Monisha Selvaraj

286 POSTS 8 COMMENTS

ESK-15

என் சுவாசம் 15

கதிரின் மனது குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.  வரும் தை மாதம் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தையும், அவன் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவையும், ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

ராகவனும் அழகரும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் அமர்ந்து பேசி முடிவு எடுத்தனர். ஒரு நல்ல நாள் பார்த்து சிவரஞ்சனியின் சித்தியையும் நேரில் பார்த்துப் பேசியதும், திருமண தேதியை உறுதி செய்து விடலாம் என்று வாசுகியும்   ராகவனும் முடிவு செய்தனர்.

கதிருக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும்.  “இத்தனை வருடங்கள் அவள் அங்கு வளர்ந்தவள், அவர்களுக்குச் சொல்லாமல் எதுவும் செய்ய கூடாது” என்று முடிவாக வாசுகி கூறியதும் மறுத்துப் பேசவில்லை கதிர்.

அவளது படிப்பு முடியும் வரை வார நாட்களில் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளட்டும், சனி ஞாயிறு இரண்டு நாட்களுக்கு கதிர் போய் அழைத்துக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் திங்கள் கொண்டு ஹாஸ்டலில் விடுவது என்று முடிவு செய்யப் பட்டது.

இதைக் கேட்டதும் சற்று சுணங்கியவன்,  அவள் தினமும் கல்லூரிக்குச் சென்று வர சாத்தியப்படாது என்பதால் ஒத்துக் கொண்டான்.

வாசுகி  வேறு, “அப்ப அவ படிப்பை முடிச்சதும், ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சிக்கலாம்.”  என்று ஐடியா கொடுக்க,  தனது உடன் பிறவா சகோதரியைப் பாசமாக முறைத்தவன் வேறு வழியின்றி, திருமணம் முடிந்தும் அவள் ஹாஸ்டலில் தங்க ஒப்புக் கொண்டான்.

எளிமையாக   கோவிலில் வைத்துத் திருமணத்தை முடித்துவிட்டு,  ஏதேனும் ஹோட்டலில் ரிசப்ஷன் வைத்துக் கெள்ளலாம், என்ற கதிரின் வாதத்தையும் ஏற்கவில்லை   ராகவன்.

“அவ்வளவு  பணம் சேர்த்து வச்சிருக்க, வெளிய எடுடா…  செலவே இல்லாம கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தியா?  ஒழுங்கா நல்ல மண்டபம் பிடிச்சுதான் கல்யாணம் பண்ற. சிவா எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி. அவளுக்கு என்னென்ன செய்யனுமோ அதெல்லாம் நான் செய்வேன்.” என்று முடிவாகக் கூறிவிட மறுக்க முடியவில்லை அவனால்.

ராகவன் வந்ததும் அவரையும் வாசுகியையும் நிற்க வைத்து, கதிரும் சிவாவும் ஜோடியாக ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.  அழகரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

அங்கிள் என்று அழைத்த சிவரஞ்சனியை  அழகர்  அப்பா என்று அழைக்கக் கூற,  அது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது.

மதியம் அவன் கட்டிக் கொண்டிருக்கும்  வீட்டைப் பார்க்க வாசுகியும் சிவாவும் வந்த போதும், வாசுகியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சிவாவைச் சீண்டிக் கொண்டே இருந்தான் கதிர். அவளின் முகச் சிவப்பும் கண்களில் லேசான பயத்துடன் கூடிய மிரட்சியும், காணக் காணத் தெவிட்டவில்லை அவனுக்கு.

தன்னை நினைத்தே வியப்புதான் அவனுக்கு.  ‘எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்’ என்று தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனது சேட்டைகள் கூடியிருந்தது.

அதிலும் வீட்டின் படுக்கையறையை அவளுக்குக் காட்டும் போது உல்லாசத்தின் உச்சத்தில் இருந்தான்.  அவளுக்குத்தான் கதிரின் இந்தப் புதிய பரிணாமத்தைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

காலையில் அதிரடியாக முத்தமிட்டுச் சென்றவனின் அடாவடியில் விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். இயல்புக்கு வரவே வெகு நேரம் ஆனது. பெண்களுக்கே உரிய இயல்பான பயம் உள்ளுக்குள் இருந்தாலும், அந்தக் கள்ளனின் அடாவடியை ரகசியமாக ரசித்தது மனது.

இத்தனை நாட்கள் அந்நியனாக இருந்தவனின் ரெமோ அவதாரம்,  மிகவும் சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது அவளுக்கு. திருமணமும் ஒரு மாதத்தில் என்னும் நிலையில் கதிரின் இத்தகைய பிரியம், அவளது மனதின் ஓரத்தில் இருந்த சிறு சஞ்சலங்களைக் கூட விரட்டியது.

வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஒவ்வொன்றிலும், அவளது அபிப்ராயத்தைக் கேட்டு அவளை அந்த வீட்டின் அரசியாக உணர வைத்தான்.  அவன் அளவுக்கு சகஜமாகப் பழக முடியாவிட்டாலும்,  தயக்கத்தை விட்டு அவனுடன் பேச வைத்தான்.

மறுநாள் காலை சிவரஞ்சனியை ஹாஸ்டலில் கொண்டு விட ரெடியாகி வந்தவனை, வரவேற்றது அழகரும் சுந்தரும்தான்.

“காலையிலயே தலைவர் ஏதோ வேலையிருக்குன்னு கூப்பிட்டாருன்னு கிளம்பி வந்தீங்க, இன்னும் இங்க என்ன  பண்றீங்க?”

“ஆமாம் மாப்ள…  சிவரஞ்சனியை  ஹாஸ்டல்ல கொண்டு விடதான் கூப்பிட்டாரு.”

“நான் கொண்டு போய்  விட்டுக்கறேன்.  நீங்க வேற ஏதாவது கட்சி வேலையிருந்தாப் பாருங்க.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, கிளம்பித் தயாராக சிவரஞ்சனியும், அவளை வழியனுப்ப வாசுகியும் வந்தனர்.

“என்ன இங்க பிரச்சினை?”

“ஒன்னும்  இல்லக்கா…  சிவாவ நான் கொண்டு போய் விட்டுக்கறேன், நீங்க தலைவர் கூட இருங்கன்னு மாமாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.”

வாசுகி நமுட்டுச் சிரிப்புடன், “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.  அழகரும் சுந்தரும் கொண்டு போய் சிவாவ விட்டுட்டு வருவாங்க.  உனக்கு விருப்பம்னா அவங்க கூட போ.  இல்லைன்னா  இங்கயே இருந்துக்கோ.  ஆனா அவங்க கண்டிப்பா வருவாங்க.”

‘இன்னும் ஒரு மாசம்தான, அப்புறம்  என்ன பண்றீங்கன்னு நானும் பார்க்கிறேன்’ என்று தனக்குள் முனுமுனுத்தவன், சிவரஞ்சனியின் பேக்கை வாங்கி வண்டியில் வைத்து அவளை  முன்னிருக்கையில் ஏறி அமரச் சொன்னான்.  அழகரையும் சுந்தரையும் கடுப்புடன் பின்னே ஏறச் சொன்னான்.

வாசுகியிடம் விடைபெற்றுக் கொண்டு வண்டி கிளம்பியதும், வழக்கம் போல கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயரையும் பெருமாளையும் வழிபட்டவர்கள்,   மீண்டும் பயணத்தைத் துவங்கினர்.

சற்று தூரத்திலேயே காரை ஓரம் கட்டி நிறுத்தியவன்  அழகர் மற்றும் சுந்தரிடம்,

“மாமா…  சுந்தர் ரெண்டு பேரும் கொஞ்சம் இறங்கி டயர்ல காத்து சரியா இருக்கான்னு பாருங்க.”

“ஏன் மாப்ள?  சரியா செக் பண்ணலையா நீ?”  என்றவாறு அழகர் இறங்க முற்பட.

“அழகர் அண்ணா இறங்காதீங்க…  நாம கீழ இறங்குனதும் நம்மள விட்டுட்டு கதிர் அண்ணன் வண்டிய கிளப்பிட்டு போயிடுவாரு. அன்னைக்கு என்னையும் அப்படிதான் இறக்கி விட்டாரு.”

“சுந்தரு…  ஓவர் அறிவாகிடுச்சி செல்லம் உனக்கு.”

அவனின் பாவனையில் அனைவரும் சிரித்து விட…

“தம்பி…  பாண்டிச்சேரியில பண்ணை நிலம் பார்த்து வச்சியே… சிவாவ கொண்டு போய் விட்டுட்டு, அப்படியே அத இன்னைக்குப் பேசி முடிச்சிடலாம்யா.  தை மாசம் பத்திரம் பதிஞ்சிடலாம். அதுக்குத்தான் நாங்க கூட வர்றோம்.”

“அதுவும் இல்லாம கல்யாணம் முடியற வரை உன்னைத் தனியா விடக் கூடாதாம்.  அந்தக் குமாரு மறுபடியும் ஏதாவது பண்ணுவானோன்னு வாசுகி அக்காவுக்கு பயம்  ண்ணா.”

“அவனாலலாம் எதுவும் பண்ண முடியாது  சுந்தரு. அக்கா வீணா பயப்படுது.”  பேசிக் கொண்டே காரைக் கிளப்பியவன்,

கண்களில் பயத்தைத் தேக்கியவாறு அவனைப் பார்த்து, “இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க”   என்ற சிவரஞ்சனியை புன்னகையுடன் ஏறிட்டவன், ஆறுதலாக “சரிம்மா” என்க.

“இதுக்குதான் மாப்ள உனக்கு கால்கட்டு போடனும்னு வாசுகி சொன்னது.  நாங்க சொல்றத இப்படி சிரிச்சிகிட்டே கேட்பியா நீ.”  அழகர் அவனை ஏகத்துக்கும் வாற  பயணம் இனிமையாக இருந்தது.

கதிருக்கு வெகு நாட்களாகவே விவசாய பண்ணைநிலம் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  விவசாயம் செய்வதைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும்,  மா, பலா, கொய்யா, தென்னை போன்ற மரங்கள் சூழ்ந்த பண்ணை நிலமும் மத்தியில் ஒரு சிறிய வீடும் இருப்பது போல வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

குத்தகைக்கு விட்டோ அல்லது ஆள் வைத்தோ பார்த்துக் கொள்ளலாம்,    ஓய்வு கிடைக்கும் போது சென்று தங்கியிருக்கலாம் என்று எண்ணியிருந்தான்

அதற்காக பணமும் சேர்த்திருந்தவன் மிகுதிக்கு வங்கிக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான். பாண்டிச்சேரி இடம்   விலை கொஞ்சம் அவன் எதிர்பார்த்தது போல இருந்தாலும், அவனது  கற்பனையில்  இருந்த பண்ணை  நிலம் போல  இல்லை.

“அந்த இடம் என்னவோ மனசுக்கு அவ்வளவு திருப்தியா இல்ல மாமா.  ஆனா, விலை கொஞ்சம்  படியுது. பார்க்கலாம், இன்னைக்குப் போய் பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்.”

மேலும் பல  விஷயங்களைப்   பேசிக் கொண்டு வந்தவன்,  முன்தினம் ஸ்ரீதரைச் சந்தித்ததையும் கூறினான்.  ஸ்ரீதர் கூறிய விஷயங்களையும் மேலோட்டமாகக் கூறினான். மாணவர்களுக்கிடையே பரவியுள்ள போதைப் பழக்கத்தை பற்றிக் கேட்டதும், மனம் கனத்துப் போனது அனைவருக்கும்.

“நாடு போற பாதைய என்ன சொல்ல மாப்ள.   எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன, எனக்குக் காசுதான்  முக்கியம்னு நினைக்கிறவனுங்க இருக்கற வரை, ஒன்னும் சொல்றதுக்கில்லை.”

அலுத்துக் கொண்ட அழகரிடம்,  “நாம அப்படி இருக்கக் கூடாது மாமா.  ஏதாவது செய்யனும்.”

“தலைவர்கிட்ட சொல்லி இதைப் பற்றி  மேலிடத்துல பேசச் சொல்லனும்.  மாணவர்கள் இடையில விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கச் சொல்லனும்.”

பேசிக் கொண்டே கல்லூரிக்குள் நுழைந்திருந்தனர்.  சுந்தரும் அழகரும் காரில் இருந்து கொள்ள,   அவளை அழைத்துச் சென்று ஹாஸ்டல் அறையில் வசதிகள் போதுமான அளவு உள்ளதா என்று பார்த்தான்..

அவளுடைய உடைமைகளை அறையில் வைத்து விட்டு வெளியே அழைத்து வந்தவன், கல்லூரிக்கு அருகில் இருந்த உணவகத்தில் காலை உணவை வாங்கித் தந்தான். கல்லூரி ஆரம்பிக்கச் சற்று நேரம் இருந்ததால்,   கல்லூரி அருகே உள்ள கடற்கரைக்கு, அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணி அழைத்துச் சென்றான்.

இருவருக்குமே இன்னும் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பார்த்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம்  அவர்களை மௌனமாக்கியிருந்தது.

அமைதியாக கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருந்தவளின் வலது கரத்தைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு மௌனத்தைக் கலைத்தவன்,

“நல்லா படி…  இன்னும் ஐஞ்சு நாள்தான்…  வெள்ளிக்கிழமை சாயந்திரம் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்துடுவேன்.  சரியா.”

ஏனோ அவன் பேசப்பேச அவள் விழிகள் நீரால் நிறைந்தன. சரி என்பது போலத் தலையசைத்தவளின் கரத்தை அழுத்தியவன்,

“ஹேய்…  லூசு…  இரண்டு மணி நேரப்   பயணம்தான். நினைச்சா நடுவுலகூட வந்து பார்த்துட்டுப் போவேன்.  இதுக்குப் போய் அழலாமா?”   என்றபடி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு மொபைல் ஃபோனை எடுத்தவன் அவளிடம் கொடுத்தான்.

“தினமும் சாயந்திரம் ஃபோன் பண்றேன்.  என் நம்பர் அதுல சேவ் பண்ணியிருக்கேன்.  உனக்குப் பேசனும்னா எப்ப வேணும்னாலும் ஃபோன் போடு. வீடியோ கால் கூடப் பேசிக்கலாம்.  ஐஞ்சு நாள் ஐஞ்சு நிமிஷம் மாதிரி ஓடிடும். சரியா.”

சரி என்றபடி வாங்கிக் கொண்டாள்.  அவளது கையில் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தவனை கேள்வியாக ஏறிட்டவள்,

“பணம்லாம் வேணாம்.”

“இல்ல…  வச்சுக்கோ,  ஏதாவது செலவிருந்தாத் தேவைப்படும். உனக்குத் தேவையான புக்ஸ் வாங்கிக்கோ.  வேற ஏதாவது வேணும்னா, ஃபோன் போடும் போது சொல்லு.  வரும் போது வாங்கிட்டு வரேன்.”

தனக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதில், அவனுக்குத் தன் மீது   இருக்கும் அளவு கடந்த நேசம்,   தெள்ளத்தெளிவாக தெரிந்தது அவளுக்கு.   இத்தகைய நேசத்தைப் பெற என்ன தவம் செய்திருந்தேனோ என்று எண்ணிக் கொண்டாள்.

ஆதரவுக்குக் கூட ஆள் இல்லாமல் தவித்த நிலை மாறி,  இன்று உனக்குச் சகலமும் நானாக இருக்கிறேன் என்று ஒவ்வொரு நொடியும் உணர்த்துபவனை, கண்களில் காதலைத் தேக்கி ஏறிட்டவள்,

“நீங்களும் ஜாக்கிரதையா இருங்க.  வாசுகி அண்ணி உங்க நல்லதுக்குத்தானே சொல்றாங்க.”

அவளைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தவன், “கண்டிப்பா…  நான் எல்லாம் பார்த்துக்கறேன்.  நீ எந்த சிந்தனையும் இல்லாம நிம்மதியா படி.”

அவளை அழைத்து வந்து கல்லூரியில் விட்டதும்,  அனைவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, வண்டியில் ஏறிப் பாண்டிச்சேரியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

 

 

பாண்டிச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் ஒரு கிராமத்தில் இருந்தது அந்த பண்ணை நிலம்.  ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்தது.  ஆனால் கடலோரத்தில் அமைந்திருந்தது.  நிலத்தடி நீர் உவர்நீராக இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் இருந்தது.

அதனாலேயே கதிருக்கு அவ்வளவு பிடித்தம் இல்லாததாக இருந்தது.  எந்தப் பிரச்சினையும் இல்லாத இடமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்தான். ஆனால்   விலை படிவதால் சென்று பார்க்கலாம் என்று நினைத்தபடி சென்றவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்களுக்கு முன்பே சகாயம் அந்த இடத்தை, வேறொரு நபருக்கு விலையைக் கூடுதலாக வைத்துப் பேசி முடித்து, அட்வான்ஸ் கொடுக்க வைத்திருந்தான்.

நிலத்தின் உரிமையாளரும் கூடுதல் விலை கிடைப்பதால், இடத்தைப் பதிவு செய்து கொடுக்க முடிவு செய்திருந்தார்.  சகாயத்துக்கு கூடுதலாக கமிஷன் கிடைப்பதாலும், கதிருக்கு மேலும் மேலும் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், மெனக்கெட்டு இந்த டீலிங்கைப் பேசி முடித்திருந்தான்.

கதிரின் கவனத்திற்கு வராமல் இந்த விஷயம் நடைபெற்று இருந்தது. இவர்கள் சென்ற நேரம் சரியாக சகாயமும் அங்கே இருந்தான்.

கதிர் உறுதியாக எதுவும்  சொல்லி   இருக்காததாலும்,   அட்வான்ஸ் என்று எதுவும் கொடுக்கவில்லை என்பதாலும், நிலத்தின் உரிமையாளரை எதுவும் சொல்ல முடியவில்லை அவனால்.  அவன் கோபம் முழுவதும்  சகாயத்தின் மீதுதான் இருந்தது.

இருப்பினும் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் என்று, அழகரும் சுந்தரும் கதிரை சமாதானப் படுத்தி திரும்ப அழைத்துச் செல்ல முற்படும் போது, கதிரை ஏளனமாகச் சீண்டியது சகாயத்தின் குரல்.

“இது ஆரம்பம்தான் கதிரு…  ஊருக்குள்ள இனி நீ தொழிலே செய்ய முடியாமச் செய்யறதுதான் என் வேலையே.”

“சகாயம் தேவையில்லாம பிரச்சினை பண்ணாத சொல்லிட்டேன்.”  அழகர் கோபத்தோடு எச்சரிக்க…

“யோவ்…   சொல்லி வை உன் மருமகப்புள்ளைகிட்ட…  ஏதோ அன்னைக்கு ஊர விட்டு ஓடினதால உயிர் பிழைச்சான் .  இல்லைன்னா இன்னேரம் இவனைக் கொன்னு புதைச்சிருப்பாரு எங்கத் தலைவரு. இனிமேலும் எங்க விஷயத்துல தலையிடாம  ஒதுங்கி இருக்கச் சொல்லு.  முடிஞ்சா ஊர காலி பண்ணிட்டு ஓடச் சொல்லு. ஊர விட்டு  ஓடறது ஒன்னும் அவன் குடும்பத்துக்குப் புதுசு இல்லையே.”

சகாயம் பேச ஆரம்பிக்கவுமே, வெறி வந்தவன் போலத் திமிறிய கதிரை, அடக்க முடியவில்லை  அழகராலும் சுந்தராலும்.  இருவரையும் விலக்கித் தள்ளிவிட்டு சகாயத்தின் மேல் பாய்ந்தவன், சரமாறியாக வெளுக்க ஆரம்பித்து இருந்தான்.

“யாரு? யாரடா கொன்னு புதைக்கறது? அன்னைக்கு நான் ஊருக்குள்ள இருந்திருந்தா,   உங்க அத்தனை பேரையும் கொன்னுருப்பேன்னுதான் என்னைய அடக்கி வச்சிருந்தாங்க…

ஒரே தொழில் செய்யறவனாச்சேன்னு நானும் பொறுத்துப் போனா… ரொம்பத் துள்ளுற நீ…”

“யார ஊரை காலி பண்ணிட்டுப் போகச் சொல்லுற?  உங்க அத்தனை பேரையும் பாளையங்கோட்டைக்கோ இல்ல வேலூருக்கோ அனுப்பல நான் கதிர் இல்லடா…”

என்றபடி சகாயத்தைப் புரட்டி எடுத்ததில் அவனது மூக்கு வாயெல்லாம் கிழிந்து ரத்தம் கொட்டியது. முரட்டுத் தனமாக அடித்தவனைத் தடுக்க முடியாமல், சகாயம் மண்டியிட்டு விட.    கதிரை அடக்கி இழுத்துச் சென்றனர் அழகரும் சுந்தரும்.

சுந்தர் வண்டியை ஓட்ட,  கதிர் கோபத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தான்.  பின்னால் அமர்ந்திருந்த அழகர்,

“அவன்தான் பைத்தியக்காரன் மாதிரி பேசறான்னா,  உனக்கு ஏன் கதிரு இவ்வளவு கோபம் வருது? படக்கூடாத இடத்துல பட்டு ஏதாவது ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிப் போச்சுன்னா என்ன செய்யறது?   யாரையும் அடிக்கக் கை நீட்டாதன்னு சொன்னா கேட்கறதில்ல நீ.”

என்று வெகுவாகக் கடிந்து கொள்ள…  சுந்தரும், “அமைதியா இருண்ணா…  இந்த இடம் போனாப் போயிட்டுப் போது.  நாம வேறப் பார்த்துக்கலாம்.”

“ம்ப்ச்…  இடம் பிரச்சனையே இல்ல சுந்தர்.  அவனுங்கத் திமிர அடக்கனும். பார்த்துடறேன் நானா அவனுங்களான்னு.  எல்லாவனையும் ஓட ஓட விரட்டுறேன்.”

மிகுந்த கோபத்தோடு கொந்தளித்தவனைப் பேசிப் பேசி சற்று அமைதியாக்கினர் இருவரும். ஆனால் கதிரின்  மனமோ அடங்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.  சகாயம் தன்னுடைய குடும்பத்தைப் பற்றித்   தேவையில்லாத வார்த்தையை விட்டது, அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

மறக்க நினைத்த பழைய நினைவுகள் அனைத்தும், நினைவில் வந்து பேயாட்டம் போட்டன.   தலையும் வெடித்து விடுவது போல வலிக்க ஆரம்பித்தது.  கண்களை இறுக மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

அழகருக்கும்  அவனது நிலை புரிந்தது.  மேலும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். ஊருக்குள் வந்ததும்   ராகவனும் அவனிடம் பேசி அவனைச் சற்று சமாதானப் படுத்தினார்.

“பொறுமையா இரு கதிர்.  ஓவரா ஆடுறவனுங்க கண்டிப்பா ஒருநாள் அடங்குவானுங்க.   நானும் இது சம்பந்தமா பேசிகிட்டேதான் இருக்கேன்.  ஸ்ரீதரும் ஊருக்குள்ள வந்தாச்சு. முன்ன மாதிரி அவனுங்களால  சுதந்திரமா இருக்க முடியாது.   இனி சட்ட விரோதமா  என்ன செய்தாலும் சிக்குவானுங்க.”

வாசுகியோ அவன் அடிதடியில் இறங்கியதற்குக் கோபப்பட்டாலும்,  அவனை இயல்புக்குக் கொண்டு வர  வேண்டி,

“டேய்…  எந்த மடையனாவது பொண்டாட்டி கூட டூயட் பாடறதுக்காக வாங்குற பண்ணை வீட்ட, கொதிக்கக் கொதிக்க இருக்கற பாண்டிச்சேரியில வாங்குவானாடா?  நல்லா சிலுசிலுன்னு இருக்கற பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பக்கம் வாங்குடா. பக்கத்துலயே ஊட்டி இருக்கு அங்கயும் போயிக்கலாம்.”  என்று கண்களைச் சிமிட்டிக் கூற,  சிரித்தவனோ…

“செம ஐடியாக்கா…  அந்தப் பக்கமே நிலம் பார்க்குறேன்.”

“ஆமாம் மாப்ள,   நாம எல்லாரும் போய் தங்கறதுக்கு நல்லாயிருக்கும்.”

“ஏன் மாமா?  கல்யாணம் முடிஞ்சாலும் என் பொண்டாட்டிய என் கூடத் தனியா விட மாட்டீங்களா?”  என அழுவது போல முகத்தை வைத்துக் கேட்டவனைப் பார்த்து அனைவரும் சிரிக்கச் சூழ்நிலை சற்று மாறியது.

ஸ்ரீதர் டிஎஸ்பியாக பதவியேற்றதும், கடலூர் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தான்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினான்.

காவல்துறையினரின் கண்களை மீறி, எந்த விதமான சட்ட விரோதப் பொருட்களும் கடத்த முடியாதபடிக் கட்டுக் காவலை அதிகப் படுத்தினான்.

பள்ளிகளுக்கு அருகே இருந்த கடைகள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. போதைப் பொருள் விற்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டதில், நிலைமை ஒரளவு கட்டுப் பாட்டுக்குள் வந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், பள்ளி மாணவர்கள் இடையே போதைப் பழக்கத்தின் தீமையை எடுத்துச் சொல்லும் விதமாக பேரணிகள்,  கருத்தரங்குகள்,  சிறு மேடை நாடகங்கள் ஆகியவை ராகவனின் முயற்சியால், அவரது கட்சி ஆட்களால் நடத்தத் தீர்மாணிக்கப் பட்டது.

சமூக ஆர்வலர்கள்,   மருத்துவர்கள்,  தங்கள் துறைகளில் சாதித்த  சாதனையாளர்கள் சிலரைச் சந்தித்த  கதிர், தனிப்பட்ட முறையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க வேண்டுகோள் விடுத்தான். ஒவ்வொரு பள்ளிக்கும் வாரத்தில் ஒரு நாள்  மட்டும் வகுப்பு எடுக்க முடிவு செய்யப் பட்டது.

போதை மருந்து கலாசாரத்தை ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ கட்டுப் படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.   ஆகவே இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டனர்.

கதிருக்கு அனைத்து வேலைகளோடு கூடுதலாக சிவரஞ்சனியுடன் ஃபோனில் கடலை போடும் வேலையும் சேர்ந்து கொண்டது.  தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை அழைத்து, அவளது குரலைக் கேட்டாக வேண்டும் அவனுக்கு.

ஆரம்பத்தில் அவனோடு சகஜமாகப் பேசத் தயங்கியவள்,   போகப் போக சற்று இயல்பாக உரையாடத் துவங்கினாள். வாசுகியும் குழந்தைகளும் தினமும் அவளுடன் பேசிவிட தனிமையை உணரவில்லை அவள். இப்படியே நாட்கள் இனிமையாக நகர்ந்தன.

 

 

உயர் தரமான பார் ஒன்றின் மாடியில், திறந்த வெளி உணவகத்தில்  ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர் மூவர்.  இருவர் நன்றாக போதையில் மிதக்க ஒருவன்  சற்று நிதானமாக இருந்தான்.

அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது உணவகம். ஒரு வேளை உணவகத்தையே மொத்தமாக புக் செய்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.  போதையில் வாய் குழறி கண்கள் சொருகினாலும் நிதானமாகப் பேசினான் ஒருவன்.

“எப்பப் பறவைகள் வருது?”

“இன்னும் நாலு நாள்ல.”

“எந்த நாட்டுப் பறவைகள்?”

“நார்வே.  வழக்கம் போல கொஞ்சம் வயசான ஜோடிப் பறவைங்க.  அப்பதான் பயம் ஜாஸ்தியா இருக்கும்.”

“எங்க அடைச்சு வைக்கப் போறோம்?”

“இந்த தடவை வழக்கமான இடத்துல வேணாம்.  வேற இடம்தான் பார்க்கனும்.”

“என்னோட கெஸ்ட்ஹவுஸ்ல அடைச்சு வைக்கலாம். இந்த   முறை லாபம் அதிகம்.  கொழுத்த பறவைகள்.  அதனால 20சி டார்கெட்.”

போதையில் சொக்கிப் போயிருந்த மூன்றாமவனின் கண்கள் விரிந்தன. பேராசை பேச்சில் தெறிக்க,

“நோகாம பத்து நாள்ல ஆளுக்கு   நாலு கோடியா?”

“வாய ரொம்பப் பிளக்காதே…   இப்ப புதுசா வந்திருக்கிற டிஎஸ்பி ரொம்பக் கெடுபிடி.  வழக்கமா வர்ற வருமானமே பாதியாக் குறைஞ்சு போச்சு.   ஹார்பர்ல எதுவுமே செய்ய முடியல கண் கொத்திப் பாம்பு மாதிரி கதிர் பார்த்துகிட்டு இருக்குறான்.”

“கவலைப் படாத… இந்த ஆபரேஷன் சக்சஸ் ஆனதும் அந்தக் கதிரை நான் போட்டுத் தள்ளுறேன்.   வெளியூர் ஆளுங்களை வச்சு செய்யறேன்.    ஆக்ஸிடென்ட் மாதிரி செட்டப் செய்யறேன்.  எவனுக்கும் சந்தேகம் வராது.”

தைரியம் சொன்னது ஒரு உருவம்.  போதை வழிய சிரித்தனர் மூவரும்.

“பறவைகளைத் தூக்க இந்த தடவை யார் போறது?”

“நானே போறேன்.  ஏர்போர்ட்லயே வச்சுத் தூக்கறேன்.”

“இடத்தை ரெடி பண்ணிட்டு உனக்குச் சொல்லுறேன்.   மத்த ஏற்பாடு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.”

“இந்த தடவை பணம் எங்க வந்து சேருது?”

“ஒரிசால இருக்கற ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு  வருது. அங்க வந்ததும் ரெண்டே நாள்ல நம்ம கைக்கு வந்துடும்.  அங்க நம்ம ஆள் பக்காவா அந்த வேலையை முடிச்சிடுவான்.”

“அப்ப சரி.  ப்ளான் பக்கா தான?   போலீசுக்குப் போயிட மாட்டாங்களே?”

“அது நாம பேசுற பேச்சுல இருக்கு.  போலீசுக்குப் போனா கோழியத் திருகுற மாதிரி தலையைத் திருகி எறிஞ்சிடுவோம்னு மிரட்டுறதுல இருக்கு.  அவங்களுக்கு அந்த பயம் இருக்கற வரை போலீஸ்க்கு போக மாட்டாங்க.”

