் கதை கட்ட, புது புது கதாசிரியர்கள் திடீர் என்று சமூக வலைத்தளங்களில் முளைப்பார்கள்.
‘அது எப்படி கிளாஸ் டீச்சருக்கும்,ப்ரின்சிபாலுக்கும் தெரியாமல் போதை மருந்து உள்ளே வந்து இருக்க முடியும்?
‘அந்த ஒரு பொண்ணு மட்டும் இல்லையாம். ஒட்டுமொத்த ஸ்கூல் பசங்களும் போதை மருந்து எடுத்துட்டு இருக்காங்களாம்.’
‘பஞ்சாப் முதல் அமைச்சர் உறங்குகிறாரா?….அவருக்கும் இதில் பங்கு உண்டு’
‘இந்த காசில் தான் இந்திய ப்ரைம் மினிஸ்டர் புது வீடு கட்டியிருக்கார்.’
எதை வேண்டும் என்றாலும் பேசி விடலாம் என்று வரைமுறை இல்லாமல், தகுந்த ஆதாரம் இல்லாமல், பொய் பரப்புகிறோம் என்று தெரிந்தே, மனசாட்சியை குப்பையில் போட்டு விட்டு, தான் சொல்லும் பொய்களுக்கு ஜால்ரா தட்ட நான்கு பேர் இருந்தால், ‘கலங்கரை விளக்கு தான் மட்டுமே!….’ என்று சமூக வலைத்தளத்தை சாக்கடை ஆக்கும் அறிவாளிகளின் பொழுதுப்போக்கிற்கு அந்த பள்ளி இரையாகி போனது.
அதான் போன் இல்லாத மனிதன் என்று யாரையுமே இன்று பார்க்க முடியாதே. திபுதிபுவென்று அத்தனை பேர் பள்ளியில் நுழைய,என்ன ஏது என்று பார்க்க குவிந்த மக்கள் கூட்டம் மாக்கள் ஆகி சமூக வலைதளத்தின் உதவியுடன் அந்த பள்ளியை ஒருவழியாக்கி கொண்டு இருந்தனர்.
காதலில் தொடங்கி,கர்ப்பம்,திருட்டு கல்யாணம்,பொண்ணு ஓடி போச்சு,ஆசிரியர் தகாத முறையில் நடந்தார் என்று விதவிதமான பாகங்கள் வைத்து அங்கே ஒரு’ frankstein’ உருவாக்கி கொண்டு இருந்தது மக்கள் கூட்டம்.
சாட்டையை சுழற்றுபன் வேறு எவனோ ஒருவன். அதன் அடி விழுந்தது என்னவோ ஒன்றும் அறியா சில அப்பாவிகள் மேல்.
ஸ்கூலில் ஹோம் ஒர்க் செய்தார்களா என்று செக் செய்யலாம், போதை மருந்து கொண்டு வருகிறாயா என்றா செக் செய்ய முடியும்?
அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் மெட்டல் டிடெக்டர் வைத்து படிக்க வரும் பிள்ளைகள் துப்பாக்கி,கத்தி போன்றவற்றை கொண்டு வந்து சக மாணவர்களையும், ஆசிரியர்களையும், ‘குருவி சுடுவதை போல்’ சுடுவதை தடுக்க வைத்து இருப்பார்கள்.
அது எல்லாம் அங்கே சகஜம்.
வருடத்திற்கு பத்து துப்பாக்கி சூடுகள் பள்ளி வளாகத்தில் நடைபெறுவது எல்லாம் தினப்படி வழக்கம்.
‘பாக் ஸ்கேனர்/BAG SCANNER’ வைக்கும் நிலைக்கு தான் இன்றைய மாணவர்கள் இங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள்.
பள்ளிக்கு என்று கேட்,சுற்றுச்சுவர் கூட இல்லாத பள்ளிகள் உள்ள நாட்டில் யாரை குறை சொல்ல முடியும்?
அந்த குழந்தையே வீட்டின் அருகே இது மாதிரி நடந்து இருந்தால், விஷயம் வேறு மாதிரி மாறி இருக்கும்.
பெற்றோர் மட்டுமே குற்றவாளியாக நின்று இருப்பார்கள்.
நடந்து இருப்பது பள்ளி வளாகம் என்னும் போது பிரச்சனை வேறு விதத்தில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
மேலே,கீழே என்று எல்லா தளத்திற்கும் ஓடி,ஒவ்வொரு வகுப்பறையாய் செக் செய்தும், தன் பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க என்று சென்ற குழந்தையை காணவில்லை.
“பின் பக்கம் தண்ணீர் தேங்கி இருக்கு.போக சான்ஸ் இல்லை. யாஷ்வி கிளாஸ்க்கு சென்றதற்கும், நாம் உள்ளே நுழைந்ததற்கும் மிஞ்சி போனால் ஐந்து முதல் பத்து வினாடி தான் கேப். அதற்குள் அந்த குழந்தை எப்படி மறைய முடியும்? எல்லா கிளாஸ் செக் செய்துட்டோம்,எல்லா லேப், லைப்ரரி, கான்டீன் செக் செய்தாச்சு.”என்ற ப்ரீத்தி குழம்ப, அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.
‘அடுத்து என்ன!…’ என்று யோசிக்க முடியாமல், அங்கு இருந்தவர்கள் திகைத்து நின்றார்கள்.
பள்ளிக்குள் வந்த சிறுமி எப்படி காணாமல் போய் இருக்க முடியும்?
அந்த வகுப்பின் வாயிலில் நாற்பது பேருக்கும் குறையாமல் நின்று காணாமல் போன குழந்தையின் நிலையை எண்ணி பதறி கொண்டு இருந்தனர்.
பள்ளிக்கு அருகில்,பட்ட பகலில் அத்தகைய வெறித்தனத்தில் ஈடுபட்ட மிருகங்கள் வேறு ஏதாவது செய்து விட்டனரா?
யோசிக்க யோசிக்க அந்த யோசனைகள் அவர்களை மிடறு விழுங்க வைத்தது.
“ஒருவேளை கம்பத்தில் மோதின காரில் குழந்தை இருந்தாளா?” என்றாள் ஜெஸ்ஸி.
“இல்லை… சான்ஸ் இல்லை… அந்த பொண்ணு ஸ்கூல் உள்ளே தான் வந்துச்சு.இந்த வகுப்பிற்குள் அந்த பெண் நுழைந்த பிறகு தான் என் கண்பார்வையை அகற்றினேன். என்னை தாண்டி அந்த காரில் இருந்தவர்கள் குழந்தையை கடத்த வாய்ப்பே இல்லை..”என்றாள் ப்ரீத்தி.
