UVVU 31

அத்தியாயம் 31

“அத்தான், இந்த நீல லெங்கா சூட் பாருங்களேன் என்ன அழகு! “

கடையில் இருந்த எல்லா துணிகளையும் புரட்டிப் போட்டு அலசிக் கொண்டிருந்தாள் தேஜல்.

பொறுமைப் பறக்க நின்றிருந்த பிரகாஷ்,

“தேஜல், சீக்கிரம் செலக்ட் பண்ணும்மா. இன்னும் அரை மணி நேரத்துல எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு.”

தேஜல், ஜெயின் தூரத்து உறவு. சிறு வயதில் பெற்றவர்களை இழந்தவளுக்கு ஜெயின் வீடே அடைக்கலமானது. பெண் குழந்தை இல்லாத ஆராதனாவுக்கு இவள் மேல் பாசம் அதிகம். ஆனாலும், அவள் வழக்கப்படி கண்டிப்பை மட்டும் தான் காட்டுவாள். எப்படி கோப முகம் காட்டினாலும், ஆராதனா பின் நாய் குட்டி மாதிரியே திரிந்து கொண்டிருப்பாள் தேஜல்.

பிரகாஷிற்கும், ஜெபீக்கும் கூட மிக செல்லம் இவள். நாளை அவளுக்கு இருபத்தி ஒன்றாவது பிறந்த நாள். அதற்குத்தான் உடை எடுக்க வந்திருந்தார்கள்.

“பய்யா! நீங்க போங்க. நான் ஷோப்பிங் முடிச்சுட்டு இவள கூட்டி வரேன்.” என்றான் ஜெபீ.

கார்டை தம்பியிடம் கொடுத்தவன்,

“நீயும் வேண்டியத வாங்கிக்க ஜெபீ. என்னோட கார்டுதான். மம்மிக்கு கணக்குப் போகாது. ரீபோக் ஷூ வேணும்னு சொல்லிட்டு இருந்த. அதையும் வாங்கிக்க. ரொம்ப நேரம் வெளிய சுத்தாம சீக்கிரம் வீட்டுக்கு வந்துருங்க. பாய் தேஜல்”

பிரகாஷிற்கு தம்பி மேல் அளவு கடந்தப் பாசம். சிறு வயதிலிருந்தே தன்னலமற்று தன்னிடம் பாசத்தைக் காட்டும் தம்பியை இவனும் அளவுக்கு அதிகமாக தாங்கினான். படித்து முடித்து விட்டு இன்னும் ஆபிசுக்கு வராமல், ஆராதனாவுக்கே தண்ணி காட்டும் தம்பி மேல் இவனுக்கு சிறு பொறாமை கூட உண்டு. இவன் மட்டும் எப்படி அம்மாவின் கண்ணில் விரலை வைத்து ஆட்டுகிறான் என.

ஆராதனா அனுப்பிய எந்த கிளாசிலும், ஒரு வாரம் கூட ஜெபீ தாக்குப் பிடிக்க மாட்டான். அழுது ஆர்ப்பாட்டம் செய்வான், அல்லது எங்காவது ஒளிந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்வான். ஆராதனா கண்டிக்க கண்டிக்க இன்னும் பிரச்சனைகளை இழுத்து வந்தான். அதனாலேயே சின்ன மகனைத் தண்ணீர் தெளித்து விட்டு விட்டாள் ஆரா. அவளது நம்பிக்கை எல்லாம் பிரகாஷின் மீதுதான். அவன் மட்டுமே தனக்குப் பிறகு தொழிலைக் கட்டிக் காப்பான் என பெரிதும் நம்பினாள்.

கொஞ்ச நாளாக படுத்தும் ‘ஸ்லிப்ட் டிஸ்க்’ பிரச்சனையால் முழு ஓய்வு தேவைப்பட்டதால், தொழிலை பிரகாஷிற்கு எழுதி கொடுத்து விட்டு சுவிட்ஷர்ந்திற்குக்கு ஓய்வுக்கு சென்றிருந்தாள் ஜெய்யுடன்.

