admin

909 POSTS 560 COMMENTS
Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Episode 6

தான் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கணவன் வந்த விபரத்தை தாயிடம் கேட்டறிந்த ரம்யாவிற்கு இப்பொழுது என்ன குழப்பம் வரக் காத்திருக்கிறதோ என்ற கவலை தான்.. 

வந்தவர் யார் என்று கேட்ட குழந்தையிடம் கூட தெரிந்தவர் என்றே சொல்லி வைத்தனர் பெரியவர்கள்…

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அமைதியாய் கழிய மீண்டும் ரம்யாவின் அலுவலகத்திற்க்கே வந்து கிரிதரன் பேச அப்பொழுதும் அவளுக்கு சந்திக்கும் எண்ணமில்லை தான். 

ஆனாலும் தன் நிலையை உறுதியாக கூறி முற்றுப்புள்ளி வைக்கவே அவனுடன் பேச சம்மதித்தாள்.

ப்ளு ஸ்லிம்ஷர்டுடன் ப்ளாக் ஜீன்சும் அணிந்து கம்பீரமாய் தனக்காக காத்திருந்தவனை கண்டதும் மனதிற்குள் கிளர்ச்சி எழுந்தாலும் அதனை வெளிக்காட்டமால் பேச வந்தமர்ந்த மனைவியை கண்டதும் அவளின் தோற்றப்பொலிவில் மனம் லயிக்க மனைவியின் மாற்றத்தை எடை போட ஆரம்பித்தான். 

பிங்க் ஆர்ட் கிரேப் சுரிதாரில் அமைதியான அழகும் குழந்தைத்தனமும் குடிகொண்டிருந்த முகத்தில் தற்போது தாய்மையின் பொலிவும் சற்றே கடினத்தன்மையுடன் மெருகேறிய அழகும் புதுப் பொலிவை கூட்டிட ஏற்கனவே மெலிந்த தேகத்தை உடையவள் இன்னும் மெலிந்தவளாய் மாறியிருந்தாள். 

அதை அவளிடம் சொல்லவும் செய்தான். எதையாவது சொல்லி பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே. அதற்கு இது தொடக்கமாக இருக்கட்டுமே என்று நினைத்து தான் அவன் ஆரம்பித்தது…

“ரொம்ப மெலிஞ்சு போயிருக்கியே ரம்யா… இன்னும் சாப்பாடு விசயத்துல தகராறு தானா?” என்றவனிடம் கோபமாய் 

“ரொம்ப அவசியமா தெரிஞ்சுகிட்டே தான் ஆகணுமா? இப்படி உத்து உத்து பாக்கத்தான் வந்துருக்கீங்கன்னா அதுக்கு ஆள் நான் இல்ல; வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க” 

“உன் கோபத்துல அர்த்தம் இருக்கு; நான் எல்லா தப்பையும் சரி பண்ணறேன்.. போதும் தனித்தனியா இருந்தது; நீயும் பேபியும் எனக்கு வேணும்” என்று கூற அவனை இடைமறித்து 

“நாங்க என்ன கடையில வாங்குற பொருளா? சின்ன குழந்த மிட்டாய் வேணும்னு அடம்பிடிக்கிற மாதிரி எனக்கு நீங்க வேணும்ன்னு வந்து நிக்கிறீங்க; மனுசங்கள மனுசனா பாக்க எப்போதான் பழகுவீங்களோ தெரியல. 

இந்த லட்சனத்துல திரும்பவும் உங்க கூட வந்து சந்தோசமா இருக்கணும்னு சொல்லறத நம்ப எனக்கு ஒண்ணும் பைத்தியம் பிடிக்கல. நான் தெளிவா தான் இருக்கேன்” என்று பைத்தியம் என்னும் வார்த்தையை அழுத்திப் பேச; 

“ம்ப்ச்… அத எல்லாம் மறந்துரு; தயவு செய்து இந்த ஒரு தடவை எனக்காக வேண்டாம் நமக்காக… நம்ம குழந்தைக்காக… கொஞ்சம் யோசி ரம்யா” 

“அந்த நமக்காக… நானும் என் குழந்தையும் மட்டும் தான் இருக்கோம் நீங்க இல்ல; உங்க கூட எங்களையும் இணைச்சு வீணா ஆசைய வளர்த்துக்காதீங்க. எங்கள நிம்மதியா இருக்க விடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும். 

இவ்வளவு நாளா இல்லாத அக்கறை; அஞ்சு வருசமா வராத பாசம் இப்போ மட்டும் எப்படி வந்தது?” என்று கேள்வி கேட்டவளை கண்களை விரித்து மெச்சும் பார்வையுடனே பார்த்தவன்

“இப்போ கேட்டியே இது கேள்வி; உங்க மேல இருக்குற என்னோட பாசமும் அக்கறையும் என்கிட்டே தான் பத்திரமா இருக்கு. என்னோட இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சி பாரு.

என்னோட அம்மாவும் அப்பாவும் எந்த காலத்திலேயும் நாம சேர்ந்து வாழறதுக்கு தடை சொன்னதில்ல. அவங்கள நான் விட்டு கொடுக்காம இருக்கணும்னு நினைச்சுருக்காங்க .

பெத்தவங்க சொல்லை மீறி  நாம ஒரு காரியம் செய்யும்போது நம்ம மேல உள்ள நம்பிக்கை குறைஞ்சு போயிருது.. 

நம்ம மேல நம்பிக்கை இல்லாத பட்சத்தில எங்கே அவங்களோட மதிப்பும் மரியாதையும் குறைஞ்சு போயிடுமோனு நினைச்சு தான் கொஞ்சம் இல்ல அதிகமாவே உரிமை எடுத்துகிறாங்க. அது தான் உண்மை.

பெத்தவங்களுக்கு மனசுல கோவில்  கட்டி கும்பிட்டாலும் வெளியே காமிச்சுக்காத என்னை மாதிரி பசங்களுக்கு அது தான் வினையா முடியுது. நம்ம கல்யாண விசயத்திலேயும் சரி; அதுக்குப் பிறகும் சரி இது தான் நடந்தது.

வீணான பேச்சுக்கள் வளர்ந்த நேரத்துல அத விலக்கி வைக்க முடியாத படி சூழ்நிலையும் காலமும்  அதுக்கு தோதா அமைஞ்சுருச்சு. நான் வெளிநாடு போனதும் அங்கே வேலையும் இழுத்து என்னை கட்டி போட்டத என்னனு சொல்ல. 

எல்லாம் விதின்னு சொல்லி தப்பிக்க நான் விரும்பல. தப்புன்னு பார்த்த எல்லாமே தப்பு தான்; எல்லோர் மேலயும் தப்பு இருக்கு அத இப்போ அலசி ஆராய வேணாமே… போனதெல்லாம் போகட்டும் இனிமே புதுசா நமக்கான வாழ்க்கைய நாம ஆரம்பிப்போம்.

எனக்கு நீதான் வேணும்னு யார்கிட்டயும் போய்  கேட்கவும் முடியல… நான் உனக்காக மட்டுந்தான் தவிச்சுக்கிட்டிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லவும் முடியல ரம்யா?” மென்மையாய் தன் நீண்ட விளக்கத்தை கூறியவனிடம்

முடிஞ்சுருச்சா?அவ்வளவு தானா” ?; ரொம்ப ஈசியா உங்க மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லிடீங்க; ஆனா நான் பட்ட கஷ்டம்; அவ்ளோ ஈஸியா என்னால மறக்க முடியாது இத தான் பேச வந்தீங்கன்னா நான் கிளம்புறேன் வெடுக்கென்று கூறி கிளம்பி விட

“கொஞ்சம் யோசிச்சு பாரு; வீண் பேச்சையும், கோபத்தையும் இன்னும் இழுத்து பிடிக்க வேணாம். போதும்  நாம பட்ட கஷ்டம்; என்ன பேச்சு வந்தாலும் நான் பொறுப்பு” அவனின் வார்த்தைகள் காற்றோடு தான் போனது.

அதற்கடுத்த நாளில் இருந்து அவளையும் குழந்தையையும் காலை நேரத்தில் பார்க்க தவறுவதில்லை. குழந்தையை அனுப்பிவிட்டு நிற்கும் அவளிடம் மீண்டும் இணைந்து வாழ்வதைப் பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் பேசுபவன் எக்காரணத்தைக் கொண்டும் தானாகச் சென்று குழந்தையுடன் பேசுவதை தவிர்த்து வந்தான். 

அவனது பொறுமையின் உச்சகட்டமாக தானோ இப்பொழுது ஆலோசனைக்கு(கவுன்சிலிங்) அழைத்திருப்பதும் என்றே ரம்யாவிற்கு தோன்றியது…

இடைவிடாத கீச்சுக்குரலும் அதனை தொடர்ந்து தொலைக்காட்சியின் ஒலியும் ரம்யாவை நிகழ் காலத்திற்கு அழைத்து வர தன்னறையிலிருந்து வெளியே வந்தவள் 

“இவ்ளோ சவுண்ட் வைச்சுக்காதே இந்தும்மா… வீடே அதிருது.. என்னால உள்ளே இருக்க முடியலடி..” தன் மகளிடம் கூற

“மாட்டேன் போ… நான் இப்போ தான் ஸ்கூல்ல இருந்து வந்திருக்கேன்.. டிஸ்டர்ப் பண்ணாதே”.. என்று பெரிய மனுசியாய் ஆணையிட்டதோடு தன் தலைவன் சின்சானை பார்க்க ஆரம்பித்தாள்

“எல்லாம் உங்க பாட்டியும் மாமாவும் சேர்ந்து குடுக்குற செல்லத்துல தாண்டி இப்படி ஆடிகிட்டு இருக்க. உனக்கு அடுத்த வருஷம் நிறைய ஹோம்வோர்க் குடுக்குற ஸ்கூலா பார்த்து சேர்த்து விடறேன் அப்போதான் அடங்குவ” என்று கூற அங்கே ஆரம்பமாகியது ஓரு கச்சேரி. அதை கேட்டு சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த செல்வி 

“ஏண்டி.. இப்ப குழந்தயா அழ வைக்கிற; அவ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் பேசாம ரூம்லேயே இருக்க வேண்டியது தானே; அதுக்குள்ள வந்து அவகிட்ட வம்பு வளக்கனுமா?” என்றவாறே வெளியே வந்தவர் 

“நீ வாடி செல்லம். அம்மா என்ன சொன்னா?” அவளை மடியில் இருத்திக்கொண்டே உணவை ஊட்டி விட ஆரம்பித்தார்.

“ஒண்ணும் சொல்லிடக்கூடாது; உடனே மூக்கு வேர்த்து போய் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துருவாங்க என்னமோ செஞ்சுக்கொங்க.. முணுமுணுத்தவாறே அலுத்துக்கொண்டே ரம்யாவும் உள்ள சென்று விட

“எனக்கு நிறைய ஹோம்வோர்க் குடுக்குற ஸ்கூல்ல சேர்த்துருவேன்னு அம்மா சொல்றா? நெஜமாவா பாட்டி”. விசும்பிக்கொண்டே பேத்தி கேட்க

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தங்கம்… அப்படி செஞ்சா அவளுக்கு சாப்பாடு குடுக்காமா பட்டினி போட்ருவோம்.. சரியா இப்போ இந்த தோசைய சாப்பிடுவியாம்.. பாப்பாக்கு பிடிச்ச மாதிரி முறுவலா இருக்கு” 

“மாமா எனக்கு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரும். அத தான் சாப்பிட்ட போறேன் இது வேணாம்” பேத்தி ஒதுக்க 

“உங்க மாமா வர லேட் ஆகும்டி ராஜாத்தி.. இப்போ இதை சாப்பிடுவியாம்… கொஞ்ச நேரம் கழிச்சு அதையும் சாப்பிடுவியாம்” என்று தொடர்ந்தார்.

பேத்தியை சீராட்டுவதில் செல்விக்கு அலாதி பிரியம்; ஒரு சுடு சொல்லோ அடியோ பேத்தியின் மீது விழுந்து விடாமால் பொத்தி பொத்தி தன்னோடு வைத்துக்கொள்வார். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே யார் வந்தாலும் அவர்கள் எல்லாம் கால் தூசி தான் செல்வி பாட்டிக்கு.

இதை விட ஓரு படி மேல் தன் மாமனிடம் செல்லம் கொஞ்சுவாள் அந்த சின்ன சிட்டு. அவனை பார்க்காமல் இந்த செல்ல ராட்சசிக்கு பொழுது விடியாது; இரவும் முடியாது. 

மாமனை தவிர்த்து வேறு யாரும் இவளை செல்ல ராட்சசி என்று கூப்பிட்டு விடவும் முடியாது. அவ்வளவு ஒட்டுதல் இருவருக்கும்.

இவர்களின் மூவர் கூட்டணியில் கலந்து கொள்ளாமல் தனியே நின்று வேடிக்கை பார்க்கும் வேலையை மட்டுமே பார்ப்பவர்கள் ரம்யாவும் அவள் தந்தை சண்முகமும் தான்.

அவருக்கும் பேத்தி மீது அதீத பாசம் தான்; ஆனாலும் அதை விட பெண்ணின் நலனே அவர் கருத்தில் நிலைத்து நிற்கும். எப்பொழுதும் போல் நடப்பதை பார்த்துகொண்டு இருந்த ரம்யாவிற்கு கோபம் அளவில்லாமல் வந்தது..

“ஆபிஸ் முடிஞ்சு வந்ததும் நான் சொன்னத பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம இந்த அம்மா பேத்திக்கு ஊட்டி விடுறது தான் முக்கியமான வேலையா செஞ்சுகிட்டு இருக்காங்க. இவங்கள என்ன பண்ணலாம் (அதைப்பற்றி கேட்க வேண்டாம் என்று தன் அன்னையிடம் சொன்னதை அந்த சமயத்தில் ரம்யா ஏனோ மறந்து போனாள்)” மனதில் இருவரையும் கடிந்து கொண்டிருக்கும் வேளையில் சிவா வந்து விட்டான்.

ரம்யாவின் அண்ணன் சிவகுமார் CA முடித்து விட்டு தற்போது ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் ஆடிட்டிங் சம்மந்தமான அலுவல்களை கவனித்து கொள்பவன். மிகுந்த திறமைசாலி; தன் பொறுப்பினை நன்றாய் அறிந்தவன். குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருப்பவன். 

தன் தங்கையின் நலமே தன்னலமாய் நினைத்து திருமண வாழ்க்கையை தள்ளிபோடும் முப்பது வயது இளைஞன். அவர்கள் வீட்டு சின்ன சிட்டின் மனம் கவர்ந்த தாய்மாமன்.

“என்னோட செல்ல ராட்சசி என்ன பண்ணறாங்க”… சீண்டிக்கொண்டே வந்த சிவாவைப் பார்த்து 

“ஏன்டா… உனக்கு கூப்பிடுறதுக்கு வேற பேரே கிடைக்கலையா? என் தங்கத்தோட அழகான பேர இப்படி கொலை பண்றீயே?” என்று செல்வி மகனிடம் காய ஆரம்பித்தார்.

“நானா கொலை பண்ணறேன்? உன் பேத்தி தான் அப்படி சொல்லிக்கிட்டு இருக்கா எங்கே சொல்ல சொல்லுங்க அவளோட பேர” என்றவன் குழந்தையிடம் திரும்பி “குட்டிம்மா உங்க பேர் சொல்லுங்க; பாட்டி காது குளிர கேக்கட்டும்.” 

“மை நேம் இஸ் இந்திரட்சஷி” என்று அந்த சின்ன சிட்டும் கூற 

“நல்லா கேட்டியா “இந்திராக்ஷி” ங்கிற அழகான பேர எப்படி சொல்றா உன்னோட பேத்தி” என்று வாரினான்.

“எனக்கு என்ன வாங்கிட்டு வந்தே மாமா?” 

“உனக்கா ஒண்ணுமே வாங்கலையே..”

“இல்ல இருக்கு எனக்கு குடு” ஏற்கனவே ரம்யாவின் அதட்டலில் விசும்பலை தொடங்கி இருந்தவள் மாமனின் பேச்சில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க

“நெஜமாவே ஒண்ணும் கொண்டு வரலடா இந்தும்மா… இப்போ வெளிய போயிட்டு வரும்போது கொண்டு வர்றேன் செல்லம்” என்று சமாதானம் கூறினாலும் ஏற்கவில்லை.

சோபாவில் அமர்திருந்தவள் அப்படியே மாமனின் முதுகில் தொற்றிக்கொண்டு தன் விருப்ப பொருளை ஆராய ஆரம்பித்தாள், தேடியது கிடைக்காமல் போக கச்சேரி உச்சஸ்தாயில் வளர்ந்தது. 

“என்னடா நீ… புள்ளைக்கு ஆச காட்டிட்டு ஒண்ணும் கொண்டு வராமா வரலாமா?” அதட்டலுடன் செல்வி கேட்க 

“அப்பா போன் பண்ணி கோர்ட் நோட்டீஸ் வந்துருக்கு; வீட்டுக்கு வா பேசணும்னு சொன்னதால ஆபிஸ்ல சொல்லிட்டு அப்படியே வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாவும் வந்துருவாரு. அதுக்குள்ள இந்த ராட்சசிய வெளியே கூட்டிட்டு போய் லஞ்சம் கட்டிட்டு வரேன்” என்று நகர்ந்தான்…

பிள்ளைக்கு பிடித்த நொறுக்கு தீனியை வரிசையாய் வாங்கி கொடுத்துவிட்டு வந்தவனிடம் “இப்போ என்ன செய்யலாம் சிவா? எனக்கே குழப்பமா இருக்கு அது எப்படி திரும்பவும் கவுன்சிலிங் கூப்பிட்டு விட்ருக்காங்க என்ன விவரம்னு தெரியலையே?” என்று சண்முகம் கவலை கொள்ள

“நான் போய் விசாரிச்சிட்டு வரேன்ப்பா… நீங்க கவலை படாதீங்க… தங்கச்சிக்கு தைரியம் சொல்லுங்கப்பா. ஏற்கனவே குழப்பத்துல இருக்கா; இப்போ இதையும் சேர்த்து கஷ்டப்படுத்திக்கப் போறா” என்று சொல்லிக் கிளம்பியவன் போய் நின்ற இடம் கிரிதரனின் இல்லம்.

 

Yaaro Avan 19

யாரோ அவன்? 19

அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் முன்னே, தன் காரை உரிய இடத்தில் லாவகமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினாள் அவள்.

சந்தனத்தையும் குங்குமத்தையும் குழைத்தெடுத்த வண்ணத்தில் மிளிர்ந்த பளிங்கு மேனி!

காண்பவரை கட்டி இழுக்கும் அகன்ற மையிட்ட கண்கள்!

மிதமாய் அவள் இதழோடு உறவாடும் வசீகர புன்னகை!

மொத்தத்தில் அவளை பார்க்கும் பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகாய் காட்சி தந்தாள் அவள்.

பர்ப்பிள் நிற லாங்க் டாப்பும், வெளீர் நீல நிற ஜீன்ஸும் அணிந்து பெரிதாய் அணிமணிகள் ஏதுமின்றியும், அவளை கடந்து செல்பவர்களை திரும்பி பார்க்க செய்தாள் அவள்.

காரின் மறுபக்க கதவை திறந்து, இரண்டு வயது ஆண் குழந்தையை தன் கைகளில் தூக்கி கொண்டு ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தாள்.

சரியாக ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு, ஒரு கையில் பெரிய பையை தூக்கியபடி அவள் வெளியே வர,

அவளின் மறுகையின் விரலை பிடித்து கொண்டு அந்த குழந்தையும் நடந்து வந்தான்.

வெண்ணெயில் தோய்த்தெடுத்த சின்ன கண்ணனைப் போல, அந்த குழந்தை தன் அம்மாவிடம் மழலையில் ஏதேதோ பிதற்றியபடி, தத்தி தத்தி நடந்து வந்தான்.

காரின் லாக்கை விடுவித்து, பின்பக்க கதவை திறந்து பையை உள்ளே வைத்து விட்டு திரும்ப, அவள் கண்முன்னே குழந்தை மாயமாகி போயிருந்தான்.

“காணா! கஹாங் ஹோ தும்?” (கண்ணா! எங்க இருக்க நீ?)
முகத்தில் பரவிய மென்னகையோடு, தன் மகன் அங்கே தான் ஒளிந்து இருப்பானென்று குரல் கொடுத்தபடியே சுற்றும்முற்றும் தேடினாள்.

குழந்தை அவள் பார்வையில் படாமல் போகவே, “ரிஷப்…! ஜல்தி ஆஜா பேட்டா, ஹம் கர் ஜானா ஹேனா”
(ரிஷப்… சீக்கிரம் வா கண்ணா. நாம வீட்டுக்கு போகணும் இல்ல)

தன் குழந்தையின் பதில் குரல் வராமல் போகவே, அவளின் தாயுள்ளம் பதற ஆரம்பித்தது.

“ரிஷப்…! ரிஷப்…! ரிஷப்ப்ப்ப்!” அங்கு வரிசையாய் நிறுத்தப்பட்டு இருந்த, ஒவ்வொரு காரின் இடைவெளியிலும் அவன் பெயரை கூவி அழைத்தபடி தேடினாள்.

“மேரா தோ சால்கா பச்சா தா, கிஸினே தேக்கா கியா?” (என்னோட ரெண்டு வயசு பையன, நீங்க யாராவது பார்த்தீங்களா?)

அங்கே அவள் கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் ஓடி ஓடி சென்று தன் மகனின் அடையாளத்தை கூறி விசாரிக்க, அவர்கள் தெரியாதென தலையசைத்து நகர்ந்தனர்.

அந்த ஷாப்பிங் மால் வாசலில் கண்ணீருடன் இங்கும் அங்கும் ஓடி அல்லாடி, தன் செல்வத்தை தேடி பதைபதைத்தாள் அவள்.

அவளின் செல்ல கண்ணன் கிடைக்கவே இல்லை.

ஒரு நிமிடம், அவளை சுற்றி இருக்கும் அனைத்தும் அவள் கண்முன்னே சுழற்வதை போல தெரிந்தது அவளுக்கு.

அது பொதுவிடம் என்பதை கூட மறந்து, “ரிஷப்…! ரிஷப்…! ரிஷப்…!” என்று கதறி அழுதாள் அவள்.

அங்கே எதிரே காருக்குள் இருந்தபடியே, அந்த தாயின் கண்ணீரையும் கதறலையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

அவளின் கதறலை பார்த்து ஒரு சிலர் அவளருகே வந்து, போலிஸில் புகார் செய்யும்படி ஆலோசனை வழங்க, அவள் இன்னும் அதிகமாக உடைந்தழுதாள்.

அப்போது தான் அவளுக்கு யோசனை தோன்ற, தன் காரிடம் தட்டு தடுமாறி ஓடிச்சென்று அலைபேசியை கையில் எடுத்தாள்.

ஏதோ புது எண்ணிலிருந்து இருமுறை விடுபட்ட அழைப்பு வந்திருப்பதாக திரையில் காண்பித்தது.

அதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

அவசரமாக தன் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

குறுக்கே, அதே புது எண்ணிலிருந்து அழைப்பு வர, அவளின் முதல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“ச்சே!” என்று அந்த புது எண்ணை பதட்டமாக துண்டித்து விட்டு, மறுபடி தன் கணவன் எண்ணுக்கு முயன்றாள்.

இப்போதும் அந்த புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது!

இவள் அந்த அழைப்பை துண்டித்து கொண்டே இருக்க, தொடர்ந்து அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

இவளின் மூளைக்குள் ஏதோ துணுக்குற, அவளின் மென் விரல்கள் நடுங்க, கைபேசியை உயிர்ப்பித்து காதில் ஒற்றினாள்.

“…!”

“ஹாய், ஷிவானி பேபி! எப்படி இருக்க?” இனிமையான ஆண் குரல் மறுமுனையில் கேட்டது.

“நி…நீங்க யாரு?”

“என்ன சில்லி கேள்வி இது! என் வாய்ஸ்ஸ நீ அதுக்குள்ள மறந்திட்டியா என்ன?”

அவன் பேச்சை வளர்த்து கொண்டு போக, “நான் இப்ப பிஸியா இருக்கேன். ஃபோனை வைங்க” என்று துண்டிக்க முற்பட்டவள்,

“நீ லைன கட் பண்ணாம இருந்தா தான், உன் பையன் உனக்கு கிடைப்பான்! ஷிவானி” என்ற அந்த குரலின் எச்சரிக்கையில் கைப்பேசியை அப்படியே தன் காதோடு ஒற்றிக் கொண்டாள்.

“எங்…எங்… என் குழந்தை எங்க?”

“ஹே கூல் பேபி! உன் பையன் சமத்தா இருக்கான்”

“உனக்கு என்ன வேணும்? ப்ளீஸ், என் குழந்தைய என்கிட்ட கொடுத்துடு”

“ப்ச் பார்த்தியா, யாரோ மாதிரி என்கிட்ட கெஞ்சிட்டு இருக்க, முதல்ல நான் யாருன்னு கண்டுபிடி பார்க்கலாம்?”

அந்த குரல் சிறிதும் இரக்கமின்றி அவளின் பலவீனத்தோடு விளையாடிக் கொண்டிருந்தது.

“இல்ல, நீ யாருன்னு எனக்கு தெரியல! நீ எவ்ளோ பணம் கேட்டாலும் கொடுத்துறேன். என் ரிஷப்ப விட்டுடு ப்ளீஸ்” அவள் கண்ணீரோடு மன்றாடினாள்.

“இப்பவும் நீ அழுதா என்னால தாங்க முடியல பேபி, ஐ லவ் யூ சோ மச் பியூட்டி!”

இந்த காதல் சொற்கள் அவளுக்கு வேறொரு கிறக்கமான குரலை நினைவுபடுத்த, அவள் கண்முன்னே காரிருள் படர்ந்தது.

“யார் யார் நீ?”

“சுந்தர்! உன்னோட சுந்தர்!”

“நோ! என்கிட்ட விளையாடாம உண்மைய சொல்லிடு! யார் நீ?”

“உன்னோட விளையாட எப்பவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் பேபி. பட், இப்ப என் பேரோட நான் விளையாடல. நான் சுந்தர் தான் பேசறேன்.”

“இல்ல, நான் நம்ப மாட்டேன்! நீ சுந்தரா இருக்கவே முடியாது!” ஷிவானி அடுத்தடுத்த அதிர்ச்சிகளால்
மிகவும் பதற்றத்தின் வசப்பட்டு இருந்தாள்.

அந்த நேரத்தில், தன் மகனுக்கு என்ன நேர்ந்ததோ! என்ற தாய்மையின் ஏக்கத்தில் அவள் யோசிக்கும் திறனை முழுவதுமாக இழந்திருந்தாள்.

“என் மகனை மறைச்சு வச்சிகிட்டு, ஏன்? சுந்தர் பேர சொல்லி என்னை மிரட்டுற?”

“நான் சுந்தர் தான் பேசறேன் ஷிவானி!” அவன் அழுத்தமாக உச்சரித்தான்.

“இல்ல! நீ பொய் சொல்ற! நீ நிச்சயமா சுந்தரா இருக்கவே முடியாது!” அவள் வார்த்தைகள் வேகம் பிடித்தன.

“ஏன் பேபி? நான் சுந்தர்னு சொன்னா, நீ என்னை நம்பவே மாட்டேங்கற?”

“நீ எப்படி சுந்தரா இருக்க முடியும்? அவன் தான் எப்பவோ செத்து போயிட்டானே!”

“இல்ல ஷிவானி டியர், நான் இன்னும் உயிரோட இருக்குறதால தான் உன்கூட பேசிட்டு இருக்கேன்!”

“நீ உயிரோட வர வாய்ப்பே இல்ல! நான் தான என் கையால உன்ன குத்தி கொன்னேன்!” அவள் ஆவேசமாய் சொன்னாள்.

“…!”

கைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.

ஷிவானிக்கு ஒன்றுமே புரியவில்லை.  அவள் கையில் இருந்து அலைபேசி கீழே நழுவியது.

“ரிஷப்…!” என்று குரல் கம்ம, இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள்.

“மம்மி! மம்மி!” என்ற அமுத குரல் கேட்டு, அவள் குனிந்து பார்க்க,

ரிஷப், அவளின் துணியை பிடித்து இழுத்தபடி அவளை அழைத்து கொண்டு இருந்தான்.

அந்த நொடியில், எல்லாவற்றையும் மறந்து தன் மகனை அள்ளி சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

தன் மகன் கிடைத்து விட்டான் என்ற எண்ணமே அவள் மனதை நிறைத்து விட்டது.

தன் அருகில் ஏதோ சலசலப்பை உணர்ந்து நிமிர்ந்தவள், அவளை சுற்றிலும் நான்கு பேர் நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.

பிரபாவை தவிர மற்ற மூன்று பெண்களும் காக்கி சீருடையில் இருந்தனர்.

ஷிவானியின் தொண்டைக்குழி அடைத்து கொண்டது போலானது.

தன் குழந்தையை தோளோடு சேர்த்து இறுக்கி கொண்டு மிரள மிரள விழித்தாள் அவள்.

சற்று தூரத்தில், காரிலிருந்து இறங்கி வெற்றி வேந்தனும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவரும் அவளை நோக்கி வந்தனர்.

“சுந்தர கொலை செஞ்ச குற்றத்திற்காக உங்கள கைது செய்றேன்!” என்று துணை ஆய்வாளர் சொல்ல, அவள் மிரண்டு போய் நின்றாள்.

“இவ்வளவு நேரம் நீங்க ஃபோன்ல பேசினதெல்லாம் ரெக்கார்ட் பண்ணியாச்சு! இதுக்கு அப்புறம் நீங்க தப்பிக்க எந்த வழியும் இல்ல! ஷிவானி மேடம்!” வெற்றி வேந்தன் நிதானமாக சொன்னான்.

சற்று முன், தன்னை கைப்பேசியில் ஏய்த்த அதே குரல்! அவள் முன்னே ஒலிக்க,

ஷிவானியின் பார்வை இருண்டு, அவள் நினைவிழந்து அப்படியே கீழே சரிந்தாள்.

# # #

ஷிவானியை பின் தொடர்ந்த இரு நாட்களிலேயே வெற்றி வேந்தன் அவளை ஓரளவு சரியாகவே கணித்து விட்டிருந்தான்.

ஒரு சின்ன தடயம் கூட விடாமல், ஒருவனை கொடூரமாக கொன்று விட்டு, இங்கு வெகு இயல்பான குடும்ப தலைவியாக வலம் வந்து கொண்டிருந்தாள் அவள்.

அசாத்திய அழகு, திறமை மட்டுமல்ல, அவளுக்கு நுணுக்கமான புத்தி கூர்மையும் இருக்க வேண்டும்.

இல்லையேல், அவளால் இத்தனை இயல்பாக தன்னை காட்டிக் கொள்ள முடியாது என்று எண்ணமிட்டான்.

ஷிவானியை நேருக்கு நேராய் சந்தித்து உண்மையை அறிய முயற்சிப்பது நேர விரயம் என்று வெற்றி யோசிக்க, பிரபாவும் அதையே தான் சொன்னாள்.

ஷிவானியின் பலவீனத்தை அறிந்து கொண்டு, அதைக்கொண்டு அவளை வீழ்த்த வேண்டுமென திட்டமிட்டனர்.

ஒரு தாயாய் ஷிவானியின் பலவீனம்? அவளது செல்ல மகன்!

சுவாதியின் மீது வெண்ணிலா கொண்டிருக்கும் பாசத்தை கண்கூடாக உணர்ந்து இருந்ததால், வெற்றிக்கு இது சரியான யோசனையாக தோன்றியது.

பிரபாவின் முயற்சியால் அங்கிருந்த காவல்துறை உதவியை நாடினான்.

அவன் திட்டத்தை கேட்டு முதலில் அவர்கள் மறுத்தாலும், ஷிவானி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை விளக்க, காவல்துறை உதவியும் அவனுக்கு கிட்டியது.

கரணிடம், சுந்தர், ஷிவானி இவர்களின் தனிப்பட்ட பழக்கத்தை பற்றி சில விவரங்களை கேட்க,

‘சுந்தர், பொதுவாக பெண்களிடம் பேபி, டியர் என்று தான் பேசுவானாம்! அதுவும் ஷிவானியை ‘பியூட்டி’ என்ற அடைமொழியோடு தான் அதிகமாய் அழைப்பான்’ என்று கரண் சொன்ன விவரங்கள் வெற்றிக்கு சாதகமாக இருந்தன.

“எக்ஸ்லண்ட், மிஸ்டர் விக்டர்! எத்தனை லாவகமா பேசி, அவங்க வாயாலேயே உண்மையை வரவச்சிட்டிங்க! நீங்க கொஞ்சம் பிசறி இருந்தாலும், இந்த பிளான் ப்ளாப் ஆக நிறைய சான்ஸஸ் இருந்தது” என்று காவல்துறை உதவி ஆய்வாளர் அவனை கைக்குலுக்கி பாராட்டி விட்டு சென்றார்.

எனினும் வெற்றி வேந்தன் முகத்தில் மகிழ்ச்சிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

முன்பு, வெண்ணிலாவை குற்றம் செய்தவளாய் இவன் நினைத்திருந்த போதே, அவளின் குற்றம் நிரூபிக்கபட்டால் சுவாதி தன் அம்மாவின் அருகாமையை இழக்க நேரிடும் என்று மனதிற்குள் பரிதாபம் கொண்டிருந்தான்.

இப்பொழுதும் ஒரு குழந்தை தன் தாயின் அருகாமையை இழந்து போனது! அதன் காரணம் அவனேயாகி போனான்!

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை என்பது விதிக்கப்பட்டது தான் என்றாலும், ஏனோ? ஷிவானியை வெறும் குற்றவாளியாக மட்டுமே அவனால் பார்க்க முடியவில்லை.

அவளை ஒரு சிறு குழந்தையின் தாயாக தான் எண்ண முடிந்தது அவனால்.

ஆனால், இந்த இரு ஜீவன்களுக்காக பாவம் பார்த்தால், அங்கே இவனுடைய இரு ஜீவன்கள் எந்த தவறும் செய்யாமலேயே மீளா துயரில் மடிந்து போகுமே.

கடமை வீரர்கள் எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்க கூடாது. அவனும் தன் மனதை ஒரே முனையில் வைத்து தன் கடமையை செய்து முடித்திருக்கிறான்.

அவனுடைய இத்தனை நாட்கள் நிழல் தேடலுக்கான நிஜத்தை இதோ கண்டுபிடித்து விட்டான்.

அவன் மனதின் ஓரம் சிறு கலக்கம் ஏற்பட்டு இருந்தாலும், கரண், நித்யாவின் சந்தோசமான வாழ்க்கை மீண்டு விடும் என்ற எண்ணமே அவனுக்கு பெரும் நிம்மதியை தந்தது.

# # #

ஷிவானி விசாரணை கைதியாக சென்னை கொண்டு வரபட்டாள்.

இப்போது, ஒரு தனி அறையில், காவல்துறை பெண் ஆய்வாளர் சங்கரி முன்பு அமர்த்தப்பட்டு இருந்தாள்.

அரைமணி நேரமாய் அவரின் எந்த கேள்விக்கும் இவளிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

கொலைக்காரி  என்ற பட்டத்தினால் அவள் இழந்துவிட்ட தன் கணவனின் அன்பையும், தன் செல்ல மகனின் பிரிவையும் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்த பேதை மனம் அலையில் சிக்குண்ட துகளாய் உழன்று கொண்டிருந்தது.

“ஷிவானி, ஒழுங்கா உண்மைய சொல்லிடு. இல்ல, நான் உன்ன விசாரிக்கிற விதம் வேற மாதிரி இருக்கும்” என்று அடிக்குரலில் சங்கரி மிரட்ட, நிமிர்ந்த ஷிவானியின் இதழில் இளப்பமான சிரிப்பு வந்து போனது.

“நீ என்ன காரணத்துக்காக சுந்தர கொலை பண்ண? அவனுக்கும் உனக்கும் ஏதாவது முன் விரோதம் இருந்ததா?”

“…”

“ம்ம் பதில் சொல்லு!”

“நான் எதுக்காக அவன உயிரோட விட்டிருக்கணும்?” ஷிவானியின் பதில் கேள்வி சீறிக்கொண்டு வந்தது.

“…!?”

“நான் செஞ்ச ஒரேயொரு தப்பு அவன் ‘என்னை நேசிக்கிறேன்’னு சொன்னதை நம்பினது மட்டும் தான்.
ஆனா? அதுக்காக கட்டின பொண்டாட்டிய கொலை செய்ற அளவுக்கு கொடூரமானவனா இருப்பான்னு எனக்கு தெரியாது! அவனுக்கு பயந்து என்னோட கெரியர், வேலை எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு, சென்னைய விட்டே ஓடி போயிட்டேன்!”

“அப்புறம்?”

“அப்பறம் தான், என்னோட அபிய சந்திச்சேன், ‘அபிஷேக்’ என் வீட்ல எனக்காக பார்த்த மாப்பிள்ளை. என்னோட வெளி தோற்றத்தை மட்டுமில்லாம, என் மனசையும் நேசிச்ச ஒரே ஒருத்தர் அவர் தான். எங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கான பெரிய வரமா, அடுத்த வருசமே ‘ரிஷப்’ எங்களுக்கு கிடைச்சான்” அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது.

“என் வாழ்க்கையில மறுபடியும் அந்த சுந்தர் வந்திருக்கவே கூடாது! வராமலேயே இருந்திருக்கலாம்!”

“அவன் என்ன பண்ணான் உன்ன?”

“அன்னைக்கு என் மெயிலுக்கு சில வீடியோ கிளீப்ஸ் வந்தது. நானும் சுந்தரும் சேர்ந்து இருக்க மாதிரி! கூடவே சுந்தரும் ஃபோன் பண்ணான்!

‘என் அப்பா செத்துட்டாரு ஹனி! நான் இப்ப பெயில்ல வெளியே இருக்கேன். உன்ன தொந்தரவு பண்ணனும்னு எந்த மோட்டிவ்வும் எனக்கு இல்ல. எனக்கு கொஞ்சம் பணம் தேவபடுது! ஒரு பத்து லட்சம் கொடுத்தன்னா இந்த வீடியோஸ் ஃபுல்லா நான் அழிச்சிறேன்!’

அவன் மிரட்டி இருந்தா கூட எனக்கு சந்தேகம் வந்திருக்கும். அவன் கெஞ்சி கேட்டதை முட்டாள் தனமா நம்பி, அவன் சொன்ன லாட்ஜிக்கு போனேன்!

அவங்கிட்ட நான் செக்க நீட்டும் போதே, ஏதோ ஸ்ப்ரேவ என் முகத்தில அடிச்சிட்டான்! எனக்கு நினைவு வந்தபோது என் கை, கால், வாய் எல்லாத்தையும் கட்டிவச்சிருந்தான் பாவி!

நான் அவனுக்கு செஞ்ச துரோகத்துக்கு
இப்ப, என்னை பழி தீர்த்துக்க போறதா சொல்லி…! சொல்லி…! என்கிட்ட ரொம்ப வல்கரா நடந்துகிட்டான்!”

“…!”

“யாரோ வராங்கன்னு என்னை அப்படியே வாஸ் ரூம்ல போட்டு அடைச்சு வச்சிட்டான்! வெளியே ஏதேதோ விழுந்து உடையற சத்தமெல்லாம் கேட்டது!

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அவனே வந்து கதவை திறந்தான்.
அவன் தலையில அடிபட்டு ரத்தம் வழிஞ்சிட்டு இருந்தது!

அவனே, கத்தியால என் கட்டு எல்லாம் அறுத்து விட்டான்! நான் அவன உடனே ஹாஸ்பிடல் கூட்டி போகணும்னு திமிரா ஆர்டர் வேற போட்டான்!

அன்னிக்கு அவங்கிட்ட நான் அனுபவிச்ச சித்ரவதை, எனக்கேற்பட்ட அவமானம்! அப்ப எனக்கு வேற எதுவுமே தோணல! அவன் கையில இருந்த கத்திய பிடுங்கி, என் ஆத்திரம் தீர்ற வரைக்கும் அவன குத்தினேன்!

அவன் கீழ விழுந்த அப்பறம் தான், நான் ஒரு கொலை செஞ்சதை என்னால உணர முடிஞ்சது!

அந்த கேடுகெட்டவனை கொன்னதுக்காக நான் தண்டனை அனுபவிக்க விரும்பல!

முதல்ல, அவன் மொபைல் எடுத்து என்னோட விவரம் எல்லாத்தையும் அழிச்சிட்டேன்! என் கைரேகை எல்லாத்தையும் துடைச்சிட்டு, நான் அங்க வந்ததுக்கு அடையாளமா இருக்க, செக் உட்பட எல்லா பொருளையும் எடுத்துட்டு வந்துட்டேன்!”

“உன்ன நேர்ல பார்த்த ஒரே சாட்சி அந்த ரூம் பாய்கிட்ட பணத்தை கொடுத்து சரிகட்ட நினச்சிருக்க! உன்ன பிடிக்க எந்த கொம்பனாலையும் முடியாதுன்ற மிதப்புல இருந்திருக்க! இப்ப, உன் வாயாலேயே நீ மாட்டிகிட்ட!” சங்கரி மீதத்தையும் சொல்லி முடிக்க,

“அப்பவும் சரி, இப்பவும் சரி, அவன கொன்னதை நினச்சு எனக்கு எந்த வருத்தமும் இல்ல! என் இடத்தில வேற எந்த பொண்ணு இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பா!” ஷிவானி நெஞ்சை நிமிர்த்தி சொன்னாள்.

இன்ஸ்பெக்டர் சங்கரி, ‘அந்த சுந்தர் எத்தனை பெண்களோட வாழ்க்கையில கீழ்தரமா விளையாடி இருக்கான்!’ என்று எண்ணி, அவரும் ஒரு பெண்ணாய் உள்ளம் கொதித்து போனார்.

தேடல் நீளும்…

TK 36

அத்தியாயம் – 36

திருமணத்திற்கு ஒரு நாள் முன்னரே டெல்லியில் இருந்து பிளைட்டில் திருச்சி வந்து சேர்ந்தாள் மின்மினி.. சரியாக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக டிராவல்.. முதலிலேயே புக் பண்ணி வைத்திருந்த ஹோட்டல் ரூமிற்கு சென்று படுத்து உறங்கிவிட்டாள்..

மறுநாள் காலை அவளின் செல் சிணுங்கும் சத்தம்கேட்டு தான் கண்விழித்தாள் மின்மினி.. அலைபேசியின் திரையைப் பார்த்துவிட்டு, “ஐயோ..” என்று தலையில் அடித்துக்கொண்டு, “என்னோட அம்முகுட்டி இல்ல.. தயவுசெய்து திட்டாதே.. இப்போ கல்யாணத்தை பார்த்ததும் கிளம்பிவிடுவேன்..” என்று பயத்துடன் பதில் கொடுத்தாள்..

“………………..” மறுபக்கத்தில் இருந்து பதில் வர, “சரி போனை வை.. முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிறது..” என்று போனை வைத்துவிட்டு குளித்துவிட்டு அழகாக பட்டுசேலை கட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னுடைய முகம் பார்த்தாள்..

சேலையில் அவளின் அழகு இன்னும் அதிகமாக இருக்க, “மினி வர வர உன்னோட அழகு அதிகமாகிட்டே போகிறதே..” என்று தன்னை தானே கிண்டலடித்து கொண்டாள்..

பிறகு மணியைப் பார்த்துவிட்டு, “இதற்கு மேல் லேட் பண்ண மண்டபத்திற்கு போக ரொம்ப லேட் ஆகிவிடும்..” என்று வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.. ஹோட்டலுக்கு வெளியே வந்து டாக்சி ஒன்றைப் பிடித்தவள் மண்டபத்தின் பெயரை சொல்ல கார் கிளம்பியது..

பொழுது விடியலை நோக்கி பயணிக்க மினி மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.. காலை நேரத்தில் குளிர் தென்றல் அவளின் முகத்தில் மோத உற்சாகமாக உணர்ந்தாள்.. அவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வர ரேடியோவில் பாடிய பாடல் அவளின் மனத்தைக் கவர்ந்தது..

ஆணின் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது..

எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது..

தெய்வம் ஒன்று சேர்த்த சொந்தம் இங்கே சேர்க்கிறது..

வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது..

நிலவினை கிரகணம் தீண்டியது.. மறுபடி பௌர்ணமி தோன்றியது..   

 விதியும் புதியது.. கதையும் புதியது.. காலத்தின் தீர்ப்பு இது.. தெய்வத்தின் சேர்ப்பு இது..” என்ற பாடல் வரிகளை கேட்டு அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.. அந்த பாடல் வரிகள் கூறிய விஷயம் அவளின் மனதினைக் கவர்ந்தது..

பிறந்து வளர்ந்த ஊர் என்ற காரணத்தால் அவளுக்கு திருச்சி பற்றி எந்த பயமும் இல்லை.. திருமண மண்டபம் பக்கத்திற்கும் அவள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் அரைமணி நேரம் டிராவல்.. சொந்த ஊர் என்ற காரணத்தில் மனம் சந்தோஷத்தில் திருமண மண்டபம் சென்றார்..

திருச்சியில் பெரிய மண்டபத்தில் பிரபாகரன் – ஜெயக்கொடியின் திருமணம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.. காலையில் விடியும் முன்னரே  மகளையும், ருக்மணியும் எழுப்பிய சுகந்தி, “நேரம் ஆகிறது.. காலை ஆறு மணியிலிருந்து எழுமணிக்குள் முகூர்த்தம் இன்னும் என்ன தூக்கம்..” என்று மகளை எழுப்பிவிட்டார்..

அவள் சென்று குளித்துவிட்டு வரவே உறவினர்கள் எல்லாம் குளிக்க சென்றனர்.. உறவு பெண்கள் ருக்மணி மற்றும் விஜி  அனைவரும் இணைந்து அவளை அலங்காரம் செய்தனர்.. அவர்கள் ஒன்று சேர்ந்து ஜெயாவை ஒரு வழி செய்தனர்..

“ஜெயாவிற்கு சும்மாவே மேக்கப் போட்ட பிடிக்காது.. இன்னைக்கு நீங்க பண்ண போற அலங்காரத்தில் அவள் எனக்கு திருமணமே  வேண்டாம் என்று சொல்லிவிட்டு மணமேடையை விட்டு இறங்கி வந்தாலும் ஆச்சர்யம் இல்ல..” என்று தோழியை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்..

அவள் பொம்மை போல அமர்ந்திருக்க இதழ்களில் மட்டும் கசந்த புன்னகை மலர்ந்திருக்க, ‘திருமணம் நிற்க போவது தெரிந்தும் மணமேடை போகும் ஒரே மணமகள் நானாகத்தான் இருப்பேன்..” என்றவளின் பார்வை ஜன்னலை பார்த்தாள்..

இருள் மெல்ல விலகி வானத்தில் வெளிச்சம் பரவ இரைதேடி பறவைகள் கிழக்கு நோக்கி பறந்து செல்ல, ‘இந்த விடியல் யாரின் வாழ்க்கையை இருளாக மாற்ற விடிகிறது..’ என்ற கேள்வியுடன் கண்ணாடியைப் பார்த்தாள்..

நேரான வகிடு எடுத்து பின்னபட்ட தலையில் மல்லிகை பூக்கள் மணந்து மனம் வீசியது.. மைதீட்டப்பட்ட விழிகளும், மூக்கில் மூக்குத்தி அழகாக மின்னி போட்டிபோட்டது.. அவள் அணிந்திருந்த நகைகளும், மயில் கழுத்து நிறத்திலிருந்த சேலையில் அவளின் அழகிற்கு அழகு சேர்த்தது..

மணப்பெண் அலங்காரம் அழகாக இருந்தாலும் உள்ளம் எதையோ எதிர்நோக்கி காத்திருக்க அவளின் மனநிலை அறியாதது, “அண்ணா உன்னை இந்த அலங்காரத்துடன் பார்த்த அவ்வளவுதான்..” என்றனர் ருக்மணியும், விஜியும்..

அதையெல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை.. அப்பொழுது அவளை நோக்கி ஓடிவந்த நேத்ரா, “அக்கா இந்த பாட்டு நல்ல இருக்கு இல்ல..” என்றதும், “என்ன பாட்டுடா செல்லம்..” என்று புன்னகையுடன் கேட்க, நேத்ரா பாடலை ஒலிக்கவிட அது ஜெயாவின் மனநிலையை பிரதிபலித்தது..

“காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பத்தில்லை..

ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை..

புதியபாதை போட்டுக்கொள்ள எவரும் மறுப்பதில்லை..

பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை..

பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லை..

பெண்மையைக் காட்டிலும் தெய்வம் இல்லை..” என்று பாடல் பாட அவளின் முகமே மாறிப்போக, “நிஜமாவே சூப்பர் பாட்டுதான் குட்டிம்மா..” என்றாள் ஜெயா..  

அவளைச்சுற்றி எல்லோரும் சந்தோஷமாக இருக்க ஜெயா மட்டும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தாள்.. கோபிநாத் பெரிய பிஸ்னஸ்மேன் என்பதால் திருமணத்திற்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்துருந்தனர்.. கண்ணன் திருமண வேலைகளை ஓடி ஓடி கவனித்தான்..

அதே நேரத்தில் பிரபா தன்னுடைய அறையில் திருமணத்திற்கு தயாராக பட்டுவேட்டி சட்டையில் தயாரானான்.. அவன் அதிகமாக எதிர்பார்த்த நாள் இது என்றாலும் அது அவனின் விருப்பம் போல இல்லாமல் போனதுதான் சோகத்தின் உச்சகட்டம்..

‘ஜெயாவுடனான திருமணம் நின்றாளே போதும்..’ என்ற முடிவுடன் அவன் இருக்க அவனின் மனமோ, ‘மின்மினி கண்டிப்பாக வருவாளா..?’ என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் தயாரானவன் முகம் களையிழந்து போயிருந்தது..

அவனின் அறைக்குள் வந்த கோபிநாத் பிரபாவின் முகம் பார்த்ததும், “பிரபா நல்ல இருக்கிற கண்ணா.. பட்டுவேட்டி சட்டையில் உன்னைப் பார்க்க மனசு நிறைஞ்சிருக்கு..” என்றவர் நிறைவுடன் கூறினார்.. அவன் தீவிரமான சிந்தனையில் இருந்தனர்..

“மதன் இப்போதான் கண்ணா போன் பண்ணினான்.. முக்கியமான மீட்டிங் கல்யாணத்திற்கு வரமுடியவில்லை.. என்றதும் நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தான்..

‘அவனோட கல்யாணத்திற்கு நான் வராமல் போனது என்னோட சூழ்நிலை.. இப்பொழுது அவன் வராமல் இருப்பதற்கு என்னோட செயல் மட்டுமே காரணம்..” என்று நினைத்தவன் மெளனமாக இருந்தான்..

அவனின் வருத்தம் உணர்ந்து, “பரவல்ல கண்ணா.. அவன் இன்னொரு முறை வரும் பொழுது வீட்டிற்கு வருவான்.. இந்த முதலாளிகளுக்கு மட்டும் ஓய்வே இருக்காது.. இதெல்லாம் தெரிந்த விசயம்தானே..” என்றவர் எடுத்துக் கூறினார்..

அதற்குள் அறையின் உள்ளே வந்த நண்பன் ஒருவன், “பிரபா  மணமேடைக்கு மாப்பிள்ளையை அழைத்து வர சொன்னார் ஐயர்..” என்றதும், “இந்த பிரபா இந்த மாலையைப் போட்டுட்டு மணமேடைக்கு போ..” என்றார்..

‘என்ன நடந்தாலும் சரி..’ என்ற முடிவுடன் மணமேடையில் போய் உட்கார்ந்துவிட்டான் பிரபா.. ஐயர் மந்திரங்களை சொல்ல சொல்ல மண்டபத்தின் வாசலைப் பார்த்த வண்ணம் மந்திரத்தை சொன்னான் பிரபா.. நேரம் சென்றுகொண்டே இருக்க, மினி வரும் வழியைக் காணோம்..

“பொண்ணை அழச்சிட்டு வாங்க..” என்ற ஐயரின் குரல்கேட்டது.. உடனே ஜெயாவின் கழுத்தில் மாலையை அணிவித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர் ருக்மணியும், விஜியும்..!

ஜெயா தலையைக் குனிந்தவண்ணம் மணமேடை வர, முழு அலங்காரத்தில் இருந்த மகளைப் பார்த்து பூரித்து போனார் சுகந்தியும், ஆனந்த்தும்..! கண்ணன் மனம் உற்சாகத்தில் துள்ளிட பிரபாவின் அருகில் நின்றிருந்தான்..

ஜெயாவின் விழிகளில் தேடல் இல்லை.. மணமகளுக்கு உண்டான வெக்கமோ நாணமோ இல்லாமல் கடமைக்காக மணமேடை வந்து பிரபாவின் அருகில் அமர்ந்தாள்.. அவளின் பார்வையும் வாசலை தொட்டு மீண்டது.. அவனின் மனம் முழுவதும் கவலை மட்டுமே குடிக்கொண்டு இருந்தது..

உயிருக்கு உயிராக காதலித்த பெண் மணமேடை வரும் நாள் இது.. அவளை ஆசையுடன் அள்ளி பருக நினைக்கும் விழிகள் என்று எதிர்பார்ப்புடன் தன்னவளை சுற்றி வரும்.. ஆனால் பிரபாவோ கல்மாதிரி முகத்தை வைத்துகொண்டு கடமைக்காக மந்திரம் சொன்னான்..

“கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..” என்று ஐயர் தாலியை எடுத்து பிரபாவின் கையில் கொடுக்க அவனின் பார்வை வாசலை நோக்கியது.. அங்கே மினி வராமல் இருக்க ஜெயா தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..

அவளாக நினைத்திருந்தால் நிறைந்த சபையில் எழுந்து நின்று எனக்கு திருமணமே வேண்டாம் என்று கத்தியிருக்க முடியும்.. அவளை எடுத்து வளர்த்த ஆனந்த் மற்றும் சுகந்தியின் முகம் பார்த்தவளால் அது முடியாமல் போனது..

“மாப்பிள்ளை தாலி கட்டுங்க..” என்ற ஐயரின் குரல்கேட்க ஜெயாவின் நிலை மோசமானது.. தாய், தந்தையை மீறி மணமேடையைவிட்டு எழுந்து கொள்ள முடியாமல் முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்ற உணர்வுடன் அமர்ந்திருந்தாள் ஜெயா..

அவளின் கணக்கு அங்கே பொய்யாக போக அவனின் கரத்தில் தாலியை நோக்கியது அவளின் விழிகள்.. அந்த தாலியை அவளின்  கழுத்தில் காட்ட முடியாமல் தாலியையும் வாசலையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபா..

தன்னால் இரண்டு பெண்களின் வாழ்க்கை வீணாகுமே என்று அவனின் உள்ளம் துடித்தாலும் இப்பொழுது எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிரபா எழுந்தாலும் ஜெயாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று உணர்ந்தான்..

அவனின் உள்ளம் இதற்கும் அதற்கும் ஊஞ்சலாட, இருவரின் வாழ்க்கையும் அங்கே கேள்வி குறியாக மாறும் தருணத்தில் அவனின் அருகில் வந்த கோபிநாத், “பிரபா தாலியைக்கட்டு..” என்று அவனைக் காட்டாயபடுத்த வேறு வழியில்லாமல் வாசலைப் பார்த்துவிட்டு ஜெயாவின் கழுத்தில் தாலிகட்டி இரண்டு முடிப்போட, ‘எல்லாமே முடிஞ்சி போச்சு..’ என்று நினைத்த ஜெயாவின் விழிகள் கலங்கியது.

ஆனந்த், சுகந்தி, கண்ணன், விஜி, ஜீவன், ரேகா, ருக்மணி, கோபிநாத் அனைவரும் நிறைந்த மனமுடன் அவர்களுக்கு அர்ச்சதை தூவினர்.. அவள் கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து பிரபாவைப் பார்க்க, ‘உன்னைத் திருமணம் செய்யும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தேன்..’ என்றவனின் விழிகள் அதை பிரதிபலிக்கவில்லை..

‘இப்போ உன்னோட கலங்கி விழிகளைத் துடைக்க கூட தகுதி இல்லாமல் இருக்கிறேன் பனிமலர்..’ என்றவனின் உள்ளம் வலித்தது.. நிறைந்த சபையில் இருமனங்கள் இணையும் முன்னே திருமணம் என்ற ஒன்று நடந்தேறிட பெற்றோர்கள் உள்ளம் பூரித்து போனது.. அப்பொழுது வாசலில் கார் வந்து நின்றது..

காரில் இருந்து இறங்கிய மின்மினி, “ஐயோ திருமணமே முடிஞ்சி போச்சு..” என்ற பதட்டத்துடன் மண்டபத்தின் உள்ளே நுழைந்தாள்.. ஜெயாவின் விழிகள் அதை கவனிக்கும் முன்னே நாத்தனார் முடிச்சை விஜி போட்டு முடித்தாள்..

அவனிடம் குங்குமத்தைக் கொடுத்த ஐயர், “இந்த குங்குமத்தை பொண்ணோட நெற்றியில் வைங்க..” என்றதும் அவள் நெற்றில் குங்குமம் வைத்துவிட்டு அவன் நிமிர்ந்து பார்க்க மின்மினி புன்னகை முகமாக அவர்களின் எதிரே நின்றிருந்தாள்..

மணமேடையில் தம்பதிகளாக அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து அவளின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.. அப்பொழுதுதான் நிமிர்ந்த ஜெயா மினியைப் பார்த்தும் அடையாளம் கண்டுகொண்டாள்..

அவளின் கலங்கிய விழிகளை கண்டு மனதிற்குள் நொந்துபோனவள், ‘உன்னோட வாழ்க்கையில் நானாக குறுக்கே வரவில்லை மினி..’ என்று வலியுடன் நினைக்க பிரபாவின் முகம் களையிழந்து போனது.. இருவரும் சேர்ந்து அக்னியை சுற்றிவந்து பெரியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்..

அப்பொழுதுதான் மினியைக் கவனித்த கோபிநாத், “வாம்மா மினி.. திருமணத்திற்கு வந்துவிட்டாயா..” என்றவர் சந்தோஷமாக அவளை வரவேற்றார்..

“நான் நல்ல இருக்கிறேன் அங்கிள்..” என்றவளை நோக்கி வேகமாக வந்த ருக்மணி, “மினிக்கா.. நீங்க சாரி கட்டியிருக்கீங்க.. என்னால என்னோட கண்ணையே நம்ப முடியல..” என்றவளை அனைத்துக் கொண்டாள்..

“நல்ல இருக்கிறாயா ருக்மணி..” என்றவள் விசாரிக்க, “ருக்மணி..” என்ற தாயின் குரல்கேட்டு, “அக்கா இருங்க இதோ வரேன்..” என்று சொல்ல, “ம்ம் போயிட்டு வா..” என்றவள் புன்னகையுடன்..

மினியின் பார்வை ஜெயாவின் மீது கேள்வியாக படிய, “ஹலோ மேடம் என்னை கொஞ்சம் நிமிர்ந்துப் பாருங்க..” என்றவள் கேலி பேசினாள்.. ஆனால் சிரிக்கும் நிலையில் அவள் இல்லை.. அதற்குள் ரிசப்ஷன் மேக்கப் என்று ஜெயாவை அழைத்து சென்றார்கள்..

மினி அவர்களை பின் தொடர்ந்து அறைக்குள் நுழைய படுக்கையில் அமர்ந்து கழுத்தில் இருந்த தாலியைக் கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் அருகில் சென்ற மினி அவளின் தோளை தொட, அவளின் விரல்வழியே உணர்வு பெற்ற ஜெயா நிமிர்ந்து மின்மினியை நேருக்கு நேராக பார்த்தாள்..

“மினிக்கா ஏன் இப்படி செஞ்சீங்க..” என்றவள் மனம் பொறுக்காமல் கேட்க, “நீ எதற்கு இப்போ அழுகிற.. நான் என்ன செய்தேன்..” என்றவளின் விழிகளைத் துடைத்துவிட்டாள் மின்மினி..

“உங்களோட வாழ்க்கையை எனக்கு விட்டு கொடுத்துட்டு என்னக்கா இது விளையாட்டு.. எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கு..” என்றவள் அழுகையுடன்..

அவளின் மனநிலை உணர்ந்த மினி, “என்னோட முடிவில் மாற்றம் இல்ல.. என்னோட வாழ்க்கையில் நீயும் குறுக்க வரல..  உன்னோட வாழ்க்கையில் நானும் குறுக்கே வரல.. எல்லாமே விதியின் விளையாட்டு ஜெயா..” என்றவளுக்கு புரிய வைத்தாள்..

“ஒரு பெண்ணாக உங்களோட வாழ்க்கையை நான் தட்டி பறித்துவிட்டேனோ என்று தோணுது..” அவளின் உதட்டில் கசந்த புன்னகை மலர்ந்தது..

“நான் கல்யாணத்தை நிறுத்த வரல ஜெயா.. கல்யாணத்தைப் பார்க்கத்தான் வந்தேன்.. நீ என்னை தவறாக புரிஞ்சிக்கிட்ட..” என்று புன்னகையுடன் கூறியவளை கேள்வியுடன் பார்த்தாள் ஜெயா..

“வாழ்க்கை உனக்கு முன்னாடி ஒரு பெரிய கேள்வியை உருவாக்கி வெச்சிருக்கு.. விடையை கண்டுபிடிக்க வேண்டியவள் நீதான்.. நான் அல்ல..” என்றவள் ஜெயாவிற்கு புதிர்போட்துவிட்டு, “விஷ் யூ ஹாப்பி மேரேஜ் லைப்..” என்று புன்னகைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்..

அவளின் செயல்களில் ஏதோவொரு மாற்றம் இருப்பதை உணர்ந்த ஜெயாவின் புருவங்கள் முடிச்சிட, ‘இந்த அக்கா என்ன என்னைக் குழப்பிவிட்டு போறாங்க..’ என்றவளின் மனதில் சந்தேகம் எழுந்தது..

அவள் அறையைவிட்டு வெளியே வர எதிரே வந்த பிரபாவைப் பார்த்ததும், “ஹாய் புது மாப்பிள்ளை..” என்று கேலியுடன் அவனை நெருங்கிய மின்மினியின் முகம் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் நின்றிருந்தான்..

பிறகு, “ஸாரி மினி.. நீ வருவாய் என்று நான் கடைசி நிமிஷம் வரை எதிர்பார்த்தேன்..” என்றதும், “நான் வேண்டும் என்றுதான் லேட்டாக வந்தேன்..” என்றவள் புன்னகைத்தாள்..

அவன் அவளை கேள்வியாக பார்க்க, “மினியோடமுடிவில் என்றும் மாற்றமே இல்ல..” என்றவள், “ஹாப்பி மேரேஜ் லைப் பிரபா..” என்று சொல்லிவிட்டு மற்ற யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் மின்மினி..

அவள் சென்றபிறகு ரிசப்ஷன் நடைபெற மற்ற வேலைகள் சீரான வேகத்தில் நடந்தது.. முதல் முறையாக மகளை பிரியும் தாய், தந்தை இருவரும் கலங்கி நின்றனர்.. கண்ணனுக்கு அக்காவை அனுப்ப மனமே இல்லை.. ஆனாலும் அவளின் வாழ்க்கையை நினைத்து விலகி நின்றான்..

அவர்களை விட அதிகமாக கலங்கிய ஜெயா அவர்களை எல்லாம் பிரிந்து கணவனுடன் காரில் ஏறினாள்.. தம்பதிகளை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றார் கோபிநாத்.. கார் சீரான வேகத்தில் செல்ல பிரபாவும், ஜெயாவும் மௌனமாகவே கழிந்தது..

வீடு வந்தும் கோபிநாத் சென்றதும் சுந்தரியம்மா அவர்களை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.. வீட்டிற்கு வந்த மருமகளை பூஜை அறைக்கு அழைத்து சென்ற சுந்தரிம்மா, “விளக்கு ஏற்று ஜெயா..” என்றதும் பொம்மை போல அவர்கள் சொன்னதை செய்தாள்..

அதன்பிறகு இருவரையும் அழைத்து சென்று தனியறையில் தங்க வைத்தனர்.. அன்று பொழுது சாய இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்தனர் பெரியவர்கள்..!

அவர்கள் ஜெயாவிற்கு அலங்காரம் செய்துவிட, “அண்ணி இங்கே சொன்னது எதையும் மறக்காதீங்க..” என்று கிண்டலடித்தவளை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் என்ன பேசினால் என்றே ஜெயாவிற்கு தெரியாது என்றாலும் கூட சரியென தலையாட்டினாள்..

அவளை அழைத்து சென்று பிரபாவின் அறைக்குள் விட்டுவிட்டு கதவை சாத்திவிட்டு வந்தனர்.. தனியறையில் பிரபாவை நேருக்கு நேர் சந்தித்த ஜெயாவின் விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தது..

 

Mohana punnagaiyil 11

மோகனப் புன்னகையில் 11

பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான். கலைந்திருந்த தலைமுடி நெற்றியில் புரள குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவன் முகத்தில் அத்தனை மென்மை. 

மென்மைக்கு மட்டும் அவன் சொந்தக்காரன் அல்ல என்று நேற்றிரவு அவளுக்குக் காட்டி இருந்தான்.

மனம் மலர்ந்து புன்னகைத்தாள் சுமித்ரா. கூந்தல் ஈரமாக இருக்கவும் கை அது பாட்டில் உலர்த்திக் கொண்டிருந்தது. கூந்தலைப் பின்னல் போடாமல் தளர்த்தி விட்டால் விஜயேந்திரனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

குங்குமத்தை வைத்து விட்டு நிமிர கதவு தட்டும் ஓசை கேட்டது. அவசரமாக எழுந்து போய் கதவைத் திறந்தாள். கங்கா தான் நின்றிருந்தாள். வழமை போல கையில் ஒரு கப் காஃபி.

“கங்கா!”

“சொல்லுங்கம்மா?”

“ஐயாக்கும் சேர்த்து காஃபி கொண்டு வர்றியா?” சுமித்ரா சொன்னது முதலில் கங்காவிற்குப் புரியவில்லை. புரிந்த போது வாயெல்லாம் பல்லாகிப் போனது. 

“ஐயா இப்போ தூங்குறாங்க. கெட்டில் ல கொண்டு வா.”

“சரிம்மா. அப்போ பூ?” இப்போது குறும்பாகக் கண் சிமிட்டினாள் கங்கா.

“அடி வாங்கப் போறே நீ!” இவள் அடிக்கக் கையை ஓங்கவும் காஃபியோடு ஓடி விட்டாள் கங்கா.

“என்ன காலங்காத்தால ரெண்டு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடுறீங்க?” கேட்டபடியே சுமித்ராவின் ரூமிற்குள் எப்போதும் போல நுழைந்தார் கோதை நாயகி. மருமகனை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை.

கட்டிலின் திரைக்குப் பின்னால் விஜயேந்திரன் தூங்குவது தெரியவும் ஒரே ஓட்டமாக வெளியேறி விட்டார் கோதை நாயகி.

“நான் அப்புறம் வர்றேன் சுமித்ரா.” வாய் தானாகச் சொல்லி இருந்தது.

சுமித்ராவிற்குத் தான் என்னவோ போல் ஆகிவிட்டது. அத்தனைக்கும் காரணமானவன் நிம்மதியாகத் தூங்குகிறான். அவள் பாடுதான் திண்டாட்டம் ஆகிவிட்டது.

சத்தம் செய்யாமல் லேசாக ஒப்பனை பண்ணிக் கொண்டாள். புடவையை எடுக்கும் போதும் அழகானதொரு நீல நிறப் பட்டைத் தான் கை தேர்ந்தெடுத்திருந்தது. 

கண்களுக்கு லேசாக மை தடவிக் கொண்டாள். இந்தக் கண்கள் தான் அவனைச் சுண்டி இழுக்கின்றதாம். இரவு முழுவதும் அவன் புலம்பிய வார்த்தைகள் இது.

கதவு மீண்டும் தட்டப்படும் ஓசை கேட்கவும் அவசரமாக ஓடிப்போய்த் திறந்தாள் சுமித்ரா. மீண்டும் கங்கா தான் நின்றிருந்தாள். கையில் ட்ரே இருந்தது. 

வாங்கிக் கொண்டு இவள் உள்ளே நுழையும் போது விஜயேந்திரன் விழித்திருந்தான்.

“குட்மார்னிங் அம்மு.”

“குட்மார்னிங்.” குரலே எழும்பவில்லை சுமித்ராவிற்கு. டேபிளில் ட்ரேயை வைத்தவள்,

“காஃபி.” என்றாள். கட்டிலின் திரையை மெதுவாக விலக்கி விட்டாள்.

“அதை இப்படியா சொல்லுவாங்க?”

“வேற எப்படிச் சொல்லுவாங்க?”

“காஃபி, டீ, ஆர் மீ? இப்படிச் சொல்லுவாங்க.” எட்டி அவள் கையைப் பிடித்தவன் அவளை இழுத்துத் தனக்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டான். விடுபட அவளால் முடியவில்லை.

“நேரம் எட்டு மணி.”

“இருக்கட்டும், பரவாயில்லை.”

“சித்தி வேற வந்தாங்க.”

“என்னவாம்?”

“தெரியலை. வந்தாங்க… உங்களைப் பார்த்ததும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க.”

