OVOV 50
OVOV 50
“இது போதுமே. மிளகாய் பொடி மட்டும் அல்ல, பவுடர், இதோ இந்த சேப்டி பின், பூ குத்தும் இந்த ஸ்லைட் எல்லாம் கூட ஆயுதம் தான். நாம் பயன்படுத்தும் ஆயுதம் பெரிது, சிறிது என்று இல்லை. அது நாம் பயன்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. இது எல்லாவற்றையும் விட மிக பெரிய ஆயுதம் எது தெரியுமா எந்த நிலையிலும் ஒரு பெண்ணை விட்டு நீங்க கூடாதா மனத்துணிவு. அதை விட ஒரு பெண்ணை காப்பாற்றும் உயர்ந்த ஆயுதம் உலகில் வேறு இல்லை. நீ தோற்கும் வரை உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது. இதை என்றுமே மறக்காதே.” என்றாள் ஜெஸ்ஸி.
ஜெஸ்ஸி பேசி முடிக்கவும் அந்த அறை கதவை திறந்து கொண்டு சைத்தான் என்று அழைக்கப்படும் தீவிரவாதியும் அவன் மிக நெருங்கிய தளபதிகளும் உள்ளே நுழையவும் மிக சரியாய் இருந்தது.
உள்ளே வந்தவன் இவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவன் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. உள்ளே நுழைந்தவர்களில் ஒருவன் முகம் மட்டும் பெண்கள் இருவரை கண்டதும் அதிகபட்ச அதிர்ச்சியை காட்ட, நிமிட நேரத்தில் தன் முகத்தை அவன் சரி செய்து கொண்டான்.
“யார் இந்த பொண்ணுங்க? ” புரியாத மொழி ஒன்றில் அருகே இருந்தவரை பார்த்து உறுமினான், ‘சைத்தான்’ என்ற பட்ட பெயர் உலக அளவில் கொடுக்க பட்டு இருந்த அந்த தீவிரவாதி.
‘குருவி சுடுவது போல்’ என்ற பதத்தை வேறு லெவெலுக்கு எடுத்து சென்றவன் அவன். பெயருக்கு ஏற்றவன் போல் அவன் நிஜ அரக்கன் தான்.
உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் பலவற்றை வெற்றிகரமாக முடித்து, நூற்று கணக்கில் மக்களை கொன்று குவித்து, இன்டர்போல், FBI, CIA என்று இன்டர்நேஷனல் அளவில் தேடப்படும் தீவிரவாதி அவன்.
தீவிரவாதம் என்றால் அதற்கு உண்டான வரைமுறைகளை எல்லாம் மாற்றி அமைத்தவன். இந்தியாவை உள் இருந்தே அழிப்பது, இளம் வயதினரை மூளை சலவை செய்து அவர்களை மனித வெடிகுண்டுகளாய் தயார் செய்வது, இன்விசிபிள் வார் நடத்துவது, போதை மருந்து மூலமாய் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை அழிப்பது, இந்தியாவை உலக நாடுகள் பார்வையில் கேலிப்பொருளாக்க, தினம் ஒரு கலவரம், தினம் ஒரு கலகம் என்று மத்திய, மாநில அரசாங்கத்திற்கு தினமும் தலைவலியை கொடுப்பது இவன் வேலை.
இந்திய மக்களை குறிப்பாக 15-45 வயதிற்குள் உள்ளவரை போதை மருந்துக்கு அடிமையாக்கி விட்டால், அதன் மூலம் இந்திய நாட்டின் வளர்ச்சியை மட்டும் இல்லாமல், இந்திய மக்களிடமிருந்தே போதை மருந்துக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்று அந்த பணம் மூலம் ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வாங்கி இந்திய மக்களின் மீதே பயன்படுத்துவது என்று இரு முனை கத்தியை பிரயோகிப்பவன்.
ஒரு பக்கம் ஓவெர்டோஸ் மரணம் என்றால் இன்னொரு பக்கம் இவன் வெடிகுண்டால்,துப்பாக்கி தோட்டாவால் மாண்டு போகும் உயிர்கள் என்று ரத்த ஆறு ஓட வைத்து, இந்தியாவை சுடுகாடு ஆக்குவது ஒன்றே இவன் கூட்டத்தின் லட்சியம்.
போதை மருந்தை ஆப்கான், பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டு வருவது இவன் வேலை என்றால், அதை விற்று பணத்தை அவனுக்கு கொடுப்பது காபோஸ் வேலை.
ஆனால் தொடர்ந்து இவர்கள் உள்ளே கொண்டு வரும் கன்சைமென்ட் பிடிபட, எப்படி ஒரு கம்பெனி நன்றாக செயல்படவில்லை என்றால் அதை நிர்வகிக்க புதிதாய் மேனேஜ்மென்ட் டீம் என்று உள்ளே கொண்டு வருவார்களோ அதே போல் இந்தியாவின் எல்லை பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுவால் மேனேஜ்மென்ட் டீம் தலைவனாக பஞ்சாபிற்குள் அனுப்பி வைக்கப்பட்டவன் தான், ‘சைத்தான்’.
எதனால் இப்படி நடக்கிறது என்று அறிந்து, இவர்கள் பொருட்கள் பிடிபட காரணமானவனை தடம் தெரியாமல் அழிக்கவும் அனுப்பி வைக்கப்பட்டவன் தான் இந்த சைத்தான்.
ஆரம்பம் முதலே, ‘காபோஸ் என்பவன் திறமை அற்றவன். அவனுடன் தொழில் செய்வது நல்லதில்லை’ என்று தன் தலைமைக்கு தகவல் அனுப்பி கொண்டே இருந்தான்.இவன் சந்தேக பட்டது படி, காபோஸ் எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் தொடர்ந்து அவன் பொருட்கள், அவன் ஆட்கள் யோஜித், ஸுல்பா மூலமாய் ரஞ்சித் ஆட்களிடமும் மாட்டி கொண்டே தான் இருந்தார்கள்.
அது தீரா தலைவலியை கொடுத்து கொண்டு இருந்தது இவன் குழுவிற்கு. அதில் மைல் கல் போல், நடிகன் ஸ்ரீ கிருஷ்ணா’ போதை ஒழிப்பு போலீசிடமும், தீவிரவாத தடுப்பு பிரிவிடமும் அவன் கோடௌன் பலத்தில் மறைத்து வைத்திருந்த போதை மருந்து மற்றும் ஆயுதங்களை காட்டி கொடுத்து இருக்க பல பில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.
