அத்தியாயம் 5
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ.
சிடி பிளேயரில் பாடல் சுகமாக தாலாட்டி கொண்டு இருக்க… அதை அனுபவித்து கார் ஒட்டி கொண்டு இருந்தான் ஹர்ஷா… அருகில் அமர்ந்திருந்த நரேஷுக்கு இந்த ஹர்ஷா புதியவன்… பொறுப்புக்களை மில் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு வந்திருந்தாலும் ஹர்ஷாவிற்கு பதில் கூற வேண்டியது நரேஷின் கடமை… அந்த குழப்பத்தில் இருந்தவனால் மலரை ஹர்ஷாவோடு சம்பந்தபடுத்தி யோசிக்க முடியவில்லை.
“என்னாச்சு ஹர்ஷா? ”
“செம்ம அழகு… இல்லையா நரேஷ்? ” என்று மொட்டையாக அவன் கேட்டபோது அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“யாரை ஹர்ஷா சொல்ற? ” குழப்பமாக அவன் கேட்டான்!
இருவருமாக மட்டும் இருக்கும் போது நண்பனென்ற உரிமையில் மனம் விட்டு பேசி கொள்பவர்கள்… அனைத்தையும் பகிர்வார்கள்… அப்போது நரேஷ் அவனது செயலாளர் இல்லை… வெறும் நண்பன் மட்டுமே! .
“மலர்விழி…”
மென்மையாக உச்சரித்தவனை பார்த்து வியந்து… பின் அதிர்ந்தான்! இது வரை எத்தனையோ பெண்களுடன் பழகி இருந்தாலும் எந்த பெண்ணை பற்றியும் இதுபோல பேசியதில்லையே… அதுவும் அந்த பெண் அணுகுவதற்கே இத்தனை கடுமையானவளாக இருக்கும் போது… நினைக்கும் போதே அவனுக்கு கண்ணை கட்டியது.
“ம்ம்ம்… வேணாம் ஹர்ஷா… அவங்க ரொம்ப நல்ல டைப் போல தெரியுது… ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட்… உனக்கு ஒத்துவர மாட்டாங்க…”
“அதான் எனக்கு வேணும் நரேஷ்… முரட்டு குதிரைய அடக்குறது த்ரில் தானே… செம இன்ட்ரஸ்டிங் கேரக்டர்…”
“அப்படீன்னா அய்யா லவ் மூடுக்கு போயிட்டீங்க போல… சீக்கிரமா கெட்டி மேளம் தான்…” நரேஷ் சிரித்தான்!
ஹர்ஷாவின் குணவிஷேஷங்களை பற்றி முழுமையாக அறிந்தவன் அவன் நண்பன்… அவன் அந்த மாதிரி பழக்கங்களை விட்டு விட்டு நல்ல பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று மனதார நினைப்பவன்.
“கல்யாணமா… விட்டா தாலியவே கட்ட வெச்சுடுவ போல இருக்கே… அது மாதிரி எல்லாம் ஐடியாவே இல்லப்பா… அவளை பார்த்து மயங்கி இருக்கேன்னு வேணா சொல்லு… ஆனா லவ்வுன்னு எல்லாம் சொல்லாத… இன்பாக்ட் வாழ்க்கை முழுக்க ஒரே பொண்ணை என்னால காதலிச்சு குடும்பம் நடத்த முடியுமான்னு எனக்கு தெரியல நரேஷ்…”
எந்த நேரத்தில் இதை ஹர்ஷா கூறினானோ மலர்விழியின் ஒரு பார்வைக்காக தான் ஏங்க போவதை அவன் அறிந்திருக்கவில்லை.
“கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா”
நீ எரிக்க நான் ஒன்றும் கொக்கு அல்ல என்று கொங்கனவரை சுழட்டி அடித்த பவித்ரமான பதிவிரதையின் வழித்தோன்றல் தான் மலர்விழி என்பதை அறியாத ஹர்ஷா அவளிடம் விளையாடி பார்க்க முடிவு செய்து விட்டான்… ஆனால் காலம் எழுதி வைத்ததை யார் அறிவார்?
