Monisha Selvaraj

286 POSTS 8 COMMENTS

AOA-14

அவனன்றி ஓரணுவும் – 14

பூமியின் மேற்பரப்பு(lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளாட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும் நீரின் அடியுலுமாக உள்ள இந்த பிளேட்டுகள் உராயும் போது நிலஅதிர்வுகள் உண்டாகும்.

3 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வை உணர்வது கடினம். 7 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு பெரும் சேதத்தை ஏற்படுத்தவல்லன. வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள் 9.0 ரிகடருக்கும் கூடுதலானவை. (2011 அண்மையில் நிகழ்ந்த ஜப்பான் நிலநடுக்கம்)   

டிசேஸ்டர்

இரவு நடந்தது என்னவென்று நான் யோசித்து கொண்டிருக்கும் போதே எனக்கு நினைவு தப்பிவிட்டது. நான் விழித்த போது செம்மை பூசியிருந்த வானம் சூரியனின் வருகையை எனக்கு அறிவித்து கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. தான் இத்தனை நேரம் மயக்கநிலையில் இருந்திருக்கின்றேன்!

ஆனால் எப்படி? எதனால்? எனக்குள் அதிர்ச்சி பரவ ஆரம்பித்தது. அவசரமாக எழுந்து கொள்ள பார்த்தேன். ஆனால் இன்னும் என் மயக்கம் முழுவதுமாக தெளியவில்லை போலும். உடல் ரொம்பவும் பாரமாக இருந்தது. தலையில் பாரங்கல்லை வைத்து அழுத்தியது போன்ற உணர்வு. அதற்கு மேல் எழுந்து கொள்ளும் என் முயற்சியை கைவிட்டுவிட்டு மீண்டும் படுத்து கொண்டேன்.

வேகமாக என் மூளை இரவு நடந்தவற்றை பற்றி ஆராய தொடங்கின. ஏதேனும் பூச்சி அல்லது பாம்பு என்னை கடித்திருக்குமோ என்ற யோசனை!

இருக்கலாம்! ஆனால் இத்தனை நேரம் நான் உயிரோடு இருக்கும் பட்சத்தில் அது விஷக்கடியாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றிற்று. ஆனால் அதுவும் தீர்க்கமாக தெரியவில்லை. இப்படியெல்லாம் எனக்கு சில முறைகள் நடந்திருக்கிறது. ஆனால் நினைவு தப்பி மயங்கியதெல்லாம் கிடையாது.

மீண்டும் நான் மெல்ல எழுந்து கொள்ள முயன்றேன். உம்ஹும்… முடியவில்லை. என் முயற்சியில் மீண்டும் பலத்த தோல்வி. லேசாக பயம் எட்டி பார்த்தது. இப்படியே படுத்து கிடந்தால் தன்னை ஏதாவது காட்டு விலங்குகள் வேட்டையாட கூடும். யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று பார்த்தால் மனித நடமாட்டமே சுற்றிலும் இருப்பதாக தெரியவில்லை.

என் மனம் தீங்கை எடைபோட்டது. சில விஷக்கடிகள் மனிதனின் உடலின் அத்தனை பாகங்களையும் செயலிழக்க செய்துவிடும். கடைசியாக இதயம் செயலிழந்து உயிர் போகும்.

ஒருவேளை அப்படிதான் எனக்கு நடக்கிறதா? இதுதான் தன் வாழ்க்கையின் கடைசி  பயணமா? எங்கேயோ பிறந்த நான்  இங்கே வந்து என் மரணத்தை தழுவ போகிறேனா ? எல்லாமே  இதோடு முடிந்து போய்விடுமா? எனக்கு அந்த நொடியும் மரணத்தை குறித்த பயமில்லை. என் தேடல்கள் விடையில்லாமல் போய்விடுமே என்றுதான் வருத்தமாக இருந்தது.

போகட்டும். என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டேன்.  இதுதான் முடிவென்றால் அதை மனதார ஏற்று கொள்ள வேண்டும்.

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இறப்பதுதான் இயற்கையின் சாசுவாதமான நியதி. இன்றுதான் என் கடைசி நாள் என்றால் அதற்கு என்னை நான் தயார் செய்து கொள்ள வேண்டும். அழுது புலம்பி கண்ணீரோடும் வேதனையோடும் நான் மறிப்பதை ஒருபோதும் விரும்பவில்லை.

என் வாழ்க்கையில் அப்படியான அதிருப்திகள், கவலைகள் என்று எதுவுமே இல்லாத போது நான் அழ வேண்டிய அவசியமென்ன? அதுவும்  நான் அதிகமாக  நேசித்தது இந்த பூமியைத்தான். என் தேகம் நான் நேசித்த இந்த பூமியின் மீது கிடக்கிறது.

இப்படியே என் உயிர் பிரிந்தாலும் அது இன்பகரமான விஷயம்தான் என்று எண்ணி கொண்டே முகத்தில் புன்னகையோடு ஆகாயத்தை பார்த்தேன்.

நெடுநெடுவென உயர்ந்து வளர்ந்த மரங்களின் இடைவெளிகளில் சூரியகிரணங்கள் உள்நுழைத்து கொண்டிருந்தன. பசுமையான மரக்கிளைகளுக்கு இடையில் வண்ணமயமான பறவையினங்கள் அந்த விடியலின் வருகையை க்ரீச் க்ரீச் என்று சத்தமிட்டு ரசனையாக வரவேற்று கொண்டிருந்தன.

அவைதாம் எத்தனை அழகான காட்சிகள். விவரிக்க வார்த்தைகளே இல்லை. எத்தனை முறை பார்த்தாலும் இந்த மாதிரியான காட்சிகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது. மனிதனை தவிர மற்ற எல்லா ஜீவராசிகளும் இயற்கையை ஆராதிக்கின்றன. ஆனால் இன்றைய காலகட்ட மனிதனுக்கு அவற்றை ரசிக்கும் பொறுமையும் இல்லை. ரசனையும் இல்லை.

கற்கால மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான். பணத்தின் தேவை இல்லாத மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான். அதிகார பித்து இல்லாத மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான். ஆடம்பரங்களை விரும்பாத மனிதன் அப்படி வாழ்ந்திருப்பான்.

ஆனால் இன்றைய மனிதனுக்கு இந்த அனைத்து பித்தும் தேவைகளும் கூடிவிட்டது. தன்னையே மறந்து இயந்திரத்தனமாக ஓடி கொண்டிருக்கிறான். ஆனால் என் வாழ்க்கை அப்படியானது இல்லை.

இயற்கையின் அழகோடு பின்னி பிணைந்த என் வாழ்க்கையின்  நொடிகள் ஒவ்வொன்றும் அழகானவை! சுவரிசியமானவை! பூமிக்கும் எனக்குமான இந்த பந்தம் விசித்திரமானவை! நான் மடிந்து இந்த பூமிக்குள் மண்ணோடு மண்ணாக கலந்துவிட போகிறேன்.

அப்படி நான் சிந்தித்து கொண்டிருக்கும் போதுதான் என்னருகிலிருந்த சில வியத்தகு விஷயங்களை நான் கவனிக்க நேரந்தது. நான் படுத்து கொண்டிருக்கும் இடம் மிகவும் மென்மையாக இருந்தது. பச்சை  இலைகளை பறித்து தரையில் யாரோ படுக்கை போன்று பரப்பியிருப்பார்கள் போலும்.

அதோடு என்னருகே நெருப்பு கங்குகள் கணனென்று கொண்டிருந்தன. மிருகங்கள் எதுவும் தீண்ட கூடாத வகையில் யாரோ செய்த முன்னேற்பாடுகள்.

அந்தளவுக்கு தன்மீது அக்கறை கொண்டு யார் இதெல்லாம் செய்திருப்பார்கள். ஒரு வேளை…  தான் இரவு கண்ட அந்த மாயபெண்ணா?

அப்போது அது என் கனவில்லையா? அந்த எண்ணம் வந்த மறுகணம் இரவு நடந்தது உண்மைதானா என்ற கேள்வி எழுந்தது.

கேள்விகளை தாண்டி நம்ப முடியாத ஆச்சரியங்களால் நான் சிலாகித்தேன். மனிதனுக்கு மறையும் சக்திகள் இருக்குமா? இல்லை அது ஏதாவது என் கற்பனையா? அது கற்பனை என்றால் தன்னை சுற்றி இருக்கும் இவையெல்லாம்….

குழுப்பமாக இருந்தது. அப்படியெனில் அந்த பெண் என் அருகில்தானே இருக்க வேண்டும்? அவள் எங்கே சென்றாள்? தலையை சுழற்றி பார்த்து தேடினேன். எந்த ஆள்அரவமும் இல்லை. யாருமே அருகாமையில்  இருப்பதாகவும் தெரியவில்லை.

நிமிடங்கள்தான் கடந்திருக்கும். ஆனால் பல மணிநேரங்கள் கடந்து போனது போல் ஒருவித சோர்வு உணர்வு என்னை ஆட்கொள்ள, எழுந்து கொள்ள முடியாத இயலாமையின் காரணத்தால் அப்படியே விழிகளை மூடி கொண்டேன்.

அப்போது யாரோ என் முகத்தில் தண்ணீரை ஊற்றினர். பதறி போய் யாரென்று விழித்து பார்த்தேன். அது அவளேதான்!

நான் மயக்கதிலிருந்தேன் என்று எண்ணி கொண்டு என் முகத்தில் தண்ணீர் தெளித்தால் போலும். அவள் இப்போது குனிந்து என் முகத்தருகே பார்த்து கொண்டிருந்தாள். மயில்தோகை போல் விரிந்த அவள் இமைகளினுள்ள கருவிழிகளில் நான் என்னையே பார்த்தேன்.

அத்தனை அழகான கண்கள் அவை. இயற்கையின் மீதான என் காதலும் ரசனையும் அவள் அழகின் முன்னே பின்வாங்கி கொண்டிருந்தன.

அவள் அத்தனை அழகு!’

பிரபஞ்சன் ஆழ்ந்து படித்து கொண்டிருக்கும் போது அவன் உடலில் ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்ட உணர்வு. பதட்டத்தோடு எழுந்து நின்றான். அவன் கால்களில் ஒருவித நடுக்கம். பின்னுக்கு யாரோ இழுப்பது போன்றிருந்தது. எல்லாமே ஒரு சில நொடிகள்தான்.

அவன் மூளைக்கு எட்டிய வரை அது ஏதோ நிலஅதிர்வு என்றே தோன்றியது. ஆனால் ஊர்ஜிதமாக தெரியவில்லை. அது ஒருவேளை தன் பிரேமையாக கூட இருக்கலாம் என்றவன் யோசித்த அதேநேரம் அவன் மனதில் பதட்டமும் குடிகொண்டது.

மீண்டும் ஓர் மோசமான இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்று எண்ணி கொண்டான். தன் கையிலிருந்த பக்கங்களை மேஜையில் வைத்துவிட்டு  பால்கனியிலிருந்து கடலை பார்த்தான். அமைதியாகவே காட்சியளித்தது. ஆனால் அவன் மனமோ உள்ளுர  கொந்தளித்து கொண்டிருந்தது.

எந்த நொடி என்ன நடக்குமோ என்று நரகமாக இருந்தது. அப்போதுதான் அவன் மனதிற்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதன் பின் வேறெதுவும் யோசிக்காமல் உடையை மாற்றி கொண்டு கீழே இறங்கினான்.

ஹரியோடு ஷெர்லி சமையலறையில் ஏதோ பேசி கொண்டிருந்தாள். அவன் முகப்பறையை கடந்து செல்லும் போது ஷெர்லி ஹரியிடம் சொன்ன வார்த்தை அவன் காதில் விழ அப்படியே நின்றுவிட்டான்.

“ஹரி… நான் வெளியே ஊஞ்சலில் இருக்கும் போது ஏதோ ஷேக்கான மாதிரி பீல் ஆச்சு” என்று அவள் உணர்வுகளை சொல்ல,

ஹரி சத்தமாக சிரித்துவிட்டு, “ஊஞ்சல்ன்னா ஷேக் ஆகத்தான் செய்யும்” என்று கேலி செய்தார்.

“அது அப்படி இல்ல ஹரி… நான் என்ன சொல்ல வரேன்னா” என்று அவள் தன் உணர்வுகளை புரிய வைக்க முடியாமல் திண்டாடி கொண்டிருந்தாள்.

அப்போது ஹரி, “நீ உன் ஹென்சம் பத்தியே யோசிச்சிட்டு இருந்திருப்ப… அதான் உனக்கு இப்படியெல்லாம் ஷேக் ஆகுற மாதிரி பீல்” என்று ஹரி சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார்.

“நோ” என்று ஷெர்லி சிணுங்கி கொண்டே மறுக்க, அப்போது  இவர்கள் சம்பாஷணைகளை கேட்டு கொண்டிருந்த பிரபாவிற்கு கோபம் பற்றி கொண்டு வந்தது ஹரி மேல்!

ஆனால் இப்போது  அவன் இருக்கும் மனநிலையில் அவர்களிடம் எதையும் கேட்டு வாதம் செய்ய விரும்பவில்லை. ஷெர்லி சொன்னபடி தனக்கு தோன்றிய அதே உணர்வு அவளையும் ஆட்கொண்டது. அப்படியெனில் அது நிலஅதிர்வுதான் என்று முடிவுக்கு வந்தான்.

வேகமாக வீட்டை விட்டு வெளியேறி கடற்கரை நோக்கி சென்றான். அவன் வெளியே செல்வதை சமையலறை சாளரம் வழியாக பார்த்த ஹரி வெளியே வந்து, “டே! பிரபா… டிபன் சாப்பிட்டிட்டு போடா” என்று அழைத்தார்.

ஆனால் அதற்குள் அவன் தன் பைக்கில் ஏறி விரைந்துவிட்டான். “என்னாச்சு இவனுக்கு… ஏன் காலையில இருந்த ஒரு மாதிரி இருக்கான்” என்றவர் வாய்விட்டு புலம்ப,

அருகிலிருந்த ஷெர்லி அவரிடம், “என்னாச்சு ஹரி?” என்று கேட்டாள்.

அவர் அவளிடம் யோசனையாக, “நேத்து நைட் எதாச்சும் நடந்துச்சா பியுட்டி?” என்று அவளிடம் கேள்வி கேட்க,

அவள் முகத்தில் வித்தியசாமான மாற்றங்கள். எதை சொல்வது? எப்படி சொல்வது? என்று அசடு வழிந்து கொண்டே, “நத்திங்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவர் கேட்ட விஷயம் வேறு. ஷெர்லி யோசித்த விஷயம் வேறு. இதற்கிடையில் வேகமாக சென்ற பிரபாவின்  பைக் கடற்கரை ஓரத்தில் நின்றது. இறங்கியவன் விரைவாக நடந்து அங்கு வசிக்கும் மீனவ மக்களிடம் பேசினான். அதாவது அன்று முழுவதும்  யாரும்  கடற்கரை ஓரத்தில் வசிக்க வேண்டாம் என்று எச்சிரிக்கை செய்தான். ஆனால் வெளிப்படையாக அவன் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை.

அந்த மீனவர்களுக்கு அவனை சிறுவயதிலிருந்தே தெரியும். அவன் சொல்வதில் ஆழமான அர்த்தம் இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணரந்தவர்கள் அவர்கள்!

“சரிங்க தம்பி… நீங்க சொல்றது மாதிரியே செய்றோம்” என்று சொல்ல, “சீக்கிரம் அண்ணே! அப்புறம் கடல் பக்கத்தில இருக்க உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி விடுங்க” என்று மீண்டும் அழுத்தமாக ஒரு எச்சரிக்கை செய்தான்.

அப்போது கரைகளை மோதி கொண்டிருந்த கடலலைகளை ஒருமுறை திரும்பி பார்த்தான். அமைதியாகத்தான் தென்பட்டது. இருப்பினும் அந்த அமைதியில் ஏதாவது ஆபத்து இருக்குமோ என்று அவன் மனம் பதட்டம் கொண்டது.

அவன் நெற்றியில் வியர்வை துளிகள் கசிந்தன. விழிகளை கண்ணீர் மறைத்தன. யாருக்கும் எதுவும் நேர்ந்திட விட கூடாது என்கிற அச்சத்தால் வெளிவந்த கண்ணீர் துளிகள். மீண்டும் பைக்கை எடுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி செலுத்த தொடங்கினான்.

அப்போது அவன் சென்ற வழிமுழுதும் அழகாக  தோரணங்கள் கட்டி தொங்கி கொண்டிருந்தன. சத்யாவின் திருமண ஏற்பாடுகள். அவர்கள் வீட்டு வாசலிலும் வாழை மர தோரணங்களும் சீரியல் பல்புகளும் அலங்கரித்திருந்தன. பந்தக்கால் நடும் விழா முடிந்திருந்தது. ஆனால் பிரபாவின் பார்வை அந்த அலங்காரங்களையும் தோரணங்களையும் பார்க்கவில்லை. உள்ளே நிரம்பியிருந்த ஜனத்திரளை பார்த்தது.

பெண்கள் குழந்தைகள் என்று உறவினர்கள் நிரம்பியிருந்தனர். கடலுக்கு வெகுஅருகாமையிலிருக்கும் வீடு அவர்களுடையது. சுனாமி வந்தால் அவர்களுக்கு ஆபத்தின் சதவீதம் அதிகம் என்று தோன்றிய மறுகணம் பைக்கை அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்திவிட்டு இறங்கினான்.

சுனாமி வரும் என்பதெல்லாம் அவன் கணிப்பு மட்டும்தான். அவன் கனவு கூட அது சம்பந்தப்பட்டதாக இல்லை. இருப்பினும் அவன் மனம் காலையில் அவன் உணர்ந்த நிலஅதிர்வை கருத்தில் கொண்டு சுனாமியோடு தொடர்புபடுத்தி கொண்டது.

வெறும் யூகம்தான் என்றாலும் அதனை அவனால் இயல்பாக எடுத்து கொள்ள முடியவில்லை. இத்தனை உயிர்களை அலட்சியம் செய்யவும் முடியவில்லை.

ஹரிக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் இருக்கும் பகைமை பற்றி யோசிக்க அது நேரமுமில்லை. அவனை பொறுத்தவரை அது ஏதோ அரத்தமற்ற பிரச்சனை என்றே தோன்ற, அவன் வேகமாக அவர்கள் வாயிலுக்குள் நுழைந்தான்.

அங்கே இருந்த யாருமே அவனை கவனிக்கவில்லை. ஆனால் வெளியே நின்றிருந்த சத்யாவின் தந்தை லோகநாதன் அவனை கவனித்துவிட்டார். அவன் வீட்டிற்குள் நுழைவதை அவர் விரும்பாமல் அவனை வழிமறித்து, “என்னடா வேணும் உனக்கு?” என்று காட்டமாக கேட்டார்.

“அது இல்ல சார்… வந்து” என்றவன் தடுமாற,

“என் பையன் கல்யாணத்துல பிரச்சனை  பண்ண வந்தியா?” என்று கேட்டார்.

அவன் பதறியபடி, “சேச்சே! அப்படி எல்லாம் இல்ல சார்” என்றான்.

“அப்புறம்” என்றவர் மேலும் கீழுமாக அவனை இளக்காரமாக பார்க்க, அவன் எப்படி தான் வந்த விஷயத்தை சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தான்.

அப்போது அவர், “ஆமா அந்த வெளிநாட்டு பொண்ணை உங்க வீட்டுலதான் தங்க வைச்சிருக்கீங்க போல” என்று கேட்கவும் அவன் உடனே, “அது ஷெர்லியா விருப்பபட்டுதான்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னர்,

“ஒ! யார் மேல விருப்பபட்டு?” என்று எள்ளலாக கேட்டார் லோகநாதன்.

பிரபஞ்சன் ஒரு நொடி அதிர்ந்து அவரை பார்க்க, அவர் குரூரமாக சிரித்தார்.

“ஷெர்லியை பத்தி பேச நான் வரல… எனக்கு வேறொரு விஷயமா உங்ககிட்ட பேசணும்” என்று அவன் பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டான்.

“அனாதை பையன்… எனக்கு உன்கிட்டஎன்னடா பேச்சு” என்றவர் சீற்றமாக சொல்லிவிட்டு,

“போடா வெளியே” என்று சத்தமாக கத்திவிட்டார். அங்கிருந்த எல்லோரும் பிரபஞ்சனை திரும்பி பார்த்தனர். தான் இனி எது சொன்னாலும் அவர்களுக்கு புரியாது என்று எண்ணி கொண்டு அவன் வேறுவழியில்லாமல் திரும்பி நடந்தான்.

பிரபா பைக்கை எடுக்காமல் வாசலிலியே நின்றான். அனாதை என்ற வார்த்தை ஒன்றும் அவனை பெரிதாக பாதித்துவிடவில்லை. அதற்கெல்லாம் வருந்தும் சாதாரண உணர்வுகள் கொண்டவனும் இல்லை. அவன் வாழ்க்கை கற்று தந்த பாடம் அத்தகையது.

அவன் வருத்தமெல்லாம் அவர் தான் சொல்ல வந்ததை இப்படி காது கொடுத்து கூட கேட்காமல் போகிறாரே என்றுதான். உடனடியாக ஏதோ யோசனை வர, தன் கைபேசி எடுத்து சத்யாவிற்கு அழைத்தான். அழைப்பு மணி அடித்த மாத்திரத்தில் எதிர்புறத்தில் இணைப்பு துண்டிக்கபட்டது.

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது வேறொரு யோசனை வந்தது. வேகமாக தன் பைக்கை எடுத்து கொண்டு தன் வீட்டிற்கு வந்தவன்,

“ஷெர்லி” என்று அழைத்து கொண்டே உள்ளே வந்தான்.

அவள் மிகுந்த ஆர்வத்தோடு அவன் முன்னே வந்து நின்று, “டிட் யு காலட் மீ?” என்று கேட்டாள்.

“ஹம்ம்… சத்யாவுக்கு உங்க போன்ல இருந்து கொஞ்சம்  கால் பண்ணுங்க… நான் பேசணும்” என்றான்.

இவ்வளவுதானா? என்றவள் முகம் வாடி வதங்கி போக எதுக்கு ஏனென்று எல்லாம் கேட்காமல் அவள் தன் பேசியை எடுத்து சத்யாவிற்கு அழைத்தாள். ஆனால் அவள் அழைப்பையும் சத்யா அப்போது ஏற்கவில்லை.

“உஹும்.. சத்யா ஃபோனை அட்டென்ட் பண்ணல” என்றாள்.

பிரபாவிற்கு மீண்டும் ஏமாற்றமானது.

“திரும்பியும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க” என்றவன் சொல்ல, “பட்ஒய்?” என்றவள் புரியாமல் அவனை பார்க்க,

“ப்ளீஸ்!” என்றவன் காரணம் சொல்லாமல் அவளை இறைஞ்சுதலாக பார்த்தான்.

அவள் மீண்டும் அழைத்தாள். ஆனால் சத்யா அழைப்பை ஏற்கவில்லை.

பிரபா உடனே, “அவங்க வீட்டுல இருக்க வேற யாரோட நம்பராச்சும்” என்று கேட்கும் போதே, “நோ சாரி” என்றவள் மறுப்பாக தலையசைத்தாள்.

அவன் பெருமூச்செறிந்தான். அவன் அதற்கு பின் அவள் முன்னே நிற்காமல் துவண்டு போய் மாடியேறி செல்ல அப்போது ஹரி, “ஏ பிரபா! என்னடா பிரச்சனை? என்கிட்டயாச்சும் சொல்லி தொலையேன் டா” என்று கேட்டார்.

“வர கோபத்துக்கு உங்கள எதாச்சும் நல்லா திட்டி விட்டுருவேன்… போயிடுங்க” என்று கடுகடுத்தவன் மேலே ஏறி தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

“இவன் ஏன் இப்படி காலையில இருந்து லூசு மாதிரியே சுத்திக்கிட்டு இருக்கான்… இதுல என்னை எதுக்கு திட்டிட்டு போறான்” என்று அவர் யோசித்து கொண்டிருக்கும் போதே ஷெர்லி பிரபாவை பின்தொடர்ந்து அறைக்குள் சென்றாள்.

“அய்யய்யோ! இவ எதுக்கு உள்ளே போறா? இருக்கிற கடுப்பில இவளை எதாச்சும் காச்சு மூச்சுன்னு காத்திட போறான்” என்று அவரும் பதட்டத்தோடு மேலே ஏறி அறைக்குள் செல்ல எத்தனிக்க, அப்போது ஷெர்லி பிரபா அருகில் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவன் கைகளை பிடித்து கொண்டு ஏதோ பேசி கொண்டிருந்தாள்.

பிரபஞ்சன் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் கோபவுணர்வு துளி கூட இல்லை. இந்த காட்சியை பார்த்த ஹரி முகம் பிரகாசமானது.

‘பாரவாயில்ல நம்ம நினைச்சுது நடக்குது… ஹம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்’ என்று எண்ணி கொண்டே அவர் அவர்களை தொந்தரவு செய்யாமல் கீழே இறங்கி சென்றுவிட்டார்.

ஆனால் அவர் நினைத்தது போல் அங்கே ஒன்றும் நடக்கவில்லை. ஷெர்லி அறையின் வாசலில் போய் நின்ற போது பிரபா தலையை பிடித்து கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தான்.

அந்த நொடி ஷெர்லி எதுவும் யோசிக்காமல் அவன் அருகில் வந்து அமர்ந்து, “வாட் ஹெப்பன் பிரபா? எதனால இவ்வளவு டென்ஷன்? யார்கிட்டயாவது உங்க பிராபளத்தை ஷேர் பண்ணா உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா பீல் ஆகும் இல்ல… ஒரு வேளை சொல்யுஷன் கூட கிடைக்கலாம்” என்று அவன் கண்களை பார்த்து பேசி கொண்டிருந்தாள்.

முதலில் அவள் செய்கையில் அவன் துணுக்குற்றாலும் அவள் வார்த்தைகள் அவனை அமைதிப்படுத்தின. இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

அதுவும் இவையெல்லாம் மனஉளைச்சளிலிருப்பவர்களிடம் அவன் சொல்லும் வார்த்தைகள். அந்த நொடி மனபாரம் லேசாக இறங்கிய உணர்வு!

ஷெர்லியின் வார்த்தைகள் அவன் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஆனால் அவன் மனநிலைக்கு அந்த ஆறுதல் வாரத்தைகள் தேவைப்பட்டது.

அவள் தன் கையை பிடித்து கொண்டு நெருக்கமாக அமர்ந்திருப்பதையெல்லாம் அப்போதைக்கு அவன் பொருட்படுத்தவில்லை. அவளிடம் ஏதோ ஒரு காந்த சக்தியிருந்தது. அருகே இருப்பவர்களை நொடி நேரத்தில் ஈர்த்து தன்வசப்படுத்தும் காந்த சக்தி அது. கிறிஸ்டோபர் அந்த மாயபெண்ணிடம் உணர்ந்த அதே சக்தி.

அது ஷெர்லி வழிவந்த சந்ததிகளின் சிறப்பம்சம். ஷெர்லிக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அது அவளின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கும் ஆற்றல்!

பிரபா சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு பின் அவளிடம் அவனுக்கு வரும் கனவுகளில் தொடங்கி கடைசியாக வந்த கனவு வரை சொல்லிமுடித்தான். இவற்றையெல்லாம் அவளிடம் பகிர்ந்து கொள்வதினால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட போகிறதென்பது பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை.

அவன் பாரத்தை இறக்கி வைக்க எண்ணினான். ஆனால் ஷெர்லி அவன் சொல்வது அனைத்தையும் மிகுந்த சிரத்தையோடு கேட்டு முடித்தாள். நேற்று இரவு ஹரி குடிபோதையில் பிரபாவின் இன்ஸ்டிக்ட் பற்றி உளறிய சில விஷயங்களும் நினைவு வந்தன.

அவளுக்கு ஓரளவு அவன் சொல்ல வந்த விஷயம் புரிந்தது. அவள் எழுந்து நின்று கொண்டு, “ஈஎஸ்பி பவர் பத்தி நான் கேள்விபட்டிருக்கேன்…  ஆனா அதெல்லாம் உண்மைன்னு நான் பிலீவ் பண்ணல… பட் நீங்க சொல்றதை கேட்கும் போது” என்று அவள் தன் விழிகளால் வியப்பு உணர்வை வெளிப்படுத்தினாள்.

பிரபா எதுவும் பேசாமல் மௌனமாக பால்கனி பக்கம் சென்று கடலை பார்த்து கொண்டு நின்றான்.

ஷெர்லி அவன் பின்னே வந்து நின்று, “உங்களோட கனவுக்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்ப,

“உஹும் தெரியல…ஆனா என் ஈஎஸ்பிக்கும் கடலுக்கும் சம்பந்தம் இருக்கு… உங்களை காப்பதினதும் அப்படிதான்” என்றவன் கடலை வெறித்தபடியே விரக்தியாக பதிலுரைத்தான்.

ஷெர்லி இதை கேட்டு வியப்பும் களிப்பும் அடைந்த அதேநேரம் அவன் சொன்னதை பற்றி யோசித்துவிட்டு, “ஒரு வேளை ஜப்பான்ல ஃபுக்காஷிமால நடந்த மாதிரி இங்கேயும் சுனாமியால நுய்க்கிளியர் டிசெஸ்டர் நடக்குமோ?” என்று கேட்டுவிட, அதிர்ந்து அவள் புறம் திரும்பினான்.

“இப்ப என்ன சொன்னீங்க ஷெர்லி… நுய்க்கிளியர் டிசெஸ்டர்ன்ன்ன்ன்னா!!!” என்று நடுக்கத்தோடு கேட்க,

“ஹ்ம்ம் எஸ்… உங்க ட்ரீம் பத்தி கேட்கும் போது அப்படிதான் தோணுது” என்றவள் சொன்ன நொடி அவனுடைய அச்சம் பல்லாயிரம் மடங்கு பெருகியது.

