vkv 11

vkv 11

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 11

நேரம் காலை 5:00 மணி. குந்தவியின் ஃபோன் மெதுவாக சிணுங்க, எடுத்துப் பார்த்தார். ‘உமாஎன்றது. புன்னகையுடன் ஆன் பண்ண,

ஹாப்பி பர்த்டே அத்தை!” என்றது அந்த மகிழ்ச்சியான குரல்.

தாங்க் யூ கண்ணம்மா.”

டிஸ்டர்ப் பண்ணினதுக்கு ரொம்பவே சாரி. மிட் நைட் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணனும்னு தான் நினைச்சேன். பதினொன்னுக்கு மேலதான் வீட்டுக்கே கிளம்பினீங்கன்னு ஹாஸ்பிடல்ல சொன்னாங்க. அதான் கொஞ்சம் லேட்.” சத்தமாகச் சிரித்தாள் உமா.

ம்நைட் ஒரு சிசேரியன் இருந்தது. அதான் லேட் ஆகிடுச்சு டாகுந்தவியும் சிரித்துக் கொண்டார்.

இன்னைக்கு என்ன ப்ளான் அத்தை?”

நானும், மாமாவும் கோயம்புத்தூர் வரைக்கும் போற வேலை இருக்கு உமா.”

குட், அப்போ இன்னைக்கு எல்லாரும் அங்கயே ஹோட்டல்ல மீட் பண்ணலாம். கே யா அத்தை?”

எல்லாரும் ஃப்ரீயான்னு பாத்துக்கோடா.”

அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்களும், மாமாவும் சரியா ஈவ்னிங் அஞ்சு மணிக்கு வந்து சேருங்க. எங்க வரணும்னு நான் உங்களுக்கு அப்புறமா டெக்ஸ்ட் பண்ணுறேன்.”

கே டா.”

பை அத்தை, ஹேவ் லவ்லி டே.”

விஷ் யூ ஸேம் பேபி.” அழைப்பை துண்டித்தார் குந்தவி.

என்ன, ஒரு பேபி இன்னொரு பேபிக்கு விஷ் பண்ணுதா?” குந்தவியை தன்னை நோக்கி இழுத்தபடி கேட்டார் பிரபாகரன்.

ம்இன்னைக்கு மகேஷ் சீக்கிரமா வெளியே போகணும்னு சொன்னான் ப்ரபா.” என்றபடி குந்தவி எழும்ப, அவரை தன்னருகே பிடித்து வைத்த பிரபாகரன்,

அதுக்கு? அஞ்சு மணிக்கே எந்திருச்சு ஓடணுமா? எங்கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணு டாலி. வர வர நாம பேசிக்கிறதே குறைஞ்சு போச்சு.” தன் கணவனின் அங்கலாய்ப்பில் சிரித்த குந்தவி, அவர் தலையை கோதிக் கொடுத்த வண்ணம் பக்கத்தில் அமர்ந்தார்.

சரி, சொல்லுங்க ப்ரபா.”

நான் நைட் குடுத்த கிஃப்ட் பிடிச்சிருந்ததா டாலி?” ஆசையாகக் கேட்டார் பிரபாகரன்.

எந்த கிஃப்டை கேக்குறீங்க ப்ரபா?” குந்தவி குறும்பாகக் கேட்க,

ஹாஹாஎன் பொண்டாட்டி செம மூட்ல இருக்காப்பா.” வாய்விட்டு சிரித்த பிரபாகரனின் வாயை மூடியவர்,

ஐயோ ப்ரபா, எதுக்கு இப்போ இப்படி சத்தம் போட்டு சிரிக்கிறீங்க? வயசுப் பசங்க வீட்டுல இருக்கிறது ஞாபகம் இருக்கா இல்லையா?”

அடிப் போடி, வயசுப் பேரனுங்க வீட்டில இருந்தாலும் நான் இப்படித்தான் சிரிப்பேன். நீ சொல்லு டாலி, உனக்கு எந்த கிஃப்ட் பிடிச்சிருக்கு?” கண்ணடித்தபடி குறும்பாகக் கேட்டார் பிரபாகரன்.

