OVOV EPILOGUE

அது ஒரு சாதாரண அறை. ஸிரோ வாட்ஸ் பல்ப் அழுது வடிந்து கொண்டு இருக்க, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரே ஒரு நாற்காலி மட்டுமே போட பட்டு இருந்தது. அதில் கை கால்கள் கட்டப்பட்டு இருந்த நிலையில் அமர்ந்து இருந்தான் அவன். முகத்தை கருப்பு துணி மூட பட்டு இருந்தது.எங்கும் இருட்டு. இருட்டை தவிர சில நாட்களாக வேறு எதையும் அவன் பார்த்திருக்கவில்லை என்பதால் பயப்பந்து நெஞ்சுக்குள் உருண்டு கொண்டு இருந்தது.

அந்த அறைக்கு கொண்டு வரப்பட்டு எத்தனை நாள் ஆனது என்பதையே மறந்து இருந்தான். இரவா பகலா என்று கூட அவனுக்கு தெரியவில்லை.

அவன் செய்த ஒரே தவறு தீர விசாரியாமல் இவன் பெயர் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டு இருந்த பதாகையை தாங்கி நின்ற டிரைவரை  நம்பி ஏர்போர்ட்டில் காரில் ஏறியது தான். ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் வரை எந்த பிரச்னையும் இல்லை.

டிராபிக் இல்லாத ஒரு இடத்தில் வண்டி நிற்க டிரைவர் இயற்கை உபாதைக்கு தான் செல்கிறான் என்று இவன் எரிச்சலுடன் அமர்ந்திருக்க, டிரைவர் காரை நிறுத்தி விட்டு பின்னால் இவனை பார்த்தது போல் திரும்பி அமர்ந்தான்.

“வாட்…?” இவன் கேட்டு முடிப்பதற்குள் கையில் இருந்த பாட்டில் ஒன்றில் இருந்த ஸ்பிரே அடிக்கப்பட, மயக்கம் முழுதாய் ஆட்கொள்வதற்குள்,

“இந்த ட்ராவல்ஸ் தேர்ந்து எடுத்ததற்கு நன்றி. இந்த பயணம் உங்களுக்கு இனிமையானதாக இருக்க வாழ்த்துக்கள்.” என்ற டிரைவர் நக்கல் குரல் கேட்க,

“ஆர் யு ஜோக்கிங்…மயக்க மருந்தை அடிச்சிட்டு …பயணம் இனிமைன்னு சொல்லறானே லூசு.”என்றவாறே  மயங்கி போனான் அவன்.

அதன் பிறகு அவன் கண் விழித்த போது எங்கும் கும்மிருட்டு. இவன் பெருங்குரல் எடுத்து கத்த முடியாத அளவிற்கு அவன் வாய் கட்டப்பட்டு இருந்தது.

“ஒத் சார் முழிச்சிட்டார்.”என்ற ஆங்கில குரல் இவன் காதில் வந்து விழ, அடுத்த நொடி இவன் முகத்தை மூடி இருந்த மாஸ்க் எடுக்கப்பட்டது.

இருட்டுக்கு பழகியிருந்த பார்வை சற்று நேரத்தில் தெளிவாக, நிமிர்ந்து பார்த்த அவன் திகைத்தான்.

அவனுக்கு முன் நான்கு பேர் முகத்தில் மண்டை ஓடு மாஸ்க் அணிந்து கையில் உருட்டுக்கட்டை உடன் நின்றார்கள்.

தொடர்புடைய படம்

 

“டேய் …யாரு மேல் கை வச்சி இருக்கீங்க தெரியுமா?”என்று முதல் நாள் சத்தம் இட்டான்.

“டேய் நான் யாரு தெரியுமா?” ரெண்டாவது நாள் சுருதி இறங்கி இருந்தது.

“பாஸ் யாருங்க யாரு நீ ?”மூன்றாவது நாள் கேள்வி தொனி மாறியது.

“சார் …ப்ளீஸ் யாருங்க நீங்க எல்லோரும்?”என்று முழு சரணாகதி அவன் அடைய அவர்கள் அப்பொழுது தான் கட்டையை வைத்து அடிப்பதையே நிறுத்தினார்கள்.

“ப்ரோ இந்த பணிவு முதலிலேயே இருந்தா, இப்படி எங்க கையில் தர்ம அடி வாங்க வேண்டிய அவசியமே இல்லையே. பாருங்க…உங்களுக்கு பணிவு பற்றி கிளாஸ் எடுக்க நாலு நாள் உங்களை வச்சி செய்ய வேண்டியதாக இருந்தது.” என்றான் அவர்களில் ஒருவன்.

