அத்தியாயம் 26
முள்நாறிப் பழம் (டுரியான்) மலேசியா பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. டுரி என்பது மலாயில் முட்கள் என பொருள்படும். இந்தப் பழம் மலேசியாவில் வாழும் எல்லா இன மக்களாலும் விரும்பப்படுகிறது. இந்தப் பழத்தின் வாடை சிலருக்குப் பிடிக்காமல் போனாலும், பலர் விரும்பியே உண்ணுகிறார்கள். டுரியான் கேக், ஐஸ்க்ரீம், பூடிங் என இந்த பழத்தைக் கொண்டு பல வகையான உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இப்பழத்தின் வாடை பல நாக்டள் ஆனாலும் போகாமல் இருப்பதால், மருத்துவனை, ஹோட்டல் போன்ற இடங்களில் இந்தப் பழத்தை அனுமதிக்க மாட்டார்கள்.
பி.எம் மெடிக்கல் செண்டர், கோலாலம்பூரில் மற்றும் அல்ல பல மாநிலங்களிலும் தங்களது கிளையை நிறுவிக் கொடிக் கட்டிப் பறக்கும் மருத்துவமனையாகும். எல்லா விதமான மருத்துவமும் இங்கே வழங்கப்பட்டாலும், காஸ்மடிக் சர்ஜரி தான் அதில் முதன்மையாக இருந்தது. லிப்போசக்ஷனில் இருந்து லிப் லிப்ட் வரை இங்கே செய்யப்படுகிறது. மலேசியர்கள் மட்டுமல்லாது, வெளி நாட்டினர் பலரும் இங்குதான் தங்களுக்குத் தேவையான பல வகை ட்ரீட்மெண்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். பெரிய இடத்தை வளைத்துப் போட்டு, ஹோட்டல் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதென்றால் கையில் தாராளமாக பணம் புரள வேண்டும்.
குரு அவ்விடத்தை அடைந்தப் போது காலை மணி ஐந்தடித்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. மிரு போனை மீண்டும் ஆப் செய்து வைத்திருந்ததால் அப்ளிகேஷன் அந்த மெடிக்கல் செண்டரை தான் கடைசி இடமாக காட்டியது. பக்கத்தில் வேறு எந்த பில்டிங்கும் இல்லாமல் அந்த மருத்துவமனை மட்டும் தனித்து இருந்ததால், மிரு கண்டிப்பாக அதன் உள்ளேத்தான் இருப்பாள் என யூகித்தான் குரு.
விடியற்காலை நேரம், வண்ண விளக்குகள் மின்ன மிக அமைதியாக இருந்தது அந்த மருத்துவமனை வளாகம். காரைப் பார்க் செய்து விட்டு, ரிஷப்ஷன் என எழுதி இருந்த இடத்தை நோக்கி நடையை எட்டிப் போட்டான் குரு. அங்கே இரு மலாய் பெண்மணிகள் நின்றிருந்தார்கள்.
ரிஷப்ஷன் அருகே இருந்த இருபத்தி நான்கு மணி நேரம் திறந்திருக்கும் கடைக்குள் நுழைந்தவன், அங்கிருந்த பூங்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டான். அதன் பிறகு முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்துக் கொண்டு ரிஷப்ஷன் பெண்களை அணுகினான் குரு.
“ஹலோ லேடிஸ்!” என ஆரம்பித்தவன், வெளி நாட்டில் இருந்து நேராக இங்கே வருவதாகவும், தனது வருங்கால மனைவி இங்கே அட்மிட் ஆகியிருப்பாதாகவும், அவன் போன நாட்டில் நெட்வோர்க் இல்லாததால் மனைவி அனுப்பிய மேசேஜ்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சரளமாக அள்ளி விட்டு தனக்கு வேண்டிய விவரங்களை சில நிமிடங்களிலே பெற்றுக் கொண்டான். செக்குரிட்டி ரீசனுக்காக அவர்கள் கேட்டபடி தனது அடையாள அட்டையைக் அவர்களிடம் கொடுத்து விட்டு விசிட்டர் பாஸ் வாங்கிக் கொண்டான்.