“ஒரு வேளை போலீசுக்குத் தெரிஞ்சிட்டா?”

“ஒன்னும் பண்ண முடியாது  அவனுங்களால.  ஆந்திரா ட்ரஸ்டுக்கோ ஒரிசா ட்ரஸ்டுக்கோ நாம யார்னு தெரியாது.  நாம இருக்கற இடத்தை அவனுங்களால ட்ரேஸ் பண்ண முடியாது.  கடத்துனவங்களை பத்திரமா  திருப்பி அனுப்பிட்டா, வேற பிரச்சனை வராது.”

“இதுவரைக்கும் கடத்துனதையே அவனுங்களால இப்பவரை கண்டுபிடிக்க முடியல…  அவனுங்கல்லாம் சினிமால கடைசி சீன்ல வர்றதுக்குத்தான் லாயக்கு.” என்று கூறி ஒருவன் சிரிக்க…  மற்ற அனைவரும் உரத்துச் சிரித்தனர்.

பக்காவாகப் பேசி  அனைத்தையும் முடிவ  செய்தவர்கள்.  நன்றாக போதையேறியதும் உணவகத்தில் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டுக் கலைந்தனர்.

—-காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

AOA- 17

அவனன்றி ஓரணுவும் – 17

இரத்தப்புற்று நோய் அல்லது லுகேமியா எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இது வெள்ளை அணுக்களின் அபிரிமிதமான வளர்ச்சியால் உண்டாகும் கோளாறாகும்.

இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது கதிரியக்க, கதிர்வீச்சு எக்ஸ்ரே கதிர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக சேதுவின் எதிர் வீட்டிலிருந்த பத்து வயது குழந்தை இரத்த புற்று நோய் காரணமாக இறந்து போனது. அந்த குழந்தையின் பெற்றோர்களின் கதறல் இன்னும் அவன் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஒரே மகளை அநியாயமாக ஒரு கொடிய நோயிற்கு பறிகொடுத்த,  அந்த தாய் தந்தையின் வேதனையும் வலியும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை!

அவர்களை மட்டுமல்ல. அந்த குழந்தையின் மரணம் அவன் மனதையும் உலுக்கிவிட்டது. எந்தளவுக்கு அந்த சம்பவம் அவனை பாதித்ததென்றால் கிட்டத்தட்ட ஒரு மாதம்வரைக்கும் அவனுக்கு இரவு உறக்கமே இல்லாமல் போனது. கள்ளமில்லாத அந்த குழந்தையின் புன்னகையில் விஷத்தை கலந்தது யாரோ?! என்று அவன் மனம் ஒவ்வொரு இரவிலும் வெதும்பியது.

பின்னர் மெல்ல அவன் அந்த மரணத்திலிருந்து மீண்டு வந்திருந்த சில நாட்களில் அவன் வேலை பார்த்து கொண்டிருந்த கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் நீண்ட நாட்களாக கல்லூரிக்கு வரவேயில்லை.

சேது சென்று காரணம் விசாரித்த போது அவனும் லுகேமியா…  அதாவது இரத்தபுற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பது தெரிய வந்தது. அந்த தகவலையறிந்து சேது ரொம்பவும் அதிர்ச்சியடைந்தான்.

அப்போதுதான் சேதுவிற்கு இதன் பின்னணியில் வேறெதோ ஆழமான காரணமிருக்கிறது என்பது பிடிப்பட்டது. கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? கல்பாக்கம் அணுமின் நிலையம் சுற்றி அவர்கள் வசிக்கும் ஒரு காரணம் போதாதா?

ஆனால் அதுதான் காரணம் என்று வெறும் யூகத்தின் அடிப்படையில் அவனால் தீர்மானத்திற்கு வர முடியவில்லை. அதற்கு சரியான ஆதாரம் வேண்டுமே. அந்த தேடலை அவன் தொடர்ந்த போதுதான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவனுக்கு கிடைத்தன. கல்பாக்கத்தில் மின் உற்பத்தியின் போது உருவாகும் கடைநிலை அணுக்கழிவுகளை பாலாற்றிலும் கடலிலும் கலந்து விடுகிறாகள் என்று! பாலாற்றின் மணலை கைகளில் எடுத்தாலே அணுகதிர் வீச்சின் பாதிப்பு ஏற்படுமளவுக்கு அதன் தாக்கம் இருந்தது.

ஆனால் இது பற்றி அங்கே வசிப்பவர்களுக்கு அந்தளவு விழிப்புணர்வு இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதுவும் அவர்கள் ஊரை சுற்றி மீனவ மக்கள்தான் அதிகம் வசித்து வந்தனர். அவர்கள் இந்த தண்ணீரை பருகியதன் காரணமாக  கதிர்வீச்சின் தாக்கத்தில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி பிறந்துள்ளன.

இது பற்றி சேது அரசாங்கத்திற்கும் கல்பாக்கம் அணுமின் நிலை இயக்கனருக்கும் எழுதிய கடிதங்கள் எந்தவித பயனுமின்றி குப்பைக்குதான் சென்றன. யாரிடமிருந்தும் சரியான பதில் கூட வரவில்லை. ஒரு சாதாரண குடிமகனாக அவனால் அதற்கு மேல் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்யவும் முடியவில்லை.

அதே நேரம் அங்கு வசிக்கும் மக்களிடம் அவர்களை சூழ்ந்துள்ள ஆபத்தை பற்றி தெளிவாக விளக்கினான். ஆனால் அவர்களாலும் அந்த இடத்தை விட்டு வேறிடம் நோக்கி செல்ல முடியவில்லை. அந்த இடமும் மீன் பிடிப்பதுமே அவர்கள் வாழ்வாதாரம் எனும் போது அவர்கள் வேறெங்குதான் செல்வார்கள்?

சேதுவிற்கு இதன் விபரீதம் தெரிந்த போதும் தன் இனத்து மக்களை சுயநலமாக அங்கே விடுத்து செல்ல விருப்பமில்லை.

மக்களின் நலன் பற்றி துளியளவும் யோசிக்காத அரசாங்கம் இருக்கும் வரை இதற்கெல்லாம் தீர்வு ஏது? ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவனும் இது குறித்து மெல்ல மறந்துபோயிருந்தான். மனதை ஒருவாறு சமன்ப்படுத்தி கொண்டு சேது தன் வேலைகளில் கவனத்தை திருப்பியிருந்தான் .

ஆனால் பிரச்சனை இப்போது தலைக்கு மேல் வெள்ளமாக போய்விட்டது. ஒரு சிறியளவிலான அணுக்கசிவே இத்தனை பெரிய விபரீததிற்கும் வித்திடுமெனில் இப்போது நடக்க போகும் கொடூரத்தை குறித்து அவனால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

பிரபஞ்சன் கனவு மட்டும் உண்மையாகிவிட்டால் பல உயிர்களை அந்த அணுமின் நிலையும் காவு வாங்கிவிடும். அதோடு சென்னை மற்றும் காஞ்சிபுர மாவட்ட மக்களின் வருங்காலத்தையும் அவர்கள் சந்ததிகளின் எதிர்காலத்தையும் அது மொத்தமாக கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

நினைக்கும் போதே அவன் முதுகுத்தண்டு சில்லிட்டது.

இருப்பினும் சேது தன் மனிதின் ஏதோ ஓர் மூலையில் இருந்த துளியளவு நம்பிக்கையின் காரணமாக பிரபாவிடம்,

“உன் கனவு கண்டிப்பா பளிச்சிருமா டா?” என்று கேட்டு வைத்தான். அவ்வாறு கேட்கும் போதே சேதுவின் குரல் உடைந்தது.

பிரபஞ்சன் பதில் பேசவில்லை. நடக்காது என்று அவனால் உறுதியாக கூறவும் முடியவில்லை. நடக்கும் என்று சொல்லி தன் நண்பனை வேதனைப்படுத்தி பார்க்கவும் அவன் விரும்பவில்லை. ஆதலால் பிரபஞ்சன் மௌனமாகவே நின்றான்.

ஆனால் சேது விடாமல், “அப்போ நடந்திரும் அப்படித்தானே?!” என்று கேட்டு நண்பனை உலுக்கினான். பிரபா அப்போதும் தன் மௌனத்தை கலைக்கவில்லை.

சேது அதிர்ச்சியிலும் பயத்திலும் அப்படியே ஒடுங்கி போய் அங்கிருந்த தென்னை மரத்தின் மீது சரிந்துவிட்டான். மனதின் நம்பிக்கையெல்லாம் வடிந்து போகும் போது நம் உடலின் சக்தியும் சேர்ந்தே வடிந்துவிடும்.

சேதுவின் நிலைமையும் அதுதான். பிரபா அந்த நொடி தன் மௌனத்தை கலைத்து, “சேது” என்று அவன் தோள்களை பிடித்து கொள்ள, அவன் உடனடியாக தன் நண்பனை இறுக்கமாக கட்டி கொண்டான். அவனுக்கு அந்த நொடி ஏதோ ஒரு பற்றுகோல் தேவைப்பட்டது.

நண்பனின் தோளில் தலை சாய்த்து குலுங்கி குலங்கி அழ பிரபா அவனை தேற்றி கொண்டே ஷெர்லியை பார்த்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வர சொல்லி சமிக்ஞை செய்தான். அவள் உள்ளே சென்றுவிட,

பிரபா தன் நண்பன் முகத்தை நிமிர்த்தி பிடித்து, “இப்ப ஏன் இவ்வளவு  உணர்ச்சி வசப்படுற நீ? இன்னும் எதுவும் நடக்கல… அதை முதல நீ புரிஞ்சிக்கோ… என் கனவு நடந்தே ஆகணும்னு எந்தவித அவசியமும் இல்ல” என்றான்.

சேது உடனடியாக நிமிர்ந்து, “நீதானே டா நடக்கும்னு சொன்ன” என்று கேட்க,

“ஹ்ம்ம் சொன்னேன்… ஆனா ஏதோ ஒரு மூலையில ஒரு நம்பிக்கை… அது நடக்காது… நடக்க விடகூடாதுன்னு தோணுது… ஆனா அது எப்படின்னு தெரியல” என்ற போது பிரபாவின் விழிகளிலும் கண்ணீர் தளும்பியது.

பிரபா உடனடியாக தன் விழிகளை துடைத்து கொண்டு,

“ப்ளீஸ் சேது! அடுத்து என்ன செய்றதுன்னு யோசிப்போம்” என்று சொல்லும் போது பிரபாவின் விழிகளில் பிரகாசித்த அந்த துளியளவு நம்பிக்கை சேதுவின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அப்போது ஷெர்லி தண்ணீர் எடுத்து வந்து சேதுவிடம் நீட்டினாள்.

அப்போதுதான் சேது அவளை பார்த்தான். “யாரு” என்பது போல் சேது பிரபாவை பார்க்க, “கெஸ்ட்” என்பது போல் ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டான்.

பிரபா தெளிவுபெற்று தன் நண்பன் சேதுவை பார்த்து, “ஏன் சேது? கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் எல்லா பாதுக்காப்பு ஏற்பாடுகளும் பண்ணியிருப்பாங்கதானே?” என்று கேட்டான்.

“ஹம்ம் பண்ணியிருப்பாங்க” என்றவன் உடனடியாக ஏதோ யோசனையோடு, “எனக்கு அங்க வேலை பார்க்கிற ஒரு டெக்னிஷ்யனை தெரியும்… நான் அவன்கிட்ட இது பத்தி கேட்டு பார்க்கிறேன்” என்றான். அதேபோல அவன் தன் பேசியை எடுத்து அழைப்பு விடுத்தான்.

எதிர்புறத்தில் அவர் அழைப்பை ஏற்றுதும், சேது நிதானமாக அங்கிருந்த பாதுக்காப்பு ஏற்பாடுகளை பற்றி விசாரிக்க, எல்லாமே சரியாக இருப்பதாகவே அவர் தெரிவித்தார். ஆனாலும் இயற்கை சீற்றத்தில் எதுவும் நம்பிக்கையாக சொல்வதற்கில்லை என்று ஒரு இக்கு வைத்தே முடித்தார்.

அதேநேரம் அவசர நிலை அறிவித்து அங்கிருந்த மக்கள் எல்லோரையும் இடம்பெயர சொன்னதாகவும் உரைத்தார். சேதுவின் மனதில் லேசாக நிம்மதி படர்ந்தது. அவன் குடும்பத்தினர் இரண்டு நாட்கள் முன்னதாகவே திருப்பதி சென்றுவிட்டனர்.

சேது இறுதியாக அவரிடம், “இருந்தாலும் மனசுக்கு எதுவோ சரியா படல… பார்த்து ஜாக்கிரதை” என்று முடித்து அழைப்பை துண்டித்த போது அவர் மனதிலும் அச்சம் பற்றி கொண்டது.

ஏனோ அந்த வார்த்தை அவருக்கு சாதாரணமாக ஒலிக்கவில்லை. ஏதோ எச்சரிக்கையை மணியடித்தது போன்ற உணர்வு! அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக அவர் வேலை செய்து கொண்டிருந்த யூனிட் பக்கம் ஒருமுறை சரி பார்த்துவிட்டு வர திரும்பினார். அங்கேதான் அந்த இயந்திர கோளாறு காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டு கொண்டிருந்தது.

சேது பேசி முடித்ததும் தன் கல்லூரி மாணவர்கள் நண்பர்களிடம் பேசினான். அவன் பின்னர் பிரபாவை பார்த்து, “கல்பாக்கம் மட்டும் இல்லாம அவுட் ஆஃப் டவுன்ல இருக்கவங்களையும் பாதுக்காப்பான இடத்துக்கு போக  வைக்கணும்… அவங்களுக்கு இந்த ஆபத்தோட தீவிரம் தெரியுமோ தெரியாதோ? அதான் என் ப்ரெண்ட்ஸ் ஸ்டூடண்ட்ஸ் சில பேரை கூட வர சொல்லியிருக்கேன்” என்றவன், “நீயும் என் கூட கிளம்பி வர்றியா பிரபா” என்று கேட்டான்.

பிரபாவிற்கு அண்டசராசரமே ஆடி போனது.  உடனடியாக அவன் முடியாது என்று தலையசைத்து மறுத்துவிட்டான். கனவில் பார்த்த அந்த பயங்கரமே அவன் நினைவை விட்டு இன்னும் நீங்கமால் இருக்க, அப்படியொரு நிகழ்வை நேரில் பார்ப்பதா?

அவன் முகத்தில் வியர்வை துளிர்த்தது. அவன் அங்கே வந்தாலே அந்த விபத்து நேர்ந்துவிடுமோ என்று உள்ளுர நடுங்கி கொண்டிருந்தான்.

நண்பனை பார்த்த பிரபா, “தப்பா எடுத்துக்காதே சேது… எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு… நீ பார்த்து பத்திரமா போயிட்டு வா” என்றான்.

சேதுவும் நண்பனை புரிந்தவனாக தலையசைத்துவிட்டு சென்றுவிட ஷெர்லி மட்டும் அங்கே பிரபஞ்சனோடு நின்று கொண்டிருந்தாள்.

ஷெர்லி அப்போது அவன் மனநிலையை தெளிவாக படித்தவள் போல, “டென்ஷன் ஆகுறதால எதுவுமே ஆகிடபோறதில… நமக்கு மேல ஒரு யுனிவர்சல் பவர் இருக்கு… நாம அதை பிலீவ் பண்ணுவோம்… அது நம்மல கண்டிப்பா சேஃப் பண்ணும்” என்றாள்.

அவளின் அந்த வார்த்தைகள் பிரபஞ்சனுக்கு ஏதோ ஒரு பற்றுக்கோலை தந்தது. கிறிஸ்டோபர் எழுதிய டிசேஸ்டர் அவன் முழுவதுமாக படிக்கவில்லை என்றாலும் கடைசி பக்கத்தில் ஓர் வரி இருந்தது.

அதை நினைவுப்படுத்தி கொண்டான். மனதில் பெருஞ்சுவராக எழும்பி நின்ற அவநம்பிகையை நம்பிக்கை என்ற ஒரு சிறு உளி அடித்து தகர்த்தது.

“யுனிவர்ஸல் பவர்” அந்த வார்த்தையை பிரபா தனக்குள்ளாகவே சொல்லி பார்த்து கொண்டான். நடப்பதை முன்னமே தெரிந்து கொள்ளும் ஆற்றல் தனக்கு இருக்குமெனில் அதை தடுக்கும் ஆற்றல் தனக்கு இல்லாமல் போகுமா?

முந்தைய முறை சுனாமி வந்த போது அவன் தாய் ஒரு சிறு மரக்கட்டையை கொடுத்து அதை விடாமல் பற்றி கொள்ள சொன்னது நினைவுக்கு வந்தது. அத்தனை பெரிய ராட்சச அலைகளிடமிருந்து அந்த சிறு மரக்கட்டை தன்னை காப்பாற்ற முடியும் போது ஏன் இந்த மோசமான விபத்திலிருந்த எம் மக்களை என்னால் காப்பாற்ற முடியாது. அதற்கு அவனுக்கு தேவை அவள் சொன்னது போல் அந்த யுனிவர்சல் பவர்!

இந்த பிரபஞ்சத்தை ஆளும் அந்த உயிரிய சக்தி!

பிரபஞ்சனின் சிந்தனை காட்டாற்று வெள்ளமாக தங்குதடையின்றி அதிவேகமாக முன்னேறி சென்று கொண்டிருந்தது.

பிரபா அப்போது ஷெர்லியின் முகத்தை யோசனையாக பார்த்து, “இஃப் யு டோன்ட் மைன்ட்… எனக்கும் குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டான்.

“ஒ! சூயர்” என்று சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து கொண்டு திரும்ப, பிரபா அங்கே இல்லை.

“ஹென்சம்” என்று அழைத்து கொண்டே அவள் அந்த தோட்டத்தை சுற்றிலும் வலம் வந்துவிட்டாள். ஆனால் அவன் அவள் கண்ப்பார்வையில் தென்படவேயில்லை.

அவள் மனம் அச்சத்தை நிரப்பியது. அவன் இந்த நேரத்தில் எங்கே போனான்? சேது அழைத்த போதும் அவன் வரவில்லை என்று மறுத்துவிட்டானே!

பின் அவன் இப்போது எங்கே சென்றிருப்பான்.அவள் மனம் ஏதேதோ விபரீதமாக யோசிக்க, அவளுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. அவள் எடுத்து வந்த தண்ணீரை அங்கேயே வைத்துவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

***

மெரினா கடற்கரை!

எப்போதும் ஜனசஞ்சாரத்தோடு இருக்கும் அந்த இடமே இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கடற்கரை சாலையில் ஒரு வாகனம் கூட பார்க்க முடியவில்லை.

அந்த கடற்கரை சாலையின் எதிர்புறத்திலிருந்த உயரமான கட்டிடத்தின் மீது ஒரு கூட்டமே நின்றிருந்தது. எல்லோர் கையிலும் அதிநவீன கேமராவும் அது சார்ந்த மற்ற உபகரணங்களும் இருந்தன. எப்படி ஒரு மோசமான சம்பவத்தையும் நொடி நேரத்தில் செய்தியாக மாற்றவல்ல பத்திரிக்கையாளர்கள் கூட்டம்தான் அது.

ஆனால் அநியாயங்களை தட்டி கேட்பது அவர்கள் வேலையில்லை. அவற்றை தத்ரூபமாக படம் பிடிப்பதே அவர்கள் வேலை. பின்னர் அந்த செய்தியை எந்தளவு பரபரப்பாக மாற்ற முடியுமோ மாற்றி விட்டு பின் சில நாட்களில் அதை சுத்தமாக மறந்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுவார்கள். அதுதான் அவர்களுடைய புனிதமான பத்திரிக்கை துறையின் தர்மம்.

அவர்களின் அப்போதைய பரபரப்பு சுனாமி. அதை பற்றித்தான் அவர்களுக்குள் அப்போது மும்முரமாக உரையாடல் நடந்து கொண்டிருந்தன.

“எவ்வளவு நேரம் வைட் பண்றது… சுனாமி வருமா வராது?”  என்று அவர்களில் ஒருவன் காத்திருந்து காத்திருந்து அலுத்து போய் எரிச்சல் மிகுதியோடு கேட்க,

“ஆமா ஆமா இன்னைக்கு பூரா இதுலயே டைம் வேஸ்ட் ஆகிடும் போல” என்று உடனிருந்த பெண் சொன்னாள்.

“ஆமா… உண்மையில சுனாமி வருமா?” ஒருவன் சந்தேகமாக கேட்க,

“வந்தாதானே டா இன்னும் இந்த நியுஸ் சென்சேஷன்லா மாற்ற முடியும்” என்றான் இன்னொருவன்!

“அட போங்கடா… மழை வரும்னு சொன்னாலே வெயில் கொள்ளுத்தி எடுக்கும்… இதுல சுனாமி வர போகுதாக்கும்… ச்சே! காலையில் ஒரு ஹீரோயின் இன்டர்வியு எடுக்க அபாய்ன்மன்ட் எல்லாம் வாங்கி வீணா போச்சு” அவனுக்கு அது பெரிய கவலையாக இருந்தது.

“அதை விட இதான் சென்சேஷ்னல்”

“இப்படி வெட்டியா நிற்கிறதை விட சுனாமி வந்தாதான்  அது சென்சேஷ்னல்”

“இப்ப என்ன… சுனாமி வரணும்கிறியா வர கூடாதுங்கிறியா ?”

“வந்ததான் நமக்கு செம ஹாட் நியுஸ் கிடைக்கும்… அப்படியே சுனாமி வர சீனை என் கேமரால கேப்சர் பண்ணிப்பேன்”

“அது ஓல்ட் மாடல்… இதை பாரு… எவ்வளவு தூரத்தில இருந்தாலும் செம கிளேரிட்டியோட வீடியோ கேப்சர் பண்ணும்” என்று தன் கேமராவை காட்டி பெருமை அடித்து கொண்டிருந்தான் ஒருவன். சிறியதாக இருந்தாலும் அவன் சொன்னது போல் அதன் செயல்பாடுகள் நவீனமாக இருந்தது.  எல்லோருமே அந்த சிறியளவிலான கேமேராவை பார்த்து வியந்தனர்.

அவன் தன் கேமரா மூலமாக கரைகளை தாண்டி தொலைதூர கடலலைகளை காண்பிக்க

அவர்கள் கூட்டத்தில் ஒருவன், “ஆமா… செம்மயா இருக்கு… செம்ம டெக்னாலஜி” என்று பாராட்டினான்.

எல்லோருமே அந்த காட்சியை கேமராவில் பார்த்து கொண்டிருக்க, அப்போது வெகுதூரமாக கடலலை மலையாக எழும்பிய காட்சி தெரிந்தது. ஓயாமல் அத்தனை நேரம் வாயடித்து கொண்டிருந்த அந்த கூட்டம் வாயடைத்து போனது.

அந்த கேமராவை கையில் பிடித்து கொண்டிருந்தவன் விஸ்வரூபம் எடுத்து சீறி கொண்டு பாய்ந்து வந்த கடலலைகளை பார்த்து நடுநடுங்கி போனான். அந்த நடுக்கத்தில் அவன் கையிலிருந்து அந்த அதிநவீன உயர் ரக கேமரா அந்த உயரமான கட்டடத்தின் மேலிருந்து விழிந்து நொறுங்கி தூள் தூளானது.

 

 

Kathambavanam- 8

கதம்பவனம் – 8

 

அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது,செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர,மற்றவர்கள் பார்வை அவனை வளம் வந்தது,தாமரைக்குச் சங்கடமாக இருந்தாலும்,கணவனின் பார்வை அத்தனை நிறைவை கொடுத்தது, இவர்களின் வாழ்க்கையை இனி இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்  என்ற நம்பிக்கையில் சுந்தரத்தின் பார்வை ராஜாவிடம் நிலைத்தது.

‘என்னடா சோதனை காலம் போன கடைசில் அன்பு மனைவியுடன் கோவில் குலமென்று சுற்றி வரலாம் என்று நினைத்தால்,தான் பெற்ற மகன்களைச் சுற்றி திரிய வேண்டியதாக இருக்கிறது,அதுவும் அவர்கள் இளமை வயதில்’ அலுப்பாகத் தான் இருந்தது சுந்தரத்திற்கு,அவ்வப்போது ஏக்கமாகப் பங்கஜத்தை வேறு பார்த்து வைத்தார், கணவனின்  கண் அசைவில் அவரது மன நிலையைப் புரிந்த மனைவிக்குப் பாவமாகத் தான் இருந்தது.

மாமனார் மாமியார் பார்வையைப் பார்த்த மாதங்கி கையில் உள்ள பாத்திரத்தை நங் என்று கீழே போட்டு உடைத்தால்,அதில் கலைந்த சுந்தரம் அவளைப் பார்த்து “என்ன ஆச்சும்மா” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,பங்கஜம் உள்ளே சென்று விட்டார்,கணவரை தவிர்த்து அவளை யாரும் சமாளிக்க முடியாது அல்லவா.

“ஒன்னுமில்ல மாமா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு,ஆனா அதுக்கு உண்டான பர பரப்பே இங்க இல்லையே,ஏன்,என் தங்கச்சி தாணு எலக்காரமோ என்னவோ”.

“எங்களுக்கு எல்லாரும் ஒண்ணுதான் மாதங்கி அது என்ன உன் தங்கச்சி, அவ நம்ப விட்டு மருமக சொல்ல போன மஹாலக்ஷ்மி,இனிமே பிரிச்சு பேசுறத நிறுத்திக்கோம்மா, நீ தான் மூத்த மருமக,நீ ஒரு வழிகாட்டிய தான் இருக்கணுமே ஒழியே வழி தவறி போகக் கூடாது,அப்புறம்” நான்” அப்புடிங்கற வார்த்தையே இனி இங்கில்லை ‘நாம்’ தான் என் கடைசி மூச்சு இருக்குற வரைக்கும்,கொஞ்சம் காட்டமாகப் பேசியவர் வெளியே சென்றுவிட்டார்.

என்றைக்குமே பேசிடாத மாமனார் என்று காட்டமாகப் பேசவும்,மற்றவர்கள் முன்னிலையில் அவமானாகக் கருதினாள் மாதங்கி,அந்த கோபம் கண்ணைப் பதம் பார்த்தது,இரவு தனது கணவனின் வரவுக்காகக் காத்திருந்தாள்.

இங்கு இப்புடி இருக்க,அங்கு நகத்தோடு சேர்த்து விரல்களையும் தின்று கொண்டு இருந்தாள் விமலா நாட்கள் நெருங்க நெருங்க அடி வயிற்றில் ராட்டினம் சுற்றியது,ராஜாவை பார்த்துப் பயமில்லை என்றாலும் அவனுடன் வாழ்க்கையில் இணையும் போது அவனது மனநிலை  எப்புடி இருக்குமென்று கணிக்க முடியவில்லை,போன் வசதி இல்லை,அவனை நேரில் பார்த்து மனம் விட்டுப் பேசலாம் என்றால்,அதற்கும் தைரியம் வேண்டும்.

திருமண நிகழ்வை மொத்தமாக அனுபவிக்க முடியவில்லை,இதில் தனது தமக்கையின் ஆட்டம் வேறு அதிகமாக இருந்தது,அவளும் அவளது தாயாரும் சொந்தங்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை கண் கொண்டு பார்க்க முடியவில்லை,திருமணம் முடியட்டும் அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று பல்லை கடித்துக் கொண்டு இருந்தாள்.

*************************************************************************************

நாட்கள் அதன் போக்கில் நகர ,இரண்டு வீட்டிலும் தாய் மாமன் நலங்கு,நாள் சோறு என்று நித்தம் நித்தம் ஒரு சடங்கு நடந்தது,ராஜன் முகத்தை அவ்வப்போது ஊற்று பார்த்துக் கொண்டு இருந்தனர் பெண்கள்,அவர்கள் கவலை அவர்களுக்கு,மாதங்கி அவனிடம் பேச வரும் போதெல்லாம் அவன் ஒரு அலட்சியம் காட்டு வதையும்,அவனை மீறி கோபம் கொள்வதையும் பார்த்த அமுதா,சீதா,தாமரை,பங்கஜத்திற்கு இந்தத் திருமணம் நடக்குமா என்ற பயம் பிடித்துக் கொண்டது.

ராஜனிடம் நெருங்கி  பழகும் விஜி கூட அவனிடம் அன்று நெருங்க பயந்து போனால்,அண்ணனின் கோபத்தை உணர்ந்து அவளுக்கும் பயம் அதிகரித்தது,இதையெல்லாம் கண்டும் காணமால் இருந்து கொண்டார் அண்ணன்கள்,அனைவரும் சென்ற பிறகு பேசி கொள்ளலாம்,அவர்கள் பேச வரும் போதெல்லாம் எதையாவது சொல்லி ராஜா மழுப்பி விடுகிறான்,ஆனால் இன்று கண்டிப்பாகப் பேசியே ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டனர்.

ஒரு வழியாக நலுங்கு  முடிந்து அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போட்டு முடிக்க,ராஜாவை தூக்காத குறையாக அண்ணன்கள் இழுத்து சென்றனர்,”அண்ணா ஏன் இழுத்துட்டு வர,நான் தாமரை அண்ணி இல்ல கைய விடு”,அவனை இழுத்து சென்ற செல்வதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்ல,அவனை முறைத்தான் செல்வம்.

“கண்ணன், டேய் பேச்ச மாதத்த என்னதான்டா பிரச்சனை உனக்கு விமலாவை புடிக்கலையா,நீ மாதங்கிய நினைச்சு அவளை ஒதுக்குரிய”,கண்ணனுக்கு வலித்தது தான் மற்ற அண்ணிகளுடன் சுமுகமாக இருப்பவன்,மாதங்கி என்றால் ஒரு அடி தள்ளி தான் நிற்பான்,மனைவியின் குணம் தெரிந்தாலும் கண்ணனுக்கு இச்செயல் வலிக்கத் தான் செய்தது”,அண்ணன் வலியைக் கண்டு கொண்ட ராஜன்.

