SSKN– EPI 30

அத்தியாயம் 30

 

உன் வேட்கைப் பின்னாலே

என் வாழ்க்கை வளையுதே!!!

 

அந்த மருத்துவமனை அறையில் மௌனமே ஆட்சி செய்தது. மீரா மூக்கை உறிய கவி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“சொல்லு கவிமா! உனக்கு அபி அத்தையைப் பத்தின விஷயங்கள் எப்போ தெரியும்?” என கேட்டார் வெங்கி.

“அம்மா இறக்கறதுக்கு முன்னாடி என் கிட்ட சொன்னாங்கப்பா.”

நெற்றியைத் தேய்த்துக் கொண்டார் வெங்கி. கீதாவைப் பற்றி அவர் பேசியாக வேண்டிய சூழ்நிலை. ஆனால் மீரா அங்கேயே இருக்கவும் தயக்கம் வந்தது.

“மீரா, வந்து.. இப்போ கீதா பத்தி..” என அவர் தயங்க,

“அக்காவப் பத்திப் பேச போறிங்களா? நான் வெளிய போகனுமா?” என சாதாரணமாகக் கேட்டார் மீரா.

“இல்ல வேணா” என அப்பாவும் மகளும் சேர்ந்தே சொன்னார்கள்.

“அப்போ பேசுங்க! நான் எதையும் தப்பா எடுத்துக்க மாட்டேன்” என்றார் மீரா.

நிம்மதி பெருமூச்சுடன் கவியையும் மணியையும் பார்த்தார் வெங்கி.

“அம்மா உன் கிட்ட என்னன்னு சொன்னா கவி?”

“எப்படி அம்மாவும் அத்தையும் க்ளோசா இருந்தாங்கன்னு. அப்புறம் தாத்தா பாட்டி கட்டாயத்துல பாலா மாமாவ கல்யாணம் செஞ்சது, தென் அவர் அவங்க காதல புரிஞ்சுக்காம கொடுமைப் பண்ணது, ஹ்ம்ம் கடைசிலே பேபி வயித்துல செத்துப் போனது வரைக்கும். அத்தையால பிள்ளை பெத்துக்க முடியாதுன்னு அவசர அவசரமா மாமா வேற கல்யாணம் செஞ்சது. அத்தை அதை நினைச்சு துடிதுடிச்சு செத்தது வரைக்கும். அவங்க அண்ணா எதைப் பத்தியும் கவலைப்படாம ரெண்டு பிள்ளைங்க பெத்துகிட்டு மும்பையில சந்தோஷமா இருக்கற வரைக்கும் சொன்னாங்கப்பா”

“இப்போ நான் சொன்னது தான் நிஜமா நடந்த விஷயம். உங்கம்மாக்கு தெரிஞ்சது எல்லாம் எங்கக்காவால நம்ப வைக்கப்பட்ட விஷயங்கள் தான். உண்மைய கீதாவுக்கு சொல்ல கூடாதுன்னு அக்கா சொல்லிட்டா. அவளுக்கு விஷயம் தெரிஞ்சு அவ அண்ணாகிட்ட சொல்லிட்டா, புது வாழ்க்கைய பாலா மாமா நிறைஞ்ச மனசோட வாழ மாட்டாருன்னு தான் இந்த கண் துடைப்பு. ஆனா அந்த விஷயம் என் மக வாழ்க்கையைப் பாதிக்குதுன்னு தெரியும் போது என்னால உண்மைய மறைக்க முடியல கவிம்மா. என் அக்கா காதல் வாழ்க்கையை தொலைச்சிட்டு செத்துப் போயிட்டா. அவ மாதிரி இருக்கற நீயும் அதை தொலைச்சிறக் கூடாதுன்னு  தான் மணிய கண்டுப்பிடிச்சு உன் கூட சேர்த்தேன்”

“நீங்க ஏன்பா அத்தை பத்தின விஷயங்கள் எதையும் என் கிட்ட ஷேர் பண்ணிக்கல? அம்மா கூட சாவின் விளிம்புல தான் இதை சொன்னாங்க! அதுவும் நீ உன் அத்தை மாதிரியே புத்திசாலி கவிக்குட்டி. அந்தப் புத்திசாலித்தனத்தால அவங்க பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்ல! அவங்களுக்கு வாழ்க்கையத் தேர்ந்தெடுக்கற வாய்ப்பு வழங்கப்படல. ஆனா நீ, நல்லா ஆராஞ்சி, உனக்கு வரவன் உன்ன நல்லா பாத்துக்குவானா, உன் கிட்ட இருக்கற நிறை குறைகள ஏத்துகிட்டு மனம் ஒத்து வாழ்வானா இப்படிலாம் தெரிஞ்சி கிட்டு தான் கட்டிக்கனும். யாரோ மணின்னு கவிதை எழுதி வச்சிருக்கியே, அதெல்லாம் பப்பி லவ். பெரியவ ஆனதும், அம்மா சொன்னத நினைச்சுப் பார்த்து வாழ்க்கைய அமைச்சிக்கோ. உங்கப்பா ஜீனியசா இருக்கவும் அவர் கூட அவர் லெவலுக்கு என்னால கலந்துப் பேசி சிரிச்சி வாழ முடியல. அதே மாதிரி நீயும் ஜினியசா இருக்க, என்னை மாதிரியே உனக்கு வரவனும் இருந்துருவானோன்னு பயமா இருக்கு. நான் பொம்பள அடங்கி வாழ்ந்துட்டேன், எங்கண்ணா மாதிரி  வேணான்னு உன் புருஷனும் உன்னை விட்டுட்டுப் போயிட்டா என் மக வாழ்க்கை என்னாகும்னு தெரியலையேன்னு சொல்லி அழுதாங்கப்பா!”

