YWA 14

அத்தியாயம் 14

கதவை திறக்கவும் கவி…கனி…மாஹிர்…சித்…உடைந்த ஜன்னலை வேலை பார்க்க வந்த இருவர்…ஒரு ரூம் சர்வீஸ் செய்பவர் என்று ஒரு கூட்டமே வெளியே நின்றது…அத்தனை பேரை பார்த்ததும் சிறிதாக அதிர்ந்தவள் கதவை முழுவதாக திறந்து அவர்களுக்கு வழிவிட்டாள்…அவர்களை பார்த்த யாதவும் அதிர்ந்து எழுந்தவன் தன்னை சமாளித்து கொண்டு வேலை பார்க்க வந்தவர்களை அறைக்குள் அழைத்து சென்று உடைந்த ஜன்னல்களை காட்டிக்கொண்டிருந்தான்…

என்னடா விடிச்சு விடியாம இத்தனை பேர் வந்துஇருக்கீங்க…என்றவாறு நினைத்தவள் அவர்கள் நால்வரையும் சந்தேகமாக பார்த்தாள் ஏதோ நால்வரும் ஒன்றாகவே சுற்றுகிறார்களோ என்று அவளுக்கு ஒரு எண்ணம்…

உள்ளே நுழைந்த நால்வரோ ஷா மற்றும் யாதவ் ஆகியஇருவரும் வரவேற்பறையில் உறங்கியதற்கான அடையாளங்களை புரியாமல் பார்த்தனர்…சித் “ஏன் ஷா வெளியவே தூங்கிட்டிங்களா…என்ன ஆச்சு…யாதவ் ரூம் கண்ணாடி தானே உடைச்சோம்….”என்று வாய் தவறி கூறிவிட மீதமிருந்த மூவரும் தலையில் கை வைத்து ஐயோ என்பது போல் அவனை பார்க்க…ஷா அவனை கூர்பார்வை பார்த்தாள்…

“உடைச்சுஇருக்குனு வேலைபார்க்க வந்தவங்க சொன்னாங்களே…அதான் கேட்க வந்தேன் …குளிருதுல…அதனால வாய் உளறிருச்சு…”என்று சித் தான் பேசும் வார்த்தைகளுக்கு ஒன்றோடு ஒன்று சம்மந்தமில்லாமல் பாதி தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல் எதையோ உளறிக்கொட்டி சமாளிக்க…..அவனுக்கு உதவுதற்காக இடையில் புகுந்த மாஹிர் “ஹான் தீதி….சித் பையா யாஹ் சரி போல்ராங்க…”என்றான்…

உங்கள் நடை உடை பாவனையே சரி இல்லையே டா என்பதை போல்நால்வரையும் பார்த்த ஷா”ஆமாம் நீங்க எல்லாம் ஏன் ஒன்னாவே சுத்துறீங்க…”என்று நெற்றியின் ஓரத்தில் ஆள் காட்டி விரலால் லேசாக சொரிந்துகொண்டு மாஹிரை பார்த்து சந்தேகமாக கேட்க…

சிறிதாக பதறினாலும் வசமாக மாட்டிக்கொள்வோம் என்றுணர்ந்த மாஹிர் மிக சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொள்ள அவர்கள் ஊர்பிரபலம்…முகத்திலே அனைத்தையும் காட்டும் நடிகர் கோவிந்தாவை போல் வாயை இழுத்து சுளித்து…கண்களை சுழற்றி “மே சித் பையா உங்களை மில்னே வந்தோம்…கவிஜி ஆர் கனி உன்சே மில்னே வந்தாங்க… “நானும் சித் அண்ணாவும் உங்களை பார்க்கவந்தோம்..கவி மேடமும் கனியும் அவரை பார்க்க வந்தாங்க…என்று கூறியவன் ஷா அடுத்த கேள்வி கேட்பதற்குள் இயல்பு போல் ஷாவின் அறைக்குள் சென்று விட சித்தும் அவன் பின்னையே செல்ல…மீதமிருந்த கவி கனிஷ்காவை இவள் பார்க்க…அவர்கள் இருவரும் ஷா என்கிற ஒரு ஜீவனே அந்த இடத்தில் இல்லாதது போல் சுற்றிமுற்றி பார்த்து தங்களுக்குள்ளயே ஏதோ பேசிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து யாதவின் அறைக்குள் சென்று விட்டனர்…

