Shanthini Un Uyir Thaa Naam Vazha 15

உயிர் – 15

ஜிக்கி அவளை அழைத்துக் கொண்டு, கெளதம் சென்ற பக்கம் தான் சென்றாள், ஆனால் அங்கு சென்று கௌதம்க்கு எதிர் பக்கம் நின்றுக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தாள்….

ஜிக்கியின் சத்தம் இல்லாமல் போகவே “ ஜிக்கி என்று அழைத்துக் கொண்டு அவள் திரும்பவும், அவளை திரும்ப விடாமல் செய்த ஜிக்கி ஒண்ணும் இல்ல ஜிக்கி “ நான் நினைத்த டிரஸ் இங்க இல்ல வா அடுத்த ப்ளோர் போவோம் “ என்று கூறி அவளை கைபிடித்து அழைத்து வந்து கீழ் தளம் சென்று விட்டாள்…

அதன் பிறகு அவளின் மைக்கு தேவையான எல்லாம் வாங்கி கொண்டு ஹாஸ்டல் நோக்கி சென்று விட்டனர் இருவரும்..

கெளதம் அவன் குடும்பத்துடன் வந்த வேலை முடிந்தது என்று அவனும் கிளம்பிவிட்டான்…

இன்று வர்மா – சஜினா திருமணம்… சியோரா மிக பிரமாண்டமாக வைத்தார்.. கூடவேகௌசிக், மையூரி வரவேற்பும் நல்ல விதமாகவே ஆரம்பித்தது… ஆட்டம் பாட்டம் என்று எங்கும் கோலாகலமாக நடந்தது….

இதுவரை எங்கும் இது போல் ஒரு விழா நடந்திருக்காது அவ்வளவு கோலாகலமாக வைத்திருந்தார் சியோரா… தனது மூன்று மக்களின் திருமண வரவேற்பும் அப்படி எல்லாராலையும் பேசப்பட்டது… கூடவே உங்க சின்ன மகனுக்கும் சேர்த்து கல்யாணம் வைத்திருக்கலாம் என்று பேச்சும் வந்தது.. அதை எல்லாம் கேட்ட சியோரா கூட யோசித்தார் பேசாமல் அவனுக்கும் சேர்த்து வைத்திருக்கலாமோ என்று…

விழா சிறப்பாக எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்தது… அவர்கள் மூவரையும் திருமண கோலத்தில் பார்க்கவும் அவருக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.. அதிலும் தங்களுக்கு மகள் இல்லாத குறையை போக்க வந்த மையூரியை இப்படி பார்க்க சத்ரியாவுக்கும், சியோராவுக்கும்கண்கள் கலங்க அவளை அணைத்துக் கொண்டார்…

பல ஆண்டுகள் சந்தோசமாக வாழவேண்டும் என்று ஆசியுடன்… கூடிய சீக்கிரமே பேரன், பேத்தி வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் மையூரியை அணைத்துக் கொண்டார் சியோரா..

அவர் பாசத்தில் வர்ஷிக் கண்களில் கூட கண்ணீரே அவனுக்கு இப்படி ஒரு மாமனார் கிடைக்க குடுத்து வைத்திருகணுமே.. என்ன தான் ரத்த சொந்தத்தில் மையூரி அவர்களுக்கு மருமகள் முறை வந்தாலும், வாய் மொழியாகவும், மனசாலையும் அவர்கள் தகப்பன் – மகள் முறையே..

போலியாக இருக்கும் ரத்த உறவுகளை விட மனத்தால் இணைந்திருக்கும் உண்மையான உறவுகள் என்று போற்றதக்கதாகும், அத்தகைய உறவு தான் இந்த சியோரா- வர்ஷிக் உறவு.. இப்பொழுது புதிதாக ரத்த உறவு என்று தெரியாமல் முதலில் மனத்தால் சேர்ந்த உறவு தான் சியோரா- மையூரி உறவு.. இந்த உறவை அவர்கள் ரத்த உறவை பார்ப்பார்களோ இல்லை மனத்தால் இணைந்த உறவு என்று பார்ப்பார்களோ அது அவரவர் கையில்….

