VKV – 6

VKV – 6

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 6

1988 அன்று.

தமிழ்ச்செல்வனும், இளமாறனும் அந்த வீட்டின் வராண்டாவில் இருந்த ஒற்றை சோஃபாக்களில் அமர்ந்த வண்ணம் காத்துக் கொண்டிருந்தார்கள்.

குந்தவியின் வீடு, பழைய தொட்டிக்கட்டு வீடு. மரத்தினாலான பெரிய பெரிய தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தது. வீட்டைப் பார்க்கும் போதே அவர்களது வளமும், செழிப்பும் தெரிந்தது

தமிழ், இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ? கொஞ்சம் எனக்கு படபடப்பாத்தான் இருக்குப்பா.”

என்ன நடந்தாலும் பரவாயில்லை மாறா, இதுக்கு அப்புறமும் ஒரு பொண்ணை வீட்டுல வைச்சிருக்கிறது நியாயம் இல்லை. ஒரு தகப்பனா அதை அவர் கண்டிப்பா உணருவார்.”

எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சந்தோஷம் தான். இதாவது பரவாயில்லை, பிரபாகரன் அவரோட அம்மாவை எப்பிடி சமாளிக்கப் போறாரோ?”

அது அவர் பிரச்சினை மாறா, அதை அவர் பாத்துக்கட்டும். நாம குந்தவி ரூட்டை க்ளியர் பண்ணுவோம்.”

தூரத்தில் குந்தவியின் அப்பா வேல்முருகன் வருவது தெரிந்தது. இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். இருவர் முகத்திலும் ஒரு உறுதி தெரிந்தது.

வணக்கம் ஐயா!”

வணக்கம், யாருப்பா நீங்க? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு.”

குந்தவியின் அப்பா வீட்டிற்குள் வந்ததும் இருவரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தார்கள்.

உக்காருங்கப்பா, என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திருக்கீங்க?”

ஐயா, என் பேரு தமிழ்ச்செல்வன், ஸ்பின்னிங் மில் நடத்துற சிதம்பரத்தோட மகன். இது இளமாறன், என்னோட நண்பன்.”

அட, சிதம்பரம் பையனாப்பா நீ? அப்பா எப்பிடி இருக்கார்?”

நல்லா இருக்கார் ஐயா.”

நான் உங்களை எங்கயோ பாத்திருக்கேன்பா, ஆனா எங்கன்னு தான் ஞாபகம் வரமாட்டேங்குது.”

ஐயா, நாங்க குந்தவியோட ஒன்னா படிச்சவங்க, அப்போ எங்களை பாத்திருப்பீங்க.”

ம்ஆமா…!” அவர் கண்களில் ஆராயும் பாவனை ஒன்று வந்து போனது.

சொல்லுங்க தம்பி.”

ஐயா, ஜாதகம் ஒன்னு வந்திருக்கு, எனக்குத் தெரிஞ்சவங்க தான். நானும் நல்லா விசாரிச்சுட்டேன். அதைப்பத்தி உங்ககிட்ட பேசலாம்னுதான் வந்தோம்.”

இத்தனையும் பேசும்போது மாறன் அமைதியாக உட்கார்ந்து பார்த்திருந்தான். இப்போது வேல்முருகனின் முகம் கொஞ்சம் யோசனையைக் காட்டியது. தாடையை தடவியபடி மௌனமாக இருந்தார்.

ஐயா, ஜாதகம் ஒன்னும் குறைச்சலானது இல்லை. பையன் பெரிய சர்ஜன். இப்போ லன்டன்ல வேலை பாக்குறாரு. வயசும் நம்ம குந்தவிக்கு ஏத்த வயசுதான்.”

அப்போ எதுக்கு தம்பி கிராமத்துல பொண்ணு தேடுறாங்க?”

சட்டென்று பாயின்ட்டைப் பிடித்தார் அந்த கிராமத்து மனிதர். இதற்குப் பிறகும் மறைப்பதில் அர்த்தம் இல்லை என்று தமிழுக்கு புரிந்தது.

