thathi thavuthu maname 2

thathi thavuthu maname 2

அத்தியாயம் – 2
வண்டியில் பலத்த மௌனம் இருவருக்குமிடையில், அவன் ஒன்றை நினைத்து இவளை முறைக்க. இவள் வேறொன்றை நினைத்து, முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“மேடம்க்கு அப்படி என்ன ஈகோ, எங்க வண்டியில் எல்லாம் ஏற மாட்டீங்களோ?” என்று சிடுசிடுத்தான்.
“லூசா டா நீ? யாராவது பார்த்தா, என்ன நினைப்பாங்க?” என்று சிடுசிடுத்தாள்.
“பார்த்தா என்ன இப்போ? ஆமா உன் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை பார்த்து சைட் அடிக்கிறாங்க, உனக்கு பொறாமையா இல்லையா பேபி?” என்று இப்பொழுது அவளை சீண்டினான்.
“நீ எதுக்கு வாரம் வாரம், காலேஜ் வரன்னு இப்போ தானே தெரியுது, பிராட்” என்று பதிலுக்கு அவனை மொத்தினாள்.
“ஏய்! அடிக்காத டி எருமை. நிஜமாவே நான் அப்போ காலேஜ் நிலவரம் தெரிஞ்சிக்க தான் வரேன். அப்படியே ஒவ்வொரு வாரமும், கணக்கு எல்லாம் செக் பண்ணா தான் நல்லது தெரிஞ்சிக்கோ” என்று கூறியவனை முறைத்தாள் மீண்டும்.
“அதை நீ, அந்த நேரம் தான் வந்து பார்க்கனுமா? உனக்கு தான் தெரியும் ல, அப்போ எத்தனை பேர் நீ அந்த நேரம் வருவன்னு தெரிஞ்சு உட்கார்ந்து உன்னை சைட் அடிக்கிறாங்கன்னு”.
“அப்புறம் நீ ஏன் அந்த நேரத்தில் வர, வேற டைமிங் ல வர வேண்டியது தான” என்று சிடுசிடுத்தாள்.
“ஹே அப்போ உனக்கு பொறாமை! மாமனை நீயும் சைட் அடிக்கிறியா பேபி அப்போ” என்று மீண்டும் வம்பு வளர்த்தவனை இரண்டு அடி அடித்தாள்.
“லூசு! நான் என்ன சொல்ல வரேன்னு தெரிஞ்சும், நீ என்னை இப்படி வம்பு வளர்த்துகிட்டு இருக்க. இரு இப்போவே ஆன்ட்டி கிட்ட சொல்லி, உனக்கு அந்த சுஷ்மிதாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறேன்” என்று கூறிக் கொண்டே அவனின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து, செல்போனை எடுத்து அவனின் தாயாருக்கு போன் செய்து விட்டாள்.
அந்த பக்கம் போனை எடுத்த லக்ஷ்மி அம்மா, ஹல்லோ என்று சொல்லி பேச்சை ஆரம்பிக்கும் முன் இவள் படபடவென்று இவனை பற்றி புகார் பட்டியலை வாசித்து விட்டாள்.
அந்த பக்கம் இவள் பேசியதை கேட்டவர், கண்களில் நீர் வர சிரித்துக் கொண்டு இருந்தார்.
“மதி கண்ணா! இன்னும் இப்படி தான் வம்பு சண்டை வளர்த்துகிட்டு இருக்கீங்களா ரெண்டு பேரும். சரி டா அவனை நான் பார்த்துக்கிறேன், நீ போனை அவன் கிட்ட கொடு” என்று அவர் கூறவும், போன் அவன் கைக்கு மாறியது.
வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு, பேச தொடங்கினான் அவன் தாயிடம். அந்த பக்கத்தில் இருந்து அவன் தாய் என்ன கூறினாரோ, எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போல் மண்டையை எல்லா பக்கமும் ஆட்டிக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்த மதியழகிக்கு சிரிப்பு தாங்கவில்லை, ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு சத்தம் வராமல் சிரித்துக் கொண்டு இருந்தாள். அவள் சிரிப்பதை பார்த்து இவன் பேசி முடித்துவிட்டு, பத்திரம் என்று சிரித்துக் கொண்டே சுண்டு விரல் நீட்டி எச்சரித்தான்.
