Penniyam pesathadi 3

பெண்ணியம் பேசாதடி – 3

அன்றில் பறவை தூது செல்ல காதல்
வளர்த்தார்களாம் அன்று!
மகன் தூது செல்ல காதல்
வளர்த்தேன் இன்று!
எக்காலத்திலும் காதல் கிறுக்கு
உண்டு போலும்.

தனது முன் அமர்ந்து தீவிரமாக ஆராய்ந்து கொண்டு இருந்த வளவனை வெட்டவா, குத்தவா என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.அவனது கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.

தொழில் செய்ய வேண்டிய வேலை அதிகம் உள்ளது என்னதான் வாமணன் வாண்டு பார்த்துக் கொண்டாலும்,நிர்வாகம் சரி பார்ப்பது வளவன் தான்.அதாவது சம்பளம்,வரி,முக்கியமான வங்கிக் கடன்கள்,என்று பணம் பரிவர்த்தனை,அவன் பங்கிட்டுக் கொடுத்தால் தான் வேலை நடக்கும்.

மாதத்தில் முதல் நாள் இந்த வேலையைத் தொடங்கினால் தான் ஐந்து தேதிக்குள் அனைத்தையும் முடித்துச் சம்பளம் போட முடியும்.அதை செய்யாமல் தனது அப்பாக்குத் தீவிரமாகக் காதலியை தேடி கொண்டு இருக்கும் நண்பன் மீது கோபம் வராமல் இருந்தால் தான் தப்பு.

சரி அவன் போகட்டும் தன்னையாவது வேலை செய்ய விடுகிறானா அதுவுமில்லை.அவனையும் சேர்த்துக் கொண்டு லூட்டி அடித்துக் கொண்டு இருக்கிறான்.

தந்தையிடம் வாக்கு கொடுத்துச் சரியாகப் பத்து நாள் சென்ற நிலையில் இன்று அவனுக்கு ஒரு தகவல் கிடைத்தது, கிடைத்த தகவலில் தந்தையின் கண்ணம்மாவாக இருப்பாள் என்ற அந்தத் தகவல் எழுபது சதவீதம் பறை சாற்றியது.

“டேய் ரமேஷ் எங்க சித்தி இருக்கற வீட்டுக்கு எதிர்த்த வீடு தாண்ட இந்த மலர் கொடி.அப்பாவோட பைத்தியமான ரசிகை.சித்திகிட்ட கேட்டு அவுங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்”.

“என்னது சித்தி கிட்ட கேட்க போறியா நான் வரலடா சாமி.அந்த ரவுடி கிட்ட பேச எனக்குத் தெம்பில்லை”ரமேஷுக்குக் காஞ்சனை பற்றி நன்கு தெரியும் அவனுக்கு அவரிடம் அடி வாங்கிய அனுபவம் அதிகம் உண்டு.படிக்கும் காலத்தில் வளவனுடன் அவர் வீட்டுக்கு சென்று பழக்கம் ஆகி,அடி வாங்கும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம்.

“டேய் உன்ன யாரு உண்மைய சொல்ல சொன்னா.எங்க அப்பா மேட்டரு நம்ப இரண்டு பேருக்கு தான் தெரியும்.கஞ்சனைக்குத் தெரிஞ்சுது நம்ப உயிருக்கு உத்தரவாதம் இல்லை”.

“நல்ல குடும்ப அமைப்புடா உனக்கு.என்ன நேரமோ என் வாழ்க்கை உங்ககிட்ட சிகிடுச்சு”.

“ரொம்ப அழுத்துக்காதடா வா சித்தி வீட்டுக்கு போவோம்”இனி இவன் சொன்னாலும் கேட்க மாட்டான் என்று சில பல வேலைகளைத் தனக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களுக்குக் கொடுத்துவிட்டு நண்பனுடன் சென்றான்.

அங்கு வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தார் காஞ்சனை.அதில் ஒரு குத்து பாடல் ஓடி கொண்டு இருந்தது.அதனை பார்த்தவாறே ரமேஷும்,வளவனும் உள்ளே நுழைந்தனர்.

டீபாய் மேல் கால் வைத்து ஆட்டியவரே அவர்களைப் பார்த்த காஞ்சனை “ஹே.. யூ… தடி ….மாடுஸ்” என்று வரவேற்க.

“என்னடா உங்க வீட்டுல ஒருத்தருக்கும் மரியாதனா என்னனு தெரியாதா” என்று காஞ்சனை விட்டுவிட்டு வளவனிடம் எகிறினான் ரமேஷ்.
அதையெல்லாம் கண்டு கொள்ளவளா காஞ்சனை “உங்களுக்கு இந்த மரியாதையே அதிகம்” என்றவள் மீண்டும் அவர்களைக் கண்டு கொள்ளாமல் டிவி பார்க்க.ஓடி சென்று டீவியை நிறுத்தினான் வளவன்.