தனக்கு ஏன் இந்த விஷயம் தோன்றவில்லை. அதுவும் தற்போது தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

அதிலும் ஒன்றான கல்பாக்கம் அவர்கள் வீட்டிலிருந்து அரைமணி நேர தூரத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. அணுகதிர் வீச்சின் பாதிப்புகளும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களும் உலக வராலற்றின் அதிபயங்கரமான பக்கங்களாக பதிவாகியுள்ளன.

இவற்றையெல்லாம் யோசிக்கும் போதே பிரபஞ்சனுக்கு அவன் நிற்கும் இடத்தில பூமி பிளந்துவிடும் போலிருந்தது.

அதிர்ச்சியில் உலகமே ஸ்தம்பித்த நிலையில் நின்று கொண்டிருந்த பிரபாவின் தோள்களை தொட்டு, “ரீலேக்ஸ்” என்று சொல்ல, அவளை உயிரற்ற பார்வை பார்த்தான்.

மீண்டும் படுக்கையில் வந்து தலையை பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டான்.

அணுசக்தி என்பது மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று. மனித சக்திக்கு மேலான ஒரு சக்தியால் மட்டுமே இத்தகைய ஆபத்திலிருந்து  காப்பாற்ற முடியும். அதாவது மனிதன் கண்மூடித்தனமாக நம்பி கொண்டிருக்கும் கண்கண்ட சக்தி. கடவுள் சக்தி!

அவனன்றி ஓரணுவும் அசையாது எனும் போது அவன் ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் அந்த ஒருவன் எங்கே? விடை தெரியா பெரிய கேள்விகுறி அது?!

***********

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த அணுவுக்கு அணுவாக பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் பேரொளி கடவுள்!

kathamabavanam-7

கதம்பவனம் – 7

செல்வத்தின் நடவடிக்கை ஒரு மார்கமாகத் தான் இருந்தது,அனைவரும் அவனைக் கண்டும் காணாதது போல் காட்டி கொண்டாலும்,செவியும்,கண்களும், அவனைச் சுற்றியே,தாமரையை அவன் கண்கள் அளவிடுவதும்,அவளை இமைக்காமல் பார்ப்பதையும் பார்த்த அமுதாவுக்கும்,சீதாவுக்கும் அத்தனை ஆனந்தம்,எப்புடியும் தனது கொழுந்தன் தாமரையுடன் வாழ்ந்து விடுவான் என்ற நம்பிகை வேர் ஊன்றியது.

சீதா தான் தாமரையை ஓட்டி எடுத்துவிட்டாள்,தாமரையே கை எடுத்து கும்பிட்டு “அக்கா ப்ளீஸ் அக்கா இது மாதிரி பேசாதீங்க கூச்சமா இருக்கு”,அழுகும் அளவில் சொன்னவளை கண்டு கொள்ளாமல் அமுதாவும் சரிக்கு சரி வாயாடி கொண்டு இருந்தாள்.

பங்கஜத்திற்குச் சொல்லவா வேண்டும் சிறுசுகளின் சேட்டைகளைக் கண்டு வாய்கொள்ளா சிரிப்பு,அவரு எண்ணுவது அது தானே,அத்தனை பேரின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும்.

இந்த வீட்டின் விதி விலக்கு ஒன்று இருக்கின்றதே மாதங்கி,எதுவோ செய்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கியே இருந்தாள்,நம் குடும்பம் என்று பிணைப்பு எப்போது தான் வருமோ என்ற பெருமூச்சு மட்டுமே பங்கஜத்திடமும்,சுந்தரத்திடமும்.

*****************************************************************

இரவு வேளையில் அனைவரும் கூடி உண்ண ராஜனின் திருமணத்தைப் பத்தி பேசினார் சுந்தரம்,ஆண்கள் அனைவரும் உண்டு கொண்டே பேச,பெண்கள் அவற்றைப் பரிமாறிக் கொண்டே கேட்டனர்.

“என்னப்பா கண்ணா ராஜன் கல்யாண பத்திரிகை வந்துருச்சு,எப்போ குலதெய்வ கோவிலுக்குப் போறது”,வீட்டின் மூத்த மகன் என்ற முறையில் பேச்சுக் கண்ணனிடம் இருந்து ஆரம்பம் ஆனது.

“அப்பா,வர ஞாயிற்றுக் கிழமை எல்லாருக்கும் தோது படும்,அப்போதான் பிள்ளைகளுக்கும் விடுமுறை, விடிய காத்தால கிளம்புனா சரியா இருக்கும்,என்னடா உங்களுக்குச் சரிதானே” என்று தம்பிகளைப் பார்த்துக் கேட்க,ரெங்கன்,ராம்,செல்வம் மூவரும் பலமாகத் தலையை ஆட்டினர்.

ஒருவன் மட்டும் இன்றே அந்த உணவை உண்ணாவிட்டால் இனி உண்ணவே கிடைக்காது என்பது போல் கரும சிரத்தையாகக் குனிந்த தலை நிமிராமல் உண்டான்,சுந்தரம் மனதுக்குள் பொருமி கொண்டு இருந்தார்,’எவன் கல்யாணத்தைப் பத்தியோ பேசுற மாதிரி உட்காந்து இருக்கான் பாரு,தவிட்டு கோழி முழுங்குற மாதிரி முழுங்குறத பாரு’.

“அடேய்,ராஜா”,சுந்தரம் உரக்க அழைக்க அனைவரும் அவனைத் தான் பார்த்தனர்,அவனோ இன்னும் இரண்டு கவளம் வாயினுள் அடைத்துக் கொண்டு தான் நிமிர்ந்தான்,அதுவும் என்ன என்ற பார்வை மட்டுமே.

“இங்க உன் கல்யாணத்தைப் பத்தி தான் பேசிகிட்டு இருக்கோம்”,சுந்தரம் பல்லை கடித்துக் கொண்டு சொல்ல,அவனோ அதற்கும் காதில் கை வைத்து ‘கேட்குது’ என்பது போல் செய்கை செய்தான்.

அண்ணன்களுக்கு அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை,ஒருவருக்கு ஒருவர் பேசி கொண்டால் தானே,அவரவர் வேலைகள் இழுக்க ஆளுக்கு ஒவ்வொரு பக்கம் ஓடுகின்றனர்,தம்பியின் நடவடிக்கை சரில்லை என்பதைக் குறித்துக் கொண்ட அண்ணன்கள் தனியே பேச முடிவு செய்தனர்.

மனைவிகளைத் தவிர்த்து அடுத்த நாள் மாலை பங்காளிகளின்(அண்ணன்,தம்பி) சந்திப்பு உறுதி செய்யப் பட்டது,சேவல்களும்,கோழிகளும் அதன் அதன் கூட்டில் அடைந்து கொண்டது.

******************************************************************************

எப்பொழுதும் போல மனைவியை எதிர் பார்த்துத் தோட்டத்தில் காற்று வாங்கிக் கொண்டு இருந்தார் சுந்தரம்,இன்று ஏனோ மனைவியின் முகம் வழக்கத்திற்கு மாறாகப் பிரகாசமா இருந்தது,அதனை பருகி கொண்டு இருந்தார்,கூச்சம் நெட்டி தள்ள,”என்னங்க”,என்று சினுகினார் பங்கஜம்.

“பங்கு,இன்னக்கி என்ன முகம் ஜொலிக்குது”,குறும்பு சிரிப்புடன் கேட்க,அவரோ தள்ளி வந்து அவர் நெஞ்சில் மஞ்சம் கொண்டார்,சுந்தரம் ஒரு சிரிப்புடன் அவரை அனைத்து கொண்டு,”என்னடா இன்னக்கி என் பொண்டாட்டி சந்தோசமா இருக்காப் போல இருக்கே”,அவர் முகம் நோக்கி குனிந்து கேட்க.

ரொம்ப என்று அனைத்து கொண்டார்,அதற்குள் மேல் சுந்தரம் பேசவில்லை,இந்த நேரம் இந்த நொடி எங்கள் தனிமை என்று கண்மூடி ரசித்து இருந்தார்.

தாமரை அறைக்குள் நுழையும் போதே கை கால்கள் நடுங்கியது,அதுவும் அவன் காதுக்குள் உனக்குப் பலமான தண்டனை தருவேன் என்று சொன்னது வேறு ஒரு பக்கம் அவளை வாட்டி எடுத்தது,என்ன பயந்தாலும் சென்று தானே ஆக வேண்டும்,கையில் பருக தண்ணீருடன் உள்ளே சென்றாள்.

அவள் வந்ததை உணர்ந்தும் கைகளைத் தலைக்கு மேல் வைத்து படுத்து இருந்தான் செல்வம் ,அவனுக்கும் கோவம்,காதல்,காமம்,கருணை,இரக்கம்,என்று எல்லா உணர்வும் வரிசை கட்டி கொண்டு நின்றது,எதை அவளிடம் முதலில் காட்டுவது என்று தெரியவில்லை பாவம்.

பொறுமையாகத் தண்ணீரை கீழே வைத்தவள்,அவனைத் தாண்டி சென்று படுக்கப் போகக் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான் செல்வம்,ஏற்கனவே பயத்தில் இருந்தவள் அவன் பிடிக்கவும் உடல் நடுங்க அவனைப் பார்க்க,அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே அருகில் இழுத்தான்,அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்தது எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகக் கரைந்தது தான் மிச்சம்.

‘பாருடி உன் மீது நான் வைத்திருக்கும் அன்பை,காதலை,தேடலை’, அனைத்தையும் அவளுக்குச் செய்கையால் புரிய வைக்க வன்மையைக் கையில் எடுத்தான்,அந்த முரட்டு கணவன்,நடப்பதை அவள் அறிய முற்படும் போதே உணர்வுகள் தடை விதித்து அவளை ஆட்கொண்டது,வேட்கை குறைந்து,காமம் குறைந்து, வன்மை குறையும் நேரம் காதல் ஆட்சி செய்ய,அவளை மெதுவாக விடுவித்தான் செல்வம்.

சாதாரண நாளிலே பேச்சுக்குப் பஞ்சம் தான்,இன்று கேட்கவா வேண்டும் கண்கள் மட்டும் அவன் கட்டு பாடுயின்றி அவளை மேய்க்க,தைரியமாகத் தனது கை கொண்டு கணவனின் கண்களை மூடினாள் பெண்,வெடுக்கெனக் கையைத் தட்டிவிட்டவன்,இன்னும் அவளைத் தீவிரமாகப் பார்க்க தவித்து,துடித்தாள் அந்த மென்மையான தாமரை.

செவ்விதழ் மலர்ந்து “அப்…அப்புடி…பாக்காதீங்க”அவள் சொன்ன விதமே மீண்டும் பார்க்க தூண்ட தாங்காத தங்க தாமரை அவனைத் தள்ளி விட்டு,போர்வைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

மனைவியின் செயலில் சிரித்தவன்,”எனக்கு மட்டுமே உரிமை இருக்கு அதனால்”மீண்டும் போர்வையை இழுக்க,இப்போது அவள் கண்ணில் நீர்,ஹ்ம்ம் …………… அசைவான என்ன துயில் உரித்து அவளுக்குத் துணியாக மாறியவன்,சிறுது நேரம் அமைதி காத்து,”யாரை கேட்டுப் பிறந்தகம் போனீங்க”…

அவனது உடல் பாரம் தகிக்க,அவனது கேள்வி பயத்தைக் கொடுக்கத் தயங்கிய வாறே,”மாமா தாங்க போகச் சொன்னாங்க,அவர் பேச்சை மீற முடியல நான் அப்பவே சொன்னேன் உங்ககிட்ட சொல்லிட்டு போரேன்னு”,அதற்கு மேல் அவனது அசைவு பேச விடாமல் செய்ய,அவனே கருணை பிறந்து அவளை விட்டு தள்ளி படுத்தான்.

முகத்தை அவனை நோக்கி திருப்பி “என் மேலையும் தப்பு இருக்கு எனக்கு ரொம்பப் பேசவெல்லாம் தெரியாது,ஆனா உங்கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லிடறேன் என்ன புருஞ்சுக்க முயற்சி பண்ணு”

தலையை ஆட்ட,” இங்க பாரு தாமரை,அண்ணிங்க மாதிரி உனக்கும் இந்த வீட்டுல மரியாதை வேணும் அதான் இராப்பகலா உழைக்குறேன்,மாதங்கி அண்ணி என் வேலையும்,சமபலத்தைப் பத்தியும் குறைவா பேசுறது புடிக்கல அதான்,பொது காசுல இருந்து எனக்கு வேண்டாம் சொல்லிட்டேன்,ஆனா உனக்கு அதில உரிமை இருக்கு,என் செலவுகளைக் குறைச்சுட்டு,உனக்கும் சேர்த்து தான் அப்பாகிட்ட காசு கொடுக்குறேன்,நீ உனக்குத் தேவை உள்ளதை வாங்கிக்கலாம்,எனக்காகப் பார்க்காத நான் சம்பாரிக்கிறதே உனக்குத் தான்.

அவன் பேச பேச கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது,”என்னம்மா”,அந்த ஒற்றை அழைப்பு இன்னும் அழுகையைத் தூண்ட அவனது நெஞ்சில் கதறி அழுதாள் தாமரை,சிலரின் நாக்கு விஷ தன்மை உள்ளது போலும்,விஷமாக வார்த்தையைக் கக்குகின்றது,மாதங்கியின் நாக்கினை போல.

தான் பெண் அவர் என்ன பேசினாலும் தாங்கி கொள்ளலாம்,ஆனால் ஆண்கள் பொறுமையும் குறைவு,திடமும் குறைவு எத்தனை தூரம் மாதங்கி பேசி இருந்தாள்,அவன் ஊண்,உறக்கம் மற்று உழைத்து இருப்பான்,எண்ண எண்ண மனம் வலித்தது.

அவளது வேதனையை அறிந்தவன் “தாமரை இங்க பாரு”,தனது முகம் காண செய்தவன் கண்ணைத் துடைத்து,”எனக்கு உன் மேல எப்புடி அன்பு காட்டுறதுனு தெரியல சாப்பிட்டியா,எண்ண பண்ண அதேல்லாம் கேட்க தோணல,ஆனா இனிமே கேட்குறேன்,உன் தேவைகளை என்கிட்ட சொல்லு,கொஞ்சி பேச தெரியாட்டியும்,உன் மேல உள்ள அன்பு குறையாதுடி,இனிமே எங்கையும் போகாத,இது கூட்டுக் குடும்பம் அனுசரிச்சு தான் போகணும் நான் சொல்ல வரது புரியுதா”.

ம்… முனகியவள் உரிமையுடன் அவனை கட்டிக் கொள்ள,இன்னும் வசதியாகப் போனது அந்த முரட்டு அன்பனுக்கு,காலம் கை கூடி வர தான் இந்தக் கலகம் போலும்.

அங்கு வெளியில் தூங்கும் மனைவியை அனைத்துக் கொண்டு ,அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்,என்ன ஒரு தீவிரமான யோசனை,இன்னும் இந்த வண்டியில் இரண்டு சக்கரங்களைப் பழுது பார்க்க வேண்டும்,அனைத்து சக்கரங்களும் சீரான பின்பு தான் இந்தச் சுந்தரம் குடும்பத்தின் வண்டி நிலையாக ஓடும்……

முகத்தைத் தீவிரமாக வைத்தவர் மெதுவாகப் புன்னைகைத்தார் தனது கடை குட்டி காளையும்,அழகான சீமை பசுவும் குடும்பம் நடத்துவதை எண்ணி பார்த்தவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை,அதானே சுந்தரமாவது தீவிரமாகச் சிந்தப்பதாவது,வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவர் ஆயிற்றே கலங்குவாரா என்ன?…

AOA-13

அவனன்றி ஓரணுவும் – 13

பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின.

சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நுண்ணுயிர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் அதன் பின்னரே படிப்படியாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரபஞ்சனின் மனதினோரத்தில் நடக்கப் போகும் அபாயம் குறித்த தவிப்பு ஒருபுறம் இருந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் கிறிஸ்டோபர் வாழ்க்கையும் மிகுந்த சுவாரஸ்யத்தோடு அவனை உள்ளிழுத்து கொண்டு சென்றது.

ஒவ்வொரு வரியிலும் இயற்கையின் மீது அவர் கொண்டிருந்த அலாதியான காதல் தெரிந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் *சார்லஸ் டார்வின் இந்த பூமியில் ஜீவராசிகள் பரிணமிக்கும் கோட்பாடுகளை ஆராய்ந்து, ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அந்த புத்தகம் இந்த பூமியில் உயிர்வாழும் ஒவ்வொரு உயிரும் இறைவனின் படைப்பு என்ற மதவாத கோட்பாடுகளின் அடித்தளத்தை அடித்து நொறுக்கியது.

மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை வெளியிட்டதால் மதவாதிகள் மூர்க்கத்தனமாக டார்வினை எதிர்த்தனர். டார்வினை, குரங்காகவும் சாத்தானாகவும், பைத்தியமாகவும் சித்தரித்தனர்.

உண்மையும் அறிவியலும் அத்தனை சீக்கிரத்தில் ஏற்கப்பட்டுவிடுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை எனினும் டார்வின் பரிணாம வளர்ச்சியின் உண்மைத்தன்மையை நிரூபிக்க அபரிமிதமான ஆதாரங்களை வழங்கினார். பரிணாமத்தை பற்றிய நிதர்சனமான உண்மையை இனியும் மறுக்கமுடியாத அளவில் அவை அமைந்தன.

எடுத்துகாட்டாக சொல்வதென்றால், ‘ஒரே சிற்றினத்தை சேர்ந்த எல்லா உயிரினங்களும் ஒன்று போல் ஒன்றிருப்பதில்லை. உதாரணமாக ராட்சத ஆமையின் ஒரீட்டு தொகுதியின் குஞ்சுகளில் சில தம்முள் அமைந்திருக்கும் மரபணுத் தன்மையின் காரணமாக மற்றவற்றை விட நீளமான கழுத்தை கொண்டுள்ளன. வறட்சியின் போது மரங்களிலுள்ள இலைகளை உண்டு வாழ இந்த நீண்ட கழுத்துடைய ஆமைகளால் முடியும்.

இவற்றின் குட்டை கழுத்து சகோதர, சகோதிரிகள் பட்டினியால் இறக்கின்றன. எனவே, தம் சூழலுக்குப் பொருத்தமாகத் தம்மை தகவமைத்து கொண்டவை மட்டுமே  அடுத்த சந்ததிகளுக்கு தம் குணாதிசியங்களை கடத்துகின்றன.

பல தலைமுறைகளுக்கு பின் வறட்சியான தீவுகளிலுள்ள ஆமைகள், நீர் வசதியுள்ள ஆமைகளை விட நீண்ட கழுத்துகளைக் கொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட இதே போன்ற காரணங்களால்தான் டைனோசரஸ் இனங்கள் கூண்டோடு அழிந்துவிட்டன.

உலகத்தின கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பூமி குளிர்ந்த காரணத்தால் அந்த கடுங்குளிர் சூழலை தாங்க முடியாத டைனோசரஸ் இனங்கள் அழிவை எட்டியது. மீளமுடியாத அளவிற்கு அவற்றின் உடல் வெப்பம் மிகவும் குறைந்தது. தாங்கமுடியாத குளிரால் அதனுடல் பாதிக்கப்பட்ட போது, அவற்றால் தன் பெரிய உடலை நகர்த்தி சென்று உணவைத் தேடி உண்ணத் தேவையான சக்தியை திரட்ட இயலவில்லை.

எனவே பெருவுடல் கொண்ட சாகபட்சிணிகள் (அப்போடோசராஸ்) பூண்டோடு அழிந்தன. இவற்றை வேட்டையாடி கொண்டிருந்த மாமிசபட்சிணிகளும் (டைனோசரஸ்) இவற்றுடன் சேர்ந்து அழியலாயிற்று

தீவிரமாகிக்கொண்டு வரும் குளிரால் ஏற்படும் விளைவினின்று தப்பித்து கொள்ள பல ஊர்வனவைகள் பாறை இடுக்குகளில் புகுந்து கொண்டோ அல்லது கடும்உறைபணியிலிருந்து காத்துக் கொள்ள தம்முடலை புதைத்து காத்துகொண்டன.

பெரிய உடல் கொண்ட அப்போடோசராஸ் மற்றும் டைனோசரஸ் போன்றவற்றிற்கு இந்த வழிகள் சாத்தியமில்லை.

இந்த கோட்பாட்டின் சாராம்சம்தான் ‘சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்’ என்று சொல்லப்படுகிறது.

சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ளும் உயிரினம்தான் இந்த பூமியில் சஞ்சரித்து தங்கள் குணாதிசயங்களை மரபணு மூலமாக அடுத்தடுத்த  தலைமுறை சந்ததிகளுக்கு கடத்துகின்றன.

இத்தகைய டார்வினின் கோட்பாடுகளின் மீது ஆழமான நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டிருந்த கிறிஸ்டோபர் தன் வாழ்க்கை பயணத்தை பரிணாம வளர்ச்சியின் பயணத்தில் தொடர ஆரம்பித்தார்.

உயிரினங்களின் தொடர்பு சங்கிலிகள் குறித்து தன் தேடலை தொடங்கினார். சிறு வயதிலிருந்து கிறிஸ்டோபர் இயற்கையின் பால் கொண்ட காதலும் டார்வினின் கோட்பாடுகளும் அவர் வாழ்க்கை பயணிக்க போகும் திசையை தீர்மானித்தன.

அவற்றை நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அவருடைய வயதிற்கும் வளரச்சிக்கும் ஏற்றார் போல் வளர்ந்து கொண்டே போனது.

அவருடைய தேவையும் தேடலும் சமுத்திரம் போல் வானம் போல் எல்லைகளற்று விரிந்து கொண்டேயிருந்தன.

காடுகள், மலைகள், கடல்கள் என்று அவர் இயற்கையோடு ஒன்றென கலந்து தன் வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டார். தென்னமரிக்க வெப்ப மண்டல காடுகளில் வருடக்கணக்கில் தன்னுடைய நாட்களை செலவிட்டார். அங்குதான் இதுவரையில் நாம் அறிந்திராத உயிரினங்களை கண்டுபிடிக்கலாம்.

பசுமையான மென்னொளி படர்ந்திருக்கும் காற்றீர பசை மிகுந்த அடர்ந்த காடுகளில் எத்தனை வகையான விலங்குகள் உள்ளன என்பதை ஒருவராலும் சொல்லுவதற்கியலாது.

உலகின் எப்பகுதியானாலும் இத்தகைய வளமான காடுகளில்தான் அபரிதமான வகை வகையான விலங்கினங்கள் தாவரங்கள் கூடி அமைந்துள்ளன. குரங்குகள், கொறிக்கும் பிராணிகள், சிலந்திகள், வானம்பாடிகள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பல பெருந்த்தொகுப்புகள் உள்ளதோடு மட்டுமின்றி அவை பலதரப்பட்ட வடிவமைப்புகளில் காணப்படுகின்றன.

நாற்பதுக்கும் மேற்பட்ட கிளி இனங்களும் எழுபதுக்கும் மேற்பட்ட  குரங்கினங்களும் முன்னூறு வகை வானம்பாடிகளும் பல்லாயிரகணக்கான வண்ணத்து பூச்சிகளும் உள்ளன. சற்று கவனக் குறைவாக இருந்துவிட்டால் நூற்றுக்கணக்கான வகை கொசுக்கள் மொய்த்து கடித்துவிடும் அபாயங்களும் இந்தமாதிரியான பயணங்களில் இருந்தது.

ஆனால் கிறிஸ்டோபர் அவற்றையெல்லாம் குறித்து கொஞ்சமும் அச்சம் கொள்ளவில்லை. இயற்கையின் ஆச்சரியங்களை தேடி அவர் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பூமியின் உருவாக்கம் எப்படி இருந்திருக்கும்? ஆரம்ப கட்ட நிலையில் எப்படி எந்த உயிரினம் இந்த பூமியில் உருப்பெற்று ஜனித்திருக்கும்? இப்படியான பற்பல கேள்விகள் அவரை துளைத்து எடுத்து கொண்டிருந்தது.

எல்லோரும் எதிர்காலத்தை பார்க்க ஆசை படுவார்கள். ஆனால் கிறிஸ்டோபர் கடந்த காலத்தை பார்க்க ஆசைப்பட்டார். எப்படி இந்த இயற்கையானது இத்தனை நேர்த்தியாக தன்னை தகவமைத்து கொண்டது? இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தை இதனால் வரை எது இயக்கி கொண்டிருக்கிறது?

இப்படியாக அவர் தன் வாழ்நாட்களை இந்த மாதிரியான கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலேயே கழித்து கொன்டிருந்தார்.

பூமியில் ஜனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாராண மனிதர்கள் போல் பணம், காதல், குடும்பம், நாடு, மொழி, மதம் மீதெல்லாம் அவருக்கு பற்றுதல் துளியளவும் இருக்கவில்லை.  அவருக்கிருந்த ஒரே பற்று இயற்கையின் மீதுதான்.

அவரை பொறுத்தவரை இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பூமி என்பது பொதுவானது. நாடு, மதம், மொழி, இனம் என்ற பெயரில் எல்லை கோடுகளும் போதாக்குறைக்கு அதனை விரிவாக்கம் செய்ய போர் செய்வது குண்டு வீசுவது தன் இனத்தை தானே அழித்து கொள்வது போன்றவற்றை அவர் முற்றிலுமாக  வெறுத்தார்.

இப்படியாக பதினைந்து ஆண்டு கால வாழ்க்கையை உயிரினங்கள் பற்றிய தம் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் புத்தகங்களாக தொகுத்தவர் தன் தேடலை எந்த நிலையிலும் நிறுத்தி கொள்ளவில்லை.

அழிந்த போன குமரி கண்டம் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கிறிஸ்டோபர் தம்முடைய நாற்பதாவது வயதில் இந்திய தேசத்தில் கால் பதித்தார்.

ஆனால் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆடவனாக அவரின் தோற்றமும் உடலமைப்பும் இல்லை. இயற்கையோடு வாழ்ந்த காரணத்தால் அவர் தோற்றத்தில் கொஞ்சமும் இளமை குன்றாமல் இருந்து வந்தது. இருபத்தைந்து வயது இளம் வாலிபன் போலவே அவர் உயரமும் கம்பீரமும் உடல்கட்டமைப்பும் இருந்தது என்று சொல்லலாம்.

கிறிஸ்டோபர் தம் தேடல்களுக்கான விடையை  தமிழகத்தின் நிலபகுதிகளில் ஆராய்ச்சி செய்ய தொடங்கினார். ஆதி காலத்து மனிதனின் பழமையான நாகரிகம் தொடங்கிய இடங்களாக அவற்றில் ஆதாரங்களை தேடினார். குமரி கண்டத்தின் பேரழிவின் மிச்சம்மீதி அல்லது அது குறித்த சான்றுகள் அங்கே கிடைக்கலாம் என்பது அவருடைய கணிப்பு.

ஆனால் அவர் வேறொரு அதிசியத்தை அங்கே பார்க்க நேர்ந்தது. அதனை குறித்து கிறிஸ்டோபர் எழுதியிருந்ததை பிரபா மும்முரமாக படித்து கொண்டிருந்தான்.

********

டிசேஸ்டர் – இறுதி அத்தியாயம்

‘அங்கே நான் பார்க்க போகும் அதிசியங்கள் குறித்து யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடிந்திருக்காது.

நான் ஆய்வு மேற்கொண்டிருந்த கிராமத்தின் அருகே ஓர் உயரமான மலை கம்பீரமாக காட்சியளித்தது. அந்த மலை அடிவாரத்திலிருந்த கிராம மக்கள் அந்த மலை மீது அவர்களின் கடவுள்கள் வாழ்கிறார்கள் என்றும், அதன் மீது  ஏறுவது பாவ காரியம் என்றும் என்னிடம் சொன்னார்கள்.

அதோடு  யாருமே அந்த மலையை நெருங்கி கூட  செல்ல மாட்டோம் என்றும் அப்படி அவர்கள் தப்பித்தவறி சென்றால்  உயிருடன் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதனாலேயே அந்த மலை மீது ஏறி சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அதிகரித்தது.  எத்தனையோ பயங்கரமான காடுகளை சுற்றி பல அபயாங்களை கடந்து வந்த எனக்கு அவர்களின் எச்சிரிக்கை பெரிய விஷயமாக தோன்றவில்லை. நம்பும்படியாகவும் இல்லை. கடவுள்கள் மலை மீது வாழ்வார்களா என்ன?

அப்படி யாரேனும் வாழ்ந்தால் அதையும் பார்த்துவிடலாம் என்ற அசட்டுத்தனமான துணிச்சல் உருவானது. அதேநேரம் அந்த கிராம மக்கள் நிச்சயம் இதற்கு அனுமதிக்கவும்  மாட்டார்கள்.

இதனால் நள்ளிரவு நேரத்தில் அந்த மலை மீது ஏற எனக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து கொண்டு அந்த மலையடிவாரத்தை நெருங்கினேன். என்னுடன் வந்த உதவியாளனும் உடன் வர மறுத்துவிட்டான். அவனிடம் யாரிடமும் எதுவும் சொல்ல கூடாது என்று மிரட்டிவிட்டு நான் தனியாகவே மலையேறினேன்.

எனக்கு ஒன்றும் அது அத்தனை சிரமமான காரியமாக இல்லை. இருப்பினும் அந்த மலை மீது என்ன மாதிரியான கொடியவிலங்கினங்கள் இருக்குமோ? விஷ பாம்புகள் இருக்குமோ என்றெல்லாம் மனதில் லேசான அச்சமும் படர்ந்தது.

மெதுவாக அதேநேரம் மிகுந்த எச்சரிக்கையோடு என் நெற்றியில் ஒரு டார்ச் லைட்டை கட்டி கொண்டு ஒரு குச்சியை  பிடித்து ஊன்றி கொண்டு அந்த மலையின் மீது ஒவ்வொரு அடிகளாக  எடுத்துவைத்து ஏறி சென்றேன். அந்த பயங்கர இருளை கிழித்து கொண்டு என் தலையில் கட்டியிருந்த டார்ச் லைட் ஒளிவீசியது.

