UEU4

UEU4

அத்தியாயம் 7
விருந்துக்கு செல்ல தயாராகி வந்தவளை பார்த்த துவாரகா மலைத்து நின்றாள். மலர் அலங்காரமில்லாமலே அழகு! … இப்போது அந்த அழகு பேரழகாக ஒளிர்ந்தது!
எளிமையான ரோஜாப்பூ நிற டிசைனர் சாரியில் இடையை தாண்டிய கேசத்தை தளர பின்னலிட்டு ஒப்பனையே இல்லாமல் வானுலக தேவதை மண்ணில் வந்தது போல் இருந்தவளை பார்த்த துவாரகா மலைத்து போனாள்! முகத்தில் அறிவின் தீட்சண்யம் ஒளிர்ந்தது.
“வாவ்… சூப்பரா இருக்கடி… அதான் உன் மேல ஹர்ஷாவுக்கு செம க்ரஷ் போல மலர்…”
“அப்படி ஒரு எண்ணம இருந்தா அழுச்சுடு டுவாப்ஸ்… நான் தற்கொலை பண்ணிட்டாலும் பண்ணிக்குவேனே தவிர அவன் எனக்கு சரி வர மாட்டான்… அவன் கிட்ட பணம் வேணும்னா இருக்கலாம்… எனக்கு வரவன் ஸ்ரீராமனா தான் இருக்கணும்! எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும்! நான் எதிர்பாக்குற இந்த குணம் எல்லாம் அவன் கிட்ட சுத்தமா இல்ல… தயவு செஞ்சு அப்படி பேசாத டுவாப்ஸ்…” குரலில் வலி மிகுந்து அவள் கூறிய வார்த்தைகளை கேட்ட துவாரகா தவித்து போனாள்.
“ஓகே… அவர் மேலத்தான் வராது… வேற யார் மேல வேணும்னாலும் வரலாம் இல்லையா… ஒய் டோன்ட் யூ கன்சிடர் எ மேரேஜ்? நீ செட்டிலாக வேண்டாமா? ”
“ஹேய் செல்லம்! உன் சின்ன மண்டைக்குள்ள இருக்கற மூளைய இப்படியா குழப்பிக்குவ… செட்டில் ஆகறதுன்னா என்னடி லூசு? நான் சர்விஸ்ல இருக்கேன்… நல்லா சம்பாதிக்கறேன்! எனக்கு பிடிச்ச மாதிரி டைம் ஸ்பென்ட் பண்றேன்… என்னால முடிஞ்ச அளவு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்! இப்போ நான் திருப்தியா இருக்கேன்… இதுக்கு மேலே என்னடி செட்டில் ஆகவேண்டியது இருக்கு…? ”
பேசி கொண்டு இருக்கும் போதே செல்பேசி அழைக்க.
எடுத்து பேசிய துவாரகா.
“சொல்லுங்க நரேஷ்…”
“என்னடா கிளம்பியாச்சா? நாங்க பிக் அப் பண்ண வரவா? ”
“இல்ல நரேஷ்… மலர் டியூட்டி இல்லாத டைம்ல ஆபீஸ் காரை எடுக்கவும் மாட்டா… அடுத்தவங்க வண்டில வரவும் மாட்டா… நாங்க எங்க ஸ்கூட்டில வந்துடறோம்… நீங்க முன்னால போங்க…”
செல்பேசியை வைத்து விட்டு மலரை பார்த்து புன்னகைத்தாள்! .
“சீக்கிரம் வா மலர்! . அவங்க முன்னாடி போறாங்க! நாம பின்னால போகலாம்…”
அவள் பேசியதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த மலர்.
