Thendral

566 POSTS 40 COMMENTS

odi8

ஓடி போகலாம் 8

வீட்டை விட்டு வந்து இன்றோடு ஐந்து மாதங்கள் கடந்து இருந்தது. அங்கு இருந்து வந்து, அவள் பாட்டியிடம் மட்டுமே பேசி இருந்தாள், தன்னை இனி சிறிது நாளைக்கு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று.

அதன் பிறகு, அந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் மட்டும் பார்த்துக் கொடுத்துவிட்டு வந்து இருந்தாள். படமும் ரிலீசாகி வசூலில் ஷியாங் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது.

அதில் அவளுக்கு சந்தோஷமே, ஆனால் அந்த சந்தோஷத்தை பகிர கூட முடியாத அவளின் நிலையை தான் அடியோடு வெறுத்தாள். இப்பொழுது அவள் இருப்பது பட்டாயாவில் உள்ள கோரல் ஐலன்ட் எனும் சிறு தீவுக்குள்.

அங்கே உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கிக் கொண்டு, தனக்கு பிடித்த வேலையான போட்டோகிராபியை புரோபஷனாக செய்து கொண்டு இருந்தாள். அங்கே வருபவர்கள் எல்லாம் சாகச விளையாட்டுகள் பல விளையாடி, அங்கு இருக்கும் கடல் நீரில் குளித்துவிட்டு மறுபக்கம் இருக்கும் ஊருக்கு சென்றுவிடுவர்.

இந்த தீவில் கடை நடத்துபவர்கள், சாகசம் புரிபவர்கள் மட்டும் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி தங்கி வருகின்றனர். ஒரே ஒரு ரிசார்ட் இங்கே, கடல் அருகே ஏகாந்தமாக ரசிப்பவர்கள் மட்டுமே வருவார்கள்.

விலையும் சற்று அதிகம் மற்ற ரிசார்ட்களை விட, ஆகையால் எண்ணிக்கையும் கம்மி தான் இங்கே. இவள் இங்கே வருபவர்களை வித விதமாக எடுத்து, அவர்களுக்கு பிடிக்கும் படத்தை பிரசுரித்து கொடுப்பாள்.

தொழிலாக இப்பொழுது இதை செய்து வந்தாலும், சில இயற்கை காட்சிகளை குறும்படமாக எடுத்து அதை தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டும் வருகிறாள்.

அப்படித்தான் அன்று ஒரு புதுமண ஜோடிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தவள் வட்டத்தில் அவளின் மியாவ் விழுந்தான். பிரம்மை என்று அதை ஒதுக்கி தள்ள நினைக்க, அது உண்மை என்று அவன் அருகில் ஒரு இளம் சீன பெண்ணுடன் உரசிக் கொண்டு வந்ததும் இல்லாமல், அவனின் டிரேட்மார்க் புன்னகையுடன் வலம் வந்ததில் உண்மை என்று புரிந்தது.

கடைசி போட்டோஷூட் முடிந்து, அந்த ஜோடிகளிடம் டோக்கன் ஒன்றை கொடுத்துவிட்டு, அறை மணி நேரம் கழித்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அவளின் மியாவ் கண்ணில் படாமல் செல்ல வேண்டும் என்று வேகமாக அந்த இடத்தை காலி செய்தாள்.

விரைவாக அந்த ஜோடிகளுக்கு புகைப்படத்தை தயார் செய்து கொடுத்துவிட்டு, உடனே அங்கு இருந்து தான் தங்கி இருந்த ரிசார்ட் நோக்கி ஓடினாள். அவளின் அறைக்கு முன் நின்று கதவை திறந்த நொடி, அவளோடு சேர்ந்து பின்னாடியே அவளின் மியாவும் உள்ளே நுழைந்து கதவை அடைத்தான்.

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ந்து நின்றவள் என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

நிஷ்! உன்னை பார்த்த பிறகு இப்போ தான் ரிலிப்பா இருக்கு எனக்கு. எப்படி இருக்க? ஓகே நீ பாட்டுக்கு சொல்லாம வந்துட்ட, எனக்கு இப்போ ஹெல்ப் வேணும் டைவர்ஸ் பாத்திரத்தில் சைன் பண்ணி கொடு இப்போ”.

என்னோட பியான்ஸி வெளியே வெயிட் பண்ணுரா, அவ கூட அவுட்டோர் ஷூட் வந்து இருக்கேன். சீக்கிரம் சைன் பண்ணி கொடுத்தா நான் பாட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்என்றவனை இப்பொழுது வெறித்து பார்த்தாள்.

இறுதியில் தன்னை நிரந்தரமாக விளக்கி வைக்க, தன்னை தேடி வந்துவிட்டான். இதற்கு பயந்து தானே, அவள் விலகி வந்தது, இப்பொழுது அவளுக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. கண்கள் லேசாக இருட்டிக் கொண்டு வர மயங்கி விழுந்தாள்.

டேய் லூசு! அவ கிட்ட என்னடா சொல்லி தொலைச்ச? பாரு மூணு மணி நேரமா மயக்கத்தில் இருக்காஎன்று சிடிசிடுத்தார் அவனின் தாத்தா.

ம்ச்! தாத்தா, சும்மா அவளை கோபப்படுத்தி பார்க்க நினைச்சு, டைவர்ஸ் கொடு அப்படினு சொன்னேன், இப்படி ஆகும்ன்னு நினைக்கல தாத்தாஎன்று வருந்திக் கொண்டு இருந்தவனை பார்த்து முறைத்தார்.

ம்க்கும்! இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய? சரி, இனி அவ எழுந்துக்கும் பொழுதாவது, உன் காதலை சொல்லிட்டு சேர்ந்து வாழ வழியை பாரு டாஎன்று சொல்லிவிட்டு உடனே அவர் வெளியேறினார்.

ஹாஸ்பிடலில் அனுமதித்து மூன்று மணி நேரத்திற்கு மேலானது. இன்னும் கண் முழிக்காமல் இருக்கிறாள் என்றால், அவள் எந்த அளவு தன்னை நேசித்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு இருந்தான்.

பேபி! அம் சாரி மா. உனக்கு நியாபகம் இருக்கா, நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங் இன் ஏர்போர்ட். எப்படி மறக்க முடியும்? அதானே இந்த கல்யாணத்துக்கு முதல் அச்சாரமே”.

ஆமா! நம்ம ஏர்போர்ட் மீட்டிங் தான், இந்த கல்யாணத்திற்கு காரணம் பேபி. இந்த கல்யாணம் பத்தி முதல நான் பேசினது உங்க பாட்டி கிட்ட தான்என்று கூறியவன் அவளை முதன் முதலில் சந்தித்த நிகழ்வை நினைவு கூர்ந்தான்.

இந்தியாவில் மும்பையில் ஷுட்டிங் முடித்து, ஷியாங் கோலாலம்பூர் செல்ல இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் செக் இன் முடிந்து காத்து இருந்தான். அவன் பிரஸ்டிஜ் லௌன்ச் ஏரியாவில் காத்து இருக்க, அதே இடத்திற்கு கோபமாக வந்த நிஷாவை சுவாரசியமாக பார்க்க தொடங்கினான்.

இங்க பாரு எனக்கு ஆக்ஷன் ஃபில்ம் மட்டும் தான் புக் பண்ணனும் இனி, ரொமான்ஸ் படம் அப்படினு ப்ளூ பிலிம் எடுக்கிற டைரக்டர்ஸ் தான் அதிகம்”.

எனக்கு இரிட்டிங்கா இருக்கு, கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாத ஆட்கள் கூட எல்லாம் இனி ஒர்க் பண்ண முடியாது என்னால. இனி புக் பண்ணுறதுக்கு முன்னாடி, எனக்கு அந்த படத்தோட ஸ்கிரிப்ட் அனுப்பிட்டு அப்புறம் புக் பண்ணு புரியுதா?” என்று தன் அசிஸ்டன்ட்டிடம் எகிறி விட்டு போனை வைத்தாள்.

அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ஷியாங்கிற்கு, அவளிடம் சற்று விளையாடி பார்த்தால் என்ன என்று தோன்றியது.

அவள் பேசிய ஆங்கிலம், ஒவ்வொரு முறையும் பேசும் பொழுது அவள் பிடிக்கும் அபிநயம் எல்லாம் அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது அவனுக்கு. ஆகையால், அவளிடம் வம்பு வளர்க்க எண்ணி என்ன செய்ய என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான்.

அந்த வாய்ப்பு அதுவாகவே அப்பொழுது அமைந்து தொலைத்து, அவளிடம் முழுவதுமாக சரண்டராக வைத்தது.

ஹல்லோ! உங்களுக்கு தனியா சொல்லுவாங்களா, ஃப்ளைட்க்கு போர்டிங் சொல்லிட்டாங்க, கிளம்புங்கஎன்று அவன் கவனிக்காமல் விட்டதை சுட்டிக் காட்டி முன்னே சென்றாள்.

முன்னே சென்றவளை தொடர்ந்து சென்றவன், அங்கே ஃப்ளைட்டில் அவள் அருகில் தான் இவனுக்கு சீட் இருக்கவும், சந்தோஷமாக அமர்ந்தான்.

தாங்க்ஸ் மேடம்! வாஸ் லாஸ்ட் இன் மை தாட்ஸ், சோ டிட் நாட் நோட்டீஸ் அபவுட் போர்டிங். அனிவேஸ், தாங்க்ஸ் லாட் மேடம்என்று ஆங்கிலத்தில் அவன் அவளிடம் மரியாதையாக பேசவும், ஏனோ அவளுக்கு அப்பொழுது அவனின் அந்த அணுகுமுறை பிடித்து இருந்தது.

எங்கோ போற மாரியாத்தா, என் மேல ஏறாதா என்பது போல் அவள் யார் மீதோ இருந்த கோபத்தை அப்பொழுது, அங்கே இருந்த அவனின் மீது காட்டி இருந்தாள்.

நியாமாக அவளின் செயலுக்கு அவனுக்கு அவள் மீது சற்று எரிச்சல் வர வேண்டும், ஆனால் அவனோ அதை காட்டாமல் நன்றி உரைத்தது தான் அவளுக்கு அவனின் மீது மதிப்பு வந்தது.

அதன் பிறகு, அவன் மெதுவாக பேசி அவளின் விபரத்தை வாங்கியவன், அடுத்து செய்தது தன் படத்தில் அவளை கேமராமேனாக போட வைத்தது தான். அவள் அந்த பிராஜக்டில் சைன் பண்ணியதும் தான், அவனுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

அதன் பிறகு, சில விஷயங்களில் இரு குடும்பத்தார் மீதும் வழக்கு ஒன்று ஓடி கொண்டு இருந்து, அது மக்களால் கவனிக்கப்படுகிறது எனவும் அதை இவன் தனக்கு சாதகமாக ஏற்படுத்திக் கொண்டான்.

அவள் பாட்டியிடம் பேசி, அவர் மூலமாக திருமணத்திற்கு நாள் குறித்தான். அவளை சரிகட்ட பாட்டி இருக்கிறார் என்ற தைரியத்தில் எல்லாம் செய்தான், நண்பன் டிசங்கிற்கு கூட தெரியாமல்.

ஆம்! அவள் தான் வேண்டும் என்று முடிவு எடுத்த பின், எங்கேயும் எந்த ஒரு விஷயமும் வெளியே செல்ல கூடாது என்பதில் கவனம் வைத்து, அடி மேல் அடி வைத்து செயல்பட்டது இந்த திருமணம்.

இதை எல்லாம் நினைத்துக் கொண்டும், அவன் செய்த விஷயங்களை எல்லாம் மயக்கத்தில் இருந்த நிஷாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

அப்போவே, நீ என்னை விரும்பி இருக்க அப்படிதான மியாவ்என்று நிஷா மெதுவாக வாய் திறக்கவும், அவன் சடாரென்று அவளை கூர்ந்து பார்த்தான்.

நீ மயக்கத்தில் இல்லையா அப்போ, இவ்வளவு நேரம் நான் பேசினது எல்லாம் கேட்டியா!” என்று அவன் கேட்கவும், அவள் சிரித்தாள்.

உனக்கு மட்டும் தான் ஷாக் கொடுக்க தெரியுமா, எனக்கும் தெரியும்என்று கூறி சிரித்தாள்.

அடிப்பாவி! இதுக்கு அந்த டாக்டரும் கூட்டா!” என்று கேட்கவும், அவள் சிரித்தாள் அவனின் முக பாவனையில்.

நிஜமாவே நான் மயங்கி விழுந்துட்டேன், இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் முழிப்பு வந்தது. தாத்தா வேற உங்க கிட்ட கோபமா பேசிக்கிட்டு இருந்தாங்க வேற, அதான் நான் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிட்டேன்என்று கூறி கண்ணடித்தாள்.

அதில், அவன் சிரித்து அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.

இப்போ சொல்லுங்க, உங்களுக்கு அப்போவே அவ்வளவு லவ்வா என் மேல. எனக்காவது ஒரு தடவை தான் கல்யாணம் நம்ம லைஃப் , சோ இதை நிரந்தரமாக்கி அம்புட்டு லவ்வையும் உங்க மேல கொட்டனும் ஆப்படின்ற ஆசையில் தான் நெருங்கினேன் உங்க கிட்ட”.

ஆனா! எப்படின்னு தெரியல உங்களை, உங்க மனரிசம் எல்லாம் அம்புட்டு பிடிச்சது எனக்கு. என்னை அறியாமல், உங்களை நல்லா சைட் அடிக்க ஆரம்பிச்சேன்”.

மியாவ்! இதான் உங்களுக்கு நான் வச்ச பெயர்என்று அவள் கூறவும், அவன் அதற்கு காரணம் கேட்டான்.

உங்க பெயரை இதோட லிங்க் பண்ணி பாருங்க, உங்க பெயர் வாய்ல நுழையல அதான் இப்படிஎனவும் அவன் முறைத்தான்.

ஈசியா வாய்ல வர பெயரா பார்த்து என் தாத்தா எனக்கு பெயர் வச்சா, உனக்கு வாய்க்குள்ள நுழையல யா! இரு இப்போ நுழையும் பாரு, என் பேர் உனக்கு”  என்று கூறி அவளின் இதழ்களை சிறை செய்தான்.

அவனின் அந்த மென் தீண்டலில், உடல் சிலிர்த்து அவனோடு ஒண்டினாள் நிஷா. சிறிது நேரத்தில், இதழ்களுக்கு அவன் விடுதலை அளிக்க, அவள் அவனை அடித்தாள்.

அன்னைக்கு அப்போ ஏன் டா இதை சொல்லல? நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?” என்று அன்றைய நினைவில் அழுகை வந்தது அவளுக்கு.

சாரி! சாரி! உங்க பாட்டி தான் வாய்யே திறக்க கூடாது அப்படினு கட்டி போட்டு இருந்தாங்க என்னை. இப்போ கூட அவங்க தான் பிளானை எக்சிகுட் பண்ண சொன்னாங்க”.

உணகும், எனக்கும் எந்த அளவு லவ் ஸ்ட்ராங்கா இருக்கு அப்படினு இந்த பிரிவு சொல்லி கொடுக்கும் சொன்னாங்க தெரியுமா? உன்னை, நீ இல்லாம நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றவணை இப்பொழுது அவள் அனைத்து கொண்டாள், தானும் மிஸ் செய்ததாக.

அதற்குள் வெளியே பெரியவர்களின் பேச்சு குரல் கேட்க, மறுபடியுமா என்று இருவரும் அலறினர்.

மியாவ்! ஓடி போகலாமா?” என்று அவள் கேட்க, சிரித்துக் கொண்டே போகலாம் என்று கூறி இருவரும் தேனிலவு கொண்டாட ஸ்விஸ் சென்றனர்.

நாமும் நம் வேலையை பார்க்க ஓடி போகலாம்.

 

 

 

 

 

inkfull

அதிகாலை பொழுது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பே அமைதியில் ஆழ்ந்திருக்க ஒரு ஃப்ளாட்டில் மட்டும்

 

“அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளது ஆகித்

தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி

எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன

திண்திறள் சரவணன்தான் தினமும் என் சிரசைக் காக்க… ”

என்று ஷண்முக கவசத்தைப் பாடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சி.

 

குளித்து முடித்த கூந்தலில் ஈரம் சொட்டிக் கொண்டிருக்க, தன்னுடைய நீண்ட கூந்தலைக் குனிந்து தட்டிக் கொண்டிருந்தாள் மாதங்கி. செயற்கையாகத் திருத்தப்படாமலே அழகூட்டும் புருவங்கள். பாலில் விழுந்த திராட்சை போன்ற கண்கள். கூர்மையாய் இல்லாவிட்டாலும் எடுப்பான மூக்கு. கோவைப்பழமெனச் சிவந்த இதழ்களுக்கு ஒளியூட்டியது அதில் உறைந்திருக்கும் கள்ளச்சிரிப்பு. ஆக மொத்தத்தில், அவள்

“தேவதை அவள் ஒரு தேவதை

அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ

காற்றிலே அவளது வாசனை

அவளிடம் யோசனை கேட்டுத் தான்

பூக்களும் பூக்குமோ

நெற்றி மேலே

ஒற்றை முடி ஆடும்போதும்

நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்

பார்வை ஆளைத் தூக்கும்

கன்னம் பார்த்தால்

முத்தங்களால் தீண்டத் தோன்றும்

பாதம் இரண்டும் பார்க்கும் போது

கொலுசாய் மாற தோன்றும்…”

 

தலைமுடி நுனியில் கொண்டையிட்டு கொண்டு சமையல் வேலைகளை ஆரம்பித்தாள். காலை சிற்றுண்டியாக இட்லியும் வத்தக்குழம்பும் மதியத்திற்குச் சாதம் உருளைக்கிழங்கு பொரியல் செய்து முடித்து இரண்டு சம்படத்தில் எடுத்து வைத்தாள். வேகமாக மணியைப் பார்த்தாள் 7.40எனக் காட்டியது. அவசரமாகச் சென்று மற்றொரு அறையின் வாயிலிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினாள். அறைக்குள் அரவம் எதுவும் கேட்கிறதா என்று கவனித்தாள். அமைதியாகவே இருக்கவும் மீண்டும் ஒருமுறை பலமாக அழுத்தினாள். இப்போது அறைக்குள் அரவம் கேட்கவே, விரைந்து சென்று அடுப்படிக்குள் மறைந்தாள்.

 

ஆழ்ந்த நித்திரையிலிருந்த விதுரன் அழைப்புமணி ஒலியில் துயில் கலைந்தான். பின்னர் காலைக்கடன்களை முடித்து, யோகாசனம் செய்ய அமர்ந்தான். அதை வெளியே இருந்தவாறே கவனித்த மாதங்கி தினமும் அவன் அருந்தும் சத்துணவு கஞ்சியைக் கொண்டுவந்து அவன் அறைவாயிலில் இருந்த மேசையில் வைத்தாள். பின் அறைக்கதவில் மாட்டியிருந்த வெள்ளைப் பலகையில் எதையோ எழுதினாள். பின்னர் மீண்டும் சமையலறைக்குள் புகுந்தாள்.

 

விதுரன் ஆறடி ஆண்மகன். உயரத்திற்கேற்ற உடல். சுருக்கமாகச் சொன்னால் அவன் ஒரு கருப்பு பேரழகன். உடற்பயிற்சியை முடித்த விதுரன் அறை வாயிலில் அவள் வைத்துச் சென்ற கஞ்சியை எடுத்துப் பருகினான். அவன் கண்கள் அந்த வெள்ளை பலகையில்‌ பதிந்தது. அதிலிருந்த செய்தியைப் படித்தவன் ஒரு பெருமூச்சுடன் சமையலறையை நோக்கினான். அவனும் அந்தப் பலகையில்‌ அங்கிருந்த பேனாவால் சரி(✓) என்ற குறியை வரைந்தான். மேலும் பல சிரித்த முகம் கொண்ட பொம்மைகளையும் வரைந்தான்.

 

பின்னர் அறைக்குள் சென்று குளித்துக் கிளம்பி வந்தான். அவன் அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வரும்போதே வீட்டு வாயிலில் மாதங்கியும் கிளம்பி ஒருகையில் அவனுக்குச் சாப்பாட்டு பை மற்றொரு  கையில் தனது கைப்பையுடன் நின்றாள். (இடையில் அவன் வரைந்த பொம்மைகளில் அவள் பொழிந்த முத்த மழை அவன் அறியாதது.) அவன் மனதில் ஒரு மெச்சுதல். சாவி மாட்டுத்திடத்தில் சாவியெடுக்க போனவன் கேள்வியாக அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் சிறிதும் சலனமின்றி நின்றாள். சிறு தலையசைப்புடன் கார்ச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி மின்தூக்கியில் கீழே வாகனம் நிறுத்துமிடம் சென்றனர்.

 

அவள் ஏற கார்கதவை திறந்தவனைத் தலையசைப்புடன் மறுத்து தனக்காக வரச் சொல்லியிருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.அவன் முகத்தில் எரிச்சல் மண்டியது. ‘கிராதகி பாடா படுத்துகிறாள். எல்லாம் நீ பார்த்த வேலை தான். போதும் நிப்பாட்டு.’ என்று தன் மனசாட்சியை அடக்கியவன் ஆட்டோ ஓட்டுநரிடம் செல்ல வேண்டிய கோவிலைக் கூறி காரில் சென்று அமர்ந்து அதனைக் கிளப்பினான்.

 

காரை ஓட்டும் போதும் அவன் சிந்தனை முழுவதும் அவனவளே ஆக்கிரமித்தாள். ‘திமிறு! உடம்பெல்லாம் திமிறு! ஏன் பிறந்தநாள் வாழ்த்தக் கூட வாயால் சொல்லமாட்டாளோ! ராங்கிக்காரி! படித்தது பத்தாங்கிளாஸ்தான் ஆனால் பிடிவாதத்தில் பி‌.எச்டி பண்ணிருப்பாள் போல.’

 

‘அமைதியா கங்கா மாதிரி இருந்த பிள்ளையை சந்திரமுகி பேயா மாற்றின பெருமை உன்னையே சேரும் டா.’

 

‘டேய்! நீ எனக்கு மனசாட்சியா இல்லை அவளுக்கா?’

 

‘உண்மையை யார் வேண்டும் என்றாலும் வாதிடலாம் ப்ரோ.’

 

‘நீ ஒரு டேஷும் வாதிட வேண்டாம். மூடிட்டு கிளம்பு.’ அவன் மனசாட்சியை அடித்து விரட்டியபடியே கோவிலில் தன் காரை நிறுத்தினான்.

 

சரியாக அதே நேரம் ஆட்டோவும் கோவிலை அடைந்தது. இருவரும் சேர்ந்தே கோவிலுள் சென்றனர். அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த அம்மாவோ,”எப்பா பார்க்க இவ்வளவு டிப்டாப்ப இருக்கியே! பொண்டாட்டிக்குக் கோயிலுக்கு வந்தால் பூ வாங்கி தரனும்னு தெரியலையா? இந்த காலத்து ஆம்பளைங்க அப்படி இருக்காங்க! எங்க காலத்திலெல்லாம் வெளிய வந்தாலே பொண்ணுங்களுக்கு முதல் வேலையா பூதான் வாங்கிக் குடுப்பாங்க அவுங்க புருசங்க! இப்போ என்னடான்னா லவ்விர்ஸ் டேக்கு மட்டும் தான் பூவே வாங்கி தாராய்ங்க அதுவும் பத்து ரூபா ரோசாப்பூவோட முடிச்சிக்கிறாங்க!”

 

‘கிளவி வேற எறிகிற நெருப்பில் கிருஷ்ணாயில ஊத்துறாளே! நம்மளையே இப்படி பேச்சிலையே பொரிச்செடுக்குதே புருசனா இருக்கவன்லாம் செத்தான்! நம்மாளு எவ்வளவோ பரவாயில்லை!’ என்றவாறே மாதங்கி பார்த்தான்.

 

அவனது மனதிலிருப்பதை ஊகித்தவளோ அவனை முறையோ முறையென முறைத்தாள்.

 

‘ஆகா! கர்டுபுடிச்சிட்டாளோ? சரி சரி சமாளிப்போம்.’

 

“இப்ப என்ன பாட்டி என் பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் குடுக்கனும் அவ்வளவு தான‌? மல்லிப்பூ அஞ்சு முழம் குடுங்க” என்று வாங்கினான்.

 

‘கிழவி பேசுனதுல வீராப்பா வாங்கிட்டோம் வச்சுக்குவாளா? தெரியலையே!’ என்றவாறே பூவை நீட்டினான் அவளிடம். மற்றவர்கள் முன் காட்சிப்பொருளாக விரும்பாத மாதங்கி அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

 

‘ஜடம்! இதுவா வாங்குமாக்கும் பூவை ஏதோ அந்த பாட்டி அறிவுரைனு அறோஅறுனு அறுத்ததுல வாங்கிருக்கான்.’

 

‘இல்லாட்டி மட்டும் அவன் வாங்கிகுடுத்தா நீ வச்சுட்டு தான் மறுவேலை பார்ப்ப பாரு. நீயே அவன் மேல கோபமாதான இருக்க அப்பறம் என்னடி?’

 

‘உன்னை இப்போ யாராச்சும் வந்து விளக்கவுரை கொடுக்க கூப்பிட்டாங்களா? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போயேன்!’ என்று மனசாட்சியை விரட்டி விட்டு கணவனுடன் கோவிலிற்குள் சென்றாள்.

 

நொந்துபோன இருவரின் மனசாட்சியும் ‘இவிங்க இரண்டுபேரும் எக்கேடும் கெடட்டும் வாடா டார்லிங் நாம ஸ்விட்சர்லாந்துல போய் சுத்தி சுத்தி டூயட் பாடுவோம்’என்று பறந்தன.

 

கோவிலில் அர்ச்சனை தட்டை பூசாரியிடம் கொடுத்து எப்படியும் பெயர் நட்சத்திரம் சொல்லனுமில்லை என மனதுக்குள் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு இருந்தான். அவளோ அர்ச்சனை தட்டைக் கொடுத்து அவனின் பெயரும் நட்சத்திரமும் எழுதிய சீட்டை அவரிடம் கொடுத்து அர்ச்சனை செய்தாள்.

 

‘ரொம்ப பண்ணுறாளே! காலையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை அறைக்கு வெளியில் எழுதி வைக்கிறாள். அதுக்குகூட பேசமாட்டாளாமா? எதாவது பண்ணியே ஆகனுமே இதுக்கு.’

 

‘ஏற்கனவே நீ பண்ணக் காரியத்துக்குத் தான் இந்த மௌனவிரதம் இன்னும் ஏதாச்சும் பண்ணி சொதப்புச்சு அவ்வளவு தான் ஜீவசமாதி தான் உனக்கு’ என்று சிரித்தது வேறுயாருமில்லை அவன் மனசாட்சியே தான்.

 

‘இன்னுமா நீ போகலை?’என்றவாறே அடிப்பதற்குப் பொருள் தேடினான்.

 

‘வாங்க டார்லிங் நாம போகலாம்’ என்று இழுத்துச் சென்றது மாதுவின் மனசாட்சி.

 

‘காரில் வேற வரமாட்டேன்னு ஆட்டோவில் போகிறாள், திமிர்பிடித்தவள்!’ ஒருவழியாக அவன் தான் வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்துக்கும் அவள் தனது வீட்டிற்கும் தனித்தனியாய் சென்றனர்.

 

மாலைநேரம் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தவளை தொலைப்பேசி அழைப்பு கலைத்தது. ‘வேற வேலையே இல்லை நான் தான் பேச மாட்டேன் தெரியும் ல அப்பறமும் ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணுறது. தூ! என்ன தான் மனுசனோ!’

 

இந்த தொலைப்பேசி இலக்கம் விதுரனிற்கு மட்டுமே தெரியும். அவளுக்குப் பாட்டியைத் தவிர வேறு சொந்தம் என்று யாருமில்லை‌. பாட்டியும் விதுரன் கைப்பேசிக்கே அழைப்பார். இது விதுரன் அவளுடன் பேசுவதற்காக மட்டுமே வாங்கிய இணைப்பு.

 

ரிசீவரை காதுக்குக் கொடுத்தவள் மறுமுனையில் கூறிய செய்தியில் அதிர்ந்து போனாள்.”எங்கே?”

 

“எப்படி?” அவள் கண்களிலோ இருதுளிக் கண்ணீர்.

🌼🌼🌼🌼🌼🌼🌼

தொலைப்பேசி அழைப்பு சொன்ன செய்தியைக் கேட்டதிலிருந்து படபடப்புடன் காத்திருந்தாள். அழைப்பு தாங்கி வந்த விசயம் யாதெனில் விதுரனின் கேபின் அருகிலிருந்த சி.ஃஎப்.எல் பல்ப் உடைந்ததால் கண்களில் ஒவ்வாமை தொற்று பரவியுள்ளது.

 

ஆகையால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குக் கண்களை சிரமப்படுத்தக் கூடாதென்றும் ஒரு பத்து நாளைக்காவது கண்களை முடிந்த அளவு மூடியே வைத்திருக்க வேண்டுமென்றும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

வாயிலில் கேட்ட அழைப்பு மணியோசையில் நினைவு வந்தவளாக விரைந்து சென்று கதவைத் திறந்தாள். வெளியே கண்களில் கருப்புக் கண்ணாடியுடன் விதுரன் நண்பனின் தோளை ஆதரவாய் பற்றியபடி நின்றிருந்தான்.

 

“வாங்கண்ணா! உங்க ஃப்ரண்ட உள்ள கூட்டிட்டு வாங்க!” என்றவாறே கதவை விசாலமாகத் திறந்து வைத்தாள்.

 

‘பயங்கர வரவேற்பா இருக்கிறதே இந்த மாமனுக்கு! சீலாக் குட்டி! உன்னுடைய ஐடியா சூப்பர்டா தங்கம்!’ என்ற நினைத்தவாறே தன் நண்பனிடம் கண்ணடித்தான். இருவருமாகச் சேர்ந்து அவளறியாமல் வெற்றிக் குறி செய்தனர்.

 

“ராஜாண்ணா! அவங்கள இங்க டைனிங் டேபிளுக்கு கூட்டிட்டு வாங்க. இரண்டு பேரும் சாப்பிடுங்க.”

 

“இல்லைம்மா டைம்மாச்சு இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்மா. இப்பொழுது கிளம்புறேன்” என்றுவிட்டு விதுரனிடம் இரகசிய மொழியில்,”மச்சான் அனுபவி ராஜா அனுபவி! நான் எதற்குப் பூஜை வேலை கரடி மாதிரி?”என்று கேட்டுவிட்டுக் கிளம்பினான்.

 

பல நாட்களுக்குப் பிறகு கிடைக்கப் போகும் மனைவியின் பரிவும் பாசமும் அவனைப் பித்தனாக்கியது. ஆசையும் காதலும் போட்டிப்போட அவள் அருகாமைக்காகக் காத்திருந்தான். அவன் காத்திருப்பைப் பொய்யாக்காமல் சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்தாள்.

 

சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்தவாறே,”இந்தாங்க சாப்பிடுங்க! கண்ணுக்குக் கீரை வகைகள் தான் நல்லதுங்க. அதான் முருங்கை கீரை சூப், பொண்ணங்கண்ணி துவையல், மணத்தக்காளி கீரை குழம்பு, அறைக்கீரை பொரியல், குமிட்டிக் கீரை கடைசல் எல்லாம் வைக்கலாமென்று கீரை நிறைய வாங்கிட்டு வந்தேன். சமைச்சத விடப் பச்சையா சாப்பிட்டா தான் ரொம்ப நல்லதாம்ங்க! அதான் உங்களுக்காகச் சமைக்காமல் கீரையை நல்லா கழுவிக் குட்டி குட்டியாக நறுக்கி சாலட் பண்ணிருக்கேன்ங்க. சாப்பிடுங்க!” என்று பச்சை இலைகளால் நிறைந்த‌ ஒரு கிண்ணத்தை அவனிடம் நீட்டிவிட்டு தனக்காக ஒரு தட்டை எடுத்து சாதம் வைத்தாள்.

 

‘ஐயோ! கடவுளே கீரையா? சும்மாவே சாப்பிடமாட்டேன். இதில் பச்சையா வேற குடுக்குறாளே! புருசனை ஆடு மாடு மாதிரி ட்ரீட் பன்றாளே. எல்லாம் இந்த சீலா கொடுத்த ஐடியாவால வந்த வினை.’

 

‘அது அந்த மென்டல் கிட்ட ஐடியாக் கேட்கிறதுக்கு முன்னாடியே தெரிந்ததுதான்!’என்று சிரித்தது யாருனு உங்களுக்கே தெரியும் அவனோட மனசாட்சியே தான்.

 

விதுரன் முறைத்த முறைப்பில்,’டார்லிங் வாங்க ஓடிருவோம்! இவன் பார்வையே சரியில்லை’ என்றது மாதுவின் மனசாட்சி.

 

‘கடுப்பேத்தாம இரண்டு பேரும் ஓடிருங்க! சிக்குனீங்க நான் இருக்கிற பசியில உங்களைச் சில்லி பொடி தடவி ஃப்ரை பண்ணி சாப்பிட்டுறுவேன்.  ஜாக்கிரதை!’ என்றவன் கோபத்தில் ஜெர்க்கான அந்த ஜோடி இருவரும் ஜெட் பிடித்து பறந்தனர் ஜப்பானிற்கு.

 

புலம்பியவாறே கரண்டியில் பச்சை இலைகளைச் சாரி கீரைகளை அள்ளி வாயில் வைத்தான். அடுத்த நொடி குமட்டிக் கொண்டு வந்தது. மாது இருந்த பக்கம் திரும்பி,”என்னடி இப்படி கேவலமா வாடை வருது. இதை எப்படி சாப்பிடறது?” என்றான்.

 

“அது ஒன்னுமில்லைங்க விளக்கெண்ணெய் கண்ணுக்கு ரொம்ப நல்லதாம் அதான் கீரை சாலட்ல கொஞ்சமா ஒரு கப் விளக்கெண்ணெய் ஊத்துனேன். இதுக்கே இவ்வளவு ஆச்சரிய படுறீங்களே இன்னும் நிறையா சமையல் குறிப்பு பார்த்து வச்சிருக்கேன் கண்ணுக்கு. முப்பது என்னங்க முப்பது இன்னும் மூனே நாளுல உங்களை ஒரு வழியாக்கி சாரி சாரி சரியாக்கிக் காட்டுறேன்! இது உங்க மேல சத்தியம்!”

 

‘கண்ணு சரியாகுதோ இல்லையோ! நான் இதைத் திண்ணா என் வயிறு பீதியாகி பாதியகிரும் டி! பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதென்று தான் சொல்லுவாங்க! கேவலமான சாப்பாட்டை போட்டாக் கொல்லுவாங்க!’

 

‘உப்பு திண்ணா தண்ணி குடிச்சு தான் ஆகனும் ப்ரோ!’

 

‘இருடி இன்னிக்கு நீ ஃப்ரை தான்!’

 

‘முதல்ல இந்த கீரையைச் சாப்பிடு ப்ரோ அப்புறம் உன் பொண்டாட்டியே நிறைய புதுசு புதுசா சாப்பாடு செஞ்சி தந்து உன்னைக் கொஞ்சப் போறாங்களாம்.’

 

‘என் நிலைமையை பாரேன், கேவலம் என்னோட சொந்த மனசாட்சி கூட என்னை வச்சு செய்யுது! எல்லாம் விதி!’

 

‘சரி சரி ரொம்ப புலம்பாத அவ சாப்பிட தந்த இலைகளை எப்படியாவது சாப்பிட்டு முடி. அவளுக்குள்ள இருக்கும் என்னோட டார்லிங் சரியான முறையில் அதை ஓர்க்கவுட் பண்ணி இரக்கப்படவச்சு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கிருவோம்!’

 

‘உனக்குள்ள இவ்வளவு அறிவா? நம்பமுடியலையே! இதில் ஏதாச்சும் உள்குத்து இருக்குதா?’

 

‘ஐடியா குடுத்தா அதை யூஸ் பண்ணி முன்னேறப் பார். அதை விட்டுட்டு அதை ஆராயாதடா!’

 

‘சரி ட்ரைப் பண்ணுவோம்.’

 

முகத்தைச் சுளித்தவாறே நான்கு வாய் சாப்பிட்டான். அடுத்த வாய் வைக்கப் போனவனை திடீரென்று மாதுவின் கைத் தடுத்தது நிமிர்ந்து என்னவென்று பார்த்தான். அவள் அவனுக்கு மற்றொரு உணவுத்தட்டை நீட்டினாள். அதைப் பார்த்தவன் அசந்துபோனான்.

 

பக்குவமாய் வடித்த சாதத்தில் சாம்பாரும் நெய்யும் கலந்து ஊற்றியிருந்தாள். பச்சைப் பட்டாணி கூட்டும் அவியலும் வைத்திருந்தாள். அருகில் ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு பாயசம், மற்றும் மாவடு ஊறுகாய் அலங்காரமாய் அமர்ந்திருந்தது.

 

தட்டை வாங்கியவன் கையில் ஓர் காகிதம் தட்டுப்பட்டது. அதை விரித்துப் பார்த்தான் மாது தான் எழுதியிருந்தாள். மாதுவைக் கேள்வியாகப் பார்த்தான்.

 

“நான் கண்ணைச் சிரமப்படுத்தாமல் இருக்கனும்னு டாக்டர் சொல்லிருக்கார்.”

 

அதைக் கேட்டவளோ அவனை கண்களிடுங்க முறைத்துப் படிக்குமாறு சைகை செய்தாள். அதில் தடுமாறிய விதுரன்,”இ..தோ.. படிக்கிறேன்!” என்றான்.

 

‘‌வீணாப்போன விதுரா,

உன்னோட ஆபிஸில் பல்பெல்லாமே கண்ணாடி தடுப்புகளோட பயங்கர பாதுகாப்போட தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். பாதுகாக்கப் படாமல் ஆஃப் பாயில்டா திரியும் ஒரே பல்பு நீ தான் டா மட்டி. ஏற்கனவே கோபமா இருக்கிற என்னை இன்னும் இன்னும் காண்டாக்குற நீ! இதுவும் அந்த சீலா குடுத்த கேவலமான ஐடியா தான!

 

இனம் இனத்தோடதான சேரும். நீ ஒரு ஹாஃப் பாயில்னா? அந்த சீலா ஒரு ஃபுல் பாயில்.  இனியும் அந்த சீலாக் கிட்ட ஐடியாக் கேட்டு என்ன எரிச்சல் படுத்துன மவனே! உண்மையிலேயே கண்ணு இரண்டையும் நொல்லையக்கிடுவேன் பார்த்துக்க! பார்த்து சூதானமா இருந்ததுக்கோ!! இதுவே உன் பிறந்தநாளுக்காகக் கொடுத்த வாய்ப்பு தான்.

இப்படிக்கு,

உன் மண்டையை உடைக்கிற

அளவு கோபத்தோடு மாது’

 

திருதிருவென விழித்தான் விதுரன். ‘கரெக்டா கண்டுபிடிச்சுட்டாளே இந்த காக்கா முட்டை! சீலா இவ நம்ம இரண்டு பேரையும் ரொம்ப டேமேஜ் பண்ணுறாடா டார்லிங்! சீக்கிரமா ஊருக்கு வா!’

 

‘மவனே! உன்னோடா ஆளு இதைமட்டும் கேட்டா உனக்கு மறுபடியும் அந்த விளக்கெண்ணெய் விட்ட கீரை சாலட் தான் டா! ஒழுங்கு மரியாதையா மைண்ட் வாய்ஸ ஆஃப் பண்ணிட்டு சாப்பாட்டை வச்சி கைக்கும் வாய்க்கும் சண்டை போடு போ!’

 

அதை ஆமோதித்த விதுரனோ கைக்கும் வாய்க்கும் சண்டையிடத் தொடங்கினான் சாப்பாட்டை வைத்து. மாதுவோ கள்ளச்சிரிப்போடு அவனைக் கண்களுள் நிறைத்தாள் அவனறியாமல்.

 

 

 

 

 

 

 

வாழ்க்கை வழக்கம் போல் பலகை விடு தூதாகச் சென்றது மாதுவிற்கும் விதுரனுக்கும். காலையில் கண்விழித்த மாதங்கி தன் அன்றாட பணிகளைத் தொடங்கினாள். திடீரென வாயிலில் அழைப்பு மணி அழைத்தது. மணியைப் பார்த்தவள் இவ்வளவு காலையில் யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தவாறே கதவைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறந்தவள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் நின்றாள். வெளியே சீலாவும் மதுராவும் நின்றனர்.

 

‘என்னாச்சு ட்ரிப் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்குதே! அதுக்குள்ள எப்படி வந்தார்கள்? இரண்டு மென்டலும் சேர்ந்து என் மதுராக் குட்டியுடைய ப்ளான கெடுத்துடுச்சோ?’

 

“மாது! வழி விடாம என்ன திங்க் பண்ணிட்டு இருக்கிற?” என்று தன் மழலையில் கேட்டாள் மதுரா.

 

“சாரி, அம்முடா! உங்க ட்ரிப் இன்னும் முடியலையே அதுக்குள்ள எப்படி வந்தீங்கனு யோசித்தேன் டா குட்டி!”

 

“டோன் கால் மீ குட்டி. ஜஸ்ட் கால் மீ மதுரா. ஏன் நாங்க எங்கள் இஷ்டப் படி வீட்டுக்கு வரக்கூடாதா? உன் கிட்ட பெபர்மிஷன் வாங்கிகிட்டு தான் வரனுமா?”

 

அவள் பேச்சில் அதிர்ந்த மாது,’பிள்ளையை அவளை மாதிரியே அடாவடியா வளர்த்திருக்கிறதை பார். அப்படியே இந்த சீலாவுடைய ஜெராக்ஸ் காப்பி! முதல் வேலையா மதுராக் குட்டிய ஸ்கூல்ல சேர்க்கனும்.’

 

“அதில்லைடா செல்லம்! பாதியிலேயே வந்துட்டீங்களே ட்ரிப்ல ஏதாச்சும் ப்ராப்ளமோனு பயந்தேன் அதான் கேட்டேன். உள்ள வாடா செல்லம் பால் குடிக்கிறயா? ஜூஸ் குடிக்கிறயா?”

 

“பேபி! இந்த பட்டிக்காடு கிட்ட என்ன தேவையில்லாமல் பேசி டைம் வேஸ்ட் பண்ணுற? வா பேபி போய் ரெஸ்ட் எடுப்போம்.” என்று இடைமறித்துக் கூறினாள் சீலா (குழந்தை பாட்டுக்கு உண்மை உளறிவிடுமோ என்ற பயம் தான்).

 

அப்போது தான் அங்குச் சீலா என்றொரு ஜீவன் இருப்பதையே கவனித்தாள் மாது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தாள். ‘யோக்… என்ன ஹேர் ஸ்டைலோ இதெல்லாம். கருமம்! கருமம்!! ஸ்டைல்ன்ற பேரில் காமெடி பண்ணுறாளே. ஷண்முகா நீதான் என்னை இதுங்க கிட்ட இருந்து காப்பாத்தனும்.’

 

மாதுவின் பார்வையைப் புரிந்த சீலாவோ,”என் ஹேர் ஸ்டைல் எப்படியிருக்கு மாது? உனக்கும் வேண்டுமானால் வாயேன் என் கூட ‘லேக் மீ’ பார்லர்க்கு. ‘வொன்டர் லா’ல லக்கி கூப்பன் விண் பண்ணோம் நானும் மதுராவும். சோ ஃப்ரீ கட்டிங் தான். ஆனால் உன்னுடைய பட்டிக்காட்டுப் புத்திக்கு இந்த மாதிரி ட்ரெண்டி ஃபேஷன் எல்லாம் தெரியாது பிடிக்கவும் செய்யாது. சோ சேட்!” என்று அவளைச் சீண்டினாள்.

 

அவள் பேச்சில் எரிச்சல் எல்லையைக் கடக்க மூக்கு கோபத்தில் விடைக்க,”இப்படியே ஏதாச்சும் பேசி கடுப்பேத்திட்டே இருந்தனு வச்சிக்கோ காவல்துறையில் நாத்தனார் கொடுமைனு புகார் மனு எழுதிக் குடுத்துட்டு வந்துருவேன். ஒழுங்கா இருக்கிற இடம் தெரியாமல் இருந்தீங்கன்னா உனக்கும் நல்லது உன் தம்பிக்கும் நல்லது. நான் வந்து உன்கிட்ட நின்னு கெஞ்சுனனா இந்த பட்டிக்காட்டுச் சிறுக்கிக்கு உங்க வீட்டு வெள்ளைக்கார துறையைக் கட்டி வைங்கனு அழுதேனா? சிவனேன்னு இருந்தவளை மிரட்டி உன் தம்பிக்குக் கல்யாணம் பண்ணிவச்சுட்டு ஐந்தாறு வருசங் கழிச்சு வந்துதான் நான் பட்டிக்காட்டு கிறுக்கினு உனக்கும் உன் தம்பிக்கும் தெரியுதா?”

 

“மாது ஏன் இவ்வளவு கோபப் படுற? உன்னை யார் என்னச் சொன்னாங்க சொல்லு டார்லிங். மாமா நான் கேட்கிறேன்!” என்றபடியே வந்தது யார் சாட்சாத் நம்ப விதுவேதான்.

 

போதும் என்றவாறு கையை உயர்த்தி இருவருக்கும் பொதுவாகக் காட்டிவிட்டு மதுராவிற்கு சாப்பாடு செய்வதற்காகச் சமையலறைக்குள் சென்றாள். சீலாவும் விதுவும் அதிர்ந்து நின்றனர் மாதுவின் கோபத்தில். பின்னர் இரகசியமாக இருவரும் பேசினர்.

 

“எப்படிடா தம்பி இந்த சீலாவுடைய ஃபெர்பாமன்ஸ்? சும்மா தெரிக்கவிட்டேன்ல? இன்னும் போகப்போகப் பார் களைக்கட்ட போகிறது!”

 

“கிழிச்ச என் வாழ்க்கையில் ஒரு லாரி மண்ணள்ளிக் கொட்டிட்டு களைக்கட்டுமாம். அக்கானு சும்மா விடுகிறேன். ஓடிரு!”

 

“என்னடா போன் போட்டு அழுதியேனு மதுக் குட்டிய சமாளித்து ட்ரிப்ப பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்தால் புருசனும் பொண்டாட்டியும் டர்ன் போட்டு திட்டுறீங்க? இந்த சீலா என்ன காஜா போடுற நூலா? ஆளாளுக்கு வந்து அக்குறீங்க!”

 

“அப்படி இல்லை சீலா டார்லிங், மாதுவ சமாதானம் பண்ண வரச் சொன்னால் நீ அவளைக் கூடக்கொஞ்சம் காண்டாக்கிட்ட! அதான் டென்சன்ல அப்படி பேசிட்டேன்.”

 

காதல் மனைவியின் ஒதுக்கம் அவனைப் பெரிதும் வாட்டியது. இந்நிலையில் நேற்று இரவு என்னவென்றால் அவனது மற்றொரு காதலியான நித்திராதேவியும் அவனை ஒதுக்கினாள் காரணமின்றி.

 

“என்னடா! இது, குட்டிக் கரணம் கூட அடிச்சுப் பார்த்துட்டேன் தூக்கம் வரமாட்டிக்குது! என்னவா இருக்கும்?” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான்.

 

‘குட்டிக் கரணம் அடித்தால் இடுப்பு வலி தான் வரும்! தூக்கம் எப்படி வரும்?’

 

“வந்துட்டான்டா! சீய்…. வெறுப்பேத்துறதுக்குனே வருவானே மூக்கு வேர்த்த மாதிரி.”

 

‘நான் உன்னைப் பிரிவதும் இல்லை! உன்னை விட்டு விலகுவதுமில்லை!’ (சிங்கம் புலி ஸ்டைலில் படிக்கவும்😉)

 

“போடாங்க! சரி விடு எதோ நீயாச்சு என் கூட பேசுரியே!”

 

‘விடுடா ரொம்ப ஃபீல் பண்ணாத ஃப்ரீயா விடு! எல்லாம் சரியாகிடும். சீக்கிரமே உன்னுடைய ஆள் உன்கிட்ட பேசிடும் டா.’

 

“ம்ம்ம்… அதற்கு ஏதாச்சும் ஐடியா குடுடா.”

 

‘ஃபர்ஸ்ட் அவங்க தனி அறையில் படுக்குறத தடுக்கவேண்டும். இந்த ரூம்லையே அவங்களும் இருந்தாதான் ஏதாச்சும் கோமாளித்தனம் செஞ்சாச்சு சரி பண்ண முடியும்.’

 

“ஆமாடா! அவ என்கிட்ட பேசாட்டிக்கூட பரவாயில்லை. என்கிட்டையே இருந்து அவளை பார்த்துட்டே இருந்தால் கூட போதும்.”

 

‘சரி எதாச்சும் ஃப்ளான் பண்ணி அவங்களும் இந்த அறையிலேயே இருக்க மாதிரி பண்ணனும். உனக்கு ஏதாச்சும் ஐடியா வருதா?’

 

முதலில் யோசிப்பது போல் பாவனை செய்து பின்னர் இல்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினான் விதுரன். அதைச் சலிப்புடன் பார்த்த அவனது மனசாட்சி,’உனக்கெல்லாம் யோசிக்கத் தெரிந்திருந்தால் நீ ஏன் போயும் போயும் அந்த சீலா கிட்டயெல்லாம் ஐடியா கேட்கிற! அதுவும் கேவலமான மட்டமான மடத்தனமான ஐடியாதான் எல்லாம்!’

 

“சீலா டார்லிங்க அவ மட்டமா பேசலாம் பிகாஸ் அது நாத்தனார் சண்டைனு வந்துரும். அதுவும் சீலாவுடைய தம்பியா இருந்துகிட்டு நீ பேசலாமா? தாய்ப் பாசத்தையும் மிஞ்சியது தமக்கையார் பாசம்! தெரிஞ்சுக்கோ!”

 

‘என்ன நேத்து இராசராச சோழன் ஹச்டி பிரிண்ட்ல பார்த்தியா? நானும் பார்த்தேன். நான் சீலாவ ஒன்னும் திட்டல. அவர்கள் குடுத்து நீர் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றியும் அவை தழுவிய தோல்விகளைப் பற்றியும் தான் பேசுகிறேன்.’

 

“டேய்! ஐடியா! சீலாவைப் பத்தி பேசிக்கிட்டு இருந்ததுல எனக்கு மண்டைல ஒரு ஸ்பார்க் அடிக்குது. சீலாவும் மதுராவும் வந்துட்டாங்கன்னா மாது ரூம்க்கு வந்துதானே ஆகனும். எப்படி என் ஐடியா?”

 

‘ஐடியா நல்லாத்தான் இருக்கு. பட், அவங்க ட்ரிப் முடிஞ்சாதான வருவாங்க. அதுக்குத் தான் இன்னும் ஒரு வாரம் இருக்கே!’

 

“இதெல்லாம் ஒருமேட்டரா! சீலா தான் போகும் போது சொல்லிட்டு தான போயிருக்கு,’எனி ப்ராப்ளம்! ஒன் கால்! சீலா வில் அப்பியர்!’ சோ, போன் போடு கொண்டாடு! எப்படி?” இத்தோட முடிவு தான் காலையில் சீலா மற்றும் மதுராவின் திக்விஜயம்.

 

ஐந்து வயது மதுராவிற்கு ஒன்றாம் வகுப்பு பள்ளியாண்டு துவங்க இரண்டு வாரம் இருந்த நிலையில் சீலா அவளை தன் தோழிகளுடன் சுற்றுலா அழைத்துச் சென்றாள். முதலில் தோழிகள் மட்டும் செல்ல நினைத்த பயணம் சீலாவால் சிறுவர்களுக்காக மாறியது. முதல் வாரம் பெங்களூரில் உள்ள சுற்றுலா தளங்களைச் சுற்றிவிட்டு கோவில்களையும் வலம் வந்து இறுதியாக வொன்டர்லா சென்று பின் அப்படியே மறு வாரம் மைசூரைச் சுற்றுவதாகத் திட்டம். விதுவின் தொலைப்பேசி விடு தூதில் மைசூர் போகாமல் திரும்பியிருந்தனர்.

 

“ஆனாலும் தம்பி நீ ஒருவிசயம் கவனிச்சியா? இத்தனை நாள் மௌனராகம் படம் காட்டிட்டிருந்தவ இப்போ உரிமைக்குரல் குடுக்குறா!”

 

“ஆனாலும் அக்கா நீ இப்படி உன் பெண்ணை இவ்வளவு அடாவடியா பெத்திருக்க வேண்டாம்! முடியலை!”

 

இதனை மறைவில் நின்று கேட்டிருந்த மதுவின் முகத்திலோ குழப்ப ரேகை என்றால் மாதுவின் முகத்திலோ அனல் சிவப்பு.

🌼🌼🌼🌼🌼🌼

 

மதியம் மணி பதினொன்று, மாதுவின் வீடே அமைதியில் அழகாய் இருந்தது. விதுரன் அலுவலகம் சென்றிருந்தான். சீலாவோ தாங்கள் வென்ற ‘லேக் மீ’ சலுகையை வீணாக்க விரும்பாமல் ஃபேசியல் மெனிக்கியூர் பெடிக்கியூர் என்று பல க்யூரை செய்வதற்கு க்யூவில் நின்றாள். மாது வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஸோஃபாவில் அமர்ந்தாள். மது விளையாடிக் கொண்டிருந்தாள். அம்மாவைப் பார்க்கவும் அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

 

அதனைக் கவனித்த மாது,’என்னமோ ப்ளான் பண்ணுறாளே! என்னவா இருக்கும்?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே,”என்னடா பட்டு… என்ன வேணும்?” என்றாள்.

 

மதுவோ தயங்கியவாறே,”ட்ராயிங் பண்ணுவோமாம்மா?” என்றாள்.

 

“அம்மாவா இத்தனை நாள் நான் பட்டிக்காட்டு மாது உங்களுக்கு அம்மானு ஞாபகம் வந்துருச்சா?” என்று அவளிடம் வம்பிழுத்தாள்.

 

“ம்மா! ஜஸ்ட் ஃபார் ஃபன் மா. ப்ளீஸ் மா ட்ராயிங் பண்ணுவோமா!” என்று கண்களைச் சுருக்கி கொஞ்சினாள்.

 

மகளின் செய்கையில் மயங்கிய மாதுவோ அவளைத் தூக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். மகளும் அதே செய்தாள்.

 

“நல்லா ஐஸ் வைக்கிற குட்டி மா! சரி வா ட்ராயிங் பண்ணுவோம்” என்று மகளை அழைத்துச் சென்றாள். ட்ராயிங் நோட்டை எடுத்து ஒரு பக்கம் மாது வரைய அதை பார்த்து மதுரா வரைந்தாள். பூனையில் ஆரம்பித்த அவர்கள் ஓவியக்கலை பல்வேறு பொருட்களைக் கடந்து வந்து வீட்டில் நுழைந்தது.

 

“அம்மா! அப்பாக்கூடப் பழம் விட்டுடீங்களாம்மா?” என்று கேட்டு மாதுவை அதிர வைத்தாள் மது.

 

“நாங்க தான் சண்டையே போடலையே குட்டி. அப்புறம் எதுக்குப் பழம் விடனும்?” என்று சமாளிப்புடன் கூறினாள்.

 

“சண்ட போடலை. ஆனா பேசாம இருந்தீங்கள்ள. நேத்தும் அப்பாவ நீங்க அடிச்சீங்கதான? பாவம் அப்பா மெடிக்கல் கிட்ட எடுத்து அழுதுகிட்டே மருந்து போட்டாங்க. ரொம்ப வலிச்சது போல!” என்று மது அழுகையுடன் கூறினாள்.

 

முதல் நாள் இரவு, மதுராவும் சீலாவும் இருந்ததால் மாது விதுரன் அறையிலேயே உறங்க வந்திருந்தாள். அவனுக்காக மெத்தையில் போர்வையை சிரிப்புடன் விரித்து விட்டு சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டாள்.

 

விதுரன் மதுவிடமும் குட்நைட்டும் சீலாவிடம் வெற்றிக்குறியும் செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து கதவடைத்தான். அவன் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் போட்டிப் போட்டுப் பொங்கியது. அதில் கடுப்பான அவன் மனசாட்சியோ,’டேய்! அவள் இன்னும் அதே மௌற விரதம் ரேஞசில தான் இருக்கா. நீ என்னமோ அவள் ஓடி வந்து உன்னை கட்டிக்கொண்டு ஐ லவ் யூ சொன்ன மாதிரி மூஞ்சியை வைத்திருக்க. டேய் முடியலை டா! பட் அவளை நம்பாத அவ கேடி, எதாச்சும் பெரிசா ப்ளான் பண்ணிருப்பா! பீ ஃகேர்ஃபுல்!’

 

“டேய்! நானே இன்னைக்கும் தான் ரொம்ப நாள் கழித்து நிம்மதியா தூங்கப் போறேன். டென்சன் பண்ணாமல் போயிரு!” என்றவாறே குளியலறையில் சென்று குளித்து இரவு உடைக்கு மாறி வந்தான். சிறிதுநேரம் உறங்கும் தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘சாரிடி இனிமே குடிக்க மாட்டேன்! நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். என்கிட்ட பழையபடி பேசுடி!’ என்று மனதிற்குள் புலம்பவிட்டு பெருமூச்சுடன் சென்று கட்டிலில் படுத்தான்.

 

மாதுவை பார்த்தபடியே படுத்திருந்தான். திடீரென்று ஏதோ ஓர் குறுகுறுப்பு உடலெங்கும் உணர்ந்தான். என்னவென்று கண்டுகொண்டதும் அடித்துப் பிடித்து எழுந்தான். தன் உடுத்திருந்த மேல் சட்டையை கலைந்தவாறே எழுந்து குளியலறைக்குள் மீண்டும் புகுந்தான்.

 

“இராட்சசி! இராட்சசி! இப்படி பண்ணிட்டாளே!”

 

‘நான்தான் முதல்லையே சொன்னேன்ல பார்த்து எச்சரிக்கையா இருந்துக்கோனு. கேட்காமல் என்னைத் திட்டி விரட்டிவிட்ட. இப்போது நீ தான் அவஸ்தை படுகிறது.’

 

“ஐயோ! இப்படி பண்ணுவான்னு நானென்ன கனவா கண்டேன். வச்சி செஞ்சிட்டா டா!” என்றவன் குளித்துவிட்டு வேறுடை அணிந்து வெளியேறினான். தலையணையை எடுத்துக்கொண்டு மாதுவை ஓர் பார்வை பார்த்தான். பின் அறைக்கதவைத் திறக்க முயல்கையில் தான் கவனித்தான் கதவினை வெளிப்புறம் தொங்கிய பலகை இப்போது உட்புறம் தொங்கியது.

 

அதில்,”என்ன மாமா! இன்றைக்கு அருமையான சத்தான ருசியான விருந்துபோல எறும்புகளுக்கு!” என்று எழுதியிருந்தாள். திரும்பி அவளை முறைத்து விட்டு வெளியே சென்று சோஃபாவில் சாய்ந்தான். கதவு மூடும் இடைவெளியில் மாது விழுந்து விழுந்து சிரிப்பது தெரிந்தது. தன் கோபம் மறந்து அவளை ரசித்தான் அவள் கணவன்.

 

‘என்னடா இப்படி பார்க்கிற கோபத்துக்குப் பதிலா காதல் கொஞ்சுதே உன் மூஞ்சியில்.’

 

“இல்ல! இப்படி எப்பவுமே அவ சிரிச்சுகிட்டே இருக்கனும் அத்தாண்டா என்னாசை!”

 

‘அப்போ நாளைக்கு ஐம்பது தேனீ பார்சல்!’

 

அதைக்கேட்டு பேய் முளி முழித்தான் விதுரன். நடு இரவில் வலி தாங்காமல் கொசுக்கடி ஒவ்வாமைக்கான மருந்தில் குளித்தது வேறு விசயம். இதை மகள் கவனித்திருக்கிறாள் என்றுணர்ந்த மாது மிகவும் சங்கடப்பட்டாள்.

 

மகளின் செயலில் பரிதவித்த மாது,”செல்லம்மா அப்பிடிலாம் இல்லைடா அம்மா உன்னை எப்பையாவது அடிச்சிருக்கேனா? இல்லைல. ராஜூ மாதிரி ஸ்மால் பேபிஸையே அடிக்க மாட்டேன் அப்புறம் எப்படி காலிய்யா மாதிரி இருக்கிற அப்பாவ அடிப்பேன் சொல்லுடா?” என்று மகளைச் சமாதானம் செய்தாள்.

 

அவள் கூறிய விளக்கத்தில் சமாதானமடையாத மதுரா,”அப்போ மிட்ஸில்லாம் ஹேரி நொகோராவை அடிக்கிறா?” என்றாள்.

 

அவள் கேள்வியில் நொந்துபோன மாது,’அடக்கடவுளே! இவள் கார்ட்டூனை பார்த்துட்டு என்னை கதறவிடுறாளே!’ என்று புலம்ப, அவள் சிந்தனை வலையில் சிக்கினான் சின்சான்.

 

“அதுவந்துடா குட்டி மிட்ஸி வந்து சின்சானையும் தான அடிப்பாள். சோ ஹேரியவும் அடிக்கிறாள். நான் உன்னை அடிக்க மாட்டேன். சோ யாரையுமே அடிக்க மாட்டேன்.”

 

அவள் கூறியதைக் கேட்ட மதுரா தன் நாடியில் ஆட்காட்டி விரலால் தட்டியவாறே யோசித்தாள். அதில் பதறிய மாது,’அய்யோ வேறென்னமோ யோசிக்கிறாளே!’ அவள் யோசனையைத் தடுக்கும் வகையறியாது மலைத்தாள். திடீரென்று யோசனை வந்தவளாக, மதுவின் சிந்தனையைக் கலைப்பதற்காக,”அம்முடா! நீங்க ட்ரிப்ப ஏன் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தீங்க?” என்று கேட்டாள்.

 

அவள் கேள்வியில் திருதிருவென விழித்தாள் சின்னவள். அதை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள் பெரியவள். சட்டென்று தன்னை சமாளித்த மதுரா,”ரொம்ப டைர்ட் ஆகிட்டோம் நானும் சீலாவும். சீலாவுக்குக் கொஞ்சம் உடம்புக்கு வேற முடியவில்லை. சோ கிளம்பிட்டோம்.”

 

“வழியில் பார்த்ததெல்லாம் வாங்கி திண்ணுருப்பா! வயிறு வலி வந்திருக்கும். வயசானாலும் வாயடக்கம் வரலை! சீ… என்னமோ போ!”

 

“அம்மா பாவம் சீலா! திட்டாதம்மா! தி பெஸ்ட் கிராணி இன் தி வேர்ல்ட் மா!”

 

“கிரானினு நீ சொல்கிற அவங்க என்னமோ வடிவேலுடைய யூத்தாமா லுக்கோட சுத்துறாங்க.”

 

‘அழகான பெயர் சீதா லாபன். அதை சுருக்குகிறேன் பேர்வழியென்று சீலானு வச்சுட்டு சுத்துது இந்த கிளவி. நல்ல வேளையாக எங்கப்பா இவகிட்ட இருந்து தப்பித்து மேல போய்ட்டார்.’

 

“அம்மா நீ அப்பாவிடம் பேசுமா! ப்ளீஸ்மா! அன்னைக்கு அப்பா சொன்னதை நான் உன்கிட்ட கேட்டதுனால தான அப்பா மேல் கோபமா இருக்க? எனக்குத் தெரியும்!” என்று அழுகையுடன் கூறினாள்.

 

அவளது செயலில் மாதுவின் கண்கள் கலங்கியது. ஆனாலும் அவனிடம் பேச மனம் வரவில்லை. ஆதலால் தயக்கமும் கலக்கமும் போட்டியிட எதுவும் பேசாது நின்றாள். அவளையே பார்த்தவாறு அழுது கொண்டிருந்த மது,’நான் இவ்வளவு தூரம் அழுகிறேன் பேசுகிறேன் சொல்லுறாங்களா? செண்டிமெண்ட் சீனுக்கு என்ட் கார்ட் போட்டுட்டு ஆக்ஷன் ப்ளாக்ல என்ட்ரி குடு மதுரா.’ அழுது கொண்டிருந்த மகள் திடீரென்று அமைதியாகக் கண்ணைத் துடைக்கவும் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.

 

‘ஐயோ பயபுள்ள எதையோ ஹெவியா ப்ளான் பண்ணுது போலையே! ஷண்முகா காப்பாத்துப்பா!’

 

“இப்போ முடிவா கேட்கிறேன்மா! பேசுவியா மாட்டியா?”

 

மாதங்கி எந்த பதிலும் அளிக்கவில்லை. மதுராவோ தன் தாய்க்கு பத்து நிமிடங்கள் வரை கெடு கொடுத்தாள். ‘இவ வந்து பாசமா உரசையிலேயே நெனச்சேன் எதாவது ப்ளான் பண்ணி லாக் பண்ணுவான்னு. உசாரா இருந்திருக்கனும். என் தப்புதான். எந்த குண்டத் தூக்கி என் தலைல போடப்போகிறாளோ.’

 

மாதுவையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தவள், பத்து நிமிடங்கள் கடக்கவும்,”என்னம்மா? பேசுறியா அப்பாகிட்ட. ஃபோன் போட்டுத்தறேன்!” என்றாள். இம்முறையும் மாதுவிடம் பதிலில்லை.

 

“சோ பேச மாட்ட அப்படித்தான்? ஒகே” என்று நிறுத்தி இடைவெளிவிட்டாள்.

 

‘படம் பார்த்து ரொம்ப கெட்டுபோச்சு பேச்சை பாரு ஏதோ வில்லன் பேசுற மாதிரி. போன ஜென்மத்தில் எனக்கு மாமியாரா இருந்திருப்பா போல!’ என்று மனதிற்குள் புலம்பினாள் மாது.

 

மதுவோ மறுபடியும் பேச ஆரம்பித்தாள். அவள் கூறியதைக் கேட்ட மாதுவோ அதிர்ந்தாள். மறுநொடி அவள் தொலைப்பேசியிலிருந்து தன் கணவனை அழைத்துச் சிரித்துச் சிரித்து பேசினாள். இவளது திடீர் மாற்றத்தில் திகைத்த விதுரன் ஃபோனை வைத்தவுடன் மயங்கி விழுந்தான்.

 

‘பொண்டாட்டி ஃபோன் போட்டதுக்கே மயங்கி விழுகிறான். இவனெல்லாம் என்ன படைப்போ. ஏம்மா இவனுக்குப்போய் என்னை மனசாட்சியா போட்டு இன்சல்ட் பண்ணுற'(சாரி ப்ரோ! இருந்தாலும் நீங்க என் ஹீரோவை இவ்வளவு டேமேஜ் பண்ணவேண்டாம்!😧)

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மனைவி பேசியவுடன் மயங்கியவனை மற்றவர் பார்க்கும் முன் தட்டி சுயநினைவிற்குக் கொண்டு வந்தான் அவனது நண்பன் ராஜா. மயக்கத்திலிருந்து அவன் தெளிந்தாலும் அவன் மனமோ இன்னும் மனைவி பேசிய மயக்கத்திலேயே மகிழ்ந்து இருந்தது.

 

“டேய்! மாப்ள என்னாச்சு டா? ஏதாச்சும் ப்ராப்ளமா? எதற்கு டா ஃபோன் பேசவும் மயங்கி விழுந்த? அக்காக்கு எதாவது முடியலையா? யாருக்கு என்னடா?” என்று பதற்றமாக வினவினான் ராஜா.

 

“எல்லாரும் நல்லா தான் இருக்காங்க மச்சி! இப்போ மாது ஃபோன் பண்ணிருந்தாள்டா.”

 

“என்னாச்சுடா மாது திட்டிட்டாளா? கோபத்தில் கிராமத்துக்கே மறுபடியும் போய்ட்டாளா? மதுராவை விட்டுட்டா? இல்ல கூட்டிட்டு போய்ருக்காளா?” என்று படபடத்தான் ராஜா.

 

“உனக்கு ரொம்ப நல்லெண்ணம் டா ராஜா! நல்ல்ல்லா வருவடா!” என்று நல்லாவை நல்லா அழுத்திக் கூறினான்.

 

‘இவனையெல்லாம் ஃபரண்டா வச்சிருக்க உன் வாழ்க்கை எப்படிடா உருப்படும்! சீ ஃபில்ட் வித் நெகட்டிவிட்டீஸ்! ரொம்ப கஷ்டம்தான்.’ என்று புலம்பியது அவன் மனசாட்சி.

 

‘உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போறியா! என் ஃபரண்ட்ஸ் பத்தி பேச நீயாருடா? ஓடிரு!’ என்று மனசாட்சியை விரட்டி அடித்தான் விது.

 

‘கேவலம் பொண்டாட்டி பேசினதுக்கு மயங்கினவன் கிட்டப்போய் பேச்சு வாங்குகிறேன் என் விதி!’

 

“இல்லைடா மாது சமாதானம் ஆகிட்டா டா சிரிச்சு சிரிச்சு பேசுறா! அதான் சந்தோசத்தில் மயங்கிட்டேன்!” என்று நண்பனிடம் தெளிவுபடுத்தினான்.

 

“வாவ்! சூப்பர் டா! ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கப் போல! மச்சான்… பா..ர்..டி.. பண்ணுவோமா?”

 

“என்னது பா…ர்…டீ…யா??? டேய் செத்துச் செத்து விளையாடுவோமா னு கேட்கிற மாதிரியே இருக்குடா!”

 

‘ஏம்பா ஹெட்செட் மாட்டி படம் பார்த்துட்டே பேசுறியா?’

 

‘இப்ப நீ போகலை! நாளைக்கு ஹெட்லைன்ஸ்ல மனசாட்சியை மர்டர் பண்ண மாவீரன்! மைன்ட் வாய்சில் டார்ச்சர் பண்ணியதால் விழைந்த விபரீதம்!! னு வந்துசரும் பார்த்துக்கோ!’

 

(இதுக்கும் மேல நம்மாளு அங்க நிப்பாரு! ஒரே ஓட்டமா ஓடிப் போய் அவன் சட்டைப் பையில் ஒளிந்து கொண்டார்து.)

 

தன் நண்பனைப் பார்த்து முறைத்தான். “அய்யோ சும்மா கிண்டலுக்கு கேட்டேன் டா! ஆமா அப்படி அன்னைக்கு என்னதான் டா ஆச்சு? சிஸ்டர் ஏன் இவ்வளவு கோபமா இருந்தாங்க உன்மேல!”

 

“அதை ஏன்டா கேக்குற! அன்னிக்கு அடிச்ச சரக்கு தான் எல்லாத்துக்ர்கும் காரணம். தண்ணிய தொட்டுக்கூட பார்க்காதவனை அன்னைக்கு எல்லாருமா சேர்ந்து உசுப்பேற்றி விட்டு என் வாழ்கையில் விளையாண்டுடீங்கடா எல்லாரும் சேர்ந்து!”

 

“டேய் மச்சான் இப்படி வாழ்க்கையையே வெறுத்துப் போய் பேசுகிற அளவிற்கு என்ன நடந்ததுடா??”

 

“டேய் நான் எங்கடா வாழ்க்கையை வெறுத்தேன்! என் பொண்டாட்டியை நீங்க எல்லாரும் சதி பண்ணி என்னைய வெறுக்க வச்சுட்டீங்கடா பாவிகளா! உங்களைச் சொல்லி என்ன பிரயோஜனம்! என் புத்தி அப்போ புல்லு மேய போயிருச்சா? நான் குடிச்சிருக்க கூடாது, தப்பு பண்ணிட்டேன்! எல்லாம் விதி!” இதைக் கேட்டவுடன் விளக்கைத் தேய்த்ததும் வரும் பூதமாய் வந்து பாடியது அவன் மனசாட்சி.

 

‘உன்னைச் சொல்லி குற்றமில்லை!

என்னைச் சொல்லி குற்றமில்லை!

காலம் செய்த கோலமடி!

கடவுள் செய்த குற்றமடி!’

 

“மச்சான் இந்த துடைப்பு கட்டை எங்க இருக்கும்? ஒரு பெருச்சாளி ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது!” இதைக் கேட்ட மாத்திரத்தில் சோப்பு தேய்த்த நுறையாய்ச் சிதறி மறைந்தது வேறயாரு நம்மாளு தான்.

 

“மச்சான் இருடா நான் வேணும்னா நம்ம முனியம்மா கிட்ட வாங்கிட்டு வாரேன்.”

 

“டேய்! தேவையில்லைடா! நீ ஆணியே புடுங்க வேண்டாம்.”

 

“சரி விடுடா! நீ உன் வீட்ல நடந்த பிரச்சினையை சொல்லு டா!”

 

அன்று மாலை நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தான். இது அவன் வேலை பார்க்கும் மென்பொருள் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி என்று அங்கே தான் ஏற்பாடு செய்வார்கள்.

 

அப்படி ஒரு நண்பனுக்குப் பிறந்தநாள் வரவே அதனைக் கொண்டாட அனைவரும் அங்கு கூடியிருந்தனர். பெரிய கேக்கை கொண்டு வந்து வைத்தனர் அந்த பப்பின் ஊளியர் இருவர்.

 

கேக் வெட்டி முடிந்தவுடன் குளிர் பானங்களும் சிற்றுண்டி வகைகளும் வழங்கினர். அனைவரும் தங்களுக்குத் தேவையான குளிர்பானங்கள் (மதுபானங்களும் தான்) எடுத்துக் கொண்டனர். விதுரனோ மதுப்பழக்கம் இல்லாததால் ஆரஞ்சு பழச்சாறு எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

 

நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுவாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று அங்கே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்த விதுவும் ராஜாவும் அதில் கலைந்து என்னவென்று பார்த்தனர்.

 

அரவிந்த் என்பவன் தன் நெருங்கிய நண்பன் ப்ரதீப்புடன் மதுபானக் கோப்பைகள் நிறைந்த தட்டை கையில் ஏந்தி பாட்டிற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டே இவர்கள் இருந்த மேஜையை நோக்கி வந்தனர்.

 

“என்னடா இவனுங்க எதுக்கு இப்படி கேவலமா ஆடிக்கிட்டு நம்மகிட்ட வராங்க? எதாவது ப்ளான் பண்றீங்களா?”

 

‘அய்யய்யோ அலர்ட்டா இருக்கானே! என்ன பண்ணலாம்!’

 

“அதுவந்து மாப்ள! அவனுங்க உன்னை ரொம்ப கலாய்ச்சானுங்க மாப்ள! அதான்…”

 

“என்னடா அதான்னு ஜவ்வுமிட்டாயா இழுக்குற? ஆமா அவனுங்க எதுக்காக என்னை கலாய்ச்சானுங்க?”

 

“அதுவந்து மாப்ள! நீ ரொம்ப நல்லவனாம்… அழகானவனாம்… அறிவானவனாம்… பண்பானவனாம்… ஆனால்.. ரொம்ப ரொம்ப கோழையாம்!!”

 

“அதுக்கு! ஸார் என்ன சொன்னீங்க?”

 

“டேய்! என் ஃப்ரண்ட என்கிட்டயே கோழை சொல்றீங்களா? உங்கள இன்னைக்குனு… சட்டைக் காலரை பிடிச்சுட்டேன் மாப்ள!”

 

‘டேய்! ராஜா நீ அந்த மாதிரில்லாம் பேசிருக்கமாட்டியே!’

 

“அப்படியா!அப்புறம் என்னாச்சு!” என்று நம்பாத பார்வை பார்த்தான்.

 

“அது இதுன்னு ரெண்டு பேரும் வாக்குவாதம் பண்ணினோம்..”

 

“அப்பறம்!”

 

“அப்பறம்! அவன் சொன்னான்… இந்த வாரம் வரும் ரமேஷோட பர்த்டே பார்ட்டில சரக்கடிச்சா உன்னை வீரன் ஒத்துக்குவாங்களாம்!”

 

“நான் அந்த கருமத்தைக் குடிக்கவும் வேண்டாம். அவனுங்க குடுக்குற வீரன் பட்டமும் வேண்டாம். இவனுங்க பெரிய மிஸ்டர் சென்னை ஜட்ஜஸ் நான் இவிங்கள இம்ப்ரஸ் பண்ணி அவார்ட் வாங்கப்போறேன். போடா டேய்!”

 

“மச்சான் ஒரு பீர் மட்டும் தான் டா! ப்ளீஸ் டா எனக்காக!”

 

“உனக்காகவா என்னடா உளறிகிட்டு இருக்குற?”

 

“ஆமா மச்சான்! பெட்ல தோற்றா என்ன செய்யனும்னு அவன் கிட்டக் கேட்டேன்.”

 

“ம்ம்ம்ம்ம்ம்..”

 

“என் ஃப்ரண்ட பத்தி இனிமே எதுவும் இப்படி நக்கலா பேசக்கூடாதுனு சொன்னேன்.”

 

விதுரனின் நம்பாத பார்வையில்,”அதுவும் கேட்டேன் மச்சான்! சத்தியமா!” என்றான்.

 

“அதுவும் கேட்டியா? அப்போ இன்னும் வேறென்ன கேட்ட?” என்று அவனை ஆழ்ந்து பார்த்தான்.

 

“உனக்கும் எனக்கும் தனித்தனியா ஒரு மட்டன் பிரியாணி, சிக்கன் விங்க்லெட்ஸ், நண்டு கிரேவி, ப்ரான் 65, காடை வறுவல், சிக்கன் சுக்கா,…..”

 

“டேய் போதும்டா போதும். என்னடா இரண்டு பேருக்குனு சொல்லிட்டு ஒரு ஊருக்கே ஆர்டர் பண்ணிருக்க!”

 

“இதே தான் அவனும் சொன்னான் மச்சி. ஆனா வாங்கித் தரேன்னு சொல்லிட்டான்.”

 

“வாங்கித்தரேன்னு சொல்லிட்டானா? சோ நீ விதவிதமா சோறு திங்க நான் தண்ணியடிக்கனும். ஏன்டா? சரி விடு இதெல்லாம் மொத்தமா வாங்கித்தராட்டியும் ஒன்னொன்னாவாச்சு நான் வாங்கித்தரேன். அதுக்காக எல்லாம் என்னை தண்ணியடிக்க சொல்லாத டா!”

 

“மாப்ள இதுக்காக உன்னைச் சரக்கடிக்கச் சொல்லலை டா!”

 

“அப்புறம்??? இன்னுமென்னடா??”

 

“பதிலுக்கு நானும் கேட்டேன் அப்படி நான் தோத்துட்டா உனக்கென்ன வேணும்னு!”

 

“ஓ இப்படித்தான் எல்லார்கிட்டயும் பகுமானம் பண்ணி பந்தா காட்டுறியா? இந்த என்னுடைய க்ரெடிட் கார்ட் எந்த ஹோட்டல்னு கேட்டு கூட்டிட்டுப் போ! பாத்துடா என் காசுதானன்னு ஓவரா திங்காத லிமிட்டா முடிச்சுக்கோ!”

 

“மச்சான்….”

 

“இன்னுமென்ன டா நானும் வந்து சர்வ் பண்ணாதான் வருவாய்ங்களா?”

 

“அதில்லைடா…” என்று ராஜா எதுவோ சொல்லவரவும் அரவிந்த் மற்றும் ப்ரகாஷ் மதுக் கோப்பையுடன் அருகில் வரவும் சரியாக இருந்தது. அதைப் பார்த்த விதுரன் எரிச்சலின் எல்லையை எட்டினான்.

 

“டேய் பெட் தான என்னால குடிக்க முடியாது! சோ உங்க பெட்ட நீங்க தாராளமா கேரி அவுட் பண்ணலாம்” என்று கூறித் தோளைக் குலுக்கினான்.

