thenmazhai_uma2

அத்தியாயம் 3

அவன் அவளை கையில் ஏந்திக் கொண்டு அவர்கள் அறைக்கு வந்து, ஒரு காலால் கதவை அடைத்து விட்டு அவளை அந்த அறையில் உள்ள குளியலறையில் இறக்கி விட்டான்.

“இங்க பாரு, பாட்டி வந்த நேரத்தில் இப்படி சீன் கிரியேட் செய்யாத புரியுதா! டிரஸ் மாத்திட்டு வந்து படு சீக்கிரம், நானும் டிரஸ் மாத்தணும்” என்று கூறி குளியலறை கதவை சாற்றிவிட்டு சென்றான்.

“கொழுப்பு எடுத்தவன், நான் சீன் கிரியேட் செய்றேனா இரு டா உனக்கு இப்போ ஆப்பு வைக்கிறேன்” என்று சூளுரைத்து விட்டு உடையை கலைத்து விட்டு, ஒரு குளியல் போட்டுவிட்டு அங்கு இருந்த துண்டை தன் உடம்பில் சுற்றிக் கொண்டு மெதுவாக வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும், இவன் அங்கு அவள் வந்த பின் அவன் தன் இரவு உடையை எடுத்துக் கொண்டு உள்ளே புகுந்தான். இவள் மீண்டும் பல்பா என்பது போல், வாயை பிளந்தபடி நின்றாள்.

“இவன் லவ் failure ல இப்படி ஆகிட்டானா, இல்லை நடிக்கிறானா?” பின்னது தான் என்று முடிவுக்கு வந்தவள், அவனுக்கு பிடித்த அவனின் டி ஷர்ட் எடுத்து மாட்டிக் கொண்டு அங்கே காற்றாடிக்கு அடியில் நின்று தலையை துவட்ட தொடங்கினாள்.

குளித்து விட்டு வெளியே வந்தவன், அவள் அவனுக்கு பிடித்த உடையை அவள் மாட்டி இருப்பதை பார்த்து கோபம் கொண்டான்.

“ஏய்! எதுக்கு என் டிரஸ் எடுத்து போட்டு இருக்க? முதல அதை கழட்டி கொடு” என்று வந்து நின்றான்.

அவளோ அசராமல், முடிந்தால் நீயே கழட்டி எடுத்துக் கொள் எனவும், அவனுக்கு பகீரென்றது. இவள் எப்பொழுதும் போல் அதட்டினால், ஒதுங்கிக் கொள்வாள் என்று இவன் நினைக்க, இன்று அவள் அதற்கு நேர்மாறாக செய்யும் செயல்கள் எல்லாம் அவனை தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது.

ஏற்கனவே உடலோடு ஒட்டி நின்ற உடையில் அவன் தடுமாறி போய் இருந்தான். இருந்தும் அதை அப்போதைக்கு சமாளித்து, அவளை தூக்கிக் கொண்டு வந்து விட்டு, விடுவிடுவென்று சென்றான்.

வந்தவள் மேலும் சீண்டவென, துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்து நின்றாள். தன் தடுமாற்றத்தை மறைக்க, அவளை கண்டு கொள்ளாமல் குளியலறை புகுந்தான்.

உடை மாற்றி இருப்பாள் என்று எண்ணியவன், அவள் தன் டி ஷர்ட் ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு, மேலும் அவனை சோதிக்கவும், அவனுக்கு பகீரென்றது.

“டேய் ஆதி! இவ ஒரு முடிவோடு தான் இருக்கா போல, இவளை இத்தனை நாள் கடுப்பேத்தி விட்டத்துக்கு நல்லா வச்சு செய்றா. எல்லாம் இந்த கிழவியை சொல்லணும், ஒரு ரெண்டு வருஷம் பொறு பேராண்டி உங்க ரெண்டு பேர் ஜாதகத்தில் தோஷம் இருக்கு, அதை நிவர்த்தி பண்ணிட்டு அப்புறம் தான் சேரனும்” என்று அவர் போட்ட குண்டில் தான் இவன் இத்தனை நாள் அமைதி காத்தது.

அதுவும், மதி தான் முன்பே வேறு ஒருத்தியை விரும்பியதாக அவளாக எண்ணிக் கொள்ளவும், அதை அப்படியே இன்று வரை மெயின்டெய்ன் செய்து வந்தான். காரணம், அவள் யேதும் ஏடாகுடம் செய்து விடக் கூடாதே என்று தான்.

இன்று பாட்டி வந்தது கூட, இன்று நல்ல நாளாக இருக்கிறது வீட்டிற்கு அழைத்து செல்ல வந்து இருக்கிறேன் என்று கூறி தான் வந்தது. ஆனால், அவள் வெடித்த வெடிப்பில் இருவரும் ஆடி போய் விட்டனர்.

முதலிலேயே எடுத்து சொல்லி இருந்துக்க வேண்டுமோ, என்று காலம் கடந்த ஞானோதயம் இருவருக்கும். ஆகையால் முதலில் அவளை கீழே அழைத்து வர வேண்டும், நாளை ஊருக்கு சென்று பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்த பின் தான் அவன் உடனே அவளை தேடி மேலே வந்தது.

