தோழிமார் கதை
பகுதி – 8
“கேட்பாங்க…பட் நான் சமாளிச்சுக்குவேன்..” (நீ மொதல்ல ஐ லவ் யூ சொல்லுடா…நான் என் பிஜிம்மோட “மாதா பிதா குரு டலாக் சொல்லணும்…உனக்கு வேணா படிச்சுட்டு வந்த ஸ்கிரிப்ட் மறந்து போலாம். ஆனா எனக்கு மறக்கலை…)
“இல்லை…அப்படியே கேட்டாலும்…வேற ஏதாவது சொல்லி சமாளிச்சிரு..”
“கண்டிப்பா கண்டிப்பாஆஆஆ….அவங்க அதைப்பத்தியெல்லாம் ரொம்ப கேட்கமாட்டாங்க…வெரி டீசண்ட்..நானா சொன்னா கேட்டுப்பாங்க….பட் துருவ மாட்டாங்க..”என அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என தெரிந்திருந்த போதும் கூசாமல் மொழிந்தாள். அதிலும் “டீசண்ட்” என்ற வார்த்தையை சொல்லும் போது அர்ச்சனாவிற்கு லேசான சிரிப்பு எட்டிப்பார்த்தது. இலக்கியாவை வேண்டுமானால் ஏதோ ஒருவகையில் “டீசண்ட்”எனக்கொள்ளலாம். அதுவும் சமயங்களில் தான். மற்ற இரண்டும் கேட்கவே வேண்டாம். திலீபா குத்திக் காட்டியே கொண்டு விடுவாள். மற்றது, “என்ன? புரியலையே”என சொல்லிச் சொல்லியே விளக்காமாக பேச வைச்சுரும்” என அர்ச்சனாவின் எண்ணவோட்டம் அரவிந்திற்கு கேட்கவில்லை. அரவிந்த் அர்ச்சனாவின் பேச்கை நம்பியது போலத்தான் தெரிந்தது.
பற்றாகுறைக்கு தூரத்தில் தோழிகள் நூலகத்தில் இருந்து வெளிவருவது தெரிந்தது. “என்னை….என்னை….ஐ மீன்…எனக்கு” என சற்றே உதறலுடன் அவன் பேச, அடுத்து அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டு அர்ச்சனாவின் முகம் சொல்லமுடியா வகையில் காட்சியளித்தது.
“பரவாயில்ல அரவிந்த்…என்ன விஷயம் னு சொல்லு…” என அரவிந்தின் முகத்தை ஆவலாகப் பார்த்த அர்ச்சனா, தனது வசனங்களை சொல்ல தன்னை தயார் படுத்திக் கொள்ள, ” வந்து…அர்ச்சனா..எனக்கு ..ஐ மீன் ..என்னை பத்தி திலிபா ஏதாவது சொல்லியிருக்காளா?” என அரவிந்த் மென்று விழுங்க, அறிவாளி அர்ச்சனாவிற்கு விஷயம் சட்டென புரிந்தது. வெறும் புரிதல் மட்டும் அன்றி, அத்துடன் அர்ச்சனாவின் கோபமும், ஒரு விதப் பொறாமையும் கைகோர்த்துக் கொண்டது. “அதெப்படி அவளை…அதும் நான் இருக்கும் போது…” என்பதில் துவங்கி, “என்னை விட அவா ரொம்ப அழகா என்ன” என்பதை தொட்டுவிட அர்விந்த் அதன் பின்னர் பேசிய எதுவும் அவளது செவிகளில் விழவில்லை.
அர்ச்சனாவின் எண்ணவோட்டம் பற்றி அறியாத சிறுவன் அரவிந்த் தன் போக்கில் பித்தற்றிக்கொண்டிருந்தான். ” வந்து திலிபா யாரையாவது லவ் பண்ணராளா? ஐ மீன் ..”
(இன்னொரு ஐ மீன் போட்ட உன்னை நெய்மீனாக்கி எண்ணையில முக்கிருவேன் பார்த்துக்க) என நினைத்த நினைப்பு எதுவும் அச்சிறுவனை எட்டவில்லை. குமிறிக் கொண்டிருக்கும் ஏரிமலையின் சீற்றம் அறியாமல் கையில் இருந்த புல்லையும் பூவையும் பிய்த்துக் கொண்டிருத்தான் அந்தப் பாலகன்.
“ஹெல்ப் ம்ம்ம்ம் …என்ன ….நான் இப்போ தூது போகணும்…அதானே..” என மருவியவள் முடிந்த வரையிலும் முகத்தை சாதாரணமாகவே வைத்துக் கொண்டாள்.
