VNE 18 (3)

VNE 18 (3)

 மெல்லிய வெளிச்சம் முகத்தில் படர மெல்ல கண் விழித்தாள் மஹா. அந்த அதிகாலை நேரத்தின் குளுமையும் பறவைகளின் கீச் கீச் சப்தத்தையும் கேட்டபடி கண் விழிப்பது சொர்கமாக இருந்தது.

கைகளை தேய்த்தபடி எழுந்து அமர்ந்தவள் முதலில் கண்டது ஷ்யாமை தான். அந்த மலை முகட்டில் நின்று கொண்டு சூர்யோதயத்தை பார்த்தபடி நின்றது அவனா என்ற சந்தேகம் தான் தோன்றியது முதலில்.

கண்களை தேய்த்து விட்டு பார்த்தாள். தங்கமயமாக ஜொலித்த சூரியனை ஆழ்ந்து பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு பாறை மேல் சாய்ந்தபடி நின்றிருந்தது அவனே தான்!

எப்போது எழுந்தான் இவன்?!

இரவு அவள் விழித்திருந்த வரை அவனும் தான் விழித்திருந்தான்.

கஸ்டடி எடுத்ததற்கான காரணம் என அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தவளுக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது… கூடவே நடுக்கமும்! காரணம் புரியவில்லை. ஆனால் அந்த இரவும் தனிமையும் அதுவரை இல்லாத பயத்தை அவளுக்குள் அவளறியாமல் விதைத்து இருந்தது.

அவனது இயல்பையும் பழக்கங்களையும் அவன் வாயாலேயே கேட்ட பின்பும் அவனுடன் ட்ரெக்கிங் கிளம்பி வந்தது தவறோ என்று முதன் முறையாக மனதுக்குள் கிலி!

மனம் கடிவாளமற்ற குதிரையாக எட்டு திக்கும் பறந்தது, முந்தைய இரவை நோக்கி!

அவளது கண்கள் அவனது கண்ணில் தெரிந்த நேர்மையை ஆழ்ந்து நோக்கியது. அவன் மற்றவர்களுக்கு எப்படியோ, தனக்கு அவன் நேர்மையாளன் தானே என்று அவனுக்கு ஆதரவாக கூறியது.

என்னதான் ஆதரவைக் கொடுத்தாலும், சற்று எச்சரிக்கையாகவும் இருக்க சொன்னது மனது!

அவளும் எதற்கும் தயாராக இருந்தாள். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

“ஏன் என்ன காரணம்?” குரல் அவளறியாமல் நடுங்கியதோ என தோன்றியது.

மெளனமாக வானத்தை வெறித்தபடி படுத்திருந்தவன், டெண்டுக்குள் இருந்த அவளை நோக்கி திரும்பிப் படுத்தபடி,

“ஹே ஷிவர் ஆகற மிர்ச்சி…” என்று சிரித்தான், அவன் சொல்ல வந்ததை மறந்து விட்டு!

“வாட்… நான் ஷிவர் ஆகறேனா? நோ… நோ சான்ஸ்…” சற்று திக்கியபடி கூறியது, குப்புற விழுந்தபின் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலத்தான் இருந்தது.

அதை கேட்டவனுக்கு இன்னமும் புன்னகை விரிந்தது. அவனது குறும்புப் புன்னகையை கண்டவளுக்கு குட்டி கிருஷ்ணன் தான் நினைவுக்கு வந்தான். அவனைப் போலவே இவனும் சிரித்தே மயக்கும் கள்வன் போல… இந்த புன்னகையில் வீழ்பவர்கள் மீள்வது கடினமென்று தன தோன்றியது.

“ம்ம்ம்… ஓகே… ஷிவர் ஆகல… கொஞ்சம் நெருப்புக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்துக்க…” என்று அவன் அழைக்க,

“எனக்கு இங்கேயே கன்வீனியன்ட்டா இருக்கு…” என்று கைகளை உரசி கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

“உன்னை என்ன என் பக்கத்திலயா வந்து உட்கார சொன்னேன்? இன்னும் கொஞ்ச நேரத்துல குளிர் ஜாஸ்தியாகிடும்… அப்புறம் உன் இஷ்டம்…” என்றவன், அங்கேயே பெட்ஷீட்டை விரித்து விட, அவளுக்கு சங்கடமாக இருந்தது.

