OVOV 46

OVOV 46

ப்ரீத்தி சுடப்பட்ட அன்று

ப்ரீத்தி உயிரை காக்க அந்த ஹாஸ்பிடல் மருத்துவர்கள் போராடி கொண்டிருக்க,வெளியே கதறி துடித்து கொண்டிருந்தனர் அமன்னும், அர்ஜுனும். இவர்கள் இருவரும் அவளை காப்பதற்கு பதில், அவர்களை காப்பாற்றி விட்டு உயிர்க்கு போராடி கொண்டிருந்தாள் ப்ரீத்தி உள்ளே. ஹோச்பிடலுக்கு கொண்டு வரும் போதே அதிக அளவு ரத்த இழப்பால் முகம் வெளுக்க ஆரம்பித்து இருந்தது ப்ரீத்திக்கு.

உடலில் பாய்ந்த புல்லட் மிக பெரியது.அது பாய்ந்த வேகத்தில் ரத்த நாளம் பலத்த சேதாரத்தை சந்தித்து இருக்க,ரத்த இழப்பு மிக அதிகமாய் இருந்தது.

தகவல் அர்ஜுன் குடும்பத்திற்கு,அமன் குடும்பத்திற்கு சொல்லப்பட, மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று துடித்த அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் அவர்களுக்கு காவலாய் இருந்த ரஞ்சித் ஆட்களுக்கு தலை சுற்றி விட்டது.

அங்கே மருத்துவமனை வாயிலில் குவிந்த செய்தி சேனல்களாலும், விஷயம் கேள்வி பட்டு குவிந்த மக்களாலும் ஒருவித பதற்றமான சூழல் நிலவ ஆரம்பித்தது.இந்த செய்தியை பார்த்தவர்கள்,கேள்விப்பட்டவர்கள் மனம் ஒருவித பயம்,பதற்றம் சூழ்ந்தது.

தங்கள் வீட்டு பெண் ஒருத்தி சுடப்பட்டது போல் துடித்த மக்கள்,தங்கள் பூஜை அறையை சரண் அடைந்தார்கள். குருதுவராக்களில் சிறப்பு வழிபாடு,பிராத்தனை ப்ரீத்தி உயிரை காக்க செய்யப்பட்டது.

சில தியாகங்கள் எப்படி பட்டவையாக இருந்தாலும் ஏற்று கொள்வது என்பது கடினமே.சில உயிர்கள் விலைமதிப்பற்றவை.

ஆண்டவனே!உன் பாதங்களை நான்

கண்ணீரில் நீராட்டினேன்

இந்த ஓருயிரை நீ வாழ

வைக்க இன்று உன்னிடம்

கையேந்தினேன்.

உள்ளமதில் உள்ளவளை  அள்ளித்

தரும் நல்லவளை

விண்ணுலகம் வாவென்றால்

மண்ணுலகம் என்னாகும்?

மேகங்கள் கண்

கலங்கும்… மின்னல் வந்து

துடி துடிக்கும்… வானகமே

உருகாதோ பெண்ணவள் முகம் பாராமல்?

உன்னுடனே

வருகின்றேன் என்

உயிரைத் தருகின்றேன்

இந்த திருமகளின்  உயிர் போகாமல்

இறைவா நீ ஆணையிடு

ஆணையிடு இறைவா.

இன்று….

அமன்ஜீத் சிந்திக்க, அவனை தனியாய் விட்டு,பால்கனி கதவை சாற்றி விட்டு,ஜெஸ்ஸியையும்,அர்ஜுனையும் தேடி சென்ற ப்ரீத்தியின் முன் நின்றான் ரஞ்சித் போன் ஒன்றை நீட்டியவாறு.

“என்னடா?”என்றாள் ப்ரீத்தி ஒன்றும் புரியாதவளாய்.

“மதுரா அண்ணி லைனில் இருக்காங்க.உன் கிட்டே பேசியே ஆகணுமாம். காலை நியூஸ் பார்த்ததில் இருந்து உங்க காங் எல்லாரும் மாத்தி மாத்தி கால் போட்டுட்டு இருக்காங்க. பேசு.”என்று அவன் போனை நீட்ட,அதை வாங்கிய ப்ரீத்தி,”ஹலோ”என்றது தான் தாமதம், பத்து வினாடிக்கு நிறுத்தாமல் அந்த பக்கம் இருந்து லட்சார்ச்சணை வந்து விழ ப்ரீத்தியின் காது ‘கொய்ங்’என்றது.

மொபைலை காதை விட்டு தூர பிடித்து பேய் விழி விழித்த ப்ரீத்தியை கண்டு சிரித்த ரஞ்சித்,”WHY பிளட்?’என்றான்.

“SAME பிளட்”என்றாள் ப்ரீத்தி .

மதுரா அங்கே கத்தி கொண்டிருக்க, இவர்கள் இருவரும் இங்கு ஹை பை கொடுத்து கொண்டார்கள்.