” இல்ல திலி ..என்னை பத்தி..என்ன நினைக்கறான்னு தெரிஞ்சிட்டு சொல்ல முடியுமா? ஏன்னா அவளா என்கிட்ட பேச மாட்டா…எனக்கும் எடுத்ததும் எப்படி என்ன பேசறதுன்னு தெரியலை…மோர் ஓவர் அவ அந்த சீனியர் பையன் கூட வேற ரொம்ப சகஜமா பேசறா…”
(தெரியுதில்லை…அப்பறம் ஏன் அதே பெட்டர்மாக்ஸே வேணும்னு நினைக்கற முண்டம்..)
” அதெல்லாம் அவ பர்சனல்…நான் எப்படி இதெல்லாம் கேட்க முடியும்..”
“சே.சே….நான் உன்னை அவகிட்ட என்னை பத்தி பேச சொல்லலை…ஜஸ்ட் அவ அந்த பையனை லவ் பண்ணறாளா என்னன்னு மட்டும்….”
“வேவு பார்த்து சொல்லணும்….அப்பறமா நீ பேசி, அவளை இம்பிரஸ் பண்ணி, சிரிச்சு மயங்கி லவ் பண்ணிக்குவ” என வெகு நக்கலாகவே அர்ச்சனா வினவியது, அந்த பாலகனுக்கு அப்போதும் புரியவில்லை. அவ்வளவு நேரம் பொறுமை காத்த அர்ச்சனாவின் நா, அப்பாடி என கைகால்களை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டது.
” என்னைப் பார்த்தா எப்படி இருக்கு…ம்ம்ம்…உனக்கு மாமா வேலை செய்யத்தான் நான் காலேஜ் வர்ரேனா”..என தரை லோக்கலாக மாறாமல், சற்றே சுதாரித்துக் கொண்டாள். அதே நேரம்”திலிபாட்ட இதுபத்தி சொல்லுவேன்னு நினைக்கற?…ஹா ஹா” என நொடியில் இத்தனை வார்த்தைகளை யோசித்தவள், ” சாரி என்னால இந்த வேலை எல்லாம் செய்ய முடியாது அரவிந்த்…”என்று மட்டும் மொழிந்தாள். ” சே மாதா பிதா டயலாக் சொல்ல முடியாம போச்சே. எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டு பன்ச் பேசிறலாமா? ” என மனதில் சொல்லிக் கொண்டாள். ஆனால் அரவிந்த் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்கவில்லை. சரியாக தோழிகள் அருகில் வந்த சமயம்,” கேட்டு சொல்லு ப்ளிஸ்..” என மொழிந்த அரவிந்திடம் பதில் உரைக்காமல் சென்றுவிட்டாள்.
சீ யூ” என சொல்லிக் கொண்டு சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்த தோழிகளை நோக்கி நடந்தாள். “ஒரு தென்றல் புயலாகி வருதேஏஏஏ” இந்த இடத்தில் சற்றே பொருத்துவது போலத் தோன்றியது.
நூலகத்தில் இருந்து வெளிப்பட்ட மற்ற மூவரும், அர்ச்சனாவை நோக்கி வராமல் கேண்டீன் பக்கம் சென்று கொண்டிருக்க, அர்ச்சனா அவர்களை நோக்கி கை அசைத்தாள்.
“என்ன விட்டுட்டு எங்கடி போறிங்க?” எனக் கேட்டுக் கொண்டே அருகில் செல்ல, “ம்ம்ம் நீ உன் கொஞ்சல்ஸ் ல பிஸியா இருப்ப, நாங்க எதுக்கு கரடி மாதிரி. அதுவுமில்லாம ஏற்கனவே நீ தலை கீழாதான் நடப்ப…இனிமே கேட்கவே வேண்டாம்.” என இலக்கியாவையும் கெளசியையும் முந்திக் கொன்டு திலிபா மொழிதாள்.அதுவரையிலும் அரவிந்த் கூறியவற்றை சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவள் நொடியில் மனதை மாற்றிக் கொண்டாள்.
” எதுக்கு சொல்லணும்…அதுலயும் அவனுக்கு என்னை பிடிக்கலையாம்..உன்னை பிடிச்சிருக்காம். நீ வேற யாரையாவது லவ் பண்ணரயான்னு கேட்கறான்னு சொன்னா அவ்வளோ தான். காலத்துக்கும் என்னை கிண்டல் பண்ணிட்டு குத்தி காமிச்சுட்டு இருப்பாளுக. சொல்லாத அச்சு…அதுலயும் திலிபாக்கு நிட்சயமா தெரியக்கூடாது. ” என முடிவெடுத்தாள்.
“அர்ச்சு அர்விந்த் என்னடி சொன்னான்” என கெளசி ஆர்வமாக மொழிய, அர்ச்சனாவிற்கு சற்றே நிம்மதியாக இருந்தது. இவ ஒருத்தியாவது கேட்டாளே என மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கியது.
