(child soldier-18 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு குழந்தையும் ஒரு ஆயுதப்படை குழுவால் பயன்படுத்தப்படுகிறார்கள். குழந்தை சிப்பாய் என்பது சண்டையில் ஈடுபடும் ஒருவர் மட்டுமல்ல. அவர்கள் சமையல்காரர்கள், போர்ட்டர்கள், தூதர்கள், மனித கேடயங்கள், ஒற்றர்கள், தற்கொலை குண்டுவீச்சுக்காரர்கள் அல்லது பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்தப்படுபவர்கள். உலகில் குறைந்தது 20 நாடுகளில் இன்று 250,000 child soldiers இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.சிறுவர் படையினரில் சுமார் 40% பெண்கள், அவர்கள் பெரும்பாலும் பாலியல் அடிமைகள்)
ப்ரீத்தி சுடப்பட்ட மறுநாள் மதியம் :-
அர்ஜுன் வேக தடை எல்லாம் உடைத்தெறிந்து,பேய்த்தனமாய் ஓட்டிய கார், ‘ஜாலியன்வால பாக் தியாகிகள் நினைவு மருத்துவமனையை’ வாயில் வந்து நிற்க,ஏற்கனவே தகவல் கொடுத்து இருந்ததால் அந்த ஹாஸ்பிடல் டீன்,நர்ஸ்கள் வெளியே ஸ்ட்ரெச்சர் உடன் காத்து இருந்தார்கள்.ஹை ப்ரொபைல் பேஷண்ட் ஆயிற்றே.
ப்ரீத்தியை தூக்கி ஸ்ட்ரெட்ச்சேரில் வைத்துஅர்ஜுன்,அமன் இருவரின் கரங்களும் குண்டு பாய்ந்த ஒவ்வொரு இடத்தில் வைத்து அழுத்தி வைத்த யோஜித்,ஸ்ட்ரெச்சர் உடன் உள்ளே ஓடினான் அறுவை சிகிச்சை அறை நோக்கி.
“குயிக்…பல்ஸ் ரொம்ப குறையுது.சீக்கிரம் சர்ஜெரி செய்யணும்.”என்றவன் ஓடியவாறே, நர்ஸ் ஒருவர் நீட்டிய scrubs அணிந்து கொண்டான்.சலைன் ட்ரிப்ஸ் ப்ரீத்தி கையில் ஏற்றப்பட்டது.
வெளியே இவர்கள் காரை தொடர்ந்து வந்த மீடியா வெளியே நின்று,”ப்ரீத்தி பிழைப்பாளா?”என்று விவாதிக்க ஆரம்பித்தனர்.
“இதோ இது தான் ப்ரீத்தியை கொண்டு வந்த கார்.பாருங்க உள்ளே எவ்வளவு ரத்தம்.”
“இது தான் ப்ரீத்தி சேர்த்திருக்கும் மருத்துவமனை.”
“இதோ ப்ரீத்தியை ஸ்ட்ரெட்ச்சேரில் வைத்து உள்ளே அழைத்து செல்கிறார்கள்.”
“அர்ஜுன் மேல் ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது?நாட்டிற்க்கு அவரும் அவர் குடும்பமும் செய்யும் நல்லது யாருக்கு பிடிக்கவில்லை.”
“இதோ உங்களுக்காக ப்ரீத்தி சுடப்படும் காட்சி மீண்டும் ஒளிபரப்பு செய்கிறோம்.மன திடம் இல்லாதவர்கள்,கர்ப்பிணி பெண்கள் பார்க்க வேண்டாம்.”
என்று அங்கே ஒரு மீடியா சர்க்ஸ், TRP ரேட்டிங்காக ஒரு மருத்துவமனை வாயிலில் அரங்கேறி கொண்டு இருந்தது.
இன்று
இடம் –அர்ஜுன் TULIP INN ஹோட்டல்.
ஸுல்பா விவரித்த கொடூரங்களை கேட்டு திக்ப்ரமை பிடித்து அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி.
‘காதால் கேட்க படும் இந்த செய்திகளே மனதை பிசைகிறது என்றால்,அதை பல வருடம் அனுபவித்த ஸுல்பாவின் நிலை?இன்னும் எத்தனை நாடுகளில்,எத்தனை பாதாள அறைகளில் இன்னும் எத்தனை லட்சம் ஸுல்பாகள் முடிவே இல்லாத நரகத்தில் சிக்கி,ஒவ்வொரு கணமும் துடித்து கொண்டிருக்கிறார்கள்?
எத்தனை கோடி உயிர்கள் தடயமே இல்லாமல் மண்ணோடு புதைக்கப்பட்டு ,நெருப்பிற்கு இரையாக்க பட்டு இருக்கும். பெண்களை,சிறுமிகளை வெறும் சதை பிண்டமாக மட்டும் பார்க்கும் நிலை தொடர போகிறது?’என்று மனதிற்குள் துடித்த ப்ரீத்தியின் கண்கள் கண்ணீரை பொழிய,ஸுல்பா அவளை தட்டி கொடுத்தார்.
‘நான் இவருக்கு ஆறுதல் சொல்ல நினைத்தால் இவர் எனக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கிறார்!’என்று எண்ணி கொண்ட ப்ரீத்தி,ஸுல்பா கூறிய விவரத்தில் சந்தேகம் எழ அதை கேட்டாள்.
“பதினைந்து வயதில் அவனால் இப்படி எல்லாம் செய்திருக்க முடியுமா என்ன?வயதை தவறாக சொல்றீங்களா ஆன்ட்டி?”என்றாள் ப்ரீத்தி குழப்பத்துடன்.
“ஏன் நீ child soldiers பற்றி கேள்வி பட்டதே இல்லையா என்ன?பத்து வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் கையில் Ak 47 உடன் எல்லாம் இருப்பார்கள்.இவர்களை suicide bomber/தற்கொலை படைகளாக எல்லாம் பயன்படுத்துவது சர்வ சாதாரணம்.
குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ,எதை கேட்கிறார்களோ,எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அப்படியே தான் வளர்வார்கள்.பெண் பிள்ளைகள் என்றால் பாலியல் தொழில் தான்.அப்படி வளர்ந்தவன் வேறு எப்படி இருப்பான்?” என்றார் ஸுல்பா.
காதால் கேட்டதை என்றுமே ஜீரணிக்கவே முடியாது என்று தோன்றி விட்டது ப்ரீத்திக்கு.
“அப்போ உங்க நாலு பிள்ளைங்க.?”என்றாள் ப்ரீத்தி திடீர் என்று நினைவு வந்தவளாக.
“அவனே கொன்றுட்டான்.அங்கெல்லாம் அப்படி தான்.முதலில் குழந்தைகளிடம் இருந்து தான் ஆரம்பிப்பர்கள்.அப்போ தானே மனதளவில் தப்பி போக நினைக்கும் எண்ணமே வராது.நானும் உறைந்து போய் நின்றேன்.
அர்ஜான் வருவதற்குள் எல்லாம் முடிஞ்சி போச்சு.அவர்கள் வந்த விதம் தவறானதாக இருந்தாலும்,அந்த அரக்கன் செய்த பாவத்திற்கு அந்த பிஞ்சுகள் என்ன செய்யும் ப்ரீத்தி!அவர்களை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். சாகும் நிலையில் தீயில் மாட்டியிருந்த என்னை அர்ஜான் தான் காப்பாற்றினார்
எப்படியோ அர்ஜான் சார் எங்களை பாதுகாப்பாய் வைத்திருந்த safe ஹவுஸ் பற்றிய விவரம் அவனுக்கு கிடைத்து இருக்கு.பணம் கொடுத்தால் காட்டி கொடுக்க ஆட்களா இல்லை? அவங்க போலீஸ் துறையே பணத்திற்கு விலை போய்ட்டாங்க.அவன் வார் declare செய்திருக்கான் என்று புரிந்து விட்டது அவருக்கு.
அதான் உபிந்தர் அப்பாவை வரவழைத்து என்னை இந்தியாவிற்கு அனுப்பி வைத்து விட்டார்.அவர் சந்தேக பட்டது படியே அவரையும் அவர் குடும்பத்தையும் காட்டி கொடுத்து, அதில் கிடைத்த பணத்துடன் இங்கே இந்தியாவில் போதை மருந்து சாம்ராஜ்யமே ஆரம்பித்து விட்டான்.” என்றார் ஸுல்பா.
“அப்போ உங்களுக்கும் அவன் எப்படி இருப்பான் என்று தெரியாதா?” என்றாள் ப்ரீத்தி திகைப்புடன்.
“தெரியாது ப்ரீத்தி!அவன் இப்போ எப்படி இருப்பான் என்பது மட்டும் தெரிந்தது என்றால் இதுவரை அவனை விட்டு வைத்திருப்பேன் என்றா நினைக்கறே ?அவன் குரல் வளையை கடித்தே கொன்றிருப்பேன். இதெல்லாம் இருபது முப்பது வருடங்களுக்கு முன் நடந்தது.
இப்போ எப்படியும் நாற்பதுக்கும் மேல் வயது இருக்கும் அவனுக்கு. பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.மெக்ஸிகோ அரசாங்கம் இவனை உயிரோடவோ, பிணமாகவோ பிடித்து கொடுப்பவர்களுக்கு என்று அறிவிக்க பட்ட பணம் அப்படியே தான் இருக்கிறது.ரிஸ்க் எடுக்க மாட்டான்.
அர்ஜான் சார் கொல்லப்பட்ட பின் மெக்ஸிகோ அரசாங்கம் அந்த படுகொலைக்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை எல்லாம் ஷூட் அட் சைட் செய்ததாக கேள்வி.நாட்டையே இரும்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தாங்க.இவன் எப்படி தப்பித்தான்.இவன் தப்ப யார் உதவி புரிந்தது என்று புரியவில்லை. தப்பிக்க உதவிய அவன் மட்டும் சிக்கினான் அவனை என் கையாலேயே வெறி தீர கொல்லனும். பணத்தாசை பிடித்த மிருகம்.பணம் சம்பாதிக்க நேர்மையான வழியா இல்லை?” என்றார் ஸுல்பா கோபத்துடன்
“யார் உதவினார்கள் என்ற ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இன்னும் அர்ஜான் சார் நண்பர்கள் விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.clue ஏதாவது கிடைத்தால் கூட நன்றாய் இருக்கும்.அது மட்டும் யார் உதவியோடு அவன் தப்பினான் என்பது மட்டும் தெரிந்தது இவனை பிடித்திடலாம்.”என்றார் உபிந்தர்.அவர் குரலில் அத்தனை கோபம்.
அவர்கள் அறியவில்லை காபோஸ் தப்பிக்க காரணமாய் இருந்தவர் அப்பாவி என்பதை.அந்த அப்பாவியை கேடயமாக பயன்படுத்தியே காபோஸ் தப்பி இருக்கிறான் என்பது.அவன் யார் என்ற உண்மை தெரிய போவதும் ,அவன் உயிர் போக காரணமாய் இருக்க போவதும் அவன் தப்பிக்க உதவிய அதே நபர் என்பதும் மற்றவர்கள் அறிய முடிந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும். பல நாள் திருடன் ஒரு நாள் நிச்சயம் அகப்படுவான்.
குற்றம் புரிபவன் நிச்சயம் எங்காவது ஒரு தடயம் விடாமல் செல்ல மாட்டான். அந்த தடயம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
“எனக்கு அவன் சில லிங்க்,பேங்க் அக்கௌன்ட்,அங்கே யாருடன் போதை மருந்தை வாங்கி விற்றான் போன்ற தகவல்கள் தெரியும்.அத்தனை வருடம் அவன் கையில் சிக்கியிருந்த போது கவனித்த விஷயங்கள் தான் இவை.