 

விதுரனின் பேச்சில் கடுப்பான இருவரும் தங்கள் கையில் தயாராக வைத்திருந்த ரேஸரை எடுத்து ராஜாவை நெருங்கினர். இதனைக் கண்டு ராஜா பயந்தானென்றால் விதுரனோ அதிர்ந்தான்.

 

“டேய்! எதுக்கு டா ரேஸரை எடுத்துட்டு அவன் கிட்ட போறீங்க? என்னதான் டா உங்க பெட்?”

 

“ஓஹோ! உனக்கு பெட் என்னன்னே தெரியாமதான் ஃபெயில்னு டிக்ளேர் பண்ணியா??” என்று சிரித்த அரவிந்த் அவர்கள் பந்தயத்தை விம் போட்டு விளக்கினான்.

 

ராஜா பந்தயமாக முனியாண்டி விலாஸ் ஆர்டர் குடுத்ததும் அரவிந்திற்கு என்ன பந்தயம் என்று கேட்டான். அரவிந்தோ,”விதுரன் தண்ணியடிச்சுட்டான்னா நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேன். பட் குடிக்கலைன்னா… உன்னோட முகத்தில் வலது பக்க மீசையும் இடது பக்க தாடியும் எடுத்துட்டு ஒன் வீக் ஃபுல்லா பாதி தாடி பாதி மீசையோட தான் நீ சுத்தனும்.”

 

இதனைக் கேட்டு அதிர்ந்த ராஜாவோ,”முடியவே முடியாது!” என்று அழுத்திக் கூறினான்.

 

“அப்போ உன் விது மாப்பிள்ளையைச் சரக்கடிக்க சொல்லுடா என் பொட்டேட்டோ!” என்று கோரஸ் பாடியவாறே அரவிந்தும் ப்ரகாஷும் சென்றனர்.

🌼🌼🌼🌼🌼🌼🌼

அவர்களின் பந்தயத்தைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் விதுரன். அனைவரும் அவனை ஒருமாதிரி பார்க்க,”சாரி ட்யூட்ஸ்! யூ ஜஸ்ட் கேரி ஆன்!” என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியவாறே ராஜாவைப் பார்க்க, மீண்டும் வெடித்து வந்தது சிரிப்பு.

 

ராஜாவோ அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் பார்வையில் தன்னை அடக்கிய விது,”சாரி மச்சான்! நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன்!”என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.

 

அவன் பாவனையில் ராஜாவிற்கே சிரிப்பு வந்தது, அதை மறைத்தவாறு,”மச்சான்!” என்று அரவிந்தையும் அவன் கையிலிருந்த ரேஸரையும் கண்களால் காட்டினான் விதுரனிடம். அதை உணர்ந்த விதுரனும் தான் பார்த்துக்கொள்வதாகச் சமிக்ஞை செய்தான் கண்ணை மூடி.

 

இவர்கள் கூத்தைக் கவனித்த அரவிந்தோ,’இது வேலைக்காகாது!’ என்றெண்ணி மீண்டும் ரேசருடன் ராஜாவை நெருங்கி அவன் மீசையில் வைத்த நேரம், நான்கு ஷார்ட் கிளாஸ்கள் பறந்து வந்து அவன் கைகளிலேயே விழுந்தது. அனைவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.

 

விதுரன் தான் அந்த நான்கு ஷாட் கிளாஸையும் குடித்துவிட்டு எறிந்திருந்தான். பக்கத்தில் அவர்களுடன் பணியாற்றும் முகேஷ் என்பவன் பாவமாக அழுவது போல் அமர்ந்திருந்தான். ஆம் முகேஷ் ஆசையாக ‘பட்டியாலா ஷாட்’ அடிக்க வைத்திருந்த வோட்கா கலந்த காக்டெய்லை தான் நம் விதுரன் எடுத்துக் குடித்து வீசினான்.

 

“டேய்! மாப்ள என்னடா இப்படி பண்ணிட்ட?!!”

 

ராஜாவின் கேள்வியில் திகைத்த விதுரன்,”உனக்காகத் தான் மாப்ள குடிச்சேன்!”

 

“டேய் விது பெட்டே பீர்க்கு தான். நீ ஏன்டா விஸ்கி கலந்த காக்டெய்லைப் போய் குடிச்ச!” என்று தலையில் கை வைத்தான்.

 

“டேய் ராஜா அது வோட்கா மிக்ஸிங் டா!! எனக்கு விஸ்கி பிடிக்காதுடா..” என்று புலம்பினான் காக்டெய்லை பறிகொடுத்த முகேஷ்.

 

“நாட்டுக்கு ரொம்பத் தேவை!!! பேசாமல் இருடா பேல்பூரிவாயா!” என்று ராஜா முகேஷை அடக்கும் போது சத்தமாக சிரித்தான் விது.

 

“ஓ அப்போ நீ மாறு கால்.. மாறு கை.. மாதிரி மாறு மீசை.. மாறு தாடி…யோட தான் திரியனுமா?”என்று சிரித்தான்.

 

“ஏன்டா உனக்கு இந்த நல்லெண்ணம்? நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும்? நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற!”

 

“நா..னா.. என்னத்துக்கு யுவர் ஆனர்? காய்லான் கடை ஸ்பானர்? டோன்ட் யு ஹாவ் மேனர்? இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர்!!!” என்று கூறி வெடிச் சிரிப்புடன்,”மச்சான் ஹவ் இஸ் மை கவிதை?”என்று கேட்டான் ராஜாவிடம்.

 

இதில் நொந்துபோன ராஜா மனதினுள்,’என்னது கவிதையா!! போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ!’

 

“என்னடா இன்னும் இவன் எந்த முக்கால் டெகேட்ட (decade) கூட்டப் போறானோன்னு மனசுக்குள்ள புலம்புறியா! கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன்!” என்று ராஜாவின் தோளில் சென்று சாய்ந்தான்.

 

‘டேய் ராஜா! இவன் நம்மள உடைச்சி ஊத்தி பெப்பர் தூவி ஆம்லெட் போடுறதுக்குள்ள நாம இவனை உரிய இடத்துல டெலிவர் பண்ணிரனும்!’ என்று முடிவு செய்த ராஜா,”மச்சான் வாடா வீட்டுக்கு போவோம்! சிஸ்டர் தேடுவாங்க!” என்று விதுவைக் கிளப்பினான்.

 

“மச்சான் உன் சிஸ்டர் என்னை எதுக்கு டா தேடுவாங்க? உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான்! அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசைமாத்திரு!”

 

“டேய் உன் அழகாற் பொண்டாட்டியைத்தான் டா நான் தங்கச்சி சொன்னேன் சாவடிக்காம வாடா!” என்று பப்பின் வாயிலை அடைந்தான் விதுவை இழுத்துக் கொண்டு.

 

“டேய் மச்சான்! சூட்டிங் நடக்குது போல விளம்பரம் எடுக்காங்க டா வாடா போய் பார்ப்போம்!”

 

“ஷூட்டிங் பெரிய இதாடா நீ பார்த்ததே இல்லையா என்ன? பேசாமா வாடா!”

 

“மச்சான் ப்ளீஸ்டா! சின்ன பிள்ளைல இருந்தே இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும் டா! இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா! ப்ளீஸ்டா!”

 

விதுரனின் கெஞ்சலில் இளகிய ராஜா,”சரி வா!” என்று அவன் காட்டிய திசையில் திரும்பினான். அங்குக் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.

 

“அடப்பாவி டேய்! ஷூட்டிங் இன்னிக்கு நடக்குதோ இல்லையோ நீ பார்க்குற வேலைக்கு நாளைக்கு நமக்கு ஆஃபிஸ்ல ஷூட்டிங் ஆர்டர் கன்பார்ம். உன் நொல்ல கண்ணை வச்சு நல்லா பாரு ஷூட்டிங் எங்கடா நடக்கு அது நம்ம பாஸ் ப்ளே க்ரௌண்ட் மண்டையன் டா! ஒனிடா மண்டையன் வேற டா வா போவோம்.”

 

இருவரும் சென்று கார் நிறுத்துமிடத்தை அடைந்தனர். ராஜா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விதுவை திரும்பிப் பார்த்து அதிர்ந்தான். விதுவோ இருக்கை பிடித்து இழுத்துக் கொண்டே,”அண்டா…‌ கா.. கசம்! அபூ.. கா.. கசம்! திறந்திடு சீசே!! சீ…சே! ஒழுங்கா… திறந்திடு சீ…சே!” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.

 

இருக்கையிலிருந்து எழுந்த ராஜா விதுவின் அருகில் சென்று, “என்னடா பண்ணுற?” என்று வினவினான்.

 

“டேய் பக்கி பார்த்தா தெரியல! கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல! டிஸ்டர்ப் பண்ணாம ஓடிரு!” என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.

 

“மாப்ள! கதவு அல்ரெடி நான் திறந்துட்டேன் டா! நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற! டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா!”

 

அவன் கெஞ்சலை புரியாத பார்வை பார்த்த விதுவோ எதுவும் சொல்லாமல் உள்ளே அமர்ந்து கதவடைத்தான். நிம்மதி பெருமைச்சுடன் ராஜா மறுபுறம் சென்று கதவை திறந்தான். திறக்க முடியவில்லை.

 

“அச்சச்சோ லாக் ஆயிருச்சு போலையே!” என்றவாறே விதுவை பார்த்தான். அவனோ இருக்கையை பின்னுக்குத் தள்ளிக் கண்மூடி சாய்ந்திருந்தான். ‘போச்சு இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரிதான்’ என்று புலம்பியவாறே தனது பாக்கெட்டில் பர்ஸை தேடினான். காரினுள்ளேயே பர்சை வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.

 

“டேய் மாப்ள! விதுரா! மச்சான்! மாமா! அட ராமா! மட்டையாயிட்டானா?” என்று புலம்பிவிட்டு விதுவை எழ வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பல முயற்சிகள் மேற்கொண்டான். பரிதாபமென்னவென்றால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. திடீரென்று,

‘பாசம் வெக்க நேசம் வெக்க

தோழன் உண்டு வாழவைக்க

அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே’

“வாழவைக்கிறானோ இல்லியோ நல்லா புலம்பவிடுறான்”

 

‘உள்ளமட்டும் நானே

என் உசிரக் கூடத்தானே

என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்’

“இவன் எங்க சார் பெர்மிஷன்லாம் கேக்குறான்? அவனாவே என் உயிர வாங்கிட்டு தான் இருக்கான்.”

 

‘என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்’

“சோறு போடுறான் இல்லீங்கல ஆனால் பிரச்சனைகளையும் அனுகுண்டு மாதிரி தூக்கி தலையில போடுறானே! அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே?”என்றவாறு சுற்றிச் சுற்றித் தேடினான். பின் தனது கைப்பேசி தான் அந்த டீஜே என்பதைக் கண்டுகொண்டான். செல்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். ‘தளபதி’ காலிங் எனக் காட்டியது.

 

‘இவன் தான் மட்டையாயிட்டானே அப்புறம் யாரு காலிங் அதுவும் இவன் நம்பர்ல இருந்து…’ என நினைத்தவன் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த விதுரனைப் பார்த்தவுடன் முறைத்தான்.

 

சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்குமாறு சைகை செய்தான். ராஜா அழைப்பை ஏற்றதும்,”நான் தண்ணியடிச்சேன்னு மாதுகுட்டிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தான் லாக்க ரிலீஸ் பண்ணுவேன்!” என்று பேரம் பேசினான் விதுரன்.

 

இப்போது விழுந்து விழுந்து சிரிப்பது ராஜாவின் முறையானது. சத்தமாகச் சிரித்தவாறே,” சத்தியம் தான பண்ணிட்டாப் போச்சு! சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன்!!” என்று வெளியில் கூறி,’ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா!’ என்று மனதிலும் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான். லாக் ரிலிஸ் ஆகியிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.

 

விதுரன் அமைதியாகவே வருவதைப் பார்த்த ராஜா,’அப்பாடா வைப்ரேட்டிங் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு போய்விட்டான். அடுத்து ஃப்ளைட் மோடுக்குப் போனாலும் பரவாயில்லை! சவுண்ட் மோடுக்குப் போகாமல் பார்த்துக்கோ கடவுளே!!’ என்று மனதிற்குள் வேண்டினான்.

 

‘இன்னும் கொஞ்ச பிட் இருக்கிறது ராஜா இல்லாவிட்டால் கதைக்குப் பக்கங்கள் பற்றாக்குறை வந்துசேரும்.. சோ இன்னும் கொஞ்ச நேரம் அவன் டார்ச்சரில் இருக்கக் கடவாய்!’ என்ற கடவுளின் மனமொழி இவனுக்குக் கேட்டதா கேட்கவில்லையா என்று அறியுமுன்னே மௌனம் கலைத்தான் விதுரன்.

 

“டேய் வண்டியை நேராப் போலிஸ் ஸ்டேசன் விடுடா! ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கவேண்டும்!”

 

“போலிஸ் கம்ப்ளைன்டா யார் மேலடா?” என்று பதறினான் ராஜா.

 

“உனக்குத் தெரியாதா மச்சி! குற்றம் செய்றவங்கள விடக் குற்றம் செய்ய தூண்டுறவங்களுக்கு தான் அதிக தண்டனை. குடிக்கிறதும் ஒரு குற்றம் தான அதான்…”

 

“அது…னால…”

 

“அதுனால அந்த தன்யா மேல் ஒரு குற்றம் செய்யத் தூண்டினாள் அப்படியென்று ஒரு கம்ப்ளைன்ட்ட போடுவோம் மச்சி!”

 

“தன்யா மேலையா அவள் நமது டீமில் கூட இல்லையே! ஆகாஷ் டீம்ல தான இருக்கா! அவ எதற்கு தூண்டினா உன்னை?” என்று சந்தேகமாகக் கேட்டான் ராஜா‌.

 

“டேய் லூசு! அறிவே இல்லையா உனக்கெல்லாம்! மூளையை என்ன முனியாண்டி விலாஸ்ல வித்துட்டியா??”

 

“ஆத்தாடி! மூலையை முனியாண்டி விலாஸ்லயா? டேய் என்னடா இப்படி அபசகுனமா பேசுற!”

 

“அப்புறம் என்னடா! நான் அந்த தான்யாவை சொல்லுறேன்! நீ இந்த தான்யாவை சொல்லுற! எருமை மாட்டுக்கிட்ட ஏ பி சி டி சொன்ன மாதிரி இருக்கு உன்கிட்ட சொல்லுறது!”

 

“மச்சி என்னை டேமேஜ் பண்ணது போதும்! எந்த தான்யா எதுக்கு கம்ப்ளைன்ட் அதை முதலில் சொல்லு.”

 

“அதான் மச்சி நம்ம சூர்யா இருக்கான்ல?”

 

“மச்சி எந்த சூர்யாடா?”

 

“டேய் அதான் அந்த ஃபோன் கம்பனில வேலை பாக்குறான்ல!”

 

‘ஐயோ எந்த சூர்யானு தெரிலையே! குத்துமதிப்பா ஊம் போடுவோம் இல்லாட்டி சிறு மூளையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டியா! பெருமூளையை பேரிச்சம்பழத்துக்கு போட்டியானு கேப்பான்!’ என்று நினைத்த ராஜா,”ம்ம்ம்…” ஆமாம் சாமி போட ஆரம்பித்தான்.

 

“அவன் ஒரு காலேஜ் பொண்ணு கூட பிரச்சினை ஆகி கடைசில அவளையே லவ் பண்ணிட்டான். அந்த பொண்ணு பேருகூட.. ம்ம்ம்!”

 

“ரெஜினா!” என்றான் ராஜா எதையோ புரிந்து கொண்ட பாவனையில். (நீங்க கெஸ் பண்ணது ரொம்ப கரெக்ட் ராஜா ராணி படமே தான்😉)

 

“ம்ம் அவ தான். அவ ஃப்ரண்ட் தான் தான்யா.”

 

“தான்யா தெரியுதுடா. பட் கம்ப்ளைன்ட் எதுக்கு?”

 

“எதுக்கா? அவதான மச்சான் ஷாட் க்ளாஸ்ல எதோ ஒரு சரக்க கப் கப் னு அடிச்சு அடுக்குவா. அந்த மாதிரி க்ளாஸ்ல எதாச்சும் குடிக்இனும்னு ஆசையா இருக்கும். அதான் பீர் பாட்டில எடுக்காமல் அந்த முக்காப்படி முகேஷோட பட்டாணி பெக்க எடுத்து குடிச்சுட்டேன்.”

 

“அடப்பாவி! தெரிஞ்சே தான் குடிச்சியா நீ! அது பட்டியால பெக் பட்டாணி இல்லை. சோ உங்களைச் சரக்கடிக்க தூண்டுன தான்யா மேல் கம்ப்ளைன்ட் பண்ணப் போற!”

 

“ஆமாடா!”

 

“சரி டா இறங்கு!”

 

“அதுக்குள்ள ஸ்டேசன் வந்துருச்சா? வாடா இன்றைக்குக் கண்டிப்பாக கம்ப்ளைன் பண்ணவேண்டும்!” என்றபடியே கார்க் கதவைத் திறந்து இறங்கினான்.

 

“நீ என்ன கம்ப்ளைன் பண்ணாலும் யாரை கம்ப்ளைன் பண்ணாலும் இந்த ஸ்டேசனில் உனக்கு மட்டும் தான் டா அரெஸ்ட் ப்ரொடெஸ்ட் பெட்ரெஸ்ட் எல்லாம்!” என்றான் ராஜா நக்கலாக.

 

“அப்படி என்னடா புது ஸ்டேசன்?” என்று கேட்டவாறே வெளியே கண்களைச் சுழற்றி பார்த்தான்,”டேய்! மச்சான் இந்த ஸ்டேசன் பாரேன் அப்படியே எங்கள் ஃப்ளாட் மாதிரியே இருக்கு!” என்று ஆச்சரியப்பட்டான்.

 

“கொஞ்ச நேரத்தில் பாரு இன்ஸ்பெக்டர் அம்மா வருவாங்க! அவங்களை பாரு உனக்கு ஷாக்கே அடிக்கும்.”

 

“என்னது??”

 

“இல்லைடா ஷாக்கிங் ஸர்ப்ரைஸா இருக்கும்னு சொல்ல வந்தேன்..” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான். லிப்டில் ஏறி அவன் ஃப்ளாட் இருக்கும் தலத்தின் எண்ணை அழுத்தினர்.

 

“இங்க பாருடா லிஃப்ட் கூட எங்க அபார்ட்மெண்ட் லிஃப்ட் மாதிரியே இருக்கு. எதுக்கு டா ஸ்டேசன்ல லிஃப்ட் வச்சிருக்காங்க?”

 

“அது… வந்து மச்சான்.. அக்யூஸ்ட் தப்பித்து போனாங்கனா படியிலென்றால் போலிஸால துரத்திப் பிடிக்க முடியலையாம்! அதான் லிஃப்ட். லிஃப்டில் தப்பிச்சா லிஃப்ட லாக் பண்ணிறலாம்ல அதான் டா.”

 

“ஓ! பரவாயில்லையே போலீஸ் எல்லாம் முன்னேறிட்டாங்க போல! நல்ல நல்ல திட்டம் செயல்படுத்துறாங்க.”

 

“ம்ம்ம்” என்று அவனை இழுத்துக்கொண்டு அவன் வீட்டு வாயிலில் நின்று அழைப்பு மணியை அடித்தான். சீலா வந்து கதவைத் திறந்தார். விது நின்ற நிலையைப் பார்த்து வருந்தினார். மாது இதைப் பார்த்தாள் மிகவும் உடைந்து விடுவாள் என்று நினைத்தவர். அவனை அவள் வருமுன்னரே தன் அறையில் படுக்க வைக்க அழைத்துச் சென்றார்.

 

யாரின் கெட்ட நேரமோ! மாது மதுவிற்குப் பால் எடுத்துப்போக அறையிலிருந்து வெளியே வந்தவள் இந்த காட்சியைக் கண்டு பதறினாள். அவள் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றே நினைத்து அவர்களிடம் விரைந்து வந்தாள்.

 

“மாமா! என்னாச்சு மாமா?” என்று கேட்டபடியே வந்தவள் அவன் முகத்தைப் பார்த்ததுமே நடந்ததை அறிந்துகொண்டாள். எதிலோ தோற்றுப்போன உணர்வு அவளுள் எழுந்தது.

 

“எந்த சோகத்தை மறக்க இப்போ இவர் குடிச்சாராம்மா?”

 

“இல்லமா..” என்று சூழ்நிலையை விளக்க வந்த ராஜாவை மாது விது இருவரும் ஒருசேரத் தடுத்தனர். தன் நிலையை மனைவியிடம் புரியவைக்க மூன்றாம் நபரின் தலையீட்டை அவன் விரும்பவில்லை. தன்னவனை தன்னிடம் மூன்றாம் நபர் நியாயப் படுத்துவதை அவள் மனம் ஏற்கவில்லை.

 

“சரிடா மச்சான் நான் கிளம்புகிறேன்! பார்த்துக்கோங்க மா! வரேன் சிஷ்டர்!” என்று விது, சீலா, மாது மூவரிடமும் விடைபெற்றுச் சென்றான் ராஜா.

 

இருவரும் மற்றவரைப் பார்த்தவாறு நின்றனர். அவன் கண்களில் குற்றவுணர்வு பொங்கியதென்றால் இவள் கண்களில் ஏமாற்றம் கண்ணீராய் வடிந்தது. இவர்கள் நிலையை உணர்ந்த சீலா இருவரையும் கலைத்தார்.

 

“மாது! நீ போ பாப்பாவைப் பார்ப் போ! விது வாடா இன்னைக்கு என் அறையில் நீ படு நான் மாது கூட படுத்துக்குறேன்.” அவனை அழைத்துச் சென்று தன்னறையில் படுக்க வைத்தார்.

 

பின் மாது வை தேடி அவள் அறைக்குள் நுழையும்போது மாதுவின் கண்களில் கண்ணீர் தன் அணையை உடைக்க காத்திருந்தது. அவள் கைகளை விரைவாகச் சென்று பற்றி அழுத்திக் கொடுத்தார். அவள் அவரை என்னவென்று பார்த்தாள். அவரும் கண்களாலே மதுராவை சுட்டிக்காட்டினார்.

 

“மது பேபி! நீ போய் அப்பாவை பார்த்துக்க டா! என் ரூம்ல படுத்திருக்கிறான். அவனுக்கு ஃபீவர் சோ தொந்தரவு பண்ணாமல் பார். ஓகேவா?”

 

“டன்! பைம்மா. பை கிரானி.” என்று ஓடினாள் நம் மதுக் குட்டி.

 

கதவைத் திறந்து உள்ளே தந்தையை எட்டிப்பார்த்தாள் மதுரா. அவனோ தன் பர்சில் மறைத்து வைத்திருந்த தன்னவளின் புகைப் படத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான்.

 

“டாடி அது யாரு?” என்று அவனிடம் சென்றாள்.

 

மகளை எதிர்பார்க்காத விதுரன் பதற்றமாக தன்னவளின் புகைப் படத்தை மறைத்து,”யாருமில்லை டா க்யூட்டி.” என்றான்.

 

“டாடி! நான் பார்த்தேன் ஃபோட்டோல யாரோ ஒரு லேடி இருந்தாங்க காட்டுங்க.”

 

மகளைப் பலவகையில் சமாளித்தும் பயனின்றி கடைசியாக அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.

 

“இவுங்க..” என்ற மகளின் யோசனையைத் தடுத்தது விதுரனின் பதில்,”உங்க அம்மா!”. பின்னர் மகளை சமாதானப்படுத்தித் தூங்க வைத்து தானும் தூங்கினான் விதுரன். அன்றே நடந்ததை வரிசை மாறாமல் தன் நண்பனிடம் கூறினான்.

 

ஆனால் அவன் தூங்குவதற்காகவே காத்திருந்த மது எழுந்து அவன் பர்சில் வைத்த தன் தாயின் புகைப்படத்தை எடுத்து தனது ட்ராயிங் டைரியில் மறைத்து வைத்ததோ மறுநாள் மாதுவிடம் அதைக் காட்டியதோ அவனறியவில்லை.

 

அவன் கூறியதைக் கேட்ட ராஜா,”மச்சான்! எனக்காகத் தான் குடிச்ச, இருந்தாலும் இனிமே நீ குடிப்ப!?” என்று கேட்டுச் சிரித்தான். அதில் எரிச்சலடைந்தாலும் தன் தலையை இல்லையென்பது போல் ஆட்டோ ஆட்டென்று ஆட்டினான்.

🌼🌼🌼🌼🌼🌼🌼

அன்பில் நிறைந்து சொக்கரும் மீனாட்சியும் ஆண்ட மாமதுரைச் சீமை. அதைச் சுற்றிப் பல குக்கிராமங்கள் எழிலும் பொழிலும் கொஞ்ச நிமிர்ந்து நின்றன. அப்படி ஒரு கிராமம் தான் பூம்பொழில்.(யாரும் இந்த ஊரை மதுரையில் தேடிராதீங்கோ😉). விவசாயத்தை நம்பி வாழும் மக்களைப் பெற்ற ஊர். குழந்தைவேலு லட்சுமியம்மாள் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான பதினைந்து ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கரில் மாந்தோப்பும் ஐந்து ஏக்கரில் தென்னையும் வளர்த்து தோட்டங்களாய் உருவாக்கி மீதி ஐந்து ஏக்கரில் பயிரிட்டு விவசாயம் செய்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் சீதா, மகன் விதுரன்.

 

குழந்தைவேலு ஐயாவிற்கு விவசாயம் செய்வது வெல்லம் என்றால் கதை கேட்பதோ கற்கண்டு போல். வானொலியில் வரும் சொற்பொழிவுகள் முக்கியமாகக் கதைகள் கேட்பது அவரது தினசரி பழக்கங்களில் ஒன்று. அப்படிக் கதை கேட்டதில் அவரை மிகவும் பாதித்த இருவர் சீதா(இராமாயணம்), விதுரன்(மகாபாரதம்). ஆகையால் தன் பிள்ளைச் செல்வங்களுக்கு அந்த பெயர்களையே சூட்டினார்.

 

குழந்தைகள் இருவரும் தான் அவர்களின் உலகம்‌. ஆனாலும் விதுரனைச் சிறுவயதிலேயே வெளியூர் பள்ளியில் சேர்த்து விடுதியிலேயே அவனை வளரவிட்டார். அவனைப் பிரிந்து வாழும் வேதனையைத் தெரிந்தே ஏற்றனர் பெற்றோர் இருவரும். அதற்கு முக்கிய காரணம் சீதாவிற்கும் விதுரனிற்கும் உள்ள வயது வித்தியாசமே. ஆம்! சீதாவிற்கும் விதுரனிற்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம்.

 

லட்சுமியம்மாளுக்கு சீதா பிறந்த பின் இரண்டு குழந்தைகள் இறந்தே பிறந்தன. அதன் பிறகு அவர் கருத்தரிக்கவேயில்லை. சீதா ஆறாம் வகுப்பு வந்ததால் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். மகளைப் பள்ளிக்குத் தினமும் லட்சுமியம்மாவே சென்று அழைத்து வருவார். அப்படி ஒரு நாள் அழைத்து வந்தவர் மயக்கம் வருவது போல் இருக்கவும் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டே அழைத்து வந்தார் மகளை. இதை தன் கணவரிடம் கூற மறந்துவிட்டார். ஆனால் சீதா தந்தை வீட்டிற்கு வந்ததும் வராததுமாகத் தாயின் உடல்நிலையைப் பற்றிக் கூற, உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தார் குழந்தைவேலு.

 

மருத்துவச்சி வந்து பார்த்து விட்டுப் புன்னகை முகமாக, “லட்சுமி! மறுபடியும் உண்டாயிருக்குத் தம்பி. பக்குவமா பார்த்துக்கோங்க!” என்று கூறிச் சென்றார்.

 

மருத்துவச்சி கூறிய செய்தியைக் கேட்டுச் சந்தோசமடைந்த குழந்தைவேலு அவருக்குப் பணமும் நெல்லும் காய்கறிகளும் கொடுத்தனுப்பினார். மனைவியைக் காணச் சென்றவர் அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார். தான் மறுமுறை தாயாகப் போவதை அறிந்து முதலில் மகிழ்ந்த லட்சுமியம்மா பின்னர் தான் இரண்டு முறை கருவுற்று குழந்தை இறந்தே பிறந்ததை நினைத்து இந்த குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அழத்தொடங்கினார்.

 

மனைவியின் முகத்தை வைத்தே அவர் மனதில் உள்ளதை அறிந்த குழந்தைவேலு, அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார். பின்பு அவரிடம்,”ஏம்புள்ள இப்படி அழுவனும்? சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுது வடிஞ்சு வயித்துக்குள்ளாற இருக்குத புள்ளையவும் வெளியாற இருக்குத புள்ளையவும் மிரளவைக்குறவ! கண்ணைத் துடைச்சிபுட்டு சிரிப் புள்ள. சீதா கண்ணு பயந்துகிடுச்சு பாரு.”

 

அவர் கூறிய பின்னர் தான் சீதாவைத் தேடினார் லட்சும்மா(லட்சுமியம்மா டைப் பண்ணக் கஷ்டமா இருக்குதுப்பா!🙄). அந்த அறையின் மரக்கதவின் குமிழைத் திருகிக்கொண்டு உம்மென்று நின்றிருந்தாள். அவளைக் கண்டவுடன் வேதனைகள் அனைத்தும் தூரம் சென்றது.

 

“ஏன் ஆத்தா! எப்பப் பிடிச்சு இப்படி உம்மனாம் மூஞ்சியா மாறுனாவ? இது என் தங்கமயிலு இல்லியே வேற புள்ளை போலையே! நான்பெத்த வைரம் சிரிச்சிட்டே பம்பரமா சுத்தி சுத்தி வருமே! நீ யாரு புள்ளத்தா? என் குட்டிக் கிளியைப் பார்த்தியாத்தா?”

 

அவர் கூறியதைக் கேட்ட குட்டி சீதா அவரை நோக்கிச் சிட்டாய் பறந்து வந்து அவரை கட்டிக்கொண்டு,”ஏம்மா அழுறீங்க? உங்க வயித்துக்குள்ள இருக்குற தம்பி பயந்துக்கப் போறான்! பாவம்மா தம்பி பையன். இனிமே இப்படி அழாதீங்க சொல்லிட்டேன். இல்லாட்டிக்கா உங்களுக்கு அழுமூஞ்சினு பட்ட பேரு வச்சு வீட்டு சுவத்துல எழுதி வைப்பேன்” என்று வம்பிழுத்தாள் சின்னவள்.

 

முதலில் அவளைப் பார்த்து முறைத்த லச்சும்மா, பின்னர் அவளை அணைத்தபடியே,”ஆத்தா மீனாட்சி ஏம்புள்ளைய ஒருவழியா கண்டுகிட்டேன். அந்த உம்மனாம் மூஞ்சி யாருனும் காட்டிக் கொடுத்துறு ஆத்தா!” என்றார் நக்கலுடன்.

 

அதில் சிணுங்கியவாறே,” ம்ம்மா..ஆ..!” என்று அவரை அணைத்துக் கொண்டாள். லச்சும்மாவும் அவளை அணைத்து முத்தமழை பொழிந்தார். தன் மனைவி மற்றும் மகள் நடத்திய பாச விளையாட்டில் கண் கலங்கிய வேலு (சேம் சோம்பேறித்தனம் 😜) இறைவனிடம் அவர்கள் குடும்பம் என்றும் சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

 

லச்சும்மா வயிற்றில் நம் விதுரன் மூன்றுமாதக் குழந்தையாக வளர்ந்திருந்தான். வயலில் வேலை செய்வோரை மேற்பார்வையிட்டு வீடு வந்தார். அப்போது அவர் அங்குக் கண்ட விசயத்தில் அவர் கண்கள் கோபத்தில் சிவந்தது. லச்சும்மா வீட்டின் நடவிலிருந்த வானவெளியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க, அவரின் அக்கா பவளமோ அவரை பேச்சிலேயே சித்ரவதை செய்து கொண்டிருந்தார்.

 

“இது என்னடீ புதுக் கூத்தா இருக்கு… மக இன்னும் நாளே வருசத்துல குத்த வச்சுருவா! மறுமாசமே அவளுக்கு எவனையாச்சு புடிச்சு கட்டி வச்சோம்னா அவ மரு வருசம் புள்ள பெத்துருவா! இப்பப் போய் ஆத்தா வைத்த தள்ளிக்கிட்டு நின்னா என் தம்பி குடும்ப மானம் சந்திச் சிரிச்சுரும்… இப்படி அவனை நாலு பயலுக நக்கலா பேசத்தான் நல்லூர் சீமையில இருந்து உன்னக் நலங்கு வச்சு கூட்டியாந்தோமா?”

 

“அக்கா..ஆ!” என்று கத்தினார் வேலு.

 

“எய்யா! வேலு இதென்னய்யா இப்படி ஒரு சங்கடம் உனக்கு. இப்படி நாலு பேரு முன்னாடி தலை குனியத்தேன் நாங்க உன்ன ராசாவாட்டம் வளத்தோமா?”

 

“நாலு பேரு முன்னாடி தலை குனியிற மாதிரி சோலி ஒண்ணும் இங்க நடக்கல! எங்க வீட்டுக்கு இன்னோரு புது உசுரு வரப்போவுது! என் பொஞ்சாதி சதையில முளைச்சு என் ரத்தத்துல பூத்து என் மகள மாதிரியே சிரிக்கப் போற இன்னோர் பூ! அத கொண்டாடி சீராட்டாட்டிக் கூட பரவாயில்லை… அசிங்கப் படுத்தி தூத்தாத!”

 

“அதில்லய்யா…” என்று தொடங்கிய பவளத்தைத் தடுத்தது வேலுவின் கர்ஜனைக் குரல்.

 

“இன்னும் நா பேசி முடிக்கலைக்கா! நீ வந்து ஒப்பாரி வைக்குரியே உன் தம்பி என்ன செத்தா போயிட்டேன்! நான் இன்னொரு தடவை அப்பாவாயிட்டேன்! நான் செத்ததுக்கப்பறம் வந்து ஒப்பாரி வச்சிக்க. இப்போ போயி வேலையைப் பாரு!”

 

அவர் பேச்சில் அரண்டு போன பவளம் கண்களாலேயே இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார். லச்சும்மாவோ பதறி விரைந்து வந்து,”என்சாமி எதுக்குய்யா அபசகுனமா பேசுறீக! அத்தாச்சி ஏதோ கோவத்துல பேசுறாக, அதுக்கு இப்படி பேசனுமா?” என்று கண்களில் நீரோடு கணவனை அணைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் கூறி அமைதியடைந்தனர்.

 

இவ்வாறு கலவையான சூழலில் வாழ்க்கை நகர்ந்தது அவர்களுக்கு. விதுரன் பிறந்ததை ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடினார். பெற்றோரின் பாசத்திலும் தமக்கையின் அன்பிலும் இனிய சூழலில் வளர்ந்தான் விதுரன். ஊராரின் ஏச்சுகளும் பேச்சுக்களும் தங்கள் குடும்பத்தை அண்டாமலிருக்க தங்கள் தோட்டத்திற்குள்ளேயே வீடு கட்டி குடியேறினர்.

 

விதுரனிற்கு மூன்று வயதிருக்கையில் பள்ளிக்குச் சென்ற சீதா உம்மென்று வந்தாள். வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் விதுரனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இரவு உணவு முடிந்ததும் தன் முடிவைப் பெற்றவரிடம் கூறி அவர்களை அதிரவைத்தாள் சீதா.

 

“ப்பா.. நான் இனிமே பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்ப்பா!”

 

அவள் கூற்றில் அதிர்ந்த லச்சும்மா,”என்னடீ இது பேச்சு பத்தாங்கிளாஸ் பரீட்சையை அடுத்த மாசம் வச்சுகிட்டு!” என்று மகளை அதட்டினார்.

 

அவரை பார்த்த வேலு அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு மகளிடம்,”எதுனாலம்மா இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்ட? வாத்தியார் யாரும் வஞ்சாய்ங்களா? இல்ல கூட்டாளிகள் கூட சண்டையா? என்ன காரணம்னு சொல்லுடா!” என்று வினவினார்.

 

“அப்பா பள்ளிக்கூடத்துல கூட படிக்கிறவளுங்க என்கிட்டவந்து என்னடீ உங்க தம்பிக்கு ஆயா வேலை பார்த்துட்டே படிக்கப் போறியா?னு கேக்கறாளுகப்பா.. அவளுங்க தங்கச்சி தம்பிலாம் எங்க பள்ளிக்கூடத்திலேயே  சின்ன கிளாஸ் படிக்குறாய்ங்கப்பா.‌.. நம்பத் தம்பி மட்டும் குழந்தையா இருக்கான்னு என்னிய ஆயான்னு ஏடாசி பண்ணுதாகப்பா.. ” என்று சிணுங்கினாள் சீதா.

 

மகளைச் சமாதானப்படுத்த வேலு முயல்கையில், “இதுக்குத்தான் சொன்னேன் இந்த புள்ளய பெத்துக்குற வேணாமுன்னு யாரு கேட்டீக! புள்ள எப்படி வெக்கப்படுது பாருங்க! இப்படி பச்சை மனச வெசனப்பட விட்டுடீகளே!” என்றபடியே வந்தார் வேலுவின் தமக்கை பவளம்.

 

“இதிலென்ன ஐயித்த வெக்கமும் வெசனமும் பட? என் தம்பியை பார்த்து கிட இந்த பாழாய்ப்போன படிப்பு தடையா இருக்கு.. அதான் படிப்ப விடலாம்னு தோனுச்சு!” என்று தன் அத்தையை அதிர வைத்தாள்.

 

மகள் பள்ளிப் படிப்பை விட முடிவெடுத்தது வருத்தமளித்தாலும் அவளது சகோதரப் பாசம் அவர் நெஞ்சில் அளப்பரிய ஆனந்தத்தை வாரி இறைத்தது. மகளின் பக்குவப்பட்ட மனதை நினைத்து அந்த பெற்றோர் பெருமிதம் கொண்டனர். இதே சூழலில் தன் மகனை நினைத்த அந்த தந்தையுள்ளம் பிஞ்சு மனதில் வெறுப்பும் பேதைமையும் வராதிருக்க அவனை உறவுகளை விட்டுத் தள்ளி வளர்க்க முடிவு செய்தார்.

 

விதுரனிற்கு நான்கு வயதிலிருந்தே விடுதி வாசம்தான். அவன் மனதில் குடும்பம் என்ற பிடிப்பும் பாசமும் விட்டுப் போகுமோ என்று பயந்த லச்சும்மா, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று அவனைப் பார்த்துக் கொஞ்சி விட்டு வருவார். இப்படி இருக்கையில் ஒரு நாள் சீதா வயதிற்கு வந்தாள். அவளுக்குச் சீரும் சிறப்புமாய் ஊரே வியக்கும் அளவிற்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார் லாபேஸ்வரன், லச்சும்மாவின் ஒன்றுவிட்ட தம்பி. மறுமாதமே சீதாவைப் பரிசம் போட்டனர் லாபேஸ்வரன் வீட்டினர்.

 

சீதாவைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினார் லாபேஸ்வரன். அவள் தோழிகளிடம் பேசும்போதெல்லாம், “தாய்மாமனென்றால் சும்மாவா! அதான் உன்னை இந்த தாங்கு தாங்குறார். நீ ரொம்ப குடுத்து வச்சவ புள்ள!” என்று கூறி பெருமூச்செறிந்தனர். இதனால் சீதாவின் மனதில் ஓர் ஆசை வேரூன்றி வளர்ந்ததை யாரும் அறியவில்லை. ஆம் தனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்றும் அவளை விதுரனிற்குத்தான் மணமுடிக்க வேண்டும் என்றும் பிள்ளை பெருமுன்னரே தீர்மானம் செய்தாள் சீதா.

 

மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் திருமணம் நடந்தாள் தாலி பெருக்கி கட்ட தாய் மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்துக் கட்டுவதே வழக்கம். சீதாவையும் தாலி பெருக்கி கட்ட அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது தனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்றும் அப்படிப் பிறந்தாள் அன்னை மீனாட்சியின் பெயரையே வைப்பதாகவும் மனமுருகி வேண்டினார்.

 

அடுத்த பத்தாம் மாதம் அவள் கைகளில் தவழ்ந்தாள் மாதங்கி. அன்று மீனாட்சி தாயிடம் வேண்டியபடியே தனக்கு மகள் பிறக்கவும் அந்த இராச மாதங்கியின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினாள். விதுரனோ அந்த பிஞ்சு கைகளையும் கால்களையும் கொஞ்சிக்கொண்டே திரிந்தான். அவனுக்குப் பரீட்சை விடுமுறையும் அமையக் குதூகலமாக விளையாடித் திரிந்தான்.

 

பத்து வருடங்களில் அவர்கள் குடும்பத்தில் சந்தோஷத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமேயில்லாமல் நாட்கள் நகர்ந்தது. அந்த கருப்பு நாள் அவர்கள் வாழ்கையில் வரும் வரை. லாபேஸ்வரன் விவசாயம் செய்தாலும் அவருக்குக் கட்சியில் அதிக ஈடுபாடு இருந்தது. அவர் அவ்வப்போது கட்சி பணியாற்றியும் வந்தார்.

 

அவர் தொண்டில் குளிர்ந்த கட்சி மேலிடம் அவருக்குப் பதவி வழங்கத் தீர்மானித்து அழைப்பிதழ் விடுத்தது. அதனை தன் மாமனும் மைத்துனருமான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று கூறி கலந்தாலோசித்து இருவரும் சேர்ந்து இன்னும் சில கட்சித் தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு காட்சி தலைமையகம் சென்றனர்.

 

லாபேஸ்வரனுக்கு மாவட்ட நிர்வாகி பதவியை அளித்தது அக்கட்சி. லாபேஸ்வரனுக்கும் குழந்தை வேலுவிற்கும் இருப்புக் கொள்ளவில்லை சந்தோசத்தில். வீடு திரும்பும் வழியில் அனைவரும் மது விருந்து கேட்டனர். லாபேஸ்வரனோ தயக்கமாகக் குழந்தைவேலுவை பார்த்தார். அளவிலா மகிழ்ச்சியிலிருந்த குழந்தைவேலுவும் சம்மதம் தந்தார். அனைவரும் மது அருந்தினர். குழந்தைவேலு மதுப் பழக்கம் இல்லாவிடினும் மருமகனுக்காகச் சிறிதளவு மட்டும் அருந்தினார்.

🌼🌼🌼🌼🌼🌼

 

அனைவரும் மது விருந்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப வண்டியில் ஏறினர். குழந்தைவேலு முன்னிருக்கையில் அமர மற்றவர் பின்னால் அமர லாபேஸ்வரன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியைக் கிளப்பினார். என்னதான் நாம் வாகனத்தை நன்றாக விதிமுறைகளை கடைப்பிடித்து உபயோகித்தாலும் எதிரே வரும் வண்டிக்காரனும் நல்லமுறையில் வந்தால்தான் பிரச்சினை இல்லை.

 

இங்கோ இவரும் விதிமுறைகளை மறந்து சிறிதளவேயாயினும் மது அருந்தி வண்டியோட்டினர். எதிரே வந்தவனும் கவனமின்றி வண்டியோட்டியதில் இரண்டு வண்டியும் மோதிக் கவிழ்ந்தது. குழந்தைவேலு வயதானதாலும் பழக்கமில்லாத மதுவைக் குடித்ததாலும் இரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் இறைவனடி சேர்ந்தார்.

 

லாபேஸ்வரனுக்கு பலமாக பின் மண்டையில் அடிபட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை பண்ண வேண்டும். ஆனால் அவர் அதிகமாக மது அருந்தியிருந்ததால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. நேரம் சென்று செய்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் தன் கூட்டை விட்டுப் பறந்தது. செய்தி கிடைத்து ஓடிவந்தது இரு குடும்பமும். தன் கணவனின் இழப்பைத் தாங்க முடியாத அந்த இளகிய இதயம்(லச்சும்மா) தன் துடிப்பையும் நிறுத்தியது.

 

விதுரனே மூவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்தான். பத்து வயதான மாதங்கி என்னும் சுட்டிப்பெண், தொடர்ச்சியான இழப்புகளில் மனமுடைந்து அமைதிப் பாவையானாள். விதுரன் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும் அக்காவிடம் சொல்லிக் கொண்டு பள்ளி விடுதிக்குத் திரும்பினான்.

 

அவனைத் தடுக்க நினைத்த சீதாவும் அவனுக்கு இடமாற்றம் தேவை என்று எண்ணி வழியனுப்பி வைத்தார். அவன் உடனே ஊருக்குப் புறப்பட்டதே தன் தமக்கையின் இந்த கோலத்தைப் பார்க்க விரும்பாமல் தான். அவரை அப்படிப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவன் இதயத்தை யாரோ ஊசி வைத்துக் குத்தியது போல் வலித்தது. பெற்றோரின் பிரிவையே தாங்க முடியாமல் தத்தளித்த அந்த பதினைந்து வயது வாலிபன் தன் தமக்கையின் விதவை கோலத்தில் மறித்துப்போனான். அவளோடு துள்ளித் திரிந்து விளையாடிய குழந்தைப்பருவ நினைவுகள் அவன் இமைகளை நனைத்தன.

 

தன் தமக்கைக்குப் பிடிக்குமெனப் பக்கத்துத் தோட்டத்தில் திருட்டுத்தனமாகத் தான் பறித்து வந்த மல்லிகையும், கோவில் திருவிழாவில் அவள் ஆசையாய் வாங்கும் வண்ண வண்ண சாந்துப் பொட்டுகளும், ஆடைகளுக்கு ஒத்துப்போகும் நிறங்களில் கைகளில் சிணுங்கும் கண்ணாடி வளையல்களும் அவன் நினைவுகளில் அணிவகுத்தன. தன் கண்ணீர் கொண்டு அதனை அவன் நினைவுகளிலிருந்து அழித்தான்.

 

கிராமத்திலோ அமைதியாகத் திண்ணையில் அமர்ந்து தன் சிந்தனையில் மூழ்கிய சீதா தாய் தந்தை கணவன் மூவரும் தன்னை விட்டுச் சென்றதை நினைத்து வருந்தியவர் தன் தம்பியை மகளையும் நினைத்துத் தெளிந்தார். அவசரமாக எழுந்தவர் தன் மகளைத் தேடி அவளறைக்குச் சென்றார். அவள் நிலையைப் பார்த்து சீதாவின் பெற்ற வயிறு பற்றியெரிந்தது. ஆம் ஒருநிமிடம் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த அவள் கால்கள் இப்போது நிற்கவே தெம்பில்லாமல் மெலிந்திருந்தது. பாலும் தயிரும் உண்டுக் குண்டுக் குண்டு குழந்தை கண்ணங்கள் சாப்பாட்டையே பார்க்காதது போல் வறண்டு ஒட்டிப்போய் இருந்தது.

 

மகளின் இத்தகைய நிலைக்குத் தான் அவளைக் கவனிக்காமல் விட்டதும் ஒரு காரணம் என்று புரிந்து தன்னையே ஏசினார். ஒரு முடிவெடுத்தவராக அவளருகில் சென்று மாதுவை எழுப்பினார்.

 

“மாது! எழுந்திரு டா கண்ணம்மா! வா சாப்பிடலாம். உனக்கு பிடிச்ச மாதிரி முறுகலா தோசை ஊத்தித் தாரேன்! காரச்சட்னி வச்சிருக்கேன்.”

 

“ம்ம்ம் எனக்கு பசிக்கலைமா!”

 

“பசிக்கலையா! சரி அப்போ நீ சாப்பிட்டதும் குடிப்பியேனு கருப்பட்டி பால் கலந்து வச்சேன். நானே குடிச்சுகுறேன்!” என்று கிளம்பினார்.

 

அவர் கையை பிடித்துத் தடுத்த மாது,”உனக்குத் தான் கருப்பட்டி பால் பிடிக்காதுல்ல… எப்படிக் குடிப்ப? இரு நானே வந்து குடிக்கிறேன்…” என்று எழுந்தாள் மாது.

 

மகளின் செயலில் வந்த சிரிப்பை அடக்கிய சீதா,”சாப்பிடாமல் கருப்பட்டி பால் குடிக்க கூடாதே!” என்று அவளைச் சீண்டினார்.

 

“அப்போ ஒரு முறுகல் தோசை மட்டும் போதும்மா!” என்று செல்லம் கொஞ்சினாள்.

 

“சரிடா! வா!” என்று மகளை உண்ண அழைத்துச் சென்றார்.

 

நாட்கள் நகர நகர அவர்கள் மனதிலிருந்த சோகமும் நகர்ந்து சென்று ஓர் ஓரமாய் மறைந்தது. விதுரன் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பாடத்தில் சேர்ந்து இரண்டு வருடமும் முதல்நிலையில் தேர்ச்சி பெற்று மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தான். பத்தாம் வகுப்பு பரிச்சையில் தத்தி பித்தி தேறினாள் மாது. பதினோராம் வகுப்பு சேராமல் அடம்பிடித்தவளை விதுரனே நேரில் வந்து கெஞ்சிக் கூத்தாடி பள்ளியில் சேர்த்துவிட்டான்.

 

சீதா தங்கள் நிலத்தில் நடக்கும் விவசாயத்தைத் தானே முன்னின்று பார்த்துக்கொண்டார். தந்தையின் தென்னந்தோப்பையும் மாந்தோப்பையும் மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தந்தையின் விவசாய நிலத்தை நம்பிக்கையான ஒருவருக்குக் குத்தகைக்குக் கொடுத்தார்.

 

விதுரன் மூன்றாவது வருடத்தின் முதல் பருவத்தேர்வு முடிந்து தமக்கை வீட்டிற்குச் சென்ற நேரம் மாதங்கி பெரிய பெண்ணானாள். தாய் மாமன் சீராக நகைகளும் தந்தையின் தோட்டத்தில் பாதியையும் அவளுக்குக் கொடுத்து அமர்க்களப் படுத்தினான்.

 

உறவினர்களுக்கும் ஊரார்களுக்கும் விருந்தே ஒரு வாரம் உபசரித்தனர். சடங்கு சுற்றும்போது தண்ணீர் ஊற்றி சீர் கொடுக்கையில் திடீரென வந்த சீதா அவன் வாங்கியிருந்த நகைப் பெட்டியோடு மற்றொரு பெட்டியையும் வைத்துக் கொடுத்தார். விதுரன் கேள்வியாகப் பார்த்தான்.

 

“நம்ப பரம்பரை நகை.. அம்மா மாதுக்குட்டிக்கு இத அவங்க கையால் கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டாங்க! நம்ப குடுத்துவச்சது அவ்வளவுதான்!” என்று பெருமூச்செறிந்தார்.

 

“அக்கா இப்ப என்ன? அம்மா அப்பா மாமா மூனுபேரும் சாமியா நின்னு பிள்ளையை ஆசீர்வாதம் பண்ணுவாங்க! தேவையில்லாமல் மனசை கஷ்டபடுத்திக்காத! நல்லநாளும் அதுவுமா! போக்கா வேலையைப் பாரு!” என்று சீதாவைத் தேற்றினான் விதுரன்.

 

தண்ணீர் ஊற்றி முடிந்ததும் அவளிற்கு அத்தை முறை வரும் பெண்கள் மூவர் அவளுக்குத் தாய்மாமன் சேலையை உடுத்தி விட்டனர். நகைகளைப் போடப் போன சமயம் அவர்களைத் தடுத்த சீதா,”சீர் குடுத்தத சபையில் வச்சி என் தம்பியே போட்டுவிடட்டும்! அது தான அத்தாச்சி முறை!” என்று கேட்டாள். அவர்களும் அதை ஏற்று மாதுவை வெளியில் அழைத்து வந்தனர்.

 

அனைவர் முன்னிலையில் விதுரன் தான் மாதுவிற்கென வாங்கிய நகைகளை அவனே அணிவித்தான். காசு மாலை, மாங்காய் மாலை, பிச்சிப்பூ ஆரம், ஆறு வகை வளையல் ஜோடிகள், ஜிமிக்கி கம்மல், அதற்கு ஏற்ற அடுக்கு மாட்டல், மோதிரங்கள், மேலும் பல நகைகளை அடுக்கியிருந்தான் சீராக தன் அக்கா மகளுக்கு. அதில் அனைவர் கவனத்தையும் ஈர்த்ததென்றால் அவன் அவளுக்காய் வாங்கியிருந்த தங்க ராக்குடி(ஹேர் க்ளிப்) தான். அனைவரும் அவன் அளித்த சீரைப் பார்த்து வாயைப் பிளந்தனர். சிலர் பொறாமையுடன் பெருமூச்சு விட்டனர்.

 

மாதங்கிக்கு நகைகள் பூட்ட விதுரனுக்கு உதவினர் சில பெண்கள். மாதுவின் குழந்தை முகத்திலோ வெக்கமும் பெருமையும் ஒருங்கே சேர்ந்து போட்டிப்போட்டது. கடைசியாக தன் தமக்கை அளித்த அந்த பரம்பரை நகைப் பெட்டியைத் திறந்த விதுரன் திகைத்தான்.

 

அந்த பெட்டிக்குள் ஒரு கணவனும் மனைவியும் கைகோர்த்திருந்தனர். அவர்களுக்கு இரு பக்கமும் லட்சுமி கரமாக இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். இரு பெண்களுமே தங்களுக்கருகில் ஒரு கிளி வைத்திருந்தனர்‌. அந்த இரு கிளிகளுமே மாங்கனிகளைத் தின்றவாறு நின்றது. இரு கிளிகளின் பக்கவாட்டிலும் ஒரு சிவப்பு பாறையிலிருந்து உடைபட்ட கல். (அய்யோ தாலின்னு சொல்லாமல் இவ்வளவு மொக்கை தேவையா என்று எல்லோரும் என்ன அசிங்கமா கழுவி ஊத்துறது எனக்கு புரிகிறது என் சிந்தனை வளையத்துக்கு புரியமாட்டிக்குதே)

 

அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த விதுரன், தன் தமக்கையைப் பார்த்தான் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு. அவரோ நின்ற இடத்திலேயே முட்டியிட்டு அமர்ந்து இருகரத்தையும் அவனை நோக்கி நீட்டினார். அவர் செயலை யூகித்த விதுரன், அவர் முட்டையிடத் தொடங்கியதுமே தன் பார்வையை மாதுவை நோக்கித் திருப்பினான். அவளோ அவனையும் தன் அன்னையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

முடிவெடுக்கத் தடுமாறினான் விதுரன். அவனது தடுமாற்றத்தை அறிந்த அவனுடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த அவன் கல்லூரித்தோழன் ராஜா (இப்போது இருக்கிற அதே ராஜா தான் தங்கம்),”டேய் மாப்ள! என்ன யோசிக்கிற? மாதுவைப் பிடிக்கலையா?” என்று கேட்டான்.

 

“பிடிக்காமல் இல்லைடா! ஆனால் அவ குழந்தை டா! அவளை எப்படி டா! அவ முகத்தை பார்டா! பச்சை மண்ணுடா அது!”

 

“அவ பச்சை மண்ணுதாண்டா அதான் அக்கா உன் பொறுப்பில் அவளை குடுக்குறாங்க! காலமிருக்கிற கோலத்தில் அடுத்தவனுக்கு பொண்ணு கொடுக்கத் தாயா அவங்க மனசு தயங்குதுடா. அதான் உன்னையவே அவங்க மாப்பிள்ளையாக்கனும்னு முடிவெடுத்திருபாங்க!”

 

“மாது மனசில் என்ன இருக்கோடா? அந்த பிள்ளைக்கு சம்மதமான்னு தெரியலையே! அதான்டா தயக்கமா இருக்கு!”

 

“ஃப்….பூ இவ்வளவு தானா! இந்தா வாரேன்.” என்றவாறே மாதுவை அழைத்து,”மாது தங்கச்சி! இவனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமாம்மா?” என்று கேட்டான்.

 

“ம்ம்ம்… நல்ல வேளை அண்ணா என்கிட்ட நீங்களாச்சும் கேட்டீங்களே!” என்று இடை வெளி விட்டு தாயையும் மாமனையும் முறைத்தாள். அவள் செயலில் விதுவிற்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு படபடப்பும் தவிப்பும் அவனை முட்டிக்கொண்டே இருந்தது.

 

“எனக்குனு நிறைய ஆசையிருக்கு கனவிருக்குண்ணா! அதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி இவரைக் கல்யாணம் பண்றது?”

 

“மாதும்மா நீ கல்யாணம் செய்துகொண்டு கூட படிக்கலாம். என்ன படிக்கனும்னு ஆசையிருக்கோ சொல்லு மாப்ள கண்டிப்பா சேர்த்து விடுவான். சொல்லு மாப்ள!” என்று விதுரனையும் துணைக்கு அழைத்தான். அதற்கு விதுரனோ அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். அதன் அர்த்தம் புரியாத ராஜா என்னவென்று வினவும் முன்னர், அவன் கூற்றை மறுத்தாள் மாதங்கி.

 

“என்னது படிக்கனுமா?? அதுவும் கல்யாணம் பண்ணிட்டா! ம்மா எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை!! இப்போதே வேற மாப்பிள பாரு!”

 

“சரிடீ நீ படிக்க வேண்டாம். என்ன கனவு கொஞ்சம் சொல்லு.” என்று அவளைச் சமாதானம் செய்தார் சீதா.

 

“சொல்கிறேன் கேட்டுக்கோங்க! முதல் கனவு என்னன்னா எனக்கு மச்சு வீடுதான் (மாடி வீடு) வேண்டும்! அங்க நிறையா ரோசாப்பூச் செடி கலர்கலரா வச்சி வளர்க்கனும் அதுக்கு நடுவில் ஒரு பெரிய ஊஞ்சல் மாட்டனும். முக்கியமா என்னைய அதுல உட்கார வச்சி உசரமா ஆட்டிவிடனும் எனக்குத் தோணும் போதெல்லாம்.”

 

“அடுத்து சொல்லுமா…” என்று அதிர்ச்சியை அடக்கிக் கொண்டு கேட்டான் ராஜா.

 

“அப்போ மாமாவை உம்னு சொல்லச் சொல்லுங்க! அதான் என்னோட ரெண்டாவது ஆசை… நான் என்ன சொன்னாலும் உம்னு சொல்லி ஏத்துக்கனும்!”

 

“மச்சி மோர் ஓவர் ஷீ நீட்ஸ் ய சின்சாக் போடுறவன்”என்று விதுரன் காதை கடித்தான் ராஜா.

 

“அப்புறம் எனக்குத் தோணும் போதெல்லாம் ஊட்டி விடனும். தண்ணி தவிச்சா தண்ணியெடுத்துக் குடுக்கனும். நிறையா புதுத்துணி வாங்கிக் குடுக்கனும். ம்ம்ம்… இப்போதைக்கு இவ்வளவுதான் அப்பறமா தோணும் போது சொல்றேன் மீதியை!”

 

“உன்னோட ஆசையெல்லம் செயல்படுத்த எனக்குச் சம்மதம்!” என்று திடமாகவும் கள்ளச் சிரிப்புடனும் கூறினான் விதுரன். ஆம் அவள் ஆசைகளைக் கேட்டவன் மனதில் அவளது குழந்தைத்தனமும் தூய்மையான மனதும் நன்கு புரிந்தது. அவளை மற்றவரிடம் விட்டுக்கொடுக்க அவன் மனம் தயங்கியது. அதற்கு அவன் மனம் கூறிய காரணம் யாதெனில் காதல். ஆனால் மூளையோ அதைத் தவிர்த்து அவளின் பாதுகாப்பும் நல்வாழ்க்கையும் தான் பிரதானமானது என்று காரணம் கூறியது. அதுவோ ஒரு காரணம், ஆனால் அவனது முடிவு திருமணத்தை நடத்துவது.

 

அனைவர் முன்னிலையிலும் அந்த தங்கத் தாலியை அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருவர் வாழ்க்கையையும் ஒரே கோட்டில் முடிந்தான். அனைவரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் போட்டிப் போட வாழ்த்தினர் இருவரையும்.

🌼🌼🌼🌼🌼🌼

 

சென்னையில் தனதுக் கல்லூரிக்கு அருகேயே ஒரு ஃப்ளாட் வாங்கி மனைவி மற்றும் தமக்கையுடன் குடியேறினான். காலையில் எழுந்ததும் சில பயிற்சிகள் செய்பவன் மனைவியை பால்கனிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஊஞ்சலில் அமர்த்தி அவள் போலுமென்கிற வரையில் ஆட்டி விட்டு அதன் பிறகு தான் கல்லூரிக்கே கிளம்புவான். காலை உணவும் இரவு உணவும் அவளுக்கு அவனே ஊட்டி விடுவான்.

 

குழந்தைத் தனமாக இருந்தாலும் அவன் மனம் அதை ரசிக்கவே செய்தது. அவன் வாழ்க்கை மிகவும் ரம்மியமாகச் செல்வதை அவன் மனம் உணர்ந்தது. அதற்குக் காரணமான அவன் தேவதையைக் காதல் உலகிற்கு அறிமுகம் செய்ய அவன் ஒரு மனம் துடித்ததென்றால் மற்றொரு மனமோ பொறுமை காக்கச் சொன்னது.

 

இவ்வாறாக அவன் தன் நான்காவது வருடக் கடைசி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியில் அமர்ந்தான். ராஜாவும் அவனுடன் அதே அலுவலகத்தில் பணியில் சேர்ந்தான். அதற்கிடையில் மாதுவை வற்புறுத்தி ஆங்கிலம் பேச கற்குமிடத்தில் சேர்த்துவிட்டார் சீதா. தடுத்த விதுரனை அவளுக்குத் தன்னம்பிக்கை வர வேண்டும் என்று கூறி அமைதிப் படுத்தினார்.

 

ஆரம்பத்தில் பிடிக்காமல் சென்றாலும் அங்கு வரும் பெண்களுடன் பழக ஆரம்பித்த பின் விரும்பியே கற்றாள் ஆங்கிலத்தை மட்டுமல்ல அவர்களின் நாகரீக வாழ்க்கை முறையையும் தான் ஆரோக்கியமான வகையில்தான். அவளது மாற்றத்தை விதுரன் ரசித்தாலும் அவனுக்கு அந்த பட்டிக்காட்டு மாதுவைத்தான் பிடித்தது.

 

ஆனாலும் விதுரன் மற்றும் மாதுவின் காதல் வாழ்வு நிலைப்படியிலேயே தான் நின்றது. அதனை உணர்ந்த சீதா சீலாவாக அவதாரம் எடுத்தார். என்னதான் அவள் நாகரீகமான வாழ்க்கையை அங்கீகரித்தாலும் அது எளிமையான தொல்லையின்மைக்காக மட்டுமே தான். ஆனால் ஆடம்பரத்திற்காகவோ சுகாதாரக் கேடாகவோ வரும் இடத்தில் அவள் நாகரீகத்தை வெறுத்தாள் என்பதைவிட அவள் மனது அதை ஏற்க மறுத்தது.

 

சீதா அவள் தன்னை விட்டு விலகினாள் மட்டுமே விதுரனை நெருங்குவாள் என்பதை உணர்ந்து அவளை தன் நடவடிக்கையால் சீண்டி வெறுப்பேற்ற ஆரம்பித்தார். அதன் அடிக்கல் நாட்டு விழா தான் சீதா லாபேஸ்வரன் சீலாவானது. யாரவது கேட்டாள் மார்டனான ஆள் என்று விடுவார். அடுத்த அடியாக அவளை பட்டிக்காடு என்று கேளி செய்யத் தொடங்கினார்.

 

இப்படி இவர் பல அடியெடுத்து வைத்தாரென்றால் விதுரனோ தன் காதலை நிலைப்படியிலிருந்த மேல் நோக்கி நகர்த்த அடுத்த அடியை எடுத்து வைத்தான். ஆம் அவன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளுடன் பழகும் நேரம் குறைந்தது. அன்று மாது மட்டும் தனியாக வீட்டிலிருந்தாள். சீலா அழகு நிலையம் செல்கிறேன் என்று கூறிவிட்டு கோவிலிற்குச் சென்றிருந்தார்.

 

மாது வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்‌. திடீரென மின்தடை ஏற்பட்டு வீடே இருள் சூழ்ந்தது. ஆரம்பத்தில் தைரியமாக இருந்த மாது நேரமாக ஆகப் பயமென்னும் ஆழியில் மூழ்கத் தொடங்கினாள். அவளை மேலும் அச்சுறுத்தும் வகையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் தாழிடும் சத்தமும் கேட்டது. பின்னர் மீண்டும் பலத்த அமைதி. மாதுவோ தன்னை எதிராளி எந்த பக்கமிருந்து தாக்கக்கூடும் என்ற சிந்தனையில் வாயை கையால் பொத்தியவாறு அமர்ந்திருந்தாள்.

 

நேரம் கடந்தும் எந்த ஒரு தாக்குதலும் இல்லை என்ற உடன் மாது சிறிது ஆசுவாசம் அடைந்தாள். வாயை மூடிய கையை வாயிலிருந்து பிரித்த நேரம் ஒரு கை சட்டென அவள் கையையும் வாயையும் துணி கொண்டு கட்டியது. மாதுவின் உடல் பயத்தில் விரைத்தது. பின்னர் அந்த கைக்குச் சொந்தக்காரன் அவளைத் தூக்கிச் சென்று எதிலோ அமர்த்தினான். பின்னர் அவள் கண்கட்டையும் வாய்க்கட்டையும் அவிழ்த்தவன் மின்சாரத்தையும் இயங்கவிட்டான்.

 

மாதுவின் கண்கள் அவள் கண்ட காட்சியில் விரிந்து மலர்ந்தது. அவர்கள் வீட்டு மேல்மாடத்தில் பல வர்ண மலர்கள் பூத்துக் குலுங்க அவளுக்காகவே அவன் வாங்கிய ஊஞ்சல் மலர் அலங்காரத்தில் கண்களுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டியது. அவளின் ஒவ்வொரு முகபாவனைகளையும் விதுரன் தன் கண்கள் கொண்டும் கைப்பேசி கொண்டும் நினைவு பெட்டகங்களில் சேமித்தான்.

 

ஆச்சரியத்திலிருந்து வெளிவராதவளை உலுக்கி ஓர் புடவையை அவளிடம் கொடுத்து அணிந்து வரச் சொன்னான். அவள் புரியாது விழித்தாள். அதற்கு அவனோ, “சரியா பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி எனக்காக எங்க அக்கா ஒரு விலைமதிப்பற்ற ஒரு புனிதமான மாசுமறுவில்லாத நல்ல மனசுடைய ஒரு மரகத கல்லை எனக்குப் பரிசா கொடுத்தாங்க! அதுக்கு என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு இருக்குனு சாரி சாரி.. என் வாழ்க்கையே அது தானென்று நான் இப்போது தான் புரிந்துகொண்டேன்.”

 

“அம்மா குடுத்தாங்களா? எங்க மாமா அந்த மரகதக் கல்?”

 

“நீ போய் இந்த சேலையை கட்டிட்டு வா. நான் உனக்கு அதை காட்டுறேன்.”

 

அதையேற்று அவளும் அந்த சேலையை வாங்கிக் கொண்டு சென்றாள். அவள் தயாராகி வருமுன்னர் அவன் செய்ய வேண்டிய மீதி வேலைகளைச் செய்தான். அவள் அவனளித்த சேலையில் கிளம்பி வந்தாள். அவள் அழகை ரசித்தவன் மெய்மறந்தான்.

 

“மாமா சேலை கட்டிட்டு வந்தா அந்த மரகதக் கல்லை காட்டுவேனென்று சொன்ன! காட்டு மாமா நான் மரகத கல்லைப் பார்த்ததே இல்லை மாமா!” என்று அவனிடம் கொஞ்சினாள்.

 

அவள் சலுகையாய் கொஞ்சியதில் மீண்டெழுந்த விதுரன் அவளை அழைத்துச் சென்று அவளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அவளை அமர்த்தினான். பின் அவள் காலடியில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்தான். பொறுமையிழந்த மாதுவோ,”மாமா நான் என்ன கேட்கிறேன்! நீ என்ன செய்துகொண்டு இருக்கிற! மாமா…” என்று படபடத்தாள்.

 

அவளது படபடப்பையும் ரசித்தான் அந்த காதல் கள்வன்‌. “பொறுடா! காட்டுறேன்…” என்று அவளை அமைதி படுத்திவிட்டு அந்த மரகத பட்டுடுத்திய அழகு மரகதச் சிலை முழுதாக தெரிய அவள் காலடியில் அவன் தெரிய ஒரு சுயமியை எடுத்தான். பின் அவளிடம்,”என்னுடைய அந்த தூய்மையான மரகதக் கல் கூடத்தான் இப்போ நான் பேசிட்டுருக்கேன் டீ!” என்று கூறி அவளருகில் அவனும் அமர்ந்து ஊஞ்சலைக் காலால் உந்தி ஆட்டிவிட்டான். அவன் திடீர் செயலில் அவள் அதிர்ந்து தெளியும் முன்னரே அவளை மீண்டும் அதிரவைத்தான் விதுரன் அவள் மடியில் தலைசாய்ந்து. அதில் பதறிய மாது தன் வலது காலை கீழூன்றி ஊஞ்சலை நிறுத்த எத்தனிக்கையில் அவன் அவளை விட விரைந்து அவள் பாதத்தைப் பற்றினான் தன் வலக்கையால்.

 

அவன் மடி சாய்ந்ததில் அவளில் உண்டான குறுகுறுப்பு அவனின் இச்செயலில் வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்வு பிரவாகத்தால் அவளது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கூசி சிலிர்த்தது. ஆயிரம் தடவை தொட்டு பேசிய தன் மாமன்தான் என்றாலும் அவனது இந்த காதல் அவதாரத்தை ஏற்க முடியாமல் என்பதை விட ஏற்கத் தெரியாமல் தவித்தாள் அந்த பேதை. அவள் நிலை உணர்ந்த விதுரனோ அவள் மடிக்கும் பாதத்திற்கும் விடுதலை தந்து எழுந்தான்.

 

மேல்மாடத்தின் ஒரு ஓரத்தில் பூக்குவியலிற்குள் கிடத்தப்பட்ட மேசையில் அழகிய கேக் வீற்றிருந்தது. அதை நோக்கி அவளை அழைத்துச் சென்று,”இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பொண்டாட்டி!!” என்று கூறி அவள் பிறை நுதலில் தன் காதல் சாசனம் எழுதி இதழ் ரேகை பதித்தான் மாதுவின் காதல் அடிமை. கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டத் தயக்கத்துடன் அவனை நோக்கி கேக்கைக் கொண்டு சென்றாள்.

 

“எனக்கு நெத்தியாலா சாப்பிடுகிற பவர்லாம் இல்லைம்மா! உன் ஆசை பட்டியலில் அதுவும் இருக்கா?” என்று பயந்ததுபோல் நடித்தான் விதுரன்.

 

அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த மாது தன் கை அவன் நெற்றியைக் குறிவைத்திருப்பதைக் கண்டு சிரித்தாள். பின் தயங்கிய படியே அவன் வாயருகில் கொண்டு சென்றாள். அவள் கையை பற்றிய விதுரன் அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான். எதுவோ தோன்ற அவளும் அவனைப் பார்த்தாள். அவன் விழிகளில் எதை உணர்ந்தாளோ சட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்தாள்.

 

“என்னாச்சு டீ பொண்டாட்டி மாமா முகத்தைப் பார்க்க மாட்டிக்குற என் மூஞ்சி அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது?”

 

“என்னன்னு தெரியலை மாமா! நீ கையை பிடிக்கும் போது உன் கையை இறுக்கிப் பிடிச்சிக்கனும்னு தோனுது ஆனால் ஏதோ ஒன்னு தடுக்கிறது! நீங்க மடியில் படுக்கும்போது உங்க தலை முடியைக் கோதி விடனுமென்றுத் தோனும் ஆனால் மறுபடியும் ஏதோ வந்து தடுக்கும். இப்போ கூடப் பாருங்க உங்க முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியலை!” என்று வருந்தினாள்.

 

“அடி மக்கு அது வெக்கம் டீ! இந்த மாமன் கிட்ட சொல்லிட்டைல நான் பார்த்துக்கொள்கிறேன் இனி!” என்று அவளை சமாதானம் செய்து அவள் நீட்டிக் கொண்டிருந்த கேக்கை சுவைத்தான். இடையிடையே அவள் விரல்களையும் தான்.

 

மாதுவின் பிறந்த நாளை இனிமையாக இருவரும் சேர்ந்தே கொண்டாடி இரண்டு வருடம் கழித்து தங்கள் மதுராக்குட்டிக்கும் பிறந்தநாள் கொண்டாடத் தயாராகினர். தன் வாழ்க்கையின் நடந்த சம்பவங்களையும் தன் மனைவி தன் வாழ்க்கையை வரமாக வளமாக மாற்றியதையும் அசைபோட்டபடியே வீடு வந்தான் விதுரன்.

 

ஆசையும் மகிழ்ச்சியும்

போட்டிப் போட்டுச் சாமரம் வீச…

ஆச்சரியமும் குழப்பமும்

முட்டி மோதி பதற்றம் பூச…

விரைவாய் வாசல் வந்தேன்

என்னவளிடம் காதல் பேச…

 

வாசலில் அழைப்பு மணியை அழுத்தும் பொழுதே ஓர் அற்புத உணர்வு வந்து அவனை ஆட்கொண்டது. ஆவலுடன் காத்திருந்தான் மனைவியின் காதல் கனிந்த முகத்தைக் காண. அவன் ஏக்கத்தைத் தீர்க்கும் காதல் தடாகமாய் வந்து கதவு திறந்தாள். வாசலில் நின்றவனைச் சிரித்த முகமாக வரவேற்றுத் தேநீரும் சிற்றுண்டியும் அளித்துவிட்டு அவனுடன் சிறிது நேரம் வழக்கமான கலகலப்புடன் பேசினாள். பின் அவனிடம் சொல்லிவிட்டுச் சமையல் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். அவனும் குளித்து இளைப்பாறி வரச் சென்றான்.

 

குளித்து முடித்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தான். அவன் முகத்தில் மனைவி தன்னிடம் பேசியதில் மகிழ்ந்துபோய் இருந்தது. அவன் மகளும் அவனை இடித்துக்கொண்டு வந்து  ஃசோபாவில் அமர்ந்தாள். மகளின் செயலை இரசித்துச் சிரித்தவன்,”என் குட்டி தங்கத்துக்கு என்ன வேணுமாம்?”என்று கொஞ்சினான்.

 

“டின்னர்க்கு வெளிய கூட்டிட்டுப் போங்க டாடி!” என்று கட்டளையிட்டாள் மதுரா.

 

“டின்னரா? ம்ம்ம்.. சன்டே போகலாம் குட்டி!” என்றான் விது.

 

“டாடி! நீங்களா கூட்டிட்டுப் போனால்தான் உங்கள் சாய்ஸ். பட் இது வந்து ஃபீஸ், உங்கள் மாதுவை உங்கள் கூட பேசவச்சதுக்காக நீங்க எனக்கு தரப்போகிற ஃபீஸ்! அதுனால நான் தான் என்றைக்கு போகனும்னு சூஸ் பண்ணுவேன்!” என்று வழக்காடினாள் மதுரா.

 

“பேச வச்சியா??”

 

“ஆமா! அதுவும் ப்ளாக் மெயில் பண்ணி!”

 

“ப்ளாக் மெயிலா?? என்னடா சொல்ற குட்டிமா!”

 

“ஆமாப்பா ப்ளாக் மெயில் தான். அன்றைக்கு ஒரு ஃபோட்டோ காட்டுனீங்களா நீங்க அதை நான் அம்மாவிடம் காட்டினேன். அதான் அம்மா உங்க கிட்ட பேசாமல் இருந்தாங்க.. அதுனால அவங்களை அப்பாகிட்டப் பேசலைனா அந்த ஃபோட்டோவ ஸ்டேடஸ் வச்சி ‘மை அம்மா பை மதுரா’னு ஸ்டேட்டஸ் போடுவேனென்று மிரட்டினேன்! உடனே உங்க கிட்ட பேசிட்டாங்க! எப்படி என் ப்ளான்?” என்று மார்தட்டிச் சிரித்தாள் மதுராக்குட்டி.

 

‘ஹா… ஹா… ஹா… அப்போது இன்றைக்குப் பாம்பு படுக்கை கன்பார்ம்!’ என்று சிரித்த மனசாட்சி விதுரனின் முறைப்பில், ‘குறைந்தபட்சம், தேனீ படுத்கையாச்சு உண்டென்று நினைக்கிறேன்!’ என்று கூறிவிட்டு ஓடியது.

 

இரவு உணவு வரை இனிதாகவே அனைவருக்கும் பொழுது கழிந்தது. சீலா தன் மகளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தாலும் விதுரனிற்கு அறிவுரை வழங்கவும் மறக்கவில்லை. தன் அறிவுரையை முடித்துக்கொண்ட சீலா இறுதியில்,”இனிமே நீ குடிப்ப?!” என்று கேட்டார். அவர் கேட்ட மாத்திரத்தில் விதுரனின் தலை வேகமாக இல்லையெனும் விதமாக ஆடியது.

🌼🌼🌼🌼🌼🌼

 

இரவு அனைவரும் உறங்கச் சென்றனர். சீலா மதுராவை தன்னுடன் படுக்க அழைத்துச் சென்றார். அறைக்குள் வந்த விதுரன் தலையணையை மட்டும் நன்றாக உதறி எடுத்துக்கொண்டு கதவைத் திறக்கவும் மாது உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவனைக் குழப்பமாகப் பார்த்த மாது,” என்ன மாமா? எங்க போறீங்க? அதுவும் தலகானியோட…” என்று கேட்டாள்.

 

அவள் கேள்வியில் விழித்த விதுரன்,”இல்லை மாதும்மா நீ பாப்புக்காக தான என்கிட்ட பேசுற! இப்போது பாப்பாதான் இல்லையே! நீயும் பாவம் சோபாவில் கஷ்டப்பட்டு படுக்கனும். அதான் நான் வேண்டுமானால் வெளியில்..” என்று கூறியவனை இடைமறித்தது மாதுவின் சிரிப்பு.

 

அவன் அவளைப் புரியாமல் பார்க்க அவளோ,”மாமா அன்றைக்கு எறும்பை வைத்து விளையாண்டது மாதிரி இன்றைக்கும் பண்ணுவேன் பயந்துட்டியா? அய்யோ ஆனால் உண்மையிலேயே வேறவொன்னு ப்ளான் பண்ணேன் அதை செயல்படுத்துகிறதுக் குள்ள உன் தரப்புல ஒரு திடீர் திருப்பம் வந்து தீர்ப்பு மாறிருச்சு. சோ! நீ தப்பிச்சுட்ட!” என்று கூறிக் கண் சிமிட்டினாள்.

 

“அப்படி என்னாச்சு?”

 

மத்தியான நேரம் மாதுவும் சீலாவும் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மது விளையாடிய சோர்வில் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அழைப்புமணி அழைத்தது. யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள் பயத்தில் வெளிறினாள்.