“ம்ம்ம்..சொல்லறேன்..சொல்லறேன்…வாங்க போய் பப்ஸ் சாப்பிடலாம்..” என சட்டென பதில் சொல்லாமல் யோசிப்பதற்கு அவகாசம் எடுத்துக் கொண்டாள்.
” ஹே ஹே அர்ச்சனா லவ் பிரபோசலுக்கு ட்ரீட் வைக்கறா…எல்லாரும் ஓடியாங்க….ஓடியாங்க..” என வேண்டுமென்றே உரக்கக் கத்தினாள் திலிபா.
” சும்மா இரு திலி” என இலக்கியா மிரட்டிய போதும், அர்ச்சனா முறைத்த போதும், திலிபா அமைதியாகவில்லை. அசால்ட்டாக தோளைக் குலுக்கினாள். ” இதெல்லாம் நம்ம கடமை மக்கா…இதுகூட சொல்லக்கூடாதா…” என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாலும், ” கேண்டீன்ல இருக்கற எல்லாருக்கும் இன்னைக்கு அர்ச்சனா ட்ரீட் “என சத்தமாக மொழிய, இரண்டொரு தலைகள் திரும்பி இவர்களைப் பார்த்தன.அர்ச்சனாவிற்கு கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.
“என்னாச்சு அர்ச்சு..” என கெளசி,
“உன் முகமே சரியில்லையே…என்னாச்சுடீ சொல்லு” என இலக்கியா,
“நீ எதிர்பாத்த மாதிரி அரவிந்த் பேசலையா? இவ்வளோ டென்ஷன் ஆகற…” என திலிபா நாடி பிடிக்க, அர்ச்சனா சுதாரித்தாள்.
“சே…கொக்கியை கரெக்டா போட்டுட்டாளே…கண்டுபிடிச்சிருவாளோ….சரி சமாளிப்போம்…” என வடிவேல் பாணியில் மனதில் பேசிக்கொண்டிருக்க, திலிபா அடித்த கேள்விக்குத் தாவியிருந்தாள்.
” சரி, போறப்போ கேட்டுட்டு சொல்லுன்னு சொன்ன மாதிரி காதிலே விழுந்ததே…என்ன கேட்டுட்டு நீ சொல்லணும்…யார்ட்ட கேட்கணும்..?” என தூண்டில் போட, மீன் தானே வாயை திறந்து வடையை கவ்வியது. நல்ல வேளை திலிபா அடுத்து நோண்டும் முன்னர், அவளது அலைப்பேசி அடித்தது. ஆனாலும் பேச்சு சுவாரசியத்தில் வந்த அழைப்பை துண்டித்த திலிபா மீது எழுந்த எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்ட அர்ச்சனா, மனதில் மடமடவென கணக்குகள் இட்டாள்.
” எப்படியும் அர்விந்த் திலிபாட்ட தானா போய் பேச மாட்டான். அப்படி பேசணும்னு நினைச்சிருந்தா, என்கிட்ட சொல்லறதுக்கு பதில் திலிபாட்டையே சொல்லியிருக்க மாட்டானா? சோ, அவனுக்கு திலிகிட்ட சொல்லற அளவு தைரியம் இல்லை….இவளுககிட்ட உண்மை சொன்னா இனிமே நம்மளை கொஞ்சமும் மதிக்க மாட்டாலுக. ஏற்கெனவே திலிபா தான் பிடிக்கும்…இனி இதை வேற சொன்னா அவ்வளோ தான் கையில பிடிக்க முடியாது மேடமை…இப்போதைக்கு சமாளிப்போம்.” என கணக்கிட்டு கண்மணி, ஆவென வாயைப் பார்த்துக்க கொண்டிருந்தவர்களிடம் நூல் சுற்றி ஆரம்பித்தாள்.
“அர்விந்த் யார்ட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்லியிருக்கானே” என துவங்கினாள்.
“அவன் அப்படித்தான் சொல்லுவான்.அதுக்காக பெஸ்ட் பிரெண்ட்ஸ் எங்ககிட்ட கூட சொல்லமாட்டியா அர்ச்சு..” என கெளசி அங்கலாய்க்க, ” அப்படி இல்லை கெளசி…நான் அவன்கிட்ட அப்பவே ஸ்டிரிடா சொல்லிட்டேன்…என் பிரின்ட்ஸ் கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன்ன்னு.”