அதன் பிறகு அவள் சிரிப்பை நிறுத்திவிட்டு, அவனுடன் படிப்பு சம்மந்தமாக பேச தொடங்கினாள். அதன் பிறகு அவளின் வீட்டினுள் வண்டியை நிறுத்திய பின், அவள் இவனை உள்ளே வருமாறு அழைத்தாள். அவனும் வந்து நீண்ட நாட்கள் ஆகியதால், அவள் அழைத்த பின் உள்ளே அவளுடன் சென்றான்.
“டேய் ஆதி! எப்படி கண்ணா இருக்க? அப்பா, அம்மா, கீர்த்தி எல்லோரும் நல்லா இருக்காங்களா? தாத்தா, பாட்டி எப்போ வருவாங்க இங்க?” என்று மதியின் அன்னை கோமு அவனை நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார்.
“நான் நல்லா இருக்கேன் அத்தை, நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க?”என்று கேட்டான்.
“கோமு மா! பிள்ளையை முதல சாப்பிட கூட்டிட்டு வா மா. வா ஆதி, சாப்பிட்டு அப்புறம் பேசலாம்” என்று அப்பொழுது மதிய உணவு சாப்பிட வந்த மதியின் தந்தை பரமேஸ்வர், அவனை சாப்பிட அழைத்தார்.
அவனும் பசியில் வேறு அப்பொழுது இருந்ததால், தன் தாய் லக்ஷ்மிக்கு கால் செய்து மதியின் வீட்டில் சாப்பிட்டு வருவதாக கூறி போனை வைத்தான்.
மதியின் தந்தையும், ஆதியும் தங்கள் தொழிலை பற்றி பேசிக் கொண்டே சாப்பிட்டனர். மதி தன் தாயுடன் சேர்ந்து, அவர்களுக்கு பரிமாறிவிட்டு தாயுடன் சேர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
“கோமு! இன்னைக்கு நீ சவி கூட ஹாஸ்பிடல் போனியே, என்ன சொன்னாங்க?” என்று சாப்பிட்டு முடித்தவுடன் நியாபகம் வந்தவாரக கேட்டார் பரமேஸ்வர்.
“எல்லாமே நார்மல்ன்னு சொன்னாங்க டாக்டர், ஸ்கேன் பண்ணி பார்த்ததில் பிள்ளையும் நல்லா இருக்காம். இவளுக்கு இன்னும் கொஞ்சம் சத்து மாத்திரை, சாப்பிட சொல்லி எழுதிக் கொடுத்து இருக்காங்க” என்று கூறினார் கோமு.
“ஒ சரி மா, அடுத்த மாசம் வளைகாப்பு வச்சிடலாம். சம்மந்தி கிட்ட பேசிட்டு, ஒரு நல்ல நாள் குறிச்சிடலாம். அப்புறம் ஆதி, உன் கல்யாணம் எப்போ பா? அதான் நிச்சயம், எல்லாம் ரெண்டு மாசம் முன்னாடியே முடிஞ்சிடுச்சே. இன்னும் ஏன் பா தேதி குறிக்கல?” என்று அவனின் திருமணம் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார்.
“கீர்த்தியும் சரி, சுஷ்மியும் சரி ரெண்டு பேரும் படிச்சு முடிச்ச உடனே தான் கல்யாணம் சொல்லிட்டாங்க மாமா. அதான் இன்னும் இரண்டு மாசத்துல பரீட்சை முடியப்போகுதே, லீவ் நேரம் தானே அப்போ எல்லோருக்கும், ரெண்டு கல்யாணம் அப்போ செய்திடலாம் சொல்லிடாங்க மாமா, அப்பா” என்று கூறினான் ஆதி.
“ஒ! சரி சரி நல்ல விஷயம் தான் பா. நீங்க பேசிகிட்டு இருங்க, நான் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வந்திடுறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.
அங்கே மதியும், ஆதியும் மட்டுமே ஹாலில் இருந்தனர். இருவரும் சிறு வயது நிகழ்வுகளை, நியாபகப்படுத்தி அந்த நாட்களில் செய்த குறும்புகளை கூறிக் கொண்டு சிரித்தனர்.
