Thendral

566 POSTS 40 COMMENTS

mmv2

அத்தியாயம் – 2

ரயில் நிலையம் தாண்டி கொஞ்சதூரம் நடந்தால் இரண்டு நிறைய தெருக்கள் மற்றும் காம்பவுண்ட் வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள். தார் சாலையின் இருபுறமும் வீடுகளுடன் காணப்பட்டது. அவளின் கவனத்தை வெகுவாகத் தன் ஈர்த்தது.

ஒரு சாதாரணமான ஓட்டுவீடு பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது. வீட்டின் முன்னாடி ரோஜா, முல்லை, மல்லிகை செடிகள் இருக்க ஜாதி முல்லை கொடி மட்டும் வீட்டிற்கு மேல் படர விடப்பட்டிருந்தது. அந்த வீட்டை அழகை மனதிற்குள் ரசிக்க அவர் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தவர், “வாம்மா..” அவளை அழைத்து சென்றார்.

நிலா அவரைப் பின்தொடர்ந்து செல்ல, “ரித்திகா..” பேத்தியை அழைக்கவே, “தாத்தா..” என்ற அழைப்புடன் வாசலை எட்டிப்பார்த்தாள் அந்த பெண்.

அவர் நடக்க முடியாமல் வருவதைக் கவனித்தவள், “தாத்தா என்னாச்சு?” அவரின் பேத்தி வாசலுக்கு ஓடிவரவே, “இவர் மயங்கி விழுந்துவிட்டார்” என்றாள் நிலா.

“ஐயோ தாத்தா உங்களுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு. இந்த நேரத்தில் எதற்கு தாத்தா வெளியே போறீங்க..” அவரின் கையைப்பிடித்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.

“நீ காலேஜ் கிளம்புவதற்குள் வாக்கிங் போயிட்டு வரலாம் என்று போனேன்..” அவரின் பின்னோடு செல்லாமல் வாசலோடு கிளம்ப நினைத்த நிலா, “சரிங்க நான் கிளம்பறேன்..” என்று திரும்பி இரண்டடி எடுத்து வைத்தாள்.

அவளை சேலையில் பார்த்தும், ‘என்னோட ரொம்ப பெரிவாங்க போல..’ என்ற நினைவில், “அக்கா வாங்க காபி சாப்பிட்டுட்டு போலாம்..” என அழைத்த ரித்திகாவிடம், “இல்லங்க வேண்டாம். நான் கிளம்பறேன்..” அவள் மறுத்தாள்.

“ரித்து நீ போய் அந்த பெண்ணைக் கூட்டிட்டு வாம்மா..”  பேத்தியை அனுப்பி வைத்தார்..

“எங்க வீட்டில் வேற யாரும் இல்ல. நானும் தாத்தாவும் மட்டும்தான்..” என்றவளை வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்..

ரித்துவின் தாத்தாவும், நிலாவும் ஹாலில் அமர, “இருங்க நான் போய் காபி எடுத்துட்டு வருகிறேன்” சமையலறைக்குள் ரித்திகா நுழைந்தாள். அந்த பெரியவரின் பார்வை அவளின் மீது படிந்தது.

“ஊருக்கு புதுசாம்மா”அவளின் கவனம் கலைத்துவிட, “ம்ம்..” என்றவள் மீண்டும் மெளனமானாள்.

அதற்குள் காபி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த ரித்திகா, “அக்கா உங்க பேரு?” என்று புன்னகையுடன் கேட்க, “கலைநிலா..” என்றாள்.

“சூப்பர் நேம் அக்கா..” என்றவள் தொடர்ந்து, “இவர் என்னோட தாத்தா ரகுராம். நான் ரித்திகா காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன்..” என்றதும், “என்னது!” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் நிலா.

“இதற்கு எதற்கு நீங்க அதிர்ச்சி ஆகிறீங்க?” அவள் புரியாமல் கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

“நீங்க என்னோட பெரியவங்க. எனக்கு இப்பொழுது தான் பதினேழு வயது தொடங்கி இருக்கிறது..” எனப் புன்னகைத்த ரித்திகா, “அதுக்கு இந்த அதிர்ச்சி தேவையா நிலா?” அவளோ அமைதியாக இருக்க அவரின் பார்வை அவள்மீது கேள்வியாக படிந்தது.

‘யாரோ செய்யும் தவறுக்கு நான் மற்றவர்கள் முன்னாள் கூனிக்குறுகிப்போய் நிற்க வேண்டியதாக இருக்கிறதே..’ அவள் மனதிற்குள் நொந்துபோனவள்,  “இந்த வயசில்..” பெரியவர் ஏதோ தொடங்கினார்.

ரித்திகா அவரை தடுப்பதற்குள், “ப்ளீஸ் என்னோட பாஸ்ட் உங்களுக்கு வேண்டாமே..” அந்த பேச்சிற்கு மென்மையாக முற்றுபுள்ளி வைத்துவிட்டாள் நிலா.

அவளின் சாதுரியமான பேச்சு அவரை கவர்ந்துவிடவே, “அடுத்து என்னம்மா பண்ணப் போகிற..” விசாரிக்க நிமிர்ந்து ஒருநொடி அவரைப் பார்த்தாள்.

“வீடு வாடகைக்கு எடுத்து தங்கணும். அடுத்து இங்கே ஏதாவது ஜவுளிக்கடை இருந்தால் அங்கே வேலைக்கு கேட்டுட்டு போகலாம் என்று இருக்கிறேன்..” என்றாள் நிமிர்வாகவே..

அவளின் அந்த துணிச்சல் ரித்திகாவிற்கு பிடித்துவிட, “அப்போ படிப்பு..” என்றதும், “எனக்கு படிக்க இஷ்டம் இல்லக்கா..” என்றவள் கசந்த புன்னகையுடன்..

அவளின் முகம் பார்த்து எதையோ யோசித்த பெரியவர், “ரித்துமா இந்த பொண்ணு முன்னாடியே வந்திருந்தால் பின்னாடி இருந்த வீட்டை நம்ம நிலாவிற்கு கொடுத்திருக்கலாம்..” என்றார் மனிதாபிமானத்துடன்.

“நான் வேற இடம் பார்க்கிறேன்..” என்று எழுந்தாள் நிலா.

ஆனால் அவளை அனுப்பிவைக்க ரித்துவிற்கு மனமே இல்லை. “ஒரு நிமிஷம் இரு நிலா..” என்றவளோ தன் தாத்தாவிடம், “தாத்தா அந்த அம்மாவிடமே கேட்கலாம். நிலா பாவம் சின்ன பொண்ணு. இந்த ஊரில் இவளுக்கு பாதுகாப்பு இருக்காது..” என்று யோசனை கூறினாள்.

அவரும் சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு, “சரிம்மா அந்த அம்மா வந்தாங்களா?” பேத்தியிடம் விவரம் கேட்க, “ம்ம் இப்பொழுதுதான் வந்தாங்க தாத்தா. பின்னாடி ரூமில் இருப்பாங்க..” என்றாள் ரித்திகா.

சோபாவில் இருந்த எழுந்த பெரியவர், “சரி நிலா வாம்மா. அந்த அம்மாவிடம் பேசலாம்..” அவளின் விருப்பத்தைக் கேட்காமல் அவளை அழைத்துச் சென்றவர், “சுமித்ராம்மா..” என்று அழைக்க, “யாரது..” என்ற கேள்வியுடன் வெளியே வந்தார் சுமிம்மா

ரித்திகாவின் அருகில் நின்றிருந்த நிலாவைப் பார்த்துமே அவரின் மனதில் பொறிதட்டியது.

“சொல்லுங்க அண்ணா..” என்றவரின் பார்வை நிலாவின் மீது நிலைத்திட நிமிர்ந்து சுமிம்மாவை பார்த்த நிலா நாக்கை கடித்துக்கொண்டு, ‘ஐயோ நிலா அம்மாவிடம் மாட்டிகிட்டியே..’ மனதிற்குள் நினைத்தாள்.

“இந்த வீட்டில் நீங்க ஒருத்தார் தானே தங்க போறீங்க. அப்படியே இந்த பெண்ணையும் உங்களோட தங்க வைக்க முடியுமா என்று கேட்க வந்தேன்..” ரகுராம் தன்மையுடன் கேட்டார்.

அவர்கள் மூவரையும் ஒரு முறை பார்த்த சுமிம்மா, “அந்த பொண்ணை இங்கே தங்கவைக்க வேண்டும் என்றால் எனக்கு சில கண்டிஷன் இருக்கு..” என்றார் திமிராகவே..

“என்ன கண்டிஷன்” ரித்திகா வேகமாகக் கேட்க, “ரித்து..” என்று அவளின் கைகளை பயத்துடன் பற்றினாள் நிலா.

“முதல் கண்டிஷன் மாதத்தின் முதல் தேதியில் என் கைக்கு வாடகை வந்துவிட வேண்டும், இரவு பத்து மணிக்கு மேல் கரண்ட் யூஸ் பண்ண கூடாது, நைட் லேட்டாக வந்து கதவைத் தட்டக்கூடாது, தண்ணீர் பத்து குடம்தான் கொடுப்பேன்..” என்றவர் தொடர்ந்து,

“நான் சமையல் பண்ண மாட்டேன் நீ செய்தால் எனக்கும் சேர்த்து செய்துவிடவிட வேண்டும். கரண்ட் பில் ஆளுக்கு பாதி பாதி. அதே மாதிரிதான் எல்லாமே..” என்று அவர் கண்டிஷன் போட நிலாவிற்கு ஒருபக்கம் தலையே சுற்றியது..

ஆனால் ரித்துவோ தன் தாத்தாவின் முகம் போன போக்கைப் பார்த்து வாய்மூடி சிரிக்கவே,  “எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க..” நிலா ரகசியமாக அவளிடம் கேட்க, “அங்கே என்னோட தாத்தா முகத்தை பாரேன்..”என்றாள் ரித்திகா. அவள் திரும்பிப் பார்க்க ரகுராம் ருத்திர மூர்த்தியாக நின்றிருந்தார்..

சுமிம்மாவோ, ‘இனிமேல் வாடகைக்கு வீடு விடும் பொழுது யாரையாவது கேள்வி கேட்ப நீ..’ என்று மனதிற்கு புன்னகைக்க, “இங்கே நான் வீட்டுக்காரனா? இல்ல நீங்க வீட்டுக்காரங்களா?” கோபத்துடன் கேட்க இடைமறித்தார் சுமிம்மா.

“அட்வான்ஸ் கொடுக்கும் வரை நீங்க வீட்டுகாரர். அட்வான்ஸ் கொடுத்த பிறகு நான்தான் வீட்டிற்கு சொந்தக்காரி..” என்றதும் நிலாவும், ரித்திகாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சுமிம்மாவிற்கு கூட சிரிப்பு வந்தது ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஏய் உஸ்.. மூச்சு..” என்று அவரின் பிரஷரை ஏற்றிவிட்டார்.

அவர் கோபத்துடன் ஏதோ பேசவரவே, “தாத்தா நீங்க போட்ட கண்டிஷன் அவங்க மனசை ரொம்ப பாதிச்சிருக்கு போல.. அதனால் அப்படி பேசறாங்க தாத்தா..” என்று அவரை அமைதிப்படுத்தினாள் ரித்திகா.

“அதுக்காக..” என்று அவர் மீண்டும் தொடங்க, “தாத்தா..” என அதட்டினாள் ரித்திகா

“அம்மா இவளை உங்களோட தங்க வெச்சுகோங்க..” என்றவள் நிலாவின் பக்கம் திரும்பி, “நீ இவங்களோட பேசிட்டு இரு வருகிறேன்..” என்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்

“அவங்க அப்படியெல்லாம் பேசறாங்க, நீ என்னை அதட்டுகிற..” என்றவர் புலம்பியபடியே வீட்டிற்குள் நுழைய மீண்டும் ஓடிவந்த ரித்திகா, “சூப்பர் சுமிம்மா..” என்று கட்டியணைத்து அவரின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு சிட்டென்று பறந்துவிட்டாள்..

நிலா அவளைத் திகைப்புடன் பார்க்க, “வா நிலா..” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்ற சுமிம்மாவை அவள் பயத்துடன் பார்த்துவிட்டு தலைகுனிந்து நின்றவளோ, “அம்மா நான் வேண்டும் என்று பொய் சொல்லல.. என்னைப்பற்றி சொல்ல விரும்பல அவ்வளவுதான்..” என்றாள்..

“நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன்..” என்றார் சுமிம்மா.

அவள் நிமிர்ந்து புன்னகைக்க, “ஏன்ம்மா வெளியே அவரிடம் அப்படி பேசினீங்க..” சந்தேகத்துடன் இழுத்தாள்.

“நான் வீடு கேட்க வந்த பொழுது மனுஷன் கண்டிஷன் போட்டே என்னோட உயிரை வாங்கிட்டான். அந்த கணக்கைத் தீர்க்க வழி தேடிட்டே இருந்தேன். அந்த கணக்கு இப்போ நீ வந்து முடிச்சு வைத்துவிட்டாய்..” என்று புன்னகைத்தார்.

பிறகு அவளின் பக்கம் திரும்பிய சுமிம்மா, “நான் வெளியே சொன்ன கண்டிஷன் எல்லாம் சும்மாடா.அதை மனசில் போட்டு குழப்பிக்கொள்ளாதே..” என்றதும் சரியென தலையசைத்தாள் நிலா.

“இங்கே நீ உன்னோட வீட்டில் இருப்பது போல சுதந்திரமாக இருக்கலாம்.. ஆனால் நான் அடிக்கடி ஏதாவது சேட்டை செய்வேன்.. நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்..” என்றார் அவர் தன்மையாக..

அதற்குள் மழை பிடித்துவிட குளிர்காற்று ஜன்னல் வழியாக வந்து இருவரின் முகத்திலும் மோதிட, “ம்ம் குளிருக்கு ஒரு ஸ்ராங் டீ, ஒரு மெதுவடை சாப்பிட்டால் சும்மா சூப்பராக இருக்கு..” என்றவர் சமையறைக்குள் நுழைந்தார்..

அவர் சென்ற பின்னர் அங்கிருந்த தரையில் அமர்ந்த நிலாவின் நினைவுகள் எங்கோ சென்று திரும்பிட, “நிலா போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு.. நீயும் நானும் வெளியே போகலாம்..” என்றார்..

அவளோ அதிர்வுடன் நிமிர்ந்து, “எதற்கும்மா..” என்று கேட்க, “நம்ம இருவரும் ஊருக்கு புதுசு.. அதனால ஊர் சுத்தி பார்க்கலாம் வா.. இங்கேதான் பல்லவர்கள் கட்டிய கோவில் எல்லாம் இருக்கிறது என்று புக்கில் படித்த ஞாபகம் அப்படியே போய் ஊர் சுத்திட்டு வரலாம்..” என்றார்..

“ஐயோ அம்மா நான் வரல..” என்றாள் நிலா வேகமாக..

“இந்த கதையெல்லாம் என்னிடம் நடக்காதுங்க மேடம்..” என்றவர் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தார்..

அவர் கையில் தோசை கரண்டியுடன் நிற்க, “அம்மா” என்று பயத்துடன் அழைத்தாள் நிலா..

“ஏய் இங்கே பாரு.. எனக்கு இந்த கண்ணைக் கசக்கிட்டு மூலையில் உட்கார்ந்து அழுகிற பொண்ணுங்கள பிடிக்காது. நீ அந்த மாதிரி இருக்காதே..” என்று அவளை மிரட்ட, “நீங்க கண்டிஷன் சொல்லவே இல்ல சுமிம்மா..” என்றாள் நிலா பாவமாக..

அவளின் முகபாவனை அவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்க, “நான் மற்ற அம்மா மாதிரி இல்ல நிலா. நீ இங்கே சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அந்த சுதந்திரத்தை நீ எப்படி பயன்படுத்த போகிற? அதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு..” என்றவரை அவளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது..

ரித்திகா அவர்களிடம் சொல்லிவிட்டு கல்லூரி கிளம்பிச் சென்ற பின்னர் இருவரும் சேர்ந்து வீட்டை சுத்தம் பண்ணிவிட்டு, குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தனர். கொஞ்சநேரம் பேசினாலும் நிலாவின் மென்மையான மனதை மேலோட்டமாக புரிந்து கொண்டார் சுமிம்மா..

சுமிம்மா வெளியே அழைத்ததற்கு அவளோ, ‘இல்லம்மா நான் வரல..’ என்று மறுத்துவிட,  அதன்பிறகு அவர்கள் இருவரும் பொழுது சாயும் வரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு நிலா முற்றத்தில், ‘ஒரு படத்தின் பாடல்கல்’ என்ற தொகுப்பில் வெள்ளிவிழா படத்தின் பாடல்கள் வரிசையாக ஒலித்தது..

“காதோடுதான் நான் பாடுவேன்..” என்ற பாடலை அவள் அதே குரலில் மெல்ல பாடி முடித்தும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த சுமிம்மா, “அடுத்த பாட்டு என்னோடது..” என்றார் குஷியாக..

அவளும் ஆர்வமாக கவனிக்க, “நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்.. உன்னை சந்தித்தேதான் தீருவேன்..” என்றவரின் கத்தல் குரல்கேட்டு, “அம்மா மெதுவாக பாடுங்க..” அரண்டு கத்தியே விட்டாள்.

அந்த பாடல் முடியும் வரை அவரும் கொஞ்சம் வாணிஸ்ரீயாக மாறிவிட பாட்டு முடிந்தும், “ஐயோ சாமி.. என்னம்மா இப்படி எல்லாம் பண்றீங்க..” பதட்டம் குறையாமல் கேட்டாள் நிலா.

உடனே தன் முகபாவனையை மாற்றிக்கொண்ட சுமிம்மா, “நான் நைட்ல தான் கொஞ்சம் சத்தம் கம்மியாக பாடுவேன்.. என்னோட வாய்ஸ் வெளியே கேட்கவே கேட்காது நிலா..” என்றார். நிலாவின் நிலையோ மயக்கம் போடாத குறைதான்..

“நிலா எப்படி அம்மாவோட பாட்டு..” என்றதும் ரேடியோவில், “அத்தைமடி மெத்தையடி..” என்ற பாடல் இனிமையாக ஒலிக்க, “அன்னைமடி மெத்தையடி. சுமிம்மா குரல் அடுத்த தெரு வரை கேட்குதடி..” குறும்பு மின்னும் விழிகளுடன் அவள் பாடினாள்

“அடிப்பாவி.. என்னையே கேலி செய்யற..” என்றவர் அவளின் காதைபிடித்து திருகிட, “அம்மா வலிக்குதும்மா.. சும்மா விளையாட்டு தான் பாட்டை மாற்றி பாடினேன்..” என்று அவரிடம் சரணடைந்தாள்.

அதன்பிறகு சுமிம்மா படுத்தும் உறங்கிவிட, ‘வாழ்க்கை இப்படி எல்லாம் இருக்குமா?’ கேள்வி மனதில் எழுந்தது. கொஞ்சநேரத்தில் அவளையும் மறந்து உறங்கிவிட்டாள் நிலா.

அவள் உறங்கிய பிறகு கண்விழித்த சுமிம்மா, ‘இந்த பொண்ணுக்கு இந்த வயதில் அப்படி என்ன பிரச்சனை..’ என்ற கேள்வியுடன் விடியலை எதிர்பார்த்து காத்திருந்தார் சுமிம்மா.

இருவரின் மனநிலையும் ஒத்துப்போக அன்றைய பொழுது அவர்களுக்கு மிகவும் இனிமையாக கழிந்தது.. இனிவரும் நாட்களில் சுமிம்மா இன்னும் என்ன என்ன அலம்பல் எல்லாம் பண்ண போறாங்களோ?

மொட்டு வளரும்..

 

 

mmv1

மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது…

அத்தியாயம் – 1

மேற்கு வானம் செவ்வானமாக மாறிக் கொண்டிருக்கும் அந்த அந்திமாலை பொழுதில் மேற்கு வானத்தில் சிவந்த நிலவொன்று குளிர் நிலாவாக மாறி மறந்து கொண்டிருந்தது..

அந்த கடற்கரை மணலில் அமர்ந்திருந்த நிலாவின் கண்கள் இரண்டும் கலங்கியிருக்க அவளின் முகமோ சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்திருந்தது.

அவளின் பார்வை மறையும் சூரியனின் மீதே நிலைத்திருக்க, ‘இது ஒரு முடிவா..? ஒரு தொடக்கத்தின் ஆரம்பமா..?’ என்ற நினைவில் அவளின் விழிகளிரண்டும் கலங்கியது..

“ஐயையோ இடிஞ்சுப் போச்சே..” என்ற அந்த குழந்தையின் குரல் அவளின் கவனத்தை ஈர்த்தது. அப்பொழுது அவள் அங்கே கண்டகாட்சி அவளின் பார்வையில் சுவாரசியம் கூடியது.

ஒரு ஐந்து வயதை உடைய குழந்தை ஒன்று மணல்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது போலும்.. அவள் கட்டிய வீட்டைக் கடலலை அடித்துச் சென்றுவிட அவள் கட்டிய மணல் வீடு இடிந்துவிட்டது. அதற்காகக் கலங்காமல் அந்த குழந்தை மீண்டும் கட்டிய வீட்டை அலைகள் வந்து அடித்துச் சென்றது..

இதுவே மீண்டும் மீண்டும் தொடர அந்த குழந்தையும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் வீடு கட்டிக்கொண்டு இருந்தது. அந்த செயல் அவளின் மனதில் கேள்வியை எழுப்பிட மெல்ல அந்த குழந்தையின் அருகில் சென்ற நிலா, “பாப்பா மணலில் விளையாடுகிறாயா..” குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தாள்..

“ம்ம்..” என்ற குழந்தையோ மீண்டும் வீடு கட்டுவதைப் பார்த்து, “இந்த வீட்டையும் கடலலை வந்து அடித்து சென்றுவிடுமே..” குழந்தை வெடுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தது..

அதன்பிறகு, “நான் மீண்டும் கட்டுவேனே..” என்ற குழந்தை மீண்டும் அந்த வீட்டைக்கட்டி முடிக்கும் நேரத்தில் ஒரு பெரிய அலை வந்து அந்த வீட்டை அடித்துச் செல்ல, “நான் சொன்னேன் இல்ல..” அவள் புன்னகைத்தாள் நிலா.

“நான் மீண்டும் கட்டுவேனே..” என்ற குழந்தையோ மீண்டும் தன்னுடைய பணியைத் தொடரவே, சிலநொடி இமைக்காமல் அந்த குழந்தையின் முகத்தையே பார்த்தாள் நிலா..

பிறகு, “நீ கட்டிய வீடு இடிந்துவிட்டதே என்ற கவலையே இல்லையா பாப்பா..” வருத்தத்துடன் அவள் கேட்க, “எதற்கு கவலைப்படனும்?” என்று கேட்டு அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது அந்த குட்டி வாண்டு தொடர்ந்து,

“இங்கே இவ்வளவு மணல் இருக்கு. வீடு இடிந்தால் மீண்டும் கட்ட இரண்டு கை இருக்கு. என்னிடம் திறமை இருக்கு, முயற்சியும் இருக்கு. அப்புறம் நான் எதற்கு கவலைபடனும்..” அந்த குழந்தையின் பதிலில் திகைத்தாள் நிலா..

“உன்னோட அம்மா வந்து உன்னை வீட்டுக்கு அழச்சிட்டுப் போயிட்டா என்ன பண்ணுவ..” என்றவள் கேட்டதும், “நான் அடுத்தமுறை வரும் பொழுது கட்டுவேன்..” என்றது குழந்தை..

“அடுத்தமுறையும் இடியுமே..” என்றவளின் விழிகள் அவளையும் மீறிக் கலங்கிட, “என்னோட முயற்சியை நான் கைவிட மாட்டேன்..” பிடிவாதமாக கூறியது குழந்தை.

அதற்குள் அங்கு வந்த அந்த குழந்தையின் தாய், “ஏய் வாலு வா போலாம்” என்று குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டார்..

குளிர்ந்த காற்று அவளின் முகத்தில் மோதிட அவளின் மனதில் ஒரு தெளிவு பிறந்திட, ‘நான் எந்த தவறும் செய்யாத பொழுது, நான் ஏன் கலங்கணும்.’ அந்த இடத்தைவிட்டு எழுந்தாள்..

அவளின் மனதில் ஒரு விடியலுக்கான கதவு திறந்துகொண்டது. அந்த கதவு வழியில் வந்த வெளிச்சத்தைப் பார்த்தவள் புது பறவையாக மாறி சிறகு விரித்துப் பறக்க நினைத்தாள்..

‘கையில் எவ்வளவு பணமிருக்கிறது..?’ என்ற யோசனையுடன் பர்ஸை பார்க்க, இரண்டே இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அவளைப் பார்த்து சிரித்தது.

ஒரு தெளிவான முடிவுடன் ஒரு கையில் பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். ஒரு ஆட்டோ பிடித்து கன்னியாகுமரி ரயில்நிலையம் வந்து சேர்ந்தாள் நிலா..

“காஞ்சிபுரத்திற்கு ஒரு டிக்கெட் கொடுங்க..” என்றவள் டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் எக்ஸ்பிரஸில் ஏறியமர்ந்தாள்.

அதேநேரத்தில் ரயில் நிலையத்தின் முன்னே கார் வந்து நின்றதும், “தேங்க்ஸ் தம்பி.. என்னை சீக்கிரமே கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டாய்..” காரைவிட்டு இறங்கிய சுமிம்மா டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு ரயில் நிலையத்தின் உள்ளே நுழையப் போனவர்,

மீண்டும் திரும்பி வருவதை வினோதமாக பார்த்த அந்த டிரைவருடன், “தம்பி அம்மாவை ரயில் நிலையத்தில் தான் இறக்கிவிட்டேன் என்று மட்டும் என்னோட பிள்ளைகளிடம் சொல்லாதே..” என்றார் கொஞ்சலாகவே..

“அவர்களிடம் உண்மையைத்தானே சொல்லணும். பொய் சொல்றது தப்பில்ல..” என்றான் டாக்சி டிரைவர்.

“நல்லதுக்காக பொய் சொல்றது தப்பில்ல என்று வள்ளுவர் சொல்லியிருக்கார். அதனால என்னோட நன்மைக்காக நீயும் உன்னோட கொள்கையை கொஞ்சம் காற்றில்விட்டுட்டு இந்த ஒரு பொய் மட்டும் சொல்லுப்பா..” பாவமாகக் கேட்க மனமிறங்கினர் அந்த டாக்சி டிரைவர்..

“என்ன சொல்லணும் என்று சொல்லுங்க அம்மா..” தன்மையாக அவன் கேட்கவே, “என்னை பஸ்டாண்டில் இறக்கிவிட்டேன் என்று சொல்லிவிடு அந்து போதும்..” என்றவரை ஏற இறங்க பார்த்தான் டாக்சி டிரைவர்.

‘இவன் என்ன இந்த பார்வை பார்க்கிறான். நான் என்ன உண்மையா சொல்ல சொன்னே. ஒரே ஒரு பொய்தானே சொல்ல சொன்னேன். அதுக்கு இந்த லுக்கு தேவையாடா..’ என்று மனதிற்குள் நினைத்தார்..

பிறகு, “சரிம்மா..” என்றவன் சொல்ல, “உஸ்ஸ்.. தேங்க்ஸ்டா கண்ணா..” என்றவர் வேகமாக ரயில் நிலையத்திற்குள் நுழைய, “இந்த அம்மா லூசாக இருக்குமோ? பாவம் யார் எல்லாம் இவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்களோ?” என்று தனியாக புலம்பினான்..

அவர் உள்ளே நுழையவும் ரயில் வரவும் சரியாக இருக்க, ‘ஹப்பாடா சுமித்ரா இனிமேல் கன்னியாகுமரி பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாதுடி..’ என்றவர் ரயிலில் ஏறினார்..

கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்ததும், அந்த பெண்ணை சிந்தனையுடன் பார்த்த சுமிம்மா அவளின் அருகில் அமர்ந்தார். தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு தன் கவனம் களைந்து திரும்பிய நிலா சுமிம்மாவைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி அமர்ந்தாள்..

நிலாவை போல அழகாக இருந்த வட்ட முகமும், கலங்கிய சிவந்து இருக்கும் விழிகளும், வலதுபுறம் மூக்கில் மின்னும் சின்ன மூக்குத்தி அவளின் அழகிற்கே அழகு சேர்க்கும். அவளின் சிவந்த இதழ்களின் புன்னகை வர மறுத்தது. அவளின் கூந்தல் இடையைத் தழுவிச்சென்றது. அவள் அணிந்திரிந்த புடவை கூட அவளுக்கு பந்தமாக பொருந்தியது.

கொடிபோல இருந்த அவளின் உடல் தோற்றத்தைப் பார்த்தும் அந்த பெண்ணின் வயது குறைந்தது பதினேழு இருக்கும் என்று மனதளவில் எடை போட்டுவிட்டார் சுமிம்மா. அவரின் மனதில் ஏனோ சந்தேகம் எழுந்தது.

ரயில் கிளம்புவதற்கு உண்டான அறிவிப்பு வர ரயில் மெல்லக் கிளம்பியது. அந்தநேரத்தில் கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்த புதியவனைப் பார்த்தவளின் மனதில் பயம் எழுந்தது.

கிட்டதட்ட ஆறடிக்கும் குறையாத உயரமும், திரண்ட தோள்களும், மாநிறம் கொண்ட அந்த புதியவனை தன் எதிரே திடீரென கண்டதும் திடுக்கிட்டுப் போனாள் நிலா..அதை வெளிக்காட்டாமல் மனதிற்குள் மறைத்தாள்..

அவளின் விழிகளை வைத்தே அவளின் பயத்தை உணர்ந்த புதியவனின் முகத்தில் புன்னகை கீற்றுபோல வந்து சென்றது..

தன்னுடைய சீட் நம்பர் பார்த்து அவளின் எதிரே அமர்ந்ததும், அவள் பார்வையை வெளிப்பக்கம் நோக்கி திருப்பிவிட அவனும் ஒரு ஹெட்செட் எடுத்து காதில் வைத்துப் பாடல் கேட்கத தொடங்கினான்..

“தடக்.. தடக்..” என்ற ரயில் ஓசை கேட்டவண்ணம் அமைதியாக விழிமூடி தன்னை மறந்து உறங்கினாள். பல நாட்களுக்கு பிறகு அவளின் விழிகளைத் தூக்கம் தழுவியது.

அவள் தூக்கத்தில் சுமிம்மாவின் தோள் சாயவே, “நல்லா தூங்கறாப் போல..” என்றவரின் குரல்கேட்டு நிமிர்ந்து பார்த்தான் அவன்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவளின் குழந்தை முகம் அவனை வெகுவாக கவர்ந்ததுவிட, தன்னுடைய ஹெட்செட்டை காதிலிருந்து எடுத்துவிட்டான்.

அவனின் பார்வை அவளின் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்த சுமிம்மா, “எத்தனை நாள் தூங்காமலிருந்தாளோ தெரியல..” அவளின் தலையை மென்மையாக வருடிவிட்டார்.

அவரின் அந்த இயல்பான குணம் அவனுக்கு பிடித்துவிடவே, “ம்ம் ரொம்ப சோர்வாக தெரியறாங்க..” என்றதும், “உன்னோட பெயர் என்னப்பா? நீ எங்கே போயிட்டு இருக்கிற?” என்று கேட்டார்.

“என்னோட பெயர் கவிபாரதி அம்மா. நான் ஒரு டாக்டர். ஒரு முக்கியமான பெசண்ட் பார்க்க காஞ்சிபுரம் போயிட்டு இருக்கேன்” என்றவன் புன்னகையுடன்..

“ம்ம் பரவல்ல நல்ல படிப்புதான்”  புன்னகைக்க, “நீங்க அம்மா” என்று இழுத்தான்.

“என்னோட பெயர் சுமித்ரா தம்பி. நான் முன்னாடி தாசில்தாராக இருந்தேன். இப்பொழுது வேலையை ரிஸைன் பண்ணிட்டு காஞ்சிபுரம் போயிட்டு இருக்கேன்..” என்றார்..

“வேலை வேண்டாம் என்று சொல்லிட்டு ஊருக்கு போறீங்க போல. உங்களோட பசங்க எல்லாம் காஞ்சிபுரத்தில் இருக்காங்களா?” என்றதும் எதையோ நினைத்து புன்னகைத்தவர், “இல்லப்பா என்னவோ அந்த ஊருக்கு போகணும் போல இருந்தது அதன் கிளம்பிட்டேன்” என்றார் சுமிம்மா..

“அப்போ வயசாகி போச்சு அப்படியே கோவில் குளம் என்று சுத்தலாம் என்று கிளம்பிட்டிங்க..” கிண்டலடிக்க, “என்னடா தம்பி என்னையே நீ கலாய்க்கிற?” என்று தன் வழக்கமான குறும்புடன் கேட்டார்..

“உண்மையைத்தானே சொன்னேன்..” அவன் விடாமல் வம்புவளர்க்க, “நான் உண்மையை உன்னிடம் சொன்னேனா? சும்மா என்னை வம்பிற்கு இழுக்காதே இது சரியில்லடா கண்ணா..” இயல்பாக அவனுடன் பேச தொடங்கினார்..

“கண்ணா சுமிம்மா பற்றி தெரியாமல் பேசற இது சரியில்ல..” அவரின் மிரட்டலில், “சரிம்மா கோபபடதீங்க..” என்றவனிடம், “உன்னோட போன்ல பட்டுபோட்டுவிடுப்பா..” என்றார் சுமிம்மா.

“சரிம்மா” ஹெட்செட்டை எடுத்துவிட பாடல் ஒலிக்கவிடவே தூக்கம் கலைந்து கண்விழித்தவள் அப்பொழுது தான் சுமிம்மாவின் தோளில் சாய்ந்திருப்பது உணர்ந்தாள்.

“மன்னிக்கொங்க அம்மா. தூக்கக் கலக்கத்தில்..” அவள் இழுக்க, “அதனால் இப்போ என்ன ஆகிபோச்சு. நான் என்ன ஒருப்பக்கம் தேஞ்சு போயிட்டேனா” குறும்புடன் கேட்டார்.

“எனக்கு என்னவோ நீங்க தேஞ்சிட்ட மாதிரி தோணுது அம்மா..” அவளின் உதட்டில் புன்னகை அரும்பிட அவனின் பார்வை அவளின் மீது படிந்தது..

‘நான் என்ன பண்ணிட்டு இருக்கிறேன்..?’ பார்வையைத் திசை திருப்பிட பாடல் மெல்ல ஒலிக்க, மெளனமாக அந்த பாடல் வரிகளை மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டாள்..

வாடைக்காலம் சென்றிடலாம்..

வேனிற்காலம் வந்திடலாம்..

சோலைத் தென்றல் பாடிடலாம்..

சோகம் நீங்கி ஆடிடலாம்..

நீ பாடக்கூடும் ஓர் புதியராகம்..

ஊர் புதிய ராகம் ஹோ..” பாடலின் வரியினைக்கேட்டு அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது..

அவளின் புன்னகை ரசித்தவனின் மனதில் முதல் முதலாக ஒரு சலனம் ஏற்றப்பட, ‘என் மனதில் சிறுசலனமா..?’ என்றவன் விழிமூடிக் கொண்டான்.. ஜன்னலோரம் வழியாக வீசிய பூந்தென்றல் அவனுக்கு தாலாட்டு பாடிட தன்னை மறந்து உறங்கிவிட, சுமிம்மாவும் மெல்ல தூங்கிவிட்டார்.

வாழ்க்கையில் வரவிருக்கும் புதிய விடியலுக்கான கதவுகள் விழிமூடாமல் காத்திருந்தாள். மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்துவிட தன் தூக்கம் கலைந்து விழிதிறந்து பார்த்தவனின் விழிகளில் விழுந்தாள் நிலா.

ரயில் காஞ்சிபுரம் ஜெங்க்சனில் நின்றதும், “காஞ்சிபுரம்  வந்துவிட்டதா?”  தன்னுடைய பெட்டியை எடுத்துகொண்டு கீழ் இறங்கினார் சுமிம்மா.. அவரின் பின்னோடு கலைநிலா, கவிபாரதி இருவரும் இறங்கினர்.

சுமிம்மா எந்தப்பக்கம் போவது என்ற யோசனையுடன் நின்றிருக்க, “அம்மா நானும் இதே ஊரில்தான் இருக்கிறேன். நீங்க ஃப்ரீயாக இருந்தால் ஒருநாள் வீட்டிற்கு வாங்க..” என்று அழைத்தவன் அவரின் கையில் ஒரு விஸ்டிங் கார்டு கொடுத்தான்.

“சரிடா கண்ணா..” என்றதும், “சரிங்க அம்மா நான் கிளம்புகிறேன்” அங்கிருந்து கிளம்பிவிடவே திடீரென்று மழை பொழிந்திட அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள் கலைநிலா.

குளிர்காற்று முகத்தில் மோதிட தன்னையே புதிதாக உணர்ந்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது. அந்த மழை அவளின் மனதை மயக்கிட அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் மழையை ரசித்தாள்.

இதுநாள்வரை அவளின் மனதை அழுத்திய துயரங்கள் எல்லாம் தூரம் சென்றுவிட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ வேண்டும் என்ற முடிவுடன் அந்த ஊர் மண்ணில் காலை வைத்தாள் நிலா..

அவளின் அருகில் அமர்ந்த சுமிம்மா, “என்னம்மா வீட்டிற்கு போகாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கிற? உன்னை அழச்சிட்டு போக யாராவது வருவாங்களா?” என்று கேட்க நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தாள்.

“ம்ம் ஆமாம்மா அவங்களோட வரவிற்கு தான் காத்திருக்கிறேன்..” என்று பொய் சொல்லிவிட்டு எதையோ நினைத்து சிரிக்க, “உன்னோட பெயர் என்னடா..” என்று கேட்டார்..

“கலைநிலா..” என்று புன்னகைத்தவள், “உங்களை அழச்சிட்டு போக யார் வருவாங்க அம்மா..” என்று இயல்புடன் அவள் கேட்டுவிட, “மழை நின்றதும் நானேதான் போகணும் நிலா. என்னை அழைச்சிட்டு போக யாரும் வரமாட்டாங்க..” என்று புன்னகைத்தார்..

அதற்குள் மழை தூறல் நின்றுவிட, “சரிம்மா நான் கிளம்புகிறேன்..” அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுமிம்ம அங்கிருந்து செல்ல, அப்பொழுது பொழுது அங்கே வந்த பெரியவர் ஒருவர் மயங்கி விழுந்தார்..

உடனே பதறியடித்து அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட, “நன்றிம்மா” என்றார் அந்த பெரியவர்.

“வாங்க நான் உங்களை உங்களோட வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்” என்றவளிடம், “என்னோட வீடு இங்கேதான்..” என்றார்

“சரி வாங்க நான் உங்களை உங்களோட வீட்டில் விட்டுவிட்டு போகிறேன்” என்றதும் அவர் மறுக்கவே, “நீங்க வாங்க..” அவரை அழைத்துக்கொண்டு சென்றாள்.

ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து சென்ற இவர்கள் மூவரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புகள் அமையுமா?

மொட்டு வளரும்..

 

AP1

 

                                  அன்பே பேரன்பே – உமா தீபக்

அத்தியாயம் –   1

காலை நேர பரபரப்பு அந்த வீட்டில் எப்பொழுதும் போல், அடிதடியில் தான் ஆரம்பித்தது.

“அடேய்! பிசாசு இன்னைக்கு எனக்கு ஆபிஸ் ல மீட்டிங் டா எருமைமாடே. ஒழுங்கா பாத்ரூம் ல இருந்து வெளியே அஞ்சு நிமிஷத்துல வர, இல்லை உன் ஆளு கிட்ட உன் வண்டவாளம் எல்லாம் சொல்லி தண்டவாளத்தில் ஏத்தி விட்ருவேன்” என்று தம்பியை மிரட்டிக் கொண்டும், அவனை திட்டிக் கொண்டும் இருந்தாள் நம் கதையின் நாயகி பிரியங்கா தேவி.

“உனக்கு மீட்டிங் அப்படினா, நீ தான் சீக்கிரம் எழுந்து இருக்கணும். எனக்கு ஒரு பத்து நிமிஷமாவது ஆகும் வெளியே வர, இன்னைக்கு எனக்கு இன்டர் காலேஜ் பெஸ்டிவல் அதனால பளிச்சினு இருக்க வேண்டாமா, கொஞ்சம் டைம் எடுக்கும் அதனால நீ சமையல் வேலை பாரு” என்று பதிலுக்கு அமைதியாக குரல் கொடுத்தான், அவளின் தம்பி ராகவ்.

“அறிவு கொழுந்து! இதை எல்லாம் ராத்திரியே சொல்லி இருக்கணும். நானே லேட்டா போனா, அப்புறம் என் ஜூனியர்ஸ் எப்படி டா என்னை மதிப்பாங்க?” என்று சொன்னாலும் தலைமுடியை சுருட்டி கொண்டை போட்டுவிட்டு, கிட்சன் உள்ளே சென்று சமைக்க இப்பொழுது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.

காரட், பட்டாணி இருக்கவும் உடனே ரவா கிச்சடி தயார் செய்ய களத்தில் இறங்கினாள். ராகவ் வெளியே வருவதற்குள் இங்கே அவள் கிச்சடி தயார் செய்ததோடு, அதை டிபன் டப்பாவில் இருவருக்கும் அடைத்து வைத்து விட்டாள்.

“வாசனையே நல்லா இருக்கே, என்ன சமைச்ச அக்கா?” என்று குளித்து முடித்து வந்தவன் நேராக கிட்சன் உள்ளே வந்தான்.

“கிச்சடி சமைச்சு இருக்கேன், ரெண்டு பேருக்கும் டிபன் பாக்ஸ்ல வச்சுட்டேன். இன்னைக்கு நான் சமைச்சிட்டேன், அதனால கிளீனிங் உன் வேலை தம்பி” என்று கூறிவிட்டு குளிக்க ஓடி விட்டாள்.

“எக்கா ராட்சசி! எனக்கு பிடிக்காது அப்படின்னு தெரிஞ்சே இதை எனக்கு கொடுக்கிற, உன்னை என்ன செய்யலாம்?” என்று கத்தினான்.

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு டா தம்பி, அவங்க வந்து விசாரிக்கட்டும் யார் மேல தப்பு இருக்குன்னு” என்று உள்ளே இருந்தே பதில் கூறியவளை ஒன்றும் செய்ய முடியாமல், ஆத்திரத்துடன் கிட்சனை சுத்தம் செய்ய தொடங்கினான்.

அடுத்த அரை மணி நேரத்தில், இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தனர் அவரவர் பணியிடத்திற்கு.

ராகவ், சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் ப்ரோபெசராக வேலை பார்க்கிறான். இன்று பல்வேறு கல்லூரியில் இருந்து வருகை புரிவர், இந்த விழாவிற்கு. அதில் அவனின் காதலி ஜனனியும் அடக்கம், அதற்காக தான் வீட்டில் அம்புட்டு ரகளை தன் அக்காவிடம்.

பார்கிங் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாக ஆபிஸ் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, ஸ்டாப் ரூம் சென்றான். எதிர் வருபவர்களுக்கு காலை வணக்கம் கொடுத்துக் கொண்டே, ஸ்டாப் ரூம் வந்தவன் அங்கே தன் டேபிளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, ஆடிடோரியம் சென்றான்.

அங்கே தான், எல்லா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை புரிந்து இருந்தனர். அவனின் காதலியை தேடி, அவன் அங்கே சென்ற நொடி அவளும் இவனை கண்டுவிட்டு அவனை பார்த்து சிரித்தாள்.

அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, சைகையில் வெளியே வருமாறு கூறினான். அவளோ, பத்து நிமிடம் கழித்து வருகிறேன் என்று கூறினாள். அவனும் சரி என்று கூறிவிட்டு, உள்ளே ஆடிடோரியத்தில் மேடை அலங்காரம், மைக் செட் வகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆடிடோரியம் பின்னே இருந்த மரத்தடி நிழலில் நின்றான். சரியாக அடுத்த ஐந்து நிமிடத்தில், அங்கே ஜனனியும் வந்து சேர்ந்தாள்.

“ஹே! இந்த பச்சை கலர் சாரி உனக்கு நல்லா எடுப்பா இருக்கு, மாமன் சட்டைக்கு மேட்ச்சா போட்டு வந்து இருக்க செல்லம், சூப்பர். சரி ஸ்வீட் கொடு மாமனுக்கு, ஒரே கலர் போட்டதுக்கு” என்று கன்னத்தை காட்டினான் ராகவ்.

“வேணும்னா ரெண்டு அடி தரேன், சொல்லி வச்சு ரெண்டு பேரும் போட்டுட்டு இப்போ ஸ்வீட் கேட்குதா உங்களுக்கு?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அவன் அசடு வலிந்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், அவளுக்கு கால் வந்தது. எடுத்து யாரென்று பார்த்தவள், சிரிப்போடு அதை எடுத்து பேச தொடங்கினாள்.

“சொல்லுங்க அண்ணி! எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் ஜனனி.

அண்ணியா! இவளுக்கு அண்ணி யாரு? என்று அவன் யோசிக்க தொடங்கினான்.

அதற்குள் போனை ஸ்பீக்கர் மோடில் மாற்றி வைத்த ஜனனி, அவனை பேச சொல்ல, அவனோ யார் என்று கேட்டான்.

“டேய் அறிவு ஜீவி! அவளுக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணி தான், அது நான் மட்டும் தான். அதுக்குள்ள நீ அவளை சந்தேகப்பட ஆரம்பிச்சிட்ட பார்த்தியா? ஜனனி நான் சொல்லல இவன் சரியில்லை அப்படின்னு, நீ வேற ஆளை பாரு ஜனனி” என்று அந்த பக்கம் இவன் அக்கா பிரியங்கா தேவி பேசியதை கேட்கவும், இவனுக்கு கோபம் வந்தது.

“ராட்சசி! நீ எல்லாம் ஒரு அக்காவா? அவளை எப்போ நான் சந்தேகப்பட்டு இருக்கேன்? இதுக்கு தான் ஜனனி சொன்னேன், எங்க அக்காவோட கொஞ்சம் தள்ளி நின்னே பேசுன்னு”.

“பாரு, அவ எப்படி பேசுறா? இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, உனக்கு வர போற மாப்பிள்ளை, உன்னை கோபப்படுத்திகிட்டே தான் இருக்க போறார்” என்று அவனின் தமக்கைக்கு இன்ஸ்டன்ட் சாபம் விட்டவனை பார்த்து இருவரும் சிரித்தனர்.

“ஹா ஹா !!! அடேய் தம்பி தினம் இங்கே வந்துட்டா நான் கோபப்பட்டுகிட்டே தான் இருக்கேன். அட்லீஸ்ட் இனியாவது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிற மாதிரி வேலை பார்க்கலாம் பார்த்தா, முடிய மாட்டேங்குது என்னால இந்த வேலையை விட”.

“அதனால உன் சாபம் எல்லாம் பலிக்காது, என்னை எப்போவும் கண்ணுக்குள் வச்சு தாங்குறவர் தான் மாப்பிள்ளையா வர போறார், உன் மூக்கை இப்போவே பத்திரமாக வச்சுக்கோ. அப்புறம் மூக்கு அறுபட்டு போய்டுவ டா ராகவா” என்று இழுத்து பேசியவளை பார்த்து அவன் புன்னகைத்தான்.

“ம்கும்! நானும் நீ எப்போ டா கல்யாணம் பண்ணுவ அப்படின்னு வெயிட் பண்ணுறேன், நீ இப்படி பிடி கொடுக்காம இருந்தா என்ன அக்கா அர்த்தம்? இப்போவே முப்பது வயசு உனக்கு, நான் சொல்லுறது புரியுதா இல்லையா உனக்கு!” என்று ஆதங்கப்பட்டான்.

“டேய்! நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அப்படினா சொல்லுறேன், என் பியாரி, லவர், காதலன் இன்னும் என் கண்ணுல சிக்கல டா, நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள்.

“ஹே அண்ணி! சூப்பர் அண்ணாவை எப்போ மீட் பண்ணீங்க? எல்லாம் சொல்லுங்க கேட்போம்” என்ற ஜனனியை பார்த்து முறைத்தான்.

“ம்கும்! அவளுக்கு பிடிச்ச மாதிரி யாரையும் இன்னும் மீட் பண்ணல, அப்படின்னு சிம்பாலிக்கா சொல்லுறா. நீ போய் வேலையை பாரு அக்கா , நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்” என்று கூறியவனை பார்த்து அதிர்ந்தாள்.

“என்னது நம்ம வேலை?” என்று திக்கி திக்கி கேட்ட ஜனனியை பார்த்து சிரித்தான்.

“ஹே! இப்போ விழா ஆரம்பிச்சிடும் ப்ரோபெசர், போக வேண்டாமா?” என்று அவளை பார்த்து குறும்பாக கேட்கவும் தான், அவள் சற்று தெளிந்து அவனை இடித்துவிட்டு ஓடினாள்.

“இந்த எங்க அக்கா ராட்சசிக்கு ஏத்த ராட்சசன் எப்போ வருவான் கடவுளே? சீக்கிரம் அவ கண்ணுல காட்டுங்க, அப்போ தான் எனக்கு வழி பிறக்கும்” என்று மனதிற்குள் தன் அக்காவை நினைத்து புலம்பிக் கொண்டே சென்றான்.

அங்கே பிரியங்கா அந்த ஆபீசிற்குள் கம்பீரமாக நடந்து சென்று கொண்டு இருந்தாள். அவளை எதிர்கொண்டவர்களும், அவளுக்கு வழி விட்டு பயத்துடன் ஒதுங்கி கொண்டனர்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, அந்த கான்பெரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தாள். அங்கே இருந்த அவளின் மேலதிகாரிக்கு, விஷ் செய்துவிட்டு அவளின் இருக்கையில் அமர்ந்தாள்.

“கைஸ்! நாம இந்த மீட்டிங் எதுக்கு போட்டு இருக்கோம் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரியும். சக்தி முரளி பிசினஸ் மேன் அப்படின்ற பேர்ல இருக்கிற ரவுடிக்கு, மேலிடத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்க சொல்லி பிரஷர் கொடுத்தால, அதற்க்கான ஏற்பாடை பற்றி பேச தான் வந்து இருக்கோம்” என்று கூறிய மேலதிகாரரை பார்த்து மனதிற்குள் பொரும மட்டுமே முடிந்தது அவளால்.

ஏனெனில் இது அவருக்கும் பிடிக்காத விஷயமும் கூட, மேலிடத்து பிரஷர் தாங்காமல் இப்பொழுது பொறுப்பை தங்களிடம் அவர் ஒப்படைப்பதை நினைத்து தான் இந்த எரிச்சல்.

பிரியங்கா தேவி ஐபிஎஸ், என்று வெளியே கேட்டு பார்த்தால் அந்த போலீசா அப்படின்னு எல்லோரும் பயத்தில் அலறும் அளவிற்கு அந்த வட்டத்தில் பேர் எடுத்தவள். இப்படி ஒரு அண்டர்கிரௌண்ட் டான்க்கு, பாதுகாப்பு பணியை கொடுத்தால் எரிச்சல் வராமல் எப்படி இருக்கும் அவளுக்கு. எதிரியை வேட்டையாடி, துரத்தி பிடித்து என்கௌன்ட்டர் பண்ணும் அவளுக்கு இந்த அசைன்மென்ட் பிடிக்கவே இல்லை.

“மிஸ் பிரியங்கா, உங்க மேல இருக்கிற நம்பிக்கையிலும், திறமையிலும் தான் இந்த அசைன்மென்ட் உங்களுக்கு கொடுத்து இருக்கேன். உங்களுக்கு கீழே நீங்க யாரை எல்லாம் செலக்ட் பண்ணுறீங்க அப்படின்னு எனக்கு ஒரு ரிப்போர்ட் வந்து கொடுத்துடுங்க”.

“அண்ட் ஹி இஸ் பிரபாகர், கிரைம் பிரான்ச் டிபார்ட்மென்ட். அவனை பத்தின புல் டிடைல்ஸ் இவர் கிட்ட இருக்கு, நீங்க ஹெல்ப் கேட்டுக்கலாம். இதுல எந்த ஒரு ப்ளாக் மார்க் வர கூடாது, காட் இட் கைஸ்” என்று கூறிவிட்டு கமிஷ்னர் தினகரன் வெளியேறினார்.

அங்கு இருந்த மற்ற அதிகாரிகள், இப்பொழுது இவளை பார்த்தனர். அவளோ ஒரு முறை ஆழ மூச்சை இழுத்துக் கொண்டு, பிரபாகரை பார்த்தாள். அவர் உடனே அங்கு இருந்த ஸ்மார்ட் போர்டு ஸ்க்ரீனில், அவனை பற்றிய தகவலை எடுத்து காட்டினார்.

முதலில் வந்த அவன் போட்டோவை பார்த்தவள், மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.

“ஒன்பதாம் கிளாஸ்ல நான் படிக்கும் பொழுது, இந்த ஒல்லி பாச்சான் வந்து ஐ லவ் யூ ரியா அப்படின்னு பல்லை இள்ளிசிட்டு வந்து சொல்லுச்சு. இப்போ என்னடானா, பெரிய பிசினஸ்மேன் பிளஸ் டான்னு பெத்த பேரு இவனுக்கு” என்று பல்லை கடித்தாள்.

“அப்போ இருந்த மூஞ்சிக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை பாரேன். செம மான்லியா(manly) இருக்கான், அப்படியே நடிகர் சூர்யா சிக்ஸ் பாக் வச்சு இருந்தா எப்படி இருக்கும், அது மாதிரியே இருக்கான்” என்று ஜொல்லிய  அவளின் மனசாட்சியை அடக்கி உள்ளே வைத்தாள்.

“இப்போ இவனை டார்கெட் பண்ணி இருக்கிறது, எதிர்கட்சி தலைவரோட பையன் மிஸ்டர் கங்காதரன். ரீசன், அவர் பண்ணிய கொலைக்கு பக்கா சாட்சி இவன் தான்”.

“இவனுக்கு பெரிய இடத்தில் எல்லாம் செல்வாக்கு அதிகம், அதுவும் இந்த அஞ்சு வருஷத்தில் அவனோட வளர்ச்சி அதிகம். எஞ்சினீரிங் காலேஜ், டெக்ஸ்டைல் பிசினஸ், ஜுவெல்லரி பிசினஸ், ரியல் எஸ்டேட் அப்படின்னு இந்த அஞ்சு வருஷத்தில் அவன் வளர்ச்சி அதிகம்”.

“ஏற்கனவே, அஞ்சு தலைமுறைக்கு அவங்க வசதியானவங்க. இவன் படிச்சு முடிச்ச உடனே, அவங்க அப்பா பிசினஸ் தான் பார்க்க வந்தான். திடிர்னு என்னனு தெரியல, பெரிய பெரிய ஆளுங்களோட எல்லாம் இவனுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு”.

“அதுக்கு அப்புறம் அசுர வளர்ச்சி தான், ஆனா இவன் அண்டர்கிரவுண்ட் லெவல்ல என்ன வேலை எல்லாம் பார்த்தான் அப்படின்னு இப்போ வரைக்கும் எங்களால ட்ரேஸ் பண்ண முடியல” என்று அவர் சொல்லவும், இவள் மனதில் பலவித கணக்கு ஓடிக் கொண்டு இருந்தது.

“சரி சார், நீங்க கிளம்புங்க நான் வேற தகவல் வேணும்னா உங்களை கூப்பிடுறேன். மிஸ்டர் இளங்கோ, உங்களுக்கு கீழே ராஜு அண்ட் ரேவதியை அப்பாய்ன்ட் பண்ணிடுங்க. சரியா ஒரு பதினொரு மணிக்கு நீங்க எல்லாம் ஸ்டேஷன்க்கு வந்திடுங்க, நான் போய் கமிஷ்னரை பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு நேராக அவரின் அறைக்கு சென்றாள்.

“வா மா பிரியங்கா, முகமே செம கடுப்பில் இருக்கு. இந்த கேஸ் நினைச்சு நீ கடுப்பா இருந்தாலும், நீ தான் ஹான்டில் பண்ணி ஆகணும் இந்த கேஸ். காரணம், உன் பேரை குறிப்பிட்டு தான் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து இருக்காங்க” என்று கூறியவரை பார்த்து சிரித்தாள்.

“எனக்கு தெரியும் அங்கிள், அதுவும் என் பேரை குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க அப்படின்னு நீங்க சொன்ன உடனே இதை யாரு கொடுத்து இருப்பா அப்படினும் எனக்கு தெரியும். அந்த ஒல்லி பச்சான் தான் கொடுத்து இருப்பான், ராஸ்கல் இந்த முறை அவனா, இல்லை நானான்னு பார்த்திடுறேன்” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது அவர் சிரித்தார்.

“ஏம்மா! இன்னும் அவன் ஒல்லி பச்சான் தானா உனக்கு?” என்று கேட்டவரை பார்த்து முறைத்தாள்.

“சரி! சரி! உன்னை வர சொன்னதே ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசத்தான். அவன் சொன்ன காரணத்துக்காக மட்டும் இல்லை, வேற ஒரு விஷயம் அவனுக்கு கிடைச்சு இருக்கு அது உன் சம்மந்தப்பட்டது நினைக்கிறேன்”.

“இது நான் ரகசியமா சேகரிச்ச விஷயம், இனி நீ தான் பார்த்துக்கணும். அவன் மோதி இருக்கிறது சாதாரண ஆளும் கிடையாது, கிட்டத்தட்ட முப்பது வருஷமா எனக்கு அந்த ஆளை தெரியும், சோ இனி தான் நமக்கு வேலையே” என்று கூறி மேலும் சில தகவல்களை கூறினார்.

அவரின் அலுவல் அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு, நினைவு முழுவதும் அவர் கூறிய விஷயங்களை சுற்றியே இருந்தது. வண்டி அருகே வந்தவள், டிரைவரிடம் நேராக இசிஆர் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று சொல்லி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“ஹல்லோ! நான் சொல்லுற டிடைல்ஸ் நோட் பண்ணிக்கோ, இதனோட கம்ப்ளீட் ரிபோர்ட் எனக்கு வேணும் ஒரு டூ ஹவர்ஸ்ல, காட் இட்” என்று பிரியங்கா, எதிர்முனை ஆளிடம் சுருக்கமாக கூறிவிட்டு போனை வைத்தாள்.

அங்கு செல்லும்வரை, அவளின் எண்ணங்கள் முழுவதும் அந்த ஒல்லி பாச்சான் பற்றியே இருந்தது. அவனை இப்பொழுது சில வருடமாக பேப்பரில் தான் பார்க்கிறாள், அவனின் செயலை குறித்து ஒன்று புகழ்ந்தோ, தாளித்தோ சொல்லி இருப்பார்கள் மீடியாகாரர்கள்.

இதில் எது அவனின் உண்மை முகம் என்று தெரியவில்லை, ஒரு முகம் தொழிலதிபராக, மற்றொன்று தாதாவாக. இதில் தொழிலதிபராக கூட அவனை ஏற்றுக் கொள்ள முடிந்தது அவளால், ஆனால் தாதாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளால்.

“நிஜமாவே, அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா இருப்பானா என்ன, என் மண்டையே காயுது ஆண்டவா” என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்.

அங்கே ஸ்டேஷன் உள்ளே வண்டி நுழையவும், கம்பீரம் குறையாமல் இறங்கி உள்ளே சென்றாள். அங்கே இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், ராஜுவும், ரேவதியும் இருந்ததை பார்த்து மெச்சிக் கொண்டாள்.

அவர்களை அழைத்து, தன் காபின் உள்ளே நுழைந்தவள் அவர்களிடம் அவளின் திட்டத்தை விவரிக்க தொடங்கினாள். அதை கவனமாக கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர்கள், அவர்களுக்கு பணித்த வேலையை கவனிக்க சென்றார்கள்.

இதற்கிடையில், இவள் கேட்ட தகவல் அனைத்தும் வாட்ஸ் அப்பில் அவள் பேசிய நபரிடம் இருந்து வந்து சேர்ந்தது. அதை திறந்து பார்த்தவள், சில விஷயங்கள் அவளின் மனதிற்கு உறுத்தலாக இருந்தது. அதை தெளிவு படுத்திக் கொள்ள அவள் நேரடியாக, அவனை சந்திக்க சென்றாள் அவனின் இடத்திற்கு.

“ஐயா! அடிக்காதீங்க, நான் பிள்ளை குட்டிக்காரன். நான் பண்ணினது தப்பு தான், பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன் ஐயா” என்று ஒருவன் கதறிக் கொண்டு இருந்தான் அந்த பீச் ரிசார்ட் ஒன்றில்.

“ஏன் டா இன்னும் அடிக்க ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள பையன் இப்படி கதறுறான். டேய் டாம்மியை கொஞ்ச நேரம் அவன் கூட விளையாட விடுங்க, கத்துறதை நிப்பாட்டிடுவான் பையன்” என்று அவன் சாதுவாக கூறவும், எதிராளி அதிர்ந்து விட்டான்.

அவனை பற்றி நன்றாக தெரிந்தும், இந்த தப்பை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவனுக்கு நன்றாக புரிந்தது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உண்மையை ஒத்துக் கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து, அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

அதில் அவன் முகம் வேட்டையாடும் புலி போல் மாற தொடங்கியது. பக்கத்தில் நின்று இருந்த அவனின் வலது கையிடம் கண்ணை காட்டவும், அவனுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து உடனே அதை செயல்படுத்த விரைந்தான்.

இதை எல்லாம் அப்பொழுது அங்கே வந்து இறங்கிய பிரியங்கா பார்த்தவள், அவனின் இந்த முகத்தை பார்த்து சற்று அதிர தான் செய்தாள். அதற்குள் அவன் இவளை பார்த்துவிட்டான், உடனே அவனின் முகமே மாறிவிட்டது.

சிரிப்புடன் அவளை நெருங்கியவன், அவளின் காக்கி உடையை பார்த்து சற்று நிதானித்தான். அவளின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டே, வந்தவனை இப்பொழுது அவள் மனசாட்சி ஆஜாராகி, அவனை ரசிக்க தொடங்கியது.

“வாவ்! என்ன நடை! என்ன நடை! அந்த சட்டை காலரை தூக்கி விட்டுகிட்டு வரும் அழகே தனி. கண்ணு சும்மா பவர்புல்லா நேர் கொண்ட பார்வையா நம்மை பார்க்கும் பொழுது, சும்மா ஜிவ்வுன்னு இருக்குல” என்று வர்ணித்த மனசாட்சியை ஓங்கி ஒரு கொட்டு வைத்து உள்ளே தள்ளினாள்.

“ஹல்லோ இன்ஸ்பெக்டர்! ஹொவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டவனை பார்த்து இப்பொழுது முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

“மிஸ்டர் சக்தி முரளி, உங்க பாதுகாப்புக்கு போலீஸ் தேவைபடுது அப்படின்னு சொல்லி மேலிடத்தில் சொல்லி இருந்தீங்களே, அது விஷயமா பேசணும்” என்று பளிச்சென்று விஷயத்திற்கு வந்தவளை பார்த்து மனதிற்குள் சிரித்தான்.

“ஒ ரியா பேபி! உன்னை என் வலைக்குள்ள கொண்டு வந்துட்டேன், இனி தான் நம்ம ஆட்டத்தை பார்க்க போற” என்று எண்ணிக் கொண்டே அவளை அழைத்து கொண்டு முன்னே சென்றான்.

“உன் வலைக்குள்ள அவ்வளவு ஈசியா இந்த ரியா மாட்ட மாட்டா, நான் இங்க வந்த விஷயமே வேற டா” என்று அவளும் எண்ணிக் கொண்டே அவன் பின்னே சென்றாள்.

இவர்களை இருவர் கண்கானின்றனர் என்பதை அறியாமல், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.

தொடரும்..

  

 

 

அத்தியாயம் –   1

காலை நேர பரபரப்பு அந்த வீட்டில் எப்பொழுதும் போல், அடிதடியில் தான் ஆரம்பித்தது.

“அடேய்! பிசாசு இன்னைக்கு எனக்கு ஆபிஸ் ல மீட்டிங் டா எருமைமாடே. ஒழுங்கா பாத்ரூம் ல இருந்து வெளியே அஞ்சு நிமிஷத்துல வர, இல்லை உன் ஆளு கிட்ட உன் வண்டவாளம் எல்லாம் சொல்லி தண்டவாளத்தில் ஏத்தி விட்ருவேன்” என்று தம்பியை மிரட்டிக் கொண்டும், அவனை திட்டிக் கொண்டும் இருந்தாள் நம் கதையின் நாயகி பிரியங்கா தேவி.

“உனக்கு மீட்டிங் அப்படினா, நீ தான் சீக்கிரம் எழுந்து இருக்கணும். எனக்கு ஒரு பத்து நிமிஷமாவது ஆகும் வெளியே வர, இன்னைக்கு எனக்கு இன்டர் காலேஜ் பெஸ்டிவல் அதனால பளிச்சினு இருக்க வேண்டாமா, கொஞ்சம் டைம் எடுக்கும் அதனால நீ சமையல் வேலை பாரு” என்று பதிலுக்கு அமைதியாக குரல் கொடுத்தான், அவளின் தம்பி ராகவ்.

“அறிவு கொழுந்து! இதை எல்லாம் ராத்திரியே சொல்லி இருக்கணும். நானே லேட்டா போனா, அப்புறம் என் ஜூனியர்ஸ் எப்படி டா என்னை மதிப்பாங்க?” என்று சொன்னாலும் தலைமுடியை சுருட்டி கொண்டை போட்டுவிட்டு, கிட்சன் உள்ளே சென்று சமைக்க இப்பொழுது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.

காரட், பட்டாணி இருக்கவும் உடனே ரவா கிச்சடி தயார் செய்ய களத்தில் இறங்கினாள். ராகவ் வெளியே வருவதற்குள் இங்கே அவள் கிச்சடி தயார் செய்ததோடு, அதை டிபன் டப்பாவில் இருவருக்கும் அடைத்து வைத்து விட்டாள்.

“வாசனையே நல்லா இருக்கே, என்ன சமைச்ச அக்கா?” என்று குளித்து முடித்து வந்தவன் நேராக கிட்சன் உள்ளே வந்தான்.

“கிச்சடி சமைச்சு இருக்கேன், ரெண்டு பேருக்கும் டிபன் பாக்ஸ்ல வச்சுட்டேன். இன்னைக்கு நான் சமைச்சிட்டேன், அதனால கிளீனிங் உன் வேலை தம்பி” என்று கூறிவிட்டு குளிக்க ஓடி விட்டாள்.

“எக்கா ராட்சசி! எனக்கு பிடிக்காது அப்படின்னு தெரிஞ்சே இதை எனக்கு கொடுக்கிற, உன்னை என்ன செய்யலாம்?” என்று கத்தினான்.

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு டா தம்பி, அவங்க வந்து விசாரிக்கட்டும் யார் மேல தப்பு இருக்குன்னு” என்று உள்ளே இருந்தே பதில் கூறியவளை ஒன்றும் செய்ய முடியாமல், ஆத்திரத்துடன் கிட்சனை சுத்தம் செய்ய தொடங்கினான்.

அடுத்த அரை மணி நேரத்தில், இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தனர் அவரவர் பணியிடத்திற்கு.

ராகவ், சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் ப்ரோபெசராக வேலை பார்க்கிறான். இன்று பல்வேறு கல்லூரியில் இருந்து வருகை புரிவர், இந்த விழாவிற்கு. அதில் அவனின் காதலி ஜனனியும் அடக்கம், அதற்காக தான் வீட்டில் அம்புட்டு ரகளை தன் அக்காவிடம்.

பார்கிங் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாக ஆபிஸ் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, ஸ்டாப் ரூம் சென்றான். எதிர் வருபவர்களுக்கு காலை வணக்கம் கொடுத்துக் கொண்டே, ஸ்டாப் ரூம் வந்தவன் அங்கே தன் டேபிளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, ஆடிடோரியம் சென்றான்.

அங்கே தான், எல்லா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை புரிந்து இருந்தனர். அவனின் காதலியை தேடி, அவன் அங்கே சென்ற நொடி அவளும் இவனை கண்டுவிட்டு அவனை பார்த்து சிரித்தாள்.

அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, சைகையில் வெளியே வருமாறு கூறினான். அவளோ, பத்து நிமிடம் கழித்து வருகிறேன் என்று கூறினாள். அவனும் சரி என்று கூறிவிட்டு, உள்ளே ஆடிடோரியத்தில் மேடை அலங்காரம், மைக் செட் வகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆடிடோரியம் பின்னே இருந்த மரத்தடி நிழலில் நின்றான். சரியாக அடுத்த ஐந்து நிமிடத்தில், அங்கே ஜனனியும் வந்து சேர்ந்தாள்.

“ஹே! இந்த பச்சை கலர் சாரி உனக்கு நல்லா எடுப்பா இருக்கு, மாமன் சட்டைக்கு மேட்ச்சா போட்டு வந்து இருக்க செல்லம், சூப்பர். சரி ஸ்வீட் கொடு மாமனுக்கு, ஒரே கலர் போட்டதுக்கு” என்று கன்னத்தை காட்டினான் ராகவ்.

“வேணும்னா ரெண்டு அடி தரேன், சொல்லி வச்சு ரெண்டு பேரும் போட்டுட்டு இப்போ ஸ்வீட் கேட்குதா உங்களுக்கு?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அவன் அசடு வலிந்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், அவளுக்கு கால் வந்தது. எடுத்து யாரென்று பார்த்தவள், சிரிப்போடு அதை எடுத்து பேச தொடங்கினாள்.

“சொல்லுங்க அண்ணி! எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் ஜனனி.

அண்ணியா! இவளுக்கு அண்ணி யாரு? என்று அவன் யோசிக்க தொடங்கினான்.

அதற்குள் போனை ஸ்பீக்கர் மோடில் மாற்றி வைத்த ஜனனி, அவனை பேச சொல்ல, அவனோ யார் என்று கேட்டான்.

“டேய் அறிவு ஜீவி! அவளுக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணி தான், அது நான் மட்டும் தான். அதுக்குள்ள நீ அவளை சந்தேகப்பட ஆரம்பிச்சிட்ட பார்த்தியா? ஜனனி நான் சொல்லல இவன் சரியில்லை அப்படின்னு, நீ வேற ஆளை பாரு ஜனனி” என்று அந்த பக்கம் இவன் அக்கா பிரியங்கா தேவி பேசியதை கேட்கவும், இவனுக்கு கோபம் வந்தது.

“ராட்சசி! நீ எல்லாம் ஒரு அக்காவா? அவளை எப்போ நான் சந்தேகப்பட்டு இருக்கேன்? இதுக்கு தான் ஜனனி சொன்னேன், எங்க அக்காவோட கொஞ்சம் தள்ளி நின்னே பேசுன்னு”.

“பாரு, அவ எப்படி பேசுறா? இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, உனக்கு வர போற மாப்பிள்ளை, உன்னை கோபப்படுத்திகிட்டே தான் இருக்க போறார்” என்று அவனின் தமக்கைக்கு இன்ஸ்டன்ட் சாபம் விட்டவனை பார்த்து இருவரும் சிரித்தனர்.

“ஹா ஹா !!! அடேய் தம்பி தினம் இங்கே வந்துட்டா நான் கோபப்பட்டுகிட்டே தான் இருக்கேன். அட்லீஸ்ட் இனியாவது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிற மாதிரி வேலை பார்க்கலாம் பார்த்தா, முடிய மாட்டேங்குது என்னால இந்த வேலையை விட”.

“அதனால உன் சாபம் எல்லாம் பலிக்காது, என்னை எப்போவும் கண்ணுக்குள் வச்சு தாங்குறவர் தான் மாப்பிள்ளையா வர போறார், உன் மூக்கை இப்போவே பத்திரமாக வச்சுக்கோ. அப்புறம் மூக்கு அறுபட்டு போய்டுவ டா ராகவா” என்று இழுத்து பேசியவளை பார்த்து அவன் புன்னகைத்தான்.

“ம்கும்! நானும் நீ எப்போ டா கல்யாணம் பண்ணுவ அப்படின்னு வெயிட் பண்ணுறேன், நீ இப்படி பிடி கொடுக்காம இருந்தா என்ன அக்கா அர்த்தம்? இப்போவே முப்பது வயசு உனக்கு, நான் சொல்லுறது புரியுதா இல்லையா உனக்கு!” என்று ஆதங்கப்பட்டான்.

“டேய்! நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அப்படினா சொல்லுறேன், என் பியாரி, லவர், காதலன் இன்னும் என் கண்ணுல சிக்கல டா, நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள்.

“ஹே அண்ணி! சூப்பர் அண்ணாவை எப்போ மீட் பண்ணீங்க? எல்லாம் சொல்லுங்க கேட்போம்” என்ற ஜனனியை பார்த்து முறைத்தான்.

“ம்கும்! அவளுக்கு பிடிச்ச மாதிரி யாரையும் இன்னும் மீட் பண்ணல, அப்படின்னு சிம்பாலிக்கா சொல்லுறா. நீ போய் வேலையை பாரு அக்கா , நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்” என்று கூறியவனை பார்த்து அதிர்ந்தாள்.

“என்னது நம்ம வேலை?” என்று திக்கி திக்கி கேட்ட ஜனனியை பார்த்து சிரித்தான்.

“ஹே! இப்போ விழா ஆரம்பிச்சிடும் ப்ரோபெசர், போக வேண்டாமா?” என்று அவளை பார்த்து குறும்பாக கேட்கவும் தான், அவள் சற்று தெளிந்து அவனை இடித்துவிட்டு ஓடினாள்.

“இந்த எங்க அக்கா ராட்சசிக்கு ஏத்த ராட்சசன் எப்போ வருவான் கடவுளே? சீக்கிரம் அவ கண்ணுல காட்டுங்க, அப்போ தான் எனக்கு வழி பிறக்கும்” என்று மனதிற்குள் தன் அக்காவை நினைத்து புலம்பிக் கொண்டே சென்றான்.

அங்கே பிரியங்கா அந்த ஆபீசிற்குள் கம்பீரமாக நடந்து சென்று கொண்டு இருந்தாள். அவளை எதிர்கொண்டவர்களும், அவளுக்கு வழி விட்டு பயத்துடன் ஒதுங்கி கொண்டனர்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, அந்த கான்பெரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தாள். அங்கே இருந்த அவளின் மேலதிகாரிக்கு, விஷ் செய்துவிட்டு அவளின் இருக்கையில் அமர்ந்தாள்.

“கைஸ்! நாம இந்த மீட்டிங் எதுக்கு போட்டு இருக்கோம் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரியும். சக்தி முரளி பிசினஸ் மேன் அப்படின்ற பேர்ல இருக்கிற ரவுடிக்கு, மேலிடத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்க சொல்லி பிரஷர் கொடுத்தால, அதற்க்கான ஏற்பாடை பற்றி பேச தான் வந்து இருக்கோம்” என்று கூறிய மேலதிகாரரை பார்த்து மனதிற்குள் பொரும மட்டுமே முடிந்தது அவளால்.

ஏனெனில் இது அவருக்கும் பிடிக்காத விஷயமும் கூட, மேலிடத்து பிரஷர் தாங்காமல் இப்பொழுது பொறுப்பை தங்களிடம் அவர் ஒப்படைப்பதை நினைத்து தான் இந்த எரிச்சல்.

பிரியங்கா தேவி ஐபிஎஸ், என்று வெளியே கேட்டு பார்த்தால் அந்த போலீசா அப்படின்னு எல்லோரும் பயத்தில் அலறும் அளவிற்கு அந்த வட்டத்தில் பேர் எடுத்தவள். இப்படி ஒரு அண்டர்கிரௌண்ட் டான்க்கு, பாதுகாப்பு பணியை கொடுத்தால் எரிச்சல் வராமல் எப்படி இருக்கும் அவளுக்கு. எதிரியை வேட்டையாடி, துரத்தி பிடித்து என்கௌன்ட்டர் பண்ணும் அவளுக்கு இந்த அசைன்மென்ட் பிடிக்கவே இல்லை.

“மிஸ் பிரியங்கா, உங்க மேல இருக்கிற நம்பிக்கையிலும், திறமையிலும் தான் இந்த அசைன்மென்ட் உங்களுக்கு கொடுத்து இருக்கேன். உங்களுக்கு கீழே நீங்க யாரை எல்லாம் செலக்ட் பண்ணுறீங்க அப்படின்னு எனக்கு ஒரு ரிப்போர்ட் வந்து கொடுத்துடுங்க”.

“அண்ட் ஹி இஸ் பிரபாகர், கிரைம் பிரான்ச் டிபார்ட்மென்ட். அவனை பத்தின புல் டிடைல்ஸ் இவர் கிட்ட இருக்கு, நீங்க ஹெல்ப் கேட்டுக்கலாம். இதுல எந்த ஒரு ப்ளாக் மார்க் வர கூடாது, காட் இட் கைஸ்” என்று கூறிவிட்டு கமிஷ்னர் தினகரன் வெளியேறினார்.

அங்கு இருந்த மற்ற அதிகாரிகள், இப்பொழுது இவளை பார்த்தனர். அவளோ ஒரு முறை ஆழ மூச்சை இழுத்துக் கொண்டு, பிரபாகரை பார்த்தாள். அவர் உடனே அங்கு இருந்த ஸ்மார்ட் போர்டு ஸ்க்ரீனில், அவனை பற்றிய தகவலை எடுத்து காட்டினார்.

முதலில் வந்த அவன் போட்டோவை பார்த்தவள், மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.

