Un Kannil Inbangal Kanbein

Un Kannil Inbangal Kanbein

7

மறைவிடத்தில் சந்த்ரு நின்று கனியை நோட்டம் விடும் போது ஈஸ்வரை ஆம்புலன்ஸில் ஏற்றியிருக்க, கூர்ந்து ஈஸ்வரின் முகத்தைப் பார்த்த சந்த்ரு, சத்தம் வராமல் இதழ் பிரித்து,

“ஐ லவ் யூ ஜாகீர் உசேன்..” என்றான் வெற்றிச் சிரிப்பில்..

அவன் அகன்று, கனியும் பல குழப்பத்துடன் அங்கிருந்து விலகியதும் மறைந்திருந்த இடத்தைவிட்டு வெளியே வந்தவனின் போன் இசைந்தது..

தனது கையில் இருந்த ஈஸ்வரின் எண்ணுக்கு வந்த வெளிநாட்டு நெட் அழைப்பை ஏற்ற சந்த்ரு அதைக் காதுக்கு கொடுத்து மவுனம் காக்க,

“ஃஹூ இஸ் திஸ்..?” என்றான் போன் செய்தவன்,

எதிர்முனையில் பேசுபவனின் குரலை உள்வாங்கி கொண்டவன், தனது மற்றொரு எண்ணில் இருந்து அவன் பேசிக் கொண்டிருந்த அதே எண்ணுக்கு அழைப்புவிடுக்க, இப்போது அந்த வெளிநாட்டு அழைப்பை ஊடுருவி அட்டென்ட் ஆனது இவனது மற்றொரு எண்..

சந்த்ரு அட்டென்ட் செய்து கான்பெரென்ஸ் போட முனையும் போதே, “யார் உனக்கு கால் பண்ணுறா..?” என ஆங்கிலத்தில் கேள்வி கேட்டது அந்த கனீர் குரல்,

அந்த குரலின் கேள்விக்கு சாகும் தருவாயில் ஈஸ்வர் கூறிய இறுதி வார்த்தையான “ப்ளாக் கோஸ்ட்” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வர,

“பளாக் கோஸ்ட்..” என எதிர்முனையின் இருப்பவனை அழைத்தான் சந்த்ரு..

சந்த்ரு அழைத்ததும் இடியென சிரித்த எதிராலி, “எஸ்..இட்ஸ் மீ..சாவு வரப்போறதை முன்கூட்டியே தெரிஞ்சு வச்சிருக்க போல..” என்றவனின் தமிழ் கதைப்பில் புருவம் சுருக்கிய சந்த்ரு..

“மை லவ் ப்ளாக் கோஸ்ட்…லெட்ஸ் கவுன்ட் தி டே..” என மிதப்பாய் சந்த்ரு சொல்லியதும், ஆக்ரோஷமாய் சிரித்தவன்,

“நான் உன்னை எப்போ பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும்..” என்க

“ச்சூ..” பாவமாய் நாக்கைத் துருத்தி சத்தமெழுப்பிய சந்த்ரு,

“நீ என்னை எப்போ பார்க்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்..அதே போல நான் உன்னை எப்போ மீட் பண்ணனும்னும் நான் தான் முடிவு பண்ணுவேன்…”

சந்த்ருவின் பேச்சில் ஒரு நிமிடம் அமைதி காத்த ப்ளாக் கோஸ்ட், “லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம் மை மேன்..” என உரக்கச் சொல்லி போனை வைத்திருந்தான்..

இணைப்பு துண்டிக்கப்பட்டதும் கையில் இருந்த கர்சீப்பால் முகத்தை அழுந்தத் துடைத்தவன் பைக்கை கிளப்பினான்..

ஓரமாய் பைக்கை நிறுத்தியவன் வீட்டிற்குள் நுழைய, அதற்குள் கனியை ஃபாலோ செய்த அந்த வாலிபன் தனது கஸ்டடியில் இருப்பதாய் தகவல் அனுப்பினான் ஆனந்த்.

ஆனந்திடம் இருந்து வந்த தகவலை வாய் முணுமுணுக்கப் படித்தவன், மாடிபடிகளில் ஏறிக் கொண்டே அவனுக்கு அழைப்பு விடுத்தான்..

