Un Uyir Thaa Naam Vazha-11
Un Uyir Thaa Naam Vazha-11
உயிர் –11
கௌசிக்கால் நடந்ததை நம்பமுடியவில்லை.. ஆனாலும் நம்பாமலும் இருக்கமுடியவில்லை.. காரணம் இத்தனை நேரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பா..இப்பொழுது எழும்பி இருக்கிறார். அவனுக்கு கண்ணால் காண்பதை நம்பாமல் இருக்கமுடியவில்லை. ஆனாலும் இப்படியும் நடக்குமா என்றுயோசனை. ஆனாலும் இப்பொழுது கண் முன் நடந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் கௌசிக்…
கோட்டை அவர்களுக்கு எதிரி என்று யாரும் இருக்க கூடாது என்றும், அவள் வம்சத்தை நல்ல படியாக காப்பாற்ற வேண்டும் என்று தான் இப்படி எல்லாம் செய்ததே….
சியோராவுக்கு என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்று எதுவும் தெரியவில்லை.. ஆனால் ரோட்டில் இருப்பது மட்டும் அவருக்கு தெரிந்தது.. மெதுவாக பார்வையை சுழட்டி பார்க்கவும் தான் அருகில் இருந்த கௌசிக் கண்ணில் பட்டான்.. அவனை நோக்கி “நான் எப்படி இங்க வந்தேன்டா” என்று கேட்டார்…
அப்பொழுது அவர்களை தாண்டி ஒரு ஆம்புலன்ஸ் சென்றது.அதன் சத்தத்தில் நினைவு வந்த கௌசிக் அவன் அப்பாவின் கையை பிடித்து எழுப்பகையை நீட்டினான் கௌசிக்.. அவன் அவர் கேள்விக்கு பதில் கூறவில்லை என்றதும் அவன் கையை தட்டிவிட்ட சியோரா தானாக எழுந்து நின்று அந்த பூங்கா நோக்கி நடையை கட்டினார். அவருக்கு வீட்டுக்கு போக இஷ்டம் இல்லை.. இன்னும் அவருக்கு சத்ரியா கூறிய வார்த்தைகளே மனதில் ஓடின…
அவர் பூங்கா நோக்கி செல்லவும் தனது காரை நோக்கி ஓடிய கௌசிக் காரை எடுத்துக் கொண்டு பூங்கா வாயிலில் நிறுத்தி விட்டு சியோராவை நோக்கி ஓடினான்.. அவர் அங்கு உள்ள ஒரு பென்சில் அமர்ந்து இருந்தார்.. அவர் அருகில் போய் அமர்ந்த கௌசிக் அவர் முகம் பார்த்தான்.. என்றும் இல்லாமல் இன்று அவர் முகம் பெரும் கவலையை காட்டியது…
யோசனையுடன் அவரை பார்த்து ரொம்ப நாட்களுக்கு பிறகு “அப்பா” என்று அழைத்தான் கௌசிக்… அவன் அழைக்கவும் அவனை திரும்பி பார்த்த சியோரா “நீ எதுக்குடா இங்க வந்த” என்று கோபமாக கேட்டார்… அவருக்கு கோபம் எதுவுமே புரிந்துக் கொள்ளாமல் சென்று விட்டு இன்னைக்கு எதுக்கு வந்திருக்கானாம் என்று…. அவர் கோபத்தை கண்டுக்காத கௌசிக் அவரை பார்த்து “உங்களை அடித்துப் போட்டது யாரு” என்றுக் கேட்டான்…
அவன் அவ்வாறு கேட்கவும் அவனை புரியாமல் ஒரு நிமிடம் பார்த்த அவர் அவனை நோக்கி “என்னை யாரு எப்போ அடிச்சா” என்றுக் கேட்டு அவனை யோசனையாக பார்த்தார் சியோரா.
இவர் கூறியதை கேட்ட கௌசிக் அவரை புரியாத ஒரு பார்வை பார்த்து விட்டு இப்பொழுது நடந்ததை கூறினான்.. அவன் கூறியதை கேட்ட சியோரா யோசனையாக நெற்றியை சுருக்கினார்..
