VNE37(2)

கார்த்திக்கு மனதுக்குள் ஏதேதோ அழுத்தங்கள். ஆனால் எப்படி இருந்தாலும் இவை போன்றவைகளை சமாளிக்கத்தான் வேண்டியிருக்கும். மாப்பிள்ளையாக வேறு யாரை பார்த்தாலும் இது போன்ற சங்கடங்கள் இருக்காது என்பதற்கு கேரண்டி கிடையாதே!

என்ன ஒன்று, ஷ்யாமின் ஆளுமையும் அதிகாரமும் மிக அதிகபட்சமான ஒன்று, அதற்காகவே அவனுக்கு பின் அவனை நோக்கி வீசப்படும்அத்தனை வார்த்தைகளையும் சமாளித்தாக வேண்டிய நிலை.

வேறு யாரிடமோ பேசிக்கொண்டு ஷ்யாம் சற்று தள்ளிப் போக, மகாவை நோக்கி வந்தாள், சௌஜன்யா!

“ஹாய்…” மகாவை நோக்கி விஷமப் புன்னகையை வீசினாள் அவள்!

“ஹாய்…” பதிலாக கூறிய மகாவால் சிரிக்க முடியவில்லை.ஆனாலும் வேறு வழியில்லாமல் சிறு புன்னகையை ஒட்டி வைத்துக் கொண்டாள். ‘சௌஜன்யா’ என்ற பெயர் எரிச்சலை தந்தது. அதோடு, ஷ்யாமை அவள் அணைத்தது, ரகசியமாக மேடையில் பேசியது என அனைத்துமே மகாவை மேலும் எரிச்சல்ப்படுத்திக் கொண்டிருந்தது.

“உங்க பேர்?”

“மகாவேங்கடலக்ஷ்மி… மஹான்னு கூப்பிடுவாங்க…”

“வெரி லக்கி நீங்க…” மீண்டும் புன்னகையோடு அவள் கூற,

“அப்படியா? எதுக்காக?”

“ஷ்யாம் தி கிரேட்…” சிரித்தாள் சௌஜன்யா.

“ம்ம்ம்ஹூம்ம்ம்…” என்றவள், அதற்கும் மேல் பதில் கொடுக்காமல் சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தாள்.

“ஆனா அவரால ஒரு இடத்துல நிரந்தரமா நிற்க முடியாது… ஹீ இஸ் ஜஸ்ட் எ காசனோவா…” அக்கறையாக சொல்வது போல அவள் கூற,

“அது என்னோட கவலை… உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்…”  வெட்டிவிட முயன்றாள் மஹா.

“ஒரு குட்வில்ல தான் சொல்றேன்…”

“நோ தேங்க்ஸ் சௌஜன்யா…”

“மஹா… ஒரு பெட் வெச்சுக்கலாமா?” புன்னகையோடு சௌஜன்யா கேட்க, அவளை என்னவென்ற பார்வையோடு ஏறிட்டு பார்த்தவள்,

“என்னன்னு சொல்லுங்க…” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டாள் மஹா.

“என்னோட மறுபடியும் அவரை இருக்க வெச்சு காட்றேன்… என்ன ஓகே வா?” என்று கண்ணடித்தாள் சௌஜன்யா.

திக்கென்றது… உடல் தீப் பிடித்ததை போல எரிந்தது… என்ன தைரியம் இருக்க வேண்டும் இவளுக்கு… எதுவும் பேசாமல் அவளை மெளனமாக பார்த்தாள்.

“முன்னாடியே பழகினவர் தானே? அவருக்கு என்ன தேவைப்படும்ன்னு எனக்கு நல்லா தெரியும் மகாவேங்கடலக்ஷ்மி… என்ன பெட் க்கு ஓகே வா?” வெகு இயல்பாக கேட்க,

“முடிஞ்சா அவன் பக்கத்துல போய் பாருங்க சௌஜன்யா… உங்களால அவனோட நிழலை கூட டச் பண்ண முடியாது… இட் இஸ் எ சேலஞ்ச்…” பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள் மஹா. இவளிடமெல்லாம் தான் இந்தளவு இறங்கி வர வேண்டுமா? தன்னுடைய இயல்பை தொலைக்க வேண்டுமா என்ற எரிச்சல் மனதை கவ்வியது. ஆனாலும் ஷ்யாமை இவள் எப்படி சொந்தம் கொண்டாடலாம் என்ற கோபம், கண்ணை மறைத்தது.