இப்பொழுது, அவனுக்கு அவளை பார்க்க பார்க்க தன் மீது தான் கோபம் வந்தது. இப்படி இவளையும் வருத்தி, தன்னையும் வருத்திக் கொண்டு உள்ளோம் என்று. ஒரு முடிவுடன் அவளை அவன் நெருங்க நினைக்க, அவளோ அப்பொழுது தான் தூங்கி இருந்தாள்.

அதுவும் போர்வை எதுவும் மூடாமல், தலையணையில் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள் அவனின் டி ஷர்ட் உடையில்.

“அடிப்பாவி! என்னை நல்லா உசுப்பேத்தி விட்டுட்டு இவ நல்லா தூங்கிட்டு இருக்கா. இரு டி, இப்போ என்ன செய்றேன் பாரு” என்று மனதில் கருவிக் கொண்டு அவளை நெருங்கி படுத்துக் கொண்டு, அவளின் முக வடிவை ரசிக்க தொடங்கினான்.

அவனுக்கு போதை ஏற்றுவதே, அந்த உதட்டில் உள்ள மச்சம் தான். அவளின் உதட்டை மெலிதாக தன் விரல் கொண்டு வருடியவன், என்ன நினைத்தானோ வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி வெளியே வந்தவன், அங்கே டைனிங் மேஜையில் ஒரு டப்பாவில் அடைத்து இருந்த தேன் மிட்டாயை எடுத்துக் கொண்டு, அவனறைக்குள் நுழைந்தான்.

கதவை நன்றாக சாற்றி விட்டு, அவனின் மேலாடையை களைத்து விட்டு அவளை நெருங்கியதும், அந்த தேன் மிட்டாயை அவள் வாய் அருகே வைத்தான். அரை தூக்கத்தில் இருந்தவள், தன் வாய் அருகே பூச்சி இருக்கிறதோ என்று எண்ணி கை கொண்டு அதை தட்ட நினைக்க, அவனோ அதை புரிந்து கொண்டு அவள் கையை மறு கையால் பிடித்துக் கொண்டு, தேன் மிட்டாயை அவள் வாயினுள் திணிக்க முற்பட்டான்.

தூக்கம் கலைந்த எரிச்சலில் சிறிது கண்ணை திறந்தவள், அங்கே அவளின் மணாளன் தேன் மிட்டாயை தன் வாயில் திணிக்கும் முயற்சியில் இருப்பதை பார்த்து விழி விரித்தாள்.

அந்த தேன் மிட்டாயில் ஒரு கதையே இருக்கிறது அவர்களுக்குள். சிறு வயதில் தேன் மிட்டாய் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சாப்பிட போகும் பொழுது, அவன் அதை அவளிடம் இருந்து பறித்து சென்று விடுவான்.

அத்தோடு நில்லாமல், அவளை கடுப்பேத்தி பார்ப்பதில் அவ்வளவு சுகம் அவனுக்கு. அவள் அதன் பிறகு, அவன் இல்லாத சமயத்தில் தான் சாப்பிடுவாள்.

இப்பொழுது அதை பார்த்தவள், அவன் தரும் மிட்டாயை சந்தேகமாக பார்த்தாள். அவனோ, அதை புரிந்து கொண்டு அவள் வாயில் திணித்து விட்டான்.

அவன் அப்படி திணித்து விடுவான் என்பதை நம்பாமல் பார்த்து இருந்தவள், அடுத்து அவன் செய்த செயலில் அவளின் கண்கள் சாசர் போல் விரிந்தது.

ஆம், அவன் அவள் இதழில் அவன் இதழ் கொண்டு அந்த தேன் மிட்டாயை சுவைத்துக் கொண்டு இருந்தான். அதில் லயித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு இருந்தவள், பட்டென்று சுதாரித்து அவனை தள்ளி விட்டாள்.

“டேய்! என்ன திடீர்னு இப்போ புதுசா என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிற?” என்று கண்ணை உருட்டிக் கொண்டு அவனிடம் கேள்வி கேட்டாள்.

அவனோ சிரித்துக் கொண்டே, அவளை நெருங்கி படுத்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவளை தன் மேல் இழுத்து போட்டுக் கொண்டு அணைத்தான். இந்த திடீர் தாக்குதலில், அவள் தான் திணறி விட்டாள்.

“தேன் மிட்டாய்! எனக்கு ஒன்னும் லவ் failure எல்லாம் கிடையாது. அந்த பொண்ணு என் கிட்ட லவ் சொல்லுச்சு, நான் முடியாது சொன்னேன். அடுத்த வாரம் ஒரு நாள் என்னன்னு தெரியல, திடீர்னு சிவியர் viral fever வந்து இறந்து போனதா நியூஸ் வந்தது”.
“அப்போ கொஞ்சம் வருத்தமா இருந்தது, ஆனா நம்ம கல்யாண நேரம் நான் அதை நினைச்சு வருத்தமா இல்லை. அப்போ எனக்கு கிடைக்க வேண்டிய promotion தள்ளி போய்கிட்டே இருந்தது, அந்த டென்ஷன் ல இருந்தேன்”.