ரஞ்சித் முகத்தை வைத்தே அவன் தான் எதையோ செய்திருக்கிறான்,அதனால் தான் மதுராக்ஷி சிவகாசி வெடியாய் வெடித்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்து விட,”என்னடா செய்து வச்சே? ‘கூவுங்கள் சேவல்களே’ என்று மது மேடம் கூவிட்டே இருக்காங்க?” என்றாள் ப்ரீத்தி.

“அது ஒன்றுமில்லை பேபி!மதுரா அண்ணி தான் CBI,FBI விட,  ‘டெரர்ரான இன்டராகேசன் ஸ்பெசலிஸ்ட்’ என்று உனக்கு தான் தெரியுமே! காலையில் இருந்து போன் செய்துட்டே இருந்தாங்க. விட மாட்டாங்க என்று தெரிஞ்சி போச்சு.சோ பேசினேனா…என் வாயை அவங்க கிண்டிய, கிண்டில் எல்லாத்தையும் உளறிட்டேன்”என்றான் அசடு வழிந்தவனாய்.

தலையில் அடித்து கொண்ட ப்ரீத்தி,மீண்டும் போனை காதில் வைத்து, “மது செல்லம் கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசு.ஓவர் டென்ஷன் ஆன பிபி வரும்.”என்றாள்.

“அடியேய்! இங்கேயே உனக்கு இண்டஸ்ட்ரி வைத்து தரோம் என்று சொன்னோம் தானே!ஒழுங்கா வேலைக்கு போனோமா வந்தோமா என்று இல்லாமல்…உன்னை எவன் உலக போதை மருந்து கும்பல் கூட எல்லாம் மோத சொன்னது?’என்றாள் மதுராக்ஷி.

“ஏன் செல்லம்! நீங்க 300 பெண்களுக்கு உதவும் போது நாங்க பத்து பேருக்கு உதவ கூடாதா?நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை…..டண்டன டனட்டை …(கமல் வாய்ஸ் +பிஜிம் )”ப்ரீத்தி சொல்ல அங்கே மதுரா பல்லை கடிப்பது பஞ்சாப் வரை கேட்டது.

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.விஜய்,சூர்யாவோட பிளேனில் அங்கே வர தான் கிளம்பிட்டு இருக்காங்க .ஒழுங்கா அவங்க கூடவே மூட்டை முடிச்சை கட்டிட்டு  கிளம்பி வா.” என்றாள் மதுரா.

“அவங்களையும் விட்டு வைக்கலியா நீயி!…நல்லா வருவேடீ.” என்றாள் ப்ரீத்தி நொந்து போனவளாய்.

“நான் நல்லா வருவது இருக்கட்டும் .நீ கிளம்பும் வழியை பாரு. உன்னை பத்திரபடுத்திய பிறகு தான் எனக்கு நிம்மதியாய் இருக்கும்.” மதுராவின் பேச்சுக்கு ப்ரீத்தி எதையோ சொல்லியிருக்க “இரு…என்ன சொன்னே? …காதில் விழலை.கம் அகைன்.”என்றாள் .

“நான் இங்கிருந்து கிளம்புவதாய் இல்லை மது .தேவை இல்லாமல் விஜய் அண்ணா,சூர்யா அண்ணாவை போட்டு படுத்தி எடுக்காதே.” என்று மீண்டும் தான் சொன்னதையே திருப்பி சொல்ல, மதுரா திகைத்து போனாள்.

“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சி இருக்கா என்ன?இப்போ எதுக்கு அங்கிருந்து கிளம்ப மாட்டேன் என்று ஸீன் போட்டுட்டு இருக்கே?” என்றாள் மதுரா.

“அர்ஜுனும் மத்தவங்களுக்கு இன்று இந்த நிலையில் இருக்க, நானும் ஒரு காரணம் மது.அவங்க ஆபத்தில் இருக்கும் போது என்னை மட்டும் தப்பி ஓட சொல்கிறாயா?”என்றாள் ப்ரீத்தி.

“அப்போ ரஞ்சித் உன்னையும் அர்ஜுன் பற்றி சொன்னது எல்லாம் உண்மை தான் இல்லையா?ஆர் யு இன் லவ் வித் அர்ஜுன்?”என்றாள் மதுரா தோழியின் மனநிலை புரிந்தவளாய்.

“யெஸ்…ஐ லவ் அர்ஜுன்.”என்று ஒரு நொடி கூட தாமதிக்காமல் வந்தது ப்ரீத்தியின் பதில்.

“சரி அவங்களையும் கூட்டிட்டு கிளம்பு.”என்றாள் மதுரா.

“அவர் வர மாட்டார் மது.”என்றாள் ப்ரீத்தி.

“கம் அகைன் …அவர் வர மாட்டாரா?உங்களை விருந்துக்கு கூப்பிடலை ப்ரீத்தி.யூ ஆர் இன் டேஞ்சர்.அது நினைவில் இருக்கா இல்லையா ?வர மாட்டாராம் இல்லை வர மாட்டார்.அப்படி என்னடீ அங்கே வச்சிட்டு இருக்கார் அங்கே?”என்றாள் மதுரா.