இறந்துப் போன தன் மனைவியை நினைத்து வெங்கிக்கும் மனது கசிந்தது. கடைசி வரை தனது தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளி வராமல் இருவர் வாழ்க்கையையும் மகிழ்ச்சி இல்லாமல் செய்து விட்டாளே என வருந்தினார். மீரா அவர் அருகில் வந்து கைப்பிடித்து அழுத்திக் கொடுத்தார். தன் இந்நாள் மனைவியைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார் வெங்கி.

“உங்கம்மாவுக்கு ஜாதகம், ஜோசியம் இப்படிப்பட்ட விஷயங்களில ரொம்ப நம்பிக்கை கவிம்மா. நீ வேற அத்தை மாதிரியே பொறக்கவும் அவ ரொம்ப பயந்துப் போயிட்டா. ஜாதகம் பார்த்தே ஆகனும்னு அடம். பார்த்தப்போ உனக்கும் செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லிட்டாங்க. உடஞ்சே போயிட்டா உங்கம்மா. அபிதான் ஆத்மா சாந்தி அடையாம, திரும்பப் பொறந்து வந்துருக்கான்னு முழுசா நம்பினா. நான் அதெல்லாம் இல்ல, இது ஜெனிடிக் தான். எங்க பாட்டி இப்படி இருந்தாங்க, அப்புறம் அபி, இப்ப பேபி அவ்வளவுதான்னு எடுத்து சொல்லியும் அவ ஏத்துக்கல. அபிக்கா மாதிரியே என் மவளும் படாத கஸ்டம்லாம் பட்டு என்னை விட்டுட்டுப் போகப் போறா அப்படின்னு அழுதழுது ஜன்னி வந்துருச்சு.”

“அப்புறம் என்ன மாமா ஆச்சு?”

“எனக்கு ரொம்ப டைம் இல்ல. அமெரிக்கா வேற திரும்பி போகனும். இவ என்னான்னா என் மகளும் அபி மாதிரியே ஜீனியசா இருப்பாளோ, அவ மாதிரியே பாதியிலே போயிருவாளோன்னு ஒரே புலம்பல். சரின்னு அவ கிட்டயே என்ன செய்யலாம்னு கேட்டேன்!”

“அக்கா என்ன முடிவெடுத்தாங்க?” என கேட்டார் மீரா.

“அபி பத்தி எதையும் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் கேட்டா. அத்தைன்னு உனக்கு ஒருத்தி இருந்தா, இறந்தா இது மட்டும் தெரிஞ்சா போதும். அவ ஜீனியஸ்னோ, கல்யாணம் ஆனதோ, பிரிஞ்சதோ எதையும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் கேட்டா! என் மனசாட்சி ஒத்துக்கல கவிம்மா. ஆனாலும் உன் அம்மா மன நிம்மதியா, இல்ல என் மனசாட்சியான்னு பார்க்கறப்போ உன் அம்மா ஜெயிச்சிட்டா! எங்க ஊர விட்டு, சென்னைக்கு வந்துட்டோம். உன் தாத்தா பாட்டி கூட வரலன்னு சொல்லிட்டாங்க. நான் அமெரிக்கால போய் படிப்ப முடிச்சேன். கீதாதான் உன்னை வளர்த்தா. நான் உன்னை நெருங்கினாலே அவளுக்கு பயம், என்னோட அறிவாளித்தனம் உனக்கு ஒட்டிக்குமோன்னு. ஆனா பாரு அதெல்லாம் பிறப்புலயே வரது. என்னதான் தடைப் போட்டாலும் அது வெளி வந்துதான் ஆகும்னு உங்கம்மா புரிஞ்சுக்கல”

கவிக்கு சில விஷயங்கள் ஞாபகம் வந்தன. தான் ஏதாவது புத்திசாலித்தனமாக செய்து விட்டு அம்மாவின் பாராட்டை எதிர்ப்பார்த்தால் அவரோ முகம் வெளிறி பேச்சில்லாமல் சமைந்துப் போய் நிற்பார். சின்ன வயதில் இருந்து தன் புத்திசாலித்தனத்தை அப்பாவிடம் மட்டுமே காட்டுமாறு வெங்கி சொல்லி வளர்த்தது என எல்லாம் கண் முன் நிழலாடியது.

“நான் உன் கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு உன்னைப் பொத்தி பொத்தி வளர்த்தவ, அவளாவே விஷயத்தை சொல்லிருப்பான்னு நான் நினைச்சுப் பார்க்கல கவி! மணி, நீ அத்தைக் கூப்புடாறான்னு கதறினத சொல்லவும் எனக்கு புரிஞ்சுப் போச்சு. செவ்வாய் தோஷம், அல்பாயுசுல போன அத்தை, இதெல்லாம் உன் மனசுல ஓடிட்டே இருந்துருக்கும்னு. அதான் அந்த நேரத்துல அந்த வார்த்தைகள் வந்துருக்கும்னு தோணுச்சு. முதல்ல அதிர்ச்சியா போச்சு. அத்தையப் பத்தி உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு, அதான் கல்யாணம் வேணான்னு மறுத்தன்னு நான் அப்புறம்தான் கணேக்ட் பண்ணிப் பார்த்தேன். ஒரு இக்கட்டுல கல்யாணம் நடந்துருச்சு. அதுக்கப்புறம் நீ எப்படி பிஹேவ் செஞ்சிருப்பன்னும் என்னால ஓரளவு கெஸ் பண்ண முடிஞ்சது. மணிகிட்ட எதாச்சும் பிரச்சனையான்னு கேட்டேன்! இல்லவே இல்லைன்னு சொல்லிட்டான்”

கட்டிலில் தன்னோடு அமர்ந்திருந்த மணியை ஏறிட்டுப் பார்த்தாள் கவி. தன்னைக் காட்டிக் கொடுக்காமல் தன் தந்தையை சமாளித்தவன் மேல் காதல் பொங்கியது. கண்களில் அதை அப்படியே பிரதிபலித்தாள். அவனும் அவள் நிலை அறிந்து கையை அழுத்திக் கொடுத்தான்.