ஷாவோ இவர்களின் நடவடிக்கைகளை பார்த்து குழம்பியவளாக “என்ன டா நடக்குது இங்கே …”என்று கூறியவள் தனது அறைக்குள் சென்று விட்டாள்..

கனியும் கவியும் யாதவிடம் எவ்வளவும் விசாரித்தும் முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடியாததால் தாங்கள் போட்ட திட்டம் பலித்ததா இல்லையா என்ற குழப்பத்துடன் அவனிடமிருந்து விடைபெற்று சென்றனர்…

இவர்களை போல் மாஹிர் மற்றும் சித்தால் ஷாவிடம்நேரடியாக கேட்க முடியாது..கேட்டாலும் சொல்ல மாட்டாள் என்ற காரணத்தால் இருவரும் ஏதோ ஏதோ சுற்றி வளைத்து கேட்டும் ஷாவிடம் இருந்து ஒன்றும் விஷயம் வாங்கமுடியாததால் சோகத்துடன் அந்த இருவரும் சென்றனர்…மொத்தத்தில் நால்வருக்கும் நேற்று இரவு என்ன நடந்தது என்று தெரியவில்லை…

கண்ணாடியை சரி செய்துவிட்டு அனைவரும் சென்றவுடன் யாதவும் ஷாவும் இன்றைய படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கிளம்பினர்…யாதவின் சிந்தனை முழுதும் தான் ஏன் இப்படி நடந்துகொண்டோம்…தனக்கான கட்டுப்பாடு தன்னிடம் இல்லையா என்பது போல் இருந்தது…அவனை பொறுத்தவரை இதெல்லாம் தவறே…திருமணத்திற்கு முன் இது என்பதை விட…காதல் என்ற அடித்தளம் கூட இல்லாமல் தான் வெறும் காமத்தின் பிடியில் செய்தோம் என்பது அவனுக்கு ஒரு குற்ற உணர்வை கொடுத்தது…

அதே நேரம் ஷாவின் எண்ணம் எதுவும் நேற்று நடந்தது பற்றியதாக இல்லை…அவளை பொறுத்தவரை பசிக்குது…பசிக்கிறது…தூக்கம் வருகிறது…என்பது போல் காமமும் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று…ஒன்றை அடக்க அடக்க தான் அது மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்பது அவளின் எண்ணம்… அதையே பிடித்து தொங்கி கொண்டு இராமல்…காமம் இவ்வளவு தானா என்பது போல் தான் கடக்கவேண்டும்என்று நினைப்பவள்…கடப்பவள்…

அதனால் அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…ஜஸ்ட் லைக் தட் என்பது போல் இருந்தாள்…யாதவ் குழப்பமான சிந்தனையுடன்…ஷா நிர்மலமான மனதுடனும் தங்களது பணிக்கு கிளம்பி ஒரே நேரத்தில் தங்களது அறை கதவை திறந்தனர்…

இருவருக்கும் நேரெதிர் அறை…ஒரே நேரத்தில் இருவரும் கதவை திறந்ததால் ஒருவரையொருவர் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை…ஷா எந்நாளும் இல்லாத திருநாளாக யாதவை பார்த்து சிறிதாக புன்னகைக்க..யாதவோ அவளது புன்னகை முகத்துக்கு பதில் புன்னகை கொடுக்காமல்…ஒரு நொடி அவளை பாதத்திலிருந்து உச்சம் தலை அதாவது அவளது மேசி பன் வரை நிதானமாக பார்த்தவன்…பின்பு கண்களை மூடி இழுத்து மூச்சை விட்டு தலையை குலுக்கிதன்னை ஏதிலிருந்தோ காப்பாற்றி கொள்பவன் போல் விறுவிறுவென்று சென்று விட்டான்…