“இல்ல கௌசிக் எனக்கு அப்படி ஏதும் நடக்கல… ஏதும் கனவு கண்டியா” என்று கேட்டார்.. அவர் கேட்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியம் தான் ஒருவேளை கனவு கண்டுவிட்டோமோ என்று… அப்பொழுது அவனுக்கு அவன் அருகில் சென்ற ஆம்புலன்ஸ் சத்தம் கேட்ட நியாபகம் வரவும் சியோராவை பார்த்து “ஒரு நிமிடம் அப்பா” என்று கூறிக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் சென்ற பாதை நோக்கி சென்றான்…
அவன் செல்லவும் கண்ணை ஒருநிமிடம் மூடி திறந்த சியோரா “ஊப்” என்று மூச்சு காற்றை வெளிவிட்டு வர்மாவை அழைத்து ” வர்மா இப்போ என்னை ஒரு வண்டி அடிக்க பார்த்தது என்று கூறி அவர் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது தூரத்தில் நின்ற வண்டியை கேள்வியாய் பார்த்துவிட்டு தான் ரோட்டு ஓரமாய் நடந்து வந்தார்.. ஆனால் அந்த வண்டி தன்னை இடித்து தள்ளும் என்று எண்ணவில்லை… என்று அவனிடம் கூறி தான் இருக்கும் இடம் வரக் கூறினார்…
அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த வர்மா “அங்கிள் நானும் அது பக்கத்துல தான் இருக்கேன்.. ஒரு ஆக்சிடெண்ட் ஆகியிருக்கு அங்கிள்.. யாருனு தெரியல… கொஞ்ச நேரம் இருங்கள் நான் வந்து உங்களை பார்க்கிறேன்” என்றுகூறிபோனை வைத்தான்..
அவன் போனை வைக்கவும் இவர் உடனே அவன் சொன்ன திசை நோக்கி சென்றார்.. சென்றவர் அப்படியே அதிர்ச்சியாகநின்று விட்டார். காரணம் இன்று இவர் பார்த்த வண்டி. யோசனையோடு திரும்பி வீட்டுக்கு வந்தார்… கௌசிக் பார்த்துக் கொண்டு நின்றான்.. ஆனாலும் யார் என்று கண்டுபிடிக்க வர்மாவிடம் கூறி இருந்தான்.. காரணம் இது அவன் ஏரியா இல்லை… அவன் வேலையை விட போறதாக கூறி இருந்தான்.. இது யார் என்று தெரியவில்லை.. அப்பாவின் எதிரியாக இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு..இப்படி நடக்கும் என்று தான் அவன் பயந்ததே.. அதே போல் நடந்து விட்டது.. இப்பொழுது அப்பாகிட்ட போய் விசாரிப்போம் என்று எண்ணி அந்த பூங்கா நோக்கி சென்றான்..
வீட்டுக்கு சென்ற சியோராவை வரவேற்றது ஒரு மூலையில் அதிர்ச்சியாக இருந்த 3 பேரும் தான்..அவர்களை பார்த்த அவருக்கு முந்திய கோபம் எல்லாம் விட்டு போனது.. அவருக்கு அவரின் ரியாவை பார்க்க பாவமாக இருந்தது.. ஏதோ எதுக்கோ பயந்தது போல் இருக்கவும் அவர்கள் அருகில் சென்ற சியோரா “ரியா” என்று மெதுவாக அழைத்து அவள் தோள் மேல் கையை வைத்தார்…
அவர் அப்படி கைவைக்கவும் பயந்த ரியா ” நான் இனி அப்படி செய்யமாட்டேன் என்ன விட்டுரு” என்று கண்களில் பயத்தை தேக்கி கூறினார்…
வர்ஷிக் அவருக்கு மேல் அதிர்ந்து நின்றான்… அவனை பார்த்த சியோரா அவன் கன்னத்தில் ஓங்கி அறிந்தார்.. ரியாவை அவரால் என்றும் அடிக்க முடியாது அது தான் அவனை அடித்தார்.. அவனை அடித்த சத்தத்தில் அதிர்ந்து விழித்தனர். மூவரும்… அவர்களின் பயந்த பார்வையை கண்ட அவர் என்ன என்று கேட்டார்.. அவர் கேட்கவும் நடந்த விஷயத்தை கூறினார்கள்…