எனக்கு, நீங்க குடுத்த டைமண்ட் ரிங் தான் ரொம்பவே பிடிச்சிருந்தது.” குந்தவி பதில் சொல்ல கடுப்பானவர்,

இப்பிடிக் கவுத்திட்டயேம்மா, நானும் என்னெல்லாமோ கற்பனை பண்ணினேன்ம்ஹூம்.” பிரபாகரன் பெருமூச்சு விட, இப்போது குந்தவி சிரித்தார்.

கற்பனைதானே அது நல்லா பண்ணுவீங்களே நீங்க.‌ மாறன் கலெக்டர் ஆஃபிஸ் போகணுமாம். கார் சர்வீசுக்கு போயிருக்கிறதால நம்ம மகேஷை காரை எடுத்துக்கிட்டு வரச்சொன்னானாம். நான் மகேஷை கிளப்புற வழியைப் பாக்குறேன். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க.” சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தார் குந்தவி.

                                                    —————————————–

சுதாகரனும், உமாவும் அந்த black Audi இல் கோயம்புத்தூர் கிளம்பி இருந்தார்கள். மகேஷும், மாறனும் ஏற்கனவே கிளம்பி கலெக்டர் ஆபிஸுக்கு போய் விட்டார்கள். தமிழும், ஆராதனாவும் மதியத்திற்கு மேல் கிளம்பி வருவதாக ஏற்பாடு.

ஸ்டார் ஹோட்டலில் டேபிள் புக் பண்ணி இருந்தார் தமிழ்ச்செல்வன். தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு எல்லோரும் ஐந்து மணிக்கு ஆஜர் ஆகவேண்டும் என்பது உமாவின் அன்புக் கட்டளை. அத்தையின் பர்த் டே பாட்டியை முடித்து விட்டு உமா ஹாஸ்டல் போவதாக ஏற்பாடு. காலையிலேயே black Audi புறப்பட்டு விட்டது. இன்றைய நாளை இருவரும் சேர்ந்தே கழிப்பது என்று முடிவெடுத்திருந்தார்கள்.

அத்தான்.”

ம்…”

எல்லா வேலையும் முடிய ஒரு பத்து நாளாவது ஆகும் அத்தான்.”

இதை ஒரு பத்துத் தரம் சொல்லிட்ட மது.”

உங்களுக்கு என்னை விட்டுட்டு இருக்கிறதைப் பத்தி கவலையே இல்லை. நான் தான் கிடந்து புலம்புறேன்.” அவள் முகத்தை நாலு முளத்தில் தூக்கி வைத்துக் கொள்ள, சிரித்தான் சுதாகரன்.

மது, லைஃப்னா எல்லாம் தான்டா. நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி அப்செட் ஆகப்படாது புரியுதா?”

ம்…”

நீ ரொம்ப வொர்ரி பண்ணுறேன்னு தானே இன்னைக்கு முழுசா உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடிவு பண்ணினேன்?”

ம்…”

அதுக்கப்புறமும் டல்லா இருந்தா எப்பிடிடா?” அவன் கேட்கவும், நகர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன்,

ஹாப்பியா இருடா. ஷாப்பிங் முடிச்சுட்டு, மூவிக்கு போகலாமா?”

உங்க இஷ்டம் அத்தான்.”

மது, இங்கிலீஷ் மூவி போகலாமா?”

ஐயோ அத்தான்! எதுக்கு வம்பு? தமிழ் மூவிக்கே போகலாம்.”

அப்படீங்கறே! அப்போ இன்னைக்கு கண்டிப்பா இங்கிலீஷ் மூவி தான். அதுல மாற்றமே இல்லை.”

அத்தான், இன்னைக்கு மகேஷ் வந்து, எங்கெல்லாம் போனீங்கன்னு கேப்பான், நான் எல்ல்ல்லாம் சொல்லுவேன்.” என்றாள், அந்த எல்லாமில் ஒரு அழுத்தம் கொடுத்து.

அம்மணி ப்ளாக் மெயில் பண்ணுறீங்களா? எங்க, இன்னைக்கு உங்க ஃப்ரெண்ட்டு கிட்ட நீங்க என்ன சொல்லுறீங்கன்னு நானும் பாக்குறேனே.” அவன் தைரியமாக சவால் விட அதில் கலவரமானவள்,

இந்த வம்புக்கே நான் வரலை அத்தான், எந்தக் கடைக்குப் போறோம்?” என்றாள் பேச்சை மாற்றி.

