arputha79

103 POSTS 0 COMMENTS

KKE–EPI 2

அத்தியாயம் 2

 

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் சென்னை அமைந்துள்ளது. சென்னை நகரின் வெப்ப நிலை சாதாரணமாக கடுமையாகவே இருக்கும்.

 

வந்திருந்த பெண்கள் எல்லோரும் தமிழர்கள் மெய் லிங்கை தவிர. எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் இல்லாதவர்கள். ஒரே நாட்டில் இருந்தாலும், இந்த ட்ரீப்புக்காக மட்டுமே ஒன்றாக இணைந்தவர்கள்.

வேனின் மேல் லக்கேஜ்களை ஏற்றி அனைவரும் உட்கார உதவினான் மங்கி. ஓட்டுனரின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் மெய் லிங்.

“எல்லோரும் செட்டில் ஆகிட்டீங்களா? காலை உணவு சாப்பிட கிளம்பலாமா?” என கேட்டான் ஜம்பு.

மற்றவர்கள் சரி என சொல்ல, மெய் லிங் மட்டும் விழித்தபடி அமர்ந்திருந்தாள். ட்ரைவரின் பின்னால் சீட்டில் அவள் அமர்ந்திருந்ததால் ரியர் வியூ கண்ணாடியின் வழி நோட்டமிட்டவனுக்கு அவளின் பேய் முழி புன்னகையை வரவழைத்தது.

“டேய் மங்கி! சைனா சிட்டுக்கு தமிழ் தெரியுமான்னு விசாரிடா” என ஏவினான் ஜம்பு.

பின்னால் திரும்பிய மங்கி,

“மெய் லிங், யூ அண்டர்ஸ்டேண்ட் தமிழ்?” என கேட்டான்.

“ஒன்லி பியூ வோர்ட்ஸ் லைக் சோறு வேணும், ஆமா, இல்லை, முடாள்(முட்டாள்), பத்தியம் (பைத்தியம்). தட்ஸ் ஆல்”

ஜம்பு தலையைக் குனிந்துக் கொண்டான். அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

‘சோறு வேணும் மட்டும் எல்லா நாட்டுக்கும், இனத்துக்கும் பொருந்தும் போல’ சிரிப்பில் அவன் முதுகு குலுங்கியது.

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி!!!! அண்ணே தமிழ் வராதாம். இனிமே எது சொல்லுறதா இருந்தாலும் தமிழும், இங்கிலீசும் கலந்து சொல்லுங்க” என்றான் மங்கி.

“எனக்கு இங்கிலீசு வந்தா, உன்ன ஏன்டா அவ கிட்ட பேச சொல்லுறேன்! இவன் ஒருத்தன் நம்ம பிரச்சனைப் புரியாம நொய் நொய்ன்னுட்டு. சாப்பட போறோம்னு அந்த சைனா மொட்டு கிட்ட சொல்லு”

அவளிடம் ஆங்கிலத்தில் சாப்பிட போவதாக சொல்லியவன் ஜம்புவிடம்,

“நல்லா ரைமிங்கா தான் பேசறீங்க அண்ணாத்தே! சிட்டு, செட்டு, மொட்டுன்னு! அவளுக்கு மட்டும் புரிஞ்சது சீனத்துலயே கிழி கிழின்னு கிழிச்சிருவா!” என்றான்.

“அவள பார்த்ததுல இருந்து ப்ளோல வருதுடா! பாஷை தெரியாம, என்ன தைரியத்துல இங்க வந்துருக்கா? அதுவும் டெம்பிள் டூர்! வந்தவங்க எல்லாம் வயசானவங்க, இவ மட்டும் தான் சின்ன வயசா இருக்கா! இந்த வயசுல நம்ம சாமி மேல இவளுக்கு என்ன பக்தின்னு தெரியலையே”

“நம்ம கடமை, குடுத்த காசுக்கு பத்திரமா பாத்துகிட்டு சுத்தி காட்ட வேண்டியது. எதுக்கு வந்துருக்காங்கன்னு நமக்கு ஏண்ணா ஆராய்ச்சி? ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குண்ணா. நமக்கு கோவா ட்ரீப்லாம் குடுக்காம எப்ப பாரு கோயில் குளம்னு தள்ளி விடறாங்க. எப்பவும் ஓல்ட் கட்டைங்களையே பார்த்து பார்த்து கண்ணுலாம் கருவடைஞ்சி போச்சு. இன்னிக்குத்தான் ஒரு சேஞ்சா இருக்கு. நீங்க வேணா பாருங்களேன், இந்த ட்ரீப் ஃபன்னா இருக்கப் போகுது” மெய் லிங்கை லேசாகத் திரும்பி பார்த்து சிரித்து வைத்தான் மங்கி. அவளும் கள்ளமில்லாமல் சிரித்தாள்.

“டேய் மங்கி, கொன்னுருவேன்டா உன்னை. பரதேசி! இவங்கல்லாம் நம்ம கஸ்டமர்ஸ். மரியாதையா நடந்துக்கனும். ஜொள்ளிக்கிட்டு இருந்த, டங்குவார அத்துருவேன்” நன்றாக முறைத்தான் ஜம்பு.

“விடுண்ணா, சும்மா சொன்னேன். கோயில் குளத்துக்குப் போறப்போ இப்படிலாம் ஜொள்ள மாட்டேன். டோண்ட் வோரி”

வேனை ஒரு தரமான ஹோட்டலில் நிறுத்தினான் ஜம்பு.

“எல்லாரும் சாப்பிட போகலாம். நாற்பது நிமிஷத்துல சாப்பிட்டுட்டு வந்துறனும். அப்போத்தான் தங்கற இடத்துக்குப் போய் செக் இன் பண்ண சரியா இருக்கும்” ஜம்பு தமிழில் சொல்ல, அதையே ஆங்கிலத்தில் மெய் லிங்கிடம் சொன்னான் மங்கி.

உள்ளே நுழைந்த பெண்கள் இரு மேசைகளில் அமர்ந்தனர். இவர்கள் இருவரும் அவர்கள் கண் பார்வையில் இருக்கும்படி அருகிலேயே உட்கார்ந்தனர்.

மெய் லிங் மட்டும் இவர்கள் இருக்கும் மேசைக்கு வந்து ஜம்புவின் அருகில் அமர்ந்தாள்.

அவள் ஆங்கிலத்தில் அவசரமாகப் பேச, ஜம்பு பேய் முழி முழித்தான். அவளின் ஆங்கிலம் மங்கிக்கு கூட சற்று சவாலாகவே இருந்தது. இருவரின் முகத்தையும் பார்த்த மெய் லிங், பின் நிறுத்தி நிதானமாகப் பேசினாள்.

அவள் பேசிய வார்த்தைகளில், மணி(money) மட்டுமே புரிந்தது ஜம்புவுக்கு. அவள் முகபாவத்தை வைத்தாவது புரிந்துக் கொள்ளலாம் என அவள் முகத்தை கூர்ந்து நோக்கியவனுக்கு மூச்சடைத்தது. மிக அருகில் பார்க்க சைனா பொம்மை மாதிரியே இருந்தாள் அவள்.

‘வெத்தலை ஷேப்ல முகம், குட்டி சப்பை மூக்கு, சின்ன மேல் உதடு, சதைப்பற்றான கீழ் உதடு. ஆனா கண்ணு மட்டும் நம்ம தமிழ் பொண்ணுங்க மாதிரி முட்டையா இருக்கே. சீன படத்துல வர பொண்ணுங்களுக்கு கண்ணு இருக்கா இல்லையான்னு பூத கண்ணாடி வச்சு தேடுற அளவுக்கு சின்னதா இருக்குமே! புருவம் கூட நேர்த்தியா இருக்கே. மாசு மருவு இல்லாத முகத்துல, ஒரே ஒரு குட்டி மச்சம். அதுவும் தாவாங்கட்டையிலே. சைனா பட்டு ரொம்ப அழகா இருந்து தொலைக்கறாளே! எப்படி கட்டிக் காத்து பத்திரமா திருப்பி அனுப்பப் போறேனோ!’ பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டான் ஜம்பு.

“அண்ணே!” சத்தமான அழைப்பில் தன் உணர்வு பெற்றவன், சட்டென அவள் முகத்தில் இருந்துப் பார்வையை விலக்கினான்.

“சொல்லுடா, என்னவாம் இவளுக்கு?”

“சிங்கப்பூர் டாலர் தான் இருக்காம் அவங்க கிட்ட. அவங்க ப்ரேண்ட்லாம் இங்க வந்து மாத்துனா இன்னும் ரேட் கூட கிடைக்கும்னு சொன்னாங்களாம். அதனால இப்ப சாப்பிட காசு இல்லையாம்.”

“பரவாயில்ல சாப்பிட சொல்லு, காசு நான் கட்டிக்கறேன். அப்புறமா காசு மாத்த கூட்டிட்டுப் போறேன்.”

ஜம்பு சொன்னதை ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னவன், சாப்பாடு ஆர்டர் செய்ய சொன்னான் அவளை. மறுபடியும் பெண்கள் மேசைக்குப் போகாமல், ஜம்புவின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள் மெய் லிங்.

சிங்கப்பூரில் இரு முறை நண்பர்களுடன் இந்திய உணவு உண்டிருக்கிறாள். அவர்களே ஆர்டர் செய்துக் கொடுத்ததால், பெயர் தெரியவில்லை. ஏற்கனவே இவளை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்க்கும் இவர்கள் முன்னே சாப்பாடு பற்றி தெரியாது என சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு முதல் பக்க மெனுவில் ஒன்றாம் இடத்தில் இருந்த ஐட்டத்தை ஆர்டர் செய்தாள். உணவு வரவும், விழி விரித்தாள் மெய் லிங்.

வந்த சர்க்கரைப் பொங்கலை ஒரு வாய் வைத்தவள், முகத்தை அஷ்டக் கோணலாக்கினாள். இனிப்பு அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதுவும் காலையிலேயே அறவே ஆகாது. காலை தேநீர் கூட சீனி இல்லாமல் தான். வேறு வழியில்லாமல் கஷ்டப்பட்டு விழுங்கினாள். இரண்டு வாய்க்கு மேல் முடியவில்லை.

“ஐ எம் நாட் ஹங்கரி” என சொல்லியவள் தட்டை நகர்த்தி வைத்து விட்டு வெறும் தண்ணீரை குடித்தாள். கண்ணை கரித்துக் கொண்டு கண்ணீர் வருவது போல இருந்தது அவளுக்கு. தன் அவசரத்தால் தெரியாத, புரியாத ஊரில் வந்து மாட்டிக் கொண்ட உணர்வில் தவித்துப் போனாள் மெய் லிங்.

ஓரக்கண்ணால் அவளையேப் பார்த்திருந்த ஜம்பு, தான் இன்னும் சாப்பிடாத இட்லியை அவள் புறம் தள்ளி வைத்தான்.

“சாப்பிடு” என சொல்லி சைகைக் காட்டினான்.

வேண்டாம் என தலையாட்டினாள் அவள்.

“எனர்ஜி வேணும். ஈட்” தமிழும் அவனுக்கு தெரிந்த ஆங்கிலமும் கலந்துக் கட்டி அடித்து விட்டான் ஜம்பு.

தோசை சாப்பிடிருக்கிறாள் அவள். இட்லி இதுவரை சாப்பிட்டது இல்லை. இரண்டு நாளாக சரியாக சாப்பிடாத வயிறு வேறு பேய் ஆட்டம் போட்டது.

“ஹொவ் டூ ஈட்?” என ஜம்புவைப் பாவமாகப் பார்த்துக் கேட்டாள் மெய் லிங்.

மெய்மறந்து இட்லியை மொக்கிக் கொண்டிருந்த மங்கியின் தட்டை தனதருகில் இழுத்த ஜம்பு,

“வேற ஆர்டர் பண்ணிக்கோடா” என அசால்ட்டாக சொல்லிவிட்டு, எப்படி சாப்பிடுவது என இவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.

அவன் சாம்பாரில் எப்படி இட்லியைக் குளிப்பாட்டி வாயில் வைத்தானோ, அதே போல இவளும் செய்தாள். இட்லியின் சுவை இவளுக்குப் பிடித்துவிட்டது. மடமடவென இரண்டு இட்லியும் காலி ஆனது.

“நைஸ்!” என்றபடி சிரித்தாள் மெய் லிங். அதற்குள் மங்கியின் அடுத்த இட்லி வந்திருந்தது. அதையும் தன்னருகில் இழுத்தவன், மெய் லிங்கிடம் கொடுத்தான்.

“நைஸ்? இன்னும் ஈட்” என சொன்னான். அவளும் மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

“அண்ணே! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். என் பாவம் உங்கள சும்மா விடாது. மனுஷன் இட்லில கை வைக்கறப்பலாம் பொசுக்கு பொசுக்குன்னு தட்டை இழுக்கறீங்க! எதை வேணும்னாலும் விட்டுக் குடுப்பான் இந்த மங்கி, தன் சாப்பாட்டை மட்டும் விட்டுக் குடுக்க மாட்டான்” பொங்கி விட்டான் அவன்.

“மறுபடியும் ஆர்டர் பண்ணிக்கடா. பாவம்டா சீனா லட்டு! வந்தாரை வாழ வைக்கும் நாமதானே, இவள நல்லா பார்த்துக்கனும். நம்ம பண்பாடுடா இது!” சமாளித்தவன் மங்கிக்கு இன்னும் இரண்டு ப்ளேட் ஆர்டர் செய்து கொடுத்தான்.

“மோர்(more) வேணுமா?” என மெய் லிங்கை கேட்கவும் தவறவில்லை ஜம்பு. மீண்டும் அவன் ஒரு பில்டர் காபி அடிக்க, இவள்,

“தே ஓ” என ஆர்டர் செய்தாள்.

பேரர் ஜம்புவைப் பார்த்து,

“என்னங்க சீனாக்கார பொண்ணு ஓ போட சொல்லுது? ஓன்னு ஒரு தண்ணியும் இல்லையே!” மண்டையை சொரிந்தார்.

“அப்படினா என்னடா மங்கி?”

“யாருக்குத் தெரியும்? இவ ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள நம்ம மண்டையில உள்ள முடிலாம் கொட்டிப் போயிரும் போல”

பால், சீனி போடாத தேநீரைத் தான் சிங்கப்பூர் மலாய் பாஷையில் கேட்கிறாள் என கேட்டுத் தெளிவுப் படுத்திக்கொண்டு ஆர்டர் செய்தான் மங்கி.

அவள் இரண்டு வாய் சாப்பிட்டு வைத்த பொங்கலை தன்னருகே நகர்த்திக் கொண்டான் ஜம்பு. அவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க,

“ஃபூட் நோ வேஸ்ட்!“ என சொல்லியவன் ஒரே வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

‘பொங்கல் கூடுதல் இனிப்பா இருக்கே! இவள் வாய் பட்டதுனாலேயா? வேணாம்டா ஜம்பு. லோக்கல் பார்ட்டிகளே உன் முகத்தப் பார்க்கறது இல்ல, இதுல சிங்கப்பூர் மேட் சைனா டால் எல்லாம் உனக்கு ரொம்பவே அதிகம். கண்ட்ரோல் பண்ணிக்கோ!’ தன்னையே திட்டியவன், மங்கியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மெய் லிங்கை திரும்பிப் பார்க்காமல் வேனுக்கு சென்று விட்டான்.

எல்லோரும் வந்து ஏற மறுபடியும் பயணம் ஆரம்பித்தது. பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வர, இவள் ஜன்னலில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். அதிகாலை சென்னைக் காற்று, இவளைத் தாலாட்டி மடி ஏந்தியது. சில நாட்களாக வராமல் போக்குக் காட்டிய உறக்கம், இன்று ஆசையாக தழுவி கொள்ள ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்தவாறே உறங்கினாள் அவள். மேடு பள்ளம் தூக்கிப் போடும் போது மண்டை ஜன்னலில் முட்ட, கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து தலையைத் தேய்த்துக் கொள்ளுபவள், மீண்டும் கண் சொக்க ஜன்னலில் போய் முட்டிக் கொண்டாள். அதைக் கவனித்த ஜம்பு பார்த்து பதமாக வேனை ஓட்டினான்.

இவர்களுக்கான தங்கும் இடம் வந்ததும், வேனைப் பார்க்கிங்கில் போட்டான் ஜம்பு. பணம் மாற்ற வேண்டியவர்களை அருகே இருந்த எக்ஸ்சேஞ்க்கு அழைத்து சென்றவன், அவர்களுக்கு உதவினான். அதற்குள் லக்கேஜை எல்லாம் இறக்கி இருந்தான் மங்கி. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் செக் இன் சீக்கிரமாக முடிந்தது.

எல்லோருக்கும் தனி தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் சின்ன குழு, அதோடு ஒருத்தரை ஒருத்தர் அறியாதவர்கள். அதனால் தான் அவர்களின் விருப்பப்படி இந்த ஏற்பாடு.

“எல்லோரும் குளிச்சு ரெப்ரெஷ் ஆகிட்டு சரியா பத்து மணிக்கு லோபிக்கு வந்திருங்க. லேட் பண்ணாதீங்க. அப்புறம் நம்ம ஸ்கேடுல் படி எல்லா இடத்துக்கும் போக முடியாம போயிரும்.” என்றவன் மங்கியைப் பார்த்தான்.

மெய் லிங்கிற்கு விளக்கி சொன்னான் அவன். தலையை சரி என ஆட்டிக் கொண்டவள், தன் பேக்கை தானே எடுத்துக் கொண்டாள். ரொம்ப சிறிய பேக்.

‘துணிமணி எடுத்துட்டு வந்துருக்காளா இல்லையா? போட்டதையே திருப்பி திருப்பிப் போட்டுக்குவாளோ? துவைச்சுப் போடக் கூட நேரம் இருக்காதே, நம்ம டைட் ஸ்கேடுல்ல’ ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான் ஜம்பு. எல்லோரும் ரூமுக்குப் போக, இவள் மட்டும் தயங்கி தயங்கி இவன் முகம் பார்த்தாள்.

இனிமேல் அவளிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்து வைத்திருந்தான் ஜம்பு. தேவையிலாமல் கண்டதையும் மனதில் உளப்பிக் கொள்ள விரும்பவில்லை அவன். ஆனாலும் அவளின் பாவ முகம் இவனை அசைய விடவில்லை.

“டேய், மங்கி! என்னன்னு கேளுடா!” என அவனை ஏவினான்.

அவளிடம் பேசிவிட்டு ஜம்புவிடம் வந்தவன்,

“ண்ணா! அவ கிட்ட ஜீன்ஸ் ஷேர்ட் தான் இருக்காம். இங்க வாங்குனா விலை குறைவுன்னு சொன்னாங்களாம் அவ ப்ரேண்ட்ஸ். அதனால ஒன்னும் வாங்கலையாம் அங்க. ஷோப்பிங் கூட்டிட்டுப் போக முடியுமான்னு கேக்கறாண்ணா” என சொன்னான்.

“இம்சைடா இவ!” முனகினான் ஜம்பு.

“கஷ்டமா இருந்தா விடுண்ணா! நான் கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்.”

“டேய், அடங்க மாட்டியாடா? சாவடி அடிச்சிருவேன் படவா! எப்ப பாரு அவள பார்த்து ஜொள்ளிக்கிட்டு” கடுப்பாக கத்தினான்.

‘நீ பண்ணுறது மட்டும் என்னவாம்?’ என அவன் மனசாட்சி காறி துப்பியது. பதட்டமாக முகத்தைத் துடைத்துக் கொண்டவன்,

“ரூம்ல போய் முகத்த கழுவிட்டு பதினைஞ்சு நிமிசத்துல வர சொல்லு. பத்து மணிக்குள்ள ஷோப்பிங் முடிச்சுட்டு திரும்பிறலாம். கடை ஒன்னும் இப்ப தொறந்துருக்காது. அவசரத்துக்கு நம்ம மாரிய கடை தொறக்க சொல்லுறேன்” என்றான்.

மாரி இவர்கள் நண்பன் தான். சொந்தமாக துணிக்கடை வைத்திருந்தான். சின்னக் கடைதான், பெரிதாக டிசைன் எல்லாம் இருக்காது. ஆனால் எல்லா வகை ரெடிமேட் ஆடைகளும் இருக்கும்.

இவன் போய் சொன்னதும், அவளின் முகம் பூவாய் மலர்ந்தது. ஜம்புவின் அருகில் வந்தவள்,

“தேங்க் யூ சோ மச். யுவர் நேம் ப்ளிஸ்?” என கேட்டாள்.

ஏற்கனவே தன்னை எல்லோரிடமும் அறிமுகப் படுத்தி இருந்தான். ஆனால் இவள் மீண்டும் பெயரைக் கேட்கவும், மனதில் குட்டி எரிச்சல் அவனுக்கு.

‘என் பேரு கூட ஞாபகம் வச்சிக்க முடியலையா உனக்கு. போடி போ’ என முறுக்கிக் கொண்டான்.

“ஜம்புலிங்கம்”

“ஜம்ப்லிகம்! நைஸ் டூ மீட் யூ” மீண்டும் இரண்டாவது முறையாக கைக்குலுக்கினாள் மெய் லிங்.

“அண்ணே ஜம்ப்லிகம்மாம்” கிண்டலாக சிரித்தான் மங்கி.

மங்கி சிரிப்பதைப் பார்த்தவள் தப்பாக சொல்லிவிட்டோமோ என சங்கடமடைந்தாள்.

“சாரி, ஐ வில் கால் யூ ஜம்ப் தென்!” ஜம்ப் தான் தனக்கு வாயில் நுழைகிறது என சொல்லியவள், அவன் கையில் இரு நூறு ரூபாயைத் திணித்தாள்.

“வொய்?” என கேட்டான் நம் ஜம்பு.

“ப்ரேக்பஸ்ட் மணீ”

“ஆமா நீ சாப்பிட்ட மூன்றை இட்லிக்கு 200 ரூபாயா? வெளங்கிரும்.” முனகினான்.

“பரவாயில்ல, வேணா!” என சொல்லியபடியே வேண்டாம் என கை ஆட்டியவன், மறுபடியும் அவள் கையில் ரூபாயைத் திணித்துவிட்டு வேனுக்கு சென்றுவிட்டான்.

தோளைக் குலுக்கி விட்டு தன் ரூமை நோக்கி நடையைக் கட்டினாள் மெய் லிங்.

KKE–EPI 1

அத்தியாயம் 1

 

மாதரசன் பட்டினம்தான் மதராஸ் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின் அதுவே 1996ல் சென்னை என பெயர் மாற்றம் கண்டது.

 

“சீக்கிரம்மா! மனுஷன் அவசரம் புரியாம ஆடி அசைஞ்சிகிட்டு வரீங்க!”

சமையல் அறையில் இருந்து காபி டம்ளருடன் வந்துக் கொண்டிருந்த தன் தாய் பொன்னம்மாவைப் பார்த்துத் தான் கத்திக் கொண்டிருந்தான் ஜம்புலிங்கம்.

“எருமைகடா மாதிரி வளந்து நிக்கற, சொந்தமா ஒரு காபி போட்டுக் குடிக்கத் துப்பில்ல. எல்லாத்துக்கும் நான் வேணும். பேய் கூட குப்புற படுத்து தூங்கற நேரத்துல என்னை எழுப்பி காபி வேணும்னு அழிச்சாட்டியம்! உங்கப்பன் கூட இப்படி என்னை எழுப்பனது இல்லடா, கிரகம் புடிச்சவனே!” திட்டிக் கொண்டே காபியை நீட்டினார் பொன்னு.

“உன் கையால காபி தண்ணி குடிக்காம வெளிய போனா, போற காரியம் வெளங்காது பொன்னு. என் செல்ல கண்ணு!” தன் தாயைக் கொஞ்சியபடியே காபியை ரசித்துக் குடித்தான் ஜம்பு.

“இன்னிக்கு எந்த ஊருல இருந்துடா வராங்க?”

“சிங்கப்பூருமா! ப்ளைட் விடிகாலை அஞ்சு மணிக்கு இறங்கிரும். போற வழியில மங்கிய ஏத்திக்கனும். போன் போட்டா இன்னும் தூங்கிட்டு இருக்கான் மூதேவி!”

மங்கி எனும் மகேஷ்வரன் இவனுக்கு எடுபிடி. காலேஜ் போய் கொண்டே லீவ் நாட்களில் ஜம்புவுக்கு உதவியாக இருப்பான். வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் ஜிகிரி தோஸ்த்.

“அந்த சங்கி மங்கிய விட்டொழிச்சாதான்டா நீ உருப்புடுவ! ஏழு கழுதை வயசாச்சு உனக்கு, இன்னும் காலேஜு பையன் கூட சகவாசம்” முப்பத்திரண்டு வயதைத் தொடப்போகும் மகனை வறுத்தெடுத்தார் பொன்னு.

எருமைகடாவில் இருந்து கழுதைக்கு ப்ரோமேஷன் கிடைத்ததை எண்ணி சிரித்துக் கொண்டே,

“பொலம்பறத உட்டுட்டு நெத்தியில இட்டு விடும்மா! கிளம்பறேன்” என்றான் ஜம்பு.