 

யாரோ ஒருவன் தலையில் தலைக்கவசமுடனும் கையில் இனிப்பு பெட்டியுடனும் நின்றிருந்தான். அவளுக்கு காலையில் செய்தியில் வந்த சம்பவம் நினைவில் வந்தது. யாரோ ஒருவன் தலைக்கவசத்துடன் வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும். தெரிந்தவர் போல் மயக்க மருந்து இனிப்பு பெட்டியைக் கொடுத்து ஏமாற்றியதாகத் தகவல் என்று செய்தியாளர் சொன்னது மனதில் வந்தது. சீலாவிற்குச் சைகை செய்து அவனிடம் பேச்சுக் கொடுக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

 

வரும்பொழுது ஒரு கையில் மிளகாய்ப் பொடியும் மற்றொரு கையில் துடைப்பக்கட்டையையும் எடுத்து வந்தாள்.அவனும் இனிப்பு பெட்டியையும் நீட்டியவாறே உள்ளே வந்தான். உள்ளே நுழைந்தவனைத் துடைப்பத்தாலேயே நான்கு போடு போட்டு தலைக்கவசத்தை கழட்ட வைத்து மிளகாய்ப் பொடியைக் கண்களுக்கு அருகில் கொண்டு சென்றாள். அவன் முகத்தைப் பார்த்துத் திகைத்தனர் இருவரும்.

 

“ராஜாண்ணா! அய்யோ மன்னிச்சுருங்க அண்ணா! நான் ஏதோ திருடனென்று நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்ணி சாரிண்ணா! எதுக்குண்ணா ப்ளாட்டுக்கு ஹெல்மெட் போட்டுட்டே வந்தீங்க அதான் குழம்பிட்டேன்…” என்றவள் சற்றென்று தன் பேச்சை நிறுத்தி அவனை ஊன்றிப் பார்த்தாள்.

 

“என்னண்ணா? இது கோலம்! ஆம்பளைங்க இப்படி இருந்தால் அது எங்க ஊரப் பொருத்தவரை ஏதோ பெரிய தப்பு செஞ்சி தண்டனை வாங்கிருக்கான்னு சொல்லுவாங்க! நீங்க எதற்கு இப்படி இருக்கீங்க!”

 

“அது வந்துமா…”

 

“இருப்பா! முதலில் அந்த பாத்ரூம்ல மூஞ்சியை ஒழுங்கு பண்ணிட்டு வா!” என்று விரட்டினார் சீலா. ஆம் எந்த நிலையில் தன் நண்பனைப் பார்க்கக் கூடாது என்று விது குடித்தானோ, அதே நிலையில் மாறு மீசை மாறு தாடியோடு வந்திருந்தான். தன் நண்பனைக் குற்றமற்றவன் என்று நிரூபித்து அவன் குடும்பத்தில் தன்னால் எழுந்த குழப்பத்தைச் சரி செய்யும் வேகம் அவனில்.

 

முகத்தில் முழுதாக சவரம் செய்து வந்தவனை அமர்த்தி காபி கொடுத்தனர் தாயும் மகளும். அவன் காபியை அருந்தும் வரை அமைதி காத்தனர் இருவரும்.

 

“எதற்குப்பா அப்படி ஒரு கோலத்தில் வந்த? என்னாச்சு?” என்று வினவினார் சீலா.

 

“அன்றைக்கு மட்டும் நம்ப விது குடிக்கவில்லையென்றால் நான் இப்படித்தான் ஒரு மாசம் ஆபிஸ் போயிருப்பேன்ம்மா! எனக்காகத்தான் விது குடித்தான். அதுவும் ரொம்ப கம்மியாத்தான் குடிச்சான். பட் ஃபர்ஸ்ட் டைம்ல அதான் கொஞ்சம் பிரச்சினை ஆகிருச்சு.” என்று நடந்தது அனைத்தையும் விளக்கிக் கூறினான். அதைக்கேட்டவுடன் மாதுவின் மனதில் விதுவின் மேலிருந்த கோபம் வருத்தம் ஊடல் எல்லாம் பாறையில் அடிக்கும் அலையாய் சிதறித் தெறித்து மறைந்தது.

 

விதுரனிடம் நடந்ததைக் கூறி முடித்த மாது அவன் தோளில் சாய்ந்தாள். பின்பு எதுவோ நினைவு வந்தவளாக அவள் சாய்ந்திருந்த அவன் தோளிலேயே தன்னால் இயன்றவரை அழுந்த கிள்ளினாள். அவளை விட்டுத் துள்ளி விலகினான்.

 

“இப்போ என்னடி!”

 

“மதுக்குட்டி கிட்ட எதுக்குடா மாமா அந்த ஃபோட்டோவை காட்டி உங்கம்மானு சொன்ன? பக்கி! அவ என்கிட்ட வந்து அந்த ஃபோட்டோவை காட்டி வாட்சப் ஸ்டேட்டஸ் போடுவேன்னு சொல்லுறா!!”

 

“ம்ம் அது நீ தான… ஊரில் காட்டுப்பக்கம் திரியும் போது இப்படித்தான இருந்த! ஆயிரம் சொல்லு எனக்கு இந்த அப்கிரேடட் வெர்சனை விட அந்த ஓல்டர் வெர்சன் மாதுவைத்தான் ரொம்ப பிடிக்கும்!!” என்றவாறே அவளைத் தூக்கிச் சுற்றினான்.

 

“முதலில் என்னை இறக்கி விடுங்க மாமா!” என்று சிடுசிடுத்தாள்.

 

“எதுக்குடி மறுபடியும் ஆங்கிரி பேர்டா (angry bird) மாறிட்ட?” என்று அவளை இறக்கி விட்டான் விது.

 

“நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது! ஆனால்…”

 

“பத்து மாசத்தில் மதுரா குட்டிக்கு விளையாடத் தம்பி வேண்டும்.. அதான!” என்று பல்லைக்காட்டினான்.

 

“ஒரு ஆணியும் தட்ட வேண்டாம்… போய் உங்க பொண்ணுக்கிட்ட இருந்து அந்த ஃபோட்டோவை எப்படியாச்சும் வாங்கிட்டு வாங்க! இல்லாவிட்டால் என் பனிஸ்மன்ட்ஸ் பத்திதான் உங்களுக்கே நல்லா தெரியுமே!” என்று சிரித்தாள்.

 

“என்னது மறுபடியும் பனிஸ்மென்டா? தெய்வமே இரு காலையில் உன் கையில் அந்த ஃபோட்டோ இருக்கும். பனிஸ்மென்ட்லாம் எதற்கு வேஸ்ட் பண்ணுறீங்க?” என்று இறங்கிய குரலில் பேசினான்.

 

“பனிஸ்மென்ட்ட யூஸ் பண்றதா வேஸ்ட் பண்றதானு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க போய் ஃபோட்டோவை எப்படி வாங்குவதென்று இல்லாத உங்க மூளையைத் தட்டி தட்டி முடிவு பண்ணுங்க… போங்க!” என்று கூறி அவனை அறைக்கு வெளியே தள்ளிக் கதவடைத்தாள்.

 

அவளது திடீர் தாக்குதலில் நிலை தடுமாறி கீழே விழப்போனவன், அருகிலிருந்த மேசையைப் பற்றி நின்றான். பின் பெருமூச்சுடன் சென்று இருக்கையில் அமர்ந்து மகளைச் சமாளிக்கத் திட்டமிட்டான். அவன் சிந்தனை சிற்பியாக மாறி தன் மூளைச் செல்களை செதுக்கிக் கொண்டிருப்பதை அவனுக்குத் தலையணையும் போர்வையும் கொடுக்க வந்த மாது பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிப்பொலி அவன் செதுக்கலைத் தடைசெய்து அவனை நினைவுக்கு அழைத்து வந்தது. அவள் சிரிப்பதைக் கண்டு அவளை முறைத்தான்.

 

“மாமா நீ குரு சிஷ்யன் படத்தில் வரும் ஷோவையே தாண்டிருவ போல ப்ளான் பண்ணுறதுல! ஹா… ஹா… ஹா..” என்று அவனை வம்புக்கு இழுத்தாள். அவன் அவள் சுதாரிக்கும் முன்னர் அவளருகில் விரைந்து அவள் இரு பக்கமும் கையூன்றி அவளைச் சுவரிலேயே சிறை செய்தான்.

 

அவன் செயலில் வாயடைத்துப் போனாள் அந்த வாய் பேச்சுக்காரி. அவன் அவள் இதழ் நோக்கிக் குனிய பெண்ணவள் இமைகள் தன் கயல் காதலிகளை மறைத்தது அங்கு அரங்கேறப் போகும் காட்சியைக் காணாதிருக்க. கண்மூடிச் சாய்ந்தவளின் விழிமீன்கள் நர்த்தனங்கள் நடத்தியதே ஒழிய அவற்றின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவள் இமைகள் பிரியக் காத்திருந்தவன் அவள் தலையில் குட்டி தலையணையையும் போர்வையையும் வாங்கிச் சென்று படுத்தான். அவளோ காதலின் மாயவலை அறுபட்டு விழச் சிரிப்புடன் தன் தலையைத் தடவியவள்,’இருடா மவனே நாளைக்கு வச்சுகிறேன் உன்னை… திருட்டு மாமா!!!’ என்று கொஞ்சிக்கொண்டே அறைக்குள் சென்றாள்.

 

மறுநாள் மாலை குடும்பத்துடன் கடற்கரை சென்றான் விதுரன். மதுராவும் மாதுவும் நன்கு விளையாடிக் களைத்த பிறகே கடற்கரையை விட்டு வந்தனர். அங்கிருந்து நேராக ஓர் உயர்தர உணவு விடுதிக்குச் சென்றனர். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் அமர்ந்தனர். பணியாள் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டான். மாதுவும் மதுவும் ஒரு சேர விதுவைப் பார்த்தனர்.

 

‘ஒன்னுகூடிட்டாய்ங்களே டா விது… நம்மள இன்றைக்கு வேலை சொல்லியே வெள்ளாவிப் பானையில் வேகப் போட்ருவாங்களே! விது பார்த்து சூதானமா இருடா!!’

 

‘நானே கடுப்பில் இருக்கிறேன்! பேசாமல் போயிரு!’ என்று தன் மனசாட்சியை அடக்கியவன் மகளும் மனைவியும் கேட்டவற்றை வாங்கி வந்து அவனே பரிமாறினான். அவன் அவர்கள் கேட்டவற்றை வாங்கச் சென்ற ஒவ்வொரு முறையும் தாயும் மகளும் ஹய் ஃபை அடித்துக்கொண்டனர் சிரிப்புடன்.

 

அங்கு நடக்கும் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் சீலா. மகளும் தன் தம்பியும் மனமொத்து சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து வாழும் வாழ்க்கையை உணர்ந்த அந்த தாயுள்ளம் குளிர்ந்து போயிற்று. அவர்கள் வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்டங்களை இருவரும் சேர்ந்தே இருந்து சமாளிக்க வேண்டும் என்று கடவுளுக்கு ஒரு வேண்டுதல் வைத்தது அவர் மனம்.

 

தன் தம்பியை அவர்கள் இருவரும் படுத்தும் பாட்டை கண்டு பொறுமை இழந்தவர் இருவரையும் மிரட்டிச் சாப்பிட வைத்தார். தன் தம்பியையும் உணவுண்ண அமர்த்தினார். அவரின் செயலில் மாதுவும் மதுவும் உதட்டைச் சுழித்து முறைத்தனர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அமர்ந்து உணவுண்ண ஆரம்பித்தான் விதுரன் காலையில் நடந்ததை எண்ணியவண்ணம்.

 

“மதுக் குட்டி குட் மார்னிங்!”

 

“குட் மார்னிங் பா!”

 

“பேபிம்மா டின்னர் போவோமா இன்றைக்கு. உனக்கு பிடித்த உணவகத்துக்கே போகலாம்.”

 

“என்னப்பா எதாச்சும் ப்ராப்ளமா? என் ஹெல்ப் தேவைப்படுகிறது போலையே!”

 

“ம்ம்ம்..‌ அன்றைக்கு அப்பா ஒரு ஃபோட்டோ உன்கிட்ட காட்டுனேன்ல அது மட்டும் உங்கம்மா கைலை கிடைச்சது நான் காலி! அதை அப்பாவிடம் கொடுத்திரு டா!”

 

“எதற்குப்பா? அந்த ஃபோட்டோ அம்மாவோடது தான. அப்பறம் என்ன?”

 

“அது மாது ஃபோட்டோ தான் பட் அது ஃபுல் அன்ட் ஃபுல் நான் எடிட் பண்ணது! வில்லேஜ் ஸ்டைல இருந்த எப்படி இருப்பாளென்று பார்க்கிறதுக்காக பண்ணேன்! அத மட்டும் அவள் பார்த்தாள் மறுபடியும் என்கிட்ட டூ விட்டுருவாள். போச்சு!”

 

“ஏன் டாடி இப்படி பண்ணீங்க? நான் அம்மா தானென்று நினைத்து அவங்களை ரொம்ப வம்பு பண்ணிட்டேன்! அம்மா பாவம்! எல்லாம் உங்களால் தான்.”

 

“சாரி டா அப்பா கிட்ட அந்த ஃபோட்டோவை கொடுத்திரு டா. ப்ளீஸ்!”

 

“சரிப்பா! ஆனால் ஒரு பனிஸ்மென்ட் உண்டு கண்டிப்பாக!”

 

‘அம்வை மாதிரி பனிஸ்மென்ட் கொடுக்க ஆசைப்படுகிறாளே! சரி குழந்தை தானே எதாச்சு குழந்தைத் தனமாக சொல்லுவா செய்வோம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே,

 

“சரிடா! டீல்!” என்று கூறி ஃபோட்டோவை பெற்றுக் கொண்டான். அந்த தந்தை மகளின் உடன்படிக்கையின் விளைவு தான் இந்த உணவு பரிமாறும் வேலை. இவ்வாறு எண்ண அலைகளில் நீந்தியவனைத் தோளில் தட்டி நினைவுக்குக் கொண்டு வந்தாள் மதுரா. பின்பு குடும்பமே ஒருசேர விதுவைப் பார்த்து,”இனிமே நீ குடிப்ப?!” என்று கேட்டுச் சிரித்தனர்.

 

அன்றிரவு தனிமையில் தன் மடியில் தலை சாய்ந்திருந்த தன் கணவனின் முடி கோதியபடியே பல கதைகள் பேசிக்கொண்டிருந்தாள் மாது. அவள் பேச்சை ரசித்தவாறே அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான் விதுரன். திடீரென ஏதோ நினைவு வர அவனை எழுப்பி,

“அதெல்லாம் இருக்கட்டும் மாமா! இனிமே நீ குடிப்ப!?” என்று கேட்டாள்.

 

“சாமி சத்தியமா பாட்டில் சரக்கைக் குடிக்க மாட்டேன் டீ!!!” என்றவன் நினைவில் பச்சைக் கீரை, விளக்கெண்ணெய் சாலட், மனைவியின் விலகல், அவளின் மௌன விரதம், எறும்பு படுக்கை, அதிமுக்கியமாக அவன் மனசாட்சியின் அத்துமீறல் எல்லாம் வந்து வந்து போனது.

 

“ஆனால் ….” என்றவன் தன் menஇதழால் அவள் மென்னிதழைச் சிறை செய்தான்.

 

இத்தோடு குடிக்குப் போட்டாயிற்று என்ட்கார்ட்!!!😜😜😜

EPIPthoshi-full

தன் சந்தோஷத்தை உள்ளன்போடு  கொண்டாடும்  உறவுகளையும் , எச்சூழ்நிலையிலும்  துணை நிற்கும்  நட்பையும் கொண்டவனை

விட பலமிக்கவன் இவ்வுலகில்  எவருமில்லை  ….

–  தோஷி

அத்தியாயம் 1:

அழகிய பெரும் மலைகளை தன்னிடத்தே கொண்டு, குளிர்ச்சியை தனது அடையாளமாய் தரித்திருக்கும் கொடைக்கானலில் உள்ளது அவ்வூர்… “மன்னவனூர் “.

இன்றும் கிராமங்களின் வாசத்தை தொலைக்காமல் இருக்கும் அவ்வூரில் உள்ள அனைவரும், “தாத்தய்யா” என அழைக்கும் மரியாதைக்குரியவர் கப்பீஸ்வர் (lord of all monkeys) .

அவ்வூரின் மிகப்பெரிய தனக்காரர்களில் ஒருவரான அவர், மற்றவர்களைப் போல் இனம் ,உயர்வு ,தாழ்வு பாராமல் பழகும் விதத்தில் …அவரின் குடும்பத்தாருக்கே அவ்வூராரின்  மனதில் அளப்பரிய பாசமதை உருவாக்கியவர்  .

கப்பீஸ்வர்க்கு இரண்டு மகன்கள் : பெரியவர் –  கோதண்ட நாகா , சிறியவர் – வஜ்ர நாகா.

பெரியவர் தன் தந்தையுடனான சிறு பூசலில் மனைவி மற்றும் மகனுடன் தங்களின் மாளிகை அருகினிலே வேறொரு வீட்டில் கடந்த 18 வருடங்களாக வசித்து வருகிறார் .

ஐயா ….என அழைத்தவாறே வந்தார் வஜ்ரநாகா.

அவரின் குரலில் ஹாலிற்க்கு வந்த கப்பீஸ்வர் , அடேய்… சின்னவனே … எதுக்குல இப்படி குதிச்சுக்கிட்டு வர இளமை திரும்புதுனு நினைப்போ ?  ஹாஹாஹா உன் அப்பன மாதிரி ஆக நினைக்காதடா கிழவா  என அவரின் காதோர நரைமுடிகளை சுட்டிக்காட்டிபெரியதாய் நகைத்தவரின் முடியோ  கருக்கருயென இருந்தது . (டை யின் உபயம் மக்காஸ் ).

வஜ்ரநாகா தந்தையை முறைக்க  முடியாமல் உறுத்து  விழிக்க  …

அதற்கும் அவர் , என்னல ….நான் என்ன உன்ற சம்சாரமா ? இப்படி உத்துப் பாக்குறீரு   என மீண்டும் அவ்வீடு அதிர சிரிக்க .

அங்கு வந்த சௌந்தரம்மாள் (  கப்பீஸ்வரின்  மனைவி) ,அட எதுக்குல சின்னவனே  …. உங்க அப்பாரு இப்டி ஊரே அதிருரமாதிரி  சிரிக்கிறாரு என அருகில் இருந்த மகனிடம் கேட்க.

அவரோ தன் தந்தையை எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தார் .

தன் மனைவியின் கேள்விக்கு அமைதியாய் இருந்த மகனை கண்டு தன் கொடுப்புக்குள் சிரிப்பை மறைத்துகொண்டு ,  ஏட்டி ……நான் சொன்னேன்ல எனக்கு எத்தனை வயசானாலும் இந்த ஊர்ல என்ன அழகுல மிஞ்ச  ஒருத்தனும்   இல்லன்னு பாரு உன்ற புள்ளகூட என்ன சைட் அடிக்கிறான் என்றார்.

அவரின் பேச்சில் மோவாயை தன் தோளில் இடித்த சௌந்தரம்மாள்   , அழகு இருந்து என்ன பண்ண மனுஷருக்கு புத்தி இல்லையே என சத்தமாய்  முனங்கி மகனிடம்  திரும்பியவர்  சின்னவனே என்ன விஷயம் என கேட்டார். (பின்ன கேப் விட்டா நம்ப கப்பிஸ்வர் பேச்சை யார் தாங்குறது ).

வஜ்ரநாகா , ஆத்தா சென்னையிலிருந்து போன் வந்துச்சு , நம்ப பவித்ரா புள்ள குடும்பத்தோட அடுத்த வாரம் ஊருக்கு வருவதாக சொல்லுச்சு ஆத்தா  .

அவரின்  பதிலில் இருவரும் மகிழ…. சௌந்தரம்மாள்   , ஏலே   சின்னவனே நிஜமாவால சொல்ற ? அந்த புள்ளைய பார்த்து இருபது வருஷம் இருக்குமா ? அந்த சின்ன குட்டிய அஞ்சு வயசுல பார்த்தது , என் கண்ணுக்குள்ளயே இருக்கால அந்த குட்டி என்றவரின் கண்கள் பழைய நினைவில் கசிந்தது  .

அத்தனை நேரம் மனைவியின் சந்தோஷ முகத்தில் தானும் மகிழ்ந்திருந்தவர் அவரின் கண்ணீரில் தனது  பாசத்தையும் எரிச்சலும்  , சலிப்புமாய் ..  அடியே , கூறு கெட்டவளே , புள்ள சந்தோஷமான விஷயம் சொன்னா இப்படி மூக்கை சிந்திக்கிட்டு இருக்க . போடி போய் அவங்களுக்கு தேவையானதை எல்லாம் ரெடி பண்ணு என அவரை ஏவினார்.

அவர் உள்ளே சென்ற பின்பே தன் மகனிடம் , ஏம்ல…  அந்த புள்ள மூத்தவனோட டவுசரை பிடிச்சுகிட்டே திரியுமே ,  இப்ப அங்கன தங்குமா இல்ல இங்கனையாடா என கேட்டார்

வஜ்ர நாகா , அந்த புள்ளைக்கு அண்ணன் தனியா இருக்கிறது தெரியாதுலங்ய்யா. அவங்க சென்னை போனதுக்கு அப்புறம்தான  அண்ணன் தனியா போச்சு என்றவரின் மனமோ அதன் காரணத்தை எண்ணி குற்ற உணர்ச்சியில் தவிக்க முகமோ அதன் பலனாய் கசங்கியது .

தனது மகனின் வாடிய முகத்தை கண்டு அதை மாற்றும் பொருட்டு , ஏம்ல இப்படி கூமுட்டையா இருக்க ….. என்னல முறைக்க…பின்ன,  உன் அண்ணனபத்தியும்  அந்தப்புள்ளைய பத்தியும் உனக்கு  தெரியாதால.

அந்த புள்ள என்னமோ உன்ற அம்மாவோட தங்கச்சி மவதான் .ஆனா உன்ற அண்ணனும் , அந்த புள்ளையும்  பாசமலர் படத்தை மிஞ்சிய மாதிரி தானல பழகிட்டு   திரிவாங்க .  இத்தனை நாளும் பேசாமலா இருந்திருப்பாங்க என்றார்.

மகனது முகம் சற்று தெளிந்ததில் ஆசுவாசமாகி , ஆமா  என்னல இன்னுமா பேரன் எழலை  , விடியல்ல  என்னை பார்க்காம இருக்க மாட்டனே என கேட்டார்  .

தனது மகனது நினைவில் வஜ்ரநாகாவின் முகம் மேலும் ஒளிர்ந்தது. இவர்கள் மூவருக்கும் அவனே செல்லப்பிள்ளை .

பக்கத்தூர்ல ஏதோ கலவரமாம் ஐயா. மேலிடத்திலிருந்து நம்ப புத்ராவ போய் பார்க்க சொன்னதுல புள்ள அங்க போயிருக்கு . உங்க எழுப்ப  வேணாம்னு  சொல்லிட்டு தான் போனாங்ய்யா.

புத்ரா ….பவன்புத்ரா. கப்பீஸ்வர் மீசையை முறுக்கியவாறு , என் பேரன் என சொல்லும் கம்பீரத்திற்கு   சொந்தக்கான்.சௌந்தரம்மாளின்  பாசத்திற்கு  கட்டுப்படுபவன். வஜ்ரநாகாவின்   செல்லத்தை மொத்தமாய் குத்தகை எடுத்தவன்.

பவன்புத்ரா பக்கத்துக்கு ஊருக்கு சென்றபொழுது  , கலவரம்  உச்சத்தை  தொட்டிருந்தது  . கைகளின் சண்டைகள்  போய் ஆயுதங்களின்  முகம் எட்டிபார்த்திருந்தது  .

தனது கருப்பு நிற புல்லட்டை அவர்களின் முன்பு நிறுத்தி மிக மிக பொறுமையாய் , கலவரத்தை  ரசிக்கும் பாவனையுடன்   இறங்கினான் பவன்புத்ரா  , அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ். ஆறடிக்குக் குறையாத உயரம் , சற்று நீண்ட முகம் , அலை அலையான கேசம், அடர்த்தியான புருவம் மற்றும் மீசை , கூர்மையான கண்கள், கொஞ்சம் நீண்ட நாசி, அழுத்தமான உதடுகள் என அவனை கடக்கும் பெண்கள் அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் படியான  தோற்றம் .

*********************************

தன் வீட்டினுள் சந்தோஷமாய் நுழைந்த கோதண்டநாகா , பவுனு பவுனு என அழைக்க அங்கு வந்த தன் மனைவியை (ஜானகி ) கண்டவர் , ஏட்டி பவுனு எங்க என கேட்க…

டேட் …எத்தனை தடவை சொல்றது …என்ன அப்படி கூப்பிடாதீங்கனு கால் மீ பவன் என சொல்லியவாறே வீட்டினுள் நுழைந்தான் பவனஜ்.

முறுக்கேற்றிய உடலுடன் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் உயரம், குறும்பு கொப்பளிக்கும் கண்கள், அடர்த்தியான புருவம் மற்றும் மீசை, பெண்களைப் போன்று மென்மையான ரோஜா வண்ண இதழ்கள் , குணத்தில்   மாயக் கண்ணனின் குறும்பின் மறு உருவமாக திகழ்ந்தான்  .

பவன்புத்ராவை பார்ப்பவர் அவனின் அதிரடியை ரசித்தால் , பவனஜை பார்ப்பவர் அவனின் குறும்புத்தனத்தில் மயங்குவர்.

*******************************

மகனின் பேச்சிற்கு  சரி கண்ணா என தலையாட்டிய கோதண்டநாகா , நம்ப பவிகண்ணு குடும்பத்தோட   ஊருக்கு வரபோறதா  போன் பண்ணுச்சி  தம்பி . அவங்க வரும் போது நீ தான் போய் கூட்டிட்டு வரணும் . அவங்க இந்த ஊரவிட்டு போய் ரொம்ப வருஷம் அச்சுல  பாப்பாங்க  ரெண்டு பெரும் மெட்றாஸ்ல வளர்ந்த  புள்ளைங்க யாரையும்  தெரியாது  இங்கிட்டு  .

அவரின் பேசிச்சில்  குறுக்கிட்ட பவனஜ் , அப்போ என்னைய மட்டும் எப்படி தெரியும் .நீங்களே அம்மாவ கூட்டிட்டு போய்வங்க  பா என்றான்.

பவுனு என்று ஆரம்பிக்கப்போனவர்  மகனின் பார்வையில் …அதில்ல  கண்ணா இப்போ நான் போனா அவங்கள இங்கிட்டு தான் அழைச்சிட்டு  வருவேன். ஐயாறு  அங்கன  இருக்கையிலே அது மரியாதையை இல்ல கண்ணா.

பவனஜ் ,அப்போ அங்கிட்டே கூட்டிட்டு போகவேண்டிதான என அசால்ட்டாக  சொல்லியவன் உள்நோக்கி  செல்ல..

என்ன கண்ணா தெரியாத  மாதிரி பேசிட்டு இருக்க என உள்சென்ற  மகனின் காதில் கேட்பதுபோல் சலித்தவர் அங்கு தங்களை பார்த்தவாறு  நின்றிருந்த மனைவியிடம்  , ஏட்டி இங்கன  என்ன சட்டிபணியாரம் செய்யறோம்  வேடிக்கை பாக்குற ….சொல்லுடி புள்ளைகிட்ட என காய்ந்தார்  .

மொதல்ல புள்ள சாப்பிடட்டும்ங்க  புறவு பேசிக்கிடலாம்  என கணவனை சமாளித்து அழைத்து சென்றார் ஜானகி.

உள்ளறையில் சாப்பிட்டு  கொண்டிருந்த பவனஜை பார்த்துகொண்டே அவனின்  அருகில் அமர்ந்த கணவருக்கு  உணவு பரிமாற்ற  ஆரம்பித்தார்  ஜானகி.

அவரோ  உணவில்  ஓர் கண்ணும்  மகனில்  ஓர் கண்ணுமாய்  இருக்க தன் தட்டில் கவனமாய்  இருப்பதுபோல் இருந்த  பவனஜும் தந்தை தன்னை பார்ப்பதை உணர்ந்தே  இருந்தான்.

ம்ம்க்கும் என தொண்டையை  செறுமியவன் , மா எதுக்கும் நம்ப முருகேசன்ட சொல்லி கொஞ்சம் கல்லு , மண்ணலாம் தயாரா  வச்சிக்க சொல்லுங்க.

மகன் திடீரென சொல்லியதில் விளங்காமல் …எதுக்குபா உன் ஜோலிக்கு தேவைப்படுதா என கேட்டவரை பார்த்து  வந்த சிரிப்பை முழுங்கியவன்  ,  மா தாத்தா வீட  கொஞ்சம் மாத்தணும்மா  . மழை வந்தா வாசல் வழியா உள்ள வராத மாதிரி வாசற்படியை கொஞ்சம் தூக்கவேண்டிருக்கு .

 

ஜானகி மகன் சொல்வதை தீவிரமாய் கேட்டுக்கொண்டிருக்க , கோதண்டநாகாவோ , இங்க ஒருத்தன்  என் தங்கச்சிய  போய் கூட்டிட்டுவாடானு கேட்டுட்டு கல்லு மாதிரி பக்கத்துலயே உட்கார்ந்துருக்கேன்  ….இவன் என்னன்னா தாத்தாக்கு  வீடு கட்றதை பத்தி பேசுறான் . எல்லாம் வேணுமுனே பண்றது பின்ன அந்த அவரோட  பேரனாச்சே வேற எப்படி இருப்பான் என தனக்குள் பொறுமியவாறு அமர்ந்திருந்தார் .

மா ….நான் அவங்களை  கூட்டிட்டு வந்த பின்னால நம்ப வீடு முழுக்க பாசமழையா பொழியுமே  ,  நம்ப வீடுகூட  நான் பொறந்து  கொஞ்ச வருஷம் அப்றம்  கட்டுனது  வெள்ளம் வந்தாலும் தாங்கும் . ஆனா தாத்தா  வீடு அவங்க தாத்தாக்கு தாத்தா காலத்துல   கட்டினதாச்சே . அந்த அத்தை அங்கேயிருந்து பாசமழையா பொழிய பதிலுக்கு இவர் இங்க இருந்தே பொழிய அந்த வீடு தாங்குமா  . ஐயகோ என மூச்சை  இழுத்து பிடித்து  நடிகர் திலகமாய்  மாறி பேசிகாமிக்க  .

அத்தனைநேரம் அவனை மனதினுள்  வறுத்தெடுத்ததை  மறந்து , கண்ணு அப்போ அவங்கள கூட்டிட்டு வர உனக்கு சம்மதமா கண்ணு என கண்கள் ஒளிர  கேட்டார் கோதண்டநாகா .

அவன் கிண்டல் செய்ததை  கூட விட்டு அவன் கூட்டிட்டுவருகிறேன்  என சொன்ன ஒற்றை வார்த்தையில் அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சையை  பார்த்த தாய் மற்றும் மகன் இருவரின் மனமும் பவித்ராவின்  மேலான அவரது அன்பில் ஆச்சர்யப்பட்டது  .

**************************************

சென்னை :

 

மாடியுடன் கீழே மூன்று  அறைகளை  கொண்டிருந்த அவ்வீடு சென்னை மாநகரத்தின்  பரபரப்பில்  சிக்கிக்கொள்ளாதவாறு  சற்று தள்ளி அமைதியாய் நின்றிருந்தது  .

ஏங்க வரும்போது மறக்காம அந்த கடைக்கு  போய்ட்டுவரணும்ங்க  அண்ணனுக்கு  அதிரசம்னா  ரொம்ப பிடிக்கும் . அதுக்கு தேவையானதுலாம் வாங்கிட்டுவரனும் . இன்னிக்கு  வாங்குனா வேலை முடிச்சி செய்றதுக்கு  சரியா இருக்கும் என பவித்ராவின் குரல் ஹாலில் இருந்த அவரின் கணவர் பிரபுவிற்கு  கேட்பது  போல் உரத்து  ஒலித்தது.

சரிமா , ஆனா நீ எப்பவும் இங்க வீட்லயே செஞ்சு விப்பாங்களே அவங்க கிட்ட தான வாங்குவ  . இப்போலாம் செய்றதுக்கு தேவையான பொருளும்  நம்மளே வாங்கித்தரணுமா  என்ன ? என கேட்ட பிரபு நீல முழுகை  சட்டை  வெள்ளை நிற பேண்ட்  கருப்பு பெல்ட்  அணிந்து போர்மல் லுக்கில் பார்ப்பவர்கள்  40 வயதை தாண்டி சொல்லாதவாறு  இருப்பவரின்  உண்மையான  வயதோ  ஐம்பது  .

கணவனின்  கேள்வியில் அங்குவந்த பவித்ராவோ  சிகப்பு நிற பருத்தி  புடவையை மடிப்பு கலையாமல் பாந்தமாய்  உடுத்தியிருந்தார் . முடியை மொத்தமாய்  அள்ளி   கொண்டையாய் போட்டிருக்க  அதன் நடுவில் எட்டிப்பார்த்த  ஓரிரு  நரைமுடிகள்  அவரின் வயதை கட்டிக்கொடுக்கவிட்டால் அவருக்கு வயது நாற்பத்திற்கும்  மேல் என்பதை எவரும் நம்பமாட்டார்கள்  .

என்னங்க , நான் என்ன சொல்லிட்டுஇருக்கேன்  நீங்க என்ன பேசுறீங்க  . எங்கண்ணனுக்கு  அதிரசம்னா  பிடிக்கும்னு சொன்னேன்ல . அதுவும் அத என் கையாலே  பண்ணா ரொம்ப விரும்பி சாப்பிடுவாரு  . ரொம்பநாள் ஆச்சே பதம்  வருமான்னு நானே யோசிச்சிட்டு இருக்கேன் .நீங்க என்னனா லூசு மாதிரி கேட்டுட்டு  இருக்கீங்க ..

என்ன நான் லூசா…. ம்ம்க்கும் இத்தனை நாளா எவ்ளோ மரியாதையா  பேசுவா இப்போ அவங்க அண்ணனை  பார்க்கப்போறோம்னு சொன்னதுக்கே  நம்ப மரியாதைகாத்துல பறக்குதே இன்னும் நேர்ல  பார்த்த பின்னாடி நம்பள கண்டுபாளானே தெரியலயே என மனதில் புலம்பியவர்  ….பவி ரொம்ப நாள் இல்லமா ரொம்ப வருஷம் ஏன்னா உன்னை கல்யாணம் பண்ணி இத்தனை வருஷத்துல  உனக்கு அதிரசம் செய்ய தெரியும்னே எனக்கு இப்போ தான்மா தெரியும் என சொல்லி பாவமாய் முழித்தார் .

–  பண்ணிடுவோம்..

 

 

—————————————————————————————————————————-

 

அடித்து கொள்வோம் … பிடித்து கொள்வோம் … இடையில் வருபவரை முறைத்தே கொல்வோம்…….

-அக்கா தங்கை உறவு

 

அத்தியாயம் 2:

உனக்கு அதிரசம்  சுட தெரியுமென்றதே எனக்கு இப்போ தான்மா தெரியும் என அப்பாவியாய் சொல்லிய கணவனை எரித்து  விடுவது போல் பார்த்த பவித்ரா ,முதல்ல உங்க செல்ல பொண்ணுங்களுக்கு  போன போட்டு எப்ப  வராளுங்கனு கேளுங்க . அத விட்டுட்டு வெட்டிபேச்சி பேசிட்டு இருக்கீங்க என அதட்டிவிட்டு மீண்டும் உள்ளே  சென்றார்.

இவளாதான ஆரம்பிச்சா நான் சிவனேனு  தான இருந்தேன் . ஆனாலும் நம்ம பொண்டாட்டி சரியான கேடி , எப்படி நான் கேட்டது காதுலயே  விழாத மாறி பேசிட்டு போறா பாரு  என புலம்ப ஆரம்பிக்க  என்ன அங்க சத்தம்  என்ற மனைவியின் கேள்விக்கு , நம்ப பொண்ணு கிட்ட பேசிட்டி  இருக்கேன்மா என சொல்லியவர் அதை உண்மையாக்க  போனில் தனது பெரிய மகளின் எண்ணை அழுத்தியவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஹாலிற்கு வந்த பவித்ரா அங்கு இன்னும் மகளுடன்  பேசியவாறு இருந்த கணவனை கண்டு போனை கேட்க அவரோ கவனிக்காததை போல் வேகமாய் பேசி அணைத்தார்.

எதுக்கு இப்போ வேகமா போனை அணைச்சிங்க  என ஆரம்பிக்க .

பிரபுவோ  , பவி்மா இந்த மாமனையே சந்தேக  பட்றியா என அப்பாவியாய் கேட்டார் .

ஓஒ சாருக்கு அப்படி ஒரு நினைப்பு  வேற இருக்குதோ ஒழுங்கா பேச்சை மாத்தாம உங்க பொண்ணு எதுக்கு உங்களுக்கு இவ்ளோ நேரம் பவுடர்  போட்டானு சொல்லுங்க . (  ஏன் சோப்பு தான் போடணுமா  நாம பவுடர் போடுவோம் ).

ஹீஹீ அது ஒண்ணுமில்ல பவிமா ,  நம்ம பரி்குட்டிக்கும் , பிரி்குட்டிக்கும்  போன வேலை இன்னும் முடியலையாம்டா. அதனால நாம முதல கிளம்பி போவோம்  சரியாடா.

என்ன பேசுறீங்க அவங்க ரெண்டு பேரும் எப்படி தனியா  வருவாங்க ?. என்ன இந்த மாதிரி பேச சொல்லி அந்த பெரிய கழுதை சொல்லி குடுத்துச்சா  . அவளுங்க  இதுக்கு முன்னாடி விவரம்  தெரிஞ்சு எப்ப  அந்த ஊரை பார்த்திருக்காளுங்க ? அப்பறம் எப்படி தனியா வருவாங்க ? அவ தான் அறிவு கெட்டதனமா சொன்னா .. அப்பாவா நீங்க எடுத்து சொல்ல வேணாமா என மூச்சி  கூட விடாமல் பேசினார் .

பதிலுக்கு  எதுவும்  பேசாமல் பிரபு  விறுவிறுவென உள்ளே செல்ல அவரின் செயலில் கோபமா  போறாரோ நானும் இன்னிக்கு ரொம்ப பேசிட்டேன்  . எப்பவும் கோவமே  பட மாட்டாரு இப்போ கோவமா போறாரு எல்லாம் என்னால என தன்னையே  திட்டி கொண்டிருந்தவரின் முன்பு சொம்பு தண்ணியை நீட்டினார்  பிரபு  .

மூச்சவிடமா பேசுனதுல ரொம்ப தாகமா  இருக்கும் இந்தா குடி என சொல்லியவரின் முகம் அமைதியாய் இருக்க , விழிகளோ குறும்பில் மிளிர்ந்தது  .

கணவரின் செயலில் சிரித்தவர் , அவரை நெருங்கி தோளில் சாய்ந்தவாறு  நான் எப்போவோ  எந்த ஜென்மத்திலோ  பண்ணிய புண்ணியம்  தாங்க நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க . ஆனா நான் உங்கள மதிக்கறதே  இல்லல, நானும் ஒவ்வொரு முறையும் மாத்திக்கதாங்க நினைக்கிறேன் . ஆனா அது ஏதோ நடிக்கிற  மாதிரி இருக்கு என்னை மன்னிச்சிடுங்க  என்றவரின் கண்கள் கலங்கிருந்தது.

அவரின் முகத்தை தன் கையில்  தாங்கிய பிரபு அடடா என் பவி்மாக்கு இன்னிக்கு என்னவோ ஆயிடுச்சி  . ஒருவேளை அண்ணனைப் பார்க்க போறதால  செண்டிமெண்ட் மோட்க்கு தாவுறாங்களோ என கிண்டலாய்க் கேட்டு எனக்கு என் பொண்டாட்டி இப்டி இருக்குறது  தான்டா பிடிச்சிருக்கு என அவரின் நெற்றியில் காதலாய் முத்திரை  இட்டார்  .

ச்சு என சிணுங்கியவர்  , சரி சரி அதிரசத்துக்கு தேவையானதுலாம் வாங்கிட்டு  வாங்க . நாம நாளைக்கு  சாயந்தரம் கிளம்புற  மாதிரி டிக்கெட்ட மறக்காம  போடுங்க  என்றார்  .

ரெண்டுபேர்க்கா அப்போ பொண்ணுங்க?

அதான் கூடுகளவாணிங்களா மூணு பேரும் சேர்ந்து எதுனா திட்டம் போட்டுஇருப்பீங்களே .

ஹீஹீ  ஒண்ணுமில்லமா பாப்பாங்க  வேல முடியல அதுமில்லாம கொஞ்சம் பொருள் வாங்க வேண்டி இருக்காம். அவங்க எப்படியும் உங்க ஊர் வழியா தான் வரணும் அதனால அவங்க நேரா அங்கயே   வந்திருவாங்க.

எதுக்குங்க இப்போ என்கிட்ட ஒப்பிச்சிட்டு  இருக்கீங்க அதான் முன்னடியே எல்லாம் திட்டம் போட்டு பண்றீங்களே .

அதில்லைமா என பிரபு ஆரம்பிக்க .

மூச்…வேலைக்கு போற எண்ணம் இருக்கா இல்லையா. இன்னும் ஒரு மாசம் கிட்ட  வரமாட்டோம் அதுனால போய் வேலைய பாருங்க என்ற பவித்ரா தன் வேலையை  பார்க்க சென்றார்.

பிரபு வங்கியில்  மேலாளராய் பணிபுரிய , பவித்ரா ஆசிரியராய் பணிபுரிகிறார் .பிரபுவின் வேலை காரணமாய்  அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு மாறிக்கொண்டிருக்க அங்கு அருகில் இருக்கும் பள்ளிகளில்  வேலை பார்த்து வந்த  பவித்ராவிற்கு தனது ஊருக்கு செல்ல இதுவரை வாய்ப்பே  அமையவில்லை.

பிரபு – பவித்ரா தம்பதியர்க்கு இரண்டு  மகள்கள்  –  பரியா , ப்ரியா.

இருவருக்கும் இடையில் இரண்டு வருட  வித்யாசம் இருந்தாலும்,   பார்ப்பவர்கள் இரட்டையர்களோ  என எண்ணும் அளவிற்கு உருவிலும்  செயலிலும் அவ்வித்தியாசம்  சிறிதளவே இருக்கும்.

தைரியத்தின் மறுவுருவாய் இருக்கும் பரியா காவல்துறையில் சேர நினைக்க தாயிடம்  இருந்து வந்த ஆட்சயபனையில் அதை சிறிதே  மாற்றி மாவட்ட ஆட்சியாளர்  ஆவதே குறிக்கோளாய் கொண்டு அதற்க்கு தயார்  படுத்திக்கொண்டிருக்கிறாள்  .

பிரியாவோ பத்திரிக்கைதுறையில் நுழைந்திருந்தாள்.

அவளின் வேலைக்காகவே இருவரும் தேனி மாவட்டம் வரை சென்றுள்ளார்கள்  .

………………………………………………………………………………………………………………………

 

அக்கா இப்போ எதுக்கு இவ்ளோ கோபமா முகத்தை வச்சிருக்க  என கேட்ட பிரியா அன்று மலர்ந்த  ரோஜா பூவாய் பூத்திருக்க அவளின் முகத்தில் இருக்கும் பருக்களோ …ரோஜா இதழ்களில் உறவாடும் பனித்துளிகளை நினைவூட்டியது  .

பின்ன , அந்த பனிக்கரடி  பரத் பண்ண காரியத்துக்கு என்னை ஈஈனு இளிச்சிட்டு வரசொல்றியா என கடுகடுத்த  பரியாவோ தன் இருக்கும் இடம் முழுவதும் வாசம் பரப்பி  அனைவரின் மனதையும் வசம் செய்யும் மல்லிகை  பூவை ஒத்திருக்க , அவளின் வெள்ளை நிறம் தற்போதைய கோபத்தால் சற்றே சிவந்திருந்தது  .

அச்சோ அக்கா அதான் அவனை அங்கயே அந்த அடி அடிச்சிட்டல . இப்போ கொஞ்சம் சிறியேன் இல்லனா உன் முகத்தை பாக்க சகிக்கல  என்று அவளின் இடையில் சிறுகுழந்தையை  போல் கிச்சுகிச்சு  மூட்டி  சிரிக்க வைத்தாள்.

கண்களில் கண்ணீர் வழிய அவள் சிரிப்பதை கண்ட பின்பே விட்டவள் , ஆமா அக்கா அந்த பக்கி பரத் பண்ணதுக்காகவா இப்டி அவசர அவசரமா அங்க இருந்து கிளம்புன . சரி கிளம்புனதுதான்  கிளம்புன , நம்ப வீட்டுக்கு போறத விட்டுட்டு எதுக்கு இப்போ அம்மாவோட ஊருக்கு கூட்டிட்டு போற.

தங்கையின் கேள்விக்கு இதழ்களில் தோன்றிய கள்ள சிரிப்புடன் , ப்ரி குட்டி இன்னிக்கு வீட்டுக்கு போனா நாளைக்கே திரும்பி இங்க தான எல்லோரும் வரப்போறோம்  .எதுக்கு அந்த காவிகாரனுக்கு காச அழணும்  .

அக்காவ் …..தயவு பண்ணி உன் திருவாய கொஞ்சம் மூட்ரியா . எதெதுக்குலாம் பேர் வைக்கிறத்துனுயில்ல .

முறைத்த தமக்கையை பார்த்த தங்கையவளோ,   எதுக்கு இப்போ அந்த கண்ண போட்டு உருட்ற . பின்ன எந்த லூசாவது ட்ரெயின்க்கு செல்ல பேர் வைக்குமா பக்கி பக்கி  அதும் உருப்படியா  வச்சிருகியா.

ஏன் நான் வச்ச  பேருக்கு என்னடி குறை.

பேரா அது …காவிகாரனாம் . இப்போ  நாடு  இருக்க நிலைமையில  எவனா இத கேட்டு தொலைச்சா என்ன பண்றது என இன்னும் என்னன்னவோ வார்த்தைகளை கோர்த்து அர்ச்சனை  செய்தவள்  தான் முதலில் கேட்ட கேள்வியை மறந்திருந்தாள்.

இருவரும் சற்று நேரம் முன்பு தான் மன்னவனூரின் அருகில் இருந்த ஊரில் இறங்கிருந்தனர்  . அவர்கள் ஏறிய பேருந்து  சற்று முரண்ட அந்த ஊரினிலே  அவர்கள் இறங்க  வேண்டியதாயிற்று  .

தங்கையின் வசவு சொற்களை  காதில் வாங்காமல்  , முதல் முறையாக கிராமத்தின் வாசம் தன் கண்களையும் ,மனதையும் வசம் செய்ய அதை அனுபவித்தபடி வந்துகொண்டிருந்தாள் பரியா .

அந்த அதிகாலை பொழுதில் இவர்கள் நடந்துகொண்டிருந்த  இடம் ஒதுக்குபுறமாக  இருக்க அருகில் இருந்த தோப்பினுள் இருந்து வந்த சத்தத்தில் முதன்முறையாக  கிராம சூழ்நிலைக்கு வந்திருந்தவர்கள் என்ன என்று அறியாமல் முழித்துக்கொண்டு  அங்கயே நின்றிருந்தனர்  .

￰சற்றுநேரத்திலயே அது காற்றின் இசையும் , தண்ணீரின் சலசலப்பும்  என கண்டு கொண்டவர்கள் முகம் முழுக்கு ஆர்வம் பூச ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வேகமாய் உள்ளே நுழைய  , அங்கு இருந்தவர்களை  கண்டு சற்றே பின்வாங்கி அருகிலிருந்த  மரத்தின் பின் ஒளிந்தனர்  .

அக்கா…. இந்த இடத்தோட சொந்தக்காரங்கபோல  கா , வந்த முதல் நாளே  எதுக்கு வம்பு வா போலாம் என ப்ரியா சொல்ல , தங்கைக்கு இசைவாய்  தலையசைத்து பின் செல்ல கால் வைத்தவள்  , அவர்கள் பேசியதில் சட்டென்று மீண்டும் அதே இடத்தில் நின்றாள்.

டேய் எருமைங்களா , எவண்டா  அவன் பவன்புத்ரா….பெரிய இது மாதிரி போனீங்க  இப்போ என்னனா , அவன் வந்துட்டான் அதான் ஒன்னும் பண்ணமுடிலனு வந்து நிக்குறீங்க  . அந்த நாய போட்டித்தள்ளிட்டு சொன்னத செய்ஞ்சிருக்கவேணாமா என  தன்  முன் நின்றிருந்தவர்களை காய்ச்சிக்கொண்டிருந்தார் பத்மகேசன்  , உருவத்தில் பெரும் மலை போல் இருப்பவர் … அந்த ஊரில் அரசியல்  செல்வாக்கு பெற்றவர்.

பரியா மீண்டும் நின்றதை கண்ட ப்ரியா , சத்தம் வாரா வண்ணம் என்னாச்சி என கேட்க.

பரியாவின் இதழ்களோ “பத்ரா ” என முனங்கியது.

அவளின் முனங்கல் இவளின் காதில் விழாமல்  போக , என்னக்கா இன்னும் என்ன என பரியாவின் கைகளை பற்றி இழுத்தாள்  .

அப்பொழுது பத்திரிக்கை துறையில் இருப்பதால் இயல்பாய் இருக்கும் எச்சரிக்கை  உணர்வில் தங்களின் பின் எவரோ வரும் ஓசை கேட்க …தமக்கையை இழுத்து அருகிலே  சற்று பெரியதாய் இருந்த மரத்தின் பின் மறைந்தாள்  .

பரியாவோ இதை எதையும் கவனிக்காமல் பத்மகேசன்  பேசுவதையே உற்று கவனித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் செயலில் ஏன் இப்படி என்ற கேள்வி ப்ரியாவிற்கு தோன்றினாலும் …தமக்கையை பின்பற்றி  அவளும் நடப்பதை  கவனித்தாள்.

அனைவரையும் வார்த்தைகளால் விளாசி கொண்டிருந்த பத்மகேசன் முன் வந்து நின்றான் பரமேஷ் , அவரின் வலது கை .

என்ன அண்ணா எதுக்கு இவ்ளோ கோபமா இருக்க என கேட்டான் பரமேஷ்…

என்னடா தெரியாதமாதிரி கேக்க  என பதிலுக்கு  உறுமினார்  பத்மகேசன் .

அவரை ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி , மற்ற அனைவரையும் போகச்சொல்லி தலையசைக்க  அனைவரும் குனிந்த  தலையுடன் கலைந்தனர் .

அனைவரும் வருவதை பார்த்து இன்னும் மரத்தோடு ஒன்றிய  சகோதரிகள் இவர்கள் இருவரும் பேசுவதை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர்  .

எதேச்சையாக  கிடைத்த வாய்ப்பை  பத்திரிக்கைகார மூளை  விட்டுவிடுமா  என்ன என மெதுவாய் கேட்ட ப்ரியா தன் அக்காவை பார்க்க , அவளோ இவள் இருப்பதையே கண்டுகொள்ளாமல் அவர்களையே பார்த்திருந்தாள்.

இவ எதுக்கு  இப்போ இப்டி இவங்கள சைட் அடிக்கிற மாதிரி பாத்துட்டிருக்கா என நினைத்துகொண்டே, இவர்கள் பேசுவதை தன் பையில்  இருந்த ரெக்கார்டர் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்தாள்  .

எல்லோரும் சென்ற பின் பரமேஷ் , அண்ணா உனக்கு நட்டு  சங்கர தெரியும் தான.

ம்ம்ம்…யார சொல்ற சமயத்துல  சம்பந்தமே இல்லாம பாக்குற எல்லோரையும் நட்டு கழன்றவன் மாதிரி போட்டு தள்ளுவானே  அந்த சங்கரா ?

ஆமா அண்ணா … அவனே தான் என்றவனின் பேச்சில் குறுக்கிட்ட பத்மகேசன் ,

டேய் அவன மறக்க முடியுமாடா ….அதும் அவன் செத்ததை  இன்னுமே  நம்ப முடில. இவனே  பைத்தியம்  மாதிரி பாக்குறவனலாம்  மூச்சுவிடறதுக்குள்ள  போட்டுத்தள்ளுவான்  .அவனயே ஒருத்தன் நடுரோட்டுல  கொன்னு போட்டுருந்தானே  அப்ப்பப்ப்பா என வியந்து போய் சொன்னவர் , அதை அடுத்து பரமேஷ் சொன்னதில் ஒரு நொடி அவரின் இதயமே  நின்றது போல் ஆனார்  .

பத்மகேசன் மட்டுமல்லாது  அவன் சொன்னதை மறைவாய்  நின்று கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகளில்  , பரியாவின் உடலும்  அதிர்ச்சியில்  உறைந்தது  .

பத்மகேசன் நட்டு சங்கர்  இறந்ததை  பற்றி சொல்லிக்கொண்டிருந்த  பொழுது இடையில் குறுக்கிட்ட பரமேஷ் , அந்த நட்டு சங்கர  போட்டதே  இந்த பவன்புத்ரா தான் அண்ணா என சொல்லிருந்தான்  .

அவனின் இந்த வார்த்தையிலயே,

அவன் வெறும் போலீஸ் தான என பத்மகேசனும்  ,

பத்ராவா …இது எப்படி உண்மையா இருக்கமுடியும் என பரியாவும் அதிர்ந்திருந்தனர்  .

சகோதரியுடன்  ஒட்டியவாறு  நின்றிருந்ததால்  அவளின் அதிர்ச்சியை  கண்டுகொண்ட ப்ரியா , இவ கண்ணுமுன்னாடி  கொலை நடந்தாலே  அசால்ட்டா  இருப்பா . இப்போ , எவனோ எவனோட சாவுக்கோ  காரணம்னு சொன்னதுக்கு  எதுக்கு இம்புட்டு ஷாக்  ஆகுறா  ??

அவர்கள் அதிர்ச்சியாய் நின்றிருந்த வேளையில் இதை யோசித்துக்கொண்டிருந்த  ப்ரியா , தற்பொழுது அந்த இருவரையும் கவனிப்பதை விட்டுவிட்டு  , அவர்கள் பேசுவதற்கு தன் தமக்கையின்  முகம் காட்டும்  வர்ணஜாலங்களை  ஆராய முற்பட்டவளின் செவிகளை  இம்முறை பலமாய்  தீண்டியது , பரியாவின் இதழ்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்த  “பத்ரா ” என்னும் சொல்.

 

-பண்ணிடுவோம்.

——————————————————————————————————————————————————

 

எவன் ஒருவன் சிறுவயதில் …இவன் என் நண்பன் என்று தோள்களில் கைபோட்டு சுற்றினானோ , அவனே இன்று வளர்ந்தபின் அத்தோள்களை அறுக்க பார்க்கிறான் ….ஜாதி என்னும் அருவாள்  கொண்டு !!!

 

அத்தியாயம் 3 :

 

￰பரமேஷ் நேற்று அந்த கலவரத்தில்  பவன்புத்ராவை பார்த்ததை பற்றி பத்மகேசனிடம்  விவரிக்க ஆரம்பித்தான்.(  வாங்க அங்க என்ன ஆச்சுன்னு நாமளும்  பார்ப்போம் ).

கலவரம் நடந்து கொண்டிருந்த இடத்தில் சிறிதும் பதறாமல்  ,  ஏதோ  பிடித்த படத்தை  ரசித்து பார்ப்பது போலான உடல்மொழியுடன்  தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .

தற்பொழுது அவன் பின்னால் பல போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அதிலிருந்து இறங்கியவர்கள் இவனின் அருகில் வரிசையாய் நிற்க, அவனோ இது எதையுமே கவனித்தது போல் இல்லை.

அவ்வூரில் ஜாதி என்பது மிகபிரதானமாய் இருந்தது.

தேர்தல் நெருங்கும் வேளையில் கலவரத்தை உருவாக்கினால் அது ஆளுங்கட்சிக்கு எதிராய் திரும்பும் என்பதற்காக ***** கட்சியை சார்ந்த ஒருவர் பத்மகேசனிடம் பணம் கொடுத்திருந்தார்.

அதன்பெயரிலே  அவரது ஆட்கள் இந்த கலவரத்தை உருவாக்கியது.

இதையறியாமல் இத்தனை நாள் ஒன்றாய்  வாழ்ந்தவர்கள்   ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர்  .

தொடர்ச்சியான வண்டிகளின் சத்தத்தில் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒரு சிலர்  திரும்பிப் பார்த்தனர் .

அதில் நேற்றுவரை ஒன்றாய் சுற்றிக்கொண்டிருந்ததை மறந்து அவன் வேறு ஜாதி என்பதை மட்டுமே கண்களில் கொண்டு ஒருவனை அடித்துக்கொண்டிருந்தவன் திரும்பி பார்த்து , அய்யயோ இவன் எதுக்கு இங்க வந்துருக்கான் என முனங்கினான்.

இத்தனை நேரம் அடிவாங்கியவன்  இவனின் முனங்களில் நிமிர  , எதிரில் அமைதியாய் வண்டியில் சாய்ந்தவாறு  அமர்ந்திருந்த பவன்புத்ராவை பார்த்தவனின் கண்களில் கலவரம் சூழ்ந்தது .  ஆத்தாடி ….இவனா …இவன் எதையாவது  வித்தியாசமா பண்ணி தொலைப்பானே என்றவனின் குரலே நடுங்கியது .

இவர்கள் மட்டுமில்லாமல் கூட்டத்திலிருந்த  பத்மகேசனின் ஆட்களும் , இவனை பார்த்ததில்லை  எனினும் அறிந்திருந்ததால் , அடக்கி வாசிங்க என ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டார்கள் .

சிறிது நேரம் ரசித்து பார்த்த பவன்புத்ரா அவர்கள் தன்னை பார்த்துவிட்டபிறகு பின்வாங்குவதை  போல் தெரிய  , அவனின் இதழ்கள் புன்னகையில் வளைந்தது .

பத்மகேசனின் ஆட்களுக்கோ நேரம் போவது புரிய என்னசெய்வது என முழிக்க ,இவனை பற்றி அறியாமல் ஒருவன் கூட்டத்தினுள் மேலும் கலவரத்தை தூண்டுவதற்க்காய் ***ஜாதியின் தலைவரின் மேல் கல்லை எரிய மீண்டும் அவ்விடம் போர்களமானது .

இவனை பற்றி அறிந்திருந்த மற்ற போலீசார் , இவனின் அடுத்த செயலை ஆவலாய் பார்க்க ஆரம்பித்தனர் .

பவன்புத்ராவோ , போர் அடிப்பது போல் இருக்கே என இரண்டு கைகளையும் மேலாய் தூக்கி சோம்பல் முறித்தான் .

அவனுக்கருகில் இவனை ஒத்ததுபோல் வயதுடைய போலீகாரன் ஒருவன் நின்றிருந்தான்.

அவனிடம் , சார் படம் போரடிக்குதே சூடு ஏற்றலாமா என்றவன் ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்ட…, அடுத்த நொடி போலீஸ்காரர்கள் நரிகளின் மீது பாயும் சிங்கமாய் மாறி கூட்டத்தின் நடுவே பாய்ந்தனர் .

ஏட்டையா அதோ அந்த நீல சட்டைகாரன கால்ல போடுங்க… முருகேசன் சார் உங்க பின்னாடி ஒருத்தன் பம்முறான் பாருங்க அவனை மண்டைல  கவனிங்க   என ஒவ்வொருத்தரையும் சுட்டிக்காட்டி சொல்ல , அவர்களும் இத்தனை நாள் கேஸ் எதுவும் வரமால்  அளுத்திற்க , கிடைச்சுது சான்ஸுன்னு பிரித்து மேய்ந்தனர் .

இதை அனைத்தையும் மறைவாய் நின்று பார்த்தகொண்டிருந்த பரமேஷ் , என்னடா இவன் !! போலீஸ்காரன்னா எல்லோரையும் அரஸ்ட்டு  பண்ணி கூட்டிட்டு போறதவிட்டுட்டு , இங்கேயே எல்லாரோடையும் ப்பூய்ஸையும்  பிடிங்கிடுவான் போலயே என இவனின் செயலை கண்டு புலம்பியவனை , களைப்பதுபோல் ஒலித்த விசில் சத்தத்தில் எவன்டா அவன் என பார்க்க அங்கு வாயில் வைத்த விரலை எடுக்காமல் இடைவிடாமல் விசிலடித்து கொண்டிருந்தான் பவன்புத்ரா.

இதற்க்கு முன் இப்படி  அடிவாங்கியிறாததால் போலீசாரின் ஸ்பெஷல் கவனிப்பில் வலி தாங்கமுடியாமல் இருந்த பத்மகேசனின் ஆட்களில் சிலர், டேய் என்னடா இவன் ….இங்க நம்ம உசுறு போற மாதிரி அடி வாங்கிட்டு இருக்கோம் .., இவன் என்னவோ முதல் நாள் முதல் ஷோக்கு வந்தவன் மாதிரி விசில் அடிச்சுட்டு இருக்கான் என பொறுமினான்.

டேய் நாதாரி …, வாயமூட்றா. அவன் விசில் அடிச்சா கூட பரவாயில்ல  , ஆனா அதுக்கு நடுவுல அவன் மூச்சு விட்ற கேப்ல நம்ப மூச்ச எடுக்க கோர்த்துவிட்றான்டா  என்றான் மற்றவன் அழாகுறையாக.

இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த பரமேஷ் , அடேயப்பா … இவன் விரல் கூட இங்க ஒருத்தன் மேல படல…, ஆனா மொத்த பேரையும் இப்படி அலற வைச்சுட்டானே என மனதில் அவனை வியந்த வண்ணம் இருந்தான்.

அவன் எந்த நேரத்துல நினைச்சானோ அதுக்கு ஆப்படிப்பதுபோல் இருந்தது அடுத்ததாய்  அவன் செய்தது  .  அத்தனை நேரம் போலீசார் கலவரம் செய்தவர்களை பிரியாணி போடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் ஒருவன் வேகமாய் அரிவாளை எடுத்து ஒரு போலீஸாரின் பின் வெட்ட வருவதை பார்த்தவன்  , அவ்வளவுதான் வேகமாய் பாக்கெட்டில்  இருந்த துப்பாக்கியை பட்டென்று எடுத்து பொட்டென்று  அவனின் காலில் சுட்டான்  .

ஒரு நிமிடம் துப்பாக்கிச் சத்தத்தில் அந்த இடமே அமைதியாகியது. இந்த மாதிரி சூழ்நிலையில் அவ்வூரில் எந்த போலீஸ்காரர்களும் துப்பாக்கியை உபயோகப்படுத்துவதில்லை. சொல்லப்போனால் கலவரத்தின் நடுவே அடிவாங்கிய போலீஸ்காரர்களே அதிகம் . இவனோ அசால்டாய் எடுத்துச் சுட்டுவிட  ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்தனர் .

அந்த அதிர்ச்சி மறைவதற்குள்ளாகவே தன் அருகில் முதலில் நின்றிருந்தவனுக்கு பவன்புத்ரா கண்காட்ட…பதிலுக்கு அவன் செய்த சைகையில் அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது.

ஏன்டா நாயே ! போலீஸ்காரனையே வெட்ட வருவியா என்றபடியே குண்டடி பட்டிருந்தவனை தூக்கி மாருதியில் போட்டவன் மறுபக்கம் ஏறி வண்டியை கிளப்பினான்  . உணர்வுகளுக்கும்  அவனை கண்டால்  பயமோ வண்டியை கிளப்பியவனின்  முகத்தில் மருந்திற்கும் இவ்வுணர்ச்சிகளும் இல்லை.

அங்கு நின்றிருந்தவர்களின் இச்செயலை எதிர்பார்க்காததால் இப்பொழுது என்ன செய்வது என முழித்திருந்தனர்.

போலீஸ்காரர்களோ இது வாடிக்கை தான் என சிரித்துக் கொண்டு,  ம்ம்க்கும் ஒருத்தன் சிக்கிட்டான் . இம்முறை சார் , இவனா என்னவிதமா திரும்ப கொண்டுவரப்போறார் என தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர் .

பரமேஷிற்கோ , இங்கே என்ன நடக்குது என முடியை பிய்த்துக் கொள்ளாத குறை.

இதுவரை பரமேஷ் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக கொண்டிருந்த பத்மகேசன், டேய் என்னடா ஆச்சு ! சுட்டவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டானா.

அதற்க்கு பதிலாய் பரமேஷோ , வழக்கமான போலீஸ்னா அப்படித்தான் பண்ணிருக்கணும்..ஆனா இவன் சரியான வில்லங்கம் புடிச்சவனாச்சேணா.

அப்படி என்னதடா பண்ணி தொலைச்சான்.

கலவரம் நடந்த இடத்தையே நாலஞ்சு தடவை சுத்தி சுத்தி வந்தான்ணா . நான் கூட இன்னும் யாரையும் அள்ளிட்டு போபோறானோன்னு பார்த்தா , அவன் ஏற்கனவே தூக்கிட்டுபோனவன குப்பையாக்கி போட இடம் தேடி இருக்கான்ணா.

என்னடா சொல்ற… நாதாரி புரியிற மாதிரி சொல்ல மாட்டியா.

என்னத்தணா  சொல்ல சொல்ற  . கார்ல தூக்கி போடும்போதாச்சி அவனுக்கு கால்ல மட்டும்தான் காயம் .திரும்பி வெளியே போடும்போது  காலு எங்கடா இருக்குனு தேடறாப்புல  இருந்தான் ணா.

ஆனா அண்ணா அவனுக்கு நம்ப தான் இந்த கலவரத்துக்கு காரணம்னு தெரியாது .அவன் அவனோட மேல்அதிகாரிங்களுக்கு கூட பயப்படமாட்டானாம்ணா.

பத்மகேசனோ , டேய்  ….அவன புகழ்ந்துதள்ளவா இங்கிட்டு வந்த .எவண்டா அவன்*****  து அவனுக்குபோய் பயந்துகிட்டு . நம்ப மினிஸ்டர்ட ஒரு வார்த்த  சொன்ன அடுத்த நொடி அவன வேற ஊருக்கு மாத்திட்ட போறாரு என போனை எடுத்தார்.

அதை பிடுங்கிய பரமேஷ் ,அய்யோ அண்ணா நீங்க வேற அப்படி ஏதும் பண்ணி தொலைக்காதீங்க. இப்போதான் அவன பத்தி விசாரிச்சுட்டு வாரேன் , அவன் சொந்த ஊர் மன்னவனுர்…..பெரிய தலைக்கட்டோட பேரன். நம்ப மினிஸ்டர் அவங்களுக்கு ரொம்ப நெருக்கம் .  போலீஸ்காரனுக்கு கொஞ்சம் பணம் ,பின்புலம் இருந்தாலே துள்ளுவானுங்க , இவனுக்கு கேட்கவா வேணும் என நீளமாய் அவன் பவன்புத்ராவை பற்றி விசாரித்ததை  சொல்லினான் .

சிறிது நேரம் யோசித்த பத்மமகேசன் , இப்ப என்னடா பண்றது என அவனையே கேட்டார்.

இவங்கள மாதிரி பெரிய இடத்தை எப்பவும் பகைச்சுக்க கூடாதுனு நீதானணா சொல்லுவ என்று பரமேஷ் பதில் சொல்லும்போதே, அவர்கள் இருந்த எதிர்ப்பக்கத்தில் இருந்து எவரோ அழைப்பது போல் கேட்டதில் பேசியவாறே அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்கள் சென்றபின் பரியாவோ , என்ன நடந்திருக்கும்… ஒருவேளை இப்படி இருக்குமோ?  இல்ல ஒருவேளை அப்படி இருக்குமோ ?என மனதில் பேசுவதாய் எண்ணி வெளியே பேசிக் கொண்டிருந்தாள்.

அக்கா …அக்கா என ப்ரியா கூப்பிட கூப்பிட பரியா திரும்பாமல்  இருக்க , அவளின் காதருகில் சென்று யக்க்க்காவ் என கத்தினாள்.

எரும எரும …கூப்பிட்ட திரும்ப போறேன் அதைவிட்டுட்டு , எதுக்குடி இப்போ காதுஜவ்வு  கிழிர மாதிரி கிட்ட வந்து கத்தி தொலைக்குற  .

ஹான் ஏன் சொல்லமாட்டா  , இங்க ஒருத்தி  தொண்டைத்தண்ணி  வத்த  கத்திட்டுஇருக்கேன் . நீ நல்லா கனவு கண்டுட்டு  ,ஏன் கத்துறனா  கேக்குற  உன்ன என முறைத்தவள் தொடர்ந்து , ஆமா அந்த பவன்புத்ரா கூட டூயட் ஆடி  முடிச்சிட்டியா  இல்ல நேரம் ஆகுமா ?

ஐயையோ  இந்த பக்கிக்கு எப்படி தெரிஞ்சிது என்று குழம்பி

இல்லாத மூளையை  கசக்கியவள்  ,  ஹீஹீ குட்டிமா என சமாளிக்கிறேன் பேர்வழிஎன அசடு  வழிந்தாள்.

உவ்வேக்…அக்கா தயவு செஞ்சி எக்ஸ்பிரசன மாத்து  சகிக்கல என்றவள் தொடர்ந்து, ஏதோ ஸ்ரீ ராமா ஜெயம் சொல்ற மாதிரில  பத்ரா பத்ரா னு புலம்பிட்டு  இருந்த.  மறைக்காம உண்மையை சொல்லுக்கா.

அது ப்ரி மா …வந்து…பத்ரா…ஆங்..

எம்மாடியோவ்…விடாம பேசுற எங்க அக்கவையே வாயில டைப் அடிக்க வச்சிட்டாரே, அந்த பவன்புத்ரா பெரியஆள் தான் போல .

இன்னும் அமைதியா இருந்தா இவ உன்ன ஓட்டி தள்ளிடுவா பரி என உசுப்பிய  மனசாட்சியை , எல்லாத்துக்கும்  அந்த பத்ரா தான் காரணம் இப்போ யாரு அவனை என் நியாபகத்துல  வர சொன்ன என பழியை  அவன் மேல் போட்டாள்.(  அடி ஆத்தி  இது என்னமா புது டிஸைனா இருக்கு …நீயா அவனை நினைச்சிப்புட்டு  அந்த  புள்ளைய திட்டுற  ).

ப்ரிகுட்டி  லூசு மாதிரி பேசாத . அந்தமாதிரிலாம் எனக்கு எவனையும்  தெரியாது . இப்போ நீ சொல்லி தான் இப்படி ஒரு பேரே கேக்குறேன்  என வேகவேகமாய் மூச்சுவாங்க  சொல்லிமுடித்தாள் பரியா.

ஹாஹா , அக்கா நான் கூட ஒரு டவுட்லதான் இருந்தேன் , ஆனா இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு. எப்படி எப்படி பவன்புத்ரா -ற பெயரையே இப்போ நான்  சொல்லித்தான் நீ கேட்கிறாயா …..ஹா ஹா ஹா ….

ஏய் என்னடி ஓவரா பண்ணிட்டு இருக்க.கிளம்பர  ஐடியா இருக்கா இல்லையா …வளவளன்னு பேசாம கிளம்பு  என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் பரியா.

அச்சிசோ …எங்க அக்காக்கு   கோவம் வந்துடுச்சு போல. சரி சரி, நான் எதுவும் சொல்லல என அமைதியான ப்ரியா…, திடீரென ஹா ஹா ஹா என சிரித்தாள்  .

பரியா அவளை புரியாமல்  பார்க்க, ம்ம்க்கும் அக்கா ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்கட்டுமா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினாள்  .

பரியாவும் சரி என தலையசைக்க , அது எப்படிகா ! காதல் வந்துவிட்டா உடனே எல்லோரும்   அவங்க ஆளுக்கு செல்லப்பேர்லாம் வச்சுட்ரீங்க. எப்படி எப்படி பவன்புத்ரா டு பத்ரா வா ஹாஹா எப்படிகா இப்படிலாம்.

திருத்திருக்வென முழித்த  பரியா கோபம் போல் முகத்தை வைத்து , இப்போ வாய மூடிட்டு வரப்போறியா இல்லை நான் தனியா போகட்டுமா என அதட்டினாள் .

ம்ம்க்கும் நாங்க சிங்களுனு கொஞ்சநாள்ள நீ மிங்கிள் ஆகபோற தெனாவட்டு பேசுறீங்களோ. நாங்களும் ஒருத்தன கரெக்ட்  பண்ணுவோம்…, நாங்களும் செல்லப்பெயர் வெப்போம் …, நாங்களும் செல்லமா கூப்பிட்டு கொஞ்சுவோம் என தங்கள் அன்னை வழக்கமாய் கோபத்தில் நொடிப்பது போல் நொடித்தாள்.

தங்கையின் பேச்சில்  வந்த சிரிப்பை அடக்கிய பரியா,  முகத்தை சீரியஸாய் மாற்றி… ப்ரிக்குட்டி நாங்க நாங்கனு சொல்றியே மீதிப்பேர் யாருடா குட்டி ?  ஒருவேளை எல்லாருமா ஒரே பையனயா என பாதியில் நிறுத்தி கண்ணடித்தாள்.

ஆத்தாடி என்னது என பதறிய ப்ரியா தமக்கையின்  கண்களில் தெறித்த  கேலியில்  , உன்னை என பல்லைக்கடித்து   சுற்றுமுற்றும் தேடியவள் கிடைத்த கல்லை தூக்க.

ஐயையோ ப்ரிகுட்டி… நான் உன் ஒரேஒரு அக்காடா….நம்ப அம்மா அப்பாக்கு ஒரே ஒரு மூத்தபொண்ணுடா  என கத்தியவாறு ஓட , ப்ரியா அவளைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

ஓடிக்கொண்டிருந்த  இருவரின் முன்பும்  வேகமாய் வந்த அந்த இருசக்கர வாகனம்  கிரீச்சிட்டு  நிற்க , அதிலிருந்து வெள்ளை நிற டீஷர்ட் ப்ளூஜீன்  போட்டு கண்களில் போட்டிருந்த கருப்பு கண்ணாடியை  கழட்டியவாறு  இறங்கினான் அவன்.

திடீரென ஓர் வண்டி முன் வந்ததில் தடுமாறிய  பரியா மற்றும் ப்ரியா இருவரும் அந்த வழியில் இருந்த சேற்றில்  விழுந்தனர் .

ச்சேய் இடியட் என திட்டிகொண்டே எழுந்தவர்களில் ப்ரியா , ஹலோ அறிவில்லையா இப்படியா  திடுதிப்புனு  வருவாங்க  என கத்த தொடங்கினாள்.

அவளின் கையை பிடித்த பரியா , பத்ரா என சொல்ல….ஒரு நொடி புரியாமல் விழித்த ப்ரியா அவளின் அக்காவையும்,   அந்த பைக்கில் வந்தவனையும்  மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்  .

அட இது என்ன இந்த பொண்ணுங்க  நடுவுல வந்துட்டு  நம்மள ஏசுராங்க என நினைத்து பதிலுக்கு திட்ட  போனவன் பக்கத்திலிருந்தவள்  ஏதோ சொல்ல திட்டிக்கொண்டிருந்தவள்  அமைதியாகியதை  கண்டு யார் இவர்கள் என்பதை போல் பார்த்திருந்தான்.

டேய் பவனஜ் !  என்னடா இன்னும் நீ போலையா என கேட்டவாரே வந்த ஒருவன் இவர்களை பார்த்து யார் என பவனஜிடம்  கண்களால் கேட்க அவனோ தெரியாது என தோள்களை  குலுக்கினான்  .

பவனஜா  என குழப்பத்துடன் ப்ரியா தன் அக்காவை பார்க்க இப்பொழுது  விழிப்பது  பரியாவின் முறையாகியது .

 

– பண்ணிடுவோம் ….

 

—————————————————————————————————————————————-

 

பெண்ணே !பெண்ணியம் பேசு…பெண்ணியம் எதுவென அறிந்து பேசு !மாற்றம் வேண்டியது எங்கள்  பார்வையில் அல்ல …உங்கள் உடைகளில்  என்றால் !நாங்கள்  எவ்வாறு இருந்தாலும் உங்கள் பார்வையை மாற்றுங்கள் எனாதே மாற்றிய பின் கேள்  , எங்கள் உடைகள் மாறின  உங்கள் பார்வைகள்  மாறுமா என !நாகமது எதிரில் இருப்பவர்  குழந்தையா ? குமரியா  ? உடை என்ன என பார்ப்பதில்லை  கொத்தமட்டுமே  செய்யும் விஷமாய் !கயமையவனின்  கண்கள் கண்ணியம் உணராது …என்றும் கயமையை  மட்டுமே கக்கும் விஷமாய்  !

 

அத்தியாயம் 4:

 

தங்கள் முன் நிற்பது  பவன்புத்ரா என பரியா சொல்ல அங்கு வந்த மற்றொருவனோ அவனை பவனஜ் என்றழைத்தான் .

அதில் பரியா மற்றும் ப்ரியா இருவரும் விழித்துக்கொண்டிருந்தனர்.

யார் இவங்க …ரெண்டுபேரோட முழியுமே  சரியில்லையே  என எண்ணிய பவனஜ் சத்தமாய் , ஓய் யாரு நீங்க…இங்கன எங்க சுத்திட்டு கிடைக்கீக .

பதில் சொல்லாமல் மீண்டும் இருவரும்  முழித்துக்கொண்டிருக்க , என்னால ரெண்டு பேரும் ஆடு திருடுன கள்ளநாட்டோம்  முழிக்கீக   என அதட்டினான்  .

அவனின் அருகில் நின்றிருந்தவனோ  , ஏம்ல… என்னாத்துக்கு அதட்டுற  புள்ளைங்க பயபடுது  போல என்றான்.

அவனின் பயபடுது  என்னும் வார்த்தையில் விழித்தெழுந்த  சிங்கமாய்  சகஜநிலைக்கு வந்த பரியா , ப்ரியா இருவரும் சேர்ந்து எதிரில் இருந்தவர்களை முறைக்க , அதை பார்த்த பவனஜ் அருகில் இருந்தவனிடம் , ஏலே இவங்கள  பார்த்தா பயப்படறாப்ல தெரிலடா வேணும்னா நம்பள பயப்படவச்சிப்புடுவாங்க போல .

என்ன மாப்பு  சொல்ற, அப்போ நம்ப இங்க இருக்கிறது சரிகிடையாதே நைசா கழண்டுக்கலாமா …டேய் டேய் பவனஜ் நான் சொல்றது கேக்குதா இல்லையால  . என்னதுக்கு அந்த புள்ளையயே குறுகுறுன்னு  பாக்குற …வால போவோம் என்று பவனஜை நகர்த்தி  அவனின் வண்டியில் ஓட்டுவதற்க்காய்  அமர்ந்தான் அந்த மற்றொருவன்  .

பவனஜோ நண்பனின்  சொல்லிற்கு  சரி என தலையசைத்தாலும்  கண்களை பரியாவிடம் விட்டுக்கொடுத்துவிட்டான்  .

அவனின் பார்வையை சரியாய் மிக தப்பாய் புரிந்துகொண்ட  பரியாவோ , பார்க்குறான் பாரு இதுக்கு முன்னாடி  பொண்ணுங்களையே பார்த்தத்தில்லாத  மாதிரி ..என முனங்கினாள்  .

அவளின் முனங்களை  கவனித்த  பவனஜோ , கண்கள் குறும்பில் பளபளக்க முன் அமர்ந்திருந்தவனின் தோள்களில் கைவைத்து அவனை நிற்க சொல்லியவன் …ஏல பன்ரொட்டி நில்லுடா  . பேரு என்னனு விசாரிச்சிபுட்டு  போவோம் என அவனிற்குமட்டும்  கேட்க்குமாறு   முனங்கினான்.

ஏலே…என்னம்ல  சொல்லுர  ..நீ இப்புடிலாம்  பண்ற ஆளு கிடையாதேப்ல. உங்க அப்பாருக்கு  தெரிஞ்சிது உன்ன ஒன்னும் செய்ய மாட்டாருல என்ற தோளதான்  பிய்ச்சி  போடுவாருல.

 

அட என்ன பன்னு (பன்ரொட்டியின் சுருக்கம் பா ) , பேரு தாம்ல கேக்கலாம்  சொன்னேன் . என்னமோ நான் அந்த புள்ளைய காதலிக்க  கூப்டாப்ல  பேசிட்டு இருக்க.

