UVVU29

UVVU29

(பிரகாஷின் கடந்தகாலம் ஹிந்தி மொழி வழியில் இருந்தாலும், இங்கே உங்களுக்காக தமிழில் கொடுக்கப்படுகிறது)
“பிரகாஷ்! மம்மியோட ஆபிஸ் ரூம்லயே உட்கார்ந்து ஹோம்வோர்க் செய். நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன். நான் திரும்பி வரும் போது எல்லாம் செஞ்சு முடிச்சிருக்கனும். புரியுதா?” கட்டளையாக வந்தன வார்த்தைகள்.
“ஓகே மம்மி” ஆறு வயது சிறுவனுக்குரிய எந்த ஆர்ப்பாட்டமும், துள்ளலும் இல்லாமல் அமைதியாக வந்தது பதில்.
“பார்த்துக்கோ” அவனின் கேர் டேக்கர் ராணியிடம் சொல்லி விட்டு கிளம்பினார் ஆராதனா கப்பூர். ஆரா ஆட்டோமோபைலின் ஏகபோக உரிமையாளர். ஆண்கள் மட்டும் ஆட்சி செய்யும் தொழிலில், கால் ஊன்றி நின்று மற்றவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் முடிசூடா ராணி.
அம்மா கண்ணை விட்டு மறைந்ததும்,
“ராணிம்மா! எனக்கு பசிக்குது. ஸ்நேக்ஸ் இருக்கா?”
சுற்றும் முற்றும் பார்த்தவர், தன் கைப்பையில் மறைத்து வைத்திருந்த சாண்ட்வீச்சை எடுத்துக் கொடுத்தார்.
“சீக்கிரம் சாப்பிடு பிரகாஷ். மம்மி பார்த்தா நான் தொலைஞ்சேன்” அவசரப்படுத்தினார்.
அவசர அவசரமாக மென்று விழுங்கியவனிடம், தண்ணீர் பாட்டிலை நீட்டினார் ராணி. குடித்து முடித்தவன், தனது வீட்டுப் பாடங்களை செய்ய ஆரம்பித்தான்.
பிரகாஷ் கப்பூர் பிறந்ததிலிருந்தே எல்லாமே அட்டவணைப்படிதான் அவனுக்கு வழங்கப்படும். தனது தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காக்கப் போகிறவன், டிசிப்பிளின் நிறந்தவனாக இருக்க வேண்டும் என பிஞ்சிலேயே வரைமுறைகளை வகுத்து அதன் படி வளர்த்திருந்தார் அவனை.
கைப்பிள்ளையாக இருந்தப் போது கூட இரவில் நான்கு மணி நேரம் கணக்கு வைத்தே பால் கொடுப்பார் ஆராதனா. அதற்கு முன்னே அழுதால் கூட, கைக்கட்டிப் பார்த்திருப்பாரே தவிர சமாதானப் படுத்தமாட்டார். அவர் அகராதியில் அன்புக்கு அர்த்தம் கண்டிப்பு என்பதாகவே இருக்கும்.        
பிரகாஷின் அம்மா ஆராதனா கப்பூர் பரம்பரை பரம்பரையாக பணம் புரளும் குடும்பத்தில் ஒற்றை மகளாக பிறந்தவர். பேரழகி. குடும்ப சொத்தையும் தொழிலையும் கட்டி ஆள ஆண் வாரிசு எதிர்பார்த்திருந்த கப்பூர் குடும்பத்திற்கு இவரின் பிறப்பு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
பிறந்துவிட்டாயா, சரி விடு, வளர்க்கிறோம் என்ற ரீதியில் தான் வளர்க்கப்பட்டார் ஆராதனா. அவர் பெற்றோர்கள் எவ்வளவு முயன்றும் அடுத்த வாரிசை கடவுள் கொடுக்கவேயில்லை. நிதர்சனத்தை உணர்ந்து, இனி மகள்தான் தொழில் வாரிசு என அவர்கள் மகளிடம் நெருங்கும் போது, அவள் இவர்களை ஒதுக்கி வைத்திருந்தாள்.