ஐயா, பையன் கோயம்புத்தூர் ஹாஸ்பிடல்ல நம்ம குந்தவியை பாத்திருப்பார் போல, அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. கட்டினா குந்தவியைப் போல ஒரு பொண்ணைத் தான் கட்டனும்னு ஆசைப்பட்டு கேக்குறாரு

அவர் மட்டும் தான் ஆசைப்படுறாரா? இல்லைகுந்தவியும்…?”

அப்படியெல்லாம் இல்லை ஐயா, ஆனா குந்தவியை அணுகி இருப்பார் போல. குந்தவி அப்பாக்கிட்ட பேசுங்கன்னு சொல்லியிருக்கா. அதனால எங்களை பாத்து பேசினார். உங்க அபிப்பிராயம் என்னன்னு தெரிஞ்சா…”

சற்று நேரம் அமைதியாக யோசித்த வண்ணம் இருந்தார் குந்தவியின் அப்பா. மாறனுக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது. தமிழையும், குந்தவியின் அப்பாவையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தான்.

இப்போ புரியுது தம்பி, வந்த அத்தனை வரன்லயும் ஒன்னு கூட பிடிக்கலையான்னு ஆச்சரியப் பட்டேன். மனசுல ஒன்னு இருக்கும் போது எப்பிடி பிடிக்கும்.”

ஐயா, குந்தவிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

ம்சரிப்பா, அப்படி இருந்தா நல்லதுதான். இப்ப நான் என்ன செய்யனும்னு நீங்க எதிர்பாக்குறீங்க?”

ஐயா, பையன் ரொம்ப நல்ல பையன், சர்ஜன் வேற. ஒரே தங்கை, அதையும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க. அம்மா மட்டும்தான். நீங்க மனசு வெச்சீங்கன்னா…”

இத்தனை வயசுக்கு மேல சாஸ்திரம், சம்பிரதாயங்களை பிடிச்சிக்கிட்டு என்ன பண்ணப் போறேன். அடுத்தவளுக்கும் கல்யாண வயசு வந்திடுச்சு. அவங்களை வந்து பொண்ணு கேக்கச் சொல்லுங்க தம்பி.”

ஐயா! நிஜமாத்தான் சொல்லுறீங்களா? உங்களுக்கு இதுல சங்கடம் ஒன்னும் இல்லையே?”

இல்லைப்பா, என் பொண்ணுங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும். நம்ம ஊரு வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் பொண்ணு கேட்டு வரணும். அவங்களை வரச்சொல்லுங்க, பேசலாம்.”

சரிங்கய்யா.”

என்ன எதிர்பாப்பாங்கன்னு ஏதாவது தெரியுமா தம்பி?”

மாப்பிள்ளை தங்கம் ஐயா, குந்தவியை உள்ளங்கையில வைச்சு தாங்குவாரு. அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம். ஆனா அவரோட அம்மா கொஞ்சம் எதிர்பாப்பாங்க…”

பரவாயில்லை தம்பி, அதை நான் தப்பு சொல்லலை. நான் சேத்து வைச்சு இருக்கிறதெல்லாம் என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் தான். இந்த வீடு என்னோட பரம்பரை வீடு, எனக்கு பையன் இல்லை, அதனால குந்தவிக்குத்தான் இதை குடுப்பேன். இருபது ஏக்கர் நிலமும், நூறு பவுன் நகையும் குடுப்பேன். அவ்வளவுதான் என்னால முடிஞ்சது. எனக்கு இன்னும் ஒரு பொண்ணு இருக்கா. அவளையும் நான் யோசிக்கனும் இல்லையா?”

சரிங்கய்யா, ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் மாப்பிள்ளைக்கிட்ட கலந்து பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுறேன். அப்போ நாங்க கிளம்புறோம் ஐயா.”

சரிங்க தம்பி, அப்பாவை கேட்டதா சொல்லுங்க. உங்கம்மா எனக்கு தூரத்து சொந்தம். அக்கா முறையாகனும். வேல்முருகன்னு சொல்லுங்க, நல்லாத் தெரியும்.”

