Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 13
Un Uyir Thaa..! Naam Vazha..! ~ 13
உயிர் 13
மைத்ரேயிக்கு நம்பவே முடியவில்லை.. அவள் மும்பை வந்தது… தாத்தாவிடம் கேட்டால் அவர் மும்பை அழைத்து செல்லமாட்டார் என்றே எண்ணி இருந்தாள். ஏர்போர்ட் வந்த பிறகும் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. தாத்தா மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார் என்று எண்ணி தான் அவரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் சத்ரியன் அவளை கவனிக்கவே இல்லை… அவருக்கு தெரியும் அவளிடம் ஏதாவது பேசினாலே அழுது விடுவாள் என்று எண்ணி தான் அவளை கண்டும் காணாமல் இருந்தார்… இதோ இப்பொழுது மும்பைக்கும் வந்து சேர்ந்துவிட்டனர்…
அவளை அழைத்துக் கொண்டு அவளின் ஹாஸ்டலில் விட்டு விட்டு. உடனே மீண்டும் கிளம்பிவிட்டார் கோட்டைநல்லூர் நோக்கி..
அங்கு கோட்டைநல்லூரில் கோட்டை சுவர் இடிந்து விழவும், எல்லாருக்கும் பயம் வந்தது. இத்தனை வருடம் இவர்களை காத்து வந்தது இந்த கோட்டைத்தாயும், அவள் கட்டிய இந்த கோட்டை மதில் சுவரும் தான் ஆனால் அது இப்படி திடீர் என்று இடிந்து விழவும் என்ன செய்வது ஏது செய்வது என்று ஒருவரை ஒருவர் முழித்துக் கொண்டு இருந்தனர்…
இப்பொழுது பார்த்து பெரியய்யாவும் இல்ல.. அவர் வந்தாலாவது அவரிடம் ஏதாவது கூறலாம் என்று எண்ணி இருந்தனர்.. பார்த்தால் அவர் இன்னும் வருவது போல் இல்லை.. என்ன செய்வது என்று எல்லாரும் கோவில் முன்னாடியே அமர்ந்து இருந்தனர் கோட்டைத்தாயை மனதில் வேண்டிக் கொண்டு…
அந்த ஊர் இன்னும் வளர்ச்சி அடையாத ஊர்.. எது என்றாலும் அவர்கள் வேண்டி நிற்பது கோட்டைத்தாயை மட்டுமே… அவர்களுக்கு காய்ச்சல் என்றால் அந்த பூவரசம் இலையை எடுத்து பத்து போடுவார் நெற்றியில் அவர்களுக்கு உடனே காய்ச்சல் நீங்கி விடும்.. இப்படி சின்ன சின்ன செயலுக்கு எல்லாம் கோட்டை தான் அவர்களுக்கு துணை…
பெரியய்யா குடும்பம் செய்த பாவ செயல் அவர்களுக்கு தெரியாதே, அப்படி இருந்தாலும் கோட்டை அவர்களுக்கு எப்பொழுது காவல் தெய்வம் தான். அந்த அரக்கர்களுக்கு மட்டுமே அவள் அழிக்கும் தெய்வம்… அதே போல் சத்ரியன் ஒரு நாளும் இந்த கோட்டைத்தாயை வணங்கியது கிடையாது. அவருக்கு தான் தெரியுமே இவள் அவர்களை அழிக்கும் விஷயம்…
ஆனால் அவர் வாரிசுகள் இவளை வணங்குவதை அவர் தடுப்பதில்லை. அவர்கள் வேண்டுதலை கேட்டாவது அவர்களை விட்டால் சரி தான் என்று நினைப்பார்… அதே போல் கோட்டை கோவிலுக்கு எல்லாம் செய்வார்.. எது செய்தாலும் பெரிய அளவில் செய்வார்…
கெளதம்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்பொழுது இங்கு இருக்கவா, இல்லை மும்பை கிளம்புவதா என்று எண்ணிக் கொண்டு இருந்தான்… பிறகு சரி என்ன ஆனாலும் சரி வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்புவோம் என்று எண்ணி முதலில் இந்த கோட்டை மதில் சுவரை சரி செய்வோம் என்று நினைத்து சத்ரியன் இவனிடம் வேலை செய்ய அனுப்பிய 1௦ பேரை அழைத்துக் கொண்டு அந்த மதில் சுவர் பக்கம் செல்லவும் அந்த ஊர் மக்கள் எல்லாரும் ஓடி வந்து
“ தம்பி என்ன செய்றிங்க” என்று கேட்டனர்,,
“ மதில் சுவர் இடிந்து கிடக்குது இல்லையா அதில் உள்ள பாறைகளை எல்லாம் எடுத்து தள்ளி வைத்து விட்டு புதிதாக மதில் கட்ட முடியுமா என்று பார்க்க போறோம்” என்று கூறினான்.
