varaga 12

varaga 12

அடுத்த நாள் காலை பொழுது வராக நதிக்கரையோரம் அழகாக விடிந்தது என்று சொல்ல ஆசை, ஆனால்… நடக்க போகும் நிகழ்வுகள் அவ்வாறு இருக்கும் என்று கூற முடியாதே… ஆகையால் அடுத்த நாள் காலை பொழுது விடிந்தது என்பதோடு நடப்பதை வேடிக்கை  பார்ப்போம்.

கருணாகரன் வீட்டின் அலைபேசி வெளியே கூவும் குயில்களுக்கு நிகராக கூவ… அவரும் வயல்வெளிக்கு செல்ல தயாராக இருந்ததால் எடுத்து காதுக்கு கொடுத்தார்.

“ஹலோ… யார் பேசுறது…”

என்று கேட்க..

அந்த பக்கம் இருந்து..

“கருணா நான் மாணிக்கம் பேசுறேன்.. ஒரு முக்கியமான விசியம் பேசணும்.. அதான் காலையிலே போன் போட்டேன்”

என்றார்.

உடனே இவர்..

“மாணிக்கமா… சொல்லுப்பா.. வீட்டுல எல்லாரும் நல்லாருக்காங்கலா…?”

என்று நலம் விசாரித்தார்.

மாணிக்கவேலும் பராஸ்பரம் நலம் விசாரித்து.. திருமண பேச்செடுத்தார்.

“கருணா… எங்க வீட்டுல முகிலனுக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கோம்… அப்போ தான் அபிராமி உன் மூத்த  பொண்ண கேட்டால் என்னனு கேட்டாள்.

நானும் முகிலன் கிட்ட சம்மதம் கேட்டேன்.. அவன் உங்க இஷ்டம் பொண்ணு பாருங்க என்று என்னிடம் சொல்லிட்டான்.

உங்க வீட்டுல கலந்து பேசி சம்மதம் அப்படினா மேற்கொண்டு பேசலாம்… இல்ல விருப்பம் இல்லை என்று தோணிச்சினா…தாராளாமா சொல்லுங்க… தப்பா ஒன்னும் நினைக்க மாட்டோம்…”

என்று தன் எண்ணத்தை எடுத்துரைத்தார். 

அதை கேட்ட கருணாகரன் ஒரு நிமிடம் திகைத்தார். பின் அவர் கூற… கூற… யோசித்து,

“இல்லை… அப்படிலாம் இல்ல மாணிக்கம்… உன் பையனுக்கு பொண்ண குடுக்க கசக்குமா…? இருந்தாலும் வாழ போறது என்பொண்ணு தானே… அவளுக்கு சம்மதம் அப்படினா எங்களுக்கும் சம்மதம் தான்… பேசி நல்ல பதிலா சொல்றோம்..”

என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

உடனே இதை தன் மனையாட்டியிடம் கூற அடுப்படிக்கு விரைந்தார்.

“சீதா… மாணிக்கம் தான் போன் பண்ணுனாங்க… அவங்க பையன் முகிலன்…”

என்று விசியத்தை சொல்லும் முன்பே அங்கு அம்மாவிடம் எதையோ கேட்க வந்த முத்ரா… அதை மறந்து…

“ஒஹ்.. முகிலன் சார் போன் பண்ணிட்டார் போலவே… ருத்ராகிட்ட போய் சொல்லுவோம்…”

என்று அடுத்து அவள் தந்தை கூறுவதை கேட்காமல் சென்றதை எதில் சேர்க்க…?

அதிலும் அவள் விரைந்து சென்றதை சீதா பின்னால் திரும்பி கணவன் முகம் பார்க்கையில் பார்த்ததை விதியின் செயல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல…? 

அங்கே அவள் மாடிக்கு விரைய… இங்கே சீதாவின் முகம் மலர்ந்தது… பின்னே தெய்வம் செய்த பிரச்சனையில் மனம் உழன்றவர் ஆகிற்றே…

“சரின்னு சொல்லிட்டீங்களா…?”

