VNE23

VNE23

அத்தியாயம் 23

“ஷ்யாம்…” அவனது அணைப்பில் மெளனமாக நின்றிருந்தவள், முதுகை தட்டிக் கொடுத்தபடி அழைத்தாள். இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வான் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவனது கண்ணில் தெரிந்த கண்ணீரின் பளபளப்பு அவளை ஏதோ செய்தது.

வெகுவாக குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவன் மறுமொழி பேசவே இல்லை. பேச முடியவில்லை. உடைந்த குரலில் பேசவும் விருப்பமில்லை. அவனது ஈகோ அவனை விட்டுவிடவில்லை.

கலங்கியிருந்த முகத்தை அவளிடம் காட்ட விருப்பமில்லாமல் தான் அணைத்துக் கொண்டான். இது ஒரு வகையான எஸ்கேபிசம். உடைந்த முகத்தை காட்ட பிரியப்படாதவர்களின் ஒரு வகையான உத்தி. அணைப்பென்பது காதலாகவோ, அன்பாகவோ, பாசமாகவோ அல்லது வியாபாரமாகவோ கூட இருக்க வேண்டுமென்பது இல்லை, முகம் காட்ட விரும்பா உத்தியாக கூட இருக்கலாம். அவன் நார்மலாகும் வரை அவளை விடும் எண்ணமே இல்லாமலிருந்தவனை,

“ஹேய் என்ன இது? ஜஸ்ட் ஒரு விளையாட்டு… இதை போய் சீரியஸா எடுத்துக்குவியா?” முதுகை தட்டிக் கொடுத்தபடி மஹா கேட்க,

ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டு, தன்னை தொகுத்துக் கொண்டவன், அவளை விடுவித்தான்.

“லூசு இன்னொரு தடவை இப்படியெல்லாம் கேனத்தனமா எதாச்சும் பண்ணி வை, அப்புறம் இருக்கு உனக்கு…” அவளது மண்டையில் நறுக்கென்று கொட்டியவனை கேலியாக பார்த்தாள் மஹா.

“ஷ்யாம் தி கிரேட்… ஏன் இவ்வளவு இமோஷனாகறார்? வாட் இஸ் தி ரீசன் பாபோய்…” கிண்டலாக கண்ணடித்தவள், கேட்டு விட்டு சற்று தள்ளி நின்று கொள்ள, எப்போதும் அவளது கிண்டல் கேலிகளுக்கு பதிலடி கொடுப்பவன், இப்போது வெகுவான யோசனையான முகத்தோடு நின்று கொண்டிருந்தான்.

அவனது மனம் குறித்து அவனுக்கே தெளிவில்லை.

அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டு, சற்று முன்  தான் பட்டபாட்டை நினைத்துப் பார்த்தான். அவள் தன் பொறுப்பில் இருக்கிறாள், அவளது சகோதரன் பணத்தை திருப்பும் பட்சத்தில் அவளை பத்திரமாக வீடு சேர்க்க வேண்டும் என்ற கடமைக்காக மட்டுமா தான் துடித்தது என்ற கேள்வி அவனுக்குள்!

இந்தளவு இந்த பெண்ணை மனம் முக்கியமாக நினைக்கிறதா என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான். இது தோழமை என்ற கட்டத்தை தாண்டிவிட்டதோ என்ற சந்தேகம் அவனுக்கு! தோழமையை தாண்டி ஒரு உறவை வளர்த்துக் கொள்ள அவனுக்கு விருப்பமில்லை.

ஆனால் தன்னுடைய விருப்பங்களுக்கு எல்லாம் வளைந்து கொடுப்பதல்ல விதி என்பதை அவன் மறந்து விட்டான்.

அவனை பொறுத்தமட்டில் எந்த பெண்ணையும் இந்தளவு தீவிரமாக நினைத்ததில்லை. பெண்கள் என்பவர்கள் தன் தேவைக்கு மட்டுமே என்று இருந்தவன்.

