vkv 26

vkv 26

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 26

சுதாகரன் அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந்தான். உமா கொண்டு வந்து கொடுத்த காஃபியை வாங்கிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன்,

மது ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டு சீக்கிரமா கிளம்பலாம். உன்னை வீட்டுல விட்டுட்டு நான் மில்லுக்குக் கிளம்பனும். பார்வதி அம்மாவை வரச்சொல்லி இருக்கேன். நான் ஈவ்னிங் வரும் வரைக்கும் அவங்க உன் கூட இருப்பாங்க, கே?”

ம்…” இஷ்டமே இல்லாமல் தலையாட்டினாள் உமா. மனம் ஏனோ சஞ்சலப் பட்டது. இத்தனை நாளும் இல்லாதபடி இன்று சுதாகரனின் அருகாமையை அவள் மனம் நாடியது

அவள் அருகில் வந்தவன், அந்தக் கன்னங்களை மென்மையாக வருடிக் கொடுத்தான். அவள் மனம் அவனுக்குப் புரிந்தாலும், ஏற்கனவே திட்டமிட்ட அந்தப் பயணம் தவிர்க்க முடியாததாக இருந்தது.

மது, தமிழ் மாமாக்கு இன்னைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. அதனால தான் நானும், மாறன் மாமாவும் கோயம்புத்தூர் போறதா டிசைட் பண்ணினோம். இப்போ என்னால வர முடியாதுன்னு சொன்னா நல்லா இருக்காதுடா.”

இல்லையில்லை, நீங்க கிளம்புங்க அத்தான்.”

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திருவேன் என்ன?”

ம்…” 

சுதா…” இவர்கள் பேச்சைக் கலைத்தது குந்தவியின் குரல். அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன்,

கிளம்பலாம் மது.” என்றுவிட்டு அவளையும் கையோடு அழைத்துச் சென்றான். நீண்ட நாட்களுக்குப் பின் அம்மாவின் கைப்பக்குவத்தில் அவன் லயித்திருக்க,

சுதா, உமா இங்க இருக்கட்டுமேப்பா. நீயும் கோயம்புத்தூர் போகப் போறே. திரும்ப வரும் போது கூட்டிக்கிட்டு போகலாமே.” குந்தவி சொல்லவும், பாட்டி ரூமை ஒரு நோட்டம் விட்டவன், தணிந்த குரலில்,

வேணாம்மா, ஏதாவது மதுவை குத்திக் காட்டுற மாதிரியே பேசுவாங்க. நான் வரும்போது கூட்டிட்டு வர்றேம்மா.” என்றான்.

ம்அதுவும் சரிதான்.” ஒரு பெருமூச்சோடு சொன்னார் குந்தவி. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அந்த black Audi விரைந்து போனது

உமாவை வீட்டில் விட்டு விட்டு கிளம்பிப் போனான் சுதாகரன். அந்தத் தனிமை அப்போது உமாக்கும் தேவையாகத் தான் இருந்தது

கொஞ்ச நேரத்திலேயே பார்வதி அம்மாவும் வந்துவிட, மத்தியான சமையலை எளிமையாகப் பண்ணச் சொல்லி விட்டு தனது ரூமிற்குள் புகுந்து கொண்டாள் உமா.

எண்ணம் முழுவதும் சுதாகரனே வியாபித்து இருந்தான். நேற்றைய நாள் ஆரம்பித்த விதமும், அதே நாள் முடிந்த விதமும் அவளைப் புரட்டிப் போட்டது.

தனக்காக அவன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதை அவளால் உணர முடிந்தது. பாட்டியையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தன்னையும் அதே பாட்டியிடம் மேன்மைப் படுத்திய அத்தானை இப்போது மிகவும் பிடித்தது உமாவிற்கு.

எல்லாப் பெண்களும் தனது துணையிடம் வேண்டுவதும் இதைத்தானே. தாங்கள் அவர்கள் மீது கொட்டும் அன்பிலும், அக்கறையிலும் கொஞ்சமே கொஞ்சம் திரும்ப எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?