அந்தப் பக்கம் ஆனந்த் அழைப்பை ஏற்றதும், “ஒரு நாளைக்கு ஒரு கொலை தான் பண்ண முடியும்..” என்றவன் இப்போது அவனது பதிலுக்கு காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்..

அறைக்கு வந்து தனது மடிக்கணினியை எடுத்தவன், யார் யாரிடலாமோ தனது உரையாடலைத் துவங்க, மறுபடியும் ஈஸ்வரின் எண்ணுக்கு அழைப்பு வந்தது..

இப்போது கவனமாய் தனது அறையில் பொருத்தியிருந்த மைக்கின் பக்கம் அவனது மொபைலை வைத்து அட்டென்ட் செய்து அமைதி காக்க,

“மை மேன்…” என கர்ஜனையுடன் அழைத்த கோஸ்ட்

“இன்னும் மூன்று நாளில் காத்திரு..” என ஆங்கிலத்தில் தகவல் சொல்லி அழைப்பைத் துண்டித்தது..

***

அனுஷிற்கு அன்று காலையில் இருந்தே ஏதோ விபரீதமாய் நடக்கப் போவதாய் மனம் அலறிக் கொண்டே இருந்தது..

தனது கையணைவில் படுத்திருக்கும் லீசாவின் மென்மையான ப்ரவுன் நிறக் கூந்தலுக்குள் தனது முகத்தைப் புதைத்தவன் ஆழ்ந்து வாசம் பிடிக்க , அதிகாலையில் அவன் செய்யும் இந்தச் சின்ன செய்கையை ரசித்த லீசாவும் அவனது கழுத்தில் தனது முகத்தைப் புதைத்து அவனுக்கு இசைந்து கொடுத்தாள்..

அவளின் இசைவில் தனது மன சஞ்சலத்தை ஒதுக்கி வைத்தவன் அவளது மேனியில் தனது கரங்களை அலயவிட சரியாக அவனது போன் இசைந்து தனது இருப்பைக் காட்டியது..

இசைந்த போனின் ரிங்-டோனில் இருந்தே யாரென அறிந்து கொண்ட லீசா எரிச்சலாய் ஒரு சத்தத்தை விடுக்க, லீசாவிடம் அமைதியாய் இருக்குமாறு சைகை செய்தான்..

அருகே கழற்றி வைத்திருந்த டீசர்ட்டை கழுத்து வழியே மாட்டிக் கொண்டவன் அழைப்பை வேகமாய் எடுத்துப் பேச,

“அப்பா…” என ஆசையாய் அழைத்தாள் அரசி..

“என்ன செல்லம் தூங்கலையா..?” பாசமாய் கேட்டவனின் இடது கை போனைப் பிடித்திருக்க வலது கையோ தனது அருகே இருந்த மற்றொரு எண்ணில் இருந்து வந்த குறிப்புகளை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தது..

“நோ அப்பா..நான் இன்னைக்கு யோகா க்ளாஸ் போறேன்..சோ மம்மி சீக்கிரமே கிளம்ப சொல்லிட்டாங்க..” என்றவளின் பேச்சில் அவனுக்கு கனியின் நினைவு எழ,

“ஹோ சோ சுவீட்..மம்மி எங்க டா..?” என்றவனை லீசா முறைப்பது தெரிந்தாலும் கண்டு கொள்ளவில்லை..

“மம்மி..மாமா கூட பேசுறாங்க..” என்றதும்,

“ஓஹ்..ஓடிப்போய் உங்க மாமாவும் மம்மியும் பேசுற இடத்துக்கு போய் போன குடு..” என்றவன் நிறுத்தி,

“மாமாவும் மம்மியும் பிஸியா பேசிட்டு இருந்தா அங்கேயே வெயிட் பண்ணி அவங்க ஃப்ரீ ஆன அப்புறம் போன கொடுக்கனும்..” என்றவனிடம்

“சரி அப்பா..” எனச் சொல்லி சின்னவள் ஓட,

“பார்த்து மெதுவா போ பேபி..” காதில் மாட்டியிருக்கும் இயர் ஃபோனில் தந்தையின் ஜாக்கிரதைகள் கேட்டாலும் சிட்டாய் மாடிக்கு ஓடி கனியின் அருகே இருந்த சேரில் அமர்ந்தாள் அரசி..