அதற்கு“ வேண்டாம் தம்பி, சாமி குத்தமாகிடும் பெரியய்யா வரட்டும் அவர்கிட்ட கேட்டு பரிகார பூஜை செய்து மீண்டும் கட்டுவோம் இப்போ வாங்க இங்க ” என்று அவனை கையோடு அழைத்து சென்றனர்…
அவர்கள் அப்படி சொல்லவும் இவனுக்கு கோபமாக வந்தது, இருந்தாலும் சமாளித்துக் கொண்டு வந்து அவன் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்…
வெளியில் போய் அவன் அப்பாவுக்கு அழைத்தான். அவர் போனை எடுத்து ஹலோ சொல்லும்முன் “ டாட் இங்க எல்லாம் முட்டாளா இருக்குது நான் சொல்வதை எதையும் கேட்கனும்னு நினைக்க மாட்டுக்காங்க, எது எடுத்தாலும், பூஜை பரிகாரம்னு இன்னும் அந்த காலத்திலையே இருக்காங்க டாட்” என்று அவர் எடுத்ததும் இவன் பொரியவும்,
அவன் இப்படி பேசியதில் ஒன்றும் புரியாமல் முழித்த சியோரா “ டேய் கெளதம் என்னடா என்ன ஆச்சு நிதானமா சொல்லுடா ” என்று கூறினார்.
அவர் புரியலை என்று சொல்லவும் நிறுத்தி நிதானமாக இங்கு நடந்ததை எல்லாம் சியோராவுக்கு கூறினான் கெளதம், மேலும் அந்த பொண்ணு, அவள் தாத்தா ரெண்டு பேரும் இங்க இல்ல, எங்க போனாங்க என்று தெரியலை என்று கூறினான்….
அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்ட சியோரா அவனிடம் “ சரி கெளதம் இப்படி எல்லாம் நடக்குதுன்னா கோட்டைத்தாய் ஏதோ முடிவெடுத்துட்டாள். நீ அங்க வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் இங்க கிளம்பி வா.. அதே போல அது உன் ஊர் இல்ல, அது அவங்க ஊர் அவங்க செய்றதை செய்யட்டும் நீ எதையும் கண்டுக்காம சீக்கிரமா இங்க வந்து சேரு. எக்காரணம் கொண்டும் அது உன் இடம் நீ சொல்லுறதை அவங்க செய்யணும் என்று எண்ணாதே ” என்று கூறி யோசனையுடன் அழைப்பை நிறுத்தினார்…
கெளதம் எப்பொழுதும் அப்படி தான்.அவன் சொல்வதை கேட்கவேண்டும் என்று எண்ணுவான்.. அதிலும் அவர் சொல்வது சரிதானே அது அவர்களின் நிலம் தானே. இப்பொழுது சத்ரியன் குடும்பம் அனுபவிக்கிறது… கோட்டை ஆட்கள் கையில் தான் இருக்கிறது நிலம் கெளதம் குடும்பத்திருக்கு செல்லுமா இல்லை மைத்ரேயி அனுபவிப்பாளா என்று… என்ன தான் நடக்க போகிறது நாம் பொறுத்திருந்து பார்போம்…
அங்கு மும்பை சென்றதே மைத்ரேயிக்கு பிடிக்கவில்லை.. அதுவும் இல்லாமல் தாத்தா இங்கு ஹாஸ்டலில் விட்டு விட்டு படிப்பு முடிந்த பிறகு தான் அங்க வரணும்னு சொல்லிட்டு போய்ட்டாங்க… எப்படி நான் இங்க இருக்கிறது. இதுல வேற இந்த ரூம் மேட் இன்னும் வரல.. அவா வார வர இப்படி தான் இருக்கணுமா என்று எண்ணிக் கொண்டு இருக்கும் நேரம் அவளின் ரூம் கதவு தட்டும் ஓசை கேட்கவும் யாரா இருக்கும் என்ற யோசனையுடன் வந்து கதவை திறந்தாள் மைத்ரேயி..