“அண்ணா,எனக்கு அவுங்களும் அண்ணிதான் அவுங்க நடந்துக்குற முறை தான் புடிக்காது,எங்க அண்ணனின் மனைவியா புடிக்கும்,எனக்குப் பயம் இருக்குன்னா அவளும் வீட்டுல பிரச்சனை பண்ணுவாளோனு,அப்பாக்கு அண்ணி பேசுறது ஏவுளோ கஷ்டமா இருக்கும் தெரியுமா,ஆனா வெளில சொல்ல மாட்டாரு,அவருக்கு நம்ப எல்லாம் ஒரே குடும்பமா இருக்கனுமுனு ஆசை”,அண்ணன்கள் முகத்தில் கவலை, அதிலும் பேச மடந்தையான அர்ஜுன் முதல் முதலில் தனது அண்ணன்களிடம் பேசினான்.

டேய் தம்பி விமலா நல்ல பொண்ணுடா,அமுதா சொல்லி இருக்கா, இது உன்னோட வாழ்க்கை நீயே யோசுச்சு முடிவெடு,அந்த பொண்ணு பாவம் நமக்கு வேணாம்,அவ வந்தா  அண்ணி சரி ஆய்டுவாங்குனு தோனுது,அப்பா யோசிக்காம எதுவும் செய்ய மாட்டாரு.

எனக்குப் புரியுதுன்னா ஆனா என் மனச மாத்திக்க எனக்கு அவகாசம் வேணும் அவுங்க இப்புடித்தான்னு என் மூளைக்குள்ள பதிஞ்சுடுச்சுக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்,எது நடந்தாலும் அவதான் பொண்டாட்டி,ஏன்னா,எங்க அப்பா பார்த்த பொண்ணு நீ கவலை படாத”,அவன் பேச்சில் உள்ள தெளிவில் அண்ணன்கள் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்தது.

சூழ்நிலையை மாத்த எண்ணிய அர்ஜுன் “ செல்வதைப் பார்த்து என்னடா லீவே போடமாட்ட இப்போ என்ன முழுசா பத்து நாள் லீவு”,புருவத்தை உயர்த்திக் கேட்க.

கண்ணன்,”தம்பிக்குக் கல்யாணம் ,வீட்டுல வேற நைட் டூட்டி பார்க்கணும்,காலைல கல்யாண வேல பார்க்கணும்,அவன் ஒரே பிஸி டா,எனக்கு என்னமோ பத்து நாள் லீவு பத்தாதுன்னு தோணுது”.

ராமன் குறும்பு கொப்பளிக்க “அப்புடியாடா” என்று கேட்க,செல்வம் திணறிப் போனான்.

“டேய்! அண்ணா விட்டுடுங்கடா,என்று அழுகுத குறையாகக் கெஞ்சி கொண்டு இருந்தான் செல்வம்,ராஜா ஒரு படி மேல போய்,”அண்ணா இனி நம்ப வீடுகட்டுனா ஒரு அறைக்கு இன்னொரு அறைக்கு அதிக இடைவெளி விட்டு தான் கட்டணும்,நைட் படுக்க முடியல ஏடாகூடமா சத்தம் வருது”,அவன் சொல்லி முடிக்கவில்லை அண்ணன்கள் அனைவரும் அவனைத் துரத்தினார்.

சகோதர்கள் என்பதை மறந்து நண்பர்கள் போல அவர்கள் தனது வயதையும் மறந்து விளையாடி கொண்டு இருந்தனர்,நால்வரும் ஒருவரை ஒருவர் வாரி கொண்டு,நெடு நாள் கழித்து அந்த மாலை வேளையை இனிமையாக மாற்றினார்.

இந்த இதம் தொலையாது பார்த்துக் கொள்வது இந்த வீட்டின் வேர்களான பெண்களிடம் தான் உள்ளது,பல்வேறு பூ செடிகள் இருக்கும் கதம்பவனத்தில் இன்னும் ஒரு ரோஜா செடி சேர்க்கயில் அதன் மனம் மாறாமல் வனம் செழிக்குமா என்பதைப் பார்ப்போம்…..

ESK-13

சுவாசம் —  13

போர்டிகோவில் வந்து நின்ற கதிரின் காரைப் பார்த்ததும் குழந்தைகள் இருவரும்  ஓடி வந்தனர். கதிருடன் இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

காலையில் கண்விழித்ததும் முதலில் அவர்கள் கேட்டது சிவரஞ்சனியைப் பற்றிதான்.  கல்லூரிக்குச் சென்றிருக்கிறாள் என்றதும்    சற்றுச் சுணங்கியவர்கள்,   விடுமுறையில் கண்டிப்பாக இங்கு வருவாள் என்று கூறியதில்  சமாதானமாகி இருந்தனர்.

வெளியில் கிளம்புவதற்குத் தயாராக இருப்பது போல உடையணிந்திருந்த ஆதவனைக் கையில் அள்ளிக் கொண்டவன்,

“எங்கடாப் போறீங்க? ரெண்டு பேரும் கிளம்பி ரெடியா இருக்கீங்க.”

சிவரஞ்சனியிடம் ஒட்டிக் கொண்டிருந்த அனுதான் பதில் கூறினாள்,

“உனக்குப் பொண்ணு பார்க்கக் கோவிலுக்குப் போறோம் மாமா.”

திடுக்கிட்டு விழித்தவன், “என்னடாச் சொல்ற?”   என்று கேட்டபடி சிவரஞ்சனியையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சிவரஞ்சனியும் சற்று அதிர்ந்துதான் போயிருந்தாள்.

“அக்கா…  அக்கா… “

அவன் குரல் கேட்டு சாவகாசமாக வெளியே வந்த வாசுகி,   கதிரையும் சிவரஞ்சனியையும் பார்த்துவிட்டு,

“வாடா…  என்னடா சிவரஞ்சனிய ஹாஸ்டல்ல சேர்க்கல?   திருப்பிக் கூட்டிட்டு வந்திருக்க?”

“அதெல்லாம் சேர்த்தாச்சு க்கா…  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுதான,  அங்க தனியாதான   இருப்பா, அதான் திங்கள்கிழமை கொண்டு போய் விட்டுக்கலாம்னு திரும்பக் கூட்டிட்டு வந்துட்டேன். ஆமா, அனு என்னவோ   எனக்குப் பொண்ணு பார்க்கப் போறதாச் சொல்றா…?”

அவன் கடைசியாகக் கேட்ட கேள்வியைச் சட்டை செய்யாமல், உணவு மேஜையில் இருந்த பொருட்களை ஒதுக்கி வைத்தபடி,

“அதுவும் சரிதான், பிள்ளைங்க காலையில எழுந்ததிலிருந்து சிவரஞ்சனியத்தான் தேடுனாங்க. அவ வந்ததும் நல்லதாப் போச்சு, அவங்க கூட விளையாடிட்டு இருப்பா… “

‘பிள்ளைங்களோட விளையாடவா அவளைக் கூட்டிட்டு வந்தேன்’   என்று அவன்  முழித்துக்  கொண்டிருக்கும் போதே,

“ரஞ்சனி…  அனுவுக்கு அழகா தலையை சீவி விட்டுட்டு,   மாடியில போய் அவங்களோட விளையாடிகிட்டு இரும்மா.”

என்றவள் கைக்கொரு பாத்திரமாகத் தூக்கியபடி சமயலறைக்குள் சென்றாள்.

‘மாடிக்குப் போகாதே! இங்கேயே இரு!’ என்று கண்களாலேயே அவன் சிவரஞ்சனியிடம் பேசிக் கொண்டிருக்க,   அனுவும் ஆதவனும், “வாங்கக்கா” என்றபடி அவளது இரு கரங்களையும் ஆளுக்கொன்றாகப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடியேறினர்.

கதிரைத் திரும்பித் திரும்பிப்  பார்த்தபடியே மாடியேறினாள் சிவரஞ்சனி.

வீடு முழுவதும் ஒருவிதப் பரபரப்பில் இருந்ததை அப்பொழுதுதான் கவனித்தான் கதிர்.  சுந்தரும் அவனது சகாக்களும் ஹாலில்  வாசுகி எடுத்து வந்து வைத்திருந்த பொருட்களைச் சரி பார்த்தபடி இருந்தனர்.

“டேய்…  சுந்தரு…  நீங்க இங்க என்னடாப் பண்றீங்க?”

“நம்ம வீட்டு விசேஷம், நாங்க இல்லாமையா ண்ணா?  அண்ணிய நான்தான் முதல்ல பார்த்து நல்லா இருக்காங்களான்னு சொல்லுவேன்.  அப்புறம்தான், நீங்க சம்மதம் சொல்றீங்க சரியா?”

நறநறவென்று பற்களைக் கடித்தவன், “உன் மண்டையப் பொளக்கப் போறேன் நான்.  வேலையப் பாரு… உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்.”  என்றபடி வாசுகியைத் தேடி சமயலறைக்குள் போனான்.

தான் நினைத்து வந்தது என்ன?   இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன?  நினைக்க நினைக்கக் கடுப்பாக இருந்தது அவனுக்கு.

சிவரஞ்சனியுடன் சேர்ந்து வாசுகியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய   பிறகு, தாங்கள்   இருவரும் திருமணம்  செய்ய விரும்புவதைச் சொல்லி, வாசுகியின் முகம் மலர்வதைப் பார்க்கும்  ஆவலோடு வந்தால்,  தனக்கு எவளோ ஒருத்தியைப் பெண் பார்க்கவென்று, இவர்கள்   அனைவரும் கிளம்புவது அவ்வளவு எரிச்சலைக் கொடுத்தது.

அதேக் கடுப்புடன் சமையலறையின் உள்ளே நுழைந்தவன்   கண்டது பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கல்,  கேசரி,  வடை  என்று பலவித ஐட்டங்கள் தயாராகிக் கொண்டிருப்பதைத்தான். அதைக் கண்டு அதிர்ச்சி ஆனவன்,

“அக்கா…  என்னக்கா  இதெல்லாம்?”

“சர்க்கரைப் பொங்கல்டா…   சாப்பிட்டதில்ல? போன மாசம் ஆது பிறந்தநாளுக்குச் செய்தேனே.”

“கடவுளே…  அதுத் தெரியுது. எதுக்கு இவ்வளவு செய்து வச்சிருக்க?”

“பிரசாதம்டா…   கோவில்ல குடுக்கறதுக்கு. அபிஷேகம் அர்ச்சனை எல்லாத்துக்கும் ரெடி பண்ணிருக்கேன்.  காலையில  பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதுல இருந்து, எனக்குக் கையும் ஒடல காலும் ஓடல.  பயங்கர சந்தோஷம்.  அதான் சாயந்திரமே பொண்ணு பார்க்கற ஃபங்ஷன கோவில்ல வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

“யாரைக் கேட்டு முடிவு பண்ண?  எனக்கு இந்தப் பொண்ணு பார்க்கறதெல்லாம் புடிக்கல.  நான் வரமாட்டேன்.”

“இங்க பாரு கதிரு,  நான் ஏற்கனவே உன் கிட்ட சொல்லியிருக்கேன்.  நான் எந்தப் பொண்ணப் பார்த்துக் கையக் காட்டுறேனோ அந்தப் பொண்ண  நீ கல்யாணம் பண்றன்னு, புரியுதா…  என் கிட்ட வார்த்தையாடாம  ஒழுங்காப் போய் கிளம்பி ரெடியாகு.  எனக்குத் தலைக்கு மேல வேலையிருக்கு.”

“அக்கா,   நான் சொல்றதக் கொஞ்சம் கேளேன்.  நான் கல்யாணம் பண்ணிக்குறேன்கா…ஆனா”  அவனை இடைமறித்து,

“பெருமாளே…  உன் கருணையே கருணை.  அபிஷேகம் ஆராதனை பண்றேன்னு வேண்டிக்கிட்டதுமே,  கதிரு வாயில இருந்து கல்யாணம் பண்ணிக்கறேன்னு வார்த்தை வந்துடுச்சி.  இது போதும் எனக்கு.   பொண்ணோட ராசி ரொம்ப நல்ல ராசி.”

வீட்டின் விட்டத்தைப் பார்த்துக் கும்பிட்ட வாசுகியைக் கடுப்பாக முறைத்தவன்,  “இப்ப நான் சொல்றத முழுசா கேட்கப் போறியா இல்லயா?  எனக்கு நீ பார்த்து வச்சிருக்கப் பொண்ணப் புடிக்கல.”

“பார்க்கறதுக்கு முன்னாடியே எப்படிடா புடிக்கும்?  வந்து கோவில்ல பொண்ணப் பாரு, அப்படியே மயங்கிப் போயிடுவ.  கொள்ள அழகா இருப்பாத் தெரியுமா?”

அவனிடம் பேசிக் கொண்டே தாம்பாளத் தட்டுகளை எடுத்து வந்து சுந்தரிடம் கொடுத்தவள்,

“எல்லாப் பொருளும் சரியா இருக்கா? சுந்தர் செக் பண்ணிட்டியா?”

“எல்லாம் சரியா இருக்குக்கா.  மாலையும் பூவும் மட்டும் வாங்கிட்டாப் போதும்.”

மேஜையின் மேல் வைத்திருந்தக் கவரை எடுத்து கதிரின் கைகளில் திணித்தவள்,

“இங்க பாரு, மசமசன்னு நிக்காத.  கோவிலுக்குப் போகனும்,   நேரமாகிடுச்சி.  இதுல உனக்கு புது பட்டு வேட்டி சட்டை வச்சிருக்கேன்.  உன் ரூம்ல போய் குளிச்சிட்டு ரெடியாகி மாலையும் பூவும் வாங்கிகிட்டு நேராக் கோவிலுக்கு வந்துடு.”

“அக்கா,  நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்கா.”

“அதெல்லாம்  கோவிலுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நைட்டு   பேசிக்கலாம்.”

தனது ஃபோனை எடுத்தவன்,  “உன் கிட்ட பேசினா சரிப்பட்டு வராது.   நான் தலைவர்கிட்ட பேசிக்கறேன்.”

“அதெல்லாம்   நான் அவர்கிட்ட மதியானமே சொல்லிட்டேன்.   அவருக்கு டபுள் சந்தோஷம்.   நாளைக்கு மதியம் ஃப்ளைட்ல வர்றாராம்.  வந்ததும் பொண்ணு வீட்டுல போய் உறுதி பண்ணிட்டு வந்துடலாம்னு சொல்லியிருக்காரு.  இப்ப கட்சி மீட்டிங்ல இருப்பாரு.”

எரிச்சலுடன் முறைத்தவனைப் பார்த்து,

“சின்னப் புள்ளைங்க மாதிரி அடம் பிடிக்காம கிளம்பி வா கதிரு.   சுந்தர் நீயும் இவனும் போயிட்டு கிளம்பி நேரா கோவிலுக்கு வந்துடுங்க.  மாலையும் பூவும் மறந்துடாதீங்க.”  என்றவள் மீண்டும் சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்.

படு கோபமாகக் கால்களைத் தரையில் உதைத்தவன்,   சுந்தரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தபடி வெளியேறினான்.

ஸ்கார்ப்பியோ அரைவட்டமடித்து வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில்  கதிரின் கோபம் தெரிந்தது.  ஸ்டியரிங்கைக் கைகளால் வளைத்துக் கொண்டே,

“எவடா அவ?  அக்கா எனக்காகப் பார்த்து வச்சிருக்கப் பொண்ணு?   யாரோடப் பொண்ணு?”

“ஹி… ஹி…  அதுக்குள்ளப் பொண்ணப் பார்க்கனுமா உனக்கு? அவசரப் படாதண்ணா.  பொண்ணக் கோவில்ல காட்டுவாங்க. அப்பப் பார்த்துக்கலாம்.”

“ஓங்கி மிதிச்சேன்னு வை. ரோட்டுல போய் விழுவ. வாய மூடிகிட்டு வா.”

எரிச்சலாக இருந்தது கதிருக்கு.  தான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல்,    வாசுகிப் பிடிவாதமாக இருப்பது கடுப்பைக் கிளப்பியது.  வாசுகியிடம் பெண் பார்ப்பதை நிறுத்தச் சொல்லி, எப்படிச் சொல்வது என்று யோசித்தபடி வந்தான்.

சற்று நேரம் அமைதியாக இருந்த  சுந்தர் மெதுவாக,

“எனக்கு வாசுகி அக்கா பண்றது ஒன்னும் பிடிக்கல ண்ணா”  என்றவனைப் புருவம் உயர்த்திப் பார்த்த கதிர்,

“ஏன்டா?”

“நீ என்ன சொல்ல வர்றேன்னு காது குடுத்துக் கேட்டுச்சா அக்கா.  உனக்கு எவ்வளவு கஷ்டமா  இருந்திருக்கும்?”

“ம்ப்ச்…  உனக்காவது புரியுதே. எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா? என்னென்னவோ நினைச்சிட்டு வந்தேன்.”

“கவலைப் படாதண்ணா…   நைட்டு போய்ப் பார்த்துக்கலாம்.  எப்படியும்  மீதி இருக்கும்.”

சுந்தரைப் புரியாமல் பார்த்தக் கதிர், “என்னாதுடா?”

“பாயாசம்…   மதியம் வச்சது.”  கொலை  வெறியில்  கதிர் முறைப்பதைக் கவனிக்காமல்,

“இன்னைக்கு மதியம் வடை பாயாசத்தோட எங்களுக்குச் சாப்பாடுண்ணா.  ஃபுல் கட்டு கட்டுனேன். பருப்புப் பாயாசம். உனக்கு கூட ரொம்பப் புடிக்குமே. அதத்தான அக்காகிட்ட அவ்வளவு நேரமா கேட்டுட்டு இருந்த?”

வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியவன் அவனைப் பார்த்து,

“கீழ இறங்கி டயர்ல காத்து இருக்காப் பாரு.”  கதிர் கூறியதும்,

“ஏன் ண்ணா? சரியாதான இருக்கும்”  என்றபடி கீழே இறங்கிய சுந்தர் நான்கு டயர்களையும் சுற்றிப் பார்க்க,   கார்க் கதவை மூடி   ஜன்னலைத் திறந்தவன்,

“பொடிநடையா  நடந்து வீட்டுக்கு வா.  அப்பதான் உனக்கு கொழுப்புக் குறையும்”  என்றபடிக் காரைக் கிளப்பிச் சென்று விட்டான்.

“அண்ணா…  அண்ணா… “ கத்தியவன்,  கார் நிற்காமல் போகவும் ஒரு ஆட்டோவைப் பிடித்து கதிரைப் பின்தொடர்ந்தான்.

 

மாடியறைக்குள் சிவரஞ்சனியின் மனம் பல்வேறு யோசனைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

‘வாசுகி  அக்கா சொல்றத அவர் கண்டிப்பா கேட்பாரு. அவங்க அவருக்குப் பெரிய வசதியான இடத்துல, நல்லா அழகானப் பொண்ணு பார்த்திருப்பாங்க. கண்டிப்பா நாம அதுக்குத் தடையா இருக்கக் கூடாது.’  என்று யோசித்தது ஒரு மனது.

‘ஆனா அவருக்கு என்னைத் தான பிடிச்சிருக்கு.  அத அவங்க அக்காகிட்ட, அவர் சொல்ல மாட்டாரா? அவர் மனசுக்குப் பிடிச்ச என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தான அவர் ஆசைப்படுவாரு’  என்று யோசித்தது இன்னொரு  மனது.

‘அவர் ஆசைப்படறது அவங்க அக்கா ஆசைப்படறதெல்லாம் விடு.  உனக்கு  கதிர் மேல் ஆசையில்லயா?  கதிர் இல்லாமல் நீ இருந்து விடுவாயா?’  என்று கேள்வி எழுப்பியது மற்றொரு மனது.

மனம் வெகுவாகக் குழம்பிப் போயிருந்தாலும்,   கைகள் அதன் போக்கில் அனுவுக்கு அழகாக தலைப் பின்னி விட்டிருந்தது.

அனுவும் ஆதவனும் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்று அவர்களுக்குச் சமமாக விளையாடிக் கொண்டிருந்தவள்,  இறுதியாக அவர்களைப் படம் வரையச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

கோவிலுக்கு எடுத்துப் போக வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வேலையாட்களை  வைத்து வண்டியில்   ஏற்றிய வாசுகி, பிள்ளைகளை  அழைக்க மாடியேறினாள்.

“சின்னப் புள்ளைங்களக்கூட கிளப்பிடலாம் போல, இந்தக் கதிரக் கிளப்பறதுக்குள்ள நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது.”  புலம்பியபடி  குழந்தைகளின் அறைக்குள்  நுழைந்தாள்  வாசுகி.

“ஒருவழியா கதிரை சமாதானப் படுத்தி,   கிளம்பி ரெடியாகி  வரச் சொல்லி அனுப்பியிருக்கேன்.  அவங்க நேரா கோவிலுக்கு வந்துடுவாங்க.   நாமும் கிளம்பலாம்.”

“…”

“சிவரஞ்சனி உனக்கு ட்ரெஸ் கீழ ரூம்ல எடுத்து வச்சிருக்கேன்.  நீ போய் சீக்கிரம் கிளம்பு.”

“நான் வரல க்கா.  நீங்க போயிட்டு வாங்க. நான் வீட்டுல இருந்துக்கறேன்.”

“எதுக்கு? வீட்ல தனியா இருந்து என்ன செய்யப் போற?  கோவிலுக்குக் கூட வந்தா இந்தப் பசங்கள நீ பார்த்துக்குவ.  நான் நிம்மதியா மத்த வேலைகளைப் பார்ப்பேன்.

அதுமட்டுமில்லாம நம்ம வீட்டு விசேஷம் இது. நீ இல்லாம எப்படி?   இனி நீயும் இந்த வீட்டுப் பொண்ணுதான்.  போய் ரெடியாகு போ.”

மனம் முழுவதும் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல கணமாக இருந்தாலும்,  துயரத்தை முகத்தில் காட்டாமல் இயல்பாக வைத்தபடி,

“பொண்ணு ரொம்ப அழகா இருப்பாங்களா அக்கா?”

“ம்ம்ம்…  கொள்ளை அழகா இருப்பா. மூக்கும் முழியும் நல்ல லட்சணமா இருக்கும்.  அட, அழகக் கூட விடு.  என்ன மாதிரியான குணம் தெரியுமா?  கதிர் சட்டுசட்டுன்னு கோபப் படற குணத்துக்கு, இவ அப்படியே ஆப்போசிட்.  அவ்வளவு அமைதியான பொறுமையான குணம்.

ரொம்ப நல்ல மனசுள்ள பொண்ணு. பணம் காச விட சொந்தம்தான் முக்கியம்னு நினைக்கிற குணம் யாருக்கு வரும் சொல்லு?”

மிகவும் தயக்கத்துடனே கேட்டாள், “ அ… அவருக்குப் பொண்ணு பிடிச்சிருக்கா? சரின்னு சொல்லிட்டாரா?”

“கதிரப் பத்தி எனக்குக் கவலையே இல்லம்மா.  நான் எந்தப் பொண்ணப் பார்த்துக் கையக் காட்டுறேனோ, அந்தப் பொண்ணு கழுத்துல தாலியக் கட்டுவான்.

அந்தப் பொண்ணு சம்மதம் சொன்னதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷம்.   அதுக்குதான்   கோவில்ல அபிஷேகமும் பூஜையும் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

அப்படியே பொண்ணையும் வரச் சொல்லியிருக்கேன்.  பார்த்துட்டு வந்திடலாம்.”

பேசிக்கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த வாசுகி சிவரஞ்சனிக்கு என்று எடுத்து வைத்திருந்த புடவையையும் சில நகைகளையும் எடுத்துக் கொடுத்தாள்.

“அக்கா இதெல்லாம் வேணாம்.  நான் சுடிதாரேப் போட்டுக்கறேன்.”

“சுடிதார் தினம்தான் போடற.  கோவிலுக்கு வரும்போது புடவைகட்டி தலைநிறைய பூ வச்சி நகை போட்டு வரனும்.  அப்பதான் பார்க்க மங்களகரமா இருக்கும்.  சொல்றதக் கேட்கனும்.  போ…  புடவையக் கட்டிட்டு வா.”

வாசுகியின் பேச்சை மறுக்க முடியாமல்,  சிவரஞ்சனி புடவையைக் கட்டித் தயாராகவும்,  வீட்டைப் பூட்டிக் கொண்டு அனைவரும் கோவிலுக்கு விரைந்தனர்.

மாலையையும் பூவையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்த கதிர் மிகவும் எரிச்சலான மனநிலையில் இருந்தான்.   கோவில் வாசலில் காரை நிறுத்திவிட்டு வந்தவனை எதிர்க் கொண்டனர் சற்று முன்னதாகவே கோவிலுக்கு வந்திருந்த  சுந்தரும் அவனது சகாக்களும்.

“அண்ணா…  கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க…  வாழ்த்துகள்.  அண்ணி  தேவதை மாதிரி இருக்காங்க ண்ணா.   உள்ள  போய் உடனே ஓகே சொல்றீங்க…   எல்லாருக்கும் விருந்து   குடுத்து ஜமாய்க்கிறீங்க.”

என்ற சுந்தரைத் தொடர்ந்து மற்றொருவனும்,

“ஆமாண்ணா…  அண்ணி உங்களுக்கு ரொம்பப் பொருத்தம்.”   என்க,  மற்றொருவனோ,

“டேய்…  அண்ணன் இவ்வளவு அழகா பொண்ணு கட்டனும்னுதான் ஆஞ்சநேயர  தினமும் சுத்திச்  சுத்தி  வந்தார் போல…”  என்று கூறி வெடிச் சிரிப்பு சிரிக்க,  கதிருக்கு பிபி கொஞ்சம் கொஞ்சமாக ஏறத் துவங்கியது.

அனைவரும் கோரசாக, “ அண்ணா…  கண்டிப்பா எங்களுக்கு பலமா பேச்சுலர்ஸ் பார்ட்டி வைக்கனும், இப்பவே சொல்லிட்டோம்.”

“மொத்தமா ஒரு டின் பாலிடாயில வாங்கி எல்லாருக்கும் ஊத்திடறேன்.”  கடுப்பாகக் கூறியவன் அவர்களைத் தாண்டி உள்ளே சென்றான்.

கோவிலுக்குள் நுழைந்த  கதிரை எதிர்க் கொண்டார் கோவில் குருக்கள்.

“வாடா அம்பி…  கல்யாணக் களை வந்துடுத்து   நோக்கு. பொண்ணு நன்னா லட்சணமா இருக்காடா அம்பி. கடிவாளம் கட்டின குதிரையாட்டம், ஆஞ்சிநேயர சுத்திட்டு அப்படியே போயிடுவ.  பெருமாள் எப்படி அவர்கிட்ட வரவச்சார் பாரு உன்னை.

போ…  பெருமாள் சன்னதியில  உங்க அக்கா,  புள்ளைங்க எல்லாரும் இருக்காங்க.  அங்கதான் அபிஷேகம் நடக்குது.”

என்றவர் நகர்ந்துவிட,  கடுப்புடன் அவரை முறைத்தபடி பெருமாள் சன்னதி நோக்கி நடந்தான்.

வழியில்… தினமும் அவனைக் கோவிலில் சந்திக்கும் பெண்மணி ஒருவர்,

“கதிரு…   பொண்ணு   சூப்பர்… உனக்கேத்தப் பொண்ணுதான்.  தங்கச்சிலையாட்டம்  இல்ல இருக்கு. இத்தனை  நீ நாள் ஆஞ்சநேயர  சுத்துனது வீண் போகல”   என்று கூறவும், அவர் தலையில் நறுக்கென்று குட்டுவதற்குப் பரபரத்தக்  கையை, மற்றொரு கையில் இருந்த மாலைக் கவரை மாற்றி  அடக்கியவன்,   தன் பற்களை முழுவதும் காட்டி இளித்தான்.

“என்னவோ போ…  பொண்ணு அமைஞ்சதும்தான் கதிர் முகத்துல சிரிப்பையே  பார்க்க முடியுது”  என்று தனக்குள் கூறியபடி நடந்தார் அந்தப் பெண்மணி.

கொலைவெறியில் அந்தப் பெண்மணியைத் திரும்பி முறைத்தவன்,  அனைவரையும் கடித்துக் குதறி விடும் கோபத்தோடு சன்னதிக்குள் நுழைந்தான்.  அவனை எதிர் கொண்ட வாசுகி,

“ஏன் லேட்டு கதிர்?  மாலையையும் பூவையும் கொண்டா.”  அவன் கையில் இருந்த கவர்களை வாங்கியவள், அவனையும் அழைத்துக் கொண்டு கர்ப்பக்கிரகத்தின்   அருகில் சென்று நின்று  கொண்டு, அபிஷேகத்தைப் பார்த்தாள்.

குழந்தைகள் இருவரும்  கதிரின் அருகே வந்து நின்று கொண்டனர்.

கதிரின் கண்களோ வாசுகியின் மறுபுறத்தில் நின்று கொண்டு, ஐயரிடம் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை, ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த, தன்னவளின் மீதே நிலைத்திருந்தது.

அரக்கு நிறத்தில், மெல்லிய சரிகையிட்டக் காஞ்சிப் பட்டு அவளுடலைத் தழுவியிருந்தது. கண்களை உறுத்தாத மெல்லிய நகைகளை அணிந்திருந்தாள்.  இறுகப் பின்னிய நீண்ட கூந்தலும்,  தலை   நிறைந்த மல்லிகையுமாய் நின்றவளின் அழகு அவனைக் கவர, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது விலாவில் தனது கைகளால் இடித்த வாசுகி,   “அபிஷேகத்தைப் பாரு” என்க…

‘முடியாது… உன்னால ஆனதைப் பாரு’   என்று மனதிற்குள் முனுமுனுத்தவன், தன்னவளைச் சைட்டடிக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

‘என்னைத் திரும்பிப் பாரு…  என்னைத் திரும்பிப் பாரு…’ என்று  மீண்டும் மீண்டும் மனதிற்குள்  சிவரஞ்சனியிடம் கூறி, டெலிபதிக்கு வேறு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

டெலிபதி வொர்க்  அவுட் ஆகி அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனை முறைத்துவிட்டு  மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

‘போச்சுடா…  இவள வேறச் சமாதானப் படுத்தனுமா?’   மனதிற்குள் நொந்து கொண்டவன், பெருமாளிடம் அவசர உடன்படிக்கை ஒன்றைப் போட்டான்.