‘என்னது பணிவு  வரணும் என்று கிளஸ்ஸா? இவனுங்க என்ன லூசா?’ என்று மனதிற்குள் நினைத்தவன், அதை வாய் விட்டே கேட்டு விட, மீண்டும் வடிவேலுக்கு நாலா பக்கம் கட்டையில் இருந்து அடி விழுவது போல் அடி விழுந்து கொண்டே இருந்தது.

“பாருங்க ப்ரோ…நான்கு நாள் தொடர்ச்சியா உங்களுக்கு பணிவு கிளாஸ் எடுத்தோம். இப்படி பெயில் ஆன எப்படி? இப்படி மரியாதை, பணிவு தெரியாதவனை எல்லாம் ஏன் விட்டு வச்சி இருக்கீங்க என்று நாளை சமுதாயம் எங்களை நோக்கி விரல் நீட்டும் அளவுக்கு போக கூடாது இல்லையா?”என்று விளாசி தள்ளினார்கள்.

“அயோ சாரி…இனி மேல் அப்படி எல்லாம் பேச மாட்டேன்.” என்று அவன் கதறிய பிறகு தான் அவனை அடிப்பதை நிறுத்தினார்கள்.

“இப்போ சொல்லுங்க  டெய்சியை பார்த்து ஏன் கண் அடிசீங்க?” என்றான் அந்த நால்வரில் ஒருவன்.

“டெய்சியா அது யாரு?”என்றான் இவன் குழப்பத்துடன்.

“கண்ணை அடிச்சது மட்டும் இல்லாமல், கண் அடிச்ச பெண் பெயர் டெய்சி என்பது கூட தெரியாமல் தான் கண் அடிச்சியா?”என்று குரலை உயர்த்தியவன்  பட்டென்று முதுகில் பட்டேனென்று கட்டையால் அடி போட்டான்.

“சத்தியமா எனக்கு எந்த டெய்சியும் தெரியாது.”என்று அலறினான் இவன்.

“அப்போ டெய்சி மேட்டர் நீ செய்யவில்லை என்றால் அப்போ ரூபா கையை பிடிச்சி இழுத்தது நீ தானே?” என்ற இன்னொருவன் அவன் கை மேல் அடி வைத்தான்.

இப்படியே மாற்றி மாற்றி பத்துக்கும் குறையாத பெண்கள் பெயரை சொல்லி. இதை செய்தது நீ தானே, அதை செய்தது நீ தானே என்று கேட்டு கேட்டு துணியை துவைப்பது போல் துவைத்து எடுத்தார்கள் அவனை.

முன்னால் போனால் கடிப்பதும், பின்னல் வந்தால் உதைப்பதும் என்று அவனை ஒரு வழியாக்கி கொண்டு இருந்தார்கள்.

“சகோதரா அப்போ என் தொன்னூறு வயது பாட்டி பியூட்டி பார்லர் போகும் போது பைக் கொண்டு வந்து இடிச்சது நீ தானே? “என்றான் இன்னொருவன்.

“நானா….என் கிட்டே பைக்கே இல்லைங்க.கார் தாங்க இருக்கு “என்றான் அவன்.

“ஏன்டா பைக் வச்சிட்டு இல்லை நீ? காருக்கு பெட்ரோல் எவ்வளவு செலவு ஆகும்?” என்றான் இன்னொருவன்.

“சார் என் கார் டீசல்லில் ஓடுவது சார்.”என்றான் இவன் அழாத குறையாய்.

“ஏண்டா பெட்ரோல் கார் வாங்கலை…பெட்ரோல் பூமியில் இருந்து எடுக்க எவ்வளவு செலவு ஆகும்…பெட்ரோல் எடுப்பவன் குடும்பம் எப்படி  கஷ்ட படும் நீ பெட்ரோல் வண்டி வாங்கலை என்றால்…அவங்க குழந்தை குட்டி பெட்ரோல் நீ வாங்கலை என்றால் நாளை சாப்பாட்டுக்கு என்னடா செய்வாங்க.”என்றான் இன்னொருவன்.

“சார் நான் பெட்ரோல் கார் வாங்கிடறேன் சார்.”என்றான் இவன்.

“அப்போ டீசல் எடுப்பவன் குடும்பம் சோத்துக்கு வழியில்லாமல் தெருவில் நின்றால் என்ன செய்வது.”என்றான் இன்னொருவன்.