உச்சிக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் அந்த அடர்ந்த மலைக்காட்டில் புகுந்து மேலே ஏற ஆரம்பித்தேன். அந்த மலைகளில் நடப்பதற்கான வழிபாதைகளே இல்லை. கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக இருந்தன. யாரும் அந்த வழியை இதுவரை உபயோகித்ததே இல்லை என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது.

இரவு நேரம் ஆதலால் அத்தனை சீக்கிரத்தில் எனக்கு களைப்பும் உண்டாகவில்லை. சலசலவென ஓர் ஓடை பாய்ந்து செல்லும் ஓசை என் காதுகளில் ரீங்காரமிட்டது. க்ரீச் க்ரீச் என்று சில பறவையினங்களின் கூக்குரல்கள் மெலிதாக கேட்டு கொண்டிருந்தன. இரவு நேர பூச்சியினங்களின் சத்தங்கள் என்னை தொடர்ந்துவந்து கொண்டிருந்தன.

விழிகளை விட காதுகளை கூர்மையாக தீட்டி கொண்டு அந்த காட்டு பாதையில் வெகுலாவகமாக ஏறினேன். அப்போது மெலிதாக ஒரு காலடி ஓசை என்னை பின்தொடர்ந்ததை என்னால் கேட்க முடிந்தது. என் இதயம் படபடக்க மேலே செல்லாமல் அப்படியே சிலையாக நின்றுவிட்டேன்.

என்னை சுற்றிலும் பார்வையை படரவிட்டேன். என் பார்வைக்கு யாரும் தென்ப்படவில்லை.ஆனால் மீண்டும் நடக்கும் போது சில நிமிடங்கள் கழித்து அந்த காலடி ஓசை என்னை தொடர்ந்தது.

என் நடையின் வேகத்தை குறைத்தேன். மெல்ல பின்னே இருந்த காலடி ஓசையை மிகவும் கவனமாக உள்வாங்கி கொண்டேன். அது மிருகத்தின் காலடி ஓசையாக எனக்கு தெரியவில்லை. நுகர்ந்து பார்த்த போது மிருக வாடை எதுவும் அருகாமையிலிருப்பது போலவும் தோன்றவில்லை.

இப்போதுதான் என்னை அச்சம் அதிகமாக பீடித்து கொண்டது. கொடிய விலங்கினங்களை கூட சமாளித்துவிடலாம். எது எந்தமுறையில் தம் தாக்குதலை நிகழ்த்தும் என்று என்னுடைய இத்தனை வருட காட்டு பயணங்களில் நான் கற்று கொண்டிருந்தேன். அவற்றை எப்படி எதிர்க்க வேண்டுமென்ற உபாயமும் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் என்னை பின்தொடர்வது காட்டில் வாழும் மனிதனாக இருக்கும் பட்சத்தில் அது மிகுந்த ஆபத்தானது. அவன் எந்தப்பக்கம் எந்தவிதமான ஆயுதம் கொண்டு தாக்குவான் என்று நிச்சயம் கணிப்பது அசாத்தியம்.

மரணத்தை குறித்து என்றுமே நான் பயந்ததில்லை. ஆதலால் எதையும் எதிர்க்கும் துணிச்சலோடு நான் முன்னேறினேன். என்னை பின்தொடர்ந்து காலடி ஓசை நெருக்கமாக கேட்ட மறுநொடியே தடலாடியாக திரும்பி அந்த உருவத்தை கையும் களவுமாக பிடித்து கொண்டேன்.

எல்லாமே சில வினாடி பொழுதில் நிகழ்ந்துவிட,நான் வியந்து போனேன். என் கைகளுக்குள் அப்போது சிக்கியது காட்டு மனிதன் அல்ல. ஓர் இளம் பெண்!

என் நெற்றியிலிருந்த டார்ச் வெளிச்சம் அவள் முகத்தின் மீது விழுந்தது. ஒளி பொருந்திய காந்த சக்திகள் மின்னும் கண்கள் அவை. மீள முடியாமல் என்னை ஈர்த்து கட்டி போட்டது. அவள் என் கைகளில் கட்டுண்டாளா அல்லது நான் அவள் விழிகளில் சிக்குண்டேனா?! எனக்கு சொல்ல தெரியவில்லை.

வாழ்கையில் நான் எப்போதுமே இப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்ததே இல்லை. முதல்முறையாக ஒரு பெண்ணை பார்த்த நொடி பொழுதில் என் உணர்வுகள் சிலிர்த்து கொண்டன.

என் தேவைகள் தேடல்கள் யாவும் மறந்து போயின. அல்லது மறக்கடிக்கப்பட்டன. இத்தனை அழகம்சம் கொண்ட ஒரு பெண்ணா?

விழி எடுக்காமல் அவளையே நான் மயங்கி பார்த்து கொண்டிருக்கும் போது மின்சார பாய்ந்தது போல் ஒரு உணர்வு. ஆயிரம் ஆயிரம் சூரிய ஒளி என் விழிகள் முன் வீசியது போல் ஓர் மின்னல் வெட்டியது.

அடுத்த நொடியே அந்த பெண் என் கைகளிலிருந்து மாயமாகி போனாள்.

என் பிடி தளரவில்லை. அவள் என் பிடியை எதிர்த்து கொள்ளவுமில்லை. ஆனால் மாயவித்தை போல் அவள் என் கண்களிலிருந்து மட்டுமல்ல. என் கைபிடியிலிருந்தும் காணாமல் போனாள்.

காற்றோடு கரைந்து போனாள். நம்பமுடியாமல் என் கண்களை நான் பலமுறை கசக்கி சுற்றிலும் பார்த்தேன். நிச்சயமாக அது என் கனவோ கற்பனையோ அல்ல. அப்படியொன்று நிகழ்ந்தது. ஆனால் அதெப்படி சாத்தியம் என்று எனக்கு புரியவில்லை.

mayavan- 3

 

அத்தியாயம் 3

பிரபல மருத்துவமணை ஆபரேஷன் தியேட்டர் வாயிலில் முகம் இறுக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் அபிஜித். இவ்வாறு நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை காப்பதற்காக இவன் சண்டையிட, அவளோ இவனை காக்க வேண்டி குறுக்கே பாய்ந்திருக்கிறாள்.

அத்தோடு தலையில் வேறு “கடவுளே” என்று வாய்விட்டு புலம்பியவன் அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்துவிட்டான். அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது. அவளுக்கு ஒன்றென்றால் என் மனமே என்னை மன்னிக்காது. காப்பதாக நினைத்து என் பிரச்சனையில் யாரென்று அறியாத இவளையும் இழுத்து விட்டுவிட்டேனே!

அவனுக்கு தெரியும் வந்தவர்கள் ரத்தினத்தின் ஆட்கள் என்று. ஒரு வாரமாகவே இவனை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். எச்சரிக்கையோடுதான் இருந்தான், அதனால்தான் டிரைவரை கூட வேண்டாம் என்று இன்று தனியாக வந்தான் எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று. ஆனால் வழியில் ஏற்பட்ட குழப்பத்தால் இதை கவனிக்காமல் விட்டுவிட்டான்.

அவள் மட்டும் இவர்களை பார்க்காமல் இருந்திருந்தால், காரிலிருந்து இறங்காமல் இருந்திருந்தால், அவளுக்கு இந்த நிலைமை இல்லையே! என்று யாரென்றே அறியாத பெண்ணுக்காக கலங்கி அமர்ந்திருந்தான்.

அதேநேரம் ரத்தினம் மிகுந்த ஆத்திரத்தில் எதிரில் இருப்பவனை குதறிக் கொண்டிருந்தார். அன்று அபிஜித்தின் அலுவலகத்திற்கே சென்று அவனை கெஞ்சி, பேரம் பேசி கடைசியில் மிரட்டி என எப்படியும் வழிக்கு கொண்டுவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். அதில்வேறு அவனது தங்கையை கடத்த சென்றவன் “அண்ணே இது ரொம்ப பெரிய இடமா இருக்கு, சுத்தியும் பொண்ணுக்கு தெரிஞ்சவங்க யாராவது எப்பயும் இருந்துட்டே இருக்காங்க, அதனால இந்த விசயத்த இத்தோடு விட்றுங்க” என இவருக்கே அறிவுரை கூற மனிதன் நொந்து விட்டார்.

இனி என்ன வழி என்று யோசிக்க, அவனை முடிப்பதை தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக அவருக்கு தோன்றவில்லை. மாரியும் அடுத்த ஒரு வாரத்தில் ஜெயிலில் இருந்து வந்திருக்க, அபிஜித்தின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்தனர்.

அப்படி அவர்கள் பின் தொடர்வதைதான் அபிஜித் கண்டு கொண்டிருந்தான். இன்னும் இரண்டொரு நாட்களில் அரெஸ்ட் வாரண்ட் வாங்கிவிடுவான் என அறிந்த ரத்தினம் இன்று எப்படியாவது அவனை கொன்று விடுங்கள் என கூறியிருந்தார்.

அதற்கு தகுந்தார் போல் அவனும் தனியாக வரவே கொஞ்சம் இடைவெளி விட்டு பின்தொடர்ந்தனர். அப்படி வருகையில்தான் அபிஜித் ரோட்டில் சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்தவர்கள் இதுவே நல்ல சமயம் என எண்ணி வந்தனர். இதில் அவர்களே எதிர்பாராதது ஒரு பெண் குறுக்கே வருவாள் என்று.

அதனால் கத்தியை இறக்கும் கடைசி நொடி சற்று தேங்கியதில் கத்தி குத்து ஆழமாக விழவில்லை. அவள் கீழே விழவும் அனைவரும் இந்த எதிர்பாரா நிகழ்வில் அதிர்ந்து நின்றிருந்தனர். முதலில் தெளிந்தது அபிஜித்தே. தன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்தவன் சற்றும் தாமதிக்காமல் கத்தி இறக்கியவனின் முழங்காலில் குண்டை இறக்கியிருந்தான். அதில் அவன் அந்த இடத்திலேயே சுருண்டு விழ, அவளை துரத்தி வந்த நால்வரும் அரண்டு போய் ஓடியிருந்தனர். ரத்தினத்தின் ஆட்கள் அடிபட்டவனையும் தூக்கி கொண்டு ஓடி வந்திருந்தனர். இதை கேட்ட ரத்தினம் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். இனி அவன் சும்மா இருக்க மாட்டான் என நினைத்தவர் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பும் முடிவை எடுத்தார்.

அபிஜித்திற்கு என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை. இரண்டு க்ரூப் ஆட்களும் ஓடியிருந்தனர். முழங்காலில் குண்டடி வாங்கியவனையும் அவன் ஆட்கள் தூக்கி சென்றிருந்தனர். அவர்களை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம். இவளை முதலில் காப்பாற்ற வேண்டும் என நினைத்து கீழே அமர்ந்து அவள் தலையை எடுத்து மடியில் வைத்தவன், அவள் கன்னத்தை தட்ட பல தட்டல்களுக்கு பிறகு மெதுவாக கண்விழித்தாள். “ஏய் ஹலோ.. இங்க பாருமா கண்ண மூடாத இப்ப ஆஸ்பத்திரி போயிடலாம் உனக்கு ஒண்ணும் இல்ல புரிஞ்சுதா” என கூறியவாறே தன் பாக்கெட்டில் இருக்கும் கைக்குட்டையை எடுத்து இடுப்பில் ரத்தம் வெளியேரும் இடத்தில் வைத்து அழுத்த, அந்த வலியில் முகம் சுளித்தவளை கண்டு பதறியவன், “ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல ஐஸ்ட் டென் மினிட்ஸ்ல போயிடலாம்”

“உன்ன யாரு கீழ இறங்கி வர சொன்னது?” என கடியவும் மறக்கவில்லை. அதை கேட்டு முடியாத நிலையிலும் அவனை கைகாட்டி ஏதோ சொல்ல வந்தவளை “நோ..நோ ஸ்ட்ரெய்ண் பண்ணிக்காம அமைதியாயிரு என அவள் இதழின் மீது விரலை வைத்து தடை செய்தவனை கண்டு சோபையான மெல்லிய புன்னகையை வழியவிட்டவள் சுருக்கென்ற வலியில் முனகலுடன் கண்ணை மூடிக் கொண்டாள்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் “ஐயோ என்னாச்சு சார்” என பதறியபடி வர, அவரை நோக்கி “உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா?” என கேள்வியை கேட்டு வைக்க அவனோ அடிச்சு போட்டுட்டானுங்க போல வீணாக கேஸில் மாட்டிக்கொண்டால் போலீஸ் ஸ்டேசனெல்லாம் போகனுமே என எண்ணிக் கொண்டு “சார் அது வ..ந்து” என இழுக்க அவனது தயக்கத்தை புரிந்து கொண்டவன் “இங்க பாருங்க நான் ஒரு கலெக்டர் இதால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது போதுமா… கார் ஓட்ட தெரியுமா தெரியாதா?” என கத்த,

இனிமேல் உதவி செய்ய எந்த தடையும் இல்லையே “சார் பொண்ண தூக்கு சார் நான் காரை எடுக்கறேன்” என செயலில் இறங்கினார். இதுவரை அவளை மடிதாங்கியவன் அவளை தூக்க போக அவன் மடி முழுதும் இரத்தத்தால் அபிஷேகம் செய்தது போல் இருந்தது. அதை கண்டு அதிர்ந்தவன் அவள் தலையை வலது கைக்கு இடமாற்றி இடது கையை தூக்கி பார்க்க அதுவும் அவ்வாறே ரத்தக்களரியாய் இருந்தது. பின் தலையை ஆராய மண்டை பிளந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.

தன்னை மீறி “ஓ…நோ” என அலறினான். தலையில் அடிபட்டிருக்கும் என நினைக்கவில்லை, உடனே மருத்துவமணை செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவன், அவளை அலுங்காமல் அள்ளிக்கொண்டு காருக்கு விரைந்தான். அதற்குள் அந்த ஆட்டோகாரர் கார் கதவை திறந்து வைத்திருக்க, அவளை கையில் ஏந்தியவாறே உள்ளை நுழைந்தான். டிரைவர் விரைந்து காரை எடுக்க, “சார் எந்த ஆஸ்பத்திரி சார்” என வினவ, அவனிடம் பதிலில்லை. அவள் முகத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தை தனமான முகம் அது வலியில் சுருங்கி விரிய இவன் இதயம் வழக்கத்திற்க்கு மாறாய் படுவேகமாக சுருங்கி விரிந்தது.

“சார்” என சத்தமாக இன்னொருமுறை அழைக்க “ஹான் என்ன” என திடுக்கிடலோடு கேட்டான், “எந்த ஆஸ்பத்திரி சார் போக” “கமலா ஆஸ்பத்திரி போங்க ஃபாஸ்ட்” என பதட்டமாக உரைக்க, “பக்கத்துலதான் சார் இதோ அஞ்சு நிமிசத்துல போயிடலாம் ” “ரெண்டு நிமிசத்துல போகனும்” என அழுத்தத்துடன் கூறியவன் அவள் தலையை நெஞ்சோடு அழுத்தி பிடித்துக் கொண்டான்.

அதன் பின் அரசு வாகனம் அசுர வேகத்தில் பறக்க அவன் சொன்ன நேரத்தை விட ஒரு நிமிடம் தாமதமாகவே வந்திருந்தனர். வண்டி நிற்பதற்க்கு முன்னே கதவை திறந்து இறங்கியவன் அவளை தூக்கி கொண்டு ஓடினான். ” சிஸ்டர் … டாக்டர கூப்பிடுங்க ” என அவன் கத்திய கத்தலில் மருத்துவமணை வளாகமே மருண்டு விழித்தது. அவசரமாக அவனருகே வந்த செவிலி “இ..தோ கூப்பிடறேன் சார், என்னாச்சு!! இவங்கள இதுல படுக்க வைங்க” என ஸ்ரெக்ட்சரை காட்டியவள் “வாட் பாய் தள்ளிட்டு வாங்க” என அவள் முன்னே செல்ல “நோ நானே தூக்கிட்டு வரேன் எங்க போகனும்” அவனை திரும்பி பார்த்த நர்ஸ் தர்ட் ஃப்ளோர் சார் லிஃப்ட்ல போயிடலாம்.

மூன்றாவது தளம் செல்ல, அங்கே வழியிலேயே எதிர்கொண்டார் டாக்டர் சஞ்சய். இவனை கண்டதும் ஒருகணம் நின்றவன், வேறு எதுவும் பேசாது இவளை ஆராய “இடுப்புல கத்தி குத்தியிருக்கு, அப்பறம் த….லை..ல அடிபட்டிருக்கு சீக்கிரம் பாருங்க” குரலே எழும்பவில்லை அவனுக்கு.

“இட்ஸ் ஓ.கே நான் பாத்துக்கறேன். யு டோன்ட் வொர்ரி” “டாக்டர் இது போலீஸ் கேஸ் ” என நர்ஸ் இடைபுக, “இவரே கலெக்டர்தான் அதனால பிரச்சனை இல்ல நீங்க ஏற்பாடு பண்ணுங்க” “ஓ..சாரி டாக்டர்” என்ற நர்ஸ் தன் வேலையை கவனிக்க தொடங்க, பேசிக்கொண்டே ஆப்ரேஷன் த்யேட்டர் வரை அவளை தூக்கியே வந்திருந்தான்.

“இதுல படுக்க வைங்க சார் என செவிலி பெட்டை காட்ட அவளை மெதுவாக படுக்க வைத்தான். படுக்க வைத்துவிட்டு எழ நினைக்க, அவனால் முடியவில்லை. குழந்தை உறங்கிய பின்னும் தாயின் சேலையை விடாமல் பிடித்திருக்குமாம் ஆதரவு வேண்டி அதுபோல, மயக்கத்திலும் ஒரே ஆதரவான இவனை விட மனமில்லாமல் அவன் சட்டை காலரை இறுக்கமாக பிடித்திருந்தாள்.

அவனுக்குதான் என்னவோ இதுவரை யாரும் இவனை இதுபோல நாடியதில்லை, மயக்கத்தில் இருந்தாலும் அவளது செய்கை அவனுக்கு அவஸ்தையாய் இருந்தது. அவனால் ஒரு இழுப்பில் அவள் கைய விலக்கி எடுத்திருக்க முடியும்தான் ஆனால் அவ்வாறு செய்ய மனம் வரவில்லை. அவன் கையும் ஏனோ நடுங்க டாக்டரை சங்கடமாக ஒரு பார்வை பார்த்தான் அதுவரை ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை கவனித்தாலும் ஓரமாக இவனையும் கவனித்திருந்த சஞ்சய் உதவிக்கு வர, கைகளை பிரித்தெடுப்பது அவனுக்கும் அவ்வளவு எளிதாக இல்லை முயன்று பிரித்தவன் நீங்க வெளில இருங்க என அவனை வெளியே அனுப்பி கதவை சாற்றி விட்டு தன் பணியை தொடர்ந்தான்.

வெளியே வந்த அபிஜித்திற்கு இருப்பு கொள்ளவில்லை. உள்ளேயே இருந்திருக்க வேண்டுமோ! என ஒரு மனம் தவிக்க, நீ உள்ள இருந்து என்ன பண்ண போற?! என இன்னொரு மனம் எடுத்துரைக்க அவனுக்குள்ளே பல போராட்டங்கள்.

அப்போது நர்ஸ் அவனிடம் “பேஷன்டோட டீடெய்ல்ஸ் இதுல ஃபில் பண்ணுங்க சார்” என ஒரு படிவத்தை கொடுக்க வேகமாக வாங்கியவன் அப்போதுதான் உணர்ந்தான் அவள் விபரம் எதுவுமே அவனுக்கு தெரியாதே. யோசனையுடன் நெற்றியை தேய்த்தவன் “சிஸ்டர் இத அப்பறம் ஃபில் பண்றனே!!”

அவன் மிகவும் பதட்டமாக இருப்பதையும், அதுவுமில்லாமல் அவன் ஒரு கலெக்டர் என்பதையும் அறிந்த செவிலி “இட்ஸ் ஓகே சார் இதை அப்பறமா நிரப்பிடுங்க” என வாங்கி சென்றிருந்தாள். அப்போதுதான் அங்கு வந்த ஆட்டோகாரர் காரின் சாவியை கொடுத்துவிட்டு, “கவலைபடாதீங்க சார் அவங்க நல்லாகிடுவாங்க, அப்ப.. நான் கெளம்பவா சார் என் பொண்டாட்டி தேடுவா மாசமா வேற இருக்கா” என தயங்கியவாறு சொல்ல,

“ஓ…சாரி…தேங்க்ஸ் உதவி செஞ்சதுக்கு ” என பர்ஸை எடுக்க, அவனை தடுத்த டிரைவர் “சார் பாத்தீங்களா உதவி செஞ்சதுக்கு காசு கொடுக்க பாக்கறீங்க, என் தங்கச்சி மாதிரி இருக்க பொண்ணு சார் போலீஸ் கேஸ் ஆச்சினா அலைய விடுவாங்களேன்னுதான் யோசிச்சேனே தவிர, காசுக்கெல்லாம் இல்ல சார் நான் நாளைக்கு வந்து பாக்கறேன் சார்” எனகிளம்ப எத்தனிக்க,

“மிஸ்டர்……” என கேள்வியோடு நிறுத்த,

“குமாரு சார்”

“குமார், இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்ட் எப்ப என்ன உதவினாலும் என்னை கான்டேக்ட் பண்ணுங்க, என்னால முடிஞ்ச உதவி செய்வேன்.” என அவன் கையில் கார்டை வைக்க, “சரி சார் நான் வரேன்” என சென்று விட்டான். போகும் அவனையே பார்த்திருந்தான், இன்னும் சில நல்ல மனம் கொண்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மிகவும் கனமாய் அடுத்து வந்த மூன்று மணி நேரமும் யுகங்களாய் கரைய, ஆப்ரேஷன் தியேட்டர் கதவை திறந்து கொண்டு டாக்டர் வெளியே வந்தார். அமர்ந்திருந்தவன் உடனே அவனிடம் விரைந்து “ஹௌ ஈஸ் ஷி” என பதட்டமாக வினவ, அவன் இன்னும் உடையை மாற்றாமல் இரத்த கறை படிந்த உடையிலேயே இருக்க, அவனை ஒரு பார்வை பார்த்த டாக்டர் “என்கூட வாங்க” என அதே தளத்தில் இருந்த அவனது பர்சனல் அறைக்கு அழைத்து சென்றான்.

ஒருவித இயலாமையுடன் டாக்டரின் பின்னே சென்றவன் “டாக்டர் ஹௌ ஈஸ் ஷி” என இன்னொரு முறை கோபமாக வினவ, அதை அசட்டை செய்தவன் வார்ட் பாயை அழைத்து குறிப்பிட்ட சைஸ் சொல்லி உடை வாங்கி வருமாறு பணித்தான்.

அவனது நடவடிக்கைகளை ஒரு எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த அபிஜித் “சஞ்சய் ப்ளீஸ் டெல் மீ டேமிட் அந்த பொண்ணு எப்படி இருக்கா” என ஆத்திரத்தில் அவனது மேஜையை தட்டியவாறு கேட்க, “முதல்ல உட்காரு அபி” என அழுத்தமாக கூறினான். அப்போதுதான் தான் கட்டுபாட்டை இழந்து நடந்து கொண்டிருப்பது அவனுக்கு உரைக்க, “சாரி” என கூறியவன் தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்து கையால் தலையை தாங்கி கொண்டான்.

ஜீஸ் வரவைத்த சஞ்சய் அபிக்கு அதை கொடுக்க மறுக்காமல் வாங்கி குடித்தவன் அமைதியாய் அமர்ந்திருந்தான். அவனுக்குள் பல எண்ணங்கள் முதல் முறையாக கட்டுப்பாட்டை இழக்கிறேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என சுய அலசலில் ஈடுபட்டான். சஞ்சயும் அவனை தொந்தரவு செய்யாமல் அவனையே பார்த்திருந்தான்.

அதற்குள் வார்ட் பாய் உடையோடு வர, அங்கிருக்கும் அவனது குளியலறையை காட்டி குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திக்க, என கூற அதுவரை தன் எண்ணங்களுக்குள் உழன்றவன் அவனை நிமிர்ந்து பார்த்து கடுப்போடு அதை பிடுங்காத குறையாக வாங்கி சென்றான். அதை கண்ட சஞ்சய்க்கு சிரிப்பு வர “இவன் இன்னும் மாறவே இல்ல” என நினைத்துக் கொண்டான் அந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணன். அபிஜித்தின் உற்ற தோழன் டாக்டர் சஞ்சய்.

KVI-6

‘கனலினி’ ‘கனலினி’ என்று முணுமுணுத்துக் கொண்டாள், சயனா. ஏதோ ஒரு ஏமாற்றம் உடலெங்கும் பரவியது. அது கண்களின் வழியே வெளியே தெரிவதைத் தவிர்க்க முயன்றாள்.

ரேவ், மேகத்தைக் கிழித்திடும் மின்னலைப் போன்ற பார்வையால், சயனாவைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“என்ன சயனா, ஏதோ எக்ஸ்பெக்ட் பண்ணது கிடைக்கலையா? ”

“சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை”

“நல்லது ”

“கனலினி ரிலேட்டடா ஏதாவது பேப்பர் நியூஸ்”

“ய்யா, ஹியர் யூ கோ” என்று, தான் சேகரித்தச் செய்தித்தாள்களை எடுத்து நீட்டினாள்.

அதுகூறும் செய்தி என்னவென்றால், ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, கையூட்டுப் பெற்றதாகச் சொல்லி, கனலினி என்ற வருமான வரித்துறை அதிகாரி, கைது செய்யப்படுவது போன்ற காட்சிகள் மற்றும் அதைப்பற்றிய விரிவான செய்திகள்.

பெருமூச்சுவிட்டாள் சயனா.

“வேறுவழியில்லை சயனா, டிபார்ட்மென்ட் போய் விசாரிக்கனும். நம்ம கேஸப் பத்திப் பேச வேண்டாம். இந்த லேடியப் பத்தி விசாரிக்கலாம்”

“ய்யா, வெயிட் அ வொயில். நான் ரெடியாகிட்டு வரேன்”

ஒளியின் வேகத்துடன், ராயல் என்ஃபீல்டு கிளம்பிச் சென்றது.

******
அரசு அலுவலகத்திற்குச் சென்று, அன்றைய தினமே வேலை முடிந்து திரும்பியவர்கள், அரிய பொருளாக, அரும் காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்.

காத்திருந்தனர்… காத்திருந்தனர்… காத்துக் கொண்டே இருந்தனர். இது அவர்களின் அடையாளத்தை மறைக்க விரும்பியதால், வந்த காத்திருப்பு.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அப்பொழுது அவளது ‘கூஃபி’ வாழும் காதல் கிரகத்திலிருந்து அழைப்பு வந்தது.

ஏதோ, ஏமாற்றம் கண்டது போல் எடை கூடியிருந்த மனதை, எளிதாக்க முடிந்த ஒரே நபர்.

“ஹலோ” – கனத்த மனதால் வார்த்தைக் கம்மிய குரலில் வந்தது.

“ஹாய் ட்டேபீ. நல்லா தூங்கினியா? இப்போ பீல் பெட்டரா? ” – காதல் கரிசனம்.

“யெஸ்” – அவளது ‘கூஃபி’யின் அந்தக் கரிசனமே போதுமாயிருந்தது, இந்தப் பதிலைச் சொல்ல.

“என்ன பண்ணிட்டு இருக்கிற?”

“இன்வெஸ்டிகேஷன் விஷயமா டேக்ஸ் டிபார்ட்மென்ட் வந்திருக்கேன்”

“அதிசயமா இருக்கு. வேல நேரத்தில போஃன் பண்ணிருக்கேன், மேடம் கோபப்படவே இல்லை. ஏன்? ” – காதலியைப் பற்றிய சரியான புரிதல்.

புரிதலைப் புரியாத மௌனம்.

“ஓ ஹேக்கர் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண வந்திருக்க. அதான் ரொம்ப சாஃப்டா இருக்க. ஏன்னா உனக்குத்தான் அந்த ஹேக்கர் மேல ‘சாஃப்ட் கார்னர்’ இருக்குல”

எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் கேட்டவளுக்கு அனர்த்தமாகத் தோன்றியது.

“இதுக்கு நான் ‘ஆமான்னு’ பதில் சொல்லிடுவேன், அப்புறம் நீதான் கஷ்டப்படுவ” – கம்மிய குரல், இப்போது கடுமையாக ஒலித்தது.

“நான் கஷ்டப்பட மாட்டேனு சொன்னா, என்னயவிட நீதான் கஷ்டப்படுவ” – அதே கடுமை எதிர்முனையிலிருந்தும்.

எல்லோரிடமும், எல்லா இடத்திலும் எதையோ இழப்பது போல் உணர்வு சயனாவிடம். பதில் கூறாமல் இருந்து தன் இழப்பை, இயல்பாகத் தெரியப் படுத்தினாள்.

“ஹேய் ட்டேபீ, என்னாச்சு? ஜஸ்ட் பார் பஃன். நீ சீரியஸா எடுத்துக்காத”

“…. ” – ‘நான் சொல்லுவேன், நீ எப்படி சொல்லலாம்’ என்பதைக் கேள்வி கேட்கும் மௌனம்.

“ட்டேபீ… ஜஸ்ட் பஃன்”

“ஐ அம் நாட் அ கேம்”

“என்னாச்சி சயனா?” – இப்படி அவன் காதலின் கவனிப்பாய் கேட்கும் போது, அவளின் எல்லா இழப்பும், எதுவுமில்லாமல் ஆகிவிடுகிறது.

“நத்திங். ஹேக்கர் யாருன்னு தெரிஞ்சாச்சு”

“ஓ, யாரு? பேரென்ன? ”

“ஹேக்கர் பேரு கனலினி”

“இது பொண்ணோட பேருமாதிரி இருக்குதே ட்டேபீ?? ”

“மாதிரியெல்லாம் இல்லை. ஹேக்கர் பொண்ணுதான்.” – தனது கனிப்பு தவறானதால் வந்த எரிச்சல்.

அவளது கூஃபியின் சிரிப்புகள்.

“ஏன் சிரிக்கிற?”

