TholilSaayaVaa21A

TholilSaayaVaa21A

திருமணத்திற்கான இரண்டுவார விடுப்பு முடிந்து அலுவலகம் வந்த மாயா, புதுமண பெண்ணிற்க்கே உரித்தான நாணமோ தயக்கமோ இன்றி, எப்பொழுதும் போல சகஜமாக வேலையை துவங்க, பத்மாவும் வினோத்தும் அவளை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மெல்ல அவளை நெருங்கிய பத்மா, “ஹேய் என்னடி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற? எல்லாம் எப்படி நடக்குது?” கண்ணடித்தபடி ஆர்வமாக மாயாவின் முகத்தை பார்க்க,

“என்ன நடக்கணும்?” கம்பியூட்டர் ஸ்க்ரீனிலிருந்து கண்களை விலக்காமல் மாயா கேட்க, மூக்கை சுருகியவள்,

“அதான்…ஜலபுலஜங்ஸ்…”

“என்ன?” இப்பொழுதும் அவள் பார்வை கணினித்திரையை விட்டு விலகவில்லை,

“அதான்…” அவள் காதில் ரகசியமாக கேட்டவள், மாயாவையே ஆர்வமாக பார்த்திருக்க,

“ஓ! அதுவா? அதெல்லாம் நடக்கல, எப்போ நடக்கணுமோ நடக்கும்” தோளை குலுக்க,

“என்னடி சொல்றே?” சற்று உறக்கவே கேட்டுவிட்ட பத்மா, வினோத் இருப்பதால் அமைதியாக,

“எதுக்கு இந்த ரியேக்ஷன்?” வினோத் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்த பத்மா குனிந்துகொள்ள, “நீயாவது சொல்லேன் மாயா, என்ன ரகசியம்?” அவன் விடுவதாக இல்லை.

வேலையில் மும்முரமாக இருந்த மாயா, “ஃபர்ஸ்ட் நைட்ல என்னாச்சுன்னு கேட்டா, ஒன்னும் ஆகலைன்னு சொன்னேன்! அதுக்குதான் இந்த ரியேக்ஷன்” இதெல்லாம் ஒரு விஷயமா என்பதைப்போல் சொல்ல,

கண்களை சாசர்போல் விரித்த பத்மா, “லூசு இதெல்லாம் இப்படியா கத்தி சொல்லுவ? நல்லவேளை வெங்கட் இல்ல! இதெல்லாம் பாய்ஸ் காதுல விழுந்தா என்ன நினைப்பாங்க?” படபடக்க,

“ஹலோ!” அவளை முறைத்த வினோத், “அப்போ நான் யாரு?”

“குரங்கையெல்லாம் நான் கன்சிடர் பண்றதே இல்ல” தோளை குலுக்கினாள் பத்மா.

“அதை ஒரு குரங்கே சொல்லுறது தான் அதிசயம்!” கண்களை உருட்டியவன், மாயாவிடம்,

“கல்யாணம் ஆச்சு அப்படியே சைலெண்டா இருந்தா எப்படி?”

“என்னடா பண்ணனும்?”

“எங்கள லஞ்சுக்கு கூப்பிடமாட்டியா?” வினோத் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது அறைக்குள் நுழைந்த வெங்கட்,

“என்ன லன்ச்?” கேட்டபடி அமர, விஷயத்தை சொன்ன மாயா,

“எல்லாரும் இந்த வீக்கெண்ட் வீட்டுக்கு சாப்பிட வந்துருங்க. யாருக்கு என்ன வேணும்?” அவள் கேட்டதுதான் தாமதம், ஆளுக்கொரு மெனுவை சொல்ல, அதிர்ந்தவள்,

“ஹலோ! ஹலோ! ஒரு ஃபார்மாலிட்டிக்கு கேட்ட்டா… நீங்க என்ன ஹோட்டல் மெனுவைவிட பெரிசா சொல்லறீங்க?” விழிகள் விரிய.

வினோத், “அதெல்லாம் தெரியாது கூப்பிட்டல்ல? நீயே உன்கையால சமைச்சு போடணும்!”