“கெளரவம்…தன் மண்ணின்மீது பக்தி ,மக்களின் மீது பாசம் மதுரா. நம்ம தமிழ்நாடு   புறநானூறு பாடல்களில் கேள்வி பட்டு இருக்கோம். போர்க்களத்தில் முதுகில் அம்பு பாய்ந்து உன் மகன் இறந்து கிடக்கிறான் என்று சொன்னதும் , ஒரு வீர தமிழச்சி ,அது உண்மை எனில் அவனுக்கு பால் கொடுத்த என் தனங்களையே வெட்டி கொள்கிறேன் சொல்வதாய் படித்து இருக்கோம் இல்லையா!

அதே வீரம் …இங்கே இவர்களிடம்.ஹாஸ்பிடலில் பாம் மட்டும் வைக்கவில்லை என்றால் இவர்கள் வீட்டை விட்டு கூட கிளம்பி இருக்க மாட்டார்கள்.தங்களால் பொது மக்கள் பாதிக்க பட்டு விட கூடாதே என்று தான் இங்கே ஹோட்டலில் மறைந்து இருப்பது கூட.

பஞ்சாபிகளின் வீரம் பற்றி எத்தனை கதை கதையாய் படித்து இருக்கோம்.துப்பாக்கியே நீட்டினாலும் ‘நெஞ்சில் குறி வைத்து சூடு ‘என்று மார்பை  காட்டுவார்கள்.அந்த அளவிற்கு கட்ஸ் உண்டு.

ரஞ்சித்தையே கேட்டு பாரு.எந்த அளவிற்கு அவங்க கையில் சிக்கி நூடுல்ஸ் ஆகிட்டு இருக்கான் என்று ….ஸ்டேட் விட்டு ஸ்டேட் என்றதற்கே இவர்கள் சம்மதிக்கவில்லை.

‘வாழ்வோ சாவோ அது எங்கள் மண்ணில்,எங்கள் வீட்டில் நடக்கட்டும்’ என்று குழந்தைகளை மட்டும் எங்கேயோ அனுப்பிட்டாங்க.ஏற்கனவே மூணு பெண்கள் உயிர் போயிருக்கு.இனி இந்த வீட்டில் இருந்து எந்த உயிரும் போக விட மாட்டேன் மதுரா.

எப்போ அர்ஜுன் தான் எனக்கு எல்லாம் முடிவு செய்து விட்டேனோ,‘வாழ்வோ,சாவோ அது இங்கே அவருடன் தான்’.கம்பெல் செய்யாதே. விஜய்,சூர்யாவை படுத்தி எடுக்காதே..யாரும் வர வேண்டாம்.”என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு, எப்படி ரியாக்ட் ஆவது என்று கூட புரியாமல் அந்த பக்கம் அமைதியாய் இருந்தாள் மதுராக்ஷி.

‘தன்னை போலவே காதலுக்காக,காதலித்தவனுக்காக உலகத்தையே எதிர்க்க துணிந்து விட்டால் தன் தோழி என்பது புரிய,இனி அர்ஜுனுக்கோ, அவன் குடும்பத்திற்க்கோ எதுவும் நடக்காது.நடக்கவும் ப்ரீத்தி விட மாட்டாள் என்று மதுராவிற்கு புரிந்தது.

‘ஆனால் ப்ரீத்தி நிலை?’என்று மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு எழுந்தாலும்,ரஞ்சித் இருக்கும் போது கவலையில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

“அர்ஜுன் இஸ் லக்கி.சீக்கிரம் கல்யாண விருந்துக்கு ரெடி செய்.” என்றாள் மதுரா.

“ஹ்ம்…ரெடி செஞ்சிட்டாலும்….நமக்குன்னு எங்கிருந்து தான் வந்து சிக்குறானுங்களோ!…ரொம்ப நல்லவனா இருக்கான் மதுரா.”என்றாள் ப்ரீத்தி நொந்து போனவளாய்.

“என்னடீ… என்ன ஆச்சு?”என்றாள் மதுரா குழப்பத்துடன்.

“அதான் மா விஜய் அண்ணா மாதிரி, மெரினா சிலை வைக்கும் அளவிற்கு, தியாக செம்மல் வேலை தான்.அவராவது உனக்காக, உங்க காதலுக்காக உன்னையே இழக்க துணிந்தார்….இந்த பஞ்சாபி மாக்கான், மாங்கா மடையன் இருக்கே …ஒண்ணு விட்ட பிரதர் என்னை விரும்பறான் என்று, ‘வாழ்வே மாயம்’ பாடிட்டு சுத்துது.