ஸ்ரீ கிருஷ்ணா தான் படத்தில் மட்டும் இல்லை நிஜத்தில் கூட ஹீரோ தான் என்று நிரூபித்து விட்டு, ‘கசாக் நாட்டில்’ தலைமறைவாகி விட, அவனை பொது மக்கள் முன்னிலையில் கொன்றால் தான் அவர்களின் மேல் பயம் வரும் என்று சைத்தான் கசாக் நாட்டிற்கு வந்திருந்தான்.
மக்களின் பயம், அஜாக்கிரதை,எனக்கென்ன என்ற மனநிலை இது தான் தீவிரவாதிகளின் மிக முக்கிய ஆயுதங்கள்.
ஸ்ரீ கிருஷ்ணா மாதிரி, ‘நாட்டை காப்பது போலீஸ், ராணுவத்தின் கடமை மட்டும் அல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை’ என்ற உண்மை உணர்ந்து, ‘ஒரு தீவிரவாத குழுவிடம் இருக்கும் ஒற்றுமை நமக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் கூட ஏன் இல்லை’ என்ற மனநிலைக்கு வந்து பொது மக்கள் களம் இறங்கினார்கள் என்றால் இந்த அரக்கர்களின் நிலை என்ன ஆவது?
எந்த அளவிற்கு ரைட்ஸ் இருக்கிறது என்று வாய் கிழிய பேசுகிறமோ அதே அளவிற்கு இந்திய சட்டம் கடமையையும் சொல்லி இருக்கிறது என்ற மனநிலைக்கு ஸ்ரீ கிருஷ்ணா போல் அனைவரும் வந்து விட்டால் நாட்டை அழிக்க இவர்கள் போடும் திட்டம் எல்லாம் என்ன ஆவது?
‘இன்னொருத்தன் இவர்களை எதிர்க்கவோ, காட்டி கொடுக்கவே இனி முன் வர கூடாது.வெகு கோரமாக ஸ்ரீ கிருஷ்ணா சாகடிக்கப்பட வேண்டும்’ என்ற கட்டளை பிறப்பிக்க பட்டு இருந்தது.
ஸ்ரீ கிருஷ்ணா மாதிரி உலகம் அறிந்த ஒரு ஸ்டார் கொல்லப்பட்டால் இவர்கள் குழுவின் பெயர் மக்களின் மனதில் பயத்தை விதைப்பது மட்டுமில்லால் இவர்கள் பவர் உலகத்திற்கே தெரியும்.
ஸ்ரீ கிருஷ்ணாவை ஹாண்டில் செய்தது காபோஸ்.அவன் ராணுவத்திடம் போய் இவர்களை மாட்டி விட்டது ஒரு புறம் பிரச்சனையை ஏற்படுத்தி இருந்தது என்றால் பஞ்சாப் மாநில முதலமைச்சராக அர்ஜுன் இருந்தது இன்னொரு வகையான ஆப்பை ஆழமாக சொருகி இருந்தது.
அர்ஜுன் பஞ்சாப் முதலமைச்சராகி இருக்க, சாதாரண குடிமகனாக இருக்கும் போதே அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்து கொண்டிருப்பவனின் கையில் பதவி கொடுக்க பட்டு இருக்க, இப்பொழுது கேட்கவும் வேண்டுமோ?
கிடைத்த கேப்பில் எல்லாம் அர்ஜுன் ஆப்பு அடித்து கொண்டு இருக்க, காபோஸ் பஞ்சாப் விட்டு எஸ்கேப் ஆகி தன்னை காக்கும் படி கசாக் நாட்டில் இருந்த ஷைத்தானிடம் அடைக்கலம் ஆகி இருந்தான்.
அவர்கள் குழுவின் தலைவன் மகன் பரிந்துரையின் பேரில் தான் சைத்தான் கபோஸிற்கு உதவி கொண்டு இருந்தது.
“இவன் சரி வர மாட்டான்.இவனுடன் வேலை செய்வது ரிஸ்க்.தொடர்ந்து இவனால் பல பில்லியன் கணக்கான பொருள் இழந்து தவிக்கிறோம். இவன் ஆட்கள் கமாண்டோஸ் படையிடம் மாட்டுவது தினம் வாடிக்கையாகி வருகிறது. இவனோடு இருப்பது நமக்கும் ஆபத்து. நாம் இந்தியாவையே கதற அடிக்க போகும் அடுத்த பிளான் போட்டு கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் இவனுடன் இருப்பது ரிஸ்க்.”என்று இவன் பலமுறை தலைமையிடம் சொல்லியும் இவன் கண்டனத்தை தலைமை ஏற்காத வண்ணம் பார்த்து கொண்டான் தலைவன் மகன்.
ஒரு கூட்டத்தின் தலைவன் மகன் என்றால் அதற்கு என்று சில திறமைகள் இருக்க வேண்டும்.எதிராளியை விட எல்லா வழிகளிலும் சிந்தித்து, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ‘இல்லை நான் கால்களுக்கு நடுவே மட்டும் தான் சிந்திப்பேன்’ என்று சபலம் பிடித்து அலைபவனின் காமத்திற்கு ,பாலியல் வெறிக்கு இரையாக்க தினமும் பல பெண்களை அனுப்பும் ‘காபோஸ் செய்வது எல்லாம் தவறே இல்லை ‘ என்று தான் சொல்வான்.
தலைவன் மகனின் அந்த சபலம், காம வெறி அவர்கள் கூட்டத்தின் அந்த கிளையே அழிய காரணமாய் இருக்க போகிறது என்று அந்த தலைமைக்கு யார் சொல்வது.
அதன் ஒரு கட்டமாய் தான் ஸ்ரீ கிருஷ்ணாவை கடத்தி வர சைத்தான் கட்டளையிட்டு இருந்தால், காபோஸ் ஆட்கள் ஸ்ரீ க்ரிஷ்ணாவிற்கு பதில் இரு பெண்களை கடத்தி வந்து கண் முன்னே நிறுத்தி இருக்க எரிமலை போல் கொதித்து கொண்டு இருந்தான் சைத்தான்.
அவன் பார்வை கைகள் கட்டப்பட்ட நிலையில், மழையில் நனையும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து நிற்கும் கோழிகளை போல் ஒட்டி நின்று கொண்டு இருந்த பெண்கள் இருவரின் மேலிருந்து கீழாக படிந்தது.