“ஹா… ஹா… பரவாயில்லை… நம்ம மருமகன் தேறிருவான்னு நினைச்சிருப்பாங்க.” பேசிய படியே அவன் கை எல்லை மீறவும் தவித்துப் போனாள் சுமித்ரா.

“ப்ளீஸ்… போய் குளிச்சிட்டு வாங்க. கங்கா கூட கேலி பண்ணிட்டுப் போறா.” அவள் கெஞ்சவும் புன்னகைத்தவன் அவள் கூந்தலுக்குள் கை விட்டு அதன் மென்மையைச் சில நொடிகள் ரசித்தான். 

“காஃபியைக் குடிச்சிட்டுப் போகட்டுமா?” 

“ம்…” காஃபியை அவள் நீட்ட வாங்கிக் கொண்டவன் அவளையும் சேர்த்தே பருகினான். அந்தப் பார்வையின் வீரியத்தைத் தாங்க சுமித்ராவால் முடியவில்லை. ட்ரேயில் கங்கா வைத்திருந்த பூவை எடுத்துக் கொண்டு கண்ணாடி முன் சென்று நின்று கொண்டாள்.

விரித்திருந்த கூந்தலைத் தளரப் பின்னியவள் அதில் பூவை வைத்துக் கொண்டாள். காஃபியை முடித்தவன் அங்கிருந்த டவலை எடுக்க,

“அது இல்லை. உங்களோடது இங்க இருக்கு.” அவள் அலமாரியைத் திறக்க அதைக் கணக்கில் கொள்ளாதவன் அவளின் ஈர டவலோடு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அங்கிருந்த பெரிய அலமாரியில் அவனுக்கான பொருட்களும் அடுக்கப்பட்டிருந்தன. வந்த முதல் நாளே அதைக் கவனித்திருந்தாள் சுமித்ரா. இன்று தான் அவற்றிற்கெல்லாம் தேவை வந்திருந்தது.

காலை உணவும் அறைக்கே வந்து சேரவும் இருவரும் உண்டு முடித்தார்கள். 

“அம்மு, எனக்கு இன்னைக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. வர லேட் ஆகலாம். ஈவ்னிங் உங்க வீட்டுக்குப் போகணும் ரெடியா இரு.”

“ம்…” சொன்னவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான் விஜயேந்திரன். 

“என்னாச்சு? ஏதாவது சொல்லணுமா அம்மு?”

“எனக்கு… எனக்கு அத்தான் கூடப் பேசணும்.”

“என்ன திடீர்னு?”

“இல்லை… என்னதான் அத்தான் குடும்பம் குழந்தைன்னு வாழ்ந்தாலும் அவங்க மனசுல நான் சந்தோஷமா இல்லையேங்கிற கவலை நிறையவே இருக்கு.”

“ம்…” மேலே சொல் என்பது போல அவளையே பார்த்திருந்தான் விஜயேந்திரன்.

“அத்தான் கிட்ட…‌ அத்தான் கிட்ட சொல்லணும். நீங்க கவலைப் படாதீங்க அத்தான்னு சொல்லணும்.” தலையைக் குனிந்த படி அவள் தயங்கித் தயங்கிச் சொல்ல விஜயேந்திரனின் முகத்தில் புன்னகை அரும்பியது. 

ஒற்றைக் கையை நீட்டி அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவன்,

“ஏற்பாடு பண்ணுறேன்.” என்றான். 

விஜயேந்திரன் ரூமை விட்டு வெளியே வரவும் சுமித்ராவும் வாசல் வரை கூட வந்தாள். மனைவியிடம் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டவன் வெளியே வர எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தது அமிழ்தவல்லி. கூடவே நின்றது கோதை நாயகி.

மருமகன் அந்தப் புரத்தில் இருப்பது கோதைக்குத் தெரிந்திருந்தாலும் அமிழ்தவல்லியிடம் அதை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

மகனைக் கண்ட மாத்திரத்தில் அமிழ்தவல்லியின் முகம் மலர்ந்து போனது. கோதை நாயகியைத் திரும்பிப் பார்க்க அவர் ‘எனக்குத் தெரியும்’ என்பதைப் போலப் புன்னகைத்தார்.

“கோதை!” சற்று உரக்கவே அழைத்தார் அமிழ்தவல்லி. வேட்டியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்த படி அவர்களைக் கடந்த விஜயேந்திரனின் நடையில் வேகம் குறைந்தது.

“அரண்மனையில, ஃபாக்டரியில, மில்லுல வேலை செய்யுற எல்லாருக்கும் துணி மணி எடுத்துக் குடுக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு உன்னோட மருமகன் கிட்ட.” 

குரலில் அத்தனை உற்சாகம். செய்தி தனக்கானது என்று புரிந்து கொண்ட அரண்மனைக் காரன் ஒரு புன்னகையோடு நகர்ந்து விட்டான். சுமித்ரா தான் திகைத்துப் போனாள்.

‘என்ன நடக்கிறது இங்கே? பேசுவது தனது மாமியார் தானா?’ முழித்துக் கொண்டு நின்றவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விட்டார் அமிழ்தவல்லி.

“சுமித்ரா.” அவளை நோக்கி வந்த கோதை நாயகி அவள் கன்னம் வழித்து முத்தமிட்டுக் கொண்டார்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ம்மா.” அவர் சொன்னதின் அர்த்தம் புரிய தலையைக் குனிந்து கொண்டாள் இளையவள்.

“அண்ணியோட சந்தோஷத்தைப் பார்த்தியா?” 

“ஆச்சரியமாத்தான் இருக்கு சித்தி!”

“ம்ஹூம்… அது அப்படி இல்லைம்மா. எல்லா அம்மாவுமே தன்னோட குழந்தைங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் எதிர் பார்ப்பாங்க. என்ன? இவங்க கொஞ்சம் பாரம்பரியம், குடும்பம், தராதரம் இதெல்லாம் பார்ப்பாங்க. மத்தப்படி கெட்டவங்க கிடையாதும்மா.”

“சரி சித்தி.”

“பார்த்தியா! சொல்ல வந்ததைச் சொல்லாம என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கேன்.”

“சொல்லுங்க சித்தி.”

“நானும் மங்கையும் இன்னைக்கு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் ம்மா.”

“ஐயையோ! ஒரு வாரம் இருப்பேன்னு சொன்னீங்களே சித்தி?”

“சொன்னேன் தான். ஆனா இப்போ மங்கையோட அப்பாக்கு உடம்புக்குக் கொஞ்சம் முடியலையாம் சுமித்ரா. லேசான காய்ச்சல் தான். இருந்தாலும் நான் போனா நல்லா இருக்கும் டா.”

“போய்ட்டு வாங்க சித்தி.”

“சரி டா. இப்போ உனக்கு இந்த அரண்மனை கொஞ்சம் பழகிடுச்சு தானே சுமித்ரா? நீ சமாளிச்சிடுவே. அதுவும் என் மருமகன் இப்போ உன்னை நல்லாப் பார்த்துக்குவான்.” கண் சிமிட்டிய படியே சிரித்தார் கோதை நாயகி.

அந்தப் புன்னகை சுமித்ராவையும் தொற்றிக் கொண்டது. கோதை நாயகியும் மங்கையும் மதியத்துக்கு மேல் கிளம்பி விட்டார்கள். விஜயேந்திரன் மதியமும் வீடு திரும்பி இருக்கவில்லை. 

‘தோட்டத்துல வேலை அதிகமா இருக்கிறதால தம்பி வரல்லை மா’ என்று கணக்கர் தான் தகவல் சொன்னார். ஒரு நான்கு மணி போல கங்கா வந்து நின்றாள்.

“அம்மா! ஐயா உங்களை மாடிக்கு வரச் சொன்னாங்க.”

“கங்கா!” சேதி சொல்லிவிட்டு நகர்ந்த கங்காவை நிறுத்தினாள் சுமித்ரா.

“என்னம்மா?”

“மேலே போய் உங்க ஐயாவை இங்க வரச்சொல்லு.” சுமித்ராவின் பேச்சில் ஆச்சரியப்பட்டாள் கங்கா. ஐயாவை அவர் அம்மா கூட இப்படி அதட்டியது இல்லையே!

“போ கங்கா.”

“சரிங்கம்மா.” கங்கா ஓடி விட சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான் விஜயேந்திரன்.

“அம்மு… என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”

“சாப்பிட்டீங்களா?”

“ஆமாண்டா. வீட்டுல இருந்து எனக்கு சாப்பாடு வந்திச்சு.”

“ஆனா எனக்கு ஒரு தகவலும் தெரியலை.”

“ஓ… அரண்மனைக்கு அடிக்கடி வர முடியாது சுமித்ரா. அதனால நான் எங்க இருந்தாலும் சாப்பாடு அங்க வந்திரும்.”

“சரி… நீ சாப்பிட்டியான்னு கேக்க மாட்டீங்களா?”

“ஏய்! நீ இன்னும் சாப்பிடலையா?”

“சாப்பிட்டேன்… ஏதோ பெயருக்கு…” குறை பட்டுக் கொண்டவளின் அருகில் வந்தவன் அவள் கன்னத்தை வருடினான்.

“என்ன வேணும் என் அம்முக்கு?”

“எங்க வீட்டுல எல்லாம் அப்பா வீட்டுக்கு வரும் வரை அம்மா சாப்பிட மாட்டாங்க. அது எவ்வளவு நேரம் ஆனாலும் சரிதான்.”

“என்னால அப்படி வேலையை விட்டுவிட்டு வர முடியாதுடா.”

“வரவேண்டாம். அட்லீஸ்ட் என்ன பண்ணுறீங்க? எங்க இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? ஏதாவது சொல்லி அனுப்பலாம் இல்லை? இன்னைக்கு நான் சாப்பிடாம உக்காந்திருக்கவும் கங்கா என்னை விசித்திரமாப் பார்க்கிறா.”

மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன். அவளின் தேடல் அவனுக்குப் புரிந்தது. மகிழ்ந்து போனான்.

“இத்தனை நாளும் இதுதான் பழக்கம். தகவல் சொன்னா சாப்பாடு வந்திரும். ஆனா இனி அப்படி இருக்காது. மாத்திக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் இனி என் பொண்டாட்டி கூட உட்கார்ந்து சாப்பிடுறேன். இல்லைன்னா அவளே எனக்கு சாப்பாடு அனுப்புற மாதிரி பார்த்துக்கிறேன், சரியா?” 

“ம்…”

“இப்போ ரெடி ஆகுறீங்களா?” கேட்டவன் குரலில் கேலி.

“ம்…” 

அழகான சிவப்புப் பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிந்து தலை நிறையப் பூவுமாக வெளியே வந்தாள் சுமித்ரா. கூடவே வேஷ்டி சட்டையில் விஜயேந்திரன்.

அமிழ்தவல்லியின் ரூமைக் கடக்கும் போது கணவனின் கை பிடித்துத் தடுத்தாள் சுமித்ரா. அவன் முகத்தில் மறுப்பிருந்தது. ஒரு கெஞ்சல் பார்வை பார்த்து விட்டு அவள் மட்டும் உள்ளே போனாள்.

மனம் தடதடத்தது. வலிக்க ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்தாலும் சொல்லாமற் போக அவளுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

அமிழ்தவல்லி என்ன நினைத்தாரோ! வாசலில் நின்ற மகனையும் அலங்காரத்தோடு நின்றிருந்த மருமகளையும் ஒரு நொடி பார்த்தவர்,

“போயிட்டு வாங்க.” என்றார். அவர் கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிய சுமித்ரா விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டாள்.

விஜயேந்திரன் அவளை முதலில் போஸ்ட் ஆஃபீஸுக்குத்தான் அழைத்துச் சென்றான். ‘என்ன?’ என்பது போல அவள் பார்க்க,

“அதான் காலையில அத்தான் கிட்ட பேசணும்னு சொன்னீங்களே.” என்றான் விஜயேந்திரன் தனது அம்பாஸிடரை நிறுத்திய படி.

இவர்கள் இருவரும் உள்ளே போக அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார் போஸ்ட் மாஸ்டர். கரிகாலனோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிய விஜயேந்திரன் சுமித்ராவை பேசச் சொல்லி விட்டு வெளியே வந்து விட்டான். 

அவர்கள் தனிமையில் குறுக்கிட அவன் விரும்பவில்லை. காரில் சாய்ந்த படி அமைதியாக நின்றிருந்தான். வாழ்க்கை வண்ண மயமாகத் தோன்றியது. 

சுமித்ரா சுமித்ரா என்று மனம் கிடந்து அரற்றியது. இத்தனை சீக்கிரமாக அவள் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

முதலில் அவளை நெருங்கவே பயப்பட்டான் விஜயேந்திரன். ஆனால் அவன் மேல் அவள் காட்டிய உரிமை அவனுக்குத் தைரியம் கொடுத்திருந்தது. 

நேற்று இரவு கூட அவள் சட்டென்று விலகவும் அத்தனை ஏமாற்றமாக இருந்தது அரண்மனைக் காரனுக்கு. வெளியே போய்விடத்தான் திரும்பினான். 

ஆனால் கை பிடித்துத் தடுத்தவள் அவனிடமே தஞ்சமடையவும் அந்தக் காதல்க் கணவன் கள்வனாகிப் போனான். 

இரண்டு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டான் விஜயேந்திரன். உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. 

அந்தக் கருவிழிகள் இரண்டும் கதைபேச அவள் அபிநயம் பிடித்த பொழுதுகளை நினைத்துப் பார்த்தான். அந்தக் கண்களிலும் கால்ச் சதங்கையிலும் தான் அவன் உயிர் இருக்கிறது என்று அவளுக்குச் சொன்னால் புரிந்து கொள்வாளா? 

மனமே இல்லாமல் தான் தோட்டத்திற்குக் கிளம்பிப் போனான். முக்கியமான லோட் ஒன்று ஏற்ற வேண்டி இருந்தது. இவன் கூடவே நிற்க வேண்டிய நிலைமை.

“போகலாமா?” மனைவியின் குரலில் கலைந்தான் கணவன்.

“பேசி முடிச்சாச்சா?”

“ம்…” அந்த முகத்தில் அத்தனை மலர்ச்சி. காரை ஸ்டார்ட் பண்ணியவன் நேராக சுமித்ராவின் வீட்டிற்கு முன்னால் நிறுத்தி இருந்தான். 

தில்லை வடிவு பாய்ந்தோடி வாசலுக்கு வந்தார். மருமகளும் மாப்பிள்ளையும் வரப்போகும் தகவல் ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டிருந்ததால் தடல்புடல் பண்ணி இருந்தார். 

நெய் வாசம் வந்தவர்களை வரவேற்றது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்திருந்தார். விருந்தும் ஒரு புறம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. 

“சுமித்ரா!” தன்னை மறந்து பாய்ந்து மருமகளைக் கட்டிக் கொண்டவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டார். சேலைத் தலைப்பை இழுத்து தோளை மூடிக் கொண்டவர்,

“வாங்க மாப்பிள்ளை.” என்றார் பவ்யமாக. சங்கரனும் அடைக்கல நம்பியும் வாசலுக்கு வந்து வரவேற்றார்கள். பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் வாசலில் போட்டிருந்த கோலம் அமோகமாக இருந்தது. ஆரத்தி எடுத்து முடிக்கவும் பெண்ணும் மாப்பிள்ளையும் உள்ளே போனார்கள்.

புத்தம் புதிய தாலி கழுத்தில் மின்ன பூவோடு போட்டி போட்ட மலர்ச்சியும் பொட்டோடு போட்டி போட்ட நாணமுமாக நின்ற மகளைப் பார்த்த தமிழ்ச்செல்வி ஆனந்தத்தில் அழுதே விட்டார்.

“செல்வி! பொண்ணு முதல்முதலா வீட்டுக்கு வந்திருக்கா. எதுக்குக் கண்ணைக் கசக்கிறே?” வடிவு போட்ட சத்தத்தில் தமிழ்ச்செல்வி கண்களைத் துடைத்துக் கொண்டார். 

வீடு ‘ஜே ஜே’ என்று இருந்தது. பெண்கள் அத்தனை பேரும் சுமித்ராவைச் சூழ்ந்து கொண்டார்கள். அரண்மனை பற்றிக் கேட்க அவர்களுக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன.

“ஏம்மா சுமித்ரா? உன்னோட மாமியார் எப்படி? நல்லாப் பழகுறாங்களா?” இது பக்கத்து வீட்டுப் பெண்மணி.

“ஆமா மாமி. அவங்க ரொம்ப நல்ல மாதிரி. அரண்மனையில நடக்கிற எல்லா நல்லதுக்கும் என்னத்தான் முன்னிறுத்துறாங்க.”

“அப்படியா! பார்த்தா கொஞ்சம் கரடு முரடான ஆள்மாதிரித் தெரியுறாங்க. இதுக்குத் தான் வெளித்தோற்றத்தை வெச்சு எதையும் எடை போடக்கூடாது ன்னு சொல்லுறது.”

“சுமிம்மா! மாப்பிள்ளை எப்படி?” இது எதிர்வீடு.

“இது ஒரு கேள்வின்னு கேக்குறயே. ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்ட மனுஷன். நம்ம சுமித்ராவை உள்ளங்கைல வெச்சுத் தாங்க மாட்டார்.” இன்னொரு வீடு சொல்ல அதற்கு அத்தனை ஆமோதிப்பு.

கூடியிருந்த அனைவரும் காஃபி பலகாரம் சாப்பிட்டு விட்டுக் கிளம்ப வீடு கொஞ்சம் அமைதியானது. விஜயேந்திரன் கொஞ்சம் சங்கடப் பட்டாலும் எல்லாவற்றையும் ரசித்தான். 

சாயம்பூசாத இயல்பான மனிதர்கள். அரண்மனைக் காரன் அடைக்கல நம்பி வீட்டு மருமகனானதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி.

இரவு நெருங்கவும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அருகமர்த்தி விருந்து பரிமாறினார்கள். குடும்பமாகக் கூடியிருந்து உண்பது விஜயேந்திரனுக்குப் புது அனுபவமாக இருந்தது.

“இங்கேயே தங்கலாமே மாப்பிள்ளை.” இது நம்பி.

“இல்லை மாமா. இன்னொரு நாள் தங்கிற மாதிரி வர்றோம். இப்போ இன்னொரு இடத்துக்கும் போக வேண்டி இருக்கு.” சொன்ன விஜயேந்திரன் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான்.

“கிளம்பலாமா சுமித்ரா?”

“ம்…” தலையாட்டியவள் காரில் ஏறிக் கொண்டாள். 

“அடிக்கடி வந்து போங்க மாப்பிள்ளை.”

“சரிங்க மாமா.” கார் லேசாக வேகமெடுத்தது.

“ரொம்பத் தொல்லை பண்ணிட்டாங்களோ?” சுமித்ரா சங்கடமாகக் கேட்டாள்.

“சேச்சே! அப்படியெல்லாம் இல்லை சுமித்ரா. நான் ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். மாமனார் வீட்டுக்கு அடிக்கடி வரணும்.” சிரித்தான் விஜயேந்திரன். 

குடும்பத்தை உட்கார வைத்து விருந்து பரிமாறிய பெண்கள், கணவனிடம் கண்களாலேயே ‘சாப்பாடு நன்றாக இருக்கிறதா?’ என்று ஐயம் தீர்த்துக்கொண்ட பெண்கள் என இன்று ஒரு வித்தியாசமான உலகத்தைப் பார்த்திருந்தான் விஜயேந்திரன்.

அரண்மனையில் எல்லாவற்றிற்கும் வேலைக் காரர்கள் தான்.

“இப்போ எங்க போறோம்?” கார் ஊரைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கவும் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமித்ரா.

“அது சர்பிரைஸ்.” சொன்னவன் காரை ஆர்க்கிட் தோட்டத்திற்கு முன்னால் நிறுத்தினான். சுமித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை. 

கூடாரம் போன்ற அமைப்புக்களைப் பார்த்த போது ஏதோ தோட்டம் என்று மட்டும் விளங்கியது.

நிலா வெளிச்சம் நன்றாக இருந்ததால் விஜயேந்திரன் லைட்டைப் போடவில்லை. ஒரு கூடாரத்தைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான். 

வண்ண வண்ணப் பூக்கள் பல வடிவங்களில். காகிதங்களைச் சுருட்டி வைத்தாற் போல தினுசு தினுசாக இருந்தது. மலைத்துப் போனாள் பெண்.

“என்ன பூ இது? வித்தியாசமா இருக்கு!”

“ஆர்க்கிட் சுமித்ரா.”

“ஓ…”

“புதிசா ஆரம்பிச்சிருக்கேன்.‌ இப்போ தான் பூக்கத் தொடங்குது. அப்படியே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ண எல்லா ஏற்பாடும் நடக்குது.”

“அப்படியா!”

“ம்…” வாய்பிளந்த மனைவியை தன்னருகே இழுத்துக் கொண்டான் கணவன்.

எங்கும் ஏகாந்தம் பரவி இருக்க மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் விஜயேந்திரன்.

“அத்தான் கிட்ட என்ன பேசினேன்னு கேக்க மாட்டீங்களா?”

“எதுக்கு டா? முக்கியமான தகவல்னா நீயே சொல்லப் போறே.” அவன் முகம் இப்போது அவள்க் கூந்தல்க் காட்டில் மலர் வாசம் பிடித்தது.

“உங்களைப் பத்தியே பேசினாங்க.”

“என்னவாம்?”

“மூச்சுக்கு முந்நூறு தடவை ராஜா ராஜா. இது மட்டும் தான் அத்தான் வாயில இருந்து வந்தது.” நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான் விஜயேந்திரன்.

“கரிகாலனுக்கு நான் ராஜா. உனக்கு யாராம்?”

“எனக்கு… அரண்மனைக் காரர்.”

“அடியேய்! நான் உன்னோட வீட்டுக்காரன் டி.”

“என்னோட வீடு ஏது?”

“அரண்மனை.”

“அப்போ சரிதானே.” அவள் சொல்லவும் வெடிச் சிரிப்புச் சிரித்தான் விஜயேந்திரன்.

“இது செல்லாது. பெயர் சொல்லு.”

“ஐயையோ!”

“என் பெயர் ஐயையோ வா?”

“நல்லாருக்காது.”

“ஏன்? விஜயேந்திரன் நல்ல பெயர் தானே?”

“நீங்க வேணும்னே வம்பு பண்ணுறீங்க.”

“சரி… பண்ணலை. நீ சொல்லு அம்மு. விஜயேந்திரன்… விஜயன்… ம்… இப்படி ஏதாவது.”

“வேணாம்.”

“ஏன்?”

“நான் ஒன்னு சொல்லுவேன். அது உங்களுக்குப் பிடிக்காது.”

“பிடிக்குமா பிடிக்காதான்னு நான் முடிவு பண்ணுறேன். நீ முதல்ல சொல்லு.”

அவள் வெகுவாக பிகு பண்ணவும் அவள் தோள்களைப் பிடித்தவன்,

“ஏய்! இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா?” என்றான் அழுத்தமாக.

“வேணாம் விஜி. அதை நான் சொன்னா நல்லா இருக்காது விஜி.”

“நீ முதல்ல சொல்லு…” பேச ஆரம்பித்த பிறகுதான் அவள் சொல்லி விட்டது இவனுக்குப் புரிந்தது. அவன் புரிந்து கொண்டதை இவள் அறிந்த போது மெதுவாக விலகிக் காரை நோக்கி ஓடி விட்டாள்.

“உன்னை எனக்குப் பெயர் செலெக்ட் பண்ணுடீன்னு சொன்னா நீ என் பொண்ணுக்கு பெயர் செலெக்ட் பண்ணுறியோ! இதோ வர்றேன்.” புன்னகைத்தபடி காருக்குப் போனான் அரண்மனைக் காரன்.

அந்த அம்பாஸிடர் அல்லோல கல்லோலப் பட்டது.

 

ஏகாந்த வேளை – இனிக்கும்

இன்பத்தின் வாசல் – திறக்கும்

ஆரம்பப் பாடம் – நடக்கும்

ஆனந்த கங்கை – சுரக்கும்…

 

Yaaro Avan 18

யாரோ அவன்? 18

கரண் குமார்… தைரியமும் தன்னம்பிக்கையும் இழந்து, திடகாத்திரமான அவன் உடல் தளர்ந்து  அவர்கள் முன்பு நின்றிருந்தான்.

பதட்டத்தில் அவசரபட்டு யோசிக்காமல் அவன் செய்த சின்ன தவறுக்கு, இப்போது கம்பிகளுக்கு பின்னால் குற்றவாளியாக கிடக்கிறான்.

அன்று, இரத்தம் வழிய உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுந்தரை பார்த்தவுடன், தன் நண்பனின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் தான் அவன் மனதில் முதலில் எழுந்தது.

அந்த வேகத்தில் தான் முட்டாள் தனமாக அவன் வயிற்றில் குத்திட்டு கிடந்த கத்தியை உருவ முயற்சித்தான்.

அதே சமயம் துடித்து கொண்டிருந்த சுந்தரின் உடல் அடங்கி விட, அந்த அதிர்ச்சியில் அவன் மூளையும் செயல்படாமல் மரத்து போனது.

‘ஐயோ… கொலை… கொல…!’ என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டு தான் அவனின் சுய உணர்வு மீண்டது.

அதன்பிறகு நடந்த எதையும் அவனால் தடுக்க முடியவில்லை.  எல்லோராலும் கரண் குமார் கொலைக் காரனாக தான் அடையாளப்படுத்த பட்டான்.

‘நான் சுந்தர கொலை பண்ணல!’ என்று சொல்லி சொல்லி, அவன் உடலளவிலும் மனதளவிலும் முழுவதுமாக களைத்து போய் விட்டான்.

கடவுள் மீதும், உண்மையின் மீதும் அவனுக்கு இருந்த அசையாத நம்பிக்கை இப்போது குறைந்து கொண்டே வந்தது.

“இந்த பொண்ண பத்தி உங்களுக்கு என்னென்ன தகவல் தெரியும்? நல்லா யோசிச்சு சொல்லு கரண் மாமா” வெற்றி தன் கைப்பேசியின் திரையில் ஷிவானியின் நிழலுருவத்தை காட்ட,

அதை உற்று பார்த்த கரண் குமார், “இது ஷிவானி, கொஞ்ச வருசத்துக்கு முன்ன எங்க கம்பெனி மாடலா இருந்தா. ரொம்ப திறமையான பொண்ணு” என்றான்.

“சுந்தருக்கும் ஷிவானிக்கும் என்ன பிரச்சனை?” சூரிய நாராயணன் கேள்வி எழுப்ப,

“பிரச்சனைன்னு பெருசா எதுவும் இல்ல சர். சுந்தர், ஷிவானிகிட்ட ரொம்ப நெருங்கி பழக ஆரம்பிச்சான்! ‘அவன் கல்யாணம் ஆனவன், அவங்கூட கொஞ்சம் டிஸ்டன்ஸா பழகு’ன்னு ஷிவானிக்கு ஒருமுறை அட்வைஸ் பண்ணேன். அதுக்கப்புறம் ஷிவானிய அதிகமா சுந்தர் கூட நான் பார்க்கல!”

“இப்ப ஷிவானி எங்க இருக்காங்கன்னு தெரியுமா கரண்?”

“சுந்தர் ஜெயிலுக்கு போனதுக்கு கொஞ்ச நாள் முன்னாடியே ஷிவானி நம்ம கம்பெனிய விட்டு போயிட்டா! அவளோட ஃபேமிலி பெங்களூர்ல இருந்ததா ஞாபகம்!” வெற்றியின் கேள்விக்கு கரண் தனக்கு தெரிந்த பதிலை சொன்னான்.

“எங்களுக்கு உடனே அந்த ஷிவானியோட அட்ரஸ் வேணுமே?” சூரிய நாராயணன் கேட்க,

“நம்ம கம்பெனி ரெக்கார்ட்ஸ்ல ஷிவானியோட பெங்களூர் அட்ரஸ், மத்த டீடெய்ல்ஸ் இருக்கும். நித்திகிட்ட கேளு வெற்றி உங்களுக்கு தேவையானதை அவ எடுத்து தருவா”
நித்யாவின் பேரை சொல்லும் போதே கரணின் முகம் கனிவதை வெற்றி மனதில் குறித்து கொண்டான்.

இவர்களின் துயரை சீக்கிரமே துடைத்தெறிய வேண்டும் என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டான்.

கரணிடம் நம்பிக்கையான வார்த்தைகளை கூறிவிட்டு, இருவரும் சென்றனர்.

நித்ய பாரதி வெகு சுலபமாக ஷிவானியின் பெங்களூர் முகவரியை எடுத்து தந்தாள்.

அந்த முகவரியைத் தேடி, வெற்றி வேந்தனும், பிரபாவதியும் அன்றே பெங்களூர் கிளம்பினர்.

பிரபா… தனியார் துப்பறியும் நிறுவனத்தின் திறமை வாய்ந்த துப்பறிவாளினி! அவள் பெங்களூரில் வளர்ந்தவள் என்பதால் வெற்றிக்கு அவளின் உதவி இன்றியமையாதது ஆனது.

பிரபாவின் மின்னல் வேக செயல்பாட்டினால், மறுநாள் ஷிவானியின் வீட்டை கண்டுபிடித்து விட்டனர்.

எனினும் அவர்களால் ஷிவானியை நெருங்க முடியவில்லை.

ஷிவானி திருமணம் முடிந்து, தன் கணவன், குழந்தையுடன் டில்லியில் வசிப்பதாக தகவல் கிடைத்தது.

என்ன காரணமோ, ஷிவானியின் பெற்றோர் அவளின் தற்போதைய முகவரியை தர, பிடிவாதமாக மறுத்து விட்டனர். எனவே ஷிவானியின் முகவரியை பெற, இவர்கள் வேறு வகையில் முயற்சிக்க வேண்டியதாய் போயிற்று.

“ஷிவானியோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் யாரையாவது அனுப்பி, அட்ரஸ்ஸ தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாமா?” வெற்றி, பிரபாவிடம் யோசனை சொல்ல,

“அது ஃபிளாப் ஆகவும் வாய்ப்பு இருக்கு சர். நாம ஷிவானியோட அட்ரஸ விசாரிச்ச உடனே, வேற ஃபிரண்ட்ஸ்னு வந்து அட்ரஸ் கேட்டா நமக்கே கூட சந்தேகம் வரத்தானே செய்யும்” அதிலிருக்கும் பாதகங்களையும் பிரபா அலசினாள்.

“வேறெப்படி கண்டுபிடிக்கறது? நம்ம நேரம் வீணாகிட்டே இருக்கு” வெற்றி கவலை தெரிவித்தான்.

“என்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு சர்!
அது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன்”

“என்ன பிளான்?”

“எனக்கு தெரிஞ்ச ஃப்ரண்ட் ஒருத்தி, இங்க வந்திருக்கறதால அவங்ககிட்ட உதவி கேட்கலாம்னு நினைக்கிறேன் சர்” என்று பிரபா தன் திட்டத்தை விளக்க, வெற்றி வேந்தனின் புருவங்கள் உயர்ந்தன மெச்சுதலாய்.

# # #

“ஹாய் ஆன்ட்டி, ஹவ் ஆர் யூ?” பிரபல இந்தி சின்னத்திரை நாயகி, தன் வீட்டு வாசலில் வந்து துள்ளலாய் விசாரிக்க,

அந்த நடுத்தர வயது பெண்மணிக்கு சந்தோச ஆச்சரியத்தில், தலை கிறுகிறுத்து மயக்கமே வருவது போலானது.

“அஅஅஆப் பூர்வி எனா! ஓ மை காட்ட்ட்!” (நீங்க பூர்வி தான!) தன் கொழுத்த உடம்போடு துள்ளி குதிக்கவே செய்தார் அவர்.

“எஸ் ராக்கி ஆன்ட்டி, ஆப்கே பாரிமே ஷிவானி பகூத் போல்திதி, பர் ஆப்கோ மில்னேகா சான்ஸ் அபி மில் கெய், ஐ அம் சோ ஹேப்பி ஆன்ட்டி”(உங்களபத்தி ஷிவானி நிறைய சொல்லி இருக்கா! ஆனா, உங்கள சந்திக்கிற சான்ஸ் இப்ப தான் கிடைச்சிருக்கு!)
என்று ராக்கி தேவியை ஆர தழுவிக் கொண்டாள் பூர்வி.

ராக்கி தேவிக்கு பெருமை தாளவில்லை.  பின்னே, தினமும் தவறாமல் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் நடிகை திடீரென்று தனக்கு இத்தனை அருகாமையில் பார்த்து, அவர் திக்பிரமை பிடித்து போனார்.

“ஆப் பெஹலே அந்தர் ஆயியே பூர்வி ஜீ” (நீங்க முதல்ல உள்ளே வாங்க பூர்வி) என்று அவரை உற்சாகமாய் வரவேற்று பழச்சாறு பரிமாறினார்.

“ஆப் தோனோ இத்தினி அச்சி தோஸ்தே கியா? ஷிவானி ஆப்கி பாரிமே ஏக் பார் பீ நை பத்தாயா!?”
(நீங்க ரெண்டு பேரும் இவ்வளோ நல்ல ஃபிரண்ட்ஸா? ஷிவானி உங்கள பத்தி ஒரு முறை கூட சொல்லலையே!) ராக்கி சற்று ஆதங்கமாக வினவினாள்.

“பாப்ரே, ஆப்கி பேட்டி, மேரே பாரிமே ஏக் சப்த் பீ நை போலா கியா? தேக்லீஜியே ராக்கி ஆன்ட்டி, மேஹீ ஹூம் புராணா தோஷ்தி யாத் ரக்கே உன்கீ அட்ரஸ் டூட்டுகே ஆகைய்!” (கடவுளே, உங்க பொண்ணு, என்னை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையா? நீங்களே பாருங்க ராக்கி ஆன்ட்டி, நான் தான் பழைய ப்ரண்ட்ஷிப்ப ஞாபகம் வச்சு அவளை தேடி வந்திருக்கேன்!) என்று முகம் சுருக்கினாள் பூர்வி.

“கொய் பாத் நை ஆஃப் பீ மேரி பேட்டி ஜேசியே” (பரவால்ல விடும்மா, நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான்) என்று சமாதானபடுத்தினாள்.

“ஐ மிஸ் சோ மச் ஷிவானி, ஓ அபி கேஸிஹே? கஹாங் ரெஹிதீஹே? உஷ்கோ தேக்னே கேலியே மேரி மன் தடப் தாஹ!” (அவ இப்ப எப்படி இருக்கா? எங்க இருக்கா? அவளை பார்க்கணும்னு என் மனசு அடிச்சுகிட்டே இருக்கு!)

பூர்வி முகம்வாடி உணர்ச்சி பூர்வமாக கேட்க, ராக்கி தேவியின் மனமும் இளகியது.

அவர் ஷிவானியின் நலத்தை தெரிவித்து, அவளின் புகுந்த வீட்டு முகவரியையும் தயக்கமின்றி தெரிவிக்க,

“தேங்க் யூ சோ மச் ராக்கி ஆன்ட்டி!” என்று பூர்வி அதே துள்ளலோடு விடைபெற்று தன் காரில் ஏறிக்கொண்டாள்.

ராக்கி பெருமை பொங்கி வழிந்த இதயத்துடன் தன் தோழியருக்கு ஃபோன் செய்ய விரைந்தார்.

காருக்குள் தன் அருகே அமர்ந்திருந்த, பிரபாவை பார்த்து பூர்வி, உற்சாகமாய்
தன் கட்டைவிரலை உயர்த்தி காட்டினாள்.

# # #

உலையில் இட்ட அரிசியை போல, கற்பகத்தின் உள்ளமும் கொதித்து வெந்து கொண்டிருந்தது.

வெற்றி வேந்தன் செய்த பச்சை நம்பிக்கை துரோகத்தை நினைத்து நினைத்து அவர் நெஞ்சுக்குள் குமுறி கொண்டிருந்தார்.

தன் மகளின் திருமண கோலத்தை காண வேண்டும் என்கின்ற, அவரின் பல நாள் ஆசை நிறைவேற போகும் சந்தோசத்தில் தான் வெண்ணிலாவை, வெற்றி வேந்தனுடன் வழியனுப்பி வைத்தார் அவர்.

ஆனால், வெண்ணிலா கசங்கிய முகத்துடன் தனியாக திரும்பி வர, என்னவென்று விசாரித்தார்.

நிலா எதையும் மறைக்காமல் உள்ளதை உடைத்து சொல்லி விட, அதைக்கேட்டு கற்பகம் அதிர்ந்து போனார்.

வெற்றி செய்த பொய் சத்தியத்தை நம்பி, அவனை தங்கள் வாழ்க்கைக்குள் விட்டது இவர் செய்த தவறு தானே!

தன் நிலாவிற்கு, தனக்கு பிறகு உற்ற துணையாக இருப்பான் என்று கற்பகம் வெற்றியை உளமார நம்பி இருந்தார்.

அவனை தன் பெறாத மகனாகவே நினைத்து கொண்டு, அன்பும் பாசமும் வைத்து உரிமையோடு பழகினார்.

இப்போது!

‘தன் மகளுக்கு விதிக்கப்பட்டது இந்த தனிமையும், வெறுமையும் தானா?’ என்று மனதுக்குள் வெதும்பி தவித்து போனார்.

ஏதோ இந்த உலகமே இருண்டு போனது போல, இடிந்து போயிருக்கும் தன் அம்மாவை நிலாவும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.

தன் மடியில் உறங்கி போயிருந்த சுவாதியை தூக்கி கொண்டு, அறையின் கட்டிலில் படுக்கவைத்து போர்த்தி விட்டாள்.

தன் குட்டி மகள் உறங்கும் பேரழகை எப்போதும் போல நின்று ரசனையோடு கண்களில் நிரப்பி கொண்டு, அவளின் பட்டு கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டு வெளியே வந்தாள்.

கற்பகத்தின் கலக்கமான முகத்தை கவனித்த, வெண்ணிலாவின் மனமும் துவண்டு போக தான் செய்தது.

நிலாவை பொறுத்தவரை, சுவாதி சின்ன குழந்தை என்றால், கற்பகம் வளர்ந்த குழந்தை.

அவரின் உலகம் மிகச் சிறியது.  தன் கணவன், மகள்கள் என்பதை தாண்டிய எதுவும் அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.

விமலாவின் இழப்பிலேயே கற்பகம் பாதி உடைந்து போயிருந்தார்.  கொஞ்ச நாட்களில் கணவனும் பிரிந்து விட, அவர் வாழ்நாட்களில் வெறுமையும் வெறுப்பும் படர ஆரம்பித்து இருந்தது.

நிலாவும் சுவாதியும் மட்டும் இல்லை என்றால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவு விரக்தியின் பிடியில் இருந்தார்.

கற்பகத்தை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி மீட்டுவர, வெண்ணிலா தனி கவனம் எடுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

கற்பகம் இயல்பிலேயே புதியவர்களிடம் சட்டென பழகும் குணம் கொண்டவர் இல்லை.

வெற்றியுடன் தன் அம்மா அத்தனை சீக்கிரம் உரிமையோடு பேசி, பழகுவதை கண்டு முதலில் நிலா வியந்து தான் போனாள்.

கொஞ்ச நாட்களே ஆனாலும், அந்த மாயகாரனை மறப்பது தன் அம்மாவுக்கு கடினம் தான் என்று எண்ணிக் கொண்டாள்.

அவர் அருகில் அமர்ந்து ஆறுதலாக அவர் தோள் பற்றினாள்.

நிலாவை பார்த்து கற்பகத்தின் கண்கள் கலங்கின.

மகளை பற்றிய தாயின் கணிப்பு முழுவதும் பொய்யாக வாய்ப்பில்லை.

நிலாவின் மனம் வெற்றியின் பக்கம் சாய்ந்ததை கற்பகம் முன்பே உணர்ந்து இருந்தார்.

நிலாவின் பிடிவாத குணம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், தாயாய் அவள் மனநிலை பற்றி ஓரளவு யூகித்து இருந்தார் அவர்.

ஆனால், இப்போது!

“நீ அவனை நம்பாதன்னு சொன்ன போதே நான் கேட்டிருக்கணும். அந்த ஏமாத்துகாரனை நம்பி, உன் வாழ்க்கையை பணயம் வச்சிட்டேனே நிலா” என்று தலையில் கைவைத்து கொண்டு புலம்பினார்.

கற்பகம், வெற்றியின் மீது கொண்ட அளவுக்கு அதிகமான பாசம், நம்பிக்கையின் விளைவு இது, என்பதை நிலாவும் உணர்ந்து தான் இருந்தாள்.

“நீ இப்படி புலம்பி தவிக்கிற அளவுக்கு நாம எதையும் பெருசா இழந்து போகலம்மா!” தாயை சமாதானம் செய்யும் கடமை இப்போது அவளுக்கானது.

“…!”

“நீ, நான், சுவாதி எப்பவும் போல நிம்மதியா இருக்கலாம்மா. நமக்கு நடுவுல வேற யாரும் வர வேண்டிய எந்த அவசியமும் இல்ல ம்மா” நிலா நிதானமாகவே கூறினாள்.

“அப்படி சொல்லாத நிலா, எனக்காகவும், சுவாதிக்காகவும் உனக்கான வாழ்க்கைய நீ வாழ மறுக்கிறதை, ஒரு அம்மாவா என்னால எப்பவுமே பொறுத்துக்க முடியாது” என்று நிலாவின் கைகளை அழுத்த பற்றி கொண்டார்.

“உங்கள விட்டுட்டு எனக்கான தனி வாழ்க்கையினு எதுவுமே இல்லம்மா” நிலா திடமாக மறுத்து பேசினாள்.

அவளின் சலனமற்ற முகத்தை பார்த்து, “நான் வேணும்னா வெற்றி கிட்ட பேசி பார்க்கட்டுமா?” கற்பகம் சின்ன நம்பிக்கையில் கெஞ்சலாகவே கேட்க,

“அவங்கிட்ட போய் நீ என்னன்னு கேப்பம்மா? புரிஞ்சிக்கம்மா நாம பாத்து, பழகன வெற்றி நிஜமானவன் கிடையாது! ஏன்? அவனோட நிஜ பேர் கூட வெற்றி இல்ல! தெரியுமா?”

“அப்ப, வெற்றி இனிமே நம்ம பார்க்க, வரவே மாட்டானா?” என்று கேட்ட அந்த தாயின் கண்களில் குழந்தை தனமான ஏக்கம் நிறைந்திருந்தது.

“ம்ஹூம் என்ன பெரிய வெற்றி வெற்றின்னு, அவன் என்னை கொலைகாரியா நினச்சிருக்கான் அதைப்பத்தி உனக்கு கவலை இல்ல,
ஏன்? அவன் இல்லாம நம்மால வாழ முடியாதா என்ன? யாரோ அவன்! வந்தான், போனான். சும்மா, அந்த ராஸ்கல பத்தியே புலம்பிட்டு இருந்த எனக்கு கெட்ட கோபம் வந்துடும்”
அமைதியான சமாதானம் வேலைக்கு ஆகாது என்று அவள் பாணியில் கற்பகத்திற்கு நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றாள் வெண்ணிலா.

“இல்ல நிலா, நம்ம சுவாதி, அப்பா ஏன் வரலன்னு கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு?” கற்பகம் கலக்கமாக நிறுத்த,

“அவளோட அப்பா, இனிமே எப்பவும் வர மாட்டார்னு சொல்லிடு!” நிலாவின் பதில் தடாலடியாய் வந்தது.

“எப்படி நிலா?”

“சொல்லித்தான் ம்மா ஆகணும்! எந்த பொய் சொல்லியும் என் சுவாதி மனசுல வீண் எதிர்பார்ப்ப கூட்ட, நான் விரும்பல” வெண்ணிலா உறுதியாக சொல்லிவிட்டு நகர, கற்பகம் பேச்சிழந்து நின்றார்.

தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிதர்சனத்தை வெண்ணிலா, கற்பகத்திற்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்று கொண்டிருந்த அதே நாளில்,

வெற்றி வேந்தன் நம் நாட்டின் தலைநகரில், அலைந்து திரிந்து ஷிவானி பற்றிய விவரங்களை சேகரித்து கொண்டிருந்தான்.

ஷிவானியின் முகவரியை கண்டுபிடித்து, அவள் நடமாட்டத்தை நோட்டம் விடவே அவர்களின் அடுத்த இரண்டு நாட்கள் கழிந்தன.

நீதிமன்றத்தில் சுந்தர் கொலைவழக்கு விசாரணையும் ஆரம்பித்து இருந்தது.

வாதம், பிரதிவாதம், சாட்சிகள் என வழக்கின் விசாரணை நீண்டு கொண்டிருக்க,

சூரிய நாராயணன், தங்களின் முக்கிய சாட்சியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, சிறிது கால அவகாசம் வேண்டி மனு செய்தார்.

அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்த விசாரணை ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டது.

சுந்தர், ஷிவானியின் பழைய பழக்கம், ஆனந்தனின் சாட்சி இவற்றை தவிர, ஷிவானி தான் குற்றவாளி என்பதற்கு வேறு ஆதாரம் எதுவும் இவர்களிடம் இப்போது இல்லை.

எனவே, “விக்டர், இதுவரைக்கும் நமக்கு வலுவான ஆதாரம்னு எதுவுமே கிடைக்கல! இது மாதிரி கேஸ்ல, குற்றவாளியே முன்வந்து தன் குற்றத்தை ஒத்துகிட்டா தான் உண்டு! சரியா யோசிச்சு ஏதாவது செய் விக்டர்” என்று சூரிய நாராயணன் வழக்கின் நிலையை அவனுக்கு புரியும் படி எடுத்து கூறினார்.

தேடல் நீளும்…

Mangalyam thanthu naane 5

தாரு போனை எடுத்தவுடன் “எனக்கும் உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாதே…நீயே உன்னை பத்தி சொல்லு” என்றவன் பாவமாக கேட்க “அதெல்லாம் முடியாது.நீங்க எனக்கு சொன்னது தான் உங்களுக்கும்” என்று சிறுபிள்ளைத் தனமாக சொல்ல சிரித்தவன்

“சரி..எனக்கு உன்னோட புல் நேம் தாரிகான்னு தெரியும்.அதனால நீ என்கிட்ட உன்ன பத்தி சொல்லலாம்.நீயும் என் புல் நேம் கண்டுபிடிச்சு என்கிட்ட சொல்லு நானும் என்ன பத்தி சொல்லற.பட் என் நேம் யார்கிட்டையும் கேட்கக்கூடாது” என்று ஒப்பந்தம் போட

“அதெல்லாம் முடியாது.அ டீல் இஸ் அ டீல்” என்றாள்.

”ஒய் லூசு உங்க வீட்ல தான் உங்கிட்ட என்ன பத்தி யாரும் சொல்லல.பட் என்கிட்ட உன்ன பத்தி எல்லாம் சொன்னாங்க” என்க “அப்ப எல்லாம் தெரிஞ்சுட்டு தான் என்ன ஒட்டுனிங்களா?” என்று கோபமாக கேட்க

“பரவாயில்லையே..செம்ம பாஸ்ட்டா கண்டு பிடிச்சிட்ட”என்று அதற்கும் வார “போங்க… போங்க…என்கிட்ட பேசாதிங்க” என்று கோபித்துக்கொண்டாள்.

“நீ சுப்ரியா கூட விளையாடும்போது கூட சின்ன குழந்தை அதனால அவளுக்கு தகுந்த மாதிரி விளையாடுறன்னு நினைச்ச…பட் இப்ப தான தெரியுது நீ உண்மையாவே பாப்பான்னு” என்று கலாய்க்க

“நான் ஒன்னும் பாப்பா இல்லை” என்றவள் சொல்ல “இப்படி கிண்டல் பண்ணறதுக்கு எல்லாம் கோவுச்சுகிட்டா பாப்பான்னு சொல்லாம வேற என்ன சொல்லறது?” என்று கேட்க

“நான் ஒன்னும் கோவுசுக்கல..சும்மா நடிச்ச” என்றவள் நாக்கைக் கடித்துக்கொண்டு சொல்ல “ம்ம்ம்.. ம்ம்ம்…நம்பிட்ட…நம்பிட்ட” என்றவன் மீண்டும் ஓட்ட “ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்” என்றவள் கெஞ்ச “சரி.. சரி…பொழச்சுப் போ” என்றுவிட்டான்.

என்ன பேசினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.ஆனால் விடியக்காலை மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.தாருவுடன் பேசியதில் அவளின் சிறுபிள்ளைத் தனத்தையும் பக்குவப்படாத மனதையும் பற்றி ப்ரியன் நன்றாகப் புரிந்துகொண்டான்.

“மணி மூணு ஆச்சு…தூங்கலாமா?” என்று ப்ரியன் கேட்க அரைமனதாக சம்மதித்தவள் “குட் நைட்” என்று கூறி போனை வைத்தாள்.போனை வைத்ததும் கூட தூங்காமல் ப்ரியனின் முழுப்பெயரைக் கண்டுபிடிப்பதற்காக முகநூலில் நுழைந்தவள் ப்ரியன் என்று டைப் செய்து வந்த எல்லா ப்ரோபைல்களையும் பார்த்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்பு ப்ரியனின் முகம் இருந்த அக்கௌன்ட் அவள் கைகளுக்கு சிக்கியது.அதில் ‘கவிப்ரியன் முத்துசுவாமி’ என்ற பெயர் இருக்க ‘ஒ நம்ம ஆள் பேரு கவிப்ரியனா?நல்லா தான் இருக்கு.டேய் கவி நாளைக்கே உங்கிட்ட பேர சொல்லி அசத்துற பார்’ என்று நினைத்தவள் அவனின் அக்கௌன்ட்டுக்குள் நுழைய  ஒரு போட்டோவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

‘பொண்ணு நானே எதையும் பிரைவசி போட்டு வைக்கல.பையன் இவன் ஏன் இப்படி இருக்கான்.நாளைக்கு இதை பத்தியும் கேக்கணும்’ என்று நினைத்தவள் பின்பு அவனுடன் பேசிய தருணங்களை அசைப்போட்டுக் கொண்டு அப்படியே தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலை எழும் பொழுதே உற்சாகமா எழுந்தவள்  நேரத்தைப் பார்க்க அது பத்து எனக் காட்டியது.’என்னது மணி பத்து ஆச்சா?இவ்வளவு நேரம் இந்தப் பாட்டி நம்மளை எப்படி தூங்கவிட்டுச்சு?இன்னைக்கு நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறோம்” என்று நினைத்தவள் பல் துலக்கிவிட்டு கீழே செல்ல

சௌந்தரம் பாட்டி திட்டாமல் “இப்ப தான் எழுந்தியா தாரு?கல்யாணம் பண்ணிப் போறதுக்குள்ள எல்லா வேலையும் கத்துக்கணும் சரியா?” என்று கேட்க அவளும் சரி என்று தலையை ஆடினாள்.

சமையலறைக்குள் சென்றவள் தன் அன்னையிடம் பால் கேட்க முறைத்தவர் “ஏன் டி இன்னும் நாலு மாசத்துல கல்யாணத்த வெச்சுக்கிட்டு பத்து மணி வரைக்கும் யாராச்சும் தூங்குவாங்களா?” என்க “அட விடு விசா…நம்ம கூட இருக்க வரைக்கும் அவள் இஷ்டப்படி இருக்கட்டும்.பொறுப்பு வந்தா தானா மாறிருவா…” என்று ருக்குமணி அவளுக்கு பரிந்து பேசினார்.

உள்ளே இவர்களின் வாக்குவாதம் கேட்டு சமையலறைக்குள் நுழைந்த பரந்தாமனைப் பார்த்ததும் “குட் மோர்னிங் ப்பா” என்று தாரு சொல்ல “குட் மோர்னிங் தங்கம்” என்றவர் மனைவியிடம் திரும்பி “இங்க என்ன சத்தம்?” என்று கேட்க

“ஆமா பொண்ண ஒன்னு சொல்லிறக் கூடாதே…உடனே வந்துருவாரு” என்று அவருக்கு கேட்குமாறு முனுமுனுக்க “ஏன் மா…அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணறத பாத்து பொறாமை படற?வேணும்னா உன் அப்பாவை போய் கூப்ட்டிட்டு வந்து உனக்கு சப்போர்ட் பண்ண சொல்லு” என்று தாயை வம்புக்கிளுதாள்.

இப்படி பேசியபடியே காலை உணவினை உண்டு முடித்தவள் தன் ரூமிற்குச் சென்றாள்.ப்ரியனுக்கு அழைக்கலாமா?வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தியவள் பின்பு அம்முடிவை கைவிட்டவளாய் வாட்ஸ் ஆப்பைத் திறந்தாள்.

அதில் அவனிடமிருந்து ஏற்கனவே “குட் மோர்னிங்” என்ற மெசேஜ் வந்திருக்க தாருவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.பதிலுக்கு “குட் மோர்னிங்”என்ற மெசேஜ் அனுப்பியவள் அரை மணி நேரம் ஆகியும் அவன் பார்க்காததால் அவனுக்கு  அழைத்தாள்.

அந்த அழைப்பு எடுக்கப்படாமல் போகவே மீண்டும் அழைப்போமா என்ற யோசனையை கைவிட்டவள் அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

விசாலாட்சி “மணி மூணு ஆச்சு டி.நேரத்துக்கு சாப்பிட்டா தான ஒடம்பு நல்லா இருக்கும்?” என்று எழுப்ப எழுந்தவள் “நீ போ ம்மா..நான் வர்ற” என்றுவிட்டு போனை எடுத்தாள்.”எப்பப் பார்த்தாலும் அந்த போன நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது.அப்படி அதுல என்ன தான் இருக்கோ தெரியலை” என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.

போனை எடுத்துப் பார்க்க அதில் ப்ரியனிடம் இருந்து “கொஞ்சம் வேலை.ப்ரீ ஆகிட்டு கூப்பட்ற” என்ற பதில் வந்திருந்தது.அவனிடமிருந்து பேச்சுக்களை எதிர்பார்தவளின் மனம் இந்த பதிலில் கொஞ்சம் சோர்வடைந்தது.மூளை அவனுக்கு வேலை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சாப்பிடச் சென்றவள் ஏதோ கொறித்துவிட்டு மீண்டும் வந்து படுக்கை அறையில் முடங்கினாள்.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவனிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றும் வரவில்லை.  

.ஆறு மணி வரை அவனிடம் இருந்து மெசேஜ் வராததினால் ‘காலைல இருந்து என்கிட்ட பேச இவங்களுக்கு பத்து நிமிஷம் கூட டைம் இல்லையா?வேலை இருந்தா கூட அப்படியே எனக்கு மெசேஜ் பண்ணிட்டே பார்க்க வேண்டியது தான?’என்ற எண்ணம் அவள் மனதில் வந்தது.

ஹாலில் பரந்தாமன் ராஜு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.ஆனால் மனம் மட்டும் ப்ரியனையே நினைத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்தவள் பின்பு மீண்டும் அறைக்குள் நுழைந்து போனைப் பார்த்தாள்.அவனிடமிருந்து எந்தவொரு மெசேஜ்ஜும் வரவில்லை.பின்பு தன் நண்பர்களிடம் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்தவள் அவர்களுக்கு போன் செய்து பேசினாள்.

போனை வைத்தவுடன் கார்த்திக் அவள் ரூமிற்குள் நுழைந்தான்.”ஏன் தாரு பேஸ் டல் அடிக்குது?” என்று முகத்தைப் பார்த்துக் கேட்க “இல்லையே நல்லா தான் இருக்க” என்று சமாளித்தவள் முகத்தை நன்றாக வைத்துக் கொண்டாள்.

“நேத்து என்கிட்ட மச்சான் பத்தி டிடைல்ஸ் கேட்ட.பட் அப்பா கிட்ட வேற விஷயம் பேசிட்டு இருந்ததுனால உங்கிட்ட சொல்ல முடில” என்று சொல்ல “என்னது மச்சான்னா?” என்று கேட்டவளிடம்

“ஆமா மச்சான் தான்.தங்கச்சி மாப்பிள்ளை எனக்கு மச்சான் தான?” என்றான்.

“பட் நீ அவங்கள மச்சான்னு கூபிட்டா எனக்கு கேட்க செம்ம காமெடியா இருக்கும்” என்றவள் அவன் குரலிலேயே “ப்ரியன் மச்சான்…ப்ரியன் மச்சான்” என்று பேசிக் காண்பிக்க அவள் தலையில் ஒன்று போட்டவன் “இந்த வாய் இருக்கே வாயி…இது இல்லனா உன்னை எல்லாம் நாய் கூட மதிக்காது” என்று சிரிக்க அவனுடன் அவளும் இணைந்து கொண்டாள்.

இன்று ருக்மணி இருவரையும் சாப்பிட அழைக்க “சாப்டுட்டு வந்து பேசலாம்” என்றவன் டைனிங் டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மீண்டும் போனை எடுத்துப் பார்த்தவள் ஒரு பெரு மூச்சுடன் சாப்பிடச் சென்றாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் “உறுதி வார்த்தைக்கு போய் சேரி நாளைக்கு எடுத்துட்டு வந்தறலாம்.அப்போ தான் ப்ளோவுஸ் எல்லாம் தைக்க கொடுத்து வாங்க முடியும்” என்று ருக்குமணி சொல்ல தலையாட்டியவள் தன் தந்தையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

கார்த்திக்கிற்கு தன் நண்பன் அழைத்திருக்க  போனில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.பத்து நிமிடம் வரை பொறுத்துப் பார்த்தவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

சரியாக பத்து மணிக்கு “கால் பண்ணட்டா?” என்ற மெசேஜ் ப்ரியனிடம் இருந்து வர “ஹ்ம்ம்” என்று தான் கோபமாக இருப்பதைக் காட்ட அனுப்பினாள்.

“ஹலோ” என்றவன் சொல்ல சிறிது நேரம் தாரு ஒன்றும் பேசவில்லை.அவன் “ஹலோ… ஹலோ… “என்று அதற்குள் மூன்று முறை சொல்லிவிட “ஹலோ” என்றாள்.

“என்ன தூக்கமா?வாய்ஸ் ஒரு மாறி இருக்கு” என்று கேட்க கோபத்தில் “ஆமா நல்லா தூங்கிட்டு இருந்த” என்று கடுப்பாகக் கூற “என்ன ஆச்சு கோபமா?” என்றான்.

அவள் ஒன்றும் பேசாமல் இருக்க “சொல்லு …கோபமா?நீ சொன்னாதான எனக்குத் தெரியும்” என்று கேட்க “காலைல இருந்து ஒரு பை மினுட்ஸ் கூட என்கிட்ட பேச உங்களுக்கு டைம் கிடைக்கலையா?” என்றதற்கு

“ஓ…அதுக்குத் தான் மேடமுக்கு கோபமா?” என்றுவிட்டு சிரித்தவன் “ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்ட?” என்று கேட்க ‘என்ன சமாதானம் பண்ணாம இவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்க’ என்று நினைத்தவள் “ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.

“நம்ம சிறு தானியம் எல்லாம் இங்க இருந்து பாரின்க்கு எக்ஸ்போர்ட் பண்ணறோம்.பட் ஜெர்மனிக்கு எக்ஸ்போர்ட் பண்ணறதுல மட்டும் இவ்வளவு நாள் கொஞ்சம் ப்ரோப்ளம் இருந்துச்சு.இன்னைக்கு அது சால்வ் ஆகிடுச்சு.எல்லாம் நீ வீட்டுக்கு வரப் போற நல்ல நேரம் தான்னு அம்மா சொன்னாங்க” என்றவன் சொல்ல தன் கோபத்தை மறந்தவள்

“அத்தை செம்ம ஸ்வீட்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் உண்மையாக.”அவங்க பையன பிடிச்சிருக்கா?” என்றவன் குறும்பாகக் கேட்க “ம்ம்ம்…” என்று சிறிது நேரம் யோசனை செய்தவள் சிரித்துக்கொண்டே “இல்லை” என்றாள்.

“அடிப்பாவி” என்றவன் சொல்ல “எனக்கு இன்னும் உங்க மேல இருக்க கோபம் போல” என்று சொல்ல “உண்மையாவே நீ பாப்பா தான் டி.உன்ன எல்லாம் வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்” என்றவன் பெருமூச்சுவிட

“ஓ…அப்படியா?அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் என்கூட பேச வேண்டாம்” என்றவள் உடனே போனை வைத்துவிட்டாள்.ப்ரியன் விளையாட்டுக்கு சொன்னதை இவள் மிக சீரியஸ்சாக எடுத்துக் கொண்டாள்.கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது.

போனைத் தூக்கிப் போட்டவள் ‘காலைல இருந்து எப்ப பேசுவான்…எப்ப பேசுவான்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.ஆனா இவன் என்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம் சொல்லறான்’ என்று நினைத்தவள் குப்புறப்படுத்து விட்டாள்.

Nachu Annam’s Unnaala ulagam azhagaache! – full novel

அருளழகன். கோமதி வெற்றிவேல் பெற்றெடுத்த மகவு.28 வயசு எலிஜபில் பேச்சுலர். ஒரு தடவ சீவினாலே போதும் அந்த நாள் முழுவதும் கலையாமல் இருப்பேன் என்று சொல்லும் அளவு ஜெல் வைத்து சீவப்பட்ட கேசங்கள். கைல ரோலக்ஸ் வாட்ச், கண்களில் தெரியும் நேர்கொண்ட பார்வை, அந்த கூரான விழிகளுக்கு கூடுதல் அழகு நீல நிற கண்கள் அதை மறைக்க வேன ரேபன் கூலர்ஸ், எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்ற பிங்க் கலர் உதடுகள்.

கன்னத்து குழியில விழுந்து எந்திரிக்க முடியாம தவிச்சிட்டு இருக்க பொண்ணுங்க லிஸ்ட் அதிகம். எத்தனை பொண்ணுங்க கூட பழகி இருந்தாலும் இன்ன வரைக்கும் அருள் பீல் பண்ணாத ஒரு விஷயம் காதல்.

பக்கா பிசினஸ்மேன்…அருள் கன்ஸ்ட்ரக்ஷன் அவன் பொறுப்பெடுத்த நாலு வருஷத்துத்துல டாப் கம்பெனி லிஸ்ட்ல கொண்டுவந்ததே அதற்கு சாட்சி.

ஆனா பிஸ்னஸ் மேன் அருளா அவன பார்த்தவங்க ரொம்ப கொஞ்ச பேர் மட்டும் தான். அவனுடைய முகமா எல்லா இடத்துலயும் இருக்கிறது கமல் அவனோட பி ஏ.

பக்கா பிசினஸ்மேன்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கிறது ரொம்ப சூப்பர் கூலான வாத்தி.

அப்பா ஆசைக்காக ஒன்பது மாசம் கம்பெனி பொறுப்பு 3 மாசம் அவன் ஆசைக்காக வாத்தியார் வேலை.

பாரபட்சம் பார்க்காம ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் கவனிக்கிற ஒரே வகுப்பு நம்ம அருள்ளோடது மட்டும் தான்.

போரடிக்காம கிளாஸ் எடுக்கிறதில்ல நம்ம அருள் கில்லாடி.

இன்னிக்கி அருள் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்… அவன் தேவதையே பார்க்கிற நாள்.. அப்படியே கிளாஸ் எடுக்கிற நாளும்.

எரும மாடே முதல்ல எந்திரி.. எவ்வளவு நேரம் தான் உன்னை எழுப்புரது. உனக்கு கத்தி கத்தியே பாதி டயர்ட் ஆகிட்டேன்.

 

உன்னை பெத்து வளக்கிறதுக்கு பதிலா ஒரு மாட்ட வளர்த்திருந்தாவது பால் கொடுக்கும்…. நீ எல்லாம் எனக்கு பொம்பள புள்ளைன்னு வந்து பிறந்து இருக்கியே.. உன்னை எல்லாம் என்ன சொல்லித் திருத்துரது..

இன்னும் என்ன என்ன தேவி திட்டி இருப்பாங்களோ அதுக்குள்ளேயும் போர்வைக்குள்ள இருந்து எந்திரிச்சு உட்கார்ந்துட்டா அனு.

அம்மாமா… உன்ன காலையில ஏழு மணிக்கு எழுப்பி விடுங்கன்னு சொன்னேன்.. புது ப்ரொபசர் வராரு கிளாஸ்க்கு…சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல நீ என்ன ஒன்பது மணிக்கு எழுப்பிவிடுற…

எது நான் எழுப்பி விடலையா உன்ன ஏழு மணியிலிருந்து எழுப்பறேன் எந்திரிகிறியா நீ..

இவ யாருக்கோ கத்துறான்னு இழுத்துப் போர்த்தி தூங்கிட்டு இப்ப என்ன சொல்றியா. பத்து மணிக்கு காலேஜ் நீ எப்டி போரேன்னு நானும் பாக்குறேன் டி.

ஏன்மா நீ என்னைய பெக்கும்போது பாக்கலையா இரண்டு கால் இருந்திருக்குமே… அதை வச்சு தான் நடந்து போவேன் ஆனாலும் பத்து நிமிஷம் நடந்தா வர காலேஜுக்கு நீ பண்ற அலப்பறை இருக்கே தாங்க முடியல மா.

எது நான் அலப்பறை பண்றேன்னா நீ பண்றது தாண்டி தாங்க முடியல.

சரி விடும்மா இப்ப போய் எனக்கு சூடா டிபன் எடுத்து வை.. இந்தா குளிச்சிட்டு வந்தர்றேன்…

உன்னல்லாம் திருத்தவே முடியாது டி வந்து தொல எடுத்து வைக்கிறேன்.

ஆனாலும் தேவி உனக்கு இம்புட்டு ஆகாது… என்ன திருத்த முடியாதுனு தெரிஞ்சும் டெய்லி நீயும் தான் சொல்லிட்டே இருக்க…

 

என்னது தேவியா உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிடுச்சு டின்னு சொல்லி டிவி ரிமோட் அனு மண்டையைப் பதம் பார்க்கிறது குள்ளயும் பாத்ரூமுக்குள்ள நுளஞ்சிட்டா…

குளிச்சிட்டு சிகப்பும் ஊதாவும் கலந்த சுடிதாரில் வெளியில வந்த பொண்ண பார்த்து தேவி கவலைப்பட்டதே உண்மை.. அவங்க கவலைக்கு காரணம்..

பால்ல ரெண்டு சொட்டு தேனை விட்டா வர கலரு.. உருண்டை முகம், துருதுருன்னு இருக்கிற கண்கள். பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கின ஒரு அழகு சிலை.இதெல்லாம் விட இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கிற விஷயம் அவளுடைய கூந்தல் மட்டும் தான்.ஆமாம் முழங்கால் தொடுற அளவுக்குள்ள முடி.

அம்மா என்ன சைட் அடிச்சது போதும்… டிபன் எடுத்து வை.. என்னம்மா இன்னைக்கும் இட்லிய செஞ்சு வச்சு இருக்க ஒரு பூரி செஞ்சிருக்கலாம்ல…

ஆமாண்டி இப்படி உனக்கயா செஞ்சு போடுறேன்ல…நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ… உன் மாமியாக்காரி கையால நாலு அடிவாங்கினா தான் என் அருமை தெரியும் உனக்கு.

ஏன்மா பாப்பாவ திட்டுறன்னு சொல்லிகிட்டே அந்த இடத்துக்கு வந்தது சுந்தரம்… அனுவோட ஆருயிர் அப்பா.

நீங்க ஒரு ஆள் போதும்க அவளைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்க.

அவ என்ன பண்ணாலும் கேட்கிறதே இல்ல… நேத்து அந்த ஹரிஷ் குட்டியோட அம்மா சொல்றாங்க.. உங்க பொண்ண கொஞ்ச நேரம் வீட்ல வச்சுக்கோங்க.. அவனுக்கு எக்ஸாம் இருக்கு படிக்க விட மாட்டேங்கிறானு…. எனக்கு ஒரே அவமானமா போச்சு… இவ கூட்டாளி எல்லாம் எல்கேஜி யுகேஜி படிக்கிற பசங்க…இவ பொண்ணு மாதிரியா இருக்கா… சின்ன பசங்க கூட சேர்ந்து விளையாண்டுகிட்டு இருக்கா…

 

 

அம்மா போதும் என்னையே திட்டாத.. நான் நேத்தே ஹரிஷ் கிட்ட கேட்டேன் போய் படிக்கணும்மானு.. அவன் தான் சொன்னான் இல்லக்கா நான் படிச்சு முடிச்சிட்டேன்னு…அப்புறம்தான் விளையாண்டோம்….

ஆமா இதுல உனக்கு பெறும வேற.

அப்பா இப்ப என்ன கொண்டுபோய் காலேஜ்ல விட்டுருங்க.. இல்லைனா இந்த தேவி திட்டியே என் காது ரெண்டையும் பஞ்சர் ஆக்கிடும்.

”சரி வா பாப்பா”

ஆமாங்க இந்தா இறுக்கிற காலேஜ்க்கு வண்டியில் கொண்டுபோய் விடுறீங்களா… இப்படியெல்லாம் செல்லம் கொடுக்கிறதாலதான் உங்க பொண்ணு குண்டாயிட்ட போறா… அவள நடந்து போக சொல்லுங்க…

பாப்பா நீ கார்ர போய் எடு…இந்தா வந்துடுரேன்…. ரொமான்ஸ் பண்ணனும்னு சொன்னா நான் போகப் போறேன்…அதுக்கு எதுக்கு காரை எடுக்க சொல்றீங்க நீங்களே வந்து எடுங்க அப்பா…

பார்த்தீங்களா உங்க பாப்பா பேசுறத…

சரி விடு தேவி அவ சின்ன பொண்ணு தானே நீ ஏன் டெய்லி அவ கிட்ட மல்லுக்கு நிற்கிற…

நான் எங்கங்க மல்லுக்கு நிக்கிறேன்.. உங்க ஆசை மக தான் டெய்லி என்ன கத்த விட்டு டென்ஷன் ஆக்கிறா….

நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் தானே இப்படியெல்லாம் இருக்க முடியும் அதனால அவளையும் கொஞ்சம் ப்ரீயா விடு மா…

ஆமா நீங்களும் கண்டிக்க மாட்டீங்க என்னையும் எதுவும் சொல்ல விடமாட்டீங்க அப்புறம் எப்படி அவளுக்கு பொறுப்பு வரும்..

கல்யாணம்னு ஒன்னு ஆகிடுச்சுன்னா பொறுப்பெல்லாம் தானா வந்துடும் டி.

இப்போதைக்கு அவளைக் கொஞ்சம் ஃப்ரீயா விடு. இப்போ டைம் ஆயிடுச்சு சோ நாங்க ரெண்டு பேரும் கெளம்புறோம் ஈவ்னிங் வந்து உன்னுடைய கச்சேரிய ஆரம்பிக்கலாம்னு சொல்லி பறக்கும் முத்தத்தை பார்சல்ல தேவிக்கு அனுப்பி திட்டுறதுக்கு முன்னாடி அப்பாவும் பொண்ணும் கிளம்பிட்டாங்க…

Epi-2

அன்பே பேரன்பே, பேரன்பே

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்

உறவொன்று கேட்கிறேன்

வரை மீறும்இவளின் ஆசை

நிறைவேறுப் பார்க்கிறேன்.

நதி சேரும் கடலின் மீது

மழை நீராய் சேருவேன்.

அந்த காருக்குள் சித் ஸ்ரீராம்,ஸ்ரேயா கோசல் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் இரண்டு குரலுக்கும் அனைவரையும் கட்டிப் போடும் காந்தசக்தி உள்ளது.

அதனால்தான் அனுவும் சிறு குழந்தை போல் தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டே வந்தாள்.

அவளின் ரசனைக்கு இடையே வந்தது சுந்தரத்தின் குரலும், GV இன்ஜினியரிங் காலேஜ்ம்.

“பாப்பா காலேஜ் வந்துடுச்சு…”

“ஓ…காலேஜ் வந்துடுச்சா நான் அப்படியே அந்த பாட்டுல மூழ்கிட்டேன்பா” “ஓகே பாய் ஈவினிங் பாக்கலாம்பா”

“சரிடா…அங்க போய் ஒழுங்கா படி உங்க அம்மா சொல்ற மாதிரி விளையாடிக்கிட்டு இருக்காம்ம”

“அப்பா இருந்தாலும் அனுவுக்கு இவ்ளோ பெரிய இன்சல்ட் வேண்டாம்பா… ஒரு டாப்பர்ர பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே..” சிவாஜி கணேசன் வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணி சிரிக்க வச்சே டாட்டா சொன்னா சுந்தரத்துக்கு…

GV இன்ஜினியரிங் காலேஜ்… சுமார் 2000 மாணவர்களை தன்னகத்தே கொண்ட தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்று.

கல்வி ஒரு வியாபாரமா போன நிலையிலும் இன்னி வரைக்கும் பல ஸ்டூடண்ட்ஸ்க்கு பாதி பணம் வாங்கிட்டு எஜுகேட் பண்ற ஒரு கல்லூரி. அதோட முழுப் பெருமையும் GV காலேஜ் ஓட நிறுவனருக்கு மட்டும்தான் சேரும்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் மரம் செடி கொடிகள்.. இதெல்லாம் மத்தவங்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாலும்… ஆனா அங்க இருக்க ஸ்டூடண்ட்ஸ்க்கு கேர்ள்ஸ்கு பாய்ஸ் குளிர்ச்சியாவும், பாய்ஸ்க்கு கேர்ள்ஸ் குளிர்ச்சியாவும் தான் கண்ணுக்கு தெரிவாங்க😜😜..(உண்மையை யாரும் வெளியில சொல்ல மாட்டாங்க.. நீயேன் சொல்ற…(என் மைன்ட் வாய்ஸ்😉😉))

அப்படி ஒரு மரத்துக்கு அடில மத்தவங்கள கலாய்ச்சிட்டு இருந்த 7 பேர் கொண்ட குழுவில் அனுவும் போயி ஐக்கியமாகிட்டா.

ஹேய் அமுல் பேபிஸ்… இன்னிக்கு ஏதோ புது சார் வரதா சொன்னாங்களே.. அவரப் பத்தி ஏதாவது தெரிஞ்சுசா டி..-அனு

இல்லடி அனு.. ஒரு விவரமும் தெரியல அந்த மனுஷன் பேரு கூட தெரியலடி-அபி

பேரு தெரிஞ்சா மட்டும் நீ கிளாஸ கவனிக்கவா போற.. ஆனா இவ்வளவு ஃபீலிங்ஸ் எல்லாம் ஆகாது டி அடங்கு-கலை

“நான் கிளாஸ கவனிக்கிறேன் இல்ல குப்புறப்படுத்து தூங்குறேன்.உனக்கு என்னடி கவலை”-அபி

“அதைத்தான் நானும் சொன்னேன் நீ என்ன கிளாசை கவனிக்கவா போறேன்னு..”-கலை

அடச்சீ…உங்க கேவலமான சண்டைய நிப்பாட்டுங்க டி கிளாசுக்கு டைமாயிடுச்சு போலாம் வாங்க…-அனு

“தினகரன் சார் குட் மார்னிங்!”

அடடே…“வாங்க தம்பி இன்னும் உங்களை காணமேனு தான் நினைச்சிட்டு இருந்தேன்னு சொல்லி பிரின்சிபால் சீட்டில்லிருந்து எந்திரிச்சு டோர் வரைக்கும் போய் கைகொடுத்தாரு நம்ம அருளுக்கு…”

தினா சார், “நீங்க ஒரு ஆளு போதும் நான் தான் இந்த காலேஜ் ஓட ஓனர்னு சொல்றதுக்கு”

“ஏன் தம்பி! இப்படி சொல்றீங்க நான் போய் வெளியில யார்கிட்டயாவது சொல்வேனா”

“நீங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்க சார்… ஆனா உங்க நடவடிக்கை காமிச்சு கொடுத்துடும்..”

“இப்ப கூட வாசல் வரைக்கும் வந்து என்ன ரிசீவ் பண்ணத யாராவது பார்த்தா கண்டிப்பா டவுட் வந்திருக்கும்னு சொல்லி தன்னோட மயக்கும் புன்னகையுடன் தினா சார்ர பார்த்து சிரிச்சான்”.

“உங்க உதடு மட்டும் தான் சிரிக்குது தம்பி! ஆனா அந்த கண்ணல்ல லைட்டான கோபத்தை பார்க்கிறேன்.. உங்களால மட்டும் தான் கோபத்தைக் கூட சிரிச்சிட்டே காமிக்க முடியும்.”

“இது ரொம்ப பெரிய ஜஸ்ஸா இருக்கு சார்.. உங்களுக்கு இன்கிரிமெண்ட் வேணும்னா சொல்லுங்க.. சேர்த்து குடுத்துடறேன் ஆனா இப்படி எல்லாம் ஓட்டாதிங்க.”

“தம்பி நான் ஓட்ட எல்லாம் இல்ல! உண்மையைதான் சொன்னேன்”

“போதும் சார்.. விட்டுடுங்க!” “எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு…யாராவது கேட்டா நம்ம ராஜா சாருக்கு பதிலா கெஸ்ட் லேக்சரரா வந்திருக்கேன்னு சொல்லிடுங்க”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்! இனிமே காலேஜ்ல நான் இருக்கிற வரைக்கும் தம்பினு கூப்பிடாதிங்க… எல்லாரு மாதிரி சார்னே கூப்பிடுங்க..”

“சரிங்க தம்பி!”

“சார் இப்ப என்ன சொன்னேன்!”

“ஆஹா அத மறந்துட்டேன்! இனிமே சார்னே கூப்பிடுறேன். உங்களுக்கு கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு… நீங்க கிளம்புங்க சார்.அப்படியே இங்க இருக்க அட்மின்ஸ் நோட்டுல சைன் பண்ணிட்டு போயிடுங்க…”

B.E 4th year நேம் போர்ட் இருக்கிற கிளாசுக்குள்ள அருள் நுழைறதுக்கும், அனு பாக்குறதுக்கும் சரியா இருந்துச்சு…

நான்கு கண்களும் ஒரு நிமிடம் பார்த்துக்கொள்ளும் இடைவெளியில் உதடுகள் இரண்டும் ஒரு சேர வார்த்தைகளை உதிர்த்தது..

“இவனா”

“இவளா”

Epi-3

இவளா” என்று நினைத்த மறுநொடி “குட் மார்னிங் சார்” என்ற கோரஸ் குரல்கள் வந்ததில் அருள் தன் கவனத்தை கிளாஸ் எடுப்பதில் மாற்றிவிட்டான்.

ஒரு நிமிடத்தில் உலகையே சுற்றி வரும் திறமை கொண்ட மனம் அனுவையும் அன்று அருளை சந்தித்த நாட்களுக்கு அழைத்து சென்றது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்டால் உனையே தருவாய்…

சித்ராமா குரலில் பாடிய செல் என்னையும் கொஞ்சம் கவனி என்றது அனுவை.

டிஸ்ப்ளேயில் அபி காலிங் என்று வருவதைப் பார்த்து “இந்த லூசு எதுக்கு இப்ப கால் பண்ணுது… இவளுங்க ஏதாவது பிளான் சொல்லி நான் மறந்துடேன்னா தெரியலையே…” இப்படி விடாம கால் பண்ணுதுங்கனு நெனச்சுட்டே போன் அட்டன்ட் பண்ணா.

அட்டன் பண்ண அடுத்த நிமிஷம் “எருமமாடே, கிளம்பிட்டியா இல்லையா! நாங்க எல்லாம் கஃபேக்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு… இன்னும் என்ன தாண்டி பண்ணுவ நீ!” அப்படின்னு மூச்சு விடாம அபி கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் நம்ம அனுக்கு இன்னிக்கு டிங்டாங் கஃபேல மீட் பண்ணலாம்னு சொன்னதே ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஆத்தி… மறந்துட்டேன்னு சொன்னா கேவலமா கழுவி ஊத்துவாளுங்களே.. சரி சமாளிப்போம்… “இதோ ஸ்கூட்டி எடுத்துட்டுயிருக்கேன்டி ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்.”

“அம்மா!இந்த பிங்க் கலர் சால் எங்க வச்ச கப்போர்டில் காணலையே…”

“முந்தாநாள் தானேடி அத துவைக்க போட்ட! தொவச்சி அந்த சேர்மேல கெடக்கு பாரு…”

“இத முன்னாடியே சொல்றதுக்கு என்ன… எவ்வளவு நேரமா நான் தேடிட்டு இருக்குகேன். ஏன் அவசரம் புரியாம இப்டி பண்ணிட்டு இருக்கீங்கமா..”

“நான் என்னடி பண்ணேன்… நீ தான் வீட்டில் ஒரு வேலையும் பாக்குறது இல்ல.. அந்த டிரஸ் எப்போ துவைக்க போட்டோம்னு கூட உனக்கு ஞாபகமில்லை… ஏழு கழுதை வயசாச்சு இன்னும் எல்லாத்துக்கும் அம்மாவயே கேட்டுக்கிட்டு இருக்குற…”

“அம்மா! தயவு செஞ்சு நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன் கச்சேரிய ஆரம்பிச்சிக்கோ” இப்ப நான் கிளம்புறேன்.

“எங்கடி போற அதையாவது சொல்லிட்டு போ..”

“அம்மா பிரண்ட்ஸ் மீட்டிங் டிங்டாங் கஃபேல..”

“அது சரிடி குளிச்சுட்டாவது போ!”

“நீ ஒரு ஆளு போதுமா என் மானத்த வாங்க! நான் குளிக்கலைங்கிறது உனக்கு மட்டும் தானே தெரியும். வந்து குளிக்கிறேன்மா டைம் இல்ல..”

“என்ன கருமத்தையோ பண்ணித் தொலை!”

“ரொம்ப பண்ணாதமா! அதுக்கு தான் பர்பியும்னு ஒன்னு இருக்கே.. அதை அடிச்சுட்டா நான் குளிச்சேன்னா இல்லயானு யாருக்கும் தெரியாது😜😜..”

“உன்னல்லாம் திருத்தவே முடியாது! இன்னிக்கு ஈவ்னிங் கோவிலுக்கு போகனும்…அதனால கொஞ்சம் சீக்கிரமா வந்துடுடி.. உங்க அப்பாவும் வரேன்னு சொல்லிட்டாரு லேட் பண்ணிடாத..”

“அதெல்லாம் கரெக்ட் டைமுக்கு வந்து ஆஜராகிடுவேன்.”

“இப்போதைக்கு என்னைப் போகவிடு தேவி! பிரண்ட்ஸ் போன் பண்ணி டைமாச்சு.. ஒரு சால் எடுத்து கொடுனு சொன்ன குத்ததுக்கு ஒரு பிரசங்கமே வைக்கிற நீ!”என்று சொல்லி தேவிகிட்டயிருந்து ஒரு அடிய வாங்கிட்டே வீட்ட விட்டு கிளம்புனா அனு.

ஸ்கூட்டி எடுக்கும்போது ஆனந்தி கிட்டயிருந்து இன்னொரு ஒரு போன்.. ஐயோ போன் எடுத்தா இவளுங்க திட்டுவாளுங்களே🙄🙄..

சரி கஃபேக்கு போனதுக்கு அப்புறம் போன் சைலன்ட்ல இருந்துச்சு பார்க்கலைன்னு சொல்லி சமாளிப்போம்….

மெயின் ரோட்டில் போன கால் மணி நேரமாவது ஆகும்.. ஒன் வேல போனா பத்து நிமிஷம் தான் ஆகும். இந்த டைம்ல யாரும் வர மாட்டாங்கனு நெனச்சு ஒன் வேலை தன்னோட ஸ்கூட்டியை அனு திருப்பிட்டா…

ஆனா அவ நேரம் இவ ஸ்கூட்டிய திருப்புறதுக்கும் அருள் கார் வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு…

இவ வரத பார்த்த ஒரு செகண்ட்ல அருள் பிரேக் போட்டுட்டான். அப்படி இருந்தும் ஸ்கூட்டில லைட்டா மோதிடுச்சு.

அருள் இறங்கி திட்டுறதக்கு முன்னாடியே அனு திட்ட ஆரம்பிச்சுட்டா.

“ஏன்யா! கண்ணு என்ன பிரடிலயா வச்சிருக்க…ஒரு அழகான பொண்ணு ரோட்ல வரக்கூடாதே… அப்படியே வந்து மோதிட வேண்டியது…அப்புறம் சாரி சொல்ல வேண்டியது..சரினு சொல்லி லைட்டா சிரிச்சா போதும்…உடனே நம்பர் தாங்கனு கேட்கிறது.கடைசியா நீ இல்லாம நான் எப்டி வாழ்வேன்‌..ஐ லவ் யூ…ஏன் உலகமே நீ தான்னு சொல்ல வேண்டியது…”

“ஏய் முட்டக்கண்ணி! மொதல உன் பிளா பிளாவ நிப்பாட்டு…நீ சொன்ன பாரு ஒரு அழகான பொண்ணுனு அது முதல்ல யாருனு சொல்லிட்டு அப்புறம் மத்தத சொல்லு”(டேய்!இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆகாது டா..இவ அழகா இல்லயா…ஹீரோயினி மாதிரி இருக்கா மொதல்ல நீ போய் உன் கண்ண செக் பண்ணுனு சொன்ன மனசாட்சிக்கு பெரிய கொட்டா வச்சு ஓரமா அனுப்பிட்டான்)

“யோவ்! என்ன திமிரா…யார பார்த்துனு!!” ஆரம்பிக்கும் போதே அங்க ஒரு கூட்டம் சேர ஆரம்பிச்சிடுச்சு…

என்னமா என்ன பிரச்சனைனு அங்க இருந்த ஒருத்தர் கேட்டவுடனே… “அண்ணா! என் பிரண்ட்க்கு ரொம்ப சீரியஸ்ணா.. அர்ஜென்ட்டா பி பாசிடிவ் ரத்தம் வேணுமுன்னு சொன்னாங்க.. அதனால ஒன் வேயில நுழைஞ்சிட்டேன்ணா.. அதுக்கு இந்த சார்ரு ரொம்ப திட்டுறாரு அண்ணா…”(இவ சொன்ன பொய்யில மனசாட்சி மயக்கம் போட்டே விழுந்துடுச்சு…)

அந்தப் பொண்ணுதான் ரத்தம் கொடுக்க போகணும்ங்கிற அவசரத்துல ஒன் வேல நுழைஞ்சிட்டேனு சொல்லுதே…அப்புறம் ஏன் தம்பி இப்படி சண்டைக்கு போற…

“ஐயோ சார் நான்…. “

அட நிப்பாட்டு தம்பி…அந்த பொண்ணு ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகட்டும்… நீ போமா உன் பிரண்டுக்கு ரத்தம் கொடு…

ரொம்ப தேங்க்ஸ் அண்ணானு சொல்லிட்டு அருள்ள பார்த்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சிட்டே கஃபேக்கு போனா அனு.

ஏன்டி! இது தான் பத்து நிமிஷத்துல கஃபேக்கு வரதா-அபி

எருமமாடே எவ்ளவு நேரம் தான் உனக்காக வெயிட் பண்றது-சரண்

வாய தொறந்தா வரது ஃபுல்லா பொய்!உண்மைய சொல்லுடி…ஃபர்ஸ்ட் கால் பண்ணும் போது எங்க இருந்த-ஆனந்தி

அது ஒன்னும் இல்லடி….வர வழியில ஒரு சின்ன பஞ்சாயத்து…அத முடிச்சிட்டு வர டைம் ஆகிடுச்சு…பிரபலங்கள்னாலே பிராப்ளங்கள் தானேனு சின்சான் டையலாக் சொல்லி நாலு அடிய வாங்கிட்டு அன்றைய நாளுக்கான கச்சேரி அமோகமா ஆரம்பித்தது…

ஆனா அனுவோட நேரம்….அருளும் அதே கஃபேக்கு தான் பிரண்ட்ஸ் மீட் பண்ண வந்துருந்தான்…

ஒருத்தர ஒருத்தர் பார்த்து பெரிய ஷாக் ஆனாங்களா…இல்ல இவுங்கள எப்டியாச்சு சேர்த்து வைக்கனும்னு நினைச்ச கியூபிட் இவுங்க ரியாக்சன்ன பார்த்து ஷாக் ஆனுச்சானு தான் தெரியல…

“டேய் மச்சி!இங்க இருக்கோம்ங்கிற சவுண்ட் வந்ததுக்கு அப்புறம் தான் அங்க இருந்து நகர்ந்தான்….அப்டியும் அனுவ கிராஸ் பண்ணும் போது எப்போலயிருந்து கஃபேல ஹாஸ்பிடல் ஓபன் ஆச்சு….அப்புறம் என்ன சொன்ன பி பாசிடிவ் ரத்தம் கொடுக்கனும்மா…எங்கமா கொடுத்துடியா அப்டினு கேகும் போதே பேரர் வந்து மேம் உங்க கோல்ட் காஃபினு சொல்லி இன்னும் கொஞ்சம் அனுவ டென்ஷன் ஆக்கியும்,அருள்ளுக்கு இன்னும் கொஞ்சம் அனு மேல கோபத்த கிளப்பிவிட்டும் போயிட்டாரு.”

“இல்ல சார்!அது வந்து….”

“தப்பு தப்பு!யோவ் அப்டினு கூப்பிடனும்….”

“ஐயோ சார்! பிரண்ட்ஸ் பார்க்க வர அவசரத்துல பொய் சொல்லிட்டேன் சார்…இந்த சின்ன பிள்ளைய மன்னிச்சு விட்டுடுங்க சார். மீ பாவம் சார்…”

இப்படி வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பம்மிட்டு பேசுற அனுவ பார்த்து வந்த கோபம் கூட கம்மியாகிடுச்சு அருளுக்கு….

“நீ பொய் சொன்னது கூட தப்பு இல்ல! ஆனா அது ஒரு நல்ல விசயத்துக்கா இருக்கனும்! அப்புறம் டிராபிக் ரூல்ஸ் கொஞ்சம் மதிக்க கத்துக்கோனு கருத்து கந்தசாமியா சொல்ல…அனு ரொம்ப நல்ல புள்ளையா வெளிள தலைய தலைய ஆட்டிட்டு மனசுக்குள்ள ‘போயா டுபுக்கு’ அப்டினு சொல்லி அவன கலாய்சிகிட்டு இருந்தா.”

என்ன டா நம்ம இவன்ன கூப்பிட்டா….அந்த பொண்ணு கூட கடலைய போட்டுகிட்டு இருக்கான்.உதயா நீ போய் அவன கூப்பிட்டு வா-முத்து

இந்தா போரேன் இருடா-உதயா

டேய் மச்சான்னு உதயா சவுண்ட் கேட்டவுடனே….அனுவுக்கு ஒரு பாய் சொல்லிட்டு கிளம்பிட்டான்…

அடியே!உட்காரு….அந்த ஆள பார்த்து எந்திரிச்சு நின்னவ அப்டியே நிக்கிற-அபி

அபி சொன்னதுக்கு அப்புறம் தான் அருளை பார்த்து ஷாக்காகி நின்னுடோம்கிறதே அனு உணர்ந்தா.

அனு உட்கார்ந்துவுடனே! ஏன் அமுலு அந்த ஹேண்ட்சம் என்ன சொன்னாரு-அனிதா

ஹான் சுரைக்காய்க்கு உப்பு இல்லைனு… ஃபர்ஸ்ட் இங்கயிருந்து கிளம்பலாம்னு பாதிலே எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பிட்டா.

ஹலோ! ரெட் சுடிதார்னு அருள் வாய்ஸ் கேட்டும் அனு அந்த நாள்ளோட ஞாபகத்திலிருந்து வரல.

பக்கத்துல இருந்த அபி ஒரு கிள்ளு கிள்ளுனதுக்கு அப்புறம்தான் கிளாஸ்ல இருக்கிறத உணர்தா.

ஏண்டி எருமை மாடு இந்தக் கிள்ளு கிள்ளுறனு சொல்லி அபிய அடிச்சதுக்கு அப்புறம் தான்…ஏன் கிளாஸ்ல இருக்க எல்லாரும் நம்மலே பாக்குறாங்கன்னு யோசிச்சா…

“Hello! red chudidar I think you are physically present and mentally absent” அப்படின்னு அருள் சொன்னவுடனே…எந்திரிச்ச அனு.. “நோ சார் ஐ அம் mentally also present.”

“அப்படியா அப்போ நா என்ன சொன்னேன்.”

நோட்ஸ் குடுத்துட்டு இருக்கீங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷம் கிளாஸ்சே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.

இதுக்கு எதுக்கு லூசு மாதிரி சிரிக்குதுங்கனு யோசிச்ச அடுத்த நிமிஷம் அபி அனுகிட்ட அவரு உன்னோட நேம் கேட்கிறார்டின்னு சொன்னா.

கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு மை நேம் இஸ் அனு ஸ்ரீனு சொல்லுறதுக்கும் அந்த கிளாஸ் ஓவர்னு சொல்லுற பெல் அடிக்கிறதுக்கும் கரெக்டா இருந்துச்சு.

Epi-4

அடுத்த கிளாஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உள்ள கேப்ல எல்லோரும் ஓட்டி எடுத்துட்டாங்க அனுவ…

அது எப்டி அமுலு நோட்ஸ் குடுக்குறாங்கள….. இன்னிக்கு தான் அவரு கிளாஸ்க்கே வராரு… அதுக்குள்ள உனக்கு நோட்ஸ்ஸா….-அபி

அத விடுங்கடி… இவ சொன்னாலே ஆல்சோ மென்டலி பிரசன்ட்னு… அதுல எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு…என்ன டா இவ கிளாஸ் கவனிச்சாலானு…அப்புறம் இவ சொன்ன நோட்ஸ் குடுக்குறாங்கனுதுல தான் உயிரே வந்துச்சு…-கலை

அடியே அவ கிளாஸ் கவனிக்கலைனாலும் டாப்பர்…. நீயும் நானும் ஆவரேஜ் தான்…அதுனால ஒழுங்கா கிளாஸ்ஸ கவனி-ஆனந்தி

நண்பேன்டா அமுலு நீ! என்ன விட்டுகுடுக்காம பேசுரியே- அனு

தூ…அதுலாம் ஒரு மண்ணும் இல்ல…ரொம்ப ஓட்டுனா மூஞ்சிய தூக்கி வச்சுக்குவ…அந்த கண்றாவிய யாரு பார்குறதுனு தான்…-ஆனந்தி

ஆனாலும் உனக்கு ரொம்ப கொலுப்புடி-அனு

அடுத்த கிளாஸ்க்கான சார் வந்தவுடனே அந்த அரட்டை கச்சேரி ஒரு வழியா முடிஞ்சிது…

ஒரு மாதங்கள்ளுக்கு பிறகு….

காலேஜ் லைஃப்ல எந்த மாற்றமும் இல்ல…ஆனா அனுவுக்குள்ள மட்டும் மாற்றங்கள் தாறுமாறா வந்துருந்துச்சு….. காரணம் வேறு என்ன காதல் மட்டும் தான்….

“அடியே!நா பெத்த மகளே…. இன்னிக்குகாவது கொஞ்சம் சீக்கிரமா குளிச்சிட்டு வா…பாத்ரூம் போனா ஒரு மணி நேரம் ஆகுது!குளிச்சிட்டு வர…போனா போன இடம்! வந்தா வந்த இடம்னு இருந்தா போர வீட்டுல நாலு அடிதா வாங்குவ…”

“அது சரி தேவி என்ன நா பெத்த மகளேனு சொல்லுற….எப்போயும் உன்னோட ஆஸ்தான டையலாக் அடியே எருமமாடேனு தானே சொல்லுவ…”

“அடியே என்ன கொலுப்பா!நேத்து தான் என்ன எருமமாடுனு கூப்பிடாத!எனக்கு கெட்ட கோபம் வரும்…எருமமாடு தான் உனக்கு புடிக்கும்னா என்ன எதுக்கு பெத்த…எருமமாடே வளர்க்க வேண்டியது தானேனு அந்த ஆட்டம் ஆடுன…இப்ப என்ன இப்படியும் கூப்பிடக் கூடாதா…”

“ஐயோ தேவி! நீ எருமமாடுனே கூப்பிடு.. அதுதான் நல்லா இருக்கு நான் ஏதோ நேத்து கோவத்துல சொல்லிட்டேமா..

இதெல்லாம் பெருசா எடுத்துக்கலாமானு சொல்லி ஒரு முத்தம் வச்சு தேவிய சிரிக்க வச்சிட்டா….”

“அட எரும கன்னத்த எச்சி பண்ணாத….”

“அம்மா!கிரேட் இன்சல்ட் எனக்கு…”

“பரவாலடி…கத பேசாம குளிக்க போ…அப்ப தான் சாப்பாடு தருவேன்…”

“ஆமா!அப்டியே பிரியாணியா செஞ்சு வச்சு இருக்க போற…

அதே சாம்பாரு தானே அதுக்கு ஓவர் பில்டப்பா குடுக்குறமா…”

“உனக்கு விதவிதமா ஆக்கி போடுரேன்ல…நீ இப்டியும் சொல்லுவ…இதுக்கு மேலயும் சொல்லுவ…மத்த அம்மாங்க மாதிரி வீட்டு வேல பாரு,சமச்சு வைனு சொல்லிடுந்தா…இந்த வாய் கொஞ்சம் குறஞ்சிருக்கும்.”

“ஐயோ!தேவி என்ன விட்ரு…தெரியாம கேட்டுடேன்.உன் சாம்பாரே அமிர்தமா இருக்கும்…நா போய் குளிச்சிட்டு வரேன்.அந்த அமிர்ததை எடுத்து வை…இந்தா வந்துடுரேன்.”

தேவி…

 

இந்தா வரேன் அனுப்பா…

நீ இன்னும் குளிக்க போகலையா…

இந்தா போயிட்டேமா….

“டேய் அழகா! உன்னால தான் நேத்து தேவிய நான் திட்டிடேன்…அதான் இன்னிக்கு இவ்ளோ திட்டு வாங்குரேன்.”(இல்லைனா மட்டும் நீ என்ன கம்மியாவ திட்டு வாங்குவனு சொன்ன மனசாட்சிய ஒரு கொட்டு வச்சு அனுப்பி விட்டா)

யாரேன்று அறியாமல் பேர் கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம் உருவானதே…

ஏனேன்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியேங்கும் மனம் போகுதே…

லேப்பின்(laptop) வழியாக வழிந்த G.Vன் குரல் அந்த அறை முழுவதும் ஒளித்து கொண்டிருந்தது.

டேய் அழகா டங்காமாரி பாட்டு கேட்டுகிட்டு இருந்த என்ன இப்டி லவ் சாங்கா கேட்க வச்சிடியே…இந்த கொடுமைய நா எங்க போய் சொல்ல…எங்கயும் வேண்டாம்…கல்யாணம்மாகட்டும் உன்னையவே கேட்க வச்சிடுரேன்…ஒரு இரண்டாயிரம் பாட்டு ஏத்தி வச்சிருக்கேன்…தினம் ஒரு சாங்க மனப்பாடம் பண்ண வைக்கிறேன்.அது தான் நீ என்ன கண்டுக்காம இருக்குறதுக்கான பனிச்மெண்ட்.

“அடியே எரும!ரூம்குள்ள போய் ஒன்ர மணிநேரம் ஆகிடுச்சு…இன்னுமாடி நீ குளிக்கிற…”

“ஐயோ! அம்மா சாப்பிட வர சொன்னத எப்டி மறந்தேன்…எல்லாதுக்கும் காரணம் இந்த அழகன் தான்…இந்தா வந்துட்டேன்மா…”

“ஏன்டி!குளிக்க போறதுக்கு முன்னாடி தானே அவ்ளோ திட்டு வாங்குன…கொஞ்சமாச்சு உறைக்குதா உனக்கு…உன்னலாம் எந்த நேரதுல பெத்தேன்னோ…சாப்பிட வந்து விடு…இப்பவே மணி மூன்னாச்சு…”

“ஏம்மா நீ ஜாதகத்த சரியா பார்கலையோ…”

ஏன்டி!

இல்ல உன்ன எந்த நேரத்துல பெத்தேன்னோனு கேட்டியே அதுக்கு தான்…அதுல தெளிவா டைம் எழுதிடுப்பாங்க?

இத சொன்ன நிமிசம் சாம்பார் கரண்டில ஒரு அடி பரிசா வாங்கினதுக்கு அப்புறம் தான் சாப்பிட ஆரம்பிச்சா…

“அடியே! மணி மூன்றை ஆகிடுச்சு…அந்த சன் டிவி வைடி…சிங்கம் படம் போட்டுறுவான்.”

“சிங்கம்மா!ஏம்மா அந்த படத்தையும் அவன் நூறு தடவ போட்டுயிருப்பான்…நீயும் எல்லா தடவையும் பாக்குற…அப்டி அதுல என்ன தான் இருக்கு…”

“சூர்யா இருக்காருல….நல்லா நடிச்சிருப்பாடி…எல்லா பாட்டும் அருமையா இருக்கும்…”

“ஆண்டவா!நீ தான் தேவிய காப்பத்தனும்…”

“அதுலாம் என்ன நல்லா தான் காப்பாத்துவாரு…நீ போய் டிவிய ஆன் பண்ணுடி…”

முன்னாடிலாம் படம் பார்க்கும் போது எப்டிடா இப்டி எல்லாருக்கும் பொசுக்கு பொசுக்குனு காதல் வரும் கேள்வி கேட்ட மனசுக்கு….வரும்னு ஸ்ட்ராங்கான பதில்லா சொல்ல வச்சது அழகன் மட்டும் தான்னு நினைச்ச மறுநொடி அருண்கிட்டயிருந்து தன்ன காப்பாதின விசயம் தான் அனுவுக்கு நியாபகம் வந்துச்சு….

அன்னிக்கும் அப்டி தான் பிரண்ட்ஸ் எல்லாரும் காலேஜ் முடிஞ்சும் பேசிட்டு இருக்கும் போது அருண் அனுவ பார்க்க வந்தான்.

ஏற்கனவே அருண் அனுவ ஃபாலோ பண்றது தெரிஞ்சாலும்…அவன் எந்த தொந்தரவும் செய்யாததுனால அனு எதுவும் கண்டுகிறது இல்ல…

ஆனா இன்னிக்கு பேச வரவும் தான் கொஞ்சம் அல்லு விட்டுடுச்சு…

அனு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்-அருண்

சொல்லு அருண்..

“ அதுவந்து அனு நீ பர்ஸ்ட் டே காலேஜ் வந்ததுல இருந்தே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.. “

“ஐயோ அருண் காமெடி பண்ணாம போ…”

“நான் சொல்றதை பார்த்தா உனக்கு காமெடி பண்ற மாதிரி இருக்கா! சீரியஸா நான் உன்னை விரும்புறேன்…ஐ லவ் யூ..”

“எனக்கு அந்த ஐடியா சுத்தமா இல்ல! நீ என்னோட ஃப்ரெண்ட் மட்டும்தான்…நம்ம கிளாஸ்ல இருக்க எல்லார்கிட்டயும் பேசுற மாதிரி தான் உன்கிட்டயும் பேசினேன்…இந்த மாதிரி ஒரு நினைப்பு உனக்கு இருக்குன்னு தெரிஞ்சு இருந்துச்சுன்னா உன்கிட்ட பேசுரதையே அவாய்ட் பண்ணியிருப்பேன்..”

“நான் உன்னை விரும்புறேன்னு சொல்றேன்… நீ என்ன புரிஞ்சுக்காம என்ன அவாய்ட் பண்ணியிருப்பேன்னு சொல்லுர…நீ இல்லைனா நான் செத்துடுவேன் அனு…”

“லூசுத்தனமா பேசாத அருண்!

நான்தான் சொல்றேன்ல எனக்கு அந்த மாதிரி ஒரு தாட்டே உன் மேல இல்ல!உன்ன ஃப்ரண்டா மட்டும்தான் நான் பார்த்தேன்… போய் படிச்சு பொழைக்கிற வழிய பாரு! என்ன விட்டுடு ப்ளீஸ்..”

“நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்! நீ சும்மா சொல்ற உனக்கும் என் மேல லவ் இருக்கு.. அத ஒத்துக்க மாட்டேங்குற… சொல்லு உண்மைய சொல்லு நானும் விரும்புறேனு சொல்லு..”

“நான் சொல்லிட்டே இருக்கேன்! நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கற அருண்.. நிஜமாகவே அப்படி எல்லாம் இல்ல! நீ எனக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான்…”

“திருப்பித் திருப்பி பொய் சொல்லாத அனு!நீ இப்ப என்ன விரும்புறேன்னு ஒத்துக்கோ.. இல்லைன்னா இந்த ஆசிட்ட உன் மேல வீசிடுவேன்…”

“ஹே அருண்! என்ன இப்படி எல்லாம் பண்ற இதெல்லாம் தப்பு..”

“தப்பு ரைட்லாம் எனக்கு தெரியும்டி!நீ இப்போ என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்கணும், ஒத்துக்கோ..”

அப்போதான் தன்னோட பைக் எடுக்க வந்த அருள், இத கவனிச்சுட்டு அனு பக்கத்துல வர்றதுக்கும்..அருண் ஆசிட்ட ஓபன் பண்றதுக்கும் கரெக்டா இருந்துச்சு.

அனு மேல ஆசிட் விழுகிறதுக்கு ஒரு நொடிக்கு முன்னாடி அத கீழ தள்ளி விட்டான் அருள்…

அதுல கோபமான அருண்! அருள்ள அடிக்க ஆரம்பிக்க…

அருளுக்கு கராத்தே தெரியுங்கறதால அருணோட அடி எல்லாத்துக்கும் சரமாரியா பதிலடி கொடுத்துட்டான்..

இங்கதான் அருளோடு முகத்தை ரொம்ப பக்கத்துல அனுவால பார்க்க முடிஞ்சது.. ஏற்கனவே நீல நிற விழிகளின் மேல் பைத்தியமாக இருப்பவள்(e.g: ஃபேஸ்புக்ல யாராச்சு ப்ளூஐ(Blue eyes)யோட இருந்தா பாரபட்சம் பார்க்காம எல்லாருக்கும் பிரண்ட் ரெக்வச்ட் கொடுத்து வைச்சிருப்பா…) நீல நிற விழிகளுடன் தனக்காக சண்டை போடும் அருளை கண்டு முதல் முறை காதல் என்னும் உணர்வை உணர்ந்தாள் அனு..

அதுக்கப்புறம் அருள் அருணை சஸ்பெண்ட் பண்ண வச்சதையோ…அதுக்கு அனு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்ததோ…கடைசியா அருள் டேக் கேர்னு சொல்லி போனதோ.. எதுவுமே கண்ணுக்கு தெரிஞ்சாலும் மூளையிலோ, மனசுலையோ பதியல அனுவுக்கு…ஏன்னா அருளோட அந்த நீல நிற விழிகளும் கோப முகமும் மட்டுமே மாறி மாறி கண்ணுக்கு எதிரே தோன்றிக்கொண்டே இருந்தது….

அன்னிக்கு எப்படி வீட்டுக்கு வந்தானு கூட சரியா ஞாபகம் இல்ல…

“ஏண்டி எருமமாடே! படம் முடிஞ்சும் இன்னும் என்னத்தடி டிவியில பார்த்துட்டு இருக்க…”

“நானும் மணி ஆறாச்சு,சாமி பாட்டு வைக்க அந்த டிவி ரிமோட்ட எடுத்து கொடுடினு ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கேன்! நீ பாட்டு டிவியவே கண்ணிமைக்காம பாத்துக்கிட்டு இருக்க…”

“ஐயோ அம்மா!ஆறு மணிக்கு நியூஸ் வரும்ல…அதுக்காண்டி தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…இந்தா நீயே சாமி பாட்ட கேளு.. நான் ரூமுக்குள்ள போறேன், அசைன்மென்ட் எழுத வேண்டியது இருக்கு…”

Epi-5

“ஹே!அமுலுஸ் குட்மார்னிங்…-அனு”

“வாடி நல்லவலே! என்ன அதிசயமா பத்து ஆகுறதுக்கு பத்து நிமிசம் முன்னாடியே வந்துட்ட….எப்பவும் கரைக்ட்டா டேன் ஓ கிளாக் தானே காலேஜ்குள்ள கால தூக்கி வைப்ப-அபி”

“அது ஒன்னும் இல்லடி தங்கம்…உங்களையேல்லாம் ரெண்டு நாள் பார்கலைல….யேன் கண்ணுக்குள்ளே இருந்திங்க…அதான்…-அனு”

“நெஞ்சு வலியே வந்துரும் போல இப்படி எல்லாம் பொய் சொல்லாத… உண்மைய சொல்லு உங்க அம்மா நீ வீட்லயிருந்தது போதும்னு சொல்லி துரத்தி விட்டாங்க தானே…-கலை”

“இஇஇஇ…கரெக்டா சொல்லிட்டடா அமுலு..ரெண்டு நாள் வீட்ல இருந்ததுக்கே ரொம்ப அவங்கள டார்ச்சர் பண்ணிட்டேன்னு ஒரு பொய் குற்றச்சாட்டை என் மேல வச்சு எங்க அப்பா கூட பத்த்த்துதுது நிமிஷத்துக்கு முன்னாடியே அனுப்பிவிட்டாங்க…-அனு”

“எது பொய் குற்றச்சாட்டா.. அது உண்மைனு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்! அப்புறம் என்ன இப்படி ஒரு டயலாக்கு-ஆனந்தி”

“சரி போதும் விடுங்கடி!என் மானத்த வாங்குறதுல அப்படி ஒரு ஆனந்தம் உங்களுக்கு எல்லாம்…

அதெல்லாம் இருக்கட்டும் இன்னிக்கி ஃபர்ஸ்ட் பீரியடு என்னடி-அனு”

“சாப்ட்வேர் இன்ஜினியரிங் நம்ம குப்புசாமி சார் கிளாஸ்-அபி”

“ஐயோ குப்பு கிளாஸ்ஸா! சாப்ட்வேர் இன்ஜினியரிங்கும் வேற வேற பெயர்ல மூனு செமஸ்டர்ரா வருது..

அது பேரு மாறி வந்தாலும் நம்ம குப்பு மூனே example வச்சு மூனு செமஸ்டரையும் ஓட்டுராரு…சத்தியமா பர்ஸ்ட் கிளாஸ்சே அவரோடது கவனிக்க முடியாது..அதனால எல்லாரும் கேன்டீன் போகலாம்டி…-அனு”

“லூசாடி நீ!மொத்தமா ஏழு பேரும் காணாம போனா…அந்த மனுசன் என்ன நினைப்பாரு…-சரண்”

“ஹான்…ஏழும் எங்கோ ஊர் சுத்த போயிடுச்சுனு நினைப்பாரு…ரொம்ப பேசாம வாடி..-அனு”

“வேண்டாம் அமுலு! ஃபர்ஸ்ட் கிளாஸ்சே பர்ஸ்ட் ரெண்டு பெஞ்சுல யாரும் இல்லனா தப்பாகிடும்…யாராது நாலு பேர் போலாம்…மீத மூனு பேர் இங்க இருக்கட்டும்-சரண்”

“சரண் சொல்லுறது கரைக்ட் தான்டி…நீ,அபி,கலை,ஆனந்தி போய்ட்டு வாங்க…நாங்க மூனு பேர் இங்க இருக்கோம்-நித்யா”

“சரி என்னத்தையோ பண்ணுங்க…நாங்க ஒரு ஹாவ்வனார் கழிச்சு வரோம்-அனு”

ஆனா அனுக்கு தெரியாது இன்னிக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் அருள் நடத்துரான்னு…குப்புசாமி சார் லீவ்னு….

கேன்டீன்ல அரட்டை கச்சேரிய முடிச்சிட்டு கிளாஸ்க்கு வந்தா அருள் அங்க ஸ்டூடண்ட்ச செமினார் எடுக்க சொல்லி நின்னு கவனிச்சுட்டு இருந்தான்.

“போச்சு எரும மாடு அருள் சார் க்ளாஸ் எடுத்துட்டு இருக்காரு…உன் பேச்சை கேட்டு கேன்டீன் வந்தோம் இல்ல எங்களை சொல்லணும்டி-கலை”

“உன்ன நானாடி வருந்தி வருந்தி கூப்பிட்டேன்.. நீயா தானே டீ குடிக்கிற ஆசையில கேன்டீனுக்கு வந்த… இப்ப என்னத்துக்கு என்ன மட்டும் சொல்ற…-அனு”

“அடச்சீ லூசுகளா உங்க சண்டைய நிப்பாட்டுங்க! இப்ப கிளாஸ்குள்ள போலாம் வாங்க…-அபி”

 

“மே ஐ கம் இன் சார்”னு அபி, கலை,ஆனந்தி கேட்க அனு மட்டும் கடைசியா நின்னதால கேட்கல…

எல்லாரையும் உள்ள வர சொன்ன அருள்.. அனு அவன கிராஸ் பண்ணும் போது மட்டும் அவ காதுல கேக்குற மாதிரி மே ஐ கம்மின்னு கேட்கணும்ங்கிற மேனர்ஸ் இல்லையான்னு கேட்டுட்டான்…

அதுக்கு பதில் சொல்ல அனு நினைச்சாலும்…எல்லாரும் அவுங்களே பார்கிறத பார்த்து போய் உட்கார்ந்திட்டா…

கிளாஸ் முடிஞ்சு அருள் கிளம்பினதுக்கு அப்புறம் தான்…அனுவுக்கு குப்புசாமி சார் அட்டனன்ஸ் சைன் வாங்கலைன்னு ஞாபகம் வந்துச்சு. ஏன்னா சாரோட அட்டனன்ஸ் எப்பயும் அனு கிட்ட தான் இருக்கும். கிளாஸ் டைம்ல அட்டனன்ஸ் போட்டுட்டு திருப்பி கொடுத்துடுவார்..

சைன் வாங்க ஸ்டாப் ரூம் போனா அங்க அருள் மட்டும் தான் இருந்தான்.

அட்டனன்ஸ் சைன் பண்ணாம வந்துட்டீங்க அப்படின்னு சொல்லி அட்டனன்ஸ்ஸ அருள் கிட்ட குடுத்தா…

தாங்கனு சொல்லி சைன் பண்ணி அருள் கொடுத்ததுக்கு அப்புறம்…

“அப்புறம் நீங்க மே ஐ கம் இன் கேட்கலைன்னு சொன்னிங்க… என் டிக்ஷனரியில் உங்ககிட்ட மே ஐ கம்மின்னு (may I come in) கேட்கணும்னா ஐ லவ் யூ ன்னு அர்த்தம்.. எல்லாருக்கும் நேர கேட்கலாமா…”

“ஹே லூசா நீ!படிக்கிற வயசுல என்ன லவ் உனக்கு…இப்டி தான் எல்லார்கிட்டயும் லவ் சொல்லிட்டு இருக்கியா…கொஞ்சம் கூட அறிவுங்கிறதே இல்ல… irresponsible idiot…படிச்சு முடிச்சு வேலைக்கு போய் உங்க அப்பா அம்மாக்கு பெரும சேர்க்க பாரு…”

“போதும் நிப்பாட்டுயா…அந்த பெரும பொறும எல்லாம் எங்களுக்கு தெரியும்…நீ ஒன்னும் சொல்லனும்ங்கிறது இல்ல…அப்புறம் என்ன சொன்ன🤔🤔…எல்லார்கிட்டையும் லவ் சொல்லிட்டு இருக்கேன்னா…நா எத்தன பேருக்கு சொல்லி நீ பார்த்த…சும்மா தெரிஞ்ச மாதிரி சொன்ன கண்ண நொண்டிடுவேன்…நான் முதல்ல லவ் சொன்னதும் உனக்கு தான்…முடிவ்வா சொல்லுறதும் உனக்கு மட்டும் தான்…நானும் இந்த ஒரு மாசம்மா உங்க பின்னாடி தான் சுத்துரேன்னு உங்களுக்கும் தெரியும்…அப்புறம் எதுக்கு என்ன ஹர்ட் பண்ற மாதிரியே பேசுற…”

“இது லவ் கிடையாது.. infatuation…அத முதல்ல புரிஞ்சிக்கோ…படிக்கிற வயசுல வரதுலாம் லவ்வே இல்ல…இது தெரியாம…இது தான் லவ்வுனு நினைச்சு உங்க வாழ்கையவே கெடுத்துக்குறிங்க…அப்புறம் ஐயோ அம்மானு சொன்னாலும் வாழ்க்கை இன்னொரு சான்ஸ் குடுக்காது…”

“அது சான்ஸ் குடுக்குதோ இல்லயோ…நீ குடுப்பியா மாட்டியா…”

“ஹே பொண்ணா நீ! இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீ திருப்பியும் அதே கேட்குற…”

“ஆமாயா!நான் பொண்ணு இல்ல பைய்யன்னு சொன்னா என்ன பண்ண போற…ஆனா நீ சொல்லுறதும் உண்ம தான்…படிக்கிற வயசுல்ல லவ் வேண்டாம்கிறது…பட் என் படிப்பு முடிய இன்னும் நாலு மாசம் தான் இருக்கு…அதுக்கு அப்புறம் நா வந்து லவ் சொன்னா ஏதுக்குவியா…”

“சான்ஸ்சே இல்ல!உன்னலாம் திருத்தவே முடியாது…”

“என்ன பெத்த தேவியாலே என்ன இன்ன வரைக்கும் திருத்த முடியல…அதுனால நீ என்ன தேவ இல்லாம திருத்த முயர்ச்சி பண்ணி டையர்ட் ஆகிடாத…”

“பொண்ணு மாதிரி ஃபர்ஸ்ட் நடந்துக்கோ…அப்புறம் சார்க்கு கொஞ்சம் மரியாத குடுக்க கத்துக்கோ…”

“இதுவே ஒரு பையன் பொண்ணு பின்னாடி அலஞ்சு…லவ் சொல்ல வச்சிருந்தா அது கரைக்ட்…அதுவே ஒரு பொண்ணு பண்ணா தப்பு…என்ன லாஜிக் யா உங்களோடது…சூப்பர்…ஆனா நீ கொஞ்சம் வேற மாதிரினு நினைச்சேன்….ஆனா அப்டிலாம் இல்லனு சொல்லுற…அப்புறம் என்ன சொன்ன…சார்க்கு மரியாத குடுன்னா…நா எல்லா சாருக்கும் மரியாத கொடுத்து தான் பேசுவேன்…உன்கிட்ட பேசும் போது மட்டும் தான் இப்டி வந்துடுது…”

இதுக்கு மேலயும் இரண்டு பேரும் என்ன பேசிருப்பாங்களோ…அதுக்குள்ளயும் ஸ்டாப் ரூம்முக்கு இன்னோரு சார் வந்துட்டாரு…அவரா வந்தாரா இல்ல கியூபிட் நீங்க ரெண்டு பேரும் பேசின வரைக்கும் போதும்…இல்ல இல்ல சண்ட போட்ட வரைக்கும் போதும்னு அனுப்பி விட்டுச்சானு தெரியல…

Epi-6

அனு போனதுக்கு அப்புறம் அருள் தலைய புடிச்சிட்டு உட்கார்ந்துட்டான்.உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அன்னிக்கு அனு ப்ரொபோஸ் பண்ணதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு.

“டேய் கிளம்பிட்டியா”-கோமதி

“அம்மா இப்போ நா கோவிலுக்கு வந்து என்ன பண்ண போறேன்…காலேஜ்க்கு போயிட்டு வந்து ஆபிஸ் வோர்க் பார்க்கவே கரைக்ட்டா இருக்கு எனக்கு…ஏன் இப்படி கோவிலுக்கு வந்தே ஆகனும்னு அடம் புடிக்குற”-அருள்

“இன்னிக்கு வரலட்சுமி நோன்பு டா.. அதனாலதா கோவிலுக்கு போலாம்னு சொல்றேன்.. அப்புறம் நீ காலேஜ் ஆபிஸ் இரண்டு வோர்க்குமே நல்லா பண்ணுவேன்னு எனக்கு தெரியும். அதனால பேசாம கிளம்பி வா…”

“ஐயோ அம்மா! வரலஷ்மி நோன்புக்கு நீங்க தானே கோவிலுக்கு எல்லாம் போவிங்க, விரதம்லாம் இருப்பிங்க…அப்புறம் எதுக்கு என்ன கூப்பிடுற…”

“ஏன்டா பொண்ணுங்க மட்டும் தான் கோவிலுக்கு போகணும்.. விரதம் இருக்கணும்னு எழுதி வச்சிருக்காங்களா…. ஏன் நீங்கல்லாம் எங்களுக்காண்டி விரதமல்லாம் இருக்க மாட்டீங்களா…”

“ஐயோ அம்மா! நான் உன்ன மட்டும் தானே சொன்னேன் நீ ஏன் பொண்ணுங்கன்னு எல்லாரையும் விஷயத்தில சேர்த்து இழுக்குற…”

“சரி அப்போ நா எல்லாரையும் இழுக்க வேண்டாம்னா நீ கோவிலுக்கு வா…”

“ஏம்மா இப்பிடி அடம் பிடிக்கிற..”

“டேய் உனக்கு நல்ல பொண்ணு கிடைக்கனும்னு தான் டா.. அப்புறம் இப்பலாம் நீ என் பேச்ச கேட்கிறதே இல்ல…அம்மாங்கிற பாசமே இல்ல உனக்கு..கோவிலுக்கு வாடானு சொன்னதுக்கு இவ்வளவு பேச வைக்கிற என்ன…”

“ஐயோ அம்மா தயவு செஞ்சு அழுக ஆரம்பிக்காத…இப்ப என்ன நா கோவிலுக்கு வரனும் அவ்வளவு தானே..”

“ஆமாடா..”

“சரி கிளம்பி வரேன்..கீழ போய் வேயிட் பண்ணுங்க..”

“நா கீழ போறேன் டா..நீ வேஷ்டி சட்டையில வா..”

“அம்மா நா வரதே பெரிசு..நீ என்ன வேஷ்டி சட்டையில வர சொல்லுர..”

என் புள்ளய வேஷ்டி சட்டையில பார்க்க ஆசையா இருக்குனு சொன்னேன்..நீ எனக்காக அது கூட செய்ய மாட்டியானு சொல்லி திருப்பி அழ ஆரம்பிச்சிட்டாங்க கோமதி.

திருப்பி டேங் ஓபன் பண்ணாத மா…நீ சொல்லுற படியே கிளம்பி வரேன்.. ஆனாலும் ஆ,ஊனா கண்ணுல தண்ணி வச்சே என்ன ஒத்துக்க வச்சிடுற..இதுக்குலாம் ஒரு நாள் உன்ன சேர்த்து வச்சு செய்ய போறேன்…

டேய் நா உன் அம்மாடா..நீ என்ன செஞ்சாலும் அதுக்கு பதில் குடுத்துருவேன் டா.. அதுனால இப்ப கிளம்பி வா நா கீழ போறேன்…

அதே நேரம் அனு வீட்ல…

“அம்மா எனக்கு இந்த சேலையேல்லாம் கட்ட வராது…என்ன டார்சர் பண்ணாம விட்டுடு அம்மா..”

“உன்ன என்ன டேய்லியும்மா கட்ட சொல்லுரேன்…இன்னிக்கு வரலெட்சுமி நோன்புடி..உனக்காக ஆசையா இந்த சேலை எடுத்திருக்கேன்…அதுனால இத கட்டிடு வா.. கோவிலுக்கு போலாம்…”

“ஐயோ அம்மா எனக்கு சேலை கட்டிடு நடக்க தெரியாது மா…போற வழில எங்கயாவது கண்டிப்பா புதையல் எடுத்துடுவேன் மா..”

“சரிடி தங்கமா பார்த்து எடு..”

“எதமா எடுக்க?”

“புதையல் எடுப்பேன்னு சொன்னியே..அதான் தங்க புதையலா எடுக்க சொன்னேன்..”

“ஓஓ..இது ஜோக்கா நா அப்புறமா சிரிக்கிறேன் மா…ஆனா இப்ப என்னால சேல கட்ட முடியாது..”

“ஏன்டி கட்ட முடியாது…”

“உனக்கே தெரியும்.. ஃபர்ஸ்ட் எனக்கு சேல கட்ட தெரியாதுனு.. நெக்ஸ்ட் அத கட்டிட்டு எனக்கு நடக்க தெரியாதுனு..இதலாம் விட முக்கியமான காரணம் சேல எப்போ அவுந்துடும்மோனு பயமாவே இருக்கும்மா..”

“எரும்மமாடே உனக்கு சேல கட்ட தெரியாதுனு எனக்கும் தெரியும்.. அதுனால நா கட்டி விடுரேன்..அவுராம இருக்க எல்லா சைடும் பின் குத்தி விடுரேன்டி.. அப்புறம் நீ நடக்க வேண்டிய தூரம் ரொம்ப இல்ல..பக்கத்து தெருவுல இருக்க கோவிலுக்கு தான் போக போறோம்…”

“என்ன மா இப்டி என் எல்லா குவஸ்டின்னுக்கும் பதில் சொல்லிட்ட..”

“நா உன் அம்மா டி…இப்போ அரட்ட அடிக்காம அந்த புடவைய எடுத்துட்டு ரூம்க்குள்ள வா..”

“அம்மா எல்லா சைடும் நல்லா பின் குத்திட்டியா…”

“எல்லாம் குத்திட்டேன்டி..எங்கையும் அவுராது…அதுனால பயப்டாம கிளம்பி வா.. அப்புறம் அந்த டேபிள் மேல மல்லிகை பூ கட்டி வச்சிருக்கேன்..அதையும் வச்சிட்டு கிளம்பி வா..நா வெளில வேயிட் பண்ணுறேன்…”

தலை நிறைய மல்லிகை பூவோடு சிகப்பு கலர் சேலையில வந்த அனுவ பார்த்து தேவி ஒரு நிமிசம் ஷாக் ஆகிட்டாங்க..இவ என்னடா இவ்ளோ அழகா இருக்கானு தான்…

“ஏம்மா என்ன பார்த்து இப்டி ஷாக் ஆகி நிக்கிற…நா பார்க்க எப்டி இருக்கேன்.. கொஞ்சம் அழகா இருககேன்னா…”

பூக்குட்டி! என்ன இப்டி கேட்ட…ரொம்ப அழகா இருக்க…என் கண்ணே பட்டுரும் போல…இப்பதான் நீ பொறந்த மாதிரி இருந்துச்சு…அதுக்குள்ளயும் இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டனு நம்பவே முடியலடானு சொல்லும் போதே லைட்டா கண்ணு கலங்க ஆரம்பிச்சிட்டாங்க தேவி..

அம்மா என்ன கண்ணுலாம் கலங்குது…எவ்ளோ நாள் கழிச்சு என்ன பூக்குட்டினு குப்பிடுற…அத அனுபவிக்கலாம்னா! இப்டி நீயும் அழுது என்னயும் அழுக வச்சிடுவ போலயேமா…

சரிடி அழுகல! வா கோவிலுக்கு போலாம்…

ஆனா இரண்டு பேரும் போறது ஒரே கோவிலுக்கு தான்..இது எதார்த்தமா நடந்துச்சா இல்ல கியுபிட்டோட பிளான்னானு தெரியல..

“டேய் அந்த பொண்ண பாரேன்…அப்டியே மகாலெட்சுமி மாதிரி இல்ல-கோமதி”

“யாரமா சொல்லுற..-அருள்”

“உனக்கு என்ன கண்ணு தெரியலயாடா..அந்தா வரா பாரு சிகப்பு கலர் புடவ கட்டி..அந்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்து தான்டா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்.”

“ஐயோ! அம்மா கொஞ்சம் மெதுவா பேசு…அந்த பொண்ணு என்னோட ஸ்டூடண்ட்..”

“உனக்கு ஸ்டூடண்ட்டா..நல்லதா போச்சு..பொண்ணு கேட்போம்மாடா…”

நீ இப்டியே தான் ஏதாவது பேசுவேன்னா..நா இப்பவே கிளம்புறேன் அம்மானு கோவமா அருள் சொன்னவுடன தான் அந்த பேச்ச கோமதி விட்டாங்க..அப்பையும் அருள்ள பார்த்து முறைக்கிறத விடல.. அந்த முறைப்புக்கு காரணம் வீட்டுல போய் அருளுக்கு கச்சேரி இருக்குங்கிறது தான்…அந்த கச்சேரி கோமதி திட்டுறதா இல்ல அழுகுறதானு அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

அனு தான் அருள்ள வேஷ்டி சட்டையில பார்த்து ஸ்டன் ஆகிட்டா..ஏதோ மனசுக்குள்ள ஒரு உந்துதல்..இப்பவே அருள் கிட்ட காதல சொல்லிடுன்னு…இப்போ ஏதுக்கிறானோ இல்லயோ காதல்ல சொல்லிடுன்னு மெதுவா சொல்லிட்டுயிருந்த மனசு..அஞ்சே நிமிசத்துல பேரலையா மாற ஆரம்பிச்சிடுச்சு…அதுடைய அழுத்தம் தாங்காம அனுவும் எப்டியாச்சு சொல்லிடலாம்னு முடிவு எடுத்துட்டா.

அதுக்கு தோதாவே அன்னிக்கு கோவில்ல இவுங்கள தவிர யாரும் இல்ல..

டேய் பிரகாரம் சுத்திட்டு வா! எனக்கு கால் வலிக்குது…அப்படின்னு சொல்லி கோமதி சன்னதிக்கு முன்னாடியே உட்கார்ந்துட்டாங்க.

அருள் பிரகாரம் சுத்த போறத பார்த்து அனுவும் தேவி கிட்ட கேட்டா..அம்மா நானும் போய் பிரகாரம் சுத்தவா..

சரி போயிட்டு வா!அதோட இன்னிக்கு ஆறு மணிக்கு ஏதோ விசேஷ பூஜையாம்… நாமதான் தெரியாம ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்.. இப்ப கூட்டமும் இல்ல அதுனால ஒரு 108 பிரகாரம் சுத்திட்டு வா.

என்னது 108ஆனு நினச்சாலும்.. அதுக்கு சண்ட போடுறதுக்கான டயம் இப்ப கிடையாது. ஏன்னா அனு தேவி கிட்ட சண்டை போடுறதுக்குள்ளேயும் அருள் பிரகாரத்தை சுத்தி முடிச்சுட்டு வந்துடுவான்கிறதால… மனசுக்குள்ளே தேவிய திட்டிட்டு பிரகாரம் சுத்த போயிட்டா…

கருவறைக்கு பின்புறம்மா போகும் போதே அனு அருள்ள நிப்பாடிட்டா..

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்-அனு

சொல்லுங்க!-அருள்

“நீதான்டா உலகத்துல்லே ரொம்ப அழகு!என் ராஜா,என் கண்ணுனு எல்லா அம்மாவும் அவுங்க பையன பார்த்து சொல்லிடுப்பாங்க…அது பொய்யின்னு அவுங்களுக்கே தெரியும்!ஆனா உங்க அம்மா பொய் சொல்லல…நீங்க அவ்ளோ அழகு… உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு…I love you..”

இப்டி அனு சொன்ன நிமிசம் அருள் சொன்னுது…வரும் போது ‘என்னை அறிந்தால்’ படம் பார்த்துட்டு வந்தியா…அந்த டையலாக் எல்லாம் சொல்லிட்டு இருக்க…

ஆமா..வரும் போது பார்த்தேன்…அதுக்கு இப்ப என்ன…ஏதோ நல்லா இருந்துச்சே டையலாக்குனு சொன்னேன்…ஆனா அந்த I love you உண்ம.

எப்ப இருந்து இந்த காதல்…-அருள்

“உங்கள ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது அப்டி எந்த எண்ணமும் இல்ல…ஆனா உங்கள திருப்பி திருப்பி பார்க்கும் போது தான் என் மனசுல நீங்க பதிய ஆரம்பிச்சிங்க…பார்க்கும் போதுலாம் சண்ட போட்டம்மே..அப்ப எனக்கு தெரியாது இது காதல்லா மாறும்னு…உங்க பின்னாடி இப்டி பைதியமா சுத்துவேன்னு…அப்புறம் அருண் கிட்டயிருந்து என்ன காப்பாத்தும் போது தான் முழுசா உங்க மேல காதல் வந்துச்சு…அண்ட் ஐ லவ் யூ…”

“படிக்கிற வயசுல இது தப்புன்னு உனக்கு தோணலையா…அப்புறம் எனக்கு நீ சொல்ற மாதிரி எந்த ஃபீலிங்கும் உன் மேல கிடையாது.. அதனால வேற வேல இருந்தா போய் பாரு…-அருள்”

“படிக்கிற வயசுல காதல் தப்புனு எனக்கும் தெரியும்…இதே ஒரு மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட கேட்டு இருந்தாங்கன்னா நானும் அப்படிதான் சொல்லி இருப்பேன் காதல் தப்புன்னு…ஆனா இப்ப என்னால அப்படி சொல்ல முடியாது… அப்புறம் உங்களுக்கு எந்த ஃபீலிங்கும் இல்லைன்னு சொன்னீங்க…காதல்ங்கிறது ஒருவகையான அன்புதான்! நீங்க என் மேல அன்பு வைக்கலைனாலும்…உங்க மேல நான் இந்த வானம் வரைக்கும் காதல் அதாவது அன்பு வச்சிருக்கேன்! உங்களுக்காகவும் உங்களோட பதிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன்.

அப்புறம் இன்னொரு விஷயம் மூஞ்சிய இந்த மாதிரி வைக்காதீங்க…ஃபர்ஸ்ட் டைம் ப்ரப்போஸ் பண்ற எனக்கே வேர்த்து வடியல… உங்களுக்கு ஏன் இப்படி வேர்த்து ஊத்துதுன்னு கேட்டுட்டு அனு போயிட்டா..”

அருள் சார் என்ன முழிச்சுட்டே தூங்கறீங்களா! நீங்க கிளாஸ் எடுக்குறதுக்கான பெல் அடிச்சுட்டாங்க பாருங்க… கிளாசுக்கு போகலையான்னு ப்ரொஃபஸர் ராம் கேட்டவுடன்னதான்! அருள் அந்த நாள்ளோட ஞாபகத்திலிருந்து வெளில வந்தான்.

உனக்கு எப்படி அனு நான் புரியவைப்பேன்… உன்னுடைய காதல என்னால ஏத்துக்க முடியாதுனு! இத உன்கிட்ட எப்டி சொல்ல போறேன்னு நெனச்சுட்டே… அடுத்த கிளாஸ் எடுக்குறதுக்கு அருள் கிளம்பிட்டான்…

Epi-7

எங்க பார்த்தாலும் மாணவர்களோட மகிழ்ச்சி முகம் தான்…அரட்டை கச்சேரி, ரிகர்சல்,மைக்செட், ஸ்பீக்கர்னு G.V காலேஜ் திருவிழா மாதிரி இருந்துச்சு…ஆமா இன்னிக்கு காலேஜ் கல்சுரல்.

“ஏன்டி நம்ம கல்சுரல்னு பொதுவா சொல்லிடுறோம்..ஆனா வருசா வருசம் இதுக்கு ஒரு பெயர் வைப்பாங்களே.. இந்த வருசம் என்ன பேருடி”-ஆனந்தி

“இந்த வருச நேம் ‘ஸ்வயம்-2019’ டி”-அபி

“எதுக்கு அமுலு ஸ்வயம்னு பேரு வச்சிருக்காங்க”-ஆனந்தி

“ஹான் எல்லாரும் அவுங்க அவுங்க சுயம்மா பண்ணனும்மா அதான்….கேக்குறா பாரு கேள்வி”-கலை

“ஒரு கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல தெரியல..இதுல என்ன கிண்டல் பண்ணுறாளுங்க”-ஆனந்தி

“அதுலாம் இருக்கட்டும்.. இந்த அனு கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருக்கா…யாராச்சும் கவனிச்சிங்களா”-அபி

“நானும் கவனிச்சேன்டி…”-நித்யா

“நானும்”-ஆனந்தி

“அப்ப இத்தன பேர் கவனிச்சிருக்கிங்க…அப்போ ஏன் யாரும் அவகிட்ட கேட்கல”-அபி

“அட நீ வேற..கேட்கலாம்னு போனாலே டாபிக்க மாதிடுறா”-ஆனந்தி

“அப்டியா!சரி வரட்டும் இன்னிக்கு கேட்கலாம்”-அபி

“குட் மார்னிங் மச்சிஸ்… என்ன எல்லாரும் சேர்ந்து பயங்கரமா டிஸ்கஸ் பண்ற மாதிரி இருக்கு…”-அனு

“இந்திய பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம்னா பேசப் போறோம் எப்பயும் போல காசிப் தான் பேசுறோம்…”-அபி

“ஓ சூப்பர் டி! வாங்க பேசுவோம்… ஆமா யாரை பத்தி பேசுறீங்க…”-அனு

“எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான்..இப்பலாம் ஒரு மாதிரியாவே இருக்காலாம்…யாராவது என்னனு கேட்டாலும் டாபிக்க சேஞ்ச் பண்ணிடுறாலாம்…ஒருவேளை காதல் பேய் புடிச்சிடுச்சோனு பேசிட்டுயிருக்கோம்…அவளுக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு எதுவும் தெரியுமா…”-ஆனந்தி

ஆத்தி! இவளுக ஒருவேளை நம்மள பத்தி தான் சொல்லுறாலுகளோ… டாப்பிக்க சேஞ்ச் பண்ணிடு அனு…யார்டி அந்த பொண்ணு…நமக்கு தெரியாம..

“உனக்கு யாருனு தெரியாதா…கொண்டே புடுவேன்…உண்மைய சொல்லு…என்ன ஆச்சு உனக்கு..”-கலை

எனக்கெல்லாம் ஒன்னும் ஆகல…எப்பவும் போல தான் இருக்கேன்.. இப்ப வாங்க ஆடிட்டோரியத்துக்கு.. டான்ஸ் ஆரம்பிக்க போகுது..

“சும்மா டாபிக் சேஞ்ச் பண்ணாத..உண்மைய சொல்லு என்ன நடக்குது”-அபி

“2 professors நடந்து போறாங்க நாலு பசங்க அஞ்சு பொண்ணுங்க நடந்து போகுது இப்போதைக்கு இங்க இது தான் நடக்குது அபி…”

“என்ன ஜோக்கா!ரொம்ப கேவலமா இருக்கு உண்மையை சொல்லு என்ன ஆச்சு உனக்கு…”-அபி

“ஹே!நீங்க என்ன கேட்டாலும் அவ சொல்ல போறது இல்ல.. வேஸ்டா எதுக்கு இவ்வளவு டயலாக் எடுத்து விடுறீங்க.. எப்படியும் ஒருநாள் நமக்கு தெரிய தானே போகுது, அன்னைக்கு பேசிக்கலாம்.. இப்போதைக்கு டான்ஸ் ஆரம்பிக்கப் போகுது.. சீட் கிடைக்காது அதனால வாங்க ஆடிடரியத்துக்கு போகலாம்-“ஆனந்தி

ஒரு வழியாஅந்தப் பேச்சுக்கு எண்டு கார்டு போட்டு அடிச்சு புடிச்சு சீட்ல எல்லாரும் உக்காந்துட்டாங்க.