அப்பா என்றாலே அன்பு.. அந்த அன்பு என்று பெண்பிள்ளைகளுக்கு அதிகமே.. அந்த வகையில் இப்பொழுது அவருக்கு பெண்பிள்ளை இல்லை என்ற குறையை தீர்க்க வந்தவளே இந்த மையூரி.. அது தான் அவருக்கு அவள் மேல் அதிக அதிக பாசமே.. அந்த பாசமே இன்று வெளிவருகிறது.. இதை தான் எல்லாரும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்…

இவர்களின் பாசத்தை கலைத்தது சத்ரியாவே “ போங்க போங்க சீக்கிரம் வீடு போய் சேருவோம்” என்று எல்லாரையும் அழைத்துக் கொண்டு சென்றார் சத்ரியா…

வீட்டில் வந்து எல்லாரும் களைப்பு தீர படுத்து உறங்கி விட்டனர்… அடுத்த நாள் விடியல் அழகாகவே விடிந்தது.. வர்மா அவன் மனைவியை அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு சென்று விட்டான்… இவர் வீட்டை விட்டு 4 வீடு தள்ளி இப்பொழுது தான் சியோரா திருமண பரிசாக அவனுக்கு கொடுத்தார்…

வர்ஷிக் இதோ இப்பொழுது கிளம்புகிறேன் என்று பிடிவாதமாக கூறி கிளம்பி விட்டான்… அதன் பிறகு ஒவ்வொரு வேலையாக வர அவரவர் வேலையை பார்க்க கிளம்பினார்கள்…

இப்படியாக அவர்கள் நாட்கள் கடந்தது.. இந்த 2 மாதத்தில் யார் வாழ்விலும் எந்த மாற்றமும் வரவில்லை என்று சொன்னால் அது நன்றாக இருக்காது.. கௌசிக்அவன்மனைவியுடன் வாழ்கையை ஒரு நல்ல நாளில் ஆரம்பித்து விட்டான்… வர்ஷிக் வாழ்கையை ஆரம்பிக்க வில்லை என்றாலும், அவளுக்கு அவனின் காதலை உணர்த்திக் கொண்டு இருந்தான்..

கௌசிக் மனைவி இதோ கௌசிக்சியோரா வாரிசை வயிற்றில் சுமந்து வருகிறாள்… இன்று தான் உறுதி செய்துக் கொண்டு வந்தனர் இருவரும்… அதிலும் டாக்டர் ஆயிரம் பத்திரம் கூறி இருந்தார்.. மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று…. சியோராவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை…அவரின் சந்தோசத்தை பார்த்து கௌசிக் டாக்டர் கூறியதை அவரிடம் கூறவில்லை….. வீட்டில் முதல் வாரிசுவரபோகிறது என்று சியோராவுக்கு சந்தோஷத்தில் திக்கு முக்காடி இருந்தார்… உடனே கௌதம்க்கு அழைத்து கூறினார் அவனுக்கும் சந்தோசம் தாளவில்லை…

உடனே கோவிலுக்கு சென்று கோட்டைத்தாய்க்கு சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்துவிட்டான்… ஆம் கெளதம் இப்பொழுது கோட்டைநல்லூரில் இருக்கிறான்.. கோட்டை கோவில் திருவிழா என்று கிளம்பிவிட்டான்.. எல்லாம் அவளை பார்க்க மாட்டோமா என்ற ஆசை தான்.. அதே ஆசையில் அவனின் டிடெக்டிவ் கூறியதும் கிளம்பிவிட்டான்.. ஒருவேளைஅவள் திருவிழாக்கு வந்தாலும் வரலாம் என்ற எண்ணத்தில்….ஆனால் அவள் வரவேயில்லை..

