YWA 16

YWA 16

16

எங்கிருந்தோ அடித்துக்கொண்டு வந்த சிறிது பலத்த காற்றில், இதழ் அமுதம் பருகிக்கொண்டிருந்த இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தனர். இருவருக்கும் ஏதோ ஒரு சந்தோஷமான மனநிலை; தாங்கள் முழுமை பெற்றது போல் ஒரு உணர்வு.

சிரிப்புடன் ஷா யாதவை பார்க்க, அவனோ ஷாவை பார்க்காமல் வேறெங்கோ பார்வையை பதித்து நின்றிருந்தான். அதில் சிறிது குழம்பியவள் “டூ யு பீல் ரெக்ரிட்டட் பார் வாட் ஹாப்பேன்டு நொவ்?” (Do you feel regretted for what happened now?) என்று கேட்க, அந்த வார்த்தையில் சட்டென்று யாதவ் அவளை பார்த்தான். அப்பொழுது தான் தெரிந்தது அவனது இரண்டு கன்னங்களும் ஏதோ ருச் தடவியதைப்போல் சிவந்து இருந்தது. ஷா என்ன டா இது என்பதுபோல் பார்க்க யாதவ் “ஐ யாம் பிளஷிங் பஜாரி…” என்க.

“ஹொவ் கியூட்…!”என்று கொஞ்சும் தோரணையில் கூறியவள் அவனது வலது கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தம்வைத்தாள்.

“ம்.ம்.” என்று குழந்தையாய் குழைந்த யாதவ், “தேங்க்ஸ்.” என்றவாறு ஷாவின் முகத்தை தனது கரங்களில் ஏந்தி அவளது நெற்றியில் மிக மெதுவாக மென்மையாகமுத்தமிட்டான்.

இந்த முத்தம் ஷாவிற்குள் ஏதோ சொல்லமுடியாத உணர்வை ஏற்படுத்தியது. இது வரை அறிந்திராத உணர்வு,உடல் லேசாக நடுங்கியதோ..?அந்த நடுக்கத்தை யாதவ் உணர்வதற்குள் அவன் கரங்களிருந்து தன்னை விடுவித்தவள் குழப்பத்துடன் அவனை பார்த்தாள்.

ஷாவின் திடீர் விலகளில், பார்வையில் குழம்பியவன் “என்ன ஆச்சு?”என்ற கேள்வியை கண்களில் ஏந்தி அவளை நோக்க,அதற்கு பதிலாக,தனது பார்வையை சட்டென்று மாற்றிக்கொண்டு சிரிப்புடன் ஒன்றும் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள் ஷா…

“சரி வா;போவோம்.ஹீரோவையும்,சினிமாட்டோகிராபரையும் காணோம்னு தேட போறாங்க.”என்று யாதவ் சிரிப்புடன் கூற,

அவனை ஒரு மாதிரி பார்த்தவள் “உனக்கு தெரியாதா..?இன்னைக்கு ஷூட்டிங் முடிச்சுருச்சு.எல்லாரையும் கட்டேஜ்க்கு போகச் சொல்லி டைரக்டர் சார் சொல்லிட்டாரு.”

“ஓஹ். அப்படியா. அப்ப நீ ஏன் போகாம இங்கே சுத்திகிட்டு இருக்க..?”என்று யாதவ் கேட்க,

“லொகேஷன் பார்த்துட்டு அப்டியே ஏதாவது போட்டோ எடுக்கலாம்னு வந்தேன்.”என்று யாதவிடம் கூறியவாறு காட்டின் உள்பகுதியை நோக்கி நடந்தாள் ஷா.

ஷாவுடன் சேர்ந்து நடந்த யாதவ்”நீ மட்டும் தனியாவா இதெல்லாம் பண்ணுவ..?எங்கே உன் கூட வாலு மாதிரி ஒருத்தன் சுத்துவான்ல உன் அருமை தம்பி?அறிவு இல்லை அவனுக்கு;இப்படி தனியா விட்டுருக்கான்.”என்று கோவமாக ஷாவை பார்த்து கேட்க,

நடையை நிறுத்திவிட்டு திரும்பி யாதவை நேராக பார்த்தவள் “ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத சரியா? உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கது வெறும் லஸ்ட் தான்? அதுவும் இங்கே நான் இனிமே இருக்க போற மூணு நாளுக்கு மட்டும் தான்.அதுக்கு அப்பறம், நீ யாரோ? நான் யாரோ? இனிமேல் இந்த மாதிரி கேள்விலாம் கேட்காதே.என் விசயத்துல தலையிடாதே.நானும் உன் விசயத்துல தலையிட மாட்டேன்.சரி தானே…” என்று ஷா கேட்க,

இவள் ஏன் இதற்கு இவ்வளவு கோவப்படுகிறாள் என்று புரியாமல் முழித்தவன் சரி சரி என்பது போல் தலையசைத்தான்.

