UUTNV- 23

UUTNV- 23

உயிர்– 23                                                         

ஷதாஷி கருவுற்ற செய்தியை கேட்ட சத்ரியா, சியோரா சொல்வதையும் கேட்காமல் இங்கு கோட்டைநல்லூர் கிளம்பிவிட்டாள்… சியோரா இவளின் இந்த அதிரடியில் கொஞ்சம் பயந்துவிட்டார்.. பின் கௌசிக் தான் இனி நம்ம வீட்டில் யாருக்கும் ஆபத்து வர கோட்டை விடமாட்டாள் என்று சத்தியம் செய்யாத குறையாக கூறவும் தான்அவளுடன் அவரும், கூடவே மையூரியும் கிளம்பினார்கள் கோட்டைநல்லூர்க்கு பல வருடங்களுக்கு பிறகு…. வர்ஷிக் கோபத்தில் வரமாட்டேன் என்று கூறி விட்டான்…

கோட்டைநல்லூர் வந்த எல்லாருக்கும் பெரும் ஆச்சரியம் ஊர் கொஞ்சம் கொஞ்சமாக மாறியதை பார்த்து… அப்பொழுது தான் கௌசிக் எல்லாம் கூறினான்.. வீட்டில் இருந்தது ஜிக்கி என்று.. ஆனால் கௌதம் ஆசையை மட்டும் அவன் கூறவில்லை மைத்ரேயி பிறந்த பிறகு கூறலாம் என்று விட்டு விட்டான்…மையூரி அழுத அழுகை நெஞ்சை உருக்கும் படி அழுதாள் அவளின் ஒரே தங்கை.. உயிரை விட்டது அவளால் தாங்க முடியவில்லை.. அவளுக்கு கோட்டை மேல் கோபமாக வந்தது இப்படியும் பழி வாங்க ஒருத்தி இருப்பாளா என்று..

அதன் பிறகு தான் சத்ரியனை காண சென்றார் சத்ரியா, மையூரி இருவரும்… அவளுக்கு அவரை அந்த நிலையில் காண பயம் அது தான் தயக்கத்துடன் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தார்… எப்படியும் கண்டு தானே ஆகவேண்டும்என்று அவள் அப்பாவை கண்ட பிறகு அவளுக்கு துக்கம் தாளவில்லை.. ராஜாவாக இருந்தவர் இப்பொழுது படுக்கையில்..

சத்ரியன் ஆசை நிறைவேறியது, அவர் மரணத்துக்கு முன் எல்லாரையும் பார்த்து விட்டார் அதே சந்தோசத்துடன் அடுத்து வந்த ஒரு வாரத்தில் அவர் இம்மண்ணைவிட்டு பிரிந்தார்…

ஷதாஷி குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது வயிற்றில், குழந்தையின் முதல் அசைவை உணர்ந்தது ஆத்மாவாக இருந்த மைத்ரேயி.. ஷதாஷி வயிற்றில் இவள் கைவைத்தால் போதும் குழந்தை அதை உணர்ந்து அவளை உதைக்கும் அந்த செயலில் மைத்ரேயி ரொம்பவே உணர்ச்சி வசபடுவாள்.. அவளுக்கு ஏக்கமாக இருக்கும் தானும் மீண்டும் பிறப்போமா இவனுடன் சேர்வோமா என்று… இவள் செய்வதை எல்லாம் கோட்டை புன்னகை முகமாக பார்த்துக் கொண்டு இருப்பாள்.. இருவரும் அப்படி கௌதமை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்..