தனது பிடிவாதத்தை எல்லாம் தூக்கித் தூரப் போட்டு விட்டு, அவளது எண்ணங்களுக்கும், மறுப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இனிமையாக தங்கள் இல்லறத்தைத் தொடங்கிய சுதாகரன் அவளுக்குப் புதிதாகத் தெரிந்தான்.

ஏனோ அவன் அருகாமையை மனம் தேட, இதுவரை அவள் சென்றிராத அவன் ரூமிற்குள் சென்றாள் உமா. அவனைப் போலவே ரூமும் நேர்த்தியாக இருந்தது

பெட்டுக்குப் பக்கத்தில் இருந்த சின்ன டேபிளில் அவர்களது நிச்சயதார்த்த ஃபோட்டோ இருந்தது. ஃப்ரேம் போட்டு வைத்திருந்தான். பக்கத்திலேயே ஒரு ஆல்பம்

அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்து எடுத்தது முதற்கொண்டு அத்தனையும் அதில் இருந்தது. செல்ஃபியையும் விடாமல் டெவலப் பண்ணி இருந்தான்

அலமாரியைத் திறக்க, அதன் கதவின் உட்ப்பக்கத்தில் இரட்டை ஜடையோடு ஸ்கூல் யூனிஃபோமில் சிரித்தபடி இருந்தாள் உமா. உள்ளே ஆடைகளுக்கு நடுவில் ஸ்டோரேஜ் டியூப் ஒன்று இருந்தது. திறந்து பார்க்க உள்ளே சுருளாக காகிதங்கள்.

சுதாகரன் அப்போதே நன்றாக வரைவான் என்பது உமாவிற்குத் தெரியும். ‘இன்னும் அத்தானிடம் அந்தப் பழக்கம் இருக்கிறதா என்ன?’ எண்ணமிட்டபடியே அந்தக் காகிதச் சுருளை வெளியே இழுத்தாள்.

அத்தனையிலும் வயது வித்தியாசமின்றி உமாவே நிறைந்திருந்தாள். பென்சிலால் வரைந்திருந்த கறுப்பு வெள்ளைப் படங்கள்

ஒவ்வொன்றின் அடியிலும் எழுதப் பட்டிருந்த தேதிகளைப் பார்த்து மலைத்துப் போனாள் உமா. ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வர கடைசியாக வரைந்திருந்தது ஒரு வாரத்திற்கு முந்தைய தேதி காட்டியது. ஆனால் சித்திரம் மட்டும் கொஞ்சம் வில்லங்கமாக இருந்தது. அவன் கற்பனைக்கு அவளை வரைந்திருந்தான்

ஒன்றிரண்டு படங்களை தனது செல்ஃபோனில் ஏற்றிக் கொண்டவள், அதிலொன்றை அவனுக்கே அனுப்பி வைத்தாள். அனுப்பிய மறு நிமிடமே அவனிடமிருந்து கால் வந்தது.

மது, அம்மணி இப்போ எங்க இருக்கீங்க?” குரலில் குறும்பு கொட்டிக் கிடந்தது.

எங்க இருக்கனுமோ, அங்க இருக்கேன்.” தயங்கித் தயங்கிச் சொன்னாள் உமா.

ம்ஹூம்எம் மாமன் பொண்ணுக்கு இப்போதான் அவங்க இருக்க வேண்டிய இடம் புரிஞ்சுதா?” 

இருக்க வேண்டிய இடமும் புரிஞ்சுது, என் அத்தானோட மனசுல நான் இருக்கிற இடமும் புரிஞ்சுது.”

அப்பிடியா! பக்கத்துல இல்லேங்கிற தைரியம், ம்வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை.”  அவன் அடிக்குரலில் சிரிக்க, அவள் மௌனத்தையே பதிலாகத் தந்தாள்.