பெற்றவர்களின் ஆண் வாரிசு ஏக்கம் அவளை அடியோடு மாற்றி இருந்தது. ஒரு ஆண் பெண்ணாய் மாறினாள் தூற்றும் சமூகம், ஒரு பெண் ஆண் போல் மாறினாள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஜீன்ஸ், டீ சர்ட், ஏன் ஒரு பெண் வேட்டி கட்டிக் கொள்வது கூட சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. ஆராதனா உடை விஷயத்தில் மட்டும் மாறி இருக்கவில்லை, நடை விஷயத்திலும் மாறி இருந்தாள்.
பெண்மைக்குரிய எந்த நளினமும் இல்லாமல், ஆளுமை நிறைந்தவளாக வளர்ந்திருந்தாள். நடக்கும் போது தீப்பொறி பறக்கும், பேசும் போது அனல் அடிக்கும், பார்க்கும் பார்வையில் நெருப்பு பற்றிக் கொள்ளும். ஒற்றைக் கண் அசைவில், தன்னை சுற்றி உள்ளவர்களை ஆட்டி வைத்தாள்.
படிக்கும் போதே தொழிலை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தவள், படிப்பை முடித்ததும் முழு மூச்சாக அதில் மூழ்கிப் போனாள். பெற்றவரை மிரட்டி மொத்த சொத்தையும் தன் பெயருக்கு மாற்றியவள், தொழிலையும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாள்.
வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்க மகள் திருமணம் பற்றி யோசிக்காமல் தொழிலில் மூழ்கி கிடப்பது ஆராதனாவின் பெற்றவர்களுக்கு கவலையை கொடுத்தது. அவளுக்குப் பிறகு தொழிலை நடத்த வாரிசு வேண்டுமே. அவர்கள் கவலை அவர்களுக்கு. மகளிடம் லேசாக நூல் விட்டுப் பார்த்தனர்.
“நான் காட்டாறு. எவனுக்கும் அடங்கிப் போக மாட்டேன். வாரிசு வேணும்னா, அதுக்கு வழியா இல்ல? டோன்ட் பீ சில்லி” என பெற்றவர்களையே அதிர வைத்தாள். அடங்கா குதிரை ஆராவுக்கும் காதல் வந்தது. அந்தக் காதல் வாழ வைத்ததா, வீழ வைத்ததா?
“மேடம், இன்னிக்கு ஒரு ஆர்ட் எக்ஸபிஷன்கு நீங்கதான் சீப் கெஸ்ட். பேமஸ் அமெரிக்கா ஆர்டிஸ்ட் ரோவன் அண்டேர்சனின் பேய்ண்டிங் ஒன்னு ஏலத்துக்கு விடறாங்க. வர கலேக்சன் செர்விக்கல் கேன்சர் ஃபண்ட்கு போகுது.” அன்றைய நிகழ்ச்சி நிரலை, காலையிலேயே கம்பெனியை ரவுண்ட்ஸ் செய்து கொண்டிருக்கும் ஆராதனாவின் பின்னால் வேகமாக நடந்தபடி ஒப்பித்தார் அவளின் செகரெட்டரி.
“வாட் தெ…. இந்த மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் ஏன் ஒத்துக்கறீங்க? அங்கல்லாம் போய் பொறுமையா என்னால உட்கார்த்திருக்க முடியாது தெரியுமில்ல?” மிசின்களின் சத்தத்தையும் மீறி வந்தது அவளின் கத்தல்.
“இல்ல மேடம், நாம புதுசா தொடங்கிருக்க கார் மாடல் லான்ச் ஆகப்போகுது. நீங்க இதுல கலந்துக்கிட்டு அந்த ஓவியத்தை வாங்குனா, நிறைய பப்ளிசிட்டி கிடைக்கும். சேல்ஸ்கு பூஸ்டா இருக்கும். அதுக்குத்தான் உங்கள கேட்காம ஒத்துக்கிட்டேன்”
“நெஸ்ட் டைம் இப்படி அதிக பிரசங்கித்தனமா ஏதாவது நடந்துச்சு, இருக்கறதெல்லாம் பிடுங்கிட்டு நடுத்தெருவுல சுத்த விட்டுருவேன். மைண்ட் இட்! எத்தனை மணிக்கு அங்க இருக்கனும்?” மறைமுகமாக தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
“நைட் ஏழு மணிக்கு மேம். அதோட” தலையை சொரிந்தார் அந்த செக்ரட்டரி.