ஓ….மாப்பு உனக்கு அந்த ஆச வேற இருக்காப்பு  என பேச ஆரம்பவித்தவனை  கண்டுக்காமல்  பவனஜ் பெண்களிடம்  திரும்பியவன்  , எங்கன இருந்து வாரீக உங்கள இந்த ஊர்ல பார்த்ததில்லையே என்றான்.

அவனின் தோரணையில் அசந்து  இருந்த ப்ரியாவோ , அடடா செம்மயா இருக்கானே இருந்த அதிர்ச்சில  அவன் மொதல்ல பேசும்போது பதில் சொல்லாம வேற இருந்துட்டோம்  அடுத்து பேசுவானா என புலம்பிக்கொண்டிருந்தவள்  அவனின் கேள்வியில் , அப்பாடா இப்போவாவது  இந்த ஹீரோ கூட பேசிடுவோம்  என மனதினுள் குதூகலித்தாள்.

அவசரமாய் பரியா தடுப்பதற்குள் , சென்னை என்றிருந்தாள்.

ஓஒ இங்கன யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க  , உங்க பேர் என்ன என ஆரம்பிக்க அவனை முறைத்த பரியா  வாயினுள் அவனை திட்டியவாரே தன் தங்கையின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு   சென்றாள்.

அடிங்கு ….மாப்பு இவளுங்களுக்கு  கொழுப்பை  பார்த்தியால . எம்புட்டு பெரிய ஆளு நீரு , பேர் கேட்டதுக்கு  என்னமோ அவளுங்க சொத்தை கேட்டப்புல  முறைச்சிட்டு போறத பார்த்தியால என  பேசிக்கொண்டிருந்த பன்ரொட்டி அடுத்த நொடி ஆஆஆ என அலறினான்  .

ஏம்ல பன்ரொட்டி  ….அம்புட்டு அதிகமாவால வலிக்குது என சாதுவாய்  பவனஜ் கேட்க ,

எதுக்குல இப்போ வாயிலயே அடிச்ச .அடிச்சிப்புட்டு  வலிக்குத்தான்னு வேற கேக்குற என அழாக்குறையாய்  கேட்டான் பன்ரொட்டி .

மன்னிச்சுடுடா பன்னு …ஆனாலும் நீயும்  அப்படி  பேசிர்க்கப்படாதுல  . அந்த புள்ளைய பொறுத்தவரைக்கும் நான் யாரோ ஒருத்தன்  தானல அப்படிருக்காப்ல  அந்த புள்ள இப்படி தானலை  பண்ணும் . ஒருக்கா  நம்மளுக்கு   கூட பொறந்த புள்ளையா  இருந்தாலும் இப்படி தானல சொல்லி வளர்ப்போம்  . அப்றம் நீ அந்த புள்ளைய வைதா எப்படி.

அட மாப்பு என்னால திடுதிப்புனு காரமா  பேசுறாப்ல.

இல்ல பன்னு… எனக்கும் மண்டைல இப்பத்தாம்ல உரைக்குது  .யாருனு தெரியாதவங்க பொம்பள புள்ளைகிட்ட சும்மா  பேரு கேக்குறதுகூட  தப்புதாம்ல  . அதுவும் இப்போல்லாம்  புள்ளைங்க கூடவே இருக்குற சொந்தங்களை  கூட நம்ப முடியாம தவிக்குதுங்கல .அதுவும் பொம்பளை புள்ளைய பெத்த அம்மாங்க  அதுக்குமேல  , மொதலலாம் புள்ளைங்க நேரத்துக்கு வரலைனா தான் வயத்துல  நெருப்பை  கட்டிட்டு  இருக்கனும் … இப்போல்லாம் ஒவ்வொருநிமிஷமும்  அப்டிதாம்ல  இருக்காங்க  .

நீ சொல்றதுலாம் வாஸ்தவம்  தான் மாப்பு …ஆனா நீ இதுவரைக்கும் எந்த புள்ளைகிட்டயாவது  நின்னு பேசிற்பியா  விடு மாப்பு என  பவனஜின்  பேச்சை ஒத்துக்கொண்டு , அவனை…அவனின் செயலிற்காய்   சமாதனப்படுத்தியவாறே  வண்டிய  வீடுநோக்கி செலுத்தினான்  பன்ரொட்டி .

சிறிதுதூரம் சென்றபின் , ஏலே பன்னு ! ஆனாலும் அந்த கூர்மூக்கி  பேர் என்னவால  இருக்கும்.என்னவே முழிக்க , அதாம்ல ரெண்டுபேர்ல  ஒருத்தங்க  நம்பள முறைச்சு முறைச்சு  பார்த்தங்களே  அவங்கள தாம்ல சொல்றேன்.

இம்புட்டு நேரம் இவன் பேசுனது என்ன , இப்போ பேசுறது  என்ன என கடுப்பாகிய  பன்ரொட்டி ….ஏலே மாப்பு உனக்கு நான்  நல்லா இருக்கிறது பிடிக்காட்டி சொல்லு அந்தா இருக்க கிணத்துக்குள்ள  குதிச்சிபுடுறேன்  .இப்போதான மாப்பு அந்தா தண்டியா பேசுன அதுக்குள்ள இப்டி கேக்குறியே .

ஹீஹீ வுட்றா வுட்றா  …அந்த புள்ளைகிட்ட தான கேக்கவேணாம் சொன்னேன் .அந்த புள்ள எவரு வீட்டிக்கு வந்துருக்காப்புலனு பார்த்து விசாரிச்சிபுட்டா  போச்சி .

என்னல பன்னு அந்த கண்ணாடி வழியா என்னைய உத்து பாக்குற .

பன்ரொட்டியோ, ஒண்ணுமில்ல மாப்பு எப்டியா நீ இப்படிலாம் பண்ற. ம்க்கும்  இத்தனை வருஷமா சேர்ந்தாப்ல தான் சுத்துறோம் எனக்கே நீ என்ன வகைனு தெரில மாப்பு என புலம்பி தள்ளினான்  .

 

அட என்ன பன்னு !இம்புட்டு சலிச்சிக்கிற   நம்ப “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா??”

பண்ணுவல நீ பண்ணுவ அடுத்து உங்க குடும்பமே  என்னைய வச்சிபண்ணிடும் என சத்தமாய் முனங்கியவனை கண்டுகொள்ளாமல் அவனின் தோளில் சாய்ந்தவாறு  வந்தான் பவனஜ்.

 

**************************************************************

 

ஏட்டி அங்கிட்டு  என்ன செய்யுற சீக்கிரம் எதுனா குடு புள்ளைங்களுக்கு . அம்புட்டு தொலைவுல  இருந்து வந்துருக்குங்க ராத்திரி எதுனா சாப்பிடிச்சீங்களோ  என்னவோ ?. அய்யோ எனக்கு கையும்  ஓடல  காலும்  ஓடலயே என வீட்டினுள்ளும்  வெளியேயும் மாற்றி மாற்றி நடந்தார் கோதண்டநாகா.

அங்கிருந்த குட்டை   மதில்சுவற்றின்  வழியாய்  பக்கத்துவீட்டில்  நடைநடந்துகொண்டிருக்கும்  மகனை பார்த்த கப்பீஸ்வர்  , இவன் எதுக்கு திருட்டு பூன கணக்கா  திரியுரான் என எண்ணியவர்  அங்கு வந்த மனைவியை  பார்த்து ஏட்டி சௌ ….உன்ற புள்ள என்னல சமஞ்ச புள்ளைய பெத்தவானாட்டோம்  உள்ளுக்கும்  வெளிக்கும் நடநடந்துட்டு இருக்குரான் .

உங்களுக்கு அவன ஓரண்டை  இழுக்கலனா உறங்கமாட்டீரோ . நம்ப பவித்ரா கண்ணோட புள்ளைங்க வந்துருக்காப்ல  அதுதான் நம்ப மவன் தலைகால்  விளங்காம  திரியுறான் . ஏனுங்க  நானும் போய் ஒருக்கா  பாத்துப்போட்டு   வாறேன் .

ஏட்டி ! அதுதான் கைல கருவாட்டுக்குழம்பு வாசனையோடு  தூக்க  தூக்கிட்டு வந்துருக்கும் போதே தெரியுதே உன்ற மவன் வூட்டுக்கு  போறன்னு . என்னமோ நான் சொன்னாப்றம்தான்  போபோறாப்ல  கேக்குற.

அடியாத்தி  என மோவாயில்  இடதுகையை  வைத்த  சௌந்தரம்மாள் , உன்ற கிட்ட இங்கன யாரு கேட்டாப்ல என நொடித்தவர் , நான் இல்லாத நேரத்துல உள்ளார  இருக்க சட்டிக்குள்ள மண்டைய வுட்டுப்புறாதிங்க  நான் இந்தா வந்துபுடுவேன்  என கருவாட்டுக்குழம்பு தூக்குடன்  மகனின் வீட்டிற்கு சென்றார் .

தாத்தய்யா ! நம்ப பெரிய மள்ளிகைக்கடைக்காரரு  உங்கள பார்த்துப்போட்டு போலாம்னு  வந்துருக்காருங்கய்யா  என கணக்கர்  சொல்ல கப்பீஸ்வர் அதில் கவனமானார்  .

**************************************************

 

வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த பன்ரொட்டி பின்னாடி அமர்ந்திருந்த பவனஜிடம் , ஏம்ல   மாப்பு !  என்னலே காலையிலயே நம்ப சௌந்தர்யா  தூக்குவாளியோட சுத்துறாப்ல .

அதற்குள் வண்டியை வீட்டினுள் பன்ரொட்டி நிறுத்திருக்க இறங்கிய பவனஜ் , நம்ப சௌந்தர்யாவ வுடு பன்னு… அங்கன எங்க அப்பார பாரு .என்னாச்சி இந்த மனுஷருக்கு  கையும் ஓடல காலும் ஓடல்னு  சொல்லிட்டு இருக்காரு.

பின்னடியே இறங்கிய பன்ரொட்டி , ஐய்யயோ மாப்பு என்னால கத பேசிட்டு இருக்க போ மாப்பு போய் அப்பார தூக்கு  ஹாஸ்பத்திரிக்கு  போவோம் .

இவன் ஒலறியதை கேட்ட சௌந்தரம்மாள் , ஏன்டா எடுப்பட்டமவனே எம்புள்ளையவா ஏளனம்  பண்ற என அங்கு கோதண்டநாகா குடித்துவிட்டு வைத்திருந்த  இளநி  குடுவையை  எடுத்து அவனின் மேல் எறிந்தார் .

அடியாத்தி என எகிறி அதிலிருந்து தப்பித்த பன்ரொட்டி , அப்பாடி ஜஸ்ட்டு மிஸ்ஸு  என பெருமூச்சிவிட்டவன்  பக்கத்தில் ஒரு மார்க்கமாய்  பார்த்த பவனஜிடம் , மாப்பு நான் கால தாண்டா சொன்னேன் என அவனோ அப்படியா என்பது போல் பார்த்தான்.

இவன் நம்பமாட்டானே  என முனங்கி  கொஞ்சநேரம்  நம்ப வாய்மூடுவோம்  பயபுள்ள  வேறபக்கம் திரும்பிடும்  என புத்திசாலித்தனமான  முடிவு பண்ணி வாயை இருக்க மூடினான்  .

சௌந்தரம்மாளோ , நீ வா ராசா  !  அந்த வெட்டிப்பய பேச்செல்லாம் நின்னு கேட்டுகிட்டு.

ஹாஹா , அப்பத்தா  நீயும் அவன் கூட சரிக்குசரி தான பேசிட்டு கிடக்க. ஆமா வீட்டுக்கு யார் வந்துருக்காப்ல  அப்பாரு சும்மா துள்ளிக்கிட்டு  கிடக்காரு  .

எல்லாம் நம்ப பவித்ரா கண்ணோட புள்ளைங்கதானப்பு . அப்பத்தா கருவாட்டுக்குழம்பு  ஊத்தி எடுத்தாந்துருக்கேன்  , நீ  போய்  சாப்டு ராசா  களைச்சு போய் தெரியுற.

ஆனாலும் சௌந்தர்யா ! உனக்கு இந்த ஓரவஞ்சனை  ஆகாது சொல்லிப்புட்டேன் .உன் ரசிகன்  நான் இங்க கால்கடுக்க  நிக்குதன் என் கால உடைச்சிட்டு  , என் பின்னாடி சும்மா உட்காந்துட்டு  வந்த அவனை கொஞ்சிட்டு  கிடக்க என்றான் பன்ரொட்டி.

ஏண்டா  சட்டிதலையா நான் குழம்பூத்தி வச்சிருக்க  பாத்திரத்தலாம்  களவாண்டிட்டு  போனவந்தான  நீனு . என்ற புருசனே என்னை பேர் சொல்லி கூப்பிட்டதில்லை  நீ என்னலே என அவனை அடிக்க ஏதுவாய்  ஏதேனும் இருக்கா என தேடினார்  .

அப்பொழுதும் அடங்காத  பன்ரொட்டியோ  , அதா உன்ற  புருஷரு உன்ன செல்லமா  கௌ (கௌ ) னு கூப்புட்றாருல அப்றம் ஏன் பொங்குத  .

அப்பத்தா கௌ -னா  எரும மாடுனு  அர்த்தம் அப்பத்தா  . அவன் உன்ன எருமைமாடுனு  திட்ட தாத்தா பேர சொல்லி ஏமாத்துறான் என்று அத்தனை நேரம் அமைதியாய் இருந்த பவனஜ் வசமாய் நண்பனை தப்பாய் போட்டு கொடுத்தான் .

என்னல சொல்ற இவன் அப்டியா  சொன்னான் .ஏத்தா ஜானகி(பவனஜின் அம்மா) !  சுடுதண்ணி  போட விறகு  பத்தவச்சிருப்பல அத எடுத்தாத்தா இவன் வாயிலயே சுடுவோம்  .

ஏம்ல மாப்பு , நீ என்கூட தானல வந்த எப்போல துரோகியா  மாறுன.அது சரி கௌ-  னா  மாடுன்றத்துல  இருந்து எரும மாடுனு எப்போல மாத்துன்னாங்க

ஹீஹீ மாப்ள , என்னை என்ன உன்னோட வெறும் நண்பன்னு  நினைச்சியா நீ சொல்றத அப்படியே சொல்ல  , நான் உன் உயிர் நண்பன்டா. அதாகப்பட்டது மாப்ள !  நான் போய் கருவாட்டுக்குழம்பு சாப்பிடுறேன்  நீ அப்பத்தா பஞ்சாயத்தை முடிச்சிட்டு உயிரோட இருந்தா வா சரிதான மாப்ள என அவனை போட்டுக்கொடுத்ததை  உயிர்நண்பனின் ரூல்ஸ்  என சொல்லாம சொல்லி செல்ல , பதிலுக்கு பன்ரொட்டி கத்த…மற்றோரு பக்கம் அப்பத்தா பேச என அவ்விடமே  சத்தமாய் இருந்தது  .

அந்த ஊரிலே  பெரிய குடும்பம் என்பதால்  தேடுவதற்கு  சிரமமின்றி  பரியா மற்றும் ப்ரியா இருவரும் சுலபமாய் இங்கு வந்திருந்தனர் .இன்று வருவதாய்  முன்பே சொல்லாவிடினும்   கோதண்டநாகா வீட்டினுள் இவர்களுக்கு  தந்த வரவேற்பினால்  மகிழ்ந்து, இன்னும் சேற்றுடன் இருப்பதால்   உரிமையுடன் தங்களுக்கான அறை கேட்டுசென்றனர்.

சிறிதுநேரம் கழித்து இருவரும் வர , ஏன் ப்ரி !  நம்ப அம்மா அவங்க அண்ணாவ பத்தி சொல்லும்போதுலாம்  ஓவரா  சொல்றாங்கன்னு  கிண்டல் பண்ணுவோமே ஆனா இவர் நம்ப மேலயே இவ்ளோ பாசம் காமிச்சா  நம்ப அம்மா மேல எவ்ளோ காமிச்சிர்ப்பாரு என பரியா ஆரம்பித்திருக்க  ,

அப்போ இந்த அம்மா குடுத்த பில்டப்லையும் ஒரு அர்த்தம் இருக்குனு சொல்ற என ப்ரியா குறுக்கிட்டு முடித்தாள்.

எப்பப்பாரு என்ன பேசவிடாம நீயே பேசிடு , பத்திரிக்கை கார புத்தி என பரியா தங்கையை  பொரிய அதேநேரத்தில்  வெளியே சத்தம் அதிகமாகியதில்  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு  வெளியே வந்தனர் .

 

 

-பண்ணிடுவோம்

 

——————————————————————————————————————————————————-

இரக்கம் என்பதே இல்லாமல் பல உயிர்களை கொன்று  …குருதிகடலின் நடுவில்  சிம்மாசனமிட்டு  வாழ்பவனையும் …

ஒற்றை பார்வையில்  அடக்கும்  வல்லமை வாய்ந்தது  …

காதல் என்னும் மூன்றெழுத்து

உயிர் அச்சாணி …!!!

 

அத்தியாயம் 5 :

பவனஜ் , அப்பத்தா , பன்ரொட்டி மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச அவ்விடத்தில் சத்தம் அதிகமாகியதில் பரியா மற்றும் ப்ரியா இருவரும் அங்கு வந்தனர் .

கத்திக் கொண்டு இருந்தவர்களை பார்த்த கோதண்டநாகா , கொஞ்சம் எல்லாம் சும்மா இருங்க……ஏன் ஆத்தா அவனுங்கதான் வம்பு இழுக்கானுங்கனா நீயும் அவங்களுக்கு சரிக்குசரியாக மல்லுக்கட்ர. ஏல  பன்ரொட்டி உமக்கு என்ற ஆத்தா கூட ஓரண்ட இழுக்கலானா பொழுதுபோகாதோ…கண்ணு  நீயும் இவங்க கூட சேர்ந்து இப்படிபண்ணா எப்டி என மூன்று பேரிடமும் கேள்விகள் பறந்தன.

 

சிறிது நேரம் பின்னும் பதில் வராததால், ஆத்தி நம்ப பேச்சக்கூடவா இம்புட்டு  அமைதியா கவனிக்குறாங்க என அவருக்கே சந்தேகம் வந்து நிமிர்ந்து பார்க்க  மூவரும் அவருக்குப் பின்னால் பார்த்திருந்தனர்.

அதான பாத்தேன் நம்ப பேச்சலாம் என்னைக்கு இந்த ரொட்டி பையன் காது கொடுத்து கேட்டிருக்கான்  என்று அவரும் திரும்பி பார்க்க …அங்கு பரியாவும், ப்ரியாவும் பவனஜை பார்த்து அதிர்ச்சி சிறிதுமின்றி நின்றிருந்தனர் .

பவனஜோ , அட நம்ப ஆளு என சந்தோஷமாய்  பரியாவை பார்த்தவன் அவள் இவனை பார்த்ததில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் நின்றிருந்ததில் , இந்த கூர்மூக்கி சரியான திமிர் பிடிச்சவங்க அதனால அவங்க ஷாக் ஆனா கூட ஆகாத மாதிரியே சீன போட்டாலும் போடுவாங்க . ஆனால் பக்கத்துல இருக்க பாப்பா அப்படி பண்ணாதே ?? என யோசித்தவன் , ஒருவேளை இவங்களுக்கு முன்னாடியே நம்பள தெரியுமா என்ன ? என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

கோதண்டநாகா , வாங்க பாப்பா என இருவரையும் அருகில் அழைத்தவர்  , ஆத்தா இந்த புள்ளைங்க தான் நம்ப தங்கச்சி மவங்க என்றவர் தொடர்ந்து பரியா மற்றும் ப்ரியாவிடம்,

அம்மாடி இவங்க தான்மா என்ற ஆத்தா உங்க பெரிய அம்மாயி. இவன் என்ற மவன்  பவுனஜ் , அப்றம் இது அவன் சோக்காலி இவனும் என்ற புள்ளை மாதிரிதா மா .

ம்ம்க்கும் ….அதனால்தான் நானும் கொஞ்சம் சொத்தை எழுதி வைங்கன்னு  சொல்றேன் கேட்க மாட்டேங்குறீரே…. என்ன சௌந்தர்யா நீயும் ஒன்ற புள்ளைக்கு கொஞ்சம் சொல்லலாம்ல என ஊடாலே அப்பத்தாவையும் வம்பிழுத்து வைத்தான் பன்ரொட்டி .

அட செத்த சும்மா இருங்கப்பு ….ஆத்தா பெரிய பாப்பாக்கு போலீசில் சேர ஆசையாம் . பரீட்சை எழுதுறதற்கு நம்ப தம்பிய கொஞ்சம் சொல்லி தர முடியுமான்னு பவிக்கண்ணு கேட்டுச்சி, அதுக்கென்ன அவன் சொல்லித்தந்துடுவானு  சொல்லிபுட்டன் சரிதான ஆத்தா, ஐய்யாறு எதுனா சொல்லிபுடுவாரோ.

ஏம்ல உன்ர ஐய்யாரை பத்தி உமக்கு தெரியாதால. அவர் என்னைக்கு நீ செய்யுறத மறுத்திருக்கிரு.

 

ஆமாஆமா பின்ன எதுக்கு அப்பனும் மவனும்  இத்தனை வருஷம் பிரிஞ்சிக்கங்களாம்  என பவனஜ் பன்ரொட்டியின் காதில் ஓத அவனோ பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்.

ஏம்ல பன்னு ஏய் …என்னல இப்டி நிக்கிறவ என அவனை உலுக்கினான்.

திருதிருவென விழித்த  பன்ரொட்டி , ஏலே மாப்பு உங்க அப்பாரு  சொன்னத கேட்டீரா. அந்த புள்ள போலீசாக போகுதாம்ல .

அதுக்கு என்ன மாப்பிள்ளை ! போலீஸ் தானனன என அசட்டையாய் ஆரம்பித்தவன் அதிர்ச்சியில்  போலிஸாஆஆ என அலர , அவனுடன் பன்ரொட்டியும்  சேர்ந்து அலறினான் ” போலீஸாஸாஸா “.

ப்ரியாவோ எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க அவளை உசுப்பிய பரியா , ஏய் என்னத்தடி இப்படி மண்டைல போட்டு உலுப்பிட்டுருக்க எனக் கேட்டாள் .

சுற்றும் முற்றும் பார்த்தவ ப்ரியா , அதுவா கா என ஹஸ்க்கி வாய்ஸில் கேட்க ,

எதுக்கு இப்போ ஹஸ்க்கி வாய்ஸில பேசி பில்டப் குடுக்கிற .நீ சத்தமாவே சொல்லு.

ம்க்கும் ஒன்னுபண்ண விடமாட்டீயே என சிணுங்கிய ப்ரியா , அது ஒண்ணுமில்லைக்கா நம்ப அம்மா அடிக்கடி அண்ணன் வீட்டுலதான் பொண்ணு கொடுக்கணும்னு சொல்லுவாங்கல. அப்ப பெரியபையன் பவன்புத்ரா உனக்கு, சின்னபையன் பவனஜ் எனக்கு தான. நீ உன் ஆளுக்கு செல்ல பெயர் வச்சிட்ட …நான் என் ஆளுக்கு வைக்கவேணாமா அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன் .

ஏனோ இப்பேச்சை பரியாவால் ரசிக்கமுடியாமல் போக , ஏன்டி உனக்கே இது ஓவரா தெரியல என்றவள் ….ஆமா எப்படி பத்ரா பெரியர் இவர் சின்னவர்னு சொல்ற .

லூசாகா நீ ! பவன்புத்ரா போலீஸ்னு தான சொன்ன… இவர பாரு  பார்வையிலயே குறும்ப வச்சுக்கிட்டு ப்ரெண்டு கூட சேர்ந்து வம்புபண்ணிக்கிட்டு்  சின்னப்புள்ளத்தனமா திரியுறாரு அதுலயே தெரிலயா  இவர்தான் சின்னவருனு .

தெரியும் டி தெரியும் …குறும்பா பார்க்குறானா எனக்கு என்னமோ வில்லங்கமா பாக்குறமாதிரி தான  தெரியுது .

அக்க்க்கா…!  இன்னும் ஒரு வார்த்தை அவரைப்பற்றி எதுனா சொன்ன அவ்ளோதான் பாத்துக்கோ . பவனஜ் பெரியவர் , பத்ரா சின்னவராவே   இருந்துட்டு போகட்டுமே. நீ உன்னோட பத்ராவ தான லவ் பண்ற அப்ப அமைதியா இரு . நான் என் ஆளுக்கு செல்ல பேர் யோசிக்கிகனும்.

ஏனோ இது எதுவும் அவளுக்கு சரியாய் தோன்றாதத்தில் , அதுவும் தன் தங்கை அவன்மேல் ஆசையாய் பேச அவனின் பார்வையோ  தன்மேல் படிந்திருந்ததில் , இவனுகுலாம் செல்ல பேரு ஒரு கேடு என நினைத்தவள் , ஏன் ப்ரி பஜ்ஜி னு வேனா வச்சுக்கோயேன் என்றிருந்தாள் .

ப்ரியா , அக்க்க்க்கா என கோபமாய்  பற்களை கடிக்க ,

சரியாய் அப்பொழுது பவனஜும் , பன்ரொட்டியும்  போலீசா என அலறியிருக்க ,கோதண்ட நாகா பவுனு என அழைத்திருந்தார்.

அவரின் அழைப்பில் குபீரென வந்த சிரிப்பை ப்ரியாவை பார்த்து அடக்கிய பரியா , மாமா என்ன மாமா திடீர்னு பவனு னு  சொல்றீங்க .ஏதாவது நகை  வாங்கணுமா மாமா மறந்திட்டீங்களா  . எத்தனை பவுனு மாமா என சீரியஸாய் கேட்டவளின் கண்களோ சிரிப்பில் குளித்திருந்தது.

அதை கண்டு கொண்ட பவனஜும் ,ப்ரியாவும் அவளை முறைத்தனர் .

மாப்பு என்னாலே இந்த புள்ள உன்னையவே கேலி பன்றாப்ல . ஆனா மாப்பு முகத்தை பார்த்தா தெரியாம பேசுராப்ல தான் தெறி்து என பன்ரொட்டி பவனஜின் காதிற்க்கு மட்டும் கேட்பதுபோல் சொன்னான்.

மருமகளின் கேள்வியில் விழித்த கோதண்டநாதா … அவள் தன்மகனை அழைத்ததை தப்பாய் புரிஞ்து பேசுவதாய் நினைத்து , போச்சி கண்ணனுக்கு  இப்டி கூப்ட்டாலே  பிடிக்காதே  .எல்லாம் என்னை சொல்லணும் சீமைல  இல்லாத பேரா தேடித்தேடி கடைசில என்ற வாயில நுழையாத பேரால  வச்சுப்புட்டன் .இப்போ இந்த புள்ள வேற இப்டி கேட்டுபுட்டுச்சி மவன் கோபப்படுவானே   என நினைத்தார்.

பேச்சைமாற்றும் பொருட்டு , ஏன் ஆத்தா அந்த தூக்க உள்ள எடுத்துட்டு போறது  என்றவர் …ஏட்டி ஜானகி  ஆத்தா கருவாட்டுக்குழம்பு எடுத்தாந்திருக்கு பாரு .எடுத்துட்டு போய் புள்ளைங்களுக்கு குடு என்றார் .

கருவாட்டுக்குழம்பில் பவனஜை மறந்த ப்ரியா , ஐஐ கருவாட்டுக்குழம்பா எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க உங்க கருவாட்டுக்குழம்புக்குனே தனி ரசிகர் பட்டாளம் இருக்காமே அம்மாயி என சௌந்தரம்மாளிடம் சிரித்தவாறு சொன்னாள்.

அடஅட அய்த்த சரியாத்தம்மனி  சொல்லிருக்காங்க .எங்க சௌந்தர்யா வெக்குற  கருவாட்டுக்குழம்பு வாசனைக்கே நாக்குல  எச்சி ஊரும் என சப்புகொட்டினான்  பன்ரொட்டி.

பரியாவோ இன்னும் பவனஜை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க , அவனோ கண்கள் மின்ன அவளை பார்த்திருந்தான் .

கணவரின் அழைப்பில் அங்கு வந்த ஜானகி , குடுங்க அய்த்த என தூக்கை  வாங்கியவர்  வாங்க கண்ணுங்களா  சாப்பிடலாம் என அழைத்தார் .

பவனஜும் அங்கிருப்பதை பார்த்து , அட ராசா நீ எப்போ வந்த …வா வந்து நீயும் சாப்பிடு சீக்கிரம் போகணும்னு சொன்னியே என்றார்.

பன்ரொட்டி , அம்மா தாயே இந்த அடியேனுக்கும் கொஞ்சம் கருவாட்டுக்குழம்பை  ஊத்து தாயி என அவர் முன் குனிந்தவாறு சொன்னான்.

 

ஏத்தா…நேத்து வச்ச பழையசோறு இருந்தா எடுத்தாந்து  போடுத்தா.   எப்படி பிச்சை கேட்குறாப்ல கேட்குறான் பாரு உள்ளாரா போய் சட்டியோட வாயில போடறதைவிட்டுப்போட்டு  சரியான   கூறுகெட்டவன்  என்ற அப்பத்தா என்ன தான் பன்ரொட்டியிடம் வம்பிழுத்தாலும் மற்றவர் அவனை ஒரு சொல் சொல்ல விடமாட்டார் அவருக்கு அவன் மீது பாசம் அதிகம்  தான் அதுதெரிந்துதான்  அவனும் அவரிடம் உரிமையாய் வம்பிழுப்பான்  .

பன்ரொட்டியின் பேச்சில் அவன் புறம் திரும்பிய ஜானகி , ஏம்ல நீயும் இங்கனதான் இருக்கியால …வால உனக்கு இல்லாததா என்றார்.

அனைவரும் உள்ளே செல்ல பவனஜ் மற்றும் பரியாவின் பார்வைகள் மட்டும் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றாய் கலந்தது போல் சில நொடிகள் தேங்கி பின் பிரிந்தன .

 

**************************************************

கண்ணுகளா  பார்த்த்ங்களா எம்புட்டு அட்டகாசமா இருக்குனு எல்லாம் என்ற மாமனாரோட அப்பாரு காலத்தி் கட்டுனது என சொல்லியவாறு பரியாமற்றும் பிரியாவை கூட்டிவந்தார் சௌந்தரம்மாள்.

ஏட்டி ! யாருகிட்ட இம்புட்டு  பெருமையா அளந்துட்டு  இருக்காப்ல   எனக் கேட்டுக் கொண்டே வந்தார் கப்பீஸ்வர் .

எல்லாம் நம்ம பவித்ரா கண்ணோட புள்ளைங்ககிட்ட  தானுங்க  என்றவர் அவர்களிடம்  ,கண்ணுங்களா இவ்ரதாம்ல என ஆரம்பிக்க …

அம்மாயி அம்மாயி என அவரை தடுத்த பரியாவும் ப்ரியாவும் , நாங்க சொல்ற நாங்க சொல்றோம் என்றார்கள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டவர்களில்  முதலில் பரியா , இவர் தான் நம்ப ஊர் கரங்களோட “தாத்தய்யா ”  எனவும்  ,

ப்ரியாவோ  , இவர் தான் இந்த ஊரோட ஆணழகன் அதாவது இவரை மிஞ்ச ஒருத்தரும்  இல்லங்குறேன்   எனவும் சொல்லி கைகளில் அடித்து கொடுத்துக்கொண்டனர்(  ஹிபை ) .

ஹா ஹா ஹா என்று சிரித்த கப்பீஸ்வர் , ஏட்டி பார்த்தியா என்ற பவர … புதுசா வந்த புள்ளைங்க கூட எம்புட்டு சரியா சொல்லுதுங்க பார்த்தியா என்றார்.

ஏன் கண்ணுங்களா… சும்மாவே இந்த மனுஷர  சமாளிக்க முடியாது இதுல இது வேறயா என சலிக்க  , மற்ற இருவரும் கலகல என சிரித்தனர் .

சிரித்துக் கொண்டிருந்த பரியாவின் கண்களில் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த பவன்புத்ராவின் படம் பட்டது .

காவல் அதிகாரிக்குறிய  உடையில் அதற்கு உரிய கம்பீரத்துடன் இருந்தவனை கண்டவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ….நெஞ்சம் முழுக்க இருக்கும் காதலின் விளைவால் கன்னங்கள் செம்மையுற்றது  .

என்னமா அப்படி பாக்குற அதுதான்மா என்ற மவன் பவன்புத்ரா என சொல்லியபடி அங்கு வந்தார் வஜ்ரநாகா .

மீசையை முறுக்கிவிட்ட  கப்பீஸ்வர்  , ஏம்ல மத்ததலாம்  யார் சொல்வாப்ல  …ஏத்தா என்ற பேரன் போலீஸ் ஆபிசர்த்தா சுத்துப்பட்டில  இருக்க மொத்த  பயலும்  என்ற பேரனோட  ஒத்த  பார்வைக்கே கட்டுப்படுவானுங்க.

அது என்னவோ சரிதான் அதுதான் எங்க அக்கா பாக்காமலே  அவர்கிட்ட  கவுந்துட்டாளே என மனதினுள் முனங்கினாள் ப்ரியா.

என்னத்தா அமைதியா இருக்கவ நிசமாதான்தா  …ஏலே சொல்லுதே  நம்ப புள்ளைய பத்தி என மகனை ஏவினார் கப்பீஷ்வர் .

வஜ்ரநாகவோ யாரும் கேட்கமாலே தன் மகன் புகழ்  பாடுபவர்  இப்பொழுது சொல்லவா வேணும் ,  கண்ணுங்களா ! இந்த உத்தியோகத்துக்குலாம்  பரிட்சை வைப்பாங்க  தெரியும்ல. நிறைய புள்ளைங்க ரெண்டு மூணு தடவ எழுதியும் பாஸாகாம இருக்க என்ற மவன் ஒரே தடவைல  போலீசாகிட்டான்த்தா என தொடர்ந்து  பவன்புத்ராவின் புகழை  பாட தொடங்கினார் .

தன்னவனின் பெருமைகளை  காதலாய் கேட்டுக்கொண்டிருந்த பரியாவும் , ஆமா சின்னமாமா நான் கூட போலீஸ் க்கு தான் படிக்குறேன்   அதுக்குதான்  அவருகிட்ட  பரீட்சையை  பத்தி தெரிஞ்சிக்கலாமேனு முன்னடியே வந்தோம்.

ப்ரியாவோ , அடிப்பாவி  அக்கா இதுக்குதான்  சும்மா இருந்த அந்த பரத் கூட சண்டைய போட்டு கிளம்பி வந்தியோ  . உன் திருவிளையாடல்  தெரியாம நான் வேற அவனை கழுவி கழுவி ஊத்துனனே  என தன் அக்காவை முறைத்தவாறு மனதினுள் புலம்பினாள்.

அதை கண்டுகொண்டாள் அது பரியா இல்லையே , அவள் மிக ஆர்வமாய் தன்னவனின் புகழ் கேட்டுக்கொண்டிருந்தாள்  .

 

****************************************************

ஏம்ல மாப்பு என்னலே சுவத்த  முறச்சிப்பார்த்து உட்கார்ந்திருக்கீறீரு  என பவனஜை கேட்டவாறு அந்த அறையினுள் நுழைந்தான் பன்ரொட்டி .

மாப்ள !  ஏம்ல அந்த கூர்மூக்கி எப்பவும் என்னை முறைச்சே பாக்குறாங்க . மொத பார்த்தப்பவும் பேர் மட்டும்தானால  கேட்டேன் அப்றம் என்னல என்ற மேல அவங்களுக்கு கோபம்.

விடு மாப்பு !  அந்த புள்ள முறைச்சா முறச்சிட்டு போவுது  . நீ ஏன் மாப்பு அதலாம்  யோசிக்கிற .

ம்ம்ம் அதுவும் சரிதான்  பன்னு என அமைதியாகியவன்  சிறிது நேரம் கழித்து  , ஏம் மாப்ள முறைக்குற அந்த கண்ணு என் மேல ஆசையோட  காதலா  பார்த்தா எம்புட்டு நல்லா இருக்கும்.

ஐய்யயோ மாப்பு !  வாயில  அடி ..வாயில அடி என அவன் வாயில் அடிக்க வர..

ஏலே பன்னு !  என்னல பண்ணுற.

பின்ன என்ன மாப்பு !  காதல் அது இதுனு சொல்ற . உன்ர அப்பாரு  சொன்னத கேட்டடீரு தான . அந்த புள்ள போலீஸ் ஆகப்போகுதாம்ல  .நம்மளுக்கு போலீஸ் உத்தியோகம்லாம் தோதுப்படாதுனு  நீ தானம்ல சொல்லுவ.

ஓஓஓ …..அப்படி ஒன்னு இருக்குதோ என யோசித்த  பவனஜ் , ஏம்ல அவங்களுக்கு போலீஸ்னா ரொம்ப பிரியமா  இருக்குமோ  .

இல்லாமையா அந்த உத்தியோகத்துக்கு  ஆசைப்படும்  .

ம்க்கும்ம்க்கும் ஆசை தான கலச்சிப்புடலாம் …” எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா “என சொல்லிகொண்டு பன்ரொட்டி விழிப்பி்துங்க  பார்ப்பதை கண்டுகொள்ளாமலே   வெளியே சென்றான் பவனஜ்.

 

– பண்ணிடுவோம்

 

————————————————————————————————————————————–

பார்த்த ஒரே நொடியில்..

பழகும் ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில்  …

இதயத்தில் நுழைந்து …

ஒவ்வொருஅணுவிலும்  கலந்து …

ஒருவரை உயிருடன் கொல்லவல்லது  …!!!

காதல் என்னும்

உயரழுத்த மின்சாரம் …!!!

 

அத்தியாயம் 6:

கப்பீஷ்வரின் வீட்டிற்கு பரியா மற்றும் ப்ரியாவை சௌந்தரம்மாள் அழைத்துச் செல்ல, அங்கு இருந்த வஜ்ரநாகா  பவன்புத்ராவை தன் மகன் என அறிமுகப்படுத்தி அவனின் புகழ் பாடினார் .

அதன் பின் இருவரையும் அழைத்துச் சென்றவர் ஊர் முழுவதும் சுற்றிக் காட்ட , தங்களுக்கு பழக்கம்இல்லாத அந்த கிராம சூழ்நிலையையும்… அங்கிருந்த கள்ளமில்லா பாசத்துடன் பழகும் மக்களையும் பார்த்துப் பார்த்து இருவரும் பூரித்தனர் .

பரியாவோ ,அவர்களை  தன்னவனின் ஊர்மக்கள் என்ற சொந்தத்துடன் பார்க்க… ப்ரியாவோ பத்திரிக்கைக்கார மூளையாக , அங்கு இருப்பவர்களையும் , நடப்பவற்றையும் தன்னுடன் இருந்த சிறு குறிப்பு புத்தகத்திலும் தனது கைபேசியிலும் செய்தியாய் சேகரித்தாள்.

 

அதை பார்த்த வஜ்ரநாகா , ஏன் பெரிய பாப்பா ! சின்னப் பாப்பாக்கு பரிச்சை எதுனா இருக்குதா புள்ள வெளியே வந்தும் கூட படிக்குது என வெகுளியாய் கேட்டார்.

அவரின் வெகுளித்தனத்தில் , மாமா என பரியா எதையோ சொல்ல ஆரம்பிக்க …அவளின் கையை பிடித்து தடுத்த ப்ரியா , அக்கா இது என் மாமனார்ட்ட தான் எனக்கு பேச சான்ஸ் கொடுக்கல அட்லீஸ்ட்  உன் மாமனார்ட்டயாவது பேசி என் ஆள பத்தி தெரிஞ்சிக்குறனே    என கிசுகிசுக்க யோசனையோடு சரி என தலை அசைத்தாள்.

மாமா நான் உங்க பெரிய பாப்பா மாதிரி இல்லனாலும் நானும்  கொஞ்சம் தைரியசாலிதான் சென்னைல பத்திரிக்கைல  வேலை பாக்குறேன் . (உள்ளுக்குள்ள மனமோ பவன்புத்ரா மாதிரி போலீசுக்கு தான் அக்கா மாதிரி தைரியமானவ தேவை நம்ம ஆளுக்கு நாமே போதும் என முணுமுணுத்தது ).

பத்திரிக்கைல  இந்த ஊர்ல நடத்துறதெல்லாம் போடலாம்னு தான் இதெல்லாம் படம் பிடிக்கிறேன் மாமா. அப்புறம் மாமா உங்க அண்ணன் வீட்ல எல்லாருக்கும் கருவாட்டு குழம்பு தான் ரொம்ப பிடிக்குமோ எனக்கும் கருவாட்டு குழம்புனா ரொம்ப பிடிக்கும் மாமா நல்லா சமைக்கவும் சமைப்பேன்  என வார்த்தைக்கு வார்த்தை மாமா என அழைத்து ஏதேதோ  பேசிக்கொண்டிருந்தாள்  .

பரியாவோ காலையில் நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள்.

காலையில் சாப்பிட  அழைத்த ஜானகி  அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்  .

அட அட அட சோறுனா இது சோறு கோழிகறிக்குழம்பு கமகமக்க  என பன்ரொட்டி ஆரம்பிக்க ,

கருவாட்டுக்குழம்பு மணமனக்க என ப்ரியா தொடர ,

நண்டுவறுவல்  நொறுநொறுங்க  …

இறா வறுவல்  மொறுமொறுக்க  …என இருவரும் மாறி மாறி பாடி  காலை வேலையை கலகலக்க  செய்தனர்  .

பரியாவிற்க்கோ எப்பொழுதும்  நண்டுவறுவல் என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால் அதை பிரித்து  சாப்பிடமுடியாமல்  தடுமாற  அப்பொழுதெல்லாம்  பிரபு மகளிற்காய்  , அதை உடைத்து அழகாய் சதை பகுதியை  தனியாய் எடுத்து தருவார்  .

தற்பொழுதும்  ஆவலாய் நண்டுகளை தட்டில் வைத்தவள் பிறகே தந்தை இல்லாததை  உணர்ந்து நாக்கை கடித்தாள்.

அச்சோ அப்பா தான் இங்க இல்லையே என்ன பண்றது எடுத்தத திரும்ப வைக்கவும்  கூடாது. சே இந்த ப்ரி எருமையாச்சி  பாக்குதா பாரு சோற கண்ணுல காட்டுனா  போதும் வேறு எதுவும் தெரியாது என தங்கையை அர்ச்சித்தவள்  தானே அதை பிய்த்து சாப்பிட முயற்சித்தாள்.

பரியா அமர்ந்திருக்க அவளின் அருகில் பவனஜ் அமர்ந்திருந்தான் . அவனின் அருகில் அமருவதற்க்காய்  சென்ற ப்ரியா அங்கு கோதண்டநாக அமர்ந்ததை  கண்டு வேறுவழியில்லாமல்  எதிர்புறம்  சென்றமர்ந்திருந்தாள்.

இத்தனை நேரம் சாப்பிடுவதாய் பாவனை  செய்துகொண்டிருந்த பவனஜின் கண்களோ தன் அருகில் அமர்ந்திருந்தவளின்  மேலையே இருந்தது .

அவள் நண்டுகளை தன் தட்டில் அடுக்குவதை  கண்டவன் ,  வுட்டா கடல்ல  கிடைக்குற  எல்லா நண்டையும்  கேப்பா  போலயே. டேய் பவன் நல்லா யோசிச்சுக்கோடா  அப்றம் இவ நண்டு ஆசைக்காகவே நீ வேலைக்கு  போவோனோம்  போலையே என மனதில் தன்னவளை பற்றி கிண்டலாய்  யோசித்தான்  .

அட என்ன இவங்க அம்புட்டு நண்டையும் தட்டுல  அடுக்கிட்டு  திண்ணாம முழிச்சிட்டு இருக்காங்க என எண்ணியவன் அவள் அதை சாப்பிடமுடியாமல்  தவிப்பதை  கண்டுகொண்டு  , ஹாஹா கூர்மூக்கி என் செல்லம் டி நீ …பாப்பாக்கு சாப்பிட தெரியாதா அதுக்கு ஏன்  முழிக்கிறீங்க அத்தான் கிட்ட  சொன்னா பிச்சி  தாரேன் என மனதினுள் செல்லமாய்  பரியாவை கொஞ்சினான்  பவனஜ்.

திடீரென தன் தட்டினுள்  ஒரு கை வர பரியா திகைத்து பார்க்க அவள் தட்டிலிருந்த நண்டுகளை எடுத்தவன் எவரும் அறியாமல் அதை அழகாய் அவள் உண்பதற்கு  ஏதுவாய் பிய்த்து கொடுத்தான் .

ஏனோ அதை மறுக்க  தோன்றாமல்  போக பரியாவும் அதை அமைதியாய் உண்டிருந்தாள்.(  பின்ன சாப்பிட கொடுக்கிறத எப்படி வேணா சொல்றது நம்மளுக்கு நண்டு முக்கியம் அமைச்சரே ).

காலையில் நடந்ததை பற்றி யோசித்துக்கொண்டிருந்த பரியா ,நம்ப ஏன் அமைதியா இருந்தோம்  வேணாம்னு சொல்லிற்கனும்  இல்ல தாங்ஸ் ஆச்சி  சொல்லிற்கனும்  .

சே அவன் நம்பள  பத்தி என்ன நினைச்சிருப்பான்  அவ்ளோ நேரம் முறச்சிட்டு இருந்தவ சாப்பிட கொடுக்கும்போது  மட்டும் அமைதியா வாங்கி்ட்டானு  நம்பள கேவலமா  நினைச்சிருப்பான் என யோசித்தவாறு  தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.

பேசிக்கொண்டிருந்த (அறுத்துக்கொண்டிருந்த  )  ப்ரியாவிடம் இருந்து தப்பிக்கமுடியாமல்  வஜ்ரநாகா விழிபிதுங்கினார்.

அங்கு வந்த ஒருவர் ஏதோ வேலையாய்  கூப்பிட வஜ்ரநாகாவோ தெய்வம்யா  நீரு  என்பது போல் பார்த்தவர்  , இவளிடம் சிறிது நேரத்தில் வந்துட்றேன்  மா இங்கனவே இருங்க என சொல்லி சென்றார்.

ச்சேய் எப்படியாவது இவருக்கிட்ட  பவனஜை பத்தி தெரிஞ்சிக்கிட்டு   அம்மாகிட்ட பேசலாம்னு  பார்த்தா இப்படி எஸ் ஆகிட்டாரே என வாய்விட்டு புலம்பியவள் தன் தமக்கையை நோக்கி சென்றாள்.

அக்கா என அழைக்க அதை அவள் கண்டுகொள்ளாததில் …அவளை உலுக்கியவள்  இங்க நான் என் ஆளுகூட எப்படி சேருறதுனு  தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் இவ என்னனா  அவ ஆள் கூட டூயட் பாடிட்டு இருக்கா என புலம்பினாள் ..

தங்கையின் பேச்சில் நிஜத்திற்கு  வந்த பரியாவோ தான் இத்தனை நேரம் பவனஜை பற்றி நினைத்துக்கொண்டிருந்ததை எண்ணி தன்னையே மனதினுள்  குட்டிக்கொண்டாள்  .

அக்கா ….அக்கா கனவுல இருந்து முழிச்சியா  இல்லையா கா .

 

ஏய் என்னடி எப்பப்பாரு கத்திட்டு இருக்க.

என்னது கத்திட்டு இருக்கேனா இங்க ஒருத்தி பீலிங்ஸ்ல இருக்கேன் நீ கனவு கண்டது  மட்டுமில்லாம  கத்திட்டு இருக்க்கேன்னா சொல்லுறா  .

அம்மா சாமி , தெரியாம சொல்லிட்டேன் போதுமா . இப்போ உனக்கு என்ன வேணும்.

எனக்கு என்ன வேணும் அதான் உன்ற மாமனாரு இப்டி என் பேச்சைக்கேக்க முடியாம தெறிச்சு  ஓடுறாப்லையே .

ஹாஹா அப்டி என்னடி பேசுன .

என்ன பேசுனவா அவர்தாம் கா உன் ஆள பத்தி பேசி என் காத அறுக்க பாத்தாரு.  நான்விடுவேனா பதிலுக்கு நான் பேசுன பேச்சிலே  இனிமே அவர் என்பக்கம்  வருவாருன்ற.

ஹாஹா ஏண்டி இப்டி ,  என்ன சொன்னாரு பத்ராவ பத்தி என பரியா ஆர்வமாய் கேட்க,

பார்ஹா !  உங்க ஆள பத்தி கேட்க எம்புட்டு ஆர்வம் பட் ஐயம் சோ சாரி …நான் அவர் சொன்னதை கேட்டகவே இல்ல என அசால்ட்டாய் சொல்ல , அவளை மொத்த ஆரம்பித்தாள் பரியா.

சிறிதுநேரம் விளையாடி ஓய்ந்தவர்கள்  அமைதியாக …சரிகா நீ சொல்லு எப்படி உனக்கு அந்த பவன்புத்ரா மேல லவ் வந்துச்சி . எனக்கு தெரிஞ்சவரைக்கும்  நீ அவரை பார்த்திருக்க  கூட மாட்டியே சோ உன்காதல் கதை சொல்லு என கேட்டாள் ப்ரியா.

அடிங்கு என் காதல் உனக்கு கதையா ..

பின்ன உன் காதல் உனக்குவேனா  காவியமா இருக்கும் எனக்கு கத தான்பா . சரி நீ பேச்ச மாத்தாம  சொல்லு பாப்போம்…

செல்லமாய் தன் தங்கையை முறைத்த பரியா தன் காதலை பற்றி சொல்ல ஆரம்பித்தாள் .

நீ சொன்னது சரிதான் ப்ரி குட்டி , நான் என் பத்ராவ இதுவரைக்கும் நேர்ல பார்த்ததில்லை  .அப்றம் என்ன கேட்ட காதல் கதையா  நான் சொல்ல போறதுல  காதல் எங்க இருந்து வந்திச்சின்னு  எனக்கே தெரியாது .

உனக்கு நியாபகம் இருக்குமான்னு  தெரியல ரொம்ப வருஷம் முன்னாடி நடந்தது . எனக்கே அப்போ 8 வயசு தான் அப்போ தான் முதல் முதலா பத்ரான்ற ஒருத்தன் என் வாழ்க்கைல இருக்கான்றதா அந்த விதி எனக்கு சொல்ல நினைச்ச  நாள்னு நினைக்கிறேன் .

 

சில வருடங்களுக்கு  முன் :

ம்ம்ம்ஊஊ….ம்ம்ம்ம்ஊஊ…. என 8 வயது பரியா அழுதுகொண்டிருக்க  அவளின் முன் அமர்ந்திருந்த பிரபு அவளை சமாதான  படுத்திக்கொண்டிருந்தார்  .

அடடா எதுக்கு என் செல்லம் அழுகுறாங்க…  என்னாச்சி என் பட்டுக்குட்டிக்கு  …என்னடா தங்கம் என்ன என்ன என அவளை தூக்கி கொஞ்ச அவளோ அழுகையை நிறுத்தியபாடில்லை  .

ஏய் இப்போ அடிதான்  வாங்கப்போறா  அதுதான் வாங்கமுடில  நாளைக்கு வாங்குதரோம்னு  சொல்றேன்ல இன்னும் என்ன அழுக என பவித்ரா அதட்ட  அவளின் அழுகையோ  மேலும் கூடியது  .

அப்பொழுதெல்லாம்  பவித்ராவை  பார்பதற்க்காய்  மூன்று மாதங்களுக்கொருமுறை  வருவது கோதண்டநாக , வஜ்ரநாகா இருவருக்கும் பழக்கம் .

 

நேற்று கோதண்டநாக வரமுடியாததில்  வஜ்ரநாகா பவன்புத்ராவை மட்டும் அழைத்துவந்திருக்க , அனைவரும் குழந்தைகளுக்கு  உடை மற்றும் நகை வாங்க சென்றிருந்தனர்  .

பரியாவிற்க்கு அங்கிருந்த முத்துக்கள்  மிகுந்திருந்த  கொலுசை  கண்டு ஆசை மிக அதை வாங்கித்தருமாறு  கேட்டிருந்தாள்.

ஏற்கனவே இவர்கள் வாங்கிய அனைத்திற்கும் வஜ்ரநாகாவே பணம் செலுத்தியிருக்க  இதை நாம் மறுநாள் வாங்கலாம்  என அண்ணனுக்கு தெரியாமல்  மகளை சமாதானப்படுத்தி  கூட்டிவந்திருந்தனர் .

ஆனால் காலையில் பக்கத்துவீட்டு  குழந்தை அதே போல் அணிந்திருப்பதை  கண்டு தனக்கும் வேண்டும்  என அழஆரம்பித்தவளை  தான் சமாதானப்படுத்த  வழியில்லாமல்  பிரபு  திணற , பவித்ரா அதட்டிக்கொண்டிருந்தார்  .

குட்டி தங்கம் எதுக்கு அழுகுறாங்க என கேட்டுகொண்டே வீட்டினுள் நுழைந்தனர்  வஜ்ரநாகாவும் , அவர் கைகளை பிடித்தவாறு பவன்புத்ராவும் .

அவ கெடைக்குறா  அண்ணா எப்பவும் சொல்றபேச்கேக்குறதில்ல. நல்லவேளை இன்னொருத்தி  இன்னும் எழுந்துக்கல இல்ல இவளுக்கு மேல ஆர்ப்பாட்டம்  பண்ணிர்ப்பா  என பரியாவை முறைத்துகொண்டே சொன்ன பவித்ரா  தொடர்ந்து ,

ஆமாணா …நீங்க புள்ளைய கூட்டிட்டு காலையிலயே எங்க போனீங்க என விசாரித்தாள்.

அதான கொஞ்ச நேரம் கூட உன் தொல்லையில்  இருந்து யாரும் தப்பிச்சிட  கூடாதே – பிரபு மைண்ட்வாய்ஸ் என  நினைத்து சத்தமாய் பேசி வைக்க பவித்ராவோ , கணவனை  எண்ணெய்ச்சட்டியில் போட்டு வறுப்பதற்கு தயாரானாள்  .

அவங்க அண்ணன் இருக்க வரைக்கும் நம்பள ஒன்னும் செய்யமாட்டா  . அதுக்குள்ள சமாதானப்படுத்த ஐடியா யோசிச்சிட்டா  போச்சி என தன்னைத்தானே சமாதானப்படுத்திய  பிரபு அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டார்  .

அட நீ பேசாத கண்ணு என்ற வஜ்ரநாகா  , நேத்து புள்ள கொலுசு  வேணும்னு   கேட்ருக்கு நீ என்ட சொல்லாம மறைச்சிபுட்ட  . நம்ப பவன் கண்ணா தான் ராத்திரி சொன்னாப்ல  .

 

பாப்பா அதுவேனும்னு  அழுதுது  பா னு சொல்லி இவன் ஒரே அழுகை.ராத்திரி கடைய  மூடியிருப்பானுங்கனு  சொல்லி புள்ளைய தூங்கவச்சேன்  .

பயபுள்ள காலையில சீக்கிரம் எழுந்ததில்லாம  என்னையையும்  எழுப்பி  விட்டுபோட்டுச்சி  .அதான் வெள்ளனவே கிளம்பி கடத்துறந்த  உடனே வாங்கிவந்தோம்  என நீளமாய் பேசிமுடித்தார்  .

கொலுசை பவித்ராவிடம்  கொடுத்தவர் , புள்ளைக்கு போட்டு விடுத்தா  என்றார்.

கண்களில் கண்ணீர் வழிந்து காய்ந்திருக்க  , கொலுசை கண்டதில் வாய் கொள்ளா சிரிப்புடன் அமர்ந்திருந்த பரியா, நேற்று தங்களுடன் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த பவன்புத்ராவை இன்று சிரிப்புடன் பார்த்தாள்.

அவர்கள் பேசியதை சரியாய் புரிந்துகொள்ளும்  வயதில்லை  என்றாலும் தனக்கு இந்த கொலுசு கிடைக்க அவன் தான் காரணம் என புரிந்ததால் வந்தது அந்த சிரிப்பு .

அதற்க்கு பின் அவளின் ஒவ்வொரு முக்கியமான ஆசையையையும் நிறைவேற  ஏதோ ஒருவகையில்  அவனே காரணமாய்  இருந்தான்.

இவள் தற்பொழுது போலீஸ் உத்தியோகத்திற்கு பரீட்சை  எழுத பவித்ரா சம்மதித்ததும்  பவன்புத்ராவிடம்  பேசிய பின்புதான்  .

அவனோ ஒவ்வொருமுறையும் தன் அத்தைகுடும்பம்  என ஒவ்வொன்றும்  செய்ய பரியாவோ சிறிது சிறிதாய் அவனிடம் தன் இதயம் பறிகொடுத்திருந்தாள்.

பரியா என்றில்லாமல்  ப்ரியாவிற்காய்  ஏதேனும் கேட்டிருந்தாலும்  அவன் செய்திருக்கலாம்  எவர் கண்டது ??

இதுவரை அப்படி எதுவும் பரியா அறியாததில்   தானாய் ஒரு சொந்தம் அவன் மேல் உருவாகி  , அது தற்பொழுது காதலாய் பிறபெடுத்திறுக்கிறது .

அது வளர்வதோ  பவன்புத்ராவின் முடிவிலே  உள்ளது.

தன் சிறுவயது  நினைவில் அமர்ந்திருந்தவளை  களைத்த  ப்ரியா  , யக்காவ் போயும் போயும் ஒரே ஒரு கொலுசுலையாகா கவுந்த என கேலியாய்  கேட்க…

பரியா தன் நினைவிலிருந்து  களைந்து தங்கையை அடிப்பதற்கு  துரத்தினாள்.

 

– பண்ணிடுவோம் ….

 

————————————————————————————————————————————-

கடல் மணலில்  ஆழ புதைந்த  உன் கால்தடத்தை சொந்தம்கொண்டாடி  கொண்டுசெல்ல அந்த அலைகள் காத்திருக்கிறது  ….

அலை போலே நானும் உன்னை உரிமையாய் கொஞ்சி  பேசி …! உன்னையும்  உன்னிதயத்தையும்  களவாட  காத்திருக்கிறேன்  …!

 

அத்தியாயம் 7  :

 

பவனஜ் பரியாவை காதலிப்பது  போல் பேச அதிர்ந்த பன்ரொட்டி ,

மாப்பு ஏலே மாப்பு என் வயித்துல புளிய கரைக்க வைச்சிபோட்டு நீ எங்கல போற . உண்மைய சொல்லுல நீ சும்மா காச்சும் தான அப்படி சொன்ன என அவனை தொடர்ந்தவாறு  வந்து கேட்டான்.

வெளியே தங்களைத் தவிர நிறைய பேர் இருப்பதை பிறகே உணர்ந்து அமைதியாகினான்.

அதன்பின் வேலைகள் பல அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்ள அதில் ஒன்றிய இருவருக்கும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் போனது . ஒரு வழியா அனைத்தும் முடிய மாலை ஆக வண்டியை எடுக்க போன பன்ரொட்டியை தடுத்த பவனஜ் ,

மாப்ள வால நடந்து போவோம் .

ஏய் மாப்பு என்னால , என்ன ஆச்சு உனக்கு ? மோகினி பிசாசு எதுனா அடிச்சுபுடிச்சா. இங்கிருந்து எம்புட்டு தொலவு போனும் நடக்கலாம் சொல்ற.

என்னால தூரம் ஒருமணிநேரம் நடந்தா ஊரு வந்துரபோது வால .

அவனின் முகத்தை பற்றி இந்த பக்கம் அந்த பக்கம் திருப்பி பார்த்த பன்ரொட்டி  , பேய் எதுவும் அடிச்சாப்ல கூட தெரிலயே என்றான்.

பவனஜோ ,சே என்ன  மாப்ள நம்ம ஊரு எம்புட்டு அழகா இருக்கு அத ரசிச்சிக்கிட்டே போவோம்னு சொன்னா ஏதோ பேசுற . அங்க பாரேன் அந்த சூரியனை  எம்புட்டு அழகா ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கு என

பன்ரொட்டி வானத்தை உத்து பார்க்க சூரியனோ சுட்டெரித்தான் .

பவனஜோ மிக ரசனையாய்  , ஏலே மாப்ள அங்கிட்டு பாருல அது நம்பள பார்த்து வெட்கப்பட்டு  ஒளியுது  .

என்னாது சூரியன் வெக்கப்படுதா ??? அதுவும் நம்பளை பார்த்து ? அவனை ஏற இறங்க பார்த்தவன் ஏல என்னல சொல்லுத என்றான்.

பவனஜோ , போ மாப்ள எனக்கு வெக்கவெக்கமா வருது என நெளிய.

ஐய்யயோ கன்ஃபார்ம் மோகினி பிசாசு தாம்ல அடிச்சுற்க்கு . எப்படி உன்ன அதுகிட்ட  இருந்து காப்பாத்த  போறன்னு தெரிலயே.

வால சீக்கிரம் வீட்டுக்கு போய் நம்ப சௌந்தர்யாகிட்ட சொல்லி  விபுதிய போடுவோம் என  வேகமாக வண்டியை எடுக்க செல்ல ,தடுத்து அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் பவனஜ்.

அதன்பின் அவன் ஏதேதோ புலம்புகொண்டிருக்க பவனஜோ உம் கொட்டிவந்தான்.

கடுப்பான பன்ரொட்டியோ  அவனை பார்க்க , பவனஜோ ஏதோ இன்று தான் அவ்வூருக்கு முதல்முதலாய் வருவதுபோல அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

எந்த மோகினிப்பிசாசு அடிச்சிதுன்னு   தெரிலையே பயபுள்ள பைத்தியம் மாதிரி தெரியுதே . அப்பனே கருப்பசாமி  நீதாம்ல  என்ற நண்பனை  காக்கணும்  . என் நண்பன் பழையமாரி  ஆனா கப்பு தாத்தா கிட்டசொல்லி உனக்கு படையல் போட சொல்றேன்பா என வேண்டினான்.( நம்ப கப்பீஷ்வரர தாங்க பயபுள்ள அப்டி சொல்லுது .இது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது உனக்கு சங்குதாண்டி  ).

அதுவரை அமைதியாய் வந்தவன் திடீரென பன்ரொட்டியிடம்  திரும்பி , ஏல மாப்ள ஒருக்கா நீ  பொண்ணா பொறந்துருந்தா என்னைய கட்டிகிட  ஒத்துக்கிட்டிருப்பியால  .

ஏலே மாப்பு என பன்ரொட்டி அலற ,

அடச்சீ  !  அதில்ல  மாப்ள அது …அது வந்து எனக்கு அந்த புள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள . அந்த  பிள்ளைக்கு  என்னை பிடிக்குமால.

ஏலே மாப்பு யாருல , உங்க வீட்டுக்கு வந்துருக்கே அந்த புள்ளையால  அப்போ நீ நிஜமா  தான் சொன்னியால  என யோசனையானவன்  , உன்னை கட்டிக்கிட யாருக்குல கசக்கும்  .

பவனஜோ , ஆனா மாப்ள அந்த புள்ளை போலீஸாவணுமாம்ல டா . அப்போ அது அந்த மாதிரி வீரமான  போலீஸ்காரன தான விரும்பும் என சொல்லும்போதே  அவன் குரல் இறங்கியது  .

அதை கண்டுகொண்ட பன்ரொட்டி அதை மாற்றும் பொருட்டு , அட என்ன மாப்பு நீ இப்டி விவரம் தெரியாம இருக்கீறீரு . மாப்பு இப்போல்லாம்  புள்ளைங்களுக்கு சிரிப்பு மூட்ரவனையும்  , வெட்டிப்பயலையும்  தாம்ல பிடிக்குது  . அதுக்காண்டி  நீ கவலைப்படாதல என்றான்.

ம்ம்ம் சரி மாப்ள ஆனாலும் நீரு கேடிபயல சந்தடில  என்னைய வெட்டிப்பய னு சொல்லிபுட்டல.

அய்யகோ  நான் போய் உன்ன அப்டி சொல்லுவேனா  மாப்பு என பன்ரொட்டி அலற,

ஓவரா நடிக்காதல என பன்ரொட்டியின் தோள்களில் கைபோட்டு  இறுக்கி எகிற  , இருவரும் ஹாஹா என சிரித்து கொண்டும் விளையாடிக்கொண்டும்  சென்றனர்.

 

***************************************************

என்னக்கா இன்னும் உன் ஆள காணோம் என கேட்டுகொண்டேய வாசலில் காத்திருந்த பரியாவின் அருகில் அமர்ந்தாள் ப்ரியா.

பின்ன அந்த பவனஜ் மாதிரி பத்ரா வெட்டியாவா இருக்காரு . அவர் போலீஸ் டி நிறைய வேலை இருக்கும் என தேவையில்லாமல் ஊடாலே  இழுத்தாள். அவளின் பத்ராவின்  நினைவை மறக்க செய்யும் பவனஜை வெறுத்தாள் .

அவளை ஒருமார்கமாய்  பார்த்த ப்ரியா , அக்கா நீ பத்ரா பத்ரா னு சொல்றியே அவர் இதுவரைக்கும் உன்கிட்ட நேருக்குநேரா எதாவது பேசிர்காரா  என கேட்டாள்.

பரியா யோசனையுடன் இல்லை என தலையாட்ட  ,

அக்கா எனக்கு நிறைய விஷயங்கள் ரொம்ப குழப்பமா  இருக்கு கா . நீ அவசரப்பட்டு எப்பவோ சின்னவயசுல  நடந்தத வச்சி அது இப்போ காதலா மாறிடிச்சினு  சொல்ரியோ .நீ யே நல்லா யோசி கா .

என்ன ப்ரி குட்டி நீயே இப்டி சொல்ற என சோகமானவள்  , ப்ரி நான் அந்த ஒரு சம்பவத்த  மட்டும் சொல்லலைடா . ம்ம்ம் நீ சொல்லு நம்ப அம்மா நான் சொன்ன எதுக்குமே  மொதல்ல ஒத்துக்காதவங்க  அப்றம் எல்லாத்தையுமே  நடத்திக்குடுத்தாங்க  எப்படி??

அதான நான் கூட கேப்பனே  , இதுக்கு நீங்க மொதல்ல ஒத்துர்க்கிட்டிருக்கலாமேனு  , அப்பா கூட சொல்றவங்க  சொன்னா தான் மா உங்க அம்மா கேப்பாங்கனு  .

அதேதான் ப்ரிகுட்டி , ஒவ்வொருவாட்டியும்  அவங்க இங்க பேசுனதுகப்ரும்  தான் ஒத்துக்கிட்டிருக்காங்க  . இங்க என்னோட படிப்பை  பதிலாம் பேசுறதுனா  அது பத்ராவா  தான இருக்கணும் . அதுவுமில்லாம ஒவ்வொரு வருஷம் என் பிறந்தநாள்  அப்பவும் அவங்க எனக்காக துணி எடுத்து அனுப்புவாங்க  . அம்மா கூட சொல்லுவாங்களே  பவன் கண்ணா எடுத்து அனுப்பிருக்கானு  என கண்கள் மின்ன  சொன்னாள்.

 

தங்கையிடம்  சொன்னது பாதி  தான் இன்னும் நிறைய இவளுக்கே இவளுக்கென்று  அவன் அனுப்பிருக்கிறான்  . ஒவ்வொரு பரிட்சைக்கு  அவனிடமிருந்து  வாழ்த்து  அட்டை  அவளிற்கு வந்துவிடும்.

போனமுறை  யுபிஎஸ் க்கு அவனிடமிருந்து வாழ்த்து வரமால்  போக அதை பற்றிய நினைவில் அவளால்

சரியாக  எழுதமுடியாமல் போக அதில் தேறவில்லை  .

ஏனோ  மனதால் நெருக்கமாய் இருந்தாலும் , அவன் காவல்துறையில் சேர்ந்தபின் அவனை பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தேடித்தேடி பார்த்தாலும் ஒருமுறை கூட நேரில்  பார்க்கமுடியவில்லை  .

இந்தமுறை  எப்படியும் பார்த்துவிடவேண்டுமென்று  தான் பிரபு நேற்று இரவு கால் செய்ததிலிருந்தே  யோசித்திருந்தவள்  , அங்கு அவர்களது நண்பன் பரத் செய்த சிறுகுளறுபடியை  கிளறி  சண்டையிட்டு கிளம்பினாள் .

ஊருக்கு சென்றபின் அவனிடம் மன்னிப்பு  கேட்கவேண்டும்  என மனதினுள் இத்தனை நேரமாய்  பேசிக்கொண்டிருந்தவள்  ப்ரியாவின்  அமைதியில் அவள் புறம் திரும்பினாள்  .

என்ன ப்ரிக்குட்டி !  இன்னும் என்ன ? சரி அப்படியே அவர் என்னை விரும்பாலனாலும்  இப்போ என்ன ஆகபோது  ?.

அப்பா அன்னிக்கு போன்ல  சொன்னது   நியாபகம் இல்லையா .எப்படியும் அவங்க அண்ணண் பையனுக்கு  தான் என்னை கட்டிகுடுப்பாங்கனு  சொன்னாருல்ல  . அதுமட்டுமில்லை நான் அவங்க அண்ணன் பையன விரும்பறது  அப்பாக்கும்  தெரியும் சோ டோன்ட்  ஒர்ரி  .

அச்சோ அக்கா இப்போ என்னோட ஒர்ரியே அந்த  அண்ணன் பையன் யாருன்றதுதான்  .  எனக்கு தெரிஞ்சவரைக்கும் அம்மா  எப்பவும் வஜ்ரநாகா மாமாவ விட கோதண்டநாக மாமா பத்திதான்  அதிகம் பேசுவாங்க  . இப்போ ரெண்டு  பேருக்கும் பையன் இருக்க பட்சத்துல உன்னை எப்படி பவன்புத்ராக்கு குடுப்பாங்க  .

இதற்க்கு பரியா பதிலை யோசிப்பதற்குள்  , கப்பீஷ்வர் பத்ரா என அழைத்து பேசும்குரல்  கேட்டது.

அங்கு செல்லும் அவசரத்தில்  , அதுக்கென்ன  ப்ரிக்குட்டி அதான் நீ அந்த பவனஜை விரும்புரியே சோ ப்ரோப்லேம்  சால்வ்ட் என சொல்லி சிட்டாய்  பறந்தாள்.

அடியாத்தி நான் விளையாட்டை சொன்னதை இவ உண்மைன்னு  நினைச்சிட்டாலோ .  அந்த பவனஜ் கண்ணு முழுக்க உன் மேல தான இருக்கு என்ற அக்கா என எண்ணிகொண்டே அவளும் பரியாவின் பின்  சென்றாள்.

அங்கு காவலதிகாரி உடையில்  பவன்புத்ரா சௌந்தரமாளின்  மடியில் தலைவைத்தவாறு  கப்பீஷ்வருடன் பேசிக்கொண்டிருந்தான்  .

பரியாவோ தன்னவனை பார்த்த சந்தோஷத்தில்  சிலையாய்  நின்றிருந்தாள்  . அதுவும் காற்றில் அலைபாயும்  அவனின் முடியை சௌந்தரம்மாள் கோதிக்கொண்டிருக்க  அவரை எழுப்பி அங்கு அவருக்கு பதில் தான் அவனை  மடியேந்த மாட்டோமா  என்ற ஏக்கம்  மனதில் ப்ரவாகமெடுத்தது  .

பலமுறை அவனை புகைப்படங்களில்  கண்டதாலோ  ஏனோ புதிதாய் பார்ப்பதுபோல்  அவளுக்கு தோண்றவே இல்லை.

அப்பொழுது அங்கு வந்த முனியன்  ,  என்ற மவளுக்கு  மேலுக்கு  முடிலனு  என்ற பொஞ்சாதி  சொல்லிவுற்றுக்காமா . பெரிய அத்தா ஒருவார்த்தை  சொன்னிங்கன்னா இந்தா போய் ஹாஸ்பத்திரில  காட்டிட்டு சட்டுனு  வந்துபுடுவேன் மா என பணிவாய்  கேட்டவாறு நின்றான்.

ஏன் முனியண்ணன்  !  பொண்ணுக்கு உடம்பு சரிஇல்லன்ரிங்க  மொதல்ல  கிளம்புங்க நீங்க .அதுலாம் ஒடனே வரவேணாம்  நீங்க கூடவே இருங்க என்ற பவன்புத்ரா  உள்ளே சென்று சிறுபணமும்  எடுத்துவந்து  கொடுத்தான் .

அதில்ல தம்பி !  பெரிய ஆத்தா ஜட  தைச்சி தரணும்னு  சொல்லிருந்தாங்க  என தயங்க  , தன் அப்பத்தாவை  ஓர் பார்வை பார்த்தவன் ஜட தான அத அப்றம் தைச்சிக்கலாம்  நீங்க போய் புள்ளைய பாருங்க என்றான்.

 

அவர் சென்றபின் சௌந்தரம்மாளின்  புறம் திரும்பியவன் , ஏன் அப்பத்தா இந்த வயசுல  உனக்கு ஜட கேக்குதா என கண்களை உருட்ட  ,

அப்படி கேளுடா  பேராண்டி , கிழவிக்கு  16 வயசுன்னு  நினைப்பாக்கும்    என கப்பீஷ்வரும்  இடையில் நுழைந்தார்  .

அப்பொழுதுதான் அங்குவந்திருந்த  பரியா மற்றும் ப்ரியாவை  பார்த்த சௌந்தரம்மாள் , ஏன் கண்ணுங்களா  அங்கனவே நிக்குறீக  இங்க வாங்க என்றழைத்தவர்  ,

ஏம்ல என்னய பார்த்த இந்தவயசுலையும்  ஜட வச்சிக்கிட்டு திரியுர மாதிரியால  தெரியுது . நம்ப பத்ரா கண்ணு அந்த வசந்தி  பொண்ணு வச்சிருந்தத  அம்புட்டு ஆசையா பார்த்துது.

அதான் முனியன கூப்டு  தச்சுத்தர சொன்னேன் . பரி கண்ணு நான் உனக்கு வேற யார்கிட்டேனா  சொல்லி தச்சிதாரேன்  கண்ணு என்றார்.

அவரை தடுத்த பரியா , இல்லை அம்மாயி  பரவால்ல இருக்கட்டும் என்றவளின்  பார்வையோ பவன்புத்ராவிடம்.

அவனும் அவளை தான் பார்த்திருந்தான் .

சிறிதுநேரம் அங்கிருந்தபின்  மீண்டும் கோதண்டநாக வின் வீட்டிற்கு வந்தார்கள்  பரியாவும், ப்ரியாவும்.

அக்கா ஏன் வேண்டாம்னு  சொன்ன ஜட வச்சிகணும்னு அவ்ளோ ஆசையா இருந்த.

ஆமா இப்பவும் ஆசையா தான் இருக்கு வச்சிக்கவும்  போறேன் தான்.

ஆனாஅக்கா அம்மாயி கிட்ட வேணாம்னு சொன்னியே.

அம்மாயிகிட்ட தான சொன்னேன் . அங்க தான் என் பத்ரா இருந்தாரே. என்னோட எல்லா ஆசையையும்  நிறைவேத்துறவரு  இந்த ஆசைய மட்டும் எப்படி விடுவாரு  என தங்கை பார்த்து கண்ணடித்தவள்  ,

நீ வேனா பாரு ப்ரிக்குட்டி நாளைக்கு காலையில எனக்கு ஜட தயாரா  இருக்கும் . சரி நான் போய் கனவுல என் ஆள மீட் பண்ணனும் டாடா  என சொல்லி சென்றாள்.

மறுநாள் தன் கதிர்களை  உலகம்  முழுவதும் பரப்பிகொண்டு மெதுவாய் தன் துயில்களைந்து எழுந்தான்  கதிரவன்.

அக்கா அக்கா என ப்ரியா  உலுக்க, என்னடி என அழுத்துகொண்டே எழுந்தாள்  பரியா.

அங்க பாரு என என ப்ரியா காட்ட அங்கு திரும்பி பார்த்தவளின் கண்கள் விரிய , இதழ்களோ மகிழ்ச்சியில் சிறிதாய் மாதுளை  சுளை  போல் திறந்திருக்க  முகம் விகசித்தது  .

அவர்கள் முன் ….. வில்லை வைத்து அதை சுற்றி கனகாம்புறமும்  , அதன் கீழ்  சிறிது சிறிதாய் மணம் பரப்பும்  மல்லியும் என அழகாய் ஒருமாற்றி  ஒன்று என தைத்துக்கட்டிருந்த  ஜடை அவர்களிடம் என் அழகை பார் என்பது போல் சுவற்றில் மாட்டி   இருந்தது.

 

 

-பண்ணிடுவோம் .

——————————————————————————————————————————————————-

தன்னை அழுத்தமாய் காட்டிக்கொண்டு ..

முரட்டுதனமாய் சுற்றும் ஆண்களின் உதட்டிலும்.புன்னகையை பூக்க வைக்கும் சக்தி !

மகள்களிடம்  மட்டுமே உள்ளது….!!!

 

அத்தியாயம் 8 :

முந்தின தினம் என் பத்ரா நிச்சயம் என் ஆசையை நிறைவேத்துவாரு  என பரியா நம்பிக்கையாய்  சொல்லிச்சென்றிருக்க,

மறுநாள் அவள் சொன்னதுபோல் அவள் அறையில்  கனகாம்புறமும், மல்லியும் சேர்த்து  தைத்திருந்த  ஜடை இருந்தது .

யாஹூ !!!! ப்ரிக்குட்டி நான் சொன்னேன்ல பாரு என் பத்ரா என்னோட ஆசைய நிறைவேத்திட்டாரு  என சந்தோஷத்தில் எகிறி குதித்தவள்  , நான் இப்பவே இத  வச்சிக்கபோறேன் என அதை எடுக்க சென்றாள்.

ஏய் ! குளிக்காம  அதில கைய வச்சினா  கைய உடைச்சிபுடுவேன்  என அதட்டலாய் கேட்ட குரலில் சந்தோஷமாய் சகோதரிகள் இருவரும் திரும்ப அங்கு பவித்ரா (அவர்களது அன்னை)  நின்றிருந்தார்  .

மாம் …….. என கத்திகொண்டே இருவரும் அவரை கட்டிக்கொள்ள  , அட என் பொண்ணுங்களா  இது இவ்ளோ சீக்கிரம் எழுந்தது  என அங்கு வந்தார் பிரபு.

அப்பாபா என மகள்கள் இருவரும் அவரிடம் செல்ல , ம்ம்ம்கும் அப்பா  வந்த உடனே அம்மா கண்ணுக்கு  தெரியமாட்டனே  என நொடித்த பவித்ரா,

சரிசரி கொஞ்சுனது போதும் , போய் குளிங்க  ரெண்டுபேரும் . ஏங்க நீங்க மொதல்ல கிளம்புங்க அப்போ தான் அவளுங்க கிளம்புவாளுங்க  என அனைவரையும் விரட்டினார்  .

நாங்க ஒண்ணா  இருந்தா போதும் உடனே பொறாமையில பொசுங்க  ஆரம்பிச்சிடுவியே என பிரபு முனங்க வழக்கம்போல் அது பவித்ராவின்  காதில் விழிந்து  தொலைத்தது .

உங்கள என ஆரம்பிக்க …இதோ இந்தா கிளம்பிட்டேன்  மா என வெற்றிகரமாய் பின்வாங்கியவர் ஓடியேவிட்டார்  .

பரியாவோ தான் நம்பியது  பொய்த்துப்போகவில்லை  என சந்தோஷத்தில்  இருக்க ,

ப்ரியாவின் பத்திரிக்கை  மூளை சும்மாஇல்லத்தில்   தன் முக்கிய சந்தேகத்தை  அன்னையிடம் கேட்டாள்.