“ஒன்பதாம் கிளாஸ்ல நான் படிக்கும் பொழுது, இந்த ஒல்லி பாச்சான் வந்து ஐ லவ் யூ ரியா அப்படின்னு பல்லை இள்ளிசிட்டு வந்து சொல்லுச்சு. இப்போ என்னடானா, பெரிய பிசினஸ்மேன் பிளஸ் டான்னு பெத்த பேரு இவனுக்கு” என்று பல்லை கடித்தாள்.

“அப்போ இருந்த மூஞ்சிக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை பாரேன். செம மான்லியா(manly) இருக்கான், அப்படியே நடிகர் சூர்யா சிக்ஸ் பாக் வச்சு இருந்தா எப்படி இருக்கும், அது மாதிரியே இருக்கான்” என்று ஜொல்லிய  அவளின் மனசாட்சியை அடக்கி உள்ளே வைத்தாள்.

“இப்போ இவனை டார்கெட் பண்ணி இருக்கிறது, எதிர்கட்சி தலைவரோட பையன் மிஸ்டர் கங்காதரன். ரீசன், அவர் பண்ணிய கொலைக்கு பக்கா சாட்சி இவன் தான்”.

“இவனுக்கு பெரிய இடத்தில் எல்லாம் செல்வாக்கு அதிகம், அதுவும் இந்த அஞ்சு வருஷத்தில் அவனோட வளர்ச்சி அதிகம். எஞ்சினீரிங் காலேஜ், டெக்ஸ்டைல் பிசினஸ், ஜுவெல்லரி பிசினஸ், ரியல் எஸ்டேட் அப்படின்னு இந்த அஞ்சு வருஷத்தில் அவன் வளர்ச்சி அதிகம்”.

“ஏற்கனவே, அஞ்சு தலைமுறைக்கு அவங்க வசதியானவங்க. இவன் படிச்சு முடிச்ச உடனே, அவங்க அப்பா பிசினஸ் தான் பார்க்க வந்தான். திடிர்னு என்னனு தெரியல, பெரிய பெரிய ஆளுங்களோட எல்லாம் இவனுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு”.

“அதுக்கு அப்புறம் அசுர வளர்ச்சி தான், ஆனா இவன் அண்டர்கிரவுண்ட் லெவல்ல என்ன வேலை எல்லாம் பார்த்தான் அப்படின்னு இப்போ வரைக்கும் எங்களால ட்ரேஸ் பண்ண முடியல” என்று அவர் சொல்லவும், இவள் மனதில் பலவித கணக்கு ஓடிக் கொண்டு இருந்தது.

“சரி சார், நீங்க கிளம்புங்க நான் வேற தகவல் வேணும்னா உங்களை கூப்பிடுறேன். மிஸ்டர் இளங்கோ, உங்களுக்கு கீழே ராஜு அண்ட் ரேவதியை அப்பாய்ன்ட் பண்ணிடுங்க. சரியா ஒரு பதினொரு மணிக்கு நீங்க எல்லாம் ஸ்டேஷன்க்கு வந்திடுங்க, நான் போய் கமிஷ்னரை பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு நேராக அவரின் அறைக்கு சென்றாள்.

“வா மா பிரியங்கா, முகமே செம கடுப்பில் இருக்கு. இந்த கேஸ் நினைச்சு நீ கடுப்பா இருந்தாலும், நீ தான் ஹான்டில் பண்ணி ஆகணும் இந்த கேஸ். காரணம், உன் பேரை குறிப்பிட்டு தான் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து இருக்காங்க” என்று கூறியவரை பார்த்து சிரித்தாள்.

“எனக்கு தெரியும் அங்கிள், அதுவும் என் பேரை குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க அப்படின்னு நீங்க சொன்ன உடனே இதை யாரு கொடுத்து இருப்பா அப்படினும் எனக்கு தெரியும். அந்த ஒல்லி பச்சான் தான் கொடுத்து இருப்பான், ராஸ்கல் இந்த முறை அவனா, இல்லை நானான்னு பார்த்திடுறேன்” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது அவர் சிரித்தார்.

“ஏம்மா! இன்னும் அவன் ஒல்லி பச்சான் தானா உனக்கு?” என்று கேட்டவரை பார்த்து முறைத்தாள்.

“சரி! சரி! உன்னை வர சொன்னதே ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசத்தான். அவன் சொன்ன காரணத்துக்காக மட்டும் இல்லை, வேற ஒரு விஷயம் அவனுக்கு கிடைச்சு இருக்கு அது உன் சம்மந்தப்பட்டது நினைக்கிறேன்”.

“இது நான் ரகசியமா சேகரிச்ச விஷயம், இனி நீ தான் பார்த்துக்கணும். அவன் மோதி இருக்கிறது சாதாரண ஆளும் கிடையாது, கிட்டத்தட்ட முப்பது வருஷமா எனக்கு அந்த ஆளை தெரியும், சோ இனி தான் நமக்கு வேலையே” என்று கூறி மேலும் சில தகவல்களை கூறினார்.

அவரின் அலுவல் அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு, நினைவு முழுவதும் அவர் கூறிய விஷயங்களை சுற்றியே இருந்தது. வண்டி அருகே வந்தவள், டிரைவரிடம் நேராக இசிஆர் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று சொல்லி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“ஹல்லோ! நான் சொல்லுற டிடைல்ஸ் நோட் பண்ணிக்கோ, இதனோட கம்ப்ளீட் ரிபோர்ட் எனக்கு வேணும் ஒரு டூ ஹவர்ஸ்ல, காட் இட்” என்று பிரியங்கா, எதிர்முனை ஆளிடம் சுருக்கமாக கூறிவிட்டு போனை வைத்தாள்.

அங்கு செல்லும்வரை, அவளின் எண்ணங்கள் முழுவதும் அந்த ஒல்லி பாச்சான் பற்றியே இருந்தது. அவனை இப்பொழுது சில வருடமாக பேப்பரில் தான் பார்க்கிறாள், அவனின் செயலை குறித்து ஒன்று புகழ்ந்தோ, தாளித்தோ சொல்லி இருப்பார்கள் மீடியாகாரர்கள்.

இதில் எது அவனின் உண்மை முகம் என்று தெரியவில்லை, ஒரு முகம் தொழிலதிபராக, மற்றொன்று தாதாவாக. இதில் தொழிலதிபராக கூட அவனை ஏற்றுக் கொள்ள முடிந்தது அவளால், ஆனால் தாதாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளால்.

“நிஜமாவே, அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா இருப்பானா என்ன, என் மண்டையே காயுது ஆண்டவா” என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்.

அங்கே ஸ்டேஷன் உள்ளே வண்டி நுழையவும், கம்பீரம் குறையாமல் இறங்கி உள்ளே சென்றாள். அங்கே இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், ராஜுவும், ரேவதியும் இருந்ததை பார்த்து மெச்சிக் கொண்டாள்.

அவர்களை அழைத்து, தன் காபின் உள்ளே நுழைந்தவள் அவர்களிடம் அவளின் திட்டத்தை விவரிக்க தொடங்கினாள். அதை கவனமாக கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர்கள், அவர்களுக்கு பணித்த வேலையை கவனிக்க சென்றார்கள்.

இதற்கிடையில், இவள் கேட்ட தகவல் அனைத்தும் வாட்ஸ் அப்பில் அவள் பேசிய நபரிடம் இருந்து வந்து சேர்ந்தது. அதை திறந்து பார்த்தவள், சில விஷயங்கள் அவளின் மனதிற்கு உறுத்தலாக இருந்தது. அதை தெளிவு படுத்திக் கொள்ள அவள் நேரடியாக, அவனை சந்திக்க சென்றாள் அவனின் இடத்திற்கு.

“ஐயா! அடிக்காதீங்க, நான் பிள்ளை குட்டிக்காரன். நான் பண்ணினது தப்பு தான், பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன் ஐயா” என்று ஒருவன் கதறிக் கொண்டு இருந்தான் அந்த பீச் ரிசார்ட் ஒன்றில்.

“ஏன் டா இன்னும் அடிக்க ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள பையன் இப்படி கதறுறான். டேய் டாம்மியை கொஞ்ச நேரம் அவன் கூட விளையாட விடுங்க, கத்துறதை நிப்பாட்டிடுவான் பையன்” என்று அவன் சாதுவாக கூறவும், எதிராளி அதிர்ந்து விட்டான்.

அவனை பற்றி நன்றாக தெரிந்தும், இந்த தப்பை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவனுக்கு நன்றாக புரிந்தது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உண்மையை ஒத்துக் கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து, அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

அதில் அவன் முகம் வேட்டையாடும் புலி போல் மாற தொடங்கியது. பக்கத்தில் நின்று இருந்த அவனின் வலது கையிடம் கண்ணை காட்டவும், அவனுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து உடனே அதை செயல்படுத்த விரைந்தான்.

இதை எல்லாம் அப்பொழுது அங்கே வந்து இறங்கிய பிரியங்கா பார்த்தவள், அவனின் இந்த முகத்தை பார்த்து சற்று அதிர தான் செய்தாள். அதற்குள் அவன் இவளை பார்த்துவிட்டான், உடனே அவனின் முகமே மாறிவிட்டது.

சிரிப்புடன் அவளை நெருங்கியவன், அவளின் காக்கி உடையை பார்த்து சற்று நிதானித்தான். அவளின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டே, வந்தவனை இப்பொழுது அவள் மனசாட்சி ஆஜாராகி, அவனை ரசிக்க தொடங்கியது.

“வாவ்! என்ன நடை! என்ன நடை! அந்த சட்டை காலரை தூக்கி விட்டுகிட்டு வரும் அழகே தனி. கண்ணு சும்மா பவர்புல்லா நேர் கொண்ட பார்வையா நம்மை பார்க்கும் பொழுது, சும்மா ஜிவ்வுன்னு இருக்குல” என்று வர்ணித்த மனசாட்சியை ஓங்கி ஒரு கொட்டு வைத்து உள்ளே தள்ளினாள்.

“ஹல்லோ இன்ஸ்பெக்டர்! ஹொவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டவனை பார்த்து இப்பொழுது முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

“மிஸ்டர் சக்தி முரளி, உங்க பாதுகாப்புக்கு போலீஸ் தேவைபடுது அப்படின்னு சொல்லி மேலிடத்தில் சொல்லி இருந்தீங்களே, அது விஷயமா பேசணும்” என்று பளிச்சென்று விஷயத்திற்கு வந்தவளை பார்த்து மனதிற்குள் சிரித்தான்.

“ஒ ரியா பேபி! உன்னை என் வலைக்குள்ள கொண்டு வந்துட்டேன், இனி தான் நம்ம ஆட்டத்தை பார்க்க போற” என்று எண்ணிக் கொண்டே அவளை அழைத்து கொண்டு முன்னே சென்றான்.

“உன் வலைக்குள்ள அவ்வளவு ஈசியா இந்த ரியா மாட்ட மாட்டா, நான் இங்க வந்த விஷயமே வேற டா” என்று அவளும் எண்ணிக் கொண்டே அவன் பின்னே சென்றாள்.

இவர்களை இருவர் கண்கானின்றனர் என்பதை அறியாமல், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.

தொடரும்..

  

 

AVAV8

அரிவை விளங்க அறிவை விலக்கு – 08

இந்த பத்து நாட்களில், நங்கை சும்மா இருந்த நாட்கள் குறைவு. அவள் வாய்ச்சொல் வீரராய் இருப்பவளல்ல, என அவளுக்கே அவளுக்கு நிருப்பித்தாக வேண்டிய கட்டாயமும் கூட.. மற்றவர்களிடம் சவடால் விட்டிருந்தாலும் பரவாயில்லை, கட்டிய கணவனிடம் சவாலாயிற்றே? அத்தனை சுலபமாய் விட்டுவிடுவாளா என்ன? இவள் எதற்கும் லாயக்கில்லை என்று அவன்  எண்ணத்தை உடைத்தெரிய வேண்டுமே? சுய கவுரவமாயிற்றே?

த்ரிவிக்ரமன் அந்தபக்கம் அலுவலகம் சென்றதும், நங்கை வெளியே கிளம்புவாள், கூட தீக்ஷா-வின் தாயாரையும் உடனழைத்துக் கொண்டு, அக்கம் பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், அருகில் இருக்கும் மழலையர் விடுதிகள், அவற்றின் தரம், பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்தாள். கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்புக்களையும் ஆராய்ந்திருந்தாள் , அதில் உள்ள வேலைக்கு போகும் பெண்கள், வீட்டில் சுய தொழில் செய்வோர், அவர்களின் குழந்தைகள், பள்ளி செல்வோர், செல்லாதோர், மழலையர் விடுதிக்கு செல்லும் குழந்தைகள், முந்தைய தலைமுறைகளால் கவனிக்கப்படும் பிள்ளைகள்,  என தனித்தனி பட்டியல் தயாரித்தாள்.

இவளுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்பதை அறிய இத்தனை மெனக்கெடல் தேவைப்பட்டது. எந்த ஒரு வியாபாரத்திற்கும் /சேவைத்துறைக்கும் ஆரம்பம் அமர்க்களமாய் இருப்பதாக காண்பித்து விட்டாலே போதும், பின் அதன் சக்கரங்கள் தானாய் சுழலும்.

தீக்ஷா-வின் அம்மாவை அவளது காரியதரிசியாய் வேலைக்கு சேர்த்திருந்தாள், கள ஆய்வு செய்து துவங்கப்பட வேண்டிய விஷயமாகையால், மொழி ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதென்று நினைத்து அவரை வேலைக்கு அழைத்தாள். அவரும் இவளிடம் அரைமணி நேரம் கலந்து பேசியதில், க்ரீச் அமைப்பதில் இவளின் தீவிரத்தை புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.

சென்னையில் தொழில் துறையில் கோலோச்சும் குடும்பத்தை சேர்ந்த கோடீஸ்வரி.. டெல்லியில் மழலையர்  விடுதி துவங்கி நடத்தப் போகிறாள்.

இவள் விடுதி குறித்து நோட்டீஸ் தயாரித்து வீடு வீடாக விநியோகம் செய்வித்தாள்.

கட்டணத்தில் ஆகட்டும்.. பாதுகாப்புக்கு செக்யூரிட்டி நியமித்ததிலாகட்டும்.. மதிய உணவுக்கான அட்டவணையை தயாரிப்பதில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தெளிவான திட்டமிடுதல் இருந்தது அவளிடத்தில். தவிர தொழில் முனைதல் என்பது இவளது இரத்தத்தில் ஊறி கலந்து இருந்தது. துவக்கத்தில் தற்காலிக ஏற்பாடாக அவளது வீட்டிலிருந்து மூன்று பிளாக்குகள் தள்ளி இருந்த தரைதளத்தில் 2 வீட்டினை வாடகைக்கு எடுத்திருந்தாள்.

உள்ளரங்க விளையாட்டுக்கள்.. வெளியே விளையாட ஊஞ்சல்கள்..சறுக்கு மரம்.. குறுக்கு கம்பிகளில் ஏறி விளையாடும் விளையாட்டு அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தாள்.

பணம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல என்றாலும் அளந்தே போட்டாள் இவள் செலவு செய்ததை எடுப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என கணக்கிட்டு இருந்தாள் ஆனால் அவற்றுக்கெல்லாம் அச்சப்படவில்லை இவள். வெற்றி நிச்சயம் எனும்போது முதலீட்டுக்கு பயப்படுவானேன்?

இத்தனை முஸ்தீபுகள் ஒரு பக்கம் இருக்க, வீட்டுடன்அவளது வழமையான ஸ்கைப் பேச்சு தடைபடவில்லை. என்ன.. நேரத்தை மட்டும் மாறறியிருந்தாள். இரவு 7 மணி என்பதை ஏழரைக்கு மாற்றியிருந்தாள், எட்டு மணி சுமார்தானே  திரிவிக்கிரமன் வரும் நேரம்? அவன் வருவது திரையில் தெரியுமாறு பார்த்துக் கொண்டாள். த்ரிவிக் வேலை முடித்து வந்து விட்டதால், பிறகு பேசுவதாக கூறி வைத்துவிடுவாள்.

உடனே அவன் அம்மாவுக்கு போன் செய்து பேசி முடித்து பின்..”இதோ அவரைக் கூப்பிடறேன், பிஸியா இருக்காங்க” என்று இவள் கிட்சன் சென்று மறைய.. த்ரிவிக் அன்னையுடன் பேச்சை தொடர்வான். மொத்தத்தில் இவர்கள் பிரச்சனை யார் காதுக்கும் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர்.

த்ரிவிக், முடிந்தவரை வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். மனைவி மேல் இருக்கும் கோபம் போகாத போதும்,  அவளின் சன்னமான கொலுசொலியும், கூடத்தில்,  அவள் அமர்ந்த இடத்தில் எழும் அவளது வாசனையும், கிச்சனில் இருந்து வரும் அவளது சமையலின் நறுமணமும், எல்லாவற்றையும் விட இரவின் தனிமையும்…நாமே போய் பேசினால் தான் என்ன என்று தூண்டும், ஆனால் அவனது வீம்பு “விடாது கருப்பு’ பாய் முன்னிற்கும்.

நங்கை தனது சிறுவயது பழக்கமான தலையணையை வைத்துக் கொண்டு தூங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டு இருந்தாள். அதில், அவன் கதகதப்பு இல்லாவிட்டாலும்… காலை வேளைகளில் தொழிலில் கவனம் செலுத்துவதால் அந்த அலைச்சலில் எப்படியோ தூங்கிவிடுவாள்.

இப்படியான கண்ணாமூச்சி மேலும் ஒரு பத்து நாட்கள் தொடர்ந்தது. இந்த நாட்களில் அவளது காரை சென்னையில் இருந்து தருவித்து இருந்தாள். ஒருநாள் இவளது காரியதரிசி, த்ரிவிக்கின் அலுவலகத்திற்கு போன் செய்து அவனது அப்பாயின்மென்ட் கேட்டாள். தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீரஜ் திருதிருவென முழித்து நிற்பதைப் பார்த்த த்ரிவிக் என்னவென்று கேட்டான்.

“சார்,  மேடம் பி.ஏ. லைன்ல இருக்காங்க உங்களோட அப்பாயின்ட்மென்ட் கேக்குறாங்க”, என்றான் ஒருவித குழப்பத்துடன். பின்னே, ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு அவர்களது வேலைகள் குறித்து தெரியாதா என்ன என்று அவன் நினைத்தான். தம்பதிகள் கிழக்கு-மேற்குமாய் இருப்பது அவனுக்குத் தெரியுமா என்ன?

“ஓஹ்.. வரணும்னு சொல்லிட்டு இருந்தா நான் பாத்துக்குறேன் கொடுங்க”,  என்று தொலைபேசியை கையில் வாங்கிக் கொண்டான்.

ஆள்காட்டி விரலால் தன் பி.ஏ.வை வெளியே போகச் சொல்லிவிட்டு, “சொல்லு”,  என்று கடுகடுத்தான் தொலைபேசியில்.

மறுபுறம்…நீரஜ் பேசி முடித்தவுடன், “நான் பேசிக்கிறேன் நீங்க டாக்குமெண்ட் காப்பி எடுங்க”, என்று கூறி சுபத்ராவிடமிருந்து [தீக்ஷாவின் அன்னை/காரியதரிசி] நங்கை,  பேசியை வாங்கி தன்வசமாக்கி இருந்தாள்.

கணவனின் கடுகடு “சொல்லு”-வில்,  மூளையை அஃபிஷியல் மோட்-க்கு மாற்றி, “கொஞ்சம் பிசினஸ் பேசணும் நான் உங்க ஆபீஸ்க்கு வரேன் உங்க ஆடிட்டர் இருக்காரான்னு பாத்துட்டு, அவரை ஆஃபிஸ் வரச்சொல்லிட்டு எனக்கு கால் பண்ணுங்க, அன்ட் மிஸ்டர் “.. என்று இடைநிறுத்தி, “பத்து நிமிஷத்துல கால் வரலைன்னா மறுபடியும் நீரஜுக்கு  போன் பண்ணுவேன். இதே வேலைய அவரை செய்ய சொல்லுவேன். ஓகே?”, என்றுவிட்டு, பதிலுக்கு கோபமாக இவன் “ஏய்ய்” எனும்போது டொக் என அவளது தொலைபேசியை வைத்துவிட்டாள்.

” அடியே சொர்ணாக்கா ஒருநாள் என்கிட்ட மாட்டாமலா போய்டுவ?  அப்ப வச்சுக்கிறேன்டி உன்ன”, .. பல்லை நற நறவென கடித்தபடி.. வேறு ஒன்றும் செய்ய இயலாதவனாய் அவனது ஆடிட்டரை அலுவலகத்திற்கு கூப்பிட்டு இருந்தான், நங்கையின் மணாளன்.

அன்று காலை சென்னையிலிருந்து வந்துவிட்டிருந்த அவளது பி.எம்.டபிள்யூ-வில், சொன்னபடி அரைமணியில் நங்கை நல்லாள்  வந்து இறங்க,  அலுவலகம் ‘ஆ’வெனப் பார்த்தது . எளிமையாய்..  கண்ணுக்குத் குளிர்ச்சியான மேக்கப்புடன், வெகு திருத்தமாய் கட்டிய  ப்யூர் காட்டன் சில்க் பிளைன் புடவையில், ஆளுமையுடன் அவள் படியேறி வர, கண்ணாடிக் கதவின் அருகிருந்த செக்யூரிட்டி, தானாய் கதவைத்திறந்து சல்யூட் வைத்தார்.

நங்கை கொணர்ந்த காகிதங்களை பார்த்த ஆடிட்ருக்கு, திருத்தம் செய்யும் வேலையைக் கூட இவள் வைக்கவில்லை, அனைத்தையும் பக்காவாய் தயார் செய்து வைத்திருந்தாள். பெருக்கல் குறி போட்டு த்ரிவிக், கையெழுத்திட வேண்டிய இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்தாள்.

இவள் உடன்படிக்கையின்படி, இருவருக்கும் சமபங்கு உள்ள ஒரு நிறுவனத்தை இவர்கள் சேர்ந்து ஆரம்பிக்கிறார்கள் என்று இருந்தது.

இடையே கிடைத்த தனிமையான நேரத்தில், திரிவிக்ரமன் நங்கையிடம் கேட்ட முதல் கேள்வி, ” இது என்ன டிராமா?”, என்பதுதான்.

“ரொம்ப சிம்பிள். நான் தான் இத பண்றேன்னு சொன்னா எங்க அப்பா விட மாட்டார். அடுத்த பிளைட் பிடிச்சு வந்து என்ன பிரச்சனைன்னு கேப்பாரு.  இதுவே நீங்க பண்றீங்கன்னு சொன்னா..உங்களுக்கு நான் சப்போர்ட் பண்றேன் ன்னு சந்தோஷப்படுவார். காட் இட்?”, பட்டென முடித்தாள்.

“இதெல்லாம் தேவையில்லை சும்மா வெட்டி வீம்புக்காக பண்ணாதே”, சொன்னவன் குரல் பாதியாய்த்தான் ஒலித்தது. காரணம், நங்கை அத்தனை முன்னேற்பாடுகள் செய்திருந்தாள், அவளிடம் உழைப்பும் இருந்தது புத்திசாலித்தனமும் இருந்தது.

அடுத்து வந்த அரை மணி நேரத்தில் கையெழுத்து எல்லாம் முடித்து கிளம்பி இருந்தாள்.  நல்ல நேரம் பார்த்தே வந்திருந்ததால், எந்த விஷயமும் தடைப்படவில்லை. அவள் அருகாமையும், விட்டுச் சென்ற வாசமும்,  அறை முழுவதும் இருக்க, த்ரிவிக்கிற்கு மனைவியின் அரவணைப்பு மிகவும் தேவையான ஒன்றானது.

அன்று இரவு ஸ்கைப்பில் த்ரிவிக்கினது அன்னை கிடைக்கவில்லை. அலைபேசியில் பிடித்து பேசியபோது, தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை இருந்ததால், கணவன் மனைவி இருவரும் சுற்றுலா செல்லத் தீர்மானித்து சென்றுகொண்டு இருப்பதாகச் சொன்னார்.  இது அவர்கள் வழமையாய் செய்வதுதான். சின்ன விடுமுறை கிடைத்தாலும் சுற்றிலும் உள்ள கோவில்களுக்கு செல்வது அவர்கள் பொழுதுபோக்கு. எனவே அதை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல் விட்டு விட்டான்.

அலைபேசியை கீழே வைத்துவிட்டு, நங்கையோடு வெளியே சென்று எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்று நினைத்தான். அவனை அறியாமல் சன்னமான பெருமூச்சு ஒன்று கிளம்பியது. நங்கைநல்லாள் எப்பொழுதோ தூங்கச் சென்று இருந்தாள். இவனோ டிவி ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி இலக்கில்லாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எத்தனை நேரம் போனதோ தெரியாது, திடீரென வாசலில் அழைப்பு மணி அடிக்க, யாரது இந்த நேரத்தில் என்ற யோசனையோடு சென்று கதவை திறந்தான். பார்த்தால் அங்கே அவனது அன்னை.. “வாவ் மாம்” , என்று கத்தியவன், சந்தோஷ  மிகுதியில், அவரை தூக்கி தட்டாமாலை சுற்றி ‘லவ் யூ மா’ என்றான்.

“எப்படிடா எங்க சர்ப்ப்ரைஸ்?” என்று சிரித்தார் அன்னை..

” ஓ !! ஸோ கைன்ட் ஆஃப் யூ மாம், அப்பா எங்க?”, என்றான்.

“அவர் கீழே டாக்ஸிக்கு செட்டில் பண்ணிட்டு வருவார். எனக்கு பாத்ரூம் போனும்.  அதான் சீக்கிரமா வந்துட்டேன். நைட் நேரம் நங்கைய எழுப்பாத காலைல பாத்து பேசிக்கலாம்.  இப்போ நீ தூங்கு போ”, என்றுவிட்டு அவர் பாத்ரூம் சென்றார்.

அய்யய்யோ !!!!!!!! “ட்டின்டு டின்ட்டு டுடுன் ட்டின்ட்டின்ட்டின் “…. திரிவிக்கிரமனின் மனதுக்குள் உடுக்கடித்தது.

நங்கை தனியாக வேறு அறையில் அல்லவா உறங்குகிறாள்? பதறி அடித்துக் கொண்டு அவள் படுத்திருந்த அறைக்கு சென்றான். “அடியே, பூட்டி கீட்டி வச்சிருந்த, கொன்னுடுவேண்டி உன்னை “, மனைவிக்கு மனதுக்குள் அர்ச்சனை செய்துகொண்டே கதவைத் திறக்க.. நல்லவேளையாய் அவள் பூட்டியிருக்கவில்லை. உள்ளே நுழைந்தால்..  இரண்டு தலையணைகளை கட்டிப்பிடித்து, ஆனந்தமாய் சயனித்து ஆழந்த உறக்கத்தில் இருந்தாள், நங்கை நல்லாள்.

“அடியே, அங்க ஹால்-ல ஒரு மனுஷன் தூங்க முடியாம கஷ்டப்படறேன், இங்க தலைகானி-யை தலைக்கு ரெண்டு காலுக்கு ரெண்டுன்னு வச்சுக்கிட்டு கும்பகர்ணியா தூங்கிட்டு இருக்கியா?”, சரியான கடுப்பில் [வெறுப்பு வேறு, கோபம் வேறு, கடுப்பு வேறு.. காலங்காலைல அரக்கப்பரக்க நம்ம லேடீஸ் பசங்களுக்கு / வீட்டுக்காரருக்கு டப்பா கட்டிட்டு இருக்கும்போது… நம்மாளு, அதான் வேற யாரு குடும்….பத்…தலைவர், தன்னைச் சுத்திலும் உலகப் பிரளயமே நடந்தாலும் கண்டுக்காம … சாவகாசமா…  பேப்பர் படிச்சிகிட்டு “கண்ணம்மா .. இன்னொரு கப் காஃபிடா”-ன்னு  கேப்பாரு பாருங்க…  அப்போ உள்ளங்கால்லேர்ந்து உச்சந்தலை வரைக்கும் பிச்சுக்கிட்டு வரும்பாருங்க.. அது, உங்க வீட்டுக் கடுப்பு எங்க வீட்டுக் கடுப்பு இல்லைங்கோ … உலகமகா கடுப்பு…  

இதுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கக்கூடாது, விளக்கம் சொன்னா அனுபவிக்கனும்… ஆராயக் கூடாது ] திட்டித் தீர்த்தான் மனதுக்குள்.

த்ரிவிக் உலுக்கிய உலுக்கில் அடித்துப் பிடித்து எழுந்தவள், அவன் கடித்துத் துப்பிய “ஏய்.. சொர்ணாக்கா.. எங்கம்மா வந்துருக்காங்க.. நம்ம ரூமுக்கு போய் படு.”, என்றது புரியாமல் அலங்கமலங்க விழித்தாள். நங்கைக்கு தான் சொன்னது புரியவில்லை என்பதை அறிந்து, “அடியேய்.. முட்டைக்கண்ணை முழிச்சு பாக்காத. ஊர்லேந்து அம்மா வந்துருக்காங்க..உனக்கு மட்டும்தான் அன்பு அவரைக்காய்; பாசம் பச்சைமிளகாயெல்லாம் இருக்குன்னு நினைச்சுக்காத.. நம்ம விஷயம் ஏதாவது தெரிஞ்சுது … உன்னைக் கொன்றுவேன்”, என்று மிரட்டினான்.

சட்டென எழுந்தவள், தலையணை போர்வையை வாரி சுருட்டியவாறே அவர்களின் அறைக்கு ஓடியே விட்டாள். “ப்பா செம பாஸ்ட்தான்”, மெச்சியவன், பாத்ரூமில் தண்ணீர் சப்தம் கேட்க, மெத்தையின் மீது புதிய விரிப்பினை விரித்து, இவனது அறைக்கு சென்று படுக்கையை சுத்தம் செய்து, இருவரின் பொதுவான அறைக்கு மின்னலாய் விரைந்தான்.

நங்கை முகத்தில் முள்ளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள், உள்ளே வந்த கணவனைப் பார்த்து “அஞ்சு கிலோ இஞ்சியை முழுங்கினா மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு, நானு உங்களுக்கு சொர்ணாக்காவா?”, என்று கிசுகிசுத்து சண்டையிட துவங்கி.. , “அவங்க எனக்கும் மாமா அத்தைதான், எங்களுக்கும் அவங்க மேல அக்கறை இருக்கு.  முத முதலா வந்தவங்களை வாங்கன்னு சொல்லிட்டு வர்றேன்.” என்று முடித்தாள்.

“ஒன்னும் வேணாம், காலைல பாக்கலாம்னு… “, இவன் பேசியவாறு இருக்க… கேட்க நங்கை இருந்தால் தானே?

” அடங்காப்பிடாரி, சொர்ணாக்கா..” , மனது திட்டினாலும்… உள்ளூர குத்தாட்டம் போட்டது…. த்ரிவிக் மட்டுமே அறிந்த ரகசியம்.

வெளியே கூடத்தில், நங்கை அகமும் முகமும் மலரச் சிரித்து “வாங்கத்தை , வாங்க மாமா”, [அதற்குள் அவரும் மேலே வந்துவிட்டிருந்தார்], என வரவேற்றாள்.

“அவன் எழுப்பினானா உன்ன? நான்தான் டிஸ்டர்ப் பண்ணாதடான்னு சொன்னேனே?”, .. அத்தை.

“சத்தம் கேட்டு நானே முழிச்சிட்டேன் அத்த. குடிக்க பால் ஏதாவது தரட்டுமாத்த?”, வீட்டு மனுஷியாய் விசாரிக்க…

“ஒன்னும் வேணாம்மா.. காலைல லேட்டாத்தான் எந்திரிப்போம். போயி தூங்கு நாளைக்கு ஆற அமர பேசலாம். குட் நைட்”, என்று ஒரு அறைக்கு சென்று படுத்து விட்டார்.

இப்போது கூடத்தில் இருந்தது, நங்கை மட்டுமே. கணவன் இருக்கும் அவர்கள் அறைக்கு செல்ல .. அவளது முதலிரவில் கூட இத்தனை படபடப்பு இல்லாமல் இருந்தவள், தற்போது பந்தயக்குதிரையாய் ஓடும் மனதினை சமன் செய்து, உள்ளே சென்றாள்.

த்ரிவிக் கட்டிலின் அந்தப்பக்க மூலையில், முதுகு காட்டி தூங்கினான்  (??), நங்கை வாயைத் திருப்பி ஒழுங்கு காட்டி, தலையனை அணை கட்டி படுத்தாள். பத்து நிமிட நேர போராட்டத்துக்கு பின், தூக்கம் கண்களை தழுவியது.

ஆனால், அந்தோ பரிதாபம். !! அரைமணித் துளியில், அணையை அவளையறியாமல்  உடைத்து கணவனின் தோளைத் தழுவி இருந்தாள், பெண்.

“ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை”, கொக்கு போல .. அவனுக்கு சாதகமான  நேரத்திற்காக காத்திருந்த  கணவனவன்.. கட்டித்தழுவ, எதிர்க்க இயலாமல் விரைத்தாள்.

“ம்ப்ச்.”, என்ற அவன் ஆட்சேபத்திலும், நிற்காத தேடலிலும் … தானாய் உடல் தளர்ந்து மறுமொழி உரைக்க ஆரம்பிக்க.. அங்கு அறிவுக்கு அம்னீஷியா கொடுத்து… இளமை விழித்திருந்து.

அரிவை அறிவானா?

AV7

அரிவை விளங்க அறிவை விலக்கு . – 07

பத்து நாட்களுக்கு பிறகு:

த்ரிவிக்ரமனின் ஃபிளாட் மிக அமைதியாக இருந்தது ; அங்கு வசிப்பதோ இரண்டே பேர் ; அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே இல்லை என்னும் பொழுது சப்தங்கள் எங்கே வரும்? மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், இவர்கள் இருவருக்குமான அறையை நங்கை, த்ரிவிக் இருவரும் புறக்கணித்து, மீதமிருந்த அறைகளில் ஆளுக்கொரு அறையாக எடுத்துக்கொண்டு தஞ்சம் அடைந்திருந்தனர்.

சமையலறையில் இருவரும் தனித்தனியாக சமைத்துக் கொண்டனர். த்ரிவிக், அலுவலகம் செல்லும் வரை நங்கை எழுவதே இல்லை. விழித்திருந்தாலும் வெளியே வருவதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களுக்கு மேல் ஆனது. பேச்சு ? மூச்.. ..இனி எங்கே பேசுவது? அந்த ஒரு நாளில்.. ஒரு மணி நேர பேச்சுவார்த்தையில் அனைத்திற்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைத்திருந்தனர் தம்பதிகள் இருவரும்.

திரிவிக்ரமன் தனது திருமணத்திற்கு முன்பான பழைய வாழ்க்கைக்கு திரும்பி இருந்தான். காலை ஜாகிங். வந்ததும் பத்து பதினைந்து ஊறவைத்த பாதாம், ஒரு கப் முளைவிட்ட பயிறு, பிரெட் என அவன் காலை உணவினை முடித்து தயாராகி வெளியே சென்றால், பின் வீடு திரும்புதல் என்பது இரவு எட்டு மணிக்குத்தான். இந்த பத்து நாட்களில் நான்கு நாட்கள் வெளியூருக்கு சென்று வந்தான். வெளியே காண்பதற்கு அமைதியாக இருந்தாலும், த்ரிவிக்-கின் உள்ளம் உலைக்களமாய் கொதித்தது. காரணம் அவள் பேசிய பேச்சுக்கள் அப்படி, பேச்சு மட்டுமா?…. அதை நினைக்க நினைக்க த்ரிவிக்ரமனின் முகம் ரத்த நிறம் கொண்டது ..

அப்படி என்னதான் நடந்தது?

அன்று:

த்ரிவிக் திட்டமிட்டபடியே அலுவலக பணியாளர்கள் அனைவரையும்  இந்தியா கேட் கூட்டி சென்று,  பிரபல ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துப் பின்னரே  அவரவர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தான். ஷில்பா வேண்டாமென்றால் த்ரிவிக் விடுவானா என்ன?, அனைத்தும் முடிந்து அமைதியாய் வீடு வந்து சேர்ந்தான்.ஆம்.. அமைதிதான் … புயலை உள்ளடக்கிய அமைதி.

நங்கையும் ஒரு பூகம்பத்திற்கு தயாராகவே இருந்தாள். கண்டிப்பாய் போன் வாட்ஸப் பதிவினை ஏன் பார்க்கவில்லை என்று சப்தம் போட போகிறான், குடியிருப்பில் உள்ள ஒருவரின் உடல்நலக்குறைவே காரணம், என்பதை விளக்கினால் கேட்டுக்கொள்வான். இல்லையேல் நான்கு திட்டு திட்டினாலும் , அமைதியாய் இருந்துவிட்டு,  பின்..  விளங்கங்கள் தர வேண்டியதுதான் என்று நல்ல விதமாகத்தான் எண்ணினாள்.

வீடு வந்த  திரிவிக்கிரமன் காலில் இருந்த ஷூவை கழட்டி அதனுடைய அலமாரியில் எடுத்து வைத்தான். அவன் குடிக்க தண்ணீர் கொடுத்தவள், அமைதியாய் நின்றாள். நீர் அருந்தியவன், கிளாஸை டேபிளில் வைத்து…. கையை கட்டிக்கொண்டு, குற்றம் சாடும் தோரணையில் நின்று, நிதானமாய் கேள்வி கேட்டான். “ஏன் போன் பண்ணல?”,

கேள்வியை உள்வாங்கியவள், புரியாமல் பார்த்தாள்.”என்.. எதுக்.. நான் ஏன் பண்ணனும்?”, குழப்பத்துடன் பதில் கேள்வி கேட்டாள்.

“யாரைக் கேட்டு குழந்தைகளை பார்த்துக்கறேன் -ன்னு ஒத்துக்கிட்ட?”, குரல் மெல்ல அவனையறியாமலே உயர்ந்தது.

” ஓ!  அதுவா, நாம பார்க்-ல பாத்தோமே அந்த பாப்பாதான், அவங்கம்மா வந்து பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு உடம்பு சரியில்ல, அந்த வீட்டுல வேற ஒரு குழந்தை இருந்ததா, ஹாஸ்பிடல் போறோம்,  குட்டிப்பசங்க ரெண்டு பேரையும் பாத்துக்க முடியுமா-ன்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொன்னேன்”, சற்றே படபடப்பு குறைந்தவளாய் பதில் கூறினாள்.  ஸ்ஸ்… இவ்வளவுதானா? இதற்குத்தான் த்ரிவிக்-கிற்கு கோபமா? இலகுவாய் சமாளித்து விடலாம் என்று ஆசுவாசமானாள்.

“அவங்க நம்பிக்கையான ஆளுங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?”, அவளின் அமைதியை கண்டு இன்னமும் கோபமானவன்..பற்களை கடித்தபடி , வார்த்தையை மென்று துப்பினான்.

“ஒருத்தங்களை பாத்தா நம்பலாமா கூடாதான்னு கூட தெரியாதா என்ன? “, அசிரத்தையாய் பதிலுரைத்து.., கிச்சனுக்குள் நடந்தாள். தொடர்ந்து .. “என்னைக் கேக்கறீங்க? நீங்க, இந்தமாதிரி நாங்கெல்லாம் வர்றோம்-ன்னு ஒரு போன் பண்ணமாட்டீங்களா?, எல்லாத்துக்கும் மெசேஜ் தானா?, கெஸ்ட் வரும்போது பேக்கு மாதிரி நின்னேன்.  மானமே போச்சு. ச்சே..”, சாப்பாடு மேஜையின் மேல் இருந்த மாதுளையின் முத்துக்களை பிரிக்கவென கத்தி கொண்டு பழத்தை கீறி பிளக்க ஆரம்பித்தாள்.

அதுவரை பொறுமையை  இழுத்துப் பிடித்திருந்தவன்..  உச்சபட்ச கோபத்தில்,நங்கையின் பின்னோடே வந்து, அவள் தோளைப் பிடித்து விருட்டென திரும்பியவன், “யேய் .. நிறுத்து . கேள்வி கேட்கணும்ங்கிறதுக்காக என்கிட்டே argue பண்ணாத, பிரியாணியை கடைல வாங்கி வைன்னு, என் ஆபிஸ் கேபினுக்குள்ள இருந்து கத்தனும்-னு நினக்கிறயா? என் PA நீரஜ், என் கூடவேதான் இருப்பான். யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லாத விஷயத்தை வாட்சப்-ல அனுப்பலாம். வீட்ல நீ மட்டுந்தான இருப்ப, சோ ப்ளூ டிக் பாத்தோடனே நீ மெசேஜ் பாத்துட்ட-ன்னு நினச்சேன். இதுல என்ன தப்பு ?”, என அவன் மீண்டும் பொரிய .. “ஓ இப்படி ஒரு பாயிண்ட் இருக்கோ?”, நங்கையின் மனம் த்ரிவிக் சொல்வது சரிதான் என்றது. அதனால், அமைதி காத்தாள். விக்ரமன் இத்தோடு விட்டிருக்கலாம்…..

“லிசன்.  இப்ப போன் பண்ணினேன் … பண்ணல, கெஸ்ட் வந்தாங்க .. நீ பக்கி மாதிரி இருந்த இல்லங்கிறது இல்லை பிரச்சனை. குழந்தைங்களைப் பாத்துக்கட்டுமா வேணாமா-ன்னு என்கிட்டே கேட்கணுமா ? இல்லையா? நீயே உன் இஷ்டப்படி  பண்ணுவியா?”, அவனுக்கு அவள் பாதுகாப்பு பற்றிய கவலை.

“ஏன்? அப்படி என்ன என் இஷ்டப்படி பண்ணிட்டேன்? அடுத்தவங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்றது தப்பா?”, நங்கை, விட்டேனா பார் என்று மல்லுக்கு நின்றாள்

“முட்டாள். அடி முட்டாள்.எவனாவது குழந்தைய சாக்கு வச்சு உள்ள வந்தா என்ன பண்ணுவ ? ராபரி பண்ணியிருந்தா? அவ்வளவு ஏன் ? கொலையே பண்ணியிருந்தா? பெரிய மதர் தெராசான்னு நினைப்பா உனக்கு? “, இவன் அவளுக்கு மேல் இருந்தான், இவன் மனதுக்குள் அப்படி ஒரு பயம் ஓடியது நிஜம் “உனக்கு ஏதாவது ஆனா என்ன பண்றது ? ” என்று கேட்க வேண்டியதை இப்படிக்  கேட்டால் ….. ?

பால் ஈனும் மாட்டினை பசு என்றும் கூறலாம், மாடென்றும் பகிரலாம். சொல்லின் வீர்யம் புரியாமல், த்ரிவிக் மாடென்றான். மாடு முட்டவும் செய்யுமே?

” சும்மா ஓவரா பண்ணாதீங்க. அதான் ஒண்ணுமாகலையில்ல. எனக்கும் சொந்தமா யோசிக்க தெரியும் “, வார்த்தைகள் தடிக்க…

“ஓ மை காட் .  இது உனக்காக தான் சொல்றேன் னனு கூட தெரியாத மரமண்டையா இருக்கே நீ? well. ஐ டோன்ட் கேர். இந்த வீட்ல இனி எது நடந்தாலும் எனக்கு தெரிஞ்சு தான் நடக்கணும். அதுமட்டுமில்ல , நான் சரின்னு ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் நடக்கணும்.. காட் இட் ?”, ஸ்ட்ரிக்ட் ஆபிசரானான்.

“அப்படி எல்லாம் கேரண்டி வாரண்டி கொடுக்க முடியாது. அண்ட் எல்லாத்துக்கும் உங்கள கேக்கணும் அவசியமும் கிடையாது. this is my home too.”, அம்மா வீட்டில் இளவரசியாய் கோலோச்சிய நங்கை பேசினாள்.

கடுங்கோபத்துடன், “நோ. இது எங்க அம்மா எனக்காக வாங்கி வச்ச வீடு.இங்க, எனக்கு என்ன தேவைன்னு பார்த்து செய்யதான் நீ  வந்திருக்க. மத்த குழந்தைகளுக்கு ஆயாம்மா வேலை பாக்கறதுக்கு கிடையாது. வேறென்ன தெரியும் நீ படிச்ச படிப்புக்கு? நேத்து வந்தாங்களே என்னோட ஆபீஸ் ஸ்டாப். அவங்கள மாதிரி உனக்கு வேலை செய்யத் தெரியுமா என்ன?…”, த்ரிவிக்ரமன் வார்த்தையை விட்டான்.

அதுவரை, தன் செயலின் தாக்கத்தால் , கணவனுக்கு தர்ம சங்கடமானதொரு நிலை வந்ததே என்ற வருத்தத்தில் இருந்த நங்கையை, த்ரிவிக்கின் சொல்லம்புகள் சரியாக தாக்கின. “ஆஹா!, இத்தனை நாளாய் நம்மைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறானா இவன்?” என்ற எண்ணம் தலையெடுக்க, ஆத்திரத்தில், அனிச்சையாய் கையில் இருந்த கத்தியின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்திருந்தாள்.

சில தருணங்கள், சிற்சில நொடிகள், சின்னதாய் ஒரு வார்த்தை பலர் வாழ்க்கையை  மொத்தமாய் புரட்டிப் போடும், அவர்களின் வாழ்க்கைப்பாதையை தீர்மானிக்க வைக்கும். அந்த ஒரு நொடி நங்கையின் வாழ்வில் வந்தே விட்டது.

ஆழ மூச்சிழுத்து தன்னை சமன் செய்து கொண்டாள். இந்த வினாடியிலிருந்து, அவள் எதிர்காலப் பாதை மாறப்போகிறது என்பதை அறிந்தவளாய்…. மெல்லத் தலை நிமிர்த்தி, எதிரில் நின்றவனை மேல்பார்வை பார்த்து, “மிஸ்டர் த்ரிவிக்ரமன்..கல்யாணத்துக்கு முன்னாடியே … எனக்கு என்ன தெரியும், நான் என்ன படிச்சிருக்கேன்-னு உங்க அப்பாம்மாகிட்ட தெளிவா சொன்னதா ஞாபகம். அண்ட் ஆமா, நான் உங்க அகராதிப்படி ஆயா வேலை பாக்கத்தான் படிச்சிருக்கேன், இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. இங்க இனிமேல் அதேதான் செய்யவும் போறேன்”, என்று அவள் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று தீர்மனமாய் கூறினாள்.

நங்கை நல்லாள், குடும்ப உறவுகளிடையே வளர்ந்தாலும், இவளை இளவரசியாய் நடத்தும் சுற்றத்தார். [உண்மையும் அதுதானே? அனைத்திற்கும் வாரிசு என்பது இவள்தானே? ], தவிர அவள் வாய் விட்டு சொல்லும் முன்… மகள் நினைப்பதை மனத்தால் யூகித்து நடத்திக் காட்டும் தந்தை, என இருந்தவள். அது சில நேரங்களில் சரியாகவும், பல நேரங்களில் சரியில்லாததாகவும் இருக்கும், தந்தையின் மனம் வேதனைப்படக் கூடாதே என்று இவள் ஜீரணித்தவை அதிகம். அங்கே பாசம் தெரிந்ததால், தேவை பின்னுக்கு சென்றது.

அதிலும் இப்பொழுது, தன்னை எதற்கும் உபயோகமில்லாதவள் என்று த்ரிவிக் கூற, அது நங்கைக்கு பெரிய அவமானமாகவே தோன்றியது.  தவிர, அவளுக்கே அவளுக்கென ஒரு வீடு வந்த பின்னும், மீண்டும் மற்றவர் முடிவுக்கே கட்டுப்படுவதென்பது இயலாத காரியமாய் தோன்ற, இங்கே, இப்போது தலையாட்டத் துவங்கினால், இனி எப்பொழுதும் தலையாட்டும் பொம்மையாகவே இருக்க வேண்டியதாகிவிடும் என்றும்  நினைத்தாள். ஆக, “கட்டுக்குள் நில்”, என்று கணவன் ஆணையிட.. “அடங்க மறு”-க்கும் பெண் சிறுத்தையாய் பொங்கி எழுந்தாள் மனைவி.

இன்னொரு பக்கம் கண்களில் தணலே தெறிக்க நின்ற   த்ரிவிக்ரமனோ, அவனது ஏழாம் வகுப்பில் இருந்து தனியே விடுதியில்  வளர்ந்து வருபவன், தாய், தந்தை, குடும்பம் மற்றும் சமூக அமைப்பு தெரியாதவனில்லை, ஆனால் தன்னிச்சையாய் முடிவெடுக்கப் பழகியவன். அவனுக்கு சரியென்று தோன்றினால், அந்த ஒன்றிலேயே நின்று செயல்படுத்துபவன். அதுதான் அவன் தொழில் வெற்றியின் ரகசியம் கூட. சில விஷயங்கள் தொழிலுக்கு சரி? குடும்பத்திற்கு?

“நிச்சயமா அதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன். நீ சென்னை போகலாம். நான் உங்கப்பாக்கு கால் பண்றேன். அடுத்த பிளைட்-ல டிக்கட் போடறேன். ரெடியாயிரு.”, என்று உறும …

நங்கை பொறுமையிழந்து சட்டென கையை உயர்த்தி, “ஏய் மிஸ்டர்.. அப்பாகிட்ட சொல்லனும் ஆட்டுக்குட்டி கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சீங்க.. நான் மனுஷியா இருக்க மாட்டேன். கோடி கோடியா கொட்டி கொடுத்து கட்டிவச்சா,  திருப்பி அனுப்புவீங்களோ? தொலைச்சிடுவேன் தொலைச்சு…”, கடிபட்ட பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள். அவள் கையில் இருந்த கத்தியை அப்பொழுதுதான் கவனித்தாள். சற்றே தெளிந்து, கையை இறக்கினாள்.

நங்கைக்கு, த்ரிவிக்ரமனிடம் கத்தி காண்பித்தது சிறிது அதிகப்படியாய் தோன்றியது. தன்னால் ஒரு சிறிய கவலை கூட தந்தைக்கு வரக்கூடாது என நினைத்து நங்கை இதுநாள்வரை செயல்பட, திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அவரிடம் அனுப்புகிறேன் என்பதோடல்லாமல், அவரிடமே பிரச்சனைப் பேசப் போகிறேன் என கணவன் கூறியதும், தந்தையின் வருத்தமான முகம் கண்களுக்கு வர, அவள் கோபம் எல்லை மீறியது. அதன் தாக்கமே அந்நிகழ்வு.

அவளது பத்தாவது வயதில், அவளது அன்னை திடீரென உலகத்தை விட்டு நீங்க, இவர்கள் மூவருமான குடும்பம் அது. வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும், நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்த அந்த இழப்பு அனைவரையும் நிலைகுலைய வைத்திருந்தது. மோகனசுந்தரத்துக்குமே, அடுத்து என்ன என்பது தெரியாத கையறுநிலை. அன்று வரை மனைவி முத்தழகி வீட்டை நிர்வகிக்க, இவர் அலுவலகம் சென்று வந்தார். அன்று காலை சிற்றுண்டி கொடுத்து வழியனுப்பிய மனைவி, அந்தி சாயும் நேரம், இதயத்தைப் பிடித்துக் கொண்டு  சாய்ந்து விட்டதாய் வந்த ஒற்றை அலைபேசி அழைப்பில், அவர் உலகமே அஸ்தமனமாகியது. வீட்டை அடைந்தவர், மனைவியை மடியில் தாங்கி அமர்ந்தவர், அழக்கூட தோன்றாமல் அதிர்ச்சியில் இருந்தார்.

தூக்க கலக்கத்தில் இருந்த நங்கை, கூடத்தில் சோஃபாவில் தந்தையின் மடியில் படுத்திருந்த அன்னையிடம், “அம்மா, பசிக்கிதுமா, பூரி செஞ்சுதர்றேன்னு சொல்லிட்டு, தூங்கிட்டே இருக்கீங்க. ப்பா, அம்மாவை எழுப்புங்கப்பா.”, என்ற பெண்ணைப் பார்த்தும், “முத்து, நல்லா சாப்பாடு கேக்கறாம்மா, எடுத்துட்டு வா”, என்று வெடித்து அழ… அன்றுதான் தந்தை அழுது பார்த்தாள், நங்கை. பின், சொந்தங்கள் வர வர, காரியங்கள் நடந்தன.

அவரும் நிதர்சனத்தை உணர்ந்து, பங்காளி முறையில் சில சொந்தங்களை, வேலையும் கொடுத்து, வீட்டிலும் இருக்க வைத்தார். ஆனாலும், அன்று பேச்சைக் குறைத்தவர், தேவைக்கு மேல் அனாவசியமாக ஒரு வார்த்தை, மற்றவரிடம் உதிர்த்தவர் இல்லை. அவரது உணர்வுகள்/உணர்ச்சிகள், அது மகளைப் பற்றியதோ, மற்றதைப் பற்றியதோ,  அவர் மனதுக்குள் அவரது முத்துவுடன் மாத்திரமே.

அன்று அவர் அழுவதை பார்த்த நங்கை, அதன்பிறகு, எதற்காகவும் அவர் அவளைக்கொண்டு கவலை கொள்ள கூடாது என்று உறுதி எடுத்திருந்தாள். அவரிடம் த்ரிவிக்ரமன் பேசுகிறேன் என்றதும் அவளையறியாமல் வெகுண்டதும் இதனால்தான்.

ஆனால், த்ரிவிக்ரமன், நங்கையை சென்னையில் இருக்கும் அவனது அம்மாவிடம் அனுப்ப எண்ணியிருந்ததோ, விமான நிலையத்தில், இவளை அழைத்துக்கொள்ள மட்டுமே மோகனசுந்தரத்தை வரச்சொல்வதாக இருந்ததோ, இவளுக்கு தெரியுமா என்ன?

த்ரிவிக்ரமன்….. இன்னமும் நங்கை கத்தி காண்பித்த அதிர்ச்சியில்  இருந்து வெளியே வரவில்லை.

அரிவை அறிவானா?

tk42

அத்தியாயம் – 42

தன்னுடைய கண்கள் உணர்த்தும் செய்தி உணர்ந்தவளின் மனமோ சிறகில்லாமல் வானத்தில் பறந்தது. அவளின் காதலுக்கும், காத்திருப்பிற்கும் விடை கொடுத்தது அந்த ஃபைல். பிரபா தவறு செய்யவில்லை என்ற உண்மையை உணர்ந்தவள் அந்த ஃபைலை மார்புடன் அணைத்துக் கொண்டாள்..

அவனை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்கி வைத்துவிட்டு கடைக்குள் சென்று பிரபாவிற்கு  ஏற்ற வண்ணத்தில் துணிகளை தேர்வு செய்தாள். அந்த துணி பைகளுடன்  அந்த ஃபைலையும் பத்திரமாக எடுத்து வைத்துகொண்டாள். அவள் பர்சேஸ் முடித்துவிட்டு வெளிவர அவளின் கைபேசி சிணுங்கியது.

அதன் திரையைப் பார்த்தவளின் விழிகள் சந்தோஷத்தில் துள்ள, “பிரபா..” என்றழைக்க, “ஜெயா எங்கே இருக்கிற” மறுப்பக்கம் அவனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

“நான் பர்சேஸ் முடித்துவிட்டேன். உங்களோட வேலை முடிந்ததா?” என்று கேட்க, “நான் ஆபீஸிலிருந்து கிளம்பிவிட்டேன்” என்றவன் சொல்ல, “சரி வாங்க நான் மாலில் வெயிட் பண்றேன்” அவள் போனை வைத்துவிட்டாள்.

அங்கிருந்த புக் ஸ்டால் உள்ளே நுழைந்ததும், “இங்கே நியூ கலெக்சன்ஸ் இருக்குதா?” என்று கடைகாரரிடம் கேட்டாள்.

“ம்ம் இருக்கு மேடம்” என்றவன் எழுந்துசென்று, “இந்த ரேக்கில் இருப்பது எல்லாமே நியூ ஸ்டோரிஸ்” என்றார்.

“ஓஹோ ஓகே..” என்றவள் புத்தகங்களின் பெயர்களை படித்துக்கொண்டே வர, “கதிரழகி” என்ற தலைப்பைப் பார்த்தும் அவளின் உள்ளம் திக்கென்றது.

அந்த கதையின் கடைசி அத்தியாயம் அவளால் எழுந்த முடியாததால் தான் அப்படியொரு அறிவிப்பை கொடுத்திருந்தாள் ஜெயக்கொடி. அவளும் எழுத முயற்சி செய்தாள் ஆனால் அது அவளால் முடியவில்லை.

அதன்பிறகு நடந்த அனைத்தும் அவள் மனதில் படமாக ஓடவே, ‘இந்த கதை நிறைவடையாமல் நாங்க புக் போட முடியாது’ என்றவள் பப்ளிக்கேஷன் அனுப்பியது திரும்பி அவளிடமே வந்துவிட்டது. ஆனால் இன்று அது புத்தகமாக தன் கையில் இருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

‘எண்டு இல்லாமல் எப்படி புத்தகமாக போட்டாங்க?’ கேள்வி அவளின் மனதில் எழுந்தது. உடனே புத்தகத்தை கையில் எடுத்து அதன் எண்டு பகுதியை படித்தாள்.

அழகி மனமிறங்க மறுத்துவிட, ‘நீ சொன்ன பிறகு நான் ஊர் அறிய உன்னைத் திருமணம் செய்தால் அங்கே நான் முட்டாள் ஆகிருவேன்’ என்றவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

‘பரவல்ல உண்மையைக் கண்டு பிடிச்சிட்டீங்க..’  அவள் கர்வமாக புன்னகைக்க, ‘அதற்கு பிறகு நீ என்னோடு சேர்ந்து வாழ மறுத்துவிட்டு வந்துவிடுவாய் அழகி. இதுவரை உன்னோடு வாழ்ந்த எனக்கு தெரியாதா உன்னோட மனசு..’ என்றவன் அன்றிலிருந்து குழந்தையை கவனித்துக்கொள்ள தொடங்கிவிட்டான்.

அதன்பிறகு அழகி வேலைக்கு சென்று தன்னுடைய தேவைகளை கவனித்துக்கொண்டாள். கதிர் மகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அதன்பிறகு பார்கவி – பார்த்திபன் திருமணம் நடந்தது. கதிரழகி தவழ்ந்து நடக்க தொடங்கினாள்.

அவளின் வளர்ச்சிகளை எல்லாம் விலகி நின்றே ரசித்தாள் அழகி. தகப்பன் – மகள் இருவரும் இருக்கும் உலகிற்குள் அழகி ஒருநாளும் நுழைய நினைக்கவில்லை. ஆனால் கதிர் தன் மனைவிக்கும் அங்கொரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தான்.

அவன் எந்த முடிவு எடுத்தாலும் அதில் அழகியின் சம்மதம் மறைமுகமாக இருக்கும். நாட்கள் சீரான வேகத்தில் செல்ல நான்கு வருடம் ஓடி மறைந்தது. அதன்பிறகு பார்கவி கர்ப்பமாக இருக்க அங்கே சந்தோசம் இரட்டிப்பானது.

பார்கவிக்கு ஒன்பதாவது மாதம் நடக்கும் பொழுது அவர்கள் இருவரும் கதிரழகியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல அழகி வீட்டில் இருக்க கதிர் வெளியே சென்றிருந்தான்.

அழகியின் மனம் மெல்ல மெல்ல மாறி இருக்க கதிருடன் இணைந்து வாழும் எண்ணத்துடன் இருந்தாள். கதிர் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வரவே அவனிடம் எப்படி தன் மனமாற்றத்தை சொல்வது என்று அவள் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், அப்பொழுது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் சிலிண்டர் வெடித்துவிட வீட்டின் சுவர் இடித்து இருவர் மீது விழுந்துவிட்டது.

இருவரின் உடல்களும் தீயில் கருகும் முன்னேரே தீயணைப்பு வீரர்கள் அவர்களை காப்பாற்றிவிட பார்கவியும், பார்த்திபனும் வீடு வந்து சேர்ந்தனர்.

“அப்பா, அம்மா” என்று மகள் கதறியழுக சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் இறந்துவிட்டாள் அழகி. கதிரின் உயிர் மட்டும் ஊசலாட கடைசியாக சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்துவிட்டார். கடைசியில் பார்த்திபன் – பார்கவியின் மகளாக வளர்ந்தாள் கதிரழகி.

கடைசியாக சுபம் என்று கதை முடிந்திருக்க, ‘என்னோட வாழ்க்கையில் நடந்த விஷயம் எப்படி?’ என்ற திகைப்புடன் அவள் நின்றிருக்க, “இந்த மாதத்தில் அதிகம் விற்பனையான புத்தகம் இதுதான் மேடம்..” என்றார் கடைகாரர்.

“ஓஹோ..” என்றவளின் கைபேசி சிணுங்க, “மலர் எங்கே இருக்கிற..” என்றவனின் குரல்கேட்க, “இங்கே புக் ஸ்டாலில் இருக்கிறேன்..” என்றதும் அவன் போனை கட் செய்தான்.

அவள் சிந்தனையுடன் அந்த புத்தகத்தை பில் போட்டு வாங்கிவிட்டு வெளியே வர, “மலர் பைகளை கொடு..” என்று அவளிடமிருந்து பைகளை வாங்கியவன் அவளின் முகம் பார்த்தான்.

அடுத்தடுத்து நடந்த விஷயங்களில் அவள் குழம்பிப் போயிருக்க, “ஏன் ஒரு மாதிரி இருக்கிற..” என்றவனின் பார்வையில் விழுந்தது அவளின் கையிலிருந்த புத்தகம்.

அவளின் மனநிலை உணர்ந்தவனோ, “எந்த புத்தகத்தை கொடுத்து ப்ரபோஸ் பண்ணலாம் என்று நினைத்தேனோ அந்த புத்தகத்தையே காசு கொடுத்து வாங்க வெச்சிட்டான் கடன்காரன். .” அவனின் முணுமுணுப்பு அவளின் காதுகளில் தெளிவாக விழுந்தது..

“என்ன சொன்னீங்க..” அவள் விழி உயர்த்தி அவனை கேள்வியாக நோக்க, “சும்மாடா..” என்றவன் கண்சிமிட்டிட கார் நேராக ஏர்போர்ட் சென்றது.

டெல்லி ஏர்போர்ட் பார்த்த ஜெயா திரும்பி பிரபாவின் முகம் பார்க்க, “இங்கே வந்த வேலை முடிந்துவிட்டது. அதன் ஊருக்கு ரிட்டன் டிக்கெட்” என்றான் பிரபா சாதாரணமாகவே.

அதன்பிறகு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிம்லா ஏர்போர்ட்டில் இறங்கினார்கள்.மீண்டும் கால் மணிநேரம் கார் பயணம். அவளின் மனம் அடுத்தடுத்த அதிர்ச்சியில் இருந்தாளோ என்னவோ அவள் வேறு எதையும் கவனிக்கவே இல்லை..

அந்த அதிர்ச்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திகொண்ட பிரபா அவளை அழைத்துக்கொண்டு ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து, “ஸ்ஸ்ஸ்..” என்ற பெருமூச்சுடன் சுவற்றில் சாய்ந்து நின்றான்..

அப்பொழுது அவள் மெளனமாக இருக்க, “மலர்..” என்ற அழைப்புடன் அவன் அவளை அணைக்க வர, “பிரபா நீங்க என்னிடம் எதையோ மறைக்கிறீங்க..” என்று கூறிவே, “நான் என்ன மறைத்தேன்..” குறும்புடன் அவளிடமே கேட்டான்.

அவனின் முன்னாடி தன் கையிலிருந்த புத்தகத்தை அவனின் முன்னாடி காட்டி, “இந்த புத்தகம் வெளிவர வாய்ப்பே இல்லை என்று பப்ளிக்கேஷனில் இருந்து ரிட்டன் வந்த கதை இன்னைக்கு நாவலாக வெளி வந்திருக்கிறது. ஆனால் அது எப்படின்னு எனக்கு புரியல..” அவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது..

“அதை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்..” சுவற்றில் சாய்ந்து நின்றவனோ, “அப்போ நீதான் அந்த தமிழரசியா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்..

அவனை நேருக்கு நேராக பார்த்த ஜெயாவோ, “ஏன் நான் தமிழரசி என்று உங்களுக்கு தெரியாத அன்பரசு” அவள் விஷயத்திற்கு வர, “சபாஷ் நான்தான் அன்பு என்று கண்டுபிடித்துவிட்டாயே..” என்றவன் புன்னகைத்தான்.

“இந்த கதை எப்படி உங்களோட கைக்கு வந்தது?  நான் எழுத நினைத்து எழுத முடியாமல் போன அதே கதையின் நிறைவு. அதுவும் ஒரு வரி மாறாமல் இந்த கதை புத்தகத்தில் இருக்கு. என்னைப்பற்றிய விஷயங்கள் தெரிந்த பிறகு நீங்க..” அவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது.

அவளைச் சரியாக புரிந்துகொண்ட பிரபா, “உன்னோட மனசு எனக்கு தெரியாதா மலர். உன்னோட மனம் எனக்கு புரியதா? நம்ம திருமணத்திற்கு முன்னாடியே நான் இந்த கதைக்கு எண்டு எழுதிவிட்டேன் மலர்..” என்றவனை அவள் விழி உயர்த்தி கேள்வியாக நோக்கினாள்..

“இந்த கதையை நீ பப்ளிக்கேஷனுக்கு அனுப்பும் பொழுது எங்கிருந்து அனுப்பின?” என்று கேட்க, அவள் உடனே யோசிக்க ருக்மணியின் முகம் மனதில் மின்னி மறைந்தது.

“ருக்மணியின் முகவரி. அதாவது நம்ம கம்பெனி முகவரி கொடுத்திருந்தேன்..” என்றவளின் குரலில் ஸ்ருதி குறைந்ததுவிட அவள் அங்கிருந்த படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்..

“அது ரிட்டன் எப்பொழுது வந்தது என்று உனக்கு தெரியுமா?” என்றவன் ஆழ்ந்த குரலில் கேட்க , ‘இல்லையென’ இடமும் வளமும் தலையசைத்தாள்.

“நீ நம்ம கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ஒருவாரத்திற்கு பின்னாடி என்னோட கைக்கு கிடைத்தது. இதே கதைக்கு அன்று  நிறைவுபகுதி  எழுதி நான் உனக்கு அனுப்பிய மெயில். அடுத்த சிலநொடியில் நீ எனக்கு அனுப்பியதும் நீதான் தமிழரசி என்று எனக்கு தெரிந்துவிட்டது” என்றவனை அவள் புரியாத பார்வை பார்த்தாள்..

அன்று கொஞ்சம் ஹெவி வொர்க்கில் தனக்கு வந்த மெயிலை அவள் அவனுக்கு அனுப்பியது அவளின் நினைவிற்கு வந்தது..

அவளை கவனிக்காத பிரபாவோ, “வாழ்க்கையில் ஒன்று சேர முடியாத மனம் இந்த கதையிலாவது எழுத்து வடிவில் உன்னோடு சேரட்டும் என்று நான்தான் எழுதி பப்ளிக்கேஷனுக்கு அனுப்பினேன்..”  அன்றைய நாளில் அவன் அனுபவித்த வலி அவனின் குரலாக ஒலிக்க அதற்கு மேல் அவளால் அவளின் கால்களுக்கு தடை போட முடியவில்லை.

அவள் ஓடிசென்று அவனை அணைத்துக் கொள்ள, “பனிமலர்..” என்றவனின் விழிகள் கலங்கிட, “நீதான் எந்த தப்புமே பண்ணல இல்ல அப்புறம் எதற்குடா இப்படி கலங்கற? உன்னோட காதல் பொய்யாக போகல இல்ல அப்புறம் எதற்கு நீ கலங்கணும்?” என்றதும், ‘இவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதா?’ அதிர்ந்து நிமிர்ந்தான் பிரபா..

“ஒரு நிமிஷம்..” அவனைவிட்டு விலகிய சென்ற ஜெயா தன்னுடைய கைக்கு கிடைத்த ஃபைலை அவனின் முன்னே நீட்டி, “இது என்ன தெரியுமா?” என்று கேட்க அவனோ தெரியாது இடமும் வலமும் தலையசைக்க அவனை இமைக்காமல் பார்த்தாள்..

“ நான் உங்கமேல் வைத்த நம்பிக்கை. இன்னைக்கு நீங்க தப்பு செய்யல என்ற உண்மை எனக்கு தெரிந்துவிட்டது..” என்றவளின் கையிலிருந்த ஃபைலை பார்த்தும் அவனுக்கு உண்மை புரிந்துவிட்டது.

“மினியோட மெடிக்கல் ரிப்போர்ட். அதில் அவள்..” என்றதும், “இது எப்படி உன்னோட கையில் கிடைத்தது?” என்றவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

அவனிடம் மாலில் நடந்த அணைத்தையும் மறைக்காமல் கூறிய ஜெயா, “பிரபா நீ தவறே பண்ணல என்று இந்த ஃபைல் சொல்லுது. மினிக்கா கன்னி தன்மையுடன்..” என்றவள் அதற்குமேல் பேசாம முடியாமல் போக சந்தோஷத்தில் அவளின் கண்கள் இரண்டும் கலங்கியது..

அவளின் அருகில் வந்த பிரபா அவளை மார்புடன் சேர்த்து ஆதரவாக அணைத்துக்கொள்ள, “ஏண்டா என்னிடம் முன்னாடியே நீ இதை சொல்லல..” என்றவனின் மார்பில் குத்தினாள்..

அவள் கொடுத்த அடிகளை தாங்கிய பிரபாவின் மனம் நிறைந்தது. அவன் எந்த தவறும் செய்யவில்லை என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவனையும் மீறி நடந்திருந்தால் என்ற சந்தேகத்துடன் இருந்தான்.

அவனின் மனம் அதை இல்லை என்று சொன்னாலும் நடப்பவைகள் அனைத்தும் அவனுக்கு எதிராகவே இருந்ததால் அவனால் உண்மையை உணர முடியாமல் போனது..

ஆனால் ஜெயா சொன்னபிறகு அவன் தெளிவாக யோசித்துவிட்டு ஒரு டிடெக்டிவிடம் சொல்லி உண்மையைக் கண்டறிய சொன்னான்.. அதன்பிறகு அவனுக்கு கிடைத்த தகவலில் அன்று மருத்துவமனைக்கு சென்றதும் அங்கே அவர்கள் கொடுத்த ரிப்போர்ட் பற்றிய விவரங்கள் அவனின் கைக்கு கிடைத்தது.

அவனுக்கு உண்மை தெரிந்தும், ‘இந்த விஷயத்தை ஜெயாவிடம் சொல்ல வேண்டும்’ என்று நினைத்தான்.. ஆனால் அதன்பிறகு அவன் அந்த முடிவை மாற்றிக்கொண்டான்..

“உங்களுக்கு இந்த உண்மை தெரிந்த வந்த பின்னாடிதான் ஐ மீன் இப்போ உங்களோட மாற்றத்திற்கு இந்த ஃபைல்தான் காரணம். எங்கே இல்லன்னு என்னிடம் சொல்லுங்க பார்க்கலாம்..” சவால்விட அவன் மௌனமானான்.

அவனின் மௌனமே அவனைக் காட்டிக்கொடுத்துவிட, “தவறு செய்தேன் என்று தலை நிமிர்ந்து சொன்னீங்க. இப்போ மட்டும் என்ன மௌனம்?” என்றவள் விழி உயர்த்தி கேள்வியாக நோக்கினாள்.

அவன் சிலநொடி மௌனத்திற்கு பிறகு, “என் காதலை நீயாக உணரனும் என்று நினைத்தேன். மற்றபடி மறைக்கணும் என்ற எண்ணம் எனக்கு இல்ல மலர்..” என்றவன் நிதானமாகவே..

“இதை மட்டும்தான் என்னிடம் மறைச்சீங்க இல்லையே. இன்னும் இருக்கு” என்றதும், “இன்னும் என்ன இருக்கு?” என்று அவளிடமே கேட்க, “நீங்க என்னை பத்து வருசமாக காதலிப்பது உண்மைதானே” என்றவள் சாதாரணமாக கேட்க, “மலர்” அதிர்ந்தான் பிரபா.

“உன்னோட பனிமலர்..” என்றதும், “எனக்கு தெரியாமல் எப்போ மேடம் அந்த ரூமிற்குள் நுழைஞ்சீங்க” அவன் அவளை நெருங்க, அவளின் இதயத்துடிப்பு எகிறி குதிக்க பின்னாடி நகர்ந்தாள் ஜெயா.

அவன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவள் இரண்டடி பின்னே நகர, “மலர் நில்லுடி..” என்று சொல்ல முடியாது என்றவள் பின்னாடி நகர சுவற்றில் மோது நின்றுவிட அவளின் பார்வை அவன் மீது நிலைத்தது..

அவளின் இருபுறமும் தன் இரு கரங்களை வைத்து அவளுக்கு அரணாக வைத்து அவளை நகர முடியாமல் செய்ய, “பிரபா..” சிணுங்கலுடன் அழைக்க, “ம்ம்” என்றவனின் பார்வை அவளின் உதட்டில் நிலைத்தது.

அவனின் பார்வையை புரிந்து கொண்ட ஜெயா அவனின் மார்பில் முகம் புதைக்க நினைக்க, அவளின் செயலை தடுத்த பிரபா அவளின் இதழோடு இதழ் பொருத்தினான். இருவருக்கும் மூச்சு முட்டும் வரை அந்த இதழ் முத்தம் நீடித்தது.

அவன்  இதழ்பிரித்து நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க காதலியின் முகமோ செங்காந்தாள் மலர்களுடன் போட்டிபோட, “என்ன கன்னத்தில் ரோஜா பூ எட்டி பார்க்குது..” என்று குறும்புடன் கேட்டவனின் வலக்கரம் அவளின் கன்னங்களை வருடியது..

அவள் சிலிர்த்து விழிமூட, “மலர் விழி திறந்து என்னை பாரு..” அவளோ மறுப்பாக தலையசைத்து விழி மூடி நின்றாள். அவளின் முகத்தில் விழுந்த கற்றை முடியை அவளின் காதோரம் ஒதுக்கிவிட்டு, “அன்னைக்கு எந்த தப்பும் பண்ணல. ஆனால் இன்னைக்கு..” என்றவன் அடுத்து என்ன சொல்ல வருவான் என்று புரிந்து கொண்டவள்,

“ஐயோ வாய் திறக்காதே..” அவனின் பார்வை மீண்டும் அவளின் உதட்டில் படிய, “போடா..” என்று அவனை விலகி தள்ளிவிட்டு திரும்பியவளுக்கு அப்பொழுதுதான் ஹோட்டல் ரூமை கவனித்தாள்..

பெரிய படுக்கையுடன் கூடிய அறையில் எல்லாம் நேர்த்தியாக இருக்க ஜன்னல் வழியாக தெரிந்த இமயமலைகளை பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிய, “பிரபா நீ என்னை எங்கோ கடத்திட்டு வந்துட்ட..” என்றாள்.

அவளின் பார்வையில் ரசனை கூடிட அவளின் பின்னோடு நின்று அந்த இமயமலை தொடரின் அழகை ரசித்த பிரபா, “சிம்லாக்கு கடத்திட்டு வந்துட்டேன்..” என்றவன் புன்னகைத்தான்.

அவளின் பார்வை பனிமலையை ரசிக்க, “கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பனிமலை தொடர்.. என்னோட கைக்குள் என்னோட பனிமலர்..” என்றவனின் உதடுகள் அவளின் காதோரம் ரகசியம் பேசிட அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

சிறிதுநேரம் நின்று அந்த அழகை ரசித்த ஜெயா, “நான் போய் குளிக்கிறேன்..” என்றவளை அவன் தடுக்கவில்லை.. அவள் குளித்துவிட்டு வந்தபிறகு இருவரும் சேர்ந்து மத்தியான உணவை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டனர்..

அவளே அவனுடன் பேசிகொண்டிருக்க பிரபா மெளனமாக அவள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் அந்த அறைக்குள் சென்றது அதன்பிறகு நிகழ்ந்த மாற்றம் அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.

மாலை பொழுதில் கணவனின் தோள் சாய்ந்த வண்ணம் அவள் அந்த ஊரையே சுற்றிவிட்டு வருவதற்குள் இரவாகிவிடவே டின்னரை முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த அறையின் ஏற்பாடுகளை கவனித்த ஜெயா, “நான்..” என்று தொடங்க, “நீதான் போய் குளிச்சிட்டு இந்த சேலை கட்டிட்டு வா..” என்றான் பிரபா குறும்பாகவே..

“நான் மாட்டேன்..” என்றவள் பிடிவாதம் பிடிக்க, “அப்போ எனக்கும் ஓகே..” என்றவன் அவளை நெருங்கிவர அவனின் கைகளுக்குள் சிக்காமல் குளியறைக்குள் சென்று மறைந்தாள் ஜெயா..

அவனும் சென்று தயாராகி வெளிவர ரோஜாபூக்கள் தூவப்பட்ட படுக்கையின் நடுவே இரண்டு இதயங்கள் இணைந்திருந்தது. அவன் கொடுத்த சேலையைக் கண்டிக்கொண்டு வந்தவளை அவன் இமைக்காமல் ரசித்தான்..

அவளோ நாணத்துடன் தலை குனிந்து நிற்கவே, “பனிமலர்..” என்று மெல்லிய குரலில் அவளை அழைத்ததும் அவள் அவனை கேள்வியாக பார்க்க, “உனக்கு சம்மதமா?” என்றவன் அவளை நெருங்கி இரண்டு கரங்களும் ஏந்திக்கொண்டு படுக்கையை நோக்கி நடக்க, அவள் விழியால் தன சம்மதத்தை தெரிவித்தாள்..