முத்தம் கொடுப்பதுபோல் உதட்டை குவித்து யாதாவிற்கு ஒரு பறக்கும் முத்தம் கொடுத்தாள் ஷா. அதை பார்த்து சமநிலைக்கு வந்துவிட்ட யாதவ் அவளை அருகில் இழுத்து இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை இட்டான்..

இப்படியே இருவரும் ஏதேதோ பேசியவாறு மாலை மங்கும் வரை அங்கு சுற்றி திரிந்து விட்டு;காட்டேஜிற்கு நடந்தே சென்றனர்.

வேனிலிருந்தவர்கள் கேட்ட யாதவ் எங்கே? என்ற கேள்விக்கு,அவன் தனியாக வருவதாக கூறிவிட்டான் என்று பொய் கூறி வண்டியை எடுக்கவைத்தனர் நால்வர்க்குழு.

காட்டேஜை அடைந்த பிறகு யாதவும் ஷாவும் வந்தார்களா என்று பார்க்கக்கூட நால்வரில் ஒருவர் கூட நினைக்கவில்லை;தத்தம் துணையை அழைத்துக்கொண்டு வெளியே சுற்ற சென்றுவிட்டனர்;அந்த ஜோடிப்புறாக்கள்.அண்ணன் எப்ப சாவான்;திண்ணை எப்ப கிடைக்கும் என்ற பழமொழியில் வரும் தம்பியை போல்,இந்த ஷாவும் யாதவும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள்,தங்களுக்கு எப்பொழுது காதலிக்க நேரம் கிடைக்கும் என்ற காத்துக்கொண்டிருந்த அந்த இரட்டை ஜோடி,நேரம் கிடைத்ததும் தங்களது இணையுடன் பறந்துவிட்டது.

காட்டிலிருந்து நடந்தே காட்டேஜிற்கு வந்தடைந்த இருவரும்,தங்களது அறைக்குள் நுழைவதற்கு முன் ஒரு இதழ் முத்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

யாதவ் சென்று குளித்து உடைமாற்றிவிட்டு அப்படியே கட்டிலில் விழுந்துவிட்டான்…இரண்டு நாட்களாக அவனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நித்திராதேவி,இன்று ஷாவை போலே அவளும் யாதவை இருகரம் நீட்டி அணைத்துக்கொண்டாள்…

ஷாவோ உடையை மற்றும் மாற்றி விட்டு,இயக்குனரை தேடி சென்றாள்.ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்று முழுவதும் எடுத்த தொகுப்பை பார்ப்பர்.பிறகு மறுநாள் எங்கே எப்படி படப்பிடிப்பு நடக்கவேண்டும் என்று இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,உதவி இயக்குனர்கள் பேசுவார்கள்.அதற்காக இயக்குனரை தேடி சென்றாள்.

அது இது என்று அனைத்தையும் பேசிமுடிக்க இரவு எட்டுமணி ஆகிவிட்டது.

“வா ஷா.சாப்பிட போலாம்.”என்று இரவு உணவு உட்கொள்வதற்காக காட்டேஜில் இருந்த உணவகம் செல்ல ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்த வேதன்,அவரது அறையில் தன்னுடைய பொருள்கள் மற்றும் புகைப்பட கருவியை எடுத்துக்கொண்டிருந்த ஷாவைபார்த்து அழைத்தார்.

“ஹான்.இல்லை நீங்க போங்க சார்.நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் சார்.”என்று ஷா கூற,அவரும் சரி மா என்று சென்று விட்டார்.