********
சமையலறையில் பாத்திரங்கள் பறந்து கொண்டு இருந்தன. மிக கோபமாக போட்டு உடைத்தவாறே அன்று இரவுக்கு தானே சமையல் செய்து கொண்டு இருந்தாள் மலர். அதை பார்த்து திகைத்தவாறே வந்த துவாரகா.
“அம்மா பரதேவதை! ஏன்டி இப்படி போட்டு உடைக்கிற? பேசாம லதாக்காவே சமைக்கட்டும்டி…”
அவள் கூறியதை கேட்டு பத்ரகாளி போல் வெளியே வந்த மலர்,
“ஒருத்தன் மேல கோவத்த காட்ட முடியலடி பிசாசே… என்ன பண்றது? அப்போ நான் கலெக்டர்ங்கற டீசென்சி மெய்ன்டைன் பண்ண வேண்டி இருந்துது… இல்லைன்ன…”
அதீத கோபத்தில் வெடித்து கொண்டிருந்தவளை பார்த்து திகைத்தாள் துவாரகா! இந்த அளவு கோபப்படுவது இவளது இயல்பே கிடையாதே.
“ஹே பன்ஸ்… ஏண்டி இப்படி வெடிக்கிற? என்ன ஆச்சுன்னு சொல்லு…”
“என்ன ஆச்சா? இப்போ மட்டும் அவன் என் கைல கிடைச்சான் அவன் குடல உருவிடுவேன்…”
அவள் உறுத்து விழிப்பதை பார்த்த துவாரகா,
“என்ன ஆச்சு… யாரை இப்படி கற்பனைல துவம்சம் பண்ணிட்டு இருக்கே…? ”
“ம்ம்ம்ம்… அந்த ஹர்ஷாவைதான்…”
“ஓ… இந்த வார வீக், டைம் எல்லாத்துலையும் அந்த சூப்பர் பிகரோடபேட்டி தான்… பாத்தியா”
“ஏன்டி… அவன் பேசுனத நினைச்சே நான் கொதிச்சு போய் இருக்கேன்… இதுல நீ வேற எரியற கொள்ளிக்கு எண்ணெய் வார்த்துட்டு இருக்கியா? சூப்பர் பிகராம்… என்னைக்கு என்கிட்டே செருப்படி வாங்க போறான்னு தெரியல…”
“சரி என்னதான் சொன்னான்… சொல்லு…? ”
“ம்ம்ம்… சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு சொன்னான்… கேக்கறா பாரு கேள்விய… அடச்சே ஓடி போய்டு… நான் இருக்கற கோவத்துல…” என்று கொதித்தவள் ஒரு வாறாக அடங்கி தனது ஆற்றாமையை கொட்ட ஆரம்பித்தாள்!
“ஏன்டி நேர்மையா இருக்கறது தப்பா… இந்த ஆண்களுக்கு தங்களை எதிர்த்து நிற்கற பெண்களை படிய வைக்க இந்த வழி ஒண்ணுதான் தெரியுமா? ரொம்ப சீப் ஆ இருக்கு துவாரகா… இப்படி இருக்கறவங்கள பாத்தா இன்னும் தான் கோபம் வருது! ஆனா அந்த இடத்துல என்னால கோபத்த காட்ட முடியலையே…” துவாரகாவின் தோளில் சாய்ந்தவள் வருத்தப்பட அவளது வருத்தம் துவாரகாவையும் பாதித்தது!
“கவலைப்படாத மலர்… எவ்வளவோ கஷ்டப்பட்டுட்ட… இனிமேலும் கடவுள் உன்னை சோதிக்க மாட்டார்டா…” பேசி கொண்டு இருக்கும் போதே செல்பேசி அழைக்க பேசிவிட்டு யோசனையாக செல்பேசியை வைத்தாள்.
“ஹே யாருப்பா… இப்படி யோசனையா இருக்க? ”
“சீப் செக்ரடரி துவாரகா… சென்னை கலெக்டரா ட்ரான்ஸ்பெர் பண்ணி இருக்காங்க…”
மீண்டும் செல்பேசி இசைக்க… பிரைவேட் நம்பர்! குழப்பத்தோடு காலை அட்டென்ட் செய்தாள் மலர்!