காதலால் இணைந்த இருமனங்கள் இங்கே அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வானமோ விடியலை நோக்கி பயணித்தது.. மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவர்களின் பொழுது இனிமையாக கழிந்திட அன்று காலையில் மலையின் முகட்டில் உதயமாகும் சூரியனை நின்று ரசித்த மனைவியின் பின்னோடு வந்து அணைத்துகொண்ட பிரபா அவளின் காததோரம் பாடினான்..

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது..

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது..

அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே..

மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை படுமே தோடி..

சந்தோஷ சாம்ராஜ்யமே..” என்றவனின் குரல் இனிமையாக ஒலிக்க இமைமூடி  அவன் தோள்சாய்ந்தாள் அவனின் பனிமலர்.. அதே காதலுடன் அணைத்துக் கொண்டான் அவனின் பிரபா..

அங்கே ஒரு மாதம் தங்கிவிட்டு அதன்பிறகே இருவரும் பெங்களூர் திரும்பினர்.. அதற்குள் இங்கே பெரிய ரகளையே நடந்து முடிந்திருந்தது..

 

mazhai21

மழை – 21

இருபெரும் கடினப் பாறைகள் கடல் ஆழத்தில் உரசினால்தான் ஆழிப்பேரலை வரும் என்று யார் சொன்னது? மென்மையான இதழ்கள் இரண்டு உரசிய நொடியே மனமென்னும் மகாசமுத்திரத்தில் உருவான ஆழிப்பேரலை ஒன்று பிரவாகமாய்ப் பொங்கி மொத்தமாய் அவர்களை மூழ்கடித்துச் சென்றது.

அதுவும் மனதைச் சுற்றி எஃகு கவசம் அணிந்து மதுவின் மீதான சலனத்தை ஒதுக்கியதாக நினைத்த அரசனிற்கு இப்போது அவனுள் ஆர்ப்பரித்து வந்த அவளுக்கே அவளுக்கான உணர்ச்சியானது அவளை மனதைவிட்டு வெளியேற்றாமல் அடியாழத்தில் புதைத்து வைத்ததை உணர்த்த, கவசத்தால் வெளியிலிருந்து வரும் தாக்குதலை தடுக்குமே அன்றி உள்ளிருந்து வருவதை தடுக்கத் தெரியாதே!

ஒற்றை இதழோற்றல் அவனின் மனதை வெட்டவெளிச்சமாக்கி வெளிக்கவசத்தை வெடித்துச் சிதறடித்திருந்தது.

நேர்மாறாக மதிக்கோ என்னதான் விரும்பியவன் என்றாலும் அவன் விருப்பம் இன்னும் தெரியாத நிலையில் தான் அவசரப்பட்டு செய்த காரியம் புரிய மனதில் சட்டென்று ஏறிய பாரத்துடனும் கலக்கத்துடனும் விலகினாள். அவளுக்கே ‘இது நாம் தானா?’ என்ற கேள்வி தோன்ற, அதற்கு பதில் கூற முடியாமல் விசுக்கென்று அவனின் மேல் இருந்து இறங்கியவள் அரசனின் முகம் பார்க்க முடியாமல் வெளியேறி தன் அறைக்குள் புகுந்து தாளிட்டாள்.

அரசனுக்கும் தன் மனமாற்றம் திடுக்கிட வைக்க அதை நம்ப இயலாமல் உள்ளங்கைக்குள் தலையைப் புதைத்து அமர்ந்திந்தான்.

நெடுநேரம் கடந்தும் அவனின் அசையாநிலை அப்படியே இருக்க விக்னேஷ்வரன் வந்துவிட்டதாக கூற வந்த அழகேசன் திறந்திருந்த கதவின் வழி அரசன் அமர்ந்திருக்கும் தோரணை கண்டு என்னவோ ஏதோ என்றெண்ணி, “அரசா என்னாச்சு?” என்று உலுக்க அவனும் அதையே தான் உள்ளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான் என்று அவருக்கு தெரியாதே!

அதில் உணர்வு பெற்று அவரைக் கேள்வியாகப் பார்த்தான். உள்ளுக்குள் அவர் மகள் செய்த செயல் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

தலையை உலுக்கி பெருமூச்சை வெளியேற்றினான் அரசன். அத்தனையும் அமைதியாக ஆனால் குழப்பத்தோடு பார்த்திருந்தார் அழகேசன். என்னவென்று கேட்டவர் அவன் பதில் கூறாமல் இருக்கவும் மீண்டும் தான் வந்த காரியத்தை சொன்னார்.

அவனோ, “அவங்க வந்துட்டாங்களா? மேல வரச் சொல்லலாம்ல” என்றவாறே தேவையானவற்றை எடுத்துக் கீழே செல்ல மடிக்கணினி சகிதம் அமர்ந்திருந்தவர் அவனிடம் காமெராவைக் கேட்டார்.

அதை கணினியுடன் பொருந்திப் பார்க்க அனைத்தும் பக்காவாகப் பதிவாகியிருந்தது. இன்னொரு முறை அதனைப் பார்க்கத் திரணியின்றி அரசன் எதிரில் அமர்ந்திருக்க மற்ற அனைவரும் அதனைக் கண்ணுற்றனர்.

தேவையானவற்றை மட்டும் தனியாக எடுத்த விக்னேஷ்வரன், “குட் ஜாப் அரசன். இப்போதைக்கு இது நம்ம கைல இருக்குறத சொல்ல வேணாம் ஓகே? இப்போ நாம என்ன பண்ண போறோம்ன்னு சொல்லிரறேன்” என்றவர் சிறிது யோசித்து

“முதல்ல லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல மரம் கடத்துறதாவும் இடத்தை ஆக்கிரமித்து தர மறுக்குறதாவும எப் ஐ ஆர் போட்டுட்டு கூடவே பாரெஸ்ட் ஆபீஸ்க்கும் தகவல் சொல்லிரலாம். சுதர்சனை அரெஸ்ட் பண்ண அவங்க போகட்டும். நாம கோர்ட்க்குல சீல் வைக்கணும்ன்னு கேஸ் போட்ரலாம் கூடவே சிவில் கோர்ட்க்கும் போய் பத்திரம் காமிச்சி கேஸ் போடணும். சோ சேலம் போறோம். வேற எதாவது மாற்றம் இருக்கா?” என்று திட்டத்தை விளக்கி வினவ

அரசனின் கண் அன்னிசையாய் மதியைத் தேடியது. காதல் என்றான பின் கண்ணிலேயே படவில்லையே. கூடவே அவள் இருந்தால் இதற்குள் ஆயிரம் சந்தேகம் கேட்டிருப்பாள் அல்லவா? அதைக்கொண்டும்தான் இந்த தேடல்.

அவள் இல்லையாதலால் அவளின் வேலையை இவன் எடுத்துக்கொண்டான். “எதுக்கு நீங்க அவங்க ஆக்கிரமித்து தர மறுக்குறதா சொல்றீங்க? நாம தான் கேட்கவே இல்லையே அவங்க கிட்ட” என்று புரியாமல் கேட்டான்.

“அட என்னப்பா? கேட்டா மட்டும் இந்தா வச்சிக்கோன்னு தந்துருவானா? தர மாட்டான்ல அதைத் தானே நான் முன்னாடியே சொல்லிருக்கேன். அது நமக்கு நம்ம இடம் வேணும்ன்னு தெளிவாத் தெரிவிக்கத்தான். இல்லன்னா சமரசம் பண்றேன் சமாதானம் பண்றேன்னு இழுத்தடிப்பான். வாங்க கிளம்பலாம்” என்றழைத்தார். 

அடுத்து என்ன? அழகேசனும் அரசனும் விக்னேஷ்வரனோடு வாசல் செல்ல தாத்தாவோ, “நீங்களே எல்லாத்தையும் பண்ணிட்டு வாங்க. நான் தேவை இல்லைத்தானே” என்றுவிட்டார். இவர்களும் அதனை ஒத்துக்கொண்டனர் வயசானவரை எதற்கு அலைக்கழிக்க வேண்டுமென்று.

விக்னேஷ்வரன் அவரின் காரில் கம்பீரமாக ஏறி அமர, அப்போது தான் அரசன் கவனித்தான் அவர் காக்கிச்சட்டையில் வந்திருப்பதை. அன்று வந்த காவலரும் இதே உடையில்தான் வந்திருந்தார். ஆனால் அவரை விட இவருக்கு மிகப்பொருத்தமாக இருப்பது போல் பிரமை. அந்த சட்டைக்கான மரியாதையும் நேர்மையும் கொடுப்போருக்குத்தான் சட்டையும் பதில் நேர்மை செய்யும் போலவே.

அழகேசன் காரோட்ட அரசன் முன்புறம் ஏறி அமர்ந்தான். அத்தோடு இரு கார்களும் அரண்மனையை விட்டு வெளியேறியது.

மாடி அறையிலோ மதி உள்ளத்து பாரத்தையெல்லாம் விழி வழி வெளியேற்றி அப்போதும் விசும்பலோடு எழுந்து முகம் கழுவி வர, கண்ணாடியைப் பார்த்தால் முகமெல்லாம் அழுதழுது இரத்தநிறம் கண்டிருந்தது.

இப்படியே கீழே போனால் அவ்வளவு தான் என்றெண்ணியவள் முணுமுணுவென்று ஒரு மாதிரியாக வலித்த மனதை சிறிது நேரம் அங்கும் இங்கும் அலைந்து, அவளது பொருட்களை கலைத்து போட்டு, திரும்ப ஒழுங்காக வைத்து பின் கண்ணாடியைப் பார்க்க முகம் சற்று தெளிந்திருந்தது.

ஆனால் இவள் கீழே வந்து பார்ப்பதற்குள் அழகேசன் மற்றும் அரசன் விக்னேஷ்வரனுடன் வெளியே சென்று அரைமணி நேரம் கடந்திருந்தது.

தாயிடம் சென்று அவர்கள் சென்றதை அறிந்தவள், “அம்மா… நாம இன்னைக்கே சென்னை போகலாமா? காலேஜ் லீவ் போட்டு மூணு நாள் ஆச்சும்மா” என்று மனதை மறைத்துக் கேட்டாள். அவளுக்கு இங்கிருந்து போக வேண்டும் போல் இருந்தது.

இத்தனை நாள் மறந்திருந்த காலேஜ் நினைவு வரவே தாயிடம் அவ்வாறு கேட்டாள். வேறு நேரமாக இருந்தால் கண்டுபிடித்திருப்பார் மகளின் மனதில் எதுவோ குடைவதை, ஆனால் இப்போதோ அவர் மனதே வெளியே சென்ற வீட்டு ஆண்களின் நலனை எண்ணி பதைபதைத்திருக்க, “போலாம்டி உங்கப்பா வரட்டும்” என்று மட்டும் கூறித் தன் தாயிடம் சென்றுவிட்டார்.

காவல் நிலையத்தில் புகார்ப் பதிவு செய்ய சுதர்சனனின் ஆதர்ச காவலர் மிகவும் தயங்கினார்தான். “சார் ரொம்ப பெரிய இடம் சார். கொஞ்சம் யோசிச்சி…” என்று அவர் இழுக்க,

“அதெல்லாம் எனக்கும் தெரியும். நீங்க யாருக்கிட்ட வேலைப் பாக்குறீங்க கவர்ன்மென்ட்கிட்டையா இல்ல அவருகிட்டையா?” என்ற விக்னேஷ்வரனின் ஒற்றைக் கேள்வியில் பதிவு செய்த கையோடு தொழிற்சாலையில் சோதனையிட சென்றனர்.

அங்கே அப்பொழுதுதான் காகிதகூழ் செய்ய இரண்டு மரக்கட்டைகளை தூள் தூளாக்கி இருந்தனர். மூன்றாவதை தூக்கவும் காவல்துறை, வனத்துறை மட்டுமின்றி எங்கும் தன் கண்களை வைத்திருக்கும் ஊடகத்துறையும் வந்து குவிந்தனர்.

இதுவரை இப்படி நடந்திராதலால் நேற்று வந்திறங்கிய நூற்றுக்கணக்கான மரத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்த தொழிலாளர்கள் விழிக்க கையும் களவுமாக பிடிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது அத்தனை மரங்களும்.

கூடவே தொழிற்சாலை இடம் பிரச்சனைக்குரியது என்றும் எப்படியோ விஷயம் வெளியே கசிந்திருக்க அனைத்து தொலைக்காட்சி செய்தியிலும், ‘சுதர்சன் பேப்பர் ஆலையில் இருந்து தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியம் திடுக்கிடும் திருப்பம்’ என்று வண்ண வண்ண  வார்த்தைகளில் பிளாஷ் பாக் ஓட ஆரம்பித்தது.

சுதர்சனை கைது செய்ய ஏற்காடு காவலர்கள் சென்றால் அவர் வெளிநாடு சென்றிருப்பதாக அவரின் மகன் கூற நம்பமுடியவில்லை என்றாலும் வேறு வழியின்றி, “சீக்கிரம் இங்க வர சொல்லுங்க” என்ற வார்த்தையோடு கிளம்பினர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்த சுதர்சன் வெறிப் பிடிக்காத குறையாக கோபத்தில் குமிறிக்கொண்டிருந்தார்.

மூளையோ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், “நான் இருக்குற வரை எம்மண்ணுல உன்னை கால்பதிக்க விடமாட்டேன் உன்னால ஆனதை பார்த்துக்கோ” என்று வேட்டியை மடித்துக்கட்டிச் சவாலிட்ட சக்திவேலின் குரலை நினைவுபடுத்தியது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்,

தந்தையின் ஏற்காடு எஸ்டேட் அவருக்கு பின் சுதர்சனிடம் வர, அவருக்கோ பெரிதாக எதையாவது செய்து பெரும் புகழும் பெற வேண்டுமென்று தீரா தாகம். பத்தோடு பதினொன்றாக தானும் ஒரு எஸ்டேட்காரன் என்று இருப்பதை வெறுத்தவர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.

அப்போதெல்லாம் வடஇந்தியாவில் மட்டும்தான் காகித தொழிற்சாலை இருந்தது. காகிதத்தின் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க அதனை வேறு மாநிலத்தில் இருந்து தென்னிந்தியாவில் இறக்குமதி செய்துக்கொண்டிருந்தனர். அதை கவனித்தவருக்கு சட்டென்று பொறி தட்ட அதற்கான வேளையில் இறங்க ஆரம்பித்தார்.

எங்கெங்கோ ஆலை திறப்பதை விட ஏற்காட்டிற்க்கு அருகில் இருக்கும் ஊர்களையே தேர்ந்தெடுத்தார் அதில் அவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது வாணிமாபுரமும் அதன் சுற்றுவட்டார வளமும்தான்.

அவர் ஏற்காட்டிற்கு அருகில் இடம் வாங்குவதே மூலபொருட்களின் தேவை அதிகமாகும் பட்சத்தில் எஸ்டேட்டிற்கு பின்புறம் உள்ள மரங்களை வைத்து சமாளிக்கத்தான். அப்படி இருக்க காகிதகூழ் செய்ய தேவையான மலைவேம்பு, சவுக்கு காடாக படர்ந்திருக்க அந்த இடங்களை வாங்க சக்திவேலைச் சந்தித்தார்.

ஆனால் அவரோ, என்ன எதற்கென்று கேட்டு ஆலை ஆரம்பிக்க என்றதும் நயமாகவே மறுத்தார். மறுக்க மறுக்க அதன் மேல் ஆசை அதிகமாவது தானே மனித குணம்.

அதற்கு அவரும் விதிவிலக்காக இல்லாமல் ஜமீன்தார் விவசாயம் செய்பவருக்கு குறைந்த விலைக்கு விற்ற இடத்தை விவசாயிகளிடம் சென்று அதிக பணம் தந்து கேட்க, அதில் ஒருவர் சக்திவேலிடம் விசுவாசமாய் சொல்லிவிட்டார்.

அதைக் கேள்விப்பட்டதில் இருந்து கடுங்கோபமும் எரிச்சலும் அடைந்த சக்திவேல் கொடுத்த நிலத்தை எல்லாம் விவசாயிகள் மனம் மாறி சுதர்சனிடம் விற்கும் முன் இவரே வாங்கிக்கொண்டார்.

இதனை தந்தையிடம் சொன்னால் கொடுத்ததை திரும்ப வாங்கியது பரம்பரைக்கே இழுக்கு என்று திட்டுவாரே என்றெண்ணி அதற்கும் சேர்த்து மனவுளைச்சலை அனுபவித்தார்.

இதற்கிடையில் சக்திவேல் செய்ததை எண்ணி கடுப்பின் உச்சிக்கு சென்ற சுதர்சன் அவரிடம் கேட்பதை விடுத்து மிரட்டலுக்கு போக, கேட்டே தராத ஜமீன் இளரத்தம் மிரட்டலுக்கு தந்து விடுமா என்ன?

அதனை தூசென தட்டிவிட்டு, “நான் இருக்குற வரை எம்மண்ணுல உன்னை கால்பதிக்க விடமாட்டேன் உன்னால ஆனதை பார்த்துக்கோ” என்று வேட்டியை மடித்துக்கட்டிச் சவாலிட்டு அரண்மனை திரும்பினார்.

ஆனால் அவரின் உள்ளுணர்வு அவருக்கு எதை உணர்த்தியதோ அன்றைய இரவு பத்திரம் அனைத்தையும் தான் படுக்கும் படுக்கையை பின்புறம் கிழித்து உள்ளே திணித்தார். அதை செய்து முடித்த பின் புனிதா வரவும் வீட்டினரிடம் தான் செய்யும் செயல்களை மறைக்கும் குற்றஉணர்ச்சி வேறு தாக்கியது.

அவரின் மாற்றத்தை உணர்ந்து புனிதா என்னவென்று கேட்டாலும் பதில் சொல்லாதவர் புதுமனைவி ஏற்காடு செல்ல ஆசைப்பட்டு கேட்கவும் தானும் மனமாற்றத்துக்கு வேண்டி புறப்பட்டார்.

அன்றே சக்திவேலிற்கு முடிவு கட்ட நினைத்த சுதர்சன் அடுத்த நாளே நினைத்தபடி காரியத்தைச் சாதித்து மாட்டிக்கொள்ள கூடாதென்று ஏற்காடு சென்றுவிட்டார்.

பின் சக்திவேல் இடம் வாங்கி தன்னிடம் விற்றுவிட்டதாக போலி பத்திரம் தயாரித்து ஒரு மாதம் கழித்து வர, அவர் உள்ளுக்குள் பயந்ததைப் போல் யாருக்கும் தெரியவில்லை.

தென்னிந்திய அளவில் மிகப்பெரிய காகித தொழிற்சாலையை அரசு உதவியோடு ஆரம்பித்தவர் ஆரம்பத்தில் ஒரு மரத்தை வெட்டினால் பல மரத்தை நடும் விதிமுறையை சில வருடங்கள் கடைப்பிடித்தார்தான்.  

போகப் போக அவருக்கான பேரும் புகழும் செல்வாக்கும் சேர குறைந்த காலத்தில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக மாற்றி வெளிநாட்டு ஏற்றுமதியிலும் முன்னிலை வகித்தார். தேவைகள் அதிகப்பட காடுகள் அழிக்கப்பட்டன. மரம் நடுவதாக இயற்கை காப்பதாக வெளியே காட்டப்பட்டன. அவ்வாறு கட்டி காப்பாற்றி??? வந்த நிறுவனம் பேர் புகழ் அனைத்தையும் ஒரே நாளில் நிர்மூலமாக்க பார்த்தால் விடுவாரா சுதர்சன்?

டிரைவரின் போனில் இருந்து குடும்ப வக்கீலுக்கு அழைத்தவர், தானும் தன் நிறுவனமும் பாதிப்பின்றி வெளிவர என்ன செய்வது என்று ஆலோசித்தார்.

பின் வேறொரு நம்பருக்கு அழைத்து செய்ய வேண்டிய காரியத்தைக் கூறி எப்பாடுபட்டாவது அதனை செய்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். ஆனால் அதில் இருந்து தப்பிக்க முயற்சியின்றி சோம்பியிருக்க மாட்டான் என்பதை ஜமீன் வீட்டினர் மறந்து போனது யாரின் குற்றம்?

விளைவு காரில் சென்றுக்கொண்டிருந்த அழகேசனுக்கு கீதாவிடம் இருந்து போன் வந்தது. காரோட்டிக் கொண்டிருந்ததால் அதனை ஆன் செய்து அரசனிடம் கொடுத்துப் பேசச் சொல்ல இவன் பேசும் முன்பே அவர் அழுகையோடு திக்கித்திக்கி கூறிய, “என்னங்க… நம்ம… மதுவ காணோங்க” என்ற செய்தியானது அரசனின் செவி வழி இதயம் நுழைந்து சிறிது நேரம் முன்பே உணர்ந்திருந்த அவனின் காதல் மனதை கதறடித்தது.

மழை வரும்…

உன்னை எனக்குள் அடக்கிக்கொள்ள

இப்போது விளைகிறேன் நிலவே

தாமதத்திற்குத் தண்டிக்காமல்

மழையாக நீ வருவாயா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

NAA-Full

“நாங்கலாம் அப்பவே அப்படி. 1 ”

 

 

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பெங்களூரு “கெம்பே கவுடா” விமான நிலையம். பலவகையான மனிதர்களை தனக்குள் இருத்தி வைத்திருந்த அந்த பிரமாண்ட கட்டிடத்தில்,  அடிப்பகுதியில் ஆர்ப்பரித்தாலும் மேற்பகுதியில் தன்னை அமைதியாக காட்டிக்கொள்ளும் ஆழியை போல மனதுக்குள் பல எண்ணங்கள் படையெடுத்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தார் அஞ்சுகம் பாட்டி. பழுத்த பழம் என்பார்களே அதுபோல தோற்றம்,  வெள்ளிக்கம்பியாய் மினுமினுத்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, தங்க பிரேமிட்ட மூக்கு கண்ணாடி அதற்குள் இருவிழிகள் எவரையும் துல்லியமாக எடைபோட்டு விடும் தீட்சண்யத்தோடு. எளிமையான காஞ்சி பட்டுடுத்தி ஒரு மகாராணியை போல அமர்ந்திருந்தவரை பார்ப்பவர்கள் நின்று அவரிடம் ஒரு சிறு புன்னகையாவது பூத்து செல்வர்.

 

 

ஆம் அவர் மகாராணியாகதான் வாழ்ந்தார் சிறு கவலை கூட இல்லாமல்  அவர் கணவர் குமாரபூபதி இருக்கும் வரை.

 

 

ஐந்தாண்டுகளுக்கு முன் மகன் பிரபாகர் மருமகள் காஞ்சனாவுடன் நெருங்கிய நண்பரின் இல்ல திருமணத்திற்க்கு சென்ற கணவரை  எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தால் துணியில் சுற்றப்பட்டு பொட்டலமாகதான் கொண்டு வந்தனர்.  மகன் , மருமகள் நிலமையோ இன்னும் மோசம் சுரண்டிதான் கொண்டுவந்தனர்.

 

 

இந்த கோர சம்பவத்தை கேள்விபட்ட பின்னும் தடங்கலில்லாமல் துடித்து கொண்டிருக்கு தன் இதயம் கூட அவருக்கு பாரமாகதான் இருத்தது…கிட்டத்தட்ட மரத்து போன நிலை.இவையனைத்தும் தன் பேரனை காணும் வரை மட்டுமே.

 

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியில் தன் MBA மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருந்தவன்  இந்த பேரிழப்பை  கேட்டதும் விரைந்து வந்திருந்தான். குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருப்பவனாயிற்றே..அவனை கண்டதும்தான் தன் நிலை உணர்ந்து அவனுக்காக தான் செய்ய வேண்டிய கடமையை எண்ணி தன் துக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டார்.

 

 

இதோ இப்பொழுது இந்த பயணம் கூட அவனுக்காகதான். அவனை நல்ல மனம் கொண்ட மனிதர்களிடத்தில் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 

 

காரணம் இங்கிருக்கும் குள்ளநரிகூட்டம் பற்றி அவர் நன்கறிவார். பேரனின் மேல் நம்பிக்கையில்லாமல் இல்லை. எத்தனுக்கும் எத்தன் அவன், படிப்பை பாதியில் விட்டு வந்தவன் அதன் பிறகு ” “ஏகேபி” நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றான், அதிலிருந்து இதுவரை ஏற்றம்.. ஏற்றம் ..ஏற்றம் மட்டுமே.

 

 

எதற்கும் அஞ்சாதவன்தான். ஆனால் நேர்நின்று தாக்கும் எதிரிகள் அல்லவே இவர்கள்… பாசத்தை கொண்டு பாழாக்க நினைக்கும் குள்ளநரி கூட்டம். இவற்றையெல்லாம் தன் மனதில் போட்டு அலட்டிக்கொண்டிருந்தவர் கண்களில் மெல்லிய கலக்கம் , சிறு தேடல் என நுழைவாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.

 

 

இன்னும் அரைமணி நேரத்தில் உள்ளே செல்ல அறிவிப்பு வந்துவிடும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அட்டகாசமாய் உள்ளே நுழைந்தான் அவன்.  ஆறடி ஓரங்குல உயர ஆணழகன், புலியின் வேட்டைப் பார்வையை ஒத்த கூர்மையான விழிகள் தன் தேடலை தொடங்க, ஆழ்கடலின் நீல வண்ணத்தில் டீசர்ட் அணிந்திருந்தவன் தன் ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் வலது கையை நுழைத்தவாறு மாடல் போல அம்சமாய்  இருந்தான்.  பரந்து விரிந்த “ஏகேபி”  நிறுவனத்தின்  வாரிசு “கௌதம் பிரபாகர்”.

அந்த கோர விபத்திற்க்கு பிறகு எஞ்சியிருக்கும் தன் ஒரே உறவான பாட்டியின் மீது இன்னும் அதிக பாசம் அவனுக்கு.இந்த உலகில் அவன் பணிவது என்றால் அது அவர் ஒருத்தருக்கு மட்டுமே. மற்றபடி அவன் தாத்தாவை போல அனைவருக்கும்  சிம்மசொப்பனம்.

 

 

இதோ இந்த பயணத்திற்க்கு ஒப்புக்கொண்டு வருவது கூட அவர் வருத்தப்படகூடாது என்ற ஒரே காரணம் தான்.  அவர் ஊருக்கு அழைத்த போது வரவே முடியாது என மறுத்திருந்தான்.

 

 

இன்று  காலை பரபரப்பாக தன் வழக்கமான அலுவல் உடை அணிந்து கையில் விலையுயரந்த கைக்கடிகாரத்தை கட்டியவாறே மாடிப்படிகளை தன் வேக நடையுடன் கடந்து வந்துகொண்டிருந்த பேரனை பார்த்த அஞ்சுகம் பாட்டி அவனின் கம்பீரத்தை கண்டு எப்போதும் போல இம்முறையும் ரசித்து பார்த்திருந்தார்.

 

 

அவரின் பார்வையை உணர்ந்தவனாக மெல்லிய புன்னகையுடனே இறங்கி வந்தான். அவன் அருகில் வரவும்  தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பி விட்டார். இதை அறிந்தவன் இன்னும் அதிகமாக புன்னகைத்தவாறே

 

 

” குட் மார்னிங் அஞ்சு டார்லிங்”

 

 

அவர் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து அவர் தாடையை பற்றி திருப்பியவன்

 

“டார்லிங் சாப்டாச்சா”

 

என சிறு குழந்தையை கொஞ்சுவது போல பேச, அவன் கையை தட்டிவிட்டவர்  எழுந்து தன் அறைக்கு செல்ல முயல, அவருக்கு முன் சென்று தடுத்தவாறு நின்றவன்

 

 

“டார்லிங் இது சரியில்ல, நீங்கதான் என்னை தனியா விட்டு ஊருக்கு போறீங்க.. நியாயமா பார்த்தா நான்தான் இப்படி கோவிச்சுக்கனும்”

 

 

என்று அவரை மாதிரியே முகத்தை உர்ரென்று வைக்க அதை பார்த்த அஞ்சுகம் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

 

அவன் கன்னத்தை பிடித்து இழுத்தவர் “படவா! உன்கிட்ட கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க முடியுதா?” என சலித்து கொண்டவரிடம்.

 

 

“ம்ம் .. இப்பதான் என்னோட டார்லிங் மாதிரி இருக்கீங்க.  எதுக்கு இந்த கோபம் உங்க அண்ணன் வீட்டுக்கு போறீங்க..  அங்க விசேசத்துல கலந்துகிட்டு பத்து நாள்ள இங்க வரப்போறீங்க அப்பறம் என்ன? முகத்தை அண்டார்டிகா வரை நீட்டி வச்சிருக்கீங்க…”

 

 

அதத்தான் நானும் சொல்றேன்  கண்ணா நீயும் என்கூட வாடா!  இங்க தனியாதான இருப்ப, அங்க தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அம்மு, அரசு இவங்கலாம் இருக்காங்க அவங்களை பார்த்தால்  உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.

 

 

“நான் அங்க வந்துட்டா இங்க பிஸ்னஸ  யாரு பாத்துக்குவாங்க அஞ்சு, சுந்தரேசன் அங்கிள் பாவம் அவரால சமாளிக்க முடியாது.அதுவுமில்லாம நாளைக்கு மறுநாள் முக்கியமான பிஸ்னஸ் டீலிங் இருக்கு..அது மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா பலகோடி ருபாய் லாபம் வரும்…அப்பதான் வொர்க்கர்ஸ்க்கும்  போனஸ் கொடுக்க முடியும். அதனால நீங்க மட்டும் போய்ட்டு வாங்க”  என்று கூறியவன் ஆபீஸிற்க்கு கிளம்பி விட்டான்.

 

 

ஆபீஸிற்க்கு வந்துவிட்டானே ஒழிய அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை…பாட்டியின்  சோகமான முகமே ஞாபகம் வந்தது…

 

 

தாத்தா இறந்த பின்பு தன் அண்ணன் வீட்டை தவிர எங்கும் சென்றதில்லை… அவருக்கு நேரம் ஒதுக்க தவறுகிறோமோ என்று எண்ணியவனின் மனதில் அவரது கலங்கிய முகமே தெரிய, தன் முடிவை மாற்றி தன் ஜி.எம் சுந்தரேசன் அங்கிளை அழைத்தவன் தான் பத்து நாட்கள் இங்கு இருக்க மாட்டேன் என்றும், கணிணி மூலம் தன் வேலைகளை பார்ப்பதாக கூறி மீதி அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்குமாறு கூறினான்.

 

 

தன் பாட்டி செல்லும் விமானத்திலேயே இரண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்தவன் ,

பாட்டிம்மாவிற்க்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என்று அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின்  வீட்டிற்க்கு சென்றவன் அவசர அவசரமாக கிளம்பி வந்தான். இங்கு வந்து அவர் எங்கே என தேடியவனின் பார்வை வட்டத்தில் அவர் தென்படவும் இதழ்கடையில் தோன்றிய புன்னகையுடன் தன் பாட்டிம்மாவை நோக்கி வந்தான் கௌதம்.

 

 

“ஹாய் அஞ்சு டார்லிங்”

 

 

என அவர் அருகில் அமர்ந்தான். அவனை நோக்கி ஒரு அணல் பார்வையை வீசியவர் மீண்டும் வேறு பக்கம் திரும்பி கொண்டார். (கோபமாக இருக்கிறாராம்.)

 

அதைக் கண்டு முகத்தை பாவமாக வைத்தவன்

 

“ம்ச்…நானும் உங்ககூட வரலாம்னு நினைச்சேன்…நான் வர்றது புடிக்கல போல…நான் கெளம்பறேன் ”

 

என்று  எழ எத்தனிக்க …அவன் கூறிய செய்தியில் ஆனந்த அதிர்ச்சியடைந்தவர்அவன் கையை பிடித்து

 

 

 

“கௌதம் கண்ணா நீயும் வரியா?”

 

என ஆர்ப்பரிக்க ..அவரது மகிழ்ச்சியை கண்டு விளையாட்டை கைவிட்டவன்

 

“ஆமா அஞ்சு டார்லிங்… நானும் வரேன். இப்போ ஹேப்பியா.”

 

 

அதில் மகிழ்ந்தவர் அவனை  வம்பிழுக்கும் எண்ணத்தோடு,  அவனை தான்டி  யோசனையாக பார்த்தவர் அவனை மீண்டும் பார்க்க

 

” இப்ப என்ன?”

 

 

“இல்ல  உன் ட்ரெஸ் எதுவும் எடுத்து வரலயா?  அதான் அங்க வந்து கோவணத்த கட்டிப்பியோன்னு பார்த்தேன்”

 

 

” என்ன கோவணமா?  அந்த ட்ரெஸ் எங்க கிடைக்கும்,  அங்க அதான் போட்டுக்கனுமா?”

 

 

என பல கேள்விகளை முன்வைக்க அவனை அந்த கோலத்தில் நினைத்து பார்த்தவர் வாய்விட்டு சிரித்தார்.

 

 

அவர் சிரிப்பதை வைத்து ஏதோ விவகாரமான விசயம் போல என நினைத்தவன்…வெகு நாளைக்கு பின்னான அவரது புன்னகையில் தானும் மகிழ்ந்தான்.  அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக தன் பின்னால் வந்த  பி.ஏ. ராகேஷ் எங்கே என தேடினான்.

 

 

ராகேஷ் இவனின் அந்தரங்க செயலாளர். மூன்று வருடங்களாக அந்த பணியை சீரும், சிறப்புமாக  செம்மையான திட்டுகளோடு செய்து வருகிறான். கிட்டத்தட்ட கௌதமின் வயதுதான் அவனுக்கும். அவன் இருக்குமிடம் தானாகவே கலகலப்பாக மாறிவிடும்.

 

 

ராகேஷ் எங்கே என தேடிய கௌதமின் கண்களில் வெளிநாட்டு பெண்மனியுடன் கடலை வேகவைத்துக் கொண்டிருந்தவனே பட்டான்.

 

 

அதை கண்டு கடுப்பானவன்  ஒரு நிமிஷம் அஞ்சு என வேகநடைகளால் அவனிடத்தை நெருங்கியவன் பல்லைக் கடித்துக் கொண்டு அவன் தோள்களில் தட்ட அதை கண்டுகொள்ளாமல் தன் கடலை வறுக்கும் பணியில் மும்முரமாக இருந்தவனை

 

“ராகேஷ்”

 

என்ற அழுத்தமான அழைப்பில்

 

“ஐயோ!! பாஸ்”

 

என திடுக்கிட்டு திரும்பியவன்.கண்ணில் கொலைவெறியோடு  நின்றிருந்த கௌதமை கண்டதும் தன் கடலை வியாபாரத்தை கைவிட்டவனாக,

 

“பாஸ் இங்க என்ன பண்றீங்க…பாட்டிமா மேடத்தை பாத்துட்டீங்களா? இல்லையா? என்ன பாஸ் இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்கீங்க ?

 

 

என மூச்சு விடாமல் படபடத்தவனிடம்…அவங்கள பார்த்து அரைமணி நேரமாகுது…. என பல்லைக்கடித்தவன் அவனையும்  அங்கிருந்த வெளிநாட்டு பெண்மணியையும் சுட்டிக் காட்டி

 

 

“சார் இங்க என்ன பண்றீங்க?”

 

என கிண்டலாக வினவ சில நொடிகள் திருதிருவென முழித்தவன்

 

“இன்க்ரெடிபிள் இந்தியா” பாஸ்

 

“வாட்”

 

அதான் பாஸ் சுற்றுலாக்கு வர பயணிகளுக்கு நம்மாள முடிந்த உதவிய செய்யனும் …என சுற்றுலாத்துறையை பற்றி ஏதேதோ உளறி கிண்டி கிளறி மூடினான்.

 

 

அவன் என்ன கூறினான் என்று அவனை கேட்டால் அவனுக்கே தெரியாது. அவனது பதிலில் பல்லை கடித்துக்கொண்டு

 

” வாய்ல நல்லா வசந்தமா வருது..பாட்டி இருக்காங்களேன்னு பார்க்கிறேன், இதுக்கும் மேல எதாவது உளறி வச்ச சீட்டு கிழிஞ்சிடும் ஜாக்கிரதை!” என அடிக்குரலில் சீறினான்.அதைக் கேட்டு

 

” ஐயோ! பாஸ் எனக்கு இருக்கறது ஒரே சீட்டு அதை கிழிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்”

 

 

என பின்னால்  கையை வைத்து மறைத்தவனை கண்டு கடுப்பானவன்

 

 

“டேய் கைய எடுடா முன்ன.. நான் சொன்னது உன் வேலைய.”

 

“ஸ்ஸப்பா இதுவா” என ஆசுவாசமடைந்தவன்

 

“அதுக்குதான் நானும் வெய்ட் பண்றேன் வேற  எதாவது  வேலை கிடைச்சதும் நானே போயிட போறேன், இல்லைனா ராகேஷ் ராகேஷ்னு கத்தியே என் காதை கே காதா மாத்திடுவாறு…” என முணுமுணுத்தவனை கண்டு

 

 

“அங்க என்ன சத்தம் ”

 

“நோ..பாஸ் இனிமே உங்க பேச்சை தட்டாம கேக்கனும்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்” என பல்லை காட்டியவனிடம்..

 

“சொல்லு ஆனா செஞ்சிடாத… லக்கேஜ் எங்க மேன்”

 

 

“இதோ பாஸ்” என்று இழுத்த வேகத்தில்  கௌதமின் காலிலேயே இடிக்க

 

” ஓ.. காட் “என காலை பிடித்தவன்  அவனை முறைக்க, அவனது முறைப்பில் பயந்தவன் “பாட்டிமா” என்றவாறு  அஞ்சுகம் பாட்டியை நோக்கி சென்றான்.

 

 

அஞ்சுகம் பாட்டி ராகேஷை தன் சொந்த பேரனாகவே பாசமாக நடத்துவார். யாருமில்லாத அவனும் இந்த இரு கிளிகளின் கூட்டில்  சேர்ந்து கொண்டான்.

 

 

அதனால் தான் இந்த பயணத்தில்  அவனையும் இனைத்து கொண்டான் கௌதம். இதுவரை அவன் செய்த சேட்டைகளை  பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவர் அவன் அருகில் வரவும்

 

 

“வாப்பா ராகேஷ் ..எங்க இப்பலாம் வீட்டு பக்கம் வரவே மாட்டிக்கற” அன நலம் விசாரிக்க

 

 

“என்ன பண்றது பாட்டிமா, என் பாஸ் அப்ப்படி..அதான் நான் இப்ப்படி” என சோகமாக கூறியவனின் காதை பிடித்து திருகியவர்

 

“படவா என் பேரனை பற்றி என்கிட்டயே கிண்டல் பன்றயா!!”

 

 

“ஆஆஆ…விடுங்க பாட்டிமா வலிக்குது. ”

 

என அஞ்சுகம் பாட்டியின் சிரிப்போடும்,  ராகேஷ் அவரிடம் வம்பிழுத்துக்கொண்டும், கௌதமிடம் திட்டுகளை வாங்கி கொண்டும் அந்த விமான பயணம் இனிதே  தொடங்கியது.

 

 

 

நாங்௧லாம்  அப்பவே  அப்படி  2

 

 

இருள் சூழ்ந்த அதிகாலை வேளையில் அந்த அலுமினிய இயந்திர பறவை கோயமுத்தூரை வந்தடைந்தது. முடிக்க வேண்டிய ஃபார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து மூவரும் வெளியில் வர மேலும் அரைமணி நேரம் கடந்திருந்தது.

 

 

அழைத்து செல்ல யார் வந்துள்ளார்கள் என தேடியவரின் விழிகளில் இந்த வயதிலும் மிடுக்கான தோற்றத்துடன்  தன்  விழிகளை அங்குமிங்கும் அலைபாய விட்டவாறு நின்றிருந்த அண்ணனை கண்டதும் சிறுபிள்ளையென குதூகலித்தவாறு…

 

 

“கௌதம்  அதோ அண்ணா”

 

 

என கூறியவாறு இந்த தள்ளாத வயதிலும் பாய்ந்து சென்ற அவரை

 

 

“டார்லிங் மெதுவா”

 

 

“அம்மாடி பார்த்துடா”

 

 

“அத்தை கவனம்”

 

 

என பல குரல்கள் தடுத்தாலும் கவனத்தில் கொள்ளாது சென்றவரை விரைந்து வந்து தாங்கினார் “ரத்ன பாண்டியன்” அஞ்சுகம் பாட்டியின் அண்ணன்.

 

 

சிறுவயதில் தாய் தந்தையை இழந்து சிறு குழந்தையாய் இருந்தவரை , தாய்க்கு தாயாய் மடிசாய்த்து, தந்தையாய் தாங்கிய தாயுமானவர்.

 

 

“என்னம்மா பார்த்து வரக்கூடாது…இப்படிதான் ஓடி வரதா?”

 

என வாஞ்சையாய் தலையை தடவியவாறு கடிந்தவரை,

 

“எனக்கு என்ன அண்ணா கவலை..என்னை தாங்கி பிடிக்கதான் நீங்க இருக்கீங்களே!” என சிரித்தவரை பார்த்து

 

 

“அதான உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”

 

“வாங்க அத்தை பயணம் நல்லபடியா இருந்ததா?” என விசாரித்த அண்ணன் மகன் வீர பாண்டியிடம்…

 

 

“நல்லபடியா இருந்தது வீரா, வீட்டில எல்லாரும் நல்லாயிருக்காங்ளா?” என விசாரித்தவரிடம்

 

 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க அத்தை…நாச்சியாதான் உங்கள கேட்டுகிட்டே இருந்தாங்க”.

 

 

“நாச்சியார்” அவர்களின் இளவரசி, பெண் குழந்தைகளை தாயைபோல் மரியாதையாக அழைக்கும் பழக்கம்  இன்றளவும் அவ்வீட்டில் உண்டு.  அனைவருக்கும் நாச்சியார் என்றால் அஞ்சுகம் பாட்டிக்கு மட்டும் அவள் “அம்மு. ”

 

சுற்றும்  முற்றும் தேடிவிட்டு  “அம்மு இங்க வரலயா வீரா?”  அவருக்கு தெரியும் அவர் எப்போது , எந்த நேரத்தில் வந்தாலும் அம்முதான் அழைத்து செல்ல வருவாள் , அதனால் இன்றும் வந்துள்ளாளா என வினவியவரிடம்

 

 

“அத்தை மறந்துட்டீங்களா! இன்று வெள்ளிக்கிழமை ”

 

 

“அட ஆமாப்பா நினைவு இல்ல…சரி வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்.”

 

 

அப்போது ராகேஷ், தங்களது பயண பொதிகளை இழுத்து வந்தவாறே கௌதமிடம்

 

 

“பாஸ் அங்க நெப்போலியனுக்கு கசின் மாதிரி உயரமா இருக்காரே அவர்தான் உங்க தாத்தாவா?” என கேட்டவனை முறைத்து பார்த்து..

 

 

“பெட்டர் இதை நீ அவர்கிட்டயே கேக்கலாம்!   என்ன கேக்கலாமா?” என தன் ஒற்றை புருவத்தை தூக்கி வினவியவனிடம்

 

 

“ஆஹா சாட்டர்ன் நாக்குல பட்டறைய போடறாறே!!! அவர விரட்டி விடுடா ராக்கேஸூ”  என மனதில் நினைத்தவன்  கப்சிப் என வாயை மூடிக்கொண்டான் ….

 

 

அவர்கள் அருகில் வந்த கௌதம் தன் பாட்டியை முறைக்கவும் தவறவில்லை. தோற்றத்தில் தன் தாத்தாவை போல இருந்த கௌதமை கண்டதும்  ரத்ன பாண்டி

 

 

“வாப்பா கௌதம் , உன்னை பார்த்து எத்தன வருடங்களாயிடுச்சு, அப்படியே குமரன பார்த்த மாதிரியே இருக்கு ..”  எனகூறி அணைத்துக்கொண்டவரை தானும் அணைத்தவன்…

 

 

“ஐ ம் ஃபைன் தாத்தா…வயசானாலும் உங்க கம்பீரம் மட்டும் குறையவே இல்ல,அண்ட் மாமா யூ டூ, எப்படி இருக்கீங்க” என அவரை அணைத்தவனை தானும் அணைத்தவர்

 

 

“நாங்க நல்லாயிருக்கோம் “அப்புப்பா” நீங்கதான் நெடுநெடுன்னு வளர்ந்து ராஜாவாட்டம் அம்சமா இருக்கீங்க”  என பெருமையாய் பார்த்தவரை

 

 

“ஆஹா உங்கள விடவா” என அவரிடம் சற்று நேரம் அலவலாவினான்.

 

ராகேஷும் பாட்டிமாவை முறைத்துக் கொண்டே நிற்க,  முறைப்பிற்க்கான காரணம் அறிந்தவர் கண்களால் இறைஞ்சியவாறு…  ராகேஷை அருகில் இழுத்தவர்

 

 

“அண்ணா இ்வன் ராகேஷ்  என்னோட பேரன் ” என அறிமுகப்படுத்த,

 

 

அவர் இப்படி அறிமுகப்படுத்துவார் என எண்ணியிராதவன்  அவரின் இந்த அன்பில் நெகிழ்ந்தான் என்றால்,

 

 

“வாப்பா ராகேஷ் எப்படி இருக்க?” கேட்டவாறே அவனை அணைத்துக் கொண்டார் ரத்ன பாண்டியை கண்கலங்க தானும் அவரை அணைத்துக் கொண்டவன். “தேங்க்ஸ் தாத்தா” என்க.

 

 

அவன் வெகுவாக நெகிழ்ந்திருப்பது தெரிந்து அவனது தோளில் ஆறுதலாக தட்டிய கௌதம் மெல்லமாக அவன் காதருகில்

 

 

“டேய் அவரு தாத்தாடா  உன் லவ்வர் இல்ல”  என கிண்டல் செய்ய தன்னை கட்டுபடுத்தியவன்,

 

 

தாத்தாவை விட்டு கௌதமை  அணைத்து “அவரை மட்டுமில்ல உங்களையும் கட்டிபிடிப்பேன், இப்படி கிஸ்ஸும் பண்ணுவேன்” என கன்னத்தில் முத்தமிட…

 

 

 

“டேய் … ச்சீ …ச்சீ என்னடா பண்ற” என அவனை மொத்த துவங்க” தாத்தா காப்பாத்துங்க” என அவரின் பின்னால் சென்று ஒளிய இவனும் விடாமல் துரத்தினான்.

 

 

 

இவர்களது விளையாட்டை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்

 

 

“அடடா போதும் வாங்க கிளம்பலாம்”என்று அழைக்க ஐவரையும் ஏற்றிக்கொண்ட அந்த “இன்னோவா” கார் பூஞ்சோலையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

 

 

மற்றவர்கள் சலசலத்தபடி வர கௌதம் அதிகாலை நேர தென்றலை அனுபவித்தபடி அமைதியாய் வந்தான். ஏதோ ஒரு அழுத்தம் நீங்கியது போல, தன் இடத்தில் சேர்ந்தது போல ஒரு ஆசுவாசம் கண்களை மூடி அந்த அனுபவத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.

 

 

ஒன்றரை மணி நேரத்தில் அந்த “இன்னோவா” கார்  ஒரு மாளிகையின் முன் நின்றது…நடுவில் ஶ்ரீ கிருஷ்னரின் சிலை வீற்றிருக்க.. அவர் முன் நீர்த்தடாகம் ஒன்று அதில் அல்லிகளும், தாமரைகளும் அலங்கரிக்க,  வாத்துகள் நீந்திக்கொண்டிருந்தன.

 

 

அதன் இருபுறங்களிலும் சாலை , இரண்டும் சேரும் இடம் மாளிகையின் முன்புறம்.  இதை பார்த்ததும் ராகேஷிற்க்கு “வாவ்” என்றுதான் தோன்றியது….

 

 

பெங்களூரூ பங்களாவும் பெரியதுதான், ஆனால் இது “கிளாசிக் பியூட்டி” என்பார்களே அந்த வகையை சார்ந்தது.

 

“ராகேஷ் இறங்குப்பா” பாட்டியின் குரலில்  நினைவு வந்தவன் கீழே இறங்க, “வாம்மா” ” வாங்கப்பா” என ரத்ன பாண்டி உள்ளே அழைக்க,

 

 

” அங்கயே நில்லுங்க” எனும் குரல் அவர்களை தடுத்தது. அப்போது ஆரத்தி தட்டுடன் வெளிப்பட்டார் “காமாட்சி” உடன் அவரது மருமகளான தெய்வானையுடன்.

 

 

ரத்ன பாண்டி, காமாட்சி தம்பதியரக்கு ஒரு மகன் , ஒரு மகள் . மகன் வீரபாண்டி, அவரது மனைவி தெய்வானை. வீரபாண்டி கரடுமுரடான தோற்றம் என்றால், தெய்வானை அழகிய சாந்த ஸ்வரூபி. அவர்களுக்கு “அழகு நாச்சியார்”என்ற மகளும்,  “கலையரசன் ” என்ற மகனும் உள்ளனர்.

 

 

ரத்ன பாண்டி, காமாட்சி தம்பதியரின் மகள்  சகுந்தலாவை உள்ளூரிலேயே கனக வேல் என்பவருக்கு  கட்டிக்கொடுத்தனர்.அவர்களும் அவ்வூரில் செல்வாக்கான குடும்பமே. ஆனால் சில பிரச்சனைகளால் இன்றளவும் பேச்சுவார்த்தை இல்லை. கனக வேல், சகுந்தலா  தம்பதியினர்க்கு வேலன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர்.

 

 

ஆரத்தி தட்டுடன் வந்த காமாட்சி, “வாம்மா அஞ்சு” “வாங்க பேராண்டிகளா” என அன்புடன் அழைத்தவர் “சரி..சரி மூனு பேரும் நில்லுங்க”  அவர்கள் நின்றதும் மூவருக்கும் ஆரத்தி எடுத்தார்.

 

 

“கோதை இதை கொண்டு போய் வீட்டுக்கு வெளிய ஊத்திட்டு வா” என வேலைக்கார பெண்ணை பனித்தவர்,

 

 

“எப்படி இருக்க அஞ்சு” என அவரை அணைத்துக் கொண்டார்.  “நான் நல்லாயிருக்கேன் அண்ணி”  எனவும்.

 

“முதல்ல உள்ள கூட்டிட்டு போம்மா” என ரத்ன பாண்டி கூற… “சரிங்க” என்றவர், “வாங்க..எல்லாரும் உள்ள வாங்க” என அஞ்சுகத்தின் கைபிடித்து உள்ளே அழைத்து சென்றார்.

 

 

“ரங்கா பெட்டியெல்லாம் உள்ள எடுத்து வை” என வேலையாளை ஏவிவிட்டு தந்தை மகன் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

 

கௌதம் சுற்றிலும் பார்வையை சுழல விட்டவாரே  மெதுவாய் உள்ளே நுழைந்தான். உடன் ராகேஷும். அப்போது உள்ளிருந்து ஒரு குரல், தேனை விட தித்திப்பது எதுவென்றால் இந்த குரலை கூறலாம். அவ்வளவு இனிமையான குரல்.

 

 

“ஓம் பூர் புவஸ்வக” எனும் காயத்திரி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு இது போன்ற மந்திரங்கள் எல்லாம் தன் தாய் பாடிய ஞாபகம்… அதன் இனிமையை ரசித்தவாறு எங்கிருந்து கேட்கிறது? என பார்வையை சுழல விட்டான்.

 

 

அதோ பூஜையரையில்… “யாராக இருக்கும்?” என யோசித்தவாரே கௌதம் நிற்க”என்ன  அப்புப்பா  நின்னுட்ட? “என வீரா வினவ..  அதுவரை ஒரு மோனநிலையில் இருந்தவன்,

 

“இந்த மந்திரம்”  என நிறுத்த…

 

 

 

“ஓஹோ..மந்திரமா வெள்ளிகிழமையானா நாச்சியார் இப்படித்தான் காலைல பூஜை பண்ணுவாங்க”

 

 

“ஓ…பம்ப்கின்னா?”

 

“என் பொண்ணுப்பா “அழகு நாச்சியார்”  சின்ன வயசுல ஒன்னா விளையாடுவீங்க.. மறந்துட்டீங்களா?” என கேள்வியும் கேட்டு பதிலும் அவரே சொல்லிட…

 

 

அவன் தன் நினைவடுக்குகளில் சந்து பொந்தெல்லாம் தேட தொடங்கினான்

 

 

 

“கௌ……கௌ…கௌ..”

 

 

 

“ஏய் பம்ப்கின், என்னை அப்படி கூப்பிடாதே?”

 

 

 

“ஏன்? ஏன் அப்படி கூப்பிடகூடாது.. உன் பேர் கௌ ல தானே  ஆரம்பிக்குது அப்ப நீ கௌதான்.

 

 

 

 

 

“வேனாம் பம்ப்கின்!!”

 

 

 

“போடா..நீ மட்டும் பம்ப்கின் சொல்ற” என சிலிர்த்துக்கொண்டு செல்லும் கொழுகொழுவென்ற சிறுமி அவன் நினைவுகளில் வந்தாள்.

 

 

 

ஆனால் அவள் முகம் ஞாபகம் இல்லை. இப்போது அதை நினைத்தவன் அந்த “பம்ப்கின்னா” … “வாய்ஸ் சுவீட்டா இருக்கே …ஆள் அப்படியேதான் புசுபுசுன்னு இருப்பாளா?  என பல கேள்விகள் படையெடுக்க

 

 

 

 

 

“ச்சே என்ன நான் அவள் எப்படி இருந்தா என்ன? ஓவர் எக்சைட்மென்ட் ஆகாதுடா கௌதம் கன்ட்ரோல்…கன்ட்ரோல்” என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டிருக்க கண்கள் மட்டும் பூஜை அறையை  விட்டு விலகவில்லை.

 

 

 

 

 

பூஜை முடிந்து தீபாராதனை தட்டுடன் வெளிவந்த பெண்ணவளை கண்டவன் தன் மூச்சுக்காற்று வெளியேறுவதற்க்கும் சில வினாடிகள் தடை விதித்தான் போலும்..அவை காற்றுப்பைக்குள்ளேயே தஞ்சமடைந்து விட்டன.

 

 

 

 

குங்குமப்பூ  நிறத்தில்,  பிறை நெற்றி, வில்லென வளைந்த புருவங்கள், அதன் நடுவில் சூரியனை போல செஞ்சாந்து திலகம், அதற்க்கும் கீழ் இரு காந்த விழிகள்,  கூரான நாசி, வடிவான இதழ்கள், நீண்ட அழகான கார்கூந்தலை தலைகுளித்து ஈரம் சொட்ட,  தாவனிப் பாவாடையில் மெல்லிய புன்னகையுடன்  என ஐந்தரையடி உயர அழகுப்பாவையாய் அப்பாவை தோன்றிட கௌதம் சுவாசிக்க மறந்தான்.  விருந்தாளிகளை வரவேற்றவளின் கண்கள் இவனிடம் சிறிது தேங்கியதோ!

 

 

ஒவ்வொருவருக்காய் தீபாராதனை காட்டி ஆசிர்வாதம் வாங்க, தெய்வானை யிடம் வாங்கும் போது  “ க்கும் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல” என நொடிக்க  அவளது முகம் கனநேரம் சுருங்கி மீண்டும் புன்னகையை பூசிக்கொண்டது.  மற்றவர்கள் இது எப்போதும் நடப்பதுதானே என கடந்து விட  கௌதமிற்க்குதான் தன் அத்தையின் மேல் கோபம் வந்தது.

 

 

“என்ன அத்தை இப்படி பேசிட்டீங்க”  என தனது ஆதங்கத்தை வெளியிட, அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் அப்பாவை.

 

“இதெல்லாம் எப்படி பேசினாலும் திருந்தாத கேசு தம்பி, நீங்க குளிச்சிட்டு வாங்க” எனக்கூற  அவள் தன்னுணர்வுகளை மறைக்க போராடுவது தெரிந்தது. அனைவரும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தனர். ஒரு பெருமூச்சுடன் அவன் மௌனமாய் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று மறைந்தான்.

 

 

இதையெல்லாம் பார்த்த ராகேஷுக்கோ “ரொம்ப கொடுமை பன்ற அம்மாவா இருப்பாங்களோ? ஆனா யாரும் கண்டுகிட்ட மாதிரியும் தெரியலயே? என்னடா நடக்குது இங்க, பாட்டிமா கூட  ஒண்ணும் சொல்லல” என யோசித்தவாறே தனது அறைக்கு சென்றான்.

 

சிறிது நேரத்தில் ஃப்ரெஷ்ஷாகி வந்தவர்களுக்கு சூடான இட்லி, இடியாப்பம், குழிப்பணியாரம், பூரி அதற்க்கு சைடிஷ்ஷாக பூரி கிழங்கு, தேங்காய் பால்,  விதவிதமான சட்னிகளும் சாப்பாட்டு மேசையை அலங்கரித்தது. இனிப்பிற்க்கு கேசரி செய்திருந்தனர்.

 

பதினொரு பேர் அமர்ந்து உண்ணக்கூடிய அந்த டேபிளில் ரத்ன பாண்டி நடுநாயகமாக அமர, ஒருபுறம் காமாட்சியும், மறுபுறம் அஞ்சுகம் பாட்டியும் அவர் அருகில் ராகேஷ் அமர, மறுபுறம் வீர பாண்டியுடன் அமரந்தான் கௌதம்.

 

ராகேஷிர்க்கு இது மிகவும் புதிதான சூழல், அதுவும் தெய்வானை இவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற என்றும் இல்லாத அளவிற்க்கு மனது நிறைவாய் உணர்ந்தது.

 

ஆனால் கௌதமிற்க்கோ கையும், வாயும் அதன் வேலையை பார்த்தாலும் பார்வை முழுதும் அங்கு பரிமாறிக்கொண்டிருந்த “நாச்சியாரின்” மேலேயே இருக்க, அவளோ அமைதியாய் பரிமாறிக்கொண்டிருந்தாள்.

 

சிறு வயதில் அவ்வளவு சுட்டியாய் அவனிடம் வம்பிழுத்தவளா இவள்? என ஆராய்ச்சியாய் அவளை பார்க்க அப்போது அவளும் இவனை ஓரப் பார்வை பார்க்க, இவன் பார்ப்பது அறிந்ததும் டக்கென தலையை குனிந்து கொண்டாள்…

 

அதை  பார்த்து இவனும் மெலியதாய் புன்னகைத்துக் கொண்டே உண்டான்.  இவர்கள் உணவு அருந்த அப்போதுதான் எழுந்து குளித்து முடித்து  வந்தான் “ கலையரசன்” பணிரெண்டாம் வகுப்பு முடித்து விடுமுறையை அனுபவிப்பவன்.

 

அஞ்சுகம் பாட்டியை கண்டதும் “பாட்டிமா எப்ப வந்தீங்க “ என அவர் தோளில் சலுகையாய் நாடியை வைத்து வினவியவனிடம்,  “அரசு சாப்பிட விடு, அப்புறம் செல்லம் கொஞ்சலாம்” என

 

”ம்மா..என்ற சிணுங்கலுடன் அமர போனவன் அப்போதுதான்  அங்கிருந்த கௌதமை கண்டதும் “ஹய், அத்தான் நீங்க வரீங்கன்னு பாட்டி சொல்லவே இல்ல”  என புகார் படித்தவனை

 

 

“ஹேய் நான் வரது கடைசி நிமிஷம் வரை அவங்களுக்கே தெரியாது அரசு … எக்சாம்ஸ் எப்படி பண்ணிருக்க”

 

“நால்லா பண்ணிருக்கேன் அத்தான்” என்றவன் ராகேஷை கண்டு” இவங்க” என யோசித்தவன் “ ஹான்.. ராகேஷ் அண்ணா… அத்தானோட PA. சாரிண்ணா உங்கள போட்டோலதான் பார்த்திருக்கேன் அதான் சட்டுன்னு அடையாளம் தெரியல” எனக் கூற

 

“ஹேய் அரசு அதனால என்ன மேன் இனி நாம ஃபிரன்ட்ஸ்”  “ஓ.கே.”   என ரெண்டு பேரும் ஹை-பை அடித்துக்கொண்டனர். இதுதான் கலையரசு அனைவருடனும் எளிதாக பழகிவிடுவான்.

 

 

சாப்பிட்டு முடித்து அனைவரும்  ஹாலில் அமர “அத்தான் , அண்ணா ரெண்டு பேரும் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாளைக்கு நான் உங்கள வெளியில சுத்தி பார்க்க கூட்டிபோறேன், அன்ட் நோ மோர் எக்ஸ்கியூசஸ்”  என மிரட்ட பெரியவர்கள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தநாள் ராகேஷுக்கு அரசுவின் புண்ணியத்திலும், தெய்வானையுடன் அம்மா..அம்மா என நன்றாக ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டும் கழிந்தது.கௌதமிற்கோ கண்கள் தானாக அவள் பக்கம் செல்வதை தடுக்க முடியவில்லை…ஆனால் அவளோ அதற்க்கு மேல் அவனை திரும்பியும் பார்க்கவில்லை… இப்படியே அன்றைய நாள் கண்ணாமூச்சி ஆட்டமாய் கழிய… மறுநாள் விடிந்தது ஆர்ப்பாட்டமாக, கலவரமாக….யாருக்கு ஆர்ப்பாட்டம்? யாருக்கு கலவரம்?

 

 

நாங்கலாம்  அப்பவே  அப்படி 3

 

 

“தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க       உள்ளாற வந்தா நான் பொல்லாதவேங்க”

 

 

என தலைவர் பாடல் காதை பிளக்க அலறியடித்து எழுந்தான் ராகேஷ். மணி எத்தனை என்று பார்க்க அது ஐந்து நாற்பத்தைந்தை காட்டியது. தலையை உலுக்கி தூக்கத்தை விரட்டினாலும் போகமாட்டேன் என அது அடம்பிடிக்க வலுக்கட்டாயமாக தண்ணியில் அமுக்கி அதை விரட்டினான்.

 

 

“யாருடா அது இந்த வீட்ல இவ்ளோ சத்தமா பாட்டு கேக்கறது. அரசுவா இருக்குமோ?  ச்சே..ச்சே  இருக்காது..வேற?????

 

 

அந்த பொண்ணு ..”டேய்..டேய் அறிவுகெட்டவனே அது அவ்ளோ அமைதியா இருந்துச்சு அந்த பாப்பா அப்படிலாம் பண்ண சான்ஸே இல்ல. “என மனசாட்சி கல்லை கொண்டு அடிக்க…அதுவும் சரிதான் யாரா இருப்பாங்க என்றவாறு தன் அறையை விட்டு வெளியே வர

 

 

இந்த சத்தம் தங்களை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல  தாத்தா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, காமாட்சி, தெய்வானை இருவரும் சமையலறையில் இருந்தனர்.

 

 

 

சரி அவர்களிடம் விவரம் கேட்போம் என அங்கு சென்றான். “அம்மா…பாட்டி” என மாறிமாறி அழைக்க அவர்களுக்கு கேட்டதை போல தெரியவே இல்லை. அதுசரி இந்த சத்தத்துல எங்க கேக்க போகுது என நினைத்துக்கொண்டவன் தெய்வானையின்  தோளை தொட அவரோ பயந்து விருக்கென்று அதிர்ந்து திரும்ப, அங்கு ராகேஷ் இருப்பதை பார்த்ததும் தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்தவர்,

 

 

” வாப்பா எழுந்துட்டியா?  காலைல என்ன சாப்பிடுவ பால்,  காபி, டீ என்ன வேணும் சொல்லு”

 

 

“எனக்கு….”

 

அவனை நிறுத்துமாறு சைகை செய்தவர் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துவிட்டு

 

 

“இப்ப சொல்லுப்பா”

 

அவரது செயலில் ஆ…வென வாயைப்பிளந்தவன்..

 

“ஏன்மா இப்படி?” என ஆச்சர்யம் விலகாமல் கேட்க….

 

“அதை ஏன்பா கேக்கற எல்லாம் நான் பெத்ததுக்காகதான்”  அவரது கவலை அவருக்கு…

 

 

“யாருமா அரசா?”

 

 

“இல்லப்பா அவன் தங்கம் , கலகலப்பா இருப்பானே ஒழிய சூதுவாது இல்லாத புள்ள….நான் பெத்த பெருசுதான் இதுக்கு காரணம்”

 

 

“என்ன அவங்களா?” என ஆச்சர்ய மிகுதியில் கத்தியேவிட்டான்.

 

“அவகளேதான்”

 

 

“வெளிய தாத்தா”…. என தடுமாறியவன் “அவர் ஒன்னுமே சொல்லமாட்டாரா?”

 

 

“அத அப்பறம் சொல்றேன் ”  என சைகை செய்தவர் மீண்டும்  என்ன வேண்டும் என கேட்டு கொடுக்க, தனது கப்புடன் ஹாலிற்க்கு வந்தான்….

 

 

அங்கோ நடுஹாலில் அரசு தூங்கி வழிந்தவாறு அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்றவன் “அரசு” என தோளில் கைவைக்க “ஐயோ அக்கா ” என கத்தியவனை பார்த்து விருட்டென தானும் இரண்டடி பின்னால் சென்ற ராகேஷ்

 

 

“டேய் என்னடா காலங்காத்தால எல்லாரும் இப்படி பயங்காட்டுறீங்க” என அழாத குறையாக புலம்ப..

 

உடனே தன் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டு “ஐயோ! நீங்களா சாரிண்ணா..சாரிண்ணா  நான் அக்காவோன்னு நினைச்சேன்.

 

 

வாங்க வந்து உட்காருங்க “என தன் பக்கத்தில் இடம் காட்ட இவனோ” குடும்பமே இப்படிதான் சுத்தறாய்ங்களோ? “என எண்ணியவன் ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.

 

(உஷாராமாம்..ஆனா இவனுக்கு தெரியல சைத்தான் மேல இருந்து மட்டுமில்ல வீட்டுக்கு வெளில இருந்தும் வரும்னு)   காபியை ஒரு மிடறு விழுங்கியவன்

 

 

“ஆஹா காபின்னா அது தெய்வாம்மா காபிதான் பேஷ்..பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு” என்றவாறே மெதுவாக உறிய தொடங்கினான்.

 

 

அப்போது திடீரென்று பாட்டு  சத்தம் நிறுத்தப்பட “அண்ணா கவனம் அவங்க வருவாங்க” என அரசு எச்சரிக்கை செய்ய உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியில் “ஹா..யாருக்கிட்ட நாங்க சைத்தானயே சைட்ல தூக்கி போடுவோம்…இதெல்லாம் ஜீஜுபி.”

என கெத்தாக சொல்லியவனை ஒரு பாவப்பார்வை பார்த்தான் அரசு.

 

 

“இவன் ஏன் நம்மள இப்படி பாவமா பார்க்கறான்..நேத்தும் கூட இப்படிதான் பார்த்து வச்சான் என்னன்னு கேக்கனும்..ஆனா முதல்ல காபிய குடிப்போம்” என வாயில் வைக்க  “தல” என திடீரென்று பல குரல்கள் கத்தும் சத்தம் வீட்டினுள் கேட்க குடித்துக்கொண்டிருந்த காபியை அப்படியே வெளியில் துப்பிவிட்டான்.

 

 

நல்லவேளை கப்பை கீழே போடவில்லை.  இந்த வீட்டுல நிம்மதியா காபி கூட குடிக்க விடமாட்டிங்கறாங்களே என வெளிப்படையாகவே புலம்பியவன் இம்முறை யாரென பார்க்க அங்கே சைஸ் வாரியாக பத்து, எட்டு, ஆறு ,நான்கு வயதுகளில் நான்கு குட்டிகள் இருக்க…இவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் மேலே உள்ள அறைக்கு ஓடினர்.

 

 

“இந்த அவதார் குட்டிங்க யாருடா?” என மனதில் நினைப்பதாய் வெளியே பேசிவிட்டான்.

 

அவன் வாயை அவசரமாக பொத்தியவன் அருகில் இருந்த அறைக்கு அவனை இழுத்துச் சென்றான்.

 

“டேய்..டேய் அரசு என்னடா பன்ற?”

 

“அட வாங்கண்ணா முதல் நாளே பூஜை வாங்க அவ்வளவு அவசரமா?”  அறையினுள் இழுத்துச் சென்றவன் கதவை கொஞ்சமாக திறந்து வைத்தவாறே “இப்ப நடக்கறத வேடிக்கை மட்டும் பாருங்க”  “இதென்னடா  மந்திர குகை மாதிரியே இப்படி பயங்காட்டுறான்!!! சரி பாப்போம் என்ன நடக்குதுன்னு” என்று எண்ணியவாறு அவனும் எட்டிபார்த்திருக்க..

 

 

சிறிது நேரத்தில் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். கண்களில் கலர் கலராய் சன் கிளாசுடன் அவர்களின் பின்னால் அழகு நாச்சியார் நிற கிளிப்பச்சை நிற பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட், ரோஜா நிற தாவணி அணிந்து, தலைவாரி அடியில் குஞ்சம் வைத்து பின்னி தலை நிறைய குண்டுமல்லி பூ வைத்து, அஞ்சனம் பூசிய மைவிழிகளை மறைத்தவாறு கருப்பு நிற சன் கிளாஸ், பின்னலிட்ட ஜடையை முன்னால் விட்டு ஆட்டியவாறு நடந்து வர உள்ளிருந்து ராகேஷ் ஆவென பார்த்திருந்தான்.

 

 

நேற்று பார்த்த பெண்ணா இவள்..இன்றைய அதிர்ச்சிகள் இன்னும் முடியவில்லை போல.ஒய்யாரமாக நடந்து வந்தவள், ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் காலிட்டு அமர , மற்ற நால்வரும் அவளின் பின்னால்.   சுற்றி ஒருமுறை நோட்டம் விட்டவள் முகம் ஒரு கனம் சுருங்கி எதையோ யோசித்து பின் தெளிந்தது.

 

“அம்மா”

 

“ம்மா”

 

“மா”

 

“தாயே தெய்வா”  என இடைவிடாது கத்திக்கொண்டிருக்க…

 

“என்னடி”

 

“தாயே குரல் மட்டும் வருது உன் திருமுகத்தை ஒருமுகமா காட்டம்மா”

 

“எனக்கு  வேலை நிறைய இருக்கு என்னன்னு சொல்லு” குரல் காரமாகவே வர,

 

“உன் கையால காபி போட்டு கொடும்மா”  “அப்படியே என்னோட தளபதிகளுக்கும் ”

“என்னடா காபி ஓகே வா”

 

“ஓகே தல”

 

“அண்ணா இவனுங்க பேர் தெரியுமா?

 

” என்ன என்பதை போல ராகேஷ் பார்க்க…. அதோ மிலிட்டரி ஆபீஸர் மாதிரி விரைப்பா நிக்கறானே அவன் “நண்டு”

 

அடுத்து எப்படா காபி வரும்னு சமையலறையையே பார்க்கறானே அவன் “சிண்டு”  சரியான தீனிக்கோழி.

 

அதுக்கடுத்து பச்ச மண்ணு மாதிரி பவ்யமா நிக்கறானே அவன் “சுண்டு” சரியான விவகாரம் புடிச்சவன் அவன்கிட்ட ஜாக்கிரதையாஇருக்கனும்,

 

அந்த கடைக்குட்டி “வண்டு” இப்பதான் இந்த “கொரில்லா கேங்ல ” சேர்ந்திருக்கு.

 

 

அறிமுகத்தை முடித்தவன் வெளியே

நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.

 

“ஆபீஸர் சுண்டு , எனி நியூஸ்?”

 

“இருக்கு தல, அர்ணால்டுக்கும், டாம் க்ரூஸூக்கும் நேத்து சண்டை”

 

 

“ஏன்டா?”

 

“எல்லாம் இடப்பிரச்சனைதான்.

 

“என்னாது அர்னால்டு.. டாம் க்ரூஸ்ஸா????”

 

“அண்ணா அதெல்லாம் தாத்தாங்க, இப்படி ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பேர் வச்சிருக்காங்க”

 

“ஆஹான்”

 

“ஓ… ஜாக்குலின்க்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு?”  பேசிக்கொண்டிருக்கும் போதே தெய்வானை காபியோடு வர,  பேச்சு நின்று ஒரு சிக்னல் செய்தாள்  அதை புரிந்து கொண்ட நண்டு அவள் கையில் ஒன்றை வைக்க…

 

 

சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த தெய்வானையையும் கையையும் மாறி மாறி பார்த்தவள்  அடுத்த நொடி அதை தூக்கி எறிந்திருந்தாள். அது ஒரு பொம்மை பல்லி.

 

 

ஏதோ தன்மீது விழுந்த பதற்றத்தில் தெய்வானை  காபி கப்புகள் அடங்கிய ட்ரேவை கை நழுவ விட அது பொத்தென கீழே விழுந்து அவர் புடவையெல்லாம் காபி சிந்தியது.  அதை பார்த்து

 

 

“என்னம்மா தெய்வா பார்த்து வரக்கூடாது” என  நக்கலடித்து  “எங்களுக்கு காபி வேணாம்,  நான் போய் அஞ்சு குட்டிய பார்த்துட்டு வரேன்” என்றவள் அவர் முறைப்பதையும் பொருட்படுத்தாது

 

 

“டேய் பசங்களா நீங்க சாப்பிட்டு வாங்க அதுக்குள்ள நானும் வந்துடுவேன்” என்று சொல்லி செல்ல அவர்கள் சிட்டாய் பறந்துவிட்டனர்.

 

 

இங்கேயே சாப்பிட சொன்னால் கேட்க மாட்டார்கள். தெய்வானையின் முறைப்பிற்க்கு பயந்தே ஓடிவிடுவர். அவருக்கு தெரியாதா தான் நேற்று பேசியதன் எதிரொளி என்று… ஒரு பெருமூச்சுடன் சுத்தம் செய்ய வேலையாளை ஏவிவிட்டு தன் அறைக்கு சென்றார், உடை மாற்றத்தான்.

 

இதுதான் நாச்சியார் அவளுக்கு எது கிடைக்கிறதோ அதை இருமடங்காக கொடுக்கும் எண்ணம் உடையவள். அவளை போல அரவணைக்கவும் ஆளில்லை, வம்பு செய்யவும் ஆளில்லை. ஆனால் அதெல்லாம் செயலை செய்யும் வரை மட்டுமே. அதற்கு பின் அதையும் மறந்துவிடுவாள். வஞ்சம் வைத்து பழிவாங்கும் நல்ல பாம்பின் ரகமல்ல, ஆனால் தன்னை தீண்டியவரை தீண்டாமல் விடாத தேளின் ரகம்.

 

 

ஊருக்கு செல்ல பிள்ளை. பல இடங்களில் இவளே பிரதானம். இவள் சொல்லுக்கு அப்படி ஒரு மரியாதை இந்த வயதிலேயே. வயதுக்கும் மரியாதைக்கும் சம்மந்தம் ஏது , செய்யும் செயலே பேசும். ஆனால் எந்த இடத்திலும் குடும்பத்தை தலைகுனிய விட்டதில்லை.  அதிலும் பொது இடங்களில் “நாச்சியாரின் அம்மா வழிவிடுங்கப்பா”  என்று கூறும் அளவிற்க்கு ஊருக்குள் பெயர். இத்தனைக்கும் ரத்ன பாண்டிதான் பஞ்சாயத்து தலைவரும் கூட.  இந்த வெள்ளிக்கிழமை வனவாசம் கூட குடும்பத்திற்காகதான்.  ஆம் வனவாசம்தான். வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் அடக்கமாய் வலம் வருவது. இதுவும் அவள் நினைப்பதால் மட்டுமே. இல்லையென்றால் இல்லை மட்டும்தான் அவளிடம். வளையாத இரும்பு ஆனால் பாசம் என்னும் நெருப்பினால் மட்டுமே வளைக்க முடியும் இரும்பு.

 

 

அங்கு பாட்டி தனது காதில் பஞ்சை வைத்தவாறு தூங்கிக்கொண்டிருக்க  அவர் நெற்றியில் முத்தமிட்டு

 

“அஞ்சு பேபி” என அவரை அணைத்து கொண்டாள்.  உறக்கம் கலைந்தவர்

 

“வாடா அம்மு,  நல்லா தூங்கிட்டேன் போல”   அவர் எழுவதற்க்கு உதவி செய்தவள்

 

 

“அதனால என்ன அஞ்சு பேபி, வாங்க கஞ்சி குடிப்பீங்களாம்”

 

“தோ , வரேன்டா” அவர் குளித்துவிட்டு வரவும்   அவரை அழைத்து சென்று அவருக்கு வேண்டியதை கவனித்தாள். காமாட்சியும் அங்கே இருக்க இருவரும் பேசிக்கொண்டே தங்களது வேலையை கவனித்தனர்.

 

இந்த ராகேஷ் அண்ணா எங்க? ”  என்று எண்ணியவள்

 

 

“ராகேஷ் அண்ணா” என்று சத்தமாக அழைக்க அப்போதுதான் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தவன் இவளது குரல் கேட்க,

 

 

“இவங்க எதுக்கு இப்ப கூப்பிடறாங்க, நாம எதுவும் செய்யலயே… கடவுளே அப்படியே எதாவது செஞ்சிருந்தாலும் என்னை காப்பாத்தி விட்றுங்க..உங்களுக்கு கோடி புண்ணியமாக போகும். ” என்று நிமிடத்தில் வேண்டுதலை வைத்தவன் வேகமாக வெளியே வந்தான்.

 

 

“வாங்கண்ணா காபி குடிப்பீங்க”

 

 

“இல்லைங்க நான் குடிச்சிட்டேன்” அவன்  படபடப்பாய் சொல்ல…அவனை கூர்ந்து பார்த்தவள் பயந்துட்டாரு போல என புருவத்தை நீவியவாறு  யோசித்தவள்

 

 

“பயப்படாதீங்கன்னா தப்பு பண்ணாதவரை ஒண்ணும் பண்ண மாட்டேன் ” என்று சொன்னாளே பார்க்கலாம்.

