UyirThedalNeeyadi(Epilogue)

உயிர் தேடல் நீயடி (எபிலாக்)

 

 

ஆறு வருடங்கள் கழிந்திருக்க,

அந்த உயர்ரக மகிழுந்து சாலையில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவ்யதர்ஷினி காரை செலுத்தும் வேகத்திலேயே அவளின் மனநிலை தெரிந்தது.

இப்போது அவளின் உருவத்தில் பெரும் மாற்றங்கள் தெரிந்தன. முன்பை போலவே கூந்தல் நீளமாக வளர்ந்திருக்க, அதை ஒற்றை பின்னலில் சுருக்கி இருந்தாள். முகத்தின் தழும்புகள் எல்லாம் சிகிச்சை மூலம் ஓரளவு குறைந்திருந்தது. அவள் முகத்தில் நிமிர்வும், தன்னம்பிக்கையும் கூடியிருக்க, காதல் வாழ்வின்‌ நிறைவாய் சற்று எடையும் கூடி தெரிந்தாள்.

அவளின் கறைகள் துடைத்த அழகு முகத்தில் கடுப்பு கூடி தெரிய, வாய் பாட்டிற்கு கோபமாக ஏதோ முணுமுணுத்திருக்க கைகள் பாட்டிற்கு காரை இயக்கிக் கொண்டிருந்தன.

விபி நிறுவனத்தின் சரிவிகித பங்குதாரராக காவ்யாவும் இருந்து வருகிறாள். முதன் முதலில் விபீஸ்வர் இதைப்பற்றி சொன்னபோது காவ்யா தயங்கினாள் தான்.

“நான் எப்படி விபு? வேண்டாமே” காவ்யா தயக்கமாக மறுப்பு சொல்ல, “உன்கிட்ட சஜெஷன் கேக்கல பேபி இன்ஃபார்ம் பண்றேன். நீ முன்ன வீட்ல போரடிக்குது என்னோட வேலைக்கு வரட்டுமான்னு கேட்ட அப்பவே முடிவு பண்ணிட்டேன், என்னோட ஒய்ஃப் எனக்கு கீழே வேலை செய்றவளா இல்ல, எனக்கு ஈக்குவல் பொசிசன்ல இருக்கணும்னு. அப்பவே ஃபிப்டி ஷேர்ஸ் உன் பேர்ல மாத்த ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று விளக்கியவனை விழி விரிய பார்த்திருந்தாள்.

“என்ன, இதை உன்கிட்ட சொல்லி உன்ன சர்பிரைஸ் பண்ண தான் இவ்வளவு லேட் ஆகிடுச்சு” என்று குரல் இறங்கி சொன்னவனை நெகிழ்வோடு அணைத்து கொண்டாள்.

தன்னவளை தன்னோடு இறுக்கி கொண்டவன், “வெறும் ஹக் மட்டும் போதாதே பேப்” கிசுகிசுக்க, அவன் முகம் முழுவதும் தன் இதழ் ரேகைகளை பதித்திருந்தாள்.

ஆனந்த அவஸ்தையாய் அவள் விழியோரம் கண்ணீரும் தேங்கி நிற்க, “ஹே அழுமூஞ்சி இப்ப ஏன்டி அழற” என்று கடிந்தபடியே அவள் கண்களை துடைத்து விட்டான்.

“உங்களை புரிஞ்சுக்காம முன்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் விபு” என்க.

“ஆமா இல்ல, என்ன பண்ணலாம்?” விபீஸ்வர் தீவிரமாக யோசித்து, “டெய்லி தௌசண்ட்ஸ் ஆஃப் கிஸ்ஸஸ் ஃபைன் பண்ணணும்” என்று தீர்ப்பெழுதி கண்ணடித்து குறும்பாய் சிரித்து வைக்க, “போங்கு, அதெல்லாம் தர முடியாது” என்று வீராப்பாய் விலகியவளை பிடித்து இழுத்து, “இட்ஸ் ஓகே பேபி, அப்ப இதையும் நானே ஃபைன் பண்ணிறேன்” என்று பெண்ணவளை திக்குமுக்காட செய்திருந்தான்.

காதல் வாழ்விலும் தொழிற் துறையிலும் இருவரும் கைக்கோர்த்து பயணிக்க, குடும்ப எண்ணிக்கை கூடி இருக்க, அவர்களின் தொழில் வளர்ச்சியும் ஏற்றத்தை தொட்டிருந்தது.

