Ponnunjal24

Ponnunjal24

ஊஞ்சல் – 24

 

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!

மூன்று நாள் வைபவமாக விஸ்வேந்தர் – பொம்மி திருமணக் நிகழ்வுகள் களைகட்டத் தொடங்கின.

முதல் நாள் அவர்களது கிராமத்து முறைப்படி சடங்குகள் சாங்கியங்கள் நடைபெற, எந்தவித முகச்சுளிப்பும் விலகலும் இல்லாமல் மணமக்கள் அமைதியாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பந்தக்கால் நட்டு, நிச்சயப் பத்திரிக்கை வாசிக்கபட்டு ‘சம்மந்தி தாம்பூலம்’ பரிமாறிக் கொள்ளபட்டது.

அதற்கடுத்த நாள் கொண்டாட்டமும் அதை தொடர்ந்த திருமணநாளும் இரு வீட்டாரின் குடும்ப வழக்கமான திருச்சானூர் கோமல் கல்யாணமண்டபத்தில் கோலாகலமாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாம் நாள் விழாவில் சங்கீத், மெஹந்தி என்று நண்பர்கள் பட்டாளம் புடைசூழ விழா ஏகபோகமாய் ஆரம்பமாக, ஆட்டம் பாட்டத்துடன் அன்றைய தினம் அனைவரையும் உள்வாங்கிக் கொண்டது.

மாலை வரவேற்பு நிகழ்ச்சி அங்கேயே வெகுசிறப்பாக நடைபெற, மைசூர் பிருந்தாவனத்தை தோற்கடிக்கும் வண்ணம் மண்டபம் முழுவதும் பூக்களால் நிறைந்திருந்தது.

பூக்களை தோற்கடிப்பதுபோல் சுற்றிலும் படர்ந்த வண்ண விளக்குகள் காண்போரை கவர்ந்திழுத்தன. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது.

மகளின் திருமணத்தை அசத்தி விட்டான் ரிஷபன். பணம் தண்ணீராய் செலவழித்து, வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஏகாம்பரக்குப்பம் கிராமமே அங்கு நடமாடியதைப் போல் அனைவரையும் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தான் ரிஷபன்.

இசைக்கச்சேரி மண்டபத்தின் சுற்றுபுறத்தை நிறைத்துக் கொண்டிருக்க பஃபே முறையில் விருந்தினர்க்கு, தாங்கள் விரும்பும் வகையில் விருந்து பரிமாறபட, இசையை கேட்டபடியே சோபாவிலும் இருக்கைகளிலும் அமர்ந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தனர். எளிமையாக திருமணத்தை நடத்தும் கிராமத்து மனிதர்களுக்கு இது புது அனுபவமாக இருந்தது.

அழகு நிலையத்தாரின் கை வண்ணத்தில் பொம்மி பேரழகியாய் மிளிர்ந்தாள். தங்கநிற லெஹாங்காவில் பொன்மகளைப் போல் ஜொலித்தாள். சந்தன நிற ஷெர்வாணியில் விஸ்வா கம்பீரமாக நிற்க, அவனை கண்டு பொம்மிக்கும் ஆச்சரியம்தான். இதுவரை பார்க்காத ஒரு பாவனையில் அவனை, தன் கண்களால் அளந்து கொண்டிருந்தாள்.

இன்னமும் அவனிடம் சரியாக பேசவில்லை. இவன் இன்னும் என்னென்ன கூத்து செய்ய இருக்கிறானோ எண்ணத்திலேயே சற்று இளைத்தும் இருந்தாள். விஸ்வாவிற்குமே சற்று மனதாங்கல்தான். இவளிடம் பதில் வாங்காமல் திருமணம் வரை வந்தது அவனுக்கும் பிடித்தம் இல்லைதானே?

வந்தவர்கள் பெண் இளைத்து விட்டாள் என்று நேருக்கு நேராய் சொல்லி விட்டுச் செல்ல,

“நான் ரொம்ப இளைச்சுட்டேனா விஸ்வா?” தன் உடையவனிடம் உடன்பட்டே மணமகள் கேட்க,

“உன்னத் தூக்கி பார்த்து சொல்லட்டா?” தன் அக்மார்க் பேச்சினை அவளிடம் ஆரம்பித்தான்.