அது, அந்தப் பயம் இருக்கனும்.” என்றான் சுதாகரன் சிரித்தபடி. காரை கோயம்புத்தூரின் பிரசித்தமான அந்த ஜவுளி மாளிகைக்குள் நிறுத்தியவன்,

இறங்கு மது, உனக்கு என்னெல்லாம் புடிக்குதோ, அதையெல்லாம் எடுத்துக்கோ. அப்பிடியே அம்மாக்கும் ஒரு பட்டுப் புடவை. கே.” என்றான்.

ம்…” உமா தலையசைக்க, மலர்ந்த முகத்துடன் இருவரும் கடைக்குள் நுழைந்தார்கள்

அத்தான், எனக்கு நீங்க செலெக்ட் பண்ணுங்க. நான் அத்தைக்கு செலெக்ட் பண்ணுறேன், கே.” என்றாள். சிரித்துக்கொண்டே தலை ஆட்டிய சுதாகரன், ஃபங்ஷனுக்கு கிரான்ட்டாக செஞ்சந்தனக் கலரில் அநார்க்கலி ட்ரெஸ் தேர்ந்தெடுத்தான். உடல் முழுவதும் நெட்டில் மெல்லிய இழையாக த்ரெட் வேர்க் இருந்தது. போர்டர், கை, கழுத்து என அனைத்து இடத்திலும் தங்க ஜரிகை வேலைப்பாடு கண்ணைப் பறித்தது.

அத்தான்! சூப்பரா இருக்கு. என்ன இப்படி அசத்துறீங்க?” என்றாள் ஆச்சரியமாக. புடவை செக்ஷ்னுக்கு சென்றவன், குங்குமக் கலரில் ஒரு பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தான்.

ஐயோ அத்தான்! எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா எடுக்குறீங்க?” அவள், அவன் காதைக் கடிக்க, முறைத்துப் பார்த்தவன், அவன் நினைத்ததையே சாதித்தான்

குங்குமப் பூ கலரில் இருந்தது புடவை. பெரிய தங்க நிற சூர்யகாந்திப் பூக்கள் ஹெட்பீஸை அலங்கரிக்க, ஹெட்பீஸின் முடிவில் மயில் கண்கள் வரிசைகட்டி நின்றன. உடல் முழுதும் தங்கப் புள்ளிகள் கோலம்போட, போர்டர் நெடுகிலும் பாதி சூர்யகாந்திகள் அணிவகுத்து நின்றன. உமா ஒரு கணம் புடவையை பார்த்து சொக்கிப் போனாள்.

புடவைப் பிரிவில் வேலைக்கு நின்ற பெண்ணை அழைத்தவன், ப்ளவுஸ் தைப்பதற்கு அங்கு வசதிகள் இருக்கின்றதா என விசாரித்து அதற்கும் ஆர்டர் பண்ணினான். கேள்வியாக உமா பார்க்க,

இன்னைக்கு ஈவ்னிங் இந்த புடவையை கட்டிக்க மது.” என்றான். அவள் ஆச்சரியமாகப் பார்க்க, லேசாகச் சிரித்தவன்

இந்தப் புடவையில நீ எப்படி இருப்பேன்னு பாக்கத் தோணுச்சு.” என்றான். இவர்கள் பேச்சைக் குலைப்பது போல அந்த சேல்ஸ் கேர்ள் ப்ளவுஸ் டிசைன்களோடு வர,

இதை நீயே செலெக்ட் பண்ணிடு மது, எனக்கு எப்பிடி செலெக்ட் பண்ணுறதுன்னு தெரியாது. ஆனா அன்னைக்கு மாதிரி ஜன்னல், கதவெல்லாம் இருந்துது, எனக்கு கெட்ட கோபம் வரும், சொல்லிட்டேன்.” இவன் சத்தமாகச் சொல்ல, அந்த சேல்ஸ் கேர்ள் வாய்மூடி சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

அத்தான், மானத்தை வாங்காம கொஞ்ச நேரம் அத்தைக்கு புடவை செலக்ட் பண்ணுங்க, ப்ளீஸ்.” என்றாள் பற்களைக் கடித்தபடி. அவளை முறைத்தபடியே மயில்க் கழுத்து நிறத்தில் ஒரு புடவையை குந்தவிக்காக தெரிவு செய்தான்.