“நீ வளர வளர, உன் புத்திசாலித்தனமும் வளந்துச்சி. அதுல உங்கம்மா ரொம்ப டிப்ரெஸ்ட் ஆயிட்டா! அவளுக்கு உருவத்துல அபி மாதிரி இருந்தாலும், புத்தியாச்சும் சாதாரண லெவல்ல இருந்துறக் கூடாதான்னு நப்பாசை. ஆனா அது இல்லன்னு தெரிஞ்சதும் டினையல்லே இருந்தா. ஆனா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சி, அத அவ முன்னுக்குக் காட்டிக்க முடியல. கீதா அறியாம உன்னை கோச் பண்ண நான் பட்ட கஸ்டம்! அப்பப்பா! அதுக்கு மட்டும்தான் அவ கிட்ட சண்டைப் போட்டுருக்கேன். ஆங்கில வழி கல்வினால அவளால கைட் பண்ண முடியல. அதனால டியூசன் போடறேன்ன்னு சொல்லி உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் அரேஞ் பண்ணேன். அதுக்கும் பிரச்சனை பண்ணா. என் மக அறிவாளியா இல்லைனாலும் அடிமுட்டாளா போயிட கூடாதுன்னு சத்தம் போட்டு அடக்கனேன். நான் வீட்டுல இருக்கறப்போ ஹோம்வோர்க் சொல்லி தரேன்னு நிறைய விஷயங்கள் கத்துக் கொடுத்தேன். உன் அறிவுப் பசிக்குத் தீனி போட்டேன்.”

“ஞாபகம் இருக்குப்பா! ஏ,பி,சி,டி புக் உள்ள சோலார் சிஸ்டம் புக் வச்சி சொல்லிக் கொடுப்பீங்க! ஆனா இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாதுன்னா நினைக்கறீங்க? நீங்க போனதும் என் புக் எல்லாம் அலசி ஆராய்வாங்க. நீங்க செஞ்சது எல்லாம் அவங்களுக்குத் தெரியும். ஆனாலும் அமைதியா இருந்தாங்க. மேபீ முட்டாள புத்திசாலி ஆக்கறது சுலபம், ஆனா புத்திசாலிய முட்டாளா டீமோட் பண்ணறது கஸ்டம்னு அவங்களுக்கும் புரிஞ்சிருக்கலாம். அந்த வயசுலயே என்னை நடுவுல வச்சி நீங்க ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்கறது எனக்கு புரிஞ்சது. நீங்க சொல்லுறத அவங்க கிட்டயும், அவங்க சொல்லறத உங்க கிட்டயும் சொல்லமாட்டேன்.”

சின்னதாகப் புன்னகைத்தார் வெங்கி.

“அத இத்தனை வருஷமா கடைப்பிடிச்சிருக்க நீ! அம்மா சொன்னத உள்ளுக்குள்ளயே வச்சி மருகிட்டு இருந்துருக்க. நானே கண்டுப்பிடிச்சு மணிய கூட்டிட்டு வரலனா இப்படியே வாழ்க்கையை ஓட்டிருப்ப!”

தலைக் குனிந்த தன் மகளை வாஞ்சையாக நோக்கினார் வெங்கி.

“ஒரு தம்பியா என் அக்கா வாழ்க்கைய சீரமைக்க முடியல, ஒரு கணவனா உங்கம்மாவ என்னால என் பக்கம் திருப்ப முடியல. ஆனா ஒரு அப்பாவா என் மகள நல்லபடியா வளர்த்துட்டேன்னு நினைச்சேன்! ஆனா அப்படி இல்லையோன்னு மனசுக்குக் கவலையா இருக்கு. என் மக என் கிட்ட இதையெல்லாம் சொல்லாம மனசுல வச்சி புழுங்கிட்டு இருந்துருக்கான்னு நினக்கறப்போ மனசு நோகுது. நான் ஒரு ஆம்பளையா வாழ்க்கையில தோத்துட்டேன் கவிமா”

“அப்பா!” அழுதுவிட்டாள் கவி.

“அங்கிள், அப்படிலாம் பேசாதீங்க! ஜெயிக்கறதுக்கும் தோக்கறதுக்கும் வாழ்க்கை என்ன ஓட்டப் பந்தயமா? அது ஒரு நீச்சல் போட்டி. தம் பிடிச்சு, மூச்ச அடக்கி, உடம்பையும் மனசயும் ஒருநிலைப்படுத்தி நீந்தி ஜெயிக்கனும் அங்கிள். நீங்களூம் உங்கள சுத்தி ஆட்டி வச்சப் பொண்ணுங்க மத்தியில தம் புடிச்சு மேல வந்துருக்கீங்க! என்னைப் பொருத்த வரைக்கும் நீந்தி இலக்கத் தொட்ட எல்லாருமே வின்னர்தான். எல்லாத்தையும் சமாளிச்சு இந்த அளவுக்கு மகள வளத்து ஆளாக்கன நீங்களும் வின்னர்தான். சியர் அப் அங்கிள்”

“அப்பா, வேணும்னே உங்க கிட்ட இருந்து மறைக்கலப்பா! எனக்கு தெரியக் கூடாதுன்னு தானே நீங்க சொல்லல! பிறகு ஏன் எனக்கு தெரியனும்னு காட்டி உங்கள கஸ்டப்படுத்தனும்னு தான் சொல்லல” என கண் கலங்கிய மகளை கட்டிக் கொண்டார் வெங்கி.

“என் மக சந்தோஷமா இருக்கனும். அதுதான் எனக்கு வேணும். மணி கூட இத்தனை நாள் பழகிருக்க. அவனப் பத்தி தெரிஞ்சிருக்கும். இனியாவது ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டு சந்தோஷமா வாழுங்க. நிறைய இழப்புகள சந்திச்சவன் நான். நமக்கு கிடைச்சிருக்கற காலத்தோட அருமை எனக்கு நல்லாவே புரியும். நீங்களும் கிடைச்ச காலத்துல ஆத்மார்த்தமா வாழப் பாருங்க.” என்றவர் இருவருக்கும் பேச இடம் கொடுத்து மீராவை அழைத்துக் கொண்டு வெளியே போய் விட்டார்.