 

 

“இல்லைங்க நான் இனி தப்புங்கற வார்த்தைய பத்தி கூட யோசிக்க மாட்டேன்.”  இன்னும் படபடப்பாய்கூற கண்டவள்,

 

“அண்ணா!”

 

“அப்படி கூப்பிடலாம்தானே”  அவள் அப்படி கேட்டதில் மகிழ்ந்தவன்

 

 

 

“கூப்பிடுமா தங்கச்சி” என உடனடியாக சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டான்.

 

 

“சரிண்ணா அப்ப என்னை நீங்க , வாங்கன்னு கூப்பிடகூடாது,  நீ, வா, போன்னுதான் கூப்பிடனும் சரியா” என விகல்பமில்லாமல் சிரித்தவளை கண்டவன் யாருமில்லாமல் இருந்தவனுக்கு இப்படி பாசத்தை கொட்டும் குடும்பம் கிடைக்க வேண்டாம் என்றா சொல்லுவான்.

 

 

“சரிம்மா” என்று சந்தோசமாய் தலையாட்டினான்.

 

 

“என்ன ராகேஷ் என்ன சொல்றா உன் தங்கச்சி”  என்றவாறு கௌதம் அங்கு வந்து சேர்ந்தான். உடன் கலையரசுவும் வந்துவிட்டிருந்தான்.

 

 

கௌதமின் பார்வை முழுதும் நாச்சியாரின் மீதே “இவ்வளவு பண்ணுவியா நீ? இன்னும் மாறவேயில்லை” என்பதாய் இருந்தது அவன் பார்வை.

 

 

அதிகாலை எப்போதும் போல் ஐந்து பதினைந்துக்கு எழுந்தவன் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே வர, வீராவும் வயலுக்கு செல்ல  வேண்டி அப்போதே கிளம்பியிருக்க      தெய்வானையும் அவருடன்.

 

 

“என்னப்பா கௌதம் அதுக்குள்ள முழிச்சிட்ட?” என்று கேட்க

 

 

“நார்மலி இந்நேரத்துக்கே முழிச்சிடுவேன் மாமா அதான், நீங்க இந்நேரத்துக்கே கிளம்பிட்டீங்க?”

 

 

“வயல்ல இன்னைக்கு வேலை செய்யஆளுங்க வருவாங்கப்பா இப்ப போனாதான் சரியா இருக்கும்”

 

 

“சரி மாமா அப்பநானும்வரேன்”  வரேன் அத்தை, என்றவன் அவருடன் கிளம்பி சென்றான். அதிகாலை நேர சுத்தமான காற்றை சுவாசித்தவாறே அவருடன் நடந்து சென்றவனை எதிர்கொண்டவர்கள் அனைவரும் “வாங்க தம்பி” என்று அவனிடம் நலம் விசாரித்து  பேசி செல்ல அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டே அவர்களின் வயல் வரை சென்றவன்,

 

மீண்டும் திரும்பி வரும்போதுதான்  நாச்சியார் மாடியிலிருந்து இறங்கிவருவதை பார்த்தான்.நேற்றே அவளின் அழகில் விழுந்துவிட, இன்று அவளது தோற்றத்தில் மேலும் வீழத்தப்பட்டான்.

 

 

ஆனால் அதற்கு பிறகு அவளின் லீலைகளை கண்டதும் “இன்னும் இவ மாறவே இல்ல” என்று நினைத்தவன் அவள் பாட்டியின் அறைக்கு சென்றதும் இவனும் உள்ளே சென்று தயாராகி வந்துவிட்டான்.

 

 

 

இவளோ அவன் இன்னும் பார்வையைமாற்றாமல் தன்னை பார்ப்பதை கண்டு படபடப்பாய் வர வேறு பக்கம் திரும்பி  கொண்டாள்.  இந்த தயக்கம் புதிது, எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர்தான் அவளிடத்தில் , ஆனால் இவனோ  மயக்கும் பார்வை பார்த்து வைக்கிறான்.

 

 

 

மங்கையின் நிலை ஆடவனுக்கு தெரியவில்லை…

 

ஆடவனின் பார்வை மங்கைக்கு புரியவில்லை….

 

இனி இவர்களின் நிலை ????

 

நாங்கலாம்  அப்பவே  அப்படி  –  4

 

 

 

இரண்டு நாட்கள் கடந்திருந்தது.  கௌதம் இங்கிருந்தே தன் அலுவல் வேலைகளை கவனித்துக்கொள்ள,  ராகேஷோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல  ஊரைச்சுற்றுவதிலேயே பொழுதை கழித்தான்.

 

 

மற்ற நேரமாய் இருந்தால் கௌதமிடம் வண்டி வண்டியாய் வசவுகள் வாங்கியிருப்பான்தான்! ஆனால் இப்போது அதை செய்ய இயலா நிலையில் கௌதமால் பல்லைக் கடித்துக்கொண்டு புலம்பதான் முடிந்தது.

 

 

ஒரு நேரம் கலையரசனுடன் என்றால், இன்னொரு நேரம் நம் கொரில்லா கேங்குடன்  கழிந்தது.  ஆம் இப்போது அவனும் கொரில்லா கேங்கில் அடக்கம். ஆனால் அதில் சேர்வதற்க்குள் பல வீரதீர சாகசங்களை செய்ய வேண்டியதாய் போயிற்று.

 

 

 

அதாவது அவர்களுடன் சேர்ந்து ஓணான் பிடிப்பது, மாங்காய் அடிப்பது, வீட்டிற்குள்  கௌதம் குளிக்க சென்றால் அவன் வருவதற்குள் உடுத்த வைத்திருக்கும் உடையில் எதாவது குளறுபடி செய்வது, குளிக்கும் போது தண்ணீரை அடைப்பது  இது போன்ற சிலபல  நல்ல செயல்கள்.

 

 

 

இவர்கள் செய்யும் கலாட்டாவில்  மாட்டிக்கொள்வது என்னவோ  நாச்சியார்தான். “அம்மாடி கௌதம் ரூம்ல தண்ணி அடைச்சுகிச்சு போல இந்த வாளிதண்ணிய கொண்டு போய் வச்சிடுடா” என தன் பாட்டி கூறும் போது, சரியென தலையாட்டிவிட்டு எடுத்து செல்வாள்.

 

 

 

அவருக்கு தெரியும் விருந்தாளிகளை உபசரிப்பதில்  குறும்புதனத்தை கைவிட்டு பொறுப்பாய் நடந்துகொள்வாள் என்று.  ஆனால் இன்னொன்று அவருக்கு தெரியாதே அவர் இந்த பக்கம் சென்றதும் அவள் கண்களில் தோன்றும் கள்ள புன்னகை.

 

 

கௌதமிற்கு என்றால் அவள் எதுவும் செய்யகூடியவள். எங்கு எப்படி ஆரம்பித்தது என்றால் அது அவளுக்கே தெரியாது.

 

 

ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக  அவளுக்கு பிடித்தம்தான்,அதீத பிடித்தம். சிறு வயதில் சீண்டி விளையாடிய ஞாபகம், அஞ்சுகத்தின் மூலம் கேள்விபட்ட அவன் ஆளுமைகள், தன் பாட்டியின் மேல் அவன் கொண்ட பாசம் அனைத்தும் கலந்துகட்டி அவளுள் விதைத்த நேசம் இது.

 

 

ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டாள். அதற்கு வெட்கம் காரணமல்ல, பிடித்தத்தை அவனே முதலில் கூற வேண்டும் என்ற அவா.

 

 

நீ என்ன பெரிய அழகியா!  பார்த்தவுடன் அவனும் உன்னை விரும்புவான் என்று எதிர்பார்க்கிறாயோ? என்று எதிர் கேள்விகேட்ட மனசாட்சியை சுடுநீர் ஊற்றி அடக்கியவள், அது அவனது விருப்பம் என் பிடித்தம் என்னோடே! யாருக்கும் தெரிய வேண்டாம். நடப்பது நடக்கட்டும்.

 

 

பார்க்காத போதுதான் அப்படியென்றால், இப்போது நேரில் இருக்கும் போதோ! பேச்சு வார்த்தைகள் அவ்வளவாக இருப்பதில்லை, பல நேரங்களில் மௌனத்திலேயே கடந்துவிடும்.  இதுவும் ஒரு வகை நேசமே, மனதினில் இருத்தி நினைப்பில் வாழ்வது.

 

 

அனைவரிடமும் படபட பட்டாசாக பொரிபவள் இவனை கண்டால் மட்டும் புஸ்வானமாக அடங்கிவிடுவாள். அவ்வப்போது அவன் பார்த்து வைக்கும் பார்வையில் மூச்சுக்காற்றுக்கே சிரமம் எனும் போது பேச்சு எங்கிருந்து வரும்?  திட்டி பார்த்த மனசாட்சி இது திருந்தாது! என்று அடங்கிவிட இவளது கள்ள சைட்டுகள் தாராளமாக நடைபெற்றது.

 

 

இவள் இப்படியென்றால் கௌதமின் நிலை வேறு! இவளை பற்றிய சிறுவயது ஞாபகங்கள் இன்றளவும் உண்டு.

 

 

ஏனோ!  எந்நேரமும் தன்னிடம்  வம்பிழுக்கும் பொசுபொசுவென்று இருக்கும் அந்த குட்டி பெண்ணை அவனால் மறக்க இயலவில்லை.  இங்கே வரும்போதே இப்போது எப்படி இருப்பாள் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

 

 

ஆனால் எப்போது அவளை பார்த்தானோ,   மாலை நேர கதிரவனின் இளஞ்சிவப்பு  ஒளியை போன்ற நிறத்தில், ஐந்தரை அடி உயரத்தில், கொடியிடையுடன் தாவணி பாவாடையில் பாந்தமாக இருந்தவளை கண்டு அவளா இவள்? என்னும் பாவனைதான்.

 

 

என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் வசியம் வைத்தது போல கண்களை அவளிடம் இருந்து திருப்ப முடியவில்லை.

 

கண்களில் காந்தம்தான் வைத்திருக்கிறாளோ?  விழிகள் கொஞ்சம் வித்தியாசம்தான் அவளுக்கு. “செங்கண்” என்பார்களே அதுபோல. அதன் உள் புகுந்து விடலாமா? என்று கூட யோசித்தான்.

 

 

“ச்சே என்ன இது இப்படி எல்லாம் யோசிக்கிறேன், ம்ஹும் என்னவோ செய்கிறாள் அவளை பார்க்காதே” என்று எச்சரித்தாலும் பார்த்தே ஆவேன் என்னும் கண்களை திரையிட்டு மறைக்கவா முடியும் அதன் போக்கில் விட்டுவிட்டான்.

 

 

அடுத்தநாள் அவள் அடித்த லூட்டிகளை பார்த்தவன் இன்னும் மீளமுடியா சுழலுக்குள் அவள் தன்னை இழுத்து செல்வதை உணர்ந்தான். அவள் மாறவில்லை. இன்னும் சுவாரசியமாய் விரும்பியே தொலையவும் செய்தான்.

 

 

கௌதம் ப்ரபாகர் அழகிய கந்தர்வனை போல தோற்றம்.

 

 

அதனால் எந்த இடத்திற்க்கு சென்றாலும் இளம் பெண்களின் கண்களும், அதைவிட “இவன் நம் மாப்பிள்ளையாக வந்தால்? ” என்று பெண்ணை பெற்றவர்களின் கண்களும் இவனை வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் கண்டும் காணாமல் சிறு புன்னகையுடன் கடந்து விடுவான். அதில் சிறு கர்வம் கூட.

 

 

அதற்காக பெண் தோழிகள் இல்லாமல் இல்லை அமெரிக்காவில் படித்த போது பழக்கமானவள் ” ஸ்டெல்லா” அமெரிக்க, இந்திய கலவை. ஆனால் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் கொண்ட தோற்றம்.  இன்னும் இணைப்பில் இருக்கும் நல்ல தோழிப்பெண்.

 

 

 

ஆனால் நாச்சியாரின் பார்வையோ இவனை ஆர்வமாய் தீண்டியதில்லை (அவனறிந்தவரை)  தானாக அவளிடம் செல்ல வேண்டுமா என்ற ஈகோ,  எனவேதான் விருப்பம் இருந்தாலும் நானாக கூற கூடாது என்ற எண்ணம்.  இப்படி இருவரும் போட்டி போட,  சொல்லாத காதல் சேராது என்று அறியாமல் போனது யார் குற்றம்?

 

“ப்பா” ஹாலில் அமர்ந்திருந்த வீரபாண்டியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் நாச்சியார். இரவு உணவு முடிந்து தெய்வானை சமைலறையில் இருக்க, கௌதம் பிஸினஸ் விசயமாக பேச மாடிக்கு சென்றுவிட்டான்.மற்ற அனைவரும் அங்குதான் இருந்தனர்.

 

“என்னம்மா”

 

” நாளைக்கு காரும், டிரைவரும், வேணும்பா”

 

“ஆமா ஊருல அடிக்கற லூட்டி பத்தாதுன்னு காரேறி போய் பம்பரம் விட போறாளாம்!! இந்த கொடுமை இங்கதான் நடக்கும்” என தெய்வானை தன்பாட்டிற்க்கு புலம்ப,

 

 

“எடுத்துக்கம்மா.. யார் யார் கெளம்பறீங்க?”

 

” அதுங்கப்பா ராகேஷ் அண்ணனும் இன்னும் இங்க இருக்கற இடம்மெல்லாம் பாத்ததில்லையாம் அதனால அவரு, நண்டு, சிண்டு, சுண்டு, வண்டு, கலை நீயும் வரியா? என தம்பியை வினவ…

 

 

 

“என்னை கலைன்னு கூப்பிடாதீங்கன்னா கேட்க மாட்டிகங்கறீங்க, பொண்ணு பேர் மாதிரி இருக்கு” என அழாத குறையாக கூற,

 

“ஏன்டா குட்டி நல்லாதான இருக்கு”

 

அதெல்லாம் தம்பியின் மேல் அளவில்லாத பாசம் கொண்டவள்தான், அவனும் அப்படியே! ஆனால் சீண்டல் குறையாது. அடிதடிகள்  அலுக்காது. உடன் பிறப்புகளுடன்  போராட்டம் இல்லாத சிறுவயது உண்டா என்ன?”

 

அத விடுடா, அவகளும் வராங்களா கேளு!”

 

“யாருக்கா?”

 

அப்பாவின் மடியில் இருந்து எழுந்து கொண்டாள். பேச்சு தடுமாறியது ,

 

“அதா…ன்டா கௌ…தம்”

 

 

 

வீரா தன் தந்தையுடன் நிலத்தை அறுவடை பற்றி பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. அஞ்சுகம் பாட்டி மட்டுமே பேத்தியின் நிலஅதிர்வு போன்ற ஒரு நிமிட தடுமாற்றத்தை கண்டு கொண்டார். அது அறிவித்த செய்தி அவருக்கு மகிழ்வை வாரி இறைத்தது.

 

 

“ஆண்டவா இந்த விசயத்தை நல்லபடியா முடிச்சு கொடுப்பா” என்றுவேண்டுதலும் வைக்கப்பட்டது.

 

 

“அட அத்தான கேட்டீங்களா,  அதெல்லாம் நான் கூப்டா வருவாங்க” என பெருமையாக சொல்ல இவளுக்கு காந்தியது.  எந்நேரமும் அத்தான்,பொத்தான்னு வால புடிச்சுகிட்டே திரிய வேண்டியது.

 

ஏன் நீயும் திரிய வேண்டியதுதானே! என மனசாட்சியின் கேள்விக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.

 

 

காலையில் நான் வந்துட்டேன் என்றவாறே வெப்பத்தை வாரி இறைத்தவாறே கதிரவனும் வந்தான்.  ராகேஷ், அரசு இருவரும் தயாராக இருக்க, நாச்சியார் கடலின் பல வகையான நீல வண்ணங்களை கொண்ட தாவணி பாவாடையில் கடல் கண்ணியை போல் மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.

 

 

கௌதமும் அப்போதுதான் மாடியில்  தன் அறையில் இருந்து வெளியே வர, அப்படியே நின்றுவிட்டான்.

 

அப்சரஸ் போல இருந்தவள் இவன் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பாதிபடியிலேயே திரும்பி பார்க்க இதயம்  ரேஸ் குதிரையை போல தறிகெட்டு ஓட தொடங்கியது. அதை நிறுத்த கடிவாளம்தான் ஏது? தன் நெஞ்சை நீவியபடி தனிக்க முயன்றான், அந்தோ பரிதாபம் மோசமாக தோல்வியை சந்தித்தான்.

 

 

இவன் நின்ற நிலையை பார்த்து எதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று எண்ணியவள் மேலே ஏறி வந்தாள். அருகில் வரவர அவள் சுகந்தம் காற்றில் அவளுக்கு முன் இவனை சேர்ந்தது. அதை ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்தவனுக்கு சற்று ஆசுவாசமடைவதுபோல் தோன்றியது.

 

 

நோயும் அவளே ; மருந்தும் அவளே!  மனம் நொடியில் ஒரு ஹைக்கூவை எடுத்து விட உனக்கு முத்திடுச்சுடா! என அவனுக்குள்ளே கூறிக்கொண்டான்.

 

“என்னாச்சு?”

 

“ஒன்னுமில்லையே!”

 

“இல்ல ஏதோ நெஞ்சை புடிச்சிகிட்டு நின்னீங்களே அதான் ..”

 

“அதான்”

 

“வலிக்குதோன்னு” கண்களில் சிறு கலவரம், பரபரப்பு. அதை கண்டதும் இவனுக்கு சில்லென்ற உணர்வு.

 

“ம் ஆமா ஒரு மோகினி அடிச்சிட்டா” மயக்கத்துடன் கூற,  அவனது பதிலில் அவனை ஒரு மாதிரி பார்த்தவள்  திரும்பி சென்றுவிட,

 

 

“அடிப்பாவி ஒன்னும் சொல்லாம போறா! இருடி வைக்கறேன் செக்!”

 

இவள் சென்றபோதே நான்கு வாண்டுகளும் வந்திருக்க “பார்த்து பத்திரமா போய்ட்டு வரனும்” என்ற அறிவுரையோடு தெய்வானையின் கைவண்ணத்தில் சாப்பாடும் நொறுக்கு தீனிகளும் தயாராக வர காரில் அத்தனையும் ஏற்றினர் அண்ணனும், தம்பியும். அதாங்க ராகேஷும், அரசுவும்.

 

கௌதம் வந்தவன் கீழே அமர்ந்து விட “என்ன அத்தான் உட்கார்ந்துட்டீங்க? வாங்க போலாம்.” நாச்சியாரை ஒரு பார்வை பார்த்தவன்

 

“இல்லடா அரசு நான் வரல” உடனே அவளது முகம் சுருங்குவதை கண்டு மனம் ஆனந்தத்தில் துள்ளியது.

 

“ஏன் பாஸ் வாங்க போலாம்” என ராகேஷும் அழைக்க

 

“சார்தான் ஆபீஸ்னு ஒன்னு இருக்கறதையே மறந்துட்டு  உடன்பிறப்புகளோட ஊர்கோலம் போறீங்க, நானும் அப்படி இருக்க முடியுமா ஆபீசர்” என கேட்க இனி அவன் வாயை திறப்பான். இரண்டடுக்கு பாதுகாப்போடு பூட்டிக் கொண்டான்.

 

 

பேத்தியின் முகம் வாடியதை பார்த்த அஞ்சுகம் “கௌதம் கண்ணா எந்நேரமும் ஆபீஸ் வேலைதானா போய்ட்டு வாப்பா” என கூற அவரிடமும் ஒருவாறு சமாளித்தவன் சட்டமாக அமர்ந்திருக்க மற்ற இருவரும் வாண்டுகளை அழைத்து சென்று விட்டனர்.

 

 

இவள் அழைப்பாளா என அவனும், வந்துவிடேன் என்று அவளும் மனதிற்குள் விண்ணப்பமிட வாயில் வரை சென்றவள் திரும்பி ஒரு பார்வை பார்த்து சென்றாள். ஆயிரம் கதைகள் சொன்னது அப்பார்வை.  அதன் பொருளை படித்தவன்

 

 

” கடவுளே பார்த்தே கொல்றா!ஒன்னும் இல்லாத மாதிரி நடிக்கறா! சீக்கிரமே உன்னை என்கிட்ட வர வைக்கல நான் கௌதம் இல்லடி என் ப்யூட்டி.ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்”

 

 

“சரி டார்லிங் இவ்ளோதுரம் நீங்க சொல்றதால நானும் போய்ட்டு வரேன்.”

 

“பார்த்து போய்ட்டு வா பேராண்டி!”

 

அதற்குள் ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் ராகேஷ் அமர்ந்திருக்க, அரசுவும, நாச்சியாரும் நடுபகுதியில் அமர்ந்தனர். நான்கு வாண்டுகளும் பின்னால் குதூகலித்தபடி ஏறிக்கொண்டனர்.

 

 

கார் கிளம்ப இருந்த சமயம் கௌதம் வந்தான்.  அவனின் நவீன விலையுயர்ந்த கேமிரா சகிதம். வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் காரின் நடுபகுதியில் ஏறி அமர நாச்சியார் ஆனந்தமாய் அதிர்ந்தாள். நொடிக்கும் குறைவான மகிழ்ச்சியை அவள் கண்ணில் கண்டவன் கண்கள் மின்னின.

 

பாஸ் நீங்க முன்னாடி வாங்க என்று அழைத்தவனிடம் “இல்லை ராகேஷ் இதே கம்ஃபர்டபிளா இருக்கு” என்று மறுத்து விட்டான்.  அரசுவும், ராகேஷும் பேசியபடி வர, நாச்சியார் வேடிக்கை பார்ப்பதும் சைடில் சைட்டடிப்பதுமாக வர, கௌதம் பின்னால் இருந்த சிறுவர்களிடம் பேச்சு கொடுத்தான்.

 

 

“டேய் பசங்களா உங்க பேர் என்ன? ” அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்க தங்களை ஆதி முதல் அந்தம் வரை  கூறினர்.

 

 

“வீட்ல எப்படி விட்டாங்க உங்கள?”

 

” ஏன் மாமா அக்காகூடதான வரோம் அதெல்லாம் விட்டுடுவாங்க”

 

“பார்றா உங்க அக்கா மேல அவ்ளோ நம்பிக்கையா”  சைடில் அவளை பார்த்துக் கொண்டே வினவ,

 

 

பின்ன எங்க அக்கா யாரு? அவங்க பவரு என்ன? அவங்கள எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா?”  இந்த நான்கு வாண்டுகளின் வீடுகளிலும் நாச்சியாருக்கு நல்ல பழக்கம். அவ்வப்போது இப்படி அழைத்து செல்வாள்தான். இவள் சமாளித்து விடுவாள் என்பதாலேயே நான்கு வயது வண்டை கூட அவன் அன்னை அனுப்பி விடுவார்.

 

“டேய் பசங்களா சும்மா இருங்க”  அவளுக்கு படபடப்பாய் இருந்தது.

 

“அவங்கள ஏன் அடக்கற?”

 

“அதான நம்ம மாமா தானேக்கா”

 

“அதென்னடா மாமா, ராகேஷ் மட்டும் அண்ணா சொல்றீங்க?”அவன் சாதாரனமாகதான் கேட்டான்  இவளுக்குதான் படபடப்பாக வந்தது.

 

“கௌதமா! நீ அமைதியா வந்தால் தேவல” என எண்ணதான் முடிந்தது. அதற்குள் அடுத்த கேள்வியை கேட்டிருந்தான்

 

“யார்டா உங்களுக்கு சொன்னது என்ன மாமான்னு கூப்பிட சொல்லி?”

 

“அக்காதான்” உடனே கோரசாக பதில் வந்தது.  மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல திரும்பி கொண்டாள்.

 

 

அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான், “ஆனா உங்கக்கா இதுவரை என்னை மாமான்னு கூப்பிட்டதில்லையே!”

 

“அக்கா ஏன்கா என்ககிட்ட மட்டும் என் மாமான்னு சொன்ன” என்று மாட்டிவிட

 

“ம்ஹீம் இவனுங்கள அடக்கியே ஆகனும்” வலுக்கட்டாயமாக கோபத்தை பறைசாற்றும் குரலில் “டேய் என்னடா இப்ப, எனக்கு தோன்றப்பதான் கூப்பிட முடியும்! கம்முனு வாங்க இல்லைனா இனி எங்கயும் கூட்டிட்டு போக மாட்டேன்” என்றூ கூறி விட அதன்பின் பேசுவார்களா என்ன?

 

“பாரேன் எப்படி சமாளிக்கறா? எவ்வளவு நாளைக்கு சமாளிப்ப, மாட்டுவ ப்யூட்டி நீ என்கிட்ட வசமா மாட்டுவ அப்ப இருக்கு உனக்கு”  என எண்ணி கொண்டவனுக்கு தெரியவில்லை இன்று மாலையே அவளிடம் அரை வாங்குவானென்று!!!!!

 

 

 

நாங்கலாம்  அப்பவே அப்படி —  5

 

 

“கோயமுத்தூர சுத்தி பார்க்க போறேன்; ஆழியாரில் வீடுகட்ட போறேன். வைதேகி ஃபால்ஸ் வாங்க போறேன். நான் கோவைக்கு ராஜாவாக வாரேன்.”

 

 

ராகேஷ் குஷியாக பாடியபடி வர குட்டீஸ் அவனுக்கு கோரஸ் கொடுத்தபடி வந்தனர்.

 

 

“ஹா..ஹா.. ஃபால்ஸ் வாங்க போறிங்களா யாரு உங்களுக்கு விக்கறாங்களாம்! எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாம்.” என அரசு நக்கலடிக்க,

 

 

” போடா இவனே போலி பட்டா ரெடி பண்ணிடலாம்”

 

 

“ஹான்..என்று வாயை பிளந்தவன் அப்படியெல்லாம் பண்ண முடியுமா?” அரசு ஆச்சர்யமாய் கேட்க.

 

 

“நீ இன்னும் வளரனும் தம்பி, இவ்வளவுஅப்பாவியா இருக்க, பொணத்துக்கே ஆதார் கார்டு அடிக்கறவங்க இருக்க ஊருடா இது. ”

 

 

“எப்படிண்ணா இப்படி” அரசு வியந்தபடி வினவ, “முட்டைக்கு முன்னாடி கூ சேர்ந்து” இருக்கவங்க பொறுப்புல இருக்க ஊருல இதெல்லாம் சாத்தியம்தான்.” என்றவாறு நடக்க,   நாச்சியார் இவர்களுடன் சேர்ந்து சிரித்தபடி வந்தாள்.

 

 

கௌதம் தன் புகைப்பட கருவியில் காட்சிகளை பதிவு செய்தபடி பின்னால் மெதுவாக வந்தான். அதில் அனேகம் நாச்சியாரே நிரம்பி இருந்தாள்.

 

 

விதவிதமான போஸ்களில் எடுத்து தள்ளியிருந்தான் யாரும் அறியாமல் . காதலித்தால் கள்ளத்தனமும் தானாக வந்துவிடுமோ?

 

 

அவர்கள் இப்போது இருப்பது திருமூர்த்தி மலையில். காலை முதல் பரம்பிகுளம் ஆழியாறு அணை சென்று, வருடம் முழுதும் நீர் கொட்டும் வைதேகி நீர்வீழ்ச்சியில் ஆட்டம்போட்டு அங்கேயே மதியம் உண்டுவிட்டு,

 

 

ஆனைமலை என பல இடங்களில் சுற்றி விட்டு இப்போது திருமூர்த்தி மலை வந்துள்ளனர். இங்குதான் அனுசுயாதேவி மும்மூர்த்திகளை குழந்தைகளாக மாற்றியதாக கூறுவர்.

 

 

அங்குள்ள இறைவனை வணங்கிவிட்டு அருவிக்கு வந்தனர். மேலிருந்து கொட்டும் அருவி சிறிது தூரத்தில் பரந்து விரிந்து தேங்கும்.  கௌதம் அருவியில் நனைய மறுத்து  இயற்கைக்கு போட்டியான அழகோடு, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே நீராட்டிக்கொண்டிருந்தவளை வளைத்து வளைத்து படம் எடுத்தான்.

 

 

“கௌதமா இது மட்டும் உன் ப்யூட்டிக்கு தெரிஞ்சது நீ காலி மவனே!” என மனம் எக்காளமிட

 

 

“அதெல்லாம் தெரியாது, தெரிஞ்சாலும் குழந்தைங்களதான் எடுத்தேன்னு சமாளிச்சிடுவேனே!”

 

 

” இப்படி கவுந்திட்டியேடா” என மனசாட்சி நகைக்க, அதை புறம் தள்ளியவன் காமிரா கண்கள் மூலம் தன்னவளை விழுங்க தொடங்கினான்.

 

 

இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு ஒரு ஜோடி கண்கள் நாச்சியாரை வெறித்தபடி பார்த்தன

 

 

.  அதுவரை குழந்தைகளோடு பாறையில் அமர்ந்து விளையாடியவள், ஓரக்கண்ணால்  நோட்டமிட்டபடி, “இந்த கௌ எங்க” என தேட கௌதம் ஒரு பாறையின் மேல் ஏறிக்கொண்டிருந்தான்.

 

 

அது வழுக்கும் பாசிகள் படர்ந்திருக்க மிகவும் அபாயகரமானதாக இருந்தது. கீழேயும் கரடுமுரடான பாறைகள் அதிகமாக இருந்தது. விழுந்தால் தலையில் எப்படி  அடிபடும் என்று அறுதியிட்டு கூற இயலாது.

 

 

அவளுக்கு திக்கென்று இருந்தது “இந்த கௌ ஏன் அங்க போகனும்.”

 

 

“அங்க போகாதீங்க அந்த பாறை வழுக்கும்” என இங்கிருந்தவாறு கத்தினாள்.  அவன் கேட்பதாயில்லை இதோ வந்துவிடுகிறேன் என சைகை செய்தவாறு சென்றான்.

 

 

நீருக்கு அடியில் நின்றிருந்த ராகேஷ்,  அரசு இருவருக்கும் இரைச்சலால் எதுவும் தெரியவில்லை.  இவளுக்குதான் படபடப்பாக இருந்தது.சிறுவர்களை போதுமென அழைத்து  அவர்களுக்கு தலையை துவட்டியவாறு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

 

தலையை துவட்டி முடித்து உடை மாற்றுமாறு அவர்களை காருக்கு  அனுப்பி வைத்து விட்டு ,பிறகு அவனை பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.

 

 

அவன் ஒரு கட்டத்தில் தடுமாற, இவள் “பார்த்து” என இங்கிருந்தே கத்தினாள்.

 

 

அவளை அப்படி பதட்டமாக பார்த்தவனுக்கு சுவாரசியமாக,  “இப்பதான் என்னை கண்டுக்கறா, இருடி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்றேன்”  என எண்ணி அடுத்த அடி எடுத்து வைத்தவன் பாறை வழுக்கி கீழே நீரில் விழுந்துவிட்டான்.

 

 

இவளுக்கு ஒரு நிமிடம் உயிரே உறைந்துவிட்டது.  அடுத்த நொடி  மின்னலென பாய்ந்திருந்தாள் அவனை நோக்கி.

 

 

“கௌதம்” என கத்தியவாறு தலைதெறிக்க ஓடியவளை பார்த்த அரசுவும், ராகேஷும் சத்தத்தில் ஒன்றும் கேட்காமல் என்னவென அறியாமலேயே ஓடி வந்தனர். பிறகுதான் தெரிந்தது கௌதம் விழுந்தது.

 

 

“பாஸ்”

 

“அத்தான்”

 

என இருவரும் விரைந்து இறங்கி அவனை தூக்கியபடி வெளியே வந்தனர்.  அவன் உடலில் அசைவுகள் இல்லை.

 

 

கீழே அமர்ந்து அவன் தலையை மடிதாங்கியவள் நடுங்கும் விரல்களால் முகத்தை  ஆட்டியவாறு  “கௌதம், கௌதம்” என அழைக்க பதட்டத்தில் பேச்சே வரவில்லை.

 

 

கண்களில் நீர் அருவி போல கொட்டிக்கொண்டே இருந்தது. விழிநீர் அவனை மறைக்க புறங்கையால் கண்ணீரை துடைத்தவாறு முகம் முழுதும் தடவி தடவி பார்த்து “கௌதம், கௌதம் ” என அரற்றிக்கொண்டே இருந்தாள்.

 

 

அரசுவும் பதட்டமாகஆராய்ந்தான் எங்கேயும் அடிப்பட்டது போல தெரியவில்லை!

 

 

“அக்கா அழாத ஒண்ணுமில்லை  தோ எங்கயும் அடிபடலை பாரு”

 

 

ராகேஷுக்கும் அதிர்ச்சியே உடன்பிறந்தவனை போல அல்லவா அவன்!

 

 

இருப்பினும் விடாமல் அரற்றிக்கொண்டிருந்த இவளை தேற்றும் பொருட்டு “ஆமாம்மா அடி எதுவும் படல, விழுந்த அதிர்ச்சியில மயங்கியிருப்பார்”

 

 

ஒரு நிமிடம்  ஆசுவாசமடைந்தாலும், அடுத்த நொடி “கடவுளே உள்காயம் மாதிரி பட்டிருந்தா” என மனம் கண்டதையும் தூபம் போட ஆரம்பித்தது.

 

 

இவளின் தவிப்புகளை கண்மூடி ரசித்தவன் போதும் விளையாண்டது என கண்களை திறக்க,  அவளுக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.

 

 

“கௌதம்  உங்களுக்கு அடிபடலயே ” என  பதட்டத்துடன் வினவ  மெல்ல எழுந்தவன்

 

” ஒண்ணுமில்லை”

என தலையை ஆட்ட,

 

 

ராகேஷ் “ஊஃப் பாஸ் ஒரு நிமிசம் கொன்னுட்டீங்க” என அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

 

தானும் அவனை அணைத்துக்கொண்டவன் “டேய் ஒண்ணுமில்லடா” என சமாதானம் செய்ய ஒரு வாறு அவனை விட்டவன்,

 

 

பார்த்து இருக்கலாம்ல என்று மீண்டும் தொடங்க ஒருவாறு இவனையும் அரசுவையும் சமாதானப்படுத்தியவன்,  காமிரா மேலேயே இருக்கிறது அதனை எடுத்துக்கொண்டு,  உடைமாற்றி வர சொல்ல,  இருவரும் அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

 

 

தனிமையில், இன்னும் அவன் மேனியில் எதாவது அடிபட்டிருக்கிறதா என ஆராய்ந்தவளை பார்த்தவன்

 

“ஹேய் பம்ப்கின் எனக்கு ஒண்ணுமில்லடி” என தன்னை சுற்றி காட்டியவனை பார்த்தவள் தன் கோட்பாடுகளை கலைந்து, அவன் விழுந்ததால் தவிப்புகள் மட்டுமே எஞ்சியிருக்க ,

 

 

“கௌதம்” என்றவாறு பாய்ந்து அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். முகத்தை பற்றி முகம் முழுதும் முத்தங்களால்  அர்ச்சித்தவள், மீண்டும் அணைத்துக்கொண்டு

 

 

“எருமமாடே என்னை சாகடிக்கனும்னே இருக்கியா?” என்று சரமாறியாக அவன் முதுகில் மொத்த,

 

 

அவனுக்குள் இன்ப அதிர்வு . மெதுவாக மேல் எழும்பிய கை அவளை இறுக்கமாக அணைத்து, காதோரம் மீசை முடிகள் உரச

 

“ஹேய் பம்ப்கின் என்னடி”

 

 

என கிசுகிசுப்பாக வினவ,   அவன் நெஞ்சில் மேலும் புதைந்தவாறு, இல்லை என தலையசைக்க அவனுக்கோ கட்டுப்பாடுகளை களையும் உணர்வு. அதை அணைப்பின் இறுக்கத்தில் காட்டினான்.இன்னும் சிறுபிள்ளை போல தேம்பியவளை சமாதானப்படுத்த,

 

“ஹேய் ப்யூட்டி இங்க பாரு ஒன்னும் ஆகிருக்காதுடி, பாறை இல்லாத நல்ல இடமா பாத்துதான் குதிச்சேன்” என வாயை விட,

 

 

அதில் தன் தலையை அவனிலிருந்து பிரித்து புரியாமல்  பார்க்க,  அவனுக்கு சந்திராஷ்டமம் உச்சத்தில் இருந்ததோ என்னவோ!

 

 

“ஆமாண்டி , வேணும்னேதான் குதிச்சேன். அதனாலதான நீ இப்படி இருக்கற” என அவர்களிருக்கும் நிலையை சுட்டிக்காட்ட,

 

 

உடனே அவனை விட்டு விலகியவள் கண்ணீரை துடைத்தவாறு “அப்ப வேணும்னேதான் விழுந்தீங்களா?” சீற்றத்தை அடக்கியபடி வினவ,

 

 

அவன் “ம்ம்ம்” என்ற நொடி அவள் கை அவன் கன்னத்தில் பதிந்திருந்தது.  ஆழமாய் ,அழுத்தமாய் ஐந்து விரல்களின் ரேகை பதியுமளவு.

 

 

என்னுடைய பரிதவிப்பு இவனுக்கு விளையாட்டாமா என எண்ணிய நொடி இதனை செய்து விட்டாள்.

 

 

அவன் அதிர்ந்தது ஒரு நொடியே, அவனது  அகங்காரம் தலைதூக்க அவள் பின்னந்தலைமுடியை வலிக்க பற்றியவன் தன் முகத்திற்க்கு அருகில் கொண்டு வந்து

 

“என்னடி ஆம்பிளைய கைநீட்டுற பழக்கம்”

 

 

வலி இருந்தாலும் அதை காட்டாமல் அவன் கையை தட்டிவிட முயல அதை எளிதாக தடுத்தவன்

 

“எவ்வளவு  தைரியம், என்னை அடிச்ச உன்னை திருப்பி அடிக்க வேணாம்?” எனக் கூறியவன்,

 

 

அவள் உணரும் முன் அவள் வயிற்றில் கை வைத்து தள்ளி அருகில் இருந்த பாறையின் மேல் சாய்த்தவன் அவள் இதழ்களை வன்மையாக சிறைபிடித்தான்.

 

 

அவள் எதிர்க்க,  எதிர்க்க  அவள் மேல் தன் மொத்த உடலும் உரச பரவி நின்றவன் அவள் அசையாதவாறு பிடித்திருக்க, இடது கை பின்னந்தலையில் அழுத்தத்தை கூட்டி மேலும் தன் முகத்தோடு அழுத்த, வலது கையோ கொடியிடையை கன்றி போகும் அளவிற்க்கு இறுக்கியது.

 

 

முதலில் கோபத்தில் வன்மையை கையிலெடுத்தவன் அவள் மென்மையில்  உருகி குழைந்து பின் மென்மையாய் ஒற்றை முத்தத்தில் உயிரை உறிஞ்சும் அரக்கனாய் மாறியிருந்தான்

.

 

 

 

 

 

நாங்கலாம் அப்பவே அப்படி–  6

 

 

 

நாளை வெள்ளிக்கிழமை, ரத்னபாண்டி, காமாட்சி தம்பதிகளுக்கு அறுபதாம் ஆண்டு திருமணநாள் விழா . அதற்காக வேண்டிதான் அஞ்சுகம் பாட்டி வந்தது.

 

 

மறுநாள் விசேசம் என்பதால்  வீடு முழுதும் ஆட்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அஞ்சுகம் பாட்டிகூட எதாவது வேலையை மேற்பார்வையிட்டபடி இருந்தார்.

 

 

“ஏலேய் முத்தா மண்டபத்துக்கு காய்கறியெல்லாம் போயாச்சா” வீரபாண்டி.

 

 

“அதெல்லாம் நம்ம சின்னதம்பி வந்து சரிபார்த்து வாங்கி வச்சுட்டாக அய்யா!”

 

“யாரு கௌதமா?”

 

 

“ஆமாங்கய்யா”

 

 

“வாழை மரத்துக்கு சுப்பையாகிட்ட  நம்ம தோட்டத்துல வெட்டி வைக்க சொல்லிருக்கேன் அத என்னான்னு பாத்துக்க”

 

 

“அய்யா அதையும் சின்னய்யா வெட்டி மண்டபத்துக்கு அனுப்பிட்டாக”

 

 

“பொறவு அலங்காரத்துக்கு….”

 

“அய்யா அதுவும் தான்க, நம்ம சின்ன தம்பி பம்பரமா சொழண்டு எல்லா வேலையும் முடிச்சிபுட்டாக, நீங்க வெசனப்படாதீக”

 

 

வீரபாண்டிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஒற்றை ஆளாய் கவனிக்கும் ஆளுமைகாரன். அங்கு அவன் பின்பமே வேறுமாதிரி!  ஆனால் இங்கு இவர்களுக்கு இணையாய் இறங்கி வேலை பார்ப்பதில் அவருக்கு அளவில்லா பெருமை, பாருங்கயா இதுதான் எங்க குடும்பம் என்பதாய்.

 

 

இவர்களும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல!  அங்கே ஏ.சி. அறை என்றால் இங்கே களத்துமேடு; அங்கே நுனிநாக்கு ஆங்கிலம் என்றால், இங்கே மண்மணக்கும்  கொங்குதமிழ்; அங்கே ஆடம்பரம் கொண்டு அறியப்படும், இங்கே பாரம்பரியம் கொண்டு அறியப்படும்;

 

 

“எல்லா வேலையும் அவகளே பார்த்தா நீங்க என்ன வேலை பார்த்தீங்க?”

 

 

தலையை சொறிந்தவாறு “அய்யா அவககூட அந்த  ராகேசு தம்பி, நம்ப தம்பி அப்பறம் உதவிக்கு மருதும், கண்ணணும் இருக்காங்க”

 

 

 

“சரிசரி நீ எதுக்கும் மண்டபத்துக்கு போய்ட்டு எல்லாம் சரியா இருக்கான்னு இன்னொரு முறை சரிபார்த்துடு, அப்படியே தம்பி ராத்திரிக்கு அங்கனயே தங்கறாங்களாம் அதனால அவகளுக்கு  உடுப்பு தரேன் எடுத்துபோய் கொடுத்துடு” என்றவாறு

 

 

“ஆத்தா நாச்சியா!”

 

 

அதுவரை தந்தை பேசுவதை ஒருவித சலிப்புத்தன்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள்

 

 

” என்னங்கப்பா”

 

 

“ஆத்தா அப்படியே பசங்க மூனுபேருக்கும் புது உடுப்பு எடுத்து என்ற அறைல இருக்கு அத எடுத்து வந்து கொடாத்தா”

 

“ம்.. சரிங்கப்பா”

 

“ஏன் இங்க வரவே மாட்டானாமா? கௌதமா நாளைக்கு உனக்கு இருக்குடா” என கறுவியவாறு எடுத்துவந்து கொடுத்துவிட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள்.

 

 

 

“ஏனுங்க அத்தை இந்த குட்டிக்கு என்னாச்சு நாலுநாளா என்னவோபோல இருக்கா!” பூத்தொடுத்துக்கொண்டிருந்த  தெய்வானை காமாட்சியிடம் வினவ,

 

 

 

காமாட்சி “ஏமா மருமவளே,உன்ற மவள வையாம பொழுது போகலயா?” என்றார் சிரிப்புடன்.

 

“ஏனுங்க அத்த நான் வேணும்னா அவள வையறேன்!  நாளை இன்னொரு குடும்பத்தில வாக்கப்பட போற பொண்ணு, அடக்கமா இருக்க வேணாம், சிறுவாண்டுக கூட ஊர சுத்திக்கிட்டு எல்லார்கிட்டயும் வம்பிழுத்துக்கிட்டு இருக்கறா. அவ வெளில போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் மனசு ஒரு நிலைல இருக்க மாட்டிங்குது” என தாயாய் அவர் புலம்ப,

 

 

“அதுக்கு என்ன ஆத்தா வயசுப்புள்ள அப்படி கலகலப்பா இருந்தாதான் வீடு, வீடா இருக்கும். அவ இந்த வீட்டு மகாலட்சுமி ஆத்தா. அவளால கௌரவமும், பெருமையும்தான் உண்டே ஒழிய நீ தலைகுனியற மாதிரி எந்த வேலையும் செய்ய மாட்டா!”  அது என்னவோ உண்மை என்பதால் தெய்வானை அமைதியாகிவிட்டார்.

 

 

அங்கு மண்டபத்தில் கௌதம் பரபரப்பாக வேலையெல்லாம் சரியாக நடக்கிறதா என கவனித்துக்கொண்டிருந்தான். முன்று நாளாய் சரியான உறக்கம் இல்லை. அதன் விளைவாக கண்கள் சிவந்து காணப்பட்டன.

 

 

பூந்தோரணங்களை கட்டுவதற்க்கு உதவி செய்தவாறு இருந்தவனை “பாஸ்.. பாஸ் ..என்ன நீங்க இந்த வேலையெல்லாம் செய்யறீங்க, இங்க வந்து ஆளே மாறிட்டீங்க. அங்க அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பீங்க, இங்க இவ்வளவு ஜாலியா இருக்கீங்க எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யறீங்க  இதுல எந்த பாஸ் நிஜம்”

 

 

அவன் புன்னகையோடே “அதெல்லாம் கிளைதான் ராகேஷ், ஆனா வேர் இங்கதான். வேர எப்படி விடமுடியும்? வேர் இல்லைனா கிளையும் தங்காது. இது புரிஞ்சாலே போதும்”

 

 

இப்போது பிரம்மிப்பாக பார்ப்பது அவன் முறையாயிற்று.  எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிதாக கூறிவிட்டான்.

 

 

“ஏக்கமா இருக்கு பாஸ்” அதில் இருந்த பாவனையில் திரும்பி அவனை பார்த்தவன்

 

“எதுக்கு”

 

 

சுற்றி அந்த இடத்தை பார்வையிட்டவாறே  நெஞ்சை தடவியவன் “இங்க நான் பிறக்காம போனனேன்னு!!!!!!!”  கண்கள் கூட சற்று கலங்கியதோ???

 

 

ராகேஷ் அனாதை இல்லத்தில் வளர்ந்தாலும் எதற்கும் கலங்கியவன் இல்லை.பள்ளி படிப்பு வரைதான் ஆசிரமம் பார்த்துக் கொண்டது.

 

 

அதன் பிறகு தன் கையே தனக்குதவி என்பதை போல  சொந்த முயற்சியால் கல்லூரி படிப்பை முடித்தான்.  யாரும் இல்லாதவன் என்று தன்னை யாரும் இரக்கமாய் பார்க்க கூடாது என்பதற்காகவே தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொள்வான்.

 

 

 

ஆனால் இங்கு வந்த பின்பே இவர்களின் அன்பெனும் மழையில் நனைந்து  மனித மனங்களின் அன்பிற்காக ஏங்க தொடங்கினான்.

 

 

அப்போது அங்கு அரசு செல்வதை பார்த்த கௌதம் “டேய் அரசு இங்க வா”  “என்ன அத்தான்?”

 

 

“ம்..இந்த சார்ர்ருக்கு யாரும் இல்லைனு ரொம்ப பீலிங்கா இருக்காம் என்னான்னு கேளு”

 

 

அவனை திரும்பி முறைத்தவன் “இருங்க அக்காகிட்ட போட்டு குடுக்கறேன்” அதில் ஜெர்க்கானவன்

 

 

“தம்பி ராசா அந்த உன்னத வேலையை மட்டும் செஞ்சிடாத புண்ணியமா போகும்”

 

 

“ஆ…அது இனிஇப்படி பேசுனீங்க …”

 

 

மாட்டேன் மாட்டேன்” என்று கையெடுத்து கும்பிடஇருவருக்கும் சிரிப்பு..

 

 

“சிரிங்க சிரிங்க என்னைய வச்சு எல்லாரும் காமெடி ஷோ நடத்தறீங்க!! ” என்று போலியாய்  சலித்துக்கொள்ள

 

 

“நாங்க நடத்துல நீங்களே நடத்திக்கறீங்க..ஹா..ஹா..” என்று சிரித்த அரசு போய்விட,

 

 

“பாஸ் நீங்க போய் கொஞ்ச நேரம் தூங்குங்க நான் இதை பார்த்துக்கறேன்.”  அவனுக்கும் ஓய்வு தேவைப்பட்டது அதனால் செய்ய வேண்டிய வேலைகளை அவனிடம் கூறிவிட்டு அங்குள்ள ஒரு அறையில் முடங்கிவிட்டான்.

 

 

 

உறங்க முயன்றானே ஒழிய உறக்கம் வராது போக்கு காட்டிக் கொண்டே இருந்தது.இரு கைகளையும் தலைக்கு கொடுத்தவாறு படித்திருந்தவன் மனதில் அன்று அருவிக் கரையில் முத்தமிட்டது நினைவில் வந்ததும் முகம் தானாக புன்னகையை பூசிக் கொண்டது.

 

 

“வெக்கமா இல்ல அந்த புள்ள உன்னை அடிச்சிருக்கு நீ என்னடான்னா பல்ல காட்டற? ” என மனசாட்சி கேலி பேச,

 

“பதிலுக்கு நானும்தான அடிச்சேன்” என கெத்தாக கூற ,

 

 

“ஹான்..என்ன நீ அடிச்சியா? அடிச்சியா? அடிச்சியா? (எதிரொலி அதாவது எக்கோ) எப்ப நானும் அங்கதான இருந்தேன் ”

 

 

“எல்லார் கண்ணுக்கும் அது தெரியாது” மயக்கத்தோடு கூற,

 

 

“என் கண்ணுக்கு கூடவா?”

 

 

“நானே கண்ண மூடிதான் அடிச்சேன், அதான் என்ன நினைக்கறான்னு தெரியாம மண்டை காயறேன்”

 

 

“இவன் பேசறதே புரியல எப்ப அடிச்சான் என யோசித்தவாறே மனசாட்சி இடத்தை காலி செய்தது.

 

 

 

அன்று அருவி  கரையில் அவள் மொத்த  உயிரையும் ஒற்றை அச்சாரத்தில் உறிஞ்சுபவன் போல அவளை மூச்சுக்காற்றுக்கு தவிக்க விட்டவன் மெதுவாக விடுவித்து அவள் கழுத்தில் இறங்கி பயணிக்க, அதுவரை இருந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினான்.

 

 

அதை பயன்படுத்திக்கொண்டவள் அவனை தள்ளி விட்டு ஓடிவிட இவன் மீண்டும் நீருக்குள் விழுந்தான்.  அவன் மீண்டும் எழுந்து பார்க்கையில் அவள் ஓடிவிட்டிருந்தாள்.

 

 

“ச்சே” என்றவாறு தலையை கோதியவன் “நானா இப்படி!  அதுவும் பொது  இடத்தில, என்னமோ வசியம் பண்றா! கடவுளே கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டா” முன்னதை  சத்தமாக சொன்னவன் பின்னதை முணுமுணுத்தவாறு  மந்தகாச புன்னகையுடன் அவர்களிருக்கும் இடம் வந்தான்.

 

 

அவள் முன்பாகவே காரில் ஏறி கலையரசனையும் அவளுடன் நடுவில் இருத்திக்கொண்டாள்.  அவனையும் பார்க்கவில்லை, அவனை பார்க்க விடவும் இல்லை.

 

 

என்ன நினைக்கிறாள் என்றே தெரியாமல் மண்டை காய்ந்தது அந்த பிஸினஸ் புலிக்கு. மற்றவர் முகத்தை பார்த்தே எண்ணங்களை துல்லியமாக அளவிடும் அவனால் அவளை அறிய முடியவில்லை.எங்கே அவள்தான் முகத்தையே காட்டவில்லையே!

 

 

 

வீட்டிற்குசென்றவள் தன் அறையில் சென்று அடைந்து கொண்டாள். வெளியே வரவும் இல்லை. இவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை விடைபெற, இனியும் அவள் தன் கண்முன் வராவிட்டால் கோபத்தில் எதாவது செய்துவிடுவோம் என எண்ணியவன்  திருமணத்திற்க்கான வேலையை எடுத்துக் கொண்டான்.

 

 

அலுவலக வேலை, திருமண வேலை என சுழல,  அவளது நினைவுகள் சற்று மட்டுபட்டது.

 

கோபம் என்ற ஒன்றை வெளிப்படையாக காட்டினாலாவது மனம் சமாதானம் அடைந்திருக்கும். ஒன்றும் கூறாமல் கண்ணாமூச்சி ஆடுபவளை என்ன செய்ய?  யோசித்தவாறே  உறங்கிவிட்டிருந்தான்.

 

 

அடுத்த நாள் காலை மங்கள நாதத்தோடு திருமண சடங்குகள் ஆரம்பித்தன. வரனும், வதுவும் மனையில் அமர்ந்திருக்க, அஞ்சுகம் பாட்டி முதல் வரிசையில் அமர்ந்து அண்ணா, அண்ணியின் அறுபதாம் திருமணத்தை மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

வீரபாண்டி, தெய்வானை, இவர்கள் மேடையில் நின்றிருந்தனர். இளவட்டங்களைதான் அங்கே காணவில்லை.

 

 

ராகேஷும், அரசுவும் பந்தி பரிமாறும் இடத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என கவனிக்க, கௌதம் ஏதோ வேலையாய் வெளியே சென்றிருந்தவன் அப்போதுதான் வேகமாக உள்ளே வர, வரவேற்பில் நின்றிருந்தவளை பார்த்ததும் அழகாய் புன்னகை பூத்தான்.

 

 

சிவப்பு வண்ண பட்டு புடவை அவளை முழுவதும் பாந்தமாய் தழுவியிருக்க, அதற்குரிய நகைகளோடு வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இணையாய் விசேசத்திற்க்கு வருபவர்களை இன்முகத்துடன்  வரவேற்றுக்கொண்டிருந்தாள்.

 

 

உடல் சிலிர்த்து அடங்க அன்று மாடிப்படியில் நின்றதை போல இன்றும் அதே உணர்வுகள் தாக்க அவன் புன்னகை மேலும் விரிந்தது.

 

 

“பேசாம இன்னைக்கே கல்யாணத்த முடிச்சிடலாமா?” மனம் தன்போக்கில் தறிகெட்டு திரிய,

 

 

“போடா டேய் மூனுநாள் கழிச்சு இன்னைக்குதான் முகத்தையே பார்க்கற அத கெடுத்துக்காத,

 

“தம்பி நல்லாருக்கீகளா?”

 

அப்போதுதான் கனவு  கலைந்தவன் போல் “நான் நல்லாயிருக்கேன் சித்தப்பா உள்ள வாங்க முகூர்த்தம்  நெருங்கிடுச்சு” வார்த்தை அவரிடம் பார்வை இவளிடம்.  அவரிடம் பேசியவாறே அவளிருக்குமிடம் வந்தான்.

 

“என்ன மாமா இப்பதான் வரீங்க?”

 

“ஒரு வேலை ஆத்தா நாச்சியா அதான் தாமதமாயிடுச்சு”

 

 

“ஆகட்டுங்க மாமா உள்ள போவீங்களாம்” அவரை உள்ளே அழைத்து செல்லுமாறு அவனிடம் கண்களிலேயே சைகை காட்டினாள்.

 

 

சரியென தானாக தலை ஆட மந்திரித்து விட்டவனை போல அவரை அழைத்து சென்றான். அவன் சென்றதும்தான் இவள் இயல்பாக சுவாசித்தாள்.

 

 

“ஆனாலும் அநியாயத்துக்கு அழகா இருக்கடா கௌதமா!” என்று மனம்  தன் போக்கில்  புலம்பியது .

 

 

அலைஅலையாய் கேசம் துள்ளிகுதிக்க வேட்டி சட்டையில் இருந்த மோகனனை பார்த்தவர் மயங்காமல் இருப்பரா என்ன?

 

 

ஆனா என்ன இப்படி பார்த்து வைக்கிறான். நல்லவேளை மாமாகூட வந்ததால தப்பிச்சேன்” என நினைத்த நேரத்தில் மீண்டும் அவளருகே வந்திருந்தான்.

 

அவள்  அரண்டு  சுற்றி  பார்க்க  அங்கே  யாரும்  இல்லை. வந்தவன் ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க அவள் வேறுபுறம் பார்வையை படரவிட்டாள்.

 

 

சுற்றும் முற்றும் பார்த்து அவள் மறுக்க மறுக்க கைபிடித்து மறைவான இடத்திற்க்கு இழுத்து சென்றவன், அவளை சுவரில் சாய்த்து இருபுறமும் அணையிட்டவாறு நின்றுகொண்டான்.

 

 

அவள் செல்ல பார்க்க “ஷ்.. “என்று உதட்டின் மேலே கைவைத்து “பேசக்கூடாது கொஞ்ச நேரம் பேசிட்டு விட்றுவேன்” என்றவன். சோ ஒருவழியா கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சதா?”

 

 

கதைபேசும் கண்கள் படபடப்பை மறைக்க பாடுபட, இவள் அவனை தவிர எல்லா இடங்களையும் பார்த்து வைத்தாள்.

 

 

அவள் கன்னத்தை ஒரு கையால் பற்றியவாறு தன்னை பார்க்க செய்தவன் அதன் மென்மையில் கிறங்கி பெருவிரலால் அலைந்து மெதுவாக அவளை பார்த்துக்கொண்டே காதருகே குனிய அவள் கண்கள் தானாக மூடிக்கொண்டது.

 

 

அதை பார்த்தவன் மெல்லிய புன்னகையுடன்,  “இது முறையில்லதான் ஆனா தப்பில்ல” என்று கிசுகிசுத்த அதே வேகத்தில் அவள் கன்னத்தில் ஆழப்புதைந்தான்.

 

 

மயிர்க்கால் சிலிர்த்து நிற்க , முகமும் செந்நிறத்தை கடன் வாங்கியது போல சிவந்தது. அது மேலும் அவனை கிறங்கடிக்க இருக்கும் இடம் அவன் கைகளை கட்டிபோட்டது.

 

 

 

சுற்றி இன்னொரு முறை பார்வையை படரவிட்டவன் மேலும் நெருங்கி நின்று

 

 

“சோ அன்னைக்கும் இப்படிதான் ஃபீல் பண்ணியா பம்ப்கின்?”

 

 

அதில் டக்கென்று கண்களை திறந்தவள்  அவனை பார்க்க, அது ஆயிரம் கதைகளை அவனுக்கு சொல்லியது.

 

அதன் ஜாலத்தில் மயங்கியவன் மீண்டும் முகம் நோக்கி குனிய, சுதாரித்தவள்  அவனை தள்ளிவிட்டு மண்டபத்தினுள் ஓடிச்சென்றுவிட்டாள்.

 

 

இவனும் சிரிப்புடனே அவளை தொடர்ந்து மண்டபத்தினுள் வந்திருந்தான். இதை ஒருவன் கோபத்துடன் பார்த்ததை இருவரும் அறியவில்லை. யார் அவன்?

 

 

 

 

நாங்கலாம் அப்பவே அப்படி–  7″

 

யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான்  இவன்  அன்பானவன்”  மனதுக்குள் மெல்லிய சாரலாய் கீதம் இசைக்க  முகம் முழுவதும் விகசித்த புண்ணகையோடு மண்டபத்திற்க்குள் நுழைந்தாள் காரிகை.

 

 

 

சிறுவாண்டுகள் கூட இவளை அழைத்து பார்க்க, இவள் கலையவில்லை. மனம் மொத்தமும் கௌதம் மட்டுமே.

 

 

அன்று அருவிக்கரையில் முதலில் முத்தமிட்ட போது  அதிர்ச்சிதான், விலக்கவும் முயன்றாள். ஆனால்  காதல் கொண்ட மனம் ஒரு கட்டத்திற்க்கு மேல்  ரசிக்க தொடங்கியது.

 

 

ஆனால் அதை அடுத்த நிலைக்கு கௌதம் எடுத்து செல்ல முயன்ற போது, இவள் சுதாரித்து அவனை தள்ளிவிட்டிருந்தாள். அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அவனுக்கு காட்டவும் தவிர்த்தாள்.

 

 

 

 

அப்போது அவள் மனதில் கோபம், தவிப்பு போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லை. மனம் வெற்றுத்தாளாய்; அதில் கௌதமனின் எண்ணங்கள் மட்டும் தூரிகையாய் வானவில்லை தீட்ட தொடங்கின.அது சரியோ? தவறோ? மனம் ஒருவித போதையில் மூழ்க தொடங்கியது.

 

 

 

அதிலிருந்து தெளிவு பெறாமல் அவனை பார்க்க முடியாது, எனவேதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.  அது இன்று நிறைவுபெற்று விட்டது.

 

 

 

மண்டபம் முழுவதும் ஆட்கள் நிரம்பியிருக்க புடவைக்கு போட்டியாய் மின்னும் இவள் முகத்தை கவனிப்பார் யாருமில்லை. மற்றவர் கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ளும் நிலையில் இவளும் இல்லை.  அதனால் தன்னை ஒருவன் பின்தொடர்வதையும் கவனிக்க தவறினாள்.

 

 

இத்தனை  நாள்  கேள்விக்கு  இன்று  கிடைத்த பதிலில் மனம் இறகை போல லேசாக, மயிலிறகால் வருடுவது போல உடலில் சிலிர்ப்பு ஓடி மறைய, மயக்கும் புன்னகையை சிந்தியவாறே தலையை கோதியபடி கௌதமும் மண்டபத்திற்க்குள் நுழைந்தான்.

 

 

கண்களால் அவளை தேடி , அவள் மேடைக்கு கீழே இருந்த உறவினர் கூட்டத்தில் இருப்பதை கண்டவன்

 

 

“மேடைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாள்” என எண்ணியவாறு கூட்டத்தில் கலந்து அவளை,நோக்கி முன்னேறினான்.

 

 

அப்போதுதான் அந்த முகத்தை கண்டான் அவ்வளவு குரோதம் அதனில் , யாரைக் கண்டு? அவனவளை கண்டா! கூர்ந்து கவனித்தான். அவளை நோக்கிதான்.

 

 

கையில் எதையோ மறைத்தபடி. கௌதமுக்கும் அவனவளுக்கும் இருக்கும் தூரம் பதினைந்து அடி;   நாச்சியாருக்கும் அந்த கோர முகத்துக்காரனுக்கும் இருக்கும் தூரம் ஐந்தே அடிகள்.  எதுவோ சரியில்லை மனம் அடித்து கூறியது. அவன் கனிப்புகள் இதுவரை  பொய்த்ததில்லை.

 

 

அவளிடம் செல்ல உறவினர்களை விலக்கியபடி எட்டிநடைபோட  அதற்குள் அவன் அருகில் சென்றுவிட்டிருந்தான்.

 

 

மற்ற நாளாய் இருந்தால் சுற்றுபுரத்தை தன் கவனத்தில் வைத்திருப்பாள். இது அவளது வழக்கம். பெண்களுக்கு இந்த கவனம் அவசியம் என நினைப்பவள். ஆனால் இன்று அதைகூட அவள் கவனிக்க வில்லை காரணம் கௌதம்.

 

 

கௌதமுக்கு புரிந்தது அது ஆசிட் என்னும் திராவகம். மனம் பதறியது. “ஏய் “என்ற கூவலுடன் கௌதம்  செல்வதற்க்கும்  அவன் பாட்டிலை திறந்து ஊற்ற வரவும் சரியாக இருந்தது.

 

 

கூட்டத்தில் சலசலப்பு. யாருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை. நாச்சியாருக்கோ அதிர்ச்சி. கௌதம் விரைந்து வந்தவன் நாச்சியாரை இழுத்து தன் பின்னால் இருத்திக் கொண்டான்.

 

 

அவளை முழுதும் ஆராய்ந்தான் ஒன்றும் ஆகவில்லை. மனம் இப்போதுதான்  அமைதியடைந்தது. எங்கே அவன்? என்று கோபத்தோடு திரும்ப அங்கு ஒரு கரம் அவனை வளைத்து திராவகம் இருந்த கரத்தை பற்றியிருந்தது.

 

 

“யார் இவன்? “கௌதம் ஒரு முகச்சுருக்கத்துடன் புதியவனை நோட்டம்விட்டான்.

 

 

“கௌதம் வந்து கொஞ்சம் உதவி பண்ணுங்க” அந்த புதியவன் அழைக்க, அதுவரை நாச்சியாரை கைவளைவில் வைத்திருந்தவன் அவளை மெதுவாக விலக்கி  அவன் அருகில் வந்தான்.

 

 

திராவகம் இருந்த கையை பிடித்த கௌதம் , லாவகமாக அதை அவனிடம் இருந்து பறித்தவன் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.

 

 

கௌதம் “யார்றா நீ?  எதுக்கு  இப்படி  பண்ண?

 

 

இருவரின் கைப்பிடியில் இருந்தும் அவன் அடங்கவில்லை. “ஏய் நாச்சியா தப்பிச்சிட்டன்னு நினைக்காத அழிப்பேன்டி உன்ன!!!  என்னோட காதல அழிச்ச நீ மட்டும்…….” அதற்கு மேல் அவன் பேசவில்லை.  வாயிலேயே ஒரு குத்து விட ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.

 

 

அந்த அடிக்கு சொந்தகாரன் கௌதம் அல்ல, அந்த இன்னொருவன். அவன் “வெற்றி வேலன்” வீரபாண்டியின் தங்கை சகுந்தலாவின் மைந்தன்.  ரத்ன பாண்டி, காமாட்சியின் மகள் வயிற்று பேரன். நெடுநெடுவென்ற உயரத்தில், விவசாயம் செய்து உரமேறிய உடற்கட்டுடன், மாநிறத்தில் இருக்கும் கிராமத்து அழகன்.

 

 

அதற்குள் அனைவரும் இவர்கள் அருகில், மணமக்கள் கோலத்தில் இருந்த தம்பதிகளும் வந்துவிட தெய்வானை ஓடி மகள் அருகில் நின்று கொண்டார்.

 

 

வீரபாண்டி தங்கையின் மகனை கண்டவர்  “வேலா, என்னப்பா இது? ” அவருக்கு அதிர்ச்சி அவரது செல்ல மகளின் மேல் ஒருவன் வஞ்சம் கொண்டு இத்தனை தூரம் செல்வான் என்று நினைக்கமுடியவில்லை.

 

 

“மாமா அன்னைக்கு பஞ்சாயத்துல இவன அவமானபடுத்தினதால நம்ம பொண்ண பழிவாங்கனும்னு சுத்தியிருக்கான். எனக்கு தெரிஞ்சு நானும் எச்சரிச்சு விட்டேன். ஆனா அப்பவும் திருந்தாம இந்த வேல பாத்திருக்கான்” என்றவாறு மீண்டும் ஒரு அறை விட்டான்.

 

 

“ஏலேய் முத்தா! ” “ஐயா!” நம்ம ஆளுங்களை கூப்பிட்டு இந்த பயல நம்ம குடோனுக்கு கொண்டு போங்க, நம்ம பொண்ணு  மேல கை வைக்க நினைச்சா என்னாகும்னு தெரியனும்.ம் .. இழுத்துட்டு போங்க” என்று கர்ஜிக்க, தன் முதலாளியிடம் இவ்வளவு கோபத்தை முதன் முறையாக கண்ட தொழிலாளர்களும் அவனை இழுத்துகொண்டு சென்றனர்.

 

 

கௌதம் “மாமா  ஒரு நிமிஷம்” வேலையாட்களின் பிடியில் இருந்தவனை காட்டி “ஆசிட் அடிக்கற அளவுக்கு என்ன வெறி இவனுக்கு? அப்பறம்” இது யாரு எனக்கு பதில் சொல்லுங்க மாமா?” என வேலனை சுட்டிகாட்டி கூறினான்.

 

 

வேலனை காட்டி “இவன் என்ற மருமவன் கௌதம்”

 

 

“அப்ப நான் யாரு?” என்ற பாவனையுடன் வேலனை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன்  அழகாய் புன்னகைத்தான்.

 

 

“தங்கச்சி மவன கூட மருமவன்னு கூப்பிடலாம் கௌதம்”

 

“ஓ.” ஒரு சிறு  ஆறுதல்.

 

 

“சரி சொல்லுங்க இவனுக்கும் அழகிக்கும் என்ன பிரச்சனை?”

 

 

அதற்கு கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் “இந்த பய ஒரு பொண்ண விரும்பினான் தம்பி, அந்த புள்ளையும் இவன விரும்பிச்சு…அந்த புள்ளைக்கு அம்மா மட்டுந்தான், அப்பா அந்த புள்ள கருவுல இருக்கையிலயே தவறிட்டாரு.

 

 

 

இவன் பொண்ணு கேட்க, அந்தம்மா ஊருக்குள்ள பொறுக்கிதனம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான் இவனுக்கு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிடுச்சு.

 

 

இவன் அந்த பொண்ண ஏவிவிட்டு அம்மா மேல பஞ்சாயத்துல பிராது கொடுக்க வச்சுட்டான் படுபாவி.

 

பஞ்சாயத்தில் ஊர் மக்கள் கூடியிருக்க (ஆலமரம், சொம்பு இதெல்லாம் மிஸ்ஸிங். ஹா.ஹா..ஏனா இது நவீன பஞ்சாயத்து கிராமசபை மண்டபத்தில் நடைபெற்றது. )

 

 

பஞ்சாயத்து தலைவராக வீரபாண்டி , உடன் கனக வேலுவும்

சில பெரியவர்களும். ஊர் மக்கள் முக்கால்வாசி பேர் அங்கிருக்க தெய்வானை, நாச்சியார் கூட அங்கிருந்தனர்.

 

 

“சொல்லுங்கப்பா என்ன பிராது”

 

 

“ஐயா இந்த பொண்ணு வான்மதி நாலாவது தெரு கண்ணம்மா பொண்ணுங்க, அது இந்த பையனதான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு சொல்லுதுங்க, ஆனா இந்த பொண்ணோட அம்மா இதுக்கு சம்மதிக்கலன்னு பஞ்சாயத்த கூட்டி நிக்குதுங்க” என்று ஒரு பெருசு வழக்கை சுருக்கமாக உரைக்க விசாரணை ஆரம்பித்தது.

 

 

கண்ணம்மா அழுதபடி நிற்க, அவருக்கு சில பெண்கள் ஆறுதல் அளித்தபடி உடன் நின்றிருந்தனர். வீரபாண்டி,

 

 

“உங்க தரப்ப சொல்லுங்க கண்ணம்மா.”

 

 

அந்த ஊரில்இது ஒருவழக்கம் தன் வீட்டு பெண்களை தவிர மற்ற பெண்களை மரியாதையோடு வாங்க , போங்க என்றே அழைப்பர் . சிறிய பெண்ணாக இருந்தாலும் .

 

 

 

“ஐயா! எனக்கிருக்கறது ஒரே மவங்க, அது நல்லபடி கட்டிக் கொடுக்கனும்னு நினைச்சேன், பாவிமக இப்படி பண்ணிட்டாங்க” என்றவாறு அழுதவாறு தன் வாதத்தை முன் வைத்தார்.

 

 

வயிற்றில் ஆறுமாத கருவுடன் கணவனை இழந்தவர். அதன்பின் எவ்வளவு பாடுபட்டு மகளை வளர்த்தார் என்பது இந்த ஊருக்கே தெரியும். இப்போது வான்மதியிடம்

 

 

“நீங்க சொல்லுங்காத்தா” என்று கூற,

 

 

 

“ஐயா! எனக்கு இவர புடிச்சிருக்குங்க, அதனால இவரதான் கட்டிக்குவேங்க”

 

 

“ம்” சிறிது நேரம் யோசித்தவர்

 

“ஏன்பா நீ மாரி மவன்  இளங்கோதான”

 

 

“ஆமாங்க”

 

“வேலைக்கு போறியா”

 

“இல்லைங்கய்யா”

 

 

“பொறவு எப்படி நீ உன்ன நம்பி வர பொண்ண காப்பாத்துவ”

 

 

“சூப்பர்!! அப்பா பாய்ண்ட புடிச்சிட்டாரு” ஒருவித குதூகலத்துடன்  ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் நாச்சியார். அவளுக்கு  இதெல்லாம் கவனிப்பதில் ஒரு சுவாரசியம்.

 

 

“அதெல்லாம் பாத்துக்குவேங்க”

 

 

“நீ உலகம் புரியாம பேசறப்பா.. காதல் மட்டும் வாழ்க்கை இல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கு,  நிதர்சனத்த புரிஞ்சிக்கனும்” வீரபாண்டியும் பொறுமையாக எடுத்து சொன்னார்.

 

 

“ஏன் அப்படி கஸ்டப்பட்டா அவங்க நிலத்த கொடுக்க சொல்லுங்க அத வச்சு வாழறேன்”  இப்போது அங்கிருந்த எல்லோரும் முகத்தை சுழித்தனர்.

 

 

நாச்சியார் “என்ன திண்ணக்கம் இவனுக்கு” என்று பல்லை கடித்தாள். வீரபாண்டி ஒரு முடிவுடன்

 

 

“நீங்க என்ன சொல்றீங்க கண்ணம்மா”

 

 

அவரும் ஒரு முடிவுக்கு வந்தவராய் முந்தானையால் கண்களை துடைத்து இடுப்பில் சொருகிக் கொண்டு “இப்ப சொல்றேங்கய்யா அந்த நிலம் என்னோட சம்பாத்யம், எனக்கு பொறவு என்ற மகளுக்குதேன். இப்பவே எழுதிக்கொடுக்க மாட்டேன்.

 

 

 

அவ வேணா அந்த பையனையே கட்டிக்கட்டும். பின்னால அவ கண்ண  கசக்கிட்டு வரக்கூடாதுன்னு குலசாமிய வேண்டிக்கறேன். ஒரு வேளை அப்படி வந்தா அவள வச்சி காப்பாத்த எனக்கு அந்த நிலந்தான் ஆதாரமா இருக்கு.. அவ்வளவுதானுங்க நான் சொல்லிட்டேன் இனி பஞ்சாயத்து முடிவுக்கு கட்டுபடறேங்க”

 

 

அங்கிருந்த தாய்மார்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது தெய்வானை உட்பட.

 

 

“நீங்க என்ன சொல்றீங்க” என்று வான்மதியிடம் கேட்க,

 

“ஐயா அந்த நிலத்த கொடுத்தாதான் என்னங்க, அவங்களுக்கு அவங்க சந்தோசம்தான் முக்கியமா படுது. நான் காலம் பூரா அவங்கள அண்டிதான் பொழைக்கனும்னு நினைக்கறாங்களா?  எனக்கு அந்த நிலம் வேணும் இல்லைனா கேஸ் போட்டு வாங்கி…..” முடிக்ககூட இல்லை சப்பென்று அறைந்திருந்தாள் நாச்சியார்.

 

 

(இவளுக்கு இதே வேலையா போச்சுன்னு  நீங்க திங்கிங்… ஐ நோ யுவர் மைண்ட் வாய்ஸ்..ஆனா பாருங்க உண்மையா இருக்கறவங்களுக்கு கை கொஞ்சம் நீளமாதான் இருக்கும்… )

 

 

 

அங்கிருந்த எல்லோருக்கும் நாம செய்ய நினைச்சத இந்த பொண்ணு செஞ்சிடுச்சுபா என்ற எண்ணம் தான்.

 

 

“கொன்றுவேன் கொன்னு !!! யார பாத்து என்ன கேள்வி கேக்கற? அவங்க சந்தோசம்  எதுல இருக்குன்னு உனக்கு தெரியுமா?  அவங்க சந்தோசம் முக்கியம்னு நினைச்சிருந்தா கருவுலயே உன்ன கொன்னுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பாங்க, இல்லையா பொறந்ததும் அனாத ஆசிரமத்துலயோ, இல்ல தத்து கொடுத்துட்டோ சந்தோசமா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி கண்ணுல தண்ணி விட்டுட்டு நின்றுக்க மாட்டாங்க.

 

 

அதுக்கு பதிலா உன்ன பாராட்டி சீராட்டி வளர்ந்தாங்களே எதுக்கு இத கேக்கவோ? எட்டி நின்னு பாத்த எங்களுக்கே பதறுது, உனக்கு உயிர் போவவேணாம் இந்த கேள்விய கேக்க. நீ என்ன செஞ்சிகிட்டு இருக்கேன்னு தெரியுதா! உங்கம்மாவ எங்க நிறுத்தி வச்சிருக்க… இதப்பார் இத புரிஞ்சிக்க அவங்க பொண்ணா இருக்கனும்னு அவசியமில்ல, நல்ல மனசிருந்தாலே போதும்.”

 

என்று அவளை போட்டு தாக்கியவள் இவள் பேசபேச இன்னும் அதிகமாக அழுது கொண்டிருந்த கண்ணம்மாவை தோளோடு அணைத்து கண்ணீரை துடைத்தவள்

 

 

“அத்த என்னது இது! இவ போய்ட்டா உனக்கு யாரும் இல்லையா..  ஏன் நான் உங்க மவ இல்லையா? ம்.. அந்த கழுதை எக்கேடோ கெட்டு போவுது, நான் இருக்கேன் உன்ன பாத்துக்க…சும்மா சொல்லல இந்த நாச்சியா சொன்ன சொல்ல காப்பாத்துவா!”

 

“ஐயோ ஆத்தா உன் வாயால அப்படி சொல்லாத கண்ணு அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்..இந்த நிலந்தான வேணும் எடுத்துக்கட்டும். அவளே போறேன்றப்ப இத வச்சி நான் என்ன பண்ண போறேன்..நல்லாயிருக்கட்டும் தாயி”

 

 

என இவளிடம் இறைஞ்ச…ஒரு துச்சமான பார்வையை வான்மதியை நோக்கி வீசினாள். அது ஆயிரம் சமமாய் இருந்தது.