“ஏன் உனக்கு குளிராதா?” என்று அப்பாவியாக கேட்டவளை இதழில் வளைந்த குறுஞ்சிரிப்போடு,

“ஏன் மிர்ச்சி? நீ எதாவது தெர்மல் எனர்ஜி ப்ரோவைட் பண்ணலாம்ன்னு இருக்கியா?” என்று கேட்க, முதலில் புரியாத பார்வை பார்த்த மஹா, புரிந்தப்பின், கோபத்தில் முகம் சிவந்து, கையில் கிடைத்த கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தாள்.

“இப்பவும் ஜஸ்ட்டு மிஸ்ஸு மிர்ச்சி…” என்று அவளை மீண்டும் வம்பிழுக்க,

“டேய்… வேண்டாம்… முழுசா ஊர் போய் சேரனும்ன்னு ஆசையில்லையா?”

“ஹேய் அதை நான் சொல்லணும்…” என்று அதற்கும் சிரித்தவனை பார்த்து எதுவும் சொல்லாமல் முறைத்தவள்,

“எக்கேடோ கெட்டுத் தொலை… நீ எப்படி போய் தொலைஞ்சா எனக்கென்ன?” என்றவள், டெண்ட்டின் திரையை இழுத்து ஸிப்’பை மூடிக் கொண்டு படுத்த போதுதான் அவன் ஆரம்பித்த கேள்விக்கு அவன் பதில் கூறாமல் பேச்சை மாற்றியது புலப்பட்டது.

மெல்ல தலையை நீட்டி வெளியே பார்த்தாள். கையில் சிகரெட்டோடு நிலவை வெறித்தபடி ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தான். விரல் நுனியில் தீக்கங்கு பளபளவெனயிருந்தது.

“ஷ்யாம்…” மெல்லிய குரலில் அவனை அழைக்க,

அவனோ திரும்பாமல், “ம்ம்ம்…” என்றான், சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தபடி.

“டேய்… ஷ்யாம்…” இவள் வேண்டுமென்றே அழைக்க,

“என்னடி?” அவளது ‘டா’ வுக்கு அவனது பதில் எப்போதும் ‘டி’ யாகத்தானே இருக்கிறது. பல்லைக் கடித்துக் கொண்டாள்.

“ஒரு நிமிஷம் இந்த பக்கம் திரும்பு…”

“சொல்லு… எனக்கு காது நல்லாவே கேக்கும்…”

அவனது இது போன்ற பதில்களெல்லாம் அவளை இன்னுமே எரிச்சல் மோடுக்கு தாவ செய்து விடும். இப்போதும் அது போல எரிச்சலானவள், டெண்ட்டை விட்டு எழுந்து, அவன் முன்னே சென்று நின்றாள்.

சிகரெட் நெடியை அவளால் தாள முடியவில்லை. இருமிக் கொண்டே,

“சரி… ஒரு பைவ் மினிட்ஸ் அங்க இருக்கேன்… இதை முடிச்சுட்டு வா…” என்றபடி சற்று தள்ளிப் போக முயல, அவன் கையிலிருந்த சிகரெட்டை அணைத்து விட்டு, எழுந்து கொண்டான்.

“உனக்கு ஸ்மோக் வரவேண்டாம்ன்னுதான் இவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்தேன்… இங்கயும் வந்து…” என்று முறைத்தவன், “இப்ப சொல்லு …” என்று கூற, அவனை யோசனையாக பார்த்தாள்.

“இந்த பழக்கம் உனக்கு எதுக்கு ஷ்யாம்? அதுவும் ரொம்ப பிடிக்கற போல… உன் ரூம்ல அவ்வளவு கிடந்துச்சு…” என்று நிறுத்த,

“இது உனக்கு தேவையில்லாதது மஹா… உன் வேலைய மட்டும் நீ பார்…” வார்த்தைகளில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அலட்சியம் தெறித்தது.