“உன்கிட்ட போய் கேட்டேனே? திருந்த மாட்டேரா நீ”

“ஷப்பா… ஒரு வழியா பேசிட்டா என் ஸ்பைசிகுவின், இப்போதான் நிம்மதியா மூச்சு விட முடியுது” என்று அவள் காதில் கிசுகிசுக்க,

“ஏமிரா? எதுவும் பிரீத்திங் ப்ராபலமா? ரொம்ப கஷ்ட்டபடுறியா?” அவனுக்கு சளைக்காதவளாய் நக்கலில் இவளும் இறங்க,

“பின்ன? இன்னும் என்னை பிடிச்சிருக்குனு சொல்லலையே நீ? என் டென்ஷன் எனக்கு”

“இப்போ போய்டுச்சா போலீஸ்கார்?”

“இந்த இடத்துல கூட ப்ரோபோஸ் பண்ணி என் டென்சனை குறைக்கலாம் பொண்டாட்டி”

“என்கிட்ட இருந்து அந்த வார்த்தைய வாங்குறது உங்க திறமை ஆபிசர்” என்று பதிலுக்கு பதில் பேசி சிரித்திட, அசலாவிற்கும் அப்பொழுதுதான் நிம்மதி வந்தது.
எங்கே கணவனின் வற்புறுத்தலில் மட்டுமே இந்த திருமணம் நடப்பதாக ஆகிவிடக் கூடாதே என்று அவள் மனம் தவித்த தவிப்பு அப்படி.

திருமணத்திற்க்கு முன்தினம் வரை அத்தனை அமைதியாய் மகள் வலம் வந்திட, மாப்பிள்ளையோ மிக நல்லவனாய் அனைவரிடத்திலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

இதனை பார்த்து அசலாட்சியின் மனம் கலவரம் கொண்டு உற்சாகம் குறைந்து நடமாடிட, இப்பொழுது இவர்களின் சிரிப்பை பார்த்துதான் தெளிந்தாள்.
மனதில் ஒரு நிம்மதி பரவ, இன்னதென்று சொல்ல முடியாத உவகை ரிஷபன் அசலாட்சித் தம்பதியருக்கு இருக்க, அந்த உற்சாகம் குறையாமல் அனைவரையும் வரவேற்றனர். மகனும் மருமகளும் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அனைத்து திருமண வேலைகளிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
வரவேற்பு முடிந்தவுடன் மீண்டும் அவர்களின் சம்பிரதாய முறைப்படி சடங்குகள் நடந்திட, பின்னிரவு நேரத்தில் திருமண நிகழ்வுகள் ஆரம்பமானது.

அவர்களின் பாரம்பரிய முறைப்படி அன்று இரவு தங்கை மற்றும் மாமியார் முதல்தாலி போட, இரண்டு பொட்டு கோர்த்த கழுத்தை ஒட்டிய கருகுமணிதாலி பொம்மியை பாந்தமாய் அலங்கரித்தது.

திருமண நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற அதிகாலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில், கணபதி பூஜையுடன் சடங்குகள் ஆரம்பமாகின.

இயற்கையான பூக்களைக் கொண்டு மணமேடை கொள்ளை அழகோடு அமைக்கப் பட்டிருந்தது. நாதஸ்வர ஓசை எட்டுத் திக்கும் எதிரொலிக்க, மாப்பிள்ளை அழைப்பான காசியாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

காசியாத்திரைக்கு சென்ற மாப்பிளையை தடுத்து நிறுத்தி, பத்ரி குடைபிடித்து, கைபற்றி மண்டபத்திற்கு அழைத்து வர, பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து அவனின் பாதம் கழுவினர்.

மச்சான் முறைக்கு பத்ரி கழுத்துச் சங்கிலியும் கைசங்கிலியும் போட்டு விட, அப்படி ஒரு பொலிவான தோற்றத்தில் கொள்ளை அழகாக இருந்தான் விஸ்வேந்தர்.

பஞ்சகச்சம் வைத்து கட்டிய பட்டுவேட்டி மற்றும் அங்கவஸ்திரத்தில், மணமகன் பட்டை தலையில் அலங்கரிக்க கம்பீரமாக அனைவரையும் கவர்ந்தான் விஸ்வேந்தர்.
அவனுக்கு சற்றும் குறையாமல் இளமஞ்சள்நிற திருமணப்புடவையில் முழுக்க முழுக்க பூக்களால் செய்த தலை அலங்காரத்தில் பொம்மி தேவதையாக மின்னினாள். உதடுகள் புன்னைகையில் பூத்திருந்தது. தங்கநிற முகம் நாணத்தால் நிஜதாமரையாகவே மலர்ந்திருந்தது.

