admin

920 POSTS 560 COMMENTS
Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Mp15

மோகனப் புன்னகையில் 15

காலையிலேயே அத்தானின் வீட்டிற்கு வந்து விட்டாள் சுமித்ரா. விஜயேந்திரனுக்கு முக்கியமான வேலை இருந்ததால் அவன் வரவில்லை.

“சுமித்ரா! வாங்க வாங்க.” இது ரோஸி.

“வீடெல்லாம் ஓகே வா ரோஸி? வசதியா இருக்கா? குட்டிப் பையன் என்ன பண்ணுறான்?” கேட்டபடியே உள்ளே நுழைந்தாள் சுமித்ரா.

“எல்லாம் நல்ல வதியா இருக்கு சுமித்ரா. ரவி தூங்குறான். புது இடம் இல்லையா? அதால நைட் சரியாத் தூங்கலை. அதுதான் இப்போ தூங்குறான்.”

“அத்தான் எங்கே?”

“அப்பாவும் மகனும் தான் தூங்குறாங்க.”

“ஓ… நான் நேத்து இங்கிருந்து கிளம்பும் போதே அத்தைக்குக் கால் பண்ணிட்டேன். இந்நேரத்துக்குக் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க.”

“சுமித்ரா…”

“சொல்லுங்க ரோஸி. எதுக்குத் தயங்குறீங்க?”

“இல்லை… ரவியை அங்க நீங்க கூட்டிட்டுப் போறது சந்தோஷம் தான், இல்லேங்கலை. ஆனாலும்…”

“புரியுது ரோஸி. உங்க மனசோட பயம் எனக்கு நல்லாவே புரியுது. இருந்தாலும் யோசிச்சுப் பாருங்க. நீங்களும் அத்தானும் அந்த நொடியை எப்போ இருந்தாலும் சந்திச்சுத் தானே ஆகணும்?‌ எதுக்கு வீணா நாளைக் கடத்தணும்?”

“………….”

“அத்தை ரொம்ப நல்லவங்க ரோஸி. தன் பையன் இப்படிப் பண்ணிட்டானே ங்கிற ஆத்திரம் தானே தவிர அவங்க உங்களையெல்லாம் வெறுக்கலை. முன்னாடியாவது என்னைக் காரணம் காட்டிக் கோபப் பட்டாங்க. இப்போ அதுவும் சொல்ல முடியாதே.‌ சத்தம் போடுவாங்க ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. இல்லேங்கலை. ஏத்துக்குவோம். வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க?”

அதற்கு மேல் ரோஸியும் எதுவும் பேசவில்லை. சுமித்ரா சொல்வது நியாயம் தான் என்று அறிவிற்குப் புரிந்தாலும் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. 

இவர்களின் பேச்சுக்குரலில் குழந்தை விழித்துக் கொள்ள மகனைத் தூக்கியபடி ரூமை விட்டு வெளியே வந்தான் கரிகாலன்.

“குட்மார்னிங் அத்தான்.”

“குட்மார்னிங் சுமி.”

“குட்டிப் பையா குட்மார்னிங். வாங்க வாங்க.” குழந்தைக்காக அவள் கையை நீட்ட இப்போது கரிகாலனின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் ரவி.

“ஐயையோ! எங்கிட்ட வரமாட்டீங்களா?”

“இப்போ தான் தூங்கி முழிச்சிருக்கான் இல்லையா? அதான், கொஞ்ச நேரம் போனதும் வந்திடுவான். அதை விடு சுமி. உன்னோட அத்தை எப்படி? உங்கிட்ட நல்லாப் பழகுறாங்களா?”

அத்தானின் கேள்வி சுமித்ராவைக் கொஞ்சம் சங்கடப் படுத்தியது. லேசாகப் புன்னகைத்தவள் தலையைக் குனிந்து கொண்டாள். ரோஸியும் கரிகாலனும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

“சுமித்ரா!”

“குறைன்னு எதுவும் சொல்ல முடியாது அத்தான். அரண்மனையோட மருமகள் எங்கிற அந்தஸ்தை அவங்க என்னைக்கும் எனக்குத் தர மறுத்ததில்லை. எல்லாத்துக்குமே என்னைத்தான் முன்னிறுத்துவாங்க. ஆனா, அதைத் தாண்டி வேற எதையும் எதிர்பார்க்க முடியாது.”

“ம்… பேசுவாங்களா?”

“தேவை இருந்தா மட்டும். அவர் கூடவும் பேசுறதில்லை.”

“ஏன்?”

“ரொம்ப நாளாக் கல்யாணம் பண்ணாம இருந்தது. இப்போ அவங்க அப்பாக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது.”

“நீ சந்தோஷமா இருக்கியா சுமித்ரா?” இதைக் கரிகாலன் கேட்ட போது சுமித்ராவின் முகம் மலர்ந்து போனது.

“நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் அத்தான். அவங்க ரொம்ப நல்ல மாதிரி. வீட்டுல வேலை செய்யுற மனுஷங்க கிட்டக் கூட நல்லா சிரிச்சுப் பேசுவாங்க. எந்த வேறுபாடும் பார்க்க மாட்டாங்க.”

“தெரியும் சுமி. படிக்கிற காலத்திலேயே ராஜா அப்படித்தான். நல்லாப் பழகுற ரகம். ஆனா எங்களால தான் ஒரு எல்லைக்கு மேல நெருங்க முடியலை. அது அப்படியே பழகிப் போச்சு.”

“அவங்க அம்மாக்கிட்டக் கூட என்னை விட்டுக் குடுக்க மாட்டாங்க. அவங்க அப்படி இருக்கிறதாலேயோ என்னவோ, எனக்கு என்னைச் சுற்றி இருக்கிற குறைகள் புரிய மாட்டேங்குது.”

“இவ்வளவு பிரச்சினைக்கு நடுவுல எதுக்கு சுமித்ரா ஸ்டீஃபன் விஷயத்துல ராஜா இவ்வளவு அக்கறை எடுத்துக்கணும்?” கரிகாலனின் பேச்சில் திடுக்கிட்ட சுமித்ரா ரோஸியைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். 

ரோஸியையும் வைத்துக்கொண்டு அத்தான் இத்தனை வெளிப்படையாகப் பேசியது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் ரோஸியின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இயல்பாகவே இருந்தாள்.

“உங்களோட வாழ்க்கையில பிரச்சினை வரும்னு தெரிஞ்சும் எதுக்கு இந்த விஷப் பரீட்சை?”

“அப்படியில்லை அத்தான். ஸ்டீஃபன் மேல எந்தத் தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தோணலை. பொண்ணு தான் ஆசைப்பட்டிருக்கு. அதை ஸ்டீஃபனுக்கும் தெரியப்படுத்தி இருக்கு. இது சரியா வராதுன்னு புரிஞ்சிக்கிட்டு ஸ்டீஃபன் புத்திதான் சொல்லியிருக்கார். அதைத் தாங்கிக்க முடியாமத் தான் மாத்திரையை சாப்பிட்டுட்டா.”

“என்ன முட்டாள்த்தனம் இது சுமித்ரா. ஸ்டீஃபன் கிட்டச் சொல்லி என்னால புரிய வைக்க முடியும். ஸ்டீஃபனும் புரிஞ்சுக்கிற பையன் தான். ராஜா இடையில நிக்குறதால என்னால எதுவுமே பண்ண முடியலை.”

“இல்லை அத்தான். நானும் அவங்க கிட்ட பேசிப் பார்த்தேன். ஆனா அவங்க எதையும் ஏத்துக்கிற மனநிலையில இல்லை. அவங்க அனுபவிச்ச வலியை மங்கையை அனுபவிக்க விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

“இதால உங்க வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வரும் சுமித்ரா.”

“அதைப்பத்தி அவங்க கவலைப் படவேயில்லை. மங்கைக்கும் வாக்குக் குடுத்திருக்காங்க. இந்தக் கல்யாணத்தை எப்பாடு பட்டாவது நடத்திக் குடுப்பேன்னு.”

“ஓ…” ஒரு பெருமூச்சோடு பேச்சை நிறுத்திக் கொண்டான் கரிகாலன். இதனால் இன்னும் எழப்போகும் பிரச்சினைகள் அவன் கண் முன் வரிசை கட்டி நின்றன. 

‘ராஜா’ என்பதைத் தாண்டி விஜயேந்திரன் இப்போது அவர்கள் வீட்டு மாப்பிள்ளை. அந்த வார்த்தைக்குண்டான மரியாதையைக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்!

இதுவே வேறு யாருமாக இருந்திருந்தால் முழு மூச்சாக எதிர்த்திருப்பான். ஆனால் முன்னே நிற்பது விஜயேந்திரன் எனும் போது அமைதியாகக் தான் போக வேண்டி இருந்தது.

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

“அம்மா… அத்தை…” அழைத்தபடியே உள்ளே நுழைந்தாள் சுமித்ரா. துவாரகா விற்கு வந்திருந்தாள். கையில் ரவிவர்மன்.

“அடடே! சுமித்ரா வா வா. இது யாரு குழந்தை?” சமையலறையிலிருந்து வந்த தில்லைவடிவு ஆச்சரியமாக நின்று விட்டார். சுமித்ராவின் பெற்றோர் மாமா சங்கரன் எல்லோரும் அப்போது வீட்டில் தான் இருந்தார்கள். 

“அதை விடு அத்தை. குழந்தை எப்படி இருக்கான்? அதை முதல்ல சொல்லு.”

“ராஜா கணக்காத்தான் இருக்கான். வெள்ளைக்கார தொரை மாதிரியில்லை இருக்காரு. யாரு குழந்தை சுமி இது?” குழந்தையின் கன்னத்தை வழித்து முத்தமிட்ட வடிவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“வெள்ளைக்காரத் தொரை தான் அத்தை. ஏன்னா ஐயா கனடா வில இருந்து இல்லை வந்திருக்காரு.” சுமித்ராவின் வார்த்தைகளில் அத்தையின் முகத்தில் அனல் பறந்தது. வீட்டிலிருந்த மற்றவர்கள் அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

“ஏன் அத்தை ஒன்னும் பேச மாட்டேங்குறே? யார் குழந்தை யார் குழந்தை ன்னு இவ்வளவு நேரமும் கேட்டியே… இந்தக் குழந்தையை முதல் முதலா பார்த்தப்போ எனக்கு உன்னைப் பார்த்த மாதிரித் தான் இருந்தது.” ஓர் நொடி அத்தையின் கண்கள் குழந்தையை ஆசையாகப் பார்த்தது.

“உன்னோட வாரிசு அத்தை. உன்னோட ரத்தம். ரெண்டு வருஷம் ஏற்கனவே வீணாப் போச்சு. இன்னும் மூனு வாரம் தான் இந்தியாவுல இருப்பாங்க.‌ அதுக்குள்ள உன் பேரனைக் கொஞ்சி முடிச்சுக்கோ.” புன்னகையோடு பேசினாள் சுமித்ரா. அத்தையின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

“வெளியே போடீ!” அத்தையின் சத்தத்தில் குழந்தை பயந்து போய் சுமித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது.

“அத்தை! எது பேசுறதா இருந்தாலும் அமைதியாப் பேசு. குழந்தை பயப்பிடுறான் பாரு.” சுமித்ராவும் அமைதியாகவே ஒரு அதட்டல் போட்டாள்.

“எங்கேடீ அவன்? உன்னோட நொத்தான். உன் கையில குழந்தையைக் குடுத்து சமாதானத் தூது அனுப்பிட்டு அவன் எங்கே மறைஞ்சு நின்னு வேடிக்கை பார்க்குறான்?”

“அத்தை, தேவையில்லாமப் பேசக்கூடாது. நான் ரவியை இங்க கூட்டிட்டு வர்றதுக்கே அத்தான் சம்மதிக்கலை. நான் தான் சண்டை போட்டுக் கூட்டிட்டு வந்திருக்கேன்.”

“ஓ! ஐயாக்கு அது வேற பிடிக்கலையோ?”

“வடிவு!” இப்போது சங்கரன் ஒரு அதட்டல் போட்டார். மனைவியின் வார்த்தைகள் தடிப்பது அவருக்குப் புரிந்தது.

“புரிஞ்சுக்கோ அத்தை. அத்தான் பண்ணினது தப்புத் தான், இல்லேங்கலை. அதுக்காக இன்னும் எத்தனை நாளைக்கு அவங்களை ஒதுக்கி வெப்பே? இத்தனை நாளா என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டாங்கன்னு சொன்னே. இப்போ தான் நான் நல்லா இருக்கேனே. இனியும் எதுக்கு வீணா விரோதத்தை வளர்க்குறே.” 

“ஆமா! விரோதம் தான். எங்க தலையில மண்ணை அள்ளிக் கொட்டிட்டு எவளோ ஒருத்தி தான் பெரிசுன்னு போனவன் மேல மனசு நிறைஞ்ச விரோதம் தான். என்ன பண்ணச் சொல்லுறே? நான் இப்படித்தான்.” ஆங்காரமாக வந்தது வடிவின் குரல்.

ஏற்கெனவே அங்கு நடந்த விவாதத்தால் பயந்து போய் சுமித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தை இப்போது வடிவு போட்ட சத்தத்தில் வீறிட்டு அழ ஆரம்பித்தது. 

“ஐயையோ! குட்டிப் பையன் எதுக்கு அழறீங்க? பாட்டி உங்களை ஒன்னும் சொல்லலை கண்ணா. இங்கே பாருங்க.” சுமித்ரா எவ்வளவு சமாதானம் பண்ணியும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

முகம் சிவந்து போய் கண்களில் நீரோடு அழுதபடி இருந்த அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்த போது அங்கிருந்த அத்தனை பேருக்கும் உருகி விட்டது.

எப்போது எப்படி வந்திருந்தால் என்ன? இப்போது இங்கு அழுது கொண்டிருப்பது கரிகாலனின் குழந்தை. அது இல்லையென்று ஆகிவிடுமா?

தமிழ்ச்செல்வி ஓடி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். எத்தனை சமாதானம் செய்த போதும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

வெளி வேலையாகப் போயிருந்த விஜயேந்திரன் வேலையை முடித்த கையோடு நேராகக் கரிகாலன் வீட்டிற்குத் தான் வந்தான். மனைவியின் குணம் அவன் நன்கறிந்தது என்பதால் அவன் அரண்மனைக்குப் போகவில்லை.

“வாங்க ண்ணா.” ரோஸி தான் ஓடிவந்து வரவேற்றாள்.

“சுமித்ரா எங்கம்மா?”

“ரவியைத் தூக்கிக்கிட்டு அவங்க வீடு வரைக்கும் போயிருக்காங்க.”

“கரிகாலன்?”

“அவங்களும் கூடப் போயிருக்காங்க ண்ணா.” ரோஸியின் முகத்தில் பதட்டமா, கவலையா என்னவென்று புரிந்து கொள்ள முடியாத உணர்வொன்று தெரிந்தது.

“இதுல கவலைப்பட என்ன இருக்கு ரோஸி? எப்ப இருந்தாலும் அங்க போய்த்தானே ஆகணும்?”

“……………”

“நான் பார்த்துக்கிறேன். கவலைப்படத் தேவையில்லை. வீடெல்லாம் சௌகரியமா இருக்கா?”

“இருக்கு ண்ணா.”

“அப்போச் சரி. நான் கிளம்புறேன் ரோஸி.” வந்த வேகத்திற்கு விஜயேந்திரனும் துவாரகா நோக்கி காரைத் திருப்பி விட்டான்.

எவ்வளவோ மறுத்தும் கேளாமல் குழந்தையோடு கிளம்பிய சுமித்ராவைத் தனியே அனுப்ப மனமில்லாமல் கூடவே போனான் கரிகாலன். இருந்தாலும் வீட்டுக்குள் போக தைரியம் இருக்கவில்லை. காரிலேயே அமர்ந்து விட்டான்.

குழந்தையின் அழுகுரல் கேட்டபோதே வெளியே இருந்த கரிகாலனுக்கு உடம்பெல்லாம் பதறியது. கட்டுப் படுத்திக் கொண்டான். ஆனால் அழுகை ஓயாமல்ப் போகவும் அதற்கு மேல் அங்கே உட்கார்ந்திருக்க முடியாமல் வீட்டிற்குள் போனான்.

கரிகாலனை அப்போது அங்கு யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை. திடுதிடுப்பென்று வந்து நின்ற குழந்தையே அவர்களுக்கு ஆச்சரியம் என்றால், கரிகாலன் வந்து நின்ற போது உறைந்து போனார்கள்.

ஆனால் இது எதுவும் தில்லை வடிவிடம் எடுபடவில்லை. மகனைக் கண்ட மாத்திரத்தில் ஆத்திரம் தலைக்கேற கரிகாலனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அத்தை அறைவதற்கும் விஜயேந்திரன் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“அத்தை!” சுமித்ரா தான் கத்தினாள்.

“வாயை மூடுடி!” பதிலுக்கு தில்லைவடிவும் சத்தம் போட்டார். இது எதையும் கரிகாலன் கண்டு கொள்ளவில்லை. நேராகத் தமிழ்ச் செல்வியிடம் போனவன் குழந்தையை வாங்கிக் கொண்டான். 

அப்பாவைக் கண்டதும் குழந்தை பாய்ந்து தாவிக் கொண்டான். கரிகாலனின் கழுத்தைக் கட்டிக் கொண்ட ரவி அங்கே முகம் புதைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த போது செல்விக்குக் கண்கள் கலங்கியது. 

தான் வளர்த்த பையன்… இன்று அவனுக்கே ஒரு குழந்தை இருக்கிறது. கண்கள் கலங்கக் கரிகாலனைப் பார்த்துப் புன்னகைத்தார் செல்வி. கரிகாலனும் பெயருக்குப் புன்னகைத்து வைத்தான். மனதுக்குள் ஒரு புயலே அடித்தது.

“இப்போ எதுக்கு மாப்பிள்ளை இவன் இங்க வந்திருக்கான்?”

“அத்தை! நீ கொஞ்சம் அமைதியாவே இருக்க மாட்டியா?” விஜயேந்திரனிடம் கேட்ட கேள்விக்கு சுமித்ரா பதில் பேசினாள்.

“அம்மா! கரிகாலன் பண்ணினது தப்புத் தான் இல்லேங்கலை. அதுக்காக இன்னும் எத்தனை நாளைக்கு அவனைத் தண்டிப்பீங்க? மறந்துடுங்கம்மா.”

“எதை மாப்பிள்ளை மறக்கச் சொல்லுறீங்க? நம்ம வீட்டுப் பொண்ணு வாழ்க்கை எப்படிப் போனாலும் பரவாயில்லை. எவளோ ஒருத்தி தான் முக்கியம்னு போனானே அதை மறக்கச் சொல்லுறீங்களா? ஊரே எங்களைக் கேள்வியாக் கேட்டப்போ இதோ… இங்க தொங்காம இன்னைக்கு வரைக்கும் உசிரோட நிக்கிறோமே, அதை மறக்கச் சொல்லுறீங்களா?” வீட்டின் உத்தரத்தை நோக்கிக் கையைக் காட்டிப் பேசினார் தில்லை வடிவு.

அத்தையின் பேச்சில் இருந்த நியாயம் விஜயேந்திரனுக்குப் புரிந்தாலும் நிலைமையை இப்போது சமாளிக்க வேண்டுமே. சங்கரனைத் திரும்பிப் பார்த்தான் அரண்மனைக்காரன்.

‘நீங்களாவது கொஞ்சம் பேசக்கூடாதா!’ என்ற இறைஞ்சல் அதில் இருந்தது.

“அவ பேசுறது எல்லாமே நியாயம் மாப்பிள்ளை. நாங்க அவனை வளர்த்ததை விட இதோ… இந்த நம்பி வளர்த்தது தான் அதிகம். வேலைக்காக ஊர் ஊரா அலைஞ்சவன் நான். இந்த நம்பிக்குத் தான் தங்கை பையன் எங்கிற கடமை இருந்தது. இந்தச் செல்விக்கு என்ன தேவை சொல்லுங்க? பெத்த புள்ளை மாதிரி பார்த்துக்கிட்டா. அதுக்கு இவன் பண்ணின கைம்மாறு இதுதானா?” சங்கரனும் தன் பங்கிற்கு நெருப்பைக் கொளுத்திப் போட்டார்.

“விடுங்க அண்ணா! இவ்வளவு காலம் கழிச்சு வீட்டுக்கு வந்த பையனை ஆளாளுக்கு நிக்க வெச்சுக் கேள்வி கேக்குறது நல்லாவே இல்லை. ஆசைப்பட்ட பொண்ணைக் கட்டிக்கிட்டான். அது அவ்வளவு பெரிய குத்தமா?” இது செல்வி.

“ஆமாடியம்மா! இப்போ நீ இதுவும் பேசுவே… இன்னமும் பேசுவே. அன்னைக்கு உம்பொண்ணு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நின்னப்போ தலையில அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வெச்சயே! அது மறந்து போச்சா?”

“எதையும் மறக்கலை அண்ணி. இதே கரிகாலன் அன்னைக்கு என் கண்ணு முன்னாடி வந்து நின்னிருந்தா இன்னைக்கு நீங்க விட்ட அறையை அன்னைக்கு நானே விட்டிருப்பேன். இல்லேங்கலை. அதுக்காக? அந்த வன்மத்தை இன்னும் மனசுல வச்சுக்கிட்டு நம்ம குழந்தையை நாமே வதைக்கிறது நல்லா இல்லை அண்ணி. அந்தச் சின்னக் குழந்தை என்ன பண்ணிச்சு? இவ்வளவு சொந்தம் இருந்தும் யாருமே இல்லாம வளருது. இது பாவம் இல்லையா?”

“நீ என்ன சொன்னாலும் என்னால எதையும் ஏத்துக்க முடியாது செல்வி. முதல்ல அவனை வெளியே போகச் சொல்லு.” வடிவின் முடிவு உறுதியாக இருக்க அம்மாவை ஒரு தரம் திரும்பிப் பார்த்தான் கரிகாலன். அந்த முகத்தில் இருந்த பிடிவாதம் அவனுக்கு லேசான வருத்தத்தைக் கொடுத்தாலும் ஒரு புன்னகையோடு நகர்ந்து விட்டான். இங்கே இதற்கு மேலும் நின்றால் அம்மாவின் கோபம் இன்னும் அதிகமாகும் என்று அவனுக்குத் தெரியும்.

“கரிகாலா!” செல்விக்கு மனது பொறுக்கவில்லை. அழுதழுது பின் அப்பாவின் தோளில் தூங்கி விட்டிருந்த குழந்தையைச் சுமந்தபடி காரை நோக்கிப் போன கரிகாலனின் பின்னோடு ஓடினார்.

“என்னப்பா நீ? இத்தனை வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்திட்டு எதுவுமே சாப்பிடாமப் போறே?”

“அத்தை! உனக்கு எம்மேல கோபமே வரலையா?”

“வந்தது கரிகாலா. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னைக் கொல்லலாம் போல ஆத்திரம் வந்தது. ஆனாலும் அதைப் பிடிச்சிக்கிட்டுத் தொங்க முடியலை. நீயும் எனக்குப் பிள்ளை தானே? அப்படியிருக்கும் போது எப்படி டா என்னால உன்னை வெறுக்க முடியும்?”

“அத்தை!” கரிகாலனின் கண்கள் கலங்கியது.

“ஏன் உன் வீட்டுக்காரியைக் கூட்டிக்கிட்டு வரலை?”

“அத்தை… அது வந்து…”

“எதுக்கு மென்னு முழுங்கிறே. உங்கம்மாக்குப் பயந்துக்கிட்டு கூட்டிட்டு வரலை. அதுதானே? எனக்கு அது நல்லாப் புரியுது. நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா?” கிசுகிசுப்பான குரலில் கேட்டார் செல்வி.

“வா அத்தை…”

“ஷ்… மெள்ளப் பேசு. உங்கம்மா காதுல விழுந்தது… என்னைத் தொலைச்சிடுவா. ஆமா… உம் பொண்டாட்டியோட பெயர் என்ன?”

“ரோஸி.”

“பிடிச்சது தான் பிடிச்சே. நம்ம ஜாதியில இருந்து ஒரு பொண்ணாப் பார்த்து பிடிச்சிருக்கப் படாது?”

“நான் என்ன பண்ணட்டும் அத்தை? எனக்கு அவளைத் தானே பிடிச்சிருந்தது?”

“ஆமா! விளக்கம் மட்டும் நல்லாச் சொல்லு. எப்படித்தான் இந்தக் காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் இத்தனை சுலபமாப் போச்சோ? எனக்கு இதையெல்லாம் ஜீரணம் பண்ணுறது கஷ்டமா இருக்கு கரிகாலா.”

“ரோஸி ரொம்ப நல்ல பொண்ணு அத்தை.”

“ஐயையோ! நான் அந்தப் பொண்ணைத் தப்பாப் பேசலை ப்பா. இன்னொரு மதத்துப் பொண்ணு. அவங்க நடைமுறை, பழக்க வழக்கங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கும். நாள், பண்டிகை எல்லாம் வேறையா இருக்கும். எப்படி டா?” செல்வியின் கவலையில் கரிகாலனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. இருந்தாலும் விவாதிக்காமல் விட்டு விட்டான்.

ரோஸியுடனான அவனது இனிமையான இல்லறம் இவர்களுக்கெல்லாம் தெரிய வரும் போது இந்தக் குறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல்ப் போகும் என்று அவனுக்குப் புரிந்தது.

“அது சரி… உன்னோட மாப்பிள்ளை எப்படி அத்தை?”

“தங்கம் கரிகாலா.” அவசரமாக வந்தது பதில்.

“எம் பொண்ணை எதுக்கு ஆண்டவா இப்படிச் சோதிக்கிறேன்னு நான் அழாத நாளில்லை. இப்படியொரு மனுஷனோட வாழத்தான் அவ அத்தனை நாளும் காத்திருந்திருக்கா போல.”

“ம்… சந்தோஷமா இருக்காங்க இல்லை அத்தை?”

“மாப்பிள்ளை எம் பொண்ணை சந்தோஷமா வெச்சிருக்காங்க கரிகாலா. மத்ததெல்லாம் எனக்குத் தெரியாது. தெரியவும் நான் பிரியப்படலை.”

“ம்…”

“சரி நீ கிளம்பு. குழந்தை பாவம் தூங்கிட்டான். ரவி ன்னு சுமித்ரா கூப்பிட்டா. வெள்ளைக்காரக் குழந்தை மாதிரி தான் இருக்கான். என் கண்ணே பட்டிருக்கும். வீட்டுக்குப் போனதும் சுத்திப் போடு.”

தலையை ஆட்டியபடி கிளம்பினான் கரிகாலன். வீட்டுக்குள் நடந்திருந்த பிரளயங்களையெல்லாம் தாண்டி இப்போது மனது நிறைந்து போயிருந்தது. 

உடனேயே ரோஸியைப் பார்த்து நடந்தது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல தோன்றவும் சட்டென்று கிளம்பினான். 

விஜயேந்திரனும் வந்திருப்பதால் சுமித்ரா அந்தக் காரில் போய்க் கொள்ளட்டும் என்று நினைத்தவன் சுமித்ரா வந்திருந்த காரில் போய்விட்டான். 

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

புரண்டு படுத்தாள் சுமித்ரா. தூக்கம் வராமல் அவளைப் பாடாய்ப் படுத்தியது. விஜயேந்திரன் வேறு இன்னும் வீடு வந்து சேரவில்லை. 

அன்றைய நிகழ்வுகளை நினைத்த போது மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. கடைசி வரை அத்தை இறங்கி வரவில்லை. அத்தை தான் அடம் பிடித்தார்கள் என்றால் மாமா வும் அதற்கு ஆதரவாக நின்றது இன்னும் வேதனையாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். வேறு என்ன தான் செய்வது?

மகன் தங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்பதை விட சுமித்ராவிற்குத் துரோகம் பண்ணி விட்டான் என்ற கருத்தே மேலோங்கி நிற்பது சுமித்ராவிற்கு அத்தனை பிடித்தமாக இருக்கவில்லை.