அரசி வந்ததைக் கவனித்தாலும் பரத்தும் கனியும் ஆழ்ந்த ஆலோசனையிலிருக்க, தந்தைச் சொல்லியதைப் போல
போனை வைத்து அமைதியாய் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தாள்..

சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவள் இப்போது காதில் மாட்டியிருந்த ஹெட் போனைக் கழற்றி பேசியைத் தலைகீழாய் டீபாயில் வைத்துவிட்டு மீன் தொட்டியிடம் சென்றுவிட்டாள்..

நாளைக் காலை கனியின் கையைவிட்டு ஸ்தமதியின் கேஸ் போகப் போகிறது, இது அவள் அறிந்த விஷயம் என்றாலும், ஆர்டர் வருவதற்கு முன்பே ரிப்போர்டகள் வீட்டின் வாசலில் நின்றிருந்தனர்..

“கனி…ஆர் யூ ஓகே..?” தலையைப் பிடித்து அமர்ந்திருக்கும் கனியின் தோளைத் தட்டி பரத் கேட்க,

“பரத்…நாளைக்கு என் கையைவிட்டு கேஸ் போயிடும்..அதுக்குள்ள இன்னைக்கு வித்யாவை வச்சி அந்தக் கேஸ் சிபிஐ’க்கு மாத்தனும்னு கேஸ் போடச் சொல்லனும்..” என்றவள்

“அனு..” எனச் சத்தமாய் அழைக்க,

அனு என்னவென்பது போல எட்டிப் பார்க்க, பரத்தும் அதேப் பார்வை தான் பார்த்து வைத்தான்..

“பின்வாசல்ல ஒரு நாலைஞ்சு புடவைய கம்பில காயப்போட்டு, முன்வாசல்ல எத்தன பேர் இருக்காங்க..பின் வாசல்ல எத்தன பேர் இருக்காங்கன்னு பாரு..” கட்டளையாய் உரைத்தவளின் போன் மெல்லமாய் சிணுங்க,

“விது, பின் வாசல் வழியா மாடிக்கு வா..” என்றவள் அணைப்பைத் துண்டித்து பரத்துக்கும் கதவைத் திறந்துவிடுமாறு செய்கை செய்தாள்..

வித்யா உள்ளே வந்ததும், “வாங்க என் ரூமுக்கு போயிடலாம்..” என்ற கனி முன்னே செல்ல, பின்னே இருவரும் தொடர்ந்தனர்..

வித்யா வந்ததைக் கவனித்து அவளைப் பார்த்து சிரித்த அரசிக்கு அப்போது தான் தனது தந்தை போனை கனியிடம் கொடுக்கச் சொன்னது நினைவுக்கு வந்தது..

அவள் போனை எடுத்து கனியிடம் கொடுப்பதற்குள் அவள் அறையை மூடியிருக்க, லைனில் தந்தையில்லாததை கவனித்தவள் கீழே அழைத்த அனுவிடம் சென்றுவிட்டாள்..

அறைக்குள் நுழைந்ததும், “விது இன்னைக்கு நான் சொன்ன மாதிரி மனு தாக்கல் பண்ணு..” கனியின் பேச்சில் இடைப்புகுந்த பரத்,

“எப்படியும் இன்னும் டுவன்ட்டி டேஸ்ல இந்தக் கேஸ் எங்க கைக்கு வந்திடும் கனி..அப்புறம் எதுக்கு..?”

“பரத், இந்தக் கேஸ் ஃபைல் நீ பாத்தியா..?” வித்யாவின் கேள்விக்கு இல்லையென பரத் தலையசைத்ததும், தனது இடப்பக்கத்தில் ட்ராவைத் திறந்தாள் கனி..

அதிலிருந்த ப்ளூ கலர் உரையிட்ட ஃபைலை பரத்தின் கைகளில் திணித்தவள், “திறந்து பாரு..” என்க..