ஒரு டூ அவர்ஸ்ல ப்ளவுஸ் ரெடியாகிடும் சார்.” அந்தப் பெண் சொல்ல, தலையாட்டியவன் பில்லை பே பண்ண நகர்ந்தான். அவன் கைகளை பற்றி நிறுத்தியவள்,

அத்தான், உங்க பாட்டிக்கு ஒன்னும் வாங்கலையே?” என்றாள். ஒரு கணம் அவன் கண்களில் வர்ணிக்க முடியாத ஒரு பாவம் வந்து போனது. அவள் கையை லேசாக அழுத்தியவன்,

போகலாம் மது.” என்றான். இருவரும் கடையை விட்டு வெளியேறி ஒரு ஹோட்டலுக்கு போய் மதிய உணவை முடித்தார்கள்

ஹாஸ்டல்ல சாப்பாடு எப்பிடி இருக்கும் மது?”

ம்குறை சொல்ல முடியாது அத்தான். சில சமயம் நாக்கு செத்துப் போச்சுன்னா எல்லாரும் ஹோட்டல் போய் சாப்பிடுவோம்.”

ம்…” இருவரும் சாப்பிட்டு முடித்து தியேட்டர் போனார்கள்.

அத்தான், இங்கிலீஷ் மூவி எனக்கு பிடிக்காது. தமிழ்ப்படம் பாக்கலாம் அத்தான்என்றாள் கெஞ்சலாக.

ஏன் பிடிக்காது?”

படம் பாக்க டைமெல்லாம் கிடைக்காது அத்தான். எப்போதாவது ஒரு சான்ஸ் கிடைக்கும் போது யாராவது அதைப் பாப்பாங்களா?” அவளைப் பார்த்து சிரித்தவன், ‘சீமராஜாவுக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்தான்

அத்தான், யூ ஸோ ஸ்வீட்.” என்று அவன் இரண்டு கன்னங்களையும் பிடித்துக் கிள்ளினாள். தியேட்டர் நிரம்பி வழிந்தது. கூச்சலும், கும்மாளமும் காதைப் பிளக்க, உமாவை முறைத்துப் பார்த்தான் சுதாகரன்.

இதுக்குதான் இங்கிலீஷ் மூவி போகலாம்னு சொன்னேன். இப்பிடி கத்தினா எப்பிடி படம் பாக்குறது?”

ப்ளீஸ் அத்தான், எனக்காக ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுங்க. எனக்கெல்லாம் இந்த அட்மோஸ்ஃபியர்ல படம் பாத்தாத்தான், படம் பாத்த ஃபீலிங்கே வரும்.” அவள் கெஞ்சவும், கொஞ்சம் மலை இறங்கினான் சுதாகரன். படம் ஆரம்பிக்கவும் அவள் அதில் லயித்துப் போனாள்

                                               ————————————————–

நேரம் மாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆராதனாவும், தமிழ்ச்செல்வனும் அந்த ஸ்டார் ஹோட்டலின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, தாங்கள் டேபிள் புக் பண்ணி இருந்த ஹாலுக்கு போனார்கள். வண்ண விளக்குகளின் அலங்காரமும், காதை வருடிச் சென்ற மெல்லிய மேலைத்தேய இசையும் அந்த இடம் எத்தனை நவ நாகரீகமானது என்று சொல்லாமல் சொன்னது. ஆங்காங்கே ஒரு சில உல்லாசப் பயணிகளையும் காண முடிந்தது

என்ன ஆரா, இன்னும் ஒருத்தரும் வரல்லை போல இருக்கே?” தமிழ் சொல்லி முடிப்பதற்குள் குந்தவியும், பிரபாகரனும் ஊள்ளே நுழைந்தார்கள். இங்கருந்தே கை காட்டிய ஆராதனா,

அதோ! குந்தவியும், அண்ணாவும் வந்தாச்சு.” என்றார். சற்று நேரத்தில் இளமாறனும், மகேஷும் வர அந்த இடமே களைகட்டியது. மகேஷுக்கு குறையாமல் மாறனும் வம்படித்துக் கொண்டிருந்தார்.