இத்தனை நாளும் அந்த வருத்தம் இருந்ததில் ஒரு நியாயம் இருந்தது. இப்போதும் என்ன? ‘விஜியை விடவா கரிகாலனால் தனக்கொரு நல்ல வாழ்க்கையைத் தந்து விட முடியும்?’

கதவு திறக்கும் ஓசை கேட்கவும் எழுந்து உட்கார்ந்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் தான் வந்து கொண்டிருந்தான்.

“விஜி…”

“இன்னும் தூங்கலையா சுமி?”

“சாப்பிட்டீங்களா?”

“அதெல்லாம் ஆச்சு. நீ தூங்கு.”

“தூக்கம் வரலை விஜி.”

“என்னாச்சு?” 

“ஒன்னுமில்லை… நீங்க குளிச்சிட்டு வாங்க.” சொன்னவள் அவனுக்கு டவலை எடுத்து நீட்ட, மனைவியைப் பார்த்த படியே பாத்ரூமிற்குள் போனான் விஜயேந்திரன்.

ரூமிற்குள் இருக்கப் பிடிக்காமல் நந்தவனத்திற்கு வந்திருந்தாள் சுமித்ரா. மடல் விரித்திருந்த மல்லிகைப் பந்தல் மனதை மயக்கியது.

நான்கைந்து பூக்களைப் பறித்தவள் தலையில் சொருகிக் கொண்டாள். நிலவும் அவளைப் போல நட்சத்திரப் பூக்கள் புடை சூழ வானில் உலா வந்து கொண்டிருந்தது. 

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த கணவன் மனைவியைத் தேடினான். கதவு திறந்திருக்கவும் வெளியே வர சுமித்ரா நந்தவனத்தில் நிற்பது தெரிந்தது. ஒரு புன்னகையோடு நெருங்கியவன் தானும் தன் பங்கிற்கு பூக்களைப் பறித்து அவள்  கூந்தலில் வைத்து விட்டான்.

“விஜி…”

“ம்…”

“வீட்டுல நடக்கிற எதுவும் எனக்குப் பிடிக்கலை.”

“எல்லாம் சட்டுன்னு சரியாகும்னு எதிர்பார்க்கக் கூடாது சுமித்ரா.”

“நான் அதைச் சொல்லலை.” கணவன் புறமாகத் திரும்பினாள் பெண். அவன் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.

“எதுக்கு இன்னும் அத்தான் கூட என்னைச் சேர்த்துப் பேசுறாங்க? எனக்கு அது பிடிக்கலை.”

“எனக்கும் தான் பிடிக்கலை.” நிதானமாக வந்தது அவன் பதில்.

“அடுத்த முறை அங்க போகும் போது நீங்க சொல்லுங்க விஜி. நல்ல காலம் இன்னைக்கு ரோஸி அங்க இல்லை. இருந்திருந்தா இவங்க பேசுறதைக் கேட்டு அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு வருத்தமா இருந்திருக்கும், இல்லை விஜி?”

“ம்…” தன் தோளில் சாய்ந்த மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்தான் அரண்மனைக்காரன்.

“விஜி…”

“என்ன டா.”

“அந்தக் குட்டிப் பையன் எவ்வளவு அழகா இருக்கான் இல்லை!” இப்போது விஜயேந்திரனின் முகத்தில் லேசான புன்னகை வந்தது. மனைவி எதற்கு அடிப்போடுகிறாள் என்றும் புரிந்தது. இருந்தாலும் பிடி கொடுக்காமல் பேசினான்.

“குழந்தைங்க ன்னாலே அழகுதானே அம்மு.”

“அவ்வளவு தானா?”

“வேற என்ன சுமி?” வேண்டுமென்றே கேட்டான்.

“என்னோட சுமித்ரா கேட்டு என்னால எதையுமே மறுக்க முடியாதுன்னு அன்னைக்குப் பெரிய டயலாக் எல்லாம் பேசி ஸ்டீஃபன் கிட்ட சொல்லி அனுப்பி இருந்தீங்க. எல்லாம் போச்சா?”

“நீ எங்கிட்ட எதுவுமே கேக்கலையே சுமி.” குறும்பாக வந்த அவன் குரலை அவள் ரசிக்கவில்லை.

“ஏன்? நான் கேக்கலைன்னா உங்களுக்கு எம் மனசுல என்ன இருக்குதுன்னு புரியாதா?” அவள் குரலில் இப்போது கோபம் இருந்தது. மனைவியின் தோள்களைப் பிடித்துத் தனக்கெதிரே நிறுத்தினான் கணவன்.

“கரிகாலனோட கையைப் பிடிச்சிக்கிட்டு குட்டியா ஒரு பொண்ணு நடந்து வந்தப்போ பாசம் தான் வந்திச்சு. அதே பொண்ணை பாவாடை தாவணியில பார்த்தப்போ தான் கரிகாலனோட மாமா பொண்ணு மட்டும் வளரலை, நாமளும் வளருறோம்னு புரிஞ்சுது. அதே பொண்ணு புடவை கட்டிக்கிட்டு கோயில் தூண் பின்னாடி நின்னு எட்டிப் பார்த்தப்போ காதல் ன்னா என்னன்னு முதல் முதலா புரிஞ்சுது. அந்த உணர்வு என்னன்னு முழுசா புரியுறதுக்கு முன்னாடியே அவ எனக்கு இல்லைன்னு ஆகிப்போயிட்டா. ஆனாலும் அவளை நான் காதலிச்சேன். வலிக்க வலிக்க முழுசா அவளை அஞ்சு வருஷம் நான் காதலிச்சேன். கடவுளுக்கு எம்மேல கருணை இருந்தது. முழுசா அவளை எம்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினாரு. அடேய் மடையா! கனவுல மட்டும் காதலிச்சது போதும். இந்தா பிடி, நிஜத்துல காதலி ன்னு எங்கிட்ட உன்னை வந்து கொடுத்தாரு. அந்தக் காதலை இன்னும் கொஞ்ச நாள் அனுபவிக்காம உடனேயே மூட்டை கட்டி வெக்கச் சொல்லுறியா அம்மு?” 

“ம்ப்ச்… போங்க விஜி. நீங்க என்னை ரொம்பவே ஏமாத்திட்டீங்க.” சலிப்போடு சொன்னவள் ரூமை நோக்கிப் போய்விட்டாள்.

போகும் தன் பேரழகையே இமைக்காமல் பார்த்திருந்தான் விஜயேந்திரன். முகத்தில் அழகானதொரு சிரிப்புத் தோன்றியது. 

அவள் கோபம், சலிப்பு, ஏமாற்றம் எல்லாம் ஏனோ அவனுக்கு ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. 

தான் அத்தனை தூரம் உறுதியாக இருக்கும் தீர்மானங்களை எல்லாம் கூட அவள் ஒற்றை முகபாவம் சரியச் செய்து விடுவதை நினைத்த போது அவன் சிரிப்பு இன்னும் பெரிதானது.

‘இவள் இந்த அரண்மனைக்காரனை ஆட்டிப் படைக்கும் ராட்ஷசி’ ஆனால் அது கூட அவனுக்கு இனித்தது.

 

இன்னும் என்னை வெகுதூரம் கூட்டி செல்லடி…

பண்ணிசையில் பாடங்கள் மாற்றிச் சொல்லடி…

கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி…

கண் அசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி…

 

Tk43

அத்தியாயம் – 43

பெங்களூர் வந்து இறங்கும் வரை தோழியை மறந்திருந்த ஜெயாவிற்கு அப்பொழுதுதான் ருக்மணியின் நினைவே வந்தது.. 

“ஐயோ இப்போ என்ன பண்றது என்று தெரியல.. இனிமேல் நான் அவளை எப்படி சமாளிக்க போகிறேனோ..” என்று காரில் ஏறியதில் இருந்தே தனியாக புலம்பிக்கொண்டே வந்த மனைவியை குறும்பு புன்னகையுடன் கவனித்தவன்,

“ஜெயா இப்போ எதுக்கு இப்படி புலம்பற..” கள்ளச்சிரிப்புடன் கேட்க, “என்னது புலம்புகிறேனா? அடப்பாவி..” கணவனின் முதுகில் ‘சட்’ என்று ஒரு அடிப்போட்டாள்..

“என்னடா மலர் தனியாக புலம்புதேன்னு கேட்ட மலராமல் என்னோடு அக்கப்போர் பண்ணுது..” என்று தனியாக புலம்பிய பிரபாவோ, “என்னாச்சு ஜெயா..” சாலையில் பார்வையை பதித்தவண்ணம் கேட்டான் பிரபா..

“பிரபா இன்னைக்கு ருக்மணிக்கு மேரேஜ் முடிஞ்சிருக்கும். இப்போ என்ன பண்றது. உன்னோட சிந்தனையிலேயே இருந்ததில் அவளோட திருமணத்தையே மறந்துவிட்டேன்..” என்றவள் வருத்ததுடன்..

மறுகரத்தில் அவளின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்த பிரபா, “ருக்மணி உன்னை புரிஞ்சிக்குவா.. நீ ஃபீல் பண்ணாத மலர்..” என்றான் அவன் நிதானமாகவே..

“திருமணத்திற்கு நான் வருவேன் என்று ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பா..” என்றதும் பிரபா எதையோ நினைத்துகொண்டு வாய்விட்டு சிரிக்க, “எதுக்குடா சிரிக்கிற..” என்று கோபத்துடன் கேட்டாள் ஜெயா..

“அவள் உன்மேல் எங்கே கோபமாக இருக்க போறா, ஏற்கனவே பெருமாள் பெயரில் கணவன் வேண்டும் என்று கேட்டுட்டு இருந்தாள். இப்போ சீனிவாசன் கிடைத்தும் அந்த பெருமாளையே மறந்திருப்பாள்..” என்றவன் மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான்..

அப்பொழுதுதான் அவனுக்கும் ருக்மணி பற்றிய ஒரு விஷயம் ஞாபகம் வர, “மலர் உன்னிடம் சொல்ல மறந்துட்டேன். அன்னைக்கு கோவிலில் என்ன நடந்தது தெரியுமா?” என்றவனை புரியாத பார்வை பார்த்தாள் ஜெயா..

“இந்த விஷயம் நடந்து எப்படியும் ஒரு மூன்று மாசம் இருக்கும். நீ ருக்மணியை இங்கே பெங்களூர் வர சொன்னதற்கு மறுவாரம் நடந்த விஷயம்..” அன்னைக்கு கோவிலில் நடந்த விஷயத்தை அவளிடம் சொல்ல தொடங்கினான்.. 

அன்று சனிக்கிழமை பிரபா எப்பொழுதும் போலவே கோவிலுக்கு செல்ல அங்கே சீனிவாசனை எதர்ச்சியாக சந்தித்தான். இருவரும் தோளைப் பற்றி பேசியபடியே கோவிலைச் சுற்றி வந்தனர்.

அப்பொழுது பெருமாள் முன்னே நின்று நெய்தீபம் ஏற்றுவதைப் பார்த்த சீனிவாசன், “ருக்மணி மாதிரி இருக்கு..” என்றவனின் பார்வை சென்ற திசையை நோக்கியவனோ, “ஆமா அவள்தான்..” என்றதும் இருவரும் அவளின் அருகில் சென்றனர்.

பெருமாளுக்கு நெய்தீபம் போடும் இடத்தில் நின்று இரண்டு விளக்கை வைத்துகொண்டு, “என்னடா இவள் வாரம் வாரம் ஹனுமானுக்கு தானே விளக்கு போடுவாள். இது என்ன புதுசாக இருக்கு என்று யோசிக்கிறாயா?” அவள் தனியாக பேசிக் கொண்டிருந்தாள்.

“ருக்மணி தனியாக நின்று எல்லாம் புலம்புவாளா?” என்றவன் சீனிவாசனிடம் கேட்க, “அவள் என்ன புலம்பற என்று முதலில் காது கொடுத்து கேளுங்க பிரபா..” என்றான் சீனிவாசன் புன்னகையுடன்..

இருவர் தன்னை நோக்குவது தெரியாமல் நின்றவளோ, “ஹனுமானுக்கு இந்த வாரம் விளக்கு கேன்சல் பண்ணிட்டேன்.. காதலுக்கு தூது போக சொன்னதுக்கு, நான் ராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தூது போவேன் என்று சொல்லிட்டார்.. 

ஏன் சீனிவாசனுக்கும், ருக்மணிக்கும் தூது போனால் என்ன? முடியாது என்று சொல்லவும் எனக்கு கோபம் வந்துருச்சு.. அதனால இன்னைக்கு அவருக்கு விளக்கு கேன்சல்.. என்ன பெருமாளே நான் சொல்றது சரிதானே..” என்று பக்தியில் முக்தி நின்ற ருக்மணியைப் பார்த்த பிரபாவோ, “என்ன பெருமாளுக்கு மிரட்டல் விடுகிற..” என்று வாய்விட்டு சிரித்தான்..

அவளின் அருகில் சென்ற சீனிவாசன், “ஹனுமான் தூது போக மாட்டேன் என்று சொன்னதும் சீனிவாசனுக்கு பெருமாளையே தூதாக அனுப்ப தயாராகிட்ட போல..” அவன் சிரிக்காமல் கேட்க அவளோ சீரியஸாக பதில் சொன்னாள் ருக்மணி.

“பின்ன வேற வழி. நான் என்ன சினிமாவில் வர மாதிரி அவர் முன்னாடி போய் நின்று வராத வெக்கத்தை கயிற்றை கட்டி இழுத்து நாணி கோணி என்னோட காதலை சொல்ல முடியாது. அதுக்கு இந்த தூது எவ்வளவோ பெட்டர்..” என்றாள் ருக்மணி விளக்கை ஏற்றியபடியே.  

அவள் பேசியதைக் கேட்டு பிரபா வாய்விட்டுச் சிரிக்க மற்றொரு பக்கம் சீனிவாசனோ இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்க விளக்கை ஏற்றிவிட்டு திரும்பிய ருக்மணி அங்கே சீனிவாசனைப் பார்த்தும், ‘ஐயோ மாட்டிகிட்டேன்..’ என்று கைகளை உதறினாள்..

அவளை முறைத்த சீனிவாசனோ, “ருக்மணி நீ இன்னும் மாறவே இல்லையா?” என்று கேட்க, “நான் இப்படித்தான்..” என்றவளை இமைக்காமல் பார்த்தவனோ, “அதன் உண்மையை சொல்லாமல் என்னை இப்படி சுத்த விடுகிறாயா?” அவனின் பார்வை ருக்மணியின் மீது நிலைத்தது..

“நான் உங்களை சுத்தலில் விடல. நீங்க வந்து பொண்ணு கேளுங்க..” என்று நேருக்கு நேர் சொல்லிவிட்டு தன்வழி சென்றவளை பார்த்த சீனிவாசனின் உதட்டில் புன்னகை அரும்பியது. அதன்பிறகு ருக்மணியின் வீட்டில் பேசி இருவரின் சம்மதம் கிடைத்தது.

அவர்கள் ஊருக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் ருக்மணி தனது கல்யாண பத்திரிக்கையை அனுப்பியிருந்தாள். இப்படி அனைத்தையும் மனைவிடம் பகிர்ந்தவன்,

“பொண்ணுங்க விளக்கு வைக்கிறேன் என்று சொன்னாலே இனிமேல் எனக்கு ருக்மணியின் நினைவுதான் மலர் வரும்..” என்றவன் வாய்விட்டுச் சிரிக்க, “அவள் அப்படித்தான். இப்படித்தான் ஏதாவது எடக்கு முடக்க வேண்டுதல் வைப்ப..” என்று சிரித்தாள் ஜெயா..

ஆனால் பிரபாவின் சிந்தனையுடனே இருந்த ஜெயாவோ அவளின் திருமணம் பற்றிய நினைவே இல்லாமல் இருந்துவிட்டாள். எப்படியும் ருக்மணி தன்னை அவள் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை ஜெயாவிடம் இருந்தது..  

பிரபா வீட்டின் முன்னே காரை நிறுத்திட சத்தம் கேட்டு, “மாமாவும், அக்காவும் வந்துட்டாங்க..”என்றவன் வேகமாக வாசலுக்கு வர அவனின் பின்னோடு ஆனந்த் மற்றும் சுகந்தியும் வாசலுக்கு வந்தனர்.

தம்பியின் முகம் பார்த்ததும் மறந்துவிட்டு, “கண்ணா..” என்ற அழைப்புடன் வேகமாக காரைவிட்டு இறங்க, “வாங்க மாமா. வாங்க அத்தை..” என்ற அழைப்புடன் மறுபக்கத்திலிருந்து இறங்கினான் பிரபா.

“அக்கா எப்படி இருக்கிற..” என்றவன் ஜெயாவின் கையோடு கையைக் கோர்த்துக்கொள்ள, “நான் நல்ல இருக்கிறேன்டா கண்ணா..” என்றாள் அவள் புன்னகையுடன்..

அவளை மேலும் கீழும் பார்த்த கண்ணன், “அக்கா நீ ஏன் ஊருக்கு வரல..” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்கும் பொழுதே அவளுக்கு ஏதோ மாதிரி இருக்க, “கொஞ்சம் வேலை கண்ணா.. அதன் ஊருக்கு வர முடியல..” என்று தன்னால் முடித்தவரை தம்பியை சமாளித்தாள் ஜெயா..

அதற்குள் அவனின் அருகில் வந்த பிரபாவோ, “கண்ணா என்ன மறந்துட்ட இல்ல..” அவனின் தோளில் கைபோட்டான். 

“உங்களை மறக்க முடியுமா மாமா..” என்று கண்சிமிட்டியதும், “நல்ல சமாளிக்கிற..” என்று வாய்விட்டுச் சிரித்தான் பிரபா.

“அப்பா எப்படிப்பா இருக்கீங்க.. அம்மா என்னை மறந்துட்டீங்க..” என்று முதல் வாக்கியத்தை ஆனந்திடம் தொடங்கி சுகந்தியிடம் முடித்தாள் மகள்.

அவளின் மலர்ந்த முகம் பார்த்த சுகந்தி, “உனக்குத்தான் எங்க யாரோட நினைப்பும் இல்ல..” என்றதும் நாக்கைக் கடித்துக்கொண்டு, “அதெல்லாம் இல்லம்மா..” சினுங்கினாள் மகள்..

கண்ணனும், பிரபாவும் பேசியபடியே வீட்டின் உள்ளே சென்றுவிட, “வாப்பா பிரபா பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது..” என்று கேட்க, “சூப்பர் மாமா..” சோபாவில் அமர்ந்தான் பிரபா..

அவனின் பளிச்சென்று மலர்ந்த முகம் பார்த்ததும் அவருக்கு உண்மை புரிந்துவிட, “மீட்டிங் எல்லாம் எப்படி இருந்தது..” என்று கேட்டவர் கம்பெனி நிர்வாகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்..

“மாமா நீங்களாவது அக்காவைக் கூட்டிட்டு கல்யாணத்திற்கு வந்திருந்திருக்கலாம் இல்ல.. பாவம் ருக்மணி அக்கா..” என்றதும் உஷாரான பிரபா, “என்ன கண்ணா சொல்ற?” புரியாமல் கேட்டவனை வேற்றுகிரகவாசிகளை பார்ப்பது போல பார்த்து வைத்தான் கண்ணன்..

பிறகு, “ருக்மணி அக்காவிற்கும், சீனிவாசன் மாமாவிற்கும் திருமணம் ஆன விஷயம் உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்க, “எனக்கு தெரியாதுடா..” என்றான் பிரபா அதிர்ச்சியுடன்..

அதே நேரத்தில் ஜெயாவின் தலையைப் பாசமாக வருடிய ஆனந்த், “என்னடா ருக்மணியோட கல்யாணத்திற்கு கூட வராமல் இங்கேயே இருந்துட்ட..” உண்மையைச் சொன்னால் யாரும் நம்ப போவதில்லை என்று அறிந்தவள், “அப்பா என்ன சொல்றீங்க ருக்மணிக்கு திருமணம் முடிந்ததா?” என்று அதிர்ந்தாள் மகள்..

 “ம்ம் அவளுக்கு திருமணம் முடிந்து இப்போ மூன்று வாரத்திற்கு பக்கம் ஆச்சுடா. அவளையும் இங்கே தனிக்குடித்தனம் வைக்க ஜீவன், ரேகா இருவரும் வந்தாங்க. அப்படியே உன்னைப் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் ஜெயா..” என்றார்  புன்னகையுடன்.

“இங்கே முக்கியமான மீட்டிங் வேலையாக அவரும், நானும் டெல்லி போயிருந்தோம்..” இருவரும் வீட்டின் உள்ளே நுழைந்தனர். 

கோபிநாத், பிரபா, கண்ணன் மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, “அப்பா நான் ருக்மணிக்கு போன் பண்ணிட்டு வருகிறேன்..” என்று தனியாக சென்ற மனைவியை கவனித்தான் பிரபா..

ஜெயா – ருக்மணி இருவரின் நட்பு எத்தகையது என்று அவனுக்கு தெரியும். அவளின் கல்யாணத்திற்கு ஜெயா போகவில்லை என்றால் ருக்மணியின் மனநிலை என்னவாக இருக்கும் என்றவன் சிந்தனையுடன் எழுந்து அவளின் அருகில் சென்றான்.

அவளோ முதலில்  ருக்மணிக்கு அழைக்க முதல் ரிங் போய் கட்டாகவே, மீண்டும் அழைக்க மீண்டும் ஃபுல் ரிங் போய் கட்டானது. அவள் மீண்டும் மீண்டும் மீண்டும் அழைத்தாள். ஆனால் அவளின் அழைப்பை ருக்மணி எடுக்கவே இல்லை..

அப்பொழுது மெல்ல அவளின் அருகில் வந்த பிரபா, “ஜெயா என்ன பிரச்சனை?” என்று கேட்க, “ருக்மணி போனை எடுக்கவே மாட்டேங்கிற..” கலங்கிய விழிகளுடன் கூறினாள் ஜெயா..

அவளின் மனவலியை புரிந்து கொண்ட பிரபா, “ஜெயா ஒரு நிமிஷம்..” தன்னுடைய போனிலிருந்து சீனிவாசனுக்கு அழைக்க, “ஹலோ பிரபா சொல்லுங்க..” மறுப்பக்கத்தில் அவனின் குரல் தெளிவாக கேட்டது..

“சீனிவாசன் திருமணம் முடிந்துவிட்டது என்று கேள்விபட்டேன். ஸாரி என்னால வர முடியவில்லை..” அவன் மன்னிப்பு கேட்க, “என்ன பிரபா.. நீங்க ஒரு டீலிங் விஷயமாக டெல்லி போனது எனக்குதெரியாதா? அதனால நான் அதை பெருசா எடுத்துக்கல..” என்றான் அவன் சாதாரணமாக..

“ஆனால் ருக்மணிதான்..” அவன் இழுக்க,  “ஏன் ருக்மணிக்கு என்ன?” அவன் சாதாரணமாக கேட்க, “ஜெயா மேல் சரியான கோபத்தில் இருக்கிற..” என்றான்.

அவனிடமிருந்து போனை வாங்கியவள், “அண்ணா நான் வேண்டும் என்று பண்ணல. சில பிரச்சனைகளில் அவள் அனுப்பிய பத்திரிக்கை தேதி பார்க்க மறந்துவிட்டேன்..” பிரபாவின் இதழ்களில் கள்ளச்சிரிப்பை தோன்றி மறைந்தது. 

அவனை முறைத்துவிட்டு, ‘உன்னாலதான் எல்லாம்..’ மனதிற்குள் சிணுங்கியவள் உதட்டை சுளிக்க பிரபாவோ உல்லாசமாக சிரித்து வைக்க சீனிவாசனின் குரல் அவளின் கவனத்தை திசை திருப்பியது.

 “நீ மட்டும் மறந்துட்டேன்னு மட்டும் அவளிடம் சொல்லிவிடாதே. அவள் பத்ரகாளியாக மாறுவிடுவாள்..” மெளனமாக இருந்தாள் ஜெயா..

“அக்கா நம்ம ருக்மணி அக்காவின் வீட்டிற்கு போலாமா?” கண்ணனின் குரல்கேட்டு திரும்பிய பிரபா, “ம்ம் போகலாம்..” என்றவன் அவளிடமிருந்த கைபேசியை பிடுங்கியவன், “நாங்க நேரில் வருகிறோம் சீனிவாசன்..” போனை கட் பண்ணினான்.

வீட்டிலிருந்து பெரியவர்கள் மூவரும் அமர்ந்து பேசிகொண்டிருக்க, “அப்பா, அம்மா நாங்க ருக்மணி அக்காவின் வீட்டிற்கு போயிட்டு வருகிறோம்..” என்ற கண்ணனை நிமிர்ந்து பார்த்தார் கோபிநாத்..

“பிரபா முதலில் ஜெயாவை கூட்டிட்டு போப்பா. பாவம் அந்த பொண்ணு அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு கோபத்தில் திரும்பி போனாள்..” என்றார்..

“சரிங்க மாமா..” மனைவியை அழைத்துக்கொண்டு காரில் ஏறியதும் பின் கதவைத் திறந்து காரில் ஏறினான் கண்ணன். அடுத்த கொஞ்ச நேரத்தில் சீனிவாசனின் வீட்டின் முன்னே கார் நின்றதும் காரிலிருந்து வேகமாக இறங்கினாள் ஜெயா.. 

மூவரையும் பார்த்து புன்னகைத்த ஜீவன், “வாம்மா ஜெயா..” என்றழைக்க, “அப்பா ருக்மணி..” என்றவள் தயக்கமாகவே கேட்க அவளின் குரல்கேட்டு வாசலுக்கு வந்த சீனிவாசன், “வாங்க பிரபா, வா ஜெயா, வா கண்ணா..”என்றழைத்தான்..

அவனை பார்த்ததும், “மாமா நீங்க வான்னு கூப்பிடல என்றாலும் நான் வருவேன்..” என்றவன் வீட்டிற்குள் நுழைய, “நீதானே என்னோட மச்சினன் உனக்கு இல்லாத உரிமையா?” என்றவனை பின் தொடர்ந்தனர் ஜெயாவும், பிரபாவும்..!

அதற்குள் ஹாலுக்கு வந்த ரேகா, “வா ஜெயா.. எப்படி இருக்கிற..” என்று விசாரித்துவிட்டு, “அவள் ரூமில் இருக்கிற இரு கூப்பிடுகிறேன்..” என்றார்..

அதற்குள் அறைக்குள் இருந்து வெளியே வந்த  ருக்மணி, “வாடி வா.. உன்னைத்தான் தேடிட்டு இருக்கிறேன். என்னோட கல்யாணத்திற்கு வராமல் இப்பொழுது எதற்கு வந்தாய்..?” என்று கோபத்துடன் சண்டைக்கு கிளம்பிவிட்டாள்..

“ஜெயாக்கா ருக்மணிக்கா  உன்மேல் சரியான கடுப்பில் இருக்கிற..” அவன் பங்கிற்கு போட்டு கொடுத்துவிட்டு, “மாமா நீங்க இருவரும் அவங்க சண்டையைப் பாருங்க..” என்று ஜெயாவிடம் தொடங்கி பிரபாவிடம் முடிந்தான்..

“நீ வேற அவளை ஏற்றிவிடாதே..” என்று பிரபா கண்ணனை அதட்ட, “ருக்மணி..” மனைவியை அதட்டிய சீனிவாசனை முறைத்தாள்.. 

“எங்களுக்கு இடையே நீங்க வராதீங்க. நானும், அவளும் சண்டை போட்டுகொள்வோம். அப்புறம் சேர்ந்து கொள்வோம். அதனால நீங்க இடையே வராதீங்க..” என்று முற்றுபுள்ளி வைத்துவிட்டாள்..

“நல்ல பிரிண்ட்ஸ்..” என்றான் சீனிவாசன். 