“எங்களை தாண்டி எந்த வண்டியும் போகவேயில்லையே!….நான் கூட என்ன இன்னைக்கு, இந்த கிராமம் இப்படி இருக்கே என்று யோசித்து கொண்டு இருந்தேன்…
நாங்க இங்கே வந்து 15-20 நிமிடம் ஆகி இருக்கும். இங்கே நின்றது ரெண்டே கார் தான். ஒன்று அர்ஜுனுடையது. இன்னொன்று அந்த xxxx சொந்தமான நெக்ஸா.” என்றான் அமன்ஜீத்.
“அப்போ சாக்லேட் கொடுக்க சென்ற பெண் எங்கே?….எல்லா இடத்திலேயும் தான் ஒன்றிற்கு ரெண்டு முறை தேடிட்டோமே!….” என்றான் ரஞ்சித்.
“இல்லை ரஞ்சித்…நோ…நாம் எல்லா இடத்தையும் செக் செய்யலை.” என்று அர்ஜுன் உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான் நீண்ட யோசனைக்கு பிறகு.
“இல்லை வி செக்கெட்.”என்றார் வீரேந்தர்.
எதையும் பேசாத அர்ஜுன் பார்வை ஒரு இடத்தில் நிலைக்க, அவன் பார்வை சென்ற இடத்தை கண்ட ப்ரீத்தி அடுத்த நொடி அங்கு பாய்ந்தாள்.
அது பெண்கள் ரெஸ்ட்ரூம்.
அங்கு யாருமே சோதித்து இருக்க மாட்டார்கள் என்று திடமாய் அர்ஜுன் நம்ப, கதவை திறந்து கொண்டு உள்ளே பாய்ந்தாள் ப்ரீத்தி.
ஸ்கூல்,அதன் சுற்றுப்புறம் எல்லாம் தேடியவர்கள் டாய்லெட்டில் தேடி இருக்கவில்லை.
‘குழந்தையை காணோம்’ என்ற பதற்றம் அவர்களை சிந்திக்க விடாமல் செய்து இருந்தது. அந்த சூழ்நிலையிலும் நிதானமாய்,தெளிவாய் யோசித்த அர்ஜுன், அவர்கள் யாருமே பாத்ரூம் செக் செய்யவில்லை என்பதை நொடியில் கண்டு கொண்டான்.
உள்ளே ஒரு பாத்ரூமில் மட்டும் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க அங்கு இருந்தவர்களுக்கு அப்போது தான் நின்று இருந்த மூச்சே வெளி வந்தது.
” யாஷ்வி!… நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட் …பயப்படாதே! …வெளியே வா. உன்னை பயமுறுத்தியவனை அர்ரெஸ்ட் செய்துட்டாங்கடா பேபி… பயப்படாதேடா!.”என்றாள் ஜெஸ்ஸி பஞ்சாபியில்.
“ஹ்ம்ம்! …”என்ற யாஷ்வி குரல் மட்டுமே உள் இருந்து கேட்டது.
யாஷ்வியின் பயம்,பதற்றம் இவர்களால் நன்கு உணர முடிந்தது.
சின்ன பிள்ளை தானே!.
பயமுறுத்தி,டார்ச்சர் செய்து மனதளவில் குழந்தையை பலவீன படுத்தி அரக்க கூட்டம் செயல்படுத்திய இந்த வக்கிரத்திற்கு, அந்த சிறுமி எந்த விதத்திலும் பொறுப்பு ஆக முடியாது தான் என்றாலும், இது எல்லாம் அந்த குழந்தைக்கு தெரிய வாய்ப்பில்லை தானே!.
பெரியவர்களே இது போல் சிக்கி கொண்டால், ‘என்ன செய்வது!….’ என்று தெரியாமல் தான் திணறி போவார்கள்.
உலகளவில் ஆக்டோபஸ் போல் தன் கரங்களை நீட்டி இருக்கும் ஒரு போதை மருந்து கும்பலின் பிடியில் சிக்கி,சின்னாபின்னமாகி இருந்த அந்த பிஞ்சு, பயத்தில் பாத்ரூமிற்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
“கம் ஆன் பேபி…. பயப்படாதே!.உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ தப்பு எதுவும் செய்யலை என்று எங்களுக்கு தெரியும். வெளியே வா மா யாஷ்வி “என்ற ஜெஸ்ஸியின் கெஞ்சலுக்கு பதில் வரவில்லை என்றதும் அடுத்த நொடி ப்ரீத்தி, அந்த பாத்ரூம் தரையில் முட்டி போட்டு கீழே இருந்த இடைவெளி வழியாக உள்ளே பார்த்தாள்.
உள்ளே பார்த்தவள் இதயம் துடிப்பதை நிறுத்தி தான் விட்டது.
“அர்ஜுன்!….”என்று உரக்க கத்த, ப்ரீத்தியின் முகமே ஏதோ விபரீதம் என்பதை உணர்த்த அர்ஜுன்,அமன் இருவரும் சேர்ந்து மூடி இருந்த அந்த கதவை எட்டி உடைக்க ஆரம்பித்தார்கள்.
அது என்ன சினிமாவில் வரும் அட்டை கதவா?
ஹீரோ ஒரு உதை உதைத்ததும் சுக்குநூறாய் நொறுங்க?
துரு பிடித்து இருந்தாலும் இரும்பு கதவு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
“கடப்பாரை,சுத்தி எங்கு இருந்தாவது எடுத்து வாங்க.”என்று வீரேந்தர் கத்த அதை எடுத்து வர சிலர் ஓடினார்கள்.
“அர்ஜுன் ஜம்ப்.”என்றாள் ப்ரீத்தி.
ப்ரீத்தி சொல்லியது புரிய, அடுத்த நொடி அமன்ஜீத் தன் ரெண்டு கைகளையும் குவித்து, ஒரு குழி போல் வைக்க,அதில் தன் ஒற்றை காலை வைத்த அர்ஜுனுக்கு ப்ரீத்தியும், ஜெஸ்ஸியும் கை கொடுத்தனர்.
அடுத்த நொடி அமன்ஜீத் கீழ் இருந்து போர்ஸ் கொடுக்க, அர்ஜுன் உயர எம்பி அந்த பாத்ரூம் கதவின் நிலையை பிடித்து கொண்டான்.
அப்படி பிடித்து கொண்டு ஜிம்மில் ‘மங்கி பார் ‘ பிடித்து உடலை மேல் தூக்குவது போல் அர்ஜுன் தன் சக்தி முழுவதும் திரட்டி தன் உடலை மேல் தூக்கினான்.
அவன் கால்களுக்கு தேவையான சப்போர்ட் கொடுக்க ப்ரீத்தியும், ஜெஸ்ஸியும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து குனிந்தவாறு நிற்க, அவர்கள் முதுகில் கால் வைத்து ஏறி அந்த பாத்ரூம் சுவர் மீது அமர்ந்தான் அர்ஜுன்.