பூஜை அறையில் நுழைந்து, அங்கிருந்த தெய்வங்களைக் கையெடுத்து கும்பிட்ட பொன்னு, குங்குமத்தை கொண்டு வந்து மகனுக்கு வீர திலகம் இட்டார். எப்பொழுது ட்ரீப் அடிக்கப் போனாலும் அம்மாவின் ஆசீர்வாதம் அவனுக்கு முக்கியம். அவரின் ஆசியால் மட்டுமே போன காரியம் நல்லபடி முடிகிறதென நம்பிக்கை அவனுக்கு. வெளியே முரடாக காட்டிக் கொண்டாலும் தாயின் மேல் உயிரையே வைத்திருந்தான் ஜம்பு.

“நல்லபடி போய்ட்டு வாடா என் சிங்கக்குட்டி!” வாழ்த்தியவர்,

“ஹ்ம்ம் பொண்டாட்டி கையால திலகம் வாங்கிக்கற வயசுல இன்னும் இந்த ஆத்தாவ வாட்டி எடுக்கற” கடைசி வாக்கியத்தை மெல்ல முனகிக் கொண்டார்.

சத்தமாக சொன்னால்தான் ராவில் மூச்சு முட்டக் குடித்துவிட்டு வந்து அலப்பறைப் பண்ணுவானே! அத்தோடு நிறுத்தாமல், வாந்தி எடுத்து வீட்டை நாறடிப்பது பத்தாமல், தன் தகப்பனையும் சேர்த்து நாறடிப்பான். அது என்னமோ அப்பனுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம்.

“நான் வரேன்மா! இந்த தடவை திரும்பி வர ரெண்டு வாரமாகும். உன் புருஷன் கிட்ட சொல்லிரு. கேட்கவே அவருக்கு குளுகுளுன்னு இருக்கும். நீயும் என் தொல்லை இல்லாம அக்கடான்னு கட்டைய சாய்ச்சுக்க” சொல்லியபடியே வேனில் ஏறி வெளியேறினான் ஜம்புலிங்கம்.

மகன் ஓட்டி சென்ற வேன் கண்ணில் இருந்து மறையும் வரை வாசலிலே நின்றிருந்தார் பொன்னு.

“என்ன பணிவிடைலாம் செஞ்சு, வீர திலகமிட்டு மகன போருக்கு அனுப்பி வச்சிட்டியா?” கிண்டலாகக் கேட்டபடி வந்தார் ஆதிலிங்கம்.

கடுப்புடன் திரும்பிய பொன்னு கணவனைப் பார்த்து முறைத்தார்.

“ஏன்டி முறைச்சுப் பார்க்கற? அந்தக் காலத்துலயே முறைச்சிப் பார்த்து என்னை வளைச்சிப் போட்டது பத்தலயாடி என் முறைப்பொண்ணே! முறைத்து முறைத்து என்னை சிறையிலிட்டாய்” என பாட்டைப் மாற்றி பாடி வம்பிழுத்தார் தன் ஆசை மனைவியை.

“ஹ்க்கும்! இவரு பெரிய மன்மத ராசா! இவர முறைச்சி மயக்கிப்புட்டாங்க. உங்க ரோமாஞ்சனத்த கொஞ்சம் மூட்டைக் கட்டி வைங்க. பையனுக்கு கல்யாணத்துக்குப் பாருங்கன்னு நான் காட்டுக் கத்தலா கத்தறேன், அது மட்டும் காதுல விழுகாது! ஆனா கேப் கிடைச்சா பொண்டாட்டிய கொஞ்ச கிளம்பிருவாரு” பொறுமியவர் கூடத்தில் இருந்த நாற்காலியில் போய் பொத்தென அமர்ந்துக் கொண்டார்.

“எனக்கும் மட்டும் உசுரு போகற வரைக்கும் நீ கழனி தண்ணி மாதிரி கலக்கிக் குடுக்கற காபி குடிச்சே வாழனும்னு ஆசையா என்ன! மருமக வந்து காபி போட்டுக் குடுக்கனும், பேரப்புள்ளைங்க மூஞ்சில மூச்சா போகனும் இப்படிலாம் ஆசை நெஞ்சு முழுக்க முட்டிக்கிட்டு நிக்குதுடி பொன்னும்மா! உன் மகன் புடி குடுக்க மாட்டறானே!”

“அவன் அப்படி பேசவே நீங்கதான் காரணம். நல்லா இருந்த புள்ளைய அடிச்சு வச்சு இப்படி சாமியார் கணக்கா சுத்த விட்டுட்டீங்க”

“தறுதலையா சைட்டடிச்சுட்டு, சரக்கடிச்சு சுத்திக்கிட்டு இருந்தவன, லேசா ரெண்டு தட்டு தட்டிபுட்டேன். எந்த அப்பந்தான் மகன் இப்படி கெட்டழிஞ்சா சும்மா பார்த்துட்டு நிப்பான்? அடிச்சதையே இன்னும் புடிச்சுட்டு தொங்கிட்டு இருந்தா நான் என்னடி செய்யட்டும்?”

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன கவலை! சண்டை போட்டுகிட்டு ஆளுக்கு ஒரு மூலைய பார்த்துட்டு நிப்பீங்க! ஒத்தைப் பொம்பளயா நான் நடுவுல கிடந்து அல்லாடுறேன். ஒரு சீரியல் பார்த்து, அதைப் பத்தி பேசி சிரிக்க மக இருக்கா, நாங்களும் அல்வா சாப்புடுவோம்னு வம்பிழுக்க மருமக இருக்கா? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்” புலம்பினார் பொன்னு.

“மருமக வரதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாதுடி, புரிஞ்சுக்க! அதுக்கு உன் மகன் கூட தான் நீ சண்டைப்பிடிக்கனும். மக வேணும்னா இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல, ரூமுக்கு வா ரெடி பண்ணிரலாம்” சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார்.

“புள்ள இல்லாத வீட்டுல கிழட்டுக் கிழவன் துள்ளிக் குதிச்சானாம்! மகனுக்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு பேரப் புள்ளைங்க துள்ளி விளையாடறத பார்க்க ஆசைப்பட்டா, அவனுக்கு தங்கச்சி பாப்பா கொண்டு வர ப்ளான் போடறீங்க! வகுந்துருவேன் வகுந்து!” முதுகில் புரண்ட முடியை கொண்டையாக அள்ளி முடித்தவர், தீப்பார்வையை கணவரிடம் செலுத்தினார்.

அதற்கு மேல் பேச வாய் வருமா அவருக்கு. மெல்ல எழுந்து சமையல் அறையை நோக்கி நடந்துக் கொண்டே,

“நீ போய் கொஞ்ச நேரம் படும்மா. விடிஞ்சும் விடியாம எழும்பவும்தான் சாதாரண விஷயத்துக்கெல்லாம் கோபம் வருது. நான் உனக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார்.

“சீனி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்” என்ற பொன்னு மெல்ல நடந்து படுக்கை அறையில் புகுந்துக் கொண்டார். அப்பா மகனுக்குள் எதுவும் சரி இல்லாவிட்டாலும் இருவருக்குமே பொன்னுவிடம் மிகுந்த பாசம் இருந்தது. அவருக்காகவே ஒருவர் முகத்தை ஒருவர் சகித்துக் கொண்டு ஒரே கூரையின் கீழ் இருந்தனர்.

மகேஷ்வரனின் வீட்டை அடைந்த ஜம்பு, ஹாரனைத் தெறிக்கவிட்டான். மங்கியின் தங்கை வெளியே வந்து,

“என்னண்ணா ஹாரனை போட்டு அடிக்கிறீங்க? நாங்கலாம் தூங்கறது இல்லையா?” என கத்தினாள்.

“பாப்பு, மார்கழி மாசத்துல வயசு புள்ளையா சீக்கிரம் எழுந்து கோலம் போடனும்மா! நீ என்னடான்னா தலைவிரிக்கோலமா நிக்கற! அப்புறம் எப்படி மகாலெட்சுமி வருவா? போ போய் உங்கண்ணன எழுப்பி சீக்கிரம் வர சொல்லு.”

“இனிமே மகாலெட்சுமி எங்க வருவா? அதான் நீங்க வந்துட்டீங்களே!”

“அடிங்க! இறங்கி வந்தேன் அடிய கிளப்பிருவேன்” அவன் சத்தத்தில் உள்ளே ஓடிவிட்டாள் அவள்.

பத்து நிமிடத்தில் அடித்துப் பிடித்து கையில் பேக்குடன் ஓடி வந்தான் மங்கி.

“சாரிண்ணா, தூங்கிட்டேன்!” அசடு வழிந்தவனை,

“குளிச்சியா இல்லையாடா?” என கேட்டான் ஜம்பு.

“இல்லண்ணா! பல்லு மட்டும் விளக்கனேன்”

“கருமம் புடிச்சவனே! நாம போறது டெம்பிள் டூர்டா. குளிக்காம கொள்ளாம வந்தா பாவம்”

“அதெல்லாம் தலைல மூனு சொட்டு தண்ணி தெளிச்சிகிட்டா தோஷம் இல்ல. நீங்க என்னை மொறைக்காம ரோட்டப் பார்த்து ஓட்டுங்கண்ணா. நான் கொஞ்ச நேரம் கண்ண மூடறேன்”

“உன்னை போய் உதவிக்கு வச்சிருக்கேன் பாரு, என் புத்திய..”

“விடுண்ணா. நைட்டு முழிக்கறது, பகல் வரைக்கும் தூங்கறதெல்லாம் வயசு பசங்க லைப்ல ஜகஜம்ண்ணா” என்றவாறே குறட்டை விட ஆரம்பித்துவிட்டான் மங்கி.

சத்தமாக கடிந்துக் கொண்டாலும் மங்கியின் மேல் நெஞ்சு முட்ட பாசம் வைத்திருந்தான் ஜம்பு. அண்ணா அண்ணா என சுற்றும் மங்கி இவனுக்கு நண்பனுக்கும் மேல். அவனும் பாசம் காட்டுவதில் சளைத்தவன் அல்ல.

சென்னை மீனாம்பாக்கம் ஏர்போர்ட்டை அடைந்த போது காலை மணி நான்கு ஐம்பது ஆகி இருந்தது.

“மங்கி, சீக்கிரம் நேம் போர்டையும், டேஷ்போர்டுல இருக்கற பைலையும் எடுத்துட்டு வாடா. நான் போய் ப்ளைட் வந்துருச்சான்னு பார்க்கறேன்” என்றவாறே உள்ளே ஓடினான் ஜம்பு.

லிங்கம் டூர் அண்ட் ட்ராவல்ஸ் ஜம்பு பிறந்த போது அவன் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்டது. அவன் வளர வளர வாடிக்கையாளர்களும் வளர்ந்து இப்போது ஓரளவு முண்ணனியில் நிற்கிறது. அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் சண்டை வரும் வரை இளவரசனாய் சுற்றி திரிந்தவன் தான் ஜம்பு. காலேஜிக்கு ஒழுங்காக போகாமல், நண்பர்களுடன் தம், சைட், சரக்கு என பொழுதை குஜாலாக ஓட்டியவன். பொன்னுவின் கெஞ்சல் கொஞ்சலும் எடுபடவில்லை, ஆதிலிங்கத்தின் காட்டுக் கத்தலும் அவனை மாற்றவில்லை.

பழைய படங்களில் காட்டுவது போல கடைசியில் சண்டை முற்றி மகனை வீட்டை விட்டு துரத்திவிட்டார் ஆதிலிங்கம். அப்பாவை எதிர்த்துக் கொண்டு போயா ஆதி, பாசம் இல்லாத கபோதி என சிலிர்த்துக் கொண்டு ஒன்றும் இல்லாமல் வெளியேறினான் ஜம்பு. இருவருக்கும் நடுவில் கண்ணீர் விட்டவர் பொன்னுதான்.  மனைவியின் பிடுங்கலில் எப்படியும் மறுநாளே அவனை வீட்டில் சேர்த்திருப்பார்தான். ஆனால் அவ்விரவே தானாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஜம்பு.

யாரிடமும் பேசவில்லை, தன் அறையில் போய் அடைந்துக் கொண்டான். இன்று வரை அன்று என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. வாலை சுருட்டிக் கொண்டு அப்பாவின் கீழேயே வேலைக்கு அமர்ந்தான். ஆபிசில் இருக்க சொல்லியதற்கு மறுத்து விட்டு, வேன் ட்ரைவராகவும் டூர் கைடாகவும் மாறி புது வாழ்க்கையை ஆரம்பித்தான் ஜம்பு. அப்பாவிடம் அளந்துப் பேசுபவன், அம்மாவிடம் மட்டும் செல்லம் கொஞ்சிக் கொள்வான். அவன் வாழ்க்கையே வேன், டூர், மங்கி என சுருங்கிப் போனது.

ஏர்போர்ட் உள்ளே சென்றவன், சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் தரை இறங்கி விட்டதா என விசாரித்தான். அரை மணி நேரம் தாமதம் ஆகும் என அறிந்துக் கொண்டவன், ஆசுவாசமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அதற்குள் மங்கியும் அவன் அருகில் வந்து அமர்ந்திருந்தான்.

“அண்ணா, எத்தனை பேர் வராங்க இந்த தடவை?”

“எட்டு பேர் வராங்கன்னு ரிசப்ஷன் பொண்ணு சொன்னுச்சு. கூட்டம் அதிகம்னா பஸ் விட்டுருப்பாங்க. ஆள் ரொம்ப இல்லைன்னு நம்ம கிட்ட குடுத்துட்டாங்கடா. பெயர் லிஸ்ட் கூட நான் பார்க்கல. அவங்களாம் முதல்ல வரட்டும் அப்புறம் செக் பண்ணலாம்.”

நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான் ஜம்பு. சில நிமிடங்களில் அவன் மூக்கின் முன் காபியின் வாசனை. புன்னகையுடன் கண்ணைத் திறந்தான் அவன்.

“இதுக்குத்தான்டா தண்ட சோம்பேறியா இருந்தாலும் உன்னை எனக்கு உதவியா வச்சிருக்கேன்!” என காபியைக் கையில் வாங்கிக் கொண்டான் ஜம்பு.

ஜம்பு ஒரு காபி பிரியன். விடாமல் சிகரேட் அடிப்பவர்களை செயின் ஸ்மோக்கர் என சொல்வது போல, இவனை செயின் ட்ரிங்கர் என சொல்லலாம். கணக்கிலடங்காமல் காபியை உள்ளே தள்ளிக் கொண்டே இருப்பான். உடம்பில் ரத்தத்துக்கு பதிலாக காபி தான் ஓடுகிறது என பொன்னு கூட அவனை திட்டிக் கொண்டே இருப்பார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ப்ளைட் வந்த அறிவிப்பு வர இருவரும் பரபரப்பானார்கள். சிங்கப்பூரில் உள்ள ஒரு சீன டிராவல்ஸ் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அங்கிருந்து வரும் சுற்றுப்பயணிகளை இங்கே லிங்கம் ட்ராவல்ஸ்க்கு கைமாற்றி விடுவார்கள். இவர்கள் வந்த பயணிகளை பத்திரமாக பார்த்து, சுற்றிக் காட்டி மீண்டும் விமானம் ஏற்றி சிங்கப்பூருக்கு அனுப்பி விடுவார்கள். பணம் பயணிகள் இறங்கும் போது பாதியும், கிளம்பும் போது மீதியும் கணக்கில் கட்டி விடுவார்கள் சிங்கப்பூர் நிறுவனத்தினர். இது போல லிங்கம் டூர் அண்ட் டிராவல்ஸ்க்கு பல நாட்டு வாடிக்கையாளர்கள் இருந்தனர். உள்ளூரிலே உளன்று கொண்டு இருந்த நிறுவனத்தை வெளிநாட்டு வாடிக்கைப் பிடிக்கும் அளவு வளர்த்து விட்டது ஜம்புதான்.

அலைந்து திரிந்து விசாரித்து, ரிஸ்க் எடுத்து தான் இதை செய்து முடித்திருந்தான். மங்கியின் படிப்பறிவும் இதற்கு உதவியது. ஆதிலிங்கம் முதலில் மறுத்தாலும், பின்பு ஒத்துக் கொண்டார். முதலில் பலரிடம் ஏமாந்து, பிறகுதான் வியாபார சூட்சுமத்தைப் பிடித்துக் கொண்டான் ஜம்பு. பிறகே லாபம் காட்ட தொடங்கியது தொழில். இவ்வளவு செய்தும், அவனுக்கு திருப்தி அளிப்பது ஊர் ஊராக சுற்றுவதுதான். அதற்காகத்தான் தானே வண்டி எடுத்துக் கொண்டு டூருக்கு செல்வான். வரும் சுற்றுப் பயணிகளிடம் கைடாகவே நடந்துக் கொள்வான்.

கார்ட்போர்டில் ‘ஏஞ்சலா ட்ராவல்ஸ்’ என எழுதி இருந்த பதாகையைப் பிடித்துக் கொண்டு மங்கி நிற்க, ஜம்பு வருபவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். பயண பொதிகளைத் தள்ளிக் கொண்டு ஒரு கூட்டம் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தது. பெண்களின் தலைகளே தெரிந்தது.

‘லேடிஸ் தான் வயது ஏறும் போது கோயில் குளம்னு கிளம்பறாங்க. இந்த ஆம்பிளைங்க கிழடு வயசானாலும் கோவா ட்ரீப் பிளான் பண்ணி சைட் அடிக்க கிளம்பிருறாங்க! நம்ம மேக் அப்படி!’ என மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டான் ஜம்பு.

எல்லோரும் இவர்கள் அருகே வரவும் வணக்கம் சொன்னவன், தலை எண்ணிக்கையைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான். ஏழு பேர்தான் இருந்தார்கள்.

“ஒரு ஆள் குறையிது மங்கி. நல்லா செக் பண்ணு”

ஒவ்வொரு பெயராக கூப்பிட்ட மங்கி, எட்டாவது பெயராக

“லீ மெய் லிங்” என வாசித்து விட்டு மீண்டும் தான் வாசித்தது சரிதானா என ஆச்சரியமாகப் பார்த்தான். முன்னே நின்றிருந்த பெண்களை விலக்கிக் குட்டியாக ஒரு பெண் உள்ளேன் ஐயா என்பது போல ஒற்றைக் கையைத் தூக்கிக் கொண்டு ஜம்புவின் முன் வந்து நின்றாள்.

“டேய் மங்கி, என்னடா இது சைனா செட்டு வந்து நிக்கிது?” என மங்கியின் காதில் முணுமுணுத்தான் ஜம்பு.

“அதான்ணே எனக்கும் ஆச்சரியமா இருக்கு.”

“ஹாய்!! ஐ எம் லீ மெய் லிங்” என ஜம்புவின் முன் கைக்குலுக்க கை நீட்டினாள் அவள்.

தன்னையறியாமல் அவனின் கை நீண்டு அவளின் கையைப் பற்றி குலுக்கியது.

 

 

SST—EPI 30 (EPILOGUE)

எபிலாக்

 

காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கும் தங்களின் திருமண பதிவு நிகழ்வுக்கு ஒன்பது மணிக்கே அரசாங்க பதிவு ஆபிசில் காத்திருந்தார்கள் குருவும் மிருவும். மலேசியாவில் திருமண பதிவு என்பது கட்டாய விஷயமாகும். திருமண பதிவுக்கு விண்ணப்பிக்க பாரங்களைக் கொடுத்ததும், மணமகன் மணமகள் போட்டோவுடன் அந்த பாரம் பதிவாளர் அலுவலகத்தில்  சில வாரம் காட்சிக்கு வைக்கப்படும். ஆபிசர் கொடுத்த தினத்தில் இவர்கள் வந்து திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

மிக நெருங்கிய சொந்தம் மட்டுமே இதில் கலந்துக் கொள்வார்கள். குருவின் குடும்பத்தில் அவனது அம்மா, தம்பி, தம்பி மனைவி, வந்திருக்க, மிருவின் தரப்பில் ரதி கணே, மற்றும் காசிம் வந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னமே ஒரு ஜோடி உள்ளே நுழைந்திருக்க இவர்கள் வெளியில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.

ஃபார்மலாகவோ பாரம்பரிய முறைப்படியோ  உடுத்தி வர வேண்டும் என ரூல்ஸ் இருப்பதால், மிரு சேலை அணிந்திருந்தாள். கொஞ்சமாக நகை அணிந்து, மிதமான ஒப்பனையுடன் அழகாக இருந்தாள் அவள். அன்று காலையில் சேலையில் கிளம்பி அவள் ரூமில் இருந்து வெளி வந்தவளைப் பார்த்ததும் குருவுக்கு குப்பென நெஞ்சடைத்தது. முதன் முறையாக சேலையில் பார்க்கிறான் தன்னவளை. அவள் அருகே நெருங்கி வந்தவன் மெல்லிய குரலில்,

“மிருது, கும்முன்னு இருக்கடி!” என ஜொள்ளினான்.

“வாட்டர் ஃபால்ஸ்ச க்ளோஸ் பண்ணுங்க பாஸ்! இந்த கர்மத்துக்குத்தான் நான் சேலையே கட்டறது இல்ல” என சிணுங்கினாள். இப்பொழுதெல்லாம் மிருவுக்கு அடிக்கடி வெட்கம் வருகிறது, சிணுங்கல் வருகிறது, சிரிப்பு வருகிறது.

இன்று சட்டப்படி தனதுரிமை ஆகப் போகிறவளின் சிணுங்கல் கண்டு சிலிர்த்துப் போனான் குரு.

“இந்த சீ ப்ளூ கலர் சாரில அப்படியே தேவதை மாதிரி இருக்கத் தெரியுமா!”

“நெஜமாவா பாஸ்?” தன்னைக் குனிந்துப் பார்த்துக் கொண்டவள், எப்பொழுதும் எழும் சந்தேகத்தை தன் மணாளனிடம் வாய் திறந்துக் கேட்டாள்.

“முன்னுக்கு அசிங்கமா தெரியுதா பாஸ்?”

சற்று நேரம் அவள் முகத்தையே உற்று நோக்கியவன்,

“எது அசிங்கம் மிரு? எல்லா பெண்களுக்கும் உள்ளதுதானே உனக்கும் இருக்கு? இதுல என்ன அசிங்கமா தெரியப் போகுது? சிலருக்கு மூக்கு அகண்டதா இருக்கும், சிலருக்கு நீளமா இருக்கும், இன்னும் சிலருக்கு சப்பையா இருக்கும். மூக்கு மாதிரி உனக்கு இருக்கறதும் உடலோட ஒரு பாகம்தான் மிரு! பெருசோ, சிறுசோ, முதல்ல அசிங்கமா இருக்குன்னு நினைக்கறத நிறுத்திக்க மிரு! யூ ஆர் ப்யூட்டிபுல் அஸ் யூ ஆர்” என்றவன் மெல்லிய குரலில்

“ஐவ் நெவர் சீன் எனிதிங் அஸ் பியூட்டிபூல் ஆஸ் யூ” என பாடினான்.

சட்டென முகம் பிரகாசிக்க மலர்ந்து புன்னகைத்தாள் மிரு. அந்த புன்னகை முகம் வாடாமலே அவளையும் அவள் குடும்பத்தையும் அழைத்துப் போனான் குரு. அவனது குடும்பம் நேராக பதிவாளர் அலுவலகத்துக்கே வருவதாக சொல்லிவிட்டார்கள்.

குருவின் குடும்பத்தைப் பார்த்து புன்னகைத்தாள் மிரு. ஹரியை நேரில் பார்த்து பழகி இருக்கிறாள். பிரஷாவுடனும், மேனகாவுடனும் போனில் பேசி இருக்கிறாள். பேபிம்மா கூட மிருவுடன் வீடியோ சேட் செய்திருகிறாள். அவர்களும் இவளைப் பார்த்து முகம் மலர புன்னகைக்க, ஆனந்தி மட்டும் மில்லிமீட்டர் கணக்கில் உதட்டை பிரித்துக் காட்டினார். ரதி அவருடன் பேச முனைய, ஒன்றிரண்டு வார்த்தை மட்டும் மரியாதை நிமித்தம் பேசியவர், கையில் வைத்திருக்கும் பத்திரிக்கையை விரித்துப் படிப்பது போல அமர்ந்துக் கொண்டார். ரதியிடம் கண்களால் மன்னிப்பை இறைஞ்சினான் குரு.

அறவே முகத்தைத் திருப்பாமல், ஒன்றிரண்டு வார்த்தை பேசியதே ரதிக்குப் பெரியதாக தெரிய சிரித்த முகத்துடன் மேனகாவுடனும் பிரஷாவுடனும் ஐக்கியமாகி விட்டார் அவர். இவர்கள் மெல்லிய குரலில் அளவளாவிக் கொண்டிருக்க, தனித்திருந்த தன் அம்மாவின் அருகில் போய் அமர்ந்தான் குரு. மிரு அம்மா மகன் இருவரைத் தான் கவனித்திருந்தாள். அவன் என்னவோ சொல்லி சிரிக்க, ஆனந்தி முகம் மலர கேட்டிருந்தார். உம்மென இருந்த தன் அம்மாவை சிரித்த முகமாக்கியவன், நிமிர்ந்து தனது பொம்மாவைப் பார்த்தான். அவள் புன்னகைக்க, கண் சிமிட்டி அவனும் புன்னகைத்தான்.