அதை வைத்து தான் அவன் கம்ப்யூட்டர் ஒரு அக்கௌன்ட் ஹாக் செய்து அவன் டீல், இப்போ இங்கே உள்ள தொடர்பு என்று எல்லாவற்றையும் கண்டுபிடித்து அவன் ஆட்களை போட்டு தள்ளிட்டு இருக்கோம். தமிழ்நாட்டிற்கு லாரி மூலம் செல்ல இருந்த அவன் மிக பெரிய ஷிப்மென்ட் பற்றி இப்படி தான் தகவல் கொடுத்தோம்.” என்றார் ஸுல்பா.
“சோ இது தான் எங்கள் கதை ப்ரீத்தி.எல்லா உண்மையும் இப்போ உனக்கு தெரியும்.இப்போ நீ என்ன செய்ய போறே?” என்றான் யோஜித்.
“இந்த பழ சாலட் சாப்பிட்டு போய் தூங்க போறேன் டாக்டர் சார்” என்றாள் ப்ரீத்தி.
ப்ரீத்தி சொன்னதை கேட்டு மூவரும் ஒரு கணம் ஜெர்க் ஆவது நன்றாகவே தெரிந்தது .
“ப்ரீத்தி விளையாடாதே.நான் சீரியஸ்சா கேட்கிறேன்.”என்றார் உபிந்தர்.
“நானும் சீரியஸ்சா போய் தூங்க தான் போறேன் தாத்தா. இன்னைக்கு என்ன சிவராத்திரியா என்ன!கண் முழிச்சி இருக்க?”என்ற ப்ரீத்தியை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் பல்லை கடித்தனர்.
“எங்க மேட்டர் ரஞ்சித் கிட்டே சொல்ல போறியா என்று கேட்கிறோம்.” என்றார் ஸுல்பா.
“எந்த மேட்டர்?எனக்கு எதுவும் தெரியாதே.”என்றாள் ப்ரீத்தி புன்னகையுடன்.
“ப்ரீத்தி!.ஸ்டாப் ப்ளெயிங்.”என்றார் உபிந்தர் கோபமாக.
“தாத்தா இதில் நான் என்ன விளையாடுறேன் என்று சொல்றீங்க? ஸுல்பா விர்து அத்தையாய் இருப்பதால் நாட்டிற்கு ஏதாவது கேடு ஏற்பட போகிறதா என்ன?இவங்க உயிரை காக்க தானே இவங்களை விர்து அத்தையாய் மாற்றி இருக்கீங்க?இதை சொல்வதும் சொல்லாததும் உங்க இஷ்டம்.
இப்போ விர்து அத்தையும் கொல்லபட்டு இருக்காங்க என்பது தெரிந்தால்,வீட்டு பெண்களை கூட காக்க முடியாதவர்களாக இருந்திருக்கிறோமே என்று நிலைகுலைந்து போய் விடுவார்கள். தெரியாத ஒன்று விர்து மரணம்.தெரியாத ஒன்று என்றுமே நம்மை பாதிக்காது.Ignorance இஸ் bliss தாத்தா.அதை நான் கலைக்க போவதில்லை.
வன்சினி அத்தை மரணம்,அன்யா பாட்டி மரணமே அர்ஜுனையும் மத்தவங்களையும் துடிக்க வைத்திருக்கிறது. வெளியே காட்டி கொள்ளவில்லை என்றாலும் இவர்கள் துடிப்பு புரிகிறது தாத்தா.இது உங்களோடு புதைந்து போவது தான் சரி என்று எனக்கு தோன்றுகிறது.இதுவரை விர்து ஆன்டியாக இருந்தவர் அப்படியே இருந்து விடட்டுமே!
‘விஜிலாண்டி’ விஷயம் என்றால் அது யோஜித் மட்டுமாய் இருந்தால் வெளியே சொல்லலாம்.பாதிக்கப்பட்ட பஞ்சாப் குடும்பங்கள் எல்லாமே இதில் ஈடுபட்டு இருக்கும் போது, எவிடென்ஸ்,சாட்சி,எதுவும் இல்லாமல் யாரை நான் காட்டி கொடுப்பது?காட்டி கொடுக்க நான் எட்டப்பனோ,ஜுடாஸ்சோ இல்லையே!
இந்த அரைமணி நேர பேச்சு நடக்கவேயில்லை தாத்தா என்னை பொறுத்தவரை.என்னை நம்பலாம்.நம்பியவரை முதுகில் குத்தும் வழக்கம் எல்லாம் எனக்கில்லை.உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன்.
அதற்காக என் கையில் துப்பாக்கி, கத்தி,விஷம் எல்லாம் தந்து விடாதீங்க.நம்ம ஆள் பார்க்க தான் ஸ்ட்ராங்.பேஸ்மென்ட் ரொம்ப வீக். மாட்டி கொள்ளாமல் எதை செய்வதாய் இருந்தாலும் செய்யுங்க.இப்படி சொல்வதால் உங்கள் வழியை ஏற்று கொள்கிறேன் என்றோ,உங்களை எதிர்க்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.
தீமைகளை அழிக்க கிருஷ்ணர் பிறந்து வருவார் என்று எதிர் பார்த்துட்டு காத்திருந்தால் வேலைக்கு சில சமயங்களில் ஆகாது. குட் நைட்.”என்ற ப்ரீத்தி அங்கிருந்து கிளம்ப அவர்கள் முகத்தில் புன்னகை விரிந்தது.
‘அதாவது உங்களை நான் ஆதரிக்கவும் இல்லை,எதிர்க்கவும் இல்லை.இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தீமையை எதிர்க்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள்’ என்று சொல்லாமல் சொல்லி விட்டு செல்லும், அவளை பார்த்து கொண்டு நின்றார்கள், பாதிக்கப்பட்ட பஞ்சாப் மக்களுடன் சேர்ந்து போதை மருந்து குழுக்களை எதிர்த்து கொண்டிருக்கும் அந்த மூன்று போராளிகள்.
இவர்களிடம் பேசி எதையோ யோசித்து கொண்டு வந்த ப்ரீத்தி ஹாலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டு குழப்பத்துடன் நின்றாள்.அர்ஜுன் குடும்பத்திடம் சிக்கி திக்கி திணறி வெளி வந்த ரஞ்சித்,ப்ரீத்தி நிற்பதை கண்டு அவளிடம் வந்தான்.