அவனது செயலில் ஐயோ பைத்தியமாயா இவன் என்பது போல் புரியாமல் பார்த்த ஷா உன்னை பார்த்து சிரிச்சேன்ல என்னை சொல்லணும் என்று வாய்விட்டே கூறியவள் நெற்றியில் அடித்து கொண்டு அவனின் பின்னே சென்றாள்…

அவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜிலிருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வேனில் செல்ல வேண்டும்…ஐந்து நிமிட இடைவேளை…அனைவரும் வேனிற்கு சென்று விட இவர்கள் இருவர் தான் கடைசியாக சென்றனர்…இருவர் அமர கூடிய ஒரு சீட் தான் இருந்தது…அப்படி இருக்கும்படி பார்த்து கொண்ட பெருமை நமது நால்வர் கூட்டணியை தான் சேரும்…

முதலில் வந்த யாதவ் அந்த சீட்டில் அமர்ந்து காதுகளில் இயர் போனை மாட்டி சோகப்பாடல்களை ஒலிக்க விட்டவன் கண்களை மூடிக்கொண்டான்…….

வண்டி கிளம்ப தயாராக வேகமாக வந்து ஏறிக்கொண்ட ஷா…தனக்கு இடம் தேடி சுற்றி பார்வையை சுழற்ற யாதவ் அமர்ந்திருந்த இருக்கை மட்டும் தான்இருக்க அமருவோமா என்று யாதவ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் நின்றவாறு ஷாயோசித்துக்கொண்டிருக்க… அதுவரை கண்களை மூடி காதுகளில் உருகிக்கொண்டிருந்த அமித் மிஷ்ராவை

Meriroohkaparindaphadphadaye

Lekinsukoonkajazeera

milnapaaye

Main kikaraan?Main kikaraan?

The bird of my soul writhes

But it is unable to find the island of peace

What should I do?

Ikbaarkotajallitoh

dikha de Jhoothisahimagar

tasalli to dila de

Vekikaraan?Vekikaraan?

Just once show yourself

Give me some hope even if false What should I do?

கேட்டுக்கொண்டிருந்தவன்..அவளது வருகையில் கண்களை திறக்காமலே நில் என்பது போல் சைகை செய்தவன்…எழுந்து நின்றான்….

அவனை ஆச்சரியமாக பார்த்தாள்ஷா…இது யாதவின் வழக்கம்…நடிக்கப்போகும் காட்சிக்கு ஏற்றவாறு பாடல்களை கேட்டு தன்னை அந்த உணர்வுக்கு ஏற்றார் போல் கொண்டுவருவான்…சோக காட்சியாக இருந்தால் சோக பாடல்கள் கேட்பான்…சந்தோஷமான காட்சியாக இருந்தால் அதற்கேற்றாற் போல் பாடல்கள் கேட்பான்…இசை அதன் தன்மைக்கு ஏற்றவாறு கேட்பவரையும் மாற்றிவிடுமாம்…அதற்கு அத்தகைய சக்தி உள்ளது…மதம் இனம் மொழி நாடு கடந்து தன்னை தேடி வருபவர்களை அரவணைக்ககூடியது…

இப்படி அவன் நடிப்பதற்காக பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் போது பிரளயமே வந்தாலும் கண்திறந்து பார்க்கமாட்டான் என்று அவள் கேள்வி பட்டிருக்கிறாள்…நேற்று நேரில் கூட பார்த்தாள்…ஆனால் அவன் இப்பொழுது தனது வருகையை உணர்ந்து எழுந்து நின்றது ஆச்சரியமாக இருந்தது…