அதற்கு மேல் எந்த ஒட்டுதலையும் வளர்த்து கொள்ள மாட்டான். அவையெல்லாம் தேவையற்ற தளை என்பதுதான் அவனது எண்ணம்.

ஆனால் மஹாவை அப்படி நினைக்க முடியவில்லை. அவள் மிகவும் வித்தியாசமாக இருந்தாள். எண்ணமும் செயலும் நேர்மையாக இருந்தது. தான் இப்படித்தான் என்பதில் எவ்வளவு தெளிவாக இவன் இருக்கிறானோ, அதை காட்டிலும் அவள் தெளிவாக இருந்தாள், தான் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று!

அனாவசிய அலட்டலில்லை. தேவையற்ற போலித்தனமுமில்லை. இது சரி, இது தவறு என்று அவனிடம் சுட்டிக்காட்டும் அசாத்திய தைரியமிருந்தது. தன்னுடைய வார்த்தைகளில் தவறிருக்கும் பட்சத்தில் சட்டென்று மன்னிப்பு கேட்டுவிடும் துணிச்சலிருந்தது. எந்த சூழ்நிலையாக இருந்தாலும், எவ்வளவு சங்கடங்கள் நேர்ந்தாலும் அதை கடந்து தன் கடமையை செய்ய வேண்டும் என்ற மனமார்ந்த கடமையுணர்வு இருந்தது.

சூழ்நிலைகளை பொறுத்துக் கொண்டு போராடும் செயல் திறன் இருந்தது. பொய்மையையும் கபடத்தையும் எதிர்த்து வெளிப்படையாக்கும் கரவில்லாத தன்மையிருந்தது. ஒப்புக்கொண்டதை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றும் உறுதியிருந்தது.

இவை அனைத்தையும் விட அவளது குரல் அவனது மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது. அவளை சிறையெடுக்க காரணமாக இருந்தது! அவளிடம் வேறென்ன காரணம் சொல்லி ஏமாற்றினாலும், உண்மையில் அவளது குரலில் மயங்கி, அந்த குரலை கேட்டுக் கொண்டிருக்கும் ஆசையில் தான் அவளை கவர்ந்திருந்தான் அந்த கள்வன்.

கூடவே நொண்டி காரணங்கள்!

அவை நொண்டியடிக்கும் என்பதையும் அறியாதவனல்ல!

முதல் சந்திப்பில் பூக்களெல்லாம் பூக்கவில்லை. அவள் தைத்த முள் மட்டுமே வலியை கொடுத்திருந்தது. இரண்டாவது சந்திப்பில் அந்த வலியை அதிகமாக்கினாள் அவள். ஆனால் மூன்றாவது பார்வையில் அவனது அத்தனை வலிக்கும் அவளது தேமதுர குரலால் மயிலிறகு கொண்டு மருந்திட்டிருந்தாள்.

அவனது உறக்கம் துறந்த இரவுகளில் தாலாட்டாக மாறி அவனை உறங்க வைத்தாள். பிரச்சனைகள் சூழ்ந்து மனம் தவிக்கும் போதெல்லாம் அவன் அதை வெளிக்காட்டி பழக்கமில்லை. அந்த நேரங்களில் அவனை சமாதானப்படுத்தியது அவளது குரல்!

ஆனால் அவளது பின்னணியும், கார்த்திக்கின் பிரச்சனையும் அவனது கவனத்துக்கு வந்தபோது தான் அவனுக்குள் இந்த விபரீதமான திட்டம் உருவாகியது.

அதுவரை கஸ்டடி என்ற விஷயத்தில் தலையிடாதவன், மஹா விஷயத்தில் தலையிட்டான். அவள் மேல் விஜய் காதல் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தும், அவளை கஸ்டடி எடுப்பதில் உறுதியாக இருந்தான். அதிலும் அவர்கள் பெண்களை கஸ்டடி எடுத்ததே இல்லையென்ற நிலையில் மஹாவை தூக்கி விஜிக்கே அதிர்ச்சி கொடுத்தான்.

அவன் எவ்வளவு போராடினாலும், அவளை அவனிடம் கொடுப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல், தானே இறங்கினான்.