நல்லது ஐயா.” இரண்டு பேரும் கிளம்பி வெளியே வந்தார்கள்.

என்ன தமிழ்? மனுஷன் சுலபமா இறங்கி வந்துட்டாரு. மலையிறக்கனும்னு நினைச்சேன்.”

இல்லை மாறா, குந்தவிக்கும் வயசு ஏறுதில்லையா? அதனால்தான் இறங்கியிருப்பாரு. அதோட பிரபாகரனை வேணாம்னு சொல்ல எந்தக் காரணமும் இல்லையே.”

ம்அது உண்மைதான், இவங்க பண்ணப்போற சீரெல்லாம் அந்த அம்மாவை திருப்திப் படுத்துமா தமிழ்?

கொஞ்சம் கஷ்டம்தான் மாறா, அந்த அம்மா பெரிய எதிர்பார்ப்போட இருக்கு, இனி பிரபாகரன்தான் சமாளிக்கனும்.”

இந்த வாரம் ஃபோன் பண்ணும்போது எல்லாம் தெளிவா சொல்லிடு தமிழ், இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு வரும்போது ஒரேயடியா கல்யாணத்தை முடிக்கிற மாதிரியே வரச்சொல்லுப்பா.”

ஆமாம்பா, நானும் அதையேதான் நினைச்சேன். இன்னும் எத்தனை நாளைக்கு குந்தவி இப்படியே இருக்க முடியும். அவளுக்கு பின்னாடி ஒரு பொண்ணு இருக்கில்லையா? அதோட நல்லது கெட்டதும் அவங்க அப்பா பாக்கனுமே.”

அதைச் சொல்லுபேசியபடியே இருவரும் மில்லுக்கு வந்து சேர்ந்தார்கள்.

                                  **    **     **    **    **    **

2018 இன்று

தன் கையில் இருந்த ஃபோனை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள் உமா. அவளால் நம்பவே முடியவில்லை. தன்னை அத்தனை தூரம் உதாசீனப்படுத்திய அத்தான் எதற்காக இன்னும் இந்த ஞாபகார்த்தங்களை சுமந்து கொண்டு திரியவேண்டும்.

அதுவும் ஃபோனிற்கு பின் நம்பராக எதற்கு தன்னுடைய டேட் ஒஃப் பேர்த் குடுக்க வேண்டும்? தலை குழம்பியது. அவள் முகம் பிரதிபலித்த உணர்ச்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர்.

மது…! நீ மாறிட்டதா நினைச்ச எதுவுமே மாறல்ல.”

“……..”

நான்அன்னைக்குஅது தப்புதான், உங்கிட்ட அப்படி நடந்திருக்கப்படாது. பாட்டியை நீ எதிர்த்துப் பேசினதும், என்னமோ கண் மண் தெரியாம ஒரு கோபம் வந்திடுச்சு.”

“……..”

ஏதாவது பேசு மது.”

நீங்க அப்படி நடந்துக்கிட்டது கூட எனக்கு கவலை இல்லை அத்தான்…”

அவளை கூர்மையாக அவன் ஆழ்ந்து பார்க்க, அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. பிடிவாதமாக இருந்த அந்த முகம் ஃபோனையே வெறித்துப் பார்த்திருந்தது.

நீங்க என் கையைப் பிடிச்சு வீட்டுக்கு வெளியே இழுத்துக்கிட்டு வந்தீங்க இல்லையா?… அப்போ உங்க பாட்டிஉங்க பாட்டி என்னைப் பாத்து ஏளனமா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க அத்தான்என் ஜென்மத்துக்கும் அதை மறக்க மாட்டேன் அத்தான்.”

இங்கப் பாரு மது, பெரியவங்க ஏதோ கோபத்துல பண்ணிட்டாங்க. விடுடா, இப்போ நான் கூப்பிடுறேன். வா நம்ம வீட்டுக்கு போகலாம்.”