ட்ரோயிங் எல்லாம் பிடிச்சிருக்கா? அதுவும் அந்த லாஸ்ட் வன்?” சீண்டும் குரலில் அவன் கேட்க, அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்று புரிந்தவள் சட்டென்று அழைப்பைத் துண்டித்தாள்

இங்கே சுதாகரன் புன்னகைத்துக் கொண்டான். மனமெல்லாம் சந்தோஷம் ஆர்ப்பரித்தது. புதிய ஒப்பந்தம் ஒன்றிற்காக இரண்டு பேரும் கிளம்பி கோயம்புத்தூருக்கு வந்திருந்தார்கள். இடையில் சின்ன காஃபி ப்ரேக் கிடைக்கவே, உமாவின் மெஸேஜைப் பார்த்துவிட்டு கால் பண்ணி இருந்தான் சுதாகரன். இவன் மலர்ந்த முகத்தைப் பார்த்த இளமாறனே,

என்ன சுதாகரா, முகமெல்லாம் பளிச்சுன்னு இருக்கு? உன்னோட சமாதான கோரிக்கையை உமா ஏத்துக்கிட்டாளா?” என்றார். வார்த்தைகள் எதுவும் அகப்படாத சுதாகரன், இளமாறனைக் கட்டி அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பே சொன்னது, அவன் மகிழ்ச்சியின் அளவை. அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார் மாறன்.

சந்தோஷம் பா, நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்தாலே போதும். ஈகோவை விட்டுருப்பா. உமா சின்னப் பொண்ணு, தப்புப் பண்ணினா சொல்லித் திருத்து, புரிஞ்சுக்குவா. ஆனா உன் கோபத்தை காட்டிராத சுதாகரா, அவ தாங்க மாட்டாப்பா.” சொல்லிவிட்டு இளமாறன் அப்பால் நகர, கண்மூடி இருக்கையில் சாய்ந்தான் சுதாகரன்.

                                  —————————————————————-

ஃபோன் சிணுங்கியதில் கண்விழித்தாள் உமா. பகலுணவை முடித்துக் கொண்டு லேசாகக் கண்ணயர்ந்து இருந்தாள். ஃபோனின் திரைஅத்தான்எனவும் அவசரமாக ஆன் பண்ணினாள்.

மது.”

சொல்லுங்க அத்தான்.”

…! தூங்குறயா மது? டிஸ்டேர்ப் பண்ணிட்டேனா?”

இல்லையில்லை, சொல்லுங்க அத்தான்.”

மது, என் ஃப்ரெண்ட் ஒருத்தன், கார்த்திக் ன்னு பெயர். அவன் என்னைப் பாக்கிறதுக்கு நம்ம ஊருக்கு வந்துக்கிட்டிருக்கான். நான் நம்ம வீட்டு அட்ரஸ் தான் குடுத்திருக்கேன். நமக்கு கல்யாணம் ஆனது அவனுக்குத் தெரியாது.”

சொல்லியிருக்கலாமே அத்தான்.”

அப்பவே ரொம்ப கேலி பண்ணுவான். உன்னை அவனுக்குத் தெரியும்டா, அதான் சொல்லலை. உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்குன்னு மட்டும் சொல்லி இருக்கேன். நீயும் எதையும் காட்டிக்காதே மது.”

ம்…”

வந்த வேலை முடிஞ்சிடுச்சு மது. நாங்க இப்போவே கிளம்புறோம்டா. எப்பிடியும் அவன் வந்து கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்திடுவேன். நீ சமாளிச்சுடுவ இல்லை மது?”

கண்டிப்பா அத்தான். நீங்க சீக்கிரமா வந்திடுங்க.” 

கே மது.” அவன் அழைப்பைத் துண்டிக்கவும், பார்வதி அம்மாவிடம் போனவள், இரவு உணவிற்கு கொஞ்சம் விசேஷமாக சமைக்கச் சொல்லி விட்டு, தன்னையும் கொஞ்சம் அலங்கரித்துக் கொண்டாள்

சற்று நேரத்திற்கெல்லாம் அந்தக் கார் வாசலில் வந்து நின்றது. வாசலுக்கு வந்த உமா கொஞ்சம் தடுமாறிப் போனாள். சுதாகரனின் ஃப்ரெண்ட்டை மட்டும் எதிர் பார்த்தவளுக்கு, கூடவே ஒரு பெண்ணும் காரிலிருந்து இறங்கவும் ஆச்சரியமாக இருந்தது.