எங்கப்பா, சுதாவும், உமாவையும் இன்னும் காணலை?” மாறன் கேட்க,

அதானே, காலையிலேயே புறப்பட்டுட்டதா அண்ணா சொன்னானே.” இது மகேஷ்

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த black Audi பார்க்கிங்கில் வந்து நின்றது. அழகோவியமாய் அமர்ந்திருந்தவள் காரை விட்டு இறங்கப் போக, அவள் கை பிடித்து தடுத்தவன், அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான். அதிர்ச்சியாய் உமா சுற்று முற்றும் பார்க்க,

யாரும் இல்லை, டோன்ட் வொர்ரி.” என்றான். குங்கும நிறப் புடவை அவள் நிறத்திற்கு தூக்கி அடித்தது. கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட சுதாகர், காரை விட்டிறங்கினான். ‘தான் பார்க்க வளரந்த பெண்ணா இவள்!’, என்று அவனால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை

இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த டேபிளை நோக்கி இவர்கள் போகவும், அத்தனை பேரின் கண்களும் திரும்பிப் பார்த்தது.

அதோ, அண்ணாவும், உமாவும் வந்தாச்சு.” மகேஷ் சொல்லிவிட்டு வெயிட்டரை நோக்கிப் போய் விட்டான். இவர்களை ஜோடியாக பார்த்த மாத்திரத்தில் குந்தவியின் முகம் மலர்ந்து போக, ஆராதனாவின் முகம் கொஞ்சம் யோசனையாக மாறியது

உமா, சாரி புதுசா இருக்கே, இது எப்போ வாங்கினோம்?” அம்மாவாக ஆராதனா கேட்க,

இல்லை அத்தை, அம்மாக்கு கிஃப்ட் வாங்கப் போனோம். அப்போ நான் தான் மதுவை கட்டாயப்படுத்தி இதை எடுத்துக்கச் சொன்னேன்.” உமாவிடம் கேள்வி கேட்க, பதில் சுதாகரனிடம் இருந்து வந்தது. குந்தவி பிரபாகரனின் முகத்தை திரும்பிப் பார்க்க, அவர் கண்ணமர்த்தி சமாதானப் படுத்தினார்.

அண்ணா, ஃபர்ஸ்ட் சாலரி எடுத்தா உமாக்கு மட்டும் தான் கிஃப்ட் வாங்கி குடுப்பயா? அப்போ எங்களுக்கு எல்லாம் ஒன்னும் இல்லையா?” சூழ்நிலை கொஞ்சம் கனமாவதைத் தடுக்க மகேஷ் சட்டென்று கேலியில் இறங்கினான். அவன் நோக்கம் புரிந்ததோ என்னவோ இளமாறனும்,

நல்லா கேளு மகேஷ், சுதா நமக்கெல்லாம் எதுவும் வாங்கிக் குடுக்க மாட்டானாமா?” என்றார்.

மாறன் மாமா, அந்த வழக்கை அப்புறமா பாப்போம். நான் இப்போ உங்க வழக்குக்கு வாறேன்.” எல்லோரும் மகேஷை வியப்பாகப் பார்க்க,

சின்னப் பசங்களோட சகவாசகம் வச்சுக்கக் கூடாதெங்கிறது சரியாத்தான் இருக்கு. எங்கிட்ட என்னப்பா வழக்கு?” என்றார் மாறன் மகேஷைப் பார்த்து.

தமிழ் மாமா, இன்னைக்கு கலெக்டர் ஆஃபிஸிலே ஒரு பெரிய காவியமே ஓடிச்சு.” மகேஷ் சிரித்துக் கொண்டே சொல்ல, மாறன் லேசாக நெளிந்தார்.

இளமாறனும் இன்று அதை லேசாக உணர்ந்திருந்தார். விசாலாட்சியின் பார்வையிலும், பேச்சிலும் இன்று ஒரு உரிமையும், அன்னியோன்யமும் தெரிந்தது. தனது கற்பனையாக இருக்கும் என்று அவர் புறந் தள்ளிய விஷயத்தை, மகேஷ் கண்டு கொண்டிருப்பான் என்று அவர் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.

