thuruvam 4

thuruvam 4

துருவம் 4

            அன்று faiq நண்பன் ரசாக்கை காண, அவனது ட்ராவல் ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்தான். ரசாக் அப்பொழுது சற்று வேலையாக இருந்ததால், இவனை சற்று நேரம் காத்து இருக்குமாறு கூறினான்.

                Faiq சற்று நேரம் அங்கே அமர்ந்து, அங்கு நடப்பவற்றை கவனிக்க தொடங்கினான். அப்படி அவன் கவனிக்கும் பொழுது, ரசாக் சற்று டென்ஷனாக இருப்பது போல் தெரிந்தது.

              நம்மால் ஏதும் உதவி செய்ய முடியுமா? என்று பார்க்க அவன் அங்கே சென்று ரசாக்கிடம் விசாரித்தான்.

               “ஒன்னும் இல்லை டா, ஒரு இந்தியன் பேமிலி தமிழ்நாடு இருந்து வராங்க. கொஞ்சம் நிறைய பேர், நம்ம கிட்ட இருக்கிற தமிழ் ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் வேற வேலை கொடுத்து இருக்கேன்”.

               “சரி ஆங்கிலம் பேச கூடியவங்க யாரையாவது போடலாம் பார்த்தா, இப்போ அவங்களும் பிஸி. பீக் சீசன் வேற, இப்போ என்ன செய்றதுன்னு தெரியல?” என்று வருந்தியவனை தேற்றினான் faiq.

                 “இதுக்கு போயா நீ வருத்தப்படுற! டோன்ட் ஒர்ரி! நானே உன் கூட இங்க ஒரு ஒரு மாசம் இருக்க தான் வந்தேன். வண்டி இருக்கா உன் கிட்ட, இல்லைனா இப்போதைக்கு என்னோட பெரிய கேரவன் சும்மா தான் இருக்கு, எடுத்துக்கலாம்என்றவனை ஆச்சர்யமாக பார்த்தான்.

              “என்ன டா இது? இப்படி சொல்லுற நீ! நல்லா தான இருக்க!” என்று அவனின் மீது அக்கறை கொண்டவனாக கேட்டான் ரசாக்.

          “ டேய்! நல்லா தான் டா இருக்கேன். அடுத்த மாசம் இருந்து நான் பிஸி. அரசு அருங்காட்சியகம், என் கைக்கு வந்த பின்னாடி ஐயாவை அடுத்து பிடிக்கவே முடியாதுஎன்று கெத்து காட்டியவனை பார்த்து முறைத்தான்.

          “ஏண்டா! அன்னைக்கு உன்னை பிரின்ஸா அறிவிப்பு கொடுக்கணும் சொல்லி, அவங்க எல்லாம் வந்தப்போ, நீ ஏன் டா மறுத்த?” என்று கோபத்துடன் கேட்டான் இப்பொழுது.

           “அந்த பட்டம் தானா வரணும், சும்மா இப்படி வரது எனக்கு இஷ்டமில்லை ரசாக். என் அம்மாவும், அதுக்கு ஒரு காரணம்”.

           “என் அப்பா இஷ்டப்பட்டு கொடுத்தா மட்டும் தான், நான் வஙகிக்கணும் அப்படினு. அது எதுவா இருந்தாலும், இப்போ வரைக்கும் நான் அதை தான் follow செய்றேன்என்று கூறியவனை வியப்பாக பார்த்தான்.

           அதற்குள், faiq அவனிடம் தொழில் விஷயமாக பேச ஆரம்பிக்கவும், இருவரும் அதற்குள் நுழைந்து கொண்டனர். அதன் பின், ரசாக்கின் பெரிய வேன் ஒன்றில் இவர்கள் இருவரும் guide ஆக செல்லலாம் என்று முடிவானது.

          நிறைய ஆட்கள் என்பதால், இரண்டு குழுவாக பிரித்து வைத்து ஊர் சுற்றி காட்டினால் இன்னும் நல்லது என்று முடிவு செய்து கொண்டு, அதற்க்கான திட்டம் தீட்டினர்.

           அப்படித்தான் முதலில் ஏர்போர்ட்டில், இவர்களை அழைக்க வந்தான் faiq.

               காலை ஆறு மணிக்கு, முழிப்பு தட்டியது காவ்யஹரிணிக்கு. ஹோட்டல் பார்க் ரெஜிஸ்சில் தான், அவர்கள் மொத்த குடும்பமும் தங்கி இருந்தார்கள்.