ஒரு நல்ல நாளில் ஷதாஷி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.. கெளதம் முதன் முதலில் நடை பயின்றது கோட்டைதாய் சிலையை அதாவது கோட்டையின் கையை பிடித்துக் கொண்டு தான்.. முதல் முதலாக “ அம்மா“ என்று அழைத்ததும் கோட்டையை தான்…

பிறந்ததும் இவனுக்கு கெளதம் சியோரா என்று பெயர் சூட்டினர்.. இந்த பெயரை தான் கௌசிக் வைக்க வேண்டும் என்று கூறி விட்டான்…  இவனுக்கு 1 வயதாகும் பொழுது மைத்ரேயி இவன் கண்களுக்கு தெரிந்தாள். இவன் போலவே ஒரு வயது குழந்தையாக… ஷதாஷி வேலை இருக்கும் பொழுது இவனை கோட்டைத்தாய் பொறுப்பில் விட்டு சென்று விடுவாள்.. அவளுக்கு மட்டும் எல்லா உண்மையையும் கௌசிக் கூறி இருந்தான்…. அதனால் தைரியமாக கோட்டையை நம்பி அவள் விட்டு செல்வாள்… ஆனால் இவனுக்கு அரணாக மைத்ரேயி இருப்பது அவளுக்கு தெரியாது…

கெளதம் விளையாடுவது எல்லாம் மைத்ரேயிடம் மட்டுமே.. அவள் கோவிலில் இருக்கும் பொழுது மட்டும் இவன் கண்களுக்கு காட்சி தருவாள்.. அவனை எப்பொழுதும் போல் ” மாமா “ என்று அழைப்பாள் மைத்ரேயி..

அதற்கு கெளதம் சொல்லுவான் “ நீ மட்டும் என்னை மாமா சொல்லுற, நான் உன்னை எப்படி சொல்ல” என்று கேட்பான்..அவனின் கேள்விக்கு முழிப்பாள் மைத்ரேயி… கெளதம் அவளை செல்ல பெயர் வைத்து அழைத்தது இல்லையே.. என்று மனதில் வருத்தமாக நினைத்துக் கொள்வாள்…

அவனின் மழலையை ரசிப்பாள் கோட்டை… கௌதம் கோவில் விட்டு வெளியில் செல்லும் பொழுது அவனுக்கு இவள் நினைவு இல்லாமல் செய்துவிடுவாள்…

இப்படி நாளும், வருடமும் கடந்தநிலையில் அவனுக்கு 7 வயது இருக்கும் பொழுது ஒரு நாள் கோவில் உள்வந்த கெளதம் ” சின்னு… சின்னு..” என்று அழைத்தான்….

இவனின் அழைப்பை கேட்ட கோட்டையின் முகம் முழுவதும் புன்னகை.. அவனுக்கு 5 வயதிற்கு மேல் மைத்ரேயி நினைவு எப்பொழுதும் இருப்பது போல் கோட்டை பார்த்துக் கொண்டாள்.. ஆனால் வீட்டில் இவன் யாரிடமும் இவளை பற்றி பேசவிடமட்டாள்…

ஒரு நொடியும் மைத்ரேயி நினைவு இவனை விட்டு அகலாத படிபார்த்துக் கொண்டாள்.. இவன் குழந்தையில் இருந்து வளர்வது போல் கெளதம் கண்களுக்கும் இவள் வளர்ந்தாள்…

“சின்னு” என்ற அழைப்புக்கு மைத்ரேயி வரலை என்றதும் அந்த சிறுவன் “ சின்னு உன் மாமா வந்திருக்கேன்” என்று அவளுக்கு அவளை தான் சின்னு என்று அழைக்கிறான் என்று உணர்த்தினான்.. அவனின் அறிவை மெச்சிக் கொண்டாள் கோட்டை…

அவனின் அந்த குரலுக்கு ஓடி வந்தாள் சின்னு… அதன் பிறகு எப்பொழுதும் கௌதம்க்கு சின்னு புராணம் தான்.. அவனை ஒவ்வொரு நொடியும் பார்த்து பார்த்து மைத்ரேயிக்காக செதுக்கினாள் கோட்டை.. அவனின் மனதை விட்டு மைத்ரேயி ஒரு செகண்ட் கூட விலகவிடவில்லை கோட்டை…

அவனுக்கு 8 வயதாகும் பொழுது மைத்ரேயியின் ஆத்ம காலம் முடிவுக்கு வந்தது… அன்று பள்ளியில் விட்டு வந்ததும் கெளதம், கோட்டைத்தாய் கோவில் நோக்கி சென்றான்…