இவர்கள் முறை வர அனைவரும் அலுவலக அறைக்குள் நுழைந்தார்கள். பதிவாளராக ஒரு மலாய் பெண்மணி அமர்ந்திருந்தார். அவரின் மேசையில் எதிரே மிருவும் குருவும் அமர, குரு பக்கத்தில் ஆனந்தியும், மிருவின் பக்கத்தி வீல்சேரில் ரதியும் அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் சற்று தள்ளிப் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார்கள்.

அந்தப் பதிவாளார்,

“குருப்ரசாத், மிருதுளாஸ்ரீ?’ என கேட்க இவர்கள் ஆமேன தலையாட்டினார்கள். இருவரின் அடையாள அட்டையையும் வாங்கி சரிப்பார்த்தவர், திருமணத்தின் தாத்பரியங்களை விளக்கி, இனிமேல் இருவரும் சட்டப்படி கணவன் மனைவியாக இணைக்கப்படுகிறீர்கள் என வலியுறுத்தி, என்றேன்றும் இணைப்பிரியாமல் வாழ்வோம் என கைத்தூக்கி உறுதிமொழி எடுக்க சொல்லியவர், மேரேஜ் சர்டிபிகெட்டை அவர்கள் முன் நகர்த்தி கையொப்பமிட வைத்தார். மிருவும் குருவும் கையெழுத்திட்டு மணவாழ்க்கைக்குள் நுழைய ஆனந்தியும் ரதியும் சாட்சி கையெழுத்திட்டு அதை ஆசீர்வதித்தார்கள்.

தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டவளின் கையை மேசைக்கடியில் இறுகப் பற்றிக் கொண்டான் குரு. படபடப்புடன் இருந்தவள், அந்த நொடி மனம் லேசாக மெல்லியப் புன்னகை ஒன்றை குருவுக்குப் பரிசளித்தாள். குரு சொல்லி இருந்தப் படி சிகப்பு ரோஜாக்கள் கொண்ட பொக்கேவை வாங்கி வந்திருந்த ஹரி அதை தன் அண்ணனின் கையில் கொடுத்தான். மிருவைக் கைப்பற்றி எழுப்பி, அந்த பொக்கேவை அவளுக்குக் கொடுத்த குரு,

“வெல்கம் டூ மை லைப் மிசஸ் குருப்ரசாத்” என சொல்லி புன்னகைத்தான். வெட்கப் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள் மிரு.

அருகில் இருந்த ஒரு உயர்தரமான உணவகத்தில் மதிய உணவுக்கு டேபிள் ரிசர்வ் செய்திருந்தான் குரு. மூன்று கார்களில் அந்த உணவகத்துக்குப் பயணப்பட்டார்கள். அந்த நீண்ட மேசையில் அனைவரையும் அமரவைத்த குரு, காசிமையும் ஸ்பெஷலாக கவனித்தான். பின்பே மிருவுக்கும் தன் அம்மாவுக்கும் நடுவில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஹரியிடம் இருந்து ஓடி வந்த ரேஷ்மி குருவின் மடியில் அமர்ந்துக் கொண்டாள். மேனகா அழைத்தும் போக மாட்டேன் என அடம் செய்தவளை தன்னிடமே வைத்துக் கொண்டான் குரு. பிரஷா பிள்ளைகளை கணவனிடம் விட்டு விட்டுத் தனியாக வந்திருந்தாள், இல்லையென்றால் மை மாமா, மை குருப்பா என உரிமைப் போராட்டம் வேறு நடந்திருக்கும்.

தனது பேபிம்மாவுக்கு ஊட்டுவதில் கவனமாக இருந்தவன், அவன் வயிற்றைக் கவனிக்கவில்லை. நான்கு வாய் வாங்கிக் கொண்டு அவள் ஓடி விட, ஒரே நேரத்தில் இரு கைகள் அவன் முன் நீண்டன உணவை ஊட்டுவதற்காக. தன் ஆனந்தியின் கையையும் தன் ஆனந்தத்தின் கையையும் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. கையில் உணவுடன் மிரு ஆனந்தியைப் பார்க்க, அவரும் கையில் உணவுடன் அவளைத் தான் பார்த்திருந்தார். திண்டாட்டத்துடன் யார் கையில் உள்ள உணவை வாங்குவது என பேய் முழி முழித்த தன் அண்ணனை நமுட்டு சிரிப்புடன் பார்த்திருந்தான் ஹரி.

மகனின் சங்கடத்தை உணர்ந்து ஆனந்தி கையை எடுத்துக் கொண்ட அதே நேரத்தில் மிருவும் தன் கையை எடுத்திருந்தாள். கிடைத்த கேப்பில் சட்டென தானே உணவை அள்ளித் தன் வாயில் திணித்துக் கொண்டான் குரு.

“ஜஸ்டு மிஸ்!” என சிரிப்புடன் சொல்லி அண்ணனைப் பார்த்து கண் சிமிட்டினான் ஹரி.  சாப்பிட்டவாறே இன்னும் இரு வாரத்தில் ஈப்போ கோவிலில் நடக்கப் போகும் திருமண ஏற்பாட்டைப் பற்றி பேசினார்கள்.

ஏற்கனவே சென்ற வாரம் கோலாலம்பூர் வந்திருந்த ஆனந்தி, மிரு குருவுடன் சேலை, நகை என ஷாப்பிங்கை முடித்திருந்தார். ரதியால் பல கடைகள் ஏறி இறங்குவது சாத்தியப்படாது என்பதால் இவர்கள் மட்டும் சென்றிருந்தார்கள். மகன் தன் மனைவிக்கு ஆசையாய் சேலை தேர்ந்தெடுப்பதை முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பார்த்திருந்தார் ஆனந்தி. நடு நடுவே மிரு பேச்சுக் கொடுத்தாலும், ஆம், இல்லை, நன்றாக இருக்கிறது என சில வார்த்தைகளிலேயே முடித்துக் கொண்டார். அவளிடம் பேசக்கூடாது என இல்லை! திட்ட வந்தது போல சுமூகமாகப் பேச வரவில்லை அவருக்கு. மனைவிக்குத் தேர்ந்தெடுத்தவன் அம்மா மனம் கோணாமல் அவருக்கும் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தான். ரதிக்கும் கணேவுக்கும் கூட வாங்க மறக்கவில்லை குரு.

குருவின் குடும்பம் உணவு முடித்து அப்படியே ஈப்போ கிளம்பி இருக்க, இவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்ததும் மகளைத் தங்கள் அறைக்கு அழைத்தார் ரதி.

“என்னம்மா?”

“உங்க அத்தை என் கிட்ட ஒரு விஷயம் சொல்லி விட்டாங்கடி!”

“என்னவாம்?”

“சட்டப்படி புருஷன் பொண்டாட்டி ஆகிட்டாலும், சம்பிரதாயப்படி இன்னும் தாலி கட்டலயாம்! அதனால…”

“அதனால???”

“என்னடி மிரு? எல்லாத்தையும் அக்‌ஷியோன் (பாத்திரம் துலக்கும் சோப்பு) போட்டு விளக்கனுமா? எப்பொழுதும் மாதிரி என் கூடவே படுத்துக்கோ! மாப்பிள்ளை ரொம்ப மோடனா இருக்காரு! இதெல்லாம் பார்ப்பாரோ இல்லையோ, ஆனா அவங்க அம்மா பார்க்கறாங்க. டைம்லாம் குறிச்சு வச்சிருக்காங்களாம். பார்த்து நடந்துக்க சொன்னாங்கடி” என சொல்லி விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டார்.

மிருவுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. தினமும் எல்லோரும் தூங்கியதும், இவர்கள் இருவரும் சமையல் அறையில் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொஞ்சிப் பேசிக் கொள்வார்கள். திருமணத்துகு முன் என் காதலியுடன் டேட்டிங் வேண்டும் என கேட்டவன், விடிகாலை மூன்று மணியைத் தான் அதற்கு ஃபிக்ஸ் செய்திருந்தான். டைனிங் டேபிளில் மிருவை அமர்த்தி, அவன் நாற்காலியில் அமர்ந்து பேசுவான் பேசுவான் பேசிக் கொண்டே இருப்பான். அவள் கண் சொருகும் போது முத்தமிட்டு எழுப்பி  அவள் ரூமுக்கு படுக்க அனுப்புவான். சில நாட்களில் இவள் அலாரத்தை அடைத்துப் போட்டுவிட்டு டேட்டிங் வராமல் தூங்கி விடுவாள். அந்நாட்களில் அவள் கையால் சாப்பிடாமல் தனது கோபத்தைக் காட்டுவான் குரு. அவனை கெஞ்சிக் கொஞ்சி சமாதானப் படுத்தி மீண்டும் டேட்டிங்கை ஆரம்பிப்பாள் அவள். மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு இந்த அக்கப்போரே தேவையில்லை! தன்னுடனே தனது ரூமிலே இருந்துக் கொள்ள சொல்லி இருந்தான் குரு. அவன் அம்மாவின் நினைப்போ வேறு விதமாக இருந்தது.

இவளது பொருட்கள் எல்லாம் ஏற்கனவே அவன் ரூமில் அடைக்கலமாகி இருந்தன. அன்றிரவு மேசேஜ் செய்திருந்தான் குரு.

“மிருது! வரல?”

“இல்ல பாஸ்”

“ஏன்?”

“கல்யாணம் முடியட்டும் பாஸ்”

“அப்போ இன்னிக்கு நடந்ததுக்குப் பேரு என்ன?” கோப முகம் காட்டும் இமோஜி பறந்து வந்தது. இத்தனைக்கும் இருவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள். அருகில் கணேவும் டீவியில் ஆழ்ந்திருந்தான்.

டைப்பிங் என ஐந்து நிமிடமாக காட்டியதே தவிர, பதில் மட்டும் வரவில்லை மிருவிடம் இருந்து. நிமிர்ந்து அவளைப் பார்த்தான் குரு. உதட்டைக் கடித்துக் கொண்டு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும், முகம் கனிந்தது அவனுக்கு.

“எங்க அம்மா எதாச்சும் சொன்னாங்களா மிரு?”

“தாலி கட்டற வரைக்கும் வேய்ட் பண்ண சொன்னாங்க”

“இது நம்ம பெர்சனல் மிருதும்மா! இதுல அவங்க தலையிடறத நாம அனுமதிக்கக் கூடாது! என் அம்மாவா இருந்தாலும், நம்ம அந்தரங்கம்னு வரப்போ, அவங்க வெளி ஆள்தான்!”

“எனக்குமே ஒரு மாதிரி இருக்கு பாஸ்! வேய்ட் பண்ணலாமே”

“பைத்தியம்! நீ என் பக்கத்துல இருக்கனும்னு தான் நினைச்சேனே தவிர, மேரிட்டல் ரைட்ஸ்ச கிளேம் பண்ணனும்னு நினைக்கலடி! இப்படி முகத்தை சுளிச்சுட்டு இருக்காதே! சரி விடு! இவ்ளோ நாள் வேய்ட் பண்ணிட்டேன் இன்னும் 2 வீக்ஸ் வேய்ட் பண்ணமாட்டேனா!”

“தேங்க்ஸ் பாஸ்!”

“போடி! உன் தேங்க்ஸ்ச நீயே வச்சிக்கோ! என் மிருது என் கிட்ட வரப்போ முழு மனசோட சந்தோசமா வரனும்! அவ்ளோதான்! என் மிரு நோ சொன்னா சத்தியமா அது எனக்கு நோதான்! புரியுதா? ஆனா நம்ம மிட்நைட் டேட்டிங் மட்டும் ஸ்டாப் ஆகக்கூடாது. அது மட்டும்தான் என்னோட பூஸ்ட்! சீ யூ அட் 3”

அவன் பதிலில் மயங்கியவள் கண்ணில் ஹார்ட் இருக்கும் இமோஜியை அள்ளி அனுப்பினாள்.

“கல்யாணம் ஆகியும் வைப்ப திருட்டுத்தனமா டேட்டிங் கூப்பிட்ட ஒரே ஆளு நானாத்தான் இருப்பேன். இப்போ போய் படு” என முடித்துக் கொண்டான் குரு.

நாளொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாக போனது அவர்களின் நாட்கள். திருமண நாளும் வந்தது. ஈப்போவில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மிருவின் குடும்பத்தைத் தங்க வைத்திருந்தான் குரு. மிருவின் மாமா குடும்பம், காசிம் என சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். கோலாலம்பூரில் கொடுக்கப்படும் டின்னருக்கு நட்புக்களையும், ஆபிசில் உள்ளவர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டான் குரு. நிச்சயதார்த்த விழா வைக்காததால் உடன் பரிசம் போட்டு, பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கப்போகும் திருமணத்திற்கு அப்படியே மிருவை அழைத்து செல்லலாம் என முடிவெடுத்திருந்தார் ஆனந்தி.

மிருவின் அலங்காரம், ஜடை மாலை போன்ற விஷயங்களுக்கு மேனகாவே ஏற்பாடு செய்திருந்தாள். திருமண நாளுக்கு முன்னிரவு அந்த வாடகை வீட்டுக்கு குருவுடன் வந்தார் ஆனந்தி. கையில் மெஹந்தியுடன் அமர்ந்திருந்த மிருவை நோக்கிப் போனவர், ஒரு பெட்டியை அவள் அருகில் வைத்தார். தொண்டையை செருமிக் கொண்டவர்,

“என் குருப்பா மனைவிக்குன்னு நான் சேர்த்து வச்ச நகைங்க இந்த பெட்டியில இருக்கு! இதுலாம் இனி உனக்கு சேர வேண்டியது! எடுத்துக்க! நாளைக்கு எது போடனும்னு பிரஷா சொல்லுவா! போட்டுக்க! நம்ம சொந்தமெல்லாம் வருவாங்க! அவங்க முன்ன என் மருமக தங்க சிலையாட்டம் நிக்கனும்! யாரும் நாக்குல பல்ல போட்டு ஒரு வார்த்தை பேசிறக் கூடாது!” என சொல்லி முடித்தார்.

வார்த்தை அவளிடம் இருந்தாலும் பார்வை எதிரில் இருந்த சுவற்றில் இருந்தது. தன்னைப் பார்க்காமல் சுவற்றைப் பார்த்து பேசியதில் கோபம் வந்து விட்டது மிருவுக்கு.

“தேவையில்ல! எனக்கு உங்க குருப்பா போதும்! இதெல்லாம் வேணாம்” என பட்டென சொல்லிவிட்டாள்.

சுவற்றில் இருந்து பார்வையைத் திருப்பி மிருவின் மேல் வைத்தவர்,

“ஹ்ம்ம்..போட்டுக்க மிரு! என் பையன் கௌரவம் இனி உன் கிட்டத்தானே இருக்கு!” என மெல்லிய குரலில் சொன்னார்.

“அத்தை! என்னைப் பார்த்து பேசுங்க, என் கண்ணைப் பார்த்து பேசுங்க! உங்க மகன நான் தானே கட்டிக்கப் போறேன்? இல்ல இவ்வளவு நேரம் நீங்கப் பார்த்து பேசன அந்த குட்டி சுவத்துக்கு கட்டி வைக்கப் போறீங்களா? அத்தைன்னு எல்லா மரியாதையும் நான் உங்களுக்குக் குடுப்பேன்! என்னைப் பிடிக்கலைனாலும், உங்க மருமகளுக்கு உரிய மரியாதைய நீங்க குடுத்துத் தான் ஆகனும். நம்ம ரெண்டு பேரையும் இணைக்கற புள்ளி உங்க மகன்தான். அவருக்கு நீங்களும் வேணும், நானும் வேணும்! அதனால நமக்குப் புடிக்குதோ புடிக்கலையோ உங்க குருப்பாவுக்காகவாச்சும் முகம் திருப்பாம நாலு வார்த்தைப் பேசிக்கறது நல்லதுன்னு நான் நினைக்கறேன். தப்பா எதாச்சும் சொல்லிருந்தா என்னை மன்னிச்சிருங்க அத்தை”

மிரு படபடவென பொரியவும் திகைத்துப் போனார் ஆனந்தி. மெல்லிய குரலில் தான் இருவரும் பேசினார்கள்.

“அம்மா, மிரு!” என்ற குரலில் நிமிர்ந்துப் பார்த்தார்கள் இருவரும்.

கதவில் சாய்ந்து நின்று தவிப்புடன் தாயின் முகத்தையும் தாரத்தின் முகத்தையும் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த குருவை பார்க்க இருவருக்கும் மனம் உருகி விட்டது. மிரு சட்டென புன்னகைக்க, ஆனந்தியும் மகனைப் பார்த்து புன்னகைத்தார். இவர்களின் புன்னகையில் குருவின் முகம் மலர்வதை இருவரும் ஆசையாகப் பார்த்திருந்தனர். அந்த நொடியில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் சகித்துக் கொண்டுப் போவது என முடிவெடுத்தனர் மாமியாரும் மருமகளும். ஆனந்தி பேசிய பேச்சுக்கு மன்னிப்பை வேண்டவில்லை, மிருவும் அதை எதிர்ப்பார்க்கவில்லை.

மறுநாள் பிரம்மன் எழும் நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் ஆனந்தி செயற்குழுவில் இருக்கும் அந்தக் கோயிலில் திருமண சடங்குகள் அமோகமாக ஆரம்பித்தன. அந்த அதிகாலையில் கூட ஆனந்தியின் சொந்தபந்தங்கள் வந்து குவிந்து விட்டார்கள். தனி தனியாக குருவுக்கும் மிருவுக்கும் சடங்குகள் முடிய, முகூர்த்தப் புடவையை மிருவிடம் கொடுத்துக் கட்டி வர சொன்னார் குருக்கள். பிரஷா பெண்ணின் தோழியாக இருக்க, கணே மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான். பட்டு வேஷ்டி சட்டையிலும், அவர்கள் குல வழக்கத்தின்படி தலைப்பாகையும் கட்டி ராஜ களையுடன் மேடையில் அமர்ந்திருந்தான் குரு.

“பொண்ண கூட்டிட்டு வாங்க” என ஐயர் அவசரப்படுத்த,

“சேலைய என்ன அப்படியே சுத்தியா விட முடியும்? அழகா கட்டறதுக்குள்ள இந்த பூசாரிங்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது” என மெல்லிய குரலில் அவரைத் திட்டிக் கொண்டே மேக்கப் ஆர்டிஸ்ட் அருமையாக மிருவுக்கு சேலையைக் கட்டிவிட்டார். அழகாக பட்டுப் பாவாடை அணிந்து குட்டி வாண்டுகள் வரிசையாக அலங்கார விளக்குகள் பிடித்து முன்னே நடக்க, அவர்கள் பின்னால் அன்ன நடையிட்டு நடந்து வந்தாள் குருவின் மிரு. தான் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பால் வண்ண சாமுத்திரிகா பட்டுடுத்தி பாவையவள் நடந்து வருவதை விழி மூடாமல் பார்த்திருந்தான் குரு. இவள் என் மனைவி எனும் எண்ணத்தில் அவன் நெஞ்சம் விம்மியது.

சடங்குகள் செய்யப்பட்டு பாத பூஜைக்கு பெற்றவர்களை அழைத்தார் பூசாரி. மிரு ஏற்கனவே தன் அம்மாத்தான் அதற்கு முன் நிற்க வேண்டும் என சொல்லி விட்டதால் வீல் சேரில் மிருவின் அருகில் நிறுத்தப்பட்டார் ரதி. குருவுக்கு ஆனந்தி முன் நின்றார். தன் ரதியின் ஒற்றைக் காலுக்கு பாலால் அபிஷேகம் செய்த மிருவுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஒரு செக்கண்ட் தங்களை வளர்க்க தன் அம்மா பட்டப்பாடும் துயரமும் கண் முன்னே ஓடியது அவளுக்கு. ரதி தன் மகளின் நிலை உணர்ந்து மெல்ல அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். குருவும் தன் ஆனந்திக்கு பாத பூஜை செய்து முடிக்க அடுத்தடுத்து சடங்குகள் செய்யப்பட்டன.

பூசாரி கெட்டிமேளம் என முழங்க, அப்சரஸ்சாக ஒளிர்ந்த தனது மிருதுவுக்கு சொந்த பந்தங்கள் மஞ்சள் அரிசி தூவி ஆசீர்வாதம் செய்ய, தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சுக்கள் போட்டு தனது மறுபாதியாக ஏற்றுக் கொண்டான் குரு. உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்க நின்ற மிருவை தோளோடு அணைத்து,

“உனக்கு ஒரு அடிமை சிக்கிருச்சுன்னு நீ ஹெப்பியா இருக்கனுமே தவிர, கண் கலங்கக் கூடாது மிருது!” என்றவன், பிரஷாவிடம் இருந்து டிஷூ வாங்கி மேக்கப் கலையாமல் மிருவின் கண்ணைத் துடைத்து விட்டான்.

அந்தக் காட்சியைக் கூட அழகாக தனது கேமராவில் கிளிக்கிக் கொண்டார் கேமராமேன். அதன் பின்னர் கோயிலை சுற்றி வித விதமாக இருவரையும் போட்டோ எடுத்துத் தள்ளினார் அவர். கோயில் வளாகத்தில் இருந்த மண்டபத்திலேயே காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மணமக்களுக்கு மொய் கொடுத்து விட்டு வந்திருந்தவர்கள் சாப்பிட சென்றார்கள். சில பல வம்புகள் மிருவை முன்னிருத்தி பேசப்பட்டது தான். அதையெல்லாம்,

“மகன் ஆசைப்பட்டான், கட்டி வச்சுட்டேன்! வயசு புள்ளைங்க சந்தோஷம் தானே முக்கியம். சாதி, அந்தஸ்த்து இதையெல்லாம் சாவரப்போ கொண்டுட்டா போக போறோம்!” என ஒரே போடு போட்டு அடக்கி விட்டார் ஆனந்தி. அதற்கு மேல் அவரை எதிர்த்து வம்பு பேச யாருக்கு தைரியம் இருக்கும்!

ஒரு வழியாக திருமணம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்ப இரண்டு நாட்கள் பிடித்தது. சாந்தி மூகூர்த்தம் என ஆனந்தி ஆரம்பிக்க,

“அம்மா அதெல்லாம் ஹனிமூன் போகறப்போ நாங்களே பார்த்துக்கறோம்! கல்யாணம் உங்க ஆசைப்படி எல்லா சாங்கியமும் அனுசரிச்சு செஞ்சிகிட்டேன்ல! அதுக்கும் மேல என் வழியில விட்டுருங்கம்மா” என முடித்துவிட்டான் குரு.

மகனிடம் தன் பாச்சா பலிக்காது என மருமகளிடம் வந்து நின்றார் ஆனந்தி.

“வந்து மிரு!!!”

“சொல்லுங்கத்தை”

“நல்ல நேரம் பார்க்கனும் முதல் இரவுக்கு. என் மத்த புள்ளைங்களுக்கு எல்லாம் முறைப்படி தான் எல்லாம் செஞ்சேன்! இவன் மட்டும் என்னிக்கும் என் வட்டத்துக்குள்ள வரமாட்டான்”

தன்னை திருமணம் செய்ததையும் அந்த வட்டத்தில் இணைக்கிறாரோ என அவர் முகத்தைப் பார்த்தாள் மிரு. சாதாரணமாகத்தான் முகத்தை வைத்திருந்தார் ஆனந்தி.

“சரித்தை! இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர மாதிரி ஒரு டைம் பிக்ஸ் பண்ணிக் குடுங்க! எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டாள் மிரு.

இங்கிருந்த சொந்த பந்தங்கள் வீட்டுக்கு எல்லாம் விருந்தாட போய்விட்டு இரண்டு நாட்கள் கழித்துதான் கோலாலம்பூரில் இருந்து மால்டிவ்ஸ் போவதற்க்கு டிக்கேட் புக் செய்திருந்தான் குரு. மூன்று நாட்கள் மட்டுமே அங்கே தங்குவது என் ஏற்பாடு. ரதியும் கணேவும் நீண்ட நாள் தனித்திருப்பதை குரு விரும்பவில்லை. அந்த நாட்களில் கவனித்துக் கொள்ள சொல்லி காசிமிடமும் சொல்லி இருந்தாள் மிரு. அவர்கள் திரும்பும் வாரத்தில் வரும் சனிக்கிழமையில் கோலாலம்பூரில் டின்னர் வைப்பது என ஏற்பாடாகியிருந்தது.

தங்களின் எல்லா கடமையையும் முடித்து விட்டு மால்டிவ்ஸ் செல்லும் விமானத்தில் அக்கடாவென சாய்ந்து அமர்ந்தார்கள் மிருவும் குருவும்.

