OVOV 42

“வயசில் சின்னவளாக இருந்தாலும் உன் தெளிவு எங்களிடம் இல்லையே நூ…நீயும் எங்களுக்கு ஒரு மக மாதிரி தான் என்பதை மறந்து இத்தனை வருடம், எங்களுக்கு மகனாய் இருந்த குருவின் குடும்பத்தை அல்லவா ஒதுக்கி வைத்து விட்டோம்…வா மகளே…இனி இது தான் உன் தாய் வீடு…”என்று உபிந்தர் பாட்டியா அழைக்க அந்த தந்தையின் நெஞ்சில் சரண் புகுந்தாள் அந்த மகள்.குருதேவ்,அமன்ஜீத் சகிதமாய் அவர் காலில் விழுந்து வணங்க தன்வியின் மனதில் நெகிழ்வு.

இந்த நொடி,இந்த நாளுக்காக தானே அவர்கள் அங்கேயே வனவாசம் இருந்தது.எந்த அங்கீகரம் கிடைக்க வேண்டும் என்று அமன்ஜீத் அந்த கிராமத்திலேயே இருந்தானோ அது நிறைவேறி விட,கால்கள் தோய்ந்து தரையில் சரிந்தவனை தாங்கி கொண்டாள் ஜெஸ்ஸி.

“ரப்ஜி…உமக்கு நன்றி.”என்று முணுமுணுத்து அவன் கண்களில் கண்ணீர்.கால் மடங்கி உடல் குலுங்கியவனை பின் இருந்து அணைத்து கொண்டாள் ஜெஸ்ஸி.

“ஜெஸ் நீ சொன்னது நடந்துடுச்சு…என் அம்மா மேல் ஏற்பட்ட கலகம் விலகி விட்டது.எதற்காக இத்தனை நாள் தவம் இருந்தோமோ அது நடந்து விட்டது.எந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்தோமோ அது கிடைச்சிடுச்சு…. இப்போ எப்படி இருக்கு தெரியுமா எல்லா பாரமும் நீங்கி வானில் பறப்பது போல்,உலகத்தையே ஜெயித்து விட்டதை போல் இருக்கு.ஆயிரம் யானை பலம் வந்த  மாதிரி இருக்குடீ.”என்று வாய் விட்டு கதறினான்.

அவன் கதறலே சொல்லாமல் சொன்னது அவன் எத்தனை ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகி அதனால் மன காயம் பட்டு இருக்கிறான் என்பதை.அந்த நொடி அமன்ஜீத் சிறுவனாய் தான் தெரிந்தான். ஒரு சமூகம் எப்படி நல்லவை எல்லாவற்றுக்கும் துணை இருக்குமோ,அதே சமூகம் இது போன்ற வலிகளையும் கொடுத்து விடும்.

அங்கிருந்தவர்களின் கண்களை கலங்க செய்தது அமன்ஜீத் துடிப்பு. அவனையும்,மௌன கண்ணீர் வடித்து கொண்டிருந்த தன்வி, குருதேவிற்கும் அர்ஜுன் குடும்பம் அணைத்து ஆறுதல் சொல்லி கொன்றிருந்தார்கள். இனி இது அர்ஜுன் குடும்பம் மட்டும் இல்லை, அமன்ஜீத்தின் குடும்பமும் இது தான்.                      

இந்த நாளுக்காக தானே,அந்த உன்னதமான குடும்பத்தில் தாங்களும் ஒரு அங்கம் என்று சொல்ல தானே தன்வியும், குருதேவும் தவம் இருந்தது.        

அந்த நெகிழ்வு அங்கிருந்த அனைவருக்குமே இருக்க,அங்கு கண்கள் அனந்த கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தது.

“எப்படி சொல்றீங்க என் அத்தையை எங்கள் வீடு புகுந்து ஒருவன் கொன்று இருக்கான் என்று?அதற்கான ஆதாரம் என்ன?”என்றான் அர்ஜுன்.

குருதேவ்,தன்வியை வணங்கி,அவர்கள் அணைப்பில், பாசத்தில் நெகிழ்ந்து,அமன்தீப் என்ற சகோதரனின் தோளில் சேர்ந்து,ஒரு நிறைவை உணர்ந்த பின், அந்த வீட்டின் வாரிசாக,அத்தையின் இன்னொரு மகனாய் நிமிர்ந்து நின்றான் அர்ஜுன்.    

“இந்த எவிடென்ஸ் வெளியே பொது மக்களுக்கு ஒளிபரப்ப  கூடாது தான். ஆனால் உங்கள் அனைவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால்,இதை நீங்கள் தெரிந்து வைத்து இருப்பது நல்லது.எனென்றால் இதில் யார் யாரெல்லாம் இன்வோல் ஆகி இருக்காங்க என்பது எங்களுக்கு இன்னும் சரியாக பிடிபடவில்லை. சோ எங்கள் பாதுக்காப்பு உங்களுக்கெல்லாம் இருக்கும் தான் என்றாலும் எப்பொழுதும் விழிப்புடன் நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இதை இங்கே பிளே செய்கிறோம்.” என்றான்  ரஞ்சித்        

வீரேந்தர், திலீப் அனுப்பிய அந்த ரெகார்ட்டை ஓட விட அங்கு இருந்தவர்கள் திகைப்பில் உறைந்து போனார்கள்.பல ரகசியங்களை மீண்டும் சொல்லி கொண்டு இருந்தது விஜிலாண்டி குரல்.

“நினைச்சேன்…என் வெற்றி பிக்ஸ் செய்யபட்டது என்று அப்பொழுதே நினைச்சேன்.என்னை எதிர்த்து போட்டியிட்ட அந்த   எதிர் கட்சி ஆள் தான் நியாமாய் ஜெயித்து இருக்க வேண்டும்.தேர்தல் முடிவின் மேல் அப்பொழுதே எனக்கு டவுட் இருந்தது.இந்த தர்மா தான் அப்படி எல்லாம் எதுவும் இருந்திருக்காது என்று சமாதானம் செய்தான்.”என்று தலையை உலுக்கி கொண்டார் குருதேவ்.

அதுவரை ‘ஹும் அப்கே ஹைன் கோன்’ ஹிந்தி படத்தை சப்டைட்டல் இல்லாமல் பார்ப்பது போல்,புரிந்தும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள் ப்ரீத்தி.     

“என்னடா நடக்குது இங்கே?”என்று ப்ரீத்தி வாய் விட்டே புலம்ப,ஜெஸ்ஸி அவளுக்கு குருதேவ் -அர்ஜுன் அத்தை ரேஷ்மா வன்சினி,தன்வி காதல்,மோதல்,மரணம்,இவர்கள் திருமணம்,அமன்ஜீத் பிறப்பை அந்த ஊர் என்னவெல்லாம் சொல்லியது,அங்கேயே தன்வியும்,அமன்ஜீத்தும் தேங்கி நிற்பதை எல்லாம் சொல்லி முடித்தாள்.

“கேட்கவே கஷ்டமாய் தான் இருக்கு ஜெஸ்ஸி.அந்த காலம் வேற இல்லையா..கிராமம் வேறு…சொல்லவும் வேண்டுமோ? ‘ஐ டோன்ட் கேர்’ என்று சுற்றினாலும், ஒவ்வொருவருக்கும் அடி மனதில் மற்றவர் சொல்லும் ஒரு சொல் அம்பாய் தான் தைத்து விடும்.இதை தான் ‘ஒரு சொல் வெல்லும்,ஒரு சொல் கொல்லும்’ என்று அன்றே பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள் போலிருக்கு….தவறே செய்யாமல் இத்தனை பெரும் தண்டனை என்றால் கேக்கும் எனக்கே மனசை ஒரு மாதிரி பண்ணுது.உனக்கு இதெல்லாம்  எப்படி தெரியும் ஜெஸ்ஸி?”என்றாள் ப்ரீத்தி.