அவர்கள் வெளியேறியதும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி இருந்தனர்.

“கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?” என ஆரம்பித்து வைத்தாள் கவி. இந்த முறை அலைபாயுதே போல சருக்கி விடாமல் கரெக்டாக அவள் பாயிண்டைப் பிடித்தான் மணி. மெல்லிய சிரிப்புடன்,

“ஹே! நீ கேக்காத! நானே கேக்கறேன்! எனக்குக் கேக்கத்தான் தெரியும்”

“கேளும்!”

“அதுக்கு மேல எனக்கு திருவிளையாடல் வசனம் தெரியாது லயனஸ்! நேராவே மேட்டருக்குப் போவோமா? சொல்லு! என்ன என் கிட்ட சொல்ல நினைக்கறியோ, எதை மனசுல வச்சுப் புழுங்கறியோ எல்லாம் சொல்லு. பேசி தீர்த்துடுவோம்”

“எங்கன்னு ஆரம்பிக்க? உனக்கு ப்ரோபோஸ் பண்ணதுல இருந்து வரேன்”

“சரி, சொல்லு”

“அப்போ அத்தை விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. அம்மா அப்பாக்குள்ள என்னமோ சரியில்ல. அது என்னை வச்சித்தான்னு தெரியும். ஆனா பெரியவங்க அவங்களே அதப் பார்த்துப்பாங்கன்னு அப்பவோ மைண்ட கிளியரா வச்சிக்கிட்டேன். அம்மாவுக்கு ஏத்த மாதிரி அவங்க கிட்டயும், அப்பாவுக்கு ஏத்த மாதிரி அவர் கிட்டயும் நடந்துக்குவேன்! ஒத்தைப் பிள்ளையா இருக்கறதுல ஒரு ட்ராபேக் என்ன தெரியுமா? விளையாட ஆள் இல்லாம அம்மா அப்பாவையே விளையாட்டுத் தோழன் தோழியா சேர்த்துக்கறது. அப்படி சேர்த்துக்கறப்போ அவங்க நம்ம லெவலுக்கு வருவாங்க. நாம அவங்க லெவலுக்குப் போவோம். பெத்தவங்களுக்கும் ஒத்தைப் புள்ளைக்கும் சீக்கிரம் சிங்க் ஆகிரும். அப்படிதான் எனக்கும் அம்மா கூட விளையாடி அவங்க லெவல் புரிஞ்சது, அப்பா கூட பாடம் படிச்சு அவர் லெவல் புரிஞ்சது!”

“அதாவது அப்பா கிட்ட புத்திசாலியா பேர் எடுத்த அம்மா கிட்ட நார்மல் கவியா நடந்துகிட்ட”

“ஆமா! இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் என் உலகம். அதுவும் அப்பா அடிக்கடி வெளியூர் பேயிருவார். அம்மாதான் எனக்கு எல்லாம். பெரிய பொண்ணா ஆகிக்கூட எனக்கு அவங்கதான் சாப்பாடு ஊட்டி விடுவாங்க. அவங்க ரசிச்ச சாதாரண விஷயங்கள என் கிட்ட கலந்துக்குவாங்க! காமெடி ட்ராமா, சினிமா, அதுல வர வசனங்கள வச்சி என் கிட்ட பேசறதுன்னு. நான் கூட அடிக்கடி வடிவேலுலாம் கோட் பண்ணறத கேட்டுருப்பியே! அதெல்லாம் அவங்க கிட்ட பழகன பழக்கம்தான். ரொம்ப சிம்பிளானவங்க. கைக்குள்ளயே வச்சிருந்தாங்க என்னை.”

“சொந்தம் பந்தம்?”

“அப்பா சைட் தாத்தா பாட்டி இருந்த வரை போய் பாத்துட்டு வந்துருவோம். அம்மா சைட் தாத்தா வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. அப்பாட்ட விட்டுட்டு அவங்க மட்டும் போய் பாத்துட்டு வருவாங்க. தென் யூ என்டர் மை லைப்”

புன்னகைத்தான் மணி.

“ஸ்கூல்ல யார் கிட்டயும் ரொம்ப ஒட்டுனது இல்ல. என்னன்னா என்ன! அவ்வளவுதான்! உன்னை மட்டும் பார்த்துட்டே இருப்பேன்! க்ரஷ் ஏன் வருதுன்னு யாருக்குத் தெரியும்! உன் முடி அழகா இருக்கே, அதனாலயா இருக்கும்னு நினைப்பேன்! மறுநாள், இல்ல, இல்ல மணி சிரிப்புல தான் நான் விழுந்துட்டேன்னு முடிவ மாத்திப்பேன். ஹஹ! ரொம்ப நாள் பாத்துட்டே இருந்தேன்! அப்புறம் தைரியப்படுத்திட்டு வந்து கணக்கு கேக்கற மாதிரி பேசனேன்! நீயும் என்னை வியர்டா பாக்காம நல்லா பழகன! அது போதாதா? உடனே மனசுல லாலாலா தான். அதுக்கு மேலதான் உனக்கு தெரியுமே!”

“தெரியும் தெரியும், இந்த ரௌடியோட அடாவடி!”