வணக்கம் அண்ணா.” வீட்டை ஆராய்ந்த படி இறங்கிய கார்த்திக், உமாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.

வணக்கம், நீங்கநீங்க சுதாவோட மாமா பொண்ணுல்ல? வெயிட், வெயிட்ம்ரெண்டு மாமாவோட பேர் சொல்லுவான். நீங்க தமிழ் மாமா பொண்ணு, ரைட்?” 

ம்ஆமா அண்ணா.” சிரித்துக்கொண்டே சொன்னாள் உமா.

கார்த்திக்…” சிணுங்கலாக வந்தது பக்கத்தில் நின்ற பெண்ணின் குரல்.

ரவீனா, சாரி. பேச்சு சுவாரஸ்யத்துல உங்களை நான் மறந்துட்டேன்.” கார்த்திக் சொன்ன மறு நொடி கொஞ்சம் நிலை குலைந்தாள் உமா.

ரவீனாஎன்ற பெயர் இன்னும் அவளுக்கு ஞாபகம் இருந்தது. மகேஷ் சொன்ன அதே பெயர். அத்தான் மேல் பைத்தியமாக இருந்த அந்த ரவீனாவா இது

உள்ள வாங்க அண்ணா.” தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விருந்தினரை வரவேற்றாள் உமா. ஆனால் பார்வை மட்டும் அந்தப் பெண்ணையே வட்டம் போட்டது

செதுக்கி வைத்த சிலை போல அத்தனை அழகாக இருந்தாள் அவள். அணிந்திருந்த ஆடை, அணிகலன்களிலும் சரி, நடையுடை பாவனைகளிலும் சரி அத்தனை நேர்த்தியும், செழுமையும் இருந்தது.

ஆம் கார்த்திக், இது ரவீனா.” தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டான் கார்த்திக்.

ஆம் உமா.”

இல்லையே, சுதா வேற பேர் சொல்லுவானே?”

மதுன்னு கூப்பிடுவாங்க.”

யெஸ்மது, இப்போ ஞாபகம் வருது. நாங்க எல்லாம் ஒன்னாத்தான் பெங்களூர்ல எம் பி பண்ணினோம்.” 

அப்பிடியா?”

ஆமா, மகேஷ் எங்க? சுதாவோட பேரன்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்காங்களா?

இல்லையில்லை, அத்தான் மட்டும் தான் இங்க இருக்காங்க.” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, பார்வதி அம்மாள் கையில் ட்ரேயோடு வர அதை வாங்கி இருவருக்கும் கொடுத்தாள் உமா.

கார்த்திக் அனைத்தையும் ரசித்து உண்ண, ஒய்லி ஸ்நாக்ஸ் என்று முகத்தைச் சுழித்த ரவீனா, காஃபியை மட்டும் வாங்கிக் கொண்டாள்

ரவீனா அவசரமா சுதாவைப் பார்க்கனும்னு சொன்னதால சட்டுன்னு கிளம்பி வந்திட்டேன்மா. வந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது உங்க ஊர் எத்தனை அழகுன்னு. இன்னொரு முறை ரெண்டு நாள் தங்குற மாதிரி வரனும்.”

கண்டிப்பா வாங்க அண்ணா. இப்போ உடனேயே கிளம்புறீங்களா என்ன?”

ஆமாம்மா, சுதா வந்ததும் அவனைப் பாத்துட்டு உடனேயே கிளம்புறோம். ரவீனா இன்னும் ரெண்டு நாள்ல ஆஸ்திரேலியா போறா.”

…!” அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அந்த black Audi வாசலில் வந்து நின்றது. அவசர அவசரமாக இறங்கிய சுதாகரன் வீட்டுக்குள் ஓட்டமும் நடையுமாக வந்தான்.