அதற்குள் நாற்காலி ஒன்றை ரஞ்சித் எடுத்து வந்து போட்டு அதன் மீது ஏறி நின்ற ரஞ்சித்,அமன்ஜீத் இருவரும் அர்ஜுனுக்கு கை கொடுக்க அவர்கள் இருவரின் கையை பற்றுக்கோலாய் பற்றி கொண்டு,உடலை வளைத்து திருப்பிய அர்ஜுன்,உள்ளே குதித்தான்.
உள் போடப்பட்டு இருந்த தாழ்ப்பாளை அர்ஜுன் அகற்ற, அவர்கள் கண் முன் விரிந்தது மிருக ஜென்மங்களின் செயல்களின் விளைவாய் அங்கு ஓடி கொண்டு இருந்த ரத்த ஆறும், அதில் முழுகி தன் உயிரை இழந்து கொண்டு இருந்த சின்ன பூ ஒன்றின் நிலையும்.
அந்த பாத்ரூம் அறையின் தரை சிகப்பு நிறமாய் மாறி இருந்தது அந்த பெண்ணின் கையில் இருந்து ஒழுகி கொண்டு இருந்த ரத்தத்தால்.
‘ரத்த ஆறு ஓடுகிறது!….’ என்ற பதத்திற்கு ஏற்ப ,அங்கு ரத்தமே ஆறாய் தான் ஓடி கொண்டு இருந்தது.
பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கும் காட்சி அது.
“மேஜர் அர்டேரி ரெண்டு கையிலும் கட் செய்துட்டு இருக்கா.காயம் வெகு ஆழம்.ரத்த நாளம் வெளியே தெரியுது.” என்றான் அர்ஜுன், ஒரு கையால் அறுக்க பட்டு இருந்த ரத்த நாளத்தின் மீது, தன் விரலை வைத்து அழுத்தியவாறு.
அடுத்த நொடி உள்ளே பாய்ந்த ஜெஸ்ஸி, அடுத்த கையை பிடித்து கொள்ள,அந்த பெண்ணின் கையில் இருந்து வெளியேறும் ரத்தம் நிற்க ஆரம்பித்தது.
தன் ஷால் உருவி எடுத்த ப்ரீத்தி ,அர்ஜுன் விரலோடு சேர்த்து ஒரு கையை கட்டிவிட்டு ,ஜெஸ்ஸியின் ஷால் உறுவி ஜெஸ்ஸி கை வைத்து இருந்த இன்னொரு கைக்கும் ஜெஸ்ஸியின் கையின் மேலேயே கட்டு போட்டு விட்டாள்.
அர்ஜுன்,ஜெஸ்ஸி இருவரின் கட்டை விரலும் ரத்த நாளத்தின் மீது அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்க,மீதம் உள்ள நான்கு விரல்களும் அந்த சிறுமியின் மாணிக்கட்டினை தாங்கி பிடித்து இருந்தது.
“எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரஷர் கொடுங்க.ரொம்ப நேரம் இப்படியே கையை பிடிக்க முடியாது தான்.அப்போ அடுத்த கையை வைத்து இந்த கைக்கு அழுத்தம் கொடுங்க.”என்றாள் ப்ரீத்தி.
“அப்போ ரத்த ஓட்டம் நின்று விடாதா ப்ரீத்தி?….அது வேற காம்ப்ளிகேஷன் ஆக போகுது.”என்றாள் ஜெஸ்ஸி.
“அப்படி ஆகாது.இவ கட் செய்து இருப்பது ரேடியல் அர்டேரியை தான்.இப்படி நடந்தால் ரத்த ஓட்டம் தடை படாமல் இருக்க, ‘ULNAR ARTERY ‘ ஒன்று நம் உடம்பில் இருக்கும்.இப்படி விபத்து ஏற்படும் போது, அந்த அர்டேரி மூலம் நம் உடம்பில் மற்ற பாகங்களுக்கு ரத்த ஓட்டம் தடை படாமல் இருக்கும்.
சோ கவலை பட வேண்டாம்.முடியாத போது சொல்லுங்க.உங்க கைக்கு தேவையான பிரஷர் நாங்க தரோம்.கை மரத்து போகும் தான்.ஆனா இந்த பொண்ணு ப்ளீட் அவுட் ஆகாம இருப்பது உங்க கையில் தான் இருக்கு.”என்ற ப்ரீத்தி.
“அமன் பெல்ட்… அங்கிள் பெல்ட்.”என்று ப்ரீத்தி கை நீட்ட, இருவரும் தங்கள் பாண்டில் இருந்த பெல்ட் உருவி தந்தார்கள்.
அதை அந்த பெண்ணின் இரு புஜத்தில் இறுக கட்டிய ப்ரீத்தி,”அமன் பிக் ஹேர் அப்.அங்கிள் ஸ்டார்ட் தி கார்”என்றாள்.
அமன்ஜீத் அந்த பெண்ணை தூக்கி கொள்ள,ப்ரீத்தி, வீரேந்தர் முன்னால் கத்தியவாறு ஓட, அர்ஜுன்,ஜெஸ்ஸி அந்த பெண்ணின் கையை பிடித்தவாறு ஓடி வந்தார்கள்.
அமன்ஜீத் மார்பினில் அந்த யாஷ்வி தலை சாய்ந்து இருக்க, அவன் தோள்வளைவின் வழியாக ஒரு கையை பிடித்த வண்ணம் அவர்களுக்கு பின்னால் ஜெஸ்ஸி ஓடி வர, இன்னொரு கையை பிடித்தவாறு முன்புறம் ஓடி வந்தான் அர்ஜுன்.
ஜெஸ்ஸியாவது பின்னால் ஓடி வந்து கொண்டு இருந்தாள். அர்ஜுன் அமன்ஜீத் முகத்தை பார்த்தவாறு ரிவெர்ஸ் ஓட்டம் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
அந்த பெண்ணின் கைக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்கவோ,கையை வளைத்தோ பிடிக்க முடியாத சூழலில்,அந்த பெண்ணின் கையை முன்புறம் நீட்டி பிடித்தவாறு ஓடுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
அமன்ஜீத்துக்கு பக்கவாட்டில், கையை நீட்டி பிடித்த படி ஓட அங்கங்கு இருந்த பள்ளி வளாகத்தின் தூண்கள் இடம் அளிக்கவில்லை.
எனவே ரிவேர்ஸ் ஜாகிங் தான் அர்ஜுன் செய்ய வேண்டி இருந்தது.
அப்படி ஓடுவது சுலபம் இல்லை. பின்னால் வழியை பார்த்தவாறு அடியை எடுத்து வைக்கவேண்டும், அதுவும் கால் பின்புறமாய் எடுத்து வைக்க வேண்டும். கை பிடியும் தளர்ந்து விட கூடாது,அமன்ஜீத் ஓடும் வேகத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டும்.
பக்கவாட்டில் ஓடினாலும், அந்த பெண்ணின் கைக்கு இழுப்பு, ஸ்ட்ரெஸ் அதிகமாகி ரத்தம் அதிகமாய் வெளியேறியது. அதற்கு இப்படி ரிவர்ஸ் ஓட்டம் தான் சரியாய் இருந்தது.