இவனை சத்ரியன் பார்த்தார் அவருக்கு யோசனை மீண்டும் இவன் எதற்கு வந்திருக்கிறான் என்று யோசனையாகவே அவனை தொடர்ந்துப் பார்த்தார்.. அப்பப்போஇவன் யாருக்கோ அழைத்து பேசுவதை கண்டு அவருக்கு பெரும் யோசனை திருவிழா முடியவும் இவனை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தார்…

மிக மிக பிரமாண்டமாக கோவில் திருவிழா நடந்துக் கொண்டு இருந்தது… பால் குடம் எடுத்தல், முளைப்பாரி என்று கோலாகலமாக நடந்தது.. கெளதம் எல்லாத்தையும் தனது கேமராவில் பதிந்துக் கொண்டான்…

நாளை காலையில் கௌதமை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று எண்ணி சத்ரியன் உறங்கினார்.. கௌதமும்அவன் படைகளுடன் எப்பொழுதும் போல் டெண்ட் கட்டி படுத்துக் கொண்டான்… ஆனால் நடு இரவில் அவனை யாரோ எழுப்பும் உணர்வு, யார் என்று பார்த்தான் அவன் அருகில் யாரோ நின்றிருந்தார். ஆனால் யார் என்று அவனுக்கு தெரியவில்லை.

வந்தவர்“ உடனே அவனை அந்த இடத்தை விட்டு காலி பண்ண சொன்னார்…. அவர் அப்படி சொல்லவும் கௌதம்க்கு தான் கோட்டை விஷயம் தெரியுமே அவள் தான் கூறுகிறாள் என்று எண்ணி அவன் படையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் மும்பைக்கு….

காலையில் எழுந்த சத்ரியன் ஆட்களை வைத்து கௌதமை வரக் கூறினார்.. ஆனால் அவன் சென்று விட்டான் என்ற பதிலில் யோசனையாக கோட்டைத்தாய் கோவிலை பார்த்தார் பின் ஏதோ நினைத்தவராக அப்படியே அமர்ந்து விட்டார்..

அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அந்த சித்தர் கூறியதை நினைத்து பேசாமல் இருப்பதா? இல்லை இப்பொழுது அவளை தேடி இவன் வந்திருக்கிறான் என்று அவளை பாதுகாப்பதா என்று சத்ரியனுக்கு பெரும் யோசனை… எதுவாக இருந்தாலும் சரி அவளை இங்கு வரவழைக்காமல் இருந்தாலே போதும் அவள் உயிரை காப்பாற்றி விடலாம் என்று எண்ணி அந்த நேரம் தனது யோசனையை விட்டார் சத்ரியன்..

கௌதமும் அவளை பார்க்க முடியவில்லை என்று எண்ணத்தோடு மும்பை கிளம்பிவிட்டான்… அங்கு போனதும் அவனுக்கு வேலைகள் அவனை சூழ்ந்துக் கொண்டது… வர்ஷிக் வந்து சில நேரம் இவர்களுக்கு உதவி செய்வான்… சியோரா அவனை இங்கையே வருமாறு கூறினார் ஆனால் அவன் “ வேண்டாம் அங்கிள் நான் அப்பப்போ வருகிறேன் என்று கூறிவிட்டான்…

ஜிக்கி இப்பொழுது எல்லாம் மைக்கை நிறைய மாற்றிவிட்டாள்… கொஞ்சம் கொஞ்சமாய் அவளை அங்கு மும்பை வாழ்க்கைக்கு பழக்க படுத்திவிட்டாள்… அங்கு போன பிறகும் மைக் கோவில்களுக்குபோவதை மட்டும் நிறுத்தவில்லை…

காலேஜ் லீவ் நேரம் மட்டும் ஜிக்கி, மைக்கை அழைத்துக் கொண்டு அவளின் வீட்டுக்கு அழைத்து செல்வாள்.. ஜிக்கி அடிக்கடி சத்ரியனிடம் பேசி மைக் பற்றி கூறுவாள்…

இப்படி தான் ஒரு நாள் “ தாத்தா நான் ஊருக்கு வாறேன்” என்று மைத்ரேயி அவள் தாத்தாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் போனில்,

