YwA 13

YwA 13

அத்தியாயம் 13 

 

இரவு பத்து மணி 

   மாஹிர்…கவி..சித்தார்த்…கனிஷ்கா…மற்றும் இரண்டு துணை இயக்குனர்கள்…என்று ஒரு பட்டாளமே ஷா மற்றும் யாதவின் காட்டேஜின் வரவேற்பறையில் அமர்ந்து கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தது…படப்பிடிப்பு முடிந்து வந்ததிலிருந்து யாதவ் மற்றும் ஷாவை அவர்களது அறைக்குள் கூட நுழைய விடாமல்…சிறுபிள்ளை தனமாக பாட்டுக்கு பாட்டு…நடித்துக்காட்டி படம் கண்டுபிடி..கையைப்பிடி என்று விளையாடி கொன்றுக்கொண்டிருந்தனர்…ஷாவிற்கு போய் அக்கடாவென்று படுக்கணும் போன்று தோன்றியது…யாதவிற்கோ ஷா அவளின் அறைக்கு அவள் செல்லவேண்டும் அப்பொழுது தான் அவள் பைத்தியம் பிடித்தவள் போன்று கத்துவதை பார்க்கமுடியும்…எனவே இருவருமே அவர்களை விரட்ட என்ன என்னமோ குறளி வித்தைகள் செய்து பலிக்காமல் போக களைப்பாகி விளக்கெண்ணெய் குடித்த குரங்கு போல் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்…

          வெளியே வேறு மழை அடித்து வெளுத்து வாங்கி கொண்டிருந்தது…அதனால் அழுத்தி வெளியே செல்லுங்கள் என்றும் சொல்லமுடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர் இருவரும்….

              இந்த திட்டம் கண்டிப்பான முறையில் வெற்றிபெறும் என்று கற்பனையில் வெற்றிக்களிப்புடன் இருந்தனர் மாஹிர்சித்…கவி..கனிஷ்கா…

                  மணி பத்திற்கு மேல் ஆகியதும் இது தான் கிளம்ப சரியான நேரம் என்று நினைத்த சித் மற்ற மூவருக்கும் கண் காட்ட… துண்டை காணோம் துணியை காணோம் என்று அனைவரும் நொடிப்பொழுதில் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்…ஏதோ மாயாஜால படம் பார்த்த எபக்ட்டில் முழித்தனர் ஷாவும் யாதவும்…

                  ஒரே நேரத்தில் “அப்பாடா…”என்று இருவரும் கூறிவிட்டு ஒருவரையொருவர்  பார்த்துக்கொண்டனர்…யாதவ் இன்னைக்கு குளிர்லயே நொந்து சீக்கு வந்த பிராய்லர் கோழி மாதிரி ஆகப்போற …யாதவ் கண்ணா எனக்கு உன் ரூம்குள்ள கொஞ்சம் இடம் கொடுன்னு கெஞ்ச போற…என்று நினைத்தவாறு அவளை பார்த்து சிரிக்க….இந்த வெள்ளை பன்னி பார்வையே சரியில்லையே சம்திங் wrong”  என்று நினைத்த ஷாவும் அவனை பார்த்து சிரித்து வைத்தாள்

                      “குட் நைட் ஆரு…”என்று  விடைபெற்ற யாதவ் குறும்பு சிரிப்புடன் தனது அறைக்குள் சென்றான்…இந்த நாய் இப்படி எல்லாம் பண்ணாதே என்று யோசனையுடன் தனது அறைக்குள் சென்றாள் ஷா

       அறைக்குள் சென்றதும்  இருவரும் குளியலறையில் நுழைந்துவிட உடைந்த கண்ணாடி வழியாக மழைத்தண்ணீர் உள்நுழைந்து படுக்கை முழுவதும் நனைத்திருந்ததை அவர்கள் உணரவில்லை

          “ஹி ஹி ஹி…இன்னியராம் ஐயோ குளிருதே குளிருதேனு கீச்சு கீச்சுனு கத்திக்கிட்டு ரூம் சர்வீஸ்க்கு போன் பண்ணிருப்பா…அவன் இப்பலாம் வந்து பாக்கமுடியாது மேம்…குளிர்லயே சாவுங்க மேம் அப்படினு சொல்லுவான்…”என்று நினைத்துக்கொண்டே உடைமாற்றினான் யாதவ்