“நான்,அர்ஜுன்,அமன் மூன்று பேரும் சிம்லா கேம்பில் சந்தித்தோம். அர்ஜுன் இருக்கும் இடம் கலகலவென இருக்கும்.இந்த அமன்ஜீத் தான் என்னவோ டைட்டானிக் கப்பலே மூழ்கியது போல் சோகமாய் சுத்திட்டு இருப்பான். லவ் பெயிலியர் போல் இருக்கு அதான் இந்த தேவதாஸ் கெட்டப் என்று பார்த்தால்,வேலை வெட்டி இல்லாத நாதாரி பசங்க பேசினாங்களாம்…இவரு அதை கேட்டு உடைஞ்சி போய் சுத்திட்டு இருக்காராம்.பேசினவன் பல்லை உடைக்கறதை விட்டுட்டு,சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கு பக்கி….அத்தனை ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டிய வயசு அது இல்லை தான்.ஒரு மாதிரி மன அழுத்தத்தில் இருந்தான். அப்படியே சும்மா விட முடியுமா? அர்ஜுன் வாய், இவன் வாயை கிண்டி எல்லாத்தையும் வாங்கிட்டேன்.”என்றாள் ஜெஸ்ஸி.

“நீ இவங்க சண்டையை முடிக்க எதையும் செய்யலையா?” என்றாள் ப்ரீத்தி.

“நிறைய செய்தேன் ப்ரீத்தி.ரெண்டு பேரையும் உட்கார வைத்து மனதில் இருப்பதை எல்லாம் வாய் விட்டு பேச வைக்க முயன்றேன்.பெரியவங்க செயலுக்கு இவங்க ரெண்டு பேரும் அடித்து கொள்வது சரியாய் படலை. பெரியவர்களை, ஊரை தான் நம்மால் திருத்த முடியாது. அட்லீஸ்ட் இந்தியா பாகிஸ்தான் போல் மோசமாய் அடித்து கொள்ளும் இதுங்க ரெண்டுத்தையும் சேர்த்து வைப்போம் என்று முயன்றேன்.எதையும் நான் செய்வதற்குள் தான், என் வீட்டின்நிலைமையே  மாறி போச்சு.”என்றாள் ஜெஸ்ஸி.

“Better late than never” என்று மனதை ஆறுதல் படுத்தி கொள்ள வேண்டியது தான்…ஆமா அவங்க அர்ஜுன் அத்தை ரேஷ்மா வன்சினி போட்டோ இருக்கா?”என்றாள் ப்ரீத்தி.

“ஏன்?உனக்கு அவங்க போட்டோ எதுக்கு? “என்றாள் ஜெஸ்ஸி.

“சும்மா பார்க்கா தான்.தன் உயிரை கொடுத்து இன்னொரு உயிரை காக்க போராடி இருக்காங்க இல்லை.அந்த கட்ஸ், அந்த துணிவு மைண்ட் ப்லோவிங் இல்லை… அதான்.” என்றாள் ப்ரீத்தி.

“விக்கிப்பீடியாவில் அர்ஜுன் குடும்பத்திற்கு என்று தனி பேஜ் இருக்கு. அதில் முழு பேமிலி போட்டோ பார்த்த நியாபகம் இருக்கு ப்ரீத்தி.” என்றாள் ஜெஸ்ஸி.

“தோ பார்டா நம்ம பரட்டைக்கு விக்கிப்பீடியா பேஜ் எல்லாம் இருக்காம்லே…வியாபார காந்தம் என்று இவனும் பீலா விட்டு சுத்தும் அராத்து போலிருக்கு…’நாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்கமுடியலப்பா…. புண்ணாக்கு விக்கிறவன்,ஊசி விக்கிறவனை எல்லாம் தொழிலதிபராம்.’என்று அர்ஜுனை ப்ரீத்தி வெகு சீரியசாக கலாய்த்து கொண்டிருக்க,அதை அப்படியே மொழி பெயர்த்தாள் ஜெஸ்ஸி அர்ஜுனுக்கு.

ஜெஸ்ஸி சொல்வதை கேட்டு ஒரு கணம் ஜெர்க் ஆகி நின்ற அர்ஜுனுக்கு மன்னன் படத்தில் அந்த டயலாக் வரும் இடத்தை youtubeஇல் வேறு ஆங்கில சப்டைட்டிலோடு ஒட்டி வேறு காண்பித்தாள் ஜெஸ்ஸி.திடீர் என்று தமிழில் வெகு சத்தமாய் அந்த டயலாக் கௌண்டமணி வாய்ஸில் ஒலிக்க ஜெர்க் ஆகி நிற்பது ப்ரீத்தியின் முறையானது.

அதை பார்த்துவிட்டு ஒற்றை புருவம் தூக்கி அர்ஜுன் ப்ரீத்தியை முறைக்க, ஈயென்று வாயை காது வரை விரியும் படி இளித்து வைத்தாள் ப்ரீத்தி.

” அடியேய் எட்டப்பி …வெளியேவா உனக்கு இருக்கு.”என்று ப்ரீத்தி முணுமுணுக்க அவளுக்கு ஒழுங்கு காட்டி விட்டு சிட்டாக பறந்தாள் ஜெஸ்ஸி.

அர்ஜுன் இன்னும் அக்னி ஏவுகணைகளை பார்வையால் ப்ரீத்தி மீது செலுத்தி கொண்டு இருக்க,தன் காதை பிடித்து கொண்டு ப்ரீத்தி  முகத்தை ‘ஐயோ பாவம் ‘ போல் வைத்து கொள்ள,அவளை பார்த்து சட்டென்று கண் அடித்தான் அந்த கள்வன்.

இப்பொழுது முறைப்பது ப்ரீத்தியின் முறையானது. அதற்கெல்லாம் பயந்தால் அவன் அர்ஜூனே இல்லையே. சட்டென்று அர்ஜுன்  இருந்த இடத்தில் இருந்தே  உதட்டை குவித்து முத்தம் ஒன்றைப்ரீத்தியை பார்த்து கொடுக்க, ப்ரீத்தியின் கண்கள் சாசர் போல் விரிய,அர்ஜுன் உடல் மௌன சிரிப்பில் குலுங்கி கொண்டு இருந்தது.

ப்ரீத்தியின் திணறலை, தவிப்பை ரசித்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

‘இது உனக்கு தேவையா ப்ரீத்தி செல்லம் ?…எங்கேயோ இருக்கும் தேளை எவன் சொரிய சொன்னது?…பாரு பாரு குடும்பமே இங்கே இருக்கு.கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா பாரு…ஐயோ இன்னைக்கு என்ன முத்த போட்டி எதாவது வைக்கிறாங்களா என்ன?இத்தனை கொடுத்துட்டு  இருக்கான்.’என்று ப்ரீத்தி இருந்த இடத்தில் இருந்தே நெளிந்து கொண்டு இருந்தாள்.