இவங்க பேசி அவங்க பேசினு அரை மணி நேரம் கழிச்சு டான்ஸ் ப்ரோக்ராம்ம வழக்கம் போல பரதநாட்டியத்தோட ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்த பாட்டா வந்தது…

“ஏ தோட்டு கட ஓரத்திலே

ஏ தோடு ஒன்னாங்க

தோடு ரெண்டாங்க

தோடு மூணாங்க

வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க

வரவழச்சாக்க

மடி செரிஞ்சாக்க

வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க

வரவழச்சாக்க

மடி செரிஞ்சாக்க

வாறேன் போங்க”

என்னிக்கி சும்மா இருந்திருக்கா அனு.. எப்பயும் அவ ஒரு கவுண்டர் குடுத்துட்டு அமைதியாகிடுவா…கூட இருக்கவங்க தான் சிரிச்சு மாட்டிக்குவாங்க..

இப்பயும் அப்டி தான்..சாங் ஆரம்பிச்சவுடனே…எம் ஆர் ராதா வாய்ஸ்ல டயலாக் பேச ஆரம்பிச்சிட்டா..”ச்ச ச்ச ச்ச.. எத்தனை தடவ தான் டா இந்த பாட்டுக்கே ஆடுவிங்க…தோட்டுகடை,தோங்கட்டான் கடைனு…புதுசா ஆடுங்கடா”

இதுக்கு அப்புறமும்…சிங்சாங் சிங்சானு வர இடதுல எல்லாம் கண்டக்டர் விசில் வச்சு இவ மட்டும் ஊதுனது இல்லாம…இவ கேங்குக்கும் விசில் வாங்கிட்டு வந்து ஊத ஆரம்பிச்சிட்டா…

அடுத்த சாங்கா..

“நான் பாஞ்ச bullet-u தான்

ஆபத்தே chicklet தான்

கார் ஓட்டும் fight jet-u நான்

பொண்ணுங்க மாக்நெட்-உ நான்

எனக்குன்னு இல்ல கூண்டு

உன் நெஞ்சில ஏன்டா காண்டு

உனக்கென்ன வேணும் வேண்டு

என்னோட பேரு bond-u

Bond James Bond..”

பத்து எண்றதுக்குள்ள படதுல வர இந்த சாங்குக்கும்…வுரும் வுரும்னு வர இடம் புல்லா…ஸ்கூல் exercise பண்ண ஆரம்பிச்சுட்டா..

அன்னிக்கு ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லாரையும் ஒருமுறையாவது தன்ன பார்க்க வச்சிட்டா..சில பேரு யாருடா இந்த பொண்ணுன்னும்…சில பேரு யாருடா இந்த லூசு புள்ளைனும்…சில பேரு யாரு மச்சி இந்த அழகி அப்படின்னும்….

ஆனா எல்லாரும் கடைசியா நினச்சது…இந்தப் பொண்ணு கொஞ்சம் பிரண்ட்லி டைப் போல அப்படின்னுதான்… எல்லாராலயும் சீக்கிரமா எல்லார் கூடவும் பிரண்டாக முடியாது.. ஆனா அனு எல்லார்கிட்டயும் ஈஸியா பிரண்ட் ஆகிடுவா…அதுக்கு முதல் காரணம் அவளுடைய பிரண்ட்லியான சிரிப்பு தான்…எவ்வளவு சிரிச்சு பேசுனாலும், அவ்வளவு கோபமும் வரும்…ஆனா அது கூட இருக்க குளோஸ் பிரண்ட்ஸ்க்கு மட்டும் தான் தெரியும்.

ஒருவழியா டான்ஸ் புரோகிராம் முடிஞ்சு…பாட்டு போட்டி ஆரம்பிக்க போகுதுனு announcement உம்.. கூடவே ஒன் ஹவர்ல சாப்பிட்டுட்டு எல்லாரும் ஆடிட்டோரியத்துக்கு வந்திருக்கணும்னு inform பண்ணாங்க.

அன்னிக்கு தான் அருண்னும் சஸ்பென்ட் முடிஞ்சு காலேஜ் வந்துருந்தான்…வந்தவுடனே அனுவ பார்த்து சாரி கேட்கனும்னு இருந்தான்..பட் அனுவ பார்க்க முடியல…இப்ப அனு லஞ்ச்க்கு வெளிய வந்தவுடனே பேச வந்துட்டான்.

“ஹாய் அனு!எப்டி இருக்க..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…”-அருண்

“நீங்க கேண்டின்ல வெயிட் பண்ணுங்க டி வந்துடுரேன்…-“அனு

சொல்லு அருண்..நா நல்லா இருக்கேன்…நீ எப்டி இருக்க..எப்ப ஜாயின் பண்ண..

நல்லா தான் இருக்கேன்..இன்னிக்கு தான் ஜாயின் பண்ணேன்..உன்கிட்ட சாரி கேட்க தான் வெயிட் பண்ணேன்.

அன்னிக்கு நா அப்டி பண்ணிருக்க கூடாதுல…ஏதோ அவசரதுல அப்டி பண்ணிட்டேன்…அருள் சார் மட்டும் அன்னிக்கு வராம இருந்துருந்தா..இன்னிக்கு நம்ம ரெண்டு பேர் லைவும் ஸ்பாயில் ஆகிருக்கும்…தேங்காட்…அப்புறம்மும் நிறைய கவுன்சிலிங் சார் கொடுத்தாருனு அருண் சொல்லிட்டே போகத்தான்…அன்னிக்கு எதாவது நடந்து இருந்துச்சுனா,என்ன ஆகிருக்கும்னே அனுவுக்கு புரிய ஆரம்பிச்சது…ஏன்னா அப்போ தான் அவ அருள்ளோட புளூ ஐ பார்த்து எல்லாதையும் மறந்துட்டாலே…

‘பரவால அருண்..சாரிலாம் எதுக்கு!’ அப்டிலாம் சொல்ல மாட்டேன்..நீ பண்ணது தப்பு தான்..ஒரு பொண்ணு ஓகே சொல்லலைனா ஆசிட் ஊத்துவியா…நீ பாட்டு ஊத்திட்டு போகிடுவ…அதுக்கு அப்புறம் அந்த பொண்ணோட லைவ்வ யோசிச்சு பார்த்தியா…உங்களயேல்லாம் ஒன்னும் சொல்ல கூடாது…படத்துல காமிக்கிறாங்கள…ஓகே சொல்லலைனா ஆசிட் ஊத்துறது,பள்ளிகூடத்துலே லவ்ங்கிறது,சின்ன பையன் போதை பொருள் சாபிடுற மாதிரி…அவுங்கள எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சம்னா எல்லாம் சரி ஆகிடும்னு மேடையே இல்லாம அனு பேச ஆரம்பிச்சிட்டா..அதுக்கு அப்புறம் தான் அருண் ஃபேஸ்ச பார்த்திட்டு பேசுறத நிப்பாடுன்னா…மனசார தான் பன்னது தப்புனு நினைகிறவங்கள்ட அதே பேசுறது தப்பு…அதுனால இதுலாம் எதுவும் மனசுல வச்சிக்காத….போய் படி லைவ்வ பாரு…அப்டினு சொல்லிட்டு கேண்டின் போய்டா…

“என்ன மச்சி அருண் பேசுனான்”-அபி

“முயலுக்கும்,ஆமைக்கும் ரேஸ் வச்சா யாரு ஜெயிப்பாங்கனு பேசுனோம்…கேள்வி கேட்காம சாபுடுடி”-அனு

அப்பதான் ஜெனி வந்து..அனு நம்ம டிபார்ட்மெண்ட் சார்பா பாட வேண்டிய காவியாவுக்கு தீடிர்னு உடம்பு சரியில்லடி…நீ பாடேன்னு சொன்னா.

என்ன விளையாடுறியா ஜெனி நா எப்டி பாடுவேன்.

எப்டி பாடுவேன்னா வாயால தான் பாடனும்…கடுப்பு ஏதாம்ம வாடி ஃபர்ஸ்ட் சாங்கே நம்மளோடது தான்…

ஏன் வாய்ஸ் நல்லா இருக்காது டி…வேற யாரவது பாட சொல்லு ஜெனி.

உன் வாய்ஸ் நல்லா தான்டி இருக்கும்.டிபார்ட்மெண்டுலே நீங்க மூனு பேரு தான் நல்லா பாடுவிங்க…காவியாவுக்கு உடம்பு சரியில்ல..ராம் இன்னிக்கு காலேஜ் வரல…அது தான்டி உன்ன கூப்பிடுறேன்…

மேலும் கூட இருக்கவுங்களே…நம்மாள முடியலைனாலும்,உன்னால முடியாதுனு ஒன்னுமே இல்ல…நீ நல்லா பண்ணுவேன்னு சொல்லி ஊக்க படுத்துவாங்கள…அந்த வேலைய தான் ஏழு பேரும் பண்ணி அனுவ ஸ்டேஜ் ஏத்திட்டாங்க.

அனு செலக்ட் பண்ணி வச்சிருந்த பாட்டு வேற…ஆனா ஸ்டேஜ் ஏறுனவுடனே பார்த்தது சைட்ல இருந்த அருள்ள தான்…பார்த்த நிமிசம் அலைபாயுதே படத்துல வர கரோக்கி போட சொல்லிட்டு மேல ஏறிட்டா…

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்”

அந்த பாட்டுடைய வரிகளின் கனமா..இல்ல அருள் பதில் சொல்லாததால அனு அவன நினச்சிட்டே பீல் பண்ணி பாடுனதாலையானு தெரியல…அந்த ஆடிட்டோரியமே சைலண்ட் ஆகிடுச்சு…யாரும் அனு கண்ணுலயிருந்து வந்த கண்ணீர பார்கலைனாலும்..அருள் பார்த்துட்டான்.

இன்னும் ஒரு மாசம் கழிச்சு ரிசைன் பண்ணுறதா இருந்த வேலைய…அப்பவே ரிசைன் பண்ணிட்டான்…ஆனா ரிசைன் பண்ணி சைன் பண்ணும் போது அனுவோட அழுத முகம் தான் நியாபகத்துக்கு வந்துச்சு.

Epi-8

“என்னடி கல்சுரல்ஸ்லாம் முடிஞ்சிருச்சா..”-தேவி

“ஹான் முடிஞ்சிருச்சுமா…ரொம்ப டையர்ட்டா இருக்கு..சோ எனக்கு டிபன் வேண்டாம்.நான் போய் தூங்குறேன்.”

“அடியே நில்லு! என்ன முகம் அழுத மாதிரி இருக்கு..குரலும் கரகரங்குது..”

“அதுலாம் ஒன்னு இல்லமா.. எல்லா புரோகிராம்கும் கத்துனதால..குரல் கரகரங்குது அம்மா..வேற ஒன்னும் இல்ல..நா போய் தூங்குறேன்.”

“என்னமோ நீ சொல்லுற..நானும் கேட்குறேன்..ஏதாவதுனா சொல்லுடி…இப்ப கொஞ்சம் பால் குடிச்சிட்டு போய் படு.. வெரும் வயித்தோட படுக்க கூடாது.”

“சரிம்மா…பால் குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தலா தான் இருந்துச்சு அனுவுக்கு.. எல்லாத்தையும் சொல்லுற அம்மாகிட்ட இத சொல்லலைனு…இருந்தாலும் எப்டியிருந்தாலும் இத சொல்லி தான் ஆகனும்..அப்ப பார்த்துக்கலாம்னு போய் படுத்துட்டா.”

“ஹாய் டி! என்ன பண்ணிடு இருக்கிங்க..”-அனு

“கபடி விளையாட்டுறோம்..வா ஒரு கை குறையுது..விளையாடுவோம்..”-கலை

“என்னடி கிண்டலா..”-அனு

“பின்ன என்ன..நேத்து தான் கல்சுரல் முடிஞ்சிருக்கு…நம்ம டிபார்ட்மெண்ட் தான் டிராபி வின் பண்ணிருக்கோம்…அப்ப அத பத்தி தானே பேசுவோம்..”-கலை

“சரிடி!தெரியாம கேட்டுட்டேன்.. என்ன பண்ணுறிங்கனு…இன்னிக்கு ஃபர்ஸ்ட் பிரியட் என்ன..”-அனு

“நம்ம அருள் சார்ரோடது..”-அபி

ஆனா அன்னிக்கு கிளாசுக்கு வந்தது..ராஜா சார்..

ஹலோ ஸ்டூடண்ட்ச்! குட்மார்னிங்.

குட்மார்னிங் சார்..

என்னடா அருள் சார் தானே கிளாசுக்கு வருவாங்க…இன்னிக்கு என்ன ரொம்ப நாள் கழிச்சு இந்த சார் வந்துருக்காங்கனு நீங்க நினைக்கலாம்.என்ன பண்ணுறது எனக்கு உடம்பு சரியாகிடுச்சேனு சொல்லி கொஞ்சம் சிரிப்போட நிப்பாடுனாறு..

அருள் சார் மாதிரி ராஜா சாரும் கலகலப்பா தான் கிளாஸ் எடுப்பார்னாலும்..அருள்ள மிஸ் பண்றதால.. அங்க இருந்த எல்லார் சார்பாவும் ஒரு பையன் எந்திருச்சு அருள் சார் எங்க போனாங்கனு கேட்டுட்டான்.

அவன் கேட்கலைனாலும் அனு எந்திருச்சு கேட்டுறுப்பா..

நீங்க எல்லாரும் மறந்துட்டிங்கனு நினைக்கிறேன்.அருள் சார் எனக்கு பதில்லா கெஸ்ட் லேக்சரரா வந்தவங்க தான்..இப்ப எனக்கு தான் சரியானதால..நான் டியூட்டில ஜாயின் பண்ணிட்டேன்..அருள் சார் ரிசைன் பண்ணிட்டாங்கனு சிரிச்ச முகமாவே சொன்னாலும்..உள்ளுக்குள்ள எல்லா ஸ்டூடண்ட்ச்சோட சோக முகத்த பார்க்கும் போது நிஜமாவே ரொம்ப கஸ்டமாச்சு..ஏன் தம்பி இப்டி என்ன பொய் சொல்ல வைக்கிறிங்கனு…இருந்தாலும் ஒரு வாரத்துல எல்லாரும் அருள்ள மறந்துட்டு தன்னோட கிளாஸ் கவனிக்க வச்சிடலாம்ங்கிற நம்பிக்கையில அன்னிக்கு உள்ள கிளாஸ்ஸ ஆரம்பிச்சாரு.

நல்ல வேளயா அவர் யாருகிட்டையும் கிவிஸ்டின் கேட்கல..முக்கியமா அனுகிட்ட.கேட்டுருந்தா அன்னிக்கு சொன்ன மாதிரி நோட்ஸ் குடுத்துட்டு இருந்திங்கனு சொல்லிருப்பா.

அப்படியே அந்த ஹவர் முடிஞ்சவுடன்.. ஃப்ரீ ஹவர்ங்கிறதால..பாதிலே நிப்பாட்டுன அரட்டை கச்சேரி ஆரம்பிச்சது.எத எதயோ பேசி கடைசியா டாபிக் வந்து நின்னது…பிளேஸ்மெண்ட் பத்தி.

“எல்லாரையும் ஒரே கம்பெனி காரனே செலக்ட் பண்ணிருந்தா நல்லா இருந்துருக்கும்ல…”-ஆனந்தி

“ஏன்!அங்கயும் போய் இதே கச்சேரிய ஆரம்பிக்கிறதுக்கா…அங்க போயாச்சு கொஞ்சம் உறுப்படியா வேல பார்போம்..”-கலை

“எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்னு சொன்னா..ரொம்ப பண்ணுற கலை நீ.. “-ஆனந்தி

“சைதான்களே!சண்டைய நிப்பாட்டுங்க ஃபர்ஸ்ட்..”-அபி

“நம்ம ஏழு பேர்ல..மூணு பேர்க்கு இப்பவே மாப்பிள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..மீதம் இருக்கிறது நாலு பேர் தான்..அதுல நானும் கலையும் பிரியா கன்ஸ்ட்ரக்ஷன்ல செலக்ட் ஆகியிருக்கோம்.. ஆனந்தியும் அனுவும் அருள் கன்ஸ்ட்ரக்ஷன்ல செலக்ட் ஆகிடுறிக்கிங்க..அப்புறம் என்ன சமாளிச்சிடலாம்..அதோட இன்னும் டூ வீக்ஸ் தான் காலேஜ்…அப்புறம் பிராஜெக்ட் சம்மிட் பண்ண தான் வரனும்…சோ இப்பயும் சண்ட போட்டுகிட்டே இருக்காதிங்கடி…”-அபி

“அது சரிடி! இவ்வளவு நேரம் நாம எவ்ளோ பீல் பண்ணி பேசிட்டு இருக்கோம்..இவ என்னடானா இப்டி படுத்துருக்கா..”-சரண்

“அனு என்ன ஆச்சு..ஏன் இப்டி படுத்துருக்க..”-நித்யா

“தலவலிகுது அமுலு..நா வீட்டுக்கு கிளம்புறேன்…சார்கிட்ட லீவ் சொல்லிடு..கேட்டா ஒரு லெட்டர் எழுதி என் சைன் பண்ணி கொடுத்துடுனு சொல்லி வீட்டுக்கு கிளம்பிட்டா…இல்லைனா கண்ணுல இருந்து வர கண்ணீர்க்கு காரணம் சொல்லனும்..பொய் சொல்ல விரும்பாம தான் வீட்டுக்கு கிளம்பிட்டா…”

அனு வீட்டுக்கு வரது தெரியாததால…தேவி கல்யாண வீட்டுக்கு போய்டாங்க…

இருந்தாலும் அனுகிட்ட ஒரு ஸ்பேர் கீ இருந்ததால உள்ள போய்டா..

ஆனா உள்ள வந்த நிமிஷம் இவ்வளவு நேரம் கண்ணுல தேங்கியிருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளம்மா வெளிள வர ஆரம்பிச்சிருச்சு.. அதற்கு தோதா அம்மாவும் இல்லாததால தன்னுடைய சோகம் எல்லாம் கண்ணீர்ல கரஞ்சி போயிடாதாங்கிற ஏக்கத்தோடையே…கண்ணீரே தீரும் அளவுக்கு அழுது தீர்த்திட்டா.

நம்ம கதவ பூட்டிட்டு தானே போனோம்..இந்த நேரதுக்கு ரெண்டு பேர்ல யார் வந்துயிருக்கானு தெரியலையேனு நினச்சிட்டே தேவி கதவ திறந்தா…ஹால்ல படுத்திருந்தது அனு.

“அடியே எரும! என்ன காலேஜ் கட் அடிச்சிட்டியா…இந்த நேரத்துல வீட்டுல இருக்க”அப்டினு தேவி கேட்டதுக்கு அப்புறம் தான் அனுவோட முகத்த பார்த்தாங்க.

டேய் என்ன ஆச்சு!ஏன் இப்டி உன் முகம்லாம் வீங்கியிருக்கு..

“தலவலிம்மா…அதான்.”

“ஏன்டி!ஒரு சின்ன தலவலிக்கே இந்த அழுக அழுதின்னா…நீயெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி புள்ள பெக்க போறியோ…ஒன்னும் எனக்கு புரியல…இப்ப போய் முகம் கழுவிட்டு வா..காபி போட்டு தரேன்…அப்புறமா ஒரு மாத்திரை சாப்பிட்டு தூங்கு…சரி ஆகிடும்.”

“சரிம்மா.”

“ஏன்டி!வெளில மழை வருதானு பாரு.”

“ஏம்மா..”

“இல்ல நான் கேட்குறதுக்கு எல்லாம்..ஒரு வார்தையில பதில் சொல்லுறியே அதான்னு..சிரிச்சிட்டே சொன்னாங்க.”

“அம்மா”

“சரிடி கோவபடாத…போய் முகம் கழுவிட்டு வா.”

அருள்ளோட நியாபகத்துலையும்…பிராஜெக்ட் டேன்சனுலையுமே அனு காலேஜ்ஜ முடிச்சிட்டா…ஆனா எந்த வேலை பார்த்தாலும்…செல்லரிக்கும் கரையான் மாதிரி அருள்ளோட நியாபகம் எப்போழுதுமே இருந்துச்சு.

“ஏன்டி எருமமாடே! காலேஜ் படிக்கும் போது தான்..ஒரு வேலையும் பார்க்க மாட்ட…இப்பயாசும் வீட்டுல கொஞ்சம் வேலை பார்த்தா என்ன..”

“அம்மா என்னாலயெல்லாம் வேல பார்க்க முடியாது…நீங்களை பார்த்துகோங்க..அப்டினு சொல்லி தேவி திட்ட ஆரம்பிக்கிறதுகுள்ள லைப்ரரிக்கு கிளம்பிட்டா.”

இங்க தான் கியூபிட்…எனக்கு ரொம்ப போர் அடிக்குதே..என்ன பண்ணலாம்னு யோசுசிச்சு…அனுவ மாட்டிவிட பிளான் பண்ணிடுச்சு.

கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே இல்ல இவளுக்கு…எல்லா பெட்சீட்டும்,பெட் கவரும் எடுத்துட்டு வந்து துவைக்க போடுனு சொன்னேன்…அதுக்குள்ள லைப்ரரி போயிட்டா…இவள பெத்ததுக்கு பதில்லா ஒரு அம்மி கல்ல பெத்துருக்கலாம்..

மாவு அரைக்கவாது யூஸ் ஆகிடுக்கும்னு…அனுவ திட்டிக்கிட்டே பெட்கவர் எடுக்க அனு ரூம்முக்கு போனாங்க.

பெட்சீட்,பெட்கவர் எடுத்ததுக்கு அப்புறம் தான்..பில்லோ கவர் எடுக்கலைனு கவர உறுவுனாங்க…உறுவுன நிமிசம் கீழ விழுந்தது…அனு வரஞ்சி வச்சிருந்த அருள்ளோட ஃபோட்டோ உள்ள பேப்பர் தான்.

இப்டி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சிருந்தா…அனு கிளம்பியிருக்க மாட்டாளோ…

கீழ விழுந்த பேப்பர்ர எடுத்து பார்த்தா..அங்க ஒரு பையனோட கோப முகம் உள்ள படமும்,அனு கைபட எழுதியிருந்த கவிதையும்.

 

அத பார்த்த நிமிசம் பெரிய ஹாக்னாலும்…அனு வந்தவுடன கேட்கலாம்னு சொல்லி துணிய மிசின்ல போடுறதுக்கு போயிட்டாங்க.

“அம்மா ஒரு காபி.”

“தரேன்..இப்டி வந்து உட்காரு…கொஞ்சம் உன்கிட்ட பேசனும்..”

“அம்மா காஃபி குடுத்துட்டு பேசும்மா…எவ்வளவு நேரம் வேண்ணா கேட்குறேன்.”

“சரி! வெயிட் பண்ணு வரேன்.”

காஃபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்த தேவி…”ஏன் அனு உன்ன நாங்க ஏதாவது கஸ்ட படுத்துறோம்மா..”

“இல்லமா..”

“அப்ப நீ ஆச படுற ஏதாவது வாங்கி தராம இருந்தோம்மா..”

“இல்லமா..”

“எல்லாதையும் ஃபர்ஸ்ட் நீ என்கிட்ட தானே சொல்லுவ…

அதுவும் ஒரு பையன பார்தேங்கிறதுல ஆரம்பிச்சு…யார் யார் லெட்டர் குடுத்தாங்கனு வரைக்கும்…”

 

“ஆ..ஆ..ஆமாம்மா..”

 

“நான் கொஞ்சம் ஸ்ட்ரீட் மாதிரி நடந்துகிட்டாலும்…உன்னளவுல சுதந்திரம் குடுத்துருக்கேன்னா..இல்லயா..”

 

“குடுத்துருக்கிங்க அம்மா..”

 

அப்ப இது என்னது அனு..அப்டினு அந்த பேப்பர எடுத்து காமிச்சாங்க..

அம்மா அது வந்துனு..அனு ஆரம்பிக்கிறதுக்கும்…தேவி அவுங்க கை அனுவோட கன்னத்த பதம் பார்கிறதுக்கும்…கரைக்ட்டா இருந்துச்சு..

 

“அம்மா..”

 

“எத்தன நாளா இது நடக்குது அனு…”

 

“நீ அப்ப அப்ப அழுகுறதுக்கு காரணம் இது தான் கரைக்ட்…நா எத்தன தடவ கேட்டுருப்பேன்….ஆனா அத்தன தடவையும் தலவலினு சொன்ன நீ…ஒரு தடவ கூட உண்மைய சொல்லனும்னு உனக்கு தோனலியா..”

“பிளிஸ்மா!கோப படாதம்மா…உன்கிட்ட இந்த உண்மைய சொல்லலைனாலும்…தலவலினு நான் சொன்னதும் உண்ம தான் மா..”

“கண்டிப்பா உன் மேல கோபம் தான்..ஆனா நீ லவ் பண்ணுரியேனு இல்ல…ஏன்னா நானும் உங்க அப்பாவும் லவ் மேரேஜ் தான்…அத நான் தப்புன்னும் சொல்லல…ஆனா எப்ப இருந்து என் பொண்ணு பொய் சொல்ல ஆரம்பிச்சானு தான்..”

 

தேவி சொல்லி முடிச்ச நிமிசம்…அனு போய் தேவிய இருக்கி கட்டிகிட்டு அழுக ஆரம்பிச்சிட்டா..

 

“அம்மா சாரிமா!என்ன மனிச்சிடுமா…பிளிஸ்மானு சொல்லி ஒரு அரைமணி அழுது முடிச்சதுக்கு அப்புறம் தான் தேவிய அணைப்பில் இருந்து விட்டா…ஆனா அதுவரைக்கும் தேவியும் எதுவும் பேசல…”

 

அவுங்க அவுங்களுக்குள்ளே கேட்டுகிட்டு இருந்தாங்க…எங்க நாம தவறிட்டோம்னு…அது அவுங்கள அறியாமே கேள்வியாகவும் வெளிய வந்துடுச்சு..

 

ஐயோ அம்மா!நீங்க எங்கயும் தவறல…நான் தான் உங்க பொண்ணுங்கிறதுல இருந்து தவறிட்டேன்னு சொல்லி திருப்பி அழுக ஆரம்பிச்சிட்டா…

 

ஒருவழியா அழுது அழுது ஓஞ்சதுக்கு அப்புறம் தேவி கேட்ட கொஸ்டின் “யார் அந்த பையன்?”

 

“பேரு அருளழகன் மா..எங்க காலேஜ்ல தான் லெக்சர்ரா இருந்தாங்க..”

 

“இருந்தாங்கனா..”- தேவி

 

“இப்ப இல்லமா..ரிசைன் பண்ணி போயிட்டாங்க..”

 

“சரி இப்ப என்ன பண்ணுறாரு..?”

 

“தெரியாது மா..”

 

“எங்க இருக்குறாரு..?”

 

“தெரியாது மா..”

 

“போன் நம்பர் இருக்கா..?”

 

“இல்லமா..”

 

“எங்க தங்கியிருக்காங்கனு தெரியுமா..?”

 

“தெரியாது மா..”

 

“என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்கா..?”

 

“கண்டிப்பா இல்லமா..”

 

“அப்ப நீ லூசா..?”

 

“இல்லமா..”

 

“ஆனா எனக்கு என்னமோ நீ முழு லூசு ஆகிட்டேன்னு தெரியுது.. அந்த பையன் எங்க இருக்கானு தெரியாது, என்ன பண்ணுறாங்கனு தெரியாது,நம்பர் கிடையாது.. அப்புறம் எப்படி இந்த லவ்..”

 

“அம்மா நீங்க சொல்லுற மாதிரி அவுங்கள பத்தின டீடைல் என் கிட்ட இல்லைனாலும்…என்னுடைய காதல் உண்மை மா.. கண்டிப்பா தேடி நா கண்டு பிடிச்சிடுவேன்.”

 

“நம்பிக்கை இருக்கலாம் அனு…ஆனா எதுவுமே தெரியாம எப்டி கண்டு புடிப்ப நீ..”

 

“எனக்கு நம்பிக்கை இருக்கு மா…என் காதல் உண்மையானது…நிச்சயமா நான் கண்டு பிடிச்சிடுவேன் மா…ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..”

 

“உன்கிட்ட எவ்வளவு டைம் வேணும்னு கேட்டா…காலம் முழுவதுக்கும்னு சொல்லுவ…அப்படிலாம் எங்கனால டைம் கொடுக்க முடியாது…எங்களுக்கு நீ ஒரே பொண்ணு…உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு.. எங்களுக்கும் ஆசைலாம் இருக்கு…சோ இரண்டு வருசம் டைம் தரோம்…அதுக்குள்ள கண்டுபிடி…இல்லைனா நிதர்சனத்த புரிஞ்சிகிட்டு நாங்க சொல்லுற மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்கனும்..சம்மதமா.”

“தேங்யூ சோமச் அம்மா…டீல்…கண்டிப்பா இரண்டு வருசத்துக்குள்ள கண்டுபிடிச்சு…அவனையும் காதலிக்க வச்சிடுவேன்…அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…உங்களுக்கு மாப்பிள்ளை தேடுறதுக்கான வாய்பே தர மாட்டேன்மானு சொல்லி சிரிச்சிட்டே கன்னதுல முத்தம் வச்சு கட்டிக்கிட்டா..”

“அடியே!கண்ணத்த எச்சி பண்ணாத…போ போய் துவச்ச டிரஸ்ஸ காய போடு.. நாளைக்கு புது ஆபிஸ்க்கு போனும்ல..”

“ஆமா மா!ஆனா என்னால டிரஸ் காய போட முடியாதுமா…ரொம்ப அழுது தலவலிக்குது இப்ப ஒரு காஃபி போட்டு தானு சொல்லி…அடுத்து தேவியோட திட்ட கேட்க ஆரம்பிச்சிட்டா”…

Epi-9

“அடியே! ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு,பாரு…இன்னும் ரூம்முக்குள்ள என்ன தான்டி பண்ணுற..”

“இந்தா வந்துட்டேன் மா..”

“எவ்வளவு நேரம்டி என்ன கத்த வைப்ப…டிஃபன் ஃபாக்ஸ் எடுத்துட்டு கிளம்பு.. இன்னிக்கு உங்க அப்பா கொண்டு போய் விடுவாங்க.”

“ஏம்மா முதல் நாள் மட்டும் தான் கொண்டு போய் விடுவாங்களா..”

“பின்ன!டேய்லி உன்ன கொண்டு போய் விடனும்மா…ஏதோ முதமுதல்லா போறியேனு உங்க அப்பாவ கொண்டு போய் விட சொன்னேன்..இனி நீயே ஸ்கூட்டில போ…அப்புறம் இன்னொரு விஷயம்..உன்ன விட்டா இந்த ஊரையே வித்துட்டு வந்துடுவ…அதுனால ரொம்ப வாய் பேசாம கிளம்பு…”

“கிரேட் இன்சல்ட் மா..”

“பரவாலடி கிளம்பு…அங்க போயாச்சு வேல பார்க்க பழகிக்க..இங்க மாதிரியே நின்ன நெடுமரம் மாதிரி இருக்காம..”

“அம்மா இருந்தாலும்..நீ என்ன ரொம்ப மட்டம் தட்டுற மா..”

“அடியே….”

“ஏம்மா உங்க ரெண்டு பேர் சண்டைய கொஞ்சம் நிப்பாட்டுறிங்களா…எனக்கு ஆஃபிஸ்க்கு டைம்மாச்சு..நீ உள்ள ஏறு பாப்பா..அப்டினு சொல்லி இவுங்க ரெண்டு பேரோட சண்டையையும்( போரையும்) நிப்பாட்டிடாங்க சுந்தரம்.”

காருக்குள்ள வந்தவுடன ரேடியோவுல பாடுன சாங்

“திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்

ஓ.. அன்பே..

நீ சென்றால்கூட வாசம் வீசும்

வீசும் வீசும் வீசும்

என் அன்பே…. என் நாட்கள் என்றும் போலப் போகும்

போகும் போகும் போகும்

என் உள்ளே என் உள்ளே

தன்னாலே காதல் வரம் கண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்

 

உள்ளமே உள்ளமே

உள்ளே உனைக்காண வந்தேன்

உண்டாகிறாய் துண்டாகிறாய்

உன்னால் காயம் கொண்டேனே

காயத்தை நசுக்கினேன் என்ன சுக ஆனந்தமே

நம் கனவிலும் வசித்தேன்

என்னுடைய உலகம் தனி

 

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்

 

சந்தோசமும் சோகமும்

சேர்ந்து வந்து காக்க கண்டேனே

சந்தேகமாய் என்னையே

நானும் பார்த்துக் கொண்டேனே

ஜாமத்தில் விழிக்கிறேன்

ஜன்னல் வழியே தூங்கும் நிலா

ஹோ காய்ச்சலில் கொதிக்கிறேன்

கண்ணுக்குள்ளே காதல் வினா வினா

 

திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்

ஓ.. அன்பே..

நீ சென்றால்கூட வாசம் வீசும்

வீசும் வீசும் வீசும்

என் அன்பே…. என் நாட்கள் என்றும் போலப் போகும்

போகும் போகும் போகும்

என் உள்ளே என் உள்ளே

தன்னாலே காதல் வரம் கண்டேன்

 

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்”

(இந்த பாட்டுல வர எந்த லையனையும் கட் பண்ண முடியல..அனுவோட ஃபீலிங்ஸ் அப்டியே சொல்லுற மாதிரி இருந்துச்சு..அதான் ஃபுல் பாடல் வரியும் குடுத்துட்டேன்🙊🙊)

அதற்கு அடுத்தும் நிறைய பாடல் காருக்குள்ள ஓடுனாலும்…அனுவின் மனம் என்னவோ இந்த பாடல்லே நின்னுருச்சு…எத்தனையோ மீம்ஸ்ல சோகமா இருக்கும் போது நாம பாடலில் வரிகளை தான் கவனிப்போம்னு பார்க்கும் போதுலாம்…அப்படியானு கேட்டு சிரிச்சிக்கிட்ட மனசுக்கு அப்டி தான்னு அருள் நிருபிச்சிட்டான்.

 

பாப்பா ஆபிஸ் வந்துடுச்சு.. எனும் சுந்தரத்தின் குரல் வந்தவுடன தான் அனு அந்த மோன நிலையில் இருந்து வெளில வந்தா..

 

ஓகேப்பா!பாய்…பார்த்து போங்கனு சொல்லிட்டு அந்த ஆபிஸ்ஸ நிமிர்ந்து பார்த்தா…ஐந்து மாடி கண்ணாடியால் ஆன கட்டிடம் கம்பிரமாக நின்றது.

ரிசப்ஷன்ல நின்ன பொண்ணுகிட்ட “ஹலோ மேம்!ஐம் அனு ஸ்ரீ.. அண்ட் நீயூ ஜாயினி இன் திஸ் ஆபிஸ்.”

“ஹலோ அனு!வெல்கம் டூ அவர் ஆபிஸ்”

“தேங்யூ மேம்”

“மேம் வேண்டாம்..கால் மீ கவி”

“ஓகே கவி!நா யார போய் பார்க்கனும்.. ஜாயின் பண்ணுறதுக்கு..”

“கமல் சார மீட் பண்ணுங்க..அவுங்க கேபின் லாஸ்ட் புளோர்ல..ரைட் சைட் சேகன்ட் ரூம்.அண்ட் ஹேவ நைஸ் டே.”

தேங்க்யூ கவி..நா மீட் பண்ணிக்கிறேன்.. ஈவினிங் பாக்குறேன்னு ஒரு சிநேக புன்னகையோட கிளம்பிட்டா அனு.

“மே ஐ கமின் சார்”-அனு

 

“எஸ் கமின்”-கமல்

 

“சார் ஐம் அனு ஸ்ரீ.நியூ ஜாயினி.”

 

“தெரியும்..உங்க பைல் தான் பார்த்துட்டு இருந்தேன்.உங்களுக்கு மூணு மாசம் டிரைனிங்..நெக்ஸ்ட் கேபின்ல சாரா இருப்பாங்க..அவுங்கள கான்டேக்ட் பண்ணுங்க அண்ட் வெல்கம் டூ அவர் ஆபிஸ்..”

 

“தேங்யூ சார்.”

 

“நோ ப்ராப்ளம்..”

இன்றோடு அனுவும் ஆனந்தியும் அருள் கன்ஸ்ட்ரக்ஷன்ல சேர்ந்து மூணு மாசம் ஆகிடுச்சு.சோ டிரைணிங்கிற போஸ்ட்ல இருந்து எம்ளாயிங்கிற போஸ்ட்க்கு புரோமொசன் வாங்கிட்டாங்க.

கியூபிட்டும் இவுங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சிடலாம்னு மூணு மாசம்ம்மா டிரை பண்ணி இன்னிக்கு தான் மீட்டிங்க சக்ஸஸ் பண்ண போகுது.

“அமுலு எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு..பாஸ்ஸ மீட் பண்ணணும்மாம்ல..”-ஆனந்தி

“அதுக்குயேன்டி பதட்டபடுற.. சிங்கம் புலியா உள்ள இருக்க போறது மனுசன் தானே..தைரியமா இரு..”-அனு

“சரிடி எதுக்கு நம்மள மீட் பண்ணனும்னு சொல்லிருக்காரு…”-ஆனந்தி

“நானும் கவிக்கிட்ட கேட்டேன் டி..அது இங்க இருக்க ப்ரசீஜர்ராம் டி…ட்ரெயினியாயிருந்து எம்ளாயியா மாறினா எம்டி தான் விஸ் பண்ணி ஜடி கார்ட் கொடுப்பாராம்.. அதுக்கு தான் மீட் பண்ண போரோம்.”-அனு

ஏன்டி ஐடி கார்டு குடுக்கவா ஒருமணி நேரம்மா உட்கார வச்சுருக்காயிங்கனு சொல்லி தன்னுடைய முகத்த தோல் பட்டையில இடிக்கிறதுக்கும்..கமல் கதவ துறந்துட்டு வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு.

“சாரி கைஸ்!சார் மீட்டிங்ல மாட்டிகிட்டாங்க..இப்ப போய் பாருங்க..”

“ஓகே சார்.”

“மே ஐ கமின் சார்”

 

யேஸ் கமின்னு சொல்லிட்டு அருள் பார்கிறதுக்கும்…அனு உள்ள வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு.

அனுவ பார்த்த நிமிசம்….இவ எப்டி நம்ம ஆபிஸ்க்கே வந்தாங்கிற அதிர்ச்சில அருள் சீட்லயிருந்து எந்திருச்சிட்டான்.

அனுவுக்கும் அதிர்ச்சி தான்…அதிர்ச்சிக்கான காரணம் எங்க போய் இவன தேடுறதுன்னு நாம யோசிச்சா…நமக்கே எம்டியா இருக்கானே…இனி எப்டி நீ ஓடுரேன்னு நானும் பார்க்கிறேன் டானு நினைச்ச ஆனந்த அதிர்ச்சி…

ஹே நம்ம அருள் சாருடினு வந்த ஆனந்தியோட வாய்ஸ்ல தான் ரெண்டு பேரும் நிஜதுக்கு வந்தாங்க.

“சார் நீங்க இங்க எம்டினா…அப்ப காலேஜ்ல பாடம் எடுத்தது உங்க பிரதர்ரா சார்…”-ஆனந்தி

“நா ஒரே பையன் தான்மா…அது எங்களோட காலேஜ்…அது தான் வந்து கிளாஸ் எடுத்தேன்.. இந்தாங்க உங்க ஐடிகார்ட்…போய் ஜாயின் பண்ணிக்கோங்க..ஹேவ நைஸ் டே..”

தேங்யூ சோ மச் சார்னு ஆனந்தி சொல்லி ஐடிகார்ட்ட வாங்குறது தெரிஞ்சாலும்…அனு எதுவும் பேசல…. ரொம்ப நாள் நாம தேடுன பொருள்,எதிர் பார்க்காம நம்ம கைல கிடைக்கும் போது ஒரு சந்தோஷம்மும் கூடவே கண்ணீரும் வருமே…அந்த மனநிலையில இருந்தா.

அடியே சார் உன்கிட்ட தான் ஐடிகார்ட் குடுக்குறாங்க வாங்குனு ஆனந்தி கிள்ளுனதுக்கு அப்புறம்தான் கார்ட வாங்குனா..

ரெண்டு பேரும் கிளம்பினதுக்கு அப்புறம் கமலுக்கு பயங்கரமா திட்டு விழுக ஆரம்பிச்சிடுச்சு..

“யார கேட்டு கமல் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் எல்லாம் செலக்ட் பண்ணிங்க..”

 

 

“சார் இந்த இயர்ல இருந்து ரெண்டு ஸ்டூடண்ட் செலக்ட் பண்ணுங்கனு பெரிய எம்டி தான் சொன்னாங்க சார்..”

“ஓ!அத ஏன் என்கிட்ட சொல்லல…”

“சார் எப்பவுமே நீங்க இண்டர்வியூக்கு வர மாட்டிங்க சார்…நான் தான் செலக்ட் பண்ணுவேன்…எம்ளாயியா ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் தான் சார் நீங்க பார்பிங்க…அதான் சார் சொல்லல…சாரி சார்..”

“இட்ஸ் ஓகே!…”எனக்கு கொஞ்சம் தலவலியா இருக்கு..நா வீட்டுக்கு கிளம்புறேன்…முக்கியமான பைல் இருந்தா…வீட்டுக்கு எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டான் அருள்.

இன்னிக்கு இந்த சாருக்கு என்ன ஆச்சு..எப்பவும் நாம தானே செலக்ட் பண்ணுவோம் இப்ப எதுக்கு இப்டி கத்துறாரு…அவரு கண்ணு கூட கலங்குன மாதிரி இருந்துச்சு…என்னவா இருந்தா என்னடா உனக்கு…போய் வேலைய பாருனு மனசாட்சி திட்டுனதுக்கு அப்புறம்வேலைய பார்க்க போயிட்டான் கமல்.

கியூபிட்டும் ஆறு மாசம்மா இவுங்க ரெண்டு பேரையும் எப்படியாச்சு சேர்த்துடனும்னு போட்ட பிளான் எல்லாதையும் அருள் கிளோஸ் பண்ணிடான்.அதுனால கடைசியா ஒரு தடவ முயற்ச்சி பண்ணி பார்போம்…இப்பவும் சேரலைனா, ரெண்டு பேரும் பிரிஞ்சிடடும்கிற முடிவுல…மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுச்சு.

“ஹலோ அனு,ஒரு சின்ன ஹெல்ப்…”-கமல்

“சொல்லுங்க சார்..”

“எம்டி சாருகிட்ட அர்ஜென்டா ஒரு சைன் வாங்கனும்..வாங்கிட்டு சாராகிட்ட குடுக்க முடியுமா..”

“அப்கோர்ஸ் சார்..பட் நா சைன் வாங்குனா எம்டி வேற எதாவது சொல்லுவாங்க..”

“எதுவும் சொல்ல மாட்டாங்க…கேட்டா நா பாரின் கிளையண்ட்ட ரிசிவ் பண்ண போயிருக்கேன் சொல்லுங்க…இது அர்ஜென்ட் கேள்வியா கேட்காம எடுத்துட்டு போறிங்களா..”

 

“ஓகே சார்..”

“மே ஜ கம் இன் சார்”-அனு

“யேஸ்..”

“சார் இந்த ஃபைல்ல சைன் வேணும்..”

“வச்சிட்டு போங்க..”

“………”

“வாட்!ஏன் இப்டி பார்த்துட்டு இருக்கிங்க..”

“பதில் சொல்லுங்க..நா கிளம்புறேன்..”

“எதுக்கான பதில்…”

“என்னோட காதலுக்கான பதில்,ஏன் காலேஜ்ல ரிசைன் பண்ணிங்கனுங்கிறதுக்கான பதில்..”

நா ஏன் இதுக்கான பதில் எல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு அருள் சொன்ன நிமிசம் அனு அவனுடைய சட்டை காலர இறுக்கி பிடிச்சிருந்தா.

Epi-10

“என்ன பண்ணுற அனு..”

“என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்காடா…எதுக்கு உனக்கு பதில் சொல்லனும்னு சொல்லுற..”

“லூசு மாதிரிலாம் இல்ல…முதல்ல சட்டையில இருந்து கை எடு..”

 

“பதில் சொல்லு எடுக்குறேன்..”

“சொல்லி தொலையுரேன்…ஆனா அதுக்கு அப்புறம் என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது..”

“முதல்ல நீ சொல்லு! டிஸ்டர்ப் பண்ணுறதா வேண்டாம்மானு…கடைசியா நா சொல்லுறேன்.”

அத சொல்லுறதுக்கு முன்னாடி…இனி சும்மா கூட என்கிட்ட நீ பேச மாட்ட அனு…அண்ட் உன்ன மாதிரியே நானும் தான் ஐ லவ் யூ…பட் இது என்னிக்குமே நடக்க போறது இல்லனு மனசுக்குள்ள நினைச்சிகிட்டே…சொல்ல ஆரம்பிச்சான்…

ஒரு வருசத்துக்கு முன்னாடி நா பாரின் போயிருந்தேன்….அங்க ஒரு ஆக்ஸிடென்ட்… என்னால எப்பவுமே ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாது…அப்டினு சொல்லி அழுதுட்டே சுவர் பக்கமா திரும்பிட்டான்..

இதுக்கு தான் உன்ன அவாய்ட் பண்ணேன்…நீ ஸ்டேஜ்ல அழுதுட்டே பாடுனியே…அத பார்த்து தான் உன்ன ரொம்ப கஸ்டபடுத்துறேன்னு தோணுச்சு..அதான் ரிசைன் பண்ணிட்டேன்…ஆனா விதி வலியது போல என் ஆபிஸ்லே ஜாயின் பண்ணிருக்க நீ…என்ன மறந்துட்டு வேற எதாவது ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ…அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது…அப்டி சொன்னதுக்கு அப்புறமும் அனு கிட்ட இருந்து எந்த பதிலும் வராததால…அவ போயிட்டானு நினச்சு…ஐ லவ் ஸ்ரீ…அப்டினு அருள் சொன்னான்..

சில வினாடிகளுக்கு அப்புறமா திரும்புனா…அனு எங்க நின்னாலோ…அங்கேயே தான் இருந்தா…

“நீ இன்னும் போகலியா..”

“எங்க போயிருக்கனும்னு நினைக்கிற..”

“இல்ல இத கேட்டோன போயிருப்பேன்னு நினச்சேன்..”

“போயிருந்தா எப்டி நீ ஐ லவ் ஸ்ரீனு சொன்னத கேட்கிறது..”

“அது ஏதோ தெரியாம சொல்லிட்டேன்…உனக்கு இத விட பெட்டர் கம்பெனில வேல வாங்கி தரேன்…நீ உன் வாழ்க்கைய பார்த்துட்டு கிளம்பு..”

“என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…உடனே மனச மாதிட்டு…நீ சொல்லுற மாதிரி வேற பையன கல்யாணம் பண்ணிக்குவேனு தோணுதா..”

“இல்ல என்னால…”

“நிப்பாட்டுங்க”இப்ப என்ன உங்கனால அப்பா ஆக முடியாது…அதுனால என்ன…செக்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது…அத தாண்டியும் நிறைய இருக்கு…ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பு போதும் நாம மொத்த வாழ்க்கையும் வாழுறதுக்கு.. இப்பவும் சொல்லுறேன்..காதல்ங்கிறது அன்பு தான்…ஒரு தாய் தன்னுடைய கருவில இருக்க குழந்தை எப்டி இருக்கும்னு தெரியாம…ஒரு அன்பு வச்சிருப்பாங்கல…அது மாதிரி தூய்மையான அன்பு தான்,நா உங்க மேல வச்சிருக்கிறதும்..இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு இந்த மாதிரி ஆகியிருந்தா…நா என்ன உங்கள விட்டா போயிடுப்பேன்…கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…

நமக்கு குழந்தை இல்லைனா என்ன…இங்க எத்தனையோ குழந்தைங்க,அம்மா அப்பா இல்லாம இருப்பாங்க…அவுங்களுக்கு நாம அப்பா, அம்மாவா இருப்போம்…அப்புறம் ஒரு குழந்தைய தத்து எடுத்துகிட்டா அந்த புள்ளைக்கு மட்டும் தான் அப்பா அம்மாவா இருக்க முடியும்…அதுனால ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்…அங்க வர எல்லா குழந்தைக்கும் நாம நல்ல பெற்றோர்ரா இருப்போம்.. என்ன சொல்லுறிங்க..

“இதுலாம் நடக்கும்னு தோணுதா…நீ வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ..”

“யோவ்!என்ன கொழுப்பா..நா என்ன சொல்லிட்டு இருக்கேன்..நீ லூசு மாதிரி வேற பையன கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லுற..”

“இல்ல..நா”

“நிப்பாட்டு…நா கேட்கிறதுக்கு முதல்ல பதில் சொல்லு…ஆனா அந்த பதில் உண்மையா மட்டும் தான் இருக்கனும்..”

“கேளு..”

 

“டூ யூ லவ் மீ”…உங்க அம்மா மேல சத்தியமா உண்மையான பதில் தான் சொல்லணும்..

“யேஸ்..”

“ஹப்பாடி…உன்கிட்ட இருந்து இந்த பதில்ல வாங்கிறதுக்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டியதா இருக்கு…இனி நாம லவ்வர்ஸ்…கைய குடு…கங்ராஸ்லேசன்…”

“ஹே!நா என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீ என்ன சொல்லிட்டு இருக்க..”

“யோவ்!திருப்பி ஆரம்பிக்காத…என்னால முடியல..அழுதுடுவேன்னு வடிவேல் ஸ்டைல சொல்லி லைட்டா சிரிக்க வச்சிட்டா..”

இப்டியே…அருள் வேண்டாம்னு சொல்லுறதும் அனு சம்மதிக்க வைக்கிறதுலையும் ஒரு மாதம் ஓடிருச்சு…”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” அப்படி சொல்லுற மாதிரி பேசி பேசியே ஓகே சொல்ல வச்சிட்டா..

மூன்று மாதங்கள் கழித்து:

அந்த V.G மஹால்லே கூட்டத்தால நிரம்பி வழிஞ்சது…ஆமா இன்னிக்கு அனுவுக்கும் அருளுக்கும் கல்யாணம்..

பட்டு வேஷ்டி கட்டி மிக கம்பிரமா மேடையில உட்கார்ந்திருந்தான் அருள்…இந்த பக்கம் தேவ மங்கை தான் வந்துடுச்சோனு நினைக்கிற மாதிரி அவ்வளவு அழகோட அனு.

எல்லார் முகத்துலையும் அவ்வளவு சந்தோஷம்…அவ்வளவு நிறைவு…இவுங்க இரண்டு பேரோட பொருத்தத்த பார்த்து…

அன்று இரவு:

அருள் ரூம்ல இருக்க…அனு கல்யாண அலங்காரத்த கலச்சிட்டு மிதமான ஒப்பனையோட பச்சை காட்டன் சில்க் சேரி கட்டி…ஏற்கனவே சிகப்பான கன்னங்கள்…உறவு பொண்ணுங்களோட கேலியால இன்னும் சிகப்பாகி…வெட்கப்பட்டு கொண்டே அந்த அறைக்குள்ள நுழைந்தாள்.

“வா!அனு…இங்க உட்காரு..”

“ஏன் இப்டி வேர்குது உங்களுக்கு…”

“இது தான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்…எக்ஸ்பீரியன்ஸ் இல்ல…அதுனால தான்…”

“எனக்கு மட்டும் டேய்லி டேய்லி எக்ஸ்பீரியன்ஸ்ஸா…லூசு மாதிரி பேசாதயா…”

“சரி பேசல…ஆனா உன்கிட்ட ரெண்டு கேள்வி மட்டும் கேட்கனும்..”

“கேளுங்க..”

“நீ ஏன் எனக்கு இப்டி ஒரு பிரச்சினை இருக்குனு எங்க அம்மாகிட்டையும்..உங்க வீட்டுலயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்ட..”

“திருப்பி சொல்லுறேன்…இது ஒரு பிரச்சினையே கிடையாது…அப்புறம் இது உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்னு சொன்னிங்க…சோ இத எல்லாருக்கும் சொல்லி பெரிய இஸ்யூவா ஆக்க வேண்டாம்னு நினச்சேன்…அவுங்க நம்ம கிட்ட எதுவும் கேட்கலினாலும்…கண்டிப்பா அவுங்களுக்கு கஸ்டமா இருக்கும்…அதுனால இது என்னிக்குமே யாருக்கும் தெரிய கூடாது…இது என் மேல பிராமிஸ்…யாருகிட்டையும் நீங்களும் சொல்ல கூடாதுனு அனு சொல்லி முடிச்ச நிமிசம் அருள்ளோட அணைப்பில இருந்தா…”

அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறுகி…தன் இதழால் அவளது இதழில் கவி படைக்க ஆரம்பித்தான்…

மூச்சுக்கு கஸ்ட படுவாளேனு இவன் விட நினைக்க…எப்போழுது இதழ் முத்தத்தை…யுத்தமாக அனு மாற்றினால் என்பது தெரியவில்லை…மிக நீளமான முத்தத்திற்கு பிறகே இருவரும் பிரிந்தனர்.

“அடியே ராட்சசி…!மெதுவா டி…உதட்டுலயிருந்து இரத்தமே வந்துடுச்சு…”

“கலகலனு சிரிச்ச அனு…சரி சாரி செல்லம்…நெக்ஸ்ட் கேள்வி என்ன..

 

“நீ ஏன் அப்போ அப்போ வாங்க போங்கனு சொல்லுற…சில நேரம் வாயா போயா சொல்லுற..”

“நல்ல கேள்வி…பர்ஸ்ட் நைட் அன்னிக்கு கேட்க வேண்டிய கேள்வி தான்..”

“ரொம்ப பண்ணாத பதில் சொல்லு..”

“சரி சொல்லுறேன்”

“கேட்டுக்கோங்க…நல்ல மூட்ல இருந்தேனா மரியாதையா கூப்பிடுவேன்….கோவமா இருந்தேன்னா…என்ன அறியாமையே வாயாபோயா வந்துடும்…”

“அப்படியே வாடா போடாவும் வரும்…சொல்ல விட்டுட்ட…”

“ஆமா…”

அப்படி சொல்லும் உதடுகளுக்கு தண்டனை குடுக்குறதுக்கு முன்னாடி…அனுவோட கண்ணங்கள தன்னுடைய கைகளால தாங்கி…தேங்க்ஸ் அனு…தேங்யூ சோ மச்…நீ இல்லனா…நா என்ன ஆகிடுப்பேன்னு தெரியல…உன்னால மட்டும் தான் என்னுடைய உலகம் இவ்வளவு அழகாச்சுனு…தன்னுடன் இறுக்கி கொண்டான்..

ஒரு வழியா இவுங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச கியூபிட்…அடுத்த ரெண்டு பேர ஜோடி சேர்க்க கிளம்பிடுச்சு!

Sangeetha’s Paarvaiye ramyamaai- full novel

பார்வையே ரம்மியமாய்

பார்வை – 1

மதுர குலுங்க குலுங்க

நீ நையாண்டி பாட்டுப் பாடு”

அலறிக் கொண்டிருந்தது அங்கிருந்த லவுட் ஸ்பீக்கர்கள். ஸ்பீக்கரை விட அங்கிருந்த ஆட்களிடமிருந்து வந்த சத்தம் சற்றுத் தூக்கலாக இருந்தது. கரகாட்டம், சிலம்பாட்டம், மற்றும் மயிலாட்டம் ஆடும் கலைஞர்கள், சில வாத்தியக் கலைஞர்கள், இவர்களோடு நண்டும் சிண்டுமாக ஆறேழுப் பொடுசுகள் என்று அந்தப் புகை வண்டி நிலையமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது இவர்கள் கொடுத்த அலப்பறையில்.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிவந்தவர்களில்,  ‘இவைய்ங்களுக்கு இதே வேலையா போச்சு’ என்ற முகச்சுளிப்புடன் சிலரும், ‘அப்படி யாருக்குடா இந்த வரவேற்பு’ என்ற ஆர்வத்துடன் சிலரும் அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

கரகாட்டம் மற்றும் கோலாட்டக் கலைஞர்களுக்கு ஈடாகத் தன்னுடைய நடனத் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தான் பாண்டியன். ஒடிசலான தேகம். பளபள மஞ்சள் கலர் சட்டை. தொடை தெரிய தூக்கிக் கட்டிய கைலி. கண்களில் போன திருவிழாவுக்கு வாங்கிய டூப்ளிகேட் ரேபான். இவன் தான் பாண்டி என்று எல்லோராலும் பாசமாக மற்றும் கோபமாக அழைக்கப்படும் பாண்டியன். 

பாண்டியனின் தற்போதைய சந்தோஷத்திற்குக் காரணம் அவனுடைய ஆருயிர்த் தோழனும், உறவுமுறைப்படி பங்காளியுமான பிரபாகரன் இன்று வேலை முடிந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மதுரை வருகிறான் என்பதே. பிரபாகரன் இங்கு இருக்கும்வரை இனி மதுரையே இவர்கள் கைக்குள் இருப்பதாக ஒரு நினைப்பு பாண்டியனுக்கு.

பாண்டியிடமிருந்து கரகாட்டப் பெண்களைக் காப்பதே அந்தக் குழுவில் உள்ள ஆண்களுக்குப் பெரும் வேலையாகிப் போனது. அவர்களுடைய முறைப்புகளும் கடுப்புகளும் எல்லை மீறுவதற்குள்ளாக பிரபாகரன் வந்தப் புகை வண்டி மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்திருந்தது அதிர்ஷ்ட வசமாக. வேகமாக வந்து ஒரு சிறுவன் பாண்டியின் காதில் இத்தகவலைக் கூறிவிட்டு ஆட்டத்தில் ஐக்கியமானான்.

“எடோய் என் மாப்பிள்ளை வண்டி வந்துருச்சு. நான் போய் அவனைக் கூட்டியாரேன். எங்க தலை தெரிஞ்சதும் இங்கிருக்குற அம்புட்டு பயலுக காதும் செவிடாகுற மாதிரி ஒரு கொட்டு அடிக்கணும் புரியுதா? சத்ததுக்கு ஏத்த மாதிரிதான் இன்னைக்குப் படிக்காசு கிடைக்கும். சொல்லிபுட்டேன் ஆமா” என்று பொதுவாக நின்று அனைவரின் காதுகளிலும் விழுமாறு சத்தமாகக் கூறியவன், இரண்டு பேரை மட்டும் தனியாக அழைத்து,

“எழுதிக் கொடுத்த வசனமெல்லாம் ஞாபகம் வைச்சிருக்கீங்களாடா? நீங்க கூவுற கூவுல என் மாப்பி உச்சி குளிர்ந்து போயிடணும். இது மட்டும் நடந்துச்சு அண்ணன் உங்க ரெண்டு பேரையும் தனியா கவனிப்பேன்” என்று அவர்களின் காதைக் கடித்துவிட்டு அலப்பறையாக புகை வண்டி நிலையத்திற்குள் நுழைந்தான்.

அங்கோ இவன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வருவதற்குள் மொத்த ரயிலுமே காலியாகிப் போயிருக்க “மாப்பி… மாப்பி” என்று பாண்டி மட்டுமே தொண்டை வறளக் கத்திக் கொண்டிருந்தான். வெறுத்துப் போனவனாகத் தன்னுடைய அலைப்பேசியைக் கையில் எடுத்து அழைப்பு விடுக்க,

அழைப்பு ஏற்கப்பட்டதற்கு அடையாளமாக பெரும் சத்தம் வந்து பாண்டியின் காதை அடைத்தது. எங்கிருந்து இவ்வளவு சத்தம் என்பது புரிந்த நொடி வேக எட்டுக்களை எடுத்து வைத்து ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து சேர்ந்தான் பாண்டி. மூச்சு வாங்க ஓடி வந்தவன் கண்ட காட்சி,

சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாய் சூழ்ந்து ஆடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுநாயகமாக நின்று பாட்டின் சத்தத்தை விட அதிக சத்தமாக விசிலடித்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். 

கருமையான கேசம் அலை அலையாக அடங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய, இதழ்களுக்குப் போட்டியாகக் கூடவே சேர்ந்து சிரிக்கும் கண்களில் அவ்வளவு குறும்பிருந்தது. கூர்மையான நாசி, அளவான மீசை, ஆறடிக்குக் கொஞ்சமே கொஞ்சம் குறைவான உயரம், மாநிறத்தில் ஆண்மையின் மொத்த உருவமாக எந்தக் கவலையுமில்லாமல் ஆடிப் பாடிக் கொண்டிருந்தான் பிரபாகரன் சுருக்கமாகப் பிரபா.

பாண்டியைப் பார்த்தவுடன், “என்ன மாப்பி உன்னை வரவேற்க கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம் பார்த்தியா” என்று வாய் பேசினாலும் கால்கள் ஆட்டத்தை நிறுத்தவில்லை. பாண்டி வேகமாக வசனம் பேச வேண்டிய ஆட்களைத் தேட அவர்களோ மெய்மறந்து பிரபாவுடன் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“நிறுத்து… நிறுத்து… நிறுத்துங்கடா. இந்தா எல்லாரும் காசை வாங்கிட்டுக் கிளம்பு” என்று கோபமே உருவாக பாண்டி சொல்ல, அவனை அருகில் வந்து ஆரத் தழுவிக் கொண்டான் பிரபா.

“டேய் மாப்பி கூல்யா, கோவிச்சுக்கிட்டியா என்ன?” என்று அப்பொழுதும் நடனக் கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தவனின் தோள் மீது வம்படியாகக் கையைப் போட்டுக் கொண்டே கேட்டான் பிரபா.

“பின்ன என்னடா உன்னை வரவேற்க நான் வந்தா இவன் என்னை வரவேற்கிறானாம். போடா நான் எம்புட்டு பிளான் போட்டிருந்தேன் தெரியுமா? எல்லாம் வீணா போச்சு” விடாமல் முறுக்கிக் கொண்டான் பாண்டி.

“எது? இவனுங்க கூவுனதுதான் உன் பிளானா?” என்று அங்கு சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த இருவரையும் சுட்டிக் காட்டிப் பிரபா கேட்டவுடன்  அவ்விருவரும் வெகு பவ்வியமாக கைலியைக் கீழிறக்கி சட்டைக் காலரை இழுத்து விட்டுக் கொண்டார்கள்.

வேகமாக அவர்கள் இருவரின் அருகிலும் சென்ற பாண்டி, “அண்ணன் இல்லாத போதும் கரெக்டா உங்க வேலையை செஞ்சிருக்கீங்க டா. என்ன அண்ணனாலதான் அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்க முடியாம போச்சு” என்று உச்சு கொட்ட,

“அண்ணே காசு” என்று அவ்விருவரும் ஒற்றுமையாகக் கோரஸ் பாடித் தலையை சொரிந்தார்கள். “உங்களுக்கு இல்லாததாடா?” என்று கேட்டு சற்று அதிகமாகவே அவர்களுக்குப் பணத்தைக் கொடுக்கவும், பணம் வாங்கிய குஷியில் இருவரும்  மீண்டுமாகக் கோஷமெழுப்பினார்கள்.

“கலியுக இராம லெட்சுமணர்களே வருக வருக

மதுரை மண்ணின் உத்தம புத்திரர்களே வருக வருக”

என்று அவ்விருவரும் உச்சஸ்தாயில் கத்த, பாண்டி வெகு பெருமையாக மிதப்பாக பிரபாவை ஒரு பார்வைப் பார்க்க, பிரபாவோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

“ஏன்டா உனக்கு இந்தக் கொலைவெறி? நான் ராமன் நீ லெட்சுமணனா?” என்று சிரிப்பும் இருமலுமாக பிரபா கேட்க,

“நான் உன்னைய விட ஆறு மாசம் பெரியவன்டா. நான்தான் ராமன். நீ லெட்சுமணன்” என்று சிரிக்காமல் சொன்னான் பாண்டி.

“நீ ராமனா? ஊருக்குள்ள ஒத்த புள்ளை விடாம துரத்தி துரத்தி சைட் அடிச்சவனெல்லாம் ராமனாடா?” என்று அடக்க மாட்டாமல் மீண்டும் சிரிக்கத் தொடங்கியவன், “ஆமா, இந்த விஷயம் என் தங்கச்சிக்குத் தெரியுமா?” என்று கர்ம சிரத்தையாக வினவினான் பிரபா.

“அவ அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாடா” என்று முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டுப் பதிலளித்தான் பாண்டி.

“ஏன் மாப்பி? மறுபடியும் சண்டை போட்டியா? ரெண்டு பேரும் அடிச்சுக்காம இருக்கவே மாட்டீங்களாடா?”

“இல்ல மாப்பி. இது வேற” என்று வெட்கப்பட்டுக் கொண்டே பாண்டி கூற,

“ஆத்தீ! அதை விட இது இன்னும் டேஞ்ஜராச்சேடா. ஏன்டா உன்னை மாதிரியே ரெண்டு குட்டிப் பாண்டி டவுசரில்லாம மதுரையை வலம் வர்றது பத்தாதா? மூணாவது வேறயா?” அதிர்ந்து போனவனாக வினவினான் பிரபா.

“ம்ப்ச் இப்பவே வாயை வைக்காதே மாப்பி. எனக்கு… எனக்கு என்னை மாதிரியே ஒரு குட்டிப் பொம்பளைப் புள்ள வேணும்டா” அருகில் வந்து பிரபாவின் சட்டைப் பட்டனைத் திருகிக் கொண்டே பாண்டி கூற,

“உன்னை மாதிரி பொம்பளைப் புள்ளயா” என்று கூறி கற்பனை செய்துப் பார்த்த பிரபா வேகமாகத் தன் தலையை உலுக்கிக் கொண்டு, “மாப்பி நான் எங்கம்மாவுக்கு ஒத்தப் புள்ளடா. இப்படியெல்லாம் சொல்லி எனக்கு நெஞ்சு வலி வர வைச்சுடாத. அதுக்கும் மேல தயவு செஞ்சு நீ வெட்கம் மட்டும் பட்டுடாதே. தாங்க முடியலைடா டேய்” என்று சொல்லியவாறே அவர்களின் காரை நோக்கிப் போனான் பிரபா.

அங்கு அவர்களுக்கு முன்பாக பிரபா கொண்டு வந்திருந்த பெட்டிப் படுக்கைகளுடன் ஆஜராகியிருந்தார்கள் அந்த ஆறேழு வாண்டுகளும். 

“எங்கக்காக்கள் பெத்த ரத்தினங்களே, எப்படிடா இருக்கீங்க எல்லாரும்? முப்பெரும் தேவியரும் அதான்டா என் மூணு அக்காக்களும் நலமா? அவர்களுக்கு வாக்கப்பட்டு வந்த என் அப்பாவி மாமாக்கள் நலமா?” என்று அவர்களை நோக்கிப் பிரபா தொடுத்தக் கேள்விக் கணைகளுக்கு,

“சூப்பர் மாமா, நல்லா இருக்கோம் மாமா, டாப்பு டக்கரு மாமா” என்று ஆளுக்கொருப் பதிலாகத் தந்தார்கள் அந்த மழலைப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.

“அப்பாவி மாமாக்களா? அடப்பாவி மாமான்னு வேணா சொல்லு அதேன் அவெய்ங்களுக்குப் பொருத்தமா இருக்கும்” வாய் தன் பாட்டுக்கு முணுமுணுக்க பிரபாவின் பெட்டிகளை அந்த மகேந்திரா ஸ்கார்ப்பியோவினுள் வைத்துக் கொண்டிருந்தான் பாண்டி.

“ஏன்டா இப்படி குண்டக்க மண்டக்க பேசுற” என்ற பிரபாவின் கேள்விக்கு,

“சின்ன புள்ளைகென்டு நினைக்காத மாப்பி. அம்புட்டும் விஷம். நான் இப்ப எதாவது சொன்னேன்டு வையி, நாம வீடு போய் சேர்றதுக்குள்ள நாம பேசுன மேட்டரு போயிரும். இங்கனதான இருக்கப்போற, நாம சாவகாசமா பேசுவோம். இந்தாட்டி எத்தனை மாச லீவு மாப்பி? மூணு மாசமா ஆறு மாசமா?” என்று முன்னதை முணுமுணுப்பாகவும் பின்னதை சத்தமாகவும் கேட்டான் பாண்டி.

“இந்தாட்டி ஆறு மாசம் இங்கன தான் பாண்டி. ஆற அமர இருந்து வீட்டையும் மதுரையையும் ரசிக்கப் போறேன். கம்பெனியில சொல்லிட்டேன்டா. அஞ்சு மாசம் கழிச்சுத்தான் வருவேன்டு” பேசிக் கொண்டே பிள்ளைகள் அனைவரையும் நடு இருக்கையிலும் பின் இருக்கையிலுமாக அமர வைத்துவிட்டுத் தான் வந்து டிரைவர் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் பிரபா.

பாண்டியும் பெட்டிகளை ஏற்றி வைத்து விட்டு வந்து டிரைவர் இருக்கையில் அமர, அந்த மஹேந்திரா ஸ்கார்பியோ மதுரை ஹைவேசில் வேகமெடுக்கத் தொடங்கியது. இருக்கையை சாய்த்துவிட்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவாறு பிரபாகரன் கண்ணை மூடிக் கொள்ள, அவன் மனமறிந்தவனாக இளையராஜாவின் ராகங்களை ஒலிக்க வைத்தான் பாண்டியன்.