 

 

“மதி நாம ஜெயிச்சுட்டோம் உங்கம்மா நிலத்த தர ஒத்துக்கிட்டாங்க” என இளங்கோ சந்தோசமாய் துள்ள,

 

 

நாச்சியார் அடித்த போது கூட அவள் தன் தவறை உணரவில்லை, அதற்கு பின்னான அவள் பேச்சில் முழுதும் மாறியிருந்தாள். இப்போது இளங்கோ பேச்சை கேட்டதும் இருந்த கொஞ்ச தயக்கமும் ஓட,

 

 

“அம்மா என்னை மன்னிச்சிடுமா” என்றவாறு காலில் விழுந்திருந்தாள்.

 

 

ஒருவாறு இருவரும் சமாதானமாக “அத்த பாத்தியா உன்பொண்ணு வந்ததும் என்ன மறந்துட்ட” என செல்லமாய் கோபித்துக் கொண்டவளை கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்

 

“நீ என் சாமி ஆத்தா! நூறு வருஷம் சகல சௌகரியத்தோட நீ நல்லா இருப்ப” இதை கேட்ட வீரபாண்டிக்கும் தெய்வானைக்கும்பிறவி பலனை அடைந்ததுபோல இருந்தது.

 

 

 

ஆனால் வான்மதியும் சென்றுவிட, ஊர் மக்கள் இளங்கோவை கேவலமாக பேச, இதற்கெல்லாம் நாச்சியார்தான் காரணம் என்று வன்மத்தை நெஞ்சில் விதைத்தான். அதை அறுவடை செய்ய இன்றுவரை காத்திருந்தான் .

 

(அப்படி வந்தவன் நாச்சியாரும் கௌதமும் நெருக்கமாக இருந்ததை கண்டு, என் காதல பிரிச்சிட்டு நீ மட்டும் சந்தோசமா இருக்கியா உன்ன விடமாட்டேன்டி” என்று கூட்டத்தோடு கலந்தான்.)

 

 

 

இதை கூறி முடித்ததும் நாச்சியார் கௌதமின் மனதில்  இன்னும் ஆழியை போல ஆழப் பதிந்தாள். ராகேஷுக்கோ ஒரு வித மரியாதையே தோன்றியிருந்தது.

 

 

 

இப்போது வீரபாண்டி ” வேலா நம்ம குடும்பம் பிரிஞ்சிருந்தாலும் எதையும் யோசிக்காம எம்மவள காப்பாத்திட்டப்பா.. ரொம்ப நன்றி” என்று கையெடுத்து கும்பிட போனவரை தடுத்தவன்.

 

 

 

” மாமா என்ன பண்றீங்க! பேசலைனா சொந்தம் இல்லைனு ஆயிடுமா இல்ல பாசந்தான் விட்டு போயிடுமா. நம்ம வீட்டு பொண்ணு மாமா அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்” என்று நாச்சியாரை பார்த்தவாறே சொல்லி முடித்தான்.

 

 

கௌதமிற்கு உள்ளே திபுதிபுவென்று எரிந்தது “விட்டுட மாட்டானாமா”.

 

 

 

“மருமவனே இந்த வீணாப்போன ரோசத்தால விசேசத்துக்கு கூட உங்கள கூப்படலயேப்பா..ஆனா நீ எதையும் கண்டுக்காம எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க..என்ன நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு”

 

 

“தெய்வான கெளம்புமா நாம போய் மாப்பிள்ளையையும், தங்கச்சியையும் அழைச்சிட்டு வரலாம்” என வாயிலை நோக்கி நடக்க, கனக வேலுவும், சகுந்தலாவும் வேகமாக வந்துக் கொண்டிருந்தனர்.

 

 

“அண்ணா என்ன ஆச்சு நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமில்லையே!”  “மச்சான் எங்க அந்த எடுபட்ட பய…” என்று மீசையை முறுக்கி கொண்டு கேட்க,  வீரபாண்டி இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டவர்

 

 

“என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ள .. வீம்பால இத்தன நாளா பிரிஞ்சிருந்தோம் இனி அப்படி இருக்க வேணாமே..நானே உங்கள கூப்பிடலாம்னுதான் வந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. பெரிய மனசு பண்ணிவந்து கல்யாணத்துல கலந்துக்குங்க மாப்பிள்ள, சகுந்தலா நீயும் வாம்மா”

 

 

“அடஎன்ன மச்சான் இதுக்கு போய் கும்பிட்டுகிட்டு, சொந்த பந்தம்னா சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் அதுக்குன்னு சொந்தம் இல்லைனு ஆயிடுமா..இந்த மாதிரின்னு  தகவல்  வந்துது  அதான் ஓடியாந்தோம். இந்த கல்யாணத்துல கலந்துக்கறது  கொடுப்பினை மச்சான் எங்களுக்கு அது கிடைச்சிருக்கு வாங்க போவோம்”.

 

 

அதன்பின்  திருமணம் நல்லபடியாக முடிந்தது. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும்தன் மனைவியின் கழுத்தில் மாங்கல்ய நாணை அணிவித்தார் ரத்னபாண்டி. தன் மகள் இல்லையே என்ற சிறு கவலையும் தீர்ந்ததில் இருவருக்கும் அளவில்லா ஆனந்தம்.

 

வீரபாண்டி- தெய்வானை, கனகவேலு – சகுந்தலா தம்பதிகளாய் ஆசீர்வாதம் வாங்க, பேரன் பேத்திகள் அனைவரும் ஒன்றாக நின்றனர்.

 

 

சகுந்தலாவின் மகளை தவிர. அவள் வெளியூரில்,படித்துக் கொண்டிருப்பதால் அவள் மட்டும் இல்லை.

 

ராகேஷ், அரசு, வெற்றி வேலன், நாச்சியார், கௌதம் வரிசையாய் நின்று காலில் விழ, கௌதம் மட்டும் நாச்சியாரின் கையை யாரும் அறியாதவாறு பிடித்து சற்று காலம் தாழ்த்தி ஜோடியாய் விழுந்தனர்.

 

 

 

இதை கண்டு கொண்ட வேலன் கௌதமை நினைத்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தான். நாச்சியார் முறைத்தபடி நின்றிருந்தாள்.

 

 

திருமணம் முடிந்த அடுத்த நாள் கௌதம், அஞ்சுகம், ராகேஷ் இவர்களுடன் நாச்சியாரும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தனர் பெங்களுரை  நோக்கி  ஏன்?  எதற்காக?

 

நாங்கலாம் அப்பவே அப்படி–  8

 

 

திருமணம் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்க்கு வந்து விட்டிருந்தனர். தம்பதியர் இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, வீரபாண்டி , கனக வேலு இருவரும் இத்தனை வருடம் விட்டதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.

 

 

நாச்சியார் மாடிக்கு சென்றுவிட மற்ற இளவட்டங்கள்  கீழேயே தங்கிவிட்டனர். அரசு, வேலன், ராகேஷ் மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கௌதம் தனித்திருந்தான்.

 

 

அவனுக்கு வேலனோடு ஒன்ற மனமில்லை. ஏதோ அவனுக்கு போட்டியாய் வந்தது போலவே பாவித்தான். எல்லோரும் அவனையே தாங்கி பேச இவன் அந்நியமாய் உணர தொடங்கினான்.

 

 

ஏன் நாச்சியாரும் கூட இவனிடம் பேசவில்லை என்ற சுணக்கம் வேறு. இத்தனை எண்ணங்கள் மனதில் சுழன்றாலும் வெளியில் ஒன்றும் காண்பிக்காமல்  போனில் ஏதோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

 

 

 

நாச்சியார் மேலே வந்தவளுக்கோ கண்மண் தெரியாத கோபம். ஆசிட் ஊற்ற வந்தவன் மேல் , அவன் கூற வந்து பாதியில் விட்ட காரணத்தின் மேல், அதற்கு காரணமான கௌதம் மேல், அதற்கு துணை போன தன்மேல் என பல கோபங்கள். மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.

 

 

 

கொட்டும் நீரில் நின்றாலும் மனம் அமைதியடைய மறுத்தது. இளங்கோ என்னகூற வந்தான்.  “நீ மட்டும் காதலிக்கலாமா என்றா? அப்படியென்றால் கௌதமுடன் நான் நெருக்கமாக இருந்ததை பார்த்திருக்கிறான்.

 

 

இதை பொதுவில் கூறியிருந்தால்…நினைக்க, நினைக்க பதறியது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள், பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்த இருந்தேனே! என்று வெகுநேரம் நீரில் நின்றவள் பின் உடைமாற்றி தலையை கூட உலர்த்தாமல் படுத்து உறங்கிவிட்டாள்.

 

 

சிறிது நேரத்தில் அவளது அறைக்கு வந்ந தெய்வானை அவளின் நிலையை கண்டு அவள் மிகுந்த கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டார்.

 

 

ஏனெனில் அவளது கோபம் எல்லை மீறும் போது இப்படிதான் செய்து வைப்பாள். சிறிது நேரம் அவளை பார்த்தவர் ஒரு முடிவு எடுத்தவராய் சென்றார்.

 

அனைவரும் அங்கே ஹாலில் இருக்க, ரத்னபாண்டி, காமாட்சி அருகில் சென்றவர்

 

“மாமா, அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”

 

 

பொதுவாக இப்படியெல்லாம் பொதுவில் இருக்கும் போது ரத்னபாண்டியிடம் முக்கியமானதை தவிர வேறு பேச மாட்டார் என்பதால், ரத்னபாண்டி, காமாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

காமாட்சி “சொல்லுமா”

 

 

“அது வந்து … நம்ம நாச்சியாருக்கு கல்யாணம் பண்ணலாங்க அத்தை”  அனைவருமே அதிர்ந்தனர். ஆனால் வேறுவேறு காரணங்கள் அவரவர்க்கு.

 

“ஏன்மா திடீர்னு”

 

 

“அவளுக்கும் வயசு 24 ஆகுது, கல்யாணம் பண்ணா அப்பதான் இவளுக்கும் பொறுப்பு வரும் எந்த வம்புக்கும் போகமாட்டா.

 

 

இல்லைனா இன்னைக்கு ஆசிட் தூக்கிட்டு வந்த மாதிரி, நாளைக்கு ஒருத்தன் கத்திய தூக்கிட்டு வர மாட்டான்னு என்ன நிச்சயம்” இன்று நடந்த சம்பவத்தால் அவர் மிகவும் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

 

 

 

ஒரு தாயாக அவரது பயம் நியாயமே. ரத்னபாண்டி “அதுக்கென்னமா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிக்கலாம்”

 

 

“இல்லைங்க மாமா சீக்கிரமா இது நடக்கனும்” தலை குனிந்தவாறு சொல்ல,

 

 

“புள்ளபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்த முடியாதுமா”

 

“அது பாம்பா இருந்தா அதுவும் அடிபட்டு பழிவாங்க வந்ததா இருந்தா அப்ப பயந்துதானே ஆகனும்.”

 

வேலன் “அத்த நாங்கலாம் இருக்கோம் அப்படிலாம் ஒண்ணும் ஆகாது. தவிர நம்ம பொண்ணு மேல தப்பில்லையே, நீங்க பெருமைதான் படனும்.”

 

 

அவனை நோக்கியவர், “இன்னைக்கும் எல்லாரும் அங்கதானே இருந்தோம், ஏதோ குலசாமி புண்ணியம் காப்பாத்திருச்சு, இல்லைனா எம்மவ நிலமைய நினைச்சு பாருங்க” என்று தழுதழுத்தவர்

 

 

“வேணாம்பா அவளுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்” புரிந்தது ஒரு தாயாய் அவரது தவிப்பும் சரியே.

 

 

“சரிம்மா அதுக்குன்னு நல்ல இடமா தேட வேணாமா..அதுக்கு நாளாகுமே” ரத்னபாண்டி.

 

 

“நம்ம சொந்தத்துலயே பாக்கலாமே, ஏன் நம்ம வேலன் தம்பி  கூட இருக்காப்லயே” இதைக் கேட்ட கௌதம் விருட்டென்று எழுந்து விட்டான்.

 

 

“ஏன் எங்களை பார்த்தா மாப்பிள்ளையா தெரியலயா?” கோபத்துடன் மேலே அவனது அறைக்கு சென்றன்.

 

 

அவனது நடவடிக்கையை இருவர் புன்னகையுடன் பார்த்தனர்.அஞ்சுகம் பாட்டி ஒருவர், அவருக்கு பேரனின் மனம் புரிந்தது அதில் மகிழ்ச்சியே இதைத்தான் அவரும் விரும்பினார். மற்றொருருவர்  வேலன்.

 

 

 

நாச்சியாரின் அறையை தாண்டிதான் அவனது அறைக்கு செல்ல வேண்டும். செல்லும்போது அவளது அறை லேசாக திறந்திருப்பதை பார்த்தவன் உள்ளே செல்லலாமா என யோசித்தான்.

 

 

என்னோட ப்யூட்டி அறைக்கு போக யார்கிட்ட அனுமதி வாங்கனும் என்று நினைத்தவன் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு, அவள் அருகில் சென்றான்.

 

 

தாவணி பாவாடையில் ஈர கூந்தலை மெத்தையில் தோகை போல விரியவிட்டு ஒருபக்கமாய் படுத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.

 

 

அந்த ஆசிட் மட்டும் இவள் மேல் பட்டிருந்தால்.  அந்த கொடுமையான நொடிகளை நினைத்து பார்த்தான். அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என உணர்த்திய அற்புத நொடிகள் அவை.

 

 

பார்த்து ஒரு வாரமே ஆன பெண்ணின் மேல் இவ்வளவு நேசம் தோன்றுமா?

 

 

“முட்டாள் அவளின் சிறுவயது ஞாபகங்களைகூட நீ மறக்கவில்லையே, உன்னுள்ளே இருந்தவளை கண்டுபிடிக்கவே இந்த ஒரு வாரம்” என மனம் எடுத்துரைக்க,

 

 

அவளை நோக்கி குனிந்தவன் அவள் தலையை  மெதுவாக வருடி கொடுத்தான். சிறிது அசைந்தவள் மெல்லிய புன்னகையுடன் உறங்கி போனாள்.

 

 

இவனுக்கும் புன்னகை வந்தது, “எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா, இப்ப தூங்கறத பாரு சின்ன புள்ளையாட்டம்,

 

 

அங்க உனக்கு கல்யாணம் பேசறாங்க ப்யூட்டி, அப்படியே உன்ன தூக்கிட்டு எங்கயாவது போயிடலாமான்னு தோணுது,

 

 

ஆமா நல்லாதான இருந்த அதுக்குள்ள என்னடி கோபம் முகத்த திருப்பிட்டு போற.  ஆனா ஒண்ணு உன்ன சமாளிக்க ரொம்ப பாடுபடனும் போல..

 

 

நிம்மதியா தூங்குடா இனி எதுவும் உன்ன நெருங்காம பாத்துக்குவேன்” என்று நெற்றியில் மென்முத்தம் பதித்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு சென்று விட்டான்.

 

 

கீழே வேலன் ஒருவாறு பேசிசமாளித்துக்கொண்டிருந்தான். “அத்த இதுக்கு பயந்துலாம் கல்யாணத்த வைக்க வேணாம். ”

 

 

“ஏன் தம்பி உங்களுக்கு என் பொண்ண புடிக்கலிங்களா?”

 

“அத்த என்ன பேசறீங்க, நம்ம பொண்ணு கட்டிக்க யாருக்காவது கசக்குமா! இது அப்படி இல்ல நாச்சியாரோட விருப்பம் முக்கியம்.

 

 

வீட்ட விட்டு துரத்தறாங்கன்னு நினைப்பு வந்துடும். நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போகும் போது சந்தோசமா போகனும், அதான் சொல்றேன் கொஞ்சநாள் ஆறப்போடுங்க எல்லாம் சரியாகும்”

 

 

அவன் பேசியே தெய்வானையை சம்மதிக்க வைத்து விட்டான்.

 

“தெய்வா, அப்படி உனக்கு மனசு ஆறலைன்னா , நான் அம்முவ பெங்களூருக்கு கூட்டிட்டு போறேன் ”

 

அனைவருக்கு அது சரியென்றே பட்டது.  வீரபாண்டியும் “தெய்வானை அத்தை சொல்றது சரி கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்”

 

தெய்வானை அரைமனதோடு சம்மதித்தார்.

 

“அச்சோ என்னால வர முடியாதே, நான் எப்ப பெங்களூரூ வரது” என அரசு புலம்ப,

 

 

“இந்த கலவரத்துலயும் உனக்கு குதூகலம் கேக்குதா!! வெசம்..வெசம்” என அவன் தலையை  கொட்டியவாறு இழுத்து சென்றான்.

 

 

வேலன் நைசாக நழுவி, கௌதமின் அறைக்கு  வந்தான்.

 

“உள்ள  வரலாமா”

 

“யா கம் இன்”

 

உள்ளே வந்தவனை பார்த்தவன், இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று யோசித்தாலும்  அவன் அமர இருக்கையை காட்ட, வேலன் அதில் அமர்ந்து கொண்டான்.

 

 

இவனும் கட்டிலில் அமர்ந்து கொண்டு  “என்ன பேசனும்”

 

 

“ஸ்ஸப்பா என்ன காரம்”

 

“இன்னைக்கு  ஆசிட் உத்த வந்தானே அவன் என்ன சொல்ல வந்தான்னு தெரிஞ்சுதா உங்களுக்கு” என நேரடியாக  விஷயத்திற்கு  வந்தான்.

 

கௌதமுக்கு இப்போதுதான் புரிந்தது, இத எப்படி மறந்தேன் அதான் நம்மமேல கோவமா இருக்காளோ! என தலையில்  கைவைத்துக் கொண்டான்.

 

 

“நான் மட்டும் சுதாரிச்சு அடிக்கலைனா இந்நேரம் உளறி வச்சிருப்பான், அப்ப நாச்சியாரோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா?

 

 

ஒரு பொண்ணா எவ்வளவு சங்கடம் ஊரு முன்னாடி, குடும்பத்து முன்னாடி. உங்க நகரத்துல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா இங்க அப்படி இல்ல.

 

 

ஆம்பிளைங்க விசயத்துல நாலு பக்கம் யோசிச்சா பொண்ணுங்க விசயத்துல பத்து பக்கமும் யோசிக்கணும். அதுவும் விரும்பற பொண்ணுன்னா  ரொம்ப கவனமா இருக்கனும்.

 

 

இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்ல பாத்துக்கோங்க. அப்பறம் நாச்சியார பெங்களூரு கூட்டி போக அத்த சொல்லிட்டாங்க” என்றுகூறியவன் வந்த வேலை முடிந்தது போல கிளம்ப,

 

“வேலா”

 

“என்ன என்பதை போல பார்க்க”

 

 

“நீ… அப்படி கூப்பிடலாம்ல”

 

 

“ம்  தாராளமா, ஒரே வயசுதான் ரெண்டு பேருக்கும்”

 

 

நீ எப்படி கரெக்டா வந்த”

 

அவனை கூர்மையாக பார்த்தவன் “எங்க வீட்டு பொண்ணுங்க எங்க இருந்தாலும் என்னோட பாதுகாப்புலதான் இருப்பாங்க” என்று மீசையை முறுக்கியபடி கூற,

 

 

“நீ நாச்சியார காதலிச்சியா?” இப்போது நேரடியாக கௌதம் கேட்டான். அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது.

 

 

குறும்பு புன்னகையுடன் “மாமன் பொண்ணு தங்கச்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்..ஆனா நீங்க சொல்ற மாதிரி இல்ல, எங்க கல்யாணம் நடந்தா குடும்பம் சேரும்னு கூட நினைச்சிருக்கேன். ஆனா இப்ப இல்ல”

 

 

“ஏன்னு தெரிஞ்சிக்கலாமா”

 

“நாச்சியார்,  அவங்களோட விருப்பம், புடிக்காத ஆம்பிளைகிட்ட எந்த பொண்ணும் அப்படி இருக்க மாட்டாங்க, அதுவும் நாச்சியார் நெருப்பு. ”

 

சற்று திணறியபடி “நீ….நீ எங்க …”

 

“திருமூர்த்திமலை”

 

“ஓ…”

 

கௌதமா அப்படியே அங்க இருக்க பாறைலயே தலைய முட்டிக்க. இப்படியா சுத்தி யார் இருக்கான்னு கூட பாக்காம இருப்ப” என தனக்குள்ளயே  முனகிகொண்டிருக்க,

 

 

சத்தம் போட்டு சிரித்த வேலன்

 

 

“காதல் எதையும் கவனிக்காது. கீழ அவசரமா கல்யாணம் பேசாதீங்க  சொன்னேன், அதையே உங்ககிட்ட சொல்ல மாட்டேன் , சீக்கிரமா சமாதானபடுத்தி கல்யாண சாப்பாடு போடுங்க. அப்ப நான் கெளம்பறேன்” என்றவனை

 

“வேலா”

 

 

அருகில் வந்த கௌதம் அணைத்து விடுவித்தவன் ,

 

 

“தேங்கஸ்” என உளமாற கூறினான்.

 

 

 

சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவன் சென்றுவிட்டான்.

 

 

கௌதமிற்க்கு இப்படியும் ஒரு மனிதனா என பிரமிப்பாக இருந்தது.

 

 

“வாவ் ப்யூட்டி நீயும் வரியா வா..வா அங்க வச்சு உன்ன பாத்துக்கறேன்” என உல்லாச மனநிலையோடு கட்டிலில் விழ விதி அவனை பார்த்து கெக்கபிக்கேவென்று சிரித்தது அவனுக்கு தெரியலயே?????

 

 

இப்படியாக அவளை கேட்காமலேயே எல்லாம் நடந்து விட அவளுக்கு மறுக்க அவகாசமே இல்லை.

 

 

முகத்தை கடுகடுவென்று வைத்தவாறே பெங்களூரு வந்தடைந்தாள் நச்சியார்.

 

 

இவர்களை அழைத்து செல்ல கார் வந்திருந்தது.  அவர்கள் வீட்டுக்கு சென்று  உள்ளே நுழைந்த சில நிமிடங்களில்

 

 

“கௌதம் எங்க போனீங்க இத்தன நாளா?”என்றவாறு ஒரு நாவநாகரீக யுவதி அவனை கட்டிக்கொள்ள,

 

 

பாட்டிக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

 

“பாட்டி இந்த அல்டாப்பு எப்படி உடனே வந்துது எதாவது ஸ்பை வச்சிருக்குமோ” ராகேஷ் பாட்டியிடம் வினவினான்.

 

 

நாச்சியார் எள்ளும் கொல்லும் வெடிக்கும் அளவு வெப்பத்தை வெளியிட்டவாறு இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

அப்போதுதான் பாவாடை தாவணியில்  அவளை பார்த்த அந்த யுவதி ” ஏய் வேலைக்காரி புதுசா வந்திருக்கியா?

 

 

போய் கௌதம்க்கு ஒரு ஆப்பிள் ஜீஸ் எடுத்து வா!” என நாச்சிரிடம் கேட்டாளே ஒரு கேள்வி.

 

 

பாட்டியின் தோள் மீது கைவைத்தவாறு நின்றிருந்த ராகேஷ் “ஆத்தி” என்றவாறு தடுமாறியவன்

 

 

” இந்த பொண்ணு வந்தவுடனே ஆப்பு மேல் ஏறுதே சொல்லுவோமா! ச்சே வேணாண்டா ராகேஷ் எத்தன தடவ உன்ன சர்வென்ட்ன்னு கூப்டிருப்பா அனுபவிக்கட்டும் நீ நடக்கறத வேடிக்கை மட்டும் பாரு”

 

 

பாட்டியை பார்க்க அவரும் அதே டோனிலேயே இவனை பார்த்தார் இருவருக்கும் புன்னகை வர

 

“அப்படிங்கறீங்க”

 

“ஆமாங்கறேன்”

 

“அப்ப வாங்க” என வேடிக்கை பார்க்க அங்கேயே சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

 

 

“ஏய் நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ என்ன வேடிக்கை பாக்கற, ஏன் கௌதம் இங்க வேலைக்காரி கிடைக்கலன்னு கிராமத்துக்கு போய் கூட்டிட்டு வந்தீங்களா”

 

 

அதுவரை அவள் யாரை கூறுகிறாள் என்று அறியாத கௌதம்

 

“ஹேய் நிவி அது…”

 

 

“என்ன கௌதம் இப்படி மரியாதை தெரியாதவளெல்லாம் ஏன் வேலைக்கு வச்சிருக்கீங்க”

 

என தோளில் தொங்கிய நிலையிலேயே  கிள்ளை மொழியில் மிளற்ற,

 

“நிவி ஸ்டாப் இட்”

 

“வெய்ட் கௌதம் இவல்லாம் இப்படி சொன்னா கேக்க மாட்டா, ஏய் நீ வா” என்று நாச்சியாரை சமையலறைக்கு இழுத்து போனாள்.

 

 

கௌதம் தலையில் கைவைத்தபடி அமர்ந்தவன், பாட்டியை பார்த்து

 

“நீங்களாவது சொல்லலாம்ல”

 

 

“என்ன சொல்றது பேராண்டி இதுவரைக்கும் நடந்தத நாங்க கம்முனு வேடிக்கை பார்த்தமில்ல இனி நடக்கறத நீ பாரு”

 

 

அவனுக்கும் அதை தவிர வேறு வழி இல்லை. வந்தவுடன் இப்படி ஒரு சீனை அவன் எதிர்பார்க்கவில்லை.

 

 

இவள் நிவிதா கௌதம் அம்மாவின் அண்ணன் மகள். எப்போதும் இப்படிதான் நடந்து கொள்வாள்.

 

 

அப்போதெல்லாம் சிறு பெண் என விட்டுவிட்டான். ஆனால் இப்போதுதான் அது அதிகபடியோ என தோன்றியது.

 

 

எல்லையை வகுத்திருக்க வேண்டுமோ? பாட்டி சொன்ன போதெல்லாம் அலட்சியமாய் விட்டதற்கு இது தேவைதான்.

 

 

 

அப்படியே எதாவது சொன்னாலும் உடனே தன் தந்தை கருணாகரனிடம் சொல்லி, அவர் வந்து

 

 

“என் தங்கை இருந்தால் இப்படி நடக்குமா?”

 

 

என்று  காதை ஒட்டு போடும் அளவுக்கு ஓட்டையாக்கி விட்டுதான் போவார். அனைத்தையும் அன்னைக்காக பொறுத்துக்கொள்வான்.

 

 

இப்போதும் அதற்குதான் தலையில் கை வைத்தான். மற்றபடி  அவன் அழகியை பற்றி கவலையில்லை அவள்  எப்படியாயினும் சமாளித்து விடுவாள்.

 

 

 

ஆனால்  மாமா வந்து நாச்சியாரை எதாவது கூறினால் பொறுத்துக் கொள்ள முடியாது.

 

 

இனி பாட்டிக்கு பிறகு இவள்தான் இங்கு எல்லாமே என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

 

 

சமையலறையில் இருந்து நிவி முன்னே வர, நாச்சியார் பின்னால் ஜுஸ் கிளாஸ் அடங்கிய ட்ரே வை தூக்கியபடி வந்தாள்.

 

 

” ஏய் எல்லாருக்கும் கொடு”

 

 

என்று கூறியவள் பாட்டியை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவாறு கௌதமின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

 

பாட்டியும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தார் அவளை அது அவளுக்கு இப்போது புரியவில்லை , புரிந்தபோதோ??????????

 

 

நாங்கலாம் அப்பவே அப்படி–  9

 

 

நாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,” பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு.”  என பெருந்தன்மையாய்  பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.ஆனால் நாச்சியார் அதை

கவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.

 

 

“பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு  மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா”

 

 

இதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

 

கௌதம் “இது ரொம்ப முக்கியம் இப்ப”

 

இதை ராகேஷ்  ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.

 

 

மெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.

 

 

ராகேஷ் “அது..எந்தங்கச்சியா கொக்கா”

 

 

“ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட! ”

 

 

என்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.

 

ஆத்திரம் தலைக்கேற  நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.

 

 

கௌதமின் கை நிவியை தடுத்திருந்தது.  “நிவி யூ ஆர்  கோயிங் டூ மச்”

 

 

நாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.

 

 

நிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி,  “வாட்  நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க” என கீச்சுக்குரலில் கத்த

 

 

“ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத” கௌதமுக்கு அத்தனை கோபம்.

 

 

அவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா!

 

 

நிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள்? இவளுக்காக என்னிடம் கத்துகிறானா! அதையே கேள்வியாக கேட்டாள்.

 

 

“யார் இவ”

 

 

“ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா” அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.

 

 

நிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு.  ஆனாலும் கட்டுபடுத்தினாள்.

 

 

கௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.

 

 

“சரி…யார் இவங்க”

 

 

“அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு” அவள்  பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா!என்றுதான் எண்ணினாள்.

 

 

“ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா…ங்களா”  என்று  இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

 

 

கௌதமிற்காக “சாரி” என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே  இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.

 

 

“என்ன ஒரு திண்ணக்கம்! உன்ன பாத்துக்கறேன்டி” என்று கருவியவள்,

 

 

“கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்.”  என்றவாறு மாடியேறப் போனவளை

 

 

“நில்லு நிவி! அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ”. என்று கீழே ஒரு அறையை காட்டினான்.

 

 

“ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.

 

 

நாச்சியாரை பார்த்தவாறே “இனியும் அப்படி இருக்க முடியாது நிவி  கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ”  நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

 

 

 

இவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன், அவளுக்காக அவமானப்படுத்திவிட்டான்.

 

 

எல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் இவளையெல்லாம்……”  இது எதுவும் தடையாக  இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.

 

 

ராகேஷ் எழுந்தவன் “சரி பாட்டிமா நான் கெளம்பறேன்” என்க.

 

 

நாச்சியார் “ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க”

 

 

நிவியும் கேட்பாள்தான் “அங்க போய் தனியாதான இருக்கனும்”என்னும் குத்தல் பேச்சோடு.  அர்த்தம் ஒன்றே ஆனால்  வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.

 

 

“அது… என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா” என தயங்கியவாறு  சொல்ல,

 

 

“அப்படியா அப்ப  சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள்  கௌதமிடம்  நான் அண்ணனோட போறேன்” என்றாள்.

 

 

அதில் “நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது.”

 

 

இப்போது கௌதம் கோபமாக “டேய் ஒழுங்கா உள்ள போ…என்ன கொலகாரனாக்காத”

அவனும் எத்தனைதான் சமாளிப்பான்.

 

இல்ல பாஸ்..”

 

“ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா” என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.

 

 

“டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க” என நாச்சியார்  பாட்டியையும் விரட்ட,

 

 

“இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்” என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.

 

 

நிவி “ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். ” என பொருமிக் கொண்டிருந்தாள்.

 

 

அவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் “என்னோட ரூம் எங்கயிருக்கு” என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.

 

“மேல”

 

“சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க” என்று அவனிடம் கூறியவள்.

 

 

நிவியிடம் “இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.

 

 

ஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்” என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.

 

“கௌதம் என்ன இது இந்த பொண்ணு இப்படி மிரட்டிட்டு போகுது”

 

 

ஹா..ஹா..  மிரட்டினதோட விட்டாளேன்னு சந்தோசப்படு.

 

 

தன் வீட்டில் தன்னவள்  என்னும் நினைவே சந்தோசத்தை அளித்தது தன் நீண்ட பின்னலாட செல்லும் அவளையே பார்த்திருந்தான்.

 

 

“கௌதம்”

 

 

என மீண்டும் அவனை உலுக்க “என்ன நிவி இன்னும் கெளம்பலயா, இப்படியேவா நிக்க போற சிக்கிரம் போ”

 

 

அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள். பார்த்து பார்த்து செய்த அலங்காரங்கள் பாழாய் போனது.

 

“இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் பட்டிக்காடு” என்று எண்ணியவாறு தன ஹை ஹீல்ஸ் சத்தம் எழுப்ப வெளியே சென்று விட்டாள்.

 

 

அவள் சென்றதும் கௌதம் அவனது அறைக்கு  மேலே  செல்ல, அப்போதுதான் நாச்சியார் அவனறையிலிருந்து வெளியே வந்தாள்.

 

 

இவனை கண்டதும் “அது தெரியாம என்னோட ரூம்னு நினைச்சு வந்துட்டேன்  சாரி”

 

 

“ஹேய் இதுக்கெல்லாம்  எதுக்கு சாரி, இதுவும் உன்னோட ரூம்தான் வா…”

 

 

 

அவளை அப்படியே தள்ளிக்கொண்டு உள்ளே சென்று விட்டான்.

 

“விடுங்க”

 

என்று அவள் திமிர,

 

“உங்கிட்ட கொஞ்சம் பேசனும் ”

 

“இல்ல நான் போறேன்”

 

“ப்ளீஸ் ப்யூட்டி”

 

“இதுக்கும் மேல கட்டாயபடுத்தினா இங்க இருந்து போயிடுவேன்”

 

 

அவளை விட்டவன்

“சரி போ” அவள் செல்ல

 

 

“ஒரு நிமிசம்”

திரும்பி பார்த்தாள்.

 

“இப்ப  உன் விருப்பம், ஆனா எப்பவுமே அப்படி கிடையாது சரியா!”

 

 

அவள் அவனை முறைத்துக்கொண்டே சென்று விட்டாள்.

 

 

இவன் சிறு சிரிப்புடனே அலுவலகத்துக்கு செல்ல தயாரானான்.  வழக்கமான ஃபார்மல் உடையில் தயாரானவன், ராகேஷ்  என அழைத்தவாறே இறங்கினான்.

 

 

அவன் முணகியவாறே வர , “என்ன சார் இன்னும் வெக்கேஷன் முடியலயா! வரீங்களா? இல்லையா?என நக்கலாக வினவ,

 

 

“தோ வரேன் பாஸ்”  இப்படியாக  கௌதம் அலுவலக வேலையில் மூழ்கி விட,  பாட்டிக்கு ஓய்வினை கொடுத்துவிட்டு நாச்சியார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டாள்.

 

 

சமையல் முதல் தோட்டம் வரை இவளின் எண்ணத்தில் மிளிர்ந்தது.  வேலையாட்களும் இவளிடம் அன்பும் மரியாதையுமாக நடந்துகொண்டனர்.

 

 

இப்படியாக ஒரு வாரம் சென்றது.  இவளும் பேசவில்லை, கௌதமும் பேசவில்லை.  தன் வீட்டினர் போன் செய்தால் கூட அவள் பேசுவதில்லை. நிவியும் வரவில்லை.

 

 

அன்றே தந்தையுடன் வருவாள் என்று  எண்ணிணான். ஆனால் அவர்கள் வரவில்லை. இதுவும்  நல்லதுக்கே என கௌதம் எண்ணிக்கொண்டான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் சுவாரஸியம் ஏது?

 

 

அன்று அலுவலகத்துக்கு விடுமுறை என்பதால் கௌதம்  வீட்டிலேயே லேப்பில்  வேலை  செய்துகொண்டிருந்தான்.  ஹாலில் இருந்ததால்  வேலையில் ஒரு கண்ணும், தன்னவளின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.

 

 

பாட்டி தனது அறையில் ஓய்வெடுக்க, அப்போது ராகேஷும்  தனது லேப்புடன் வெளியே வந்து அமர்ந்து கொண்டான்.

 

 

ஏதோ சந்தேகம் தோன்ற  கௌதமிடம் கேக்கலாம் என நிமிர்ந்தவன்  “பாஸ்”   “பாஸ்” என அழைத்து பார்க்க அவன் திரும்பவே இல்லை.

 

 

என்னாச்சு இவருக்கு அவனை உற்று பார்க்க அவன் கனவுலகில் இருப்பதை போல சிறுசிரிப்புடன் நாச்சியாரையே பார்வையால் தொடர்ந்தபடி இருந்தான்.

 

 

அவளும் அவ்வப்போது  ஓரப்பார்வை தரிசனம் கண்டாள்.

 

 

“ஆஹா இது எப்ப ஆரம்பிச்சது, தெரியவே இல்ல ராகேசு நீ வேஸ்டுடா இப்படி ஒரு ட்ரேக் ஓடறது தெரியாம இருந்திருக்க”

 

 

 

“இவரு சிங்கம்னா, அந்தம்மா புலி ரெண்டுக்கும் எப்படி செட்டாகும். ரெண்டும் மெஜாரிட்டி காட்டற கேஸு வேற. எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்தா சந்தோசப் படற முதல் ஆள் நான்தான். ” என எண்ணியவாறே அங்கிருந்து நழுவி வெளியே செல்ல வந்தான்.

 

 

 

அப்போது வெள்ளை சட்டையும், வெள்ளையில் பேண்ட்டுமாய் உஜாலா விளம்பர மாடல் போல் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் நிவியும்.

 

 

ஆம் நிவியின் அப்பா அவர்.  இவனை கண்டதும்  “என்னப்பா இங்கயே தங்கிட்ட போல” என நக்கலாக வினவ,

 

 

ஆமா அன்னைக்கு மவ வாங்கிட்டு போனது பத்தாதுன்னு இன்னைக்கு அப்பாவும் வந்திருக்கார் போல.. என மனதில் நினைத்தவன்.

 

 

“ஆமா சார் தங்கச்சிதான் இனி இங்கயே இருங்க அண்ணா சொன்னாங்களா அதான் தட்ட முடியல பாருங்க” என கூறியவன்

 

 

“நான் பாட்டிய பாக்க போகனும் நீங்க  உள்ள போங்க பாஸ் உள்ள தான் இருக்கார்.” என மீண்டும் உள்ளே திரும்பி பாட்டியின் அறைக்கு சென்றான்.

 

 

கௌதமின் அன்னை  காஞ்சனாவின் அண்ணன் கருணாகரன். அவரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துபவர்தான். ஆனால் சிறிய நிறுவனம்.

 

 

அதனாலேயே தங்கை குடும்பத்தின் மேல் பொறாமை கொண்டவர். தங்கை கணவரான பிரபாகரிடம் தொழில் நஷ்டத்தை அடைந்ததாக கூறி சிலபல கோடிகளை கடனாக பெற்றுள்ளார்.

 

 

இதுவரை திருப்பி தரவுமில்லை. சிலமுறை கவனித்த குமார பூபதி மேலும் இது தொடராதவாறு பார்த்துக்கொண்டார்.

 

 

பிரபாகர் தந்தையை போல அல்லாமல் மென்மையான குணம் கொண்டவராக இருந்தார்,  அதனாலேயே குமாரசாமி  இருந்தவரை ஜெயக்குமார் குடும்பத்தை நெருங்க விட்டதே இல்லை.

 

 

ஆனால் இப்போது அவர்கள் பார்வை பணத்தை விட்டு கௌதமின் மேல் திரும்பியது. அவனை நிவிக்கு திருமணம் செய்ய ஆவல் கொண்டார்.

 

 

இவன் பிடிகொடுக்காமல் இருக்க, பத்தாததுக்கு இப்போது மாமன் மகள் ஒருத்தி வந்து அதிகாரம் செலுத்துவாள் என்று கனவா கண்டார்.

 

அவரை பார்த்த கௌதம் “வாங்க மாமா, வா நிவி” என அழைக்க,

 

 

“வரேன் மாப்பிள்ளை”

 

 

“உட்காருங்க, அழகி மாமாவுக்கு ப்ளேக் காஃபி அப்பறம் நிவிக்கு ஜுஸ் எடுத்துவா”

 

 

“ஐயோ ஜுஸா வேணாம் எனக்கு தண்ணி போதும்”.

 

 

அதற்குள் அவள்  அவரவர்க்கு வேண்டியதை  கொண்டு வந்தாள்.  அவளை அளவிடுவது போல பார்க்க கௌதமிற்கு அது பிடிக்கவில்லை.

 

 

“இந்த பொண்ணுதான் மாமா பொண்ணாபா, பாப்பா சொன்னா”

 

 

“ஆமா மாமா”

 

 

சிறிது நேரம் மற்ற விசயங்களை பேசியவர் “நானும், அத்தையும் கொஞ்ச நாள் வெளியூர் போறோம் மாப்பிள்ள அதனால நிவி கொஞ்ச நாள் இங்க தங்கட்டுமா”

 

 

பெட்டியோடு வந்த பின் என்ன சொல்ல

 

 

“சரி மாமா இருக்கட்டும்”

 

 

“சரிப்பா நான் கெளம்பறேன்.” என்றவர் சென்று விட்டார். கடமைக்கு கூட பாட்டியை பற்றி கேட்கவில்லை.

 

 

அன்றிலிருந்து நிவிக்கு கௌதம் கௌதம்தான். அவன் எங்கேயோ இவளும் அங்கேயே.

 

 

முன்பிருந்ததற்க்கு இப்போது ராகேஷும் நாச்சியாரும் நன்றாக  பாசப்பயிரை வளர்த்தனர்.

 

 

அன்றும் அப்படிதான் ராகேஷ் லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு  அது வரவில்லை.

 

 

 

“இந்த வேலைக்கு பேசாம வேற எங்கயாவது கழுதை மேய்க்க போகலாம். மண்டை காயுது” என புலம்பி கொண்டிருந்தான்.

 

 

அவனுக்கு வாழ்க்கையை ஜாலியாக வாழ வேண்டும். ஆனால் கௌதம் வேலை வேலை என பெண்டெடுப்பான்.

 

 

அதான் அவ்வப்போது வேற வேலைக்கு செல்லலாமா என கிறுக்குதனமான யோசனை வரும். ஆனால் அதெல்லாம் இதுவரை யோசனை அளவிலேயே.

 

 

அப்போது அங்கு வந்தாள் நாச்சியார் “என்னண்ணா வேற வேலை வேணுமா!” அவன் இப்படி புலம்புவதை சில முறை கண்டிருக்கிறாள்.

 

 

அவன் நல்லமூடில் இருந்திருந்தால் இவள் டோனை வைத்தே இவள் விளையாடுகிறாள் என கண்டிருப்பான். ஆனால் இவன் குழப்பத்தில் இருந்ததால் தெரியவில்லை.

 

 

ஆனால் கௌதம் கண்டுகொண்டான். அப்போதுதான் வந்தவன் இவர்கள் பேசுவதை  கேட்டதும்  அங்கேயே நின்றுவிட்டான். இவள் என்ன கூறுவாள் என்பத அறியும் ஆவல்.

 

 

“நான் உங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணட்டா”

 

 

“உன்னால முடியுமா”

 

 

“ம்.. ஆனா வேலை முதுமலைல யானைகள் சரணாலயத்துல உங்களுக்கு யானைனா பயமில்லையா”

 

 

யானை கிட்டயா எச்சில் விழுங்கியவன் பரவால்ல நல்ல வேலையா இருந்தா என மனதில் நினைத்தவன்

 

“இல்லையே சொல்லபோனா ஐ லவ் யானை” ஒருவித ராகத்தோடு கைகளை அகல விரித்து கூறினான்.

 

 

“ஓ…அப்ப சரி”

 

 

“சரி என்ன வேலைனு இன்னும் சொல்லவே இல்ல”

 

 

 

“அதுவா..ஒண்ணுமில்ல யானை இருக்குமா!  அத கட்டிபோட்டு  உப்பு பேப்பர் வச்சி தேய்ச்சு ..”

 

“தேய்ச்சு”

 

 

“அப்பறமா அதுக்கு கருப்பு பெய்ண்ட் அடிக்கனும் அவ்வளவேதான்”

 

 

என்ன வேலையோ என ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தவன் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

 

 

அப்போதுதான் அவள் தன்னை  கலாய்க்கிறாள் என தெரிந்தது.

 

 

“ஏன் இப்படி” என பாவப்பார்வை பார்க்க,

 

 

“ஏன் இந்த வேலைக்கு என்ன குறைச்சல் சும்மா வேற வேலைக்கு போறேன்னு சொல்லுறீங்க! இனி அப்படி சொல்லுவீங்க” என மிரட்ட,

 

 

 

“தெய்வமே இனி சாகற வரைக்கும் இந்த வேலைய விடலாங்கற எண்ணமே எனக்கு வராது போதுமா!”

 

 

உனக்கு இது தேவையா இனி வேற வேலைக்கு போறேன்னு சொல்லுவியா..சொல்லுவியான்னு மாறிமாறி கன்னத்திலேயே அடித்துக்கொண்டான்.

 

 

 

அட அந்த வேலை வேண்டான்னா “வரிக்குதிரைக்கு கோடு போடற வேலை, புலிக்கு புள்ளி வைக்கற வேலை இந்த மாதிரி நிறைய இருக்கு”

 

 

“என்னாது சரியான கொலகார குடும்பம்யா..நான் இடத்த காலி பன்றேன் என்றவாறு எழுந்து  ஓடிவிட்டான்.

 

 

அவனை பார்த்து கலகலத்து சிரித்தவாறே திரும்ப கௌதம் புன்னகையோடு நின்றிருந்தான்.

 

 

நாங்கலாம் அப்பவே அப்படி–  10 final

 

ராகேஷிடம் வம்பளந்துவிட்டு திரும்புகையில் கௌதம் அங்கே இருப்பான் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் நின்றவள் பின் அவனை கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு செல்ல திரும்பினாள்.

 

 

“நாச்சியார்” என விளித்தான். முதல் முறை அவள் பேர் சொல்லி அழைக்கிறான். என்ன என்பதை போல பார்க்க

 

 

“உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”

 

 

அவள் ஏதோ சொல்ல வர “நோ சொல்லாத  இன்னைக்கு பேசியே ஆகனும்.” விடாப்பிடியாய் நின்றான்.  அமைதியாக தோட்டத்திற்க்கு சென்றவளை இவன் பின்தொடர  அவர்களை நிவி தொடர்ந்தாள்.

 

 

நிவியும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள். இந்த வீட்டில் நாச்சியாருக்கு இருக்கும் செல்வாக்கை.  நான் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய இடமது, இந்த பட்டிகாட்டிற்க்கு என்ன தெரியும். மேலும் நெருப்பை மூட்டுவது போல் கௌதமின் பார்வை  இவளையே சுற்றி சுற்றி வருகிறது.

 

 

 

அது உணர்த்தும் செய்திதான் அவ்வளவு உவப்பானதாக இல்லை. கருணாகரன் வேறு இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கௌதமின் மனதில் இடம் பிடிக்குமாறு கூறிதான் விட்டு சென்றார்.

 

 

ஆனால் எங்கே இவன் மீனாக நழுவி விடுகிறானே. முதலில் இவளை இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும். அதுவும் அவளே தலைதெறிக்க ஓட வேண்டும்.

 

 

என்ன செய்யலாம் என பலவாறு யோசிக்கிறாள் ஆனால்  ஒரு வழியும் கிடைக்கவில்லை.  அதைவிட மாட்டிக்கொண்டால் தன்னுடைய கதி அதோகதிதான்.

 

 

அதனால் பொறுமையாக சந்தர்ப்பத்திர்க்காக காத்திருக்கிறாள்.  மறைவான ஒரு இடத்தில நின்று  நடப்பதை கவனித்தாள்.

 

 

நாச்சியாரின் கைவண்ணத்தில் தோட்டம் இன்னும் மிளிர்ந்தது.  பல வகையான மலர் செடிகள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.

 

 

தேவலோகத்தை போல எங்கும்  பூக்களின் வாசம்.  ஆழ்ந்து சுவாசித்தபடி, “தோட்டம் அழகா இருக்கு, அம்மா இருந்தப்ப கூட இந்த மாதிரி இல்ல” அவன் அம்மாவை பற்றி பேசவும் வருந்துகிறானோ என பார்த்தாள். இல்லை அவன் இயல்பாகவே இருந்தான்.

 

 

இன்னும் சற்று தள்ளி இருந்த வேப்ப மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டார்கள்.   இன்று இவளிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடுதான் கௌதம் வந்திருந்தான்.

 

 

எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை.  ஒருவாறு பேச ஆரம்பித்தான்.

 

 

“சாரி அன்னைக்கு ..” என தடுமாறியவன் தலையை கோதியவாறே

 

 

“அது அந்த இடத்துல…நான் வேணுன்னு பண்ணல..ஆனா தப்புன்னு இப்ப புரியுது. ”

 

 

அவள் புருவத்தை  சுருக்கி யோசிக்க,

 

 

“அன்னைக்கு மண்டபத்துல நடந்தது, அப்பறம் அருவிக்கரையில் நடந்தது, தப்புதான் ஆனா  உன்னை பார்த்தா என்னையே  மறந்துடறேன். என்னையே மறக்கறப்ப  சுத்தி என்ன இருக்குன்னு எப்படி தெரியும்”

 

 

அவனை ஒரு பார்வை பார்த்தவள் “இதத்தான் சொல்ல வந்தீங்கன்னா நான் கெளம்பறேன்”  என செல்ல பார்க்க,

 

 

அவள் கையை,பிடித்து நிறுத்தினான் “ப்ச் என்ன உன் பிரச்சனை , அதான் சாரி கேக்கறேன்ல”

 

 

 

“நீங்க சாரி கேட்டா சரியாயிடுமா   அன்னைக்கு மண்டபத்துல அவன்  உளறி வச்சிருந்தா என்னோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா! என் குடும்பத்த, ஊர் ஜனங்கள  எந்த முகத்த வச்சி பார்ப்பேன்.

 

 

நீங்க ஆம்பிள உங்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவன் ஆசிட் ஊத்த வந்தது கூட பெருசா தெரியல, ஆனா இத சொல்ல வரும்போது வேலன் அத்தான் மட்டும் அடிக்கலைன்னா!” என இத்தனைநாள் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட்டு  செல்ல திரும்பியவளை,

 

 

“ஆனா உனக்கு பிடிக்காத மாதிரியும் தெரியலயே”

 

 

இப்போது மானசீகமாக தலையில் அடித்துக் கொள்வது அவளது முறையாயிற்று, வெக்கம் கெட்ட மனசு, சொன்ன பேச்ச கேட்டிருந்தா இன்னைக்கு இந்த அவமானம் இல்லையா.

 

 

அவனது பேச்சால் சிவந்த முகத்தை எங்காவது புதைத்துக் கொள்ளலாமா என்று தோன்றியது.

 

 

“என்ன பேச முடியலயா!  ஏன்னு நான் சொல்லட்டா”

 

என அவளை நெருங்கியவன் காதோரமாய்

 

 

“நீ என்னை விரும்பற ”

 

என ஒவ்வொரு வார்த்தையாய் கூற அவன் மூச்சுக் காற்று பட்டதில்  கழுத்து முடிகள் சிலிர்த்து கொண்டு நின்றது.

 

 

நடுங்கிய கைகள்  அதன் போக்கில் தாவணியை  திருகி கொண்டிருந்தது. மேலும் நெருங்கி இடுப்போடு சேர்த்தனைத்தவன்

 

“என்ன சரியா சொன்னனா பம்ப்கின்”  அவனது கிண்டலான அழைப்பில் கலைந்தவள்

 

 

 

“இ…ல்ல  நீ..ங்க  தப்..பு  தப்பா பேசறீங்க,   செய்யறீங்க”

 

அவனது கைகளை விலக்க பார்க்க

 

 

” எது முத்தம் கொடுத்தத சொல்றியா, அது தப்பில்லடா அது  நான்  உனக்கு கொடுக்கற பாசம்”

 

 

அவனை நோக்கி திரும்பியவள் “அய்ய போதுமே உங்க பாசம் என்ன விடுங்க, இல்ல…”

 

 

இப்போது அவன் கையணைப்பிலேயே சரளமாக பேச வந்தது.

 

 

“இல்ல…இல்லைனா என்ன பண்ணுவ பாட்டிய கூப்பிடுவியா?”  இவனும் பதிலுக்கு சீண்ட

 

 

 

“நான் ஏன் பாட்டிய கூப்பிட போறேன் அதோ அங்க மறைஞ்சு நின்னு பாக்கறாளே உங்க மாமா பெத்த மரவள்ளி கிழங்கு அவள கூப்பிடறேன்”

 

“என்ன? ” என்று அதிர்ச்சியாகி டக்கென்று கைகளை விலக்கியவன்

 

 

“ஏன்டி உன்னை எங்கயாவது தனியா தீவுக்குதான் தள்ளிட்டு போகனும் போல, எந்நேரமும் யாராவது ஒருத்தர் பார்த்துட்டே இருக்காங்க,

 

 

“எங்க அவ”

என்று நிவியை தேட,

 

 

 

“ஹலோ அவ என்னை தேடி வரல, நீங்க என் பின்னாடி வரத பார்த்து அவ உங்க பின்னாடி வேவு பாக்க வந்திருப்பா” என சரியாக கணித்தாள்.

 

 

“ஆனா எனக்கு அந்த மரவள்ளி கிழங்கவிட இந்த சக்கரவள்ளி கிழங்கதானே புடிச்சிருக்கு”

 

 

நாச்சியாருக்கு கோபமெல்லால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது.  இப்போது இருந்ததெல்லாம் காதல் காதல் காதல் மட்டுமே.

 

 

அவன்  கண்களிலே  நங்கூரத்தை பாய்ச்சி ,அவன் காதலின் ஆழத்தை அறிய முயன்றாள்.  இருவரின் பார்வைகளும் பின்னி பினைந்து சதிராட்டம் போட, அதன் தாக்கத்தை தாள முடியாமல் நங்கையவளே முதலில் பார்வையை விலக்கினாள்.

 

 

ஏற்கனவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மங்கையின் நிறம் இப்போது இன்னும் அடர்ந்த நிறத்தில் வர்ணஜாலம் காட்டியது.

 

 

 

“ஹேய் என்னடி இப்படி கலர் மோட் மாத்தற” என வியந்து அவள் கன்னத்தை தடவியவாறு கேட்டான்.

 

 

 

அவன் கையை தட்டி விட்டவள்  “ஒண்ணுமில்ல என்று முனகியவாறு கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள்”

 

 

 

அவள் செய்யும் செயல்களை ரசனையாக பார்த்தவாறு  நின்றிருந்தான்.

 

 

இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிவியின் மனதில் எரிமலையே வெடித்தது… இவ்வளவு நெருக்கத்தை அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.  சொத்தாசை இருந்த இடத்தை இப்போது  போட்டி பிடித்துக் கொண்டது.

 

பார்க்கலாம் நீயா? நானா? என்று மனதில் நினைத்தவள் அவ்விடம் விட்டு அகன்றாள்.  அது அறியாமல் காதல் பறவைகள் தங்களது உலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

 

 

அப்போது மேலே பறந்து சென்ற பறவை ஒன்று  கவ்வி சென்ற பழம் நழுவி இவர்கள் அருகில் விழ நினைவு கலைந்து கௌதம் அவள் கையை பிடிக்க வர,

 

“கிட்ட வந்தா கொன்றுவேன் கௌ”  என்று விலக

 

 

“கொன்னுடு, இந்த அவஸ்தை என்னால முடியல பக்கத்துல நீயிருந்தும் உன்னை கட்டாம  கைகட்டி நிக்கற இந்த நிலமைய நான் அடியோடு வெறுக்கறேன்.”

 

 

“அய்ய என்ன இப்படி ஆய்ட்டீங்க, நான் இந்த ஆட்டத்துக்கு வரல, நான் கெளம்பறேன் பா ”  என்றவள் ஓடிவிட்டாள்.

 

 

அவளறைக்கு சென்று புகுந்து  கொள்ள அவளின் பின் வந்தவன் அவளறை கதவை தட்ட நினைத்து பின் வேண்டாம் என அவனது அறைக்கு சென்று விட்டான்.

 

சிறிது நேரத்தில் நாச்சியாரின் அறை கதவு தட்டபட, யாரென்று கதவை திறந்தால் அங்கே நிவி நின்று கொண்டிருந்தாள். இவளென்ன இங்கே என நினைத்தாலும் “என்ன வேணும்” என வாய் கேட்டது.

 

 

“அது ஒரு சின்ன ஹெல்ப்”

 

 

“என்ன”

 

“அது என்னோட செய்ன் அங்க ஸ்விம்மிங் பூல்ல  விழுந்துடுச்சு அத எடுக்கனும்”

 

“அதுக்கு நான் என்ன பண்ணணும்”

 

“என்னால இந்த ட்ரெஸ் போட்டு எடுக்க முடியல, அதான்  நீ வந்து எடுத்து தரியா”

 

முட்டிக்கால்  வரையான  சிவப்பு நிற இறுக்கமான உடை அது.  “நம்மாள நல்லா நடக்க கூட  முடியாது எப்படிதான்  போட்டிருக்காளோ “ என நினைத்தாலும்,

 

 

“ஏன்  வேற யாரும் இல்லயா”

 

 

“இல்ல ராகேஷ் காணோம், கௌதம ஏன் டிஸ்டர்ப் பண்ணணும் நீ வாயேன்”

 

 

யோசித்தாலும் “சரி வா” என்றவாறு முன்னே நடக்க பின்னால் மர்ம புன்னகையுடன் பின் தொடர்ந்தாள் நிவி.

 

 

நாச்சியாரை எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வெறி பிடித்தவள் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கண்டுபிடித்ததுதான் இந்த வழி.

 

 

ஒரு முறை தனக்கு நீச்சல் தெரியாது  என்றும் தனக்கு பயம்  என்றும் ராகேஷிடம் நாச்சியார் பேசிக் கொண்டிருந்ததை நிவி கேட்டிருந்தாள்.

 

 

அதனால் அவளை அதை வைத்து சிறிது மிரட்டி வீட்டை விட்டும் கௌதமை விட்டும் துரத்தலாம் என எண்ணியே இப்போது நாச்சியாரை அழைத்து செல்கிறாள். நீச்சல் குளம் அருகே வந்திருந்தனர்.

 

 

“எங்க இருக்கு உன்னோட செய்ன்”

 

“அதுவா தோ அங்கதான் இருக்கு பாரு”

 

 

“எங்க எனக்கு தெரியலயே”

 

 

“குனிஞ்சு பாரு, ஒன்றரை லட்சம் பிளாட்டினம் செய்ன் ”

 

 

அவள் சொன்னதை நம்பி இன்னும் நன்றாக குனிந்து பார்க்க சுற்றும் முற்றும் பார்த்தவள் தண்ணீரில் தள்ளி விட்டிருந்தாள்.

 

 

 

அவள் இப்படி தள்ளுவாள் என எதிர்பார்க்காத நாச்சியார் தண்ணீரில் விழுந்து உள்ளே போய் போய் வந்து கொண்டிருந்தாள்.

 

 

அவள் உயரத்திற்க்கு அது ஒன்றும் அவ்வளவு ஆழம் இல்லைதான், ஆனால் பயம் அவள் புத்தியை மறைத்து விட்டது.

 

 

அவளை ஒரு குரூர திருப்தியுடன் பார்த்த நிவி “இனி கௌதம நினைப்ப அதுக்குதான் இந்த தண்டனை” என கூறிக்கொண்டிருக்க

 

“ஹேய்  ப்யூட்டி”

 

 

என கத்தியவாறு கௌதம் வந்து சேர்ந்தான்.

 

 

அவனறை பால்கனியில் அமர்ந்திருந்தவன் நாச்சியாரின் பேச்சுக்குரல் கேட்டு அவளை காண எழுந்து நின்று பார்த்திருந்தான். உடன் நிவியை பார்த்து நெற்றி சுருக்கியவன் அவர்களையே பார்த்திருக்க நீச்சல் குளம் அருகில் சென்றவள் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

 

 

 

எதை தேடுகிறாள் என நினைக்கும்போதே நிவி நாச்சாயாரை பின்னிருந்து தள்ளியதை பார்த்து ஓடி வந்திருந்தான். வந்தவன் விரைந்து நீரில் குதித்து அவளை மேலே இழுத்து வந்தான்.

 

 

அப்படி ஒன்றும் மோசமாகவில்லை, கொஞ்சம் பயந்து நடுங்கி கொண்டிருந்தாள். நிவியோ கையை பிசைந்தபடி நின்றிருந்தாள்.

 

 

ச்சே இவன் கரெக்டா வந்துட்டானே.நாம தள்ளினத பார்த்திருப்பானோ? ச்சே இருக்காது எதுக்கும் நூல் விட்டு பாப்போம்.

 

 

“அது நான் வேணாண்ணுதான் கௌதம் சொன்னேன் ஆனா இவதா……” பளீரென்று அறைந்த அறையில் நிவி நீச்சள் குளத்தில் விழுந்திருந்தாள்.

 

 

ஒரு விரலை நீட்டி எச்சரித்தவன் “நடிக்கற ராஸ்கல் பொண்ணா நீ ஒழுங்கா இப்பவே ஓடிப்போயிரு இல்ல நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல” என்றவன்  இருமிக் கொண்டிருந்த நாச்சியாரை தூக்கி சென்றிருந்தான்.

 

 

 

அவளறைக்கு சென்றவன்  அவளை துணி மாற்றி கொள்ளுமாறு கூறி, பால்கனிக்கு சென்றுவிட்டான். அவள் மாற்றியவுடன்  உள்ளே வந்தவன் இறுக்கமாக அணைத்து கொண்டான்.

 

 

“ஏன்டி  அவகூட  போன  ”

 

 

“அவதான்  செய்ன்  எடுக்க கூப்டா”

 

 

அவ கூப்டா நீயும் போய்டுவியா லூசு கொஞ்ச நேரத்துல கொண்ணுட்டடி” என இறுக்க இவளும் பாந்தமாக அவனுள் அடங்கினாள்.

 

 

ஒரு மாதம் கழித்து இன்னும் ஒரு வாரத்தில் கௌதமிற்கும் ,நாச்சியார்க்கும் திருமணம் ஊரில் வைத்து.

 

 

கௌதம் தான் பாட்டியிடம் சொல்லி அவசரமாக திருமணத்தை வைக்க பணித்திருந்தான்.  நாச்சியாரின் வீட்டிலும் அனைவருக்கும் மகிழ்ச்சி. திருமண வேலைகள் மடமடவென்று நிகழ்ந்து கொண்டிருந்தன.

 

 

இதுவரை இவன் அவளை ஊருக்கு அனுப்பவில்லை. ஏன் என்று கேட்டவர்களை ஒருவாறு சமாளித்திருந்தான். இதோ இன்று நீச்சல் குளத்தில் வைத்து நாச்சியார் அவனை முறைத்துக்  கொண்டிருந்தாள்.

 

 

கையில் இவளுக்கான  நீச்சல்உடையுடன் நின்று கொண்டிருந்தான்.

 

“ப்ளிஸ் கௌதம் மாமா வேணாமே”

 

 

 

“மாமா கூப்டா மயங்கிடுவோமா! நோ நீ இத செஞ்சிதான்  ஆகனும். ”

 

அவள் பிடிவாதமாய் நிற்க

 

“சரி பரவால்ல இந்த ட்ரெஸ்ஸ விட தாவணி பாவாடைதான் எனக்கு வசதி நீ அப்படியே வா” என கையை பிடித்து இழுக்க

 

“விடு நானே வரேன்” என நீச்சல் உடை மாற்றி நெளிந்தபடி வந்தாள்.

 

 

அவளை நீரினுள் இறக்கி “ஒழுங்கா கத்துக்கற புரியுதா” என கர்மசிரத்தையாக சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான்.

 

 

அவள் தான் இவன் விரல்களின் ஸ்பரிசத்தில் நெளிந்து கொண்டிருந்தாள்.

 

அன்று நிவியால் ஆபத்து ஏற்பட்டாலும் நீச்சல் தெரிந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது என எண்ணி அவளுக்கு வலுக்கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

 

 

இதற்கு குடும்பத்தில் இருந்து ஏகோபத்த வரவேற்பு.பின்னே சிறுவயதில்  நீச்சல் பழக்க கிணற்றில் குடுவையை கட்டி விட ,இவள் பயந்து போய்   நீந்திக் கொண்டிருந்த கௌதமின் கழுத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

அவனுக்கோ குடுவை இல்லை.

எப்படியோ தினறி அவளை கீழே தள்ளி விட்டாருந்தான். உயிர் போய் உயிர் வந்த நிலமை அவனுக்கு.

 

அதிலிருந்து அவள் நீச்சல் பக்கம் சென்றதேயில்லை.  இன்று அதை நினைத்துக்கொண்டவள்,

 

“கௌதமா இரு வரேன் என்கிட்டயேவா! ”  என கூறிக்கொண்டவள் நொடியில் அவனை இழுத்து அவன் மேலே ஏறியிருந்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை.

 

 

“ஏய் பம்ப்கின் இறங்குடி. என்ன பன்ற நீ..திருந்தவே மாட்டியா! என்று அவளை கீழே இறக்கினான்.

 

 

“இதுக்குதான் சொன்னேன் கேட்டியா நீ” என நக்கலாக சிறித்தபடி கேட்க,

 

 

“இவ்வளவு வயிசாயிடுச்சு இன்னும் சின்ன புள்ளையாட்டம் அடம் பண்ற, ஏன்டி இத்தன வில்லத்தனம் பன்ற” என சுகமாய் சலித்துக் கொண்டான்.

 

 

” நாங்கலாம் அப்பவே அப்படி”  இருந்தோம்,  இப்ப இருக்க மாட்டோமா!  போயா..போயா போய் வேற வேலைய பாரு வந்துட்டாரு நீச்சல் கத்துக் கொடுக்க.”

 

 

அவளை ரசனையாய் பார்த்தவாறே “சரி கொஞ்ச நாள் நல்ல பையனா இருக்கலான்னு பார்த்தா விடமாட்டியே என்றவன்  அவள் சுதாரித்து விலகும் முன் அவளையும் சேர்த்து அணைத்துக்கொண்டு நீருக்குள் மூழ்கியிருந்தான்” (ஸ்ஸப்பா இந்த தடவ யாரும் பாக்கல)

 

 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நாச்சியார்  தன் இதழை தொட்டுப்பார்த்தவாறே “கெட்ட பய சார் இந்த கௌதம்” என  அவன் நெஞ்சிலேயே அடைக்கலமானாள்.  இத்துடன் நாமும் விடைபெறுவோம்.

 

 

 

 

 

eks-full

இரவு நேரம்.. பௌர்ணமி வானம்..! மொட்டை மாடி தனிமை.. தேகம் தீண்டும் தென்றலின் குளுமை..! நானாக இருந்தால் இக்கணம் உறைந்து போகும் வரமொன்றை என் இஷ்ட தெய்வத்திடம் கேட்டிருப்பேன்..

 

ஆனால் அவன்.. ப்ரியன்.. நிலவொளியும் உடலில் படாதவாறு சுவரோரமாய் சுருண்டு படுத்திருந்தான். ஹெட் ஃபோன் வழியாக கசிந்து, அவன் காதின் நரம்புகளில் தன் கம்பீரக் குரலைக் கடத்திக் கொண்டிருந்தார், ஹரிஹரன்..!

 

“வெண்ணிலவே.. வெண்ணிலவே…

என்னைப் போலத் தேயாதே..

உன்னோடும் காதல் நோயா..?”

 

ரிப்பீட் மோடில் போட்டு விட்டு வானில் காயும் நிலாவை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

எங்கே பிழை செய்தான்..? தன் தோழன் என்று முழு நம்பிக்கையை அவன் மேல் வைத்தது தான் பிழையா? அன்றி இனி தன் வாழ்க்கை முழுதும் அவளொருத்தியின் புன்னகையில் மட்டுமே என்று ஒட்டுமொத்த அன்பையும் அவள் மேல் கொட்டியது பிழையா?

 

ப்ரியனின் தோழன் விஷ்வா. இருவரும் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனி ‘பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’. நன்றாக சென்று கொண்டிருந்த நட்பு எப்போது, எங்கே தடம் புரண்டதெனத் தெரியவில்லை.. விஷ்வா.. கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனி சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு.. இன்று மொத்தமாக முதுகில் குத்தி விட்டான்.

 

கம்பெனி ப்ரியனிடம் இல்லை எனத் தெரிந்த கணம்.. தன் காதல் பொய்யென்று உரைத்துச் சென்று விட்டாள், ப்ரியனின் ப்ரியமானக் காதலி ப்ருந்தா..!

 

அடுத்தடுத்த அடிகளால் மீள விரும்பாமல் உடைந்து போய், இருளோடு இன்பம் தேடிக் கொண்டிருக்கிறான், இவன்.

 

திடீரென அந்த அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டுக் கேட்டது ஒரு கிசுகிசுக் குரல்..! பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தவன் முதலில் கவனிக்கவில்லை. இப்போது இரு குரல்கள் வழக்கடித்துக் கொண்டிருந்தன.

 

புருவம் சுருக்கியவன்.. தலையை லேசாகத் திருப்பி, சுவற்றின் அலங்கார துளை வழியாகக் குரல் வந்த திசையில் பார்த்தான். அவனின் சுருங்கியப் புருவங்கள் அழகாய் விரிந்தன, ஆச்சர்யத்தில்..!

 

இதென்ன.. இன்று இவனுக்கென்று ‘இரட்டை நிலவுகளின்’ தரிசனமா!!! ஆம்! அந்த பௌர்ணமி நிலவிற்குப் போட்டியாக வெள்ளை நிற நைட் ட்ரெஸ்ஸில் நின்றப் பெண்ணவள் தான்.. அடுத்த மாடியில் நின்று அந்த வீட்டு பொடிப் பயல் தருணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

 

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்.. அன்னை, பக்கத்து வீட்டில் அவர்களின் சொந்தக்காரப் பெண் வந்திருப்பதாகக் கூறியத் தகவலை.. தான் அரைகுறையாகக் காதில் வாங்கியது.. லேசாக நினைவடுக்கில் படிந்திருந்தது.

 

இருவரும் கைகளில் எதையோ பிடித்து இழுத்து கொண்டிருந்தனர்.

 

“சொல்றதக் கேளுடா குட்டி சாத்தான்.. நான் ஃபர்ஸ்ட் விடறேன்.. கொஞ்சம் மேலப் போனதும் உன்கிட்ட தந்துடறேன்.”

 

“முடியாது.. நீ ஜாலியா விட்டுட்டு இருப்ப.. அதுக்குள்ள யாரும் வந்தா என்னை டீல்ல விட்டுட்டு நீ நல்ல பொண்ணு மாதிரி எஸ்கேப் ஆகிடுவ..”

 

“ஷ்ஷ்.. கத்தாதடா.. அப்டிலாம் பண்ண மாட்டேன்..”

 

“முடியாது குடு. வெண்ணி.. பன்னி”

 

“ஏய்… இன்னொரு வாட்டி பன்னி சொன்ன.. வாயத் தச்சிடுவேன்..”

 

“ நீ மட்டும் என்னைக் குட்டி சாத்தான் சொல்லல?”

 

“சரி இனி சொல்ல மாட்டேன்.. இப்ப அத என்கிட்ட குடு..”

 

“நீ யார் வந்தாலும் என்னை விட்டு போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு..”

 

“ப்ராமிஸ் பண்ணா.. உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்க மாட்டாளாம்டா பரவாயில்லயா?”

 

பிஞ்சு விரலை, நாடியில் வைத்து யோசித்தவன்.. “நிஜமாவா பன்னி?” கேட்டான், தீவிரமான முகபாவனையோடு..!

 

அவள் முறைத்துப் பார்த்ததும்.. “சரி சரி.. வெம்மதி..” என்றான், சமாதானமாக..!

 

“ஹய்யோ… வெம்மதி இல்லடா.. வெண்மதி..” என்றாள்.

 

இங்கே இவன் இதழ்கள் பிரிந்து.. மிகமிக மென்மையாக உச்சரித்தது.. “வெண்மதி” என்று..!

 

அவர்கள் இருவரும் ஒரு வழியாக சமாதானமாகி.. பட்டம் விட ஆரம்பித்திருந்தனர். பட்டம் விடத் தான் இந்த ஆர்பாட்டம் போலும்.

 

ப்ரியன் தன் மொபைலில் நேரம் பார்த்தான். இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. புன்னகையோடு அவர்களைப் பார்த்து விட்டு திரும்பிப் படுத்தான்.

 

தன் மனதைக் கூறுப் போட்டுக் கொண்டிருக்கும் ப்ருந்தாவின் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்த நேரம்.. மீண்டும் இருவரிடையே சலசலப்பு.. ‘இப்ப என்னவாம்..?’ யோசித்தவாறேத் திரும்பிப் பார்த்தவன்.. பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கைகளால் வாயை இறுக மூடிக் கொண்டான்.

 

பட்டத்தின் நூல் அறுந்து எதிர் வீட்டின் மாமரத்தில் சிக்கிக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தருண், பெரிய மனித தோரணையோடு.. இருக் குட்டிக் கைகளையும் மார்பின் குறுக்கேக் கட்டி.. குற்றம் சாட்டும் பார்வையைப் பார்த்திருந்தான். அவள், இருக் காதுகளையும் பிடித்துக் கொண்டு.. அவன் முன்னால் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

“போதுமா..? கால் வலிக்குது தருண்.. ப்ளீஸ்டா.. சாரிடா..”

 

“எனக்கு என் பட்டம் வேணும்.. இப்பவே வேணும். அதில்லாம நான் சாப்ட மாட்டேன்.. தூங்க மாட்டேன்.. யாரோடயும் பேச மாட்டேன்.”

 

“டேய் செல்லோ.. அப்டிலாம் சொல்லக் கூடாதுமா.. வெண்மதி நாளைக்கு வேற செஞ்சு தருவாளாம்.. தருண் ஜாலியா பட்டம் விடுவானாம்.. ஓகேவா?”

 

“முடியாது.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அத செஞ்சேன் தெரியுமா? நம்ம ரொம்ப டெடிகேட்டிவா.. கஷ்டப்பட்டு செய்ற விஷயம் எப்பவும் நம்மள விட்டு போகாதுனு எங்க ஹேமா மேம் சொல்லிருக்காங்க. இப்.. இப்ப.. இப்ப மட்டும் ஏன் போச்சாம்? சொல்லு வெம்மதி..” என்று கண்களில் நிறைந்து விட்ட நீரோடு உதட்டைப் பிதுக்கினான்.

 

“இங்க பாரு.. இப்ப என்ன? நீ கஷ்டப்பட்டு செஞ்ச உன்னோட பட்டம் உனக்கு வேணும். அவ்ளோ தான?”

 

“ம்ம்..”

 

“அதுக்கு இப்டி அழுதுட்டு மூலைல உட்கார்ந்தா ஆச்சா? உன்னை விட்டு போன உன் பொருள மீட்டெடுக்க.. என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு யோசிக்கணும். கவலைய மறந்துட்டு அது கிடைக்கற வரை விடாம போராடணும். சரியா?” என்று அவனின் சுருள் கேசத்தைக் கலைத்து விட்டாள்.

 

ப்ரியனின் கரங்கள் தானாக.. மொபைலில் ப்ளே லிஸ்ட்டில் இருந்த பாடலை டெலிட் செய்தது.

 

“எப்டி..? அந்த ஆன்ட்டிக்கும் அம்மாவுக்கும் சண்டையாச்சே.. அவங்க காம்பவுண்ட்டுக்குள்ள விட மாட்டாங்க.”

 

“யோசிப்போம்டா வெல்லக்கட்டி.. ஏதாவது ஐடியா மாட்டும்.. கண்டிப்பா நமக்கு வழியில்லாம போகாது. அங்க பாரு.. மாங்கா பறிக்க பெரிய கம்பு மரத்துலயே சாய்ச்சு வச்சிருக்காங்க. அத வச்சு பட்டத்த எப்டியும் எடுத்துடலாம்..”

 

“நிஜமா?”

 

“ம்ம்.. உன் பட்டம்..! உன் உரிமை..!! தடை அதை உடை..!!!”

 

இவன் பரபரவென தன் லேப்டாப்பை விரித்து.. கம்பெனியில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டான். நிச்சயம் நமக்கான வழி எங்கேனும் இருக்கும் என்று மனம் கூவியது..!

 

“அது சரி.. இப்ப நம்ம எப்டி அங்கப் போறதாம்?”

 

“அது தான்டா இப்ப நம்ம ப்ரச்சனை..” என்று நெற்றியைத் தேய்த்து விட்டு கொண்டாள்.

 

“ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத வெம்மதி.. நீ சுவரேறி குதிச்சு உங்க பக்கத்து வீட்டு அண்ணாவோட புது ஷர்ட்ல போஸ்டர் கலர்ஸ கொட்டி வச்சியாமே.. பெரிம்மா சொன்னாங்க..”

 

“ஹிஹி.. சொல்லிட்டாங்களா? அவன் நான் கடைக்கு போகும் போது என் ஷால புடிச்சி இழுத்தான்டா.. சும்மா விட சொல்றியா?”

 

“அப்டியா செஞ்சான்? அப்ப நீ அவனோட ஷர்ட்ட கிழிச்சு விட்ருக்கலாம் தான?”

 

“ரௌடி பயலே.. இப்ப அந்த பக்கம் எப்டி போகலாம்னு பார்ப்போம் வா..”

 

“தருண்..” – ப்ரியன்.

 

குரல் வந்த திசையைத் திரும்பி பார்த்தவன்.. திகைப்பாய், “ப்ரியண்ணா.. அது வந்து.. இந்த வெம்மதி தான் சாக்லேட் வாங்கி தரேன். நிலா வெளிச்சத்துல பட்டம் விட்டா செமயா இருக்கும் வா னு.. குட்டிபையன் தானனு என்னை ஏமாத்திக் கூட்டிட்டு வந்துட்டா..” என்றான், பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு..!

 

“அடப்ப்ப்பாவி.. குட்டிச்சாத்தான்..” – வெண்மதி.

 

சிரிக்கும் விழிகளோடு, “வெய்ட் பண்ணு.. உன் பட்டத்த நான் எடுத்து தரேன்.” என்றான்.