“இன்னும் என்ன? சொல்லித் தொலைங்க” பொறுமை பறந்தது.
“போர்மல் ஈவெண்ட் அது. ஜீன்ஸ்லாம் போட முடியாது மேம்”
“கமினே! (கெட்ட வார்த்தை. இதுக்கெல்லாம் ட்ரென்ஸ்லேசன் கேக்காதீங்கோ) அவங்களுக்குத் தேவை என் பணம். நான் அவுத்..ஹ்ம்ம்ம் எப்படி வந்தா தான் என்ன?” அவரிடம் எகிறினாலும், அன்று மாலை அவள் நிறத்தை எடுத்துக் காட்டும் சிகப்பு நிறத்தில் ஈவ்னிங் கவுன் அணிந்தே சென்றாள்.  
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன், டிஸ்ப்லேயில் இருந்த ஓவியங்களை எல்லோரும் பார்வையிட்டபடி இருந்தனர். இவளும் சிவனே என ஒவ்வொன்றாக பார்த்தபடி வந்தாள். அங்கிருந்த ஓவியங்களில் இது ஒன்று மட்டும் அவள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்தது. அப்படியே அதன் அருகிலேயே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள் ஆராதனா. ஒரு நிர்வாண தேவதை பெண், இறக்கைகளுடன் இருந்தாள் அந்த ஓவியத்தில். பக்கவாட்டுப் போஸில் வரையப்பட்டிருந்த அந்தப் படத்தில் அவளது நிர்வாணம் கூட நீண்ட கூந்தலால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த தேவதை சிரித்த முகத்துடன் இருந்தாலும் கண்களில் ஒரு வலி தெரிந்தது. பார்பவர்களின் கண்ணை உறுத்தாமல், கலைநயத்துடன் இருந்தது அந்த ஓவியம். ஆராதனாவால் கண்களை அகற்ற முடியவில்லை. அந்த ஓவியம் தன் வாழ்க்கையையே பிரதிபலிப்பது போல ஒரு பிரமை.
திடீரென,
“பியூட்டிபுள்” எனும் குரலைக் கேட்டு தன் பிரமையில் இருந்து வெளிவந்தவள், அருகில் நின்றிருந்த அந்த வெளிநாட்டவனை நிமிர்ந்துப் பார்த்தாள். தன்னை ஆழ நோக்கிய அந்த ப்ரௌன் நிற கண்களைப் பார்த்து தடுமாறியவள், தன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.  
“ஹாய், ஐம் ரோவன். க்ளேட் டூ மீட் யூ” நீட்டிய கையைப் பற்றிக் குழுக்கியவள்,
“ஐம் ஆராதனா” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“இந்த ஓவியம் நீங்க சொன்ன மாதிரி பியூட்டிபுல் தான்”
“நான் ஓவியத்தை சொல்லல ஆரா, உன்னைதான் சொன்னேன்” பார்த்த கணமே, தன் பெயரை சுருக்கியது மட்டுமில்லாது தன்னை அழகி என குறிப்பிட்டது ஆராதனாவுக்கு ஒரு வகை மயக்கத்தைக் கொடுத்தது. அதை சொன்னவன், ஆளை மயக்கும் அழகில், ப்ரௌன் முடியில், ப்ரென்ச் பியர்ட் வைத்திருந்ததும் கூட அந்த மயக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
“வாயேன் ஆரா! என்னோட மற்ற ஓவியங்களையும் உனக்கு காட்டறேன்” என அவளது கையைப் பற்றிய படி அழைத்து சென்றான் ரோவன், நமது பிரகாஷின் தந்தை.(இப்போ தெரியுதா ப்ரௌனி ஏன் இம்புட்டு அழகா இருக்கான்னு?)
“ஓ நீங்க தான் இந்த ஏஞ்சலை வரைஞ்சவரா? ரொம்ப அருமையா இருக்கு” ரோவனிடம் பேச சகஜமாக வார்த்தை வந்தது ஆராதனாவுக்கு.