“என்ன ட்ரான்ஸ்பெர் ஆர்டர் போட்டாச்சா? ” எடுத்த எடுப்பில் நக்கலாக கேள்வி வந்து விழ
“ஹலோ… யாருன்னு சொல்ல தெரியாதா? ” இருக்கின்ற கோபத்தை அதிகபடுத்தவென்றே யாரோ விளையாடுகிறார்கள் என்று தோன்றியது அவளுக்கு!
“என்னை தெரியலையா… கண்டிப்பா உங்களால மறந்து இருக்க முடியாதே… இந்நேரம் கடுகு மாதிரி வெடிச்சுட்டு இருக்கணுமே! ” சிரித்து கொண்டே மறுபுறம் கேட்டு வைக்க… அவன் தான் என புரிந்தது.
“ம்ம்ம்… நினச்சேன்… உங்க வேலையா தான் இருக்கும்னு…”
“அப்போ என்னை நினைச்சுட்டு தான் இருக்கிங்கன்னு சொல்லுங்க…”
“இந்த மாதிரி பேசுற வேலையெல்லாம் என்கிட்டே வேணாம்… வேற யார்கிட்டயாச்சும் வெச்சுக்கங்க உங்க வேலைய… வால நறுக்கிடுவேன்…”
“சரி… இந்த சண்டைய இப்போ விடுங்க… சென்னைக்கு வர போறீங்களா இல்லை என்னை பாத்து பயந்து ராஜினாமா பண்ணிட்டு ஓட போறீங்களா… அத சொல்லுங்க செல்லம்…” அவனுக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் கொடுத்து விடலாம் ஆனால் இந்த கொஞ்சல் வார்த்தைகளை கேட்கும் போதே எரிந்தது மலருக்கு!
“உங்களை பார்த்து நான் ஏன் பயப்பட போறேன்? என்னை பார்த்து நீங்க தான் இனிமே பயப்படனும்…”
“வாவ்வ்வ்… சூப்பர்… இது நல்லா இருக்கே… ஆனா மலர்விழி… நீங்களா என் கிட்ட வந்து என் கால்ல விழ தான் போறீங்க… இது சேலஞ்ச்…”
“அது இந்த ஜென்மத்துல நடக்காது… அதுவும் உங்க மாதிரி ஒரு ஆள் கால்ல நான்… சான்சே இல்ல…”
உறுதியாக அவள் கூற அந்த உறுதியை பதம் பார்த்தே தீருவேன் என்று நினைத்து கொண்டான் ஹர்ஷா!
அத்தியாயம் 6
சுற்றிலும் பார்த்தாள் மலர்… அனைவரும் அமைதியாக தியானம் செய்து கொண்டு இருந்தனர். ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவு வெளியே அமைதியாக இருந்தாலும் அவள் மனம் உலைகலனாக கொதித்து கொண்டு இருந்தது.
அன்று காலையில் தான் சென்னை ஆட்சியராக பொறுப்பு எடுத்து கொண்டு இருந்தாள். முதல் பூங்கொத்து வேதா குரூப்சில் இருந்து வந்தது… நல்ல வேலை அவன் வரவில்லை என்று நினைத்தவள், வந்த பூங்கொத்தை மறுப்பது மரபு கிடையாது என்பதால் ஏற்று கொண்டு வந்தவர்களை அனுப்பி வைத்தாள்!
மாலை வரை நிறைய பேர் வந்து அறிமுகப்படுத்தி கொண்டு இருந்தனர்… எல்லாவற்றையும் முடித்து கொண்டு கிளம்பலாம் என்று நினைத்த போது தலைமை செயலகத்துக்கு வருமாறு உத்தரவு வர… சற்று அவசரமாகவே கிளம்பினாள்.
தலைமை செயலரின் அலுவலக அறைக்குள் சென்றவள் அங்கே அமர்ந்து இருந்தவனை பார்த்து அதிர்ந்தாள்!
ஹர்ஷா!
தலைமை செயலர் மட்டும் இல்லாமல் கூடவே பொதுப்பணி துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் இருக்க… நிதியமைச்சர் அவளை வரவேற்று விசாரிக்க ஆரம்பித்தார்!