வீரேந்தர் வழி சொல்ல,ப்ரீத்தி அர்ஜுனை பின்னால் பிடித்து கொள்ள அந்த உயிரை காக்க அவர்களின் ஓட்டம் தொடங்கியது.
அன்றைய பிறந்த நாள், அந்த சிறுமியின் இறப்பு நாளாகவும் ஆகி விட கூடாது என்பது தான் அவர்களின் எண்ணமாக இருந்தது.
ஊடங்களில் ஒரு இறப்பை பற்றி படிப்பது வேறு.
நேரிடையாக நமது கையில் ஒரு உயிர் துடிப்பது என்பது வேறு.
படிப்பது, செய்திகளில் பார்ப்பதே அடிவயிறை கலங்க செய்யும் போது, அவர்கள் கைகளில் அந்த உயிர் இருக்கிறது.
அந்த சூழ்நிலையில் அவர்களின் மனநிலையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
சம்பவம் பற்றிய விவரம், அதற்குள் அந்தக் கிராமத்தில் காட்டுதீ போல் பரவி இருக்க, ஒட்டுமொத்த ஊரே, பள்ளியின் முன் குழுமி இருந்தது. அக்கம் பக்க கிராமங்களுக்கும், அது மட்டுமே பள்ளியென்பதால், சுற்று வட்டார கிராம மக்களும், விஷயம் கேள்விப்பட்டு அங்குக் கூட ஆரம்பித்து இருந்தனர்.
அந்த தீக்கு, பெட்ரோல் வார்த்துக் கொண்டிருந்தான் வீரேந்தர் உடன் வந்து இருந்த தல்வார் பத்திரிகை நிருபர் திலீப். திலீப் அனைத்தையும் லைவ் ரிலேவாக ஒளிபரப்பிக் கொண்டிருக்க வீரேந்தரால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.
அவனுக்கு அது TRP ஏற்றும் இன்னொரு கதை அவ்வளவு தான்.
அதில் அதுவரை நற்பெயர் எடுத்த பள்ளியோ அதில் படிக்கும் பிள்ளைகளோ, இன்னும் சொல்ல போனால் உயிர்க்கு போராடும் அந்த சிறுமியும் வெறும் செய்தியே.
இவன் செய்தியால் யார் வாழ்க்கை எப்படி போனால் அவனுக்கு என்ன?
அது உலகத்திற்க்கு சூடான செய்தி.HOT நியூஸ்.
அந்த வெம்மையில் எந்த குடும்பம் அழிந்தால் அவனுக்கு என்ன?
‘உயிர் போகும் போது கூட,கழிப்பறையில் கூட விட்டா இவனுங்க இவங்க காமெராவையும்,மைக்கையும் நீட்டுவானுங்க போல் இருக்கு.’என்று மனதிற்குள் பொரிந்த ப்ரீத்தி,கடுப்பாகி,
” தீப் யுவர் ஷர்ட் …”என்று கேட்க ,தான் அணிந்து இருந்த ஷர்ட்டை தீப் கழற்றி கொடுக்க, அதை அப்படியே சிறுமியின் முகத்தை யாரும் பார்க்காத வண்ணம் மூடினாள் ப்ரீத்தி.
“அங்கிள்!…எந்த ஹாஸ்பிடல்?”என்றாள் ப்ரீத்தி வீரேந்தரிடம். ஒருவேளை அருகிலேயே ஏதாவது ஹாஸ்பிடல் இருந்து விட்டால் சுலபமாய் அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றி விடலாமே
“பதிண்டா அரசு மருத்துவமனைக்கு தான் போகணும்.இங்கே எதுவுமே திறந்து இருக்காது.திறந்து இருந்தாலும் டாக்டர் எப்போ வருவார் என்பது எல்லாம் தெரியாது. போதிய மருத்துவ உபகரணம் இருக்கான்னு தெரியாது.
பதிந்தாவிற்கு கொண்டு போய்டலாம். ஆனால் எப்படியும் 45 நிமிடம் ஆகும்.தூரம் அதிகம்.பாதி வழியில் வேண்டும் என்றால் யோஜித் அவன் டீம் உடன் நம்மை மீட் செய்ய சொல்லிடறேன்.” என்றார் வீரேந்தர்.
“அத்தனை மணி நேரம் இவ்வளவு ரத்த சேதாரத்துடன் ட்ராவல் செய்வது கஷ்டம் தாயா. ஏற்கனவே ரொம்ப ரத்தம் போய் இருக்கு. இதுவே சீரியஸ் கண்டிஷன் .surgery செய்யாமல் இந்த ரத்த இழப்பை நிறுத்த முடியாது.காயம் வெகு ஆழம்.”என்றான் அர்ஜுன்.
“இல்லை ட்ராவல் செய்யலாம்.முதல் உதவி,எமெர்ஜென்சி கேஸ் பார்க்க என்னால் முடியும்.ரத்த இழப்பு ஏற்பட்டாலும் மானேஜ் செய்யலாம்.”என்ற ப்ரீத்தி அங்கு சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவளாய், அங்கு இருந்தவர்களுக்கு ஒவ்வொரு வேலையை பிரித்து கொடுத்தாள்.
“தீப் வாட்டர் பாட்டல்ஸ் ,டெண்டர் coconut”என்று ப்ரீத்தி கத்த, அவள் சொல்ல வருவது புரிந்து விட, அந்த பள்ளிக்கு வெளியே இருந்த இளநீர் கடைக்குள் பாய்ந்தான் தீப்.
அமர்நாத் மீண்டும் அருகே இருந்த வகுப்பறைக்குள் நுழைந்து, அங்கு இருந்த மாணவிகளிடம் பேசி அவர்களின் வாட்டர் பாட்டில்களை கை நிறைய எடுத்து கொண்டு தீப்பை நோக்கி ஓடினார்.
“தில்சர்! …tarnequet ,iv டியூப்,சலைன் ட்ரிப்.”என்றாள் ப்ரீத்தி. அடுத்த நொடி அவனும் அவன் தோழர்களும் அந்த தெருவில் இருந்த மருந்தகத்திற்குள் புயலென நுழைந்தார்கள்.
“ரஞ்சித்! …அர்ஜுன் கார் பின்னாடி.”என்று ப்ரீத்தி கத்த, அர்ஜுன் ஓடி கொண்டே தன் பாக்கெட்டில் இருந்து கார் சாவியை ரஞ்சித் நோக்கி வீச,அதை கேட்ச் பிடித்த ரஞ்சித் ஓடி சென்று, அர்ஜுன் காரை அந்த பள்ளி வாயிலில் கொண்டு வந்து நிறுத்தினான்.