ஷ்யாம், விஜய் என்ற இருவரின் வரலாற்றில் இது போன்ற விதிமீறல்கள் எல்லாம் அதுவே முதல் முறை. திட்டம் போடும் போது கூட இந்தளவு வெறியோடு இறங்குவான் என்பதை அவனே எதிர்பார்க்கவில்லை. விஜய் மஹா மேல் கொண்ட காதல் அவனை வெறியேற்றியது.

அப்போது ஷ்யாமை பொறுத்தவரை மஹா ஒரு விளையாட்டுப் பொருள். தன்னை தாண்டி விஜய்யை யோசிக்க வைத்த ஒரு பொருளை, அவனிடமிருந்து தட்டிப் பறிக்கும் ஆத்திரத்தோடு பறித்த ஒரு பொருள்.

அந்த ஆத்திரத்தோடு தான் முதலில் அவளையும் அணுகினான் ஷ்யாம்.

விஜய் அவளுக்காக வாதிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவனது கோபம் எல்லையை கடந்தது. இவன் யார் இவளுக்காக பேசுவது என்ற எரிச்சலும் இவளுக்காக இவன் தன்னை எதிர்க்கிறானே ஆத்திரமும் அவள் மேல் பாய்ந்தது.

விஜய்யின் பார்வை அவள் மேல் காதலாக விழுந்த சந்தர்ப்பங்களிலெல்லாம், விஜய் அவளுக்காக அவனை எதிர்க்க நினைத்த போதெல்லாம் ஷ்யாம் மகாவிடம் சீறினான்.

ஷ்யாமுக்கும் புரிந்திருந்தது. விஜய்யின் காதல் உண்மையானது என்பது இவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. தான் தள்ளி நின்றிருந்தால் அவன் மகாவிடம் காதலையுரைத்து கண்டிப்பாக மணம் செய்து கொள்வான் என்பது திண்ணம்.

ஆனால் அதை செய்ய விடக் கூடாது என்ற அளவு விஜய் மேல் ஆத்திரம் கொள்ள வைத்தது எது?

மஹாவின் குரலா?

ஒரு குரலால் இந்தளவு தன்னை வசியப்படுத்த முடியுமா என்றெல்லாம் அப்போது அவன் யோசிக்கவில்லை. மஹா விஜய்க்கு கிடையாது என்பதை மட்டும் தான் அப்போது நினைத்தானே தவிர, மஹாவின் வாழ்க்கையில் வேறு ஆண்களே இருக்கக் கூடாது என்று நினைத்தானா என்ன?

அது இயல்பில் நடக்கக் கூடியதா என்ன?

அவள் வாழ்க்கையில் வருபவர்களையெல்லாம் விலக்கி விட முடியுமா? ஏன் அதை செய்ய நினைக்க வேண்டும் என்று இப்போது யோசித்தான்.

அப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன? அது தன்னால் முடியுமா?

ஆனால் தான் மாற ஆரம்பித்தது எப்போது என்பது அவனுக்கே புரியவில்லை.

இந்த நான்கு நாட்களில், மஹா, அவளது உண்மையால், நேர்மையால், தோழமையால், ஒரு முழுமையான பெண்ணாக அவனை வசீகரித்தாள். அவனால் மறுக்க முடியாதளவு உள்ளுக்குள் நுழைந்திருந்தாள்.

ஆரம்பத்தில் அவனுக்கிருந்த எரிச்சலும் அவள் மேல் கொண்ட கோபமும் எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை.

தன்னுடைய ஒவ்வொரு செயலாலும், வார்த்தையாலும் அவனது மனதில் நங்கூரம் பாய்ச்சி அமர துவங்கியிருந்தாள்.

இதை தேவையற்ற தளை என்று ஒதுக்கவும் பிடிக்கவில்லை.

ஆனால் அவளது எதிர்பார்ப்பை அவன் அறிவான். அவளை மட்டும் காதலிக்கும் ஒருவனை மட்டுமே அவளால் ஏற்க முடியும் என்பதும் அவனுக்கு தெரியும்.