“அப்படீங்கறீங்க?” என்று சிரித்தவளின் பார்வை வெகு கொடூரமாக இருந்தது. இரையை தவறவிட்ட புலியின் கொடூரப் பார்வை அது!

தன்னைத் தானே மீட்டுக் கொண்ட மஹா,

“எஸ்…” என்று புன்னகைக்க, ஷ்யாம் அவளருகில் வந்தான்.

“கிளம்பலாமா மஹா… இட்ஸ் கெட்டிங் லேட்…” என்று அழைத்தவனின் பார்வை கூட சௌஜன்யாவை தீண்டவில்லை. ஆனால் அவன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே கண்டுவிட்டான். சௌஜன்யாவின் மேல் அவனுக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. அவளாக மகாவிடம் பேசுவதென்றால் எதோ வம்பு தான் என்று யோசித்தவன், அவசரமாக தான் பேசிக் கொண்டிருந்தவரிடம் கூறிவிட்டு, காதலியை நோக்கி வந்தான்.

“ம்ம்ம்…” என்றவள், “அண்ணா எங்க?” என்று கேட்க,

“மச்சான் தனியா வந்துடறேன்னு சொல்லிட்டான்… நான் உன்னை வீட்ல விட்டுடறேன்…” எனவும், சம்மதமாக தலையாட்டியவள், சௌஜன்யாவின் புறம் திரும்பி,

“பை சௌஜன்யா… ஆல் தி பெஸ்ட்…” என்று கூற, அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.

அவளை கண்டுக்கொள்ளாமல் அவனோடு சென்றவளை தோளோடு அணைத்துக் கொண்டான், அவளவன்!

எதுவும் பேசாமல் காரை டிரைவ் செய்தவன், நிறுத்திய இடம் உத்தண்டி வீடு.

குழப்பத்தில் போகும் வழியை கூட கவனிக்காமல் இருந்திருந்தாள் மஹா.

“என்ன… உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க?”

“கொஞ்சம் பேசணும் வா மகா…” என்றவன், வீட்டுக்குள் அழைத்துப் போகாமல், வீட்டின் பின்னாலிருந்த கடற்கரைக்கு அழைத்துப் போனான்.

சில விஷயங்களை அவனுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்… சிலவற்றை அவளிடம் ஒப்புவிக்க வேண்டும்… அன்றைய தினத்தின் டென்ஷன்களை அவளிடம் கொட்ட வேண்டும் என்று தான் அழைத்து வந்தான்.

அதோடு, விழாவில் மறைமுகமாக மஹாவை பற்றி அறிவித்து விட்ட சந்தோஷம் வேறு…

அனைத்தையும் அவளிடம் அவனுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்…

பேசாமல் அவனோடு நடந்தவளின் மௌனம் அவனை யோசிக்க வைத்தது.

என்ன காரணம் என்று புரியவில்லை… அவள் காதலுக்கு ஒப்புதல் கூறாமலே திடீரென பரிமாறிக்கொண்ட முத்தமா? விழாவில் அவளைக் கேட்காமல் தான் அறிவித்ததா?

மஹா சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் தான் சற்று அதிகப்படியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்று புரிந்தது. ஆனாலும் அவனையும் அறியாமல் செய்து விடுகிறானே! ஏதோ ஒரு பதட்டத்தில், அவளை தவற விட்டுவிட கூடாது என்று மட்டும் மனம் துடிக்கிறது என்று உணர்ந்தான்.

இவள் படித்து முடிக்கும் வரை தன்னால் காத்திருக்க முடியுமா? இப்போதே அவள் வேண்டும் என்று தவிக்கும் மனதை எங்கனம் கட்டுப்படுத்துவது என்று புரியவில்லை. அதிலும் இவை போன்ற சந்தர்ப்பங்கள் பெரும் சவால்கள்!

கடற்கரை மணலில் கால் புதைய நடந்தவளை, தோளைத் தொட்டுத் திருப்பினான்.

“என்ன மகா? வாட் ஈஸ் ஈட்டிங் யூ? ஸ்பீக் அவுட் டார்லிங்…” என்று கூற, அவனை மெளனமாக பார்த்தாள். எதுவும் பேசவில்லை.