கெளதம் அங்கு கோவில் பணியை அன்றே ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா கூறியபடி வேலையை செய்துவிட்டு உடனே ஊருக்கு கிளம்ப எண்ணினான்…
கெளதம் கூறியதை கேட்ட சியோராவுக்கு பெரும் யோசனை, அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என்று, அவரின் யோசனை முகத்தை பார்த்த கௌசிக் அவரிடம் வந்து “ அப்பா என்ன யோசனை ” என்று கேட்டான்.
அவன் கேட்கவும் கெளதம் கூறியதை கூறினார் சியோரா, அதைகேட்ட கௌசிக் “ அப்பா அவங்க இப்போ அங்க இல்லைதான அதனால ஏதும் இப்போ நினைக்காதிங்க, நீங்க முதலில் இவளை பற்றி விசாரித்த டிடெக்டிவ் கிட்ட சொல்லி வைங்க அந்த பொண்ணு அந்த ஊருக்கு வரும்பொழுது நம்ம கிட்ட சொல்ல சொல்லுங்க. அப்போ நாம அங்க போய் அவளை அழைச்சுட்டு வருவோம்” என்று கூறினான்..
அவன் கூறுவது அவருக்கு சரி என்று படவே முதல் வேலையாக அந்த டிடெக்டிவ்க்கு அழைத்து கௌசிக் கூறியதை அப்படியே கூறினார். அவர்களும் சரி என்று கூறின பிறகு தன் அவர்க்கு நிம்மதியாக இருந்தது.. அதன் பிறகு அவர் அந்த ஊரையே மறந்து போனார்…
அங்கு கோட்டைத்தாயிக்கு இன்று நடந்ததே மனதில் ஓடிக் கொண்டு இருந்தது, தேவி இப்படி தீடிர் என்று வருவாள் என்று நினைக்கவே இல்லை, அது தான் அவள் மரத்தை ஏவி விட்டாள் ஆனால் கடைசியில் அதையும் தடுத்து விட்டாள்,
இரவு முழுவதும் தீசுவாலையில் வைத்து விட்டாள், காலையில் எப்படியும் தேவி மனசு மாறுவாள் என்று எண்ணி இருந்தால், ஆனால் அவளின் சாந்தமுகமோ அகோரமாக மாறி இருந்தது… இதுக்கு மேல் அவளிடம் ஏதும் கூறமுடியாது என்று நினைத்த கோட்டை மெதுவாக அந்த பெட்டி விட்டு எழுந்தாள்,
1௦௦ வருடங்களுக்கு முன் அவளை எப்படி பெட்டியில் வைத்தினரோ அதே போல் புன்னகை முகம் வாடாமலும் கண்களில் மட்டும் இரக்கம் காட்டு என்ற வேண்டுதலுடன் தேவியை நோக்கி கொண்டே பெட்டியை விட்டு எழுந்து நின்றாள்…
அவள் எழுந்து நிற்கவும் அவளை பார்க்கவே ஆவலாக இருக்கும் அந்த பூவரசம் மரமும் தன் கிளைகளை வேகமாக அசைத்து அந்த ஜன்னலை பலமாக தட்டி கொண்டு இருந்தது… ஆனாலும் தேவி அதன் வேண்டுதலுக்கு எல்லாம் செவி சாய்க்கவே இல்லை… அவளுக்கு கோபம் அடக்கமுடியாத கோபம் அவளின் நாள் முடிந்தும், அவள் வராமல் என்னை இங்கு வர வைத்து விட்டாளே என்ற கோபமே தேவிக்கு.. அது தான் அவளின் கெஞ்சல் எல்லாம் கேன்சல் செய்து விட்டு அவளை அந்த சிலையில் நிரந்தரமாக குடியேற்ற வந்து விட்டாள்…