“ஆஸ் எ டாக்டரா சொல்றேன் ஷ்யாம்…”

“எனக்கும் எல்லா ஆணியும் தெரியும்… ஈவன் கஞ்சா கூட ஒரு தடவை ட்ரை பண்ணிருக்கேன்… எல்லாமே என் இஷ்டம் மட்டும் தான்… யாருக்கும் விளக்கம் சொல்ல மாட்டேன்… இப்ப நீ கேட்க வந்ததை மட்டும் கேளு…” ‘கஞ்சா’ என்றதும் திக்கென்று நிமிர்ந்தவளால் அவனுக்கு புரிய வைக்க முடியுமா? அவனாக வழிக்கு வந்தால் தானே உண்டு. ‘லூசு … எருமை…’ என்று விதம் விதமாக மனதுக்குள் திட்டிவிட்டு, தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டவளுக்கு கேட்க வந்ததே மறந்து போனது.

“ஒன்னுமில்ல… நான் போறேன்…” என்றவளை, அவனது, “மஹா…” என்ற அழைப்பு தடுத்தது. திரும்பி அவனைப் பார்த்தாள்.

“என்ன?”

“என்ன கேட்க வந்த?”

“ப்ச்… ஒண்ணுமில்ல…”

“சொல்லு…”

“ம்ம்ம்… பேசற மூட் போய்டுச்சு…” எங்கோ பார்த்தபடி கூறினாள். அவனும் சற்று இளக்கமாக பேசினால் கூட தேவலாம்… பதிலுக்கு பதில் கடித்து வைத்தால்? என்ன பேசுவது?

“ஆனா எனக்கு கேட்கற மூட் வந்துடுச்சு… சொல்லு…” குரலில் மீண்டும் குறும்பு எட்டிப் பார்த்தது.

“உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கேட்க முடியாது… எனக்கா தோணும் போதுதான் கேட்க முடியும்…” சற்று இறுக்கமாகக் கூறினாள்.

“உன்னோட இஷ்டத்துக்கு நானும் பதில் சொல்ல முடியாது… என் இஷ்டத்துக்கு தான் பதில் சொல்ல முடியும்…” என்று அவனும் பதிலுக்கு பதில் பேசினாலும் அவனது குரலில் கிண்டல் வழிந்தது.

“சரி… தனியா உட்கார்ந்து பேசிக்க…” என்று அவள் மீண்டும் போக முயல, அவளது கையை பிடித்து இழுத்து தனக்கருகில் நிறுத்தி வைத்தான்.

“ஏய் கையை விடு…” அவள் கையை உதற முயல, அவளது கையை விடுவித்துவிட்டு அங்கிருந்த பாறை மேல் வசதியாக சாய்ந்து கொண்டவன்,

“சொல்லிட்டு போ மிர்ச்சி…” என்று அமர்த்தலாக கூற, அவனை முறைத்தாள். ஆனாலும் சொல்லாமல் அவன் விட மாட்டான் என்பதும் புரிந்தது. அவன் நினைத்ததை மட்டுமே செய்ய வேண்டுமா என்ற எரிச்சல் எட்டி பார்த்தது. இதென்ன அதிகாரம் என்ற கோபமும் எழ அவள் கைகளை கட்டிக்கொண்டு மெளனமாக தூரத்தில் தெரிந்த நட்சத்திரங்களை பார்த்தாள்.

சற்று நேரம் மௌனமாகவே கழிய, அவளது கையை விடுவித்தவன், அவளது இடது கையை பிடித்து தன்னுடனே கீழே புல்லில் அமர்ந்தான், கால்களை நீட்டிக் கொண்டு. அவளுக்கும் மறுத்து பேச தோன்றவில்லை.

எதிரே நெருப்பு ஜுவாலைகள்! அதன் வெப்பம் அவர்கள் வரையுமே பரவியிருந்தது, ஊசி போல குத்திய குளிரையும் தாண்டி!

“மஹா…” என்ற அவனது அழைப்புக்கு, அவள் பதில் கொடுக்கவில்லை. மெளனமாக நெருப்பைப் பார்த்தபடி இருந்தாள்.

“ஏய் லூசு…” என்று வேண்டுமென்றே அவன் வம்பிழுக்க, திரும்பி அவனை முறைத்தாள்.

“செம சிச்சுவேஷன்ல?” என்று குறும்பாக கேட்டவனை இன்னமுமே முறைத்தாள். இன்னமும் அவள் கோபத்தில் தான் இருந்தாள், அவன் எடுத்தெறிந்து பேசியதில்!