கிடைத்த விவரங்களைக் கொண்டு லிப்ட் ஏறி ஏழாவது மாடிக்கு சென்றவன், ரூம் நம்பர் 708ஐ கண்டுப்பிடித்தான். சிங்கிள் ரூம் புக் செய்திருந்தாள் மிரு. அறை வாயிலில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், மெல்ல கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் மிரு. மெல்ல அவளை நெருங்கியவன், தூங்கும் அவளையே சற்று நேரம் பார்த்தப்படி நின்றிருந்தான். அவள் நலமாக இருக்கிறாளா என ஆராய்ந்தவன், இன்னும் எதுவும் நடக்கவில்லை என்பதில் நிம்மதியடைந்தான். அதன் பிறகே அறையை சுற்றிப் பார்த்தான் குரு. மருந்து வாடை, மருத்துவ உபகாரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்த அறையை பைவ் ஸ்டார் ஹோட்டல் அறை என்றே சொல்லி விடலாம். கட்டிலின் அருகே இருந்த குட்டி டேபிளில் ஒரு ஃபைல் இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஓசை எழுப்பாமல், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் குரு.
அந்த ஃபைலை புரட்டிப் பார்த்தவனுக்கு மனம் பாரமாகிப் போனது. அதில் மிருவின் சொந்த விவரங்கள், மெடிக்கல் டெஸ்ட்கள் எடுத்த விவரங்கள், அவளின் நெஞ்சப் பகுதியின் போட்டோக்கள், அதன் அளவு, ச்சேஸ்ட் எக்ஸ்ரே, எந்த அளவுக்கு குறைக்கக் போகிறார்கள் என்ற வரைபடம் எல்லாம் இருந்தது. நெஞ்சம் கணக்க அவற்றையை சிறிது நேரம் பார்த்தப்படி இருந்தான் குரு. தனது போனை எடுத்து கூகுலை நாடி ‘ப்ரெஸ்ட் ரிடக்ஷன்’ என டைப் செய்து, கொஞ்ச நேரம் படித்துப் பார்த்தான் குரு. அந்த சர்ஜரி எப்படி செய்வார்கள், அதன் நன்மை தீமைகள் எல்லாவற்றையும் சற்று நேரம் அலசினான்.
பின் பெருமூச்சுடன் எழுந்தவன், தனது காலணியைக் கழட்டி நாற்காலி அருகே வைத்து விட்டு கட்டிலை நெருங்கினான். மெல்ல கட்டிலில் ஏறி பின்னிருந்து மிருவை அணைத்தப்படி படுத்துக் கொண்டான் குரு.
சில நாட்களாக இருந்த மன உளைச்சலால் தூக்கம் தொலைத்திருந்தவள் முடிவு என்ற ஒன்றை எடுத்து விட்ட தைரியத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். குளிரில் இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு, கட்டிலின் மெல்லிய அசைவும், திடீரென உடலை அழுத்திய பாரமும், பின்னால் உரசிய மூச்சுக் காற்றும் தூக்கத்தைக் கலைத்திருந்தது.
பின்னால் திரும்பிப் பார்க்காமலே,
“பாஸ்!” என அழைத்தாள் மிரு.
“ஹ்ம்ம்” என குரல் கொடுத்தவன் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டான் மிருவை.
படுத்தப்படியே மெல்லத் திரும்பியவள், அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள்.
“இங்க என்ன செய்யறீங்க பாஸ்?”
“என்னோட எக்ஸ் வொர்க்கர், எக்ஸ் ட்ரைவர், எக்ஸ் கேர்ள்ப்ரேண்ட் இங்க என்னவோ சர்ஜரிக்கு வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். பார்த்து பூ குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன் அவள் முன்னுச்சியில் வந்து விழுந்த சுருள் முடி கற்றையை காதின் ஓரம் சொருகினான். அவள் அவன் விழிகளையே ஊடுருவிப் பார்த்திருக்க, இவன் அவள் கண்களைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்தான்.
“யார் தடுத்தாலும் நான் இந்த சர்ஜரிய பண்ணிக்கத்தான் போறேன்!” என அறிவித்தாள் மிரு.
“யார் தடுக்கப் போறாங்க? எல்லாம் உன் இஸ்டம்தான் மிரு! பண்ணிக்கோ! கஸ்டப்பட்டு காசு வேற கட்டியிருக்க, வேஸ்ட் பண்ண வேண்டாம்” என அசால்ட்டாக சொன்னவன் இன்னும் அவளருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டான்.