“டேய் லூசாடா நீங்க …நான் ஒருத்தன் பெட்ரோல், டீசல் வாங்கலைன்னா அவனுங்க குடும்பம் என்ன தெருவில் நிற்க போவது போல் ஏண்டா பில்ட் அப் கொடுக்கறீங்க…. பைத்தியக்கார ஹோஸ்டபிடலில் இருந்து மொத்தமாய் தப்பி வந்துடீங்களா?”என்றான் அவன் கடுப்பாகி.

“பார்த்தியா மீண்டும் பேச்சில் மரியாதை இல்லை ….சமுதாயம் என்ன சொல்லும் எங்களை?”என்று மீண்டும் அங்கே கட்டை தூக்க பட்டது.

எதுக்கு தன்னை கடத்தினார்கள், எதுக்காக அடிக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியாமல் அடி வாங்கி கொண்டு இருந்தவன் உலகிலேயே அவன் ஒருத்தனாய் தான் இருப்பான்.

“ஒரு சந்தேகம் தம்பி…. ஏன்டா நீ பச்சை சட்டை போட்டு இருக்கே…” என்றான் இன்னொருவன்.

“கடையில் வாங்கினேன் சார்…அதான் போட்டு இருக்கேன்….” என்றான் இவன் அடுத்த ரவுண்ட்டா என்ற திகிலுடன்.

“அப்போ மீதம் உள்ள சட்டை எல்லாம் என்ன ஆவது? அந்த சட்டை எல்லாம் மனம் வேதனை பட்டு கண்ணீர் விட்டால் மத்த சட்டைகளின் மனம் தாங்குமா?”என்றான் இன்னொருவன்.

“அதை நாடு தாங்குமா?”

“இந்திய பொருளாதாரம் என்ன ஆவது?”

“நீ செய்த இந்த செயலால் ஐ.நா இந்தியா மேல் வழக்கு கொண்டு வந்தால் என்ன செய்வது?”

“அதானே நாளை உலகத்தின் முன் நாம் தலை குனியும் படி நீ வைக்கலாமா.எவ்வளவு தான் கிளாஸ் எடுத்தும் மரியாதை வரலையே…”என்ற இன்னொருவன் கட்டையால் அடி போடஆரம்பித்தான் .

“அய்யோ கடவுளே….லூசுங்க கிட்டே மாட்டிக்கிட்டேனே என்னை காப்பாத்து.”என்று வாய் விட்டே அலறினான் அவன் .

“தம்பி…எங்கள் தங்க கம்பி….இப்போ கடவுளை எதுக்கு டிஸ்டர்ப் செய்யரே…அவருக்கு கோபம் வந்து நீ செய்த செயல் பிடிக்காமல் போகும் போக்கில் நாலு நிலநடுக்கம், ஐந்து சுனாமி, பத்து எரிமலை நம்ம பக்கம் அனுப்பி வச்சுட்டா என்ன செய்வது?”

“தம்பி…இப்படி உலகையே அழிக்க நினைக்கிறாயே…உன் மனம் என்ன கல்லா? அதில் ஈரம், கருணை அன்பெல்லாம் இல்லையா? ”

‘உலகையே ஒட்டுமொத்தமாய் அழிக்க நினைக்கும் தீவிரவாதியாகி விட்டாயே?”

“அப்போ ஹோச்பிடலில் குண்டு வைத்த தீவிரவாத கூட தலைவனை உலகமே தேடுதே அந்த சைத்தான் நீ தானே.”

“இல்லை இவன் போதை மருந்து கூட தலைவன் காபோஸ். இவனை பிடிச்சி கொடுத்தால் இருபது லட்சம் மெக்ஸிகோ அரசாங்கம் கொடுக்குமாம்.”

“சார் …சார் …நான் தீவிரவாதி எல்லாம் இல்லை…”என்றான் அவன் பயத்துடன்.

பிளைட் எறியதில் இருந்தே அவன் பார்த்த வீடியோ எல்லாம் சைத்தான், காபோஸ் பற்றியே இருக்க, அவர்கள் இருவரை கொல்ல இந்திய அரசாங்கம் மட்டும் அல்ல உலகமே காத்து இருப்பதை பற்றி கேள்வி பட்டு இருந்தான்.

“நீ தீவிரவாதி இல்லை என்று சொன்னால் உன் கூட்டத்தின் ஆட்களின் மனம் என்ன பாடு படும்?”

“தீவிரவாதி என்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கா?”