ஆராவின் கைப்பிடித்து நடத்தி சென்ற ரோவன், ஒரு ஓவியத்தின் முன் அவளை நிறுத்தினார். ஓவியத்தைப் பார்த்த ஆராதனாவுக்கு முகம் குப்பென சிவந்தது. தன்னிடமும் வெட்கம் எனும் அப்ளிகேஷனைக்(application) கடவுள் இண்ஸ்டால் செய்து தான் அனுப்பியிருக்கிறார் என்பதை அவள் 
அப்பொழுதுதான் உணர்ந்தாள். செமி நியூட் எனும் வகையில் இருந்தது அந்த ஓவியம். உடம்புக்கு மேலே மெல்லிய துணி மட்டும் மறைத்திருந்தது ஓவியப் பெண்ணுக்கு.
ஓவியத்தைப் பார்த்து, பின் ஆராதனாவைப் பார்த்த ரோவன்,
“உன்னை இதை மாதிரியே பேய்ண்ட் பண்ண எனக்கு ஆசையா இருக்கு ஆரா. வில் யூ அல்லாவ் மீ?” என மயக்கும் குரலில் கேட்டான்.
தன் கைகளை அவனிடம் இருந்து உறுவிக் கொண்டவள்,      
“அப்புறம் பார்க்கலாம் ரோவன்” என அவசரமாக ஏலம் நடக்கும் இடத்திற்கு நடையை எட்டிப் போட்டாள்.
“ஆரா, உன் பதிலுக்கு நான் காத்திருப்பேன்” ரோவனின் குரல் அவளைத் துரத்தியது.
அன்று நடந்த நிகழ்ச்சியில், ரோவனின் பார்வை யாரைப் பற்றியும் கவலைப் படாமல் ஆராதனாவின் மேலேயே இருந்தது. அதை உணர்ந்துக் கொண்டாலும், இவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
ஏலத்தில் விடப்பட்ட அந்த ஏஞ்சல் ஓவியத்தை வாங்கிக் கொண்டே வீட்டுக்குப் பயணப்பட்டாள் ஆரா.
மறுநாள் மட்டும் அல்ல தொடர்ந்து ஒரு வாரமாக அவளது ஆபிசுக்கு சிவப்பு ரோஜாக்கள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு போக்கேவும், ஒவ்வொரு வாசகத்தைத் தாங்கி வந்தன.
“நான் ஒரு திருடன், உன்னைத் திருடிப் போக வந்திருக்கிறேன்”
“தினம் என் கனவில் ஓடி விளையாடுகிறாயே பெண்ணே, உனக்கு கால் வலிக்கவில்லையா?”
“நீ ஒரு மந்திரக்காரி! உன்னைப் பார்க்கும் போது மற்றவர்கள் எல்லாம் மறைந்து போகிறார்களே”
“உன்னை முத்தமிட துடிக்கிறேன். உனக்குப் பிடிக்காவிட்டால் திருப்பிக் கொடுத்து விடடி கண்ணே”
இப்படி ரசித்து ரசித்து வாசகங்களை அனுப்பி வைத்திருந்தான் ரோவன். படிக்கும் போதே இவளுக்கு முகம் சிவந்துப் போகும்.
ஒரு வாரம் பொறுத்தவள், அந்த கார்டுகளில் அவன் கொடுத்திருந்த நம்பருக்குக் போன் செய்தாள்.
“ஹலோ ரோவன்”
“ஹலோ பியூட்டி. ஒரு வாரமா என்னைத் தவிக்க விட்டுட்டீயே. ஐ மிஸ் யூ பேபி”
“லுக் ரோவன்! இந்த ரொமான்ஸ்லாம் எனக்கு ஒத்து வராது. ஐம் நாட் கட் அவுட் ஃபோர் திஸ் க்ரேப். பிளிஸ் அண்டேர்ஸ்டாண்ட்”
“இது தான் பேபி, உன்னோட இந்த அட்டிடியூட் தான் என்னைக் காந்தம் மாதிரி இழுக்குது. அன்னிக்கு எக்ஸ்சபிஷன்ல உன்னை முதல் முறை பார்த்தப்பவே, யூ ஆர் நாட் ஈசின்னு புரிஞ்சுகிட்டேன். என் வாழ்க்கை முறைக்கு நீ ஒத்து வர மாட்டேன்னு அறிவுக்குப் புரியுது, ஆனா மனசுக்குப் புரிய மாட்டிக்கிது பேபி. அட் லீஸ்ட் கிவ் மீ அ சான்ஸ். ப்ளிஸ் பேபி. பழகி பார்க்காமலே சரி வராதுன்னு சொல்லாதே ஆரா” அவனது கெஞ்சலைப் போல் இருந்த கொஞ்சலில் ஆரா மனம் தடுமாறி தான் போனாள்.