“டுவாப்ஸ்! நீ பால் மனம் மாறாத பச்ச பாப்பான்னு நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்குன்னு நிருபிச்சுட்ட! ”
எப்படியாக இருந்தாலும் ஹர்ஷா வண்டியில் போவதற்கு தான் ஒத்துக்கொள்ள போவதில்லை என்பதை புரிந்து கொண்டு செயல்பட்ட தன் தோழியை பெருமையாக பார்த்து கொண்டே அவளை கலாய்த்து கொண்டு இருந்தாள்.
********
“இந்த வண்டில வந்தா அவ கற்பு போயிருமா நரேஷ்… ஏன் இப்படி பிகேவ் பண்றா…” மலரை பற்றி நரேஷிடம் கொதித்து கொண்டு இருந்தான் ஹர்ஷா.
“அது அவங்க இஷ்டம் ஹர்ஷா… அதுல நாம என்ன பண்ண முடியும்… அதுவும் இல்லாம ஒரு பொறுப்பான பதவில இருக்கறாங்க… அதனால ஒரு சில etiquitte மெய்ன்டைன் பண்ண நினைக்கலாம்… அவங்க பர்சனல் ஸ்பேஸ்ல நாம ரொம்ப மூக்க நுழைக்க கூடாது ஹர்ஷா…”
“இவ இப்படி எல்லாம் பண்றதுனால தான் இன்னும் வம்பிழுக்க தோணுது… ஓகே லீவ் இட்… அந்த ஓ எம் ஆர் விஷயம் என்ன ஆச்சு? கோர்ட் ஆர்டர் வந்துடுச்சா? இன்னிக்கு செம பிசி… அதான் என்னால கேக்கவே முடில… நமக்கு சாதகம் தானே? ”
இதை கேட்டவுடன் நரேஷ் முகம் வெளுத்தது.
“இல்லை ஹர்ஷா…”
“வாட்…” காரை சரக்கென்று பிரேக் போட்டு நிறுத்தியதில் வழுக்கி கொண்டு நின்றது… யாரும் வராத தெருவென்பதால் ஒன்றும் நேரவில்லை!
“ஆமா ஹர்ஷா ரிசல்ட் நமக்கு சாதகமா இல்ல… இப்போ கொஞ்ச நேரம் முன்னாடிதான் கோர்ட் ஆர்டர் வந்துருக்கு… நிர்வாகம் அவங்க வேலைய செய்யலாம்னு சொல்லி… இப்போ காஞ்சிபுரம் நிர்வாகம் நமக்கு பிரச்சனை இல்ல ஹர்ஷா… ஆனா பாதி கன்ஸ்ட்ரக்ஷன்க்கு மேலே நடந்து இருக்கறது சென்னை அட்மின்ல… மலர் மேடமை சரி கட்ட முடிஞ்சா பரவால்ல… இல்லைனா ஒன்னும் பண்ண முடியாது…” என்று சொல்லி முடிக்க… சிந்தனை வயபட்டவன் சிறிது நேரம் கழித்து
“அவ என் கன்ஸ்ட்ரக்ஷன்ல கை வெச்சுடுவாளா… வைக்க விட்டுருவேனா… பாத்துக்கலாம்… இந்த போட்டி முடியவே முடியாது போல…”
“அவங்க கிட்ட offensiveவா இருக்காத ஹர்ஷா… தேவை இல்லாம சீண்டி விடறாப்ல ஆகிட போகுது…”
என்று உண்மையை இவன் கூற.
“ஹஹஹா… கண்டிப்பா இப்போ தான் சீண்ட போறேன்… என்ன தான் பண்ணிடுவா? நானும் தான் பாக்குறேன்…”
ஒரு மாதிரியான குரலில் கூறியவன்… செல்பேசியில் யாரையோ அழைத்து பேசினான்!
*******
மெலிதான இசை அந்த இடத்தை நிறைத்தது… இனிய மணம் நாசியை தழுவி செல்ல மெல்லிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குளித்திருந்த இடத்தில் நரேஷும் ஹர்ஷாவும் அமர்ந்து இருக்க… வானத்து தேவதையை போல வந்த மலரை பார்த்து மூச்சு விடவும் மறந்து போனான் ஹர்ஷா!