“இங்கே பாரு இருபது லட்சம் ரூபாய் கிடைக்கும்…சோ மெக்ஸிகோ அரசாங்கம் கிட்டே நீ தான் தீவிரவாதி என்று சொல்லு…உன் பெயரை சொல்லி அந்த காசை நாங்க வாங்கி உனக்கு ஐந்து லட்சம் செல்வதில் சிலை வைக்கிறோம்யா ப்ளீஸ்…கொஞ்சம் உன் உயிரை கடனாய் கொடேன்.”

“நான் தீவிரவாதி எல்லாம் இல்லம் இல்லை சார்.”

“ஹே நான் கண்டுபிடிச்சிட்டேன் இவன் அப்போ காபோஸ்… அந்த போதை மருந்து கூட தலைவன்.”

“ஹே போதை மருந்து தலைவன் உயிருக்கும் சன்மானம் உண்டு இல்லை…யாருக்குமே அவன் யார் என்று யாருக்குமே தெரியாதாமே…சோ இவன் பெரிய மனது செய்து செத்துடுவான்…இவன் தான் காபோஸ் என்று சொல்லி நம்ம காசு வாங்கிடலாம்..”

“இரு இவன் தான் ரெண்டும் என்று சொல்லிடலாம் …துப்பாக்கி வேண்டும்…இதோ கையில் துப்பாக்கி ரெடியா இருக்கு.அதை இவன் கொண்டு வந்த பையில் வைத்திடலாம்.”

“சார் …சார் …சார் …என்ன சார் செய்யறீங்க?”என்று அலறினான் அவன் திகிலுடன்.

“டேய் சும்மா இருடா…பிளான் செய்யறோம் இல்லை…எதையும் செய்வதற்கு முன் பிளான் பண்ணி செய்யணும் என்று எங்க தலை வேலு, வடிவேலு சார் சொல்லியிருக்கார்…பிளான் செய்யலைன்னா எப்படி காசு எப்படி வரும்?”

துப்பாக்கி ஒன்று அவன் பையில் வைக்கப்பட, அடுத்து ஒரு போதை மருந்து பாக்கெட் ஒன்றும் அவன் சட்டை, பாண்டில் வைக்கப்பட்டது.

“ஹேய் இப்படியே ஒரு ஸெல்ப்பி எடுக்கலாம் பா…அதை ஷேர் செய்ததா தானே இவன் தான் அவங்கன்னு பேமஸ் ஆகும்… தம்பி…நீங்க தான் தீவிரவாதி, போதை மருந்து கூட தலைவன் இல்லையா..உங்க கூட ஒரு போட்டோ சார்..”

“சார் சாமி மேல் சத்தியமா நான் தீவிரவாதி, போதை மருந்து கூட தலைவன் எல்லாம் இல்லை.”

“இப்படி பொய் சொன்னால் பொய் சொன்ன வாய்க்கு புவா கிடைக்காதுன்னு செத்து போன எங்க அப்பத்தா சொல்லி இருக்கு…உங்களை என்ன நாட்டின் பிரதமர் ஆகவா சொல்றோம்… ஒரு தீவிரவாதி தானே ஆக சொல்றோம்…அதுக்கு இப்படி பிகு செய்யலாமா?”

“எங்க செல்லம் இல்லை…ஓத்துக்கோ பா …என்ன சொல்லணும் …நான் ஒரு தீவிரவாதி.மக்களை கொன்று குவிப்பது என் ஹாபி… என்னை எதிர்ப்பவன் போவான் மேலே பேபி…நாங்க டெரர். எங்களுக்கு இல்லை பியர்…நாங்க தான் மாஸு ..எங்களை எதிர்ப்பவன் ஆவான் பிஸ்கோத்து ….நான் தான் ஜிராஃபி…என்னை எதிர்த்தா பிம்பிளிக்கி பியாபி.”

எத்தனை நாளோ கணக்கு வழக்கில்லாமல் அவனை வச்சி செய்ததில் அவனுக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்று தான் குறை.

ஒருவாரம் கழித்து சொர்க்க வாசல் போல் கதவு திறக்கப்பட வெளியே ஓடி வந்தவனை எதிர் கொண்டது தார் பாலைவனம்  170,000 km2  கிலோமீட்டர் சுற்றளவுள்ள இந்தியாவின் மிக பெரிய பாலைவனம்.