சரண் காரில் ஏறி பின் இருக்கையை மடித்து விட்டு உள்ளே இருந்த பரிசுகளை எல்லாம் தூக்கி வெளியே வீசினான்.
போதிய அளவு இடைவெளி கிடைத்து விட,முதலில் அர்ஜுனும்,ஜெஸ்ஸியும் உள்ளே ஏற,குழந்தையை அமன்ஜீத் நீட்ட,சரண்,அர்ஜுன்,ஜெஸ்ஸி பெற்று கொண்டார்கள்.
அந்த குழந்தையின் id கார்டு அந்த பெண் AB பாசிட்டிவ் ரத்த வகை அதாவது எந்த வகையான ரத்த குரூப் இடம் இருந்தும் ரத்தம் பெற்று கொள்ளும் வகை என்பது தெரிந்து விட ப்ரீத்தியின் முகத்தில் ஒரு நிம்மதி வந்தது.
AB ரத்த வகை ‘UNIVERSAL RECIPIENT’ வகை என்பதால் A,B,O எந்த வகை ரத்தமும் பொருந்தி விடும்.
கார் கிளம்புவதற்குள் தீப் பல வாட்டர்பாட்டில்களில் இளநீர் கொண்டு வர,தில்சர் குழுவும் ப்ரீத்தி கேட்ட பொருட்களை அவளிடம் கொடுத்தார்கள்.
“அங்கிள்!…கார் வர கிளியர் ரூட் வேண்டும்.”என்றான் ரஞ்சித்.
“டோன்ட் ஒர்ரி சார் …அதை நாங்க பார்த்துக்கறோம்.”என்ற தில்சர் குழு அசுர வேகத்தில், இவர்களுக்கு முன்னால் தங்கள் பைக்குகளில் பாய்ந்தார்கள்.
ஒரு ப்ரைம் மினிஸ்டரின் காருக்கு முன் செல்லும் பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மாதிரி,தில்சர் குழுவினரின் பைக் முன்னால் வழி ஏற்படுத்தி கொண்டு பறந்தது.
சட்டென்று பார்க்க, “சென்னையில் ஒரு நாள்’ படத்தின் கிளைமாக்ஸ் ஸீன், ஜிந்தா காலனியில் நடப்பதாக வருவது போல் ,இங்கு நிஜ வாழ்க்கையில் நடந்து கொண்டு இருந்தது.அங்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக வரும்.
ஒரு பக்கம் இவர்கள் பயணம் எந்த தடங்கல் இல்லாமல் தொடர வழி ஏற்படுத்த பட்டு கொண்டு இருக்க, இன்னொரு புறம் INTENSIVE கேர் யூனிட்/அவசர சிகிச்சை பிரிவு ஒன்றில் நடக்கும் உயிரை காக்கும் போராட்டம் அந்த காரின் பின்புறம் அரங்கேறி கொண்டு இருந்தது.
அர்ஜுன் காரில் பின்புறம் டிக்கியில் அர்ஜுன், ப்ரீத்தி, ஜெஸ்ஸி, அமன் அந்த குழந்தையோடு இருக்க, நடு இருக்கையில் தீப்,சரண் முட்டி போட்டு பின்புறம் இவர்களை பார்த்தார் போல் அமர்ந்து இருக்க,முன் இருக்கையில் ரஞ்சித் அமர்ந்து காரை இயக்கி கொண்டு இருந்தான்.
வீரேந்தர் அங்கு நிலைமையை சமாளிக்க, குற்றவாளிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லவும், அங்கு விசாரிக்கவும்,குழந்தையுடன் ப்ரீத்தி வருவதை யோஜித்திற்கு சொல்லவும் அங்கேயே தங்கி விட்டார்.
அந்த பகுதி இன்ஸ்பெக்டருக்கு தகவல் பறக்க கான்ஸ்டபிள்கள் உடன் அவர் பதறியடித்து வந்தார்.
அந்த குழந்தையின் வீட்டிற்கு தகவல் பறக்க, அவர்களை ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்ல, சில கான்ஸ்டபிள்கள் விரைந்தார்கள்.
அந்த பள்ளி போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
அக்கம் பக்கம் இருந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லாவற்றிக்கும் தகவல் சொல்லப்பட அங்கு இருந்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் டீம் விரைந்து வந்தது.
அந்த பள்ளிக்கு கதவாய் வேறு யாரும் உள்ளே நுழைய முடியாத படி தில்சர் குழுவில் மீதம் இருந்தவர்கள், அங்கே போலீஸ் டீம் வரும்வரை காவலாய் நின்றார்கள்.
அருகே இருந்த கடைகளில் இருந்து இரும்பு வேலிகளை கொண்டு வந்து பள்ளி வளாகத்தை யாரும் நெருங்காத வண்ணம் அரண் அமைத்தார்கள்.
2000 பெண்கள் பயிலும் பள்ளி.
காலையில் டிபன் கொடுத்து டாடா காட்டி மகிழ்வுடன் அனுப்பி வைத்து விட்டு வேலைக்கு சென்றவர்களும், வீட்டில் சாவகாசமாய் டிவி பார்த்து கொண்டு, பல்வேறு வேலையை செய்து கொண்டு இருந்த பெற்றோர்களும், திடீர் என்று இப்படி ஒரு தகவல் வந்து சேர திகைத்து தான் போனார்கள்.
இது தான் ஒரே நொடியில் வாழ்க்கை தலைகீழ் ஆவது என்பது.
கண் சிமிட்டும் நொடியில் அனைத்தும் மாறி போகும் மர்ம ஆட்டம் தானே வாழ்க்கை .
பதறி அடித்து கொண்டு ஓடி வந்த பெற்றோரின் முதல் எண்ணம்,’நம் குழந்தை நன்றாக இருக்கிறதா?’ என்பதாய் தான் இருந்தது.
ஒரு குழந்தை சீரியஸ் தான். உயிர்க்கு போராடி கொண்டு இருக்கிறது தான். ஆனால் அது யாருடைய குழந்தை என்பது அங்கே வந்த பின் தானே தெரியும். அங்கு வந்து சேரும் வரை ….
ஒருவித பயம்,பதட்டம்,தவிப்பு.தங்கள் மகவை கண்ணால் காணும் வரை அவர்கள் உயிர் அவர்களுக்கே சொந்தம் இல்லை தானே.
ஒரே சமயத்தில் இல்லை என்றாலும் சிறுக, சிறுக என்று கூடிய பெற்றோரின் எண்ணிக்கை சமாளிக்க முடியாமல், வீரேந்தர் திணறி தான் போனார்.
ஒன்றை பத்தாய் கூறும் சமூக வலைத்தளங்கள் இது மாதிரி சமயங்களில் தானே ஓவர் ஒர்க் செய்யும்.அது வேறு பெற்றோர்களை கதி கலங்க வைத்தது.