“கல்யாணம் ஆனதுல இருந்து நம்மால டேட்டிங் கூட பண்ண முடியல. எப்போ பாரு பக்கத்துல யாராச்சும் இருந்துகிட்டே இருந்தாங்க! கரேக்டா நைட் டைம்ல உன்னை கண்ணால கூட காண முடியல. போனையும் அடைச்சு வச்சுட்ட. எவ்வளவு கஸ்டமா இருந்துச்சு தெரியுமா எனக்கு! ஐ மிஸ்ட் யூ சோ மச் மிருது” என்றவன் அவள் தோளில் சாய்ந்துக் கொண்டான். அவன் கையை எடுத்து தன் கையோடு பிணைத்துக் கொண்டாள் மிரு.

“இந்த மூனு நாளைக்கு ஒன்லி யூ அண்ட் மீ! மை ஹனியோட ஹனிமூன்!” என சொல்லியவன் புன்னகையுடன் இணைந்திருந்த கைகளைத் தூக்கி முத்தமிட்டான்.

அவர்களுக்குக்காக அவன் புக் செய்திருந்த அறையைப் பார்த்ததும் மூச்சு விட மறந்தாள் மிரு. மலாக்காவையே வாய் பிளந்து ரசித்தவளுக்கு மால்டிவ்ஸ் சொர்க்கலோகமாக காட்சி அளித்தது. கடலை ஒட்டிய ரூம் என சொல்லவதா இல்லை கடலன்னை மடியிலே ரூம் என சொல்வதா! மலைத்துப் போனாள் மங்கை. ரூமில் நுழைந்ததில் இருந்து மிரு முகம் காட்டும் பாவங்களையேப் பார்த்திருந்தவனுக்கு புன்னகை அரும்பியது.

தங்களது லக்கேஜ்களை கொண்டு போய் ரூமில் வைத்து விட்டு வந்தவன், மிருவின் அருகே போனான். குரு புக் செய்திருந்தது, ஹால், குட்டியான கிச்சன், ப்ரைவேட் நீச்சல் குளம், படுக்கை அறை என சகல வசதிகளையும் கொண்ட ரூமாகும். நீச்சல் குளத்தின் அருகே தெரிந்த கடலை பார்த்தப்படி நின்றிருந்த மிருவைப் பின்னிருந்து கட்டிக் கொண்டான் குரு.

“புடிச்சிருக்கா மிரு?”

“ரொம்ப ரொம்ப!”

“பசிக்குதாமா?”

“இல்லையே!”

“எனக்கு பசிக்குதே!”

“அச்சோ! வாங்க சாப்பிடப் போகலாம்” என முன்னே திரும்பினாள்.

திரும்பியவளை முன்னிருந்து அணைத்துக் கொண்டவன்,

“என்னோட ஃபுல் மீல் இங்கத்தானே நிக்கிது! அள்ளி சாப்பிடவா?” என கேட்டுக் கொண்டே மிருவின் காதை கவ்வினான்.

மிருவின் மனதில் ஓடியது ராத்திரி நேரத்து பூஜை சாங்!!!

“சாப்பிட வாடா சாப்பிட வாடா

உன் ஆசைத் தீர என்னை நீயும் சாப்பிட வாடா!!!!”

மயங்கிக் கிறங்கிக் கிடந்தவள் மூளையில் அலாரம் அடித்தது.

‘ஐயோ, நல்ல நேரம்!!!! ராத்திரி ஒன்பதுக்குத்தானே அத்தை சொன்னாங்க! அதை சொன்னாலும், நாம ரெண்டு பேரும் சேரர நேரம்தான் நல்ல நேரம்னு டயலோக் விடுவாரே!’

“மிரும்மா”

“ஹ்ம்ம்”

“ஐ லவ் யூடி”

“ஹ்ம்ம்”

“யூ ஆர் மை சன்ஷைன்டி”

“ஹ்ம்ம்”

“மை ஏஞ்சல்டி”

“ஹ்ம்ம்”

“மை லவ் கோடேஸ்டி(goddess)”

ஒவ்வொன்றை சொல்லும் போதும், காது, மூக்கு, கண்கள் என ஒவ்வொரு இடமாக முத்தமிட்டு முத்தெடுத்தான் குரு.

“பாஸ்”

“என்னம்மா!”

“பசிக்குது”

“நான் உன்னை சாப்பிடற மாதிரி நீயும் என்னை சாப்பிடு! பசி போய்டும்” என சொல்லிக் கொடுத்தான் குரு.

“நெஜமாலுமே பசிக்குது பாஸ்!!”

அவள் கழுத்தில் இருந்து முகத்தை நிமிர்த்தியவன், கொஞ்ச நேரம் அவளை அணைத்தப்படி அமைதியாக இருந்தான்.

“ரிப்ரேஷ் ஆகிட்டு, சட்டை மாத்திட்டு வா மிரும்மா! சாப்பிட போகலாம்” என சொல்லியவன், விலகி அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

இந்த ட்ரிப்புக்கா வாங்கி இருந்த ஷார்ட்சும், பச்சைக் கலரில் இலைதளைகள் படம் போட்டிருக்கும் ஷேர்ட்டும் அணிந்து வந்தாள் மிரு. குருவும் அவளைப் போலவே மேட்சிங் உடை அணிந்து வர கைக்கோர்த்து உணவருந்த போனார்கள். உணவு உண்டு, பீச்சில் காலார நடந்து, தண்ணீரில் ஆடி, ஓடிப்பிடித்து விளையாடி, லைட்டாக டின்னர் சாப்பிட்டு விட்டு அவர்கள் ரூமுக்கு வந்த போது மணி ஐந்தரை ஆகியிருந்தது. குளித்து முடித்து இருவரும் ஸ்வீம்மில் பூல் அருகே கடல் காற்று தாலாட்ட தண்ணீரில் கால் நனைய அமர்ந்திருந்தார்கள்.

“மிரும்மா”

“யெஸ் பாஸ்”

“எங்க அம்மா எதாச்சும் சொல்லி அனுப்புனாங்களாடா?”

“உண்மைய சொல்லனுமா பொய் சொல்லனுமா இப்போ?”

“கசந்தாலும் உண்மைத்தான் நல்லது. சொல்லு, என்ன சொன்னாங்க?”

“ஒன்பது மணிதான் நல்ல நேரமாம்”

ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன்,

“சாரிடா மிரு” என மன்னிப்புக் கேட்டான்.

“எதுக்கு பாஸ்?”

“அவ்ளோ ஆசை என் மேல இருந்தும் என் அம்மாவுக்காகத்தானே தள்ளிப் போன இன்னைக்கு?”

“அவங்க உங்க அம்மா பாஸ்! உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க! உங்க நல்லதுக்குத்தானே இதெல்லாம் கடைப்பிடிக்கிறாங்க! அதை ஏன் மறுக்கனும்!”

“அவங்க மேல உனக்கு கோபம் கொஞ்சம் கூட இல்லையா மிரு?”

“கோபம் இருந்துச்சுத்தான், ஆனா இப்போ இல்லை! என்னோட கோபம்லாம் ரொம்ப நாள் நிக்காது பாஸ்! கோபத்த உள்ளுக்குள்ளேயே வச்சிருந்தா கெட்ட ஹார்மோன்லாம் சுரந்து அது உடம்புல உள்ள மத்த பார்ட்ஸ்லாம் டேமேஜ் பண்ணுமாம். நமக்கு எதுக்கு அந்த கஸ்டம். நான் ரொம்ப நாள் உங்க கூட சந்தோஷமா வாழனும் பாஸ்” என சொன்னவளை இறுக அணைத்து முத்த மழை பொழிந்தான் குரு.

“ஐம் சோ லக்கி டூ ஹேவ் யூ மிரு”

முத்த மழை கொஞ்சம் கொஞ்சமாக உடல் யுத்த மழையாக மாறத் தொடங்கியது. அப்பொழுது கூட இவள்,

“பாஸ்.. பாஸ்! நல்ல நேரம்” என வாய் திறக்க, அந்த வாய்க்கு அழுந்த முத்தமிட்டான் குரு.

“நம்ம நாட்டு டைம் இப்போ ஒன்பது மணி ஆச்சுடி! இதுக்கு மேலயும் என்னை சோதிக்காதே மிருது” என்றவனை புன்னகையுடன் எதிர்கொண்டாள் மிரு. சிக்கித் தவித்து தத்தளித்த ஜோடிப் புறாக்கள், திக்கித் திணறி காதல் கரை தொட்டார்கள்.

 

ஐந்து வருடங்கள் கழித்து…

“மிருது”

“வரேன் பாஸ்” என மாடி ஏறி தன் கணவனை நாடிப் போனாள் மிரு.

இப்பொழுது குருவும் மிருவும் கொண்டோவில் வசிக்கவில்லை. ரதிக்காகவும், தங்கள் குடும்பத்தின் புது வரவினாலும் டபுள் ஸ்டோரி வீடு ஒன்று வாங்கி குடியேறி இருந்தார்கள்.

“பையன பிடி மிரும்மா! நான் குளிக்க வச்சிட்டேன். கட்டில்ல உட்கார வச்சா இறங்க ட்ரை பண்ணுறான். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்குடா இன்னைக்கு!” என தங்களது இரண்டு வயது மகன் ஜெய்ப்ரசாத்தை மிருவிடம் நீட்டினான் குரு.

“ம்மா!” என சிரித்தப்படியே தாவினான் மகன். மேலே இரண்டு கீழே இரண்டு என பல்  முளைத்திருக்க, அவன் சிரிக்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது.

“குட்டி ஜெய் அப்பாவ டிஸ்டர்ப் செய்றீங்களா? வாங்க வாங்க கீழ போகலாம்” என தங்கள் மகனை கொஞ்சிய மிருவை ஆசையாகப் பார்த்திருந்தான் குரு.

ஜெய்ப்ரசாத் அப்படியே குருவின் ஜாடை. ஆனால் நிறம் மட்டும் மிருவைக் கொண்டிருந்தான். ஜாதி பூக்கான் என மிருவை மனம் வருந்த செய்த ஆனந்திக்கு கடவுள் கொடுத்த பரிசு அவன். பேரன் நிறம் வேறாக இருந்தாலும், தன் குருப்பாவை அவனுள் பார்த்தார் ஆனந்தி. பேரனைப் பார்க்க மாதத்திற்கு இரு முறை வந்து விடுவார் கோலாலம்பூருக்கு. வெள்ளிக்கிழமை வருபவர், ஞாயிறு மனமே இல்லாமல் கிளம்பிப் போவார். இவரோடு சேர்ந்து சில சமயம் ஹரியும் குடும்பத்துடன் வருவான். பிரஷாவும் வருவாள். தனிமையே இனிமை என வாழ்ந்த குருவுக்கு குடும்பமே சொர்க்கம் என கற்றுத் தந்திருந்தாள் மிரு.

திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த நேரத்தில் தான் ஆனந்தியுடன் மனதளவில் நெருங்கி இருந்தாள் மிரு.

“மிரு! ரெண்டு வருஷம் ஆகுதே, இன்னும் எனக்குப் பேரப்புள்ளைய கண்ணுல காட்ட மாட்டறீங்க ரெண்டு பேரும்! செக்கப் எதுக்காச்சும் போகறியா இல்லையா?” என ஆரம்பித்தவரை கொலை வெறியில் பார்த்திருந்தவளுக்கு,

“குருப்பாவையும் கூட்டிட்டுப் போய் செக் பண்ண சொல்லு! குறை யாருகிட்ட இருந்தாலும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்” என முடித்தது இவளுக்கு கண்ணீரை வர வைத்தது. குறை என்றால் பெண்ணிடம் தான் என சொல்லும் மாமியார்கள் மத்தியில் மகனையும் செக் செய்து கொள்ள சொன்ன ஆனந்தி அவள் மனதில் உயர்ந்து நின்றார். மிரு டாக்டரைப் பார்த்து, கரெக்டான டயட் இருந்து, சரியான உடற்பயிற்சிகள் செய்து, சில பல மருந்துகள் உண்டு பிறந்தவனே ஜெய்ப்ரசாத்.

குழந்தை தாங்கும் போது, இன்னும் பெரிதாகிப் போன நெஞ்சத்தினால், அடிக்கடி இடுப்பு வலி, முதுகு வலி, மூச்சிரைப்பு என சிரமப்பட்ட மிருவை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினான் குரு.  அந்த வலி இந்த வலி என அவதியுறும் மிரு சிடுசிடுத்தாலும், கோபம் கொண்டாலும் சாந்தமாகவே அவளை சமாதானப்படுத்தி இதமாக கவனித்துப் பார்த்துக் கொள்வான். பிள்ளைப் பெற்றவளை ஆடி ஓடி ரதியால் கவனிக்க முடியாது என கூடவே தங்கி இருந்து மருமகளையும் பேரனையும் தேற்றிவிட்டார் ஆனந்தி.

மகனை கொஞ்சிக் கொண்டிருந்த மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் குரு.

“மமி மரு!”

“என்ன பாஸ்?”

“இப்போ நீ எவ்ளோ அழகா இருக்கத் தெரியுமாடா?”

“தெரியுமே! அதைத்தான் தினம் நைட் சொல்லிட்டே இருக்கீங்களே பாஸ்”

“நைட்ல சொல்லறது எல்லாம் ஒரு போதைல சொல்லறதுடி! பகல்ல சொல்லறதுதான் எப்பவுமே நெஜம்”

“பார்டா! இத்தனை நாள் இது தெரியாம போச்சே எனக்கு” என சிரித்தாள் மிரு.

“என் மிருது பிள்ளை பொறந்ததும் தான் இன்னும் மிருதுவா இருக்கா தெரியுமா?”

“இதுல எதாச்சும் ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ் இருக்கா பாஸ்?”

“சேச்சே! பையன பார்த்துக்கறதுனால பொறுமை வந்துருச்சு! அதனால குணம் இன்னும் மிருதுவாயிருச்சுன்னு சொன்னேன்”

“ஹ்கும் நம்பிட்டேன்! என் கழுத்துல உதட்டால கோலம் போடறத விட்டுட்டு போய் ஆபிசுக்கு கிளம்புங்க பாஸ்” என சொன்னவள், அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டே கீழே இறங்கி சென்றாள்.

தன் மகனை  ப்ளேபென்னில் விளையாட விட்டவள், தங்கள் எல்லோருக்கும் காலை உணவு சமைக்கப் போனாள்.

இப்பொழுது கணே யூனிவெர்சிட்டியில் படிக்கிறான். செமெஸ்டர் ப்ரேக்குக்கு மட்டும்தான் வீட்டுக்கு வருவான். ச்சேக்கு சொன்னது போலவே தமிழ் பெண்ணை போன வருடம் தான் மணமுடித்திருந்தார். இவர்களும் குடும்பமாய் போய் கலந்து சிறப்பித்து விட்டு வந்தார்கள். காசிமும், ரீனாவும் அடிக்கடி வந்து இவளைப் பார்த்து விட்டுப் போவார்கள். அருளுக்கு இன்னும் ஆஸ்ட்ரேலியாவில் காண்ட்ரேக்ட் முடியவில்லை. திருமணம் முடித்து, தன் மனைவியுடன் அங்கே செட்டில் ஆகிவிட்டான் அவன்.

மிரு இன்னும் குருவின் ஆபிசில் வோர்க் ப்ரோம் ஹோம் செய்கிறாள். வீட்டில் வேலைகளை செய்துக் கொண்டே ப்ரோகிராமும் செய்வாள். குரு சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம் என சொல்லியும், படித்தது மறந்துப் போய்விடும் என சொல்லி பிடிவாதமாக இதை செய்கிறாள்.

“மிரும்மா”

“அம்மா, வாங்க! நல்லா தூங்கனீங்களா?”

“எனக்கு என்ன கவலைடி மிரு! ஆமோகமா தூக்கம் வருது. அன்பான மக, ஆசையான மகன், அருமையான மருமகன், செல்லக்குட்டி பேரன்! என் வாழ்க்கையே நிறைஞ்சு சந்தோஷத்துல தளும்பிக் கிடக்குதுடி! என்னை மாதிரி குடுத்து வச்சவங்க இந்த உலகத்துல யாரும் இல்லைடி”

“மிருது” மேலிருந்து மீண்டும் கத்தினான் குரு.

“போம்மா, தம்பிக்கு என்ன வேணும்னு பார்த்து எடுத்துக் குடுத்துட்டு வா! ஜெய் பக்கத்துல நான் இருக்கேன்”

“ஆபிஸ் போகறதுக்குள்ள பத்து தடவை மிரு, மிருது, மமி மருன்னு அட்டகாசம்டா சாமி” முனகிக் கொண்டே படி ஏறினாள்.

“ங்கொய்யால! இன்னும் என்ன பாஸ்?” கடுப்புடன் கேட்டாள் மிரு.

“மறுபடியும் மால்டீவ்ஸ் போகலாமா?”

“இப்போ நமக்கு ஒரு குட்டிப் பையன் இருக்கான்! பாஸ்க்கு அது ஞாபகம் இருக்கா? கடல் காத்து அவனுக்கு ஒத்துக்காது!”

“அவன் எதுக்குடி மால்டிவ்ஸ்கு? அம்மாவும் ரதிம்மாவும் நம்மல விட நல்லா பார்த்துப்பாங்க! நாம செகண்ட் ஹனிமூன் போலாம்”

“எது? இது செகண்ட் ஹனிமூனா? பிள்ளை தங்கனும்னா வெளியூர் போங்கன்னு டாக்டர் சொன்னத கேட்டு பூகேட் போனது, ஹவாய் போனது, பாலி போனது, போரா போரா போனது எல்லாம் என்ன பாஸ்?”

“அதெல்லாம் பிள்ளை வரம் வேண்டி போனதுடி! அந்த ட்ரீப்லாம் கிக் இருந்தாலும் லேசா ஸ்ட்ரேஸ்சும் இருந்துச்சு! இப்போ போக போறோம் பாரு இதுதான் ரியல் ஹனிமூன்! டிக்கட் போட்டாச்சு! அதே ஹோட்டல், அதே ரூம், அதே மாதிரியே புத்தம் புதுசா கசமுசா!”

வெட்கத்துடன் புன்னகைத்தாள் மிரு.

“புத்தம் புதுசா ஒன்னும் இல்ல பாஸ்! அதே பழைய மிருதான்”

“யார் சொன்னா அதே பழைய மிருன்னு! என் நெஞ்சுல நாளுக்கு நாள் வளந்துகிட்டே வர காதல்னால நீ இன்னும் இன்னும் புதுசாத்தான் தெரியறடா!”

குரு சொன்னதைக் கேட்டு கண் கலங்கியவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

“காதல் எல்லோருக்கும் தான் வரும் பாஸ்! வந்த மாதிரியே பலருக்கு மறைஞ்சும் போயிரும்! உங்கள மாதிரி சிலரால தான் கிடைச்ச காதல நாளுக்கு நாள் அன்பு எனும் உரம் போட்டு வளர்த்து செழிக்க வைக்க முடியும். அந்த வகையில நான் ரொம்ப குடுத்து வச்சவ பாஸ். மஐ மலவ் மயூ மகு மரு”

“மஐ மலவ் மயூ மமி மரு டில் டெத் டூ அஸ் பார்ட்” என சொன்னவன் தன் இணையை இறுக அணைத்துக் கொண்டான்.

சிக்கிச் சிக்கித் தவித்தவர்கள் காதல் கூட்டுக்குள் தாமாகவே சிறைப்பட்டார்கள். இது விடுதலை இல்லாத வாழ்நாள் சிறை!

 

தடைகளை தாண்டி வந்து

உன்னை நான் நெருங்கிட

கடலிலே மூழ்காமல்

உன்னிலே மூழ்கிட

தேவதை உன்னிடம்

வரம் ஒன்று கேட்டிட

காதலில் விழுந்தேன்

நீ தரிசனம் காட்டிட

ஏ பெண்ணே!!!

சிக்கிச் சிக்கித் தவிக்கிறேன்………….

(அடங்கியது தவிப்பு)

 

ENE–EPILOGUE

எபிலோக்

இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட

காரணம் இருக்கிறதே

கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி

அர்த்தம் கிடைக்கிறதே

தானு பிடிவாதம் பிடித்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தாலும் இருவரும் தனி தனி வீட்டில் தான் வசித்தார்கள். விபா எவ்வளவு கெஞ்சியும் ஒன்றாக இருக்க ஒத்துக் கொள்ளவில்லை தானு. தொட்டு கூட பேச மாட்டேன் என விபா துண்டை போட்டு தாண்டியும் அவள் மசியவில்லை. எப்பொழுதும் போல் சனிக்கிழமைகளில் மட்டும் தான் தேவி தரிசனம் கிடைத்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவள் படித்து முடிக்கும் வரை பொறுத்துக் கொண்டான் விபா. கடைசி பரீட்சை முடிந்த மறுநாளே திருமணம் செய்து கொண்டான்.

திருமணம்  இந்தியாவில் வட பழனி கோயிலில் சொந்தங்கள் மட்டும் கலந்து கொள்ள சிம்பிலாக நடைப்பெற்றது. விபாவுக்கு யாரும் இல்லாததால் கற்பகமே இருவருக்கும்  தாயாய்  நின்று திருமணத்தை   நடத்தி வைத்திருந்தார். சென்னையில் விபாவின் தொழில் துறை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்குமாக பிரமாண்டமாக ஒரு வரவேற்பும் நடைப்பெற்றது.

டேனி, தானுவின்  திருமணத்துக்கு வர முடியாத சூழ்நிலை. பரீட்சைகள் அசையமுடியாதபடி அணிவகுத்து நின்றன. மூக்கை சிந்திய தானுவிடம் ரிஷப்சனுக்கு வருவேன் என உறுதி அளித்திருந்தான்.  முடித்துவிட்டு வரவேற்புக்கு கோலாலம்பூர் வந்திருந்தான். சொன்னபடியே வந்தும் விட்டான்.

அவன் அப்பா தான் அவனை அழைக்க வந்திருந்தார்.
“டேட்” என கட்டிக் கொண்டான் அவரை.
“வெல்கம் மை சன்”
“எப்படி பா இருக்கீங்க?”
“குட் டேனி. நீ எப்படி இருக்க?” என மகனை ஆராய்ச்சியாக பார்த்தார் ஓங்.
“ எப்படி இருக்கேன், நீங்களே பார்த்து சொல்லுங்களேன்” என சிரித்தான்.
“ உன் உடல் நலத்த பத்தி கேட்கலப்பா. உன் மன நலத்தைப் பத்தி தான் கேட்குறேன். போன்லயும் எதையும் சொல்ல மாட்டிக்கிற. டான்யா வேற யாரையோ கல்யாணம் செய்யுறான்னு கேள்விபட்டவிடனே எனக்கு மனசே ஆறலப்பா”
“டேட், நீங்க கவலை படற அளவுக்கு ஒன்னும் இல்ல. அவ காதலிச்சவனையே கல்யாணம் செய்யறதுல நாம சந்தோஷம் தான் படனும்”
“என் மகன்னு வரப்போ, மத்தவங்க சந்தோஷத்த விட எனக்கு உன் சந்தோஷம் தான்பா முக்கியம்”
அவர் கையைப் பிடித்துக் கொண்டவன்,
“ வாங்க டேட், ஒரு காபி சாப்பிட்டு பேசலாம். அதுக்கு அப்புறம் இந்த மேட்டர பத்தி என்னிக்குமே நாம பேச கூடாது. ஷி இஸ் வேணுஸ் வைப் நவ்” என காபி ஷோப்புக்கு தன் தந்தையை அழைத்து சென்றான்.

காப்பியை உறிஞ்சியவாறே தந்தையை கவனித்தான். இந்த சில வருடங்களில் இன்னும் வயதான மாதிரி தோற்றமளித்தார் அவர். சீக்கிரம் திரும்பி வந்து அவரது பிஸ்னசை கவனித்துக் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டான்.

“டேட், என் கிட்ட ஏற்கனவே நீங்க சொன்னது ஞாபகம் இருக்கா? தூரமா இருக்கும் போது தான் இது நிஜ காதலா இல்ல இன்பாக்சுவேஷனா தெரியும்னு சொன்னீங்க. இப்போ நான் நல்லா இதை புரிஞ்சுகிட்டேன். அவ மேல நான் வைச்சிருந்த அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் தப்பா காதல்னு நான் முடிவு பண்ணிட்டேன். அந்த அடலாசண்ட் வயசுல இது தான் காதல்னு நினைச்சுட்டேன். இப்ப யோசிச்சு பார்த்தா, டான்யாவை ஒரு காதலியா என்னால கண்டிப்பா ஏத்துக்க முடியாதுன்னு தோணுது டாட். ஓபனா சொல்லுறேன், அவளை கிஸ் பண்ணுறதையோ, இல்ல அதுக்கும் மேல போறதையோ என்னால இமேஜின் பண்ணி கூட பார்க்க முடியல டேட். இந்த பிரிவுல நான் உணர்ந்தது பாசத்தை மட்டும் தான் காதல இல்லை. தேங்க் கோட்! நான் இத பத்தி அவ கிட்ட பேசனது இல்ல. அப்பவே ஒரு தயக்கம். அதுவும் நல்லதா போச்சு. அவ கண்டிப்பா ஹர்ட் ஆகியிருப்பா. அதோட அவ காதலையும் மறைச்சு என்னையும் ஏத்துக்க முடியாம தவிச்சுருப்பா. அவ வேணுவ லவ் பண்ணறேன்னு சொன்னப்ப, மனசுல ஒரு வலி இருந்தது. ஆனா காதலி போய்ட்டான்னு இல்ல, என் தோழி என்னை பிரிஞ்சுருவாளோன்னு தான் இருந்தது. எங்க பிரண்ட்ஷிப்ப யாராலும் பிரிக்க முடியாதுன்னு மனச தேத்திக்கிட்டேன். அவ சந்தோஷம் தான் என் சந்தோஷம் டேட்.”