அதற்குள் ருக்மணியின் பக்கம் திரும்பிய பிரபாவோ, “ருக்மணி அவளைத் திட்டாதே. நான்தான் அவளை ஊருக்கு கூட்டிட்டு போனேன்..” அவளுக்கு கோபம் வந்துவிட, “ஏன் அண்ணா நான் அவளை எதிர்பார்ப்பேன் என்று தெரியாதா?” என்றவள் ஜெயாவின் பக்கம் திரும்பினாள்..

“என்னைவிட நேற்று வந்த இவர் உனக்கு முக்கியம். நான் முக்கியம் இல்ல..” என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.. தோழியின் கோபம் பற்றி அவள் அறியாத விஷயமா?

“ருக்மணி..” என்று ஜீவன் மகளை அதட்ட, “அங்கிள் விடுங்க. ருக்மணி சொல்றதுதான் சரி. நீங்க அமைதியாக இருங்க..” அவனின் பக்கம் திரும்பியவள், “உங்கமேல் சரியான கடுப்பில் இருக்கேன். அப்புறம் நான் ஏதாவது சொல்லிட்டா நீங்க வருத்தப்படக்கூடாது..”  என்று மிரட்டினாள்..

ஜெயா அமைதியாக நின்றிருக்க, “ஏய் நீ ஏன் கல்யாணத்திற்கு வரல..” என்று கேட்க, “அம்மா தாயே நான் வராமல் போனது தப்புதான். இந்த என்னோட கிப்ட்..” அவளின் கையில் ஒரு பார்சலைக் கொடுக்க, “மாமா அக்கா ஏதோ பிளான் பண்ணிட்ட..” என்றான் கண்ணன்.

அந்த பார்சலை பிரித்து பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிய, “ஹே ஜெயா உன்னோட புக் வந்துவிட்டதா? சூப்பர்டி..” என்று மற்றத்தை மறந்துவிட்டு தோழியை அணைத்துக்கொள்ள தலையில் அடித்துக்கொண்டான் சீனிவாசன்..

“ஏண்டா தலையில் அடிச்சிக்கிற..” பிரபா புரியாமல் அவனிடம் கேட்க, “இன்னைக்கு நைட்டும் புக்கை கையில் தூக்கி வெச்சு படிக்க உட்கார்ந்து விடுவா.. அப்போ என்னோட நிலைமை?” முகத்தை பாவமாக வைத்திருக்க வாய்விட்டு சிரித்தான் பிரபா..

அதுவரை இருந்த கோபம் மறந்து, “விடு ஜெயா! குடுப்பத்திற்கு நுழைந்த பெண்களோட வாழ்க்கையே இப்படித்தான்.. சோ அதற்காக எல்லாம் நான் கோபடல கொஞ்சம் வருத்தம்..” என்றாள்..

மலைபோல வந்த பிரச்சனை பனிபோல விலகியதில், “ஹப்பாடா இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு..” என்றாள் ஜெயா..

அதன்பிறகு அங்கே கொஞ்சநேரம் இருந்துவிட்டு மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.. மறுவாரமே தாய், தந்தை, தம்பி மூவரும் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர்..

பிரபாகரன் பழையபடி வேலையை தொடங்க, சுந்தரியம்மா தன்னுடைய பேத்தியுடன் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட ஜெயா வீட்டின் பொறுப்புகளை கவனித்துக் கொண்டாள்.. 

சீனிவாசன் அவனின் வேலையைக் கவனிக்க அவனுக்கு துணையாக நின்றாள் ருக்மணி. நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல ஜெயாவின் மனதில் பாரம் ஏறிக்கொண்டே சென்றது.

அந்த பாரம் தாங்க முடியாமல் ஒருநாள் மயங்கி சரிய அவளைத் தாங்கிக் கொண்டான் பிரபா. அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தும் பிரபா  சந்தோஷத்தின் உச்சியில் நின்றான்.. அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் சந்தோசம்.. சந்தோசம்.. சந்தோசம் மட்டுமே..! 

 

Mp14

மோகனப் புன்னகையில் 14

விஜயேந்திரனும் சுமித்ராவும் அரண்மனைக்குத் திரும்பி இருந்தார்கள். மங்கையின் பிரச்சினையைக் கொஞ்சம் ஆறப் போட்டால் நன்றாக இருக்கும் என்று கண்ணபிரான் அபிப்பிராயப் படவும் விஜயேந்திரன் கிளம்பி விட்டான்.

கிளம்புவதற்கு முன்பே மங்கையை அழைத்து ஸ்டீஃபன் சம்மதம் சொன்னதைத் தெரிவித்திருந்தான். இளையவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. சுமித்ராவைக் கட்டிக் கொண்டு அவள் கண்ணீர் விடவும் கணவனும் மனைவியும் நெகிழ்ந்து போனார்கள்.

மேலும் ஒரு மாதம் நகர்ந்திருந்தது. அன்று மதிய உணவிற்கு விஜயேந்திரன் அரண்மனைக்கு வந்திருந்தான். நேராக அவன் அந்தப்புரம் வரவும் சுமித்ரா ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“அடடே! அரண்மனைக்காரரே! வாங்க வாங்க. ஏது, இன்னைக்கு இந்நேரத்துக்கு உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கு?” வேண்டுமென்றே அவள் வம்பிழுக்கவும் புன்னகைத்தான் விஜயேந்திரன்.

“எம் பொண்டாட்டி ஞாபகம் வர்றப்போ எல்லாம் நான் வீட்டுக்கு வரணும்னா நான் வீட்டிலயே தான் இருக்கணும்.”

“அது சரி. இந்தச் சக்கரைப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.”

“ஐயையோ! அப்படியா சொல்லுறீங்க?” அவன் வேண்டுமென்றே வில்லத்தனமாகக் கண்ணடிக்க முறைத்துப் பார்த்தாள் சுமித்ரா. அவன் அதற்கும் வாய்விட்டுச் சிரித்தான்.

“சுமித்ரா! சாப்பிட்டுட்டு நாம ரெண்டு பேரும் வெளியே கிளம்புறோம்?”

“ஐயையோ! இன்னைக்கா?”

“ஆமா ஏன்? என்னாச்சு?”

“நான் பசங்களை இன்னைக்கு வரச்சொல்லி இருக்கேனே?”

“பசங்களா? யாரு அது?”

“கங்காக்குத் தெரிஞ்ச பசங்க. நாட்டியம் கத்துக்கணும்னு சொன்னாங்க. சரி, இன்னைக்குக் கூட்டிட்டு வான்னு சொன்னேன்.”

“அதை நாளைக்குப் பார்க்கலாம். இப்போ சாப்பாட்டை முடிச்சிட்டு கிளம்பு அம்மு.”

“கண்டிப்பாப் போகணுமா?”

“அட! ஆமாங்கிறேன்.”

“அப்படி எங்க போறோம்?”

“அது சஸ்பென்ஸ்.” மர்மமாகச் சிரித்தான் கணவன்.

“ப்ளீஸ்… சொல்லுங்களேன்.”

“சொன்னா எனக்கு என்ன குடுப்பே?”

“உங்களுக்கு என்ன வேணும்?”

“எனக்கு என்ன பிடிக்கும்னு தான் உனக்குத் தெரியுமே.”

“சரி. இன்னைக்கு வெளியே போய்ட்டு வந்ததுக்கு அப்புறமா அரண்மனைக்காரருக்கு மட்டும் தனியா நாட்டியக் கச்சேரி. சரியா?”

“அது!”

“இப்போ சொல்லுங்க. எங்கே போறோம்.”

“ஏர்போர்ட் க்கு.”

“ஏர்போர்ட் க்கா? எதுக்கு? ஓ… ஸ்டீஃபன் வர்றாரா என்ன?” சுமித்ராவின் குரலில் இனம்புரியாத மகிழ்ச்சி.‌ மங்கைக்கும் அவளுக்கும் இடையில் அழகானதொரு புரிதல் உருவாகி இருந்ததால் மங்கைக்கு ஆனந்தம் கொடுக்கும் அனைத்தும் இவளுக்கும் இனித்தது.

“இல்லை.”

“இல்லையா? அப்போ யாரு… விஜீ… அத்தானா? அத்தான் வர்றாங்களா? விஜீ… வர்றது அத்தானா?” அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தாள் சுமித்ரா. அவள் கொண்டாட்டம் அவனையும் தொற்றிக்கொண்டது.

“ஆமா… ஆமா… இப்போவாவது நாட்டியப் பேரொளி சீக்கிரம் ரெடி ஆகுறீங்களா?” சொன்னபடி சிரித்தான் விஜயேந்திரன்.

“இதோ! பத்து நிமிஷத்துல ரெடி ஆகிறேன்.” பரபரத்தவளைப் பிடித்து நிறுத்தினான் கணவன்.

“அந்த மயில்கழுத்து நிறத்துல ஒரு சேலை இருக்கில்லை? அதைக் கட்டு அம்மு. அப்புறம் கங்கா க்கிட்டச் சொல்லி பூ நிறைய வெச்சுக்கோ. அப்புறம் இந்தக் கண்ணுக்கு ஏதோ போடுவே இல்லை…”

“ஐயோ விஜி! இப்படியே பேசிக்கிட்டு இருந்தா அங்கே அத்தான் வந்திருவாங்க. நான் ரெடியாக வேணாமா?”

“அதுவும் சரிதான். அப்படியே என் வீட்டுக்காரி எனக்குக் கொஞ்சம் சாப்பாடு போட்டா நல்லா இருக்கும்…” வேண்டுமென்றே அவன் இழுக்க இப்போது பல்லைக் காட்டினாள் சுமித்ரா.

“நாம இன்னும் சாப்பிடல்லை இல்லை… நான் அதை மறந்தே போயிட்டேன் விஜி.” மனைவியின் ஒவ்வொரு செய்கைக்கும் மலர்ந்து புன்னகைத்தான் அரண்மனைக்காரன். 

ஏதோ ஒரு பரபரப்போடே ஆயத்தமாகிக் கணவனோடு கிளம்பி இருந்தாள் சுமித்ரா. விஜயேந்திரனிடம் கேட்க அவளுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தது.

“ஏன் விஜி? நீங்க அத்தானைப் பார்த்து அஞ்சு வருஷம் இருக்குமா?”

“ரோஸி எப்படி இருப்பாங்க விஜி? எங்கூடப் பேசுவாங்களா?”

“அத்தானோட பையனுக்கு ரெண்டு வயசுன்னு சொன்னாங்க. பார்க்க யாரு மாதிரி இருக்கும் குழந்தை?”

‘விஜி விஜி’ என்று அவனைத் துளைத்து எடுத்து விட்டாள் சுமித்ரா. அத்தனைக்கும் சலிக்காமல் ஒரு புன்னகையோடே மனைவிக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் விஜயேந்திரன்.

மங்கையின் வீட்டிலிருந்து வந்த உடனேயே கரிகாலனைத் தொடர்பு கொண்டு விட்டான். ஸ்டீஃபன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சொல்லா விட்டாலும் லேசாகச் சொல்லி இருந்தான்.

கரிகாலனுக்குத் திடீரென்று லீவு போட முடியாத படியால் உடனடியாகக் கிளம்ப முடியவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாக போஸ்ட் ஆஃபீஸுக்குக் கால் பண்ணித் தகவல் சொல்லி இருந்தான்.

விஜயேந்திரன் யாரிடமும் சொல்லவில்லை. சுமித்ராவிடம் சொன்னால் ஆர்வக் கோளாறில் ஒரு வேளை தகவல் அவள் வீட்டிற்குப் போக வாய்ப்பு இருப்பதால் அதையும் தவிர்த்திருந்தான். 

ஒரு வழியாகக் கணவனும் மனைவியும் ஏர்ப்போர்ட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அந்த ப்ளாக் அம்பாஸிடரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே போக அப்போதுதான் ஃப்ளைட் தரையிறங்கிய அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.

“வெளியே வர இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும் விஜி?”

“இந்த ஃப்ளைட் மட்டும் தான் இப்போ வந்திருக்கிறதால எப்படியும் ஒரு அரை மணி நேரத்தில வந்திருவாங்கடா.”

“ஓ… அவ்வளவு நேரம் எடுக்குமா?”

“உங்களுக்கு எதுக்கு இன்னைக்கு இவ்வளவு அவசரம்?” 

“தெரியலை விஜி. பெயருக்குத் தான் அவங்க எனக்கு அத்தான். எங்க வீட்டிலேயே இருந்ததால எனக்கு எப்போவுமே அத்தான் ரொம்ப நல்ல ஃப்ரென்ட். வீட்டுல மத்தவங்க கிட்ட சொல்ல முடியாத விஷயங்களைக் கூட அத்தான் கிட்ட ஈஸியாப் பேசுவேன்.”

“என்னைப் பத்தி என்ன பேசி இருக்கீங்க? உங்க அத்தான் கிட்ட?” கேட்ட கணவனின் கண்களில் அத்தனை ஆர்வம்.

“உங்களைப் பத்தி எதுவும் பேசினதில்லை.” இப்போது மனைவியின் முகத்தில் லேசான வெட்கம்.

“ஏன் அப்படி?”

“பசங்க ரோட்ல கலாட்டா பண்ணினா அத்தான் கிட்ட வந்து சொல்லிடுவேன். ஆனா இந்தப் பையன் தான் எந்தக் கலாட்டாவும் பண்ணலையே.”

“ஓ… கலாட்டா பண்ணி இருந்தா சொல்லி இருப்பீங்களோ உங்க அத்தான் கிட்ட? அவரு என்ன பண்ணி இருப்பாராம்? வந்து என் சட்டையைப் பிடிச்சு ‘நீ எப்படிடா என் முறைப் பொண்ணை சைட் அடிக்கலாம்’ னு சண்டை போட்டிருப்பாரோ?” கூட்டத்தையும் பாராமல் அவள் இடை வளைத்தான் அரண்மனைக்காரன்.

“விஜி! என்ன பண்ணுறீங்க?”

“பதில் சொல்லுடி.” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பயணிகள் வெளியே வர ஆரம்பித்ததால் இருவர் கவனமும் அங்கே போனது.

சற்று நேரத்திலெல்லாம் கரிகாலன் பைகளைத் தள்ளிக் கொண்டு வருவது தூரத்தில் தெரிந்தது.

“விஜி! அத்தான்!” கண்ணீர் கலந்த குரலில் குதூகலித்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் இங்கிருந்து கையை ஆட்ட கரிகாலனும் கையை ஆட்டினான். 

ட்ராலியில் பைகளோடு மகனையும் சேர்த்து உட்கார வைத்துக் கரிகாலன் நடக்க கூடவே அந்தப் பெண்ணும் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

‘ரோஸி.’ கரிகாலனின் மனைவி. ஜாடையில் நடிகை ஸ்ரீ தேவியைப் போல இருந்தாள் பெண். சுமித்ரா வீட்டிலும் எல்லோரும் அரைத்த வெண் சந்தனத்தைப் போல நல்ல நிறமாக இருப்பார்கள். கரிகாலனும் கனடா வாசத்தில் ஜம்மென்று தான் இருந்தான்.

பக்கத்தில் அவர்கள் வரவும் சுமித்ரா தான் ஓடிப்போனாள்.

“அத்தான்.” கண்களில் கண்ணீர் நிரம்ப அவள் அழைத்த போது கரிகாலனுக்கும் கண்கள் கலங்கி விட்டது. 

“சுமிம்மா.” என்றவன் அவளைத் தவிர்த்து விட்டு சட்டென்று விஜயேந்திரனிடம் போய் அவனைக் கட்டிக் கொண்டான்.

“ராஜா! எப்படி இருக்கே?” கரிகாலனின் குரல் தழுதழுத்தது.

“நல்லா இருக்கேன் பா. ரொம்ப நல்லா இருக்கேன்.” விஜயேந்திரனுமே கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனான்.

சுமித்ராவிற்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. கரிகாலனை அவள் அவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்திருக்க அவன் தன்னைத் தவிர்த்துத் தன் கணவனிடம் நட்புப் பாராட்டியது அவளை லேசாக வருத்தியது.

அப்போதுதான் ரோஸியின் மீது கவனத்தைத் திருப்பியவள் புன்னகைத்தாள்.

“எப்படி இருக்கீங்க ரோஸி?”

“ம்… நல்லா இருக்கேன். நீங்க?” மிகவும் தயக்கத்திற்கு மத்தியில் வந்தது ரோஸியின் குரல். 

“ரொம்ப நல்லா இருக்கேன். குட்டிப் பையன் அவ்வளவு அழகா இருக்கான். எங்கிட்ட வருவானா?” ரோஸி தன்னிடம் நெருங்கத் தயங்குவதை உணர்ந்த சுமித்ரா சட்டென்று சகஜமானாள்.

“பெருசா யார்க்கிட்டயும் போக மாட்டான்.” ரோஸி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தையை நோக்கிச் சுமித்ரா கையை நீட்ட ஒரு கணம் அம்மாவைத் திரும்பிப் பார்த்த குழந்தை சுமித்ராவிடம் தாவிக் கொண்டது.

“அடடே! சின்னக் குட்டி எங்கிட்ட வந்துட்டானே?”

“அதானே! எனக்கே ஆச்சரியமா இருக்கு சுமித்ரா. நான் இல்லைன்னா உங்க அத்தான் தான். ஸ்டீஃபன் கிட்டக் கூடப் போக மாட்டான். உங்க கிட்ட சட்டுன்னு வந்துட்டான்.”

“பின்னே இருக்காதா? எங்க அத்தையோட வாரிசு எங்கிட்ட வராம வேற யார்கிட்ட போவானாம்?” உரிமையாக சுமித்ரா சொல்ல ரோஸியின் முகம் மலர்ந்து போனது.

பெண்கள் இருவரும் கடந்த காலத் தயக்கங்களை மறந்து நட்புக் கரம் நீட்டிக் கொண்டார்கள்.

“சின்னக் குட்டியைப் பார்த்தீங்களா விஜி? யார்கிட்டேயும் போக மாட்டானாம்.‌ நான் கூப்பிடவும் சட்டுன்னு வந்துட்டான்.” குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனிடம் வந்த சுமித்ரா கரிகாலனும் விஜயேந்திரனும் பேசிக் கொண்டிருப்பதைக் கூடக் கருத்தில் கொள்ளாது இடை மறித்தாள்.

“சுமித்ரா, என்ன இது? இப்படி பெயர் சொல்லிக் கூப்பிடுறே?” கரிகாலன் குரலில் அத்தனை ஆச்சரியம். தங்களுக்கு நண்பன் என்றாலும் ‘ராஜா’ என்ற வார்த்தை தவிர அவர்கள் வட்டத்தில் வேறு பெயர் இல்லை. அத்தனை நெருக்கமாக விஜயேந்திரனை அழைக்க அத்தனை பேரும் தயங்குவார்கள்.

“ஏன் அத்தான்? அவங்களுக்குப் பெயர் வெச்சதே நான் கூப்பிடத்தானே?” சுமித்ராவின் பதிலில் இப்போது விஜயேந்திரனின் கண்களில் மின்னல் தெறித்தது.

“ஏய்! என்னம்மா பேசுறே நீ?”

“விடுங்க கரிகாலன். வாய் இப்போல்லாம் ரொம்பத்தான் நீண்டு போச்சு.” குறும்பாகச் சிரித்தபடி விஜயேந்திரன் அவள் இதழ்களைச் சுண்டிவிட அழகு காட்டினாள் பெண்.

கரிகாலனுக்கு மனது நிறைந்து போனது. சுமித்ராவின் வாழ்க்கை இத்தனை நாளும் தன்னால் பாழ்பட்டு விட்டது என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு அவர்களது அன்னியோன்யம் ஆனந்தமாக இருந்தது.

ரோஸியைப் பார்த்துப் புன்னகைக்க அந்தப் பெண் முகத்திலும் ஒரு ஆறுதல்ப் புன்னகை தவழ்ந்தது.

“அத்தான்! இன்னைக்கு ராத்திரியே அத்தைக்கு ஃபோனைப் போட்டு நாளைக்கு துவாரகா கிளம்பி வாங்க ன்னு சொல்லணும்.”

“சுமிம்மா… அவசரப்படாதே. கொஞ்சம் ஆறுதலா எல்லாமே பண்ணலாம்.”

“ம்ஹூம்… நீங்க எதுவும் பேசக்கூடாது அத்தான். இந்தப் பயலைப் பார்த்ததுக்கு அப்புறமும் அத்தை கோபம் தாக்குப் பிடிக்கும்னு நினைக்கிறீங்களா?”

“அதுக்கில்லை சுமிம்மா…”

“உங்க பேச்சு எதுவும் இனி எடுபடாது. நான் சொல்ற படி மட்டும் கேளுங்க.” கரிகாலனுக்கு ஆணையிட்டவள் அதன் பிறகு குழந்தையைக் கொஞ்சத் தொடங்கி விட்டாள்.

பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக விஜயேந்திரன் ஏற்பாடு பண்ணி இருந்த வீட்டிற்கு எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். இம்முறை விருந்தினரை ஏனோ அரண்மனையில் தங்க வைக்காமல் வீடொன்றை ஏற்பாடு பண்ணி இருந்தான் விஜயேந்தின். 

கரிகாலனுக்கு மூன்று வாரங்கள் விடுமுறை கிடைத்திருந்தது. மங்கையின் வீட்டிலிருந்து வந்த உடனேயே கரிகாலனோடு பேசி இருந்தான் அரண்மனைக்காரன்.

உடனேயே புறப்பட்டு வர முடியாததால் இப்போது கிளம்பி வந்திருந்தது கரிகாலன் குடும்பம். ரோஸி பார்க்க அத்தனை அழகாக பாந்தமாக இருந்தாள். 

குழந்தை கொள்ளை அழகாக இருந்தான். ரவிவர்மன் என்று பெயர் வைத்திருந்தார்கள். கொழு கொழுவென்று பச்சரிசிப் பல்லோடு சிரித்தவனை சுமித்ரா யாரிடமும் கொடுக்கவில்லை. தன்னோடே வைத்துக் கொண்டாள்.

கரிகாலனுக்காக ஏற்பாடு பண்ணியிருந்த வீட்டில் சமையலுக்கும் ஆட்களை அமர்த்தி இருந்ததால் இவர்கள் வந்து சேர்ந்த போது சாப்பாடும் ஆயத்தமாகி இருந்தது.

பயணக் களைப்புத் தீரக் குளித்து முடித்து இரவுச் சாப்பாட்டையும் முடிக்கும் போது குழந்தை உறங்கி இருந்தான். பெண்கள் இருவரும் பரஸ்பரம் விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள ஆண்கள் இருவரும் வீட்டின் முற்றத்திற்கு வந்திருந்தார்கள்.

“கரிகாலன்.”

“சொல்லு ராஜா.”

“ஸ்டீஃபன் பத்தி நீ என்னப்பா முடிவெடுத்திருக்க?” விஜயேந்திரன் நேரடியாகவே கேட்கக் கரிகாலன் கொஞ்ச நேரம் அமைதி காத்தான்.

“மனசுல என்ன இருந்தாலும் அதை மறைக்காம சொல்லு கரிகாலா.”

“ராஜா… உங்க குடும்பத்துல பொண்ணு எடுக்க நாங்க குடுத்து வெச்சிருக்கணும்.”

“அப்புறம் ஏன் தயங்குற?”

“ஏற்கெனவே உங்க குடும்பத்துக்கு நாங்க ஒரு பொண்ணு குடுத்திருக்கோம் ராஜா.”

“சரி… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சுமித்ரா வாழ்க்கையில என்னால ஏற்கெனவே பல குழப்பங்கள். இப்போதான் எங்க ஒட்டு மொத்த குடும்பமே நிம்மதியா மூச்சு விடுறோம்.”

“…………..”

“இப்போ இன்னொரு பிரச்சினை என்னால திரும்பவும் வந்ததுன்னா… என் குடும்பம் என்ன, என் மனசாட்சியே என்னை மன்னிக்காது ராஜா.”

“அப்படி என்ன பிரச்சினை என்னைத் தாண்டி சுமித்ராக்கு வந்திரப் போகுது?”

“உங்க அம்மாக்கும் சுமித்ராக்கும் இன்னைக்கு வரைக்கும் நல்ல உறவு இல்லை ராஜா.”

“கரிகாலா… அது…”

“இல்லையில்லை… உங்கம்மாவை நான் எந்த விதத்திலும் தப்பு சொல்லமாட்டேன். அவங்களுக்கும் உள்ளது ஒரே பையன். உங்க குடும்ப கௌரவத்துக்கும் அந்தஸ்துக்கும் அவங்க எவ்வளவோ கனவு கண்டிருப்பாங்க. அத்தனையும் சுமித்ராவால நாசம் ஆனப்போ அவங்க கோபம் நியாயமானது தான்.”

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற கரிகாலா?”

“எனக்கு சுமித்ரா வாழ்க்கை தான் முக்கியம் ராஜா. இதைப் பத்தி நான் ரோஸி கிட்டக் கூடப் பேசிட்டேன்.”

“என்ன சொன்னாங்க?”

“ஸ்டீஃபனோட ஆசையை விட அவளுக்கு சுமித்ரா வாழ்க்கை தான் முக்கியம் னு அவளும் தெளிவா சொல்லிட்டா.”

“……….”

“எங்க நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எங்க ரெண்டு பேராலயும் சுமித்ரா அவளோட வாழ்க்கையில அஞ்சு வருஷத்தைத் தொலைச்சிட்டு நிக்குறா. உங்க ரெண்டு பேரையும் இப்படி அன்னியோன்யமா பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அந்த சந்தோஷம் நிலைக்கணும் ராஜா.”

“சரிப்பா. இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிக்கணுமா என்ன? பார்க்கலாம்.” பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டவன் சுமித்ராவோடு கிளம்பி விட்டான்.

“அத்தான்! நாளைக்கு விடிஞ்சதும் வந்திருவேன். இனி உங்க பையன் என் பொறுப்பு, சரியா?”

“உன் இஷ்டம் சுமிம்மா. எப்போ வேணும்னாலும் நீ தாராளமா வா.” சுமித்ராவின் தலையைத் தடவிய படியே கண் கலங்கினான் கரிகாலன். ரோஸியும் வெளியே வந்தவள் சுமித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“சுமித்ரா…” ஏதோ சொல்ல வாயெடுத்தவள் சுமித்ராவின் கரங்களைக் கண்களில் ஒற்றிய படி தேம்பித் தேம்பி அழுதாள்.

“ஐயோ! ரோஸி என்ன இது? எதுக்கு இப்போ அழுறீங்க? விஜி… என்ன ஆச்சு? அத்தான் எதுக்கு ரோஸி இப்போ அழுறாங்க?” சுமித்ரா தவித்துப் போனாள்.

கரிகாலன் மனைவியைத் தேற்ற முயற்சிக்கவில்லை. அமைதியாகவே நின்றான். ஆனால் கண்கள் மட்டும் கலங்கிச் சிவந்திருந்தன. அவர்கள் குற்ற உணர்ச்சிகள் எல்லாம் அந்தக் கண்ணீரில் கரைந்து போயினவோ!

“ரோஸி… இங்கப்பாருங்க. எதுக்கு இப்போ நீங்க அழுறீங்கன்னு எனக்குப் புரியலை. நான் நல்லாத்தான் இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். உங்களுக்கும் அத்தானுக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. சரியா? விஜி… நீங்க சொல்லுங்களேன். ரோஸியை அழ வேணாம்னு சொல்லுங்களேன்.” மனைவி கிடந்து தவிக்கவும் விஜயேந்திரன் சுமித்ராவின் பக்கத்தில் வந்தான்.

“அம்மு… அஞ்சு வருஷமா அவங்க மனசுக்குள்ள அடங்கி இருந்த குற்ற உணர்வு. இப்போ வெடிக்குது. அது வெளியே வர்றது தான் அவங்களுக்கும் நல்லது. அப்போதான் அவங்களுக்கு நிம்மதியா இருக்கும். கரிகாலா! உள்ளே கூட்டிக்கிட்டுப் போப்பா. போய் ரெஸ்ட் எடுங்க. நாங்களும் கிளம்புறோம்.” சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள் விஜயேந்திரனும் சுமித்ராவும். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தான் நகர்ந்தார்கள் பெண்கள் இருவரும்.