ஷா தனது அறைக்கு சென்று புகைப்பட கருவியில் இருந்த புகைப்படங்களை தனது மடிக்கணினியில் ஏற்றி விட்டு இரவு உடைக்கு மாறி விட்டு சாப்பிட செல்வதற்காக கதவை திறக்க,நேற்று போல் இன்ற

மாற்றிக்கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது…

“இருங்க வரேன்.”என்று குரல் கொடுத்தவள் உடையை அணிந்துக்கொண்டு வந்து கதவை திறக்க,அங்கு தன்னிடம் இருக்கும் முப்பத்திரண்டு பற்களையும் ஷாவிற்கு காட்டியே தீருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு வந்தவனை போல் ஈஈஈஈ என்று இளித்தவாறு நீலநிற இரவுடையில் நின்றிருந்தான் யாதவ்.

அவனை பார்த்தவுடன் ஷாவிற்கும் தன்னாலே உதடுகள் தன்னை மீறி பிரிந்துவிட சிரிப்புடன் “என்ன டா வெள்ளை பன்னி?”என்று புருவம் உயர்த்தி கேட்க,அவளை மேலிருந்து கீழ் வரை நிதானமாக பார்த்தவன் “சேம் பின்ச்…!”என்று கூவியவன் ஷாவை அணைத்துக்கொண்டான்.

அவனது திடீர் அணைப்பில் தடுமாறியவள், ”எருமை.என்ன டா..”என்று தன்னை அணைத்திருந்தவனின் முதுகில் அடித்தவாறு கேட்க;இன்னும் அவளை இறுக்கியவன் அவளது தோளில் தனது சிரத்தை அழுந்த பதித்து இதழ் அவளது வெற்று தோளை வருட “நீயும் நானும் ப்ளூ கலர் பஜாரி..!”என்க.

அப்பொழுது தான் அதை உணர்ந்தவள் இதழ் சுழிந்த சிரிப்புடன் “உங்க ஊர்ல இப்படி தான் சேம் பின்ச் வைப்பிங்களா…”என்று ஷா கேட்க,அவளை அணைத்தவாறே ஆமாம் என்பதுபோல் தலையசைத்தவன்;அவளது தோளில் இருந்து கழுத்தோரம் திரும்பி ஆழ்ந்து சுவாசித்துஅவளது வாசத்தை தனக்குள் நிரப்பினான்யாதவ்.

“நீ என்ன perfume யூஸ் பண்ற..?”என்று ஷாவை விட்டு விலகியவாறு கேட்டான் யாதவ்.

“diorhomme intense …”என்று ஷா கூற,அவளை ஒருமாதிரியாக பார்த்த யாதவ் “அது ஜென்ட்ஸ் perfume தானே..!”என்று யாதவ் புரியாமல் கேட்க;

தன் மீது சாய்ந்திருந்ததால் கலைந்திருந்த யாதவின்முடியை சரிசெய்தவாறு “ஆமாம்.ஐ லைக் ஜென்ட்ஸ் perfume.”என்றுக் கூறினாள்.

“யு ஆர் டிபரென்ட் பிரம் அதர்ஸ் பஜாரி.”என்று மீண்டும் அவன் வழிய ஆரம்பிக்க;

“ஹான்.அதெல்லாம் இருக்கட்டும்.நீ எதுக்கு வந்த?”என்று ஷா கேட்க,

“நீ சாப்டியா ஆரு?” என்று யாதவ் கேட்க,ஷா “இல்லை.இனிமேல் தான் போனும்”என்று கூற,அப்ப வா போகலாம் என்பது போல் அவளது கரத்தை பிடித்து இழுத்துக்கொண்டு உணவகம் நோக்கி சென்றான் யாதவ்.ஷாவும்விரும்பியே அவனது இழுப்பிற்கு சென்றாள்.

உணவகத்தில் ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் யாரும் அவ்வளவாக இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இருந்தனர்.அங்கிருந்த சிலரும் கரம் இணைந்து இருவரும் வந்ததும் சிறிது சுவாரஸ்யத்துடன் கூடிய ஒரு பார்வையை செலுத்திவிட்டு அவர்களது சாப்பிடும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதெல்லாம் இந்த துறையில் மிக சாதாரணம்;ஒரு படம் ஆரம்பிக்கிறது என்றால் அதின் ஆரம்பத்திலிருந்து முடிவுக்குள் பல காதல்கள்,பல லஸ்ட்கள் வரும்.வந்த வேகத்தில் அதில் சென்றும் விடும்.

தங்களுக்கு தேவையான உணவுகளை தட்டில் எடுத்துக்கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தனர்.இருவரும் அங்கிருந்த விதவிதமான எந்த உணவையும் எடுக்காமல் சப்பாத்தி மற்றும் சென்னா மட்டுமே இருவரும் எடுத்துவந்திருந்தனர்.