“இடியட்ஸ்….இடியட்ஸ் இவங்களை பார்த்தா இந்த போட்டோவில் இருப்பவன் போலவா இருக்கிறது?நான் கடத்தி வர சொன்னது ஒரு ஆண்மகனை.நீங்கள் கூட்டி வந்திருப்பது ரெண்டு பெண்களை. இவங்களை இங்கே வைத்து கொள்ளவா வெங்காயம் உரிக்க?பிரியாணி சுடசுட செய்து போட..
இவங்க யார் என்னவென்று தெரியாது.பிரச்சனை வரும் முன்னர், இவங்களை கண்ணை கட்டி கொண்டு வந்தது போலவே எங்கேயாவது விட்டுட்டு வாங்க.இருக்கும் பிரச்சனைக்கு நடுவே இது வேறு…ஒன்றுக்கும் உதவாதா முட்டாள்கள்…கெட் லாஸ்ட்….கூட்டிட்டு போங்க இவங்களை.”என்று உக்கிரமாக கத்தினான் சைத்தான்.
“இல்லை சார் இவங்க ரெண்டு பேர் தான் பஞ்சாபில் நம்ம பொருட்களை பிடிபட காரணம்.”என்றான் நடுக்கத்துடன் காபோஸ் தளபதிகளில் ஒருவன்.
இடி சிரிப்பு சிரித்த சைத்தான், “யாரு இதுங்க ரெண்டும்? சோ இந்தியாவில் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நிறுவி, காபோஸ்/தலைவன் என்று பெயர் வாங்கிய ஒருவன் சாம்ராஜ்யம் பிடிபட ரெண்டு பொட்டசீங்க காரணம் என்று சொல்கிறாயா?உனக்கே இதை சொல்ல கேவலமாய் இல்லை? .
இவளுங்க எங்கே யூஸ் அவாளுங்க தெரியுமா படுக்கை அறையில் மட்டும் தான்.அந்த புது CM அர்ஜுன் அவன் போதை மருந்தை பிடித்தான், இல்லை ஸ்பெஷல் கமாண்டோ ரஞ்சித் பிடித்தான் என்று சொல்லு. நம்புவது மாதிரி இருக்கும். ஷோகேஸ் பொம்மை மாதிரி இருக்குதுங்க. இதுங்க தான் உங்க கூட்டத்தை சரித்தார்கள் என்றால் நீங்க எல்லாம் அவளுங்க கையில் இருக்கு பாரு வளையல் அதை அணிய தான் லாயக்கு. இன்னும் சுடிதார் வாங்கி தரேன் போட்டுக்கோங்கோ. ச்சே” என்று கர்ஜித்தான் அவன்.
அவனையும் அவன் கூட்டத்தையும் பொறுத்தவரை,அவர்கள் தலைமை இருக்கும் எல்லை பகுதியில் பெண்கள் என்றால் படுக்கை அறைக்கும், சமையல் அறைக்கும் மட்டுமே லாயக்கு.படிப்பு,தன்னம்பிக்கை,சுய சிந்தனை,சுதந்திரம் எல்லாம் மறுக்கப்பட்ட ஒன்று.
இவர்கள் கூட்டத்தில் ஒவ்வொருவனுக்கும் ஐந்து,ஆறு மனைவிகள், 50,100க்கும் குறையாத அந்தப்புர பாலியல் அடிமைகள் உண்டு. குழந்தைகளை பெற்று போடவும்,சமையல் செய்து போடவும் மட்டுமே பெண்கள் என்று இன்னும் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் வெறி பிடித்த கூட்டம்.
அந்த மைண்ட் செட் உடன் வாழ்ந்து கொண்டு இருப்பவனிடம் பெண்கள் தான் ஒரு கூட்டத்தையே அழிக்க காரணம் என்று சொன்னால் அவனால் அதை ஏற்க முடியவில்லை.
உடனே அதை தன் தலைமைக்கு தெரிவித்தவன், “நான் அப்பொழுதே சொன்னேன்.இந்த காபோஸ் ஒன்றுக்கும் உதவாதவன் என்று.ரெண்டு பொம்மைகளை பிடிச்சுட்டு வந்து இதுங்க தான் ராணுவத்தால், கமாண்டோஸ் படையால்,முதலமைச்சரால் சாதிக்க முடியாத ஒன்றை சாதித்து காட்டியதாய் சொல்லிட்டு அலையறானுங்கோ.”என்று இவன் எரிமலையாய் கொதிக்க அவன் தலைமை முதல் முறையாக இவன் சொல்வதை ஏற்க ஆரம்பித்தது.
அங்கு ஆரம்பமானது தலைவனின் மகன் என்ற பெயரில் அதுவரை முடிவு எடுத்து வந்தவனின் அழிவு. அவன் அதள பாதாளத்தை நோக்கி போக, கூட்டத்தில் உயர ஆரம்பித்தான் சைத்தான்.சைத்தானின் இந்த உயர்வு ரெண்டு பெண்களின் வாழ்வை குறி வைக்க போகிறது என்பதை அந்த சமயம் யாரும் அறியவில்லை.
ஒரு பெண் இந்திய ப்ரைம் மினிஸ்டர் மகள் ஷீலா தேசாய்.இன்னொரு பெண் டாக்டர் மயூரி ஹரி பிரசாத்.
அதே சமயம் கசாக் நாட்டில் இருந்த ஒருவனின் மொபைல் அலற ஆரம்பித்தது.
“ஹெலோ!”என்று ரஞ்சித் சொன்னது தான் தாமதம்.பத்து வினாடிகளுக்கு காதில் கேட்க முடியாத பச்சை வார்த்தைகள் வந்து விழுந்தது எதிர் முனையிலிருந்து.
“உன்னையெல்லாம் எவன் கமாண்டோ ஆக்கியது? கொடுத்து இருக்கும் ஒரே வேலை அந்த ரெண்டு பொண்ணுகளை பத்திரமாய் காபோசிடம் இருந்து பாதுகாப்பது ஒன்று தான்.அதை கூட செய்யாமல் அவன் கூட்டத்திடம் மட்டும் இல்லாமல்,தீவிரவாத கூட்டத்திடமும் அவங்களை பார்சல் செய்து கொடுத்து இருக்கியே நீ எல்லாம் ஒட்டகம் மேய்க்க கூட லாயக்கு இல்லைடா.”என்று குதறி எடுத்தான் ஒருவன்.