“யெஸ்!” பத்மாவும் வெங்கட்டும் சேர்ந்துகொள்ள, வேறுவழியின்றி சம்மதித்தவள் வீட்டிற்கு திரும்பியது முதல் அதே யோசனையில் இருந்தாள்.

இரவு வீடு திரும்பிய பைரவ், மாயாவை தேட, ஏதோ கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்த வாணி, “அவ பிசியா தோட்டத்துல என்னமோ விழுந்து விழுந்து எழுதிக்கிட்டு இருக்கா! வந்த உடனே நோட்டும் கையுமா உட்காந்தவ தான்” புன்னகையுடன் சொல்ல,

“என்னவாம்?”

“யாருக்கு தெரியும்? நீயாச்சு அவளாச்சு” எழுந்தவர், ரெண்டுபேருக்கும் டின்னர் டேபிள்ள இருக்கு, நான் சீக்கிரமா தூங்கபோறேன், கொஞ்சம் டையர்டா இருக்கு” என்றபடி தன் அறைக்கு சென்றுவிட்டார்.

மாயாவை தேடி தோட்டத்திற்கு சென்றவன், ஊஞ்சலில் அமர்ந்திருத்தவள் பின்னே ஓசை எழுப்பாமல் நின்றபடி தீவிரமாக எதையோ பார்த்து பார்த்து எழுதிக்கொண்டிருப்பதை கவனிக்க, அவளோ மும்முரமாக யுடியூபை பார்த்து சமையல் குறைப்பை எழுதி கொண்டிருந்தாள்.

அவள் காதிலிருந்த இயர்ஃபோனை பிடிங்கியவன், “உனக்கெதுக்கு இந்த வேலை?” என்றபடி அவளருகே அமர்ந்தான்.

நண்பர்கள் வாரயிறுதியில் மாயா கைப்பட சமைத்த விருந்தை சாப்பிட வருவதை சொன்னவள்,
“இப்போதான் பத்மா சொன்ன மெனுவை நோட் பண்ணிக்கிட்டேன், இன்னும் வினோத், வெங்கட் கேட்ட மெனுவை தேடணும்” பேனாவை கடித்தபடி சொன்னவளை பார்த்து சிரித்தவன்,

“இதுக்கு முன்னாடி இம்பார்ட்டண்டா ஒன்னு செய்யணும்!”

“என்னதுடா?” அவனை ஆர்வமாக பார்க்க,

“ஆம்புலன்சுக்கு சொல்லிடனும்! நீ சமைச்சு அவங்க சாப்பிட்டா எபப்டியும் ஹாஸ்பிடலுக்கு தான் அவங்க போகணும். முன்னாடியே புக் பண்ணிவைச்சா வசதியா இருக்கும் என்ன நான் சொல்றது?” அவளை பக்கவாட்டில் அனைத்தவன் அவள் காதோரம் இருந்த முடியுடன் விளையாடியபடி சொல்ல,

“போடா போ! நான் சமைச்சு அசத்துறேனா இல்லையான்னு பார்!” சவால் விட்டவள், அப்பொழுதான் அவன் நெருக்கத்தை உணர்ந்து. வெடுக்கென்று எழுந்தாள்.

“வா உள்ளேபோகலாம் வாணிமா வெயிட் பண்ணுவாங்க” நிற்காமல் ஓடிவிட,

‘இதே வேலையா போச்சு! நான் கிட்டவந்தாலே ஓடறல? வச்சுக்கறேன்’ புன்னகையுடன் கறுவியவன், இரவு உணவிற்கு பிறகு எதுவும் பேசாது அறைக்கு சென்றுவிட்டான்.

சமையலறையை சுத்தம் செய்துவிட்டு, மீதி சமையல் குறிப்புகளையும் பார்த்துவிட்டு அவள் தங்கள் அறைக்கு சென்றபொழுது பைரவ் உறங்கிவிட்டிருந்தான்.

‘அப்பாடி தூங்கிட்டான், இல்லனா கட்டிப்பிடி கிஸ்கொடுன்னு…’
முதலில் எதையும் உணராதவள், ஏனோ திருமணமான மறுநாள் முதலே அவள் தன்னை நெருங்கிய ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்லி விலகுவதையே வேலையாக கொண்டிருந்தாள்.