“இவள் மட்டும் இப்போது என்னுடையவளாக இருக்க கூடாதா” என்று மனம் கேட்க… அது போன திசையை பார்த்து அதிர்ந்தான்.
ஏன் தன் மனது இப்படி அவளில் லயிக்கிறது என்று புரியாமல் குழம்பினான். இவளை விடவும் அழகிகளிடம் பழகாதவனா தான்… இல்லையே! அப்படி இருக்கும் போது ஏன்? பதட்டத்தில் அவளது அழகும் நளினமும் நிதானமும் அவனை பெரிதும் வசீகரித்தது!
நரேஷ் துவாரகாவிடம் பேசிக்கொண்டிருக்க… ஹர்ஷா மலரை பார்த்து
“என்ன ஆர்டர் பண்ண? ” என்று கேட்க… சற்று தயங்கி கொண்டு யோசித்தவள்
“ம்ம்ம்ம்… ப்ரைட் ரைஸ்… கோபி மஞ்சுரியன்”
“ஏன் நீங்க நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களா? ”
“ம்… நான் ப்யூர் வெஜ்” அவனை நிமிர்ந்து பார்க்கவும் பிடிக்காமல் அவள் கூற அவனோ அவளை தவிர வேறு எதையுமே பார்க்க விரும்பாதவனாக இருந்தான்… நான்கு பேருக்கு தேவைபட்டதையும் கூறி பேரரை அனுப்பினான்.
அவன் சொன்னவற்றை பார்த்து மலர்.
“இதெல்லாம் எத்தனைபேருக்கு? அதுவும் இத்தனை நான் வெஜ் ஐட்டம்? ”
“கண்ணு போடாதீங்க மேடம்… நான் ப்யூர் நான் வெஜ்… அதுவும் இல்லாம உங்களை மாதிரி என்னால ஸ்டைல் சாப்பாடு சாப்பிட முடியாது! ”
பேசி கொண்டு இருக்கும் போது மலருடைய செல்பேசி அழைக்க… எடுத்து பேசியவள்… வெகு சன்ன குரலில்.
“ம்ம்ம் ஓகே… நான் பார்த்துக்கறேன்… நாளைக்கு ஜிஓ போட்டுடலாம்…” என்று கிசுகிசுக்க… நரேஷை அர்த்தமாக பார்த்தான் ஹர்ஷா!
அவள் பேசும் போதே புரிந்தது… அவள் கோர்ட் தீர்ப்பு பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறாள் என்று… மூளை பரபரப்பாக யோசித்தது.
தனியாக சென்று செல்பேசியில் பேசிவிட்டு வந்தவன் அவளுடன் பேசியபடி உணவு உண்டான்… நிறைய விஷயங்களில் இருவரும் நேர் எதிர் கருத்தை கொண்டிருந்தாலும் இருவருமே அந்த கருத்துபரிமாற்றங்களை விரும்ப தொடங்கி இருந்தனர்… இணைக்கு இணையாக ஆரோக்கியமாக விவாதிப்பதில் உள்ள சுகமே தனிதான் அல்லவா! … சாப்பிட்டு விட்டு பிங்கர் பௌலில் கை கழுவி விட்டு எழுந்து நகர போனவளுக்கு சட்டென்று கால்கள் தடுக்க… சரிந்து விழ போனவளை இடுப்பில் கைகொடுத்து நிறுத்தினான் ஹர்ஷா.
மின்சாரம் தாக்கிய உணர்வு! இடுப்பில் கைககொடுத்து நிறுத்தியவன், அந்த கைகளை எடுக்க முடியாமல் திணறினான். வழுவழுப்பான அந்த பிரதேசம் அவனது கைகளை தன்னிடமே இருத்தி கொள்ள விழைந்தது. எவ்வளவு மென்மை.