“அதுவுமில்லாம, நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்ன்னு உங்க பெரியப்பா ஆசை பட்டதால, உடனே நடந்திடுச்சு நம்ம கல்யாணம். ஆனா சடங்கு ரெண்டு வருஷம் கழிச்சு தான் நல்லா இருக்கு, நம்ம ராசிக்கு அப்படினு பாட்டி சொல்லிட்டாங்க”.

“எனக்கு அப்போ அங்க ஊருல இருக்க இஷ்டமில்லை, இங்க மேல exam எழுதி பாஸ் பண்ணிட்டு, பெரிய வேலைக்கு போக ஆசை. அதான் பாட்டி கிட்ட நான் பார்த்துக்கிறேன் சொல்லிட்டு, உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்”.

“உன்னை அப்புறம் பார்க்கும் பொழுது, என்னை கட்டுப்படுத்திக்க கோபமா உன்னை முறைசிட்டு போய்டுவென். ஆனா ராத்திரி தூங்கும் பொழுது, உன்னை பார்க்காம தூங்க முடியாது”.

“உன் ரூம்க்கு வந்து உன்னை அப்போ திருட்டுத்தனமாக ரசிசிட்டு போய்டுவென். ஆனா, இன்னைக்கு நீ இப்படி வெடிச்ச பிறகு என்னால கையை கட்டிகிட்டு சும்மா நிக்க முடியல”.

“நாளைக்கு நம்மள ஊருக்கு கூட்டிட்டு போக தான், அவங்களும் வந்து இருக்காங்க. நாளைக்கு வரை என்னால வெயிட் பண்ண முடியும் தோணல, நீ பண்ணி வச்ச வேலை அப்படி” என்று கூறிக் கொண்டே அவன் கண்கள் கழுத்துக்கு கீழே இறங்குவதை பார்த்து அவன் கண்களை தன் கை கொண்டு மூடினாள்.

“பிராடு! ரெண்டு வருஷம் என்னை வெயிட் பண்ண வச்ச ல. இன்னைக்கு எதுவும் கிடையாது, கீழே போய் படு. நாளைக்கு நைட் தான் எதுனாலும் அதுவும் எனக்கு அப்போ மூடு ஓகேவா இருந்தா மட்டும் தான்” என்று கூறிவிட்டு அவனை கட்டிலில் இருந்து தள்ளி விட எண்ணியவள், அவளின் திட்டத்தை புரிந்து கொண்ட ஆதி, அவளின் இரு கைகளையும் பிடித்து தனக்குள் சிறை வைத்துக் கொண்டு, அவள் திமிர திமிர அவள் இதழில் சுவைத்து கவி எழுதிய கையோடு அவளையும் சுவைக்க தொடங்கினான்.

அவள் அணிந்து இருந்த டி ஷர்ட் அவளிடம் இருந்து விடை பெற்று இருக்க, வெட்கம் கொண்டு போர்வை எடுத்து மூட, போர்வையை தேட அவனோ போர்வை எதற்கு என்று கேட்டு அவனே அவள் மீது போர்வையாக மாறி அவளின் வெட்கத்தை மேலும் ரசித்துக் கொண்டே, காமன் உலகத்திற்குள் அழைத்து சென்றான்.

இரவில் விடிய விடிய, அவளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து கொண்டு இருந்தவன், விடியலில் தான் அவளை விட்டான். அவளோ, அவன் மார்பில் இப்பொழுது சுகமாக துயில் கொண்டு இருந்தாள், நீண்ட நாட்களுக்கு பிறகு.

இரு வாரங்கள் கழித்து, மதியின் தோழி சுகன்யா இவளுக்கு கால் செய்து இருந்தாள்.

“ஹே! என்னடி அந்த பூஞ்சோலை கேரக்டர் காலி பண்ணிட்டு, மதிக்கும் கரிகாலனுக்கும் செட் பண்ணி விட்டுட்ட. பிரியாணி வேற கொஞ்சம் தூக்கலா இருக்கு, என்னடி விஷயம்” என்று கேட்டாள்.

“ம்ம்.. அது கரிகாலன் இல்லை, ஆதித்ய கரிகாலன்” என்று கூறிவிட்டு போனை அணைக்கவும், அந்த தோழிக்கு விஷயம் புரிந்தது.

தோழிக்கு அவள் பிடித்த வாழ்க்கை அமைந்ததில், அவளும் மகிழ்ச்சி அடைந்தாள். இங்கே ஆதியும், மதியும் தேன் மழையில் நாள் ஒரு பொழுதும், வண்ணமுமாக அந்த தேன் மிட்டாய் சுவை போல் வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம். தேன் மழையில் நனைந்த அனைவருக்கும், சித்ரா பவுர்ணமி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
உமா தீபக்..

error: Content is protected !!