அவர்கள் கூறவும் அவருக்கு தெரிந்துவிட்டது… கோட்டை இங்கே எதுக்கோ வந்திருக்கிறாள் என்று… அப்பொழுது தான் அவருக்கு கௌசிக் கூறியதும் நினைவு வந்தது.. எல்லாம் பிறகு கூறலாம் என்று எண்ணி அவர்களை சமாதானப்படுத்தி விட்டு வர்ஷிக்கை நோக்கி ” டேய் நீ இன்னைக்கு எகிப்து போகணும் தானே.. சீக்கிரம் கிளம்பு இவங்களை நான் பாத்துக் கொள்கிறேன்”என்று கூறி அவனை கிளம்ப அனுப்பினார்.. அவன் பின்னே மையூரியும் சென்றாள்…. சிறிது நேரத்தில் அவன் கிளம்பி வரவும் அவனை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்றார் சியோரா…
அவர் கிளம்பி செல்லவும் தான் மையூரிக்கு அவளின் ஊர் நியாபகம் வந்தது… உடனே சத்ரியாவிடம் கூறி அவளிடம் போனை வாங்கி கோட்டைநல்லூர் அவர்கள் வீட்டு போனுக்கு அழைத்தாள்… “நீங்கள் அழைக்கும் எண் தற்பொழுது உபயோகத்தில் இல்லை” என்று கூறவும் பயந்த மையூரி மைத்ரேயிக்கு அழைத்தாள்.. அவளுக்கு அழைத்ததில் ஒரு ஆண் வேற ஏதோ மொழியில் பேசவும் அவளுக்கு கண்ணீர் விழவா, வேண்டாமா என்று கேட்டுக் கொண்டு நின்றது…
அவளுக்கு பயம் அவர்களுக்கு ஏதோ ஆகிற்றோ என்று அவள் ஊரில் வேற யார் நம்பர் தெரியாது அவளுக்கு.. சத்ரியாவிடம் கூறவும் அவளுக்கும் சிறு கலக்கம் இருக்க தான் செய்தது கோட்டை அவர்களை ஏதாவது செய்து விட்டாளோ என்று..பயத்துடனே மையூரியை அழைத்துக் கொண்டு சாமி ரூம் சென்று மீண்டும் கோட்டை முன் அமர்ந்துக் கொண்டாள்.. மனத்தால் இருவரும் அவரிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தனர்..
இவர்கள் வேண்டுதல் அவளுக்கு கேட்டதோ என்னவோ உடனே பதில் அளிக்க ஆரம்பித்துவிட்டாள் அங்கு கௌதமிடம்..
கார் அருகில் சென்ற கெளதம் கார் கதவில் கை வைத்துக் கொண்டு திரும்பி பார்த்தான்.. அப்பொழுது அவனுக்கு அவன் அப்பா கூறியதுநினைவு வந்தது.. “மையூரி தங்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்”என்று இவன் இங்கு கிளம்பவும் சியோரா கூறியது நினைவு வரவும். உடனே ஊருக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை நிறுத்தி விட்டு..
கார்ட்ஸ் நோக்கி“டேய் டெண்ட் கழட்ட வேண்டாம்..வேலை எல்லாம் முடித்துக் கொண்டு கிளம்புவோம்” என்று கூறி மீண்டும் அவன் டெண்ட் நோக்கி சென்றான்…
ஆனால் இப்பொழுது அங்கு சத்ரியா, மையூரி வேண்டுதலுக்காக இங்கு ஒரு நிமிடம் மட்டும் சியோரா கூறியதை நினைவு படுத்தினாள் கோட்டை… அவன் அங்கு இருக்கும் ஒவ்வொரு பொழுதும் அவனின் சிந்தனை, செயல் எல்லாம் கோட்டை கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்து விட்டது.. அவள் நினைத்ததை அவன் செய்வான் அவள் செய்யவைப்பாள்..