முதலில் அவள் தந்திரத்தை உணராதவன் எதார்த்தமாக எடுத்துக்கொள்ள, அவளோ விடாது இதையே செய்ய அவள் சூட்ஷமத்தை உணர்ந்து கொண்டான்.

அதன் காரணமாகவே இன்று மாயா அறைக்கு வந்த நொடியே உறங்குவதைப்போல நடித்தவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டது.

உறங்கும் நேரம் மட்டுமே அவனை அணைத்தபடி உறங்குவதை வழக்கமாக கொண்டவள். பலமுறை அழைத்தும் கண்திறக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப்போல் பாசாங்கு செய்ய, முணுமுணுத்தபடி கண்களை மூடிகொண்டவள் உறக்கம் வராமல், அவன் முதுகை சொரிந்தபடி,

“பைரவ்… பாஸ்… என்பக்கம் திரும்பிக்கோ ப்ளீஸ்… தூக்கமே வரலை… டேய்…” விடாது கெஞ்ச,

‘கிஸ் கூட குடுக்க கூடாது, இறுக்கமா கட்டிக்க கூடாது, ஆனா ராத்திரி கட்டிக்கிட்டு மட்டும் தூங்கணுமாம். நான் என்ன உன் டெட்டி பியரா?’ பைரவ் கண்களை திறவாமல் பாசாங்கு செய்ய,

அவனை அழைத்து சோர்ந்தவள் , அவன் முதுகை அணைத்தபடி அவன் முதுகில் கண்மூட, தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன் ,

‘நீயா வரவரை உனக்கு இந்த ட்ரீட்மெண்ட் தான்’ திரும்பி அவளை அணலத்துக்கொள்ளும் எண்ணம் அவனை இம்சித்தாலும், வெகு சிரமப்பட்டு உறங்கினான்.

காலை கண்விழித்ததும் அவள் நெற்றியில் முத்தம் தந்து “குட் மார்னிங்” சொல்பவன் எதுவும் சொல்லாமல் குளிக்க சென்றுவிட, அவன் ஒட்டுதலின்மை புரியாமல், அவன் நெருக்கத்திற்கு முதல்முறை ஏங்க துவங்கினாள்.

அன்று முழுவதுமே அவன் அவளை கண்டு கொள்ளவில்லை. இரவு சீக்கிரமாக உறங்க சென்றவள், “மேல கையை போட்டுக்கோடா” அவனை கெஞ்ச, “கைவலிக்குது” என்றவன் மறுபடி முதுகைக்காட்டி படுத்துகொண்டான்.

“நான் கேட்கும் போதுதான்…”அவன் காதில் விழாதவாறு முணுமுணுத்தபடி அவன் முதுகை முறைத்திருந்தவளின் பார்வையை, அவனை துளைப்பதை திரும்பாமலே உணர்ந்தவன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு அமைதியாக உறங்கிப்போனான்.

காலை கண்விழித்தவள் அவன் விழிக்கும் முன்பே எழுந்து குளித்து தயாராகி கீழ்தளத்திற்கு செல்ல, காலை சிற்றுண்டியை செய்துகொண்டிருந்த வாணியிடம்,

“வாணிமா ஜம்முன்னு ஒருகப் காபி, குடிச்சா அவன் அப்படியே சொக்கி போகணும்!” பொங்கலுக்காக வறுத்து வைத்திருந்த முந்திரியில் இரண்டை வாயில் போட்டுக்கொண்டவள், “சீக்கிரம் வாணிமா” கால் தரையில் நிற்காமல் அவசரப்படுத்த,

“அதுக்கு வசியமருந்துதான் கொடுக்கணும்! காபிக்கெல்லாம் நீ நினைக்கிற பலன் இருக்காதுடா” வாணிமா நக்கலடித்தபடி, பாலை சுடவைக்க,

மறுப்பாக தலையசைத்தவள் , “நானே காபி போடறேன் நீங்க நகருங்க” டம்பளரை எடுக்க பதறிய வாணி,

“வேணாம்டா! நீ போடுற காபியை குடிச்சா அவன் உன்னை சுத்துவானான்னு தெரியாது, கண்டிப்பா டாய்லெட்டையே சுத்திசுத்தி வருவான்!” அவளிடமிருந்து டம்ப்ளாரை வாங்கி காப்பி கலக்கினார்.