என்று வினவ..

“இல்லமா… ருத்ரா கிட்ட கேட்டு சொல்றேன் என்று தான் சொல்லியிருக்கேன். நல்ல சம்பந்தம் தான்… இப்போவே போய் கேட்டுப்பார்க்கிறேன்” என்றார் அவர்.

அதற்கு சீதா…

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. இங்க உங்க சின்னமக வந்து நம்ம பேசுனதை கேட்டுட்டு ஓடிருக்கா மாடிக்கு… இப்போ வருவாங்க பாருங்க இரண்டு பேரும்”

என்றார்.

“அடடா!!! அதுக்குள்ள கேட்டுட்டு ஓடிட்டாளா…

சரி வா ஹால்ல இருப்போம்… என்ன சொல்ல போறான்னு தெரியணுமே”

என்றவாறு காத்திருக்க ஆரம்பித்தனர்.

மேலே சென்ற முத்ரா… தன் தமக்கை தனக்காக காத்திருப்பதை பார்த்து…

“ருத்ரா… அப்பா…”

என்று கூறவும்…

அவள் உடனே..

“என்ன ஆத்துக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டாரா..?”

என்றாள்.

அப்போது தான் தான் கீழே சென்ற காரணம் நியாபகம் வந்தது முத்ராவிற்கு…

“அதை நான் கேக்கவே இல்ல ருத்ரா… அப்பா கிட்ட போன் பண்ணி பேசிட்டாரு முகிலன் சார்… அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாரு.. அத கேட்டுட்டு ஓடி வந்துட்டேன். அப்பா ஆந்திரா போக சம்மதிப்பாரா…?”

என்று வாய் மூடாமல் பேசித்தள்ளினாள்.

போன் பேசியது முகிலனின் தந்தை மாணிக்கம் என்று ருத்ராவிற்கு தெரியபடுத்தியிருந்தால் கூட அவள் யோசித்திருப்பாள். சொல்ல வேண்டிய அவசரத்தில் வார்த்தை விடுபட்டதை என்னவென்று சொல்ல.

அதை கேட்டதும் ருத்ரா..

“அடியே அவசர குடுக்கை… அப்படியே முழுசா கேக்க வேண்டியது தான… எதுக்கு இங்க ஓடி வந்த…”

என்று கூறி தன் தலையில் அடித்தாள் அக்காகாரி. ( நல்லா கேளு அந்த லூசு கிட்ட )

“ஆமாம்ல… இருந்தாலும் உன்கிட்ட சொல்ற ஆர்வத்துல இங்க வந்துட்டேன்… சரி வா நாம போய் என்னன்னு கேக்கலாம்”

என்றாள்.

இருவரும் கீழே இறங்கி வருகையில் பெற்றோர் இவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருப்பதை கண்டனர்.

முத்ரா தான் ஆரம்பித்தாள்…

“எதுக்கு ரெண்டு பேரும் இங்க உக்கார்ந்திருக்கீங்க…? வீட்டுல வேலை இல்லையா மா..?”

என்றாள்.

சீதாவும்

“அது இருக்குது நிறைய ஏன்..? நீ செய்ய போறியா..?” என்று வாரிவிட்டு… ருத்ராவிடம்,

“அப்பா சொன்னது உனக்கு தெரிஞ்சிருக்கும்ல ருத்ரா… இவ அடுப்பறைக்கு வந்து ஓடினது எனக்கு தெரியும்.. நீங்க கீழ வருவீங்கன்னு தான் இங்க இருந்தோம்.

சொல்லு… உன் முடிவு என்ன…?”

என்றார்.

கருணாகரனும்…

“சொல்லும்மா.. நான் உன் முடிவு தான் என்று சொல்லியிருக்கேன்… அந்த தம்பிய பார்த்தாலும் நல்ல பையன்னா தான் தெரியுது… நீ விரும்பினா …”

என்று முழுதாக கூறுவதற்குள், ருத்ரா

“உங்களுக்கு சரின்னா எனக்கும் சரிதான் பா…”

என்று விட்டாள்.