அந்தப் பெண் இறந்ததில் இருந்து தற்போது வரை மீடியாக்களில் வந்த நீயூஸ் கட்டிங் ஒன்றன் பின் ஒன்றாக இருந்தது..

“கனி..மீடியா பீப்புல் சொல்றதை வச்சிட்டு நாம கேஸை மூவ் பண்ண முடியாது..” என்றவனைப் பார்த்து சிரித்தவள், இருவரையும் அமருமாறு செய்கை செய்து,

“இப்போதைக்கு அவங்களும் நாமளும் ஒரே வேவ்-லென்த் தான்..”

“புரியல..” இருவரும் கோரஸாய் சொல்ல,

“நான் இன்னும் விசாரணைய முழுசா முடிக்கல..ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன்..”

“கொலை செய்யப்பட்ட அன்னைக்கு வந்த பேப்பர் கட்டிங் பாரு..அதுல அந்த பொண்ணோட ஆடை விலகி ரொம்ப பயங்கரமா இருப்பா சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த அவளோட அப்பா அவரோட ஃப்ரெண்ட்னு யாருமே அவளை டச் கூட பண்ணிருக்க மாட்டாங்க..”

“கனி…போலீஸ் டச் பண்ண கூடாது சொல்லிருப்பாங்க..”என்றவனை கை நீட்டித் தடுத்தவள்..

“பரத், எல்லா நேரத்துலையும் நாம டெக்னிக்கா பார்த்தா விக்டிம் கிடைக்காது..கொஞ்சம் சென்ட்டிமென்டலாவும் யோசிக்கனும்..” என்றவள் தொடர்ந்து..

“கேஸ்ல முக்கியமான எந்த தடயமும் அந்த விக்டிம் சூட் பண்ணுன புல்லட் தவிர அவளோட போன் இப்போ வரைக்கும் என் கைக்கு வரல..அங்க நின்னு பார்த்தவங்க அவன் சுட்டுட்டு ஓடுனதா தான் வாக்குமூலம் கொடுத்திருக்காங்களே தவிர அவன் எந்தப் பொருளையும் எடுத்துட்டு போனதா வாக்குமூலம் கொடுக்கல..”

“அப்போ அவளோட ஃபோன் எங்க போச்சு..?”

“ம்ம்… சிசிடிவி வச்சி கண்டுபிடிக்க செவன்ட்டி பெர்சன்ட் முடியாது ஏன்னா? உனக்கு எந்த ஃபுட்டேஜ்லையும் அக்யூஸ்ட் தெளிவா இல்ல… ஸ்தமதியோட பேரென்ட்ஸ் இப்போ வரைக்கும் என்னைச் சந்திக்கல..”

“எல்லாமே வச்சி பார்க்கும் போது எங்கேயோ இடிக்குன்னு உனக்குப் புரியலையா பரத்..” என்றவளிடம் அவன் மறுப்பாய் தலையசைக்க,

“பரத்..எங்க டிப்பார்ட்மென்ட்ல இருந்து கேஸ் சிபிஐ கிட்ட போகக் கூடாதுன்னு பயப்படுறாங்க அது ஏன்னு உனக்குப் புரியலையா..?” என்றதும் இடையிட்ட வித்யா,

“ஏய் அது உங்க டிப்பார்ட்மென்ட்க்கு கவுரவ கொறச்சலா இருக்கும்..”

“நோ.. நாங்க சில கேஸ்ல முக்காவாசி கண்டுபிடிச்ச அப்புறம் சிபிஐக்கு மாறும் அப்போ தான் எங்களுக்கு கோபம் வரும்..ஆனா இந்தக் கேஸைப் பொறுத்த வரைக்கும் யார் எடுத்தாலும் எக்ஸெப்ட்..” என்றவள் நிறுத்த

“ஜெ.ஸி.என்..” பரத் வேகமாய் சொல்ல,

“ம்ம்….அவனைத் தவிர எவன் உள்ளே வந்தாலும் மண்ணைக் கவ்வுறது உறுதி..” என்றவள் நிறுத்த

“அது என்ன உன்னால முடியாதது ஜெ.ஸி.என்’னால முடியும்னு சொல்ற..?” என்ற வித்யாவை இடைமறித்த பரத்

“ஜெ.ஸி.என் காத்து போக முடியாத இடத்துக்கு கூட போய்ட்டு வர அளவுக்கு தைரியசாலி…எங்க டிப்பார்ட்மென்ட்ல எல்லோரும் பேச யோசிக்கும் ஒரே ஆளு அவரு தான்..” என்றவனிடம்..