மிதமான ஒப்பனையில் நெற்றி சுட்டியில் இருந்து கொலுசு வரை தங்கமும் வைரமும் இணைசேர மணமகளாக அத்தனை பாந்தமாக குத்துவிளக்கு ஏந்தி மணமேடைக்கு வந்து அமர்ந்தாள் பத்மாக்ஷினி.

தனக்கு பிடித்தவனே மணவாளனாகிறான் என்ற எண்ணம் மனதை நிறைத்தாலும் புது பெண்ணுக்கே உரிய தயக்கமும் பயமும் கலந்து பொம்மி அமைதியாய் வார்த்தை தடுமாறி இருக்க,

அன்றைய திருமணச் சடங்கு முடியும் வரையிலும் தனது சீண்டலால் அவளிடம் வார்த்தைகளை வாங்கிக் கொண்டிருந்தான் விஸ்வா.

“இங்கே பத்மாஷினின்னு ஒரு பொண்ணு இருந்தாளே? அவள பார்த்தியா பொம்மி”

தன் சீண்டலில் அவளை இயல்பாக்கினான்.

கிசுகிசுக்கும் பாஷையில் அவள் காது மடல்களை இவன் உதடுகள் உரசிச் செல்ல,
“கொஞ்ச நேரம் நல்ல பிள்ளையா அடக்க ஒடுக்கமா இரு விஸ்வா” இவளும் பதிலுக்கு பொறுப்பாய் கிசுகிசுத்தாள்.

இருவரும் ஹோம குண்டத்தின் எதிரில் அமர்ந்து மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க, புகையால் கண்களில் வழிந்த நீரை துடைக்கவென அஜூகுட்டி நீட்டிய கைக்குட்டையை, பறித்துக்கொண்டவன் அவனே துடைத்து விட்டான்.

“உனக்கு எரியலையா விஸ்வா?” இவள் அக்கறையாகக் கேட்க,

“எனக்கு லேசாதான் இருக்கு. உனக்குத்தான் ரொம்ப… பாரு எப்படி சிவந்து போச்சு?” என்றவர்களின் பேச்சை தடை செய்து சடங்குகளை செய்ய வைத்தனர்.

மணமகள் தன் கைகளில் இளநீரை ஏந்தி அமர்ந்திருக்க, மணமகன் எழுந்து நின்று முப்பத்து முக்கோடி தேவர்கள், உற்றார் உறவினர் நண்பர் அனைவரும் அட்சதை தூவ, மங்களநாண் பூட்டி தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.

அம்மி மிதித்து மணமகளின் காலில் மெட்டி மாட்டி விட்டதும், மாப்பிள்ளைக்கும் மெட்டி மாட்டிவிடும் நிகழ்வு நடைபெற்றது.

அதற்கடுத்து நடந்த ஊஞ்சல் வைபவங்கள் மற்றும் விளையாட்டுகளின் போதும், இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்தாலும் மற்றவர் விடாமல் ஏற்றி வைத்து, அவர்களை மேலும் விளையாட வைக்க அன்றைய நாளின் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது.

மாலை மாற்றி போடுகையில் விஸ்வாவை நண்பர்கள் தூக்கிக்கொண்டு தள்ளிச் சென்று போக்குகாட்ட, அவனுக்கு அணைவாய் அஜுவும் மஹதியும் நிற்க, பத்ரி பொம்மியை தூக்கிக் கொண்டான்.

மூன்று முறை முயற்சித்தும் அவனுக்கு மாலை போட பொம்மிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக, அமைதியாய் நொடிநேரம் நின்று விட்டாள்.