“நிஜமாவா… நல்ல யோசிச்சியா மா…? இது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது…”

என்று கருணாகரன் மீண்டும் கூற…

“ஆந்திராக்கு போக ஏன் இவ்வளோ யோசிக்கணும்…?”

என்று தான் ருத்ராவிற்கு தோன்றியது… ஆனாலும் அப்பா சம்மதிச்சதே பெரிய விசியம் என்றெண்ணி…

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லப்பா… எனக்கு ஓகே தான்…”

என்றாள்.

அதன் பின் முத்ரா ஆற்றுக்கு போக அனுமதி கேட்க… பெற்றோரும் மகள் திருமணத்திற்கு சம்மதித்த சந்தோஷத்தில் பத்திரமாக போய் வாங்கமா என்று அனுப்பி வைத்தனர்.

சகோதரிகள் இருவரும் நீண்ட நாள் கழித்து வராக நதிக்கு செல்லும் ஆர்வத்தில் சிட்டாக பறந்தனர்.

அவர்கள் சென்ற பின்னர் மாணிக்கவேலிற்கு அழைத்து பேசிய கருணாகரன்… தன் பெண்ணும் திருமணத்திற்க்கு சம்மதித்த விசியத்தை கூறினார்.

பின்னர் கல்யாணத்தின் முதல் படியான ஜாதகம் பார்க்க வேண்டி கருணாகரன் முகிலனின் ஜாதகத்தை அனுப்புமாறு கூற…

அவரும்… கொரியரில் அடுத்த நாள் காலை ஜாதகம்  வந்து சேருமாறு அனுப்புவதாக கூறினார்.

மதுரையில் கைராசியான ஜோதிடரிடம் அடுத்த நாள் காலை ஜாதகம் பார்ப்பதாக முடிவானது.

வராக நதியில்… ருத்ராவின் வாழ்க்கை அவள் அறியாமல் கைமீறி போகும் பிரக்ஞை சிறிதுமின்றி அவள் தன் தங்கையுடன் நதியில் இறங்கி லயித்திருந்தாள்..

கோவையில்…

என்ன தான் ருத்ராவை மணக்க சரி என்று கூறிவிட்டாலும்… மனது நீ செய்வது தவறு என்று கூறி சண்டித்தனம் செய்தது…

அவள் அப்பாவிடம் ஏற்கனவே பேசி அவர் வாயாலே சரி சொல்ல வைத்ததை யோசித்து பார்த்தான்… ஏன் அதை போல் மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்க கூடாது..?

அதற்கு சலிப்படைந்தா கல்யாணத்திற்கு சரி என்றோம்… வேண்டாம் கீழே போய் இதை நிறுத்த சொல்லுவோம் என்று இறங்கி வர…

அதே நேரம் அபிராமி இவனின் ஜாதகத்தை சாமி முன் வைத்து பின்னர் கணவரிடம் தர… அதை அவர் நம்பிக்கையான விசுவாசியிடம் தந்து கொரியரில் அனுப்ப சொன்னார்.

முகிலனிற்கு உள்ளூர திகில் பிடித்தது… பெற்றோரின் அசுர வேகத்தை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை…

எதற்கும் உறுதிபடுத்தி கொள்வோம் என அவர்களிடம் சென்று

“என்ன பா அது…?”

என்று  கேட்க…

அபிராமி தான்..

“அது ஒன்னும் இல்லப்பா… உன் ஜாதகம் தான்… ருத்ரா வீட்டுல அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சிடாங்க… அதான் சட்டு புட்டுன்னு எல்லாம் பார்த்து முடிக்கணுமே.. நல்ல விசேசம்லாம் தள்ளி போடக்கூடாதுல”

என்றார்.

கூடவே நீ மனசும் மாறிவிட கூடாதே என்றும் மனதிற்குள் சொல்லிக்கொண்டார். தாயல்லவா…? உள்ளுணர்வு சீக்கிரம் அனைத்தையும் பார்க்க சொல்லியது.