‘வேணாம் அவனை பார்க்காதே.’என்று மூளை இட்ட கட்டளை ப்ரீத்தியின் கண்களுக்கு எட்டாமல் போக நொடிக்கொரு தரம் அவள் கண்கள் அர்ஜுனிடமே பாய்ந்தது.ப்ரீத்தி கண்கள் ஒவ்வொரு முறை அவனை தழுவும்  போதும், உதடு குவித்து இருந்த இடத்தில் இருந்தே முத்தமொன்றை கொடுத்த கொண்டிருந்தான் கணக்கு வழக்கில்லாமல் .

ப்ரீத்தியும் அவனை பார்ப்பதும்,அவன் முத்தம் தருவது போன்ற செய்கையில் அதிர்ந்து,திகைத்த எங்கோ பார்ப்பது போல் முகத்தை திருப்பி கொண்டாலும்,மீண்டும் மீண்டும் அவள் கண்கள் அர்ஜுனிடம் மட்டுமே சென்றது.

தன் கீழ் உதட்டை பற்களால் கடித்தபடி ப்ரீத்தி தலை குனிய,அவள் பற்களின் இடையில் கடிபட்டு இருந்த உதட்டின் மேல் பார்வை பதித்த அர்ஜுன் கண்கள் விபரீதமாய்  ஜொலிக்க ஆரம்பித்தது.மீண்டும் அந்த இதழ் தேனை,அமிழ்தத்தை பருகும் எண்ணம் அவனை அலைக்கழித்தது.

இரு விழிகள் வாட்போரினை தொடங்க இந்த முறை அர்ஜுன் பார்வை ப்ரீத்தியின் உதடுகளை மட்டுமே பார்த்தவாறு முத்தமிடுவது போல் தன் உதட்டை அர்ஜுன் குவிக்க ப்ரீத்திக்கு குப்பென்று வியர்த்தது.

‘கொன்னுடுவேன்’என்று ப்ரீத்தி ஒற்றை விரல் தூக்கி காட்டி எச்சரிக்கை விடுக்க,அதற்கும் நீண்ட முத்தம் ஒன்றை அவன் அனுப்பி வைக்க,ப்ரீத்திக்கு தான் எங்கே முட்டி கொள்வது என்று தெரியவில்லை.

‘இவன் மேல் கோபமும் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.அய்யோ படுத்தறானே.’என்று ப்ரீத்தி முனக,’ஏன்மா ப்ரீத்தி செல்லம் அவன் செய்வதற்கு நீ கோபபடுறியா இல்லை அவன் அங்கே தூரத்தில் இருந்து இதை எல்லாம் கேனை மாறி செய்து கொண்டிருக்கிறானே என்று ரொம்ப பீல் செய்துட்டு இருக்கியான்னு ஒரு சின்ன டவுட் பேபி.கொஞ்சம் க்ளாரிப்பை செய்தால் நல்லா இருக்கும்.’என்று மனசாட்சி வேறு வந்து அவள் எதற்காக கோபப்படுகிறாள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு மௌனமாகி விட,ப்ரீத்தி இருந்த இடத்தில் இருந்தே நெளிந்தாள்.

இருவருக்கும் இடையே பத்தடி தூரம் இடைவெளி இருந்தது. இவள் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க,அர்ஜுன் வேறு ஒரு சோபாவில் அமர்ந்து இருந்தான். அங்கிருந்தவாறே இத்தனையும் செய்து கொண்டிருந்தான் ‘பூனையும் பால் குடிக்குமா’ என்று முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு.

இன்னும் என்னவெல்லாம் ட்ரை செய்து இருப்பானோ, அதற்குள் ஜெஸ்ஸியும்,ரஞ்சித்தும் ப்ரீத்தி அருகில் வந்து அமர்ந்தனர்.அவர்கள் வந்த பிறகு தான் தான் மூச்சு விடுவதையே மறந்து அர்ஜுனையே  பார்த்து கொண்டிருக்கிறோம் என்பதே ப்ரீத்திக்கு புரிந்தது.   

“வன்சினி ஆன்ட்டி போட்டோ பார்க்க வேண்டும் என்று சொன்னாயா ப்ரீத்?”என்ற  ரஞ்சித் தன் பாம் டாப் எடுத்து அதில் அர்ஜுன் குடும்பத்தை பற்றிய ஹோம்பேஜ் எடுத்து கொடுத்தான்.

அதற்குள் அர்ஜுன் ஏற்படுத்திய மாய வலைக்குள் இருந்து தன்னை மீட்டு கொண்ட ப்ரீத்தி அவனை முறைத்து பார்த்து விட்டு ரஞ்சித் கொடுத்த பாம்டேப்பிற்குள் தலையை புதைத்து கொண்டாள்.

‘உன்னை நான் அறிவேன்.’என்பது போல் வாய் மூடி சிரித்த அர்ஜுன்,’ தனியா மாட்டாமலா போய் விட போறே?.அப்போ இருக்குடீ உனக்கு.’என்று மனதிற்குள் அர்ஜுன் வெகு தீவிரமாய் பிளான் போட்டு விட்டதை பாவம் ப்ரீத்தி அறியவில்லை.

அருகில் இருந்த குருதேவ் எதையோ கேட்க அவர் பேச்சில் கவனமானான் அர்ஜுன். மற்றவர்கள் வன்சினி பற்றிய பேச்சிலும்,கடந்த காலத்தை அசை போடுவதிலும்,பஞ்சாப் மட்டும் இல்லாமல் இந்தியாவை இந்த போதை வஸ்துக்கள் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை பற்றி பேசி கொண்டு இருக்க, ப்ரீத்தியோ அர்ஜுன் பற்றிய விக்கிபீடியா பேஜில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும் இவர்கள் பேசுவதிலும் காதை வைத்து கொண்டு தான் இருந்தாள்.

சிலவற்றை ஜெஸ்ஸியும்,சிலவற்றை ரஞ்சித்தும் அவர்களுக்கு மொழி பெயர்த்து அங்கு அர்ஜுன் குடும்பம் விவாதிப்பதை சொல்லி கொண்டு இருந்தனர்.

அவர்கள் பற்றிய நான்கு ஐந்து தலைமுறை வரலாற்றினை அந்த பக்கம் விவரித்து கொண்டு இருந்தது ஏதோ சரித்திர கதையை போல். ஒவ்வொரு தலைமுறை பற்றிய விவரிப்பும்,அவர்களின் ஒவ்வொரு வாரிசு பற்றிய தனி பக்கங்களும் விரிந்தன.

சிலவற்றை ஸ்கிப் செய்த ப்ரீத்தி நேராக உபிந்தர் பாட்டியா பக்கத்திற்கு சென்றாள். அவரின் ஆர்மி மேஜர் வாழ்க்கை, அவரின் மனைவி புகழ்பெற்ற டாக்டர் என்பதும், சில வருடம் டெல்லியில் பணியாற்றி இருக்கிறார் என்பதும், அங்கு நடந்த அரசியல் கலவரத்தில் இறந்து போனார் என்பதும் சொல்ல பட்டது.

அடுத்து வீரேந்தர்,யதுவீர்,வன்சினி,விர்து  என்று அவரின் பிள்ளைகளின் பக்கங்கள் புகைப்படங்களோடு இருந்தது.அவர்களின் படிப்பு, தொழில், குடும்ப வாழ்வு பற்றிய முழு டீடைல் கொடுத்தது.