ஏதோ மின்னல் அடித்தது போல ஒரு உணர்வு மலருக்கு… போட்டோ பிளாஷ்? இருக்க கூடுமா? ச்சே ச்சே இருக்காது… ஆனால் கண்ணில் மின்னியதே… விழ போன நேரத்தில் அவன் இடுப்பில் கை வைத்து தாங்கிய போது… பிரமையா? சுற்றிலும் பார்த்தாள்… எல்லோரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டு இருந்தனர்… பிரமை தான்!
நெருக்கமாக அவனை பார்த்தவள் அரண்டு தான் போனாள்.
“தேங்க்ஸ்…”
“இதுக்கு போயா? இன்னும் எப்போ எல்லாம் விழுவீங்கன்னு சொல்லுங்க… நான் வந்து பிடிச்சுக்கறேன்”என்று கூறி சிரிக்க.
அந்த அழகான சிரிப்பை பார்த்து மயங்கினாள்… என்ன அழகான சிரிப்பு… மாய கண்ணனின் சிரிப்பு!
முகம் சிவந்தது… மலருக்கு!
அத்தியாயம் 8
சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்.
எப்பொழுதும் தான் விழிக்கும் போது கேட்க விரும்பும் பாடல்… மலருக்கு எப்பொழுதுமே இந்த ஷஷ்டி கவசத்தின் மீது அலாதி ப்ரியம்… நான் உன்னுடன் எப்பொழுதும் இருக்கிறேன் என்று முருக கடவுள் தன்னுடன் மானசீகமாக பேசுவதாகவே உணர்வாள். துன்பம் வரும்போதெல்லாம் அவள் வாயிலிருந்து அவளை அறியாமல் வருவதும் ‘காக்க காக்க’ தான்.
அதிகாலை யோகாவை முடித்த கையோடு குளித்து முருக கடவுளை வணங்கி சாம்பிராணி மனத்தோடு வரும் காபி மணத்துக்கு ஈடு இணை இல்லை என்பது மலரின் தீர்மானமான கொள்கை… ஆனால் துவாரகா அதற்கு நேர்மாறான ஆள்… தார்குச்சி போட்டாலும் எழுப்புவது கஷ்டம்!
லதா அக்கா கொடுத்த காபியோடு ஜன்னல் அருகே நின்ற மலருக்கு அன்று அப்படி ரசிக்க முடியவில்லை… அவள் தான் அந்த மனநிலைகளில் இருந்து மாறி நாளாகிறதே… என்று அவனை சந்தித்தாளோ அன்று போனது தான்! .
நேற்று அலுவலகத்திலும் வெளியிலும் நடந்தது ஓடியது… தன் கடமையை செய்த திருப்தி இருந்தாலும் அவளுள் நடந்த விஷயங்கள் முரண்டியது!
அப்போது அலுவலகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது!
அவளின் நேரடி உதவியாளர் தீபாவிடம்,
“தீபா… எல்லாம் ரெடியா? ”
“எஸ் மேடம்… எல்லாம் எடுத்துட்டேன்…”
“மொத்தம் எத்தனை சைட் இன்னிக்கு முடிக்க முடியும்? ”
“இன்னிக்கு நாலு முடிக்கலாம் மேம்… மீதிய நாளைக்கு பாக்கலாம்… நோட்டீஸ் இஸ்யு பண்ணியாச்சு மேம்…”
“ஓகே முதல்ல OMR போலாம்…”
“ஓகே மேம்…”
பேசிக்கொண்டு இருக்கும் போதே செல்பேசி அழைத்தது… பார்த்தாள்… ஹர்ஷா! எடுக்க யோசித்தாள்… மறுபடியும் அழைத்தது… எடுத்தாள்!