இன்றைக்கு முக்கிய தொழில்முறை சந்திப்பிற்காக தான் இருவரும் வந்திருந்தனர். கடைசி நேரத்தில் விபீஸ்வர் முக்கிய வேலையென்று நழுவி இருந்தான்.

வேறுவழியின்றி காவ்யா தனியாகவே சந்திப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை. சற்று தயக்கம் இருக்க தான் செய்தது. இதுவரை விபீஸ்வருடன் இணைந்தே அனைத்து சந்திப்புக்களிலும் பங்கேற்று இருக்கிறாள். விபீஸ்வர் தனித்தோ காவ்யா தனித்தோ பங்கேற்க வேண்டிய நிலை வந்ததில்லை இதுவரை.

இன்று காரணமே சொல்லாமல் விபீஸ்வர் சென்றிருந்தது இவளுக்கு கோபத்தை கிளப்பி இருந்தது.

இன்றைய தொழில்முறை சந்திப்பை தனித்து வெற்றிகரமாகவே முடித்திருந்தாள். சந்தோசம் தான். ஆனாலும் அவன் அருகில்லாதது ஏதோ போல வெறுமை தொற்றிக் கொண்டது.

விபீஸ்வருக்கு பலமுறை முயன்றும் அவன் பதில் தராதது வேறு இவளை கொதிநிலைக்கு ஏற்றி இருக்க, அதே கோபத்தோடு வீட்டை நோக்கி வேகமெடுத்திருந்தாள்.

சாலையோர காட்சிகளில் ஏதோ இவளின் பார்வையில் பட வேகத்தை குறைத்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினாள்.

அங்கே சாலையோர நடைப்பாதையில் ஒரு சிறுவன் பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றிருந்தான். சிறு குறுத்தின் அத்தகைய அவல நிலையைப் பார்த்து இவள்‌ மனம் கனத்தது. அருகில் சென்று பேச்சு கொடுத்தாள்.

“உங்க அப்பா அம்மா எங்கே? தனியாவா இங்க நிக்கிற!”

“எனக்கு அப்பாம்மா எல்லா இல்ல, ஆயா மட்டுதென், அது கோயில்தெருல பிச்சை எடுக்குது நான் பஸ்டாண்டில பிச்சை எடுகிறேன், பசிக்குது பத்து ரூபா போடு கா…” என்றான் அந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன்.

காவ்யா தன் கைப்பையில் இருந்து ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை எடுத்து கொடுக்க அதை வாங்கி உடனே பிரித்து சாப்பிட தொடங்கினான்.

சின்னஞ்சிறு சிறுவன் பசியோடு நின்று பிச்சை எடுக்கும் நிலை எத்தனை கொடியது. மனம் தாளவில்லை அவளுக்கு.

சமூக சேவகி பாரதியுடன் காவ்யாவும் கைக்கோர்த்து ‘அடுத்த தலைமுறையின் வறுமையை ஒழிப்போம்’ என்ற பெயரில் வறுமையில் வாடி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கான உணவு, உடை, படிப்பு, தொழிற்பயிற்சி போன்றவற்றை அளித்து வருகின்றார்கள். இதில் அவளுக்குள் மனநிறைவும் கூட.

“அப்ப காசு தரமாட்டியா கா?” அவன் மறுபடி கேட்க, “ம்ஹும் மாட்டேன், காசு நாம வேலை செஞ்சு சம்பாதிக்கணும் இப்படி பிச்சை எடுத்து கேக்க கூடாது” என்றாள்.

“எனக்கு வேல தெரியாதே” என்று கைவிரிக்க,

“உனக்கு சாப்பாடு, துணி தந்து படிப்பு, வேலை சொல்லி கொடுக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்க.

“ஐய படிப்பா நா எல்லா வரல, அதெல்லா‌ எனக்கு வராது” என்று சிறுவன் முறுக்கிக் கொண்டான்.

“சரி, படிக்கலனா பரவால்ல ஏதாவதொரு வேலை கத்துக்கலாம் இல்ல, பிச்சை எடுக்காம வேலை பார்த்து சம்பாதிக்கலாம், உன்ன மாதிரி நிறைய பசங்களுக்கு படிப்பும் வேலையும் சொல்லி தரோம்” என்றவள் ஒரு ஆல்பத்தை எடுத்து காட்ட, அதில் பல குழந்தைகள் படிப்பது, வேலை பயிற்சி எடுப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன.

“இவன் காசி, என் தோஸ்த், இவனையும் நீங்க தான் இட்டுனு போனீங்களா, சரி அப்ப நானும் வரேன்” என்றவனை அழைத்து கொண்டு அவன் ஆயாவை தேடி சென்றாள்.