“எதுக்குடா நிறுத்தின”

“நீயெல்லாம் என்ன பொண்ணு நாளைக்கி உன்ன கட்டி கொடுத்தா எங்க தாத்தாவை தான் திட்டுவாங்க”.

“எனக்கு என்னடா குறைச்சல்” என்று சண்டைக்கு வர தனக்கு இப்போது காரியம் தான் முக்கியம் என்று எண்ணி. “உன்கூடச் சண்டை போட வரல சித்தி எனக்கு முக்கியமா ஒரு விஷயம் தெரியணும்,என்ன எதுன்னு கேள்வி கேட்காம தயவு செஞ்சு நான் கேட்டதுக்குப் பதில் மட்டும் சொல்லு”.

“சரி சரி அழுதுடாத கேளு சொல்லுறேன்,டேய் அற லூசு நீயும் உட்கரு” என்று ரமேஷையும் வாரினால்.அவனும் குடும்பமா இது என்ற முணு முணுப்போடு உட்காந்தான்.

“சித்தி நம்ப வீட்டுக்கு எதிர்த்த வீட்டுல மலர்கொடினு ஒரு ஆண்ட்டி இருக்காங்களா அவுங்கள பத்தி தெரியுமா உனக்கு” என்றவனை முகத்தைச் சுளித்துக் கொண்டு பார்த்தவள்.

“அவனாடா நீ” என்று கேட்டு வைக்க முதலில் புரியாமல் இருந்த ஆண்களுக்குப் பின்பு புரிய இருவரும் உக்கிரமாக முறைத்தனர்.

உன்ன என்ற வளவன் அவள் கழுத்தை பிடித்து நெறிக்கப் போக,அவனை இழுத்துப் பிடித்தான் ரமேஷ்.விடுடா என்ன இன்னக்கி கஞ்சனையைக் கஞ்சி ஆக்கள நான் வாமணன் மகன் இல்லடா.

“ஐயோ உட்காந்து தொலைடா உங்களோட முடியல என்ற ரமேஷ் .சித்தி இது ரொம்ப முக்கியமான மேட்டரு படுத்தாம சொல்லுங்க” பொறுமை காற்றில் பறக்க ரமேஷ் சற்று குரலை உயர்த்த.

“சரி.. சரி.. கூல்… கூல்….அவங்களுக்கு ஒரே பொண்ணு இப்போதான் கல்யாணம் பண்ணாங்க.அவுங்க வீட்டுக்காரு இறந்துட்டாரு.இப்போ மாமியாரோட இருக்காங்க”.

“சூப்பர் சித்தி உன்கூடப் பேசுவாங்களா”.
“பேசும்.. பேசும்.. உங்க அப்பா ரசிகை.எப்போ பாரு உங்க அப்பாகிட்ட கையெழுத்து கேட்டு அப்பாவ படுத்தி எடுத்துடும்.அப்பாவும் வாங்கிட்டு வந்து கொடுப்பாரு.ஏன் கேட்குற”.

“இல்ல அப்பாக்கு நிறைய லெட்டர்ஸ் எழுதி இருக்காங்க,நம்பப் பதிப்பகத்துல இருந்து முதல் புக் முணு பேருக்கு போகுது.அதுல ஒருத்தவங்க தான் இந்த மலர் கொடி”.

“சரி அதுக்கு என்ன இப்போ”.

“அவுங்க கூடப் பேசணும்”.

“அவுங்க நைட் டியூட்டி போலத் தூங்கிட்டு இருக்காங்க.நாளைக்கி லீவு தான் வந்து பேசு.என் தோழி கிட்ட சொல்லி உன்ன இன்ட்ரோ கொடுக்கச் சொல்லுறேன்”.

“நீயும் உன் தோழியும் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.அவுங்க கிட்ட கூட்டி போனா மட்டும் போதும்” என்றவனை முறைத்தவள் சரியென்று சென்று விட்டாள்.அவனுக்குச் சாப்பிட குடுக்க என்னதான் வாய் சண்டை இட்டாலும் அவனுக்குச் சரியாகச் சாப்பிட கொடுத்து விடுவாள் ஓர் அன்னையாக.
அதே போல் ஏன் எதற்கு அவர்களைப் பற்றிக் கேட்கிறாய் என்ற கேள்விகள் கஞ்சன்னையிடம் இல்லை.அவன் சொல்லாமல் அவள் கேட்கமாட்டாள்.அவனே மதித்துச் சொன்னாலும் அலட்சியம் செய்வாள் ராட்சசி.

அங்கே வாமனன் பேரிளம் பெண்ணுடன் பேசி கொண்டு இருந்தார் “என்ன எழுத்தாளரே கோபம் போச்சா பத்து நாள் என்கூடப் பேசவே இல்ல,போன் எடுக்கல”

“வேலம்மா” தன்மையாகப் பேசியவரை நம்ப முடியாமல் “இது யாரு வாமணன் எழுத்தாளர் தானே”.