கரிகாலன் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் சுமித்ராவின் வாய் ஓயாது பேசிக் கொண்டிருந்தது. 

“விஜி… குட்டிப் பையன் ரொம்ப அழகா இருக்கான் இல்லை. அந்த ஊர்க் குழைந்தங்க மாதிரி தான் இருக்கான் இல்லையா?”

“ம்…”

“விஜி… குளிர்காலம் வந்தா ரொம்பக் கஷ்டமா இருக்குமாம். ரோஸியால தாங்கவே முடியாதாம். அத்தானுக்கு பழகிடுச்சாம். ஆனா இவங்க ரொம்பக் கஷ்டப் படுவாங்களாம்.”

“அப்படியா…”

“ம்… வீட்டு வாடகையே லட்சக்கணக்கில வருமாம் விஜி. முன்னாடி ரோஸியும் வேலைக்குப் போனாங்களாம். குழந்தை பொறந்ததுக்கு அப்புறமா அத்தான் வேணாம்னு சொல்லிட்டாங்களாம்.”

“ஓ…” 

அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு ஒன்பதைத் தாண்டி இருந்தது. அரண்மனையே அமைதியான இருளில் மூழ்கி இருக்க விஜயேந்திரனும் சுமித்ராவுடன் அந்தப்புரம் வந்தான். 

லேசான குளியலோடு மெல்லிய காட்டன் புடவைக்கு மாறியவள் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். ஏற்கெனவே குளியலை முடித்திருந்த கணவன் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான்.

“சுமி…”

“ம்…” விளக்கை அணைத்து விட்டு நைட் லாம்ப் ஐ ஆன் பண்ணியவள் திரும்பிப் பார்த்தாள். 

“இன்னைக்குக் மத்தியானம் யாரோ என்னவோ சொன்னதா ஞாபகம்.”

“என்ன விஜி?” கேட்ட பிறகுதான் அவனுக்குப் பிடித்ததைக் கொடுக்க ஒப்புக் கொண்டது ஞாபகம் வந்தது. அன்றைக்கு அவளுக்கிருந்த மன நிலையில் கணவன் கேட்டிருக்கா விட்டால் கூட அவன் கேட்டது நடந்திருக்குமோ என்னவோ!

ஒரு புன்னகையோடு அலமாரியைத் திறந்தவள் அதிலிருந்த டேப் ரெக்கார்டரை எடுத்தாள். கேசட் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவள் அதை ஒலிக்கவும் விட்டாள்.

ஜேசுதாஸின் குரலில் பாரதியின் வரிகள் அறையை நிரப்பியது. சாய்ந்திருந்த விஜயேந்திரன் எழுந்து உட்கார்ந்தான்.

‘சுட்டும் விழிச் சுடர் தான் – கண்ணம்மா…’

அந்தக் கண்கள் இரண்டும் சுழன்று வீசிய வீச்சில் அரண்மனைக்காரன் கூப்பிடாமலேயே மனைவியின் அருகில் வந்திருந்தான்.

நாட்டியத்திற்கு ஏற்றவாறு ஒரே பாடல் வரி திரும்பத் திரும்ப ஒலிக்க சுமித்ரா ஒவ்வொரு தடவைக்கும் வெவ்வேறு அபிநயம் பிடித்தாள்.‌ அந்த நயன பாஷையில் அரண்மனைக்காரன் கவிழ்ந்து போனான்.

“பாரதி சரியாச் சொல்லலை அம்மு.” மெல்லிய ஒலியில் பாடல் ஒலித்ததால் இவன் குரல் அதையும் தாண்டித் தெளிவாகக் கேட்டது. ஆட்டத்தை நிறுத்தாமல் புன்னகைத்தாள் சுமித்ரா.

“பாரதியையே குறை சொல்லுவீங்களோ?”

“காதல்னு வந்துட்டா பாரதி என்ன அந்தக் கம்பனையே வம்புக்கிழுக்கலாம்.”

“பாரதி எதைச் சரியாச் சொல்லலை?” பேச்சு பேச்சாக இருக்க பாட்டும் நடனமும் தொடர்ந்தது.

“இந்தக் கண்களோட ஒளியை சூரிய சந்திரனுக்கு ஒப்பிடுறாரே… இங்க இருந்து சதா என்னை நோக்கி அம்பு வருதே… இதயத்தைப் புண்ணாக்குதே… அதைச் சொல்லலையே அம்மு அந்த பாரதி!” 

‘வட்டக் கரிய விழி – கண்ணம்மா…’ பாடலில் ஒலித்த வரியை தானும் ஒரு முறை தன் ஆழ்ந்த குரலால் பாடலோடு சேர்ந்து உச்சரித்தான் கணவன்.

“இது உண்மை தான்.” அவன் இப்போது பாரதியை சிலாகிக்கப் புன்னகைத்தாள் சுமித்ரா.

‘வாலைக் குமரியடீ – கண்ணம்மா…’ இப்போது பாடலை அவனும் சேர்ந்து பாடினான். அந்தக் குரலின் வசீகரம் சுமித்ராவை என்னவோ பண்ணியது. விஜயேந்திரனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

மருவக் காதல் கொண்டேன்… ஆமா… மீள முடியாம தானே பைத்தியக்காரன் போல காத்துக்கிட்டுக் கிடந்தேன்.”

‘சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா…’

“ஆமா… அடிக்கடி இப்போல்லாம் சாத்திரம் தான் பேசுறே நீ.”

“அப்படி என்ன பேசிட்டேனாம்?”

“பக்கத்துல வந்தா ஆயிரம் ரூல்ஸ் போடுறே தானே?”

‘மூத்தவர் சம்மதியில் – வதுவை…’ இப்போது அவன் பார்வை அவளைப் பிரித்து மேய்ந்தது. அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு அடி வைத்து அந்த முகத்தை அப்புறாகத் திருப்பி விட்டாள்.

“சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம் எல்லாம் பார்த்து அனுமதியும் வாங்கியாச்சு அம்மு.” சொன்னவன் டேப் ரெக்கார்டரில் பாடலை நிறுத்தி இருந்தான்.

அந்தக் குரல் மட்டும் இப்போது பாடலின் அடுத்த வரிகளைத் தானாகப் பாடியது.

‘காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று…’ பாடல் நின்றவுடன் கடைசியாகப் பிடித்த அபிநயத்தோடு அசையாமல் அப்படியே நின்றிருந்தாள் சுமித்ரா. லேசாக மூச்சு வாங்கியது.

பாடலைப் பாடி முடித்த அரண்மனைக்காரன் அவள் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் வைத்தான். 

“விஜீ… டான்ஸ் பண்ணும் போது இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு பல தடவை சொல்லி இருக்கேன்.” கட்டிலில் வந்து அமர்ந்தபடி அவள் குரல் அவனை மிரட்டியது.

“வீட்டுல மிரட்டுறது பத்தாதுன்னு இன்னைக்கு கரிகாலன் முன்னாடியும் வேணுமின்னு விஜி விஜி எங்கிற இல்லை நீ?” அவள் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன் தானும் கட்டிலில் சரிந்து கொண்டான்.

“ஆ… வலிக்குது. பின்னே என்னவாம்? எப்பப் பாரு ராஜா ராஜான்னுக்கிட்டு. எந்த ஊருக்கு ராஜாவாம் நீங்க?” அவள் குரலில் வழிந்த கேலியில் அவன் கண்கள் மின்னியது.

“எந்த ஊருக்கு ராஜாவா இருந்தா என்ன இல்லாட்டா என்ன? உனக்கு நான் தானேடீ ராஜா!” அவன் கைகள் இப்போது அவளை வளைத்துக் கொண்டது. 

“எனக்கு ராஜாவா நீங்க? நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” 

“ஏன்? நீ சொன்னதே இல்லையா? அன்னைக்கு…” அவர்கள் அந்தரங்கங்களை அவன் பட்டியலிட ஆரம்பிக்க அவன் வாய் மூடினாள் சுமித்ரா.

“விஜீ! சரி… நீங்க தான் ராஜா… ராஜாதி ராஜா… சக்கரவர்த்தி… போதுமா?” அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையானது.

“போதாது… போதாதுடி.” அந்தக் குரலில் இப்போது போதை வழிந்தது.

 

ராஜ ராஜ சோழன் நான்… எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

 

Poovanam 10

பூவனம்—10

எளிமையான முறையில் மணமகன் குலதெய்வக் கோவிலில் திருமணம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. வெண்பட்டில் மாப்பிள்ளை மிடுக்குடன், அம்சமாய்
கிரிதரன் அமர்ந்திருந்திருக்க, அவனை ஏறிட்டு பார்க்க முடியா வண்ணம்
அரக்கு பாட்டில் மணமகளாய் நாணத்துடன், முகம் சிவக்க தலை
குனிந்திருந்தவளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி, காலில் மெட்டி அணிவித்து
தன்னுடையவளாய் ஆக்கிக் கொண்டான்…

திருமணம் சிறப்பாக நடந்தாலும் தன் பிள்ளை, தங்கள் கை மீறி போய் விட்டது
போன்ற உணர்வு மணமகனின் பெற்றோர்க்கு.

அந்த எண்ணத்தை மறைத்து, வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, எந்த
குறையும் இல்லாமல் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர்…

அதிகாலை திருமணம் முடிந்த கையோடு, பெண்ணை புகுந்த வீட்டில் அனுப்பி
விட்டு ரம்யாவின் பெற்றோர் விடைபெற்றனர்.

திருமணம் முடிந்து வீட்டிற்க்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்த கையுடன்
உறவினரின் பேச்சு ஆரம்பமாகியது. சற்றே மெலிந்த உடல்வாகு கொண்டவள், புதிய
உறவுகள், புது இடம், புது விதமான பேச்சுக்கள் எல்லாம் சேர தனக்குள்ளே
சுருங்கிக் கொண்டாள்.

“ஏன் பெரியதம்பி, நீ கட்டுன பொண்ணு வீட்டுல ரொம்ப கை சுருக்கமோ?
பொண்ணுக்கு நல்ல விதமா ஆக்கிபோட்டு உடம்ப தேத்து விடாம இப்படி பஞ்சத்துல
அடிபட்டவ மாதிரில்ல இருக்கா கல்யாணப் பொண்ணு” என உறவினர்கள் விசாரணையை
ஆரம்பிக்க

“அப்படி எல்லாம் இல்ல அத்த! அவ உடம்பு அப்படி, எல்லோரும் ஒண்ணு போலவே
இருக்குறோமா என்ன?” மாப்பிள்ளை பதிலுரைக்க

“இதப்பாருடா… பொஞ்சாதிய விட்டுக்குடுக்காம இருக்கான், பேசவாவது
செய்யலாமே, உன்ர பொஞ்சாதி… நாங்க பத்து கேள்வி கேட்ட மூணுக்கு தான்
பதில் வருது, சொல்லி வை தம்பி நம்ம உறவுகாரவுகள பத்தி…” என பட்டியல்
இடுவோர் நீள…

“சரி அத்த சொல்லி வைக்குறேன், புது இடம், கொஞ்சம் சங்கோஜம் இருக்கத்தானே
செய்யும்…“ மாப்பிள்ளையும் நெளிய

“எப்ப தம்பி சொல்ல போற? நீ சொல்லி, அவ இந்த வீட்டு பழக்கத்தை எல்லாம்
கத்துக்குறது எப்போ?” இது அடுத்தவரின் வாதம்

“இப்ப ஒரு வாரந்தான் இங்கே இருப்பீங்க. அப்பறம் வேலைன்னு சாக்கு
சொல்லிட்டு பட்டணத்துக்கு ஓடவே உங்களுக்கு சரியா வரும்” என்று
கணித்தவர்கள்

“வேற நான் என்னதான் பண்ணணும்னு எதிர்பாக்குறீங்க அத்த?” கிரி ஆதங்கத்துடன் கேட்க

“அவள ஒரு மாசம் இங்கே விட்டுட்டு போ பெரியதம்பி, எல்லா சொந்தக்காரங்க
வீட்டுக்கும் போய் பழகிகட்டும்”, குடும்பத்து மூத்த மருமக நம்ம சனங்களை
எல்லாம் தெரிஞ்சு, நம்ம பழக்க வழக்கத்தை எல்லாம் கத்துக்கணும்”
பட்டியலிட்டார் மீனாட்சி அம்மாள்.

“இப்போ தான் வேலைக்கு சேர்ந்து இருக்கோம், லீவெல்லாம் எடுக்க
முடியாதும்மா… இந்த பதினைஞ்சு நாள் லீவுக்கே கொஞ்சம் கஷ்டமாப் போச்சு,
நிச்சயமா கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு வர்றேன், அப்போ எல்லோரோட
வீட்டுக்கும் போயிட்டு வரட்டும்” சிரித்துக்கொண்டே சொன்னாலும் ஒரு வித
சங்கடம் கிரிதரனுக்கு.

மீனாட்சி அம்மாவிற்க்கோ பொல்லாத கோபம் மனதில். அனைவரின் முன்பும் மகன்
தன் பேச்சை தட்டி விட்டானே என்று அதை பேச்சில் காட்டத் தொடங்கினார்…

“இதுக்கு தான் பட்டணத்து பொண்ணு வேணாம்னு சொன்னது. நம்ம உறவுக்குள்ள
கட்டியிருந்தா இந்நேரம் இவ்ளோ பேச்சு இருக்குமா?” அங்கலாய்த்தவர்

“நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அத எல்லாம் இந்த காலத்து
புள்ளங்களுக்கு எங்கே தெரியுது? வந்த மருமக தான் இதயெல்லாம் தெரிஞ்சு
குடும்பத்த நடத்தணும்.

இப்போவே பொண்டாட்டிய விட்டுட்டு போக மாட்டேன்னு சொல்றவன் எங்கே? எப்போ?
தனியா இங்கே விடப் போறான்?” என நீட்டிமுழக்கி விட்டார் கிரியின் தாயார்.

இத்தனை பேச்சுகளிலும் ரம்யா சிறிதும் கலந்து கொள்ளவில்லை. அவள் மனதில்
பயம் வந்து உட்கார்ந்து கொண்டது.

துணையாய் வந்த பெற்றவர்களும் இல்லாமல், ஏதோ ஒரு காட்டுக்குள் வழி தெரியாத
அபலை பெண்ணாய் தான் அமர்ந்திருந்தாள். பட்டணத்தில் பிறந்து
வளர்ந்தவளுக்கு சபை நாகரிகம் வாய்பூட்டை போட்டிருந்தது.

பொதுவாகவே புதிய மனிதர்களை பார்த்தால் ஒதுங்கிக் கொள்பவள்.. தன்னையே
எல்லோரும் உற்று உற்று பார்க்க, ஏதோ ஓர் தனிமை உணர்வு வந்து ஆட்கொண்டது.

அவள் வயதை ஒத்த செந்தாமரையிடமும் பேச்சு சற்று குறைவே, கணவனின்
தம்பியிடம் மிக சுத்தமாய் ஒதுங்கிக் கொண்டாள்.

மனம் மயக்கும் திருமண இரவில் மெல்லிய அலங்காரத்தோடு அறைக்கு வந்தவளின்
குழப்ப முகத்தை கண்டு கொண்டவனுக்கு சகஜமாய் மனைவியை தன் வீட்டில் எப்படி
பொருத்துவது என்ற கவலை சூழ்ந்து கொண்டது.

தோள்களில் அணைவாய் பக்கத்தில் அவளை அமர வைத்துகொண்டு மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.

“இங்கே எல்லாம் பிடிச்சிருக்கா ரம்யா?”

“ஓ பிடிச்சிருக்கு”

“எங்க அப்பா அம்மா?”

“பிடிச்சிருக்கு”

“இது நம்ம ரூம், உனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம், என்ன வேணும்னு
சொல்லு செஞ்சிருவோம்,”

“ஏன் சென்னைக்கு போகப் போறதில்லையா கிரி?” என கண்களை விரித்து கேட்டவளிடம்

“ஏய்! சென்னையில தான் இருக்க போறோம், நாம இங்கே அடிக்கடி வந்துட்டு
இருக்கணும் ரம்யா.. மொத்தமா அங்கேயே இருக்க முடியாது? சரியா?” என்றவனின்
பேச்சிற்க்கு நன்றாகவே ஆட்டியவளின் தலையை தன் இரு கைகொண்டு நிறுத்தி

“இப்படி எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு இருக்காதே!
உனக்கு என்ன தோணுதோ சொல்லு” சற்றே சீண்டி விட அது நன்றாய் வேலை செய்தது.

“யாரு நானாடா மாடு? நானா தலையாட்டிட்டு இருக்கேன்? நீதான்டா மாடு! யாரு
என்ன சொன்னாலும் “சரி அத்த”, “சரி மாமா”னு ஆட்டிகிட்டே இருக்கே, ஒரு உரலை
தலையில கட்டி வச்சிருந்தா இந்நேரம் கல்யாணத்துக்கு மாவாட்டி இருக்கலாம்”

“அடிப்பாவி! பாவமா மூஞ்சிய வச்சுகிட்டு என்ன பேச்சு பேசுற? இந்த பேச்ச
கீழே சொந்தக்காரங்க கிட்ட பேசினா எல்லோரும் சந்தோசப்படுவாங்கடி, எனக்கும்
மாவாட்டற வேலை குறைஞ்சுருக்குமே?”

“அப்படி சட்டுன்னு பேசி பழக்கம் இல்ல கிரி… எனக்கு கூச்சமா இருக்கு,
எங்கேயும் போய் இருந்ததும் இல்ல”, தனக்கு இந்த வீடு பொருந்தவில்லை என்பதை
கோடிட்டு காட்டி விட்டாள் கணவனிடம்.

“இனிமே பழக்கப்படுத்திக்கோ ரமி… கிராமத்து ஜனங்க, இங்கே இருக்குற பழக்க
வழக்கம் எல்லாமே உனக்கு புதுசு தான். அவங்க வெளிப்படையா பேசுறாங்க, மனசுல
எதையும் வச்சுக்க தெரியாதவங்க, நீ ரெண்டு நாள் பேசி, பழகினாலே உனக்கு
தெரிஞ்சுரும்” நெற்றியில் முத்தமிட்டவாறே சொல்ல நெளிய ஆரம்பித்து
விட்டாள்.

அவள் நெளிவு, மனதில் உள்ள பயம் அனைத்தும் சேர்ந்து முகத்தில் பல வித
பாவங்களாய் சுருங்கியும் விரிந்தும் மாற

“இப்படியெல்லாம் மூஞ்சிய வச்சுக்காதேடி, பாக்க புடிக்கலே எனக்கு”

“நீ இப்படி ஓட்டிகிட்டு இருந்தா இன்னும் மோசமா கூட என் மூஞ்சி போகும்
கிரி, கொஞ்சம் இடம் விடேன்… ஏன் இப்படி பசையா ஓட்டிகிட்டு இருக்கே?”

“அது முடியாது, இப்போதைக்கு என்னால முடிஞ்சா வேலை இது மட்டும்தான், நம்ம
வீட்டுல தான் நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன். அது
வரைக்கும் இப்படி பக்கத்துல உக்காந்து சமாதானம் பண்ணிக்கிறேன்”

“தள்ளியிருக்கேன்னு கொஞ்சம் தள்ளி உக்காந்தே சொல்லலாம் கிரி, எனக்கு
இப்படி.. பிடிக்கல…” மீண்டும் முகத்தை சுருக்க

“போடி பச்சமிளகா! கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் இல்லாத ஜடம் நீ”

“நீதான்டா அது, பக்கத்துல ஓட்டிகிட்டு, தள்ளி நிக்கிறேன்னு ஜடம் மாதிரி
சொல்றே, அரலூசு மாதிரி பேசுறே…” கடிந்து கூற

கோபமாய் தள்ளி அமர்ந்து கொண்டான். சட்டென்று அவனின் விலகலில் மனம் பதற
“கோபப்படாதே! கிரி சாரி… நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது, நீ
என்னோட நல்லதுக்கு தான் பாக்குறேனு தெரியுதுடா, கொஞ்சம் கூச்சமா பீல்
பண்ணினேனா, அதான் அப்படி பேசிட்டேன்” என்று சமாதனப்படுத்த இன்னும் ஒட்டி
அமர, கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமால் அவளைத் தன் தோளில் போட்டுகொண்டு
உறங்க ஆரம்பித்தான்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் அங்கு தங்கிருந்த காலத்தில் ரம்யாவிற்கு
முள் மேல் நடக்கும் நிலை தான். குடும்ப பாரம்பரியத்தை சொல்லிச்சொல்லி
அதன் படி நடக்கச் சொன்னவர்கள் அவள் நின்றாலும், நடந்தாலும்
குற்றப்பத்திரிகை வாசித்து மறைமுக எதிர்ப்பைக் காட்டத்தொடங்கினர்…

அந்த குற்றச்சாட்டின் தீர்ப்பு “நம்ம இனத்துல பொண்ணு கட்டியிருந்தா இவ்ளோ
கஷ்டம் நமக்கு இல்ல, இப்படி ஒண்ணொண்ணா சொல்லிக்குடுத்து வேண்டியிருக்கு”
என்பதே….

வீடெங்கும் உறவினர் சூழ்ந்திருக்க சதா மணப்பெண்ணை சுற்றி கண்கொத்தி
பாம்பாக பார்த்து வைத்து குத்திக் காட்டி பேசியதை கணவனிடம்
சொல்வதற்க்கும் வாய் வரவில்லை மணப்பெண்ணிற்க்கு.

கணவனை அழைக்கும் முறையையும் ஆட்சேபித்தவர்கள் “இது என்ன பேச்சு
கொஞ்சம்கூட மாரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிட்டுகிட்டு?

அழகா “மாமா” “மச்சான்” அதுவும் இல்லனா “அத்தான்”னு கூப்பிட்டு பழகு. இது
கிராமம், எல்லா விசயத்துலயும் ரொம்பவே அனுசரிக்கணும், உன் இஷ்டத்துக்கு
இங்கே இருக்கலாங்கிறத மறந்துரு” போன்ற பல சட்டதிட்டங்களை மருமகளுக்கு
சொல்லி, அவளுக்கு தான் என்றுமே எதிரி என்னும் மேல்பூச்சை பூசிக்கொண்டார்
மீனாட்சி அம்மாள்….

கணவனின் அருகாமையில் மட்டுமே நிம்மதியாக முச்சு விட முடிந்தது…

எங்கே தான் சொல்வது தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்ச
உணர்வு, உறவினர்களின் பேச்சை கணவனிடம் பகிர்ந்துகொள்ள விடாமல் தடுத்தது.

சென்னையில் வரவேற்பு முடிந்து தனிக்குடித்தனம் ஆரம்பித்து வைக்க வந்த
இடத்திலும் இந்த குத்தல் பேச்சு தொடர, தகுதிக்கு மீறிய இடத்தில் பெண்ணை
கொடுத்தது தவறோ என்ற எண்ணம் பெண்ணை பெற்றவர்களின் மனதை பதம் பார்த்தது

கிரிதரனின் சென்னை வீடு கொஞ்சம் பெரிய வீடாகத் தான் இருந்தது..
ஊரிலிருந்து அடிக்கடி பெற்றோரின் போக்குவரத்தும், சிறிது நாட்கள் கழித்து
தன் தம்பி முரளிதரனின் ஜாகையையும், இங்கே மாற்றிக்கொள்வதாக சொன்னதால்
பெரிய வீடாக பார்த்து முடித்திருந்தான்…

முன்பக்கம் பெரிய ஹாலும் அதனை ஒட்டிய மூன்று அறைகளும் அதற்கடுத்து இருந்த
சமையல் அறையும் கொண்ட தனிக்குடித்தனத்திற்கு தேவையான அனைத்து
பொருள்களையும், தன் தகுதிக்கு மீறியே சீர் செய்திருந்தார் ரம்யாவின்
தந்தை சண்முகம். “எதற்கு இவ்ளோ செய்றீங்க மாமா வேண்டாம்” என்று தடுத்த
மாப்பிள்ளையிடம்

“என்னை தடுக்காதீங்க மாப்ளே! இது என்னோட கடமை மட்டுமில்ல, என் பொண்ணு மேல
வச்சுருக்கிற பாசத்தை காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம்.

அவ எங்கவீட்டு இளவரசி, அவ கஷட்டப்பட்டா அத பாக்குற சக்தி எங்களுக்கு
இல்ல. இது ஒரு சுயநலம்னு கூட நீங்க எடுத்துக்கலாம். நாங்களும் சந்தோசமா
இருக்க தான் இத செய்றேன்” என்று நெகிழ வைத்து விட்டார்…

கிரிதரனுக்கு பெருமை தாங்கவில்லை… அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவள்,
அன்று ஏன் தன் காதலை ஏற்க மறுத்தாள் என்பது தெளிவாக விளங்கியது… திருமண
ஆராவாரங்கள் அடங்கி அமைதியான, மகிழ்ச்சியான நல்லதொரு நாளில், தங்களின்
இல்லறத்திற்க்கான அடுத்த அடியை எடுத்து வைத்தான்….

Gggg

Ggggg

OVOV 13

அத்தியாயம் 10 

 

       “செம போ…ஆமாம் நீ பண்ணி வைச்சுருக்க கூத்துக்கு அந்த கவி உன்னை சும்மாவா விட்டா…”என்று ஷா சிரிப்புடன் கேட்கவும்

       அதே ஏன் கேட்குறீங்க என்பது போல் ஒரு சலிப்பான பார்வையை ஷாவை நோக்கி செலுத்தியவன் “உஸ்ஸெ பேசி  தோ நாள் ஹோ கயே…”அவள் பேசி இரண்டு நாட்கள் ஆகிறது என்று குரலில் ஒரு சலிப்புடன் கூறினான் மாஹிர்

        “ஹா ஹா ஹா…செம..என்று சிரித்தவள்…அடுத்து பெரியவள் என்கிற முறையில் தீவிரமான குரலில்

.மஹி நல்லா கேட்டுக்கோ…தேவை இல்லாம எங்க சண்டைக்குள்ள உங்களை இன்வால்வ் பண்ணிக்காதே…சொல்லிட்டேன்…”

     என்ற ஷாவின் வார்த்தைகளுக்கு அவளை புரியாத பார்வை பார்த்தவன் “ஆப் ரெண்டு பேரும் பதி பத்தினியா க்யா தீதி…ஜப் சண்டை ரக்தே ஹோ…”நீங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா…எப்ப பார்த்தாலும் சண்டை போட..”இனி நீங்க தோனோ பார்ப்பிங்களோ…யா நஹி…”இனி நீங்க ரெண்டு பேரும் பார்ப்பிங்களோ இல்லை  மாட்டிங்களோ…என்றவன் கொளுத்தி போட்ட சந்தோஷத்தில் கள்ள சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றான்

         அதானே நாம எதுக்கு இப்ப இந்த வார்த்தையை சொன்னோம் என்று நினைத்தவள்…அப்ப. யாதவை பார்க்கணும்…அவன் கூட சண்டை..என்று அவளது id  நிகழ்காலம் எதிர்காலம் என்று வரப்போகும் எந்த விஷயத்திற்கும் கவலை படாமல் ஆழ் மனதின் ஆசைகளை நோக்கி போகும் போது இடையில் புகுந்த சூப்பர்ஈகோ அதெல்லாம் ஒன்னும் கிடையாது போய் வேலையை பாரு என்று கூற…அதில் வெகுண்டு எழுந்த ரவுடி பேபியான id மூடிட்டு போறியா இல்லை மூஞ்சில பூரான் விடவா என்று எகிற..தெய்வ அம்சமான கதாநாயகி வேடம் மேற்கொள்ளும் சூப்பர் ஈகோ நீ ரொம்ப பேசுற…இதெல்லாம் நல்லதுக்கு இல்லை நீ சொல்ற மாதிரி எல்லாம் நடந்துக்கிட்டா ஷாவுக்கு தான் பிரச்சனை…சும்மா இருந்த பிள்ளையை நீ தானே அன்னைக்கு உசுப்பிவிட்டு சரக்கு அடிக்க சொல்லி வந்த பிரச்சனையை பார்த்த தானே….திரும்பியும் ஆரம்பிக்குற… என்று இருவரும் எப்பொழுதும் போல் சண்டையை மேற்கொள்ள…இதற்கு மேலும் நம் தலையை காட்டாவிடில் பாவம் இந்த ஷா பிள்ளை என்று பரிதாபப்பட்ட நாட்டாமை ஈகோ இரண்டு பேரும் சண்டையை நிப்பாட்டுங்க மொத நான் வந்துட்டேன் என்று கெத்துடன் இருவரையும் அமைதியாக்கிய ஈகோ சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தது…அதற்குள் இந்த id சூப்பர் ஈகோவை நோக்கி twerking என்னும் நடன அசைவு போட்டு வெறுப்பேத்திக்கொண்டிருந்தது…அதின் எந்த குரங்கு சேட்டைக்கும் விழி மடுக்காமல் நம்மவூரு சீரியல் கதாநாயகி போல் எதையும் தாங்கும் இதயமாக சூப்பர் ஈகோ கம்முனு இருந்தது….