முதலில் விஜய் அவளுக்கு பொருத்தமானவனா?

ஆனால் கடந்த காலத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் மஹாவுக்கு விஜய்யை தவிர வேறு யாரும் பொருத்தமில்லை என்பதை அவனது மனம் வலிக்க உணர்த்தியது.

அவனோடு வாழ்ந்தால் இவள் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கக் கூடும். விஜய் மஹாவுக்காக மட்டுமே வாழக் கூடும், கண்டிப்பாக அது நடக்கும்.

ஆனால் ஏன் அவனது காதல் தன்னை இந்தளவு வெறியேற்ற வேண்டும்? மகாவுக்கு அவன் தான் சரியானவன் என்பதை அறிந்தும் ஏன் அவனிடம் அவளைக் கொடுக்கவே கூடாது என்ற கோபம் வர வேண்டும்?

மஹா மேல் தான் காதல் கொண்டிருக்க கூடுமா?

கண்டிப்பாக தன்னால் அது முடியாது.

தன்னால் முதலில் ஒருத்தியிடம் மட்டுமே நிற்க முடியுமா என்பதே அவனுக்கு சந்தேகமாக இருந்தது. ஒருத்தியுடன் மட்டுமே வாழ்நாளை கழிக்க முடியுமா? அதிலும் திருமணமென்னும் உறவில்லாமல் மஹாவை நினைத்தும் பார்ப்பது முடியாத ஒன்று. ஆனால் திருமணமென்னும் விஷயம் அதில் சற்றும் நம்பிக்கையில்லாத தன்னை எவ்வளவு நாள் பிடித்து வைக்க முடியும்?

ஒருத்தியுடன் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள்வது எந்தளவு தன்னால் சாத்தியமாக கூடிய ஒன்று? அவனுக்கே அவனுடைய எதிர்கால உறவுகளில் நிச்சயமில்லாத போது மஹாவின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது எந்த வகையில் நியாயம்?

ஒரு முறை பார்த்துவிட்டால் மஹாவுடனான வாழ்க்கை கூட தனக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடுமே!

இன்று அவள் மேல் கொண்ட ஈர்ப்பில் ஏதேதோ தோன்றலாம். ஆனால் நாளையே வேறு அழகான பெண்ணை பார்த்து, அவள் தனக்கு வேண்டும் என்று தோன்றிவிட்டால், அது மஹாவுக்கு செய்யும் துரோகமாகி விடாதா?

ஒரு உறவுக்கு ஒப்புக்கொடுப்பது என்பது மிகக் கடினமான வேலை. முழு மனதோடு செய்ய வேண்டிய ஒன்று. ஒப்புவித்தப்பின் பின்வாங்க முடியாத ஒரு உறவுக்குள் செல்லும் முன், அந்த உறவுக்கு தன்னால் நேர்மையாக இருக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல், அந்த நேரத்தின் தேவைக்காக மட்டும் உபயோகிப்பதே சரியில்லாத ஒன்று.

குறை பிரசவம். வாழ்வே சவம்!

அதிலும் மஹா விளையாட்டு பொருளல்ல என்பது இப்போது புரிந்தது. அவளிடம் விளையாட முடியாது. தன்னை தோழனாக நம்பிக் கொண்டிருப்பவளுக்கு தான் செய்ய நினைக்கும் துரோகம் மிக கொடுமையானது. அது பஞ்ச மகா பாதகம்!

வேண்டாம் என்று முடிவெடுத்தபின் அவனது மனம் தெளிவாகியது.

மஹா அவனது மிக முக்கியமான தோழி!

வேறு யாரையும் விட அவள் அவனுக்கு முக்கியமானவள். இந்த எல்லைக்குள் நிற்பதே தனக்கும் சரி, அவளுக்கும் சரி சரியான ஒன்று!

மனதில் தோன்றிய சஞ்சலங்களையும் ஒருவாறாக ஒதுக்கி வைக்க முடிந்தது. இன்னொரு மிக முக்கியமான முடிவையும் எடுக்க முடிந்தது அவனால்.