           இரண்டு பெட்ரூம் கொண்ட ஒரு அறையை தான், இவர்கள் எடுத்து இருந்தனர். ஒரு அறையில் தாயும், தந்தையும் இருக்க, மற்றொரு அறையில் இவளும் அவள் தம்பியும் இருந்தனர்.

           அந்த அறையின் திரைசீலை மெதுவாக விலக்கிவிட்டு, கீழே பார்த்தாள். நடுவில் சிறிய குகையில் இருந்து, மெட்ரோ ட்ரெயின் செல்ல, இரண்டு பக்க சாலையில் வண்டிகள் சீராக சென்று கொண்டு இருந்தது.

             எதிரே இருந்த கட்டிடத்தின் பின்னே, சூரியன் நான் வந்துவிட்டேன் என்று அறிவிப்பது போல மேலே எழுந்து கொண்டு இருந்தார்.

            இவர்கள் இருப்பதே இருபதாவது மாடியில், முப்பது மாடிகள் இவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில். எதிரே இருந்த கட்டிடமோ, அம்பது மாடி கட்டிடம் போலும் பெரிதாக தெரிந்தது.

               அந்த கட்டிடத்தில் சில பல வேலைகள் இருப்பதால், அங்கே crane வண்டிகளை நிறுத்தி இருந்தனர். எல்லாவற்றையும் மெய் மறந்து பார்த்துக்கொண்டு இருந்தவள், நேற்று இரவு இங்கு வந்து சேர்ந்த விதத்தை நினைவு கூர்ந்தாள்.

            வேனில் ஏறி, இறுதியாக இருந்த சீட்டில் அக்காவும் தம்பியும் அமர்ந்து இருந்தனர். Faiqயை, நன்றாக சைட் அடித்துக் கொண்டு இருந்த பொழுது, அவளின் மனசாட்சி அங்கே அவள் பக்கத்தில் சரியாக ஆஜாராகி இருந்தது.

             “ஆத்தி! ஏன் டி மதுரை வீரன் வேணும்ன்னு கேட்டுபுட்டு, இப்படி இந்த ஷெய்க்கை என்னமா சைட் அடிக்கிற! அப்போ மதுரை வீரன் வேண்டாமா உனக்கு?” என்று அது இடித்துரைக்கவும், இவள் முறைத்தாள்.

            “லூசாப்பா நீ! சைட் அடிச்சா அதோட நாங்க நிறுத்திக்குவோம், கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டோம். அதுவும் இவங்களை எல்லாம் கல்யாணம் பண்ண, ஒரு தைரியம் வேணும் தெரியுமா?” என்று அவள் கூறவும் முறைப்பது இப்பொழுது மனசாட்சியுடையதாகியது.

           “தைரியம் வேணுமா! எதுக்கு?” என்று கேட்டது.

           “பின்ன மூஞ்சி தெரியாம இருக்கணும், எந்நேரமும் அந்த புர்கா போட்டு சுத்தனும். இவங்க என்ன சாப்பிடுவாங்களோ தெரியாது, எனக்கு வகை தொகையா மீன், கோழி, ஆட்டு கறின்னு சாப்பிடணும்”.

             “ஆட்டுக்கறி கேட்டா, ஒட்டக கறி கொண்டு வந்து கொடுத்தா என்ன பண்ணுறது? இதை எல்லாம் விட, நம்மளை selfie எடுக்க விடுவார்களா!”.

               “அப்படியே எடுக்க விட்டாலும், அந்த புர்கா போட்டுட்டு எடுத்தா என் மூஞ்சி எப்படி தெரியும்? அதனால இவனை எல்லாம் சைட் அடிக்கிறதோட, நிறுத்திக்கணும்என்றவளை மனசாட்சி கேலி பார்வை பார்த்தது.

              “நீ விடுற ஜொள்ளு துபாயில், வெள்ளம் வராம இருந்தா சரி தான். நிஜமாவே, இவனை சைட் மட்டும் தான் அடிக்கிறியா?” என்று அது கேட்ட கேள்விக்கு முறைப்பை பரிசாக கொடுக்கவும், அது அடங்கி அவளுக்குள்ளே மீண்டும் சென்று பதுங்கியது.