ஆதியின் தந்தையும், மதியின் தந்தையும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். சிறு வயது முதலே, நல்ல நட்பு அவர்களுக்குள். குடும்பத்தினருடன் அப்பொழுதே சுற்றுலா சென்று, தங்களின் நட்பை இன்னும் பலப்படுத்தி இரு குடும்பமும் வேறு அல்ல என்ற அளவுக்கு இருந்தனர்.
இவர்களின் நட்பை பிடிக்காத ஒரே ஜீவன், ஆதியின் தாத்தா நல்லசிவம் மட்டுமே. அவர் அந்த காலத்தில் இருந்தே, தனக்கு சரியான அந்தஸ்து உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பழகுவார்.
பரமேஸ்வரோ, சாதாரண விவசாயி மகன். தன் மகனோ, ஒரு பெரிய ஜமீன் வீட்டு வாரிசு போல் இருப்பவன். அவனோடு, இவன் பழகுவதா என்ற நினைப்பு இப்பொழுது வரை அவருக்கு உண்டு.
பேரன் ஆதியிடம், அவர் அந்தந்ஸ்து பார்த்து உன் நட்பை உருவாக்கிக் கொள் என்று சொல்ல, அது அவர் பத்தினி பார்வதி காதில் விழுந்து அவரை கொதித்து எழ செய்தது. பார்வதி, அவரை படுத்திய விதத்தில் அதன் பின் தன் வாயை இறுக மூடிக் கொண்டார்.
இதுவரை நட்பு என்ற ரீதியில் தான், அவர்களின் பழக்கம் இருப்பதை அறிந்து அவர் சற்று தேற்றிக் கொண்டார். இருவரின் வீட்டிலும், திருமண பேச்சு எடுத்து இருந்தால், இந்நேரம் நிச்சயம் பிரச்சனை செய்து இருப்பார்.
ஆதியின் செல்லில் அப்பொழுது அழைப்பு வரவும், எடுத்து பேசியவன் அவளிடம் சொல்லிக் கொண்டு உடனே கிளம்பினான். அவனின் வலது கை விஷ்வா தான் அழைத்து இருந்தான். கட்டுமானம் நடைபெறும் இடத்தில், ஒருவன் தன் படையை கூட்டிக் கொண்டு வந்து பிரச்சனை செய்கிறான் என்று.
கோபத்தில் அங்கே கிளம்பி சென்றவன், பிரச்சனை செய்தவனை பார்தததும் கோபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது.
“டேய் கிரி! என்ன டா இது வேஷம்? ஆமா எதுக்கு டா, இப்படி இங்க வந்து நிக்குற?” என்று சிரித்துக் கொண்டே, அவன் அருகில் சென்றான் ஆதி.
“ஏன் டா சொல்ல மாட்ட? ஒரு போன் பண்ணி பேச முடியல உன்னால, போட்டாலும் சும்மா ஹாய் சொல்லிட்டு வச்சிடுற, கேட்டா பிஸியா இருக்கேன் டா அப்புறம் பேசுறேன் சொல்லுற”.
“உன்னை பார்க்க வரலாம் அப்படினா, எவனும் உன்னை பார்க்க விட மாட்டேன்கிறான். வீட்டுக்கு வந்தா, உங்க மம்மி அதுக்கு மேல புலம்புறாங்க! அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு” என்று கடுப்புடன் கூரியவனை பார்த்து சிரித்தான்.
“சரி, சரி வா டா வீட்டுக்கு போகலாம். விஷ்வா! நீ வேலையை பாரு, முடிஞ்ச அளவுக்கு நீயே பிரச்சனை எதுனாலும் சமாளி, அப்படி முடியல அப்படினா மட்டும் கூப்பிடு” என்று அவனிடம் கூறிவிட்டு கிரியை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான்.
வீட்டிற்கு வந்த கிரியை பார்த்து, லக்ஷ்மி அவனிடம் நலம் விசாரித்து விட்டு அவனுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்தார்.
“அப்புறம் உன் கல்யாணம் எப்போ டா?” என்று ஆதியிடம் விசாரித்தான் கிரி.