அர்ஜுன் பக்கம் அவனை பற்றிய தீசிஸ் செய்தது போல் அத்தனை தெளிவாக,விவரமாக இருந்தது.அர்ஜுன் பக்கங்களை படிக்கச் படிக்க ப்ரீத்தி தன்னையும் அறியாமல் பல முறை நிமிர்ந்து தன் குடும்பத்துடன் பேசி கொண்டு இருந்த அர்ஜுனின் மேல் கண்களை செலுத்தினாள். முகத்தில் அப்படி ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டு இருந்தது.  

‘இந்த சர்தார் அநியாயத்திற்கு நல்லவனாலே இருக்கான். யப்பா சாமி படிக்கச் படிக்கச் தலை சுத்துது.அவனவன் ஒரு வேளை சாப்பாடு போட்டுட்டு,ஒரு முறை நல்ல துணி எடுத்து கொடுத்துட்டு, பிறந்த நாளுக்கு மட்டும் தானம் பண்ணிட்டு என்னவோ கர்ணன் ரேஞ்சுக்கு FLEXI வைப்பானுங்க, மூஞ்சி பூக்கில் அப்படி தம்பட்டம் அடிப்பானுங்க.

ஆனா இவன் தினமும் இத்தனை நல்லது செய்யறான் எதை பற்றியும் வெளியே சொல்லி கொள்வதே இல்லையே. அடியாத்தீ.’என்று எழுந்த வியப்பை, திகைப்பை அர்ஜுன் மேல் மதிப்பை ப்ரீத்தியால் விளக்கவே முடியவில்லை.

‘உண்மையான பக்திக்கும்,மனபூர்வமான சேவைக்கும் விளம்பரம் தேவையில்லை தானே.மக்கள் சேவையிலே முழுகி இருப்பவர்கள் தாங்கள் இதை செய்கிறோம் என்று பிரகடன படுத்தி கொள்வதும் இல்லை.

அவர்கள் சூரியன் போல் பிரகாசிப்பவர்கள்.அவர்களுக்கு விளம்பரம் தேவையில்லை.அவர்கள் செய்யும் செயல்களே அவர்களுக்கான விளம்பரம்.ஹாட்ஸ் ஆப் அர்ஜுன் .யு ஆர் கிரேட் மேன்.’என்று ப்ரீத்தி மனம் அவனுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் பணியில் மிக தீவிரமாக இறங்கியது.

தலைவியே தலைவனுக்கு ரசிகர் மன்றம் மனதிற்குள் அமைக்கும் பணியில் மிக தீவிரமாக இறங்கி விட்டாள்.

அந்த பக்கத்திலேயே அர்ஜுனின் முகநூல் பக்கமும் இருக்க அதில் நுழைந்த ப்ரீத்தியின் வாய் தானாக திறந்தது.

‘அட கடவுளே…இத்தனை லட்சம் நட்புக்களா?விட்டா ஒவ்வொரு வீட்டிலும் இவன் படத்தை வைத்து பூஜை செய்வானுங்க போல் இருக்கே…பீகிள் பட வெறித்தனமாய் லே இருக்கு…’என்று மலைத்து போய் அவன் பதிவுகளை படித்து கொண்டு இருந்தாள்.

அதில் அவன் வீட்டு விசேஷங்கள்  நடைபெறும் போது எடுக்க பட்ட புகைப்படங்கள்,வீட்டில் உள்ளோருக்கு திருமண நாள்,பிறந்த நாள்  வாழ்த்துக்கள்,  புகைப்பட ஸ்லைடு ஷோ என்று அவன் குடும்பத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறான் என்பதை பறைசாற்றி கொண்டு இருந்தது.

அவன் அத்தை வன்சினியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்,திருமண நாளுக்கும்,இறப்பு தினம் அன்றும் கூட அவர் புகைப்படங்கள் வைத்து வீடியோ ஷோ ஒன்றே அமைத்து இருந்தான்.

அதில் சில வீடியோக்களை பார்த்த ப்ரீத்தி கண்கள் குறுகி, புருவம் சுருங்க ஆரம்பித்தது.சில புகைப்படங்களை தனியே எடுத்து ஒவ்வொன்றையும் கம்பேர் செய்ய ஆரம்பித்தவள் தன் கண்கள் காண்பதை நம்ப முடியாதவளாய் எதிரே இருந்த இருவரின் மேல்  பார்வையை பதித்தாள். கண்கள் திகைப்பில் விரிய,கண் முன்னே தெரியும் காட்சியை  நம்ப முடியாமல் ப்ரீத்தியின் மூளை திணற ஆரம்பித்தது.   

“ரஞ்சித்…அந்த ஸுல்பா யாருன்னு தெரிஞ்சுதா?”என்றாள் ப்ரீத்தி சட்டென்று வெகு சத்தமாக.

இவள் குரல் கேட்டு அங்கங்கே பேசி கொண்டு இருந்தவர்கள் கூட தங்கள் பேச்சை நிறுத்தி விட்டு இவளை பார்க்க ஆரம்பிக்க,அதில் இருவரும் மட்டும் அதிகமாய் அதிர்ந்தனர்.

அதை கேட்டு அங்கிருந்த இருவர் விரைத்து நிமிர்த்தனர். அவர்கள் மேல் கண் வைத்திருந்த ப்ரீத்தியின் கண்களுக்கு இந்த ரியாக்ஷன் தப்பவில்லை. 

“நோ ஐடியா…அவங்க பெண் என்பதை தவிர கறுப்பா, சிவப்பா, நெட்டையா குட்டையா என்று எந்த விவரமும் இல்லை.”என்றான் ரஞ்சித்.

‘கடவுளே இது எப்படி சாத்தியம்?வீட்டில் உள்ள ஒருவருக்கு கூடவா சந்தேகம் வரவில்லை?இல்லை கண்ணுக்கு முன் மீண்டும் மாயத்தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். CGF இல்லாமல் இப்படி ஒரு இல்லுசன் எப்படி உருவாக்க முடிந்தது?சந்தேகம் வர வாய்ப்பேயில்லை.ஏனென்றால் இதன் பின் இருப்பவர் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டவர் ஆயிற்றே.’என்றது ப்ரீத்தியின் மனது.

“சாகும் முன் வன்சினி ஆன்ட்டி நிறைய பணம் குருதேவ் அங்கிள் கிட்டே இருந்து எடுத்திருக்காங்க என்று இப்போ இவங்க சொன்னாங்களே…அது யாருக்கு அனுப்ப பட்டது என்று ட்ரேஸ்  செய்ய முடிந்ததா?”என்றாள் ப்ரீத்தி.

“அது டெல்லிக்கு தான் போய் இருக்கு.இன்னும் சொல்ல போனால் வன்சினி, தன் அம்மா அன்யாவுக்கு தான் அனுப்பி இருக்காங்க.அதை அவங்க இன்னொரு ஹோச்பிடலுக்கு ட்ரான்ஸபெர் செய்து இருக்காங்க. அது கலவர நேரம்.அதற்கு மேல் ரெகார்ட் கிடைக்கலை.இந்த ஆங்கிள் எல்லாம் நாங்க ஏற்கனவே கவர் செய்தாச்சு. ஒண்ணும் தேறலை.மெக்ஸிகோவிற்கு ஆள் அனுப்பி இருக்கோம் அங்கே கிளறி பார்க்க… அங்கிருந்து தகவல் எதாவது வந்தால் தான் உண்டு.”என்றான் ரஞ்சித்.

“அந்த கலவரம் எதனால் நடந்தது ரஞ்சித்?”என்றாள் ப்ரீத்தி.