‘வேறு குழந்தை ஏதாவது இதனால் பாதிக்க பட்டு இருக்கிறதா?’ என்று பிள்ளைகளை மருத்துவ பரிசோதனை செய்யாமலும் வெளியே அனுப்ப முடியாது என்னும் நிலை.
‘இப்போதைக்கு வேறு எந்த குழந்தைக்கும் ஒன்றும் இல்லை.’ என்பதை தவிர வீரேந்தரால் வேறு எதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்ணால் கூட பார்க்க முடியாமல் வெளியே கால் கடுக்க நின்ற நிலை என்று அந்த இடமே போர்களமாகி தான் போனது.
அதுவரை யாஷ்வியை தேடினார்களே ஒழிய, அது போல் வேறு ஏதாவது போதை மருந்துகள் அந்த பள்ளியில் எங்காவது மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா,வேறு ஏதாவது குழந்தை இந்த அரக்கர்களிடம் சிக்கி உள்ளதா,அந்த போனில் இவனுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார் என்று பல பக்கங்களில், கோணங்களில் வீரேந்தர் செயல்பட வேண்டியதாய் இருந்தது.
இந்த விஷயத்தை மேலிடத்திற்கும்,முதல் அமைச்சர் கவனித்திற்கும் எடுத்து போக வேண்டிய பொறுப்பும் இவருடையது.
காவல் துறைக்கு எப்படி எல்லாம் பிரஷர் வரும்,என்ன எல்லாம் அவர்கள் செய்ய வேண்டி வரும்,எந்த சூழ்நிலைக்கு எப்படி ரியாக்ட் ஆக வேண்டும்,எப்படி ஒரு நிகழ்வை கையாள வேண்டும், எத்தனை பக்கம் யோசிக்க வேண்டும் என்று வீரேந்தரின் அந்த நிமிட நடவடிக்கைகள் நமக்கு சொல்லி விடும்.
சுலபமாய் ஜோக்ஸ்,மீம்ஸ் போட்டு கலாய்த்து விடும் மக்கள் அறிவதில்லை இந்த பணியில் உள்ள நெளிவு சுளிவுகளை. இந்த துறையில் இறங்கி வேலை பார்த்தால் தான் எத்தனை விதமான சூழ்நிலைகளை, சவால்களை கொண்டு வருகிறது என்பது புரியும்.
அந்த கிராமத்தில் குவிந்த பெற்றோரின் பயம், பதட்டம், வதந்திகள் அந்த இடத்தை ஒரு போர்களமாக்கி கொண்டு இருக்க, அங்கு கலவரம் ஒன்று வெடிக்காமல், மக்களுக்கோ, பொருட்களுக்கோ சேதாரம் ஏற்ப்படாமல் காக்கும் பொறுப்பு வீரேந்தரிடம்.
அதை அவர் வெகு லாவகமாய் சமாளித்து கொண்டு இருந்தார்.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க வீரேந்தர் ஆவண செய்ய, பள்ளியில் இருக்கும் வேறு ஏதாவது குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய தேவையான மருத்துவ சோதனை உபகரணங்களுடன், தேவைபட்டால் செலுத்த, ‘ஆன்டி நார்க்கோடிக்ஸ்/ anti narcotics’ மருந்துகளுடன் ஒரு டீம் எட்டு டாக்டர்கள்,10 நர்ஸ், பதிண்டா மருத்துவ கல்லுரி மாணவ மாணவியர்களையும் யோஜித் அனுப்பி வைத்து விட்டு ஆம்புலன்சில் அவனும் கிளம்பி வந்தான்.
இது எல்லாவற்றையும், ‘லைவ் கவர்ஜ்/ live coverage’ என்ற பெயரில் பின்னால் கொடுத்து கொண்டே வந்தான் திலீப்.
அந்த கிராமத்தில் அவனிடம் வேலை பார்க்கும் ஒருவனிருக்க, அது அவனுக்கு வசதியாய் போனது.
தன் அலுவலகத்திற்கு போன் செய்து அருகே இருக்கும் வேறு ரிப்போர்ட்டரை அந்த பள்ளிக்கு கேமராவுடன் வரவழைத்தான்.
அந்த குழு பள்ளியின் அருகே கவர் செய்ய,இவன் அர்ஜுன் கார் பின்னால் வந்தான்.
பஞ்சாபில் மட்டும் இல்லை, இந்தியாவில்’ EXCLUSIVE COVERAGE’ இவன் டிவி சேனலுக்கு மட்டுமே கிடைத்தது.
பின்பக்க கார் கதவு திறந்து இருக்க,உள்ளே நடப்பது எல்லாம் இவன் கேமரா மூலம் பதிவாகி, அந்த ஒளிபரப்பு தீயென இந்தியாவை தாண்டி ஒளிபரப்பாக தொடங்கியது.
வீரேந்தரும், அர்ஜுனும், ப்ரீத்தியை மறைக்க பார்க்க, இன்றோ அவள் பெயர் இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் பரவி கொண்டு இருந்தது.
‘இனி எதுவுமே இல்லை,எல்லாம் முடிந்து விட்டது’ என்ற பயத்தில் என்று மரணத்தை தேர்ந்தெடுத்து விட்ட அந்த சிறுமியின் உயிரை காக்க, அர்ஜுன் கார் 80 -120 மைல் வேகத்தில் ஓடி கொண்டு இருந்தது பதிந்தாவை நோக்கி.
அர்ஜுன் தன் மொபைலில் யோஜித்தை அழைத்து இருக்க, நிலைமையை விளக்கி கூறினாள் ப்ரீத்தி.
அதற்குள் “சரண்!… என் ட்ராவல் பாகில் first aid கிட் எடுத்துட்டு வர சொன்னேனே. அதை ப்ரீத்தி கிட்டே கொடுங்க.”என்றான் ரஞ்சித்.
அந்த பரப்பிலும் அவசர சிகிச்சைக்கு எது தேவையோ அதை எடுத்து இருந்தான் ரஞ்சித்.
“ப்ரீத்தி!… நல்லா பார்த்து சொல்லுங்க. அந்த கேர்ள் கட் செய்து இருப்பது ரேடியல் ஆர்ட்டெரியா(RADIAL ARTERY),இல்லை உள்னர் அர்டேரியா(ULNAR ARTERY)? அப்படி என்றால் என்னனு தெரியுமா?”என்றான் யோஜித்.
“தெரியும் சார்…நமக்கு ட்ரிப்ஸ் போடவும்,ரத்தம் எடுக்கவும் பயன்படுவது ரேடியல் அர்டேரி/radial artery. இதை தான் ஆழமாய் கட் செய்து இருக்கா.முதல் உதவி கோர்ஸ் படிச்சு இருக்கேன்.ரத்த நாளத்தின் மீது அர்ஜுன்,ஜெஸ்ஸி இருவரும் பிரஷர் கொடுத்துட்டு இருகாங்க.