“உங்களுக்கு கொஞ்சமான பொறுப்பிருக்கா வாணிமா?”

அவளை விழிகள் விரிய பார்த்தவர், “என்ன வேணும் இப்போ?” காபி தூளை பாலுடன் கலந்தபடி கேட்க,

“பின்ன என்ன? காலாகாலத்துக்கு ஒரு பேரனோ பேத்தியோ கையில வாங்கினோமா கொஞ்சினோமான்னு இருக்க வேண்டாமா? உங்களுக்கு பாட்டியாகுற பிளானே இல்லையா?” இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைக்க.

“பாட்டியா? இப்போதான் மாமியாரே ஆகி இருக்கேன்! எனக்கு எந்த அவசரமும் இல்லமா” அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி காபியை ஆற்றியவர்,

“இந்தா கொண்டுபோய் கொடு!” அவள் கையில் டம்பளரை கொடுத்தார்.

“காபியை விட காதல் முக்கியம் பொண்ணே அப்போதான் நீ நினைக்கறது நடக்கும்” புன்னகைத்தபடி சமையல் வேலையே தொடர, “நானா மாட்டேங்குறேன்?” முனகியபடி பைரவை எழுப்ப சென்றாள்.

அவள் அறைக்குள் நுழைந்த நேரம் பைரவ் பால்கனியில் நின்றிருக்க,
“குட் மார்னிங் பாஸ்!” புன்னகையுடன் அவனை நெருங்கியவள், “சூப்பர் காபி” அவன் முன்னே ஆவிபரக்கும் டம்பளரை நீட்ட, ஒரு நொடி புன்னகைத்தவன், முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு,

“ஆஹா எனக்கு வேண்டாம் டா! என்னமோ இப்போ மூட் இல்ல, எனக்கு டி குடிக்கணும் போல இருக்கு” தோளை குலுக்க,

‘அட பாவிப்பயலே! தினமும் காபி குடிக்கிறவனுக்கு இன்னிக்கி என்ன மசக்கையோ!’
முகத்தில் கடுப்பை காட்டாமல், “இதோ ஃபை மினிட்ஸ்!” வேகமாக சமயலறைக்கு ஓட, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

உணவை மேஜை மீது வைத்து கொண்டிருந்த வாணியை நோக்கி வேகமாக சென்ற மாயா
“அர்ஜெண்டா ஒரு டி!” காபியை மேஜைமீது வைத்து, “அவனுக்கு காபி வேண்டாமாம் டி வேணுமாம்” மூச்சுவாங்க சொல்ல,

“நான் என்ன டி கடையா வச்சுருக்கேன்? நீயே என்னவேணுமோ அவனுக்கு கலந்துகொடு. உங்க கூட இதே ரோதனயா போச்சு ! எனக்கு அவசரமா பேங்க் போகணும், நீங்க ரெண்டு பேரும் சாப்டுட்டு கிளம்புங்க” என்றவர்
தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட தொடங்க,

தலையை தொங்கபோட்டுக்கொண்டு உர்ரென்று சமயற்கட்டிருக்குள் சென்ற மருமகளை பார்த்து வாணி சிரித்துக்கொண்டதை மாயா கவனிக்கவில்லை.

சிலபல நிமிடங்களுக்கு பிறகு ஒருவழியாக டி என்ற பெயரில் ப்ரவுன் கலர் சுடுதண்ணியை பைரவிடம் கொடுக்க, முழுவதுமாக ஆபீஸ் செல்ல தயாராகி அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தவன்,

“ஏண்டா நான் எப்போ கேட்டேன் நீ எப்போ கொண்டுவர? இப்போ டி குடிச்சா எப்படி சாப்பிடுவேன்? வேணாம்!” என்றவன் வேகமாக படியிறங்கி சென்றான்.