கடல் ஆக்ரோஷமாக பொங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் மெல்லிய வெளிச்சம். அது மிகவும் தனிமையான இடம். பெரும்பாலும் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும் என்பது போன்றதான இடம். நல்ல ரசனை என்று எண்ணிக் கொண்டாள். காற்றும் வேகமாக வீச, சேலையை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

“உன்னை பற்றி ஸ்டேஜ்ல பேசினது உனக்கு பிடிக்கலையா?” என்ன காரணம் என்று தெரிந்து கொண்டாக வேண்டும் அவனுக்கு.

அவள் மெல்ல இடம் வலமாக தலையசைத்தாள்.

“தென்? என்ன ரீசன்?” என்றவன், அவளுக்கு மிகவும் அருகில் வந்து,

“அவ்வளவு பேசுவ? வாய் ஓயாம? என்னடி இப்படி திடீர்ன்னு இவ்வளவு சைலண்ட்டா ஆகிட்ட?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்டாள் மஹா.

அவளால் ஷ்யாமை இரண்டு நிமிடங்கள் சேர்த்து வைத்து பார்க்க முடியவில்லை.

“அப்படீன்னா…” என்று இடைவெளி விட்டவன், இறங்கிய குரலில் “கிஸ் பண்ணது பிடிக்கலையா?” என்று கேட்டான். உள்ளுக்குள் கொஞ்சமாக தயக்கம் இருந்தது. அவளது கண்களில் வழிந்த காதலை கண்டு தான் அவன் தன்னிலை மறந்திருந்தான். அவளது மறுப்பின்மையும் சேர்ந்து கொள்ள, அவனால் கட்டுப்படுத்தியிருக்க முடியவில்லை.

அதற்கும் அவள் இடம் வலமாக தலையசைத்தாள்.

“வெறுமனே தலையாட்டினா நான் என்ன அர்த்தம் எடுத்துக்கறது குல்ஃபி?” அவனது குரலில் குறும்பு மீண்டிருக்க, அவளை நெருங்கி நின்று கேட்டான்.

நிமிர்ந்து அவனை பார்த்தவள், சற்று பின்னடைந்தாள்.

உண்மையில் அந்த சூழ்நிலையும், ஷ்யாமின் அண்மையும் குழப்பங்கள் அனைத்தையும் மீறி, அவளை பதட்டப்படுத்தி இருந்தது.

அவளது அந்த பதட்டத்தை உணர்ந்து கொண்டவன், மணலில் சற்று மேடாக இருந்த பகுதியில் அமர்ந்து கொண்டு அவளுக்கு கைக் கொடுத்தான்.

மெல்ல அவனருகில் அமர்ந்தவள், அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், “பிடிச்சிருக்கா?” அவளது காதில் கிசுகிசுப்பாக கேட்க,

ரொம்பவும் யோசித்தவள், மேலும் கீழுமாக ‘ஆமென்று’ தலையாட்டினாள்.

“ஸ்பீக் அவுட்…” என்றவன், “நிமிர்ந்து என்னைப் பார்த்து சொல்லுடி…” என்று கிறக்கமாக கேட்க,

“ம்ஹூம்…”என்று மீண்டும் இடம் வலமாக தலையசைத்தாள்.

“இப்ப சொல்லலைன்னா வேற மாதிரி பனிஷ் பண்ண வேண்டியிருக்கும்…” என்றவனின் குரலிலேயே வேறுபாடு தெரிய, அவனை இன்னுமே நெருங்கி அமர்ந்து அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு,

“ம்ஹூம்…” என்று மீண்டும் மறுக்க, ஷ்யாமின் வலக்கரம் முதுகிலிருந்து முன்னேறி அவளது பின்கழுத்தை வாகாக பற்றி, அவளை தன்னை நோக்கி நிமிர செய்தது.

மஹா வைத்திருந்த ஜாதி மல்லி சரம் வேறு விஷத்தனமாக அவனது மூளைக்குள் மாற்றங்களை செய்வித்துக் கொண்டிருக்க, அவனையும் அறியாமல் மயக்க நிலைக்கு ஆட்பட்டிருந்தான்.

அந்த நிலையிலும், அது திறந்தவெளி என்பதை அவனது மூளை உரைத்தது.

“வீட்டுக்குள்ள போய்டலாமா?” என்று இவன் கேட்க, அதற்கும் மறுப்பான தலையாட்டாலே பதிலாக கிடைத்தது.