கண்களில் கண்ணீர் கோடாக இறங்க அவனைத் திரும்பிப் பார்த்தாள் உமா. அவள் கன்னங்களைப் பற்றியவன் தன் பெரு விரல்களால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு,

இப்ப எதுக்கு இப்படியொரு லுக்கு?” என்றான்.

நீங்க துரத்தியுட்டா போகணும், திரும்ப கூப்பிட்டா ஓடி வரனுமா?”

சரி, நான் என்ன பண்ணனும் நீயே சொல்லு.”

நான் என்ன சொன்னாலும் செய்வீங்களா அத்தான்?”

ம்நீ என்ன சொன்னாலும் செய்யுறேன், சொல்லு மது.”

அவசரப்பட்டு வாக்குக் குடுக்காதீங்க, அப்புறம் வருத்தப்படப் போறீங்க.”

இத்தனையும் பேசும்போது அவள் முகம் மட்டும் கல்லைப் போல இருந்தது. ஏதோ ஒரு பிடிவாதம் அந்தக் கண்களில் தெரிந்தது. வாய்விட்டுச் சிரித்த சுதாகரன்,

இந்தப் பிடிவாதம் தான் உன்னோட கெட்ட குணமே. பரவாயில்லை, சொல்லு மது. உங்கிட்ட மன்னிப்பு கேக்கணுமா?”

இல்லை அத்தான், நீங்க எதுக்கு எங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்?”

பாட்டி மன்னிப்பு கேக்கணுமா?”

இல்லை.”

அப்போ என் பேர்ல இருக்கிற சொத்து எல்லாத்தையும் உனக்கு குடுக்கட்டுமா?”

யாருக்கு வேணும் அத்தான் உங்க சொத்து.”

அப்போ என்னதான் பண்ணனும்? எங்கிட்ட வேற என்ன இருக்கு?”

ஏன்? நீங்க இல்லையா அத்தான்?”

மது…! நீ என்ன சொல்லுற?”

எந்தப் பேரனை உரிமை கொண்டாடிக்கிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தினாங்களோ, அதே பேரனை உரிமை கொண்டாடிக்கிட்டு அந்த வீட்டுக்குள்ள நான் வரனும்.”

காருக்குள் கொஞ்ச நேரம் எந்தச் சத்தமும் இல்லை. உமா பிடிவாதமாய் அவனையே பார்த்திருக்க, இப்போது சுதாகரனின் முகம் சிந்தனையைக் காட்டியது.

குந்தவியோட மகன் எங்கிற தகுதி உங்கப்பாக்கு போதுமா இருக்கு, உன்னோட ஆத்திரத்தை தீத்துக்க உனக்கு இந்த அத்தான் தேவையா இருக்கு. சுதாகரன் எங்கிற மனுஷனை யாருக்கும் கண்ணுக்கு தெரியலை. அவனுக்கும் ஒரு மனசு இருக்கும்ன்னு யாருக்கும் தோணலை.”

ஏன்? அந்த மனசுல ரவீனா இருக்கான்னு சொல்லப் போறீங்களா?”

ஏன் மது, அந்த மனசுல நீ இருக்கப்படாதா?”

ஹாஹாஅத்தான், சமயத்துக்கு நீங்களும் நல்லா காமடி பண்ணுறீங்க.”

நான் சொன்னது உனக்கு சிரிப்பா இருக்கா மது?”

சிரிப்புத்தான் வருது அத்தான்அந்த மனசுல நான் இருந்திருந்தா, என் நினைப்பு இருந்திருந்தா, இத்தனை வருஷத்துல ஒரு தரமாவது கூப்பிட்டு, மது எப்படி இருக்கேன்னு கேக்கத் தோணி இருக்கும். முதல் முதலா காலேஜ் போனப்போ அத்தனை பேரும் விஷ் பண்ணினாங்க. எப்படியும் அத்தான் இன்னைக்கு கூப்பிடுவாங்கன்னு ஆசையா காத்திருந்தேன். என்னோட அத்தான் கடைசி வரைக்கும் கூப்பிடவே இல்லை தெரியுமா?”

மது…”

“……”

உனக்கு எப்படிப் புரிய வைக்குறதுன்னு எனக்குத் தெரியல்லை மது.”