அவனது பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு நின்றவளுக்கு அவனது இந்த நீண்ட மௌனம், பல குழப்பங்களை கொடுக்க,

“மச்சி… டைம் ட்ராவல் பண்ண போயிட்டியா?” கேலியாக அவள் கேட்டவுடன் தான் அவனது ஸ்மரணை மீளப் பெற்றது. அவளது அந்த அழைப்பு அவனுக்கு புன்னகையை தோற்றுவிக்க,

“ஆமா மச்சி… வேண்ணா நீயும் வா… போலாம்…” என்றவன், தன்னுடைய பேக்பேக்கை திறந்து செல்பேசியை எடுத்துப் பார்த்தான். அதிர்ஷ்டவசமாக லேசாக டவர் காட்டியது.

கணக்கில்லாத மிஸ்ட் கால்ஸ். மெசேஜஸ்.

மிஸ்ட் கால்ஸ் எல்லாம் முதலிலிருந்தே பார்த்தது தான். கார்த்திக், விஜய், தன்னுடைய தந்தை, தாய், மற்றும் நிறைய தெரியாத எண்கள் வேறு!

தந்தையிடமிருந்து அத்தனை மெசேஜ் வேறு. திறந்து பார்த்தவன் யோசனையாய் புருவத்தை சுருக்கினான். நிச்சயமாக இது பிரச்னையை வேறு மாதிரி கொண்டு போய் விடுமே!

அவசரமாக மெசேஜை டைப் செய்து அனுப்பிவிட்டு நிமிர்ந்தவன், மஹாவை பார்த்து ஜெர்க்கானான். கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி சைட் அடிக்கிறியா?” முன்னம் போல கோக்குமாக்காக கேட்கவும் தான் அவளது முகத்தில் நிம்மதி வந்தது.

“ஷப்பா… இவனுக்கு என்னாச்சு? பேய் பிடிச்ச மாதிரி இருக்கானேன்னு யோசிச்சேன்… இப்ப தான் நீ ஓகே வா இருக்கன்னு தெரிஞ்சுது…” சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற,

“இந்தா வரேன்… உன்னை மறுபடியும் தண்ணில தூக்கிப் போட்டு பேய் ஓட்டுனாத் தான் வழிக்கு வருவ…” என்று எழுந்தவன், அவளை நோக்கி வர,

“டேய் வேணா… விட்டுடு…” ஒற்றை விரலை காட்டியபடி பின்னால் போனவளை, ஒரே எட்டில் எட்டிப் பிடித்து, மீண்டும் அவளது முதுகில் கைவைத்து நீரை நோக்கி தள்ளிக் கொண்டு போக, அவனது வலது கையை தோள் வழியாக தன் கைக்குள் இழுத்துக் கொண்டாள், சிரிப்போடு!

“என்ன டாக்டர், புன்னகை மன்னியா இருக்கீங்க?” என்று கேலி செய்தவனை, திரும்பிப் பார்த்தவள்,

“நத்திங்…” என்று கூற,

“அட சொல்லுங்க டாக்டர்…”

“இல்ல… கொஞ்ச நேரம் முன்னாடி நீ பண்ணதை நினைச்சு பார்த்தேன்… சிரிப்பு வந்துடுச்சு…” உள்ளத்தை மறைக்காமல் சொல்ல, அவளது பின் மண்டையில் மட்டென்று அடித்தவன்,

“என்னை டேமேஜ் பண்றதுலையே குறியா இருங்க டாக்டர்…” என்று சிரிக்க,

“என்ன? என்னை டாக்டர்ன்னு சொல்லி ஓட்டிகிட்டு இருக்க? நான் இன்னும் டாக்டர் ஆகல… டாக்டர் டூ பி…” என்றவளை பார்த்து சிரித்தவன்,

“காலைல நீங்க பார்த்த வேலை ஒன்னே போதும் டாக்டர்… நீங்க தான் இனிமே எனக்கு டாக்டர்…” மீண்டும் சிரித்தவனை யோசனையாக பார்த்தாள்.