‘பேசுவதெல்லாம் பேசிவிடுவானாம், ஆனால் ஒன்றுமே பேசாதது போல திரும்ப அவன் பேசினால் தானும் பேசிவிட வேண்டுமா என்ன?’ மனதுக்குள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

“செம ரொமாண்டிக் சிச்சுவேஷன்… சில்லுன்னு கிளைமேட்… யாருமே இல்லாத ஒரு வனாந்திரம்… டென்ட்… கேம்ப் ஃபயர்…” என்று ரசனையாக சொல்லிக்கொண்டே வந்து நிறுத்தியவன், “ஒரு நல்ல ஃபிகரை தள்ளிட்டு வந்திருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்…” என்று இதழோரம் சிரிப்பை அதக்கியபடி கூறியவனை திரும்பிப் பார்த்து எரித்தாள், பார்வையால்!

“ஏன்… நல்ல ஃபிகரை இழுத்துட்டு வர வேண்டியதுதானே?” கடுப்பாக இவள் கேட்க, அவனது முகத்தில் சிரிப்பு பரவியது.

“என்ன பண்றது? என் நேரம்… உன்னை மாதிரி ஒரு சப்பை ஃபிகரோட வரணும்ன்னு இருக்கு…” என்று அலுத்துக் கொண்டவனை கொலைவெறியோடு பார்த்தவள், அதற்கும் மேல் பேசாமல் எழ முயல, திரும்பவும் அவளது கையை பிடித்து இழுத்து அமர வைத்தான்.

“எப்பருந்து இப்படி தொட்டாசிணுங்கியான மிர்ச்சி?” என்று புன்னகையோடு கேட்டவன், “உன்கிட்ட பிடிச்சதே பதிலுக்கு பதில் நீ கொடுக்கற பன்ச் டைலாக் தான்…” என்று விரிந்த புன்னகையோடு கூறியவனை எரிச்சலாக பார்த்தாள்.

“உன் இஷ்டத்துக்கு பேசுவ… அப்புறம் ஒண்ணுமே நடக்காத மாதிரியும் பேசுவ… என்னால அப்படி இருக்க முடியாது…” இறுக்கமாக கூறியவளை புன்னகை மாறாமல் பார்த்தவன்,

“சரி… என்ன சொல்ல வந்த… இப்ப சொல்லு…”

“அதெல்லாம் சொல்ல முடியாது… எனக்கு மூட் இல்ல…” முகத்தை அவள் திருப்பிக் கொள்ள, ‘ஷப்பா… மிடில…’ என்று நினைத்துக் கொண்டவன்,

“சரி… உன் முன்னால நான் சிகரெட் பிடிக்கறதை குறைச்சுக்கறேன்… போதுமா?” என்று வழிக்கு வந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள். “இப்ப சொல்லு…” என்று கேட்டவனை மலர்ந்த சிறு புன்னகையோடு பார்த்தவள், உண்மையிலேயே வியப்பாகத் தானிருந்தது.

“என்னை எதுக்காக கஸ்டடி எடுத்த ஷ்யாம்?” அவனது கண்களை நேராக பார்த்து கேட்க, அந்த இரவு நேரத்தில் அவளது கண்களை நேர்கொண்டு பார்ப்பது பெரும்பாடாக இருந்தது அவனுக்கு! ஏனென்று புரியவில்லை!

ஆனாலும் நேராகவே பார்த்தான்!

“ம்ம்ம்… சொல்றேன்… ஆனா ஒரு கண்டிஷன்…” என்று நிறுத்தியவனை கேள்வியாக பார்த்தாள்.

“இந்த கண்டிஷன் போடறதை விட மாட்டியா?”

“ஏன் விடனும்?”

“உன் கல்யாணத்துக்கும் மணல் கயிறு கிட்டுமணி மாதிரி கண்டிஷன் போடாம இருந்தா சரி…” என்று அவள் புன்னகைக்க, அதை கேட்டவன் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ‘இது அவ்வளவு பெரிய ஜோக் இல்லையே’ என்று யோசித்தவள் அதையே சொல்ல,

“மேரேஜே ஒரு ஜோக்… ப்ராக்டிகல் ஜோக்… இன்னும் சொல்ல போனா நம்மை நாமே ஏமாத்திக்கற ஒரு பிரான்க்…” சிரிப்பை அடக்கிக்கொண்டு வெகு இயல்பாக இவன் சொல்லியதை கேட்டவளுக்கு ஐயோவென்றிருந்தது.