“வாம்மா… எப்படி இருக்கு புது வேலை? ”
“நல்லா இருக்கு சார்…”
“என்ன உதவி வேணும்னாலும் கேளும்மா… செஞ்சு தரோம்…”
“சரிங்க சார்…” அங்கு அமர்ந்து இருந்த ஹர்ஷாவை காட்டி
“நம்ம தம்பி… வேதா ஹர்ஷா! ”
“ஓ… ப்ளீஸ் டு மீட் யு சர்…”
புதிதாக பார்ப்பவளை போல அவள் காட்டிக்கொள்ள அவனது உதடு ஏளன புன்னகையில் வளைந்தது… என்னை தெரியாத மாதிரியா நடிக்கிற? இப்போ பார் விளையாட்டை என்று நினைத்து கொண்டே.
“ஹாய்… ஐம் ஆல்சோ வெரி மச் ப்ளீஸ்ட்…” கையை பற்றியவன் புன்னகைத்து கொண்டே கையை விடாமல் பற்றியவாறே இருந்தான்.
“அடக்கடவுளே… இதென்ன? விட்டு தொலையேன்டா கைய” என்று மனதிற்குள் திட்டி கொண்டே இருந்தவள் கையை இழுத்து கொள்ள வெகுவாக முயன்றாள்.
அவள் முயல முயல அவனது பிடி இறுகி கொண்டே தான் போனதே தவிர விடுவதாக தெரியவில்லை… அவர்களை பார்த்து வியந்த அமைச்சர்களும் தலைமை செயலரும் வேறு விஷயங்களை அவர்களுக்குள் பேசி கொண்டும் நடுவே ஹர்ஷா விடம் பேசி கொண்டும் இருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் முன் எப்படி கோபத்தை காட்டுவது என்று புரியாமல் தன் கையை விடுவிக்கவும் தெரியாமல் அவனுக்கு மட்டும் கேட்குமாறு.
“கைய விடுங்க… இதென்ன வேலை? ” குரலில் கோபத்தை காட்டினாலும் முகத்தில் காட்ட இயலவில்லை.
“எனக்கு பிடிச்ச வேலை தான்…” என்று புன்னகைத்தவாறே கையை விடாமல் பற்றியிருக்க… மலர் கைகளை உருவ வெகு பிரயத்தனப்பட்டு.
“எனக்கு பிடிக்கல… இவங்க இருக்கறதுதான் உங்க பலமா? ”
“பலமா? எத்தன பேர் இருந்தாலும் உங்க கைய பிடிக்க எனக்கு தனியா தைரியம் தேவை இல்ல மிஸ் மலர்விழி… நீங்க என் ப்ரோபெர்ட்டின்னு இவங்களும் தான் தெரிஞ்சுக்கட்டுமே…” எதை பற்றியும் கவலையே இல்லாமல் அவளை வம்பிழுப்பது ஒன்றே நோக்கமாக அவளிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தான்!
“யார் கிட்ட வந்து என்ன பேசுறீங்க? நான் என்ன பொருளா? இன்னொரு தடவ சொன்னா மரியாதை கெட்டு போயிரும்… ராஸ்கல்… எட்றா கைய…” கோபம் தலைக்கேற அவள் கூற… அதை கேட்டு சிறிதும் நிதானம் இழக்காமல்.
“செல்லம்… இன்னொரு தடவ இப்படி பேசி என்னை இன்னும் எதாச்சும் செய்ய வைக்காத… அது உனக்கு தான் நல்லதில்ல! இப்படி நான் உன் கிட்ட பேசிட்டு இருக்கேனே… யாரையாவது இன்டரப்ட் பண்ண சொல்லு பார்க்கலாம்… அது தான் ஹர்ஷா! ”
“நீ யாரா வேணும்னாலும் இரு… அது எனக்கு தேவை இல்லாத விஷயம்…” என்று சொல்லி கையை வேகமாக உதற… அவன் பிடியில் இருந்து கை விடுதலை பெற்றது.
இத்தனை வாதங்களும் இருவருக்குமுள்ளாக கிசுகிசுப்பாகவே நடக்க… இறுதியாக தீர்க்கமாக அவனை பார்த்து கூறினாள்.