டெண்ட் சென்று பேக்கை அங்கு வைத்து விட்டு.. அந்த ஊரை சுற்றி பார்க்க கிளம்பி சென்றான்…நேராக அவன் சென்றது அந்த வயல் நோக்கி தான்.. அதன் அருகிலே ஒரு அருவியும் இருந்தது… அவனுக்கு இதை பார்க்க அத்தனை ஆச்சரியமாக இருந்தது… எப்படி இங்கு மட்டும் இப்படி செழிப்பாக இருக்கிறது என்று… எங்கும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது…சுற்றி பாத்துக் கொண்டு இருக்கும் பொழுது இவன் பார்வை அந்த கோட்டை நோக்கி செல்லவும் அவனுக்கு அவள் நியாபகம் மீண்டும் வந்தது…
அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் அப்பா கூறிய அவள் தான் இந்த சிறுபெண்ணா என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது இவனை யாரோ பார்க்கும் உணர்வில் திரும்பி பார்த்தான் அவன் பின்னே மைத்ரேயி அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்…
அவளை பார்த்தும் மீண்டும் திரும்பிக் கொண்டான்..ஆனாலும் அப்பா கூறியதும் நினைவு வந்ததுஅதை விட இவளை எல்லாம் காப்பாத்தணுமா என்ற எண்ணமும் கூடவே வந்தது…ஏனோ தெரியவில்லை காரணமே இல்லாமல் இவனுக்கு அவளை பிடிக்காமல் போகிறது… அவளை அவன் கூர்ந்து கவனித்தால் கண்டிப்பாக பிடிக்கும்.. எங்கே கோட்டை அவனை இவளை கவனிக்க விடுகிறாள்..
அவன் இவளை பார்த்தும் பேசாமல் இருந்தது இவளுக்கு ஏதோ மாதிரி ஆகியது.. அதிலும் இந்த கோட்டைக்கு சொந்தக்காரி நான் இவனிடம் பேச முயற்சி செய்தும் இவன் எப்படி தன்னை அலட்சிய படுத்தலாம் என்ற எண்ணம் ஓங்கி ஒலித்தது…இதுவரை அவளை யாரும் அலட்சியபடுத்தியதில்லை.. இந்த ஊரில் அவர்கள் தான் கோட்டை மனிதர்கள் என்று தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும் அவர்களிடம். ஆனால் இவன் செய்வது அவளுக்கு கோபம் வந்தது தான் ஆனாலும் அவனை அவளுக்கு பிடித்திருக்கிறதே…கொஞ்சம் மெதுவாக தயக்கத்துடன்“மாமா” என்று அழைத்தாள்…
அவள் “மாமா” என்று அழைக்கவும் அவனுக்கு எரிச்சலாக வந்தது. கூடவே கொஞ்சம் கோபமும் வந்தது.. சின்ன வயசு பொண்ணு என்று எண்ணி கோபத்தை அடக்கி கொண்டு நின்றான்.. .”லூசு போல சும்மா இருக்குறவனையும் இருக்கவிடாம செய்றா.. இவளை” என்று பல்லைக் கடித்து நின்றான்..
ஆனால் அவள் இவனை விடுவது போல் இல்லை போல.. “மாமா” என்று மீண்டும் அழைத்தாள்…
அவள் மீண்டும் அழைத்ததில் கோபமான கெளதம் அவளை நோக்கி திரும்பி “என்ன” என்று பார்வையாலையே கேட்டான்.. அவன் என்னமோ அவளை சாதாரணமாக தான் கேட்டான் ஆனால் அவளுக்கு அவன் முறைத்துப் பார்த்ததாகவே பட்டது…
அழுது கொண்டே கோட்டையை நோக்கி சென்றாள் மைத்ரேயி… அவள் செல்லவும் அலட்சியமாக தோளை குலுக்கிக் கொண்டு அருவியை பார்த்துக் கொண்டு இருந்தான்.. அப்பாவிடம் அவளை பற்றி கேட்கலாம் என்று எண்ணி அவருக்கு அழைக்க போன் எடுத்தான்.. ஆனால் டவர் இல்லை.. “சை” என்று கையை உதறி விட்டு அவனின் டெண்ட் நோக்கி சென்றான் கெளதம்…
அவன் அவளிடமே கேட்கலாம்.. ஆனால் தான் அவளிடம் பேச போய் வீணா பிரச்னை வந்தா பாவம் சின்ன பொண்ணு.. சும்மாவே மாமா மாமானு சொல்லுது என்று மனதில் எண்ணி அவன் அப்பாவிடம் கேட்க நினைத்தான்..( டேய் நீ அவளுக்கு மாமா முறை தாண்டா. ஆனா என்ன பிள்ளை உன்னை பார்த்து மயங்கி மாமா சொல்லுது..)