மாம்! எப்ப வந்திங்க ? இந்த ஜடையை  நீங்களா  வரும்போது வாங்கிட்டு வந்திங்க.

ஏண்டி இங்க வருமுன்ன நல்லா தான இருந்த .இப்போஎன்ன ஆச்சி லூசுத்தனமா    கேக்கற  .

மா …கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மா

ம்ம்க்கும் இந்த அதிகாரத்துக்கு ஒன்னும் குறைச்சல்  இல்லடி உனக்கு .

ஏண்டி நீங்க இங்கதான்  இருக்கீங்கன்ற விஷயத்தை உங்க அப்பா என்கிட்டே மூச்சேவிடல .  அப்றம் எதுக்குடி நான் வாங்கிட்டு வரப்போறேன்  .

அப்போ இது எப்படி இங்க வந்தது என அவள்  யோசனையாய் கேட்க,

இது என்ற அண்ணன் மவன் குடுத்தான் டி . நாங்க வரப்போவே புள்ள இத தச்சிட்டு இருந்துச்சி . எம்புட்டு அழகா இருக்குல்ல என அதை தொட போக ,

அது வரை தன்னவனுடனான கனவில் இருந்த பரியா இவர்களின் பேச்சில் நிஜத்திற்கு வந்தாள்.

அவர் ஜடையின் அருகில் செல்வதை பார்த்து அவரின் முன் சென்று தடுத்தவள், மா இது  எனக்குனு பண்ணது . நான் தான் முதல்ல தொடுவேன்  என சிறுபிள்ளையாய் சிணுங்கினாள்  .

தன்னவன்  தன் ஆசைக்காய்  இதை எப்படியேனும்  கொண்டுவருவான் என நினைத்திருந்தாலே  தவிர அவனே இதை முழுக்க முழுக்க செய்வான்  என எதிர்பார்க்கத்தில் அவளின் மனம் தன் காதலை  அடக்க இயலாமல் விம்மியது.

ஏய் ரொம்ப  பண்ணாதடி .இத இங்க எடுத்துட்டு  வந்து வச்சதே  நான் தான்டி .போ போய் குளி முதல்ல என அவளை விரட்டியவர் ,

முழித்துகொண்டிருந்த   ப்ரியாவை பார்த்து , நீ என்னடி முழிச்சிட்டு  நிக்குற  என்றார்.

மாம் !  நான் கேக்றதுக்கு சரியானா பதில் சொல்லுங்க . அண்ணன் மகன்னு நீங்க யாரை  சொல்றிங்க என விடாமல் கேட்டவளிர்க்கோ  தன் தமக்கையின் காதலில் குழப்பம்  நேர்ந்துவிடுமோ  என்ற பயம் எழுந்திருந்தது  .

இது என்ன டி கேள்வி , அண்ணன் மகன்னு நா யாரை சொல்ல போறேன் என்று தொடர போனவரை  தடுத்தது கீழிருந்து வந்த கோதண்டநாகாவின்  குரல்.

சீக்கிரம் கிளம்புங்கடி , நீ போய் உன் ரூம்ல குளிச்சிட்டு வா .அண்ணன் கூப்புட்றாரு  நான் போய்ப்பாக்குறேன்  என கிளம்ப ,

மா ..மா….சொல்லிட்டு போமா  என ப்ரியா கத்த பவித்ராவோ  கண்டுகொள்ளாலே சென்றார்.

பரியா குளித்துவிட்டு  வந்தபொழுது ப்ரியா குளித்துமுடித்து  கிளம்பிருந்தவள் , கட்டிலில் நகத்தை கடித்துக்கொண்டிருந்தால் .

ப்ரி இது ரெண்டுல  எந்த புடவை நல்லா இருக்குனு சொல்றி என அவளிடம் கேட்க ,

அதுலாம் வேணாம் கண்ணு இந்தா இந்த சேலைய  கட்டிக்கோ என ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையை  தந்த ஜானகி (பவனஜின் அம்மா) அதற்கு தோதான  நகைகளும்  உடன் தந்தார்  .

ப்ரியாவோ அதை பார்த்து முட்டை கண்ணை விரித்து முழிக்க ,

பரியா தான் அவரிடம் ,என்ன அத்த…. இதெல்லாம் எதுக்கு என கேட்டாள்.

பின்ன ஜடை வைக்கணும்னு  சொன்னல அதுக்குதான் இது என கொடுத்தவரின் உதடுகளோ கேலிசிரிப்பில் பூத்திருந்தது.

அங்கிருந்த ஜடையை  பார்த்த அவரும் , ராசா னா ராசா தான். நேத்து தான் அயித்த  சொன்னாங்க ஜட தைக்கமுடிலனு .அதுக்குள்ள ஒரே ராவுல புள்ள எம்புட்டு ஜோரா  தைச்சிருக்கு என மோவாயில்  கை வைத்து அதிசயத்தார் .

அவளின் முகத்தை வழித்து நெட்டுடைத்தவர்  , எம்புட்டு அம்சமா  இருக்க உனக்கு அந்த ஜட பொருத்தமா  இருக்கும் கண்ணு .என் ராசா ரொம்ப குடுத்துவச்சிக்கணும்  என பேசிக்கொண்டே கீழிறங்கி  சென்றார்.

யக்காவ் …எனகென்னமோ உனக்கு பெரிய ஆப்பா  எதுவோ வைக்கப்போறாங்கனு தோணுது .நா இப்போ இங்க வரும்போது கூட பார்த்தேன் வீடெல்லாம்  அலங்காரம்  பண்ணிருக்காங்க  . தங்கச்சி  சொல்றேன் வா இங்க இருந்து எஸ் ஆவோம்  .

சும்மா இருடி , எப்பப்பாரு லூசு மாதிரி உளறிட்டு இருக்க என அழுத்த  பரியாவின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு  சென்றவள்  கீழிருந்தவர்களை காட்டி , அங்க பாருக்கா  என்றாள்.

என்னடி அங்க ? தாத்தாவும்  , வஜ்ரநாகா மாமாவும் தான இருக்காங்க என அசால்டாக கேட்டாள் பெரியவள்  .

ஐயோ இந்த தத்தி  அக்காவை வச்சிக்கிட்டு நான் இன்னும் என்ன பாடுபடபோறனோ  என ப்ரியா புலம்ப  பரியா அவளின் தலையில் கொட்டினாள்.

அவ்ச் யக்காவ் எதுக்கு இப்போ கொட்டுன என முறைக்க .

ஏண்டி அவங்க வீட்ல அவங்க இருக்றதுல  என்ன இருக்கு ? இத கேட்டா லூசு மாதிரி ஒலர்ற .

அக்கா இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்கோ நீ லாம் சத்தியமா போலீஸ் ஆவமாட்ட.

முறைச்சா பயந்துருவோமா ,பின்ன என்னக்கா …நம்ப மொதல் நாள் இந்த வீட்டை  கண்டுபிடிக்க  ஒருத்தர்ட்ட விசாரிச்சப்ப  என்ன சொன்னாரு .

என்ன சொன்னாரு என யோசித்தாள் பரியா . இவர்கள் கோதண்டநாக , வஜ்ரநாகா இருவரின் பெயரையும்  சொல்லி விசாரிக்க  ,

இங்குட்டுல  இருந்து நேருக்கா போன கடைசியா ரெண்டு பெரிய வீடு ஒட்டினாப்ல இருக்கும் . ரெண்டுக்கும்  நடுவுல மதி சுவர்  சின்னுண்டா  இருக்கும் பாருங்க .

அதுல வலப்பக்கமா இருக்கிறது  தாத்தைய்யா வூடு. அங்கிட்டு தான் வஜ்ரநாகா ஐயா  இருப்பாரு  .

இடப்பக்கம்  இருக்கிறது நம்ப கோதண்டநாக ஐயா வூடுங்க என்றிருந்தார் .

பிறகு இங்குவந்தபின்   சௌவுந்தரம்மாளிடம் , விசாரித்த பொழுதுதான்  தந்தை மகன் விவாவதத்தில்  இப்படி பிரிந்திருப்பது  தெரிந்தது . இதுவரை கோதண்டநாக வீட்டீற்க்குள் கப்பீஷ்வர் வந்ததே இல்லை.

அதை எண்ணிப்பார்த்த பரியா ,

இதுவரைக்கும் இங்க நம்ப தாத்தைய்யா   வந்ததே  இல்லனு தான அம்மாயி  சொன்னாங்க என கண்களை உருட்டினாள்.

அதேதான் கா …ஆனாபாரு இப்போ அவரும் வஜ்ராமாமாவும்  காலம்காலமா  இந்த வீட்லயே இருக்க மாறி உட்காந்து  சிரிச்சிட்டே இருக்கிறத. அதான் சொல்றேன் ஏதோ ஆப்பு  ரெடி பண்றங்க  வா எஸ் ஆகிடுவோம்  .

ஏய் அவங்களுக்குள்ள  என்ன பிரச்சனைனே நம்பளுக்கு  தெரியாது .ஏதோ இப்போ சரிஆகிடிச்சிபோல  . அதுக்கும் நம்பளுக்கும்  என்ன டி சம்மந்தம்.

அப்பொழுது அங்கு வந்த பவித்ரா , மகள்கள் இருவரும் படிகளில் நின்று பேசிகொண்டிப்பதை  பார்த்தவர் , இங்க என்னாடி பண்ணுறீங்க ரெண்டுபேரும்  . பரி நீ போய் ரெடியாகுமா , ப்ரி நீ அக்காக்கு  உதவி பண்ணு  ப்ங்க்ஷன் ஆரம்பிக்கிறவரைக்கும்  கீழ வர கூடாது  ஓடுங்க என விரட்ட  ,

மா ப்ங்க்ஷனா  !  என்ன ப்ங்க்ஷன் மா என பரியா கேட்க ,

உன் நிச்சயதார்த்தம்  தான்டா குட்டி என சொல்லியபடியே அங்கு வந்தார் பிரபு.

சொன்னவரை  பவித்ரா முறைக்க , ஏன்மா பொண்ணுகிட்ட  சொல்லவேண்டிது  நம்ப கடமை இல்லையா என பதிலுக்கு பிரபு கேட்க,

எப்படி பா ? நிச்சயத்துக்கு  கொஞ்சநேரத்துக்கு  முன்னடியா  என ப்ரியா கேட்ட விதத்தில்  பரியாவே அதிர்ந்து பார்க்க ,

பிரபு என்ன சொல்வதென  தெரியாமல் வாயடைத்துப்போனார்  .

ஏய் என்னடி பேசுற அவர்ட்ட என ப்ரியாவை  திட்டிய  பவித்ரா , இதுக்குதான்  செல்லம் குடுக்காதிங்க  சொன்னேன் கேட்டீங்களா என பிரபுவையும் ஏசினார்   .

பிரபுவோ பரியாவின் கைகளை பிடித்துக்கொண்டு  , அப்பா உனக்கு சர்ப்ரைஸ்  குடுக்கலாம்னு  தான்டா சொல்லல . நீ பவன் மேல எம்புட்டு ஆச வச்சிருக்கேன்னு  எனக்கு  தெரியாதா.

காலைல பவன் அந்த ஜடைய கொடுக்கும்போது பெரியஅத்த பேச்சுவாக்கல , எதுக்கு வெறும் ஜட துணிமணியும்  எடுத்துகுடு இன்னிக்கே நிச்சயத்தை  வச்சிக்கிடலாம் னு சொன்னாங்கமா . நம்ப சொல்லாமே  நம்ப பொண்ணோட ஆசை நிறைவேறுதுன்னு  தான்மா  நான் சொல்லல என மகள்கள் தன்னை தவறாய்  எடுத்துக்கொள்வார்களோ  என நீண்டதாய்  விளக்கம்  கொடுத்தார்  .

மனதினுள் பழகுழப்பங்கள்  இருந்தாலும் தன் தந்தை வருந்துவது பிடிக்காமல்  மகள்கள் அவரை சமாதானபடுத்த  ஆரம்பிக்க  அங்கு ஒரு பாச அலை  உருவாகி அனைவரையும் நனைத்து  சென்றது .

 

*************************************************************************************************

எங்க அக்காகேத்த  மாப்பிளை எங்கிருக்கான்  பயபுள்ள …எங்க அக்காகேத்த  மாப்பிளை எங்கிருக்கான் பயபுள்ள ..

–  பாடி கொண்டே தான் அணிந்திருந்த  தாவணியின் முந்தானையை  சுத்திகொண்டு  வந்த ப்ரியா , அதான் அவர் இந்த வீட்ல தான் இருக்காருன்னு  தெரிஞ்சிடிச்சே . சரி வேற பாட்டு யோசிப்போம் என எண்ணிகொண்டே வந்தவள் பரியா அதே உடையுடன் இருப்பதை பார்த்து குழம்பினாள் .

அக்கா நீ இன்னும் புடவை கட்டலையா ? சீக்கிரம் கட்டுக்கா  நான் உனக்கு மேக்கப் பண்ணிவிடறேன்  இல்ல அம்மா வந்து கச்சேரியை  ஆரம்பிச்சா நிறுத்தமாட்டாங்க .

அவள் பேசியதற்கு எதுவும் சொல்லாமல்  பரியா அமைதியா இருக்க , அக்கா என்னாச்சி  கா என அவளை தன்புறம் திருப்பினாள்.

ப்ரிக்குட்டி…அது….நிச்சயம்…எனக்கும்…பவன்….என்று பரியா தடுமாற ,

அக்கா என்னனு சொல்லுக்கா.

ப்ரிக்குட்டி !  இன்னிக்கு எனக்கு நிச்சயதார்த்தம் சரி ஆனா அது யார் கூட ???

என்னக்கா  அதான் அப்பா சொன்னாருல்ல நீ விரும்பறது தெரியும்னு ,நீயும் தான அப்பாக்கு தெரியும் னு சொன்ன.

சொன்னான் தான்டி …அன்னிக்கு அப்பாகிட்ட ஒருநாள் முன்னடியே அங்க போறேன்னு சொல்லும்போது ஏன்னு  கேட்டவர்கிட்ட உங்க ”  பவன் கண்ணா”  வ நான் விரும்பறேன். அவனுக்காக  போறேன்னு தான் சொன்னேன்.

அதான் சொல்டியேகா அப்றம் என்ன ?

இல்ல ப்ரி , நான் பவன்புத்ரா மட்டும்தான்னு  நினைச்சி தான் அப்டி சொன்னேன் . ஆனா இங்க ஒரே மாதிரி கிட்டத்தட்ட  ஒரே பேர்ல ரெண்டு பேர் இருப்பாங்கன்னு  எனக்கு தெரியாதே  டி. இப்போ அப்பா ரெண்டுபேர்ல யாரை பவன் கண்ணா னு சொல்றாருனு குழப்பமா இருக்கு ப்ரி.

என்னக்கா நீ , இத அப்பாகிட்டயே கேட்ருக்கலாம்ல இல்ல என்கிட்டே சொல்லிருந்தாலவது நான் கேட்ருப்பேன் என்று இது என்ன புதுகுழப்பம்  என்ற எண்ணத்தில்  தமைக்கையை  கடிந்தாள்.

அடியே எனக்கு முன்னடியே  தெரிஞ்சிருந்தா கேட்ருக்கமாட்டேனா ?

மேல வரும்போதுதான் கேட்டேன் ஜானகிஅத்த அந்த பன்ரொட்டி  அண்ணாகிட்ட  , போய் பவனஜ கூட்டிடுவா ராத்திரி முழுக்க முழிச்சிட்டு இருந்த புள்ள சரியா சாப்டாமகூட போய்ட்டான் . கொஞ்சம் அதான் உறங்குனாதா ப்ங்க்ஷன்ல முகம் பளிச்சுனு இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்கடி . அதுகப்றம் தான் எனக்கே சந்தேகமா இருக்கு.

என்னக்கா இப்டி சொல்ற இப்போ என்ன பண்றது என சிறிது நேரம் என யோசிக்க ,

அதுமட்டுமில்லை ப்ரி அப்பா என்ன சொன்னாரு பவன் ஜடை குடுகும்போது தான் அம்மாயி நிச்சயம் பத்தி பேசுனாங்கனு  . ஆனா ஜானகி அத்த சொன்னதை கவனிச்சியா  என் ராசா குடுத்து வச்சிருக்குனு  சொன்னாங்க . அவங்க யாரை பத்தி சொன்னாங்க .

அச்சோ அக்கா இப்டி வரிசையா  சந்தேக பட்டு பேசுனா எப்படி ?

ப்ரி எனக்கு ஒண்ணுமே புரிலடி . நான் இப்பவே பத்ராவ பார்த்து பேசணும்  . அவர்கிட்ட பேசுனா  இந்த குழப்பத்துக்குலாம் ஒரு முடிவு கிடைக்கும்ல  .

ஆனா அக்கா இப்போ உன்ன வெளிய விடமாட்டாங்களே. அதுவும்  நான் வரும்போது தான் பெரிய மாமா சின்ன மாமாகிட்ட  பவன்புத்ரா ஸ்டேஷன்  போய்ர்க்கான் இப்போ வந்துருவான்னு சொல்லிட்டு இருந்தாரு .

அவருக்கும் எனக்கும் தான் நிச்சயதார்த்தம்னா  அவரை மட்டும் எப்படி வெளிய விட்ருப்பாங்க . நான் உடனே அவரை பார்க்கணும் டி என ப்ரியாவின்  கைகளை பிடித்து ஜன்னலின் புறம் சென்றாள்.

அக்கா…அக்கா …நில்லுக்கா என்னபண்ணப்போற அம்மாக்கு  தெரிஞ்சா நம்பளுக்கு  சங்கு  தான்.

சும்மா இரு ப்ரி அதுலாம் அப்பாகிட்ட மெஸ்ஸேஜ் பண்ணி யாரும் இங்க வராம பார்த்துக்கலாம் . அதுவும் லேட் ஆனா மட்டும் … இப்போ வா போவோம் .

எப்படி கா போவ  ? இங்க போறதுக்கு வழியே இல்லையே.

ஆன் என்ற பரியா , இப்படி தான் என ஜன்னல் வழியாய் குதித்து  அங்கிருந்த தடுப்பின்  மேல் நின்றாள் .

யக்காவ் ! போலீஸ் ஆகப்போறேன்னு நிரூபிக்கிறியோ  . சரி சரி நீ சுடிதார்  போட்டதுனால  சட்டுனு குதிச்சிட்ட  நான் எப்படி என புலம்பிய  படியே முந்தியை இடுப்பில் சொருகியவள்  பாவாடையையும்  தூக்கி சொருகியபடி இறங்கிய ”  எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ”  என்றாள் .

– பண்ணிடுவோம் …

——————————————————————————————————————————————–

 

ஒற்றை சந்திப்பில் ,ஒரே ஒரு பார்வையில்… தன் ஆயுள் மொத்தத்தையும் ஒருவருக்காய்

அர்ப்பணிக்க தூண்டுகிறது

காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரம்  …!!

 

அத்தியாயம் 9 :

 

ஏல திடிர்னு இந்த அம்மா எதுக்குல வரசொல்லுச்சி என பின் அமர்ந்திருந்த பன்ரொட்டியிடம் கேட்டவாரே வீடை நோக்கி வண்டியை ஓட்டினான் பவனஜ்.

காற்றிற்க்கும் அவனின் மேல் ஆசையோ என்னவோ அவனின் முன்னுச்சிமுடியை செல்லமாய் கலைத்து சென்றது .

மாப்பு மொதல்ல இந்த ஹெல்மெட் அ போடுல . இன்னிக்கு அந்த போலீஸ்க்காரன் கூடவே இருப்பான்ல . யாருக்குதெரியும் இப்பவே நம்ப முன்ன வந்து குதிச்சாலும் குதிப்பான் . நீ இந்த ஹெல்மெட் போடாம ஒட்றதை பார்த்தா ஒரு சொற்பொழிவை ஆத்தாம போமாட்டான்ல

ஆனா மாப்ள என் தம்பிய பத்தி என்கிட்டயே இப்டி பேசுறியே உனக்கு ஏத்தம் கூடிடிச்சில என பன்ரொட்டியை சொன்னாலும் அவனின் கை தானாய் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டியது .

அக்கா ! அங்க பாரு அது பன்ரொட்டி அண்ணா தான ,அப்போ முன்னாடி  உட்கார்ந்துட்டு போறது பவனஜ் அத்தான்னு நினைக்கிறேன் என தங்களை கடந்து சென்றவர்களை  பார்த்து சொன்னாள் ப்ரியா .

ஏய் என்னடி புதுசா அத்தானுலாம்  சொல்ற.

அது ஒண்ணுமில்லை கா …ரெண்டு பேர்ல யார் உனக்குன்னு  இன்னும் முடிவாகலயே . அதான் முன்னடியே கூப்ட்டுவைப்போம்னு தான்.

அவளை முறைத்த பரியா , எனக்கு கல்யாணம்னா  அது நிச்சயம் பத்ரா கூட தான் நடக்கும் ப்ரி . நீ இந்தமாதிரிலாம்  பேசுறதா இருந்தா என் கூட வராத என கோபமாய்  முன்னே சென்றாள்.

அக்கா நில்லுகா…..அக்க்க்கா …..சரிசரி நான் எதுவும் சொல்லல என…   சிறுது நேரம் அமைதியாய்  நகர்ந்தது , மீண்டும் அக்கா என்று ஆரம்பித்தாள் .

பரியா என்ன என்பது போல் பார்க்க,

கேக்றேன்னு கோபப்படாத கா …உன்னோட ஒவ்வொருஆசையா  பவன்புத்ரா நிறைவேத்தநிறவேத்த தான் உனக்கு காதல் வந்துச்சின்னு சொல்றல . அது பவன்புத்ரா தான்னு நீ எப்படி சொல்ற .

இவளின் கேள்வியில் பரியா அவளை  அடிபட்ட  பாவனையுடன் பார்க்க ,

அக்கா ப்ளீஸ் ….நீ பீல் பண்ணணும்னு நான் கேக்கல . சொல்லப்போனா இப்படிலாம் குழப்பம் ஆகும்னு நீ யோசிச்சீர்க்ககூட மாட்ட. யோசிச்சி பாருக்கா அம்மா ஒருவாட்டியாவது பேர் சொல்லிற்பாங்கள ??

இல்ல ப்ரி அம்மா எப்பவும் அண்ணன் மகன்னு தான் சொல்வாங்க , அப்பாவும் பவன் கண்ணானு தான் சொல்வாங்க என தவிப்பாய் சொல்ல ,

ப்ச்சே…இந்த அம்மா இருக்காங்களே …ஆனாவுனா அண்ணா அண்ணா சொல்வாங்க. ஆன எந்த அண்ணனுனு சொல்லமாட்டாங்க என ப்ரியாவின் சொற்கள் குழப்பத்தில் எரிச்சலாய் வெளிவந்தது .

திடீரென ப்ரியாவின் கைகளை பிடித்து , ஏய் ப்ரி குட்டி அம்மா நிச்சயம் என் பத்ராவ தான் சொல்லிர்க்கணும் என சந்தோஷத்தில் குதித்தாள் .

ஆமா ப்ரி , உனக்கு நியாபகம் இருக்கா அம்மா நம்மளுக்கு என் அண்ணன் மகன் போலீஸ் ஆகிட்டான்னு சொல்லி் அன்னிக்கு பிரட்அல்வா லாம் செஞ்சி குடுத்தாங்களே . அப்போ தான் நானே நெட்ல தேடி முழுபெயர் பவன்புத்ரா னு தெரிஞ்சிகிட்டேன் என குதூகலாமாய் சொன்னாள்.

நீ சொல்றதுலாம் சரிகா ஆனா அந்த பவனஜும் உன்ன உத்து உத்து பார்த்து வைக்கிறாரே என சொல்லிமுடிக்க அவர்கள் அந்த காவல்நிலையம் அருகில் வந்திருந்தனர் .

அட ! நீங்க நம்ப தாத்தய்யா வீட்டுக்கு வந்தவங்க தான ,என  கேட்டுகொண்டே உள்ளிருந்து  வந்தவரும் காவலதிகாரி  உடையில் இருந்தார்.

என்னமா பாக்குறீங்க?

என்ன செய்தி ?

பரியா , இல்ல சார் …அது பத்ரா..ம்ம்ம் …அது ஏசிபி சார பாக்கணும்  .

ஹாஹா என்னமா சிரிப்பு மூட்றிங்க  . நம்ப பவன்புத்ரா சார தான சொல்ரீங்க . தினம் தினம் வீட்லையே பார்க்க கூடியவரை  காங்க  இத்தனை தொலைவு  வந்தீயலா  என சிரிப்பாய்  கேட்டார்.

ஓஓ அக்கா இவர் காமெடி பண்ணிட்டாராம்  சிரிச்சிடு கா இல்லனா புடிச்சி  ஜெயில்ல  போட்டாலும்  போட்றுவாரு என பரியாவினிடம் நக்கலாய்  முனங்கினாள் ப்ரியா .

அதே நக்கலுடன்  , என்ன சார் ஸ்டேஷன்ல எல்லாம் ஈ ஓட்றாப்ல  தெரிது என கேட்க ,

அதையும் காமெடியாக ஏடுத்துக்கொண்டவர்  , ஹாஹா ஹாஹா என்று  சிரிக்குறேன் பேர்வழி என பயமுறுத்தினார்  .

என்னமா பண்றது ….எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்  பவன்புத்ரா ன்ற பேர கேட்டாலே  மிரண்டு  ஓடிட்றாங்களே  என சலிப்பாய் சொல்வதுபோல்  சொன்னாலும் அவரின் குரலில் பெருமையே விஞ்சிருந்தது .

அவரின் பெருமையில்  பத்ராவின் இதயமும்  தன்னவனிருக்காய் விம்மியது .

அட இந்த அக்கா வந்தவேலைய  மறந்து காதல்ல மூழ்கிட்டாங்க  போலயே . ஏய் சொட்டமண்ட இப்போ யார்னா உன்கிட்ட அவர் புகழ் பாட சொல்லி  கேட்டாங்களா என மனதிற்குல் அவரை அர்ச்சித்த ப்ரியா ,

ஹீஹீ சார் ஏசிபி இருக்காரா  இல்லையா என கேட்டாள்.

பரியாவும் அந்த கேள்வியையே விழிகளில் தாங்கியவாரு  பார்க்க ,.

பவன்புத்ரா சாரும் , பிரதாப்  சாரும்  இப்போ தான்மா கிளம்புனாங்க . கொஞ்ச நேரம் முன்னாடி வந்தா பார்த்துர்க்கலாம்  என உச்ச்சு கொட்ட  ,

இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடினா நாங்க வீட்லையே பார்த்துருப்போமே  என மனதினுள் கவுண்டர் கொடுத்த  இருவரும் ஏமாற்றமாய்  திரும்பி சென்றனர் .

ச்சே என்னக்கா இது ? இதுக்கா இவ்ளோ தூரம் வந்தோம் . ம்ம்ம் வரும்போதாவது  அந்த வழியா வந்த வண்டில  தொத்திட்டு  வந்தாச்சு  . இப்போ எப்படி போறது யாரையும் காணோமே  என புலம்பிகொண்டே வந்தாள்  ப்ரியா.

ஏய் ப்ரி அது அந்த பவனும்  , பன்ரொடியும் தான இன்னும் இங்கயே இருக்காங்க என பரியா சொல்ல , அவர்களை பார்த்த ப்ரியாவும் என்ன யாருக்கோ பயந்து போய் உட்கார்ந்துருக்க மாதிரி உட்கார்ந்துருக்காங்க . வா கா போய் கேட்போம் .

அருகில் செல்ல செல்ல ஹெல்மெட்டுடன் இருந்த பவனஜின் கண்கள் மட்டுமே பரியாவிற்கு தெரிய அது ஆழிப்பேரலையாய் மாறி தன்னை உள்ளிழுப்பதாய் உணர்ந்தாள் . அந்த உணர்வில் தோன்றிய எரிச்சலில் ,

என்ன ப்ரி பவுனு எதையோ பார்த்து பதுங்கிற்கு  போல என நக்கலாய் கேட்க அவர்கள் அருகில் வந்திருந்ததால்  அது பவனஜ் மற்றும் பன்ரொட்டியுன் காதுகளிலும்  விழுந்தது .

எங்கையோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுத்தான்ற மாதிரி அவன் பாக்காம இருந்தாலும் வேணுகா வம்புக்கு நிக்குறாங்களே . இந்த புள்ளைக்கு நம்ப மாப்பு தான்னு எழுதிர்க்கு போல என எண்ணினான் பன்ரொட்டி.

ப்ரியாவோ களைப்பாய் இருக்க இளநீர் எதுவும் இங்கு இருக்குமா என பன்ரொட்டியிடம் விசாரித்தாள் .

பவனஜோ ,திடீரென தன் முன் வந்து நின்றவளை நம்பமுடியாமல் பார்த்தவன் பார்வையாலே அவளை முழுங்க உதடுகளோ , அவளிற்கு நிகரான நக்கலுடன் உன்ர பேர் என்னங்கோ என்றது .

ஏனோ அவன் தன் பெயர் கூட தெரியாமல் இருக்கிறான் என்ற ஆதங்கம் தன்னையுமறியாமல் தோன்ற பற்களை கடித்தவாறு பரியா என்றாள்.

கடைசி வார்த்தையை மட்டும் கேட்ட பன்ரொட்டி ,எம்மாடி என்னமா நானும் பாரத்துட்டே இருக்கேன் என்ற மாப்புக்கு மறுவாதயே குடுக்காம பேசிக்கிட்டிருக்க என கோபமாய் கேட்க ,

அவளோ இவர் எதற்கு இப்போ கோபப்படறாரு என திருதிருவென முழிக்க ,

என்ன …என்ன… முழிச்சா ஆச்சா . இளநீர் வேணும்னு இப்போ தான இந்த புள்ள கேட்டுச்சு உனக்கும் வேணும்னா பறிச்சிக்குடுங்கனு சொல்லு . மாப்பு ரெண்டு என்ன நாலு கூட பறிச்சித்தருவாப்ல. அதவுட்டுப்புட்டு மறுவாத இல்லாம பறி(ரி) யா -ன்ற என முறைக்க ,

அவளிடம் பவனஜ் பேர் கேட்டது அவனிற்கு கேட்காமல்  இளநீர்காய் சொல்வதாய்  நினைத்து திட்ட , பவனஜோ கண்களில் நீர் முட்ட  சிரித்தான் .

ஏம்ல பன்னு ! உமக்கு  என் மேல இம்புட்டு பாசமால என சிரிப்பை நிறுத்தி கேட்டாலும் அவனின் கண்கள்

பரியாவை பார்த்து கேலியாய் சிரித்தது .

இவர் எதுக்கு இப்டி சிரிக்குறாரு  அக்கா ஏன் முறைக்குது  என புரியாமல்  போக ப்ரியா , அத்தான் என்னாச்சி எதுக்கு சிரிக்கிறீங்க  என கேட்டாள் .

ஹாஹா ஒண்ணுமில்லமா , ஆமா உன் பேர் என்ன ?

ப்ரியா அத்தான் .

பரியா கோபப்படுகையில் அவளிடம் அவன் ரசிக்கும் அந்த கூர்மூக்கு  இன்னும் சிவந்து  அழகுற  அதை மேலும் ரசிப்பதற்காய்  அவளின் கோபத்தை அதிகரிப்பது போல் ,

ஓஒ…பரியாக்கு ப்ரி (free ) இந்த ப்ரி ஆ (ப்ரியா)  என நக்கலடித்தான்  .

அவர்கள் ஒரே மாதிரி இருப்பதால் பள்ளி , கல்லூரிகளில்  இதே போல் பலர்  சொல்லிருக்க   ப்ரியா அவனின் கிண்டலை விளையாட்டாய் எடுத்துக்கொண்டு  சிரித்தாள்.

பரியாவோ கோபத்தில் அங்கிருந்து செல்ல போக அவசரமாய் தடுத்த பவனஜ் , ஏய் அங்கிட்டு போவாத  .நில்லு சித்தப்புவ  வண்டி கொண்டாரா  சொல்லிருக்கேன்  என்றான்.

பார்வையில் ஏன் என்ற கேள்வி தூக்கியவாறு  அவனை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்க  அவனோ அவ்வேற்ற இறக்கத்தில்  அவளுள்  சொக்கித்தான்  போனான்.

அதை கவனித்த ப்ரியா அதை கலைப்ப , எதுக்கு அத்தான் வண்டி அதுவும் நாங்க வந்தது வேற யாருக்குமே  தெரியாது .பேசாம நாங்எ நடந்தே  போறோம் என சத்தமாய் சொன்னாள்.

இல்ல ப்ரியா அங்கிட்டு பங்காளிங்களுக்குள்ள  வரப்பு  தகராராகி  அடிச்சிக்கிட்டு  இருக்கானுவுக  .அதான் நாங்களே  இங்கன நிக்கோம்  என பவனஜ் சொல்ல ,

பன்ரொட்டியும் , ஆமா அங்கிட்டு போவதிக .எவன் யார் மண்டை உடைபானுகனு  தெரியாது  என்றான்.

இதெல்லாம் ஒரு விஷயமா என ப்ரியா கேட்டுமுடிக்க அங்கு ஒரு அருவாள் பறந்து வந்து விழுந்தது .

வரப்பு தகராறு பெரிதாகி கைகளில் அடித்தது போய் ஆயுதம் எடுத்திருக்க அங்கு போவோர் வருபவரையுமே தாக்க ஆரம்பித்திருந்தனர் .

டேய் பன்னு , சீக்கிரம் சித்தபுக்கு போன போடுடா என்றவன் , ரெண்டு பேரும் வாங்க கொஞ்சம் தள்ளி போலாம் என பரியா மற்றும் ப்ரியாவை அழைத்தான் .

அவனை மேலிருந்து கிழ்வரை பார்த்த பரியா , அதற்குள் தங்களின் புறம் ஒருவன் அடிக்க வர அசால்ட்டாக அவனின் கைகளை முறித்து உடைத்தாள்.

போனை எடுத்த பன்ரொட்டியும் , பவனஜும் ஆவென வாயை பிளக்க ப்ரியாவோ இது வழமை என்பது அமைதியாயிருந்தாள் .

***************************************************

நீ இன்னும் கிளம்பலையா கண்ணா . சீக்கிரம் கிளம்பு பா என பவித்ரா சொல்லி செல்ல சரி சரி மண்டையை உருட்டிக்கொண்டிருந்தான் பவனஜ் .

மாப்பு! இனிமே நான் இந்த வீட்டுப்பக்கமே வரமாட்டான்ல . எதுவா இருந்தாலும் இன்னியோட முடிச்சிப்போம் என பன்ரொட்டி சொல்ல,

பவனஜ் , ஏம்ல

ஏனா , நீ பார்ததானல அது முறுக்கா? கையால? ஏதோ முறுக்கு புழிறாப்ள புழிறாங்க . அதுகூட பரவலால அடுத்து வந்தவனுக்கு அடிவயதுலயே ஒன்னு விட்டாங்க பாரு… அவன் என்ன ஆனானு தெரில மாப்பு ஆனா எனக்கு வயிறு  கலங்கிடிச்சில  என அழாகுறையாய்  புலம்பி கொண்டிருந்தான் .

மேலே அறையில், இவர்களுக்கு நேர்மாறாய் பரியாவோ கோபத்தில் ப்ரியாவிடம் இவர்களை பொரிந்துகொண்டிருந்தாள்.

சே அந்த இடத்துல மட்டும் என் பத்ரா இருந்திருந்தா எல்லாரையும் ஓட ஓட அடிச்சிருப்பாரு . அவர் பேர கேட்டாலே எல்லோரும் அலறுவாங்க . இவன் என்னனா சண்டைநடக்குதுனு ஒளிய இடம் தேடுவான் போல என பவனஜை வறுத்தெடுத்தாள்.

ப்ரியா ஏதோ பதில் சொல்லப்போக அங்கு ஜானகி வருவதை பார்த்தவள் வாயை மூடி கொண்டாள் .

கண்ணுங்களா இன்னும் கிளம்பளையாடா , பரியா கண்ணு போய் சீலை மாத்திட்டு வா கண்ணு ,அய்த்த உனக்கு  ஜட வச்சி தலைய ஜோடிச்சிவிடறேன்  . நிச்சயத்துக்கு  நேரமாவுத்துல  என சொல்ல ,

இருவரும் பவனஜை மறந்து நிச்சயதார்த்த  பரபரப்பில் மூழ்கினர் .

***************************************************************************

வீடுமுழுக்க அலங்காரத்தில் ஜொலிஜொலிக்க , கப்பீஷ்வர் கம்பீரமாய் மீசையை முறுக்கியவாறு சோபாவில் அமர்ந்திருக்க அவரின் இருபுறமும் ,அவரின் கம்பீரத்திற்கு சிறிதும் குறைவில்லாதவாறு கோதண்டநாகாவும் , வஜ்ரநாகாவும் அமர்ந்திருந்தனர் .

வஜ்ரநாகா நீண்ட நாள் பிறகு முழு சந்தோஷத்துடன் அமர்ந்திருக்க , கோதண்டநாகா பவித்ராவை தன்பக்கம் அழைத்து அனைவரிடமும் பேச வைத்துக்கொண்டிருந்தார் .

சௌந்தரம்மாள் இவர்கள் நால்வரையும் கண்களில் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் அருகில் வந்த பிரபுவும் ஜானகியும் அவர்களை பார்த்து புன்சிரிப்புடன்  நிற்க , ஜானகியை  தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டார் சௌந்தரம்மாள் .

அய்யா நல்ல நேரம் வந்துடிச்சி பொண்ணு , மாப்பிளையை  அழைச்சிட்டு வந்தா நிச்சய தாம்பூலம்  வாசிச்சிபுடலாம்  என ஒருவர் சொல்ல ,

ப்ரியா பரியாவை அழைத்துக்கொண்டு வர , ஆரஞ்சு வண்ண பட்டுபுடவையில்  அதற்க்கு தோதான நகைகளுடன்  வானுலக  மங்கையோ என என்னும் பேரழகுடன் வந்தவள் அழகிற்க்கு அழகு சேர்பதற்க்காய்  தன்னவன்  தனக்காய் செய்த ஜடையை வைத்துக்கொண்டு  அது கொடுத்த காதல் உணர்வில் முகம் பூரிக்க  வந்தாள்.

அவளின் எதிரே பட்டுவேஷ்டி சட்டை அணிந்து ஆண்மையின் முழுவுருவமாய்  நின்ருந்தவனின்  முன்னுச்சி  முடிகளோ  சிங்கத்தின் முடிகளாய் , மன்னனின் கிரீடமாய் வீற்றிருந்து  ஒரு வித அலட்சியத்துடன்   சிலும்பிக்கொண்டிருந்தது  .

பரியா அவனை ரசித்து கொண்டிருக்க , பரியா அக்கா நல்லா பார்த்துக்கோ இது உன்னோட பத்ரா தான என அவளின் காதை கடித்தாள் .

இத்தனை நேரம் இருந்த மாயவலை அறுபட குரலில் நடுக்கத்துடன்  , ப்ரி என…எனக்கு …தெரிலடி . எனக்கு நேத்து அம்மாயி மடில அவர் படுத்திட்டிருந்தத  பார்த்த போ  என்ன மாதிரியான  உணர்வுகள்  தோணுச்சோ  அதே தான் இப்பவும் தோணுது என சொல்ல ,

அப்றம் என்னக்கா ?

ஆனா ப்ரி , இதே உணர்வுகள் தான் இங்க நம்ப வந்த காலைல  பவனஜ பார்க்கும் போதும் தோணுச்சு . அப்டினா என்னோட காதல் பொய்யாடி ?? ரெண்டுபேருக்கும்  என்னால வித்தியாசமே  கண்டுபிடிக்க முடிலயே என்றவள்  குரலோ அழுகையிலும்  , பயத்திலும்  நடுங்க கண்களோ தன் காதல் வழுவற்றதோ  என்னும் எண்ணத்தில் கலங்கியது .

நேரமோ இவர்களை கவனிக்க மறக்க , இவர்களின் குழப்பத்துடனே  நிச்சய பத்திரிக்கையும்  வாசிக்கபட்டது .

அதைகேட்ட பின் பரியா மற்றும் ப்ரியா இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் இறுக்கமாய் பற்றிக்கொண்டு  வார்த்தை வராமல் போக எதிரில் நின்றுந்தவனை  வெட்டவா  குத்தவா  என்பது போல் முறைத்தனர்  .

நிச்சயபத்திரிகை :

சென்னையை சேர்ந்த கண்ணன் மற்றும் பாரதியின் பேத்தியும்  , பிரபு மற்றும் பவித்ரா ஆகியோரின்  மூத்த குமாரத்தியுமான  ”  பரியா ”  –  விற்கும்

மன்னவனுரை சேர்ந்த கப்பீஷ்வர் மற்றும் சௌந்தரம்மாளின் பேரனும் , கோதண்டநாகா மற்றும் ஜானகி அவர்களின் குமாரனுமாகிய  ”  பவனஜ் என்கிற  பவன்புத்ரா ” –  விற்கும் பெரியோர்களால் நிச்சயிக்கபடுகிறது .

 

– பண்ணிடுவோம்  …

————————————————————————————————————————————————

 

அறியாவயதிலே …

ஒற்றை தருணத்திலே ..

உன் விழியோர கண்ணீரோடான  சிரிப்பினிலே  …

உன்னையும் உன் மேலான அன்பையும் ..

என் இதயத்தினுள்  சிறைவைத்தேன் …!!!

யாரும் அறியா வண்ணம் …!!!

நானும் உணராவண்ணம் …!!!

அத்தியாயம் 10 :

ஏய் என்ன பண்ற …வேணாம் டி வலிக்குது  என கத்திகொண்டே அவ்வறை முழுவதும் பவனஜ் (பவன்புத்ரா )  ஓட கையில் தலையணையுடன்  அவனை துரத்திக்கொண்டிருந்தாள் பரியா .

ஏய் கூர்மூக்கி எதுக்கு டி அடிக்கிற , என்ற அம்மா கூட என்ன அடிச்சதில்லை டி கூர்மூக்கி என கத்தியவாறு ஓட ,

யூ யூ இடியட் முதல் தடவ பார்த்தப்பவே சொல்லிருக்கலாம்ல , எவ்ளோ குழப்பம் பண்ணிர்க்க ஒழுங்கா நில்லுடா என  துரத்தியவள் ,

சட்டென்று  பவனஜ் நின்று திரும்ப அதை அவள் எதிர்பார்க்கத்தில்   அவனின் மேல் மோத பிடிப்பில்லாமல்  இருந்த பவனஜும் அவளை அணைத்தவாறு விழுந்தான் .

நல்லவேலை அங்கு கட்டில் இருந்ததில் அடிபடாமல்  போக , பரியாவோ அவனை அருகில் கண்ட தவிப்பில் இருக்க ,

பவனஜோ ,  அப்பாடி  கட்டில் இருந்ததுனால தப்பிச்சோம் . நீ  என்ன இன்னும் என்னையவே பார்த்துட்டு இருக்க எழுத்துரு . நிச்சயம்னு கவுச்சி  சாப்பிட  கூடாதுனு சொல்ட்டாங்க  அப்பத்தா தான் யாருக்கும் தெரியாம கருவாட்டு  குழம்பு  ஊத்தியாரேன் சொல்லிற்கு  . போய் சாப்பிடுவோம்  வா என்றான்.

அட மாங்கமடையா !  சரியான  சோத்து சட்டியா இருப்ப போல என சத்தமாய் திட்டியவள் , அவன் மேலையே மொத்தமா  சாஞ்சிருக்கேன்  அப்போ கூட கருவாட்டுக்குழம்பை தேடி புத்தி போது பார் என மனதினுள் திட்டினாள்  .

என்னால  என்னைய மனசுக்குள்ளாறவே திட்றாப்ல  இருக்கு .

நீ பண்ண வேலைக்கு உன் கண்லயே அந்த கருவாட்டுக்குழம்பை காட்டக்கூடாது  என பொறும,

ஏட்டி நானும் பார்த்துட்டே இருக்கேன் அப்போல இருந்து நான் ஏதோ உன்ன குழப்புனேன் சொல்ற  , நா இங்க உன்கிட்ட பேசுனதே  ரெண்டோ  மூணோ   வாட்டிதானால  என கேட்டான் .

அப்பொழுது அவ்வறையில் பன்ரொட்டியும் , ப்ரியாவும் நுழைந்தனர்.

அத்தான் நீங்க எதுவும் குழப்ல எல்லாம் உங்க பெயர் செஞ்ச  வேல என ,

என்னபுள்ள  சொல்ற மாப்பு பேருக்கு என்ன குறைச்சல் என கேட்டான் பன்ரொட்டி .

 

தாங்கள் இங்கு வந்த பொழுது கேட்ட பவன்புத்ராவின் புகழில்  ஆரம்பித்து , பன்ரொட்டி அவனை பவனஜ் என்றதில் முழித்து , அவனின் பரியாவின் மேலான காதல் பார்வையில் கடுப்பாகி  , இரண்டு மாமன்மார்களும் என் மகன் என சொன்னதில் வேறு வேறு ஆள் என எண்ணி கடைசியாய்  நிச்சயம் யாருடன்  என குழம்பியதுவரை  பரியாவும் , ப்ரியாவும் மாற்றி மாற்றி சொல்லி முடித்தனர் .

ஒருத்தரோட பேராலையா இம்புட்டு குழப்பம் என பன்ரொட்டி வாய் பிளக்க , பவனஜோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான் .

சிரிப்பின்  நடுவே , அதுக்காண்டி தான் என்ன பார்த்தப்பலாம்  புசுபுசுனு  கோபமா  மூச்சு வுட்டுட்டு  நின்னியா  . நான் கூட அன்னிக்கு தாத்தைய்யா  வீட்ல இருக்கும்  போது நினைச்சேன் , என்ன எப்பவும் முறைப்பாவ இன்னிக்கு இப்டி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாங்களேன்னு  என மறுபடியும் சிரிக்க, பன்ரொட்டியும்  உடன் சேர்ந்து சிரித்தான் .

எங்க தவிப்பு  உங்களுக்கு சிரிப்பா இருக்கா  என பரியா , ப்ரியா இருவரும் அவர்களை மொத்த ஆரம்பித்தனர் .

இருவரையும் அடித்ததில் இவர்களுக்கு கை வலிக்க  ஆமா உங்களுக்கு எதுக்கு ரெண்டு பேர் ?.

இத்தன  நாளா பேசாம இருந்த தாத்தய்யாவும்  ,பெரியமாமாவும்  எப்படி சேர்ந்தாங்க  ? என பரியாவும் , ப்ரியாவும் கேட்க பவனஜ் தன் குடும்பக்கதையை  சொல்ல ஆரம்பித்தான் .

 

சில வருடங்களுக்கு முன்பு :

கப்பீஷ்வரின் தந்தை பத்ரதேவ் –  விற்கு கடவுள் ஆஞ்சநேயர்  மீது பக்தியும்  , பிரியமும்  அதிகம் . அதன் காரணமாகவே தன் மகனிற்கு கப்பீஷ்வர் என்னும் பெயர் சூட்டினார் . பெயர் வைத்துவிட்டாரே தவிர அவரின் பெயரை சொல்லி மகனை கூப்பிட தயங்கி கண்ணா என்றழைத்து வந்தார்.

கப்பீஷ்வரோ , தன் பேருக்கு பொருத்தமன்றி  தன் தந்தை தன்னை கூப்பிடும்  பெயருக்கு  ஏற்றாற்போல்  வளர்ந்தார்  .

அவரின் செயலில் தந்தைக்கும்  மகனிற்கும்  சிறு சிறு பூசல்கள்  வந்த வண்ணம் இருந்தது .

மகனின் திருமணம்  தன் தங்கை மகளுடன் நடக்கவேண்டும்  என பத்ரதேவ் விரும்ப , கப்பீஷ்வரோ தன் நண்பனின் தங்கையான  சௌந்தரம்மாளை  காதலித்து  பலத்த  எதிர்ப்பின்  பின் கரம்பிடித்தார்.

ஏற்கனவே இருந்த பூசல்கள்  மொத்தமாய் வெடித்தது . எத்தனை சண்டை வந்தாலும் மகனை வெளியே அனுப்பாமல் இருந்தார்  பத்ரதேவ் .

கப்பீஷ்வர் –  சௌந்தரம்மாளிருக்கு  கோதண்டநாகா பிறந்த பின்னும் அவரது கோபம் மறையவில்லை . இரண்டு வருடங்களுக்கு பிறகு  வஜ்ரநாகா பிறந்தார் .

அந்த நேரத்தில் பத்ரதேவ் தன் மனைவியை இழந்து , மகனிடமும்  வீம்பை  விட்டு பேசமுடியாமல்  தனிமையில்  வாட , அப்பொழுது பிறந்த வஜ்ரநாகாவை அந்த ஆஞ்சநேயரே இவரின்  தனிமையை  போக்குவதற்காய் பிறந்தாய் எண்ணி அக்குழந்தைக்கு  “வஜ்ரநாகா ”  என பெயர் வைத்து  கொண்டாடினார்  .

கோதண்டநாகா கப்பீஷ்வரின் வளர்ப்பாய் அந்த வயதிற்கேற்ப வளர  ,

வஜ்ரநாகாவோ தன் தாத்தாவின் வழிகாட்டலில்   அச்சிறுவயதிலே  பத்ரதேவுடன் கோவில் , பக்திப்பாடல்கள்  என சென்று அவ்வயதிற்குரிய  குறும்புத்தனமோ , சேட்டைகளோ  ஏதுமின்றி  ஆஞ்சநேயர்  ஒருவரை மட்டுமே சிந்தையில்  வைத்து வளர்ந்தார் .

கோதண்டநாகா வும் , வஜ்ரநாகாவும் உடன் சேர்ந்து அதிகமாய்  இருந்ததில்லை  என்றாலும் இருவரின் மனதிலும் மற்றவர்கான  பாசம் அளப்பரியது  .

பல சமயங்களில்  வஜ்ரநாகா தன் தாத்தாவுடன்  சென்றுவிட  விளையாட்டு துணைக்கு ஆளில்லாமல்  கோதண்டநாகா வருந்தும் தருணங்களில்  அவரிற்கு  துணையாய் வந்து சேர்ந்தவள்  தான் பவித்ரா .

கோதண்டநாகா வின் சிறுவயது  முழுவதும் பவித்ராவுடனே கழிய  அவர்களுக்கு  இருவருக்கும் நடுவே அழகாய் ஓர் பாசஊற்று உருவாகியது  .

நாட்கள் மாதங்களாய்  மாற , மாதங்களும்  வேகமாய் வருடங்களாக  உருண்டோடியது  .

கோதண்டநாகாவிற்கு ஜானகியை  பார்த்து கப்பீஷ்வரும் –  சௌந்தரம்மாளும்  மணமுடித்து  வைக்க ,

அத்திருமணத்திற்கு உறவுக்காரனாய்  வந்த பிரபு , பவித்ராவை விரும்ப ஆரம்பிக்க கோதண்டநாகாவின் தலையீட்டில் அடுத்த சில மாதங்களில் பிரபு –  பவித்ராவின் திருமணம் நடைபெற்றது  .

அப்பொழுது பிரபு சேலத்தில்  வேலை செய்ய அவர்கள் அங்கு தங்களின் வாழ்வை  ஆரம்பித்தனர் .

இறுதிருமணங்களையும்  மகிழ்வாய்  பார்த்த பத்ரதேவ் அடுத்த வருடம் தன் அத்தியாயத்தை  இவ்வுலக  புத்தகத்தில் முடித்துக்கொண்டார்  .

அவர் காலமான  இரண்டு மாதங்களுக்கு பிறகு கோதண்டநாகா-  ஜானகிக்கு ஆண்குழந்தை  பிறந்தது .

என்னதான் பத்ரதேவ் மற்றும் கப்பீஷ்வர் இருவருக்கும் நெருக்கம்  அதிகமில்லை  என்றாலும் தன் தந்தையின் மேல் இயல்பான பாசம் கப்பீஷ்வருக்கு அதிகம் உண்டு . தன் தந்தையை உரித்து வைத்து பிறந்த தன் பேரனுக்கு தன் தந்தையின் பாதிப்பெயரையும்  , அவரின் விருப்ப  கடவுளான  ஆஞ்சநேயரின்  பெயரும்  வருமாறு  ”  பவன்புத்ரா ”  என பெயரிட்டார்  .

அதற்கடுத்து தான் ஆரம்பித்தது பிரச்சனை.

தான் திருமணம் முடித்து குழந்தையும் பெற்றிருக்க  தன் தம்பி இன்னும் திருமண எண்ணம் இல்லாததுபோல்  இருந்ததில் தந்தையிடம் வஜ்ரநாகாவிற்கு பெண்பார்க்கும்படி  சொன்னார் .

அவரும் வஜ்ரநாகாவிடம் சம்மதம்  கேட்க வஜ்ரநாகாவோ திருமணத்தில்  ஈடுபாடில்லை என சொல்லிவிட்டார்  .

கப்பீஷ்வர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் , பின்னாளில்  தனிமை துயர்  தாக்கக்கூடும்  என அறிவுறுத்தியும்  எனக்கு  அண்ணன் மகன் இருக்கிறான், அவனை என் மகனாய்  வளர்ப்பேன்  என சொல்லிவிட்டார்  .

கூடிய சீக்கிரமே உறவுகளை  துறந்து அனுமாரின்  பக்தியில்  தன்னை திளைத்துக்கொள்ளப்போவதாய்  தான் எடுத்திருந்த முடிவை  பற்றி அவர் தந்தையிடம்  மறைத்திருந்தார் .

கோதண்டநாகாவோ அதை அறிந்து தான் இருக்கும் எண்ணத்திலே  அவர் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக  எண்ணி , பொய்யாய் தன் தந்தையுடன்  சண்டையிட்டு வீட்டை விட்டு  வெளிவந்தவர்  , பெற்றோர்களை  பார்ப்பதர்காவாது வஜ்ரநாகா தன் முடிவை மாற்றிக்கொள்வார்  என நினைத்தார் .

அவர் நினைத்ததுபோலவே வஜ்ரநாகா  , தன் பெற்றோர்களை தனியாய் விடமுடியாமல் , தன் அண்ணனுக்கும்  தந்தைக்கும் நேர்ந்த பூசலுக்கு  தானே காரணம் என்றெண்ணி அவர்களுடனே இருந்தார் .

பவன்புத்ரா மட்டும் இருவீட்டிற்கும்  சென்று வர அவனும் தன் சித்தப்பாவின்  வழியில் ஆஞ்சநேயரை தன் மனதில் நிறுத்த , கோதண்டநாகா தன் தம்பியை   முறைத்தவாரே அவனின் பெயர் பவன்புத்ரா இல்ல இனிமே நான் என் புள்ளைக்கு  புது பேர் வச்சிக்கிறேன்  என்றவர்,

சண்டையிட்டு பிரிந்திருப்பதாய் வெளியில் காட்டிக்கொண்டாலும் , மகனும்  தந்தையின் உறவு அதே பாசத்துடன்  இருந்ததில் முதலில் பெயர் வைகப்பீஷ்வரிடம் கேட்க , அவரோ தன் தந்தை பெயரே வருவதுபோல்  இந்த காலத்திற்கு  ஏற்ப ” பவனஜ் ”  என்று வைக்க சொல்ல அதுவே வீட்டில்  அழைக்கும்  பெயரானது  .

தேடிதேடி பெயர் வைத்தவர்கள்  அதன் பொருளும் அஞ்சனை  மைந்தனே என அறியாது  போக , அதை அறிந்திருந்த வஜ்ரநாகாவோ  இன்னும் இன்னுமாய்  பவன்புத்ராவின் மேல் பாசம் கொண்டார் .

 

***************************************************

 

ஏய் என்னங்கல இன்னும் மேலயவே பார்த்துட்டு இருக்கீங்க அதுலாம் பிளாஷ்பேக் முடிஞ்சிடுச்சில  என பவன்புத்ரா சொல்ல , பரியா , ப்ரியா , பன்ரொட்டி மூவரும்  தலை இறக்கி அவனை பார்த்தனர் .

ஏன் மாப்பு ! இதுலாம் ஒரு மேட்டர்னு இத்தனை வருஷம் பேசாம இருக்காங்களாயா  என பன்ரொட்டி கேட்க ,

இடையிட்ட ப்ரியா , அண்ணா நீங்க கடைசியா கவனிக்கலையா  அதுலாம் பேசமாலாம்  இல்லனா . நம்ப அரசியல்வாதிங்க பத்தி தெரியும்ல . வெளிய ஒருத்தனோட  ஒருத்தன் அடிச்சிக்கிட்டு தெரிஞ்சாலும்  எல்லாம் ஒன்னாதான்  இருப்பாங்க . அதே பாலிசி  தான் இங்கையும்  என சொல்ல ,

ஹாஹா சரியா சொன்னமா அதே தான் . இதுவே எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சிது என அவளுடன் ஹைபை அடித்துக்கொண்டான்  .

பரியாவோ இவர்கள் பேச்சினுள்  கலக்காமல்  யோசனையை இருக்க , அவளின் காதோரம்  குனிந்த பவனஜ் ,

ஏட்டி கூர்மூக்கி !  இந்த குட்டி மூளைக்குள்ள  இன்னும் என்னத்த போட்டு உருட்டராவ என கேட்டான் .

ப்ரியாவும் , பன்ரொட்டியும் இவர்களின் புறம் திரும்ப ,

பரியா , நீங்க தான் பவன்புத்ரானா காலைல ஏன் அங்க தகராறு நடக்கும்போது  தட்டிகேக்கமா பயந்துபோய் விலகினிங்க ?? நீங்க போலீஸ் தான நீங்க பன்ரொட்டி அண்ணாகூட தான இருந்திங்க , ஆனா உங்க கூட வேல பாக்குற ஒருத்தர் நீங்க பிரதாப் னு  ஒருத்தரோட போனதா  ஏன் சொல்லணும் ?? என கேள்விகளை  அடுக்கினாள் .

ப்ரியாவும் அதானே என்பதுபோல் இருவரையும் பார்க்க ,

டேய் மாப்பு என பற்களை கடித்தான்  பன்ரொட்டி .

அண்ணா நீங்க எதுக்கு கோபப்படரீங்க , பிரதாப்  சார் யாரு அவரும் இன்ஸ்பெக்டர் தான என பரியா கேட்க ,

ஹாஹா அவன் கிட்டயே அவன் யாருனு கேட்டா எப்படி . அதுவும் அவன்ட இப்டி கேக்குறதுல  நீ 10,001-  வது ஆள் .

என்ன நீங்களும் போலீசா  என ப்ரியா அதிர்ச்சியாய் கேட்க ,

மாப்ள சின்னபிள்ளைகூட  உன்ன போலிஸ்னு  நம்பமாட்டீங்குது  டா என சொல்லி சொல்லி சிரித்தான் பவனஜ் .

ஹலோ அவரை நக்கலடிக்றது  இருக்கட்டும் , மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ?  அப்றம் எப்பவும் எனக்கு என்னென்ன  தேவைனு ஒவ்வொரு பரிட்சைக்கு அனுப்புறவரு , நான் யூபிஎஸ்சிக்கு எழுதுறப்போ எனக்கு எதுவுமே அனுப்பல  …வாழ்த்து கூட சொல்லல ஏன் என கேட்டாள் .

பன்ரொட்டி என்கிற பிரதாப்பும் , பவனஜ் என்கிற பவன்புத்ராவும் திருதிருவென முழிக்க இப்போ சொல்ல போறிங்களா  இல்லையா  என கத்தினாள் .

அதுஒண்ணுமில்லை  பரிமா , முதல்முதலா  எனக்கு உன்ன எப்போ பிடிக்கும்னுலாம்  தெரில . அப்போ உனக்கு எட்டு வயசு இருக்கும்னு  நினைக்கிறேன் கொலுசு வேணும்னு நீ அழுத ஆனா அப்போ அத்த உனக்கு அத வாங்கிதரல . எனக்கு நீ அழுத்ததே  திரும்ப திரும்ப நியாபகம் வந்து கஷ்டமா  இருந்ததா  அதான் சித்தப்பு கிட்ட சொல்லி காலையிலயே போய் வாங்கிட்ந்தோம் .

அப்போ நீ கண்ணுல இன்னும் கண்ணீர்  இருக்க என்ன பார்த்து ஏதோ ரோஜா மொட்டு  மெதுவா  மலறுறா்ல  சிரிச்சா . அப்போ எனக்கு தோணுச்சு இந்த பாப்பா எப்பவும் இப்டி சிரிச்சிட்டே இருந்தா நல்லா இருக்கும்னு .

அதுக்கப்றம் நாங்க ஊருக்கு வந்துட்டோம் , உன்ன பார்க்கிறதுக்கு  வாய்ப்பே கிடைக்கல ஆனா அத்த தினமும் போன் பண்ணி பேசுவாங்க  . அப்டி நீ இது கேக்ற அது கேக்ற , சேட்டை பண்றனு நிறைய சொல்லுவாங்க.

அவங்க எதுனா உனக்கு வாங்கித்தர  முடிலனா  அப்பாகிட்ட அன்னிக்கு முழுக்க புலம்புவாங்க  , நான் உடனே அலுதுபுரண்டு அப்பாவை வாங்கித்தர சொல்லிடுவேன்  என அவளை பார்த்து கண்ணடித்தான் .

அதில்  சே, எங்க அம்மா நல்லா என்மானத்த வாங்கிட்டாங்கனு  சொல்றிங்க என சிரிக்க ,

ஹாஹா ஆனாலும் கொஞ்ச நாள் ல அத்த அதையெல்லாம்  நிறுத்திட்டாங்க  . அப்றம் நானே துருவித்துருவி  கேட்டுத்தான்  உன்னோட ஒவ்வொரு ஆசையா நிறவேத்துவன் என சிரித்துகொண்டே சொன்னவன் ,

ஆனா நீ அன்னிக்கு போலீஸ்காக பரிட்சை  எழுதுரத்துக்கு  முன்னாடி தான் நான் அர்ரெஸ்ட்  பண்ண ஒருத்தன் லாரி வச்சி தூக்குனதுல  அடிபட்டு  ஹாஸ்ப்பிட்டல்ல கிடந்தேன்  .

அது சித்தப்புக்கு  மட்டும் தான் தெரியும் வீட்ல எல்லோருக்கும் வேலை விஷயமா வெளிய போயிக்கேன்   சொல்லிருந்தோம்  .

அப்போ தான் விஷயம் கேள்விப்பட்ட  அப்பா இனிமே இந்தமாறிலாம்  நடக்கக்கூடாது  வேலைய விட்றுனு  சொன்னாரு . சொல்லப்போன  இந்த போலீஸ் வேலையே எனக்கு செட்  ஆகாது அவரோட ஆசைக்காகத்தான்  இத படிச்சேன் , அவரே வேணாம் சொல்லினப்போ அம்புட்டு சந்தோஷம்.

எனக்கும் தான் மாப்பு !  சும்மா காதுல தேன் வந்து பாயுறாப்ல  இருந்தது .

ப்ரியா அவனை விசித்திரமாய்  பார்க்க , பரியாவோ தன்னவநிற்கு இப்பொழுது தான் அடிபட்டது போல் அவனை தலை முதல் கால் வரை கண்களால்  ஆராய்ந்தாள்.

பவனஜ் அவளின் பார்வையின்  பொருளுணர்ந்து  தற்பொழுது ஒன்றுமில்லை என விழிமொழி  பேசினான்.

பன்ரொட்டி  ப்ரியா பார்ப்பதை உணர்ந்து , என்ன புள்ள அப்டி பாக்குற ? இவன் மட்டும் அந்த ஜோலில சேர்ந்ததுமில்லாம  என்னையும்ல கூட இஸ்துன்னு  போய் சேர்த்து விட்டான் . மாப்பு அவங்க அப்பருக்காக அந்த வேலையே பார்த்தா நான் மாப்புக்காக  பார்த்தேன் என்றான் .

இந்த களேபரத்துல நீயும் அந்த பரிட்சையில் தேறாம போக அத்தை அந்த வேல உனக்கும் வேணாம் சொல்லிட்டாங்க .

அப்றம் நான் தான் நீ எவ்ளோ ஆசப்பட்டேனு நினைச்சி அவங்கள பேசி பேசியே ஒதுக்கவச்சு  , அவங்கள சமாளிக்க  நானும் வேலைய விடாம நான் சொல்லித்தரேனு  சொல்லி உங்கள இந்த ஊருக்கு  கூட்டியார  சொன்னேன் .

அப்டி நான் துருவி  துருவி கேட்டதுல  தான் அத்த இப்டி வந்த அன்னிக்கே நம்ப நிச்சயத்தை  வச்சிட்டாங்க  நினைக்கிறேன் என சொல்லி சிரித்தான் .

ப்ரியாவும் , பரியாவும் அதை கேட்டு அப்போ நாங்க ஊருக்கு வரதே உங்க பிளான் தானா  ?? அப்றம் எப்டி தெரியாத மாதிரியே நடிச்சீங்க  என வியக்க  ,

இதுக்கு பதில் சொல்லலாம் மாப்புக்கு  நேரம் இல்லமா . மாப்பு நீ போ . அந்த வயசுல இருந்தே இந்த புள்ளைய கட்டிக்கிட தான இம்புட்டு பிளானையும் போட்டிருக்கீரு  . போய் கல்யாணம் அடுத்த வாரத்துலையே வைக்கவும் எதுனா பண்ணு என நக்கலடித்தான்

பவனஜோ அதற்க்கு பதிலாய்  ”  எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ” மாப்ள  என சொல்லி சிரித்தான்  .

 

– பண்ணிடுவோம் …

————————————————————————————————————————————————

 

உன் ஓரவிழி பார்வை  ஒன்றுபோதும் …

என் உணர்வுகளை மொத்தமாய் கட்டவிழ்க்க…!!!

உன் இதழ் பூ பூக்கும்  ஒற்றை புன்னகை போகும் …

என்னை முழுதாய் உன்னுள் சுருட்டிகொள்ள …!!!

 

அத்தியாயம் 11 :

 

“மங்கள வடிவமாக திகழும்

பெண்ணே

உன்னுடன் துவங்கும்

இல்லற

வாழ்வு எனக்கு நன்றாக

அமைய வேண்டும்.

என்னுடையனுக்கு ஜீவன

என்று உறுதி கூறி , இந்த

திரு மாங்கல்ய

கயிறை உன் கழுத்தில்

அணிவிக்கிறேன் .

என் இல்லற துணையாக ,

அணைத்து சுக

துக்கங்களிலும்

பங்கேற்று ,

நிறைந்த யோகத்துடன் நீ

என்னுடன்

நூற்றாண்டு காலம்

வாழ்வாயாக !!!!!”

–  என

திருமாங்கல்யத்தை தன் கைகளில் வாங்கிய நொடி திருமண மந்திரத்தை  தனக்கு தெரிந்த அர்த்தத்தில் தன் கம்பீர குரலை காதலில் குழைத்து  பரியாவிடம் சொல்லிய பவனஜ் , மூன்று முடிச்சுகளில்

முதல் முடிச்சியிடும்  பொழுது அவள் கண்களை பார்த்தவாரே ,

என் உடல் , பொருள் , ஆவி  அனைத்தும்  உனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்குமடி  என்றவன் .

இரண்டாம் முடிச்சில்  , என் அத்தனை உரிமைகளும்  உணர்வுகளும்  உன் உரிமையடி  என உறுதி அளித்து  .

என் இறுதி மூச்சு இருக்கும் வரை  உன் ஓவ்வொரு ஆசைகளையும்  நிறைவேற்றிகொண்டே இருப்பேனடி  என பொறுமையாய் ஒவ்வொரு முடிச்சிருக்கும்  ஒரு வாக்குறுதி  என அவளின் கண்களை பார்த்தாரே மூன்றாம் முடிச்சையும் போட்டான் .

பரியாவோ தன்னவனின் செயலில் , வார்த்தைகளில்  கண்கள் கலங்க அதையும் முந்திக்கொண்டு  அவனின் காதலை கண்டு அவளின் காதலும் பெருக்கெடுக்க  , பவனஜ் என்கிற பவன்புத்ராவை அவளிடம் விழவைத்த  விழியோர கண்ணீர்துளிகளுடனான  அவளது அச்சிரிப்பை உதிர்த்தாள்  .

அன்று அதில் சந்தோசம் கொண்டவனோ  இன்று காதல் பெருக்கெடுக்க சுற்றியிருந்தோரை  கண்டுகொள்ளாமல் அவளின் சிரிக்கும் இதழ்களை தன் இதழ்களில் புதைத்து கொண்டான்  .( அடப்பாவி…இம்புட்டு நாள் நல்லாதானயா இருந்த ) .

நல்லவேளை இவன் செய்த சேட்டையை எவரும்பார்க்க  வாய்ப்பின்றி , அருகில் நடக்கும் இன்னொரு திருமணத்திற்க்காய் திரும்பியிருந்தனர் .

( யாருக்கா  நீங்களே பாருங்க ).

ரோஜாவண்ண கூரைபுடவையில் ரோஜாவாய்  மலர்ந்திருந்த ப்ரியாவின் கழுத்தில் திருமாங்கள்யம் அணிவித்து அந்த ரோஜாப்பூவாய்  தன் உரிமையாக்கினான் பவின் .

பவின் வஜ்ரநாகாவின் வளர்ப்பு மகன் , பவன்புத்ராவின் சேட்டைக்கார  தம்பி , பன்ரொட்டி(  பிரதாப் )யின் அடாவடி ரூல்ஸ் போலீஸ்காரன் . ஆமாங்கோ இவனும்  போலீஸ் தான் . ( அவன் அவன் எக்ஸாம்ல பாஸாகாம திரிய இவனுங்க மட்டும் எப்படி பாஸானானுங்க ?? )

தன் அண்ணணை போலவே , முதல் பார்வையிலே… தன்னுயிரில்  கலந்தவளின் காதோரமாய்  …

”  உன் ப்ரியா என்னும் பெயருக்குறிய பொருளான  பிரியங்கள் அனைத்தையும் என்னுடன் கொண்டு என் பெயரின் அர்த்தமாய் என்னை மொத்தமாய்  உன்னிடம் அர்ப்பணிக்கிறேன் ” என சொல்லியவாரே அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்  .

[ பவின் –  அர்ப்பணிப்பு  ,

ப்ரியா –  ப்ரியம்  ]

அன்று பவன்புத்ராவிற்கும் –  பரியாவிற்கும்  நிச்சயம்  நடந்த தினம் முழுக்க , அம்மாக்கு ரெண்டு அண்ணா இருக்காங்க . ஒருத்தரோட புள்ள உனக்கு , ஒருத்தர்  புள்ள எனக்குன்னு கனவுலாம் கண்டது வீணா போச்சே என விளையாட்டை அழுதவாறு ப்ரியா ப்ரியாவிடம்  புலம்ப ,

 

ஹாஹா ஹாஹா என்ன சொன்ன ரெண்டுப்பையன்ல ஒருத்தன் அவளுக்கு , ஒருத்தன் உனக்கா என கேட்டு பவனஜ் மீண்டும் சிரிக்க ,

ம்ம்ம் …இந்த புள்ள தலையெழுத்தை  இனி யாராலயும்  மாத்தமுடியாது  என முனங்கிய  பன்ரொட்டி , ஏல மாப்பு இன்னும் என்ன இங்கனவே நிக்குறவ.  கையோட  கையா  அதையும் முடிச்சிவிடப்பு  என சொன்னான் .

சரிதான் பன்னு , மச்சினிச்சி  வருத்தப்பட்டா  எந்த மாமனுக்காச்சி  பொறுக்குமா  என விளையாட்டாய் கண்சிமிட்ட  ,

இவர்கள் என்ன பேசுகிறார்கள்  என புரியாமல் பரியா முழிக்க ,

நம்மளே நம்பளுக்கான  ஆப்பு எதையாவது தேடிக்கிட்டோமா  என ப்ரியா யோசித்துக்கொண்டிருந்தாள் .

அப்பொழுது அண்ணா என கத்திகொண்டே ஒருவன் கதவை திறக்க , அவன் திறந்த வேகத்தில்  அதன் மேல் சாய்ந்திருந்த  ப்ரியா விழப்போக  அவளை விழாமல் தாங்கிப்பிடிக்க  அங்கு ஓர் காதல் உலகின்  வாசல்  திறந்தது  .அதற்க்கு பின் சிறுசிறு  குறும்புகளுடன்  அவர்களது காதல் உலகத்தில்  மகிழ்வாய் உலவினர் .

பவன்புத்ரா –  பரியாவிற்கு திருமண தேதி குறிக்கும் நேரத்தில் பவின்-ப்ரியாவின் விஷயம் பவன்புத்ராவால் பெரியவர்களிடம்  சென்றது .

பவித்ரா  தன் அண்ணண் மகன்களுக்கு தான் தன் பெண்கள் என அவர்களின் சிறுவயது முதலே எண்ணியிருந்ததால்  மகிழ்ச்சியாய் தலையசைத்தார்  .

பிரபுவோ , மனைவியின் ஆசை புரிந்திருந்தும்  தன் மகள்களின்  மனத்திற்க்கே முதலிடம்  கொடுத்திருக்க  , அவரும் ப்ரியாவின் விருப்பம் அறிந்து சரி என்றிருந்தார்  .

 

பவித்ராவின் ஆசைப்படி  , பவன்புத்ரா –  பரியா மற்றும் பவின் –  ப்ரியா இருவரின் திருமணமும்  இன்று ஒரே மேடையில்  அடுத்தடுத்து  நடக்கிறது  .

 

 

********************************************************

நான்கு வருடங்களுக்கு பின் :

வயதானவர்  என்றும் பார்க்காமல்  அவரின் நிலத்திற்காய்  அவரை கொன்ற  மருதன்  என்றவனை  கைது  செய்ய ஏசிபி பவன்புத்ரா தன் படையுடன்  வந்திருந்தான் .

மருதன் சிறு சிறு திருட்டு , வழிப்பறி  என ஆரம்பித்து கொலைகளையும் அசால்ட்டாக செய்ய இப்பொழுது அவன் பெயர் போலீசின்  என்கவுண்டர் லிஸ்ட்டில் உள்ளது .

அவனும் அவனின் ஆட்களையும்  போலீஸ் வளைத்திருக்க  , தப்பிக்கும்  முயற்சியில்  அங்கு ஒரு சிறு போர் நடந்தது .

வழக்கம்போல் சிறிதும் பதறாமல் , தன் பாணியானா  பிடித்த படத்தை ரசித்து  பார்பதுபோலான  உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .

அவ்வூரிற்கு  வேறொரு பஞ்சாயத்திற்காய்  வந்திருந்த பரமேஷ் இதனை கண்டு , ”  ஆத்தாடி  இவனா ”  என்ற கேள்வியுடன் அன்று போல் இன்றும் மறைந்திருந்து பார்த்தான்  .

அவனுடன் வந்திருந்த கைத்தடி  ஒருவன் , யாருன்னா  இவன் என சத்தமாய் கேட்க ,

அவனின் வாயை மூடியவன்  , மெதுவா  பேசுடா  அவனுக்கு கேற்ற போது என பயத்தில் தந்தியடிக்கும்  பற்களை கடித்து  , அவன் இருக்கான் பாரு அவனோட நிழல்  கூட ஒருத்தன் மேல படாது  ஆனா அம்புட்டு பேரையும் அப்படியே போட்ருக்க துணிலயே ***போக வச்சிருவான்டா .

பவன்புத்ரா அன்று போல் இன்றும் தன் அருகில் நின்ருந்தவனிடம் (  பிரதாப்  அதுதாங்க  நம்ப பன்ரொட்டி ) , ரொம்ப இழுக்குதோ  முடிச்சிவிட்ரலாமா  என ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்டினான் .

பன்ரொட்டி (எ)  பிரதாப் தன் பின் சைகை செய்ய ,அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி  வந்து நின்றிருந்தது .

அய்யயோ வந்திடிச்சிடா  எமனோடே  வாகனம் என அலறிய  பரமேஷ் அதற்குமேல் அங்கிருக்காமல்  தன் கைத்தடியுடன்  மெதுவாய் ஓட , பவனஜ் (எ)  பவன்புத்ரா மருதனை  தூக்கி வண்டியில் போட்டு கிளப்ப  மறுபக்கம் பன்ரொட்டி ஏறிக்கொண்டான்  .

சிறிதுநேரம்கழித்து மருதனின்  உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டுகள்  துளைத்திருக்க  வெறும் சடலமாக  அவ்வூரின் முடிவில் எறியப்பட்டது  .

*********************************************************************************************

 

“கொடூரமான குற்றவாளியாய் அறிவிக்கப்பட்டு  போலிஸாரால்  தீவிரமாய் தேடப்பட்ட  ரௌடி  மருதனை என்கவுண்டர்  செய்தார்  ஏசிபி பவன்புத்ரா ”

 

–  என மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது  .

அப்பா …அப்பா என பவன்புத்ராவின் புகைப்படம் பத்திரிக்கையில்  வந்திருப்பதை  தட்டிf தட்டி பவன்புத்ரா –  பரியாவின் இரண்டு வயது மகன் ருத்ரபவன் சிரிக்க ,

அவனின் அருகில் சௌந்தரமாளின் மடியில் இருந்த ஒரு வயது கவினும்  எதர்கென்றே தெரியாமல் தன் அண்ணனுடன்  சேர்ந்து சிரித்தான் .

அடஅட என்ற மவன் எம்புட்டு அழகா சிரிக்கிறாப்ல  என பவன்புத்ரா , ருத்ரபவனை  தூக்க அவனோ தந்தையின் அருகிலிருந்த பன்ரொட்டியிடம் தாவினான்  .

ஹாஹா என்ற மாப்பு போலவே , சின்ன மாப்புக்கும்  என்ற மேல தான் பிரியம் ஜாஸ்த்தி . நீ ஒன்னும் கவலை படாத  சௌந்தர்யா, உன்னோட ரசிகர் கூட்டத்துல  எப்படி ஆள் சேக்குறன்  பார்த்தில என அமைதியாய் இருந்த அப்பத்தாவை வம்பிழுக்க ,

எவண்டா அவன் என்ற சௌ –  வ ஓரண்ட இழுக்கிறது  என கேட்டுகொண்டே கப்பீஷ்வர் மேசையை நீவியபடி அங்கு வர ,

மாப்பு !  மீசை வந்துடுச்சுடோய்  நான் இப்டியே எஸ் ஆவுறன்  என்றவன் , அருகில் நின்றிருந்த பரியாவிடம் , ஏந்தாயி ராவுக்கு  கருவாட்டுக்குழம்பா வாசம் தூக்குது , பின்பக்கமா  வாரேன் கொஞ்ச ஊத்திதாத்தா என்றான் .

அவனை வெளியே செல்லவிடாமல்  அவன் முன் வந்த கோதண்டநாகா , அவனையும் பவன்புத்ராவையும் சந்தேகமாய் பார்த்தார் .

அப்பொழுது அங்கு வந்த ப்ரியா , அக்கா….நியூஸ்  பாத்தியா  நான் தான் எங்க பேப்பர்ல அத்தான பத்திதான் முதல் பக்கத்துல போடணும்னு  சொன்னேன் என மகிழ்வாய் அவளை கட்டிக்கொண்டவள்  ,

தன் பின் வந்த பவினை பார்த்து , இங்க பாரு கா எப்டியோ  நீ பாஸாகி  போலீசாகிட்ட  . நம்ப அத்தான் மாதிரி அட்டகாசமான   போலீசா இருக்கனும்  , பவின் மாறி காமெடி போலீசா இருக்க கூடாது என வழக்கமாய் அவனை வம்பிழுக்க சொல்வதை சொல்லி ஓடத்துடங்க  , பவின் அவளை விரட்டிக்கொண்டு  சென்றான் .

எப்படியும் குறும்பாய் ஆரம்பித்த  அவ்விளையாட்டை  காதலாய் முடிப்பது பவினிற்க்கு  கை வந்த கலை.