மெச்சுதலாக அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் பிரபா. பின்னிருந்து எழும் பிள்ளைகளின் சத்தமோ, அவர்களை மிரட்டும் பாண்டியின் குரலோ, வாகன நெரிசலோ எதுவுமே பிரபாவைப் பாதிக்கவில்லை. அவன் சிந்தை முழுவதையும் இளையராஜா ஆக்கிரமித்திருந்தார்.

பிரபாகரன் விவசாயக் குடும்பத்தில் ஒரு ஏழைத் தாய் தந்தையருக்கு மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு நான்காவதாகப் பிறந்தவன். தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் தாயாரின் தலையில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் விழ, பிரபா வளர்ந்தது முழுக்க முழுக்க அவன் அப்பத்தாளிடம்தான்.

“உங்க சீயான் வயல்ல சீரக சம்பா சாகுபடி போட்டாகன்னா ஊரு சனமே நம்ம வரப்பு வழியாதான்ப்பு கடந்து போகும். வாசனை புடிக்கன்டே அந்த வழியாத்தான் போவாக வருவாக. அம்பூட்டு வாசனையா இருக்கும் அந்த அரிசி. இப்பெல்லாம் எங்க அப்படி வாசம் வருது? கண்ட கண்ட உரத்தைப் போட்டு மண்ணு வீணா போச்சு” இப்படியாகப் பல விவசாயக் கதைகளைக் கேட்டே வளர்ந்தான் பிரபாகரன்.

தந்தை இறந்த பிறகு பிரபாவின் தாய் சுந்தரவடிவால் தனியாளாக விவசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை. வானம் பொய்த்துப் போவது, தண்ணீர் பற்றாக்குறை, உரங்களின் விலையேற்றம், இடைத்தரகர்களின் தலையீடு என்று ஏகப்பட்டத் தடைகள். உழும் நிலத்தில் களையெடுக்கத் தெரிந்த சுந்தரவடிவுக்கு இந்தக் களைகளை அகற்றும் மார்க்கம் புரியவில்லை.

விளைவு, நிலத்தை விற்றுவிட்டு மாமியார் மற்றும் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் அப்பொழுது ஓரளவு வளர்ச்சி அடைய ஆரம்பித்திருந்தத் தன்னுடைய பிறந்த ஊரான மதுரை திருப்பரங்குன்றத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறிய அளவில் ஒரு சாப்பாட்டுக் கடையைத் தொடங்கி அதில் வரும் வருமானம் மூலம் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.

தங்கம், தனம், சொர்ணம் என்று மூன்று அக்காக்கள் பிரபாவுக்கு. பெயரளவிலாவது இவையெல்லாம் இருக்கட்டுமென்று அவர்களின் தந்தை இவ்வாறு பெயர் சூட்டியிருந்தார் போல. 

மூவரின் திருமணம், சீர்வரிசை, பிரசவம் என்று சுந்தரவடிவு திணறிப் போனதென்னவோ உண்மை. பிரபாகரன் தலையெடுத்து சம்பாரிக்கத் தொடங்கிய பின்னர்தான் அவர் கால்கள் சொஞ்சம் ஓய்வெடுக்கத் தொடங்கின.

மூன்று அக்காக்களுக்கும் மதுரையின் சுற்று வட்டாரத்துக்குள்ளாகவே சம்பந்தம் தகைந்திருந்தது. மூத்த அக்கா வீட்டுக்காரர் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர். இரண்டாவது மாப்பிள்ளை சிறு அளவில் கட்டிட வேலைகளை கான்டிராக்ட் எடுத்து செய்பவர். மூன்றாமவரோ சிறிய அளவில் மெக்கானிக் ஷாப் வைத்திருந்தார். எது இருக்கிறதோ இல்லையோ மூன்று மாப்பிள்ளைகளிடமும் மாப்பிள்ளை முறுக்கு இன்னும் குறையாமல் இருந்தது.

பிரபா படித்தது கடல் பொறியியல் (Marine Engineering). திட்டமிட்டோ அல்லது லட்சியத்திற்காகவோ இதில் சேரவில்லை. தானாக அமைந்தது. இறுதியாண்டு படிக்கும்பொழுதே ஜூனியராக அதாவது ஐந்தாம் நிலைப் பொறியாளராக கேம்பசிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டான். 

அதன் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் படித்துப் பரீட்சை எழுதி, நான்கு, மூன்று, இரண்டு என்று முன்னேறி இன்றுத் தலைமைப் பொறியாளராக (சீஃப் என்ஜினியர்) டேங்கர் கப்பலில் பணிபுரிகிறான்.

தமக்கைகள் மூவரின் திருமணத்திற்காக வாங்கியிருந்த கடன்களையெல்லாம் அடைத்து முடிக்கவே போதும் போதுமென்றானது பிரபாவுக்கு. அதன் பிறகும் அவர்களுக்கென்றே செலவு செய்து கொண்டிருந்தவனை அவனுடைய அப்பத்தா தான் சொந்தமாக ஒரு வீடு கட்டுமாறு பணித்தார்.

அவர் விருப்பப்படியே கிட்டத்தட்ட இரண்டு கிரவுன்ட் நிலம் வாங்கிப் போட்டான் பிரபா. தோப்பு வீடென்றால் கொள்ளைப் பிரியம் அப்பத்தாவிற்கு. அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே சற்றே பெரிய இடமாகவே வாங்கினான் பிரபா.

ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அப்பத்தா இறைவனடி சேர்ந்துவிட, சோர்ந்து போனவனாக வீடு கட்டும் பொறுப்பை இரண்டாவது அக்கா தனத்தினுடைய கணவரிடம் ஒப்படைத்து விட்டுத் தன் கப்பல் பணிக்குத் திரும்பிவிட்டான் பிரபா.

வீடு கிரஹப்பிரவேசத்துக்குக் கூட வரவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து இப்பொழுது தான் நிலத்தில் அவனுடைய பாதங்கள் பதிகின்றன. 

நீல நிறம் என்றால் கொள்ளைப் பிரியம் பிரபாகரனுக்கு. கப்பலில் வேலை முடிந்ததும் அந்த நீலக் கடலையும் நீல வானத்தையுமே மணிக்கணக்காக ரசித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பான் இளையராஜாவின் இசையோடு. அதைப் போலவே பசுமை சூழ்ந்த வயல்வெளியையும் நீல வானையும் அதாவது பச்சையும் நீலமும் இணைந்ததாகக் கண்டு களிக்க வேண்டுமென்பது மட்டுமே அவனுடைய நீண்டநாள் கனவு.

அப்பத்தா விதைத்த விவசாயக் கனவு அவனுக்குள் விருட்சமாக வளர்ந்திருந்தது. சொந்த வீடு என்ற கனவு நிறைவேறிவிட்டது. அடுத்ததாகப் பெரிய அளவில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணம் சேமிக்கத் தொடங்கியிருந்தான் பிரபாகரன்.

“இறங்கு மாப்பி” என்ற பாண்டியினுடைய குரலைக் கேட்டுக் கண் விழித்த பிரபா வீட்டைப் பார்த்து அதிர்ந்து போனான். சொந்த வீடு குறித்த தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைத்திருந்தவனை மூன்று மாப்பிள்ளைகளும் இணைந்து,

“அப்படியெல்லாம் நீயா ஒரு முடிவுக்கு வந்துடாத தம்பி” என்று சொல்வது போல, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வாசலில் பிரபாவை வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

 

பார்வை – 2

“என்ன மாப்புள எப்படி இருக்க?”

“பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?”

“ஐயா பிரபா என்னய்யா ஆளே இப்படி இளைச்சுப் போயிட்ட?”

இப்படி ஆள் மாற்றி ஆள் கேட்ட எந்தக் கேள்விக்குமே பிரபாவிடமிருந்து பதில் வரவில்லை. வீட்டைப் பார்த்த அதிர்விலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. தாயார், மூன்று தமக்கைகள், அவர்களின் கணவன்மார்கள் அந்த இடமே சொந்த பந்தங்களால் சூழப்பட்டிருந்தாலும் பிரபாவால் எப்பொழுதும் போல அவர்களோடு ஒன்ற முடியவில்லை.

சுற்றி வர நிறைய இடம் விட்டுப் பல வகையான செடிகள் மற்றும் மரங்களுக்கு நடுவில் வீடு இருக்க வேண்டும் என்பதே பிரபா மற்றும் அவன் அப்பத்தாவின் விருப்பமாகும். அதற்காகத்தான் வாங்கும் பொழுதே இரண்டு கிரவுண்ட் வருமளவுக்குக் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுரடியில் இடம் வாங்கிப் போட்டான்.

கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி இருந்தாலும் இதற்காகவே இந்த இடத்தைத் தேர்வு செய்து வாங்கியிருந்தான் பிரபா. மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி என்று அவன் வளர்க்கத் திட்டமிட்டிருந்த அனைத்து ஜீவராசிகளுக்குமே அது வீடாக இருக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

மூன்று தமக்கைகளும் வரப் போக சற்றுப் பெரிய வீடாகவே ஒரு கிரவுண்டில் கட்டினாலும் எஞ்சியிருக்கும் இடம் தாராளமாக செடிகளுக்கும், மரங்களுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் போதும் என்றே நினைத்திருந்தான் பிரபா. ஆனால் இங்கு நடந்திருப்பதோ வேறாக இருந்தது.

அவனை வரவேற்றது ஒன்றல்ல மொத்தமாக நான்கு வீடுகள். பகுதிக்கு இரண்டாக இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வீடுகள் கார் பார்க்கிங் மற்றும் சகல வசதிகளோடு. நிலம் வாங்கிய புதிதில் சுற்றி ஃபென்சிங் போட்டுப் பாதுகாத்துத், தானும் அப்பத்தாவும் பார்த்துப் பார்த்து வைத்த மர வகைகளில் கால்பகுதி மட்டுமே மிஞ்சியிருந்தது.

“புண்ணியவான் வீட்டு வாசல்ல புங்க மரம் இருக்கணுமப்பு” என்று சொல்லியபடி அப்பத்தா வாசற்புரத்தில் நட்டு வைத்த நான்கு புங்கக்கன்றுகள் மட்டுமே ஆளுயர மரமாக வளர்ந்திருந்தன. இது தப்பியதற்குக் காரணம் தன் தாயார் சுந்தரவடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் பிரபா.

இப்படித் தன் நினைவுகளுடன் அதிர்ந்து போய் நின்றிருந்த பிரபாவை, “ஷாக்கைக் குறை, ஷாக்கை குறை இல்ல அதுக்கு வேற உன் மாமனுங்கத் தனி ஆவர்த்தனம் வாசிப்பானுங்க” என்று காதோரம் ஒலித்த பாண்டியின் கிசுகிசுப்பான குரல் நிஜத்திற்கு மீட்டு வந்தது.

“என்ன மாப்ளே அப்படியே அசந்து போய் நின்னுட்ட? என்னடா நாம ஒரு வீடு கட்டத்தானே காசு கொடுத்தோம், எப்படி மாமா நாலு வீடு கட்டியிருக்காங்கன்னு பார்க்குறியா?

உனக்கும் நல்லது கெட்டது சொல்ல எங்களை விட்டா யாரு இருக்கா மாப்ளே? அதான் நாங்க சகலைங்க மூணு பேருமா சேர்ந்து பேசி உனக்கும் அத்தைக்கும் ஒத்தாசையா இங்கனக்குள்ளவே இருந்துக்கலாமுன்னு முடிவு பண்ணோம்.

உங்கக்காங்களுக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கிருந்தாலும் உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது பாரு. அதான் நாங்களாவே பணம் பொரட்டிக் கட்டிக்கிட்டோம்” என்று ரொம்பவும் பெருந்தன்மையாகக் கூறினார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர்.

“நீ கொடுத்தக் காசுக்கெல்லாம் வரவு செலவுக் கணக்கு வழக்குப் பக்காவா வச்சிருக்கேன் பிரபா. நீ எப்பக் கேட்டாலும் உடனே கொடுத்திடுவேன்” என்று கேட்டால்தான் வரவு செலவு கணக்கு கைக்கு வரும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.

“அடடா இப்ப எதுக்குத் தேவையில்லாததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? பிரபா முதல்ல குளிச்சு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரவைக்கு எங்க வீட்டுலதானே எல்லாருக்கும் சாப்பாடு. அப்பப் பேசிக்கலாம்” என்று எதுவுமே நடக்காதது போல் கூறி அனைவரையும் அங்கிருந்து கிளம்பச் சொல்லியது மூன்றாவது அக்கா சொர்ணத்தின் கணவர்.

இப்பொழுது எந்த வீட்டிற்குள் தான் செல்வது என்பதே புரியாமல் திகைத்து நின்ற பிரபாவை, “எஞ்சாமி, உப்புக் காத்து பட்டுப்பட்டு இப்படிக் கறுத்துப் போயிட்டியே ராசா” என்று சொல்லியவாறே பிரபாவின் கைப்பிடித்து அவனைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரவடிவு.

“ஹ்ம்க்கும்… இல்லாட்டி மட்டும் உன் புள்ள அப்படியே அரவிந்த்சாமி கலரு” என்று கூறிக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான் பாண்டி.

“நீ சொன்னாலும் சொல்லலையின்னாலும் என் மகன் ஆளும் சரி அவன் மனசும் சரி எப்போதுமே வெள்ளை தான்டா பாண்டி” என்று அவனுக்குப் பதிலளித்தார் சுந்தரவடிவு.

“நீ என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு சித்தி. உன் மருமகனுங்களைக் கண்டுட்டா மட்டும் அப்படியே வாயை ஜிப்புப் போட்டு மூடிறு.”

“என்னடா பண்ணச் சொல்ற? பொட்டப் புள்ளைகளைக் கட்டிக் கொடுத்திருக்கோமே” எனறு பெருமூச்சோடு கூறினார் சுந்தரவடிவு.

“இதைச் சொல்லிச் சொல்லியே எங்க வாயை அடைச்சிறு. நீயே கேளுடா பிரபா,  இந்த வீட்டு விஷயத்துல இவைங்க அடிச்சக் கூத்து அஸ்திவாரம் போட்டதுக்குப் பொறவு தான் எங்களுக்கே தெரிஞ்சுது.

அப்பயாவது உன்கிட்ட உடனே சொல்லி இதை அப்பவே தடுத்து நிறுத்தலாமுன்னு சொன்னா இந்த சித்தி விடவே இல்ல. பத்தாததுக்கு என்னையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிடுச்சு” பல நாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் பாண்டி.

“என் ராசா பல ஆயிரம் மைல் கடந்து எந்தக் கப்பல்ல எந்தக் கடல்ல நிக்கிறானோ? அவன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டாமுன்னு நாந்தான்யா சொன்னேன். அப்படியே விஷயம் தெரிஞ்சாலும் இதை உன்னால தடுத்து நிறுத்த முடியாதுன்னு தான்யா சொல்லலை. அக்காங்களுக்காகவாவது பார்க்கணுமில்ல ராசா” என்றார் சுந்தரவடிவு.

“ஒத்த கண்ணுல வெண்ணையும் மத்த கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற சித்தி நீ” என்று பட்டென்று கூறிவிட்டான் பாண்டி.

அதைக் கேட்ட மாத்திரத்தில் சுந்தரவடிவின் கண்களில் இருந்து கண்ணீர் கரையுடைக்கத் தொடங்கியது. “என்னடா பாண்டி நீயும் இவுக அப்பாத்தாளை மாதிரியே பேசுற? சரி நான் நல்ல அம்மாவா இல்லாமலேயே இருந்துட்டுப் போறேன். உனக்கென்டு ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைச்சுப்புட்டா அவ வந்து என் மவனை நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சேனே.

அதுவுமில்ல தள்ளிக்கிட்டே போகுது. உஞ்சோட்டுப் பசங்க எல்லாம் பொண்டாட்டி, புள்ள, குட்டின்னு இருக்கும் போது எஞ்சாமி மட்டும் இப்படி ஒத்தையில் நிக்கிறானே” என்று சுந்தரவடிவு அழத் தொடங்கிவிட்டார்.

“ம்மா ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசுற? உன்ன விட நல்ல அம்மா இந்த உலகத்துலேயே கிடையாதும்மா. நீ எம்புட்டு கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்கினன்னு எனக்குத் தெரியாதாம்மா? நம்ம அக்காங்களுக்கு செய்றது என் கடமைம்மா. இதுக்கெல்லாம் நீ போட்டு மனசைக் குழப்பிக்காதே. இவன் கிடக்கான் கிறுக்குப் பய” என்று பாண்டியை முறைத்தவாறேத் தன் தாயை அணைத்துக் கொண்டு கூறினான் பிரபா.

“இங்காரு பிரபா, இந்தாட்டி என்ன ஆனாலுஞ்சரி பரிசம் போட்ட பிறவுதான் நீ கப்பலுக்குப் போற. அடுத்த ட்ரிப்பு வரும் போது கல்யாணத்தை முடிக்கிறோம். வயசும் முப்பதாகப் போவுதில்ல ராசா. 

இந்தக் கப்பல் வேலைதானே இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் புடிக்குதில்ல. போனதாட்டி வந்தப்ப சொன்னியே அந்த கனடா நாட்டு வேலை, பேசாம அதுல சேர்ந்துடுய்யா” என்று முடிவாகக் கூறினார் சுந்தரவடிவு.

“ம்மா என்னால உங்களையெல்லாம் விட்டுட்டு அப்படியெல்லாம் போக முடியாதும்மா. பொறுத்தது பொறுத்துட்ட. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் மட்டும் பொறுத்துக்க. நான் கொஞ்சம் காசு ரெடி பண்ணிட்டு இந்த வேலையவே விட்டுடறேன். நிலம் வாங்கி நாம பழையபடி விவசாயம் பண்ணலாம்மா. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்ம்மா” என்றான் பிரபா.

“யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். கப்பலு என்ஜினியரென்டு சொன்னாலே எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்குறான். இதுல விவசாயம் பார்க்கிறான்னு சொன்னோமென்டு வையி, சாதகத்தைக் கூட குடுக்க மாட்டாய்ங்க” சுந்தரவடிவு அங்கலாய்த்துக் கொள்ளவும் “தம்பி” என்று அழைத்தவாறே மூன்று அக்காமார்களும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“இந்தா வந்தாச்சுல்ல முப்பெரும் தேவியர்களும்” என்றவாறே அவர்களை வரவேற்றான் பாண்டி.

“ஐயா பிரபா, அஸ்திவாரம் எல்லாம் போட்டப்புறம் அம்மாவுக்கு எப்ப விஷயம் தெரியுமோ அப்பத்தான்யா எங்களுக்கும் சொன்னாவ. இந்த ஒரு தாட்டி இந்தப் பாவிச் சிறுக்கியளை மன்னிச்சிறு சாமி” என்றார் மூத்த அக்கா தங்கம்.

“எக்கா எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றவ? உங்களுக்குச் செய்யாம நான் யாருக்குக்கா செய்யப் போறேன்? இதுவும் என் கடமை தானேக்கா”

“இன்னொரு சென்மம் சேர்ந்து பொறப்போமா தெரியாது. ஆனா எங்களைப் பாரமா நினைக்காம பாசமா நினைக்குற பாரு, அதுக்காகவே இன்னும் எத்தனை சென்மம் எடுத்தாலும் உன் கூடவே பொறக்கணும்டா தம்பி” கண்ணீருடன் கூறினார் இரண்டாவது அக்கா தனம்.

மூவரில் சற்றுக் கஷ்ட ஜீவனம் இவருக்குத்தான். கணவருக்கு எதாவது கட்டிட வேலை கான்டிராக்ட் கிடைக்கும் நாட்களில் சமாளித்து விடுவார். அது கிடைக்காத பொழுதோ வீட்டுச் செலவு, வாடகை, பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் என்று மிகவும் திணறிப் போய் விடுவார். அந்த சமயங்களில் அவருக்குக் கைகொடுத்து உதவுவது சுந்தர வடிவுதான்.

“மூணு பேருமா சேர்ந்து மதுரையில வெள்ளம் வர வைச்சிராதீகக்கோவ். கண்ணுல இருந்து வார வாட்டர் ஃபால்சை முதல்ல எல்லாரும் க்ளோஸ் பண்ணுங்க” சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டுக் கேலியில் இறங்கினான் பாண்டி.

“ம்க்கூம் ரொம்பத்தான்டா பாண்டி பண்ற” என்று பாண்டியிடம் நொடித்துக் கொண்டு, “எம்மா நம்ம மாணிக்கம் மாமா சொன்ன விஷயத்தை தம்பிகிட்ட சொல்லிட்டியளா” என்றார் மூன்றாவது அக்கா சொர்ணம்.

“அது என்னது எனக்குத் தெரியாத புது மேட்டரு” என்று பாண்டியும்,

“எந்த மாணிக்கம் மாமா ம்மா?” என்று பிரபாவும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

“அவுக உங்கப்பாரு வழியில தூரத்து சொந்தம்ய்யா. உங்க அப்பத்தா இறந்ததை சாரிக்க வந்திருந்தாவ. அப்பத்தேன் உனக்கு பொண்ணு பார்க்குறோமென்டு தெரிஞ்சு அவுக பொஞ்சாதி வழியில் பொள்ளாச்சியில் ஒரு பொண்ணு இருக்குறதா சொல்லிக் கையோட சாதகமும் புள்ள போட்டோவும் மறுக்கா ஒரு தரம் வந்து தந்துட்டும் போனாக” என்றார் சுந்தரவடிவு.

“பொண்ணு பார்க்க அம்புட்டு அழகா இருக்கா தம்பி. அவுக அம்மா அப்பா அம்மாச்சி எல்லாம் ரொம்ப நல்ல மாதிரியாம். ஒரேயொரு தம்பி மட்டுந்தானாம் அந்தப் புள்ளைக்கு.”

“பெரிய ஜமீன்தார் வம்சமாம் தம்பி. பொள்ளாச்சி பக்கத்துல பூங்குளம் தான் இவுக ஊராம்.”

“பொண்ணும் உனக்கு சமமா நல்லா படிச்சிருக்கு தம்பி. அந்த ஊருலேயே ஒரு பள்ளிக்கூடத்துல கணக்கு டீச்சரா இருக்காம்.”

மூன்று அக்காக்களும் மாற்றி மாற்றிக் கூற அவர்கள் கூறியதில் எது காதில் விழுந்ததோ இல்லையோ ‘கணக்கு டீச்சர்’ என்ற ஒற்றை வார்த்தையில் மற்ற அனைத்தும் மறந்து போயிருந்தது பிரபாவுக்கு.

மனம் வேகமாகத் தனக்கு வந்த அத்தனைக் கணக்கு வாத்தியார்களையும் எண்ணிப் பார்க்க வேகமாகத் தன் தலையை உலுக்கிக் கொண்டான் பிரபா. மற்ற அனைத்துப் பாடங்களையும் எளிதில் படித்து விடுபனுக்கு கணக்கு மட்டும் இன்று வரை தண்ணிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

“எக்காவ் கறிவேப்பிலை கொத்து கணக்கா ஒத்தத் தம்பியை வளர்த்து யாரோ ஒரு வாத்திச்சி கையில மாட்டி வுட பார்க்குறீயளே. இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாயில்ல ஆமா” பொங்கி விட்டான் பிரபாகரன்.

“அதானே என் மாப்பிக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு” விஜய்காந்த குரலிலேயே கூறினான் பாண்டியன்.

“போங்கடா போக்கத்தவனுகளா. சொல்றானுக பாரு தேடிக் கண்டுபுடிச்சு ஒரு காரணத்தை. ஒரு நல்ல நாளா பார்த்து நான் சாதகம் பொருத்தம் பார்க்கப் போறேன். எல்லாம் நல்லபடியா பொருந்தி வந்தா இந்தப் பொண்ணுக்குப் பரிசம் போட்ட பொறவுதான் நீ கப்பலுக்குக் கிளம்பணும்” இறுதியில் உறுதியாகக் கூறிவிட்டார் சுந்தரவடிவு.

“எம்மா நீ அந்த போட்டொவைக் கொண்டு வந்துக் காட்டும்மா. அப்புறம் பார்க்கலாம் இவன் என்ன சொல்லுறான்டு” பரிகாசமாக சிரித்துக் கொண்டே கூறினார் தங்கம்.

“எக்கா உன் தம்பியை என்னன்டு நினைச்ச? அவ எந்தூரு ரம்பையா இருந்தாலும் எனக்கு வேண்டான்னா வேண்டாம் தான்” மிதப்பாகவே சொன்னான் பிரபா.

 “சரி சரி எங்க தம்பி தங்கக் கம்பிதான். நீ முதல்ல குளிச்சு சாப்பிட்டுட்டு நிதானமா போட்டோவைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வா. இப்ப நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு வாசலை நோக்கிச் சென்றவர்கள் திரும்ப வந்து,

“தம்பி இந்த விஷயம் இப்போதைக்கு உன் மாமனுங்களுக்குத் தெரிய வேண்டாம்ய்யா. இப்பவே சொன்னோமுன்னா எதாவது சொல்லி  ஆட்டையக் கலைச்சாலும் கலைச்சிறுவாக. எல்லாம் ஒத்து வந்த பொறவு சொல்லிக்கலாம்” என்பதையும் மறக்காமல் சொல்லி விட்டுச் சென்றார்கள். 

“பார்த்தியா மாப்பி, எதை எங்க சொல்லணும் சொல்லக் கூடாதுன்னு பூராத்தையும் டிசைட் பண்றது இதுகதேன். எதையும் எப்படி ப்ளான் பண்ணிப் பண்ணனுங்குறதை உன் அக்காங்க கிட்ட தான்  கத்துக்கணும்டா” பாண்டி பிரபாவின் காதோடு கிசுகிசுத்துக் கொண்டிருக்க, தன் மகள்களோடு சேர்ந்து அவர்கள் தாய் சுந்தரவடிவும் வெளியே வந்தார்.

“என்னடி இவன் பொண்ணு பேரைக் கூட கேக்க மாட்டேங்குறான்?” கவலையோடுப் பெண்களிடம் முறையிட,

“ம்மா அதெல்லாம் தம்பி ஒத்துக்கும்மா. நீ முதல்ல அந்தப் புள்ள போட்டோவைத் தம்பிக்கிட்ட குடு” என்றார் தங்கம்.

“முதல்ல சாதகம் பார்த்துட்டுப் பொறவு கொடுக்கலாமென்டு இருந்தேன். நான் இன்னைக்கே நம்ம சோசியரைப் போய் பார்த்துட்டு வாரேன்” என்றார் சுந்தரவடிவு ஒரு முடிவெடுத்தவராக.

“டேய் பாண்டி நீ இன்னும் கடைக்குக் கிளம்பாம இங்கனதேன் சுத்திக்கிட்டிருக்கியாடா?” என்று பாண்டியை நோக்கிக் குரல் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரவடிவு.

“அதானே பார்த்தேன்! என்னடா சித்தி இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். டேய் பிரபா இதுக்கு மேல நான் இங்கன இருந்தா உங்கம்மா இட்லிச் சட்டியில மாவுக்குப் பதிலா என்னை ஊத்தி வேவ வைச்சிரும். நான் கிளம்பறேன். சாயங்காலமா நீ அப்படியே கடைப் பக்கம் வாடா” என்றுவிட்டு அவர்களின் சாப்பாட்டுக் கடை நோக்கிக் கிளம்பி விட்டான் பாண்டி. பாண்டி தான் சுந்தரவடிவுக்குத் துணையாக அவர்களின் கடையைத் தற்போது கவனித்துக் கொள்கிறான்.

பாண்டி கிளம்பியதும் பிரபா சென்று குளித்துவிட்டு வர, வெள்ளை வெளேரென்று ஆவி பறக்க சுடச்சுட புழுங்கலரிசிச் சாதமும், மணக்க மணக்க மண் சட்டியில் அயிரை மீன் குழம்பும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

டைனிங் டேபிளைத் தவிர்த்துவிட்டுத் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தவன், “ஸ்ஸ்ஸ் எத்தனை நாளாச்சு எங்கம்மா வைக்கிற அயிரை மீன் குழம்பு சாப்பிட்டு? இன்னைக்கு ஒரு புடி புடிக்கப் போறேன்” என்று கூறிக் கைகளைப் பரபரவென்றுத் தேய்த்துக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.

முதற் கவளம் அமுதமாய் அவன் தொண்டைக்குள் இறங்க, கண்களை மூடி அதை அனுபவித்து ருசித்தவன், நாவால் சப்புக் கொட்டியவாறே, “ம்மா மீன் குழம்பு வைக்கிறதுல இந்த ஜில்லாவிலேயே உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதும்மா” என்று கூறி வியர்க்க விறுவிறுக்க ரசித்து உண்டான்.

ஆவலாகப் பிரபா சாப்பிடுவதையே ஆசையோடுப் பார்த்திருந்தார் சுந்தரவடிவு. ‘ஆத்தா மீனாட்சி என் மவனுக்கு இந்த சம்பந்தம் எப்படியாவது முடிஞ்சிடணும். உனக்குப் பொங்க வைச்சுப் படையல் போடுறேன் தாயீ’ என்று அவசரமாக மீனாட்சி அம்மனுக்கு ஒரு வேண்டுதல் விண்ணப்பத்தையும் வைக்கத் தவறவில்லை அந்தத் தாய் மனது.

‘உண்ட களைப்பு தொண்டை வரைக்கும்’ என்று கூறி அம்மாவின் மடியிலேயே ஒரு தூக்கமும் போட்ட பிறகுதான் பிரபாவுக்கு வீடு வந்து சேர்ந்த நிறைவே கிட்டியது. அந்தி சாயும் பொழுதில் கையில் காஃபி டம்ளரோடு பின்கட்டுக்கு வந்தவன் அங்கிருந்ததைப் பார்த்து அந்த நாளின் இரண்டாவது முறையாக அதிர்ந்து போனான்.

அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்றவன் “அம்மா” என்று கோபமாக அவனையும் மீறிக் கத்தியிருந்தான் பிரபா.

 

பார்வை – 3

நான்கு அடி உயரத்துக்கு மேடை எழுப்பப்பட்டு அதற்கு மேல் கம்பிகளின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. பார்த்ததும் புரிந்து போனது பிரபாவுக்கு அது ஒரு செல்போன் கோபுரமென்று. அதிர்ந்து போனவனாகத் தனை மறந்து அம்மா என்று கிட்டத்தட்ட அலறியிருந்தான் பிரபா.

ஒற்றை வீடு நான்கானதைக் கூட அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடிந்தது. இதை முற்றிலும் ஜீரணிக்க முடியவில்லை. பிரபாவின் சத்தம் கேட்டு அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார் சுந்தரவடிவு.

“பிரபா எதுக்குய்யா இந்தக் கத்து கத்துன?”

“இது என்னம்மா? யாரு இதைக் கட்டுறதுக்குப் பர்மிஷன் கொடுத்தது?” விழிகள் கோபத்தில்  சிவந்திருக்க உக்கிர மூர்த்தியாக மாறியிருந்தான் பிரபா.

“இதுக்குத்தான் இந்தக் கத்து கத்துனியாக்கும். நாங்கூட என்னமோ ஏதோ என்டு பயந்து போயிட்டேன்.” என்று நொடித்துக்  கொண்ட சுந்தரவடிவு மேற்கொண்டு சொல்லத் தொடங்கினார்.

“இந்த வீட்டுக்கு வந்த புதுசுல யாரோட செல்லு போனுலயும் டவரே கிடைக்கலைய்யா. நீ பேசுறது கூட பாதி சமயம் அரை குறையா தான்யா காதுல விழும். அப்பத்தேன் நம்ம மூத்த மாப்பிள்ளை நான் இதுக்கு ஒரு வழி பண்ணுறேன் அத்தைன்டு சொல்லி இந்த டவரு வைக்க ஏற்பாடு பண்ணாவ.

மாமா தேன் பாவம். முனுசிபாலிட்டி ஆபீசுக்கு நடையா நடந்து அனுமதி வாங்குனாவ. இதை வைச்சுப்புட்டா நல்லா சிக்னலு கிடைக்குமாம்ய்யா. போதா குறைக்கு இதை நம்ம இடத்துல வைக்கிறதுக்காவ வேண்டி அவைங்க நமக்குக் காசு வேற குடுப்பாய்ங்களாமே!

நீ ஆயிரந்தான் சொல்லு, படிச்சவுக படிச்சவுகதேன். ‘நீங்களும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அத்தை இந்தக் கடையில் நின்டு கஷ்டப்படுவீக? இதை இங்கன வைச்சுக்கிட்டா அதுக்கு அந்த கம்பெனிக்காரன் காசு கொடுப்பான். நாளைப்பின்ன பிரபாவுக்கு கல்யாணம் ஆன பொறவு நீங்க கைச்செலவுக்கு அவனை மாசா மாசம் எதிர்பார்க்க வேணாம் பாருங்க’ என்டு சொல்லி இதை ஏற்பாடு பண்ணிவுட்டாக பிரபா” ரொம்பவும் பெருமையாகக் கூறினார் அந்த வெள்ளந்திப் பெண்மணி.

“ஓஹோ இப்படி வேற சொல்லிக்கிட்டுத் திரியிறாரா அந்தாளு! எங்கம்மாவை எப்படிப் பார்த்துக்கணுமுன்னு எனக்குத் தெரியும். அதை ஒன்னும் இந்தாளு எனக்கு சொல்லித் தரத் தேவையில்லை.

நானும் அக்கா வூட்டுக்காரராச்சேன்னு பொறுத்துப் போனா ரொம்பத்தேன் பண்றாக மூணு பேரும். இதைக் கட்டுற முன்னுக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமுன்னு தோனலையில்ல? கப்பலுக்குத் தானே போனேன், செத்து கித்துப் போயிடலையே” எவ்வளவு கத்தியும் ஆற்றாமைத் தீரவில்லை பிரபாவுக்கு.

தான் ஆசை ஆசையாகப் பார்த்துப் பார்த்து வாங்கிய நிலம். அதில் தன் இஷ்டத்துக்கு ஒரு வீடு கட்டிக் கொள்ள முடியவில்லை. சரி உடன் பிறப்புகளுடன் ஒன்றாக வாழ்க்கையைக் கழிப்பதும் ஒரு சுகம் தானே. இன்றைய காலகட்டத்தில் எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்றெண்ணி மனதைத் தேற்றிக் கொண்டான்.

ஆனால் இந்த செல்போன் கோபுரம் முற்றிலும் அவன் கருத்துக்களுக்கு எதிரானதாயிற்றே. என்னதான் உடன் பிறந்தவர்கள் மீது பாசம் கொண்டவனாக இருந்தாலும் பிரபாவும் ஒரு தனி மனிதன் தானே. அவனுக்கென்று தனிப்பட்டக் கொள்கைகள், விருப்பு வெறுப்புகள் இருப்பதில் தவறொன்றும் கிடையாதே.

இயற்கையின் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் தீராக் காதல் கொண்ட ஒருவன் இது போன்ற விஷயங்களுக்கு எதிராக நிற்பதில் ஐயமொன்றும் இல்லையே. காலம் காலமாக வாழப் போகும் வீட்டில் இப்படி இயற்கைக்கு முரணான ஒரு விஷயம் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பிரபாவால்.

வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் மூத்த அக்கா தங்கத்தின் வீட்டிற்கு. செத்து கித்துப் போயிடலையே என்று பிரபாவின் வாய் வழி வந்த வார்த்தையால் திகைத்து நின்ற சுந்தரவடிவு என்னும் மனித சிலைக்கு இப்பொழுது பிரபா வீராவேசமாகக் கிளம்பவும் தான் உயிர் வந்தது.

“ஐயா பிரபா என்னய்யா இது? மாமாவைப் போய் மருவாதை இல்லாம பேசிக்கிட்டிருக்க? ஏன்ய்யா இது இங்கன வைக்கக் கூடாதா? எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருய்யா. கோவப்படாதே” என்று சொல்லிப் பிரபாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சுந்தரவடிவுக்கு நன்றாகவே தெரியும், தன்னுடைய மகன் எவ்வளவுக்கெவ்வளவு பொறுமையானவனோ அதே அளவுக்குக் கோபக்காரனும் கூட. அவனுடைய கோபம் நியாயமான விஷயத்திற்கு மட்டுமே என்பதும் அவருக்குத் தெரியும்.

மூன்று மாமன்களும் தன்னை எவ்வளவு திட்டினாலும், மட்டம் தட்டினாலும் பொறுத்துக் கொள்வான். அதே சமயம் அக்காக்களின் மீது கோபமாக கை நீட்டுவார்களேயானால் பொங்கி விடுவான். அவர்களும் பிரபாவுக்குப் பயந்துதான் கை நீட்டாமல் இருக்கிறார்கள், இல்லையென்றால் அதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதையும் சுந்தரவடிவும், பிரபாவின் தமக்கைகளும் உணர்ந்தே இருந்தனர்.

தன்னுடைய மகனைப் பற்றி முழுவதுமாக அறிந்த சுந்தரவடிவுக்கு அவனுடைய கோபத்தை சாதாரணமாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அதே சமயம் இவன் சென்று மூத்த மருமகனிடம் கோபமாகப் பேசுவதையும் விரும்பவில்லை அவர். எனவே சற்றுப் பொறுமையாகவே இந்த விடயத்தைக் கையாள விரும்பினார் அவர்.

“பதறுன காரியம் சிதறிப் போகும். நீ முதல்ல உள்ளார வா. வந்து அம்மாட்ட சொல்லு என்ன விஷயமென்டு. பொறவு மாமாகிட்ட பேசலாம்” என்று சொல்லிப் பிரபாவின் பிடித்தக் கையை விடாமல் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் சுந்தரவடிவு.

வீட்டுக்குள் அழைத்துச் சென்று பிரபாவுக்கு முதலில் குடிப்பதற்கென்று தண்ணீரைக் கொடுத்த பிறகுதான் பிரபாவைப் பேச விட்டார் சுந்தரவடிவு. உள்ளுக்குள் இறங்கிய தண்ணீர் பிரபாவின் கோபத்தையும் கொஞ்சம் மட்டுப் படுத்தி இருந்தது.

“ம்மா வீடுகளோ, ஆஸ்பத்திரியோ, பள்ளிக்கூடமோ இருக்குற பகுதிகள்ல இந்த செல்போன் டவரு எல்லாம் கட்டக் கூடாதென்டு சட்டமே இருக்கும்மா. டவுனுக்குள்ளாரதான் மனுஷங்க காசுக்கு ஆசைப்பட்டு வீட்டோட மொட்டை மாடியிலேயே இதைக் கட்டிக்கிறாக.

பொறவு அந்த செல்போன் கம்பெனிக்காரன் கிட்ட வாங்குன காசைக் கொண்டு போய் கேன்சரு ஆஸ்பத்திரியில கொடுக்குறாக. நமக்கு எதுக்கும்மா இந்தத் தலையெழுத்து? வாழுறது கொஞ்ச நாள், அதை நோய் நொடி இல்லாம வாழ வேண்டாமாம்மா?” சற்றுப் பொறுமையாகவே எடுத்துரைத்தான் பிரபா.

“கேன்சரா? இதால இம்புட்டுப் பாதிப்பு வருமென்டு எனக்குத் தெரியாதேய்யா” என்றார் சுந்தரவடிவு.

“இது உங்களுக்குத் தெரியாம இருக்குறதுல தப்பில்லைம்மா. ஆனா நீங்க சொன்னீகளே படிச்சவரென்டு, அந்த மெத்தப் படிச்ச மேதாவிக்கு இது தெரியாம இருக்குறது தான் தப்பு. மனுசனோட சராசரி ஆயுட்காலம் எவ்வளவென்டு சொல்லுங்க பார்ப்போம்?”

“என்ன ஒரு அறுபதிலிருந்து எழுபது வருஷம் இருக்குமாய்யா?”

“இப்ப இருக்குற கால கட்டத்துல ஒரு மனுஷனோட சராசரி ஆயுட் காலம் எழுபத்தி இரண்டு வருஷம். ஆனா தேனீ, தேனீ அப்படிங்குற ஒரு பூச்சி வகை இருக்கில்லையா? அது மட்டும் இல்லைன்னா மனுசனோட ஆயுட் காலம் வெறும் நாலு வருஷம் கூட வராது.”

“என்னய்யா சொல்ற?” மோவாயில் கை வைத்து வியந்து போனவராகக் கேட்டார் சுந்தரவடிவு. அவருக்கு இந்த விஷயம் அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.

“நிசந்தான்ம்மா. தேனீக்கள் இருக்குறதாலதேன் மகரந்த சேர்க்கை ஏற்பட்டுப், பூவாகிப், பிஞ்சாகிக், காயாகிக், கனியாகுற விசயமெல்லாம் நடக்குது. அந்தத் தேனீ இனம் மட்டும் முழுக்க அழிஞ்சுப் போச்சுன்னா மனுசனுக்கு சாப்பிட சாப்பாடு எதுவும் கிடைக்காம அவனோட சராசரி ஆயுட் காலம் வெறும் நாலு வருஷமா குறைஞ்சு போயிடும்.

அந்தத் தேனீ வகையையும் சிட்டுக்குருவி இனத்தையும் முழுக்க முழுக்க அழிக்கிறது இந்த செல் போன் டவருங்கதேன். இதுல இருந்து வார கதிர் வீச்சு தாங்க முடியாமத்தேன் அதுக எல்லாம் அழிஞ்சுக்கிட்டே வருது.

அதுமட்டுமில்லாம இந்த டவரு வீடுகளுக்குப் பக்கத்துல இருந்தா அந்த வீடுகள்ல இருக்குற மனுசங்களுக்குக் கேன்சர் வருமென்டு ஆதாரப்பூர்வமாகவே நிரூபிச்சிருக்காக. வெளி நாடுகள்ல எல்லாம் இதை வைக்கிறதுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கு. நம்மூர்லதேன் சிலர் ஏமாந்தும், சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டும் வைச்சிப்புட்டு பொறவு கஷ்டப்படுறாக” தாயாருக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துக் கூறினான் பிரபா.

“ஆத்தீ இதுல இம்புட்டு விசயமிருக்கா. எனக்குத் தெரியாதேயப்பு. ஏதோ இதை வைச்சுப்புட்டா சிக்னலு நல்லா கிடைக்குமென்டு சொல்லவும் தலையாட்டிப் போட்டேன். புத்து நோயா! அந்தப் பேரைக் கேட்டாலே பகீரென்டு வருதுய்யா எனக்கு” உண்மையிலேயே கொஞ்சம் பயந்து தான் போனார் சுந்தரவடிவு.

“ம்மா நம்ம அப்பத்தா ஒரு வார்த்தை சொல்லும் நினைவிருக்கா? ‘இந்தக் காலத்துல எல்லாரும் மனுசப் பயலுக வாழுறதுக்கு மட்டுந்தேன் வீடு கட்டிக்கிறாக’ என்டு அடிக்கடி சொல்லும். நாம கிராமத்துல இருந்து இந்தூருக்கு வந்த புதுசுல இப்படி சொல்லிச் சொல்லியே புலம்பிக்கிட்டு இருக்கும்.

அப்ப நாம இருந்தது ரொம்ப சின்ன லைன் வீடு. இதுல எப்படி மாடு, கன்னு, கோழி எல்லாம் வளர்க்க முடியுமென்டு விசனப்பட்டுக்கிட்டே இருக்கும். வீட்டுக்கே அப்படிச் சொல்லும் போது இந்த பூமி நமக்கு மட்டுமாம்மா சொந்தம்? எல்லா உயிரினத்துக்கும் சேர்த்துத் தானே. நம்மளோட சுயநலத்துக்காக நாம ஒரு உயிரினத்தைக் கூண்டோட அழிக்கிறது எந்த வகையிலம்மா நியாயம்?”

தன்னுடைய பல நாள் ஆதங்கத்தைத் தன் தாயாரிடம் கொட்டித் தீர்த்து விட்டான் பிரபா. உலக மக்களின் சுயநலப் போக்கை நினைத்துக் கவலை கொண்டாலும், இப்படிப் பல்லுயிர் ஓம்பும் தன் மகனை நினைத்துப் பெருமை பட்டுக் கொண்டார் சுந்தரவடிவு.

“என்ன ஆனாலுஞ்சரி அப்பு, இந்த டவரு இங்கன இருக்கப் படாது. ஆனா இதை எப்படிய்யா உன் மாமன்கிட்ட சொல்றது? மூணு பேருல ரொம்பவும் நொண்ண நாட்டியம் புடிச்சவனாச்சே. தான் புடிச்ச மொசலுக்கு மூணே காலென்டு இவன் ஒத்தக் கால்ல நிப்பானே” மூத்த மருமகனைப் பற்றி நினைக்கும் பொழுதே பயம் பற்றிக் கொண்டது சுந்தரவடிவுக்கு. ஏகப்பட்டதைச் சமாளித்தவருக்கு இன்றுத் தன் மருமகன் எந்த ஏழரையைக் கூட்டப் போகிறாரோ என்று பயம் வருவது இயல்பு தானே.

“நீ கூட வந்து வேடிக்கையை மட்டும் பாரு. மூணுல எந்தூடு தங்கமக்கா வூடு?” என்றவாறே கிளம்பி விட்டான் பிரபா. கையோடு தமக்கை வீட்டுக்கென வாங்கி வந்தப் பொருட்களையும் எடுத்துக் கொண்டான். பின்தொடர்ந்த சுந்தரவடிவுக்குத்தான் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது.

“இந்தூடு தான்ய்யா” என்று பிரபாவிடம் சொல்லிவிட்டு, உள் நுழைந்து மகளை அழைத்துக் கொண்டே அடுப்படிக்குள் புகுந்து கொண்டார் சுந்தரவடிவு.

இவர்கள் வந்த அரவம் கேட்டு அறை ஒன்றிலிருந்து வெளிப்பட்டார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர் நடேசன். அதற்குள் தமக்கையின் மக்கட் செல்வங்கள் மூவரும் பிரபாவைச் சூழ்ந்து கொள்ள பொறுமையாக அவர்களிடம் பேசி, அவர்களுக்காக வாங்கி வந்ததை அவர்களிடம் கொடுத்தான் பிரபா.

பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றைக் கையோடு ஆராய்ச்சி செய்யும் நோக்கில் சென்றுவிட, ஹாலில் எஞ்சியிருந்தது பிரபாவும் நடேசனும் மட்டும்தான். “வா மாப்புள” பிரபாவின் கையிலிருந்த பை காலியாகும் வரை அதில் கொஞ்சம் கவனமாக இருந்த மனிதர் இப்பொழுது தான் வரவேற்றார் மச்சினனை.

“எப்புடி இருக்கீக மாமா?” ஓற்றைக் கேள்வி தான் கேட்டான் பிரபா. வறண்டு கிடக்கும் வைகை அணையில் கீழ்ப்பாலம் முங்கி மேப்பாலம் முங்கும் அளவுக்கு வெள்ளம் வந்ததைப் போல வார்த்தைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு வந்தன நடேசனிடமிருந்து.

“எங்கிட்டு நல்லா இருக்குறது. அதுவும் உன் வூட்டுக்கு மூத்த மருமகனா வாக்கப்பட்டு வந்துட்டு நான் அதுக்கெல்லாம் ஆசைப்பட முடியுமா? நீ பாட்டுக்கு ஆறு ஏழு மாசம் நிம்மதியா கப்பலே கதியென்டு போயிடுற. இங்க என் பொழப்பில்ல நாறிப் போகுது.

உன் மத்த ரெண்டு அக்காங்களுக்கும் மாப்பிள்ளை பார்க்கும் போதே சொன்னேன். பார்க்குற வரன் என் தகுதிக்கு இல்லைன்னாலும் கொஞ்சமாவது எனக்கு சரிசமமா பாருங்க அப்படின்டு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். ஆரு கேட்டா என் பேச்சை.

நல்லா தேடிக் கண்டுபுடிச்சீங்கடா ஊருல இல்லாத மாப்பிள்ளைகளை. ஒருத்தன் மேஸ்திரி, இன்னொருத்தன் மெக்கானிக்கு. இவனுக எல்லாம் என் தகுதிக்கு ஈடாகுவானுகளா?

இந்த லட்சணத்துல நீ பாட்டுக்கு வூடு கட்டுற வேலையை என்னமோ ஊருலயே இவன் ஒருத்தன்தான் இருக்குற மாதிரி உன் இரண்டாவது அக்கா வூட்டுக்காரர் கிட்ட கொடுத்துட்ட. இதைக் கட்டி முடிக்கிறதுக்குள்ள அவன் சொல்றதை எல்லாம் நான் கேட்குற மாதிரி ஆயிடுச்சு. இதெல்லாம் தேவையா எனக்கு?

இனி இந்த மாதிரி முக்கிய வேலையெல்லாம் நீ எனக்கிட்டக் கொடுத்துப் பழகு மாப்புள. இந்த ஒரு தடவை போனா போகுதுன்டு பொறுத்துப் போயிட்டேன். சும்மா சும்மா இதுவே நடந்தா அப்புறம் நானும் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ. என் வீடு எப்படி இருக்கணுமென்டு சொல்ல அவன் யாரு? மனசுக்குள்ள பெரிய எஞ்சினியரென்டு நினைப்பு” கடகடவென பொரிந்துத் தள்ளிவிட்டார் நடேசன்.

பேசி முடித்துவிட்டு ஆவலாக பிரபாவின் முகத்தைப் பார்க்க, அவனோ மிகவும் சாவகாசமாக கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு, இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கேட்டானே ஒரு கேள்வி.

“நாந்தேன் அடிக்கு ஒருக்கா போன் போடுறேன்ல்ல மாமா, அப்பயே இதையும் சொல்லியிருக்கலாமே. ஏன் சொல்லாம விட்டீக? அப்பத்தா இருக்கும் போது வெத்தலை வாங்கியாந்து கொடுத்தா கூட ஒரு போன் போட்டு சொல்லுவீக. இதையும் அது மாதிரி சொல்லியிருக்க வேண்டியது தானே.”

பிரபாகரன் கேட்டதென்னவோ மிகவும் எளிதான கேள்விதான். நியாயமான கேள்வியும் கூட. ஆனால் அதற்குப் பதிலாக என்ன சொல்வதென்று தான் ஐயோ பாவம் நடேசனுக்குத் தெரியவில்லை.

பிரபாவுக்கும் இது ஒன்றும் புதிதல்ல. இவர்கள் மூவரும் சேர்ந்து கொண்டு கூட்டுக் களவாணித்தனம் செய்வதும், பிறகு ஒவ்வொருவரும் தனித்தனியாக மற்றவரைப் பற்றிக் குறை சொல்வதும் பழகிப் போன ஒன்று. எப்பொழுதும் தெரியாதது போல் காட்டிக் கொள்பவன் இன்று முதல் முறையாக நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக ஒரு கேள்வி கேட்டே விட்டான்.

பதில் சொல்லத் தெரியாத நடேசன் கோபத்தைப் பதிலாக மாற்றிக் கொண்டார். “அடியே தங்கம், பேரைப் பாரு பேரை தங்கமாம் தங்கம். வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சலம். கிளம்புடி முதல்ல இங்கேயிருந்து. கேட்டான்ல்ல உன் தம்பி நாக்கு மேல பல்லைப் போட்டு ஒரு வார்த்தைக் கேட்டுட்டான்ல்ல.

 நானெல்லாம் கவரி மான் பரம்பரையாக்கும். போய் பொண்டாட்டி புள்ள குட்டியோட பிளாட்பாரத்துல தங்கினாலும் தங்குவேன். இனி ஒரு நிமிசம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்று கத்திக் கொண்டே வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடக்கத் தொடங்கிவிட்டார்.

“மாமா இப்ப நான் என்ன சொல்லிப்போட்டேன்டு இப்படிக் கோபப்படுறீக. மத்த ரெண்டு மாமாவுந்தேன் சொல்லலை. நீங்களாவது சொல்லியிருக்கலாமேன்டு ஒரு உரிமையில தானே கேட்டேன். இதுக்குப் போய் இப்புடிக் கோவிச்சுக்கிடுறீயளே” என்று கூறி அவர் கையைப் பிடித்து இழுத்து வந்து உள்ளே அமர வைத்தான் பிரபா.

மற்ற இருவரையும் விடத் தன்னிடம் தான் உரிமை அதிகம் என்பது போல பிரபா சொன்னதில் கொஞ்சம் மனம் குளிர்ந்து இருந்தாலும், “என்னைப் பார்த்து எப்படி மாப்புள நீ அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்” என்று கவுண்டமணி கணக்காக மீண்டும் மீண்டும் பொரிந்து கொண்டிருந்தார் நடேசன்.

“அத விடுங்க மாமா. ஏதோ அறியா புள்ள தெரியாம பேசிப்புட்டேன். மன்னிச்சிடுங்க மாமா” என்று பிரபா கூறவும் நடேசனின் தலையில் இமயமலையின் சாரல் வீசியதை யாரும் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டார்.

“நான் இப்ப வேற ஒரு முக்கியமான விசயத்தைப் பத்திப் பேசத்தேன் வந்தேன் மாமா” லேசாக அடிக் கோடிட்டுக் காட்டினான் பிரபா.

அடுத்து எந்த பூதம் வெளியாகப் போகுதோ என்ற பயத்துடனேயே பிரபாவை ஏறிட்டுப் பார்த்தார் நடேசன். பிரபாவிடம் கேட்காமல் தாங்களாகவே முடிவெடுத்து அவனுடைய இடத்தில் ஆளுக்கொரு வீடாகக் கட்டிக் கொண்டது மூவருக்குமே கொஞ்சம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

“மாமா இந்த செல் போன் டவரு…” என்று பிரபா ஆரம்பித்ததுமே ரொம்பவும் பெருமையாகப் பேசத் தொடங்கினார் நடேசன்.

“நீ பாட்டுக்கு இப்புடி ஊருக்கு ஒதுக்குப்புறமா இடத்தை வாங்கிப் போட்டுப்புட்ட. இங்கன என்னடான்னா ஆத்திர அவசரத்துக்குக் கூட ஒரு போன் பேச முடியாது போல. எந்த போன்லயும் சிக்னலே கிடைக்கல.

இங்கனதேன் மாப்புள உன் மாமா எப்பேற்பட்ட அறிவாளி அப்படிங்குறதை நீ புரிஞ்சுக்கணும். உன் மத்த மாமனுங்களும் வெறுமன புலம்ப மட்டுந்தேன் லாயக்கு. நாந்தேன் இதுக்கு என்ன தீர்வென்டு நல்லா யோசிச்சுப் பார்த்து இப்படியொரு ஏற்பாட்டைப் பண்ணினேன்.

உனக்கு நல்லா வகையா ஒரு அமௌன்ட்டும் பேசி வைச்சிருக்கேன். எடம் உன் பேர்ல தானே இருக்கு. அதேன் நீ வந்துக் கையெழுத்துப் போட்டதும் பணத்தைத் தருவாகளாம். அது வரைக்கும் ஏன் வேலையை நிறுத்தி வைக்கீக. ஆரம்பிச்சுக்கிடுங்க. என் மாப்பிள்ளைக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்டு சொல்லி வேலையை ஆரம்பிக்க சொல்லிட்டேன். நமக்கும் ஒரு உத்தரவாதம் வேணுமில்ல. எப்படி என் சாமர்த்தியம்?” காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாத குறையாக அவ்வளவுப் பெருமையாகக் கூறினார் நடேசன்.

“இல்ல மாமா எனக்கு அது இங்க இருக்குறதுல விருப்பமில்ல. அதை நிறுத்திட சொல்லிருங்க மாமா. அது நம்ம உடம்புக்கும் கேடு” தன்மையாகவே கூறினான்பிரபா.

“என்ன மாப்புள சுத்த கூறு கெட்டத்தனமா பேசுற. சும்மா இருக்குற இடத்துல நாலு கம்பிய நட்டுட்டு அதுக்கு நமக்கு லட்சக் கணக்குல காசு தாரேங்குறாய்ங்க. பேசாம பணத்தை வாங்கிப் போடுவியா, அதை விட்டுட்டு கேனைத்தனமா பேசிக்கிட்டிருக்க?”

“நான் கேனையனாவே இருந்துட்டுப் போறேன் மாமா. என் இடத்துல அந்த டவர் இருக்கக் கூடாது அவ்வளவுதேன். என் இடமுன்னு இல்ல, என் வீட்டைச் சுத்திக் குறைஞ்சது நூறு மீட்டர் தூரத்துக்கு அந்த டவர் வர்றதை என்னால அனுமதிக்க முடியாது மாமா” கொஞ்சம் விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

“ஆனாலும் நீ இம்புட்டு சுயநலவாதியா இருக்கக் கூடாது மாப்புள. இதால எத்தனை பேர் பயனடைவாக தெரியுமா?” அவ்வளவு எளிதில் இதை விட மனமில்லை நடேசனுக்கு.

“எனக்கு என் குடும்பந்தேன் முக்கியம் மாமா. இந்த என் குடும்பத்துக்குள்ள நீங்களுந்தேன் இருக்கீக. இதால என்னென்ன கேடு வருமென்டு தெரிஞ்ச பொறவும் இதை வைக்க என் மனசு ஒப்பலை. அதேன் காசு எதுவும் வாங்கலையில்ல. இதை இத்தோட நிறுத்திப்புட்டு அவுக சாமானத்தையெல்லாம் எடுத்துக்கிட சொல்லிடுங்க” உறுதியாக சொல்லிவிட்டு எழுந்துவிட்டான் பிரபாகரன்.

“இல்ல மாப்புள, இப்படிப் பாதில நிறுத்தினா கோர்ட்டு கேசென்டு எதுவும் போனாய்ங்கென்னா நமக்குத் தானே வீண் அலைச்சலு… சிக்கலு…” என்று இழுத்தார் நடேசன்.

“இங்காருங்க மாமா, இடம் என் பேருல இருக்கு. என்கிட்ட சொல்லாம, என் அனுமதி இல்லாம இதைக் கட்ட ஆரம்பிச்சதுக்கே நானும் அவைங்க மேல கேசு போடலாம். இதைச் சொல்லுங்க அவைங்ககிட்ட. அதேன் காசு எதுவும் வாங்கலையில்ல, அப்புறமென்ன? காசு வாங்கலையில்ல?” என்று மீண்டும் ஒருமுறை நடேசனின் கண்களைக் கூர்மையாகப் பார்த்து அழுத்தமாக வினவினான் பிரபாகரன்.

அவனுடைய அந்த அழுத்தமானப் பேச்சிலும் பார்வையிலும் சற்றே மிரண்டு போனவராக இடம் வலமாகத் தலையை மட்டும் ஆட்டி வைத்தார் நடேசன். இனி பிரபா தன்னுடைய வாதத்திலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வர மாட்டான் என்பதுத் தெளிவாகப் புரிந்து போனது நடேசனுக்கு. செல்போன் கம்பெனிக்காரர்களிடம் எப்படிப் பேசி சமாளிப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார் அந்தப் புத்திசாலி மனிதர்.

“எக்கோவ் உப்புக்கண்டம் வாசம் ஆளைத் தூக்குது. வீட்டுல போட்டியாக்கா?” என்று கேட்டவாறே சமையலறையை நோக்கி நகர்ந்தான் பிரபாகரன்.

 

பார்வை – 4

அந்த செல்போன் கோபுரத்தைத் தொடர்ந்து கட்ட விடாமல் தடுத்து நிறுத்துவதற்குள் பிரபாகரனின் மூத்த மாமா நடேசனுக்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாற் போல் ஆனது. அவ்வளவு எளிதில் அந்த செல்போன் நிறுவனம் அவர்களுடைய கட்டுமானத்தை நிறுத்த முன் வரவில்லை.

பிரபாவோ ‘அது உன் பாடு’ எனும் விதமாக எதிலும் தலையிடவே இல்லை. ஆனால் அந்த செல்போன் டவர் அங்கு இருக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். நடேசன் படாதபாடு பட்டு அந்த செல்போன் டவரை எடுக்க வைத்தார். இதற்கே ஒரு மாத காலம் முற்றிலும் கடந்திருந்தது.

தான் பிரபாவுடைய நலன் கருதி செய்த ஒரு செயலை அவன் அவமதித்தது மட்டுமல்லாமல், அதற்காக முன் பின் தெரியாதவர்களிடம் எல்லாம் தன்னைக் கீழிறங்கிப் போகச் செய்துவிட்டானே என்று பிரபாவின் மீது கடுங்கோபத்தில் இருந்தார் நடேசன்.

நடேசன் மட்டுமல்ல மற்ற இரண்டு அக்காவின் கணவர்களும் கூட பிரபாவின் மீது கோபமாகத் தான் இருந்தார்கள். கழிவு நீர் வெளியேற்றம், மழை நீர் சேகரிப்புப் போன்ற விடயங்கள் கட்டமைப்பில் இரண்டாவது மாமாவுக்கும் பிரபாவுக்கும் முட்டிக் கொண்டது.

அவரிடம் தானே பிரபா வீடு கட்டும் பொறுப்பை விட்டுச் சென்றிருந்தான். எனவே அது தொடர்பான கேள்விகளை அவரிடம் தானே கேட்க முடியும். பிரபாவிற்கு அத்தியாவசியமாகத் தோன்றுவதெல்லாம் அவருக்கு அநாவசியமாகத் தோன்றியது காலக் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். 

மூன்றாவது அக்காவின் கணவர் தனக்கெனத் தனியாக ஒரு மெக்கானிக் ஷாப்பை வீட்டுக்கு முன்பாக வைத்துக் கொள்ளப் போவதாகக் கூற, பிரபா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மூன்றாவது அக்காவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். மற்ற இரண்டு அக்காக்களுக்கும் ஆளுக்கொருப் பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அதைக் காரணமாகக் கூறி, ‘பெண் பிள்ளைகள் வளரும் வீட்டில் இதெல்லாம் வேண்டாம். தேவையில்லாதப் பிரச்சனைகள் வரலாம்’ எனக் கூறி மறுத்திருந்தான்.

அதோடல்லாமல் ‘இந்த இடமும் இன்னும் அந்தளவுக்கு வளர்ச்சியடையவில்லை. உங்களுக்கு டவுனுக்குள் வேறு இடம் பார்க்கலாம் மாமா’ என்றும் கூறியிருந்தான். ‘அது எனக்குத் தெரியாதா’ என்று முறுக்கிக் கொண்டு திரிபவரிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் பிரபாவும் அத்தோடு விட்டுவிட்டான்.

இவ்வாறாக மூன்று மாமன்மார்களும் பிரபாவின் மீது ஏகக் கடுப்போடு இருந்த மிக நல்ல தருணத்தில் தான், சுந்தரவடிவு பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த பெண்ணின் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து முடித்தார்.  இரண்டு ஜாதகமும் நன்றாகப் பொருந்தி இருந்தது.

முறைப்படி அதைத் தன் மகள்கள் மற்றும் மருமகன்களிடமும் தெரிவிக்கத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தத் தருணமும் அமைந்தது.

அன்று இரண்டாவது மகள் வயிற்றுப் பேரனுக்குப் பிறந்த நாள். சிறுவனுக்கு நண்பர்களை அழைத்துக் கேக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாட ஆசை. இம்முறை மாமன் வீட்டிலிருக்கும் பொழுது பிறந்த நாள் வந்ததால் அதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டது அந்தப் புத்திசாலி வாண்டு.

அவன் விருப்பப்படியே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்த பின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமாக மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். மெல்ல சுந்தரவடிவு பேச்சைத் தொடங்கினார்.

“மாப்பிள்ளைக எல்லாரும் ஒன்னா இருக்கீக. இங்கனயே நான் விசயத்தை சொல்லிடறேன். நம்ம பிரபாவுக்கு பொள்ளாச்சியிலிருந்து ஒரு வரன் வந்திருக்கு.”

“பொள்ளாச்சியாஆஆஆ… அதெல்லாம் சரி வராது அத்தை. ஆரு இங்கனயிருந்து அம்புட்டுத் தொலவு போயாரது? அதெல்லாஞ் சரிப்படாது” சுந்தரவடிவு முடிக்கும் முன்னமே முந்திக் கொண்டார் மூத்த மாப்பிள்ளை.

“ஏங்க செத்த இருங்க. அம்மா என்னதான் சொல்றாகென்டு கேட்போமே” மூத்த உடன்பிறப்புத் தன் கடமையை செவ்வனே செய்து முடித்தது. “ம்க்கூம்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவருடைய மணாளன்.

“கொஞ்சம் தொலவுதேன்  மாப்புள. ஆனா நமக்குத் தூரத்து உறவு முறைக்காரவுக அதேன்…” என்று இழுத்தார் சுந்தரவடிவு.

“தூரத்து சொந்தமென்டா எம்புட்டுத் தூரமென்டு தெளிவா சொல்லிப்புடு சித்தி” என்றான் பாண்டி.

“நம்ம மாணிக்கம் அண்ணேன் இருக்காகல்ல அவுகளோட பொஞ்சாதி வழிச் சொந்தம். பொள்ளாச்சிப் பக்கம் பெரிய சமீன்தார் குடும்பமாம். சாரிச்ச வரைக்கும் நல்ல விதமாத்தேன் சொல்றாக. 

அதேன் நீங்க எல்லாம் உங்களுக்கு என்னைக்கு உங்களுக்குத் தோதுப்படுமென்டு சொன்னீகன்னா நாம போய் பொண்ணு பார்த்துட்டு வரலாம்” ஒருவழியாக விஷயத்தைச் சொல்லி முடித்துவிட்டார் சுந்தரவடிவு.

“இதுக்கு எதுக்கு அம்புட்டுத் தொலைவு போகணுங்குறேன்? அதேன் என் அக்கா மவ இருக்காள்ல்ல? அவளையே பரிசம் போட்றுவோம்” என்றார் இரண்டாவது மாப்பிள்ளை.

“நீ மட்டும் உன் அக்கா மகளைக் கட்டாம வெளியில நல்ல புள்ளயா பார்த்துக் கட்டிக்கிடுவ. நாங்க மட்டும் கட்டிக்கிடணுமாக்கும். என்ன ஒரு நல்லெண்ணம்” என்று பாண்டி முணுமுணுக்க அவனுக்கு ஒரு முறைப்பான பார்வைப் பரிசாகக் கிடைத்தது இரண்டாவது அக்கா தனத்திடமிருந்து.

“இங்காருங்க அத்தே இந்த சமீன்தார் வூட்டுப் புள்ள எல்லாஞ் சரிப்படாது. உங்க மகனை அப்படியே வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டுப் போயிறுவாக. அப்புறம் உங்க மகன் இருந்தும் இல்லாத மாதிரிதேன் பார்த்திக்கிடுங்க” இலவச ஆலோசனை வழங்கியது மூன்றாவது மருமகன்.

“ஆமாம்மா எனக்கென்னவோ மாமா சொல்றது தான் சரின்னு தோனுது. நாம எதுக்கும் வேற இடமா பார்ப்போமே” என்று சொன்ன பிரபாகரனை வெட்டவா குத்தவா என்பது போல அவனுடைய தாயாரும் தமக்கைகளும் பார்த்து வைக்க, மெல்ல அந்த இடத்திலிருந்து பாண்டியுடன் சேர்ந்து நழுவிவிட்டான் பிரபாகரன்.

இருவரும் சென்ற பிறகு, மூன்று மாப்பிள்ளைகளும் கூட ஒருவர் பின் ஒருவராகக் கீழிறங்கிச் சென்று விட மகள்களுடன் தனித்துப் பேச இடம் கிடைத்தது சுந்தரவடிவுக்கு.

“என்னங்கடி இது இந்தப் பய இந்தப் பாடு படுத்துறான். பொம்பளைப் பிள்ளைக உங்களுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்கக் கூட நான் இம்புட்டுக் கஷ்டப்படலை. ஆனா இந்தப் பய என்னைய ஒரு வழி ஆக்காம விட மாட்டான் போலயே.

நானும் கெஞ்சிப் பார்த்துட்டேன். திட்டிப் பார்த்துட்டேன். அழுதுங் கூடப் பார்த்துட்டேன். ஒன்னத்துக்கும் புடி கொடுக்க மாட்டேங்குறான். உங்க அப்பத்தா இருந்திருந்தாலாவதுப் பேசிப் பேசியே அவனை வழிக்குக் கொண்டு வந்துருவாக. மவராசி என்னைய இப்படித் தனியா பொலம்ப வுட்டுட்டு அவியளும் போய்ச் சேர்ந்துட்டாக.

பொண்ணைப் போய் பார்த்ததுக்கப்புறம் புடிக்கலைன்டு சொன்னா கூட ஒத்துக்கலாம். இப்படி போட்டோவைக் கூடப் பார்க்காமப் புடிவாதம் புடிக்கிறவனை என்னதேன் பண்றது?” தன்பாட்டில் புலம்பத் தொடங்கிவிட்டார் சுந்தரவடிவு.

“எம்மா தம்பி போன டிரிப்பு வந்தப்ப சொல்லுச்சே அவுக கேப்டனோ ஆரோ கப்பலுக்குப் போன எடத்துல ஒரு வெளிநாட்டுப் புள்ளய காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டதா. அதேன்மா நம்ம நாலு பேரையும் உக்கார வைச்சு கதை கதையா சொன்னுச்சே, மறந்துட்டீகளாக்கும்?