அங்கு அவனின் சின்னு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள்… அவளை பார்த்து அவள் அருகில் சென்ற கெளதம் “சின்னு, நீ இன்னைக்கு என்னை விட்டு போய்டுவ தானே” என்று கவலையாககேட்டான்… “ஆம் அவளின் விலகலை கோட்டை உணர்த்திவிட்டாள்

அப்பொழுது அவன் அருகில் வந்த அவனின் சின்னு “ மாமா, என்னை மறந்துறாத நான் மீண்டும் உன்னை தேடி வருவேன்… நான் மறந்தாலும் நீ என்னை மறக்காதே.. எனக்கு இந்த ஊரை விட்டு போகிற வேலை வந்துவிட்டது” என்று கூறி அவனின் கன்னத்தில் ஒரு ஆழ்ந்த முத்தம் விட்டு சென்றாள்…

போகும் பொழுது ஒரு நிமிடம் அவன் கண்களுக்கு அவள் பெரிய மைத்ரேயியாக தெரிந்தாள்…. அந்த முகம் அவன் மனதில் பதிந்தது. குழந்தை மைத்ரேயி உருவில் பெரிய பெண்ணாக…

அதன் பிறகு மைத்ரேயி இங்கு வரவே இல்லை.. அவனுக்கு அவளின் நினைவு போகவே இல்லை.. அவள் நினைவுடன் காத்து வந்தாள் கோட்டை…

மைத்ரேயி சென்ற கொஞ்ச நாளில் மையூரி கருவுற்றாள்.. சந்தோசம் என்றால் அப்படி ஒரு சந்தோசம் குடும்பத்தாருக்கு.. சத்ரியா மும்பை சென்று விட்டாள் இவளை காண.. வளைகாப்புக்கு இங்கு கோட்டைநல்லூர் அழைத்தார் சியோரா ஆனால் வர்ஷிக் மறுத்துவிட்டான்…

அவளை கண்ணுக்குள் வைத்து காத்தான் என்று தான் சொல்லவேண்டும்.. ஒரு நல்ல நாளில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் மையூரி.. அவளுக்கு தன் தங்கையின் நினைவாக மைத்ரேயி என்று பெயரிட்டாள்.. அவளே வந்து பிறந்திருக்கிறாள் என்று எண்ணினாள்…

அந்த பெயர் வர்ஷிக்கு பிடிக்கவே இல்லை.. இந்த பெயரை வைத்து கோட்டை இவளை அழித்து விடுவாளோ என்று.. ஆனால் மையூரி விடாபிடியாக இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று கூறி விட்டாள்.. ஆனால் வர்ஷிக் அவளை இந்த பெயரிட்டு அழைக்க மாட்டான் “ அம்மு“ என்று தான் அழைப்பான்.. மீதி எல்லாருக்கு இவள் மைத்ரேயி…

கெளதம் அடிக்கடி இங்கு மும்பைக்கு வருவான் கௌசிக் அழைத்துக் கொண்டு வருவான்.. அவனுக்கு தெரியும் மைத்ரேயி தான் மீண்டும் இங்கு பிறந்து வந்திருக்கிறாள் என்று… கெளதம் கண்களுக்கு தன்னை விட்டு விலகி சென்ற சின்னு தான் மீண்டும் வந்து விட்டாள் என்று எண்ணி “ சின்னு “ என்றே அழைத்தான்… அவனின் அழைப்பு வர்ஷிக்கு பிடிக்காது ஆனால் கண்டும் காணாமல் இருப்பான்.. அடிக்கடி மாமா – அத்தை என்று கெளதம் அவனின் அப்பா கௌசிக் கூடவே மும்பை வருவான்… வந்து அவனின் சின்னுவை கொஞ்சுவான்…