பிரகாஷும் தாய் சொல்லைத் தட்டாதே எம்ஜிஆருக்கும் மேலாக ஆரா சொன்னதை அச்சுப் பிசகாமல் செய்வான். வேலை ,வேலை என்று இருப்பவன் நன்றாக இழுத்து மூச்சு விடுவது கூட தன் அப்பாவிடம் இருக்கும் அந்த ஒரு மாதம் தான். அங்கே சென்று விட்டால், கட்டுப்பாடுகளை எல்லாம் மறந்து விட்டு பெய்ண்டிங், ஸ்னோர்க்கலிங், பார் ஹோப்பிங், என வாழ்க்கையை ஜாலியாக அனுபவிப்பான். வெஸ்டர்னும், இந்தியமும் கலந்து செய்த கலவையாக இருந்தான் பிரகாஷ்.
“டாடி”

“சொல்லு மை சன்”

ரோவனுக்கு போன் செய்திருந்தான் பிரகாஷ்.

“இந்த சம்மருக்கு என்னால வர முடியாது டாடி”

“ஹ்ம்ம் புரியுது. உங்க மம்மிக்கு இப்ப எப்படி இருக்கு?” குரலில் லேசாக சோகம், அக்கறை.

“ரிக்காவர் பண்ணிகிட்டு இருக்காங்க. வேலை எல்லாம் அப்படியே விட்டுட்டு வர முடியாது. அவங்க வந்ததும், ஜெய் டாடிகிட்ட வேலைய ஒப்படைச்சிட்டு நான் வரேன். இங்க எனக்கு மூச்சு முட்டுது டாடி”

“கண்டிப்பா வா, சன். இந்த தடவை லெட்ஸ் கோ பாரிஸ். நீ வர டைம்ல என்ன ஆர்ட் ஈவெண்ட் இருக்கோ அதுல போய் ஜாய்ன் பண்ணிக்கலாம். அப்படியே உனக்குப் பிடிச்ச வைன் டேஸ்டிங்கும் போய்ட்டு வரலாம்.”

“இனி உங்க கூட நான் வர மாட்டேன்”

“வை சன் வை?”

“பொண்ணுங்க எல்லாம் இன்னும் உங்கள தான் சைட் அடிக்கிறாங்க. எனக்கு கடுப்பா இருக்கு” சிரித்தான் பிரகாஷ்.

“சரி, இந்த தடவை நான் டை பண்ணாம வரேன். க்ரே ஹேர்லாம் அப்படியே தெரியட்டும். அப்போவாவது என்னை விட்டுட்டு என் மகன சைட் அடிக்கிறாங்களா பார்ப்போம்” மகனை கலாய்த்தார் ரோவன்.

இது அவர்களுக்குள் ஒரு விளையாட்டு. இன்னும் இளமையுடன், ஆணழகனாக இருக்கும் தன் தந்தையை எப்பொழுதும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பான் பிரகாஷ்.

“ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க ஓல்ட் மேன்.”

“யாருடா ஓல்ட் மேன்? நான் நினைச்சா இப்ப கூட உனக்கு ஒரு தம்பி பாப்பாவ அரெஞ் பண்ண முடியும் மை சன்”

“தம்பி வேணா டாடி. ஏற்கனவே இருக்கறவனையே என்னால சமாளிக்க முடியல. தங்கச்சி ஓகே”

“அட போடா! இனிமே நீ கல்யாணம் செஞ்சு ஒரு பேத்திய எனக்கு பெத்து குடுடா”

“நீங்க சொன்ன மாதிரி என் மனச அசைக்கிற பெண்ண நான் இன்னும் பார்க்கல டாட். எப்போ வருவா அவ?”

“சன்! நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா? அதெல்லாம் உன்னை திசை திருப்ப நான் அடிச்சு விட்டதுடா. பார்த்தோனே வரது ஒரு வகை காதல்னா, பார்க்க பார்க்க வரது இன்னொரு வகை காதல். மம்மி சொல்ற பொண்ண கல்யாணம் செஞ்சிகிட்டு பார்த்து பார்த்து லவ் பண்ணு. யோசிச்சுப் பாரு மை சன். டாடிக்கும் முன்ன மாதிரி உடம்பு நல்லா இல்ல மை சன் ”

“ஏன் டாடி? என்னாச்சு? ஏன் என் கிட்ட சொல்லல? இப்பவே நான் கிளம்பி வரேன்.” பதறினான் பிரகாஷ்.