ஆனா டவர் இல்ல.. என்ன செய்ய என்று எண்ணி சரி வெளியில் போய் சாப்பிட்டு அப்படியே கால் பண்ணுவோம் என்று எண்ணி அவன் கார்ட்ஸ் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான் கெளதம்…
சத்ரியனுக்கு ஏதோ நடக்க போகிறது என்று உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருந்தது… இப்பொழுது வந்தவனையும் நம்பமுடியவில்லை இவன் அவர்களை போல் இருப்பானோ என்ற எண்ணம் அவருக்கு.. அவருக்கு அவர் பேத்தியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும்பொழுது கார் நிற்கும் சத்தம் கேட்டு அவர் கோட்டையில் இருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.. கெளதம் அவன் படைகளுடன் அவனின் டெண்ட் உள்ளே நுழைந்துக் கொண்டு இருந்தான்….அவனை பார்த்துக் கொண்டே அதே யோசனையுடன் தூங்க போனார்…
அதே நேரம் மைத்ரேயி இவனிடம் எப்படி பேசலாம் என்று எண்ணிக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டு நின்றிந்தாள்.. கூடவே ” மாமா மீசை வைத்தால் எப்படி இருப்பார்” என்று கற்பனை செய்து பார்த்தாள்… இப்பொழுது அவன் இருப்பதை விட அவன் மீசை வைத்திருந்தால் அழகாக இருக்கும் என்று தோணியது.. நாளைக்கு மாமா கிட்ட சொல்லணும் என்ற யோசனையோடு உறங்க சென்றாள் மைத்ரேயி…
வர்ஷிக்கை வழியனுப்பி வைத்து விட்டு வீடு வந்தார் சியோரா.. இவர் வருவதற்கு கொஞ்சம் முன்னாடி தான் வர்ஷிக் வந்திருந்தான்…அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது தான் சியோரா வர்ஷிக்கை விட்டு வந்திருந்தார்…
இவர் வந்ததும் அவரை அழைத்துக் கொண்டு அவரின் அலுவலக அறைக்கு சென்றான்.. அவர்கள் செல்லவும் மையூரியும், சத்ரியாவும் கோட்டைநல்லூர்க்கு எப்படி தொடர்பு கொள்வது என்ற யோசனையோடு அவர்கள் அறைக்கு சென்றனர்..இந்த கவலையில் கௌசிக்கு அவளை அறிமுக படுத்த வேண்டும் என்று அவள் எண்ணவே இல்லை… அவனும் இவளை கவனிக்க வில்லை..
அறைக்கு வந்ததும் அல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.. மதியம் உங்களை அடித்தது RK ஆனால் அவன் இப்போ உயிருடன் இல்ல.. அவனும் அவன் மகனும் மதியம் நடந்த ஆக்ஸிடண்டில் உயிரை விட்டு விட்டனர்.. இப்போ சொல்லுங்க அந்த லாரி, அந்த கோட்டையம்மாள் யார் என்று கேட்டான் கௌசிக்..
பூங்காவில் இவரிடம் கேட்கவும் அவரின் பதில் அவனுக்கு ஏதோ யோசனையாகவே இருந்தது..அதே யோசனையுடன் ஆக்சிடண்ட் நடந்த இடத்துக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் இவரும் வரவும் அவனுக்கு ஏதோ இருக்கிறது என்றே அவன் மனது சொல்லியது.. அது மட்டும் இல்லாமல் அந்த லாரி அவனுக்கு உறுத்தலாகவே இருந்தது… சியோராவை விசாரித்தால் மட்டுமே தெரியும் என்று எண்ணி தான் இங்கு வந்ததே..