     வெளியே வந்தவன் என்ன இன்னும் சத்தம் வரலை…இப்ப வரும் ஒன் டூ த்ரீ என்றவாறு மெத்தையில் விழுந்தவன் ஆஆஆ என்ற அலறலுடன் எந்திரித்து நின்றிருந்தான் யாதவ்

        அங்கு இதைபோல் உடைமாற்றி வந்த ஷாவும் படுக்கையில் விழுந்து ஆஆ என்ற அலறலுடன் எழ அவளது அறை கதவு படபடவென்று தட்டப்பட்டது…கதவை திறந்தால் அங்கு கொலைவெறியுடன் யாதவ் நின்றிருந்தான்

       என்ன டா வேணும் என்று எரிச்சலுடன் ஷா கேட்க….அதை நான் கேக்கணும் டி..எதுக்கு என் ரூம் ஜன்னலை உடைச்ச என்று எகிற….

        “ஸ்ஸ்ஸ்ஸ்ஷூ…நானே இங்கே என் ரூம் ஜன்னல் உடைச்சுருச்சேன்னு கொலை காண்டுல இருக்கேன்…நீ வேற பைத்தியம் மாதிரி…”என்றவள் ஹோட்டல் ரூம் சர்வீஸ்க்கு தொடர்புகொள்ள யாதவ் சொன்ன மாதிரியே அவர்கள் கூற கடுப்பாகி திட்டி விட்டு தொலைபேசியை கீழே வைத்தவள் “உன் ரூம் ஜன்னலும் உடைச்சு இருக்கா…யார் பண்ணிருப்பா…”

 

வேற யாரு…நீ தான் டி….”

நான் எதுக்கு டா பண்ணனும்..பைத்தியம்…”என்று ஷா கூற…தவளை தன் வாயாலே கெடும் என்பதுபோல் “நான் உன் ஜன்னல் கண்ணாடியே உடைச்சேனு தெரிஞ்சுக்கிட்டு நீ என் ரூம் கண்ணாடியை உடைச்சுட்ட…”என்று கூற ஷா கொலைவெறில இருக்கேன் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்பதுபோல் முகபாவம் காட்டியவள் எப்பொழுதும்போல் மிக கேவலமாக இரு ஆங்கில கெட்ட வார்த்தை சொல்லி திட்ட…அவனும் திட்ட என்று சிறிது நேரம் வார்தைப்போர் நடந்தது…

    “சரி..விடு…இப்ப என்ன பண்ணலாம்…உள்ளே தூங்க முடியாது…செம குளிர்…”என்று கைகளை தேய்த்து கன்னங்களில் வைத்தவாறு சோபாவில் அமர்ந்தாள் ஷா

      “கவி கனி ரூம்ல போய் தூங்குறியா…”என்று கேட்டவாறு அவளுக்கு அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல்  அமர்ந்தான் யாதவ்

            “வேணாம் வேணாம்…ஐ ஆம் நாட் பீல் கபோர்ட்டபிள்…”என்றவள் அவளது அறைக்குள் சென்று ஒரு போர்வையும் தலையணையும் எடுத்து வந்தவள் அவனை சைகையால் எழ சொன்னாள்…அவனும் எதற்கு என்பதுபோல் எழுந்து நிற்க உடனே கால் நீட்டி படுத்துவிட்டாள்…

    “அப்ப நான்…”எங்கே படுப்பது என்பது போல் அவன் கேட்க…உன் விருப்பம் தரையில படு…இல்லாட்டி நின்னுக்கிட்டே தூங்கு என்று ஷா கூறவும்…மின்சாரம் போகவும் சரியாக இருந்தது

       “ச்சை…வாட் தி ஹெல்…”என்று யாதவ் தலையில் அடித்துக்கொள்ள

          “வாட் தி ####…”என்ற ஷா சோபாவில் இருந்து எழுந்து கணப்பு பகுதிக்கு அருகில் சென்று அமர்ந்துவிட்டாள்

               அவள் எழவும் அவள் படுத்திருந்த இடத்தில் போய் படுத்துகொண்டான் யாதவ்..சிறிதுநேரம் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக கடந்தது…குளிரின் வேகம் அரக்கனை போல் தனது வாய் கொண்டு முழுங்கிக்கொண்டே வர குளிர் தாங்க முடியாத யாதவ் ஷாவின் அருகில் வந்து அவளை தள்ளி விட்டு அமர்ந்தான்