“கால்ம் டவுன் மை சன். செக் அப்லாம் போய்ட்டு வந்துட்டேன். லைப்ப கொஞ்சம் டேக் இட் ஈசியா எடுத்துக்க சொல்லறாங்க. நான் ஏற்கனவே அப்படிதான்னு அவங்களுக்கு தெரியல போல” சிரித்தார் ரோவன்.

“சிரிக்காதீங்க டாட். நீங்க அங்க தனியா இருக்கறது எனக்கு எவ்வளவு கவலையா இருக்கு தெரியுமா?”

“தெரியும் சன். நான் நல்லா தான் இருக்கேன். நீ கவலைப்படாம இரு. மம்மி வந்தோன சீக்கிரம் இங்க வா. ஐம் மிஸ்ஸிங் யூ”

“ஐ மிஸ் யூ டூ டாடி.”

“சரிப்பா நீ வேலைய பாரு. அப்புறம் பேசலாம்” என காலை கட் செய்தான் ரோவன்.

ஆராதனா கொஞ்சம் தேறி தாய்நாடு திரும்பவும், மறு வாரமே தன் தந்தையைத் தேடி பயணப்பட்டான் பிரகாஷ். மகன் அங்கே செல்வதற்கு என்றுமே ஆரா தடை விதித்தது இல்லை. அவன் சென்று வரும் போது, அக்கறை இல்லாதது போல் காட்டி, ரோவனின் நலத்தை அறிந்துக் கொள்ள அவள் தவறியதும் இல்லை.

தந்தையும் மகனும், பாரில் அமர்ந்து சிக்கன் விங்ஸ் சாப்பிட்டப்படியே பேசிக் கொண்டிருந்தனர்.

“சன், உனக்கு கழுதை வயசு ஆகுது. உங்க மம்மி உனக்கு எப்போ கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்க? கார்லா இன்னும் சிங்கிளா தான் சுத்திட்டு இருக்கா. நான் வேணும்னா அவளை உனக்கு கட்டி வைக்கவா?” கிண்டலாக கேட்டார் ரோவன்.

“ஓ! நீங்க மட்டும் வயசு பொண்ணுங்க கூட சுத்துவீங்க. எனக்கு மட்டும் கார்லா கிழவிய கட்டி வைப்பீங்களா? நல்லா இருக்கு உங்க நியாயம் டேட்.” சிரித்தான் பிரகாஷ்.

“ஜோக்ஸ் அபார்ட், நீயாச்சும் கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கனும் சன். தனிமை சின்ன வயசுல வேணும்னா நல்லா இருக்கும். ஆனா வயசாகிறப்போ தலை சாய்ச்சுக்க மடி தேடி ஏங்கும் மனசு. என் நிலைமை உனக்கு வரக்கூடாது சன்.”

“கண்டிப்பா பண்ணிக்கறேன் டாட். வரிசையா புள்ளைக் குட்டியா பெத்துப் போட்டு உங்க கிட்ட விட்டுறறேன். நீங்க பார்த்துக்குங்க. நானும் என் வைப்பும் ஜாலியா ஹனிமூன் கொண்டாடிட்டே இருப்போம். எப்படி என் ஐடியா?”

“அதுக்குத் தான் நான் வெய்ட்டிங் சன்”

பேசிக் கொண்டிருந்த ரோவனுக்கு திடீரென வியர்க்க ஆரம்பித்தது. கை கால்களும் நடுங்க ஆரம்பித்தன.

“சன், ஐ பீல் ஓன் கைண்ட்.” என்றவர் மகனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

“டாடி! என்னாச்சு டாடி. மூச்ச இழுத்து விடுங்க டாடி.” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த தகப்பனை கீழே விழாதவாறு தாங்கிக் கொண்டான் பிரகாஷ்.

“காய்ஸ், மூவ் அசைட். யாராச்சும் 911 க்கு கூப்பிடுங்க. ஐ ஹேவ் அ எமர்ஜென்சி ஹியர்” கத்தியவன் தரையில் தன் தகப்பனைப் படுக்க வைத்து நெஞ்சை அழுத்தி முதழுதவி செய்தான். மூச்சு தாறுமாறாக துடிக்கவும், சி. பீ. ஆர் செய்ய குனிந்தவனை ,

“சன் ஐ ஆல்வேய்ஸ் லவ் யூ! டூ யூ க்னோ தட்?” என மூச்சு வாங்க கேட்டார் ரோவன்.