பெட்டியை விட்டு எழுந்து நின்ற கோட்டை தேவி முன் வந்து நின்றாள், ஆனால் அவளோ கோட்டையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை…. ஆனால் கோட்டை அங்கும் இங்கும் அசையாமல் தேவி அவள் முகம் பார்க்க அப்படியே நின்றாள்…
தேவி இவளை பார்த்து திரும்பவில்லை என்றதும் “ தாயே நீ சொல்லி தான் நான் இங்கு மீண்டும் வந்தேன், எனக்கு எல்லாமுமாக இருந்த நீ இப்போ இப்படி மாறியதன் காரணம் என்னவோ?? எனக்கு இன்னும் ஒரே ஒரு வேலை இருக்கிறது தாயே இந்த ஒருமுறை மீண்டும் எனக்கு வாய்ப்பு தா என் கடனை நான் வசூலித்துக் கொள்கிறேன் ” என்று தேவியிடம் மன்றாடினாள் கோட்டை..
ஆனால் அவளை கூறியதை எல்லாம் கேட்காமல் அவளை நோக்கி “ நீ கேட்டதை நான் உனக்கு அளித்தேன், உன் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, நான் உனக்கு பல வருடங்கள் வழங்கினேன், உன் பழிவாங்கும் நாட்கள் முடிந்து இப்பொழுது நீ காவல்தெய்வமாக எல்லாருக்கு அருள் அளிக்க வேண்டும் கோட்டை, நீ இப்பொழுதே இந்த நிமிடமே அந்த சிலையில் போய் குடியேறு, இல்லையேல் இந்த ஊரையே நான் இல்லாமல் ஆக்குவேன், உன் அடையாளம் எங்கும் இராதபடி செய்வேன் “ என்று ஆக்ரோசமாக கூறினாள் தேவி..
கோட்டை கெஞ்சலையும், தேவி கோபத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த பூவரசம் மரம் ஒரு முடிவுடன் அப்படியே அமைதியாக அதன் கிளைகளை சுருட்டிக் கொண்டு அப்படியே நின்றது.. காரணம் கோட்டையின் கஷ்டத்தை அந்த காலத்திலேயே உடன் இருந்து பார்த்தது அந்த மரமே, அந்த இயற்கை அன்னை அவளுக்கு உதவி செய்ய எண்ணினாள் யாரும் அறியாமலே…
கோட்டை தன் கடனை வசூல் செய்யாமல் தேவியை பார்த்த படியே அந்த சிலையில் குடியேறினாள், இன்றில் இருந்து கோட்டைத்தாய் எதிரிகளுக்கும் காவல் தெய்வம் ஆகினாள். இனி அவளால் யாருக்கும் கெடுதல் செய்யவே முடியாது… அவளை நம்பினோரை கண்டிப்பாக காப்பாற்றுவாள், அது யாரிடம் இருந்தும். ஏன் அவளின் அந்த மரமாக இருந்தாலும் சரி…
அங்கு மும்பையில் மைத்ரேயி ரூம் கதவு தட்டப் படவும் வந்து திறந்தாள் மைத்ரேயி அங்கு புன்னகை முகமாய் ஒரு யுவதி நின்றிருந்தாள்… அவளைபார்த்து புரியாமல் விழித்த மைத்ரேயியை பார்த்து “ ஐ ஆம் ஜிக்னஷா.. உன் ரூம் மேட் வர கொஞ்சம் லேட் ஆகிட்டு.. அப்புறம் இன்னொன்னு எல்லாரும் செல்லமா ஜிக்கி சொல்லுவாங்க நீயும் அப்படியே சொல்லு,” என்று அவளிடம் கூறவும் இவளும் புன்னகை முகமாகவே அவளை உள் அழைத்து “ நான் மைத்ரேயி“ என்று கூறி தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள்…