அந்த மாதிரி நம்ம தம்பியும் ஆராவது வெளி நாட்டுப் புள்ளயைக் காதலிக்குமோ? அதை சொல்ல சங்கடப் பட்டுக்கிட்டுதேன் இப்புடி புடி கொடுக்காம இருக்குதோ?” என்றார் மூத்த மகள் தங்கம்.

“நம்ம தம்பி அப்படியெல்லாம் பண்ணாதுக்கா” என்று ஒருமித்தக் குரலில் கூறினார்கள் இளையவர்கள் இருவரும்.

“அப்படி அவன் யாரையாச்சும் விரும்பினா கூட பரவாயில்லயே. சாம் சாமென்டு நான் கல்யாணம் பண்ணி வைப்பேனே. அப்படி எதாவது இருக்கான்டு நீங்க மூணு பேரும் சேர்ந்து கொஞ்சம் நயமா சாரிச்சு சொல்லுங்கடி. புண்ணியமா போகும் உங்களுக்கு” என்றார் சுந்தரவடிவு.

“ஏம்மா தம்பி அப்படி வெள்ளைக்காரியைக் கட்டிக்கிறதுல உனக்கு வருத்தம் இல்லையா?” சொர்ணத்திடமிருந்து வந்தது இந்தக் கேள்வி.

“எனக்குத் தேவை எல்லாம் அவன் கல்யாணம் முடிஞ்சு குடும்பம், புள்ள குட்டியென்டு சந்தோசமா இருக்கணும். அம்புட்டுத்தேன். வாராவ யாரா இருந்தா என்ன? அவ என்னைய தாங்க வேண்டாம். என் மகனுக்குப் புடிச்சவங்குற ஒரே காரணத்துக்காகவே நான் அவளைத் தங்கத் தட்டுல வைச்சுத் தாங்க மாட்டேனா?” வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அவருடைய அடி மனதிலிருந்து வந்த வார்த்தைகளில் மகள்கள் மூவரும் கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்கள்.

“நீ ஒன்னும் கவலைப்படாதம்மா. அதேன் பாண்டிப்பய கூப்புட்டுப் போயிருக்கான்ல்ல. அவஞ் சொன்னா நம்ம தம்பி கேட்டுக்கும்மா. இல்லாட்டி திரும்ப ஒருக்கா காலையில நாமளே தம்பிக்கிட்ட பேசுவோம்மா” என்று மகள்கள் மூவரும் சேர்ந்துத் தாயாருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தார்கள்.

**********************

பாண்டியும் பிரபாவும் ஆளில்லா அந்த ரோட்டில் நடை பயின்று கொண்டு இருந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முதலில் மௌனத்தை உடைத்தது பாண்டிதான்.

“ஏன் மாப்பி ஆரம்பத்துலயிருந்து இந்த சம்பந்தம் வேண்டான்டே சொல்லிக்கிட்டு இருக்க? உனக்குப் புடிக்கலையா? புள்ளவூட்டு போட்டோவைப் பார்த்தியா?” என்று பாண்டி வினவ,

“அதெல்லாம் நான் எந்த போட்டோவும் பார்க்கலை மாப்பி. எனக்கென்னவோ ஆரம்பத்துலேயே இது சரிவராதென்டு தோனிடுச்சு. அவ்வளவு பெரிய வீட்டுப் புள்ள இங்கன எல்லாம் வந்து இருக்குமாடா?

எத்தனை நாள்தான் பாண்டி பணத்துக்குப் பின்னாடியே ஒடுறது? எனக்கு விவசாயந்தேன் என் கனவு, லெட்சியம் எல்லாமே பாண்டி. அதுக்கு எனக்கு ஒத்துழைக்கிற புள்ளயா கட்டுனாத்தேன் வாழ்க்கை சிக்கலில்லாம போகும். இந்தப் புள்ள அதுக்குச் சரிவருமென்டு எனக்குத் தோனலைடா” என்றான் பிரபா.

“இப்ப என்ன, உனக்கு நயன்தாரா வேணாம். தேன்மொழி கனிமொழியென்டு எவளாவது ஒருத்தி வாய்க்கா வரப்புல திரியிறவதேன் வேணுமாக்கும்” நக்கலாக வினவினான் பாண்டி.

பாண்டியின் தோளில் கையைப் போட்டு அவன் கழுத்தோடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்ட பிரபா, “இந்த நக்கலுதான வேண்டாங்குறது” என்று கடுப்படிக்க,

“அடேய் விடுறா என்னைய. ஒரு அறியா புள்ளைய கழுத்தை நசுக்கிக் கொன்னுப்புடாத” என்றவாறே ஒருவழியாக பிரபாவின் கிடுக்கிப் பிடியில் இருந்து நழுவிக் கொண்டான் பாண்டி.

“இங்காரு பிரபா இத்தன நாளுந்தேன் சித்தி பொண்ணு பார்த்துச்சு. ஆனா அது சரியில்ல இது சரியில்லையென்டு சொல்லி சித்தியே பாதிய தட்டிக் கழிச்சிரும். அதுவும் மீறி ஒத்து வந்தா உன் மாமனுங்க ஒருக்கா ஃபில்டர் பண்ணுவானுங்க.

எல்லாத்தையும் தாண்டி வந்தா அந்த பொண்ணு வூட்டுக்காரங்களே எங்களுக்குக் கப்பல்ல வேலை பார்க்குற மாப்பிள்ளை வேண்டாமென்றுவாக. இப்படியே போயிக்கிட்டே இருந்தா இதுக்கு முடிவுதேன் என்ன மாப்பி? பொண்ணைப் பார்க்காமலேயே நீயா ஒரு முடிவுக்கு வராதடா.

உனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதா இல்லையா? காலா காலத்துல இதையெல்லாம் நடத்தி முடிச்சுப்புடணும் மாப்பி. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுப் புத்தியோட பொழச்சுக்க ஆமா” நண்பனின் வாழ்க்கையில் தனக்கிருக்கும் அக்கறையை வார்த்தைகளில் நிரூபித்து இருந்தான் பாண்டி.

பாண்டி சொல்வது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாக பிரபாவுக்கும் தோன்ற, “இப்ப என்னைய என்னதேன் மாப்பி பண்ணச் சொல்லுற?” என்று ஒருவழியாக இறங்கி வந்தான் பிரபா.

“அப்படிக் கேளு. இப்ப நேரா வீட்டுக்குப் போவோம். எப்படியும் சித்தி உனக்கு ஒரு மண்டகப்படி வைச்சிருக்கும். அதைக் காது குளிர கேட்டு ரசிக்கிறோம். அப்புறஞ் சித்தி மனசு குளிர அந்தப் புள்ளயைப் போய் பொண்ணு பார்த்துட்டு வாரோம். நேர்ல பார்த்தும் உனக்குச் சரி வராதென்டு தோனுச்சுன்னா என்ன செய்றதென்டு யோசிப்போம். இப்ப வா முதல்ல வூட்டுக்கு நடையைக் கட்டுவோம்” என்று கூறி பிரபாவையும் இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் பாண்டி.

பாண்டியின் கூற்றைக் கொஞ்சமும் பொய்யாக்காமல் பயங்கர கோபத்துடன் இருந்தார் சுந்தரவடிவு. அது அவர் கதவு திறந்து விடும் வேகத்திலேயே தெரிந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக இருக்கையிலேயே சுந்தரவடிவு ஏதோ பேசத் தொடங்க,

“சித்தி வெயிட். சுப்ரபாதத்தை ஆரம்பிச்சிராத. நான் எல்லாத்தையும் அவங்கிட்ட பேசிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான். இப்பப் பேயாமப் போய் அந்தப் புள்ள போட்டோவைக் கொண்டாந்து உன் புள்ள கையில கொடு. அதப் பார்த்துட்டு அவன் ஒரு முடிவு சொல்லட்டும்” என்று கூறி சுந்தரவடிவை உள்ளே அனுப்பி வைத்தான் பாண்டி.

புகைப்படத்தை எடுப்பதற்காக சந்தோஷத்துடன் சுந்தரவடிவு உள்ளே சென்றுவிட, “உன் மாமனுங்களை நம்பிக் கல்யாணத்தை நடத்துற வேலையைத்தேன் தர முடியாது. நிறுத்துற வேலையை நல்லாவே செய்வானுக. அதால இப்போதைக்கு சித்திக்கிட்ட மறுப்பா எதையுஞ் சொல்லி வைக்காதே மாப்பி. நாம பார்த்துக்கலாம்” என்று பிரபாவிடம் சொல்லி வைத்தான் பாண்டி.

புன்னகை முகமாக சுந்தரவடிவு புகைப்படத்துடன் திரும்பி வர, அதை அவரிடமிருந்து கிட்டத்தட்டப் பிடுங்கி முதலில் பார்த்தான் பாண்டி. “சித்தி பரவாயில்லயே நல்லா அம்சமான புள்ளயாதேன் பார்த்திருக்க. காலெண்டருல போட்டிருக்க மகாலெட்சுமி போட்டோ கணக்காவுல்ல இருக்கு இந்தப் புள்ள” என்றான் பாண்டி.

“கண்ணு போடாதடா என் மருமக மேல” என்று சுந்தரவடிவு நொடித்துக் கொள்ள,

“இந்தா மாப்பி, நீ பாரு. பார்த்து ஒரு நல்ல முடிவா எடு. சட்டு புட்டுனு போய் பொண்ணைப் பார்த்துப் பேசி முடிப்போம். சரி சித்த நானும் அப்படியே கெளம்புறேன். வரேன்டா பிரபா” என்று சொல்லிப் பிரபாவிடம் புகைப்படத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டான் பாண்டி.

கையில் புகைப்படத்துடன் தனது அறைக்குள் சென்ற பிரபா, வெகு நேரத் தயக்கத்துக்குப் பின் கவருக்குள் இருந்த புகைப்படத்தை வெளியில் எடுத்துப் பார்த்தான். பார்த்த அடுத்த நொடி பட்டென்று புகைப்படத்தை மறுபுறமாகத் திருப்பிக் கொண்டான். ஏனெனில் அத்தனை அழகாக அந்தப் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் பெண்.

“பிரபா வேண்டான்டா. இந்தப் புள்ளய போய் பார்த்தோம், அந்தப் புள்ளயா பார்த்து நம்மள வேண்டாமென்டு சொன்னாத்தேன் உண்டு. யப்பா என்ன அழகுடா சாமி” பிரபாவின் இதழ்கள் தானாக முணுமுணுத்துக் கொண்டது.

மீனலோசனி குமரப்பன் M.Sc.,

என்று புகைப்படத்தின் பின்புறம் அழகாக, மணிமணியாக எழுதப்பட்ட எழுத்துக்கள் பிரபாவைப் பார்த்து ஏளனமாகக் கைக்கொட்டிச் சிரித்தது. 

 

பார்வை – 5

அண்டமாய் அவனியாகி

அரியொணாப் பொருள தாகித்

தொண்டர்கள் குருவு மாகித்

துகளறு தெய்வ மாகி

எண்டிசை போற்ற நின்ற

என்னருள் ஈச னான

திண்டிறல் சரவணத்தான் 

தினமும் என் சிரசைக் காக்க 

தெய்வீகமான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது ஷண்முகக் கவசம். பழைய காலத்து முறைப்படி கட்டப்பட்ட தொட்டிக் கட்டு வீடு. வீட்டின் நடுவில் இருந்த முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்பட்டு செழிப்பாக வளர்ந்திருந்த துளசிச் செடி சொல்லாமல் சொன்னது அந்த வீட்டின் செழுமையை.

துளசி மாடத்தில் விளக்கேற்றப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. முற்றத்தின் பின்புறம் வலது கோடியிலிருந்த பூஜை அறையில் அமர்ந்து ஷண்முகக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தார் கோதை.

கோதை, பெயருக்கேற்றாற் போன்ற தெய்வீகக் களை பொருந்திய முகம். பார்ப்பதற்கு அசப்பில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்த நடிகை பத்மினியைப் போன்ற தோற்ற அமைப்பு. நெற்றியில் சிறு கீற்றாக விபூதி, தங்க நிற பிரேமினால் ஆன கண்ணாடிக்குள் அடங்கியிருந்த அந்தக் கண்களில் அவ்வளவு தீட்சண்யம். 

மூக்கில் இருந்த வைர பேசரி டாலடித்து அவருடைய அழகை இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டியது. அரக்கு நிறத்தில் புடவையணிந்து, புடவைத் தலைப்பை போர்த்தினாற் போல் கொண்டு வந்து முன்புறம் சொருகியிருந்தார்.

கோதையின் கணவர் கமலநாதன் கோவை வட்டாரத்தில் மிகப் பெரிய ஜமீன் வம்சம். கமலநாதனுடைய தாத்தா அரசாங்க உத்தரவுக்கு முன்னதாகவே தன்னுடைய சொத்துக்களை தன்னிடம் வேலை செய்தவர்களுக்கும், ஊர் மக்களுக்குமாகப் பிரித்துக் கொடுத்த வள்ளல். காலப்போக்கில் ஜமீன் முறை அழிந்தாலும் இவர்களை விடப் பெரும் பணக்காரர்கள் வந்த பொழுதிலும் கூட இவர்களுக்குரிய மரியாதை இன்று வரை நீடித்திருக்கிறது.

கோதை – கமலநாதன் தம்பதியரின் ஒரே செல்ல மகள் லலிதா. அந்த ஊரில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான கரும்பாலை மில்லில் வேலைக்காக வந்தவர் குமரப்பன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய காரணத்தால், எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் தன் மகளை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார் கமலநாதன்.

குமரப்பன் குணத்திலும் கரும்பைக் கொண்டிருந்ததால் மிகவும் இனிமையாகவே நடந்தது இல்லறம். ஆசைக்கு ஒரு பெண் மீனலோசினி, ஆஸ்திக்கு ஒரு ஆண் முகிலன் என்று இரண்டு பிள்ளைச் செல்வங்கள் லலிதா – குமரப்பன் தம்பதிகளுக்கு.

கமலநாதான் இருக்கும் வரை வரப் போக இருந்தவர், அவர் இறந்த பிறகு கோதையைத் தனியே விட மனமில்லாமல் இங்கேயே குடும்பத்துடன் வந்துவிட்டார் குமரப்பன். தான் எதுவும் சொல்லாமலேயே குறிப்பறிந்து தன் மனம் கோணாமல் நடக்கும் மருமகன் மீது எப்பொழுதுமே தனிப்பாசம் உண்டு கோதைக்கு. 

சுலோகங்கள் எல்லாம் சொல்லி முடித்தக் கோதை மணியடித்துக் கொண்டே தீபாராதனை காட்டவும் சமையலறையில் இருந்து அவரது மகள் லலிதாவும், வெளியில் தாழ்வாரத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவரது மருமகன் குமரப்பனும் வந்து தீப ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் துளசித் தீர்த்தம் வழங்கியவாறே,

“மீனா எங்கம்மணி?” என்றுத் தன் மகள் லலிதாவிடம் கேள்வி எழுப்பினார் கோதை.

“இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக் காரங்க் வாராங்க் இல்லீங்கம்மா, அதுதானுங்க நான் நம்ம செல்வி புள்ளைய வாசத் தொளிச்சு சாணம் போட்டு மொழுகிக் கொஞ்சம் பெரிய கோலமா போடச் சொன்னேனுங்கம்மா. உங்க பேத்தி தானே ரங்கோலி போடறதா சொல்லிப் போட்டுக் காலையிலிருந்து அங்கனயே தானுங்கம்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கா” என்றார் லலிதா.

“நல்லாயிருக்கு அம்மணி நீ சொல்றது. அவளைப் பொண்ணு பார்க்க வாரதுக்கு அவளையே கோலம் போடச் சொன்னியாக்கும். போய் வெரசா முடிச்சுட்டு உள்ர வரச் சொல்லு அம்மணி” என்று கோதை சொல்லத் தான் சென்று அழைத்து வருவதாகக் கூறி லலிதா வாசலுக்குச் சென்றார்.

அங்கு பல வண்ணக் கலவையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தது பல வகைப் பூக்களும் அவற்றுக்கிடையில் ஒரு மயிலும். அந்த அவசரத்திலும் ஒரு நிமிடம் நின்றுத் தன் மகளின் கைவண்ணத்தை ரசித்துவிட்டே அவளைத் தேடிக் கொண்டு சென்றார் லலிதா.

“ராசு சின்னம்மணி எங்க?” என்று அங்கிருந்த பண்ணை ஆளிடம் கேட்க,

“நம்ம பாக்யம் கன்னுக்குட்டி ஈன்றுச்சுங்க அம்மணி. செல்விப் பொண்ணு வந்து அதைச் சொல்லவும் சின்னம்மணி கட்டுத்தரைக்குப் போயிட்டாங்கங்கோ” என்று பணிவாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.

“இந்தப் பொண்ணோட” என்று முணுமுணுத்தவாறே வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார் லலிதா.

அங்கு சென்றும் மீனலோசனியைக் காணாமல், அதற்கு மேலும் தேடுவதற்கு அந்தப் பரந்து விரிந்தத் தோட்டம் அனுமதி தர மறுத்தக் காரணத்தால் வீட்டுக்குள் சென்று கோதையிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் அவர். 

மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் எப்பொழுதும் வீட்டுப் பெண்களிடம்தான். அதனால் அவர் அதைக் கவனிப்பதற்காகச் சென்றுவிட்டார். இன்று முதன் முறையாக அவருடைய ஆசை மகளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனரே! அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டுமே என்ற பதட்டம் கொஞ்சமல்ல நிறையவே இருந்தது லலிதாவுக்கு.

மாட்டுத்தொழுவத்திலிருந்து சற்றுத் தள்ளி வாழைத் தோப்புக்கு அருகில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் நமது கதாநாயகி மீனலோசனி. ஐந்தடி இரண்டு அங்குல உயரம், கொங்கு நாட்டுக்கே உரித்தான வாளிப்பானத் தோற்றம், செம்மஞ்சள் நிறமுடைய அழகி.

அடர்ந்த கூந்தல் இடைதாண்டிப் பின்னலிடப்பட்டிருக்க, ஆர்கிட் நிறச் சுடிதார் அவள் இடை தழுவியிருந்தது. அவள் கன்றிலிருந்தே ஆசையாக வளர்க்கும் பாக்யம் எனும் பசுமாடு இன்று கன்று ஈனப் போவதால் நேற்றிலிருந்து அந்த மாட்டைத் தான் சுற்றி வந்து கொண்டிருந்தாள் மீனா. இரவில் சரியாகத் தூங்கக் கூட முடியவில்லை அவளால்.

மாடு கொஞ்சம் சிரமப்படுவது போல் தோன்றவும் இன்று அதிகாலையிலேயே கால் நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். மீனாவின் பொறுமையை ரொம்பவும் சோதிக்காமல் அழகான ஒரு பெண் கன்றினை  சற்று நேரத்துக்கு முன்பாகத்தான் ஈன்றெடுத்திருந்தது பாக்யம்.

“சின்னம்மணி வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல சகுனமுங்கோ. நான் போய் பெரியம்மணிக்கிட்ட சொல்லிப் போட்டு வாரேனுங்” என்று அவர்கள் வீட்டுப் பண்ணையாள் அந்தப் பக்கம் நகரவும், பிறந்த கன்றுக்குட்டி ஒரு முறைத் துள்ளி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழவும் சரியாக இருந்தது.

அப்பொழுதுதான் பாக்யத்திடமிருந்து கன்றுக்குட்டியிடம் வந்து சேர்ந்தாள் மீனா. ஆசைதீர ஒரு முறைத் தடவிப் பார்ப்பதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் சுதாரிப்பதற்குள் தானும் கிணற்றுக்குள் குதித்திருந்தாள் மீனலோசினி.

பிறந்ததிலிருந்தே நீச்சலடித்துப் பழகிய கிணறென்பதால் எந்தப் பயமும் இன்றிக் கிணத்துக்குள் குதித்திருந்தாள். இவள் குதிக்கவும் அங்கிருந்த மற்ற ஆண்கள் கிணற்றுக்குள் குதிக்கத் தயங்க, செல்வி நொடியில் புடவையை உதறிவிட்டு பாவாடையை மேலேற்றிக் கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்தாள்.

இரு பெண்களுமாகச் சேர்ந்து இருபத்தி ஐந்து கிலோ எடையுடைய அந்தக் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி கிணற்றுக்குள் இருக்கும் படி வரைக்கும் நீந்தி வந்து ஒருவழியாக அதனைத் தூக்கிக் கொண்டு மேலேறி வந்தார்கள். கொஞ்சம் மேலே ஏறவுமே அங்கிருந்த பண்ணையாட்கள் சென்றுக் கன்றுக்குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.

வெளியே வரவும் கால்நடை மருத்துவர் அந்தக் கன்றுக்குட்டியைப் பரிசோதித்து ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னதும் தான் அனைவருக்கும் நிம்மதியானது. அதன் பிறகே சுடிதாரை உதறிக் கொண்டு மேலே வந்த மீனா பார்த்ததெல்லாம் தன்னை முறைத்துக் கொண்டு நின்றத் தன்னுடைய அம்மத்தா கோதையைத்தான்.

“அம்மத்தா நீங்க எதுக்குங் இம்புட்டுத் தூரம் வந்தீங்?” என்று அசடு வழிந்து கொண்டே கேள்வி கேட்க,

“நான் வாரது இருக்கட்டுங்கண்ணு. நீ என்ன பண்ணியிருக்குறேன்னு புரியுதா? ஒன்ன ஆரு கண்ணு கிணத்துக்குள்ளாற குதிக்க சொன்னது? நீ குதிச்சதால இவிங்க ஆரும் குதிக்க முடியாம நிக்கிறாங்க.

ஆம்பளை ஆளுக குதிச்சா சுளுவா கன்னைத் தூக்கிடுவாங்க. உன்னால முடியுமா கண்ணு. எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுதுன்னா உன்ர அப்பன் ஆத்தாளுக்கு ஆரு பதில் சொல்றது கண்ணு” என்று கடிந்தவாறே பேத்தியின் கைப்பிடித்து வீடு நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார் கோதை.

“அம்மத்தா… அம்மத்தா… ஒரே நிமிசமுங். நான் இன்னும் கன்னுக்குட்டியை ஒழுங்கா கொஞ்சவே இல்லீங். நீங்க வூட்டுக்குப் போறதுக்குள்ளார நான் ஒரே ஒருக்கா கொஞ்சிப் போட்டு வந்துடறேனுங்க அம்மத்தா. ப்ளீஸ்…” என்று சிறு பிள்ளையாய் மாறிக் கெஞ்சும் பேத்தியைக் கண்டு இளகிய மனத்தை இறுக்கிப் பிடித்தவராய்,

“உறம்பிர எல்லாம் வார நேரமாச்சு கண்ணு. பேசாம வா சாமி. உன்ர பொறந்தவன் வந்தப்புறம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா வந்து கொஞ்சிக்கோங்க” என்று சொல்லியவாறே பிடித்தக் கையை விடாமல் அழைத்துச் சென்றுவிட்டார் கோதை. செல்லும் முன் அங்கிருந்த பண்ணை ஆட்களை முறைக்கவும் தவறவில்லை.

 வேறு வழியில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் மீனா. தம்பியின் வரவைப் பற்றி அம்மத்தா கூறியதும் அவள் மனதும் குளிர்ந்து தான் போனது. அவ்வளவுப் பிரியம் தம்பியின் மீது. இருவருக்குமிடையில் ஆறு வருட வயது வித்தியாசம்.

தம்பி கேட்டானென்றால் அவனுக்காக எதையும் செய்வாள் மீனலோசினி. ஊருக்குள்ளிருந்த பள்ளியில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு அக்கா சம்பாதிப்பது அனைத்தும் தம்பிக்குத்தான். லலிதா பண விவகாரங்களில் கொஞ்சம் கெடுபிடி. அவ்வளவு எளிதில் அவரிடமிருந்து பயலால் பணம் வாங்கிவிட இயலாது. அதற்காகவே அக்காவுக்கு காக்கா பிடித்து வேண்டியவற்றை வாங்கிவிடுவான்.

இப்பொழுது கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு வானூர்திப் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறான் முகிலன். அக்காவுக்கு மட்டும் செல்லமாக முகில். அங்கே கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பதால் இப்பொழுதெல்லாம் வார விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைக் காண முடியுமென்பதில் அவ்வளவு கவலை மீனாவுக்கு.

இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் அக்காவைப் பெண் பார்க்க வருவதாலும் கல்லூரியிலிருந்து சீக்கிரமே கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தான். வரப்போகும் மாப்பிள்ளையைக் கூட இவ்வளவு ஆவலாக எதிர்பார்க்கவில்லை மீனா. தம்பியின் வரவைத் தான் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள்.

ஒருவழியாக அம்மத்தாவும் பேத்தியும் வீட்டுக்குள் வந்து சேர்ந்தார்கள். மீனாவுடைய ஈர உடையைப் பார்த்து லலிதா திட்டத் தொடங்க அவரிடமிருந்து எப்படியோ தப்பித்து உடை மாற்றுவதாகப் பேர் பண்ணிக் கொண்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் மீனா.

உள்ளே நுழைந்தவுடன் தனது அலைபேசியை எடுத்துத் தம்பிக்கு அழிப்பு விடுக்க,

“அக்கா கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சுங். நான் மதியம் கிளம்பி சரியா ரெண்டு மணிக்கெல்லாம் உங்க முன்னாடி நிப்பேனுங். இப்ப எனக்குத் திட்டு வாங்கிக் கொடுக்காம போனை வைங்கக்கா” கிசுகிசுத்தான் முகிலன்.

“அப்போ இப்ப மட்டும் எப்படிப் பேசிறீங்களாம்?” அவனைப் போலவே கிசுகிசுப்பானக் குரலில் கேட்டாள் மீனா.

“அது பென்சுக்குக் கீழே குனிஞ்சுப் பேசிக்கிட்டு இருக்கேனுங்கக்கா” அழைப்பைத் துண்டிக்காமல் தமக்கைக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“சரி சரி முகிலா சீக்கிரமா வந்துடு சாமி. எனக்கு ஒரு மாதிரி குழப்பமா இருக்கு கண்ணு. நீ என்ர கூடவே இருக்கோணும் சரியா” என்று தன் மன அலைப்புறுதலைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மீனா.

உடை மாற்றுவதற்காக வார்ட் ரோபைத் திறக்க அங்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கவர் இவள் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் பிரித்தவள், அதன் உள்ளிருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு,

“என்ன மிஸ்டர்.பிரபாகரன் உங்களைப் பத்தி வர்ற சேதி ஒன்னும் நல்லதா படலையே. பேசாம ரிஜெக்ட் பண்ணிடவா?” என்று கேட்டவாறே வில்லென வளைந்திருந்தத் தன் புருவங்களில் ஒன்றினை ஏற்றி இறக்கினாள்.

(‘நீ இப்படி ஈர டிரஸ்சோட நின்னுக்கிட்டுப் புருவத்துல டான்ஸ் ஆடிக் கேட்டின்னா பய இங்கேயே ஃபிளாட் ஆகிடுவாம்மா’ அப்படின்னு நாம கத்துறது அவளுக்குக் கேட்கலைப் போல மக்கா!)

முதலில் மீனலோசனிக்குத் தங்கள் சொந்தத்துக்கு உள்ளேயே அக்கம்  பக்கத்து ஊர்களில் தான் வரன் தேடினார் கோதை. ஒன்றும் ஒத்து வராமல் இருந்த பொழுது தான் இவர்களது உறவு முறைப் பெண்ணின் கணவரான மாணிக்கம் வந்து இந்த வரனைப் பற்றிக் கூறினார். 

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் வரன் கிடைப்பதே இந்தக் காலத்தில் அபூர்வம். அதிலும் தன் சொந்தக் காலில் நின்று உழைத்து முன்னேறித் தன் தாயையும் தமக்கைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளும் ஒருவன் நிச்சயம் தங்கள் பெண்ணையும் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை தாமாகவே அவரிடம் உதயமாகியிருந்தது.

பிரபாகரனின் புகைப்படமும் திருப்திகரமாகவே இருந்தது பெரியவர்களுக்கு. மீனலோசினியை அழைத்து சம்மதம் கேட்க அவளும் சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இந்தப் பெண் பார்க்கும் படலத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. 

மீனலோசினி மனதிற்குள் நினைத்திருந்தது வேறு. முதலில் மதுரையா, அவ்வளவு தூரமா என்று யோசித்தாள். எப்படியும் தன் தம்பி படிக்கும் படிப்புக்கு அவன் நிரந்தரமாக இங்குத் தங்கப் போவதில்லை. அம்மத்தா, அப்பா, அம்மா அனைவருக்கும் வயதும் கூடிவிட்டது. இனி இந்த தோட்டம், துரவு, வரவு, செலவு, அனைத்தையும் தான் பார்த்துக் கொள்ளக் கூடிய வகையில் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்தாள். 

பின் பிரபாவின் வேலையைப் பற்றி அறிந்ததும், அவன் கப்பலுக்குச் செல்லும் நாட்களில் தான் வந்து இங்கு இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளலாமே என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே சம்மதித்திருந்தாள்.

நேற்று போனில் அழைத்திருந்த மாணிக்கம் சித்தப்பா வேறொரு விஷயத்தைக் கூறியிருந்தார். அது அத்தனை உவப்பானதாகத் தோன்றவில்லைப் பெண்ணுக்கு. பிரபாகரன் கனடாவில் வேலைக்கு முயற்சிப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் இது போன்று நாடாறு  மாதம் கடலாறு மாதம் என்ற நிலை இருக்காதென்றும், நிரந்தரமாகவே கனடாவில் செட்டில் ஆகி விட வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தார்.

இதைக் கேட்ட வீட்டிலிருந்தப் பெரியவர்களுக்கெல்லாம் சந்தோஷம் மீனாவைத் தவிர. இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் பிரபாகரனை நிராகரித்து விடலாமா என்று அவன் புகைப்படத்திடமே கேட்டுக் கொண்டிருந்தாள். இந்த யோசனையிலேயே மீனா சுற்றிக் கொண்டிருக்க, சொன்ன நேரத்துக்கு முன்னதாக சீக்கிரமே வந்து சேர்ந்தான் அவளுடைய தம்பி முகில்.

“என்னடா அக்காவைப் பொண்ணு பார்க்க வர்றாங்களே, கொஞ்சம் முன்னாடியே வந்து அம்மா அப்பாவுக்கு உதவுவோம், அதெல்லாம் கிடையாது. இப்படித்தான் கடைசி நிமிசத்துக்கு வருவியா சாமி?” என்று கொஞ்சம் கோபத்துடனேயே மகனை வரவேற்றார் லலிதா.

“வந்ததும் வராததுமா ஏன் அம்மணி புள்ளையை ஏசுற? லீவ் போட்டா ஏன் போட்டேன்னு ஏச வேண்டியது. பொறுப்பா காலேசுக்கு போயிட்டு வந்தா அதுக்கும் ஏசுவியா?” என்று கூறியவாறே பேரனுக்காகப் பரிந்து கொண்டு வந்தார் கோதை.

“நல்லா கேளுங்க அம்மத்தா. புள்ள ஹாஸ்டல்ல இருந்து வந்தவுடனே, ‘ஏங்கண்ணு இப்படி மெலிஞ்சு போயிட்ட’ன்னு சொல்லிச் செல்லம் கொஞ்சி சாப்பாடு போடோணும். அதை விட்டுப்போட்டு… ம்….” என்று வாகாக அம்மத்தாவின் தோளில் சாய்ந்து கொண்டே செல்லம் கொஞ்சினான் முகில்.

முகிலை நெருங்கி வந்த லலிதா, அவன் கன்னத்தைத் தடவியவாறே, “எனக்கும் அப்படிச் சொல்ல ஆசைத் தான் கண்ணு. அதுக்கு நீ மெலியோணுமே. ஒவ்வொரு வாரமும் உப்பிப் போய்த்தானே சாமி நீ வார” என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, இதைக் கேட்ட கோதையுமே சிரித்துவிட்டார்.

“ம்க்கூம்” என்று முறைத்துக் கொண்டுத் தன் தமக்கையின்  அறைக்குச் செல்ல முற்பட், “வேணாஞ்சாமி அப்புறம் அவ வேற வந்து ஒரண்டை இழுப்பா. வந்து சாப்பிடு கண்ணு” என்று வேறு வழியில்லாமல் லலிதா தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

“அந்தப் பயம் இருக்கோணுங்கம்மா” என்று கெத்தாகக் கூறிவிட்டு உணவருந்தி முடித்தப் பின்  தான் தன் தமக்கையைத் தேடிச் சென்றான் முகிலன்.

“ஏனுங்க்கா உள்ர வரலாங்களா? உங்க ட்ரீம்ஸ்சு எல்லாம் முடிஞ்சுதுங்களா?” என்று கேட்டவாறே அறையினுள் நுழைந்த முகிலனை ஓடிச் சென்று கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் மீனா.

“எப்பயிலிருந்து அக்கா ரூமூக்குள்ள வாரதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்க ஆரம்பிச்ச முகில்?” செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் மீனா.

“அப்புறம் மச்சான் வரப் போறாரில்லீங்க். இதெல்லாம் பழகிக்கத்தான் வேணும்”

“ம்ப்ச்” சலித்துக் கொண்டாள் பெண்.

“ஏனுங்க்கா மாப்பிள்ளை பிடிக்கலீங்களா. ஏற்பாடு பண்ண முன்னுக்கு உங்க கிட்ட கேட்டாங்க தானே?” தமக்கையின் முகவாட்டம் பார்க்கப் பொறுக்கவில்லைத் தம்பிக்கு. தம்பியிடம் நேற்று மாணிக்கம் சித்தப்பா தொலைப்பேசி வாயிலாகத் தெரிவித்த அனைத்தையும் ஒப்பித்தாள் மீனா.

“இதுக்காங்க அக்கா இவ்வளவு பீலிங்கு? மச்சானோட உங்களைத் தனியா பேச வைக்கிறது என்ர பொறுப்புங்க. அப்ப கேட்டுத் தெளிவுப்படுத்திக்கோங்க. அதை விட்டுப் போட்டு இப்படி ஏழு முழத்துக்கு முகத்தை நீட்டி வைச்சா பார்க்க நல்லவா இருக்குங்க்” என்று கூறியவாறே அவள் முன்னுச்சி முடியை நீவி விட, மீனாவுக்கு மொத்த பாரமும் இறங்கினாற் போல நிம்மதியானது.

“நீ வேற ஏன்ரா அதுக்குள்ள மச்சான் மச்சான்னு ஏலம் விடுற. இப்பத்தானே பொண்ணு பார்க்கவே வாராங்க. இன்னும் எவ்வளவோ இருக்குல்ல கண்ணு” என்றாள் மீனா.

“எனக்கென்னவோ இவர்தான் என்ர மச்சான்னு உறுதியா தோனுதுங்கக்கா. ஆனா எனக்கு ஒரே ஒரு கவலை தானுங்கக்கா” என்று முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டு கூறினான் முகிலன்.

தம்பி தன்னைப் பிரிய முடியாமல் தான் வருந்துகிறான் போல என்றெண்ணிய மீனா, கஷ்டப்பட்டு எம்பி நின்று முகிலனின் தலை கோதி வாஞ்சையுடன், “என்ன சாமி” என்று கேட்க,

“உங்களுக்கு ஒரே ஒரு கொளுந்தியாளாவது இருந்திருக்கலாங்க்கா. இப்படி மூணும் நங்கையாளா போச்சே” என்றான் உச்சுக் கொட்டியவாறே.

இதைக் கேட்ட மீனாவுக்குத்தான் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. புரிந்த பிறகு அவனை அடிப்பதற்குத் தோதாக எதையாவது தேடிக் கொண்டே, “உன்ர கவலை உனக்கு” என்று கூறிக் கொண்டே டிரஸ்சிங் டேபிளில் இருந்த சீப்பை எடுப்பதற்குள் முகிலன் ஓட்டம் எடுத்திருந்தான்.

நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க, அவர்களும் வந்து சேரவும் இப்படியே கேலியும் கிண்டலுமாக ஒருவழியாகப் பெண் பார்க்கக் குறித்த நேரமும் வந்து சேர்ந்தது. பிரபாகரனும் தன் ஒட்டு மொத்தக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்.

 

பார்வை – 6

வீட்டின் மூன்று மருமகன்களையும் ஒன்றிணைத்து பொள்ளாச்சிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது பாண்டிக்கு. பிரபாகரன் எதிலும் அவ்வளவாக ஈடுபடாமல் பட்டும் படாமல் விலகி நடக்க, சுந்தரவடிவு ஒவ்வொன்றுக்கும் பாண்டியைத் தான் தேட வேண்டியதாகிப் போனது.

“சித்தி அநேகமா பிரபா கண்ணாலத்துல நான் வழுக்கைத் தலையோடத்தேன் சுத்தப் போறேன் பார்த்துக்க. உன் மூணு மருமகன்களையும் ஒன்னா கூட்டியாந்து நிப்பாட்டுறதுக்குள்ளயும் பிச்சுக்கலாம் போல இருக்குது. இந்தப் பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது ஆமா. படுத்துறானுகளே என்னைய” என்று புலம்பித் தீர்த்து விட்டான் பாண்டி.

மூவரும் மூன்று திசைக்கு இழுத்தால் அவனும் தான் என்ன செய்ய முடியும். ஒருவழியாகப் பெண் பார்க்கச் செல்வதற்கான நாளைக் குறித்துப் பின் எதில் பயணம் மேற்கொள்வது என்பதில் ஒரு கலகத்தை சமாளித்து, வாடகைக்கு ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு குடும்பமாக இன்றுப் புறப்பட்டு விட்டார்கள் பொள்ளாச்சிக்கு.

மூன்று தமக்கைகளும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு பிரபாவைக் கிண்டல் செய்து கொண்டே வர எல்லாவற்றுக்கும் புன்னகைதான்  பதிலாக வந்தது பிரபாவிடமிருந்து. மீனாவின் புகைப்படத்தை அன்று பார்த்ததோடு சரி. ஒருமுறைப் பார்த்ததற்கே அந்தப் பளிங்கு முகமும் கண்களும் ஆழப் பதிந்து போனது மனதில்.

பிரபாவுக்குப் பெண் பார்ப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை மதுரையில் கோவிலில் வைத்து இரண்டுப் பெண்களைப் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் தோன்றாத ஒரு விசித்திர உணர்வு இப்பொழுதுத் தன்னை ஆட்டி வைப்பது கொஞ்சம் விந்தையாகத் தான் இருந்தது பிரபாவுக்கு. கண்டதும் காதல், வெளிப்புறத் தோற்றம் இதிலெல்லாம் பெரிதாக எந்த ஈடுபாடோ நம்பிக்கையோ இல்லை பிரபாவினிடத்தில்.

பாண்டி சொன்னது போல நேரில் சென்று பேசிப் பார்ப்போம். ஒத்து வந்தால் திருமணம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கப்பலும் வேலையும். புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஒரு முறை வேலைக்கென்று சென்று விட்டால் கண்ணில் படாதது கருத்திலும் பதியாது என்று நம்பிக் கொண்டிருந்தான்.

திண்டுக்கல், பழனி வழியாகப் பயணம் நீள, பழனி தாண்டியதுமே ஒரு இதமான குளுமை பரவுவதை அனைவராலும் உணர முடிந்தது. காதில் ஹெட்போன் வழியாக இளையராஜா வசியம் செய்ய, கண்களோ எங்கெங்கும் சூழ்ந்திருந்த பசுமையில் இமைக்க மறந்து மயங்கிக் கிடந்தது.

பிரபாவுக்கு மிகவும் பிடித்த வான் நீலத்தோடுப் போட்டி போடுவதுப் போல் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்திருந்த வயல் வெளிகள். இவை இரண்டுக்கும் நடுவில் பாலம் அமைத்ததைப் போன்று ஓங்கி உயர்ந்த மலை முகடுகள். அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறிச் செல்லும் மேகங்கள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை பிரபாகரனுக்கு. 

பொள்ளாச்சியிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பூங்குளம். கிராமம் என்றும் சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத அளவுக்கு இரண்டும் கலந்த கலவையாக இருந்தது அந்த ஊர். வழியில் ஓரிருவரிடம் வழி கேட்கப் பேரைச் சொன்னதுமே அவர்கள் காட்டிய மரியாதைப் பெண் வீட்டாரின் பெருமையைச் சொல்லாமல் சொன்னது.

தேசிய நெடுஞ்சாலையிலிருந்துப் பிரிந்து இடது புறமாகத் திரும்ப, இரண்டு பக்கமும் சூழ்ந்திருந்தத் தென்னை மரங்களுக்கு நடுவில் சென்று கொண்டிருந்தது அந்தத் தார்ச்சாலை. தென்னை மரங்களின் அணிவகுப்பு முடிந்ததும் தொடங்கியது பாக்கு மரங்களின் அணிவகுப்பு. இப்பொழுது தார்ச்சாலை மறைந்து வண்டி செல்வதற்கு ஏதுவாகத் தானாக அமைந்திருந்த மண் ரோடு தொடங்கியது.

பாதையை ஒட்டி ஒரு சிறு வாய்க்கால் ஒன்று சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. வாய்க்காலில் கூட்டம் கூட்டமாக மணி வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. அனைவருமே அந்த இயற்கைச் சூழலை மனமார ரசித்துக் கொண்டிருக்க அபஸ்வரமாக ஒலித்தது மூத்த மாப்பிள்ளை நடேசனின் குரல்.

“ஏன் அத்த உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? இவங்க வீட்டுக்குப் போறதுக்கு ஒழுங்கா ஒரு தார் ரோடு கூட இல்லை. நம்ம பிரபா படிச்ச படிப்பென்ன, வாங்குற சம்பளமென்ன, அவனுக்குப் போயும் போயும் இப்படி ரோடு கூட இல்லாத குக்கிராமத்துலேயா பொண்ணெடுக்கணும்?” என்று நீட்டி முழக்கினார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் சுந்தரவடிவு விழிக்க, “எலி ஏன் ஏரோபிளேன் ஓட்டுது?” என்றான் பாண்டி.

“என்னடா பாண்டி நக்கலா?  நானும் பார்த்துக்கிட்டுதேன் வாரேன். வர வர நீ கொஞ்சம் ஓவராத்தேன் போயிக்கிட்டிருக்க” மீசையை முறுக்கிக் கொண்டதோடு நில்லாமல் தானும் முறுக்கிக் கொண்டார் அவ்வீட்டினுடைய மூத்த மாப்பிள்ளை.

“ஐய மாமா நான் உங்களைச் சொன்னேன்டு நெனச்சீகளா? இந்தா உங்க மகேன் ஏதோ வெளாடுறானே, அதைத்தேன் சொன்னேன். இந்தா வேணுமென்டா நீங்க கூட பார்த்துக்கிடுங்க. டேய் அந்த செல்லு போனை உங்கப்பாக்கிட்ட காமிடா” என்றதும் ஒருவேளை உண்மையாகத்தான் சொல்கிறானோ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டது மூத்த சமூகம்.

யோசனையினூடே வீட்டை நெருங்க இப்பொழுது ஆரம்பித்தது மூன்றாவது மாப்பிள்ளை. “நாமெல்லாம் காரை வீட்ல இருக்கோம். போயும் போயும் ஓட்டு வீட்டுலயா பொண்ணெடுக்குறது?” என்று அவர் பங்குக்கு கொஞ்சம் திருப்ப,

“ம்க்கூம்… இங்கனயாவது இம்பூட்டுப் பெரிய வீடு இருக்குது. எங்கக்காளைக் கட்டிக் கொடுக்குறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை வீடு பார்க்க வந்தப்ப வீட்டையே காணோமேன்டு நானும் பிரபாவும் அலைஞ்சது எங்களுக்குத்தானே தெரியும்” என்று கூறிய பாண்டி அவர் பதில் கூறுவதற்கு முன்,

“வந்தாச்சு, வந்தாச்சு எல்லாரும் இறங்குங்கப்பா ஏய்” என்று கூவிக் கொண்டே தான் முன்னதாக வண்டியில் இருந்து இறங்கித் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

“இந்த பக்கமெல்லாம் இதைத் தாங்க மச்சு வீடென்டு சொல்லுவாக. பெரிய பணக்காரவுக மட்டுந்தேன் இப்புடி வீட்டுல இருப்பாக. எதுவும் தெரிஞ்சா பேசுங்க. இப்படி என்னத்தையாவதுப் பேசி மானத்தை வாங்காதீக” என்று ரகசியமாகத் தன் கணவரைக் கடிந்து கொண்டார் மூன்றாவது அக்கா சொர்ணம். 

ஏனோ இரண்டாமவர் மட்டும் எதிலும் ஈடுபடாமல் கொஞ்சம் சிந்தனை வசப்பட்டவராகவே சுத்திக் கொண்டிருந்தார். அவரின் மீதே தன் மொத்த கவனத்தையும் குவித்து அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தார் இரண்டாவது அக்கா தனம்.

வீட்டைப் பற்றியும் ரோட்டைப் பற்றியும் குறை கூறிய இரண்டு சமூகமும் அங்கு வீட்டு வாசலில் ஏற்கனவே வந்து நின்றிருந்த சில பல ஆடிக்களையும் பி.எம்.டபிள்யூக்களையும் பார்த்து ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.

முறைப்படி குமரப்பன் லலிதா தம்பதியினர் முகிலோடு இணைந்து வந்து வாசலிலேயே இவர்களை எதிர்கொண்டு மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆலிவ் க்ரீன்  நிறப் பட்டுடுத்தி காதிலும் மூக்கிலும் வைரங்கள் ஜொலி ஜொலிக்க இரு கரம் கூப்பி இவர்களை வரவேற்ற கோதையம்மாளைப் பார்த்ததுமே மரியாதையுடன் கூடிய பிரமிப்பு பிரபா வீட்டினர் அனைவருக்கும் உதயமானது.

சிறு குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல், “வா கண்ணு”, “வா சாமி” என்று அன்போடு வரவேற்ற விதமே மதுரைக்காரர்கள் அனைவரையும் பாரபட்சமின்றிக் கவர்ந்தது.

நல்ல நீள அகலத்தோடு வெளியே இரண்டு திண்ணைகள், அதற்கடுத்து வெராண்டா போன்றொரு இடம் அதையும் கடந்தால் நடுவில் முற்றத்துடன் நாற்புறமும் அறைகள் சூழ விசாலமாகக் கட்டப்பட்ட குட்டி அரண்மனை அது. கீழேயே மொத்தமாக நான்கு அறைகள் இருந்தன. பூஜையறையும் சமையலறையும் மட்டுமே தனித்து தெரிந்தது. மற்றதை வகைப்படுத்த முடியவில்லை.

அங்கேயே ஒரு மூலையில் மாடிக்கான படிக்கட்டுகள் செல்ல மேலேயும் இதே போன்ற அமைப்பு இருக்குமோ என்று எண்ணிக் கொண்டான் பிரபா. இது மட்டுமல்லாமல் பிரபா மனதில் ஏகப்பட்ட கேள்விகள் குடி கொண்டிருந்தன. எல்லாமே அவர்களின் தென்னை மற்றும் பாக்கு மரங்களைப் பார்த்தபின் அவர்களுடைய விவசாய முறைகள் குறித்து உருவான சந்தேகங்கள். யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் பிரபா.

இவர்கள் வந்து சேர்ந்து நேரம் சரியாக மாலை ஐந்து மணி. முதலில் பிராயணக் களைப்பு போவதற்காகவும் அந்த சூட்டைத் தணிப்பதற்காகவும் இனிப்பு சேர்க்கப்பட்ட வெள்ளரிப்பழம் சிறிய கிண்ணங்களில் வழங்கப்பட்டது. அடுத்துப் பொதுவாக அனைவரையும் அறிமுகப்படுத்தும் படலம் தொடங்கியது. இரு தரப்பினரும் அறிமுகப்படலம் முடித்ததும் சுடச்சுட கேசரியும் வடையும் பரிமாறப்பட்டது.

முதலில் பெண்ணைப் பார்த்து விடலாமே என்று சுந்தரவடிவு கேட்க, “ஏங்கண்ணு அப்படிச் சொல்லிப் போட்ட? எப்படியிருந்தாலும் மாணிக்கம் தம்பி வகையில நாம எல்லாம் உறம்பிர தானே கண்ணு. அதால எல்லாரும் சாப்பிடுங்க முதல்ல” என்று கோதையம்மாள் கூறிவிட யாராலும் மறுத்துக் கூற முடியாமல் போனது.

மீனலோசினி மாடியில் தன்னறையில் இருந்தவாறே ஜன்னல் வழியாகக் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டுதான்  இருந்தாள். சரியாக அவள் கண்ணில் படுமாறு பிரபாவை அமர வைத்திருந்தான் முகிலன். ஆகாய நீல வண்ணத்தில் டிஷர்ட்டும் கறுப்பு நிற ஜீன்ஸ்சும் அணிந்து எந்தப் பந்தாவும் இல்லாமல் இயல்பானப் புன்னகையுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்ததும் கொஞ்சம் பிடித்துத் தான் போனது மீனாவுக்கு.

புகைப்படத்தைவிட நேரில் ஆள் இன்னும் கொஞ்சம் அம்சமாகவே இருப்பது போல் தோன்றியது. ‘மதுரையிலிருந்து மதுரை வீரன் கணக்கா வருவாங்கன்னு பார்த்தா இவங்க மேடி மாதிரி இல்ல வந்திருக்காங்க’ என்று எண்ணிக் கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே கூடாதென்று மனதோடு உருப்போட்டுக் கொண்டாள்.

கோதையம்மாள் தலையசைக்க லலிதா சென்று அவருடைய ஆசை மகளை அழைத்து வந்தார். பட்டுப் புடவை எல்லாம் அணியாமல் ஆகாய நீலத்தில் அடர் நீல நிறத்தில் பார்டர் போட்டது போல ஒரு டிசைனர் புடவையைத்தான் அணிந்து வந்தாள் பெண். ஒப்பனையும் சரி, நகைகளும் சரி மிகவும் எளிமையாகவே கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

“ஆத்தீ இந்தப் புள்ள காலைப் பார்த்தாலே பொட்டு வைக்கலாம் போல இருக்கு. இந்தப் புள்ள நம்ம ஊர் வெயில்ல எல்லாம் வந்து இருக்குமாக்கா” என்று தனக்கருகில் அமர்ந்திருந்த தமக்கைகளின்  கிசுகிசுப்பைக் கேட்டுத்தான் தலை நிமிர்த்திப் பார்த்தான் பிரபா.

அவள் தலை குனிந்து நின்ற தோற்றம், இரு தாமரை இதழ்கள் இமைகளாக மாறி கண்களை மூடியிருப்பது போல் தோன்றியது பிரபாவுக்கு. பின்னலில் சூட்டப்பட்டிருந்த குண்டு மல்லியின் சரங்களில் ஒன்றிரண்டு முன்புறம் வந்து விழுந்திருக்கக் கழுத்தில் மெல்லியதாக ஒற்றைச் சங்கிலி மட்டுமே. 

அதிலிருந்த ப்ளூ சபையர் அவ்வப்பொழுது ஜொலித்துத் தன்னுடைய மதிப்பை சொல்லாமல் சொல்லிக் கொண்டது. இரு கைகளிலும் நான்கைந்து மெல்லிய தங்க வளையல்கள். மொத்தமாகவே இவைகளை மட்டும் தான் அணிந்திருந்தாள் மீனா. எந்தவித ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருப்பவள் இதிலெல்லாம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது இயல்புதானே.

‘கண்ணிமையில் தூண்டிலிட்டுக்

காதல் தனைத் தூண்டி விட்டு

எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே’

சத்தமில்லாமல் வந்து பிரபாவின் மனதோடு இசையமைத்துப் போனார் இளையராஜா. இமைக்க மறந்துப் பார்த்திருந்தான் பாவையை. 

“இங்கன வாம்மா” என்று கூறி மீனாவைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார் சுந்தரவடிவு. “அழகா இருக்க தாயீ” என்று கூறி கள்ளங்கபடமில்லாமல் தனக்குத் திருஷ்டிக் கழிக்கும் அந்த வெள்ளந்திப் பெண்மணியை முதல் சந்திப்பிலேயே மிகவும் பிடித்துப் போனது மீனாவிற்கு.

அவளிடமும் ஒருமுறைத் தன்னுடைய மகள்கள் மருமகன்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் பேரன் பேத்திகள் உட்பட. ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தும் பொழுதும் நிமிர்ந்து பார்த்து சிறு புன்னகையைத் தந்தவள் பிரபாவைப் பற்றிச் சொல்லும் பொழுது மறந்தும் கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

முகிலன் சென்று கோதையம்மாளின் காதைக் கடிக்க, “இப்படி நாம எல்லாரும் சுத்தி இருந்தா இவிய ரெண்டு பேரும் பார்த்துக்க கூட மாட்டாங்க. ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா போய் பேசிட்டு வரச் சொல்லாங்களா?” என்று சுந்தரவடிவிடம் நேரிடையாகவே கேட்டார் கோதை.

“தாராளமா போய் பேசிட்டு வரட்டுங்கம்மா” என்று சுந்தரவடிவும் உடனடியாக சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். 

“நெம்ப சந்தோஷம் கண்ணு. அப்புறஞ்சாமி, நான் உனக்கு அத்தை முறையாகோணும், மொறைய மாத்திப் புடாத கண்ணு” என்று கூறி நலுங்காமல் சிரிக்கும் அந்த வயதானப் பெண்மணியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

முற்றத்துக்கு எதிரில் இருந்த ஒரு அறைக்குப் பிரபாவைக் கூட்டிச் சென்றான் முகில். அவர்களைப் பின்தொடர்ந்து மீனா சென்றாள். முதலில் பிரபாவும் முகிலுமே தங்களுடைய படிப்பு குறித்துக் கொஞ்ச நேரம் வளவளத்துக் கொண்டிருந்தார்கள். வாய் முகிலோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் எதிரில் அமர்ந்திருக்கும் பாவையை நொடிக்கொரு தரம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

தலை குனிந்திருந்தாலும் மீனாவும் அதை உணரவே செய்தாள். இதுவே தொடர, “நீங்க பேசிக்கிட்டிருங்க். நான் இப்ப வந்துடுறேனுங்க்” என்று சொல்லிவிட்டு முகிலன் நாசூக்காக வெளிநடப்பு செய்ய,

“தைரியம் வந்துடுச்சுங்களா மீனலோசினி? இப்பவாவது என்னை நிமிர்ந்துப் பார்த்துப் பேசுவீங்களா?” என்று பேச்சைத் தொடங்கி வைத்தான் பிரபாகரன்.

“என்ர வூட்டுக்குள்ளார எனக்கென்னங்க் பயம்” என்று கூறி முதல் முறையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் மீனா. அந்தக் கண்களில் குடியேறி விடத் துடித்த மனத்தை அடக்கியவாறே,

“உங்களுக்குப் பயமில்லாமலா உங்க தம்பி இவ்வளவு நேரம் இங்க இருந்தாரு” உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு வினவினான் பிரபாகரன்.

“எனக்கு ஒன்னும் பயமெல்லாம் இல்லீங்க். நேத்து மாணிக்கம் சித்தப்பா போன்ல சில விஷயம் சொன்னாருங்க். நீங்க கனடாவுக்கு வேலைக்குப் போகப் போறதா. எனக்கு அப்படி வெளிநாட்டுக்கு வாரதுல எல்லாம் விருப்பம் இல்லீங்க். 

என்னால எங்க வீட்டாளுங்களை விட்டுப் போட்டு, இந்தத் தோட்டம், மாடு, கன்னு இதையெல்லாம் விட்டுப் போட்டு அம்புட்டுத் தொலைவு வந்து இருக்க முடியாதுங்கோ. என்ர வூட்ல அல்லாத்துக்கும் நீங்க வெளிநாடு வேலைக்குப் போறதுல சந்தோஷமுங்க. என்னைத் தவிர. 

அதால நீங்களே என்னை புடிக்கலைன்னு சொல்லிச் சொல்லிடுங்க். அவ்வளவுதானுங்க விசயம்” படபடவென்று அனைத்தையும் கொட்டி விட்டாள் மீனா. 

“ஆக ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புடிக்கலையென்டு சொல்லத்தேன் இருந்திருக்கோம்” என்று கூறிச் சிரித்தான் பிரபா.

“நீங்க ஏனுங்க்…” எப்படிக் கேட்பது என்று தயங்கியவள் “யாராவது லவ்?” என்று கேள்வியாக நிறுத்தினாள்.

“அதெல்லாம் இல்லங்க” என்று பிரபா சொல்லவும் மனதோடு ஒரு இதம் பரவுவதை நன்றாகவே உணர்ந்தாள் மீனா.

“பின்ன வேற என்ன காரணமுங்க்?”

“அம்மா நீங்க ரொம்பப் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு சொன்னாங்க. எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயம் பண்றதுதான்ங்க கனவு லட்சியம் எல்லாமே. நடுவுல பணப் பிரச்சனை, அக்காங்க கல்யாணம் இதுக்காகவெல்லாந்தேன் நான் இந்த வேலைக்கு இன்னும் போயிக்கிட்டிருக்கேங்க.

இன்னும் ரெண்டு வருஷம் தான்ங்க இந்த வேலை. அதுக்குள்ளாற நான் எதிர்பார்க்குற அளவு பணத்தை சேர்த்துட்டு வேலையை விட்டுட்டு நிலம் வாங்கி விவசாயம் பண்றது அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேங்க.

நீங்க ரொம்பப் பெரிய இடமா… அதேன் நீங்க எப்படி என் கூட என் லட்சியத்தை அனுசரிச்சுப் போவீங்கன்னு யோசிச்சு தள்ளித் தள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தேங்க. எங்க அம்மா இந்தாட்டி விடாப்பிடியா புடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டாங்க” தன் நிலையைக் கூறி முடித்தான் பிரபா.

“பெரிய வூட்டுப் பிள்ளைங்கெல்லாம் வேலை செய்ய மாட்டாங்கன்னு உங்க கிட்ட ஆருங்க சொன்னது?”

“இல்லீங்க நீங்க வேற போட்டோவுல தேவதை கணக்கா அம்பூட்டு அழகா இருந்தீங்களா…” மேற்கொண்டு பிரபா பேசுவதற்குள் இடையிட்டாள் மீனா.

“போட்டோவுல அழகா இருந்தேன்னா அப்போ நேர்ல அழகா இல்லீங்களா” கேட்ட பிறகே தன் கேள்வியின் அர்த்தம் விளங்கியது மீனாவுக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அவள் முக பாவனைகளை ரசித்துப் பார்த்தவன், “அப்போ ஓகே சொல்லிடலாங்களா?” என்று மீனாவிடமே திருப்பிக் கேட்க, இம்முறை நிஜமாகவே வெட்கப்பட்டுத் தலைக் கவிழ்ந்தாள் பெண். அந்த வெட்கத்தை ரசிக்க விடாமல் அதற்குள்ளாக பிரபாவை அழைத்து விட்டார்கள் அவன் வீட்டார்.

அறையிலிருந்து வெளிவந்த இருவரது மலர்ந்த முகமுமே சம்மதத்தைச் சொல்லாமல் சொல்ல, மேற்கொண்டுப் பேசலாமா என்று குமரப்பன் கேட்டார்.

“அதெப்படிங்க? நாங்க ஊருக்குப் போயிட்டு எல்லாரும் கலந்து பேசிட்டு உங்களுக்குத் தாக்கல் சொல்றோங்க” என்று சரியான நேரத்தில் கட்டையைப் போட்டார் இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.

அவருடைய இந்தப் பதிலில் பெண் வீட்டாரின் முகம் கொஞ்சம் விருப்பமின்மையை காட்டியது. அதிலும் மீனாவின் முகம் சட்டென வாடிவிட்டது. அதைக் காணப் பொறுக்காதவனாக பாண்டியின் காதோடு ஏதோ ரகசியமாகப் பேசி அவனை அனுப்பிவிட்டுத் தன் அலைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் பிரபா.

சுந்தரவடிவும் வேறு வழியின்றி அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப, வாசலில் திண்ணையில் அமர்ந்த பிரபா தன்னுடைய ஷூவை மாட்டினான், மாட்டினான் மாட்டிக் கொண்டே இருந்தான் வெகு நேரமாக. 

நேரமாவதைத் தொடர்ந்து மீனாவும் கூட வெளியில் வந்து முகிலின் பின்புறம் மறைந்தவாறு நின்றுப் பார்த்தாள். அந்நேரம் பார்த்து சரியாக ஒலித்தது பிரபாவின் அலைப்பேசி.

‘சொக்குப் பொடி மீனாட்சி

சொக்க நாதன் நான்தான்டி’  

இந்த இரண்டு வரிகள் மட்டுமே ரிங் டோனாகத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்க, பிரபாவோ அலைப்பேசியை எடுத்துப் பேசுவதாகத் தெரியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஒரு நொடிப் பார்த்தவன் மீனாவிடம் மட்டும் புருவம் உயர்த்தி சில நொடிகள் தாமதித்தது அவன் பார்வை. இறுதியாகத் தன் அன்னை சுந்தரவடிவிடம் வந்த பிரபாவின் விழிகள் ஏதோ சொல்ல அதன் அர்த்தம் புரிந்தவராய்,

“அதேன் என் மவனே சொல்லிட்டானே இதுக்கு மேல நாங்க கலந்துப் பேச என்ன இருக்கு. உங்களுக்கு சம்மதமென்டா இப்போவே மேற்கொண்டு பேசிடலாங்க அத்தை” என்று கோதையிடம் சொல்லிவிட்டார் சுந்தரவடிவு.

“நெம்ப சந்தோசம்மா. எல்லாரும் உள்ர வாங்க” என்று கூறியபடியே கோதை முன் செல்ல, அதுவரை மாட்டுவதாகப் பேர் பண்ணிக் கொண்டிருந்த ஷூவை நொடியில் கழட்டி விட்டு அவரை முதல் ஆளாகப் பின் தொடர்ந்தான் பிரபா.

அதன் பிறகு பேச்சு வார்த்தை துரித கதியில் நடைபெற, திருமணத்திற்கான நாளைக் குறிக்கும் பொறுப்பை கோதையம்மாளிடமே விட்டுவிட்டு மதுரைக்குக் கிளம்பினார்கள் பிரபா குடும்பத்தினர்.

இட்லி, இரண்டு வகை சந்தகை, பலாப்பழ பாயாசம் என்று தடபுடலாக ஒரு விருந்து வைத்த பிறகே அவர்களை மன நிறைவோடு அனுப்பி வைத்தனர் லலிதா குமரப்பன் தம்பதியினர். இம்முறை அனைவரின் முன்னிலையிலும் மீனாவிடம் சொல்லிக் கொண்டுப் பதிலாக அவளின் வெட்கம் கலந்த தலையாட்டலையும் பெற்றுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் பிரபாகரன்.  

 

பார்வை – 7

நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது பிரபா குடும்பத்தினர் மதுரை வந்து சேர்வதற்கு. தூக்கத்தில் ஆளுக்கொருப் பக்கமாக சாமியாடிக் கொண்டிருந்தத் தங்களதுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மூன்று தமக்கைகளும் தத்தமது இல்லங்களை நோக்கி நகர,

“புள்ளைகளுக்குப் பாலைக் கொடுத்து தூங்க வைங்கத்தா” என்று சொல்லியபடியே சுந்தரவடிவும், பாண்டியும் பிரபாவுடன் நின்றிருந்தனர். பிரபா வேன் டிரைவருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“அண்ணே உங்க வீடு எங்கிட்டுண்ணே. ரொம்பத் தொலைவென்டா இங்கனயே ரவைக்குத் தூங்கி எந்திரிச்சு காலையில கிளம்புங்கண்ணே” பணத்தைக் கொடுத்ததோடு வேலை முடிந்தது என்றில்லாமல் அவரின் நலனிலும் அக்கறைக் கொண்டு விசாரித்தான் பிரபா.

“பரவால்ல தம்பி. நம்ம வூடு இங்கப் பக்கத்துலதேன். நான் போயிக்கிடுதேன். கண்ணாலத்துக்கும் நம்மகிட்டயே வண்டி எடுத்துக்கிடுங்க தம்பி” என்று அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு அவர் கிளம்பவும் பிரபாவின் அலைப்பேசி ‘சொக்குப் பொடி மீனாட்சி’ என்று அலறவும் சரியாக இருந்தது.

“ஏன் சித்தி நேத்து ம்ஹூம் இன்னைக்கு காலையில வரைக்கும் எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம் கல்யாணம் வேண்டாமென்டு சொல்லிக்கிட்டு ஒரு பய திரிஞ்சானே அவன நீ எங்கிட்டாச்சும் பார்த்த?” என்று பாண்டி நக்கலடிக்க,

“நானும் அவனத்தேன் பாண்டி தேடுறேன். பய சாயங்காலத்துலயிருந்து கண்ணுலயே அம்புட மாட்டேங்குறான்” என்று கூறி சுந்தரவடிவும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தார்.

தெரியாத நம்பராக இருக்கவும் செல்லை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவனாக, “ம்மா நீயுமாம்மா? அவெங்கூட எல்லாம் சேராதம்மா” என்று சுந்தரவடிவின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு சலுகையாகப் பிரபா கூற,

“ஏன்டா பேச மாட்ட. பொண்ணு பார்க்க இங்கேயிருந்து அம்புட்டுப் பேரையும் கிளப்புறதுக்கே என் தலை முடியில பாதி போயிடுச்சு. எதையுங் கண்டும் காணாம சுத்திக்கிட்டு இருந்துப்புட்டு, ஒத்த பாட்டுல சோலிய முடிச்சுட்டியே” தன் ஆதங்கத்தைப் பாண்டி கொட்டித் தீர்க்க,

“உனக்குத்தேன் கல்யாணம் முடிஞ்சுடுச்சே மாப்பி. மூணு புள்ளைகளும் ஆகப் போவுது. இதுக்கு மேல உன் தலையில முடி இருந்தா என்ன இல்லாட்டி என்ன?” என்று அசால்ட்டாகக் கூறினான் பிரபா.

“ஹேய் ஹேஹேய்… இது நல்ல கதையா இருக்கே. கல்யாணம் முடிஞ்சுட்டா ஒருத்தனுக்கு முடி இருக்கக் கூடாதா? நல்லா வந்து வாச்சீங்கடா எனக்குன்னு. இனி நீயாச்சு உன் மாமனுங்களாச்சு.

நீ அவெங்க கையைப் புடிப்பியோ, கால்ல விழுவியோ? நீயே உன் கல்யாணத்தை நடத்திக்க. உன் மண்டையில முடி இருக்கா இல்லையான்டு நான் கல்யாணத்தன்னைக்கு வந்து பார்த்திக்கிடுதேன். 

இங்காரு சித்தி இனிமே எதுக்காச்சும் என்னைய கூப்பிட்ட, பார்த்துக்க” பொங்கிவிட்டான் பாண்டி.

“என் ராசா, நீ மட்டும் இல்லாட்டி இந்த விசயம் இம்புட்டு சுளுவா முடிஞ்சுருக்குமா? ஏன்டா பாண்டி இம்புட்டுக் கோவப்படுற? இந்தக் கண்ணாலம் மட்டும் நல்லபடியா முடியட்டும். உன்னைத் திருப்பதிக்கு கூட்டிப் போய் முடியிறக்கறதா நான் அந்த ஏழுமலையானுக்கு நேர்ந்துக்கிடலாமென்டு இருக்கேன்” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுந்தரவடிவு.

“ஆக ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் என் முடியிலதேன் கண்ணு. நீ என்னத்த வேண்டிக்கிறது? இந்தக் கல்யாணம் முடிஞ்சும் என் மண்டையில முடி இருந்தா நானே திருப்பதிக்குப் போய் மொட்டை அடிச்சுக்கிறேன். போதுமா? இப்ப திருப்தியா ரெண்டு பேருக்கும்?” படபடவென பாண்டி பொரிந்து கொண்டிருக்கும் பொழுதே பிரபாவின் அலைப்பேசி மறுபடியும் அதே பாடலைப் பாடியது.

இம்முறையும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினான் பிரபாகரன். முகில் தான் அழைத்திருந்தான். முகில் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்த நாளிலிருந்தே அவன் வீட்டுக்கு வரும் நாட்களில் அக்கா தம்பி இருவரும் உறங்குவது மட்டும் ஒரே அறையில் தான்.

கீழே உள்ள அறைகளில் ஒன்று கோதையம்மாள் பயன்படுத்துவது. மற்றொன்று விருந்தினருக்கானது. மாடியில் குமரப்பன் – லலிதா தம்பதியினர் ஒரு அறையிலும், மீனாவுக்கும் முகிலுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அறைகளும் இருந்தன. இது போக விருந்தினருக்காக இங்கொரு அறையும் இருந்தது.

தம்பி ஹாஸ்டலில் சேர்ந்ததிலிருந்து ஒரு வாரக் கதையும் ஒட்டு மொத்தமாக பேசித் தீர்ப்பதற்காக இருவரும் எதாவது ஒரு அறையில் ஒன்றாகக் கதை பேசியபடித் தூங்குவது வழக்கம். இன்றும் அவ்வாறு தூங்கியிருக்க அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு மீனா தம்பியை எழுப்பினாள்.

“முகில், டேய் முகில்… எந்திரி கண்ணு”

“இப்ப எதுக்குங்க்கா உசுப்பி விடுறீங்க். தூக்கம் வருதுங்க்கா.” 