            அதற்குள் இவர்களின் ஓட்டல் வரவும், எல்லோரும் அவரரவர் பெட்டிகளை எடுக்க தொடங்கினர். அதன் பிறகு அவள், அவன் ஒருவன் இருப்பதை மறந்து போகும் அளவிற்கு அவளின் உடமைகளையும், பெற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்களின் உடமைகளையும் எடுத்து வைப்பதில் மும்முரமானாள்.

            எல்லாவற்றையும், அங்கே இருந்த ட்ராளியில், அவரவர் குடும்பம் சகிதம் பெட்டிகளை அடுக்கி வைப்பதில் கவனம் சென்றது. எல்லாம் முடித்துக் கொண்டு ஹோட்டல் reception சென்றால், அங்கே சில ரூம் குளறுபடிகள் நடந்து இருந்தது.

          அதை அப்பொழுது அவள் தான், தன் குடும்பத்தினர் சார்பாக அவர்களிடம் பேசி அறையை ஏற்பாடு செய்தாள். தெள்ள தெளிவாக அவள் பேசிய ஆங்கிலம், அப்பொழுது கேட்க நேர்ந்த faiqக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

          அவள் முதலில் அவனை பார்த்த பார்வைக்கும், அதன் பிறகு குடும்பத்தினருடன் அவள் தாய் மொழியில் சல்லாபித்த விதத்தையும் பார்த்து, ஏதோ பட்டிக்காடு என்றே எண்ணி இருந்தான்.

         அவனை பொறுத்தவரை பட்டிக்காடிற்கு அர்த்தம், ஏதோ பார்க்காததை புதுசாக பார்கிறவர்களும், சில பெண்கள் ஆண்களை வெறித்து பார்கிறவர்களும் தான் பட்டிக்காடு.  

                இப்பொழுது காவ்யஹரிணி பேசிய ஆங்கிலம், அவனை அவளை ஆராய்ச்சி செய்ய வைத்தது. ஆரஞ்சு வண்ண சுடி அணிந்து, அந்த வர்ணத்திற்கு ஏற்ப பொட்டிட்டு, தலை முடியை வாரி கொண்டையிட்டு, அதில் சிறு கிளிப் வைத்து மிக எளிமையான தோற்றத்துடன் இருந்தாள்.

             அவள் அதரங்கள் பேசும் பொழுது, அவள் கண்களும் பேசியதோ என்கிற அளவுக்கு அவன் அவளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் பொழுது அங்கே வந்தான் ரசாக்.

               “டேய்! ரூம் போட்டுட்டாங்க, வா நாளைக்கு காலையில் வரலாம்என்று ரசாக் அவனை இழுக்க, அதுவரை அவளை ஆராய்ந்து கொண்டு இருந்தவன், தன்னிலை உணர்ந்து அவளை திரும்பியும் பாராமல் சென்றான்.

         ரூம் கிலீனிங் வேலை நடந்து கொண்டு இருப்பதால், சிறிது நேரத்தில் சென்று விடலாம் என்று தாத்தாவிடம் கூறிவிட்டு, அங்கே இருந்த குஷன் சோபாவில் அமர்ந்தாள்.

         கைகள் அனிச்சையாக செல்லை நோண்டிக் கொண்டு இருந்தாலும், இவள் receptionயில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, ஓரக்கண்ணால் faiq இவளை பார்த்ததை அறிந்து கொண்டாலும், அப்பொழுது அதை பெரிதாக நினைக்கவில்லை.

       ஆனால், அதன் பிறகு ஏதோ தப்பு செய்ததை போல், அவன் இவளை திரும்பியும் பாராமல் சென்றது தான் அவள் மனதை சுருக்கென்று தைத்தது.

          இப்பொழுது, அறையில் இதை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு வேலை திருமணமானவனாக இருக்க வேண்டும், அதனால் தான் அப்படி தப்பு செய்தது போல் ஓடி இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

                இந்த கோணத்தில் அவள் யோசிக்கும் பொழுது, சற்று சமாதானம் அடைந்தாலும், ஏதோ ஒரு வித ஏமாற்றம் நெஞ்சுக்குள் பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

             அதற்குள் தயாராகிவிட்டு சாப்பிட கீழே வேகமாக வருமாறு, அவளின் பெற்றோர்கள் கூறவும், இன்று சைட் சீயிங் என்பதால், அவள் ஒரு பிங்க் கலர் டாப்ஸ் skirt ஒன்றை அணிந்து கொண்டு, அதற்கேற்ற தொங்கட்டான் எல்லாம் போட்டுவிட்டாள்.