பணம் பற்றி அவன் பேசியதும் திரு திருவென விழித்தவள், சட்டென சமாளித்துக் கொண்டாள். தன்னை நெருங்கி அணைத்திருப்பவனை விலக்காமல் ஆராய்ச்சியாக பார்த்தாள் மிரு. இங்கு வரை அவளைத் தேடி வந்திருக்கிறான் என்றால், கண்டிப்பாக கணேவின் உதவியுடன் தான் இருக்கும் என அறியாத முட்டாளில்லை மிரு.
சர்ஜரி முடிந்து, இரண்டு நாட்களாவது மயக்கம், சோர்வு இருக்கும் என டாக்டர் அறிவித்திருந்தார். அந்த இரு நாட்கள் முடிந்தும் இவள் தன்னிலை அடையாமல் இருந்தால், தன்னைக் கண்டுப்பிடிக்கவே கணேவுக்கு ஃபைண்ட் மை ப்ரேண்ட் ஆப்ளிகேஷன் போட்டுக் கொடுத்திருந்தாள் மிரு. அதோடு இங்கே தான் இருக்கிறாள் என தம்பி தெரிந்து கொள்ளவே தூக்கக் கலக்கத்திலேயே சற்று முன், சிறிது நேரம் போனை ஆன் செய்திருந்தாள். எப்படியும் மூன்று நாட்களில் தான் சொன்னது போல போன் செய்யாவிட்டால் கண்டுப்பிடித்து வருவான் தம்பி என அவள் இருக்க, இன்றே குரு வந்து நின்றது அதிர்ச்சிதான் மிருவுக்கு.
கண்டிப்பாக தான் ஆபரேஷன் செய்வதை குரு ஒத்துக் கொள்ள மாட்டான் என இவள் நினைக்க, அவனோ செய்துக் கொள் என சாதாரணமாக சொன்னது இவளுக்கு நிம்மதியையும் ஆத்திரத்தையும் ஒருங்கே வரவழைத்தது. நிம்மதி, தன் தாராள நெஞ்சத்தைப் பார்த்து தன்னைக் காதலிக்கவில்லை இவன் என்பதால் வந்தது. ஆத்திரம், காதலிப்பவள் மேல் கத்தி வைக்கப் போகிறார்கள் என தெரிந்தும் பதறாமல் சாதாரணமாக அவன் நடந்துக் கொள்வதால் வந்தது.
“அதானே, யார் தடுக்கப் போறாங்க! யாருக்கு அந்த உரிமை இருக்கு!” கோபமா கடுப்பா என அறிய முடியாத குரலில் சொன்னவள், தன் இடுப்பில் கிடந்த குருவின் கையைத் தள்ளிவிட்டாள்.
அவள் தள்ளி விட்டதைக் கண்டுக் கொள்ளாதவன், ஆட்காட்டி விரலால் அவள் கன்னத்தை வருடினான்.
“கையை எடுங்க மிஸ்டர் குரு”
“மிஸ்டர் குரு?”
“ஆமா, மிஸ்டர் குருதான். இப்போ நீங்க என்னோட பாஸ் இல்ல, என் பேசெஞ்சர் இல்ல, என் ப்ரேண்ட் கூட இல்ல. அப்படித்தான் கூப்பிடுவேன்”
“ஹ்ம்ம் சரி! நாளைக்கு எத்தனை மணிக்கு சர்ஜரி மிஸ் மிரு?”
“அது உங்களுக்குத் தேவையில்லாத ஆணி மிஸ்டர் குரு”
“இஸ் இட்! இந்த சர்ஜரிக்காக எனக்குத் தெரியாமலே நான் இன்வெஸ்ட் பண்ணிருக்கேன் மிஸ் மிரு! சோ எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு இத பத்தி தெரிஞ்சிக்க”
“என்னாது? இன்வெஸ்ட் செஞ்சிருக்கீங்களா?”
“ஆமா! இந்த சர்ஜரிக்கு நான் பணம் போட்டுருக்கேன், அதுக்கு ரிடர்னா நீ எனக்கு கிடைக்கப் போற! சோ இது இன்வெஸ்ட்மெண்ட் தானே?”