இவன் என்னவென புருவத்தை உயர்த்திக் கேட்க,

“என்னமோ உன்கிட்ட மிஸ்ஸாகுது ஷ்யாம்… என்ன? ஏதாவது திருட்டுத்தனம் பண்ணியா?” சட்டென நேரடியாக கேட்டுவிட,

“திருட்டுத்தனமா?” என்று சிரித்தவன், “நான் என்னமோ பண்றேன்… அந்த ஆணி உனக்கு வேணாம்…” என்றவனை முறைத்தவள், ‘வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு’ என்று நினைத்துக் கொண்டு, தோளிலிருந்த அவனது கையை பட்டென எடுத்து விட்டாள்.

“ச்சீ பே…” என்றவள் நீருக்குள் செல்லும் முன்பு, அவன் முன் திரும்பி,

“கார்த்தியோட மிஸ்ட் கால்ஸ் இருந்துது தானே…” என்று கேட்டுவிட்டு, “எனக்கு பேச வேணாம் ஷ்யாம்… அட்லீஸ்ட் அட்டென்ட் பண்ணி ஒரு வார்த்தை பேசிடு… ரொம்ப பயப்படுவாங்க…” என்று கூற, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“கார்த்தியோட மிஸ்ட் கால்ஸ் இருந்துது தான்… ஆனா அப்பாவோடதும் நிறைய இருந்துது… அப்பா இதுவரைக்கும் இந்த மாதிரி செய்தது இல்ல… நான் வீட்ல சொல்லாம எத்தனையோ முறை வெளிய ஸ்டே பண்ணிருக்கேன்… மாசக்கணக்கா போகலைன்னா கூட என்னை கேட்க மாட்டாங்க… கேட்கவும் முடியாது… நானும் சொல்ல மாட்டேன்னு அவங்களுக்கு தெரியும்… ஆனா இப்ப இத்தனை கால்ஸ், மெசேஜஸ்… சம்திங் சவுண்ட்ஸ் ஃபிஷி… உன் அண்ணா அப்பாகிட்ட போயிருப்பானோன்னு தோணுது…”

“வாவ் சூப்பர்… உன்னை எந்த வழில தான் அடக்கறது ஷ்யாம்? பாவம் கார்த்தியும் தான் எவ்வளவு போராடுவான் உன் கூட… உன் பிசினஸ் விஷயம் பேச கூடாதுன்னு சொல்லிட்ட… அதான் நானும் பேசலை… நீ பண்றது உனக்கே சரியா இருக்கான்னு செல்ப் அனலிசிஸ் பண்ணி பாரு…”

“நான் செல்ப் அனலிசிஸ் பண்றது இருக்கட்டும்… இப்ப நீ ஒரே ஒரு வார்த்தை சொல்லு மஹா… மொத்தமா நான் ரைட் ஆஃப் பண்ணிடறேன்…” என்று தீவிரமான குரலில் கூறியவனை யோசனையாக பார்த்தாள்.

ஒரு வார்த்தையா? இவ்வளவு பெரிய வார்த்தையை போகிற போக்கில் சொல்பவன் இவனில்லையே!

“என்ன சொல்றது?”

“எனக்காக கார்த்தியை விட்டுடுன்னு சொல்லு… நான் மொத்தமா அவனை விட்டுடறேன்… மொத்த அமௌன்ட்டையும் ரைட் ஆஃப் பண்ணிடறேன்… மோரோவர் ப்ரொடக்ஷனை அன்டர்டேக் பண்ணிக்கறேன்… கார்த்தி இனிமே என் பொறுப்பு… என்ன சொல்ற?” புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்ட தோரணையில் ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சியை அடைந்தவள், மறு நொடி முகம் கறுத்தாள்.

இவ்வளவு பெரிய விஷயத்தை, ஆஃபரை சும்மா தர இவனொன்றும் சாதாரணமானவன் இல்லையே!