மைத்ரேயி ஸ்கூல் போக ஆரம்பித்த பிறகு கெளதம் மும்பை வருவதை நிறுத்தி விட்டான்.. சுபிக்க்ஷா அவளின் தோழி… தன்னுடைய தம்பியை பற்றி பேசுவாள்… இவளும் அமைதியாக கேட்டுக் கொள்வாளே தவிர ஏதும் கூறமாட்டாள்… அப்பொழுது தான் கோட்டை இவளுக்காக ஒருவன் இருக்கிறான் என்று கனவின் மூலம் உணர்த்த ஆரம்பித்தாள்…

ஆனால் கௌதம்க்கு மைத்ரேயி முகம் மறக்கவே இல்லை… அவள் மேல் அளவுக்கு அதிகமான காதல் வைத்திருந்தான்.. ஆனாலும் தன்னை காட்டாமலே அவள்இவனை அறிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்… இவனுக்கு மைத்ரேயி நினைவை உணர்த்த கோட்டை அருகில் இருந்தாள். ஆனால் அவளுக்கு அவனை கனவில் உணர்த்துவாள்.. கனவில் உணர்த்துவாளே தவிர அவன் முகத்தை இன்னும் காட்டவில்லை…

அப்படியும் மைத்ரேயிக்கு அவனின் உடல் அமைப்பு மட்டுமே எபோழுதும் நினைவில் அவளே பல உருவம் கொடுத்து வைத்திருக்கிறாள்… அப்படி இன்னும் ஒருவனை காணவில்லை அவள்… 

அன்று ஒருநாள் சியோரா கௌதம்க்கு அம்முவை கட்டிக்கொடுபோமா என்று கேட்டதற்கு “ இல்லை மாமா கெளதம் இங்க வந்தால், கட்டி கொடுப்போம் அங்க இருந்தால் வேண்டாம்” என்று கூறிவிட்டான்.. அதன் பிறகு சியோரா அதை பற்றி பேசவில்லை.. ஆனால் கௌசிக் இவன் வருகைக்காய் காத்திருந்தான்… எல்லா உண்மையை கூறி பல வருடங்களாக இவர்கள் சேர காத்திருப்பதையும், கோட்டை எண்ணத்தையும் கூற எண்ணினான்..

அப்படி தான் போன முறை மையூரி வரும் பொழுது எல்லாம் கூறி எப்படியாவது வர்ஷிக்கை இங்கு அழைத்து வரக் கூறினான்… அவளும் அவனை அழைத்து வந்துவிட்டான்.. இதோ இப்பொழுது எல்லாவற்றையும் கூறி விட்டான்..

கௌசிக் கூறியதை கேட்ட எல்லாருக்கு ஆச்சரியம் “ எத்தனை ஜென்மன் எடுத்தாலும் கெளதம் – மைத்ரேயி சேர்வது தான் விதி என்றும், இருவரின் காதலும் எத்தனை வருடங்கள், எத்தனை ஜென்மன் எடுத்தாலும் தொடரும் என்று எண்ணிக் கொண்டார்கள்.. ஆனால் வர்ஷிக்கு மட்டும் மனது ஒரு நிலையில் இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தான்…

அதே நேரம் மைத்ரேயி வீட்டின் உள் வந்தாள்.. வந்து எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தாள்.. கௌதமை அதிகமாக பார்த்தாள். அவள் கண்களில் ஒரு ஏமாற்றம்… வந்துப் போனது…

அவளை பார்த்ததும் அவனுக்கும் ஒரு ஏமாற்றம “அவளுக்கு தன்னை தெரியவில்லையே” என்று.. அவளுக்கு இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு “கெளதம் எல்லாம் அறிந்து என்னிடம் ஒன்றும் கூறாமல் இருந்து விட்டாரே” என்ற எண்ணம்.. இப்படி எண்ணி இருவரும் முறைத்துக் கொண்டு சென்றனர்….