விடுங்க அத்தான், அது முடிஞ்சு போன விஷயம். இப்போ நான் சொன்ன விஷயத்துக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை.”

மது, எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் வாழ்க்கையில ஒரு முறை தான் கல்யாணம், அது உங்கூட நடக்கப் போறதுதான், அதுல எந்த மாற்றமும் இல்லை.”

கண்டிப்பா அத்தான்.”

பொறு, நான் பேசி முடிக்கிறேன். என்னோட சைட் க்ளீனா இருக்குது. ஆனா நீ அப்படி இல்லை. பழிவாங்க கல்யாணம் பண்ணுற. நாளைக்கே உன் கோபம் தீந்துட்டா எனக்கு பை சொல்லிர மாட்டேன்னு என்ன நிச்சயம்?”

என்ன அத்தான் விளையாடுறீங்களா?”

அம்மா தாயே, இப்போ நீதான் என்னை வெச்சு விளையாடுற. கடைசி வரைக்கும் கூட இருப்பேன்னாவது சொல்லும்மா.”

ம்ம்அதெல்லாம் இருப்பேன்.”

சுதாகரா, அந்த ரவீனாவை நீ சுத்தல்ல விட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? பெண் பாவம் பொல்லாததுன்னு சும்மாவா சொன்னாங்க.” 

இப்ப எதுக்கு அவளை இழுக்கிறீங்க?”

அப்போ உன்னை இழுக்கட்டுமா?”

ஆமாஇவர் என்னை இழுத்திட்டாலும்…!”

தலையை வெளிப்புறமாகத் திருப்பி வாய்க்குள் முணுமுணுத்தாள் உமா. அவளின் முணுமுணுப்பு சுதாகரனுக்கு நன்றாகவே கேட்டது. அப்போதுதான் அவளை கவனித்தான்

புடவை கட்டி இருந்தாள். அடர் பச்சை நிறப்புடவை அவள் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. கோவிலுக்கு வந்ததால் பட்டுப் புடவையாக தெரிவு செய்திருந்தாள். சிவப்பு சேர்ந்த மெரூன் வண்ணத்தில் த்ரெட் வேர்க் பண்ணிய ப்ளவுஸ், கழுத்து அபாயகரமாக பின்னோக்கி இறங்கி இருந்தது

ப்ளவுசின் பின் பக்கம் இரண்டு பட்டுக் கயிறுகள் முடிச்சிடப் பட்டிருந்தது. முடியை ஒற்றை ஜடை போட்டு முன்னால் போட்டிருந்தாள். மஞ்சள் சேர்ந்த வெண்ணிற மேனி முதன்முறையாக சுதாகரனை என்னவோ பண்ணியது.

குழந்தை முதல் ஒன்றாக வளர்ந்தவர்கள், உருண்டு புரண்டு விளையாடி இருக்கிறார்கள். அப்போது எந்தக் கல்மிஷமும் தோன்றியதில்லை. இத்தனை காலமும் அந்த குழந்தை முகம் அவனை தொல்லை பண்ணி இருக்கிறது. ஆனால் இன்று தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண், அவனுள் பல இரசாயன மாற்றங்களை உண்டு பண்ணினாள்

இதுவரை அவளை பார்த்திராத பார்வை இப்போது பார்த்தான் சுதாகரன். கிட்டத்தட்ட அவன் உயரம் இருந்தாள். வேண்டுமென்றே பிடிவாதமாக முகத்தை அந்தப்புறம் திருப்பி அமர்ந்திருந்தாள். காதுகளில் மின்னிய சிவப்பு வைரம் அவள் தமிழ்ச்செல்வனின் சீமந்த புத்திரி என்றது. நீண்ட அழகான கழுத்தில் கனமான ஒரு ஒற்றை ஆரம். அதற்கு மேல் பயணித்த கண்களுக்கு கஷ்டப்பட்டு கடிவாளம் இட்டவன், அவள் ப்ளவுசில் முதுகுப்புறமாக இருந்த முடிச்சை வேண்டுமென்றே இழுத்து அவிழ்த்து விட்டான்.