    எனக்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு…சரி…கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கு அப்பறம் இந்த யாதவ் பத்தி யோசிப்போம்…இப்ப இரண்டு பேரும் போங்க…”என்று நாட்டாமை ஈகோ  id மற்றும் சூப்பர் ஈகோவை  விரட்டிவிட…இருவரும் சென்றனர்

      ஈகோவின் முடிவே இறுதியானது…அதை தான் நாம் செயல்படுத்துவோம்…எனவே ஷாவும் யாதவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த ஷாட்டிற்கு காமெராவை பொருத்த சென்றுவிட்டாள்

 

          மனதத்துவ சாஸ்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் Sigmund frued இன் கூற்றுப்படி மனிதர்களின் செயல்கள் மூன்றாக பிரிக்கப்படும்…அவை 

id 

ego 

superego 

id  என்பது நம் ஆழ்மனதின் ஆசைகளை பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்…அதற்கு இந்த சமூகத்திற்கான நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது…அதற்கு பிடித்தது நடந்தே ஆக வேண்டும்

 

superego  என்பது மிக மிக நல்லவன்…அதற்கு நியாயம் தர்மங்கள் மட்டுமே முக்கியம்…ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் தெய்வம் மாதிரி

 

ego என்பது சரி எது தவறு எது என்று ஆராய்ச்சி செய்து…அனைத்து புறம் இருந்தும் யோசித்து சமுதாயத்திற்கும் நமக்கும் சரியான முடிவை எடுக்கவைப்பது…மொத்தத்தில் அவர்கள் இருவருக்கும் நாட்டாமை மாதிரி… (இன்னும் நிறைய போகும் இதற்கு மூன்றுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி subconsicious …consicious …unconsicious என்று அதெல்லாம் சொன்னால் அவ்வளவு தான்…குழம்பி விடும்…)

 

    இந்த ஒரு வாரகாலத்தில் சிரபுஞ்சி மக்களின் வாழ்வியலை நினைத்தாலே ஷாவிற்கு குழப்பமாக இருந்தது…காலையில் எழுந்தவுடனே காசி இன பழக்கூடியரின் பிரத்தியேக பத்திரிகையை khasi மொழியில் வாசித்து விட்டு…பாப் இசை கேட்டவாறு பொழுதுகளை போக்கி…உடைந்த ஆங்கிலத்தில் பேசி…உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதை பற்றி கிஞ்சித்தும் கவலை படாமல் கால்பந்து விளையாடி…பீடா பாண் மசாலாவை எந்நேரத்துக்கும் வாயிற்குள் அதக்கி..ஊரை தூய்மையாக பேணி,எந்நேரமும் மழை பெய்யும் இடத்தில இருந்துகொண்டு மாடியில் துணிகாயப்போட்டு…அலகாபாத் தீர்க்கரேகை கைங்கரியத்தில் இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் ஒற்றை நேர மண்டல விளைவினால் அதிகாலை நான்கரை மணிக்கு விடிந்தும் ஆறு மணிக்கு இருட்டியும் விடுவதை வாழ்நாள் முழுக்க சகித்துக்கொண்டு…ஹப்பா… என்று அவள் நினைத்துமுடிக்கும் போது அவர்கள் சேர வேண்டிய இடமான டான் பாஸ்கோ மையம்  வந்துவிட்டது…

டான் பாஸ்கோ மையம் பல வகையான கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. பயணிகள் பலவகையான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம். சலேசியன் சங்கத்தால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியகம் புனித இருதய தேவாலய வளாகத்தின் உள்ளேயே இருக்கிறது. உள்ளூர் மக்களால் டான் பாஸ்கோ மியுசியம் என அழைக்கபப்டும் இதில் 17காட்சியகங்கள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு இந்த காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், உடைகள், ஆபரணங்கள், கூடைகள்,  மொழிகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

    யாதவ் மற்றும் கனிஷ்கா படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஆருஷா,மாஹிர் மற்றும் சித்தார்த் வந்திருந்தனர் ஆருஷாவின் குருவான பாலு தான் யாதவின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர்…அவருக்கு இந்த மேகாலயா சீதோஷண நிலை ஒத்துக்கொள்ளாமல் போய்விட சில உடல்நல உபாதைகள் ஏற்பட்டது…இங்கு அவர்களின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது…அடுத்த பகுதி எல்லாம் சென்னையில் தான்… இங்கு படப்பிடிப்பு நடக்கும் ஒருவாரத்திற்கு மட்டும் ஷாவை வந்து ஒளிப்பதிவு செய்துதருமாறு பாலு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்ள அவரிடம் மறுக்கமுடியாத காரணத்தால் ஷா மற்றும் மாஹிர் இங்கு வர கிளம்ப…அவர்களுடன் இணைந்துகொண்டான் சித்தார்த்…

    அவன் இங்கு வரக்காரணம் கனிஷ்கா,யாதவ்,சித்தார்த் என்று மூவரையும் அறிமுகம் படுத்திய வேதன் தான் யாதவின் இயக்குனர் என்பதால் ஏழு வருடங்களுக்கு பிறகு படத்திலாவது மூவரையும் ஒரே பிரேமில் காட்டவேண்டும் என்று வேதன் ஆசைகொள்ள இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திற்கு சித்தார்த்தை அழைத்திருந்தார்…எனவே அவனும் இவர்களுடன் இணைந்து கொண்டு இங்கு வந்திருந்தனர்…

 ரெட்ஹில்ஸ் என்னும் நிறுவனம் தான் சித்தார்த் மற்றும் யாதவ் நடிக்கும் இருபடங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது… எனவே அனைத்தும் சாத்தியம் ஆகியது…

     வண்டி நின்றவுடன் முதலில் இறங்கிய மாஹிர் தனது ஆருயிர் காதலியை பார்க்க தீதியை போக்கில் விட்டுவிட்டு ஓடிவிட்டான்…அதற்கு பிறகு இறங்கிய சித்தார்த் கதவை திறந்துவிட…இரு கைகளிலும் கைப்பை மற்றும் பாலுவிற்கான பொருள்களை எடுத்துக்கொண்டு ஷா வண்டியிலிருந்து இறங்கியவளின் காலணி தடுக்கி  விழப்போக அருகிலிருந்த சித்தார்த் தாங்கி பிடித்தான்

      ஹே…பார்த்து…கண்ணாடி போட்டும் ஒழுங்கா கண்ணு தெரில”என்றவனின் ஒரு கரம் ஷாவின் இடையில் இருக்க…மறுக்கரம் அவளது கண்ணாடியை தொட்டுக்கொண்டிருந்தது… 

      சிரிப்புடன் அவனிடமிருந்து விலகிய ஷா “போ பைத்தியம்…”என்று சிரிப்புடன் கூறியவாறு விலகி செல்ல…அவள் பின்னே சித்தார்த்தும் ஏதோ பேசிக்கொண்டு சென்றான்

       இதையெல்லாம் அருகிலிருந்த மரத்திற்கு கீழ் நின்று பார்த்துக்கொண்டிருந்த யாதவ் மற்றும் கனிஷ்காவிற்கு  ஒரு கூடை நெருப்பை அள்ளி ஒரு துணியில் முடிந்து அவர்களின் வயிற்றில் காட்டியதை போல் வயிறு எரிந்தது

        அவர்கள்  அறிந்த சித்தார்த் இப்படி எல்லாம் கிடையாது…calm அண்ட் collective  என்பார்களே அதுபோல் அமைதியாக இருந்து அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவன்அதிகமாகவெல்லாம் பேசமாட்டான்…மிகவும் கவனமாக இருப்பான்இப்பொழுது பார்த்தால் ஷாவிடம் சிரித்து சிரித்து பேசுகிறான்…சம்திங் fishy …என்றவாறு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்

 

     என்ன டா ஓவரா வழியுரான்…அந்த கையை உடைச்சு அடுப்புல வைக்க…”என்று கனிஷ்கா கூற

        ஆமா…எவ்வளவு திமிரு இருந்தா என் முன்னாடியே அவள் இடுப்புல கைவைப்பான்…”என்று யாதவ் தன்னையறியாமல் மூக்கை விடைத்துக்கொண்டு கோவமாக கூறிவிட…

     யாதவை நோக்கி நக்கல் சிரிப்புடன் கூடிய பார்வையை கனிஷ்கா செலுத்த அதற்குப்பின்னே தான் கூறியதை உணர்ந்தவன் “தான் எதற்கு கோவப்படவேண்டும்…”என்று மனதிற்குள் புரியாமல் யோசித்தவன் வெளியே கனிஷ்காவிற்கு ஒரு பதிலை கூறினான்…

        இல்லை பக்கி…நம்ம ரெண்டு பேர் முன்னாடியே அதுவும் நீ அவனோட ex  லவர் உன்முன்னாடியே இப்படி பண்றானேன்னு…ஒரு நண்பனா எனக்கு கோவம் பேபி …”என்று செய்ய தெரியாத குழம்பிற்கு எதை எதையோ கொட்டி கிளறி செய்வோமே அது போல் உளறி சமன் செய்தான் யாதவ்…

        நீ சொன்னதை நான் நம்பவில்லை என்பதுபோல் பார்த்தவள் “ஏதோ சொல்லறநம்புறேன்…வா உள்ளே போகலாம்…”என்றவள் அவனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்…

 

   அவர்கள் இருவரும் படக்குழுவினர் இருக்கும் புறம் வர அப்பொழுது லைட்டிங் பொருள்களை சிலர்  தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்…அவர்கள் யாதவ் மற்றும் கனிஷ்காவை நெருங்கும்பொழுது அது கனிஷ்கா மேல் இடிப்பதுபோல் வர உடனே அவளை தோளில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான் யாதவ்

     அந்த சம்பவம் சரியாக ஆருஷா மற்றும் சித்தார்த் இவர்களை நோக்கி திரும்பும் போது நடந்து தொலைக்க…என்ன இது என்று கண்டுபிடிக்க முடியா ஒரு பார்வையில் ஷா நோக்க…நீ திருந்தவே போறது இல்லை என்ற பார்வையுடன் சித்தார்த் நோக்கினான்

       இருவர் தங்களை நோக்குவதை பற்றி கவலை கொள்ளாமல் “ஆர் யு ஒகே பேபி…”என்று யாதவ் கேட்க…ம்ம் என்பதுபோல் கனிஷ்கா தலையசைத்தாள்

         பிறகு இருவரும் வேதன்…பாலு…ஆருஷா…சித்தார்த் நின்ற இடத்தை நோக்கி சென்றனர்

          சம்பிரதாயத்திற்காக யாதவ் சித்தை மெதுவாக அணைத்து விடுவிக்க…கனிஷ்காவும் ஷாவும் சந்தோசத்துடன் ஒருவருடன் ஒருவர் அறிமுக புன்னைகையுடன் கைகுலுக்கி தங்களை அறிமுகம்படுத்திக்கொண்டனர்…

       யாதவின் பார்வை ஷாவை நோக்கி செல்ல சண்டித்தனம் செய்ய…அதை முயன்று அடக்கியவர் நின்றான்… ஷாவும் யாதவும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் நிற்க…சித்தும் கனிஷ்காவும் என்னவென்று சொல்லமுடியாத உணர்வு குவியல்களை தங்களுக்குள் அடக்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றனர்…அங்கு நடக்கும் மௌனராகங்களை பார்த்தவாறு தங்களுக்குள் சிரித்துக்கொண்ட பாலுவும் வேதனும் ஒருவரையொருவர் பார்த்து மௌனமாக சிரித்துக்கொண்டனர்

      விட்டால் இன்று முழுவதும் கண்ணாலே படம் ஓட்டுவார்கள் போலே என்று நினைத்த பாலு தொண்டையை செருமி…”இவை ஆருஷா…என் சீடை…”என்றவர் சிரித்துவிட்டு “இவ தான் ஒருவாரத்துக்கு இங்கே ஒளிப்பதிவாளர்…”என்றவர் யாதவை நோக்கி “ரெண்டு பெருகும் ஏற்கனவே பழக்கம்னு கேள்வி பட்டேன்…அப்பறம் எதுக்கு போன படத்துக்கு ஒளிப்பதிவாளரா நான் ஷாவை சொன்னப்ப நீ அடம் பண்ணி ப்ரொடியூசர்கிட்ட எல்லாம் பேசி…இவளை கான்செல் பண்ண…”என்று கேட்டு ஒரு தர்ம சங்கடமான சூழலை அங்கு உருவாக்கி விட…என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஷா மற்றும் யாதவ் இருவரும் முழித்தனர்…வெளியுலகை பொறுத்தவரை இவர்கள் இருவரும் முன்னால் காதலர்கள் தானே

        முடிஞ்சு போனது எதுக்கு சார்…”என்று வினவிய ஷா அடுத்து அவரிடம் எதுஎதுவோ கேட்டவாறு அவருடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்..

    தன் மனதே தன்னை குத்தும் செயலை அவர் ஷாவின் முன்னே கேட்டுவிட யாதவ் ஒரு மாதிரி கீழாக உணர்ந்தான்…ஏன் அன்று அப்படி செய்தான் என்றால் அனைத்தும் அவனின் சுயநலம் தான் காரணம்…வேறு எந்த நியாமான காரணங்களும்  இருப்பது மாதிரி அவனுக்கு தெரியவில்லை…வரலாற்று படம்…அவனுக்கு பெரிய திருப்பு முனையாக அமையவேண்டிய படம்…அதில் அவன் எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இல்லை…புது ஒளிப்பதிவாளர் ஏதாவது சொதப்பி விட்டால் என்னாவது என்று தயக்கத்தினால் தான் யார் சொல்லியும் கேட்காமல் களங்கம் படத்திற்கு ஒப்பந்தம் அங்கிருந்த ஆருஷாவை அந்த படத்திலிருந்து தூக்க வைத்தான்…முதலில் பெரிதாக தெரியாதது….ஷா என்பதால் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறது என்ற யோசனையுடன் அந்த இடத்தில நின்றிருந்தான்…

 

     சித்…ஏழு வருஷத்துக்கு அப்புறம் நீங்க மூணு பேரும் ஒரே பிரேம்ல வரப்போறிங்க…அதுவும் என் படத்துலையே…ரொம்ப சந்தோசமா இருக்கு டா…”என்று வேதன் உண்மையான ஆனந்தத்தில் கூறினார்

      எல்லாம் உங்களுக்காக தான் சார்…இல்லாட்டி தேவை இல்லாதவங்க முகத்துல எல்லாம் முழிக்க எனக்கு என்ன தலையெழுத்தா சார்…”என்று சித் கூற

       இவ்வளவு சீன் போடுற அளவுக்கு நீ ஒர்த் இல்லை…”என்ற கனிஷ்கா ஒரு முறைப்புடன் கைகட்டி திமிருடன் கூற…எப்பொழுதும் போல் அந்த வார்த்தைகள் அவனை கொதிநிலைக்கு கொண்டு செல்ல போதுமானதாக இருக்க

    உனக்கு ஏத்த மாதிரி பேசி சண்டைபோட எனக்கு நேரம் இல்லை…நான் ஷாவை பார்க்க போறேன்…”என்ற சித் வேதனிடம் விடைபெற்று சென்று விட…

       இங்கு யாதவும் கனிஷ்காவும் ஷ்ர்ர்ருவ்வ்வ் மோடில் நின்று கொண்டிருந்தனர்…

 

ஆமாம் இந்த மாஹிர் பையனை எங்கே

 

கவி…மேரே பியாரி…கவி…”என்று கோவத்தில் இருப்பவளிடம் மாஹிர் கெஞ்ச அவள் மிஞ்ச சென்று கொண்டிருந்தது

 

       பேசாதே…நீ என்கூட…உன்கிட்ட பல தடவை சொல்லிருக்கேன்…அண்ணா சார் தான் நான் இங்கே இப்படி இருக்குறதுக்கு காரணம்…என் படிப்பு…எங்க அக்கா கல்யாணம்…இப்ப அப்பா ஹாஸ்பிடல் செலவு எல்லாமே அவர்தான்…அவர் சட்டையில் என் முன்னாடியே கையை வைக்குற…எவ்வளவு ஹிம்மத் ச்சி தைரியம் இருக்கனும்…”என்று கவி கோவப்பட

      மேரே பியாரி…எனக்காக ஹிந்தி காதுகுறியா…”என்று கேவலமான தமிழில் யாதவ் கேட்க

        எருமை…அது கத்துக்கிறியா…”

        டிகே…முஜே மாப் கர் தேனா…”என்று இடைவரை குனிந்து மாஹிர்  கேட்க

         தமிழ்…தமிழ்…”

          என்னை மன்னிச்சு…ருக்கு…”என்று மீண்டும் இடைவரை குனிந்து கேட்க சிரிப்புடன் அவனை அணைத்துக்கொண்டாள் கவி…   

   தும் மேரே பியாரி மதுபாலா…”என்றவாறு மாஹிரும் அவளை இறுக அணைத்துக்கொண்டான்…

 

Yadhu weds aaru 10

அத்தியாயம் 10 

 

       “செம போ…ஆமாம் நீ பண்ணி வைச்சுருக்க கூத்துக்கு அந்த கவி உன்னை சும்மாவா விட்டா…”என்று ஷா சிரிப்புடன் கேட்கவும்

       அதே ஏன் கேட்குறீங்க என்பது போல் ஒரு சலிப்பான பார்வையை ஷாவை நோக்கி செலுத்தியவன் “உஸ்ஸெ பேசி  தோ நாள் ஹோ கயே…”அவள் பேசி இரண்டு நாட்கள் ஆகிறது என்று குரலில் ஒரு சலிப்புடன் கூறினான் மாஹிர்

        “ஹா ஹா ஹா…செம..என்று சிரித்தவள்…அடுத்து பெரியவள் என்கிற முறையில் தீவிரமான குரலில்

.மஹி நல்லா கேட்டுக்கோ…தேவை இல்லாம எங்க சண்டைக்குள்ள உங்களை இன்வால்வ் பண்ணிக்காதே…சொல்லிட்டேன்…”

     என்ற ஷாவின் வார்த்தைகளுக்கு அவளை புரியாத பார்வை பார்த்தவன் “ஆப் ரெண்டு பேரும் பதி பத்தினியா க்யா தீதி…ஜப் சண்டை ரக்தே ஹோ…”நீங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா…எப்ப பார்த்தாலும் சண்டை போட..”இனி நீங்க தோனோ பார்ப்பிங்களோ…யா நஹி…”இனி நீங்க ரெண்டு பேரும் பார்ப்பிங்களோ இல்லை  மாட்டிங்களோ…என்றவன் கொளுத்தி போட்ட சந்தோஷத்தில் கள்ள சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றான்

         அதானே நாம எதுக்கு இப்ப இந்த வார்த்தையை சொன்னோம் என்று நினைத்தவள்…அப்ப. யாதவை பார்க்கணும்…அவன் கூட சண்டை..என்று அவளது id  நிகழ்காலம் எதிர்காலம் என்று வரப்போகும் எந்த விஷயத்திற்கும் கவலை படாமல் ஆழ் மனதின் ஆசைகளை நோக்கி போகும் போது இடையில் புகுந்த சூப்பர்ஈகோ அதெல்லாம் ஒன்னும் கிடையாது போய் வேலையை பாரு என்று கூற…அதில் வெகுண்டு எழுந்த ரவுடி பேபியான id மூடிட்டு போறியா இல்லை மூஞ்சில பூரான் விடவா என்று எகிற..தெய்வ அம்சமான கதாநாயகி வேடம் மேற்கொள்ளும் சூப்பர் ஈகோ நீ ரொம்ப பேசுற…இதெல்லாம் நல்லதுக்கு இல்லை நீ சொல்ற மாதிரி எல்லாம் நடந்துக்கிட்டா ஷாவுக்கு தான் பிரச்சனை…சும்மா இருந்த பிள்ளையை நீ தானே அன்னைக்கு உசுப்பிவிட்டு சரக்கு அடிக்க சொல்லி வந்த பிரச்சனையை பார்த்த தானே….திரும்பியும் ஆரம்பிக்குற… என்று இருவரும் எப்பொழுதும் போல் சண்டையை மேற்கொள்ள…இதற்கு மேலும் நம் தலையை காட்டாவிடில் பாவம் இந்த ஷா பிள்ளை என்று பரிதாபப்பட்ட நாட்டாமை ஈகோ இரண்டு பேரும் சண்டையை நிப்பாட்டுங்க மொத நான் வந்துட்டேன் என்று கெத்துடன் இருவரையும் அமைதியாக்கிய ஈகோ சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தது…அதற்குள் இந்த id சூப்பர் ஈகோவை நோக்கி twerking என்னும் நடன அசைவு போட்டு வெறுப்பேத்திக்கொண்டிருந்தது…அதின் எந்த குரங்கு சேட்டைக்கும் விழி மடுக்காமல் நம்மவூரு சீரியல் கதாநாயகி போல் எதையும் தாங்கும் இதயமாக சூப்பர் ஈகோ கம்முனு இருந்தது….

    எனக்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு…சரி…கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கு அப்பறம் இந்த யாதவ் பத்தி யோசிப்போம்…இப்ப இரண்டு பேரும் போங்க…”என்று நாட்டாமை ஈகோ  id மற்றும் சூப்பர் ஈகோவை  விரட்டிவிட…இருவரும் சென்றனர்

      ஈகோவின் முடிவே இறுதியானது…அதை தான் நாம் செயல்படுத்துவோம்…எனவே ஷாவும் யாதவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த ஷாட்டிற்கு காமெராவை பொருத்த சென்றுவிட்டாள்

 

          மனதத்துவ சாஸ்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் Sigmund frued இன் கூற்றுப்படி மனிதர்களின் செயல்கள் மூன்றாக பிரிக்கப்படும்…அவை 

id 

ego 

superego 

id  என்பது நம் ஆழ்மனதின் ஆசைகளை பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்…அதற்கு இந்த சமூகத்திற்கான நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது…அதற்கு பிடித்தது நடந்தே ஆக வேண்டும்

 

superego  என்பது மிக மிக நல்லவன்…அதற்கு நியாயம் தர்மங்கள் மட்டுமே முக்கியம்…ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் தெய்வம் மாதிரி

 

ego என்பது சரி எது தவறு எது என்று ஆராய்ச்சி செய்து…அனைத்து புறம் இருந்தும் யோசித்து சமுதாயத்திற்கும் நமக்கும் சரியான முடிவை எடுக்கவைப்பது…மொத்தத்தில் அவர்கள் இருவருக்கும் நாட்டாமை மாதிரி… (இன்னும் நிறைய போகும் இதற்கு மூன்றுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி subconsicious …consicious …unconsicious என்று அதெல்லாம் சொன்னால் அவ்வளவு தான்…குழம்பி விடும்…)

 

    இந்த ஒரு வாரகாலத்தில் சிரபுஞ்சி மக்களின் வாழ்வியலை நினைத்தாலே ஷாவிற்கு குழப்பமாக இருந்தது…காலையில் எழுந்தவுடனே காசி இன பழக்கூடியரின் பிரத்தியேக பத்திரிகையை khasi மொழியில் வாசித்து விட்டு…பாப் இசை கேட்டவாறு பொழுதுகளை போக்கி…உடைந்த ஆங்கிலத்தில் பேசி…உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதை பற்றி கிஞ்சித்தும் கவலை படாமல் கால்பந்து விளையாடி…பீடா பாண் மசாலாவை எந்நேரத்துக்கும் வாயிற்குள் அதக்கி..ஊரை தூய்மையாக பேணி,எந்நேரமும் மழை பெய்யும் இடத்தில இருந்துகொண்டு மாடியில் துணிகாயப்போட்டு…அலகாபாத் தீர்க்கரேகை கைங்கரியத்தில் இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் ஒற்றை நேர மண்டல விளைவினால் அதிகாலை நான்கரை மணிக்கு விடிந்தும் ஆறு மணிக்கு இருட்டியும் விடுவதை வாழ்நாள் முழுக்க சகித்துக்கொண்டு…ஹப்பா… என்று அவள் நினைத்துமுடிக்கும் போது அவர்கள் சேர வேண்டிய இடமான டான் பாஸ்கோ மையம்  வந்துவிட்டது…

டான் பாஸ்கோ மையம் பல வகையான கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. பயணிகள் பலவகையான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம். சலேசியன் சங்கத்தால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியகம் புனித இருதய தேவாலய வளாகத்தின் உள்ளேயே இருக்கிறது. உள்ளூர் மக்களால் டான் பாஸ்கோ மியுசியம் என அழைக்கபப்டும் இதில் 17காட்சியகங்கள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு இந்த காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், உடைகள், ஆபரணங்கள், கூடைகள்,  மொழிகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

    யாதவ் மற்றும் கனிஷ்கா படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஆருஷா,மாஹிர் மற்றும் சித்தார்த் வந்திருந்தனர் ஆருஷாவின் குருவான பாலு தான் யாதவின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர்…அவருக்கு இந்த மேகாலயா சீதோஷண நிலை ஒத்துக்கொள்ளாமல் போய்விட சில உடல்நல உபாதைகள் ஏற்பட்டது…இங்கு அவர்களின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது…அடுத்த பகுதி எல்லாம் சென்னையில் தான்… இங்கு படப்பிடிப்பு நடக்கும் ஒருவாரத்திற்கு மட்டும் ஷாவை வந்து ஒளிப்பதிவு செய்துதருமாறு பாலு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்ள அவரிடம் மறுக்கமுடியாத காரணத்தால் ஷா மற்றும் மாஹிர் இங்கு வர கிளம்ப…அவர்களுடன் இணைந்துகொண்டான் சித்தார்த்…

    அவன் இங்கு வரக்காரணம் கனிஷ்கா,யாதவ்,சித்தார்த் என்று மூவரையும் அறிமுகம் படுத்திய வேதன் தான் யாதவின் இயக்குனர் என்பதால் ஏழு வருடங்களுக்கு பிறகு படத்திலாவது மூவரையும் ஒரே பிரேமில் காட்டவேண்டும் என்று வேதன் ஆசைகொள்ள இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திற்கு சித்தார்த்தை அழைத்திருந்தார்…எனவே அவனும் இவர்களுடன் இணைந்து கொண்டு இங்கு வந்திருந்தனர்…

 ரெட்ஹில்ஸ் என்னும் நிறுவனம் தான் சித்தார்த் மற்றும் யாதவ் நடிக்கும் இருபடங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது… எனவே அனைத்தும் சாத்தியம் ஆகியது…