அவளின் முறைப்பை கண்ட பிறகு தான் கௌதம்க்கு மூளையில் பளிச் என்று பல்பு எரிந்தது.. “ ஒருவேளை சின்னு என்னை அறிந்துக் கொண்டிருப்பாளோ ” என்று.. அந்த எண்ணமே அவனுக்கு அத்தனை தித்திப்பாக இருந்தது.. இந்த நேரம் சின்னு என் அருகில் இருந்தால்எப்படி இருக்கும் என்று மயக்கத்தையும், கண்களில் காதலையும் தேக்கி நினைவில் மூழ்கி இருந்த கௌதமை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் வர்ஷிக்..

வர்ஷிக்குதெரியும் கெளதம் மனம் முழுவதும் மைத்ரேயி தான் இருக்கிறாள் என்று.. ஆனால் அவள் மனதில் வேற யாராவது இருந்தால், என்ன செய்வது என்று யோசித்து, கௌதமிடம் பேசவேண்டும் என்று எண்ணிய வர்ஷிக், கௌதமை கலைக்கும் பொருட்டு அவன் முன் வந்து நின்று“ க்கும்“ என்று சத்தம் எழுப்பி அவனை கூடவே அழைத்து சென்றான்…..

அறைக்கு சென்ற மைத்ரேயிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. “ தன் வாழ்வில் இத்தனையும் நடந்திருக்கிறதா என்று. ஆனால் வீட்டில் இதுவரை யாரும் ஏதும் கூறவில்லையே ஏன் கூறவில்லை” அதே நேரம் இப்படியும் நடக்குமா என்று குழப்பமாகவும் இருந்தது… எல்லாம் எப்படி அறிந்துக் கொள்வது, என் கனவில் வரும் முகம் தெரியாத நபர் கெளதமா??கௌதமா இருந்தா நான் அவரை மனதில் நினைத்துக் கொண்டிருப்பது போல் அவரும் என்னை நினைத்துக் கொண்டிருக்கணுமே? அப்படி நினைத்தால் கெளதம் என்கிட்டே சொல்லிருப்பாங்களே? ஏன் சொல்லலை என்று பலவாறாக எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரம்,

அறைக்கு வந்த வர்ஷிக், கௌதமை நோக்கி “ நான் அன்னைக்கு பேசுனதை நீ பெருசா எடுத்துக்காதே. நான் இந்த கோட்டைத்தாய் மேல இருந்த கோபத்தில் தான் அப்படி உன்கிட்ட சொல்லிட்டேன், ஆனால் ஒண்ணு நீ அவளுக்காக காத்திருக்கிற மாதிரி அவளும் உனக்காக காத்திருக்கிறாள் என்று நினைக்குறியா” என்று கேட்டான் வர்ஷிக்…  

முன்பு கெளதம் மும்பைக்கு வரும்பொழுது எல்லாம் மைத்ரேயியை பார்க்கும் பார்வையை வர்ஷிக் கவனித்திருகிறான்… கௌதம்க்கு அவளை பிடிக்கும் என்பது அவளுக்கும் தெரியும், ஆனால் இவன் அவளுக்கான காதலை கண்களில் காட்டுவான். ஆனால் அவளோ கண்டும் காணாமல் இருப்பாள்.. மனதில் இவன் மேல் உள்ள காதல் இருந்தாலும், அவளின் கனவு நினைவு அந்த காதலை வெளிபடுத்தாமல் விரட்டிவிடும். இப்படி மனநிலையில் இருக்கும் பொழுது ஒரு நாள் கெளதம் அவளிடம் வந்து “ சின்னு, நான் உன்னை அழகா சின்னு சொல்லுற மாதிரி நீயும் என்னை மாமா சொல்லு “ என்று சொன்னான். அப்பொழுதுஅவளுக்கு18 வயது இருக்கும்..