“அய்யோ! சாமி முடியல.இதுங்க பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா?”என்றான் தலை மேல் கையை வைத்து கொண்டு.
“என்ன டா சிங்கம் உன்னையே புலம்ப வச்சிட்டாங்களா?சொல்லு ஒரு கை பார்க்கிறேன்.”என்று சிலிர்த்து கொண்டு எழுந்தாள் ப்ரீத்தி.
“ஹேய் கொரில்லா!ரொம்ப பொங்காதே.எல்லாம் அதோ நிக்கறாங்களே உன் அர்ஜுன் குடும்பம் அவங்க தான் புலம்ப வைச்சிட்டு இருக்காங்க.”என்றான் கடுப்புடன்.
“என்னடா?”என்றாள் ப்ரீத்தி.
“டாலி அப்பா, ரணீத் அவர் ரொம்ப சீரியஸ்.நைட் தாண்டுவதே கடினம் என்று இப்போ தான் ஹாஸ்பிடலில் இருந்து தகவல் வந்தது.டாலியை அனுப்பி வைக்கிறேன் என்றால் எல்லோரும் சேர்ந்த போவோம் என்று ஒரே சத்தம்.
இவங்க பாசத்திற்காக நான் பார்த்தால்,‘இவங்க உயிர்க்கு யார் உத்திரவாதம்?’ என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்.ஏற்கனவே உங்களை எல்லாம் இங்கே பாதுகாக்கவே எங்களுக்கு மூச்சு முட்டி போகுது.இதில் எல்லோரும் போவேன் என்று அடம் பிடித்தால்?அமர்நாத் மனைவியை மட்டும் டாலியுடன் அனுப்பி வைத்திருக்கிறேன்.” என்றான் ரஞ்சித்.
“ஹ்ம்ம் புரியுது உன் நிலைமை.டெத் என்றதும் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க போலிருக்கு.”என்றாள் ப்ரீத்தி.
“ஆமா இவங்க எமோஷனல் ஆகிட்டாங்க என்று நான் இவங்க எல்லோரையும் போக விட்டால், நாளை இவங்க டெத்தை தான் நாம அட்டென்ட் செய்ய வேண்டி வரும்.நல்லவேளை வீரேந்தர் அங்கிள் நிலைமையை புரிய வைத்திருக்கிறார்.”என்றான் ரஞ்சித் தலையை உலுக்கி கொண்டு.
“இரு!…அது என்ன என் அர்ஜுன் குடும்பம் என்று சொல்றே?” என்றாள் ப்ரீத்தி கடுப்புடன்.
“ஹே பிஜிலி பட்டாசு!.சும்மா பொறியாதே.நான் போலீஸ்காரன்டீ.உன் மாமனுக்கு எல்லா பக்கமும் கண் இருக்கும்.அதான்,‘கண்ணாலே காதல் கவிதைகளை’ ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வரைஞ்சிட்டு இருந்தீங்களே!இதுல பறக்கும் முத்தம் வேற சார் அனுப்பி கொண்டிருக்கிறார்.
இந்த அல்லி ராணிக்கு ஏற்ற அர்ஜுன மகாராஜா தான். நாளைக்கு softy வரங்களாம் இங்கே.அவங்க கிட்டே பேசி சீக்கிரம், ‘கல்யாண சாப்பாடு போடவா?ஓத்து ஊதவா?இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா?”என்றான் ரஞ்சித், ப்ரீத்தி தோள் மீது கையை போட்டு கொண்டு.
அழகாய் வெட்கப்பட்ட ப்ரீத்தியை அவன் ஒட்டி எடுக்க,அவனை ஓட விட்டு புரட்டி எடுத்தாள் ப்ரீத்தி.
“softy எதுக்குடா இங்கே வாரங்க?”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன், இவர்களின் ஓட்டம்,அடித்தல்,உதைத்தல் எல்லாம் முடிந்த பிறகு.
“ஹ்ம்ம் மேடம் தான் விஜயசாந்தி மேடம் மாதிரி ஆக்ஷன் படம் ஒட்டி காண்பித்தீர்களே!.அது தான் லைவ் ரிலே ஆச்சே!.உன்னை இங்கே விட்டு வைத்தால் இன்னும் எதை எல்லாம் இழுத்து வைப்பையோ என்று உன்னை பேக் செய்ய வராங்க போலிருக்கு.எதுவாய் இருந்தாலும் அவங்க கிட்டே தெளிவாய் பேசிடு ப்ரீத்தி.
அர்ஜுன் கிட்டேயும் தான்.கொஞ்சம் நிலைமை சீரியஸ் ப்ரீத்தி.ஒண்ணு கிடக்க ஒன்று ஆவதற்குள் உனக்கு நல்லது நடந்தால் ரொம்பவும் சந்தோஷபடுவேன்.இதையும் விளையாட்டு தனமாய் ஹாண்டில் செய்யாதே.அர்ஜுன் கவனிப்பு உன் மேல் இருந்தால் எனக்கும் கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ்சாக இருக்கும் டா.”என்றான் ரஞ்சித்.
“நிச்சயம் ரஞ்சித்!அர்ஜுன் கிட்டே பேசறேன்.”என்றாள் ப்ரீத்தி.
“இந்தா பிடி.உன் போன் மெமரி கார்டு.உங்க அம்மா போன் கால் வந்ததும் எனக்கு தான் டைவர்ட் செய்தாங்க.அப்போ உன் போன் debug செய்யும் போது இந்த வீடீயோவை என் இடம் வேலை பார்க்கும் பெண் பார்த்திருக்காங்க.
இதை என்ன செய்யணும் என்று முடிவு செய்துக்கோ.ஹெட் செட் போட்டு தனியாய் போய் பாரு.”என்ற ரஞ்சித்,குழம்பி நிற்கும் அவளிடம் ஒரு டம்மி போன் ஒன்றையும்,ப்ரீத்தி மொபைல் மெமரியையும்,ஹெட் செட் ஒன்றையும் கொடுத்துட்டு விட்டு சென்றான்.