“கண்டிப்பா பில்டிங்க இடிக்க தான் போறீங்க… ரைட்…? ”
“எஸ்… ரைட்! ”
“சரி இதுக்கு மேலே நான் பேச விரும்பல… ஆனா இதுக்கான விலைய நீங்க குடுக்க தான் போறீங்கமலர்விழி! ” குரலில் காரம் மிகுந்து இருந்தது.
“அத பத்தி எனக்கு கவலை இல்ல… என் கடமைய செய்றேன்… அவ்வளவு தான்” மிக இயல்பாக கூற
“லிமிட்ட கிராஸ் பண்ற மலர்விழி! ” குரலை உயர்த்தி கோபத்தை கட்டுபடுத்த இயலாமல் வெடிக்க ஆரம்பித்தான்.
மிரட்டுகிறான்!
அவள் இந்த ஆறு வருடங்களில் பார்க்காத மிரட்டல் இல்லை… ஆனால் இந்த அளவு தன்னை பாதித்ததில்லை! அவனது அணுகுமுறை தன்னை பாதிக்கின்றது! அது உண்மைதான்… ஏன்? ஆண்களுக்கு தன்னை எதிர்க்க ஒரு பெண் இருந்தால் இப்படித்தான் பலவீன படுத்த முடியுமா? வேறு வழிகளே தோன்றாதா?
ஆரம்பத்தில் இருந்து அவன் நடந்துகொண்ட முறையை எண்ணி பார்த்தாள்… ச்சே… அவனிடம் நான் பலவீனமாக ஒரு சதவீதம் கூட காட்டி கொள்ள கூடாது… நான் தோற்க மாட்டேன்! தோற்க கூடாது! கண்டிப்பாக தோற்கவே கூடாது!
*******
பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தது! இடிப்பதற்கு ஆட்களும் தயாராக இருந்தனர். அலுவலக ரீதியிலான நோட்டீஸ் முன்பே கொடுக்க பட்டு இருந்தாலும் அரசாங்க ஆணையை இன்னொரு முறை HR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக அதிகாரியிடம் தந்தவர்கள்… கட்டிடங்களை இடிக்க ஆயத்தமானார்கள்.
கடைசியாக வந்த மலர் கோப்புகளை சரி பார்த்து இடிக்க உத்தரவு பிறப்பித்தாள்.
மிகுந்த வேகத்துடன் வந்த அந்த ஆடி காரிலிருந்து நிதானமாக இறங்கிய ஹர்ஷாகோப்புக்களை வாங்கினான். அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆச்சரியம்! சேர்மன் நேரில் வந்தது!
ஒன்றும் சொல்லாமல் நிதானமாக கைகளை கட்டி கொண்டு மலரை பார்த்து கொண்டு இருந்தவனை பற்றி மலரால் முடிவு செய்ய முடியவில்லை. எப்படியும் கோபத்தில் வெடிப்பான், மிரட்டுவான் என்று தான் எதிர்பார்த்ததுக்கு நேர மாறாக அவன் நிதானமாக இருப்பது மலருக்கு ஆச்சரியத்தையே அளித்தது! ஆனாலும் அவன் நிதானமும் ஒரு வகையில் ஆபத்தானதாகவே தோன்றியது!
செல்பேசி அழைத்தது.
அவசரமாக உதவியாளர் கொண்டு வந்து குடுத்த செல்பேசியை வாங்கி பேசியவளுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் வெளியில் ஒன்றும் காட்டி கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் பேசியது முதலமைச்சர்!
கட்டிடத்தை இடிப்பதை கைவிட சொல்லி சொல்ல.
மலர் அப்போது என்ன செய்ய? சரி என்பதை தவிர.
உதவியாளரை கூப்பிட்டு ஆர்டரை கேன்சல் செய்தவள், ஹர்ஷாவை எரிப்பது போல் பார்த்து கொண்டு சென்றாள்.