“ஓகே! ஓன் சான்ஸ். ஒன்லி ஓன்”
ஒன்று என ஆரம்பித்த அவர்களின் சந்திப்பு, தினமும் தொடர்ந்தது. தன்னை மகாராணி போல உணர வைக்கும் ரோவனை மனதார நேசிக்க ஆரம்பித்தாள் ஆராதனா. அவளது ஆளுமையிலும், அலட்டாத அழகிலும் மாடலாக இருக்க கேட்டவளை மனதில் மாட்டி வைத்தான் ரோவன். பழக ஆரம்பித்த ஒரே மாதத்தில் ஐ லவ் யூ சொல்லி அன்பு முத்தத்தையும் பரிமாறிக் கொண்டார்கள் இந்த ரோனா(இருவரின் பெயர் சுருக்கம்) ஜோடி.
“ஆரா, நான் அமெரிக்கா திரும்ப வேண்டிய டைம் வந்துருச்சு. அங்க நமக்கு ஒரு ஆர்ட் கேலரி இருக்கு. நான் போய் தான் கணக்கு வழக்கெல்லாம் பார்த்து, புது பேய்ண்டிங்ஸ் வாங்கனும். அதுக்கு நிறைய நாடுகள சுத்தி வரனும். நிறைய ரிசர்ச் செய்யனும்.” ஒரு நாள் சோகமாக சொன்னான் ரோவன்.
“என்னை விட்டுப் போறீங்களா ரோவன்?” தொண்டை அடைக்கக் கேட்டாள் ஆராதனா.
“என்னாலயும் உன்னை விட்டு இருக்க முடியாது ஆரா. என் கூட வரியா பேபி?”
எதையுமே யோசிக்காமல் தலையை ஆமென ஆட்டினாள் ஆரா. பிறந்ததிலிருந்தே அன்புக்கு ஏங்கியவளுக்கு ரோவனிடம் கிடைக்கும் ஆத்மார்த்தமான அன்பை இழக்க மனம் வரவில்லை.
“உன்னோட பிஸ்னஸ்லாம் எப்படி பேபி?”
“கொஞ்ச நாளுல அதெல்லாம் காணா போயிறாது! டேடி பார்த்துக்குவாரு”
“கொஞ்ச நாளுன்னா, என்னை விட்டுட்டு திரும்ப வந்துருவியா பேபி?”
“பின்னால நடக்கறத பின்னால யோசிக்கலாம் ரோவன். இப்பவே பேசி எதுக்கு நம்ம சந்தோசத்தை ஸ்பாயில் பண்ணனும்?”
“அதுவும் சரிதான் பேபி. என் சந்தோசமே இந்த அழகான உடம்புக்குள்ள தான் ஒளிஞ்சிருக்கு” என குறும்பாக சிரித்தவன், ஆராவை தன் படுக்கையில் சரித்தான்.
கல்யாணம் இல்லாமலே இருவரும் லிவிங் டுகேதர் ஆரம்பித்திருந்தார்கள். ஆராவை விட்டு இவனாலோ, ரோவனை விட்டு ஆராவாலோ இருக்க முடியாது எனும் நிலையை அவர்கள் எட்டி இருந்தார்கள்.