‘இங்க பாருங்க… நீங்க ரெண்டு பொண்டாட்டி கட்டியிருக்கறதாலதான், நான் இதுவரை உங்களை வந்து பார்க்கலை. தப்புதான் மன்னிச்சிடுங்க.  எப்படியாவது எங்க அக்கா மனச மாத்தி, என் சிவரஞ்சனியை எனக்கு பொண்டாட்டியாக்கிட்டா,  அப்புறம் கோவிலுக்கு வரும்போதெல்லாம் உங்களைப் பார்க்காம போக மாட்டேன்.  டீல் ஓகேவா…’

உன் நிலைமை இப்படி ஆகிடுச்சே கதிரு, என்று   நினைத்த அந்த ஏழுமலையான் சிரித்துக் கொண்டார்.

ஒரு வழியாக அபிஷேகம் அர்ச்சனை அனைத்தையும் முடித்து விட்டு, பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகித்தவர்கள்,  பிரகாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாக,  கதிரிடம் கூறிவிட்டுச் சென்றிருந்தாள் வாசுகி.

மிகவும் டென்ஷனாக நின்று கொண்டிருந்தான் கதிர்.  சிவரஞ்சனியைக் கண்களால் தேடியவன், அவள் சற்று தூரத்தில் அனுவுக்கும் ஆதுவுக்கும் பிரசாதத்தை ஊட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். “கொஞ்சமாவது கவலை இருக்கா பாரு…  பிக்னிக் வந்தவ மாதிரி இருக்குறா…”  மனதிற்குள் புலம்பினான்.

 

‘அக்கா மனசு வருத்தப் படுமேன்னு பார்த்தா,  அவ்வளவுதான் கதிரு… உன் தலையில வேற எவளையாவது கட்டி வச்சிடும். அக்காவ  எதிர்த்துப் பேசறதுதான் சரி.

சும்மாகூட எவளையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை நான்.  இன்னைக்குப் பொண்ணு மட்டும் பார்த்துடுவனா?  யார்கிட்ட?  கண்ண இறுக மூடிக்கடா கதிரு.’  மனதிற்குள் பேசிக் கொண்டவன், கோவில் தூணோரம் கண்களை மூடியபடி நின்று கொண்டான்.

அவன் அருகில் வந்து நின்ற வாசுகி,  “ டேய் தூணோரம் உரசிக்கிட்டு, கண்ண மூடி என்ன ஜெபம் பண்ணிகிட்டு இருக்க?  பொண்ணு   வந்திருக்கா, கண்ணத் தொறந்து பாரு.”

பலமாக மண்டையை ஆட்டியவன், “முடியாது…  நான் பார்க்க மாட்டேன்.  எனக்குப் பொண்ணப் புடிக்கல.”

“டேய்…  அதப் பொண்ணப் பார்த்துட்டுச் சொல்லுடா.”

“நீ என்ன சொன்னாலும் சரி,  எனக்கு இந்தப்   பொண்ணப்  புடிக்கல.  நான் இவளக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”

அதற்குள் அருகே வந்த சுந்தர், அனு, ஆதவன் அனைவரும் பெண்ணைப் பார்க்கும் படி கூறினர்.

“அண்ணா…  பொண்ணப் பாருண்ணா… தேவதையாட்டம் இருக்கு”

“மாமா… அத்தை சூப்பரா இருக்காங்க, பாரு மாமா”

“முடியாது…  முடியாது…  யார் என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது.  எனக்கு இந்தப் பொண்ணு வேணாம்.”

“உண்மையாதான் சொல்றியா கதிர்?  இந்தப் பொண்ணோட முகத்தைப் பார்த்து, ஒரு தடவை சொல்லிடு உன்னை விட்டுடறேன்.”

அதுவும் சரிதான், இவர்களிடம் சொல்வதற்கு  பதில், சம்பந்தப்பட்ட பொண்ணுகிட்டயே சொல்லிடலாம், என்று  முடிவெடுத்தவன் வாசுகியின் புறம் திரும்பியவாறே,

“இந்தாம்மா  பொண்ணு…  எனக்குச் சுத்தமா உன்னப் புடிக்கல”   என்றபடி  அருகே நின்றிருந்தப் பெண்ணைப் பார்க்க,   அங்கே குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்த சிவரஞ்சனியைக் கண்டதும்,  உன்னக் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்ற வார்த்தைகளை வாய்க்குள் விழுங்கினான்.

அவளைக் கண்டதும் இன்பமாக அதிர்ந்தவன்,  அசடு வழிய வாசுகியைப் பார்த்து,  “சிவா தான் பொண்ணாக்கா?”

அவனைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிய வாசுகி, “என்னடா பொண்ண உனக்குப் புடிக்கலையா?”

“அய்யய்யோ… அதெல்லாம் இல்லக்கா, நீ சொல்லி நான் மறுத்துப் பேசுவனா?   ஹி…ஹி…ஹி…  பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா.”

வளைந்து நெளிந்து அசடு வழிந்தவனைப் பார்த்த வாசுகி,  “அய்ய…  ரொம்ப வழியுது கொஞ்சம் துடைச்சிக்கோ.”

“பாரு சிவரஞ்சனி… இத்தனை பேரு சொல்றோம்,  உன்னைப்   பிடிக்கலை  பிடிக்கலைன்னு  சொல்றான்.  அவனைக் கொஞ்சம் என்னன்னு கவனி”  என்று அவனைச் சிவாவுடன் கோர்த்து விட்ட வாசுகி,  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பிரகாரத்தை வலம் வரச் சென்றாள்.

குறும்பாகப் பார்த்துச் சிரித்தவளை ஆசையுடன் நெருங்கியவன், “ஏய்…  நீயாவது சொல்லக் கூடாது.   நீதான் பொண்ணுன்னு.  எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா?”

“எனக்கும் கோவிலுக்கு வரும் வரை தெரியாது. என்னையும் நல்லா பயமுறுத்தி விட்டுட்டாங்க வாசுகி அண்ணி.”

அவளை   ஆசையாகப்  பார்த்தபடி தன் வலது கையை நீட்டி, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டவன்,  “வா திரும்பவும் சாமிய கும்பிட்டு வரலாம்”  என்று அழைத்தான்.  (டீல் ஓகே ஆகியிருக்கு தேங்க்ஸ் சொல்ல வேணாம்)

அதற்குள் ஒரு சுற்று முடித்து இவர்களை நெருங்கிய வாசுகி, “டேய்…  இது கோவில் கையத் தொடாம பேசு.” என்று  இருவரையும் விலக்கி விட.

கடுப்பான கதிர், “கையதானக்கா பிடிச்சேன். நீ எங்களப் பார்க்காம ஒழுங்கா பிரகாரத்தை சுத்து போ.”

அவனை முறைத்த வாசுகி, “ஓ…  இனிமே இந்த அக்கா தயவு உனக்குத் தேவையில்லயோ?  கவனிச்சுக்கறேன்டா உன்ன”

“சரி…  சரி…  உனக்கு எப்படி  எங்க  விஷயம் தெரியும்?”

கெத்தாக இல்லாதக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்ட வாசுகி,

“எனக்கு ஊர் முழுக்க ஸ்பை இருக்கு. நீயும் உன் தலைவரும் என்ன செய்தாலும் எனக்குத் தெரிஞ்சிடும். ”

“ஸ்ஸ்…  அப்பாடா…  உன் பில்டப் தாங்கல. எப்படித் தெரியும் சொல்லு?”

“தீனதயாளன் வைஃப் ஃபோன் பண்ணிச் சொன்னாங்க இந்த சார்தான் புருஷன்னு இந்த மேடம் எழுதிக் குடுத்ததாவும்,  கஞ்சி போட்ட சட்டை மாதிரி விரைப்பா இருக்கற நம்ம கதிரு வெக்கப்பட்டு சிரிச்சதாவும்,  எனக்குக் காலையிலயே நியூஸ் வந்துடுச்சி.”

என்றவள் மீண்டும் பிரகாரம் சுற்றச் சென்றாள். போகும் வாசுகியைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தவன்,  மீண்டும் சிவரஞ்சனியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு சன்னதிக்குள் நுழைந்தான் டீலுக்கு நன்றி சொல்ல.

 

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொப்பனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம்

 

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

AOA- 16

அவனன்றி ஓரணுவும் – 16

இந்தியாவிலேயே முற்றிலும் இயற்க்கை வேளாண்மைக்கு மாறிய பெருமை பெற்றிருக்கிறது சிக்கிம்.  இம்மாநில மக்கள் ராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் இல்லாமல் விவாசாயம் செய்து வருகின்றனர்.

ஆனால் அதே தேசத்தில் வேளாணில் சிறந்து விளங்கய ‘நெற்களஞ்சியம்’ என்று போற்றப்பட்ட ஒரு ஊரில் விவாசயத்தை அழித்து மீத்தேன் வாயு எடுக்க போகிறார்கள்.

பிரபஞ்சன் அந்த தொலைக்காட்சியின் முன் அப்படியே சிலையாக சமைந்துவிட்டான். அப்போது அவனுடைய கைப்பேசியில் சேது எதிர்புறத்தில் பேசி கொண்டிருந்தது கூட அவனுக்கு மறந்து போனது.

“பிரபா… பிரபா” என்ற சேதுவின் கத்தல்கள் ஒன்றும் அவன் செவிகளை எட்டவில்லை. அந்தமான் தீவுகளில் நிலஅதிர்வு ரொம்பவும் அதீதமாக உணரப்பட்டதாக சொல்லி கொண்டிருந்தார் அந்த செய்தி வாசிப்பாளர்.

அவன் எதிர்நோக்கியிருந்த ஆபத்து அவர்களை ரொம்பவும் நெருங்கி வந்துவிட்டிருந்ததாக அவனுக்கு தோன்றியது.

அதேநேரம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் அரசாங்கம் பாதுக்காப்பு நடவடிக்கைகளை வேகமாக முடக்கிவிட்டிருந்தது. ‘டிசெஸ்டர் மேனேஜ்மென்ட்’ என்ற பெயரில் ‘டி’ என்ற ஒரு குழுவை அமைத்து 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு  வர போகும் பாதிப்பை தோராயமாகக் கணித்து முன்னெச்சரிக்கை திட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆதலால் கடலோர மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு அவர்களே அனுப்பியிருந்தனர்.  அதேநேரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் செய்தியை பார்த்த மக்களும் பாதுக்காப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சனை இப்போது அது மட்டுமே அல்ல. அதை விடவும் பெரிய ஆபத்தல்லவா எல்லோரின் தலை மீதும் கத்தியாக தொங்கி கொண்டிருந்தது.

இயற்கை சீற்றத்தை விட மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் பேரழிவு மிகவும் கொடூரமானது. உலக நாடுகள் பலவும் அணுமின் நிலையங்களின் ஆபத்தை உணர்ந்து  அணுஉலைகளை மூடி கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. டெக்னாலஜியில் சிறந்து விளங்கும் ஜப்பானும் கூட மின்உற்பத்திக்கு அணுஉலை வேண்டாமென மாற்று வழிகளை தேடி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அணுகழிவு கட்ட இடம் தேடி கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பசிக்கு தன் சொந்த கையையே வெட்டி உண்ணும் அறிவீனமான காரியம் அது என்று அவர்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது?!

நாட்டின் வளர்ச்சிக்காக நம் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையையே பலிகடாவாக மாற்ற துணியும் அவலம். ஆனால் அது பற்றியெல்லாம் யோசித்து இனி ஒன்றும் ஆகிவிட போவதில்லை.

தான் கண்ட கனவுக்கான தீர்வுதான் என்ன? என்று பிரபஞ்சன் எண்ணலைகள் முழுவதுமாக அணுஉலைகளுக்கு ஏற்பட போகும் ஆபத்தினால் பரவ போகும் அதிபயங்கரமான விளைவுகள் குறித்துத்தான்.

என்ன யோசித்த போதும் அவனால் ஓர் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சிந்தனையோடு அரை மணி நேரம் கழிந்துவிட, அசைவின்றி அமைதியே உருவமாக சோபாவில் அமர்ந்திருந்தான் அவன்.

அப்போது ஷெர்லியும் ஹரியும் வீட்டிற்குள் நுழைய, அவர்களுடன் சத்யா குடும்பமும் வந்தது. அவர்களை பார்த்த நொடி அவன் வியப்போடு எழுந்து நின்றான்.

அப்போது ஹரி லோகநாதனின் தோள் மீது கை போட்டு, “ஒன்னும் நடக்காது லோகா! இது வெறும் எச்சரிக்கைதான்” என்று சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்து கொண்டிருந்தார். அதோடு அவர் குடும்பத்தாரையும் மரியாதையாக உள்ளே அழைத்தார்.

அப்போது லோகநாதனின் பார்வை அவருக்கு நேரெதிரே நின்றிருந்த பிரபஞ்சன் மீதுதான் விழுந்தது.

கொஞ்சம் கூட யோசிக்காமல் எல்லோர் முன்னிலையிலும் அவனை ‘அனாதை’ என்று சொல்லி அவாமானப்படுத்திவிட்டு இப்போது தன் குடும்பத்தோடு அவன் வீட்டிற்கே அடைக்கலம் தேடி வந்திருக்கிறோமே என்று அவர் உள்ளம் குற்றவுணர்வில் மருகியது. அதுதான் விதியின் விளையாட்டு என்பது!

பல நேரங்களில் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில்தான் சில அற்புதமான பாடங்களை மனிதன் கற்று கொள்ள நேர்கிறதே!

சத்யாவின் வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது சுனாமி தாக்க போகும் எச்சரிக்கை செய்தி காட்டு தீ போல் பரவியது. அடுத்த நொடியே அவர்கள் வீட்டில் குழுமியிருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டு சென்றுவிட, கால்மணி நேரத்தில் அந்த வீடே வெறிச்சோடி போனது.

அத்தனை நேரம் சந்தோஷமாக திருமண கொண்டாட்டத்தோடு குதூகலித்த அந்த வீடு மயான அமைதியில் மூழ்கியது. அந்த சமயத்தில்தான் ஷெர்லியும் ஹரியும் அங்கே வந்தார்கள்.

லோகநாதன் ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார்.

சத்யா தன் தந்தையிடம், “அப்பா வாங்க ப்பா… இங்கிருந்து உடனே கிளம்பலாம்” என்று அச்சத்தோடு தெரிவிக்க, அவரின் சகோதரிகளும் மனைவியும் கூட அதையேதான் உரைத்தார்கள். ஆனால் லோகநாதன் அதிர்ச்சியில் பதிலின்றி அமர்ந்திருந்தார்.

அவரை குழப்பமும், எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது என்ற கவலையும் பீடித்திருந்தது. அந்த வீடு அவர்கள் குடும்ப சொத்து. அவர்கள் சந்ததிகளாக மரியாதையோடு வாழ்ந்து வந்த இடம்.

கடல் மட்டம் வருடங்கள் கடந்து, தன் கரையை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து கொண்டே வந்திருந்தது. அதன் காரணத்தாலேயே இப்போது அவர்கள் வீடு கடற்கரைக்கு அருகாமையில் இருந்தது.

முந்தைய தடவை சுனாமி வந்த போது கூட அவர்கள் வீட்டிற்கு முன்பிருந்த மற்ற வீடுகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. அதன் காரணத்தால் இப்போது அவர்கள் வீடுதான் கரையையொட்டி இருக்கிறது.

பலரும் சுனாமி ஆபத்தை குறிப்பிட்டு அந்த வீட்டையும் இடத்தையும் விற்றுவிடும்படி முன்னமே எச்சரிக்கை செய்த போதும் கூட தங்கள் குடும்பம் வழிவழியாக வாழ்ந்த இடம் என்று  அவர்கள் யார் வார்த்தைக்கும் அவர் மதிப்பு கொடுக்கவில்லை.  அதுவுமில்லாமல் அந்த இடத்தின் மீதிருந்த  பற்று காரணமாக தற்சமயம்தான் ஏகபோகமாக செலவு செய்து அவர் அந்த வீட்டை புதிப்பித்து கட்டியிருந்தார். அதற்கு முக்கிய காரணம் அவர் ஈகோவும் கூட. தான் பிறந்த ஊரில் கௌரவத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்ற ஈகோ!

இப்போது லோகநாதனால் தான் தவறு செய்துவிட்டோம் என்பதை ஏற்க முடியவில்லை. தன் தோல்வியை அவரால் தாங்கி கொள்ளவும் முடியவில்லை. அந்த வீட்டை அத்தனை சாதாரணாமாக விட்டுகொடுக்கவும் முடியவில்லை. அதில் தன்னுடைய  கௌரவமும் ஈகோவும் அடங்கியிருப்பதாக எண்ணினார். ஆதலாலேயே தன் மனைவி மக்களிடம்,

“நான் என் வீட்டை விட்டு வர மாட்டேன்… சாவே வந்தாலும் அது என் வீட்டிலேயே நடக்கட்டும்… நீங்க எல்லாம் கிளம்புங்க” என்று சொல்ல, “அப்பா” என்று சத்யா அதிர அவர்கள் குடும்பத்தாரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

மனிதன் தான் வாழும் காலங்களில் அதிகம் பற்று கொண்டுவிடுவது இந்த நிலையற்ற சொத்து பணம் மற்றும் ஆடம்பரத்தின் மீதுதான். நிரந்தரமாக இந்த பூமியில் இந்த சொத்துக்காக உறவுகள் நண்பர்களை கூட அவன் பகையாக மாற்றி கொள்ளும் அறிவீனத்தை செய்கிறான்.

வாழ்க்கையில் சாசுவதமானது உண்மையான அன்பு என்பதை இந்த மாதிரியான இயற்கை சீற்றங்கள்தான் மனிதனுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்தி கொண்டிருக்கின்றன.

குஜராத்தில் பூகம்பம் வந்த போது செல்வந்தர்கள் பலரும் தன் சொத்து வாசல் வீடு இழந்து நடுத்தெருவிற்கு வர நேர்ந்தது. புகுஷிமா சுனாமியில் பாதிக்கப்பட்ட பலரும் வசதி படைத்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பாட்டில் தண்ணீர்க்காகவும் ஒரே ஒரு சாப்பாடு பொட்டலத்திறக்காகவும் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று வாங்கவேண்டியிருந்தது.

இதையெல்லாம் பார்த்த போதும் மனிதனின் சொத்து பணம் மீதான மோகம் தீர்ந்தபாடில்லை. அடுத்த வீட்டு கூரை எரியும் போது வேடிக்கையாகதான் இருக்கும். அதுவே தன் வீட்டில் எரியும் போதுதான் ஆபத்தின் தீவிரம் புரியும்.

இந்த சூழ்நிலையில்தான் ஹரி லோகாநாதன் வீட்டு வாயிலில் வந்து நின்றார். தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருந்த செய்தியை ஹரி அப்போதுதான் பார்த்தார். பிரபஞ்சனின் இன்ஸ்டிங்கட் பற்றி முன்னமே தெரிந்த அவருக்கே இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்ததெனில் ஷெர்லியை பற்றி சொல்லவா வேண்டும். அவள் விய்யபின் விளிம்பில் நின்றாள்.

ஆனால் எல்லாம் ஒரு சில வினாடிகள் மட்டுமே. ஹரி ஷெர்லியிடம் உள்ளே வர சொல்லிவிட்டு அவரும் உள்ளே நுழைந்தார். சரியாக அப்போது லோகாநாதன் தீர்மானமாக தன் வீட்டை விட்டு புறப்பட மாட்டேன் என்று சொல்ல,

“சூப்பர்… ரொம்ப சூப்பர்” என்று சொல்லி கை தட்டி கொண்டே ஹரி உள்ளே நுழைந்தார்.

லோகாநாதன் முகம் கோபத்தால் சிவக்க, ஹரி சிரித்த முகத்தோடு, “நீ வீட்டை விட்டு வரமாட்டேன்னா… அப்போ நீ இங்கேயே ஜலசமாதி ஆக போறேன்னு சொல்லு” என்று எள்ளிநகைத்தார்.

லோகாநாதன் கோபத்தோடு, “நீ ஏன்டா இங்க வந்த? முதல வெளியே போ” என்று மிகுந்த எரிச்சலோடு சொல்ல, ஹரியின் முகத்திலிருந்த புன்னகை அந்த நொடி மறைந்தது.

“நீ ஒரு நல்ல நண்பனா இருக்க லாய்க்கி  இல்லைன்னு தான் நினைச்சேன்… ஆனா நீ உன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இல்லை… உன் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இல்ல… மொத்தத்தில் நீ ஒரு நல்ல குடும்ப தலைவனும் இல்லை” என்றார். யாராலும் அந்த நொடி எதுவுமே பேச முடியவில்லை.

“ஹரி” என்று லோகநாதன் சீற்றமாக கத்த,

“உண்மையை சொன்னா கோபம் வருதா? ஒரு குடும்ப தலைவனா முன்னாடி நின்னு உன் பொண்டாட்டி புள்ளைங்களை உயிரோட காப்பாத்தணும்னு நினைப்பியா… அதை விட்டுட்டு இந்த கல்லும் மண்ணால கட்டின வீட்டுக்கு என்னவாயிடுமோன்னு இந்த நேரத்தில யோசிச்சிட்டு இருக்கியே… மனுஷனாடா நீ?!” என்று ஹரி பதிலுக்கு அதே கோபத்தோடு கேட்டார்.

லோகாநாதனின் மனதில் அந்த கேள்வி ஈட்டியாக பாய்ந்தது. சில நொடிகள் அந்த இடத்தை கனத்த மௌனம் ஆட்சி செய்ய அந்த சூழ்நிலையை தம் கையில் எடுத்து கொண்ட ஹரி நிதானமாக,

“ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ லோகா! சொத்து, பணம், வீடு எல்லாம் போனா சம்பாதிச்சிக்கலாம்… ஆனா உறவுகள் அப்படி இல்ல” என்றார்.

ஹரி ரொம்பவும் சாதாரணமாக சொல்லிவிட்ட போதும் அது ஹரியின் வாழ்க்கையில் நடந்த கொடூரத்தை லோகநாதனுக்கு நினைவூட்டியது. சொந்த பந்தங்களை மொத்தமாக இழந்து ஊருக்கு தனியாளாக திரும்பிய ஹரியின் நிலைமை மனதை நெகிழ்த்தியது.

ஹரி  லோகாநாதன் தோளில் உரிமையோடு தட்டி, “எழுந்திரு லோகா… முதல இங்க இருந்து கிளம்புவோம்… யாருக்கும் எதுவும் ஆக கூடாது… அதுதான் முக்கியம்” என்று துரிதப்படுத்தினார். அந்த விழிகளில் பகைமை இல்லை. அன்பும் அக்கறையும் நிறைந்திருந்தது.

லோகநாதன் வியப்போடு ஹரியின் முகத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் அந்த அதிர்ச்சியிலிருந்து தேறி கொண்டபடி,

“எங்க கிளம்புறது?” என்று கேட்டார்.

“வேறு எங்க? நம்ம வீட்டுக்குத்தான். அங்கே கண்டிப்பா சேஃப்தான்” என்றார் ஹரி.

அந்த நொடி லோகாநாதன் மனதில் ஹரி வானளவு உயர்ந்து நின்றார். அதுவும் ஹரி தன் குடும்பத்தை இழந்து ஆதரவற்று நின்ற போது அவன் சொத்தை தான் அபகரிக்க திட்டமிட்டோம் என்று அவர் உள்ளம் கூனிகுருகி போனது.

லோகாநாதன் கண்கள் கலங்கிவிட்டது. நண்பனை கட்டியணைத்து கொண்டார். ஹரியின் விழிகளிலும் நீர் நிறைந்தன. ஆனால் அந்த உணர்ச்சிக்களுக்கெல்லாம் இப்போது இடம் கொடுக்காமல்,

“லோகா இந்த மாதிரி இமோஷனல் சீனுக்கு எல்லாம் இப்போ டைம் இல்ல… முதல கிளம்பு… வீட்டுக்கு போலாம்” என்றார்.  அந்த சூழ்நிலையிலும் எல்லோர் முகத்திலும் புன்னகை எட்டி பார்த்தது.

அதேசமயம் அத்தனை நேரம் அப்பாவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் நின்றிருந்த சத்யாவிடம் சென்ற ஷெர்லி, “கம்மான் சத்யா… சூன்… தேவையான திங்க்ஸ் டாகுமென்ட்ஸ் எதாச்சும் இருந்தா பாஸ்ட்டா எடுத்து வைச்சிக்கோ… லெட்ஸ் மூவ்” என்றாள்.

அவள் அவ்விதம் சொல்லவும்தான்  அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த சத்யா சுயநினைவு பெற்று வேகமாக அறைக்குள்  சென்று தேவையான சில முக்கிய பத்திரங்கள் சான்றிதழ்கள் மற்றும் வீட்டிலிருந்த பணம் முதலியவற்றை ஒரு பெட்டியில் அடுக்கி எடுத்து வைத்து கொண்டு அவர்களோடு புறப்பட்டான். அதன் பின் எல்லோரும் பிரபஞ்சன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

லோகநாதன் நேராக வந்து பிரபஞ்சன் கைகளை பிடித்து கொண்டு கண்ணீரோடு, “என்னை மன்னிச்சிடு பிரபா” என்றார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்… நீங்க முதல்ல வந்து ரிலேக்ஸ் ஆகுங்க” என்று லோகாநாதனை அவர்  குடும்பத்தாரையும் மரியாதையாக வரவேற்று அமர வைத்தான்.

ஊடகங்கள்  சூழ்நிலையை தங்களால் முடிந்தளவு பரபரப்பாக மாற்றி கொண்டிருந்தன. எல்லோருடைய கவனமும் அதன் மீது மட்டும்தான்.

பிரபஞ்சன் அந்த டென்ஷனை  தாங்க முடியாமல் சந்தடியின்றி வெளியே தோட்டத்திற்கு வந்து அமர்ந்து கொண்டான்.

தொலைகாட்சியில் வந்த செய்தி வேகவேகமாக அனைத்து சமூகவலைத்தளங்களிலும் பரவ தொடங்கியது. அதுவும் ஒன்றை ஒன்பதாக ஏற்றி சொல்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

சென்னையே மொத்தமாக கடலில் மூழ்க போகிறது என்ற ஒரு அவதூறை சமூக வலைத்தளங்கள் பரப்பியதன் விளைவாக , பேருந்து நிலையம் தொடங்கி விமான நிலையம் ரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல் துறையினர் அவதியுற சென்னையே அன்றைய தினத்தில் அல்லோலகல்லோலப்பட்டு கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படியாக பெரும்பான்மையான மக்கள் ஊரை விட்டு சென்றாவது தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டால் போதுமென்று ஓடி கொண்டிருக்க, இந்த ஆபத்தான சூழ்நிலையையும் மீம்ஸ் போட்டு காலாய்த்து அதை வைரலாக்கி கொண்டிருந்தது மற்றொரு கூட்டம்.

அது அல்லாது இன்னொரு பைத்தியக்கார  கூட்டம் சுனாமி வரும் போது செல்பி எடுக்க வேண்டுமென்று கைபேசியோடு கடலை நோக்கி படையெடுத்து கொண்டிருந்ததால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட பாதுக்காப்பு படையினருக்கும் காவல் துறையினருக்கும் கதிகலங்கி போனது.

இவற்றையெல்லாம் தாண்டி இந்த பூமியில் மனிதநேயம் மொத்தமாக அற்று போய்விடவில்லை என்பதற்கு சாட்சியாக கடலோரத்தில் வாழும் மக்களுக்கு சில தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்க்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

இந்த பாதுக்காப்பு நடவடிக்கைகளின் முக்கிய பங்காக தமிழ்நாட்டின் கடலோரத்தில் இயங்கி கொண்டிருந்த அணுஉலைகள் இரண்டும் சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

ஆனால் அந்த அவசரத்திலும் பதட்டத்திலும் ஊழியர்கள் அதன் இயக்கங்களை நிறுத்திய  போது கல்பாக்கம் அணுஉலையிலிருந்த ஒரு யூனிட்டில் மட்டும் சில இயந்திர கோளாறு காரணமாக மெலிதாக அணுக்கசிவு ஏற்பட்டதை அங்கிருந்த ஊழியர்கள் யாருமே கவனிக்கவில்லை. அவர்கள் எல்லோருமே பதட்டத்திலிருந்த காரணத்தால் அதை அவர்கள் கவனிக்கும் மனநிலையிலும் இல்லை.

***

தோட்டத்தில் அமர்ந்திருந்த பிரபஞ்சனிடம் ஷெர்லி பேசி கொண்டிருந்தாள்.

“இன்னும் ஏன் டென்ஷன்… இனிமே கவர்ன்மென்ட் எல்லாத்தையும் பார்த்துக்கும்”

“எங்க ஊரு கவர்ன்மென்டா?” என்று ஏளனமாக அவளை பார்த்து  சிரித்தவன், “எங்க அரசாங்கத்தோட கடமை உணர்ச்சி பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியாது ஷெர்லி” என்றான்.

ஷெர்லிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் படபடப்பை குறைக்கத்தான் அவனிடம் பேச வந்ததே. ஆனால் அவனோ எல்லாம் கை மீறி போய்விட்டதென்ற மொத்தமாக விரக்தி நிலையில் அமர்ந்திருந்தான்.

அந்த சமயம் சேது அவர்கள் வீட்டின் வாயிலுக்குள் அவசர அவசரமாக உள்ளே நுழைய,

தோட்டத்திலிருந்த பிரபஞ்சன் அவனை பார்த்துவிட்டு, “சேது நான் இங்கே இருக்கேன்” என்று குரல்கொடுத்தான்.

சேது அவனை பார்த்தும் பாய்ந்து கொண்டு வந்து,

“டே! என்னடா நடக்க போகுது… நீ நேத்து சொன்னதுக்கும் இன்னைக்கு நடக்கறதுக்கும் ஏதோ பெருசா சம்பந்தம் இருக்கு மாதிரி தோணுது?” என்று கேட்டான். அருகில் ஷெர்லி நின்று கொண்டிருந்ததை சேதுவின் மூளை பதிவு கூட செய்யவில்லை. அவன் மனநிலை அப்படியிருந்தது.

சேது மீனவ குடும்பத்தில் பிறந்தவன் ஆதலால் அவன் ஏற்கனவே ஒருமுறை இந்த சுனாமியின் கோர தாண்டவங்களை கண்ணெதிரே பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறானே?

நண்பனை அமைதியடைய செய்ய எந்தவித முயற்சியும் பிரபா மேற்கொள்ளாமல் அவன் முகத்தை பார்த்து, “நுய்க்கிளியர் டிசெஸ்டர்!!!” என்று சொல்ல சேது அதிர்ந்தான்.