“யா டேட். ஐ க்னோ. மீ டூ லவ் யூ சோ மச்” என்றவன், தனக்கு உயிர் கொடுத்த தகப்பனுக்கு உயிரூட்ட, தன் மூச்சுக் காற்றை மாற்றி மாற்றி அவர் வாய்க்குள் அனுப்பினான். ஆம்புலன்ஸ் வரும் வரை விடாமல் செய்து கொண்டே இருந்தான். கண்ணில் நீர் வழிய, மூச்சு வாங்க வாங்க, தகப்பனுக்கு மூச்சுக் கொடுத்தான். டாக்டர் வந்து அவனைப் பிரித்து இழுக்கும் வரை அதையே தான் செய்து கொண்டிருந்தான் பிரகாஷ்.

ரோவனின் நாடியைப் பிடித்துப் பார்த்த டாக்டர்,

“சாரி சன். ஹீ இஸ் நோ மோர்” என சொல்லவும் தான் நடப்புக்கு வந்தான் பிரகாஷ். அதிர்ச்சியில் கண்ணில் நீர் கூட வரவில்லை.

‘எப்படி, எப்படி? இப்பத்தானே என் கிட்ட பேசிட்டு இருந்தாரு. அதுக்குள்ள எப்படி?’ அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரோவனின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு தூக்கும் போது தான் பிரகாஷ் சிலைக்கு உயிர் வந்தது. அவன் கத்திய கத்தலிலும், கதறலிலும் அந்த பாரே நிலைக் குத்திப் போய் நின்றது.

அங்கு மட்டும் தான் அவன் அழுதது. அதற்குப் பிறகு பல வேலைகள் அணிவகுத்து நின்றன அவன் கண் முன்னே. பியூணரலுக்கு அரெஞ் செய்வது, ஆட்களை அழைப்பது, கேலரியை மூடுவது, அவர் செய்திருந்த ஆட்ர் டீலிங்களை ஒத்தி வைப்பது இப்படி வேலைகள் அவன் நேரத்தைப் பிடித்துக் கொண்டன.

ஆராவிடம் விஷயத்தைத் தெரியப்படுத்தினான். ஓ என்ற ஒற்றை சொல்லுடன் பேச்சை முடித்துக் கொண்டவள், ஜெய்யையும், ஜெபீயையும் மட்டும் அனுப்பி வைத்தாள். உயிரற்ற ரோவனைப் பார்க்க அவள் இதயத்துக்கு சக்தி இல்லை.

தந்தை தன் பெயரில் எழுதி வைத்திருந்த கேலரியையும் சொத்துக்களையும் ஒழுங்குப் படுத்திவிட்டு இந்தியா வந்து சேர அவனுக்கு ஒரு மாதம் பிடித்தது.

அன்றிரவு விட்டத்தை வெறித்துக் கொண்டு அவன் படுத்திருந்த போது கதவைத் தட்டும் மெல்லிய சத்தம் கேட்டது. எழுந்துப் போய் கதவைத் திறந்தவன், ஆராவை அங்கு பார்த்ததும் திகைத்தான். இந்த ஒரு மாதத்தில் இளைத்து கருத்திருந்தார்.

“உள்ள வாங்க மம்மி” அவரை உள்ளே விட்டு கதவை சாற்றினான் பிரகாஷ்.

அவன் கதவை சாத்தவும், அவனைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டார் ஆரா.

“மம்மி, கால்ம் டவுன். என்னாச்சு?” இப்படி பாசத்தையோ, நேசத்தையோ, துக்கத்தையோ தன்னிடம் காட்டியிராத தன் அம்மா அழுவது இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்பா இல்லாம என்னால முடியலடா பிரகாஷ். நானும் செத்துரலாமானு இருக்கு” தேம்பினார்.

“மம்மி! என்ன பேசறிங்க? ஜெய் டாடிக்கு தெரிஞ்சா எவ்வளவு மனவருத்தப் படுவாருன்னு உங்களுக்குப் புரியலையா?”