இவனின் இந்த நேரடி கேள்வியை சியோரா எதிர் பார்க்கவில்லை… வர்ஷிக்கை விட்டு வரும்பொழுது அவர் யோசனை முழுதும் இன்று நடந்ததிலையே இருந்தது.. அவரை வண்டி அடித்தது அவருக்கு நன்றாக தெரியும்.. ஆனால் முழித்துப் பார்க்கும் பொழுது அவருக்கு அப்படி அடிபட்டதே தெரியவில்லை..அதன் பிறகு கௌசிக் கூறியதும் தான் எல்லாம் கோட்டைத்தாயின் வேலை என்று அறிந்துக் கொண்டார்..
இப்பொழுது இவனிடம் கூறினால் இவன் நம்புவானா என்பது அவர் யோசனை.இப்பொழுது கூட அவனின் கேள்வி மகன் அப்பாவிடம் கேட்பது போல் இல்லாமல்ஒரு போலீஸ் காரனை ஒத்து தான் இருந்தது.. என்ன செய்ய என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு அவனிடம் எல்லாம் கூறினார்…
அவர் கூறியதை கேட்ட அவனுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி இப்படி எல்லாம் நடக்குமா என்று.. ஆனாலும் நடந்திருக்கிறதே என்று அவரை பார்த்துக் கொண்டு இருந்தான்…
அதை தொடர்ந்து சியோரா கெளதம் பற்றி கூறியதை கேட்டதும் அவனுக்கு தவறு செய்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சியாக இருந்தது… கண்களில் நீர் வழிய சியோரா கைகளை பிடித்து அப்பா நா.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் அப்பா. எனக்கு ஷதாஷி அன்னைக்கு அவள் கண்ணீர் மல்க கூறியதும் எனக்கு ஏதும் தோணலப்பா சாரிப்பா… என்று கூறி அன்று ஷதாஷி கூறியதும் தான் கோபத்தில் அப்படி நடந்துக் கொண்டேன் என்றும், அதே அதே கோபத்தில் அவளை திருமணமும் செய்துவிட்டேன் என்று குற்றஉணர்ச்சியுடன் கூறினான் கௌசிக்…
அவன் கூறியதை கேட்ட சியோரா. தெரியும்டா கௌசிக்.. உன் செய்கை எல்லாம் எனக்கு தெரியும்.. நீ வேலையை விடாதே… அந்த கோட்டை உன்னையும் இங்க வர வச்சுட்டா.. இனி அந்த பொண்ணையும், அவள் தாத்தாவையும் இங்க வரவச்சுட்டா எல்லாம் சரியா போகும்..இப்போ கூட கெளதம் அங்க தான் போய் இருக்கான் எப்படியும் அவளை இங்க அழைச்சுட்டு வந்திருவான் என்று கூறி மையூரி காதல் கதையையும் கூறி அவளை இவனுக்குஅறிமுக படுத்த அழைத்து சென்றார்..
கூடவே கெளதம் அங்கு தான் சென்றிருக்கான் என்று கூறவேண்டாம் என்றும், கெளதம் செய்த வேலை பற்றியும், முக்கியமாக சியோராவுக்கு நடந்த ஆக்ஸிடென்ட் இப்படி ஏதும் அம்மாவிடம் கூறாதே… அதே போல் இனி நீ இங்கையே வந்துவிடு மருமகளை அழைத்துக் கொண்டு.. அம்மாவை எக்காரணம் கொண்டு அங்க கோட்டைநல்லூருக்கு போகவிடவே கூடாது… அவள் இப்போ கண்டிப்பா அங்க போக தான் ஏதாவது முயற்சி எடுத்துக்கிட்டு இருப்பாள் என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு மையூரி பார்க்க வந்தார்…
அவர்கள் கீழே வரும்பொழுதுசத்ரியாவும், மையூரியும் மும்பை கடவுளான. அரக்கர்களை அழிக்கவே துர்கா தேவி உருவில் பிறந்த அரக்கர்களின் எதிரியான காளி துர்காவை வணங்கி கொண்டு இருந்தனர்…
அவர்களுக்கு ஒரு நம்பிக்கை எப்படியாவது துர்கா தேவி வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்று அதே நம்பிக்கையுடன் அவளை மனதார வணங்கி கொண்டு இருந்தனர்…. கோட்டைத்தாயும்அசுரர்களை அதாவது அவளை அழித்த அசுரர்களை அழிக்கவே மறுபிறவி எடுத்து வந்தாள் என்பது இருவரும் அறிந்த உண்மை..