“இந்த ரௌடி ரொம்ப மனசொடிஞ்சது அம்மா இறந்தப்பத்தான்! உலகமே சூனியமாகிட்ட மாதிரி. அது பத்தாதுன்னு அப்பா வேற ஊர விட்டுப் போகலாம்னு திடீர் முடிவு. உன்னைப் பிரியனும்னு வேதனை. என் லைப்ல ரொம்ப கஸ்டமான பீரியட் அது. அம்மா என் கிட்ட அத்தைப் பத்தி சொன்னது அப்போதான்! அவங்க இறந்தது மட்டும்தான் மனசுல நின்னுச்சு, அவங்க சொன்னது எல்லாத்தையும் என் சோகம் மறக்கடிச்சிருச்சு”

“புரியுதுமா! நமக்குப் புடிச்சவங்க இழப்பு நம்ம சுத்தி நடக்கற எல்லாத்தையும் மறக்கடிச்சிரும். நானும் அந்த நிலையில இருந்துருக்கேன். வளர்ந்து கூட பெத்தவங்க போட்டோவ பார்க்க முடியாம அழுதுருக்கேன். எனக்காக வீட்டுல அவங்க போட்டோ கூட மாட்டி வைக்கல”

இருவரும் ஒருவரை ஒருவர் கைப்பிடித்து அமைதியாக தங்கள் சோகத்தில் சிறிது நேரம் மூழ்கி இருந்தனர்.

“இங்க வந்து லைப்ல கொஞ்சம் செட்டில் ஆனதும், உனக்குப் போன் பண்ணேன்! நிலாக்கா நீ ஷாலினி பாண்டியன் கூட சந்தோஷமா இருக்கேன்னு சொன்னாங்க! அப்போ ரொம்ப மனசொடிஞ்சுப் போயிட்டேன் மணி! ராத்திரி முழுக்க அழுதேன்! அம்மா சொன்னதெல்லாம் அப்போத்தான் ஆழ்மனசுல இருந்து மேல வந்தது. நம்ம மாதிரி சோசியல் அவுட்காஸ்ட்டா இருக்கறவங்கள யாருக்கும் பிடிக்காது. நாமலும் அத்தை மாதிரியே யார் மேல பாசத்த வச்சாலும் அவங்க வலியத்தான் திருப்பிக் குடுப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன். நீ எனக்கு வேணாம்னு முடிவெடுத்தேன். நீ மட்டும் இல்ல வேறு யாரும் வேணாம்னு. அப்பா வற்புறுத்தல்ல டேட் போனேன்! ஆனா யாரையும் சீரியசா எடுத்துக்கல”

“நிலா நீ என்னையே நினைச்சுட்டு படிப்ப விட்டுற கூடாதுன்னு ஒரு பொய்ய சொல்லி இருக்கா கவி! அது இவ்வளவு பெரிய இம்பேக்ட் குடுக்கும்னு அவளும் நினைச்சிருக்க மாட்டா!”

“உன்னை என் பாத்ரூம்ல எப்போ பார்த்தனோ, அப்போ புரிஞ்சுகிட்டேன் நீ என்னிக்குமே எனக்குத்தான்னு”

“அப்புறம் ஏண்டி என்னை இப்படி பாடா படுத்தின?”

“ஏன்னா உன் மேல எனக்கு செம்ம லவ்வு”

“நல்லா இருக்குடி நீ லவ் பண்ணுற லட்சணம்”

“நீ வேணாம், நீ வேணாம்னு உருப்போட்டே உன்னை மனசுல ஆணி அடிச்சு உட்கார வச்சிருந்துருக்கேன். அப்பா கல்யாணம்னு பேச ஆரம்பிச்சப்போ உன் நினைப்புதான். நீ இப்போ எப்படி இருப்பேன்னு கூட தெரியல. அதுக்குப் பிறகுதான் பேஸ்புக்ல உன்னைத் தேடுனேன், கண்டுப்புடிச்சேன். ஆனா நீ நான் குடுத்த ரிக்வேஸ்ட் அக்சேப்ட் பண்ணல”

“ஃபேக் ஐடிலாம் நான் கண்டுக்கறது இல்லம்மா!” சிரித்தான் மணி.

“அப்பயும் நான் விட்டேனா! நிலாக்காவ கண்டுப்புடிச்சு அவங்களுக்கு ரிக்வேஸ்ட் அனுப்பனேன்! அவங்க எல்லாரையும் புடிச்சு போட்டுக்குவாங்க போல. என் ஃபேக் ஐடியயும் சேர்த்துக்கிடாங்க. வாட்ச் பண்ணிட்டே இருந்தேன். அப்போதான் உன் ஜிம் பேஜ் ஷேர் பண்ணாங்க. கப்புன்னு அங்க நூல் புடிச்சு போய் உன் படத்த எல்லாம் இறக்குமதி பண்ணிட்டேன்”

“நான் வேணான்னு நினைச்சிட்டு ஏண்டி இந்த ஸ்பை வேலைலாம் செஞ்சிருக்க?”

“நீ இல்ல, யாருமே வேனாம்னு நினைச்சேன். முரட்டு சிங்கிள இருக்கலாம்னு முடிவுல இருந்தேன். அப்படி இருந்தாலும் ராத்திரி கனவுல டூயட் பாட ஒரு முகம் வேணும்ல! அதான் முதல்ல நான் லவ் சொன்ன உன்னையே அதுக்கு செட் பண்ணிக்கிட்டேன். நீயும் பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியா இருந்தயா அதான்!” என கடுப்பேத்தினாள்.

“மேல ஜொள்ளு ஐ மீன் சொல்லு!”