“அதான் இதோ கொட்டை எழுத்தில் போட்டு இருக்கானே… இவன் சிலையை அவன் உடைத்தான், இவன் மத நூலை அவன் கொளுத்தினான் என்று வழக்கமாய் எல்லா மத கலவரங்களின் ஆரம்பம் இப்படி தானே.அந்த காலம் இன்னும் கேட்கவும் வேண்டுமா?”என்றான் ரஞ்சித்.

“இது ஏன்  காபோஸ் வேலையாய் இருக்க கூடாது?”என்ற ப்ரீத்தியின் கேள்வியில் குடித்து கொண்டு இருந்த டீ புரை ஏற,கண்கள் சிவந்து தொடர்ந்து இரும்பவே ஆரம்பித்து விட்டான் ரஞ்சித்.

தன்னை சமாளித்து கொண்டு நிமிர்ந்தவன்,”யம்மா தாயே …பராசக்தி…உன் கற்பனை வளத்திற்கு அளவே இல்லையாமா? அது மத கலவரம்.இதற்கும் கபோஸிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆளை விடு.”  என்றான் கை எடுத்து கும்பிட்டவனாய்.

“இதை பின் இருந்து டைரக்ட் செய்தது காபோஸ் இல்லையென்று ஆதாரம் இருக்கா ரஞ்சித்.?”என்றாள் ப்ரீத்தி விடாமல்.

“என்ன சொல்ல வரே ப்ரீத்தி நீ?”என்றாள் இவர்கள் பேச்சை கேட்டு கொண்டு இருந்த ஜெஸ்ஸி.

“இல்லை இங்கே விக்கிபீடியா பக்கத்தில் அர்ஜுன் பாட்டி அந்த கலவரத்தில் இறந்த தேதி போட்டு இருக்கு.அதுக்கு ஒரு வாரம்  முன்பு தான் வன்சினி ஆன்ட்டி,அவங்க அம்மா அன்யாவிற்கு அந்த பணத்தை வங்கி கணக்கு மூலமாய் அனுப்பி வைத்து இருக்காங்க.

இப்போ ரஞ்சித் பணப்பரிவர்தனையை கண்டு பிடித்தது போல் அப்பொழுதே அந்த காபோஸ் ஏன் இந்த பணத்தை தொடர்ந்து இருக்க கூடாது? வன்சினியை காபோஸ் கொன்றான் என்பது உறுதி என்றால் அர்ஜுன்   குடும்பத்திற்கே அவங்க ஸுல்பா என்ற பெண்ணிற்கு உதவி கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாத போது அவனுக்கு மட்டும் எப்படி தெரிந்து இருக்க முடியும்?

வன்சினி நடவடிக்கைகளை உளவு பார்த்தால் ஒழிய அவர் எங்கே போகிறார்,வருகிறார் கண்காணித்தால் ஒழிய இந்த பணம் வன்சினி தன் அம்மாவுக்கு அனுப்பியதை கண்டு பிடித்திருக்க முடியாது ரஞ்சித்.இங்கே இருந்து தான் பணம் அன்யா பாட்டிக்கு போய் இருக்கு.” என்றாள் ப்ரீத்தி

“சரி தானே ….எல்லோரும் அந்த பணத்தை வன்சினி போதை மருந்து வாங்க மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் என்று தவறாக நினைத்தோமே என்று இப்போ தானே வருந்திட்டு இருக்காங்க… இவர்களுக்கே தெரியாத ஒன்று அந்த பணம் எங்கே போனது என்பது. அது அன்யா பாட்டிக்கு தான் போனது என்பது பேங்க் பரிவர்த்தனை பற்றிய விவரம் அறிந்தால் ஒழிய தெரிந்து கொள்ள முடியாது தானே.” என்றாள் ஜெஸ்ஸி.

“அது மட்டும் இல்லை…இன்று அர்ஜுன் அம்மா ராஷ்மி உண்மையில் ஹார்ட் அட்டாக் வந்திருந்தால், அங்கே பதிண்டா அரசாங்க மருத்துவமனையில் தான் சேர்த்திருப்பாங்க. அப்போ ஒட்டுமொத்த அர்ஜுன் குடும்பம் அங்கே ப்ரெசென்ட்.இவங்களை ஒட்டுமொத்தமாய் போட்டு தள்ள தானே காபோஸ் பாம் வைத்தது.அது மட்டும் நடந்து இருந்தால் அப்போ இது கொலைகள் அல்ல,தீவிரவாத தாக்குதலாய் திசை மாறி போய் இருக்கும்.

இந்த குடும்பத்தை டார்கெட் செய்தார்கள் என்று நம்ப யாருக்கும் காரணமே இல்லையே. ஏனென்றால் இந்த குடும்பத்திற்கு சுற்றுவட்டாரத்தில் யாருமே எதிரியோ, பகைவர்களோ இல்லை. அப்படி இருக்கும் போது இவர்களை தான் டார்கெட் செய்தார்கள் என்று நீயே நம்ப மாட்டே ரஞ்சித். எல்லோர் போகஸும் யாஷ்வி மேல் தான் இருந்திருக்கும்.அவளை கொல்ல வைக்கப்பட்ட பாம்  நீயே விசாரணையை கொண்டு போய் இருப்பே. “என்றாள் ப்ரீத்தி.

“அப்போ அன்னைக்கு டெல்லியில் நடந்தது கலவரம் இல்லை, மத கலவரம் என்ற பெயரில் அன்யா மேடம், ஸுல்பாவை போட்டு தள்ள போடபட்ட பிளான் என்கிறாயா என்ன?”என்றான் ரஞ்சித்.

“பொசிபிலிட்டி இருக்குன்னு தான் சொல்றேன்.இங்கே அவன் முயன்றதை ஏன் முன்னரே வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க கூடாது?தன்னை யார் என்று வெளி காட்டிக்கொள்ளாமல் இருக்க அவன் ப்ரம்மபிரயத்தனம் செய்து கொண்டு இருக்கிறான்.அது ஏன் அப்பொழுதே ஆரம்பித்து இருக்க கூடாது?

அன்யா ஸுல்பாவுடன் சம்மந்த பட்டவர், நிச்சயம் அன்யா பாட்டி டாக்டர் என்பதால் ஸுல்பாவிற்கு தேவைப்பட்டு இருக்கும் மருத்துவ உதவியையோ,பண உதவியையோ  செய்திருக்க வேண்டும்.அதற்காக தான் வன்சினி ஆன்ட்டி அவருக்கு அவ்வளவு பெரிய அமௌன்ட் அனுப்பியிருக்காங்க.

அவங்களும் அந்த பணத்தை அனுப்பிய இடம் இன்னொரு ஹாஸ்பிடல் தானே?.அது ஹாஸ்பிடல்,அங்கு யாருக்கு அனுப்பினாங்க என்று தெரிந்தால் ஸுல்பாவை கண்டு பிடிப்பது சுலபமாய் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.      

ஸுல்பா கபோஸோடு  ஏதோ ஒரு லிங்க் என்னும் போது இதை கொலையாக செய்தால் அது அவன் பக்கம் அல்லவா கையை காட்டும்?

அன்யாவிற்கு பணம் அனுப்பியது வன்சினி.அவரும் இதுக்காலம் வரைக்கும் மாடி படியில் தவறி விழுந்து இறந்ததாய் தானே ஊர் உலகத்தையே நம்ப வைத்து இருக்கிறான் அவன்.அதே போல் டெல்லி மத கலவரமும் ஏன் ஒரு மாஸ்க்,ஒரு இரும்பு திரையாக இருக்க கூடாது? அவன் ரியல் டார்கெட் எது என்று யாரும் அறிய கூடாது என்பதற்காக  இப்படி செய்து இருக்க வாய்ப்பிருக்கிறது தானே?”என்றாள் ப்ரீத்தி.