பிரபா அப்போது சேதுவிடம் விளக்கமாக அவன் இன்ஸ்டிங்கட் பற்றியும் இப்போதைய சூழ்நிலையில் குறித்தும் அதனால் அவனுக்கு உண்டான பயம் குறித்தும் உரைக்க, சேது முகம் இருளடர்ந்து போனது. அவன் உடல் வியர்வையில் நனைந்தது.

சேதுவின் வீடும் கல்பாக்கம் டவுனில்தான் உள்ளது. பிரபாவின் கனவு மட்டும் நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை அவனால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. அதற்கு பிறகு எந்த நிலைமையிலும் அந்த இடத்தில் வசிப்பதை அவன் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த மொத்த நிலமுமே செர்னோபில் போன்று  ஓர் பேரழிவின் சின்னமாக மாறிவிடும்.

ESK-12

சுவாசம்  12

மேடு பள்ளமற்றச் சீரான சாலை.  அதிகக் குலுக்கலின்றி, மிதமான வேகத்தில் ஸ்கார்ப்பியோ சென்று கொண்டிருந்தது.  சிவரஞ்சனியின் உள்ளம்தான் அதிர்ந்து கொண்டிருந்தது.  கதிர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்தது.

அவன் எந்தச் சலனமும் இல்லாமல் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.  மனம் நிறைந்து நிம்மதியாக இருந்தது அவனுக்கு. என்னவென்றேத் தெரியாமல் வெகுநாட்களாக  உள்ளம் தேடிய தேடல், முற்று பெற்று விட்ட மனநிலை. உலகமே கைவசம் வந்த உணர்வு.

கதிர் எதையும் மனதில் வைத்து மருகும் ஆள் கிடையாது.  எதுவாயிருந்தாலும் பட் படா தான்.  சிவரஞ்சனியின் மீது தோன்றிய உணர்வுகளை இனம் கண்டதும், தயக்கமே இல்லாமல் அவளிடம் கூறிவிட்டான்.

உன்னை காதலிக்கிறேன், நேசிக்கிறேன், உன் மீது உயிராக இருக்கிறேன் என்றெல்லாம் பாலிஷ்ஷாகப் பேசவோ உருகவோத் தெரியாது அவனுக்கு.  காதல் என்ற வார்த்தையை விட அவளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்  திருமணம் என்ற பந்தம்தான்  சரி  என்பது அவனது எண்ணம்.

அவனைப் பொருத்தவரை சிவரஞ்சனியின் புற அழகும் அவனை ஈர்த்ததுதான்.  ஆனால் அதைவிட அக அழகுதான்  வெகுவாக ரசிக்க வைத்தது.  இன்னா செய்தாரையும் ஒறுக்கும்  நல்ல குணம் பிடித்தது.  மனதால் கூட யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று எண்ணும் அவளுடைய தூய உள்ளம் பிடித்தது. அவளுடன் வாழும் வாழ்க்கை   இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

ஆனால் சிவரஞ்சனி வெகுவாகக் குழம்பிப் போயிருந்தாள்.  தன் மீதுள்ள பரிதாபத்தில்தான் அவன் இவ்வாறு கூறியதாக உறுதியாக நம்பினாள்.  தான் அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாத போது,  தன் மீது அவனுக்குப் பிடித்தம் வர வாய்ப்பில்லை என்பது அவள் எண்ணம்.

இங்கு பொருத்தம் என்பது அவளைப் பொருத்தவரை தோற்றம், படிப்பு, வசதிவாய்ப்பு, குணம் எல்லாமே அடங்கும். அவளது மூளை பல்வேறு சிந்தனைகளில் உழன்று அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. காதலில்லாத திருமண பந்தம் எப்படி இருக்க முடியும்? என்பது அவளது எண்ணம்.

ஆனால்  அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறும் போது,  அவனது கண்களில் அவள் கண்ட உறுதி மனதைச் சற்று ஆறுதல் படுத்தியது. மேலும்  வெறும் நான்கு நாட்கள் மட்டுமே பழகிய ஒருவனின் அருகாமை, தனக்கு  அந்நியமாகத் தோன்றவில்லை   என்பதையும் வியப்புடன் உணர்ந்தாள்.

திருமணம் பற்றியெல்லாம்  அவளுக்குப் பெரிதாக கனவோ எதிர்பார்ப்போ எதுவும் கிடையாது.   ஆனால் தனக்கென்று வருபவனுடன் காதலும் புரிதலும் கூடிய, இனிய வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

கதிர் நல்லவன்தான்.  அவன் மனைவியை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்வான் என்பதும் உண்மைதான்.

ஆனால், கதிரைப் பார்க்கும் போது பயத்தைத் தவிர வேறு  உணர்வுகள் எதுவும் தனக்குத் தோன்றவில்லையே என்று குழம்பினாள். அவனுமே தன்னைச் சற்று ஆர்வமாகக் கூடப் பார்த்ததில்லையே என்றும் எண்ணிக்கொண்டாள்..

அவனுக்கும் அவளது குழப்பம் புரிந்துதான் இருந்தது.  தான் சொன்ன விஷயத்தைச் சுத்தமாக அவள் எதிர்பார்க்கவில்லை என்பது, அவளது அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.  அதனால்தான் அவளை நிதானமாக யோசித்து பதில் சொல் என்றான்.

முதலில் அவள் சகஜமாகத் தன்னோடு பேசிப் பழகட்டும், பிறகு அவளது குழப்பத்தைத் தீர்த்து வைக்கலாம் என்று நினைத்தவன், மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“உங்க காலேஜ்ல ஜெயக்கொடின்னு புரஃபசர் யாராவது இருக்காங்களா?”

எதற்குக் கேட்கிறான் என்று புரியாத போதும் வாய் தானாக பதில் கூறியது.

“ம்ம்ம்…  இருக்காங்க”

“உனக்கு பாடம் எடுக்கறாங்களா?”

“இல்ல அவங்க கம்பயூட்டர் டிபார்ட்மெண்ட்.  எனக்கு அவங்க பாடம் எடுக்கல.”

“ஓ…  ஓகே.  அவங்க டைப் எப்படி?”

புரியாமல் குழப்பமாக அவனது முகத்தைப் பார்த்தாள்.

“இல்லம்மா…  ஸ்டூடண்ட் கிட்ட எப்படிப் பழகுவாங்க.  நல்ல டைப்பான்னு கேட்டேன்.”

“ஸ்டூடண்ட் கிட்ட ஜாலியா மூவ் பண்ணுவாங்கன்னுதான் சொல்வாங்க. காலேஜ்ல அவங்களுக்கு நல்ல பேர்தான்.”

“சரி…  அவங்களைப் பத்தின தகவல் ஏதாவது தெரிந்தால் எனக்குச் சொல்லு.”

எதற்காக என்று புரியாவிட்டாலும், ‘சரி’ என்று தலையாட்டினாள்.

“தீனதயாளன் பத்தியெல்லாம் கவலைப் படாதே.   அவனெல்லாம் வெறும் குரைக்குற நாய்தான். அவன் குடும்பமே    எனக்கும்  வாசுகி அக்காவுக்கும்   நல்லாப் பழக்கம் தான்.

அவன் வைஃப்  கீதாராணி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல வாரியத்துல மெம்பர்.  அவன் மாமனார்  சீதாராமன் ரிடையர்டு ஜட்ஜ்.   அவன் பொண்ணுங்க ரெண்டும் காலேஜ்  படிக்குதுங்க. இந்த மாதிரி விஷயத்துல அவன் மாட்டினா, அவன் வீட்லயே அவனுக்குச் சங்குதான்.

அதனால தான் அவன், உன்னை மாதிரி  பயந்த  சுபாவம் உள்ள பொண்ணுங்க எதிர்த்து எதுவும் பண்ண மாட்டாங்கன்னு,  தெரிஞ்சுதான் வாலாட்டியிருக்கான்.  இன்னையோட அவன் வாலை ஒட்ட நறுக்கறேன். நீ எந்த பயமும் இல்லாம அங்க தங்கிப் படிக்கலாம்.”

அவன் அவளிடம் இயல்பாக உரையாடுவது ஒரு வித பாதுகாப்பு உணர்வை அவளுக்குள் விதைத்தது.  கதிருடன் சென்று தீனதயாளனைத் தைரியமாகச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. உன்னுடன் நான் இருப்பேன் என்ற உணர்வை அவளுக்கு உணர்த்தினான்.

அவளுடைய அம்மா அப்பா மற்றும் இளவயது நிகழ்வுகளைப் பற்றி  அவளை சகஜமாகப் பேச வைத்தான். தன்னுடைய வேலை மற்றும் ராகவனுக்காகச் செய்யும் பணிகள் குறித்தும் அவளிடம் பேசிக் கொண்டே வந்தான்.

அவர்கள் கடலூரை அடைந்து,  கல்லூரிக்குள்  சென்றதும் வாகனத்தை  நிறுத்தி விட்டு,  அவளுடன் இணைந்து படியேறியவன், அவளை முதலில் பிரின்ஸ்பால் அறைக்குள் போகச்சொன்னான்.

“நீ முதல்ல போய் பேசு.  நான் அடுத்து உடனே வரேன்.  பயப்படாமப் போ.”

“சரி”

என்றவள் சற்றுத் தயக்கத்துடனே அனுமதி கேட்டு பிரின்சிபாலின் அறைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்த தீனதயாளன்,

“சிவரஞ்சனி…  வா… வா… மூனு நாளா வரலைன்னதும் படிப்பை விட்டுட்டு போயிட்டியோன்னு நினைச்சேன்.  புத்திசாலிப் பொண்ணு சரியான முடிவெடுத்து என்னைப் பார்க்க வந்திருக்க.

குட்… வெரிகுட்… இன்னைக்கே சனிக்கிழமைதான்… உனக்கும்  கெஸ்ட்ஹவுஸ்  எங்க இருக்குன்னு பார்த்த மாதிரி இருக்கும்.  இப்பவேப் போகலாமா?”

கண்களில் ஆசை மின்னக் கேட்டவனை அற்பப் புழுவைப் போலப் பார்த்தவள்,

“போகலாம் சார். உங்க வைஃப் கிட்டயும், என் வயசுள்ள உங்க பொண்ணுங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு, அப்புறமாப் போகலாம்.”

“ஏன்னா எனக்கு  கெஸ்ட்ஹவுஸ்லாம் போய்ப் பழக்கம் இல்ல.  ஆனா உங்கப் பொண்ணுங்களுக்கு  கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்  பாருங்க.  அதான் அவங்ககிட்ட  கொஞ்சம் ஆலோசனை கேட்டுக்கறேன்.”

அவளது பதிலில் கொதித்துப் போன தீனதயாளன், “ஏய்…”  என்ற கிரீச்சிடலோடு நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேகமாக எழுந்தவன், அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்த  கதிரைப் பார்த்து அரண்டு  போய் நின்றான்.

“க…கதிர்,  வா… வாங்க… வாங்க.”

“என்ன தீனதயாளன் கேமரா இருக்கறத மறந்துட்டு, அவ்வளவு வேகமா எந்திரிச்சு வர்றீங்க?    இவங்க  கோபத்துல கால்ல கிடக்கறதக் கழட்டி, பளார் பளார்ன்னு நாலு அறை விட்டா என்ன செய்வீங்க?”

எதிர்பாராமல் உள்ளே வந்த  கதிரைப் பார்த்து அதிர்ந்து போன தீனதயாளன்,   அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார்.

“நீங்க வேற, நாங்க வருவோம்னு எதிர் பார்த்திருக்க மாட்டீங்க. ஸோ…  கேமராவ ஆஃப் பண்ணியிருக்க மாட்டீங்க.  எனக்கு அந்த  கேமரா ஃபுட்டேஜ கலெக்ட் பண்ணி, சோஷியல் மீடியால ஷேர் பண்ணறது  ஒன்னும் பெரிய விஷயமில்ல.”

“…”

“ஆனா பாருங்க, அப்படி ஒரு வீடியோ லீக் ஆனா,   அடுத்த  அரை மணி நேரத்தில  நேர்மையான ஜட்ஜ்ன்னு பேர் எடுத்த சீதா ராமன் சார்க்கும்,  மேடைக்கு மேடை பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்தி பேசற, மேடம் கீதாராணி தீனதயாளனுக்கும் போயிடும்.

அப்புறம்… உங்க பெரிய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்கன்னு கேள்விப் பட்டேன்,  அங்கயும் அசிங்கப் படுவீங்க.”

“க… கதிர்,  ப்ளீஸ்… ”  பயத்தில்  தொண்டைக்குழி அடைக்க வார்த்தைகள் வெளிவராமல் நின்றார்.

 

“அந்த வீடியோக்கு விளக்கமே தேவையில்ல. ஒரு பொண்ணு, அதுவும் உங்க காலேஜ் ஸ்டூடண்ட். உங்கள செருப்பால அடிக்கற மாதிரி வீடியோ வெளியேறினா கதை திரைக்கதை வசனம்லாம் அவங்களே எழுதிடுவாங்க.  எப்படி வசதி?”

கதிர் பேசப் பேச அவருக்கு நெற்றி கழுத்து என அனைத்து இடத்திலும் வேர்த்து வடிந்தது.  அவரைக் கேலியாகப் பார்த்தபடி, சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டவன் சிவரஞ்சனியையும் அமரச் சொன்னான்.

சிவரஞ்சனிக்கு ஆதரவாக கதிர் வருவான் என்று ஒரு துளி கூட நினைத்துப் பார்க்கவில்லை  தீனதயாளன்.   இந்த விஷயம் மட்டும் வீட்டிற்குத் தெரிந்தது,  அவ்வளவுதான் அவரது மனைவியே அவர் மீது  போலீஸில் புகார் கொடுத்து விடுவார்.

கதிரின் அமர்த்தலான பார்வை வேறு வயிற்றில் புளியைக் கரைத்தது. யாருமற்ற பெண் எனத் தான் அலட்சியமாக நினைத்திருக்க,   ஆறு அடியில் ஆஜானுபாகுவாய் அடியாள் போல துணைக்கு இவனை அழைத்து வருவாள் என்று, அவர் என்ன கனவா கண்டார்?

அதிலும் கதிர் இப்படிப் பொறுமையாக உட்கார்ந்து பேசும் ஆள் எல்லாம் கிடையாது.  பெண் பிள்ளை விவகாரம் என்பதாலேயே அவன் வாய் பேசிக் கொண்டிருக்கிறது.  இல்லையென்றால் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், நடு ரோட்டில் ஓட விட்டுத் தன்னை உதைப்பான்  என்பது அவருக்குத்  தெளிவாகத் தெரியும்.

“க… கதிர்,  நா…நான்  தெரியாமல் அந்தப் பொண்ணுகிட்ட அப்படிப் பேசிட்டேன்.  என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.”

நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடி அவர் கெஞ்ச,   அவரை தீர்க்கமாகப் பார்த்தவன்,

“சுத்திப் பொம்பளப் பிள்ளைங்க இருந்தா,  வயச மீறி அவங்களத் தப்பாப் பார்க்கத் தோனுதோ? வகுந்துடுவேன்… ஜாக்கிரதை.   இனி எந்த ஜென்மத்திலும் இப்படி ஒரு நினைப்பு உனக்கு வரக்கூடாது. நீ மன்னிப்பு கேட்க வேண்டியது   என்கிட்ட இல்ல சிவரஞ்சனிகிட்ட”

என்று கர்ஜித்தவனைக் கண்டு அரண்டு போனவர்,  சற்றுத் தயக்கத்துடன் சிவரஞ்சனியைப் பார்த்துத் தலையைக் குனிந்து,

“என்னை மன்னிச்சிடும்மா.  உன் கிட்ட நான்   அப்படிப் பேசினது தப்புதான். என்னை மன்னிச்சிடு.”

“…”

“அப்புறம் இன்னோரு விஷயம்.  சிவரஞ்சனி இதேக் காலேஜ்லதான் தொடர்ந்து படிக்கப் போறா. அவளுக்கு முழுப் பாதுகாப்பும் நீதான் குடுக்கற?  அவ மேல சின்னதா ஒரு கீறல் பட்டாக் கூட உன்னை உயிரோட புதைச்சிடுவேன். என்னப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்னு நினைக்கிறேன். என்ன புரியுதா? “

“நா… நான் பார்த்துக்கறேன் கதிர்.  இனி இங்க சிவரஞ்சனிக்கு எந்தப் பிரச்சினையும் வராது.”

“இந்த வருஷத்து  காலேஜ் ஃபீஸ்  கட்டிடுறேன்.  அப்புறம்  ஹாஸ்டல்ல  சிவரஞ்சனியச் சேர்க்க என்ன ஃபார்மாலிடீஸ்?”

கதிர் கேட்டதும், அலுவலகப் பணியாளர்களைத் தனது அறைக்கே வரவழைத்த தீனதயாளன்,  அதற்கான நடைமுறைகளை  எடுத்துக் கூறி,   கல்லூரிக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் செலுத்தச் சொன்னார். பிறகு  ஒரு விண்ணப்பப் படிவத்தைக்   கொடுத்து   நிரப்பித் தருமாறு கூறினார்.

கட்டணங்களை தனது வங்கி அட்டையின் மூலம் செலுத்தியவன்,  விண்ணப்பத்தை அவளிடம் நிரப்பச் சொல்லிக் கொடுத்தான். அப்பொழுது ஒரு முக்கியமான ஃபோன் கால் வரவும்,  பேசுவதற்காக எழுந்து வெளியே சென்றான்.

கதிருக்கு பயந்து நடுங்கும் தீனதயாளனைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது சிவரஞ்சனிக்கு.   வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுதானே.  அன்று தன்னிடம் அவ்வளவு இறுமாப்பாக பேசியவர் இன்று பம்மியபடி பேசுவதைக் கண்டவள், மனதிற்குள் சந்தோஷமாக உணர்ந்தாள்.

தானும்  இன்று பேசியதைப் போல, அன்றும் கொஞ்சம் தைரியமாகப் பேசியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டவள்,  கதிர் அருகில் இருப்பதால்தான் தன்னால் இவ்வளவு தைரியமாகப் பேச முடிந்தது என்பதையும் உணர்ந்திருந்தாள்.

அவன் அருகாமையில், தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதையும் புரிந்து கொண்டாள்.  இந்த பாதுகாப்பு உணர்வை எல்லாராலும் ஏற்படுத்தி விட முடியாது, என்பதும் அவளுக்குப் புரிந்தது.

இத்தகைய பாதுகாப்பு உணர்வைத்தான் வாழ்நாள் முழுவதும் தருவதாக, அவன் கூறினான் என்று எண்ணிக் கொண்டாள்.  இந்தக் கணம் ஏனோ கதிரை அவ்வளவு பிடித்தது அவளுக்கு.

நேற்று கேசவனிடமும் அவன் தனக்காகத்தான் சண்டையிட்டான். இன்று தீனதயாளனிடமும் தனக்காகத்தான் அவன்  இயல்பை விட்டு பொறுமையாகப் பேசிக் கெண்டிருக்கிறான். தன்னுடைய மரியாதை எதிலும் சீர் கெட்டு விடக் கூடாது என்பதற்காகவே,  தீனதயாளனை வாய் வார்த்தையாக  மிரட்டிக் கொண்டிருக்கிறான்.

ஒருவேளை தீனதயாளனைத் தானோ  அல்லது கதிரோ அடிப்பது போன்ற வீடியோ வெளியானால்,  தன்னிடமும் பல கேள்விகள் எழுப்பப் படும்.  ஆகவே அத்தகைய காரியத்தை கதிர் செய்ய மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும்.  தீனதயாளனை மிரட்டவே கதிர் அவ்வாறு சொன்னது.

ஆனால் கதிர் தன்னுடன் வந்ததற்கே தீனதயாளன்   பயந்து மிரண்டு விட்டான். இனி அவனுக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தவறான எண்ணம் வராது என்பது உறுதி.

மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓட,  விண்ணப்பப் படிவத்தை கவனமாகப் பூர்த்தி செய்து கொண்டிருந்தவளிடம்  தீனதயாளன்,

“கதிரை உனக்கு எப்படித் தெரியும்மா?”

இந்தக் கேள்விக்கு அவசியம் பதில் சொல்லனுமா என்பது போல அவரைப் பார்த்தவள் மீண்டும் குனிந்து எழுதத்  தொடங்கினாள். அவளுக்கு அவர் மீது மரியாதையே வர மறுத்தது.

அவளின் அலட்சியம் அவருக்கு அவமானமாக இருந்தது.  ஒரு நிமிட சபலத்தில் என் மரியாதையை நானேக் கெடுத்துக் கொண்டேனே என்று வருந்தியவர்,

“இல்ல…  கதிர்க்கு சொந்தம்னு அவங்க மாமாவத் தவிர யாரும் இல்லை.  அதான் உனக்கு எப்படிப் பழக்கம்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்.”

கதிரைப் பற்றி நன்கு தெரியும் அவருக்கு.  ட்ரஸ்ட் மூலமாகப் பலரை ராகவன் படிக்க வைப்பதும் தெரியும்.  ட்ரஸ்ட் விவரங்களை கதிர்தான் பார்த்துக் கொள்கிறான் என்பதும் தெரியும்.  ஆனால் சிவரஞ்சனிக்கு ஃபீஸ் கட்ட  அவன் தன்னுடைய சொந்த அக்கவுண்ட்டில் இருந்து பணம் ட்ரான்ஸ்பர் செய்தது அவரை யோசிக்க வைத்தது.

அப்படியெல்லாம் எந்தப் பெண்ணுடனும் அவனைப் பார்த்துவிட முடியாது. கண்டிப்பாக இந்தப் பெண் அவனுக்கு முக்கியமான பெண்தான் என்று உறுதியாக நம்பியவர்,  ஒரு ஆர்வத்தில் அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தனது அலைபேசி உரையாடலை முடித்து விட்டு உள்ளே வந்த கதிர்,

“என்ன தீனதயாளன்?  என்ன தெரிஞ்சிக்கனும் உங்களுக்கு?”

அவன் தன்னைத் தவறாக   எதுவும் எண்ணி  விடுவானோ என்ற பதட்டத்துடன்,

“ஒ… ஒன்னும் இல்ல கதிர்.  சும்மாதான்…  சிவரஞ்சனி உங்களுக்குச் சொந்தமான்னு கேட்டுட்டு இருந்தேன்.”

அவருக்கு என்ன பதில் கூறுவது என்று ஒரு நொடி யோசித்தவனின் கரங்களில், பூர்த்தி செய்த  விண்ணப்பத்தைத் திணித்தாள்.  அதில் பார்வையை ஓட்டியவனின் அதரங்கள்   புன்னகையில் மெல்லியதாக விரிந்தன.   அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“ம்ம்ம்…   சொந்தம்தான்.    கூடிய    சீக்கிரம்  சொந்தம் ஆகப்போறவங்க.”

அவன் கூறியது புரிந்தது அவருக்கு.

“வாழ்த்துகள் கதிர். ரொம்ப சந்தோஷம். சிவரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு.

நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன் கதிர்.  ப்ளீஸ் மனசுல எதுவும் வச்சிக்காதீங்க.

நீயும் என்னை மன்னிச்சிடும்மா.  இனி இப்படி ஒரு நினைப்பு எனக்கு என்னைக்கும் வராது.”

அவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் மனிதர் செய்த தவறை உணர்ந்து  மீண்டும்   மீண்டும் மன்னிப்புக் கேட்கும் போது,  மேற்கொண்டு  அதைப் பற்றிப் பேசாமல் மறந்து விடுவதே சிறந்தது என்று எண்ணிக் கொண்டாள்.  மன்னிக்க மனம் வராவிட்டாலும்  மறக்க முடியும் என்று தோன்றியது.

“நான் எதையும் மனசுல வச்சிக்கல சார்.  இனி இதைப் பத்திப் பேச வேணாம்.”

என்றவளை மெச்சுதலாகப் பார்த்தவன்,   தீனதயாளனிடம் விடைபெற்றுக் கொண்டு, மீண்டும் ஒரு முறை சிவரஞ்சனியின் பாதுகாப்பை அவரிடம் உறுதி செய்து கொண்டான்.  பிரின்ஸ்பால் அறையிலிருந்து  இருவரும் வெளியேறி  கார் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தனர்.

கதிரின் மனது உல்லாசமாக இருந்தது. விண்ணப்பத்தில் கணவன் என்ற இடத்தில் அவள் தனது பெயரை எழுதியிருந்தது அவனை மிகுந்த சந்தோஷமாக உணர வைத்தது.  அந்தச் சூழ்நிலையில் தீனதயாளன் கேட்டக் கேள்விக்கு பதிலாகத் தான் என்ன  கூறுவது என்ற தயக்கம் ஒரு நொடி இருந்தது அவனுக்கு.

மனைவி என்று மனதில் நினைத்து விட்ட பிறகு,  வேறு எப்படியும் சொல்லப் பிடிக்கவில்லை.   அவள் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் முன், அவளை மனைவி என்று அறிமுகப்படுத்தவும் தயக்கமாக இருந்தது.  விண்ணப்பத்தில் தனது பெயரைப் பார்த்ததும்,   வானம் வசப்பட்ட உணர்வுதான்.

உடனடியாக வாசுகியிடம் சொல்ல வேண்டும் என்று  ஒரு சந்தோஷப் பரபரப்பு.  கட்டவிழ்த்த காளை போல மனம் துள்ளியது. அகமும் புறமும் மலர்ந்த மகிழ்ச்சியோடு,

“ நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை உனக்கு காலேஜ் லீவ் தான.  ஹாஸ்டல்ல திங்கள்கிழமை வந்து ஜாயின் பண்ணிக்கலாம். இப்ப ஊருக்குப் போய் அக்காகிட்ட இந்த விஷயத்த சொல்லலாம்   சரியா?”

மலர்ந்த முகத்துடன் தன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கும் கதிரைக் கண்டவள், ‘நான் சம்மதம் சொன்னது இவருக்கு இவ்வளவு சந்தோஷம் தருதா?  மனதில் காதல் இல்லாவிட்டால் இத்தனை மகிழ்ச்சி கண்களில் வருமா?’   என்று எண்ணிக் கொண்டாள்.

கதிரின் கண்களில் மின்னியக் காதலைக் கண்டு கொண்டவள்   உள்ளத்தில் பொங்கிய உவகையுடன் சம்மதம் என்று தலையசைத்தாள். அழகான தேவதைகள் மந்திரக் கோலை அசைத்து ஒரு நொடியில் தன் வாழ்க்கையை வண்ண மயமாக்கிவிட்டது  போல இருந்தது.

கார் பயணத்தில் இருவரின்    இதழ்களும்  ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும்,   உள்ளங்கள்    மௌன மொழி பேசிக் கொண்டன.   வரும்போது  குழப்பம் இருந்த மனதில்,   இப்போது அவளுக்குத் தயக்கமும் நாணமும் குடி கொண்டது.

அவனது மனநிலைக்கு ஏற்ப இளையராஜாவின் குஷியான காதல் பாடல்கள் காரில்   ஒலித்துக்    கொண்டிருந்தன.  அவ்வப்போது அவளது முகத்தைத்   திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்குத்தான் அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.  இதுவரை இல்லாத உணர்வுகள் அடிவயிற்றில் புரியாத இம்சையை ஏற்படுத்தியது.  அவன் தன் முகத்தைப்  பார்ப்பது தெரிந்த போதும், அவன் கண்களைத் தன்னால் சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை.

புதிதாய் அவள் முகத்தில் தோன்றியுள்ள நாணமும், முகச்சிவப்பும்  அவன் மனதை மேலும்    அவளிடம் இழுத்தது. பார்த்த நாள் முதலே இவள் தன்னை பாதித்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

இவள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள கடலில் குதித்திருப்பாளோ என்று சுந்தர் கூறியதும் தனக்கு ஏன் அவ்வளவு எரிச்சல் வர வேண்டும்.   வயதுப் பெண்ணைப் படகில் மூன்று நாட்கள் தங்க வைக்க ஒப்புக் கொள்பவனா நான்?   இவளிடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் கண்டிப்பாக படகை மீண்டும் திருப்பச் சொல்லியிருப்பேன் என்று எண்ணிக் கொண்டான்.

இதுவரை எந்தப் பெண்ணையும் ரசனையாகப் பார்த்திராத தனது விழிகள் தடுமாறியது இவளிடம்தான். என் இயல்பை மாற்றியவள் இவள்தான்.  பார்த்த கணமே மனதை அவளிடம் இழந்ததை மனம் கவிதையாய் நினைத்துப்   பார்த்தது.

 

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Mayavan – 4

அத்தியாயம் 4

மணி அதிகாலை மூன்றை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. குளித்து உடை மாற்றி வந்தவனை அமர வைத்த சஞ்சய் “எதாவது சாப்பிடறயா அபி? ” “சஞ்சு ப்ளீஸ் அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கு ஷி ஈஸ் ஓகே னா?” குரல் இதற்கு மேல் தாங்கமாட்டேன் என்னும் அளவிற்கு கெஞ்சியது. அனுமன் கண்டேன் சீதையை என்று ஒரு வரியில் ராமனின் துயர் துடைத்தது போல, “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று சுருக்கமாக நிலையைக் கூறினான்.

“ஊஃப்” சட்டென தன் இறுக்கம் தளர்ந்தவன் சேரில் நன்றாக சாய்ந்தமர்ந்து தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். பாரம் விலகி மனம் லேசானது போல ஒரு நிம்மதி. இப்பொழுதுதான் புரிந்தது தான் எவ்வளவு கவலையில் இருந்திருக்கிறோம் என்பது. அடுத்து அவன் யோசனையை தடுக்கும் விதமாக “யார் அபி அந்த பொண்ணு?” என சஞ்சய் கேள்வி கேட்க கண்களை திறந்தவன் “தெரியாது” எனக்கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

“வாட் தெரியாதா!!! தெரியாத பொண்ணுக்காகவா இவ்வளவு தவிப்பு” முன்னதை சத்தமாக கேட்டவன் பின்னதை மனதுக்குள் ஆச்சர்யமாக எண்ணி கொண்டான்.