சில நொடிகள் எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்தனர்.

அந்த மௌனத்தை முதலில் களைத்த ஷா”நீ ஒரு ரொமான்டிக் ஹீரோ தானே…”என்று இழுக்க,

“ஆமாம்.அதில உனக்கு என்ன சந்தேகம் பஜாரி..?எனக்கு தென்னிந்திய இம்ரான் ஹஸ்மினு பேரே இருக்கு.”என்று சட்டை காலரை உயர்த்ததா குறையாக யாதவ் கூறினான்.

“ஹ்ம்ம்.அப்ப நான் அப்படியே மயங்கி போகுற மாதிரி ஒரு பிக்கப் லைன் சொல்லு பார்ப்போம்.”என்று புருவம் உயர்த்தி ஒரு அழகுடன் ஷா கேட்க,அவளை இமைக்காமல் பார்த்த யாதவ்,பொது இடம் என்பதால் அவசரமாக ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி வைத்தான்.

அதில் சிரித்தவள் “கம் ஆன் மேன்,சொல்லு.”

“நீ இவ்வளவு ஏக்கமா கேட்கும் போது சொல்லாம இருப்பேனா;சொல்லுறேன்.பட் ஒன் கண்டிஷன்.நீ இம்ப்ரெஸ் ஆனாலோ இல்லாட்டி சிரிச்சலோ என் கூட இன்னைக்கு நைட் ஒரு படம் பார்க்கணும்.”என்று யாதவ் கேட்க ஷா சரி என்பது போல் தலையசைத்தாள்.

யாதவ் சில நொடிகள் யோசித்தான்.பிறகு,அவன் அமர்ந்திருந்த நாற்காலியை சிறிதுதள்ளிப்போட்டு ஷாவின் அருகில் வந்து அமர்ந்தவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

அந்த பார்வை ஷாவை எதுவோ செய்தது.அவனின் செயல்கள் ஏற்படுத்தாத மாயத்தை அவனது பார்வை செய்தது..”எருமை என்ன டா பண்றே வெள்ளை பன்னி”என்றவாறு இடதுகையால் அவனது நெஞ்சத்தில் கைவைத்து தள்ளினாள்.

அதில் தடுமாறியவன் நாற்காலியுடன் கீழே விழ தெரிய,வேகமாக சாப்பிடுவதை விட்டுவிட்டு ஷா அவன் அமர்ந்திருந்த நாற்காலியை கீழே விழுந்துவிடாமல் பிடிக்க;இவளும் சேர்ந்து கீழே விழுவதுபோல் வந்து எப்படியோ சமாளித்து இருவரும் தப்பித்தனர்.

ஷா அப்பொழுது தான் யாதவின் முகம் பார்க்க,மரண பயம் என்பார்களே அது தெரிந்தது.அவன் முகம் காட்டிய பாவத்தை பார்த்தவள் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள்;

அதில் சமநிலைக்கு திரும்பிய யாதவ் அவளை பார்த்து முறைத்தான்.அவனது முறைப்பை பார்த்தவள் சிரிப்பை கட்டுப்படுத்த முயல அது முடியாமல் போய்விட

“நீ ரொமான்டிக் ஹீரோ எல்லாம் வாய்ப்பு இல்லைராஜா…!”என்று கூறியவாறு கண்களில் நீர் வரும்வரை சிரித்தாள்.

“என்னை எப்போ டி ஆகவிட்ட..?பஜாரி.எப்படி ஒரு ரொமான்டிக் சீன் வரவேண்டியது இது தெரியுமா.”என்று அவளது கழுத்தை பிடித்துக்கொண்டுதலையில் இரண்டு மூன்று கொட்டு வைத்தான்யாதவ்.

இந்த காட்சியை ஷாவை தேடி வந்த மாஹிர் பார்த்தான்.அவனால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.ஷாவுடன் யாராவது இப்படி நடந்துகொள்ள முடியுமா.?பல வருடங்களாக காதலித்த சிவா கூட ஷாவுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்தது இல்லை;அவளை இப்படி செல்லமாகவோ,வினையாகவோ கொட்டியதோ தொட்டதோ இல்லை.ஆனால்,யாதவுடன் அவனது தமக்கை ஷா அனைத்து விதத்திலும் பொருந்தி போனாள்.

அருகே சென்று அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தவன் அவளுக்கு அலைபேசியின் மூலம் அழைப்பு விடுத்தான்.