யாதவோ அப்பொழுது போல் இப்போதும் ஒரு மாதிரி புரிந்துகொள்ள முடியாத பாவனையில் அவளை பார்த்தவன் “ஏய் கவி…இங்கே வா…நீ உட்காரு…”என்று பக்கத்துக்கு இருக்கையில் கனிஷ்காவுடன் அமர்ந்திருந்த கவியை அழைத்தவன்…கவி எழுந்து வந்ததும் அந்த இடத்தை விட்டு அகன்று கவி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து விட்டான்…

வேனில் இருந்த அனைவரும் இவர்களை பார்க்கவும் ஷாவுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது…யாதவ் தன்னை பாதிக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது..கண்ணாடியை சரிசெய்து தன்னை சமநிலைக்கு கொண்டுவந்தவள் சின்ன தோள்குலுக்கலுடன் தனது இடத்தில் அமர்ந்தாள்…

கவி…மாஹிர்…கனி…சித் நால்வரும் இது என்ன டா…ஜாண் ஏறினால் ஒரு கிலோமீட்டர் சறுக்குது என்பதுபோல் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டனர்….

இப்படியே அன்று முழுவதும் ஷாவை எதிர்நோக்கும் ஒவ்வொரு தருணமும் அவளை விலக்கினான் யாதவ்…

ஷாவிற்கு ஏன் இவன் இப்படி செய்கிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது…நேற்று நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு இப்படி நடக்கிறான்…அவர்கள் முதல் சந்திப்பின் போதே கற்பு அது இது என்று புலம்பியவன் தானே…அதனால் தான்…சிறிது நேரத்தில் சரியாகிவிடுவான் என்று அதற்கு பிறகு யாதவை ஷா கண்டுகொள்ளவில்லை…அதற்கான நேரமமும் அவளிடம் இல்லை…படப்பிடிப்பு முடியவே இருள் கவிழ தொடங்கி விட காட்டேஜிற்கு வந்தவள் இரவு உணவு உண்டுவிட்டு படுத்து தூங்கி விட்டாள்…

யாதவ் தனது படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டு இன்று இன்ஸ்டாவில் ஷா பதிவேற்றிருந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தான்…புகைப்பட கருவியில் இவள் எடுத்த ஏதோ ஒரு புகைப்படத்தை கூர்மையாக பார்த்துக்கொண்டிருப்பது போல் அந்த படம் இருந்தது…அந்த படத்தை ஜூம் செய்து

“நீ ஒன்னும் அவ்ளோ பெரிய அழகி எல்லாம் கிடையாது…எனக்கு ஏன் உன்னை பார்த்தா என்ன என்னமோ பண்ணுது….”

“வேகமா ஏதாவது பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்…வயசானலே இப்படி தான் அட்டு பிகர் கூட அலியா பட் ரேஞ்சுக்கு தெரியுமாம்…”என்று இப்படி ஷாவை ஏதோ ஹீரோயின் அம்மா அளவிற்குகழுவி உத்தி கொண்டிருந்தவன் சிறிது நேரத்தில்….

“இந்த சோடாபுட்டி கண்ணாடி கூட எப்படி உனக்கு இவ்வளவு அழகா இருக்கு…இத்து போன ஜீன்ஸ் போட்டாலும் எப்படி இந்திரலோகத்தில் நான்அழகப்பன் படத்துல வர ரம்பை மாதிரி நச்சுனு இருக்க…”என்ன டா இது இப்படி அந்தர் பல்டி அடிக்குற என்று நாம் வாய் பிளக்கும் அளவிற்கு புகைப்படத்திலே வலிந்து கொண்டிருந்தான்…

மூன்றாம் நாள்:

மூன்று நாட்களாக தொடர்ந்து எலிபாண்ட் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது…முதலில் கொஞ்சம் யாதவ் மற்றும் கனிஷ்கா பேசிக்கொள்வதை போல் காட்சிகளை எடுத்தவர்கள் அடுத்து முக்கியமான காட்சியான இதழ் முத்தக்காட்சி எடுக்க தயாராகிக்கொண்டிருந்தனர்…

ஷா ஒளிப்பதிவு கருவியை செட் செய்துகொண்டிருக்க…எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் வேதன் கனிஷ்கா மற்றும் யாதவிற்கு கூறிக்கொண்டிருந்தார்…