             முடியை சிறிது வாரி மேலே கிளிப் ஒன்றை மாட்டிவிட்டு, கீழே பிங்க் கலர் பேன்ட் ஒன்றை போட்டு போனிடைல் ஆக்கி இருந்தாள். முகத்தில் சிறிது compact பவுடர், பொட்டு, உதட்டில் லிப்ஸ்டிக் என்று முடித்துவிட்டு, கையில் வாட்ச் ஒன்றை அணிந்து கொண்டு, செல்லை தன் கைப்பையில் போட்டு எடுத்துக் கொண்டு தம்பியுடன் கீழே இறங்கினாள்.

            காம்ப்ளிமென்டரி பிரேக்பாஸ்ட், ஆகையால் buffet முறையில் உணவு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த டைனிங் ஹாலில், இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் எல்லோரின் கண்களும் இவர்களையே தான் மொய்த்தது.

          குறிப்பாக காவ்யஹரிணியை, பெண்கள் முதற்கொண்டு பார்த்தனர். அங்கே தாய், தந்தை அமர்ந்து இருந்த டேபிளில் தன் கைப்பையை வைத்துவிட்டு, தம்பியுடன் சென்று தனக்கு பிடித்ததை தட்டில் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள்.

       காலை பத்து மணிக்கு, இங்கு இருந்து பயணம். மணி இப்பொழுது 9.30, ஆகையால் எல்லோரும் வேகமாக சாப்பிட்டு முடித்துக் கொண்டனர்.

           அங்கே receptionயில் போட்டு இருந்த இருக்கையில், பெரியவர்கள் அமர, சிறியவர்கள் selfie எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்படித்தான், காவ்யஹரிணி அங்கு இருந்த ஒரு அழகான பீங்கான் ஜாடி அருகே selfie எடுத்து கொண்டு இருக்க, பின் பக்கம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த faiq அந்த புகைப்படத்தில் விழுந்து இருந்தான்.

             அந்த புகைப்படம் எப்படி வந்து இருக்கிறது என்பதை பார்க்க, அவள் அதை ஓபன் செய்ய அதில் அவளுக்கு அவள் முகம் தெரியாமல் பின் இருக்கும் faiq தான் அவள் கண்ணுக்கு தெரிந்தான்.

             என்ன நினைத்தாளோ, உடனே அந்த புகைப்படத்தை டெலிட் செய்துவிட்டு நிமிர்ந்தவள், அங்கே அவள் குடும்பத்தினர் எல்லோரும் வெளியே செல்வதை பார்த்து தானும் அவர்களோடு இணைந்து வெளியே வந்தாள்.

            அங்கே ரசாக் பெரியவர்களிடம், இரு குழுவாக செல்ல கேட்டுக் கொண்டு இருந்தான். தாத்தா சற்று யோசித்துவிட்டு, இளையவர்கள் ஒரு வேனிலும், பெரியவர்கள் ஒரு வேனிலும் செல்ல முடிவெடுத்தார்.

            தாத்தாவின் இந்த அதிரடி முடிவில், காவ்யஹரிணி அவரை பரிதாபமாக பார்த்தாள். அவரோ, அவளுக்கு கண்களால் சமிக்ஞை செய்தார். அண்ணிகள் அவளுக்கு தொந்தரவு செய்தால், பதிலுக்கு பதில் கொடுக்க எல்லா உரிமையும் வழங்கினார்.

       அதில் சற்று மனம் தெளிந்து, தம்பியுடன் வேனில் ஏறினாள். முன் பக்கம் இரு அண்ணிகள் குடும்பம் இருக்க, பின்னால் அக்காவும், தம்பியும் அமர்ந்து இருந்தனர். டிரைவர் அருகில், எந்த guide தங்களுக்கு என்று பார்த்தவள் அதிர்ந்தாள்.

          “மீனாட்சி! என்ன விளையாட்டு இது? நேத்து இருந்து, இவனை தான் என் கண்ணில் கட்டிக்கிட்டு இருக்க. என்ன மீனு இப்படி செய்ற!” என்று சலித்துக் கொண்டு இருந்தாள்.

          முன்னால் அமர்ந்து இருந்த faiq, அவனுக்கு பிடித்த அரேபிய பாடல்களை தவழ விட, இவளுக்கு காதில் புகை வந்தது கோபத்தில்.