“மத்த பொண்ணுங்க மாதிரி என்னை கணக்கு போடாதீங்க மிஸ்டர் ஹர்ஷா… அப்படி போட்டீங்கன்னா நீங்க ஒரு முட்டாள்…” என்று அவனை பார்த்து நிதானமாக சொல்லி விட்டு செயலரிடம் விடை பெற்று விடு விடு என்று வெளியே வந்து விட்டாள்.
அங்கு தான் நிதானமாக காட்டி கொண்டாளே தவிர மனம் கொதித்து கொண்டு இருந்தது… என்ன திண்ணக்கம்! ஒரு மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் தனக்கே இந்த நிலையா? சூடாக யோசித்தது மனது… இந்த திமிர் அவனது பணத்தாலும்… சமூக அந்தஸ்த்தாலும்… யாருமே கேள்வி கேட்காத தன்மையாலும் தான் என்பதை அவள் உணர்ந்தாலும் இந்த விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாதே… ஆனாலும் அவனை அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை… அவனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்!
******
அன்று அந்த ரத்ததான முகாம் களை கட்டி இருந்தது… மாவட்ட நிர்வாகம் செய்து இருந்த தீவிர பிரச்சாரத்தால் மக்கள் கூட்டம் அலை மோதியது… உடல் உறுப்புகள் தானத்துக்கும் இசைந்து நிறைய பேர் வந்து இருந்தனர்! பல்வேற்பட்ட மக்களால் அந்த முகாம் பெரும் வெற்றியை நோக்கி போய் கொண்டு இருந்தது!
துவாரகாவையும் வற்புறுத்தி அழைத்து வந்து இருந்தாள் மலர்… அவளும் வரிசையில் நின்று பரிசோதனைகளை மேற்கொண்டு… ரத்தம் குடுக்க கண்களை இறுக மூடி கொண்டு படுத்து இருந்தாள்… அவளுக்கு பயம் சற்று அதிகம்… ரத்தத்தை எடுத்த பின்ஜூசை கொடுத்தவாறே… அந்த மருத்துவர்.
“கொஞ்ச நேரம் கிடினஸா இருக்கும்… படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு போங்க…” கூறிவிட்டு போக… வலிந்து எழுந்து மலரை நோக்கி சென்றாள்… திடீரென்று ஜெயன்ட் வீலில் சுற்றுவது போன்ற பிரமை… தலையை சுற்றி கீழே விழ போன நாயகியை பாய்ந்து வந்த நாயகன் காப்பாற்றினான்… அதற்காகவே காத்து கொண்டு இருந்தது போல்!
மாறி மாறி நீயா நீயா என்று பார்த்து கொண்டவர்களுக்கு உலகம் மறந்து போயிற்று!
“நரேஷ் பேசாம கிள்ளி பாரு” என்று மனம் ஐடியா குடுக்க… கிள்ளினான்!
“ஆஆ அம்மா…” என்று கத்தியவள் அவனை முறைத்தாள்… அவனோ சிரித்து கொண்டு
“நிஜம் தான்! நான் கூட என் கண்ணுக்கு மட்டும் தான் நீங்க தெரியறிங்கன்னு நினைச்சேன்! ”
அடிக்கடி அவளது அலுவலகத்திற்கு தனது நண்பன் ஒருவனை காண வரும் போது ஏற்பட்ட பழக்கம்… ஆனால் ரகசியம் என்னவென்றால் துவாரகாவை பார்க்கவென்றே அவன் வருவது அவள் அறியாத ஒன்று! ஆனாலும் துவாரகாவின் மனம் அவனது வருகையை எப்போதும் எதிர்பார்க்கும்… இவன் பொருட்டே திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே இருந்தாள் என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை.
“அடப்பாவி! அதுக்கு உங்களை கிள்ளிக்க வேண்டியது தானே? என்னை கிள்ளி தான் நீங்க தெரிஞ்சுக்கனுமா? ”
“எல்லாம் ஒரு பொது சேவைதான்! ”
“ரொம்ப தான் பொது சேவை பண்றீங்க… ஆமா நீங்க எங்க இங்க? ”
“எங்க பாஸ் கூட ரத்ததானம் பண்ண வந்தேன் துவாரகா! ” கிண்டலை கைவிட்டு விட்டு கூறினான்!