ஷா “அதானே பார்த்தேன்…என்ன டா இவன் படம் ஆச்சே இன்னும் உதட்டை கடிக்குற சீன் வரலையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்…வந்துருச்சு…ஹா ஹா ஹா…நம்ம ஆளுங்க அறிவோ அறிவு…எப்படி தான் அடக்க முடியாத சோகத்துல இருக்கும் போது கிஸ் அடிக்க தோணுமோ…கோவம் வந்தா கிஸ் அடிக்குறானுக…சோகமா இருந்தா கிஸ் அடிக்குறானுக…இவனுக கணக்கே என்ன கணக்குன்னு தெரில….”என்று மனதிற்குள் கூறியவள் இருவருக்குமான கிளோஸ் ஆப் ஷாட் வைத்தாள்…

வேதன் இவளை பார்த்து ஒகே வா என்று கேட்க கட்டை விரலை காட்டி சரி என்பதுபோல் ஷா தலையசைக்க…வேதன் “ஆக்ஷன்…”என்று கூற இருவரின் நடிப்பு ஆரம்பித்தது…

“ஜீவா…”என்று கதாநாயகியான கனிஷ்கா அழைக்க அதுவரை முட்டிக்கால் போட்டு நீர்விழிச்சியை வெறித்துக்கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்..அவள் முகத்தில் ஏங்குகிற அல்லது ஆறுதல் அளிக்க விளைகின்ற ஒரு பார்வை…அந்த ஒரு பார்வை அவன் உடைய போதுமானதாக இருக்கிறது…

“ஷீலா…”என்றவாறு இயலாமையுடன் கூடிய ஒரு பார்வையை அவளை நோக்கி செலுத்தியவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டு அழுகின்றான்…அவனை சிறிது நேரம் அழுகவிட்டவள் தன்னிடம் இருந்து பிரித்து அவனது கைகளை பிடித்து எழுப்புகிறாள்…

ஜீவாவான யாதவ் அவளது முகம் பார்க்க…அவனது கண்ணீரை துடைத்தவள் அவன் முகம் முழுவதும் முத்தங்களை பதிக்கிறாள்…நெற்றி…கண்…கன்னம்…என்று முத்தமிட இதழ்களின் அருகில் வந்து சிறிது தயங்குகிறாள்…

அவள் தயங்கியபடியே இருக்கிறாள்..அறுபது வினாடி கடக்கிறது….உதவி இயக்குனர் ஒருத்தன் சார் நீங்க அவங்க முகத்தை பிடிக்கணும் சார்…என்று இரண்டு முறை அமைதியாக தள்ளி நின்று கூறியும் யாதவ் அப்படியே நிற்க…

கட்…கட்…டேய் யாதவ் என்ன கனவு கண்டுட்டு இருக்க…என்று வேதன் கத்த….திரும்பி பார்த்த யாதவ் சாரி சார்…சாரி சார்…இப்ப சரியாய் பண்றேன் என்று கூற…மீண்டும் லேசாக டச் அப் செய்து .

கிளிசரின் கொடுத்து மீண்டும் முதலில் இருந்து வேதன் ஆக்ஷன் என்று சொல்லி ஆரம்பிக்க ஷா ஒளிப்பதிவு கருவியில் கண்களை பதித்து அவர்களை பார்த்துக்கொண்டிருக்க…எல்லா காட்சியும் சரியாக வர அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன் கைகள் நடுங்க சட்டென்று கையைஎடுத்து விட்டு ஷாவை பார்த்தான்…அதே புரியாத பார்வை…

மீண்டும் மீண்டும் இதே போல் பத்து டேக்கிற்கு மேல் சென்றுவிட…வேதன் கோவமாகி திட்ட ஆரம்பிக்க…ஷா என்ன டா ஒழுங்கா பண்ணா என்ன…இதுவரை இவர் கிஸ் அடிச்சதே இல்லை…என்றவாறு மனதில் புலம்பிக்கொண்டிருந்தாள்…