             “நாயே…எருமை கிடா மாதிரி இருந்துகிட்டு  என்னை தள்ளிவிடுற…”என்று திட்டிக்கொண்டே அவனை தள்ள முயற்சி செய்து முடியாமல் போக அவனது இடதுகையில் ஒரு குத்து விட்டு அவனிற்கு அருகில் இடித்துக்கொண்டு அமரவர அவளது கையில் இருந்தபோர்வை காலில் மாட்டி தடுக்கிவிட அவனது மடியில் விழுந்திருந்தாள் ஷா…

 

அவள் மடியில் வந்து விழவும் கீழே விழுந்துவிடாமல் இருக்க முதுகில் இரு கரங்கள் வைத்து பிடித்தான் யாதவ்…..

        கண்கள் ரெண்டும் சந்தித்து கொள்ள அவனின் முகத்திற்கு மிக அருகில் அவளது முகம்…இருவருக்குள்ளும் அந்த மழை ராத்திரி…குளிர்…எல்லாம் சேர்த்து ஒரு ரசவாதத்தை ஏற்படுத்தி விட ஷாவின் முதுகில் இருந்த அவனது  கரத்தின் அழுத்தம் அதிகரித்தது… ஷா அவனது கண்களை கூர்ந்து பார்த்தாள்..அந்த கண்களில் அவனுக்கான சேதி ஏதோ இருந்திருக்க வேண்டும்…அதை புரிந்தவன் போன்று கண்டவர் மயங்கும் மோகன புன்னகை புரிந்தவனின் கரங்கள் அவளது கழுத்து நோக்கி சென்று சிறிது உயர்த்தி,…அவளை தனது மடியில் தாராளமாக அமர வைத்தது…அவனது கரங்களின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு அதன் விசையில் செயல்பட்டாள் ஷா…

       யாதவின் வலது கரம் அவள் கரங்களை எடுத்து தனது தோள்களில் படரவிட…அவளின் கைகள் அவனது இரு தோள்களை பற்றுக்கோளாக பற்றிக்கொண்டது…தனது இடதுகரத்தை கொண்டு அவளது இடையை வளைத்தவன் தன்னை நோக்கி இழுக்க…இரு தேகங்களும் உரசி… தங்களின் இணையுடன் பொருத்திக்கொள்ள அலைபாய்ந்தது… அவற்றின் கோரிக்கையை காற்றில் விட்டவர்கள்…இதழ்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஆரம்பித்தனர்…அவனின் வலக்கரம் அவளது கண்ணாடியை கழற்றி அருகில் வைத்தது…

 

    கரங்களின் பணியை இதழ்கள் பெற்றுக்கொள்ள ஷாவின் பிறை நுதலில் சுயநினைவுடன் முதல் முத்திரையை பதித்தான் யாதவ்…அடுத்து ஒளிகளை பிடித்து அடைத்து வண்ணமாக உருவாக்க பயன்படும் அந்த நீண்ட நயனங்களில்..அடுத்து தொட்டாலே குழையும் வெள்ளை நிற கன்னங்களில் முத்திரை இட்டவன்…சம்பவ இடமான குளிந்த சிவந்த நிற இதழ்களில் அருகில் சென்று பொருந்த தயங்கின அவனது இதழ்கள்

      என்ன என்பது போல் அவள் பார்க்க…”சோ கேன் ஐ கிஸ் யூ…”என்று இதழ்கள் அவளது இதழ்களில் உரசிகொண்டு அனுமதி வேண்டகண்முடிய மோன நிலையில் 

யூ நெவெர் ஹாவ் டு ஆஸ்க்…(you never have to ask )”என்று அவள் கூற சரியாக இப்பொழுது மின்சாரம் வந்தது…அதில் தன்னுணர்வு பெற்ற இருவரும் ஒருவர் கண்ணை ஒருவர் பார்க்காமல் தடுமாறினர்

          இருவருக்குமே தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று மனது படபடவென்று அடித்துக்கொண்டது…முதலில் சுதாரித்த ஷா அவனது மடியிலிருந்து இறங்கி அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்…அவள் இடையுடனே இவனது கரங்களும் செல்ல ஷாவின் பார்வையில் தனது கரங்களை விலக்கி கொண்டவன் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கரத்தை வாய் அருகில் கொண்டுசெல்ல ஷாவின் பார்வை அவனது கரங்களை தொடர சிறிது தடுமாறி தலைமுடியை கோதிவிட்டான்