இதுல நீ கல்யாண சாப்பாட்டு கேட்டா…இரும்மா வேப்பிலை, ஹாக்கி ஸ்டிக் எல்லாம் ரெடி செய்யணும் இல்லை…எதுக்கும் ஹெலிகாப்டர் தேவை படும்.வழிக்கே வரலை என்றால் ஹைஜாக் செய்துட வேண்டியது தான்.”என்றாள் ப்ரீத்தி.

“அர்ஜுனை தூக்க விஜய்,சூர்யா ரெடியா தான் இருக்காங்க. சமுத்திரம் பிரதர்ஸ் ஆச்சே இவனுங்க…டேக் கேர்.”என்றே மதுரா புன்னகையுடன் அழைப்பை துண்டிக்க,அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த விஜய் சூர்யா இருவரும் ஹை பைவ் கொடுத்து கொண்டனர்.

“யப்பா…இன்னொரு அடிமை சிக்கிடிச்சு…நம்ம பாவப்பட்ட கணவர் சங்கத்தின் புது உறுப்பினர் கார்டு ரெடி செய்துட வேண்டியது தான்.” என்று அவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டிருக்க,மதுராவின் கைகள் அங்கிருந்த ஹாக்கி ஸ்டிக் பக்கம் சென்றது.

ப்ரீத்தி பேசியதை கேட்ட ரஞ்சித்,”பேபி!…அதுக்கு தான் இந்த மாமனை கல்யாணம் செய்துக்கோ என்று சொல்லிட்டே இருக்கேன்.பாரு ரசகுல்லா மாதிரி, காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்கும் உன்னை எல்லாம் எவன்டீ விட்டு கொடுப்பான்?அந்த அர்ஜுன் லூசு..உனக்காக இந்த மாம்ஸ,சிக்ஸ் பேக் ஆர்ம்ஸ்சோட காத்திருக்கேன்.”என்று கை நீட்ட, அவனை மொத்தி எடுத்த ப்ரீத்தி,ஜெஸ்ஸியை தேடி சென்றாள்.

‘நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க

தெரியாதா பழக தெரிந்த

உயிரே உனக்கு விலக

தெரியாதா உயிரே விலக தெரியாதா?

பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு

இணைக்க தெரியாதா?

இணைய தெரிந்த தலைவா

உனக்கு என்னை புரியாதா?

தலைவா என்னை புரியாதா?’

என்று BGM ஒலிக்க ,கருப்பு நிற உடையில்,மெத்தையில் படுத்து குலுங்கி, குலுங்கி ஜெஸ்ஸி அழுது கொண்டிருக்கவில்லை தான் என்றாலும்,அதே எபெக்ட் தான் ப்ரீத்திக்கு தெரிந்தது.

தன் அறையில் நின்று ஜன்னல் வழியே வெளியே இலக்கற்று வெறித்து கொண்டிருந்த ஜெஸ்ஸி முதுகில் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள் ப்ரீத்தி.

ஜெஸ்ஸி துள்ளி குதித்து திரும்ப,”என்ன மேடம்…சோகத்தை அப்படியே பிழிஞ்சிட்டு இருக்கீங்க.?”என்றாள் ப்ரீத்தி நக்கலாக.

“ப்ரீத்தி!…”என்று ஆரம்பித்த ஜெஸ்ஸி எதையும் சொல்லாமல் திரும்பி கொள்ள,அவள் பேசுவதற்காக கைகளை மார்பின் குறுக்காய் கட்டி, தலை சாய்த்து அவளையே பார்த்து கொண்டிருந்தாள்.

“முதலில் ஒன்று சொல்லிடறேன் ஜெஸ்ஸி.நான் காதலிப்பது உன் அமன்ஜீத்தை இல்லை.என் அர்ஜுனை.அதை அமன்ஜீத்துக்கும் நல்லா மண்டையில் உரைக்கும் படி,அடிக்காத குறையாய் சொல்லிட்டேன்.

அந்த ஆளு தான் லூசு…நீயுமாடி? .பேசி பழகின பெண் கிட்டே தான் லவ் சொல்வாங்க.நான் அவன் கிட்டே பேசினதே இல்லையேடீ..இது என்ன கம்ப ராமாயணமா நானும் நோக்க,அவனும் நோக்க என்று கம்பர் வரிகளை சொல்வதற்கு? அர்ஜுனை பழி வாங்க என்று அவனுக்கு தெரிந்த ரூட் இது தான்.

இந்த சினிமா ஹீரோயின் பின்னாடி ஒவ்வொரு காலத்தில் வெறி பிடிச்சா மாதிரி சுத்துவாங்க இல்லை..குஷ்பூக்கு கோயில் கட்டுவது,நதியா கம்மல் வளையல்,ஓவியா ஆர்மி அது மாதிரி இது ஒரு infactuation.வீரேந்தர் அங்கிள் என்ன சொன்னாரோ அதை கேட்டுட்டு உன் ஆளுக்கு  நட் போல்ட் கழன்று போச்சு ஜெஸ்ஸி.