‘என்னத்துக்கு இவன் இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறான்?’என்று குழம்பிய ப்ரீத்தி,தனியாய் சென்று அந்த மெமரி கார்டு ஓட விட,அவளை திகைக்க வைத்த வீடியோ, பல கதைகளை அவளுக்கு சொல்ல முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்வது என்று புரியாமல் நெளிந்தாள் ப்ரீத்தி.
அந்த வீடியோ அர்ஜுன் என்னும் காதல் சக்ரவர்த்தியின் லீலைகளை சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தது.
கமாண்டோஸ்சுக்கு உதவ என்று போன் வீடியோ கால், ப்ரீத்தி உபயோக படுத்தியிருக்க,அது ரயில் நிலையத்தில் நடந்த அனைத்தையும் ரெகார்ட் செய்திருந்தது.
ப்ரீத்தி சொர்ணாக்கா மேல் போதை மருந்து பாக்கெட்டை விசிறி அடிப்பதும்,அந்த பொடியை அவள் சுவாசிப்பதும், சொர்ணக்காவின் துப்பாக்கி இவள் உயிரை குடிக்க நீளுவதும், அர்ஜுன் “ப்ரீத்தி”என்று கத்தி கொண்டு தன் உயிரை பற்றி கூட கவலை படைத்தவனாய் இவளை காப்பாற்ற ஓடி வருவதும், இருவரும் தரையில் சரிவதும்,அவன் இதழோடு இவள் இதழ்கள் அறிமுகம் ஆகியிருப்பதையும் அந்த வீடியோ காட்ட ப்ரீத்தியின் முகம் செங்கொழுந்தாகி போனது.
‘அடேய் சர்தார்ஜி!.என்ன வேலை செய்து வச்சியிருக்கே.என் லிப்ஸ் மேல் அப்போப்போ நீ லுக்க்ஸ் விடும் போதே டவுட் பட்டேன்.அப்போ உண்மையிலே …நீ கிஸ் தான் அடிச்சியா?நான் கூட கனவு தான் கண்டோம் போல் இருக்கே என்று தானே நினைச்சேன்!
அந்த அளவிற்கா உன்னை கண்டதும் பிளாட் என்று நினைத்தேன். திருடு!களவாணி பயலே!யாரை கேட்டுடா உம்மா கொடுத்தே?கொடுக்கிறது தான் கொடுக்கிறே…மயக்கத்தில் இருப்பவளுக்கா கொடுப்பே!
இரு… இரு…போதை மருந்தால் மயங்கினேனா,இல்லை உன் முத்தத்தாலா!அடேய்! எப்படி எல்லாம் டவுட் கிளப்பறான் பாரேன்.இருடா தனியா மாட்டுவே …அப்போ இருக்கு’என்ற ப்ரீத்திக்கு அந்த வீடியோ அடுத்து அவள் நடத்திய இசை கச்சேரியும் போட்டு காண்பிக்க,
‘அப்போவேவா…சாங் எல்லாம் உனக்காக பாடிட்டேனா? சும்மா சொல்ல கூடாது மயக்கத்திலேயும், ‘நீ கிரேக்க வீரன் மாதிரி தான் இருக்கே’ என்பதை நோட் செய்திருக்கேன் பாரேன்.’என்று தனக்குள் பேசி சிரித்து கொண்டிருந்த ப்ரீத்தியை, கனவுலகத்தில் இருந்து நினைவுலகத்திற்கு அழைத்து வந்தது அந்த குரல்.
“ப்ரீத்தி!…ப்ரீத்தி! ….ஹெலோ.ஆர் யு ஸ்லீப்பிங் வித் ஐஸ் ஓபன்?”என்று இவள் முன்னால் கையை ஆட்டி காண்பித்து கொண்டிருந்தான் அமன்ஜீத்.
காதல் வெளிகளில் அர்ஜூனுடன் கனவில் டூயட் பாடி, ஆடி கொண்டிருந்த ப்ரீத்தி, தன்னை யார் பூமிக்கு அழைத்து என்று கடுப்புடன் சுயநிலைக்கு வர,அங்கு அமன்ஜீத்இருப்பதை கண்டு ‘இவனா?இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?’என்று குழம்பி போனாள்.
‘பயபுள்ள லூக்ஸ்சே சரியில்லையே…எதுக்கு இவன் இப்போ டூத் விளம்பரம் மாதிரி முப்பத்தி ரெண்டு பல்லையும் காட்டி இப்படி இளிக்கிறான்?பல்லு எத்தனை…ச்சே அது வேற மறந்து போச்சே…
இப்போ எதுக்கு இவன் கவுண்டமணி மேட்டுகுடி படத்தில் விடும், ‘ஒரு ரொமான்டிக் லுக்’ விட்டுட்டு இருக்கான்! வேண்டாம் டா டேய்…கண்ணு அவிஞ்சி போச்சு.பயபுள்ள கையில் போக்கே….இது சரியில்லையே. இப்போ எதுக்கு இவன் எதுக்கு பம்முறான்!.
போச்சு பின்னாடி அதுங்க ரெண்டும் வேற ஷாக் ரியாக்ஷன் கொடுக்குதுங்களே!’என்று ப்ரீத்தி தனக்குள் அமன்ஜீத்தை ஒட்டி கொண்டு இருக்க,அதை அறியாத அவன், கார்த்திக் சொல்லும் ஒரு ரொமான்டிக் லுக் விட ட்ரை செய்து கொண்டு இருந்தான். ஆனால் அதுவோ கவுண்டமணி ரேஞ்சுக்கு தான் வந்தது.
“ஹாய் ப்ரீத்தி!உங்களை பத்தி வீரேந்தர் அங்கிள் சொல்லும் போதே நான் உங்களுக்கு விசிறி ஆகிட்டேன்.”என்றான் அமன்ஜீத் ஆங்கிலத்தில்.