 

சொன்ன கையோடு நொடியில் கீழே சென்று, அந்தப் பக்கம் தாவி குதித்து.. சரசரவென மரமேறி, பட்டத்தை பத்திரமாக எடுத்து அணிந்திருந்த டீ-ஷர்டுக்குள் வைத்து, அடுத்த ஐந்தாவது நிமிடம் மாடியேறி வந்து.. அவர்கள் முன்னால் நின்றான்.

 

அவனின் செய்கைகளை விழிவிரித்துப் பார்த்து கொண்டிருந்த இருவரும் அவன் பட்டத்தைத் தந்ததும்.. சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஆர்பரித்தனர்.

 

பட்டத்தைப் பெற்றுக் கொண்ட தருண், “தாங்க்யூ ப்ரியண்ணா..” என்று கூறியவாறே கீழே ஓடி விட்டான்.

 

“தாங்க்ஸ் அ பன்ச்..” என்றாள், வெண்மதி.

 

“ம்ஹூம்.. நான் தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும்..”

 

புரியாமல் புருவம் சுருக்கியவள், “நீங்க எதுக்கு சொல்லணும்?” கேட்டாள்.

 

“தொலைச்சத மீட்டெடுக்க வழி காமிச்சதுக்கு..”

 

இப்பவும் புரியாமல் விழித்தவள்.. தோள்களைக் குலுக்கி விட்டு, “ பை தி வே.. திஸ் இஸ் வெண்மதி..” என்று நட்புப் புன்னகையோடு வலக்கையை நீட்டினாள்.

 

இருளின் பிண்ணனியில் பூமியில் நின்ற.. வெண்மதியெனும் அந்த இரண்டாம் நிலவின் நட்புக்கரத்தைப் பற்றிக் குலுக்கினான், ப்ரியன்..!

 

திடீரென மாடியின் பக்கவாட்டு சுற்றுச்சுவரின் மீது இரு கைகள் முளைத்ததைத் தொடர்ந்து.. ஒருவன் மேலேறி வந்து.. இவர்கள் முன் மூச்சு வாங்க நின்றான்.

 

வந்தவன் இருக்கைகளால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. மாயக்கண்ணனைப் போல.. கன்னக்குழி சிரிப்போடு, வெண்மதியைப் பார்த்து.. “ஹாய் போங்கு” என்றான், முத்துப் பற்கள் மின்ன..!

 

அவனைப் பார்த்து அதிர்ந்த வெண்மதி, “என்ன கொடுமைடா இது?” என்றாள்.

 

புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றான், ப்ரியன்.

 

2

 

ப்ரியன், வெண்மதியின் கரத்தைப் பற்றிக் குலுக்கிய போது.. அந்த மொட்டை மாடி மேல் மாயக்கண்ணனைப் போல திடீரெனத் தோன்றிவன்.. வெண்மதியை நோக்கி, “ஹாய் போங்கு” என்றான்.

 

விழிவிரித்து அதிர்ந்தவள்.. “டேய்.. இதென்ன திருடன் மாதிரி இப்டி வந்து நிக்கற?” என்றவளின்.. கண்களில் அதிர்ச்சியையும் மீறி சந்தோஷச் சாரல் தெறித்ததை கவனிக்கத் தவறவில்லை, ப்ரியன்!

 

“ஏய்.. உன்னைப் பாக்கறதுக்காக.. பைப்லாம் புடிச்சு ஏறி, ஹீரோ மாதிரி சாகசம் பண்ணி வந்துருக்கேன்.. ஒரே வார்த்தைல திருடன்னு டேமேஜ் பண்ணி விடற..?”

 

“நீ ஹீரோவா?” என்று அவனை மேலிருந்து கீழாக, நக்கலாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

 

சற்றே சிவந்த நிறத்தில் ஆறடி உயரத்தைத் தொடவிருந்தவனின் தேகம்.. கட்டியம் கூறியது.. தான் அன்றாட உடற்பயிற்சியைத் தவற விடாதவன் என..! காற்றில் அழகாய் கலைந்திருந்த தலைமுடி பிடிவாதமாய் கூறியது அந்த சிறிய நெற்றியை முழுமையாய் காட்ட மாட்டேன் என..!  குறும்பு கூத்தாடும் விழிகள் கூறியது இவன் தீராத விளையாட்டு பிள்ளையென..!

 

“சரியான மொக்கப் பீஸூடி நீ.. நீ என் பர்சனாலிட்டியப் பார்த்து நக்கல் லுக் விடற..?” என்று பல்லைக் கடித்தவனின் விழிகளில்.. அவளுக்கான கரை காணாத நேசத்தைக் கண்டான், ப்ரியன்..!

 

“யாருடா மொக்கப் பீஸு..?” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

 

“இங்க இருக்க ஒரே பிஸு நீதான்டி வெண்மதி..” என்று அவளின் அதே நக்கல் பார்வையை அவளிடமேத் திருப்பி அனுப்பினான்.

 

வந்தவனின் தோள் வரை உள்ள உயரத்தில் இருந்தவள்.. பெயருக்கேற்றாற் போல மதி முகம் கொண்டிருந்தாள். அயர்னிங் செய்தாலும் அடங்க மாட்டேனென சுருண்டிருக்கும் கர்லிங் கூந்தலை பெற்றிருந்தாள். கண்களோ கடலோவென பிரித்தறிய முடியாத விழிகளைக் கொண்டிருந்தவள்.. இதழ்களில் இரண்டு ஸ்ட்ராபெர்ரிகளைப் பெற்றிருந்தாள்.

 

“பீஸு கீஸுனு சொன்ன.. பல்லப் பேத்துடுவேன் பார்த்துக்கோ..” என்று சீறினாள்.

 

“நீ? என் பல்ல? ஹாஹாஹா…” திடீரென அந்த அமைதியைக் கிழித்து கொண்டு வாய்விட்டு சிரித்தவனைப் பார்த்த ப்ரியனும், வெண்மதியும் திடுக்கிட்டு போய்.. சுற்றும் முற்றும் பார்த்தனர்.

 

“அடேய் அடேய்… புண்ணியமாப் போகும் நிறுத்தி தொல..” என்று தன் கரங்களால் அவன் வாயை மூடினாள், வெண்மதி.

 

அவளின் உள்ளங்கையில் இதழ் குவித்தவனை.. அவள் முறைத்துக் கொண்டே.. சட்டென கரத்தை விலக்கிக் கொண்டதும், ஒன்றும் நடவாதது போல்.. ப்ரியனிடம், “அப்புறம் பாஸ்.. இந்த போங்கு ஃப்ரெண்ட்னு சொல்லி அது கட்சில உங்கள சேர்க்கப் பார்க்குதா? நம்பாதீங்க பாஸ்.. இப்டி தான் திருட்டு வேலப் பார்க்கறதுக்கு ஆள் சேர்த்துக்கிட்டு இருக்குது..” என்றான்.

 

“நீதான்டா இப்ப திருடன் மாதிரி பைப் ஏறி அடுத்தவங்க வீட்டுக்கு வந்திருக்க..”

 

“ஆமாண்டி.. இந்த திருடன் இந்த வெள்ளபூதத்த ஸ்வாஹா பண்றதுக்காக பைப் ஏறி வந்திருக்கேன்..”

 

அவள் அவன் மீது கன்டனப் பார்வையை வீசி விட்டு.. சட்டென்று ப்ரியனைப் பார்த்தாள். ‘அவன் என்ன நினைத்துக் கொள்வான்? லூசு லூசு.. சரியான லூசு..! எப்ப என்னத்தப் பேசணும் தெரியுதா?’

 

ஆனால் அவன்.. அவளின் கன்டனப் பார்வையைக் கண்டு கொள்ளாமல்.. ப்ரியனின் தோள் மீது கைப் போட்டுக் கொண்டு.. “உண்மைய சொல்லுங்க பாஸ்.. இந்த நடு ராத்திரில.. இப்டி வைட் ட்ரெஸ்ல தலைய விரிச்சு போட்டு நிக்கறதப் பார்த்து.. உங்க ஹார்ட் எக்ஸ்பிரே டைம் குறிச்சிச்சு தான? ஆனாலும் பேய நேர்ல மீட் பண்ணதுக்கப்புறமும் எப்டி பாஸ் இவ்ளோ ஸ்டெடியா நிக்கறீங்க?” என்றான், போலியாக ஆச்சரியம் காட்டி..!

 

“டேய்ய்ய்..”

 

“பாருங்க பாருங்க.. பேய் எப்டி முழிய உருட்டுது!”

 

“இப்ப நீ இடத்த காலி பண்ணல… இங்க ஒரு கொல விழும்..”

 

“புதுசா உன்கிட்ட சிக்கின அடிமைக்கு.. உன் ஹேண்ட்சம் ஹீரோவ அறிமுகப்படுத்தி வைக்காம துரத்தப் பார்க்கறியே போங்கு?” என்றவன்.. ப்ரியனிடம், “ஹலோ பாஸ்.. நான் வேற நல்ல ஃபிகர் கிடைக்கற வரை இந்த போங்குகிட்ட காதலனா வொர்க் பண்ணலாமேனு.. கடந்த ஒன்னரை வருஷமா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.. அதனால அதோட ஃப்ரெண்ட் எனக்கும் ஃப்ரெண்ட் தான்.. ஃப்ரெண்ட்ஸ்?” என்று கேட்டுக் கொண்டே கை நீட்டினான், அந்த புன்னகை மன்னன்.

 

வெண்மதி, “உன் மூஞ்சிக்கு வேற நல்ல ஃபிகர் வேணுமோ..?” என்று கடுப்பானாள்.

 

ப்ரியன் இன்னும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். யாரிவன்..! நடு இரவில்.. மொட்டை மாடியில்.. தன் காதலியுடன் ஒரு அந்நிய ஆடவன் கரம் குலுக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் எந்தக் காதலனின் கண்ணோட்டமும் வித்தியாசமாகவே தான் இருக்கும்.

 

ஆனால் இவன்!!! இவனால் எப்படி எந்த கேள்விக் கணைகளும் இல்லாமல் இயல்பாக பேச முடிகிறது? அதுவும் தன் தோளிலிலேயேக் கைப் போட்டு கொண்டு.. நட்பென்று கரம் நீட்ட முடிகிறது? தன் காதலி மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால் இவன் இவ்வளவு இயல்பாக இருப்பான்?

 

புதியவனை ப்ரியனுக்கு இன்னும் இன்னுமாய் பிடித்துப் போனது.. வெண்மதியின் நட்புப் புன்னகையை விட இரு மடங்கு புன்னகையோடு வந்தவன் நீட்டிய கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

 

“யாஹ்.. ஃப்ரெண்ட்ஸ்.. நைஸ் டூ மீட் யூ.. அப்புறம் என் பேரு பாஸ் இல்ல.. ப்ரியன்..” என்றான் விரிந்த புன்னகையோடு..!

 

“ப்ரியன்..? ப்ரியமா…..னவனே….” என்று பாடியவன் வாயை வெண்மதி மீண்டும் தன் கரம் கொண்டு மூட வேண்டியதாய் போயிற்று. ஆதலால் அவனும் மீண்டும் அவள் உள்ளங்கையில் இதழ் குவிக்க வேண்டியதாய் போயிற்று. ஆதலால் அவளும் சட்டென கையை விலக்கி.. அவனை முறைக்க வேண்டியதாய் போயிற்று.

 

இந்தக் கூத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியனும் தன் இயல்பை மீறி சிரிக்க வேண்டியதாய் போயிற்று. தான் சற்று முன் இருந்த நிலை என்ன..? இப்போது மனம் நிறைந்து புன்னகைப்பதென்ன..? எல்லாம் இந்த மாயக் கண்ணனால் அல்லவா!!!

 

அவனைப் பார்த்தான். அவன் கண்கள் முழுதும் காதலை நிரப்பி வெண்மதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

வெண்மதி, “நான் கீழப் போறேன்..” என்றாள்.

 

“ஓகே, குட் நைட்..” – ப்ரியன்

 

“எங்க ஓடுற?” என்று அவள் கையை பிடித்துக் கொண்டவன்.. “ப்ரியன்.. நீங்களும் தான்.. என் ஃப்ரெண்ட் ஆனதுக்கப்புறம் அவ்ளோ சீக்கிரம் தூங்க விட்ருவேனா? வெய்ட் பண்ணுங்க. இந்த பேய்க்கு பேய் ஓட்டிட்டு வர்றேன்..”

 

இதழ்களில் புன்னகை விரிய, “நான் அங்க தான் இருப்பேன்..” என்று தன் வீட்டு மொட்டை மாடியைச் சுட்டிக் காட்டி விட்டு.. நகர்ந்தான், ப்ரியன்.

 

இவள் கோபித்துக் கொண்டு அவன் பிடித்திருந்த கையை உதறி விட்டு.. கீழிறங்க மொட்டை மாடிக் கதவைத் திறந்து உள்ளே போகும் வரை அமைதியாகப் பார்த்திருந்தவன், அவள் கதவை மூடும் கடைசி நொடியில்.. பாய்ந்து சென்று, “ஹேய் போங்கு..” என்று வேண்டுமென்றே அவளை இடித்து நின்றான்.

 

“ஹய்யோ.. வெளியே போய் தொலைப் பிசாசே.. யாராவது வந்துடப் போறாங்க..”

 

“உன்னப் பார்க்கறதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு ***கிலோ மீட்டர் பைக் ஓட்டிட்டு இந்த மிட் நைட்ல சாகசம்லாம் பண்ணி வந்திருக்கேன்? நீ என்னடான்னா வெளிய விட்டு கதவைப் பூட்டற?”

 

“பைப் ஏறி திருட்டுப்பய மாதிரி வந்துட்டு பெருமை வேறப் பீத்திக்கறியா?”

 

“ஹ.. சுவரேறி குதிக்கறவளுக்குலாம் பைப் ஏறி குதிக்கறவன் தான் புருஷனா வருவான்.” என்று தான் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

 

“உன்னை மாதிரி வாலில்லாத கொரங்க லவ் பண்ணேன்ல எனக்கு தேவை தான்..” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ளும் விநாடிப் பொழுதில்.. அவளை இழுத்து, கன்னங்களை ஆக்கிரமித்திருந்தான்.

 

கன்னங்களோடும், காது மடல்களோடும் போர் செய்தது போதுமென.. கழுத்தடியில் இளைப்பாறியவன், “ஹ்ம்ம்.. ஆகச்சிறந்த பர்ஃப்யூம்..” என்றான், ஆழ்ந்த சுவாசத்துடன்..!

 

அதுவரைத் துவண்டு.. அவனின் டீ-ஷர்ட்டின் காலரை இறுக்கியிருந்தவள், இப்போது அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு.. தன் சிவந்த முகத்தைக் காட்டாமல் திரும்பி நின்று கொண்டு, “உன்னைக் கொன்னுடுவேன்.. ஓடிடு” என்றாள், பிசிறடிக்கும் குரலில்..!

 

“வெண்மதி…” கிறக்கமாக வெளிவந்த குரலில் மீண்டும் தன்னிலை இழக்க இருந்தவள், “மரியாதையா ஓடிப் போய்டு..” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

 

திரும்பி நின்றிருந்தவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டவன்.. “நீயும் வர்றியா? ஓடிப் போலாம்..” என்றான்.

 

“அய்யோ..! தெய்வமே… தயவுசெஞ்சு கிளம்புமா.. ப்ளீஸ்ஸ்ஸ்..” அவள் கெஞ்சலில் இறங்கியதும்..

 

அவளை விட்டு விலகி நின்று கொண்டு, “ஹ்ம்ம்.. ஒரு ஹேண்ட்சம் ஹீரோவ, வருங்காலத்துல உன் புள்ளைக்கு அப்பாவா வரப் போறவன அலட்சியப்படுத்திட்டீல.. இந்த நாள் மட்டுமில்ல.. இனி வரப்போற ஒவ்வொரு நாளும் இதுக்காக நீ வருத்தப்படப் போற..”

 

“என்ன மண்ணாங்கட்டிக்காம்?” என்று பல்லைக் கடித்தாள்.

 

அவளின் கீழுத்தட்டைப் பிடித்திழுத்து, “இனி தினமும் இந்த ஸ்ட்ராபெர்ரிஸ டேஸ்ட் பண்ணாம விடமாட்டேன்..” என்றான், ஒற்றைக் கண்சிமிட்டி..!

 

வெண்மதி அவன் கையை தட்டி விட்டு.. பொறுமை இழந்த குரலில்.. மேலேப் பார்த்து, “காட்….” என்றாள்.

 

“ஏண்டி சும்மா சும்மா அவரயே டிஸ்டர்ப் பண்ற? நான் தான் உன் பக்கத்துல இருக்கேன் தான?”.

 

“அதனால தான் அவரக் கூப்பிட வேண்டியதா இருக்கு. சொன்னா கேளுடா.. அம்மா முழிச்சிக்கிட்டா பக்கத்துல நா இல்லனு.. என்னைத் தேடுவாங்க.. ப்ளீஸ் போயேன்..”

 

“அப்ப வா.. அம்மா பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்..”

 

அருகிலிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து.. “இப்ப மட்டும் நீ போகல.. மண்டைய உடைச்சிடுவேன்..” என்றாள்.

 

“ச்சே.. கொஞ்ச நேரம் காதலி கூட ரொமான்ஸ் பண்ணலாம்னு பார்த்தா.. போ போ னு துரத்தறா.. என்ன கொடுமை சார் இது?” என்று நெற்றியில் அறைந்து சலித்துக் கொண்டவன், அவளை இழுத்து பிறை நெற்றியில் அழகாய்.. சின்ன முத்தமொன்றை வைத்தப் பின்பே வெளியேறினான்.

 

வெளியே.. ப்ரியன் இன்னும் தூங்காமல் லேப்டாப்பில் நிறுவனத்தில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். ‘கண்டிப்பா நமக்கு வழி இல்லாமப் போகாது’ காதில் வெண்மதியின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

திடீரென, “ஹாய் ப்ரியன்..” என்ற உற்சாகக் குரலில் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு நிமிர்ந்தான். தன் அருகில் மடியில் அமராதக் குறையாக இடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தவனைப் பார்த்ததும் தானாய் புன்னகை மலர்ந்தது, அவன் இதழ்களில்..!

 

“ஹாய்.. என்ன உங்க பேய்க்கு பேயோட்டியாச்சா?”

 

“போங்க பாஸ்.. எனக்கு வெக்க வெக்கமா கம்மிங்..” என்று ப்ரியனின் தோளில் முகம் சாய்த்து கொண்டான்.

 

“ஹாஹா..”

 

“அது சரி.. நானெல்லாம் வேலை நேரத்துலயே ஒழுங்கா வேலை செய்ய மாட்டேன்.. நீங்க என்ன இப்டி மிட் நைட்ல மிச்சமில்லாம வேலைய முடிச்சிட்டு இருக்கீங்க போலயே?”

 

“அது.. கொஞ்சம் கம்பெனி டீடெய்ல்ஸ்..”

 

“கம்பெனி? என்ன கம்பெனி பாஸ்? ஐஸ் கம்பெனியா?”

 

“ஹாஹா.. இல்ல.. கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி”

 

“ஊஊ.. வாவ்!!!” என்று கண்களை விரித்தவன்.. நம்ம லைனா நீங்க? ப்ரியன்.. இப்ப நம்ம நெருங்குனப் பங்காளி ஆயிட்டோம்” என்று ஹைஃபை கொடுத்தான்.

 

“அப்ப நீங்களும் கன்ஸ்ட்ரக்ஷன் ஃபீல்டு தானா?”

 

“ஆமா பாஸ்.. ஏண்டா இதப் படிச்சோம்னு தமிழ்நாட்டுல அம்புட்டு பயலும் ஃபீல் பண்றப் படிப்பு.. எங்களுக்கு வேலை கிடைக்குதோ இல்லயோ.. எங்கள வச்சு மீம் க்ரியேட்டர்ஸ்க்கு நல்லா வேலை கிடைக்குது.. ஹூம்ம்..”

 

“ஹாஹா.. இன்ஜினியரா நீங்க?”

 

“சரியாப் போச்சு.. அதத் தான இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன்..?”

 

“ஓகே, எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க?”

 

“சென்னைல ‘தேவேந்திரன் கன்ஸ்ரக்ஷன்ஸ்’. தெரிஞ்சிருக்கணுமே உங்களுக்கு..”

 

“வாட்!!! தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸா? அது என் ஃப்ரெண்டோட கம்பெனியாச்சே..”

 

“யாரு? ரவீந்திரன்?”

 

“எஸ்.. தேவா அங்கிளோட ஒரே பையன் அவன் தான? ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்..”

 

“அவர் தான் என்னோட பாஸ்..”

 

“ஓ!! தேவா அங்கிள் ஃபீல்டு பத்தி எனக்கு நிறைய அட்வைஸ் குடுப்பார்.. நைஸ் மேன்..” என்ற ப்ரியனின் மனம்.. ‘அத்தனை அட்வைஸைக் கேட்டும் நிறுவனத்தைக் கோட்டை விட்டு விட்டோமே’ என அடித்துக் கொண்டது. பின் அவனாகவே, “பாருங்களேன்.. நீங்க உங்க பேரயே சொல்லல..” என்றான்.

 

“ஹாஹாஹா.. உஃப் என்று ஊதினால் அணையும் தீக்குச்சி அல்ல இவன்.. ஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் மறையாதவன் இவன்.. இவன் இல்லயேல் அண்ட சராசரமே இல்லாமல் போகும்.. ஹாஹாஹா..”

 

சற்று முன் வெண்மதியிடம் வம்பு வளர்த்தவனைப் பார்த்திருந்தாலும்.. இப்போது ஒரு மாதிரி திருதிருவென முழிக்கவே செய்தான், ப்ரியன்.

 

‘என்னக் கொடுமை சார் இது? பேர தானக் கேட்டேன்!!!’

 

“புரியல.. சூர்யாவா உங்க பேரு?”

 

“அது தான் இல்ல.. ஆதவன்..” என்றான், புருவங்களை உயர்த்தி..!

 

“ஆதவன்? வெண்மதி – ஆதவன்..” சொல்லிப் பார்த்து விட்டு.. “தட்’ஸ் நைஸ்” என்றான், முகம் மலர..!

 

“அந்த போங்கு என் பேருக்காகவே என்னை லவ் பண்ணுதுங்க, ப்ரியன்..”

 

ப்ரியன், “ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டு ’ங்க’ போடறியே ஆத..” என்று சொல்லி வாய் மூடும் முன்..

 

“ஆமாண்டா ப்ரியன்.. நானே சொல்லணும் நினைச்சேன்டா.. ஃப்ரெண்ட்ஸா ஆனதுக்கப்புறம்டா மச்சிய விட்டுட்டு ‘ங்க’ போட்டோம்னாடா.. நட்புக் குத்தம் ஆகிடும்டா. இப்ப நீ சொல்லிட்ட தானடா.. இனி பாருடா.. உன்னை டால்டா ஆக்காம விட மாட்டேன்டா.. ப்ரியன்டா.. ஈஈஈ..”

 

அவன் ‘ஆமாண்டா’ என்று ஆரம்பிக்கையில் திகைப்பாய் பார்த்திருந்த ப்ரியன்.. பேசி முடிக்கையில் கடகடவென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

 

“ஹாஹா.. யூ ஆர் இன்ட்ரஸ்டிங் மேன் ஆதவன்”

 

இருவரும் சிறிது நேரம் பேசி முடித்து.. ஆதவன் கிளம்பும் போது.. “வா ஆது.. கீழ எங்க வீட்டு வழியா போகலாம்..” என்றான்.

 

“யாரைப் பார்த்து வாசல் வழியாகப் போக சொன்னாய்? மூச்சைப் பிடித்து.. சுவரேறி குதித்து.. சுற்றும் முற்றும் பார்த்து யார் கண்ணிலும் படாமல்.. கைகள் நோக பைப்பைப் பற்றி.. மேலேறி மொட்டை மாடியில் குதித்து.. காதலியைக் காண ஓடோடி வந்த இந்த சுத்த வீரனைப் பார்த்தா வாசல் வழிப் போகச் சொல்கிறாய்..? வேதனை.. அவமானம்.. வெட்ட்ட்…கம்..!” என்று கைகளைக் குவித்து நெற்றியில் குத்திக் கொண்டான்.

 

தான் பேசுவதை விழி மூடாமல் பார்த்து கொண்டிருந்த ப்ரியனின் முன் சொடுக்கு போட்ட ஆதவன், “ப்ரியன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம்.. நான் நல்லா தான் இருக்கேன்.. பட், வெண்மதிய நினைச்சா தான் பாவமா இருக்குது..”

 

“ம்க்கும்” என்று இதழ் வளைத்தவன்.. “அவக்கிட்ட மாட்டிட்டு முழிக்கற நான் தான் பாவம்.. போக போக நீயே புரிஞ்சிக்குவ..” என்று கூறி விட்டு.. நேரமாகி விட்டதென தன்னோடு தங்க சொன்ன ப்ரியனை மறுத்து விட்டு.. சொன்னது போலவே.. பைப் வழியே கீழிறங்கி.. கேட்டை (gate) தூரத்தில் இருந்து ஓடிச் சென்று.. ஒரே தாவலில் தாண்டி அந்த பக்கம் குதித்து சென்றவனை.. மேலிருந்து புன்னகை மாறாமல் பார்த்திருந்தான், ப்ரியன்.

 

ஏதோ ஒரு நிம்மதி உணர்வில் தளும்பிய மனதோடு கண்ணயர்ந்தாலும்.. ஓரத்தில் ப்ருந்தாவின் நினைவு முள்ளாய் குத்திக் கொண்டே இருந்தது.

 

3.

 

மறுநாள் கண்விழித்த வெண்மதி.. தன்னருகில் பட்டத்தைக் கட்டி கொண்டு.. சற்றே இதழ் விரிய தூங்கிய தருணின் கலைந்த தலைமுடியை இன்னும் கலைத்து விட்டு ரசித்திருக்கையில்..

 

“மதி.. நைட் எத்தன மணிக்கு ரெண்டு பேரும் தூங்கினீங்க?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார், வெண்மதியின் அம்மா சுமதி.

 

“சீக்கிரம் தூங்கிட்டோம்மா..”

 

“இன்னிக்கு ஒரு நாளாவது உண்மைய பேசேன்டி..”

 

“நான் என்னைக்குமா பொய் பேசிருக்கேன்..?”

 

“நீ என்னத்தையும் பேசிட்டு போ.. இன்னிக்கு ஊருக்கு கிளம்பணும்.. இவன் கூடவே சுத்திட்டு இருக்காம கொஞ்சம் கூடமாட வந்து வேலையப் பாரு..”

 

“வேலையெல்லாம் என்னை செய்ய சொல்லாதீங்கம்மா.. சுத்த போர்..”

 

“உன்னை ஆஃபீஸ்ல வச்சு எப்டி தான் இந்த பய வேலை வாங்கறாங்கனோ தெரியல.. சரியான சோம்பேறி”

 

சோம்பேறி என்றதில் சிலிர்த்துக் கொண்டு.. அன்னையிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்து விட்டாள், பல்லைக் கூட விளக்காமல்..

 

வெண்மதி.. ஶ்ரீதர் – சுமதி தம்பதிகளின் தவப் புதல்வி. அஜய்யின் ‘தொல்லை’ தங்கை. B. Arch., படித்து விட்டு.. அண்ணனின் கம்பெனியில் பணிபுரிகிறாள்.

 

‘Right Choice Interiors’ என்ற கம்பெனியின் எம். டி. வெண்மதியின் அண்ணன் அஜய்.. ஆதலால் வேறு வழியில்லாமல் இவள் அங்கு கொட்டும் குப்பைகளை பொறுத்துக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

 

இரக்க குணம் கொண்ட பாசக்காரி. வால்தனங்கள் மிகுந்த சேட்டைக்காரி. ஆதவனின் சேட்டைக்கு இவளின் சேட்டைகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல.

 

ஶ்ரீதர் சென்னையில் சிறுவர்களுக்கான துணிக்கடை வைத்து நடத்தும் சிறு வியாபாரி. சுமதி இனிமையான இல்லத்தரசி.

 

இப்போது சுமதியின் தங்கை சத்யாவின் வீட்டிற்கு தருணைப் பார்க்கவென்று இரண்டு நாள் பயணமாக வேலூர் வந்துள்ளனர். சுமதியின் சித்தி பெண் சத்யா.. அவரை விட பதினான்கு வயது இளையவர்.

 

சுமதிக்கு பத்தொன்பது வயதிலேயே திருமணம் முடித்து விட்டதால்.. சத்யாவின் ஆறாம் வயதிலேயே நம் வெண்மதி பூமியை பார்க்க வந்து விட்டாள். சத்யாவிற்கும், வெண்மதிக்கும் இடையேயான நட்பிற்கு.. ஆறு வயது இடைவெளி பெரிதாகத் தோன்றாததால்.. வெண்மதி அவரை சித்தி என்று இதுவரை அழைத்ததே இல்லை. எப்போதும் சத்யா தான்..!

 

அன்றலர்ந்த மலர் போல்.. குளித்து இளம் பச்சை வண்ண சுடிதாரில்.. ஈரக் கூந்தலை டவலால் துவட்டிக் கொண்டே.. உள்ளே வந்த சத்யா, “வெண்ணி.. காலைலயே எங்கக்காக்கிட்ட வம்பு வளர்க்க ஆரம்பிச்சிட்டியா? குளிச்சிட்டு சாப்ட வா.. தோசை ஊத்தறேன்.. என்ன சட்னி செய்யட்டும்?” கேட்டாள்.

 

“ஆமா.. அவ கேக்கறத செஞ்சு குடுத்து ஊட்டி விட வேண்டியது தான.. ஏண்டி இப்டி இருக்க? என்ன சட்னி வேணுமோ அவளையே செய்ய சொல்லு..”

 

“இன்னும் கொஞ்ச நேரம் தான் இங்க இருப்பா.. அப்புறம் எப்ப பார்க்கப் போறோமோ? என் திருப்திக்கு நானே செஞ்சு குடுக்கறேன். உன் வீட்ல போய் அவள வேலை வாங்கிக்கோ..”

 

“அப்டி சொல்லு சத்யா.. வீட்ல அப்பாவோட சப்போர்ட் எனக்கு எப்பவும் இருக்கும். அங்க என்னை இப்டிலாம் மிரட்ட முடியாதுல.. அதான் இங்க ட்ரைப் பண்ணி பார்க்கறாங்க உன் சிஸ்ஸி.. பாவம் அவங்களுக்கு தெரியல. அவங்க தால் என்கிட்ட எப்பவுமே குக் ஆகாது..”

 

“அந்த தைரியம் தான் உனக்கு.. உன்னை எதாவது சொன்னா.. அந்த மனுஷன் வந்துடுவார் வரிஞ்சு கட்டிட்டு..”

 

“பின்ன அவர் பொண்ண வேலை வாங்கினா அவருக்கு கோவம் வராதா?”

 

“அடியே.. போதும்டி வழக்கடிக்காம போய் குளிச்சிட்டு வா..” என்றாள் சத்யா.

 

வெண்மதி குளித்து முடித்து.. தருணை எழுப்பி அவனையும் குளிக்க வைத்து.. இருவரும் தங்கள் சேட்டைகளோடு அந்நாளைத் துவங்கினர்.

 

*********

 

காலை உணவை முடித்துக் கொண்டு, லேப்டாப்போடு அமர்ந்திருந்தான், ப்ரியன்.

 

ப்ரியனின் அப்பா கார்த்திகேயன். அம்மா பல்லவி. ஒரே தங்கை பாரதி. ப்ரியன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே கார்த்திகேயன்.. மாரடைப்பில் இறைவனடி சேர்ந்து விட்டார்.

 

பல்லவி கல்லூரிப் பேராசிரியை.. கணவரின் இழப்பில் மனம் சோர்ந்து தான் போனார். கார்த்திகேயன் கோடீஸ்வரர் இல்லையென்றாலும் ஓரளவு பணக்காரர் கேட்டகிரி தான். சில சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தாலும்.. அதை பல்லவி.. பிள்ளைகளின் பிற்காலத்திற்கென நினைத்து.. வைராக்கியத்துடன் அவரின் வருமானத்தில் பிள்ளைகளை அவர்கள் விரும்பியப் படிப்பில் சேர்த்து படிக்க வைத்து விட்டார்.

 

ப்ரியனின் தங்கை பாரதி.. ஒரு ஃபேஷன் டிசைனர்.. தற்போது திருமணமாகி மும்பையில் வசிப்பவள், படித்த படிப்பை வீணாக்காமல்.. பொட்டிக் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறாள்.

 

கல்லூரி செமஸ்டர் லீவு இருப்பதால் சாவகாசமாய் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார் பல்லவி..

 

“என்னடா.. இந்நேரம் சைட்டுக்கு போகணும்னு கால்ல சக்கரத்த கட்டிட்டு கிளம்பிருப்ப.. இன்னிக்கு இன்னும் லேப்ப நோண்டிட்டே உட்கார்ந்துருக்க?”

 

“இன்னிக்கு ஆஃபீஸ் தான் போகப் போறேன்.. லேட்டா போய்க்கலாம்..”

 

“விஷ்வா பார்த்துக்குவான்ற தைரியம் உனக்கு..”

 

‘இத்தன நாளும் அப்டி இருந்தது தான்மா தப்பா போச்சு..’

 

இன்னும் அம்மாவிடம் தான் விஷ்வாவால் ஏமாற்றப் பட்டதை சொல்லவில்லை. எப்படியும் தன்னதை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை ஆழிப்பேரலையாய் அலைமோதிக் கொண்டிருந்தது.

 

“பல்லவி ஆன்ட்டிஈஈஈ…” கத்திக் கொண்டே ஓடி வந்தான் தருண், கூடவே வெண்மதியும்..!

 

“ஹேய் தரூக் குட்டி.. வா வா.. இன்னிக்கு என்ன கேம் விளையாடலாம்? வாம்மா வெண்மதி..”

 

“ஹாய் ஆன்ட்டி..”

 

“சாப்ட்டாச்சா ரெண்டு பேரும்? வாங்க.. எங்க வீட்டு சமையல டேஸ்ட் பண்ணிப் பாருங்க..”

 

“இல்ல ஆன்ட்டி.. தாங்க்ஸ்.. இப்ப தான் சாப்ட்டோம்..”

 

“ப்ரியன்.. இவ வெண்மதி.. நம்ம சத்யாவோட அக்கா பொண்ணு.. நேத்து கூட உன்கிட்ட சொன்னேனே..”

 

“தெரியும் ஆன்ட்டி.. ஹாய் மிஸ்டர் ப்ரியன்..”

 

“தெரியுமா? எப்டிடா?” என்று மகனைக் கேட்டார்.

 

“அது…”

 

“நேத்து மொட்டை மாடில பட்டம் விடும் போது ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.. இல்ல வெம்மதி?”

 

“ஹ்ம்ம்.. ஆமா ஆன்ட்டி..”

 

‘நல்லவேளை பயபுள்ளைக்கு நைட் எத்தன மணிக்குனு சொல்லத் தெரியல..’

 

“ஓ! சரி சரி.. இரு நான் சாப்ட்டு வந்துடறேன்.. நம்ம நேத்து மாதிரி ஹைட் & சீக் விளையாடலாம்..”

 

“விளையாட முடியாது ஆன்ட்டி.. வெம்மதி ஊருக்கு போறாளாம்”

 

“ஆமாவா வெண்மதி?”

 

“ஆமா ஆன்ட்டி.. அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..”

 

“ரெண்டு நாள் நீ இருந்த.. நல்லா கலகலனு இருந்தது.. உன் கூட சேர்ந்து நானே சின்னப் பிள்ளையா மாறிட்ட மாதிரி இருந்தது.. அடுத்து எப்பமா வருவ..”

 

“இன்னும் ரெண்டு மாசத்துல தருணோட பர்த்டே வருது ஆன்ட்டி.. அதுக்கு கண்டிப்பா வருவேன்.. சரி கிளம்புறேன் ஆன்ட்டி.. பை ப்ரியன்..”

 

“ஹ்ம்ம்.. பை..” என்ற ப்ரியனின் மூளை ஒரு நிமிடம் தாமதித்து.. எதையோ கைப்பற்றியதை உணர்ந்து.. சென்று கொண்டிருந்தவள் கேட்டைத் தாண்டும் முன்.. வேகமாக வெளியே போய் அழைக்க நினைத்தவன்.. அவள் செய்த செயலில் அசையாமல் நின்று விட்டான்.

 

போர்டிகோவில் நின்றிருந்த ப்ரியனின் பைக்கை அசால்ட்டாக ஓடிப் போய் தாண்டி சென்று.. அவளைப் பார்த்து கைத் தட்டி குதித்து ஆர்பரித்துக் கொண்டிருந்த தருணிடம் ஹைஃபை கொடுத்தாள், வெண்மதி.

 

மலைத்து நின்றவன்.. அவள் வெளியே செல்வதை உணர்ந்து.. தலையை உலுக்கிக் கொண்டு, “மிஸ். வெண்மதி..” என்றழைத்தான்.

 

திரும்பியவள் மாறாத புன்னகையுடன்.. “சொல்லுங்க ப்ரியன்..” என்றாள்.

 

“வந்து.. ஆதவனோட நம்பர் வேணுமே.. ப்ளீஸ்.. நேத்து வாங்க மறந்துட்டேன்..”

 

“நம்பரா? நேத்து பத்து, பதினஞ்சு நிமிஷம் பேசிருப்பீங்களா? அதுக்குள்ள அந்த இடியட் உங்கள மெஸ்மரைஸ் பண்ணிடுச்சா?” என்று விழி விரித்தாள்

 

சிரிப்புடன், “உங்களுக்கு அதுல ரொம்ப பொறாமை போல..” என்றான்.

 

“பின்ன இல்லயா? எல்லாரையும் பேசியே கவுத்துடுவான் ஃப்ராடு..”

 

“ஹாஹா.. அவனை ஃப்ராடுனுலாம் சொல்லாதீங்க. நாங்க ரெண்டு பேரும் வாடா போடா சொல்ற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்..”

 

“ஹாங்.. இது எப்ப?”

 

“நேத்து தான்..”

 

“ஓ..!” அவளிடம் ஆதவனின் மொபைல் நம்பரைப் பெற்றுக் கொண்டு விடைக் கொடுத்தான்.

 

விடைப்பெற்று திரும்பியவள்.. மீண்டும் வந்து, “ப்ரியன்.. உங்க நம்பர் தரலியே..?” கேட்டாள்.

 

“என் நம்பரா?” என்று இழுத்தான்.

 

“ஆமா.. எனக்கு வேணும்.. குடுங்க..”

 

‘இந்த பொண்ணுக்கு எதுக்கு நம்ம நம்பர்?’ என யோசித்தாலும்.. தன் எண்ணை தரவே செய்தான்.

 

“ஓகே ப்ரியன்.. நானும் உங்க ஃப்ரெண்ட் தான? எப்ப வேணாலும் கால் பண்ணலாம் தான?”

 

“தாராளமா மிஸ் வெண்மதி..”

 

“அந்த மிஸ்ஸ கட் பண்ணுங்க ப்ரியன்.. ஓகே பார்க்கலாம்.. பை..”

 

வெண்மதி சென்றதும் உள்ளே வந்தவனை.. “ப்ரியன்.. வெண்மதி நல்ல பொண்ணா தெரியறா இல்ல? அவங்க அம்மா கூட நல்லா பழகறாங்கடா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு ஓகேனா நான் சத்யாகிட்ட பேசட்டுமா?” ஆர்வமாய் மகன் முகம் பார்த்துக் கேட்டார்.

 

சற்றே திகைத்த ப்ரியன், “ம்மா.. லூசு மாதிரி பேசாதீங்க. என்கிட்ட மாதிரி சத்யாக்காகிட்ட உளறி வைக்காதீங்க.. வெண்மதி என்னோட நல்ல ஃப்ரெண்ட்.. தட்’ஸ் இட்” என்றான்.

 

“ஏண்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைக்கிறேன். உளருரேன்னு சொல்ற? என்னோட ஒரு பார்வைலயே எங்க காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் பத்தடி தள்ளி நிப்பாங்க தெரியுமா? நீ என்னடான்னா என்னை பைத்தியக்காரி ரேஞ்சுக்கு பேசற.. லூசு, உளருறேன்னுட்டு..” ஆற்ற மாட்டாமல் கத்திக் கொண்டிருந்தார்.

 

“கால்ம் டவுன் மாம்.. வெண்மதிய நான் அப்டிலாம் நினைக்கல. அதான் சொல்றேன்..”

 

“நேத்து தான் பார்த்துருக்க.. அதனால அப்டி எதுவும் தோணாம இருக்கலாம். கொஞ்ச நாள் ஃப்ரெண்ட்ஸா பழகினப்புறம் பிடிக்கலாம் இல்ல?”

 

“நோ.. எப்பவும் தோணாது..”

 

“ஏண்டா.. இப்டி சொல்ற?”

 

“மாம்.. புரிஞ்சிக்கோங்க.. அவளப் பார்த்தப்ப அழகான பொண்ணா.. தேவதை மாதிரி தான் தோணுச்சு. ஆனா என் லைஃப் இவக்கூடனு தோணவே இல்லம்மா. வெண்மதி விளையாட்டு பொண்ணு. நான் சிரிக்கக் கூட காசு கேக்கறவன்னு நீங்க தான சொல்லுவீங்க? அவளுக்கு அவள மாதிரி ஒருத்தன் தான் லாயக்கு. மோர் ஓவர்.. நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்..”

 

அவன் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவர்.. அவனின் கடைசி வரியில், “என்னடா சொல்ற?” என அதிர்ந்தார்.

 

“பட், ப்ரேக்கப் ஆகிடுச்சு..”

 

“என்னடா சொல்ற?”

 

“ஆனா அவள மறந்துட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியும்னு தோணலம்மா..”

 

“ஹாங்.. என்னடா சொல்ற?’

 

“ச்சு.. என்னதிது..?”

 

“சரி வெண்மதி வேணாம்.. நீ லவ் பண்ற பொண்ணு யாருனாவது சொல்லு.. அம்மா போய் பேசறேன்.. என் பையன ஏன் பிடிக்கல கேக்கறேன்..”

 

“நோ மாம்.. வேணாம்னு விட்டு போனவக்கிட்ட போய் திரும்ப கேக்கற அளவு ஒண்ணும் உங்க பையன் குறைஞ்சிடல..”

 

“அப்ப என்ன பண்ற ஐடியால இருக்க? காவி கட்டிட்டு போகப் போறியா? நான் பெத்து வச்சிருக்கறது கறிவேப்பிலை கொத்து மாதிரி ஒரே ஒரு பையன்..”

 

“நான் என்ன வேப்பிலை மாதிரி ரெண்டு பையன்னா சொன்னேன்?”

 

“டேய்.. என்னப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா? எங்க காலேஜ்ல ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் நான் ஒரு பார்வை பார்த்தா….”

 

“ஷ்ஷ்.. ம்மா.. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.. போதுமா? ஆள விடுங்க”

 

“இதுக்கு தான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன்.. உனக்கு முடிச்சிட்டு பாரதிக்கு முடிக்கலாம்னு.. அவளுக்கு தான் மொதல்ல முடிக்கணும்னு ஒத்தக் கால்ல நின்ன.. இப்ப அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது.. இப்பவும் இஷ்டம் இல்ல சொன்னா என்ன அர்த்தம்..?”

 

“இஷ்டம் இல்லனு அர்த்தம்..” பேச்சை முடித்துவிட்டு, உள்ளே சென்று விட்டான்.

 

4.

 

ப்ரியன்.. அன்று மதிய ஒரு மணியளவில்.. அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்று.. ஆதவனை அழைப்பதற்காக மொபைலை எடுத்தான். திடீரென.. உள்ளிருந்து சேர் உருண்டு விழும் சத்தத்தில் திடுக்கிட்டுப் போய்.. அனிச்சையாய், கதவை தட்டாமலேத் திறந்தான்.

 

திறந்தவனின் இதழ்கள் அவனின் அனுமதி இல்லாமலேயே.. புன்னகை சிந்தியது. சேர் ஒரு பக்கமும், டீப்பாய் மறுபக்கமும் உருண்டு கிடந்தது. சோஃபாவின் இந்தப் பக்கம் ஆதவனும்.. அந்தப் பக்கம் பிங்க் வண்ண சல்வாரில் ப்ரியனின் அம்மாவின் வயதையொத்தப் பெண்மணியும் ஓடிப் பிடித்து விளையாடும் தினுசில் நின்றிருந்தனர்.

 

“டேய் உன்னைக் கொன்னுடுவேன்டா.. ஒழுங்கா குடுத்துடு..”

 

“ம்மா.. ம்மா.. ப்ளீஸ்மா.. மேட்ச் இருக்குதுமா.. முடிஞ்சதும் தரேன்மா..” தன் அன்னையிடம் இருந்து.. டிவி ரிமோட்டை கைப்பற்றியிருந்த ஆதவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

“நானும் தான்டா வ்ரெஸ்ட்லிங் பார்க்கணும்.. இன்னிக்கு என் ராக் வர்றான்டா.. மரியாதையா ரிமோட்டக் குடுத்துடு.. ”

 

“அது அரதப் பழசும்மா.. யூ – ட்யூப்ல இருக்கும்.. நான் உங்க மொபைல்ல டவுன்லோட் பண்ணி தரேன். ப்ளீஸ்ம்மா.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ரிமோட் நான் வச்சிக்கறேன்மா..”

 

“ஏன் நீ உன் மேட்ச்ச மொபைல்ல பார்க்க வேண்டியது தான?”

 

“அதுல பார்த்தா மேட்ச் நல்லாவே இருக்காதும்மா.. என்ன இருந்தாலும் பெரிய ஸ்க்ரீன்ல பாக்கற மாதிரி இருக்குமா?”

 

“ஏன் அந்த பெரிய ஸ்க்ரீன்ல நான் மட்டும் என் ராக்-அ பார்க்க மாட்டேனா?”

 

“தெய்வமே.. அவன் ஜட்டியோட உருண்டு விழறத பார்த்து ஜொள்ளு விடப் போறீங்க.. அத பெருசுலப் பார்த்தா என்ன? சிறுசுலப் பார்த்தா தான் என்ன?”

 

“ஹாஹாஹா….”

 

இவ்வளவு நேரம் இருவரின் விளையாட்டைப் பார்த்திருந்த ப்ரியன்.. வாய்விட்டு சிரித்தான்.

 

‘எவ அவ..’ வடிவேலு ரேஞ்சில் அன்னையும், மகனும் திரும்பி பார்த்தனர்.

 

ப்ரியனைப் பார்த்த ஆதவன், “ஹாய்டா.. வா வா.. ம்மா.. திஸ் இஸ் ப்ரியன்.. மை ஃப்ரெண்ட்” என்று தன் அன்னை பார்கவிக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு.. ப்ரியனின் புறம் திரும்பி.. “ப்ரியன்.. இவங்க….”என்று ஆரம்பிக்கும் முன்.. “ஹாய் ப்ரியன்.. என் பேர் கூட உன்னோடது மாதிரி ரொம்ப அழகா இருக்கும் தெரியுமா..?” என்றார்.

 

என்ன பேசுவதெனப் புரியாமல் புன்னகைத்தவனிடம், “என்ன பேருனு கேக்க மாட்டியா?” என்று முகம் சுருக்கினார்.

 

“சொல்லுங்கம்மா.. என்ன பேரு..?”

 

அவன் கேட்டதில் முகம் மலர்ந்தவர், “என் பேர் கவி.. நல்லா இருக்குல?” கேட்டார்.

 

“ம்மா.. முன்னாடி உள்ள ‘பார்’ விட்டுட்டீங்களே..” – ஆதவன்.

 

“போடா.. அது ரொம்ப ஓல்டு நேம்.. அதான் விட்டுட்டேன்.. ஆதார் கார்டுல கூட மாத்தி தர சொன்னேனே ஆதூ.. அதுப் பத்தி விசாரிச்சியா?”

 

“ஆமா.. ரொம்ப முக்கியம் பாருங்க..”

 

“ஆமாண்டா.. முக்கியம் தான். கவி னு மாத்தினா தான் யங்கா இருக்கும்..”

 

“எப்டியோ இருந்துட்டு போகட்டும்.. ப்ரியன் உங்க முழுப் பேரு தெரியாம குழம்பிட்டு இருக்கான். நீங்க சொல்றீங்களா? இல்ல நான் சொல்லட்டுமா?”

 

“ம்க்கும்..” என்று அழகாய் முகம் சுளித்தவர்.. “பாஆஆர்கவி.. போதுமா?” என்று ராகம் பாடினார்.

 

அவரின் மனதைப் புரிந்த ப்ரியன், “பார்கவி.. நைஸ் நேம்.. என் காலேஜ்மேட் பேரு கூட பார்கவி தான்ம்மா..” என்றான்.

 

“ஆமாவா ப்ரியன்? இந்த காலத்துல கூட இந்த ஓல்டு நேம் வைக்கறாங்களா என்ன?” ஆச்சர்யமாகக் கேட்டார்.

 

“வைக்கறாங்கம்மா.. அழகான பேராச்சே..”

 

“அப்ப சரி.. டேய் ஆதூ.. எதையும் மாத்த வேணாம். பார்கவியே இருக்கட்டும்..”

 

“ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. வீட்டுக்கு வந்தவனுக்கு சாப்ட எதுவும் குடுக்கற ஐடியா இருக்கா இல்லையா?”

 

“அச்சோ.. மறந்தே போயிட்டேன் பாரு.. ப்ரியன்.. உட்காரு.. தோ வந்துடறேன்..” என்று கிச்சனிற்கு ஓடினார்.

 

“ஏண்டா.. அம்மாவ துரத்தற? நான் சாப்ட்டு தான் வந்தேன்.”

 

“உன்னை காப்பாத்துனேன்னு சந்தோஷப் பட்டுக்கோடா.. இல்லனா.. ‘இந்த சல்வார் நல்லாருக்கா? இந்த குர்தி மேட்சா இருக்கா’னு இப்ப உனக்கு ஃபேஷன் ஷோவே நடத்திக் காட்டிடுவாங்க.. புவர் லேடி..”

 

“ஆதவ்.. உங்க அப்பா…” என்று இழுத்தான்.

 

சின்னப் புன்னகையுடன் மேலே விரல் உயர்த்திக் காட்டினான் ஆதவன்.

 

“ஓ! சாரிடா.. நீயும் என்னை மாதிரி தானா?” என்று தன் தந்தையைப் பற்றி கூறினான்.

 

கேட்டு கொண்ட ஆதவன், “அப்பா ரெண்டு வருஷம் முன்ன தான் போனார்டா.. கார்டியாக் அரெஸ்ட்.. அம்மாவ பழைய மாதிரி மீட்டு வர தான் கஷ்டமாப் போச்சு.. இப்பக் கூட எனக்காக தான் இப்டி ஏதாவது சேட்டை பண்ணிட்டு இருக்காங்க..” என்றான்.

 

அதற்குள் கையில் காபி ட்ரேயுடன் வந்த பார்கவி, “என்னைப் பத்தி என்னடா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..?” கேட்டுக் கொண்டே காபியை எடுத்து ப்ரியனிடம் கொடுத்தார்.

 

“ஆமா.. நீங்க நேத்து ஐ. நா சபைல ஆணைப் பிறப்பிச்சி, அறிக்கை விட்டுட்டு வந்தீங்க பாருங்க.. அது தான் உங்களப் பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன்..”

 

“ஹ.. ஐ. நா சபைல மட்டுமா? ஐன்ஸ்டீனுக்கேக் கூட நான் ஐடியா குடுப்பேனாக்கும்..” என்று கெத்தாக முகத்தை வைத்துக் கொண்டார்.

 

“நாசால சாட்டிலைட் அனுப்ப ஆலோசனை குடுத்தீங்களே.. அத விட்டுட்டீங்க?”

 

“போடா அரட்டை.. ப்ரியன்.. இவ்ளோ நல்ல பையனா இருக்கியே.. எப்டி இவன் கூட சேர்ந்த? உன் நல்லதுக்கு சொல்றேன் கேளுடா.. இவனோட கெட்ட சகவாசம் உனக்கு வேணாம்.. உன்னையும் கெடுத்துடுவான். இப்பவே அவன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணு..”

 

“சொல்லிட்டாங்க நல்லகுடி நாணயம்.. தூத்துக்குடி வெண்கலம்.. கேட்டுக்கோடா..”

 

இருவரும் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதைப் பார்த்த ப்ரியனுக்கு குடித்த காபி புரையேறியது. ஆதவனின் குறும்புத் தனங்கள் எங்கிருந்து வந்ததெனப் புரிந்து கொண்டவன் மனம் நிறையப் புன்னகைத்தான்.

 

பார்கவி காபி மக்கை எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், “வெண்மதிக்கேத்த மாமியார்..” என்றான்.

 

“ஹ்ம்ம்.. அவ வந்ததும் ரெண்டையும் கட்டி எப்டி மேய்க்கப் போறேனோ தெரியலடா..” என்று போலியாய் சலித்துக் கொண்டான்.

 

“கஷ்டம் தான் போல.. காலேஜ் ப்ரொஃபசரா இருக்க எங்கம்மாவயே ஹைட் அண்ட் சீக் விளையாட வச்சிருக்கா உன் ஆளு..”

 

“ஹாஹா.. அவ அப்டி தான்.. சரி சொல்லுடா.. ஃபோன் பண்ணி மீட் பண்ணனும் சொன்ன..? என்ன விஷயம்? அந்த போங்கு நீ கேட்டதும் நம்பர் குடுத்துடுச்சா?” கேட்டான்.

 

“ஹ்ம்ம்.. கொஞ்சம் பர்சனலாப் பேசணும் ஆதவ்..”

 

“அப்ப வா.. நம்ம வெளில எங்கயாவது போலாம்..”

 

“உனக்கு இன்னிக்கு ஆஃபீஸ் இல்ல?”

 

“இருக்குது தான்.. மேட்ச் பார்க்கணுமேனு ரவி சர்க்கிட்ட வயித்துவலினு சீன் போட்டேன்..” என்று கண்சிமிட்டியவன்.. “ஆனா பாரு.. இந்தம்மா.. ‘ராக்’கப் பார்க்கணும்.. ‘பேக்’கப் பார்க்கணும்னு கடுப்படிக்கிறாங்க.” என்று எரிச்சலானான்.

 

“ஹாஹா.. சரி வா வெளியே போய் பேசுவோம்..”

 

“ஹ்ம்ம்.. ட்டூ மினிட்ஸ்..” சொன்னதைப் போல் இரு நிமிடங்களில் தயாராகி வந்தவனை.. அருகிலிருந்த சிறுவர் பூங்காவிற்கு அழைத்து சென்றான் ப்ரியன்.

 

“இங்க எதுக்குடா? சீ சா விளையாடவா கூட்டிட்டு வந்துருக்க?”

 

“ஹ்ம்ம்.. அல்மோஸ்ட் அப்டி தான்..” என்ற ப்ரியனின் முகம் சீரியஸ்னெஸ்ஸை தத்தெடுத்திருந்தது.

 

அவன் தோள் மீது ஆதரவாய் கை வைத்த ஆதவன்.. “இப்ப எதுக்குடா எவனயோ போட்டு தள்ளப் போற தெலுங்கு பட ஹீரோ மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?” என்றான்.

 

“விளையாடாத ஆதவ்.. போட்டு தான் தள்ளப் போறேன். நீதான் அதுக்கு ஹெல்ப் பண்ணனும்.” என்று பல்லைக் கடித்தான்.

 

“என்னது!!! டேய்.. யூ மீன்…”

 

“ச்சேச்சே.. அப்டிலாம் இல்லடா.. இது வேற.. ஃப்ரெண்ட்னு நம்பின ஒருத்தன் முதுகுல குத்திட்டான்..” என்று தான் தன் நிறுவனத்தில் ஏமாற்றப்பட்டதை.. உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை.. ஆதவனிடம் கொட்டித் தீர்த்தான்.

 

“விஷ்வாவும் நானும் ரெண்டு வருஷம் முந்தி தான் பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆரம்பிச்சோம். என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்னு நம்பினதால வொர்க்கிங் பார்ட்னர், ஃபினான்ஷியல் பார்ட்னர்னு பிரிக்காம எல்லாத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்தே செய்றதுனு.. பார்ட்னர்ஷிப் டீட் கூட சும்மா ஒரு பேருக்கு தான் போட்டோம்..”

 

“பெஸ்ட் ஃப்ரெண்ட் எப்டி திடீர்னு துரோகியா மாறினான்?”

 

“அது தான் எனக்கும் தெரியல ஆதவ்.. என்னால இன்னமும் கூட நம்பவே முடியல, என் விஷ்வாவா இப்டினு.. என் நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்டான்டா..” என்று அருகிலிருந்த பெஞ்சில் பொத்தென அமர்ந்தான்.

 

“டோண்ட் ஃபீல்டா.. பார்த்துக்கலாம் விடு..”

 

“நான் மேக்ஸிமம் ஆஃபீஸ்ல இருக்க மாட்டேன்.. கான்ட்ராக்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்றதுலயும், அது சாங்ஷன் ஆச்சுனா.. பார்ட்டி விரும்பின மாதிரியான ப்ளான் போடறதுலயும், நம்ம போட்ட ப்ளான் சைட்ல நம்ம கண்ணு முன்னாடி பில்டிங்கா உருவாகறதயும் பார்க்கறதுல தான் அதிக கவனம் செலுத்துவேன். ஆஃபீஸ், மீட்டிங், ஃபினான்ஷியல் வொர்க், ஆடிட்டிங் மேய்க்கறது இதுலலாம் ஆர்வமில்லாம இருந்தது தான் நான் பண்ண பெரிய தப்பு. என் பேருக்கு வர்ற ப்ராஃபிட்ஸ்லாம் பில்டிங் மெட்டீரியல்ஸ்க்குனு சொல்லி எடுத்துருக்கான். ஒவ்வொரு வாட்டி செக்ல சைன் பண்ணும் போதும்.. முட்டாளா கண்ண மூடிட்டு சைன் பண்ணிருக்கேன். எதனால? என் விஷ்வா மேல இருந்த நம்பிக்கைனால..”

 

‘நம்பிக்கை துரோகம் செய்த ஒருவனை இன்னமும் ‘என் விஷ்வா’ என்கின்றானே.. என்ன மாதிரியான நண்பன் இவன்!!!’

 

உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே.. “கன்ட்ரோல் யுவர் செல்ஃப் ப்ரியன்.. இப்ப நம்ம என்ன பண்ணப் போறோம்?” கேட்டான்.

 

“கம்பெனில விஷ்வா என் ஷேர்ஸ் எல்லாம் அவன் பேருக்கு மாத்திட்டான். பார்ட்னர்ஷிப் டீட் போட்ட டாக்யூமெண்ட்ஸூம் மொத்தமா அவன் பேருக்கு மாத்திருக்கான்.. அதக் காட்டி தான் என்னை வெளியே போக சொன்னான்.. அந்த டாக்யூமெண்ட் எப்டியாவது என் கைக்கு வரணும். ஆதவ்.. அந்த கம்பெனி என் உழைப்பு.. திரும்ப அதோட எம்டி சேர்ல உட்காருவேன். அதுக்கு எனக்கு உன் ஹெல்ப் வேணும். செய்வியா?” என்று கேட்டு.. ஆதவனிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறினான்.

 

கேட்டுக் கொண்டு நிச்சயம் உதவுவதாக உறுதியளித்த ஆதவன், “ஏண்டா.. நேத்து தான் பார்த்த என்னை நம்பி இதல்லாம்…” என வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தான்.

 

“ஹ்ம்ம்.. என்ன கேக்கறனு புரியுது.. இத்தன வருஷமா நம்பின அவனே.. கழுத்தறுத்துட்டான். திரும்பவும் நேத்து பழகின ஒருத்தன ஏன் நம்பறனு கேக்கற.. இல்ல?”

 

‘ஆம்’ எனத் தலையசைத்தான்.

 

“எனக்கும் தெரியலடா.. முதல்ல என் மனசு இதுக்கு நீ மட்டும் தான் செண்ட் பர்சன்ட் கரெக்டான ஆளுனு சொல்லுது. ரெண்டாவது.. உனக்கும் எனக்குமான ஃப்ரெண்ட்ஷிப் விஷ்வாவுக்கு தெரியாது. மூணாவது இந்த ப்ளானுக்கு தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பேரச் சொல்லி விஷ்வாகிட்ட நெருங்க உன்னால முடியும்.”

 

“டண் மச்சி.. உன் கம்பெனி கண்டிப்பா உன்கிட்ட வந்து சேரும்..” உறுதியாகக் கூறிய ஆதவனின் மொபைலில் அழைப்பு..

 

யாரென எடுத்து பார்த்தவன்.. ஜெர்க்காகி திருதிருவென முழித்தான்.

 

“ஏண்டா இப்டி முழிக்கற? யாரு கால் பண்றா?”

 

“இந்த போங்கு தான் ப்ரியன்..”

 

“எல்லாரும் லவர் கால் பண்ணா ஆசையோட அட்டெண்ட் பண்ணி.. ஹஸ்கியா பேசுவானுங்க.. நீ ஏண்டா இப்டி ஜெர்க்காகற?”

 

“நீ வேற ஏண்டா.. இவ என்ன ரொமான்டிக்கா பேசறதுக்கா கால் பண்றானு நினைச்ச?”

 

“ச்சே.. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது.. பேசுடா.. கட்டாக போகுது..”

 

“ஆனா ஆகட்டும்.. விடு..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. அழைப்பு நின்று விட்டது.

 

ப்ரியன் ஆதவனைத் திட்டுவதற்காக வாய் திறந்தான். இப்போது ப்ரியனின் மொபைலில் அழைப்பு.. எடுத்துப் பார்த்தவன்.. திரையில் புது எண்ணைப் பார்த்து.. யாராக இருக்கும் என புருவம் சுருக்கி யோசித்து கொண்டே.. அழைப்பை ஏற்றான்.

 

“ஹலோ.. ப்ரியன் ஹியர்..”

 

“ப்ரியன்.. திஸ் இஸ் வெண்மதி..”

 

அவளின் குரலைக் காதில் வாங்கிக் கொண்டே ஆதவனைப் பார்த்து.. ‘உன் ஆளு’ என இதழசைத்து விட்டு.. “சொல்லுங்க வெண்மதி..” என்றான்.

 

அவனைப் பார்த்து ஆதவன்.. அதிர்ந்த பாவனையோடு விழிகளைப் பெரிதாக விரித்து.. ‘வேண்டாம்.. வைத்து விடு..’ என எச்சரிக்கும் விதமாய்.. சைகை செய்து கொண்டிருந்தான்.

 

அவனை அலட்சியப்படுத்திய ப்ரியன் அந்த பக்கம் வெண்மதி கூறுவதை செவி மடுத்தான்.

 

“ப்ரியன்.. நீங்க இப்ப பிஸியா இருக்கீங்களா?”

 

“அப்டிலாம் ஒன்னும் இல்ல வெண்மதி.. சொல்லுங்க..”

 

“அப்படின்னா எனக்காக பாரீஸ் வரை கொஞ்சம் வர முடியுமா? ப்ளீஸ் ப்ரியன்..”

 

“என்னாச்சு வெண்மதி? எனி ப்ராப்ளம்?”

 

“இல்ல ப்ரியன்.. நீங்க வாங்களேன்”

 

“ஓகே.. வெய்ட் பண்ணுங்க.. வந்துடறேன்..”

 

அவன் பேசி விட்டு மொபைலை வைத்ததும், ஆதவன்.. “வரேன்னு சொல்லிட்டியா..? போச்சு போச்சு.. இனி உன்னை அந்த ஆண்டவன் மட்டும் இல்ல இந்த ஆதவனாலக் கூடக் காப்பாத்த முடியாது..” என்றான், கைகளை உதறிக் கொண்டே..!

 

“ஏண்டா இப்டி அலறுற?” வா போய் என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்..”

 

“எது..? நான் வரவா? ஆள விடு சாமி.. எங்க அம்மாவுக்கு நான் ஒரே புள்ள..”

 

“பாவம் எதாவது ப்ரச்சனையா இருக்கப் போகுது‌ ஆதவ்..”

 

“அவளால யாருக்கும் ப்ரச்சனை வராம இருந்தா போதாதா? அனுபவிச்சவன் சொல்றேன்.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல.. வர முடியலனு சொல்லிட்டு உசுரக் காப்பாத்திக்கோடா”

 

“ச்சு.. போடா..” எச்சரித்தவனை அலட்சியப்படுத்தி விட்டு.. தன் டோமினார் 400ஐக் கிளப்பிக் கொண்டு பறந்தான், ப்ரியன்.

 

ஆதவன், “என்ன கொடுமை சார் இது..? ஒரு மனுஷன் இவ்ளோ தூரம் சொல்றேன்.. மதிக்காம போறான்..! கடவுளே.. யாரு பெத்த புள்ளயோ.. இப்டி ஆப்ப தேடிப் போய் உட்காருது.. ஹூம்ம்..” புலம்பிக் கொண்டே தானும் வீட்டிற்கு கிளம்பினான்.

 

பிறந்ததிலிருந்தே ஸ்பென்சர், மாயாஜால் போன்ற மேல் தட்டு மால்களில் மட்டுமே ஷாப்பிங் செய்து பழகியிருந்த ப்ரியன்.. வெண்மதிக் குறிப்பிட்ட.. பாரிஸில் இருந்த அந்த பெரிய, பிரபலமான ஷாப்பிங் சென்டர் சென்று.. அங்கிருந்து வெண்மதியை அழைத்தான்.

 

“வெண்மதி.. நான் நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்.. நீங்க எந்த ஃப்ளோர்ல இருக்கீங்க?”

 

“ஃப்ளோரா? உங்கள யாரு அந்த கடைக்குள்ள போக சொன்னா? வெளில வாங்க ப்ரியன்..”

 

“ஓ! ஷாப்பிங் முடிச்சிட்டீங்களா? சரி.. இதோ வர்றேன்..”

 

“கால் கட் பண்ணாதீங்க.. அப்ப தான் நான் லொகேஷன் சொல்ல முடியும்..”

 

“சரிங்க வெண்மதி.. வெளில வந்துட்டேன்.. எங்க வரணும்?”

 

“அப்டியே ரோட் க்ராஸ் பண்ணி எதிர்க்க உள்ள காம்ப்ளக்ஸ் வாங்க..”

 

ப்ரியன் கடை வாசலில் நின்று பார்த்தான். கசகசவென்று குட்டி குட்டி கடைகளாகத் தெரிந்ததேயன்றி.. எந்த காம்ப்ளக்ஸை இவள் சொல்கிறாளெனத் தெரியாமல் நின்றான்.

 

பக்கத்தில் போய் பார்த்தால் தெரியுமோ என்னவோ என.. சாலையைக் கடந்து சென்றவன்.. இன்னும் அதிகமாகவேக் குழம்பினான்.

 

காதில் இருந்த ப்ளுடூத்தை இடது கையால் பற்றி.. “வெண்மதி.. இங்க நிறைய கடைகள் இருக்கே.. நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்டான்.

 

“நான் கடைக்கு வெளில மெயின் ரோட் பக்கத்துல தான் நிக்கறேன்.. கொஞ்சம் லெஃப்ட்ல பாருங்க ப்ரியன்..” சொல்லிக் கொண்டே தன் வாழைத்தண்டு கரத்தை உயர்த்தி காட்டினாள்.

 

அவளைப் பார்த்ததும்.. ‘ஹப்பாடா’ என முகம் மலர்ந்தவன்.. மொபைலில் அழைப்பை நிறுத்தி விட்டு, தன் வேக நடையுடன் அவளருகில் சென்றான்.

 

“ஹாய்..”

 

“என் கூட வாங்க ப்ரியன்..” என்றவள் முன்னால் நடந்தாள்.. நடந்தாள்.. நடந்து கொண்டே இருந்தாள். இடதுபுறம் திரும்பி நீண்ட நடை பாதையிலும், பின் வலது புறம் திரும்பியும் நடந்து போய் கொண்டே இருந்தாள்.

 

இது போன்ற சின்ன சின்னக் கடைகளை இதுவரை திரும்பிக் கூடப் பார்த்திராத ப்ரியன்.. வியர்த்து வழிந்த படி, அங்கிருந்த கடைகளை மலைத்துப் போய் பார்த்து கொண்டே அவள் பின்னால் நடந்தான்.

 

‘இத தான் லொகேஷன்னு சொன்னாளா? டேய் ஆதவா.. முடியலடா..’ மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே.. ஒரு வழியாக அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைந்தாள்.

 

அங்கு நடுத்தர வயதில் இருந்த ஒருவரைப் பார்த்து.. கைகளை கட்டிக் கொண்டு, ஏற்ற இறக்கத்துடன்.. “என்ன அண்ணாத்தே.. என் டீலுக்கு ஒத்து வர்றியா.. இல்லாங்காட்டி சார உன் பேர்ல எஃப்ஐஆர் போட சொல்லவா? சார் என் வீட்டாண்ட தான் இருக்கார்..‌ நான் ‘ம்ம்’ னு சொன்னா போதும்.. உடனே செஞ்ஞ்..சுடுவார்.. ” என்றாள், பக்கா சொர்ணாக்காவைப் போல்..!

 

ப்ரியன் பேயறைந்தது போன்ற முக பாவத்துடன்.. நேற்று இரவு பௌர்ணமி நிலவொளியில் தன்னை ரட்சிக்க வந்த தேவதையைப் போல் இருந்தவள் இவள் தானா என்று கண்களை மூடித் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“சர்.. சர்.. சர் உங்கள தான்..” அவள் தன்னை உலுக்குவதை உணர்ந்து.. தூக்கத்திலிருந்து விழித்தவனைப் போல, “ஹான்.. சொல்லுங்க வெண்மதி..” என்றான்.

 

“இவ்ளோ நேரம் சொல்லிட்டு தான இருந்தேன்? என்னனு கேளுங்க சர்”

 

“என்ன..?”

 

“ஹய்யோ.. என்கிட்ட இல்ல.. இதோ நிக்கறார் பாருங்க இந்த கடைக்காரர்.. அவர்க்கிட்ட கேளுங்க சொன்னேன்..”

 

“என்ன சர்..? எனி ப்ராப்ளம்?” என்று கடைக்காரரிடம் கேட்டான்.

 

வேகமாக அவன் காதருகே சென்று.. “ஸ்ஸ்.. கெடுத்தீங்களே காரியத்தை.. உங்கள போலீஸ்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவர போய் சாரு மோருன்றீங்க? ‘என்னய்யா பொம்பள கைல ராங்கு பண்றியா’னு சவுண்ட் விடுங்க..” என்றாள், சின்னக் குரலில்..!

 

திருதிருவென முழித்தவனைப் பார்த்து.. “ஹய்யோ.. ஏன் இப்டி அம்மாஞ்சி மாதிரி முழிக்கறீங்க ப்ரியன்..? சரி.. நான் பேசறேன்.. நீங்க அப்டியே என்னை ஃபாலோ பண்ணுங்க..” என்றாள்.

 

‘அம்ம்மா..ஞ்சியா? நம்ம மூஞ்சி என்ன அப்டியா இருக்குது?’ யோசித்து கொண்டே.. அவள் பேசுவதை கவனித்தான்.

 

“இங்க பாருங்க அண்ணே.. இப்ப முடிவா என்ன சொல்றீங்க? இந்த யானை செட்க்கு முப்பது பர்சண்ட் டிஸ்கௌண்ட் தருவீங்களா மாட்டீங்களா..?”

 

“நீ எத்தன வாட்டி கேட்டாலும் தர முடியாது தான் போம்மா.. ஆள இட்டாந்தா மட்டும் பயந்துடுவோமா நாங்க..? ஓனர் வர்ற நேரமாச்சு.. இடத்த காலி பண்ணி போயிட்டே இரு..”

 

“அப்ப ஓனர் நீ இல்லயா? கஸ்டமர் சாட்டிஸ்ஃபேக்ஷன் தான் முக்கியம்னு உனக்கு சொல்லி தரலயா? வரட்டும் உங்க ஓனர் கைலயே நான் பேசிக்கறேன்”

 

அவர் தலையில் அடித்து கொண்டு.. “சரியான சாவுகிராக்கி” என்றார்.

 

“பாருங்க பாருங்க சர்.. உங்க முன்னாடியே எப்டி பேசறார் பாருங்க..” என்றாள், ப்ரியனிடம்..!

 

இன்னமும் ப்ரச்சனை என்னவென்று புரியாத ப்ரியன்.. “ஏன்.. என்ன ரேட்க்கு தருவீங்க? இங்க வாங்கற திங்க்ஸ்க்கு டிஸ்கௌண்ட் கிடையாதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. ஐம்பது வயதில் வட இந்திய முகத்தோடு அந்த மனிதர் உள்ளே வந்தார். இவர் தான் கடை ஓனர் போலும்..

 

“டிஸ்கௌண்ட் உண்டு சார்.. போர்டு வச்சிருக்கோம் பாருங்க கொஞ்சம்.. அந்த பக்கம் இருக்க பொருளுக்கு முப்பது பர்சண்ட்.. இந்த பக்கம் இருக்க பொருளுக்கெல்லாம்.. பத்து பர்சண்ட் தான் டிஸ்கௌண்ட்.. இந்தம்மா இந்த பக்கம் உள்ள இந்த யானை சிலைங்கள எடுத்துட்டு.. முப்பது பர்சண்ட்க்கு கேக்குது.. நான் வியாபாரம் பண்ணவா வேணாமா? இத்த முப்பது பர்சண்ட்க்கு குடுத்தா.‌. தோ… அந்த ப்ளாட்ஃபார்மாண்ட இருக்கானே.. அவன் பக்கத்துல போய் நானும், எங்க ஓனரும் குந்த வேண்டியது தான்..”

 

“நான் இத அந்த பக்கம் இருந்து தான் எடுத்தேன்கிறேன்..”

 

“இல்லங்கறேன்.. அடுக்கி வச்ச எனக்கு தெரியாதா சார்? இந்தம்மா போங்காட்டம் அடிக்குது..”

 

‘ஆதவன் இவளை போங்கு போங்கு என்றழைப்பதன் அர்த்தம் இது தானா?’

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது.. இப்ப இந்த யானை சிலைங்கள்லாம் முப்பது பர்சண்ட் டிஸ்கௌண்ட்ல பில் ஆகணும்.. இல்ல.. நீ இங்க பண்ற நம்பர் டூ சேல்ஸ்க்கு எல்லாம் சாருக்கு பதில் சொல்லி ஆகணும்.. அண்ணாத்தேக்கு எப்டி வசதி?”

 

நம்பர் டூ சேல்ஸ் என்றதும் சற்று திகைத்த அந்த வட இந்திய மனிதர்.. “கிருஷ்ணா.. கஸ்டமர்கிட்ட என்ன ப்ரச்சனை பண்ணிட்டு இருக்க?” கேட்டார்.

 

“ஜி.. இந்தம்மா..” என்று ஆரம்பித்தவரைக் கையமர்த்தி விட்டு..

 

“இந்தா பொண்ணு.. உனக்கு இது தர்ட்டி பர்சண்ட்க்கு வேணும்னா.. இதே விலைல உள்ள வேற பொருள் சேர்த்து வாங்கிக்கோ.. சரி தானா? என்று கேட்டு தான் ஒரு தேர்ந்த வியாபாரி என நிரூபித்தார்.

 

பின்னே.. இருபது வருடங்களாக கலைப் பொருட்களை.. பழையது, புதியது என கிடைக்கும் அனைத்து இடங்களிலிருந்தும் வாங்கி விற்கிறார். அதில் பாதிக்கும் மேல் நம்பர் டூ சேல்ஸ் எனும் பில் இல்லா வியாபாரமே..! அதில் நம் வெண்மதியைப் போல் எத்தனை ஃப்ராடுகளை சந்தித்திருப்பார்!!

 

சற்றே முகத்தைத் தூக்கி யோசித்தவள்.. “ஓகே சர்.. வாங்கிக்கறேன்.. அந்த பொருளையும் நான் தான் செலக்ட் பண்ணுவேன்.. மோர் ஓவர்.. அதுக்கும் தர்ட்டி பர்சண்ட் டிஸ்கௌண்ட் வேணும்.. டீலா? நோ டீலா?” என்று பெருவிரலை நிமிர்த்தி, கவிழ்த்துக் காண்பித்தாள்.

 

“சரி பாரும்மா..”

 

மேலும் அரைமணி நேரம் செலவழித்து.. அந்த வேலை செய்யும் நபரின் பிபியை பரிசோதித்து.. ப்ரியனின் பரிதாபகரமான பெருமூச்சுகளை எண்ணி விட்டு.. கடைக்காரரின் கண்டனப் பார்வைகளைப் புறக்கணித்து விட்டு.. கடைசியாக சீலிங்கில் தொங்க விடும் கெட்டிலைப் போல் வடிவில் உள்ள பீங்கான் ஜாடியைத் தேர்ந்தெடுத்தாள். உள்ளே கேண்டில் ஏற்றும் விதமாய் வடிவமைத்திருந்த பொருள் கண்ணைப் பறித்தது.

 

அவள் தெரிவின் அழகில் ‘விளையாட்டு பெண்ணாக இருந்தாலும் வேலையில் கெட்டிக்காரியாகவே தான் இருக்கிறாள்’ என உள்ளுக்குள் வியந்து கொண்டான்.

 

வாங்கியப் பொருட்களை பில் போட்டப் பின்.. அடுத்த ப்ரச்சனையை செவ்வனே ஆரம்பித்து வைத்தாள் நம் வெண்மதி.

 

வாங்கியப் பொருட்களை ‘ஃப்ரீ டோர் டெலிவரி செய்ய வேண்டும்’ என்பது தான் அது.