மகனின் தெளிவான பதிலை கேட்டு ஓங் மன நிம்மதி அடைந்தார். என் மகன் பெரிய மனுஷன் ஆயிட்டான் என்ற பெருமிதமும் அவரிடம் தோன்றியது.

“ரொம்ப சந்தோஷம்பா. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. டான்யா உனக்கு நீல கலருல ஷெர்வானி சூட் வாங்கி குடுத்துருக்கா. வீட்டுல தான் இருக்கு. கண்டிப்பா அதை தான் போட்டுட்டு வரனும்னு சொல்லி இருக்கா. நாம கிளம்பலாம் டேனி”

 

ஓர்கிட் பால்ரூம், பார்க் ரோயல் ஹோட்டேல் கோலாலம்பூர்

உள்ளே நுழைந்தவர்கள் தோவலோகத்துக்கு தான் வந்துவிட்டோமோ எனும் அளவுக்கு ஜொலிஜொலித்தது ஓர்கிட் பால்ரூம். வாசலிலேயே விபாவும் தானுவும் அந்தி சாயும் நேரம் கடற்கரையோரம் கைகோர்த்து நிற்கும் ஆளுயர படம் வந்தவர்களை வரவேற்றது. சான்டிலியர் விளக்குகள் கலர் கலராய் வண்ணங்களை வாரி இறைக்க, வானவில் வர்ணத்தில் திரைச்சீலைகள் ஹாலை சுற்றி படர்ந்திருக்க, நடைப்பாதையில் சிவப்பு கம்பளம் விரிக்கப் பட்டு வருபவர்களை வா வாவென அழைத்தது. மேடை பூக்களாலே அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளித்தது. அதன் நடுவே மணமக்கள் அமருவதற்க்கு அழகிய வேலைப்பாடு கொண்ட நாற்காலி போடப்பட்டிருந்தது. சரியாக ஏழு மணிக்கே விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். வந்தவர்களை கற்பகமும், லெட்சுமியும் வரவேற்று அமர வைத்தனர். டெனியும், பிரபுவும், தருணும் பம்பரமாக சுழன்று மற்ற வேலைகளை கவனித்தனர். எட்டு மணிக்கு பெண்ணும் மாப்பிளையும் ஹாலுக்கு நுழைந்த போது, டிஜே குழுவினர் பாட்டைப் போட்டு அசத்திவிட்டனர். பாடலோடு நடன கலைஞர்கள் முன்னே ஆடி வர, அவர்கள் பின்னால் விபாவும் தானுவும் சிரித்த முகத்துடன் வந்தனர்.

“கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு
ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க
தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு”

விருந்தினர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரமாக அவர்கள் இருவரையும் வரவேற்றார்கள். தங்க நிற வேலைப்பாட்டுடன் கூடிய நீல சேலையில் தானு தகதகவென மின்னினாள். நீலமும் வெள்ளையும் கலந்த ஷெர்வானியில் கம்பீரமாக வந்த விபா எல்லோருடைய கண்ணையும் கவர்ந்தான். என்ன ஒரு ஜோடி பொருத்தம் என வந்தவர்கள் எல்லாம் அசந்து போய் விட்டார்கள்.

மணமக்கள் மேடையில் வந்து கேக் வெட்டி, இருக்கையில் அமர்ந்தவுடன் விருந்து கோலாகலமாக ஆரம்பித்தது. ஒரு பக்கம் காதுக்கு உணவாக இன்னிசை நிகழ்ச்சி, மறு பக்கம் வயிற்றுக்கு உணவாக விருந்து என தருண் தடபுடல் படுத்தி இருந்தான்.

“தானும்மா! உங்க அண்ணன் அசத்திட்டான். நான் செலவை பாதி ஏத்துக்கறேன்னு சொன்னதுக்கு கூட முடியாதுன்னுட்டான்”

“நானும்தான் சொன்னேன் இவ்வளவு செலவு எதுக்குன்னு. கேட்டாத்தானே. உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்கன்னு சென்டிமென்ட்ல கை வச்சிட்டான்”

“சரி விடு, அவன் கல்யாணத்துக்கு நாம அசத்திறலாம்”

“வேணு, இந்த சட்டை ட்ரை பண்ணப்போ அவ்வளவு நல்லா இல்லைன்னு தானே உனக்கு எடுத்தேன். இப்ப பார்க்க ஜோரா இருக்கியே.”

“ஏன்டி ஏன்? நல்லா இல்லாத சட்டையையா செம்மையா இருக்குன்னு வாங்கி குடுத்த?”

“இன்னிக்கு, வந்தவங்கள உபசரிக்கறத பார்ப்பனா? இல்ல எவளாவது உன்னை சைட் அடிக்கிறாளான்னு பார்ப்பனா? அதான் இதை வாங்குனேன். ஆனாலும் எதை போட்டாலும், உன் அழகு மட்டும் குறைய மாட்டிக்குதுடா என் புருஷா”

கலகலவேன சிரித்தவன்,

“ரதி மாதிரி என் பொண்டாட்டி கூட இருக்கறப்போ, பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ங்கற மாதிரி நானும் அழகா தெரியறனோ என்னவோ” என ஆசையாக அவளைப் பார்த்தான் விபா.

“ஜொள்ளு விடறத கொஞ்சம் நிறுத்து. ஆளுங்க சாப்பிட்டுட்டு மொய் குடுக்க வராங்க.” என சிரித்தாள் தானு.

“கல்யாணம் ஆன இந்த ஒரு வாரத்துல நல்ல நேரம் இல்லைன்னு உன்னை என் கண்ணுலயே காட்டுல. இப்ப கூட பார்க்காதேன்னா எப்படி தானும்மா. அதெல்லாம் முடியாது” என முறுக்கிக் கொண்டான் விபா.

“டேய் வேணு, என் மானத்த வாங்காதே. என் கூட படிச்சவங்கலாம் வராங்க. முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிக்க” என அவன் கன்னத்தைப் பிடித்து சமாதானம் செய்தாள் தானு.

அவர்கள் இருவரையும் கீழே இருந்து பார்த்த கற்பகமும், தருணும் தங்களுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டனர்.

விருந்து முடிந்து அனைவரும் கிளம்ப இரவு பதினொன்றுக்கும் மேல் ஆகி விட்டது. இன்றே நல்ல நாளாக இருந்ததால், மணமக்களுக்கு அந்த ஹோட்டலிலே க்ராண்ட் சூட் புக் செய்து கொடுத்திருந்தான் தருண். வந்திருந்தவர்களிடம் விடைப் பெற்று கொண்டு தங்களது அறைக்கு சென்றனர் விபாவும் தானுவும்.

ஏற்கனவே அவர்களின் லக்கேஜ் பேக் அங்கே வைக்க பட்டிருந்தது. நாளை காலை இருவரும் சுவிசலார்ந்துக்கு தேன் நிலவு செல்ல ஏற்பாடு செய்திருந்தான் விபா. உள்ளே நுழைந்த தானு பெட்சைட் டேபிலில் இருந்த பால் சொம்பைப் பார்த்து சிரித்துவிட்டாள்.

‘எல்லாருக்கும் ஒரு கவலைனா எங்க அம்மாவுக்கு ஒரு கவலை. சொம்பு இல்லாம முதலிரவு நடக்க கூடாதா என்ன’

கட்டிலில் அமர்ந்தவள் விபா கதவின் அருகிலே நின்று கதவை திறந்து திறந்து மூடுவதை கேள்வியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உள்ளுக்கு வராம அங்க என்ன செய்றீங்க?”

“கதவு நல்லா லாக் ஆகுதான்னு பார்க்குறேன். உங்க தாத்தாவ நம்ப முடியாது. திடீருன்னு வந்து நிப்பாரு.” என சீரியசாக சொன்னான் விபா.

அவன் முகத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் தானு.

“களைப்பா இருக்காருன்னு அவர அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க வேணு. நீங்க இங்க வாங்க”

“என்ன மரியாதை எல்லாம் தூள் பறக்குது”

“நீங்க என் கண்ணான கணவரா ஆகிட்டீங்களாம். இனிமே இப்படி தான் மரியாதையா கூப்புடனும்மாம். கற்பு ஆர்டர்”

சிரித்துக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தவன்,

“அவங்க முன்னாடி மட்டும் மரியாதையா கூப்பிடு. மத்த நேரமெல்லாம் எப்போதும் மாதிரியே இரு தானு. எனக்காக எதையும் மாத்திக்க வேணாம்”

“நான் மாறிட்டா பூமி தலைகீழா சுத்த ஆரம்பிச்சுரும். அதனால நீ பயப்படாத வேணு. நான் இப்படியே தான் இருப்பேன்” என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவள் இடிப்பில் கை வைத்து இன்னும் நெருக்கி அமர வைத்துக் கொண்டவன்,

“இப்பவாச்சும் ஐ லவ் யூ வேணுன்னு சொல்ல மாட்டியா தானும்மா?” என ஏக்கமாக கேட்டான்.

கண்கள் லேசாக கலங்க,

“நான் சொன்னாதான் தெரியுமா வேணு, உன்னை நான் எவ்வளவு லவ் பண்ணுறேன்னு. நீதான் என் உயிர், உணர்வு, ஆன்மா, எல்லாமே. ஐ லவ் யூ வேணு” என்றவள் அவன் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள். அவள் ஆரம்பித்த முத்தத்தை அவன் தான் முடித்து வைத்தான். மெல்ல மெல்ல அவளை தன் வசமாக்கி கொண்டிருந்தவனை,

“வேணு, பால் குடிக்கல. நிப்பாட்டு வேணு. பால் பால்” என என்ன முயன்றும் தானுவால் அவனை நிறுத்த முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்தியவன் கதவைப் பார்த்து முறைக்க ஆரம்பித்துவிட்டான்.

(உங்கள தாங்க முறைக்கிறான். முதலிரவுல பொண்டாட்டிகிட்ட ஜால்சா கூட பண்ண முடியாம நீங்க எல்லாம் தொடர்ந்து வந்தா அவனும் என்னதாங்க செய்வான். போங்க போய் வேற வேலை வெட்டி இருந்தா பாருங்க)

தானுவும் விபாவும் தேன்நிலவு கிளம்பியவுடன், இன்னும் இரு நாட்கள் பெற்றோருடன் இருந்து விட்டு ஆஸ்திரேலியா கிளம்பினான் டேனி. செக்கின் முடித்துவிட்டு வெய்ட்டிங் ரூமில் அமர்ந்திருந்தான். தாகமாக இருந்ததால் மினரல் வாட்டர் வாங்கலாம் என எழுந்தவன்,தன் முன்னே ஒரு பெண் பேக்கை தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு போவதை சிரிப்புடன் பார்த்திருந்தான். ஹேன்ட் பேக்குடனும் ட்ரோலி பேக்குடனும் போராடியவள், கையில் பிடித்திருந்த பாஸ்போர்டை தவற விட்டிருந்தாள். நடந்து சென்று அதை கையில் எடுத்த டேனி, போர்டிங் பாசை பார்த்து,

“டரண்யாஸ்ரீ (தரண்யாஸ்ரீ) சுந்தரம்” என அழைத்தான்.

திரும்பி பார்த்தவளை கண்ட டேனியின் இருதயம் ஒரு நிமிடம் நின்று மறுபடியும் துடித்தது. அசப்பில் தானுவைப் போலவே இருந்தவள், சோடபுட்டி கண்ணாடியோடு , வெள்ளை வெளேரென்ற நிறத்தில் கொலுக் மொலுக்கேன இருந்தாள் தரண்யாஸ்ரீ, சுந்தரத்துக்கும் மோனாவுக்கும் பிறந்த கடைக்குட்டி. டேனியின் கைகள் தானாக பியானோ வாசிக்க ஆரம்பித்தன.

நான்கு வருடங்களுக்குப் பிறகு,

சென்னை

“அப்பா செல்லத்துக்கு பசி எடுத்துருச்சா? நீங்க வாங்க கீழ போலாம். அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என தன் மூன்று வயது மகள் காவ்யாஸ்ரீயைத் தூக்கிக் கொண்டான் விபா.

“அப்பா சாயாங். பாப்பாக்கு பாலு. பசிக்குது” என அவனிடம் செல்லம் கொஞ்சி கொண்டே சென்றாள் மகள். அவள் அப்பா செல்லம். எல்லா விஷயத்துக்கும் அப்பா தான் வேண்டும். அவள் செய்யும் அலப்பறையை தானுவால் தாங்கி கொள்ளவே முடியாது. தானுவை விபாவின் பக்கத்தில் நெருங்கவே விடமாட்டாள். அம்மாவுக்கும் மேல் ரவுடி அவள்.

பால் கொடுத்து பிள்ளையை மறுபடியும் அறைக்கு தூக்கி வந்தான் விபா. கட்டில் காலியாக இருந்தது. பெட்சைட் டேபிளில் வண்ணப் பேப்பரில் சுற்றி வைத்திருந்த சிறு பரிசு பெட்டி அவன் கவனத்தை ஈர்த்தது. ஆமாம், இன்று விபாவின் பிறந்த நாள். மகளை கட்டிலில் அமர வைத்தவன், அவளை சுற்றி தலையணைகளை அடுக்கி விட்டு பொம்மைகளையும் எடுத்துப் போட்டான். அவள் விளையாட ஆரம்பித்ததும், அந்த பரிசை திறந்து பார்த்தவன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.

“தான்யாஸ்ரீ!!!!!” அவன் செய்கையை பாத்ரூம் கதவை சின்னதாக திறந்து வைத்துக் கொண்டு பார்த்து கொண்டிருந்த தானு, கதவை மூடி தன்னை சமன் செய்து கொண்டாள்.

‘முழுசா பேர் சொல்லி கூப்பிடுறான். செம்ம கோபத்துல இருக்கான் போல. இங்கயே கொஞ்ச நேரம் இருப்போம்’ என உள்ளேயே இருந்தாள்.

பாத்ரூம் கதவை படபடவென தட்டியவன்,

“கதவை திறடி” என வார்த்தையைக் கடித்துத் துப்பினான்.

பட்டேன கதவை திறந்தவள், இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

கையில் இருந்ததை ஆட்டி,

“என்னடி இது?” என ஆத்திரமாக கேட்டான் விபா.

“உனக்கு என்னோட பிறந்த நாள் பரிசு. பார்த்தா தெரியலையா?  ப்ரேக்னசி டெஸ்ட் ரிசால்ட். ரெண்டு கோடு காட்டுது. இன்னும் புரியலையா. நான் முழுகாம இருக்கேன். இந்த தமிழாச்சும் புரியுதா?” என மிதப்பாக கேட்டாள்.

“எப்படி நடந்துச்சு?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான் விபா.

“ஏன், உனக்கு தெரியாதா? தினந்தோரும் ராத்திரி என் தூக்கத்தைக் கெடுக்கறப்போ இது நடக்கும்னு தெரியாதா?” அவளும் சிலிர்த்துக் கொண்டாள்.

“கதைய மாத்தாதடி. போன தடவை பாப்பா பொறக்கறப்பவே நீ என்ன பாடு பட்ட. இனிமே நமக்கு பேபி வேணா, நான் ஓப்பரேஷன் பண்ணிக்கிறேன்னு சொன்னனா இல்லையா? மேடம் என்ன சொன்னீங்க? அதெல்லாம் வேணாம், நான் பில்ஸ் சாப்பிட்டுக்கிறேன். நீங்க எதுவும் செய்யாதீங்கன்னு சொன்னதானே. அப்படியும் உன்னை நம்பாம, நான் தானே காலையிலே உனக்கு மருந்து குடுத்து தண்ணியும் குடுப்பேன். பிறகு எப்படிடி?”

“நீ குடுத்துட்டு, அந்த பக்கம் போனவுடனே, நாக்கு கீழ வச்சிருந்த மருந்த நான் இந்த பக்கம் துப்பிருவேன். பாப்பாக்கு மூனு வயசு ஆகட்டும்னு தான் வெயிட் பண்ணேன். அதோட சிசேரியன் செஞ்ச உடம்பு, டாக்டர் மூனு வருஷம் கேப் விட சொன்னாங்க. இல்லைன்னா மறு வருசமே பெத்துருப்பேன்”

“ஏன்டி ஏன்? போன தடவை பத்து மணி நேரம் லேபர் வார்ட்ல நீ பட்ட கஸ்டத்தைப் பார்த்தும் இதுக்கு நான் எப்படிடி ஒத்துக்குவேன்?” பயத்தில் தன்னவளை இருக அணைத்துக் கொண்டான் விபா.

“நீ இருக்கறப்ப எனக்கு என்ன பயம் வேணு. அந்த சமயத்துல எங்க ரெண்டு பேரையும் எப்படி பாத்துக்கிட்ட நீ. இன்னும் பத்து பிள்ளைங்க கூட பெத்துக்குவேன்.”

“தொலைச்சி கட்டிருவேன் உன்னை. இது தான் கடைசி. இன்னும் பிள்ளைங்க வேணும்னா, தாய் தகப்பன் இல்லாம எத்தனை பிள்ளைங்க இருக்காங்க. அவங்களை எடுத்து வளர்ப்போம். இனிமே நோ ரிஸ்க். புரியுதா தானும்மா”

“எனக்காக நீ பார்த்து பார்த்து செய்யுறப்போ, உனக்காக நான் இத கூட செய்யமாட்டேனா வேணு? சரி. இந்த பிள்ளை தான் கடைசி. இனிமே வளர்த்துக்கலாம்” என ப்ராமிஸ் செய்தாள் தானு.

அலேக்காக அவளை தூக்கி கொண்டவன், கட்டிலில் கொண்டு வந்து படுக்க வைத்தான்.

“இனிமே கவனமா இருக்கனும். பிள்ளை பிறக்கற வரைக்கும் ஹாஸ்பிட்டல் போக வேணாம். அம்மாவை நம்ப கூட வந்து இருக்க சொல்லு. உங்க அண்ணன் மகனுக்கு தான் ஒரு வயசு ஆகுதே. அண்ணி தனியா சமாளிச்சிக்குவாங்க.”

“சரி கற்பு கிட்ட சொல்லுறேன். ஹோஸ்பிட்டலுக்கு லீவ் போட மாட்டேன். டெலிவரி கிட்ட வரப்போ பார்த்துக்கலாம் வேணு. கண்ணாடி மாதிரி என்னை தாங்காதே. போன தடவை என்னை நடக்க கூட விடல. அதான் டெலிவரி பிரச்சனை ஆயிருச்சு. பாப்பாவை மட்டும் நீ பார்த்துக்க என்னை நான் பார்த்துக்குவேன்”

“அதெல்லாம் முடியாது. நீ தான் என் முதல் பாப்பா. அப்புறம் தான் காவ்யா”

சிரித்தபடி விபாவின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள் தானு. இருவரும் கொஞ்சி கொண்டிருந்த வேளையில், படீரென ஒரு அறை விழுந்தது தானுவுக்கு.

“என் அப்பா. எட்டப் போ” என இடுப்பில் கை வைத்தபடி நின்றிருந்தாள் காய்வாஸ்ரீ.

“முதல்ல எனக்கு தான் அப்பா. அப்புறம் தான்டி உனக்கு” என மகளிடம் மல்லுக்கு நின்றாள் தானு.

மகளா அசருவாள்? ஒட்டி இருந்த தாய் தகப்பன் கன்னங்களுக்கு நடுவில் கையைக் கொண்டு வந்து பிரித்துவிட்டவள்,

“என் அப்பா. என் அப்பா, என் அப்பா” என உச்சஸ்தாயியில் கத்த ஆரம்பித்து விட்டாள். எழுந்து நின்று தன் இரு குழந்தைகளையும் இரு பக்கமாக அணைத்துக் கொண்டான் விபா. அவன் முகமெங்கும் புன்னகை.

இரு மாதங்களில் டேனியின் திருமணத்திற்காக மீண்டும் கோலாலம்பூருக்கு பயணித்தது விபாவின் குடும்பம். தானுவுக்கு லேசாக வயிறு தெரிய ஆரம்பித்திருந்தது. அவள் சொன்னதையும் கேட்காமல் மீண்டும் அவளை தாங்கு தாங்கென தாங்கினான் விபா.

சைனீஸான டேனியை மணந்து கொள்ள தரண்யாவின் குடும்பத்தில் ஒத்துக் கொள்ளாததால் அவள் வீட்டை விட்டு வந்திருந்தாள். அசப்பில் தன் மகளை போலவே இருந்த முன்னாள் கணவரின் மகளை ஏற்றுக் கொண்டு அவளுக்கு தாயாக கற்பகம் தான் இந்த திருமணத்தை நடத்துகிறார். அவளும் பாசம் காட்டிய கற்பகத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். தானுதான் விபாவிடம் புலம்புவாள், என்னை விட எங்க அம்மாவுக்கு அவ தான் பெருசா போயிட்டா என்று. ஆனால் நேரில் நல்லபடியே நடந்து கொள்வாள் தானு. அதுவும் தன் உயிர் நண்பனின் காதலி, அதற்காகவே பொறாமையை ஒதுக்கி சுமூகமாக பழகுவாள். தரண்யாவும் அக்கா அக்கா என இவளிடம் ஒட்டிக் கொள்வாள். தானுவிடம் சண்டை போடும் காவ்யா கூட தரண்யாவை சித்தி சித்தி என சுற்றி வருவாள். தரண்யாஸ்ரீ இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டான் விபா. பார்த்தால், மச்சினிய பார்ப்பியா,பார்ப்பியா என தனிமையில் வெளுத்து விடுவாள் தானு.

அவர்கள் கற்பகத்தின் வீட்டை அடைந்ததும், வீடே அல்லோல கல்லோலம் பட்டது. பிரபுவும் பானுஜாவுடனும், தன் இரு வயது இரட்டை ஆண் பிள்ளைகளோடும் வந்து விட்டான். எல்லோருக்கும் பெரியவளாகிய காவ்யா தான் மற்ற மூவரையும் அதட்டி உருட்டிக் கொண்டிருந்தாள். தருணும் வேலைக்கு லீவ் போட்டு விட்டு கல்யாண வேலைகளை கவனித்தான்.

எப்பொழுதும் போல் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு, அண்ணி இதை கொண்டு வாங்க அதை கொண்டு வாங்க என அதிகாரம் செய்து கொண்டிருந்தாள் தானு. தருணின் மனைவி தருணுக்கு மேல் அவனது தங்கையிடம் பாசமுள்ளவள். பெண் பார்க்க வந்த போது, தருணுக்கு முன், எனக்கு அண்ணிய புடிச்சுருக்கு என சொல்லி இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தவளே அவள் தான்.

எல்லோரும் தேநீர் அருந்தி, ஆசுவாசபடுத்தி கொண்ட போது கற்பகம் தான் குரல் கொடுத்தார்,

“எல்லாரும் குளிச்சுட்டு வாங்க. தாய் வீட்டு நலுங்கு வைக்கனும். தானு நீ டேனி வீட்டுக்கு போய் அங்க நலுங்க பார்த்துக்க. இங்க நாங்க பார்த்துகுறோம்” என விரட்டினார்.

நாளை காலை சர்ச்சில் மோதிரம் மாற்றி, இரவில் மண்டபத்தில் தாலி கட்டி கல்யாணம் செய்வதாக ஏற்பாடு.

விபாவும், தானுவும் தங்கள் மகளோடு டேனியின் வீட்டை அடைந்த போது, வாசலுக்கே வந்து தன் தோழியை அணைத்துக் கொண்டான் டேனி. விபாவுக்காக மட்டுமில்லாமல் டேனிக்காகவும் சண்டை போடுவாள் காவ்யா. அவர்கள் இருவரின் நடுவில் புகுந்து கொண்டவள்,

“டேனி!!!! கேரி மீ” என கையை நீட்டிக் கொண்டே நின்றாள். ஆசையோடு அவளை தூக்கி அணைத்துக் கொண்ட டேனி,

“மை லிட்டல் ஏஞ்சல்” என கொஞ்சினான்.