கோதண்டநாகா இன்னும் சந்தேகமாய் மகனை பார்த்து பவுனு என்றழைக்க அங்கு

அண்ணா என அழைத்துகொண்டே வந்தார் வஜ்ரநாகா .

தம்பியின் கண்ணசைவில் என்ன கண்டுகொண்டாரோ  அதன் பின் ஜானகி என தன் மனைவியை அழைத்தவாறு  அங்கிருந்து சென்றார் .

அன்று பவன்புத்ராவிற்கு அடிப்பட்டதில் தனக்கு பிடித்தமான அவனது வேலையையே விடவேண்டும் என கோதண்டநாகா சொல்ல , வஜ்ரநாகா தான் பார்த்துக்கொள்வதாய்  சொன்னவர் , பதிலிற்கு இனிமே அதை பற்றி அவர் பேசவோ  கேட்கவோ  கூடாதென்ற வாக்கை  வாங்கியிருந்தார்.

அதை எண்ணியே தற்பொழுது கோதண்டநாகா அமைதியாய் செல்ல , பன்ரொட்டியிடம் இருந்த தன் மகவை  வாங்கிக்கொண்டு  பரியாவும் , கவினை தூக்கி கொண்டு சௌந்தரம்மாளும்அவரவர் வேலையை பார்க்க சென்றனர் .

இப்பொழுது அங்கு பவன்புத்ரா , பன்ரொட்டி மற்றும் வஜ்ரநாகா மட்டுமே இருக்க

பவன்புத்ராவும் , பன்ரொட்டியும் ”  சித்தப்புஉஉஉஉ  ”  என கத்திகொண்டே வஜ்ரநாகாவை கட்டிக்கொண்டனர்  .

அவர்கள் மூவரின்  எண்ணங்களும்  ஒரே கோட்டில்  சென்றது …

அந்த மாருதி வேனில்  மருதனை தூக்கிப்போட்டு பவன்புத்ரா  வண்டியை எடுக்க, பின்புறம்  இருந்த  தடியன்கள் நால்வரும்  மருதனின் மேல் பாய  , முன் அமர்ந்திருந்த பவன்புத்ராவும் , பன்ரொட்டியும் ,

மாப்ள நம்பளுக்கு  இந்த போலீஸ், அதிரடிலாம் சுத்தமா   செட்டாவாதுல.  இந்தா ஹெட்செட்டே புடி  அந்த கும்கி  படத்தை போடுல பாப்போம் என்று பவன்புத்ரா சொல்ல ,

மாப்பு !  போன தடவ தான அது பார்த்தோம்  இப்போ ராஜாராணி  பார்ப்போம் மாப்பு என்றான்.(  டேய் நீங்க ரெண்டு பேரும் ***டிவி ரசிகர்களா டா ) .

அன்றைய நியாபகத்தில் , அந்த ஐடியா கொடுத்த வஜ்ரநாகாவை கட்டிக்கொண்ட  இருவரும் அவரின் இருகன்னத்திலும்  முத்தமிட்டனர்  .

அட விடுங்கப்பு …விடுங்க என இருவரையும் விலக்க ,

அங்கு திரும்ப வந்த கப்பீஷ்வர் இதை கண்டு , ஏலே என்ற மவன என்னல பண்றீங்க  என கேட்டுகொண்டே இருவரின் முதுகிலும்  தட்டினார்  .

ஏன் பவன்புத்ரா கண்ணு , நம்ப பவினுக்கும்  நீ செய்றாப்ல  இந்த போலீஸ் ஜோலிய  செய்ய  காதுகுடுக்கண்ணு என அவனை பற்றி அறியாமல் மீசையை நீவியவாறு சொன்னார்.

பன்ரொட்டி , அட மீசை !  அவன் ஒருத்தன் தாம்யா ஒழுங்கா வேலைய பாக்குறவன்  . அவனையும் எங்க கூட்டுல  சேர்க்கணுமா . இந்த போலீஸ் வேல இவங்க குடும்பத்துல மாட்டிகிட்டு பட்றபாடு இருக்கே ஐயையோ  என மனதினுள் நக்கலடித்தான் .

பவனஜ் தாத்தையா சொன்னதை கேட்டு-  மாப்ள என்றழைக்க,

பதிலுக்கு பன்ரொட்டி  மாப்பு என்றழைக்க ,

இருவரும் வஜ்ரநாகாவின் கையணைப்பில் இருந்தவாறு   கோரஸாய் கப்பீஷ்வரிடம் , ”  எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ”  என்றனர் .

 

 

–  சுபம்  .

 

 

 

 

 

mtn-full

மாங்கல்யம் தந்து நானே

  • வெண்பா

அத்தியாயம் 1

மாலை ஆறு மணி.பெங்களூர்.

அந்த பதினைந்து தள அடுக்குமாடிக் கட்டிடத்தை சுற்றிப் பார்த்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த வயதான தம்பதியர்.அவர்களுடன் அவர்கள் புதல்வன்.

 

எவ்வளவு ஏக்கர் தோட்டம் இருந்தாலும் தத்தம் தேவைக்கு ஏற்ப வீட்டைக் கட்டிவிட்டு மற்றவற்றை எல்லாம் நஞ்சை புஞ்சை நிலங்களாக மாற்றி விவசாயம் செய்யும் அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கும் குறைந்த இடத்தில் இவ்வளவு வீடுகளைப் பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது.

 

எட்டாம் தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றவர்கள் வடக்கே இருந்த மூன்றாம் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஐ கேட்சரின் மூலம் யார் வந்திருகிறார்கள் என்று பார்த்த விசாலாட்சி  பின்பு கதவைத் திறந்து “வாங்க அத்தை!வாங்க மாமா!” என்று தன் மாமியார் மாமனாரை இன்முகமாக வரவேற்றார்.

 

வந்தவர்களுக்கு  தண்ணீர் கொடுக்க  விசாலாட்சி சமையலறைக்குள் செல்ல “தாரிகா எங்க டா?” என்று தன் புதல்வன் பரந்தாமனிடம் கேட்டார் சௌந்தரம்.

“அவளுக்கு இன்னைக்கு காலேஜ் கடைசி நாள் ம்மா..அதனால இன்னும் வரல.பிரிண்ட்ஸ் கூட சேர்ந்து வெளிய போயிருக்கா” என்றவர் சொல்ல “என் தம்பி மணி ஆறு ஆச்சு…ஒரு வயசு புள்ளை இன்னுமா வீடு வராம இருக்கறது?” என்று சௌந்தரம் கோபப்பட

“நல்லா உங்க பையன்கிட்ட கேளுங்க அத்தை.எல்லாம் அவரு கொடுக்குற செல்லம் தான்” என்று தண்ணீர் சொம்பை மாமனார் ராஜுவின் கையில் கொடுத்துவிட்டு தன் மனக்குமுறலை தன் மாமியாரிடம் இறக்கிவைத்தார் விசாலாட்சி.

“வந்த உடனே மாமியாரும் மருமகளும் என் பேத்திய கறுச்சுக்கொட்ட ஆரம்பிச்சுட்டிங்களா?அவள் என்ன இன்னும் சின்ன பொண்ணா..அவளுக்கும் இருபத்திஒன்னு ஆச்சு.நல்லது எது கேட்டது எதுன்னு அவளுக்கு நல்லா தெரியும்” என்ற குடும்பத் தலைவரின் அதட்டலுக்கு பயந்து இரு பெண்மணிகளும் தங்கள் ராஜியமான சமையலறைக்குள் புகுந்தனர்.

விசாலாட்சி நான்கு பேருக்கும் காப்பி போட அங்கிருந்த சாப்பாட்டு மேஜை நாற்காலியை சமையலறைக்குள் போட்ட சௌந்தரம் மருமகளுடன் ஊர்க் கதைகளைப் பேசத் தொடங்கினார்.

தந்தையும் மகனும் பொதுவான விஷயங்களை வரவேற்பு அறையில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருக்க அழைப்புமணி ஒலித்தது.”தாரு வந்துட்டா” என்றபடி கதவை பரந்தாமன் திறக்க வந்திருந்ததோ துணிகளை இஸ்திரி போட்டுக்கொண்டு வந்த வண்ணான்.துணிகளை வாங்கிவிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்தவர் மீண்டும் வந்து இருக்கையில் அமரும்பொழுது காப்பி வந்திருந்தது.

நால்வரும் காப்பி அருந்த விசாலாட்சி தான் ஆரம்பித்தார் ”தாருக்கு தான் படிப்பு முடுஞ்சுருச்சுல இனி ஜாதகத்தை எடுக்கலாம்.மாப்பிள்ளை அமைய யார் யார்க்கு எத்தனை நாள் ஆகும்ன்னு சொல்லமுடியாது”

“ஆமா அத்தை நானும் இதத்தான் இவர்கிட்ட சொன்ன.ஆனா கேட்டா தான?அவள் இன்னும் சின்ன பொண்ணு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு சொல்லறாரு” என்று மாமியாருடன் கூட்டணியில் இணைந்தார் விசாலாட்சி.

“ம்மா..அவளுக்கு இப்ப தான் ம்மா இருபத்தி ஒரு வயசாகுது.இன்னும் ஒரு வெங்காயம் கூட அறுக்கத் தெரியாது.என் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள் நம்மகூட சந்தோசமா இருக்கட்டும்.அப்புறம் இருபத்தி மூணு வயசு ஆனதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்’” என்று மகளுக்காக பரந்தாமன் பேச

“ஏன் டா புள்ளைக்கு இருபத்தி ஒரு வயசு ஆச்சு இன்னும் வெங்காயம் கூட அறுக்கத் தெரியாதுன்னு சொன்ன ஊர் உலகம் நம்மளத்தான்டா தப்பாப் பேசும்.நீ செல்லம் கொடுக்கலாம்.ஆனா எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்கனும்.இப்படியே அவளுக்கு நீ செல்லம் கொடுத்துட்டே இருந்தன்னா போற எடத்துல அவளுக்கு தான் கஷ்டம்” என்று மகனைக் காய

“முதல்ல ஜாதகம் பாக்கலாம்.அப்புறம் முடிவு எடுக்கலாம்.இப்போதைக்கு நீங்க மூணு பெரும் கொஞ்சம் சும்மா இருங்க”என்று தற்காலிகமாக அவ்வாக்குவாதத்தை முடித்தார் ராஜு.

“பத்து மணிநேரம் பயணம் பண்ணி வந்துருக்கிங்க.கொஞ்ச நேரம் படுங்க” என்று பரந்தாமன் சொல்ல விசாலாட்சி அவர்களை படுக்கை அறைக்கு கூட்டிச் சென்றார்.

முதியோர்கள் ஓய்வெடுக்க விசாலாட்சி சமையலை கவனிக்க சென்றார்.பரந்தாமனுக்கு தன் அண்ணன் பத்மநாபனிடம் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேச ஆரம்பித்தார்.

 

“ஹலோ அண்ணா..அம்மா அப்பா அஞ்சரை மணிக்கே வந்துட்டாங்க” என்று சொன்னவர் பின்பு குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.அவர் பேசிவிட்டு அலைப்பேசியை வைக்கும் பொழுது அரை மணிநேரம் கடந்திருந்தது.

மணி எட்டு.அப்பொழுதும் தாரிகாவை காணாததால் அவளுக்கு அழைக்க அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.சமையலறையில் இருந்து வெளியே வந்தவர் “ஏங்க மணி எட்டு ஆச்சு.இன்னும் இவளைக் காணோம் ஒரு போன் பண்ணி பாருங்க” என்று சொல்ல “இப்ப தான் பண்ண.ஸ்விட்ச் ஆப்ன்னு வருது என்றவர் வ்தத்ஸ் ஆப்பை திறந்தார்.

தன் நண்பர்களுடன் அடுத்த புகைப்படங்களை எல்லாம் அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேட்டஸ் போட்டிருந்தவள் அதன் பின்பு ஆன்லைன் வரவே இல்லை.திரும்ப அழைத்துப் பார்க்க அதே பதில் தான் வந்தது.

“நான் அவள் பிரண்ட் கமலிக்கு கூப்பிட்டு பார்க்கிற” என்ற விசாலாட்சி அப்பெண்ணிற்கு தொடர்புகொள்ள அவள் எடுக்கவே இல்லை.மீண்டும் மீண்டும் அழைத்தும் தொடர்பு எடுக்கப்படவே இல்லை.மணி வேறு எட்டே முக்கால் ஆகிவிட்டுருந்தது.பெற்றோர் இருவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.

தூங்கி எழுந்த முதியோர்களும் வரவேற்பறைக்கு வந்துவிட அவர்கள் கேட்ட கேள்விக்கு பரந்தாமனால் பதில் சொல்ல முடியவில்லை.இப்பொழுது எங்கு சென்று அவளைத் தேடுவது என்றும் பரந்தாமனுக்கு தெரியவில்லை.வெளிய செல்கிறேன் என்று மட்டுமே சொன்னவள் எங்கே செல்கிறேன் என்று சொல்லவில்லை.

பெண் கேட்டவுடன் எதைப் பற்றியும் கேட்காமல் சரி என்று சொன்ன தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டவர் கையைப் பிசைந்து கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.

ஒன்பது மணிக்கு வீட்டின் அழைப்பு மணி ஒளிக்க வெளியே எல்லோரையும் பயப்படுத்திய தாரிகா கூலாக நின்றுகொண்டிருந்தாள்.அவள் உள்ளே வந்தவுடன் தான் நால்வருக்கும் உயிரே வந்தது.

உள்ளே நுழைந்தவுடன் அமர்ந்திருந்த தாத்தா பாட்டியைக் கண்டவள் “ஹாய் தாத்தா!எப்படி இருக்கீங்க?” என்று கேட்க “நல்லா இருக்க தாறு.இது தான் வீட்டுக்கு வர்ற நேரமா?” என்று மென்மையாக கேட்க சௌந்தரத்திற்கோ கோபம் தாளமுடியவில்லை.

“ஏன் டி வயசு புள்ள இப்ப ராத்திரி ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வர்றதா?நீ வர்ற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு உக்காந்துட்டு இருந்தோம்” என்று கோபமாக திட்ட

“எங்க நெருப்பவே காணோம்?” என்று அவர் மடியில் தேடிய பேத்தியை முறைத்தவர் அப்பொழுது தான் அவள் உடையை கவனித்தார். ஆங்காங்கே கிழிந்து தொங்கும் அடர் நீல நிற ஜீன்ஸ் ஓபன் ஷோல்டர்ஸ் டாப் அணிந்திருந்தாள்.கழுத்தில் எதுவும் போடவில்லை, நெற்றியில் பொட்டில்லை.காதில் ஒரு சிறிய வைரத் தோடு.முடியை விரித்து விட்டுருந்தால்.ஆகமொத்தத்தில் ஒரு நவநாக மங்கை!

அவள் உடையைப் பார்த்து அஷ்டகோணமாக தன் முகத்தை திருப்பியவர் தன் மருமகளிடம் திரும்பி “ஏன் விசா உனக்கு உன் பொண்ண எப்படி வளர்க்கணும்ன்னு தெரியுமா தெரியாதா?இப்படியா உடுத்தி ஒரு வயசுக்கு வந்த பொண்ண வெளிய அனுப்புவ?” என்று கோபமாகக் கேட்க விசாலாட்சியின் முகம் அப்படியே கூம்பிப்போய்விட்டது.கல்யாணம் ஆனது முதல் ஒரு வார்த்தை கூட கடிந்து பேசாத மாமியார் நறுக்கென்று ஒரு சொல் கேட்கவும் அவரால் தாங்க முடியவில்லை.

அவரும்தான் பாவம் என்ன செய்வர்?அவர் எவ்வளவு சொன்னாலும் இப்பெண் கேட்பதில்லை.பெண்ணை ‘ம்ம்’ என்று சொல்லவதற்கு முன் ‘என்னடி என் பொண்ண திட்டுற?’ என்று சண்டைக்கு வரும் கணவர்.அதனால் அவராலும் பெண்ணை மாற்ற முடியவில்லை.

மருமகளின் முகம் சிறுத்துவிட்டதைப் பார்த்தவர் அதற்குமேல் அவரைத் திட்டாமல் தன் மகனிடம் திரும்பியவர் “ஏன் டா நீ தான் லட்சக்கணக்குள சம்பரிக்கிறையே உன் பொண்ணுக்கு ஒரு நல்ல டிரஸ் வாங்கித் தரக்கூடாது?கழுத்துல ஒரு சங்கிலி கூட இல்லாம இப்படியா மொட்ட கழுத்தா புள்ளைய விடுவ?” என்று கோபப்பட

“ம்மா..இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாம் அப்படித்தான் தான்.இது எல்லாம் இங்க சகஜம்.என்னைக்கு இருந்தாலும் நாம இன்னொரு வீட்டுக்கு கட்டிக் கொடுக்க போறோம்.நம்ம வீட்ல இருக்க வரை அவளுக்கு பிடிச்ச மாதிரி  சந்தோசமா இருக்கட்டும்.இன்னைக்கு ஏதோ காலேஜ் கடைசி நாள் அதனால பிரிண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு லேட்டா வந்துட்டா” என்று மகளுக்கு பரிந்து பேச இப்பொழுதும் மகள் செய்த தப்பை அவளுக்கு சுட்டிக்காட்டாமல் அவளுக்கு ஒத்துஊதும் கணவரைக் கண்டு விசாலாட்சிக்கு ஆற்றாமையாக இருந்தது.

“இது தான் இந்த ஊரோட கலாச்சாரம்.இங்க என் பேத்தி இப்படித்தான் வளருவானா அவள் ஒன்னு இங்க இருக்க வேண்டாம்.எங்க கூட ஊருக்கு வந்து இருக்கட்டும்.எந்த ஊர்ல வளந்தாலும் நம்ம கலாச்சாரம் குடும்பம் எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தான வளக்கணும்?” என்று மகனிடம் கோபப்பட

“பாட்டி எதுக்கு இப்ப நீங்க என் அப்பாவ திட்டுறிங்க?இதுதான் பேஷன் .உங்களை மாதிரி இருந்தா எல்லாரும் பட்டிக்காடுன்னு சொல்லிருவாங்க”என்று தாரு தன் பாட்டியிடம் மல்லுகட்ட

“உங்க அப்பாவ சொன்னா மட்டும் அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வருமே?உங்க அப்பன் உன்ன சரியா வளர்த்திருந்தா நான் ஏன் சொல்ல போற?” என்று அவரும் பதிலுக்கு சண்டைப் பிடிக்க அவரை முறைத்தவள் மீண்டும் வாய் திறக்கும் முன் ராஜு தாத்தா குறிக்கிட்டார்.

 

தந்தை ‘இதற்கு மேல் எதுவும் பேசாதே’ என்பது போல் மகளிடம் கண்களால் பேச அமைதியானால்.

 

சிறு வயதில் இருந்தே பெங்களூரில் பிறந்து வளர்ந்ததினால் தாரிகவிற்கு இவை எதுவும் தப்பாகத் தெரியவில்லை.’எல்லாரும் இங்க இப்படிதான டிரஸ் பண்ணறாங்க…இதுல என்ன இருக்கு’ என்ற எண்ணம் அவளுக்கு.மேலும் தன் தாத்தா பாட்டியை பிற்போக்கு சிந்தனையாளர்களாகவே கருதினால்.பெரியோர்கள் சொல்வதிலும் ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினால்.காரணம் அவள் வளர்ந்த சூழல்!

 

“நீங்க இரண்டு பெரும் உள்ள போய் சமையலை பாருங்க” என்று பெண்மணிகளை உள்ளே அனுப்பியவர் மகனின் முகம் பார்த்தார்.தந்தை தன்னைப் பார்க்கவும் புரிந்து கொண்டவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

“நீ இப்ப பண்ணது தப்பு சரின்னு நான் இப்ப சொல்ல வரல சாமி.எங்க எல்லாரையும் விட இந்த காலத்து புள்ள உனக்கு நிறையத் தெரியுமுனு நான் ஒதுக்குற.ஆனாலும் நம்ம குடும்பத்துக்குன்னு சில நெறிமுறைகள் இருக்கு.காலம் காலமா நாம அதை பின்பற்றிட்டு வரோம்.அது உன்னால எந்த விதத்துளையும் கெட்டுப் போகக் கூடாது.

இப்பகூட நீ நம்ம ஊர்த் தெருல நடந்து போனினா ‘முத்துசாமி அய்யன் வீட்டு பாப்பா நடந்து போகுதுன்னு’ சொல்லுவாங்களே தவிர தாரிகா நடந்து போறான்னு சொல்லமாட்டாங்கஎல்லாம் புருஞ்சு நடந்துக்கோ” என்றவர் அவள் தலையை தடவிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

தன் நண்பருடன் பேசிவிட்டு வெளியே வந்த பரந்தாமன் “ஏன் தங்கம் இன்னைக்கு இவ்வளவு லேட்?போன் வேற ஸ்விட்ச் ஆப்ன்னு வந்துச்சு.அப்பா ரொம்ப பயந்துட்டேன் டா” என்று மகளிடம் கேட்க “செல்பி எடுத்து எடுத்து சார்ஜ் போயிருச்சு” என்றவள் சொல்ல “இன்னைக்கு சிக்பெட் போயிருந்திய?” என்று கேட்டதற்கு ஒரு நிமிடம் அதிர்ந்தவள் பின்பு “ஆமா ப்பா..அம்மா கூப்டற மாதிரி இருக்கு.நான் போய் பார்கிறேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

 

மகளின் தடுமாற்றம் அவருக்கு எதையோ உணர்த்த அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.பிறந்ததில் இருந்து எல்லாவற்றையும் தந்தையிடம் பகிர்பவள் இன்று ஒன்றும் சொல்லாமல் எழுந்து சென்றது அவருக்கு எதுவோ தப்பாகப் பட்டது.

அத்தியாயம் 2

தாரிகா கோவில்பாளையம் வந்து இன்றோடு ஒரு வாரம் ஆகியிருந்தது.அவள் பரந்தாமனிடம் பதில் பேசாமல் மழுப்பிச் சென்றதால் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.

தாரிகவிடம் ஊருக்குப் போய் சிறிது காலம் தங்கிவிட்டு வரலாம் என்று மட்டும் சொன்னவர் மற்றவர்களிடம் அவள் ஜாதகத்தை தங்கள் குடும்ப ஜோசியரிடம் சென்று பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார்.அவரின் மனதில் திருமண யோகம் இப்பொழுது இருந்தால் உடனடியாக திருமணம் முடித்துவிடலாம் என்ற எண்ணம் இருந்தது.

தாரிகா தன் சொந்த ஊருக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.பெற்றோர் ஊருக்குச் செல்லும்பொழுது எல்லாம் அவளுக்கு ஏதாவது கல்லூரியில் முக்கியமான வேலைகள் இருந்துகொண்டே

இருந்ததினால் அவளால் ஊருக்குச் செல்லமுடியவில்லை.

பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து இறங்கியவர்களை கூட்டிச் செல்ல வந்திருந்தான் கார்த்திக்.பத்மநாபன் ருக்மணி தம்பதியரின் புதல்வன்!

தங்கள் உடைமைகளை தள்ளிக்கொண்டு வருபவர்களைக் கண்டவன் விரிந்த புன்னகையுடன் அவர்கள் அருகில் சென்றான்.”வாங்க சித்தப்பா!வாங்க சித்தி!” என்றவன் தாரிகாவைப் பார்த்து “ஒய் வாண்டு!என்ன இவ்வளவு பெருசா வளர்ந்திட்ட?போன வருஷம் கூட குட்டையா தான இருந்த?” என்று அவளின் தலையை செல்லமாக தட்டி  வம்பு வளர்க்க

அவன் முதுகில்  ஒன்று போட்டவள் “ஏன் டா எரும நீ கூட தான் தடி மாடு மாறி வளர்ந்துருக்க நான் ஏதாச்சும் கேட்டன?” என்று கோபப்பட விசாலாட்சி  இடைபுகுந்தி “ஏன் டி கார்த்தி விளையாட்டுக்கு தான சொன்னான்.அதுக்கு போயா இப்படி

சண்டைப் போடுவ?”என்றவளை திட்டினார்.

“சித்தி இது எங்க அண்ணா தங்கச்சிக்குள்ள இருக்க விஷயம்.நாங்க இப்ப சண்டை போடுவோம் அப்புறம் சேர்ந்துப்போம்.இதுல நீங்க தலையிடக்கூடாது” என்று கார்த்திக் சிரித்துக்கொண்டே கூற இருவரும் ஹை-பை(hi-fi)கொடுத்துக் கொண்டனர்.

“நீ இவங்க நடுவுல போகாத விசா.போனா நம்மள தான் கிறுக்கா ஆக்கிருவாங்க” என்ற சௌந்தரம் பாட்டி”ஏன் டா உங்க சித்தப்பா குடும்பத்துகிட்ட மட்டும் தான் பேசுவியா?எங்க ரெண்டு பேரையும்

கண்ணுக்கு தெரியலையா?” என்று பேரனிடம் செல்லமாக கோபித்துக்கொள்ள

“சித்தப்பா வீட்ல போய் ஒரு மாசமாச்சு டேரா போடுவிங்க.இந்த பெருசுங்க தொல்லை இல்லாம நாம கொஞ்சம் சந்தோசமா

இருக்கலாமுன்னு பாத்தா போனவுடனே வந்துட்டிங்க”என்றவன் சோகமாக சொல்ல பரந்தாமன் “ஏன் டா மகனே எங்க அம்மா அப்பா உனக்கு பெருசுங்களா??” என்று காதைப் பிடித்து திருக அனைவரும் சிரித்தனர்.

தாரிகா தான் கோவில்பாளையம் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.ஆனால் பத்மநாபனின் குடும்பம் வருடத்திற்கு ஒரு முறை பெங்களூர் சென்று தன் தம்பி குடும்பத்தாருடன் ஒரு வாரமாவது

இருந்து வருவார்கள்.அதனால் கார்த்திக்கிற்கும் தாரிகவிற்கும் நல்ல உறவு இருந்தது.எவ்வளவு சண்டை வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

தாரிகா பெங்களூரில் தன் நண்பர்களுடன் வெளியே செல்லலாம் என்று நினைத்திருந்தாள்.ஆனால் தந்தை தன் சொல்லைக் கேட்காமல் இங்கே அழைத்து வந்தது கோபம்.எப்பொழுதும் தான் என்ன

சொன்னாலும் அதை செய்து கொடுக்கும் தந்தை இன்று அவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காமல் இங்கு அழைத்து வந்துவிட்டாரே என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது.

அதனால் தான் கார்த்திக்கிடம் அப்படி பேசியது.அவனும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான்.அவளின் கோபம் அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால்  விட்டுவிட்டான்.இனோவாவில் கார்த்திக் ஓட்டுனர் இருக்கையிலும் தாரு அதற்குப் பக்கத்து இருக்கையிலும் அமர்ந்து கொள்ள பெரியவர்கள் பின்னால் அமர்ந்து கொண்டனர்.முன்புறம் அமர்ந்த இருவரும் நாயம் அடித்துக்கொண்டும் இடையிடையே சௌந்தரம் பாட்டியைக் வம்பிழுத்துக்கொண்டும் வந்தனர்.

 

கார் வந்து வீட்டின் முன்புறம் நின்றதும் “தாரு கண்ணு.எப்படி டா இருக்க?” என்றபடி வந்த பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார்.அவருக்குப் பின் வந்த ருக்மணி தாருவை அணைத்துக்கொண்டார்.பின்பு அனைவரும் வீட்டின் உள்ளே சென்றனர்.

கோவில்பாளையம் வீடு தொட்டிக்கட்டி வீடு.வீட்டைச் சுற்றி தென்னந்தோப்பு.வீட்டிற்கு வெளியே மாட்டுத் தொழுவம்.அதற்குப் பக்கத்தில் ஆட்டுக் கொட்டகை.ஆட்டுக் கொட்டகையின் பக்கத்தில் இரண்டு நாய்க்குட்டிகள். ஆங்காங்கே மேயும் நாட்டுக் கோழிகள்.வீட்டிலிருந்து பத்தடி தூரத்தில் கிணற்றுடன் பம்பு செட்டு.எப்பொழுதும் பறவைகளின் கீச்…கீச் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.

 

இங்கு வந்ததில் இருந்து தாரிகவிற்கு மிகவும் போர் அடித்தது.பெங்களூரில் எப்பொழுதும் வீட்டில் இருந்தால் பத்து மணிக்கு முன்பாக அவள் எழுந்ததாக சரித்திரமே இல்லை.ஆனால் இங்கு வந்ததில் இருந்து ஏழு மணிக்கு மேல் சௌந்தரம் பாட்டி தூங்கவிடுவதில்லை.ஏழு மணிக்கு எழுவதற்கே “பொட்ட புள்ள சூரியன் வந்ததுக்கு அப்புறமும் தூங்குனா போற எடத்துல என்ன சொல்லுவாங்க?” என்ற அர்ச்சனையை கேட்டுத் தான் தினமும் எழுவாள்.

அவளுக்கு பரிந்து பேச யாரவது வந்தால் அவர்களிடம் “அப்புறம் போற இடத்துல நம்மள தான் தப்பு சொல்லுவாங்க.இன்னும் அவள் என்ன சின்ன பொண்ணா?எல்லாரும் சேர்ந்து செல்லம் கொடுத்து கொடுத்துத் தான் அவளைக் கெடுக்குறிங்க.முக்கியமா அவள் அப்பன்”என்று அவர்களின் வாயை அடைத்து விடுவார்.

தந்தை இப்பொழுது எல்லாம் முன்பு போல் தன்னிடம் பேசுவதில்லை,நடந்துகொள்ளவதில்லை என்ற வருத்தம் அவள் மனதில் இருந்தது. அவரிடம் தனியாகப் பேசும் வாய்ப்பும் இங்கு வந்ததில் இருந்து அவளுக்கு கிடைக்கவில்லை.’ஒரு வேலை உண்மை எல்லாம் தெரிந்ததால் தான் இப்படி இருக்கிறாரா?’ என்ற கேள்வி வேறு அவள் மனதைக் குடைந்துக் கொண்டே இருந்தது.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உண்மையை எல்லாம் தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இடத்தில் இருந்தவளுக்கு இந்த அமைதியான வாழ்க்கை ரசிக்கவில்லை.பெங்களூரில்

எப்பொழுதும் மொபைல்,லேப்டாப்,வீடியோ கேம்ஸ்,நண்பர்களுடன் வெளிய சுற்றுதல் என்று இருந்தவளுக்கு கிராமத்து வாழ்க்கை சுத்தமாகப் பிடிக்கவில்லை.

வித விதமான மால்களையும்,உணவகங்களையும் சுற்றிப் பார்த்தவளுக்கு இந்தத் தோட்டங்களையும்,வயல்களையும் சுற்றிப்பார்க்க பிடிக்கவில்லை.

கார்த்திக் இருந்தால் பொழுது நன்றாகக் கழியும்.ஆனால் அவன் வெளியே சென்று விட்டால் தாருவிற்கு மிகவும் போர் அடித்து விடும்.

பத்மநாபன் பஞ்சு தொழிற்சாலை வைத்திருந்தார்.கார்த்திக்கும் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டான்.ஆண்கள் நால்வரும் தொழிற்சாலைக்கு கிளம்பிவிட்டாள் தாரிகவிற்கு பொழுதே போகாது.வாட்ஸ் ஆப்,பேஸ் புக்,இன்ஸ்டாகிராம்,யூ டியுப் என நேரத்தை அரும்பாடு பட்டு தள்ளிக்கொண்டு இருந்தாள்.

.வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு சமையல் வேலை,தோட்டத்தில் வேலை என்று வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் நம் தாரிகாவிற்கு தான் இவையெல்லாம் பிடிக்காதே அதனால் இருபத்தி நான்கு மணி நேரமும் போனும் கையுமாகத் தான் இருந்தாள்.

தினமும் தோட்டத்தில் இருக்கும் பூக்கள்,செடிகள், மாடு கன்றுகளை எல்லாம் போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு விடுவாள்.கார்த்திக் கூட கேலி செய்வான் “நீ ஊருக்கு வந்ததுல இருந்து பண்ணற ஒரே உருப்படியான வேலை ஸ்டேட்டஸ் போடுறது தான்” என்று.ஆனால் அவளுக்குத் தான் ஸ்டேடஸ் மிகவும் பிடித்தமான ஒன்றே!அதனால் அவன் சொல்வதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டாள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் ஒரு நாள் ராஜுவும் பரந்தாமனும் ஜோசியரைப் போய் பார்த்துவிட்டு வந்தனர்.அவர் இப்பொழுது நேரம் நன்றாக இருப்பதால் இப்பொழுது வரன் பார்க்க ஆரம்பித்தாள் உடனே அமைந்து விடும் என்றும் சொந்தத்தில் மாப்பிள்ளை அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சொன்னார்.

அன்று அமாவசை என்பதால் குலதெய்வம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வரலாம் என்று முடிவு செய்தவர்கள்.அப்படியே தாரிகவின் ஜாதகத்தையும் அம்மனிடம் வைத்து பூஜை செய்துவிட்டு வந்து ஜாதகம் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தனர்.இது தாரிகவைத் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும்.பரந்தாமன் தான் அவளிடம் இதைப்பற்றி இப்பொழுது சொல்லவேண்டாம் என்று சொல்லி இருந்தார்.

இரவே பெண்கள் மூவரும் சேர்ந்து புளி சாதம்,தயிர் சாதம் செய்து விட்டனர்.அவர்கள் குலதெய்வம் கோவில் காங்கேயத்தில் இருந்ததால் விடியற்காலையிலையே புறப்பட்டனர்.பொங்கல் வைத்து சாமி கும்பிட்டவர்கள் பின்பு அங்கிருந்தவர்களுக்கு பொங்கலை விநியோகித்து விட்டு தாங்கள் கொண்டு வந்ததை சாப்பிட்டனர்.

அம்மனை தரிசித்தி வந்ததில் அனைவரின் மனதும் திருப்தியாக இருந்தது.பரந்தாமன் மனதில் அரித்துக் கொண்டிருந்த கவலை நீங்கி விட்டதைப் போல் உணர்ந்தார்.இனி எல்லாம் அந்த அம்மன் பார்த்துக் கொள்ளவார் என்ற தெம்பு வந்திருந்தது.

அனைவரும் தரிசனம் நன்றாக இருந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்க இவற்றில் எல்லாம் ஒட்டாமல் இருந்தது நம் தாரிகா தான்.காரணம் அவளுக்கு கடவுள் மேல் அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லை.வீட்டில் அனைவரும் கோவிலுக்கு வந்ததால் அவளும் வந்தால் அவ்வளவே!

அங்கிருந்த இயற்கை கட்சிகளை எல்லாம் படம்பிடித்து சோசியல் மீடியாக்களில் ஸ்டேட்டஸ்  போட்டுக்கொண்டு இருந்தாள்.கோவிலுக்கு வந்ததில் இருந்து அவள் செய்த வேலை அது ஒன்றே!வீட்டில் இருந்து கிளம்பியது முதல் பொங்கல் வைக்க ஆரம்பித்தது,பொங்கல் பொங்கியது,சாமிக்கு படையல் போட்டது,கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தது என அனைத்தையும் ஸ்டேட்டஸ் போட்டு விட்டாள்.எதற்கு எடுத்தாலும் செல்பி என்ன செய்தாலும் செல்பி என அனைவரையும் ஒரு வழி செய்துவிட்டாள்.

குலதெய்வம் கோவில் சென்றுவிட்டு வந்த அடுத்த நாள் பரந்தாமனின் குடும்பம் விசாலாட்சியின் தந்தை வீட்டிற்கு செல்லவதாக முடிவுசெய்திருந்தனர்.விசாலாட்சியின் தந்தை ஊர் கோவில்பாளையம் பக்கதிலுள்ள நீலிபாளையம்.கோவில்பாளையத்திலிருந்து முக்கால் மணி நேரப் பயணம் தான்.

தாரிகா உற்சாகமாக கிளம்பினாள்.காரணம் அங்கு அவள் தான் ராணி அவள் வைத்தது தான் சட்டம்!அவ்வளவு செல்லம்.அங்கு செல்லலாம் என்று தந்தை கூறியவுடன் அவள் மனதில் முதலில் தோன்றியது இதுதான்’அப்பாடா அங்கே இருக்க வரைக்கும் எத்தன மணி வரைக்கும் வேணாலும் தூங்கிக்கலாம்’ என்று.

காரில் செல்லும்பொழுது வழியில் இருக்கும் இயற்கை காட்சிகளை எல்லாம் படம் பிடித்தாள்.அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டி விடவே விசாலாட்சி தூங்கிக்கொண்டிருந்ததால்பரந்தாமனிடம்  உண்மையைக் கூறி விடலாமா என்று நினைத்தாள்.ஆனால் தீடிரென்று அவர் முழித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தவள் அந்த முடிவைக் கைவிட்டாள்.

முக்கால் மணிநேரப் பயணத்திற்குப் பின்பு அவர்கள் விசாலாட்சியின் தந்தை வீட்டினை அடைந்தனர்.செல்லமுத்து பத்மாவதி தம்பதியரின் இளைய மகள் தான் விசாலாட்சி.விசாலாட்சிக்கு முன்பு ஒரு அண்ணன்.பெயர் முருகானந்தம்.முருகானந்தம் பானுமதி தம்பதியினர்க்கு தாமரை கமலேஷ் என்ற இரு மக்கள். தாமரை திருமணமாகி தன் கணவன் முத்துராகவன் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறாள்.

கமலேஷுக்கும் தாரிகவிற்கும் ஒரே வயது தான்.ஆனால் எப்பொழுதும் எலியையும் பூனையையும் போல் அடித்துக் கொள்வார்கள்.காரணம் தாரிகா இங்கு வாந்தால் எல்லாரும் அவளை மட்டும் கொஞ்சுகிறார்கள் தன்னைக் கொஞ்சுவதில்லை என்று சிறிய வயதில் கமலேஷிற்கு இருந்த  பொறாமை.

 

ஆனால் தாமரையை தாரிகவிற்கு ரொம்பப் பிடிக்கும்.”அக்கா அக்கா “ என்று சின்ன வயதில் எல்லாம் அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருப்பாள்.

வீட்டின் முன்பு கார் சென்று நின்றது.முன் புறம் இருந்த அகலமான வராண்டாவில் மஞ்சளைக் காயப்போட்டு இருந்தனர்.கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வெளியே வந்த கமலேஷ் இவர்களை பாசமாக வரவேற்றான்.”வாங்க அத்தை!வாங்க மாமா!” என்றவன் “ஆத்தா அத்தை மாமா வந்தாச்சு” என்று குரல் கொடுத்தான்.

‘ஆத்தாவாம் ஆத்தா..பாட்டின்னு கூப்பிடாம ஆத்தா அப்பாருன்னு’ என்று மனதுக்குள் நினைக்க அதற்குள் வீட்டினுள் இருந்து அனைவரும் வந்துவிட்டனர்.

.”வா தாரு!எப்படி இருக்க?காலேஜ் எல்லாம் முடுஞ்சுச்சா?” என்று கமலேஷ் இயல்பாகக் கேட்க அவளுக்குத் தான் பேசியது அவனா என்று நம்ப முடியவில்லை.”நல்லா இருக்கேன்” என்றவள் சொல்ல “சின்ன வயசில விவரம் தெரியாம சண்ட போட்டது.அதை எல்லாம் பெருசா எடுத்துக்காத” என்றவன் சொல்ல தாருவும் ஒரு புன்னகையுடன் தலையாட்டினாள்.

“வாங்க மாப்பிள்ளை!வா விசா!” என்று பெண்ணையும் மாப்பிளையையும் வரவேற்ற பத்மாவதி “என் தங்கம்! உள்ள வா..பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.இந்த அம்மிச்சிய பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா?” என்று கேட்டு பேத்தியை உச்சி முகர்ந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

“இல்லை பாட்டி லீவ் கிடைக்கல அதான் வரல” என்று சொல்ல “பாட்டின்னு கூப்பிடாத அம்மிச்சின்னு கூப்பிடுன்னு உனக்கு எத்தனை டைம் சொல்லறது?” என்று விசாலாட்சி கடிய “அவளுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிட்டும்.இதை எல்லாம் ஏன் பெருசு பண்ணற” என்று பரந்தாமன் தன் மனைவியை அடக்கிவிட்டார்.

வந்தவர்களுக்கு பானுமதி காப்பி பலகாரம் கொண்டு வர அனைவரும் பேசியபடியே உண்டனர்.இப்பொழுது கமலேஷிற்கும் தாருவிற்கும் இருந்த மனக்கசப்பு சரியானதால் இருவரும் தத்தம் கல்லூரியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

 

“தாமரை அக்கா எப்ப வருவா அத்தை?” என்று தாரு கேட்க “பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.அதனால வரல” என்றவர் சொல்ல அதற்குள் தாருவிற்கு தாமரையிடம் இருந்து போன் வந்திருந்தது.

அத்தியாயம் மூன்று

 

தாரிகா கோபத்துடன் தன் தந்தையை எதிர்பார்த்து தன் ரூமில் காத்திருந்தாள்.காரணம் இன்று நடந்த நிகழ்வுகள்!

தந்தை உள்ளே நுழைந்தவுடன் தன் முகத்தைத் திருப்பியவள் ஒன்றும் பேசவில்லை.”கோபமா தங்கம்?” என்ற தந்தையின் கேள்விக்கு பதிலில்லை.”அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான பண்ணுவேன்.இவ்வளவு வருசத்துல அப்பா உனக்கு ஏதாச்சும் பிடிக்காதது பண்ணிருக்கேனா?இந்த ஒரு விஷயத்துல அப்பா சொல்லறத கேட்க மாட்டிய?” என்று மிகவும் சோகமான குரலில் கேட்க “ப்பா…” என்று  திரும்பியவள்

“நீங்க இப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறதுக்கு காரணம் அந்த சிட்பெட்ல நடந்த விஷயம் நால தான?” என்று கேட்க அவள் கேள்வியில் அவர் சற்று தடுமாறிவிட்டார்.

பரந்தாமனிடமிருந்து பதில் வராததால் தாருவே தொடர்ந்தாள்”அப்ப நீங்க என்ன நம்பல..” என்ற உடைந்த குரலில் கேட்க “அப்படி எல்லாம் இல்லை டா” என்றவர் சொல்லும் முன் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.

“அச்சோ என்ன டா இது?இதுக்கு எல்லாம் போய் அழுதுட்டு?” என்றவர் மகளின் கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தார்.”அப்பாக்கு உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை.பட் இந்த உலகத்து மேல தான் நம்பிக்கை இல்லை.நீ அந்த பையன்கிட்ட பிரின்ட்லியா தான் பழகிருப்ப.பட் எல்லாரும் இந்த உலகத்துல நல்லவங்க இல்லை தங்கம்” என்றவர் விளக்க

“உங்களுக்கு என் மேல உண்மையிலேயே நம்பிக்கை இருந்திருந்தா என்கிட்ட இதைப்பத்தி டைரக்ட்டா கேட்டுருப்பிங்க.பட் நீங்க இதைபத்தி ஒண்ணுமே என்கிட்ட பேசாம எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டிங்க” என்றவள் தந்தையை குற்றம் சாட்ட

“நீ என்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தா நான் கேட்டப்பவே சொல்லிருப்பே.பட் நீ சொல்லல.சோ அப்பா கிட்ட சொல்ல வேண்டாம் நினைக்கிறியோன்னு நினைச்சுதான் அப்பா இத பத்தி உங்கிட்ட கேட்கல” என்றவர் தன் நிலையை விளக்க

“உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லப் ப்பா…அன்னைக்கு தாத்தா பாட்டி எல்லாம் வந்திருந்தது நால அப்புறம் சொல்லிக்கலாம் நினைச்ச.அப்புறம் நாம ஊருக்கு வந்துட்டோம்…உங்ககிட்ட தனியா பேசுற சான்ஸ் எனக்கு கிடைக்கவேயில்லை” என்றவள் ஆதங்கத்துடன் சொல்ல

அவள் தலையை கோதிவிட்டவர் “பாராவயில்லை விடு.இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க “அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லற” என்றவள் அன்றைய நாளின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

“எக்ஸாம் முடுச்சுட்டு நான் பிரிண்ட்ஸ் கூட மூவி போனேன்.அப்புறம் அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு ஐபாகோ போனோம்.அங்கே ஏற்கனவே விக்னேஷ் இருந்தான்.என் பிரிண்ட்ஸ் ‘அவன் உங்கிட்ட தனியா பேசனும் சொன்னான்” சொன்னங்க

 

.விக்னேஷ் என்னோட காலேஜ் மேட்.நான் போகமாட்ட சொன்னேன்.பட் அவங்க தான் கம்பெல் பண்ணி அனுப்பினாங்க.அவன் நான் உன்ன லவ் பண்றன்னு சொன்னான்.பட் நான் முடியாது சொல்லறதுக்கு முன்னாடி நிறைய டைலாக்ஸ் பேசி நாளைக்கு  உன்னோட பதில் சொல்லு சொன்னான்.

 

நானும் அவன பாக்க ரொம்ப பாவமா இருந்தது நால நாளைக்கு சொல்லறேன் சொன்ன.அடுத்த நாள் எப்படி இருந்தாலும் அவன்கிட்ட நோ தான் சொல்லிருப்ப” என்றவள் சொல்ல தன் பெண்ணை நினைத்து பெருமைப்பட்டார் பரந்தாமன்.

 

தன் நண்பர் ஒருவர் தங்கள் பெண் ஒரு பையனுடன் தனியாக ஐஸ்கிரீம் பார்லரில் அமர்ந்து அரைமணி நேரமாக பேசிக் கொண்டிருந்தாள்  என்று சொல்ல பரந்தாமனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.காரணம் தாருவிற்கு ஆண் நண்பர்கள் இல்லை.

 

அதுவும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல அவருக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.தன் பெண்ணின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இப்படி ஒருவர் சொல்ல ‘அவளோட பிரண்ட்டா இருக்கும்’ என்று அவரிடம் சொல்லிவிட்டார்.

 

மகளிடம் இதைப் பற்றி கேட்க அவள் மழுப்பிச் சென்றதும் தான் அவருக்கு பயம் எழுந்தது.பிறந்தது முதல் எதையும் மறைக்காத மகள் ஒரு பையனுடன் தனியாக வெளியே இருந்ததைப் பற்றி தான் கேட்டதும் கூட சொல்லவில்லை என்பதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

 

என்ன தான் மிகவும் செல்லமாக வளர்த்தாலும் திருமண விஷயத்தில் அவர் காட்டும் மாப்பிள்ளையைத் தான் தன் பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.அதனால் தான் இந்த ஏற்பாடு.

“சரி விடு இதைப்பத்தி இனி பேச வேண்டாம்.மாப்பிள்ளை பிடிச்சுருக்கா இல்லையா? சொல்லு” என்றவர் கேட்க கீழே குனிந்து மௌனமாக தலையசைத்தாள்.”உண்மையாவே மாப்பிளையை பிடிச்சுருக்கா டா?இல்லை அப்பா சொல்றதுக்காக ஓகே சொல்லறியா?”என்று சந்தேகமாகக் கேட்க முகத்தில் வெட்கப்புன்னகையுடன் தலையசைத்தாள்.

நடந்தது இதுதான்!

நீலிபாளையம் சென்றவர்கள் அடுத்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த ஊர்க் காவல் தெய்வம் மருதகாளியம்மன் கோவிலில் சங்கல்ப்ப பூஜை இருந்ததால் அங்கு சென்றார்கள். ஊர் மொத்தமும் கோவிலில் கூடி இருக்க பூஜை சிறப்பாக நடை பெற்றது.

 

நம் நாயகிக்கு தான் கடவுள் நம்பிக்கை பெரியதாக இல்லையே.அதனால் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுடன் அவளும் விளையாடிக் கொண்டிருந்தாள்.அதில் ஒரு குழந்தை தத்தித் தத்தி நடந்து அவளை மிகவும் கவர அக்குழந்தையை கையில் எடுத்தவள் அதை மேலே தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தையின் அம்மா சந்தியா தாருவிடம் பேச ஆரம்பித்தார்.”எந்த ஊர் மா?” என்று கேட்க “பெங்களூர் அக்கா” என்றவள் மீண்டும் அவளே தொடர்ந்தாள் “இங்க எங்க பாட்டி வீட்டுக்கு வந்திருக்க” என்றாள்.

 

“ஓ!உங்க பாட்டி பேரு என்ன?” என்று கேட்டுவிட்டு “ஓ கரட்டு தோட்டத்து வீட்டுப் பொண்ண.உங்க அக்கா தாமரையும் நானும் பிரிண்ட்ஸ்!” என்றவர் பின்பு பொதுப் படியான விஷயங்களை அவளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

இவர்கள் இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை இரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததை இருவரும் அறியவில்லை.பின்பு பூஜை முடிந்தவுடன் எல்லோரும் வெளியே வர தன் குடும்பத்தினரிடம் சந்தியாவை அறிமுகம் செய்து வைத்தாள் தாரு.

 

சந்தியாவை ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததால் அனைவரும் அவளுடன் பேசிவிட்டு பின்பு பிரசாதம் வாங்கச் சென்றனர்.பிரசாதம் சாப்பிட்டு முடித்தவுடன் சந்தியா தாருவை கண்டிப்பாக தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

 

சந்தியாவை அழைக்க வந்த அவளின் தம்பி அனைவரிடமும் நலம் விசாரித்துவிட்டுச் சென்றான்.சந்தியாவின் தம்பியை தாருவிற்கு பார்த்தவுடன் பிடித்துவிட்டது

 

.ஆறு அடி உயரம்,மாநிறம்,கூர்மையான மூக்கு,நன்றாக மசில்ஸ் பில்ட் பண்ணிய உடம்பு,அடர்த்தியான கருகரு முடி என்று இருந்தவனை நன்றாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள்..அதை விட அவன் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் கன்னத்தில் விழுந்த குழி அவளை மிகவும் கவர்ந்தது.

 

அவன் அணிந்திருந்த  வெள்ளை வேட்டி சாம்பல் நிற சட்டை அவன் கம்பீரத்தை எடுத்துக் காட்டியது..ஆனால் அவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.பெரியோர்களுடன் பேசியவன் பின்பு தன் அக்காவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

 

’சாக்லேட் பாய்’ என்று மனதிற்குள் நினைத்தவள் ‘என்ன எல்லாரும் பிரியன் பிரியன்னு கூப்படறாங்க?என்ன பேரா இருக்கும்’என்று மனதில் யோசித்துக்கொண்டிருந்தாள்.

 

அன்று இரவு தூங்கும் முன்பு கூட அவனின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனாள்.அடுத்த நாள் காலை எழும் போதே மனம் மிகவும் உற்சாகமாக இருப்பது போல் இருந்தது.ஏன் என்று யோசித்துக்கொண்டே இருந்தவளுக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் விடை கிடைத்தது.

 

ப்ரியனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்ததால் இரவு தாருவின் கனவில் அவன் வந்தான்.ஆனால் கனவில் நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்து விட அவன் வந்தது மட்டுமே நினைவு இருந்தது.

 

இரண்டு நாட்கள் கழித்து,

செல்லமுத்து தாத்தாவிற்கு ஊர்த் தலைவர் முத்துசாமியிடம் இருந்து போன் வர எடுத்துப் பேசியவரின் முகம் புன்னகையால் நிறைந்திருந்தது.’ஆத்தா என் பேத்திக்கு நல்ல வழி காட்டி’ என்று மருதகாளி அம்மனிடம் வேண்டியவர் பின்பு தன் மனைவி மருமகனிடம் விஷயத்தை சொன்னார்.

முத்துசாமி தன் மகன் கவிப்ரியனுக்கு தாரிகவை பெண் கேட்டிருந்தார்.கவிப்ரியனின் ஜாதகத்தை அவர்களிடம் கொடுப்பதாகவும்  ஜோசியரிடம் சென்று பார்த்துவிட்டு பொருத்தம் இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருந்தார்.

 

கவிப்ரியனைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.நல்ல அருமையான பையன்.அவர்கள் குடும்பமும் நல்ல பண்பான குடும்பம் என்பதால் இந்த சம்மந்தம் அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர்.மேலும் பேத்தியும் தங்கள் அருகிலையே இருப்பாள் என்ற சந்தோசம் வேறு.

 

அடுத்த நாள் ஜோசியரை சென்று பார்க்க அவர் இவர்கள் இருவருக்கும் ஒன்பது பொருத்தம் இருக்கிறது என்றும் கல்யாணம் செய்து வைத்தால் அமோகமாக வாழ்வார்கள் என்றும் கூற இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் மிகுந்த சந்தோசம்.

அன்றைக்கே தாரிகாவை அழைத்துக் கொண்டு கோவில்பாளையம் சென்றவர்கள் மற்றவர்களிடம் விஷயத்தைக் கூறினர்.காரணம் அடுத்த நாளே நல்ல நாளாக இருந்ததினால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து  பெண் பார்க்க வருவதாகக் கூறியிருந்தனர்.தாரிகவை தவிர அனைவருக்கும் விஷயம் தெரிந்ததால் எல்லோரும் உற்சாகமாக இருந்தனர்.

 

“என்ன எல்லாரோட பேஸுளையும் 1௦௦௦ வாட்ஸ் பல்பு எரியுது?” என்றவள் கேட்க “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே” என்று கூறி சமாளித்தவர்கள் பின்பு அவள் முன் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.பெண்கள் மூவரும் பலகாரம் செய்ய தாரிகாவும் கார்த்திக்கும் அதை சாப்பிடும் வேலையை நன்றாகச் செய்து கொண்டிருந்தனர்.

 

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே தாரிகவை விசாலாட்சி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று எழுப்ப அவள் எழுந்து கொள்ளாமல் அடம்பிடித்தால்.சௌந்தரம் பாட்டி வந்து ஒரு அதட்டல் போட வேறு வழியில்லாமல் எழுந்தவள் குளிக்கச் சென்றாள்.

 

குளித்து முடித்து வந்தவளிடம் “நான் உனக்கு புடவை கட்டி விடற” என்று ருக்குமணி பெரியம்மா சொல்ல அவரிடம் அடம்பிடிக்காமல் புடவை கட்டிக்கொண்டாள்..

 

தாரிகவிற்கு தன்னை அலங்கரித்துக்கொள்வது மிகவும் பிடிக்கும் என்பதால் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டாள்.தங்க நகைகள் தான் அணிய வேண்டும் என்ற பாட்டியின் கட்டளையால் தங்க நகைகளை போட்டுக்கொண்டாள்.

 

தங்க நிற மாங்காய் போட்ட குங்கும நிறச் சேலைகட்டி கழுத்தில் மாங்காமாலை அணிந்து காதில் அதற்கு ஏற்றார்போல் ஜிமிக்கு அணிந்திருந்தவளின் அழகு பார்ப்போரை கவர்ந்திழுத்தது.கார்த்திக் அவளைப் பார்த்து “இப்ப தான் டி பொண்ணு மாறி பார்க்க லட்சணமா இருக்க” என்று கேலி செய்து அவளிடம் இரண்டு அடிகளை வாங்கிக் கொண்டான்.

ஆறரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துவிட அதுவரை தாருவிற்கு தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றே தெரியாது.தெரிந்தவுடன் தன் தந்தை இப்படி தன்னிடம் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டினரை வரச்செய்தது மனதில் வலியைக் கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டாள்.கோபம்,பதற்றம் எல்லாம் சேர்ந்து அவளை மரத்துப் போகச் செய்திருந்தது.

 

வந்தவர்களை வரவேற்று அமரச் செயதவர்கள் சிறிது நேரம் தங்கள் குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.சந்தியா “நான் போய் தாருவ பார்க்கட்டுமா?” என்று விசாலாட்சியிடம் கேட்க “இதுக்கு எல்லாம டா கேட்ப அந்த ரூம்ல இருக்க போய் பாரு போ” என்று சொல்ல அவளும் தலையசைத்து விட்டு தாருவைப் பார்க்க உள்ளே சென்றால்.

 

சந்தியா உள்ளே வந்து “தாரு” என்று அழைக்க சுயநினைவுக்கு வந்தவள் “அக்கா!நீங்க எங்க இங்க?” என்று ஆச்சர்யமாகக் கேட்க “என் தம்பிக்கு பொண்ணு பார்க்க நான் இல்லாமையா?” என்று கண்ணடித்துக் கேட்க தாரு ஆச்சர்யத்தில் கண்ணை விரித்தாள்.

 

அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அந்த சாக்லேட் பாய் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறானா என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் வெளியே முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டாள்.

 

“என்ன வெக்கமா?” என்று சந்தியா கேலி செய்ய அதற்குள் சர்மிளா உள்ளே வந்தாள்.முத்துசாமி சரசம்மாள் தம்பதியினர்க்கு மூன்று மக்கட் செல்வங்கள்.சந்தியா,சர்மிளா,கவிப்ரியன்.சர்மிளாவை தாருவிற்கு சந்தியா அறிமுகம் செய்து வைக்க அதற்குள் சௌந்திரம் பாட்டி பெண்ணை அழைத்து வர சொல்கிறார்கள் என்று சொல்ல சந்தியாவும் சர்மிளாவும் தாருவை அழைத்துக் கொண்டு சென்றனர்.

அத்தியாயம் நான்கு

தாரிகவை சந்தியாவும் சர்மிளாவும் அழைத்து வர குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள்.மனதுக்குள் இனம் புரியாத உணர்வு.அந்த சாக்லேட் பாய் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தவுடன் ஜிவ்வென்ற உணர்வு.

 

அவளிடம் அனுமதி கேட்காமலேயே வந்து குடியேறிய நாணம்.சந்தோஷம்,நாணம்,படபடப்பு என கலவையான உணர்வுகளின் பிடியினால் ஆட்கொள்ளப்பட்டுருந்தாள்.

 

பெண் பார்க்க முத்துசாமி சரசம்மாளின் மொத்தக் குடும்பமும் வந்திருந்தது.ஹாலின் நடுவில் இருந்த சோபாவில் கவிப்ரியன் அமர்ந்திருக்க ப்ரியனுக்கு இடப் புறம் சந்தியாவின் கணவன் கௌதமும் வலப்புறம் சர்மிளாவின் கணவன் நரசிம்மனும் அமர்ந்திருந்தார்.

 

அதற்குப் பக்கத்தில் இருந்த நாற்காலிகளில் பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

 

விசாலாட்சி கொடுத்த காப்பி தட்டை வாங்கியவள் எல்லோருக்கும் கொடுத்தாள்.ஆனால் ஒருவரைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.வெட்கம் அவளை நிமிர்ந்து பார்க்கவிடாமல் தடுத்தது.

 

தாரிகா குனிந்து இருந்ததால் அவன் முகம் தெரியவில்லை.அவன் அணிந்திருந்த கருப்பு நிறப் பேன்ட் தான் தெரிந்தது.அவனிடம் காப்பியை குனிந்த தலை நிமிராமல் நீட்ட இரு நொடிகள் கழித்து அவன் கை நீண்டு வந்து காப்பியை எடுத்தது.இள நீல நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தவன் முழங்கை வரை அதை மடக்கிவிட்டிருந்தான்.

 

அனைவருக்கும் காப்பி கொடுத்தவுடன் தாரிகவை விசாலாட்சி உள்ளே அழைத்துச் சென்றார்.சந்தியாவும் சர்மிளாவும் ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டனர்.

 

உள்ள வந்தவுடன் தான் மனதிற்குள் ‘ச்சே..நிமிர்ந்து முகத்தை பார்த்திருக்கலாம்.அந்த கன்னக்குழி எவ்வளவு அழகா இருக்கும்.மிஸ் பண்ணிட்டோம்’ என்று நினைத்தாள்.

 

தன் எண்ணப் போக்கில் இருந்தவள் விசாலாட்சி சொல்லிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.அவர் பேசுவதற்கு எல்லாம் மகளிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே அவளை உலுக்கியவர் “மாப்பிள்ளை பிடிச்சுருக்கா?” என்று கேட்க வெட்கத்துடன் தலையை ஆட்டிய மகளைப் பார்க்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

 

‘என்னடா இது நான் மேல படிக்கணும்.இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்.இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.அப்பாவ உள்ளே கூப்பிடுன்னு அடம் பிடிப்பான்னு பார்த்தா மாப்பிளையை பார்த்த உடனே ஓகே சொல்லிட்ட.நல்ல வேலை நமக்கு இவளை சம்மதிக்க வைக்குற வேலை மிச்சம்’ என்று மனதிற்குள் நினைத்த விசாலாட்சி ‘இனி தாரு வாழ்கை ரொம்ப நல்லா இருக்கும்’ என்ற சந்தோசத்துடன் வெளியே சென்றார்.

 

அவர் வெளியே சென்றவுடன் ராஜூ தாத்தா “தாருவ கூப்பிடு மாப்பிள்ளை கூட போய் பேசிட்டு வரட்டும்” என்று சொல்ல கார்த்திக் தான் போய் அவளை அழைத்து வருவதாகக் கூறி உள்ளே சென்றான்.

 

அவன் உள்ளே நுழைந்ததைக் கூட உணராமல் தாரு தன் எண்ணங்களின் பிடியில் இருந்தாள்.”ஒய் மேடம்” என்றவன் அழைக்க திரும்பிப் பார்த்தவளிடம் “மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க வெட்கப்புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

சிரித்துக்கொண்டே அவள் தலையை தடவிக் கொடுத்தவன் “மாப்பிள்ளை கூட தனியா பேச கூப்படறாங்க…வா” என்று சொல்ல “எனக்கு பயமா இருக்கு வேண்டாம்” என்றவள் சொல்ல “லூசு இதுக்கு போய் யாராச்சும் பயப்படுவாங்களா?போய் பேசு” என்றவன் அவள் கையை பிடிக்க இரண்டடி பின்னே சென்றவள் “ப்ளீஸ்..எனக்கு உண்மையாவே ரொம்ப பயமா இருக்கு தனியா பேச.எனக்கு தான் மாப்பிளையை பிடிச்சிருகுல்ல…நீயே போய் அதை அவங்ககிட்ட சொல்லிரு” என்று சொல்ல சிரித்தவன் விடாப்பிடியாக அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.

 

அப்பொழுதும் முகத்தை நிமிர்த்தாமல் நடந்து வந்தவளைப் பார்த்துச் சிரித்த கார்த்திக் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “இப்படி எல்லாம் நீ குனிஞ்ச தலை நிமிராம வர்றத பார்த்து அவங்க உன்ன ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைச்சுக்க போறாங்க” என்று சொல்ல அவனை முறைக்க தலையை நிமிர்த்த அதற்குள் ஹால் வந்திருந்தது.

 

“போ தாரு மாப்பிளைக்கு தோப்பை சுத்திக்காட்டு” என்று ராசு தாத்தா சொல்ல கவிப்ரியன் எழுந்துவிட்டான்.அவன் முன்பு செல்ல தாரு அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

வீட்டில் இருந்து சற்று தள்ளி தோப்பிற்குள் வந்தவுடன் ப்ரியன் நிற்க அவனைப் பின்தொடர்ந்து வந்தவளும் நின்றாள்.சிறிது நேரம் அவன் ஒன்றும் பேசாமல் நிற்க தாருவிற்குத் தான் அது இன்ப அவஸ்தையாக இருந்தது.

 

அவன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாததால் தலை குனிந்து நின்று இருந்தாள்.”ம்ம்கும்…” என்றவன் தொண்டையை செரும தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

“ரொம்ப அமைதியா இருக்க…பேச மாட்டியா?” என்றவன் கேட்க அவளுக்குத் தொண்டையில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.தலை குனிந்தபடியே அமைதியாக இருக்க “என்ன பிடிச்சிருக்கா?” என்றவன் கேட்க அதற்கும் குனிந்தபடியே ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

 

அவன் உதடுகளில் சிறிய புன்னகை உதிக்க “அப்புறம் ஏன் என்ன பார்க்க மாட்டேங்கிற?” என்று கேட்க நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.”நான் உன்ன ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்.பட் நீ என்னோட பேஸ் கூட பார்க்க மாட்டேங்கிற?” என்று கேள்வியாய் நிறுத்த உடனே அவனை நிமிர்ந்து பார்த்தவள்

 

“என்ன இதுக்கு முன்னாடி நீங்க பார்த்திருக்கீங்களா?” என்று கேட்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு நின்றுகொண்டிருந்தவன் ஆம் என்பதாகத் தலையசைத்தான்.”எங்க?” என்றவள் கண்களை விரித்து கேட்க சிரித்தவன் “கோவில்ல நீ ஒரு தாத்தாகாக கடைக்காரன்கிட்ட பொங்கினியே அப்போ…அப்புறம் சுப்ரியா கூட கொஞ்சி கொஞ்சி விளையாண்டிட்டு இருந்தியே அப்போ” என்றவன் கண்களைச் சிமிட்டிச் சொல்ல வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.

 

ஒரு முதியவர் 3௦௦ ரூபாய் மதிப்புடைய மாலையை கொஞ்சம் குறைத்துக் கேட்க கடைக்காரன் அவரைக் கொஞ்சம் தரக் குறைவாகப் பேசிவிட்டான்.அதனால் நம் தாருவிற்கு கோபம் வந்துவிட கடைக்காரனிடம் சண்டைப்போட்டுவிட்டாள்.

 

“என்ன பத்தி என்ன எல்லாம் தெரியும்?” என்று கேட்க அவளுக்கு உள்ளுக்குள் பக் என்றிருந்தது.அவள் பதில் பேசாமல் இருக்க “அப்போ எதுவும் தெரியாதா?” என்றவன் கேட்டதற்கு தலையசைத்தாள்.

 

“அட்லீஸ்ட் என் பேரு?” என்று கேட்க இல்லை என்பதைப் போல் தலையசைத்தாள்.”ரொம்ப நல்லது” என்றவன் சலித்துக்கொள்ள “எனக்கு நீங்க வர்றதப் பத்தி யாருமே சொல்லல..காலைல நீங்க எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் தான் சொன்னங்க” என்று தயங்கித் தயங்கி சொல்ல

 

“சரி என்ன பத்தி எல்லாம் வீட்ல இருக்கவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு என்கிட்ட சொல்லு…இப்போ நம்ம போலாம்.வந்து பத்து நிமிஷம் ஆச்சு” என்றவன் நடக்கத் தொடங்க

“எப்படி உங்ககிட்ட பேசுறது?” என்றவள் கேட்டுவிட்டு நாக்கைக் கடிக்க “என் நம்பர் சொல்லற நோட் பண்ணிக்கோ” என்றான்.”நான் போன் கொண்டு வரல.என் நம்பர் சொல்லற நீங்க ஒரு மிஸ்ட் கால் கொடுங்க” என்றவள் தன் எண்ணை அவனிடம் கொடுத்தாள்.

இருவரும் உள்ளே செல்லும்பொழுது உறுதி வார்த்தை எப்பொழுது வைக்கலாம் என்பது பற்றி பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.ப்ரியன் பெரியவர்களுடன் அமர்ந்து கொள்ள தாரிகவை சந்தியாவும் சர்மிளாவும் உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

சந்தியா சர்மிளா உடன் சென்ற தாருவை பின் தொடர்ந்து வந்த சரசம்மாள் “ரொம்ப அழகா இருக்கடா.சுப்ரியா கூட நீ விளையாண்டுட்டு இருந்தது பார்த்தப்பவே  எனக்கு உன்னை ரொம்ப புடிச்சு போச்சு” என்று சொல்ல  சந்தியா “ஆமா தாரு அம்மாதான் உன்னை ப்ரியனனுக்கு கேட்கலாம்னு அப்பா கிட்ட சொன்னாங்க”என்று சொல்ல தாருவிற்கு தன் மாமியாரை மிகவும் பிடித்து விட்டது.

 

உறுதி வார்த்தை ஒரு மாதம் கழித்து வைத்து கொள்ளலாம் என்றும் மீண்டும் ஒரு மாத இடைவேளியில் நிச்சயதார்த்தம் வைத்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது.

 

பேச்சு வார்த்தை முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப தாருவையும் வெளியே அழைத்தனர்.அனைவரும் அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப ப்ரியன் ஒரு சின்னத் தலையசைப்புடன் அவளிடம் விடைபெற்றான்.ஒரு புன்னகையுடன் அவனுக்கு விடைக் கொடுத்தவள் பின்பு தன்னறைக்கு வந்தாள்.

போனை எடுத்து அதில் வந்திருந்த நம்பரை சேவ் செய்தவளுக்கு அப்பொழுது தான் தன் தந்தை தன்னிடம் கூறாமல் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் என்ற ஞாபகம் வர

 

‘ஏன் டி அந்த சாக்லேட் பாய்ய பார்த்தவுடனே எல்லாமே மறந்துட்டியா?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க அதை ஒதுக்கித் தள்ளியவள் தன் தந்தையின் வரவிற்காக ரூமில் கோபத்துடன் காத்திருந்தாள்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

‘யார்கிட்ட நம்ம சாக்லேட் பாய் பத்தி கேட்கிறது?இந்த அம்மா அப்பாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.மாப்பிள்ளை பத்தி ஏதாச்சும் ஒரு டிடைல்ஸ் சொன்னாங்களா?சாக்லேட் பாய் பத்தி டிடைல்ஸ் ஏதாச்சும் தெரிஞ்சா கூட இதை ரீசன்னா வைச்சுட்டு போன் பண்ணி பேசலாம்’ என்று மனதிற்குள் புலம்ப கார்த்திக் வந்து அவளை சாப்பிட அழைத்தான்.

 

‘பேசாம இவன்கிட்டே கேட்டறலாம்’ என்று நினைத்தவள் “கார்த்தி” என்று அழைக்க “என்ன டி இவ்வளவு பவ்யமா கூப்டற?என்ன விஷயம்?” என்று கேட்க “அது வந்து ப்ரியன்ன பத்தி டிடைல்ஸ் எல்லாம் சொல்லறியா?” என்று கேட்க

 

“என்னது ப்ரியன்னா? அப்படி எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாது.மரியாதையா கூப்பிடு” என்று சற்று கண்டிப்பான குரலில் கூற தாருவின் முகம் அப்படியே விழுந்துவிட்டது.

 

“என்கிட்ட இப்படி பேசுனது பரவாயில்லை.பட் எல்லாத்துகிட்டயும் மாப்பிளையை பத்தி பேசுறப்போ மரியாதையா தான் பேசணும் ஓகே வா?” என்று சொல்ல அவள் சம்மதமாகத் தலையசைத்தாள்.

 

“சாப்பிட வராம ரெண்டு பேரும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற விசாலாட்சியின் குரலில் இருவரும் டைனிங் ரூமிற்குள் நுழைந்தனர்.சாப்பிடும் பொழுது அனைவரும் கல்யாண வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்க அப்பொழுதாவது அவனைப் பற்றி பேசுவார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருக்க ஏமாற்றமே மிஞ்சியது.

 

சாப்பிட்டு முடித்தவுடன் பத்மநாபன் கார்த்திக்கிடம் தொழிலைப்பற்றி ஏதோ கேட்க அழைக்க அவன் அவர் அறைக்குச் சென்றுவிட்டான்.அப்பொழுதே மணி ஒன்பது ஆகிவிட அதற்கு மேல் கார்த்திக்கிடம் பேசமுடியாது என்பதை உணர்ந்தவள் தன் அறைக்கு வந்து போனை எடுத்தாள்.

 

வாட்ஸ் ஆப்பைத் திறந்து அதில் அவன் டிபி பார்க்க பனிகளுக்கு இடையில் நின்று கொண்டிருந்த போட்டோவை வைத்திருந்தான்.’ஓ இவங்க பாரின் எல்லாம் போயிருக்காங்களா?’ என்று நினைத்தவள் அவனுடைய லாஸ்ட் சீன் பார்க்க அது ஆன்லைன் என்று காட்டியது.

 

‘பேசுவோமோ வேண்டாமா?’ என்றவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுதே அவன் ஆப்லைன் சென்றிருந்தான்.”ச்ச” என்றவள் போனை கட்டிலின் மேல் போட்டுவிட்டு படுத்துவிட்டாள்.

 

ஒரு ஐந்து நிமிடம் கழித்து மெசேஜ் வந்ததற்கான சத்தம் வரவே எடுத்துப் பார்த்தவளின் உதடுகளில் மென்னகை பூத்தது.ப்ரியன் தான் “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.

 

வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வுடன் அவனுக்கு “ஹாய்” என்று பதில் அனுப்ப “என்னை பத்தி தெரிஞ்சிச்சா?” என்றவன் கேட்க ஒரு சோகமான ஸ்மைலியுடன் இல்லை என்று பதில் அனுப்பினாள்.

 

ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அவளுக்கு அனுப்பியவன் பின்பு “அட்லீஸ்ட் என் பேரு?” என்று கேட்க அதற்கும் இல்லை என்று பதில் அனுப்பினாள்.”நான் எதுவும் சொல்லமாட்ட நீ தான் கண்டுபிடிக்கணும்” என்றவன் சொல்ல “என்கிட்ட யாருமே உங்களைப் பத்தி பேசறது இல்லை.நானே எப்படி போய் கேட்கிறது.உங்களுக்கு என்னப் பத்தி என்ன தெரியும்?சொல்லுங்க பார்க்கலாம்…”என்றவள் கேட்க அவளுக்கு அவனிடமிருந்து கால் வந்தது.

 

“ஒருவேளை கோவிச்சுக்கிட்டாங்களோ  அதனால தான் மெசேஜ்க்கு ரிப்ளே அனுப்புலையோ?பேசாம சாரி கேட்டிடலாமா?”என்றவள் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே    அவனிடமிருந்து கால் வந்தது.

அத்தியாயம் 5

தாரு போனை எடுத்தவுடன் “எனக்கும் உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாதே…நீயே உன்னை பத்தி சொல்லு” என்றவன் பாவமாக கேட்க “அதெல்லாம் முடியாது.நீங்க எனக்கு சொன்னது தான் உங்களுக்கும்” என்று சிறுபிள்ளைத் தனமாக சொல்ல சிரித்தவன்

“சரி..எனக்கு உன்னோட புல் நேம் தாரிகான்னு தெரியும்.அதனால நீ என்கிட்ட உன்ன பத்தி சொல்லலாம்.நீயும் என் புல் நேம் கண்டுபிடிச்சு என்கிட்ட சொல்லு நானும் என்ன பத்தி சொல்லற.பட் என் நேம் யார்கிட்டையும் கேட்கக்கூடாது” என்று ஒப்பந்தம் போட

“அதெல்லாம் முடியாது.அ டீல் இஸ் அ டீல்” என்றாள்.

”ஒய் லூசு உங்க வீட்ல தான் உங்கிட்ட என்ன பத்தி யாரும் சொல்லல.பட் என்கிட்ட உன்ன பத்தி எல்லாம் சொன்னாங்க” என்க “அப்ப எல்லாம் தெரிஞ்சுட்டு தான் என்ன ஒட்டுனிங்களா?” என்று கோபமாக கேட்க

“பரவாயில்லையே..செம்ம பாஸ்ட்டா கண்டு பிடிச்சிட்ட”என்று அதற்கும் வார “போங்க… போங்க…என்கிட்ட பேசாதிங்க” என்று கோபித்துக்கொண்டாள்.

“நீ சுப்ரியா கூட விளையாடும்போது கூட சின்ன குழந்தை அதனால அவளுக்கு தகுந்த மாதிரி விளையாடுறன்னு நினைச்ச…பட் இப்ப தான தெரியுது நீ உண்மையாவே பாப்பான்னு” என்று கலாய்க்க

“நான் ஒன்னும் பாப்பா இல்லை” என்றவள் சொல்ல “இப்படி கிண்டல் பண்ணறதுக்கு எல்லாம் கோவுச்சுகிட்டா பாப்பான்னு சொல்லாம வேற என்ன சொல்லறது?” என்று கேட்க

“நான் ஒன்னும் கோவுசுக்கல..சும்மா நடிச்ச” என்றவள் நாக்கைக் கடித்துக்கொண்டு சொல்ல “ம்ம்ம்.. ம்ம்ம்…நம்பிட்ட…நம்பிட்ட” என்றவன் மீண்டும் ஓட்ட “ப்ளீஸ் நான் ரொம்ப பாவம்” என்றவள் கெஞ்ச “சரி.. சரி…பொழச்சுப் போ” என்றுவிட்டான்.

என்ன பேசினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.ஆனால் விடியக்காலை மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.தாருவுடன் பேசியதில் அவளின் சிறுபிள்ளைத் தனத்தையும் பக்குவப்படாத மனதையும் பற்றி ப்ரியன் நன்றாகப் புரிந்துகொண்டான்.

“மணி மூணு ஆச்சு…தூங்கலாமா?” என்று ப்ரியன் கேட்க அரைமனதாக சம்மதித்தவள் “குட் நைட்” என்று கூறி போனை வைத்தாள்.போனை வைத்ததும் கூட தூங்காமல் ப்ரியனின் முழுப்பெயரைக் கண்டுபிடிப்பதற்காக முகநூலில் நுழைந்தவள் ப்ரியன் என்று டைப் செய்து வந்த எல்லா ப்ரோபைல்களையும் பார்த்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்பு ப்ரியனின் முகம் இருந்த அக்கௌன்ட் அவள் கைகளுக்கு சிக்கியது.அதில் ‘கவிப்ரியன் முத்துசுவாமி’ என்ற பெயர் இருக்க ‘ஒ நம்ம ஆள் பேரு கவிப்ரியனா?நல்லா தான் இருக்கு.டேய் கவி நாளைக்கே உங்கிட்ட பேர சொல்லி அசத்துற பார்’ என்று நினைத்தவள் அவனின் அக்கௌன்ட்டுக்குள் நுழைய  ஒரு போட்டோவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

‘பொண்ணு நானே எதையும் பிரைவசி போட்டு வைக்கல.பையன் இவன் ஏன் இப்படி இருக்கான்.நாளைக்கு இதை பத்தியும் கேக்கணும்’ என்று நினைத்தவள் பின்பு அவனுடன் பேசிய தருணங்களை அசைப்போட்டுக் கொண்டு அப்படியே தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலை எழும் பொழுதே உற்சாகமா எழுந்தவள்  நேரத்தைப் பார்க்க அது பத்து எனக் காட்டியது.’என்னது மணி பத்து ஆச்சா?இவ்வளவு நேரம் இந்தப் பாட்டி நம்மளை எப்படி தூங்கவிட்டுச்சு?இன்னைக்கு நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறோம்” என்று நினைத்தவள் பல் துலக்கிவிட்டு கீழே செல்ல

சௌந்தரம் பாட்டி திட்டாமல் “இப்ப தான் எழுந்தியா தாரு?கல்யாணம் பண்ணிப் போறதுக்குள்ள எல்லா வேலையும் கத்துக்கணும் சரியா?” என்று கேட்க அவளும் சரி என்று தலையை ஆடினாள்.

சமையலறைக்குள் சென்றவள் தன் அன்னையிடம் பால் கேட்க முறைத்தவர் “ஏன் டி இன்னும் நாலு மாசத்துல கல்யாணத்த வெச்சுக்கிட்டு பத்து மணி வரைக்கும் யாராச்சும் தூங்குவாங்களா?” என்க “அட விடு விசா…நம்ம கூட இருக்க வரைக்கும் அவள் இஷ்டப்படி இருக்கட்டும்.பொறுப்பு வந்தா தானா மாறிருவா…” என்று ருக்குமணி அவளுக்கு பரிந்து பேசினார்.