“ரெண்டு பேரும் படிச்சிகிட்டு இருக்காங்க, படிப்பு முடியவும் ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடத்த பிளான் டா. ஆமா சிஸ்டர் எப்படி இருக்காங்க? நீ எப்படி டா சிஸ்டர் விட்டுட்டு, இங்க தனியா வந்த? ஆச்சரியமா இருக்கு!” என்றான் ஆதி.
“அவ டெலிவரிக்கு இங்க தான் டா, அவங்க அம்மா வீட்டுக்கு வந்து இருக்கா. அதான் நானும் ரெண்டு நாள் ல, இங்க வந்துட்டேன்” என்று கூறியவனை பார்த்து சிரித்தான் ஆதி.
“அதான பார்த்தேன், என்ன டா காத்து இன்னைக்கு இந்த பக்கம் வீசுதேன்னு. நீ நடத்து டா, ஆமா இவ்வளவு தூரம் நீ என்னை பார்க்கனும்ன்னு வந்து இருக்கனா ஏதும் முக்கியமான விஷயமா கிரி?” என்று கேட்டான் ஆதி.
கிரிக்கு என்ன சொல்வெதென்று தெரியவில்லை, ஏனெனில் அவன் பார்த்த கேட்ட விஷயங்கள் எல்லாம் அப்படி. நண்பனின் நலம் கருதி, அவன் அந்த விஷயத்தை சொல்ல எண்ணினாலும், நண்பன் அதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியவில்லை.
இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்த பிறகு விஷயத்தை சொல்லி விடுவது என்று முடிவு செய்து, அவன் அவனிடம் ஒன்று விடாமல் எல்லா விஷயங்களையும் சொல்லி முடித்தான்.
அவன் சொல்லி முடிக்கும் வரை, எதுவும் குறிக்கிடாமல் கேட்டுக் கொண்டவன் அடுத்து அவன் பதிலுக்கு கூறிய ஒரு விஷயத்தில் கிரியை அதிர வைத்தான்.
“என்னது தெரியுமா! டேய் தெரிஞ்சுமா, நீ ஒன்னும் செய்யாம இருக்க? எப்படி டா உன்னால இப்படி இருக்க முடியுது?” என்று நம்ப முடியாமல் கேட்டான் கிரி.
“டேய்! சில விஷயங்கள் நாம அது போற போக்குல, விட்டு பிடிச்சா தான் நாம பாதுகாப்பா இருக்க முடியும். இந்த விஷயத்தை இனி, நீ யார் கிட்டயும் சொல்லாத டா. நான் என்ன சொல்ல வரேன்னு, உனக்கு புரியுதா?” என்று கேட்டான் ஆதி.
பதிலுக்கு புரிகிறது என்பது போல் சொல்லிவிட்டு, மீண்டும் சில விஷயங்களை பேசிவிட்டு சென்றான் கிரி. மேலே அவன் அறைக்கு வந்த ஆதி, கிரி சொல்லிவிட்டு சென்ற விஷயத்தின் தாக்கத்தில், சீரும் புலியாக மாறி இருந்தான்.
முதுகில் குத்தும் துரோகிகளை, எப்பொழுதும் அறவே வெறுப்பான் ஆதி. அப்படிப்பட்ட அவனை முதுகில் குத்த, ஒரு குடும்பமே காத்துகொண்டு இருந்ததை நினைத்து அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
உண்மையை கூற வேண்டும் என்றால், அவர்கள் ஆதியை திட்டம் போட்டு வளைத்து இருந்தார்கள். அதை அவன் போன வாரம் தான், கண்டு கொண்டு இருந்தான். கோபத்தில் அப்பொழுதே, அவர்களை அடித்து விரட்ட நினைத்தவன், நிதானமாக யோசித்தான்.
எப்படி அவர்கள் முதுகில் குத்த நினைத்தார்களோ, அதே போல் தானும் அவர்கள் அறியாமல் வலிக்க வலிக்க குத்த வேண்டும் என்ற வெறி கொண்டான். அதன் படி, அதை செயாலாக்க அவன் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதற்க்கான நேரம் வரும் பொழுது, நிச்சயம் அவன் சீறி பாய போகிறான் என்பதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. அப்படி சீரும் பாயும் பொழுது, இரண்டு பக்கமும் காயம் ஏற்படும் என்பதை இப்பொழுது அறியவில்லை ஆதி.

தொடரும்..

error: Content is protected !!