“என்னடா சொல்றே?காபோஸ் கசாக் நாட்டில் இருக்கானா?”என்றான் ரஞ்சித் திகைப்புடன்.
“நேத்து நைட் வந்துட்டான் என்று மெசேஜ் அனுப்பினேன் பார்க்கவில்லையா நீ?” என்றான் அவன்.
“இல்லை நேத்து ஒரு இன்டெராகேசன் விடிய விடிய நடந்தது இங்கே.காபோஸ் வங்கி கணக்கை முடக்கும் வேலையில் இந்த நாட்டு போலீஸ்சுடன் செய்து கொண்டு இருந்தோம்.எப்படி அவன் பஞ்சாபில் இருந்து தப்பினான்?அவன் தான் காபோஸ் என்று உனக்கு எப்படி தெரியும்? “என்றான் ரஞ்சித்.
“லூசாடா நீ?அவன் முகத்தை தான் யாருமே பார்த்தது இல்லையே. அர்ஜுனை சுடும் போது பிடிபட்ட ஆள் கொடுத்த வர்ணனை கொண்டு வரையப்பட்ட ஸ்கெட்ச் கூட போலின்னு தான் சொல்லிட்டேனே.தவிர இத்தனை வருடம் தப்பிப்பவன் என்றால் அவன் நிச்சயம் பச்சோந்தி போல் தன்னை மாற்றி கொள்வதில் தேர்ந்தவனாய் தான் இருக்க வேண்டும்.நேத்து தான் அவனை நேரில் பார்த்தேன்.
நான் அனுப்பிய ஸ்கெட்சிற்கும் நீ கொடுத்த ஸ்கெட்சிற்கும் ஆறு இல்லை அறுபது வித்தியாசம் சொல்லிடலாம்.மெயில் பார்க்கவில்லையா நீ?” என்றான்.
“இல்லைடா…நேத்து முழுவதும் இங்கே அவன் ஆட்கள் சிலர் மாட்டினார்கள்.அவனை நொண்டி நொங்கு எடுத்து கொண்டு இருந்தோம்.இதோ பார்க்கிறேன்.”என்று secure,encrypted மெயில் திறக்க ஆரம்பித்தான்.
“இங்கே பார் ரஞ்சித் இது என்னுடைய நான்கு வருட undercover ஆபரேஷன். நான் என் வீட்டினருடன் பேசி கூட நாலு வருஷம் ஆகுது.இப்போ தான் இந்த தீவிரவாத கூட்டம் என்னை நம்ப ஆரம்பித்து இருக்கு.அதனால் தான் இந்தியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவனுங்க போட்ட திட்டம்,அர்ஜுனை கொல்ல இவனுங்க போட்ட திட்டம்,போதை மருந்து ஷிப்மென்ட் எல்லாம் நம்ம உளவு துறைக்கு சொல்ல முடிந்தது.
இவனுங்க இன்னும் அதி தீவிரமாய் ஏதோ பிளான் போடுறானுங்க.அதை கண்டுபிடிக்கும் வரை நான் இவர்களுடன் இருப்பது முக்கியம்.சோ என் கவர் ப்ளோ அப் ஆகாமல் பார்த்துக்கோ.உன் பைத்தியக்காரத் தனத்தால் ரெண்டு பெண்களும் இங்கே மாட்டி இருக்காங்க.xxxx இந்த இடத்தில் தான் இன்று இருப்போம்.விடிவதற்குள் அந்த பெண்களை மீட்டு கொள்.என் கவர் வெளிப்படும் படி நான் எதையும் செய்யமாட்டேன். ஒருவேளை அந்த பெண்களை சுடவேண்டி வந்தால் அதையும் செய்து விடுவேன்.collateral டேமேஜ் என்று எடுத்து கொள்ள வேண்டியது தான்.”என்றான் அவன் சற்றும் இரக்கம் இல்லாமல்.
எத்தனையோ மரணங்களை பார்த்தவன் தான் ரஞ்சித் என்றாலும் அவனின் இந்த பேச்சு ரஞ்சித்தையே அசைத்து தான் பார்த்தது.
“என்னடா இப்படி எல்லாம் பேசுறே?”என்றான் அதிர்ந்து போனவனாய்.
“வேறு என்ன செய்ய சொல்றே?இந்திய திருநாட்டின் பாதுகாப்பா, இல்லை ரெண்டு உயிரா என்று கேட்டால் நான் இந்தியாவை தான் தேர்ந்து எடுப்பேன்.அதற்கு நீ அங்கே ஷிம்லாவை விட்டு இங்கே இவங்களை கூட்டி வந்திருக்க கூடாது ரஞ்சித். “என்றான் அவன்.
“இது வேறு பேங்க் விஷயம் தானே.என்ன ஆபத்து வந்திட போகுதுன்னு நினைச்சேன்.கடைசியில் பார்த்தால் போதை மருந்து கூட்டமும் இங்கே தான் இருக்கு,தீவிரவாத கூட்டமும் இங்கே தான் இருக்கு.இங்கே நீங்கள் இருப்பதாய் தகவல் வரவே இல்லையே.”என்றான் ரஞ்சித்.
“லூசு மாதிரி பேசாதே ரஞ்சித்.ரகசிய ஆபரேஷன் செய்யும் போது அதையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிட்டு செய்ய முடியாது.இன்று இங்கே இருப்போம்.நாளையே அமெரிக்காவில் இருப்போம். கமாண்டோவான உனக்கு இது கூடவா தெரியாது.நீ பெண்களை இங்கே கூடி வந்தது தப்பு.இப்போ அவங்க இங்கே தீவிரவாத கூட்டத்திடம் மாட்டி இருக்காங்க.
நல்லவேளை அந்த சைத்தான் நல்ல மூடில் இருந்தான் போலிருக்கு.இவங்களை விட்டுட்டு வர சொல்லியிருக்கான்.அந்த இடத்தில் ட்ராப் செய்வாங்க.அவங்க போன பிறகு வந்து கூட்டிட்டு போ.இந்த பிளானில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் sos(save our soul ) அனுப்பறேன்.எப்படியாவது அந்த பெண்களை காப்பாற்று.சரி யாரோ வராங்க வச்சிடறேன்.”என்றான் தீவிரவாத குழுவில் இருந்த இந்திய உளவாளி, undercover அதிகாரியான அவன்.