‘ஒரு குடும்பத்தை அழிக்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து போகும் ஒரு மருத்துவமனைக்கு குறி வைத்தவன்,ஏன் இரு பெண்களை கொல்ல ஒரு மத கலவரத்தையே உண்டாக்கி இருக்க கூடாது? லாஜிக்கனா கேள்வி தான்.அந்த அளவிற்கு காபோஸ்  துணிவானா?’ என்ற கேள்வி ரஞ்சித் மனதில் அடுத்த நொடி அந்த அறையை விட்டு வெளியேறினான் ரஞ்சித்.

 பக்கத்து அறையில் இருந்து பாதுகாப்பு லைன் மூலமாக தன் தலைமைக்கு தொடர்பு கொண்ட ரஞ்சித், அந்த கலவரத்தை பற்றிய தகவல் திரட்ட சொன்னான். தகவல்களுடன் திரும்ப அழைப்பதாய் அவனின் ஹை கமாண்ட் பதில் அளித்தார்கள்.

நாட்டில் சென்சேஷனல் நிகழ்வு என்றால் அதன் பற்றியஆய்வு அறிக்கை இன்டெலிஜென்ஸ் துறைக்கு வந்து சேரும்.மேலும் தகவல் தேவை,வந்த தகவல் போதவில்லை,நிறைய ஓட்டைகள் இருக்கிறது என்றால் வெளியே யாருக்கும் தெரியாமல் இவர்களே விசாரணை நடத்தி இருப்பார்கள்.

அந்த தகவல் வந்து சேரும் வரை பல எண்ணங்கள் வலம் வர, மீண்டும் ப்ரீத்தி இருந்த அறைக்குள் யோசனையுடன் தான் வந்து சேர்ந்தான் ரஞ்சித்.

 “என்னடா ரொம்ப யோசனையா இருக்கே?”என்றாள் ப்ரீத்தி.

“ஆமா நீ உன் இஷ்டத்திற்கு இப்படி சொன்னால் அதை கேட்பவனுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாதா? அதிலும் இந்த கேஸ் எங்கெங்கோ போகுது.இதில் இது வேறு என்றால் நம்புவுதோ,டைஜஸ்ட் செய்வதோ கொஞ்சம் டைம் ஆகும். இது கதை இல்லை ப்ரீத்தி. எல்லாத்துக்கும் எவிடென்ஸ் தேவை.வாய் இருக்குன்னு பேசிடலாம்.ஆனால் அதை ப்ரூப் செய்யணும்.”என்றான் ரஞ்சித் ப்ரீத்தியின் லாஜிக்கில் இருந்த நடைமுறை சிக்கல்களை தெளிவு படுத்தியவனாக.

“controversial மரணங்கள்,விபத்துக்கள்  எல்லா நாட்டிலும் நடப்பது உண்டு தானே ரஞ்சித்?”என்றாள் ஜெஸ்ஸி.

“யெஸ்…மும்பை அட்டாக் எடுத்து கொண்டால் jew கம்யூனிட்டி ஒன்று கூடும் நரிமன் பாயிண்ட்டில் உள்ள “சபாத் வீடு”  தாக்கப்பட்டது.அந்த வீடு இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானது.அது போன்ற 4000 வீடுகள் 73 நாடுகளில் இருக்கின்றன. மும்பை இந்தியாவின் பைனான்சியல் தலைநகரம்.பில்லியன் கணக்கான பணம் நொடிக்கொரு தரம் உள்ளே வருவதும் போவதுமாய் இருக்கும் ஹாட்ஸ்பாட்.

தாக்க வேண்டும்,அதிக சேதாரம் உண்டாக்க வேண்டும் என்றால் அதை விட மிக முக்கிய இடங்கள் மும்பையில் இருக்கும் போது,சபாத் வீடு ஹை டார்கெட் இல்லையே.ஆனால் அங்கு தானே அட்டாக் நடந்தது.      

 இதே போல் 2008 அகுளா/akula வகை nuclear powered நீர்முழ்கி கப்பல், பெரோன்/feron என்ற வாயு ரிலீஸ் ஆகி ரஷ்யர்கள்  20 பேர் இருந்தார்கள். அதே வகை மரணம் தான் நம்ம போர்க்கப்பல் INS சிந்துரத்தனாவிலும் நடந்தது.

USS COLE என்ற அமெரிக்கா கப்பல் தாக்குதல் ,PNS MEHRAN அட்டாக்  நிறைய CONTROVERSY உள்ள விபத்துகள், கொலைகள், மரணங்கள்  வரலாறு முழுக்க நிறையவே உண்டு.ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கிலும் இது போல் முரண் பட்ட கருத்துக்கள் உண்டு..” என்றாள் ப்ரீத்தி.

“யம்மா தாயே …என்ன நீ விட்டா இதை பற்றி ஒரு லிஸ்டே தயாரிப்பே போல் இருக்கே.இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கா என்ன?”என்றாள் ஜெஸ்ஸி.

“இருக்கலாம் என்று தான் சொல்றேன்…இருக்குன்னு சொல்லலை. எதற்குமே ரெண்டு பக்கம் என்பது நிச்சயம் உண்டு. வயிற்று வலியால் பெண் தற்கொலை என்பது எல்லாம் 80-90களில் மிக அதிகமாய் வரும் நியூஸ். அவர்கள் மரணத்திற்கு பின் வயிற்று வலி இருந்திருக்காது என்பது ஊர் அறிந்த உண்மை.ஒரு பெண் மரணம் என்றால் உடனே காதல் என்று கதை கட்டுவது எல்லாம் ரொம்ப சாதாரணம்.காதல் என்ற வார்த்தை வந்ததும் அதன் பிறகு ஒரு மரணத்தை யாரும் ஆராய்வது இல்லை.

ஏன் ரஞ்சித்திடமே கேளு.போன வருடம் மதுரா தான் ஒரு கப்பல் கன்டைனரில் இருந்து 300 பெண்களை காப்பாற்றினாள். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் மட்டுமல்ல பல வெளிநாடுகளில் பலர் கைது செய்யப்பட்டனர்.பலர் மாயமாய் மறைந்தனர்.அந்த பெண்களை காப்பாற்றிய ஆர்மி குழுவின் தலைவர் மகன் தான் இது எல்லாவற்றின் பின் இருந்தவன்.டெங்கு வந்து செத்து போய்ட்டான் என்று தான் நியூஸில் வந்தது.

ஆனா எந்த பெண்களை காமத்தின் சின்னமாய் மட்டுமே பார்த்தானோ அதே 300 பெண்களின் காலில்  மிதிப்பட்டே செத்தான் அவன்.இப்படி இது மட்டும் இல்லை பல கேஸ் இருக்கு…

PLAUSIBLE DENIABILITY என்பார்கள்.எது மக்களுக்கு தெரியவில்லையோ அது அவர்களை பாதிக்காது.இவர்கள் வெளியே சொல்வதும் இல்லை… உண்டா இல்லையான்னு தோ இருக்கானே..அந்த பெண்கள் கடத்தல் வழக்கை நடத்தியவன் இவனிடம்கேளு…ஒத்துக்க மாட்டான்.