அவர்களின் அன்பு, காதல், சந்தோசம் எல்லாம் அமெரிக்க மண்ணில் கால் பதித்த இரண்டு மாதம் வரைதான் நீடித்தது. முதலில் இருவரும் ஒன்றாகதான் எல்லா இடங்களுக்கும் சுற்றி திரிந்தார்கள். ரோவன் அவனது வேலையில் கொஞ்சம் மூழ்கி போக, ஆராவுக்கு அன்னிய தேசத்தில் சமாளிக்க முடியாமல் போனது. என்னேரமும் வேலை, கம்பெனி என சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு வீட்டுக்குள்ளேயே அடைந்துக் கிடப்பது பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. அவை எல்லாம் ஆரா பேபி என ரோவன் அணைக்கும் வரைதான். பின் உலகையே மறந்துப் போவாள் ஆரா.
அன்று காலையில் எழுந்தவளுக்கு, தலை சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது. மீண்டும் படுத்துக் கொண்டவள், பின் மெல்ல எழுந்தாள். பல் துலக்கும் போது வயிற்றைப் பிரட்டி வாந்தி வரவும் கொஞ்சம் சந்தேகம் வந்தது. நாட்களை மனக்கணக்கிட்டு எண்ணியவளுக்கு, தேதி தள்ளி போயிருந்தது புரிந்தது. சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் பயமாக இருந்தது. பிள்ளை வேண்டாம் என இருவரும் மிகவும் கவனமாக தான் இருந்தார்கள். பின் எப்படி? இறைவனின் கணக்கை யார் மாற்ற முடியும்.
அபார்ட்மெண்டின் கீழே இருந்த மெடிக்கல் ஸ்டோருக்குப் போய் ப்ரெக்னெசி கிட் வாங்கி வந்தவள், உடனே செக் செய்தாள். இரண்டு பிங்க் கோடுகளை காட்டியது.
‘இதை வச்சே உன்னை என் கூடவே கூட்டிட்டுப் போறேன். நீ ஒரு ஸ்வீட்டி அண்ட் சோப்டீ(softie) மை டார்லிங். கண்டிப்பா நான் கூப்டா, நீ நாய்குட்டி மாதிரி என் கூட வருவே’ அந்த ப்ரெக்னசி கிட்டை கிப்ட் வ்ரேப் செய்தவள், குளித்து கிளம்பினாள் ரோவனின் கேலரிக்கு.
டாக்சியில் ஏறி அமர்ந்தவள்,இந்த கிப்டை திறந்து பார்க்கும் போது ரோவனிடம் என்ன முகமாற்றம் வரும் என கற்பனை செய்து கொண்டே பயணப்பட்டாள்.
கேலரி இருக்கும் கட்டிடத்தின் முன் இறங்கியவள், டாக்சிக்குப் பணம் செலுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள். அவளை ஏற்கனவே ரிசெப்சனிஷ்ட்கு தெரியும் என்பதால், சிரித்தபடியே அவளை வரவேற்றாள்.
“ரோவன், வரைஞ்சிட்டு இருக்காரு ஆரா. இப்போ யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிருக்காரு” என்றவளைப் பார்த்து,
“என்னை ஒன்னும் சொல்ல மாட்டாரு. நான் போய் பார்க்கிறேன்” என ரோவன் வரைய பயன்படுத்தும் ரூமுக்கு சென்றாள்.
மெதுவாக கதவைத் திறந்தவள், அங்கே கண்ட காட்சியில் அப்படியே திகைத்து நின்றாள்.
அங்கிருந்த கலைநயமான சோபாவில் உடம்பின் கீழ் பகுதி மட்டும் மறைத்திருக்க, மேலாடை இல்லாமல் ஒருத்திப் படுத்திருக்க, ரோவன் அவள் கைகளைப் பிடித்தப்படி நின்றிருந்தான்.
கோபம் கொப்பளிக்க அந்தப் பெண்ணின் அருகில் சென்றவள், கன்னம் கன்னமாக அவளை அறைந்து தள்ளி விட்டாள்.
“ஆரா பேபி, என்ன செய்யற? ஆரா விடு அவள!” தடுத்தான் அவளை.
“யூ பிட்….ஹீ இஸ் மைன். ஒன்லி மைன். டூ யூ அன்டெர்ஸ்டேன்ட்? ஹீ இஸ் மைன்” நம் நாட்டு ஸ்டைலில் முடியைப் பிடித்து இழுத்து அடித்து பெரிய கலவரமே செய்துவிட்டாள் ஆரா. ஹிஸ்டீரீயா வந்தது போல அவள் நடந்துக் கொள்வதைப் பார்த்த ரோவன், ஆராவை இறுக அணைத்துக் கொண்டான். சீக்கிரம் வெளியேறும் படி அந்த மாடலிடம் கண் அசைத்தவன்,
“ஆரா பேபி! கால்ம் டவுன்.” என தட்டிக் கொடுத்தான்.