“ஹ்ம்ம் சூட்சை போடு …காத்து வரட்டும்.”என்று தமிழில் சொன்ன ப்ரீத்தி,பெயருக்கு வாயை ஈயென்று இளித்து வைத்தாள்.
“உங்க வீரம்,உங்க திங்கிங் என்னை அப்படியே கொள்ளை அடிச்சுடுச்சுங்க.” என்றான் அமன்ஜீத்.
“முன் ஜென்மத்தில் சம்பல் காட்டு கொள்ளை கூட்ட தலைவியாய் இருந்தேன் அதான்.அடேய்! உன்னை எவன் டா இப்போ வெத்திலை பாக்கு வச்சி இங்கே வழிய கூப்பிட்டது?நயாகராவை விட ஓவர் ரா இருக்கேடா. கிழிஞ்சது கிருஷ்ணகிரி. இவன் வந்து வழிஞ்சுட்டு இருப்பதை அந்த லூசுங்க ரெண்டும் பார்த்தும் எரிமலை தொடராய் பொங்குதுங்களே!”என்று ப்ரீத்தி வாய் விட்டு புலம்பி கொண்டிருந்தாள்.
“உங்களை கண்டு அப்படியே இம்ப்ரெஸ் ஆகிட்டேங்க.எனக்கு எப்படி மனைவி வரணும் என்று நினைத்து இருந்தேனோ அப்படியே நீங்க இருக்கீங்க ப்ரீத்தி.உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குங்க..ஐ திங்க் ஐஆம் இன் லவ் வித் யு.உங்களை மணக்க விரும்புகிறேன்.உங்க சம்மதம் கிடைக்குமா?.
என் அப்பா குருதேவ் மத்திய அமைச்சராய் இருக்கார்.நானும் பல் தொழில் வல்லுநன்.”என்றான் அமன்ஜீத்.
இவன் பேச்சை கேட்டு அர்ஜுனும்,ஜெஸ்ஸியும் டென்ஷன் ஆகி, முகத்தில் டன் கணக்காய் சோகம் வழிய,’காதலிலே தோல்வியுற்றோம் நாங்கள் இருவர்’என்று பாக்கிரௌண்ட் மியூசிக் ஓட, கண்கள் கலங்கி அங்கிருந்து விலகிய அவர்கள் இருவரை கண்டு ப்ரீத்தி, தலையில் அடித்து கொண்டாள்.
“என்னங்க ப்ரீத்தி!.தலை வலிக்குதா.?”என்று அமன்ஜீத் அக்கறையுடன் கேட்க,
“அடடா!…தலைவலியே தலைவலிக்கிறதா என்று கேட்கிறதே! மூணு புள்ளி ஆச்சரிய குறி.பிரமாதம் கவிதை!…கவிதை!..”என்ற ப்ரீத்தி, இதை இப்படியே வளர விடுவது சரியில்லை என்று மனதிற்குள் சட்டென்று பிளான் எழ,
“மிஸ்டர் அமன்ஜீத்!ஊர் உலகத்திற்கு இருந்த டவுட் மாதிரி,உங்க அம்மா,உங்களை பத்தி எனக்கும் இருக்கே”என்றாள் கைகள் ரெண்டையும் கட்டி கொண்டு, தலை சாய்த்து வெகு நக்கலாய் ஆங்கிலத்தில்.
“ஹேய்!…”என்று கை ஓங்கி விட்ட அமன்ஜீத் கை தன் கன்னத்தில் இறங்கும் முன், அதை தாங்கி பிடித்து நிறுத்தினாள் ப்ரீத்தி.
“ச்சே!.உன்னை எல்லாம் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் மனதில் வைத்திருந்தேன்.ஆனால் நீ என் அம்மாவை பற்றியே இப்படி பேசுகிறாயே! எங்க அம்மா என் அப்பாவை முறை படி தான் மணந்தார்கள்.முறைப்படி திருமணத்தில் முறையாய் வந்த பிள்ளை நான்.I AM NOT ILLEGAL CHILD.என் அம்மா புனிதமானவங்க.பெண்ணா நீ?இன்னொரு பெண்ணின் ஒழுக்கத்தின் மீது என்ன தைரியம் இருந்தால் இப்படி பேச தோன்றும் உனக்கு?சே.”என்று பொரிந்தான் அமன்ஜீத்.
அவன் ஹை பிட்சில் கத்தி,கோபம் தீராதவனாய் அருகே இருந்த பூந்தொட்டியை தூக்கி போட்டு உடைத்தான்,ஒருவேளை ப்ரீத்தியையே நொறுக்குவது போல் நினைத்தானோ!அப்பொழுதும் அவன் கோபம் தணியவில்லை.
அமன்ஜீத்தை பொறுத்தவரை அவன், ‘தாய்,அவன் பிறப்பு’ என்பது அவனுக்கு சென்சிடிவ் விஷயம்.முறையாய் பிறந்தவனை, ‘முறையற்றவன்’ என்று சொல்லிச்சொல்லியே, மனம் ரணமாய் போய் இருந்தவனுக்கு, மற்றவர்கள் சொன்னதை கூட தாங்க முடிந்தும் விடும் போல் தோன்றி விட்டது.
ஆனால் அவன் இதயத்தில் ராணியாய் அவன் ஏற்றி வைத்திருக்கும் ப்ரீத்தி, அவ்வாறு சொல்வாள் என்று எதிர்பாராதவன்,அதை தாங்க முடியாதவனாய் துடித்தான்.
‘இந்த பேச்சு தன்னை விட்டு என்றுமே விலகாதா?’என்றவன் கால் மடிந்து தரையில் சரிந்து, முகத்தை மூடி கொண்டு கண்ணீர் வடிக்க,அவன் தோளில் கரம் ஒன்று பதிந்தது.
தலை நிமிர்ந்து பார்த்த அமன்ஜீத் அந்த கரம் ப்ரீத்திக்கு சொந்தமானது என்று கண்டு முகத்தை திருப்பி கொண்டான்.
“அமன்!…கெட் அப்…சொல்றேன் இல்லை.கெட் அப்.”என்று அவன் கரம் பிடித்து எழுப்பியவள்,அவனை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து,பக்கத்து அறையில் இருந்து க்ளாசில் தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.