சஞ்சயின் கேள்விக்கு “ம்” என்றவன் நடந்ததை கூறலானான். “ஓ” என சஞ்சய் அதோடு யோசனையானான். “ஏன் அபி அந்த பொண்ணு ஏன் அவங்க ஆளா இருக்க கூடாது”. அவன் கேள்வியில் கண்களை திறந்தவன் மனதில் அந்த குழந்தைத்தனமான முகம் மின்னி மறைந்தது “அதுக்கு வாய்ப்பே இல்ல சஞ்சு. அவ இன்னொசன்ட். அப்படி அவங்க ஆளா இருந்தா என்னை காப்பாத்த வேண்டி இப்படி வந்துப் படுத்திருக்க வேண்டிய அவசியமில்லையே?” என தன் கருத்தை கூற, “அதுவும் சரிதான் ” என அமைதியானான்.

“அபி…..” தயக்கமாய் அவன் குரல் ஒலித்தது.

“சொல்லு சஞ்சு” கண்களை மூடியவாறே கேட்க,

“அது…..அப்பா அம்மாவ பார்க்க போனயா?” கண்களைத் திறக்காமலேயே மௌனமே உருவாய் அமர்ந்திருந்தான் அபிஜித். ஆனால் அப்படியே அவனை விட்டால் அது சஞ்சு இல்லயே!

“அபி என்னடா! இன்னுமா உனக்கு கோபம் குறையல… அவங்க பாவம்டா” அவன் குரல் நலிந்து ஒலித்தது.

அதைக்கேட்டதும் கோபத்தில் “அப்ப நான். என்னை யாராவது நினைச்சு பாத்தாங்களா? அந்தசின்ன வயசில நான்….” அந்த நினைவுகளை புரட்டி பார்க்க கூட விருப்பமில்லை அவனுக்கு. “வேற எதாவது பேசு சஞ்சு” இனி இதை பற்றி பேசாதே என்று அந்த குரலின் அழுத்தம் கூறியது. இதை எதிர்பார்க்காத சஞ்சய்க்கு அவன் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் கலெக்டராக தெரியவில்லை. இன்னும் அந்த சிறுவயதில் பார்த்த அபி போலவே தெரிந்தான்.

அபிஜித்தே ஆரம்பித்தான் “அந்த பொண்ணுக்கு வேற எதுவும் ஆபத்தில்லையே? தலைல வேற அடிப்பட்டிருந்தது” என கேட்க, அவன் பேச்சை மாற்றுவதை கண்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் “இப்போதைக்கு ஒண்ணுமில்ல, கத்தி அவ்ளோ ஆழமா இறங்கல. சோ அதால எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா ஹெட் இன்சுரி அதிகமா இருக்கறதால ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்கேன். அது ரிசல்ட் வந்தாதான் “ஸ்கல்ல” எதாவது டேமேஜ் ஆகிருக்கான்னு பாத்து சொல்ல முடியும். மத்தபடி அவங்க கண் முழிக்கற வரைக்கும் வெய்ட் பண்ணலாம்… ” என கூறி முடித்தான்.

“அப்ப ஸ்பெஷலிஸ்ட் வரவழைச்சு பார்க்கலாமா” பரபரப்பாக கேட்க, “அவங்க வந்தாலும் இததான் சொல்லுவாங்க அபி”

“ஓ… எப்ப கான்சியஸ் வரும் எனி ஐடியா”

“அது அவங்களோட வில் பவர் பொறுத்து எப்ப வேணா கான்சியஸ் வரலாம்”.

“இப்ப பாக்கலாமா”

“நோ..நோ இப்ப வேண்டாம், நாளைக்கு பார்க்கலாம்” அப்போது சஞ்சயின் செல்போன் ஒலித்தது. திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டவன் “அச்சோ மறந்துட்டனே” என பதறியவாறு அழைப்பை ஏற்றான்.

“எஸ் மா…”

“என்னடா கண்ணா இப்ப கெளம்பிடுவேன்னு சொன்ன, இன்னும் காணோம். யாரவது உங்கிட்ட மாட்டிகிட்டாங்களா என்ன?” என கிண்டலை கிண்டி வைத்தார் அவனது அன்னை ஜானகி.

“ஹா..ஹா…என் மேல அவ்வளவு நம்பிக்கையா! திடீர்னு ஒரு எமர்ஜென்ஸி கேஸ் மா”

” உன்னையும் நம்பி வராங்க பாரு … அவங்கள சொல்லனும். நீ ஒரு போலி டாக்டர்னு அவங்களுக்கு தெரியல போல” என்று விடாமல் கிண்டி கொண்டிருந்தார்.

“ம்மா…தங்க தாரகையே! புண்ணியத்த பெத்த புண்ணியமே! என் இமேஜ்ஜ டேமேஜ் பண்ணாதீங்க… லண்டன்ல படிச்ச நான் போலி டாக்டரா? கண்ணா எனக்கு கால் வலிக்குது, தலை வலிக்குதுன்னு வருவீங்கள்ள அப்ப பாத்துக்கறேன் உங்கள. சரி அத விடுங்க இப்ப என் முன்னாடி ஒரு வி.ஐ.பி இருக்காரு யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்”

“யாருடா அது உனக்கும், எனக்கும் தெரிஞ்ச வி.ஐ.பி”

இவர்களது உரையாடலை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த அபி போனை பிடுங்கி “ஹாய் க்யூட்டி” என அழைக்க, ” ஹேய்!! அபி குட்டி” இதை கேட்டதும் உதடுகளை இருபுறமும் இழுத்து வைத்திருந்த அவன் புன்னகை பற்கள் தெரியுமளவிற்க்கு அழகாக விரிந்தது.

” எப்படிப்பா இருக்க, நீ இங்கயே வந்துட்டன்னு இந்த பக்கி சொல்லுச்சு…கூட்டிட்டு போடான்னா, அபிக்கு நேரமில்ல..டைம் கிடைச்சா அவனே வருவான்னு சொல்லிட்டான் வேஸ்ட்டு ஃபெல்லோ!”

அவரது பேச்சில் மேலும் புன்னகைத்தவன் “நான் நல்லாயிருக்கேன் டாலி.. அவன் கெடக்கறான் விடுங்க .. நீங்கபாட்டுக்கு கிளம்பி வரவேண்டியதுதான”

“எப்படிப்பா காரோட்ட டிரைவர் வேணுமில்ல, அதுவும் சம்பளமில்லாத டிரைவர்” என அவர் பாவமாக வினவ,

இவன் மேலும் சத்தமாக சிரிக்க தொடங்கினான். அவனையை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான் சஞ்சய். அபிஜித் இதுபோல் சிரிப்பதெல்லாம் அபூர்வம். அவன் வாழ்வில் நடந்த நிகழ்வால், இறுக்கம் இல்லையென்றாலும், முகத்தில் மலர்ச்சியும் இருக்காது. ஆனால் இப்போது பதவியின் காரணமாக வெறுமையை மறைக்க பழகியிருந்தான்.

சிறிது நேரம் ஜானகியிடம் பேசிவிட்டு வைத்தவன் “அம்மா இன்னும் அப்படியேதான் இருக்காங்க.. அம்மாவ பாக்கனும்னு இருக்கு..ஆனா வேலை அதுக்கும் மேல இருக்கு. சீக்கிரமா வரேன்னு அம்மாட்ட சொல்லுடா” என சிரிப்புடனே கூறி முடித்தான். சஞ்சய் புன்னகைக்கவும், மணியை பார்த்தவன் “சரிடா சஞ்சு கொஞ்சம் வேலை இருக்கு, நான் போய்ட்டு வந்துடறேன் அதுவரைக்கும் அந்த பொண்ண கொஞ்சம் பாத்துக்க”

“சரிடா பாத்து போய்ட்டு வா, அதுவரைக்கும் நான் அவங்கள பார்த்துக்கறேன்”.அவனது பதிலில் நிம்மதி வரபெற்றவன் தனது கடமையை நிறைவேற்ற கருஞ்சிறுத்தையாய் சீறிக் கொண்டு சென்றான்.

அதற்கு மேல் அவன் கொண்டது புயல் வேகமே. இதுவரை தனக்கு நடந்த தாக்குதலைப் பற்றி யாருக்கும் அவன் அறிவிக்கவில்லை. தன் அரசாங்க விடுதிக்கு சென்றவன் விரைவில் தயாராகி அந்த அதிகாலை வேளையிலேயே அலுவலகத்துக்கு சென்று தன் உதவியாளரையும் அழைத்தவன் அடுத்த சில மணி நேரங்களுக்கு பம்பரமாய் சுழன்று ரத்தினத்தின் மகனுக்கு கைது ஆணை வாங்கினான்.

அவன் வெளிநாடு தப்பி செல்வதற்காக விமான நிலையத்திற்க்கு செல்ல, அங்கு வைத்தே சிறைபிடித்தான். ரத்தினத்தையும், மகனை தப்புவிக்க முயன்றதாக கூறி கைது செய்தான். இவ்வளவு முயற்சி செய்தும் வீணாய் போனதே என ரத்தினம் தன் நிலையை நொந்தவாறே சிறைக்குச் சென்றார்.

நீரின்றி, உணவின்றி சுழன்றடித்தவன் நண்பகலில் சற்று ஓய்வானான். இப்போதுதான் பாவையவளின் ஞாபகம் எழ அலுவல் வேலைகளை முடித்துவிட்டு மருத்துவமணை விரைந்தான். இதுவரை அவள் கண்விழிக்கவில்லை. அதில் மீண்டும் அவன் மனம் கவலையடைய தொடங்கியது.

சஞ்சய் ரவுண்ட்ஸ் சென்றிருக்க அமைதியாக அவன் அறையில் அமர்ந்திருந்தான். இரவு பகல் பாராமல் உணவில்லாமல் அலைந்தது, மனசோர்வு எல்லாம் சேர்ந்து கண்களை சுழற்ற சேரில் அமர்ந்தபடியே மேஜையில் தலை சாய்த்தவாறு உறங்கிப்போனான்.

சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த சஞ்சய் பார்த்தது ஆதரவற்ற குழந்தை போல உறங்கி கொண்டிருக்கும் நண்பனையே. அவன் குடும்ப பலம் என்ன? பாரம்பரியம் என்ன? சிறு வயதில் நடந்த ஒன்றுக்காக கோபம் கொண்டு இன்றுவரை அவர்களுடன் ஒட்டாமல் வாழும் பிடிவாதத்தை எண்ணி மனம் வருந்தினான்.

சஞ்சய் அவனை எழுப்பாமல் அமைதியாக அவனது வேலையை கவனிக்க ஆரம்பித்தான். உறங்கி கொண்டிருந்த அபிக்கு உறக்கத்திலும் பெண்ணவளின் ரத்தம் தோய்ந்த முகம் தெரிய திடுக்கிட்டு விழித்தான். சிறிது நேரத்திற்க்கு பின்னே நிதர்சனம் உரைக்க முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவன் முன் சஞ்சய் டீ கப்பை நீட்ட அமைதியாக வாங்கி அருந்தினான்.

“என்னடா தூங்க முடியலயா?” என வாஞ்சையாய் கேட்டவனிடம். “ஆமா சஞ்சு அந்த பொண்ணு நல்லாயிருக்குன்னு தெரிஞ்சா ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன்” என மறையாமல் மனதை எடுத்துரைத்தான்.

மணி மாலை நான்கை நெருங்கியது, அப்போது செவிலி ஒருவர் “டாக்டர் ஐ.சி.யு ல இருந்த பேசன்ட்டுக்கு நினைவு திரும்புது” என கூறவும் பரபரப்பான சஞ்சய் “வா அபி அந்த பொண்ணுக்கு நினைவு திரும்புது” என கூறியவாறு விரைந்தான். இருவரும் அறைக்கு சென்ற போது நினைவு திரும்புவதற்கு அறிகுறியாய் பெண்ணவளின் கை, கால்களில் மெல்லிய அசைவு தெரிந்தது.

சஞ்சய் அவளை பரிசோதித்து கொண்டிருக்க, அபி அவளின் முகத்தைதான் இமைக்காமல் பார்த்திருந்தான். இரவின் இருளில் அவளை சரியாக கவனித்து பார்க்கவில்லை. பாலில் பன்னீர் ரோஜா இதழை கலந்தது போல நிறம். எடுப்பான நாசி, பிறந்த குழந்தையின் இதழ்களை போல சிவந்த இதழ்கள். முகத்தில் சோர்வு அப்பட்டமாய் தெரிந்தாலும் அதுவும் கூட தனி சோபையான அழகை அள்ளி வழங்கியது.

கண்ணில் கருமணிகள் அசைய, பிரிக்க முடியாத இமைகளை சிரமப்பட்டு பிரித்தாள். மின்சார விளக்கின் ஒளியில் கண்கள் கூசியது போல இரண்டு மூன்று முறை திறந்து திறந்து மூடி அடுத்த முறை கண்களை மலர்த்தினாள். பார்வை அறையை வலம் வந்தது. அபியிடம் கூடுதல் நொடிகள் நிலைத்து பின் செவிலி, மருத்துவ உபகரணங்கள், திரைச்சீலை என மாறி கடைசியில் சஞ்சயிடம் நிலைத்தது.

தலை வலித்தது போலும் முகம் சுருங்கி கசங்க கையை தலைக்கு கொண்டு செல்ல வெய்ன் பிளாண்ட் போட்டிருந்ததால் சுருக்கென்று வலித்தது. கையை திருப்பி அதை பார்த்தவள் உதடு அழுகையில் பிதுங்க கையை மூடி மூடி திறந்து பார்த்தாள். அறையில் இருந்த மூவரும் இல்லை…. நால்வர் சஞ்சயின் தாயும், பிரபல மகப்பேறு மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாகியுமான ஜானகியும் அங்கே பிரசன்னமானார். இவள் மேல் கவனத்தை வைத்திருந்ததால் யாரும் அவரை கவனிக்கவில்லை.

உதட்டை பிதுக்கி கண்களில் நீர் திரள “அங்கிள் ஏன் எனக்கு இது போட்டீங்க வலிக்குது” என கேட்ட கேள்வியில் அபிக்கு குழந்தையை போலஇருந்த அவளை கண்டு மனம் பாகாய் உருகிற்று. சஞ்சயோ வாய் பிளக்க கையில் இருந்த ஸ்டெதஸ்கோப்பை தவறவிட்டவன் “அங்கிளா!!!” என உச்சபட்ச அதிர்வில் திகைக்க, இவர்களைக் கலைத்தது ஜானகியின் சத்தமான சிரிப்பு.

“ஹா…ஹா..ஹா.. ” என கண்ணில் நீர் வர சிரித்தவரைக் கண்டு சஞ்சய் முறைக்க, அபியும் அப்போதுதான் அவரை கண்டான். எதற்கு சிரிக்கிறார் என முதலில் அறியாதவன் “அங்கிள்! அவங்க ஏன் அப்படி சிரிக்கிறாங்க எனக்கு பயமா இருக்கு” என பெண்ணவள் கூறியதை கேட்டு புரிந்ததும், அவனுக்கும் புன்னகை பொத்துக் கொண்டு வர, அதற்கு இரண்டு மூன்று தடுப்பணைகளை போட்டு தடுத்து வைத்தான். அப்படியும் சிறிது கசியத்தான் செய்தது.

சிரிப்பு வந்தாலும் பயந்து நடுங்கி கொண்டிருந்தவளை ஆறுதல் படுத்த வேண்டி கால் எட்டி வைக்கயிலேயே ஜானகி அவளிடம் விரைந்திருந்தார். “என்னடாம்மா பயந்துட்டியா! இங்க ஒரு கோமாளிய பார்த்தேனா சிரிப்பு வந்துடுச்சு நீ பயப்படாத” என கனிவான குரலில் தலையை தடவியவாறுப் பேசியவரைக் கண்டவள் சற்று இயல்புக்கு திரும்பினாள்.

சஞ்சய் மேலும் அவரை முறைத்தவாறு நிற்க, சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருந்த செவிலியை காப்பாற்றும் பொருட்டு அவரை வெளியே அனுப்பியவர் “இப்ப சொல்லு சஞ்சு “என கேட்க “ம் என் ஸ்டெதஸ்கோப்புக்கு ஹார்ட் அட்டேக் வந்து உயிரை விட்ருச்சு” என கடுப்பாகக் கூறினான்.

அவனது கோபத்தை கண்டதும் மேலும் ஜானகியிடம் ஒண்டியவளை கண்ட அபி “சஞ்சு” என அதட்டல் போட, ஜானகியின் தோளில் சாய்ந்தவாறே குரல் வந்த திசையில் திரும்பியவள் அபியையே வைத்தகண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க, அதில் கட்டுண்ட அபியும்அவளையே பார்த்தான்.

இருவரையும் கலைத்தது சஞ்சயின் குரலே “ம்மா என்ன பார்த்தா அவ்ளோ வயசான மாதிரியா இருக்கு” என பாவமாக வினவினான். அவனும் என்னதான் செய்வான் இன்னும் திருமணமாகாத கண்ணியமான கட்டுக்கோப்பான ஆண்மகனை பார்த்து குமரி பெண் ஒருத்தி அங்கிள் என்று அழைத்தால் அவன் மனம் பதைக்கதானே செய்யும்.

ஜானகியும் சிரிப்பை கைவிட்டு “ஏன்டாம்மா அப்படி அங்கிள்னு கூப்பிட்ட” என கேள்வி கேட்க “ஏன் ஆன்ட்டி அப்படி கூப்பிட கூடாதா..நான் குட்டி பாப்பாதான..அப்ப பெரியவங்கள அங்கிள்னுதான கூப்பிடுவேன்” என அறியா பிள்ளையாய் கண்களை சுழற்றி கூற, அவள் கூறிய பதிலில் மூவரும் அதிர்ந்து நின்றனர்.

ESK-11

சுவாசம் — 11

டிக்…  டிக்… டிக்…  கடிகாரத்தின் மெல்லிய ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.   இள நீல வண்ண சோகையான வெளிச்சம் தரும் விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.  தூக்கம் வராமல் ஓடும் மின் விசிறியைப் பார்த்தபடி படுத்திருந்தாள் சிவரஞ்சனி.    ஓடும் நதியோடு ஓடும் துடுப்பில்லா ஓடம் போலத் தன் வாழ்க்கை ஆகிவிட்டது, என்பதைக் கசப்புடன் உணர்ந்தாள்.

இன்னும் வாழ்க்கை தனக்கு என்னென்ன திகில் பக்கங்களை வைத்துள்ளது என்று புரியவில்லை அவளுக்கு.   இனி தனது வீட்டிற்குக் கண்டிப்பாகப் போக முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.  போகவும் விருப்பமில்லை.

தான் நல்ல நிலையில் இருக்கும் போதுதான், இனி சித்தியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டாள். என்றுமே தனது விதியை நொந்து கொள்வாளே தவிர,   அவளது சித்தியை வெறுத்ததில்லை.

தந்தையும் தாயும் இல்லாமல் இருந்த அந்த இரண்டும் கெட்டான் வயதில், சித்தி தன்னை வீட்டை விட்டுத் துரத்தியிருந்தாலும்,   தன்னால் எதுவும் செய்திருக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.

திட்டியோ, அடித்தோ,  அரை வயிற்றுக் கஞ்சியை ஊற்றியோ இதுவரை அடைக்கலம் கொடுத்தவள் சித்தி தான். அந்த நன்றி அவளுக்கு இருந்தது. மேலும் கல்யாணியின் பாசத்திற்கு முன் சித்தியிடம் பட்ட கஷ்டங்கள் பெரிதாகத் தோன்றவில்லை அவளுக்கு.

கேசவன் வந்து தொல்லை கொடுக்கும் வரை அந்த வீட்டை விட்டு வெளியே போகும் எண்ணம் வந்ததில்லை.

அப்பொழுது கூட, அவளது சித்தியின் கண்பார்வை படும் தூரத்தில் தனியே இருக்கத்தான் விரும்பினாள். அப்பொழுதுதான் கல்யாணியைப் பார்த்துக் கொள்ளவும் முடியும் என்று எண்ணியிருந்தாள்.

தன்னை அழைத்து வந்த அமைச்சரையும் வாசுகியையும் நினைத்துக் கொண்டாள்.  மிகவும் அருமையான மனிதர்கள்  மனம் சிலாகித்தது.  தான் படிப்பதற்கான அத்தனை செலவையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியதை எண்ணிப் பார்த்தாள்.

நாளை கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணியதும் அனிச்சையாக உடல் தூக்கிப் போட்டது.  மீண்டும் அதே கல்லூரிக்குச் செல்ல சுத்தமாக விருப்பமில்லை. ஏதாவது பெண்கள் விடுதியில் சேர்த்துவிடச் சொல்வோம் என்று எண்ணிக் கொண்டாள்.   வேலைக்குப் போய் விடுதிக் கட்டணத்தைக் கட்டிக் கொள்ளலாம்.

அமைச்சரிடம் கேட்டால் கண்டிப்பாக நல்ல வேலையாக வாங்கித் தருவார்.  அதற்குப் பின் அநாவசியமாக யாருக்கும் தொல்லை தரக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.

அஞ்சல் வழிக் கல்வி  மூலமாக விட்ட படிப்பைத் தொடர முடியும் என்றும் எண்ணிக்கொண்டாள்.   நாளை   இதுபற்றி   விரிவாக வாசுகியிடம் பேச வேண்டும்.   அவரிடம் சொல்லி ராகவனிடம் கேட்க வேண்டும்.

இப்படியே எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் கதிர் கேசவனைப் புரட்டி எடுத்ததை நினைத்துக் கொண்டது.

‘அடேங்கப்பா…   அவருக்கு எவ்வளவு கோபம் வருது? அவர் முழுதாக ஐந்து நிமிடங்கள் கூட வீட்டினுள் இல்லை. அதற்குள் கேசவனின் கையும் முகமும் உடைந்ததோடு நில்லாமல் ஒரே அதட்டலில் சித்தியும்   அடங்கி விட்டாளே’

‘நாளைக்கு அவர் வருவதற்குள் தீனதயாளன் பற்றி வாசுகியிடம் சொல்லி விட வேண்டும்.   அவருக்குத் தெரிந்தால் தீனதயாளனுக்கும் அடி நிச்சயம்.’   என்று எண்ணிக் கொண்டவள்,  தன்னால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இனி வேண்டாம் என்றும் நினைத்தாள்.

பல்வேறு சிந்தனைகளில் உழன்றவள்,  வெகு நேரத்திற்குப் பின் உறங்கிப் போனாள்.   அதிகாலையில்  எப்பொழுதும் போல விழிப்பு வந்ததும்  எழுந்தவள்,  அந்த அறையோடு ஒட்டியிருந்த குளியலறையில் தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு,   குளியலையும் முடித்தாள்.

முன்தினம் அவளுக்கு வாங்கிய உடைகள் அந்த அறையிலேயே வைக்கப் பட்டிருந்தது.  அவற்றில் இருந்து இளநீல வண்ணத்தில்,  பல்வேறு வண்ண மணிகள் வைத்துத் தைக்கப்பட்ட ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள்.  அது அவளுக்கு அழகாகப் பொருந்தியது.

தலையைச் சீவி பின்னலிட்டவள்,  கிளம்புவதற்குத் தயாராக அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தாள்.   அங்கே பரபரப்பாக ராகவன் வெளியே கிளம்பிக் கொண்டிருக்க,  வாசுகி அவரது பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் வாசுகி, “நைட் சரியா தூங்கலையாம்மா?  கண்ணெல்லாம் சிவந்திருக்கு?”

“புது இடம் இல்ல  வாசு…  அதான் தூக்கம் வந்திருக்காது”  என்றவர்   அவளிடம்,

“நான் அவசர கட்சி கூட்டத்துக்காக டெல்லி போறேம்மா.  மதியம் ஃப்ளைட்.  உன் கூட கதிர் வருவான்.  உன்னை பத்திரமா  காலேஜ் ஹாஸ்டல்லயே சேர்க்கலாம்ன்னு நினைச்சிருக்கேன்.  வேற ஏதாவது தேவைன்னா வாசுகிகிட்ட கேட்டுக்கம்மா.”

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கதிரும் அழகரும் வந்தனர்.

“தலைவரே… எல்லாம் ரெடியா?  கிளம்பலாமா?”

“நீ எங்க வர்ற?  நீ இந்தப் பொண்ண அவ காலேஜ் ஹாஸ்டல்லயே சேர்த்து விட்டுட்டு வா.  அழகர்  என்  கூட வரட்டும்.”

“நானா…?   நான் அழகர் மாமாவ அனுப்புவோம்னு நினைச்சிட்டு வந்தேன். சுந்தரையும் அந்த குமாரை கண்காணிக்க அனுப்பியிருக்கேன்.”

“அந்தக் காலேஜ் பிரின்சிபால உனக்கு நல்லாத் தெரியுமே டா.  போன வருஷம் அந்தக் காலேஜ்ல நடந்த ஸ்டுடன்ட் பிரச்சனையக்கூட பேசி முடிச்சியே.   அழகர விட நீ போனா சட்டுனு வேலை முடியும். அதனால நீயே போ.”

“சரி தலைவரே…  தீனதயாளன் நமக்கு வேண்டிய ஆள்தான்.  நான் பார்த்துக்கறேன்.”

அவள் திருதிருவென்று விழித்துக் கொண்டு, யாரிடம்  பிரின்ஸிபாலைப் பற்றிச் சொல்வது  என்று யோசிக்கும் முன், அவர்களேப் பேசி  அவளைக் கதிருடன் அனுப்புவது என்று முடிவெடுத்தனர்.

பரபரப்புடன் ராகவன் தனது உதவியாளர் சந்துரு மற்றும் அழகருடன் வெளியேற,  கதிரும் வாசுகியும் வாசல் வரைச் சென்று வழியனுப்பிவிட்டு  வந்தனர். அன்று சனிக்கிழமை  விடுமுறை ஆதலால் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

உள்ளே வந்தவுடன் கதிர் ஒரு படிவத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவளை அழைத்தான்.

“இங்க வா…  இதுல ஒரு கையெழுத்து போடு.”

அருகில் வந்தவள் என்னவென்று பார்க்க,  வாசுகியும் அவனிடம், “என்ன கதிர் இது?  எதுக்கு சிவரஞ்சனியோட சைன்?”

“அது ஒன்னுமில்ல க்கா.  நேத்துப் போனோமில்ல இந்தப் பொண்ணோட வீடு,  நல்ல மெயினான ஏரியா, குறைஞ்சது ஐம்பது அறுபது லட்சம் போகும்.  நியாயமா இந்தப் பொண்ணுக்கும் சரிபாதி உரிமை இருக்கு.

அதான் அவங்க சித்தி பேர்ல இந்தப் பொண்ணு ஒரு கேஸ் ஃபைல் பண்ணா பாதி சொத்து இந்தப் பொண்ணுக்கு வரும்.  சொத்தா குடுத்தாலும் சரி பணமா குடுத்தாலும் சரி  இந்தப் பொண்ணோட ஃபியூச்சர்க்கு யூஸ் ஆகும் க்கா.”

“கதிர் சொல்றது சரிதான்மா.  நீ சைன் பண்ணு.  அவன் கண்டிப்பா உனக்கு உன்னோட ஷேரை வாங்கித் தந்துடுவான்.”  வாசுகியும் கூற…

கதிரைத் தயக்கமாகப் பார்த்தவள், “கேஸ்லாம் வேணாமே. சித்திகிட்ட அவ்வளவு பணமெல்லாம் கிடையாது.  அவங்க எப்படித் தர முடியும்?”

“அப்ப வீட்ட வித்து ரெண்டு பேரும் சரிபாதி பணமா பிரிச்சுக்க வேண்டியதுதான்.”

“ஹைய்யோ…  வீட்டல்லாம் விக்க வேணாம். வீட்ட வித்துட்டா, சித்தி பாவம் கல்யாணிய கூட்டிட்டு எங்க போவாங்க?  அதுமட்டுமில்ல அந்த வீட்ல எங்க அம்மா அப்பா கூட பதினோரு வயசு வரை சந்தோஷமா இருந்தேன்.

எங்க அம்மாவப் பத்தின நிறைய இனிமையான நினைவுகள் அந்த வீட்ல இருக்கு.  ப்ளீஸ் அந்த வீட்ட சித்தி வச்சுகிட்டா பரவாயில்ல ஆனா கேஸ்லாம் வேணாமே.”

உண்மையிலேயே சிவரஞ்சனியைப் பார்த்து கதிருக்கும் வாசுகிக்கும் ஆச்சர்யமாக இருந்தது. கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தை.

அடுத்த வேளை உணவுக்குக் கூட  அடுத்தவர் தயவு தேவைப்படும் இந்த நிலையிலும், இந்தப் பெண் தனக்குக் கெடுதல் செய்பவருக்கும் நன்மை செய்ய நினைக்கிறதே.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதியின் வரிகளை எத்தனை பேரால் கடைபிடிக்க முடியும்?  இதோ இவள் வாழும் உதாரணமாக இருக்கிறாளே  என்று எண்ணிக் கொண்டான் கதிர்.

இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு உதவியென்றாலும் செய்யலாம் என்று நினைத்தபடி,

“நீ சொல்றது சரிதான்,  ஆனா… உங்க வீட்ல இருந்தானே ஒரு வெத்துப் பீஸ்ஸூ, உன் சித்தியோட அண்ணன்,   அவனோட நோக்கமே உங்க சித்திய ஏமாத்தி அந்த வீட்டப் பிடுங்கறதாதான் இருக்கும்.

அதுக்குதான் உன்ன கல்யாணம் பண்ணனும்னு தத்துப்பித்துன்னு உளறிகிட்டு இருந்தான். இனிமே உங்க சித்திகூடவே இருந்து அந்த வீட்ட அடைய நினைப்பான்.

அதனால ஒரு வக்கீல் நோட்டீஸ் மட்டும் சும்மா அனுப்பி விடுவோம்.  என்னைக்கு இருந்தாலும் உனக்கும் அந்த வீட்ல உரிமையிருக்குன்னு அவங்களுக்கு பயம் இருந்தாதான்,  அந்த வீட்ட விக்கற எண்ணம்லாம் அவங்களுக்கு வராது.”

“கதிர் சொல்றது சரிதான் சிவரஞ்சனி,  லீகலா எந்த ஆக்ஷனும் எடுக்காட்டாலும்,  சும்மா ஒரு பயம் காட்டி வைக்கறது நல்லது.”

வாசுகியும் வற்புறுத்திக் கூறவும் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு கதிரிடம் கொடுத்தாள். அதனை வாங்கி பத்திரப்படுத்தியவன்,

“சரி…  நாம கிளம்பலாம்.  இப்பக் கிளம்பினாதான் சரியா இருக்கும்.  போற வழியில சாப்பிட்டுக்கலாம்.”  என்றவன் வாசுவிடம் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தான்.