அவனுக்கும் நலுங்கு வைத்தவர்கள், சிறிது நேரம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

“நீ பயங்கரமான ஆளுடா டேனி. ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வந்த புள்ளைக்கு காதல் பாடம் சொல்லி குடுத்துட்டீயே” என கலாய்த்தாள் தானு.

வெட்கத்துடன் சிரித்தவனை,

“டேய் வைட்டு, வெட்கத்துல கூட நீ அழகாதான்டா இருக்க. அதான் என் அம்சமான மச்சினி கவுந்துட்டா” என வம்பிழுத்தான் விபா. அதற்கு தானுவிடம் ஒரு முறைப்பையும் பெற்று கொண்டான்.

‘நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிறா? இந்த பார்வை இன்னும் ஒரு வாரத்துக்கு வெளிய படுன்னு சொல்லுற பார்வையாச்சே. எப்படிடா சமாதான படுத்துவது’ என விழி பிதுங்கினான் விபா.

“நீ இல்லைன்னா கண்டிப்பா என் காதல் நிறைவேறி இருக்காது டான்யா. ஒவ்வொரு தடவை அவ என்னை வேணாம்னு சொல்லுறப்பையும் நீ குடுத்த மோட்டிவேஷன் தான் என்னை மீண்டும் மீண்டும் முயற்சி எடுக்க வச்சது. யூ ஆர் மை பில்லர் டான்யா.” என தன் தோழியைக் கட்டிக் கொண்டான்.

‘பொசுக்கு பொசுக்குன்னு என் பொண்டாட்டிய கட்டிப் புடிச்சுக்குறானே. இதெல்லாம் நான் ஒன்னும் கேட்க கூடாது. வாய் தவறி ஒரு வார்த்தை சொல்லிட்டா மட்டும் டார்ச்சர் பண்ணிருவா’ என கடுப்பில் உட்கார்ந்திருந்தான் விபா. அவன் மகளோ இன்னும் ஒரு படி மேலே போய் நண்பர்கள் இருவரையும் பிரித்து விட்டு டேனியின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

மறுநாள் அமைதியாக சர்ச் வெட்டிங் நடந்தது. இரவில் வேதங்கள் ஓத மங்கள நாணை தரண்யாவின் கழுத்தில் கட்டினான் டேனி. கற்பகம் தான் தரண்யாவை தாரை வார்த்துக் கொடுத்தார். ஓங்கும் கேத்ரீனும் மகனின் திருமணத்தைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். விருந்தோடு லைவ் பேன்டும் ஏற்பாடு செய்திருந்தனர். சம்பிரதாயங்கள் முடிந்து சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் லைவ் பேன்ட் கச்சேரி பார்க்க அமர்ந்தார்கள்.

மேடையில் ஏறிய விபா, தானுவையும் மேலே வர சொல்லி சைகை காட்டினான். அவள் பின்னோடு காவ்யா, தருணின் மகன், பிரபுவின் மகன்கள் எல்லோரும் ஏறினார்கள். தானு கிட்டாரை கையில் எடுக்க விபா மைக்கை சரி பார்த்தான். பிள்ளைகள் அவர்கள் அருகில் வரிசையாக நின்று கொண்டார்கள்.

மியூசிக் ஆரம்பிக்கும் போதே, கீழே இருந்து பிரபு,

“பேமிலி பாட்டா மச்சான்? கலக்கு ராசா நீ” என கத்தினான்.

சிரித்துக் கொண்டே, தானு கிட்டாரில் சுருதி ஏற்றுவதற்காக காத்திருந்தான் விபா. பின்பு அவள் வாசிக்க, இவன் பாட ஆரம்பித்தான். குழந்தைகள் அவர்கள் இஸ்டத்துக்கு ஆட ஆரம்பித்தார்கள்.

“காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும்,நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்,
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்கவே என் விழிகள் வாழுதே
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கேனவே தருவேன் கண்ணே
உன்னருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே …கண்ணே”

 

என உருக்கமாக தானுவைப் பார்த்து பாடி நிறுத்தியவன், மைக்கை தூக்கி டேனியிடம் வீசினான். அழகாக கேட்ச் பிடித்த டேனி, பாடிக்கொண்டே மேடை ஏறி வந்தான்,

“தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை ,,அடியே ஏ புள்ள ,,,,”

டேனி தமிழில் பாடியதும் தானுவுக்கு கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது. ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்துக் கொண்டே,

“காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும்,நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்,
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்”

என தரண்யாவை பார்த்து கண் சிமிட்டிப் பாடினான் டேனி. அவனின் பார்வையில் அழகாக வெட்கப்பட்டாள் தரண்யா.

விபாவையும் அருகில் அழைத்து அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள் தானு. நானும் நானும் என பிள்ளைகளும் அவர்களைக் கட்டி கொண்டார்கள்.

கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கற்பகம், கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘வீட்டுக்கு போய் முத வேலையா பிள்ளைங்களுக்கு சுத்தி போடனும். ஊரு கண்ணே அவங்க மேலதான்’ என நினைத்துக் கொண்டார்.

 

நாமளும் அவங்கள கண்ணு போடாம, எல்லா வளங்களையும் பெற்று நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தி விடைபெறுவோம்.

 

முற்றும்.

SST–EPI 29

அத்தியாயம் 29

மலேசிய எனப்படுவது தீபகற்ப மலேசியாவையும் கிழக்கு மலேசியா என அழைக்கப்படும் சபா சரவாக் மாநிலத்தையும் சேர்ந்தே குறிக்கும். இந்நாட்டில் இன்னும் மன்னராட்சி இருந்தாலும், இது ஜனநாயக நாடாகவே கருதப்படுகிறது.

 

“அம்மா”

“என்னடாம்மா?”

“உன் கிட்ட சொல்லாமலே நான் லவ், கல்யாணம்னு போய்ட்டேன்னு என் மேல கோபமாமா?”

திருமணம் என சொல்லி மிருவை கெடாவில் இருந்து அழைத்து வந்துவிட்டதாக குரு சொல்லியிருந்தான் ரதியிடம். அவர் அண்ணாவின் வீட்டில் இருந்து அழைத்து வந்து ரதியையும் கணேவையும் தன்னுடனே வைத்துக் கொண்டான். ரதி பழைய வீட்டுக்கே போகிறேன் என கேட்க, தனது பேச்சுத் திறமையால் அவரை மடக்கி தன்னுடனே இருக்க செய்து விட்டான் குரு. போனஸ்சாக மிருவும் அவன் கண் எதிரிலேயே இருக்கிறாள். திருமணத்துக்கு முன்னரே லீவிங் டுகேதெர் அதுவும் காதலியின் குடும்பத்துடன் வாழ்பவன் இவன் ஒருவனாகத் தான் இருக்கும்.

“உன் மேல என்னைக்குமா நான் கோபப்பட்டுருக்கேன்! பாலைவனமா இருந்த என் வாழ்க்கையில கடவுள் கொடுத்த பூந்தென்றல் நீ மிரும்மா! உங்கப்பாவப் பிடிச்சுட்டு போனப்போ, அவர நம்ம கூட கூட்டி வரனும்னு அங்கயும் இங்கயும் அலைஞ்சதுல உங்க ரெண்டு பேரயுமே நான் சரியா கவனிக்கல. அந்த சின்ன வயசுலயே என் கஸ்டம் அறிஞ்சு தம்பிய தங்கமாட்டம் பாத்துக்குவ நீ! ஒரு தடவை அவன் பசிக்கு பால் கலக்கிக் கொடுக்கறேன்னு சுடுதண்ணீய கையில கொட்டிக்கிட்டு, அதை என் கிட்ட கூட காட்டாம மறைச்ச பாரு, அப்போத்தான் நான் வெறும் பொண்டாட்டி இல்ல ஒரு அம்மாவும் கூடன்னு மூஞ்சில அறைஞ்ச மாதிரி தெளிவு வந்துச்சு. அம்மாவுக்கே பாடம் சொன்ன புத்திசாலிடி நீ! உன் வாழ்க்கைக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாமலா போயிரும்.  நீ எது செஞ்சாலும் உனக்குத் துணையா நான் இருப்பேன் மிரும்மா”

“அம்மா!”

“என்னம்மா? என்ன ஓடுது உன் மனசுல? மாப்பிள்ளை மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் தேதி சொன்னதுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க!”

“எனக்குப் பயமா இருக்குமா!”

“கல்யாணம்னு வந்துட்டாலே பயம் தானா வந்துரும் மிரும்மா! அதுவும் தன் குடும்பம் விட்டு இன்னொரு குடும்பத்துக்குப் போற பொண்ணுங்களுக்கு அதிகமாவே பயம் இருகும்டி! போக போக சரியாப் போயிரும்”

“சரியா போயிருமாம்மா? பாஸ் இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணல. ஆனாலும் ஒரு பக்கம் பக்கு பக்குன்னு இருக்குமா!”

“மாப்பிள்ளை தம்பி உன் கண்ணப் பார்த்து புரிஞ்சுகிட்டே எல்லாம் செய்யறாரு! நீ என்னடான்னா பயம் பாயாசம்னு சொல்லிட்டு இருக்க”

“கல்யாணம்னா சும்மாவா ரதி? இது வரைக்கும் என்னையும் உங்க ரெண்டு பேரை சுத்தி மட்டும் வாழ்க்கை இருந்துச்சு. இனிமே பாஸ் அவர் பேமிலி, அவர் ப்ரேண்ட்ஸ்னு என் வட்டம் விரியுதுல. என்னால அவர் ஸ்டேட்டஸ்கு ஈடு குடுத்து நடக்க முடியுமான்னு டவுட் வருது. நான் வாயத் திறந்தாலே கச்சடாவ வார்த்தைங்க வந்து விழும் சில சமயம். ஆரம்பத்துல என் மேல உள்ள அன்புல அதெல்லாம் கண்டுக்கலைனாலும் போக போக பாஸ்க்கு வெறுப்பு வந்துட்டா! பயந்து வருதும்மா”

கண்ணில் பயத்தைத் தேக்கி கேட்கும் தன் தைரியசாலி மகளை பாசத்துடன் பார்த்தார் ரதி.

“மிரும்மா நாம ஒரு வாஷிங் மிசின் வாங்குறோம்னு வை. அது ஒரு மூனு வருஷம் உழைக்கும்னு கேரண்டி குடுக்கறாங்க! ஆனா நெஜமா அது மூனு வருஷம் உழைக்குதா? பாதியிலேயே புட்டுக்கறதும் உண்டு, பல சமயம் மூனு வருஷத்துக்கு மேலயும் உழைக்கறதும் உண்டு. அது மாதிரி வாழ்நாள் முழுக்க உனக்கு நான் எனக்கு நீன்னு கேரண்டி குடுத்துதான் அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து கல்யாண வாழ்க்கையில நுழையறாங்க! ஆனா அது வாழ்நாள் முழுக்க நிக்கிதா? பலர் உயிர் போகற வரை சேர்ந்து இருக்காங்க, சிலர் பாதியில பிரிஞ்சிடறாங்க! இதெல்லாம் வாழ போறவங்க கையிலயும் அந்த கடவுள் கையிலயும் தான் இருக்குடா. வாழ்க்கைய அது போக்குல வாழ பாருடா! ஐயோ இவர் விட்டுட்டுப் போயிருவாறோ, பிடிக்காம போயிருமோன்னு பயத்துல வாழ்ந்தா சந்தோஷம் எங்கிருந்து வரும்?”

“ரதி பேபி, என்னம்மா பேசறீங்க நீங்க!”

“வாழ்க்கை கத்துக் குடுத்த பாடம்டி! ஆசைப்பட்டு வீட்ட எதிர்த்துட்டு உங்கப்பாவ கல்யாணம் செஞ்சேன்! அவர் கூட வாழற வரைக்கும் நெஞ்சு நிறைய காதலோட தான் வாழ்ந்தேன். அவர் ஊருக்குப் போயிட்டாலும், தோ இப்ப வரைக்கும் அவர நினைச்சே வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கேன்! மொழி புரியாம, அவர் கலாச்சாரம் தெரியாம, பழக்க வழக்கம் அறியாம காதல மட்டுமே அடிப்படையாக் கொண்டு வாழ்ந்துட்டேன். மனசுல காதல் இருக்கறப்போ ஜாதி, மதம், அந்தஸ்த்து இப்படி மத்த விஷயமெல்லாம் காணாப் போயிரும்டி. மாப்பிள்ளைக்கு உன் மேல அவ்வளவு பாசம்டி. உன்னை கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பாரு மிரு!” என்றவர் தொண்டையை செறுமிக் கொண்டு,

“உனக்கு ஒரு நல்லது நடக்கறப்போ உங்கப்பா பக்கத்துல இல்லையேன்னு நினைக்கறப்போத்தான் எனக்கு கவலையா இருக்குடி” என சொல்லி கண் கலங்கினார் ரதி.

மிரு தாவி தன் அம்மாவை அணைத்துக் கொண்டாள். முன்பு பணபலம் இல்லை, அதனால் தனது தகப்பனை தேட வழியில்லை. திருமணம் எனவும், தந்தை ஸ்தானத்தில் அவர் இருந்தால் நன்றாக இருக்குமே என இவள் ஆசைப்பட உடனே தேட முனைந்தான் குரு. லூவிஸ் தனது ஊருக்குப் போனதுமே இன்னொரு திருமணம் முடித்துக் கொண்டதாகவும், பிள்ளை குட்டிகளுடன் நன்றாகவே வாழ்வதாகவும் தகவல் கிடைத்தது. அழைத்து வரவா என இவன் கேட்க, வேண்டவே வேண்டாம் என இவள் மறுத்துவிட்டாள். ரதியிடம் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என சொல்லிவிட்டாள் மிரு.

பல கஸ்டங்களை அனுபவித்தவர், கணவர் வேறு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார் என கேட்டு ஏன் மனம் வாட வேண்டும்! அப்பாவின் காதல் நிஜமோ இல்லையோ தன் அம்மாவின் காதல் நிஜமல்லவா! வாழும் வரை என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் எனும் எண்ணத்திலாவது இருக்கட்டும் என விட்டு விட்டாள் மகள். ரதியைப் போல இன்னும் பல நூறு பெண்கள் இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

“எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீதான்மா! என் கல்யாணத்துக்கு உன் ஆசிர்வாதம் மட்டும் போதும் எனக்கு! அவர நினைச்சு அழுதுட்டு இருக்காதம்மா! சாப்பிடறப்போ விக்கிக்கப் போகுது எங்கப்பாவுக்கு. உன் சாப்பாட்டுக் கொடுமையில தப்பிச்சு அவர் அங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டுட்டு இருப்பாரு. அதுக் கூட பொறுக்காம இப்படி விக்கிக்க வைக்கறியே, இது நியாயமா ரதி பேபி?” என வம்பிழுத்தாள் தன் அன்னையை.

“அடியே! நான் ருசியா பொங்கிப் போடாமத்தான் இப்படி வஞ்சகமில்லாம வளந்துருக்கியா?” சிலிர்த்துக் கொண்டார் ரதி.

கண்ணீர் போய் சிரிப்பு எட்டிப் பார்க்கும் தன் அன்னையின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள் மிரு. பின்பே யாரோ தன்னைப் பார்ப்பது போல இருக்கவும் ரூம் கதவை நோக்கினாள். அங்கே குரு யோசனையுடன் அவளைப் பார்த்தப்படி நின்றிருந்தான். இவள் கவனிக்கவும் உள்ளே வந்தவன் ரதியிடம்,

“நைட் வெளிய சாப்பிடப் போலாமா ரதிம்மா?” என கேட்டான்.

அவரை வீட்டுக்கு அழைத்து வந்ததும் முதல் வேலையாக ஒரு வீல்சேர் வாங்கிக் கொடுத்தான் குரு. வீட்டில் ஊன்றுகோலை உபயோகித்தாலும், வெளி இடங்கள் செல்ல வீல்சேரே வசதி என சொன்னவன், வெளியே போகும் போது அதில் அமர்த்தி அவரையும் அழைத்து செல்வான். வீல்சேர் கொஞ்சம் விலை அதிகமாக இருக்கவும், தாங்கள் வாழ்ந்த பழைய வாழ்க்கையில், மகளிடம் ஊன்றுகோலே தனக்கு வசதி, வீல்சேர் எல்லாம் எதற்கு என மறுத்துவிட்டார். மிருவிடம் மறுக்க முடிந்தவரால் மருமகனிடம் வாசிக்க முடியவில்லை. இப்பொழுதெல்லாம் சந்தோஷமாகவே அதில் அமர்ந்து வெளியிடங்களுக்கு தன் குடும்பத்துடன் செல்கிறார் ரதி.

“மிருவ கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க தம்பி. நான் ரொட்டி சாப்பிட்டு சீக்கிரம் படுக்கறேன். கொஞ்சம் களைப்பா இருக்கு” என மறுத்துவிட்டார். கணேவும் அடிக்கடி லீவ் போட்டதால் படிக்க பாடங்கள் மலை போல் குவிந்துக் கிடக்கின்றன என சொல்லி வர மறுத்து விட்டான்.

எனவே இவர்கள் இருவர் மட்டும் டின்னருக்கு கிளம்பினார்கள்.

காரை மிருவே ஓட்டினாள்.

“நீங்க சாப்பிடற இலைதலைக்கு எதுக்கு வெளிய போகனும்? வீட்டுல நானே செஞ்சு குடுக்க மாட்டேனா பாஸ்?”

“நானே கூட செஞ்சு சாப்பிட்டுக்குவேன் மிரு! ஆனா எனக்கு உன் கூட டேட்டிங் போகனும் மாதிரி இருக்கே! கல்யாணம் ஆகிப் போனா அதுல என்ன கிக்! நாம ரெண்டு பேரும் இப்படி வெளிய போனதே இல்ல மிருது. எனக்கு மட்டும் என் காதலிய சினிமா, பார்க், பீச், ரெஸ்டாரண்ட்னு கூட்டிட்டு சுத்தனும்னு ஆசை இருக்காதா?”

“டேட்டிங் போறவர் தான் எங்கம்மாவையும் தம்பியையும் கூட கூப்டீங்களா?”

“வீட்டுல அவங்களும் இருக்கறப்போ எப்படி கூப்பிடாம இருக்கறது மிரு! அது மேனர்ஸ் இல்ல. அவங்க ரெண்டு பேரும் வந்திருந்தா டேட்டிங், பேமிலிட்டிங் ஆகிருக்கும். நேரா பார்த்து சைட் அடிக்காம ஓரக்கண்ணால உன்னை சைட் அடிச்சிருப்பேன்! அவ்ளோதான் வித்தியாசம்” என புன்னகைத்தான் குரு.

கியர் பிடிக்கும் இடது கையால் குருவின் கைப்பற்றி தன் இதழில் அழுத்திக் கொண்டவள்,

“மஐ மலவ் மயூ மகு மரு!” என ஆசையாக சொன்னாள்.

அப்படியே அவளின் கையை இழுத்து மீசை உராய முத்தமிட்டவன்,

“மஐ மலவ் மயூ மமி மரு!” என காதலுடன் சொன்னான். அதன் பிறகு அவள் கையைப் பற்றிய படியே வந்தான். ரெஸ்டாரன்ட் இருக்கும் மாலை அடைந்ததும்,

“கையை விடுங்க பாஸ்! ரிவர்ஸ் கியர் போடனும்” என்றாள் மிரு.

“நம்ம லவ்வுக்கு ரிவர்ஸ் கியரே கிடையாது. படிப்படியா கியர் போட்டு என் காதல் வட்டத்துக்குள்ள வந்துட்ட. இனிமே நோ ரிவர்ஸ்! நாலாவது கியர் மட்டும்தான். விடு நான் போடறேன்” என்றவன் அவள் கையை விலக்கி அவனே ரிவர்ஸ் கியர் போட்டான். இருவரும் சிரிப்புடன் பார்க் செய்து விட்டு மாலின் உள்ளே நுழைந்தனர்.

கேபிள் கார் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான் மிருவை. அது ஒரு வெஸ்டர்ன் உணவு கடையாகும். உட்காரும் இடம் கூட கேபிள் கார் போல பெட்டி பெட்டியாக இருக்கும். மிரு கிண்டல் அடித்தது போலவே குரு சாலட்தான் ஆர்டர் செய்தான். அதனோடு மஷ்ரூம் சூப். இவளோ கிரில் சிக்கன் ஆர்டர் செய்தாள். உணவு வரும் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“மிரு”

“யெஸ் பாஸ்”

“இன்னும் என்னை பாஸ்னு தான் கூப்பிடனுமா மிரும்மா?”

“அது என்னமோ பாஸ்னு கூப்பிடத்தான் பிடிக்குது. இந்த மிருவுக்கு பாஸ் நீங்க! மை ஹார்ட், சோல், பாடி எல்லாத்துக்கும். சோ பாஸ்னுதான் கூப்பிடுவேன். இப்பவும் எப்பவும்”

அவள் சொன்னதை கேட்டு புன்னகை முகமாகிப் போனான் குரு. எதிர்புறம் அமர்ந்திருந்தவன், கை நீட்டி அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

“என் மேல எப்போ மிரு காதல் வந்துச்சு?”

“யாருக்குத் தெரியும்!”

“என்னடி பதில் இது?” பட்டென கையை விட்டு விட்டு முறுக்கிக் கொண்டான். இவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இவளாக எட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“இதுக்கு பதில் பாட்டா பாடவா பாஸ்?

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது

விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது

முழு காதல் என்று வந்தது தெரியாதே

அது தெரியாதே!” என மெல்லிய குரலில் பாடியவள் வெட்கப் புன்னகை சிந்தினாள்.

“ஓ மை குட்நஸ்!”

“என்னாச்சு பாஸ்”

“இன்னும் டூ வீக்ஸ் இருக்கு மிரு நம்ம கல்யாணத்துக்கு. நீ இப்படி வெட்கம்லாம் பட்டீனா ஹனிமூன் போய்ட்டு வந்து கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லிருவேன்”

“அதுவா வெக்கம் வருது நான் என்ன செய்ய?”

“ஒன்னும் செய்ய வேணா! நம்ம பர்ஸ்ட் நைட்கு இப்படியே வெட்க வெட்கமாப்படு! சீக்கிரமா மில்க் குடிக்க மினி மிரு வந்துரும்”

“போங்க பாஸ்! அதுவே ஏதோ ஒரு சமயம்தான் வருது. இப்படி நீங்க கிண்டல் அடிச்சா வராமலே போயிரும் வெட்கம்”

“உனக்கு வெட்கம் வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் மிரு. வரலைனா ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என அந்த ரொம்பவை அழுத்தி சொல்லிக் கண் சிமிட்டினான் குரு.

“இப்போ நான் என் காதல பத்தி சொல்லனுமா வேணாமா?”

“சரி, சரி சொல்லு” என சிரித்த முகமாக விட்டுக் கொடுத்தான்.

“ஆரம்பத்துல உங்க மேல செம்ம கடுப்புத்தான்! எதுக்கெடுத்தாலும் மரியாதை பத்தி கிளாஸ் எடுக்கறது, மிரட்டறது, வம்பிழுக்கறது, டபுள் மீனிங்ல பேசறதுன்னு கொலை வெறி வரும் உங்க மேல! போக போக அதை எல்லாம் எதிர்ப்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். உங்களோட மார்னிங் அலாரம் சர்விஸ் வந்தாதான் எனக்கு புத்துணர்ச்சியாகவே இருக்கும். எவ்வளவுதான் என்னை வம்பிழுத்தாலும் முதல் தடவைப் பார்த்த மாதிரி, என்னைக் கழுத்துக்கு கீழ நீங்க பார்த்ததே இல்ல. உங்க கூட இருக்கறப்போ ஷால் எங்கடா, முன்னுக்கு இழுத்து மூடனுமேன்னு தோணனுது இல்ல. உங்க கிட்ட வார்த்தைக்கு வார்த்தை வம்பு பண்ணறப்போ அவ்ளோ நல்லா இருக்கும். நீங்க மூவிக்கு கேர்ள் ப்ரேண்ட் கூட வந்தப்போ கூட நான் சிரிச்ச முகமா இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள்ள சுருக்குன்னு வலிச்சது. உங்கள ட்ரோப் பண்ணிட்டுப் போறப்போ எல்லாம் மனசுல திடீர்னு ஒரு வெறுமை வந்த மாதிரி இருக்கும். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியாமலே சுத்திட்டு இருந்தேன்.”

ஐஸ் வாட்டரை எடுத்து அருந்தியவள்,

“நீங்க லவ் சொன்னப் போதுதான், நானும் உங்கள லவ் பண்ணறேன்னு உணர்ந்தேன்! உணர்ந்த விஷயம் எனக்கு சந்தோஷத்தக் குடுக்கல பாஸ்! மனசுல பாராங்கல்ல வச்ச மாதிரி ரொம்ப பாரமா இருந்துச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என் கேர்ள்பிரண்டா இருக்கனும்னா கூட ஒரு தகுதி வேணும்னு ஆரம்பத்துல சொன்னீங்களே! அந்த தகுதின்ற சொல் அப்போ என்னைத் தாக்கலைனாலும், நீங்க லவ் சொன்னப்போ கண் முன்ன வந்து நின்னுருச்சு! நமக்குள்ள இதெல்லாம் சரி வராதுன்னு மனச கட்டுப்படுத்திக்கிட்டேன் பாஸ். ஆனாலும் ரொம்ப நாள் உங்கள தவிக்க வைக்க முடியலை. நானும் சேர்ந்தல்லவா தவிச்சுக் கிடந்தேன்” குரலில் வலியோடு பேசியவளை பார்க்க முடியாமல், எழுந்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான் குரு.