“என்ன ஆச்சு கல்யாணப் பொண்ணு? எங்க மாப்பிள்ளைய பிடிக்க முடியலையா? சிலம்பம் சுத்தின கை, மாலைய சுழட்டி போட முடியலையா?” நண்பர்கள் கூட்டம் அவளை வம்பிற்கு இழுக்க,

“எனக்கு முடியாம இல்ல… உங்க மாப்பிள்ளைக்குதான், நான் சுழட்டி மாலைய போட்றுவேனோன்னு பயம் அதிகமா போச்சு… அதான் என்பக்கத்துல வராம உங்க பாதுகாப்புல நிக்கிறான்” என பொம்மி சொன்னதும் வீறுகொண்டு அவள் முன்பு வந்தவன்,

“யாருக்கு, யார் மேல பயம்?” என்ற அந்த நொடியில் அவனுக்கு மாலையிட்டவள்,

“இப்படி சமத்தா என் முன்னாடி வந்து நிக்காம, பின்னாடி போனா வேற எப்படி சொல்றதாம் ஆபிசர்?” என்று பேசினாலே பார்க்கலாம், வந்திருந்த கூட்டம் அனைத்தும் சிரித்து வைத்தது.

அடுத்து குடத்தில் மோதிரம் எடுப்பதற்கென இருவரும் கைகளை உள்ளே விட,
“யார் மொத எடுக்குறாங்களோ? அவங்களுக்குதான் இந்த மோதிரம்” என்று பத்ரி ஆரம்பித்து வைத்தான்.

முதலில் தன் கைகளில் சிக்கிய மோதிரத்தை பொம்மி விஸ்வாவின் கையில் கொடுக்க, அவனும் சலிக்காமல் தன் கையில் இருந்ததை அவளுக்கு மாற்றி விட்டான்.
மீண்டும் தன்னிடம் சேர்ந்த மோதிரத்தை விஸ்வாவிடம் கொடுத்து, திருப்பி தர வேண்டாம் என்று பார்வையால் பொம்மி சொல்ல,

“எங்கிட்ட இருக்கு பத்மி! நீ வேற எதையோ குடுக்கிற” என்று அவளை கூட்டத்தில் மாட்டி விட்டு அசடு வழிந்தான்.

“என்ன அல்லுடு?(மாப்பிள்ளை) என் செல்லி(தங்கை) எவ்வளவு அழகா கண்ணாலயே குடுக்காதேன்னு ஜாடை பேசினா. அவளைப் போயி மாட்டிவிட்டுடியே?” பத்ரி கிண்டலில் இறங்க

“உங்க தங்கச்சி எப்படி பேசினாலும் தர்க்கம்தான் பண்ணுவான்னு வெளியே சொல்லிட்டாரு பத்ரி. எப்படி இருந்தாலும் அடிவாங்கபோறது அவர்தானே? அதான் முந்திக்கிட்டார்” என்று மஹதியும் கூட்டு சேர,

“இந்த மாதிரி விசயதுக்கெல்லாம் அசரமாட்டேன், என்ன செஞ்சாலும் அவகிட்ட தப்பிக்க நான் விரும்பல” என்று மனையாளை சமாதானப்படுத்த விஸ்வா முயல,

“க்ரேட் எஸ்கேப்! பொழைச்சுக்குவ அல்லுடு. நான்தான் ரெண்டு மோதிரம் போட்டேன்” பத்ரி சொல்ல,

“நெஜமாவா? ஏன் சின்னையா? ஒன்னுதானே போடணும்னு சொல்வாங்க” பொம்மி கேட்க,

“எதுக்கு இன்னொருத்தர்க்கு கிடைக்காம போற மாதிரி செய்யனும்? அதான் ரெண்டு போட்டுட்டேன். இன்னைக்கு உன் கல்யாணநாள் ஒரு நிமிஷம் கூட உன்மொகம் சுருங்கக்கூடாது பொம்மி” என்று தன் பாசத்தை அத்தனை பக்குவமாய் வெளிப்படுத்தினான் பத்ரி.

அதற்கடுத்து பூப்பந்து உருட்டல், அப்பளம் உடைத்தல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தேறிட, இனிதே திருமணவிழா நிறைவுற்று கிராமத்தை வந்தடைந்தனர்.

**********************************

இரவில் தனிமையில் மணமக்கள் விடப்பட, விஷ்வா கேட்ட கேள்வியில் பொம்மியின் உற்சாகம் அத்தனையும் வடிந்தது

“இந்த கல்யாணத்துல உனக்கு பரிபூரண சம்மதம்தானே பொம்மி?”

“ஏன் விஸ்வா?”