சிவரஞ்சனியும் வாசுகியிடம் விடைபெற்றுக் கொண்டு அவளுக்கு வாங்கப்பட்ட  உடைகள் அடங்கிய பையையும் சர்டிபிகேட்டையும் எடுத்துக் கொண்டு  வாசலுக்கு வந்தாள்.

அவளை வாகனத்தின் முன்புறக் கதவைத் திறந்து வைத்து ஏறச் சொன்னவன்,   மறுபுறம் வந்து வண்டியைக் கிளப்பினான். போர்டிகோவிலிருந்து வெளியே வந்த அந்த ஸ்கார்ப்பியோ,  அமைச்சரின் வீட்டைக் கடந்து சாலையில் பயணித்தது.

“போற வழியில ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிட்டுப் போவோமா? தலைவர் அவசரமா வரச்  சொன்னதால நேரா வந்துட்டேன்.”

அவள் சரியென்று கூறியதும் கோயில் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,  இருவரும் இணைந்து கோவிலினுள் நுழைந்தனர்.  அது பெருமாள் கோவில். அதனுடன் ஆஞ்சநேயர் சன்னதியும் இருந்தது. மார்கழி மாத சனிக்கிழமை ஆதலால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

நேராக ஆஞ்சநேயர் சன்னதிக்குச் சென்றவர்கள், நினைத்த காரியம் அத்தனையும்,  நேர்மையோடு உழைப்பும் இருந்தால் ஜெயமாக்கித் தரும் வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

அவன் ரெகுலராக வரும் கோவில் ஆகையால், கிட்டத்தட்ட அனைவருமே அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடி இருந்தனர். கதிரை ஒரு பெண்ணுடன் அதுவும் இளம் பெண்ணுடன் பார்ப்பது முதல் முறை என்பதால் வந்த ஆச்சர்யம் இது.

பிரசாதமாகத் துளசித் தீர்த்தமும் செந்தூரமும் கொடுத்த கோவில் குருக்கள்,   “பொண்ணு யாரு தம்பி?”

சிறு வயதில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவர்,  அவனைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆதலால் இதைக் கேட்கத் தயங்கவில்லை அவர்.

“வாசுகி அக்காவுக்கு வேண்டிய பொண்ணு   ஐயரே… காலேஜ்ல சேர்க்கக் கூட்டிட்டுப் போறேன்.”

“நல்லதுப்பா…  ஷேமமா போய்ட்டு வாங்கோ.”

சடாரியை வைத்து ஆசீர்வதித்தவரிடம் விடைபெற்றுக்  கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

என்னவோ இன்று அவளை இந்தக் கோவிலுக்குக் கூட்டி வர வேண்டும் என்பது  போல  அவனுக்கொரு எண்ணம்.  இருவரும் இணைந்து நின்று அவனது இஷ்ட தெய்வத்தை வழிபட்டது, ஏனென்றேப் புரியாத ஒரு மனநிறைவைக் கொடுத்தது அவனுக்கு.

இந்த உணர்வுகளுக்குப் பெயர் வைக்கவும் தெரியவில்லை.  இத்தனை நாட்களாக மனதின் ஓரத்தில்  நீங்காமல் இருந்த ‘தான் தாய் தந்தை யாரும் அற்றவன்’ என்றத் தனிமை உணர்வு, அவனை விட்டு நீங்கிப் போவது போல உணர்ந்தான்.

அதற்குப் பின் தொடர்ந்த கார் பயணத்தையும் அவன்  மனது வெகுவாக ரசித்தது.  உடலை வருடும் மெல்லிய குளிர் காற்றும்,  காதுகளை வருடும் இளையராஜாவின் மெல்லிசையும் மனதைப்   பரவசப் படுத்தியது.   என்னவென்றே புரியாத ஒரு இதம் மனதை நிறைத்தது.

சூழ்நிலையையும் அவனது நிலையையும் முன்பே கணித்தபடி, இளையராஜா இசையை உருக்கி ஊற்றிக் கொண்டிருந்தார்.

 

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே…

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…

மேகம் முழிச்சு கேக்குதே…!

 

விரல்கள் தானாக ஸ்டியரிங்கில் தாளம் போட,   அவனிதழ்கள் மெலிதாகப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தது.

சிவரஞ்சனிக்கோ இவனிடம் பிரின்ஸ்பாலைப் பற்றி எப்படிச் சொல்வது என்று மனம் யோசித்துக் கொண்டிருந்தது.  அவனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து, சாலையைப் பார்த்தபடி இருக்கும் பார்வையைத் திருப்பி அவனது கரங்கள் வரைக் கொண்டு வருபவள், மீண்டும் திரும்பி சாலையைப் பார்த்தபடி யோசிக்கத் துவங்கி விடுவாள்.

முதலில் இதை கவனிக்காதவன், அவள் தன்னிடம் ஏதோச் சொல்ல நினைத்துத்  தயங்குகிறாள் என்பதைக் கண்டு கொண்டான். காரை ஓரம் கட்டி நிறுத்தியவன் அவளைக் கவனிக்க,   அவளோ காரை நிப்பாட்டியதைக் கூட உணராமல்,   யோசனையிலேயே ஆழ்ந்திருந்தாள்.

“என்ன விஷயம்?”

சட்டென்று வந்தக் கேள்வியில் லேசாக அதிர்ந்தவள்,  அவனைப் பார்க்க,

“ரொம்ப நேரமா ஏதோ சொல்லனும்னு யோசிச்சிகிட்டு இருக்கியே…  என்ன விஷயம்ன்னு கேட்டேன்?”

“அது…  வ… வந்து… அது… “  அவள் ஏதோச் சொல்லத் தடுமாறுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன்,

“கீழ இறங்கு… “  எனக் கூற,

எதுக்கு இறங்கச் சொல்றார்? என்று புரியாமல் பார்த்தவள் அப்பொழுது தான் கார் ஓரமாக நின்றிருப்பதை உணர்ந்தாள். சுற்றுப்புறம் கவனத்தில் வந்தது. கார் ஒரு உணவு விடுதியின் முன் நின்றிருப்பதைக்  கண்டவள்,  அவன் இறங்கவும் தானும் இறங்கினாள்.

சற்று உயர்தரமான ஹோட்டல் அது.  தனி அறைகள் போலத் தடுக்கப்பட்டிருந்த தடுப்பினுள் சென்று அமர்ந்தவர்கள்,  பேரரிடம் தேவையான உணவினை ஆர்டர் செய்தனர். உணவு வகைகளைக் கொண்டு வந்து வைக்கவும்,  அவள் உண்பதற்குத் தேவையானவற்றை அவள்புறம்  நகர்த்தி வைத்தபடி,

“இப்ப சொல்லு… என்ன விஷயம்?”

“அது… வந்து…  எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் குடுங்களேன்.  எனக்கு காலேஜ்க்குப் போகப் பிடிக்கலை. ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க.  எனக்கு வர்ற சம்பளத்தை வச்சு ஹாஸ்டல் ஃபீஸ் கட்டிக்கறேன்.”

அவள் தங்களுக்குத் தொல்லை தரக்கூடாது என்று எண்ணுவதாகக் கண்டு கொண்டவன்,

“காலேஜ் ஃபீஸ் பத்தில்லாம் யோசிக்காத. தலைவர் பேர்ல ட்ரஸ்ட் இருக்கு வருஷத்துக்கு நாற்பது ஐம்பது பேர படிக்க வைக்கிறாரு.   உனக்குச் செய்யறது அவருக்குப் பெரிய விஷயமில்ல. அது மட்டுமில்ல  நீ படிப்ப முடிக்காம உனக்கு என்ன வேலை கிடைக்கும்? “

“நீ முதல்ல படிப்ப முடி.  அப்புறமா உனக்கு நல்ல வேலைக்கு நான் ஏற்பாடு பண்ணித் தரேன்.”

“இல்ல… எனக்கு அந்தக் காலேஜுக்குப் போகவேப் பிடிக்கலை”

“ஏன்?… நீ நல்லாப் படிக்கற பொண்ணுதான.  உன் சர்ட்டிபிகேட்டைத்தான் நேத்து நான் பார்த்தேனே.” பேசிக் கொண்டே போனவன் சற்று நிதானித்தான்.

“என்ன சொன்ன…?  காலேஜுக்குப் போகப் பிடிக்கலையா?  இல்ல அந்தக் காலேஜுக்குப் போகப் பிடிக்கலையா?”

தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள், “அந்தக் காலேஜுக்குத்தான்”

“ஏன்?…”

மெதுவான குரலில் கல்லூரியில் நடந்தவை அனைத்தையும் அவனிடம் கூறினாள்.  மன அழுத்தம் தாங்காமல் கால் போன போக்கில் நடந்து  போன போது மூன்று சமூக விரோதிகளிடம் சிக்கிக் கொண்டதையும், அவர்களிடம் இருந்து தப்பித்துக் கடலில் விழுந்ததையும்,  பிறகு கதிர் காப்பாற்றியதையும் கூறினாள்.

கதிருக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.  ‘இப்படியும் பெண்கள் கோழையாக இருக்கலாமா? இவள் சற்று எதிர்த்துப் பேசியிருந்தாலே,  அந்த தீனதயாளன் அடங்கியிருக்கக் கூடும். அதைவிட்டு அழுது கொண்டேப் போய் யாரோ கயவர்களிடம் சிக்கத் தெரிந்தாளே…’  என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.

“உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?  அவன் அப்படிக் கேட்டதும், அவனை  உன் கால்ல கிடந்ததைக் கழட்டி அடிச்சிருக்க வேணாமா? அவன்தான் அந்த ரூம்ல கேமரா இருக்குன்னு சொன்னான்ல,  நீ எழுந்து போய் அவன் சட்டையப் பிடிச்சு,  நாலு அறை கன்னத்துல குடுத்து,  இதப் போய் வெளிய சொல்லுடா  நாயேன்னு சொல்லியிருக்க வேணாமா?”

“…”

“பெண்கள் தைரியமா இருக்கனும் சிவரஞ்சனி. பாரதியார் பாட்டெல்லாம் படிச்சதில்ல நீ.”

“பாதகம் செய்பவரைக் கண்டால்

நீ பயங் கொள்ளல் ஆகாது பாப்பா…

மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…  ன்னு குழந்தைகள் கூட தைரியமா இருக்கனும்ன்னு எவ்வளவு அழகாச் சொல்லியிருக்கார்.”

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…  ன்னு படிக்கும் போதே மனசுல வீரம் வர வேணாமா?  நாம படிக்கறதே வாழ்க்கையில அதை தேவையான இடத்துல பயன்படுத்தறதுக்காகதான்.  அதைவிட்டு வெறும் மார்க்கு மட்டும் வாங்கி என்ன சாதிக்கப் போற  நீ?”

“…”

“எந்தச் சூழ்நிலையையும் எதிர்க் கொள்ளும் அளவு தைரியத்தைப் பெண்கள் கட்டாயம் வளர்த்துக்கனும்.   நாம ஓடற வரை நாய்கள் துரத்தத்தான் செய்யும்.  தைரியமா நிமிர்ந்து நின்னு தீர்க்கமா ஒரு பார்வை பாரு,  அந்த நாய்கள் பின்னங்கால் பிடறியிலப் பட ஓடிப் போகும்.”

“…”

“இப்பவும் இந்தப் பிரச்சனையில இருந்து தப்பிச்சுப் போகத்தான் நினைக்குற.  உன் கிட்ட தப்பாப் பேசினவன்,  அடுத்தடுத்து உன்னைப் போல இருக்கற எல்லாப் பொண்ணுங்கள்ட்டயும் அப்படித்தான் பேசுவான். இதை வளர விடலாமா? நீ அன்னைக்கு தைரியமா இந்தப் பிரச்சனைய ஃபேஸ் பண்ணியிருந்தா,  அவனுக்குப் பயம் வந்திருக்கும்.”

அவன் பேசப் பேச அவளுக்கு கட்டுக்கடங்காமல் கண்ணீர் வந்தது.  அழுகையை உதடு கடித்து அடக்கியபடி,

“எப்படிப் ஃபேஸ் பண்ணச் சொல்றீங்க?  நான் ரொம்ப தைரியமானப் பொண்ணு இல்லதான் ஒத்துக்கறேன்.  ஆனாக் கோழை இல்லை. அவனை எதிர்த்து நிற்க எனக்குத் துணையா அம்மா அப்பா அண்ணன் தம்பின்னு யாராவது இருந்திருந்தா கண்டிப்பா எதிர்த்திருப்பேன்.

எப்படா என் படிப்ப நிப்பாட்டலாம்,  அந்தக் கேசவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு யோசிக்கற சித்தியை  வச்சிகிட்டு, என்னால என்ன செய்ய முடியும்?

என் டீசி,  மற்ற சர்டிபிகேட் எல்லாம் அந்த ஆள் தயவில்லாம வாங்க முடியாது. அவனை எதிர்த்துகிட்டு என்ன செய்யறதுன்னு, சத்தியமா அன்னைக்கு எனக்குப் பயமா இருந்துச்சி. படிப்பக் கூட கரஸ்ல பண்ணிக்கலாம், அந்தக் காலேஜ்க்கு இனி போகக் கூடாதுன்னுதான் தோனுச்சி.

என் கஷ்டத்தைச் சொல்றதுக்குக் கூட யாரும் இல்லையே எனக்கு. அந்தச் சூழ்நிலையில  அவன எப்படி எதிர்க்க முடியும்? யார் இருக்கா எனக்குச் சப்போர்ட் பண்ண?”

பேசியவள் கன்னத்தில் வழிந்தக் கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

‘ஏன் நான் இல்லையா?’  என்று நாக்கு நுனி வரை வந்துவிட்டக் கேள்வியைக் கண்டு ஒரு நொடித் திகைத்தான்  கதிர்.

வெறும் வாய் வார்த்தையாகக் கொடுக்கக் கூடிய நம்பிக்கையா இது?

இவளுக்கு எல்லாமுமாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றும் எண்ணங்களைத் தடுக்க முடியவில்லையே அவனால். அவள் கண்ணீரைக் கண்டதும் உடல் பதறுகிறதே… பரிதாபத்தைத் தாண்டிய ஏதோ ஒரு உணர்வு அவனை அலைக்கழிக்கிறதே… .

வேறு எந்தப் பெண்ணிடமும் தோன்றாத எண்ணங்கள்,  இவளுக்கு இனி எந்தக் கஷ்டமும் நேராமல் அரணாக இருப்பேன். இவளின் மன தைரியத்திற்குத் துணையாக இருப்பேன். ஒரு துளிக் கண்ணீரானாலும் என்னை மீறித்தான் இவளது கண்ணில் இருந்து வர வேண்டும்.

முடிவு எடுத்தவன் தீர்க்கமாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“உனக்கு உறுதுணையா காலம் முழுக்க,   உன் கூடநான் வரேன்.  என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா?”

அவனது கேள்வியின் பொருளைச் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் அவளது விழிகள் விரிந்தன. அவளுக்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. வாய் குழறி வார்த்தைகள் தந்தியடித்தது.

“எ… எ… என்னத் தி… திடீர்ன்னு… ?”

“திடீர்னு எடுத்த முடிவுதான். ஆனா…  உன்னோடக் கையை பிடிச்சா சாகற வரை விடாமக் கூடவே வருவேன்னு தீர்க்கமா எடுத்த முடிவு.

இதுவரை எந்தப்  பொண்ணுகிட்டயும் இப்படிக் கேட்கத் தோனுனது இல்ல.”   அவளது கண்களோடுத் தன் கண்களைக் கலந்தவன்,

“இனி எந்தப் பொண்ணுக்கிட்டயும் இப்படிக் கேட்கத் தோனப் போவதுமில்லை.  உனக்கும் என்னைப் பிடிச்சிருந்தா சம்மதம் சொல்லு.”

பேரர் வரவும் உணவுக்கான பில்லைக் கொடுத்தவன்,  பேரர் சென்றதும்,

“அவசரமில்லை நிதானமா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு.  இப்பக் கிளம்பலாம்.”

உணவகத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தமது பயணத்தை மீண்டும் துவங்கினர்.  இருவரது மனநிலையும் வெவ்வேறு விதமாக இருந்தது.

 

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா…
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா…

காற்று வீசும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

AOA-15

அவனன்றி ஓரணுவும்- 15

கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான்

மனிதனுக்கு தெரியவரும்… இந்த பணம் என்ற காகிதத்தை தின்ன முடியாது என்று

இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைத்து நிகழ்காலத்தில் தினம் தினம் அழுகிற சம்பவங்கள் உலகத்தில் எப்போதாவதுதான் நடக்கும். இயற்கை பேரிடர்களை எல்லாம் தாண்டிய ஒரு பேரிடரின் பெயர் செர்னோபில்!

அந்த இரவு நேரத்தில், வெப்ப நிலை 10 டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது. இந்தியா போன்ற நாட்டவருக்கு அது கடும் குளிர் கொடுக்கக் கூடிய சீதோஷ்ணம் தான். ஆனால், அன்றைய ஒருங்கிணைந்த சோவியத்தின், செர்னோபில் பகுதி மக்களுக்கு, அது கடுமையான குளிர் இல்லை.

26-04-1986. அது ஒரு சனிக்கிழமை.

நள்ளிரவு மணி 1. 15. செர்னோபில் அணு உலையின் 4 வது எண் கலனில் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

1.20 மணி… அதீத வெப்பத்தைக் கக்க ஆரம்பிக்கிறது. தண்ணீர் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஆவியாகத் தொடங்குகின்றன.

மணி… 1.22 நிமிடங்கள், 30 நொடிகள். அதைப் பரிசோதித்துக் கொண்டிருந்த ஆய்வாளர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர்கள் முடிவெடுத்து முடிப்பதற்குள்…

மணி… 1.23 பெரும் சத்தத்தோடு உலை வெடிக்கிறது. கடுமையான வெப்பம். அதைப் பரிசோதித்த இருவரும் சம்பவ இடத்திலேயே சாகிறார்கள். தீ பற்றத் தொடங்குகிறது. பற்றி எரியத் தொடங்குகிறது. எந்தளவிற்கு என்றால்… அது தொடர்ந்து 9 நாட்களுக்கு எரிந்துக் கொண்டிருந்தது.

முதலில் இதை சாதாரண விபத்தாகத் தான் நினைக்கிறது சோவியத் அரசு. பின்னர், விபத்தின் வீரியத்தை உணர்ந்து ஹெலிகாப்டரில் பறந்து மண்ணையும், கரியத்தையும் வீசி அணைக்க முயற்சிக்கிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள், அணு உலையிலிருந்து தரை வழி வெளியேறும் அணுக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

10 லட்சம் பேர் வரை இணைந்து முதற்கட்ட மீட்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். 200 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிறைந்த அணுக்கழிவு, 30 டன் அளவிற்கான கதிர்வீச்சு நிரம்பிய துகள்கள், 16 டன் அளவிற்கான யுரேனியம் மற்றும் புளுட்டேனியம் நிறைந்து கிடந்த அந்தப் பகுதியைப் பாதுகாக்க அதன்மீது ஒரு கான்கிரீட் வேலியை அமைக்கிறார்கள். விபத்து நடந்த அன்று மட்டும் 31 பேர் நேரடியாக இதில் மரணம் அடைந்தார்கள்.

(குறிப்பு- இந்த அணுகழிவில் கலந்திருக்கும் சீசியம் மற்றும் ஸ்ட்ரான்டியம் செயலிழக்க 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் புளுட்டோனியம் பாதி செயலிழக்கவே 24 ஆயிரம் ஆண்டுகள் தேவை.)

விபத்து நடந்து 36 மணி நேரத்தில்,10 கிமீ சுற்றளவிலிருந்த கிட்டத்தட்ட 49 ஆயிரம் பேர் அந்தப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். மொத்தமாக 8 டன் அளவிற்கான கதிர்வீச்சு பொருள் வகைகள் வெளியேறின. பல லட்சம் பேருக்கு உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டன. கேன்சர் பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. கதிர்வீச்சு பாதிப்புகளின் காரணமாக தோராயமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

இதில் 20% தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வாழ்வாதாரத்தைக் குலைத்து, மரணத்தை அளித்து, பல லட்சம் பேரை நடை பிணங்களாக்கி, மரம், செடி கொடிகளைக் கொன்று, லட்சக்கணக்கான கால்நடைகளைக் கொன்று என மனித இன வரலாற்றில், மனிதன் ஏற்படுத்திய ஆகப் பெரும் பேரிடராக பெரும் வலியோடு இதுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகள் கடந்தும் கூட, இன்றும் அணுக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கதிர்வீச்சின் பாதிப்புகள் நாடுகள் கடந்து அயர்லாந்து வரை இன்றும் இருந்து வருகிறது.

வருடங்கள் கடந்தாலும் அணு உலையின் தழும்புகளைச் சுமந்தே  இப்போதும் பல குழந்தைகள் பிறக்கின்றன. விபத்து நடந்து பதினாறு வருடங்கள் கழித்து, தொண்டு நிறுவனம் ஒன்று பெலாரஸ் குழந்தைகள் பற்றிய புகைப்படங்களை எடுத்திருக்கிறது.

புகைப்படத்தில் இருக்கிற குழந்தைகள்  எல்லாம் ஒன்றிலிருந்து நான்கு வயதை உடையக் குழந்தைகள். கதிரியக்கத்தின் தாக்கம் ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு உடல் சார்ந்த தீவிர நோய் தாக்குதலில் இருக்கிறார்கள்.

மண்டை ஓட்டுக்குள் இருக்க வேண்டிய குழந்தையின் மூளை  தலைக்கு வெளியே இருக்கிற பெரிய கட்டிக்குள் இருக்கிறது.

உடலுக்குள் இருக்க வேண்டிய சிறுநீரகம் உடலுக்குள் இருக்கிற பெரிய கட்டிக்குள் இருக்கிறது. நீர் சூழ்ந்து பெரிய தலையுடன் சில குழந்தைகள்  உடல் வளர்ச்சியில் மாறுபட்ட உருவத்தை பெற்றிருக்கிறார்கள்.

1980களில் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைகளின் சதவிகிதம் 80. 1986 அணு உலை விபத்திற்கு பிறகு அது 20 சதவீதமாக  குறைந்திருக்கிறது. வருடத்திற்கு 7000 குழந்தைகள் என்கிற விகிதத்தில் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள்

செர்பினியா விபத்திற்குப் பிறகு 57 விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில் 57 சதவிகிதம் அமெரிக்காவில் நடந்துள்ளன.

2011 செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து; 2011, மார்ச் 11இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து; 1986, ஏப்ரல் 26இல் நிகழ்ந்த செர்னொபில் அணு விபத்து;1979 இல் அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரி மைல் தீவு விபத்து, 1961இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு விபத்து ஆகியவைக் குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன. இவ்வாறாக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அதில் குறிப்பிடத்தக்க மிக மோசமான விபத்து புகுஷிமா அணுஉலை வெடிப்பு. சுனாமியோ, நிலநடுக்கமோ ஜப்பானைத் தாக்குவது புதிதான செய்தியல்ல. ஆனால், அன்று 9.0 என்ற ரிக்டர் அளவில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கமோ வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது.

உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவில்  ஏற்பட்ட விபத்து இன்றும் பேசப்பட்டு வருகிறது. பசிபிக் பெருங்கடலின் வடக்கு புகுஷிமா பகுதியில் உள்ள செனடாய் நகரத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் அன்று கடல்நீர் புகுந்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் கண்டன.

இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கத் தொடங்கியது. உலையைக் குளிர்விக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கதிர்வீச்சின் தாக்கத்தை சிறிதளவு குறைக்க முடிந்ததே தவிர, முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. கரும்புகை சூழ்ந்தது. அங்கு வசித்த 45,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆறு ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கிக் கொண்டிருக்கிறது அந்த உலை. இப்போது புகுஷிமா பற்றி வெளியாகியிருக்கும் செய்தி இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.

புகுஷிமா அணு உலை விபத்தினால் வெளியேறிய கதிர்வீச்சு எட்டு ஆண்டுகளைக் கடந்தும் காற்றிலும் கடலிலும் கலந்து உலகின் பல்வேறு மூலைகளுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது கனடா நாட்டின் அலஸ்கா கடற்பகுதியில் புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதை இன்றளவும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் விஞ்ஞானிகள். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வானது சிறிய அளவில் நீண்டகாலமாக நடத்தப்பட்ட ஆய்வு.

புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு பசிபிக் பெருங்கடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விளையும் திராட்சைகளில் புகுஷிமாவின் கதிர்வீச்சு கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி கதிர்வீச்சானது பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. இன்னும் நிறைய இடங்களுக்குக் கதிர்வீச்சு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் அணு உலை தொடர்பான விபத்து நடக்கவே நடக்காது எனச் சொல்லிய இடங்களில்தான் எல்லாமே சுமூகமாக நடந்து முடிந்திருக்கிறது.

மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் வயது வந்தோரைப் பற்றி ஏற்கனவே மறந்துவிடத் தொடங்கிய உலகம் அதன் கொடூர விளைவுகளுடன் வாழ்கிற குழந்தைகளை பார்த்த பின்பும் அணுஉலைகளை  நடத்திக் கொண்டிருக்கின்றன.

அணு உலைகள் வேண்டும் என்பதைச் சொல்ல எத்தனைக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வேண்டாம் என்பதைச் சொல்ல இப்போதைக்கு  இந்தக் குழந்தைகள் காரணமாய் இருக்கிறார்கள்.

அணு உலை விபத்தின் தாக்கத்தில் முடங்கிப் போய்  கிடப்பது செர்னோபில்  சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்ல அந்தக் குழந்தைகளின் நாளை பற்றிய நம்பிக்கைகளும்தான்.’

இந்த தகவல்களை இணையதளம் மூலம் தேடி படித்த பின் பிரபஞ்சன் தன்னறையின் பால்கனியில் சென்று அமைதியாக நின்று கொண்டான்.

அனிச்சையாக அவன் விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. விழிகள் சிவந்தன.

எங்கோ, என்றோ நடந்த அழிவு… நமக்கான அதிவேக வாழ்வில் இதை செய்தியாகக் கூட கடக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், அந்த வெப்பத்தில் வெந்தவர்களுக்கு, வெந்து இறந்தவர்களுக்கு, கருகி செத்த மரம், செடிகளுக்கு, எந்தத் தீங்கும் செய்திடாமல் இன்றளவும் முடமாகிப் பிறக்கும் சிசுக்களுக்கு…

அவர்களை நினைந்து நாம் சிந்தும் சில துளி கண்ணீர் தான் நமக்குள் எங்கோ ஒளிந்துக் கிடக்கும் மனிதத்தின் மிச்சமாக இருக்கக்கூடும்.

பிரபஞ்சனின் பார்வை கண்ணீரை சுரந்து கொண்டே தூரத்தில் தெரிந்த சமுத்திரனிடம் நிலை கொண்டிருந்தது. எந்த நொடி தன் கரையை உடைத்து கொண்டு வருவானோ?!

தற்போது வீட்டில் அவன் மட்டுமே தனிமையில் நின்றிருந்தான்.  ஷெர்லியை சத்யா வீட்டிற்கு தகவல் சொல்ல சொல்லி அனுப்பியிருந்தான்.

உடன் ஹரியும் சென்றிருந்தார். அதேநேரம் தன் ஊர் காவல் நிலையத்திலிருக்கும் அவரின் நண்பரும் ஆய்வாளருமான சதாசிவத்திடம் ஏதேனும் சொல்லி உதவி பெற முடியுமா என்று பார்க்க சென்றிருந்தார்.

ஆனால் இது போன்ற விஷயங்களில் வெறும் யுகங்கள் மட்டும்  உதவாதே. இருப்பினும் முயற்சி செய்யாமலும் இருக்க முடியவில்லை.

மூளையின் ஒவ்வொரு மூலையிலும் பதட்டம்! பயம்! எச்சரிக்கை உணர்வு! என்று ஒவ்வொரு விநாடியும் பிரபஞ்சனுக்கு நரகவேதனையாக இருந்தது.

மரணம் கூட ஒரு சில நிமிடங்களின் வலி! ஆனால் மரணத்தை எதிர்கொண்டிருக்கும் போராட்டம் இருக்கே! அதுதான் வலிக்களுக்கெல்லாம் பெரிய வலி!

பிரபஞ்சன் மனதளவில் ஓர் பயங்கரமான மரண போராட்டத்தில் நின்று கொண்டிருந்தான். எரிகுழம்பின் மீது நிற்பது போல்  தகித்தபடி நொடிகளை எரித்து கொண்டிருந்தான். எதிர்க்காலத்தை பார்ப்பது என்பது சக்தியல்ல. சாபம்!

எதுவுமே செய்ய முடியாது என்ற இயலாமையை விட பிரபஞ்சனுக்கு இந்த பேரழிவை தடுக்க என்ன செய்வது? என்ன செய்வது? என்று அவனுக்குள் இருக்கும் தவிப்பு மிகுந்த அவஸ்தையாக இருந்தது. அவனை கொல்லாமல் உயிரோடு கொன்று கொண்டிருந்தது.

இதே போன்ற ஓர் அணுஉலை விபத்து நம் நாட்டில் நடந்து அதனால் பல்லாயிரம் உயிர்கள் இறப்பதையும் அவர்கள் சந்ததிகள் அனுபவிக்க போகும் கொடுமைகளையும் அவனால் மனதால் யோசித்து கூட பார்க்கமுடியவில்லை.

தான் கண்ட கனவு பலித்து அப்படி ஒரு பேரழிவு நிகழ்ந்துவிடுமேயானால் அந்த நொடியே அந்த சூழ்நிலையில் தன் உயிரும் அப்படியே போய்விட வேண்டுமென்று ஓர் ஆபத்தான சங்கலப்பத்தை மனதிற்குள் எடுத்து கொண்டான்.

அவன் பார்வை கடலை வெறித்திருந்தாலும் அவன் மனம் ஓர் ஆழமான தியான நிலையில் இருந்ததை அவன் மட்டுமே அறிய கூடும். எண்ணங்களுக்கு ஓர் அபாரசக்தி இருக்கிறது. அந்த சக்தியின் மூலமாக எந்தவித பேரழிவும் ஆபத்தும் யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்று தன்னுடைய ஒவ்வொரு அணுவிலிருந்தும் வேண்டுதலாக வைத்து கொண்டிருந்தான்.