“வேற என்ன சொல்ல! என் கனவு நாயகன் என் வீட்டு பாத்ரூம்ல! எப்படி பீல் பண்ணேன் தெரியுமா? நிலாவுல நீல் ஆம்ஸ்ட்ரோங் எப்படி மிதந்துருப்பாரோ அப்படி மிதந்தேண்டா! என் மணி என்னைத் தேடி வந்துட்டான். செஞ்ச சத்தியத்த காப்பாத்த வந்துட்டான்னு. உன்னைப் பார்த்தப்ப கடந்து வந்த பல வருஷ கேப்லாம் ஓடிப் போச்சு. என்னமோ நேத்துதான் லவ் யூ சொன்ன மாதிரி இன்னிக்கு நீ தேடி வந்துட்ட மாதிரி உணர்ந்தேன். அதெல்லாம் வந்துப் படுக்கற வரைக்கும் தான். மறுபடியும் எங்கத்தை முகம் கண்ணுக்குள்ள, எங்கம்மா வார்த்தை நெஞ்சுக்குள்ள, திணறிப் போயிட்டேன். நீ வேணாம், நீ என் மனச கலைச்சிருவ. தனியா இருக்கனும்னு எடுத்த முடிவெல்லாம் நீ தகர்த்துருவன்னு தோணிச்சு. பயம் அப்பிக்கிச்சு! அதான் ஓடிப்போனேன்”

“திரும்பி வரப்போ இன்னொருத்திய எனக்கு செட் பண்ணியே! அதெல்லாம் மறக்கவா முடியும்!”

“தனியா இருந்தப்போ ரொம்ப யோசிச்சேன் மணி. நானே தேடாம நீ வந்துட்ட. நாந்தான் வேணும்னு ஒத்தக்காலுல நிக்கற! நாம மட்டும் ஏன் வேணாம்னு சொல்லனும்! அம்மா சொன்ன மாதிரி ஆராஞ்சி பாத்துருவோம்னு முடிவெடுத்தேன். அதான் சாராவ கூட்டிட்டு வந்தேன். அவ அழகுல நீ அசரவே இல்ல! அதோட அவ என்னை ஏசுனப்போ நீ கோபமா எனக்கு சப்போர்ட் பண்ணே! பூரிச்சுப் போயிட்டேன் நான். அவள நீ ஆசையாப் பார்த்திருந்தா சத்தியமா என் காதல புதைச்சிக்கிட்டு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருப்பேன்!“

“தியாகிடி நீ”

“போடா! அந்த முடிவெடுக்க நான் எவ்வளவு கஸ்டப்பட்டேன் தெரியுமா! உங்க ரெண்டு பேரையும் பேச விட்டுட்டு பைத்தியம் மாதிரி மால் முழுக்க சுத்திட்டு இருந்தேன். நெஞ்சு படக் படக்குன்னு அடிச்சிக்கிச்சு”

“தேவைதான் உனக்கு! மிஷன் மணி பத்தி சொல்லு, கேக்கலாம்! எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக் அது!”

“அது வந்து மணி…”

“சொல்லு, எதையும் தாங்கும் இதயம் எனக்கு”

“மிஷன் மணி சாராவ பார்த்துட்டு வந்த அன்னைக்கு ஆரம்பிச்சது. என் மனசு அன்னிக்குத் தவிச்ச தவிப்ப என்னால தாங்கிக்க முடியலடா! எங்கத்தையும் அப்படிதானே காதல்ல விழுந்து தவிச்சிருப்பாங்கன்னு அன்னைகெல்லாம் ஒரே அழுகை. உன் கிட்ட, எவ்வளவு பிடிச்சு வச்சும் என் மனசு ஓடிப்போய் ஒட்டிக்கிதுன்னு எனக்குத் தெரிஞ்சிருச்சு. சீக்கிரம் விட்டு விலகனும்னு நினைச்சேன். ஆனா விலகறப்ப உன் ஞாபகமா உன்னில் ஒரு பாதிய எனக்குள்ள எடுத்துக்கனும்னு நினைச்சேன். எங்க அத்தை இழந்த குழந்தைய அவங்க அச்சா இருக்கற நானாச்சும் சுமந்துப் பெத்துக்கனும்னு நினைச்சேன். அதுக்குத்தான் ஆறு மாசம் டைம் கேட்டேன். ஆனா நீ படக்குன்னு மோதிரத்தப் போட்டுட்ட! மோதிரத்த கையில வாங்குன நிமிஷமே அந்தப் பிளானா ட்ராப் பண்ணிறலாமான்னு எண்ணம். ஆனாலும் மனசுல உன் மேல இன்னும் நம்பிக்கை வரல”

“உனக்குப் பிள்ளைய குடுத்துட்டு, நீ விட்டுட்டுப் போயிட்டா நான் என் வழிய பாத்துட்டுப் போயிருவேன்னு எப்படிடி நினைச்ச?”

“எங்கம்மா சொன்ன கதைய வச்சிப் பார்த்தா எங்க மாமா அப்படிதானே எங்க அத்தைய விட்டாரு. கூட சேர்ந்து பிள்ளை வர வரைக்கும் வாழ்ந்துட்டுப் பட்டுன்னு பிரியல? நீயும் அப்படி இருந்துருவேன்னு நினைச்சேன். அதோட எல்லா ஆம்பளைங்களும் பழைய விஷயங்கள கடந்து சட்டுன்னு புது மேட்டருக்குப் போயிருவாங்கன்னு நினைச்சேன் மணீ. பொண்ணுங்களூக்குத்தான் காதலும் காமமும் சேம் டிப்பார்ட்மேண்ட். ஆம்பளைங்களுக்கு ரெண்டும் வேற வேற டிப்பார்ட்மெண்டுன்னு தான் புரிஞ்சு வச்சிருந்தேன். நீயும் காதல்னு உளறனத எல்லாம் மறந்துட்டு கண்ணுல பார்க்காத்து கருத்துல நிக்காதுன்னு வேற ஒருத்திய புடிச்சிருவேன்னு நினைச்சேன்!”

“உங்கப்பாவும் ஆம்பளைதாண்டி!”

“அவரும் தான் நான் இந்த முடிவுக்கு வர ஒரு காரணம்”

“என்னடி சொல்லுற?”