அவங்க விரலோடு சேர்த்து, “பிரஷர் ட்ரெஸ்ஸிங்/pressure dressing”என் ஷால் மூலம் போட்டு இருக்கேன்.பெல்ட் வைத்து புஜத்தில் கட்டி இருக்கேன்.
போதிய அளவு பிரஷர், பெல்ட் கொடுக்காது என்று TORNEQUET வைத்து கட்ட போறேன்.”என்றவள் சரண் கொடுத்த முதல் உதவி பையில், “bleeding control kit”திறந்து அதில் இருந்த, TORNEQUET எடுத்து ரத்த ஓட்டத்தை நிறுத்த புஜத்தில் கட்டி விட்டாள்.
அதை கட்டி முடித்து விட்டு,”சார்!…. இப்போ சலைன் ஒரு கையில் போட போறேன்.சலைன் அதிகமாய் இங்கு கிடைக்காது என்று நினைத்தேன்.அதே போல் ஒரு பேக் தான் இருக்கு. அது தீர்ந்து விட்டால் பிரெஷ் இளநீர் IV யாக போடலாம் தானே?… அப்படி ஆர்மி டாக்டர்ஸ் ‘சாலமன் தீவில்’ சலைன் கிடைக்காத போது செய்ததாய் படித்தேன்.”என்றாள் ப்ரீத்தி.
“குட்… எஸ் இளநீர், சலைன் கிடைக்காத போது மிலிட்டரில இருக்கிறவங்க யூஸ் செய்வாங்க தான். போடுங்க.ஒன்றும் ஆகாது. ஆனா, அது அப்பொழுது வெட்டிய இளநீராய் இருக்கட்டும்.வெட்டிய உடன் அதனை பயன் படுத்துங்கள்.
ரத்த இழப்பால் ஷாக் ஏற்படலாம். அப்படி ஷாக் ஏற்பட்டால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வார்ம்ஆக அந்த பெண்ணை வைத்து கொள்ளுங்கள்.
சுவாசம் எப்படி இருக்கு, இதய துடிப்பு எவ்வளவு இருக்கு என்பதை மானிட்டர் செய்யுங்க.”என்ற யோஜித்.
“பிளட் லாஸ் எப்படி இருக்கு?”என்றான்.
“சார்!…. அங்கே ஸ்கூலிலேயே ஹெவி லாஸ் ஆகி தான் இருக்கு.மயக்கத்திற்கு போகும் அளவிற்கு ஷி லாஸ்ட் லாட்ஸ் ஆப் பிளட்….” என்றாள் ப்ரீத்தி.
அதிக ரத்த இழப்பால், hypovelemic shock என்ற நிலையில் தான் அந்த சிறுமி இருந்தாள்.
அர்ஜுன், ஜெஸ்ஸி கொடுத்த விரல் அழுத்தத்தாலும், ப்ரீத்தியின் பிரஷர் ட்ரெஸ்ஸிங் மூலம் ரத்த பெருக்குசற்று குறைந்து இருந்தாலும், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே முழுவதுமாய் ரத்த பெருக்கை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை.
ஏற்கனவேஇழந்து இருந்த ரத்தம் வேறு அதற்குண்டான விளைவைக் காட்டிக் கொண்டிருந்தது/
ஒரு பக்கம் ரத்த இழப்பு மெல்ல ஏற்பட்டு கொண்டு இருக்க இன்னொரு பக்கம் கட்டுப்படுத்த வேண்டி இருக்க, இன்னொரு பக்கம் இழப்பிற்கு ஈடும் செய்தே ஆக வேண்டிய நிலை.
யோஜித் மருத்தவ குழு வந்து சேரும் வரை ஏற்கெனவே ஆபத்தின் விளிம்பில் இருக்கும் உயிரைப் போகாமல் தடுத்து, காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள்
ப்ரீத்தி அந்த மாணவியின் ஆபத்து நிலையை விளக்கி சொல்ல உடனடி ரத்த ஏற்றம் தேவை என்றான் யோஜித்.
“இந்த பொண்ணு யூனிவேர்சல் RECIPIENT தான் சார்.ஸ்கூல் ID கார்டில் இருக்கு.இங்கே அர்ஜுன், அமன்,நான், ஜெஸ்ஸி, தீப், சரண் எல்லாம் இருக்கோம்.சோ பதிண்டா வரும் வரை எங்க ரத்தத்தையே ஏத்திட்டு வரோம்.”என்றாள் ப்ரீத்தி.
“கோ ஹெட் ப்ரீத்தி.அர்ஜுன்,அமன்,சரண்,தீப் போன வாரம் தான் முழு உடல் பரிசோதனை செய்தேன். அவங்க எல்லோருமே B பாசிட்டிவ் தான். சோ மாத்தி மாத்தி A,BOன்னு கொடுக்க வேண்டி வருமோ என்ற கவலை வேண்டாம். தே கேன் டோனட்.
நீங்க,ஜெஸ்ஸி,ரஞ்சித் பத்தி தெரியாது.ஏதாவது ஜுரம்,ரத்த தொடர்பான நோய்,மலேரியா,டைபாய்டு என்று எதாவது உங்களுக்கு வந்து இருக்கா?அப்படி இருந்தால் உங்க ரத்தம் செலுத்த கூடாது.”என்றான் யோஜித்.
ப்ரீத்தி ஜெஸ்ஸியை பார்க்க,”என் ரத்தம் வேண்டாம்.நேத்து தானே ஹாஸ்பிடல் அட்மிட் ஆனேன்.ஒருவாரம் என்றாலும் போதை மருந்து உடலுக்குள் இருக்கும். “என்றாள் ஜெஸ்ஸி.
” யெஸ்…இதை மறந்துட்டேன். நல்லவேளை நியாபக படுத்தினே. அப்போ நானும் தானே அதை இன்ஹெல் செய்தேன்.சோ நானும் ரத்தம் கொடுக்க முடியாது.” என்ற ப்ரீத்தி,
“ரஞ்சித் நீ டா?”என்றாள் ப்ரீத்தி பின் இருந்து.
“நான் போன வாரம் தான் ஆர்மி மெடிக்கல் காம்பில் செக் செய்தேன்.ஐ அம் பிட் பேபி.”என்றான் ரஞ்சித்.
“சோ அர்ஜுன்,அமன்,சரண்,தீப்,ரஞ்சித் பிளட் கொடுக்க முடியும்.கேர்ரி ஆன்.”என்று யோஜித் பச்சை கொடிக் காட்ட அந்த சிறுமியின் ரத்த இழப்பிற்கு ஈடு கட்ட அங்கு இருந்தவர்களின் ரத்தத்தை அப்படியே செலுத்த ப்ரீத்தி தயார் ஆனாள்.
இப்படி ஒருவரின் ரத்தத்தை இன்னொருத்தருக்கு நேரிடையாக செலுத்துவது என்பது மிலிட்டரி ஆட்கள் யுத்தகளத்தில் சர்வ சாதாரணமாய் செய்வது.