“நானும் தான்… என் பிரெண்ட் கூட வந்தேன்! டொனேட் பண்ணதான்… சரி உங்க பாஸ் எங்க? ”
“அதோ வராரே… அவர் தான்…” என்று அப்போதுதான் வந்து கொண்டு இருந்த ஹர்ஷாவை காட்ட.
“ஓ நீங்க ஹர்ஷா சார் கிட்ட தான் வேலை பார்க்கறீங்களா? ”என்று சுரத்தே இல்லாமல் சொல்ல.
“ஏன் ஒரு மாதிரியா சொல்றீங்க? ” குழப்பமாக பார்த்தான்.
“என் பிரெண்ட் கிட்ட ரொம்ப வம்பு பண்ணிட்டு இருக்கார்… பாவம் நரேஷ் அவ… இவரால ரொம்ப மனசு கஷ்டப்படறா…” அவள் கூறியபோது அவள் யாரை சொல்கிறாள் என்பது புரிந்து போனது.
“ஓ மலர் மேடம் உங்க பிரெண்டா! ” உள்ளே சென்ற குரலோடு!
“அந்த அளவு தெரியுமா? அப்போ காரணமாத்தான் இங்க வந்திருக்கீங்க…”
“ஹர்ஷா வம்பு வளர்த்துட்டு இருக்கஒரே பொண்ணு மலர்விழி மேம் தான்! சரி மத்தவங்கள விடுங்க… நம்மள பத்தி பேசுங்க…” என்று கிடிக்கி பிடி போட!
“நம்மள பத்தி பேச என்ன இருக்கு? ”
“ஏன் இல்லாம துவாரகா? எனக்கு உங்களை பிடிச்சிருக்கு… உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு…” என்று அவன் சொல்லிக்கொண்டே போக.
“ஸ்டாப் ஸ்டாப்… என்ன நீங்க? உங்களை எனக்கு பிடிச்சிருக்கா? உளறாதீங்க நரேஷ்…” சிவந்த முகத்தை மறைத்தபடி அவள் மறுக்க… அதை கண்டுகொண்ட நரேஷ் சிரித்து கொண்டே.
“அப்படியா? நிஜமா… அப்போ என்னை பார்த்து பேச வேண்டியதுதானே…”
“ஏன் பேச முடியாதா? “ என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனது பார்வை ஏதோ செய்ய வலுகட்டாயமாக முகம் தாழ்ந்தது! அவளுக்கு நெருக்கமாக வந்தவன்,
“நான் இல்லாதப்போ ரம்யா கிட்ட என்னை பத்தியெல்லாம் விசாரிக்க தெரியுதில்லை… இப்போ நான் உன்னை விரும்பறேன்னு சொல்றேன்… இப்போ ஒன்னும் பேசாம முகத்தை தொங்க போட்டுகிட்டா எப்படிடி பூசணிக்கா? ”
கிசுகிசுப்பாக அவன் கூறிகொண்டிருப்பதை மயக்கத்தோடு கேட்டு கொண்டிருந்தவளை கொதித்தெழ வைத்தது அவனது பூசணிக்கா என்ற கிண்டலான அழைப்பு! அவள் ஒன்றும் அப்படி குண்டு இல்லையென்றாலும் ஒல்லியும் இல்லை… சற்று பூசியது போன்ற தேகம்… ஆரோக்கியமான தோற்றத்தில் இருந்தவளாகையால் அவனை சற்று அதிகமாகவே கவனித்தாள்!
“யூ யூ… ஸ்டுபிட்… நான் பூசணிக்காயா? வேணும்னா ஒரு கொத்தவரங்காய பார்த்து பிடிக்க வேண்டியதுதானே? எதுக்கு என்னை லவ் பண்ற? பிசாசு…” பொய் கோபத்தில் அடித்த அவளது கைகளை இறுக்கமாக பற்றி கொள்ள… வெட்கத்தோடு இயைந்து நின்றாள்!