“இந்தப் பண விஷயம் எ..எப்படி தெரியும்?” கண்டிப்பாக ஆனந்தி வாயைத் திறந்திருக்க மாட்டார் என அறிந்தவள், குருவிடமே கேள்வியைக் கேட்டாள்.
“எல்லாமே எனக்குத் தெரியும் மிஸ் மிரு. கட்டிக்கப் போறவன நீ காசுக்காக வித்தது, பெத்த மகனையே காசு குடுத்து எங்கம்மா வாங்கனது எல்லாம் தெரியும்! செத்து செத்து விளையாடற மாதிரி, வித்து வித்து விளையாட நான் என்ன விற்பனைப் பொருளா? உயிர் உள்ள மனுஷன் மிரு! ஹீயூமன் பீயிங். அதை மை மம்மியும் புரிஞ்சுக்கல, மை மனைவியும் புரிஞ்சுக்கல!” அவன் குரலில் அவ்வளவு வலி.
அவன் சொன்னதைக் கேட்ட மிருவின் கண்கள் கலங்கியது.
ஆனந்தி வந்ததையும், பேசியதையும் எப்படி அறிந்துக் கொண்டான், எப்படி கணேவைப் பிடித்து இங்கு வரை வந்தான் என்பதை மெல்லிய குரலில் பகிர்ந்துக் கொண்டான் குரு.
“சரி இப்போ சொல்லு, நாளைக்கு எத்தனை மணிக்கு சர்ஜரி?”
“காலை பத்து மணிக்கு பாஸ்!”
“ஓ ஓக்கே! குட்!”
“என்ன குட்? இது தப்பில்லையா பாஸ்?” தன்னைத் தடுக்காமல் ஆதரிப்பவனை கொலை வெறியோடு பார்த்தாள் மிரு.
“என்ன தப்பு? இந்த மூக்கு, முழி, லிப்ஸ், காது, கை கால், அப்புறம் உன்னோட ரெண்டு இநோர்மஸ்(பெரிய) ச்செஸ்ட் இதெல்லாம் இயற்கையாகவே உனக்கு அமைஞ்சது மிரு. அப்படி கடவுள் கொடுத்த கண் பார்வை பிரச்சனையானா கண்ணாடி போடறது இல்லையா? அதே மாதிரி காது பிரச்சனையானா மெஷின் வச்சிக்கறது இல்லையா? தட் சேம் கான்சப்ட் இஸ் அப்ளைட் டூ யுவர் ச்சேஸ்ட் டூ. அங்க உனக்கு பிரச்சனைங்கறப்போ, அத குறைச்சிக்கறதுல தப்பில்ல மமிமரு. என்னைப் பொருத்த வரை, வாழப் போறது ஒரு லைப். அதுல எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு நினைச்சு நினைச்சுப் புழுங்கி மனசு நொந்தே சாகறத விட, அத சரி செய்ய முடியும் பட்சத்துல, சரி செஞ்சிக்கறதுல என்ன தப்பு? நீ தாராளமா சரி செஞ்சிக்கோ! யூ ஹேவ் மை ஃபுல் சப்போர்ட்!”
“எனக்கு சப்போர்ட் பண்ணவோ, வேணாம்னு சொல்லவோ நீங்க யாரு? என்னோட பாஸ் கூட இல்ல இப்போ!’
“ஹேய் மிருது! என்ன இப்படி சொல்லற? நானா உன்னைத் தேடி வந்து மிரு, மிருது, மமிமருன்னு கூப்பிட்டா அந்த நிமிஷமே நீ தான் எங்கம்மாவுக்கு மருமகள்னு சொன்ன! நானே உன்னைத் தேடி வந்துட்டேன், மூனு பெயரையும் வச்சுக் கூப்பிட்டுட்டேன். சோ ஆட்டோமட்டிக்கலி ஐம் யுவர் ஹஸ்பென்ட், யூ ஆர் மை வைப். ஒரு கணவனோட கடமை, மனைவி எடுக்கற நல்ல முடிவுக்கு சப்போர்ட் செய்யறது! அதைத்தான் நான் செய்யப் போறேன்!”