அவனும் வெளிய ஒன்றும் காமிக்காமல் உண்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான்.

மனதிற்குள் சிறிது ஏமாற்றம் அடைந்தது என்னமோ உண்மை தான்… நேற்று இரவு தான் சரி கூறியிருக்கிறான்… இன்று காலை ருத்ரா வீட்டில் சம்மதம் என்றால்… அவள் பணத்திற்காக சரி என்றாலோ என்ற சம்சயம் உருவானது.

ஆனால் அவன் மனட்சாட்சி அவள் பணத்திற்கு முக்கியத்துவம் குடுப்பவளாக இருந்தால், விகாஷினியில் இருந்து வெளியேறி இருக்க மாட்டாள் என்று ருத்ராவிற்கு  வக்காலத்தும் வாங்கியது.

கூடவே நீ மட்டும் ஒழுங்கா.. அவளை காதலித்தா மணக்க போகிறாய் என்றும் குட்டியது. ( சூப்பர் மனட்சாட்சி )

இவ்வாறு குழப்பத்திற்கு இடையில் அடுத்த நாள் ஜாதகமும் கொரியரில் போய் கருணாகரன் கையில் தவழ்ந்தது.

அவரும் சீதாவும் பெண்களிடம் சொல்லாமல் மதுரை  புறப்பட்டனர்… ஜாதகம் சரி இல்லையென்றால் பெண்ணின் மனம் வேதனை பட கூடாதே என்ற நல்லெண்ணம்… (அவளிற்கு தான் கல்யாணம் என்றே தெரியாதே!!!)

ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் ஜோதிடரும் இவர்கள் ஜாதகம் பார்த்து பொருத்தம் பொருந்தி இருப்பதாகவும்… ஆனால் இவர்களின் திருமணம் அடுத்த மாதம் 23  ஆம் தேதிக்குள் முடித்தால் நலம் என்றும் கூறினார். இல்லையென்றால் பையனின் ஜாதகம் பிரச்சனை செய்யும் என்றும் கூறினார்.

அதை அப்படியே கருணாகரன் மாணிக்கத்திற்கு தெரிவிக்க… அவரும் அதற்கென்ன கல்யாண வேலைகளை விரைந்து செய்தால் ஆயிற்று என்று கூறி அவர்களின் சொந்த ஊரான பெரியகுளத்திலேயே உள்ள பெரிய மண்டபத்தில் நடத்த முடிவும் செய்யப்பட்டது.

அதற்கு முன் நிச்சியதார்த்தம் ஊரை கூட்டி இன்னும் நான்கு நாள் கழித்து வரும் சுபமுகூர்த்த நன்னாளில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றைய இரவில் மாணிக்கம் அனைத்தையும் பகிர… முகிலனிற்கு மனது உறுத்தியது… ஏனென்றால்… ஜோசியர் சொன்ன தேதி 23 இவர்கள் ஆந்திரா போக வேண்டிய நாள் 24

“எனக்கு பிரச்சனை என்றால்… அப்போ விகாஷினியோ…?  என்ற எண்ணம் உருவாவதை தடுக்க முடியவில்லை…

பின் அவளால் இனி ஒன்றும் செய்ய முடியாது.. இந்த ஜோசியம், ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை என்று மனதை மாற்றி பழைய முகிலனாக மாறி உறங்க தொடங்கினான்.

இங்கே பெரியகுளத்தில் அன்றைய இரவு உணவு அனைத்தும் ருத்ராவிற்கு பிடித்த உணவாக இருக்க..

கேள்வியாக பார்த்த பெரிய மகளிடமும்..

“அம்மா இதெல்லாம் அநியாயம்… எல்லாமே அக்காக்கு பிடிச்சதா செஞ்சிருக்க… அப்போ நாளக்கி எனக்கு பிடிச்சது செய்..”

என்று சிணுங்கிய சின்ன மகளிடமும்..

சீதா…

“உனக்கென்னடி… உங்க அக்கா கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போனதும் இங்க உன் ராஜ்ஜியம் தான… பிடிச்சதா நல்ல அனுபவிக்கட்டும் என் பொண்ணு”

என்று கூறி உச்சி முகர்ந்தார்.