எந்த பக்கமா போகிறோம் என்று எல்லா பக்கமும் ஓடி, பசி தாகத்தால் மயங்கி விழுந்தவனை யாரோ சிலர் மருத்துவமனையில் அனுமதிக்க அவனுக்கு அங்கே டிரீட்மென்ட் கொடுக்கப்பட்டது.

“யார் சார் நீங்க…உங்களிடம் துப்பாக்கி, போதை மருந்து எல்லாம் எப்படி வந்தது சார்?”என்றான் ஒருவன் அவன் உடை பார்த்தே அவன் ராணுவ வீரன் என்று புரிந்து விட,

“சார் சார் என்னை காப்பாத்துங்க சார்…ஒரு பைத்தியக்கார கும்பல் என்னை கடத்திட்டு போய்ட்டாங்க சார்.அவங்க தான் சார் இதை எல்லாம் என் பையில் வைத்தாங்க…”என்றான் சுஷாந்த் பயத்துடன்.

“நீங்க அப்படி சொல்றீங்க…பட் எங்க இன்டெலிஜென்ஸ் டீமிற்கு இந்த போட்டோ வாட்ஸபாப் வந்ததே…இப்போ வைரல் இந்த போட்டோ தான்.”என்றவன் காட்ட அதில் சுஷாந்த ஒசாமா பின் லேடன் தோளில் கை போடு கொண்டு நிற்க, ” எங்க தலை ராக்ஸ் ” என்று கீழே எழுத்துக்கள் ஒளிர சுஷாந்திற்கு தலை சுற்றியது.

“சார் சத்தியமா அது நான் இல்லை…”என்று ராணுவ வீரனின் கையை பிடித்து கொண்டு கதற,

“உங்களை நம்பறேன் சுஷாந்த்…இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் ஒன்று சென்னைக்கு கிளம்புது. அதில் உங்க ஊருக்கு போங்க சார்…அந்த தலைவனை நாங்க கொன்று விட்டோம் தான் என்றாலும், அவங்க  யாராவது உங்களை தேடி வரலாம்…

முக்கியமாய் அவங்க உங்களை வேவு பார்க்க பெண்களை அனுப்பலாம்…சோ பத்திரம்…உங்க ஊரு பெண் சிலரை கூட அவனுங்க கடத்தி போய் பிரைன் வாஷ் செய்து இருப்பதாய் கேள்வி…பத்திரம்.”என்றவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்தான்.

“ரொம்ப நன்றிங்க ….”என்றவன் உள்ளே முயல அவனை எதிர்கொண்டாள் அவள்.

“ஹே பாஸ் நீங்க இங்கே என்ன செய்யறீங்க…உங்களை தேடி தான் வந்துட்டு இருக்கேன்…பாருங்களேன் நீங்க தான் இத்தனை நாள் எங்க பாஸ் என்று தெரியாமல் போச்சு…இந்தாங்க பாஸ் இதில் பத்து கிலோ கஞ்சா,அபின் இருக்கு…”என்றவளை கண்டு அலறி அடிக்காத குறையாய் ஏர்போர்ட்டிற்குள் ஓடினான் சுஷாந்த்.

“சுஷாந்த் ….என்ற பிராணா நாதா …இந்த அபலை பெண்ணை கை விட்டு விடாதீர்க சுவாமி …சுஷ் …சுஷ் …ஷூ”என்று நாடக பாணியில் அவனை நோக்கி வசனம் பேசினாள் ப்ரீத்தி அர்ஜுன் பாட்டியா.

“ஏய் அவன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிட்டான்…இன்னும் எதுக்கு காக்கை ஓட்டிட்டு இருக்கே நீ …கிளம்பு…”என்றாள் டாலி.

“இனி செத்தாலும் பஞ்சாப் பக்கமோ, உன் பக்கமோ தலை வைத்து கூட படுக்க மாட்டான்…எந்த பெண்ணையும் தவறாய் பார்க்கவோ, பேசவோ தோன்றாது.”என்றாள் ஜெஸ்ஸி.

“லேடீஸ்…கிளம்பலாமா….வேலை இருக்கு.”என்றான் ராணுவ வீரன் ரஞ்சித்.

நால்வரும் வெகு ஸ்டைலாக தங்கள்  குலர்ஸ் அணிந்து காத்திருந்த ஜீப்பில் ஏற அதற்குள் இருந்த அமன்ஜீத் இவர்களை பார்த்து தலையில் அடித்து கொண்டான்.

“இதுங்க தேறாதா கேஸ்.”என்றான் அர்ஜுன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

“புரிஞ்சா சொறி cm சார்…”என்றாள் ப்ரீத்தி அவனை பார்த்து கண் அடித்தவாறு.