அவன் மார்பிலேயே தொய்ந்து சரிந்தவள்,
“என்னைத் தவிர மத்த பொண்ணுங்கள நீ இப்படி பார்க்கக் கூடாது ரோவன். எனக்குப் பிடிக்கல. ஏத்துக்கவே முடியல” தேம்பினாள்.
“பேபி, ஐம் என் ஆர்டிஸ்ட். லைப்(life) ட்ராவிங் என்னோட பேஷன்(passion). உனக்கே தெரியும். தென் வை திஸ் அவுட்பெர்ஸ்ட்? ஏன் இந்த கோபம்?”
“இதுக்கு முன்ன எப்படியோ, இனிமே இது வேணாம் ரோவன். ப்ளிஸ்! இந்த மாடல் வச்சி வரையறது வேணாம். சொல்லப்போனா வரையறதே வேணாம். என் கூட வந்துரு ரோவன். என் கூடவே இரு. நீ ஒன்னும் செய்ய வேணாம். நான் உன்னைப் பார்த்துக்கறேன். நாம இந்தியாவுக்கே போயிரலாம் ரோவன்”
“பேபி, நீ புரிஞ்சு தான் பேசறியா? என்னால உன் கூட வர முடியும். ஆனா என் சுயத்தை தொலைக்க முடியாது ஆரா. ஐ லவ் யூ, அட் தே சேம் டைம் ஐ லவ் மை ஆர்ட். புரிஞ்சிக்கோ பேபி. ஏற்கனவே இதெல்லாம் நாம பேசி இருக்கோம் தானே?”
“பேசி இருக்கோம். நானும் உன் லைப் ஸ்டைல ஏத்துகிட்டேன். ஆனா இப்போ எல்லாம் மாறி போச்சு ரோவன். ஐம் அட்டிக்டேட் டூ யுவர் லவ். பாசமே என்னன்னு தெரியாம வளர்ந்த எனக்கு, நீ காட்டற அன்பு இன்னும் இன்னும் வேணும் போல இருக்கு. உன்னோட ஆர்ட் கூட நம்ம ரெண்டு பேருக்கும் நடுவே வரது எனக்குப் பிடிக்கல. நான் மட்டும் தான் உனக்கு எல்லாமுமா இருக்கனும்னு தோணுது. ப்ளிஸ் ரோவன்!” அடங்காப்பிடாரி ஆராதனா, ரோவனின் அன்புக்காக கண்ணீர் வழிய கெஞ்சினாள்.
“ஆரா, ஆரா! பேபி! டோண்ட் க்ரை.” அவள் கண்களைத் துடைத்து இறுக்கி அணைத்துக் கொண்டவன்,
“ஐ லவ் யூ பேபி! ஆனா” அவன் முடிக்கவில்லை அதற்குள் ஆரா,
“அப்படி என்னை லவ் பண்ணறதா இருந்தா, இந்த ஆர்ட், உன்னோட கேலரி எல்லாத்தையும் விட்டுட்டு என் பின்னாடி வா. நான் வேணுமா இல்ல உன்னோட பேஷன்(passion)  வேணுமா? இப்பவே ச்சூஸ் பண்ணு ரோவன்” குரலில் பழைய ஆரா திரும்பி இருந்தாள்.
உடல் விறைக்க அணைப்பிலிருந்து அவளை நகர்த்தி நிறுத்தியவன்,
“லெட்ஸ் ப்ரேக் அப் பேபி!” என ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி உச்சரித்தான்.
“ரோவன்!” அதிர்ச்சியில் கத்தி விட்டாள் ஆரா.