“எப்போ வாறார் அந்த ஜெ.ஸி.என்..” என்க,

“இன்னைக்கு நைட் டெல்லி போயிட்டு சென்னை வருவார்..” அவனது பதிலைப் பொறுத்து அடுத்தடுத்த அவர்களின் விவாதம் தொடர்ந்தது..

****

மாலை வேளையில் சூரியன் தன் வெப்ப கதிர்களைச் சுருக்கிக் கொள்ளும் இளமஞ்சள் நேரத்தில் இடது கையில் அரசியைப் பிடித்து கொண்டு வலது கையில் தங்களது வளர்ப்பு செல்லமான டைகரின் செயினைப் பிடித்து கொண்டே நடைபயின்றாள் கனிஷ்கா..

வார லீவு நாள், காலையில் எழுந்ததில் இருந்து இப்போது வரையிலும் நொடி கூட விலகாது பேபியை உடன் வைத்து சுற்றித் திரிகிறாள் கனி..

நேற்றைக்கே தனது கையைவிட்டு ஸ்தமதி கேஸ் போயிருக்க, இருந்த கொஞ்ச அயர்வையும் இன்றைய பொழுதின் மூலம் களைந்துவிட்டாள் அரசி..

தனது கையைப் பிடித்து ஆடிக் கொண்டே வரும் அரசி, “மம்மி, எனக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுங்க ப்ளீஸ்..” என்க..

குழந்தையின் பேச்சில் சின்ன கண்டிப்போடு திரும்பியவள், “பேபி…நீ இப்போ தானே ஐஸ்க்ரீம் சாப்பிட்ட..?” என்றதும் தனது பிஞ்சு விரல்களில் இரண்டு விரலை மட்டும் காட்டி..

“நோ மம்மி, நா அப்ப ஒன் தா சாப்பித்தேன்..”

சமத்தாய் பதில் சொல்லும் மகளின் கன்னம் கிள்ளியவள், “நோ வே பேபி.. இப்போ ஐஸ்க்ரீம் கேட்டா நான் இன்னைக்கு உங்க அப்பா கிட்ட சொல்லிக் கொடுத்திருவேன்..”

கனியின் மிரட்டலில் வாயைப் பிதுக்கியவள், “நீ சொன்னா நானும் சொல்வேன்..” என்றாள் கைகளை மார்பின் குறுக்கே கட்டி,

“என்ன பேபி சொல்லுவ..நான் தான் உன்னை மாதிரி ஐஸ் க்ரீம் கேட்கலையே..?”

“நீ கேக்கல மம்மி..பட் நேத்து நீ..?!” கண்களை கை வைத்து மறைத்து அழுவதைப் போல் செய்து காட்டியவள்,

“நீ இப்படி இப்படி அழுதல்ல அதைச் சொல்லுவேன்..” என்றதும் சின்னவளை முறைத்தவள்..

“நீ என்ன வேணும்னாலும் பண்ணு..உனக்கு இப்போ ஐஸ் க்ரீம் கிடையாது அவ்வளவு தான்..காட் இட்..”
என்றவள் சின்னவளின் உயரத்துக்கு முட்டியிட்டு சொல்ல,

தன்முன்னே உட்கார்ந்திருக்கும் கனியைவிட்டு பின்னே கால்களை அகல விரித்து இவர்களையே பார்த்து கொண்டிருந்தவனிடம் ஓடிய அரசி, அவனது இடது காலை இறுகப் பற்றி,

“டாடிஇஇஇஇ..”எனக் கத்தினாள்..

ஆட்டம் தொடரும்..

error: Content is protected !!