“இல்ல கண்ணு அவியெல்லாம் மதுரைக்குப் பத்திரமா போயிட்டாங்களா என்னன்னு தெரியலை. ஒரு போன் போட்டுக் கேளு சாமி.”

“வரத் தெரிஞ்சவங்களுக்குப் போகத் தெரியாதுங்களாக்கும். அதெல்லாம் அவங்க பத்திரமா போயிருப்பாங்க. நீங்க பேசாம போய் தூங்குங்கக்கா. எனக்குத் தூக்கம் வருதுங்க்கா” தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்ட பொழுதிலும் தமக்கையிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்தான் முகிலன்.

“என் கண்ணு இல்ல, என் தங்கம் இல்ல. ஒருக்கா அக்காவுக்காக கேளு சாமி” மீனாவும் விடுவதாக இல்லை.

நன்றாகத் திரும்பி அவள் முகம் தெரியும் வகையில் படுத்துக் கொண்டவன், “சரி கேட்டுச் சொன்னா எனக்கு என்னங்க்கா கிடைக்கும்” கட்டிலுக்கு அருகில் டென்ஷனுடன் நின்றிருக்கும் தமக்கையிடம் அழகாக டீல் பேசினான் இளையவன்.

“நீ அடுத்த வாரம் வரும் போது அக்காவுக்கு சேலரி கொடுத்திருப்பாங்கல்ல அதை முழுசா உனக்கே தந்திடுறேன் தங்கம். இப்ப போன் பண்ணு சாமி”

“ஹைய! இனி யாருக்கு வேணும் அந்த ஐயாயிரம் ரூபாய். இனி இந்த சில்லறைக் காசெல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப ஐயாவோட ரேஞ்சே வேற. என்ர மச்சான் பெரிய ஆளாக்கும். கப்பல்ல பல நாட்டுக்குப் போய் வாரவங்க. அதால என்ர மச்சான் போற ஊருலயிருந்தெல்லாம் எனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வருவாராக்கும். வேற எதாவது பெட்டர் டீல் இருந்தா சொல்லுங்க்கா. இல்ல என்னைய தூங்க விடுங்க” விடாமல் சீண்டிக் கொண்டிருந்தான் சின்னவன்.

இப்பொழுது என்ன சொல்லி முகிலை வழிக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல் “முகிலு” என்று பாவமாக அழைத்தாள் மீனலோசினி.

அதற்கு மேலும் அவளைக் கெஞ்ச விடாமல் சிரித்தபடியே, “க்கா என்ர போன்ல மச்சான் நம்பர் இருக்குதுங்க். மச்சான்னு போட்டே ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன். நீங்களே கூப்பிட்டுக் கேளுங்க்கா” என்றான்.

“ஐயோ நானெல்லாம் பேச முடியாது முகிலு. அம்மாவுக்கும் அம்மத்தாவுக்கும்  தெரிஞ்சுது அவ்வளவு தான். கொஞ்சம் நீயே கேட்டு சொல்லேன். ப்ளீஸ் என் செல்ல முகில் இல்ல.”

“நானும் பார்க்கத்தானே போறேன், நீங்க போனும் கையுமா சுத்தப் போறதையெல்லாம்” என்று கூறியபடியே அவனுடைய அலைப்பேசியை எடுக்க,

ஐயோ அவனுடைய அலைப்பேசியில் இருந்து அழைத்தால் நமக்கு எப்படி அவங்க நம்பர் தெரியிறது என்று மனதுக்குள் அலறியவளாக, கொஞ்சம் தயக்கமும் வெட்கமும் போட்டி போட,

“முகில் இதுல இருந்து கால் பண்றியா?” என்று கூறியபடியே தன்னுடைய அலைப்பேசியை எடுத்து நீட்டினாள் மீனா.

“இப்ப மட்டும் அம்மாவும் அம்மத்தாவும் திட்ட மாட்டாங்களாக்கும். நம்பர் எக்ஸ்சேஞ்சுக்கு நல்ல நேரம் பார்த்தீங்க்கா” என்று கூறிச் சிரித்தபடியே அவளுடைய அலைப்பேசியிலிருந்தே பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

“மச்சான் நான் முகில் பேசுறேனுங்க.”

“சொல்லு முகில். நம்பர் புதுசா வரவும் முதல் தடவை கட் பண்ணிட்டேன். நீ எங்கிட்ட வேற நம்பர் கொடுத்திருந்தியா, அதான் தெரியலை.”

“நான் கொடுத்தது தாங்க மச்சான் என்ர நம்பரு. இங்க ஒருத்தவங்களுக்கு நீங்க பத்திரமா மதுரைக்குப் போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரிஞ்சுக்கணுமாமா. அதுக்குத் தானுங்க நல்லா தூங்கிட்டு இருந்தவனை உசுப்பி விட்டு கேட்கச் சொல்றாங்க.

இதுல போன் பண்றது வேற அவிய போன்ல இருந்து பண்ணனுமாம். ஏனுங்க மச்சான் நீங்களே இந்த நாயத்தைக் கேளுங்க. இப்படி என்னை உசுப்பி விட்டு அவங்க போன்ல பேசச் சொல்றதுக்குப் பதிலா அவங்களே உங்கிட்ட பேசி இருக்கலாம் இல்லீங்” என்று முகில் பேசிக் கொண்டே போக தொப் தொப்பென்று முகில் அடி வாங்கும் சத்தம் இங்கு பிரபா வரைக் கேட்டது.

ஹா…ஹாவென்று பெருங் குரலெடுத்துச் சிரித்தான் பிரபாகரன். “ஐயோ மச்சான் என்ர காது போச்சுங்க். இவ்வளவு சத்தமாவா சிரிப்பீங்க்? அக்கம் பக்கம் வீட்டுல இருக்குறவங்க எல்லாம் பாவமுங்க மச்சான்” இப்பொழுது பிரபாவையும் கலாய்க்கத் தொடங்கி இருந்தான் முகில்.

சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாண்டியை அருகில் இழுத்து அவன் தோளில் கையைப் போட்டவாறே, “அவனுக எல்லாம் தூங்குனா என்ன? தூங்காட்டி எனக்கென்ன? நான் சிரிக்கிறது உன் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் கேட்கணுமில்ல. அதான் இந்தச் சத்தம். நாங்க பத்திரமா வீட்டுக்கு வந்துட்டோமுன்னு அவங்க கிட்ட சொல்லிடு முகில்” என்றான் மச்சான்.

“சாடிக்கேத்த மூடிங்க மச்சான். இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னு வைங்க நான் தூங்கின மாதிரிதான். அதனால நீங்களே உங்க வாயால நீங்க பத்திரமா ஊருக்குப் போய்ட்ட விவரத்தை என்ர அக்கா கிட்ட சொல்லிடுங்க் மச்சான். குட் நைட்” என்று கூறியவாறே அலைப்பேசியை மீனாவிடம் நீட்டினான் முகில்.

‘ம்ஹூம் நான் மாட்டேன்’ என்று சைகையிலேயே கூறி மறுத்துக் கொண்டிருந்தவளின் கைகளில் வலுக்கட்டாயமாக அலைப்பேசியைத் திணித்துவிட்டு, “நான் என்ர ரூமுக்குப் போறேனுங்கக்கோவ்” என்று சொல்லி அவன் அறையைப் பார்த்துப் போய்விட்டான் முகில்.

இங்கு மதுரையிலோ பாண்டியைப் பிடித்து வீட்டுக்குள் தள்ளிவிட்டு, நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் தாயாரிடம் அசடு வழிந்துவிட்டு வேக வேகமாக மொட்டை மாடிக்கு ஏறப் போன பிரபாவைத் தடுத்தது பாண்டியின் குரல்.

“சித்தி நானும் இன்டைக்கி இங்கயே படுத்துக்கிறேன்” என்று சுந்தரவடிவிடம் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து உள்ளிருந்தவாறே க்ரில் கேட்டினை வெளிப்புறமாகப் பூட்டியவன் சாவியை எடுத்துப் பிரபாவிடம் தூக்கிப் போட்டுவிட்டு,

“விடியிறதுக்குள்ள பேசி முடிச்சின்டா கதவைத் தொறந்துகிட்டு வந்து சேரு மாப்பி. எங்களுக்குத் தூக்கம் வருது. நாங்க போய் தூங்குறோம்” என்று கூறிவிட்டுத் திரும்பினான் பாண்டி.

அவனைப் போக விடாமல் க்ரில் கேட்டிலுள்ள கம்பியின் ஊடாகக் கையை விட்டு அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, பாண்டியின் தலையைக் கேட்டில் முட்ட வைத்து, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றினைப் பதித்துவிட்டு இரண்டிரண்டுப் படிகளாகத் தாவி ஏறி விரைவாக மொட்டை மாடியினைச் சென்றடைந்தான் பிரபா. “அடேய்” என்று பாண்டி கத்தியது பிரபாவின் காதுகளில் விழவே இல்லை. 

இவ்வளவு களேபரத்தையும் என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருந்தாள் மீனா.

“ஹலோ மீனலோசினி லைன்ல இருக்கீங்களா? எதாவதுப் பேசுங்க” என்றான் பிரபா மொட்டை மாடியில் கட்டைச் சுவற்றில் அமர்ந்தவாறே.

வெறும் ‘ம்ம்ம்’ மட்டுமே பதிலாக வந்தது அந்தப் பக்கத்திலிருந்து. “என்னங்க இது சாயங்காலம் அவ்வளவு போல்டா பேசுனீங்க. இப்ப என்னடான்னா வாயே திறக்க மாட்டேங்குறீங்களே” என்றான் பிரபா.

“அது வேண்டாமுன்னு சொல்லச் சொல்றதுக்காகப் பேசிப்போட்டேனுங்க்” என்று வேகமாகப் பதில் தந்தவள், “இப்ப என்ன பேசுறதுன்னு தெரியலீங்க்” என்பதை முணுமுணுப்பாகக் கூறினாள் மீனா.

“சரி நீங்க என்ன பேசுறதுன்னு யோசிச்சு வைங்க. நாம நளைக்குப் பேசலாங்களா?” சிரிப்புடன் பிரபா வினவ,

“சரிங்க்” என்று கூறி வேகமாக அழைப்பைத் துண்டித்திருந்தாள் மீனா. அப்பொழுது தான் அடைப்பட்டிருந்த மூச்சும் வெளியே வந்தது. தன் நிலையை எண்ணித் தானே சிரித்துக் கொண்டு, அலைப்பேசியால் தன் தலையில் தட்டிக் கொண்டாள். பின் நினைவு வந்தவளாக பிரபாவின் அலைப்பேசி எண்ணை எந்தப் பெயரில் சேமித்து வைப்பது என்று சிந்தித்தாள்.

சிந்தித்தவளுக்கு ‘சொக்கநாதன் நாந்தான்டி’ என்ற வரிகள் மனதுக்குள் ஓட, சிரிப்புடன் ‘சொக்கு’ என்ற பெயரில் சேமித்துக் கொண்டாள். அலைப்பேசியை வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவள் உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் உறங்கிப் போனாள்.

இங்கு பிரபாவுக்கும் அதே நிலைதான். கீழே வீட்டுக்கும் போகத் தோன்றாமல் அப்படியே மொட்டை மாடியிலேயே படுத்துவிட்டான். மறக்காமல் தன்னுடைய அலைப்பேசியில் ‘சொக்குப்பொடி’ என்ற பெயரில் மீனாவின் அலைப்பேசி எண்ணை சேமித்து வைத்துக் கொண்டான்.

‘இவளைப் பேச வைக்கவே நான் ரொம்பப் பேசணும் போலயே. பேசுறதுக்கே இந்தப் பாடுன்னா இன்னும் மத்ததுக்கெல்லாம்… டேய் பிரபா விடா முயற்சி விஸ்வரூப வெற்றிடா. இதைவிட உனக்கு வேற என்னடா வேலை? நாளையிலிருந்து மினி குட்டிக்கிட்ட பேசுறது மட்டுந்தான் உன் வேலை’ மனதோடு எண்ணிக் கொண்டான். உற்சாக மிகுதியில் உறக்கம் கண்களை விட்டு வெகுதூரம் சென்றிருந்தது. சந்தோஷ மிகுதியில் ஹோவென்றுக் கத்த வேண்டும் போல் தோன்றியது. சூழ்நிலைக் கருதி அடக்கி வாசித்தவன் சூரியன் உதிக்கும் நேரத்தில் ஒருவழியாக உறங்கிப் போனான்.

******************

எண்ணியது போலவே தினமும் பல முறை அவனுடைய மினிக்குட்டியிடம் பேசிவிடுவான் பிரபா. தினமும் மீனா காலையில் கண் விழிப்பதே ‘ஓய் சொக்குப்பொடி’ என்கிற பிரபாவின் அழைப்பில்தான் என்றாகிப் போனது.

பிரபாவுடைய மரியாதையான வாங்க போங்க என்ற அழைப்புகளெல்லாம் ஒருமைக்கு மாறியிருந்தது. மீனா நக்கலாக வினவ, ‘எனக்கு நானே மரியாதை கொடுத்துப் பேசிக்க முடியுமா’ என்று கெத்தாகப் பதில் கொடுத்திருந்தான் பிரபா.

இதுவரை உடைகளில் எல்லாம் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாத மகன் இப்பொழுது ஒரு நாளைக்குப் பலமுறை உடை மாற்றுவதை வெளியில் கேலியாகவும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவும் பார்த்து வியந்து கொண்டார் சுந்தரவடிவு. 

பாண்டி, தங்கம், தனம், சொர்ணம், சுந்தரவடிவு, கூடவே வாண்டுகள் என்று அனைவருக்கும் மிகப் பெரிய என்டர்டெயின்மென்டே பிரபாதான் என்றாகிப் போனது. அவனும் ஒற்றை ஆளாக சலிக்காமல் இவர்களை சமாளித்துக் கொண்டு வந்தான்.

மீனாவோ மறுநாளே முகிலின் துணையோடுத் தன் அம்மத்தாவிடம் கெஞ்சிக் கொஞ்சி அவர் மூலமாகத் தன் தாயாரிடமும் அனுமதி வாங்கிய பின்னரே பிரபாவிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினாள்.

மீனா பொழுதுபோக்கிற்காகத் தான் சொந்த ஊரில் உள்ள பள்ளியிலேயே வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். சிறு பள்ளி தான் என்றாலும் கட்டுப்பாடுகள் அதிகம். ஆசிரியர்கள் கூட வகுப்பறைக்கு அலைப்பேசி எடுத்துச் செல்லவெல்லாம் அனுமதி கிடையாது.

எப்பொழுதும் இடைவேளை நேரங்களின் பொழுது மற்ற ஆசிரியைகள் தங்கள் அலைப்பேசியைத் தேடிப் போக மீனா அவ்வாறல்லாமல் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது வழக்கம். இப்பொழுதெல்லாம் முதல் ஆளாக இடை வேளை நேரத்தில் அலைப்பேசியைத் தேடிப் போகும் மீனா மிஸ்சை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பள்ளியின் பிள்ளைகள்.

போனும் கையுமாக இவர்கள் இருவரினுடைய நாட்களும் கழிய, கோதையம்மாள் சொன்னபடி வீட்டுக்கே ஜோசியரை வரவழைத்து திருமணத்திற்கு ஏற்ற நாளைக் குறித்துத் தரக் கூறினார்.

பிரபாகரன், மீனலோசினி இருவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோசியர் ஐந்து மாதங்கள் கழித்தே இவர்கள் இருவருக்கும் திருமணத்துக்கான நாளைக் குறித்துக் கொடுத்தார். அந்த விபரத்தை சுந்தரவடிவிடம் கோதையம்மாளே தெரிவித்து, பிரபாவின் வேலைக்கும் மற்றவர்களுக்கும் இந்தத் தேதி ஒத்து வருமா என்று கேட்கவும் சொய்தார்.

பின் இரு வீட்டாரும் ஒரு வழியாகக் கலந்துப் பேசி திருமணத்தை ஜோசியர் குறித்துக் கொடுத்தத் தேதியிலேயே ஐந்து மாதங்கள் கழித்தே வைத்துக் கொள்வதாக முடிவெடுத்தனர். திருமணத்தையும் அதற்கு முதல் நாள் நிச்சயதார்தத்தையும் பொள்ளாச்சியில் நடத்திக் கொள்வதாகவும் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

அதற்கு முன்பாகத் திருமணத்தை உறுதி செய்வது போல் ஒப்புத் தாம்பூலம் மாற்றிக் கொள்ளவும், அந்தச் சடங்கை மதுரையில் வைத்து செய்வதற்காக ஒரு நல்ல நாளும் பார்த்து பெண் வீட்டார் அனைவரும் மதுரைக்கு வர ஏற்பாடானது மீனாவைத் தவிர. இத்துடனே மாப்பிள்ளை வீடு பார்க்கும் சடங்கையும் சேர்த்து பிரபா வீட்டிலேயே எளிய முறையில் நடத்தத் திட்டமிட்டுக் கொண்டனர் இரு வீட்டாரும்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, திருமணத்திற்கு முன் இடைப்பட்ட காலத்தில் பிரபா கப்பலுக்கு வேலைக்கு செல்வதற்கும் அவனுடைய கம்பெனியில் பேசி அனுமதி வாங்கிக் கொண்டான். இப்பொழுது சென்றுவிட்டால் திருமணம் முடிந்து ஒரு ஆறு மாத காலம் இங்கு நிம்மதியாகத் தங்கிவிடலாம் என்பது பிரபாவின் எண்ணம். எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. பெண் வீட்டாரும் ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக மதுரை வந்து சேர்ந்தார்கள்.

 

பார்வை – 8

பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பிள்ளை மொழிச் சொல்லை விட

ஒற்றைப் பனைக் கள்ளை விட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன்… தொலைந்தேன்… என்று அவர்கள் காதலில் தொலைந்தே போயினர் பிரபாகரனும் மீனலோசினியும். நாட்கள் மிக இனிமையாக நகர இருவரும் அலைப்பேசியில் பேசியே தங்கள் காதல் பயிரை வளர்த்துக் கொண்டனர்.

பிரபா, மீனாவிடம் மட்டுமல்லாது குமரப்பன், லலிதா, முகில் என்று அனைவரிடமும் அவ்வப்பொழுது பேசி விடுவான். அதிலும் குறிப்பாகக் கோதையம்மாளிடம் நாள் தவறாது பேசிவிடுவான். தன்னுடையே அப்பத்தாளே மீண்டும் கிடைத்தது போல் அவ்வளவு சந்தோஷம் பிரபாகரனுக்கு. மீனாவே சில சமயங்களில் பொறாமைப்படும் அளவுக்கு நீண்டு கொண்டு இருந்தது அவர்களின் உரையாடலகள்.

“அம்மத்தா இன்னிக்கு சேவ கரெக்ட் டைமுக்கு கூவிருச்சுங்க்ளா” என்று மீனாவும்,

“எனக்கு கூவிருச்சு கண்ணு உனக்கு?” என்று கோதையும், இவ்வாறு இருவரும் அடிக்கடிக் கேட்டு ஹைபை கொடுத்துக் கொள்வார்கள்.

வெயில் என்றும் பாராமல்  மழை என்றும் பாராமல் மொட்டை மாடியே கதி என்று இருந்தான் பிரபாகரன். அவனுக்குத் தான் அங்கு வீட்டில் ஒழுங்காக சிக்னல் கிடைக்காதே. ‘டவர் வைச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா’ என்று மூத்த மாமாவின் முணுமுணுப்பை வேறு அடிக்கடி கடக்க வேண்டியிருந்தது.

மூன்று மாப்பிள்ளைகளும் ஒருவாறு அவர்களது மனைவிகளால் கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட்டு இருந்தார்கள் முதல் முறையாக. “இங்காருங்க என் தம்பி எங்க மூணு பேருக்காக இது வரைக்கும் எவ்வளவோ விசயத்தைப் பொறுத்துப் போயிருக்கான். பணத்தைப் பண்மென்டுப் பார்க்காம உங்களுக்காகத் தாராளமா செலவு பண்ணியிருக்கான். 

மொத மொறையா அவென் ஒரு விசயத்துல ஆர்வமா இருக்கான். அதை நல்லபடியா அவனுக்கு முடிச்சுக் கொடுக்க வேண்டியது கூடப் பொறந்தவுகளா எங்கக் கடமை, பொறுப்பு. எங்களோட புருஷனெங்குற முறையில உங்களுந்தேன் அந்தப் பொறுப்பு இருக்கு. அதால இந்த கண்ணாலத்தை எங்க அம்மாவுக்குத் துணையா முன்ன நின்டு நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.

இதுல எதாவது உங்க மூணு பேரால சிக்கல் வந்ததா தெரிஞ்சுது, அப்புறம் நல்லாயிருக்காது பார்த்துக்கிடுங்க” என்று மூன்று தமக்கைகளும் தங்களது கணவன்மார்களுக்குத் தனித்தனியாக வேப்பிலை அடித்திருந்தார்கள். அதற்குப் பலனும் இருந்தது.

மாப்பிள்ளை மூவருக்குக் கூட இந்தத் திருமணத்தில் பெரிதாகக் குறை கூற ஒரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை. பொள்ளாச்சியில் அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே அவர்களை வாயடைத்துப் போகச் செய்திருந்தது. அதனால் தற்சமயத்துக்கு தங்களது மனைவிகளின் பேச்சைக் கேட்டே நடப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

பிரபா அளவுக்கு இல்லாவிடிலும் மீனாவும் அவ்வப்பொழுது பிரபாவின் தமக்கைகளிடமும் அவர்களின் கணவர்களிடம் அலைப்பேசியில் உரையாடிக் கொண்டுதான் இருந்தாள். பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் கூட சமயத்தில் நடந்தது. மீனாவுடைய பாசமான மற்றும் மரியாதையான பேச்சும் கூட இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம் எனலாம்.

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக பெண் வீட்டினர் மதுரைக்கு வந்தார்கள். பிரபா எவ்வளவோ முயன்றும் மீனாவை வரவழைக்க முடியவில்லை. அதில் கொஞ்சமல்ல ரொம்பவே வருத்தம் பிரபாவுக்கு. 

இந்நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்னும் ஒரு வாரத்தில் அவன் வேலைக்காக லண்டன் சென்றாக வேண்டும். அங்கிருந்து தான் இம்முறை அவனுடைய பணி தொடங்குகிறது. அதற்கு முன்பாக மீனாவை ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று அவன் கொண்ட பேராவலை சம்பிரதாயம் என்ற பெயரில் அடக்கி விட்டனர் இரு வீட்டாரும் இணைந்து.

கோதையம்மாள், குமரப்பன், லலிதா, முகில், இவர்களுடன் இணைந்து அவர்களின் மிகவும் நெருக்கமான உறவுகள் சில பேர் என்று ஒரு இருபது பேர் மதுரைக்கு வந்தார்கள். அனைவருக்குமே பிரபாவின் வீட்டையும் மனிதர்களையும் மிகவும் பிடித்திருந்தது.

அனைத்துமே யாருடைய தயவும் இல்லாமல் சுந்தரவடிவு மற்றும் பிரபாவின் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி எனும் பொழுது அவர்களின் மகிழ்ச்சி இரு மடங்கானது. எந்தத் தயக்கமும் இன்றி அவர்களைத் தன்னுடைய உணவு விடுதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார் சுந்தரவடிவு.

அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்து கொங்கு நாட்டவருக்கு ஆச்சரியமே. “ஏனுங்க்கா மதுரைனாலே பரோட்டா தானுங்களே விசேசமே. அது உங்க கடையில இல்லீங்க்ளா?” ஆச்சரியமாகக் கேட்டார் உறவுமுறைப் பெண் ஒருவர்.

“அதெல்லாம் செய்யக் கூடாதென்டு எங்க அத்தை உத்தரவும்மா. அவுக இப்ப இல்லையென்டாலும் அவுக வார்த்தையை என்னால என்னிக்குமே மீற முடியாது தாயீ. சாப்பாட்டுக் கடை வைச்சிருக்கவுக தன் கடையில சாப்பிட வாரவுக வவுத்துக்கு ஒரு நாளுந் துரோகஞ் செய்யக் கூடாதென்டு அடிக்கடி சொல்லுவாக. அவுக யோசனைப்படி இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பமென்டு எல்லாமே வயித்துக்குக் கேடு விளைவிக்காத உணவு வகைதேன் நம்ம கடையில. 

காலைலைக்கும் ரவைக்கும் மட்டுந்தானுங்களே. நம்ம கடையில ஃபேமசானதென்டா இட்லியும் மீன் குழம்புந்தேன்.

‘சாப்புட வாரவுக வாய் வாழ்த்தலையென்டாலும் அவுக வவுறு கண்டிப்பா வாழ்த்துமென்டு’ எங்க அத்த அடிக்கடி சொல்லுவாக. இதுல காசு வாரது குறைச்சதேன், ஆனாலும் இதுல கிடைக்குற மனத்திருப்தி… எங்களுக்கு அதுவே போதுமென்டு தோனிடுச்சும்மா” சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தார் சுந்தரவடிவு.

அந்த ஆத்மார்த்தமான புன்னகை எப்படிச் சாத்தியப்பட்டது என்பது அங்கிருந்த அனைவருக்குமே நன்கு புரிந்தது. அந்தப் புரிதல் நல்லதொரு அபிமானமாக வளரவும் செய்தது.

“ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பரோட்டோ போட்டுக்கிட்டு பரோட்டா மாஸ்டரா இருந்த என்னை இப்படித் தோசை மாஸ்டரா ஆக்கிட்டாங்கம்மா” சிரித்துக் கொண்டே புகார் படித்தார் அங்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்த நபர்.

“ம்க்கூம் அதுனாலதேன் எங்க மாஸ்டர் ஊத்துற தோசையெல்லாம் பரோட்டா சைசுலேயே வருது” என்று அவருக்குப் பதில் கொடுத்தான் பாண்டி. இவ்வாறுப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் அவர்கள் வேலையைப் பார்க்கப் போயினர். பெண் வீட்டினரும் திருப்தியுடன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிவிட்டுப் பொள்ளாச்சிக்குத் திரும்பினார்கள்.

குமரப்பனுக்குத் தன்னுடைய சொந்தக் காலில் உழைத்து முன்னேறித் தாயையும் தமக்கைகளையும் எந்த ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளும் மருமகனை நினைத்துப் பெருமையோ பெருமை. பிரபா தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் தெளிவாக அவரிடம் பேசியிருந்தான். அதிலும் அவருக்குப் பெருமைதான்.

கோதையம்மாளுக்கும் லலிதாவுக்கும் சுந்தரவடிவை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பெண்மணியை நம்பித் தாராளமாகத் தங்கள் பெண்ணைக் கொடுக்கலாம் என்று முடிவே செய்திருந்தார்கள்.

பூங்குளத்தில் கிளம்பியதிலிருந்து அனைத்தையும் தன் தமக்கைக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்யும் வேலையை மட்டுமே செவ்வனே செய்து கொண்டிருந்தான் முகில். அவனுடைய பேச்சு முழுவதும் பிரபாவின் லண்டன் பயணத்தைப் பற்றியும், அங்கு சென்று அவன் ஏறப் போகும்  கப்பல் பற்றியும் அது செல்லும் இடங்களைப் பற்றியுமே இருந்தது. அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லியிருந்தான் பிரபா.

ஊருக்குத் திரும்பும் வழியில் கோதையம்மாளின் தம்பி முறை உறவுக்காரர் ஒருவர், “ஏனுங்க்கா நம்ம தகுதிக்கு ஏத்த எடம் போலத் தெரியலீங்களே” என்று ஒரு மாதிரியாக இழுக்க,

“எந்த விதத்துல தம்பி அவங்க குறைஞ்சு போயிட்டாங்க? இப்போ நாம தோட்டம், தொறவு, காடு, கரை எல்லாங் கட்டி ஆளுறோமுன்னா இதெல்லாம் நமக்கு முன்னாடி இருந்தவங்க உருவாக்குனது தானே. அதை நாம பெருக்குற வேலையை மட்டும் தானே செய்யிறோம்.

பிரபா தங்கம் அப்படிக் கிடையாது. இப்ப வந்திருக்குற வளர்ச்சி அவங்க சொந்த உழைப்பு, முயற்சி. அதோட நல்ல குணத்துக்கும், உழைப்புக்கும் இன்னும் பெரிய எடத்துக்குப் போவோணும் அந்தத் தம்பி.

காசு என்ன கண்ணு பெரிய காசு. நம்ம கிட்ட இல்லாததா? மனுசனுக்குத் தேவை குணமும், உழைக்கோணுங்குற வேகமும் தான். இது ரெண்டுமே பிரபா தம்பிக்கிட்ட நெம்ப இருக்குது.

அதுவுமில்லாம நம்ம மீனாளுக்கும் பிரபா தம்பியை நெம்பப் பிடிச்சிருக்குது. இதை விட வேற என்ன கண்ணு வோணும்?” என்று ஒரே போடாகப் போட்டு அடக்கிவிட்டிருந்தார் கோதை.

********************

பிரபா மறுநாள் சென்னையிலிருந்து லண்டனுக்கு விமானம் மூலமாகச் செல்வதாக ஏற்பாடு. அதனால் வழக்கம் போல் தன்னுடைய  பிரயாணத்துக்குத் தேவையானவற்றைப் பேக் செய்யும் வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தான். இரண்டு நாட்களாகவே வேலை அதிகம். மீனாவிடம் எப்பொழுதும் போல் உரையாட முடியவில்லை. இன்று இரவு கண்டிப்பாக அழைப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்காகக் கொஞ்சம் விரைவாக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான்.

எப்பொழுதடா வேலை முடியும் என்று காத்திருந்துவிட்டு வேலைகளை முடித்தக் கையோடு அலைப்பேசியைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான் பிரபா. அம்மா, அக்கா, பாண்டி யாருடைய கேலியும் அவனைச் சென்றடையவே இல்லை.

எப்பொழுதும் பிரபா அழைக்கும் பொழுது ‘மாமா’ என்று உற்சாகமாகப் பதில் வரும் இடத்தில் இன்று வெறும் ‘ம்ம்ம்’ மட்டுமே வந்தது.

“ஓய் சொக்குப்பொடி, ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தியாடா? எல்லா வேலையும் முடிச்சிட்டு வர லேட்டாயிடுச்சுடா. இனி நாளைக்கு பூரா ஃப்ரீதான். உன்கிட்ட பேசுறது மட்டுந்தேன் நாளைக்கு என் வேலை. சரியாடா மினிக்குட்டி. இப்ப கோவம் போயிடுச்சா என் மினிக்குட்டிக்கு? மாமாகிட்ட பேசலாமே” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் பிரபா.

பிரபா இவ்வளவு பேசியதற்கும் பதிலாக வெறும் “ம்ம்ம்” மட்டும் தான் பதிலாக வந்ததுப் பெண்ணிடமிருந்து.

“என்னடா”

“ம்ம்ம்”

“எதாவது பேசுடா. என்னாச்சு என் சொக்குப்பொடிக்கு?”

“ம்ம்ம்”

“மாமா எதாவது உனக்குப் புடிக்காததை செஞ்சுட்டேனா? மாமா மேல கோவமா இருக்கியா?”

இப்பொழுது ‘ம்ம்ம்’ மாறி “ம்ஹூம்” வந்தது. ஏதோ ஒன்று சரியில்லாததுப் போல் தோன்ற, “மினிக்குட்டி அழறியாடா?” என்றுப் பதறிப் போனவனாக வினவினான் பிரபா. இந்தக் கேள்விக்குப் பதிலாக மௌனமே வந்தது பெண்ணிடமிருந்து.

“எதாவது சொல்லுடா. இப்படிப் பேசாமயே இருந்தா நான் என்ன நினைக்கிறது? நீ எதாவது சொன்னா தானே மாமாவுக்குத் தெரியும். பேசுடா” என்ற கெஞ்சலுக்குப் பிறகே மௌனம் துறந்தாள் மீனலோசினி.

“நீங்க எதுக்கு மாமா இப்ப வேலைக்குப் போறீங்க? கல்யாணம் முடியிற வரைக்கும் இங்கேயே இருக்கலாமில்லிங்க்?” குரல்  ஏகத்துக்கு பிசிறடித்தது.

“இப்பக் கிளம்புறதுக்கே இந்தப் பாடு. இன்னும் கல்யாணம் முடிஞ்சு கிளம்புறதா இருந்தா அவ்வளவுதேன்” சிரிப்புடன் கேட்டான் பிரபா.

“எனக்கு அழுகை அழுகையா வருது. உங்களுக்கு சிரிப்பா இருக்குதுங்களாக்கும். போங்க மாமா” அழுகையுடன் சேர்ந்து கொஞ்சம் கோபமும் வந்தது.

“கல்யாணம் முடிச்சு நான் எம் பொண்டாட்டியோட பார்க்க வேண்டிய வேலையே நிறைய இருக்கும். அப்பப் போய் வேலைக்குப் போகச் சொல்றியேடா” கிசுகிசுப்பாகப் பேசினான் பிரபா.

அவர்கள் பேசத் தொடங்கிய நாளிலிருந்து முதல் முறையாக மறைமுகமாகத் தான் என்றாலும் தங்கள் அந்தரங்கம் குறித்து இன்றுதான் மனம் திறந்திருக்கிறான் பிரபா. அந்தக் கிசுகிசுப்பான குரல் பெண்ணவளை வசியம் செய்ய அழுகை எல்லாம் மறைந்து ஒரு மோன நிலையில் அலைப்பேசியைக் காதில் வைத்த வண்ணம் மௌனமாக அமர்ந்திருந்தாள் மீனலோசினி.

“டேய் மினிக்குட்டி, வீடியோ கால் போடட்டா?” மீண்டும் கிசுகிசுப்பான குரலில் பிரபா கேட்க,

“ம்ஹூம்” வெட்கத்துடன் தலை ஆட்டினாள் பாவை.

“ஏன்டா?” தாபம் மிகுந்த குரலில் பிரபா வினவ,

“அழுமூஞ்சியா இருக்கேன் மாமா” சிணுங்கலாகப் பதில் வந்தது அவனுடைய சொக்குப் பொடியிடமிருந்து.

“எந்த மூஞ்சியா இருந்தாலும் பரவாயில்ல. எனக்கு உன் கண்ணைப் பார்க்கணும் போல இருக்குடா. ஹப்பா என்ன கண்ணுடா சாமி, அப்படியே மனுஷனை உள்ள சுருட்டி வைச்சுக்குற மாதிரி.

அதெப்படி கண்ணுக்குள்ள தூங்கப் போறேன், தங்கப் போறேன்னு இந்த கவிஞருங்க எல்லாம் லூசுத்தனமா பாட்டு எழுதுறாங்களேன்னு நான் யோசிச்சிருக்கேன். இப்ப இல்ல தெரியிது அவங்க எல்லாம் எவ்வளவு அனுபவிச்சு எழுதி இருக்காங்கன்னு.

ஒரே ஒரு தடவை வீடியோ கால் போட்டுப் பேசலாம்டா. என் செல்ல மினிக்குட்டி இல்ல” பிரபாவுக்கு ஊருக்கு செல்லும் முன் அவனுடைய சொக்குப் பொடியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

“இன்னைக்கு உங்கப் பேச்சும் சரியில்ல. குரலும் சரியில்லீங்க் மாமா. எதைப் பார்க்குறதா இருந்தாலும் நீங்க நேர்ல வந்துப் பார்த்துக்கோங்க். இப்ப நான் போனை வைக்கிறேனுங்க் மாமா” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள் மீனா.

பேசி முடித்ததும் இருவருடைய மனநிலையும் உல்லாசமாக மாறியிருந்தது. இந்த நொடி உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதர்களாகத் தங்களைத் தாங்களே உணர்ந்தார்கள் என்றே சொல்லலாம். 

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து சுந்தரவடிவின் முன் பள்ளி செல்லும் சிறுவன் போன்ற முகப் பாவத்துடன் வந்து நின்றான் பிரபாகரன். அவர் என்னவென்று விசாரிக்க,

“ம்மா, ஊருக்குப் போறதுக்கு முன்ன நான் போய் உங்க மருமக கிட்ட சொல்லிட்டுக் கிளம்பட்டுமா? இங்க இருந்து பொள்ளாச்சிக்குப் போயிட்டு அப்படியே அங்க இருந்து ரவைக்கு சென்னைக்குப் பஸ் ஏறிக்குவேன்ம்மா. ப்ளீஸ்ம்மா” என்று அவர் புடவை முந்தானையைப் பற்றிக் கொண்டு பின்னாடியே சுற்றி வருபவனைப் பார்த்தால் சிரிப்பு தான் வந்தது சுந்தரவடிவுக்கு.

“தாராளமா போயிட்டு வாய்யா. ஆனா பஸ்சுல எல்லாம் வேண்டாம். நீ நம்ம பாண்டியையும் கூட்டிக்கிட்டு நம்ம வண்டியிலேயே போயிட்டு வா. அதுதேன் கொஞ்சம் கௌரதையா இருக்கும். சரியா?”

“அம்மான்னா அம்மாதான். என் செல்ல அம்மா” என்று சொல்லி அவர் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, “ஆனா மாமா எல்லாரும் கேட்டா என்ன சொல்றது?” என்று கேட்டான் பிரபா.

“அதெல்லாம் உனக்கெதுக்கு. நாங்க பார்த்துக்கிடுவோம். நீ வெரசா பாண்டிக்கு போனைப் போட்டுக் கிளம்பி வரச் சொல்லு. இப்பவேக் கிளம்புனாத்தேன் சரியா இருக்கும்” தான் ஒரு ஐ.எஸ்.ஐ முத்திரைக் குத்தப்பட்ட மகனின் நலனை மட்டுமே விரும்பும் நல்ல அம்மா என்று மீண்டும் நிரூபித்தார் சுந்தரவடிவு. அதற்குப் பிறகு பாண்டியையும் பிரபாவையும் ஏற்றிக் கொண்டு அந்த ஸ்கார்ப்பியோ மதுரை – பொள்ளாச்சி ஹைவேசில் பறந்து கொண்டிருந்தது.

**********************

அன்று மீனா பள்ளியில் வேலை முடிந்துத் திரும்பும் பொழுது, அறிந்தவர் அறியாதவர் அனைவரும் அவளிடம் சொல்லியது ஒரே விஷயத்தைத் தான்.

“சின்னம்மிணி உங்க் வூட்டுக்கு மாப்பிளை வந்திருக்குறாராமுங்கோ” சிறிய ஊர் என்பதாலும் அந்த ஊரிலேயே மிகவும் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தினருடைய பெண் என்பதாலும் பிரபா வந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவியிருந்தது.

இந்தத் திடீர் விஜயத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை மீனா. இன்று இரவு சென்னைக்குக் கிளம்புவதாகத் தானே சொன்னார்கள். அதற்குள் இங்கு எப்படி? தனக்காகவே வந்தானோ என்று மனம் இறக்கைக் கட்டிப் பறக்கத் தானும் ஸ்கூட்டியில் பறந்து கொண்டு விரைவாக வீடு வந்து சேர்ந்தாள் மீனா.

அடித்துப் பிடித்து வீடு வந்து பார்த்தால் வீடே அமைதியாகக் காட்சியளித்தது. ‘மாமா வந்திருந்தால் இந்நேரம் வீடே பேச்சும் சிரிப்புமாக அல்லவா இருக்கும். ஒருவேளை வெளியே எங்கேயாவது போயிருப்பாங்களோ? இல்ல மாமா வரவே இல்லையோ?’ என்று தோன்றிய நொடி அத்தனை சந்தோஷமும் வடிந்து போனது பெண்ணவளிடமிருந்து.

அவளுடைய அந்த நொடி நேர மனக்குமுறலையும் விரும்பாதவனாகக் கணீரென்று கேட்டது பிரபாவின் சிரிப்பொலி அடுக்களையிலிருந்து. ‘கிச்சனுக்குள்ளயா இருக்காங்க?’ என்று விரைந்து செல்ல, அவள் ஆசையைப் பொய்யாக்காமல் அங்கு தான் நின்றுப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான் பிரபா.

பிரபா இப்படித் திடீரென்று வந்து நிற்பான் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு விரைவாக எதாவது செய்து கொடுக்க வேண்டுமே என்றெண்ணி லலிதா வேகமாக ரவா பொங்கல் செய்து கொடுத்தார்.

அதன் சுவையில் மயங்கியவனாக, “ரவையில் பொங்கல் கூட செய்யலாமாங்க அத்தை?” என்று கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்திருந்தான். கூடவே பாண்டியும் கோதையம்மாளும். பேச்சு அங்கேயே நீண்டு அப்படியே திசை மாறி மீனா பக்கம் செல்ல,

“அப்பத்தா நேத்து உங்க பேத்தி ஒரே அழுகாச்சியாக்கும். அது அழுகவும் எனக்கும் சங்கடமா போச்சா, அதேன் நேர்லயே பார்த்து சொல்லிட்டுப் போகலாமென்டு கிளம்பி வந்துட்டேன்” என்று பிரபா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான் மீனா வந்து சேர்ந்தாள்.

“நல்லா கேட்டுக்கிடுங்க அப்பத்தா. இது வரைக்கும் எத்தன தாட்டி இவனைக் கப்பலுக்கு அனுப்பிட்டு எங்க சித்தி கண்ணைக் கசக்கிட்டு இருந்திருக்கும். அப்பயெல்லாம் வராத சங்கடம் சாருக்கு இப்ப வந்துடுச்சாமா” என்று பாண்டி சொல்ல அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்க, வேறு வழியில்லாமல் பிரபாவும் சிரித்துதான் சமாளிக்க வேண்டியிருந்தது.

மீனா வந்த வேகத்துக்குத் தனக்கு முதுகுக் காட்டி நின்று கொண்டிருந்தவன் மீது மோதி நின்றாள். அவள் மோதிய வேகத்துக்குக் கையில் இருந்த காஃபிக் கோப்பையை சிந்தாமல் பிடித்து விட்டாலும் திரும்பிப் பார்த்து அது மீனா என்று தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் தானாகவே கொஞ்சம் காஃபியை சட்டையில் ஊற்றிக் கொண்டான் பிரபா.

“என்ன கண்ணு பார்த்து வரமாட்டியா?”

“ஐயோ காஃபி சூடா வேற இருந்துச்சே!” என்று ஆளாளுக்குப் பதற,

“ஒன்னுமில்லைங்க அப்பத்தா. மேலுக்கு எல்லாம் சுடலைங்க அத்தை. இந்த டிரெஸ்சை மட்டும் மாத்திக்கிட்டா போதும். பாண்டி கார்ல இருக்குற பெட்டியில இருந்து ஒரு சட்டை எடுத்துத் தாடா” என்று கூலாகச் சொன்னான் பிரபா.

பாண்டியும் அதே போல் எடுத்து வந்து தர, பிரபாவைப் பார்த்த மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் சிலைப் போல் நிற்கும் மீனாவை உலுக்கி, “போ கண்ணு தம்பிக்குப் பாத்துரூமைக் காட்டு” என்று கூறி கோதை அனுப்பி வைத்தார். 

லலிதாவோ மீனாவின் கையில் ஒரு புது துண்டைக் கொடுத்து, “இதைக் கொடு கண்ணு. அப்படியே மாப்பிள்ளைக் கிட்ட அந்த சட்டையை வாங்கி வெரசா வாசிங் மிசின்ல போடு” என்றார்.

‘பய பிளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு. என்னமா பிளான் பண்றான்ய்யா!’ என்று பாண்டி முணுமுணுத்தது யார் காதிலும் விழவில்லை.

கோதையின் அறைக்குள் இருந்த குளியலறைக்குப் பிரபாவை அழைத்துச் சென்றாள் மீனா.  பாத்ரூமைக் காட்டிவிட்டு வெளியே செல்ல முற்பட்டவளை, அவள் கரத்தைப் பிடித்துக் கதவோரமாக சாய்த்து அவள் நகர முடியாத வண்ணம் அரணாக நின்றான் பிரபா.

சட்டையில்லாமல் வெறும் பனியனுடன் அவன் நின்ற தோற்றமும், அந்த அருகாமையும் அவனிடமிருந்து வெளிவந்த பெர்ப்யூமின் மெல்லிய வாசனையும் பெண்ணுக்குள் கலகமூட்ட கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் மீனலோசினி.

மூடிய கண்களுக்கு வலிக்காமல் முத்தமிட்டவன், “ஓய் சொக்குப் பொடி நேர்ல வந்து பார்த்துக்க சொன்னில்ல. இப்ப நான் நேர்ல வந்துட்டேன். கண்ணைத் தொறந்து என்னைப் பாரு” என்று அவள் காதோரத்தில் கிசுகிசுக்க, அந்தக் குரலுக்கு மயங்கியவளாய் கண்களைத் திறந்தாள் மீனா.

அவள் கண்ணோடு கண் கலந்தவனாக, அவள் தலை முடி கோதி, வெண்டைப் பிஞ்சு விரல்களோடு விரல் கோர்த்து, “ஏன்டா நேத்து அழுதே?” என்று கேட்க பதில் பேசத் தோன்றாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

“இப்ப எப்படி போன் பேசுறோமோ அதே மாதிரி ஷிப்புக்கு போன பிறகும் பேச முடியும்டா. மதுரையில இருக்குறதுக்குப் பதிலா ஷிப்ல இருப்பேன். அவ்வளவு தான்டா வித்தியாசம். இதுக்குப் போய் அழலாமா?” என்று கேட்டவாறே அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான் பிரபா.

அவன் அணைப்புக்குள் அடங்கியவளாய் தலையை மட்டும் நிமிர்த்தி, “எனக்கு நீங்க என்னை விட்டுட்டு ரொம்ப தூரம் போற மாதிரி இருந்துச்சுங்க் மாமா. அழுகை அழுகையா வந்துச்சு தெரியுமா” சொல்லும்போதே உதடு பிதுங்கியது.

இதற்கு மேல் தாங்க முடியாதவனாக அந்த உதட்டைத் தன் வசமாக்கிக் கொண்டான். முதல் முத்தம் முடியாமல் நீண்டு கொண்டே போனது. ஆசிரியை மாணவியாக மாறிக் காதல் பாடம் படிக்கத் தொடங்கினாள். ‘கணக்கு டீச்சரா’ என்று ஒரு காலத்தில் பயந்தவன் இன்று அந்த டீச்சருக்கே பாடம் கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

முதல் முத்தத்தைப் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியோடு பிரபாவின் பயணம் தொடங்கியது. தன் மீது உயிராக இருக்கும் மீனாவே தங்களதுத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தப் போகிறாள் என்ற உண்மை அறியாதவனாக லண்டன் சென்று கப்பலில் ஏறினான் பிரபாகரன்.

 

பார்வை – 9

சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி

கத்தும் கடலலைத் தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

நிலவைப் பொட்டும் வைத்துப்

பவளப் பட்டும் கட்டி

அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்

சித்திரப் பூவே பக்கம் வரச் சிந்திக்கலாமா

மன்னனை இங்கே தள்ளி வைத்துத் தண்டிக்கலாமா

காதுக்குள் இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரும் சித்ராவும் உருகிக் கொண்டிருக்கத் தன்னையே மறந்தவனாக அந்தக் கப்பலின் டெக்கில் அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். திருமணம் நின்று போயிருந்தது. அதுவும் மீனா இத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறித் திருமணத்தை நிறுத்தியிருந்தாள். அதன் பிறகு பிரபா எவ்வளவோ முயன்றும் அவளிடம் பேசக் கூட முடியவில்லை. பிரபாவின் வேலை முடியவோ இன்னும் ஒரு மாத காலம் முழுதாக இருந்தது. கையறு நிலையில் இருந்தான் பிரபாகரன்.

கப்பல் இப்பொழுது நின்று கொண்டிருந்த இடம் கரீபியின் தீவுகளில் உள்ள பஹாமாஸ் எனும் இடம். பிரபாவுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று. இத்தீவின் விசேடம் கப்பலில் இருந்தவாறே கடலின் அடி ஆழம் வரை அதாவது ஸீ பெட் என்று சொல்வார்களே அதுவரைக் காண முடியும். கப்பல் பயணத்தின் பொழுதே இந்தத் தீவின் அழகில் மனம் மயங்குபவன் இம்முறை நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தும், ரசிக்காமல் வெறித்திருந்தான்.

அவனருகில் வந்தமர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஆதரவாக அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். “இப்படியே மூஞ்சியை வைச்சுக்கிட்டு இருக்காத பிரபா. உனக்கு இது கொஞ்சங் கூட செட் ஆகலை. பொறுத்தது பொறுத்துட்ட இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ. நீ நேர்ல போய் நின்னீன்னா கண்டிப்பா அந்தப் பொண்ணால உன்னை வேண்டாமுன்னு சொல்ல முடியாது. அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ.

இப்ப ஏதோ கோவத்துல அப்படி சொல்லிட்டாங்க. உன்னை நேர்ல பார்த்துட்டா அந்தக் கோபத்தை அந்தப் பொண்ணால இழுத்துப் பிடிக்க முடியாது. சோ சியர் அப் மை பாய்” ஆதரவாகப் பேசினார் ஸ்டீவ்.

“எவ்வளவு கோவம் இருந்தாலும் அதை என்கிட்ட காட்டட்டும். அதுக்காக ஒரேடியா என்னை வேண்டாமுன்னு சொல்லிடுவாளா? அவளால எப்படி முடிஞ்சுது? என்னால சுத்தமா முடியலையே” பிதற்றிக்க் கொண்டிருந்தான் பிரபா.

“எல்லாம் சரியாகிடும். இல்லை ஒரு வார்த்தை சொல்லு, நானே அந்தப் பொண்ணை நேர்ல பார்த்து, இந்தப் பய புலம்புறதை என்னால காது கொடுத்து கேட்க முடியலைம்மா. புலம்பிப் புலம்பியே எல்லாரையும் ஒரு வழி ஆக்குறான். எங்களைக் காப்பாத்துறதுக்காகவாவது நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோம்மான்னு சொல்லிக் கெஞ்சியாவது சம்மதிக்க வைக்கிறேன் போதுமா. இப்ப எந்திரிடா. எந்திரிச்சுப் போய் எஞ்சின் செக் பண்ணு போ. சும்மா சோக கீதம் இசைச்சுக்கிட்டு”

“ம்ச்… ஒரு டென் மினிட்ஸ் கேப்டன். நீங்க போங்க, நான் வரேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் நடந்ததை அசைபோடத் தொடங்கினான்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன், பிரபா கப்பலுக்கு வந்து முழுதாக இரண்டு மாத காலம் ஓடியிருந்தது. பிரபா மதுரையில் இல்லாத போதும் திருமண வேலைகள் ஜரூராகவே நடந்து கொண்டிருந்தது எந்தத் தொய்வும் இல்லாமல்.

பொள்ளாச்சியிலேயே ஆகச் சிறந்த மண்டபமாகப் பார்த்து இவர்களது திருமணத்திற்காகப் புக் செய்திருந்தார் குமரப்பன். இரு வீட்டாரும் இணைந்து காஞ்சிபுரத்துக்கே ஒரு முறை சென்று முகூர்த்தப் பட்டு வாங்கி வந்தார்கள். இரண்டு மூன்று புடவைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபாவிடம் வீடியோ காலில் காட்டிய பிறகே முகூர்த்தப் பட்டைத் தெரிவு செய்தாள் மீனா. அதுவரையில் எல்லாம் நன்றாகத் தான் போய் கொண்டிருந்தது.

பத்திரிக்கை அச்சடித்து வந்த பிறகு பெண் வீட்டாரின் நெருங்கிய சொந்தங்களை முறையாக அழைக்கும் பொருட்டு பிரபா வீட்டிலிருந்து சுந்தரவடிவு, மூத்த மகள் தங்கம், அவர் கணவர் நடேசன், இரண்டாவது அக்கா தனத்தின் கணவர், பாண்டி ஆகியோர் கிளம்பி வந்திருந்தனர் பூங்குளத்திற்கு. மற்றவர்களுக்கு வேறு வேலை காரணமாக வர இயலவில்லை.

வந்த வேலையும் திவ்யமாக முடிந்திருந்தது. மீனா பள்ளிக்குச் சென்றிருந்ததால் அவள் வந்தவுடன் அவளையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்றெண்ணி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி மீனாவுக்காகக் காத்திருப்பதில் வந்திருந்த பிரபாவின் மாமாக்கள் இருவருக்கும் பிடித்தமில்லை.

‘ஏன் நாமதேன் இன்னைக்கி வருவோமென்டு தெரியும் தானே. அப்புறம் என்னத்துக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். வீட்ல இருக்கலாமில்ல, நம்மளை விட அதேன் முக்கியமா போச்சா’ என்று இருவரும் தங்களுக்குள்ளாக முணங்கிக் கொண்டார்கள்.

மீனாவுக்கு அன்று பள்ளியில் விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை. எப்படியும் இவர்களும் மதுரையிலிருந்து வந்து, பிறகு பத்திரிகை எல்லாம் வைத்து முடித்து வர நேரமாகும். அதற்குள் நாம் திரும்பிவிடலாம் என்றெண்ணியே பள்ளிக்குக் கிளம்பியிருந்தாள். திடீரென்று பள்ளியின் தாளாளர் வருகை தந்துவிட சட்டென்று கிளம்ப முடியாமல் கொஞ்சம் தாமதமாகி விட்டது.

அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்தவளை வாசலிலேயே வைத்துக் கடிந்து கொண்டார் லலிதா. “கொஞ்சம் சீக்கிரம் வாரதுக்கு என்ன கண்ணு? அவியெல்லாம் உனக்காகத் தான் நெம்ப நேரமா காத்துக்கிட்டிருக்காங்க. பாரு மூஞ்சியெல்லாம் எப்படி சோர்ந்து போய் இருக்குதுன்னு. அவங்களைப் பார்க்குறதுக்கு முன்னாடி போய் உன்ர ரூம்ல வேற சேலையை மாத்திக்கிட்டு முகம் கழுவி கொஞ்சம் ஃபிரெஷ்ஷா வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மீனாவும் தாயாரின் பேச்சைத் தட்டாமல் யாருடைய கவனத்தையும் கவராத வண்ணம் மாடிக்குச் செல்ல முற்படுகையில் சரியாக நடேசன் அவளைப் பார்த்துவிட்டார். பார்த்தவர் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம். அப்படி இருந்துவிட்டால் அவர் நடேசன் அல்லவே. எனவே ஆரம்பித்திருந்தார்.

“ஏம்மா உனக்காக நாங்க எல்லாம் இம்பூட்டு நேரமா காத்துக் கிடக்கோம். நீ என்னடான்னா வந்தவுகள வாங்கன்னு கூட கேட்காம நீ பாட்டுக்குப் போற” என்று உரத்தக் குரலில் கூறவும் அங்கிருந்த அனைவருக்குமே தர்ம சங்கடமாகிப் போனது. 

“ஐயோ அப்படியெல்லாம் இல்லீங்க்ண்ணா. ஸ்கூல்ல கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்க். காக்க வைச்சதுக்கு நெம்ப சாரிங்க்ண்ணா. போய் கொஞ்சம் ஃபிரெஷ் அப் பண்ணிட்டு வந்து பேசலாமுன்னு நினைச்சேனுங்க்ண்ணா. இதோ ஒரு நிமிசத்துல வந்துரேனுங்க்” என்று சொல்லி மாடிப்படியேறியவளைப் பாதியில் தடுத்து நிறுத்தியது நடேசனின் குரல்.

“ஓஹோ இம்பூட்டு நேரம் மஹாராணி வாரதுக்காகக் காத்திருந்தாச்சு. இனி மேக்கப் முடிச்சு வார வரைக்கும் வேற காத்திருக்கணுமோ? நமக்கெல்லாம் வேற வேலை வெட்டியே இல்லையென்டு நினைச்சுட்டாகப் போல சகலை” என்று சொல்லி இரண்டாவது அக்கா தனத்தின் கணவனையும் துணைக்கழைத்துக் கொண்டார்.

சுந்தரவடிவும், தங்கமும் தர்மசங்கடமாக மீனாவைப் பார்க்க, முயன்று முகத்தில் ஒட்ட வைக்கப்பட்ட புன்னகையுடன் வந்து, “வாங்க அத்தை, வாங்க அண்ணா, வாங்க அண்ணி” என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்றுப் பின், “பிள்ளைங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லீங்க் அண்ணி” என்று சொல்லியவாறே சுந்தரவடிவு அருகில் அமர்ந்து கொண்டாள் மீனா.  

அலுத்துக் களைத்து வரும் மருமகளை இப்படி விடாப்படியாகப் பிடித்து வைத்துப் பேசுவதில் மனம் ஒப்பாத சுந்தரவடிவு, “ரொம்ப சோர்வா இருக்கியேம்மா. நீ போய் முகம் கழுவிட்டு வாம்மா. வந்து மொத எதையாவது கொஞ்சம் சாப்பிடு. போம்மா” என்று மெதுவான குரலில் கூற, அவரின் குரல் பேதத்தை உணர்ந்தவளாக, “பரவாயில்ல இருக்கட்டுமுங்க அத்தை. அப்புறமா சாப்பிட்டுக்கிறேனுங்க்” என்று மறுத்துக் கூறிவிட்டு அமர்ந்து கொண்டாள்.

சூழ்நிலை விரும்பத்தகாததாக மாறும் முன் வேறு பேச்சை ஆரம்பிப்பதற்காக, “மாப்பிள்ளை தம்பி விவசாயம் பண்ண நிலம் வாங்கப் போறதா சொன்னாருங்க். இப்ப நம்ம தோப்புக்கு எதுக்கால இருக்குற எடம் விலைக்கு வருதுங்க். அதைப் பேசி முடிக்கலாமுங்களா?” என்று சுந்தரவடிவிடம் கேட்டார் குமரப்பன்.

சுந்தரவடிவு பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு பதிலளித்தார் அவருடைய இரண்டாவது மருமகன். “அதெல்லாம் சரி வராதுங்க. அவென்தேன் புரியாம ஏதோ உளறிக்கிட்டு இருக்கான்னா நீங்க வேற ஏங்க. விவசாயம் பார்க்க முடியாமத்தேன் அவென்  அவென் வேற வேலைக்குப் போயிக்கிட்டிருக்கானுங்க. இவென் என்னடான்னா இருக்குற வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்கப் போறானாம். இதெல்லாம் நடக்குற காரியமுங்களா? 

யம்மா மீனா, நீதேன் அவென்கிட்ட இதெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தணும் புரியுதா” என்றார்.

“சொல்லித் திருத்துறதுக்கு அவர் ஒன்னும் தப்புப் பண்ணலீங்களேண்ணா. விவசாயம் பண்றது தான் அவருக்கு விருப்பமின்னா நான் அதுக்குத் தானுங்களே அவருக்கு உதவியா இருக்க முடியும். எனக்கொன்னும் அவர் ஆசை தப்பானதா தெரிலீங்க்ண்ணா” என்றாள் மீனா.

மீனாவின் பதிலில் மகிழ்ந்தவராக சுந்தரவடிவு அவளுக்கு “என் ராசாத்தி” என்று சொல்லித் திருஷ்டி எடுக்க அது இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றியது அவரது மருமகன்களை. சரியாக அந்நேரம் பார்த்துப் பாண்டியின் அலைப்பேசிக்குப் பிரபாவிடமிருந்து அழைப்பு வர,

“மாப்பி சூழ்நிலை கொஞ்சம் சரியில்லடா. எதாச்சும் பிரச்சன ஆகும் முன்னுக்கு நான் இவெங்களைக் கூட்டிக்கிட்டு கெளம்புறேன். நீ அப்புறமா கூப்புடுடா” என்று சொல்லிப் பாண்டி அழைப்பைத் துண்டிக்கப் பார்க்க,

“டேய் இருடா யாரு பிரச்சன பண்றா?” என்றான் பிரபா.

“வேற யாரு எல்லாம் உன் மாமனுங்கதேன்” என்று பாண்டி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

“அத்த நீங்க வேற புரியாம பெருமை பட்டுக்காதீக. அவுக நம்ம பிரபாவை வீட்டோட மாப்பிள்ளையாக்கப் பார்க்குறாக. அதுக்குத்தேன் தோப்பு விலைக்கு வருது, அது வருது, இது வருதென்டு அடி போடுறாக. அது புரியாம நீங்க பாட்டுக்கு…

நாங்கதேன்  முன்னாடியே சொன்னோமுல்ல, இந்தப் பக்கிட்டு பொண்ணு எடுத்தா நம்ம பயல வீட்டோட வைச்சிக்கிடுவாகென்டு. நீங்கதேன் ஒத்துக்கிட மாட்டேன்னீக. இப்ப நாங்க சொன்ன மாதிரி தானே நடக்குது” என்றார் நடேசன் உரத்தக் குரலில்.

அவர் கூறிய விதமும், எழுப்பிய சத்தமும் சற்றே அவமரியாதையாகத் தோன்ற அதிர்ச்சியில் அமைதியாகிவிட்டார் குமரப்பன். கோதையம்மாளும் லலிதாவும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. நடேசன் அவ்வாறு பேசியது தன் தந்தையை அவமானப்படுத்தியதைப் போல் தோன்ற,

“அதை வீட்டோட மாப்பிள்ளையா இருக்குற நீங்க யாரும் சொல்லக் கூடாதுங்க்ண்ணா” என்று பட்டென்று கூறியிருந்தாள் மீனா. இந்தப் பதிலைக் கேட்டு இப்பொழுது சுந்தரவடிவும், தங்கமும் ஏன் பாண்டியுமே கூட திகைத்துப் போக, “மாப்பி ஃபோனை மீனா கிட்ட கொடு” என்று இவ்வளவு நேரமும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிரபா பாண்டியிடம் கூறினான்.

பாண்டி அலைப்பேசியை மீனாவிடம் நீட்ட, அவள் அதை வாங்கி ஹலோ என்று கூறும் முன், “மீனா மாப்பிள்ளைக கிட்ட மன்னிப்புக் கேளு” என்றிருந்தான் பிரபா இறுகிய குரலில். 

“இங்க என்ன நடந்துச்சுன்னே தெரியாம நீங்க பாட்டுக்கு மன்னிப்பு கேளுன்னா என்னங்க மாமா அர்த்தம்? அப்ப என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லீங்களா?” என்றாள் மீனா.

“இப்போதைக்கு இது பெரிய பிரச்சனை ஆகாம இருக்கணும். அதுக்கு வேண்டிதேன் சொல்றேன். நீ ஒரு தடவை மன்னிப்புக் கேட்டுடு. இதால நாம ஒன்னும் கொறஞ்சு போயிட மாட்டோம். கேளு மீனா” என்றான் பிரபா கொஞ்சம் பிடிவாதக் குரலில். திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் இந்தப் பிரச்சனை இத்துடன் முடிய வேண்டும். இதை மனதில் வைத்தே பிரபா அவ்வாறு கூறினான்.

“கேட்க முடியாதுங்க் மாமா” அதை விடப் பிடிவாதக் குரலில் மீனா. தன்னிடம் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தையும் கேட்காமல் மன்னிப்பு கேட்கச் சொன்னது தன் மீது நம்பிக்கையின்மையாகத் தோன்றியது மீனாவிற்கு.

“ஸ்ப்ப்பா கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா?” சலிப்பாகப் பிரபாகரன் பேசியது அவ்வளவு நேரம் மீனா இழுத்துப் பிடித்து வைத்திருந்தப் பொறுமையை வெகு தொலைவுக்கு விரட்டியிருந்தது.

“தேவை இல்லீங்க் மிஸ்டர்.பிரபாகரன். இவ்வளவு சலிப்போட இந்தக் கல்யாணம் நடக்கோணுமுன்னு எந்தத் தேவ்வையும் இல்லீங்க் மிஸ்டர்.பிரபாகரன்.”

“மினிம்மா நான் சொல்றதை ஒரு நிமிசம் கேளுடா.” 

“எப்ப நீங்க என்கிட்ட ஒரு வார்த்தையும் கேட்காம நீங்களா முடிவெடுத்துப் பேசுனீங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சுங்க். கல்யாணத்துக்கு அப்புறமும் இதே கதைதானுங்களே நடக்கும். எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லீங்க்.”

“மினிம்மா” தவிப்பானக் குரலில் பிரபா அழைக்க,

“குட் பை மிஸ்டர்.பிரபாகரன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துப் பாண்டியிடம் அலைப்பேசியை நீட்டியிருந்தாள் மீனா.

“இங்க நான் ஆருகிட்டயாவது மன்னிப்புக் கேட்கோணுமுன்னா அது உங்க கிட்ட தானுங்க்” என்று சொல்லி சுந்தரவடிவை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்னை மன்னிச்சுக்கிடுங்க. இந்தக் கல்யாணம் நடக்காதுங்க” என்றாள். 

“மீனாம்மா அவசரப்பட்டு எடுத்தோமா கவுத்தோமான்னு பேசக் கூடாது தங்கம். இதென்ன கண்ணு புதுப் பழக்கம் பெரியவங்களை எதுத்துப் பேசுறது. அவியட்ட மன்னிப்புக் கேளு” என்று கோதையம்மாளும் லலிதாவும் கூட வலியுறுத்த,

“எனக்குப் புடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி என்ர வீட்ல யாரும் வற்புறுத்த மாட்டாங்கன்னு நான் இப்ப வரைக்கும் நம்புறேனுங்க அம்மத்தா. அதே மாதிரி பண்ணாத தப்புக்கு என்னால மன்னிப்புக் கேட்க முடியாதுங்க்.  எனக்கு இந்தக் கண்ணாலத்துல இஷ்டம் இல்லீங்க்” என்று சொல்லிவிட்டு அது வரைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த அழுகையை வெளியேற்றுவதற்காகத் தன்னறை நோக்கி விரைந்துவிட்டாள்.

யாரும் யாரிடமும் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நிற்க, கலங்கிப் போய் நின்றிருந்த சுந்தரவடிவின் கைகளைப் பற்றிய கோதையம்மாள், “ஆண்டவன் போட்ட முடிச்சு இது தான்னா அதை மாத்த ஆராலயும் முடியாது கண்ணு. நீ கவலைப்படாம போயிட்டு வா. கொஞ்சம் ஆறப் போட்டு பேசலாம்” என்று சொல்லி அனுப்பி வைத்தார் கோதை.

மதுரைக்குத் திரும்பும் வழி நெடுக தங்கமும் சுந்தரவடிவும் புலம்பிக் கொண்டே வர, “இத்துணூன்டு புள்ள, எங்களை எல்லாம் அசிங்கப்படுத்தியிருக்கு. அது உங்களுக்கெல்லாம் பெருசா தெரியலை. நாங்க எவ்வளவு அசிங்கப்பட்டாலும் பரவாயில்ல. அப்படித்தானே” என்று பொங்கி விட்டனர் மருமகன்கள் இருவரும்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மீனலோசினி யாருடனும் பேச விரும்பாதவளாக அமைதியைக் கையிலெடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் தனிமையில் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தே நொந்து போயினர் மற்றவர்கள்.

பிரபா எத்தனையோ முறை முயன்றும் மீனாவிடம் பேச முடியவில்லை. ஆனால் வீட்டில் இருந்த மற்றவர்கள் பிரபாவிடம் எந்தப் பகையும் பாராட்டவில்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகள் எதையும் நிறுத்த வேண்டாம் என்றும் தான் வந்து அனைத்தையும் சரி செய்வதாக சொல்லி  அவர்களை ஆறுதல் படுத்தியிருந்தான் பிரபா. பிரபாவின் மீதுள்ள நம்பிக்கையில் பத்திரிக்கை வைப்பதை மட்டுமே நிறுத்திவிட்டு மற்ற வேலைகளை நடத்திக் கொண்டுதான் இருந்தார் குமரப்பன். அவர்களுக்கும் இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையை விட மனமில்லை.

 

பார்வை – 10

சொன்னபடி நான்கு மாதங்கள் கழித்து இந்தியா வந்து சேர்ந்தான் பிரபாகரன். இம்முறை பிரபாவுக்கு சைன் ஆஃப் சிங்கப்பூருக்குக் கிடைக்க அங்கு ஒரு நாள் தங்கிவிட்டுப் பின் இந்தியா திரும்பினான். நேரடியாக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்து இறங்கியவனை வரலாற்றில் முதல் முறையாக அமைதியாக வரவேற்க வந்திருந்தான் பாண்டி. அமைதியாக ஸ்கார்ப்பியோ பொள்ளாச்சி நோக்கிப் பறந்தது.

‘இன்று பிரபா ஊர் திரும்பும் நாள்’ என்ற எண்ணம் அலைக்கழிக்க காலையில் இருந்தே மிகவும் சோர்ந்து போனாள் மீனா. திருமணம் வேண்டாமென்று ஜம்பமாகக் கூறிவிட்டாள் தான். ஆனால் பிரபாவை மறப்பது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லையே. ஊருக்கு வந்த பின் தன்னை வந்து சந்திப்பானா மாட்டானா என்று மனதுக்குள் நடக்கும் பட்டிமன்றத்திற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

காலையிலிருந்து அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவள் மாலை மங்கும் நேரம் கீழே இறங்கி வந்தாள். தாயாரைத் தேடி சமையலறைக்குச் செல்ல, அங்கு லலிதா மும்முரமாக ரவா பொங்கல் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்ததுமே பிரபாவின் நினைவும், அதைத் தொடர்ந்த அன்றைய நிகழ்வுகளும் மனதுக்குள் கிளை பரப்பத் தொடங்கியது.

“அம்மத்தா எங்கங்க்ம்மா” எதையாவதுப் பேச வேண்டுமே என்று கேட்டாள் மீனலோசினி.