இவ்வாறிருக்கும் குழந்தைகளை மீட்பதில் அவர்களின் பெற்றோர் இடமிருந்தே அதிக எதிர்ப்புகள் கிளம்பும். பிச்சை எடுத்தாலும் தன் குழந்தை தன்னுடன் இருந்தால் போதும் என்றே வாதிடுவர். அவர்களுக்கு எடுத்து சொல்லி புரியவைத்து, தங்கள் மீது நம்பிக்கை வரவழைப்பதில் தான் பெரிய சவாலை சந்திக்க நேரும். காவ்யாவும் இதுபோன்ற பல வேளைகளில் சொர்ந்து இருக்கிறாள். அப்போதெல்லாம் பிச்சை என்று பசியில் குழந்தைகள் அவல நிலை நினைவில் வரும் பின்பும் முயன்ற மட்டும் போராடி மீட்டு வருவாள்.

இந்த சிறுவனின் ஆயா அத்தனை பிடிவாதம் பிடிக்கவில்லை. “எங்கோ என் பேரன் நல்லா இருந்தா போதும்மா, வயசான காலத்துல இதுவும் எனக்கு பாரந்தேன் கூட்டிகினு போ தாயி” என்று அனுப்பிவைத்தார்.

சிறுவனை அழைத்து சென்று உரிய இடத்தில் சேர்த்து விட்டு திரும்புவதற்குள் ஒரு மணிநேரம் தாமதமாகி இருந்தது.

காவ்யா வீட்டிற்குள் நுழையும்போதே அங்கே இருந்த அமைதியைக் கவனித்தப்படி தங்கள் அறைக்கதவை திறக்க, அவள் முகத்தில் நேராக மோதி விழுந்தது ஒரு பெரிய வண்ணப்பந்து.

சற்று தடுமாறி அறையை‌ கவனிக்க, அந்த அறை அத்தனை அலங்கோலமாக காட்சி அளித்தது. அறையின் நடுவே மூவரும் சிறிய பெரிய மூச்சுக்களோடு நின்றிருந்தனர்.

மெத்தை விரிப்புகள் கலைந்து, தலையணைகள் எல்லாம் சிதறி, மேசையில் நேர்த்தியாய் அடுக்கி வைப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கலைந்து கிடக்க, சில உடைந்தும் இருந்தன.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க, யாரோட வேலை இதெல்லாம்?” காவ்யா கோபமாக கேட்க, மூவரும் ஒருவர் மாற்றியொருவர் கைக்காட்டி நின்றனர்.

காவ்யாவின் காட்டமான பார்வை அவர்களைத் துளைத்தது. ஐந்து வயதை தொட்டிருந்த ஆண், பெண் குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வளர்ந்த குழந்தையாய் விபீஸ்வரும்.

“அத்த நான் இல்ல, செழி தான் என்மேல பால் தூக்கி போட்டான்” மதுமதி தன் அத்தையிடம் சரண்டர் ஆகிட,

“நோ மாம்,‌ மதி தான் என்னை அழகு காட்டினா, இப்படி!” என்று நாக்கை துருத்தி காட்டி அம்மாவிடம் புகார் கடிதம் வாசிக்க, “செழி, மாம் இல்ல அம்மா சொல்லு” என்று காவ்யா மகனிடம் கடுப்படிக்க, அதற்கும் சேர்த்து மாமன் மகளை முறைத்து வைத்தான் செழியன்.

“இன்னைக்கு கிளாஸ்ல செழி என்கூட உக்காரல, அந்த சோஃபி கூட தான் உக்கார்ந்தான், அதான் அவன் மேல நான் டூ விட்டுட்டேன் அத்த, இங்க என்மேல செழி பால் தூக்கி போட்டானா அது விபி மாமா மேல விழுந்துட்டு, விபி மாமா செழி மேல பால் போட்டாரு, செழி என்மேல பிள்ளோ தூக்கி போட்டான், நானும் போட்டேன், விபி மாமாவும் போட்டாரு, ரூம் எல்லாம் கலைஞ்சு போச்சு” என்று நீளமாக விளக்கம் தந்து மதுமதி முகம் சுருக்கினாள்.

காவ்யாவிற்கு அங்கே நடந்திருக்கும் கூத்து நன்றாகவே புரிந்தது. முக்கியமான மீட்டிங்கை விடுத்து இங்கே குழந்தைகளுடன் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும் விபீஸ்வரை என்ன செய்தால் தகும் என்றிருந்தது அவளுக்கு.