               “டேய் தம்பி! இந்த ஆள் நேத்தில் இருந்து ஒரே பாட்டை ஓட விடுறான். என்னால காது கொடுத்து கேட்க முயல டா, உன் கிட்ட தளபதி பாட்டு இருக்கு அதை போடு டாஎன்று தம்பியிடம் கூறிவிட்டு, மனதிற்குள் அவனிடம் நீயா! நானான்னு பார்க்கிறேன் டா என்று கருவிக் கொண்டாள்.

         அவன் தம்பியோ, இப்பொழுது வெளியாகி உள்ள சர்க்கார் படத்தில் உள்ள சிமிட்டாங்காரன் பாடலை ஓட விட்டான்.

           பல்டி பாக்குற டர்ல விடணும் பல்து

           World மொத்தமும் அலற விடணும் பிஸ்து என்ற வரி பாடல் ஆரம்பிக்கவும், அண்ணாவின் பிள்ளைகள் குஷியாகி விட்டனர்.

          ஆனால் faiq அலற விட்டாள் காவ்யஹரிணி, இந்த பாட்டின் மூலம். அமைதியாக மெலடி பாட்டை கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கு, இப்படி டர்ரு, பிஸ்து போன்ற வரிகள் என்னவென்று புரியாமல், இவர்கள் சத்தம் போட்டு அலறிய அலரளில் இவனுக்கு கோபம் சும்மா ஜெட் வேகத்தில் பறந்தது.

         பாட்டு அலறியதை விட, அவன் தான் அலறினான் அடுத்து அடுத்து, அவர்கள் போட்ட பாட்டில். நல்லவேளை, அதற்குள் முதலில் அவர்கள் பார்க்க வேண்டிய அரசு அருங்காட்சியம், முதலில் வந்தது.

          எல்லோரும், இறங்கி அந்த கட்டிடத்தை ஏற இறங்க பார்த்தனர். பழைய கால அரண்மனை போன்ற அந்த கட்டிடம், காவ்யஹரிணிக்கு பரவசம் கொடுத்தது என்றால், மற்றவர்களுக்கு இதிலா இவள் வேலை செய்ய போகிறாள் என்ற எண்ணம் உதிர்த்து, அண்ணிகள் இவளை நக்கலாக பார்த்து வைத்தனர்.

        அவளின் அண்ணன்களுக்கோ, தம்பிக்கோ அப்படி தோன்றவில்லை. அவர்கள் எண்ணம் முழுவதும், இதில் அவள் எப்படி இருப்பாள் என்பது தான்.

         ஆனால், அவளுக்கு அப்படி இல்லை ஏதோ சாதிக்க போகும் எண்ணம் மட்டுமே மனதில் துளிர்த்து, உற்சாகம் ஊட்டியது. அங்கே வாசலில் உள்ளே நுழையும் முன், இரண்டு ராணுவ பீரங்கி தான் இவர்களை வரவேற்றது.

         அதில் கவர்த்தவள், தம்பியிடம் தன் செல்லை கொடுத்து அதனருகில் சென்று நின்று போஸ் கொடுத்தாள். அவனும் அதை படம் பிடித்து, அக்காவிடம் செல்லை கொடுத்துவிட்டு, உள்ளே சென்றான்.

            அவளும் உள்ளே சென்று கொண்டே, எடுத்த புகைப்படத்தை பார்த்தவள் அதிர்ந்தாள். இம்முறையும், அவளின் பின்னால் faiq யாரையோ அழைப்பது போல் இருந்தாலும், இவள் போட்டோ எடுக்கும் பொழுது தவறாமல் வந்து விடுபவனை பார்த்து முறைத்தாள்.

            அதற்குள், உள்ளே அவன் எல்லோருக்கும் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கவும், அவள் அதில் கவணமானாள். பிள்ளைகளுக்கு புரியும் விதத்தில், அவளே சொல்லிக் கொண்டு வந்தாள்.

         அங்கே துபாய் அரசர்கள், இளவரசர்கள் என்று எல்லோருடைய புகைப்படம் இருந்தது, இவனுடையது தவிர. அதில் நெஞ்சில் அவனுக்கு சுருக்கென்று வலி எழுந்தாலும், அதை பற்றி இப்பொழுது யோசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

            அவன் சில பொக்கிஷங்கள் பற்றிய விளக்கத்தை கூற, அதை எல்லாம் காவ்யஹரிணி பிள்ளைகளுக்கு தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு வந்தாள். அவர்களும், உற்சாகமாக ஒவ்வொன்றையும் கேட்டுக் கொண்டு வந்தனர்.