வேதன் திட்ட திட்ட தலையை குனிந்து வாங்கிக்கொண்டிருந்தவன்..சார் கொஞ்சம் நேரம் பிரேக் கொடுங்க…அடுத்து சரியாய் பண்றேன் என்று கூறிவிட இடைவேளை விடப்பட்டது…

நடப்பது அனைத்தையும் யாதாவிற்கு என்ன ஆயிற்று என்பது போல் கனிஷ்கா…கவி…சித்…மாஹிர் பார்த்துக்கொண்டிருந்தனர்…கவி..சித்…கனிஷ்கா…யாதவிடம் நேரடியாக என்னாயிற்று என்று கேட்டும் யாதவ் ஒன்னும் இல்லை நீங்க போங்க என்று கூற அவனை விட்டு அகன்றனர்…

அனைவரும் விலகியதும் யாதவ் வேதனை தேடி சென்றான்…அவர் ஷாவிடம் நின்று நாளைய லொகேஷன் பத்தி பேசிக்கொண்டிருந்தார்…அவர்களின் அருகில் சென்றான்…

அவனை முதலில் பார்த்த ஷா என்ன என்பதுபோல் அவனிடம் தலையாட்டி கேட்க அவளை காணாதது போல் தவிர்த்தவன் ஷாவிடம் திரும்பி நின்று பேசிக்கொண்டிருந்த வேதனை “சார்…”என்று அழைக்க…அவர் யாதவை திரும்பி பார்த்தார்…

“என்ன யாதவ்…ஆர் யு ஒகே…”என்று அவனின் தோளில் தட்டியவாறு கேட்க…யாதவ் பைன் சார் என்றவன்…தன்னை குழப்பமாக பார்த்துக்கொண்டிருந்த ஷாவை ஒரு பார்வைப் பார்த்தவன் “உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் சார்…”என்று அவரிடம் கூற…வேதன் தர்ம சங்கடமாக ஷாவை நோக்க…”ஹான் நீங்க பேசிட்டு இருங்க சார்..”என்றவள் விடை பெற்று சென்றாள்…

“சார்..சார்…”என்று யாதவ் தயங்க…\

“என்ன டா…சொல்லு…புதுசா தயங்க எல்லாம் செய்யுற…”

“சார்…சினிமாட்டோகிராபரை மாத்துங்க…எனக்கு சரியாய் வரல…இன்னும் த்ரீ டேஸ் தானே…நாம வெயிட் பண்ணி பாலு சார் ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததும் மீதம் இருக்கறதை பார்த்துக்குவோம்…ஆரு வேண்டாம்…”என்று யாதவ் வேதனின் முகத்தை பார்க்காமல் எதிரே தெரிந்த இயற்கை காட்சிகளில் பார்வையை பதித்து படபடவென்று கூற…அவனை கூர்மையாக பார்த்த வேதன்…

“யாதவ் என்னை நிமிர்ந்து பாரு…”என்று கூற அவன் நிமிர்ந்து பார்த்ததும் “என்ன ஆச்சு…”என்று கேட்க “ஒன்னும் ஆகல…இதுக்கு பிறகும் ஒன்னும் ஆகிற கூடாதுனு தான் சொல்லுறேன்…”

“ஓஹ்…அந்த பொண்ணால இந்த படத்துக்கு எதுவும் பிரச்னை வருமா…”

“இல்லை சார்…என் பர்சனல் இஸ்யூ…”என்று குரல் இறங்கி தனது தவறு புரிய தயக்கத்துடன் கூறினான்…

“புரிஞ்சு இருக்கும்னு நினைக்குறேன்…பர்சனல் வேற…வேலை வேற…உனக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுத்து தான் வளத்திருக்கேன்…நீ கனிஷ்கா சித் என் பசங்க மாதிரி…பார்த்து நடந்துக்கோ…”என்றவர் சென்றுவிட்டார்….

error: Content is protected !!