உள்ளே இவர்களின் வாக்குவாதம் கேட்டு சமையலறைக்குள் நுழைந்த பரந்தாமனைப் பார்த்ததும் “குட் மோர்னிங் ப்பா” என்று தாரு சொல்ல “குட் மோர்னிங் தங்கம்” என்றவர் மனைவியிடம் திரும்பி “இங்க என்ன சத்தம்?” என்று கேட்க

“ஆமா பொண்ண ஒன்னு சொல்லிறக் கூடாதே…உடனே வந்துருவாரு” என்று அவருக்கு கேட்குமாறு முனுமுனுக்க “ஏன் மா…அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணறத பாத்து பொறாமை படற?வேணும்னா உன் அப்பாவை போய் கூப்ட்டிட்டு வந்து உனக்கு சப்போர்ட் பண்ண சொல்லு” என்று தாயை வம்புக்கிளுதாள்.

இப்படி பேசியபடியே காலை உணவினை உண்டு முடித்தவள் தன் ரூமிற்குச் சென்றாள்.ப்ரியனுக்கு அழைக்கலாமா?வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்தியவள் பின்பு அம்முடிவை கைவிட்டவளாய் வாட்ஸ் ஆப்பைத் திறந்தாள்.

அதில் அவனிடமிருந்து ஏற்கனவே “குட் மோர்னிங்” என்ற மெசேஜ் வந்திருக்க தாருவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.பதிலுக்கு “குட் மோர்னிங்”என்ற மெசேஜ் அனுப்பியவள் அரை மணி நேரம் ஆகியும் அவன் பார்க்காததால் அவனுக்கு  அழைத்தாள்.

அந்த அழைப்பு எடுக்கப்படாமல் போகவே மீண்டும் அழைப்போமா என்ற யோசனையை கைவிட்டவள் அவனைப் பற்றி நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

விசாலாட்சி “மணி மூணு ஆச்சு டி.நேரத்துக்கு சாப்பிட்டா தான ஒடம்பு நல்லா இருக்கும்?” என்று எழுப்ப எழுந்தவள் “நீ போ ம்மா..நான் வர்ற” என்றுவிட்டு போனை எடுத்தாள்.”எப்பப் பார்த்தாலும் அந்த போன நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது.அப்படி அதுல என்ன தான் இருக்கோ தெரியலை” என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.

போனை எடுத்துப் பார்க்க அதில் ப்ரியனிடம் இருந்து “கொஞ்சம் வேலை.ப்ரீ ஆகிட்டு கூப்பட்ற” என்ற பதில் வந்திருந்தது.அவனிடமிருந்து பேச்சுக்களை எதிர்பார்தவளின் மனம் இந்த பதிலில் கொஞ்சம் சோர்வடைந்தது.மூளை அவனுக்கு வேலை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சாப்பிடச் சென்றவள் ஏதோ கொறித்துவிட்டு மீண்டும் வந்து படுக்கை அறையில் முடங்கினாள்.பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவனிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றும் வரவில்லை.

.ஆறு மணி வரை அவனிடம் இருந்து மெசேஜ் வராததினால் ‘காலைல இருந்து என்கிட்ட பேச இவங்களுக்கு பத்து நிமிஷம் கூட டைம் இல்லையா?வேலை இருந்தா கூட அப்படியே எனக்கு மெசேஜ் பண்ணிட்டே பார்க்க வேண்டியது தான?’என்ற எண்ணம் அவள் மனதில் வந்தது.

ஹாலில் பரந்தாமன் ராஜு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் இவளும் சென்று அமர்ந்து கொண்டாள்.ஆனால் மனம் மட்டும் ப்ரியனையே நினைத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்தவள் பின்பு மீண்டும் அறைக்குள் நுழைந்து போனைப் பார்த்தாள்.அவனிடமிருந்து எந்தவொரு மெசேஜ்ஜும் வரவில்லை.பின்பு தன் நண்பர்களிடம் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்தவள் அவர்களுக்கு போன் செய்து பேசினாள்.

போனை வைத்தவுடன் கார்த்திக் அவள் ரூமிற்குள் நுழைந்தான்.”ஏன் தாரு பேஸ் டல் அடிக்குது?” என்று முகத்தைப் பார்த்துக் கேட்க “இல்லையே நல்லா தான் இருக்க” என்று சமாளித்தவள் முகத்தை நன்றாக வைத்துக் கொண்டாள்.

“நேத்து என்கிட்ட மச்சான் பத்தி டிடைல்ஸ் கேட்ட.பட் அப்பா கிட்ட வேற விஷயம் பேசிட்டு இருந்ததுனால உங்கிட்ட சொல்ல முடில” என்று சொல்ல “என்னது மச்சான்னா?” என்று கேட்டவளிடம்

“ஆமா மச்சான் தான்.தங்கச்சி மாப்பிள்ளை எனக்கு மச்சான் தான?” என்றான்.

“பட் நீ அவங்கள மச்சான்னு கூபிட்டா எனக்கு கேட்க செம்ம காமெடியா இருக்கும்” என்றவள் அவன் குரலிலேயே “ப்ரியன் மச்சான்…ப்ரியன் மச்சான்” என்று பேசிக் காண்பிக்க அவள் தலையில் ஒன்று போட்டவன் “இந்த வாய் இருக்கே வாயி…இது இல்லனா உன்னை எல்லாம் நாய் கூட மதிக்காது” என்று சிரிக்க அவனுடன் அவளும் இணைந்து கொண்டாள்.

இன்று ருக்மணி இருவரையும் சாப்பிட அழைக்க “சாப்டுட்டு வந்து பேசலாம்” என்றவன் டைனிங் டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.மீண்டும் போனை எடுத்துப் பார்த்தவள் ஒரு பெரு மூச்சுடன் சாப்பிடச் சென்றாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் “உறுதி வார்த்தைக்கு போய் சேரி நாளைக்கு எடுத்துட்டு வந்தறலாம்.அப்போ தான் ப்ளோவுஸ் எல்லாம் தைக்க கொடுத்து வாங்க முடியும்” என்று ருக்குமணி சொல்ல தலையாட்டியவள் தன் தந்தையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

கார்த்திக்கிற்கு தன் நண்பன் அழைத்திருக்க  போனில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.பத்து நிமிடம் வரை பொறுத்துப் பார்த்தவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

சரியாக பத்து மணிக்கு “கால் பண்ணட்டா?” என்ற மெசேஜ் ப்ரியனிடம் இருந்து வர “ஹ்ம்ம்” என்று தான் கோபமாக இருப்பதைக் காட்ட அனுப்பினாள்.

“ஹலோ” என்றவன் சொல்ல சிறிது நேரம் தாரு ஒன்றும் பேசவில்லை.அவன் “ஹலோ… ஹலோ… “என்று அதற்குள் மூன்று முறை சொல்லிவிட “ஹலோ” என்றாள்.

“என்ன தூக்கமா?வாய்ஸ் ஒரு மாறி இருக்கு” என்று கேட்க கோபத்தில் “ஆமா நல்லா தூங்கிட்டு இருந்த” என்று கடுப்பாகக் கூற “என்ன ஆச்சு கோபமா?” என்றான்.

அவள் ஒன்றும் பேசாமல் இருக்க “சொல்லு …கோபமா?நீ சொன்னாதான எனக்குத் தெரியும்” என்று கேட்க “காலைல இருந்து ஒரு பை மினுட்ஸ் கூட என்கிட்ட பேச உங்களுக்கு டைம் கிடைக்கலையா?” என்றதற்கு

“ஓ…அதுக்குத் தான் மேடமுக்கு கோபமா?” என்றுவிட்டு சிரித்தவன் “ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்ட?” என்று கேட்க ‘என்ன சமாதானம் பண்ணாம இவங்க என்ன சொல்லிட்டு இருக்காங்க’ என்று நினைத்தவள் “ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள்.

“நம்ம சிறு தானியம் எல்லாம் இங்க இருந்து பாரின்க்கு எக்ஸ்போர்ட் பண்ணறோம்.பட் ஜெர்மனிக்கு எக்ஸ்போர்ட் பண்ணறதுல மட்டும் இவ்வளவு நாள் கொஞ்சம் ப்ரோப்ளம் இருந்துச்சு.இன்னைக்கு அது சால்வ் ஆகிடுச்சு.எல்லாம் நீ வீட்டுக்கு வரப் போற நல்ல நேரம் தான்னு அம்மா சொன்னாங்க” என்றவன் சொல்ல தன் கோபத்தை மறந்தவள்

“அத்தை செம்ம ஸ்வீட்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் உண்மையாக.”அவங்க பையன பிடிச்சிருக்கா?” என்றவன் குறும்பாகக் கேட்க “ம்ம்ம்…” என்று சிறிது நேரம் யோசனை செய்தவள் சிரித்துக்கொண்டே “இல்லை” என்றாள்.

“அடிப்பாவி” என்றவன் சொல்ல “எனக்கு இன்னும் உங்க மேல இருக்க கோபம் போல” என்று சொல்ல “உண்மையாவே நீ பாப்பா தான் டி.உன்ன எல்லாம் வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்” என்றவன் பெருமூச்சுவிட

“ஓ…அப்படியா?அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் என்கூட பேச வேண்டாம்” என்றவள் உடனே போனை வைத்துவிட்டாள்.ப்ரியன் விளையாட்டுக்கு சொன்னதை இவள் மிக சீரியஸ்சாக எடுத்துக் கொண்டாள்.கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தது.

போனைத் தூக்கிப் போட்டவள் ‘காலைல இருந்து எப்ப பேசுவான்…எப்ப பேசுவான்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.ஆனா இவன் என்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம் சொல்லறான்’ என்று நினைத்தவள் குப்புறப்படுத்து விட்டாள்.

அத்தியாயம் 6

 

அவள் போனை வைத்ததும் ப்ரியனுக்குத் தோன்றியது “என்ன டா விளையாட்டுக்கு சொன்னதைக் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறா” என்றுதான்.

மீண்டும் இரண்டு முறை அவளுக்கு அழைக்க போனை எடுத்துக் கட் பண்ணியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

இம்முறை அவனிடமிருந்து “கால் எடு ப்ளீஸ்” என்ற மெசேஜ் வர அதைப் பார்த்தும் அவன் காலை மீண்டும் எடுக்கவில்லை.

“இப்ப நீ கால் எடுக்கலேன்னா நான் மாமாக்கு கால் பண்ணி உங்கிட்ட குடுக்க சொல்லுவ” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் அவன் காலை எடுத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க

“ஓய் மேடம்!என்ன பேச மாட்டிங்களா?” என்று கேட்க “நீங்க தான என்ன வெச்சுட்டு கஷ்டம் சொன்னீங்க” என்று கோபக் குரலில் சொல்ல

“ம்ம்ம் ஆமா கஷ்டம் தான்.அன்னைக்கு கோவில்ல செம்ம கியூட்டா  உங்க அப்பா நல்ல ஐஸ்கிரீம் வாங்கித் தரன்னு சொன்னதைக் கேட்காம எனக்கு ரோட்ல  விற்கிற ஐஸ்கிரீம் தான் வேணும்முன்னு அடம்பிடிச்சியே அப்ப நினைச்சேன்

உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் உன்னை வெச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட போறான்னு.அப்புறம் அந்த மாங்கோ ஐஸ்கிரீம் ஸ்டிக்ல இருந்து கிழ ஒழுக அப்டியே மூஞ்சி எல்லாம் அப்பிட்டு சாப்டியே அப்ப நினைச்சேன் உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்னு.

அப்புறம் பொண்ணு பார்க்க வந்தப்ப என் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காம காபி நீட்டினியே அப்ப நினைச்ச உன்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்ன்னு”என்றவன் விலகிக் கொண்டிருக்க

நம் தாருவின் முகத்தில் மென்னகை குடிகொண்டது.அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு வெட்கத்துடன் கீழே குனிய “என்ன மேடம் வெட்கப் படுறிங்களா?” என்றவன் கேட்க அவள் ஒன்றும் பதில் பேசாமல் இருக்க போன் கட் ஆகிவிட்டது.

‘என்ன ஆச்சு?டவர் இல்லையா?’ என்றவள் போனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனிடமிருந்து வீடியோ கால் வர ஒருவித பூரிப்புடன் அட்டென்ட் செய்தாள்.

முகத்தில் வெட்கம் குடிகொண்டிருக்க சிறிய கருப்பு நிறப் பொட்டுடன் கண்ணை தாழ்த்தி இருந்தவளின் முகம் பார்த்தவன் “ஒய்” என்றழைக்க “ம்ம்” என்றாள் மென்மையாக.

“என்ன எப்பப் பார்த்தாலும் வெட்கம் தானா?” என்று கேட்க பதிலில்லை.”என்ன பாரு” என்றவன் இரண்டு முறை சொன்னவுடன் அவன் முகம் பார்த்தாள்.

“இன்னைக்கு காலைல இருந்து மீட்டிங் ஜெர்மனில இருந்து வந்திருந்தவங்க கூட.லஞ்ச் எல்லாம் கூட அவங்க கூட தான்.அவங்க என்கூட இருக்கப்ப நான் உங்கிட்ட பேசிட்டு மெசேஜ் பண்ணிட்டு இருந்தா நல்லா இருக்குமா? சொல்லு…

அப்பா வேற என்கூட தான் இருந்தாங்க.அதான் டா பேசல.எனக்கும் உன்கூட பேசணும் தான் ஆசை” என்று தன்னிலை விளக்கம் அளிக்க அவள் முகம் இன்னும் பிரகாசமானது.

“உங்களுக்கும் என்கூட பேசணும் ஆசை இருந்துச்சா?நான்  காலைல இருந்து நீங்க எப்ப மெசேஜ் பண்ணுவிங்க கால் பண்ணுவிங்கன்னு டென் மினிட்ஸ் ஒன்ஸ் மொபைல் எடுத்து பார்த்துட்டு இருந்த தெரியுமா?பட் உங்களுக்கு என்கிட்ட பேச தோணவே இல்லைன்னு தான் கோபம்” என்றாள்.

“எனக்கும் உங்கிட்ட பேசணும்னு நிறைய தோனுச்சு.பட் டைம் பெர்மிட் பண்ணல டா.சாரி” என்றான் உணர்ந்து.

“சாரி எல்லாம் சொல்லாதிங்க.நமக்குள்ளே நோ தேங்க்ஸ் அண்ட் சாரி ஓகே?எனக்கே நான் பண்ணறது கொஞ்சம் ஓவரா தான் தெரியுது.பட் ஐ ரியல்லி டோன்ட் நோ வை ஐ அம் பிஹேவிங் லைக் திஸ்.உங்களை எனக்கு நேத்து பார்த்தது மாதிரியே இல்லை.வித்தின் அ சிங்கள் டே ஐ ரியல்லி பீல் க்ளோஸ் டூ யூ” என்று மனதில் இருந்ததை எல்லாம் சொன்னாள்.

“அம்மு!என்னால டெய்லியும் டே டைம்ல பேச முடியுமா தெரியலை.பிகாஸ் என் வொர்க் அப்படி.பட் நைட் கண்டிப்பா நமக்கான டைம் ஓகே.இனி இதுக்கு எல்லாம் கோபப்படக் கூடாது.சண்டை போடக்கூடாது.நம்ம கல்யாணம் அப்புறம் கூட இப்படி தான் இருக்கும்.நான் மோர்னிங் 9 க்கு போன சாயந்திரம் வரதுக்கு ஏழு மணி மேல ஆகலாம்.சினிமா மாறி எல்லாம் ரியல் லைப்ல நடக்காது டா” என்றவன் பொறுமையாக தன் நடைமுறையை சொன்னான்.

“ம்ம்ம் சரி” என்று உள்ளே போன குரலில் சொன்னவள் தன் மனதிற்குள் அவன் அம்மு என்று சொன்னதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

“இன்னைக்கு நீங்க காலைல பண்ண குட் மோர்னிங் மெசேஜ் பார்த்து நான் எவ்வளவு ஹாப்பியா பீல் பண்ணினேன் தெரியுமா?” என்றவள் சொல்ல அவள் குரலில் இருந்த உற்சாகம் அவன் முகத்தில் தாவிக் கொண்டது.

“அடிப்பாவி அப்ப காலைல பதினோரு மணிக்கு தான் எழுந்தியா?” என்றவன் கேட்க “இல்லையே பத்து மணிக்கே எழுந்திட்டேன்” என்று பெருமையாக சொன்னவளை ஒரு வித ஆச்சர்யம் கலந்த பார்வையுடன் பார்த்தவன்

“உங்க வீட்ல லேட்டா எழுந்ததுக்கு ஒன்னும் சொல்லலியா?” என்றவன் கேட்க “பாட்டி இங்க வந்ததுக்கு அப்புறம் ஏழு மணி மேல தூங்கவே விடமாட்டங்க.பட் இன்னைக்கு பத்து மணி வரைக்கும் தூங்குனதுக்கு ஒண்ணுமே சொல்லல.எனக்கே செம்ம ஆச்சர்யம்” என்றவள் வியக்க

“அடிப்பாவி ஏழு மணி வரை தான் தூங்கவிடுவாங்கனு சொல்லற?” என்றதற்கு “பாருங்க எங்க பாட்டி எப்படி என்னை கொடுமை பண்ணறாங்கன்னு.யாருமே பாட்டிகிட்ட அவள் தூங்கட்டும் சொல்லல.பெங்களூர்ல எல்லாம் நான் காலேஜ் இல்லனா லஞ்ச்க்கு தான் பெட் விட்டு எழுந்திருப்பேன்” என்று சொல்ல அவனுக்கு உள்ளே பக் என்றிருந்தது.

“அடியே!ஏழு மணி வரை உங்க வீட்ல உன்ன தூங்க விடுறதே பெரிய விஷயம்.என்ன எல்லாம் ஐந்தரை மணிக்கு மேல அம்மா இங்க தூங்க விடமாட்டாங்க “ என்று சொல்ல “அச்சோ!ரொம்ப பாவம் நீங்க”என்றாள்.

“நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீயும் நேரத்துல தான் எழுந்துக்கணும்.நம்ம வீட்ல எல்லாம் நேரத்துல எழுந்துப்பாங்க” என்று சிறு கண்டிப்புடன் சொல்ல அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது.

“அம்மு!இவ்வளவு நாள் நீ சிங்கள் டா.பட் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உனக்கு நிறைய ரெஸ்பான்ஸுபிலிடிஸ் வரும்.நான் உனக்கு கண்டிப்பா அதுல ஹெல்ப் பண்ணுவேன்.பட் எல்லாத்துலையும் பண்ண முடியாது டா.

நம்ம குடும்பத்துல உங்கிட்ட நிறைய இல்லைனாலும் கொஞ்சம் எதிர்பார்பாங்க ஓகே.நீ பொறுப்பா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்” என்று சொல்ல தாருவிற்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

அவள் தலையாட்டிய முறையிலேயே அவளுக்குப் புரியவில்லை என்று கண்டுபிடித்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

“என்ன புரியலையா?” என்று கேட்க தலையை ஆம் என்று ஆட்டினாள்.”நான் சொல்லறது எல்லாம் கேளு.அது போதும்” என்று சொல்ல அதற்கும் தலையாட்டினாள்.

“என்ன தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலை ஆட்டிட்டு இருக்க?’ என்று கேட்க “போ டா” என்று ஒரு ப்ளோவில் சொல்லிவிட்டவள் பின்பு தன் நாக்கை கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவன் கோபமாக இவளை முறைத்துக்கொண்டு இருக்க “ஏதோ ஒரு பிலோல டா வந்துருச்சு.பட் என்னால எப்பவும் உங்களை வாங்க போங்க எல்லாம் கூப்பிட முடியாது”என்று அவனைப் போலவே முறைத்துக் கொண்டே சொல்ல ப்ரியன் சிரித்துவிட்டான்.

 

“சும்மா நான் முறைச்சா என்ன பண்ணுற பாக்கலாம்னு முறைச்சேன்.எப்படி தோணுதோ கூப்டுக்கோ.பட் தனிய இருக்கப்ப மட்டும்.எல்லாரும் இருந்தா வாங்க போங்க தான்” என்று சொல்ல தலையாட்டினாள்.

“மாமா கூட கூப்பிடலாம்” என்று அவன் கேலியாக கூற “என்னது மாமாவா அப்படி எல்லாம் நான் கூப்பிட மாட்டேன்.போ டா” என்றுவிட்டாள்.

“சரி அப்ப நாளைல இருந்து காலைல நேரத்துல எழுந்திருக்கிற.அப்புறம் வாசல் கூட்டி கோலம் போடுற” என்று சொல்ல “என்னது கோலமா?” என்று அதிர்ந்தவள் “அது எல்லாம் எனக்கு போடத் தெரியாது” என்றாள்.

“தெரியாதுன்னா கத்துக்கோ டி.லைப் இஸ் டூ லேர்ன்” என்றதற்கு அவள் “சரி” என்று சொல்ல “அப்புறம் பொட்டு ஏன் இவ்வளவு சின்னதா கண்ணுக்கே தெரியாத மாதிரி வைச்சிருக்க?” என்றான் “நான் பொட்டே வைக்க மாட்டேன்.பட் இங்க வந்து பாட்டிக்கு பயந்து தான் வைக்கிறேன்” என்றாள் சின்ன சலிப்புடன்.

“எனக்கு பெரிய போட்டு வைச்சா ரொம்ப பிடிக்கும்” என்று சொல்ல தாரு ஒன்றும் சொல்லாமல் பேச்சை மாற்றிவிட்டாள்.

“நான் இன்னைக்கு காலைல இருந்து உங்ககிட்ட ஒரு இம்பார்டன்ட் விஷயம் பேசணும் நினைச்சேன்.பட் டாபிக் எங்கயோ மாறிருச்சு.உன்னோட பேரு கண்டுபிடிச்சுட்ட!” என்றாள்.

அவன் புருவம் உயர்த்தி சொல்லு என்பதைப் போல் பார்க்க அவனிடம் விளையாட நினைத்தவள் “ப்ரியதர்ஷன்” என்றாள்.

“சூப்பர் டி.கரெக்டா கண்டுபிடிச்சுட்ட”என்றவன் கைதட்ட அவளுக்கு மிகவும் குழப்பம் ஆகிவிட்டது.”டேய் லூசு!உன் பேரு கவிப்ரியன் தான?” என்று நகத்தைக் கடித்துக்கொண்டு கேட்க சிரித்தவன் “பார்டா!என்னவே இந்த பேபி ஓட்ட நினைக்குது” என்று அவள் முகத்தை குத்துவதைப் போல் செய்து காண்பித்தான்.

நாக்கை கடித்தவள் “சரி…சரி…ஓட்டாத” என்று சொல்ல “என்ன பழக்கம் டி இது?ஒன்னா நாக்கை கடிக்குறது.இல்லனா நேகத்தை கடிக்குறது” என்று கேட்க “டேய்! உனக்கு சௌந்தரம் பாட்டியே 1௦௦௦ டைம்ஸ் பெட்டெர் டா” என்று கை எடுத்து கும்பிட்டாள்

.”சரியான பஞ்சாங்கம்”என்று அவளுக்குள் முணுமுணுத்துக்கொள்ள அவனுக்கு அது நன்றாக கேட்டது.

“இந்த பழைய பஞ்சாங்கம் கூட தான் அம்மிணி நீங்க இனி வாழ்கை புல்லா வாழனும்” என்றவன் கண்ணடிக்க “இந்த பெட்டெர் மாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று தன் பெருவிரலை தன்னைத் தானே நோக்கிக் கேட்டுக்கொண்டவளைப் பார்த்துச் சிரித்தவன்

“சரி சொல்லு பேர் எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க “நம்ம மார்க் தான் சொன்னாரு”என்றவள் கெத்தாக சொல்ல “அட நம்ம மார்க் பையன் பார்த்த வேலையா இது?” என்று சிரித்தவன் “பரவாயில்லை டி.உனக்கு கூட கொஞ்சம் அறிவு இருக்கு”என்றான் கேலியாக.

அவனை முறைத்தவள் “உங்க அளவுக்கு இல்லைனாலும் நாங்களும் கொஞ்சம் அறிவாளி தான் பாஸ்”என்றவள் சொல்ல “நீ என் அறிவுவுவு வாளி டி” என்று ஓட்ட “போ டா.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன் தெரியுமா உன் பேரு?”என்று கேட்க

“சரி சரி சும்மா சொன்னேன்.நீயே கண்டுபிடிச்சது ரொம்ப சந்தோசம்.என்ன வேணும் உனக்கு?” என்று கேட்க “நீங்க பர்ஸ்ட் உங்களைப்பற்றி சொல்லுங்க.அப்புறம் நான் என்ன வேணும் சொல்லற” என்றாள்.

“என்ன பத்தி…ம்ம்ம்..என்ன சொல்லறது?பி.டெக் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பி.எஸ்.ஜில படிச்சேன்.அப்புறம் எம்.பி.ஏ யூ.எஸ்ல பண்ணின.இப்ப அப்பா ஓட சேர்ந்து ரைஸ் மில் பார்த்துக்குற.அப்புறம் மில்லேட்ஸ் எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணற பிசினஸ்” என்று தன்னைப் பற்றி சொன்னான்.

“இதுக்கு முன்னாடி நீங்க ஏதாச்சும் ரிலேசன்ஷிப்ல இருந்துருக்கிங்களா?”

“இல்லை.ஜஸ்ட் சைட் சீயிங் மட்டும் தான்”

“தேங்க் காட்!நானும் இதுக்கு முன்னாடி எந்த ரிலேசன்ஷிப்லையும் இருந்தது இல்லை.பட் லவ் பண்ணனும் ஆசை எல்லாம் இருந்துச்சு.”

“ஏன் பண்ணிருக்க வேண்டியதுதான?”

“அப்பாக்கு பிடிக்காது.நான் என்ன சொன்னாலும் அப்பா செய்வார்.பட் லவ் மட்டும் பிடிக்காது”என்றவள் விக்னேஷ் பற்றியும் சொல்லிவிட்டாள்.

“எனக்கு காலைல பொண்ணு பார்க்க வந்துருக்கிங்க தெரிஞ்ச உடனே செம்ம கோவம்.பட் சந்தியா அக்கா பார்த்ததும் தான் நீங்க மாப்பிளை தெரிஞ்சுச்சு.அப்ப செம்ம ஹாப்பி.அன்னைக்கு கோவில்ல நான் உங்களை செம்மையா சைட் அடிச்சேன்.பட் நீங்க தான் என்ன திரும்பி கூட பார்க்கல”என்றாள் சோகம் இழைந்தோடும் குரலில்.

சிரித்தவன் “யாரு உன்ன பார்க்கல?அந்த பிங்க் கலர் குர்த்தால எவ்வளவு அழகா இருந்த தெரியுமா?நீ சுப்ரியா கூட விளையாண்டப்ப என் கண்ணு புல்லா உன் மேல தான்.உன்னோட ஆக்ஷன்ஸ் எல்லாமே எனக்கு சின்னப் பிள்ளைத் தனமா தான் தெரிஞ்சுச்சு.

அப்புறம் பார்த்தா உங்க அப்பா கூட அவ்வளவு சண்டை போடுற ஐஸ்கிரீமுக்காக.எனக்கு செம்ம சிரிப்பு” என்றவன் சிரிக்க “எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு” என்று தாரு சொல்ல

“இது ஒன்னும் சந்தோஷ் சுப்ரமணியம் படம் இல்லை மா…நடு ராத்திரியில போய் ஐஸ்கிரீம் சாப்பிடுறதுக்கு” என்றவன் சிரிக்க “போ டா.வேஸ்ட் பெல்லோ”என்று அவள் திட்ட அவன் அவளை வார என்று நேரம் போனது.

இன்றும் இருவரும் நன்றாக கடலை வறுத்துவிட்டு  தூங்க மூன்று மணி மேல் ஆகிவிட்டது.

அத்தியாயம் 7

அடுத்த நாள் காலை தாரு வைத்திருந்த அலாரம் ஐந்தாரை மணிக்கு அடிக்க கஷ்டப்பட்டு கண் விழித்தவள் அதை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்.மனது எழுந்து கொள் எழுந்து கொள் என்று சொல்ல அவளால் கண்ணையே திறக்க முடியவில்லை.

மிகவும் சிரமப்பட்டு ஆறு மணிக்கு எழுந்தவள் ஹாலிற்கு செல்ல மொத்த குடும்பமும் இவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது.

“நான் கோலம் போடுற.எனக்கு சொல்லிக் கொடு”என்று தன் அம்மாவிடம் கேட்க “நீ தானா டி இது?” என்றவர் வாய்மேல் விரல் வைத்துக் கேட்க முறைத்தவள் “சொல்லி கொடுன்னா சொல்லிக் கொடு”என்று பல்லைக் கடிக்க அவர் அவளுக்கு சொல்லிக் கொடுக்க சுமாராக கோலத்தை போட்டு முடித்தாள்.

ப்ரியனிடம் இருந்து குட் மோர்னிங் என்ற மெசேஜ் வந்திருக்க அவளுக்கு உற்சாகமாகிவிட்டது.அதே உற்சாகத்துடன் புடவை எடுக்க கிளம்பிச் சென்றாள்.

அன்று அவனிடமிருந்து சிறு சிறு மெசேஜ்ஜஸ் வர பெருமகிழ்ச்சி அடைந்தாள்.குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இன்று தாருவிற்கு உறுதிவார்தைக்கு புடவை எடுக்கச் சென்றனர்.

தாருவிற்கு ஷாப்பிங் செய்வதில் அலாதிப் ப்ரியம் இருந்ததால் மிகவும் ஆர்வமாக புடவைகளை தேர்வு செய்தாள்.புடவை இதுவரை பெரியதாக அணிந்து பழக்கமில்லாததால் கொஞ்சம் செலெக்ட் செய்ய சிரமப்பட்டாள்.

ஒரு வழியாக மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு மூன்று புடவைகளை தேர்வு செய்திருந்தாள்.ஆனால் அதில் எதை எடுப்பது என்று தெரியாமல் இருக்க வீட்டினர் அனைவரும் உன் இஷ்டம் என்று விட்டனர்.

ப்ரியனிடம் கேட்கலாமா என்று யோசித்தவள் பின்பு ‘பிஸியா இருந்தா என்ன பண்ணறது?’என்று நினைத்தவள் அவளே தேர்ந்தெடுக்க நினைத்தாள்.ஆனால் முடியாமல் முழிக்க பரந்தாமன் “மூணுமே ரொம்ப அழகா இருக்கு தங்கம்.மூணையுமே எடுத்துக்கோ”என்று விட்டார்.

இரவு சரியாக தூங்காதது மற்றும் பகல் முழுவதும் அலைந்தது அவளை மிகவும் சோர்வடையச் செய்ய மாலை வீட்டிற்கு வந்ததும் போய் படுத்துவிட்டாள்.

இரவு ஒன்பது மணிக்கு ருக்குமணி வந்து சாப்பிட அழைக்கவும் தான் எழுந்தவள் முகம் கழுவிவிட்டு சாப்பிடச் சென்றால்.

“நாளைக்கு போய் டைலர் கிட்ட ப்ளெவுஸ் தைக்க கொடுத்துட்டு வந்தரலாம்.எந்த சாரீனு டிசைட் பண்ணிக்கோ தாரு.அதை கொஞ்சம் கிராண்டா தெச்சுக்கலாம்”என்று விசாலாட்சி சொல்ல சரி என்றாள்.

இரவு பத்து மணிக்கு ப்ரியன் அழைக்க நடந்த எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.”நான் செலெக்ட் பண்ண உங்ககிட்ட கேக்கலாம் நினைச்ச.பட் பிஸியா இருப்பிங்க நினைச்சு கால் பண்ணல” என்று சொல்ல “ஏதாச்சும் இம்பார்டன்ட் விஷயம்னா நீ எனக்கு தாராலமா கால் பண்ணலாம் அம்மு.உன்ன விட எனக்கு இம்பார்டன்ட் எதுவுமில்லை.புரிஞ்சுதா?” என்று கேட்க அவள் மனதில் சந்தோசத்தின் சாரல்கள்.

தாரு புடவைகளை போட்டோ எடுத்து அனுப்ப ப்ரியன் அதிலிருந்த ஊதா நிற புடவையை செலெக்ட் செய்தான்.

இன்றும் அவர்கள் பேச்சு விடியற்காலை வரை நீண்டது.இருவரின் விருப்பு வெறுப்பு தொடங்கி அன்றாடம் நடைமுறைகள் பற்றியும் கூடப் பேசத் தொடங்கி இருந்தனர்.

தாருவிற்கு ப்ரியன் தான் உலகமாக மாறிப்போனான்.இவ்வளவு வருடங்களில் விசாலாட்சி சொல்லிக் கேட்காததைக் கூட ப்ரியன் சொன்னவுடன் கேட்டுக் கொண்டாள்.காதல் அவளை மாற்றி இருந்தது.

இப்பொழுது சமையலும் கொஞ்சம் கற்றுக் கொண்டு வருகிறாள்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது “அம்மா ரொம்ப சூப்பர்ரா சமைப்பாங்க.அதுவும் எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு வைப்பாங்க பாரு..அவ்வளவு டேஸ்டா இருக்கும்” என்று சொல்லி இருந்தான் ப்ரியன்.

அன்றிலிருந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட முறை செய்துவிட்டாள் அக்குழம்பை.ஆனால் தாருவிற்கு நன்றாக வரவேயில்லை.

அன்று மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தவள் சமையலறைக்கு சென்றாள்.அவள் செல்வதைப் பார்த்த கார்த்திக் “இன்னைக்கு எவ்வளவு பேர் உயிர் போகப் போகுதோ?முதல்ல நாம எஸ்கேப் ஆகிறனும் டா சாமி” என்று சத்தமாக சொல்ல உள்ளே சென்றவள் மீண்டும் ஹாலிற்கு வந்து அவன் முதுகில் ஒன்று போட்டால்.

“ஆ!அம்மா!வலிக்குது டீ எரும”என்றவன் அலற “நல்ல அடி தங்கம் அவன…வாய் ரொம்பத் தான் பேசுறான்” என்றார் சௌந்தரம் பட்டி.

இப்பொழுது சௌந்தரம் பாட்டிக்கும் தாருவிற்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.பேத்தி பொறுப்பாக மாறிவிட்டாள் என்பது அவருக்கு மிகுந்த சந்தோசத்தையும் மனநிம்மதியையும் கொடுத்திருந்தது.

வீட்டிலிருந்த அனைவருக்குமே தாரு இவ்வளவு பொறுப்பாக மாறியது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தது.தாருவின் மாற்றங்களுக்கு காரணமாய் இருந்த மாப்பிள்ளை ப்ரியனின் மேல் அனைவருக்கும் மரியாதை கூடியது.

‘வீட்டின் செல்ல இளவரசியாக வளம்வந்தவள் மருமகளாக செல்லும் இடத்தில் இவளின் சிறுபிள்ளைத் தனத்தினால் பிரச்சனை வந்துவிடுமோ?’என்று பயந்த விசாலாட்சியின் மனதுக்கு இப்பொழுது தான் ஆறுதலாக இருந்தது.

அன்றும் மிகவும் சிரமப்பட்டு யாருடைய துணையும் இல்லாமல் இரண்டு மணி நேரத்தில் மதிய சமையல் அனைத்தையும் சமைத்துவிட்டு வெளியே தாரு வர “வாங்க மாப்பிள்ளை”என்று ப்ரியனை பரந்தாமனும் பத்மநாபனும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ப்ரியன் இன்று இங்கு வரப்போவதைப் பற்றி ஒன்றும் சொல்லாததால் தாரு இன்ப அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.”வந்தவர வாங்கன்னு கூப்பிடு தாரு”என்ற தந்தையின் குரலில் தன்னுணர்வு பெற்றவள் “வாங்க” என்று அவனை வரவேற்று அவனுக்கு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றால்.

அதற்குள் வெளியே சென்றிருந்த  பெண்கள் மற்றும் கார்த்திக் வந்துவிட மற்றுமொரு வரவேற்புப் படலம் நடைப்பெற்றது.

ப்ரியனின் மனம் இன்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.காரணம் தாரு வைத்திருந்த பொட்டு.அவன் அன்று சொன்னதைப் போல் பெரிய போட்டு வைத்திருந்தாள்.அது அவளின் அழகை மேலும் எடுத்துக் காட்டியது.

அவனிடம் தண்ணீர் சொம்பை நீட்ட அவள் கையை அழுந்தப் பற்றியபடி வாங்கினான்.தாருவிற்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.வெட்கத்தில் முகம் குனிந்து கொண்டாள்.

தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அதே போல் சொம்பைக் கொடுக்க அவளுக்கு வெட்கத்தில் முகம் செந்தணலாக சிவந்திருந்தது.

பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ப்ரியனின் கண்கள் அவ்வப்பொழுது தாருவை தொட்டு மீண்டன.ப்ரியனை ராஜு தாத்தா சாப்பிட அழைக்க “இன்னைக்கு நீங்க செம்மையா மாட்டுனிங்க.சமையல் செஞ்சது தாரு”என்று கார்த்திக் சொல்ல “இனி வாழ்க்கை புல்லா அதை தான் சாப்பிடனும்னு தலைல எழுதிருக்கே” என்றான் சிரித்துக்கொண்டு கவிப்ரியன்.

அவன் சொன்னதைக் கேட்டு முறைதுவிட்டுப் போன தாரு சாப்பாடு பரிமாறும் பொழுது இவன் பக்கம் வரவே இல்லை.”இன்னைக்கும் எண்ணை கத்திரிக்காய்யா?இவள் சமைக்க பழகுறன்னு சொல்லி வாரத்துல நாலு நாள் இதை செஞ்சு என்ன வெச்சு செய்யற” என்று புலம்பிய கார்த்திகைப் பார்த்து ப்ரியன் வாய்விட்டு சிரித்தான்.

ஆனால் அவன் மனதில் அவ்வளவு சந்தோசம்.தனக்காகத் தான் அவள் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாள் என்று.அன்று எண்ணை கத்திரிக்காய் மிகவும் அருமையாக வந்திருக்க எப்பொழுதும் சாப்பிடும் அளவை விட ப்ரியன் அன்று அதிகமாக சாப்பிட்டான்.

அவன் சாபிட்டு முடிக்கும் வரை அவனை ரசித்தவள் விசாலாட்சி “மாப்பிளைக்கு துண்டு எடுத்துக் கொடு” என்று சொல்ல அதை எடுக்கச் சென்றால்.அவன் கை கழுவியதும் அதைக் கொடுக்க வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்தான்.

அவள் என்ன என்பதைப் போல் பார்க்க “மாமன் கை தொடைக்க சேலை கட்டலைன்னா கூட பரவாயில்லை…கடைசிக்கு ஒரு ஷால் ஆச்சு போடக் கூடதா டி?” என்று கேட்க சிரித்தவள் அவன் கையில் துண்டைக் கொடுக்க “ஏன் துடைச்சு விடமாட்டியா?” என்று அவளது இடையில் கை கொடுத்து கேட்க கூச்சத்தில் நெளிந்தவள் “விடு டா…யாராச்சும் வந்திற போறாங்க” என்று சொல்ல “கை தொடச்சு விடு..விடுற”என்றவன் சொல்ல வேறு வழி இல்லாமல் துடைத்துவிட்டாள்.

மீண்டும் ஏதோ ப்ரியன் சொல்லவர அதற்குள் கார்த்திக்கின் குரல் கேட்கவே இருவரும் விலகினார்.மீண்டும் பெரியவர்களுடன் அமர்ந்து பேசியவன் சிறிது நேரம் கழித்து தாருவுடன் பேச வேண்டும் என்று சொல்ல இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர்.

சிறிது தூரம் உள்ளே சென்றவுடன் தாருவை ப்ரியன் இறுக அணைத்துக் கொண்டான்.அவளும் அவனுடன் ஒன்றிவிட்டாள்.சிறிது நேரம் கழித்து இருவரும் விலக அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் “இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?” என்று கேட்க அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

“என்ன பாரு டி”என்றவன் சொல்ல அவனைப் பார்த்தால் “வீட்டுக்குள்ள வர்றப்ப உன் கோலம்.சூப்பரா போட்டிருக்க.அப்புறம் எனக்கு பிடிச்ச இந்த பெரிய பொட்டு.எல்லாத்தையும் விட சூப்பர் உன்னோட எண்ணை கத்திரிக்காய் குழம்பு” என்று சொல்லி அவள் நெற்றியில் முட்டினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இப்படியே நாட்கள் அழகாய் சென்றன.இருவருக்கும் முரண்பட்ட கருத்துகள் வந்தாலும் ஒன்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விட்டனர் அல்லது மற்றவருக்கு அதைப் புரியவைத்து மாற்றிவிட்டனர்.

“வாங்க… போங்க…” என்ற அழைப்பு மாறி இப்பொழுது “வா டா..போ டா..”என்ற அழைப்பு தான் தாருவிற்கு இப்பொழுது வருகிறது.ப்ரியனும் அவளை “அம்மு”என்று அழைப்பான்.

கிராமத்து வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி தாரு அவள் நடைமுறைகளை கொஞ்சம் மாற்றிக் கொண்டாள்.சிரமப்பட்டாலும் ப்ரியனின் மேல் இருந்த அன்பு அவளை இதைச் செய்ய வைத்தது.

ப்ரியனுடம் பேசுவது மட்டுமல்லாது இப்பொழுது தன் மாமியார் நாத்தனார் உடனும் போன் பேசும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்.

ஒரு அளவிற்கு பொறுப்புகளை எல்லாம் கற்றுக்கொண்டாள்.அவள் உடை விஷயம் கூட சற்று மாறி இருந்தது.சில மாற்றங்கள் ப்ரியனால் நிகழ்ந்தன சில மாற்றங்கள் அவனுக்காக அவளாகவே அவளை மாற்றிக்கொண்டாள்.

ப்ரியனும் தாருவிற்காக தன் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தான்.தன் உடை விஷயங்களை அவளுக்குப் பிடித்தது போல் மாற்றிக்கொண்டான்.

இருவரும் சேர்ந்து இருமுறை கோவைக்கு தனியாக வந்திருந்தனர்.அவள் முதல் முதலாக கேட்ட ஐஸ்கிரீமை இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான் நம் ப்ரியன்.

உறுதிவார்த்தை நிச்சயதார்த்தத்தின் பொழுது புகுந்த வீட்டினருடனும் கொஞ்சம் நன்றாகப் பழகிக் கொண்டாள் தாரு.

உறுதிவார்தையும்,நிச்சயதார்த்தமும் நல்ல படியாக முடிந்திருக்க நாளைக் காலை இருவருக்கும் திருமணம்.இன்றைய இரவு ரிசப்சனிலேயே இருவரும் நின்று நின்று கலைத்துப் போய் இருந்தாலும் தூங்காமல் போன் பேசிக் கொண்டிருந்தனர்.

பன்னிரண்டு மணி ஆனதும் “போதும் போய் தூங்கு டி.காலைல நேரத்துல எந்திருக்கணும்”என்று ப்ரியன் சொல்ல “ஏன் டா இவ்வளவு நாள்ல ஒரு நாள் ஆச்சு என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருக்கியா?” என்று தன் நெடு நாள் வருத்தத்தை அவனிடம் கேட்க சிரித்தவன் “போய் தூங்கு டி.நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றான்.

அவள் ஒன்றும் பேசாமல் காலை கட் செய்யாமல் இருக்க “ஒய் மேடம்!என்ன கோபமா?” என்றான் அவளை சரியாய் புரிந்து கொண்டு.இப்பொழுதும் அவள் ஒன்றும் பேசாமல் இருக்க அவன் போனை வைத்துவிட்டான்.

அவளுக்குத் தெரியும் அவன் கண்டிப்பாக இப்பொழுது அவளைப் பார்க்க வருவான் என்று.மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து சில பூக்களை எடுத்தவன் அங்கிருந்த ரிப்பனைக் கொண்டு அதை அழகாய் கட்டி அவள் அறைக்கு எடுத்துச் சென்றான்.

அவளுடன் இருந்தவர்கள் பாகத்து அறையில் தூங்கி இருக்க இவள் மட்டுமே இங்கே இருந்தாள்.உள்ளே வந்தவனைப் பார்த்ததும் சிரித்தவள் புருவம் உயர்த்தினால்.

அவள் முன் மண்டி இட்டவன் “ஐ லவ் யூ” என்று சொல்ல “போ டா உனக்கு ப்ரொபோஸ் கூட பண்ணத் தெரியல” என்று தாரு சலித்துக்கொள்ள “நீ கூபிட்ட உடனே வந்தன்ல என்ன சொல்லணும்.நீங்க நினைக்கிற மாதிரி ட்ரீம் ப்ரோபோசல்ஸ் எல்லாம் சினிமால தான் மா நடக்கும்” என்று சொல்ல

“போ டா!நான் எப்ப எது கேட்டாலும் இதே சொல்லு” என்றாள்.மேலும் அவளைப் பேச விடாமல் இறுக அணைத்தவன் தன் அதரங்களை அவள் நெற்றியில் பதித்துவிட்டுச் சென்றான்.

அடுத்த நாள் காலை முப்பது முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்க கவிப்ரியன் தாரிகாவின் கழுத்தில் மங்கள நானையிட்டான்.

கழுத்தில் தாலி ஏறியதும் தாரு சிரித்த முகமாக ப்ரியனைப் பார்க்க அவன் கண்ணில் இரு சொட்டுக் கண்ணீர்.கண்ணைச் சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

பரந்தாமன் விசாலாட்சி இருவரின் கண்ணிலும் கண்ணீர்ப்படலம்.விசாலாட்சி கூட தன்னை சமாளித்துக் கொண்டார்.ஆனால் பரந்தாமனால் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.

ப்ரியனின் பெற்றோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள் இவர்களிடம் வர கண்ணைத் துடைத்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்தனர் பெற்றோர்.

அத்தியாயம் எட்டு

அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டு ப்ரியனுடன் தாரு தாரிகா கவிப்ரியன்னாக அவர்கள் வீடு செல்லும் நேரம் இது!

பிறந்த வீட்டினர் அனைவரும் கண்கலங்க தாருகாவும் தன் தந்தையை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.என்னதான் அவள் தன் நாயகன் உடன் அவன் வீடு சென்றாலும் அவள் முதல் நாயகன் என்றும் அப்பா தானே!

ப்ரியனிற்கே இச்சூழல் கொஞ்சம் கனமானதாகத் தான் இருந்தது.இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகியும் இருவரும் அழுது கொண்டே இருக்க சௌந்தரம் பாட்டி தான் இருவரையும் சமாதானப்படுத்தி தாருவை ப்ரியனின் கையில் பிடித்துக் கொடுத்தார்.

அவள் மீண்டும் அழ ஆரம்பிக்க சந்தியா அவளை தோல் தாங்கினாள்.பரந்தாமனின் முகம் தெளிவில்லாமல் மகளையே பார்த்துக் கொண்டிருக்க மாமனாருடன் தனியாகப் பேசச் சென்றான் மருமகன்!

அவர் கையைப் பிடித்தவன் “உங்களோட அளவுக்கு அவளை என்னால நல்லா பார்த்துக்க முடியுமா தெரியலை.பட் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்” என்று உறுதி கொடுக்க மருமகனை அணைத்துக்கொண்டவர் கண்கள் இப்பொழுது ஆனந்தத்தில் கலங்கின.

இப்பொழுது அவர் முகம் சற்று தெளிவடைந்து இருக்க மகளை சிரித்த முகமாகவே வழி அனுப்பினார்.ஆனால் தாருவின் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.

காரில் ஏறி அமர்ந்ததும் ப்ரியனின் தோளில் சாய்ந்து கண் முடியவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வர அதைத் துடைத்தவன் ஆறுதலாக தலையை தடவிக் கொடுத்தான்.

அப்படியே அவன் தோளில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தவள் வீடு வந்ததும் ப்ரியன் எழுப்பியதும் தான் எழுந்தாள்.தூங்கி எழுந்ததில் மனம் சற்று தெளிவடைந்து இருக்க ப்ரியனைப் பார்த்துச் சிரித்தவள் கிழே இறங்கினாள்.

சந்தியாவும் சர்மிளாவும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.முதலில் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டவள் பின்பு சமையலறையில் உப்பு,புலி,பருப்பு,சர்க்கரை,தண்ணீர் எல்லாம் தொட்டுக் கும்பிட்டாள்.

ப்ரியனின் பாட்டி பால் பழம் கொடுக்க ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டு சாப்பிட்டனர்.தாருவிற்கு பழம் பிடிக்காத காரணத்தினால் தாருவிற்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு முழுவதையும் அவன் சாப்பிட்டுவிட்டான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளவயதினர் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.பின்பு குடத்தில் தண்ணீர் விட்டு மோதிரம் எடுக்கும் விளையாட்டு ஆரம்பமானது.

இருவரும் தண்ணீருக்குள் கை விட ப்ரியன் சிறிது நேரம் தாருவின் கையைப் பிடித்து சீண்ட அவனை எல்லோர் முன்பு முறைக்கவும் முடியாமல் அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து விட தாருவின் கையில் தங்க மோதிரம் வந்துவிட்டது.இப்படியாக பொழுது இனிமையாக கழிந்தது.

முதலிரவு!

படபடக்கும் நெஞ்சோடு தாரு உள்ளே நுழைய ப்ரியனை அவளால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.”ஹலோ மேடம் ஜி!இந்த சீன்ல நீங்க என்னோட கால்ல விழனும்”என்றவன் சொல்ல தாருவிற்குள் இருந்த வெட்கம் இப்பொழுது காணாமல் போயிருந்தது.

அவனை இரண்டடி போட்டவள் “போ டா”என்று சொல்ல அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன் அவள் அதரங்களில் விளையாடத் தொடங்கினான்.

@@@@@@@@@@@@@@@@@@@

நான்கு ஆண்டுகள் கழித்து,

“தாரு!தாரு!”என்ற மழலையின் குரல் வீடு முழுவதும் நிறைந்திருந்தது.”என்ன டா தங்கம்?” என்ற தகப்பனிடம் “தாரு என்னோட சாக்லேட்ட மறைச்சு வெச்சுட்ட.டேபிள் மேல இருந்தத காணோம்” என்றாள் கவிரிகா!கவிப்ரியன் தாரிகாவின் தவப்புதல்வி!மூன்று வயதே ஆன சின்னச்சிட்டு!

ஜாடையில் அப்படியே தந்தையை உரித்து வைத்திருந்தாள்.ஆனால் குணம் அப்படியே தாரிகவைப் போல்.விசாலாட்சியை தாரிகா ஆட்டி வைத்தது போல் இப்பொழுது நம் தாரிகவை ஆட்டி வைக்கிறாள் கவிரிகா!

மகளின் சத்தத்தில் ரூமிற்குள் வந்தவள் “என்ன டி?” என்று கேட்க “என்னோட சாக்லேட் எங்கே?” என்றாள் அவளை முறைத்து இடுப்பில் கைவைத்தவாரு.

“காலைல தான ரெண்டு சாக்லேட் சாப்பிட.நாளைக்கு சாப்பிடலாம்.எல்லாம் உங்க அப்பாவே சொல்லணும்.என்ன கேட்டாலும் உடனே வாங்கித் தந்தறது”என்று சொல்ல

“இதை போய் முதல்ல உங்க தாத்தா கிட்ட உங்க அம்மாவ சொல்ல சொல்லு டா செல்லம்”என்று மகளைத் தூக்கிக் கொஞ்சியபடியே ப்ரியன் சொல்ல அவன் முதுகில் ஒன்று போட்டவள் சமையல் அறைக்குச் சென்றாள்.

இப்படியாக நாள் ஒரு மேனியுமாக பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் வாழ்க்கை நன்றாகச் சென்றது.

இப்பொழுது தாரு ஒரு பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்டாள்!”ரொம்ப நல்ல பொறுப்பான பொண்ணு”என்று எல்லோரும் அவளைப் புகழ்ந்தனர்.

ஆனால் சில நேரங்களில் அந்த சிறுபிள்ளைத் தனம் தழைத்தொங்கும் பொழுது ப்ரியனால் ஒன்றும் சொல்ல முடியாது.அவள் கேட்டதை செய்து கொடுத்துவிடுவான்.

சில நேரங்களில் இவன் அவளுக்கு விட்டுக் கொடுப்பதும் அவள் இவனுக்கு விட்டுக்கொடுப்பதும் என இவர்கள்  வாழ்க்கை மிக நன்றாகச் சென்றது.

முற்றும்.

 

odi-sandhyafull

ஓடிப்போலாமா..?

  • சந்தியா ஸ்ரீ

அத்தியாயம் – 1

நீலநிற கடல் மங்கை அவளோ சிவப்பு நிற சேலை உடுத்திக்கொண்டு பொற்பாவை கோலத்தில் இருந்தாள்.. சூடும் சூரியன் குளிரும் செந்நிலவாக மாறி மேற்கில் மறைய, அந்தி மாலைபொழுது அழகாக மயங்கிக் கொண்டிருந்தது..

கன்னியாகுமரி கடற்கரை அழகை வர்ணிக்க இது மட்டும் போதுமா..? திருவள்ளுவர் சிலை சூரியனின் வெளிச்சத்தில் பொன்னிறமாக மாறிட, விவேகானந்தர் மண்டபம் பொற்கோவில் போன்ற பிரமையை உருவாக்கியது..

அந்த மாலைபொழுதின் அழகை எல்லாம் ரசித்த வண்ணம் பஸில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் முகத்தில் வந்து மோதியது இளமாலைத் தென்றல்.. அது அவளின் கூந்தலைக் கலைத்துவிட்டது..

முகத்தை மறைக்கும் முடியைக் காதோரம் ஒதுக்கிய நித்திலா மாலை ஆபீஸ் வேலை முடிந்து, ‘இன்னைக்கு அம்மா என்ன செஞ்சி வெச்சிருப்பாங்க..?’ என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தாள்..

அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்துவிட பஸில் இருந்து இறங்கியவள் வீட்டை நோக்கி நடந்தாள்.. அவள் வீட்டிற்குள் நுழைய கேட்டைத் திறக்கும் நேரத்தின் வீட்டின் உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது..

“இந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்.. உங்க மகளோட அழகிற்கும், அறிவிற்கும் ஏற்ற குடும்பம்.. வேண்டாம் என்று சொல்லாதீங்க..” என்ற தரகரின் குரல் தெள்ள தெளிவாக வீட்டின் வாசல் வரை கேட்டது..

‘இது தரகரின் குரல்ல’ என்று உணர்ந்தவளின் முகம் சிவந்துவிட, ‘நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுகிறேன் என்று இவரிடம் எப்பொழுது சொன்னேன்..’ என்று மனதிற்குள் தீவிரமாக சிந்தித்தாள்..

அதற்குள், “என்னோட பொண்ணேதான் அந்த பையனுக்கு வேண்டும் என்றால் ஒரு மாசம் முடியும் வரையில் அவங்களை காத்திருக்க சொல்லுங்க தரகரே..” என்று நித்திலாவின் தாய் சுமித்ராவின் குரல் கேட்டது..

‘நல்ல வேலை நித்தி அம்மா இடையில் புகுந்து ஆட்டையை கலச்சிட்டாங்க..’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளின் காதில் மீண்டும் தரகரின் குரல் கேட்க, ‘இந்தாளு எதுக்கு இப்பொழுது வந்தான்..?’ என்று எரிச்சலுடன் பல்லைக் கடித்தாள் நித்திலா..

“ஒரு மாதம் அவங்க எப்படி காத்திருப்பாங்க..” அவர் தயக்கத்துடன் இழுக்க,  “அதுக்காக நான் என் பிள்ளை பிடித்து கட்டாயப்படுத்தி திருமணம் பண்ணிவைக்க முடியுமா..?” சுமித்ராவின் குரலில் மெல்லிய எரிச்சல்..

“என்னம்மா பிடிகொடுக்காமல் பேசறீங்க..” என்று தாழ்ந்து வந்தது தரகரின் குரல்..

“இல்லண்ணா காபி குடிக்க கொடுத்துவிட்டுதான் சொல்றேன்..” சுமித்ராவின் குரலில் குறும்பு வெளிப்பட, ‘இந்த அம்மா இருக்காங்களே..’ என்று நினைத்த நித்திலாவின் முகம் பளிச்சென்று மலர்ந்தது..

“என்னம்மா இதிலும் விளையாட்டா..? சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க..” என்றவர் கிளம்பும் ஆராவாரம் கேட்டு,  எதுவும் அறியாத பிள்ளை போல வீட்டின் கேட்டைத் திறந்தாள் நித்திலா..

அவரை வழியனுப்ப வாசல் வரையில் வந்த சுமித்ரா, “வா நித்திலா..” என்றவர் பார்வை மகளின் மீது கேள்வியாக படித்தது.. அவளோ கோபமாக இருப்பது போல சடாரென்று வீட்டிற்குள் சென்றுவிட்டாள்..

அதனாலோ என்னவோ அவருக்கு மகளின் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.. அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிய சுமித்ரா மீண்டும் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது,

“ஓடோ ஓடோ ஓடோடி போறேன்.. காதல் பாதை தேடோடி போறேன்..” என்ற பாட்டை போட்டுகொண்டு தன்னுடைய அறைக்குள் செல்லும் மகளைப் பார்த்தவருக்கு விஷயம் புரிந்துவிட, அவரின் உதட்டில் குறும்புப் புன்னகை அரும்பென்று மலர்ந்தது..

‘மகளே ஓடியா போக போறே.. நீ எப்படி ஓடுகிறாய் என்று நானும் பார்க்கிறேன்..’ என்று சமையலறைக்குள் நுழைந்தார் சுமித்ரா.. அவரின் திட்டம் அறியாத மகளோ அறையின் உள்ளே ஓடிப்போவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள்..

அழகான வட்ட முகம், வில்லென புருவம், மீன் போன்று இரு விழிகள், நேரான மூக்கு அதன் வலதுபுறம் மின்னும் வெள்ளை மூக்குத்தி, சிவந்த ரோஜாப்பூ போல இதழ்கள்.. காதோடு கதை பேசும் ஜிமிக்கி..!

அளவான உடல்வாக்கை உடைய சந்தன நிறத்தில் வடித்தெடுத்த செப்பு சிலையழகி..! வயது இருபத்தி மூன்று.. படிப்பை முடித்துவிட்டு பிரைவேட் நிறுவனம் ஒன்றில் பி.ஏ.வாக வேலை செய்கிறாள்..

அவளின் அம்மா ஒரு கவர்மென்ட் ஸ்டாப்.. நித்திலாவின் அப்பா தாசில்தார் வேலையில் இருக்கும் பொழுது இறந்துவிட அவரின் வேலை மனைவியான சுமித்ராவிற்கு கிடைத்தது..

இப்பொழுது அவர் ரிட்டயர்டு ஆக இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது.. ஒரு மகன் கலையரசன். அவனுக்கு திருமணம் முடிந்துவிட்டது.. அவர்கள் நால்வரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருக்கின்றனர்..

இப்பொழுது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் சுமித்ரா. அவரின் விருப்பத்திற்கு அடிபணிய மனம் நினைத்தாலும் அவளின் சின்ன சின்ன ஆசைகள் அவளை அடிபணிய விடவில்லை.. ஆசை யாரை விட்டது?! இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே!

அத்தியாயம் – 2

இரவு உணவை முடித்துவிட்டு எல்லோரும் அவரவர் அறைகளுக்கு செல்ல, அதையெல்லாம் கவனித்தவண்ணம் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் நித்திலா!

நேரம் பதினோரு மணியைத் தாண்டிச்செல்ல, ‘இன்னும் ஒரு மணிநேரம் கிளம்பிவிடலாம்..’ என்று  கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே அறையின் குறுக்கும் நெடுக்கும் நடைபயின்று கொண்டிருந்தாள்..

தன்னுடைய பேக்கில் உடைகளை எல்லாம் எடுத்து வைத்தவள், ‘எதற்கும் தேவைப்படும்..’ என்று அவளுக்கென அவளின் தந்தை  கடைசியாக விட்டுசென்ற மோதிரத்தையும் எடுத்துக் கொண்டாள்..

மீண்டும் கடிக்காரத்தைப் பார்த்துவிட்டு, ‘எல்லோரும் தூங்கிட்டாங்க.. நம்ம கிளம்பலாம்..’ அவள் அறையைத் திறந்து வெளியே வந்தாள்.. காலில் அணித்திருக்கும் கொலுசு கூட தன்னைக் காட்டிக் கொடுக்கும் என்று கொலுசை கூட கலட்டி பேக்கில் இருந்த துணிக்குள் போட்டுவிட்டாள்..

அவள் ஹாலில் நின்று அண்ணனின் அறையையும், அம்மாவின் அறையையும் நோக்கியவள் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, ‘நல்ல தூங்கறாங்க.. நித்தி எஸ்கேப்..’ என்று பின் வாசலை நோக்கிச் சென்றாள் நித்திலா..

அங்கே தலைக்கு கர்சீப் கட்டிக்கொண்டு தன்னுடைய உடல்வாகிற்கு ஏற்றார் போல இருக்கும் சுடிதாரை அணிந்துகொண்டு கன்னிக்கு பிளாக் கலர் கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக அமர்ந்திருந்த தாயை பார்த்து “அம்மா..” என்று அதிர்ந்து இரண்டடி பின் வாங்கினாள்..

அவளின் குரல்கேட்டு திரும்பிய சுமித்ரா, “ஏய் ஏண்டி சத்தம் போட்டு ஊரைக் கூட்டுகிறாய்.. மூச்சு..” என்று வாய்மீது விரல் வைத்து ஒரே வார்த்தையில் மகளை அடக்கினார்..

“அம்மா இங்கே என்ன பண்றீங்க..?” அவள் மெல்லிய குரலில்.. “நான் ஓடிப்போக போறேன் நித்தி..” என்று குதுகலத்துடன் கூறினார்..

“அம்மா என்னோட மானத்தை வாங்காதீங்க.. உங்களுக்கு ஓடிபோகும் வயசா..?” என்றவள் எரிச்சலுடன்

“நீயே ஓடிபோகும் பொழுது நான் ஓடிப்போகக்கூடாதா..? நான் என்றும் பதினாறு தெரியுமோ நோக்கு..”

தாய் கூறியதைக் கேட்ட நித்தி, ‘ஐயோ ஐயோ எனக்கு இப்படியொரு அம்மா..’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

“எப்படியும் ஓடிபோறது என்று ஆகிருச்சு.. வாங்க சேர்ந்தே ஓடிபோவோம்..” என்றவள் அவரின் கையில் இருந்த பேக்கைப் பார்த்து, “அம்மா இது எதுக்கு..” விசாரிக்க, “அதெல்லாம் உனக்கு எதுக்கு.. வா போகலாம்..” என்றார் சுமித்ரா..

‘தனியாக ஓடிபோலாம் என்று நினைச்சா இந்த அம்மா என்னோட ஓடிவரேன் என்று கிளம்பீட்டாங்களே..’ மனதிற்குள் நொந்து போனாள் நித்தி..

அவள் பின் வாசல் கேட் அருகில் செல்ல, “அடியேய் அங்கே எதுக்கு போறே..” என்று மகளின் கையைபிடித்து இழுத்தார் சுமித்ரா..

“என்னம்மா வெளியே போக வேண்டாமா..”

“வா சுவர் ஏறிக்குதிக்கலாம்..” என்றார் சுமித்ரா..

“அம்மா..” என்று கடுப்புடன் தாயை முறைத்தாள்..

“என்ன உனக்கு ரூல்சே தெரியல.. ஓடிபோகும் பொழுது சுவர் ஏறித்தான் குதிக்கணும்..” என்று மகளை முறைத்தார் சுமித்ரா..

“உங்களால் முடியாத ஒன்றை எதுக்கு முயற்சிக்க நினைக்கிறீங்க..”

“யாரைப் பார்த்து என்ன சொன்னா.. நான் அப்பவே ஹை ஜப்பில் செம்பியன்..” என்றவர் கையில் இருந்த பேக்கை மகளிடம் கொடுத்துவிட்டு சுவரில் ஏறி மறுக்கம் குதித்தார்..

அவர் குதித்ததும், “அம்மா..” என்று பயத்துடன் அழைத்தாள் நித்திலா.. “கையில் இருக்கும் பேக்கை கொடு..” என்று மறுபக்கமிருந்து பேக்கை வாங்கிக் கொண்டவர், “நீ சீக்கிரம் ஏறி குதி..” என்றார்..

“அம்மா நான் போயி ஏணி எடுத்துட்டு வரேன்..” அசடுவழிந்த மகளைப் பார்த்தவர், “ஒரு சுவரு எறிக் குதிக்க முடியாதவளை பிள்ளையாக பெத்து வெச்சிருக்கேனே..” என்று புலம்புவதற்குள் ஏணி எடுத்து வந்தாள் நித்தி..

“அம்மா ஏணி கிடைச்சிருச்சு..” என்று சிரித்துக்கொண்டே

“கருமம் கருமம் சீக்கிரம் ஏறிவா..” என்றார் சுமித்ரா.. மறுப்பக்கம் தாவிக்குதித்த நித்திலா, “ஹப்பாடா அடியேதும் படல..” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

“ரொம்ப முக்கியம் வா வந்து டாக்சியில் ஏறு..” என்றதும்  அவள் திருதிருவென விழிக்க, “ஏய் என்னடி பேய் முழிமுழிக்கிற..” மகளை அவர்திட்டித் தீர்க்க அவளோ தன் முன்னே நின்ற டாக்சியைப் பார்த்தாள்..

“இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் வந்துவிடும்..” என்று அவளை இழுத்துக்கொண்டு காரில் ஏறியது கார் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது..

அவரின் ஒவ்வொரு செயலையும் கவனித்த நித்திலா, “அம்மா இது எல்லாம்…” என்று இழுத்தாள்..

“ஓடிபோகும் மூஞ்சியைப் பாரு.. நான்தான் பிளான் பண்ணினேன்..” என்றார் கர்வமாக.. “நல்ல அம்மா..” என்றாள் மகள் குறுஞ்சிரிப்புடன்..

“எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே..” என்றவர் வடிவேல் பாணியில்

“ஹா ஹா ஹா..”  வாய்விட்டு சிரித்தவள், “நீங்க செம ஷார்ப் அம்மா..” என்றாள்

“ஏய் அம்மா சொல்லாதே.. சுமி இல்ல மேடம் என்று சொல்லு.. நான் ஊர் சுற்ற போறேன்.. சோ நீயும் நானும் சரிசமம்..” என்றார் கறாராக… “சரி சுமித்ரா..” என்று குறுப்புடன் கண்சிமிட்டினாள்..

அதற்குள் ரயில் நிலையம் வந்துவிட காரில் இருந்து இறங்கியவர் டாக்ஸி டிரைவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தார்..

அவர்கள் செல்ல வேண்டிய ரயில் தயார் நிலையில் நின்றிருக்க, “ஏய் சீக்கிரம் ஏறு.. நான் போய் சீட் பிடிக்கிறேன்..” என்றவர் வேகமாக ரயிலில் ஏறினார்..

தாயின் வேகத்தைப் பார்த்த நித்தி, ‘அம்மா அம்மா..’ என்று அவரைப் பின் தொடர்ந்தாள்.. அவர் போய் மகளுக்கு ஜன்னலோரம் இடம்பிடித்தார்..

அவரின் பின்னோடு கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தவள், “சுமி வர அவசரத்தில் இரண்டு விஷயத்தை செய்ய மறந்தே போயிட்டேன்..” என்றாள் வருத்ததுடன்..

“இன்னும் என்னடி மறந்து தொலைச்ச..?” என்று கடுப்புடன் கேட்டார்..

“ஒரு சிம்கார்டு வாங்க மறந்துட்டேன்.. அப்புறம் அண்ணாவுக்கு ஒரு லெட்டர் எழுதிவைக்க .மறந்துட்டேன்..” தயக்கத்துடன் இழுத்தாள்..

“நான் ஓடிபோறேன் என்று எழுதி வெச்சிட்டு வந்துட்டேன்..” என்றவர் பேக்கை திறந்து எதையோ தேடியேடுத்தார்.. “இந்த சிம்கார்ட்.. பதினைந்து நாளுக்கு யூஸ் பண்ணிக்கோ..” என்று அவளின் கையில் கொடுத்தார்..

“நீ சரியான கேடிதான்..” சிரித்தாள் நித்திலா

“தேங்க்ஸ் நித்தி..” என்றவர் சொல்ல ரயில் மெல்ல கிளம்பி வேகமெடுத்தது.. அவர் முகத்தில் குளிர் தென்றல் வந்து மோதியது..

மாளிகை சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே

சுதந்திரம் இல்லையே விடுதலை கிடைத்தது

வாசலும் திறந்தது பறந்ததே கிள்ளையே..!” அவர் மனம்விட்டு பாடினார் சுமித்ரா.. தாயின் முகம் பார்த்த நித்திலா மனதிற்குள் தன் தாயின் மன உணர்வுகளைப் புரிந்தவண்ணம் அந்த பாடலை ரசித்தாள்..

தாயும், மகளும் தங்களின் பயணத்தை இனிதே தொடங்கினர்.. கூண்டுக்குள் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டும் சிறகு விரித்து பறந்தது.. பயணம் எவ்வாறு அமையும்?

அத்தியாயம் – 3

அந்த தனியறைக்குள் அமர்ந்து நேரம் செல்வதை அறியாமல் பைலைப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.. அவன் வேலையை முடித்துவிட்டு நிமிரும் பொழுது நேரம் பத்து மணியைக் கடந்திருந்தது..

அவன் சோர்வாக சீட்டில் சாய்ந்து விழி மூட, ‘தரகரிடம் உன்னோட போட்டோ கொடுத்தும் கூட உனக்கு நல்ல இடத்தில் ஒரு பொண்ணு கிடைக்கல..’ என்று தாயின் புலம்பல் அவனின் காதில் ஒலித்தது..

‘இந்த அம்மாவுக்கு இதே வேலையாக போச்சு..’ என்று நினைத்தவன் காரின் சாவியை எடுத்துகொண்டு தன்னுடைய அறையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..

அவன் காரில் ஏறியதும் அவனின் மனம் மாறிவிட, ‘இந்த பிரச்சனை எல்லாம் மறந்து கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்கணும்..’ என்ற முடிவுடன் காரை எடுக்க,  இரவு நேரத்து நிசப்தத்தை கலைத்து சீறிப்பாய்ந்து நிரஞ்சனின் கார்..

இரவு வெகுநேரம் சென்றபிறகும் மகன் வீட்டிற்கு வாராமல் இருப்பதை கவனித்த மனோகரியின் மனதில் நெருடல் ஏற்பட்டது..

‘எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டிற்கு வந்துவிடுவானே? இன்று என்ன மணி பன்னிரண்டை கடந்த பின்னரும் வீட்டிற்கு வராமல் இன்னும் அலுவலகத்தில் என்ன செய்கிறான்..?’ என்ற சிந்தனையுடன் வாசலை நோக்கிச் சென்றார்..

அந்தநேரம் மனோகரியின் கைபேசி சிணுங்க, ‘அவனாகத்தான் இருக்கும்..’ என்ற எண்ணத்துடன் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று போனை எடுத்தார்..

“அம்மா..” என்றவனின் குரல்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட மனோகரி, “ரஞ்சன் எங்கடா இருக்கிற..” என்று தவிப்புடன் கேட்டார்..

“அதை நான் அப்புறம் சொல்கிறேன்.. நீங்க சாப்பிட்டீங்களா..” தாயை விசாரித்தான் செல்லமகன் நிரஞ்சன்..

“நான் எல்லாம் சாப்பிட்டேன்.. உன்னிடம் முக்கியமான விஷயம் பேசணும்டா..” என்றவரிடம் “சொல்லுங்கம்மா..” என்றவன் காரில் ரயில்வே ஸ்டேஷன் சென்று கொண்டிருந்தான்..

“அந்தப்பொண்ணு வீட்டில் ஒரு மாசம் டைம் கேட்டிருக்காங்க ரஞ்சன்..” என்று சொல்ல, ‘அவங்க டைம் கேட்டது நல்லதா போச்சு..’ மனதிற்குள் நினைத்தவன்,

“டைம் கேட்டங்களா? இந்த ஒரு மாசத்தை மட்டும் வைத்து என்ன பண்ண போறாங்க?” சிந்தனையுடன் ஒலித்தது நிரஞ்சனின் குரல்..

“உன்னைப்பற்றி விசாரிப்பாங்க என்று நினைக்கிறேன்..” என்ற தாயிடம், “நல்ல விசாரிக்கட்டும்.. யார் வேண்டாம் என்று சொன்னது..” என்றவனின் கார் ரயில் நிலையத்தில் நின்றது..

“சரிடா உனக்கு அந்த பெண்ணைப் பிடிச்சிருக்கா.. அவங்க இன்னும் உன்னோட போட்டோ கூட பார்க்கல..” என்றவரின் குரல் தவிப்புடன் ஒலித்தது..

“நானும் இன்னும் அந்த பொண்ணோட போட்டோ பார்க்கல..”  பிடிகொடுக்காமல் பேசினான்..

“டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா..” தன் மகனை மிரட்டிட “சொல்வதெல்லாம் பதிலாக தெரியலையாம்மா..” என்றவன் சலிப்புடன்

“சரிடா நீ எப்பொழுது வீட்டிற்கு வருவாய்..? வேலை எல்லாம் முடிந்ததா இல்லையா..?” என்று பேச்சை அவர் திசைதிருப்பிவிட, “வேலை முடிஞ்சதும்மா.. வீட்டிற்கு வரமாட்டேன்ம்மா..” என்றவன் டிக்கெட்டை எடுத்தான்..

“என்னடா சொல்ற ஒண்ணுமே புரியல..” என்றவரின் குரல் பயத்துடன் ஒலிக்க, “உங்களுக்கு புரியாதது நல்லதா போச்சு.. உங்களோட தொல்லை தாங்க முடியாமல் ஓடிபோறேன்.. ஆளை விடுங்க சாமி..” என்று அவரின் தலையில் குண்டை தூக்கி போட்டான் நிரஞ்சன்..

“டேய் ரஞ்சன் என்னடா சொல்ற..? பொண்ணு யாருடா..? நீ ஓடி எல்லாம் போகவேண்டாம்.. நீ விரும்பும் பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் திரும்ப வந்துவிடுடா..”என்று கவலையுடன்  அவரின் குரல் ஒலிக்க அவனின் கோபம் தலைக்கேறியது..

“அம்மா நான் தனியாக ஓடிப்போறேன்.. எந்த பெண்ணையும் கூட்டிட்டு ஓடல.. என்னோட மானத்தை வாங்காமல் விடமாட்டீங்க போல..” என்று தலையில் அடித்துகொண்டான் மகன்..

அவன் சொன்னதைக் கேட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மனோகரி, “இப்பொழுதுதான் மகனே போன உயிர் திரும்ப வந்திருக்கிறது.. ஆமா நீ எப்பொழுது திரும்பி வருவாய்..” மகனிடம் விசாரித்தார்..

“எனக்கே வீட்டிற்கு போலாம் என்று தோன்றும் பொழுது வருவேன்..” அதற்குள் ரயில் வந்துவிட தோளில் ஒரு பேக்கை மாட்டிகொண்ட நிரஞ்சன் அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்துவிட்டு ரயிலில் ஏறினான்..

‘தானாக கட்டாகிவிட்டது..’ என்று நினைத்த மனோகரி மீண்டும் அழைக்க, ‘நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரின் நம்பர் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது..’ என்று வரவே,

“இனிமேல் இவன் வரும் வரைக்கும் இவங்க அப்பாவை சாமாளிக்கணுமே..” என்று புலம்பியவர் தூங்க சென்றார்..

நிரஞ்சன் பெரிய செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ரவிவர்மா – மனோகரி அவனின் பெற்றோர். உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை..

ஆறடி உயரமும், அடர்ந்த புருவம், அடுத்தவரின் மனதினைப் படிக்கும் கூர்மையான கண்கள், நேரான மூக்கு, அதன் கீழே அளவான மீசை, சிகரெட் கரை படியாத உதடுகள் கட்டுகொப்பான உடல் தோற்றத்தை உடையவன்..!

பணத்திற்கு பஞ்சம் இல்லை.. குணத்திற்கு குறை இல்லை.. கைக்குள் அடக்கிவிட முடியாத திறமை..! பணத்திலோ இல்லை படிப்பிலோ அவனுக்கு எந்த குறையும் இல்லை.. ஆனால் நிறத்தில் மட்டும் பேரும் பிழை செய்தான் இறைவன்..!

கருமை நிறமுடைய கண்ணன் அவன்.. ஆனால் அவனின் நிறம் பிடிக்காத பெண்கள் அவனை ஒதுக்கினர்.. இருபத்தி ஏழு வருடம் ஆன அவனுக்கு இன்னும் பெண் மட்டும் அமையவில்லை..

அவனுக்கு பிடித்த பெண்களுக்கு அவனை பிடிப்பதில்லை.. ஏனோ வர வர பெண்களை சுத்தமாக வெறுத்துவிட்டான் நிரஞ்சன்.. அவனின் மனதில் எந்த பெண் இடம் பிடிக்க காத்திருக்கிறாளோ!

*****

இரவு பொழுது மெல்ல நகர்ந்து செல்ல அதுவரை நடந்த பிரச்சனையை மறக்க நினைத்த அனிதா தந்தையின் தோளில் சாய்ந்திருந்திருந்தாள்.. அவர்களின் குடும்பம் கூட்டு குடும்பம்..!

அனிதா வீட்டின் செல்லம்.. இப்பொழுது கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.. தினமும் வீட்டில் எழும் ஏதோவொரு பிரச்சனை ஏற்பட அதில் மனம் பாதிக்கப்பட்டாள்..

திடீரென நிமிர்ந்து தந்தையின் முகம் பார்த்தவள், “அப்பா நான் ஓடிப்போறேன்..” என்றதும் “அனிதா என்னம்மா சொல்ற..” திடுக்கிட்டார் கணேசன்..

“அப்பா ப்ளீஸ்.. இந்த ஒரு வாரம் நான் எங்காவது ஓடிப்போகிறேனே..” என்றவள் மெல்லியகுரலில்..

“என்ன பேசி பழகற.. பல்லை தட்டிவிடுவேன்..” மகளை மிரட்டினார்..

“நீங்க என்ன சொன்னாலும் சரி நான் ஓடி போகத்தான் போறேன்..” என்றவள் பிடிவாதமாக

“பாப்பா என்னடா குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற..” என்றவர் கறாராகப் பேச “…………..” அவள் மெளனமாக இருந்தாள்

“எங்களோட இருக்க உனக்கு பிடிக்கலையா..?” என்று தவிப்புடன் ஒலித்தது அவரின் குரல்..

“அதெல்லாம் இல்லப்பா..” என்றவள் மெல்லியகுரலில் சொல்ல, “அப்புறம்..” காரணம் கேட்க, “…………..” அவள் மீண்டும் மௌனம் சாதித்தாள்..

“இங்கே பாரு பாப்பா.. நீ நினைக்கிற மாதிரி இந்த உலகம் இல்ல..” என்றவர் எடுத்து சொல்ல, “புரியுதுப்பா.. ஒரு கூட்டுக்குள் அடைஞ்ச மாதிரி ஒரு ஃபீல்..” என்றாள் அவள்

“சரிடா அப்போ நீ போய் பாரு.. நம்ம குடும்பத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோம் என்று தெரியும்..” என்றவர் அவள் செல்ல அனுமதித்தார்.

“தேங்க்ஸ்பா..” என்றவள் எழுந்து கிளம்ப அந்த நடுராத்திரி நேரத்தில் அவளை வழியனுப்ப ரயில் நிலையம் வந்தார்.. ரயில் வந்த பின்னரும் அவளின் தோழிகள் வராமல் இருக்க, “பாப்பா நீ தனியாக போக போறீயா..” என்று கேட்டார்.

“ஐயோ இல்லப்பா பிரிண்ட்ஸ் எல்லாம் கம்பார்ட்மெண்டில் ஏறிட்டாங்க அப்பா..” என்றவள் புன்னகைக்க, “என்னிடம் பொய் சொல்றீயா..” என்றவர் அவளை சந்தேகமாக பார்த்தார்.