“இல்ல… மிரட்டிதானே உங்கப்பா கல்யாணத்தையே நடத்துனார். அதான் கேட்டேன்”

“என்னை பத்தின உன்னோட கணிப்பு என்னதான்னு சொல்லேன் விஸ்வா?” அதிகாரமாய் அவனை பார்த்து கேட்க,

“மனசுல இருக்குறத பூட்டி வச்சே, என்னை அலைகழிச்ச பொண்ணு. என்னை பைத்தியமா சுத்த வச்சவ நீ”

“அதே முடிவுலயே இருங்க, அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது”

“இப்படி குழப்பி விட்டுதான் உன்னை, என் பக்கத்துல கூட வர விடல!” என்றவன் அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான்.

“அப்படியென்ன விரதம்டி உனக்கு? சொல்லவே மாட்டியா?” ஏக்கத்துடன் கேட்க,

“யார் சொன்னது? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உன்னை மட்டுமே பிடிச்சிருக்கு விச்சுகண்ணா” என்று எளிதாய்ச் சொல்லிவிட்டாள்.

இதற்காகத்தானே இவன் தலைகீழாய் நின்று இவளை பாடாய் படுத்தியது. அதையெல்லாம் செய்திருக்க தேவையே இல்லை என்பதைபோல் இவள் பேச்சோடு பேச்சாய் சொல்லிவிட,

 

“நிஜமா சொல்றியா பத்மி? இன்னொரு தடவ சொல்லு” நம்ப முடியாத ஆச்சர்ய பாவனையில் மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து தன் காதினை குளிர வைத்துக் கொண்டிருந்தான்.

“என் மனசுக்கு பிடிச்சவன் கிட்ட, என் விருப்பத்தை சொல்றதுக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்ல கண்ணா. எப்பவும் உன்னை, எனக்கு ரொம்ப பிடிக்கும். போதுமாரா?” கரை காணாத காதலில் பொம்மி சொல்லிவிட,

“அப்பறம் ஏன்டி இவ்ளோ நாள் தவிக்க விட்ட?” இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தபடியே கேட்க,

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கான தயக்கம் நிறையவே இருக்குனு, நீதான் புரிஞ்சுக்கல”

“கடைசியில என்னை குழப்பவாதி லிஸ்ட்ல சேர்த்திட்டியா?” என்றவன் தலையில் கைவைத்திட,

“மொதயிருந்தே அப்படிதானேரா நீ?” இவள் சிரிப்பை தெறிக்க விட,

“லவ்வர்கிட்ட இருந்து ஐலவ்யூ சொல்ல கேக்குறது எவ்ளோ நல்ல பீல் தெரியுமா? அது எனக்கு கிடைக்கலையே?” வடை போச்சே என்ற மனநிலையில் புலம்ப

“நீ கேக்கலன்னு சொல்லுடா… நான் சொல்லலன்னு சொல்லாதே”

“எப்போ? எப்படி?” இவன் கண்களை தெறித்துக் கொண்டு கேட்க,

“உனக்காக வாய்ஸ் மெசேஜ் பேசிட்டு, உனக்கு அனுப்பலாமா வேண்டாமான்னு நாள்கணக்குல யோசிச்சிட்டு இருக்கும் போதுதான், என் நம்பர பிளாக் நீ பண்ணிட்ட” என குற்றம் சாட்டியவளை இடையோடு இறுக்கி பிடித்தவன்,

“சாரிடி பத்மி! கோபத்துல செஞ்சுட்டேன், இனி செத்தாலும் இப்படி செய்ய மாட்டேன்”

“வாயக் கழுவுரா மடையா! இன்னைக்குதான் வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணபோறோம் பேசுறான் பாரு பேச்சு” அவன் அணைப்பில் இருந்தபடியே ஏகத்திற்கும் எகிறினாள்.

“பூவாட்டம் இருக்கடி, என்னை தலைசுத்த வைக்கிற” என்றவன் அவளை அணுவணுவாய் ரசிக்க ஆரம்பித்தான்

உடல் முழுவதும் அவன் மேல் இருக்க, அவன் அணைப்பு தந்த கலவையான உணர்வில் தத்தளிக்க ஆரம்பித்தாள் பொம்மி.

அதை சாதகமாகக் கொண்டு புடவையை தாண்டிய பகுதியில் அவன் கைகள் பயணிக்க,

“என்ன பண்ற விஸ்வா?” முணகியவளின் வார்த்தைகள் அவன் செவிக்கு பலியாகி, வீணாய் போனது.