ஐந்து வருடம் கழித்து

“மீண்டும் பஞ்சாப் முதல்வர் ஆனார் அர்ஜுன் பாட்டியா.”

“ஹி டிட் இட் அகைன் ”

“ஸ்மாஷிங் சீப் மினிஸ்டர்.”

“அர்ஜுன் கட்சி மகத்தான வெற்றி…”

என்று மீடியா முழுவதும் அர்ஜுன் அவன் அமைச்சரைவை புகழை பாடோ பாடு என்று பாடி கொண்டு இருந்தது .

வெற்றி கொண்டாட்டம் எல்லாம் கலை கட்டி இருந்தாலும் அர்ஜுன் நிமிடத்திற்கு ஒருமுறை தன் மொபைல் எடுத்து பார்த்து கொண்டே இருந்தான்.

“ராட்சசி …மனுஷனை படுத்தி எடுக்கவே வந்த மோஹினி பிசாசு….”என்று வாய் விட்டே புலம்பினான் அந்த மாநில முதல்வன்.

கொண்டாட்டம் இரவு வரை நீடிக்க அதை எல்லாம் முடித்து வீட்டுக்கு வந்த அர்ஜுன், அமன், யோஜித் மூவருக்கும்  ஆலம் சுற்றி வரவேற்றார்கள்  மிருதுளாவும்,  ராஷ்மியும், ஸுல்பாவும்.

வீட்டின் மூத்த தலைமுறை காலில் விழுந்து வணங்கி எழுந்தவன் கண்கள் வீட்டிற்குள் வந்ததில் இருந்து தேடி கொண்டு இருக்கும் ப்ரீத்தியை காணாமல் ஒலி மங்கி போனது.

“வாங்க பா சாப்பிடலாம்.”என்றார் ராஷ்மி.

“தோ வரேன் மா..”என்றவன் ரெண்டிரெண்டு படிகளை மாடி ஏறி அவன் அறைக்குள் நுழைந்தான்.

அவர்கள் அறைக்குள் நுழைந்த உடனேயே அவன் நாசி ப்ரீத்தி வாசனையை கண்டு கொள்ள அவனையும் அறியாமல் அவன் இதழ் புன்னகையை தத்தெடுத்தது.

கட்டிலில்  நான்கு வயது அர்ஜுன், ப்ரீத்தியின் ட்வின்ஸ்   மோக்ஷித், ஹேரம்பிகா  உறங்கி கொண்டு இருக்க, ப்ரீத்தி சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டு இருந்தாள்.

மேடிட்டு இருந்த வயிறு மீண்டும் ப்ரீத்தி தாய்மை அடைந்து இருப்பதை சொல்ல, தாய்மையின் மிளிரவில் இருந்த ப்ரீத்தியை ஆசை தீர பார்த்தான் அர்ஜுன்.

அன்று காலை முதல் ப்ரீத்தி தன்னை படுத்திய பாடு நினைவிற்கு வர ,பொய் கோபம் தலைக்கேற, ப்ரீத்தி தலையில் நங்கென்று வலிக்காதவாறு கொட்டினான் அர்ஜுன்.

கொட்டியவன், “புருஷன் வார்டு கவுன்சிலர் ஆனாலே பொண்டாட்டிக தூக்கி வச்சி கொண்டாடறாங்க…நான் மீண்டும் முதலமைச்சர் ஆகி வந்து இருக்கேன்…ஒரு வாழ்த்து சொல்ல முடியலையா மேடம்மிற்கு  ?”என்றான் அர்ஜுன் கோபத்துடன்.

“இப்போ எதுக்கு நீ ஹல்க்  மாதிரி கோபத்தில் நிக்கறே? நீ தான் ஜெயிக்க போறே என்பது தெரியும்… ஜெயிச்சிட்டு இங்கே தானே வர போறே…அப்புறம் எதுக்குயா  தனியா உனக்கு விஷ் செய்யணும்…சும்மா அடங்குடா..” என்றாள் ப்ரீத்தி.

“அடியேய் …நான் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர்டீ…” என்றான் அர்ஜுன் காற்று போன பலூனாய்.

“அதுக்கு இப்போ என்ன ? நீ ஜில்லா கேடின்னு ஊருக்கே தெரியும்… வெளியே போய் சொல்லிடாதே என்னவோ மாஸ் cm, வீரன்,தீரன், சூரன் என்று ஊரே உன்னை கொண்டாடுது… உன்னை நான் அறிவேன்…என்னையன்றி யார் அறிவார் ?”என்று பாடிய ப்ரீத்தியை முறைத்தான் அர்ஜுன்.