ஹேய் கார்த்திக்…” வரும் போதே சத்தமாக அழைத்துக் கொண்டு வந்தவன், பாதியிலேயே ப்ரேக் அடித்தது போல் நின்று விட்டான். ரவீனாவை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது முகபாவமே சொன்னது

ஹாஹாஎன்ன மச்சான், அப்பிடியே நின்னுட்டே? எப்பிடி என்னோட சர்ப்ரைஸ்?” கார்த்திக்கின் குரலில் கலைந்தவன், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு புன்னகைத்தான்.

ஹாய் ரவீனா.” அவன் சொன்ன மாத்திரத்தில் ரவீனாவின் முகம் பிரகாசித்துப் போனது. சட்டென்று எழுந்தவள், சுதாகர் அருகில் சென்று, மென்மையாக அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்

கொஞ்சம் எதிர்பாராத பிரமிப்பில் இருந்த சுதாகரன் அவள் செய்கையை அனுமானித்து அதைத் தவிர்ப்பதற்கு முன்னதாக அனைத்தும் நடந்து முடிந்திருந்தது

ரவீனாவின் செய்கையில் கார்த்திக் கொஞ்சம் சங்கோஜப் பட்டாலும், இதெல்லாம் சகஜமப்பா என்ற பாங்கில் உட்கார்ந்து இருந்தான். ஆனால் உமாதான் நொறுங்கிப் போனாள். கண்கள் லேசாகக் கலங்க, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

உமாவின் முகத்தில் தெரிந்த அத்தனை மாற்றமும் சுதாகரனின் கண்களுக்குத் தப்பவில்லை. ரவீனாவைத் தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தியவன்,

கார்த்திக், உனக்கொரு சர்ப்ரைஸ் நான் வச்சிருக்கேன். நீ அதை என்னன்னு இன்னும் கேக்கலையே?” என்றான்.

அட, ஆமா. நானும் கேக்க மறந்துட்டேன். சொல்லு சுதா.” கார்த்திக் கேட்க, உமாவின் அருகில் வந்த சுதாகரன் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

மீட் மை வைஃப் மது.”

வாட்…!” யார் குரல் ஓங்கி ஒலித்தது என்று புரிய முடியாத அளவிற்கு இருவரும் சத்தம் போட்டிருந்தார்கள்.

என்னடா மச்சான், இத்தனை அசால்ட்டா சொல்லுறே? எங்க யாரையும் இன்வைட் கூட பண்ணலை?” இது எப்போ நடந்துது?” கார்த்திக்கின் குரலில் அத்தனை அதிர்ச்சி தெரிந்தது.

அவசரமா நடந்துது கார்த்திக். ஒன்லி ஃபேமிலி மெம்பர்ஸ். நானும், மதுவும் இப்போ இந்த வீட்லதான் இருக்கோம்.” நிறைவான புன்னகை சுதாகரன் முகத்தில்.

கார்த்திக் அதிர்ச்சி அடைந்தாலும் சற்று நேரத்திலேயே தன்னை சுதாகரித்துக் கொண்டான். ஆனால் ரவீனாவின் முகத்தில் அதிர்ச்சியையும் தாண்டி ஒரு ஏமாற்றம் தெரிந்தது.

இத்தனை நேரமும் உமா என்ற ஒருத்தியை கவனத்திலேயே கொள்ளாதவள், இப்போது அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அடிபட்ட பார்வையைப் பார்க்கையில் உமாவிற்கு வலித்தது.

மது, டின்னர் ரெடியாடா?” அணைப்பை விலக்காமலேயே சுதாகரன் கேட்க,

எல்லாம் ரெடியா இருக்கு அத்தான்.” சொல்லிவிட்டு கிச்சனை நோக்கிப் போனாள் உமா.

பார்வதி அம்மா எல்லாவற்றையும் தயார் பண்ணிக் கொடுக்க டைனிங் டேபிளை அரேன்ஜ் பண்ணினாள் உமா. கை தன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருந்தாலும், மனம் மட்டும் அந்தப் பெண்ணையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவள் கண்களில் தெரிந்த வலி உமாவை ஏதோ பண்ணியது. ஒரு காலத்தில் தானும் இதே போல அத்தானுக்காக ஏங்கியவள்தானே என்ற எண்ணம் ஏனோ எட்டிப் பார்த்தது.