“சர்ஜரி செஞ்சா வடு மறையாதாம் பாஸ்”
“வடுவோட இருந்தாலும் என் மிரு என் கண்ணுக்கு அழகாத்தான் இருப்பா! சோ நோ ப்ராப்ளம்!”
“சர்ஜரி செஞ்சா மூனு நாலு மாசம் ஆகுமாம் ரெக்காவர் ஆக! ரொம்ப வலிக்குமாம், அந்த இடத்துல தொடு உணர்ச்சியே கொஞ்ச நாளைக்குத் தெரியாதாம் பாஸ்”
“வலிக்கறப்போலாம் பேய்ன் கில்லர் போட்டுக்கலாம் மிரு. டாக்டர் கண்டிப்பா ப்ரிஸ்க்ரைப் செய்வாங்க! ரெக்காவர் ஆகற வரைக்கும் உன்னைப் பத்திரமா கண்ணாடி பாத்திரம் மாதிரி பார்த்துக்குவேன்! அப்புறம் என்ன சொன்ன? ஹ்ம்ம் தொடு உணர்ச்சி! இப்போ யாரு அங்க தொட போறா? நல்லா குணமாகி, குட் டூ கோன்னு டாக்டர் சொல்லறப்போ கல்யாணம் செஞ்சுக்கலாம். அப்புறம் தொட்டுக்கலாம்.” கண்கள் சிரிக்க முகத்தை மட்டும் சீரியசாக வைத்தப்படி சொன்னான் குரு.
அமைதியாக அவள் பார்த்திருக்க,
“இன்னொரு விஷயத்தை விட்டுட்டீயே மிரு!” என கேட்டான் அவன்.
“என்ன?”
“நமக்கு கல்யாணம் ஆகி பிள்ளைப் பொறக்கறப்போ உன்னால தாய்ப்பால் கொடுக்க முடியாம கூட போகலாம்!”
“ஹ்ம்ம் டாக்டர் சொன்னாங்க” அவள் குரலில் சுரத்தே இல்லை.
“தாய்ப்பால் இல்லைனா போய்ட்டு போது மிரு! அதான் வித விதமா ரகம் ரகம்மா ஃபார்முலா மில்க் வந்துருச்சே! நம்ம ஜீனியர் அதை குடிச்சே வளரட்டும்! நோ பிக் டீல்!”
“உங்களுக்கு எதுவுமே பிக் டீல் இல்ல! நம்ம பிள்ளைய பாசமா அணைச்சுப் பிடிச்சு நெஞ்சோட அழுத்தி பால் குடுக்கனும்! அப்படி அவன் குடிக்கறப்போ, என் விரல் கொண்டு அவன் கன்னத்தை வருடிக் குடுக்கனும்! இந்த மாதிரி எனக்கு எத்தனைக் கனவு இருக்குத் தெரியுமா? உங்களுக்கு எதுவும் பிக் டீல் இல்ல!” என கத்தியவள் உடைந்து அழுதாள்.
இவ்வளவு நாளாக என்ன ஆனாலும் குருவின் முன் தன் கெத்தை விட்டுக் கொடுக்காதவள், வெடித்து அழுதாள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய கதறி அழுதாள் மிரு. தன் நெஞ்சோடு மிருவைக் கட்டிக் கொண்டான் குரு. வாய் வார்த்தையாக எதுவும் சொல்லாமல், முதுகை வருடி, தலையைக் கோதி அமைதியாகவே அவள் அழுது ஓயக் காத்திருந்தான்.
“மிருது, இஸ்டமில்லாம எதுக்கு இந்த சர்ஜரிய செஞ்சிக்கப் போற?”
“உங்கம்மா, நான் இதைக் காட்டித்தான் உங்கள மயக்கிட்டேன்னு சொல்லிட்டாங்க! என்னால தாங்கிக்கவே முடியல!” இன்னும் தேம்பினாள் மிரு.
“உன் தைரியம் எல்லாம் இவ்வளவு தானா மிரு? யார் என்ன சொன்னாலும் கெத்தா போங்கடான்னு நிப்ப! இப்ப மட்டும் என்னாச்சு?”