அதற்கு சத்ரியன் “ கண்டிப்பாக வரலாம் கண்ணு, உன் படிப்பு முடிந்ததும் வா… அதற்கு முன் இங்கு வர வேண்டாம்” என்று கூறி கொண்டு இருந்தார்…

அதற்கு அவள் “ஒரு நாள் இல்ல ஒரு நாள் சொல்லாம கொள்ளாம உங்க முன்னாடி வந்து நிற்கிறேன் அப்போ என்ன செய்விங்க என்று பார்கிறேன் “ என்று கூறி கோபத்துடன் அழைப்பை நிறுத்தினாள்…

இப்படியாக மைக், ஜிக்கி, சத்ரியன் உறவு நன்றாகவும், கொஞ்சம் கொஞ்சம் சண்டையாகவும் வளர்ந்தது…

அங்கு வர்ஷிக் வீட்டில் “ மையூரி சீக்கிரம் வா “ என்று வர்ஷிக் அழைத்துக் கொண்டே இருந்தான்…

மையூரியும் இந்த ஒரு வாரமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள், இவளை அழைப்பதும் அழைத்து அணைப்பதுமாக இருக்கிறானே தவிர அதுக்கு மேலே போகவே மாட்டான் என்று செல்லமாக அவனை மனதில் வைதுக் கொண்டே அவர்கள் அறை நோக்கி சென்றாள்..

“ எதுக்குங்க என்ன கூப்டிங்க “ என்று கேட்டுக் கொண்டே அவர்கள் அறைக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்லவும் கதவின் பின்னாடி நின்ற வர்ஷிக் அப்படியே அவளை பின்னாடி நின்று அணைத்துக் கொண்டான்…

தினமும் இதை தான் செய்கிறான் வர்ஷிக்… ஆனால்வர்ஷிக்குபயம் அவளின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து விட்டான். ஆனால் அவளின் செய்கை, பாத்து பார்த்து செய்தல் இப்படி எல்லாவற்றிலும் அவளின் அவனுக்கு மேல் இருக்கும் பாசத்தையும், காதலையும் காண்கிறான் தான்.. ஆனால் அது அவள் வாய் மொழியாக தெரிந்தால் அவனின் காதல் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும் என்று எண்ணுகிறான்….

அவளை அப்படியே அணைத்துக் கொண்டு ரொம்ப நேரம் நின்றிருந்தான்.. அவளும் அவன்அணைப்பில் சுகமாக நின்றிருந்தாள்…

அவளின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்ட வர்ஷிக் கிறக்கமாக ” மையூ“ என்றுஅழைத்தான்வர்ஷிக்..

அவனின் அழைப்புக்கு “ ம்ம்“ என்று பதில் குடுக்க நினைத்தும் தயக்கமாகவே ஒலித்தது அவள் குரல்…

அவளின் தயக்க குரலில் அவளை அவன் நோக்கி திருப்பவும், அவன் முகம் நோக்காமல் அவன் மார்பில் முகத்தை புதைத்தாள்மையூரி….

அவளின் செயல் அவனுக்கு எதையோ உணர்த்த அவளை நோக்கி “ மையூ“ என்றுமீண்டும்கிறக்கமாக அழைத்தான்.. அவனின் கைகள் அவளுக்கு பல மாயாஜாலம் செய்தது…

அவனின் அழைப்பில் அவளுள் ஏதோ மாற்றங்கள் அவனிடம் பேச வாய் வந்தாலும் வார்த்தைகள் வரவில்லை மையூரிக்கு….

அவனுக்கு இன்று வெளியில் செல்ல மனசே இல்லை… கௌசிக் மனைவி கன்சீவ் ஆகவும் இவனுக்கும் ஆசை தங்களுக்கு என்று ஒரு குழந்தை வேணும் என்று….