ஒரே அழைப்பில் எடுத்திருந்தாள்.”ஹலோ தீதி..பாபா நே மாத்திரை லே லி ஹை;இப்ப சோ ரஹே ஹேன்.இப்ப தான் நர்ஸ் நே போன் பண்ணாங்க.”அப்பா மாத்திரை எல்லாம் சாப்பிட்டாராம்;இப்ப தூங்கிட்டு இருக்காராம்.நர்ஸ் இப்ப தான் போன் பண்ணி சொன்னாங்க. என்று கூறவேண்டிய செய்தியை கூறிவிட்டு அடுத்து ஷா எதுவும் கேட்கும் முன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

“யாரு போன்ல.?”என்று யாதவ் கேட்க,

“மாஹிர் தான்.சரி நீ பிக்கப் லைன் சொல்லு.இல்லாட்டி ஆண்ட்டி ஹீரோன்னு ஓத்துக்கோ.”என்று ஷா எங்கே அடுத்து அவன் ஏதவது கேள்விகள் கேட்டுவிடுவானோ என்று வேகமாக முந்தைய பேச்சிற்கு அவனை இட்டு சென்றாள்.

“அப்ப நீ ஆண்ட்டியா.?”என்று யாதவ் கண்களை சிமிட்டி கேட்க.,

சிரித்த ஷா “நான் உன் ரசிகை இல்லையே.!வெள்ளை பன்னி.வேணும்னா நீ என்னோட தீவிர விசிறினு சொல்லிக்கலாம்.”என்று ஷா யாதவை பார்த்து கூறினாள்.

நெருங்கி வந்து அவளது காதிற்கு கொஞ்சம் கீழே,கழுத்தின் ஆரம்ப பகுதியில் இடக்கரத்தின் பெருவிரலால் தடவியவாறு “அது என்னமோ உண்மை தான்.உன்னோட டை ஹார்ட் பான் பஜாரிநான்.”

“பாரேன். “என்று நீ எவ்வளவு ஐஸ் வைச்சாலும் எனக்கு தேவை பிக்கப் லைன் என்பதுபோல் ஷா கேட்க,அதற்கு அசட்டுச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன்”அப்ப நீ என் வாயில இருந்து பிக்கப் லைன் வாங்காம தூங்கமாட்ட..?சரி சொல்லுறேன்.எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.நான் எந்த பொண்ணையும் அப்டி கூப்பிட்டது இல்லை.உனக்காக ட்ரை பண்றேன்.”என்று யாதவ் நீண்ட விளக்கம் சொல்ல,

“தெரியும் சாமி.நீங்க ஒரு கற்புக்கரசர்;கண்ணகியோட கசின் ப்ரதர்னு…”

“ஸ்டார்ட் ஓகே வா..”என்று யாதவ் கேட்க

ஷா “சரி ,சொல்லு கேட்போம்..”

“உன்னோட போட்டோ ஒன்னு கிடைக்குமா.ப்ளீஸ்..!”யாதவ்

“எதுக்கு.?”

“சாண்டா கிட்ட காட்டணும்.எனக்கு இந்த கிறிஸ்துமஸ்கு என்ன வேணும்னு..”என்று கூற முகத்தை சுளித்து கட்டைவிரலை கீழ்நோக்கி காட்டி ஷா நல்லா இல்லை என்று கூறிவிட

“எனக்கே தெரியும்.இது கொஞ்சம் மொக்கைனு,நெக்ஸ்ட் சொல்லுறேன்.”

“சொல்லு.”

“மை லவ் பார் யு இஸ் லைக் டையேரியா….ஐ ஜஸ்ட் காண்ட் ஹோல்டு இட் இன்…!”(my love for you is like diarrhoea..i just can’t hold it in…!)

இதற்கு ஷா சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்”ச்சீ.!ச்சீ.!”என்று சிரிப்புடன் யாதவினது தோளிலே அடித்துக்கொண்டே கூற,அந்த அடியெல்லாம் சிரிப்புடன் வாங்கியவன் “ஆரு நீ சிரிச்சுட்டு என் கூட படம் பார்த்தே ஆகணும்.”என்று கூற சரி என்பதுபோல் தலையசைத்தாள்.

பின்பு இருவரும் கரங்களை கழுவிவிட்டு தங்களது காட்டேஜை நோக்கி நடந்துவந்தனர்.

 

error: Content is protected !!