“வேற யார் சொல்லிருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன் பாஸ்! இத்தனை நாளா இதெல்லாம் கடந்து வந்தவ தானே! ஆனா இப்போ சொன்னது நான் உயிரா லவ் பண்ணற என் குருவோட அம்மா! என்னால இதைக் கடந்து வர முடியல பாஸ்! முடியவே முடியல!” பரிதாபமாக அழுதாள் மிரு. அவள் அழுவதைப் பார்த்து குருவின் கண்களும் கலங்கியது.
“மிரும்மா, அவங்க எனக்கு அம்மா! நான் இல்லைன்னு சொல்லல! ஆனா உன்னை இப்படி பெர்சனலா போடி ஷேமிங் செய்ய அவங்களுக்கு எந்த ரைட்சும் இல்ல. அவங்க பேசனது ரொம்ப தப்பு! என்னோட அம்மாவ இருந்தாலும் தப்புன்னா தப்புத்தான் மிரு! இந்த ஒரு விஷயத்துல நான் அவங்கள என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்!”
“இது இப்படி மத்தவங்க கண்ண உறுத்தற மாதிரி இருக்கவும் தானே, இப்படிலாம் பேசறாங்க! அதான் குறைச்சுக்க முடிவெடுத்தேன். தெரியாம சில பேர் இடிச்சிடறப்போ, தெரிஞ்சே பல பேர் நெரிசலுல இடிச்சிடறப்போலாம் அடிக்கடி என் மனசுல இந்த எண்ணம் வந்து வந்து போகும். ஆனா கடவுள் கொடுத்தத மனுஷன் கெடுக்கக் கூடாதுன்னு மனச அடக்கி வைப்பேன்! உங்கம்மா அந்த வார்த்தைய சொன்னப்போ, அவங்க சொன்னது நிஜமா இருக்குமோன்னு கூட எனக்குத் தோணிருச்சு. இத தவிர என் கிட்ட என்ன இருக்கு நீங்க மயங்கன்னு ரொம்பவே பீல் ஆகிட்டேன் பாஸ்! ரொம்ப கூனி குறுகிப் போயிட்டேன்! மனசுக்குள்ள பல நாளா அடக்கி வச்சிருந்த காம்ப்ளேக்ஸ் வெடிச்சு வெளிய வந்துருச்சு. அதோட விளைவுதான் இந்த சர்ஜரி”
“அதாவது உன்னோட முன்னழக பார்த்துதான் உன்னைக் காதலிக்கறேன்னு தோணிருச்சு?”
அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் மிரு.
“பைத்தியக்காரி! எல்லா ஆம்பளைங்களுக்கும் அத பார்த்துதான் ஆசையோ காதலோ வரும்னு இல்லடி! சிலருக்கு நீளமான கால்கள் உள்ள பெண்ணை பிடிக்கும்! வேறு சிலருக்கு செக்சியான உதடு உள்ள பெண்களைப் பார்த்தா ஆசை வரும். இன்னும் சிலருக்கு பின்னழக பார்த்தா மோகம் பிச்சிக்கும்! இதெல்லாம் அவங்கவங்க ரசனையைப் பொறுத்தது. பெண்களுடைய எந்த உடல் பாகத்துல ஆண்கள் மயங்கி நிக்கிறாங்கன்ற ஆய்வுல என்ன கண்டுப்பிடிச்சிருக்காங்க தெரியுமா மிரு?”
தெரியாது என அவள் தலையாட்ட,
“பெண்களோட கண்களில் தான் பாதி ஆம்பளைங்க தலைக்குப்புற விழுந்துடறாங்கன்னு கண்டுப் பிடிச்சிருக்காங்க” என்றான் குரு.
“என் கிட்ட உங்களுக்கு என்னப் பிடிச்சிருக்கு பாஸ்?”