 

“வெண்மதி.. இந்த மாதிரி கடைகள்ல அதெல்லாம் செய்ய மாட்டாங்க.. நீங்க வாங்க.. நம்ம ட்ரான்ஸ்போர்ட் அரேன்ச் பண்ணிக்கலாம்.”

 

“சும்மா இருங்க ப்ரியன்.. இவ்ளோ அமௌண்ட்க்கு பர்சேஸ் பண்ணிருக்கோம்.. இது கூட செய்யலனா எப்டி..? நீங்க இருங்க.. நான் பேசிக்கறேன்.”

 

“ஹய்யோ.. சொன்னா கேளுங்க வெண்மதி..” என்றவன்.. கடைக்காரரிடம், “சர், எல்லா திங்க்ஸூம் இங்கயே இருக்கட்டும். நான் அனுப்பற ஆள்கிட்ட பில் குடுத்து அனுப்பறேன். அவர்கிட்ட ஹேண்ட்ஓவர் பண்ணிடுங்க” என்று கிட்டத்தட்ட அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

 

வெளியே மெயின்ரோட் வரை போன பின் கையை விட்டவன்.. “அட்ரஸ் சொல்லுங்க வெண்மதி.. எனக்கு தெரிஞ்ச ட்ரான்ஸ்போர்ட்ல புக் பண்ணிடுவோம். அவங்க சேஃப்டியா உங்க திங்க்ஸ் கொண்டு வந்துடுவாங்க..” என்றான்.

 

“ப்ச்.. ஏன் ப்ரியன் இப்டி பண்றீங்க..? நான் இன்னும் கொஞ்சம் பேசிருந்தா அவங்களே டெலிவரி பண்ணிருப்பாங்க.. ச்சு.. போங்க..” அழகாய் கைகளைக் கட்டிக் கொண்டு, முகம் திருப்பினாள்.

 

அவளை சமாதானப்படுத்த நிமிரும் போது தான் கவனித்தான், அவனவளை..! வெண்மதியின் பின்னால் நின்றிருந்தாள், ப்ரியனின் ப்ரியமானவள் ப்ருந்தா.

 

நேற்று இதே நேரத்தில் அவன் மனதை நொறுக்கிச் சென்றவளை.. இன்று மீண்டும் சந்திக்கையில் உள்ளுக்குள் ஊற்றாக பெருகும் காதலைத் தடுக்கத் தான் முடியவில்லை. இவள் தன்னவள் என்ற உரிமைப் பார்வையினை மாற்றத் தான் முடியவில்லை. லிப் க்ளாஸில் பளபளக்கும் ரோஜா இதழ்களை தன் வசமாக்கும் எண்ணத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. அவளில் கிறங்கும் மனதினை இழுத்துப் பிடித்து.. சமரசம் செய்வதில் ஜெயிக்கவே முடியவில்லை.

 

ஆனால்.. ஆனால்.. அவள் கண்களில் ஏன் இத்தனை வெறுப்பு..! புரியாமலேப் பார்த்திருக்கையில்.. திரும்பி நடந்து விட்டாள், ப்ருந்தா..!

 

பெருமூச்சுடன் வெண்மதியைப் பார்த்தான். அவள் இன்னும் கோபமாக வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளை சமாதானம் செய்து.. பின் அவளின் ஆலோசனைப் படி, அவள் நிறுவன வாகனத்தையே வரவழைத்து.. வாங்கியப் பொருட்களை பத்திரமாக ஏற்றி விட்டு.. அவளும் விடைபெற்று அவளின் ஸ்கூட்டியில் ஏறிப் பறந்ததைப் பார்த்தப் பின்.. ‘உசுரக் காப்பாத்திக்கோடா..’ என்ற ஆதவனை அலட்சியப்படுத்தியது எத்தனை தவறு என்று.. தன்னையே நொந்து கொண்டு கிளம்பினான்.

 

இங்கு வீட்டிற்கு வந்த ஆதவன் .. அம்மாவிடம் சிறிது நேரம் வம்பு வளர்த்து விட்டு.. க்ரிக்கெட் பார்த்து.. ‘ஒன் மோர் சிக்ஸ்’, ‘வாவ்! சூப்பர் கேட்ச்’ என்றெல்லாம் உருண்டு புரண்டு கத்தி விட்டு அமர்ந்திருக்கையில்.. ப்ரியன் வந்து சேர்ந்தான்.

 

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்த ஆதவன்.. “என்னடா.. பாஸ்தா பீட்சா மாதிரி போன.. இப்ப பழைய சாதம் மாதிரி திரும்பி வந்துருக்க? என்ன.. ஸ்பெஷல் கவனிப்போ..? என்று போலியாக வியந்தான்.

 

“டேய் ஆதவா.. எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடா..” என்றான், பாவமான முகத்தோடு..!

 

“கேளு மச்சி.. கேளு.. நீ கேட்டப் பின்னும் விடைக் கூறாமல் இருப்பேனோ..! உன் கேள்விக் கடலில் மூழ்கி பதிலெனும் முத்தெடுத்து, நண்பனாகிய உன்னிடம் சேர்க்காமல் விடுவேனோ..! உன்னால்..”

 

அவனை அதற்கு மேல் பேச விடாமல்.. இரு கைகளையும் கூப்பி.. “நானே நொந்து போய் வந்துருக்கேன்.. நீ வேற ஏண்டா என்னை நூடுல்ஸ் ஆக்க ட்ரைப் பண்ற?” அழாக் குறையாக..!

 

“ஹாஹா.. சரி சரி.. அழாத.. என்ன கேக்கணுமோ கேளு..”

 

“மச்சி..‌ எப்டிடா இந்த பொண்ண லவ் பண்ணின? உன் லவ் ஸ்டோரிய கொஞ்சம் சொல்லு..”

 

“என் லவ் ஸ்டோரியா? அது ரொம்ப பெரிய கதை ஆச்சேடா.. கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?”

 

ஆமெனத் தலையசைத்த ப்ரியனிடம் தான் வெண்மதியை சந்தித்ததைக் கூற ஆரம்பித்தான், ஆதவன்..!

 

5.

 

‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ உடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில்.. வேலைகளை செய்து தருபவர்கள், ‘Right Choice Interiors’

 

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தங்கள் வேலை முடிந்ததும்.. இன்டீரியரின் வேலைகளை மேற்பார்வையிட வந்திருந்த ஆதவனின் விழிகளில் விழுந்து.. அவனை காதலில் மொத்தமாக வீழச் செய்தவள், வெண்மதி.

 

முதன்முதலில் அவளைப் பார்த்து, தனக்கானவள் இவள் என முடிவு செய்து விட்டு.. அவள் கண்களில் படும் தூரத்தில் நின்று கொண்டு.. ஆனால், அவளை கவனிக்காதவன் போல இருந்து கொண்டான்.

 

அந்த பங்களாவில் மாடுலர் கிச்சன் அமைக்க வேலை நடந்து கொண்டிருக்கையில்.. இவள் ஹாலில் கலைப் பொருட்களையும், பெயிண்டிங்ஸையும், எங்கே எப்படி வைக்கவென ஆட்களிடம் கூறிக் கொண்டிருந்தாள். இடையில் வேறு என்ன தேவையெனக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

கிச்சன் வாசலில் நின்று கொண்டிருந்தவன்.. அவள் திரும்பாததைப் பார்த்து கடுப்பாகி, அங்கு இன்னும் பிரிக்கப் படாமல் இருந்த அட்டைப் பெட்டியை வழக்கம் போல் ஓடி வந்து தாண்டி வெளியே சென்று விட்டான்.

 

அவன் ஓடி வரும் அரவம் கேட்டு இவள் திரும்பும் போது, அட்டை பெட்டியைத் தாண்டி வெளியே சென்று கொண்டிருந்தான்.

 

சென்று கொண்டிருப்பவனைப் பார்த்து, ‘யாருடா இவன்.. ஹை ஜம்ப்ல நமக்கே டஃப் குடுப்பான் போல..?’ என்று மனதில் நினைத்தவள்.. ஜன்னலின் வழியே வெளியே கார்டனிங் வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்தவனைப் பார்வையிட ஆரம்பித்தாள்.

 

‘நல்லா தான் இருக்கான்.. பட், நம்ம கொள்கைக்கு ஒத்து வரணுமே..’ என்று யோசித்து விட்டு, ‘சட்! என்னத்த யோசிக்கறேன்!!’ என்று தன் எண்ணம் போகும் திசையில் திகைத்து.. தலையில் கொட்டிக் கொண்டாள்.

 

நம் வெண்மதிக்கு தன் பெயரின் மேல் அலாதி ப்ரியம்.. ஆதலால், தன் பெயருக்கேற்றாற் போல் பொருத்தமாய் பெயருள்ளவனையே மணாளனாய் ஏற்றுக் கொள்வது என்ற மேம்பட்டக் கொள்கை வைத்திருக்கிறாள்.

 

தன் மனதை கட்டுப்படுத்தி.. வேலையில் கவனம் செலுத்தியவள், ஏதோ உள்ளுணர்வில் மீண்டும் அவனைத் திரும்பி பார்த்தாள். அங்கே அந்த மாயக்கண்ணன்.. வேலை செய்யும் பெண்களுடன் ‘ஈஈஈ’ என அத்தனை பற்களையும் காட்டி, என்னவோ கதை ஜொள்ளிக் கொண்டிருந்தான்.

 

கடுப்பானவள்.. வெளியே செல்ல எத்தனிக்கையில்.. ‘அவன் யாரோ எவனோ.. என்ன செய்தால் உனக்கென்ன?’ என்ற மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்து.. அமைதியாக நின்று விட்டாள்.

 

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவனை.. வேலை செய்பவர், “ஆதவன் சார்.. இந்த கப்போர்ட் சைஸ் ஓகேவா பாருங்களேன்..” என்றார்.

 

அங்கே அவனின் பெயரைக் கேட்டு ஃப்ளாட் ஆனவள் தான் நம் வெண்மதி..!

 

அன்றைய வேலை முடித்து செல்லும் வரைக் கூட பொறுமையில்லாமல்.. நொடியும் தாமதிக்காமல், கிச்சனில் உள்ளே நின்றிருந்தவனிடம்.. “மிஸ்டர் ஆதவன்” அழைத்தாள்.

 

யாரெனத் திரும்பி பார்த்தவன்.. அழைத்தது தன்னவளெனத் தெரிந்து, விநாடிப் பொழுதில் பிண்ணனியில் இளையராஜா பிஜிஎம் இசைக்க விட்டு.. வெண்ணிற ஆடை அணிந்த தேவதைகள் சகிதம்.. பனிமலை வரை அவளுடன் கைக்கோர்த்து சென்று கொண்டிருந்தவன்.. அவளின் “கேன் வீ கெட் மேரீட்?” என்ற கேள்வியில் அவசர அவசரமாக இளையராஜாவையும், தேவதைகளையும் புறம் தள்ளிவிட்டு… திகைத்துப் போய் “பார்டன்” என்றான், புருவங்கள் சுருங்க..!

 

வேலை செய்து கொண்டிருந்த அனைவரும்.. வேலையை நிறுத்தி விட்டு, இவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

அதில் அஜய்க்கும், வெண்மதிக்கும் தோழனான ப்ரதீபன், “மதி.. என்ன விளையாட்டு இது?” என்றான், கண்டிக்கும் பாவனையில்..!

 

“விளையாடல தீபன்.. நிஜமா தான் கேக்கறேன்..”

 

“உன்ன… இரு உன்னை வேலை செய்ற பேர்வழினு என் தலைல கட்டின உன் அண்ணங்காரன்ட்ட சொல்றேன்..” என்று அலைபேசியை உயிர்ப்பித்தான்.

 

அது எதையும் கண்டுகொள்ளாமல்.. ஆதவனைப் பார்த்தாள். அவன் இன்னும் ‘என்ன பொண்ணுடா…’ என்ற ரீதியில் திகைப்பிலிருந்து வெளியே வராமல்.. கண் தட்டாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

 

“பிடிக்கலனாலும் சும்மா சொல்லுங்க.. நோ இஷ்யூ..”

 

“ச்சேச்சே.. பிடிக்கல எப்ப சொன்னேனாம்..? உங்களப் பார்த்தப்பவே ரொம்ப பிடிச்சது. நீங்க சொல்லுங்க.. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?”

 

பார்த்து கொண்டிருந்த மற்றவர்கள் மானசீகமாக தலையில் அடித்து கொண்டனர்.. அநேகமாக அவர்களின் மைண்ட் வாய்ஸ்.. ‘இதுங்க எங்க உருப்பட போகுதுங்க’ என்பதாய் இருக்கலாம்.

 

ப்ரதீபன் அலைபேசியைத் தட்டி கொண்டிருக்கையிலேயே, “ஓ! பண்ணிக்கலாமே.. கல்யாணத்துக்கு எங்கள எல்லாம் கூப்டுவீங்களா எப்டி?” கேட்டு கொண்டே உள்ளே வந்தான், வெண்மதியின் அண்ணன் அஜய்.

 

அஜய்யின் தங்கை தான்.. வெண்மதியென அறியாத ஆதவன், “ஹலோ அஜய் சர்.. நீங்க இல்லாமலா? வாங்க.” என்று கைக் குலுக்கி.. அவன் காதோரம் சென்று, “இந்த பொண்ணு பார்த்ததுமே என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு அஜய் சர்.. என் பர்ஸனாலிட்டிக்கு மேட்ச்சா இருப்பாளா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்..” என்றான்.

 

இருவரின் அருகில் நின்ற தீபன்.. ‘என்ன கொடுமை சார் இது? பொண்ணோட அண்ணன்கிட்டயே போய் மேட்ச்சா இருப்பாளானு கேக்கறான்..!’ என்று திருதிருவென முழித்து கொண்டிருந்தான்.

 

“அதிருக்கட்டும்.. பொண்ணு பேரென்ன கேட்டீங்களா ஆதவன்?”

 

“ஸ்ஸ்.. இல்லயே..” என்று நுனி நாக்கை கடித்துக் கொண்டவன், வெண்மதியிடம் திரும்பி.. முப்பத்து இரண்டையும் காட்டி, “யுவர் குட் நேம் டார்லிங்?” கேட்டான்.

 

“வெண்மதி..” என்று பதில் சொன்னான், அஜய்.

 

“பரவால்ல அஜய் சர்.. உங்க ஸ்டாஃப்ஸ் எல்லார் பேரையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல.. ஐ அப்ரிஷியேட் யூ..”

 

“ஸ்டாஃப்ஸ் பேரு மட்டுமில்ல.. இந்த தங்கச்சி பேரயும் தெரிஞ்சு வச்சிருக்கேன் மிஸ்டர் ஆதவன்” என்ற அஜய், “ரெண்டு பேரும் மாடிக்கு வாங்க..” என்று உறுமி விட்டு விறுவிறுவென மாடியேறி சென்று விட்டான்.

 

ஆடு திருடும் கள்ளனின் முகத்தை பார்க்காதவரா நீங்கள்? அப்படியானால் இப்போது வந்து ஆதவனின் முகத்தைப் பார்த்து செல்லுங்கள்..

 

“த.. த.. தங்கச்சியா?”

 

“ஏன் தந்தியடிக்கறீங்க ஆதவன் சர்?” – தீபன்.

 

“நீங்க கூட சொல்லவே இல்லயே தீபன்? அதான் தந்தி.. தபால் அடிக்குது..”

 

“எங்க சொல்ல விட்டீங்க? அதுக்குள்ள தான் ரெண்டு பேரும் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமானு டூயட் வரைப் போயிட்டீங்களே.. போங்க.. உங்க மச்சான் மாடில மசாஜ் பண்ண வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு.. அவர ரொம்ப நேரம் காக்க வைக்காதீங்க..”

 

அவனை முறைத்து விட்டு, வெண்மதியைத் திரும்பி பார்த்தான்.. அவள் படியேறி சென்று கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் இவனும் அவளை பின் தொடர்ந்தான்.

 

அஜய்.. வெண்மதியின் குணத்திற்கு அப்படியே நேர் எதிரானவன்.

 

இவளிடம் ஒற்றை ரோஜாவைக் கொடுத்தால்.. நாள் முழுதும் கூட பூச்சாடியில் வைத்து ரசித்திருப்பாள். அதை அஜய்யிடம் தந்தால்.. நொடியில் விற்று லாபக்கணக்கை கணித்து விட்டு.. அடுத்த பிஸினஸ் என்னவென்று பார்க்க போய் விடுவான்.

 

இவளின் குறும்பு தனத்தில் அஜய் கொலை வெறியாவான். வீட்டில் இருவருக்கும் எப்போதும் முட்டுக் கொள்ளும் தருணங்களே அநேகம்..

 

மொட்டை மாடியில் இருந்த அஜய்யின் முன் ஒன்றுமறியா பச்சை பாலகனைப் போல் நின்றிருந்தான் ஆதவன். அஜய்யின் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியவில்லை.

 

அஜய்.. ஆதவனின் கண்களுக்கு மொட்டை மாடியில் தனுஷிடம் பேரம் பேசும் பிரகாஷ் ராஜாகவே தெரிந்தான். சிரிக்காமல் இருக்க அரும்பாடுபட்டு மேலே வானத்தையும், கீழே தரையும் பார்க்கும் பாவனையில் மண்டையை மேலும் கீழுமாக உருட்டி கொண்டிருந்தான்.

 

“என் தங்கச்சிய என்கிட்டயே மேட்ச்சா இருக்காளா கேக்கறீங்களே மிஸ்டர் ஆதவன்.. ஹௌ டேர் யூ ஆர்?”

 

“அஜய் சர்.. அது..”

 

“அஜய்.. நான் தான் கல்யாணம் பண்ணிக்கலாமானு அவர்கிட்ட கேட்டேன்”

 

“ஏன் நாங்களாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்னு நீயே உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டியா?”

 

“ஏண்டா இப்டி பேசற? அவர் பேரு தெரிஞ்சதுனால தான் அப்டி கேட்டேன்..” என்றவளின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்தது..

 

அவளின் பதிலில் அஜய் ருத்ர மூர்த்தியாய் முறைத்துக் கொண்டிருந்தானெனில்.. ஆதவன்.. திகைப்பு, ஆச்சர்யம், கோபம், தன்னை தனக்காக அவள் விரும்பவில்லை என்றதில் கொஞ்சமே கொஞ்சம் அவமானமாய் கூட உணர்ந்தான்.

 

‘ஏன்.. பேரு ராமசாமியா இருந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாமா?’

 

“சென்ஸோட தான் பேசறியா மதி நீ? ஒருத்தவங்க பேர மட்டும் வச்சு உன் லைஃப தூக்கி குடுத்துடுவியா?”

 

“இங்க பாரு.. என்னோட பாலிஸி உனக்கு தெரியும் தான?”

 

“பாலிஸி மண்ணாங்கட்டினு பேசினினா.. அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன் வெண்மதி.. இருபத்து மூணு வயசு ஆகிடுச்சு.. இன்னும் குழந்தையாவே பிஹேவ் பண்ணிட்டு இருக்க.. வெக்கமாயில்ல?”

 

“போடா அஜய்.. நா..”

 

இருவரிடையேக் குறுக்கிட்ட ஆதவன், “சர் ப்ளீஸ்.. உங்க சிஸ்டர் எதுக்கு அப்டி கேட்டாங்கனு எனக்கு தெரியல.. பட், நிஜமாவே எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கே என்னைப் பத்தி ஓரளவு தெரிஞ்சிருக்கும்.. இன்னும் விசாரிக்கணும்னா நீங்க ரவி சர்கிட்ட கூட தாராளமா கேட்டுக்கலாம். உங்க தங்கச்சினு தெரியாம.. உங்கக்கிட்டயே நான் அப்டி கேட்ருக்கக் கூடாது தான். ஐ’ ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.. நான் வரேன் அஜய் சர்” என்று அஜய்யிடம் கூறி விட்டு.. வெண்மதியைத் திரும்பி கூடப் பார்க்காமல் சென்று விட்டான்.

 

ஒரு பார்வைக் கூட தராமல் போனவன்.. அடுத்து வந்த இரவுகளில்.. வெண்மதியின் தூக்கத்தை மொத்தமாய்க் களவாடிக் கொண்டான்.

 

ஒரு வாரமாக வேலையில் கவனம் செலுத்தாமல்.. சோர்ந்து போய் இருக்கும் தங்கையைப் பார்த்த அஜய்.. கடுப்பானாலும்.. வேறு வழியில்லாமல் ஆதவனின் எம். டி. ரவீந்திரனிடம் பேசினான்.

 

விசாரித்த வரையில் விளையாட்டுதனம் மிகுந்தவன் என்பதைத் தவிர, மற்ற விஷயங்கள் தன் மனதிற்கு திருப்தி தரவே.. வெண்மதியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

 

ஒரே நொடியில் மனதைக் கொய்து சென்றவனின் பார்வையை ஒரு முறை மட்டும் பெற்றால் போதுமென ஒரு வாரமாகத் தவித்திருந்தவள்.. வாழ்நாள் முழுதும் அவன் பார்வைக்கான சொந்தம் கிடைக்கப் போவதில் சிட்டுக்குருவியாய் மாறி பறந்து போனாள்.. அவளவன் ஆதவனைக் காண..!

 

‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்று தங்க நிற எழுத்துக்கள் மின்னிய போர்டைப் பார்த்து வியந்து கொண்டே.. அந்த பெரிய நிறுவனத்தினுள் அனுமதி வாங்கி உள்ளே சென்றாள், வெண்மதி.

 

ரிசப்ஷனில் இருந்த அந்த அழகியப் பெண்ணிடம்.. “எக்ஸ்க்யூஸ் மீ.. திஸ் இஸ் வெண்மதி.. வான்ட் டூ ஸீ மிஸ்டர் ஆதவன்.. கேன் ஐ?” என்றாள்.

 

“ஆதவன் சர்.. ஆஃபீஸ்ல இல்லயே மேம்.. சைட் சீயிங் போயிருக்கார்..”

 

“ஓ! எப்ப பார்க்கலாம்?”

 

“வொர்க் முடியற நேரம் தான்.. வந்துடுவார்.. மே பி.. ஹாஃப் அன் ஆர் ஆகலாம்..”

 

“ஓ!”

 

அவளின் ஏமாற்ற முகத்தைப் பார்த்து விட்டு, “ரொம்ப அர்ஜென்ட்னா சொல்லுங்க மேம்.. கால் பண்றேன்.. உங்க நேம் என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள், ரிசப்ஷன் பெண்.

 

“இல்ல.. பரவால்ல.. நான் வெய்ட் பண்றேன்..”

 

“அது விசிட்டர்ஸ் ரூம்.. அங்க வெய்ட் பண்ணுங்க.. அவர் வந்ததும் நான் இன்ஃபார்ம் பண்றேன்..”

 

“ஹ்ம்ம்.. தாங்க்ஸ்..” அவளிடம் ஒரு புன்னகையைத் தந்து விட்டு.. அவள் காட்டிய அறையில் போய்.. அங்கிருந்து விலையுயர்ந்த அந்த சோஃபாவில் அமர்ந்து ஆதவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள், வெண்மதி..!

 

அரைமணி நேரம் ஒரு மணி ஆனப் பின் வந்தவனை.. ரிசப்ஷனிஸ்ட், “ஆதவன் சர்..” அழைத்தாள்.

 

“ஹாய் மேகா.. எப்டி காலைல பார்த்த மாதிரியே.. இப்பவும் இவ்ளோ ஃப்ரெஷ்ஷாவே இருக்க? ம்ம்… லிப்ஸ்டிக் மட்டும் தான் லேசா கலைஞ்சிருக்கு நினைக்கறேன்.. எங்க அந்த டிஷ்யூ? கொண்டா சரி பண்ணுவோம்..”

 

“ப்ச்.. ஏன் சர் இப்டி..”

 

“அப்ப லிப்ஸ்டிக் கலையலயா? இந்த பக்கம் கொஞ்சம் திரும்பு.. ஓ! எஸ்.. கண்ல காஜல் கூட கலைஞ்சிருக்குது போலயே.. ஸீ மேகா.. நீ எந்த காஸ்மெட்டிக் ப்ராடெக்ட்ஸ் யூஸ் பண்ற? இனி அதுலாம் வாங்காத.. நான் சொல்ற ப்ராடெக்ட்ஸ் வாங்கு சரியா? ட்வென்ட்டி ஃபோர் ஆர்ஸ்.. பர்ஃபெக்ட்டா இருக்கும்..”

 

அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தவள்.. “ஷ்ஷ்.. கொஞ்சம் என்னைப் பேச விடுங்களேன் சர்..” என்றாள், பொறுமை இழந்தவளாக..!

 

“பேசு கண்ணே.. பேசு.. நீ பேசுவதைக் கேட்பதற்காகவன்றோ நான் இப்பிறவியே எடுத்துள்ளேன். நீ பேசுவதைக் கேட்காவிட்டால்.. என் ஜென்ம சாபல்யம் தீருமோ? இப்பிறவிப் பயனை நான் அடைவேனோ..? பேசு மேகாம்மா பேசு..” என்றான், ஓவர் உணர்ச்சிகரமான குரலில்..!

 

அடுத்து எங்கே தன்னை பேச விடாமல் அவன் பேச ஆரம்பித்து விடுவானோ என்று.. ‘கண்டேன் சீதையை’ என்பது போல்.. “விசிட்டர் சர்.. உங்களுக்கு சர்.. வெய்ட்டிங் சர்..” என்றாள், அவசர அவசரமாக..

 

“பார்த்து.. பார்த்து.. மெதுவா மேகா.. ஏன் செல்லம்.. தொண்டைல எதுவும் ப்ராப்ளமா?”

 

“சர்.. பாவம் அவங்க ஒரு மணி நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா இங்க விளையாடிட்டு இருக்கீங்க..”

 

“ஒரு மணி நேரமாவா? யாரு?”

 

“ஒன் யங் லேடி.. பேரு என்னவோ சொன்னாங்க.. விசிட்டர்ஸ் ரூம்ல வெய்ட் பண்றாங்க. போய் பாருங்க..”

 

“பாஸ் இருக்காரா.. கிளம்பிட்டாரா மேகா..?”

 

“ரவி சர் அப்பவே கிளம்பிட்டார்.. உங்கள நாளைக்கு பார்க்கறதா சொல்ல சொன்னார்.. நான் கிளம்பறேன்.. எனக்கு டைம் ஆகிடுச்சு..”

 

“ஓகே மேகா.. டாட்டா.. நான் வேணும்னா உன்னை வீட்ல ட்ராப் பண்ணட்டுமா..? என் பைக் வேற உன்னை சுமந்துட்டு போக ஒத்த கால்ல ஸ்டாண்ட் போட்டு நிக்குது..”

 

“உங்க பைக்கிட்ட ரெண்டு கால்லயும் நிக்க சொல்லுங்க சர்.. என்னை சுமந்துட்டுப் போக எங்க அத்தானோட பைக் இருக்குது..” என்றவள் அதற்கு மேல் நிற்காமல் பறந்து விட்டாள்.

 

சென்றவளைப் பார்த்து தலையசைத்து.. தோழமைப் புன்னகையை உதிர்த்து விட்டு.. பின் ஞாபகம் வரப் பெற்றவனாய், ‘யாருடா அது நம்மளப் பார்க்க வந்திருக்க யங் லேடி..?’ யோசித்துக் கொண்டே சென்றவன்.. வெண்மதி வந்திருப்பாள் என சற்றும் நினைக்கவில்லை..

 

ரூம் வாசலில் கால் வைத்தவன்.. வெண்மதியை எதிர்பாராததால் திகைத்து நின்று விட்டான். ஒரு நொடியில் சமாளித்துக் கொண்டு.. “வாங்க.. மிஸ். வெண்மதி” என்றான், எங்கோ பார்வைப் பதித்து..! அவனுக்கு இன்னும் பெயர் காரணத்தால் விரும்புகிறாள் என்பது உறுத்திக் கொண்டே இருந்தது.

 

காத்துக் கொண்டிருக்கிறாள்உன்

ஒற்றைப் பார்வையில்

சாம்பலாகிப் போக

அவளுக்கான

சிறு புன்னகையை

சிந்தி விடு..

மீண்டும் உயிர்த்திடுவாள்

ஃபீனிக்ஸ் பறவையாக..!

 

அவள் அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். பதிலில்லாமல் போனதும் திரும்பியவன்.. அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “ஏன் நிக்கறீங்க? உட்காருங்க.. என்ன விஷயமா பார்க்க வந்தீங்க?” என்று கேட்டான்.

 

பதில் சொல்லாமலும், உட்காராமலும் அதே பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“கான்ட்ராக்ட் விஷயமா வந்திருக்கீங்களா? பில்டிங் ப்ளான் எதுவும் போடணுமா? இல்ல.. ரைட் சாய்ஸ்ல இருந்து கொட்டேஷன் குடுத்துருக்காங்களா?”

 

கேள்வியை அடுக்கியவனைப் பார்த்தவள்.. பார்வையை மாற்றாமலே, “ஹ்ம்ம்.. கொட்டேஷன் தான் குடுக்க வந்தேன்.. ரைட் சாய்ஸ் ப்ரொப்பரேட்டர்.. அவர் தங்கச்சிய இங்க உள்ள ஒரு இடியட் இன்ஜினியருக்கு தாரை வார்க்க சம்மதம்னு கொட்டேஷன் குடுத்துருக்கார்.. அத சொல்ல தான் வந்தேன்.” என்று விட்டு அன்று அவன் திரும்பி பார்க்காமல் போனது போல்.. இவளும் முகத்தை திருப்பிக் கொண்டு விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

 

அவள் கூறியதன் சாராம்சம் புரிந்தும் புரியாமலும் முழித்து கொண்டே நின்று கொண்டிருந்தான். இந்த சேதியை எதிர்பாராத மூளை.. சற்றே வேலை நிறுத்தம் செய்திருந்தது போலும்.

 

வெளியே சென்றவள்.. அவன் பின்னால் வராததைப் பார்த்து கடுப்பாகி.. மீண்டும் உள்ளே வந்தாள். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவள் விரல்களை மடக்கி.. ‘நச்’சென்று அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து விட்டு.. எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

 

“ஆஆஆ… ராட்சஷி..” என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான். நல்லவேளை.. வேலை நேரம் முடிஞ்சதும் எல்லாம் கரெக்டா கடைய சாத்திடுதுங்க.. இல்லையெனில்.. ஆதவனின் மானம் ஆகாயம் சென்றிருக்கும்.

 

அப்படித் தான் தலையைத் தடவிக்கொண்டே ஓடிச் சென்று.. அவளை இழுத்து நிறுத்தினான்.

 

“ஹேய்.. என்ன சொல்ற நீ..?”

 

“நீங்க ஒரு வெங்காயம் சொன்னேன்..”

 

“ப்ச்.. அஜய் சர் என்ன சொன்னார் சொல்லு..” சுற்றும் முற்றும் பார்த்து விட்டு.. ஆஃபீஸில் ஆட்கள் இல்லாததை உணர்ந்து.. “வா வெளியே போய் பேசலாம்..” என்று அவளையும் இழுத்து கொண்டு வெளியே வந்தான்.

 

பைக்கை ஸ்டார்ட் செய்து.. “உட்காரு..” என்றான்.

 

கைகளை கட்டி கொண்டு நின்றவள்.. “நான் எதுக்கு உட்காரணும்? முடியாது..” என்றாள்.

 

அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தவன், “இங்க இப்ப செக்யூரிட்டி தவிர யாரும் இல்ல.. இப்ப மட்டும் நீ உட்காரல….” என்று வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தி விட்டு.. அவள் முகத்தை அர்த்தத்துடன் பார்வையால் தீண்டினான்.

 

வாய்க்குள் என்னவோ முணங்கிக் கொண்டே பில்லியனில் அமர்ந்தாள்.

 

சீரியல் லைட்டின் உபயத்தால் தன் மேனியெங்கும் வண்ணப் பூத்தூரலாய் தூறிக் கொண்டிருந்த அந்த உயர் ரக ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்றான்.

 

“என்ன ஆர்டர் பண்ணட்டும் வெண்மதி? ஸ்வீட் பிடிக்குமா?”

 

உர்ரென்று முகத்தை வைத்திருந்தவள்.. “எனக்கு பாவக்கா பக்கோடா தான் புடிக்கும்..” என்றாள்.

 

முதன்முதலில் ஆசையாக வெளியே அழைத்து வந்திருக்கிறான்.. பாகற்காய் கேட்டால் கோபம் வராதா..?

 

நிதானமாகப் பார்த்தவன்.. “பாவக்கா தான? போகும் போது அஞ்சு கிலோ வாங்கி தரேன்.. வீட்டுக்கு போய் நல்லா மொக்கு..” கடுப்புடன் கூறி விட்டு.. அவனுக்கு பிடித்த பாஸந்தி ஆர்டர் செய்தான்.

 

“சொல்லு வெண்மதி.. அஜய் சர் என்ன சொன்னார்..?” என்று ஆவலாக அவள் முகம் பார்த்து கேட்டான்.

 

“இன்னும் பத்து வருஷம் கழிச்சு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னார்..”

 

அவள் பதிலில் எரிச்சலாகி, அவளை நக்கலாக பார்த்து கொண்டே.. “இன்னும் பத்து வருஷம் கழிச்சா? இப்பவே உன் மூஞ்சி பார்க்க சகிக்க மாட்டாம இருக்குது. இதுல இன்னும் பத்து வருஷம் கழிச்சுனா.. டவுட் தான். பேசாம வேற பொண்ணு பார்க்கலாம் நினைக்கறேன். நீ என்ன சொல்ற வெண்மதி? ஜஸ்ட் ஒரு சஜஷன்..” என்றான்.

 

ஆர்டர் செய்த பாஸந்தி வந்த பின்னும்.. அவள் பதிலேதும் சொல்லாமல்.. அமைதியாக இருப்பதைப் பார்த்தவன், “வெண்மதி.. என்ன ரொம்ப நேரமா யோசிக்கற?” என்று கேட்டான்.

 

“இல்ல.. ஒரு இன்ஜினியர் காஸ்மெடிக்ஸ் ப்ராண்ட்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்காரே.. எப்டினு யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றாள், டேபிளிலேயேப் பார்வையைப் பதித்து..!

 

‘ஆஹா…இது தான் இந்த அழகுப் புயலின் அமைதிக்கு காரணமா? இது தெரியாம நான் வேற வெறுப்பேத்தி விட்டுட்டேனே.. எல்லாருக்கும் லவ் பண்ணதுக்கு அப்புறம் தான் ப்ரேக் அப் ஆகும்.. நமக்கு ஓகேனு சொல்றதுக்குள்ளயே ப்ரேக் அப் ஆகிடும் போலயே.. என்ன கொடுமை சார் இது?’

 

“அது.. அது.. இன்ஜினியரா? யாரு? கா.. கா.. காஸ்மெட்டிக்ஸா? அப்டியொரு ஸ்வீட் இருக்கா என்ன?”

 

“ஆமாமா.. காஸ்மெட்டிக்ஸ்னா சாருக்கு என்னன்னே தெரியாது இல்ல?”

 

“ஆமா.. இல்ல இல்ல..” என்று உளறிக் கொட்டி தலையில் கை வைத்துக் கொண்டவன்.. “பாருடி வெண்மதி.. பாஸந்தி கூலிங் போய்டுச்சுனா நல்லா இருக்காது.. சாப்டுமா..” என்றான்.

 

“சாப்பிடவா இல்ல.. தூக்கி உன் தலைல கொட்டவா..?

 

“எதுக்குடாம்மா இவ்ளோ கோவம்?”

 

“வேணாம்… கொல காண்டுல இருக்கேன். ஒண்ணுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிக்காத.. எப்டி.. எப்டி..? லிப்ஸ்டிக் கலைஞ்சிருக்குதோ? சர் டிஷ்யூ தேடி எடுத்து துடைச்சு விடப் போறீங்களோ? ம்ம்?”

 

“ச்சேச்சே.. அப்டி இல்ல வெண்மதி.. சும்மா ஒரு ஹெல்ப் பண்ணலாமேனு..”

 

“ஓஹோ! சர் சமூக சேவை செய்றீங்களோ..?”

 

“இங்க பாரு.. நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க வெண்மதி..”

 

“ஆஹான்? பைக் எதுக்கோ ஒத்த கால்ல நிக்குது சொன்னீங்களே..?”

 

“அது.. சைட் ஸ்டாண்ட் மட்டும் போட்டா ஒத்தக் கால்ல நிக்காத? அது தான் சொல்லிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்ல..”

 

“அப்ப உங்க ரிசப்ஷனிஸ்ட்கிட்ட அவ்ளோ நேரம் இத தான் சொல்லிட்டு இருந்தீங்க? வேற ஒண்ணுமேயில்ல.. இல்ல?”

 

“அது.. அது.. ரிசப்ஷனிஸ்ட்கிட்ட வேற என்ன கேப்பாங்க.. எனக்கு போன் கால் எதுவும் வந்ததா என்னனு விசாரிச்சுட்டு இருந்தேன்.. அப்..”

 

வெண்மதி பல்லைக் கடித்து கொண்டு, கையை உயர்த்தி விரல்களை மடக்கிக் காட்டினாள்.. அதைப் பார்த்தவன் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

 

“நான் உங்க ஆஃபீஸ்ல எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணேன்னு உங்க ரிசப்ஷனிஸ்ட் சொன்னாங்களா?”

 

“ஹ்ம்ம்.. ஒன் அவர் வெய்ட் பண்ணியாமே.. சாரி வெண்மதி.. சைட்ல இன்னிக்கு வொர்க் கொஞ்சம் இழுத்துடுச்சு..”

 

“சைட் வொர்க் பத்தி எனக்கு தெரியாதா? ஆனா, ஒரு மனுஷி ஒரு மணி நேரமா.. நீ வந்துட மாட்டியானு ஆஃபிஸ் வாசலயே பார்த்துட்டு இருக்கேன்.. நீ வந்தது தெரிஞ்சதும்.. எழுந்து வந்து ரூம் வாசல்ல நிக்கறேன்.. திரும்பி கூடப் பார்க்காம அந்த பொண்ணுக்கிட்ட என் கண்ணு முன்னாடியே சைட்டடிக்கற வொர்க்க சின்சியராப் பண்ணிட்டு இருக்க நீ.. உன்னை…” என்று காண்டாகி.. டேபிளில் இருந்த தண்ணீர் க்ளாஸை யாரும் அறியா வண்ணம் அவன் பக்கமாக தட்டி விட்டாள்.

 

சட்டென நகர்ந்து.. தன் உடையைக் காத்துக் கொண்டவன்.. “நோ.. நோ வயலண்ட் செல்லோ.. உங்க அண்ணாத்த என்ன தான் சொன்னார்? அதைச் சொல்லுடி.. அதுக்கு முந்தி இந்த பாஸந்தி சாப்டு..” என்று அவள் பக்கம் ஒரு பௌலை நகர்த்தி வைத்தான்.

 

“அண்ணா என்னவோ சொல்லிட்டு போகட்டும். ஆனா, இப்ப நான் யோசிக்கறேன்.. பேர மட்டும் வச்சு தப்பான ஆள செலக்ட் பண்ணிட்டோமோனு..”

 

“ஏய் ஏய்.. உளராதடி.. நான் அந்த பொண்ணுக்கிட்ட விளையாட்டா தான் பேசிட்டு இருந்தேன்.. அத மட்டும் வச்சு நீ முடிவு எடுக்காத வெண்மதி..” என்றான், அவசர அவசரமாக..!

 

“இன்னொரு வாட்டி யார்க்கிட்டயாவது இப்டி வழியறதப் பார்த்தேன்…”

 

“ச்சேச்சே.. இந்த பொண்ணுங்க தான் என்னைப் பார்த்து வழியறாங்க வெண்மதி.. உன்னைத் தவிர நான் யாரயும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.. உன்னை பார்த்த நாள்ல இருந்து என் கனவுலக் கூட நீ தான் வர்ற தெரியுமா..? தூக்கத்துல கூட வெண்மதி, வெண்மதினு உன் பேர சொல்லி தான் புலம்பிட்டு இருக்கேன்..”

 

“ஷ்ஷ்… ஆண்டவா.. நிறுத்தறியா கொஞ்சம்..? அஜய் என்ன சொன்னான் சொல்லவா வேணாமா?”

 

“சொல்லும்.. சொல்லி தொலையும்.. அதத் தான வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன்..?”

 

“ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஓகே சொல்லிட்டான்..”

 

முகம் மலர, “அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா.. இப்பவே..?” கண்ணோடு கண் பார்த்துக் கேட்டான்.

 

பதில் சொல்லாமல் எழுந்தவள்.. ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டு.. அமைதியாக எழுந்து நடந்தாள். கதவு வரை சென்றவள்.. தன்னை இமைக்காமல் பார்த்திருந்தவனை, இதழின் ஓரம் உதித்த சின்னப் புன்னகையோடுத் திரும்பி.. சற்றே தலையை இடது புறம் சாய்த்து, அந்த சிப்பி இமைகளை மூடி திறந்தாள்.

 

தலை சாய்த்துப் பார்த்தாளே..

தடுமாறிப் போனேனே..’

 

ஒருத்தியால் கண்களால் ஆறடி உயரத்தையும் மொத்தமாக முத்தமிட முடியுமா? அந்த மயக்கும் அந்தி மாலைப் பொழுதில்.. வெண்மதி ஆதவனைக் கண்களால் முத்தமிட்டுச் சென்றாள். அவளின் கண் முத்தத்தில் நெஞ்சம் முழுதாக நனைந்த ஆதவன்..

 

நீ முத்தப் பார்வைப் பார்க்கும் போதும்..

என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்..’ என்று அவளின் தனக்கான ஒவ்வொரு அசைவிற்கும்.. கனவு உலகத்திற்கு சென்று வந்தான்.

 

அவள் கண்ணை விட்டு சென்றதும்.. சுதாரித்து, பாஸந்திக்கானப் பணத்தை டேபிளில் வைத்து விட்டு.. தனக்கு முன்னிருந்த டேபிளை.. லாங் ஜம்ப் செய்து.. ஓடிப் போய், சென்று கொண்டிருந்த வெண்மதியின் முன் மூச்சு வாங்க நின்றான்.

 

‘பாவி.. ஃபர்ஸ்ட்டே இந்த பார்வையப் பார்த்திருந்தா இவ்வளவு டென்ஷனாகி இருந்திருப்பேனா? இப்படி கோவம் போல போங்காட்டம் ஆடி.. இந்த ஆதவனையே கெஞ்சும் பார்வை பார்க்க வைத்து விட்டாளே..!’

 

“ஹேய் போங்கு..” தன் முன் மூச்சு வாங்க நின்றவனை அதே புன்னகை மாறாமல் பார்த்திருந்தாள், வெண்மதி.

 

“சரியான போங்கு நீ.. இவ்ளோ நேரம் கோவம்னு நடிச்சு.. ஏண்டி மனுஷன டென்ஷன் பண்ணி விட்ட?”

 

“நீ மாங்காவா இருந்தா அதுக்கு நான் போங்கா?”

 

“யாரு நானா? வெறும் பேருக்காக கல்யாணம் பண்ணலாமா கேட்டது நீதான?”

 

“அப்டிலாம் இல்ல.. நிஜமாவே பிடிச்சிருக்கு.  என்ன தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்ருந்தாலும்.. இதுக்கு முந்தி பேசி பழகாத ஒருத்தன் அத்தன ‘டி’ போட்டும் நான் அமைதியாவே இருக்கேன்.. அப்பவே புரிஞ்சிருக்க வேணாம்? வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் கன்னம் பழுத்துருக்கும்..”

 

புருவங்களை உயர்த்தி, “ஓ! இதுல இப்டி ஒரு விஷயம் இருக்கா? அப்ப பொண்ணுங்கக்கிட்ட ‘டி’ சொன்னா நம்மள புடிச்சிருக்கா.. இல்லயா.. தெரிஞ்சுக்கலாம்.. ரைட்?” என்று குறும்பு கண்களை சிமிட்டிக் கேட்டவனைப் பார்த்து பொய்யாய் முறைக்க முயன்று முடியாமல்.. இதழ் மலர்ந்து புன்னகைத்தாள், அவனவள் வெண்மதி..!

 

6.

 

ப்ரியன் தன் காதல் கதையைக் கூறுமாறு கேட்டதும்.. ஆதவன், “நிஜமாகவே தெரிஞ்சுக்கணுமா? அது பெரிய கதையாச்சே..” என்றான்.

 

“பரவாயில்ல சொல்லு.. இன்னிக்கு நான் ஃப்ரீ தான்..”

 

“அப்ப சரி.. வா.. நம்ம வெளில போய் பேசலாம்.. இங்க இந்த ஓல்டு லேடி ஒட்டு கேக்கும்..”

 

“ஏண்டா.. அம்மாவுக்கு இன்னும் வெண்மதி பத்தி தெரியாதா?”

 

“தெரியாது மச்சி.. தெரிஞ்சா இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிடுவாங்க.. அவளும் எப்ப வரட்டும்னு கேட்டுட்டே இருக்கா.. ரெண்டும் சேர்ந்தா என் நிலைமை என்னாகும்? கொஞ்சம் யோசிச்சு பாரேன்.. அதான் கொஞ்ச நாளாவது நிம்மதியா இருந்துட்டு போலாமேனு சொல்லல..”

 

“சரி வா.. அப்டியே வெளில டின்னர் முடிச்சிட்டு வந்துடலாம்..”

 

ஆதவன் – வெண்மதியின் காதல் கதையைக் கேட்ட ப்ரியன்.. “அப்ப இந்த ரெஸ்டாரண்ட் தான் ஃபர்ஸ்ட் டைம் உன் ஆளக் கூட்டிட்டு வந்தியா?” என்று கேட்டான்.

 

“ஆமா மச்சி.. நீ கேட்டதும் சென்டிமென்டலா இருக்குமேனு தான் இங்க வந்தேன்..”

 

ப்ரியன், “பார்டா.. நீ கூட சென்டிமென்ட் பார்ப்பியா.. ஹய்யோ.. தெய்வமே.. வெக்கம் வேற படறானே.. ஹாஹாஹா..” என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டே.. “அதான் அவங்க அண்ணா ஓகே சொல்லிட்டாரே.. அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க..?” என்று கேட்டான்.

 

“அவ இன்னும் குழந்தையாம்.. ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லிட்டார். அவர் சொன்ன டைம் முடிய இன்னும் ஆறு மாசம் இருக்குது. அதான் என் நிலைமை இப்டி பைப் ஏறி குதிக்க வேண்டியதா இருக்குது..” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.

 

“யாரு? வெண்மதி குழந்தையா? இன்னிக்கு நான் போலீஸ்னு வாய் கூசாம பொய் பேசறாடா..” என்று அதிர்ச்சியானக் குரலில் கூறிக் கொண்டிருக்கையில்..

 

“இருடா வர்றேன்..” என்று எழுந்த ஆதவன்.. இவர்களதில் இருந்து இரண்டு டேபிள் தள்ளி இருந்த டேபிள் சென்று.. அங்கிருந்த பெண்ணிடம்.. “ஹாய்.. ஐ’ம் ஆதவன்.. இவ்ளோ நேரம் என்னைத் தான பார்த்துட்டு இருந்தீங்க?  இங்க இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு எக்கி எக்கி பார்த்துட்டு இருந்தீங்களா.. அதான் நீங்க படறக் கஷ்டம் தாங்காம நானே உங்க முன்னாடி வந்துட்டேன்.. இப்ப நல்லா தெரியறேன் தான? நல்லாவே பார்த்துக்கோங்க.. நான் ஒண்ணும் தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன். அப்புறம் நான் என் பேர சொன்ன மாதிரி நீங்களும் உங்க பேர சொன்னா.. கூப்பிடறதுக்கு வசதியா இருக்கும்.. அதுக்கு தான். யுவர் குட் நேம் மேம்..?” என்று வழக்கம் போல் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டிருந்தான்.

 

அவன் எழுந்து சென்றதும்.. எங்கே போகிறானெனத் திரும்பி பார்த்த ப்ரியனின் விழிகள்.. முதலில் திகைப்பைக் காட்டி, ஆதவனின் பேச்சில் சிரிப்பை வெளிப்படுத்தி,  அதற்கு எதிர்வினையாய் அப்பெண்ணின் மிரண்ட பார்வையை உள்வாங்கி, அவள் விழிகள் தன்னைத் துணைக்கழைத்ததில் கர்வப்பட்டு, என வர்ண ஜாலங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

 

அவளின் மீதிருந்த பார்வையை அகற்றாமல்.. மெதுவாக எழுந்து சென்று ஆதவனின் அருகில் போய் நின்றான்.

 

இவனைப் பார்த்த ஆதவன்.. “பாரு மச்சி.. வர வர.. எங்க போனாலும் இந்த பொண்ணுங்க தொல்லை கொஞ்சம் ஜாஸ்தியா தான் ஆகிடுச்சு.. இருந்தாலும் என்னை மாதிரி அழகா பொறந்த பசங்க அதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு இருந்தா முடியுமா..? பாவம் அந்த பொண்ணுங்க மனசு உடைஞ்சிட மாட்டாங்க..? அது தான் என் கவலைய ஒரு ஓரமாத் தூக்கி வச்சுட்டு.. இவங்க மனசு நோகக் கூடாதுனு வந்து பேசிட்டு இருக்கேன்..” என்றான்.

 

ப்ரியன் எழுந்து வந்ததும்.. அந்த பெண் ஆதவன் பேச்சில் மேலும் மிரண்டு.. மெதுமெதுவாக நகர்ந்து ப்ரியனை ஒட்டினாற் போல் நின்று கொண்டாள்.

 

அவள் மனம் பாதுகாப்பிற்காய் தன்னை நாடுவதை உணர்ந்து கொண்ட ப்ரியனின் மனம்.. இரண்டு நாட்களாய் கொதித்துக் கொண்டிருந்தது சட்டென மாறி.. பனிநிலவாய் ஒரே நொடியில் குளிர்ந்து போனது.

 

ப்ரியனைப்‌ பார்த்து விட்டு..‌ கண்களில் குழப்பத்தோடு ஆதவனைப் பார்த்தாள்.

 

அவளின் குழப்பத்தை உணர்ந்து கொண்டவன், “என்‌ ஃப்ரெண்ட்.. ஆதவன்” என்றான்.

 

தன் அழகிய புருவங்களை சுருக்கியவளைப் பார்த்து, “உனக்கு தெரியாது.. நேத்து தான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்..” என்று மீண்டும் அவள் விழிகளின் கேள்விக்கு பதில் தந்தான்.

 

இன்னமும் அவள் விழிகளைப் படித்துக் கொண்டே.. “சாப்ட்டியா?” கேட்டான்.

 

ஆயிற்று எனும் விதமாய் தலையசைத்தாள்.

 

“தனியாவா வந்த..?”

 

ஆமாமென மீண்டும் தலையாட்டினாள்.

 

“சரி, பில் நான் பே பண்ணிடறேன். நீ போ..‌”

 

தயங்கி நின்றவளைப் பார்த்தவன்.. “போ..” என்றான், மீண்டும் அழுத்தமாக..!

 

கைப்பையை எடுத்துக் கொண்டு, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.

 

சென்றவளையேப் பார்த்து கொண்டிருந்த ஆதவனைப் பார்த்த ப்ரியன், “கின்னஸ் ரெக்கார்ட்..” என்றான், சற்றும் சம்மந்தமில்லாமல்..!

 

புரியாமல் திரும்பிய ஆதவன், “எது..?” கேட்டான்.

 

“நீ இவ்ளோ நேரம் உன் திருவாய மூடிட்டு இருக்கறது..”

 

“என்ன கிண்டலா? யாருடா அந்த பொண்ணு..? இவ்ளோ நேரம் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி என் கதையக் கேட்ட? ஆனா.. உனக்கே பெரிசா ஒரு கதை இருக்குது போலயே?”

 

ப்ரியன், “எப்டிடா கண்டுபிடிச்ச?” என்றான், விழிகளில் ஆச்சர்யத்தைக் காட்டி..!

 

“ஆமா.. இத கண்டுபிடிக்க க்ரைம் ப்ரான்ச் விவேக் வரணுமாக்கும்.. நான் தான் பார்த்தேனே.. அந்தம்மா என்னவோ என்னை வில்லன பாக்கற மாதிரி பார்த்துட்டு.. இவர் பக்கம் வந்து நிக்கறாங்க.. இவர் என்னடான்னா கௌதம் மேனன் ஹீரோ மாதிரி லுக் விட்டுட்டு.. கண்ணாலயே ப்ரொடெஸ்ட் குடுக்கறாரு.. அவங்க கண்ணு கேக்கற எல்லா கேள்விக்கும் இவரு அப்டியே கூகுளா மாறி பதில் சொல்றாரு.. அப்புறம் சாப்ட்டியானு வாய் கேக்குது.. ஊட்டி விடட்டுமானு கண்ணு கேக்குது.. தனியாவா வந்துருக்கனு வாய் கேக்குது.. துணைக்கு வரட்டுமானு கண்ணு கேக்குது.. அப்புறம் என்ன..? ஆங்.. வள்ளல் பெருந்தகையா மாறி பில் பே பண்றாராமாம்.. ஷப்பப்பப்பா.. இதுக்கு மேலயுமா நான் கண்டுபிடிக்கறதுக்கு இருக்குது..?”

 

“ஹாஹா.. டேய் உனக்கு வாய் வலிக்காதா மச்சி..? தண்ணியக் குடி.. தண்ணியக் குடி..”

 

“கடுப்படிக்காதடா.. ஒழுங்கா அந்த பொண்ணு யாருனு சொல்லு..”

 

“ப்ருந்தா.. என்னோட அம்மு..” என்றவனின் கண்களில் வலியும், நிம்மதியும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதைக் கண்ட ஆதவன்..

 

“எதுவும் ப்ரச்சனையா மச்சி..?” என்று கேட்டான்.

 

பெருமூச்சை வெளியேற்றிய ப்ரியன்.. ‘கம்பெனி கைவிட்டு போனதால் ப்ருந்தாவும் கை விட்டு விட்டாள்’ என்றான்.

 

அவன் சொன்னதைக் கேட்ட ஆதவன், “நோ..‌ ஷி நெவர்.. பணத்துக்காக லவ் பண்ண பொண்ணு கண்ல இத்தனை ஏக்கம் இருக்காது..” என்றான்.

 

“என்னடா சொல்ற..”

 

“ஆமா மச்சி.. நான் பார்த்தேன்.. அந்த பொண்ணு எவ்ளோ நேரம் இங்கயே பார்த்துட்டு இருந்தா தெரியுமா? இப்ப தெரியுது.. உன் முகத்தை ஒரு வாட்டி பார்த்துட மாட்டோமானு தான் பார்த்திருக்கா.. நான் பேச ஆரம்பிச்சதும் கூட உன்னைத் தானத் தேடுனா?”

 

“ஹ்ம்ம்.. அது தான் நானும் யோசிக்கறேன். நேத்து அவ்ளோ வெறுப்பா பேசினவ.. இப்ப இப்டி…” என்று வாக்கியத்தை முடிக்காமல்.. நேற்று ப்ருந்தா பேசியதை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.

 

நேற்று விஷ்வாவின் சுயரூபம் தெரிந்து.. நொந்து போன மனதுடன் நிறுவனத்தை விட்டு வெளியேறி.. தன் டோமினாரில் வாசலைக் கடக்கும் நேரம்.. வேகமாக வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினாள் ப்ருந்தா..

 

‘ப்ரியன்..’

 

‘அம்மு.. என்ன இந்த நேரத்துல வந்துருக்க? ஃபோன் கூட பண்ணல..?’

 

‘நம்ம ப்ரேக்கப் பண்ணிக்கலாம் ப்ரியன்..’ என்றவளின் முகத்தில் வெறுப்பின் பிரதிபலிப்பு.

 

‘ஹேய்.. என்னடி உளர்ற?’

 

‘ஆமா.. உங்களப் பத்தி இப்ப தான் எனக்கு நியூஸ் வந்தது.. இனி நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல ப்ரியன்..’

 

‘அம்மு.. என்னாச்சு? ஏன் திடீர்னு இப்டி லூசு மாதிரி பேசற?’

 

‘இனி லூசாகிடக் கூடாதேனு பேசறேன்.. உங்கள மாதிரி ஒருத்தருக்கு கழுத்த நீட்டறதுக்கு லைஃப் ஃபுல்லா கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துடுவேன்..’

 

‘இப்ப என்னாச்சு சொல்லப் போறியா இல்லயாடி? யார் உன்கிட்ட என்ன சொன்னா? என்ன நியூஸ் வந்தது?’

 

‘விஷ்வாண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டார்..’ என்றவள்.. கையெடுத்துக் கும்பிட்டு, ‘இப்டிப்பட்ட ஒருத்தர் எனக்கு வேணவே வேணாம்.. குட் பை..’ என்று விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.

 

நேற்றைய சம்பவத்தை யோசித்துக் கொண்டிருந்த ப்ரியனின் தோள்களைப் பிடித்து உலுக்கினான், ஆதவன்.

 

“டேய்.. மச்சான்.. என்னாச்சு? ஏன் இப்டி சைட்டிஷ்ஷ பறிகொடுத்த குடிகாரன் மாதிரி முழிச்சிட்டிருக்க..?”

 

நக்கலடித்தவனை முறைத்த ப்ரியன்.. மீண்டும் தீவிரமான முக பாவத்துடன், “நீ சொன்னப்புறம் தான் யோசிக்கறேன் ஆதவ்..” என்றான்.

 

“என்னனு.. சைட்டிஷ்ஷ எப்டி பறிகொடுத்தோம்னா..?”

 

“ப்ச்.. டேய்..”

 

“சரி.. சரி.. சொல்லு..”

 

“நேத்து இருந்த டென்ஷன்ல என்னால எதையும் யோசிக்க முடியலடா.. நேத்து அம்மு நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்.. ஒத்து வராது சொன்னாளே தவிர.. கம்பெனி பத்தி அவ பேசவே இல்ல.. இந்த விஷ்வா தான் என்னவோ ப்ளே பண்ணிருப்பானோனு தோணுது..”

 

“ஹ்ம்ம்.. காலைல மொத வேலையாப் போய் அவன் சட்டையப் புடி.. ஏன் மச்சி.. நீ ஏன் போலீஸ்க்கிட்ட போய் அவன் மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுக்கக் கூடாது..?

 

“இல்ல ஆதவ்.. அவன் எல்லா டாக்யூமெண்ட்ஸூம் பக்காவா வச்சிருக்கான். போலீஸ்க்கு போனாலும் நோ யூஸ். நான் தான் ஏதோ கம்பெனி அக்ரிமென்ட்னு சொன்னதும் கண்ண கட்டிட்டு வெத்து பத்திரத்துல சைன் பண்ணி தொலைச்சிருக்கேனே..” தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து உள்ளம் குமுறினான்.

 

தொடர்ந்து, “மோர் ஓவர்.. எப்டி எனக்கு தெரியாம என் கம்பெனிய அவன் எடுத்துக்கிட்டானோ… அதே மாதிரி அவனுக்கே தெரியாம நான் எடுத்துக்கணும்.. அப்ப தான் என்னோட வலி என்னனு அவனுக்கு புரியும்..” என்று கண்கள் சிவந்தான்.

 

ப்ரியன் டென்ஷனாவதை உணர்ந்து… அவன் மனநிலையை மாற்ற எண்ணி, “சரிடா.. கண்டிப்பா உன் கம்பெனி உன்கிட்ட வரும்.. அத விடு.. உன் ஆளு பத்தி சொல்லு.. என்ன பண்றாங்க..?”

 

காதலியின் நினைவில் டென்ஷன் குறைந்து, மென்மையாய் புன்னகைத்தவன்.. “ப்ருந்தா.. சி. ஏ. படிச்சிட்டே ஒரு ஆடிட்டர்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருக்கா.. அப்பா ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல வொர்க் பண்றாரு.. அம்மா அக்கௌண்டண்ட்.. ஒரு தம்பி விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருக்கான்.. ஒரு வீடு முடிச்சதுல கிரஹபிரவேசத்துக்கு இன்வைட் பண்ணிருந்தாங்க.. அப்ப தான் பார்த்தேன்..” என்று கண்களில் அவளுக்கான காதலை ஏந்தி.. அவளை முதன்முதலில் பார்த்த தருணத்தை.. ஆதவனிடம் காட்டும் சாக்கில், நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்து.. தன் மனக் கரத்தால் மீட்ட ஆரம்பித்தான்.

 

தன் தோழியின் வீட்டு கிரஹபிரவேசத்திற்கு என்று வந்திருந்த ப்ருந்தா.. இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவை அணிந்திருந்தாள்.

 

தன் மொபைலில் வந்த அழைப்பை ஏற்று பேச வெளியே வந்த ப்ரியன்.. தோட்டத்தில் பூத்திருந்த ரோஜாவிலிருந்து ஒன்று தரையில் விழுந்து.. கை கால் முளைத்து, கண்களில் ரசனையெனும் மையிட்டு.. இதழ்களில் புன்னகையோடு தன் முன்னால் நிற்பதைக் கண்டான்.

 

தோட்டத்தில் தோழிகளோடு அரட்டையில் இருந்தவளின் கண்கள்.. அவ்வப்போது ரோஜாக்களை வருடி வருடி.. அதன் அழகைத் திருடித் திருடி நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது.. தன்னையும் ஒருவன் கண்களால் வருடித் திருட முயன்று கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்..!

 

விசேஷம் முடிந்து.. விடைபெறும் நேரம் வந்ததும்.. கடினப்பட்டு போயிருந்த தன் நெஞ்சத்தை நனைத்து.. இலகுவாய் உள்ளே சென்று அமர்ந்து கண்சிமிட்டியவளை.. விழிகளால் தேடினான்.

 

யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை கண்ட பின்.. அருகில் சென்று, “எக்ஸ்க்யூஸ் மீ.. ம்ம்..” என்று எப்படி பேச்சைத் துவங்குவது என தயங்கி கொண்டிருக்கையில்..

 

“நீங்க.. இன்ஜினியர் ப்ரியன் தான?” என்று கேட்டாள், தன் யூகம் சரியாக இருக்கும் என்ற ஆர்வம் தாங்கிய உற்சாகக் குரலில்..!

 

இனம் புரியாத சந்தோஷ விழிகளோடு, ஆனால் குரலில் அதை மறைத்து, “ஹ்ம்ம்.. நீங்க..?” என்று கேட்டான்.

 

“இந்த வீட்டுப் பொண்ணோட ஃப்ரெண்ட்.. வீடு ரொம்ப அழகா இருக்குது சர்.. அதான் யாரோட ப்ளான்னு கேட்டேன்.. உங்கள தான் கை காமிச்சா..” என்றாள், மலர்ந்த புன்னகையுடன்..!

 

“தாங்க்ஸ்..” அதற்கு மேல் சத்தியமாக என்னப் பேச எனப் புரியவில்லை.. நெற்றியைத் தேய்த்து விட்டு கொண்டு, அவளைத் தவிர மற்ற இடங்களை பார்வையால் அலசினான்.

 

“சொல்லுங்க சர்.. எதுக்கு கூப்ட்டீங்க..?”

 

“அது.. வந்து..”

 

அதற்குள் அவன் பின்னிருந்து ஒரு குரல், “ப்ருந்தா.. கிளம்புவோமா? எனக் கேட்டது.

 

‘ப்ருந்தா..’ தித்திப்பாய் இனித்த நெஞ்சம்.. அவள் கிளம்ப போகிறாள் என்பதில்.. சற்றே சுணங்கியது.

 

“தீப்தி.. இங்க வா.. வர்ஷினி சொன்னாளே.. இன்ஜினியர்.. இவங்க தான்..” என்றாள், தான் முதலில் அறிமுகமாகி விட்ட சந்தோஷத்தில்..!

 

இதெல்லாம் பழக்கமில்லாத ப்ரியன் சற்று எரிச்சலடைந்தான். எனினும் அவளிடம் அதைக் காட்டாமல் இருக்க முடிந்ததே தவிர.. அந்த பெண்ணின் புன்னகைக்கு பதில் புன்னகையை தர முடியவில்லை.

 

தலையை மட்டும் அசைத்து வைத்தான். அதைப் பார்த்தவள், “நீ வெளிய வெய்ட் பண்ணு தீப்தி.. இதோ வந்துடறேன்..” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

 

தீப்தி தோள்களைக் குலுக்கி விட்டு நகர்ந்ததும்.. ப்ரியன் தன் மனம் முழுதும் ஆக்ரமித்து உள்ளுக்குள் காதல் சிற்பங்களை செதுக்கி கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

தன் தோழியிடம் அவன் காட்டிய பாரா முகத்தில்.. உதடுகளை மடித்து, தன் ஏமாற்றத்தை கண்களில் வெளிப்படுத்தினாள்.

 

இப்போது அவளும் எதுவும் பேசத் தோன்றாமல்.. ‘எதற்கு அழைத்தாய்’ என விழிகளால் அவன் விழிகளிடம் கேள்வி எழுப்பினாள்.

 

எப்படி தன் காதலை வெளிப்படுத்த எனப் புரியாமல் குழம்பியவன்.. “ஐ’ம்.. ஐம் இன் லவ் வித் யூ..” என்று பட்டென்று கூறினான்.

 

அவன் தன்னிடம் காதல் உரைக்கிறான் என்று புரிவதற்கு முன்.. மென்மையான காதலை இத்தனை விறைப்பான உடல்மொழியோடு கூட ஒருவனால் வெளிப்படுத்த முடியுமாவென்றே திகைத்து நின்றாள்.

 

திகைப்பிலிருந்து மீளாமல் நின்றவளிடம், “உங்க நம்பர் குடுங்க.. பேசணும்..” என்றான்.

 

“ஹாங்!!!”

 

“ப்ச்..” என்று எரிச்சலாக மீண்டும் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டவன்.. சட்டென்று அவள் இடக்கையில் வைத்திருந்த மொபைலைப் பிடுங்கி.. ஆன் செய்தான்.

 

பேர்ட்டன் வரைய சொன்ன திரையைப் பார்த்து மேலும் கடுப்பாகி.. அவள் முன் திரையைக் காட்டினான். அவனின் மிரட்டலானப் பார்வையில்.. மிரண்டவள் நடுங்கும் விரலால் திரையை வருடி லாக்கை விடுவித்து விட்டு.. அவன் முகம் பார்த்தாள்.

 

அதிலிருந்து தனக்கு கால் செய்தவன்.. “சேவ் பண்ணிக்கோ.. அப்புறம் கால் பண்றேன்” என்று அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை முழுதாகப் பார்வையால் நனைத்து விட்டுச் சென்றான்.

 

மிரண்டு நின்றிருந்தவள்.. செல்லும் முன் அவன் பொழிந்த காதல் பார்வை மழையில் தன்னையறியாமலேயே நனைந்து.. துளிர்த்து.. சிலிர்த்து.. புதிதாய் பூத்து.. அப்பூக்களைக் கோர்த்து.. அவனிடமே தந்து தன் மனமாளிகைக்குள் தயக்கமாய் வரவேற்றுக் கொண்டாள்.

 

அவளிடம் பேசாவிட்டால் வேலையாகாது என்ற நிலையில் இருந்த ப்ரியன்.. அன்று மாலையே கால் செய்து, ‘காதல் சொல்வாயா? மாட்டாயா?’ என கிட்டத்தட்ட மிரட்டினான்.

 

அவனின் முரட்டுத்தனத்தில் சற்றே மிரண்டாலும்.. அவனின் மருவக்காதலில் கரையவே செய்தாள், ப்ரியனின் ப்ரியமான ப்ருந்தா..!

 

அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து பேசி.. காதல் வளர்த்தனர். சந்திக்கும் போதெல்லாம் திருமணம் குறித்து ப்ரியன் கேட்பதற்கு.. “அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ப்ரியன்.. சி. ஏ. வேற ரெண்டு அட்டெம்ட்லயும் கோட்டை விட்டுட்டேன்.. இப்ப போய் எப்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல முடியும்?” என்று சொல்லி தட்டி கழித்து விடுவாள்.

 

இவனும் சரி படிப்பை முடிக்கட்டுமென விட்டு விடுவான். இப்படியே ஆறு மாதங்கள் சென்ற நிலையில் தான்.. திடீரென நேற்று வந்து பிரேக்கப் என்று கூறி விட்டு சென்றாள். இன்று மதியம் கண்களால் வெறுப்பைக் கக்கி, முகம் திருப்பினாள். இப்போது பரிதவிப்பாய் பார்த்து போகிறாள். மண்டை காய்ந்து போய் ஆதவனின் தோள் சாய்ந்திருந்தான் ப்ரியன்.

 

ஆதவன் எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை கூறி.. அவனைத் தேற்றினான். இருவரும் இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு.. விடைபெற்று கொண்டு தத்தமது வீட்டிற்கு கிளம்பினர்.

 

7.

 

மறுநாள் காலையில் கண்விழித்த ப்ரியன்.. காலை உணவினைக் கூடத் தவிர்த்து விட்டு.. விஷ்வாவை சந்திக்க கிளம்பி விட்டான்.

 

நிறுவனத்தின் உள்ளே சென்றவன்.. நேரே விஷ்வாவின் கேபினுக்குள் போய் அமர்ந்து விட்டான். விஷ்வா இன்னும் வந்திருக்கவில்லை.

 

ப்ரியனும், விஷ்வாவும் பத்தாம்‌ வகுப்பு முதல் ஒன்றாகவே படித்தவர்கள். தன்னிடம் வலிய வந்து நட்பு பாராட்டிய விஷ்வாவை, தன்னை விட வசதி குறைவானவன் என்றாலும் நன்றாக படிக்கும் விஷ்வாவை.. ப்ரியனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

பள்ளி படிப்பை முடித்ததும்.. ‘உங்க அப்பா இருந்திருந்தா உன்னை ஃபாரின் அனுப்பி படிக்க வச்சிருப்பார்’ என்ற வருத்தம் கொண்ட அன்னையிடம் கூட.. ‘ஆனா, ஃபாரின்ல என் விஷ்வா இருக்க மாட்டானேம்மா’ என்று தன் நண்பனைப் பிரிய முடியாதென கல்லூரியிலும் ப்ரியன்.. விஷ்வாவுடனே தன் படிப்பைத் தொடர்ந்தான்.

 

படிப்புகள் முடிந்ததும் வேறு நிறுவனத்தில் சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த விஷ்வாவை.. ப்ரியன் தான் பார்ட்னர்ஷிப் நிறுவனம் துவங்கலாம் என விஷ்வாவை விட அதிக பணம் போட்டு.. பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸை ஆரம்பித்தான்.

 

அரைமணி நேரத்திற்கு பின் வந்த விஷ்வா.. “வாடா என் உயிர் தோழா.. ‌என்ன இந்த கம்பெனில இன்னும் நீ பார்ட்னர்ங்கற நினைப்புலயே மறந்து போய் எப்பவும் போல கிளம்பி வந்துட்டியா..? ஜோ ஜேட்.. ஜோ ஜேட்..” என்று போலியாக இரக்கம் காட்டினான்.

 

அவனை அமைதியாகவே பார்த்திருந்த ப்ரியன்.. “ஏன் விஷ்வா இப்டி பண்ணின..? என்னை ஏமாத்தி என் முதுகுல குத்தற அளவுக்கு.. என் மேல உனக்கு அப்டி என்னடா கோவம்..? எதுக்கு இந்த நம்பிக்கை துரோகம்..?” என்று கேட்டான்.

 

“ஏன்? என்ன? எதுக்கு? ஹாஹாஹா..” மென்மையாக ஆரம்பித்து வாய்விட்டு நகைத்தவன்..‌ சட்டென ஆக்ரோஷமாக, “நீ ஏண்டா அப்டி பண்ணின..?” என்று கத்தினான்.

 

புரியாது நின்ற ப்ரியன்.. “எப்டிடா..?” கேட்டான்.

 

ப்ரியனுக்கு முகம் காட்டாமல் திரும்பி.. அறையின் ஜன்னலருகே சென்றவன், “பாரதி..” என்று கூறி விட்டு.. ஒரு முறை ஆழமூச்செடுத்துக் கொண்டு.. மீண்டும் திரும்பி வேக எட்டுக்களோடு வந்து.. ப்ரியனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு “பாரதிடா.. ஷி இஸ் மை லவ்.. எஸ்.. மை லவ் பாரதி..” என்று ஹிஸ்டீரியா பேஷண்ட்டைப் போல் கத்தினான்.

 

அதிர்ந்து நின்ற ப்ரியன்.. அவன் பிடித்திழுக்க சட்டையைக் கொடுத்து விட்டு அசையாமலே நின்றான். ‘விஷ்வா பாரதியை விரும்பினானா?’ இது அவனுக்கு புதிய செய்தி..

 

மூளை யோசிக்கும் திறனை இழந்து.. அசைவற்று நின்றிருந்தவனை.. கோபத்தில் பிடித்து உலுக்கினான், விஷ்வா.

 

“ஞாபகம் இருக்காடா உனக்கு..? டென்த் படிக்கும் போது எக்ஸாம் ஃபீஸ் கட்ட வழியில்லாம நின்னவனுக்கு ஆறாங்கிளாஸ் படிக்கற சின்னப் பொண்ணு அவளோட சேவிங்ஸ்னு பத்து ரூபாய குடுத்தா..”

 

இந்த இடத்தில் ஆதவனாக இருந்திருந்தால் பக்கென்று சிரித்து வைத்திருப்பான்.. ஆனால் இந்த ப்ரியன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பார்த்திருந்தான்.

 

“உன்னைப் பார்க்கறதுக்கு முந்தி அவள தான் நான் பார்த்தேன்.. இன்ஃபாக்ட் பாரதிகிட்ட பழகறதுக்காக தான் உன்கிட்ட நான் வழிய வந்து பேசினேன். உன் ஃப்ரெண்ட்ஷிப் மூலமா அவள நெருங்க நினைச்சேன்.. ஆனா, நம்ம ப்ளஸ்1 போகும் போது.. உங்க வீட்ல அவள வேற ஸ்கூல் மாத்திட்டாங்க”

 

ப்ரியன் என்னும் சிலை உயிர் பெற்று கோப முகம் காட்டியது. “அதுலாம் பப்பி லவ்டா அறிவு கெட்டவனே..”

 

“நோ..‌ அவள அப்பவே மறந்திருந்தா அது பப்பி லவ்.. ஆனா, இன்னும் மனசுல பதிஞ்சு போனவள மறக்க முடியலடா.. இதுவா பப்பி லவ்?”

 

இப்போது ப்ரியன் விஷ்வாவின் சட்டையை பிடித்து, “ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா மறக்க முடியலனு என்கிட்டயே சொல்லுவ?” என்று உறுமினான்.

 

“ஆமாண்டா.. தைரியம் தான்.. நானும் உன் ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலா இருந்திருந்தா.. அவளுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கும் போது நான் உன் கண்ணுக்கு தெரிஞ்சிருப்பேன்.. நான் ஒண்ணுமில்லாதவன்னு தான என்னை விட்டுட்டு, உன் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி மும்பை பிஸினஸ்மேன உன் வீட்டு மாப்பிள்ளை ஆக்கின..? அதான் நான் உன் கம்பெனிய உனக்கே தெரியாம உன்கிட்ட இருந்து பறிச்சேன். இப்ப நானும் உனக்கு ஈக்குவலான பணக்காரன் தான்..”

 

ப்ரியன் அவனைப் பேச விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ஆனா, என் காதல் திரும்ப கிடைக்காதே.. அப்ப நீ மட்டும் உன் காதலிய கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா லைஃப என்ஜாய் பண்ணலாமா? அதுக்கு தான் உனக்கு வச்சேன் அடுத்த ஆப்பு.. நேத்து பிருந்தா வந்து பிரேக்கப்னு சொல்லிருப்பாளே.. ஹாஹாஹா.. நேத்து நீ மஞ்சமாக்கான் மாதிரி முழிச்சிட்டு இருந்தத இங்க இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..”

 

ப்ரியன் கோபமிகுதியில் பல்லைக் கடித்தான். ஆனாலும் அவனே சொல்லட்டும் என முகத்தை பாறையாக வைத்து கொண்டு அமைதி காத்தான்.

 

“என்ன செல்லோ.. நான் என்ன பண்ணிருப்பேன்னு யோசிக்கறியா? ஒண்ணும் இல்ல.. அந்த ஆந்திரா பார்ட்டிக்கு ஒரு வில்லா முடிச்சு குடுத்தோமே.. அந்த ப்ராஜெக்ட் பண்ணும் போது.. நீ போட்ட ப்ளான்ல இது சொத்த அது சொட்டனு சொல்லிட்டே இருந்துச்சே அவர் பொண்ணு.. அப்ப உங்க ரெண்டு பேரையும் கொஞ்சமா.. கொஞ்சமே கொஞ்சமா கவர் பண்ணி வச்சிருந்தேன். அத தான் சமயம் பார்த்து நேத்து உன் ஆளுக்கு அனுப்பிட்டு.. கால் பண்ணி சும்மா உன்னைப் பத்தி ரெண்டே ரெண்டு பிட்ட போட்டேன் மச்சான்.. சத்தியமா அவ்ளோ சீக்கிரம் வருவானு நான் கூட எதிர்பாக்கலடா..” என்று கூறி விட்டு வடிவேலு ஜோக்கைப் பார்த்தவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.

 

ப்ரியன் நிதானமாக யோசித்தான். விஷயம் என்னவென்று அறியாத பொழுது பிருந்தாவைப் பற்றி அரித்துக் கொண்டிருந்த மனம்.. இப்போது விஷயம் தெரிந்த பின்.. ‘ஓ! அதான் நேத்து வெண்மதியோட சேர்த்து பார்த்ததும் அப்டி முறைச்சாளா? சரி.. அவளை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம்.. தற்போது விஷ்வாவிடம் இருந்து நிறுவனத்தை அவன் பெயருக்கு மாற்றிய ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டும்.’ என்றே யோசித்தது.