அத்தான்! என்ன பண்ணுறீங்க?”

என்ன ட்ரெஸ் இது மது? உங்க அம்மாவும், பாட்டியும் என்ன பண்ணுறாங்க? என்னமோ சூசைட் ஸ்பாட் மாதிரி இருக்கு.”

இப்ப இதுதான் ஃபேஷன், அம்மாதான் இந்த டிசைன்ல தைக்க சொன்னாங்க.”

விளங்கிரும்!”

இப்போ எதுக்கு அந்தநொட்டைகழட்டி விட்டீங்க அத்தான்? என்னால கட்ட முடியாது. நீங்க கட்டி விடுங்க, இல்லைன்னா பாக்க அசிங்கமா இருக்கும்.”

தன்னை நோக்கி முழுதாகத் திரும்பி முதுகு காட்டி அவள் அமர, திணறிப் போனான் சுதாகரன். ‘இவ இன்னைக்கு என்னை ஒரு வழி பண்ணாம விடமாட்டா போல இருக்கே!’, அவன் மனதின் சங்கடம் புரியாமல்,

ம்சீக்கிரம் அத்தான், என்ன பண்ணுறீங்க?” என்றாள்.

அவள் சொன்ன காரியத்தை செய்யச் சென்ற கைகள் அதைவிடுத்து அவள் தோள்களை அழுந்தப் பிடித்தது. அவள் ஒற்றை ஜடையில் முகம் புதைத்தவன், கழுத்து வளைவில் முத்தம் வைத்தான். அவள் உடலில் ஓடிய சிலிர்ப்பை அவனால் உணர முடிந்தது.

..த்..தான், என்ன பண்ணுறீங்க?”

அவனிடமிருந்து அவள் விலக முயல, அவளை மேலும் தன்னோடு சேர்த்தணைத்தவன் அந்த முதுகெங்கும் முத்தம் வைத்தான். தன் பெண்மைக்கு நேர்ந்த முதல் தாக்குதலில் உமா அதிர்ச்சி அடைந்தது ஒரு சில நிமிடங்கள் தான். தன்னை அவனிடமிருந்து திமிறி விடுவித்துக் கொண்டவள்,

அத்தான்! என்ன பண்ணுறீங்க? இது தப்பு.” என்றாள்

எது தப்பு மது?” அவன் குரலில் போதை ஏறி இருந்தது. அந்தக் குரலில் விக்கித்தவள்,

என்ன பேசுறீங்க?” என்றாள்.

நீதானே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னே.”

சொன்னேன்தான், அதுக்காக இதெல்லாம் பண்ணனுமா?”

பின்ன இல்லையா மது?”

அவனை மருண்டு பார்த்த அந்த விழிகளில் அழுந்த முத்தமிட்டவன், அடுத்து கன்னத்திற்கு முன்னேறினான். அவன் அடுத்த இலக்கை யூகித்தவள் வெட்கம் மேலிட அவன் மார்பிற்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.

                                     **     **    **    **   **    **

மிகவும் களைப்பாக இருந்தது குந்தவிக்கு. கொஞ்சம் க்ரிடிகலான டெலிவரி. மூன்று நாட்களாக லேபர் பெயினில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்

அந்தப் பெண்ணின் கணவர்சீ செக்ஷ்னுக்குஒத்துக் கொள்ள வில்லை. கடைசி வரை நோர்மல் டெலிவரிக்கே முயற்சி பண்ணினார்கள். குழந்தையின் ஹாட் பீட்டில் சிறிய மாற்றங்கள் தெரியவே, வாட்டர் பேகை(அம்னியோன்) இவர்களே உடைத்தார்கள்

 வலியால் துடித்தவளுக்கு அவர்கள் அனுமதியின் பேரில்எப்பிடியூரலும்கொடுத்திருந்தார்கள். மூன்று நாட்கள் போராட்டத்தின் பிறகு, தன் முகம் காட்டி இருந்தது அந்த பெண் குழந்தை