அவனுக்கு என்று சியோரா குடும்பம் இருந்தாலும், அவனுக்காய் அவன் மனைவி இருக்க அவர்களுக்கு என்று ஒரு வாரிசு வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவளின் சம்மதம் வேண்டி தான் இதோ அவளின் முன் பேச்சு வராமல் அவளின் மேல் பித்தாகி இருக்கிறான் வர்ஷிக்…

டேய் வர்ஷிக் இப்படியே நீ இருந்தா உனக்கு 5௦ வயசுல தான் குழந்தை வரும் என்ற அவனின் மனசாட்சி செய்த கேலியில் உணர்வு வந்த வர்ஷிக்அவளின்முகத்தை நிமிர்த்தி கண்களில் காதலை தேக்கி அவள் கண்களில் அவனுக்கான காதலை தேடி கண்டு மயக்கத்துடன் “ மையூகௌசிக் மாதிரி நாமும் குழந்தை பெத்துக்கலாமா?” என்று கேட்டான் வர்ஷிக்….

அவனின் கேள்வி அவளுக்கு புரியவே சில நிமிடங்கள் பிடித்தது… அவன் கேள்வியை அவள் புரிய எடுத்துக் கொண்ட நேரத்திற்குள் வர்ஷிக் மிகவும் டென்சன் ஆகிவிட்டான்.. இண்டர்வியூ அட்டென் செய்து விட்டு அதன் பதிலுக்காய் காத்திருப்பது போல் அவள் முகத்தை ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தான்….

அவனின் கேள்வி புரிந்ததும் அவனை விட்டு ஒரு நிமிடம் விலகி நின்ற மையூரி.. அந்த ஒரு நிமிட விலகலில் மிகவும் பயந்துவிட்டான் வர்ஷிக்… விலகி பின் அவன் மார்பில் சாய்ந்து மெதுவாக அவன் நெஞ்சில் குத்தி

“ இதை கேட்க உங்களுக்கு இத்தனை நாளா மாமா “ என்று கேட்டாள் மையூரி… அவளின் மாமா என்ற அழைப்பில் அவளின் மனதை தெரிந்துக் கொண்டான் வர்ஷிக்..

அவனை மாமா என்று அழைத்த அந்த இதழுக்கு உரிய பரிசை அளித்து“ மையூ “ என்று காதலாக அழைத்து அடுத்த கட்டத்துக்கு பயணித்தான்…. இனிமையாகஅவர்கள் இல்லறவாழ்க்கை ஆரம்பித்தது….

இப்படியாக அவர்களின் வாழ்க்கை சந்தோசமாகவும், காதலாகவும் கழிந்தது…. இதற்கிடையில் ஷதாஷி குழந்தை, சியோராவின் குடும்ப வாரிசு கருவிலேயே அழிந்தது…. இதில் சியோரா குடும்பம் மிக மிக வருந்தியது….

ஷதாஷி கர்ப்பப்பை மிகவும் பலகீனமாக இருப்பதால் சிலபல மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்து அவளை கவனமாக பார்த்துக் கொள்ள கூறினார் டாக்டர்…

இதில் சியோரா தான் மிகவும் வருந்தினார்.. வாரிசு வர போகிறது என்று எண்ணி ஏற்பட்ட சந்தோசம் எல்லாம் பொங்கிய பாலில் ஊற்றிய தண்ணீர் போல் ஆகிவிட்டது….

இப்படியாக 2 வருடம் கழிந்தது.. இந்த 2 வருடத்தில் வர்ஷிக், கௌசிக் இருவருக்கும் குழந்தைபாக்கியம் கிட்டவே இல்ல… இதில் சத்ரியா தான் அழுது புலம்பினார்.. கோட்டைத்தாய்க்கு என் மேல் உள்ள சாபம் தான் இப்பொழுது என் மக்கள் வாழ்கையை அழிக்கிறது என்று…. எனக்கு வரவேண்டிய சாபம் என் மக்கள் வாழ்வில் திரும்பி விட்டது என்றும்,

சியோராவை நோக்கி “என்னை இப்பொழுதே கோட்டைநல்லூர் அழைச்சுட்டு போங்க என் உயிரை அவள் எடுத்தாலும் பரவாஇல்லை என் பிள்ளைகள் குழந்தை குட்டி என்று சந்தோசமாக வாழட்டும்” என்று சியோராவிடம் கூறி அழுது புலம்பினார்…. அவர் தான் அவளை ஏதேதோ பேசி சமாதானபடுத்தினார்….