அப்போதும் பெண்கள் இருவருக்கும் கேள்வி கேட்க தோணாதது தான் அதிசயம்… அம்மா எப்போதும் சொல்லும் டயலாக்கை இப்போதும் சொல்கிறார் என்றெண்ணி உணவருந்தி படுக்க சென்றனர்.

அடுத்த நாள் முதல் பெற்றோர்கள் சொந்த பந்தம் அழைக்க… மற்ற வேலை பார்க்க என்று பிஸியாக…

அப்போது தான் சந்தேகம் வந்து ருத்ரா அம்மாவிடம் கேட்க போக.. அந்த நேரம் சரியாக விசியம் கேள்விப்பட்டு தெய்வம் தெய்வமாக வந்து சேர்ந்தார்.

அவர் வந்ததும் ருத்ராவை சிறிது நேரம் மேலே இருக்க சொன்னவர்… கணவனை துணைக்கழைத்து சமாதானம் செய்ய முயன்று தோற்க…

தெய்வம் ஆவேசமாக சாபம் விட்டு கிளம்பினார். முத்ரா வேலைக்காக பியுட்டி பார்லர் சென்றதால் இதனை அறியவில்லை.

அவர் சென்றதும் காதில் உள்ள ஹெட்போனை கழட்டி வைத்துவிட்டு கீழே இறங்கி வந்த ருத்ரா…

“என்னமா அத்தைக்கு பிரச்சனை… மாசம் மாசம் ஏதாவது சாக்கு வச்சிட்டு சண்டைக்கி வராங்க”

என்று வினவ…

“அது ஒன்னும் இல்லை வழக்கம் போல தான்மா… உன்னை கல்யாணம் பண்ணிக்கொடுக்க சொன்னாங்க… அதுக்கு உங்க அப்பா.. முடியாது.. நாங்க வெளிய குடுக்க முடிவு பண்ணிட்டோம்…

வேணும்னா பரசுக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு சொல்லிட்டார்… அதான் அந்த அம்மா கத்திட்டு போறாங்க…”

என்றார்.

அவளை வெளியே கொடுக்க போறோம் என்று சொன்னதை கவனிக்காதவள்.. பரசுவிற்கு கல்யாணம் என்பதை மட்டும் பிடித்துக்கொண்டு…

“அப்பாக்கு ஏன் இந்த வேண்டாத வேலை… அவனுக்கு கல்யாணம் பண்ணுனா என்ன..? பண்ணாட்டி என்ன…?”

என்றாள்.

“என்ன இருந்தாலும் தங்கச்சில… இன்னும் கொஞ்ச நாள் உங்க அப்பா இப்படி சொன்னத பத்தி பஞ்சாயத்து பண்ண வேற யாராவது வந்துட்டே இருப்பாங்க… நீ அடிக்கடி கீழ இறங்கி வர வேண்டாம்… முத்ராவையும் லீவ் போட சொல்லி உன்கூட வச்சிக்கோ… எல்லாம் இன்னும் 2 நாளில் சரி ஆகிடும்.”

என்று அவள் நிச்சயதார்த்தத்தை மனதில் வைத்து சொன்னவர்… நடந்த பிரச்சனையில் அவளுக்கு தான் நிச்சியதார்த்தம் என்று கூற மறந்தாரோ… இல்லை கீழே நடந்த பிரச்சனை மேலே கேட்டிருக்கும் என்று நினைத்தாரோ…

அவள் தான் தனக்கு கோபம் வர கூடாது என்பதற்காக ஹெட்போனை மாட்டி பாட்டு கேட்டுகொண்டிருந்தாளே..

இவ்வாறு அனைத்து சூழ்நிலைகளும் ருத்ராவிற்கு எதிராக சதி செய்ய…   

கார்முகிலன் மற்றும் ருத்ராவின் நிச்சியதார்த்த நாளும் கலர் கலராக விடிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!