“காம்பட்டீசன் இல்லாத ஒன்சைட் லவ். அந்த சந்தோஷம் உனக்குப் புரியாது”

அவளும் சிரித்துவிட்டாள்.
இப்போதெல்லாம்
அவன் ‘சிரியென்று’ சொன்னால், அவள் ‘சரியென்று’ செய்யும்படி ஆயிற்றோ?!

“எப்ப பார்த்தாலும் உன்னப் பத்தி மட்டும்தான் யோசிப்பியா? என்னப் பத்தி யோசிக்க மாட்டியா?” – எதற்காக இந்தக் கேள்வி?

“நான் சொன்னனா? சொல்லு நான் சொன்னனா?”- ஆனால், காதலுக்காக மட்டுமே இந்த எதிர் கேள்வி.

” என்னப் பத்தி யோசிப்பியா?” – குரல் மிகக் கொஞ்சமே கொஞ்சமாக கொஞ்சியதோ??

“கண்டிப்பா ட்டேபீ. என்ன ஒன்னு உன்னப் பத்தி யோசிச்சாலே கபுள் கோல்ஸ்தான், முன்னாடி வந்து நிக்குது” – காதல் வாடிக்கை.

“அதான பார்த்தேன், ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சே… இன்னும் இந்த பேச்சு வரலயேனு நினைச்சேன் ” – காதல் வேடிக்கை.

“பார்த்தியா? நீ நினைக்கிற. நான் பேசறேன். அவ்வளவுதான் டிபெரன்ஸ்” – காதல் எல்லைக் கோடு.

“ஏய்! நான் அந்த அர்த்தத்தில சொல்லல” – குரலின் குழைவு காதல் எல்லைக் கோட்டைத் தாண்டப் பார்க்கிறதோ? ?

“தெரியும். போ, போய் வேலையை பாரு. ஐ கிஸ் யூ ட்டேபீ.”

“என்ன? இன்னைக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லல” – காதல் ஓட்டை.

“அதான், நீ சொல்லிட்டல ட்டேபீ” – காதல் சேட்டை.

“அய்யோஓஓஓ” – காதல் பிழை.

“இருந்தாலும்,என்னோட ட்டேபீ கேட்டு சொல்லாம இருப்பேனா? லவ் யூ லவ் யூ, லவ் யூ, ட்டேபீ. பை” – காதல் மழை.

காதல் கிரகத்தில் நாளுக்கு நாள், காதல் மழைப் பொழிவின் அளவு, மில்லி மீட்டரலிருந்து சென்ட்டி மீட்டர் ஆகிறதோ??

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

” மனோவா? “-ரேவ்

” ம்ம்ம்” – சயனா.

ஆறுதல் புன்னகை – இருவரிடமும்.

ஒருவழியாக, அவர்கள் பேச நினைத்த அதிகாரியிடமிருந்து, அழைப்பு வந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள்.

அரசாங்க அலுவலகத்தின் அத்தனை அம்சமும் பொருந்தி இருந்தது, அந்த அறை. அழுக்குப் படிந்த கோப்புகள். ‘ஏசி’ இருந்தும் ‘பேஃன்’ போட்டுக் கொள்ளும், ஆண் அதிகாரிகள். செவ்வாய் கிழமை மங்களகரத் தோற்றத்துடன் பெண் அதிகாரிகள்.

“சொல்லுங்க என்ன வேனும்” – அதிகாரி.

செய்தித் தாளை நீட்டினாள், ரேவ்.

“இந்த லேடியப் பத்தி டீடெயில்ஸ் வேனும்” – ரேவ்.

“என்ன வேனும்? அதான் பேப்பர்ல இருக்குதுல”

“யெஸ். லஞ்சம் ஏன் வாங்கனாங்கனு தெரியுமா? ”

“அதை நீங்க ஏன் கேட்கிறீங்க? அப்படியே கேட்கனும்னாலும் போலீஸ்கிட்ட கேளுங்க”

இதற்கிடையில்
ஒரு பெண் வேலையாள், அந்த அறைக்குள் நுழைந்தார்.

“சார் வூட்டுக்கு சீக்கிரமா போனும். இப்பவே சுத்தம் செய்றேன்”

ஒரே ஒரு தலையசைப்புடன், அந்தப் பெண்ணிற்கு அனுமதி அளித்தார், அந்த அலுவலகர்.

“கனலினி மேடம், இப்ப எங்க இருக்காங்க? அதாவது சொல்லுங்க” – ரேவ்.

அந்தக் கேள்வியில், அந்தப் பெண் வேலையாள், ஒரு சின்ன அதிர்ச்சிப் பார்வைப் பார்த்தார். அதை சயனா கண்டுகொண்டாள்.

சிறிது நேரம் ரேவிற்கும், அலுவலருக்கும் இடையே பேச்சுக்கள் இருந்தன. ஆனால் எந்த ஒரு பயனும், அளிப்பதாக இல்லை.

சுத்தம் செய்து முடித்துப் போகும் போது, தன் வாளியால், சயனாவை லேசாக இடித்துவிட்டுச் சென்றார்.

ஒரு ஐந்து நிமிடத்துக்குப்பின், சயனா வாய்திறந்தாள்.

“இங்க பாத்ரூம் எங்க சார் இருக்கு? ” – சயனா.

ரேவ் வித்தியாசமாக பார்த்தாள்.

“லெப்ட்ல கட் பண்ணி ஸ்ட்ரைட்டா போனீங்கன்னா, டெட் என்ட்ல”

“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று சொல்லி விடை பெற்றாள்,சயனா.

ரேவ், சயனா பின்னேயே ஓடி வந்தாள்.

“இப்ப பாத்ரூம் போகறதுதான் முக்கியமா?” – ரேவ்.

“ஆமா முக்கியம்தான் ”

“அவர்கிட்ட இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருந்தா, ஏதாவது விஷயம் கிடைச்சிருக்கும் ”

“ஒன்னும் கிடைச்சிருக்காது. பேசாம வா ”

“எவ்வளவு இம்பார்ட்டண்ட் வொர்க். பாத்ரூம் போகனும்னு சொல்ற.”

“….”

“கவர்மெண்ட் டாய்லெட் சுத்தமா இருக்காது”

“அது பப்ளிக் டாய்லெட் ”

“அப்ப, கவர்மெண்ட்டும் பப்ளிக்கும் ஒன்னில்லையா சயனா? ”

அடஅடஅட! ‘இந்தியன் டெமாகிரேஸி’ பற்றி, இம்மியளவும் தெரியாத ஒருவரால் மட்டுமே, இதைக் கேட்க முடியும்.

“மிஸ்.ரேவ், சிஐடி மாதிரி பேசுங்க. சீர்திருத்தவாதி மாதிரி வேண்டாம்”

பாத்ரூம் இருக்கும் இடத்திற்கு வந்தவுடன், சயனாவின் மூளை காத்திருக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குப் பின், அந்தப் பெண் வேலையாள் வந்தார்.

“வாங்க உங்களுக்குத்தான் வெயிட் பண்றேன். உங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்க? ”

“கனலினி மேடம் ரொம்ப நல்ல ஆபீஸர். பெரிய இடத்துல நடந்த தப்ப பிடிக்கப் போனதால, இங்கிருந்த ஆபீஸருங்க எல்லாம் சேர்ந்து, மாட்டி விட்டுட்டாங்க”

“ம்ம்ம். இது கொஞ்சம் எங்களுக்குத் தெரிஞ்சதுதான். பேப்பர்ல கூட போட்டிருக்கு. வேற ஏதாவது சொல்லுங்க? ”

“மூனு மாசம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாக. அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரியல”

“மூனு மாசமா? பேப்பரல இரண்டு மாசமானு போட்டிருக்கு”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. வேற என்ன வேனும்னு சொல்லுங்க? ”

“அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமா? ”

“அது எதுக்கு? ” – ரேவ்.

“நீ பேசாம இரு”

“என்னமோ பண்ணு. நான் போறேன் ” என்று சொல்லி ரேவ் கிளம்பி விட்டாள்.

“அது தெரியும்” என்று முகவரியைத் தந்தார், அந்த வேலையாள்.

“அவங்க வீடு இருக்கிற ஏரியா, உங்களுக்கு எப்படித் தெரியும்? ”

“நான் சனி ஞாயிறுனா, அந்த மேடம் வீட்டுக்குப் போய், அவங்களுக்கு வீடு சுத்தம் பண்ண உதவி செய்வேன் ”

“சரி. இதெல்லாம் இருக்கட்டும். நீங்க எந்த ஏரியால இருக்கிறீங்க” – இந்தக் கேள்விதான், சயனா கேட்க நினைத்து வந்தது.

“நான் இதுக்கு முன்னாடி, நுங்கம்பாக்கத்தில இருந்தேன் ”

“நான் அத கேக்கல. இப்ப எந்த ஏரியால இருக்குறீங்க? ”

“அட போம்மா உனக்கு உதவலாம்னு நினைச்சா? நீ என்னையவே கேள்வி கேட்கிற?” என்று நடந்து, இல்லை நழுவிச் சென்றுவிட்டார்

அவர் போவதையே பார்த்தபடி, சயனா நின்று கொண்டிருந்தாள். திடீரென்று பின்னால் இருந்து யாரோ இடித்தனர்.

“ஏன்மா பாத்ரூம் வந்தேன்னா, போயிட்டு போக வேண்டியதுதானே. இங்கனயே நின்னுக்கிட்டு இருக்க. நவுறு ” – இன்னொரு வேலையாள்.

“யக்கா, ஒரு கெல்ப்பு. அந்த போறாங்கள, அவங்க எந்த ஏரியா?” – முதல் சுத்தம் செய்பவரைக் காட்டி.

“அவ சைதாப்பேட்டை. நீ வழிய வுட்டு நகறு. நான் வேல பாக்கனும்”

தான் நின்று கொண்டிருப்பது, அரசு அலுவலகமா என்று சந்தேகம் எழுந்தது, அந்தப் பதிலால்.

எனினும் “தேங்க்ஸ்கா” என்று சொல்லி வெளியேறினாள்.

*****

வண்டியின் அருகே நின்று கொண்டு, இருக்கையில் விழுந்திருந்த வேப்பம் பூக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள், ரேவ்.
சயனா வந்தாள்.

“கனலினி வீட்டுக்குப் போய் பார்க்கப் போறீயா? ” – ரேவ்.

“கண்டிப்பா. ஆனா அங்க யாரும் இருக்க மாட்டாங்க. ”

“அப்புறம் எதுக்கு போகனும்? ”

“வெயிட் பண்ணி தெரிஞ்சிக்கோ”

ராயல் என்ஃபீல்ட் ரகளையாகச் சென்றது.

*******
குடியிருப்புகள் ஒன்றின் முன்னே வந்து ராயல் பார்க் செய்யப்பட்டது. ஒரு இனிப்புக் கடையில் மைசூர்பாகு மட்டுமா இருக்கும்? கடலைமிட்டாயும் உண்டல்லவா? இந்தக் கட்டிடம் அந்த வகையறா!

வண்டியிலிருந்து இறங்கினார்கள்.

“எத்தனாவது ப்ளோர் சயனா ”

“எயிட்த். வா, அங்க இருக்கிற செக்யூரிட்டிய பிடிப்போம் ”

இருவரும் செக்யூரிட்டி முன்…

“என்ன வேனும்?” – செக்யூரிட்டி.

“இங்க எயிட்த் ப்ளோர்ல கனலினினு ஒருத்தங்க இருக்காங்கள, அவங்கள பாக்கனும்” – சயனா.

அவர் யோசித்தார்.

“இப்ப அப்படி யாரும் இல்லையே”

“அவங்ககூட இன்கம்டாக்ஸ் ஆபிஸர்”

“தெரியல மேடம். அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலைய”

“நாங்க ப்ளோர்ல போய், பக்கத்து வீட்டில விசாரிச்சிக்கிறோம்” – உள்ளே நுழையப் பார்த்தாள் சயனா.

“இல்ல மேடம். அப்படியெல்லாம் உள்ளே விடமாட்டோம் ” – தடுத்தார் செக்யூரிட்டி.

இப்பொழுது அவர்களது அடையாள அட்டை எடுத்துக் காண்பிக்கப்பட்டது.

உடனே,

“உங்களுக்கு வேண்டிய விவரமெல்லாம் செக்கரட்டரி தருவாரு. நீங்க செகன்ட் ப்ளோர் போனீங்கன்னா, அங்க அவரோட ரூம் இருக்கும்” – செக்யூரிட்டி.

“தேங்க்ஸ்” என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர். விடை பெறும் முன் அவர் வசிக்கும் ஏரியா கேட்டு அறிந்து கொண்டாள், சயனா.

*****
இரண்டாவது தளத்தில்…

‘செக்ரட்டரி அறை’ என்று பெயரிட்ட அறைக்குச் சென்றனர்.

நடுத்தர வயதில் ஒரு பெண்மணி, அங்கு அமர்ந்திருந்தார்.

“வாங்க, உட்காருங்க” என்று இருக்கையைக் காட்டினார்.

இருவரும் அமர்ந்தனர்.

“இப்பத்தான் செக்யூரிட்டி இன்டர்காம்ல சொன்னாரு” என்றார், இன்முகமாக.

சிரித்து வைத்தனர்.

“ஏதும் குடிக்கிறீங்களா? ”

மழுப்பி வைத்தனர்.

“சொல்லுங்க கனலினி மேடம் பத்தி என்ன தெரியனும்” – புரிந்துவிட்டது, அவர்களது மழுப்பல்.

“இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியனும்” – ரேவ்.

“அவங்க எங்கன்னு தெரியாது. ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பிறகு எங்க போனாங்கன்னு தெரியலை”

“அவங்க ஃபேமிலி பத்தியாவது தெரியுமா? ” – சயனா.

சயனா அதிக ஆவல் காட்டினாளோ? அது அப்பட்டமாகத் தெரிந்ததோ?

அந்தப் பெண்மணி பதில் சொல்லும் முன், சயனாவின் இருதயம் இஷ்டத்திற்கு இருமிக் கொண்டது.

“கனலினி மேடத்துக்கு ஹஸ்பண்ட் கிடையாது. ஒரே ஒரு பையன் உண்டு. ”

சயனாவின் இருமிய இருதயத்துக்கு, இதமான சூட்டில், இஞ்சி டீ கொடுக்கப்பட்டது.

“அந்தப் பையன் பேரென்ன?” – சயனா.

சயனாவின் இந்தக் கேள்வியால், ரேவின் இருதயம் இம்சையாக இருமியது.

“பேரு சக்திவேல். இங்கு சோளிங்கநல்லூர்ல ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை பார்த்தாரு”

ரேவின் இருமிய இருதயத்துக்கு, இளநீர் கொடுத்து, மேலும் இருமச் செய்யப்பட்டது.

“சக்திவேல்” – சயனாவால் அந்த எழுத்துக்கள் உச்சரிக்கப்பட்டன.

உச்சரிக்கும்போதே
உயிர் சிலிர்த்தது!
உதடு இனித்தது!!

சிலிர்த்த உயிரைச் சீராக்க, தனிமை தேவைபட்டது. வெளியே சென்று விட்டாள்.

“வேற டீடெயில்ஸ்?” – ரேவ்.

“இவ்வளவுதான் தெரியும். நீங்க சக்திவேல் வேல பார்க்கிற ஆபீஸ்ல போய் கேட்டீங்கன்னா, மற்ற விவரங்கள் தெரியும் ” என்று, அந்த விவரங்களை ரேவிடம் தந்தார்.

அவரிடம் விடைபெற்று, ரேவ் வெளியே கிளம்பி வந்தாள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மாலை 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வெளியே வந்த சயனா, என்ஃபீல்டு மேல் ஏறி அமர்ந்திருந்தாள்.

‘சக்திவேல்’ ‘சக்திவேல்’ என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தாள். அந்தப் பெயர், அவளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.

பாவமான முகத்துடன் ரேவ் வந்து நின்றாள்.

“போலாமா? – சயனா.

“ரொம்ப லேட்டாயிடுச்சு. இன்னைக்கு இன்வெஸ்டிகேஷன் போதும். ஐடி ஆபீஸ் நாளைக்கு காலையில போய் விசாரக்கலாமா? ”

“ம்ம்ம், நான் உன்னை வீட்ல டிராப் பண்றேன்”

“ம்ம்ம்”

ராயல் கிளம்பியது.

ஆட்காட்டி விரல் நகம் கடித்தால் மட்டும் நாணமல்ல, ஆமை நடக்கும் வேகத்தில் ராயல் ஓட்டினாலும் நாணம்தான்!!

சாலையோர விளக்கின் மிதமிஞ்சிய ஒளியில், மெதுவாகச் சென்று, ரேவின் வீட்டை வந்தடைந்தது சயனாவின் என்பீல்ட்.

இறங்கி விடைபெறும் போது ரேவ்,

“எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு”

“என்ன பிராமிஸ்?”

“வீட்டுக்கு போயி அந்த ஐடி கம்பெனி எம்பிளாய் டீடெயில்ஸ் பார்க்க கூடாது. முக்கியமா சக்திவேலப் பத்தி பார்க்கவே கூடாது. ”

“ஓகே, நாளைக்கே சக்தியைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்” – உடனே, செல்லப் பெயர் சூட்டுவிழா நடந்துவிட்டது.

“சக்தியா? ”

“ஏன்? அவன் பேரு அதான. ”

“இங்க பாரு, ஹேக்கர் கனலினிதான்.
நீயா ஏதாவது கற்பனை பண்ணாதே ”

” நிஜமாவா சொல்ற? ”

“ஆமா, அந்தக் கொரியர்ல வந்த பேரு கனல்தான ”

‘சயனா’ என்று தனக்குத் தானே கைதட்டிக் கொண்டாள்.

“இப்போ எதுக்கு இந்த சபாஸ்?”

“அன்னைக்கு ஹேக்கர் பேர கெஸ் பண்றப்போ, கனல்வேல்னு சொல்லிருப்பேன். அதுக்குத்தான் ”

“அதுக்கு இப்ப என்ன? ” – ‘இது வேறயா’ என்று பொருள் கொள்க.

“ஒன்னுமில்லை ரேவ்” – ‘இது வேறதான்’ என்ற பொருளில்.

“லிஸன் ரேவ், அவனோட அம்மாக்கு என்ன ஆயிருக்கும்னு கண்டுபிடிச்சா, கேஸ் முடிஞ்சிரும்”

“அப்போ, அவன் அம்மாக்காக பழி வாங்கிருக்கானு சொல்றியா?”

“ம்ம்ம்.”

“ஓகே.பை” என்று திரும்பினாள்.

“குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்”

இவள் ஏன் இதைச் சொல்கிறாள்? என்று நினைத்து, ரேவ் நின்றாள்.

“குட்நைட் சொன்னா, திரும்ப குட்நைட் சொல்லனும்”.

காலையில் ரேவால் சொல்லப்பட்ட தத்துவம்தான். தவறாமல், இரவில் திருப்பி அவளிடமே கொடுக்கப்பட்டது.

“காலைல என்ன கேட்ட? ஹேக்கர் மேல எனக்கு கிரஸ்ஸானுதான? இப்ப அந்த கொஸ்டின் கேட்பியா?”

‘சயனாவின் கிரஸ் சக்திவேல்’ – சகிப்புத்தன்மையின் மறுஉருவான ரேவாலே சகிக்க முடியாதக் கூட்டணி.

“அப்புறம் என்ன சொன்ன? மைண்ட் கனெக்ட்டான…ச்ஞ்ச், ச்ஞ்ச் மனசே கனெக்ட் ஆனாலும் பரவாயில்லை அப்படித்தான? ”

ரேவின் நிலை – அழுது அடம்பிடித்து வாங்கிய பலூனை, ஐந்தே நிமிடத்தில் விளையாடி உடைத்து விட்ட குழந்தை போலிருந்தது.

“சயனா, நீ மனோகர்கிட்ட பேசிட்டு தான் தூங்கனும்”

“டயலாக் மாத்து ரேவ். போரடிக்குது” – என்று சொல்லி டக்கராக விடைபெற்றது ராயல்.

கட்டளையிட்டு எந்தக் காதலையும் வரவைக்க முடியாது.

செல்லப் பெயர் வைக்கப்பட்ட ‘சக்தி’ , ‘கூஃபி’ – இந்த இரண்டுக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கும் உணர்வில், உறங்கச் சென்றாள் சயனா.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ESK-9

என் சுவாசம் —  9

சிவரஞ்சனி கல்லூரியை விட்டு வெளியேறிய அன்று மதியம்,  செயல்முறைப் பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வந்த கலாவும் கோதையும், சிவரஞ்சனியைக் காணாமல் கல்லூரி முழுவதும் தேடினர்.

அவளது புத்தகப் பை,  நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் அவள் அமர்ந்திருந்த இடத்திலேயே கிடந்தது. அவள் மட்டும் மாயமாகிப் போனதைக் கண்டுத் தவித்தனர் தோழிகள்.

கல்லூரி ஆசிரியர்களிடம் தெரிவித்தும் ஒரு பயனும் இல்லை.  “அவள் வீட்டிற்குச் சென்றிருப்பாள்” என்கிற அலட்சிய பதிலே கிடைத்தது.

அவளது உடைமைகளை அப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு, எப்படி அவள் வீட்டிற்கு போவாள்?  தவித்தபடி கல்லூரி முடியும் வரை காத்திருந்தனர் தோழிகள்.  கல்லூரி முடியவும்  அவசரமாக அவளது வீட்டிற்கு சென்று பார்த்தவர்களுக்கு, பெரும் ஏமாற்றமாக இருந்தது.

அங்கேயும் அவள் இல்லை. காலையில் கல்லூரிக்கு வந்தவள்,  மாயமாக மறைந்திருக்கிறாள். அப்படியெல்லாம் எங்கேயும் சொல்லாமல் செல்பவளும் இல்லை. தோழிக்கு என்ன ஆபத்து ஏற்பட்டதோ? என்று அவர்களது மனம் அஞ்சியது.

சிவரஞ்சனியின் சித்தியும், “அவள் வீட்டிற்கு வராமல் எங்கோ ஓடிவிட்டாள்.  யாருடன் ஓடினாள்?  உங்கள் இருவருக்கும் தெரியாமல் இருக்காது” என்று அவர்களது வீட்டிற்கே வந்து ருத்ர தாண்டவம் ஆடியதில் தோழிகள் இருவரும் கதி கலங்கிப் போய் இருந்தனர்.

தெருவில் உள்ள அனைவரும் பார்க்கும் படி, அவளது சித்தி அவர்களது வீட்டு வாசலில் நின்று கத்தியது, அவர்களது குடும்பத்திற்கு மிகவும் தலையிறக்கமாகப் போய்விட்டது.

சிவரஞ்சனியைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும்,  இரவு முழுவதும் அவள் வீட்டிற்குச் செல்லாதது,   அவள் எங்கே சென்றிருப்பாள்? என்கிற கேள்வியை அனைவரது மனதிலும் ஏற்படுத்தியது.

சிவரஞ்சனியின் வீட்டில், அவளைக் காணவில்லை என்று பதறித் தேட யாரும் இல்லாததாலும்,  அவளது சித்திக்கு அவள் காணாமல் போனது ஒரு வகையில் நிம்மதி தந்ததாலும் அவளைத் தேட யாரும் முற்படவில்லை.

ஆனாலும் கலாவும் கோதையும் அவர்களது கல்லூரித் தோழர்களிடம் கூறி, கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தேடிப் பார்த்தனர்.  சந்தேகப் படும்படி ஏதும் கிடைக்காததால், என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றனர்.

அவர்கள் வீட்டினரின் ஆதரவு இல்லாமல், போலீஸிடம் போவதற்கும் பயமாக இருந்தது  அவர்களுக்கு. மூன்று நாட்களாக சிவரஞ்சனி இருக்கும் இடம் தெரியாமல்,  அவளைப் பற்றிய அவதூரான கேள்விகளுக்குப் பதில் அளிக்க  முடியாமல் கலாவும் கோதையும் தவித்துப் போயினர்.

சிவரஞ்சனியின் சித்தி சாரதாவுக்கு, அவள் காணாமல் போனது ஒரு வகையில் பெருத்த நிம்மதியே.  இருக்கும் ஒரு வீட்டையும் சிவரஞ்சனியின் அம்மாவுடைய நகைகளையும், எந்தவிதமான பங்கும் இல்லாமல் முழுதாக தன்னுடைய பிள்ளைக்குக் கொடுக்க  வேண்டும் என்பது அவளுடைய எண்ணம்.

சிவரஞ்சனியை மிரட்டி உருட்டிப் பேச முடியாமல் வைத்திருக்க முடியும் சாரதாவால். ஆனால் அவளது அண்ணன் சிவரஞ்சனியைத் திருமணம் செய்தால் கண்டிப்பாகப் பங்குக்கு வருவான்.  அவனை ஏமாற்ற முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.

 

உண்மையில் தனது அண்ணனுக்கு  சிவரஞ்சனியைத் திருமணம் செய்து கொடுக்க அவ்வளவாக விருப்பம் இல்லை சாரதாவுக்கு. அவள்  படித்து ஏதேனும் வேலைக்குப் போனால், காலம் முழுவதும் அவள் உழைப்பில் வாழ்ந்து விடலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் அவளது அண்ணன் பிடிவாதமாக, “அவளைக் கட்டிவை.  நான் என்னுடைய சேமிப்புப் பணத்தைத் தருகிறேன், நீ வட்டிக்கு விட்டு பணம் சம்பாதித்துக் கொள்” என்றதாலும்,  அனைவரும் ஒரே வீட்டில் இருக்கலாம் என்றதாலும் ஒத்துக் கொண்டாள்.

அது மட்டுமல்லாமல் சிவரஞ்சனியும் அவளது அண்ணனும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தையும், தனக்கே சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் மனக் கணக்குப் போட்டிருந்தாள். ஆனால், அவளது அண்ணனின் கிறுக்கு குணங்களை எண்ணி பயமும் இருந்தது.

சாரதாவின் அண்ணன் அவனது முதல் மனைவியைச் செய்த சித்ரவதை தாங்காமல், அவள் தற்கொலை செய்து கொண்டாள்.  அவனுக்கு எதிராக அவனது தெரு மக்களே வந்து சாட்சி சொன்னது,  அவனுக்குப் பாதகமாக அமைந்தது.

பணத்தைத் தண்ணீராய் செலவு செய்து,  யார் யாருடைய  கை கால்களைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி பெயிலில் வெளியே வந்திருக்கிறான்.  வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு அவனுக்குப் பாதகமாக இருந்தால், அவன் மீண்டும் சிறை செல்வது உறுதி.

சூழ்நிலை இப்படி இருக்க,  சிவரஞ்சனியைத் திருமணம் செய்து அவளையும்  சித்ரவதைப் படுத்தி,  அவள் ஏடாகூடமாக ஏதேனும் செய்து கொண்டால், தானும் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டி வரும் என்ற  பயம் சாரதாவுக்கு உண்டு.

இப்போது சிவரஞ்சனி காணாமல் போய்விட்டாள் என்பது சாரதாவைப் பொருத்தவரை நல்ல செய்தியே.  எனக்கு எந்தத் தொல்லையும் தராமல் சனியன் ஒழிந்தால் நிம்மதி என்றே எண்ணியிருந்தாள்.

ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்பதற்காக, ‘சிவரஞ்சனியைக் காணவில்லை’ என்று ஒப்பாரி வைத்து பொய்யழுகை அழுதாள்.

அவள் யாருடனோ ஓடிப் போய்விட்டாள் என்று, அனைவரையும் நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இனித் திரும்ப சிவரஞ்சனி வந்தாலும் வீட்டில் சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அவளது அண்ணன் கேசவனுக்கோ சிவரஞ்சனி காணாமல் போனது,  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் இருந்தான்.  சிவரஞ்சனியின் அழகு அவளைப் பார்த்ததும் அவனைப் பித்தாக்கி இருந்தது.  வயதும் ஆகிவிட்டது,  அவன் மேல் வழக்கும் உள்ளது. இனி அவனுக்கு யாரும் இரண்டாம் தாரமாகக் கூடப் பெண் தர மாட்டார்கள்  என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரியும்.

சிவரஞ்சனிக்கு யாரும் இல்லை.  சாரதாவின் வாயை ஒன்றிரண்டு லட்சங்களைக் கொடுத்து அடைத்து விட்டால் அவளைத் திருமணம் செய்யத் தடை இருக்காது  என்பது அவன் எண்ணம்.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவரஞ்சனியின் வீடு, அவனது கணக்குப்படி பல லட்சம் ரூபாய் மதிப்பு பெறும். சாரதாவை ஏமாற்றி வீட்டை முழுவதும் கைப்பற்றும் எண்ணமும் கேசவனுக்கு இருந்தது.

அவள் மீண்டும் திரும்பி வரும் போது, அவளை அடித்து மிரட்டியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் மூன்று நாட்களாக அவள் வராதது, அவர்களுக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருந்தது.

அவரரவர் எண்ணங்களின் படி அவரரவர் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, இறைவன் போடும் கணக்குகளை யார் அறிவார்?

யாருமில்லாதவள் என்று அவளை எண்ணிக் கொண்டு இவர்கள் கணக்கு போட,   அவளுக்கென்று ஒருவன் வருவான்,  இவர்கள்  போட்ட கணக்குகளைத் தூள்தூளாக்கி இவர்கள் அனைவரையும் விரட்டி விரட்டி வெளுக்கப் போகிறான் என்பதையும் யார் இவர்களுக்குச் சொல்வது?

சிவரஞ்சனியைக் காணவில்லை என்று உண்மையில் வருத்தப்படும் ஜீவன்கள் கலா கோதை மற்றும் அவளது தங்கை கல்யாணி மட்டுமே.  அவள் திரும்பி வந்துவிட வேண்டும் என்று கடவுளை நிதமும் வேண்டுபவர்களும் இவர்களே.

மத்திய அமைச்சரின் வீடு.   ஆயுதம்  தாங்கிய காவலர்கள் வாசலின் இருபுறமும் நின்றிருந்தனர். ராகவனும் கதிரும் வரும் வழியைப் பார்த்து, வாசலிலேயே கோபமும் கவலையும் சரிவிகிதத்தில் கலந்து முகத்தில் தாங்கியபடி நின்றிருந்தாள் வாசுகி. ராகவனுடன் கதிரும் கூடவே ஒரு பெண்ணும் வருவதாக அவளுக்குத் தகவல் கொடுத்திருந்தார்  ராகவன்.