“அவங்க ரூம்புல அவங்க பேரன் கூட பேசிக்கிட்டிருக்காங்க கண்ணு” என்றார் லலிதா.

“முகில் வந்திருக்குறானாம்மா? வாரதா என்கிட்ட சொல்லவே இல்லையே” என்றாள் மீனா. 

“முகில் இல்ல கண்ணு. இவங்க வேற. நமக்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லைன்னாலும் இந்தத் தம்பி உங்க அம்மத்தாவோட பேரன் தானாம். அதை ஆரும் தடுக்க முடியாதாமா. இந்தா நீயே இதைக் கொடுத்துப்போட்டு வா” என்று சொல்லி அவள் கையில் பொங்கலைக் கொடுத்து அனுப்பி வைத்தார் லலிதா. 

ஒருவேளை பிரபாவாக இருக்குமோ என்று மனதுக்குள் மறுபடியும் பட்டிமன்ற விவாதம் ஆரம்பிக்க, அதை நிறுத்தும் வழி அறியாது கோதையம்மாளின் அறையை நோக்கிச் சென்றாள் மீனா. வந்தவளை வரவேற்றது அவளின் பட்டிமன்ற நாயகனே தான். கண்களின் அணை உடைப்பெடுக்க, இமைத்தால் மறைந்து விடுவானோ என்ற பயத்தில் இமைக்கவும் மறந்து பிரபாவைப் பார்த்தபடியே நின்றுவிட்டாள்.

அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்ததை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, “ஏங்க அப்பத்தா இதேன் உங்க பேத்திங்களா? இம்புட்டு அழ்கான புள்ளைக்கா கண்ணாலம் நின்டு போச்சு? நீங்க பார்த்த மாப்பிள்ளை சரியில்லை அப்பத்தா. சுத்த கூறு கெட்டவனா இருப்பான் போலயே.

அவன் இடத்துல நான் இருந்திருந்தா, எம் பொண்டாட்டி பேசுனது உங்களை வருத்தியிருந்தா அவ சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எனக்கு நீங்க எல்லாம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவளுந்தேன் முக்கியமுன்னு சொல்லி அந்த மாமா கையில காலுல விழுந்தாவுது கண்ணாலத்தை முடிச்சிருப்பேன் இந்நேரத்துக்கு. பாருங்க இப்பக் கூட அதைத்தேன் பண்ணிட்டு வரேன்” பிரச்சனையை சரி செய்து விட்டேன் என்று சொல்லாமல் சொன்னான் பிரபாகரன்.

பேச்சு மட்டுமே கோதையம்மாளிடம் நீடித்துக் கொண்டிருந்தது. பார்வையோ மொத்தமாய் மீனாவை மொய்த்துக் கொண்டிருந்தது.

கண்கள் லேசாகக் கலங்கியிருக்க, குரலும் கரகரத்துப் போயிருக்க இயல்பாக இருப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு பிரபா பேசிய தொனியில் தன்னைத் தொலைத்தாள் பாவை. இத்தனை நாட்களாக ‘உன் குடும்பம் மட்டும் தான் உனக்கு முக்கியமா? நான் இல்லையா?’ என்று பிரபாவின் மீது கொண்டிருந்த தார்மீகக் கோபத்தை மறக்கச் செய்திருந்தது அவனது பேச்சு.

கோதை அங்கிருப்பதையும் மறந்து “மாமா” என்று கூவியவாறே பிரபாவை அணைத்திருந்தாள் மீனா. “ஹப்பா இந்த வார்த்தையைக் கேட்டு எத்தனை நாளாச்சு” என்று சொல்லியவாறே அவனும் அணைத்துக் கொண்டான். இருவரின் கண்களும் மழையைப் பொழிய இருவருக்குமே அந்த அணைப்பு தேவையாக இருந்தது. மனம் விட்டுப் பேசிக் கொள்ளட்டும் என்றெண்ணியவராகக் கோதை அவ்விடம் விட்டுச் சென்றார்.

“சாரிடா மினிக்குட்டி. மாமா உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா” என்று சொல்லியவாறே அவளது உச்சியில் முத்தம் பதித்தான் பிரபாகரன்.

“நாந்தான் மாமா சாரி சொல்லோணும். எனக்கு மறுநாளே புரிஞ்சு போச்சுங்க் மாமா. உங்களை விட்டு என்னால இருக்க முடியாதுன்னு. ஆனா இவ்வளவு நடந்தப்புறம் எப்படிங்க் உங்க வீட்டுல என்னை சேர்த்துப்பாங்க. அதான் நீங்க போன் பண்ணும் போதெல்லாம் எடுக்கவே இல்லீங்க். நெம்பத் தவிச்சுப் போயிட்டேனுங்க் மாமா. இனி என்ன நடந்தாலும் உங்களை விட்டுப் போக மாட்டேனுங்க் மாமா” என்று சொல்லி அணைப்பை இறுக்கியவளாய் அவன் நெஞ்சத்திலேயே தன் முதல் முத்திரையைப் பதித்தாள் மீனலோசினி.

*********************

ஐந்து வருடங்களுக்குப் பிறகு. அழகிய நல்லூர், பொள்ளாச்சிக்கும் கோவைக்கும் இடையில் இருக்கும் அழகிய கிராமம். இங்கு தான் பிரபா தன்னுடைய விவசாயக் கனவை நனவாக்கியிருந்தான். இப்பொழுது அவனுக்கென்று சொந்தமாக ஒரு தென்னந்தோப்பு, நன்செய், புன்செய், நாட்டுக் கோழிக்கென்று தனிப் பண்ணை அனைத்தும் உள்ளது.

பண விஷயத்தில் நாசூக்காக விலகிக் கொண்டவன் தொழில் விஷயத்தில் ஒவ்வொன்றையும் தன்னுடைய மாமனார் குமரப்பனிடம் ஆலோசனை கேட்ட பிறகே செய்வது வழக்கம். அதில் அவர்களுக்கும் பரம திருப்தி, சந்தோஷம். சுந்தரவடிவும் தங்கள் உணவு விடுதியை மொத்தமாகப் பாண்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு இப்பொழுது மகன், மருமகளுடன் சந்தோஷமாக நாளைக் கழிக்கிறார்.

“அப்பா தீக்கிரம் வெளியே வாங்கப்பா. பாப்பா துண்டு வைச்சிக்கேன்” என்று குளியலறையின் வாசலிலேயே பூந்துவாலையுடன் கத்திக் கொண்டிருந்த பூச்செண்டின் பெயர் ஆதர்ஷினி. பிரபாகரன் மீனலோசினி தம்பதியரின் மூன்று வயது மகள்.

“அப்பாக்கிட்ட துண்டு இருக்குடா பாப்பா. நீங்க போய் அப்பத்தாக்கிட்ட இருங்க. அப்பா இதோ வந்துடுறேன்” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான் பிரபா.

“அது அம்மா துண்டு. அது நேநா” கொஞ்சம் கொஞ்சமாய் குரல் அழுகைக்குத் தயாராக, அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாக லேசாகக் கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி “என் சமத்து பாப்பா. நீங்க தாங்கடா. எப்பப் பாரு எம்மக கூட போட்டி போடுறதே இவளுக்கு வேலையா போச்சு” என்று போலியாக அலுத்துக் கொண்டு மகள் கையிலிருந்த துண்டை வாங்கிக் கொண்டான் பிரபா.

அத்தோடு நிறுத்தாமல், “அம்மா துண்டை குடுப்பா” என்று பிரபா ஏற்கனவே வைத்திருந்த துண்டைக் கேட்டு வாங்கி அதை சர்வ அலட்சியமாகக் கட்டிலில் வீசிவிட்டு அவளுடைய அப்பத்தாவிடம் ஓடிச் சென்றது அந்த வாண்டு. 

அம்மா மகள் இருவருக்கும் யார் அப்பாவுக்கு முதலில் துண்டைக் கொடுப்பது என்று போட்டி நடந்திருந்தது. அதில் மகளை முந்திக் கொண்டு மீனா துண்டை நீட்டியிருந்தாள். குட்டிப்பெண் அதில் அழுது கொண்டு அப்பத்தாவிடம் குறை படிக்க ஓடிவிட, பிரபாவின் மீது நம்பிக்கையற்றவளாக அந்த அறைக்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தாள் மீனா மகளை உள்ளே விடாமல். பிரபாவோ அவள் எதிர்பார்க்கா நேரம் அவளையும் உள்ளிழுத்து முழுதாக நனைத்துவிட்டிருந்தான்.

மகள் சென்றவுடன் கதவை அடைத்துவிட்டு உள்ளே திரும்பியவனை சராமாரியாக அடித்தாள் உள்ளே தொப்பலாக நனைந்து போய் நின்று கொண்டிருந்த மீனலோசினி.

“வலிக்குதுடி பொண்டாட்டி. உன் கூட குளிக்கவே செய்றேன். உன் மக கொடுத்த துண்டை வாங்கக் கூடாதா? அம்மாவுக்கும் மகளுக்கும் என்னை வைச்சு போட்டி போடுறதே வேலை” என்று சொல்லியவாறே அவள் கைகளிரண்டையும் ஒற்றைக் கையில் அழுத்திப் பிடித்து மற்றொரு கையால் இடை வளைத்துத் திரும்பவும் அவளை ஷவருக்கடியில் நிறுத்தியிருந்தான்.

“போங்க் மாமா. உங்களுக்கு உங்க பொண்ணு பொறந்தப்புறம் என் மேல பிரியமே இல்லீங்க்” என்று செல்ல ஊடல் கொண்டு சிணுங்குபவளை இன்னும் கொஞ்சம் தன்னோடு இறுக்கி அணைத்து,

“பிரியம் இல்லாமயாடா சொக்குப்பொடி பின்னாடியே சுத்தி வரேன். நல்லா பார்வையாலேயே சொக்குப் பொடி போட்டு மயக்கி வைச்சுக்கிட்டு பேச்சைப் பாரு பேச்சை. இப்படிப் பொய்யா பேசுற இந்த உதட்டை என்ன பண்றேன் பாரு” என்று கூறியவாறே வன்மையாக அவள் உதட்டைக் கொய்திருந்தான்.

முற்றும் 

Thendral’s ‘Ketti Melam’ – Full Novel

 சுமனச வந்தித சுந்தரி மாதவி 

  சந்திர சகோதரி ஹேமமையே

 

பிசிறில்லாத கணீர் குரலில் பாடிக்கொண்டு வாசலில் போட்ட மனை கோலத்தை செம்மணிட்டு அழகு படுத்திக் கொண்டிருந்தார் வச்சு என்கிற வத்சலா

 

மனது முழுக்க உற்சாகம். ஒரு படபடப்பு. சந்தோஷம். உள்ளே ஒரே பெருமிதம்

அதற்கு காரணம் அவரது மூத்த மகளான அனு என்கிற அனுராதாவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள்உறவினர்கள் மூலம் கிடைத்த சம்மந்தம்

 

அனுவின் போட்டோவைப் பார்த்ததிலிருந்தே பையனுக்குப் பிடித்துவிட்டதால் , போனிலேயே அனைத்தும் பேசி, இன்று சம்ப்ரதாயப் படி பெண் பார்ப்பது முடிவானது

 

வச்சு மாமி மிகவும் ஆச்சாரம் பார்ப்பவள். அவளது பூர்வீகமும் சரி அவளது கணவனின் பூர்வீகமும் சரி , கோவிலில் கைங்கர்யம் செய்தவர்கள். அதனால் அப்படியே வளர்ந்துவிட்டாள்

 

கணவன் சாரங்கபாணிக்கு  கவர்ன்மென்ட்டில் வேலை. இப்போது தான் சாய்வு நாற்காலிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். கூடிய சீக்கிரம் ரிட்டயர்டு வாழ்க்கையை அதிலே கழிக்கவேண்டுமென்று

 

பொண்டாட்டி சொல்லே வேதம் அவருக்கு. வச்சு மாமி போடும் பில்டர் காப்பிக்கே மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல மயங்கி கிடப்பார். சம்பளத்தை வாங்கியதும் கவரோடு வச்சு கையில் கொடுத்து விட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விடுபவர்

 

வச்சு தான் ஆல் இன் ஆல். அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீட்டில் மோர் மிளகாய் எப்போது தீரும், புதிதாக அப்பளம் எப்போது இட வேண்டும்ஜாடியில் போட்ட ஊறுகாய் கிளறி விடும் நேரம் கூட அத்துப்படி

 

பால் காரன் முதல் கொல்லைபுறத்தை சுத்தம் செய்பவனை வேலை வாங்குவது வரை அவர் பொறுப்பு தான். கணவனையும் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டதால், சாரங்கனுக்கும் வச்சு இல்லாமல் எதுவும் ஓடாது

 

இந்த தம்பதிக்கு அழகிய இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை மிகவும் பொறுப்பானவள், அம்மாவைப் போலவேஅவள் தான் கல்யாணத்திற்கு தயாராக நிற்கும் நம்ம அனு

 

அனு , சீக்கிரம் எழுந்துக்கோ டீ. நாழி ஆறது பாரு. மள மளன்னு ஸ்நானம் பண்ணிட்டு வா. இன்னிக்கு வெள்ளிக்கிழமை! லக்ஷ்மி பூஜை பண்றதுக்கு கொல்லை லேந்து பூ றிச்சுண்டு வந்து வை. நேக்கு திரும்மாப்படில  நெறைய வேலை இருக்கு. அவாள்ளாம் வரத்துக்குள்ள எல்லாம் ரெடி பண்ணி வைக்கணுமோன்னோபடுக்கை அறையின் வெளியில் நின்றே குரல் கொடுத்தாள்

 

எழுந்துட்டேன் மா… ” போர்த்திக்கொண்ட போர்வையை மடித்தபடியே எழுந்தாள். இன்னும் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் தங்கையை வாஞ்சையுடன் பார்த்தவள், மெல்ல அவளது போர்வையை உருவ

 

ஹே அனு , என்னை ஒன்பது மணிக்கு குறைஞ்சு எழுப்புனா உன்னை அணுகுண்டு வெச்சே கொன்னுடுவேன்‘  என அவள் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்தது நினைவிற்கு வர , லேசான பயத்துடன் மீண்டும் போர்வையை சத்தமில்லாமல் அவள் மேல் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்

 

தங்கை வைஷ்ணவி என்றால் அவளுக்கு உயிர். தாய் போல பார்த்துக் கொள்வாள். அனு படித்து முடித்து வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் தான் இருந்தாள்

 

நன்றாக சமைப்பாள். தையல் , ஓவியம் என அசத்துவாள்வைஷ்ணவிக்கு டிசைனர் அனு தான். காலேஜில் அனைவரும் வைஷுவின்  உடையை பாராட்டாமல் இருந்ததே இல்லைஅதற்கு காரணம் அனுவின் கலைநயம் தான்

 

அனுவிற்கு வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் வைஷு ஊரையே விற்று வெல்லம் தடவி சாப்பிட்டு விடுவாள்

 

அக்காவிற்கு எப்போதும் அவள் தான் லீகல் அட்வைசர்

வீட்டு வேலை மட்டும் செஞ்சுட்டு இருந்தா உன் மாமியார் உன்ன காசில்லாத வேலைக்காரி ஆக்கிடுவா.. என்கூட வாஎன தன் தோழிகளோடு வெளியே செல்லும்போது அழைத்துச் செல்வாள்.

 

அனு உடன் சென்றாலும் அவளுக்கு ஜனக்கூட்டத்தை கண்டாலே தலைவலி வந்துவிடும்

 

எப்போதும் சாந்தமாக , அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்துவிடுவாள்

 

வைஷ்ணவி அவளுக்கு நேர் எதிர். எப்போதும் கலகலப்பு. அம்மாவை வம்பிழுப்பது. ஒருவர் விடாமல் கிண்டல் செய்வது. எந்த இடத்தில் அவள் இருந்தாலும் அனைவருக்கும் அவளைத் தெரிந்து விடும்

 

பாப்புலாரிட்டி பைத்தியம். அப்பவின் செல்லம் வேறு .. இப்போது தான் கல்லூரி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தாள். டீ யில் தான் வேலை

 

அங்கேயும் அணைத்து வேலைகளிலும் சுட்டி என பேர் எடுத்திருந்தாள்.

 

வச்சு மாமி இரு பெண்களையும் சிறு வயது முதலே அழகாகப் பராமரிப்பாள். வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் நல்லெண்ணெய் வைத்து சீயக்காய் பொடி போட்டுக் குளித்தே ஆகவேண்டும்

 

பயத்தமாவும் கடலைமாவும் வைத்து உடலுக்குத் தேய்த்து வந்ததால் இரு பெண்களும் மேக்கப் இல்லாமலே ஜொலிப்பர்

சார்ங்கபாணியின் சிவந்த நிறம் இருவரிடமும் சற்று அதிகமாகவே வந்து சேர்ந்திருந்தது

 

மாமி உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் ரொம்ப லட்சணமா இருக்கா! ‘  என யாராவது சொன்னால் போதும் உடனே அழகிகள் இருவருக்கும் சுத்திப் போட்டு விடுவார் வச்சு

 

வயிற்றில் நெருப்பைக் கட்டிண்டு இருக்கேன்.. ரெண்டு பேரையும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பிடனும்என புலம்பிக் கொண்டே இருப்பார்

 

இப்போது அனுவிற்கு வரன் அமைந்தது கொஞ்சம் அவர் வயிற்றில் பால் வார்த்தது

 

அனு குளித்துவிட்டு தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு அழகாக ஒரு காட்டன் புடவை அணிந்து வந்தாள். மலர்களை பறித்துக் கொண்டு வந்தவள் அதை மாலையாகக் கட்டி , ஸ்வாமி படங்களுக்கு மாட்டினாள்.

 

வச்சு மாமி வேகமாக பூஜை அறைக்குள் வந்தாள். அனு உடனே வெளியேற

 

அனு நீ போய் கொஞ்சம் வாழைக்காயை நீளமா நறுக்கி வை. ஜலத்துல போட்டு வை டீ, இல்லனா கருத்துடும். நான் பூஜை முடிஞ்சுச்சுண்டு வந்துடறேன்.” வெளியே சென்றவளை துரத்திக் கொண்டே அவர் குரலும் சென்றது

 

அனு அப்பாக்கு காபி எடுத்துண்டு போய் குடுத்துட்டு , இந்த சின்னக் கழுதையை எழுப்பிவிடு. நாளுங் கிழமையுமா  நன்னா தூங்கறது..” மீண்டும் குரல் கொடுத்துவிட்டு , பூஜையில் லயித்தார்

 

அனு முதலில் சாரங்கபாணிக்கு காபியைக் கொடுக்கஅவரோ 

 “அம்மா எங்க …?” என மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு சமையல்கட்டை பார்க்க,

அம்மா பூஜை பண்ணிண்டு இருக்கா பா ..” 

சரி சரி , வேற ஏதாவது வாங்கிண்டு வரணுமா பாரு.. காத்தால போனா கறிகாய் எல்லாம் பிரெஷா வச்சின்டிருப்பான். போய் வாங்கிண்டு வரேன்காபியை உதட்டில் படாமல் தொண்டைக்குள் நேராக சரித்துக் கொண்டார்

 

இல்லப்பா. அம்மா ஏற்கனவே பொன்னம்மா கிட்ட சொல்லி கொண்டுவர சொல்லிருக்கா.. இப்போ அவளே வந்து கொடுத்துடுவாஅவளும் வாழைக்காய் நறுக்கச் சென்றாள்

 

நல்ல காரியம் பண்ணா. இப்போ நான் என்ன பண்றதுஆபீசுக்கும் லீவ் போட்டுட்டேன். அவா மூணு மனிக்குத் தானே வாரா. வச்சு வந்தா தான் ஏதாவது வேலை சொல்லுவா. அதுவரை செத்த இந்த பேப்பரை படிக்கறேன். ரொம்ப நாள் ஆச்சு நிம்மதியா பேப்பர் படிச்சுகாபியை சொட்டு விடாமல் மொத்தமாகக் குடித்துவிட்டு அந்தத் தெம்பில் பேப்பர் படிக்க வாசல் திண்ணையில் அமர்ந்தார்

 

அதற்குள் பொன்னம்மாவும் காய்கறி கூடையுடன் வந்தாள்

 

கொஞ்சம் இறக்கி வை சாமி”  என குரல் கொடுக்க,

 

நான் பேப்பர் படிக்கறது அந்த பகவானுக்கே பிடிக்கல..” என பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவள் தலையில் இருந்த மூட்டையை இறக்கி வைத்தார்

 

மாமி இல்லையா சாமி?” புடவைத்  தலைப்பால் முகத்தின் வியர்வையை துடைத்துக் கொண்டு கூடை அருகிலேயே தரையில் அமர்ந்தாள்

 

வருவா இரு.. ” மீண்டும் பேப்பரில் முகத்தை திணித்துக் கொண்டு அமர்ந்தார்

 

ஐந்து நிமிடத்தில் வச்சு மாமியும் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்தார்

 

அழகாக மடிசார் அணிந்து  நெற்றியில் குங்குமத்துடன் லட்சணமாக இருந்தார்

 

வா மாமி. உன்ன பாத்தாலே நாள் பூரா என் வியாபாரம் நல்லா போகும்மனதார பொன்னம்மா சொல்ல ,

 

ஏன் டீ! இப்படி சொல்லி விலை எல்லாம் அதிகமா சொல்லலான்னு பாக்கறியா.. எல்லா காயும் கொண்டு வந்திருக்கியா ?”  கூடையை ஆராய்ந்த படியே கேட்க

 

அய்ய .. இன்னம்மா அப்படி சொல்லிட்ட , உனுக்கு எப்பயாச்சும் அதிகமா சொல்லிகிறேனா . எடுத்துனு போ மாமிகுடுக்கறத குடு..” சிரித்துக்கொண்டே சொல்ல

 

வச்சுவும் சிரித்தாள்

 

அனு அந்த சிகப்புக் கூடையை எடுத்துண்டு வா.. ” என வீட்டுக்குள் குரல் அனுப்பகாய்களை பார்த்து எடுத்துக் கொண்டார்

 

இந்தா மாஅனு நீட்ட

 

பெரிய பாப்பாவை பொண்ணு பாக்க வரவங்க வேண்டானா சொல்லப் போறாங்க.. கரும்பு தின்ன கூலியா ? பெரிய பாப்பா உன் கண்ணாலத்துக்கு எனக்கு ஒரு சீல எடுத்து தந்துடு. சரியா ?” பொன்னம்மா அவளிடம் சொல்வது போல வச்சு மாமியிடம்  புதுப் புடவைக்கு அப்பிளிகேஷன் போட்டாள்

 

அம்மா கண்டிப்பா வாங்கித் தருவாங்க பொன்னம்மா. கவலப் படாதசிரித்து விட்டு தாயுடன் சேர்ந்து கறிகாயை எடுத்து வைத்தாள்

 

வச்சு மாமி அவளிடம் ஐம்பது ரூபாயை கொடுக்க பொன்னம்மாவும் எதுவும் சொல்லாமல் வாங்கிச் சென்றாள்

 

இன்னும் பேப்பரில் மூழ்கி இருந்த சாராங்கனை பார்த்த வச்சு மாமி

 

நான் இங்க ஒண்டியா கெடந்து அல்லாடறேன். நீங்க நிம்மதியா பேப்பரை படிச்சிண்டு இருக்கேளே! உங்க அண்ணா மன்னி க்கு போன் பண்ணி எப்போ வரான்னு கேளுங்கோ! புள்ளையாத்துக்காரா  வரப்ப அவா இருந்தா தான் நன்னா இருக்கும். இல்லனா நம்ம சைடுல ஆளே இல்லனு நெனச்சுப்பா

 

நம்ம கெளரவம் போய்டும். போங்கோ உடனே போன் பண்ணுங்கோ!” விரட்டினாள்

 

நீ சொன்னா சரி டீ . உடனே பண்ணிடுறேன். நாலு தெரு தள்ளி தான இருக்க , கூப்டா உடனே வர போறா ..” அவரும் தன் செல்போனை எடுக்க

 

ஆமா.. உடனே வந்து நின்னுட போறா.. உங்க அண்ணனா தேவலாம். உங்க மன்னி இருக்காளே! விஷயமே மறந்து போச்சுன்னு முழு பூசணிக்காய மறைக்கற மாதிரி  மறச்சிப்புடுவோ.. நாம வெத்தல பாக்கு வெச்சு அவளை அழைக்கணும். பொறாமை புடிச்சதுகள். உங்க தங்கை வரமாட்டா , ஆனாலும் சொல்லி வைங்கோ. பொருமிக்கொண்டே உள்ளே செல்ல, வழியில் வந்த படுக்கையறையில் இன்னும் வைஷ்ணவி உறங்குவது தெரிய

 

நாங்க இங்க இவ்ளோ வேலை பண்ணிண்டிருக்கோம், அங்க ஒன்னு யாருக்கோ வந்த விருந்து மாதிரி இழுத்துப் போத்திண்டு தூங்கறது பாரு. அடியே வைஷு ..கழுத எழுந்திரு டீ.. கூட மாட வேலை பண்ணு…” 

 

அனைவரையும் வச்சு ஆட்டி வைத்தாலும் , அவளின் புயல் காற்றுப் பேச்சுக்கு அசையாமல் இருப்பது வைஷு மட்டுமே!

 

வைஷு அசையாமல் படுத்திருக்க

பூஜையை முடிச்சுட்டேன் டீ , உள்ள வந்தா அடிச்சு தான் எழுப்புவேன். இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல நீ கூடத்துல இருக்கணும். ” மிரட்டி விட்டு 

சமையல் வேலையை கவனிக்கச் சென்றாள்

 

அனு தான் அனைத்துக்கும் உதவி செய்தாள்

 

போதும் அனு. நீ இன்னிக்கு அடுப்பு கிட்ட நீக்காதபோய் உக்காந்துக்கோ. ஏதோ பேஸ் பேக் குடுத்தாளே உன் தங்க, அதை போட்டுக்கோ. அந்த வைஷுவை நாலு தட்டு தட்டி எழுப்பு

 

மொதல்ல அவளுக்கு கல்யாணத்த பண்ணி அனுப்பி வைக்கணும். அப்போ தான் எனக்கு நிம்மதி, இல்லனா என்னை கத்த விட்டே பி பி வர வெச்சு என்னை சீக்கிரம் அனுப்பிடுவா..” 

 

பாவம்மா அவ.. இன்னிக்கு தானே லீவ் ..கொஞ்சம் தூங்கட்டும். ஒன்னும் இப்போ வேலை இல்லையே.” தங்கைக்கு பரிந்து கொண்டு வர

 

இல்லன்னா அவ தூங்கவே மாட்டாளா.. போய் எழுப்பு போஅதட்டினாள் வச்சு

 

அதற்கு மேல் அவளும் அங்கு நிற்க வில்லை

 

வைஷு எழுந்துவிட்டிருந்தாள்

வாடி கல்யாண பொண்ணு. ஏன் டீ நீ சுறுசுறுப்பா இருந்து என்னை திட்டுவாங்க வைக்கற. வச்சு பாரு காலைலயே வீச்சு பரோட்டா போடா ஆரம்பிச்சுடுத்துதூக்கம் கலையாமல் எழுந்து வர

 

என்ன டீ எக்ஸாம்பிள் இது ..பரோட்டா அது இதுன்னு ..அம்மா காதுல விழுந்தா அவ்ளோ தான். ” அனு தலையில் அடித்துக் கொள்ள

 

நான் அஞ்சா நெஞ்சி.. வச்சு க்கு பயப்பட மாட்டேன். ” பயில்வான் போல கையை உயர்த்திக் காட்டி சொல்ல

 

போதுண்டி தாயே! அந்த பேஸ் பேக் எங்க வெச்ச..?” கைகூப்பிவிட்டு அலமாரியை தேட

 

இரு நான் ப்ரஷ் பண்ணிட்டு , வச்சு கைல ஒரு காபி குடிச்சுட்டு வந்து நானே உனக்கு போட்டு விடறேன்.” அக்காவிற்கு செய்வதென்றால் அவளுக்கு குஷி தான்

 

வச்சு காபி ப்ளீஸ்கிச்சனில் சென்று நின்றாள் வைஷு

 

பழைய பாடல்களை அவளின் சிறிய ரேடியோ ஒன்றில் ஓடவிட்டுக் கொண்டே வைஷுவிற்கு காபி கொடுத்தாள் வத்சலா. 

 

டம்ளரை கையில் வாங்கி

 சிப்பினாள்

எச்சல் பண்ணாத. உங்க பெரிம்மா பெரிப்பா வரதுக்குள்ள குளிச்சுட்டு வா” 

போ மா. நான் அக்காக்கு பேக் போட்டுவிட்டு அப்பறம் குளிக்கறேன். அப்போ தான் அவங்க வரப்ப பிரெஷா இருக்கும். ” 

 

உன்னையா பொண்ணு பாக்க வாரா… ” 

 

அதுக்காக நான்  அசிங்கமா வா வர முடியும். போ மா” 

 

அனுவிற்கு அனைத்தும் செய்து அவளை தயார் படுத்தினாள்

 

சாரங்கனின் அண்ணா நாராயணன், மன்னி ருக்மினி  வந்துவிட

குடும்பப் பேச்சுகள் தொடர்ந்தது

 

என்ன டி வச்சு, புள்ளையாததுக்காரா கரெக்ட்டா வந்துடுவாளோனோ?!” இளக்காரமாக ருக்கு கேட்க

 

கெளம்பரச்சே போன் பண்றதா அந்த மாமா சொல்லிருக்கார் மன்னி.” பட்டும் படாமல் பதில் சொன்னாள் வச்சு. ஏற்கனவே ருக்கு  விற்கு சற்று வயிற்றெரிச்சல் , இவளது பெண்கள் இருவரும் அழகு என்று

 

ருக்குவின் பெண் அவளை போன்றே சற்று மாநிறம்ஒருவழியாக அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து ஊட்டிக்கு அனுப்பிவிட்டாள். ஆனாலும் அவள் இவர்களை போல அழகும் இல்லை, வேறு ஏதும் கற்றுக் கொள்ளவும் இல்லை

 

ஆனால் அனு நன்றாக வீணை வாசிப்பாள். வைஷு நன்றாகக் பாடுவாள். எந்த வீட்டிற்கு கொலுவிற்கோ அல்லது திருமணத்திற்கோ போனாலும் இவர்களைத் தான் நன்றாக கவனிப்பார்கள்

 ‘அனு வீணை எடுத்துண்டு வா . வைஷு நீ பாடுஎன  இருவரையும் வருந்தி வருந்தி அழைப்பார்கள்

 

இவளுக்குப் பொறாமை தாண்டவமாடும். எப்போது சாக்கு கிடைத்தாலும் வச்சுவை மட்டம் தட்டவே காத்திருந்தாள் ருக்மிணி.

 

ஆனால் வெளியில் மற்றவர்கள் முன்பு காட்டிக் கொள்ள மாட்டாள்.  

 

என்ன பண்ணலான்னு இருக்க ? கேசரியா ? அப்புறம் பஜ்ஜி போட்டுடுமூத்தவளாக சொன்னாள்

 

ஆமா மன்னி. கேசரி பஜ்ஜி தான வழக்கம். அவா எங்க சித்தி வழில தூரத்து சொந்தம். அதுனால சித்தி கிட்ட பேசினேன். புள்ளையாத்துலையும் கொஞ்சம் நம்மள மாதிரி மடி விழுப்பு எல்லாம் பாப்பாளாம். அதுனால எல்லாம் வழக்கப் படி செஞ்சுடலாம்.”

 

“உங்க சித்தி வழி சொந்தமா..” ஏதோ ஒரு சலிப்புடன் கூறி, 

” கூட பொறந்தவா எத்தனை பேர்” என முடித்தாள் பத்மா. 

” ரெண்டு பசங்கன்னு சொன்னா. மூத்தவன் தான் அனுக்கு பாத்திருக்கோம்” தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு  பழம் முதலியவற்றை அடுக்கிய படியே ருக்குவின் கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் வத்சலா. 

 

வைஷுவும் அனுவிற்கு புடவை அதற்கு மேட்சிங் பிளவுஸ், தலைக்கு வைக்க மல்லிகைச் சாரம் முதலியவற்றை எடுத்து வைத்துக் காத்திருந்தாள். 

 

அனு பேஸ் பேக்கை கவிழுக் கொண்டு வந்தாள். ருக்கு  அவளை எதிர்கொண்டு 

 

” என்ன டீ இன்னும் புடவை உடுத்திக்காம இருக்க? சீக்கிரம் கெளம்பு. அவாளாம் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவா. நல்ல நேரத்துல பாக்கணுமோன்னோ.. எங்க இந்த வைஷு?  வைஷு … அடியே … ” தொண்டை கிழிய கத்தினாள். 

 

“ஐயோ பெரிம்மா என்னத்துக்கு இப்படி கத்தற..?” அவளது புது புடவையை சரி செய்தபடி வந்தாள் வைஷு. 

 

கட்டை விரலும் ஆள் கட்டி விரலையும் தாடையில் வைத்து ‘ஆ’ வென வைஷுவைப் பார்த்தாள் ருக்கு. 

 

“ஏண்டி என்னடி கூத்து இது. நோக்கு கல்யாணமா இல்ல உங்க அக்காவுக்கா?” என்று இழுக்க, 

 

“ஆஅஹ்ஹ்ங் … அது வர மாப்பிள்ளையை பார்த்து அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். உனக்கு பிடிச்சிருந்தா நீயும் பெரிப்பாவ டிவோர்ஸ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா?” கண்ணடித்து சிரித்தாள். 

 

” கொழுப்பு டீ உனக்கு. வச்சு.. இந்த வைஷு என்ன பேச்சு பேசறா பாத்தியோனோ!!  முதல்ல அனு வ ரெடி பண்ணு டீ” வச்சுவிடமும் வைஷுவிடமும் மாறி மாறி பேசிவிட்டு தன் மடிசாரை சரி செய்தபடி நகர்ந்தாள். 

 

” என்ன டீ வைஷு..” அனு சைகையால் கேட்க, 

” அட விடு அனு. பெரிம்மா இந்த குடும்பத்துக்கே மூத்தவன்னு பிகு பண்ணிக்கறா, அப்பப்ப இப்டி வாய மூடி அனுப்பனும். நம்ம அம்மா எப்பவாச்சும் அவா ஆத்து விஷயத்துல தலையிட்டுருக்காளா.. சும்மா சீன் போட வேண்டியது. நீ வா முதல்ல உன்ன அலங்காரம் பண்ணனும் ” அவளை அழைத்துச் சென்றாள். 

 

நீளமான தலைமுடியை தழைய பின்னலிட்டு , கீழே குஞ்சம் வைத்து கட்டினாள். அது தொடை வரை தொங்க, நெறுக்கிக் கட்டிய மல்லிகையை நான்கு சரமாக தலையில் வைத்து ஹேர்பின் குத்தினாள். 

சிவந்த முகத்தில் மெல்லிய மேக்அப் செய்து அலங்கரித்தாள். 

அனு எப்போதும் போட்டிருக்கும் ஜிமிக்கி போதும் என்று விட , கழுத்துக்கு மட்டும் மேலும் ஒரு ஆரத்தை போட்டுவிட்டாள். 

 

கரும்பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவை கட்டி வர , அவளது நிறத்திற்கு அது மேலும் அம்சமாக இருந்தது. 

 

அக்காவை கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்சினாள் வைஷு. 

“வரப் போறவர் குடுத்து வெச்சவர். இப்படி ஒரு அழகு சிலையை எங்காத்துலேந்து கடத்திண்டு போகப் போறாரு. ”  வைஷு சொல்ல,

 

வெட்கத்துடன் அனு , “அட சீ..” என்றாள்.

 

“வெட்கப் படாத , அப்புறம் இன்னிக்கே தூக்கிண்டு போய்டப்போறாரு” வைஷு அவளது கண்ணில் இருந்த மையால் அனுவின் காதுக்கு கீழ் தெரியாமல் ஒரு த்ரிஷ்டிப் போட்டு வைத்தாள். 

 

மீதி மையை தன் தலையில் தடவிக் கொண்டு, 

 

” அக்கா, இங்க பாரு மாப்பிள்ளை வந்து தனியா பேசணும்னு சொன்ன, சரி ன்னு சொல்லு. பயந்துகிட்டு அப்டியே இருந்துடாத. புரியுதா. இப்போ பேசி பாத்தா தான் , ஆள் எப்படின்னு தெரியும். இப்போ விட்டா அதுக்கப்புறம், நிச்சயம் கல்யாணம் கெட்டிமேளம் தான். சோ பீ கேர்புல் ” அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க,

 

“ஹே பொண்ணுங்களா, மாப்பிள்ளை ஆத்துக்காரா கிளம்பியாச்சாம் . நான் போய் பஜ்ஜி போடறேன். அனு ரெடி தானே? ” வச்சு வந்து எட்டிப் பார்த்தாள். 

 

” ம்ம்ம் அவ ரெடி தான். நானும் ரெடி” வைஷு நக்கல் செய்ய, 

 

” நீயும் ரெடியா. இரு இரு , ரெண்டு பசங்கன்னு சொன்னா, ரெண்டாவது பையனுக்கு உன்ன பேசி முடிச்சுடறேன். ” வச்சு பதில் கொடுக்க,

 

” என்ன கல்யாணம் பண்ணிக்க அவனுக்கு சில குவாலிடீஸ் இருக்கணும். அப்படி எல்லாம் என்னை ஈஸியா தள்ளி விட முடியாது வச்சு.” அளந்தாள் சின்னவள்.

 

“வச்சு.. கேசரி ரெடி. வந்து பஜ்ஜி போடு ” கிச்சனிலிருந்து ருக்கு  குரல் தர, 

 

“உன்ன அப்பறம் பேசிக்கறேன்” என்று ஓடினாள் வச்சு. 

 

சாரங்கனும் நாராயணனும் அங்கிருந்த நாற்காலிகளை ஒழுங்கு படுத்தி, வட்ட வடிவ சிறிய மேசை ஒன்றை நடுவில் கொண்டு வந்து போட்டனர். 

ருக்கு  தாம்பூல தாம்பாளத்தை எடுத்து வந்து அதில் வைத்து விட்டு, 

 

“ஒருத்தர் வாசல்ல போய் நில்லுங்கோ. அவாளுக்கு ஆகம் தெரியணுமோன்னோ” தன் கழுத்து அட்டிகையை சரி செய்து கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

“அனு மாப்பிள்ளை பேர் என்ன?” பயந்திருந்த அனுவை சரி செய்ய ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள் வைஷு. 

 

” ரகுராம் ” 

“போட்டோவே நான் பாக்கலையே. நீ பாத்தியா?” – வைஷு 

 

“ம்ம் ..அப்பா காட்டினா வாட்ஸாப்ப்ல”  படபடப்பாகவே பதில் சொன்னாள் அனு. 

 

“ம்ம் .. எனக்கு காட்டவே இல்ல..” புருவத்தை தூக்க 

 

” நீ பாதி தூக்கத்துல பாத்திருப்ப..அதான் உனக்கு ஞாபகம் இல்லை” அனு சீரியஸாக பதில் சொன்னாள். 

 

“ஓ! ஆமா , அந்த மீசை இல்லாம மொழு மொழுனு கொழுக்கட்டை மூஞ்சி மாதிரி இருந்துச்சே!” கிண்டல் செய்தாள் வைஷு. 

 

“ஹே ! இல்ல , மொழு மொழுன்னு லாம் இல்ல. லைட் டா மீசையை ட்ரிம் பண்ணி அழகா தான் இருந்தார்” அனு அவளது கிண்டல் பொறுக்காமல் சொல்லிவிட , 

 

“ஓ அழகா இருந்தாரா அனு. சொல்லவே இல்லையே!” வைஷு அவளது முகம் பார்த்து சிரிக்க ,

 

“போடி” வெட்கத்திலும் சிறு கோபம் கொண்டாள் அனு. 

 

“வத்சலா, எல்லாரும் வந்தாச்சு பாரு! ” வாசலில் நின்று குரல் கொடுத்தார் சாரங்கன். 

 

                                           

                                                     2

 

                                                       

 

வத்சலாவும் ருக்குவும்  ஓடி வந்து அனைவரையும் வரவேற்றனர். 

 

” கரெக்ட் டைம்க்கு வந்துட்டோம்” அசடு வழிந்தார் மாப்பிள்ளையின் அப்பா வேணு.

 

“ஆமா. வாங்கோ வாங்கோ” உள்ளே அழைத்துக் கொண்டு போனார் நாராயணன். 

 

வேணுவை முழங்கையால் இடித்தார் பங்கஜம். வேணு திரும்பி பார்க்க,

 

“ரொம்ப வழியாதீங்கோ. சித்த அடக்கிவாசிங்கோ. உங்க பிரதாபமெல்லாம் நம்மாத்தோட இருக்கட்டும்” அவருக்கு மட்டும் கேட்குமாறு பல்லைக் கடிக்க,

 

அடுத்த கணமே வாயை மூடிக் கொண்டார் . 

 

ஐந்தாறு பேர் உள்ளே வந்தனர் மாப்பிள்ளையுடன் சேர்த்து. 

 

“உக்காருங்கோ..” சாரங்கன் சொல்ல ,

 

” நான் தான் வேணுகோபலன். இவ எங்காத்து ப்ரைம்மினிஸ்டர் பங்கஜம். 

 இவன் தான் எங்க மூத்த பையன் ரகுராம். 

ரெண்டாவது பையன் ஆஸ்திரேலியால வேலை பாக்கறான். 

இது என் தங்கை , அவ ஆத்துக்காரர்.” என அனைவரையும் இன்ட்ரோ செய்து வைத்தார் வேணு. 

அவர் சொல்ல சொல்ல அனைவரையும் பார்த்து இங்கிருப்பவர்கள் சினேகமாக தலையசைக்க, 

 

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண பாத்துடலாம். அப்பறம் சாவகாசமா பேசிக்கலாம்” பங்கஜம் ஆர்டர். 

 

“ஆங் சரி. ” சாரங்கன் வச்சுவை பார்க்க, 

 

ருக்கு  உள்ளே சென்று அனுவை அழைக்க, வச்சு கிச்சனுக்குள் சென்று போட்டு வைத்திருந்த பில்டர் காபியை சூடாக  டவரா டம்ளரில் ஊற்றி ட்ரேயுடன் கொண்டு வந்தார். 

 

அனு தலை குனிந்த படி  வெளியே வர, பின்னால் வைஷுவும் வந்தாள். 

வச்சு அவளிடம் ட்ரேயை கொடுக்க, 

 

அதை வாங்கிச் சென்று அனைவருக்கும் கொடுத்தாள் அனு. சற்றும் நிமிர்ந்து பார்க்கவில்லை. 

 

ரகுவோ அனு  வெளியே வந்ததிலிருந்து அவளைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அவளை கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான்.

 

அவனுக்கு போட்டோ பார்த்ததிலிருந்து அனுவை மிகவும் பிடித்துவிட்டது. 

 

இவளைத் தான் திருமணம் செய்வேன் என்று அம்மாவிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டான். 

 

பங்கஜத்தின் அதிகாரம் கணவனிடத்தில் மட்டும் தான். பிள்ளைகள் இருவரிடத்திலும் செல்லாது. 

 

அதனால் சரி என்று விட்டார். 

 

ரகுவிற்கு அனுவிடம் பேச வேண்டும் என்றிருந்தது. பெரியவர்கள் நாலு வார்த்தை பேசிய பின்னர், தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லலாம் என்றிருந்தான். 

 

அனு காபி கொடுத்துவிட்டு சற்று தள்ளிச் சென்று வைஷுவுடன் நின்று கொண்டாள். 

 

“ எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கோ அனு” பெரியப்பா நாராயணன் சொல்ல, 

 

அவளும் பொதுவாக விழுந்து வணங்கினாள். 

 

“ நன்னா இரும்மா” பங்கஜமும் வேணுவும் ஒருசேரக் கூறினர்.

 

“ பொண்ணு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதை நாங்க முன்னாடியே சொல்லிட்டோம். இருந்தாலும் சாஸ்திரம் சம்ப்ரதாயம் இருக்கோனோ . அதுக்காக தான் வந்தோம். வா மா இங்க “ என அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார் பங்கஜம். 

அவளிடம் பேச, 

 மற்றவர்கள் மற்றது பேசிக் கொண்டிருந்தனர். 

 

ரகுவிடம் சாரங்கனும் நாராயணனும் வேலை பற்றியும் அவனைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தனர். 

 

“ நான் அமெரிக்கால ஐஞ்சு வருஷம் இருந்தேன். இதுக்கப்பறம் சான்ஸ் கெடச்சா போவேன். இப்போதிக்கு இங்க தான்” 

 

வைஷுவிற்கு வந்ததிலிருந்து ரகு மீது தான் கண். அவன் பார்வையிலேயே அவன் எப்படிப் பட்டவன் என கணிக்க முயன்று கொண்டிருந்தாள். 

 

வந்ததிலிருந்து அனுவ விட்டு இவன் கண் நகர்ல, அதே சமயம் ரொம்ப கூச்சப் படாம, நல்லா நிமிர்வா தான் இருக்கான்.  பெரியவங்க பேசட்டும்னு அவன் எதுவும் பேசாம தான் இருக்கான். மரியாதை தெரிஞ்சவனா இருக்கான். 

 

அனுவ நல்லா பாத்துப்பான்னு நெனைக்கறேன். இருந்தாலும் அனு கிட்ட அவன் பேச போகும் போது நாமளும் போய்டணும். கரெக்டா பேசிடனும். அப்போ தான் அனு சந்தோஷமா இருப்பா. மனதில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். 

 

 

பையனின் அத்தை அதாவது வேணுவின் தங்கை மெல்ல ஆரம்பித்தாள். 

“பொண்ணுக்கு என்ன போடறேன். கல்யாணத்துக்கு என்ன செய்யறேள்?” 

 

ரகுவிற்கு எரிச்சல் வந்தது. அவன் கிளம்பும் முன்பே சொல்லி தான் அழைத்து வந்திருந்தான். இப்படி எதுவும் கேட்கக் கூடாது என்று. 

 

உடனே தன் தாயை அவன் பார்க்க, 

 

பங்கஜமும் மகனின் கோபம் புரிந்து , 

 

” அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யறதை செய்யுங்கோ. கொழந்தேள் நன்னா இருந்த போதாதோ.” உள்ளுக்குள்ளே எத்தனை பவுன் நகை போடுவார்கள், பிள்ளைக்கு என்ன செய்வார்கள், வீட்டிற்கு புதிதாக என்னென்ன பொருள் அனுப்புவார்கள் என்று தெரிந்து கொள்ள அவளுக்கும் ஆசை தான். 

மகனின் முறைப்புக்கு பயந்து அத்தோடு நிறுத்திக் கொண்டாள். 

 

காபியை குடித்து முடிப்பதற்குள் , ருக்கு குறிப்பறிந்து அனைவருக்கும் பஜ்ஜியும்  கேசரியும் தனித் தனி தட்டுகளில் எடுத்து வந்தாள். 

இடையே புகுந்த வைஷு தட்டுகளை வாங்கி அனைவரிடமும் கொடுத்தாள். 

 

” இது தான் உங்க ரெண்டாவது பொண்ணா?” வேணு கேட்க,

 

“ஆமா. பேரு வைஷ்ணவி. ஐ டி ல வேலை பாக்கறா”  எப்போதும், தான் பெற்ற பெண்களின் புகழ் பாடுவது சாரங்கனுக்கு பிடித்த ஒன்று.

 

வைஷு அனைவருக்கும் கேசரி பஜ்ஜி கொடுக்க, ரகுராமின் அருகில் வந்து அவனுக்கு கொடுத்து, “அக்கா வோட பேசுங்கோ”  என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு சென்றாள்.

 

அவனும் அப்போதே, “பேசாம போகமாட்டேன்” என்று பதில் தந்தான். 

 

நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து கொண்டாள். 

 

தட்டை வாங்கி நெய் வடிந்த கேசரியை ஸ்பூனால் இரண்டு வாய் உண்ண, அது வழுக்கிக் கொண்டு தொண்டைக்குள் நேராக இறங்கியது. 

 

பெரியவர்கள் அனைவரும் தங்களின் சொந்தங்கள் பற்றியும், “அவாளத் தெரியுமா, இவாள தெரியுமா என்றும், குலதெய்வம் என்ன உங்களுக்கு?” போன்றவற்றைப் பேசிக் கொண்டிருக்க, 

 

அவர்களுக்கு இடையில் அனு சங்கடமாக தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தாள். 

 ரகுவிற்கு அவளின் நிலை புரிய, 

 

“நான் அனுகிட்ட கொஞ்சம் பேசணும்” என சாரங்கனிடம் சொல்ல, 

 

சோஷியலிஸ்ட் என்று வெளியே சொல்லிக் கொண்டு உள்ளே இன்னும் கட்டுப்பெட்டியாக இருக்கும் அனைவரும், ஒரு நொடி அவனைப் பார்க்க, 

 

பின் பங்கஜம் தான், “போப்ப்பா” என்று சோஷியலிசத்தை முதலில் வெளிப்படுத்தினாள். 

 

“அனு போம்மா” நாராயணன் சொல்ல,

 

வைஷு வந்து அனுவை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். 

 

“வாங்கோ” என ரகுவை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள். 

 

“தேங்க்ஸ்” என பொதுவாகக் கூறிவிட்டு அவனும் அவர்களை பின் தொடர்ந்தான். 

 

அனுவும் வைஷுவும் உள்ளே செல்ல, 

 

ரகு அந்த அறைக்குள் சென்றான். 

 

அனு அமைதியாக குனிந்த தலை நிமிராமல் நின்றாள். வைஷுவும் அருகிலேயே இருப்பதைக் கண்ட ரகு, 

 

“தனியா பேசலாமா?” என்று அனுவைப் பார்த்துக் கேட்க, 

 

“பேசலாம். அதுக்கு முன்னாடி நான் பேசிடறேன்.” வைஷு அனுவை நகர்த்திவிட்டு முன்னே வந்தாள். 

 

புருவத்தை சுருக்கி அவளை பார்த்தவன், 

 

“என்ன?” எனவும்

 

“அனுவ உங்களுக்கு பிடிச்சிருக்கா?” 

அனுவை ஒரு முறை பார்த்தவன், உதட்டில் மெல்லிய சிரிப்பைப் படரவிட்டு, 

 

“ரொம்ப பிடிச்சிருக்கு. அதுனால தான் பாக்க வந்தேன். இல்லனா இப்படி வந்து பொண்ணு பாக்கறதெல்லாம் எனக்கு பிடிக்காத விஷயம்.” 

 

“ஓகே .அப்போ நான் சில விஷயங்களை உங்ககிட்ட முன்னாடியே சொல்லணும். ஏன்னா தன்னோட விருப்பத்தை கூட வெளில ஓப்பனா சொல்றதுக்கு அனுவுக்கு தெரியாது.” 

 

“ம்ம்” என கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான். 

 

“எங்க அனு ரொம்ப ரொம்ப சாஃப்ட் டைப். சத்தமா கூட பேச மாட்டா. ரொம்ப பாசமா இருப்பா எல்லார் மேலையும். எல்லாருக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செய்வா. 

ஆனா அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா வெளில சொல்ல மாட்டா.  மனசுக்குள்ளையே வெச்சு புழுங்கிடுவா. நீங்க தான் அவ கிட்ட பேசி தெரிஞ்சுக்கணும்.  அவளை கஷ்டப் படாம பார்த்துக்கணும். 

 

உங்காத்துல எல்லாரும் எப்படின்னு தெரியாது. ஆனா என் அக்காவ யாராவது ஏதாவது சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அது மாதிரி நீங்களும் இருக்கணும். அவளுக்கு எப்பவும் துணையா, அவளை எங்கயும் விட்டுக்குடுக்காம இருக்கணும்.  இருப்பேளா??” பட படவென பேசியவள், இறுதியில் இரைஞ்சும் குரலில் முடிக்க, 

 

அவர்களின் பாசம் தெரிந்தது. அவனுக்கும் வைஷுவின் பேச்சு முதலில் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் பின் அவளின் பயம் புரிந்தது. 

 

அனுவின் வாழ்வு சிறப்பாக இருக்க அவள் பேசுகிறாள் என்பதும் புரிந்தது.

அவனது பதிலுக்காக அவள் காத்திருப்பது தெரிய,

 

“நீ அவளை விட எத்தனை வயசு சின்னவ?” அவளையே கேட்க,

 

” மூன்ற வருஷம்” 

 

“நான் அவளை விட நாலு வருஷம் பெரியவன். நீயே அவளை இவ்வளவு பாத்துக்கும் போது, நான் அதை விட அதிகமாகவே பாத்துப்பேன். 

 

எனக்கு பொண்டாட்டியா வர்றவள முகம் சினுங்க கூட விடக் கூடாதுங்கறது  தான் என் பாலிசி. அவளை அழவெச்சா நான் ஆம்பளையே இல்ல. 

 

எல்லா பசங்களும் பொதுவா அம்மா பேச்சு தான் கேப்பாங்க. நானும் அம்மா பேச்சை கேட்பேன். ஆனா அது நியாயமா இருந்தா மட்டும் தான். 

 

கண்மூடித்தனமா எல்லாத்தையும் கேட்க மாட்டேன். நான் படிச்ச படிப்பு எனக்கு நியாயம் அநியாயம் எதுன்னு பிரிச்சு பாக்கற அறிவை கொடுத்திருக்கு. அது கூட இல்லனா நான் படிச்சதுக்கே அர்த்தமில்லாம போய்டுமே. 

 

அப்படி நியாயம் தெரிஞ்ச ஒருத்தன் தான் உண்மையிலேயே படிச்சவன்னு சொல்லிக்கற தகுதி உள்ளவன். 

 

உங்க அக்காவ பத்தி இனிமே நீ கவலைப் படத் தேவை இல்லைன்னு நினைக்கறேன். 

 

” நான் சொன்ன பதில் உனக்குத் திருப்தியா இருந்ததா?” வைஷுவைப் பார்த்துக் கேட்க ,

 

அவனின் பதிலில் சற்று மலைத்து தான் போனாள். படித்த படிப்பை, பெற்ற அறிவை  தெளிவாகப் பெற்றிருக்கிறான் என்பதை உணர்ந்தாள். 

 

” ரொம்ப திருப்தி அத்திம்பேர். இனி அனு உங்க பொறுப்பு. இப்போ நீங்க தனியா பேசுங்கோ . பெர்மிஷன்  க்ராண்டட்” நக்கலாகக் கூறிவிட்டு மனநிறைவோடு அங்கிருந்து சென்றாள். 

 

அத்திம்பேர் என்ற அழைப்பு அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.  சிரித்துக் கொண்டே அனுவைப் பார்க்க, 

 

அத்தனை நேரம் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அனு கண்ணில் கண்ணீருடன் நின்றாள். 

 

“ஹே! என்ன ஆச்சு. உனக்கு என்னைப் பிடிக்கலையா?!” சிறு கவலையோடு ரகு கேட்க,

 

” ரொம்ப பிடிச்சிருக்கு.” மெதுவாகச் சொல்ல,

 

“அப்பறம் ஏன் இந்த அழுகை?” இரண்டடி தள்ளி நின்றே பேசினான். 

 

“நீங்க பேசினதை கேட்டத்துலேந்து , நான் ரொம்ப குடுத்து வெச்சவன்னு புரிஞ்சுண்டேன். என்னையும் அறியாமை கண் கலங்கிடுத்து”  கண்ணைத் துடைத்துக் கொள்ள, 

 

“இப்போ கலங்கினதோட சரி, இனிமே கலங்கினா நான் சும்மா இருக்க மாட்டேன்.  நிச்சயம் ஆனதுக்கப்பறம் ஸ்ட்ரிக்ட்ல்லி நோ. புரியறதா” சற்று நெருங்க நினைத்தான். ஆனால் இப்போது வேண்டாமென விட்டான். 

 

அவன் பேச்சில் லேசாகச் சிரித்தாள் அனு. 

 

“குட். என் வேலைய சுலபமாக்கிட்டா உன் தங்கை. உன் மனசையும் தெரிஞ்சுண்டேன். ” 

 

“அவ எப்போதும் அப்படி தான் ரொம்ப ஓபன் டைப். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிடுவா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ”  ஒருவேளை வைஷு பேசியதில் அவனுக்கு சங்கடமோவென்று அவள் சொல்ல, 

 

“சே சே! அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்பேக்ட் நானும் என் தம்பியும் கூட ரொம்ப கிளோஸ். அவனும் இவளை மாதிரி கலாட்டா பேர்வழி தான்.” 

 

“ஓ” 

 

“ம்ம்ம்ம்” வேறு என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று தான் மனம் ஏங்கியது. என்ன ஆரம்பிப்பது எப்படி என்று புரியாமல் நின்றான். 

 

அந்த பச்சை நிற புடவையில் அம்சமாக இருந்த அவளை மொத்தமாக மனதுக்குள் நிரப்பிக் கொண்டான்.  

அவளும் அவனை ஏறிட்டு பார்த்தாலும், கண்ணைப் பார்த்துப் பேச தயங்கினாள். 

 

அவளது அறையை சுற்றி பார்த்தான். மிகவும் சுத்தமாக வைத்திருந்தாள். 

 

 

சில புத்தகங்கள் அடுக்கப் பட்டு இருந்த டேபிள் அருகில் சென்றான். அங்கிருந்த பேனா ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் தனது கைபேசி எண்ணை எழுதி அவளிடம் கொடுத்தான். 

 

“உன்கிட்ட செல்போன் இருக்கோன்னோ!?”

 

“ம்ம்” 

“உனக்கு எப்போ தோணுதோ கூப்டு. சரி வா போகலாம். எல்லாரும் அங்க இருந்தாலும் இங்க என்ன நடக்கறதுன்னு தான் நெனச்சின்டிருப்பா” 

 

அவன் முன்னே செல்ல, அனு பின்னால் வந்து கதவில் சாய்ந்து நின்று கொண்டாள். 

 

வைஷு அங்கே அனைவரிடமும் வாயடித்துக் கொண்டிருந்தாள். அனுவின் வீணை வேறு அங்கே எடுத்து வைத்திருந்தாள். 

 

பங்கஜம் எழுந்து வந்து “பேசினியா” என ரகுவிடம் கேட்க.

 

“ம்ம்” என்று விட்டு நாராயணன் கேட்ட கேள்விக்கு மீண்டும் பதில் சொல்லலானான். 

 

யாருக்கும் தெரியாமல் ரகுவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள் வைஷு. அவனும் கண்ணசைத்தான்.

 

அனுவிடம் சென்றாள் பங்கஜம். 

 

“நன்னா வீணை வாசிப்பனு உங்க சித்தி பாட்டி சொல்லிருக்கா. ரகுக்கும் மியூசிக் னா இண்டரஸ்ட். 

என் பசங்க ரெண்டு பெரும் மிருதங்கம் கத்துண்டா. ஆனா ரகு விட்டுட்டான். எங்க அர்விந்த் இன்னும் வாசிப்பான்.” 

 

“யார் அந்த புது கேரக்டெர்” வாய் துடுக்காகக் கேட்டு வைத்தாள் வைஷு. 

 

அவளை ஏற இங்கப் பார்த்து விட்டு, “என்னோட சின்ன புள்ள” என்றாள் பங்கஜம். 

 

வச்சு அங்கிருந்து வைஷுவை முறைக்க, மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள் வைஷு. 

 

“எங்கம்மா போற, நீ பாடு, அனு வாசிக்கட்டும் கேப்போம்” வேணு வாயைத் திறந்தார். 

 

வச்சுவைப் பார்க்க, அவரும் சரி என்றார். 

 

ருக்குவுக்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘எங்க போனாலும் இது ஒன்னு கேட்டுடறா எல்லாரும்’ என மனதில் கொதித்தாள்.

 

கலர் கலராக கோடு போட்டிருந்த ஜமக்காளத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு ,

 

அனு வீணையில் சுருதி மீட்ட , வைஷு பாட ஆரம்பித்தாள். 

 

 ” குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா 

       குறை ஒன்றும் இல்லை கண்ணா … .

      குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ……” 

 

இந்தக் குறையுமில்லாமல் பெண் பார்க்கும் படலம் முடிந்து, அப்போதே ரகுவின் அத்தையின் கணவர் நாள் பார்த்துச் சொல்ல, அன்றிலிருந்து இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் என்று முடிவானது. 

 

அனைவருக்கும் தாம்பூலம் வெற்றிலை பாக்கு ரவிக்கை துணி வைத்துக் கொடுக்க, 

 

பங்கஜமும் தான் கொண்டு வந்திருந்த தேங்காய் பூ பழத்தை ஸ்வீட் பாக்ஸ் வைத்து அனுவிற்கு கொடுத்தாள். 

பூவை அவரே அனுவின் தலையில் வைத்து விட, ரகு மனதில் அன்றே அவள் குடி புகுந்தாள். 

 

அனைவரும் கிளம்ப, ரகு அனுவிடம்  கண்களால் விடை பெற்று, போன் செய்யுமாறு ஜாடை காட்டிச் சென்றதை வைஷு பார்க்க தவற வில்லை.  

 

 

 

                                               3

 

 

“நேக்கு அத்திம்பேரை ரொம்ப பிடிச்சிருக்கு” அவர்களின் கார் சென்ற உடனேயே வீட்டிற்குள் வந்த வைஷ்ணவி   குதித்தாள். 

“நோக்கு புடிச்சு என்ன ஆப்போறது? அனுவுக்கு புடிச்சா சேரி. என்ன அனு, பையன் என்ன பேசினான்?” ருக்கு பெரிம்மா அனுவிடம் ரகசியம் பேச, 

 

“ஒண்ணுமில்ல பெரிம்மா. அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டார். வேற ஒன்னும் பேசல. 

 

“என்னவோ போ. எங்க காலத்துல கல்யாணமாகி ரெண்டு வாரம் கழிச்சு தான் உங்க பெரியப்பா முகத்தையே சரியா பாத்தேன். “சலித்துக் கொண்டாள் ருக்கு. 

 

“அப்பறம்…?!” வைஷு ஆர்வமாக 

 

“அப்பறம் என்ன. ஏன்டா பாத்தோம்னு தோணிடுத்து!” நாராயணனைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கொண்டு சொல்ல, 

 

“உங்க பெரியம்மாவ கட்டிண்டா தான் ஆச்சுன்னு அவ அப்பா ஒரே போராட்டம். போனா போகுதுன்னு ஒத்துண்டேன். இல்லன்னா …” நாராயணன் தன் பக்கத்து நியாயத்தைக் கூற,

 

“ஐயோ போதுமே உங்க கல்யாண புராணம். கொழந்த கல்யாணத்தைப் பத்தி பேசுங்கோ” ருக்கு அத்துடன் அவள் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க,

 

வச்சு கேசரியை எடுத்து வந்து அனுவிற்கு ஊட்டினாள். 

அனுவும் மகிழ்ச்சியாக வாங்கி உண்ண,

 

பெண்ணைப் பிரிய வேண்டுமே என்ற கவலை வச்சுவிற்கு இப்போதே தொற்றிக் கொண்டது. 

 

அதைக் கண்ட வைஷு, “லாலே லா ல லே லா லா……..”

 

என்று பின்னாலிருந்து பாட, 

 

“போடி கழுத” அவள் தலையில் கொட்டினாள் வச்சு.

 

“ஆ!!” தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“வச்சு … இந்த நாள் உன் காலெண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ” வீர வசனம் பேச,

 

“எதுக்கு டீ?” வச்சு பஜ்ஜி பிளேட்டை கையில் எடுக்கவும்,

 

“ம்ம் ஒண்ணுமில்ல சும்மா குறிச்சு வெச்சுக்க சொன்னேன். எனக்கு ரெண்டு பஜ்ஜி மா ப்ளீஸ்” என அந்தர் பல்டி அடித்தாள். 

 

“உடனே ஒரு சின்ன மண்டபம் பாக்கணும். அவா ஆத்துல எத்தனை பேர் வருவான்னு கேட்டுக்கோங்கோ. சாப்பாட்டுக்கு நம்ம கோவிந்தன் கேட்டரிங் சொல்லிடுவோம். நன்னா சுத்தமா பண்ணிகுடுப்பான்.” வச்சு அடுக்கிக் கொண்டே போனாள். 

 

“சரி டி வச்சு. பத்திரிகை எழுத வாத்தியாருக்கும் சொல்லிடறேன். ஆத்துக்கு பக்கத்துலயே இருக்காரோனோ.” சாரங்கபாணி தன் பங்கை சொல்ல, 

 

“அம்மா மெனு நான் சொல்றேன்.” வைஷு சாப்பாட்டு விஷயம் என்றால் உடனே ஆஜர். 

 

“ம்ம்ம் சொல்லலாம் இரு டீ. அதுக்கு முன்ன நிச்சயதார்த்தத்துக்கு புடவை ஒன்னு புதுசா வாங்கணும். மாப்பிளைக்கும் பேண்ட் ஷர்ட் மோதிரம் வாங்கணுமே! அட கடவுளே இப்போவே அளவுக்கு கேட்டிருக்கலாமே!” வச்சு மறந்ததை சொல்ல, 

 

“பரவால்ல வத்சலா. நாம எல்லாருமே அவா ஆத்தை பாக்கணுமோன்னோ. போய் பார்த்துட்டு அப்படியே அளவு வாங்கிண்டு வருவோம்.” நாராயணன் சொல்ல, 

 

“ஆமா அதுவும் சரி தான்.” சாரங்கன் ஆமோதித்தார். 

 

“கட கட ன்னு எல்லாம் நடந்துடுத்தே! இந்த அம்புவும் கூட இருந்திருந்தா நன்னா இருக்கும். உங்க தங்கைக்கு போன் பண்ணேளா!?” ருக்கு அவளின் நாத்தனாரை நினைவு படுத்த, 

 

“அவ நாளைக்கு வரேன்னு சொன்னா. அவளையும் கூட்டிண்டு போவோம்” சாரங்கன் பதில் தர,

 

“ஐ அப்போ நாளைக்கே போறோமா!” வைஷு குஷியானாள்.

 

“நீ வர வேண்டாம். நீ அனுக்கு துணையா ஆத்துலையே இரு. நாங்க பெரியவா மட்டும் போய்ட்டு வரோம்.” வச்சு ஆர்டர். 

 

அனைத்தும் பேசி முடிவெடுத்தனர். 

 

மண்டபம் முதல் தாம்பூலப் பை வரை அனைத்திற்கும் ஆளுக்கொரு வேலையாகச் செய்து ஒரே நாளில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தனர். 

 

பெண் பார்த்துவிட்டு காரில் கிளம்பியதிலிருந்து அத்தை மீது காட்டமாகவே இருந்தான் ரகு.

 

“அத்தை நான் தான் நகை பணம் பத்தி எதுவும் பேசக்கூடாதுனு சொன்னேனோல்யோ அப்புறம் எதுக்கு கேட்ட” கார் சற்று தூரம் சென்ற பிறகு கேட்க, 

 

அவனது அத்தை அலமேலு, பங்கஜத்தைப் பார்க்க, 

 

“ஓ! நீ சொல்லி தான் அத்தை கேட்டாளா! என்னம்மா இப்படி இருக்க? நம்ம கிட்ட என்ன இல்ல? அவ கொண்டு வர போறத வெச்சு தான் வாழணுமா? 

அவகிட்ட வாங்கி அவளுக்கு நான் சாப்பாடு போடறதுக்கு, அந்த பணத்தையும் நகையும் வெச்சு அவா ஆத்துலையே அவ சந்தோஷமா இருப்பாளே மா! 

அவ அப்பா அம்மா குடும்பத்தை விட்டுட்டு நம்ம குடும்பத்தை பாத்துக்க என்னை நம்பி வரா, அவளுக்கு நாம தான் குடுக்கணும். எனக்கு இந்த வழக்கமே புடிக்கல. இதோட நிறுத்திக்கோங்கோ. அவா என்ன பண்ணாலும் குறை கண்டுபிடிக்காம இருங்கோ. 

 

போறப்ப என்னத்த கொண்டு போகப் போறோம். இருக்கற கொஞ்ச கால வாழ்க்கையை பணத்தை காட்டி கெடுக்காதீங்கோ. “தலையில் கடுப்புடன் அடித்துக் கொண்டான். 

 

“ஏன் டா ஊர்ல நடக்காததையா நாங்க கேட்டுட்டோம். எதுக்கு இப்படி பேசற” பங்கஜம் வாயை மூடுமாறு சைகை செய்தும் அதை புறக்கணித்து அத்தை அலமு கேட்டுவிட, 

 

“ஊர்ல இருக்கறவாள்ளாம் கிணத்துல குதிக்கறாளாம். நீங்களும் குதிச்சுடுவேளா?” 

 

“நன்னா இருக்கு. நான் என்னத்துக்கு குதிக்கணும்?” அலமு தோளில் முகத்தை இடித்துக் கொள்ள,

 

“அதே தான். ஊர்ல இருக்கறவா என்ன பண்ணா எனக்கென்ன. நானும் அவளா மாதிரி இருக்கணுமா” 

 

“இங்க பாரு ரகு. நாங்க எதுவும் கேக்க மாட்டோம். உன்னோட விருப்பம் தான் டா முக்கியம். அத்தைய தெரியாம கேக்க சொல்லிட்டேன். மன்னிச்சுடு” பங்கஜம் மனதாரக் கூற, 

 

சற்று சாந்தமடைந்தான் ரகு.