சற்று நேரம் மெளனமாக கழிந்தது… அவனது பார்வை மொத்தமும் ஆர்ப்பரித்த கடலின் மீதே இருக்க, அவளது மனதுக்குள் அதே ஆர்ப்பரிப்பு!

ஆனால் ஷ்யாமின் மனம் அமைதியில் திளைத்தது. அவளிடம் எதுவும் கொட்டாமலேயே அவனது மனதுக்குள் ஒரு நிம்மதி சூழ்ந்தது. எதை எதையோ தேடி ஓடிய அவனது மனது, இந்த மயக்கத்தை, இந்த காதலை, இந்த ஆத்மபூர்வமான பந்தத்தை தான் தேடினேன் என்று கூறியது!

அதை அவன் முழுவதுமாக உணர்ந்து கொண்டான். நெஞ்சில் சாய்ந்து இருந்தவளை இறுக்கமாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 “இது லஸ்ட்டா டா?” சிறிய குரலில் அவள் கேட்க, புன்னகைத்தான்.

“இன்னும் லஸ்ட்ங்கற சேப்டர்க்கே நாம போகலடி…” மெல்லிய சிரிப்போடு கூற,

“ப்ரெண்டா நினைச்சுட்டு இருந்துட்டு இப்படி இருக்கறது எனக்கு தப்பா படுது… ஐ ஃபீல் கில்டி…” உள்ளே இறங்கிவிட்ட குரலில் கூற,

“திஸ் இஸ் ஹிப்போக்கிரசி குல்ஃபி… அந்த ஸ்டேஜை நாம எப்பவோ தாண்டியாச்சு… நான் மட்டுமில்ல… நீயும் தான்… அதை நான் பீல் பண்ணேன்…” என்று அழுத்தமாக கூறினான்.

நிமிர்ந்து அவனை பார்த்தவள், “எனக்கென்னமோ இது வெறும் லஸ்ட்டாத்தான் படுது…” என்றவளை குறும்பாக பார்த்தவன்,

“லஸ்ட் இல்லாம லவ் கிடையாது… அது உண்மை… ஆனா லவ் இல்லாம வெறும் லஸ்ட் மட்டும் உண்டு… ஐ நோ த டிபரன்ஸ் பிட்வீன் த டூ… லஸ்ட் டாவே இருக்கட்டுமே… ஆனா கூடவே டன் கணக்கா லவ் இருக்குடி பிசாசே…” என்று சிரிக்க,

“ம்ம்… ப்ராக்டிகல் டிபரென்ஸ்…”

“எஸ்… அஃப்கோர்ஸ்… ஐ டோன்ட் வான்ட் டூ ஹைட் எனிதிங்…” என்றவனை, கண்களில் வலியோடு பார்த்தாள்.

“சில நேரத்துல பொய் கூட அழகானது ஷ்யாம்… உண்மைகளை ஜீரணம் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு…” மெல்லிய குரலில் கூறியவளை ஆழ்ந்து பார்த்தான்.

உண்மை தானே!

“நான் உன்கிட்ட பொய் சொல்லனும்ன்னு எதிர்பார்க்கறியா?” ஒருவிதமாக அவன் கேட்க,

“தெரியல… ப்ரெண்டா உன்னோட பிரான்க்னஸ் எனக்கு பிடிக்கும்… எவ்வளவு ட்ரான்ஸ்பரன்ட்ன்னு பெருமைப்பட்டுக்குவேன்… ஆனா இப்ப வலிக்குதுடா…” என்றவளின் குரல் உடைவது போல இருக்க, மூச்சை இழுத்து விட்டபடி தன்னை சமன் செய்து கொண்டாள்.

மெளனமாக அவளது வார்த்தைகளை கேட்டபடி அமர்ந்திருந்தான்.

“உன்னை பிடிக்குது… விட முடியல… விட்டுக் கொடுக்கவும் முடியல… ஆனா ஏத்துக்கவும் கஷ்டமா இருக்கே ஷ்யாம்? நான் என்ன பண்றது?” வலியை கொடுத்தவனிடமே வலிக்கான மருந்தையும் கேட்க, பதில் கூறாமல் அவளையே பார்த்தபடி இருந்தான் ஷ்யாம்.