இப்பொழுது எல்லாம் அவருக்கும் அதே யோசனை தான் சத்ரியா குடும்பம் செய்த பாவம் தான் தன் குழந்தைகளை பாதிக்கிறதோ என்று என்ன ஆரம்பித்தார்… ஆனால் கோட்டை சத்ரியாவுக்கு பதிலாக இவர்களை பழிவாங்குவாள் என்று அவர் கொஞ்சமும் எண்ணவில்லை… எண்ணவும்மாட்டார்…. சத்ரியா குடும்பம் செய்த பாவம் தான் நமது குழந்தைகள் அனுபவிக்கிறதோ என்று எண்ண ஆரம்பித்தார் சியோரா…

சத்ரியா பலமுறை அவர்கள் வீடு மனிதர்களை பார்க்க கேட்டும் சியோரா இங்கே அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி கொண்டே இருந்தார்… தினமும் சத்ரியாவும், மையூரியும் அவரை செய்த தொல்லையில் பொறுக்க மாட்டாமல் வெடித்துவிட்டார் சியோரா…

“ பேசாம இருங்க ரெண்டு பேரும்” என்று கூறிக் கொண்டு அவர் ரூம் சென்று கெளதம் அங்கு கோட்டைநல்லூரில் இருக்கும் பொழுது எடுத்த போட்டோவை காட்டினார்.. மைத்ரேயி போட்டோ மட்டும் அவனிடம் இல்லை என்று தாத்தா போட்டோவை காட்டி, மைத்ரேயியை தாத்தா எங்கோ பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறார் என்றும், மேலும் கெளதம் அங்கு தான் இருந்தான் என்பதையும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதையும் கூறினார்.. இப்பொழுது நடந்த கோவில் திருவிழா போட்டோவையும் காட்டினார், மேலும் அவள் அந்த ஊரில் வந்த அவளை இங்கு அழைத்து வருவேன் என்றும் கூறினார்.. அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிய பிறகு தான் அவர்கள் பயம் இல்லாமல் இருந்தனர் இருவரும்..

இந்த 2 வருடத்தில் மைத்ரேயி ஒரு நாள் கூட கோட்டைநல்லூர் செல்லவே இல்லை…. சத்ரியன் தான் அடிக்கடி வந்து அவளை பார்த்து செல்வார்…. வரும் பொழுது அந்த ஊரை பற்றிய பல கதைகளுடன் வருவார்…

அதே போல் இந்த 2 வருடத்தில் நடந்ததை, அவளிடம் கூறாத கூற நினைக்காத பல விஷயங்கள் இப்பொழுது கூற வேண்டும் என்று எண்ணி கூற ஆரம்பித்தார் சத்ரியன்….

உயிர் எடுப்பாள்………

இந்த 2 வருடத்தில் கோட்டைநல்லூரில் என்ன நடந்தது??? சியோராவுக்கு வாரிசுகள் வருமா?? கெளதம் அவளை பார்ப்பானா கேள்விகளுடன் நானும், உங்களுடன் …..

ஹாய் டியர்ஸ்.. ஸ்டோரி எப்படி இருக்கு… படிக்குறிங்க பட் கருத்தை சொல்ல மாட்டுகிறீங்க why?? இந்த எபி படிங்க படித்து சொல்லுங்க.. அடுத்த எபியில் இருந்து நிறைய நீங்க எதிர் பார்த்த, எதிர் பார்க்காத திருப்பம் வரும்… கோட்டை எண்ணம் நிறை வேறுமா என்று கேட்டிருந்திங்க… கண்டிப்பாக நிறைவேறும்… வருகிற எபியில் பார்க்கலாம்…