லூசு மாதிரி என்னிடம்  லவ் சொன்னாலும்,துக்கம்,மகிழ்ச்சி என்று வரும் போது அவர் நாடுவது உந்தன் அருகாமையை தான் என்று விம்,சபீனா போட்டு விளக்கிட்டேன்.என் மேல் இருப்பது காதலே இல்லை என்றும், அது அர்ஜுன் மேல் இருக்கும் ஒரு விதமான போட்டி மனப்பான்மை என்றும் சொல்லிட்டேன்.

சோ அந்த கால, ‘பிளாக் அண்ட் வைட் ஹீரோயின்’ சோகத்தை பிழிவது போல் பிழிஞ்சிட்டு நிக்காதே.முடிந்தால் ரஞ்சித் கிட்டே சொல்லி கிரிக்கெட் பேட்,ஹாக்கி ஸ்டிக் வாங்கி தரேன்.நீ அடிக்கும் அடியில் அந்த லூசுக்கு வேறு எந்த பெண்ணும் கண்ணில் படவே கூடாது.நானும் தான் பேட் தூக்கணும் போல் இருக்கு…எல்லாம் அர்ஜுன் தலையை உடைக்க தான்.  “என்ற ப்ரீத்தி பேச்சை கேட்டு  விழித்தாள் ஜெஸ்ஸி.

“ஹாஸ்பிடலில் ஐசியூவில் எல்லாம் அட்மிட் ஆகும் எண்ணம் எனக்கில்லை ஜெஸ்ஸி.சோ உன்னை லவ் செய்யறேன்.என்னை மணந்து கொள்வாயா?”என்ற குரல் அந்த அறை வாசலில் இருந்து கேட்க, திகைத்து திரும்பிய பெண்கள் இருவரும் அங்கு அசடு வழிந்து கொண்டு நின்ற அமன்ஜீத்தை கண்டு வாய் விட்டு நகைத்தனர்.

அவர்கள் பேச தனிமை கொடுத்து விலக முயன்ற ப்ரீத்தியை தடுத்த அமன்ஜீத்,”சாரி ப்ரீத்தி…நீ சொன்ன பிறகு தான் என் இதயமே எனக்கு புரிந்தது.ஜெஸ்ஸியிடம் எனக்கு இருந்த உரிமை உணர்வு,ஒரு ஈடுபாடு, அவளிடம் நான் நானாக இருப்பது வேறு எந்த பெண்ணிடமும் சாத்தியம் இல்லாத ஒன்று என்று புரிந்து போனது.

உன்னை விரும்புவதாய் சொன்னது கூட அர்ஜுனை பழி வாங்க என்று நான் எடுத்த முடிவு தான் என்று இப்போ தெரியுது.நான் காயப்பட்டது போல்,பதிண்டா மக்களின் முடி சூடா இளவரசனாய் இருக்கும் அவனை சிறிதாவது காய படுத்தி பார்க்க வேண்டும் என்ற வெறி ஒன்று தான்.

கோபம் ஆலகால விஷத்தை விட ஆபத்தானது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.கோபம்,பழி வாங்கும் உணர்வு தன்னை மட்டும் இல்லை தன்னை சார்ந்தவரையும் பொசுக்கி விடும் தான் என்பது இப்பொது தான் புரிந்தது.தேங்க்ஸ் ப்ரீத்தி.நீ சொல்லவில்லை என்றால் நான் செய்து கொண்டிருக்கும் முட்டாள் தனம் எனக்கே தெரிந்து இருக்காது. ஜெஸ்ஸியையும் இழந்து இருப்பேன்.”என்ற அமன்ஜீத் கை கூப்பினான்.

“நீங்க செய்தது தவறே இல்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.மனித மனம்,உணர்வுகள் விசித்திரமானது.இப்படி நடந்ததை மறந்துடுவோம். ஹோய் கோல்டன் பிஷ்.எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் தரனும்டீ…”என்ற ப்ரீத்தி வெளியேற,கண்களில் உண்மையான காதலுடன் அமன்ஜீத் ஜெஸ்ஸியை நெருங்கினான்.

எந்த பார்வை தன் தோழனின் கண்களில் காண மாட்டோமா என்று ஜெஸ்ஸி அத்தனை வருடம் காத்து இருந்தாளோ அந்த உரிமை பார்வை,கண்டு அவள் கண்கள் கலங்கியது.

அவள் முகத்தை கைகளில் ஏந்திய அமன்ஜீத்,”சாரி ஜெஸ்ஸி…நீ எனக்கு என் இதய துடிப்பு போன்றவள்.எப்பொழுது எல்லாம் நான் மனதளவில் காயப்பட்டு துடித்தேனோ, அப்பொழுது எல்லாம் நான் உடையாமல் பார்த்து கொண்ட தேவதை நீ.