எத்தனை காதல் இருந்திருந்தால் அத்தனை உரிமையாக அத்தானுக்கு முத்தம் வைப்பாள்.

உமா…” அவள் சிந்தனையைக் கலைத்தது கார்த்திக்கின் குரல். தயங்கியபடி இவளையே பார்த்திருந்தான்.

சொல்லுங்க அண்ணா.” தன் சஞ்சலங்களை மறைத்துக் கொண்டு புன்னகைத்தாள் உமா. சுதாகரனும், ரவீனாவும் இவர்கள் பேசுவது கேட்காத தூரத்தில் இருக்கவே கார்த்திக் தொடர்ந்தான்.

என்னை மன்னிச்சிடும்மா.”

ஐயோ! என்ன அண்ணா இது? எதுக்கு இப்போ மன்னிப்பு எல்லாம்?”

இல்லைம்மா, உங்க கல்யாணம் நடந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சிருந்தா, நான் கண்டிப்பா ரவீனாவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க மாட்டேன்.”

அதெனாலென்ன, பரவாயில்ல விடுங்கண்ணா.”

இல்லைம்மா, உண்மையைச் சொல்லப் போனா ரவீனாக்கு சுதா மேல எப்பவுமே ஒரு கண். சுதா கண்டுக்க மாட்டான். ஆனா உன்னைப் பத்தி, உங்க குடும்பங்களைப் பத்தி எல்லாம் சுதா சொல்லியிருந்ததால இந்தக் கல்யாணம் நடக்க வாய்ப்பில்லைன்னுதான் நான் நினைச்சிருந்தேன்.” 

இதைச் சொன்ன போது உமாவின் முகம் கொஞ்சம் வாடிப்போனது. பேச்சு ரவீனாவோடு இருந்தாலும் சுதாகரனின் ஒரு கண் உமாவின் மேலேயே இருந்தது.

இப்ப கூட அவ சுதாக்கிட்ட ஒரு முடிவு கேக்கத்தான் வந்திருக்கா. உங்க கல்யாணம் நடந்தது யாருக்கும் தெரியாததால எனக்கும் அது தப்பாத் தோணலை.” 

…!”

அவங்க அப்பா அவளை கல்யாணத்துக்கு அவசரப் படுத்துறாங்களாம். என்னால சுதாகரை மறக்க முடியலை. கடைசியா ஒரு தரம் நான் முயற்சி செஞ்சு பாக்குறேனேன்னு கேட்டப்போ, என்னால மறுக்க முடியலை.”

“……”

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்மா. உங்க கல்யாணம் முடிஞ்ச விஷயம் தெரிஞ்சிருந்தா, நானும் கூட்டிக்கிட்டு வந்திருக்க மாட்டேன். அவளும் இப்பிடி வந்திருக்க மாட்டா. ரொம்பவே சுய கவுரவம் பார்க்கிற பொண்ணும்மா. எனக்குத் தெரிஞ்சு அவ இறங்கி வந்திருக்கிற ஒரே விஷயம் சுதாதான்.”

கார்த்திக் சொல்லச் சொல்ல உமாவின் முகம் சோபையிழந்து போனது. இவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த சுதாகரன்,

மது, எல்லாம் ரெடியா?” என்றான்.

அடேங்கப்பா! பயலுக்கு இருக்கிற அக்கறையைப் பாருடா. என்னை உங்கூட பேச விடாம தடுக்கிறாராம்.” சொல்லியபடி கார்த்திக் வாய் விட்டுச் சிரிக்க, பதிலுக்குப் புன்னகைத்த உமா,

ரெடி அத்தான்.” என்றாள்.