     வண்டி நின்றவுடன் முதலில் இறங்கிய மாஹிர் தனது ஆருயிர் காதலியை பார்க்க தீதியை போக்கில் விட்டுவிட்டு ஓடிவிட்டான்…அதற்கு பிறகு இறங்கிய சித்தார்த் கதவை திறந்துவிட…இரு கைகளிலும் கைப்பை மற்றும் பாலுவிற்கான பொருள்களை எடுத்துக்கொண்டு ஷா வண்டியிலிருந்து இறங்கியவளின் காலணி தடுக்கி  விழப்போக அருகிலிருந்த சித்தார்த் தாங்கி பிடித்தான்

      ஹே…பார்த்து…கண்ணாடி போட்டும் ஒழுங்கா கண்ணு தெரில”என்றவனின் ஒரு கரம் ஷாவின் இடையில் இருக்க…மறுக்கரம் அவளது கண்ணாடியை தொட்டுக்கொண்டிருந்தது… 

      சிரிப்புடன் அவனிடமிருந்து விலகிய ஷா “போ பைத்தியம்…”என்று சிரிப்புடன் கூறியவாறு விலகி செல்ல…அவள் பின்னே சித்தார்த்தும் ஏதோ பேசிக்கொண்டு சென்றான்

       இதையெல்லாம் அருகிலிருந்த மரத்திற்கு கீழ் நின்று பார்த்துக்கொண்டிருந்த யாதவ் மற்றும் கனிஷ்காவிற்கு  ஒரு கூடை நெருப்பை அள்ளி ஒரு துணியில் முடிந்து அவர்களின் வயிற்றில் காட்டியதை போல் வயிறு எரிந்தது

        அவர்கள்  அறிந்த சித்தார்த் இப்படி எல்லாம் கிடையாது…calm அண்ட் collective  என்பார்களே அதுபோல் அமைதியாக இருந்து அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவன்அதிகமாகவெல்லாம் பேசமாட்டான்…மிகவும் கவனமாக இருப்பான்இப்பொழுது பார்த்தால் ஷாவிடம் சிரித்து சிரித்து பேசுகிறான்…சம்திங் fishy …என்றவாறு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்

 

     என்ன டா ஓவரா வழியுரான்…அந்த கையை உடைச்சு அடுப்புல வைக்க…”என்று கனிஷ்கா கூற

        ஆமா…எவ்வளவு திமிரு இருந்தா என் முன்னாடியே அவள் இடுப்புல கைவைப்பான்…”என்று யாதவ் தன்னையறியாமல் மூக்கை விடைத்துக்கொண்டு கோவமாக கூறிவிட…

     யாதவை நோக்கி நக்கல் சிரிப்புடன் கூடிய பார்வையை கனிஷ்கா செலுத்த அதற்குப்பின்னே தான் கூறியதை உணர்ந்தவன் “தான் எதற்கு கோவப்படவேண்டும்…”என்று மனதிற்குள் புரியாமல் யோசித்தவன் வெளியே கனிஷ்காவிற்கு ஒரு பதிலை கூறினான்…

        இல்லை பக்கி…நம்ம ரெண்டு பேர் முன்னாடியே அதுவும் நீ அவனோட ex  லவர் உன்முன்னாடியே இப்படி பண்றானேன்னு…ஒரு நண்பனா எனக்கு கோவம் பேபி …”என்று செய்ய தெரியாத குழம்பிற்கு எதை எதையோ கொட்டி கிளறி செய்வோமே அது போல் உளறி சமன் செய்தான் யாதவ்…

        நீ சொன்னதை நான் நம்பவில்லை என்பதுபோல் பார்த்தவள் “ஏதோ சொல்லறநம்புறேன்…வா உள்ளே போகலாம்…”என்றவள் அவனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்…

 

   அவர்கள் இருவரும் படக்குழுவினர் இருக்கும் புறம் வர அப்பொழுது லைட்டிங் பொருள்களை சிலர்  தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்…அவர்கள் யாதவ் மற்றும் கனிஷ்காவை நெருங்கும்பொழுது அது கனிஷ்கா மேல் இடிப்பதுபோல் வர உடனே அவளை தோளில் கையிட்டு தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான் யாதவ்

     அந்த சம்பவம் சரியாக ஆருஷா மற்றும் சித்தார்த் இவர்களை நோக்கி திரும்பும் போது நடந்து தொலைக்க…என்ன இது என்று கண்டுபிடிக்க முடியா ஒரு பார்வையில் ஷா நோக்க…நீ திருந்தவே போறது இல்லை என்ற பார்வையுடன் சித்தார்த் நோக்கினான்

       இருவர் தங்களை நோக்குவதை பற்றி கவலை கொள்ளாமல் “ஆர் யு ஒகே பேபி…”என்று யாதவ் கேட்க…ம்ம் என்பதுபோல் கனிஷ்கா தலையசைத்தாள்

         பிறகு இருவரும் வேதன்…பாலு…ஆருஷா…சித்தார்த் நின்ற இடத்தை நோக்கி சென்றனர்

          சம்பிரதாயத்திற்காக யாதவ் சித்தை மெதுவாக அணைத்து விடுவிக்க…கனிஷ்காவும் ஷாவும் சந்தோசத்துடன் ஒருவருடன் ஒருவர் அறிமுக புன்னைகையுடன் கைகுலுக்கி தங்களை அறிமுகம்படுத்திக்கொண்டனர்…

       யாதவின் பார்வை ஷாவை நோக்கி செல்ல சண்டித்தனம் செய்ய…அதை முயன்று அடக்கியவர் நின்றான்… ஷாவும் யாதவும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் நிற்க…சித்தும் கனிஷ்காவும் என்னவென்று சொல்லமுடியாத உணர்வு குவியல்களை தங்களுக்குள் அடக்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றனர்…அங்கு நடக்கும் மௌனராகங்களை பார்த்தவாறு தங்களுக்குள் சிரித்துக்கொண்ட பாலுவும் வேதனும் ஒருவரையொருவர் பார்த்து மௌனமாக சிரித்துக்கொண்டனர்

      விட்டால் இன்று முழுவதும் கண்ணாலே படம் ஓட்டுவார்கள் போலே என்று நினைத்த பாலு தொண்டையை செருமி…”இவை ஆருஷா…என் சீடை…”என்றவர் சிரித்துவிட்டு “இவ தான் ஒருவாரத்துக்கு இங்கே ஒளிப்பதிவாளர்…”என்றவர் யாதவை நோக்கி “ரெண்டு பெருகும் ஏற்கனவே பழக்கம்னு கேள்வி பட்டேன்…அப்பறம் எதுக்கு போன படத்துக்கு ஒளிப்பதிவாளரா நான் ஷாவை சொன்னப்ப நீ அடம் பண்ணி ப்ரொடியூசர்கிட்ட எல்லாம் பேசி…இவளை கான்செல் பண்ண…”என்று கேட்டு ஒரு தர்ம சங்கடமான சூழலை அங்கு உருவாக்கி விட…என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஷா மற்றும் யாதவ் இருவரும் முழித்தனர்…வெளியுலகை பொறுத்தவரை இவர்கள் இருவரும் முன்னால் காதலர்கள் தானே

        முடிஞ்சு போனது எதுக்கு சார்…”என்று வினவிய ஷா அடுத்து அவரிடம் எதுஎதுவோ கேட்டவாறு அவருடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்..

    தன் மனதே தன்னை குத்தும் செயலை அவர் ஷாவின் முன்னே கேட்டுவிட யாதவ் ஒரு மாதிரி கீழாக உணர்ந்தான்…ஏன் அன்று அப்படி செய்தான் என்றால் அனைத்தும் அவனின் சுயநலம் தான் காரணம்…வேறு எந்த நியாமான காரணங்களும்  இருப்பது மாதிரி அவனுக்கு தெரியவில்லை…வரலாற்று படம்…அவனுக்கு பெரிய திருப்பு முனையாக அமையவேண்டிய படம்…அதில் அவன் எந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராக இல்லை…புது ஒளிப்பதிவாளர் ஏதாவது சொதப்பி விட்டால் என்னாவது என்று தயக்கத்தினால் தான் யார் சொல்லியும் கேட்காமல் களங்கம் படத்திற்கு ஒப்பந்தம் அங்கிருந்த ஆருஷாவை அந்த படத்திலிருந்து தூக்க வைத்தான்…முதலில் பெரிதாக தெரியாதது….ஷா என்பதால் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறது என்ற யோசனையுடன் அந்த இடத்தில நின்றிருந்தான்…

 

     சித்…ஏழு வருஷத்துக்கு அப்புறம் நீங்க மூணு பேரும் ஒரே பிரேம்ல வரப்போறிங்க…அதுவும் என் படத்துலையே…ரொம்ப சந்தோசமா இருக்கு டா…”என்று வேதன் உண்மையான ஆனந்தத்தில் கூறினார்

      எல்லாம் உங்களுக்காக தான் சார்…இல்லாட்டி தேவை இல்லாதவங்க முகத்துல எல்லாம் முழிக்க எனக்கு என்ன தலையெழுத்தா சார்…”என்று சித் கூற

       இவ்வளவு சீன் போடுற அளவுக்கு நீ ஒர்த் இல்லை…”என்ற கனிஷ்கா ஒரு முறைப்புடன் கைகட்டி திமிருடன் கூற…எப்பொழுதும் போல் அந்த வார்த்தைகள் அவனை கொதிநிலைக்கு கொண்டு செல்ல போதுமானதாக இருக்க

    உனக்கு ஏத்த மாதிரி பேசி சண்டைபோட எனக்கு நேரம் இல்லை…நான் ஷாவை பார்க்க போறேன்…”என்ற சித் வேதனிடம் விடைபெற்று சென்று விட…

       இங்கு யாதவும் கனிஷ்காவும் ஷ்ர்ர்ருவ்வ்வ் மோடில் நின்று கொண்டிருந்தனர்…

 

ஆமாம் இந்த மாஹிர் பையனை எங்கே

 

கவி…மேரே பியாரி…கவி…”என்று கோவத்தில் இருப்பவளிடம் மாஹிர் கெஞ்ச அவள் மிஞ்ச சென்று கொண்டிருந்தது

 

       பேசாதே…நீ என்கூட…உன்கிட்ட பல தடவை சொல்லிருக்கேன்…அண்ணா சார் தான் நான் இங்கே இப்படி இருக்குறதுக்கு காரணம்…என் படிப்பு…எங்க அக்கா கல்யாணம்…இப்ப அப்பா ஹாஸ்பிடல் செலவு எல்லாமே அவர்தான்…அவர் சட்டையில் என் முன்னாடியே கையை வைக்குற…எவ்வளவு ஹிம்மத் ச்சி தைரியம் இருக்கனும்…”என்று கவி கோவப்பட

      மேரே பியாரி…எனக்காக ஹிந்தி காதுகுறியா…”என்று கேவலமான தமிழில் யாதவ் கேட்க

        எருமை…அது கத்துக்கிறியா…”

        டிகே…முஜே மாப் கர் தேனா…”என்று இடைவரை குனிந்து மாஹிர்  கேட்க

         தமிழ்…தமிழ்…”

          என்னை மன்னிச்சு…ருக்கு…”என்று மீண்டும் இடைவரை குனிந்து கேட்க சிரிப்புடன் அவனை அணைத்துக்கொண்டாள் கவி…   

   தும் மேரே பியாரி மதுபாலா…”என்றவாறு மாஹிரும் அவளை இறுக அணைத்துக்கொண்டான்…

 

TK 41

அத்தியாயம் – 41

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

கிழக்கே கதிரவன் தன்னுடைய பயணத்தைத் துவங்கிட அந்த வீட்டின் தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தாள் மினி. வயிறு நன்றாக மேடிட்டு இருக்க, “பேபிமா காபி குடிக்க வா..” என்று வீட்டின் உள்ளிருந்து குரல் கேட்டது..

“ம்ம் இதோ வரேன்..” என்று மெல்ல நடந்து ஹாலில் போய் அமர்ந்தவள், “இன்னும் என்ன பண்ற..” சிணுங்கலுடன் கேட்க, “ம்ம் வந்துட்டேன் வந்துட்டேன்..” என்று சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்டான் மதன்.

அவன் கையில் காபி கப்புடன் வரவே, “மதன் நீ ரொம்ப அழகாக இருக்கிற..” அவனைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்தாள் மினி.

“தேங்க்ஸ் பேபிமா..” என்றவன் “என்னோட பேபி சமத்தாக காபி குடிச்சிட்டு போய் ரெடியாகி வருவீங்களாம், நம்ம இருவரும் சேர்ந்து ஹாஸ்பிடல் போவோமாம்..” என்றதும் அவன் நீட்டிய காபியை எடுத்து குடித்தாள்

“சாப்பாடு ரெடி ஆகிருச்சு பேபி.. நீ சீக்கிரம் குடிச்சிட்டு கிளம்பு..” அவன் அதட்டல் போட, “ப்ளீஸ்டா காபி குடிக்க விடு..” அவனின் தாடையைப் பிடித்து அவள் செல்லம் கொஞ்சினாள்..

“இந்த மாதிரி நேரத்தில் என்னோட அம்மா இருந்தால் உன்னை எவ்வளவு பத்திரமாக பார்த்துப்பாங்க தெரியுமா?” தாயின் நினைவில் நின்றவனின் கையை பிடித்தாள் மினி..

அவன் திரும்பி அவளின் முகம் பார்க்க, “உன்னைவிட என்னை யாரும் இந்தளவுக்கு பாதுக்காப்பாக பார்த்து கொள்ள முடியாதுடா..” என்றவள் புன்னகைக்க அவளின் நெற்றியில் இதழ் முத்தமிட்டான்.

“சரி மதன் நீ சீக்கிரம் கிளம்பு.  உனக்கு டாக்டர் கிட்ட செக் பண்ணும் இல்ல. பேபி வேற பையனா? பொண்ணா? என்று தெரியல.” சீரியஸாக முகத்தை வைத்துகொண்டு சொன்ன மனைவியை முறைத்த மதன், “போக்கிரி”  திட்டிவிட்டு எழுந்துகொள்ள உதவி செய்தவன்,

“சீக்கிரம் கிளம்புடா. டாக்டர் கிட்ட பத்து மணிக்கு அப்பாயின்மென்ட்.” என்றவன் சொல்ல, “ம்ம்” என்றவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

மதனுக்கு – மினிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. அவளுக்கு இது ஏழாவது மாசம். அவன் தோளில் முன்னேறினாலும் அவனுக்கு என்று இருக்கும் ஒரே உறவு மினி மட்டுமே. அவளை சுற்றி தன்னுடைய வாழ்க்கை வட்டத்தை மாற்றிக்கொண்டான் மதன்.

இருவரும் மனமார காதலித்து திருமணம் செய்ததாலோ அல்லது மதனின் வாழ்க்கை முன்னாடியே தடுமாறி சென்றதுதான் இப்பொழுது அவனின் வாழ்க்கை நன்றாக அமைந்ததோ இந்த கேள்விக்கு இறைவன் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

மினிக்கும் அவளை தவிர வேறு யாரையும் தெரியாது. அவனுக்கும் அவள் மட்டுமே உலகம். இருமனம் ஒன்றிணைந்த பின்னால் அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்றது. இன்றைக்கு மினிக்கு செக்கப் நாள் அதற்கு அவளை அழைத்து செல்வது பற்றிதான் இதுவரை மதன் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் சீக்கிரம் தயாராகி வரவே இருவரும் சேர்ந்து ஹாஸ்பிடல் சென்றனர். மினிக்கு செக் பண்ணி முடித்துவிட்டு வெளியே வரும் பொழுதுதான் அவளின் கையிலிருந்த ஃபைலை கவனித்தவன், “இந்த ஃபைல் எதற்கு எடுத்துட்டு வந்த?” கோபத்துடன் அவளை முறைத்தான் மதன்.

அவனை கொஞ்சும் பார்வை பார்த்த மினியோ, “நான் வேண்டும் என்று எடுத்துட்டு வரல மதன். ” என்றதும், “சரி விடு..” என்றவன் காரில் ஏறினான்.

“மதன் ஒரு புக் வாங்கணும். வா மதன் மாலுக்கு போய் வாங்கிட்டு போகலாம்” என்றழைக்க “ம்ம் சரி போலாம்..” என்று இருவரும் மாலுக்குள் நுழைந்தனர். 

அவள் தேடிய புத்தகத்தை வாங்கிட்டு, “மினி ஜூஸ் குடிச்சிட்டு வீட்டுக்குள் போலாம்..” என்றதும் அவள் சரியென தலையசைத்தாள். 

அவளுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்தவனின் கைபேசி சிணுங்கிட, “இருடா ஒரு முக்கியமான போன் பேசிட்டு வரேன்” என்று ஜூஸ் கடையைவிட்டு வெளியே சென்றவன் போன் பேசி கொண்டிருந்தான்

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணத்திற்கு பிறகு டெல்லி சென்றடைந்தனர். மறுபடியும் ஏர்போர்ட்டில் செக்கிங் எல்லாம் முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்து சேர்ந்தனர்..

ஹோட்டலுக்குள் நுழைந்தும் மீண்டும் படுக்கையில் விழுந்த ஜெயா ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்திருந்தான் பிரபா..

இந்த மூன்று வாரத்தில் அவளிடம் அதிகமான மாற்றங்கள். எதற்கும் கலங்காத பெண்ணாகவே அவளை பார்த்திருக்கிறான் பிரபா. அன்று அவனிடம் எதற்காகவும் கலங்கமாட்டேன் என்று சொன்ன ஜெயா அன்று அவனின்  தோள் சாய்ந்து அழுதது அவனின் மனதை கொஞ்சம் மாற்றியது..

அதுவரை அவளின் மனம் மாறவேண்டும் என்று காத்திருந்தான் பிரபா. அவளின் மனமாற்றம் அவளின் கண்ணீர் வழியாக உணர்ந்தவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரியவில்லை. அவள் ஏன் அழுதாள்? என்ற கேள்விக்கு அவனிடம் விடையில்லை..

அவனின் மனதில் இருந்த கேள்வியை அவன் கேட்ட கேள்விக்கு அவள் உடனே பதில் சொல்லிவிட அவனின் மனதில் இருந்த கலக்கம் தேவையற்றது என்று உணர்ந்தான். அதன்பிறகு வந்த நாட்களும் அவர்களுக்கு இனிமையை பரிசளிக்க இதயம் லேசாக இருப்பது போல உணர்ந்தான்.

அவளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற முடிவு செய்து இந்த ஒருவாரமாக இரவு பகலும் கண்முழித்து வேலை பார்த்தான். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் சைன் பண்ண டெல்லி போகவேண்டிய கட்டாயம் ஏற்படவே அவளை தனித்து விட மனம் இல்லாமல், மாமாவிடம் சொல்லிவிட்டு அவளையும் உடன் அழைத்து வந்துவிட்டான்.

தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் தன்னுடன் இவ்வளவு தூரம் வந்த பொழுதே அவளின் மன மாற்றத்தை புரிந்து கொண்ட பிரபா, ‘இந்த ப்ராஜெக்ட் சைன் பண்ணிட்டு அவளை வெளியே கூட்டிட்டு போகணும்.’ என்று முடிவெடுத்தான்..

தன்னருகே குழந்தை போல தூங்கும் மனைவியை பார்த்துக்கொண்டே இருந்தவன் பிறகு எழுந்து குளிக்க சென்றான்.. அதற்குள் பொழுது நன்றாக விடிந்துவிட தூக்கம் களைந்து எழுந்தாள் ஜெயா. 

அவள் எழும் பொழுது பிரபா மீண்டும் வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, “பிரபா இப்போ எங்கே கிளம்பிட்ட..” என்றவள் தூக்க கலக்கத்துடன்.

“மொசக்குட்டி டைம் இல்ல. நான் இங்கே ஒரு ப்ராஜெக்ட் சைன் பண்ண வந்தேன். அந்த மீட்டிங்க்கு நான் கிளம்பிட்டு இருக்கேன்..” விளக்கம் கொடுக்க, “நீ சைன் பண்ண போற.. அப்புறம் நான் எதற்கு உன்கூட” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

“ம்ம் பிரபாவுக்கு லூஸ் கிளம்பிருச்சு.. அதன் உன்னையும் சேர்த்து இழுத்துட்டு வந்தேன்..” அவன் சிரிக்காமல் சொல்ல அவனை முறைத்தாள் அவள்..

“சரி அதை விடு..” என்றவன் “சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு இங்கே இருக்கிற மாலுக்கு போய் பர்சேஸ் முடித்துவிடு மலர். நான் மீட்டிங் முடிச்சிட்டு வரும் பொழுது மறக்காமல் மாலுக்கு  வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்..” என்றான் அவளுக்கு வேலை கொடுத்தான்..

அவனையே இமைக்காமல் பார்த்தவளோ, “என்ன ஊர் தெரியாத ஊரில் கொண்டுவந்து விட்டுட்டு பர்சேஸ் பண்ணுன்னு சொல்ற.. ஆமா நான் என்ன பர்சேஸ் பண்றது..” என்று அவனை முறைத்துக்கொண்டே விளக்கம்  கேட்டாள்..

“எனக்கு பேண்ட் சர்ட், உனக்கு ஜீன்ஸ், டாப்ஸ், குர்தீஸ் எல்லாம் வாங்கிட்டு எனக்கு போன் பண்ணுங்க மேடம்..” என்றவன் குறும்புடன் கண்ணடித்தான்..

அவனின் குறும்பு மின்னும் புன்னகை அவளை கவர, “நீ என்ன நாடுவிட்டு நாடு கடத்த பார்க்கிற..” மணிப்புறா போல தலையை சரித்து குறும்புடன் கேட்க, “அந்த ஐடியா இது மாதிரி இல்ல. இனிமேல் கொஞ்சம் யோசிக்கணும்..” சிந்தனையுடன் கூறினான்

அவனின் சிந்தனை முகத்தைக் கவனித்தவள், “ஏய் கேடி நீ செய்தாலும் செய்வ..” என்றவள் எழுந்து குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.. அவள் தயாராகி வர, “மலர் போலாமா?” என்றவன் கேட்க, “ம்ம்..” அவனுடன் கிளம்பிவிட்டாள். 

அவன் ஆபீஸ் செல்லும் வழியில் அவளை அங்கிருந்த பெரிய மால் முன்னே இறக்கிவிட, “நான் பர்சேஸ் முடிச்சிட்டு போன் பண்றேன் பிரபா..” என்றவள் சொல்ல, “கொஞ்சம் கேர்ஃபுல் மலர். தெரியாத ஊர். கொஞ்சம் கவனமாக இரு..” அவன் அக்கறையுடன் சொல்ல, “ம்ம்..” என்று புன்னகைத்தாள் ஜெயா..

அவன் சென்ற பின் மாலுக்குள் நுழைந்த அங்கிருந்த துணி கடைக்குள் நுழைந்தவள் பிரபாவின் நிறத்திற்கு தகுந்தார்போல் சர்ட் தேர்வு செய்து கொண்டிருக்க அந்த கடைக்கு வெளியே வரண்டாவில்  நின்று போன் பேசிக்கொண்டிருந்தான் மதன். 

அவன் போன் பேசிவிட்டு திரும்ப எதிரே வந்த பெண்ணைப் பார்த்ததும் சிலையென நின்றுவிட, “மதன்..” என்ற அழைப்புடன் ஜூஸ் கடையைவிட்டு வெளியே வந்தாள் மினி.

அவன் சிலையென நின்றிருப்பதைக் கவனித்தவளோ அவன் பார்வை சென்ற திசையில் தன் பார்வையை செலுத்தினாள். அங்கே நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும், “மதன் இவங்க யாரு?” அவனிடமே கேட்டான்.

அவனைப் பார்த்த அந்த பெண்ணோ அவனை நெருங்கி வந்தவளின் பார்வை அவன் மீது நிலைக்க மினியின் பார்வையோ அவளின் மீது கேள்வியாக படிந்தது.  அவளை அடையாளம் கண்டு கொண்டாள் மினி..

 ‘மதன் எதற்கு சிலையாகி நிற்கிறான்?’ என்று புரியாமல் அவள் நின்றிருக்க, அவளின் குரல்கேட்டு நடப்பிற்கு வந்த மதன், “என்னோட முதல் மனைவி இந்துமதி” அவளை அவன் மினிக்கு அறிமுகம் செய்துதான் தாமதம், 

“வாவ்..” சந்தோஷத்தை வெளிபடுத்தியவள் அந்த பெண்ணை நோக்கி செல்ல, “மினி எங்கே போற..” அவளின் பின்னோடு சென்றான் மதன்.

இந்துமதி மினியை புரியாத பார்வை பார்க்க, “ஹாய் இந்துமதி. நான் மின்மினி. மதனோட  மனைவி..” என்றவள் குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு மதனின் தோள் சாய்ந்தாள்.

அவள் சொன்னதைக்கேட்ட இந்துமதி மதனைப் பார்த்துவிட்டு பதில் பேசாமல் தலைகுனிந்து நிற்க, “உங்களோட லைப் எப்படி இருக்கிறது?” அக்கறையுடன் மினி அவளை விசாரிக்க மதன் மெளனமாக இருந்தான்.

“ம்ம் நல்ல இருக்கு..” என்று சொல்லும் பொழுதே அவளின் கண்கள் கலங்க அது மினியின் கண்களுக்குத் தப்பவில்லை..

“என்னங்க உங்களோட காதலனும் உங்களை கைவிட்டுவிட்டானா? இல்ல நீங்க அவரை பிடிக்கல என்று டைவர்ஸ் பண்ணிட்டு வந்துட்டீங்களா?” என்றவளின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. 

அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது மினிக்கு. ஆனால் அவள் யாருக்கு தண்டனை கொடுத்துவிட்டு சென்றாள் என்று நினைக்கும் பொழுது அவளின் உள்ளம் கொதித்தது.

“மினி..” அவன் அவளை அதட்ட, “நீ சும்மா இரு. நான் இன்னைக்கு பேசணும். இவள் எதனால் உன்னை விட்டுவிட்டு போனாள் என்று எனக்கு தெரியனும்..” என்றவள் இந்துமதியின் பக்கம் திரும்பினாள்.

“எந்த தவறும் செய்யாத இவர் கொடுக்கிற ஜீவனாம்சம் எல்லாம் வைத்து நீ சந்தோஷமாக வாழ நினைத்தாய் இல்ல. இப்போ என்ன ஆச்சு? எல்லாம் ஒட்டுமொத்தமாக போச்சா?” கோபத்துடன் கேட்டாள்.

அப்பொழுது எதர்ச்சியாக கண்ணாடி திரும்பிய ஜெயா அங்கே நின்றிருந்த மினியைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.. அவள் நிறைமாத கர்ப்பிணியாக நின்றிருப்பதை கண்டதும் அவளின் உலகமே தலைகீழாக மாறியது.

‘மினிக்கா மாசமாக இருக்காங்க..’ என்ற அதிர்வுடன் அவள் கடையைவிட்டு வேகமாக வெளியே வந்தாள். அழகாக சேலை கட்டி நெற்றியில் குங்குமம், கழுத்தில் பொன்தாலி மின்ன நின்றவளை பார்த்தும், ‘இவங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ அவள் மீண்டும் அதிர்ந்து நின்றாள்.

அங்கே நின்றிருந்த ஜெயாவை மதனோ மினியோ கவனிக்கவே இல்லை. அதே நேரத்தில் அக்காவை தேடிக்கொண்டு சங்கவி மற்றும் தர்மனும் அருகில் இருந்த போன் கடையிலிருந்து வெளியே வந்தனர்.. 

மதன் நிற்பதை முதலில் பார்த்த சங்கவி, “அப்பா அத்தான்..” என்றாள் புன்னகையுடன் சொல்ல, “என்னது மாப்பிள்ளையா?” என்றவர் வேகமாக திரும்பிப் பார்த்தார். ஆனால் அவரின் கண்ணில் முதல் விழுந்தது மினிதான்..

“சங்கவி உன்னோட மின்மினி அக்கா எங்கே நிற்கிற பாரு..” என்றவர் தன்னுடைய சின்ன மகளை அழைத்துக்கொண்டு அவர்களின் அருகில் சென்றார்..