உன்னிடம் உள்ள நெருக்கம்,உரிமை,நீ தான் எனக்கு எல்லாமும் என்ற உண்மை இது வரை எனக்கு புரியவில்லை.உன் காதலையும் புரிந்து கொள்ளாத முழு முட்டாளாய் தான் இருந்திருக்கிறேன். மன்னிச்சுடு.” என்றவனை மேல் இருந்து கீழ்,கீழ் இருந்து மேலாக ஒரு நக்கல் பார்வை பார்த்தாள் ஜெஸ்ஸி.

“என்னடீ?”என்றான் அவள் பார்வைக்கு பொருள் உணர முடியாதவனாய்.

“ஹ்ம்ம்…அரசியல்வாதி மகன் என்று நிரூபித்துட்டு இருக்கே. இப்படி ஆத்து ஆத்துன்னு  உரை உன்னை ஆற்றவில்லை என்று இப்போ யார் அழுதது.நீ எல்லாம் ஸிரோ வாட்ஸ் பல்புடா நல்லவனே.”என்ற ஜெஸ்ஸி சொல்வது புரியவே அமன்ஜீத்துக்கு சில பல வினாடிகள் ஆனது.

“யு …யு ..கோல்டன் பிஷ்…”என்றவன் அவளை துரத்த,அவன் கைகளில் சிக்காமல் அந்த அறைகளில் ஓடி கொண்டிருந்தாள் அவனை வென்று விட்ட அவன் இதய ராணி.

ஜெஸ்ஸியும்,அமன்ஜீத்தும் பேசி தங்கள் காதலை துரத்தலும், அடித்தலுமாக,நெருங்கலும் என்று காதலர்களுக்கே உண்டான பாஷையில் பேசி கொள்ள,ப்ரீத்தி அர்ஜுனிற்கு வேப்பிலை அடிக்க வேண்டி சென்றாள்.

தன் அறையில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தான் அர்ஜுன்.மனம் நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தது. ஏற்கெனவே ஒரு பெண்ணால் பிரிந்த குடும்பம், மீண்டும் பிரிய போகிறதா என்ற கேள்வி அவனை ஒரு வழியாக்கி கொண்டிருந்தது.

தன் எண்ணங்களில் மூழ்கியிருந்தவனை கலைத்தது வாயிலில் இருந்து கேட்ட கனைப்பொலி.கலங்கிய கண்ணோடு நிமிர்ந்து பார்த்தவன் அங்கே,ப்ரீத்தி நிற்பதை கண்டு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

தன் மன உணர்வுகளை அவளிடம் சொல்லி ஆறுதல் தேட மொழி அவனுக்கு தடையாய் இருந்தது.தான் சொல்வது ப்ரீதிக்கோ,ப்ரீத்தி சொல்ல போவது தனக்கோ புரிய போவதில்லை.இதில் எதை பேசி என்னத்தை புரிய வைப்பது என்று அவன் குழம்பி போய் அமர்ந்திருக்க, காதலை சொல்ல மொழி தேவையேயில்லை என்று அவன் உணர தவறினான்.

“அர்ஜுன்!…”என்ற ப்ரீத்தியின் குரல் கேட்ட அர்ஜுன் நிமிர்ந்து பார்க்க, ப்ரீத்தி  தன் இரண்டு கைகளையும் அகல விரித்து கண்களால்,உடல் மொழியால் தன் காதலை சொல்ல,தன் கண்கள் காண்பது கனவா, நினைவா,ஆசை கொண்ட மனதின் கற்பனையா என்று ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான்.

அவன் கண்களில் இருந்த கேள்விக்கு,தன் புன்னகையை பதிலாக அளித்த ப்ரீத்தி,தலை அசைத்து அவன் கேள்வியை ஆமோதித்து, கண்களை ஒரு முறை அழுந்த மூடி,கைகளை அகல விரித்து மீண்டும் அவனை அழைக்க,அடுத்த நொடி அர்ஜுனின் காற்று கூட புக முடியாத இறுகிய அணைப்பில் இருந்தாள் ப்ரீத்தி.

அங்கு வார்த்தைகள் தேவை படவில்லை.இரு உயிர் தங்களின் சரி பாதியை,தங்கள் ஆத்ம பந்தத்தை உணர்ந்து கொண்டு விட,அங்கு கண்கள் கண்ணீரால் தங்கள் உணர்வுகளை பறிமாறி கொண்டது.    

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை.

 இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது  மொழிகள் கிடையாது

பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட

முடியாது காதல் பேசும் மொழியெல்லாம்

சப்தக்கூட்டில் அடங்காது.

எத்தனை உண்மையான வரிகள்!

அவர்களின் காதலுக்கு முன் பாஷை என்ற தடை தூள் தூளாகி இருந்தது.காதல் இரு மனம் உணரும் இணைவு.இரு இதயம் ஒன்றாய் இணைந்து,ஒன்றிற்காக இன்னொன்று துடிப்பது.அந்த துடிப்பு உணர காதல் போதும் என்பதை அந்தக்கணம் அவர்கள் நிரூபித்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் காதலுக்கு மொழி தேவையே இல்லை.

எவ்வளவு நேரம் ஒருவர் அணைப்பில் ஒருவர் இருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது.