 

(எல்லாரும் இப்டி தான் இருப்பாங்க போல ஃப்ரெண்ட்ஸ்.. நம்மள சமாதானப்படுத்தறது எல்லாம் அப்புறமாம்.. அவங்க வேலை தான் அவங்களுக்கு முதல் முக்கியமாம் பாருங்களேன்.. ஹூம்ம்..)

 

எனவே, வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு.. பொறுமையாகவே பேசினான். “இங்க பாரு விஷ்வா.. நீ பாரதிய விரும்பறனு ஒரு வாட்டியாவது என்ட்ட சொல்லிருக்கலாம் தானடா? எதுவும் சொல்லாம எனக்கு எப்டி தெரியும்? என்னைக்காவது ஸ்டேட்ஸ் பத்தி உன்கிட்ட பேசிருக்கேனா நானு?” என்று கேட்டான்.

 

“எத்தன வாட்டி மறைமுகமா உன்கிட்ட சொல்லிருக்கேன் தெரியுமா? அப்பலாம் மாங்கா மாதிரி இருந்துட்டு.. இப்ப வந்து சொல்லிருக்கலாம்லன்னா என்ன அர்த்தம்..? எனக்கு சத்தியமா புரியலடா ப்ரியன்.. செங்கலயும், சிமெண்டயும் கட்டி அழறவன் எப்டிடா ப்ருந்தா மாதிரியான ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிச்ச..? ஆறு மாசம் முந்தி நீ லவ் பண்ற விஷயத்த சொன்னதும்.. நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்..”

 

பறந்து கொண்டிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்த ப்ரியன்.. “சரி நடந்தத மாத்த முடியாது விஷ்வா.. இப்ப பாரதி வேற ஒருத்தரோட வைஃப்.. நீ மனசுல நினைக்கறது கூட தப்பு.. மறந்துடு.. இதனால நம்ம ஃப்ரெண்ட்ஷிப்குள்ள ப்ரச்சனை வரணுமா? எப்பவும் போல நம்ம கம்பெனிய ரன் பண்ணலாம்டா.. என்ன சொல்ற?” என்று தன்மையாகவே பேசினான்.

 

“தெரியாம தான் கேக்கறேன்.. என்னைப் பார்த்தா உனக்கு கேனயன் மாதிரி இருக்குதா? இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணி என் பேருக்கு நான் மாத்துவேனாம்.. அத இவர் நோகாம திரும்ப குடு கேப்பாராம்.. நானும் இந்தா மச்சினு தர்ட்டி டூ காட்டிட்டே.. குடுக்கணுமாம். போடா டுபுக்கு..” என்றவன்..

 

ப்ரியனை சுற்றி வந்து, எம்.டி நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சுழற்றிக் கொண்டே.. “ஸ்டேட்ஸ் பத்தி நீ வேணும்னா எதுவும் நினைக்காம இருக்கலாம் மச்சி.. ஆனா, நான் நினைச்சேன்.. சின்ன வயசுல இருந்தே உன்னை மாதிரி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் இல்ல நானு.. உனக்கு தான் தெரியுமே.. குடிகார அப்பனுக்கு பிறந்து நான் பட்டக் கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? அதனால தான் கல்யாணமாவது பணக்காரப் பொண்ணாப் பார்த்து பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆகலாம்னு நினைச்சேன்.. உன் தங்கச்சியக் கட்டினா சொத்தும் வரும்.. சொசைட்டில மதிப்பும் வரும்னு ப்ளான் போட்டேன். அது தான் சொதப்பிடுச்சு.. ஆனா, என்னை என்னடா பண்ண சொல்ற? செகண்ட் ஆப்ஷனா வச்சிருந்த கம்பெனி ப்ளான் பக்காவா வொர்க் அவுட் ஆகிடுச்சு..” என்று டேபிளில் வலக்கையை ஊன்றி கன்னத்தைத் தாங்கி பாவம் போல் இமைக் கொட்டினான்.

 

இவ்வளவு நேரம் தன் தங்கையின் மேல் உள்ள நண்பனின் காதலை உணராமல் போனோமே‌ என்று மனதின் ஓரம் தோன்றிய குற்ற உணர்ச்சியோடு நின்றிருந்த ப்ரியன்.. இப்போது அவன் பணத்திற்காக என்றதும்.. கட்டுக்கடங்காத கோபத்தோடும், தன் இத்தனை வருட நட்பு இப்படி தோற்று போன வருத்தத்தோடும்.. இனி, இவனிடம் பேசி ப்ரயோஜனம் இல்லை என்ற ஞானோதயத்தோடும் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி விட்டான்.

 

“என்ன கொடுமை சார் இது..? அவன் பணம் போட்டு.. வெயில்ல கல்லோடயும், மண்ணோடயும் நின்னு வளர்த்த கம்பெனிய ஒருத்தன் பிடுங்கிட்டேன்னு சொல்றேன்.. சட்டையப் புடிச்சி ஏண்டா இப்டி பண்றனு நாலு இழுப்பு இழுக்காம.. எனக்கென்னனு விளக்கெண்ண மாதிரி போறான்? அது சரி.. கேக்கும் போதெல்லாம் சைன் பண்ணும் போதே மூளை வேலை செய்யல.. இப்ப மட்டும் செஞ்சுடப் போகுதா என்ன..? புவர் பாய்..” என்று வாய் விட்டு தன் நண்பனுக்காக போலியாக வருத்தப்பட்டான்.

 

அவனுக்கு தெரிந்திருக்கவில்லை, புவர் பாய் ப்ரியனல்ல தான் தானென்று..! தன் மீது பாயப் போகும் புலி.. ஒன்றல்ல இரண்டு என்பதை.. அறியாமல் போனான், விஷ்வா.

 

8.

 

அந்த நள்ளிரவு இரண்டு மணிப் பொழுதில்.. விஷ்வாவின் வீட்டின் முன் நின்றிருந்தனர்.. ப்ரியனும், ஆதவனும்..! வேலூரில் ஒதுக்குப்புறமாக இருந்தது ஒற்றை படுக்கையறையைக் கொண்ட விஷ்வாவின் சின்னஞ்சிறிய வீடு..

 

கொட்டாவியை வெளிப்படுத்திக் கொண்டே, “எப்டிடா உள்ள போறது..? வழியவே காணுமே..” என்றான், ஆதவன்.

 

ப்ரியன், கண்களால் வீட்டின் உள்ளே செல்ல வழியைத் தேடிக் கொண்டே.. “வெண்மதியப் பார்க்க மொட்டை மாடிக்கு எப்டி வந்தியோ அதே மாதிரி போய்.. விஷ்வாவையும் பார்த்துட்டு வா..” என்றான்.

 

“எது? டேய்.. என்ன நக்கலா? உன் ஃப்ராடு ஃப்ரெண்டும்.. என் ஆளும் ஒண்ணா..?”

 

“உன் மனசாட்சியத் தொட்டு சொல்லு.. உன் ஆளு ஃப்ராடு இல்லனு..? நீயே அவள போங்குனு தான் கூப்பிடற..”

 

“அது… அது நான் செல்லமா அப்டிக் கூப்டுவேன்.. அதுக்காக..? இவன் மூஞ்சியப் பாக்கறதுக்கு நான் பைப் ஏறி வேறப் போகணுமாக்கும்..? காலக் கொடுமைடா சாமி..” என்று நோகாமல் நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

அவன் நெற்றியில் இருந்து கையை எடுத்து விட்ட ப்ரியன்.. “அது அப்டி இல்லடா.. என்ன கொடுமை சார் இதுனு சொல்லணும்.. அது தான் நம்ம செலக்ட் பண்ணிருக்க டைட்டில்..” என்றான், கொஞ்சமும் சிரிக்காமல்..!

 

“இப்டிலாம் மொக்கயா கடிக்கக் கூடாதுனு சஷி மேம் சொல்லிருக்காங்க மச்சி.. ரூல்ஸ ஒழுங்கா படிச்சியா இல்லயா நீ..?” என்று சுட்டு விரலை ப்ரியனின் மூக்கிற்கு நேரே நீட்டிக் கேட்டான், ஆதவன்.

 

“என் கம்பெனி ரூல்ஸயே ஒழுங்கா படிக்காம தானடா.. இப்டி ராத்திரி நேரத்துலயும், ப்ருந்தாவ விட்டுட்டு உன் கூட சுத்தற நிலைமைல இருக்கேன்..? ஆனாலும் ஆதவ்.. நான் உன்னை விட அதிகமா மொக்க போட்டுட மாட்டேன்..”

 

உர்ரென முகத்தை வைத்து கொண்ட ஆதவன், “இப்ப உள்ள எப்டி போறதுனு சொல்லப் போறியா? இல்லயாடா..?” என்று கேட்டான்.

 

“ஸீ ஆதவ்.. விஷ்வா வீட்ல மொட்டை மாடிலலாம் வழி இல்ல.. எனக்கு தெரியும்.. பின்னாடி கிச்சன் பக்கம் ஒரு வாசல் உண்டு.. அது வழியா போக முடியுமா பாக்கலாம்..”

 

ஆதவன், “சரி வா.. என் தகுதிக்கு இந்த குட்டி சுவரெல்லாம் தாண்ட வேண்டிருக்குது.. எல்லாம் என் நேரம்..” என்று புலம்பிக் கொண்டே அந்த குட்டி காம்பௌண்ட் சுவரைத் தாண்டினான்.

 

அவனைப் பின்பற்றி ப்ரியனும் சுவரைத் தாண்டிய பின்.. இருவரும் வீட்டின் பின்பக்கம் சென்றனர்.

 

பின்புறம் முழுவதும் காய்கறி செடிகளும், கீரைகளும் நன்றாக செழித்து வளர்ந்து கிடந்தது. நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருந்த இடத்தைப் பார்த்து.. ஆதவன், “சூப்பர்ல..?” என்றான்.

 

“விஷ்வாம்மா வளர்க்கறாங்க.. ‌அவங்களுக்கு கார்டனிங்ல ரொம்ப இஷ்டம்..” கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டே.. கதவைத் தள்ளிப் பார்த்தான்.

 

உள்பக்கமாய் பூட்டப் பட்டிருந்தது. எப்படி திறக்க முற்பட்டாலும் சத்தம் கேட்டு உள்ளிருப்பவர்கள் எழுந்து விடக் கூடும். என்ன செய்வதெனப் புரியாமல்.. மீண்டும் ஒருமுறை இருவரும் வீட்டைச் சுற்றி வந்தனர். ம்ஹூம்.. எங்கும் வழியில்லை..

 

வீட்டின் வலப்புற ஜன்னலின் வழியே உள்ளே ஹாலில் பார்வையை செலுத்தினர். விஷ்வாவின் அம்மா..‌ நல்ல தூக்கத்தில் இருந்தார். அருகே அவர் கணவர் ஒழுங்கில்லாத கோணத்தில் படுத்திருந்தார். அவரின் தலைமாட்டில் ஃபுல் மதுபாட்டில்..!

 

ஆதவன் ஒருமுறை ப்ரியனைப் பார்த்து விட்டு.. கீழிருந்து சிறு கல்லை எடுத்து.. உள்ளே விட்டெறிந்தான். அவன் கல்லையெடுத்து குறிபார்க்கையில் அவன் நோக்கத்தை புரிந்து கொண்ட ப்ரியன்.. “டேய் டேய்.. நோ ஆதவ்‌.. நோ..” என்று ஆட்சேபித்துக் கொண்டிருக்கும் போதே.. ஆதவன் விட்டெறிந்த கல் மிகச் சரியாக தன் வேலையை செய்து.. மதுபாட்டிலை வீழ்த்தியது.

 

தட்டென்று தன் தலையில் என்னவோ விழுந்ததை உணர்ந்து.. எழுந்தமர்ந்தவர்.. கீழே சாய்ந்திருந்த மதுபாட்டிலைப் பார்த்து.. “செல்லம்.. என்னாச்சு செல்லம்? எப்டி கீழ விழுந்த? அடிகிடிபட்ருச்சா..?” என்று கண்களில் போதையோடு பாட்டிலைத் தூக்கி மேலும் கீழும் பார்த்தார்.

 

“ஹ்ம்ம்.. அடிலாம் ஒண்ணுமில்ல.. என்னை எழுப்ப தான் கீழ விழுந்துக் கூப்ட்டியா? என் மேல தான் உனக்கு எவ்ளோ அக்கறை செல்லம்..?” என்று மூடியைத் திறந்து.. இன்னும் கொஞ்சம் குடித்துக் கொண்டவர்.. மெதுவாக எழுந்து தள்ளாடிக் கொண்டேப் பின்பக்கம் வந்தார்‌.

 

இவர்கள் இருவரும் மெதுவாக பின்பக்க பக்கவாட்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டனர். நினைத்தது போலவே விஷ்வாவின் தந்தை.. கதவைத் திறந்து பின்பக்கமிருந்த பாத்ருமை நோக்கிப் போனார்.

 

கிடைத்த இடைவெளியில் இருவரும் உள்ளே புகுந்து விட்டனர். வேகமாக திறந்திருந்த விஷ்வாவின் அறைக்குள் போய் சற்றே மூச்சு வாங்கிக் கொண்டு.. சத்தம் வராமல் இருவரும் அறையைப் புரட்டிப் போட ஆரம்பித்தனர்..

 

கால்மணி நேரத் தேடலுக்கு பின்.. ஆதவன், “ஆஃபீஸ்ல வச்சிருப்பானோ..?” என்று.. அந்த சின்ன மர பீரோவின் சாவியைத் தேடிக் கொண்டிருந்த ப்ரியனிடம் கிசுகிசுத்தான்.

 

வாயில் விரல் வைத்து.. இல்லை எனத் தலையாட்டிய ப்ரியன்.. ஆணியில் மாட்டியிருந்த ஜூட் பையிலிருந்து மர பீரோவின் சாவியைக் கைப்பற்றியிருந்தான்.

 

அசந்து தூங்கிக் கொண்டிருந்த விஷ்வாவை ஒரு பார்வை பார்த்து விட்டு மெதுவாக பீரோவைத் திறந்தான். உள்ளே துணிமணிகளையும், லாக்கரில் சொற்ப நகை மற்றும் பணம் தவிர.. வேறொன்றுமில்லை.

 

ஏமாற்றமாய் நிமிர்ந்தவனின் கண்களில் பட்டது.. அந்த பரண்.. பரண் மேலிருந்த ட்ரங்கு பெட்டி.. அது விஷ்வாவின் தாத்தாவினது என்று ப்ரியனுக்கு தெரியும். தாத்தாவின் பொருட்களை அவர் மீதுள்ள அலாதி ப்ரியத்தால்.. தான் சேகரித்து வைத்திருப்பதாக முன்பு ஒரு முறை விஷ்வா கூறியதாக ஞாபகம்..

 

ஒருவேளை.. அதனுள் இருக்குமோ..? யோசித்ததை செயல்படுத்த ஆதவனுக்கு கண்ணைக் காட்டினான். மேலே பார்த்த ஆதவன்.. ‘சத்தம் கேட்கும்’ என்று சைகை செய்தான்.

 

முகத்தில் பிடிவாதம் காட்டி.. ‘பரவாயில்லை வேண்டும்’ என இவன் சைகை செய்தான். ‘தம்ப்ஸ் அப்’ காட்டிய ஆதவன் அங்கிருந்த நாற்காலியில் ஏறி.. பரணில் இருந்து பெட்டியை மெதுவாக நகர்த்தினான். ‘க்றீச் க்றீச்’ என்ற சத்தத்தில்.. விஷ்வா விழித்து விடுவானோ என்ற கவலை கொஞ்சமுமில்லாமல்.. சிறிது சிறிதாக நகர்த்தி வெளியே எடுக்கும் சமயம்.. விஷ்வாவிடம் அசைவு..! சட்டென ஆதவனையும் இழுத்து கொண்டு கட்டிலின் பின்புறம் குனிந்து அமர்ந்து கொண்டான் ப்ரியன்.

 

மெதுவாக கண்விழித்த விஷ்வா.. சிறு கொட்டாவியுடன் எழுந்தமர்ந்தான். தலைமாட்டில் இருந்த அலைபேசியில் நேரம் பார்த்தவன்.. அருகிலிருந்த சின்ன டீபாயில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்து விட்டு.. வெளியே செல்ல எண்ணி.. கட்டிலை விட்டு இறங்கினான்.

 

இறங்கியவன் வெளியே செல்லாமல்.. நாற்காலி எப்படி இடம் மாறியதென்ற சிந்தனையுடன்.. அதன் அருகே சென்றான்.

 

ஒன்று.. இரண்டு.. மூன்று..

 

‘டமால்’ என்ற பெரும் சத்தத்துடன் விஷ்வாவின் தலைக்குள் இருக்கும் கிரிமினல் மூளையைப் பரிசோதிக்க எண்ணி.. அவன் தலை மேல் வந்து விழுந்தது, ஆதவன் ஸ்லாபின் முனை வரை நகர்த்தி வைத்திருந்த.. தாத்தாவின் ட்ரங்கு பெட்டி..!

 

சிறு அலறல் கூட இல்லாமல் தலை சுற்றி சரிந்து விழுந்தவனைப் பார்த்து.. வாயில் கை வைத்த ஆதவன், “போச்சு.. போச்சு.. ஃப்ரெண்டோட லட்சியத்துக்காக நம்ம திருடனா மாறுறது ஒண்ணும் தப்பே இல்லனு உன்னை நம்பி வந்தேன் பாரு.. இப்டி அநியாயத்துக்கு என்னை கொலகாரனா மாத்திட்டியேடா கொலகார பாவி..!!!” என்று பயந்தவன் போல் படபடவென பொறிந்தான்.

 

“டேய் கத்தித் தொலையாதடா.. வா.. என்னாச்சு பார்ப்போம்..”

 

“என்னத்த பார்க்க போற? உசுரு இருக்கா இல்லையான்னா? அவன் தான் சயனைட் முழுங்குனவன் மாதிரி கிடக்கறானே..”

 

“யூ…” என்று திட்டுவதற்கு வாய் திறந்த ப்ரியன்.. “ச்சு.. போ..” என்று விட்டு, விஷ்வாவின் அருகே சென்று பார்த்தான். விஷ்வா லேசாக கண்களை அசைத்து.. மென்மையாக முணங்கிக் கொண்டிருந்தான்.

 

“விச்சு.. விச்சு.. என்னடா சத்தம்? இன்னைக்கும் அந்த மாமனார் கெழவனோட ட்ரங்கு பெட்டிய நோண்டிட்டு இருக்கியா? இம்சை..” – வெளியிலிருந்து விஷ்வா அம்மாவின் சலிப்பானக் குரல்.

 

இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் அர்த்தம் பொதிந்தப் பார்வையைப் பரிமாறிக் கொண்டு, விஷ்வாவை விட்டு விட்டு.. கீழே விழுந்ததில் தன்னுள் பொத்தி வைத்திருந்த அத்தனைப் பொருட்களையும்.. சிதற விட்டிருந்த பெட்டியை ஆராய்ந்தனர்.

 

தாத்தாவின் ரிம்லெஸ் கண்ணாடியில் இருந்து.. கடன் கணக்கு எழுதி வைத்திருந்த டயரி வரை எல்லா பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தான் பேரன். கீழே சிதறயது போக பெட்டியின் உள்ளிருந்தவற்றை ஆராய்ந்ததில் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த தாத்தாவின் வெள்ளை வேஷ்டியின் அடியில் இருந்தது.. அந்த பேப்பர் ஹோல்டர்.

 

ப்ரியனின் செல்களில் புது ரத்தம் பாய்ந்து.. அவனிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக எடுத்து பிரித்து பார்த்து.. முகத்தில் வெளிச்சத்தைப் படர விட்டான்.

 

வந்த வேலை முடிந்ததென்பதைப் புரிந்து கொண்ட ஆதவன்.. எழ முற்படுகையில்.. “என்னடா விச்சு.. சத்தத்தையே காணும்..?” என்று கேட்டு கொண்டே வந்த விஷ்வாவின் அம்மாவைப் பார்த்ததும்.. இருவரும் ஜெர்க்காகி.. மீண்டும் கட்டிலின் பின்புறம் போய் அமர்ந்து கொண்டனர்.

 

உள்ளே வந்தவர் விஷ்வா கிடந்த கோலத்தைப் பார்த்து விட்டு.. “அய்யோ விச்சு.. என்னடா ஆச்சு..? ஏண்டா இப்டி விழுந்து கிடக்கற? கடவுளே.. இந்த மனுஷன் வேற இப்டி குடிச்சிட்டு மல்லாந்து கிடக்கறாரே.. நான் என்ன பண்ணுவேன்..” புலம்பிக் கொண்டே விஷ்வாவை உலுக்கினார்.

 

மிகுந்த பதட்டத்தில் இருந்தவர்.. “தண்ணி.. தண்ணி.. எங்க..?” கேட்டு கொண்டே டீப்பாய் பக்கம் திரும்பினார்.. கட்டிலை ஒட்டி இருந்த டீப்பாய் பக்கம் அமர்ந்திருந்த ஆதவன்.. நொடிக்கும் குறைவான நேரத்தில், வாட்டர் பாட்டிலைக் கைப்பற்றி.. சிலை போல் அமர்ந்து கொண்டான்.

 

அவனின் செயலைப் பார்த்த ப்ரியன் வந்த சிரிப்பை, உதடுகளை மடக்கி அடக்கிக் கொண்டான். ‘என்னைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குதா’ என்பது போல் இவன் முறைத்து வைத்தான்.

 

அம்மா.. தண்ணீர் இங்கில்லை என நினைத்து கிச்சனில் இருந்து எடுத்து வர சென்ற நேரத்தில்.. இருவரும் விஷ்வாவைப் பார்த்து.. சாதாரண மயக்கம் தான்.. ஆபத்தில்லை என்று, வந்ததைப் போல் பின்பக்கம் வழியே வெளியேறி விட்டனர்.

 

மீண்டும் அந்த குட்டி காம்பௌண்ட் சுவரை தாண்டி குதித்ததும்.. ஆதவனைக் கட்டிக் கொண்டு ஆர்பரித்தான் ப்ரியன்.

 

“டேய் டேய்.. விடுடா.. பாதி கிணறு தான் தாண்டிருக்கோம்.. அதுக்குள்ள மியூசிக்க போட்டுட்டு இருக்க?”

 

“அது எப்டியும் நீ சக்ஸஸ்ஃபுல்லா பண்ணிடுவ.. எனக்கு நம்பிக்கை இருக்குடா..”

 

“பண்ணப் போறது ஃப்ராடு தனம்.. இதுல நம்பிக்கை வேறயா? ஹய்யோ..”

 

“சரி சரி வா.. நேரமாச்சு.. சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கு.. அப்ப தான் காலைல ஃப்ரெஷ்ஷா போய் விஷ்வாவ மீட் பண்ண முடியும்..”

 

“ஹ்ம்ம்.. நல்லா கோர்த்து விடறடா..” பேசிக் கொண்டே இருவரும்.. தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த ப்ரியனின் நீல வண்ண ஏமியோவில் ஏறிச் சென்றனர்.

 

9.

 

மறுநாள் காலையில் அலுவலகத்தில் தன் கேபினில்.. கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தான், விஷ்வா. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. தான் ஏமாற்றி வாங்கிய கம்பெனி டாக்யூமெண்ட்ஸ் ப்ரியனிடம் சென்று விட்டது என்று..! ஆனால் இது எப்படி நடந்தது என்று தான் புரியாமல் அமர்ந்திருக்கிறான்.

 

நேற்றிரவு பெட்டி எப்படி கீழே விழுந்தது? உள்ளிருந்த பத்திரம் மட்டும் எப்படி காணாமல் போனது? வீட்டிற்கு யாரும் வந்த சுவடும் இல்லை. போலீசிற்கு போகலாமா? என்னவென்று கம்ப்ளெய்ண்ட் தருவது? நிறுவனத்தை தன் பெயருக்கு மாற்றிய விவரம் நிறுவன ஊழியர்களுக்குக் கூட இன்னும் தெரியாது. அனைவரும் ப்ரியனும் பார்ட்னர் என்றே நினைத்திருக்கின்றனர். இந்நிலையில் போலீஸிடம் சென்றால் திருடனுக்கு தேள் கொட்டினாற் போலல்லவா இருக்கும்?

 

ஏதேதோ நினைத்து தனக்குள் உழன்று கொண்டிருக்கும் போது.. இன்டர்காமில் விசிட்டர் வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பது ப்ரியனாக தான் இருக்கும் எனத் தானே முடிவெடுத்துக் கொண்டு.. மேலே எதுவும் விசாரிக்காமல், உள்ளே அனுப்புமாறு பணித்தான்.

 

ஆனால் உள்ளே வந்தவனைப் பார்த்ததும்.. ஆச்சர்யமாக நோக்கி.. “நீங்க.. நீங்க ரவி சர் பிஏ.. மிஸ்டர் ஆதவன்.. இல்ல?” என்று கேட்டான், பரபரப்பாக..!

 

‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ உடன் ஒப்பிடுகையில்.. ப்ரியனின் நிறுவனம் மிகவும் சிறியது தான்.. தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இரண்டு தலைமுறைகளை சந்தித்த நிறுவனம்.. பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இரண்டு வருடங்களை மட்டுமே எட்டவிருந்தது.

 

அதோடு ப்ரியனைப் போல் அல்லாமல்.. ப்ரியன், விஷ்வாவின் தோழனான ரவீந்திரனின் வலக்கை, இடக்கை, சைடு கை என அனைத்தும் இந்த ஆதவன் தான் என்று அறிந்திருந்தான் விஷ்வா. எனவே தான் ஆதவனைக் கண்டதும் அவனிடம் இந்த பரபரப்பு..!

 

“ஆமா சர்.. எப்டி இருக்கீங்க..?”

 

“ஹ்ம்ம்.. குட் மிஸ்டர் ஆதவன்.. ரவி எப்டி இருக்கான்? பேசி ரொம்ப நாள் ஆச்சு..”

 

“யாஹ்.. ஹி ஆல்சோ ஃபைன்..”

 

“என்ன திடீர் பிவி விசிட்.. உங்க பிஸி ஷெட்யூல்லயும்?”

 

“ஒரு சின்ன ப்ராஜெக்ட் சர்.. ரவி சர்க்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க போல.. மறுக்க முடியல.. ஆனா, இப்ப ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரண்ட் ப்ராஸஸ்ல இருக்குது.. சோ.. இப்போதைக்கு வேற எதையும் தொட முடியாது.. அதான் உங்களால பண்ண முடியுமானு கேக்கலாம்னு வந்தேன்..”

 

“ஓ!! சர்ட்டன்லி ஆதவன்.. என்ன மாதிரி ப்ராஜெக்ட்..?”

 

ஆதவனின் வாய்ஜாலம் நாம் அறியாததா? இல்லாத திட்டத்தை இருப்பதாகக் கூறி, இடத்தையும் கைக் காட்டி.. விஷ்வாவை நன்றாகவே நம்ப வைத்து விட்டான்.

 

“இதுல நாங்க இடத்துக்கு அட்வான்ஸ் பே பண்ணின டீடெய்ல்ஸ் இருக்குது..” என்று கோப்பு ஒன்றை எடுத்துக் காட்டினான். “இடம் பாக்கறதுக்கு உங்க சைட் இன்ஜினியர் அனுப்புனீங்கனா எங்க ஆள் ஒருத்தர் வந்து காட்டிடுவார்..”

 

இன்ஜினியர் என்றதும் மீண்டும் ப்ரியனின் நினைவில் அமிழ்ந்து.. குழம்பினான் விஷ்வா.

 

“தென்.. உங்களுக்கு ஓகேனா பார்ட்டிய கூட்டிட்டு வரேன்.. ப்ராஜெக்ட்க்கு பைசா கால்குலேட் பண்ணி கொட்டேஷன் அவர்க்கிட்டயே குடுத்துடுங்க.. பில்டிங் ப்ளான் கூட ஏற்கனவே பார்ட்டி கேட்ட மாதிரி நானே போட்டு வச்சுட்டேன். நீங்க இடம் பார்த்தப்புறம்.. உங்க இன்ஜினியர்கிட்டயும் கன்சல்ட் பண்ணிக்கோங்க விஷ்வா சர்.. ”

 

“ஹ்ம்ம்.. ஓகே மிஸ்டர் ஆதவன்..” மனதில் குழம்பிக் கொண்டிருந்தவன்.. ஆதவனிடம் கவனத்தை சிதற விட்டான்.

 

பேனாவை பிடிப்பதற்கு கூட திராணியற்றவன் போல அமர்ந்திருந்தவனை கீழ் கண்களால் கவனித்து கொண்டே.. “ஓகே சர்.. அப்ப இது பத்தின அக்ரிமென்ட்ல கொஞ்சம் சைன் பண்ணிடறீங்களா? நாங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டோம்.. தட்’ஸ் வொய்…” என்று இழுத்தவாறே.. முதல் இரண்டில் மட்டும் வேலை சம்பந்தப்பட்ட காகிதங்களையும்.. மற்றவை நிறுவனத்தை ப்ரியனுக்கு தாரை வார்த்து தருவதாக கூறிய.. சில காகிதங்களையும் எடுத்து வைத்தான், ஆதவன்.

 

யோசித்து கொண்டிருந்த விஷ்வா.. “ஹ்ம்ம்.. ஷூயூர்..” என்று பிசிறு தட்டியக் குரலோடு.. ஆதவன் நீட்டிய காகிதங்களை மேலோட்டமாக பார்த்து விட்டு தன் கையெழுத்தை இட்டான்.

 

ஆதவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு.. விடைபெற்று கொண்டான். அவன் போன பின்னும் விஷ்வாவின் நினைவுகளில் ப்ரியன் மட்டுமே நிறைந்திருந்தான்.

 

அவனுக்கு நன்றாக தெரிந்தது, நிறுவனம் தன் கைவிட்டு போகப் போகிறதென்று..! அதை ஏற்று கொள்ள முடியாமல் மனம் தத்தளித்து தவித்தது. என்னவோ இவனே உழைத்து வளர்த்த நிறுவனம் போல்.. அதிலேயே உழன்று கொண்டிருந்தான். இருந்தாலும் தன் சம்மதம் இல்லாமல் அவனால் அவன் பெயருக்கு மாற்ற முடியாது என பலவீனமாக நம்பினான்.

 

எந்த நேரமும் ப்ரியனை எதிர்பார்த்திருந்த விஷ்வா.. அன்று மாலையில் அவன் ப்ருந்தாவுடன் கைக் கோர்த்து கொண்டு வருவான் என கொஞ்சமும் நினைக்கவே இல்லை.

 

‘இது எப்படி..?’ காலையில் இருந்து யோசித்து யோசித்து சூடாகிக் கிடந்த மூளை.. இப்போது வெடித்து சிதறி விடும் கொதிநிலையை அடைந்தது..

 

உள்ளே வந்த ப்ரியன்.. “என்னடா மறுபடியும் மறந்து போய் வந்துட்டேன்னு பார்க்கறியா? பாவம் பச்சப்புள்ள மாதிரி முழிக்கறியே மச்சி.. ஜோ ஜேட்.. ஜோ ஜேட்..” என்று அவனைப் போலவே போலி இரக்கம் காட்டினான்.

 

“ஒரு நாள்.. ஒரு நாள் கூட உன்னை வேற மாதிரி நினைச்சதே இல்லடா.. நம்ம என்னத்த தர்றோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். ஆனா.. ஒட்டுமொத்த நம்பிக்கையையும் நான் உன் மேல் தானடா வச்சிருந்தேன்..? நீ ஏன் எனக்கு அந்த நம்பிக்கைய தராம போயிட்ட?”

 

விஷ்வா பேச்சு வராமல் நின்றிருந்தான்.

 

“ஃப்ரெண்டுனு நீ என்னை தோள்ல சாய்ச்சுக்க வேணாம்.. குப்புற தள்ளி விடாம இருந்துருக்கலாம்ல? எத்தனை வருஷ ஃப்ரெண்ட்ஷிப்..? பணத்துக்காக தூக்கிப் போட்டுட்டல்ல? ரைட்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. இப்ப எப்டி..? நீயே வெளில போயிடறியா? இல்ல….” என்று வாக்கியத்தை முடிக்காமல் விஷ்வாவின் முகத்தை வெற்றி பார்வை பார்த்தான்.

 

“நோ.. இது என் கம்பெனி.. நான் எதுக்கு வெளில போகணும்..? ஐ நெவர்..” விஷ்வாவின் குரலில் நடுக்கமும், பதட்டமும்..

 

ப்ரியன் கூலாக ப்ருந்தாவைப் பார்த்து கண்சிமிட்டி, “அம்மு.. சர்கிட்ட அத எடுத்து காட்டு” என்றான்.

 

ஓரத்தில் சிறிய டெடிபியர் தொங்கி கொண்டிருந்த தன் கைப்பையில் இருந்து கற்றை காகிதங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை எடுத்து டேபிளில் விஷ்வாவின் முன் வைத்தாள், ப்ருந்தா.

 

இதோ.. இதோ.. தான் வெளியேறும் தருணம் வந்து விட்டது.. தன்னை வெளியேற்ற காத்திருக்கும் அரக்கனை போல் காட்சியளித்த  கோப்பினை மெதுவாக பிரித்துப் பார்த்தான்.

 

நிறுவனத்தை ப்ரியன் பெயருக்கு மாற்றி தருவதாக எழுதியப் பத்திரங்கள்.. விஷ்வாவின் கையெழுத்தோடு..! இது எப்படி சாத்தியம்..! நிமிர்ந்து ப்ரியனைப் பார்த்தான்.

 

என்ன பாக்கற? ரெண்டே நாள்ல எப்டி இது நடந்தது பார்க்கறியா? ஏமாத்தின உனக்கே ஒரு வழி இருந்துருக்கும் போது.. நேர்மையா இருந்த எனக்கு ஒரு வழி கூடவா இல்லாம போய்டும்? அதான் உன் வழிலயே வந்து என் கம்பெனிய எடுத்துக்கிட்டேன். ஹாஹாஹா.. ஏண்டா.. ஒருத்தன் வந்து கையெழுத்து போடு சொன்னா படிச்சு பார்க்க மாட்டியா? மடையன் மாதிரி கண்ண மூடிட்டு போட்ருவியா?”

 

விஷ்வாவிற்கு ஆதவன் வந்து போனதே

அப்போது தான் புத்தியில் உறைத்தது.. ஆனால்.. நிறுவனக் கூட்டத்திற்கு சென்று வரும் தனக்கே ஆதவனை அதிகம் தெரியாத பொழுது.. கல்லோடு மல்லுக் கட்டும் ப்ரியனுக்கு எப்படி தெரிந்தது? விஷ்வா மற்றும் ப்ரியனின் தோழனான ரவியின் ஆள் தான் ஆதவன்..

 

‘அப்படியானால்??? உதவிக்காக ப்ரியன் சென்றது.. ரவியிடமா? அதனால் தான் பத்திர பதிவு கூட இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்கிறானா?’ அவனாகவே அவனின் யூகங்களைத் தீர்மானித்துக் கொண்டான்..

 

என்ன கொடுமையடா இது.. விஷ்வாவைப் போன்றவன்.. தன் சக்திக்கு மீறி ப்ரியனிடம் வேண்டுமானால் போராட முடியும்.. ‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ எனும் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் வாரிசான ரவியிடம் எப்படி மோத முடியும்?

 

ஒழுங்காக இருந்திருந்தாலாவது தான் நான்கில் கால் பங்களித்த பிவி – யில் இருந்திருக்கலாம்.. இப்போது.. மொத்தமும் போய் வெற்று ஆளாய் நிற்கின்றான்.

 

சரி.. நிறுவனத்தில் தான் இந்த ப்ரியன் தன்னை வென்று விட்டான்.. ஆனால் இந்த ப்ருந்தாவுடன் எப்போது, எப்படி ராசியாகித் தொலைந்தான்? எரிச்சலுடன் ப்ருந்தாவைப் பார்த்து விட்டு.. ப்ரியனை நோக்கினான்.

 

“என்ன செல்லோ.. என் செல்லத்த எப்டி சமாதானம் பண்ணினேன்னு யோசிக்கறியா? அதுக்கு ஏண்டா இப்டி மஞ்சமாக்கான் மாதிரி முழிக்கற?” என்று அவனின் வசனத்தை அவனுக்கே திருப்பி படித்தான், ப்ரியன்.

 

“ஒண்ணுமில்ல.. நேத்து உன் வீட்டுக்கு வந்தப்ப உன் மொபைல்ல இருந்த மெமரி கார்ட எடுத்துட்டு போய்.. என் தேவிகிட்ட காட்டினேன்.. மேடம் அதுல நீ வச்சிருந்த குப்பையெல்லாம் பார்த்துட்டு என் மேல எந்த தப்பும் இல்லனு வெளில ரிலீஸ் பண்ணி விட்ருந்த என்னை திரும்பவும் அவங்க இதய ஜெயிலுக்குள்ளத் தூக்கி போட்டுக்கிட்டாங்க.. இனி எப்பவும் என்னை ரிலீஸ் பண்ணவே மாட்டாங்களாம்டா.. ம்ம்..” என்று தித்திப்பாய் வருந்தினான்.

 

ப்ரியன்.. ப்ருந்தாவின் மேல் வீசியக் காதல் பார்வையில், விஷ்வாவின் உள்ளம் கோபத்தில் தகித்தது..

 

ப்ரியன், “ஆங்.. மிஸ்டர் விஷ்வா.. ஒன் கைண்ட் இன்ஃபர்மேஷன்.. நௌ, இட்’ஸ் மை சேர்.. யூ கோ அவுட்.. மீ கோ சிட்..” என்று கைகளை நீட்டி மடக்கி பேசி நக்கலடித்தான்.

 

எழுந்து கொள்ளாமல் முறைத்துக் கொண்டிருந்த விஷ்வாவைப் பார்த்தவன்.. “இன்னும் என்ன முறைப்பு வேண்டி கிடக்குது? வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்..” என்றான், வடிவேலு பாணியில்..

 

இருவரையும் தோற்றுப் போன பார்வைப் பார்த்து விட்டு.. வெளியேறினான், விஷ்வா..!

 

அவன் சென்றதும் திரும்பிய ப்ரியன் தன்னையே வைத்த விழியெடுக்காது பார்த்து கொண்டிருந்த ப்ருந்தாவிடம், “ஹேய்.. இது ஆஃபிஸ்டி.. எதுக்கு இப்டி பார்த்து வைக்கற..” கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.

 

“இது ஆஃபிஸ் ஆச்சே.. எதுக்கு பக்கத்துல வரீங்களாம்?”

 

“நீ எதுக்கு அப்டி பார்த்தனு கேக்கறதுக்காக வந்தேன்..” என்றான், தன் கைகளால் அவள் கைகளோடு கதை பேசிக் கொண்டே..!

 

“இல்ல.. இத்தன நாளும் சிரிக்கவே யோசிப்பீங்க.. இப்ப வடிவேலு ஸ்லாங்லலாம் பேசறீங்க.. இந்த ரெண்டு நாளைல சிரிக்கறதுக்கு எதுவும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எடுத்தீங்களா என்ன..?”

 

“ஹ்ம்ம்.. ஆமா.. நேத்து ரெஸ்டாரண்ட்ல பார்த்தியே.. அவன்கிட்ட தான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன்..”

 

“அவர் யாருனு ஒண்ணும் நீங்க சொல்லவே இல்லயே.. என்ன தான் ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல.. ப்ரேக்கப்னு சொல்லிட்டு போயிருந்தாலும்.. நீங்க ரெஸ்டாரண்ட்குள்ள போறது பார்த்துட்டு என்னால பார்க்காத மாதிரி போக முடியல. ஒரே ஒரு வாட்டி உங்க முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு.. ஃப்ரெண்ட் கூட ஷாப்பிங் வந்தவ.. அவள அனுப்பிட்டு உங்க பின்னாடியே நானும் வந்துட்டேன்..” தாயின் மடியை முட்டும் கன்றைப் போல் அவன் நெஞ்சில் தலை சாய்த்து கண்மூடிக் கொண்டாள், ப்ருந்தா.

 

அவள் மனநிலையை புரிந்து.. ஆறுதலாய் அணைத்துக் கொண்டவன்.. “எனக்கும் ப்ரேக்கப்னு சொன்னதும் கோவம் வந்தாலும்.. நேத்து உன் கண்ணு துணைக்காக என்னைக் கூப்பிட்டதுமே புரிஞ்சது.. நீயும் என்னை மாதிரி தான் தவிச்சுட்டு இருக்கனு..” என்றான், அவள் நெற்றியில் முத்தமிட்டு..!

 

“சாரிப்பா.. யார் என்ன சொல்லிருந்தாலும் நான் நம்பிருக்கக் கூடாது. ஆனா.. இன்னிக்கு நீங்க வரலனா நாளைக்கு நானே உங்கள பார்க்க வந்துருப்பேன்..”

 

“அந்த ஃபோட்டோவ நானும் தானப் பார்த்தேன்.. யாரா இருந்தாலும் கோவம் வர தான் செய்யும்.. லீவ் இட் அம்மு..”

 

“ஆமா.. அந்த ஃப்ரெண்ட் யாரு..? அவர் என்கிட்ட வந்து அப்டி பேசுனதும் எனக்கு ரொம்ப பயமா போயிடுச்சு தெரியுமா?”

 

“ஹாஹாஹா.. இப்ப நம்ம கம்பெனி திரும்ப கிடைச்சதுக்கு காரணமே அவன் தான் அம்மு.. இல்லனா.. இவ்ளோ சீக்கிரம் நான் நினைச்சது நடந்துருக்காது..” பேச்சோடு பேச்சாக.. நெற்றியில் முத்தமிட்ட அதரங்கள் இப்போது காது மடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தது.

 

ஆதவனைப் பற்றி மேலும் கேட்க நினைத்தவளுக்கு மொழியோடு சேர்ந்து சிந்தனையும் சிதைந்து கொண்டிருந்தது. கண்மூடிக் கிறங்கி கொண்டிருந்தவள்.. “பிடிச்சிருக்கு..” என்றாள், கிசுகிசுப்பாய்..!

 

தன் வேலையை கண்ணாய் செய்த படி.. “என்னது..?” தெளிவில்லாத குரலில் கேட்டான்.

 

அவனை விலக்கி நிறுத்தி விட்டு,

காதுமடல் அருகே உதடுகள் நடத்தும்

நாடகம் பிடிச்சிருக்கு..”

என்று தன் ஐஸ்கிரீம் குரலில் பாடினாள்.

 

“ஹாஹாஹா.. அப்ப நிறைய நாடகம் நடத்தலாமே..” என்றவன் விலக்கியவளை மீண்டும் நெருங்கி.. “அடுத்த லைன் நான் எப்ப பாடறதாம்?” என்று அவள் கண்களுக்குள் விழுந்து கொண்டே கேட்டான்

 

“பாடலாமே.. இன்னும் பத்து நாளைல..”

 

“என்ன..? பத்து… ஹேய்.. நிஜமாவா சொல்ற..? உங்க அப்பாகிட்ட பேசிட்டியா?” என்று கண்கள் பளபளக்க.. விலகி நின்றவளை கைப் பிடித்து இழுத்து நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு கேட்டான்.

 

“ஹ்ம்ம்.. மனசால ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்னு சொன்னதே போதும். உயிர் போய்டுச்சு தெரியுமா? அதுவும் வேற பொண்ணோட சேர்த்து பார்த்ததும் நான் பட்ட அவஸ்தை.. இனி என்னால முடியாது. கல்யாணம் பண்ணிக்க போறீங்களா இல்லயா?” என்றாள், மிரட்டல் குரலில்..!

 

என்ன தான் காலையில் அவளைப் பார்க்க சென்ற போது.. வெண்மதி தன் தோழி என்று விளக்கம் கூறியிருந்தாலும்.. அவன்.. அவள் கையைப் பிடித்திருந்த போது..? அது ப்ருந்தாவிற்கு தெரியாதல்லவா? தன்னவனை விட்டு கொடுக்க முடியாது என்ற பிடிவாதமான மனநிலை வந்த பின் தான் ரெஸ்டாரண்டில் அவன் முகம் காணத் தவித்து நின்றாள்.

 

“நானா வேணாம் சொல்றேன்.. நீதான அப்பாகிட்ட பேசணும் ஆயாகிட்ட பேசணும்னு உளறிட்டு இருந்த?”

 

“இன்னிக்கு எப்டியும் பேசிடுவேன்.. கொஞ்சம் சிடுமூஞ்சின்றத தவிர உங்கள மறுக்க காரணமில்ல.. அதுவும் இப்பலாம் ஜோக் கூட பண்றீங்க.. கண்டிப்பா அப்பா ஒத்துக்குவார்.. எனக்கு நம்பிக்கை இருக்குது..”

 

“ஆனா, அப்ப கூட பத்து நாள்ல மேரேஜ்னு எப்டி சொல்லுவார்?”

 

“அதுலாம் நீங்க ஆன்ட்டிய கூட்டிட்டு வந்து பேசிக்கோங்க.. எனக்கு டென் டேஸ்ல என் ப்ரியன் வேணும்.. அவ்ளோ தான்..”

 

இது போதாதா..? தன் காதலி தன்னைத் தேடுகின்றாள்.. அதற்காக தன்னை வேண்டுகின்றாள் என்பதில் கர்வம் தலைக்கேறிப் போய்.. அவள் காதலின் கனம் தாங்காமல் தலைசுற்றி நின்றான், ப்ருந்தாவின் ப்ரியன்..!

 

10.

 

ப்ருந்தா ப்ரியனிடம் சொன்னதைப் போலவே.. தன் தந்தையிடம் தங்கள் காதலைக் கூறி, திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டாள். பெரிதாக காதலை எதிர்க்காத ப்ருந்தாவின் அப்பா கிருஷ்ணன்.. ப்ரியனை மட்டுமல்லாமல்.. அவன் குடும்பத்தினரைப் பற்றியும் நன்கு விசாரித்த பின்னரே அவளின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.

 

அந்த வாரத்திலேயே ஒரு நாள் ப்ரியன்.. தன் வீட்டில் கெட் டூகெதர் பார்ட்டி அரேன்ஞ் செய்து ஆதவனையும், வெண்மதியையும் அழைத்திருந்தான். கூடவே ப்ருந்தாவையும் அழைத்து தன் அம்மா பல்லவியிடம் இவள் தான் உங்கள் மருமகள் என்று கூறி விட்டான்.

 

ப்ருந்தாவிற்கு வெண்மதியின் மீதிருந்த கோபம்… அவளிடம் பேச ஆரம்பித்ததும் கரைந்து காணாமல் போனது. அவளின் விளையாட்டுதனம் கலந்த பேச்சில் ஈர்க்கப்பட்டாள்.

 

இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆதவன் எங்கே தான் ப்ருந்தாவிடம் ரெஸ்டாரண்டில் வம்பு வளர்த்ததை வெண்மதியிடம் கூறி விடுவாளோ என.. திருதிருவென முழித்து கொண்டு நின்றான்.

 

அவன் படும் பாட்டைப் பார்த்த ப்ரியன் தனியாக அவனை அழைத்து சென்று, “உன்னை பத்தி நான் அம்முகிட்ட சொல்லிருக்கேன்டா.. அப்டி ஒண்ணும் உன்னை போட்டு குடுத்துட மாட்டா.. நீ வயித்து வலிக்காரன் மாதிரி மூஞ்சிய வச்சிக்காம கொஞ்சம் நார்மலா இரு மச்சி..” என்று கூறி விட்டு, அடக்கமாட்டாமல் சிரித்தான்.

 

“உனக்கு என்னைப் பார்த்தா சிரிப்பாணியா இருக்குதா?” என்று இவன் அவனை மொத்தினான்.

 

ப்ருந்தாவின் பாந்தமான அழகில் பல்லவி அசந்துவிட்டார் என்றால்.. அவளின் மென்மையான குணத்தில் வீழ்ந்து விட்டார் என்றே சொல்லலாம். எனவே, ப்ரியன் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும்.. எங்கே மகன் மீண்டும் சண்டை, ப்ரேக்கப் என்று மனம் மாறி விடுவானோ என பயந்தவர்.. ப்ருந்தா தன் தந்தையிடம் பேச அழைத்த போது உடனே தலையாட்டி விட்டார்.

 

பின்பு, பெரியவர்கள் பேசி பத்து நாட்களில் எல்லாம் கல்யாணம் வைக்க முடியாது.. அடுத்த மாத இறுதியில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டு, இன்று இதோ.. இந்த சுபயோக சுபதினத்தில்.. ப்ருந்தாவை தன்னுடையவளாக்கிக் கொண்ட பூரிப்பில்.. கேமரா மேன் அலைக்கழிப்பதையும் அருண் ஐஸ்கிரீம் தந்ததைப் போல்.. முகம் கொள்ளா புன்னகையுடன்.. ஏற்று நின்றிருக்கிறான் ப்ரியன்.

 

உடலெங்கும் கற்கள் பதித்த பேர்ல் நிற லெஹங்காவில் தேவதையாய் ஜொலித்த ப்ருந்தாவை திருட்டுப் பார்வைப் பார்த்து கொண்டிருந்தவன்.. சட்டென முகம் மாறிப் போய்.. தூரத்தில் ஒரு  பெண்ணிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்த ஆதவனை, தன்னருகே நின்றிருந்த சிறுவன் ஒருவனை அனுப்பி அழைக்க செய்தான்.

 

சிரித்து கொண்டே வந்த ஆதவன், “எதுக்குடா கூப்பிட்ட? ஆமா.. அந்த பொண்ணு ப்ருந்தாவுக்கு சொந்தமா? நல்லா கம்பெனி குடுக்கறாங்க மச்சி.. செத்த நேரம் பேசலாம் நினைச்சா.. அதுக்குள்ள கூப்பிட்டுட்ட..? வேற ஒண்ணுமில்ல.. என்னடா நம்ம ஃபேமிலி மேன் ஆகிட்டோமே.. இவன் மட்டும் இன்னும் பேச்சிலராவே இருந்து.. பொண்ணுங்கக்கிட்ட கடலை ஃபேக்டரி நடத்தறானேனு உனக்கு ஜெலஸ்டா.. அதுவும் அந்த பொண்ணு உனக்கு மச்சினிச்சி முறை வருது.. எங்க நம்ம மச்சினிச்சி இவன் அழகுல மயங்கிடுவாளோனு ஃபியர்.. கரெக்ட்டா? மோர் ஓவர்…”

 

அதற்கு மேல் பொறுக்க முடியாமல்.. வேகமாக ஆதவனின் வாயை மூடிய ப்ரியன்.. “இன்னொரு வார்த்தை பேசின.. ஃப்ரெண்ட்னு பார்க்காம கொன்னுடுவேன்..” என்றான், எச்சரிக்கும் குரலில்..!

 

“அடக் கொலகார பாவி.. எதுக்குடா என்னைக் கூப்பிட்ட? அத சொல்லு மொத..”

 

“எங்கடா சொல்ல விடற? மொத ப்ருந்தாவுக்கு டச் – அப் பண்ணிட்டு இருக்க உன் ஆள அந்த பக்கம் கூட்டிட்டு போ..”

 

ஆதவன் வெண்மதியைத் திரும்பி பார்த்தான். அவள் ப்ருந்தாவிடம் என்னவோ பேசி சிரித்தவாறே.. முகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை கர்ச்சீஃபால் ஒற்றிக் கொண்டிருந்தாள்.

 

“எதுக்குடா..? இருக்கட்டும்.. ப்ருந்தாவுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்..”

 

“வேணாம் மச்சி.. ப்ருந்தா சூது வாது தெரியாதவடா.. வெண்மதி மாதிரி கிடையாது.. அவ பாட்டுக்கு எதையாவது சொல்லி குடுத்துடப் போறா ஆதவ்.. உன் கைய காலா நினைச்சு கேக்கறேன்.. அவள கீழ இறங்க சொல்லு மச்சி..” என்று ஆதவனின் கைகளை பிடித்துக் கொண்டான்.

 

ஆதவன் கண்களில் சிகப்பு சீரியல் பல்புகள் போட்டதைப் போல்.. தீப்பொறி பார்வைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. யோசனையுடன் இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து கொண்டே மேடையேறினான் விஷ்வா.

 

ப்ரியன்.. பல்லவியிடம், ‘விஷ்வா வேறொரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டான். இது அவனுக்கொரு நல்ல வாய்ப்பு. இனி நம் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் இல்லை’ என்று மட்டும் தான் கூறியிருந்தான். துரோகியாய் மாறிய நண்பனைப் பற்றி வேறு எதுவும் பேசவும் விரும்பவில்லை.

 

பல்லவிக்கு விஷ்வாவின் வீட்டு நிலைமை நன்றாக தெரியும். விஷ்வாவின் அப்பா ஒரு குடிகாரர். அம்மா தான் காய்கறிகள் விற்று அவனைப் படிக்க வைத்தார். ஆதலால்.. பல்லவி ப்ரியனிடம் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. ஆனால், இத்தனை நாளும் தன் மகனின் நண்பனை தன் மகனாகவே நினைத்திருந்தவர்.. மகனின் திருமணத்திற்கு அவன் குடும்பத்தினரை அழைக்காமல் எப்படி இருப்பார்? இந்த விஷயத்தில் ப்ரியனும் எதுவும் செய்வதற்கு இல்லை.

 

இப்போது இதோ.. மேடைக்கு தன் அன்னையுடன் வந்து கொண்டிருக்கிறான். விஷ்வாவின் அம்மா தம்பதிகளை ஆசிர்வதித்து பரிசுப் பொருளை ப்ரியன் கையில் தந்து விட்டு.. விஷ்வாவைக் காட்டி, “இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லக்கூடாதா பிரியா? உன் கூட இருந்தா பொறுப்பா இருப்பான்.. கொஞ்ச நாள்ல இவனுக்கும் ஒரு பொண்ணு பார்த்து முடிச்சு வச்சிட்டா நிம்மதினு நினைச்சேன்.. இப்ப என்னடான்னா தனியா வேலை பார்க்கப் போறேன்னு சொல்றான்.. இதுக்கா நான் ரோட்டோரமா.. வெயில்ல கிடந்து காய் வித்தேன்?” என்று கவலைப்படுவதற்காகவே ஜென்மம் எடுத்த அந்த தாய் வேதனையோடு ப்ரியனிடம் புலம்பினார்.

 

ப்ரியனுக்கு நெஞ்சோரம் ஈரம் கசிந்தாலும்.. விஷ்வாவின் செயலால் கசிந்த இரத்தமே இன்னும் உலராமல் இருக்கும் போது.. தன்னால் என்ன செய்து விட முடியும் என அமைதியாகவே இருந்தான்.

 

தன்னை விட ப்ரியனையே உயர்த்தி பேசும் தாயின் மேல் எப்போதும் போல் இப்போதும் விஷ்வாவிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பளித்தது.

 

“ம்மா.. வந்த இடத்துல என்னத்த பேசிட்டு இருக்கீங்க..? கிஃப்ட்ட குடுத்தாச்சு தான? கீழ இறங்குங்க..” என்று கையைப் பிடித்து கீழே விட்டு விட்டு வந்தவன்.. ஆதவன் கண்களைக் கூர்மையாய் பார்த்துக் கொண்டே, “என்ன மிஸ்டர் ஆதவன்.. எங்க இன்ஜினியர உங்களுக்கு முன்னாடியே தெரியும் போலயே..” என்று கேட்டான்.

 

ப்ரியன், “என்கிட்ட கேளுடா ஃப்ராடு.. ரொம்ப நல்லாவே தெரியும்.. என்னாங்குற இப்ப?” என்று அடிக்குரலில் உறுமினான்.

 

“ஓ! அப்ப ரவிக்கு எதுவும் தெரியாது?” என்று.. தன்னை புத்திசாலி என்றெண்ணி உளறி விட்டான்.

 

‘இவன் இப்படி ரவியோடு சம்மந்தப்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கிறானா?’ என்று இருவரும் சுதாரித்து கொண்டனர்.

 

“ஏன் தெரியாது விஷ்வா சர்..? எங்கள இன்ட்ரடியூஸ் பண்ணி விட்டதே ரவி சர் தான்.. என்னை உங்ககிட்ட அனுப்பினதும் அவர் தான்.. ஃபங்கனுக்கு கூட வந்துருக்காரு.. வாங்க பேசி ரொம்ப நாளாச்சுனு என்கிட்ட சொன்னீங்களே.. வாங்க நான் கூட்டிட்டு போறேன்..” என்றான் ஆதவன்.

 

உள்ளுக்குள் சற்று பயம் தோன்றினாலும்.. “பரவால்ல.. என் ஃப்ரெண்ட்ட பார்த்துக்க எனக்கு தெரியும்..” என்று கெத்தாகவே கூறி.. மேடையை விட்டு கீழே இறங்கினான்..

 

“இனி உன் திசைக்கே வர மாட்டான்னு நினைக்கிறேன்..”

 

ஆமோதிப்பாய் தலையசைத்துப் புன்னகைத்த ப்ரியன்.. ப்ருந்தாவைப் பார்த்தான்.

 

விஷ்வா இருவரிடமும் பேசுவதைப் பார்த்தவள்.. மீண்டும் ஏதேனும் ப்ரச்சனை செய்வானோ என கலக்கத்தோடு பார்த்திருந்தாள். அவளை ப்ரியன் கண்களால் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த இடைவெளியில்.. ஆதவன் வெண்மதியை கைப் பிடித்துத் தனியே தள்ளிக் கொண்டு போனான்.

 

வெண்மதி பேபி பிங்க் நிறத்தில் பாவாடை, தாவணி அணிந்திருந்தாள். தாவணியிலும், ப்ளவுஸிலும் ஆரி வொர்க் செய்திருந்த அந்த உடையில் அப்சரஸ் போல் காண்போரின் கண்களை நிறைத்தாள்.

 

மணமகன் அறைக்கு இழுத்து சென்றவன்.. அவள் நெற்றியோரம் சிலும்பிக் கொண்டிருந்த முடிகளை விரல்களால் ஒதுக்கி கொண்டே, “ஹேய் போங்கு.. டுடே யூ லுக் கார்ஜியஸ்டி..” என்றான்.

 

“அப்ப இத்தன நாளும் கேவலமா இருந்தேனா?”

 

“அத என் வாயால வேற நான் சொல்லணுமா?” என்று கேட்டு.. அவளிடமிருந்து சில பல பரிசுகளை பெற்று கொண்டான்.

 

“மங்க்கி, டாங்க்கி.. ஆன்ட்டிகிட்ட ஏண்டா என்னை இன்ட்ரடியூஸ் பண்ணி விட மாட்டேங்குற?”

 

நெற்றி முட்டி, “ரெண்டு பேய்ங்களயும் தனிதனியா சமாளிக்கவே இங்க அல்லு விடுதாம்.. இதுல ரெண்டு பேயும் ஒண்ணா சேர்ந்தா என் நிலைமை அந்தல சிந்தல ஆகிடாது?” என்றான், அவள் புருவங்களை இதழ்களால் வருடிக் கொண்டே..!

 

இதழ் வருடலில் சிலிர்த்து கொண்டிருந்தவள்.. அவன் பேசியதைக் கேட்டு, “என்னடா சொன்ன.. நான் பேயா..?” கேட்டு கொண்டே.. அவனின் புதிய ரேமண்ட் ஷர்ட்டைப் பிடித்து இழுத்து, தள்ளி விட்டு, வயிற்றில் பன்ச் செய்து என.. கோபம் கொண்டு மூச்சிறைத்து நின்றாள்.

 

“கூல் கூல் டார்லிங்.. உண்மைய தானடி சொல்றேன்..?”

 

“நீ அடங்க மாட்ட.. இரு நானே போய் ஆன்ட்டிகிட்ட பேசிக்கறேன்..” என்று வெளியேறப் போனவளைப் பிடித்து இழுத்து.. “உங்க அண்ணா சொன்ன டைம் முடிய தான் இன்னும் அஞ்சு மாசம் இருக்கே.. அதுவரை நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்ட போலயே..” என்று அலுத்துக் கொண்டான்.

 

“ஏன் நாங்க இன்ட்ரடியூஸ் ஆகறதுல உனக்கு என்ன இஷ்யூ?”

 

“ஒண்ணுமில்லயே.. ஒண்ணுமே இல்ல..” என்று அவள் இடை வளைத்து இறுக்கி.. அதற்கு மேல் அவளைப் பேச விடாமல்.. அவள் சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை செவ்வனே செய்தான்.

 

மூளையின் செல்களை அசமந்தமாக்கி.. உடலின் செல்களை மட்டும் விழிக்கச் செய்து கொண்டிருந்தவனிடம் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டு கொண்டு திமிறியவள்.. “டேய் ஆதூ.. கேடிடா நீ.. பேசிட்டு இருக்கும் போதே என்ன காரியம் பண்ணி வைக்கற..?” என்று அதற்கும் மொத்தினாள்.

 

ஆதவனின் அன்னையிடம் பேசியே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றவளை.. வேறு வழியின்றி.. பார்கவியிடம் அழைத்துச் சென்றான்.

 

பார்கவி, தன்னருகே வந்து நின்ற மகனிடம்.. “என்னை இங்க உட்கார வச்சிட்டு நீ எங்கடா போய் தொலஞ்ச? எனக்கு யாரையுமே தெரியல.. பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல..” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்.

 

“அதனால தான் அந்த ஆரஞ்ச் சாரி கட்டிருக்க ஆன்ட்டி அரண்டு போய் அந்த பக்கம் போய் உட்கார்ந்தாங்களா?”

 

“ஆமா.. சும்மா ரெண்டு வார்த்தை பேசுவோம்னு  இந்த புடவைல நான் நல்லாயிருக்கேனா? இல்ல கல்யாணப் பொண்ணு போட்டிருக்க மாதிரி லெஹங்கா போட்டா நல்லாயிருக்குமானு தான் கேட்டேன்.. மூஞ்சிய திருப்பிக்கிட்டு அந்த பக்கம் போய் உட்கார்ந்துட்டா..” என்று முகத்தை தோளில் இடித்து கொண்டார்.

 

ஆதவன் அருகிலிருந்த வெண்மதி பற்களால் உதட்டை இறுக்கமாகக் கடித்து சிரிப்பை அடக்கினாள்.

 

“உங்கள கல்யாண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனா? இல்ல ஃபேஷன் ஷோக்கு கூட்டிட்டு வந்தேனா? எப்ப பாரு யார்கிட்டயாவது இது நல்லாயிருக்கா? அது நல்லாயிருக்குதானு நொய் நொய்னுட்டே இருக்கணுமா? மனசுல இளமை ஊஞ்சலாடுதுனு நினைப்பு..” என்று கடுப்படித்தான்.

 

“போடா.. பொறாமை பிடிச்சவனே.. வெவ்வவெவ்வவெவ்வ..”

 

“நானு? உங்களப் பார்த்து? பொறாமை?” ஆதவனின் உடல்மொழியில் வெண்மதி அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல்.. அருகிலிருந்த சேரில் (chair) அமர்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

 

இத்தனை நாளும் எப்போதும் தன்னை வெறுப்பேற்றும் ஆதவனையே இன்று ஒருவர் டென்ஷன் செய்கிறார்.. தனக்கு ஒரு மகத்தான கம்பெனி கிடைத்துள்ளது என்பதில் ஏகக் குஷியாகிப் போனாள்.

 

அவன் அறிமுகம் செய்யாமலே.. இவளாகவே பார்கவியிடம், “ஆன்ட்டி.. இந்த சாரி கொஞ்சம் ஓல்டு டிசைனாத் தெரியுது.. ஆனாலும் இதுல நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க ஆன்ட்டி..” என்றவளைப் பார்த்த ஆதவன், ‘அடி பாதகத்தி’ என வாயில் கை வைத்து அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

“நிஜமாவா சொல்ற? ஆமா.. நீ இவ்ளோ அழகா இருக்கியே.. எப்டிமா?” என்று அவள் கன்னம் வருடி அதிசயித்தார்.

 

“அது நான் அப்புறம் சொல்றேன் ஆன்ட்டி.. இப்ப வாங்க நம்ம சாரி கலெக்ஷன்ஸ் பார்ப்போம்.. நியூ டிசைன்ஸ் ஆன்லைன்ல நிறைய கிடைக்குது..” என்று ஆதவனை இடித்துத் தள்ளி விட்டு.. தன் மொபைலுடன் பார்கவியின் அருகே அமர்ந்து விட்டாள்.

 

‘ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா… ஒண்ணு கூடிட்டாய்ங்க!!! இதுக்கு தான இத்தன நாளும் மீட் பண்ண விடாம பார்த்துட்டு இருந்தேன். இனி நம்ம இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கவே தேவையில்ல. அய்யய்யோ.. ஆதவா.. உன் பர்ஸ பனால் ஆக்கப் போகுதுங்கடா. இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா க்ரெடிட் கார்ட் நம்பர் கேக்கும்ங்க.. நைஸா எஸ்ஸாகிடு’ என்று மனதிற்குள் அலறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவினான், ஆதவன்.

 

11.

 

ப்ரியன் – ப்ருந்தாவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில்.. அதே ப்ரியன் வீட்டு மொட்டை மாடி.. இரவு நேரம்.. பௌர்ணமி வானம்.. தேகம் தீண்டும் தென்றலின் குளுமை.. அன்று தனிமையில் உழன்று கொண்டிருந்த ப்ரியன்.. கடவுளிடம் அன்று கேட்காத வரத்தை இன்று கேட்டுக் கொண்டிருந்தான்.

 

கை வளைவில் இருந்த ப்ருந்தாவோடு தனித்திருக்கும் இந்த பொழுது உறைந்து போக வேண்டிக் கொண்டிருந்தான்.

 

“ப்ரியன்..”

 

“ஹ்ம்ம்.. சொல்லு அம்மு..”

 

“இன்னிக்கு ஃபங்ஷன் நல்லா போச்சுல்ல? அத்தை வெண்மதியப் பார்த்ததும் குழந்தையா மாறிட்டாங்க தெரியுமா? அவக்கூடயும், தருண்கூடயும் சேர்ந்து எதிர்வீட்டு அண்ணாவ ஒரு வழி பண்ணிட்டாங்க”

 

“எதுக்காம்..?”

 

“தருணுக்கு கிஃப்ட்ங்கற பேர்ல ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்’ கடைல உள்ள குட்டி கார் வாங்கி குடுத்திருக்காராம்.. அத நானும் பார்த்தேன்.. இதுக்கு அந்த மனுஷன் எதுவும் வாங்காமலே வந்திருக்கலாம்பா.. அதப் பார்த்ததும் தருண் டென்ஷன் ஆகிட்டான்.. அதுக்கு மூணு பேரும் சேர்ந்து என்ன பண்ணாங்க தெரியுமா?”

 

“என்ன பண்ணாங்க? நீங்களே வச்சிக்கோங்கனு திருப்பி குடுத்துட்டாங்களா?”

 

“இல்லங்க.. கேக் உள்ள உப்புக்கல்ல வச்சு, ஜூஸ்ல புளிய கரைச்சு ஊத்தி குடுத்துட்டாங்க.. ஹாஹாஹா..”

 

“வெண்மதிக்கு வால் நீளம்.. சின்னப்பையனையும் சேர்த்து கெடுக்குறா..”

 

“அப்டிலாம் இல்ல.. தருணுக்கு நல்ல விஷயங்கள் எவ்ளோ கத்துக் குடுக்கறா தெரியுமா? எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்குது”

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு.. இதே இடத்தில் தருணிற்கு நல்லுரைக் கூறி சமாதானப்படுத்தி.. தன்னையும் தெளிவுறச் செய்தவள் அல்லவா?

 

“ஹ்ம்ம்.. அது என்னவோ சரி தான்..” என்றான், ஒத்துக் கொள்ளும் பாவனையில்..!

 

இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே.. ப்ருந்தா, “ஆவ்வ்” என்ற சிறு அலறலுடன் துள்ளி.. ப்ரியனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

எதைப் பார்த்து அலறுகிறாள் எனத் திரும்பி பார்த்தவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது. பைப் ஏறி குதித்து, மூச்சு வாங்க இருக்கைகளையும் இடைப் பற்றி நின்று கொண்டிருந்தவன்… சாட்ஷாத் நம் மாயக்கண்ணனே தான்.. தவறு! தவறு!! வெண்மதியின் மாயக்கண்ணன்!!!

 

ஆம்! ஆதவன் எதிர்பார்த்தது போலவே.. பார்கவிக்கு வெண்மதியை மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக திருமணம் செய்து கொள் என அடம்பிடிக்கவே ஆரம்பித்துவிட்டார். அதோடு நிறுத்தாமல் வெண்மதி வீட்டிலும் பேசி.. சென்ற வாரத்தில் நிச்சயதார்த்தத்தையும் முடித்துவிட்டார். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் என முடிவாகியிருந்தது.

 

இந்நிலையில் இன்று தருணின் பிறந்தநாளிற்கு ஆதவனையும் அழைத்திருந்தனர். ஃபங்ஷனில் கலந்து கொண்டவன்.. வீட்டின் பின்புறம் வந்து.. பைப் ஏறி இதோ மொட்டை மாடியில் திருடனைப் போல் குதித்து ப்ருந்தாவை அலற விட்டுக் கொண்டிருக்கிறான்.

 

“ஏண்டா.. அதான் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க தான? இன்னும் என்னத்துக்குடா இப்டி வந்து குதிச்சுக்கிட்டு இருக்க? பேச நினைக்கறதக் கீழயே அவக்கிட்ட பேச வேண்டியது தான..?”

 

“என்ன இருந்தாலும் பழச மறக்கக்கூடாதுல்ல.. அதோட கீழ ஒரே க்ரௌடு மச்சி.. ஓவர் டிஸ்டபர்ன்ஸ்.. எப்டியும் அந்த பொடிப்பயலோட ஆட்டம் போட இங்க தான் வருவா.. மோர் ஓவர்.. சாகசம் பண்ணாம சும்மா நேரடியா பேசறது இந்த வீராதி வீரக் காதலன் ஆதவனுக்கு இழுக்கு..”

 

“ஹ.. உன் பேய்க்கு பேயோட்டணும்னு வந்துருக்க.. அதுக்கு இம்புட்டு பில்டப்பா?”

 

திருடனோவென பயந்து கணவனைக் கட்டி கொண்ட ப்ருந்தா, திருடனல்ல தன் புதுத் தோழி வெண்மதியைத் திருடவிருக்கும் ஆதவனெனத் தெரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நண்பர்கள் பேசுவதை சின்னச் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

 

“ஹிஹி.. அப்டியும் சொல்லலாம்..” அசடு வழிந்து கொண்டிந்தவனின் அலைபேசி அழைத்தது.

 

“பேசுகிறேன்… பேசுகிறேன்…

உன் இதயம் பேசுகிறேன்…”

 

ரிங் டோனை வைத்து அழைப்பது யாரென தெரிந்து கொண்டவன்.. சட்டென சைலண்ட் மோடில் போட்டு விட்டு ப்ரியனைப் பார்த்தான். அவன் திகைத்துப் போய் ஆதவனிடம் ‘ஆமாவா’ எனத் தலையசைத்துக்  கேட்டான்.

 

ஆதவன், ‘ஆம்’ என பதில் தலையசைப்பைத் தந்ததும்.. அவசரமாக தன் ஷார்ட்ஸின் பாக்கெட்டைத் துழாவி அலைபேசியை எடுத்து வேகமாக அணைத்து வைத்தான்.

 

இருவரையும் புரியாமல் பார்த்து நின்ற ப்ருந்தாவின் அலைபேசி சொன்னது.. வெண்மதி அழைக்கிறாள் என..!

 

எடுத்துப் பார்த்து விட்டு இருவரிடமும்.. “வெண்மதி” என்றாள்.

 

“வேணாம் ப்ருந்தா.. அட்டெண்ட் பண்ணாத..”

 

“ஆமா அம்மு.. கட் பண்ணுடி..”

 

இருவரையும் ஒற்றைத் தலையசைப்பில் அலட்சியம் செய்து.. அழைப்பை ஏற்று பேசி விட்டு ஆதவனிடம்.. “வெண்மதி உங்கள கீழ கூப்பிடறா அண்ணா.. நீங்க ஏன் கால் அட்டெண்ட் பண்ணல?” என்று கேட்டாள்.

 

“அது.. அது.. ப்ரியன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டிருக்குது.. நான் அப்புறம் போறேன் ப்ருந்தா..”

 

“ரெண்டு பேரும் டெய்லியும் பேச தான செய்றீங்க? போய் என்னனு கேட்டுட்டு வந்துடுங்க”

 

எப்டி தவிர்ப்பது எனப் புரியாமல்.. ப்ரியனின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீயும் வாடா..” என்றான்.

 

“அவங்க எதுக்கு.. என்னவோ ஃபர்ஸ்ட் மீட்டிங் மாதிரி இப்டி ஜெர்க் ஆகறீங்க?”

 

பதட்டமாக இன்னும் ப்ரியனை ஒட்டி நின்று கொண்டவன், “பப.. பர்ஸ்ட் மீட்டிங் இல்ல ப்ருந்தா.. ஃபர்ஸ்ட் நைட்..” என்றான்.

 

“வாட்!!! யாருக்கு?”

 

“எனக்கும் இவனுக்கும் தான்.” என்று உளறிக் கொட்டினான்.

 

“ஹா…ங்ங்ங்!!!” என்று முகத்தை அஷ்டகோணலாக்கினாள்.

 

“டேய்ய்ய்!!!” ப்ரியன் ஆதவனின் காலை நச்சென மிதித்தான்.

 

“ஆஆ!!!” என்று காலைப் பிடித்தவன் பின்பு தான்.. தான் என்ன உளறினோம் என்று புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டான்.

 

இருவரையும் முறைத்து விட்டு, “நீங்க பேசிட்டு இருங்க.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்..” என்றாள்.

 

“நோ அம்மு.. போகாத..” – ப்ரியன்.

 

“வேணாம் வேணாம்..” – ஆதவன்.

 

இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து அலறினர்.

 

“எதுக்கு ரெண்டு பேரும் இப்டி பண்றீங்க? பாவம் வெண்மதி ரொம்பப் பதட்டமா வேற பேசற மாதிரி இருக்குது.”

 

“சொன்னா கேளு அம்மு.. நீ போக வேணாம்..”

 

“ஆமா ப்ருந்தா.. அவ ஏதாவது வாய்க்கா தகராறுக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிடுவா.. போகாத..”

 

“ச்சு.. போங்க ரெண்டு பேரும்.. ப்ராப்ளம் வரும் போது ஹெல்ப் பண்ணலனா அது என்ன மண்ணாங்கட்டி ஃப்ரெண்ட்ஷிப்பாம்.? நான் போறேன்” என்று விறுவிறுவெனக் கீழே இறங்கி சென்றுவிட்டாள்.

 

இருவரும் திரும்பி, ஒருவர் முகத்தை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டே.. கோரஸாக, “ஒருத்தருக்கு ரெண்டு பேர் இவ்ளோ தூரம் சொல்றோம்.. கேக்காம போறா? என்ன கொடுமை சார் இது?!” என்று கூறி, நெற்றியில் நோகாமல் அறைந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

odiumafull

ஓடி போகலாம் 1

 

மலேஷியா கோலாலம்பூர் நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஷியாங் டுயாவிற்கும், நிஷா தேவிக்கும் திருமணம் அந்த ஆலயத்தை நடத்தி வரும் தந்தை பெர்னார்ட் நடத்தி வைத்தார்.

மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பூக்களை தூவி அவர்களை வாழ்த்தினர். மீடியா மக்கள் ஒரு புறம் அவர்களின் திருமணத்தை பதிவு செய்து, அதை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர் மக்கள் அனைவரும் காண.

ஆம்! மக்கள் அனைவரும் காணும் அளவுக்கு அவர்களின் குடும்பம் பிரபலம் அங்கே. ஷியாங் டுயாவின் தந்தை மிகப் பெரிய தொழிலதிபர்.

இவர்களின் தொழில் கேசினோ, பார் மற்றும் சினிமா படத்திற்கு செட் அமைத்துக் கொடுப்பது. இவர்களின் கேசினோ இல்லாத இடமே இல்லை, உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளிலும் அவர்களின் கேசினோ தான் இன்று டாப்.

ஷியாங் இதில் சினிமா செட் அமைத்துக் கொடுக்கும் வேலையிலும், சினிமாவில் கதாநாயகனாகவும் புகழ் பெற்றவன். பெண்கள் கூட்டம் எப்பொழுதும் அவனை சுற்றி இருக்கும், அவன் அதை சிரித்தபடியே கடந்து விடுவான்.

நிஷாவின் குடும்பம் மிக பெரிய ஜமீன்தார் குடும்பம் மலேசியாவில் தற்பொழுது, தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்து தப்பி இங்கே வந்தவர்கள் தான் இவர்கள்.

இங்கேயும், ஆங்கிலேயர்களின் ஆட்சி அப்பொழுது இருந்தாலும் சிறிது காலத்தில் அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடி, அதன் பின் மலேஷிய தமிழர்கள் என்று அவர்களுக்கென்று பெயர் வரவும், அதன் பின் தான் நிம்மதியாக சுவாசித்தனர்.

அங்கே பதினைந்து சதவீதம் மலேஷிய தமிழர்கள் தான் இப்பொழுது, நிஷாவின் குடும்பம் ரியல் எஸ்டேட் பல செய்து அங்கே வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இரு குடும்பத்துக்கும், இந்த இரண்டு வருடங்களாக தான் அறிமுகம் தொழில்முறை மூலம். அது இப்பொழுது பிள்ளைகளின் திருமணம் வரை கொண்டு வந்து இருக்கிறது.

அன்று