“அறிவுக்குப் புரியுது. ஆனா மனசுக்கு புரியலையேடா. எங்கயோ ஒரு மூலையில என் ரோவன் சந்தோஷமா இருக்காருன்னு மனச தேத்திட்டு இருந்தேனே! இப்ப அவர் இல்லவே இல்லைன்றத என்னால தாங்கிக்க முடியலைடா” அழுதே கரைந்தார்.

பிரகாஷால் தன் அம்மாவைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. தன் அப்பா வேண்டாமென ஜெய்யை மணந்து அவருடன் வாழ்ந்து தம்பியையும் பெற்றவர், இப்பொழுது இறந்து போனவரை நினைத்து அழுது கரைகிறாரே என வருத்தமாக இருந்தது. ஏற்கனவே பாசத்தைப் பொழிந்த ஒற்றை ஜீவனும் போய் விட்டதே என இறுகி இருந்தவன், ஆராவின் பரிணாமத்தைப் பார்த்து வெறுத்துப் போனான்.

அணைத்திருந்த மகன் , தன்னைத் தள்ளி நிறுத்தவும் அவனை நிமிர்ந்து பார்த்த ஆரா, அவன் முக மாற்றத்தைக் கண்டு கொண்டார்.

“பிரகாஷ்! உன் ஜெய் அப்பாவுக்கு நேர்மையாக தான் இத்தனை நாளா நான் வாழ்ந்தேன். அடி மனசுல உங்க டாடி நினைப்பு இருந்துருக்கலாம். அதை நான் ஆராய்ந்து பார்த்ததில்லை. இப்போ அவர் இல்லைங்கறதுனால கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். சாரி. குட் நைட்.”

கதவை நோக்கி சென்றவர், மீண்டும் அவனைத் திரும்பி பார்த்து,

“பிரகாஷ்! உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்.” என்றார்.

“மம்மி!” அதிர்ந்தான் பிரகாஷ்.

“டாடி இறந்து இன்னும் ரெண்டு மாசம் கூட ஆகலைன்னு புரியுது. ஆனா நீ முன்ன மாதிரி இல்லயே பிரகாஷ். ரொம்ப மாறிட்ட. ஏற்கனவே அளந்து தான் சிரிப்ப. இப்ப அதுக்கூட இல்ல. வேலையிலும் பல மிஸ்டேக்ஸ். உனக்குன்னு ஒரு வைப் வந்துட்டா கொஞ்சம் ரிலாக்‌ஷா இருப்ப. அதுக்குத்தான் இந்த முடிவு. அதோட துக்கம் நடந்த கையோட ஒரு சுப காரியம் செஞ்சிறது நல்லது பிரகாஷ். பொண்ணு வேற யாரும் இல்ல நம்ம தேஜல் தான். உன் கூடவே வளர்ந்தவ அவ, உன்னைப் புரிஞ்சு நடந்துக்குவா“

‘தேஜலா? அவள நான் அந்தக் கண்ணோட்டத்தோட பார்த்தது இல்லையே’

முதன் முறையாக அம்மாவை எதிர்த்துப் பேசினான் பிரகாஷ்.

“என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது மம்மி”

“பிரகாஷ், என் பேச்சுக்கு மதிப்பில்லையாடா? எல்லாம் உன் கையில இருக்குன்ற அதிகாரமா?”

“மம்மி! அதிகாரம் நீங்க குடுத்தது தான். இப்ப கூட நான் அதை திருப்பி குடுத்துருறேன். இப்போதைக்கு என்னை ப்ரீயா விடுங்க மம்மி. டாடி இல்லாம நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். என் மனக்காயம் ஆறனும். ஐ பேக் யூ மம்”

இப்படியே விட்டால் இவன் சரி வர மாட்டான் என முடிவெடுத்த ஆராதனா,

“உங்க டாடிக்கு நீ சீக்கிரமா லைப்ல செட்டல் ஆகி புள்ளை குட்டிங்களோட வாழனும்னு ஆசை. லாஸ்ட் டைம் ஈமெய்ல இத பத்திதான் ரொம்ப பேசி இருந்தாரு பிரகாஷ்” என ரோவனை இழுத்தார்,

நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன்,

‘காதல் இல்லாம எப்படி கல்யாணம் செஞ்சிக்கறது’ என யோசித்தான்.

ரோவனின்
“பார்த்தோனே வரது ஒரு வகை காதல்னா, பார்க்க பார்க்க வரது இன்னொரு வகை காதல்.” என்ற பேச்சு மனதில் வந்து போனது.