“இப்போ என்ன சொல்லவரே நீ? என் தீரம் வீரம் தான் ஒன்றுக்கு மூணாய் இருக்கே.போதாதா? “என்றான் அர்ஜுன்.

“ஐயோ சார் அப்படிங்களா…ஆனால் நான் இதை சொல்லலியே சார்…திருமணம் அதுவும் மூன்று முறைஆகி போச்சு. உலகத்திலேயே பொண்டாட்டி கழுத்தில் மூன்று முறை தாலி கட்டியவன் நீ ஒருத்தன் தான் யா.ஆனா உன் குடும்பத்திடம் பொண்ணு மாறிய விஷயத்தையோ, அமிர்ஸ்டெர் கோயிலில் ரப்ஜி முன்னிலையில் நீ தாலி கட்டி விட்டதையோ சொல்லாமல் நீயும் அந்த அமர்நாத் மாமாவும் இன்னும் எத்தனை வருஷத்திற்கு தான் மறைக்க போகறீங்களோ.

இதில் நான் cm என்று பில்ட் அப் வேற…முதலில் தைரியமா போய் உன் குடும்பத்திடம் உண்மையை சொல்லு பார்க்கலாம். அப்போ ஒத்துகிறேன் நீ cm என்று…உனக்கு வீரம், தீரம் எல்லாம் இருக்கு என்று…”என்றாள் ப்ரீத்தி வெகு நக்கலாக.

“யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ல்லிட்டே..”என்றான் அர்ஜுன்.

“உன்னை பார்த்து தான் டா சொன்னேன்.அதுவே உனக்கு தெரியலையா சுத்தம். “என்றாள் ப்ரீத்தி.

“இப்போவே கீழே இறங்கி போவேன்.”என்றான் அர்ஜுன்.

“வழி அந்த பக்கம் இருக்கு…”என்றாள் ப்ரீத்தி.

“போய் சொல்லிடுவேன்.”என்றான் அர்ஜுன்.

“சொல்லுன்னு தான்டா நானும் சொல்றேன்.தைரியமா உங்க தாத்தாவின் துப்பாக்கிக்கு பயப்படாம சொல்லிட்டு வா  பார்க்கலாம்…பெட் என்ன cm சார்?  “என்றாள் ப்ரீத்தி.

“யாருக்கு …யாருக்கு தாத்தா துப்பாக்கி மேல் எல்லாம் பயம்… இதோபோறேன் …போய் சொல்லிட்டு வந்து என்னை கிண்டல் செய்த இந்த வாயை எப்படி மூடணும் என்று எனக்கு தெரியும்.”என்றவன் வேகத்துடன் கீழ் இறங்க, சிரித்து கொண்டே அவனை பின் தொடர்ந்தாள் ப்ரீத்தி.

ஹாலில் ஐந்து ஆறு குடும்பம் குழுமி இருந்தது.அர்ஜுன் குடும்பம், ப்ரீத்தி பெற்றோர், அவள் தோழர்கள் மதுரா, விஜய், சூர்யா,அவர்கள் பிள்ளைகள் ரஞ்சித், அமன் அவன் குடும்பம், அமன் -ஜெஸ்ஸியின் பிள்ளை விக்ராந்த், யோஜித், டாலி மகன் மன்தீப் என்று ஒரு மினி கிராமமே அங்கு குழுமி இருந்தது.

“தாத்தா !”என்று உரக்க குரல் கொடுத்தவன், அவர் தன் துப்பாக்கியை துடைத்து கொண்டு இருப்பதை கண்டு ஜெர்க் ஆகி நின்றான்.

“என்ன அர்ஜுன்?”என்றார் அவர் வெகு நிதானமாய்.

“அது அது வந்து தாத்தா …நீங்க சாப்டீங்களா?”என்றான் அர்ஜுன்.

“அவர் சாப்பிட்டு தெம்பாய் தான் இருக்கிறார் உங்களை துரத்தி துரத்தி சுட.”என்றாள் ப்ரீத்தி கிண்டலாக.

‘இவ வேற நடுவில்.”என்ற அர்ஜுன் அவளை முறைக்க, முறைத்தவனை பார்த்து கண்ணடித்தாள் ப்ரீத்தி.