பின் இருவரும் பொதுவாக அவர்கள் பற்றி பேசிக் கொண்டனர். அதில் ஜிக்கி தான் தனக்கு யாரும் இல்லை என்றும் அவளை படிக்க வைப்பது எல்லாம் அவளின் மாமா என்று கூறினாள்.. அவள் கூறியதை கேட்ட மைத்ரேயிக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது…
ஆனால் அவளுக்கு அவள் தாத்தாவை தவிர யாருமே இல்லை என்பது அந்த நேரம் ஏனோ மறந்து போனது. ஜிக்கியை சமாதானபடுத்திக் கொண்டு இருந்தாள்…
கோட்டைநல்லூர் வந்த சத்ரியனுக்கு நடந்த எதையுமே ஜீரணிக்க முடியவில்லை. முதலில் அவர்களை போகவிடாமல் செய்தாள், இப்பொழுது மதில் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. இதுக்கு எல்லாம் என்ன காரணம் என்று அவருக்கு தெரியவில்லை…
ஏதும் செய்யாமல் ஊர் ஜனங்களை பார்த்து எல்லாரும் வேலையை போய் பாருங்க.. சீக்கிரம் கோவில் வேலையை முடிச்சுட்டு கோட்டைத்தாயிக்கு பெரிய விழா எடுப்போம் எல்லாம் சரி ஆகிரும் என்று கூறி யோசனையோடு அவர் கோட்டை நோக்கி சென்றார்…
சிறிது நேரத்தில் மைத்ரேயி ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று அவர் நண்பன் கூறிய சித்தரை பார்க்க சென்றார் சத்ரியன்…
கௌதம்க்கு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. எங்கு பார்த்தாலும் அவனுக்கு “ மாமா “ என்ற அழைப்பே அவனை சுற்றி சுற்றி வந்தது… அவளை காண வில்லை என்றதும் அவனுக்கு அதிகமாக அவள் நியாபகம் வந்தது.. அதே போல் அவளை இனி எப்படி பார்ப்பது என்ற யோசனையோடு கோவில் வேலை செய்ய அவர்களை ஏவிக் கொண்டு இருந்தான் கெளதம்…
RKமனைவிக்கு RKவும், அவன் மகன் இறந்ததையும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. RK மனைவியும், அவர் மகளும் ஒரே நேரத்தில் தனிமரமாகினர்.. இனி தொழிலை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் தருணம் RK மகள் சஜினாக்கு ஒரு யோசனை வந்தது அதன் படி அவள் அம்மாவிடம் கூறிக் கொண்டு தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சஜினா….
தனதுக் காரை எடுத்துக் நேராக சியோரா வீட்டுக்கு சென்றாள். அங்கு சென்று சியோராவை பார்த்து “ அங்கிள் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ” என்று தயக்கத்துடனேயே ஆரம்பித்தாள்..