“ஹ்ம்ம்…பிடிங்க அமன்…குடிங்க …ரிலாக்ஸ்….குடிங்க என்று சொல்றேன் இல்லை…”என்றவள் அவன் அந்த கிளாஸ் முழுவதையும் ஒரே மடக்கில் குடிக்கும் வரை அமைதியாய் நின்றாள்.
அவன் குடித்து முடித்ததும் அவன் தன்னை பெருமூச்சு எடுத்து சமாளிக்க, நேரம் கொடுத்த ப்ரீத்தி,அவன் சமாளித்து கொண்டான் என்பதை கண்டு கொண்டாள்.
“பேசி முடிச்சுடீங்களா மிஸ்டர் அமன்ஜீத்?இப்போ நான் பேசலாமா? என்னை காதலிக்கறதாய் சொன்னீங்களே!நான் நீங்க சொன்ன அர்த்தத்தில் எல்லாம் இன்னொரு பெண்ணை பற்றி பேசும் ஆள் தானா நான் என்பது கூட தெரியாமலா காதல் சொன்னீர்கள்?”என்ற ப்ரீத்தியின் முதல் கேள்வியே சாட்டை அடியாய் விழ, விறைத்து நிமிர்ந்தான் அமன்ஜீத்.
அடுத்தடுத்த கேள்விகள் சாட்டையாய் விழ அம்னஜீத் உறைந்து போனான் என்று தான் சொல்ல வேண்டுமோ!
“என் கேள்வியை ஒழுங்காய் கவனித்தீர்களா?ஊர் உலகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த டவுட் மாதிரி, என்று தான் சொன்னேனே ஒழிய, அதே டவுட் என்று நான் சொல்ல வில்லையே!என்ன ஷாக் ரொம்ப அதிகமாய் இருக்கு?என் டவுட் என்ன தெரியுமா?ஊர் உலகம் தங்களை தூற்றினாலும், மத்தவங்களுக்காக எல்லாத்தையும் பார்த்துப்பார்த்து எல்லாத்தையும் செய்யும், ‘அந்த உத்தம அம்மா,அப்பாவின் மகன் தானா நீங்கள்?’ என்பது தான்.”என்றாள் ப்ரீத்தி.
“ப்ரீத்தி! …”என்று அமன்ஜீத் குரல் திகைப்புடன் வெளிவர,
“யெஸ் அமன்ஜீத்! இவ்வளவு செல்பிஷ்சாக இருக்கும் நீங்க எப்படி அவர்களின் மகன் என்று சொல்ல முடியும்?அர்ஜுன் வீட்டில் எல்லோரும் என்னை அர்ஜுனுக்கு என்று சொல்லி கொண்டிருப்பது மேடை ரகசியம் போன்றது.அவர்களுக்கு என்னை அர்ஜுனுக்கு மணம் முடிக்க என்ற ஆசை இருக்கிறது. அதனால் தான் வேலை செய்ய வந்த எனக்கு இத்தனை சௌகரியம் செய்து கொடுக்கிறாங்க.அவங்க வீட்டில் ஒருத்தியாய் என்னை தாங்கிட்டு இருக்காங்க.இது கண் இருக்கும் எல்லோருக்கும் தெரியும்.
உங்களுக்கும் அது மிக நன்றாக தெரியும்.வேலை செய்ய வந்த இடத்தில், எந்த பெண்ணை இப்படி தாங்குவார்கள்?அதை கூட யோசிக்க முடியாதவளா நான்?இல்லை அது தெரியாத சிறு பிள்ளையா நீங்க?
இதெல்லாம் புரிந்தும், உங்க சகோதரன் என்னை விரும்புகிறார் என்பது தெரிந்தும், சுயநல பேய் போல் அவர் முன்னாலேயே வந்து இப்படி ப்ரோபஸ் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது?
எதையும் பேசாதீங்க.அர்ஜுன் இங்கே வரும் வரை நீங்க காத்து இருந்தது,அவர் இங்கே வரும் போது மிக சரியான அதே நேரத்தில் என்னிடம் வந்து அவர் முன்னாலேயே ப்ரொபோஸ் செய்தது,பார் உன்னை ஜெயித்து விட்டேன் என்று ஷோ காட்ட தானே? கவனிக்கவில்லை என்று மட்டும் நினைக்காதீங்க. எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தேன்.
காதலை மட்டுமே நீங்க சொல்லவில்லையே!.உங்க அப்பா குருதேவ் மத்திய அமைச்சர் என்பது எனக்கு தெரியவே தெரியாதா என்ன? இல்லை நீங்க தான் வியாபரா காந்தம் என்பது தெரியாதா?காதல் சொல்ல வந்த உங்களுக்கு உங்களின் பணம்,பின்புலம் பற்றி பேச்சு எதற்கு?
அர்ஜுனை விட பணம்,பதவி,பெயர்,புகழில் நீங்க நம்பர் ஒண் என்று என்னிடம் நிரூபிக்க தானே?அதாவது உங்களை விட அர்ஜுன் என்பவர் பல படி கீழே இருக்கார் என்று சொல்லாமல் சொல்றீங்க.உங்களை மணந்து கொண்டால் ராணி மாதிரி வாழலாம்,அதுவே அர்ஜுனை மணந்தால் அப்படி ஒரு வாழ்வு கிடைக்காது என்பது தானே நீங்க சொல்வது?
அதை கூட விடுங்க. அர்ஜுனை நீங்க எல்லாவற்றிலும் போட்டியாக நினைக்கறீங்க.இன்று அவர் விரும்புகிறார் என்று தெரிந்தும் அவர் மனதை உடைத்தாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டிடீர்கள். ஆனால் ஜெஸ்ஸி மனதை உடைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது?.