இப்படியாக ஒவ்வொரு விநாடிக்கும் அவன் செத்து செத்து பிழைத்து கொண்டிருந்தான்.

அப்போது மேஜை மீதிருந்த பிரபஞ்சனின் கைப்பேசி தொடர்ந்து ரீங்காரிமிட்டது. இரண்டு மூன்று அழைப்புக்கு பின்னரே பிரபஞ்சன் அந்த சத்தத்தை கேட்டறிந்து வந்து அதனை ஏற்று காதில் வைத்தான்.

எதிர்புறத்தில் மிகுந்த பதற்றத்தோடு பேசியது சேது!

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையில்லாமல் பேசியை காதில் வைத்து கொண்டே கீழே முகப்பறைக்கு வந்தவன் தொலைகாட்சியை உயிர்பித்தான்.

ப்ரேகிங் நியூஸ் ஒளிப்பரப்பட்டு கொண்டிருந்தது!

‘சுனாமி வர போகும் முன்னெச்சரிக்கை தகவல். வங்காளவிரிகுடா நடுகடலுக்கடியில் உணரப்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு. இது கடலோர பகுதிகளிலும் உணரப்பட்டது.’

அனைத்து சேனல்களில் இந்த ஒரே செய்தி மட்டுமே!

உச்சபட்ச பரப்பரப்பை எட்டியது வங்காளவிரிகுடா கடற்பகுதியின் ஓரமாக அமைந்திருந்த நகரங்கள்!

வர போகும் பேரழிவை முன்னமே கண்டறிந்த மனிதனின் புத்திகூர்மை அணுஉலை என்ற பெயரில் ஓர் பேரழிவை தானே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை உணராது போனது அவனின் முட்டாளத்தனத்தின் உச்சமா?

அடிப்படை வசதிகளான உணவு, உடை, தங்க இடம் போன்றவற்றை கூட நம் நாட்டில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இதுவரை ஒழங்காக பூர்த்தி செய்யாத இந்த அரசாங்கங்கள் பல கோடிகளில் செலவு செய்து வெளிநாடுகளுடன் கை கோர்த்து அணுஉலைகள் நிர்மாணித்து மின்உற்பத்தி செய்கிறது. நிச்சயம் அது அடித்தட்டு மக்களுக்காக அல்ல. சென்னை போன்ற மாநகரங்களில் கோடிகளில் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்காக!

ஆக மனிதனின் அடிப்படை தேவை பணம் மட்டுமே! இந்த பணம் என்ற காகிதத்திற்க்காக எதிர்கால சந்ததியை முடமாக்கவும் மலடாக்கவும் பலிக்கடாவாக மாற்றவும் இந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கின்றனர்.

ESK-10

சுவாசம்—  10

 பொன் அந்திப் பொழுது வேகமாகத் தனது இரவுக்  காதலியைத் தேடத் துவங்கி இருந்தது. இரவு மகளும் காதலனின் தேடலை ரசித்து எங்கும் வியாபித்துப்  பரவ ஆரம்பித்திருந்தாள். சிவரஞ்சனியின் வீட்டு வாசலில் ஒற்றை மின்விளக்கும்,   உள்ளே ஒற்றை மின்விளக்கும் போடப்பட்டு  சுமாரான வெளிச்சத்தில் இருந்தது.

வாசலிலேயே   திண்ணையில் அமர்ந்திருந்தான் கேசவன்.  அது கொஞ்சம் வளர்ச்சியடைந்த மெயினான ஏரியா.  சிவரஞ்சனியின் வீடு போல ஒருசில வீடுகளே, சற்று அளவில் சிறிய வீடுகள்.  மற்ற அனைத்தும் நல்ல வசதியானவர்கள் குடியிருக்கும் பங்களா டைப் வீடுகளே.

பல வருடங்களாக அங்கே குடியிருந்து வருவதால், அனைவருடனும் நல்ல பழக்கம் இருந்தது  சிவரஞ்சனிக்கு.  அவளைக் காணவில்லை என்றதும்,  அவள் சித்தியிடம் இருந்து தப்பித்து, எங்காவது நன்றாக இருந்தால் சரி என்ற மனநிலையில் இருந்தனர் அவளது அக்கம் பக்கத்தினர்.

ஒருவருக்கொருவர் தேவையற்றப் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை அவர்கள்.  அதிலும் சாரதாவிடம் பேசுவது கூடக் கிடையாது.

வீட்டினுள் அன்றைய பொழுதின் நூறாவது முறையாக,  கல்யாணி தனது அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா…  அக்கா எங்க ம்மா?   எப்ப வரும்?”

“ம்ம்…  வாய மூடுடி…  அவ எங்க போய்த் தொலைஞ்சாளோ…   அவ இனிமே வரமாட்டா. அக்கா நொக்கா ன்னு ஏதாவது புலம்புன, வாயில சூடு போட்டுடுவேன் பார்த்துக்க.”

தன் மேல் எப்பொழுதும் பாசமாக இருக்கும் தனது தமக்கையைக் காணாமல், அந்தப் பிஞ்சு ஏங்கிப் போய் இருந்தது. சாரதா அடுப்படியில் முனுமுனுத்தவாறு சமையல் செய்து கொண்டிருந்தாள்.

“அந்தக் கழுத இருந்தா இந்த வேலையெல்லாம் அவ தலையில கட்டிடுவேன்.  இப்ப நானே செய்ய வேண்டியதா இருக்கு. இந்த அண்ணன் வேற நல்லா வாய்க்கு வக்கனையா செய்யச் சொல்லுது.  முதல்ல அத ஊருக்கு அனுப்பனும்.”

கைகள் வேலையைச் செய்து கொண்டிருக்க,  வாய் சிவரஞ்சனியைத் திட்டிக் கொண்டிருக்க,  மூளையோ அவள் அண்ணனை எப்படி ஊருக்கு அனுப்புவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.

வாசலில் அமர்ந்திருந்த கேசவன், போவோர் வருவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும்  தெருவில் நடந்து  போகும்  பெண்களின் மீது சற்று அதிகமாகவே பார்வை போனது.

அப்பொழுது வாசலில் இருந்து சில அடிகள் தள்ளி ஒரு கார் வந்து நிற்கவும், அவனது கவனம் அங்கே சென்றது. அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த வாகனம், சற்று தூரத்தில் தள்ளி நிறுத்தப் பட்டிருந்தது.

காரில் இருந்து முதலில் இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் அவனது கண்கள் விரிந்தன.

“ஏ…  சாரதா உன் மூத்த பொண்ணு வந்துட்டா பாரு.”  என்று வேகமாகக் குரல் கொடுத்தபடி உள்ளே ஓடினான்.

அவளைத் தொடர்ந்து வாசுகியும் ராகவனும் இறங்கினர். அவளிடம் ராகவன், “இவர் யாரும்மா?”

இவ்வளவு  நேரம் இருந்த மனநிலை மாறி, தனது வீட்டின் அருகே வரவும் சிவரஞ்சனியின் அடிவயிறு பயத்தில் தடதடத்தபடி இருந்தது. கண்களில் கலவரம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதிலும் கேசவனைக் கண்டதும் மேலும் பயம் அதிகரித்தது. சற்று நடுக்கத்துடனே பதில் தந்தாள்.

“எங்க சித்தியோட அண்ணன்  சார்.”

கதிர், “நான் காரிலே இருந்து கொள்கிறேன், நீங்க ரெண்டு பேரும் போய் விட்டுட்டு வாங்க” என்று கூறியதால்,  அவனுடன் குழந்தைகளை விட்டுவிட்டு மூவர் மட்டும் சிவரஞ்சனியின் வீட்டிற்குள் சென்றனர்.

காரில் இருந்து இறங்கிய கதிர், அதன் மீது சாய்ந்து நின்றபடி சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  குழந்தைகள் இருவரும் காருக்குள் ஆளுக்கொரு ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு, கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

காரில் வரும் போது அவள் படிக்கும் கல்லூரியைப் பற்றி விசாரித்து,  படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தார் ராகவன்.   அவள் கல்லூரி பெயரைச் சொன்னதும் கதிரின் மனதில் சிலபல கணக்குகள்.

அவளிடம் சில விபரங்களைக் கேட்க வேண்டி இருந்தது அவனுக்கு. வாசுகியின் முன் விசாரித்தால் அடுத்த பிரச்சனைக்கு ரெடி ஆகிட்டியா?  என்று திட்டுவாள் என்பதால்,  பிறகு தனியாகச் சந்தித்து விசாரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

மேலும் சிவரஞ்சனி அவளது சித்தியைப் பற்றி சொல்லியிருந்ததால்,  அவனுக்கு உள்ளே சென்று அவர்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கவில்லை.   சாரதாவைச் சமாதானப் படுத்தும் அளவுப் பொறுமையெல்லாம் தனக்குக் கிடையாது என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும்.

தான் தேவையில்லாமல் ஏதேனும் பேசி விட்டாலோ,  கை நீட்டி விட்டாலோ சிவரஞ்சனிக்குத்தான் பிரச்சினை என்பதால், தான் உள்ளே வரவில்லை என்று கூறிவிட்டான்.

 

மூவரும் வீட்டினுள் நுழையவும்,  கேசவனின் குரலைக் கேட்டு சாரதா வெளியே வரவும் சரியாக இருந்தது.

“வீட்டுக்குள்ள கால எடுத்து வச்ச வெட்டிடுவேன்.  வெளிய போடி.”

சாரதாவின் ஆங்காரக் குரலைக் கேட்டதும் நடுங்கிப் போய் வாசுகியுடன் ஒட்டி ஒடுங்கிப் போய் நின்றிருந்தாள்.

“பெரியவங்க அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க.  சிவரஞ்சனி மேல எந்தத் தப்பும் இல்லை.”

அமைதியான குரலில் பேசிய வாசுகியையும் உடன் வந்திருந்த ராகவனையும் பார்த்ததும் சாரதாவின் வேகம் சற்றுக் குறைந்தது. ஆனால்  சிவரஞ்சனியை  முறைப்பதை விடவில்லை அவள்.

சிவரஞ்சனியுடன் வந்திருந்த ராகவனைப் பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது.  மத்திய அமைச்சர் என்றதும் சற்று பயம் கலந்த மரியாதையும் வந்திருந்தது.

ஆனால் கேசவனுக்குத்தான் சட்டென்று உடன் வந்திருப்பவர்கள் யார் என்பது புரிபடவில்லை.  சாரதா அமருமாறு நாற்காலியைக் காட்டியதும் அமர்ந்த ராகவன்,

சிவரஞ்சனி கடலில் விழுந்ததில் இருந்து,  மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களும் கதிரும் அவளைக் காப்பாற்றியதையும்,  உடனடியாகத் திரும்ப முடியாத சூழ்நிலையால் மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்று திரும்பி வந்ததையும் எடுத்துக் கூறினார்.

இதில் சிவரஞ்சனியின் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் எடுத்துக் கூறினார்.

“கடல்ல விழுந்தவ அப்படியே செத்துப் போயிருந்தாக் கூடக் கவலையில்ல.   ஆனா மூனு நாள் இராத்திரி வீடு வராம வேற ஆம்பளைங்களோடத் தங்குனவள, நான் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன் ஐயா.”

கடலில் விழுந்து செத்திருந்தாலும் பரவாயில்லை என்று சாரதா கூறியது, அப்படி ஒரு கோபத்தைக் கொடுத்தது ராகவனுக்கு.   ஆனாலும் பொறுமையாக,

“அப்படிச் சொல்லாதீங்கம்மா…  அந்தப் பிள்ள மேல எந்தத் தப்பும் இல்லை.  சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு. உங்கப் பொண்ண பத்திரமாதான் கொண்டு வந்து சேர்த்திருக்கோம்.”

“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது.  இந்த ஓடுகாலிக் கழுதைய என்னால வீட்டுக்குள்ள சேர்க்க முடியாது.”

ராகவனும் வாசுகியும் வெகு நேரம் சமாதானமாகப் பேசியும்,  சாரதா தன் பிடியில் இருந்து மாறவே இல்லை. இடையிடையே சிவரஞ்சனிக்கு முதுகில் நான்கு அடியும் விழுந்தது. ராகவனாலும் வாசுகியாலும் சாரதாவைத் தடுக்க முடியவில்லை.

கேசவனைப் பார்த்த ராகவன், “உங்க தங்கைக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா நீங்க?”  என்று அவனைத் துணைக்கு அழைக்க, அவனோ…

 

“அய்ய சாரதா… எதுக்கு இப்ப  அவள உள்ள சேர்க்க  மாட்டேன்னு சொல்ற?  இப்ப எதுவும் பேசாத.  அடுத்த முகூர்த்தத்துல எனக்கும் அவளுக்கும் கல்யாணத்த முடிச்சி விடு.  அதுக்கு மேல அவ வெளியில கால எடுத்து வைக்க முடியாதபடி காலை வெட்டறேன்.”

என்ற கேசவனின் பேச்சில் மிரண்டு போயினர்  இருவரும். ‘முக்காக் கிழவனா இருக்கான்… இவனுக்கு இந்த சின்னப் பொண்ணக் கட்டி வைக்கறதா?’   நினைக்க நினைக்கத் தாங்கவில்லை வாசுகிக்கு.

இனியும் இந்தப் பெண்ணை இந்த வீட்டில் விட வேண்டுமா? என்ற எண்ணத்தில் இருந்தனர் இருவரும். அதிலும் கேசவனைக் கண்டதும் அவ்வளவு கோபம் வந்தது.

இந்தப் பேச்சுக்களைக் கேட்டு அழுது கொண்டிருந்த சிவரஞ்சனியைப் பார்க்கப் பாவமாக இருந்தது.   அவள் நாள்தோறும் இத்தகைய சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

அவளைக் கட்டிக் கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்து விட்டபடி இருந்த கல்யாணி மட்டுமே, அவளுக்கு ஒரே ஆறுதல் என்பதும் புரிந்தது.

உள்ளே சிவரஞ்சனி அடிவாங்கும் சப்தமும் சாரதாவின் உயர்ந்த குரலையும் கேட்ட கதிர், உடனடியாக வீட்டின் வாசலுக்கு வந்து விட்டான்.  ஆனால், உள்ளே செல்லாமல் அனைவரது பேச்சுக்களையும் கேட்டபடி கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு  திண்ணையில்  அமர்ந்திருந்தான்.

அவனுக்கு சாரதா, கேசவனை விட சிவரஞ்சனியின் மீது அதிகமான கோபம் இருந்தது. இவ்வளவு ஏச்சுப் பேச்சுகளையும் அடியையும் வாங்கிக் கொண்டு,   எதிர்த்துப் பேசாமல் அழுது கொண்டிருக்கிறாளே என்று வெகுவாகக் கோபப் பட்டான்.

உள்ளே நுழைந்து அவளைக் கூட்டிக் கொண்டு வந்துவிடுவோமா என்று, உள்ளம் பரபரத்தது   அவனுக்கு. அதிலும் கேசவன் கடைசியாகப்   பேசியதைக் கேட்டவுடன், அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் வேகம் வந்தது.

“பெரிய மனுஷங்க சொல்றாங்க,  நான் சொல்றேன் கேட்க மாட்டியா நீ.   மூனு நாளு வெளியில தங்கி வந்தவள எவன் கட்டிப்பான்றது தான உனக்கு பிரச்சினை.

கவலைய விடு சாரதா.  நானே அவளக் கட்டிக்குறேன். அதுக்கப்புறம் அவ வீட்ட விட்டு வெளியே போக மாட்டா.  அதுக்கு நான் கேரண்டி”

“அண்ணா… உனக்கு அவளக் கல்யாணம் பண்ணனும்னா,   நீயே உன் ஊருக்கு கூட்டிப் போயி கல்யாணம் பண்ணிக்க.  நான் இவள வீட்டுக்குள்ள வச்சிக்க மாட்டேன்.”

சிவரஞ்சனிக்கு உள்ளுக்குள் அவ்வளவு  கோபமும் ஆற்றாமையும் இருந்தது.  அவளுக்கு உண்மையில் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. வாசுகியிடம் சொல்லி ஏதேனும் பெண்கள் விடுதியில் சேர்த்துவிடச் சொல்வோம் என்று  நினைத்தபடி, அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.

அப்போது கேசவன்  அவளது வலது கையைப் பிடித்து இழுத்தபடி,

“அழுவாத புள்ள… மாமா உன்னக் கல்யாணம் பண்ணிக்கறேன். நாம  இங்க இருக்க வேணாம். நம்ம ஊருக்குப் போயிடுவோம்.  அப்புறமா வந்து உன் சித்திய சமாதானம் பண்ணலாம்.” என்று கூறினான்.

அவனை மிரட்சியாகப் பார்த்தபடி அவனது கைக்குள் சிக்கியிருந்த தனது  வலது கையை விடுவிக்கப் போராடியபடி இருந்தாள்  சிவரஞ்சனி. சரியாக  அந்த நேரம் கேசவனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க முடியாமல், உள்ளே நுழைந்தான் கதிர்.

உள்ளே நுழைந்தவனின் பார்வை முதலில் சிவரஞ்சனியின் கைகளைப் பிடித்திருந்த கேசவனின்  கைகளில் ஒரு நொடி நிலைத்துப் பின் சிவரஞ்சனியின் முகத்திற்கு வந்தது.

“இந்த ஆளக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?”

கேசவனிடம் இருந்து கைகளை விடுவிக்கப் போராடியபடியே,  கதிரின் குரலில் மிரண்டு அவன் முகத்தைப் பார்த்தவள்,  வேகமாக இல்லை என்று தலையை ஆட்டினாள்.

உடனேக் கேசவனின் கை மணிக்கட்டைப் பற்றியவன்,

“உனக்கு பதினெட்டு வயசு முடிஞ்சிடுச்சா?”

“ம்ம்…” மீண்டும் ஆமாம் என்ற வகையில் ஒரு தலையாட்டல்.

“உனக்கு இந்த வீட்ல இருக்கனுமா?”

“இல்லை”

அவனது ஒவ்வொரு கேள்விக்கும் கேசவனைப் பிடித்திருந்த கதிரின் பிடி இறுகியது. தானாக சிவரஞ்சனியின் கையை விட்டான் கேசவன்.

“டேய்…  டேய்…   கைய விடுடா…  ஆ… ஆ…  அம்மா…”

கதிர் அவனது கையை முறுக்கியதில் வலி தாங்காமல் கத்தினான் கேசவன்.

“அப்புறம் எதுக்கு இவங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு அழுதுகிட்டு அடி வாங்கிகிட்டு இருக்க?”

“…”

“தைரியமா உன் சம்பந்தப்பட்ட முடிவ நீ எடுக்கலாம்.  அதுக்கான வயசு வந்துடுச்சி உனக்கு.”

“…”

“எங்க கூட வா… உன்னப் படிக்க வச்சு நல்ல  வேலை வாங்கித் தரவேண்டியது எங்க பொறுப்பு. என்ன…  வர்றியா?”

சம்மதமாகத் தலையசைத்தபடி, “சரி” என்றாள்.

“போ…  உள்ள போய் உனக்குத் தேவையான உன்னோட சர்டிபிகேட் மட்டும் எடுத்துட்டு வா”

அவன் கூறியதும் விடுவிடுவென்று உள்ளே சென்றவள்,  தனது சான்றிதழ்கள் அடங்கிய ஃபைலுடன் வந்தாள்.

வாசுகி ராகவன் இருவருக்குமே கதிரின் அடாவடிதான் இவர்களுக்குச் சரி என்று தோன்றியது.

கேசவனின் கையில் மளுக்கென்று ஒரு சப்தம் வரவும் அவன் உச்சஸ்தாயில் கத்தவும் சரியாக இருந்தது.  கதிர் கையை  உதறியதும்  அந்த அறையின் மூலையில் போய் விழுந்தான்  கேசவன்.

சமாளித்து  எழுந்து வந்தவன், கதிர் கையை உடைத்து விட்டக் கோபத்தில்,

“ஏய்…  எங்க வீட்டுக்குள்ள வந்து என் கையவே உடைச்சிட்டியா?  எங்க வீட்டுப் பொண்ண எங்கடா கூட்டிட்டுப் போற?”  என்று கதிரிடம் எகிறிக் கொண்டே,

“ஏய் ஓடுகாலி நாயே…  எவனோ ஒருத்தன் கூப்பிட்டா  அவன் பின்னாடியே போயிடுவியா? போடி உள்ள.”   என்றுக் கூறியபடி  சிவரஞ்சனியின் தலைமுடியை இடது கையால் பற்ற வந்தான்.

அவனது  இடது கையையும் பிடித்து முறுக்கியபடி அவன் வயிலும் மூக்கிலும் சரமாரியாகக்  குத்தினான் கதிர்.  கதிரின் பலத்தின் முன்னால் கேசவனால் அரை நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாமல், அவனது  வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வழிந்தது.

தனது அண்ணனைத் திடீரென்று வீட்டிற்குள்  புகுந்து தாக்குபவனைக் கண்டதும் சாரதா, பெருங்குரலெடுத்துக் கத்தியதுடன்,   சிவரஞ்சனியையும்  கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, கதிரின் பிடியில் இருந்து கேசவனைக் காப்பாற்றப் போராட…

மயங்கித் தொய்ந்து போயிருந்த  கேசவனை விட்டவன், அதேக் கையால் சாரதாவின் குரல் வளையைப் பிடித்து  நெரிப்பது போல, அருகே கொண்டு சென்றிருந்தான்.

அவன் கழுத்தை நெரிப்பது போல வந்த வேகத்திலும்,  அவன் பார்வையில் தெரிந்த உக்கிரத்திலும், அரண்டு போன சாரதா சுவரோடு சுவராக பயத்தில் பல்லி போல ஒட்டிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து முறைத்தபடி,  ஒற்றை விரலை நீட்டி,

“அந்தப் பொண்ணு எதிர்த்துப் பேச மாட்டேங்குதுங்குற  ஒரே  காரணத்தால உன் இஷ்டத்துக்கு ஆடிகிட்டு இருக்குற.  இதே உன் பொண்ணா இருந்தா இப்படிப் பேசுவியா?”

“பொம்பளைன்னு பார்க்க மாட்டேன்.   இன்னோரு தடவை அந்தப் பொண்ண  ஏதாவது பேசுன…  உன்னைக் கொன்னு போட்டுடுவேன்”   என்று கர்ஜித்தவனைக் கண்டு மிரண்டு போனாள் சாரதா.

அதற்குள், ராகவனும் வாசுகியும் கதிரை பின்பக்கம் இழுக்கப் போராட…   இந்தக் களேபரத்தில் மிரண்டு அழுத கல்யாணியைத் தூக்கிக் கொண்டு  கதிரிடம் விரைந்த சிவரஞ்சனி, அவளது சித்தியை  விட்டு  விடும்படிக்  கெஞ்சினாள்.

அழுது கொண்டிருந்த  கல்யாணியைப்  பார்த்ததும், தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், சாரதாவை முறைத்து விட்டு,  வாசுகியையும் ராகவனையும் பார்த்து,

“அவள அழைச்சிட்டு வாங்க…   நான் வெளியே வெயிட் பண்றேன்.”    என்றவாறு வெளியேறினான்.  புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. அவன் உள்ளே நுழைந்து ஐந்து நிமிடங்களில் இவ்வளவும் முடிந்தது.

கொஞ்சம் விட்டிருந்தால் அவன் தன் கழுத்தைக் கண்டிப்பாக நெரித்திருப்பான் என்பது புரிந்தது சாரதாவுக்கு. அது சிவரஞ்சனிக்காக என்பதும் புரிந்தது. பயத்தில் ஓய்ந்து போய் சுவரோரம் சரிந்து அமர்ந்தாள்.

இங்கு கேட்ட சத்தத்தில், அக்கம் பக்கத்தில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே கூடி இருந்தனர்.  அவர்களுக்கும் உள்ளே நடக்கும் பிரச்சனையின் சாராம்சம் புரிந்தது.

சுவற்றை ஒட்டி அமர்ந்திருந்த சாரதாவைப் பார்த்த ராகவன்,

“என்னைப்  பத்தி  உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.  நாங்க சிவரஞ்சனியைக் கூட்டிட்டுப் போறோம்.  நல்ல ஹாஸ்டல்ல  சேர்த்து நானே அவள படிக்க வைக்குறேன்.

என்னைக்காவது அவள உங்களுக்குப் பார்க்கனும்னா, தாராளமா வந்து பாருங்க. அப்ப நாங்க கிளம்புறோம்.”  என்றவர் சற்று நிதானித்து,

“கதிர் உங்க  கிட்ட நடந்துகிட்ட முறை தப்புதான்.  கோபத்துல பண்ணிட்டான்.  மன்னிச்சிடுங்க.”

அவரைப் பின்பற்றி வாசுகியும், “நாங்க போய்ட்டு வரோம் மா.”   என்றவள் சிவரஞ்சனியிடம்,

 

“சித்திகிட்ட சொல்லிட்டு வாம்மா.”  என்றபடி வெளியேறினாள்.

அமைதியாக கல்யாணியை இறக்கி விட்ட  சிவரஞ்சனி,  தனது சித்தியின் அருகில் சென்றாள்.

“உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கலைன்னு எனக்குத் தெரியல சித்தி. ஆனா, நான் ஒருநாளும் உங்களை வெறுத்ததில்லை. நான் போயிட்டு வர்றேன்.  என்னால இனி உங்களுக்குத் தொல்லை இருக்காது. நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க சித்தி.”

கல்யாணியிடமும், “அக்கா போய்ட்டு வர்றேன்  பாப்பு.”  அந்தக் குழந்தைக்கு என்ன புரிந்ததோ?  தன் அக்கா வெளியில் இருந்தால் நிம்மதியாக இருப்பாள் என்று எண்ணியபடி,   “சரிக்கா…  நீ அப்புறமா என்னைப் பார்க்க வா…”

“கண்டிப்பா வருவேன்டா…  வரேன் பாப்பு…  வரேன் சித்தி…” என்றபடி வெளியேறினாள் .

வெளியே நின்றிருந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரிடமும் நடந்ததை விளக்கிக் கூறி விடைபெற்றாள். அவளை அழைத்துச் செல்வது மத்திய அமைச்சர் ராகவனும் அவரது மனைவியும் என்பதால் பெரிதாக விளக்கங்கள் தேவைப்படவில்லை அவர்களுக்கு.

செய்தியறிந்து கலாவும் கோதையும் கூட ஓடி வந்திருந்தனர்.  தோழிகளைக் கண்டதும் அவர்களிடமும் விடைபெற்றவள்  காரில் ஏறிக் கொண்டதும் கார் மீண்டும் காட்டுமன்னார்கோவில் நோக்கி விரைந்தது.

காரில் கணத்த மௌனம் நிலவியது.  குழந்தைகள் இருவரும் சிவரஞ்சனி திரும்பவும் அவர்களுடனே வருவதால், மகிழ்ச்சியாக அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.  ராகவன்தான் முதலில்,

“இனிமே மனசுல  எதுவும் கவலையை வச்சுக்காம படிப்புல மட்டும் கவனத்தைச் செலுத்துமா. நீ நல்லாப் படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டா தானா புரிஞ்சுக்குவாங்க உன்ன.”

“சரிங்க சார்.”

“எப்பவும் கதிர் அடிதடியில இறங்கினா  நான்  கண்டிக்கத்தான் செய்வேன். ஆனா எனக்கே இன்னைக்கு கதிர் செஞ்சதுதான் சரின்னு தோனிடுச்சி.”

“பெண்கள் என்னைக்கும் தைரியமா இருக்கனும் சிவரஞ்சனி.   எல்லாருக்கும் அடங்கிப் போய் அழுதுகிட்டு இருந்தா எல்லாரும் ஏறி மிதிச்சிட்டுப் போயிடுவாங்க.”

வாசுகியின் கூற்று அனைவருமே ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. பாசம் காட்ட வேண்டிய இடத்தில் மட்டுமே  பாசத்தைக் காட்ட வேண்டும்.   நம்மை அடக்கி ஆள்பவர்களிடம் இல்லை என்பது,  சில நேரங்களில் உண்மைதானே.

கதிருக்கோ அவள் மீது வெகுவான கோபம் இருந்தது. ‘தேவையான இடத்தில் கூட எதிர்த்துப் பேசாமல் அடங்கியிருந்து, எதைச் சாதிக்கப் போகிறாள் இவள்?  அமைதிசிகாமணி என்று யாராவது பட்டம் கொடுத்து சிலை வைக்கவா போகிறார்கள்?’  வாயைத் திறந்தால் அவளைக் கண்டிப்பாகக் கன்னாபின்னாவென்று திட்டிவிடுவோம் என்றதால் அமைதியாக வந்தான்.

அவளுக்குத் தேவையான உடைகள்  சிலவற்றை வாங்கியவர்கள்,  அவளுக்கு அத்தியவசியமான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டனர்.

ஒரு நல்ல உணவகம் சென்று இரவு உணவை முடித்தவர்கள் ஊர் வந்து சேர்வதற்கு இரவு மணி  பத்துக்கு மேல் ஆனது.  ராகவனது வீட்டில் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு,  தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான் கதிர்.

போகும் முன் சிவரஞ்சனியிடம்  வந்து அவளது  கண்களைக் கூர்ந்து பார்த்தவாறு,  “நிம்மதியாத் தூங்கு.  இனிமே எந்தக் கஷ்டமும் உனக்கு வராது. நாளைக்கு விடியற விடியல் உனக்கானதா நினைச்சுக்கோ.

நான் நாளைக்கு வந்து உன்னை  நல்ல ஹாஸ்டலாப் பார்த்துச் சேர்த்து விடறேன்  புரியுதா.”

அவனது பார்வையின் தீட்சண்யம் தாங்க முடியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டு சரி என்பது போலத் தலையசைத்தவளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான்.

விருந்தினர் அறையில் அவள் உறங்குவதற்கு வசதி செய்து கொடுத்த வாசுகி,  “நிம்மதியா கவலையில்லாமத் தூங்குமா. எல்லாப் பிரச்சனையும் நாளைக்குச் சரியாகிடும்”  என்று கூறி வெளியேறி தனது அறைக்குச் சென்றாள்.

தான் இருந்த அறையின் கதவைத் தாழிட்டுவிட்டு வந்து படுத்த சிவரஞ்சனிக்கு உறக்கம் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டியது.

 

 

—-காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!