மிருவின் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் சற்று நேரம் அமைதியாகவே இருந்தான்.

“மிருது! நீ ரதிம்மா கிட்ட பேசிட்டு இருந்தத நான் கேட்டேன்! என் காதல எத்தனையோ விதமா சொல்லியும் ஏன் இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலன்னு மனசு ரொம்ப கவலையா இருந்துச்சு. கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல என் நேசம் காணா போயிருமோன்னு உனக்குள்ள இருக்கற பயம் எதனாலன்னு ஒரே யோசனையா இருந்துச்சு. இப்போ நீ பேசவும் தான், நான் சொன்ன தகுதின்ற ஒரு வார்த்தை உன்னை எந்தளவு பாதிச்சிருக்குன்னுப் புரியுது மிருது” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே உணவு வந்தது.

“முதல்ல சாப்பிடும்மா! அப்புறமா என் சைட் எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லறேன்” என்றவன், உணவை அவள் புறம் நகர்த்தினான். அமைதியாகவே சாப்பிட்டார்கள் இருவரும். இவளது கிரில் சிக்கனை அவனுக்கு கொஞ்சம் வைத்துக் கொடுத்தாள் மிரு.

“கிரில் பண்ணதுதான், பொரிக்கல! சோ கலோரி குறைவுதான். சாப்பிடுங்க பாஸ்” என கொடுத்தாள். பொரித்து எண்ணெயாக இருக்கும் சிக்கான் ச்சோப்பை விரும்பி சாப்பிடுபவள், அவனுக்காக கிரில் சிக்கனுக்கு மாறி இருந்தாள். ஹெல்த்தியாக உண்டு அவனோடு நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் முடிவுக்கு வந்திருந்தாள் குருவின் மிரு. சாப்பாட்டை இவள் குறைத்தால் 69 கலோரியையும் 91 கலோரியையும் குறைப்பதைத் தான் அவன் பார்த்துக் கொள்வானே.

சாப்பிட்டு பில்லை செட்டில் செய்து விட்டு இருவரும் மாலில் இருந்து வெளியே வந்தார்கள். அங்கிருந்த செயற்கை நீறுற்று முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள் இருவரும். மிருவின் கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டவன், மெல்ல பேச ஆரம்பித்தான்.

“கிரேப்ல நீ என்னை முதன் முதலா ஏத்துனப்போ, யாரு எவருன்னு கூட நான் கண்டுக்கல மிரு. நான் பாட்டுக்கு என் ஈமேயில் செக் பண்ணிட்டு வந்தேன். போன் பேச நீ அனுமதி கேட்டப்போ, சரி சொல்லிட்டு நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்தேன். நீ பேசனது எல்லாம் கேட்டுச்சு. வேலைக்கு ட்ரை செய்யற, டீ லேடி வேலையா இருந்தாலும் பரவாயில்லன்னு சொன்னப்போ பாவமா இருந்தது. அதோட கம்ப்யூட்டர் லைன் தான் எடுத்துப் படிச்சிருக்கன்னு தெரிஞ்சப்போ, சரி வேலை போட்டுக் குடுக்கலாம்னு தோணுச்சு. அந்த நினைப்பு வந்தப்பலாம் நான் உன்னைப் பார்க்கவே இல்லை மிரு”

“பார்க்காமலே உதவி செய்ய நினைச்சீங்களா?” ஆச்சரியமாக கேட்டாள் மிரு.

“யெஸ்! இந்த குருவோட மனசுலயும் கொஞ்சமே கொஞ்சம் ஈரம் இருக்கு மிரு” புன்னகைத்தான் அவன்.

“அப்புறம்?”

“காசு குடுக்கறப்போத்தான் உன் முகத்தப் பார்த்தேன். வாவ் வாட் அ எக்ஸோடிக் பியூட்டின்னு திகைச்சுட்டேன்! நீ சார் சார்னு அவசரமா கையை நீட்டவும் கையைப் பார்க்க குனிஞ்சவன் வாவ் வாட் அ டிவைன் பியூட்டின்னு மலைச்சுப் போயிட்டேன்”

அவன் கையிலேயே ஒன்று போட்டாள் மிரு.

“யூ சீ மிரு! அப்படி ஸ்டேர் பண்ணது இண்டீசண்ட் தான். வெரி சாரி! ஒரு பைவ் செகண்ட் பார்த்துருப்பனா? நான் செய்யறது தப்புன்னு நானே பார்வைய விலக்கிருப்பேன்! அதுக்குள்ள நீ கண்டபடி திட்டிட்ட. என்னை யாரும் அப்படிலாம் திட்டனது இல்ல தெரியுமா! கபோதி அப்படி இப்படின்னு. சட்டுன்னு கோபம் வந்திருச்சு எனக்கு. அவ்ளோ கோபத்துலயும் கார்ட் குடுத்துட்டுத்தான் வந்தேன். ஏன் குடுத்தேன்னு எனக்கேத் தெரியல! உன் மேல ஆரம்பத்துல வந்த பரிதாபமா, இல்ல அதுக்கு அப்புறம் வந்த ஒரு மயக்கமா என்னன்னு தெரியல. ரெண்டு மூனு நாளா மனசுக்குள்ள உன்னைத் திட்டிட்டே இருந்தேன். என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்டாளேன்னு”

“உங்களையாச்சும் திட்டிட்டு விட்டேன்! சில பேர செருப்பக் கழட்டி அடிச்சிருக்கேன்! அந்த விஷயத்துல எனக்கு அவ்ளோ கோபம் வரும் பாஸ்”

“நீ வேலைக்கு வந்தப்போ எனக்கு ரொம்ப ஹேப்பியா ஆகிருச்சு மிரு! என்னை கபோதின்னு சொன்ன உன்ன வம்பிழுக்கனும், எதிர்த்துப் பேச முடியாத நிலையில வச்சு வாட்டனும்லாம் நினைச்சேன். ஆனா முடியல மிரு. அப்படியே உன் துறு துறு குணத்துல என்னை கட்டிப் போட்டுட்ட! தகுதி பத்திப் பேசனது கூட என்னை நீ ஒரு பெர்வர்ட் மாதிரியே ட்ரீட் பண்ணதுனாலத்தான் மிரு. என்னமோ உன்னை கையப் பிடிச்சு இழுத்துருவேனோன்ற மாதிரி பார்க்கறதும், மறுபடியும் கபோதி வோர்ட் யூஸ் பண்ணதும் தான் என் கோபத்துக்கு காரணம். அதான் உன் மனச கஸ்டப்படுத்தனும்னு தகுதி பத்திப் பேசனேன். நீ என்னன்னா சிரிச்சுட்டே என்னை முட்டாளாக்கிட்டுப் போயிட்ட!”

“நீங்க சொன்ன மாதிரி எங்க என் கையைப் பிடிச்சு இழுத்துருவீங்களோன்னு பயம்தான் பாஸ் காரணம். நீங்க தகுதி பத்தி பேசவும் அப்பாடான்னு தான் இருந்துச்சு”

“உன் கூட பழக பழக என்னைக் கிறுக்காகிட்ட மிரு. நீ பக்கத்துலயே வேணும்னு என் மனசு முரண்டு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. நீ சிரிக்கறத கேட்டுட்டே இருக்கனும்னு தோணும். அந்த மன அழுத்தத்த என்னால தாங்கிக்க முடியல. என்னை இப்படி ஆட்டி வைக்கறியேன்னு ஒரு பக்கம் உன் மேல கோபமா வரும். சரி கொஞ்ச நாள் பழகிப் பார்க்கலாம். இந்த பழமும் புளிக்கும்னு தோணிரும்னு தான் ட்ரைவரா கூப்பிட்டேன். ஆனா அது எனக்கே நான் வச்சிக்கிட்ட பெரிய சோதனையா ஆகிருச்சு. உன்னோட நெருக்கம், பேபி பவுடர் வாசம், நீ ரேடியோவோட சேர்ந்து பாடற அழகு, உன்னோட சிரிப்புன்னு அவஸ்தையா நான் கழிச்ச நாட்கள் அவை. அப்போத்தான் சிங்கப்பூர் ட்ரீப் வந்தது. அங்கத்தான் சிந்தியாவ சந்திச்சேன்”

“சிந்தியா?”

“ஆமா சிந்தியா! அம்மா எனக்குப் பார்த்த பொண்ணு! செமினார் முடிஞ்சு போறப்போ என்னை சந்திக்கனும்னே சிங்கப்பூர் வந்தா”

“ஓஹோ!”

“ரெண்டு பேரும் சந்திச்சுப் பேசனோம்! நான் நேராவே சொல்லிட்டேன் எனக்கு இந்தக் கல்யாணத்துல இஸ்டம் இல்ல! ஐ லவ் சம்வான் அப்படின்னு! சிந்தியா வாஸ் சோ அன்டேர்ஸ்டேண்டிங்! பெஸ்ட் அப் லக்னு சொல்லிட்டு போய்ட்டா! எனக்குத்தான் அதுக்கு அப்புறம் உன் மேல சரியான கோபம்”

“இது என்னடா வம்பா போச்சு! நானா சிங்கப்பூர் போக சொன்னேன்? நானா சிந்தியாவ பார்க்க சொன்னேன்? நானா வேணான்னு சொல்ல சொன்னேன்? எல்லாத்தையும் நீங்க செஞ்சுட்டு என் மேல என்ன இதுக்கு கோபம் வரனும்?”

“என்னை, இந்த குருவ ஆட்டி வைக்கறியேன்னுதான் கோபம். நீ எப்படி என்னை கன்ட்ரோல் பண்ணலாம்னு கோபம்! எங்கம்மா பார்த்த பொண்ண உன்னாலதானே ரிஜேக்ட் பண்ணிட்டேன்னு கோபம். சுதந்திரமா இருந்தவன கட்டுக்குள்ள கொண்டு வர பார்க்கறேன்னு கோபம். இதுல எதுலயும் உன் பங்கு இல்ல மிரு! ஆனா எனக்குத்தான் மிரு பைத்தியம் பிடிச்சிருந்துச்சே! பைத்தியக்காரனால எப்படி ஸ்ட்ரேட்டா திங்க் பண்ண முடியும்?” என அவளையே கேட்டான் குரு. இவள் ஆவேன பார்த்திருந்தாள்.

“நீ என் லைப்ப காதல், கல்யாணம் எதுவும் இல்லாத போதே டிக்டேட் பண்ணற ஃபீல். அதான் ஒதுங்கிப் போனேன். கிட்ட இருந்தா உன் ப்ரேசென்ஸ்னால கட்டிப் போட்ட, ஒதுங்கிப் போனா உன் நினைவுகளால கட்டிப் போட்ட! என்னால முடியல மிரு! அதான் ஜாதி, தகுதி, அந்தஸ்த்து எல்லாத்தையும் உதறிட்டு என் மிரு மட்டும் போதும்னு முடிவு எடுத்துட்டேன். அதுக்கு அப்புறம் தான் உடம்பும் மனசும் லைட்டான மாதிரி ஃபீல் ஆச்சு. அப்பா இறந்ததுல இருந்து எனக்குள்ள ஒரு இறுக்கம்! வீட்டுக்கு மூத்தவன்! அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் என் பொறுப்பு! அவங்களுக்காக உழைக்கனும்! அப்படின்னு சின்ன வயசுலயே பொறுப்புணர்ச்சி வந்துருச்சு. உன் கூட பழகனதுக்கு அப்புறம் தான் என்னோட இறுக்கம் தளர்ந்த உணர்வு மிரு. யூ ஆர் மை ஹெப்பி பில்! மை ஏஞ்சல்! என்னோட காதல உன் கிட்ட சொல்லத்தான் மலாக்கா ட்ரீப் அரேஞ் பண்ணேன். தென் தெ ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி”

குருவை நெருங்கி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் மிரு.

“அழக பார்த்து காதலிச்சாத்தான், அது குறையறப்போ காதலும் குறையும் மிரு. ஆரம்பத்துல உன் மேல ஈர்ப்பு இருந்தாலும், காதல்ல விழ வச்சது உன்னோட அழகான குணம்தான் மிருது. பெயருக்கு ஏத்த மாதிரியே மிருதுவான குணம் உனக்கு. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிருந்தும் யூ கிவ் யுவர் ப்ரீசியஸ் ஹார்ட் டூ மீ! அத நான் சாகிற வரைக்கும் போற்றி எனக்குள்ளயே வச்சிப்பேன் மிருதும்மா!” பேசிக் கொண்டே மெல்ல அவள் இடுப்பை அழுத்திக் கொடுத்தான்.

“என்ன பாஸ் பண்ணுறீங்க?”

“ரொம்ப நடந்துட்டல்ல! வலிக்குமே இடுப்பு அதான் பிடிச்சு விடறேன்.”

கண்கள் கலங்கியது அவளுக்கு.

“பிடிச்சு விடறது, அழுத்தி விடறது எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு செய்யலாம் பாஸ்! இப்பக் கைய எடுங்க”

“ஏன் மிரு, நீ இப்போ பேசனதுல எதாச்சும் ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ் இருக்கா? பிடிச்சு, அழுத்தின்னு?” என சிரிக்காமல் கேட்டான் குரு.

“ங்கொய்யால! இனிமே எல்லாமே ஸ்ட்ரேய்ட் பேச்சுதான். ரீடிங் பிட்வீன் தெ லைன் பேசனீங்க, ஸ்லீப்பிங் பிட்வீன் தெ பில்லோவ்ஸ்ன்னு சொல்லிருவேன். பீ கேர்பூல்!” என மிரட்டியவளை சிரிப்புடன் பார்த்திருந்தான் குரு.

(தவிப்பு அடங்கும்)

(நெக்ஸ்ட் எபிலாக்)

ENE–EPI 42

அத்தியாயம் 42

இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இது வரையில் எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
புதியதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே ..

“வில் யூ மேரி மீ வேணு?” என கேட்டாள்.

அவனிடம் சற்று நேரம் எந்த பதிலும் இல்லாததால், பயந்து போன தான்யா,

“வேணு, வேணு!” என உலுக்கினாள்.

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா, இல்லையா? முடியாதுனா சொல்லிரு. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் தானு.

சத்தமாக சிரித்தவன்,

“ரெண்டும் ஒன்னுதானே தானு. ஆனா ஏன் இந்த அவசர முடிவு? நான் என் பக்க கதைய சொல்லுறதுக்குள்ள எப்படி என்னை நம்பி கல்யாணம் செஞ்சுக்கிறீயான்னு கேக்குற?” பிரமிப்புடன் பார்த்தான் விபா.

“அவசர முடிவு இல்ல வேணு. நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்தேன். நான் வேணும்னு இவ்வளவு செஞ்சிருக்கியே, கண்டிப்பா உன் காதல் தோற்கக்கூடாது வேணு. நீ காரணங்கள அடுக்கின பின்னே நான் யெஸ் சொன்னா, அது என்ன லவ் சொல்லு? உன் பக்கம் நியாயம் இருக்கும்னு என் மனசு அடிச்சு சொல்லுது. இவ்வளவு நடந்தும் எனக்கு உன் மேல வெறுப்பு வரல. கோபம் இருக்கு ஆனா, வெறுப்பு இல்ல. அது என்னால முடியவும் முடியாது வேணு. அதனால நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.”

“நீ பெருந்தன்மையா இப்படி பேசலாம் தானு. ஆனா  உனக்கு நான் செஞ்சது எல்லாம் தெரியனும். அதுக்கு அப்புறம் நீ வேணான்னு சொன்னாலும் நான் உன்னை விடமாட்டேன் தானும்மா”

“சரி சொல்லு. அதுக்கு முன்னுக்கு ஒரு ப்ரேயர் சொல்லிக்கிறேன் வேணு. ஆண்டவா! வேணு சொல்லப்போற விஷயங்களை கேட்டு எனக்கு கோபம் வரலாம், ஆனா கொலைவெறி வர கூடாது. அவனை நீதான் எந்த ஆபத்தும் இல்லாம ரட்சிக்கனும். “ என வேண்டி கொண்டாள்.

“என்னடி மறைமுகமா மிரட்டுற? நான் சொல்லவா வேண்டாவா?”

“சேச்சே மறைமுக மிரட்டலெல்லாம் இல்லை. எதை செஞ்சாலும் இந்த தானு நேரடியா தான் செய்வா. உன்னை மாதிரி குறுக்கு வழி எல்லாம் போக மாட்டா” என பேன்ட் பாக்கேட்டிலிருந்து ஆயுதங்களை எடுத்து மேசை மேல் கடை பரப்பினாள்.

அவள் வைத்த பொருட்களைப் பார்த்து விபா எச்சிலை கூட்டி விழுங்கினான். லைட்டர், பேனா கத்தி, பெப்பர் ஸ்ப்ரே, ஃபிளாஷ் லைட் என அணிவகுத்து நின்றது.

ஃபிளாஷ் லைட்டை கையில் எடுத்தவன்,

“இது எதுக்கு?” என கேட்டான்.

அதை அவனிடம் இருந்து வாங்கி, ஆன் செய்து அவன் உள்ளங்கையில் வைத்து பட்டென எடுத்து விட்டாள். தூக்கி போட்டது விபாவுக்கு.

“ஆஆஆ!!! என்னடி ஷாக் அடிக்குது?”

“அதே அதே. இலெக்ட்ரிக் ஷாக் டிவைஸ் இது. உனக்காக ஸ்பெஷலா ஆன்லைன்ல வாங்குனேன்.”

“என்னை கொலை பண்ணுறதா முடிவே எடுத்துட்டியா?” என கேட்டவன் எல்லா பொருட்களையும் அள்ளி கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்தான்.

“தானு! என்ன கோபம்னாலும் இதோ இந்த ரெண்டு கையால மொத்து, சத்தம் போடாமா வாங்கிக்கிறேன். ஆயுதமெல்லாம் ஹாஸ்பிட்டலோட நிறுத்திக்கம்மா. வீடு வரைக்கும் வேணாம். “ என அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“பார்க்கலாம். இப்ப வாக்குமூலத்தை ஸ்டார்ட் பண்ணு”

அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தான்.

“நான் செஞ்சதெல்லாம் உன் மேல உள்ள காதலினால தான்னு மனசுல பதிய வைச்சுக்கிட்டு, அப்புறமா கேளு தானும்மா. உன்னை நோக்கி அடி எடுத்து வைக்க நான் செஞ்ச முதல் காரியம் டேனி அப்பாவோட கம்பேனி ஷேர்சை வாங்குனது தான்”

இது என்ன புது கதை என்பது போல் பார்த்தாள் தானு.

“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா இருந்தீங்க. அவன் உனக்கு போய் பிரண்டா இருக்குமோன்னு தான் முதல்ல நினைச்சேன். யாரா இருந்தாலும், நீ எனக்கு மட்டும் தான்னு முடிவு எடுத்தேன். அப்புறம் உன்னை தொடர்ந்ததுல வெறும் பிரண்டு தான்னு தெரிஞ்சுகிட்டேன். இருந்தாலும் அவன் பக்கத்துல இருக்கற வரைக்கும் நீ என் கிட்ட வரமாட்டேன்னு மனசு அடிச்சு சொன்னுச்சு. அதனால தான் சேர்சை வைச்சு அவனை மிரட்டி, ஆஸ்திரேலியா அனுப்பினேன். ஏற்கனவே அவங்க அப்பா அப்ளை பண்ணியிருந்தாரு தான். இன்னும் சீக்கிரமா அவன் போகனும்னு நான் தான் காலேஜ்ல பணம் குடுத்து கிளப்பிவிட்டேன்.”

கண் கலங்க சட்டேன எழுந்தவள், கைகளை கட்டிக் கொண்டு சற்று நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். டேனி தன்னிடம் காட்டிய பாராமுகம், திடீரென பிரிந்து சென்றது எல்லாம் மீண்டும் நினைவு வந்து கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது. அமைதியாகவே அமர்ந்து அவளை பார்த்துக் கொன்டிருந்தான் விபா. சமாதானம் செய்ய மனம் விழைந்தாலும், ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

“அப்புறம்?”

“எங்க போனாலும் உன்னை தொடர செக்குரிட்டி செர்விஸ் அரெஞ் பண்ணேன். என் தானு எப்பொழுதும் பாதுகாப்பா இருக்கனும்னு தான் செஞ்சேன். நான் பிஸ்னஸ் விஷயமா அங்க இங்க அலைஞ்சி கிட்டு இருக்கறப்போ, நீ பத்திரமா தான் இருக்கங்கிற உத்திரவாதம் எனக்கு தேவையா இருந்துச்சு. என்னால என் வேலைகளை கான்சன்ட்ரேட் பண்ணி செய்ய முடியலை. அதனால தான் இந்த ஏற்பாடு. உனக்கு இது பைத்தியக்காரத்தனமா படலாம். ஆனா நீ பாதுகாப்பா இருக்கன்றது எனக்கு எவ்வளவு மன நிம்மதி கொடுக்குது தெரியுமா தானு?”

எப்பொழுதும் தன்னை யாரோ கண்காணிப்பது போல் இருக்கும் உணர்வு பொய்யில்லை என புரிந்தது தானுவுக்கு. இங்கே வந்த பின்னும் அந்த பீலிங் இருப்பதால்,

“இன்னும் என் பின்னால ஆளு வச்சிருக்கியா?”

ஆமென தலையாட்டினான் விபா. பைத்தியமாடா நீ எனும் பார்வையுடன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள் தானு.

“அப்புறம் நான் எஸ்கேப் ஆனத எப்படி அவங்க மிஸ் பண்ணாங்க?”

“என் கூட தான் இருக்கியேன்னு, நான் தான் செக்குரிட்டிய போக சொன்னேன். நீ இப்படி செய்வேன்னு எனக்கு எப்படி தெரியும்”

“இனிமே என் பின்னால யாரும் வர கூடாது”

“அது மட்டும் முடியாது தானு. பிஸ்னஸ்ல எனக்கு நிறைய போட்டி இருக்கு. நிறைய எதிரிங்க இருக்காங்க. அவங்க யாராச்சும் உன்னை டார்கேட் பண்ணிட்டா? அதனால இதை மட்டும் என்னால விட்டுக் குடுக்க முடியாது” முடிவாக சொல்லிவிட்டான் விபா.

முகத்தை திருப்பிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் தானு. பின் மேலே பேசுமாறு சைகை காட்டினாள்.

“அப்புறம் பிரபு மூலமா ட்ரேக்கர் வைச்ச போனை உன் கிட்ட குடுத்தேன். உன்னை சந்திச்ச ஆரம்பத்துல செஞ்சது இது. அப்போ எனக்கு உன்னைப் பற்றி ஒன்னும் தெரியாது தானும்மா. நீ எப்படி, உன் நடவடிக்கைகள் எப்படின்னு கண்காணிக்க தான் இதை செஞ்சேன். எனக்கு தெரியாம உன் வாழ்க்கையில எதுவும் நடக்க கூடாதுன்னு நெனைச்சேன். நீ எப்படிப்பட்ட கேரக்டரா இருந்தாலும் நான் உன்னை விட்டுருக்க மாட்டேன் தானு. உன்னோட குறை நிறைகளோட அப்படியே ஏத்துகிட்டு இருந்துருப்பேன். உன் கூட பழகன கொஞ்ச நாளுல உன் நேர்மை, ஒழுக்கம், புத்திசாலித்தனம், பட்ஜேட் போடுற குணம் இதெல்லாம் பார்த்து ரொம்ப இம்ப்ரெஸ்ட் ஆயிட்டேன். அதுக்கு அப்புறம் நீ போன்ல செய்யுற அக்டிவிட்டீஸ் எதையும் நான் வேவு பார்க்கல தானு. இதை நீ நம்பனும். ஆனா ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கை தானா ட்ரெக்கர்க்கு போயிரும். நீ எங்க இருக்கன்னு செக் பண்ணிகிட்டு தான் இருப்பேன். அதான் பாதுகாப்புக்கு செக்குரிட்டி இருக்காங்களேன்னு நினைப்பேன். இருந்தாலும் என்னால முடியாது தானு. சைக்கோன்னு வேணும்னாலும் நினைச்சுக்க. ஆனா இந்த பழக்கத்த என்னால விட முடியுமான்னு தெரியலை. அப்படிதான் நீ எங்க போனாலும் உனக்கு முதல்ல நான் வந்து நின்னேன்”

“ஏன் வேணு? அப்படின்னா நீ என்னை நம்பலியா? நான் வேற யாரோடயாவது ஓடி போயிருவேன்னு நினைக்கறியா?” மனம் வலிக்க கேட்டாள் தானு.