          அவர்களுக்கு உற்சாகம் என்றால், faiqக்ற்கு எரிச்சல். கடைசியாக திரும்ப அதை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே அவள், நான் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே அவள் கூறிக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம் என்று ஆத்திரமாக வந்தது.

          அங்கே விளக்கி கூற வேண்டிய இடங்களும், பொருட்களும் விளக்கிவிட்டு அவன் இங்கு சில திரவிய பொருட்கள் வாங்கலாம், விருப்பம் இருந்தால் தரமானதாக இருக்கும் என்று கூறினான்.

            “ஹையோ! முதல் நாளே பர்ஸ்க்கு வேட்டு வைக்குறானேஎன்று மனதிற்குள் புலம்பினர் இரு அண்ணன்களும்.

         அவர்களின் முக மாறுதலில், அவர்களின் எண்ணத்தை ஊகித்துக் கொண்ட அக்காவும், தம்பியும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

         அங்கே மேலும் சில காதணிகள், கழுத்தில் போடும் சில மாலைகள், வளையல்கள் என்று விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்த ஒரு வெள்ளை கற்கள் பதிந்த தொங்கட்டான், காவ்யஹரிணிக்கு பிடித்து இருந்தது.

          அதை எடுத்து அங்கு உள்ள கண்ணாடியில், அந்த தொங்கட்டானை வைத்து, அழகு பார்த்தவள் அது மிகவும் அவளுக்கு பொருத்தமாக இருந்தது. உடனே அதை அங்கு உள்ளவர்களிடம் கொடுத்து, இதை பாக் பண்ணி தருமாறு கூறினாள்

        அதை வாங்க ரிசப்ஷனிற்கு சென்று ரூபாயை செலுத்திவிட்டு, வாங்கிக் கொண்டு முதல் ஆளாக வெளியே வந்தாள். வெளியே வந்தவளை, faiq பிடித்துக் கொண்டான்.

             “மிஸ்! இங்க பாருங்க நான் முழுசா எல்லாம் explain பண்ணி முடிச்ச பிறகு, அப்புறம் மெதுவா நீங்க உங்க மொழியில் மொழிபெயர்த்து சொல்லிக் கொடுங்க. அதுக்கு முன்னாடி, நான் ஒவ்வொரு இடமா சொல்லி முடிச்சிடுறேன்என்று ஆங்கிலத்தில் கூறிக் கொண்டு செல்பவனை பார்த்து, கை காட்டி நிறுத்தினாள்.

             “மிஸ்டர்! அவங்க சின்ன பிள்ளைங்க, அப்போவே அது என்னனு தெரிஞ்சிக்க ஆசை படுவாங்க. அது மட்டுமில்லாம, அப்பாவே அதை பத்தி நான் explain பண்ணா, அவங்க mind நல்லா ஸ்டார் ஆகிடும் ”.

              “நாளைக்கு, அவங்க ஊருக்கு போன பின்னாடி எல்லோருகிட்டையும் பார்த்த விஷயத்தை, ஒன்னு விடாம சொல்லுவாங்க. இந்த சின்ன விஷயம் கூட உங்களால் புரிஞ்சிக்க முடியாதா, மிஸ்டர்என்று அவனின் தாய்மொழியான அரேபிய மொழியிலே நன்றாக காய்ச்சி எடுத்துவிட்டு வேனில் சென்று அமர்ந்து விட்டான்.

         அவள் திட்டியதை விட, அவள் சரளமாக அவனின் தாய்மொழியில் பேசி சென்றதை நினைத்து ஆச்சர்யம் அடைந்தான். மேலும் அவளை நன்றாக இப்பொழுது, கவனிக்க தொடங்கினான் faiq.

           எல்லோரும் அடுத்த சிறிது நேரத்தில் வரவும், அவர்களை அழைத்துக் கொண்டு கோல்ட் palace என்று அழைக்கப்படும், இன்னொரு  அரசு அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்றான்.

          அங்கே, மீண்டும் ஒரு யுத்தம் நடக்க போவதை பற்றி அறியாமல், faiq அவளை பார்த்து வியக்க, அவள் இவனை நினைத்து பல்லை கடித்துக் கொண்டு இருந்தாள்.

 

தொடரும்..

  

 

error: Content is protected !!