“இல்லடா மணி, அப்பாவ தப்பா சொல்லல. அம்மா இறந்து அத்தனை  வருஷம் தனியா வாழ்ந்தவரு வாழ்க்கையில, மீராம்மா வந்ததும் அவர் தடுமாறல, அது மாதிரி உனக்கு ஒருத்தி வருவான்னு நினைச்சேன்”

‘ஜீனியஸ் மூளை எப்படிலாம் யோசிச்சு ஒவ்வொன்னுக்கும் காரணம் தேடி வச்சிருக்குப் பாரேன்’ அதிர்ந்துப் போனான் மணி.

“ஏற்கனவே நிறைய தடவை நீ என்ன இம்ப்ரேஸ் பண்ணிட்ட மணீ! உன் மேல நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுச்சு. ஆம்பளை என்ன பொம்பளை என்னா எல்லாம் சமம்தான்னு நீ சொன்ன ஆனா பாலா ஆம்பளை தான் பெருடு, பொண்ணுங்க அவங்க கீழன்னு என் அத்தைய அடக்கனாரு. நான் இறந்துப் போயிட்டா சாவ உன்னத் தேடி வர வச்சிக்குவேன்னு நீ சொன்ன ஆனா அவரு அத்தை இறந்ததும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. என் சம்பாத்தியத்துல வாழறது உனக்கொன்னும் ஈகோ பிரச்சனை இல்லைன்னு ஒத்துக்கிட்டது, நான் ஆம்பளைன்னு சுணங்காம எனக்கு சமைச்சுப் போட்டது இதெல்லாம் சத்தியமா மாமா கிட்ட எதிர்பார்த்துருக்க முடியாது. நான் சால்வ் பண்ண இகுலிபிரியம் ஃபோர்முலாவ பார்த்து என் புத்திசாலித்தனத்த மெச்சி என்னைக் கட்டிக்கிட்ட ஆனா அவரா இருந்தா பொட்டப்புள்ளைக்கு எதுக்கு இந்த அறிவுன்னு சொல்லிருப்பாரு. இப்படிதான் நான் போட்டுருந்த வேலிய உடச்சி கொஞ்சம் கொஞ்சமா உள்ள வர ஆரம்பிச்சுட்ட! என் பாலா மாமா எதுல எல்லாம் பெயில் ஆயிட்டார்னு நான் நினைச்சனோ அதுல எல்லாம் நீ பாஸ் ஆகிட்டே! இதெல்லாம் அப்பா பாலா மாமா கதைய சொல்லுறதுக்கு முன்ன  இருந்த என் மனநிலை மணி. அதை நீ புரிஞ்சுக்கனும். கல்யாணத்துக்கு முன்ன ஆரம்பிச்சு கல்யாணத்துக்கு அப்புறம் வரைக்கும் நீ காட்டுனது எல்லாம் அக்மார்க் கலப்படம் இல்லாத அன்புதான். அத நான் புரிஞ்சுகிட்டேன்”

“அப்போ என்னை விட்டுட்டுப் போகனும்னு எடுத்த முடிவ ஏற்கனவே வித்ட்ரோ பண்ணிட்டியா லயனஸ்?”

“ஆமா! கல்யாணம் ஆனதும், ப்ளான்லாம் சொதப்பிருச்சேன்னு ஒரே அழுகை. என்னைக் கட்டி, என் கூட வாழ்ந்து என்னை வெறுத்துருவியோன்னு பயம். ஆனா சித்ராக்காவும், நிலாக்காவும் உன்னையப் பார்த்துக்க சொல்லிட்டு போனப்போ, ஒரு மனைவியா என் கடைமை, உடைமை எல்லாம் நீன்னு உணர்ந்தேன். உன் கூட வாழ்ந்து பாத்துரனும், கல்யாணம் உடஞ்சி போனாலும் அது என்னாலன்னு இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்.  அப்புறம் உனக்கு மிஷன் மணி பத்தி தெரிஞ்சது, நான் அழுதது, சமாதானம் ஆனது, நமக்குள்ள கஜாகஜா நடந்தது எல்லாம் தான் உனக்குத் தெரியுமே”

“உன் மாமாவோட கதைய கேட்டுட்டே, அவர் காதலப் பத்தி தெரிஞ்சிகிட்ட! அவங்க வாழ்க்கையில விளையாடனது விதி. உங்கத்தையோட மதியோ, உன் மாமானோட முரட்டுக்குணமோ இல்ல. இன்னும் கொஞ்சம் காலம் போயிருந்தா அவங்களே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அமோகமா வாழ்ந்துருப்பாங்க! இனியாச்சும் என் காதல சந்தேகக் கண் கொண்டு பார்க்காம இருப்பியா லயனஸ்?”

“மணி!”

“என்ன இழுக்கற?”

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு கேள்விப்பட்டிருக்கியா?”

“என்ன சொல்ல வர?”

“உன்னை நம்பறேன்! ஆனாலும் உன் அழகுனாலயும், உன் மென்லினஸ்னலாயும் எனக்குள்ள ஒரு இன்செக்குரிட்டி பீலிங் இருந்துட்டேத்தான் இருக்கும்! எவ உன்னப் பார்த்தாலும் சண்டைப் பிடிப்பேன்! ஆனா விட்டுட்டுப் போக மாட்டேன். உன்னை முழுசா நம்பறேன்னு சொன்னா அது பொய் மணி! இத்தனை வருஷமா மனசுல ஊறிப் போன பயம் பட்டுன்னு போயிறாது! எப்போ நான் சொதப்புவேனோ, எப்ப நீ கோபப்பட்டு என்னை விட்டுப் போயிருவியோன்னு ஒரு பக்கம் மனசுல இருந்துட்டேத்தான் இருக்கும். ஆனா அத உன் உதவியால கடக்கப் பழகுவேன். நீ அதுக்கு எனக்கு ஹேல்ப் பண்ணுவியா மணீ?”

“இவ்வளவு நாளா உன்னை எது குழப்புதுன்னு தெரியாமலேயே நீ செஞ்சதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன் கவி. இப்போ இதுதான் பிரச்சனைன்னு மனசு திறந்து சொல்லும் போது அத சமாளிக்க தெரியாதா எனக்கு? என்னை எப்படி பாடு படுத்தினாலும் என் கவி என் கூட இருப்பான்றதே எனக்குப் போதும்டி!”