“அடேய் ! நில்லுடா ! மெனெக்கெட்டு நானே டி போட்டு கொண்டு வந்தேன். மரியாதையா குடிச்சுட்டு அடுத்த வேலைய பாரு” கோவமாக அவனை பின் தொடர்ந்தாள்.

அவள் கோவத்தையோ முனகல்களையோ காதில் போட்டுக்கொள்ளாதவன் சாப்பிட்டுவிட்டு அலுவகம் புறப்பட, அவனுடன் சேர்ந்து அலுவலகம் செல்ல மறுத்தவள் கோவமாக ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

வீட்டில் துவங்கிய கோபம் அலுவலகம் வரை நீண்டது,

அவளை கண்டு புன்னகையுடன் வரவேற்ற வினோத்திற்கு பதிலாக முறைப்புமட்டுமே வர, புருவத்தை உயர்த்தி பத்மாவை பார்க்க, அவள் மெள்ளமாக,

“ஹாய்டா குட்மார்னிங்!

அவளுக்கும் முறைப்பே பதிலாக தந்தவள், கோவமாக லேப்டாப்பை திறந்து , மெளனமாக அதையே வெறித்திருந்தாள்.

‘கொழுப்பு! உடம்பெல்லாம் கொழுப்பு!’ பைரவை மனதில் நினைத்து திட்ட துவங்கியவள், கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்துகொண்டாள்.

நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, தொண்டையை செறுமிய வெங்கட், “பெர்சனல் விஷயம் எதுவா இருந்தாலும் வீட்டோட விட்டுட்டு ஆஃபீஸ்ல வேலையைமட்டும் கவனிச்சா நல்லா இருக்கும்” என்றபடியே வினோத்திற்கு வாட்சப்பில்.

‘அவளை கூட்டிகிட்டு ஒரு காபி குடிச்சுட்டு அப்படியே கொஞ்சம் வேப்பிலையும் அடிச்சு கூட்டிகிட்டுவா’ என்று மெசேஜ் அனுப்பிவைத்தான்.

சிலமுறை விடாமல் அழைத்த பிறகே வினோத்துடன் பேன்ட்ரி அறைக்கு சென்றாள் மாயா.

அவளுக்கு சாக்கலேட் மில்க் கலக்கியவன், கோப்பையை அவளிடம் தந்து, “காலங்கார்த்தால என்ன முருங்கைமரத்து மேல ஏறியிருக்க?” தன் காபியை சுவைத்தபடி கேட்க,

“உனக்கென்ன இப்போ? அதான் உன்கூட வந்துட்டேன்ல?” கடுகடுத்தாள்.

“வீட்ல சார் ஏதான கடுப்படிச்சுட்டாரா? அந்த மிச்சம்மீதியெல்லாம் இங்கேவந்து கொட்டரியா? மொதல்லஇப்படி உர்ருன்னு இருக்காத!”

“அதான் சாதிச்சாச்சே இன்னும் என்ன வேணும்?” வேதாவின் குரலில் திரும்பியவள்,

“என்ன?” புருவம் சுருக்க,

“எங்களுக்குள்ள ஒன்னுமில்லன்னு சொல்லி சொல்லி வளைச்சு போட்டுட்டே! இன்னும் என்ன நடக்கலைனு இங்க மூஞ்சிய தொங்க போட்டுக்கிட்டு…?” வேதா முடிக்குமுன்னே, அவளை கோவமாக நெருங்கியவள்,

“கேணைத்தனமா ஏதாவது உளறணும்னா என் காதுக்கெட்டாத தூரத்துல எங்கயான போயி பெனாத்து !” நேரடியாக அவளை பொறித்துத்தள்ளிய மாயா,

“எப்போ பாத்தாலும் என்னையே வம்புக்கு இழுத்துகிட்டு. இதான் லாஸ்ட் வார்னிங் இனிமே என்கிட்டே பேசின மூஞ்சிய ஒடைச்சுடுவேன் சொல்லிட்டேன்.”

அவளை முறைத்தபடி அறையை விட்டு வெளியேறியவள், தனக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“கம்பெனில எல்லாம் லூசுங்களா இருக்கு சீஇஓ யிலிருந்து இந்த பைத்தியம் வரை!” கடுகடுத்தபடி தன் கேபினுக்கு சென்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!