அவளின் தயக்கத்தை புரிந்துக் கொண்ட சியோரா “ என்னம்மா சொல்லு என்ன விஷயம் இந்த அங்கிள் கிட்ட உனக்கு என்ன தயக்கம் “ என்று கேட்டார்…
அவளுக்கு இவரை நன்றாகவே தெரியும், அவள் அப்பா இவரிடம் பேசவில்லை என்றாலும் இவளுக்கும் சியோராவுக்கு ஒரு அப்பா, மகள் பாசம் எப்பொழுதுமே உண்டு அது தான் இவளை இந்த வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர எண்ணினார் கடைசியில் எல்லாம் அவர் கனவாகவே போய் விட்டது…
இதை எல்லாம் யோசித்த சியோரா அவளை பார்த்து “ சொல்லும்மா ” என்று மீண்டும் ஊக்கபடுத்தவும்
“அது வந்து அங்கிள் “ என்று இழுக்கவும்
“ என்ன இழுக்குற சொல்லும்மா “
இனியும் தயங்க வேண்டாம் என்று எண்ணிய சஜினா “ அங்கிள் நானும், அம்மாவும் எங்க மாமா கூட அவங்க வீட்டுக்கு போறோம். நீங்க எங்க ஆபிஸ் வாங்குங்க அங்கிள் உங்க கம்பெனி கூட சேர்ந்து நடத்துங்க “ என்று தான் எண்ணியதை கூறி அவர் பதிலுக்காய் அவர் முகம் பார்த்தாள் சஜினா…
அவள் கூறியதை கேட்ட சியோரா யோசனையாக அவளை பார்த்து “ நீ தான இத்தனை நாள் உன் அப்பா கூட இருந்து ஆபிஸ் பாத்துகிட்ட இனியும் அப்படியே பாரும்மா. நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் “ என்று கூறினார்..
அவர் அப்படி கூறவும் “ வேண்டாம் அங்கிள் இங்க தனியா இருக்கனும் அது தான் யோசிக்குறோம் ” என்று இழுக்கவும்
அவளுக்கு பிடித்தம் இல்லை என்பதை உணர்ந்த சியோரா அவளை நோக்கி “ ம்ம் சரிம்மா நான் நாளைக்கு உன் வீட்டுக்கு வாரேன். இப்போ நீ பத்திரமா வீட்டுக்கு போ ” என்று கூறி அவளை அனுப்பி வைத்துவிட்டு சில பல யோசனை செய்து விட்டு சத்ரியாவை அழைத்து அவர் எடுத்திருக்கும் முடிவைக் கூறினார்..
அவர் எடுத்திருக்கும் முடிவு சரி என்று படவே சத்ரியாவும் சரி என்று கூறி இப்பொழுதே திருமணத்திற்கான வேலையை பார்க்க சென்றார்…. நாளை காலை சஜினா வீட்டில் போய் பேசவேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டார்கள்…
சித்தரை பார்க்க சென்ற சத்ரியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… அவர் கோட்டைத்தாய் பற்றி கூறியதை கேட்டு சந்தோசபடுவதா?? இல்லை மைத்ரேயி வாழ்வில் உள்ள கண்டத்தை நினைத்து வருத்தபடுவதா என்று தெரியவில்லை…
ஆனாலும் மைத்ரேயிக்கு வரும் கண்டத்தில் இருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் சத்ரியன்…
அங்கு வேலை செய்யும் ஆட்களை அழைத்து மதில் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ள கற்களை எல்லாம் அகற்ற கூறி, அந்த இடத்தை அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்….
வேற ஊர் மக்கள் இங்கு தங்க வரட்டும் என்ற எண்ணத்தோடு… முதல் முறையாக கோட்டைநல்லூரில் கோட்டைத்தாய்க்கு எதிராக ஒரு செயலை சத்ரியன் கூறுகிறார்…
வெளி ஊர் ஆட்கள் இங்கு தங்க வருவார்களா? இல்லை இங்கு உள்ளவர்கள் வெளி ஊருக்கு செல்வார்களா?? சித்தர் என்ன கூறினார்? சியோரா யாருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருகிறார்? கெளதம்அவளை பார்ப்பானா? இப்படி பல கேள்விகளுடன் உங்களுடன் நானும்…
உயிர் எடுப்பாள்….