கையை கட்டிக் கொண்டு அவனை நேருக்கு நேராக பார்க்க, அவனும் அவளது கண்களை பார்த்தபடிதான் இருந்தான். அவளது ஒவ்வொரு எதிர்வினையையும், முகத்தில் பிரதிபலித்த உணர்வு குவியல்களையும் பார்த்தபடி, கணக்கெடுத்தபடி, பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் உணர்ந்து கொண்டிருந்தாள்.

சற்று முன் வரை இருந்தவன் இவனில்லை. நொடிக்கு நொடி மாறும், அடுத்த நொடி இவன் என்ன செய்வான் என்ற கணிப்பில் அடங்காத ஷ்யாமை தனக்கு ஏன் பிடித்தது? இவனது தோழமையை, அருகாமையை மிகவும் விரும்ப ஆரம்பித்து விட்டதன் பிரதிபலிப்பை அவனிடம் இப்போது காண முடியவில்லை!

அவனது கண்களுக்குள் தேடித் பார்த்தாள். கிடைக்கவில்லை.

“மொத்தமா அண்ணா எவ்வளவு பணம் தரணும்?”

“ட்வென்டி சி ப்ளஸ் இன்ட்ரெஸ்ட்…”

“எவ்வளவா இருந்தாலும் நீ விட்டா அண்ணா கட்டிடுவாங்க… நீதானே ஷ்யாம் தடுக்கறதே…” அவளது நேரான பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அவன் தந்தது மிகப் பெரிய ஆஃபர். யாருக்கும் அவன் தராத ஒன்று. யாராலும் நினைத்து பார்க்கவும் முடியாத ஒன்று. ஆனால் அவள் உண்மையான நிலையை பேசுகிறாள். அவனிடம் அந்த உதவியை அவள் பெற நினைக்கவில்லை.

“ம்ம்ம்… ஸ்மார்ட்… யூ வார் ரைட்…” நிமிர்ந்து நின்றவன், மெல்லிய புன்னகையோடு கூறினான். முன்னொரு தடவை அவன் கூறிய ‘ஸ்மார்ட்’க்கும் இப்போது இவன் சொல்வதற்கும் தான் எத்தனை வித்தியாசம்.

“இவ்வளவு பெரிய ஆஃபரை சும்மா தர நீ ஒன்னும் ஏமாளி கிடையாது… சுருக்கமா உன்னோட லாங்குவேஜ்ல சொல்றதுன்னா சென்டிமென்டல் ஃபூல் கிடையாது…”

“ம்ம்ம்… ஸ்மார்ட்டர்… யூ வார் அப்சொலியுட்லி ரைட்…” அவனது புன்னகை மேலும் விரிந்தது.

“என்னமோ ப்ளான் வெச்சுருக்க… ஆனா ஒன்னை ஞாபகம் வெச்சுக்க ஷ்யாம்… நீ என்னோட ஃப்ரென்ட்… உன்னோட டிக்னிட்டியையும் நீ விட்டுக் கொடுக்க மாட்ட… என்னோட டிக்னிட்டியையும் நீ விட்டு கொடுக்க மாட்ட… நான் உன்னை ஹண்ட்ரட் பர்சன்ட் நம்பறேன்… இப்ப சொல்லு… என்ன ப்ளான்?” நிச்சயமாக அவன் எதிர்பார்த்தான். அவளது தெளிவையும் முதிர்வையும் கணக்கில் கொண்டு அவளது அடுத்த இலக்கு இப்படியாகத்தான் இருக்குமென்று.

அவளது கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பற்ற வேண்டியது அவனது கடமை என்று அவனுக்கு மறைமுகமாக கொட்டு வைத்தவளை வியந்த பார்வை பார்த்தான்.