     யாதவின் அமைதி ஷாவிற்கு வயிற்றில் புளியை கரைத்ததுஷாவிற்கு இப்பொழுது என்ன பயமென்றால் அன்று மாதிரி இன்றும் பாலிதீன் போட்டு முடிவைத்த கற்பு அது இது என்று எதுவும் சண்டை போடுவானோ என்பது தான்…

     “இங்கே பாரு இதுக்கெல்லாம் உன்னோட கற்பு போகாது சரியா…”என்று தயக்கத்துடன் அவளது கரங்கள் அவனது தோளை தட்ட…தனது தோள் மீதிருந்த கரத்தை பார்த்தவனுக்கு அதை எடுத்து முத்தம் வைக்க வேண்டும் போல் என்று தோன்ற பயந்துவிட்டான்…தானும் சாதாரண ஆண்கள் போல் தானோ

      “ம்ம்…ம்ம்…”என்று தலையசைத்தவன் தனது அறைக்குள் சென்று போர்வை மற்றும் ஒரு தலையணையை எடுத்து வந்தவன்  சோபாவின் ஒரு மூலையில் அவளுக்கு இடம் விட்டு அமர்ந்த நிலையில் உறங்க தயாராகி கண்களை மூடிக்கொண்டான்….

         அவனது செயல்களில் யாதவை விசித்திரமாக பார்த்தவள் எப்பொழுதும் போல் அலட்சிய பாவனையுடன் தோள்களை குலுக்கி விட்டு….தனது போர்வை தலையணையை எடுத்துக்கொண்டு வந்து தானும் அவனை போல் சோபாவின் மறுமுனையில் அமர்ந்தவாறு தூங்க ஆயத்தமானாள்அமர்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் தூங்கியும் இருந்தாள்…ஆனால் முதலில் வந்தவனுக்கு தான் தூக்கமே வரவில்லை…என்ன காரியம் செய்ய துணிந்தான்…மனைவியை தவிர யாருக்கும் தனது கற்பை கொடுத்துவிட கூடாது என்று கொள்கையுடன் இருப்பவனுக்கு இப்பேற்பட்ட சோதனையா…தனது திடம் அவ்வளவு தானா…என்று யோசித்தவாறு விழித்தே கிடந்தவன் நடுஇரவுக்கு மேல் துயில் கொண்டான்…

நாள்

      எங்கோ தூரத்தில் யாரோ விடாமல் மணிஅடித்துக்கொண்டிருக்க அது யாதவின் தூக்கத்தை கலைக்க மெதுவாக கண்விழித்தான் யாதவ்…விழித்தவனின் பார்வை வட்டத்தில் முதலில் விழுந்தது…சோபாவின் நுனியில் தலைசாய்ந்திருக்க ஆஅ வென்று வாயை திறந்தவாறு குழந்தை போன்று உறங்கும் ஷாவின் முகம் தான்…அப்படியே முகத்திலிருந்து இறங்கியவனின் பார்வை அவளது கால் வரை வந்தது…இடதுகால் கீழே தரையில் ஊன்றி இருக்க…அவளது வலதுகால் யாதவின் நெஞ்சின் மீது இருந்தது… ஏதோ உரிமை பட்ட இடத்தில் ஒய்யாரமாக இருப்பது போல் இருந்தது…பளபளவென்ற வெளிர் நிற கணுக்கால் அவனை முத்தமிட சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்தது…அவனுக்குள் ஒரு போராட்டமே நடந்துகொண்டிருந்தது…வேண்டும் வேண்டாம் என்று இரு விதமான மனக்குமுறல்கள்…கொடுத்துவிடேன்..என்று ஒரு குரலும்…வேண்டாம் உனது இத்தனை வருட கற்பு என்று ஒரு குரலும் அவனது மண்டையில் நர்த்தனம் ஆட…ஆசை ஒழுக்கத்தை வென்று விட ஷாவின் காலை கைகள் நடுங்க தொட போக ஒரு சென்டி மீட்டர் தான் இருக்கும் அவனது கருத்திற்கும் அவளது காலிற்கும்…. அப்பொழுது தூக்கத்திலிருந்து விழித்திருந்த ஷா படக்கென்று காலை எடுத்துக்கொண்டு….”சாரி டா…”என்றவள் கதவை திறக்க சென்றாள்…

 

error: Content is protected !!