அது தவிர அதில் ஈடுபட்ட சில வக்கிர பிடித்த மிருகங்களை கண்டைனர் உடன் ஜலசமாதி செய்தார்கள்.மக்களுக்கு தெரிந்தால் தானே இந்த மிருகங்களுக்கும் ‘ஹியூமன் ரயிட்ஸ்’ இருக்குன்னு நாலு பேர் குதிப்பாங்க.இவங்க எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை என்றால் ‘தேடி கொண்டிருக்கிறோம்’ என்பதுடன் முடிந்து விடும். மக்களுக்கு தெரியும் படி எதையும் செய்தால் தான், இன்னும் சொல்ல போனால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தால் கூட வீடியோ ஆதாரம் தேவை என்று குரல் வரும்.

‘பேபி’ என்ற ஹிந்தி படம் போல் எல்லாவற்றையும் தெரியாமல் செய்து விட்டால்,எது மக்கள் அறிவதில்லையோ அது அவர்களை பாதிக்க போவதில்லை.

IGNORANCE IS BLISS.வெளியே தெரியாமல் எத்தனையோ வெடி குண்டுகள் இந்தியாவில் வெடிக்க செய்யாமல் நம் ராணுவம் செயல் இழக்க செய்திருக்கிறது. மாஸ் PANIC வராமல் சத்தம் இல்லாமல் இன்று ஹாஸ்பிடலில் டிஸ்ஆர்ம் செய்தது போல் செய்து விடுவார்கள்.”என்ற ப்ரீத்தி பேச்சை கேட்டு ஜெஸ்ஸி ரஞ்சித்தை பார்க்க,அவன் ப்ரீத்தி சொன்னதை மறுக்கவும் இல்லை,ஒற்று கொள்ளவும் இல்லை.             

 அவன் இந்த செய்கை plausible deniability- -நம்பத் தகுந்த மறுப்பு.                 

“மம்முட்டி நடித்த நிறைய மலையாள படங்கள் இது போன்ற முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டது தானே? 1998 வெளிவந்த ‘தி ட்ருத்/the truth,1988 வெளிவந்த ‘Oru CBI Diary Kurippu’,என்று கிட்டத்தட்ட பத்து படங்கள்  இதே போல் கொலைகளை விபத்தாகவும், தற்கொலையாகவும் மாற்றியதை அடிப்படையாக கொண்டவை.

அதை போல் அர்ஜுன் பாட்டியின் மரணம் ஏன் கொலையாக இருக்க கூடாது? வன்சினி அத்தையின் கொலை எப்படி விபத்தாய் மாற்றப்பட்டு இருந்ததோ அதே போல் கலவரத்தால் மரணம் என்று மாற்றி இருக்க வாய்ப்பு உண்டு தானே?”என்றாள் ப்ரீத்தி.

அவள் பேச்சு அங்கிருந்தவர்களை திகைக்க வைத்தது. அடுத்து என்ன சொல்வது செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தனர் கையை பிசைந்தவாறு.

மிக பெரிய போதை மருந்து சாம்ராஜ தலைவன் அது நாள் வரை ஏற்படுத்தி இருந்த மாய திரையை,கொலைகளை கலவரம்,தற்கொலை,விபத்து என்று அவன் மாற்றி இருந்த அதி முக்கியமானவர்களின் மரணத்தை எல்லாம் ‘இருக்கலாம்,ஏன் இருக்க கூடாது’என்று கேட்டு கேட்டே ப்ரீத்தி பினிஷ் செய்து இருந்தாள்.

இவர்கள் இருக்கும் இடத்தை trace மூலம் தெரிந்து கொண்டு விட கூடாது என்று எல்லார் மொபைல்லும் சரண் வாங்கி சென்றிருக்க,ரஞ்சித் மொபைல் எடுத்து கொண்டு இன்னொரு அறைக்கு சென்றாள் ப்ரீத்தி.

அர்ஜுன் குடும்ப புகைப்படங்களை பார்த்ததில் இருந்து ஏதோ ஒன்று அவளை குடைந்து கொண்டிருந்தது.அதை நிவர்த்தி செய்ய அவள் அழைப்பு டெல்லிக்கு பறந்தது.

“ஹலோ டாக்டர் மயூரி ஹரிபிரசாத் ஹியர்”என்றது எதிர் முனை.

இந்த டாக்டர் தான் FBI,இன்டர்போல் ‘மோஸ்ட் வான்டெட் லிஸ்டில்’ ஐந்தாம் இடத்தில் இருக்கும்,இந்தியாவை குறி வைத்து அழிக்க நினைக்கும் ‘டெவில்/சாத்தான்’ என்று அழைக்கப்படும் தீவிரவாதிக்கும், அவன் தலைமைக்கும் பிற்காலத்தில் ஆப்பு வைக்க போகும் ஆழிப்பேரலை.

பெண்ணை தீய எண்ணத்துடன் தொடும் எவனும் வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை.சீதையை இராவணன் கவர்ந்ததால் ராமாயணம்,திரௌபதியை துகில் உரிந்ததால் மஹாபாரதம்,நாளை இந்த மயூரியால் இந்தியாவின் எல்லை பகுதியே பற்றி எரிய எரிய போவதில் சில  அரக்க கூட்டங்கள் அழிய போகிறது.

மனம் கெட்டு தசரதன் செத்து செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே

அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டது பெண்ணாலே

பாலைவனம் எங்கும் மூளை கெட்டு மஜுன்னு போனதும் பெண்ணனாலே

அந்த ரோமாபுரி அன்று ரத்தக்குளம் என்று ஆனதும் பெண்ணாலே

இந்த கால கட்சிகளும் ரெண்டாச்சு பெண்ணாலே

பெண் என்பவள் ‘ஆக்க சக்தி’ மட்டும் இல்லை,மனம் வைத்தால் சாம்ராஜ்யங்களையும்,ஒரு நாட்டின் தலைவிதியையுமே மாற்ற கூடிய ஆற்றல் உள்ளவர்கள் என்று  தீவிரவாத குழுக்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

“ஹாய் மயூரி…நான் ப்ரீத்தி பேசறேன் யா.?’என்றாள் ப்ரீத்தி.

“ஹாய் ப்ரீத்தி…வாட் எ பிளசண்ட் சர்ப்ரைஸ்…எப்படி இருக்கே…?”என்றாள் மயூரி.

“டூயிங் குட் மா …நீ பிரீ தானே பேசலாமா?”என்றாள் ப்ரீத்தி.

“எஸ் இப்போ தான் ஒரு ஆபரேஷன் முடிச்சுட்டு வந்தேன்.பிரீ தான் வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்.இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் எல்லை பகுதிகளில் மெடிக்கல் கேம்ப் போக போகிறோம் சோ அதற்கான ப்ரீபரேஷன் போய்ட்டு இருக்கு.”என்றாள் மயூரி.

“எந்த இடம்?’என்றாள் ப்ரீத்தி.

“———–“என்று ஒரு இந்திய எல்லை பகுதியை சொல்ல,ப்ரீத்தி அதிர்ந்தாள்.

“ஏய் அந்த இடம் ரொம்ப டேஞ்சரோஸ் ஆன இடம். தீவிரவாதிங்க ஹப் அது.பொதுமக்களோடு பொது மக்களாய் இருந்து கொண்டே திடீர் திடீர் என்று கல்லை அடிப்பதும்,பெட்ரோல் குண்டு வீசுவதும்,ஆட்களை பணத்திற்காக கடத்துவதும் அதிகமாகி இருப்பதாய் நியூஸ்சில் சொன்னாங்களே பா…அங்கே.நீ?”என்றாள் ப்ரீத்தி பயத்துடன்,தோழியின் உயிருக்கு பயந்தவளாய்.