மேலும், நடந்த விஷயங்களையும் மேலோட்டமாக அவளிடம் காரில் வரும் போது கூறியிருந்தார்.  வாசுகியைப் பொருத்தவரை அவளுக்குத் தன் குடும்ப நலன்தான் முதலில்.  குடும்பத்தினர் எந்த விதமானப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும்.  குடும்பத்தினர் என்பதில் கதிரும் அடக்கம்.

அரசியலில் மக்களுக்கு தொண்டு செய்கின்றீர்களா செய்யுங்கள்.   அறக்கட்டளைகள் மூலமாக பணத்தைச் செலவு செய்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிறீர்களா தாராளமாகச் செய்து கொள்ளுங்கள்.   ஆனால் எந்த விதத்திலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் என்பதுதான் அவளது எண்ணம்.

ராகவனுக்கோ கதிருக்கோ ஏதேனும்  சிறு பிரச்சினை என்றாலும், மிகவும் பயந்து போவது வாசுகிதான்.  அதனாலேயே கதிர் அடிதடி கட்டப்பஞ்சாயத்து என்று இறங்குவதில் பெரும்பான்மையான விஷயங்களை வாசுகி காது வரை எடுத்து வருவதில்லை.

அப்படியே அவளுக்குத் தெரியவந்தால் அவளைச் சமாளிப்பதும் கதிருக்குக் கடினமாகத்தான் இருக்கும்.  அதனால் கதிரின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததிலிருந்து அவள் மனம் ஒருநிலையில் இல்லை.

தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு இருக்கும் அவன் மீது, கடுமையான கோபத்துடன் இருந்தாள். அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால்?  என்ற எண்ணமே அவளை பதைபதைக்க வைத்திருந்தது.

போர்டிகோவினுள் ஒய்யாரமாக வந்து நின்றது அந்த வெள்ளை நிற  இன்னோவா. அதிலிருந்து இறங்கிய கதிரையும் ராகவனையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் வாசுகி.

அவளைப் பார்த்து ஏதோ பேச வாயெடுத்தக் கதிரை மேலும் முறைத்தவள்,  பின்னிருக்கையில் இருந்து பயந்தபடி இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் புன்னகையுடன்,

“வாம்மா… “ என்றாள்.  வாசுகியின் கோப முகம் கதிரை பாதிக்க,

“அக்கா…  இப்படி எல்லாம் இவனுங்க ப்ளான் பண்ணுவானுங்கன்னு எனக்குத் தெரியுமா?”

“அதான் சேஃப்பா வந்துட்டேனில்ல?”  என்று கெஞ்சினான்.

“நீ பேசாத கதிர்.  உன் மேல கொலவெறில இருக்கேன்.”

பாவமாக முகத்தை வைத்தவாறு,  “அதையேதான் க்கா அவனுங்களும் சொல்றானுங்க.”

“வாய மூடு…  உனக்கேன்டா இந்த வேண்டாத வேலையெல்லாம்?  எவனோ எக்கேடு கெட்டுப் போனா  உனக்கு என்ன?  உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் என்ன செய்வேன்?”

“இந்த மாதிரி  யோசிச்சவனுங்க இன்னும் என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ?  அத நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.   முதல்ல நீ இந்த   அடிதடி   கட்டப்பஞ்சாயத்து இதையெல்லாம் விடு  சொல்லிட்டேன்.”

“அக்கா அவனுங்க இனிமேல்  எதுவும் பண்ண முடியாதுக்கா.  டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் இரண்டு பேரையும் தூக்கியாச்சு.  அவனுங்க இருந்த தைரியத்துலதான் எம்எல்ஏ குமார் ஆடுனான். அவன் இனிமே பல்லு புடுங்குன பாம்புதான்.

அதுவும் இல்லாம அடுத்து வரப்போற இன்ஸ்பெக்டர் நேர்மையான ஆளு,  டிஎஸ்பி என்கூடப் படிச்சவன். என் ஃப்ரண்டு.  இனி பாரு என்னோட ஆட்டத்தை. என்னையவே ஊர விட்டு ஓட வச்சவனுங்களை நான் சும்மா விடுவேனா?”

அவனை மேலும் முறைத்தவள்,  “நீ அடங்க மாட்டடா.  உன்னய எப்படி அடக்கனும்னு எனக்குத் தெரியும்.  உடனே உனக்கு ஒரு பொண்ணப் பார்த்துக் கட்டி வச்சாதான், உனக்கு குடும்பப் பொறுப்பு வரும். இப்படி நினைச்ச நேரம் நினைச்சபடி திரிய முடியாம, உன்ன ஒருத்தி கேள்வி கேட்டாதான் நீயெல்லாம் அடங்குவ.”

மேலும் சிலபல திட்டுகளை வாசுகி வாறி வழங்க,  நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ராகவன்,

“வாசு…  போதும்மா உள்ள போய் மீதிய திட்டு. அந்தப் பொண்ணு பயந்து போய் நிக்குது பாரு”

இவர்களையே சற்று பயந்தவாறு பார்த்துக் கொண்டிருந்த  சிவரஞ்சனிக்கு பெரும் ஆச்சரியம்தான். இந்தக் காட்டான் என்ன இவங்ககிட்ட இப்படிப் பம்முறான் என்று எண்ணிக் கொண்டாள்.   அவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்ட வாசுகியை மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு.

“வாம்மா…  உள்ள வா.”  என்றபடி அவளைக் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் வாசுகி.

“தலைவரே அக்கா திட்டும் போது கொஞ்சம் கூட சப்போர்ட் பண்ணாம, உள்ள போய் மீதிய திட்ட  சொல்றீங்க…  உங்க வீட்டுக்காரம்மாவக்  கொஞ்சம் சமாதானம் பண்ணக் கூடாதா?”

பொய்க் கோபத்துடன் முறைத்தவனை,  முஷ்டியை மடக்கி புஜத்தில் குத்தியவர், “வாங்குடா…  எத்தனை தடவை அவகிட்ட என்னை மாட்டிவிட்டு திட்டு வாங்க வச்சிருக்க.  இப்ப உன் டர்ன் நீ வாங்கு.”

அதற்குள் அழகரும் சுந்தரும் வந்திருக்க அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

அழகர்,  “ஏன் மாப்ள, சேதாரம் ரொம்ப அதிகமோ…?”  என்க,  சுந்தரோ, “ திட்டு மட்டும் தானா…? அடியும் வாங்குனியா ண்ணா?”   என்று கலாய்க்க,

“ரொம்ப ஏத்தமாகிப் போச்சு உங்களுக்கு.  அப்புறம் கவனிச்சுக்கறேன் உங்கள”   என்று அழகரை முறைத்தபடி சுந்தரின் மண்டையிலும் ஒன்று போட்டான்.

அந்த பிரம்மாண்டமான வீட்டைச் சுற்றிக் கண்களால் பார்த்தவாறு வந்தவளை, சோபாவில் அமரச் சொல்லவும் தயக்கத்துடனே அமர்ந்தாள்  சிவரஞ்சனி. அவளுக்கும் மற்ற அனைவருக்கும் குளிர் பானம் வரவழைத்துக் கொடுத்தாள் வாசுகி.  வீட்டின் செல்வ நிலையும் பகட்டும் சற்று பதட்டத்தைக் கொடுத்தது சிவரஞ்சனிக்கு.

அவளின் பதட்டத்தைப் பார்த்த வாசுகி, அவளருகே அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுத்து, அவளைப் பற்றிய  விபரங்களை விசாரித்ததில்,  சிவரஞ்சனியின் தயக்கம் சற்று விலகியது.

தொளதொளவென்று அவள் போட்டிருந்த சட்டையைப் பார்த்ததும் தெரிந்தது அது கதிருடையது என்று.  அதுவே அவளுக்கு முட்டி வரை இருக்க அதற்குக் கீழே சற்றும்  பொருந்தாத அவளுடைய சுடிதார் பேண்ட்.  அவளுடைய உடையைக் கண்டதும் வாசுகி,

“ஏன்டா…  அந்தப் பெண்ணக் கூட்டிட்டு வர்ற வழியில அவளுக்கொரு ட்ரஸ் வாங்கியிருக்கலாம் இல்ல.  இப்படியேவா கூட்டிட்டு வருவீங்க.”  என்று கடிந்து கொண்டாள்.

“நீ வாம்மா… வேற புடவை தரேன் குளிச்சிட்டு அத மாத்திக்கோ.”

“அட,  அத யோசிக்கவே இல்ல க்கா.”

“நீ எதத்தான் ஒழுங்கா யோசிச்ச?   கண்டிப்பா இந்த பொண்ணு கூடவும் சண்டை போட்டிருப்ப.”

“அதெல்லாம் நல்லா போட்டான் மா”   என்ற அழகரை வெட்டவா குத்தவா என்பது போலப் பார்த்தவன்  சிவரஞ்சனியிடம்,

“ஏய்…  உன் கிட்ட நான் சண்டையா போட்டேன்?”

அவன் கேட்ட த்வனியே அவளை மிரள வைப்பதாய் இருந்தது.

“இப்ப எதுக்குடா அந்தப் பொண்ண மிரட்டிகிட்டு இருக்க?”

“நீ வாம்மா…  புடவை கட்டத்  தெரியுமில்ல…?”

“கட்டுவேன் க்கா.” என்று தயக்கத்துடன் பதிலளித்தவளை விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்று குளிக்கச் சொன்ன வாசுகி,  அவளது புதுப்புடவை ஒன்றையும் அதற்குத் தோதான ரெடிமேட் ப்ளவுஸ் ஒன்றையும் எடுத்து வைத்தாள்.

வெளியே வந்தவள்,  “நல்ல பொண்ணாத் தெரியுது கதிர்.  வீட்லயும் நிறைய பிரச்சினை போல.  ஏதாவது உதவி செய்யனும்.”

“செய்யலாம் க்கா.  படிக்கற செலவு முழுக்க நாமளே நம்ப ட்ரஸ்ட் மூலமா ஏத்துக்கலாம்.  படிச்சு முடிச்சதும் நல்ல வேலை வாங்கிக் குடுக்கலாம்.”

“கண்டிப்பா செய் கதிர்.   நீயும் கொஞ்சம் ரிஸ்கான வேலையெல்லாம் விட்டுடக் கூடாதா? உனக்கு ஏதாவது ஒன்னுன்னா எங்களால தாங்க முடியுமா சொல்லு?”

“அக்கா…  இனிமே கவனமா இருக்கேன்கா.   தலைவர் எவ்வளவோ நல்ல காரியம் செய்யறாரு.  அது எல்லாம் மக்கள்கிட்ட சேரனும்னா, கெட்டதெல்லாம் கொஞ்சம் களையெடுக்கனும் க்கா.”

“உன் ஒருத்தனால நாட்டைத் திருத்த முடியுமா கதிர்? உன் உயிருக்கே ஆபத்து வர்ற மாதிரி இந்த வேலையெல்லாம் எதுக்கு  உனக்கு?”

“எல்லாரும் இப்படி நினைச்சா முடியுமாக்கா? என் ஒருத்தனால இந்த நாட்டைத் திருத்த முடியாதுதான்.  ஆனா,  என் ஊரைக் கொஞ்சம் திருத்த முடியுமே…   எவ்வளவோ பேர் என்னென்ன தியாகமெல்லாம் இந்த நாட்டுக்காக செய்யறாங்க. நான் என்னால முடிஞ்ச சின்ன உதவியத்தானக்கா செய்யறேன்.”

“…”

“ப்ளீஸ்க்கா…  நீ இப்படி முகத்தை வச்சிருந்தா என்னால எதுவுமே செய்ய முடியாது. ஆனா இனிமே, இப்ப இருந்த மாதிரி அசால்ட்டா இல்லாம, கவனமா இருக்கேன்.  எனக்கு எதுவும் ஆகாது க்கா.  நீ கவலைப்படாம இரு.”

வாசுகியைச் சற்று சமாதானப் படுத்திய பின், கதிரும் அழகரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குப் போய் தயாராகி வருவதாகவும்,  வந்தவுடன் சிவரஞ்சனியை அழைத்துக் கொண்டு சென்று அவளது வீட்டில் விட்டு வரலாம் என்றும் கூறிச் சென்றனர்.

 

இளம் ரோஜா வண்ண  சில்க் காட்டன் புடவை பாந்தமாகப் பொருந்தியது சிவரஞ்சனிக்கு.   ரெடிமேட் ப்ளவுஸும் கச்சிதமாக இருந்தது. தலையை நன்கு துவட்டிக் காய வைத்தவள் தளர்வாகப் பின்னி வாசுகி கொடுத்த பூவையும் வைத்துக் கொண்டாள்.

பளிங்கு போன்ற முகத்தில் வைத்தப் பொட்டைத் தவிர வேறு ஒப்பனைகள் தேவைப்படவில்லை அவளுக்கு. இயல்பிலேயே நல்ல அழகுடைய  அவளுக்கு அந்த அழகிய விலை உயர்ந்த சேலை மேலும் அழகைக் கொடுத்தது.

அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்த வாசுகி,   “ரொம்ப அழகா இருக்கம்மா.  சாப்பிட வா.”

“கூச்சப்படாம சாப்பிடுமா.  உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோ.”

அவளை அமர வைத்து உணவுப் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது தானும் தயாராகி,   பள்ளியில் இருந்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் கதிர்.

தங்கள் வீட்டினுள் புதிதாக ஒரு பெண் அதுவும் கொள்ளை அழகாக இருந்தது,   குழந்தைகளைத் தானாக அவளிடம் இழுத்து வந்தது.

“அம்மா யார் இந்த அக்கா?”

“உங்க கிட்ட உங்க கதிர் மாமா சொல்லலையா?  இவங்க மாமாவோட ஃப்ரண்டு.”

“மாமா… உங்க ஃபரண்டா இவங்க? நீங்க சொல்லவே இல்ல.” என்றது சின்ன வாண்டு.

பெரியவளோ, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா.” என்று நொடியில் ஒட்டிக் கொண்டாள் சிவரஞ்சனியிடம்.

சிவரஞ்சனிக்கும், சிறியவர்களிடம் பேசிப் பழகுவது சற்று இயல்பாக இருந்தது.

“என்னடா வரும் போதே ஸ்கூல்க்குப் போய் பிள்ளைகளைக் கூட்டிட்டு வர்ற?”

“மூனு நாளா உன்னையும் புள்ளைங்களையும் பார்க்காம ரொம்ப கஷ்டமாப் போச்சுக்கா.  அதான் நேரா ஸ்கூல்க்குப் போயிட்டேன்.”

சிவரஞ்சனியின் இருக்கைக்கு எதிர்ப்புறம்  அமர்ந்தவனுக்கு உணவைப் பறிமாறிய வாசுகி,  “சாப்பிட்டதும் சிவரஞ்சனியை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடலாம் கதிர்.”

“சரி க்கா… “  என்றவனின் பார்வை சிவரஞ்சனியைக் கண்டதும் சற்று விரிந்தது.  அவனது  சட்டையைப் போட்டுக் கொண்டு,  கடல் காற்றில் முகம் பிசுபிசுத்திருக்க,   அள்ளி முடிந்த கூந்தலுடன் இருக்கும் போதே இவனது கவனத்தைக் கலைத்தவள்,  இன்று தழையத் தழையப் புடவை கட்டிப் பூச்சூடி  பொட்டிட்டு,  பளிங்கு சிலை போல மின்னுபவள் வெகுவாக தடுமாற வைத்தாள்.

ரசனையுடன் அவளை வருடியவனின் விழிகள் பிறர் பார்க்கும் முன் விலகிக் கொண்டது. ‘இந்தச் சேலைதான் இவள இவ்வளவு எடுப்பாக் காட்டுது. நாமளும் இந்தக் கலர்ல ஒரு சட்டை எடுப்போமா?’  என்று எண்ணியவன் கலவரமாகத் தலையை உலுக்கிக் கொண்டான்.

‘டேய் கதிரு…  என்னடா நினைப்பு இது? நீ இந்தக் கலருல சட்டை போட்டா ஒன்னு உன்ன பஞ்சு மிட்டாய் விக்குறவன்னு சொல்வாங்க. இல்லயா ராமராஜனுக்குத் தம்பின்னு சொல்லுவாங்க.  உனக்கு இது தேவையா?  நமக்கு என்னைக்கும் வொயிட் அண்ட் வொயிட் தான் சரி’ என்று எண்ணியபடி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

படகில் பார்க்கும் போது கேஷுவலாக ஒரு டீசர்ட்டும் ஷார்ட்ஸ்ஸும் போட்டிருந்தவன்,  இன்று தூய வெண்மை நிற வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் மிடுக்காக அணிந்து   புதிதாகத் தெரிந்தான்.

புருவத்தின் மத்தியில் இருந்த குங்குமப் பொட்டும் அவன் வலது கையில் அணிந்திருந்த வெள்ளிக் காப்பும் அவனது கம்பீரத்தைக் கூட்டிக் காட்டியது.

எப்போதும் மனதுக்குள் காட்டான் என்றும் அவன் இவன் என்றும் கூறிக் கொள்பவள்,  அவனது இந்தத் தோரணையைக் கண்டு வியந்து போனாள். தானாக மனதிற்குள் மரியாதை வந்தது. அவனது தோற்றமே அவனது ஆளுமையைச் சொல்லாமல் சொல்லியது.

கதிர் வண்டியை ஓட்ட ராகவன் அவனருகில் அமர்ந்திருந்தார்.  பின்னிருக்கையில் வாசுகி சிவரஞ்சனி மற்றும் குழந்தைகளும் அமர்ந்து கொள்ள,   வாகனம் கடலூரை நோக்கிச் சென்றது

——காற்று வீசும். .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Mayavan-2

அத்தியாயம் 2
மேஜை மேல் அடுக்கி வைக்கப் பட்டிருந்த கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்தான் அபிஜித்.  அப்போது கதவு  படாரென்று திறக்கப்பட,  யாரென்று கண்ணை மட்டும் உயர்த்தி பார்த்தான்.
சார்..சார் நில்லுங்க சார். இப்படி  உங்கள உள்ள விட்டா என் வேலை போயிடும் சார்..”  என நாகா சொல்லிக் கொண்டே வர அதை காதில் வாங்காமல் உள்ளே நுழைத்தார் ரத்தினம். முன்னாள் அமைச்சர். சுருக்கமாக சொல்வதானால் இன்று அபிஜித் மேல் தொடுக்கப்பட்ட கொலை முயற்சியின் சூத்திரதாரி.
உடுப்பு  மட்டுமே வெண்மை நிறம், மனம் முழுதும் அழுக்கு நிரம்பிய பெரிய மனிதர். இவருக்கென்று நான்கு கல்லூரிகள் உள்ளன.  அதை தவிர பினாமி பேரில் வெளிமாவட்டங்களில் கல் குவாரிகள், தவிர ஒரு மருத்துவமணையும் நடத்தி வருகிறார். இவை சொற்ப கணக்குகளே!
இவையெல்லாம் பரம்பரை சொத்துகளா? என்றால், இல்லை  இவர் அமைச்சராக இருந்த நான்காண்டுகளில் சம்பாரித்தவை.  தவறு கொள்ளையடித்தவை என கூற வேண்டுமோ!.  இவர் இப்படி அடித்து உதைத்து சொத்து சேர்க்க, அதை அனுபவிக்க என்றே அவரது ஒரே  மகன். அவன் சொத்தை மட்டும் அனுபவித்து அழித்திருந்தால் யாருக்கும் பிரச்சனை இல்லையே! ஆனால் அவனோ அவன் தந்தையின் கல்லூரியில் படிக்கவரும் ஒன்றும் அறியாத கிராமத்து பெண்களையும் அல்லவா அனுபவித்து அழித்தான்.
அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல ஆறு பெண்கள் .  அவர்களின் விடுதியில் தங்கி படிக்கும், வசதியில்லாத பெண்களாக தேர்ந்தெடுத்து  அவர்களை நாசமாக்கியது போதாதென்று  அவர்களை கொன்று  தற்கொலை அல்லது ஓடிப்போனது போல  பிம்பத்தை  ஏற்படுத்தி விடுவான்.
இதையெல்லாம் கண்டும் காணாது இருந்த தகப்பன் இன்று மகனை காக்க வேண்டியே, மகனை பற்றிய உண்மை அறிந்து அவனை கைது செய்ய பார்க்கும் அபிஜித்தை பல வழிகளில் மிரட்டி  அது பலனளிக்காது போகவே இப்போது சமாதான தூதுவனாக வந்திருந்தா(ன்)ர்.
“சார் நான் எவ்வளவோ சொன்னேன் சார் இவர் கேக்க மாட்டேன்னு வந்துட்டார் சார்” என நாகா பரிதாபமாக உரைக்க,  அபிஜித்  அவனை போ என சைகை செய்ய நாகா கதவை சாற்றி விட்டு சென்று விட்டான்.
“வணக்கம் தம்பி”, என கை கூப்பி வணக்கம் வைத்தவரை, கால் மேல் கால் போட்டவாறு  ரோலிங் சேரில் அங்கும் இங்கும் அசைந்தபடியே கையில் வைத்திருந்த பேனாவை விரல்களில் சுழற்றியபடி பார்த்திருந்தான்.
அவனது தோரனையை பார்த்த ரத்தினமே ஒரு கணம் சொக்கிதான் போனார். அது பதவியால் வந்த கம்பீரமா? இல்லை இயல்பிலேயே அமைந்து விட்டதா?  பதவி என்று பார்த்தால் இவனை விட பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் தன்னை எதிர்த்து பேசவே பயந்து ஒதுங்கி கொள்வரே!
ஆனால் இவனோ அரட்டல், மிரட்டல் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று தோரனையை காட்டுகிறானே! என்று எண்ணிய படியே தானாக அங்கிருந்த ஒரு இருக்கையை நிரப்பினார்.
“என்ன தம்பி பதிலுக்கு வணக்கம் வைக்க மாட்டீங்களா?  சரி விடுங்க,  அது உங்க இஷ்டம்.   நான் நேரடியா விசயத்துக்கே வரேன்.  என் பையன இந்த கேசுல இருந்து காப்பாத்த உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க அப்படியே செஞ்சிடலாம்..   வீணா நமக்குள்ள பிரச்சனை எதுக்கு  பாருங்க” என கேவலமான  சிரிப்புடன்  கைதேர்ந்த அரசியல்வாதியாக  பேசினார்.
“சோ, பையன காப்பாத்த லஞ்சம் கொடுக்க பேரம் பேச வந்திருக்கீங்க.. ஏம் ஐ கரெக்ட்”  என அபிஜித் நேரிடியாக கேட்க ரத்தினம்  முகம்  யோசனையை காட்டியது….
“என்ன ரகு வாங்கிடலாமா  ல..ஞ்..ச..ம்.” என நிறுத்தி  நிதானமாக வினவ,
“சார்..அது  வந்து…..” என  ரகு தடுமாறினான்.
“சும்மா  சொல்லுங்க ரகு, சார் தான் சொல்றாரில்ல”  பேச்சு ரகுவிடத்தில் ஆனால் பார்வை முழுதும் ரத்தினத்தையே துளைத்தது.
இப்படி  கேட்டால் அவனும் என்ன சொல்வான். அமைதியாக நின்று  கொண்டான்.
“இப்பதான் தம்பி நல்ல முடிவு எடுத்திருக்கீங்க…பசங்க பேச தெரியாத உங்ககிட்ட பேசியிருக்கானுங்க.. நான்கூட  நீங்க  மசிய மாட்டீங்கன்னு  நினைச்சி காலைல என்னவோ பண்ண பாத்தேன்.” என தலையை தேய்த்தவாறு சன்னமாக முனகியவர்,  “சரி அத விடுங்க, இப்ப சொல்லுங்க பணம், பொருள், வீடு,   நகைங்க என்ன வேணும். ”  என அடுத்த அடியை உடனே எடுத்து வைத்தார் அந்த பாசக்கார தகப்பன்.
“இந்தாள் என்ன லூசா இன்னைக்கு காலைல கொலை பண்ண ஆள் அனுப்புனத வெளிப்படையா சொல்றான்.  இவர பத்தி தெரியாம பேரம் வேற பேசறான் என்ன நடக்க போகுதோ” என திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு.
“ச்ச்ச் … என தலையை இடவலமாக ஆட்டியவன் இதுல ஒரு சிக்கல் என்னன்னா, பணம் அது என்கிட்டயே  நிறைய இருக்கு,  அடுத்து பொருள், வீடு இதுல எல்லாம்  எனக்கு விருப்பமில்ல, அப்பறம் நகைங்க  அத வாங்கி  கொடுக்கறதுக்கு யாரும் இல்ல , சோ எதுவும் எனக்கு யூஸ் ஆகாது.” என  உதட்டை நெளித்தவாறு நக்கலாக  கூற.
“ஓ…அப்ப தம்பிக்கு  நல்ல இளங்குட்டியா மாசத்துக்கு ஒண்ணு …..” என்ன விகார சிரிப்புடன் சொல்லிக் கொண்டே சென்றவர் அவன் பார்த்த  பார்வையில் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.
இவன் பெருசா எதிர்பாக்கறானோ என அவரது அரசியல் மூளை யோசிக்க ஆரம்பித்தது.  ஆனால் மனமோ அவன் என்ன கேட்டாலும் கொடுத்துதான் ஆக வேண்டும். ஏனெனில்  இதில் மாட்டிக்கொண்டிருப்பது அவரது ஆருயிர் மகனாயிற்றே என்று சமயத்தில் எடுத்துரைத்தது. அவர் முகம் யோசனையிலேயே இருக்க அதை கண்ட அபிஜித்,
“அடடே நீங்க இவ்வளவு யோசிக்கவே வேண்டாம்… நான் கேக்கறத கொடுத்தா போதும் எ..ல்…லாம் முடிஞ்சிடும் என்ன டீல் பேசலாமா”  என கேட்க முன்னாள் அமைச்சரின் முகம் மலர்ந்தது.  “நீங்க கேளுங்க தம்பி எதுவா இருந்தாலும் பண்ணிடலாம்” என உற்சாகமாக வாக்களித்தார்.
பேனாவினை மூடியவாறே “அப்படினா  செத்து போன ஆறு பொண்ணுங்களையும் உயிரோட கொண்டு வாங்க ” என இறுகிய முகத்தோடு பல்லை கடித்துக் கொண்டு கூற, திடுக்கிட்டு அவனை பார்த்தார் ரத்தினம். அவரது முகத்தில் இருந்த சந்தோசம் துணி கொண்டு துடைத்தார் போல் கானாமல் போனது.
“என்ன தம்பி மாத்தி மாத்தி பேசறீங்க,  விளையாண்டு பாக்கறீங்களா!  என்னோட பவர்  தெரியாம  பேசறீங்க.  ” என கோபமாக  பேசியவர், முன்னிருந்த  டேபிளில் கைவைத்து சற்று முன்வந்து “ஆமா உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்காமே… அதுவும் அழகா வேற இருக்காம்”  இதை கேட்டு அவனது முகம் பாறை போல் இறுகுவதை பார்த்து  ரசித்தவாறே,
“நான் சொல்லலப்பா, நம்ம பசங்கதான் சொன்னாங்க, கொஞ்சம் மோசமான பசங்க தம்பி பார்த்து சூதானமா இருக்க சொல்லுங்க தங்கச்சிய..இப்பலாம் என்னென்னவோ நடக்குது  பாருங்க நாமதான் எச்சரிக்கையா இருக்கனும்” என நக்கலாக கூறினார்.
அதை கேட்டு தன் பற்கள் தெரிய அழகாக சிரித்தவனை “அந்தாள் மிரட்றாரு, இவர் ஏன் சம்மந்தமேயில்லாமல் சிரிக்கறாரு” என ரகுதான்  குழப்பத்தோடு பார்த்திருந்தான்.
“ம்ஹும்  குட் ஜோக்” என சிரித்து முடித்தவன்  “அவளோட நிழல கூட உன்னால நெருங்க முடியாது முடிஞ்சா பாத்துக்கோ” என சவால் விட்டான்.
 “என்ன முடியாதா!!  இப்ப..இப்ப தூக்கி காட்றேன் பாக்கறியா” என  ரத்தினம் ஆவேசமாக கத்த,
“நான் ஒன்னுமே பண்ணல, இங்கதான் உன் கண்ணுமுன்னாடிதான் இருக்கேன்  முடிஞ்சா துக்கு”  என  மேலும் சாய்வாக அமர்ந்து தெனாவட்டாக கூறியவனை  என்ன செய்தால் தகும் என பார்த்திருந்தார் ரத்தினம்.
உடனே யாருக்கோ போன் செய்தவர்  அந்த பக்கம் என்ன சொன்னார்களோ!  போனை கட் செய்து விட்டு, “வேணாம் தம்பி எங்கிட்ட மோதாதீங்க”
“ஒழுங்கா உன் பையன தப்ப ஒத்துகிட்டு சரணடைய சொல்லு,  இன்னும் கொஞ்ச நாள்ல அரெஸ்ட் வாரண்டோட போலீஸ் வீட்டுக்கு வரும். இல்ல நான் இந்த மாதிரி  எதையாவது பண்ணிட்டுதான் இருப்பேன்னா..உன் பையன் உனக்கில்ல இது மிரட்டல் இல்ல… புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்” என்றவன் வாயிலை நோக்கி கைகாட்ட, தன் இயலாமையை காட்ட முடியாமல் அவனை முறைத்தவாறே வேகமாக வெளியேறி இருந்தார் ரத்தினம்.
அவர் சென்றபின்  போனை எடுத்து  குறிப்பிட்ட எண்ணை டயல் செய்ய  சிறிது தயங்கியவன்,  ஆனால் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து  போன் செய்து  சில விசயங்களை பேசி வைத்திருந்தான்.
ஒரு மாதம் கடந்திருந்தது. ரத்தினம் வந்து சென்ற பின்  எவ்வித இடையூரும் இல்லை அமைதியாக  சென்று கொண்டிருந்தது. ஆனால் அவன் இத்தோடு விடுவான் என்று  தோன்றவில்லை. அவன் மகனுக்கு எதிரான ஆதாரங்களை முழுவதுமாக திரட்டியிருந்தான் அபிஜித். நாளையோ,  அதற்கு அடுத்த நாளோ  அவன் ஜெயிலுக்கு செல்வது உறுதி.    அந்த பெண்களின் பெற்றவர்களை நினைத்து மனம் கனத்தது அபிஜித்திற்க்கு. எத்தனை கனவுகளோடு படிக்க வந்த பெண்கள் இப்படி அநியாயமாய் கொல்லப்பட்டதை நினைத்து மனம் வருந்தினான். தன் செல்வாக்கின் மூலம் அவன் தப்பிவிட கூடாது என்பதற்காகவே  இந்த வழக்கை நேரடியாக தன் கண்காணிப்பில் கொண்டு வந்திருந்தான்.
இன்று கொஞ்சம் தாமதமாகிவிடவே  டிரைவரை மறுத்து வீட்டிற்கு போக சொல்லிவிட்டு  அபிஜித்தே அரசு வாகனத்தை ஓட்டி வந்திருந்தான்.  இரவு பத்தரை மணி சாலை துடைத்து போட்டதை போல ஆள் அரவமற்று இருந்தது. இவன் மனதிலும் அந்த சாலையை போலவே ஒருவித வெறுமை சூழ்ந்தது எதையெதையோ நினைத்தவாறு வாகனத்தை ஓட்டி வந்தவனின் கண்ணில் தூரத்தில் ஒரு பெண் ஓடி வருவதையும், அவளை நான்கு பேர் துரத்தி வருவதையும் கண்டவன்  வாகனத்தை வேகமாக செலுத்தி  அந்த பெண்ணை நெருங்கியிருந்தான்.
எதற்கும் இருக்கட்டும் என்று தன் கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பில்சொருகி கொண்டு  காரை விட்டு இறங்கினான்.  தலைதெறிக்க ஓடி வந்த பெண்ணவளோ   இவனின் பின்னால் வந்து மறைந்து கொண்டு “சா…ர்   ப்…ளீஸ்  சேவ் ..மீ ” என சொல்லுவதற்குள்ளாகவே பலமாக மூச்சு வாங்கியது. அவள் முகத்தை கூட சரியாக இவன் பார்க்கவில்லை.  அவளை காருக்குள் அமர செய்தவன் வாட்சை கழட்டி காருக்குள் வைத்து, கை பட்டனை கழட்டி மேலேற்றியவாறே கார் கதவை சாற்றிவிட்டு, துரத்தி வந்தவர்களை நோக்கி சென்றான்.
உள்ளே அமர்ந்த பெண்ணவளோ முகத்தில் வழிந்த வியர்வையை கூட துடைக்க தோன்றாமல் கைகால்கள் வெளிப்படையாக நடுங்க, காருக்குள் இருந்த பாட்டிலில் இருந்து நீரை அருந்தினாள். ஆனால் பாதி நீர் கை நடுக்கத்தால் அவள் மேலேயே ஊற்றிக்கொண்டிருந்தது.
நிதானமான நடையுடன் நடத்து வந்த அவனை அந்த நால்வரும் எதிர்பார்க்கவில்லை போலும்.  இருட்டுக்குள் இருந்ததால் அரசு வாகனத்தை அவர்கள் கவனிக்கவில்லை.  தனியாக ஒரு பெண் மாட்டவும் அவளை துரத்தி வந்திருந்தனர்.  இப்படி ஒருவன் வருவான் என்று நினைக்கவில்லை. அவளை விடவும் மனமில்லை, அவ்வளவு அழகாக இருந்தாள்.
நூறில் கால்பங்கு வாய்ப்பாக இவனை அடித்து துரத்திவிட்டால், இன்று நல்ல வேட்டை அவர்களுக்கு. அவர்களும் தயாரானார்கள் பலப்பரீட்சைக்கு.  ஆனால் அவர்கள் நினைத்தது போல இவன் சாதாரணமாக தாக்குவது போல் தெரிந்தாலும் அது அவ்வாறு இல்லை என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். இனி ஓடவும் முடியாது ஏனெனில் அபிஜித் அந்தளவுக்கு அவர்களை தாக்கியிருந்தான்.
இவை அனைத்தையும் காரினுள் இருந்தே திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் காரிகை. அப்போது அவள் கவனத்தை கலைத்தது பின்னாலிருந்த வந்த ஒரு ஒளி.  அது என்னவென்று கூர்ந்து பார்த்தாள். ஒரு பெரிய ஜீப் போன்ற வாகனம் அதிலிருந்து  இறங்கினர் தடிதடியாய் ஆட்கள் கையில் ஆயுதங்களுடன்.
அதை கண்டதும் வெலவெலத்து போனது அவளுக்கு,  இன்றைய கண்டம் இதோடு நிற்கவில்லையோ அவளுக்கு.   அவர்கள் தன்னை காத்தவனை நோக்கிதான் வந்து கொண்டிருந்தனர் என்பது அவளுக்கு புரிந்தது.
இவனை அழைக்கலாம் என்றால்  காருக்கு வலது புற பக்கவாட்டில் அவர்களை பந்தாடிக் கொண்டிருந்தான்.  உள்ளிருந்து அழைத்தால் சத்தம் கேட்காது. எனவே பயத்துடன் கார்கதவை திறந்து இறங்கியிருந்தாள்.
அதற்குள் அபிஜித் அடித்தவர்களுள் ஒருவன் கீழே விழ, பக்கத்தில் ஒரு பெரிய இரும்பு ராட் ஒன்று  இருந்தது. அதை கண்டவன் அதை எடுத்துக் கொண்டு அபிஜித்தை நெருங்கினான்.
அதற்குள் காரிலிருந்து வந்தவர்கள் அவனை நெருங்கியிருந்தனர்.  இனி அவனை அழைத்து கூறுவதென்பது இயலாத காரியம் அதனால் இவளே அவனிடத்திற்க்கு விரைந்திருந்தாள். இவள் ஒன்றும்  அவ்வளவு தைரியசாலியெல்லாம் இல்லை.  தன்னை காத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவனை காக்க வேண்டும் என்ற அந்த நேர பரிதவிப்பு மட்டுமே அவளை விரைய செய்திருந்தது.
இவள் செல்வதற்கும்  காரிலிருந்து வந்தவர்களில் ஒருவன் கையில் உள்ள கத்தியால் அபிஜித்தை  ஓங்கி குத்த வரவும் சரியாக இருக்க அவனை தள்ளிவிட சென்றவள் கால் தடுக்கி அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் தடுமாற கத்தி இவள் இடுப்பு பகுதியை ஊடுருவி சென்றது.
அதே நேரம் இரும்பு ராட் ஐ எடுத்தவன் அபிஜித்தை தாக்க வரவும்,  அபிஜித் தன்னை காத்துக் கொள்ள வேண்டி குனிய அந்த அடியும் பெண்ணவளின் பின் மண்டையை பலமாக தாக்கியது.
இரண்டு தாக்குதல்களாலும் நிலை குலைந்த பெண் பரிதாபமாக கீழே விழுந்திருந்தாள்.