“ப்ரீத்தி!”என்றான் அர்ஜுன்,அவள் உச்சியில் தலை வைத்து, ஆழந்த பெரு மூச்சு விட்டவனாய்.

“ஹ்ம்ம்…”என்றாள் ப்ரீத்தி.

“அமன்..அமன் துஹானு பியாரா கரடா ஹை/அமன் உன்னை காதலிக்கிறான் ப்ரீத்தி.”என்றான் அர்ஜுன்.

“ப்ரீத்தி லவ்ஸ்,பியாரா அர்ஜுன்.”என்றாள் ப்ரீத்தி அவன் மார்பில் இருந்து தலை எடுக்காமல்.

“ப்ரீத்தி.”என்ற அர்ஜுன் அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க,”அமன் பியாரா ஜெஸ்ஸி….”என்றவள்,அது தான் இல்லை என்று சைகையில் சொல்ல அர்ஜுன் புன்னகை விரிந்தது.

” கி துஹானு இஷா பரே யாக்கின ஹை?/உனக்கு அது நன்றாக தெரியுமா?” கண்ணால் அவன் கண்டது வேறு ஆயிற்றே.

“ப்ரீத்தி லவ்ஸ்,பியாரா அர்ஜுன் ஒன்லி.”என்றாள் ப்ரீத்தி.

ப்ரீத்தியை பொறுத்தவரை அவர்கள் இருவரும் மட்டுமே முக்கியம். அர்ஜுன் தான் அவளின் காதல் என்பது  மட்டுமே அர்ஜுனின் கேள்விகளுக்கு ப்ரீத்தியின் பதிலாக வெளி வந்து கொண்டிருந்தது.

மொழி புரியாமல் தட்டு தடுமாறி தான் இருவரும் பேசினார்கள் என்றாலும் அதில் அதிகமாய் தென்பட்டது காதல் ஒன்று தான்.

நேரிடையாக பேசினாலே காதலர்களுக்குள் பிரச்சனை வரும் போது பாஷை புரியாமல் காதலின் துணை மட்டும் கொண்டு அவர்க தங்கள் காதலை தங்கள் இணைக்கு உணர வைத்து கொண்டிருந்தார்கள்.

அந்த கணம் அது அவனுக்கு போதுமானதாய் இருந்தது.அவர்கள் இருவரின் பேரை மட்டுமே பயன்படுத்தி,அர்ஜுன் பேச்சில் இருந்து,’பியாரா/காதல்’ என்ற ஒரே வார்த்தை கொண்டு தன் மனதை ப்ரீத்தி சொல்லி விட்டாள்.

“நோ ப்ரீத்தி..அமன்.”என்று அர்ஜுன் இழுக்க அடுத்த நொடி அவன் உதடுகள் பேசும் திறனை இழந்திருந்தது,ப்ரீத்தியின் இதழ்கள் அவன் இதழை சிறை பிடித்து இருந்ததால்.

அர்ஜுனை அப்படியே விட்டால் விடிய விடிய,”அமன்” என்று அவனை பற்றியே பேசி கொண்டிருப்பான் என்பது புரிந்து விட,வாயால் பாஷை உதவி கொண்டு பதில் சொல்வதை விட,இதழ்  என்னும் தூரிகையால் தன் காதல் என்னும் கதையை ப்ரீத்தி, அர்ஜுனுக்கு முத்தசாசனமாய் எழுதி கொடுத்தாள்.

அர்ஜுனின் கேள்விக்கான விடை அங்கு இறுகிய அணைப்பு, முத்த கவிதையாய் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு அங்கு பாஷை தேவையே இருக்கவில்லை.

எப்பொழுது அவள் முத்தத்தில் இருந்து அவன் முத்தமாய் மாறியது என்று சொல்ல முடியாத அளவிற்கு அப்படியொரு ஜீவ தேடல்.அணுக்கள் கூட உள்ளே புக முடியாத காதலர்களின் அணைப்பு.இவர்கள் தங்களுள் மூழ்கி தங்களை மறந்திருக்க,இவர்களை மறக்க முடியாதவனாய் கொதித்து கொண்டிருந்தான் இவர்கள் உயிர்களை பலி வாங்க காத்து கொண்டிருக்கும் ஒருவன்.

பயங்கர அடி.காரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் மாட்டியிருந்தது.தன்வியை கொல்ல அவன் போட்ட பிளான் போலீசாரால் முறியடிக்க பட்டு இருந்தது. . ‘சைத்தான்’ என்பவனை மதத்தின் பேரில் இந்திய நாட்டையே அழிக்க நினைத்த திட்டத்தோடு சவக்கிடங்கில் இவன் செய்து வந்த சட்டத்திற்கு புறம்பான ஆர்கன் டிரேடிங்காக கொன்றவர்களின் உடல்கள் அழிந்தால், தன் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்று அவன் போட்ட கணக்கு எல்லாம் தவறாய் போனது.