“இதற்குத்தானா இவன் இப்படி நிதானமாக நின்று கொண்டு இருந்தது… ச்சே அத்தனை பேருக்கு முன்னாடியும்… தனக்கு இப்படி ஒரு தலைகுனிவா?
செய்வதையும் செய்துவிட்டு போஸ் குடுப்பதை பார்… எருமை எருமை…” என்று பலவாறாக உள்ளுக்குள் அர்ச்சனை நடத்தியவளுக்கு அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்கவில்லை. முள் மேல் நிற்பது போன்ற உணர்வு! அதுவும் அவன் முன்னால் இப்போது நிற்பது மிகுந்த உளைச்சலை தர.
உதவியாளர் தீபாவிடம்,
“தீபா… இன்னிக்கு என்னோட என்கேஜ்மென்ட்ஸ கான்ஸல் பண்ணிடு… நாளைக்கு பார்த்துக்கலாம்… இன்னிக்கு எனக்கு தலைவலி”
“ஓகே மேம்! எல்லாரையும் டிஸ்பேர்ஸ் ஆக சொல்லிடறேன்! ”
அவளிடம் சொல்லி விட்டு காரை நோக்கி செல்ல… வழிமறித்த ஹர்ஷா
“மலர் உங்க கிட்ட பேசணும்! ”என்றான்… மிகவும் சிரித்த முகத்துடன்!
அவனை பார்க்கும் போதே கடுப்பாக வர… அதே உணர்வுடன்
“என்ன பேசணும்…? அதான் நீங்க சாதிச்சுகிட்டீங்க இல்ல… அப்புறமும் என்ன? ” என்று கேட்க
“கொஞ்சம் பேசணும்… கூட வரிங்களா இல்லையா? ”புன்னகை மாறாமல்!
“என்ன பேசறதுனாலும் இங்கேயே பேசுங்க! ”
“அப்படியா… இங்க பிரஸ் ஆளுங்க கூட இருக்காங்களே… பரவால்லையா? ”என்று ஏளனமாக கேட்டான். சுற்றி இருந்த பத்திரிக்கையாளர்கள் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தார்கள்!
கோபம் முகத்தில் மின்ன “பரவால்ல சொல்லுங்க…” என்றாள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று கொண்டு இருந்தவர்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்ததை கவனித்த மலர் அவனை துரித படுத்தினாள்.
அவனோ புன்னகை மாறாமல் அருகில் வந்து,
“நாளைய தேதியை உங்களால் மறக்கவே முடியாது மலர்…” என்று நிதானமாக கூறி கண்களை நேராக பார்த்து மிகவும் நெருங்கி வந்து
“யு ஆர் டிராப்ட் மலர்… ஐ மீன் இட்… ஓகே செல்லம் பை! ”என்று கூறி விட்டு பெரிதாக புன்னகைத்து விட்டு சென்றான்.
படபடவென அடித்து கொண்ட மனதை அடக்கி கொண்டு பின்னோக்கி வந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை! அதிலும் அவன் கூறுவதை கேட்டவளுக்கு சரியான திமிர் பிடித்தவன் என்பதை தவிர வேறெதுவும் கூற முடியவில்லை.
ஏன்? என்ன? புதிதாக என்ன செய்து விட போகிறான்?
அலட்சியமாக சென்றவளுக்கு தெரியவில்லை… நாளை எத்தகைய சிக்கலில் மாட்ட போகிறோம் என்று.
******
   காலை காபியை சுவைத்து கொண்டே நினைவுகளை அசை போட்டு கொண்டு இருந்தவள் செல்பேசி அழைப்பை கேட்டு இவ்வுலகம் வந்தாள்!
பேசியது நெருங்கிய தோழி! இப்போது என்ன இந்த அதிகாலையில்?