இதற்கு AVELING’S TRANSFUSION’ என்று பெயர்
ரத்தத்தை சேமிக்கும் பை இல்லாமல் இருக்கும் அவசர காலகட்டங்களில், சின்ன ஒரு டியூப்,ஒரு ரப்பர் பல்ப் (பிளட் பிரஷர் பார்க்கும் போது டாக்டர் கையால் அழுத்தும் ரப்பர் போன்றது)கொண்ட கையடக்க கருவி இது.
ஒரு கையில் சலைன் ஏறி கொண்டு இருக்க,இன்னொரு கையில் ரத்தம் ஏற்றும் விதமாய் அதற்கான IV டியூப் சொருக பட்டு முதல் பேட்ச் ரத்தம் அர்ஜுன் கையில் இருந்து நேராக, அந்த சிறுமியின் உடலில் ஏற்றப்பட்டது.
விபத்து,நோயின் போது இழந்த திரவங்களை நிரப்பவும், காயங்களை சுத்தப்படுத்தவும், மருந்துகளை வழங்கவும், அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் மற்றும் கீமோதெரபி மூலம் நோயாளிகள் உடல் திரவ அளவை தக்கவைக்கவும் மருத்துவர்கள் IV சலைன் ட்ரிப்ஸ் பயன்படுத்துகின்றனர்.
இதில் ஒரு லிட்டருக்கு 9 கிராம் சோடியம் குளோரைடு உப்பு கலந்து இருக்கும்.
ஒரு நவநாகரீக ஹேங்கொவர்(hangover) தீர்வாக சலைன் IV கள் மருத்துவமனைக்கு வெளியே ஒரு இடத்தை இந்த காலத்தில் பிடித்து இருக்கின்றன.
“யோஜித் சார்! …ஒரு நார்மல் மனிதன் 1 யூனிட் ரத்தம் கொடுக்கலாம்அதாவது 350ML ஒருவரிடம் இருந்து எடுக்கலாம். இங்கே நேரிடையாக அப்படியே கொடுப்பதால், எப்படி அந்த அளவினை கணக்கு வைத்து கொள்வது?அங்கு வந்து சேர எப்படியும் 35-45 நிமிடம் ஆகும்.”என்றாள் ப்ரீத்தி.
“1 யூனிட் பிளட் டோனட் செய்ய எப்படியும் 15-20 நிமிடம் ஆகும்.இங்கே மொத்த அளவு,ரத்த ஏறும் அளவு நமக்கு தெரியாது என்பதால் 10 நிமிடம் டைம் பிக்ஸ் செய்துக்கோங்கோ ப்ரீத்தி.
10 நிமிடத்திற்கு ஒருவர் என்று மாற்றி கொண்டே இருங்கோ.ரத்தம் கொடுப்பவர்களுக்கு மயக்கம் வந்து விட கூடாது.”என்றான் யோஜித்.
“கவலை இல்லை அண்ணா.இப்போ தான் முன்னால் போகும் தில்சர் அண்ணா கிட்டே பேசினேன்.ரத்தம் கொடுப்பவர்களுக்கு உடனடி பிரெஷ் ஜூஸ் ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கேன். அங்கே அங்கே வாங்கி எங்க கிட்டே கொடுப்பாங்க.”என்றான் தீப்.
அந்த சூழ்நிலைக்கு எது தேவை என்று யோசித்து, அங்கு இருந்த அனைவரும் செயல் பட்டு கொண்டு இருந்தனர்.
ஜெஸ்ஸி போனில் 10 நிமிடம் அலாரம் செட் செய்யப்பட்டு, முதல் 10 நிமிடங்களுக்கு அர்ஜுனின் ரத்தம் செலுத்த பட்டது.
அலாரம் அடித்தவுடன், மீண்டும் டைமர் செட் செய்ய பட்டு அமன்ஜீத் ரத்தம், அதற்கு அடுத்த 10 நிமிடங்களுக்கு தீப்,அதற்கு அடுத்த 10 நிமிடங்களுக்கு சரண் ரத்தம் கொடுக்கப்பட்டது.
அமன்ஜீத் ரத்தம் கொடுத்து முடித்த பிறகு அவன் நடு இருக்கைக்கு சென்று விட,அந்த குழந்தையின் அருகே தீப் வந்தான் ரத்தம் கொடுக்க.
நல்லவேளையாக நிறைய ஊசிகள் அந்த முதல் உதவி பெட்டியில் இருக்க,ஒவ்வொருவரிடமும் ரத்தம் எடுக்க புது ஊசிகளாய் ப்ரீத்தியால் பயன்படுத்த முடிந்தது.
தீப் ரத்தம் கொடுத்து முடித்ததும் அவன் நடு இருக்கைக்கு சென்று விட,அவன் இடத்திற்க்கு சரண் வந்தான்.அவன் ரத்தம் கொடுத்த உடன் காரை ஓரமாக நிறுத்திய ரஞ்சித் பின்னால் வந்து ஏற,அவன் டிரைவர் இடத்திற்கு தில்சர் பைக்கில் இருந்து இறங்கி வந்து அமர்ந்தான்.
இப்படி ரத்தம் கொடுத்தவர்களுக்கு 10 நிமிடத்திற்கு ஒரு முறை அவர்கள் கடக்கும் கிராமங்களில் ஒருவர் பிரெஷ் ஜூஸ் உடன் நின்றார்கள்.
தில்சர் ஏற்க்கனவே இவர்கள் செல்லும் வழியை தன் நண்பர்களிடம் பகிர்ந்து இருக்க, அவர்கள் வழியெங்கும் உள்ள கிராமத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களிடம் தொடர்பு கொண்டு, இவர்கள் கடக்கும் வேளைகளில் இவர்களிடம் பிரெஷ் ஜூஸ் கொடுப்பது போன்ற ஏற்பாடு செய்ய பட்டது.
காரினை ஓட்டியவாறு ஒரு நொடி ஸ்பீட் குறைக்கப்பட வண்டியில் இருந்து கை நீட்டி இவற்றை பெற்று கொண்ட ரஞ்சித் அடுத்த நொடி வெகு வேகமாய் காரினை ஒவ்வொரு இடத்திலும் கிளப்பினான்.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து நிமிடங்கள்.
ஏதோ திரில்லர் திரைப்படத்தை பார்ப்பது போன்ற நிலையில் தான் அந்த நொடி இந்தியா முழுவதும் இருந்தது.
லைவ் ரிலே/live relay என்னும் போது ஓடி கொண்டு இருந்த காரோடு மக்களின் மனமும் புல்லட் ரயிலை விட வெகு வேகமாய் ஓடி கொண்டு இருந்தது.
இத்தனை பேரின் போராட்டம் பலன் தருமா?
கருகி கொண்டு இருந்த மொட்டு தப்புமா?
பயணம் தொடரும்…