‘பார்க்க, பார்க்க வரலாம்!’ முடிவெடுத்தவன், ஆராவை நோக்கி,

“உங்களுக்கு பிடிச்சத செய்ங்க மம்மி” என சொன்னான்.

“தேஜல் உனக்கு ஓகேவா பிரகாஷ்?”

“முடிவெடுத்து விட்டு என்ன கேள்வி மம்மி? ஆக வேண்டியத பாருங்க. நான் படுக்கப் போறேன். குட் நைட்” என திரும்பிக் கொண்டான்.

மகன் வாழ்க்கை இனி சரியாகி விடும் எனும் நிம்மதியில் கதவை சாத்திவிட்டு வெளியேறினார் ஆராதனா.

பேப்பரில் விளம்பரம் செய்து, பத்திரிக்கைகள் அடித்து மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது பிரகாஷ், தேஜலின் திருமணம்.

திருமணம் ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்கும் போதே, தன் தந்தையின் ரியல் எஸ்டேட் இன்வெஸ்மெண்டில் கொஞ்சம் குளறுபடி வர மீண்டும் அமெரிக்கா பயணப்பட வேண்டியதாகி விட்டது பிரகாஷிற்கு.

அவன் திரும்பி வந்த அன்றே குடும்பமாக மட்டும் சென்று திருமணத்தை ரெஜிஸ்டர் செய்து விட்டு வந்தார்கள். பதிவு முடிந்து வீட்டிற்கு வந்த போது, தடுமாறிய தேஜலை விழுந்து விடாமல் தாங்கினான் பிரகாஷ். சட்டென விலகி நடந்தவளின் விழிகளில் கண்ணீரைக் கண்டு யோசனையாக இருந்தது பிரகாஷிற்கு.

‘இவ எதுக்கு அழுதுகிட்டுப் போறா? அம்மா ஏற்பாடு செஞ்சாங்கன்னு நான் அப்படியே விட்டுருக்க கூடாதோ. பிடிச்சிருக்கா, இல்லையான்னு கேட்டுருக்கனுமோ? கல்யாணம் பிடிக்காத மாதிரி என் கிட்ட இத்தனை நாளா நடந்துக்கலியே!’ பலவாறாக நினைத்தப்படி தனது அறைக்கு சென்றான் பிரகாஷ்.

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம், இப்பொழுது பெண்ணின் சம்மதத்தைக் கேட்கவில்லையே என யோசிக்கும் தன்னை நினைத்து அவனுக்கே ஆத்திரம் வந்தது. யாரோ ஒரு ரோவனுக்குப் பிறந்ததால் சிறு வயதில் இருந்து தான் அனுபவிக்கும் துன்பங்கள் இன்னும் துரத்துகிறதே என சுயபச்சாதாபம் அவனை வாட்டியது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு எங்காவது சென்று விடலாமா என மனம் அழுதது.

அன்று இரவும் அவன் ரூமின் கதவு தட்டப்பட்டது. திரும்பவும் ஆராவோ என யோசித்தப்படியே போய் கதவைத் திறந்தான். அங்கே தேஜல் அழுது சிவந்த முகத்துடன் நின்றிருந்தாள். இவனுக்குப் பார்க்கவே பாவமாக இருந்தது.

“உள்ள வா தேஜல். என்னாச்சு? அழுதியா?”

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் முகத்தில் அப்படி ஒரு வெறுப்பு.

“அனாதையா உங்க வீட்டுக்கு காலடி வச்சதனால, நான் உங்களுக்கெல்லாம் இளப்பமா போயிட்டேன்ல?”

“என்ன பேசுற தேஜல்? உன்னை நாங்க யாருமே அப்படி ட்ரீட் பண்ணது இல்லயே”

“பின்ன எப்படி ட்ரீட் பண்ணீங்க? மகாராணி மாதிரியா? போக்கத்தவதானே நாம வாயால சொன்னத இவ தலையால செய்வான்னு தானே உங்க எல்லாருக்கும் நினைப்பு”

“தேஜல்!”

“நீங்க எல்லாம் மனுஷ பிறவியே இல்ல. ஐ ஹேட் யூ!”