பொதுவாக மாலை நேரம் இல்லையென்றால் மதிய நேரங்களில் மட்டுமே தன் தோழியர் அழைப்பது வாடிக்கை… ஏனென்றால் முக்கால்வாசி பேருக்கு திருமணமும் ஆகி குழந்தை கணவனுடன் வசிப்பவர்கள். காலை நேர வேலை காரணமாக அதிகாலையில் செல்பேசி பேசுவது அவர்களுக்குள் சரிவராத ஒன்று. மிக முக்கிய விஷயமாக இல்லாவிட்டால் ஒழிய காலை நேரத்தில் அழைக்க மாட்டார்கள்.
இவள் ஏன் அழைக்கிறாள்? இதை யோசித்து கொண்டே எடுத்தவள்,
“ஹாய் மங்குஸ்… என்னடி காலைலேயே? ”
“அடி களவாணி கழுதை… முக்கியமான விஷயத்த மறைச்சுட்டல்ல! ” குரலில் குறும்பும் கேலியும் கொப்பளிக்க கேட்டாள்!
“ஹேய்… என்னம்மா தாயே… நான் ஒரு விஷயத்தையும் மறைக்கிலையே… என்னடி ஆத்தா உளறுற? ”
“அடிப்பாவி… கொலைகாரி… நானா உளறுறேன்… சொல்லுவடி சொல்லுவ… பேப்பர் எடுத்து பாரு உன்னை பத்திதான் போட்டுருக்கு… விஷ் யு ஆல் தி பெஸ்ட் கண்ணா! ” என்று சந்தோஷமாக சொல்ல!
“ஹேய் லூசு… ஒண்ணுமே புரியல…” என்று குழம்பினாள் மலர்.
“ஆத்தா பேப்பர் பாத்தியா இல்லையா? ”
அவசரமாக அன்றைய செய்தித்தாளை எடுத்தவள்… முதல் பக்கத்தை பார்த்தவுடன் அதிர்ந்தாள்!
அவள் காலடியில் இருந்த பூமி நழுவியது.
தொழிலதிபரின் புதிய காதலி மலர்விழி IAS
கொட்டை எழுத்துகளில் முன் பக்கத்தை செய்தி ஆக்ரமித்து இருக்க… அன்று இரவு விருந்தின் போது சேர்ந்து உள்ளது போல் மிக நெருக்கமாக இருக்கும் புகைபடமும் வெளியாகி இருந்தது!
எப்படி… இப்படி ஒரு புகைப்படம்? ஹா… அன்று கண்ணில் மின்னல் மின்னியது பொய் இல்லை… திட்டமிட்டே இதை செய்திருக்கிறான்!
இந்த அளவும் ஒருவன் போக கூடுமா? பழிவாங்க மட்டுமே? இவன் என்ன மனிதனா? மலர்விழிக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது… நேற்று அவன் கூறியது காதுகளில் ஒலித்தது!
நாளைய தேதியை உங்களால் மறக்கவே முடியாது!
பழிகார பாவி… செய்தே விட்டான்.
கண்களில் அருவி பொங்கியது!
முருகா! ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்? இப்படி அபாண்டமாக செய்தி வரவழைத்து இருக்கிறானே… உண்மையாக இருந்தேன்! சத்தியத்தை கடைபிடித்தேன்! அதற்கு இப்படி ஒரு பழியா?
இது அவனுக்கு அவமானமில்லையா? அவனுக்கு குடும்பம் இல்லையா? அவர்கள் கேட்க மாட்டார்களா? அனைத்தையும் துடைத்து விட்டு செல்பவனுக்கு இதுவும் இயல்பான ஒன்றாக இருக்கலாம் ஆனால் சுயமரியாதையும் தன்மானமும் பெரிய விஷயங்களாக நினைக்கும் தனக்கு?
கண்களை துடைத்து கொண்டு… மங்கையிடம் செல்பேசியில் ஒன்று இரண்டு விஷயம் பேசி விட்டு வைத்தாள்!