என்னாச்சு மகேஷ்?” தமிழ்ச்செல்வன் கேட்க

நீ வேறப்பா, சின்ன பையன் ஏதோ சொல்லுறான். அதைப் போய் விசாரிச்சுக்கிட்டு!” அங்கலாய்த்தார் மாறன்.

சும்மா பேச்சை மாத்தாதீங்க மாமா. இன்னைக்கு அந்த கலெக்டர் உங்களை சைட் அடிக்கலை?” குரலை தாழ்த்தி, ஆனால் தெளிவாகக் கேட்டான் மகேஷ். எல்லோரும் வாய்க்குள் சிரிப்பை அடக்க

ஏம்பா மகேஷ், பெரிய இடத்து வில்லங்கத்தை எதுக்குப்பா இழுக்கிற? இத்தனை வயசுக்கு மேல உம் மாமனுக்கு சைட் ரொம்ப முக்கியமா?” என்றார் மாறன்.

ஏன் மாறன்? அம்மணி இன்னும் மிஸ், நீங்க எலிஜிபிள் பேச்சிலர், அப்புறம் என்ன?” பிரபாகரன் கேட்க,

மச்சான் நீங்களுமா?” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டார் இளமாறன்.

சுதாக்கு பொண்ணு பாக்குற வயசுல, நீங்க எனக்கு ஜோடி சேக்குறீங்களே மச்சான்.”

இல்லாதவங்களுக்குத் தான் தேடனும், இருக்கிறவங்களுக்கு எதுக்கு மாறா தேடனும்?” இது குந்தவி. சற்று நேரம் அந்த இடத்தில் அசாத்திய அமைதி நிலவியது.

தமிழ், குந்தவி கேக்குறேன். உன்னோட பொண்ணை எம் பையனுக்கு குடுப்பியா?” தடாலடியாக கேட்டார் குந்தவி. இப்படி ஒரு தாக்குதலை பிரபாகரனே எதிர்பார்க்கவில்லை. ஆராதனா ஏதோ சொல்ல வாயெடுக்க, அவர் கையை மேசைக்குக் கீழே அழுத்திப் பிடித்தார் தமிழ்ச்செல்வன். ‘எதையும் அவசரப்பட்டு சொல்லி விடாதே‘, என்ற சேதி அதில் இருந்தது.

என்ன தமிழ், எதுவும் பேசமாட்டேங்குற? உனக்கு இதுல இஷ்டம் இல்லையா?”

என்ன குந்தவி, இப்படி சட்டுன்னு கேட்டுட்டே?”

ஏன் தமிழ், எப்போ இருந்தாலும் நான் உங்கிட்ட இப்படி கேப்பேன்னு உனக்குத் தெரியாதா? பிடிக்கலைன்னா தாராளமா சொல்லிடு.” குந்தவியின் பேச்சுக்கு தமிழ்ச்செல்வன் பதில் சொல்வதற்கு முன் சீறிப்பாய்ந்து இளமாறனின் குரல்.

பாத்தீங்களா மச்சான் இவ பேசுற பேச்சை! நீங்க இருக்கீங்களேன்னு பாக்கிறேன். இல்லைன்னா நடக்கிறதே வேற.” குந்தவியின் பதிலில் இளமாறன் ஆத்திரப்பட,

பொறுங்க மாறன். ஆராதனா, நீ சொல்லும்மா. குந்தவி கேட்டதுக்கு உன்னோட பதில் என்ன?” சரியான இடத்தில் கேள்வியை வைத்தார் பிரபாகரன். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இருந்தது ஆராதனாவின் பதில்.

அண்ணா, உங்களுக்கு மருமகளா எம் பொண்ணை அனுப்புறதுல எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனா, உங்க வீட்டுல எம் பொண்ணு சந்தோஷமா இருப்பாளா? இதுக்கு இப்போ நீங்க பதில் சொல்லுங்கண்ணா?”