“என்ன விஷயம்னு சொல்லு தேஜல்! என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன்”

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. ஐ ஹேட் யூ. எனக்கு வெறுப்பா இருக்கு! என் முன்னால நிக்காம போ!” குலுங்கி அழுதாள்.

“ஏன், என்னாச்சு ?”

“எனக்கு உன்னைப் பிடிக்கல. உன் தம்பிய தான் பிடிச்சிருக்கு.”

அவனின் அறைக்கே வந்து அவனையே முன்னால் நிற்காதே என கத்தியதிலேயே அவள் நிரம்பவும் ஸ்ட்ரெஸாக இருப்பதை உணர்ந்துக் கொண்டான். கல்யாணம் பிடிக்காத காரணத்தைக் கேட்டு அவளை சரி செய்து விடலாம் என நினைத்தானே தவிர, அவள் மனதில் இன்னொருத்தன் அதுவும் தன் தம்பி இருப்பான் என நினைக்கவில்லை.

“பைத்தியக்காரி! இத முன்னமே சொல்லுறதுக்கு என்ன? ரிஜிஸ்டர் மேரேஞ் முடிஞ்சு இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம். இப்பத்தான் சொல்லனும்னு தோணுதா?” பொறுமை பறந்தது பிரகாஷிற்கு.

“ஆமா, நான் பைத்தியக்காரி தான். உன் மேல உயிர வச்சிருக்கற மடையன லவ் பண்ணேன் பாரு, நான் பைத்தியக்காரி தான். என்னை லவ் பண்ணிட்டு, உனக்கு பேசறாங்கன்னு தெரிஞ்சவுடனே, என்னை மறந்துருன்னு அழறானே உன் கோழை தம்பி, அவனை லவ் பண்ண நான் பைத்தியக்காரிதான். கல்யாணம் நெருங்க நெருங்க என்னால என்னையே கட்டுப் படுத்திக்க முடியல. நன்றி கடனுக்கு உயிர குடுக்கலாம், உயிருக்கும் மேலா நினைக்கற காதல பலி கேட்டா நான் என்ன செய்யறது?” ஆங்காரமாக கத்தியவள், அவனின் அறையில் இருந்தப் பொருட்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தாள். சத்தத்தில் குடும்பமே அவன் ரூமுக்கு ஆஜராகி இருந்தது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத தேஜல், ஜெபீயின் அணைப்பில் மட்டுமே கட்டுக்குள் வந்தாள்.

அதிர்ச்சியில் நின்றிருந்த ஆராவுக்கு கோபம் தலைக்கேறியது. தேஜலையும் தன் சின்ன மகனையும் அறைந்து தள்ளிவிட்டார். ஜெய் தான் அவளை சமாதானப் படுத்தினார்.

“ஒருத்தர ஒருத்தர் காதலிக்கறத முன்னமே சொல்லி தொலைச்சிருக்க வேண்டியது தானே?” கத்தினார் ஆரா.

“மம்மி, நீங்க அண்ணனுக்கு தேஜல கேட்கவும் எனக்கு வாய் தன்னால மூடிக்கிச்சு மம்மி. தேஜல கல்யாணம் செஞ்சிகிட்டா அண்ணா பழையபடி ஆகிருவாறுன்னு நினைச்சி தான் விட்டுக் குடுத்தேன்.” தலையைக் குனிந்துக் கொண்டான் ஜெபீ.

“விட்டு குடுக்க இது என்ன விளையாட்டுப் பொருளா? ஒரு பொண்ணோட மனசு. நீ பண்ண காரியத்தால நம்ப குடும்ப மானமே சந்தி சிரிக்கப் போகுது.” கத்தினாள் ஆரா.

நடப்பதை மூன்றாம் மனிதனாகப் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ்,

“விடுங்க மம்மி, அவன திட்டாதீங்க. கல்யாணம் நிச்சயம் பண்ணறப்ப என் கிட்ட கேட்ட மாதிரி நீங்க தேஜலையும் கேட்டிருக்கனும்.” என அமைதியாக சொன்னான்.

“தப்புதான். நான் செஞ்சது பெரிய தப்புதான். நான் பார்க்க வளர்ந்தவ கிட்ட எந்த ஒளிவு மறைவும் இருக்காதுன்னு நினைச்சேன். இப்படி ரெண்டு பேரும் திருட்டுத்தனமா லவ் பண்ணிருப்பாங்கன்னு நான் நினைக்கல. இவ்வளவு தூரம் வந்தும் என் கிட்ட மறைச்சிருப்பாங்கன்னும் நினைக்கல” தலையைப் பிடித்துக் கொண்டார்.