உங்கள் அம்மாவின் களங்கம் நீங்கியதும்,அர்ஜுன் குடும்பத்தில் நீங்களும் ஒருவராய் ஏற்று கொள்ள பட்டதும்,இதோ காதலிக்கிறேன் என்று ப்ரொபோஸ் செய்த என்னிடமா அடைக்கலம் ஆனீர்கள்?யார் அணைப்பில்,யாரிடம் அந்த நொடி ஆறுதல் தேடினீர்கள் என்று யோசித்து பாருங்க அமன்ஜீத்.”என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு திகைத்து விழித்தான் அமன்ஜீத்.
ஜெஸ்ஸியிடம் தான் கதறி அழுது, அடைக்கலம் ஆன அந்த நொடி மீண்டும் மனக்கண்ணில் படமாய் ஓட மிடறு விழுங்கினான் அமன்ஜீத் .
“சின்ன வயதில் இருந்து உங்கள் கஷ்டத்தை உணர்ந்து உங்களை மீட்டு எடுத்த, உங்கள் தோழி ஜெஸ்ஸியை விட நேத்து வந்த இந்த ப்ரீத்தி பெரிதாக உங்களுக்கு பெரிதாய் போய் விட்டாளா?
உங்களை உயிராய் ஜெஸ்ஸி நினைப்பது,உங்களுக்காக அவள் துடிப்பது எல்லாம் கூட உணர்ந்து கொள்ள முடியாத நீங்க தான் என்னை காதலிக்கறீங்களா?அத்தனை உதாசீனம் அவள் மேல். ஆனால் ஏதாவது சோகம் என்றால் உங்களை தாங்க மட்டும் அவள் வேண்டும்? இது எந்த ஊர் நியாயம் சார்?
உங்களை விட,என்னை விட,‘அர்ஜுன்,ஜெஸ்ஸி’ உயர்ந்தவங்க எப்படி தெரியுமா?நீங்க ப்ரொபோஸ் செய்ததும்,உங்களை துவம்சம் செய்யாமல்,மெரினாவில் சிலை வைக்க வேண்டும் என்று ரெண்டு பேரும் உங்களுக்காக விட்டு கொடுத்துட்டு போறாங்களே இதோ உங்களுக்கு பின்னால்.அது சொல்லும் அவங்க வைத்திருக்கும் காதலின் அளவை,பாசத்தின் அளவை.
அது உண்மையான காதல்.நீங்க என் மேல் வைத்திருப்பது இன கவர்ச்சி மட்டுமே.புதிதாய் உங்கள் கண் முன் ஒரு புது பொம்மை பார்த்த உடன்,ஏற்கனவே தன்னிடம் உள்ள பழைய பொம்மையை தூக்கி போடும் குழந்தை மெண்டாலிட்டி இது அமன்ஜீத்.”என்ற ப்ரீத்தியின் வார்த்தைகள் சாட்டை அடிகளாய் விழ துடித்து நிமிர்ந்தான் அமன்ஜீத்.
” யோசிங்க.அமன்ஜீத் நிதானமாய்,தனியே அமர்ந்து யோசிங்க. உங்களுக்கே புரியும்.உங்க அடி மனதில் நீங்களே அறியாமல் ஜெஸ்ஸி மேல் பூத்திருக்கும் உங்கள் காதல்.நெருங்கவே முடியாத உங்களை நெருங்கி சிறு வயதில் உங்களை டிப்ரெஸ்சன்னில் இருந்து மீட்டவள் ஜெஸ்ஸி தான்.நான் இல்லை.அவள் மேல் அத்தனை அன்பு இருக்க போய் தான அந்த வயதிலேயே அவளை உங்க வீட்டுக்கு அழைத்து கொண்டு போகணும் என்று உங்க வீட்டில் சண்டையே போட்டு இருக்கீங்க.
இன்று நீங்க உடைந்து கதறிய போது உங்கள் மனம் என்னை தேடவில்லை.உங்கள் மனதிற்கு தெரியும் அதன் இணை,அதன் சரி பாதி எது என்று.உங்களையும் அறியாமல் அதனால் தான் உங்களை மறந்த நிலையில் ஜெஸ்ஸி கரங்களில் அடைக்கலம் ஆனீர்கள் அமன்.ஜெஸ்ஸி மாதிரி பெண்களின் காதல் எல்லாம் விலைமதிப்பற்றது.
என் மனம் ஏற்கெனவே அதன் இணையுடன் சேர்ந்து விட்டது. அதை இந்த உயிரே பிரிந்தாலும் மாற்ற முடியாது.சாரி உங்கள் மனதை காயப்படுத்த இதையெல்லாம் சொல்லவில்லை. அர்ஜுன் என்பவர் வேண்டும் என்றால் பாசம்,குடும்பம் என்று தயங்கி உங்களை ஹுர்ட் செய்து விட கூடாதே என்று தன் காதலையும் துறக்க முன் வரலாம்.இந்த ப்ரீத்தி அப்படிபட்டவள் இல்லை.எனக்கும் அர்ஜூனுக்கும் உள்ள காதலுக்கு இடையே வராதீங்க.
அதே சமயம் ஜெஸ்ஸியின் உங்கள் மீதான காதலை இழந்து விடாதீங்க அமன்ஜீத்.அது மட்டும் உங்கள் கையை விட்டு போனால் பிறகு எது உங்களுக்கு கிடைத்தாலும் அது பொய்யானதாய் தான் இருக்கும்.”என்ற ப்ரீத்தி அங்கிருந்து விலக, அமன்ஜீத் திக்ப்ரமை பிடித்து நின்றான்.
ப்ரீத்தியின் வார்த்தை என்னும் சாட்டை அடிகள் நின்ற போது அமன்ஜீத் என்பவன் புதிதாய் பிறந்து இருந்தான் அங்கே.அவன் மனசாட்சியே அவனை குற்றவாளி கூண்டில் ஏற்றி லெப்ட் ரைட் வாங்க ஆரம்பித்து இருந்தது.
தலையை பிடித்து கொண்டு ப்ரீத்தி சொன்ன ஒவ்வொன்றையும் அவன் அலசி ஆராய்ந்து பார்க்க எந்த அளவிற்கு கீழ் இறங்கி போய் இருக்கிறோம் என்பது விளங்க துடித்து போனான்.
பயணம் தொடரும்…