ஆராதனாவின் கேள்வியில் வாயடைத்துப் போனார் பிரபாகரன். இதற்கு என்னவென்று பதில் சொல்ல முடியும். தன் அம்மா அந்தச் சின்னப் பெண்ணை நிம்மதியாக வாழ விடுவாரா? பிரபாகரன் மௌனிக்க,

அண்ணா, நீ கல்யாணம் பண்ணின கையோட தனிக்குடித்தனம் போயிடு. அப்போ எல்லாம் சரியாகிரும்.” மகேஷ் சொல்ல,

ஏன் மகேஷ், கல்யாணம் பண்ணின உடனேயே குடும்பத்தை பிரிச்சிட்டா மகராசின்னு எல்லாரும் எம் பொண்ணைத் திட்டுறதுக்கா?” என்றார் ஆராதனா. மகேஷ் ஏதோ சொல்லப் போக, அவனை இடை மறித்தது சுதாகரனின் குரல்.

அத்தை, சுதாகரன் உங்ககிட்ட நேரடியா கேக்குறேன். மதுவை எனக்குக் கட்டிக் குடுக்க உங்களுக்கு சம்மதமா? இல்லையா?” நேரடியாக ஆராதனாவை நோக்கி வந்தது கேள்விக்கணை. யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோரும் ஆராதனாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். அத்தனை கண்களும் தன்னையே மொய்ப்பதை ஒரு வித சங்கடத்துடன் பார்த்தவர் உமாவைத் திரும்பிப் பார்த்தார். தனக்கு சாதகமாக அம்மாஆம்என்று சொல்லமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு அந்தக் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. தமிழ்ச்செல்வனை திரும்பிப் பார்க்க, நீ சொல்வதே என் முடிவு, என்பதைப் போல அமைதியாக இருந்தார்

உரிமையா கேக்குற சுதாக்கு இந்த அத்தை இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா அதே நேரம்…” சற்று இடைவெளி விட்டவர், மீண்டும் தொடர்ந்தார்.

எம் பொண்ணு வாழ்க்கையில, ஆண்டவன் பாதுகாக்கணும், ஏதாவது பிரச்சினை வந்துதுன்னா இதே அத்தை சுதாவோட சட்டையை பிடிக்கவும் தயங்க மாட்டேன்.” ஆணித்தரமாக வந்தது ஆராதனாவின் குரல்.

அதுக்கு அவசியமே இல்லை அத்தை.” சுதாகரனும் உறுதியாகச் சொல்ல,

இல்லைன்னா எனக்கும் சந்தோஷம் தான் சுதா.” அந்தக் குரலில் லேசாக கேலி இழையோடி இருந்ததோ…? அதன் பிறகு அந்த இடமே கல கலப்பாகிப் போனது. சின்னதாக ஆர்டர் பண்ணியிருந்த கேக்கை குந்தவி கட் பண்ண, கேளிக்கை, விருந்து என பொழுது நகர்ந்து போனது.

                                                     —————————————————–

இது மௌனமான நேரம்இள

மனதில் என்ன பாரம்

காரில் மென்மையாக பாடல் ஒலிக்க, அமைதியாக காரை ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தான் சுதாகரன். பக்கத்தில் உமா. ஹாஸ்டலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த black Audi. ஹோட்டலில் டின்னரை முடித்துக்கொண்டு எல்லோரும் கிளம்ப, உமாவை ட்ராப் பண்ண வந்திருந்தான் சுதாகரன்

ஹாஸ்டல் நெருங்க நெருங்க உமாவின் முகம் வாடிப் போனது. அவள் முகத்தில் ஒரு கண்ணை வைத்திருந்தவன், காரை ஓர் ஓரமாக நிறுத்தினான். கேள்வியாக உமா பார்க்க,

இப்படி முகத்தை வெச்சுக்கிட்டு இருந்தா நான் எப்படி திரும்பப் போறது? என்றான். அவன் மார்பில் முகம் புதைத்தவள் லேசாக விம்மினாள்

மது, என்னடா இது? எதுக்கு இந்த அழுகை?” அவளை லேசாக அணைத்தவன், தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான்.

எனக்கு உங்களை விட்டுட்டு போறது ரொம்பக் கஷ்டமா இருக்கு அத்தான்.”