விஸ்வேந்தரோ பதில் பேசாமல் தன் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்க, முதல் முதலாய் ஒருவித நடுக்கம் அவள் உடலில் தோன்றியது.

“இன்னும் என்னால நம்ப முடியலடி? இத்தனை அமைதியா நீ, என்கிட்ட அடங்கி இருக்கன்னு… உனக்கு பிடிச்சிருக்கு தானே?” அவளை பார்வையால் விழுங்கிக்கொண்டே தன்னையும் தன் செயலையும் சுட்டிக்காட்டிக் கேட்க,
கணவனின் பார்வைக்கும் பேச்சிற்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஆனாலும் அவனை ஏமாற்றவும் மனம் வரவில்லை மனைவிக்கு.

“ரொம்ப… ரொம்ப… ரொம்ப பிடிச்சிருக்கு, போதுமா?” நடுக்கத்தை மறைத்து தலைதாழ்ந்து கூற,

“ஹேய்… என்ன ஆச்சு என்னோட சண்டை ராணிக்கு? இப்படி மெதுவாகூட பேசத் தெரியுமா?” பதில் சொல்லாமல் இவள் மௌனம் சாதிக்க,

“பத்மி என்ன பண்ணுது? ஏன் அமைதியாகிட்ட?”

“நத்திங் விச்சு” என்றவளின் வார்த்தையும் நடுங்கிக் கொண்டு வந்தது.

“எனக்காக பார்க்காதே… உனக்கு என்ன தோணுதோ, அத சொல்லுரா பத்மி”

“விஸ்வா! என… எனக்கு பயமா இருக்கு, இன்னைக்கு வேண்டாமே” முதல் பாதியை சொல்லி மறுபாதி வார்த்தையை விழுங்கினாள்.

“இவ்ளோ தானே? வேற ஒன்னும் இல்லையே? அத மறந்துருவோம் சரியா? வா கொஞ்ச நேரம் பேசுவோம், என் பத்மி பொண்ணே! நானிருக்க அச்சமென்ன உனக்கு?” அவளின் தோள் அணைத்து கட்டிலில் அமரவைத்தவன்,

“பத்மி, நல்லா புரிஞ்சுக்கோ! நான் எப்பவும் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அடுத்துதான் உன்னோட ஹஸ்பண்ட். இடையில உன்னோட லவ்வர்.
உன் மனசுல என்ன தோணுதோ அத ஃப்ரெண்ட் கிட்ட ஷேர் பண்ணு, உன்னோட சேட்டை எல்லாத்தையும் உன் லவ்வர் கிட்ட காட்டலாம். உன்னோட மனசும் உடலும் எத விரும்புதோ, அத தயங்காம உன்னோட ஹஸ்பண்ட் கிட்ட நீ சொல்லலாம். அதுக்கு எந்த ஒரு தயக்கமும் தேவையில்ல… அதுவும் நம்ம ரூம்ல நீ பேசாம தடுமாறிட்டு இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று தெளிவாக அவளுடனான அவனின் உறவை விளக்கிவிட,

“அதில்ல விஸ்வா! நீதானே, அன்னைக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு அப்படி இருப்பேன், இப்படி எதிர்பார்ப்பேன்னு சொல்லி என்னை கார்னர் பண்ணின?” தயக்கத்துடன் கேட்டு முடித்தாள்.

“அடி லூசி! இந்த நேரத்துல, இந்த தயக்கம் வராம இருக்காதான், என் லவ்வ அக்செப்ட் பண்ணிக்க சொல்லி, உன்னை கம்பல் பண்ணேன். அதுக்குதான் அப்படி பேசினது, என்னை வில்லன்னு ஸ்ட்ராங்கா முத்திரையே குத்திட்டியா?”

“நீ செஞ்ச அலும்புக்கு புடிச்சு ஜெயில்ல போட்ருக்கணும். போலீசா போனதால தப்பிச்ச” என அவனுக்கு கொட்டு வைக்கும் பொழுது இயல்பு நிலைக்கு மாறி இருந்தாள்.

அதை தடுக்காமல் அவனும் ஆவலுடன் வார்த்தை பந்தியில் தன்பேச்சுக்களை பரிமாற, ஒரு மணி நேரத்தில் அவள் தோளில் சாய்ந்து உரிமையாய் அவன் கைவளைவிற்குள் வந்திருந்தாள் மங்கை.