“சொல்லு அர்ஜுன்.”என்றார் உபிந்தர்.

“அது தாத்தா.”என்று ஆரம்பித்தவன் தயங்க, ப்ரீத்தியின் நக்கல் பார்வை தொடர பெருமூச்சு எடுத்தவன் எல்லாத்தையும் சொல்லி முடித்து விட்டு துப்பாக்கி முழங்க கண்ணை மூடி காத்து நின்றான்.

“ஹே நாங்க தான் ஜெயிச்சோம்…எடுங்க காசை…’என்ற உபிந்தர் குரல் அந்த ஹால் நிறைத்தது.

“இல்லை இது போங்காட்டம்….ஐந்து  வருடம் கழிச்சி தான் உங்க பேரனுக்கு வீரம் வந்து இருக்கு.”என்றது ப்ரீத்தியே தான்.

“அது எங்க மேல் இருந்த மரியாதைடீ.”என்றார் ஸுல்பா.

“மரியாதை…உங்க அர்ஜுன் மரியாதையை நீங்க தான் வச்சுக்கணும்…அமிர்ஸ்டெரில் ஒருமுறை திருமணம், தமிழ்நாட்டில் ஒருமுறை திருமணம், இங்கே வந்து உங்களுக்காக ஒருமுறை திருமணம் என்று உங்க பேரன் என் கழுத்தில் மூன்று முறை தாலி கட்டி இருக்கிறார்…”என்றாள் ப்ரீத்தி.

“மாப்பிள்ளை அஸ்திவாரத்தை ஸ்டராங்கா போட்டு இருக்கார் மா.” என்றார் மிருதுளா.

அர்ஜுன் வீட்டினருக்கு தமிழ்நாட்டில் திருமணம் நடந்ததே போதுமாய் இருந்தது தான் என்றாலும், பஞ்சாபில் அவர்கள் முறைப்படி திருமணம் நடக்கவில்லை என்ற சலசலப்பு எழ, ஊரில் உலகத்தில் ஆயிரம் உயிர் போகும் பிரச்சனை இருந்தாலும் இதை வைத்து அரசியல் செய்தார்கள்.அவர்கள் வாயை அடக்க மூன்றாவது முறையாய் ப்ரீத்தி கழுத்தில் பஞ்சாப் முறைப்படி பத்து நாள் விரதம், ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி, ஊருக்கே விருந்து வைத்து ப்ரீத்தியை தன்னவள் ஆக்கி கொண்டான் அர்ஜுன்.

மூன்று முறை தாலி கட்டியும், குழந்தைகள் பிறந்தும், ஐந்து வருடம் கடந்த பின்னும்  அர்ஜுன் பெண் மாறியதையோ , முதல் முறை அவன் செய்த திருட்டு தனத்தையோ வீட்டில் சொல்லவேயில்லை.

“என்ன நடக்குது இங்கே?”என்றான் அர்ஜுன்.

“ஒய் பல்பு மன்னா…என் கண்ணா…உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் வீட்டினருக்கு ஏற்கனவே சொல்லிட்டோம் இல்லை…நீயே சொல்வே என்று ஐந்து வருடம் முன்பு உங்க தாத்தா பெட் கட்டினார்…இப்போ தான் என் ஆசை ராசா உனக்கு வீரம் வந்து இருக்கு.”என்ற ப்ரீத்தி அடுத்த நொடி எடுத்தாள் ஓட்டம்.

“அடியேய் …நில்லுடீ …ஓடாதே …கையில் கிடைச்சே …உன்னை நில்லுடீ…என்னை வச்சி காமெடி செஞ்சிட்டு இருக்கே…. “என்றவன் ப்ரீத்தியை துரத்த அவளை காக்க சிலர், அர்ஜுனுக்கு உதவ சிலர் என்று ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே ஓடி பிடித்து சிறு பிள்ளைகள் போல் விளையாடி கொண்டு இருந்தார்கள்.

சில நொடிகளில் அர்ஜுன் கைகளில் வெகு பாந்தமாய் அடங்கி போனாள் அவனின் சரிபாதி.

மனதளவில் பிள்ளைகளாகவும், பாசம், அன்பு என்ற பிணைப்பில் இணைந்திருந்த் அவர்கள் மாநிலத்திற்கு நாட்டுக்கு என்று வரும் போது   சீரும் சிங்க கூட்டம்.

மக்களுக்கு நன்மை கொண்டு வர இவர்கள் மேற்கொள்ளும் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இது முடிவில்லா பயணம்.

 

THE END