ESK-8

என் சுவாசம் — 8 

இருள் எங்கும் கருமை போர்த்தி இருந்தது. உப்புக்  காற்று குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. படகின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி.

‘இப்ப என்ன தப்பாக் கேட்டுட்டேன்னு இந்த குதி குதிக்கிறான்?  மினிஸ்டர் ஃபோன்ல  சொன்னததானே கேட்டேன். அதுக்குப் போய் இப்படித் திட்டுறான்.  சரியான காட்டான்.

நல்லவேளை அந்த அங்கிள் வந்து அவனைப் புடிச்சாரு. இல்லைன்னா கண்டிப்பா அடிச்சிருப்பான்  மாக்கான்,  வளர்ந்து கெட்டவன்’  என்று  மனதிற்குள் அவனைக் கறுவியபடி கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள்.

அவள் சித்தியைத் தவிர யாரிடமும் இப்படித் திட்டு வாங்கியதில்லை அவள்.   பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கிதான் பழக்கம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் இனிமையாகவே பழகுவதால்,  யாரும் சிறிதாக முகம் சுளித்துக் கூட பேசியதில்லை.

இவன் ஒருத்தன்தான் அப்பொழுதிலிருந்து தன்னை முறைக்கவும் நக்கலடிக்கவும் திட்டவுமாக இருக்கிறான்  என்று எண்ணியவள், இங்கிருந்து போகும் வரை அவன் கண் பார்வையில் படாதவாறு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

கோபத்தில் அவளைத் திட்டியபடி அடிக்கப் பாய்ந்தவனைப் பிடித்துப் படகின் கீழே இழுத்து வந்திருந்தார் அழகர்.

“ஏன் மாப்ள, அதுவே  சின்னப் பொண்ணு.  ஏற்கனவே ரொம்ப பயந்து கிடக்குது.  அதப் போய் அடிக்கப் போற. உன்னோட ஒரு அடியத் தாங்குமா அது?”

“தலைமறைவா இருக்கியான்னு என்னைக் கேட்கறா?  போலீஸ் தேடுதா  உங்களன்னு கேட்கறா? எவ்வளவு கொழுப்பு இருக்கனும்?  எனக்கு வர்ற கோபத்துக்கு  அடிச்சி  அவ மூஞ்சி முகரையெல்லாம் பேர்த்திருப்பேன்.”

“அட விடுப்பா…  சின்னப்  பொண்ணு.  தெரியாம ஏதோ பேசியிருக்கும்.  நீ இங்கயே ஸ்டீபன் கூட இரு. சாப்பிடும் போது வந்து கூப்பிடுறேன்.”

“சொல்லி வைங்க அவகிட்ட.  இங்கயிருந்து போற வரைக்கும் அவ இருக்கற இடம் தெரியக் கூடாது. வாயத் தொறந்து எதுவும் பேசக் கூடாது.”

“சரிப்பா… சரிப்பா…  நீ அமைதியா இரு.  ஒரு பொண்ணுகிட்டயாவது சண்டை போடாம இருக்கியா நீ” என்று புலம்பியவாறு படியேறியவரை முறைத்தபடி நின்றான் கதிர்.

படகின் மேல்தளத்திற்கு வந்த அழகர் சிவரஞ்சனியையும் சமாதானம் செய்து அவளுடன் பேசியபடி அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

“அம்மாடி சிவரஞ்சனி,  அவன் ஒரு முரட்டுப் பய. சட்டுன்னு கோபம் வந்துடும். அவன் திட்டினத மனசுல வச்சிக்காதம்மா. எதுக்கும் நீ அவன் கண்ணுலயே படாம இரு. அதான் நல்லது.”

அப்பொழுது உணவு தயாராகிவிட்டதாகக் கூறிய சுந்தரும் ஜெகாவும்,  உணவு  வகைகளைக் கொண்டு வந்து வைத்தனர். கதிரையும ஸ்டீபனையும் அழைத்தவர்கள்,  சிவரஞ்சனியையும் அழைத்து  அனைவரும் வட்டமாக அமர்ந்தனர்.

ஒரு தட்டில் சுடச்சுட சாதம் வைத்து,  அதன் மீது மணக்க மணக்க மீன் குழம்பை ஊற்றி,  பொறித்த மீன் துண்டுகளை வைத்து முதலில் சிவரஞ்சனியிடம் நீட்டினான்  சுந்தர்.

அவை அப்பொழுது பிடித்த மீன்கள்.  மிகவும் ஃப்ரெஷ்ஷான மீன்களை வைத்து செய்த மீன்குழம்பு மிகுந்த வாசத்துடன் சாப்பிடத் தூண்டும்படி இருந்தது. அனைவரது வாயிலும் தானாக நீரைச் சுரக்கச் செய்தது.

அந்தத் தட்டைத் தயக்கமாகப் பார்த்தவள்,  முகத்தை லேசாகச் சுளித்தபடி வேண்டாம் என்று கூறினாள்.

“சாப்பிடு பாப்பா சூப்பரா இருக்கும்.”

“எனக்கு வேண்டாம் ண்ணா… “  என்று அவள் கூறியதும் அவளை முறைத்த கதிர்,

“என்ன… சாப்பிடக் கூட உன்னை எல்லாரும் கெஞ்சனுமா?  ஒழுங்கா வாங்கிச் சாப்பிடு” என்று மிரட்டினான்.

அவனைப் பாவமாகப் பார்த்தவாறு சுந்தரிடம், “அண்ணா நான் அசைவம் சாப்பிட மாட்டேன். கொஞ்சம் மோர் இருந்தாப் போதும்,  அதை ஊற்றிச் சாப்பிட்டுக்குவேன்.”

“அய்யோ…  மோர்லாம் இல்லையே பாப்பா.”

“பரவாயில்ல ண்ணா நான் வெறும் தண்ணி ஊற்றிக்கூட சாப்பிட்டுக்குவேன்.” என்றபடி வேறு ஒரு தட்டில் சாதம் வைத்து தண்ணீர் ஊற்றி ஜெகா கொண்டு வந்து கொடுத்த ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாள். அது அனைவருக்கும் சங்கடத்தைக் கொடுத்தது.

“நீ வெறும் தண்ணி ஊத்தி சாப்பிடும் போது,  நாங்க மட்டும் மீன் குழம்பு வச்சி சாப்பிடறோம். எப்பவுமே அசைவம் சாப்பிட மாட்டியாம்மா”

“ஆமாம் அங்கிள்,  எப்பவும் அசைவம் சாப்பிட மாட்டேன்.  எத்தனையோ நாள் பட்டினியா வெறும் வயிற்றோட படுத்திருக்கேன் அங்கிள். அப்படிப் பார்த்தா  இந்த சாப்பாடு எனக்கு தேவாமிர்தம்.  நீங்க சாப்பிடுங்க அங்கிள்”   என்று கூறியவளைக் கேள்வியாகப் பார்த்தவன்,

“ஏன்?  உங்க அப்பா என்ன பண்றாரு?”   என்று அவளது தந்தையின் வருமானத்தை அறியும் பொருட்டுக் கேட்டான்.

“எனக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் இல்லை. எங்க சித்தி கூடத்தான் இருக்கிறேன். அப்பா பென்ஷன் கொஞ்சம் வருது.  அதத் தவிர வேற  வருமானம் இல்ல அதான்.” என்று தயக்கத்துடனும் சிறு சங்கடத்துடனும் கூறியவள்,  அப்பொழுதும் தனது சித்தியை விட்டுக் கொடுக்கவில்லை.

ஏனோ!  அவளும் தன்னைப் போலவே தாய் தந்தையற்ற பெண் என்பதில்,  கதிரின் மனம் சற்று இளகியது.  அப்பொழுதுதான் அவளை நன்றாக கவனித்தான்.

காதில் முத்து போன்று பிளாஸ்டிக் தோடுகள் அணிந்திருந்தாள்.  கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்  கைக்கொன்றாக அணிந்திருந்தாள்.  கழுத்து வெறுமையாக இருந்தது. அவளுக்குச் சற்றும் பொருந்தாத அவனது சட்டையைத் தொளதொளவென்று அணிந்திருந்தாள்.

ஆனாலும் முகம் துடைத்து வைத்த வெண்கல விளக்கைப் போல பளபளப்பாக இருந்தது. சோகையான விளக்கு வெளிச்சத்திலும் அவளது சந்தன நிறம் பளிச்சென்று தெரிந்தது.

காந்தம் போல ஈர்க்கும் விழிகள்,  சிறிய அளவிலான மூக்கு. மேலுதடு மெலிந்தும் கீழுதடு சற்று சதைப்பற்றாகவும் இயல்பாகவே சிவந்து இருந்தன. சுந்தரிடம் ஏதோ பேசிக்கொண்டே சாப்பிட்டவளின் பளீரென்று மின்னிய அரிசிப் பற்கள்  என்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்,  தலையை உலுக்கிக் கொண்டான்.

‘ச்சே…  இது என்ன இவளை இப்படிப் பார்க்கிறேன்’ என்றுத் தன்னையே கடிந்து கொண்டவன்,   அதன் பின்னர்  விரைவாக உணவை முடித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டான்.

உணவு உண்டதும் அனைத்தையும் எடுத்து வைக்க ஜெகாவுக்கும் சுந்தருக்கும் உதவினாள்.

“அம்மாடி சிவரஞ்சனி,  நீ அந்த ரூம்ல படுத்துக்கோம்மா.  ரூமுக்கு கதவுல்லாம் இல்ல.   ஆனாலும் ஒரு பயமும் கிடையாது.  நான் இங்க வெளியிலதான் படுத்திருப்பேன்.  நீ உள்ள போய் படுத்துக்கம்மா.”

சரி என்று தலையாட்டியவள் அமைதியாக அறைக்குள் சென்று தரையில்,  கைகளைத் தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.  தூக்கம் வரவில்லை.  தானும் வெளியே அமர்ந்திருந்தால் அவர்களுக்கும் சங்கடம்,  தனக்கும் சங்கடம் என்பதாலேயே உள்ளே வந்தாள்.

வெளியே கதிரின் ஆர்ப்பாட்டமான சிரிப்புச் சத்தம் கேட்டது.  ஜெகாவும் ஸ்டீபனும் ஏதோ நகைச்சுவையைக் கூற அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். இந்த சிடுமூஞ்சிக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா என்று எண்ணிக் கொண்டாள்.

கதிரின் உடைகளும் தோரணையும் அவன் நன்கு வசதியானவன் என்று காட்டியது.  ஸ்டீபனும் ஜெகாவும் மீனவர்கள் என்பதும் புரிந்தது.  ஆனாலும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைவருடனும் நன்கு பழகுபவனைப் பார்த்துச்  சற்று ஆச்சரியமாக இருந்தது.

அழகர் அவனைப் பற்றிக் கூறியதையெல்லாம் நினைத்துப் பார்த்தாள்.  அடேங்கப்பா!  சாதாரணமாகக் கேட்டதற்கு எவ்வளவு கோபம் வருகிறது அவனுக்கு.  இன்று அவனிடம் அடி வாங்கியிருக்க வேண்டியது. அழகர் அங்கிளால் தப்பித்தேன் என்று எண்ணிக் கொண்டாள்.

அத்தனை ஆண்களுக்கு மத்தியில் இருந்தபோதும்,  ஒருவரின் பார்வைகூட தன் மீதுத் தவறாக விழவில்லை என்பது புரிந்தது.  கோபப்பட்டாலும் கதிரும் நல்ல குணமுடையவன் என்று எண்ணிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் இளையராஜாவின் இன்னிசை கீதங்கள் ஒலிக்கத் துவங்கின. கதிர்தான் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.  அருமையான பாடல்களைக் கேட்டபடி அவள் உறங்கிப் போனாள்.

***

எப்பொழுதும் போல அதிகாலை நான்கு மணிக்கே விழிப்பு வந்தது சிவரஞ்சனிக்கு.   வெளியே  மெல்லிய ஒற்றை விளக்கு மட்டுமே எரிந்தது.  சற்றுத் தயக்கத்துடனே வெளியே வந்தாள்.

படகு காற்றின் வேகத்தில் கடலின் மீது சற்று அலைபாய்ந்தபடி இருந்தது. ஸ்டீபனும் ஜெகாவும் படகின் ஒரு புறத்தில் நின்று கடலில் வீசியிருந்த வலைகளை இழுத்துக் கொண்டு இருந்தனர்.

இவளைப் பார்த்ததும், “எழுந்திருச்சிட்டியா பாப்பா.  கீழ சின்னதா பாத்ரூம்மு இருக்கு போய் மூஞ்சி கழுவிக்கோ. கொஞ்சம் வெயில் வந்ததும் குளிச்சிக்கோ பாப்பா.  இப்ப தண்ணீ சில்லுன்னு இருக்கும்”  என்றான் ஜெகா.

சரி என்றவள் கீழே சென்று முகம் கழுவி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டவள் மாடியேறி வந்தாள்.   மார்கழிப் பனிக்காற்று கடலுக்கு நடுவே நின்றிருந்ததால்,  சற்று ஆவேசமாக எலும்பை   ஊடுருவிச்  சென்றது.

கைகள் இரண்டையும் இணைத்துக் குறுக்கே கட்டிக் கொண்டாள். வாயைத் திறந்தால் சிகரெட் பிடிப்பது போல புகையாய் வந்தது.

ஜெகா ஒரு டம்ளரில் டீ கொண்டு வந்து  அவளிடம் கொடுத்தான். அந்தக் குளிருக்கு சூடான டீ இதமாக இருந்தது. கதிர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியில் காலை நீட்டியபடி சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அழகரும் சுந்தரும்  ஆளுக்கொரு  மூலையில் சுருண்டிருந்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் தூங்கலையாண்ணா?”

“கடலுக்குள்ள படகெடுத்துகிட்டு வந்தா தூக்கமெல்லாம் பார்க்க முடியாதும்மா.  திமிங்கிலமோ சுறாவோ கூட்டமா வந்தா படகை கவுத்தி விட்டுடும். கடல் கொள்ளைக்காரனுங்க கண்ணுல பட்டா உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

எந்த நேரம் காத்தடிக்கும் எந்த நேரம் மழை வரும்னு ஒன்னும் சொல்ல முடியாது.  எப்பவும்  ஜாக்கிரதையாதான் இருக்கனும்.”

“நம்ம நாட்டுக் கடல் எல்லைக்குள்ளதான் இருக்கனும். தெரியாம தாண்டிட்டா நம்ம வலையெல்லாம் அறுத்து விட்டுறுவானுங்க  பாப்பா.  படகை உடைச்சிடுவானுங்க. அதுமட்டுமா?  எத்தனை மீனவர்கள் செத்துப் போயிருக்காங்க?”

“மீனவர்கள் பிழைப்பே உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பிழைப்பும்மா.  கடலுக்குள்ள வந்தவன் திரும்பி கரைக்கு வந்தாதான் உறுதி. நிம்மதியான தூக்கமெல்லாம் புள்ள குட்டிங்க முகத்தைப் பார்த்தாதான் வரும்.”

அவர்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மைதானே என்று தோன்றியது.

“ஆனா நைட்டு இரண்டு மணிவரைக்கும் கதிர் தம்பிதான் முழிச்சிருந்தது.  நாங்க அதுவரைக்கும் தூங்கி இப்பக் கொஞ்சம் முன்னாடிதான் எழுந்தோம்.”

திரும்பிக் கதிரைப் பார்த்தாள்.  அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.  இப்படி உட்கார்ந்து தூங்கினா உடம்பு வலிக்காதா என்று தோன்றியது.

“கதிர் தம்பி தலையெடுத்த பிறகு இப்ப எவ்வளவோ எங்க நிலைமை  மாறி இருக்குமா.”

“…”

“மீன் பிடி தடைக் காலம் ஏப்ரல் 15 ம் தேதியில இருந்து ஜூன் 15 ம் தேதி வரை  அரசாங்கத்துல அறிவிச்சிருக்காங்க.  மீன்கள் இனப்பெருக்கம் செய்யற நேரம் இது.   அந்த நேரத்துல மீன் பிடிக்க கடலுக்கு வரக்கூடாது.

இரண்டு மாசமும் ஒரு வருமானமும் இருக்காது. இந்த ஓய்வு நேரத்துலதான் படகு, வலையெல்லாம் ரிப்பேர் பண்ணி வைக்கனும்.  அதுக்கும் பணம் வேணும்.

புயல் பாதிப்பு ஏதும் இல்லைன்னா தாக்குப்பிடிச்சிடுவோம். ஆனா புயல் வந்தா சுத்தமா சேமிப்பும் எதுவுமே இருக்காதும்மா.  புயல்ல சேதமான குடிசைய   மறுபடி கட்டவே சரியா இருக்கும்.

ஆனா இப்ப ராகவன் ஐயாவும் கதிரும் சேர்ந்து,  எங்க குப்பத்துல கல்லு வீடு கட்டிக்  குடுத்து, குறைஞ்ச பணத்தை வாடகையா வாங்குறாங்க.”

“இலவசமா குடுத்தா  எல்லா பயலுகளுக்கும் இளக்காரமா போகுமின்னு பணம் வாங்குறாங்க  பாப்பா.  ஆனா அந்தப் பணத்தையும் பேங்க்ல எங்க பேர்லயே போட்டு,  மீன் பிடிக்க தடை போடுற இரண்டு மாசமும் எங்களுக்கே திருப்பி குடுத்துடுவாங்க.”

“…”

“எனக்கெல்லாம் சொந்த படகே கிடையாது.   இது ராகவன் ஐயாவுக்கு சொந்தமான படகு.  இந்த மாதிரி அஞ்சு படகு  ஐயாவுக்கு இருக்கு.  குறைஞ்ச வாடகை வாங்கிகிட்டு படகை விட்டிருக்காங்க.”

“இங்க மட்டுமில்ல பரங்கிப்பேட்டை,  சாமியார் பேட்டைன்னு எல்லா இடத்துலயும் ஐயாவோட நல்ல குணத்தால அவருக்கு செல்வாக்கு அதிகம்  பாப்பா. கதிரு அவருக்கு புள்ள மாதிரி.”

“…”

“கதிரு மட்டும் என்ன?  வக்கீலுக்கு படிச்சிருக்கு. வழிவழியா நாங்க இருந்த நிலத்துல வீடு கட்டித்தர ராகவன் ஐயா முயற்சி பண்ணப்ப,  கலெக்டர்  ஆபீசில  எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாங்க?.

கதிருதான் பொதுநல வழக்கு போட்டு வாதாடி எங்களுக்கு பட்டா வாங்கி தந்துச்சி. எங்க பொம்பளைங்களும் உழைச்சி முன்னேறனும்னு சிறு தொழில் கூடங்கள் அமைக்க அதுதான் முயற்சி பண்ணுச்சி.”

“…”

“கதிருக்கு கோபம் வந்தா சிடுசிடுன்னு பேசிப்புடும்.  தப்புன்னா டக்குன்னு கைய நீட்டிடும். ஒருத்தன் கதிர்கிட்ட அடி வாங்குறான்னா அவன் கண்டிப்பா தப்பு செஞ்சிருப்பான்.”

“ஆனா எதையும் மனசுல வச்சிக்காது.  தப்பு செஞ்சவன் உணர்ந்துட்டா,  உடனே அணைச்சிக்கும். கதிர் மாதிரி ஒரு நல்ல குணம் எங்கயும் பார்க்க முடியாது.”

ஸ்டீபனும் ஜெகாவும் மாறி மாறிப் பேசியதில்,  சிவரஞ்சனியின் மனதில் கதிரின் மீது பெரும் மரியாதை வந்திருந்தது.

ராகவனைப் பற்றி அவள் கேள்விப் பட்டிருக்கிறாள்.  அறக்கட்டளைகள்  மூலமாக  அவர் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து வருவது அவளுக்கும் தெரியும். ஆனால் இப்போது இவர்கள் வாயால் கேட்கும் போது பெரும் மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது.

“காலைக்கு என்ன சமைக்கலாம் அண்ணா?  சும்மா உட்கார்ந்து இருக்க போர் அடிக்குது. நான் சமைக்குறேனே.”

“ஐய்ய…  உனக்கேன் கஷ்டம் பாப்பா.  நாங்க நிமிஷத்துல செஞ்சிடுவோம். கதிர் அண்ணன் கறி மீனுன்னா நல்லா சாப்பிடும். ஐஸ் பெட்டிக்குள்ள இட்லி மாவும் கோழிக்கறியும் இருக்கு.  இட்லி சுட்டு கோழிக்குழம்பும் செய்யலாம்னு நினைச்சேன்.  உனக்கு கொஞ்சமா வெங்காயம் பூண்டு போட்டு குழம்பு வச்சிட்டா போதாது?”

“போதும் ண்ணா.  நான் மதியத்துக்கும் அதையே வச்சிப்பேன்.  வெங்காயம் பூண்டுல்லாம் எங்கண்ணா இருக்கு?  நான் உறிச்சுத் தர்றேன்.”

“கீழதான் இருக்கு.  இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் பாப்பா,  அப்புறம் செய்யலாம்.”

“சரி ண்ணா.”

கீழே இறங்கி சென்றவள்,  குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அதே உடைகளை அணிந்து கொண்டு வந்தாள்.  கிழக்கில் சூரியன் கடலில் இருந்து மேலே எழும்பும் காட்சி ரம்மியமாக இருந்தது.

கடலுக்குள் மூழ்கி இருந்த கதிரவன் செஞ்சாந்து நிறத்தில் தகதகவென்று மின்னியபடி மேலே எழும்பியது.  அதன் கிரணங்கள் பட்டு, கடலே பொன்னாடை போர்த்தியது போல காட்சியளித்தது.

படகின் ஓரம் நின்று  காணக் கிடைக்காத  இந்தக் காட்சியை ரசித்தபடி தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் பெண்.   உறங்கிக் கொண்டிருந்த கதிர் விழிப்பு வந்ததும் மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தான்.

சூரிய வெளிச்சம் பின்னனியில் இருக்க, கோட்டோவியம் போல நின்றிருந்த பெண் பார்வையில் பட்டாள். தன் தலை முடியை விரல்களால் கோதிப் பிரித்து விட்டபடி நின்றிருந்தவளின் பின்புறத் தோற்றம் ஏனோ மயக்கத்தைத் தருவதாய்  இருந்தது அவனுக்கு.

‘டேய் கதிரு நீ ரொம்பக் கெட்டுப் போயிட்ட.  ஒரு ஆஞ்சநேயர் பக்தன மாத்தப் பாக்குறா. நீ மாட்டிக்காத. முதல்ல இவளக் கூட்டிட்டுப் போய் அவ வீட்டுல விட்டுடனும். அப்புறம் இவ இருக்கற பக்கமே திரும்பக் கூடாது.’  என்று ஏகத்துக்கும் மனசாட்சி அட்வைஸ் செய்ய,  கஷ்டப்பட்டுக் கண்களைத் திருப்பினான்.

அனைவரும் விழித்து எழும்பிவிட காலை வேலைகள் களைகட்ட ஆரம்பித்தது.  வலையில் சிக்கிய மீன்கள் அனைத்தையும் குளிர் பதனக் கிடங்கில் சேமித்தனர்.   படகும் வேறு திசையில்  நகரத் துவங்கியது.