அத்தனை இலகுவான மனநிலைக்கு அவளை மாற்றி, தன்னுள் இழுத்து வைத்திருந்தான் அவளின் கண்ணாளான்.

உன்னிடம் நான் எதிர்பார்ப்பது தடை அகன்ற, மனம்நிறைந்த பேச்சுக்களை மட்டுமே என்று அறிய செய்தவன், தன் காதலை மேலும் சிறப்பிக்க மெதுமெதுவாய் காதல் பாடத்தை ஆரம்பித்தான்.

காதலோடு கலந்த காமபாடத்தின் முதல் அத்தியாயத்தில் பொம்மிக்கு மீண்டும் நடுக்கம் வர, அவன் சொன்ன ரகசிய மொழிகளை தன்காது மடல்களும் சிவக்கும் வண்ணம் ரசிக்க ஆரம்பித்தவள், முற்றிலும் அவன் மேல் தோய்ந்து விழ, மேலும் சோதிக்காமல் தன்சித்திரப்பாவையை புதியதொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றான் விஸ்வேந்தர்.

தனக்கு பிடித்தமில்லை என்று நினைத்ததெல்லாம் கனவாகிப் போன நிலையில் அவனில் கரைந்து அவனோடு கலந்திருந்தாள் அவனின் பத்மி.இத்தனை சீக்கிரத்தில் தன்னால், இவனோடு இழைய முடியுமா என்ற சந்தேகத்தை, அவள் கணவன் உண்மையாக்கிக் கொண்டிருந்தான். அவளே தன்னை சுற்றி அமைத்துக் கொண்டிருந்த மாயவேலியை அவன் கலைத்து கொண்டிருந்தான்.

விஸ்வேந்தரின் மூச்சும் பேச்சும் இப்போழுது பத்மி என்றாகிப் போக, அவளது நடுக்கமும் தயக்கமும் முன்ஜென்மத்தின் தாக்கமோ என்றெண்ண வைத்தான்.

காதலை சொல்லியே ஆகவேண்டும் என்று முரண்டு பிடித்தவன், தாம்பத்யத்தை மென்மையாக மேன்மையாக அவள் உணரும் வண்ணம் கற்றுக் கொடுக்க, அவளும் சோதிக்காமல் முயன்று கற்றுத் தேர்ந்தாள்.

மறுநாள், மறுவீட்டிற்க்கு வந்த மகளின் முகபொலிவு அசலாட்சிக்கு அத்தனை அமைதியை தந்தது. எங்கே ஏதேனும் இன்னல்களை சந்திக்க நேர்ந்து, உடைந்து போய் விடுவாளோ என்று பயந்தவளுக்கு புதுமணத் தம்பதிகளின் அன்னியோன்யத்தைப் பார்த்து கண்களும் கூசிப் போனது

“நீ பார்த்தே, என் பொண்ணுக்கு கண்ணு பட்டுடும் போல, போதும் பார்வைய மாத்து சாலா” என்று ரிஷபன் மனைவியின் எண்ணப்போக்கை கணித்துச் சொல்ல,

“என்னோட இத்தன வருச தவிப்பு இன்னைக்கு முடிவுக்கு வந்திருக்கு. என் பார்வைய தடுக்காதீங்க பாவா”

“இன்னும் நம்ம கடமை முடியல சாலா! இன்னொரு பொண்ணு இருக்கா, இதுக்கே இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டா எப்படி?” என்று சொல்லி முடிக்கும்போதே சின்னவள் அங்கே வந்து சேர்ந்தாள்.

“நாணா இன்னைக்கு ரிசல்ட் வந்திருச்சு. ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணிருக்கேன். நான் சொன்னது மாதிரியே ரோபோட்டிக்ஸ் படிக்க போறேன்” என்றவள் துள்ளிக் குதிக்க,

“படிப்பு விசயத்துல நான் யாருக்கும் எந்த தடையும் சொன்னதில்லயே அஜுக்குட்டி” பேசியபடியே வரேவேற்பறைக்கு வந்திருக்க,

“அத்தன இன்ட்ரெஸ்ட்டா உனக்கு, ரோபோட்டிக்ஸ் படிக்க?” என்று பத்ரி வினவ,

“பியூச்ச்சர்ல ரோபோட் இல்லாம எந்தவொரு வேலையும் நடக்க போறதில்ல அண்ணயா. இப்பவே சர்ஜரி பண்ணவும் நாத்து நடவும் ரோபோட் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க” என்று விளக்கி கொண்டே போக,

“காங்கிராட்ஸ் அஜூ! நீ படிச்சு முடிச்சதும் எனக்கு ஹெல்ப்பரா ஒரு ரோபோட் செஞ்சு குடு” – விஷ்வா

“எதுக்கு மாமா?” – அஜூ.