“ போடாநான் உன்னை மாமா சொல்லமாட்டேன். நீசுபி மாதிரி  கெளதம் தான் என்று சொல்லுவாள்… யாரு சொன்னாலும் கேட்கமாட்டாள் மைத்ரேயி.. அப்படி செல்லமாக வளர்ந்துவிட்டாள்… மையூரி எவ்வளவோ கூறுவாள் ஆனால் காதில் கேட்கவே செய்யாது அவளுக்கு…

போன ஜென்மத்தில் “ மாமா ” என்று பின்னாடியே வந்த மைத்ரேயியை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை. ஆனால்இன்றோ அவனின் மனம் பிடித்த மைத்ரேயியின் திருவாயால் ஒரு “ மாமா “ வார்த்தை கேட்க பாடுபடுகிறான்…

கெளதம் காதலை வர்ஷிக் உணர்ந்து தான் அன்று அவனை“ இவன் அப்படியே அந்த கெளதம் போல் இருப்பதாலும், மைத்ரேயியும் அவளை போல் இருப்பதாலும் அவள் அங்கு சென்றால் எல்லாம் அவளுக்கு நினைவு வந்து கௌதமை திருமணம் செய்து அங்கு சென்று விட்டால்  கோட்டை மைத்ரேயியை அழித்து விடுவாள் என்று பயந்த வர்ஷிக் இவனை நோக்கி “ என் மகளை விட்டு கொஞ்சம் விலகி இரு” என்று கூறியதில் இருந்து தான் கெளதம் மும்பை செல்வதை நிறுத்தினான்..

ஆனாலும் அவனுக்கு தெரியும் “ கோட்டை இவனை மைத்ரேயிக்கு உணர்த்திக் கொண்டு தான் இருப்பாள். அந்த தைரியத்தில் தான் அன்று வர்ஷிக்கிடம் என்றைக்கு இருந்தாலும் மைத்ரேயி தான் தன் மனைவி ” என்று கூறி இருந்தான்.. இதை சிந்தித்த கெளதம் அவனின் மாமாவை நோக்கி “ மாமாசின்னுவுக்கு எல்லாம் கோட்டைத்தாய் உணர்த்திவிட்டாள்.. என்னை அவள் இந்த நேரத்துக்கு அடையாளம் தெரிந்து கொண்டிருப்பாள்… ஆனாலும்அவளுக்கு போன ஜென்மம் நியாபகத்தில் இருக்காது. அது அவளுக்கு நினைவு வந்தால் தான் அவளின் எல்லா குழப்பமும் போகும். அதையும் கோட்டைத்தாய் சீக்கிரம் உணர்த்திவிடுவாள்.. நீங்கரெஸ்ட் எடுங்க மாமா, கோட்டை எல்லாம் பார்த்துகொள்வாள்” என்று கூறி வெளியில் வந்தான் கெளதம்…

வெளியில் வந்த கௌதம்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை “ சின்னுவை பார்த்து உண்மையை கூறுவோமா? ஆனாலும் அவனது காதல் மனது “ வேண்டாம் கெளதம் நீ எப்படி அவளை மறக்காமல் நினைவு வைத்திருக்க. அதே போல அவளும் உன்னை நினைவு வைத்திருந்தால் உன்னை தேடி வருவாள், கோட்டை உனக்கு அவளை உணர்த்தியது போல் அவளுக்கும் உன்னை உணர்த்தி இருப்பாள்.

அவளே உன்னை தேடி வருவாள்.. இப்போ போ உன் மற்றொரு உயிரை கவனி” என்று தோட்டத்துக்கு அடித்து விரட்டியது அவனின் மனசாட்சி…

அவனுக்கும் மனசாட்சி கூறியதே சரி என்று படவும் அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும்தூர தள்ளி வைத்து தோட்டத்தை நோக்கி கிளம்பினான்…

அவன் கிளம்புவதை கோட்டை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் மைத்ரேயி… “ கோட்டை படியில் இருந்து இறங்கி வேஷ்டி நுனியை பிடித்து கட்டிக் கொண்டு…. கையில் போட்டிருந்த தங்க காப்பை மேல் நோக்கி இழுத்து விட்டுக் கொண்டு… அவன் பைக் ராயல் என்பீட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டு அதை உதைத்து கிளம்பிய..” காட்சியை கண்ட மைத்ரேயி மனதில் மீண்டும்மீண்டும் கெளதம் பதிந்து போனான்…

மீண்டும் உயிர்தோம்…

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!