காலை உணவு  செய்வதற்கும் மதிய உணவு செய்வதற்கும் உதவிகள் செய்து கொண்டு கீழேயே இருந்தாள்.  அவன் முன் வரவேயில்லை அவள்.  அவனைத் தேவையில்லாமல் கோபப் படுத்தக் கூடாது என்று ஒதுங்கியே இருந்தாள்.

அது வேறு அவனுக்கு ஏனென்றே தெரியாமல் எரிச்சலைக் கிளப்பியது.   அவன்தான்  அவளை இருக்கும் இடம் தெரியாமல் இருக்கச்   சொன்னவன்.  ஆனால் அவள் ஒதுங்கி இருப்பதும் காரணம் புரியாத வெறுமையைக் கொடுத்தது.

அழகரும் அவளது குடும்ப நிலையைப் பற்றிக் கூறியதில் அவள் மீது இரக்கம் சுரந்தது.

“ அது ரொம்ப நல்ல பொண்ணு மாப்ள.   அநாவசியமான அலட்டல் இல்லை.  தேவையில்லாத பேச்சு பேசறதில்லை. ரொம்ப மரியாதையான பொண்ணும் கூட.

உடனே வீட்டுக்குப் போகனும்னு, அது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா என்ன பண்ண முடியும் சொல்லு? ஆனா எடுத்துச் சொன்னதும் புரிஞ்சிகிட்டு அமைதியா இருந்துகிச்சு.

இப்பவும் அந்தப் புள்ளைக்கு பயம் இருக்கு,  அவங்க சித்தி வீட்டுக்குள்ள விடலைன்னா என்ன செய்யன்னு?  ஆனா எதையும் வெளிய காட்டிக்காம அமைதியா இருக்கு.   குடும்பமும் கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் போல.”

“ஊருக்குப் போனதும் நம்மளால முடிஞ்ச உதவிய செய்வோம் மாமா.”

“கண்டிப்பாச் செய்யனும் கதிரு.”

இவ்வாறாக அன்று முழுவதும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நகர்ந்தது. மூன்றாம் நாள் ராகவனும் ஊருக்குத் திரும்புவதாகக் கூறியதும்,  இவர்களும் படகைத் திருப்பியிருந்தனர்.

விலை மதிப்பு கூடிய மீன்கள் நிறைய கிடைத்ததில் ஸ்டீபனும் ஜெகாவும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர்.  மீன்கள் நல்ல விலைக்குப் போகும் என்று எண்ணியபடி உற்சாகமாக இருந்தனர். அவளும் அவர்களிடம் அது பற்றிய விவரங்களைக் கேட்டபடி வந்தாள்.

“இப்பல்லாம் இடையில கமிஷன் வாங்குறவனுங்க இல்லாம நாங்களே விக்குறது நல்ல லாபம் கிடைக்குது பாப்பா.”

“மீன் பதப்படுத்தும் தொழில் கூடம் வர ஏற்பாடு நடக்குது.  வந்துட்டா நாமளே நேரடியா ஏற்றுமதி பண்ணலாமாம்.  கதிர்தான் முன்ன நின்னு எல்லா ஏற்பாடும் செய்யுது.”

“இந்த  டிசம்பர், ஜனவரி மாசங்கள்ள  நிறைய மீன்கள் கிடைக்கும் பாப்பா.  மீதமாகுற மீனை கருவாடாதான் மாத்துவோம். இனிமே பதப்படுத்தி விக்கலாம்.”

அவளும் அவர்களிடம் உற்சாகமாகப் பேசியபடி வந்தாள். மூன்று நாட்கள்  பழகினாலும் கள்ளமில்லாத அன்பு வைத்திருந்தவர்களை  இன்றோடு பார்க்க முடியாதே என்றும் தோன்றியது.

அழகர் கதிர் இவர்களையும் மறக்க முடியாது என்று எண்ணிக் கொண்டாள்.  அதே சமயம் வீட்டில் சித்தியிடம் எவ்வளவு மாத்து வாங்கப் போகிறோமோ என்ற பயமும் அடி வயிற்றில் உருண்டது.

அவர்கள் படகு ஏறிய இடத்திற்கு மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவும் அமைச்சரின் வாகனம் வரவும் சரியாக இருந்தது.

இடைப்பட்ட இந்த மூன்று நாட்களுக்குள் டிஎஸ்பியும் இன்ஸ்பெக்டரும் வெவ்வேறு மாவட்டங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டு இருந்தனர்.  கிளம்புவதற்குக்  கூட அவகாசம் இல்லாமல் அவசர அவசரமாக ஓடியிருந்தனர் இருவரும்.

எம்எல்ஏ குமார்  பல்  பிடுங்கிய பாம்பாக அலைந்து கொண்டிருந்தான்.  அவனுக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட பயம் வேறு.   இனிக் கதிர் என்னென்ன ஆட்டம் ஆடப் போகிறானோ என்று.  இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கெத்தாக காட்டிக் கொண்டான்.

ஸ்டீபனிடமும் ஜெகாவிடமும் விடைபெற்றுப் பின் கதிரையும் சிவரஞ்சனியையும் ஏற்றிக் கொண்டு அமைச்சரின் வாகனம் அவர்களது ஊரை நோக்கி விரைந்தது.

தான் அப்படியே வீட்டுக்குப் போய்  விடுவதாகக் கூறிய சிவரஞ்சனியை,  வாசுகியையும் அழைத்துக் கொண்டு வந்து உங்க வீட்டுல சொல்லி விட்டுட்டு வர்றோம் என்று கூறியிருந்தார் ராகவன்.

மூன்று நாட்கள் வீட்டிற்குச் செல்லாத பெண், ஆண்களுடன் சென்று இறங்குவது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்று அவர் கூறியது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது.

சுந்தரும் அழகரும் அங்கே நிறுத்தி வைத்து இருந்த அவர்களது காரில் ஏறி அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

காற்று வீசும். .

 

Avanindri oranuvum – 12

அவனன்றி ஓரணுவும்-12

இந்த பூவுலகிலேயே பேராபத்தான ஒரு ஜந்து உண்டெனில் அது மனிதன்தான். அவன் மூளையை விட ஆபத்தான ஓர் பேரழிவு வேறெதும் இல்லை.

யுரேனியத்தை நியூட்டிரானால் பிளந்தால் பிரிவு ஏற்படும். அதன் மூலமாக ஆட்டம்பாம் தயாராகும் என்று கண்டுபிடித்து தன் இனத்தை தானே கொத்தாக கொத்தாக மரணிக்க செய்த  ஒரே இனம் அவன் மட்டும்தானே! 

 

‘மை டார்லிங் ஷெர்லி,

நீ எனக்கு கடவுள் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம். உன் குழந்தைத்தனமான புன்னகையில்தான் என் வாழ்க்கையின் பாவங்கள் கரைந்து புனிதமடைகிறது.

நீ இல்லாமல் போயிருந்தால் விரக்தியும் வெறுமையும் மட்டுமே எனக்கு மிச்சமாக இருந்திருக்கும். நான் பைத்தியம் பிடித்து இந்நேரம் ஒரு மனநோயாளியாக இருந்திருப்பேன். அதுவே நான் செய்த பாவங்களுக்கு எனக்கு நல்ல தண்டனையாகவும் இருந்திருக்கும்.

ஆனால் தண்டனைக்கு பதிலாக எனக்கு நீ உன் அளப்பரிய அன்பையும் அரவணைப்பையும் தந்திருக்கிறாய். இன்னும் இன்னும் தந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பதில் உபாகாரமாக நான் என்ன செய்வேன்.

உன்னை பத்திரமாக பார்த்து கொள்வதன் மூலமாக என் பாவங்களுக்கு நான் கொஞ்சம் விமோசனம் தேடி கொள்ள முயல்கிறேன். ஆனால் இனி அது முடியாது. உன்னை விட்டு நான் வெகுதொலைவு போகிறேன். என்னுடைய முடிவை நானே தேடி கொள்ள போகிறேன்.’

 

முழுவதுமாக ஆங்கிலத்திலிருந்த அந்த கடிதத்தை படித்து முடிக்கும் போது பிரபஞ்சன் எதிரே நின்றிருந்த ஷெர்லியை அதிர்ச்சி கலந்த பார்வையை பார்த்தான். அவன் கைகளிலிருந்த  இரண்டு தாள்களில் ஒன்று அந்த கடிதம்.

ஷெர்லியிடம் அதனை திருப்பி தந்துவிடலாம் என்று யோசித்த போது ஷெர்லி கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்து, “என் கிரேன்ட் பா அவரோட லாஸ்ட் டேஸ் ல எழுதுனது… இட்ஸ் மோர் ப்ரெசியஸ் ஃபார் மீ… அந்த ஃபர்ஸ்ட் பேஜ்ல டாட்ஸ் மாதிரி இருக்கிறதெல்லாம் அவரோட ப்ளேட் ஷெட்ஸ்” என்றாள்.

அவள் சொன்ன நொடி அவன் கைகளிலிருந்த தாளின் பின்பக்கத்தை பார்த்தான். டிசேஸ்டர் என்ற தலைப்பிற்கு கீழ் கரிய நிறமாக மாறியிருந்த அந்த புள்ளிகள் அவரின் இரத்தத்துளிகள் என்பதை அவனால் யூகித்து கூட பார்க்க முடியவில்லை. லேசாக அவன் கை நடுங்கியது.

வருடங்கள் பல கடந்துவிட்டதால் அது அப்படி கரிய நிறமாக மாறியிருக்க கூடும் என்று தோன்றியது.

பிரபஞ்சன் அதிர்ச்சியோடு நிமிர்ந்து, “எப்படி ஷெர்லி?” என்று கேட்டதும்,

“சூசைட் பண்ணிக்கிட்டாரு” என்றாள் தம் விழிகளின் நீரை துடைத்து கொண்டே!

“ஏன்? எப்படி?”

அவள் தெரியாது என்ற பாவனையோடு தோள்களை குலுக்கிவிட்டு, “அப்போ என் ஏஜ் ஜஸ்ட் டென்… ஈவன் என் டேடுக்கு கூட என்ன காரணம்னு தெரியல… இதுதான் என் கிரேன்ட் பா லாஸ்ட்டா எழுதிட்டிருந்த புக்… பினிஷ் பண்ணாமலே” என்று சொல்லும் போதே அவள் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவாரமல் சிக்கி கொண்டன.

அவளின் வலி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு ஜீரணித்து கொள்ள முடியாத இழப்பு இருக்கவே செய்கிறது. அதுதான் மனித வாழ்வின் நிதர்சனம் போலும்.

நேற்று தனக்காகவும் ஹரிக்காகவும் வருந்திய அதே மனம் இன்று அவள் தாத்தாவின் இழப்பை எண்ணி கலங்கி நிற்கிறது. அவன் மனமும் கூட அவளுக்காக அந்த நொடி கலங்கியது.

“ஐம் சாரி” என்று பிரபஞ்சன் வேதனையோடு சொல்ல, “இட்ஸ் ஓகே” என்று அவள் தன்னைத்தானே தேற்றி கொண்டாள்.

பின் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இதுவரைக்கும் என் கிரேன்ட் பா அதுல என்ன எழுதியிருக்காருன்னு நான் படிச்சதே இல்ல ஹென்சம்

எப்பவும் அவர் யூஸ்வலா இந்த மாதிரி  நிறைய புக்ஸ் எழுதிறதுதான்… ஆனா என்னவோ இந்த பேபர்ஸ் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப அழுகையா வரும்… ஸோ ஐ வோன்ட்… ஆனா பரவாயில்ல… நீங்க படிச்சிட்டு கொடுங்க” என்று அந்த தாள்களை அடுக்கியபடி அதனை ஒரு கோப்பையில் வைத்து அவனிடம் நீட்டினாள்.

“நான் படிச்சிட்டு பத்திரமா உங்ககிட்ட திருப்பி கொடுத்துடுறேன் ஷெர்லி” என்றவன் முகம் மலர அதனை பெற்று கொண்டு,“தேங்க்ஸ்” என்றான்.

“ஹம்ம்” என்றவள் தலையசைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி விட, அவன் யோசனையாக நின்றுவிட்டான். அப்படியெனில் ஷெர்லி அவர் தாத்தா எழுதிய அந்த கடிதத்தை இதுவரை படித்ததேயில்லையா?

வியப்பாக இருந்தது அவனுக்கு!

அதேநேரம் கிறிஸ்டோபர் அதில் எழுதியதன் முழு அர்த்தம் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அதில் ஏதோ உள்ளர்த்தம் பொதிந்திருக்கிறது என்பதாக தோன்றியது.

ஒருவேளை இது அவர்களின் தனிப்பட்ட விஷயமாக இருக்குமோ?! இதை தான் படிப்பது சரியாக இருக்குமோ என்ற கேள்வி எழ, அந்த கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டான். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அதனை படிக்க சொல்லி அவனை உந்திதள்ளியது.

மனம் குழப்பமுற்றது. இப்போதைய தன் மனநிலைக்கு தெளிவு ஏற்பட வேண்டுமெனில் யோகாதான் ஒரே தீர்வு என்று தான் எப்பொழுதும் செய்யும் தன் காலை பயிற்சிகளை செய்ய தொடங்கினான். முதலில் அரைமனதாக தொடங்கினாலும் பின் முழு மனதாக அவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டான்.

அதேசமயம் ஷெர்லி வெளியே ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அவள் கையில் காபி கோப்பை இருந்தது. அதனை குடித்து கொண்டே அவள் தீவிரமாக எதையோ சிந்தித்து கொண்டிருந்தாள். ஹரி அருகிலிருந்தும் அவரிடம் அவள் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

நேற்று அவள் முகத்திலிருந்த தெளிவு இப்போது அவளிடம் இல்லையே என்று யோசித்த ஹரி, “என்னாச்சு பியுட்டி?!” என்று கேட்க,

அவரை நிமிர்ந்து பார்த்தவள், “நத்திங்” என்றாள். அவள் மனதிற்குள் அவள்  தாத்தாவின் நினைவுகள் அலைகழித்து கொண்டிருந்தன.

ஹரிக்கோ அவள் ‘நத்திங்’ என்று சொன்ன பிறகு தோண்டி துருவி கேட்க விருப்பமில்லாததால் அவர் அமைதியாக எழுந்து செல்ல பார்க்க,

“ஹரி” என்று அழைத்து, “சுத்தி காட்டிறேன்னு சொன்னீங்களே… நம்ம எங்கயாச்சும் இன்னைக்கு வெளியே போகலாமா?” என்று கேட்டாள்.

அவள் அப்படி கேட்டதும் மீண்டும் அவரை உற்சாகம் பற்றி கொள்ள, அவள் அங்கே அருகாமையில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கின்றன ஒரு நீண்ட பட்டியலை சொல்லி முடித்தார்.

அவளும் ஆர்வமாக அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் செல்ல சம்மதமாக தலையசைத்தாள். ஹரி அதே உற்சாகத்தோடு சமையலறைக்கு சென்று,

‘பிரபாவையும் கூப்பிடணும்… அவனுக்கு இன்னைக்கு எந்த வேலையும் இருக்க கூடாது’ என்று முணுமுணுத்து கொண்டே அவனுக்காக க்ரீன் டீயை தயாரித்து எடுத்து கொண்டு மேலே அறைக்கு சென்றார்.

பிரபஞ்சன் அப்போது பத்மாசன நிலையில் விழிகள் மூடி தியானத்தில் அமர்ந்திருக்க, அவனை தொந்தரவு செய்துவிடாதவாறு சத்தமில்லாமல் எடுத்து வந்த க்ரீன் டீயை மேஜை மீது வைத்துவிட்டு அங்கேயே நின்றிருந்தார்.

பிரபஞ்சன் சில நிமிடங்கள் கழித்து தம் விழிகளை திறந்தான். இயல்பாக மனம் குழப்பத்திலிருக்கும் போது தம் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஓர் நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவது சற்றே அசாத்தியமான காரியம்தன். ஆனால் பிரபஞ்சனுக்கு அது சாத்தியப்பட்டது.

அந்த சில நிமிடங்கள் ஏனைய அனைத்து கவலைகள் குழப்பங்கள் யாவையும் ஒதுக்கிவிட்டு தன் எண்ணங்களை ஓர் புள்ளிக்குள் சங்கமிக்க செய்து தன் தியானத்தை செய்து முடித்தான். அவன் தெளிவற்ற மனதிற்கு அப்போது அந்த அமைதி தேவையாகவும் இருந்தது.

அதேநேரம் நம் சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை எண்ணி கவலையுறுவது உபயோகமில்லை என்ற ஒருவித விரக்திநிலை அவனை பீடித்து கொண்டதும் உண்மை.

பிரபஞ்சன் எழுந்ததும் மேஜையின் அருகில் நின்றிருந்த ஹரியை பார்க்க விருப்பமில்லாதது போல் முகத்தை திருப்பி கொள்ள,

“சாரி பிரபா” என்று அவனை சமாதானம் செய்யும் விதமாக பேச ஆரம்பித்தார் அவர்.

“எதுக்கு சாரி?” என்று அலட்சியமாக கேட்டுவிட்டு அவர் மேஜை மீது வைத்திருந்த க்ரீன் டீயை எடுத்து நிதானமாக பருகி கொண்டே  இருக்கையில் அமர்ந்து அந்த கோப்பையை கையிலெடுத்து புரட்டி கொண்டிருந்தான்.

“நீ கோபமா இருக்கன்னு எனக்கு தெரியும்” என்று ஹரி சொல்ல,

“நான் கோபப்பட்டா மட்டும் நீங்க குடிக்கிறதை நிறுத்திட போறீங்களா?”

“என்னைக்கோ ஒரு நாள்… அதுகென்னவோ ஓவரா சீன் போடுற” என்றவர் எரிச்சலாக கேட்க அவரை நிமிர்ந்து பார்த்தவன்,

“என்னைக்கோ ஒரு நாள்னு இப்படி லிமிட் இல்லாம குடிப்பீங்களா? அதுவும் கூட ஒரு பொண்ணை வைச்சுக்கிட்டு” என்று சீற்றமாக கேட்டான்.

“டே! இந்த ட்ரிங்க்ஸ் பார்ட்டியே  ஷெர்லியை வெல்கம் பண்ணத்தான்” என்றவர்  சாதாரணமாக சொல்ல, அவரை விழிஇடுங்க  பார்த்தவன்,

“ஹ்ம்ம் ஹ்ம்ம்… பண்ணுங்க பண்ணுங்க… வெல்கம் பார்ட்டி சென்ட் ஆஃப் பார்ட்டின்னு எல்லாம் பண்ணுங்க” என்று சொல்லி தலையிலடித்து கொண்டான்.

“சென்ட் ஆஃப் பார்ட்டி எல்லாம் கிடையாது… அந்த பொண்ணு இங்கேதான் இருப்பா… போக மாட்டா”

அதிர்ச்சியாக எழுந்து நின்ற பிரபஞ்சன், “என்ன விளையாடுறீங்களா? நேத்து ஒரு மாதிரி பேசுறீங்க இன்னைக்கு ஒரு மாதிரி பேசுறீங்க… அந்த பொண்ணு டெம்பரரியா டூரிஸ்ட் விசாலதானே இங்க வந்திருக்கா” என்று கேட்டான்.

“ஏன்? அதை பெர்மனட்டா மாத்த முடியாதா?”

பிரபஞ்சன் அதிர்ந்தான். பதிலின்றி அவரை கூர்மையாக அவன் பார்க்க, “இந்த ஊர்லையே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிட்டா” என்றதும், “என்ன சொன்னீங்க?” என்றவன் கோபமாக கத்த,

“டே! நல்ல பையன்தானே சொன்னேன்… உன்னைன்னு நான் சொல்லவே இல்லையே” என்றவர் எகத்தாளமாக சொல்ல அவனுக்குள் எந்தளவுக்கு கோபம் மூண்டது என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அவர் அவனை மனதில் வைத்துதான் அவ்விதம் பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் இல்லை. ஆனால் அவரிடம் கேட்டால் தலைகீழாக நின்று அப்படி இல்லை என்று சாதித்துவிடுவார்.

மனதில் எழுந்த கோபத்தை கட்டுபடுத்தி கொண்ட பிரபா, “எனக்கு ஏற்கனவே நிறைய டென்ஷன்… இதுல உங்ககிட்ட பேசுனா இன்னும் இன்னும் டென்ஷன்தான் ஏறுது… ப்ளீஸ் நீங்க போங்க” என்றவரிடம் வெளியே செல்ல சொல்லி வாசலை காண்பிக்க,

ஹரி அப்போதும் முறுவலித்து,“அவ்வளவு டென்ஷனா இருந்தா  எங்க கூட வாயேன்… நானும் ஷெர்லியும் வெளியே போறோம்” என்றான்.

“நான் வரல… நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டான்.

“ஏதோ டென்ஷனா இருக்கியேன்னு கூப்பிட்டேன்… வரலன்னா போ” என்று அசட்டையாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற பார்க்க அத்தனை நேரம் கோபமாக பேசி கொண்டிருந்த பிரபஞ்சன்,

“சார்” என்று நிதானமாக அழைத்தான்.

அவர் அவனை திரும்பி பார்க்க, “நீங்களும் ஷெர்லியும் இன்னைக்கு எங்கேயும் வெளியே போக வேண்டாம்” என்றான்.

“நீ வரலன்னா நாங்க போக கூடாதா?” என்று ஹரி கோபமாக,

“நான் அதனால சொல்லல… எனக்கு ஏதோ மனசுக்கு சரியா படல… தப்பா ஏதோ நடக்க போற மாதிரி” என்றவன் மேலே சொல்லாமல் நிறுத்தி கொண்டான். தன் வேதனையும் தவிப்பும் தன்னோடே போகட்டும் என்று அவன் அமைதியாக இருந்துவிட,

ஹரி படபடப்போடு அவனை பார்த்தார். அவன் முகமே ஏதோ சரியில்லை என்பதை அவருக்கு உணர்த்தியது.

“என்ன பிரபா சொல்ற?  என்ன நடக்க போகுது… எதாச்சும்” என்று அவராலும் ஒரு நிலைக்கு மேல் யோசிக்க முடியவில்லை.

“ப்ளீஸ் சார் … இப்ப எதுவும் கேட்காதீங்க… நீங்களும் ஷெர்லியும் இன்னைக்கு எங்கயும் வெளியே போக வேண்டாம்… அவ்வளவுதான்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

ஹரிஹரன் பிரபா சொன்னதை யோசித்து கொண்டே படியிறங்கி சென்று விட்டார். அவன் இந்தளவு தீவிரமாக சொல்கிறான் எனில் அதில் ஏதாவது ஆழமான காரணம் இருக்கும் என்பது அவருக்கு தெரியும்.

பிரபஞ்சனின் சிந்தனை முழுக்க அந்த கோர சம்பவத்தை குறித்துதான். ஆனால் இப்போது அவனுடைய யோசனையெல்லாம் இதுவரை அவனுக்கு இன்ஸ்டிங்டாக தோன்றி எல்லா சம்பவங்களும் அப்படியே பலித்திருக்கின்றன. அப்படியெனில் இதுவும் பலிக்கும். ஆனால் இந்த கனவு மட்டும் முன்பு நடந்த சம்பவங்களை விட முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் தோன்றியது.

இயல்பாக அவனுக்கு வரும்  இன்ஸ்டிங் நடக்கும் நிகழ்வை அப்படியே காட்சிகளாக அவனுக்கு காட்டும். சில நேரங்களில் அது அவன் கண்முன்னே நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவை அவன் பார்க்காத தூரத்திலும் நிகழலாம். ஆனால் இந்த கனவு மட்டும் தன்னுக்குள் தானே அந்த காட்சிகளை பார்ப்பது போல் அவனுக்கு உணர்த்தியிருந்தது. அப்படியெனில் அந்த சம்பவம் நடக்கும் போது, அந்த இடத்தில் தான் இருக்கிறோமோ என்று யோசித்தவன்,

தான் வெளியே சென்றால்தானே அவற்றை பார்க்க நேரிடும். அந்த கனவு பலிக்கும். தான் செல்லாமல் போனால் எப்படி நடக்கும்?

இந்த யோசனை எந்தளவுக்கு வேலை செய்யும் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனால் அந்த கோரமான விபத்தை தடுக்க அவன் மூளைக்குள் உதித்த ஒரு சிறிய லாஜிக்.

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ எனில் தன்னை அந்த விதியே சம்பவம் நடக்கும் இடத்திற்கு இழுத்து போகட்டுமே?! என்று பிரபா தனக்குள்ளாக ஒரு சங்கல்பம் செய்து கொண்டு விதியோடு ஓர் விளையாட்டை தொடங்கியிருந்தான். ஆனால் அவன் யோசித்ததை விட இன்னும் ஆழமாக வேறொரு விஷயம் தன் கனவில் ஒட்டாமல் நின்றதை அவன் கவனிக்க தவறியிருந்தான்.

******

மத்திய விஞ்ஞானம் , தொழில்நுட்ப துறை, இந்திய விண்வெளி துறை, விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி பேரவை ஆகியவை இணைந்து ரூ. 125  கோடி செலவில் புவி விஞ்ஞான அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருந்தது.

அந்த அமைப்பின் மூலமாக ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் நிறுவியது.

ஆழிபேரலைகளை உருவாக்க காரணமான கடலுக்கடியில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கங்களை கண்டறிந்து இந்த ஆய்வு மையம் சுனாமி தாக்கும் அபாயத்தை 30 நிமிடங்களுக்குள் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளிக்கும்.

கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களை ஆராய்பவர்கள், சாலைகளில் சுற்றி திரியும் ஐந்தறிவு பிராணிகள் இப்படியான தகவல் மையங்களின் எச்சரிக்கை இல்லாமலே, எந்த உபாயத்தை கொண்டு தங்களை இதை போன்ற இயற்கை பேரழிவிலிருந்து காத்து கொள்கின்றன என்று ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை?

இன்னும் சொல்ல போனால் மனிதன் தனக்குள் இருக்கும் சக்தியை தேடுவதை  விடுத்து கோடி கணக்கில் செலவு செய்து செயற்கை கோள்களை அனுப்பி விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கின்றான். அதையே நாட்டின் பிரதான கௌரவமாக பார்க்கின்றான்.

ஆனால் அனுப்பிய செயற்கோள்கள் பல தம் சக்தியையும் இயக்கத்தையும் இழந்த பின், விண்வெளிகளில் தேவையற்ற குப்பையாக மிதந்து கொண்டிருக்கிறது. பூமியோடு சேர்த்து ஆராய்ச்சி என்ற பெயரால் வானவெளியையும் குப்பை கிடங்காக மாற்றுகிறான் என்பதை யார் அவனுக்கு சொல்வது.

இவற்றையெல்லாம் விட மனித மூளையின் ஆபார சாதனை ஒன்றிருக்கிறது. பூமியை சுற்றிலும் இயற்கையானது தானாகவே  உருவாக்கி வைத்திருக்கும் காக்கும் படலமான ஓசோனை, துச்சாதனன் திரௌபதி துகிலை உரிப்பது போல் விடாமுயற்சியோடு உரித்து கொண்டிருப்பதுதான். விரைவில் ஒசோன் படலத்தை கிழித்து இந்த மனித இனம் பூமியை கற்பழித்துவிடும். ஆனால் அதற்கு முன்னால் இயற்கை முந்தி கொள்ள பார்க்கிறது.

பரபரப்பே இல்லாமல் இயங்கி கொண்டிருந்த ஹைதராபாத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் இன்னும் சில மணி நேரங்களில் உச்சப்பட்ச பரபரப்பை எட்ட போகிறது. தென்னிந்தியாவை உலுக்க போகும்  ஒரு பயங்கர தகவலை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப போகிறது.

ஓர் மரண காண்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த பரபரப்பான சூழல் தொடங்க போகிறது. ஆனால் இதை குறித்து முன்னமே தன் ஈஎஸ்பி சக்தி மூலமாக அறிந்து கொண்ட பிரபஞ்சன் அப்போது கிட்டத்தட்ட தொண்ணூறு வருடங்கள் முன்பு நடந்த டெக்சாஸ் சூறாவளியை பற்றி படித்து கொண்டிருந்தான்.

நடக்க போகும் பயங்கர நிகழ்விற்கும் முடிந்து போன அந்த பேரழிவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அது அவனுக்கும் தெரியாது. ஆனால் அந்த மோசமான சூறாவளியால் அலைகழிக்கபட்ட ஓர் கர்ப்பவதி குறை பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.

அவர் பெயர்தான் கிறிஸ்டோபர் எட்வர்ஸ்.

‘டிசேஸ்டர்’ – 1

‘நான் பிறந்த அந்த நாளும் நேரமும் அமெரிக்காவின் வராலாற்றின் பதிய பட்ட முக்கிய நாளாகவும் பலராலும் மறக்க முடியாத ஓர் மோசமான நாளாகவும் மாறியிருந்தது.

வானத்திற்கும் பூமிக்கும் இடையில் விஸ்வரூபம் எடுத்து நின்று அந்த சுழற் காற்றின் வீச்சீன் வீரியத்தில்  வடக்கு டெக்சாஸ் நகரமே சின்னாபின்னபானது. உயிர் சேதம் பொருட் சேதம் என்று கணக்கிலடங்கா பேரழிவை சந்தித்த அதேநாளில் அதேநகரத்தில் இந்த பூமியில் ஓர் சிறு புள்ளியாக என் பயணம் தொடங்கியது.

அன்றிலிருந்து எனக்கும்  இந்த பூமிக்கும் இடையில் ஓர் விசித்திரமான பந்தமும் உருவாகியிருந்தது’

 

ESK-7

என் சுவாசம் 7

நடுவானில்  சுட்டெரிக்கும் சூரியன் என்னவோ தன் திறமை முழுவதையும் காட்டிக் கொண்டிருந்தாலும், மார்கழிப் பெண் தன் பனிக் காற்றால் அனைவரையும் குளிர்வித்துக் கொண்டிருந்தாள்.