குந்தவிக்கு அத்தனை மகிழ்ச்சி. பெண் பிள்ளைகள் என்றால் தன் மனம் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போகிறது என்று இப்போது நினைத்துக் கொண்டார். கான்டீனுக்கு அழைத்து சூடாக ஒரு காஃபி வரவழைத்து அருந்தினார். கொஞ்சம் தெம்பாக இருந்தது

எமெர்ஜன்சி இல்லாத பட்சத்தில் தன்னை அழைக்க வேண்டாம் என்று ஒரு தகவல் கொடுத்து விட்டு சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அனுமதியில்லாமல் தன் ரூமின் கதவை யாரோ திறக்க, கண்விழித்துப் பார்த்தார். சுதாகரன் வந்து கொண்டிருந்தான், பின்னால் உமா.

உமா…!” தன் பிள்ளையை மறந்து உமாவிடம் போனார் குந்தவி. சுதாகரன் அங்கிருந்த மேசைமேல் சாய்ந்து நின்று இவர்களையே பார்த்த வண்ணம் இருக்க,

அடடே, இன்னைக்கும் புடவையா? சூப்பர் உமா. அப்படியே உன்னை மாடலிங் பண்ண அனுப்பலாம். என்ன இது? இந்த ஸ்டைல்ல ப்ளவுஸ் தைச்சிட்டு நொட் போடாம விட்டிருக்கே!”

இரண்டு பேரும் நேராக குந்தவியை பார்க்க வந்திருந்தார்கள். குந்தவியின் கேள்வியில் அதிர்ந்த சுதாகரன், ‘என்னக் காட்டிக் குடுத்தே, உனக்கு இருக்கு இன்னைக்குஎன்ற ரீதியில் பார்க்க, ‘சரிதான் போடாஎன்று அலட்சியமாக அவனைப் பார்த்தவள்,

நான் சரியாத்தான் போட்டுக்கிட்டு வந்தேன் அத்தை, உங்க மகன்தான் இழுத்து விட்டாரு.” கொஞ்சும் குரலில் வந்தது புகார்.

சுதா…! என்ன வேலை இது? இப்படித்தான் பண்ணுவியா? அவ இன்னும் என்ன சின்னப் பொண்ணுன்னு நினைச்சு விளையாடுறியா?” உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும், ஒரு தாயாக மகனைக் கண்டித்தார் குந்தவி.

குந்தவியின் முதுகுப் புறமாக வந்து, அவர் தோளில் முகத்தை வைத்துக் கொண்டவள் அவனைப் பார்த்து அழகு காட்டினாள். ‘உன் லீலைகள் அனைத்தையும் அத்தையிடம் சொல்லுவேன்‘, என மிரட்டியது அவள் கண்கள்.

சொல்லித்தான் பாரேன்என்று பதிலுக்கு மிரட்டியது அவன் கண்கள்.

பாருங்க அத்தை, உங்க முன்னாடியே என்னை முறைச்சு பாக்குறதை.”

அதானே! எதுக்குடா அவளை முறைக்குற?”

ஆமா, நீங்க தான் அவளை செல்லம் கொஞ்சுங்க. அவ இந்த ஊரையே மேய்ச்சுக் கட்டுவா.”

எம் பொண்ணு கெட்டிக்காரிடா, ஊரை என்ன? இந்த உலகத்தையே மேய்ச்சுக் கட்டுவா.” குந்தவி பெருமை பேச, அவரையே பார்த்த சுதாகரன்,

உன்னோட பையனை மேய்ச்சுக்கட்ட பெர்மிஷன் கேக்குறாம்மா, குடுக்குறியா?” என்றான்.

ஒரு கணம் குந்தவிக்கு அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. அமைதியாக அவர் நிற்க, அருகில் வந்த சுதாகரன் உமாவின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகே நிறுத்தி,

ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கா?” என்றான்.

உமாவின் கண்கள் தானாக நிலம் பார்க்க, ஆச்சரிய மிகுதியில் வார்த்தைகளற்று ஸ்தம்பித்து நின்றார் குந்தவி.

 

error: Content is protected !!