பின்னர் இதே தொடர்கதையானது! செய்தித்தாளை பார்த்து விட்டு பேசியவர்களுக்கு அது உண்மை இல்லை என்று கூறியே மலர்விழி ஓய்ந்து போனாள்! துவாரகாவுக்கு மலரை பார்க்க பார்க்க பாவமாக இருந்தது! தலையில் கையை வைத்து அமர்ந்தவள் எழவில்லை… ஹர்ஷாவுக்காக மலரிடம் சார்ந்து பேசியதை நினைத்து தன்னை தானே நொந்துகொண்டாள்!
மிகவும் கோபமாக நரேஷை அழைத்து கடி கடி என்று கடித்து விட்டு பின்னர் மலரை சமாதானபடுத்த முனைந்தாள்!
செல்பேசி மறுபடியும் அழைத்தது!
பிரைவேட் நம்பர்!
எடுத்து பேசினாள் மலர்விழி!
“என்னடா செல்லம்! நியூஸ் பாத்தீங்களா? ”
மெளனமாக கேட்டு கொண்டு இருந்தாள்!
“ஹேய் என்ன… ஒன்னும் பேச மாட்டேங்கறீங்க… எதாச்சும் கருத்து சொல்லுங்க கலெக்டர் மேடம்… அடுத்த நியூஸ் போடுபோது சேர்க்க சொல்றேன்! ”
“நீ மனுஷனா? ” ஒற்றை வார்த்தையில் குமைந்தாள்.
“கலெக்டர் மேடம்… டிவி நம்ம டிவி… பேப்பர் நம்ம பேப்பர்… அப்படி இருக்கும் போது நான் சொல்றதுதான் நியூஸ்… பாத்தீங்க இல்ல… நான் செஞ்சது தப்புன்னு எல்லாத்தையும் விட்டுடுங்க… நானும் நியூசை வாபஸ் வாங்கிக்கறேன்… என்ன ஓகே வா? ”
பெருகி வந்த கோபத்தை கட்டுபடுத்திய மலர்,
“நீ எவ்வளவு தான் செஞ்சாலும் அந்த ஒன்னு மட்டும் உன்னால முடியவே முடியாது ஹர்ஷா… ஐ மீன் இட்”
“முடியுதா முடியாதான்னு இனிமே தான பார்க்க போற… கண்டிப்பா என் கால்ல மட்டும் விழ வைக்கறது இல்ல… இன்னும் பச்சையா சொல்ல போனா என் படுக்கைல விழ வைப்பேன்டி…” என்று நிதானமாக கூற ஆரம்பித்தான் ஹர்ஷா!
பெரும் சிரிப்பு சிரித்த மலர்.
“நல்லா ஜோக் பண்ற ஹர்ஷா… நீயும் கேட்டுக்கோ… நீ பண்ற தப்ப நினச்சு… என் கிட்ட இப்படி நடந்துகிட்டோமேன்னு நினச்சு அழ தான் போற… அதையும் நான் பார்க்கத்தான் போறேன்… எனக்குன்னு யாரும் இல்ல… அதனால இழக்க ஒன்னும் இல்ல… இது வரைக்கும் கறை படாம இருந்த என்னோட பேருக்கு களங்கத்த சுமத்திட்ட… இதுக்கு நீ வருத்தபடபோற காலம் வரத்தான் போகுது! ”
செல்பேசியை வைத்தவளுக்கு இன்னும் அந்த கோபத்தின் வீர்யம் இருந்தது… உடல் நடுங்கி கொண்டு இருந்தது… கண்களில் நீர் பெருக பார்த்தது.
அழ கூடாது… இனிமேல் அழ கூடாது… எதற்கு அழ வேண்டும்… அழ வேண்டியவன் அவன்… அவனை தான் அழ வைக்க வேண்டும்!
என்ன நினைத்து இதை செய்தாய்?
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னசிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பமிகு உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுன்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலயானும்
 வீழ்வேன் என்று நினைத்தாயோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!