“சோஃபி யாரு செழி? உன் புது ஃபிரண்டா?” விபீஸ்வர் மகனிடம் குரல் தாழ்த்தி கேட்க,

“அச்சோ டாட் அது ஷோபியா, சோ கியூட் கேர்ள் யூ‌ நௌ, ஷீ ஈஸ் மை கேர்ள் ஃபிரண்ட்” என்று அலட்டலாய் சொன்ன மகனின் பதிலில் காவ்யா விழிகள் விரிய, கணவனின் மீது பார்வையால் அனல் கக்கினாள்.

விபீஸ்வர் வேகமா இடவலமாக தலையசைத்தான். இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பாணியில்.

“ஷோபியா என்ற பேரே சுருக்கமா தான் இருக்கு, அதையும் சுருக்கி கூப்பிடுவியா டா?” காவ்யா மகனிடம் கேள்வி தொடுக்க,

“எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு மாம்” என்ற பதிலில் விபீஸ்வர் இதழ் மடித்து சிரித்து வைத்தான். அவளுக்கு புரிந்து தான் இருந்தது மகன் அப்படியே அவன் அப்பாவின் பிடிவாத குணத்தோடு பிறந்திருக்கிறான் என.

“சரி செழியா நியூ ஃப்ரண்ட்காக, உன் பெஸ்ட் ஃப்ரண்ட்டை அவாய்ட் பண்ணலாமா? தப்பில்ல” காவ்யா நிதானமாக கேட்க,

“மதி தான் மாம் முதல்ல டூ விட்டா, அப்புறம் தான் நான் டூ விட்டேன்” செழியன் சொல்ல,

“சரி இப்ப ரெண்டு பேரும் பழம் விட்டுட்டு தோட்டத்தில போய் விளையாடுவீங்களாம்” காவ்யா சொல்ல, இரு குழந்தைகளும் ஒன்றையொன்று பார்த்து உம்மென்ற முகத்துடனே ஆள்காட்டி விரல் நடுவிரலை சேர்த்து வைத்து பழம் விட்டு கொண்டு தொட்டத்தை நோக்கி கொண்டாட்டமாக ஓடினர்.

அதுதான் தாமதம் என்று விபீஸ்வர் அவளை தூக்கி சுழற்றினான்,”அச்சோ விபு விடுங்க” என்று பதறியவளை இறக்கி விட்டு, “கங்கிராட்ஸ் பேபி, இன்னைக்கு மீட்டிங்கல கலக்கிட்ட போல” என்று வாழ்த்தினான்.

“நீங்க எதுக்கு பாதியில விட்டுட்டு வந்தீங்க, அதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல” என்று தன் பிடியில் நிற்க, “அது கவி… ஸ்கூல்ல இருந்து ஃபோன் வந்தது. மதியும் செழியும் சண்ட போட்டு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுகிறாங்கன்னு உடனே வர சொன்னாங்க… இதை உன்கிட்ட சொன்னா நீ கோவபடுவ, அதான் மீட்டிங்கை உன் பொறுப்புல விட்டுட்டு வந்தேன்”.

“ஸ்கூல்ல சண்டை போட்டு அடிச்சுக்கிற அளவு வந்தாச்சா” காவ்யா கவலையாக கேட்க, “குழந்தைங்க சண்டை போடுறதும் சேர்ந்துக்கிறதும் சாதாரண விசயம் பேபி, ஸ்கூல்ல தான் டிசிப்ளீன்னு சொல்லி சிசிடிவி கேமரா வச்சு வாச் பண்ணி பெருசா காட்டிறாங்க, இப்ப பாரு எவ்வளவு சமத்தா விளையாடிட்டு இருக்காங்க” என்று விபீஸ்வர் சொல்வது காவ்யாவிற்கும் சரியாகவே பட்டது ஆமோதித்து தலையசைத்து கொண்டாள்.

“இன்னைக்கு செம கியூட்டா இருக்க பேபி, டின்னருக்கு வெளியே போலாமா!” ‌விபீஸ்வர் அவளின் காதோரம் கிசுகிசுத்து கழுத்தோரம் இதழொற்றல் தர, “ம்ஹும் நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன் விபு” என்று சட்டம் பேசியபடி, அவன் விரல் மீறலை தடுக்க தோன்றாமல் ரசித்திருந்தாள்.

“என்னவோ நீ கோபபடும் போதெல்லாம் எனக்குள்ள கிக்கேத்துற‌டீ” காதலால் தன்னவளை வளைத்து இழுக்க, சில மணித்துளிகள் அவனுக்காக விட்டு தந்தவள் விலகிக் கொண்டாள்.