அவள் சொல்வது போலவே இந்துமதியின் வாழ்க்கை சின்னாபின்னமாகி இப்பொழுதுதான் பழையது எல்லாம் மறந்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்து இருக்கிறாள். அவள் விரும்பிய காதலன் அவளை தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணிவிட்டு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டான்.

கடைசியில் சொந்தம் பந்தம் எல்லாம் தொலைத்து தனிமரமாக மீண்டும் வீடு திரும்பிய மகளை இந்த அளவிற்கு தேற்றி கொண்டு வந்ததே அவளின் அப்பா தர்மன் மற்றும் தங்கை சங்கவிதான் அதையெல்லாம் நினைத்தவளின் கண்கள் கலங்கியது..

“யாருக்குமே கெடுதல் நினைக்காத என்னோட மதனை நீ வேண்டாம் என்று சொல்லி இருக்கிற.” என்றதும் அவள் தலைகுனிந்து நிற்க, “பட் நீ வேண்டாம் என்று சொன்னதால் தான் என்னோட மதன் எனக்கு கிடைத்தார். அதுக்கு நான் உனக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும் இந்துமதி..” மதனின் கரங்களுடன் தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டாள்.

அதை கவனித்த இந்துமதி மெளனமாக நிற்க, “விவாகரத்து என்ற முடிவு எப்பொழுது எடுக்கணும் தெரியுமா?” மினியின் குரல் அவரின் காதில் விழ, “இங்கேயே நில்லு.. அவள் பேசி முடிக்கட்டும்..” என்று சின்ன மகளை அவர் தடுக்க, “அப்பா அக்கா..” என்றாள் சங்கவி

“உங்க அக்காவிற்குதான் அவள் புத்திமதி சொல்ற..” மகளைக் கடிந்துகொண்டவர் தூரத்தில் நின்று மினி பேசுவதை கவனித்தார்.

“இனிமேல் இவனோடு வாழவே முடியாது என்ற கட்டத்தில் தான் ஒருவர் அந்த முடிவிற்கு வரணும்.. தன்னோட சுயநலத்திற்காக தெரிந்தே மற்றவரின் நிம்மதியைக் கெடுக்கக்கூடாது..” என்றவள் எதையோ நினைத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்

“உன்னை மாதிரியே ஜெயாவும் இருந்திருந்தால் இன்னைக்கு பிரபாவோட வாழ்க்கையே திசை மாறி போயிருக்கும்.. அதிர்விலிருந்து வெளியே வந்த ஜெயா அவள் பேசுவதைக் கவனித்தாள்.

“கணவன் தவறு செய்துவிட்டேன் என்று அவனே சொன்னபிறகும் விவாகரத்து பற்றி யோசிக்காமல் மற்றவர் நிம்மதிக்காக அமைதியாக இருந்தாள் ஜெயா. அவளோட கண்ணோடத்தில் அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் தான். ஆனால் அதற்காக அவள் விவாகரத்து வரை போகவே இல்ல ”  என்றதும் ஜெயாவிற்கு எங்கோ பொறி தட்டியது..

‘நான் அவரோடு சேர்ந்து வாழும் விஷயம் இங்கே இருக்கும் மினிக்கு எப்படி தெரியும்?’ தீவிரமாக அவள் சிந்தித்தாள். அப்பொழுது அவளின் மனகண்ணில் மின்னி மறைந்தார் கோபிநாத்.

 “இதைவிட அது பேஸ்ட் என்று அவள் நினைத்திருந்தால் இன்னைக்கு அவளோட நிலையும் இதுதான். ஆனால் அவள் அப்படி யோசிக்கல. அதனால்தான் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்றாள் மின்மினி..

ஜெயா அங்கே இருப்பது தெரியாமல் அவள் பேசிக்கொண்டே செல்ல, “மதன் எனக்கு கிடைத்த நல்ல காதலன் மற்றும் நல்ல கணவன். இதை நான் பெருமையாக சொல்வேன். எங்க அன்பிற்கு சாட்சியாக சீக்கிரமே ஒரு குட்டி தேவதை இந்த உலகிற்கு வர போகிறாள்..” விழிகள் மின்ன கூறிய மனைவியை ரசித்தான் மதன்.

அவனின் பார்வையில் தெரியும் காதலும் அவளின் வார்த்தைகளில் வெளிப்படும் அன்புமே அவர்கள் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அவளுக்கு படம்பிடித்து காட்டிட,  ‘நல்ல வாழ்க்கையை தவறவிட்டவள் நான்தான் மினி..’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

“அப்பாவோட வயிற்று எரிச்சலை வாங்கிட்டு போனாய்.. அது அப்படியே பலித்துவிட்டது அதைத்தான் சொன்னேன் பெற்றவங்க சாபத்தை வாங்கவே கூடாது இந்துமதி..” என்றவளின் அருகில் வந்தனர் தர்மன் மற்றும் சங்கவி.

அவர்களைக் கண்டவுடன் மினி “அப்பா..” என்று அழைக்க, “அக்கா..” என்று அவளை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள் சங்கவி.. 

“எப்படி இருக்கிற சங்கவி..” மினி அவளை விசாரிக்க, “நல்ல இருக்கிறேன் அக்கா..” என்றவள் புன்னகைக்க அவரை அங்கே எதிர்பார்க்காத மதன், “மாமா” என்று கொஞ்சம் தடுமாறினான்

அவனின் தடுமாற்றத்தை புரிந்து கொண்டவர், “இவளும் என்னோட மகள்தான் மதன்.. நீ தயங்கவே வேண்டாம்.. உன்னோட வாழ்க்கையை அழகாக தேர்வு பண்ணிருக்கிற..” என்றவர் சொல்ல இருவரும் அவரின் காலில் விழ போக, “என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு” என்றதும் அவர்களின் மனம் நிறைந்தது..

மினியை நிறைமாத கர்ப்பிணியாக பார்த்தவர், “உன்னோட நல்ல மனசுக்கு உனக்கு கெடுதல் வராதும்மா..” அவளின் தலையை பாசத்துடன் வருடிய தர்மனின் கண்கள் அவரையும் மீறி கலங்கியது..

இந்துமதி மட்டும் விலகி நிற்க, “மாப்பிள்ளை குழந்தை பிறந்த எனக்கு சொல்லுங்க..” என்றதும் சரியென தலையசைத்தான் மதன்.  இரண்டு மகளையும் அழைத்துக்கொண்டு அவர் செல்ல, “வா மினி..” மனைவியுடன் அங்கிருந்து கிளம்பினான் மதன். 

அவள் பேசுவதை கவனித்த ஜெயாவின் கண்கள் கூட கலங்க, ‘என்னோட கணவன் தவறு செய்யவில்லையா?’ என்ற கேள்வியுடன் அவள் நின்றிருக்க, “மேடம் இந்த பைல் உங்களோடதா?”  அவனின் குரல்கேட்டு நிமிர்ந்தாள். 

‘மினிக்கா ஃபைலை மறந்து விட்டுவிட்டு போயிட்டங்களோ?’ என்ற நினைவில், “இது என்னோடது..” என்று அவனிடமிருந்து பைலை கையில் வாங்கியவள் அது மினியின் ஃபைல்தானா? என்ற சந்தேகத்தில் பைலை திறந்து படித்தாள்.

 அவளின் விழியிரண்டும் வியப்பில் விரிந்திட அதுவரை மனதிலிருந்த கலக்கம் அவளைவிட்டு விடைபெற்று செல்ல, அவளின் கண்களில் கண்ணீர் ஊற்றேடுத்தது. அவளின் மனமோ சந்தோஷத்தில் துள்ளியது..

அவளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்னவோ?! 

 

Mohana punnagaiyil 13

மோகனப் புன்னகையில் 13

மறுநாள் முழுவதும் மங்கையுடனேயே தனது நேரத்தைச் செலவு பண்ணினாள் சுமித்ரா. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசி அவளை வழமைக்குத் திருப்பி இருந்தாள்.

மங்கைக்கும் கொஞ்சம் பரதத்தில் ஆர்வம் இருந்ததால் பெரும்பாலும் பேச்சு அதைப் பற்றியே இருந்தது.

“மங்கை…”

“சொல்லுங்க க்கா.”

“ஸ்டீஃபன் என்ன சொன்னார்?” விலுக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள் மங்கை. இளையவளின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் சுமித்ரா.

“காதல் ன்னா என்னன்னு எனக்குத் தெரியும் டா. அதோட வலியும் எனக்குத் தெரியும்.” மங்கையின் கையை லேசாகத் தட்டிக் கொடுத்தாள் சுமித்ரா.

“அக்கா…”

“சொல்லக் கஷ்டமா இருந்தா வேணாம் டா.”

“அது அப்படி இல்லைக்கா… யாரு சொன்னாங்க?”

“உன்னோட அத்தான் தான் சொன்னாங்க. ஸ்டீஃபன் கிட்டவும் பேசி இருப்பாங்க போல.”

“அப்படியா! என்ன சொன்னாங்களாம்?” அந்தக் குழந்தை முகத்தில் அத்தனை ஆர்வம்.

“உன்னோட அத்தான் என்ன சொன்னாலும் ஸ்டீஃபன் செய்வாங்க. அது தெரியுமா உனக்கு?”

“அப்படியெல்லாம் செய்ய வேணாம் ன்னு அத்தான் கிட்ட சொல்லுங்க க்கா. இதெல்லாம் அவங்களுக்காத் தோணணும். சொல்லிக் குடுத்து வரக்கூடாது.”

“அப்படீங்களா கிழவி. இதை உங்க அத்தான் கிட்ட மறக்காம சொல்லிர்றேன்.” சுமித்ரா சொல்லவும் லேசாகப் புன்னகைத்தாள் மங்கை. 

“அப்படி இல்லை மங்கை. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. ஒரு வேளை மனசுல ஆசை இருந்தாலும் மத்த விஷயங்களுக்காகத் தன்னோட ஆசையை மறைக்கலாம் இல்லையா?”

“அக்கா…”

“நம்பிக்கையை விட்டுராத மங்கை. உன்னோட அத்தான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க.”

“நான் சொன்ன விஷயத்தை அவங்க சீரியஸாவே எடுத்துக்கலை க்கா. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிற மாதிரி ஒரு லெட்டர் போட்டிருந்தாங்க.” மங்கை குறைப் பட்டுக் கொள்ளவும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சுமித்ரா.

“அதான் நான் சொல்லுறேன் இல்லை மங்கை. ரொம்ப நல்ல பையன். வாழ்க்கையோட கஷ்ட நஷ்டங்கள் புரிஞ்சவர். உன்னை மாதிரி ‘போர்ன் வித் அ சில்வர் ஸ்பூன்’ கிடையாது. அதுதான் நாலையும் சீர்தூக்கிப் பார்த்து யோசிச்சிருப்பார் போல.”

மங்கை தலையைக் குனிந்து கொண்டாள். முகம் வாடிப் போனது. 

“கவலைப்படாதே மங்கை. உண்மையான அன்பு என்னைக்கும் தோத்துப் போகாது.” சுமித்ராவின் குரலில் அத்தனை உறுதி.

🗼🗼🗼🗼🗼🗼

அன்று விஜயேந்திரன் ‘கௌரி புரம்’ போய் வந்திருந்தான். தம்பதிகள் இன்னும் அத்தை வீட்டில் தான் இருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு மேல் அங்கே தங்க அவன் வேலைப்பளு அனுமதிக்காததால் சுமித்ராவை மங்கைக்குத் துணையாக இருத்தி விட்டு அவன் மட்டும் போய் வந்திருந்தான்.

அமிழ்தவல்லியிடம் லேசாக விஷயத்தைக் கணக்கர் மூலம் தெரிவித்திருந்தான். அவர் பங்கிற்கு அவரும் இப்போது கிளம்பினால் அவனால் சமாளிக்க முடியாது.

லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. சமையலறையை எட்டிப் பார்த்தான் விஜயேந்திரன். பெண்கள் மூவரும் ஏதோ பேசிச் சிரித்தபடி சமையலில் மும்முரமாக இருந்தார்கள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தபடி ஹாலுக்கு வந்தான்.

கண்ணபிரான் முன் வாசல்த் தோட்டத்தில்த் தான் அமர்ந்திருந்தார். முகம் வாடிப்போய் இருந்தது.

“மாமா!”

“வா விஜயா. போன வேகத்துக்குத் திரும்பி வந்துட்டே.”

“உங்களை எல்லாம் இந்த நிலைமையில விட்டுட்டு என்னால அங்க இருக்க முடியலை மாமா.”

“ரொம்ப நன்றி விஜயா. நீங்க ரெண்டு பேரும் இப்போ இங்க எங்க கூட இருக்கிறது ரொம்பத் தைரியமா இருக்கு ப்பா.”

“என்ன மாமா?‌ ஏதோ மூனாவது மனுஷங்க கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க?”

“அப்படி இல்லைப்பா. புதுசாக் கல்யாணம் ஆனவங்க. நீயாவது பரவாயில்லை, அத்தை மாமாவுக்காக வந்து நிக்குற. சுமித்ராவுக்கு என்ன தேவைப்பா? அது பெருந்தன்மை இல்லையா?”

“நான் வேற சுமித்ரா வேற இல்லை மாமா.” விஜயேந்திரனின் பதிலில் கண்ணபிரானின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை வந்து போனது.

“மாமா…”

“சொல்லு விஜயா. ஏதோ சொல்லத்தான் வந்திருக்கேன்னு நல்லாவே புரியுது. தயங்காமச் சொல்லு.”

“நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கலாம். அதான்…”

“எம் பொண்ணு குடுத்த அதிர்ச்சியை விட உன்னால ஒன்னும் பெரிய அதிரச்சியைக் குடுத்திட முடியாது. நீ விஷயத்துக்கு வா.”

“ஸ்டீஃபன்…”

“ஓ… யாரு? அந்தக் கனடாப் பையனா?‌ உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தானே?”

“ம்…”

“உனக்கு நிச்சயமாத் தெரியுமா?” 

“தெரியும் மாமா.”

“ம்…” இப்போது கண்ணபிரான் தாடையைத் தடவிய படி யோசித்தார்.

“வழி வழியா சாஸ்திரம் சம்பிரதாயம் ன்னு ஊறிட்டோம். என்னதான் காலத்துக்குத் தக்க படி மாறினாலும் இந்த அளவுக்குப் போக முடியுமான்னு தெரியலை விஜயா.”

“என்னால உங்களைப் புரிஞ்சுக்க முடியது மாமா. ஆனா மங்கையைப் பத்தி யோசிச்சுப் பாருங்க. எவ்வளவு தீவிரம் இருந்திருந்தா மாத்திரை சாப்பிடுற அளவுக்குப் போயிருப்பா?”

“மத்தது எல்லாத்தையும் விடு, உங்க அத்தையைப் பத்தி யோசிச்சுப் பாரு. சம்மதிப்பா ன்னு நினைக்கிறியா?”

“கஷ்டம்தான் மாமா… இல்லேங்கலை.‌ ஆனா இப்போ இருக்கிற நிலைமை யார்கிட்டயும் சம்மதம் கேக்கிற மாதிரி இல்லையே?”

“இதெல்லாம் சரியா வருமா விஜயேந்திரா? ஒரே மதத்திலேயே ஆயிரத்தெட்டுக் குலம் கோத்திரம் ன்னு எத்தனை பிரச்சினைகள் வருது. இதுல இப்படி… எப்படிப்பா? இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமா? நாளைக்குப் பொறக்கப் போற குழந்தைகளைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?” 

ஒரு தகப்பனாகக் கண்ணபிரான் பேசிய போது விஜயேந்திரனிடம் அதற்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தான். ஆனாலும் வாழப் போகும் பெண், தனது வாழ்க்கை இதுதான் என அவளே முடிவெடுக்கும் போது என்ன செய்ய முடியும்?

“எனக்கு எதுவும் புரியலை விஜயா. படிக்காதவன், பணமில்லாதவன் யாரா இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நம்ம சாதி சனமா இருந்தாக் கண்ணை மூடிக்கிட்டு நான் சம்மதம் சொல்லிருவேன். இதை எப்படிக் கையாள்றது ன்னு எனக்குப் புரியலை. சாதி சனம் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும் சொல்லு?”

“மாமா! நீங்க சொல்லுற அத்தனையும் சரிதான். நான் ஒத்துக்கிறேன். ஆனா… மதம் எங்கிற ஒன்னு மட்டும் நடுவில இல்லைன்னா ஸ்டீஃபனைப் போல ஒரு பையனை உங்களால கூடத் தேடிக் கண்டு பிடிக்க முடியாது. சுமித்ராக்குத் தெரிஞ்ச பையன் எங்கிறதால சொல்லலை. எனக்கு அவனை தனிப்பட்ட முறையில அவ்வளவு நல்லாத் தெரியும்.”

“ம்…” கண்ணபிரான் அதன்பிறகு மௌனமாகிப் போனார். முகத்தில் கவலையையும் தாண்டி இப்போது சிந்தனை முடிச்சுகள் தான் தெரிந்தது. 

கோதை நாயகிக்கும் என்ன புரிந்ததோ, கணவன் முகத்தையே அடிக்கடி பார்த்தபடி இருந்தார். மங்கை எதுவும் பேசவில்லை என்றாலும் அப்பா முகத்தில் தெரிந்த மாற்றம் விஷயம் அவர் காது வரை சென்று விட்டது என்ற மட்டில் புரிந்து கொண்டாள்.

டின்னரை முடித்துக் கொண்டு எல்லோரும் நகர விஜயேந்திரன் மங்கையின் அறைக்கு வந்தான். சுமித்ரா அப்போதுதான் மங்கைக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

“மங்கை!”

“சொல்லுங்க அத்தான்.”

“வீட்டுக்குள்ள எதுக்கு அடைஞ்சு கிடக்கிறே? உன் ப்ராஜெக்ட் பாதியிலேயே நிக்குதில்லை. அதைத் தொடர்ந்து பண்ணலாம் இல்லையா?”

“இல்லை… அம்மா என்ன சொல்லுவாங்களோ ன்னு…”

“அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படுறே? நான் அத்தைக்கிட்டப் பேசுறேன். ஏதோ தெரியாம முட்டாள்த்தனமா ஒரு காரியம் பண்ணிட்டே. இல்லேங்கலை. அதுக்காக அதையே பிடிச்சிக்கிட்டுத் தொங்கக் கூடாது. சரியா?”

“ம்…” 

“ஆக வேண்டியதைப் பாரு. உனக்கொரு கஷ்டத்தைக் குடுத்துட்டு இங்க யாரும் நிம்மதியா இருக்கப் போறதில்லை. அதை மட்டும் எப்பவுமே அடி மனசுல அழுத்தமா பதிச்சு வெச்சுக்கோ.”

மங்கை தலையைக் குனிந்த படியே மௌனமாக அமர்ந்திருந்தாள். விஜயேந்திரனுக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்க்க அத்தனை வருத்தமாக இருந்தது. 

எத்தனை உற்சாகமான பெண். துறு துறுவென்று சதா ஏதாவது வாயாடிக் கொண்டு. இப்போது எல்லாமே காணாமல்ப் போயிருந்தது.

“அத்தான்!”

“சொல்லு ம்மா.”

“அப்பா ஏன் இன்னைக்கு ஒரு மாதிரியா இருந்தாங்க?” மங்கைக்கு இதற்கு மேல் வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை. 

“மங்கை… சில விஷயங்களை உன் வயசுக்குச் சுலபமா ஏத்துக்க முடியும். ஆனா பெரியவங்க அப்படி இல்லை. வழி வழியா வந்த ஒரு விஷயத்தை மாத்துறதுன்னா அவங்களுக்கு அது அத்தனை சுலபம் இல்லை. நாம தான் கொஞ்சம் பொறுமையாக் காத்திருக்கணும்.”

“சரி அத்தான்.”

“என்னையே எடுத்துக்கோ. இந்த சுமித்ரா வேணும்ன்னு எவ்வளவு போராடினேன். ஆரம்பத்துல எனக்கு சுமித்ரா இல்லைன்னு தானே நினைச்சேன். அப்போ எல்லாம் உன்னைப் போல நான் மாத்திரையைத் தூக்கலையே? என் வாழ்க்கைக்குள்ள சுமித்ராவைக் கொண்டு வரலாம்னு தெரிஞ்சப்போ அடுத்தடுத்து என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சேன். அமுல்ப் படுத்தினேன். சட்டுன்னு உயிரை விட்டுடலாம் மங்கை. ஆனா அதால யாருக்கு என்ன லாபம் சொல்லு? நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ அந்த உயிர் உனக்கு வேணும் இல்லையா?”

“அத்தான்!” கண்கள் கலங்க விஜயேந்திரனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மங்கை.

“என்னை மன்னிச்சிருங்க அத்தான். தப்புத் தான். நான் பண்ணினது பெரிய தப்புத் தான்.”

“இதை எங்கிட்ட சொல்லாதே. அம்மா எவ்வளவு கண்டிச்சாலும் உன்னை எப்பவுமே எங்கயுமே விட்டுக் குடுக்காத உன்னோட அப்பா கால்ல விழுந்து சொல்லு.” 

விஜயேந்திரன் சொல்லி முடிப்பதற்குள் மங்கை என்ன நினைத்தாளோ… சட்டென்று ரூம் கதவைத் திறந்து கொண்டு அம்மா அப்பாவின் ரூமிற்குள் ஓடினாள்.

இந்த திடீர்த் தீர்மானத்தைப் பார்த்து சுமித்ராவும் விஜயேந்திரனும் திகைத்துப் போனார்கள் என்றால், அங்கே கோதை நாயகியினதும் கண்ணபிரானினதும் நிலைமை அதை விட மோசமாக இருந்தது.

விளக்கை எல்லாம் அணைத்து விட்டு அப்போதுதான் கண்ணயர்ந்தவர்கள் மகளின் அழுகுரலில் அதிர்ந்து போனார்கள்.

“அப்பா! என்னை மன்னிச்சிடுங்க ப்பா. நான் ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன் ப்பா. நான் அப்படி நடந்திருக்கக் கூடாது ப்பா. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க ப்பா. உங்க வாயால சொல்லுங்க ப்பா.” 

மங்கை ஓயாமல் அழ தன்னை வேகமாகச் சுதாரித்துக் கொண்டார் கண்ணபிரான். ஆசை ஆசையாக வளர்த்த மகள். கண்ணீரில் கரைவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும் கோதை நாயகி கல்லுப் போல உட்கார்ந்திருந்தார். பெண்கள் எப்போதும் மனதளவில் ஆண்களை விடத் தைரியசாலிகள் என்பதைச் சொல்லாமல் சொன்னது அவர் அமர்ந்திருந்த தோரணை.

கண்ணபிரான் மகளை வாரி அணைத்துக் கொண்டார். மனிதருக்குச் சற்று நேரம் பேச்சு வரவில்லை.

“தப்பு உம்மேல இல்லைடா செல்லம். அப்பா மேல தான். எல்லாத் தப்பும் அப்பா மேல தான். எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் நம்ம அப்பாக்கிட்டச் சொன்னா அதுக்கொரு தீர்வு கிடைக்குங்கிற நம்பிக்கையை உனக்கு நான் குடுக்கலை ம்மா.”

“ஐயோ அப்பா! அது அப்படி இல்லை ப்பா. வழியே இல்லாத ஊருக்கு என்னாலேயே போக முடியலை. இதுல நான் உங்களையும் எப்படிப்பா கூப்பிடுவேன்?”

“வழியே இல்லைன்னு நீயா முடிவெடுத்தா எப்படிம்மா? அப்போ அப்பா நான் எதுக்கு இருக்கேன். உனக்கு நல்ல வழி காட்டத்தானே நான் இருக்கேன்?” 

பேச்சு இப்படியே போக கோதை நாயகி தன் கணவரை ஒரு தினுசாகப் பார்த்தார். அதற்கு மேல் அங்கே விஜயேந்திரனும் சுமித்ராவும் நிற்கவில்லை. தங்கள் ரூமிற்கு வந்து விட்டார்கள்.

கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் அரண்மனைக் காரன். கண்கள் இரண்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த மனைவியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“விஜி…” லைட்டை அணைத்து விட்டுக் கட்டிலில் அமர்ந்தாள் சுமித்ரா.

“அடேங்கப்பா! இந்த வார்த்தையைக் கேட்டு ரெண்டு நாள் ஆகிடுச்சு.” கணவனின் வார்த்தையில் புன்னகைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“விஜி…”

“ம்…”

“சித்தியோட முகத்தைப் பார்த்தீங்களா?”

“கவனிச்சேன்.”

“நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்க வேண்டி வரும் விஜி.”

“நான் எதைப் பத்தியும் கவலைப் படலை அம்மு.”

“உங்க அம்மா…”

“சொல்லு.”

“அவங்க கோபம் முழுக்க எம்மேல தான் திரும்பும்.”

“தெரியும் டா.”

“தெரிஞ்சுமா இதைப் பண்ணப் போறீங்க?” சுமித்ரா இந்த வார்த்தைகளைச் சொன்ன போது விஜயேந்திரன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அவன் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

“என்னோட சுமித்ராவா இப்படிப் பேசுறது? எப்படி சுமி? எப்படி உன்னால இப்படிப் பேச முடியுது?”

“சில நேரங்கள்ல நிதர்சனங்கள் வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் ஏத்துக்கத்தான் வேணும் விஜி.”

“எதை அம்மு ஏத்துக்கச் சொல்றே? உயிரா நேசிக்கிறவங்களை இன்னொருத்தருக்குத் தாரை வார்த்துக் குடுத்துட்டு நடைப்பிணமா ஒரு வாழ்க்கை வாழ்வோமே. அந்த வாழ்க்கையை ஏத்துக்கச் சொல்றியா?”

“எதுக்கு நடைப்பிணமா வாழணும்? அந்தப் புள்ளியைத் தாண்டி வெளியே வரலாம் இல்லையா?”

“எப்படி வர முடியும்? என்னால வர முடியலையே? அப்படி இருக்கும் போது மங்கைக்கு அதை எப்படி என்னால சொல்ல முடியும்?”

“நீங்க பண்ணினதே தப்புன்னு தான் நான் சொல்லுவேன்.”

“எதுடி தப்பு? நான் பண்ணினது எது தப்பு?” அவன் வார்த்தைகளில் இப்போது நெருப்புப் பறந்தது. ஒற்றைக் கை அவள் கூந்தலைக் கெட்டியாகப் பிடித்திருந்தது. வலித்தாலும் சுமித்ராவும் ஓயவில்லை.

“இத்தனை வருஷம் தனியா நின்னது தப்பு. காலா காலத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணி இருந்திருந்தா இந்நேரத்துக்கு கரிகாலன் அத்தான் மாதிரி ஒரு குழந்தை உங்களுக்கும் இருந்திருக்கும்.”

“யாருக்கு வேணும்? யாருக்குடி வேணும் அந்தக் குழந்தை? மனசு முழுக்க ஒருத்தி உக்காந்துக்கிட்டு தினம் தினம் ஜாலம் காட்டுறா. அவளைத் தூக்கித் தூரப் போட்டுட்டு எவளோ ஒருத்தி கூட இந்த ஊர் உலகத்துக்காகப் போலியாக் குடும்பம் நடத்தச் சொல்லுறியா?”

“எத்தனை பேரோட வாழ்க்கை அப்படித்தானே விஜி இருக்கு?”

“எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை. எனக்கு நீ தான்டி வேணும். நீ மட்டும் தான் வேணும்.”

“நான் வராமலே போயிருந்தா?” சுமித்ராவின் குரல் விம்மியது.

“இந்த அரண்மனைக் காரன் ஒத்தையாவே செத்துப் போயிருப்பான்.”

“விஜீ…” ஒரு கேவலோடு கணவனைக் கட்டிக் கொண்டாள் சுமித்ரா. 

“வேணாம் விஜி… இத்தனை பாசம் வைக்காதீங்க விஜி. எனக்கு அதுக்கு அருகதை இல்லை விஜி.” திக்கித் திணறிப் பேசியவள் அவன் முகம் முழுவதும் முத்தம் வைத்தாள். மனைவியின் செயலில் அரண்மனைக் காரன் ஆடிப் போனான்.