அவர் அசடுவழிய சிரித்திட அவளின் தலையைக் கலைத்துவிட்டு சிரித்த கணேசன், “ம்ம் என்னிடம் அனுமதி வாங்க இவ்வளவு போய் சொல்லிருக்கிற” என்று இடது புருவம் உயர்த்தினார்..

“ஸாரிப்பா..” என்றாள் மகள் சன்னக்குரலில்..

“சரிடா பார்த்து பத்திரமாக ஊரைச்சுற்றி பார்த்துவிட்டு வா..” என்றவர் அவளிடம் வேறு எதுவும் கேட்கவே இல்லை..

அவர் அவளின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்க, ‘அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்..’ என்று நினைத்தவளின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திட அவரின் முகம் மலர்ந்தது..

“வீட்டில் உனக்கு என்ன பிரச்சனை என்று தெரியல பாப்பா.. ஆனால் நீ திரும்பி வருவதற்குள் அப்பா எல்லாம் சரி பண்ணி வைக்கிறேன்..” என்றவர் உறுதியுடன்

“வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லப்பா..” என்றாள் மகளின் முகம் பார்த்தவர், “அப்புறம் எதுக்கு இப்பொழுது ஓடிப்போகிறாய்..” என்று கேட்டார்..

“காதலிச்சு ஓடி போகும் பொழுது போக வழி தெரியாமல் திணறக்கூடாது இல்ல அதுக்கான ஒரு ஒத்திகை..” குறும்புடன் கண்சிமிட்டினாள்..

“ஓ அதுக்குதான் மேடம் ஓடி போறீங்களோ..?” அவள் பதில் சொல்லவில்லை.. “சரிம்மா நீ ஓடிப்போ.. நான் தேடி வந்து உன்னை உதைக்கிறேன்..” என்றவரும் கேலியாக..

“ஓ தேடி வந்து உதைக்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்துருச்சா..?” என்று தந்தையை மிரட்டினாள் மகள்..

அவள் இடையில் கையூன்றி நின்ற தோரணையைப் பார்த்தவர், “ஏன் எனக்கு தைரியம் இல்லையா என்ன..?” என்று கேட்டார் கணேசன்..

“அது நிறைய இருக்கு என்ன மண்டையில களிமண் மட்டும் கொஞ்சம் கம்மிய இருக்கு போல..” தனியாக அவள் புலம்ப, “என்னது..?!” அதிர்ந்தார்

“ஆமாப்பா.. இல்லாட்டி ஓடிப்போறேன் என்று சொல்லும் மகளை ரயில் ஏற்றிவிட இங்கே வந்து நிற்கும் பொழுதே தெரியல உங்களுக்கு நட்டு கொஞ்சம் லூசு ஆகிருச்சு என்று தெரியலையப்பா..” என்றவள் குறும்புன்னகையுடன் ..

“எனக்கு மெண்டல் ஆகிருச்சா.. நீ ஊருக்கு போயிட்டு வா.. அந்த பட்டிக்காட்டான்னு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..” என்று மிரட்டினார்..

“அப்பா பட்டிகாட்டான் எல்லாம் வேண்டாம்..” சினுங்கினாள் மகள்

“அவன் வேண்டாமா அப்போ யார் வேண்டும்..?” என்று அவர் யோசிக்க, “மகேஷ் பாபு மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து வைங்கப்பா..” என்று தன்னுடைய கனவை சந்தடி சாக்கில் கூறிய மகளை முறைத்தார் கணேசன்..

“ஹி.. ஹி.. ஹி.. அப்பா மை ட்ரிம் பாய்ப்பா.. அவனோட ஒரே ஒரு டூயட் மட்டும் ஆடினால் போதும்..” என்றவளின் விழிகள் கனவில் மிதப்பதைக் கண்டவர், “அதெல்லாம் கனவில் மட்டும்தான் நடக்கும்..” என்றவளை நக்கல் செய்ய, “நிஜத்தில் நடக்காதா..” என்று விளக்கம் கேட்டாள் மகள்..

அவர் பதில் சொல்லாமல் அவளை முறைக்க, “அனிதா உனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதானா..?” என்று புலம்பிய மகளை பார்த்தார்..

“அடியேய் உன்னை நல்ல பெத்து பொன்னின்னு பெயர் வெச்சேன்.. இப்படி அரலூசா ஆகும்முன்னு தெரியாம போச்சே..”  என்றவர் தனியாக புலம்பிட, “அப்பா நான் லூசு என்று முடிவே பண்ணீட்டீங்களா..?” என்று கேட்டாள்

“இதில் என்ன சந்தேகம் இதெல்லாம் கீழ்ப்பக்கம் போக வேண்டிய கேஸுன்னு தெரிஞ்சிருச்சு.,.” என்றவர் திடீரென எதையோ யோசித்தார்..

அவர் திடீரென தீவிரமாக யோசிக்க, “அப்பா என்ன யோசிக்கிறீங்க..” அவரின் கவனத்தைக் கலைக்க, “கீழ்பாக்கம் ஹவுஸ்புல் என்று நேற்றுதான் பேப்பரில் படித்தேன்..” அவர் சீரியஸாக சொல்ல, “அப்பா..” என்று கத்தினாள் அனிதா..

“என்னம்மா..” அக்கறையுடன் கேட்க, “யெப்பா கணேசா என்னை ஆளைவிடு..” என்று கையெடுத்து கும்பிட அவர் வாய்விட்டு சிரித்தார்..  “நான் ஒருவாரம் ஊர் சுற்றிவிட்டு வந்து உன்னை காமாட்சி கிட்ட மாட்டிவிடல..” என்றவள் சபதம் எடுத்தாள்..

“என்னிடமே சபதமா..? அதை நானும் பார்க்கிறேன்..” என்றவரின் குரல் கம்பீரமாக ஒலித்தது.. அதற்குள் ரயில் வந்துவிட, ‘நல்ல பெத்து பொன்னின்னு பெயர் வெச்சாராம்.. நான் என்ன பெயரை மாத்தியா வெச்சிகிட்டேன்..’ அவள் மனதிற்குள் புலம்பினாள்..

அவள் ரயில் ஏறும் வரையில் மகளைப் பார்த்துக்கொண்டே இருந்தவர், “போன் பண்ணுமா..” என்றார்.. “சரிப்பா..” என்றவள் புன்னகைக்க ரயில் மெல்ல வேகமெடுத்தது.. அவரும் வீட்டை நோக்கிச் சென்றார்..

இந்த பயணத்தில் யார் யாரோடு கைகோர்க்க போறாங்களோ..?!

அத்தியாயம் – 3

இரவுநேரத்தில் குளிர்தென்றல் இதமாக உடலைத் தழுவிச்சென்றது.. கம்பார்ட்மெண்டில் யாரும் அதிகமாக இல்லாததால் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது..

நிரஞ்சன் அந்த கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழையும் பொழுது சுமிம்மா மனம்விட்டுப் பாடிகொண்டிருந்தார்.. அவரின் பாடலைக் கேட்டதுமே அவனின் கடுகடுப்பு எல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது..

“சூப்பராக பாடுறீங்க.. உயிரே உனக்காக மூவி சாங்.. நதியா மேடமின் ஹைலைட் சாங்..” என்றவனின் குரல்கேட்டு நிமிர்ந்த சுமிம்மா, “தேங்க்ஸ் தம்பி..” என்றார்..

அவன் தோளில் பேக்குடன் நிற்பதைக் கவனித்தவர், “வாப்பா வந்து இங்கே உட்காரு..” என்றவர் நகர்ந்து உட்கார்ந்தார்..

நித்தி நிமிர்ந்து அவனின் முகம் பார்த்துவிட்டு தன்னுடைய ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிகொண்டு பாடலைக் கேட்க தொடங்கினாள்..

அவளின் பார்வையில் இருந்த அலட்சியம் அவனின் பார்வைக்கு தப்பவில்லை.. அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..

அவர் நகர்ந்து உட்கார்ந்தது தான் தாமதம், “அண்ணா கொஞ்சம் வழி விடுங்க..” என்று சொல்லிவிட்டு ஓடிவந்து நித்திலாவின் அருகில் அமர்ந்தாள் அனிதா..

அவளின் வேகத்தை கவனித்த நித்திலா, ‘இவ்வளவு வேகமாக இங்கே வந்து உட்கார்ந்துவிட்டாள்..’ என்று நினைத்து அவனை நிமிர்ந்து நோக்கியவளின் விழிகளில் குறும்பு மின்னி மறைந்தது..

‘இவ்வளவு வேகம் தேவையா..?’ என்று திகைப்புடன் அனிதாவைப் பார்த்துகொண்டே நின்றான் நிரஞ்சன்

அவளை முறைத்த சுமிம்மா, “அந்த பையனை தள்ளிவிட்டு வருகிறாய்.. அப்படி என்ன அவசரம்..” அவளிடம் சண்டைக்கு போனார்..

அதற்கு எல்லாம் பயப்படும் ஆளா நம்ம அனிதா, “இல்லாட்டி உட்கார இடம் கிடைக்காது..” என்றாள் வேகமாக..

அவளின் புத்திசாலித்தனம் அவரின் மனதை கவர வாய்விட்டு சிரித்த சுமிம்மா, “சமத்து.. இந்த மாதிரிதான் இருக்கணும் செல்லம்..” என்றார்..

“தேங்க்ஸ்.. உங்களோட சுடிதார் நல்ல இருக்கு..” என்றவள் கூசாமல் ஐஸ் வைப்பதைக் கவனித்த நிரஞ்சனின் முகத்தில் புன்னகை அரும்பியது..

அவனின் கம்பீரத்திற்கு கீரிடமாக அமைந்த புன்னகையை இமைக்காமல் பார்த்த நித்திலாவின் மனதில் சின்ன சலனம்..!

“தேங்க்ஸ் குட்டிமா.. ஆமா உன்னோட பெயர்..” என்றவர் விசாரிக்க, “அனிதா..” என்றாள்..

“உங்களோட நேம்..” என்றவள் கேட்டதும், “சுமித்ரா..” என்றார்

“நான் உங்களை எப்படி கூப்பிட..” என்றவள் சிந்திக்க, “சுமிம்மான்னு கூப்பிடு அனிகுட்டி..” என்றார்

இருவரின் பேச்சையும் கவனித்த நிரஞ்சன், “இந்த வாலுக்கு சரியான ஜோடி நீங்கதான் சுமிம்மா..” என்றவரின் அருகில் அமர்ந்தான்..

இருவரும் பேசுவதைக் கவனித்த நித்திலாவின் பார்வை தனி சீட்டில் அந்த பெண்ணின் மீது கேள்வியாக படிந்தது.. அந்த பெண்ணோ புத்தகத்தைப் படித்துக்கொண்டே அனிதாவை முறைத்தார்..

“அண்ணா உங்களோட நேம்..” என்றவள் நிரஞ்சனின் பக்கம் திரும்பிவிட்டாள்..

“அவங்களைவிட்டு என்னிடம் வந்துவிட்டாயா..?” என்று சிரிப்புடன் கேட்க, “சொல்லுங்க அண்ணா..” அவள் அடம்பிடிக்க, “நிரஞ்சன்..” என்றான்..

“நேம் நல்ல இருக்கு..” என்று சொல்லிவிட்டு நித்யாவின் பக்கம் திரும்பிய அனி, “அக்கா நீங்க பெயர் சொல்லுங்க..” என்றாள்..

தன்னுடைய காதில் இருந்து ஹெட்செட்டை எடுத்துவிட்டு, “நித்திலா..” என்றவள் புன்னகையுடன்..

“என்னம்மா எல்லோரின் பெயரும் தெரிஞ்சிதா..?” அவன் அவளைக் கிண்டல் செய்ய, “அதையெல்லாம் விடுங்க அண்ணா.. இங்கே பாருங்க நம்ம எவ்வளவு பேசிட்டு இருக்கிறோம்.. இவங்க ரொம்ப மும்பரமாக புத்தகம் படிக்கிறாங்க..” என்று அவளின் அருகில் அமர்ந்திருந்தவளை கிண்டலடித்தாள்..

“ஏய் வாயை மூடு..” என்றவளின் வாயை மூடிய நித்தியின் கையைத் தட்டிவிட்டவள், “அக்கா ஏன் என்னோட வாயை அடைக்கிறீங்க..” என்றவள் காரணம் கேட்டாள்..

“ஏற்கனவே அவங்க உன்னை முறைச்சாங்க..” என்றவள் குறுஞ்சிரிப்புடன்.. அவளோடு சேர்ந்து அவளின் விழிகளும் புன்னகைக்க அவனின் மனதில் சலனம் ஏற்பட, ‘என்னது..’ என்று முகத்தை திருப்பிவிட்டான்..

‘அவள் வேண்டும் என்றே செய்கிறாள்..’ என்று உணர்ந்த சுமிம்மா, ‘ஐயோ யாரு பெத்த பிள்ளையோ தெரியல..’ அவர் மனதிற்குள் புன்னகைத்தார்..

“பாப்பா இவளோட பேச்சை கேட்காதே..” என்று எச்சரிக்கை செய்ய, “அட இருங்க சுமிம்மா..” என்று அந்த பெண்ணின் அருகில் செல்ல, “விடுங்கம்மா.. அவள் வம்பு வளர்க்காமல் விடமாட்டா..” என்றான் நிரஞ்சன் புன்னகையுடன்..

“அக்கா அப்படி என்ன படிக்கிறீங்க..” என்று அவளின் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தவள், “அண்ணா கதை புத்தகம்..” அவள் வாய்விட்டுச் சிரித்தாள்..

“இதுக்குதான் இவ்வளவு பில்ட்டப்பா..” என்றவள் வயிறைப் பிடித்துகொண்டு சிரிக்க, “இந்த அர்த்த ராத்தியில் கதை படிக்க விடாமல் என்னோட உயிரை வாங்காதே அனிதா..” என்றாள் அந்தப்பெண்..

“என்னோட பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றவள் அதிர்வுடன் கேட்க, “நீ என்ன மெதுவாகவா சொன்ன..” என்று குறும்புடன் கேட்டார் சுமிம்மா.. மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர்..

அவள் திரும்பி இருவரையும் முறைத்திட சிரிப்பைக் கட்டுபடுத்த இருவரும் வெகுவாக போராடிட, “அக்கா உங்களோட நேம் என்ன..?” என்று கேட்டாள்..

“வித்யா..” என்றதும், “உங்களை வீட்டில் யாரும் கதை படிக்க விடல என்று வீட்டில் இருந்து ஓடி வந்துடீங்களா..?” என்று சந்தேகமாகவே இழுத்தாள்.

“அது எப்படி உனக்கு தெரியும்..?” அவள் மீண்டும் அதிர்வுடன் கேட்க, “நீயும் வீட்டில் இருந்து ஓடிவந்துட்டியா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டது வேறு யாரும் அல்ல நம்ம சுமிம்மா தான்..

“என்னது நீங்களும் ஓடி வந்தீங்களா..? அதுவும் இந்த வயசில் தனியாக ஓடி வந்திட்டீங்களா..?” – அதிர்ச்சியுடன் வித்யா..

“ஏனம்மா நான் ஓடி வர கூடாதா..?” என்றவர் அவளிடமே விளக்கம் கேட்க, “உங்களுக்கு என்னம்மா பிரச்சனை..?” – அனிதா

“எனக்கு என்ன பிரச்சனை.. ஒன்னும் இல்லையே..” என்றவர் தொடர்ந்து, “மனசில் சின்ன சின்ன ஆசை அதிகமாக இருக்கு அதையெல்லாம் நிறைவேற்றிக்க நினைச்சேன் ஓடி வந்துட்டேன்..” என்றார் சாதாரணமாக..

அவரின் மனம் அறிந்திருந்த நித்திலா அமைதியாக இருப்பதைக் கவனித்த அனிதா, “நித்திக்கா நீங்க இவங்களோட மகளா..?” என்று சந்தேகம் கேட்டாள்..

அவளின் கேள்வியில் நித்தியின் பார்வை நொடியில் தாயின் மீது படிந்து மீண்டது.. அவளோடு விளையாட நினைத்த மனமோ, “யாரு யாரோட மகள்..? இந்தம்மா யாருன்னே எனக்கு தெரியாது..” என்றவள் சொல்ல, “அட்ராசக்கை..” என்றார் சுமிம்மா சிரிப்புடன்

“அதுசரி ஆனால் முகஜாடை ஒரே மாதிரி இருக்கே..” என்றவள் மீண்டும் சந்தேகமாக இழுக்க, ‘ஆமா அவள் சொல்ற மாதிரி முகஜாடை ஒரே மாதிரி இருக்கிறதே..’ என்ற நிரஞ்சனின் பார்வையோ நித்தியின் மீது கேள்வியாக படிந்தது..

அப்பொழுது விசும்பல் ஒலிகேட்ட அனிதாவிற்கு பயம் ஏற்பட, “யாரோ அழறாங்க..” என்றவள் பயத்துடன் தொடங்க, “இந்த நேரத்தில் பேய்தான் அழுகும்..” என்று அவளை பயமுறுத்தினாள்

“இல்ல இந்த சத்தம் மேல இருந்து வருது..” – நிரஞ்சன்

“ரஞ்சன் எழுந்து யாருன்னு பாருப்பா..” என்றவர் திடீரென, “நீ வேண்டாம் இரு நானே பார்க்கிறேன் என்று எழுந்து அந்த சீட்டின் அருகில் சென்றார்.. அவர் எழுந்து பர்த் சீட்டைப் பார்க்க கிட்டதட்ட பதினேழு வயதை உடைய பெண்ணொருத்தி வாய்விட்டு அழுது கொண்டிருந்தாள்..

அந்த குட்டிப்பெண் சுருண்டு படுத்திருக்க, “நானே வருவேன்..” என்று சுமிம்மா திகிலோடு பேய் பாட்டு பாட, “வேண்டாம்..” என்று கத்தியவண்ணம் எழுந்தமர்ந்தாள்..

அவள் கண்ணைத் திறந்து பார்க்க, “ஏய் பாப்பா பயந்துட்டியா..? வா கீழிறங்கு..” என்று அவளை கீழிறங்கி வர வைத்தவர், “யாரும்மா நீ..? உன்னோட வீட்டில் இருந்து யாராவது வந்திருக்காங்களா..?” அந்த பெண்ணை விசாரித்தார் சுமிம்மா..

அவள் மெளனமாக இருக்க, “ஏய் பதில் சொல்லுடா.. எங்களை கண்டு நீ பயப்படாதே..” என்றான் நிரஞ்சன் அக்கறையுடன்.. அது அவளின் மௌனத்தைக் கலைக்க போதுமானதாக இருந்தது..

“அடுத்தவாரம் பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வருது.. அதுக்கு பயந்துட்டு வீட்டைவிட்டு வந்துட்டேன்..” என்றவள் மெல்லிய குரலில்..

“அப்போ நீயும் எங்க ஆளு..” என்றாள் அனிதா குஷியாக..

“நீ வாயை மூடவே மாட்டீயா..” என்றவள் எரிச்சலோடு தொடங்கினாள் வித்யா

“அதெல்லாம் மூட முடியாது வித்திக்கா..” என்றவள் சொல்ல, “அவளைத் திருத்த முடியாது விடு வித்யா..” என்றான் நிரஞ்சன்..

அவள் அவனை முறைக்க, “அம்மா தாயே நான் உனக்கு அண்ணன் மாதிரி தப்பாக நினைக்காதே..” என்றவன் கையெடுத்து கும்பிட வாய்விட்டு குட்டிப்பெண்.

அவள் சிரிப்பதைப் பார்த்து, “நல்ல சிரிக்கிறடா கண்ணம்மா.. உன்னோட பேரு என்ன..?” என்று கேட்ட சுமிம்மா அவளின் அருகில் அமர,, “சங்கரி..” என்றாள்..

“வீட்டில் சொல்லாமல் வந்தது தப்பில்லையா..?” அவளை அதட்டிட அவள் தலைக்குனிந்திட, “வீட்டில் எல்லோரும் தேடுவாங்க இல்ல..” என்றார் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்..

“அங்கே இருக்க முடியலம்மா.. எல்லோரும் எக்ஸாம் எப்படி எழுதி இருக்கிற? என்ன மார்க் வாருன்னு கேட்கிறாங்க..” சங்கரி வருத்ததுடன் சொல்லவே, “எக்ஸாம் எப்படி  எழுதியிருக்கிற..” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான் நிரஞ்சன்.

“மெரிட்டில் பாஸ் பண்ற அளவுக்கு எழுதியிருக்கேன்..” அவள் புன்னகையுடன்..

“உன்னோட ஊரு..” என்று நித்திலா கேட்க, “கன்னியாகுமரி..”  என்று சங்கரி சொல்ல, “நாங்க எல்லோருமே கன்னியாகுமரிதான்..” என்றனர் எல்லோருமே கோரஸாக..

இங்கே இத்தனை நடக்க வித்யாவின் எதிர் ஷீட்டில் ஒருவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.. அவனின் பார்வையோ வேறு எங்கோ நிலைத்து நின்றது..

அவனைக் கவனித்த நித்திலா, “சார் நீங்க மட்டும் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்..?” என்று அவனையும் தங்களின் பேச்சிற்குள் இழுத்தாள்..

அவன் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அமைதியாக இருக்க, “ஏன் இப்படி இருக்கிறாரு..” என்று வித்யாவிடம் சந்தேகம் கேட்டாள் அனிதா..

“ஆமா என்னிடம் கேளு.. அவரோட பயோடேட்டா என்னிடம் தான் இருக்கு பாரு..” என்றாள் வித்யா கடுப்புடன்

“உங்களிடம் தான் இருக்கா.. அப்போ இவரு உங்களோட ரிலேடிவ்..” என்றவள் வேகமாக சொல்ல அவளின் தலையில் நெருக்கென்று கொட்டினாள் வித்யா..

“அதிகமாக பேசினே.. அவ்வளவுதான்..” என்று மிரட்டிட, “சுமிம்மா..” என்று அவரின் தோளில் போய் சாய்ந்து கொண்டாள்..

அவளின் தலையை வருடிவிட்ட சுமிம்மா, “மாமன் அடிச்சாரோ மல்லிப்பூ செண்டல.” இல்லையென அவள் தலையசைக்க, “அத்தை அடிச்சாளோ அல்லிபூ செண்டாலா..” என்று பாடினார்..

நிரஞ்சன் சுமிம்மாவைப் புன்னகையுடன் பார்க்க நித்திலாவோ அன்னையின் குறும்புத்தனம் அறிந்தவள், ‘பாவம் அனிம்மா நீ..’ என்று வந்த சிரிப்பை கட்டுபடுத்த முயன்றாள்..

அதை வித்யாவும், சங்கரியும் கவனிக்க, “யாரடிச்சா சொல்லியழு.. நீரடிச்சா நீர் விலகும்..” என்றவர் பாட, “இந்த வித்யா பேய் அடிச்சிருச்சு சுமிம்மா..” என்று அழுதாள் அனிதா..

“அப்படியாடி செல்லம்..” என்றவர் அனிதாவின் முகம் பார்த்தார்.. அவளோ பாவமாக முகத்தை வைத்திருக்க, “வித்யா நீ கொடுத்த அடி வலிக்கல போல இன்னும் இரண்டு போடு..” என்றார் வம்படியாக..

“சுமிம்மா..” என்றவள் காத்திட, “உஸ்ஸ்..” என்றவன் எழுந்து சென்றுவிட அவனை மற்றவர்கள் வினோதமாக பார்க்க, “அவருக்கு கூச்ச சுபாவம் போல தெரியுது..” என்ற வித்யாவின் பார்வை அவனின் மீது நிலைத்தது.

“சரி விடு வித்யா” என்றவர் தொடர்ந்து, “எல்லோரும் படுத்து தூங்குங்க.. காலையில் எழுந்து எதுவாக இருந்தாலும் பேசலாம்..” என்றார் சுமிம்மா..

“அனிக்குட்டி சங்கரி இரு இங்கே வந்து படுத்து தூங்குங்க..” என்று சொல்ல எழுந்தவள் மீள் ஏறி படுத்துக்கொண்டாள்.. மறுபுறம் ஏறி படுத்துகொண்டாள் வித்யா..

நிரஞ்சன் எழுந்து கதவருகில் சென்றுவிட, சுமிம்மா சங்கரியை தன்னுடைய மடியில் படுக்க வைத்து தட்டிகொடுக்க விழி மூடி தூங்கினாள் அவள்..

அவரின் முகம் பார்த்தவள், ‘அம்மாவை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லிட்டானே..’ என்று மனதிற்குள் கறுவினாள்.. மெல்ல விழிமூடி உறங்கினாள் நித்திலா..

அத்தியாயம் – 5

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட கீழ்வானம் மெல்ல சிவக்க துவங்கியது.. கதிரவன் தன்னுடைய பயணத்தைக் கிழக்கில் தொடங்கி வெகுநேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தான் கலையரசன்..

அவனோடு சேர்ந்து அவனின் மாலதியும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, “கூ..கூ..கூ..” எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தத்தில் கண்விழித்தான்..

அவன் எழுந்ததும் கடிகாரத்தைப் பார்க்க அது ஏழு என்று காட்டியது.. பாவம் அது ஓடாத கடிகாரம் என்று அறியாத கலையரசன் எழுந்து குளித்துவிட்டு வெளியே வரும் வரையில் கூட அவனின் மனைவி படுக்கையை விட்டு எழுந்திரிக்கவில்லை..

“அம்மா காபி..” என்று சமையறையை நோக்கி செல்ல டைனிங் டேபிள் மேலிருந்த ஃபிளாஸ்க் அண்ட் அதன்கீழே இருந்த பேப்பரை பார்த்தவன் சிந்தனையுடன் இடது புருவம் உயர்த்தினான்.

அதில் “நான் ஓடிப்போறேன்..” என்று எழுதியிருக்க, ‘ஊருக்கு போறேன்னு எழுதாமல் ஓடிப்போறேன்னு எழுதியிருக்காங்க பாரு.. இத்தனை வயசு ஆகியும் இதுக்கு இன்னமும் கொழுப்பு குறையல..’ என்று தலையில் அடித்துக் கொண்டான்..

ஆனாலும் மீண்டும் எதுவோ ஒன்று மனதை உறுத்த, “நித்தி..” மாடியை நோக்கிக் குரல் கொடுத்தான்.. அங்கு அவள் இருக்கும் அறிகுறியே இல்லை.. அவனுக்குள் என்னவோ செய்ய, ‘நேற்று இவளோட பேச்சைக் கேட்டு அம்மாவை ரொம்ப பேசிட்டோமோ..’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது..

அப்பொழுதுதான் மெல்ல எழுந்து வந்த மனைவியின் முகம் பார்த்தவன் சிலையென நின்றிருக்க, “அத்த காபி..” அரைத்தூக்கத்தில் வந்து நின்றாள் மாலதி..

“இந்தா..” என்று பிளாஸ்கில் இருந்த டீயை ஊற்றி கொடுத்தவனின் விழிகளில் அந்த கடிதம் விழுந்தது.. அவன் அந்த கடிதத்தை கையில் எடுக்கும் பொழுதே அவனின் கைகள் இரண்டும் நடுங்கியது..

“ஹாய் மகனே.. நான் உன்னோட அம்மாடா.. ஞாபகம் இருக்கா..? சரி அதைவிடு.. உன்னோட மனைவிக்கு பரிந்து பேசியது தவறில்ல.. ஆனால் அவளின் எண்ணம் என்னவென்று நான் சொல்ல மாட்டேன்..  நீயே தெரிஞ்சிக்கோ..

உன்னோட மனையாளை திருத்த வேண்டியது நீதான் நான் இல்ல.. எனக்கு இந்த குடும்ப ஒற்றுமை முக்கியம்.. என்னோட மகளின் திருமணம் முக்கியம்.. நித்தியை தேடாதே அவள்கூட நான் இருக்கிறாள்.. நாங்க எங்கே போனாலும் அந்த இடத்தில் தானாக ஒரு பட்டாளம் உருவாகிவிடும்..

நீ இப்பொழுது மட்டும் இல்ல எப்பொழுதும் தனிமரம்தான்.. நான் இதைச் சொல்ல காரணம், நீ அறியாத ஒரு விஷயத்திற்கு தவறான முடிவு எடுக்கிற உன்னோட மழுங்கி போன புத்தியை சொன்னேன்..

இனிமேலாவது கொஞ்சம் புத்தியை தீட்டு.. எனக்காக இல்ல உன்னோட நல்ல வாழ்க்கைக்காக.. இல்லாட்டி நீயும் இப்போ இருக்கிற பிள்ளைகள் மாதிரி கோர்ட், கேஸ் என்று அலையும் சூழ்நிலை வரலாம்..” என்று எச்சரித்து கடிதத்தை முடித்திருந்தார்..

அதன் பின்னணியை கண்டுபிடிக்க நினைத்த கலையரசனின் பார்வை மாலதியின் மீது கேள்வியாக படிந்தது.. அவளோ அவனைக் கவனிக்காமல் காபி குடிப்பதில் ரொம்ப கவனமாக இருந்தாள்..

“மாலதி.. நீ சமையல் வேலையை கவனி..” என்றவன் அதட்டவே,“ஏன் உங்க அம்மா என்ன பண்றாங்க..” அவளிடமிருந்து கேள்வி வந்தது..

“என்னோட அம்மா ஊருக்கு போயிருக்காங்க..” என்றதும் அவனை ஏறயிறங்க பார்த்த மாலதி, “உங்களோட தங்கச்சி என்ன பண்றா..” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்..

“அவளும் அம்மா கூட ஊருக்கு போயிட்டா..” என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிட, “அப்போ இங்கே வேலை எல்லாம் யார் பார்க்கிறது..?” என்றவள் அதிகாரத்துடன் கேட்டதும், ‘அம்மா காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க..’ என்ற சிந்தனையுடன் மனைவியின் மீது படிந்தது அவனின் பார்வை..

“ஏன் உங்க வீடாக இருந்தால் யார் இந்த வேலையை செய்வார்..” என்றவன் கோபத்தில் கேட்கவே, “எங்க வீட்டில் நான் செய்வேன்..” அவள் வேகமாக பதில் வந்தது அவளிடமிருந்து..

“அதுதான் ஏன்..?” என்றவன் கேட்டதும், “அது என்னோட வீடு.. அவங்க என்னோட அப்பா, அம்மா..” என்றாள் சாதாரணமாக.

“அப்போ என்னோட அம்மா, தங்கச்சி பற்றிய கவலை உனக்கில்லை..?” என்றவன் கேட்டதுதான் தாமதம், “அவங்களைப் பற்றி நமக்கு என்ன..?” என்றவள் அப்பொழுதும் சாதாரணமாகவே..

“ஊப்..” என்று பெருமூச்சை வெளியிட்ட கலையரசன், ‘அம்மா தவறு இங்கே இருக்கு.. நான் உங்களை தவறாக நினைச்சிட்டேன்..’ அவன் மனம் வருந்தினான்..

“சரி மாலு.. நீ சமையல் வேலையைக் கவனி.. நான் ஆபிஸ் கிளம்பறேன்..” என்றவன் அறைக்குள் செல்ல மாலதி சமையறைக்குள் சென்றாள்..

கிட்டதட்ட ஒரு மணிநேரம் கழித்து டைனிங் ஹாலிற்கு வந்த கணவனுக்கு இட்லியும், தேங்காய் சட்டினியும் சுட சுட பரிமாறினாள்.. அவன் இட்லியைப் பிட்டால் அதிலிருந்து மாவு ஆறு தட்டில் ஓடி சட்டினியுடன் கலந்தது..

அதைப் பார்த்த கலையரசன், ‘எனக்கு இது நல்ல வேணும்..’ என்று நினைத்துகொண்டு அவன் மீண்டும் ஒரு இட்லியை பிட்டு சட்டினி தொட்டு வாயில் வைத்தான்..

உப்பு குறைவாகவும், காரம் ஊரே தூக்கும் அளவிற்கு அதிகமாக இருக்க, “என்னங்க இட்லி நல்ல இருக்கா..?” என்று ஆர்வமாகக் கேட்டவளைப் பார்த்ததும் கலையரசனின் பொறுமை காற்றில் பறந்தது..

“இதை நீயே சாப்பிடு மாலதி.. மத்தியானம் நல்ல சாப்பாடாக செய்து வை..” என்றவன் அவனின் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டே கூறினான்..

‘சமையல் செய்யும் மூஞ்சியைப் பாரு.. நல்ல வேலை எங்கம்மா புண்ணியத்தில் நான் தப்பிச்சேன்.. இல்லாட்டி..?’ என்று நினைத்தான்.. ஒருநொடி அவனுக்கு மூச்சு நின்றுபோகவே, ‘முதல்ல நல்ல ஹோட்டலாக போய் சாப்பிடனும்..’ அவன் வேலைக்கு சென்றுவிட்டான்..

கணவன் தன்னை திட்டிவிட்டு சென்றதும் கோபத்தில் சொல்லும் அவனை முறைத்த மாலதி, “நான் செய்த இட்லி அவ்வளவு மோசமாகவா இருக்கு..” என்று அவளும் சாப்பிட அமர்ந்தாள்..

அவள் செய்த சமையலை அவள் ஆர்வத்துடன் சுவைக்க, “உவ்வே.. நானா இவ்வளவு கேவலமாக சமையல் செய்திருக்கிறேன்..” என்று தட்டைத் தூக்கி சிங்கிள் போட்டுவிட்டு பாலைக் காய்ச்சி குடித்துவிட்டு அமர்ந்தாள்..

அப்பொழுதுதான் கணவன் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவேன் என்று சொன்னது அவளின் நினைவிற்கு வர, “ஐயோ மதியம் நல்ல சமையல் பண்ணி வைக்க வேண்டும்..” என்ற கவலையுடன் தாய்க்கு போன் போட்டாள் மாலதி..

அதன்பிறகு அங்கே பிரச்சனை ஆரம்பமானது..

******

காலைபொழுது அழகாக விடிந்திட பொள்ளாச்சியில் ரயில் நின்றிருந்தது.. மெல்ல கண்விழித்த சுமிம்மாவைச் சுற்றிலும் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.. மடியில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரியின் தலையைக் கலைத்து விட்டவர், ‘இவங்க வீட்டில் இவளை தேடுவாங்களே.. சரி இதுக்கு ஒரு வழி செய்யலாம்..’ மனதிற்குள் நினைத்தார்..

அப்பொழுது கண்விழித்த அனிதா, “குட் மார்னிங் சுமிம்மா..” என்றாள் உற்சாகமாக.. “குட் மார்னிங்..” என்றவர் எழுந்து செல்ல எல்லோரும் எழுந்து கொண்டனர்..

“ஆமா இது எந்த ஊரு..” என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்த வித்யாவிடம், “யாருக்கு தெரியும்..” என்று எழுந்தமர்ந்தாள் நித்திலா

“நான் போய் முகம் கழுவிட்டு வரேன்..” என்று எழுந்த அனிதா எதிரே வந்தவனின் மீது மோதிக் கொள்ள, அவனோ அசையாமல் நின்றிருந்தாள்..

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் பளபளத்தது.. அவன் வடநாட்டு பையன் போலவே இருக்க, “ஏய் மைதா மாவு கொஞ்சம் வழிவிடு..” வழக்கமான குறும்புடன்..

“பாரு காலையில் யாரிடமோ வம்பு வளர்க்கிற..” என்று திட்டிக்கொண்டே எழுந்த வித்யாவின் கையைப்பிடித்த நித்திலா, “வேண்டாம் விடு வித்யா.. உங்களைவிட சின்ன பொண்ணுதானே..” என்று புன்னகைத்தாள் நித்திலா..

அவன் வழிவிட்டு நிற்க, “இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்க..” என்று அவனை மிரட்டிவிட்டு அவள் நகர. “அனிக்கா இருங்க நானும் வரேன்..” அவளின் பின்னோடு ஓடினாள் சங்கரி..

“ஸாரிங்க அவள் ரொம்ப சின்ன பொண்ணு தெரியாமல் பேசிட்டா..” என்றவனிடம் மன்னிப்பு கேட்க, “பரவல்ல விடுங்க..” என்றான் அவன் சாதாரணமாகவே..

“நான் நித்திலா..” என்றவள் தன்னை அறிமுகம் செய்ய, “நான் மகேஷ்..” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள, “நீங்க எங்கே போறீங்க..” என்றவள் கேட்க, “நான் இன்னும் எதுவும் பிளான் பண்ணல..” என்றவன் புன்புருவல் பூத்தான்..

“எங்களை மாதிரியே..” என்று வாய்விட்டு சிரித்தவள், “வாங்க நீங்களும் எங்களோட டீமில் சேர்ந்துகோங்க..” என்றவள் வித்யா முதலில் அமர்ந்திருந்த சீட்டைக் காட்டினாள்

“நீங்க என்ன ரீசன்ல வீட்டைவிட்டு வந்தீங்க..” என்று நித்தி அவனிடம் விசாரிக்க “கொஞ்சநாள் ஊர் சுற்றலாம் என்ற மைண்ட்ல கிளம்பி வந்துவிட்டேன்..” என்றான் மகேஷ்..

அவர்களை எல்லாம் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த அவனின் மீது வித்யாவின் பார்வை திரும்பியது..

“நைட் ஏன் ஸார் பேசாமல் எழுந்து போனீங்க..” என்று கேட்க, அவனோ, “நீங்க எல்லாம் ஓடி வந்ததாக சொன்னீங்க..” என்றவன் தன் மௌனத்தைக் கலைத்த வண்ணம்..

“ஆமா நாங்க எல்லாம் ஓடிதான் வந்தோம்..” என்றாள் நித்திலா..

“நீங்களுமா..? அப்போ சுமிம்மா உங்களோட ரிலேட்டிவ் இல்லையா..” என்று கேட்டான் அவன்..

“அவங்களை ரயிலில்தான் சந்திச்சேன்..” அவள் நெஞ்சறிந்து பொய் சொல்ல அப்பொழுது கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தான் நிரஞ்சனின் பார்வை அவள் மீது கேள்வியாக படிந்தது.. அவன் பார்வை தன் மீது படிவதை உணர்ந்தும் அவள் நிமிரவில்லை..

அவனும் அமைதியாக இருக்க, “என்னை எங்க வீட்டில் துரத்தி விட்டுடாங்க..” என்றான்..

“நல்ல விஷயம் பண்ணிருக்காங்க..” என்று வித்யா சிரிக்க, “என்ன தப்பு செஞ்சீங்க..?” என்று கேட்டாள்..

“எனக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம்.. யாரிடமும் பேசமாட்டேன்.. அதன் அப்பா போடா என்று துரத்தி விட்டுவிட்டார்..” என்றவன் குறுஞ்சிரிப்புடன் முடிக்க, “அப்போ என்னோட கணிப்பு சரிதான்..” என்று வாய்விட்டுச் சிரித்த வித்தியுடன் இணைந்துகொண்டாள் நித்திலா

“என்னோட நல்லாதானே பேசறீங்க..” என்று வித்யா அவனை கேலி செய்ய, அப்பொழுதே அவனின் மாற்றம் அவனுக்கு புரிந்தது..

“நீங்க எல்லோரும் எங்கிருந்தோ வந்து இங்கே இவ்வளவு கலகலப்பாக இருக்கீங்க.. நான் பேசாமல் இருந்தால் நல்ல இருக்காது..” என்றவன் தயக்கமாகவே.

“இந்த தயக்கம் எல்லாம் வேண்டாம்..” என்றவள் தொடர்ந்து, “உங்க பெயர்..” என்று கேட்டாள் நித்திலா..

“சசிதரன்..” என்று சொல்ல, “சூப்பர் நேம்..” என்றாள் வித்யா.. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வெளியே யாரோ சண்டையிடும் குரல்கேட்டு எல்லோருமே ரயிலைவிட்டு இறங்கிச் சென்றனர்..

அவர்களின் சத்தம்கேட்டு எல்லோரும் அங்கே கூடிவிட ரயிலில் பெண்ணின் துப்பட்டாவைப்பிடித்து இழுத்த ஒருவனைப் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார் சுமிம்மா..

அவரைப் முதலில் பார்த்த நிரஞ்சன், “ஓ மை காட்..” என்று அவரின் அருகில் சென்று, “சுமிம்மா வேண்டாம்..” என்று அவரை தடுத்தான்..

“யார் மீது கை வைக்கிற.. என்னோட பிள்ளை மேல கை வைக்கிற நாயே..” என்று அவனை புரட்டியெடுத்து போலீசில் ஒப்படைத்தார்..

அவர்கள் அவனை இழுத்துச் செல்ல, “என்னாச்சு அம்மா..” என்று எல்லோரும் விசாரிக்க, “அனிதா துப்பட்டாவை பிடித்து இழுத்தான்.. அதன் அடி வெளுத்து அனுப்பினேன்.. நான் சுமித்ரா.. என்னிடமே அவனோட வேலையை காட்டுகிறான்..” என்று அனிதாவின் பக்கம் திரும்பினார்..

அவள் ஓடிவந்து சுமிம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, “நாங்க ஒழுங்காக இருந்தாலும் இந்த உலகம் நம்மள தனித்து மட்டும் பயணிக்க விடாது சுமிம்மா..” என்றாள்..

அவர் அவளை அணைத்துக்கொண்டு, “உங்க எல்லோருக்கும் பாதுகாப்பாக நான் இருக்கேன்.. இனியும் இருப்பேன்..” என்றவர் தொடர்ந்து, “பயந்துவிட்டாயா..?” என்று கேட்டார்..

“நான் யாரு அனிதா சுமிம்மா.. என்னை பயப்பட வைக்க இன்னொருவன் பிறந்து வரணும்.. விட்ட ஒரு அடிக்கு அவன் திருமணம் பற்றி நினைக்க கூட மாட்டான்..” என்று வாய்விட்டு சிரித்தாள்..

அவள் சொன்ன வேகத்தில் எல்லோரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது..  யாருக்கும் ரயிலில் செல்ல விருப்பம் இல்லாமல் போய்விட பொள்ளாச்சியில் இறங்கிவிட்டனர்..

அவரவர் கொண்டு வந்தவை அவரவர் கைகளில் இருக்க ரயில் மெல்ல கிளம்பியது.. அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் எல்லோரும் நின்றிருந்தனர்..?!

அத்தியாயம் – 6

எல்லோரும் இறங்கி நிற்பதைக் கண்ட சுமிம்மாவின் மனம் கனத்து போகவே, “என்னப்பா எல்லோரும் இறங்கிட்டீங்க..?” என்றவரின் பார்வை அந்த புதியவனின் மீது படிந்தது..

அவரின் பார்வையின் பொருளறிந்த நிரஞ்சனோ, “அவரும் நம்மை மாதிரிதான் அம்மா..” என்றவன் விளக்கம் கொடுக்க அவரின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது..

“அம்மா இங்கே பாருங்க.. நம்ம எல்லோரும் ஒரே நேரத்தில் ஊரில் இருந்து வந்திருக்கோம்.. நம்ம எல்லோருமே ஒவ்வொரு காரணத்திற்காக வீட்டைவிட்டு வந்திருந்தாலும் இவங்களுக்கு நம்ம தான் பாதுக்காப்பு..” நிரஞ்சன் புரிதலுடன் பதில் கொடுத்தான்..

அவனைப் பார்த்து புன்னகைத்த சுமிம்மா, “சரிப்பா இப்போ என்ன செய்யலாம்..” என்று அவர்களிடமே கேட்டார்..

“அதை நீங்கதான் அம்மா சொல்லணும்..” என்றாள் அனிதா..

“இல்லம்மா அவங்க பசங்க.. எங்கே சுற்றி பார்க்க வந்திருக்காங்களோ..” என்றவர் ஏதோ சொல்ல வருவதற்கு முன்னே கைநீட்டித் தடுத்தான் நிரஞ்சன்,

“முதலில் எல்லாருமே தனி.. இப்போ எல்லோரும் ஒன்றிணைந்து இருக்கிறோம்.. அப்போ அதோட தலைமை பொறுப்பை நீங்கதானே ஏற்றுக்கொள்ள வேண்டும்..” என்றான்..

பெண்கள் ஐவரும் அவனின் பேச்சிற்கு செவிசாய்த்து அமைதியாக நின்றிருக்க, ‘மொத்தம் ஐந்து பொண்ணுங்களைப் பாதுக்காப்பாக பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு..” என்றவருக்கும் அவன் சொல்வது சரியென தோன்றியது..

“சரி இப்போ நம்ம ஹோட்டலில் ரூம் போடலாம்.. நீங்க பசங்க தனியாக ரூம் எடுத்துகோங்க.. நாங்க லேடிஸ் தனியாக ரூம் எடுத்துத் தங்கிக் கொள்கிறோம்..” என்றவர்,

“இங்கே எந்த இடம் ரொம்ப பேமஸ் தம்பி..” என்றவர் நிரஞ்சனிடம் கேட்க, “இங்கே திருமூர்த்தி மலை, ஆழியார் டேம் அப்புறம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில்..” என்றான்..

“அப்போ நம்ம கோவிலுக்கு போலாம் அம்மா..” என்ற வித்யாவை எல்லோரும் சேர்ந்து முறைக்க, “நான் என்ன இப்போ தப்பாக பேசிட்டேன்..” அவள் பாவமாகக் கேட்டாள்..

“வித்யா இன்னும் கொஞ்சநாளில் நானே காசி ராமேஸ்வரம் போகணும் என்ற முடிவில் இருக்கேன்.. அப்போ வந்து இந்த கோவிலைப் பார்த்துக் கொள்கிறேன்.. என்னை ஆளைவிடு..” என்றவர் அவளைவிட பாவமாக..

அவர் சொன்ன விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட, “சரிம்மா இப்போ எங்கே போகலாம்..” – நித்திலா

“முதலில் ரூமிற்கு போய் குளிப்போம்.. அப்புறம் ஆழியார் டேம்.. திருமூர்த்திமலை போக லேட் ஆகும்..” என்றவர் வரிசையாக பட்டியலிட்டார்..

பிறகு அவர் நிரஞ்சனின் பக்கம் திரும்பி, “நீதான் இனிமேல் பொருளாளர்.. நம்ம சுற்றிப்பார்க்கும் இடத்தில் எல்லாம் ஆகும் செலவை கணக்கு எழுதி வை.. நம்ம லாஸ்ட் நாள் கணக்கு பார்த்துக்கலாம்..” என்றவர் திட்டம் தீட்டினார்..

‘அம்மா ஒரு பக்க பிசினஸ்மேனிடம் இப்படியொரு வேலையை ஒப்படைக்கிறீங்களே..’ அவன் மனதிற்குள் புலம்பினான்..

“என்னப்பா ரொம்ப அமைதியாக இருக்கிற..” என்று சுமிம்மா அவனிடம் கேட்க, “அண்ணா எனக்காக ஓகே சொல்லுங்க.. ப்ளீஸ்..” சங்கரி சிணுங்க, “சரிம்மா..” என்றான் நிரஞ்சன்..

“நீங்க மூவரும் தனி ரூம் எடுத்து தங்கிக்கோங்க.. நாங்க எல்லோரும் ஒரு ரூமில் தங்கிக்கொள்கிறோம்..”  என்றார் சுமிம்மா எல்லோரும் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.. எல்லோருக்கும் சேர்த்து இரண்டு ரூம் எடுத்தான் நிரஞ்சன்..

அவன் கொண்டுவந்து சாவியைக் கொடுக்க, அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்ற நித்தி அறையில் இருந்த ஜன்னல் மற்றும் பாத்ரூம் எல்லாம் சுற்றி பார்த்தாள்.. அது மட்டும் இன்றி ஜன்னல் திரையை நன்றாக உதறிவிட்டு நீக்கி வைத்தாள்..

அவளின் செயலைக் கவனித்த அனிதா, “என்ன தேடுறீங்க..” என்று கேட்க, “கேமரா..” என்ற நித்தி தொடர்ந்து, “பொண்ணுங்க நல்ல எல்லோரும் இங்கே இருக்க போறோம்.. நமக்கு நம்மதான் பாதுக்காப்பு.. அதன் அறையில் ஏதாவது கேமரா இருக்கான்னு பார்த்தேன்..” என்றாள்..

அவளின் செயல் மற்றவருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும் கூட சுமிம்மாவின் முகம் மலரவே செய்தது..

“நான் முதலில் போய் குளிக்கிறேன்..” என்று சுமிம்மா குளிக்க செல்ல, “ம்ம் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சுமிம்மா..” என்றாள் வித்யா..

ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்த அனிதா செல்லை கையில் எடுத்துகொள்ள, இன்னொருத்தி புக் என்று புரட்டிகொண்டிருந்தனர். சங்கரி படுக்கையில் படுத்துக்கொள்ள ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தாள் நித்தி.

லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. தக்கத்திமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா..” என்ற பாடல் ஒலிகேட்க மற்றவர்களின் பார்வை சுமிம்மாவின் மீது திரும்பியது..

அவரோ அவர்களை கவனிக்காமல், “காதில் மெல்ல காதல் சொல்ல.. காதில் மெல்ல காதல் சொல்ல..” என்று சரோஜாதேவி மாதிரியே அவரும் டான்ஸ் ஆடிக்கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தார்..

நித்தியைத் தவிர மற்ற மூவரும் அவரை வியப்புடன் பார்க்க, “மூவரும் என்னை ஏன் இப்படி பார்க்கிறீங்க.. நான் பாட்டு பாடக்கூடாதா?” என்ற கேள்வியுடன் உடையை மாற்ற சென்றார்..

அவர் உடை மாற்ற செல்ல, “அம்மா செம..” என்ற சங்கரியின் குரல் ஓங்கி ஒலிக்க, “இன்னும் அம்மாவிடம் என்ன என்ன திறமை எல்லாம் இருக்கோ யார் கண்டா..” என்ற வித்யா, “அம்மா சூப்பர் சாங்.. செம ஷாக்..” என்று புன்னகையுடன் குளிக்க சென்றாள்..

“தேங்க்ஸ் சங்கரி அண்ட் வித்யா..” என்ற சுமிம்மாவின் கைபேசி சிணுங்க போனை எடுத்துகொண்டு தனியாக சென்றார்.. அவர் போன் பேசுவதைப் பார்த்துவிட்டு தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள் நித்திலா..

தனக்கு வந்த போனை பேசிவிட்டு வைத்த சுமிம்மா, ‘எல்லாம் நல்லதாகவே நடக்கும்..’ என்று நினைத்துக் கொண்டார்..

அவரின் ஒவ்வொரு செயலும் அவளின் மனதைக் கனக்க வைக்க, ‘எல்லாம் மாறும்..’ என்ற எண்ணத்துடன் மனதைத் தேற்றிக் கொண்டாள் நித்திலா..

“நான் மகேஷ் கூட டுயட் பாடும் பொழுது அம்மா மட்டும் ஓல்டு சாங் பாடினால், அனிதா நீ க்ளூஸ்..” என்று வித்யா குளித்துவிட்டு வந்தும் குளிக்க சென்றார்..

அதேபோல நிரஞ்சன் கதவை திறந்து உள்ளே சென்றது அவனின் செல் அடித்தது.. அவன் செல்லின் திரையைப் பார்த்துவிட்டு போனை எடுத்து,  “ஹலோ” என்றவன் சொல்ல, “ரஞ்சன் நான் அம்மாடா..” என்றார் மனோகரி…

“என்னம்மா விஷயம்..” என்றவன் பதட்டத்துடன் கேட்க, “நிரஞ்சன் இப்பொழுதுதான் பொண்ணு வீட்டில் இருந்து அந்த பொண்ணோட அண்ணன் வந்துவிட்டு போனார்..” என்றவர் திருமணப் பேச்சை எடுத்தார்..

“அம்மா..” என்றவன் பல்லைக் கடிக்க மற்ற இருவரும் அவனைக் கேள்வியாக பார்க்க, “நீங்க போய் குளிங்க.. நான் அம்மாவிடம் பேசிவிட்டு வருகிறேன்..” என்றவன் புன்னகையுடன்..

சசிதரன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு குளிக்க செல்ல, “என்னம்மா இங்கே நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தால் நீங்க அதுக்கும் விட மாட்டீங்களா..” என்றவன் கடுப்புடன்

“அதெல்லாம் எடுக்கு தெரியாது.. பொண்ணு ரொம்ப அழகாக இருக்கிற..” என்றவர் தொடர, “அப்போ நீயே அவளைக் கட்டிக்கோ..” என்றவன் போனைக் கட் செய்தான்..

அவன் போனை வைத்த மறுநொடியே நிரஞ்சனின் வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது.. அதிலிருந்த போட்டோவைப் பார்த்தவனின் முகம் செந்தணலாக மாறியது..

அவனின் அருகில் அமர்ந்திருந்த மகேஷ், “அண்ணா நீங்க முதலில் போட்டோ பாருங்க.. ஏதாவது தீர்வு கிடக்கும்..” என்றவன் சொல்லிவிட்டு நகர்ந்தான்..

தாயின் தொந்தரவு தாங்க முடியாமல் போட்டோவை டவுன்லோட் செய்து பார்த்தவனின் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.. அந்த போட்டோவில் இருந்த பெண் நித்திலா..!

‘இவள் இப்போ இங்கேதானே இருக்கிற..’ என்றவன் உடனே தாய்க்கு போன் செய்தவன், “அம்மா இந்த பொண்ணு..” என்றவன் இழுத்தான்..

“தாசில்தாரின் மகள் பெயர் நித்திலா. வயசு 23. இப்பொழுது பிரைவேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்..” என்றவர் விவரத்தை ஒப்பித்தார்.

“அம்மா எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. இவங்க வீட்டில் பேசி முடித்துவிடுங்கள்..” என்றவன் தாய்க்கு கட்டளையிட்டான்..

“நானும் அதே முடிவில் தான் இருந்தேன்.. ஆனால் அவங்க அம்மாவும், பொண்ணும் வெளியூர் போயிருப்பதாக சொன்னாங்க..” என்றார் மனோகரி..

“சரிம்மா நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று போனை வைத்துவிட்டு, ‘இவள் இங்கே இருக்கிற.. அப்போ இவளோட அம்மா யாராக இருக்கும்? ஒரு வேலை சுமிம்மாவாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது..

அதன்பிறகு எல்லோரும் குளித்துவிட்டு ஆழியார் டேம் சுற்றிப்பார்க்க கிளம்பினர்.. ஹோட்டலை விட்டு வழியில் ஒரு பெண்ணின் முடியைப் பார்த்த சங்கரி, “அம்மா..” என்றழைக்க, “என்ன சங்கரி..” என்று அவளின் பக்கம் திரும்பினார்..

“அந்த அக்காவைப் பாருங்க..” என்றாள் சங்கரி.. அந்த ஹோட்டலின் பூங்காவில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிற்கு கூந்தல் நீளமாக இருந்தது..

“அந்த பெண்ணிற்கு முடி அதிகமாக இருக்கும்மா..” என்று அந்த திசையைப் பார்த்துக்கொண்டே கூறினாள் வித்யா..

“எனக்கும் முடி அதிகமாக கொட்டுது.. வா நம்ம போய் அவளிடம் டிப்ஸ் கேட்டுவிட்டு வருவோம்..” என்றவர் சங்கரியை உடன் அழைத்துச் சென்றார்..

அதெல்லாம் பார்த்த அனிதா, “இந்த அம்மாவுக்கு முடி கொட்டுதாம்..” என்றவள் வாய்விட்டுச் சிரித்தாள்..

வித்யா முறைத்த முறையில், ‘இந்த அக்கா என்னை ரொம்ப முறைக்குது.. அப்படி நான் என்ன பண்ணினேன்..’ அவளின் சிரிப்பு உதட்டில் உறைந்தது..

சசிதரன், மகேஷ் இருவரும் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க நித்திலாவோ சுவாரசியமாக அவர்கள் இவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்..

நிரஞ்சனின் பார்வை தன்னவள் என்ற உரிமையுடன் அவளைத் தழுவியது.. நீலநிற சுடிதாரில் கடல் தேவதை போல நின்றவளின் உதட்டில் மலர்ந்திருந்த புன்னகையில் அவனின் உள்ளம் அவளிடம் பறிபோனது..

“ஏன் நீ அவங்களுடன் போகல..” என்றவனின் குரல் வெகு அருகில் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவளின் அருகில் நின்றிருந்தான் நிரஞ்சன்..

ஆனால் எல்லோரின் கண்களுக்கும் அவன் இடைவெளி விட்டு நிற்பது போலவே தெரியும்..  ‘என்ன..’ என்பது போல அவன் இடதுபுருவம் உயர்த்திட, “எனக்கு எந்த டிப்ஸும் தேவையில்ல..” என்றவள் வெட்டும் பார்வையுடன்..

“நீ கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிற..” என்றவனின் பார்வை அவளின் மீது ரசனையுடன் படிய, “நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? நீங்க உங்களோட வேலையோ மட்டும் பாருங்க..” என்றவள் பொரிந்து தள்ளிவிட்டு அவனைவிட்டு விலகி நின்றாள்..

“இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவன் அவளை சீண்டிவிட, “உனக்கு என்னடா ஆச்சு..” என்றவள் கடுப்புடன் கேட்க, “அண்ணாவை யாரோ நல்ல மந்திரிச்சு விட்டுடாங்க..” என்ற மகேஷ் குறும்புடன் புன்னகைத்தான்..

அவன் இயல்பாக சொல்ல நிரஞ்சனின் பார்வையோ அவளின் மீது விசமத்துடன் படிய அவளுக்கு அப்படியே பற்றிகொண்டு வந்தது..   “கொன்றுவிடுவேன்.. சக்கிரத்தை..” என்றவள் அவனைவிட்டு விலகிச் சென்றாள்..

நித்திலாவைப் பார்த்தும் அவனின் மனதில் ஏற்பட்ட சலனத்தின் அர்த்தம் அவனுக்கு புரிந்துவிட, ‘நல்லாவே பேசற நிதி டார்லிங்..’ என்று மனதிற்குள் புன்னகைத்தான்..

அந்த பெண்ணின் அருகில் சென்ற சுமிம்மா, “ஒரு நிமிஷம் டா செல்லம்.. ஒரிஜினல் முடியா என்று ஜேக் பண்ணிக்கலாம்..” என்றவர் அவளின் முடியைப் பிடித்து இழுத்தார்..

“ஐயோ அம்மா..” என்று அலறியவள் நிமிர்ந்து பார்க்க, “ஸாரிம்மா.. நிஜமுடியா என்ற சந்தேகம் அதன் இழுத்து பார்த்தேன்..” என்று  புன்னகைத்தார் சுமிம்மா..

“நிஜமான முடித்தான்.. ஜவுரி முடி என்று நினைச்சீங்களோ..” என்றவள் கையில் இருந்த பேக்கைப் பார்த்துவிட்டு, “ஊர் சுத்தி பார்க்க வந்திருக்கிறாயாம்மா..” என்று கனிவுடன் கேட்க, “சும்மா டிப்ஸ் சொல்ல சொல்லுங்க அம்மா..” என்று அடம்பிடித்தாள் சங்கரி..

“நான் ஊர் சுத்திப்பார்க்க வரல அம்மா..” என்றவள் தொடர்ந்து, “இப்பொழுது பசிக்குது.. சாப்பிட பிரியாணி கடைக்கு போகிறேன்..” என்றாள்..

“நீ மட்டுமா..?” என்றவர் சந்தேகம் கேட்க, “வேற யார் வரணும்..” என்று அவரிடமே கேட்டாள் அந்தப்பெண்

“அப்போ நீங்களும் வீட்டைவிட்டு ஓடிவந்துட்டீங்களா” என்று குஷியுடன் கேட்டாள் சங்கரி..

“ம்ம் ஆமா..” என்றவளின் முகம் மலர, “அப்போ நானும் உங்களோட சேர்த்துக்கலாமா..?” என்று தயக்கம் இல்லாமல் கேட்டாள்..

“அதுக்கு நீங்க முதலில் உங்களோட பெயரை சொல்லணும்..” என்றவளின் அருகில் வந்த அனிதா..

“நான் கார்த்திகா.. காலேஜ் முதல் வருடம் படிக்கிறேன்..” என்றவள் புன்னகையுடன்..

அவளின் கையிலிருந்த பையைப் பார்த்த வித்யா, “ஆமா இந்த பை எதுக்கு கார்த்திகா..” புரியாமல் கேட்டாள் வித்யா..

“பழனி பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு எல்லாம் இருக்கு..” என்றவள் வேகமாக பட்டியலிட, “அப்போ நீ சரியான சாப்பாட்டு ராமிதான்..” அவளைக் கிண்டலடித்தாள் அனிதா

“அதெல்லாம் இல்ல.. ஒவ்வொரு ஊரில் இருக்கும் பேமஸ் உணவு சாப்பிட பிடிக்கும்..” என்றவள் சொல்ல, “அப்போ அதுக்குதான் ஓடி வந்தாயா..” என்று கேட்டாள் நித்திலா

“இல்ல என்னோட பாட்டி இறந்துட்டாங்க.. அவங்க இல்லாமல் வீட்டில் இருக்கவே பிடிக்கல.. அதன் வீட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன்..” என்றவள் வருத்ததுடன் கூறினாள்..

“ஸாரி கார்த்தி..” என்று அனிதா மன்னிப்பு கேட்க, “ஆனால் எனக்கு ஊர் சுற்ற ரொம்ப பிடிக்கும்..” என்றவள் புன்னகையுடன்..

“இது எல்லாம் நீங்க சாப்பிட வாங்கிட்டு வந்ததுதானே..” என்றவளிடம் சங்கரி சந்தேகம் கேட்க, “இல்லடா நான் எல்லாம் சாப்பிடுவேன்.. ஆனால் அதில் ஒரு லிமிட் எப்பொழுதும் வெச்சிருப்பேன்.. இது என்னோட பாலிசி..” என்றவள் புன்னகைத்தாள்..

அவள் இப்படி கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி சுமிம்மாவின் மனதில் சீக்கிரம் இடம்பிடிக்க, “சரி இனிமேல் நீயும் எங்களில் ஒருத்தி..” என்றவர் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார்..

அதன்பிறகு எல்லோரும் ஆழியாரை சுற்றிப்பார்க்க சென்றனர்.. அவர்கள் சென்ற நேரமோ என்னவோ ஆழியாரில் தண்ணியே இல்லை.. அங்கிருந்து வரும் பொழுது சுமிம்மா செய்த வேலையில் எல்லோருமே வாய்விட்டுச் சிரித்தனர்.. அப்படி என்ன செய்தார்?

அத்தியாயம் – 7

மதியம் கணவன் திரும்பி வருவதற்குள் தாயுடன் சண்டை போட்டுவிட்டு நிமிர்ந்த மாலதி, “இந்த அம்மாவால் வீடே இரண்டாக போச்சு.. எங்க அத்தை இருந்தால் என்னை எப்படி எல்லாம் பார்த்துப்பாங்க..” என்றவளுக்கு அப்பொழுதுதான் அத்தையின் நினைவு வந்தது..

காலையில் இருந்து சாப்பிடாமல் இருப்பதால் பசி வயிற்றைக் கிள்ள, “இப்போ என்ன செய்வது..?” என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள்..

பிறகு பசி தாங்க முடியாமல் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்த மாலதி பிரிட்ஜ் திறந்து ப்ரட் டை கையில் எடுக்க அதன் உள்ளிருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது..

‘இது என்ன பேப்பர்..’ என்று அவள் சந்தேகத்துடன் அவள் கையில் எடுத்து பார்க்க, “மருமகளே.. என்னம்மா பசி வயிற்றை கிள்ளுகிறதா..?” என்ற சுமிம்மாவின் வரிகளைப் படித்தவள், ‘அத்தை எழுதிய லெட்டர்..’ என்று மீண்டும் படிக்க தொடங்கினாள்..

‘உனக்கு சமையல் செய்ய வராது என்று தெரியும்.. ஆனால் பிறந்த வீடு விட்டு புகுந்த வீடு வந்தால் சில பழக்க வழக்கங்களை மறக்க வேண்டும்.. என்னோட மகன் மட்டும் போதும் என்று நினைத்தால் எப்படிம்மா..

உனக்கு தேவையான சமையல் குறிப்பு எல்லாம் எழுதி அங்கிருக்கும் டிராவில் வைத்திருக்கிறேன்.. அதை படித்துவிட்டு நன்றாக சமைத்து சாப்பிடு.. மற்றது நான் ஊருக்கு வந்த பிறகு பேசலாம்..’ என்று எழுதியிருந்தார்..

அவரின் கரிசனம் அவளின் மனதை தொட, “அத்தை.. அத்தை..” என்றவளின் விழிகள் எதையோ நினைத்து கலங்க அதன்பிறகு குறிப்புகளை தேடி எடுக்க இரண்டு நோட் முழுக்க சைவம், அசைவம், பொரியல், கூட்டு என்று விதவிதமாக குறிப்புகளைப் பார்த்து வியந்தாள் மாலதி..

அதன்பிறகு அவள் சேலையை இழுத்து சொருகிக்கொண்டு வேலையைக் கவனித்தாள்.. அதன்பிறகு அவள் வீட்டில் அனைத்து வேலைகளை சரியாக செய்ய தொடங்கினாள்..

சூரியனோ மேற்கு நோக்கிப் பயணிக்க கீழ்வானம் சிவக்க தொடங்கியது.. வெண்ணிற மேகங்கள் எல்லாம் பொன்னிறமாக மாறியது.. மாலைநேரத்தில் தென்றல் இதமாக வீசிக்கொண்டிருந்தது..

ஆழியார் பஸ்ஸ்டாப் வந்து பஸ்ஸிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.. அதன் அருகில் இருந்த டெய்லர் கடை ஒன்று காலி செய்துக் கொண்டிருந்தனர்..

அப்பொழுது அங்கே வந்த டெய்லர் கடைகாரர், “அம்மா இது எல்லாம் உங்களோட பொண்ணுங்களா..?” என்று கேட்க, அவரை புரியாத பார்வைப் பார்த்த சுமிம்மா, “ம்ம் என்னோட பொண்ணுங்கதான்..” என்றார்..

மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க, “நான் கடை காலி செய்கிறேன்..” என்றவர் சொல்ல, “அதுக்கு நான் என்ன செய்யறது..” என்று கேட்டார் சுமிம்மா..

“இல்லம்மா இந்த பெண் போடும் அளவிற்கு ஒரு பாவாடை சட்டை இருக்கிறது வாங்கிக்கோங்க..” அவர் தயக்கமாகக் கேட்டார்.. எல்லோரும் சுமிம்மாவைக் கேள்வியாக பார்க்க, “என்ன விலை என்று சொல்லுங்க.. நான் வாங்கிக் கொள்கிறேன்..” என்றார்..

அதைக் கவனித்த அனிதா, “நம்ம யாரும் பாவாடை, சட்டை போட மாட்டோமே அப்புறம் எதற்கு அதை காசு கொடுத்து வாங்கறாங்க..” சந்தேகமாகக் கேட்க, “எனக்கும் அதுதான் புரியல..” உதட்டைப் பிதுக்கினாள் வித்யா..

“அப்பா இன்னைக்குதான் ஒரு கேள்விக்கு முறைக்காமல் பதில் சொல்றாங்க.. பெரிய அதிசயம்..” குறும்புடன் கூறினாள் அனிதா

மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க நித்திலா மெளனமாக புன்னகைக்க கண்டுகொண்ட நிரஞ்சனின் பார்வையில் சுவாரசியம் அதிகரித்தது..

அவரிடம் பாவாடை, சட்டையை விலைபேசி வாங்கிய சுமிம்மா, “நான் இந்த துணியைப் போட்டுப் பார்க்கணுமே” என்றவரைத் திகைக்க வைத்தார் சுமிம்மா..

“என்னது..” என்று எல்லோரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து நிற்க “இதுக்கே அதிர்ச்சியானால் எப்படி..?” என்றவர் துணியுடன் சென்றார்..

அவரை திகைப்புடன் பார்த்த அந்த டெய்லர், “இதுக்குப் பின்னாடி வீடு இருக்கு போய் மாற்றிவிட்டு வாங்க..” என்றவருக்கு வழி சொன்னார்..

“இந்த அம்மாவிற்கு எவ்வளவு ஆசை பாரு..” – கார்த்திகா..

“அவங்க வயசில் இதெல்லாம் நடந்திருக்காது..” – வித்யா

“இந்த வயசில் இவ்வளவு துணிச்சலாக இதை செய்யறாங்க இல்ல அதை நம்ம பாராட்டனும்..” – சங்கரி

சசிதரன் எப்பொழுதும் போலவே மெளனமாக இருக்க மகேஷ் ரோட்டை வேடிக்கைப் பார்த்தான்.. நித்திலா எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருக்க நிரஞ்சனின் பார்வை அவள்மீது படிந்தது..

அந்த வீட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி சிரிப்புடன், “அந்த அம்மா உங்களை கூப்பிடறாங்க..” என்றார்..

இவர்கள் எல்லோரும் சென்று பார்க்க நீலநிறத்தில் பாவாடை சட்டை அணிந்து இரட்டை ஜடை பின்னலிட்டு மடித்து கட்டியிருந்தார்.. தோளில் மெரூன் கலர் துப்பட்டா போட்டு பின் பண்ணியிருந்தார்.. எந்த விதமாக விஷமமும் இன்றி கள்ளம்கபடம் இல்லாத புன்னகையுடன் அவர்கள் முன்னே வந்து நின்றார் சுமிம்மா..

“நான் நல்ல இருக்கிறேனா..?” என்று ஆர்வத்துடன் கேட்க, அவரைப் பார்த்த நிரஞ்சன், “உங்களுக்கென்ன சுமிம்மா சூப்பரா இருக்கீங்க..” என்றவன் புன்னகையுடன்..

அவரோ, “அடபோப்பா.. எனக்கு வெக்கம் வெக்கமா வருது..” என்றவர் முகத்தை மூடிக்கொள்ள, “பாருடா சுமிம்மாவுக்கு வெக்கமெல்லாம் வருது..” அவரைக் கலாய்த்தாள் அனிதா..

“சுமிம்மா உங்களுக்கு பாவாடை, சட்டை சூப்பராக இருக்கு..” என்று அவரைக் கட்டிகொண்டாள் சங்கரி..

“நிஜமாவா..” என்றவர் தயக்கத்துடன் கேட்க, “சத்தியமா நாங்க எல்லோரும் பொய் சொல்வோமா..” கேட்டாள் வித்யா..

ஆளுக்கு ஒரு விஷயம் சொல்ல அதையெல்லாம் ரசித்து சிரித்த சுமிம்மாவைப் பார்த்த நித்திலாவின் கண்கள் எதையோ நினைத்து கலங்கியது.. அனால் நொடிபொழுதில் தன் மீட்டெடுத்தாள்..

“சுமிம்மா ஒரு செல்பி..” என்ற நித்திலாவுடன் எல்லோரும் சேர்த்து நிற்க அங்கே செல்பி மூமெண்ட் சூப்பராக இருந்தது..  அவரைப் பாவாடை சட்டையில் பார்த்த சங்கரி மட்டும் அன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தாள்..

அங்கே குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த சுமிம்மா, “எனக்கு அந்த பம்பரம் வேண்டும்..” என்று அடம்பிடிக்க விழி பிதுங்கி நின்றனர் ஆண்கள்..!

சசிதரன் அருகில் இருந்த பெட்டிக்கடையில் சென்று பம்பரம் வாங்கிவர, “எனக்கு இது வேண்டாம்.. எனக்கு அந்த பம்பரம்தான் வேணும்..” என்றார்..

“சுமிம்மா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியல..” அனிதா கேட்க, “எனக்கு ஓவராக தெரியல..” என்றவர் அவர்களின் அருகில் சென்று “டேய் எனக்கு அந்த  பம்பரம் வேணும் கொடுங்கடா..” என்றார்..

“அதெல்லாம் முடியாது.. பம்பரம் கொடுத்தால் என்ன திரும்ப தருவீங்க..” என்று பேரம் பேசினார் பிள்ளைகள்..

“பம்பரம் தந்தால் உங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றேன்” என்றாவர் சொல்ல, “இதில் உங்களுக்கு என்ன கலர் வேண்டும்..” என்ற பிள்ளைகள் அவரின் முன்னே பம்பரத்தை நீட்டினர்..

“எனக்கு பிங்க் கலர் பம்பரம்தான் வேணும்..” என்றவர் அந்த கலரில் இருந்த மரபம்பரத்தை தேடி எடுத்தார்..

அவர் பம்பரம் வாங்கிவிட்டு திரும்பும் பொழுது ஒருவனின் கையில் இருந்த பட்டத்தைப் பார்த்தவர், “எனக்கு அந்த பட்டம் வேணும்..” என்று குழந்தை போல அடம்பிடித்தார்..

“என்னம்மா இப்படி அடம்பிடிக்கிறீங்க..” என்று நிரஞ்சன் அவரிடம் கேட்க, “எனக்கு அந்த பட்டம் வேணும்..” என்றவர் சொல்ல, “சரி அதையும் வாங்கிட்டு வாங்க..” என்றவன் சிரித்துக்கொண்டே.

அவரின் செயல்கள் மற்றவரின் கண்களுக்கு வித்தியாசமான தெரிந்தாலும் யாரும் அவரை தொல்லை என்று நினைக்கவில்லை.. மாறாக அவரின் செயல்களை ரசிக்கவே செய்தனர்..

“நாங்க போய் இவங்களுக்கு எல்லாம் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருகிறோம்..” என்றவன் நித்திலாவின் பக்கம் திரும்பினான்..

அவனின் பார்வையின் பொருளை உணர்ந்த நித்திலா, “வாங்க..” என்று முன்னே நடக்க, நிரஞ்சனோ குறுஞ்சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்தான்..

அதற்குள் கார்த்திகா அங்கிருந்த பெட்டிகடைக்கு கடைக்கு சென்றாள்..  இளநீர் கடையைப் பார்த்த சசிதரன், ‘ஒரு இளநீர் குடிக்கலாம்..’ என்று சென்றான்..

மகேஷ் அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைய அனிதாவும், வித்யாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.. அவன் இளநீர் குடித்துக் கொண்டிருக்க நிரஞ்சனும், நித்திலாவும் தனியே செல்வதைக் கவனித்துவிட்டு, ‘இவங்க எங்கே போறாங்க..’ என்று அவர்களைத் தொடர்ந்து வந்தாள் வித்யா..

அவர்கள் சென்ற திசையறியாமல் நின்ற வித்யா அங்கிருந்த சசிதரனைப் பார்த்து, “எங்க நிரஞ்சனும், நித்தியும் எங்கே போனாங்க..” என்று கேட்க, அவனோ கையில் இருந்த இளநீரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளைப் பார்த்து திருதிருவென விழித்தான்..

“ஏன் இந்த முழி முழிக்கிறீங்க.. அவங்க எங்கே போனாங்க..” என்றவள் பொறுமையுடன்

அவனோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மறுபடியும் கையிலிருந்த இளநீரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் வித்யாவை ஒரு பார்வை பார்த்தான்.. ஆனால் அவளின் கேள்விக்கு மட்டும் அவன் பதில் சொல்லவே இல்லை!

“டேய் எதுக்குடா இந்த முழி முழிக்கிற..” என்றவள் பொறுமையை இழுத்து பிடித்தவண்ணம்!

அவன் அதற்கும் அதே மாதிரி பார்வையை சுழற்றிட, “என்னை கொலைகாரி ஆக்காதே.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா..” என்றவள் கடுப்புடன்..

அப்பொழுதும் அவன் அமைதியாக நின்றிருக்க, “அண்ணா அந்த அருவாளை கொஞ்சம் கொடுங்க..” என்று இளநீர் வெட்டுபவரிடம் இருந்து அருவாளை வாங்கினாள் வித்யா..

“பதில் சொல்லுடா..” என்றவள் கேட்க அவன் அப்பொழுதும் அதே பார்வை பார்க்க, “சுமிம்மா..” என்று கத்தினாள் வித்யா..

அவளின் குரல்கேட்டு எல்லோரும் வந்துவிட, “இவ என்ன அருவாளுடன் நின்றிருக்கிற..” என்று ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்த நிரஞ்சன் அதிர்ச்சியுடன் கேட்டுகொண்டே அவளின் அருகில் சென்றான்..

அதற்குள் எல்லோரும் ஒன்று கூடிவிட கூட்டத்தை விளக்கி உள்ளே நுழைந்த சுமிம்மா, “வித்யா அருவாளை கொடு.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..” என்றார்..

“இவன் பேசவே மாட்டேங்கிறான்.. இவனை தீர்த்துட்டு அப்புறம் பேசலாம் சுமிம்மா..” என்றாள் வித்யா பிடிவாதமாகவே

“உங்களுக்கு இவ்வளவு கோபம் வரும்ன்னு எனக்கு தெரியாது..” என்று அனிதா பயத்துடன் சொல்ல,“எனக்கும்..” என்றனர் கார்த்திகாவும், சங்கரியும் நடுக்கத்துடன்..

“வித்யா அந்த அருவாளை கொடுங்க.. இந்தாங்க உங்களுக்கு ஐஸ்கிரீம்..” என்று அவளின் கையிலிருந்து அருவாளை வாங்க முயற்சி செய்தாள் நித்தி..

யாராலும் அவளின் கையிலிருந்து அருவாளை வாங்க முடியாமல் போக, “டேய் வாய்திறந்து பேசு..” என்றவள் அவனை மிரட்டிட, “என்னிடம் திடீரென வந்து பேசினால் எனக்கு கூச்சமாக இருக்காதா..?” என்றான்..

“என்ன கூச்சம்.. இனிமேல் நீ கூச்சம் அது இதுன்னு பதில் பேசாமல் இருந்த நான் மனிஷியாக இருக்க மாட்டேன்..” என்றவள் கொலைவெறியுடன்

“அப்படிபோடு..” என்ற மகேஷ் வாய்விட்டுச் சிரிக்க, “உன்னையெல்லாம் இப்படி மிரட்டினால்தான் சரிவரும்..” என்றார் சுமிம்மா சிரித்துக்கொண்டே..

சசிதரன் பாவமாக வித்யாவைப் பார்க்க, அவர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரிக்க வித்யாவும் சேர்ந்து சிரித்தாள்.. அப்பொழுது அவர்களின் அருகில் வந்த ஒருவன், “ஹாய் மேடம்..” என்றான்..

அவர்கள் அவனை விநோதமாகப் பார்க்க, “உலகத்திலேயே கோபம் எனக்கு மட்டும்தான் அதிகமாக வருது என்று வீட்டில் இருந்து ஓடிவந்தேன்.. இங்கே வந்து பார்த்தால் தான் தெரியுது.. என்னைவிட கோபக்காரங்க நிறைய பேர் இருக்கான்னு..” என்றவன் புன்னகையுடன்..

“வித்திக்கா உங்க புகழ் உலகம் முழுவதும் பரவும் போலவே..” என்று சிரித்தாள் அனிதா..

“அப்போ நீங்களும் ஓடிவந்த கேஸா..?” என்று கேட்ட சங்கரி, “நிரஞ்சன் அண்ணா இவரோட பெயரை கேட்டு லிஸ்டில் எழுதுங்க..” என்று ஆர்டர் போட்டாள்..

“என்னோட நேம் கௌசிக்..” என்றவன் புன்னகைக்க, “நீங்க எல்லோரும் இப்பொழுது எங்கே போறீங்க..” என்று கேட்டான்..

“நாங்க எல்லோரும் அடுத்து ஊட்டி போறோம்..” என்றாள் நித்தி புன்னகையுடன்..

“எதுக்கு செல்லம் ஹனிமூன் போவதை எல்லோரிடம் சொல்ற..” என்றவன் மெல்லிய குரலில்..

அவனை நிமிர்ந்து முறைத்த நித்தி, “ஏண்டா நல்லாதானே இருந்த.. ஏன் இப்போ எல்லாம் இப்படி பேசற..” என்றவள் எரிச்சலுடன்..

“உன்னைப் பார்த்ததான் இப்படியெல்லாம் பேச தோணுத