*****
மலர்விழி தன் வேலை முடிக்கையில் துவாரகாவை தேட, அவள் கண்களில் சிக்கினான்ஹர்ஷா! அவனும் அவளை தான் பார்த்துகொண்டிருந்தான்… அவளை பார்க்கவென்றுதானே வந்ததே… ஆனால் ஒரு பெண்ணை வெறுமனே பார்க்கவென்று வருவது இதுதான் முதன் முறை என்பதை அவனும் உணரவில்லை.
இவன் எங்கே இங்கே என்று குழப்பமாக அவனை பார்க்க அவளது பார்வையின் பொருளை உணர்ந்து… அருகில் வந்து புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க… நரேஷ் ஹர்ஷாவிடம்.
“ஹர்ஷா… இதுதான் துவாரகா…” என்று அவனிடம்அறிமுகப்படுத்த.
“ஓ… அந்த பொண்ணா… உங்க பேச்சு வந்துச்சுன்னா ஒரு மணி நேரம் பீல் பண்ணுவான் துவாரகா “ என்று சிரிப்பினூடேகூற… முகம் சிவக்க வெட்கி சிரித்தாள் துவாரகா.
இவர்களை பார்த்து திகைத்த மலர்.
“ஏய் டுவாப்ஸ்! என்னடி நடக்குது இங்க? ” புரியாமல் தனது தோழியை கடித்தாள்!
அவளோ வெட்கத்தில் கிணறு தோண்டும் முயற்சியில் இறங்க… ஹர்ஷா மலரை சிறுசிரிப்போடு பார்த்து கொண்டே.
 “நரேஷ்… எப்போடாட்ரீட்…”
“ஓகே… ஓகே… இன்னிக்கு ஈவினிங் உனக்கு ஓகே வா துவாரகா? ” அவளை கருத்து கேட்க அதற்கும் ஹர்ஷா கிண்டலடிக்க… துவாரகா வெட்கத்தோடு தலையாட்டினாள்!
“ஓகே ஈவினிங் செவன்… சோழா ஷெரட்டன்… மலர் மேடம்… நீங்களும் அவசியம் வரணும்… நம்ம நாலு பேர் மட்டும் தான்” என்று மலரை பார்த்து கேட்க.
“இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு! என்னால வர முடியாது! ” என்று தடுமாறினாள்… அவளை பார்த்து ஹர்ஷா ஏளனமாக
“நரேஷ்… அவங்களே என்னை பார்த்து பயந்துட்டு இருக்காங்க… இதுல வேற நீ டின்னர்கெல்லாம் கூப்பிட்டா… நடுங்கிட மாட்டாங்களா…? ”
கண்களை சிமிட்டிகொண்டு சொன்னவனை பார்த்து பற்றி கொண்டு வந்தது மலருக்கு! சிலிர்த்து எழுந்தாள்… அவனுக்கு வேண்டியது அதுதானே… அவளை நாடி பிடித்து வைத்து இருந்தான் ஹர்ஷா.
“யாருக்கு பயம்? எனக்கா? ! ” என்று வீராப்பாக கேட்க.
“பின்ன எனக்கா? அதைஈவினிங் வந்து ப்ரூவ் பண்ணுங்க! ” இயல்பாக அவளிடம் வாயாடியவனை கண்டு மலைத்தனர் மற்ற இருவரும்… மலரோ அவன் எங்கு வருகிறான் என்பது புரியாமல்.
“கண்டிப்பா” என்று சொல்லிவிட்டு விழித்தாள்!
“ஹஹா ஓகே… சரி நரேஷ் கிளம்பலாமா? ”என்று சிரித்து கொண்டே சொன்னவனை பார்த்த போதுதான் தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவனது வழியிலேயே சென்று ஒத்து கொண்டது புரிந்தது!
“ச்சே… எப்படி ஒத்து கொண்டேன்? புரியலையே! ” என்று குழம்பினாள்… நிமிர்ந்து அவனை பார்த்து முறைத்தாள். முறைத்தவளை பார்த்து சிரித்து கொண்டே ரகசியமாக கண்சிமிட்ட… மலருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!