“ஏன் ஷ்யாம்? உனக்கு ஏதாவது லவ் ஃபெய்லியரா?” சற்று ஆதரவாக இவள் கேட்க,

“லவ்வா? ஓ மை காட்…” என்று இன்னும் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தான்.

“ஏன்டா லூசு இப்படி சிரிச்சு தொலைக்கற? இந்த இடத்துக்கும் அதுவுமா ரொம்ப பயமா இருக்கு…” கண்களில் பயத்தோடு அவள் கூறியதை கேட்டவனுக்கு இன்னமுமே சிரிப்பு வந்தாலும், அடக்கிக் கொண்டான்.

“ஓகே… ஓகே…” என்று சிரிப்பை கட்டுப்படுத்தியவன், “நான் ஓபனா சொல்லிடுவேன் மிர்ச்சி… ஆனா நீ பொண்ணா போய்ட்ட…” என்று நிறுத்த,

“சொல்லித் தொலை… எத்தனையோ கேட்டாச்சு… இதை கேட்க மாட்டேனா?” என்று கூறியவளின் முகத்தில் மெல்லிய எரிச்சல்.

“ஒரு கப் காபிக்காக ஒரு மாட்டையே வாங்கி கட்ற அளவு நான் முட்டாளில்லை…” என்றவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு முகம் கசப்பாக கசங்கியது.

“இது ரொம்ப தப்பு… மேரேஜ்ங்கற இன்ஸ்டிஷனையும் நீ மதிக்கல… அதோட பொண்ணுங்களையும் நீ மதிக்கலை… உனக்கு எல்லாம் ஈசியா கிடைச்சுட்டதால இப்படி இருக்க ஷ்யாம்…” அவளது கசப்பு மாறவில்லை.

“எஸ்… பொண்ணுங்க மேல பெருசா ஒன்னும் மதிப்பெல்லாம் கிடையாது… ஜஸ்ட் ஒரு ஸ்பீசிஸ்… அவ்வளவுதான்… எனக்கு யூஸ் ஆகும் போது யூஸ் பண்ணிக்கறேன்… அதுல என்ன தப்பு?” என்று அவனது மனதை மறைக்காமல் அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கூறுவாள்? உள்ளுக்குள் நடுக்கம் பரவியதை போல உணர்ந்தாள்.

“ரொம்ப பேட் தாட் ப்ராசஸ் ஷ்யாம்…” அதே கசப்போடு அவள் கூற,

“எஸ்… அப்கோர்ஸ்… ஐ நோ… பட் திஸ் இஸ் ஷ்யாம்…” என்று நிறுத்தியவன், “மேரேஜ்னா ஒரே பொண்ணு கூட இருக்கணும் மிர்ச்சி… அது எனக்கு ஒத்து வராது…” என்று முடித்தவனுக்கு என்ன பதில் கூறுவாள்? இது போன்ற கருத்துரையாடல்கள் எல்லாம் அவளுக்கு புதிது.

மெளனமாக நிலத்தை பார்த்தாள்.

“என்னை நீ கேசனோவான்னு கூட நினைக்கலாம்… எனக்கு தெரியல… எப்படி டிஃபைன் பண்றதுன்னு… எந்த விஷயமா இருந்தாலும் ஒரு தடவை பார்த்துட்டா எனக்கு இன்ட்ரெஸ்ட் போய்டுது… எந்த அட்வென்ச்சரா இருந்தாலுமே எனக்கு அப்படித்தான்… ஸ்கை டைவிங் துபாய்ல ஒரு தடவை போனேன்… இவ்வளவுதானா இதுன்னு ஆகிடுச்சு… இன்ட்ரெஸ்ட் போய்டுச்சு… அப்படித்தான் கேர்ல்சும்… யூஸ் ஒன்ஸ் ரகம் தான்… இப்படி இருக்கப்ப மேரேஜ்னா…” என்று சிரித்தவன், “சாத்தியமே இல்ல…” என்று முடித்தவனை வெறித்துப் பார்த்தாள்.

இவ்வளவு வெளிப்படைத்தன்மை சாத்தியமா? இவன் எப்போதுமே இப்படித்தானா? இல்லையென்றால் இப்போதுதான் இப்படியா?