அவன் அழைப்பை துண்டிக்கவும்,ரஞ்சித் மெயில் ஓபன் ஆகி,அந்த உளவாளி அனுப்பி வைத்திருந்த ஸ்கெட்ச் ஓபன் ஆகவும் மிக சரியாய் இருக்க,அதை கண்ட ரஞ்சித்,தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து துள்ளி எழுந்தான்.
“வாட்….இவன் தான் கபோஸா?”என்று அவன் அலறிய அலறலில் அவன் அறைக்கு வெளியே நின்றிருந்த அவன் துணை அதிகாரிகள் பலர் உள்ளே ஓடி வந்தனர்.
கண்கள் முன் விரிந்த அந்த உருவத்தின் ஸ்கெட்ச் நம்ப முடியாதவனாய் வெறித்தான் ரஞ்சித்.இத்தனை காலம் அவர்கள் அருகிலேயே இருந்து பஞ்சாப் மக்களை மட்டுமில்லாது,இந்திய மொத்தத்தையும் தன் போதை மருந்தால் சுடுகாடு ஆக்கியவன் அவன் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பவே மாட்டார்கள்.
“ஓஹ் காட் நோ.”என்று ரஞ்சித் அலற அடுத்த நொடி பஞ்சாபில் பல இடங்களில் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது.
அந்த அழைப்பை ஏற்றவர்கள் எல்லாம்,” வாட்.?”என்று கேட்ட செய்தியை நம்ப முடியாதவர்களாக அலறினார்கள்.அவர்கள் அனைவரையும் அலற வைத்து கொண்டு இருந்தான் ஸ்கெட்ச்சில் இருந்த காபோஸ்.
பஞ்சாப் மட்டும் இல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் அலற காரணமாய் இருந்த காபோஸ் அப்பொழுது அந்த கோடௌனில் காலடி எடுத்து வைத்தது அந்த ரெண்டு பெண்களின் துரதிர்ஷ்டமே.ஒரு ஐந்து நிமிடம் தாமதமாய் வந்திருந்தால் இவர்கள் இருவரின் உயிருக்கு மீண்டும் ஆபத்து ஏற்படாமல் இருந்திருக்கும்.ஆனால் விதி.காபோஸ் உள்ளே வரும் போது மிக சரியாய் அவன் ஆட்கள் ரெண்டு பெண்களை மாஸ்க் அணிவித்து வெளியே கொண்டு செல்ல அவர்களை நிறுத்தினான்.
“என்ன செய்துட்டு இருக்கீங்க?யார் இந்த பெண்கள்?”என்றான் அவன் உறுமலாய்.
‘தான் என்ன சொல்லிவிட்டு சென்றோம் ,இந்த மடையர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்’என்று வெறியே எழுந்தது அவனுக்கு.
“நீங்க சொன்ன கேபின் போனோம் ஜி.அங்கே இந்த பொண்ணு தான் இருந்தது. இறந்து போன நம்ம xxx வீட்டில் இந்த பொண்ணு இருந்தது. அதான் பிடித்து வந்தோம்.உள்ளே சார் எங்களை திட்டி விட்டு, இவங்களை விட சொல்லிட்டார். அதான் விட்டுட்டு வர போகிறோம்.” என்றான் காபோஸ் ஆளில் ஒருவன்.
“அவன் சொன்னான் என்று லூசு தனமாய் செய்வீர்களா என்ன.?எதுக்கு இவளுங்க வெளியே போய் இந்த நாட்டு ராணுவத்தை கூட்டி வருவதற்கா? இங்கேயே துப்பாக்கியில் சுட்டு தள்ளி கொன்று புதைப்பதை விட்டுட்டு.பினிஷ் தேம் ஹியர்.”என்றான் காபோஸ்.
அவன் சொன்ன மறுகணம் ரெண்டு துப்பாக்கிகள் ஜெஸ்ஸி பின் மண்டையிலும்,இன்னொரு பெண்ணின் பின் மண்டையிலும் வைத்து அழுத்தப்பட,ட்ரிக்கர் அழுத்தப்படும் கடைசி நொடி அது.
ரஞ்சித்திடம் பேசி விட்டு வெளியே வந்த அவன் தன் கண் முன் எழுந்த அந்த காட்சியை கண்டு உறைந்து போய் நின்றான்.அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை வேறு.அந்த பெண்கள் இருவரை காப்பாற்ற அந்த நொடி அவன் ஆயுதம் எடுத்தால்,நாளை நூற்றுக்கணக்கில் மக்கள் சாவதை தடுக்க முடியாமல் போய் விடும்.
இரு பெண்களின் உயிரா இல்லை கோடிக்கணக்கான இந்திய மக்களின் உயிரா என்ற பூதாகரமான கேள்வி அவனை திணறடிக்க என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து நின்றான் அவன் .
அந்த பெண்கள் இருவரின் மூளை சிதறி,அந்த இடத்தில் துடி துடித்து இறப்பதை தடுக்க இயலாதவனாய் ஊமையாய் நின்றான் அந்த அதிகாரி.அவன் கைகள் ஒன்றை ஒன்று பற்றி கொண்டு இருந்த நிலையே அவன் தன்னை எவ்வளவு முயன்று கட்டுப்படுத்தி கொண்டு நிற்கிறான் என்று சொல்லாமல் சொன்னது.
கண் முன்னே ரெண்டு உயிர் பிரிய போகிறது.அதுவும் மிக நல்ல ரெண்டு பெண்களின் உயிர்.அதை காப்பாற்றும் நிலையில் அவன் இல்லை.
“கடவுளே!”என்று ஒரு கணம் அவன் கண் மூடி வேண்ட,
“கடவுளே!”என்ற முனகல் ஜெசியிடமிருந்து எழுந்தது.
ஜெஸ்ஸியின் அந்த கடவுளே என்ற முனகல் தான் அவள் உயிரை காப்பாற்றியது என்று கூட சொல்லலாம்.
அந்த வார்த்தையை கேட்ட கபோஸிற்கு என்ன தோன்றியதோ, “வெயிட்.டோன்ட் ஷூட்.” என்றவன் ஒரு பெண்ணின் முகத்தை மூடியிருந்த கறுப்பு துணியை விளக்க, திகைத்தவனாய் ரெண்டு ஸ்டெப் பின்னால் எடுத்து வைத்தான் காபோஸ்.