“எப்படியும் உங்க அக்காவுக்கு கூஜா தூக்குற வேலைய தவிர வேற எதையும் நான் செய்ய போறதில்ல. அவ வேலைய நான் பார்க்க, என் வேலைய யாராவது பாக்கணுமே? பொறுப்பான போலீஸ் ஆபிசர் நான்” என சட்டைகாலரை தூக்கிவிட்டு விஸ்வா கெத்தாக சொல்ல,

“நானும் படிச்சு முடிச்சுட்டேன் மாப்ளே, எனக்கும் வேலை குடுத்து சகாயம் பண்ணலாம் நீ. அதெப்படிரா அடி வாங்குறதுக்கும் வாண்ட்டா என்ட்ரி போட்ற?” என்று பொம்மியை சுட்டிக்காட்டி பத்ரி பேச, அவளும் தன்கணவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கில்லாததா மச்சான்? அடுத்த பத்து மாசம் கழிச்சு உன் ஹாஸ்பிடல் மேட்டர்னிட்டி வார்ட்ல ஒரு டீலக்ஸ்ரூம் அட்வான்ஸா புக் பண்றேன். நோட் பண்ணிக்கோ” என பத்ரியிடம் சொன்னவன்,

“நான் சொன்னது கரெக்ட் தானே பத்மி? என்னை ஏமாத்த மாட்டியே?” மனைவியிடம் வம்பிழுக்க,

“சின்னையா இப்பவே உன் ஹாஸ்பிடல்ல சி‌சியூ வார்ட் ஓபன் பண்ணு, இவனை அங்கேயே ஷிஃப்ட் பண்ணிடுவோம், எதுக்கும் அடங்காதவனா இருக்கான்” அவனை கடித்து குதறும் பாவனையில், தன் பொய்க்கோபத்தை வெளிப்படுத்தினாள் பொம்மி.

“இருக்குற ஒரே அடிமையையும் எங்களுக்கு தாரை வார்த்துட்டு, நீ என்ன பண்ண போற பொம்மி?” சீரியசாக மஹதி அவளோடு கூட்டு சேர,

“யோசிக்க வேண்டிய விஷயம்தான். எப்போவும் போல இவன சுத்தல்ல விட்டே, யாருக்கும் விட்டுக்குடுக்காம நானே பத்திரமா வச்சுக்க போறேன்” மென்சிரிப்பில் விஸ்வாவை பார்த்து சொல்லிய பாவனையில், விளையாட்டுக்கும் தன்னை விட்டுபிரிய விரும்பாத மனைவியை ஆசையும் அன்பும் கரைபுரண்ட பார்வையில் விஸ்வாவும் பார்க்க, அங்கே அவர்களின் காதல் பொன்னூஞ்சல் தடையின்றி ஆடிடும் ஆட்டத்தை ஸ்திரமாக்கியது.

இளையவர்களின் பேச்சும் கொண்டாட்டமும் பெரியவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை கொடுக்க, இதை விட வேறென்ன வேண்டும் என்றே நினைக்க தோன்றியது.
மனிதன் வாழ்க்கையில் தேட வேண்டிய ஒரே பொருள் நிம்மதி மட்டுமே. அது இருந்தால் பாலைவனத்தில் கூட ஊஞ்சல் கட்டி விளையாடலாம்.

ரிஷபன் அசலாட்சியின் வாழ்க்கைப் பொன்னூஞ்சலின் நிம்மதியானது, அவர்கள் பிள்ளைகளின் பாசப்பொன்னூஞ்சலில் இடைவிடாது ஆடிட, அது முடிவில்லா சந்தோஷ ஊஞ்சலாக ஆட வாழ்த்தி விடைபெறுவோம் தோழமைகளே!!!

error: Content is protected !!