“கவி…” அவன் குரல் கெஞ்சலாக ஒலிக்க, “மத்ததெல்லாம் அப்புறம் தான், குழந்தைங்க தனியா விளையாறாங்க போய் அவங்களை பாருங்க, நான் இந்த ரூம் கிளீன் பண்ண சொல்லிட்டு வரேன்” மனைவியின் படபட உத்தரவை ஏற்று இவனும் கீழே சென்று குழந்தைகளோடு சேர்ந்துக் கொண்டான். சற்று நேரத்தில் சிவாவும் வந்து சிறிது நேரம் அவர்களுடன் ஆட்டம் போட்டு, தன் மகளை அழைத்து கொண்டு புறப்பட்டான். ஒரே பள்ளியில் இரு குழந்தைகளும் படிப்பதால் இது அவ்வப்போது நடப்பதுதான்.

காவ்யா, மகனின் வீட்டு பாடங்கள் முடிக்க உதவி செய்ய, செழியன் இரவு உணவை உண்டு விட்டு, “மாம், டாட், பாட்டி குட்நைட்” சொல்லிவிட்டு சமத்து பிள்ளையாக அவன் அறையில் சென்று உறங்கி விட்டான்.

மற்ற வேலைகளையும் கவனித்து முடித்து காவ்யா அறைக்குள் வர விபீஸ்வர் மடிக்கணினி வசமாகி இருந்தான். சில கணக்கு வழக்குகளை இருவரும் பார்த்துவிட்டு உறங்க வர நேரம் கடந்திருந்தது.

“நம்ம செழியனை கவனிச்சீங்களா விபு, சிலநேரம் கோபபடுறான், சிலநேரம் பொறுப்பா நடந்துக்கிறான், இதுல கேர்ள் ஃபிரண்ட் வேற” காவ்யா சொல்ல,

“இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்?” விபீஸ்வர் சிரித்தபடி கேட்க, “ம்க்கும் இன்னும் பண்ண என்ன இருக்கு, எல்லாத்திலையும் அப்படியே உங்கள மாதிரியே செஞ்சு தொலைக்கிறான். சோஃபியாம் கியூட் கேர்ளாம்” என்று இதழ் கோணிக் காட்ட, இவன் வாய்விட்டு சிரித்து விட்டான்.

“இதென்ன டா வம்பா போச்சு, செழிக்கு கேர்ள் ஃப்ரண்ஸ் இருந்தா கூட என்னை குத்தம் சொல்லுவியா நீ” என்று அலட்டிக் கொள்ள, “ஆமா, முதல்ல பிறந்த வாலு பையன் உங்களை உரிச்சு வந்திருக்கான், அடுத்து பிறக்க போறது எப்படி இருக்குமோ?” காவ்யா சற்று குறும்பாகவே இழுத்தாள்.

“டோண்ட் வொர்ரி பேபி, உன்னை மாதிரி சமத்து பாப்பாவா தான் அடுத்தது பிறக்கும்…” என்று பேசியவன், அவளின் விழி மொழியை தாமதமாக படித்து, “கவி…என்கிட்ட சொல்லவே இல்ல… யாஹூ…” என்று எகிறி குதித்து கத்தினான்.

விபீஸ்வரின் வாயை பொத்தியவள், “அச்சோ நடு ராத்திரியில கத்தி தொலைக்காதீங்க விபு, எனக்கும் கன்பார்ம்மா தெரியல, ஒன்மன்த் தள்ளி போயிருக்கு… இனிமே தான் டாக்டர் கிட்ட செக்கப் போகணும்” என்று தயக்கங்களும் வெட்கங்களும் சேர குழைத்து மொழிந்தாள்.

“எனக்கு இப்பவே கன்பார்ம் ஆகிடுச்சு பேபி” என்று அவளின் மணி வயிற்றில் முத்தமிட்டு, “லவ் யூ லவ் யூ லவ் யூ சோ மச் சோடாபுட்டி” என்று தன்னவளை அள்ளி சேர்த்துக் கொண்டான்.

“என்னை அப்படி கூப்பிடாத விபு” அத்தனை சந்தோசத்திலும் பிணங்களோடு சிணுங்கினாள் அவள்.

“ம்ஹும் நீ எப்பவும் எனக்கு சோடாபுட்டி தான் பேபி” காவ்யாவோடு வார்த்தை வளர்ப்பதில் இப்போதுமே விபீஸ்வருக்கு தனி அலாதி தான்.

# # # முற்றும் # # #

error: Content is protected !!