நீரின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு கத்தி போல அந்த இயந்திரப்  படகு விரைந்து கொண்டிருந்தது. படகின் மேற்பரப்பில் இருந்த நான்கு பேரும் சிவரஞ்சனியைச் சுற்றி நின்று, அவளையேப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

கடல் காற்று வீசியடித்ததில் அனைவரின் உடைகளும் காய்ந்து விட்டாலும்,  காற்றின் குளுமையில் சிலுசிலுவென்று இருந்தது.  ஆனால் கதிர் மட்டும்  உச்சபட்ச  எரிச்சலில் இருந்தான்.

அவனை அந்த அளவு கோபப்படுத்திக் கொண்டு இருந்தாள் பெண். தண்ணீரைத் தெளித்து கை கால்களைத் தேய்த்து விட்டு அவளை மயக்கத்திலிருந்து எழுப்புவதும்,  அவள் இவர்கள் அனைவரையும்  பார்த்துப் பயந்துக் கத்தியபடி மயங்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

“கொழுப்பப் பார்த்தீங்களா மாமா இவளுக்கு? கஷ்டப்பட்டு தண்ணியில குதிச்சு இவளக் காப்பாத்தித் தூக்கிட்டு வந்தா,   நம்மளப் பார்த்துப் பயந்து பயந்து அலர்றா…   அப்படியேத் தூக்கித் திரும்பக் கடல்ல வீசப் போறேன் இவள.”   குதித்துக் கொண்டிருந்தான் கதிர்.

அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனை நெருங்கிய அழகர், “மாப்ள… அந்தப் புள்ள மறுபடியும் மயங்கிருச்சி…  நீ முறைக்கறது அதுக்குத் தெரியாது.”  என்று

பவ்யமாகக் கூறியவரைத் திரும்பி முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல்,

“போங்க… போங்க…   எல்லாரும் .   அந்தப் பொண்ணு நார்மலாதான் இருக்கு.  தானா மயக்கம் தெளிஞ்சு எந்திரிக்கட்டும். யாரும் எழுப்ப வேணாம்.  அப்பதான் அதிர்ச்சி இல்லாம அது கண்ணு முழிக்கும்.”

“சுந்தர், ஜெகா ரெண்டு பேரும் சாப்பாடு எடுத்து வைங்க.  சாப்பிட்டு  அப்புறம் பேசலாம்” என்றார்.

படகின் உள்ளிருந்த அறையினுள் அவளைத் தூக்கிக் கொண்டு கிடத்தியவன், வெளியே வந்து அனைவருடனும் சேர்ந்து உணவினை உண்டான்.

“அந்தப் பொண்ணு கண்ணு முழிச்சாதான், அவ யாரு என்னன்னு கேட்க முடியும்.”

“கடல்ல எப்படி விழுந்திருக்கும்? யாரு பெத்த புள்ளயோ?  நல்லவேளை நம்ம அண்ணன் கண்ணுல பட்டுச்சு”

அழகரும் சுந்தரும் அவளைப் பார்த்தவாறு அமர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருக்க, “பார்த்தா படிக்கற பொண்ணு மாதிரி இருக்கு.   ஏதும் பாடத்துல ஃபெயில் ஆகிட்டு தற்கொலை பண்ணிக்க வந்திருக்குமோ?”  என்றான் ஜெகா.

“இல்ல ஏதாச்சும் காதல் தோல்வியா இருக்குமோ?  இப்பல்லாம் சின்னப் புள்ளைங்க கூட லவ் பண்ணுதுங்களே?”

என்ற சுந்தரை வெட்டவா? குத்தவா? என்பது போல முறைத்த கதிர், “கொஞ்ச நேரம் சும்மா வாய மூடிகிட்டு இருக்கறீங்களா? கண்ணு முழிச்சதும் அவகிட்டயேக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.”

என்று சிடுசிடுத்தவனுள் ஏகப்பட்டக் கடுப்பு.   ஏனோ காதல் தோல்வி என்றெல்லாம் அந்தக் கள்ளமில்லாப் பால் வடியும் முகத்தைப் பார்த்து நினைக்க முடியவில்லை அவனால்.

‘உயிர் இவளைப் போன்றவர்களுக்கு அவ்வளவு ஈசியாகப் போய் விட்டதா?  மிஞ்சிப் போனால் இருபது வயதிருக்குமா   இவளுக்கு?   சாகும் வயதா இது?  என்ன கஷ்டம் இருந்தாலும் எப்படி இந்தப் பெண் இப்படி ஒரு முடிவு எடுக்கலாம்?’   என்று மனதிற்குள் மறுகியவன்,  அவள் எழுந்ததும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கக் காத்திருந்தான்.

ஆனால் அவளது காயங்களும் கஷ்டங்களும் அவனுக்குத் தெரிய வரும் போது,  அவளது கண்ணீருக்கு காரணமானவர்களைப் பந்தாடப் போகிறவனும் அவனே.

 

உணவு உண்டதும் இரண்டு நாற்காலிகளை எடுத்து,  சிவரஞ்சனியின் அசைவுகளைக் கண்காணிக்கும் தூரத்தில் போட்டு,  ஒன்றில் அமர்ந்து ஒன்றில் கால் நீட்டியபடி சாய்ந்து அமர்ந்தான். சிலுசிலுவென்று வீசிய கடற்காற்றில் கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள்,  உடலின் அலுப்போ? மனதின் சோர்வோ?  சிவரஞ்சனி கண் விழிக்கவில்லை. சிறிது மெல்லியதாக முனகுவதும் பின்பு மயக்கத்தில் ஆழ்வதுமாக இருந்தாள்.

பணி முடிந்து குழந்தையைக் காண வீட்டுக்குச் செல்லும்  அலுவலகப் பெண் போலப் பகலவன் மேற்கில் விடுவிடுவென இறங்கிக் கொண்டிருந்தான். வாசலிலே காத்திருந்த பிள்ளைத் தன் தாயைக் கண்டதும் தாவி வந்து மேலே ஏறுமே! அது போல  நிலாப் பெண்ணும் மேலேறிக் கொண்டிருந்தது.

சுற்றுப்புறமும் வேகமாக இருளத் துவங்கி இருந்தது. படகின் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. ஜெகாவும் ஸ்டீபனும் மீன் பிடிக்க  வலைகளைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.  சுந்தர்  அவர்களுக்கு உதவியாக இருந்தான்.

சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீலக்கடல் போர்வை விரித்திருந்தது. கூட்டிற்குத் திரும்பும் ஆரவாரத்தோடு கடல் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. ஏகாந்தமான அந்த சூழலில் இளையராஜாவும் எஸ் ஜானகியும் கரைந்து உருகிக் கொண்டிருந்தனர் அந்தக் கையடக்கமான எம்பி3  ப்ளேயரில்.

 

உயிரோடு…
உறவாடும்
ஒருகோடி…
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக… யாரோ காரணம்..!

அடி ஆத்தாடி… இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

இனிமையான தனது குரலால் உயிரை உருக்கும் ஜானகியும், ஆளுமையான தனது குரலால் மனதை மயக்கும் இளையராஜாவும் சேர்ந்து பாடிய பாடல்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன்னும்,  நீண்ட நெடிய கார் பயணங்களின் போதும் இளையராஜா கட்டாயம் வேண்டும் அவனுக்கு.

கதிரைப் பொருத்தவரை அவனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரங்கள் போதுமானதாக இருப்பது இல்லை.  காலில் பம்பரத்தைச் சுற்றியபடி அலைந்து கொண்டே இருப்பான்.

ராகவனின் கட்சி வேலைகளோ,  அவனது ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமான வேலைகளோ,  அல்லது தற்போது அவன் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மேற்பார்வைப் பணிகளோ ஏதோவொன்று அவனுக்குச் செய்வதற்கு இருந்து கொண்டே இருக்கும்.

அப்படி என்றாவது சிறிது ஓய்வு கிடைத்தாலும் ராகவனின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு,  பிச்சாவரம் பூம்புகார் என்று எங்காவது சென்று அவர்களுடன் பொழுதைக் கழிப்பான்.

அவன் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தன்னைச் சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும் அவனுக்கு. தனிமையை வெறுப்பவன் அவன். பதினைந்து வயது வரை சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும்,  தான் மனம் விட்டுப் பேசக் கூட ஆள் இல்லாதத் தனிமையை அனுபவித்தவன்.

தாயும் தந்தையும் ஒரே வீட்டில் இருந்தாலும், ஆளுக்கொரு புறம் பிரிந்திருக்க அன்பு செலுத்த ஆள் இல்லாமல் வளர்ந்தவன் அவன்.  அவன் தந்தையாவது மௌனமாக அவனது தலையைக்கோதித் தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் தனது விபரம் தெரிந்த நாளிலிருந்து தாயன்பை அனுபவித்து அறியாதவன் இவன். பொதுவாகப் பெண்களைத் தன்னை விட்டுத் தள்ளியே நிறுத்தி வைத்து விடுவான். அவன் முக இறுக்கமும் அவனது பார்வையும் அந்தக் காரியத்தைச் செவ்வனே செய்து விடும்.

அவன் சற்று இறுக்கம் தளர்ந்து கலகலப்பாகப் பேசும் பெண் வாசுகி மட்டுமே.  தனது தாய் ஏன் வாசுகி போல இல்லாது போனார் என்று எத்தனையோ நாள் எண்ணியிருக்கிறான்.

அதற்காகப் பெண்களை மரியாதைக் குறைவாக நடத்துபவனோ,  அல்லது வெறுப்பை உமிழ்பவனோ கிடையாது. அவனை விட்டுச் சற்றுத் தள்ளி நிறுத்திப் பழகுவான்  அவ்வளவுதான்.

எவ்வளவு கோபம் வருகிறதோ ,  அந்த அளவு நல்ல குணமும் உடையவன். தவறு செய்தவனை அடித்து வெளுப்பவனும் அவனே,  அதே நேரத்தில் தவறை உணர்ந்து திருந்துபவனை அரவணைப்பவனும் அவனே. ஆகையால் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு கதிர் கோபப்படுவதின் நியாயம் புரியும்.

இன்றைய ஓய்வு வலுக்கட்டாயமாக அவனுக்கு அளிக்கப்பட்டதில்,  உடலும் மனமும் தளர்ந்து இருந்தது. காலையில் இருந்த எரிச்சலும் கோபமும் சற்றுத் தணிந்து இருந்தது.

தண்ணீரில் விழுந்து மயங்கிய பெண் இன்னும் எழும்பாமல் இருக்கிறாளே…  என்று எண்ணியவன் மூன்று நான்கு முறை எழுந்து சென்று அவளைப் பார்த்து விட்டு வந்தான். சீரான சுவாசத்துடன் உறங்குபவளை  எழுப்பி உணவு ஏதேனும் தருவோமா என்று எண்ணியவன், தனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டான்.

 

‘வேண்டாம்டா கதிரு…   இவ எழுந்திரிச்சா பேயப் பார்த்தது மாதிரி உன்னப் பார்த்துக் கத்துவா’ என்று தனக்குள்ளே முனகியவன் அவளைப் பார்த்தபடி சென்று அமர்ந்து கொண்டான்.

மனதிற்குள் பலவித சிந்தனைகள் ஒடிக் கொண்டிருந்தது கதிருக்கு. தன்னை இன்னேரம் காணாமல் தேடிக்  கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பு ஒருங்கே கோபத்தையும் சிரிப்பையும் வரவழைத்தது அவனுக்கு.

காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரம் முழுக்க கதிரை வலை வீசித் தேடியவர்கள்,  அவன் மாயமாக மறைந்து விட்டதை அறிந்து கொதித்துப் போனார்கள். அவனை எங்கு தேடியும் கிடைக்காததால் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அந்தக் கைதியை சுட்டுப் பிடிக்க உத்தரவு வாங்கிய பிறகு கதிரைக் காணாததால், அந்தக் கைதியை  ஒரு மறைவிடத்தில் மறைத்து வைத்தனர். பிறகு போலீஸ் படையைப் பயன்படுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சோதனை நடத்தப் பட்டது.

எங்கும் கதிரைக் காணாததால் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவர்கள்,  அந்தக் கைதியை விரட்டிப் பிடித்தது போல செட்டப் செய்து அவனை சிறையில் அடைத்தனர்.

அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் யோசிக்கும் முன், அந்த இன்ஸ்பெக்டரையும் டிஎஸ்பியையும் ட்ரான்ஸ்பர்   செய்ய ராகவனால் நடவடிக்கை எடுக்க பட்டிருந்தது.

 

சிறிது நேரத்தில் அறையினுள் படுத்திருந்த   சிவரஞ்சனிக்கு சுயநினைவு திரும்பத் தொடங்கியது. மெல்ல இமைகளைச் சுருக்கி,  கண்களைப் பிரித்தாள். மசமசப்பான வெளிச்சம் நிறைந்திருந்தது.  கை கால்கள் இரண்டும் விண்டு விடுவது போல வலித்தது. மெதுவாக விழிகளைச் சுழற்றிப் படுத்திருந்த இடத்தைப் பார்வையிட்டாள்.

பரிட்சயமில்லாத இடமாக இருந்தது.  தட்டு முட்டு சாமான்கள் போட்டு வைக்கும் அறை போல இருந்ததைப் பார்த்தவள் குழம்பினாள். மெல்ல மெல்ல நடந்தவைகளை  நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள்.

தன்னை அவர்கள் துரத்தியதும், தான்  தண்ணீருக்குள் மூழ்கியதும் நினைவுக்கு வந்தது. “ கடவுளே! என்ன தண்ணிக்குள்ள இருந்து தூக்கிட்டு வந்துட்டானுங்களா?”  என்று வாய்விட்டுப் பதறிப் புலம்பியவள், விருட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அவளுடைய பார்வை முதலில் தன்னுடலை ஆராய்ந்தது. தன் உடை இல்லாமல் தொளதொளவென்று ஏதோ  ஒரு சட்டையை அணிந்திருப்பதை பார்த்ததும் முதலில் அதிர்ந்து போனாலும், பிறகு தனது உடையின் மேல்தான் அணிவிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஆசுவாசமானாள்.

அவள் கண்களைத் திறக்கும் போதே பார்த்து விட்ட கதிர்,  அவளின் அசைவுகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்து அமர்ந்து கொண்டு,  ஒரு கையால் சட்டையைப் பிடித்து இழுத்தபடி தன்னைத் தானே பார்த்துக் கொணடிருப்பவளைப் பார்த்ததும், முதலில் கோபம்தான் வந்தது அவனுக்கு.

அவள் மனதினுள் என்ன நினைக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு. ‘இவளக் காப்பாத்துனதே தப்பு. அப்படியே தண்ணிக்குள்ள போகட்டும்னு விட்டுருக்கனும். நம்பளையே தப்பா நினைப்பாளா இவ’  என்று கோபமாக எண்ணினாலும் ,  இயல்பான பெண்களின் எச்சரிக்கை உணர்வு இது என்பதும் புரிந்தது அவனுக்கு.

சற்றுச் சிரமப்பட்டு எழுந்து நின்றவள்,  மெதுவாக வெளியே வந்தாள்.  படகின் வெளிப்புறம் மட்டுமே ஒற்றை விளக்கு இருந்தது. மெல்லிய வெளிச்சம் இருந்ததால் அதுவும் இன்னும் போடப்படவில்லை.

அந்த மெல்லிய வெளிச்சத்தில் அனைவரது முகத்தையும் பார்க்க முயன்றாள்.  தன்னைத் துரத்தியவர்கள் இவர்கள் இல்லை என்பது புலப்பட்டது. தண்ணீரில் விழுந்து மயங்கிய தன்னை இவர்கள்தான் காப்பாற்றி இருக்கக்கூடும் என்றும் புரிந்தது.

நன்றாக இருட்டத் துவங்கி விட்டதே,  வீட்டிற்கு போக வேண்டுமே என்றும் தோன்றியது.

அதற்குள் இவள் எழுந்து வந்ததைப் பார்த்த அனைவரும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு அவளருகே வந்தனர். அழகர்தான் முதலில்,

“அம்மாடி,  உடம்பு இப்பப் பரவாயில்லயாமா?”

“ம்ம்…”  என்ற முனகலுடன் தலையை ஆட்டியவளிடம்,

“ உன் பேரு என்னம்மா?

“சிவரஞ்சனி”

“எப்படிம்மா நீ  தண்ணிக்குள்ள விழுந்த?”

பதில் பேசாமல் மௌனமாக இருந்தாள். சீக்கிரம் வீட்டிற்கு போய்விட்டால் பரவாயில்லை என்று எண்ணியபடி,  “நான் வீட்டுக்குப் போகனும்”  என்றாள்.

“போகலாம்மா, நாங்களே பத்திரமாக் கொண்டு போய் விடறோம்.  பயப்படாதம்மா… நீ எந்த ஊரு?  எப்படி கடலுக்குள்ள விழுந்த?  முதல்ல இந்த டீயக் குடி.”  என்று அவள் கைகளில் ஏலக்காய் மணத்த டீயை ஊற்றிக் கொடுத்தவர் அவள் அமர ஒரு நாற்காலியைக் கொடுத்தார்.

அவரிடம் நன்றியைக் கூறி அமர்ந்து கொண்டவள், டீயை வாங்கிக் கொண்டாள்.  உலர்ந்து போயிருந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தி விட்டு அந்த டீயைப் பருகினாள். அது அவளுக்குச் சற்றுத் தெம்பைக் கொடுத்தது. அவள் குடித்து முடித்ததும் அதே கேள்வி அவளிடம் மறுபடியும் கேட்கப்பட்டது.

“இந்த ஊருதான் அங்கிள்.”  என்றதும் அவர்களுக்குப் புரிந்தது, அவள் கடலூரைச் சொல்கிறாள் என்பது. தன்னுடைய வீட்டு முகவரியைக் கூறியவள், தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றியைக் கூறி விட்டு,  மீண்டும் ஒருமுறை வீட்டுக்குப் போக வேண்டும் என்றாள்.

“போகலாம்மா…  இன்னும் ஒரு மூனு நாள் கழிச்சு கொண்டு போய் விட்டுடறோம்.  நீ பயப்படாம இரும்மா.”

அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்தவள், “மூனு நாளா…?  நா…நானே போய்க்குவேன் அங்கிள்.  இங்க ஆட்டோ எங்கக் கிடைக்கும்?”  என்றபடி எழுந்தாள்.

அதுவரை அவளை மௌனமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கதிர், “ம்ம்…  தண்ணிக்குள்ள உங்க தாத்தா ஆட்டோ ஓட்டுறாரு.  நீ அதுல ஏறிப் போ.  முதல்ல கண்ண நல்லா முழிச்சுப் பாரு. நடுக்கடல்ல படகுல நின்னுகிட்டு இருக்கற நீ”  என்றான் நக்கலாக.

அவன் அவ்வாறு கூறியதும் பயத்துடன் தன்னைச் சுற்றிப் பார்வையை சுழற்றியவளுக்கு அந்த மெல்லிய நிலா வெளிச்சத்தில் கடல் மின்னியது தெரிந்தது. படகிலும் விளக்கை ஜெகா போட,  கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரிந்த கடல் நீரைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றாள்.

“இ… இது எ… எ… எந்த இ… டம் அ…ங்கிள்? நான் இப்ப வீட்டுக்குப் போக முடியாதா?” அவள் பேசி முடிக்கும் முன்பே அழுகையில் உதடுகள் துடிக்கக், கண்களில் கண்ணீரும் வழிந்தது.

அவள் அழுததைப் பார்த்ததும் சுந்தர், “இங்க பாரு  பாப்பா…  அழுவாத. கடலுக்குள்ள மீன் பிடிக்க வந்திருக்கறோம் நாங்க. இன்னும் மூனு நாளைக்கு கடல்லதான் இருப்போம். கடல் அலையில மாட்டி தத்தளிச்சுகிட்டு இருந்த உன்ன எங்க அண்ணன்தான் காப்பாத்தினாரு. பயப்படாம இரு.  உங்க வீட்டுல ஃபோன் இருக்கா?   இருந்தா இந்தா இந்தப் போனுல போட்டுத் தகவல் சொல்லு.”  என்று அவனது கைபேசியை நீட்டினான்.

அவளது வீட்டில் தொலைபேசி இணைப்பு கிடையாது. மற்ற எவருடைய தொலைபேசி எண்ணும் அவளுக்குத் தெரியவில்லை. கலா கோதை இருவருமே நடுத்தர வர்க்கத்தினர்,  ஆகவே அவர்களிடமும் அலைபேசி இல்லை.

இதுவரை யாரிடமும் ஃபோனில் பேசி பழக்கமில்லாததால்,  யாருடைய எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்படவில்லை.

“எங்க வீட்ல ஃபோன் இல்லண்ணா. எனக்கு யார் நம்பரும் தெரியாது.  நான் வீட்டுக்குப் போகனும் ண்ணா. வீட்ல தேடுவாங்க.” என்றவளுக்கு  மீண்டும் பயத்தில் அழுகைதான் வந்தது.

அவள் அழுததைப் பார்த்த கதிர் சற்று அதட்டலுடன், “ஏய்…  அழுகைய முதல்ல நிப்பாட்டு. வீட்டு நியாபகத்துல ரொம்ப அழுக வருதோ…   கடல்ல போய் விழும் போது எங்க போயிருந்துச்சி வீட்டு நியாபகம்?  உன்னப் பெத்தவங்களப் பத்தி யோசிக்காம சாகப் போனவதான நீ.  எதுக்குப் போய் கடல்ல விழுந்த நீ?”

“மாப்ள…  ஏற்கனவே அது பயத்துல இருக்கு. நீ வேற ஏன் மாப்ள அதட்டுற?”  எகிறியவனை அடக்கியவர்,  பரிவுடன் அவளிடம்,

“அம்மாடி சிவரஞ்சனி, நீ எதுக்குமா அந்த இடத்துக்குப் போன?  அங்க ஆழம் அதிகமா இருக்குமே,  தெரியாம கடல்ல விழுந்துட்டியாம்மா?”

கண்ணீருடன் இல்லை என்பது போலத் தலையசைத்தவளிடம் சுந்தர், “வீட்ல திட்னாங்கன்னு கோவிச்சிகிட்டு கடல்ல குதிச்சியா பாப்பா?”

இல்லை என்பது போல மீண்டும் ஒரு தலையசைப்பு.

“பாடத்துல ஃபெயில் ஆகிட்டு பயத்துல குதிச்சியா?”  “இல்லை” என்றவளிடம்,

“ஏதும் காதல் கீதல்ன்னு யாரும் ஏமாத்திட்டாங்களா பாப்பா?”  பலமாகத் தலையை அசைத்து,

“அய்யோ…  அதெல்லாம் இல்லை அங்கிள்”  என்றவள் தன்னை மூன்று பேர் துரத்தி வந்ததையும்,  அவர்களுக்கு பயந்து கடலுக்குள் பாய்ந்ததையும் கூறினாள்.

இதைக் கேட்டதும் கோபமான கதிர்,

“அறிவிருக்குதா உனக்கு? அந்த நேரத்தில  நீ தனியா அங்க ஏன் போன?”  அவளை வெகுவாகக் கடிந்து கொண்டவன்,  ஜெகாவிடம்…

“டேய்  ஜெகா…  யாரு அவனுங்கன்னு விசாரிக்கச் சொல்லு. அவனுங்கள கல்லக் கட்டிக் கடல்ல இறக்கனும். உங்க ஏரியாப் பசங்களாடா அவனுங்க?”

“தெரியலண்ணா,  விசாரிக்கச் சொல்றேன்.  நம்ம குப்பத்துப் பயலுகளுக்கு இவ்வளவு தைரியம் கிடையாது ண்ணா.  வெளியூர் மெக்கானிக் பயலுக எவனாவதுதான் இருக்கும்.”

“பாப்பா,  தெரிஞ்ச ஆள் யாரையாவது அனுப்பி உங்க வீட்ல தகவல் சொல்லச் சொல்றேன்.  பயமில்லாம இரு பாப்பா.”

சரி என்பது போலத்  தலையசைத்தாலும்,   அவள் மனதினுள் பெரும் சஞ்சலங்கள். ‘ ஐந்து ஆண்களுக்கு மத்தியில் எப்படி இங்கே தங்குவது?  பார்க்க நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்’. ஆனால் யாரையும் நம்ப மறுத்தது மனம்.   மெதுவாக ஜெகாவின் அருகே சென்றவள்,

“ அண்ணா…  என்ன வழியில எங்கயாவது இறக்கி விட முடியாதா?” என்றாள்.

“டேய் ஜெகா… வர்ற வழியில ஒரு பாறைத்திட்டப் பார்த்தோமில்ல,  அங்க போய் இறக்கி விட்டுடு.  உன் பாப்பா அங்க உட்கார்ந்து மீன் பிடிக்கட்டும்.” என்று நக்கலடித்த கதிரைக் கடுப்புடன் பார்த்தவள்,   அமைதியாகப் போய் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். அழகரும்,

“சட்டுனு திரும்பிப் போக முடியாத  சூழ்நிலையில இருக்கோம்மா.  கண்டிப்பா உன்ன பத்திரமா உங்க வீட்டுல ஒப்படைச்சிடுவோம் பயப்படாதமா”

வேறு வழியின்றி தலையை அசைத்தவளுக்கு, சித்தியை நினைத்த மாத்திரத்தில் அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது. ‘இவள் வீட்டிற்கு வராததற்கு என்னென்ன கதைகள் கட்டுகிறாளோ?  இன்னேரம் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பாள்.

கலாவும் கோதையும் பாவம் சித்தியிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடு படுகிறார்களோ?’

அடியோ உதையோ வாங்கினாலும் பரவாயில்லை வீட்டுக்குப் போய்விட்டால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது.  இன்று ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்துவிட்டது.

கலாவும் கோதையும் தன்னைக் காணாமல் தவித்திருப்பார்கள்.  அவர்களை நினைத்ததும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.  முயன்று அழுகையை அடக்கினாள்.

‘அழுகக்கூட முடியவில்லை,   வளர்ந்து கெட்டவன் எதிர்லயே உட்கார்ந்து இருக்கிறான்.  அழுதாத் திட்டுவான்’ மனதிற்குள் கதிரை வறுத்துக் கொண்டிருந்தாள்.

‘இவன யாரு என்னைக் காப்பாத்த சொன்னது.  அப்படியே தண்ணிக்குள்ள விட்டிருந்தா நிம்மதியா போய் சேர்ந்திருப்பேன்.

மூனு நாள் கழிச்சு நான் வீட்டுக்குப் போனா சித்தி என்னைக் கொன்னேபுடும். வீட்டுக்குள்ளயும் சேர்க்காது.’  யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம் அவளுக்கு. அமைதியாகக் கடலை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.

கதிருக்கும் அவளைப் பார்த்து சற்று பாவமாக இருந்ததுதான்.  என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தவன்,  ராகவனின் எண்களைக் கண்டதும் எடுத்துப்  பேசினான்.

“தலைவரே… “

“டேய்… கதிரு…  எந்தப் பிரச்சினையும் இல்லை இல்ல?  தெரியாத நம்பர்ல இருந்து ஃபோன் வந்தா எடுக்காத. நான் ஹாங்காங் புரோகிராம கேன்சல் பண்ணிட்டேன். நாளை மறுநாள் மதியம் சென்னை வந்திடுவேன்.”

“புதுசா வந்திருக்கிற அந்த டிஎஸ்பியையும் இன்ஸ்பெக்டரையும்  வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கவலைப்படாம இரு புரியுதா?”

“சரி தலைவரே.  எனக்கொன்னும் பிரச்சினை இல்லை”  என்றவன்  சிவரஞ்சனியைப் பற்றியும்,  அவளைக் காப்பாற்றியதையும் கூறியவன்,

“அந்தப் பொண்ணு பயந்து அழுகுது தலைவரே. அவங்க வீட்டுலயும் தேடுவாங்க பாவம். அதான் காலையில திரும்பி போகலாமான்னு யோசிக்கறேன்.”

“கடலூர் மாவட்டம் முழுக்க உன்ன சல்லடை போட்டு தேடறானுங்க.  அதெல்லாம் நீ இப்பப் போக வேணாம்.  நான் திரும்பி வர்ற அன்னைக்கு நீயும் வா.  உங்க கூடதான இருக்கு அந்தப் பொண்ணு,  பயப்படாம இருக்க சொல்லு.  நீங்க திரும்பி வந்ததும் நானும் வாசுவும் போய், அந்த பொண்ணு வீட்டுல நிலைமைய எடுத்துச் சொல்லி விட்டுட்டு வர்றோம்.  நீ அந்த பொண்ணுகிட்ட ஃபோன குடு நான் பேசறேன்.”

“சரி தலைவரே”  என்றவன் அவளிடம் சென்று அலைபேசியை நீட்டினான்.

“உன் கிட்ட பேசனுமாம்.  இந்தா… “

“யாரு?”

“சென்ட்ரல் மினிஸ்டர் ராகவன்.   எங்க அண்ணன் மாதிரி.  பேசு… “

அவளுக்கும் மத்திய அமைச்சர் ராகவனைப் பற்றித் தெரிந்து இருந்தது. அவருடைய நல்ல குணங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாள்.  ஆகவே தயக்கமின்றி வாங்கிப் பேசினாள்.

அவளிடம் பயப்படாமல் இருக்கச் சொன்ன ராகவன்,  அவர்கள் உடனடியாகத் திரும்ப முடியாத  கதிரின் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி, உன்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறினர்.

திரும்பி வந்ததும் நானும் என் மனைவியும் சேர்ந்து, உங்க வீட்டுல நிலைமைய எடுத்துச் சொல்லி உன்னை விட்டுட்டு வர்றோம் என்று உறுதியும் கொடுத்தார்.

அவரிடம் “சரி  சார்… சரி சார்… “ என்று அமைதியாகப் பேசியவள், அவனிடம் அலைபேசியை நீட்டியபடியே, “ போலீஸ் தேடுதா உங்கள?  இங்கத் தண்ணிக்குள்ள தலைமறைவா இருக்கீங்களா?”  என்க…

அவனுக்கு அடங்கியிருந்த கோபம் சுறுசுறுவென்று ஏறியது.

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!