“மம்மி, வந்து உட்காருங்க. என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணலாம்” என்றவன் கட்டிலில் தன் அன்னையை அமர வைத்தான்.

தேஜல் அழுதபடியே நின்றிருந்தாள். உணர்ச்சி இல்லாமல் அவளைப் பார்த்த பிரகாஷ்,

“போ தேஜல்! போய் படு. உனக்குப் பிடிக்காதது எதுவும் இங்க நடக்காது” என அவளை அனுப்பி வைத்தான்.

ஏற்கனவே மனகஸ்டத்தில் இருக்கும் தன் பெரிய மகனுக்கு, மீண்டும் ஆறா துயரைக் கொடுத்ததை எண்ணி தாய் உள்ளம் நொந்துப் போனது.

“என்னை மன்னிச்சிரு பிரகாஷ். பிக்ஸ் பண்ண டேட்டுல உனக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு”

இப்போது தலையைப் பிடித்துக் கொள்வது பிரகாஷின் முறையானது.

“போதும் மம்மி. நீங்க சொல்லி நான் கேட்டது எல்லாம் போதும். எனக்கு காதல், கல்யாணம் இப்படி எதுவுமே வேணாம். என்னை இப்படியே விடுங்க”

கட்டிலில் இருந்து எழுந்து நின்ற ஆரா,

“இந்தக் கல்யாணம் நடக்கலைனா, நீ என்னை அறவே மறந்துற வேண்டியதுதான். என் சொத்து மட்டும் தான் உனக்கு கிடைக்கும்” என்றார்.

மகனுக்கு நல்வழி நடக்கத்தான் அப்படி பேசினார் ஆரா. ஆனால் அவர் கையில் எடுத்த அதிகார தோரணைதான் அவருக்கே ஆட்டத்தைக் காட்டியது.

தன் தாயை விழி இடுங்க நோக்கியவன்,

“அறவே வெட்டி விடாம, சொத்தை உனக்குக் குடுப்பேன்னு சொன்னீங்களே அந்த மறைஞ்சிருக்கற அன்பு எனக்கு போதும் மம்மி. எனக்கு ஏதாவது கொடுக்கனும்னு நினைச்சீங்கனா, இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைங்க. எங்க ரெண்டு பேரோட பேரும் பிரகாஷ் தானே. அதனால நெருங்கனவங்கள தவிர வேறு யாருக்கும் மாப்பிள்ளை மாறனது தெரிய வாய்ப்பில்லை. “

அசையாமல் நின்றிருந்தார் ஆராதனா.

அவள் அருகே நெருங்கியவன், தாயின் கைகளை எடுத்து தன் முகத்தில் பொதித்துக் கொண்டான். தன் கண்ணீரால் தாயின் கைகளைக் கழுவியவன்,

“ப்ளிஸ் மம்மி தம்பிய தண்டிக்காதீங்க. காதலோட வலி என்னன்னு உங்களுக்குப் புரியும். இவங்கள சேர்த்து வைங்க. ” என்றான்.

பின் தன் தாயை இறுக அணைத்தவன், சில நிமிடங்களில் விடுவித்தான்.

“நான் கொஞ்ச நாளைக்கு ஒதுங்கி நிக்கறேன் மம்மி. என் லைப்ப சோர்ட் பண்ண எனக்கு டைம் குடுங்க. எனக்கு எப்ப தோணுதோ அப்போ திரும்ப வரேன். அது வரைக்கும் என்னைத் தேட வேண்டாம்” என்றவன் தனது பர்சை மட்டும் எடுத்துக் கொண்டு, போட்டிருந்த துணியோடு அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டு வெளியேறினான்.

அவனைத் தடுக்க சென்ற ஜெய்யையும், ஜெபீயையும் தடுத்த ஆரா,

“போகட்டும் விடுங்க. எப்ப திரும்பி வரானோ, அப்ப வரட்டும்” கண்ணீர் குரலுடன் சொன்னார்.


(தொடர்ந்து உன்னோடுதான்)

Comments Here


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!