“மோர் ஓவர் மேரேஜ் அண்ட் லவ்ங்கற கான்செப்ட்டே ஓவர்லி ஹைப்ட்… அதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை… ஏதோ ஒரு தேவை… அதை எப்படி வேண்ணா தீர்த்துக்கலாம்ங்கற போது, அந்த கான்செப்ட்க்கே அர்த்தம் இல்ல…”

“அப்படீன்னா குடும்பம், பாசம், தியாகம் இதுக்கெல்லாமும் அர்த்தம் இல்லையா?” இறுக்கமாகவே கேட்டாள்.

“வி ஹியுமன்ஸ் ஆர் சோஷியல் அனிமல்ஸ்… ஜஸ்ட் சோஷியல் அனிமல்ஸ்… அதாவது பதப்படுத்தப்பட்ட, ஒரு விஷயத்துக்கு பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினம்… அதை புரிஞ்சுகிட்டா இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லைன்னு நீயே சொல்லிடுவ…”

“நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன்… எனக்கு என்னோட குடும்பம் வேணும்… பியுச்சர்ல அமைதியான நிம்மதியான குடும்ப வாழ்க்கை வேணும்… ரொம்ப சிம்பிளா என்னை மட்டும் லவ் பண்ற ஹஸ்பன்ட், அழகான குழந்தைங்க… தேவைக்கு ஒரு வேலை… அம்மா அப்பாவோட அன்பு… அண்ணாவோட செல்லம்… பாட்டியோட தொல்லையில்லாம என்னால என்னோட லைப்பை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல…” சற்று உணர்ச்சிவசப்பட்டுத்தான் கூறினாள்.

அதை கேட்டவனுக்கு தான் சிரிப்பு பொங்கியது.

“இதுதான் நார்மல் பொண்ணுங்களோட எதிர்பார்ப்பு மஹா… தப்பில்ல… கோ அஹெட்… உனக்கு ஒரு ஏமாளி கிடைக்காமலா போய்டுவான்?!” என்றவனை உக்கிரமாக முறைத்தாள்.

“நீயொண்ணும் எனக்கு சொல்ல தேவையில்லை… உன் வேலைய பாரு…” என்று கடுப்படித்தவளை பார்க்கையில் இன்னுமே சிரிப்பு பொங்கியது.

“உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கு, ‘நீ ரொம்ப அழகா இருக்க’ன்னு தினம் பத்து தடவை சொல்ற பொய் சொல்ற ஹாஃப் பேக்ட் பாய் ஃப்ரென்ட் இல்லைன்னா ஹஸ்பன்ட் வேணும்… லவ்ங்கற பேர்ல கண்டதையும் உளறிட்டு பப்ளிக்ல பாதியும் ப்ரைவேட்ல மீதியும் முடிக்கற சின்சியர் சில்லி ஃபெல்லோஸ் வேணும்… கேட்டா இதுதான் கல்ச்சர், கலாசாரம்ங்க வேண்டியது… அவனோட இருந்து, பிடிக்குதோ பிடிக்கலையோ குழந்தைங்களை பெத்து, அதுங்களையும் உங்களை மாதிரியே ஒரு கல்ச்சர கட்டி காப்பாத்தற மெஷினரியா பழக்கப்படுத்தனும்… ரைட்?” என்றவன், “சென்டிமென்டல் ஃபூல்ஸ்…” என முடிக்க,

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,

“எஸ் ரைட்… யு வார் சென்ட் பர்சன்ட் ரைட்… சோ வாட்? அதனால உனக்கென்ன கஷ்டம் வந்தது… நாங்க அப்படி இருக்க மெஷினரி தான்… சென்டிமென்டல் ஃபூல்ஸ் தான்…” என்று கோபமாக ஆரம்பித்தவள், “ரொம்ப கஷ்டம் ஷ்யாம்… ரொம்பவே தப்பும் கூட…” கசப்பாக முடித்தாள்.

அவளது வார்த்தைகளில் கசப்பை தாண்டி ஏதோ இருந்தது. இவ்வளவு வெளிப்படையாக கூறுபவனை அவளால் வெறுக்க முடியவில்லை. ஆனால் அவன் கூறுவதையெல்லாம் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.