“சத்தியமா உன்னை விட மாட்டேன் மணீ! அலாவுதினுக்கு எப்படி அவன் குரங்கு அபூ இல்லாம வாழ முடியாதோ, அதே மாதிரி என்னாலயும் உன்னை விட்டு வாழ முடியாதுடா”

“இப்ப என்னடி சொல்லுற? நான் மங்கியா?”

“ஆப்கோர்ஸ்! அப்பப்போ பிராண்டி கடிச்சு வைக்கிறவங்கள மங்கின்னு கூப்டாம, மகேஷ் பாபுன்னா கூப்புடுவாங்க?”

“இந்த மங்கி கடிச்சு வச்சு ரொம்ப நாள் ஆச்சுல! அதான் வாய் பேச்சு ஓவரா போகுது”

“கைப்பேச்சு குறைவா இருக்கறப்போ வாய் பேச்சு கூடத்தான் செய்யும் மிஸ்டர் மங்கி ஐ மீன் மணி” என சிரித்தாள் கவி.

மனதில் உள்ள பாரத்தை இவன் தோளில் ஏற்றிவிட்டு ஆனந்தமாய் சிரிப்பவளை ஆசையாகப் பார்த்திருந்தான் மணி. பட்டென அவள் தாடையைப் பிடித்தவன், சிரித்தவளை வன்மையாகக் கண்டித்தான் தன் இதழால்.

“ஹ்கும்” கணைப்புச் சத்ததில் அவசரமாகப் பிரிந்தார்கள் இருவரும். அன்று பார்த்த அதே நர்ஸ் இன்றும் அவர்கள் முன்னே நின்றிருந்தார். ஒன்றும் சொல்லாமல் வழக்கம் போல் தன் பணியைப் பார்த்துவிட்டுப் போனார்.

“மறுபடியும் மானம் போச்சுடா உன்னால”

“விடு, விடு! யூத் லைப்ல இதெல்லாம் ஜகஜம்” என்றவன்,

“லயனஸ்..” என இழுத்தான்.

“என்ன வார்த்தைத் தந்தி அடிக்குது?”

“நம்ம நர்ஸ் போட்டிருந்த நீல கலர் யூனிபார்ம் அழகா இருக்குல்ல”

“நம்ம நர்ஸ் இல்ல, என்னோட நர்ஸ்! ஆமா நல்லாருக்கு, அதுக்கென்ன?” கடுப்பாக கேட்டாள் கவி.

“நீ ரோல்ப்ளே பத்தி கேள்விப்பட்டுருக்கியா லயனஸ்?”

‘அமெரிக்கால வளந்தவளுக்கு இது தெரியாதா? உன் வாய் வழியாவே வரட்டும்’

“இல்லையே! என்னது அது?”

“இந்த நர்ஸ் போட்டுருக்கற மாதிரியே யூனிபோர்ம் நாம வாங்கறோம்”

“வாங்கறோம்! அப்புறம்?”

“வீட்டுக்குப் போய், உனக்கு கொஞ்சம் நல்லா ஆனதும் நீ அழகா குளிச்சிட்டு நர்ஸ் யூனிபோர்ம் போட்டுக்குவியாம்”

“சரி போட்டுக்குவேன். அப்புறம்?”

“நான் பேஷண்ட் மாதிரி ட்ரீண்ட்மெண்டுக்கு வருவேனாம்”

“ஓஹோ! அப்புறம்?”

“நீ என்னைத் தொட்டு சோதிக்க, உன் தொடுகை என்னை பாதிக்கன்னு அப்படியே நம்ம லவ் லைப் நாதர்தனா நாதர்தனான்னு எவரெஸ்டயே தொட்டுரும். எப்புடி?”

“அதாவது சுத்த தமிழுல அம்மா அப்பா வெளாட்டு வெளையாடலாம்னு சொல்லற?”

“என்னடி, அமெரிக்காவுக்கு ஏத்த மாதிரி நான் புது வார்த்தை கண்டுப்பிடிச்சா நீ பொசுக்குன்னு அம்ஜிக்கரை லோக்கல்னு நிரூபிச்சிட்ட!”

“நான் அம்ஜிக்கரை லோக்கலாவே இருந்துட்டுப் போறேன்! ஆமா,  மேன் ஆப் பிரின்சிப்பள்னு உதார் விட்டுட்டு நல்லப் பையன் ஒருத்தன் இங்க சுத்திட்டு இருந்தானே, அவன நீ பார்த்தே?”

“நல்லவன எங்கடி நல்லவனா இருக்க விடறீங்க? ஆயா கடை சாயா, நானே உனக்குப் பாயான்னு, தொட்டுக்க தொட்டுக்கன்னு சொல்லி ஆள காலி பண்ணிருறீங்களே! அதுக்கு மேல அவன் எங்க நல்லவனா இருக்கப்போறான்? எல்லா கல்யாணமான பய புள்ளைகளும் என்ன மாதிரிதான் ஒரு மார்க்கமா சுத்திட்டு இருப்பானுங்க” என சிரித்தான் மணி.

“நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா! என் மணி என்னம்மா பேசறான்” என சிரிப்புடன் அவனைக் கட்டிக் கொண்டாள் கவி.

காபிடேரியாவில் வெங்கியுடன் அமர்ந்திருந்தார் மீரா. இருவரும் கவி மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு ரூமுக்குப் போகலாம் என எழுந்தனர். சடாரென எழவும் மீராவுக்கு இருட்டிக் கொண்டு வந்தது. கீழே விழப் போனவரை சட்டென தாங்கிப் பிடித்தார் வெங்கி.

“மீரா!!!!”

 

(அடுத்து எபிலாக்கில் வந்திக்கலாம்)