எதற்குமே அஞ்சாத மன துணிவு கொண்ட அவனையே ஸ்தம்பிக்க வைத்தாள் அவன் கண் முன்னே நின்றவள்.அவளும் கபோஸிற்கு இணையான அதே திகைப்பில் தான் அவனை வெறித்து கொண்டு இருந்தாள்.
தங்கள் கண் முன்னே காண்பதை நம்ப முடியாதவர்களாக ஒருவரை ஒருவர் வெறித்து கொண்டு இருந்தனர்.கண்கள் சொல்வதை கிரகிக்க முடியாமல் அவர்கள் இருவரின் மூளை திணறி தான் போனது.
“அடிப்பாவி நீ இன்னும் சாகலையா?” என்றான் காபோஸ்.
“அடப்பாவி நீ இன்னும் சாகலையா ?”என்றாள் அவள்
இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்து கொண்டு நிற்கும் அளவிற்கு தான் அந்த சூழ்நிலை இருந்தது.
இறந்து போனதாய் உலகமே நினைத்து கொண்டு இருக்கும் இருவர், சாகவே இல்லை என்ற உண்மை ஜீரணிக்க இருவருக்கும் கால அவகாசம் தேவைப்பட்டது.
“சாகாத உன் இறப்பிற்கு பழி வாங்க தான் அங்கே அர்ஜுன் ஒரு மாநிலத்தையே ஒருவழியாக்கி கொண்டு இருக்கிறானா?ப்ளாடி பிட்ச்.”என்று உறுமினான் அவன்.
“அப்போ நீ தான் உலகமே தேடும் காபோஸ்அப்படி தானே?மேஜர் அர்ஜான் உடன் இருபது முப்பது ராணுவ வீரர்கள் சாக,ஸுல்பா மற்றும் குழந்தைகள்,அர்ஜுன் அத்தை,பாட்டி எல்லாரும் இறக்க மட்டும் இல்லை,போதை என்னும் சுனாமி பஞ்சாபில் மட்டும் அல்ல இந்திய இளைஞ்சர்கள் உருகுலையவும் நீ தான் காரணம் இல்லையா ரணீத் ஜோகி?தன்வியின் பாசக்கரா உறவு.”என்றாள் ப்ரீத்தி ஜெகநாதன்.
ஸ்ரீ கிருஷ்ணாவிடம், ‘ஜெஸ்ஸி’ என்ற பெயரில் பேசியவள் ப்ரீத்தி ஜெகன்நாதனே.
அவள் பாஸ்போர்ட் அப்படி தான் சொன்னது.அவள் பெயர் ப்ரீத்தி ஜெகன்நாதன் இல்லை ஜெஸ்ஸி என்று.
ஆக மொத்தம் மத்திய, மாநில அரசாங்கம் வெறும் கையால் முழு பூசணிக்கையாய் மறைத்திருக்கிறது. witness protection திட்டத்தில் ப்ரீத்தி, ஜெஸ்ஸி ஆக்கப்பட்டு இருந்தாள்.
ப்ரீதியுடன் இருந்த இன்னொரு பெண் அமன்ஜீத் காதலி, ‘கோல்டன் பிஷ்’ என்று அழைக்கப்படும் அந்த ப்ரீத்தி ஜெஸ்மிந்தேர். ப்ரீத்தி ஜெகன்நாதனால் காபோஸ் தளபதி இல்லத்திற்கு அனுப்பட்டு பிடிபட்டு இருந்தவள்.
எப்படி பெண்கள் இடம் மாறி சென்று ஆள் மாறாட்டம் நடந்து இருந்ததோ அதே போல் ஒரே பெயரை இருவருக்கு கொடுத்து அங்கே, ‘ஒரு பெயர் மாறாட்டம்’ நடத்தப்பட்டு இருந்தது.
ஜெஸ்ஸி என்பது பஞ்சாப் வீடுகளில் மிக பொதுவான பெயர்.தெருவிற்கு நாலு ஜெஸ்மிந்தேர் இருப்பார்கள்.ப்ரீத்தியை பஞ்சாப் விட்டு வெளியேற்ற, ஜெஸ்ஸி என்ற பெண் தான் சிம்லா போய் இருக்கிறாள் என்ற சாட்சி ரெடி செய்ய, போலி பாஸ்ப்போர்ட்டில் ப்ரீத்தி ஜெகன்நாதன் ஜெஸ்ஸியாக மாற்ற பட்டு இருந்தாள்.
“எஸ் நான் தான் காபோஸ்.என் இடத்தில் இன்னொருத்தனை சாக வைச்சிட்டு நான் தப்பித்துட்டேன்.முகம் முழுக்க கருகி இருந்த அவன் தான் நான் என்று உலகத்தையே நம்ப வைத்தேன். அவன் செத்ததும் நான் தான் செத்துட்டேன் என்று உலகமே நம்புச்சு.ஆனால் நீ எப்படி உயிரோடு இருக்கே?உன்னை என் ஆட்கள் சுட்டதை தான் டிவி சேனல் எல்லாம் நிமிடத்திற்கு ஒருமுறை போட்டு காட்டினார்களே. ஆனால் நீ எப்படி உயிரோடு இருக்கே “என்றான் ரணீத்.
“உண்மை உன் ஆட்கள் துப்பாக்கியை தூக்கியது உண்மை.அர்ஜுனுக்கு குறி வைத்தது உண்மை. அவர்கள் குறி வைத்து அர்ஜுனை சுட்டதும் உண்மை.ப்ரீத்தி மேல் குண்டு பாய்ந்ததும் உண்மை.அதை டிவி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ததும் உண்மை.
ஆனா ஒரே விஷயம் மிஸ் செய்துட்டாங்க எல்லோரும் .’ப்ரீத்தி சுடப்பட்டார் என்று சொன்ன டிவி சேனல்கள் எந்த ப்ரீத்தி சுடப்பட்டாள் என்று அதை சொல்லலையே.’என்று சோப்பு விளம்பரம் மாடுலேஷனில் ப்ரீத்தி சொல்ல காபோஸ் திகைத்தான்.