மௌன சிரிப்புடன் நானே தான் என்றார் பேரிளம் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.அவரது அமைதி எங்கோ இடித்தாலும் அதனைப் பெருசாக அவர் எண்ணவில்லை.

“ரொம்பச் சந்தோசம் இந்த மென்மைவாதியை கூடப் புடுச்சு இருக்கு”.

“அதுசரி” என்றவர் ‘சாப்பிட்டியாடா’ என்று கேட்க

“சாப்பிட்டேன் எழுத்தாளரே, சரி உடம்பப் பார்த்துக்கோங்க நான் வைக்கிறேன்” என்றவள் வழக்கம் போல் அவர் பதிலை எதிர் பார்க்காமல் வைத்து விட்டாள்.எப்பொழுதும் இருவரிடமும் அதிகப் பேச்சுக்கள் இருக்காது.ஒரு சில வினாடிகளே நீடிக்கும் அதுபோலத் தான் இன்றும்.அதனால் அவரது மௌனம் பிடிபடவில்லை.

அவளுக்குத் தெரியவில்லை புலி பதுங்கி உள்ளது பாய்வதற்கு நேரம் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது என்று.
——————————————————————————————-

கஞ்சனையின் வீட்டில் வளவனைப் பார்த்தவாறு புருவங்கள் சுருக்கி அமர்ந்து இருந்தது அந்தக் குட்டி வாண்டு “ஏய் என்னடி அப்புடி பாக்குற,எனக்கு நேரமில்லை வந்து அந்த ஆண்ட்டியை காட்டு என்று வளவன் அதட்ட”.

“காஞ்சனை இவன் தொம்பப் பேச்சுதான் நான் கூட்டி போகமாத்தேன் போ”என்று முறுக்கி கொண்டது வாண்டு.

“டேய் ஒழுங்கா என் தோழிகிட்ட நடந்து கோ இல்ல நடையைக் கட்டு” என்றவளை பார்த்தவன்.எல்லாம் என் நேரம் என் வேல முடியட்டும் உங்க போரையும் பிரிக்குறது தான் என் முதல் வேலை என்று கருவியவன் வெளியில் சிரித்துக் கொண்டு.

வாண்டை கைகளில் அள்ளியவன் “பட்டு குட்டி இனி நம்ப இரண்டு பெரும் ப்ரண்ட்” என்று கொஞ்ச அவனது மூன்று நாள் தாடி குத்த. குண்டு கன்னங்களைத் தேய்த்தவரே,

“சீ … போ நான் பாய்ஸ் கூட ப்ரண்ட் ஆக மாத்தேன்” என்றவளது கன்னத்தைக் கடித்து வைத்தான் வளவன்.

ஆ .. அம்மா என்று கத்தியவளை ரட்சைசிங்களா எங்க இருந்துடி பேச கத்துகிறீங்க.ஒழுங்கா அந்த ஆண்ட்டியை காட்டு.இல்ல இன்னொரு கன்னத்தையும் கடுச்சு வச்சுடுவேன் என்று மிரட்ட இரு கன்னங்களையும் மூடி கொண்டு நான் காத்துறேன் கடிக்காத மாமா என்றது வாண்டு.

“அப்புடி வாடி வழிக்கு மாமவமுள்ள மாமா இனிமே சொன்ன பேச்சு கேக்கல கடி தான்” என்று மிரட்ட அதற்குள் மாடிக்கு வந்து இருந்தனர்.வளவனிடம் இருந்து இறங்கி அங்கு இருந்த மலர்கொடியை நோக்கி ஓடியது வாண்டு.

அவர் தான் மலர் கொடி என்று அறிந்த வளவன், அவரை பார்த்து மலைத்து நின்றான்.அந்த வயதிலும் கம்பீரமாக அழகாக இருந்தார் பெண்.
அவரிடம் சென்ற வாண்டு வளவனைக் கை காட்டி விட்டு ஓடி சென்றது.வளவனைக் கண்டு கொண்ட மலர் கொடிக்கு முகம் மலர்ந்தது.ஹாய்…… என்றவர் அவனை நோக்கி வந்தார்.சிறு அறிமுகத்திற்குப் பின்பு இருவரும் பேசினார்கள்.

ஓடி சென்ற அந்த வாண்டு நேராகக் கஞ்சனையிடம் சென்று முதல் வேலையாக வளவன் கடித்தை போட்டு கொடுத்துவிட்டு பொய் கண்ணீர் வடிக்க.அவளும் வளவனை ஒரு கை பார்க்கலாம் என்று வாண்டை சமாதானம் செய்தாள்.

மலர்கொடியிடம் பேசிவிட்டு முகம் கொள்ளா சிரிப்புடன் வந்த வளவன் தான் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்த அடுத்த நோடி ஆஆ…….. என்று அலறினான்.

அவனது அலறலில் காஞ்சனையும்,வாண்டும் உருண்டு பிரண்டு சிரித்தனர்.

இயற்கையிடம் போர் தொடுக்கத் தொடங்கினான் கவி.இறுதியில் வெற்றி யாருக்கு ?