கார்த்திக்கும், சுதாகரனும் தங்கள் நட்பு வட்டம், தொழில், நாட்டு நடப்பு என்று பேசிக் கொண்டே சாப்பிட, ரவீனா மௌனமாகவே உண்டு முடித்தாள். உமா எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து பரிமாற மகிழ்ச்சியாகவே பொழுது கழிந்தது. சுதாகரன் எத்தனை வற்புறுத்தியும் உமா எல்லோரோடும் சேர்ந்து உண்ண மறுத்து விட்டாள்

டின்னரை முடித்த உடனேயே ரவீனா கிளம்பிவிட்டாள். கார்த்திக்கிற்கும் வேறு வழி இருக்கவில்லை. கடைசி வரைக்கும் பெண்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. பார்வைகள் வருடிச் சென்ற போதும் பேச முயற்சிக்கவில்லை

கார்த்திக் இவர்கள் இருவரிடமும் கல ககலவெனப் பேசி விடைபெற்றுக் கொள்ள, ரவீனா அமைதியாக காரில் ஏறி அமர்ந்திருந்தாள். அந்தப் பார்வை மட்டும் சுதாகரனையே தழுவி நின்றது.

மது…” ஏதோ சொல்லத் திரும்பிய சுதாகர் அப்போதுதான் கவனித்தான், தன்னருகே உமா இல்லை என்பதை. கார் இங்கே புறப்பட்டதுதான் தாமதம் உள்ளே போயிருந்தாள் உமா. டைனிங் டேபிளில் ஏதோ க்ளீன் பண்ணிக் கொண்டிருப்பவளைக் கண்டவன்,

மது நீ இன்னும் சாப்பிடலை, சீக்கிரமா சாப்பிடு. நான் ஒரு வாஷ் எடுத்துட்டு வந்தர்றேன்.” அவன் சொல்லவும் மௌனமாகத் தலையாட்டினாள் உமா. அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு பெரு மூச்சுடன் தன் ரூமிற்குள் புகுந்து கொண்டான்

                                   ————————————————————–

பேருக்கு ஏதோ கொறித்து விட்டு தனது ரூமிற்குள் வந்தாள் உமா. மனது ஏனோ வெறுமையாக இருந்தது. இன்று காலையில் இருந்த உற்சாகம் அத்தனையும் வடிந்து போனாற் போல ஒரு உணர்வு.

ஜன்னலருகே நின்றுகொண்டு இருளை வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வருவது சுதாகரன் தான் என்று புரிந்தாலும் அப்படியே நின்றிருந்தாள் உமா, திரும்பிப் பார்க்கத் தோன்றவில்லை.

அவளருகே வந்தவன் அவள் தோளிரண்டையும் பற்றித் தன்புறமாகத் திருப்பினான். லேசாகக் கலங்கியிருந்த அந்த விழிகளை ஆழமாகப் பார்த்தவன்

என்னாச்சு மது?” என்றான். அவள் மௌனமாகத் தலை குனிய, அவள் முகத்தை நிமிர்த்தியவன்,

என்னாச்சுன்னு கேட்டேன்.” என்றான் அழுத்தமாக. ஒரு கேவலுடன் அவன் மார்புக்குள் புகுந்து கொண்டாள் உமா. அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளின் தாக்கம் ஒட்டு மொத்தமாய் வெடிக்க, அவன் டீ ஷேர்ட்டை இறுக்கிப் பிடித்தவள், அழுது தீர்த்தாள்.

சுதாகரன் எதுவும் பேசவில்லை. மெதுவாக அவள் முதுகை வருடிக் கொடுத்தவன், அவள் அழுது ஓயும் வரை காத்திருந்தான். மெல்ல மெல்ல அவள் விசும்பல் ஓயவும், அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை அழுந்தத் துடைத்தான்.

எதுக்கு இந்த அழுகைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மது?” 

தெரியாது.”

…! ‌ காரணமே இல்லாம ஒரு அழுகையா?”

“……”

இன்னைக்கு யாரோஅத்தான் மனசுல நான் இருக்கிற இடம் புரிஞ்சுதுன்னுடயலாக் பேசினாங்க. இப்போ என்னடான்னா இப்பிடி அழுறாங்க.”

நான் உங்களைத் தப்பு சொல்லலை அத்தான்.”

அப்போ ஏன் இப்பிடியொரு ரியாக்ஷ்ன்? தூக்கித் தூரப் போட்டுட்டு போக வேண்டியது தானே?”