“எல்லாம் பிடிச்சிருக்கு மிரு! ஆரம்பத்துல உன்னோட வெளி அழகப் பார்த்து எனக்குள்ள ஈர்ப்பு இருந்தது உண்மை மிரு! ஆனா அந்த வகையான ஈர்ப்பை அடக்கத் தெரியாத அளவுக்கு நான் சின்னப் பையன் இல்ல! பழக பழக என்னைக் காந்தம் மாதிரி இழுத்தது உன்னோட அழகான மனசுதான் மிரு. பிலீவ் மீ! உன் கூட இருக்கறப்போ ஐ கெட் பொசிட்டிவ் வைப்ரேஷன்! உன்னோட சிரிப்பு, பட்டுன்னு திருப்பிக் குடுக்கற பேச்சு, குறும்பு, ஐ டோண்ட் கேர் ஆட்டிடியூட், குடும்பத்து மேல நீ வச்சிருக்கற பாசம், பசிச்ச வயித்துக்கு அன்னமிடற காருண்யம் இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சது. பார்த்த உடனே பத்திக்கற உன் அழகை விட, பார்க்க பார்க்க மனச நிறைக்கற உன் குணம்தான் என்னைக் காதலிக்க வச்சது மிரு! ஐ லவ் யூ தே வேய் யூ ஆர் மிருது!”
“அப்போ சர்ஜரி வேணாம்னு சொல்லறீங்களா?”
“வேணுமா வேணாமான்னு நீதான் டிசைட் செய்யனும் மிரு. வேணாம்னு நான் சொன்னா என் அம்மா சொன்னதுதான் நிஜம்னு இன்னிக்கு இல்லைனாலும் என்னைக்காவது நீ நினைக்க வாய்ப்பிருக்கு. சர்ஜரி வேணும்னு சொன்னாலும், என்னை எனக்காக ஏத்துக்காம என் உடல் அமைப்ப மாத்தனதுக்கு அப்புறம்தான் ஏத்துகிட்டாருன்னு நீ வெறுக்கவும் வாய்ப்பிருக்கு! சோ யூ டிசைட்! இடுப்பு வலிக்குது, முதுகு வலிக்குது, ரொம்ப நடந்தா மூச்சு வாங்குது இப்படிலாம் சொல்லறல, அதுக்காக நீ சர்ஜரி செய்யறதுல ஒரு நியாயம் இருக்கு மிரு! அதே இன்னொருத்தங்க வேணும்னே உன் மனச உடைக்கனும்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக இந்த பெயின்புல் ப்ரோசிடர நீ செஞ்சிக்கறது சரியான்னு நீயே யோசி. நீ எந்த முடிவெடுத்தாலும் ஐ வில் பீ வித் யூ!” என சொல்லியவன் நன்றாக சாய்ந்துப் படுத்து, மிருவைத் தன் கைவளைவில் படுக்க வைத்துக் கொண்டான். அப்படியே பல நிமிடங்கள் அமைதியாக கழிய,
“நம்ம பிள்ளைக்கு நானே தாய்ப்பால் குடுக்கறதுன்னு முடிவு எடுத்துட்டேன் பாஸ்” என அமைதியை கலைத்தாள் மிரு. அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் குருவின் முகத்தில் வந்துப் போன குறும்புப் புன்னகையைக் கவனிக்கவில்லை.
“சரி நகரு மிருது! நான் போய் கதவை லாக் பண்ணிட்டு வரேன்”
“எதுக்கு பாஸ்?”
“நீ பால் கொடுக்க பிள்ளை வேணும்ல! அதுக்கு நான் தானே ஏற்பாடு செய்யனும்! அதுக்கு பர்ஸ்ட் ஸ்டேப் கதவ லாக் பண்ணனும். நெக்ஸ்ட் ஸ்டேப் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் லாக் ஆகிக்கனும். அப்ரகடப்ரா!!!!அடுத்த பத்து மாசத்துல பால் குடிக்க ஜீனியர் ரெடி!” என சொல்லி கண்ணால் சிரித்தான் குரு.
“பத்து மாசத்துல பையன் பால் குடிக்கறானோ இல்லையோ, ஆனா அவன் அப்பாவுக்கு இப்போ பால் ஊத்தப் போறா இந்த மிரு!” என சொல்லியவள் குருவின் நெஞ்சிலேயே குத்தினாள். சிரிப்புடன் அவள் கைப்பிடித்து தடுத்தவன், மிருவை தன்னருகே இழுத்து அழுந்த முத்தமிட்டான்.
“மை மிரு இஸ் பேக்! ஐ லவ் திஸ் ரௌடி மிரு!”
(இனி சிக்கிக் கொள்வார்கள்)
(இன்னும் சில விஷயங்கள தெளிவு படுத்தல. அதெல்லாம் நெக்ஸ்ட் எபில வரும் ஜி)