“என்ன புரியலையா…நான் ப்ரீத்தி ஜெகன்நாதன்.இதோ நிக்குதே இந்த முந்திரி கொட்டை இது ப்ரீத்தி ஜெஸ்மிந்தேர்.குண்டு பாய்ந்தது இதோ இந்த ப்ரீத்தி மேல் தான்.என் மேல் இல்லை.நியூஸ் சேனல் எல்லாம் கேட்டுக்கு வெளியே நின்றவாறு ஓவர் ஜூம் செய்ததில் எல்லா காட்சிகளும் அவுட் ஆப் போகஸ். அந்த நேர ஷூட் அவுட்டில் அங்கிருந்த மீடியா மக்கள் உயிருக்கு பயந்து ஓடியதில் எந்த காட்சி பதிவும் கிளாரிட்டி சுத்தமாய் இல்லை.
ஒரு பெண்ண சுடப்படுவது காட்டப்பட்டது..அந்த பெண் ப்ரீத்தி என்று உறுதி செய்யப்பட்டது.ஆனால் இந்த ப்ரீத்தி ஜெஸ்மிந்தருக்கு பதில் நான் தான் சுட்டு கொல்லப்பட்டேன் என்று மீடியா ஹைப் செய்துட்டாங்க.
ஏனென்றால் அந்த பள்ளி குழந்தை காப்பாற்றிய போது எங்கள் மேல் விழுந்த மீடியா வெளிச்சம், போகஸ் மக்கள் என்னை ப்ரீத்தி என்றும் இவளை ஜெஸ்ஸி என்றும் பிக்ஸ் செய்து விட்டது.இவளையும் எல்லோரும் செல்ல பெயராய் ஜெஸ்ஸி என்று அழைக்க இவளின் பெயரும் ப்ரீத்தி தான் என்பதை மக்கள் மறந்து விட்டார்கள்.
சோ இந்த லேடி ஜாக்கி சான் செய்த ஸ்டன்டில் எனக்கு சவப்பெட்டி ரெடி செய்துட்டாங்க. வாழ்க்கையில் டெத் நியூஸ், இரங்கற்பா எல்லாம் உயிரோடு இருந்து பார்த்த ஒரே ஆள் நானாய் தான் இருப்பேன்.இதுல என் சின்ன வயசு நட்பு வட்டத்தை கூட விடமால் வித விதமாய் பேட்டி எடுத்து போட்டார்கள் பாரு…நொந்து போய்ட்டேன்
மீடியா ஓவர் ரா ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தது போலெல்லாம் இவளுக்கு சீரியஸ் இல்லை.ரத்த இழப்பு இருந்ததென்னவோ உண்மை.கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் மேடம் மிஸ்ஸஸ் ஆகாமலே மேலே எஸ்ஸாகி இருப்பாங்க.
சோ எல்லாரும் ஜெஸ்ஸி மேல் கவனமாய் இருக்க, என் கவனம் மீடியா மேல், ஓடிய நியூஸ் மேல் இருந்தது.அதில் என் மரணதிற்கு இரங்கற்பா எல்லாம் வாசித்தர்களா பக்ன்னு ஆகி போச்சு.விஷயம் கை மீறி போன பிறகு தான் எல்லாருக்குமே சுடப்பட்ட பெண் பெயர் மாற்றி சொல்ல பட்டு இருப்பதை கண்டு பிடித்தார்கள்.” என்றாள் ப்ரீத்தி. .
“சோ அர்ஜுன் முதலமைச்சராக நீ தான் காரணம் இல்லையா.பின் இருந்து அரசியல் ஆட்ட காலத்தையே மாற்றி வைத்தது நீ தான் இல்லையா…என் இத்தனை வருட உழைப்பை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போக வைத்தவள் நீ தான் இல்லையா?”என்று குரலே எழும்பாமல் கேட்டான் காபோஸ்.
“நான் மட்டும் இல்லை.இன்னும் நிறைய பேர் இதற்கு துணை புரிந்தார்கள்.நான் தான் சுடப்பட்டதாய் நியூஸ் ஓடி கொண்டிருக்க ரஞ்சித்துக்கு ஒரு அழைப்பு வந்தது.உன் பிளான் எல்லாம் புட்டு புட்டு வைத்தார்கள்.
அமன் முதலமைச்சர் ஆக அதற்கு தடையாய் இருக்கும் அர்ஜுனையும், அவனுக்கு இருக்கும் பேர்,புகழை அழிக்க நீ செய்த எல்லா பிளானும் தெரிய வந்தது. பிடிபட்ட உன் தளபதி அதை உறுதி செய்தான்.
குருதேவ் அங்கிள், ‘தான் ஜெயித்தே இருக்க கூடாது.ஆனால் நான் ஜெயித்தேன்’ என்று சொல்லியதே மனதிற்குள் ஓடி கொண்டு இருந்தது.எங்கோ யாரோ விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
தர்மா அப்பா விருந்து கொடுக்கும் போது கூட தன் கட்சியில் எத்தனை பேர் உன் ஆட்களாய் இருக்கிறார்கள் என்று புலம்பிய போது கூட , ‘அர்ஜுன்,அமன்,யோஜித் இவர்களை அரசியலில் உங்கள் கட்சி சார்பாய் நிறுத்துங்கள் அப்பா’ என்று தான் சொன்னேன்.அது சரியாய் வருமா மக்கள் ஏற்று கொள்வார்களா என்ற குழப்பம் அவருக்கு இருந்தது. அர்ஜுனுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பற்றி சொல்லி அவர் கட்சியின் சார்பாய் அவனை நிறுத்த ஐடியா கொடுத்தேன்.
நான் எப்படி அர்ஜுன் கரெக்ட் கேண்டிடேட் என்று கணித்தேனோ அதே போல் அமன்ஜீத்தை விட அர்ஜுனுக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உண்டு என்று கணித்து, அர்ஜுன் இருக்கும் வரை அமன்ஜீத் என்பவன் ரெண்டாம் தரமாய், அர்ஜுனுக்கு ஒரு கட்டம் கீழே தான் இருப்பான் என்று கணக்கு போட்டு அவனை கொல்ல திட்டம் போட்டு இருந்தாய் தான்.ஆனால் என்ன நீ அதை விபத்து போல் மாற்றி இருப்பே.அர்ஜுன் இறப்பை வைத்து சவ அரசியல் செய்து அமன்ஜீத் முதலமைச்சர் ஆக்கி இருப்பாய். உன் ஆட்கள் அவசரப்படத்தில் மொத்தமாய் சொதப்பி விட்டது.