முடியலை அத்தான். அந்தப் பொண்ணு மனசுல எவ்வளவு தூரம் நீங்க இருந்திருந்தா, உங்களைத் தேடி அவளே வந்திருப்பா?”

மது…” அவன் குரலில் கோபம் இருந்தது.

இல்லை அத்தான். எவ்வளவு காதல் இருந்தாலும் ஒரு பொண்ணு தானாத் தேடிப் போகமாட்டா. அதையும் தாண்டிப் போறாங்கன்னா…” அவள் தடுமாறினாள்.

ம்நீ என்ன சொல்ல வர்ற மது?”

எத்தனை ஆசையா நீங்க வந்ததும் ஓடி வந்தா. நான் அவ முகத்தைத் தான் பார்த்தேன். அதுல அவ்வளவு சந்தோஷம். எத்தனை உரிமையா அவ உங்களுக்கு…”

மது…!” ஆத்திரமாக வெளிவந்தது சுதாகரனின் குரல்.

என்னோடே அத்தானை அந்தப் பொண்ணு பாத்ததையே என்னால தாங்க முடியல. அவ என்னடான்னா உங்களுக்கு முத்தமே குடுக்கிறா, அதுவும் என் கண் முன்னாடியே.” கண்களில் நீர் திரள அவள் சொல்லிக் கொண்டே போக, கண்களை அழுந்த மூடித் திறந்தான் சுதாகரன்.

தப்புதான் மது. நான் அதைத் தவிர்த்திருக்கனும். இப்பிடி பிஹேவ் பண்ணுவான்னு நானும் எதிர்பார்க்கலை. என்னோட தப்புதான்.”

இல்லையில்லை. நான் உங்களை எந்தத் தப்பும் சொல்லல்லை அத்தான்.”

அப்போ என்னதான் மது உன்னோட பிரச்சினை?”

அந்தப் பொண்ணு பாவம் இல்லை அத்தான்?”

அடிப்பாவி! உனக்கே இது ஓவராத் தோணலையா? பக்கத்துல ஒருத்தன் இங்கே இத்தனை வருஷமா ஏங்கிப் போய் நிக்குறேன். என்னைப் பாக்க உனக்குப் பாவமா இல்லை. எவளோ ஒரு ஹிந்திக் காரியைப் பாத்தா பாவமா இருக்கா?”

நல்லாத் தமிழ் பேசுறாங்க இல்லை அத்தான்?” அவள் பதிலில் தன் தலையில் அடித்தவன், முரட்டுத்தனமான அளை இழுத்து அணைத்தான்.

ஏன்டி? அவளுக்கு எத்தனை லாங்குவேஜ் பேச தெரியும்கிறதுதான் உன்னோட பிரச்சினையா இப்போ?” அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டே அவன் கேட்க,

ரொம்ப அழகா இருக்காங்க அத்தான்.” என்றாள்.

சான்ஸே இல்லை. எம் மதுவோட கால் தூசு கூட இல்லைடி அந்த ஹிந்திக்காரி.”

ஐயே! எதுக்கு இப்பிடியொரு பொய்?” 

பொய்யா, இல்லை மெய்யான்னு நான் காட்டுறேன் பாரு.” அவளை அலாக்காக தூக்கியவன், அடுத்த ரூம் நோக்கிப் போனான்.

ஐயோ அத்தான்!”

நீதான் இன்னைக்கு சொன்னயில்லே, நீ இருக்க வேண்டிய இடம் எதுன்னு. உன்னை விட்டு வெச்சதுதான் தப்பு.”

அது அப்போ சொன்னது.”

நீ ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொன்னு சொல்லுவியா? அத்தான் அப்பிடியில்லைம்மா. என்னைக்கும் ஒரு சொல்தான்.”

என்ன சொல் அத்தான்?”

மதுமதுமதுதான்.” கரகரப்பாக வந்த அவன் குரலில் மயக்கம் இருந்தது. அந்த மயக்கத்தில் இருவருமே கரைந்து போனார்கள்.

 

 

error: Content is protected !!