எல்லாம் மூடி மறைக்க பட்டு இருந்தது.மக்கள் தங்களை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரியாமல் இருட்டில் தான் வைக்க பட்டு இருந்தார்கள்.ஆக மொத்தம் எந்த பக்கம் திரும்பினாலும் தோல்வி.தோல்வி மட்டுமே.

இதில் அப்பொழுது தான் ,’சைத்தான்’ இவன் போன் எடுக்கவில்லை என்றதும்,வெட்டப்பட்ட தலை ஒன்றை பார்சல் அனுப்பி வைத்திருந்தான். ‘அடுத்தது உன் தலை என்ற வார்னிங் கார்டு’ ஒன்றுடன். அது இவன் ஆட்களில் யாரின் தலை என்று வேற குழம்பி போனது கபோஸிற்கு.

கோபம்,வெறி,அவமானம்,தோல்வி என்று அடிமேல் அடி விழுந்த அவன் அப்பொழுது மிருகமாய் மாறி இருந்தான்.கையில் கிடைத்த அடுத்த கட்ட நான்கு ஆட்களை,அவனுக்கு நெருங்கிய அவர்களை நைய புடைத்து விட்டதில் ரெண்டு பேருக்கு மார்பு எலும்பு உடைந்தது.ரெண்டு பேருக்கு கை உடைந்தது.

இவனின் இந்த கோபத்திற்கான விளைவு நாளை இவனை கலந்து ஆலோசிக்காமல்,இவனின் உத்தரவு இல்லாமல், ஸ்னைப்பர் துப்பாக்கியாய் நீண்டது முதலமைச்சர் விருந்தில் கலந்து கொல்ல வந்த அர்ஜுன்,அமன் மீது.

ஒருவரை கொல்ல வேண்டும் என்றால் அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்தது தாங்கள் தான் என்ற சிறு தடயமும் இல்லாமல் செய்து வந்ததால் தான் இத்தனை வருடம் காபோஸ் என்பவன் தப்பித்து வந்தது.

இவன் தன் அடுத்த நிலையில் உள்ள ஆட்களிடம் காட்டிய கோபம், தொடர் சங்கிலியாய் அதற்கு அடுத்த கட்ட ஆட்களிடம்  சென்று விடிய,எதையாவது செய்து இவனிடம் நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என்று இவனின் அனுமதி கூட பெறாமல் அவர்கள் துப்பாக்கியை தூக்கி விட,அது இதுநாள் வரை வரை அவன் சிறிது சிறிதாய் எழுப்பி இருந்த சாம்ராஜ்யத்தை மொத்தமாய் சரித்தது.

அவன் பல விஷயங்கள் செய்து,பஞ்சாப் மொத்தத்தையும் தன் கண்ட்ரோலில் வைத்திருக்க மாஸ்டர் பிளான் ஒன்று போட்டு வைத்திருந்தான்.அதன் முதல் கட்டம் குருதேவ் தேர்தல் பத்து,இருபது வருடங்களுக்கு முன்பவாகவே போடப்பட்ட அடித்தளம்.

அடுத்து சிறுக சிறுக சமுதாயத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களை, முதலமைச்சர் தர்மாவின் கட்சியிலேயே  பலரை பெண், மண்,பொன்னால் அடித்திருந்தான்.  அவர்களும் இவன் சொல்வதற்கு எல்லாம் கண்ணை மூடி தலையை ஆட்டும் கைப்பாவையாக தான் இருந்தனர்.

அவன் கனவு கோட்டையை கட்டி முடிக்க அவன் அவசரம் காட்டவேயில்லை. யாரும் அறியாமல் ஒவ்வொரு செங்கலாய் அடுக்கி மாளிகை எழுப்பி கொண்டிருந்தான்.அதன் கடைசி கட்ட பணியாய் தான் தன்வியை போட்டு தள்ள முயன்றது. அதில் இருந்து அவர் காப்பாற்ற பட்டு இருக்க,அவன் மாளிகை ஆட்டம் காண ஆரம்பித்தது.

இவன் ஆட்கள் தூக்கிய துப்பாக்கி, அர்ஜுனையும், அமன்ஜீத்தையும் குறி வைக்க,அது திசை மாறி, அவன் கனவு கோட்டையை முற்றிலும் தகர்க்கும் வெடிகுண்டாகி ,அடுத்த மூன்று மாதத்தில் அத்தனை வருடம் அவன் மிக பொறுமையாய் கட்டிய கோட்டை தரைமட்டம் ஆக்கியது.

அன்றைய காலை பஞ்சாபில் பல சூறாவளிகளை கிளப்ப போகும், பலர் மனதை சிதைக்க போகும் நாள் என்று இவர்களுக்கு யாராவது சொல்லியிருக்கலாம்.

பொழுதும் யாருக்கும் காத்திராமல் ப்ரீத்தி உயிரோடு விளையாட உதயமானது .

பயணம் தொடரும்…

 

 

error: Content is protected !!