சியோரா அவள் அருகில் போய் ரியா என்று மெதுவாக அழைத்தார்.. அவர் அழைப்பில் கண்ணீருடன் திரும்பி பார்த்த சத்ரியா… “என்னங்க அங்க அப்பாக்கு போன் போகவே மாட்டேங்குது.. அவங்களை அந்த கோட்டைத்தாய் ஏதோ செய்துட்டா அது தான் அவங்களுக்கு போன் போகல.. வாங்க நாம உடனே அங்க போவோம்” என்று கண்ணீருடன் சியோரா கையை பிடித்து சிறுபிள்ளை போல் இழுத்தார் சத்ரியா…
அவள் அருகில் வந்த சியோரா “ என்னை நம்பு ரியா நான் அன்னைக்கு உன்கிட்ட சொன்ன மாதிரி உன் குடும்ப ஆள் மையூரியை உன் கண்முன்னாடி கொண்டு வந்துட்டேன்.. அதே போல இன்னும் ஒரே மாசத்துல அங்க இருக்கிறவங்களை உன் கண் முன்னாடி கொண்டு நிறுத்துவேன்” என்று கோட்டைத்தாயை பார்த்துக் கொண்டே சத்ரியாவுக்கு சத்தியம் செய்தார் சியோரா.
சியோரா சத்தியம் செய்யவும் சத்ரியாவும் பூஜையை நிறுத்தி விட்டு இவர்களுடன் இணைந்துக் கொண்டார். சியோராவும் நல்ல முறையாக மையூரியை அவனுக்கு அறிமுக படுத்தினார்… அவளுக்கு சந்தோசம் அவள் கூட பிறந்தது அண்ணன், தம்பி என்று யாரும் இல்லை.. கௌசிக்கை மனதார தன் அண்ணனாக ஏற்றுக் கொண்டாள் மையூரி… அவன் நாளைக்கு உன் அண்ணியை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று கிளம்பி சென்றான்…
அடுத்த நாள் விடியல் எல்லாருக்கும் அழகாகவே விடிந்தது… கெளதம் எழும்பி மைத்ரேயியை தேடினான்.. அவனுக்கு அவன் அப்பா நேற்று இரவு கூறியதே மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.. அதன்படி அவளை காலையில் காணவே சீக்கிரம் வெளியில் போய் சாப்ட்டு வந்தான்..
அவளை எங்கும் தேடி விட்டான் அவளை காணவில்லை.. அதே போல் அந்த கோட்டைத்தாய் கோவிலும் திறக்கவே இல்லை… ஊர் கோட்டை வாசலும் இன்னும் திறக்கவில்லை…
கோவில் முன்னாடி இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து விட்டு அவர்கள் அருகில் போய் என்ன என்று கேட்டான் கெளதம்… அவர்கள் கதவு திறக்கவில்லை என்றும், ஒருநாளும் கோட்டைத்தாய் கோவில்கதவை அடைக்கவேமாட்டோம் இன்று இப்படி ஆகியதை நினைத்தால் பயமாக இருக்கிறது.. அதே போல் பெரியய்யாவையும் காணவில்லை என்று கூறவும் கெளதம் யோசனையுடன் கோட்டைத்தாய் கோவிலையும், கோட்டை கதவையும் மாறி மாறி பார்த்தான்…
மைத்ரேயி எங்கு போனாள்? சத்ரியன் எங்கே? இப்பொழுது கோட்டைத்தாய் கோவில் கதவுகள் ஏன் அடைக்கபட்டிருக்கிறது? என்பதை அடுத்த எபியில் பார்ப்போம்.
உயிர் எடுப்பாள்….
படிக்குறவங்க லைக், கமெண்ட் பண்ணுங்கப்பா… முதல் முயற்சி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க… கதை பிடித்திருந்தால் vote பண்ணுங்க.. இதுவரை படித்தவர்களுக்கும், லைக், கமெண்ட் போட்டவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படித்து உங்கள் கருத்தை சொல்லுங்க..