எப்போதும் அவனைக் கெஞ்ச வைப்பவள் இன்று கொஞ்சித் தீர்த்தாள். கொல்லாமல்க் கொன்றாள்.

இத்தனை நாளும் அவன் போட்ட களியாட்டங்கள் இன்று அவள் வசம் இடம் மாறி இருந்தது. காதல்ப் பித்தம் தலைக்கேற பூவிற்குள் விழுந்த வண்டாகினான் அந்த அரண்மனை வாசி.

🗼🗼🗼🗼🗼🗼

அடுத்த நாள் அத்தனை அழகாக விடிந்தது விஜயேந்திரனுக்கு. முகம் முழுதும் முத்திரைகள் பதித்தவள் அவள் காதலின் எல்லையை அவனுக்கு முழுதாக நிரூபித்திருந்தாள்.

கைகள் அவளைத் தேடியது. அவளோ காணாமல்ப் போயிருந்தாள். வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டான் கணவன்.

அவனுக்குத் தெரியும். அவளை அறியாமலேயே அவள் வெளிவரும் தருணங்களில் இப்படி ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது அவள் வழக்கம் தான்.

கண்டும் காணாமல் காலைக் கடன்களை முடித்தவன் டைனிங் டேபிளுக்கு வந்தான். கண்ணபிரானும் மங்கையும் பழைய படி ஐக்கியம் ஆகி இருந்தார்கள்.‌ அத்தையின் முகம் தான் இறுகிப் போய்க் கிடந்தது.

“சுமித்ரா! சீக்கிரம்.” அவன் குரலில் கிச்சனை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா. காலை ஆகாரம் டேபிளில் ஆயத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் வேண்டுமென்றே மனைவியை அழைத்தான்.

பக்கத்தில் நின்று பரிமாறியவளின் இடையை வளைத்தது அவன் கரம்.

“விஜீ…” நெளிந்தாள் பெண்.

“ம்… இப்போ தான் விஜியைத் தெரியுதா?”

“கையை எடுங்க. யாராவது வரப்போறாங்க.”

“யாரும் வரமாட்டாங்க. அத்தை உங்கிட்ட ஏதாவது பேசினாங்களா அம்மு?”

“ம்ஹூம்… அவங்க முகத்தைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு ங்க. எதையோ நினைச்சு வருத்தப் படுறாங்கன்னு மட்டும் நல்லாப் புரியுது.‌ ஆனா வாயைத் திறக்கலை.”

“மங்கை பேசினாளா அத்தைக்கிட்ட?”

“முயற்சி பண்ணினா.‌ ஆனா சித்தி பிடி குடுக்கலை.”

“சரி விடு. நீ வருத்தப் படாத அம்மு. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”

“விஜி… மங்கையோட ஆசை விருப்பம் எல்லாமே ரொம்ப முக்கியம் தான். அதுக்காக யாரையும் காயப் படுத்திராதீங்க.”

“சரிடா.” மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் போஸ்ட் ஆஃபீஸுக்குக் கிளம்பி விட்டான். 

“ஹலோ ஸ்டீஃபன்.”

“அண்ணா! மங்கை எப்படி இருக்கா?” பதறியது இளையவனின் குரல். அரண்மனைக் காரன் முகத்தில் அழகாக ஒரு புன்னகை தோன்றியது.

“ம்… நல்லாருக்கா. நீ என்ன முடிவு பண்ணினே?”

“அண்ணா…”

“ஸ்டீஃபன்! உன்னோட பதிலில தான் நிறைய விஷயங்கள் இப்போ அடங்கி இருக்கு. நீ ஏதாவது பேசினாத்தான் மேற்கொண்டு என்ன பண்ணுறதுன்னு என்னால தீர்மானிக்க முடியும்.”

“இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் அண்ணா?”

“ஏன் ஸ்டீஃபன்? இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி யாரும் பண்ணினதே இல்லையா?”

“மங்கை வீட்டுல தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிடும் அண்ணா.”

“அது என் பொறுப்பு. உன்னோட அக்காவையும் அத்தானையும் சமாளிக்க உன்னால முடியுமா?”

“அக்கா பிரச்சினையே இல்லை. புரிஞ்சுப்பாங்க. அத்தான் தான்…”

“ஏன்? அவர் மட்டும் என்ன பண்ணி இருக்காராம்?”

“ஹா… ஹா… அது சரி தான் அண்ணா. ஆனா என்னால அப்படியெல்லாம் அத்தான் கிட்டப் பேச முடியாது ண்ணா. ரொம்பவே நல்லவங்க. எங்க ரெண்டு பேருக்குமே அத்தான் தான் எல்லாம். உதவி பண்ணுன்னு அனுப்பினா நீ உபத்திரவம் பண்ணி இருக்கியே ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?”

“ம்…”

“அதோட அண்ணி ன்னு வந்துட்டா அத்தான் எந்த எல்லைக்கும் போவாங்க. இந்த விஷயத்தால உங்க வழ்க்கையில ஏதாவது பிரச்சினை வரும்ன்னு அத்தான் நிச்சயம் பயப்படுவாங்க.”

“ஸோ… உனக்கு மங்கை வேணாம்?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே ண்ணா!” அவசரப் பட்டான் இளையவன்.

“ஹா… ஹா… வெவரம் தான்டா நீ.”

“இல்லையா பின்னே! அரண்மனைக் காரரோட தம்பி இல்லையா நான்? அவர்ல பாதியாவது தேற மாட்டேனா?”

“அடி வாங்காம ஒழுங்காப் பதில் சொல்லு ஸ்டீஃபன். இப்போ நான் என்ன பண்ணட்டும்?”

“அண்ணா… எனக்கு மங்கையை ரொம்பவே பிடிச்சிருக்கு. மறுக்கலை. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கிற எதுவுமே எனக்குத் தடையாத் தெரியலை. ஆனா நாம வாழுற சமுதாயம் அப்படி இல்லை. அது எங்க ரெண்டு பேரையும் சுத்தி இருக்கிறவங்களை ரொம்பக் காயப்படுத்தும். நான் அதுக்குத் தான் தயங்குறேன். இல்லைன்னா இந்த மங்கையைத் தூக்கி ஃப்ளைட் ல வைக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?”

“அப்படிப் போடு! இப்போ தான் நீ என் தம்பி மாதிரிப் பேசுறே.”

“அண்ணா! பார்த்துப் பண்ணுங்க ண்ணா. யாரும் எங்கேயும் காயப்பட்டிடக் கூடாது.” சுமித்ரா சொன்ன அதே வார்த்தைகள். விஜயேந்திரன் புன்னகைத்துக் கொண்டான்.

“மங்கையோட பேசுறியா ஸ்டீஃபன்? கூட்டிட்டு வரட்டுமா?”

“வேணாம் ண்ணா. எதுவும் முடிவாகாம ஒரு சின்னப் பொண்ணுக்கு நம்பிக்கை குடுக்கிறது ரொம்பத் தப்பு ண்ணா.”

“சரி உன் இஷ்டம்.” தோளைக் குலுக்கியவன் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான். 

அரண்மனைக் காரன் ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் முடிக்காமல் ஓய மாட்டான் என்று அப்போது ஸ்டீஃபனுக்குப் புரியவில்லை.

மனம் முழுவதும் நேற்றைய இரவில் திளைத்திருக்க தன் நன்னிலவைத் தேடிப் போய்க் கொண்டிருந்தான் அரண்மனைக் காரன். 

Poovanam 9

பூவனம்-9

தான் கேட்டது கனவா? இல்லை நிஜமா? என்று தலையை உலுக்கிக் கொண்டவள்,
“இதென்னடா வம்பா போச்சு? ஒரு மூணு தடவ பார்த்து பேசியிருப்போமோ?
அதுக்குள்ள இப்படி லவ் சொல்லி வால் பிடிச்சிட்டு வர்றானே? நெஜமாவே அரலூசு
தானோ?” என மனதோடு நினைத்து, அதை மறுப்பதற்க்காய் கிரிதரன் முகம் பார்க்க,
அவனோ அவளை இமைக்காமல் பார்த்த பார்வையில் வீழ்வது இவளின் முறையாயிற்று.

கிரிதரனின் பார்வையும், வார்த்தையும் ஜாலம் செய்ய, பேச்சு வரவில்லை
ரம்யாவிற்கு. அமைதியாய் கடந்த அந்த சில மணித்துளிகளை இருவரின் மௌனம் தான்
ஆட்சி செய்தது.

காண்டீனை காலி செய்ய சென்ற கூட்டமும் ஒரு வழியாய் வந்து சேர்ந்தும்
தன்னிலைக்கு வரவில்லை ரம்யா.

“ஏண்டி ரம்யா, என்ன ஒரு ரம்யமா இருக்க?”

“ம்… என்ன?”, தோழியின் கேலி புரியாமல் பார்க்க

“என்னடி இப்படி ஷாக்காயி உக்காந்துருக்கே?”

“நத்திங்க்”

“அப்ப சம்திங்க்னு சொல்லு”

“இல்லடி”

“உனக்கு ஒண்ணும் வேணாமா? ஏன் எங்க கூட வரல?“

என்ன சொல்வது என அறியாமல் விழிக்க…

“உங்களுக்கு சீனியர், நீங்களும் ஏதும் எடுத்துக்கலையா?” என கிரிதரனையும்
பார்த்து கேட்க

“அது ஒண்ணும் இல்ல சிஸ்டர்ஸ். உங்க பிரின்ட்க்கு கொஞ்சம் உடம்பு
சரியில்லையாம், அதான் எதுவும் வேண்டாம்னு என்கிட்டே சொல்லிட்டு
இருந்தாங்க.

நீங்க போகும் போது அவங்கள பத்திரமா கூட்டிட்டு போயிருங்க, ரம்யா… இவங்க
சாப்பிட்டதுக்கு பில் கட்டிடும்மா, பாய்ய்ய்ய்யய்…”” அவளைப் போலவே
இழுத்துக் கூறினான்.

அவனின் இந்த வார்த்தை தோழிகளை உசுப்பி விட்டது…

“என்ன ப்ரோ… நீங்க தானே ட்ரீட் குடுக்கப்போறதா ரம்யா சொன்னா, ஆனா இப்ப
பில்ல அவ தலையில கட்டிறீங்க, என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஏதும்
கலாட்டா பண்ணற ஐடியா இருந்தா மறந்துருங்க””

“கலாட்டாவா? எனக்கா? உங்க குட்டையில விழுந்து மட்டையாகுற மாஸ்டர் பீஸ்
நான் கிடையாது? நானா வந்து உங்கள கூப்பிட்டேன்?

உங்கள யார் கூப்பிட்டாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் நான் ட்ரீட்
குடுக்கறேன்னு சொல்லிருந்தேன். யாரு கூப்பிடுறானு கூட தெரியாம கூட்டமா
வந்தா, அதுக்கு நான் ஆளில்ல”” என்று சிரித்தபடி கூறியவனை கோரஸாக

“ஏய்!”” என்று கத்திவிட்டு ஒவ்வொருவராக பேச தொடங்கினர்….

“ரம்யா சொல்லி வந்தோம்னு பாக்குறோம்””

“என்னடி சீனியர் பேசிகிட்டே இருக்கார், நீயும் கேட்டுகிட்டே இருக்கே”?”

“எங்கள இப்படி கோர்த்து விடத்தான் பிளான் பண்ணி கூட்டிகிட்டு வந்தியாடி”
என்று மாறிமாறி கேட்ட தோழிகளிடம்

“ஐயோ… கொஞ்சம் சும்மா இருங்களேன்டி… நானே இத டீல் பண்ணிக்கிறேன்,
கொஞ்சம் அமைதியா இருங்க”

“என்னடி வரும்போது நல்லா தான வந்த?”

“இப்பவும் அப்டியே தாண்டி இருக்கேன், நீங்க கிளம்புங்க?”

“என்னடி, கழட்டி விடுற?”

“கழட்டலடி, நானே மர கழண்ட மாதிரி இருக்கேன்”

“இப்போ சொன்னியே… அது நூத்துல ஒரு வார்த்தை”

“நா… நா… நான்… இவர் கூட பேசிட்டு வர்றேன்“

“அப்டி சொல்லு… எலி ஏன் அன்ராயர் போடனும்னு என் மனசு கேட்டிச்சு.. நீ சொல்லிட்ட”

“வாங்கடி நாம கிளம்புவோம்” எனத் தோழிகள் அவளின் மனநிலையை யூகித்தவாறு
சிரித்தபடி கிளம்ப

“கிரி சார்… உங்க மேல நம்பிக்கை இல்லாம அவங்களோட வந்தது உங்களுக்கு
தப்பா தெரியலாம்… ஆனா எனக்கு இப்படியெல்லாம் தனியா யார்கூடயும் வந்து
பேசி பழக்கம் இல்ல.”

“என்னோட பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ அதுப்படி தான் நான் கேப்பேன், உங்க
விசயத்துலேயும் அப்படித்தான். என் வீட்டுல உள்ளவங்களுக்கு எதிரா எதுவும்
செய்ய எனக்கு இஷ்டமில்ல. எனக்கு அதுல பிடித்தமும் இல்ல.

அதனாலே உங்க மனசுல வீணா ஆசைய வளத்துகிட்டு ஏமாந்துராதீங்க, இதான் என்னோட
முடிவு“ வார்த்தைகள் திக்கினாலும் தெளிவாய் தன் நிலையைச் சொல்லி, பணம்
கட்ட விரைந்தாள்…

அவளின் பின்னே வந்தவன் “நான் பில் பே பண்ணறேன் ரமி… எவ்ளோ ஷார்ப்பா
பேசிட்டே, உன் மனசு இதுதான்னு தெளிவா சொல்லிட்டே, உனக்கு என்னை பிடிக்க
வைக்குறதுக்கு நான் ரொம்பவே கஷ்டப்படனும் போல, அத நான்
பார்த்துக்குறேன்.”

“எனிவே தேங்க்ஸ்… நீ வந்ததுக்கும் உன்னோட முடிவ சொன்னதுக்கும். நல்லா
படி… முறைப்படி உங்க வீட்டுல உள்ளவங்களோட சம்மதத்தோட தான் நம்ம
கல்யாணம் நடக்கும். அதுல ஒரு சந்தேகமும் வேணாம். அது வரைக்கும் நான்
உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், வர்றேன்” என்று மென்மையாய் கூறி விடை
பெற்றான்….

கிரிதரனின் பக்குவப்பட்ட பேச்சு ரம்யாவின் மனதை குழப்பத்தில் ஆழ்த்தியது.
”என்னடா இவன் இப்படி இருக்கான்… எல்லோரும் லவ் பண்ணற பொண்ணுகிட்ட
சம்மதம் வாங்குற வரைக்கும் அவ பின்னாடி சுத்தி திரிவாங்க…

இவன் என்னடான்னா நான் முடியாதுன்னு சொல்லவும் உன்ன டிஸ்டர்ப் பண்ண
மாட்டேன்னு போயிட்டான், நிஜமாவே அரலூசோ?” என்று அவனைப் பற்றி தினமும்
நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை…

“இவன் நல்லவனா? கெட்டவனா? ஒருவேள என்னை, அவன் பக்கம் இழுக்க இப்படி
எல்லாம் சீன் போட்றானோ?

“சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது. அவன் முகம் அப்படி ஏமாத்துற மாதிரியா இருக்கு?“

“நல்லா மூக்கும் முழியுமா அழகா… பளிச்சுன்னு சிரிச்சாலே அவ்ளோ ப்ரைட்
ஆகுது அவனோட முகம். கண்ணு மட்டும் என்ன சும்மாவா? சதா எப்போ பாரு உத்து
உத்து பார்த்து, அப்படியே அவன் பக்கம் இழுக்க வைக்குது… செம்ம ஹன்ட்சம்
பிகர்னு அவனை சொல்லலாம், தலை முடிய சிலிர்த்துகிட்டு அவன் பேசுற ஸ்டைல்
இருக்கே” என்ற அவளின் நினைவை தடை செய்ய அவள் மனசாட்சி அவள் முன் வந்து
நின்றது.

“ஏய் நிறுத்து! நிறுத்து! போற போக்க பார்த்தா… நீயே அவன்கிட்ட போய் லவ்
பண்ணறேன்னு சொல்லிடுவ போலேயே? கொஞ்சம் மிச்சம் மீதி வை மா.
பிடிக்காதுன்னு சொல்லிட்டே இவ்ளோ கவனிச்சிருக்கியே, இன்னும் பிடிச்சு
பார்த்திருந்தா எப்படி எல்லாம் சொல்லுவே? எம்மாடி.. இதத்தான் உலகமகா
நடிப்புன்னு சொல்றாங்களா?“ கேலி பேசியதை தலை தட்டி உட்கார வைத்தாள்…

பக்கம் வந்து பேசாமல், பார்வையாலேயே எப்பொழுதும் போல் பேசி சென்றான்
கிரிதரன். பெண்ணவளின் முறைக்கும் பார்வை தான் சற்றே மாறி விளங்காத
பார்வையும், ஆராய்ச்சி பார்வையுமாய் பார்த்து அவனை பற்றி நினைத்துக்
கொண்டே இருந்தது…

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் விரைந்து செல்ல இருவரின்
படிப்பும் முடிந்ததும், இருவருக்கும் வெவ்வேறு நல்லதொரு கம்பெனியில்
உத்தியோகமும் அமைந்தது.

கணிசமான சம்பளத்துடன் வேலையில் அமர்ந்தவன், தன் மனம் கவர்ந்தவளை இனியும்
தள்ளி நின்று பார்க்கும் எண்ணமின்றி ரம்யாவின் தந்தையை சந்தித்து தன்
விருப்பத்தை வெளியிட்டு அவரின் உத்தரவிற்காக காத்திருந்தான்.

“உங்க பொண்ணு மேல விருப்பப்பட்டது நாந்தான் சார்… இப்போ நான்
சொல்றதுக்கும், அவங்களுக்கும் எந்த சமந்தமுமில்லை. உங்க சம்மதத்தோட
என்னோட ஆசைய அவங்ககிட்ட சொல்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீங்க
தான் சொல்லணும்” என்று கூறியவனை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்து வைத்தார்
பெண்ணை பெற்றவர்.

கிரிதரனின் பேச்சும், அவனைப் பற்றி விசாரித்து அறிந்தவையும்
திருப்தியளிக்க, முழு மனதுடன் தன் சம்மத்தைதை தெரிவித்து விட்டார்
ரம்யாவின் தந்தை சண்முகம்.

“காலேஜ்ல இருந்தே உன்மேல விருப்பமாம் பாப்பா, அத உன்கிட்ட கூட சொல்லாம
என்கிட்டே வந்து நின்னுட்டார். உங்க பொண்ண கட்டிக்குடுங்கனு,

இந்த காலத்தில இப்படி ஒரு பிள்ளைய பாக்குறது சந்தோசமாத்தான் இருக்கு.
எனக்கு சாதி பத்தின கவலை எல்லாம் கிடையாது பாப்பா, உனக்கு சம்மதம்னா பேசி
முடிக்கலாம்டா” தந்தையின் பேச்சில் பெண்ணவளின் மனம் துள்ளிக் குதிக்கத்
தான் செய்தது.

ஏற்கனவே அவனை நினைத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளின் மனதில் சிம்மாசனம்
இட்டு அமர்ந்து விட்டான் அவன் காதலன்.

தன்னை தெரியும் என்று எந்த இடத்திலும் காண்பித்துகொள்ளாதவனின் பேச்சு
இன்னும் அவனை உயரத்தில் வைத்து பார்த்தது, ஆனாலும் மனதில் ஒரு குழப்பம்
நீடிக்க

“அவங்க வீட்டுல சம்மதம் வாங்கிட்டாராப்பா, கேட்டீங்களா?” சந்தேகத்துடன்
கேட்ட மகளிடம் “அதத்தான்ம்மா நானும் கேட்டேன், அவங்க வீட்டுல இவர்
பேச்சுக்கு மறு பேச்சு இல்லையாம். அவங்கிட்ட சம்மதம் வாங்குறது என்
பொறுப்புனு சொல்லி பேச்சை முடிச்சாட்டார்.

எங்ககிட்ட பேசி சம்மதம் வாங்குறவர் அவங்க வீட்டுல பேசாம இருப்பாரா என்ன?
நீ சரின்னு சொன்னா பெத்தவங்களோட அவர வரச் சொல்லுவேன்” என்று தீர்வை
அவளிடம் நிறுத்தி வைத்தார்…

அங்கே கிரிதரனின் வீட்டில் சில பல சலசலப்புகள். ஊரிலிருந்த நாலைந்து
பெரிய தனக்காரார் குடும்பங்களில் ஒன்று அவர்களுடையது, பசி பட்டினியாய்
கிடந்தாலும் கௌரவத்தை உயிர் மூச்சாய் கொண்டவர்கள்.

தங்களுக்குரிய மதிப்பையும் மரியாதையும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க
தயங்காதவர்கள். தங்கள் இனத்தின் மீதான பற்று அவர்களின் ஒவ்வொரு செயலிலும்
வெளிப்படும்.

இப்பேற்பட்டவர்களிடம் தன் மன விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்டவனை
பார்த்து சற்றே கண்டிப்பான குரலில்

“என்ன பெரியதம்பி விளையாடுறியா? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி
படிக்கட்டும்… ரொம்ப இழுத்து பிடிச்சு வைச்சுக்க வேணாமேன்னு கொஞ்சம்
உங்க இஷ்டப்படி இருக்கட்டும்னு விட்டா, இப்படி காதல் கருமாதி சொல்லிட்டு
வந்து நிக்குற. நீ விரும்புன படிப்ப படிக்க வைச்ச மாதிரி பிடிச்ச
பொண்ணையும் கட்டி வச்சுர முடியுமா?”

“முடியாது… முடியாது… இதென்ன பழக்கம்… நம்ம இனத்துல யாரும் இப்படி
காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதில்ல” என்று மகனிடம் பொரிந்து
கொண்டிருந்தார் மீனாட்சி அம்மாள் கிரிதரனின் தாயார்.

“எந்த காலத்திலம்மா இருக்கீங்க? இப்ப எல்லாம் யாரும் சாதி பாக்குறதில்ல,
அந்த பொண்ணு பார்த்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்கம்மா, நிச்சயமா
உங்களுக்கு பிடிக்கும்” என மகன் சொல்ல

“பிடிக்கும்… பிடிக்காது… இதெல்லாம் முக்கியம் இல்ல இங்கே, நம்ம
கௌரவம் என்ன? நம்ம மதிப்பென்ன? உங்க அப்பாருக்கு வெளியே குடுக்குற
மரியாதை என்ன? இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்திருந்தா இப்படி
சொல்லமாட்டே.

நம்ம குடும்பத்துக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு, அதுப்படி தான் இங்கே
எல்லோரும் வாழ்ந்துகிட்டு இருக்கோம். இத மாத்த நினைக்காதே. நீங்க
நினைக்கிறது எந்த காலத்துலயும் நடக்காது. இந்த பேச்ச இத்தோட விட்டரு
பெரியதம்பி” என்று தன் மறுப்பை சொன்னவரிடம்

“அப்போ நானும் ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுகோங்க, இந்த ஜென்மத்துல
கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது என் ரம்யா கூட தான், எந்த காலத்திலேயும் என்
முடிவுல மாற்றம் இல்ல.

எனக்கு சொத்து பத்து முக்கியம் இல்ல, என் மனசுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை
தான் வாழ ஆசைப்படறேன். இந்த வீட்டுப் பெரியவங்க சம்மதிக்காம அவங்க
வீட்டுலேயும் சரி, அந்த பொண்ணும் சரி, எந்த காலத்திலேயும் கல்யாணத்துக்கு
சம்மதிக்க மாட்டாங்க. நான் வாழ்றதும், வீணாப்போறதும் உங்க கைல தான்
இருக்கு” என்று ஆணித்தரமாய் தன் நிலையை விளக்கி விட்டான்…

“என்னடா! என்ன வார்த்தை பேசுறோம்னு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறியா,
போனபோகுது சின்ன பையனாச்சே… பேசட்டும்னு விட்டா ரொம்பத்தான் ஆட்றே”
என்று ஆதங்கத்துடன் பேசிய மீனாட்சி அம்மாளை தடுத்து நிறுத்திய அவனின்
தந்தை சுப்பையா…

“அவன ஒண்ணும் சொல்லாதே மீனா… துரை சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டார்ல…
அந்த தைரியம் தான் பேச வைக்குது, பேசட்டும். அப்ப தானே என் பசங்களும்
வளர்ந்துட்டாங்கனு எனக்கும் தெரியும்.

எப்போ நீ எங்ககிட்ட அனுமதி கேக்காம உன்னோட முடிவ சொல்ல வந்தியோ, அப்பவே
நீ எங்க கைமீறி போயிட்டே. இப்போ நாங்க என்ன சொன்னாலும் அது உனக்கு
கெட்டதா தான் தெரியும்”

“நாங்க சாதிய பாக்குற ஆளுங்க இல்லைய்யா, குடும்ப பாரம்பர்யத்தை காப்பத்த
வேண்டிய காட்டயம் இந்த கிராமத்தானுக்கு இருக்கு. எங்கே அது தப்பிப்
போயிருமோன்னு தான் நானும் உங்க அம்மாவும் நினைக்கிறோம்.

வேற எந்த உள்நோக்கமும் இல்ல. உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறோம். நீங்க
சந்தோசமா இருந்தா தான், இங்கே எங்களுக்கு ஒரு வாய் கஞ்சி நிம்மதியா
இறங்கும்” மனைவியிடம் ஆரம்பித்து மகனிடம் தன் சம்மதத்தை கூற

“தேங்க்ஸ்ப்பா… நீங்களாவது என்னை புரிஞ்சுகிட்டு சம்மதம் சொன்னீங்களே!
ரொம்ப சந்தோசம். அம்மாவை எப்படியாவது பேசி வழிக்கு கொண்டு
வந்துருங்கப்பா. நான் இந்த விஷயத்தை ரம்யா அப்பாகிட்ட சொல்லிட்டு
வர்றேன்” மகிழ்ச்சியுடன் தன் காரியமே கண்ணாய் சென்று விட்டான்.

“ஏன் இப்படி சொன்னீங்க… நாளபின்னே இதே மாதிரி தானே எந்த ஒரு
விசயத்தையும் அலசி ஆராயாம இஷ்டத்துக்கு முடிவெடுக்க ஆரம்பிச்சுருவாங்க”
ஆதங்கப்பட்ட மனைவியிடம்

“அது அப்படி இல்ல மீனாட்சி… இன்னும் கொஞ்சம் பொறுப்பு வரும்
அவங்களுக்கு. எதையும் மேலோட்டமா மட்டுமே பாக்குற ஆள் கிடையாது நம்ம
பையன், நல்லா யோசிச்சு தான் முடிவேடுத்துருக்கான்னு தோணுது.

ஒரு விஷயம் நல்லா கவனிச்சியா, நம்ம சம்மதம் இல்லாம அந்த பக்கமும் சம்மதம்
கிடைக்காதுன்னு தானே சொன்னான். அதுலேயே தெரியலையா அவங்களோட நல்ல குணம்.
எனக்கு என்னமோ அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு பொருந்தி வருவான்னு தோணுது,
பாக்கத்தானே போறோம்.

இனிமே கல்யாண வேலைய ஆரம்பிப்போம். இல்லேன்னா உன் பையன் அந்த வேலைய கூட
நமக்கு வைக்காம தானா செஞ்சாலும் ஆச்சரியபப்பட்றதுகில்லை” என்று அந்த
பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படியாய் பல பேச்சிற்கு நடுவில், மகனின் ஆசைக்கு செவி சாய்த்து
திருமணத்திற்கு சம்மத்தித்தனர். எளிமையான முறையில் மணமகனின் கிராமத்திலே
திருமணம் நடைபெற வரவேற்பு சென்னையில் நடத்திட முன்வந்தனர்.

error: Content is protected !!