“சூப்பர்டீ…சரி..சொல்லு…என்ன சொன்னான்…”
“அது வந்து அவனுக்கு அவனுக்கு…என்னை..ரொம்ப பிடிச்சிருக்காம்…என்கூட பேசி பழகனும்னு தோணுத்தாம். அதனால அவன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு கேட்டான்…”
“அடிசக்கை….பாரேன் இவனை…”என கெளசி மொழிய,
“சூப்பர் டீ அர்ச்சு…அதுக்கு நீ என்ன சொன்ன” என விடாமல் துளைத்தாள் திலிபா. இலக்கியா மட்டுமே எந்த அபிப்பிராயமும் கூறாமல் அமைதி காத்தாள்.
“நானா…நான் வந்து…”
“ஓ.கே சொல்லிட்டியா அர்ச்சு…” சற்றே நக்கலாக திலிபா கேட்ட, அர்ச்சனாவிற்கு லேசாக படபடத்தது.
“அதெப்படி ஓகே சொல்லுவா…அவ தான் பிஜிஎம் எபெக்ட்லாம் மனப்பாடம் பண்ணிட்டு போனாளே…இல்லையாடி” என நல்லவேளை திலிபாவின் கேள்விக்கு கெளசி பதில் மொழிய அர்ச்சனாவிற்கு சுதாரிக்க சற்றே அவகாசம் கிடைத்தது.
“ஆமா.ஆமா.நான் எனக்கு ..யோசிச்சு சொல்லறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..” என அர்ச்சனா கூறிய பதிலை கெளசி மட்டுமே நம்பியது போல் தோன்றியது. இலக்கியா எப்பொதும் போல் கருத்து சொல்லாமல் நின்றிருக்க, திலிப்பாவோ ஒரு அளவெடுக்கும் பார்வையை வீசியப்படிக்கு நின்றிருந்தாள்.
திலிபா தன் கூற்றை நம்பவில்லை என்பதை அவளது அடுத்த கேள்வி பறைசாற்றியது.
“ஆனா போறப்போ கேட்டு சொல்லுன்னு தானே சொல்லிட்டு போனான். எங்க காதில விழுந்துச்சே..யோசிச்சு சொல்லுன்னு தான சொல்லியிருக்கணும்….ஏன் கேட்டிட்டு சொல்லுன்னு சொன்னான்” என சரியான கேள்வியை கேட்டிருந்தாள் திலிபா.
“அது அதுவந்து….கேட்டு சொல்லுன்னா சொன்னான்..”
“ஆமா..” என இம்முறை கெளசியும் கூட சேர்ந்து மொழிய, அர்ச்சனாவிற்கு நெஞ்சம் அடித்துக் கொண்டது.
“அதுவா..அது, என் மனசை கேட்டு சொல்லுன்னு சொன்னான்…அதான் உங்க காதிலே விழுந்திருக்கும்.” என ஏதோ சமாளிப்பாகக் கூறி மலுப்பினாள் அர்ச்சனா.
நல்லவேளை அடுத்தடுத்து கேள்வி கேட்டு படுத்தவில்லை. அவரவர் வேறு விஷயங்கள் பேசத் துவங்கி இருந்தனர்.
அன்றைய தினம் வேறு சட்ட சிக்கல்கள் இன்றி கழிந்த போதிலும், மாலை கல்லூரி பேருந்தில் ஏறப்போகும் சமயம், கெளசி அடுத்த வெடிகுண்டை ஆர்ப்பாட்டமில்லாமல் வீசினாள்.
“ஏண்டி அர்ச்சு…அப்போ இனிமே இந்த அர்விந்த் உன்னை சுத்தி சுத்தி வருவான்ல..”
” அஹான்…இதுவேறயா..” என முணுமுணுக்க…” சொல்லுடி அர்ச்சு…அவன் உன்கிட்ட பேச பேச வருவான்..நீ தள்ளி தள்ளி போவ..படத்தில காமிக்கற மாதிரி…அவன் நீ எங்க நின்னாலும் உன்னையே பார்ப்பான்…இந்த மாதிரிலாம் நடக்கும்ல..”
“ஆன்…ஆமா ஆமா..சினிமா பார்த்து சீரழிஞ்சு..என்னையும் படுத்தறியே..கொரங்கே..கொரங்கே…” என கெளசியை மானசீகமாகத் திட்டியவள், முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல் இருக்க மிகவும் முயன்றாள்.
ஒரு நாளைக்கே இப்படி நாக்கு தள்ளுதே..இதுகளை எப்படி சமாளிப்பேனோ…இதுல அவனை வேற என்னை அப்பப்போ பார்க்கவைக்கணுமே…இல்லைனா இவலுகளுக்கு பதில் சொல்லி மாளாது…சாமி..என்ன பண்ண போறேனோ…டேய் அரவிந்தா..கண்ணு ..சாமி…அப்பப்போ என்னை பாரு கண்ணு” என மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.