“ஸ்மார்ட்டஸ்ட் டார்லிங்… அப்சொலியுட்லி ஸ்மார்ட்டஸ்ட்…” என்றவன், “ஆனா பெரிய ப்ளான் எல்லாம் இல்ல டார்லிங்… ஐ நீட் த வோர்ட்… அவ்வளவுதான்…” என்று அவன் சிரித்தபடி கூற,

“ஷ்யாம்… இதை நான் நம்பனுமா?” என்று சிரித்தவள், “கைகேயிக்கு வரத்தை தந்த தசரதர் பட்ட பாட்டை பாத்தாச்சு… ப்ரேக் த ஐஸ் மேன்…”

“இல்லடா… நீயே சொல்லிட்ட… யூ ஆர் மை ஃப்ரென்ட்… ப்ரென்ட் கிட்ட நான் வேற எதை எதிர்பார்ப்பேன்? நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்… வேற யாராவது நல்ல ஃபிகரா இருந்தா கண்டிப்பா ஓஎன்எஸ் சஜஸ்ட் பண்ணிருப்பேனா இருக்கும்…” என்று கண்ணடிக்க, ஒரு நொடி அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாதவள், அடுத்த நிமிடம் விளங்க, முகமெல்லாம் சிவந்து,

“டேய் எருமை… உன்னை…” என்று அவனை துரத்த, “ஏய் நீதான சொல்லு சொல்லுன்னு சொன்ன…” என்று இவன் கத்த, “உன் மைண்டே ரொம்ப அழுக்கான மைன்ட்… கொஞ்சமாவது நல்ல தாட் இருக்கா? யூ ஸ்டுபிட்…கூஸ்…” என்று அவன் பின்னே இவளோட, அவளை பார்த்தவாறு நின்றான்.

வேகமாக ஓடி வந்தவள், மூச்சிரைக்க, அவனை அடிக்க கையோங்க,

“வெய்ட் பாப்பா வெய்ட்… சொன்னா கோச்சுக்கற… பாம்பே மனிஷாவ பீட் பண்ற மாதிரியே ஓடி வந்தா பிஞ்சு மனசு தாங்க மாட்டேங்குது பாப்பா…” என்று இவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நடிக்க, அவளது முகம் இன்னமும் சிவந்தது.

“ச்சீ டர்ட்டி ராஸ்கல்…” அவனை முறைத்தபடி பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்க முயன்றாலும், மேல் சட்டை அணியாமல் அவளோடு வம்பு வளர்த்துக் கொண்டிருந்த அவனை பார்த்ததில், அவளையும் அறியாமல் முகம் வெட்கத்தில் சிவந்தது.

வெட்கத்தில் சிவந்த அவளது முகத்தை பார்த்தவனுக்கு அதற்கும் மேல் அவனது உணர்வுகளை அவனால் தடுத்தாள முடியவில்லை. அந்த சூழ்நிலையும், நீரில் நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டு அவளுக்கு துரோகம் செய்த அவளது உடைகளும், சிவந்த உதடுகளும், குளிரில் நடுங்கிய ஐஸ்க்ரீம் குரலும், அவளுக்குள் மூழ்க சொன்ன அந்த கண்களும், நனைந்து பாலாக வெளுத்திருந்த தேகமும் அவனை புரட்டிப் போட்டன.

தான் முடிவு செய்து வைத்ததற்கு எதிர்மாறாக செயல்பட துவங்கியிருந்தான்.

வெட்கத்தோடு அடிக்க ஓங்கிய அவளது கைகளை பற்றியவன்,

“ப்ரென்ட் ப்ரென்ட்ன்னு என்னால இன்னமும் போலித்தனமா நடிக்க முடியல. என்னால உன்னை ப்ரெண்டா மட்டும் பார்க்க முடியல… வேற என்னமோ பண்ணுது மஹா…” என்று இடைவெளி விட்டவன், “ஐ வான்ட் டூ கிஸ் யூ டார்லிங்…” அவளது கண்களை பார்த்து கூற,

அவள் அதிர்ச்சியில் பேச முடியாமல் உறைந்தாள்.

அந்த இடைவெளியில் அவளது இடையை தன்னோடு சேர்த்தவன், அவளது இதழ்களை அணைத்திருந்தான்.

அழுத்தமாக… ஆழமாக… வன்மையாக… வன்மையில் மென்மையாக அவளது இதழில் கதை எழுதிக் கொண்டிருந்தான், நிதானமாக!

comments 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!