மாலை அவளிருந்த மனநிலைக்கும் இப்போதிருக்கும் மனநிலைக்கும் இருந்த வேறுபாட்டை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“பங்க்ஷன்ல யாராவது எதையாவது பேசினாங்களா?” நேராக புள்ளியை பிடித்தவன், அவளிடம் கேள்வி எழுப்ப,

“ம்ம்ம்…” என்றவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து, “சௌஜன்யாவுக்கும் உனக்கும் என்ன ரிலேஷன்ஷிப்?” அவளுமே நேரடியாக தான் கேட்டாள்.

ஒன்றுமில்லையென சொல்லிவிட மாட்டானா என்ற நப்பாசை அவளது கண்களில் தெரிந்தது

காற்று இப்போது வேகமாக வீசத் துவங்கியிருந்தது. ஈரப்பதம் அதிகமாக, வெடவெடவென நடுங்கியது அவளுக்கு.

“உள்ள போய்டலாமா மஹா?” என்று கேட்ட ஷ்யாமுக்கு மறுத்து தலையசைத்தாள்.

“வேண்டாம்… நீ சொல்லு…” என்று கேட்க,

“இதுக்கு நான் உண்மைய சொல்லனுமா? பொய் சொல்லனுமா?” எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாத குரலில் அவன் கேட்க,

“தெரியல… ஆனா நான் ரொம்ப ஹர்ட் ஆவேன்னு மட்டும் எனக்கு தெரியுது…” என்றவள், கடலை வெறித்தாள்.

மனதுக்குள் சொல்ல முடியா துயரம் அழுத்தியது.

“பொய் சொல்லி அதன் மேல ஒரு ஃபேக் ரிலேஷன்ஷிப்பை பில்ட் பண்றதை விட உண்மையை சொல்லி, உனக்கு நான் நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கறேன் மஹா… The naked truth is always better than the best-dressed lie…”

“உண்மையை சொல்றேன்னு ரொம்ப கஷ்டப்படுத்தற…”

“இல்லடி… உன்கிட்ட மட்டும் தான் உண்மையா இருக்க முடியும்… இங்கயும் என்னால பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது…”

“சரி சொல்லு…”

“ஒரு தடவை, பைனான்ஸ் கேட்டிருந்த ப்ரொடியுசர் ஒருத்தர் அவளை அனுப்பி விட்டிருந்தார்… அது எப்பவுமே கேஷுவலான ஒன்னு தான்… வேண்டாம்ன்னு சொன்னதில்லை… ஆனா அவ அப்புறமா டேட் பண்ணலாமான்னு கேட்டா… எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன்… இவ்வளவுதான் நடந்தது…” கொஞ்சமும் கூட்டாமலும், குறைக்காமலும் அவன் கூறிவிட, கடலையே வெறித்தபடி அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, கண்கள் கலங்கப் பார்த்தது.

முயன்று தன்னை அடக்கிக் கொண்டாள். அடிவயிற்றிலிருந்து எதுவோ உருண்டு வந்து தொண்டையை அடைக்க, சிரமப்பட்டு விழுங்கினாள் மஹா.

“என்னாச்சு மஹா? அவ ஏதாவது சொன்னாளா?”

“ம்ம்ம்…”

“என்ன?”

“சவால் விட்டா…”

“என்னன்னு?”

“ஒரு தடவை நீ அட்டெம்ப்ட் பண்ணிட்டா அதுக்கு மேல எங்கயுமே நீ நிற்க மாட்டியாம்…” என்று இடைவெளி விட்டு, தன்னை தொகுத்துக் கொண்டவள், “மறுபடியும் அவ கிட்ட உன்னை வரவைக்கறேன்னு சொல்றா…” மிகுந்த வலியோடு வந்து விழுந்தது வார்த்தைகள். அவளை வெறித்துப் பார்த்தான் ஷ்யாம்.

“அதுக்கு நீ என்ன சொன்ன?”

“முடிஞ்சா செஞ்சுக்கன்னு சொல்லிட்டேன்…”

அதுவரை கனத்த மனதோடு கேட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று!

நீயே

தட்டி விடுவதும் நீயே!
எட்டி பிடிப்பதும் நீயே!
எனை கொல்லடி

காதல்…
நடந்திடும் இந்த மோதல்
எது வந்த போதும்
நீயே தாயும் ஆகி நில்…

நீயே…
வலி தருவதும் நீயே
வழி விடுவதும் நீயே
முரண்பாடு ஏன்?

காதல்
உயிர் வலி வரும் தேடல்
இடையினில் வரும் ஊடல்
நலம் காணவா…