இத்தனை நாளும் இப்படித்தானே மது இருந்திருப்ப, இப்போ கொஞ்ச நாளாத்தானே அத்தானோட சகவாசம்?” அவன் குரலும் கரகரத்தது.

இத்தனை நாளும் எப்படின்னு தெரியலை, ஆனா இனிமேல் முடியும்னு தோணலை அத்தான்.” அவள் சொல்லி முடிக்க, அவன் அணைப்பு இறுகியது.

அத்தான், நான் நைட்ல ஃப்ரீ ஆகிட்டு கால் பண்ணுவேன். எங்கூட பேசுவீங்க இல்லை?”

கண்டிப்பா, ஆமாஇன்னைக்கு சாரி எடுக்கும் போது எதுக்கு உனக்கு பாட்டி ஞாபகம் வந்துது மது?”

என்ன கேள்வி அத்தான் இது? உங்களுக்கு பாட்டி எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியாதா

ஆனா உனக்கு அவங்களைப் பிடிக்காதே மது?”

பிடிக்காதுன்னு இல்லை அத்தான், எப்பவுமே அப்பாவை, அத்தையை திட்டும் போது ஆத்திரம் வரும். அந்த வீட்டை விட்டு என்னைத் துரத்துறதுலயே குறியா இருப்பாங்களா, அப்போ கோபம் வரும்.”

ம்அவங்க எவ்வளவு துரத்தியும் ஒன்னும் வேலைக்காகலையே மது?” அவன் சிரித்தபடி சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

ரொம்ப கவலைப்படுற மாதிரி தெரியுது?” என்றாள்.

ம்ரொம்பவே மது.” என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு. அவன் பதிலில் வெகுண்டவள், எட்டி அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்.

வலிக்குதுடி, இன்னும் இந்த பழக்கத்தை நீ விடலையா மது? சின்னப் பொண்ணா இருக்கும் போதுதான் சட்டுன்னு கடிச்சு வைப்பே, இப்பவுமா?” கன்னத்தைத் தடவிக் கொண்டு அவன் கேட்க,

என் அத்தானை நான் கடிக்க சின்ன பொண்ணா இருந்தா என்ன? பெரிய பொண்ணா இருந்தா என்ன?”

அதானே! நேரமாச்சு, கிளம்பலாமா மது?” சுதா சொல்லவும், அவனை கலவரமாக பார்த்தாள் உமா.

அத்தான், யாராவது ஏதாவது சொன்னாங்கன்னு, என்னை விட்டுட மாட்டீங்களே?” பயத்தை எல்லாம் கண்ணில் தேக்கி அவள் கேட்க, அப்போதுதான் அவளின் மன சஞ்சலம் புரிந்தது சுதாகரனுக்கு. பாட்டி தன்னை அவளிடமிருந்து பிரித்து விடுவார் என்று அவள் பயப்படுகிறாள் என்று புரிந்து போக, அவள் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தவன், அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

பாங்களூர்ல அத்தனை பொண்ணுங்களோட இருந்தப்பவே, உன்னை மறக்காதவன்டி நான். பாட்டி சொல்லியா உன்னை விட்டிருவேன், ம்…?” அவன் கேள்வி கேட்க, ஏதோ யோசனையில் இருந்தாள் உமா.

என்ன யோசனை?”

இல்லைஇன்னும் கொஞ்சம்கருணை காட்டலாம்…” என்றாள் இழுத்தபடி. சுதாகரனுக்கு முதலில் புரியவில்லை. புரிந்த போது வாய் விட்டுச் சிரித்தான். தான், அன்று அவள் முத்தமிட்ட போது சொன்ன வார்த்தைகளை தனக்கு இப்போது அவள் சொல்கிறாள் என்று புரிந்தது. அவனுக்கு புரிந்து விட்டது என்று தெரியவும், வெட்கம் மேலிட அவன் மார்புக்குள் புகுந்து கொண்டாள்.

அடடா! கருணை காட்ட சொல்லிட்டு முகத்தை மறைச்சுக்கிட்டா எப்படி மது?” மேலும் பொங்கிச் சிரித்தவன், அவள் முகத்தை வலுக்கட்டாயமாக உயர்த்தினான். அந்த black Audi ஆனந்த மயமாக நின்றது.

 

 

error: Content is protected !!