சோ எந்த அரசியலுக்கு அர்ஜுன் வர கூடாது என்று நீ பிளான் போட்டாயோ அதே அரசியலில் அர்ஜுன் ஜெயிக்க வேண்டும், மக்கள் மத்தியில் அவனுக்கு அனுதாபம் ஏற்பட வேண்டும் என்று ப்ரீத்தி சுடப்பட்டதை நான் சுடப்பட்டதாய் மாற்றி, இறந்து போனதாய் செட் அப் செய்து,அரசாங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு, மக்கள் மனதில் ஒரு அனுதாபம் அர்ஜுனுக்கு உருவாக்கி கொடுத்தோம்.
உன் பிளான் வைத்தே உன் கண்ணை குத்திட்டோம்.
என்னை வைத்து உன் சப்போர்ட் உள்ள ஆட்கள் பெரிய பெரிய போட்டோ போட்டு, அடுக்குமொழி வசனம் எல்லாம் பேசி, பிரபலங்கள் சிலரை கூப்பிட்டு சவ அரசியல் செய்வீர்கள் என்று நினைத்த என் கணக்கு தப்பவில்லை.
நான் இறந்து போகவில்லை என்று தெரியாத என் அம்மா கொடுத்த பேட்டி உங்க ஒட்டுமொத்த திட்டத்தை தவிடு பொடியாக்கி விட்டது.
அதாவது எப்படி குருதேவ் அரசியலில் ஜெயிக்க இருபது வருடத்திற்கு முன் பிளான் போட்டாயோ அதே போல் அவர் மகன் அமன் அரசியலுக்கு வரவழைத்து உன் கைப்பாவையாக்கி கொள்ள நீ போட்ட திட்டம் எல்லாம் தவிடு பொடி.அப்படி தானே?” என்று ப்ரீத்தி சொன்னதை கேட்டு அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றார்கள்.
“நீ உயிரோடு இருப்பது மட்டும் தெரிந்தால் மக்களுக்கு அர்ஜுன் மேல் வெறுப்பு வந்து விடும்.அடுத்த தேர்தலில் நிச்சயம் அமன்ஜீத்தை முதலமைச்சராக்கி காண்பிக்கிறேன்.”என்றான் காபோஸ் வெறியுடன்.
“அதுக்கு நிறைய தடை இருக்கே ரணீத் .எப்படி அதை எல்லாம் சரி செய்ய முடியும் உன்னால்? கொஞ்சம் யோசித்து பாரு.ப்ரெசிடெண்ட், ப்ரைம் மினிஸ்டர் நான் witness protection திட்டத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், நான் சுடப்பட்டதால் என்னை பாதுகாப்பாய் வைத்தாய் சொல்வார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணா மாதிரி ஒரு ஸ்டார் நிச்சயம் மீடியாவிற்கு போகாமல் இருக்க மாட்டான்.நிச்சயம் என் பெயரையும் சொல்வான்.சோ ஒளிந்து மறைந்து இருந்தாலும் போதை மருந்து கூட்டத்திற்கு எதிராக செயல் பட்டேன் என்று என்னை மக்கள் கொண்டாடுவார்கள் தான்.அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து, இன்னொரு மாநிலத்தின் பிரச்சனையே தீர்த்து இருக்கிறேன் என்று பக்கம் பக்கமாய் புகழ்ந்து எழுதுவார்கள்.
இது அர்ஜுன் அரசியலில் நிலைத்து நிற்க, அவனை எவனும் நெருங்காத வண்ணம் வைத்திருக்கும்.மக்கள் மனதில் ஏதாவது ஒரு விதத்தில் இடம் பெற்று விட்டால் போதும்.நம்மை அவர்கள் விட்டே கொடுக்க மாட்டார்கள்.
அதுவும் நீ யார் என்று தெரியும் போது ஒட்டுமொத்த போகஸ் உன் மேல் தான் இருக்கும்.” என்று ப்ரீத்தி நக்கலுடன் சொல்லி முடிக்க காபோஸ் கோபம் எல்லை கடந்தது.
“யு ப்ளாடி பிட்ச்…”என்று ப்ரீத்தி ஜெகன்நாதனின் கழுத்தை பிடித்து நெறுக்கினான் காபோஸ்.
வெறி …அப்படியொரு வெறி.கோபம். ப்ரீத்தியையும், ஜெஸ்ஸியையும் கன்னம் கன்னமாய் கட்டி வைத்து அடித்தவன், கீழே விழந்தவர்களின் மேல் தன் பூட்ஸ் கால்களையும் வைத்து உதைக்க ஆரம்பித்தான்.
வலி தாங்க முடியாமல் ப்ரீத்தி, ஜெஸ்ஸி இருவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகினாலும், அவர்கள் இருவரின் வாய் மட்டும் வலியில் திறக்கவேயில்லை. முகம்,கை, கால் வயிறு என்று எல்லா இடத்திலும் காபோஸ் பூட்ஸ் கால்கள் இவர்களை மிதித்தது.
ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் இருவரையும் துவைத்து எடுத்தவன், “உயிரை எடுத்துடு என்று நீங்க கதறணும்.கதற வைக்கிறேன்.உங்க சாவு அந்த அர்ஜூனுக்கும் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அந்த மக்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்கிறேன்.
பொண்ணுங்கனா வீட்டில் சமைச்சி போட்டுட்டு, பிள்ளைகளை பெத்து கொடுத்துட்டு அடிமையாய் இருக்கணும். அதை விட்டுட்டு நாங்க தான் ஜான்சி ராணி என்று துள்ளி எழுந்தால் விட்டு விடுவோமா?
சுத்தி பாரு முப்பது பேருக்கும் குறையாமா இருக்கானுங்க.அவனுங்க கையில் சிக்கி சின்னாபின்னமாகி எப்படி எல்லாம் வன்கொடுமைக்கு ஆளாக போறீங்க என்று மட்டும் பாருங்க…டேய் கேமராவை எடுத்து வாங்கடா…இன்னைக்கு உங்களுக்கு செம விருந்து. நீ சுடப்பட்டதை தானே நேரடி ஒளிபரப்பு செய்தானுங்க.நான் நீங்கள் எப்படி எல்லாம் கதறி துடித்து இவனுங்க ஒவ்வொருத்தன் கையிலும் என்னவெல்லாம் கொடுமை அனுபவிக்கறீங்க என்று நேரடி ஒளிபரப்பு செய்கிறேன். என்ஜாய்.”என்றவன் ப்ரீத்தியின் ஆடை மேல் கையை வைக்க அடுத்த நொடி அங்கே எழுந்தது ஒரு அலறல்.
பயணம் தொடரும்…