“அங்கே போகலை என்றால் மட்டும் நான் என்ன ஐயாயிரம் வருஷம் உயிர் வாழ போறேனா என்ன?என்றைக்கோ போகும் உயிர் அங்கே தான் போக வேண்டும் இன்று என் தலையில் எழுதி இருந்தால் அதை மாற்றவா முடியும்?ஏன் கடந்த ஒரு வருசமாய் ‘டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற குழுவில் யுத்தம் நடக்கும் சிரியா,ஆப்கான்,ஈராக் என்று எல்லா இடங்களுக்கும் தானே போய்ட்டு வந்தேன்.அப்போ எல்லாம் எதுவும் நடக்கவில்லை ப்ரீத்தி.”என்றாள் மயூரி.

“அங்கே நடக்கவில்லை என்பதற்காக இங்கே நடக்காது என்று என்ன உத்திரவாதம்?உன் உயிர் போனால் கூட ஒன்றும் இல்லை.ஹோஸ்டேஜ்/பணய கைதியாய் பிடித்து நடு ரோட்டில் விற்பது எல்லாம் அங்கே சகஜம்.பெண்கள் எல்லாம் அங்கே படுக்கைக்கு,பிள்ளை பெற,சமைத்து போட மட்டும் தான் என்று இன்னும் பெண்களை வீட்டு வாயிலை கூட தாண்ட விடாத மூர்க்க கூட்டம் உள்ள இடம்.

வெளியே தெரியாமல் எத்தனையோ கொடூரங்கள் அங்கே பெண்கள் தினம் தினம் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் மயூரி.யோசித்து முடிவு எடு.எனக்கு ஏதோ இது சரியாய் வரும் என்று படவில்லை.SATP (South Asia Terrorism Portal) என்ற அமைப்பு அங்கே  180 மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் இருப்பதாகவும் இது உள் நாட்டு அமைப்பு மட்டுமே என்றும்,வெளிநாடுகள் அங்கே நடத்தும் குழு என்று அது ஒரு 50க்கு குறையாமல் இருப்பதாய் சொல்ராங்க.யோசி மயூரி.”என்றாள் ப்ரீத்தி தவிப்புடன்.

“ஒகே நான் பத்திரமாய் இருப்பேன்.உடன் காவலுக்கு ராணுவம் செக்யூரிட்டி ஏற்பாடு செய்து தான் இருக்கு.நம்ம பிரதமர் மகள் டாக்டர் தெரியும் இல்லையா.அவங்களே அங்கே மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார்கள்.சோ பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று யோசி.

என்னை எல்லாம் எந்த தீவிரவாதியும் தூக்கி போக மாட்டான்.அப்படியே தூக்கி போனாலும் இது ஒரு ‘இம்சை அரசி 30 புலிகேசினி’ என்று திரும்ப கொண்டு வந்து விட்டுட்டு போவான்.சரி சரி என் கதை இருக்கட்டும்…உன் கதைக்கு வா… நீ சாதாரணமாய் அழைக்க மாட்டாயே… என்ன செய்யணும் சொல்லு.”என்றாள் மயூரி.

“அங்கே டெல்லி AIIMS,அப்புறம் இன்னும் நிறைய கிளினிக்கில் டாக்டர் அன்யா என்பவர் பணி புரிந்து இருக்கார்.அவங்க கணவர் ஆர்மி மேஜர் உபிந்தர் பாட்டியா.அவங்களை அங்கே மத கலவரம் என்ற போர்வையில் கொன்று இருப்பாங்களோ என்று டவுட்.

அவங்க மெக்ஸிகோ போதை மருந்து குழுவிடம் இருந்து தப்பி வந்த ஸுல்பா என்ற பெண்ணிற்கு அங்கே எதோ ஒரு இடத்தில் வைத்து தான் ட்ரீட்மென்ட் செய்திருக்காங்க. பணம் இங்கே பஞ்சாபில் இருந்து தான் ட்ரான்ஸபெர் ஆகி இருக்கு.

என் கெஸ் சரியென்றால் ஸுல்பா என்று பெண் அங்கே இறந்திருக்கிறார்.கொஞ்சம் ரெகார்டஸ் தேடி பார்க்க வேண்டும்.சாரி உன் பிசி வேலையில் ரெகார்ட் எல்லாம் போய் தேட சொல்றேன்.”என்றாள் ப்ரீத்தி.

“யா அன்யா மேடம் பெயரில் இங்கே ஒரு தளமே இருக்கு.அவங்களுக்கு டெடிகேட் செய்து இருக்காங்க   ரெகார்டஸ் எல்லாம் டிஜிடைஸ் ஆக்கியாச்சு.ஒரு ஒன் ஆர் டூ அவரில் திரும்ப அழைக்கிறான்.இந்த சர்வரில்  இங்கே இல்லை என்றாலோ,அழித்து விட்டு இருந்தாலோ கஷ்டம் தான் ப்ரீத்தி.நார்மல்லா 10 வருடம் வரை ரெகார்ட் மெயின்டெய்ன் செய்வாங்க. ஒரு சில சமயம் 3 வருடங்களில் அழிச்சுடுவாங்க.

எதற்கும் ட்ரை செய்யறேன் ஏறக்குறைய 30 இயர் ஆகிடுச்சு இல்லை.ரெகார்டஸ் கிடைக்க சான்ஸ் 10% தான்.அந்த காலகட்டத்தில் இங்கே ஒர்க் செய்த டாக்டர்,லெக்சர் கொடுக்க வந்திருக்கார்.அவரிடம் பேசி பார்க்கிறேன்.”என்ற மயூரி அழைப்பை துண்டிக்க யோசனையுடன் மீண்டும் மற்றவர்கள் இருக்கும் அறைக்கே திரும்ப முயன்ற ப்ரீத்தி கண்ணில் பட்டதுஅந்த அறையில் மறைந்திருந்து அது வரை அவள் பேசியதை ஒட்டு கேட்ட ஒரு நபர், சட்டென்று விலகி முன் அறைக்கு சென்றது.

மீண்டும் ஹாலுக்கே திரும்பி வந்த ப்ரீத்தியின் கண்கள் விபரீதமாய் ஒளிர ஆரம்பித்தது அந்த அறையில் இருந்த இருவரின் நடவடிக்கைகளை பார்த்து.

ஒரு கரம் இன்னொரு கரத்தை ஆறுதலாய் தட்டி கொடுத்து கொண்டு இருந்தது.

‘அப்போ நான் போட்டு வாங்கியது கரெக்ட்டா தான் ஒர்க் ஆகுது… அப்போ அர்ஜுன் பாட்டி மரணம் கொலை தான்.அதை மறைக்க தான் மத கலவரம் தூண்டப்பட்டு உள்ளது.இந்த விஷயம் இவங்களுக்கு தெரிந்து இருந்தும் வாய் திறக்கவில்லை.அப்போ அந்த விஜிலாண்டி யார் என்ற என் கெஸ் தவற வாய்ப்பே இல்லை….காட் யு ஆல்.CHECKMATE’என்று மனதிற்குள் சொல்லி கொண்ட ப்ரீத்தி இதழ் புன்னகையை தத்து எடுத்தது.          

பயணம் தொடரும்…          

           

error: Content is protected !!