“எஸ்… தப்புதான்… ஆனா நான் பண்ற ஒவ்வொரு தப்போட பின்விளைவும் எனக்கு நல்லாவே தெரியும்… உன்னை கஸ்டடி எடுத்ததும் கூட அப்படித்தான்…” என்று கூறியவன், “ஆனா அதுக்கான காரணம்…” என்று நிறுத்தியவன், அவளது முகத்தை பார்க்க, அவள் அதற்கான பதிலை கேட்க விசாரமாக காத்திருந்தாள். எதுவும் எக்குதப்பாக இவன் கூறிவிட கூடாதே என்ற வேண்டுதலோடு!

“சொல்றேன்…” என்றான் புன்னகையோடு! “ஆனா ஒரு பாட்டு பாடு… நான் சொல்றேன்…” என்று முடிக்க, அவளுக்கு சப்பென்றானது.

“லூசா நீ?” வெளிப்படையாக தனது எரிச்சலை காட்டினாள்.

“அட நிஜமாவே தான் மிர்ச்சி… ஒரே ஒரு பாட்டு பாடு… கண்டிப்பா சொல்வேன்…”

“நீ நினைச்சப்ப எல்லாம் என்னால பாட முடியாது ஷ்யாம்…” நிர்தாட்சண்யமாக இவள் மறுக்க,

“ஏன் பாட முடியாது… எவ்வளவு அமைதியான சிச்சுவேஷன்… கவிதையா இருக்கு… இங்க பாட வராதா உனக்கு?”

“வராது… அதுவும் உன் முன்னாடி வராது…”

“அதான் ஏன்னு கேக்கறேன்?”

“கை காலை கட்டி போட்டுட்டு ஆடுன்னு சொன்னா ஆட முடியுமா? அதுக்கெல்லாம் ஃபீல் வேணும்… எனக்கா தோணனும்… நீ பாடுன்னு சொன்னவுடனே பாட நான் ஒன்னும் ரோபோ கிடையாது… ரத்தமும் சதையுமா இருக்க மனுஷி… இன் ஷார்ட், ஐ ஆம் எ சென்டிமென்டல் ஃபூல்…”

ஷ்யாம் எதுவும் பேசாமல் எதிரே கனன்று கொண்டிருந்த நெருப்பு கங்குகளை பார்த்துக் கொண்டிருந்தான். மௌனத் திரை கனமாக இருந்தது.

பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்க, நேரம் தேய்ந்து கொண்டிருக்க, அந்த நிலவை ரசிக்கத்தான் இருவருக்குமே மனம் இல்லை.

மெல்ல தன் நிலைக்கு வந்தாள் மஹா.

மௌனத்தை கட்டுடைக்காமல் அவனது முகத்தை ஏறிட்டாள். அவளால் எந்த உணர்வையும் பிரித்தறிய முடியவில்லை. இவன் என்ன நினைக்கிறான் என்பதையும், ஏன் செய்கிறான் என்பதையும் கணித்து விட்டால் அவன் தான் கடவுள் போல என்று நினைத்துக் கொண்டாள்.

தன்னை சுற்றி பார்த்தாள். எரிந்து கொண்டிருந்த பெருநெருப்பு இப்பொது வெறும் கங்குகளாக இருக்க, நெருப்பு அணைந்ததால் நெடி வீசியது.

காற்று சற்று பலமாக வீச, குளிரில் அவளுக்கு வெடவெடத்தது. அவனோ எந்தவிதமான உணர்வும் இல்லாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தான்.

கொஞ்சம் அதிகமாகத்தான் விவாதம் போய்விட்டது போல என்பதுதான் இருவரது மனதிலும்!

“எனக்கு தூக்கம் வருது ஷ்யாம்…” என்று அவள் எழுந்து கொள்ள பார்க்க, அவன் அவளது கையை பிடித்து எழாமல் அமர வைத்தான். ஆனால் அவளது முகத்தை பார்க்கவில்லை.

எரிந்து முடிந்த கங்குகளை பார்த்தபடி, “யுவர் வாய்ஸ் ஹான்டட் மீ… இட் மெஸ்மெரைஸ்ட் மீ…”

அவள் எதுவும் புரியாமல் அவனை குழப்பமாக பார்த்தாள்.

கருத்துக்களை தெரிவிக்க 

error: Content is protected !!