“ஆராதனா, உன்னோட உயிருக்கு உயிராய் பழகனேன். நாம பழக ஆரம்பிச்ச கால கட்டத்துலயே என்னைப் பற்றி தெளிவா சொல்லிட்டேன். எங்க ஊரு கல்ச்சர் பத்தியும் சொல்லி இருக்கேன். நமக்கு ஒத்துப் போகற வரைக்கும் நாம சேர்ந்து இருக்கலாம். சரி வரலனா சுமூகமா பிரிஞ்சிரலாம்னு நான் சொன்னத நீயும் ஒத்துக்கிட்ட. உன் கூட இருக்கற இந்த நொடி வரைக்கும் உனக்கு உண்மையா இருக்கேன். பட் அன்போர்சுனட்லி ஐ டீப்லி ஃபோல் இன் லவ் வித் யூ பேபி. ஆனா இந்த லவ் நம்ம ரெண்டு பேரையும் வாழ விடாது பேபி. கூடவே இருந்து கொஞ்சம் கொஞ்சமா நம்ம லவ்வ நாமே கொல்லுறதுக்குப் பதிலா நாம பிரிஞ்சிரலாம் பேபி.”  
கண்களில் நீர் வழிய,
“அப்போ நான் வேணாமா ரோவன்?” கேட்டாள் ஆரா.
அழும் அவள் முகத்தைப் பார்க்க முடியாமல், பார்வையை வேறு புறம் திருப்பியவன்,
“இது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது ஆரா” என்றான்.
“உனக்குப் பிடிச்ச மாதிரி என்னால என்னோட கேரியர விட முடியாது. அதே மாதிரி உன்னோட கேரியரா விட்டுட்டு என் கூடவே உன்னால இருக்கவும் முடியாது. அதனால நாம பிரியறது தான் நமக்கு பெஸ்ட். இப்பவே பிரியறதனால, இந்த இனிமையான நாட்களாவது நம்ம மனசுல நிலைக்கும். இன்னும் சேர்ந்து இருந்து, சண்டைப் போட்டு மனச ரணமாக்கி பிரியறதுக்கு இது எவ்வளவோ பெட்டர் பேபி”
தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவள்,
“இத்தனை நாளா என் கூட பழகியதுக்கு ரொம்ப நன்றி ரோவன். இனி உன்னைப் பார்க்கக் கூட நான் பிரியப்படல. கடைசியா ஒரு தடவை,” அவனை நெருங்கி இறுக்கி அணைத்தவள், அவன் உதட்டோடு தன் உதட்டைப் பொறுத்தினாள்.
வாய் வார்த்தையாக போ என சொல்லி விட்டாலும், ரோவனின் அணைப்பு மட்டும் போகாதே என்பது போல இறுக்கமாக இருந்தது.
அணைப்பில் இருந்து விலகியவள், கண்களில் இருந்து வழிந்த நீரை அலட்சியமாக சுண்டி விட்டாள். அவன் கண்களை நேராகப் பார்த்தவள்,
“குட் பாய் ரோவன்” என சொல்லி விடுவிடுவென வெளியேறினாள். அவனை விட்டு மட்டும் அல்ல அந்த நாட்டையே விட்டும்தான்.
குழந்தை வந்ததைக் கூட ரோவனிடம் மறைத்தவள், தனி ஆளாக நின்று மகனை ஈன்றெடுத்து தனது குடும்பப் பெயரையே கொடுத்தாள் அவனுக்கு. ரோனா என பெயருக்கேற்ப இருவரையும் கலந்து செய்தது போல பூமிக்கு வந்தான் பிரகாஷ் கப்பூர்.
நான் வேண்டாம் என்றவனுக்கு பிள்ளை மட்டும் எதற்கு எனும் ஈகோவில், பிறப்புப் பத்திரத்தில் தந்தை எனும் இடத்தில் அன்நோவ்ன் (unknown)  என தெரிந்தே நிரப்பினாள் ஆரா. அதன் பிறகு அவள் மூச்சே தொழில் என ஆயிற்று.
பிரகாஷிற்கு ஒரு வயது இருக்கும் போது, ஆராவைத் தேடி வந்தான் ரோவன்.
“ஆராதனா! எவ்வளவு ஈகோ இருந்திருந்தா நம்ம காதலின் சின்னத்தை என் கிட்ட இருந்தே மறைச்சிருப்பே?”
(தொடர்ந்து உன்னோடுதான்)     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!