நாற்காலியை அவள் அருகில் நகர்த்திப் போட்டுக் கொண்டவன், அவளது கைகளை இருக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

“தானும்மா, உன்னை நம்பலனா அது என்னையே நம்பலன்னு அர்த்தம். உனக்கு எப்படி புரிய வைப்பேன்?” கைகள் நடுங்கியது அவனுக்கு.

“என்னை பெத்தவங்க என் மனசுல விட்டு போன அழுத்தமான தடம்தான் இதுக்கெல்லாம் காரணம்.” கண்கள் கலங்கியது அவனுக்கு.

அவனைப் பார்க்கும் போது, பயத்தில் இருக்கும் சிறு குழந்தை போல தோன்றியது தானுவுக்கு. எழுந்து நின்று அவன் முகத்தை அப்படியே தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டாள். அவளது இடுப்பை கைகளால் வளைத்துக் கொண்டவன் மௌனமாக அழுதான். அவன் கண்ணீர் ஓயும் வரை தலையை தடவி கொடுத்தபடி அப்படியே நின்றாள் தானு. மனதில் அழுத்தி வைத்திருந்த சோகத்தை எல்லாம் அவள் அருகாமையில் கண்ணீரில் கரைத்தான் விபா. மெல்ல தன்னை மீட்டுக் கொண்டவன், நிமிர்ந்து தானுவைப் பார்த்தான். அவனது கண்களை துடைத்து விட்டவள்,

“நான் தான் கல்யாணத்துக்கு ரெடின்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் பழசை எல்லாம் பேசி மனச கஸ்டப் படுத்திக்குற வேணு?”

தானுவை இழுத்து மீண்டும் மடியில் அமர வைத்துக் கொண்டான் விபா.

“பேசிரனும் தானு. திரும்பவும் எந்த பூதமும் வந்து நம்ம வாழ்க்கைய பயம் காட்டக் கூடாது.” என்றவன் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

“எங்க அப்பா, அம்மாகிட்ட நேர்மையா நடந்துக்கல. அவங்களுக்கு தெரியாதுன்னு பல பொண்ணுங்க பின்னால சுத்துனாரு. அந்த மயக்கத்துல இருந்தவரு எங்க அம்மா என்ன செய்யறாங்கன்னு கவனிக்க தவறிட்டாரு. இவரை பழி வாங்கன்னு எங்க அம்மாவும் கெட்டு சீரழிஞ்சாங்க. அது என் மனசுக்குள்ள ஒரு பெரிய வடுவையே ஏற்படுத்திருச்சு. நான் கல்யாணம் செஞ்சுகிட்டா என் மனைவிக்கு உண்மையா இருப்பேன். அதே மாதிரி அவளும் எனக்கு உண்மையா இருக்கனும். எனக்கு தெரியாம எதுவும் அவ வாழ்க்கையில நடக்க கூடாது. என் கை பிடியிலே அவள வச்சிருக்கனும். இப்படி இப்படி ஆயிரம் விஷயம் யோசிச்சு வச்சிருந்தேன். உன்னைப் பார்த்து பழகியவுடன், என் வாழ்க்கையே நீ தான்னு முடிவு எடுத்தேன். உன்னை முழுசா நம்பனும்னு தோணும், ஆனா இன்னொரு பக்கம் நீயும் என்னை விட்டு போயிருவியோன்னு பயமா இருக்கும். என் கிட்ட என்னாலயே போராட முடியல. கடவுளா பார்த்து எனக்கு அனுப்பிய ஏஞ்சல் நீ. உன் மேல நம்பிக்கை வைக்கணும்னு முடிவெடுத்த உடனே தான் எனக்கு போன நிம்மதி வந்துச்சு தானு.”

அவளை இருக்கி அணைத்துக் கொண்டான் விபா.

“அதனால தான் நீ சொந்தமா போன் மாத்துறன்னு சொன்னப்ப, நான் ஓகே சொன்னேன். இனிமே உன்னோட பெர்ஸனல் லைப்ல தலையிட கூடாதுன்னு ரொம்ப நாளைக்கு முன்னமே முடிவு பண்ணிட்டேன்டா. ஆனாலும் கண்டிப்பா ட்ரக்கிங் அப்ளிகேஷன் உன் போனுல போடுவேன். எப்பவும் நீ எங்க இருக்கன்னு வாட்ச் பண்ணிகிட்டே இருப்பேன். நான் பைத்தியம்னு நினைச்சு என்னை விட்டுட்டு போக மாட்டியே தானு? “ பாவமாக கேட்டான்.

“நீ தான் என் பெர்ஸனல் லைப் வேணு. தலையிட மாட்டேன் காலைவிட மாட்டேனு பேசாதே. பிச்சிருவேன். நீ பைத்தியமா மாறி காதல் பரத் மாதிரி சுத்துனாலும் உன்னை விட்டு போக மாட்டேன்”

மனம் விட்டு சிரித்தவன்,

“நீ அங்கயும், நான் இங்கயும் இருந்தது எனக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது தானு. உன்னை கடத்தி வந்தாவது என் கூடவே வச்சிக்கனும்னு ஒரு வெறியே வந்தது. பிரபு வாங்குன அடியெல்லாம் பார்த்து, கவனமா தான் மூவ் பண்ணனும்னு முடிவு பண்ணேன்”

டொக்கென்று தலையில் கொட்டினாள் தானு.

“தூக்கிருவியா என்னை? எங்க தூக்கு பார்ப்போம்”

“தூக்கி மடியில தானேம்மா உட்கார வச்சிருக்கேன். இன்னும் தூக்கு தூக்குன்னா எப்படி தூக்கறது?”

“எவ்வளவு குடுத்தாலும் நீ அடங்க மாட்டல்ல?” கன்னத்தைப் பிடித்து கடித்து வைத்தாள் தானு.

“இந்த கன்னம் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு? இங்கயும் கடி ப்ளீஸ்” என கெஞ்ச ஆரம்பித்தான் விபா.

“முழுசா சொல்லி முடி. கடிக்கிறதா இல்லை அடிக்கிறதான்னு அப்புறமா டிசைட் பண்ணுறேன்.”

“அப்புறம் என்ன, பிரபுகிட்ட பேசி உன் ட்ரையல் ரிசால்ட் எடுத்து இங்க சீட் வாங்குனேன். உன் ரிசால்ட் நல்லா இல்லாட்டி கண்டிப்பா சீட் கிடைச்சிருக்காது தானு. அதனால வெறும் பணத்துனால தான் உனக்கு சீட் கிடைச்சதுன்னு கிறுக்குத்தனமா யோசிக்காத. ஹ்ம்ம். இப்ப சொல்லுறதே கேட்டு என்னை அடிக்க வர கூடாது. ப்ராமிஸ் பண்ணு”

“சரி, அடிக்கல. சொல்லு”

“அங்க உங்க ஊருல, சில பேரை பிடிச்சு உனக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்காத மாதிரி நான் தான் செஞ்சேன். அறவே குடுக்காம இருக்க முடியாது, லாஸ்ட் ஒப்ஷன் வேணும்னா குடுக்குறோம்னு சொல்லி டென்டிஸ்ட்ரி குடுத்தாங்க. எனக்கு ஒரு பயம் தான் எங்க நீ அக்சேப்ட் பண்ணிக்குவியோன்னு. அதுக்கு தான் பிரபுக்கு மூனு நாளா டியுசன் எடுத்து உன் மனச எப்படி மாத்துறதுன்னு சொல்லி குடுத்தேன்”

கண்கள் சாசர் போல் விரிந்தது தானுவுக்கு.

“பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்வியாடா?” அடிக்க ஓங்கிய கையை இருக பிடித்துக் கொண்டான் விபா.

“பார்த்தியா, ப்ராமிஸ் பண்ணிட்டு அடிக்க வர.”

“சரி அடிக்கல. கைய விடு”

அவளை நம்பாமல் மேலும் கையை இருக பிடித்துக் கொண்டான்.

“இங்க வந்தாலும் நீ வசதியா இருக்கணும்னு தான் அபார்ட்மென்ட் வாங்குனேன். பிரபு கிட்ட கேட்டு கேட்டு உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி போட்டேன். அந்த ஊஞ்சல், பிள்ளையார் படம், உன் பேவரேட் கலர்ல வால் பேப்பர் எல்லாம் உன்னை மனசுல வச்சி செஞ்சதுதான்.”

“உன்னோட அபார்ட்மென்ட் பார்த்தப்பவே நான் மயங்கிட்டேன் வேணு. அங்க தான் தங்கனும்னு பட்டுன்னு முடிவெடுத்துட்டேன்.”

“அதென்ன உன் அபார்ட்மென்ட்? நம்மளோடதுன்னு சொல்லு.”

“நீ என் காதலனா இருக்கற வரைக்கும் அது உன் வீடு தான். என் புருஷனா ஆனாதான் நம்ம வீடுன்னு சொல்லுவேன்”

“சரி வா, இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்”

“பண்ணிக்கலாம். அதுக்குதானே கற்புக்கிட்ட சொல்லி பேர்த் சேர்ட்லாம் குடுத்து விட சொன்னேன்”

அவள் முன் யோசனையைக் கண்டு வாயைப் பிளந்தான் விபா. அவனது வாயை தன் விரல்களினால் மூடியவள்,

“வாக்குமூலம் முடிஞ்சிருச்சா? இல்ல இன்னும் மிச்சம் இருக்கா?”

அசட்டு சிரிப்பொன்றை வெளியிட்ட விபா,

“கடைசியா ஒன்னு இருக்கு. ஆனா இத நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலையே தானும்மா.”

“எல்லாத்தையும் தாங்கி கிட்டேன், இதையும் தாங்கிக்கிறேன். சொல்லு”

“வந்து, உங்க அப்பா” என நிறுத்தினான் விபா.

முகம் சட்டென மாற,

“அந்த ஆளுக்கு இப்ப என்னா?” என கேட்டவள் அவன் மடியிலிருந்து எழுந்து நின்றாள். அவன் தலை முடியைக் கொத்தாக பிடித்தவள்,

“அந்த ஆள வர வச்சது நீதானா? சொல்லு வேணு?” குரல் நடுங்கியது. அவள் முடியைப் பிடித்த வலியைத் தாங்கி கொண்டு ஆமென தலையை ஆட்டினான் விபா.

சட்டென விலகியவள், தரையில் அப்படியே மடங்கி அமர்ந்தாள். கண்களில் பொல பொலவென கண்ணீர் கொட்டியது.

“ஏன் வேணு? ஏன் இப்படி செஞ்ச? என் மனசோட ரணம் உனக்கு விளையாட்டா போயிருச்சா?” கதறினாள் தானு.

அவனும் மண்டியிட்டு அவள் அருகில் அமர்ந்தான். தடுக்க தடுக்க அவளை அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அவள் அழுது ஓயும் வரை அப்படியே இருந்தான் விபா. மெல்ல துவண்டவளை, கீழே அமர்ந்து குழந்தையை மடியில் கிடத்துவது போல் படுக்க வைத்துக் கொண்டான். தேம்பியபடியே அவன் வயிற்றில் முகத்தை வைத்து இடுப்பை வளைத்துக் கொண்டாள் தானு. அந்த நிசப்தமான இரவு நேரத்தில் அவள் தேம்பும் ஓசை மட்டும்தான் கேட்டது. தலையைக் கோதி கொடுத்துக் கொண்டே அமைதியாக இருந்தான் விபா.

சட்டென எழுந்து அமர்ந்தவள்,

“எப்படி வர வச்ச?” என கேட்டாள்.

சற்று தயங்கியவன்,

“அவரு இப்ப கொஞ்சம் பண கஸ்டத்துல இருக்காரு. வேலை இடம் நொடிச்சுப் போனதால வேலைய விட்டு தூக்கிட்டாங்க. ஆள் மூலமா, நான் தான் உங்கம்மாவ போய் பார்த்தா பணமும் வேலையும் வாங்கி தரதா சொல்லி அனுப்பி வச்சேன். அவருக்கு தெரியாம மைக்ரோபோனும் அவரோட பேக்குல சேட் பண்ண சொன்னேன். என்ன பேசறாருன்னு எனக்கு தெரியனும்ல, அதான்”

“உனக்கு பணத்திமிர்டா. வேற ஒன்னும் இல்ல.” பட் பட்டேன அடித்தாள் தானு. பேசாமல் வாங்கி கொண்டவன்,

“எனக்கு நீ சந்தோஷமா இருக்கனும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்” குரல் அழுத்தமாக ஒலித்தது. அடிப்பதை நிறுத்தியவள் அவனை ஆழ்ந்து நோக்கினாள்.

“அவரை நினைச்சு நீ அழறத என்னால தாங்கிக்க முடியலை தானு. அதுக்குத்தான் இந்த முயற்சி எடுத்தேன்.”

“அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு வேணு. அதை நீ நினைச்சி பார்த்தியா?”

“மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. என் தானும்மா நிம்மதி தான் எனக்கு முக்கியம்.”

“ஏன்டா இப்படி இருக்க? நான் உனக்கு என்ன செஞ்சேன்னு இப்படி ஒரு வெறித்தனமான பாசத்தை என் மேல வச்சிருக்க? உன்னை நான் எப்படிடா சமாளிப்பேன்? எனக்கு பயமா இருக்கு வேணு” அவன் மார்பிலே மீண்டும் சாய்ந்து கொண்டாள் அவள்.

“எதுக்கு பயம்? அதுவும் என்ன பார்த்து. பாசம் மட்டும் தான் வரனும். பயம் வர கூடாது என் செல்லக்குட்டிக்கு. ஆமா தெரியாம தான் கேக்குறேன், உங்கப்பாவுக்கு என்ன இளமை திரும்புதா? நான் அனுப்பனது உங்க அம்மா கூட கொஞ்சம் சமாதானமா பேசி, மன்னிப்பு கேட்டு நிலைமைய கொஞ்சம் சீர் பண்ணுறதுக்குதான். இந்த வயசுல என்னை ஏத்துக்க கூடாதான்னு ஏக்கமா கேக்குறாரு. உங்கம்மா லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டாங்க.ஹாஹாஹா. என் மாமனாரு ஜெமினி கணேசனையே மிஞ்சிருவாரு போல”

“மாமனாரு, கோமனாருன்னு சொல்லாதே. கடுப்பு கடுப்பா வருது. எங்கம்மா கதைய சொன்னதுல இருந்து அந்த ஆளு மேல வச்சிருந்த பாசம் எல்லாம், கரைஞ்சி சாக்கடைல ஓடிருச்சு. மாமனாருக்கு காசு பணம் குடுக்குறேன், உதவி பண்ணுறேன்னு கிளம்பினே, உன்னை பீஸ் பீஸா ஆக்கிருவேன்”

“திருந்தி வந்தா உனக்கு அப்பா கிடைப்பாரு, அப்படி சொதப்புனா அவரை தூக்கி எறிஞ்சிருவன்னு தான் இந்த முயற்சிய எடுத்தேன் தானு”

“ஹ்ம்ம் புரியுது”

“டேனிய பேக் பண்ணதுக்கு உன் கிட்ட ஒரு ரியாக்சனும் காணோம்?”

“என்ன பண்ணனும்கிற? உன்னை பறந்து பறந்து அடிக்கவா? நீ செஞ்சதுல எனக்கு மலை அளவு வருத்தம் இருந்தாலும், அவன் மேச்சுர்டா மாறிட்டான், சுயமா சிந்திச்சு முடிவு எடுக்கறான், நல்லா படிக்கறான். அதனால உன்னை போனா போன்னு மன்னிச்சு விடுறேன்.”

“இப்போ சொல்லு எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?”

“முதல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் மட்டும் செஞ்சுக்கலாம். நான் படிச்சு முடிச்சவுடனே ஊரை கூட்டி தாலி கட்டிக்கலாம். அது வரைக்கும் நான் அபார்ட்மென்டுல இருக்கேன், நீ இங்கயே இரு. அது தான் நான் உனக்கு குடுக்குற தண்டனை”

“தானு!!!!!!! நீ சொன்ன மாதிரியே செய்யலாம். ஆனா நான் உன்னை பிரிஞ்சு இருக்க மாட்டேன். ரிஜிஸ்டர் பண்ணாச்சுன்னா நீ லீகலா என் வைப். சீதை இருக்குற இடம் தான் ராமனுக்கு அயோத்தி. நான் உன் கூடதான் இருப்பேன். எங்கனாலும் சரி”

“ஏன்? நான் காலேஜ்கு வயித்தை தள்ளிக்கிட்டு போகணுமா? அதெல்லாம் முடியாது. இந்த ரிஜிஸ்ட்ரேஷன் கூட என் காதலன் பணத்துல படிக்கிறேன், காதலன் வீட்டுல தங்கி இருக்கேன்னு சொல்லுறது எனக்கு கேவலமா இருக்குன்னுதான் வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணேன். யாரு கேட்டாலும் என் புருஷன் படிக்க வைக்கிறான்னு சொல்லுறது தான் எனக்கு பெருமை.”

“பெருமை, எருமை எல்லாம் இருக்கட்டும் தானு. இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டு இருக்க மாட்டேன். எட்டி நில்லு எச்சரிக்கிறேன்னு மிரட்டுர வேலை எல்லாம் இனிமே வைச்சுக்காத. நான் கேட்கவும் மாட்டேன்.” என பிடிவாதம் பிடித்தான் விபா.

“சரியான ட்யூப் லைட்டுடா நீ. எட்டி நில்லு எச்சரிக்கிறேன்னு கோபமா சொன்னனா இல்லை சிணுங்கலா சொன்னனான்னு கூட புரிஞ்சிக்க முடியாத மண்டுவா இருக்கியே. சாம்பிராணி!!” என திட்டினாள் தானு.

“என்னடி சொல்லுற? அப்போ இவ்வளவு நாள் வாயில தான் தள்ளு தள்ளுன்னு சொல்லிட்டு, மனசுகுள்ள அள்ளு அள்ளுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தியா. இது தெரியாமா நான் தான் பயந்து பயந்து நடந்துகிட்டனா?”

அவன் மடியில் இருந்து எழுந்து கொண்டவள்,

“ஏன்டா வேணு, இன்னுமாடா உனக்கு புரியலை? சுத்த வேஸ்டுடா நீ. நானும் பிளேபாய் தான்னு வெளிய எங்கும் போய் சொல்லிறாத, துப்பிருவாங்க” என நக்கலடித்தவள் அவன் கையில் பிடிபடாமல் ஓட்டம் எடுத்தாள்.

“இருடி வரேன், என் அழகு ராட்சசி” என அவளைத் துரத்தியபடி ஓடினான் விபா. தோட்டத்தை சுற்றி சுற்றி ஓடி, களைத்துப் போய் இருவரும் புல்லிலே தொப்பென அமர்ந்தார்கள். தானுவை இழுத்துக் கொண்டு அப்படியே புல்லில் சாய்ந்தான் விபா. சற்று நேரம் மூச்சு வாங்க பௌர்ணமி நிலவையே பார்த்தபடி படுத்திருந்தவனர் இருவரும்.

தானுவின் பக்கமாக ஒருக்களித்து திரும்பியவன்,

“தானும்மா, அந்த நிலவுக்கும் உனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கு. சொல்லு பார்க்கலாம்”

“தெரியலையே வேணு”

“அந்த நிலவை என்னால பார்க்க மட்டும்தான் முடியும். ஆனா இந்த நிலவை என்னால பார்க்கவும் முடியும், ரசிக்கவும் முடியும், ருசிக்கவும் முடியும்” என்றவன் தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடினான். மீண்டும் மீண்டும் அவள் இதழோடு யுத்தம் நடத்தினான். அவனின் வேகத்தைப் பார்த்து, அந்த வெண்ணிலவே வெட்கப்பட்டு கண் மூடி கொண்டது.

இருவரும் தன்னிலை மறந்து காதல் வானில் சிறகடித்து பறந்த வேளையில், கர்ண கொடூரமாக ஒரு கணைப்பு சத்தம் பக்கத்தில் கேட்டது. முதலில் சுய நினைவு அடைந்தது விபாதான். வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவன் முன்னே, முத்துப்பாண்டி தாத்தா நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னே சேலை தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு வேலம்மா பாட்டியும் நிற்பதை கண்டு அவனது சப்த நாடியும் ஒடுங்கியது. கை கொடுத்து தானுவை தூக்கி விட்டவன்,

“வாங்க தாத்தா, வாங்க பாட்டி” என முறையாக அழைத்தான்.

“வரோம்!. ரெண்டு பேரும் தனியா இருப்பீங்கன்னு கற்பு தான் போனை போட்டு இங்க வர சொன்னுச்சு. அவங்க எல்லாம் இங்க வர வரைக்கும் துணைக்கு எங்கள இருக்க சொன்னுச்சு.” முறைத்துக் கொண்டே பேசினார். கையும் களவுமாக மாட்டியதால் விபாவும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி முழித்துக் கொண்டு நின்றான்.

பாட்டியின் பின்னால் போய் நின்று கொண்ட தானு,

“தாத்தா, இவன் தான் பௌர்ணமி இன்னிக்கு. வெளிய வா, நிலாவ காட்டுறன்னு கூட்டிட்டு வந்து முத்தம் முத்தமா குடுக்குறான்.” என கம்ப்ளைன்ட் வாசித்தவள், விபாவுக்கு நாக்கை துருத்தி அழகு காட்டினாள்.

அவளை கவனிக்காத முத்துப்பாண்டி,

“நீங்க ரெண்டு பேரும் உள்ளாற போய் படுங்க. இன்னிக்கு என் பேராண்டி கூட நான் படுத்துகுறேன்” என மீசையை நீவியபடியே விபாவுக்கு முறைப்பு ஒன்றை பரிசாக கொடுத்தார்.

விபாவின் ‘அட்டேன்ஷன்’ போஸை பார்த்து தானுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பறக்கும் முத்தம் ஒன்றை அவனுக்கு அனுப்பி விட்டு பாட்டியுடன் உள்ளே சென்றாள்.

அவள் சிரிப்பை ரசித்துப் பார்த்தவன், தாத்தாவுடன் பவ்யமாக வீட்டினுள் நுழைந்தான்.

ENE–EPI 41

அத்தியாயம் 41

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா

“தானும்மா!!!!!!!!!!!!!!!!!!” என கதறினான்.

அவன் கத்திய சத்தம் அந்த அமைதியான நேரத்தில் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பட்டு எதிரொலித்தது.

நெஞ்சில் இனம் புரியாத பயம். கண்களில் கண்ணீர் கரகரவென இறங்கியது. எல்லா கஷ்டங்களையும் தூசியென துடைத்துவிட்டு முன்னேறியவன், தானுவின் பிரிவை தாங்க முடியாமல் மடிந்து அமர்ந்தான். பயத்தில் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.

ஹால் கடிகார சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன் குடுகுடுவென தன் அறைக்கு ஓடினான். போனை எடுத்து எப்பொழுதும் அவளை கண்காணிக்கும் ட்ரேக்கர் அப்ளிகேஷனைத் திறந்தான். அவளது போனும் , லேப்டாப் சிக்னலும் இன்னும் அவளது அபார்ட்மென்ட் வளாகத்தைத் தான் காட்டியது. மனதில் பரவிய நிம்மதியோடு, ஓடி சென்று காரை ஸ்டார்ட் செய்தான். திரும்பவும் உள்ளே வந்தவன், ஆபிஸ் ரூமில் வைத்திருக்கும் அவளின் அபார்ட்மென்ட் கீயையும் மறவாமல் எடுத்துக் கொண்டான்.

அவன் காரை அழுத்திய வேகத்தில் இருபது நிமிடங்களில் தானுவின் அபார்ட்மென்டில் இருந்தான். கதவை தட்டி, தானு தானு என அழைத்தும் சத்தம் இல்லாததால், சாவியைக் கொண்டு திறந்து உள்ளே சென்றான். வீடே இருட்டாக இருந்தது. லைட்டை தட்டியவன், கதவை சாத்திவிட்டு நேராக அவள் ரூமுக்கு சென்றான். கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் அவள் இல்லை. கட்டிலின் மேல் இருந்த அவளது போனும், லப்டோப்பும் தான் அவனை வரவேற்றன. கால்கள் நடுங்க அருகே சென்றவன், அங்கே போனின் கீழ் இருந்த சிறு பேப்பரை கையிலெடுத்தான். குட் பாய் என சிவப்பில் எழுதி இருந்தாள் தானு. அவன் அங்கே வருவான் என அனுமானித்தே போனை விட்டு சென்றிருந்தாள். ரூமில் எல்லா பொருட்களும் அதன் அதன் இடத்தில் இருந்தன. அவளது துணி மணிகளை மட்டும் தான் எடுத்து சென்றிருந்தாள்.

அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டே வீட்டை ஒரு அலசு அலசினான், எங்காவது ஒளிந்து விளையாடுகிறாளா என எண்ணி. பலன் தான் பூஜியமாக இருந்தது. அப்பொழுதுதான் அவன் கண்ணில் பட்டது லேசாக திறந்திருந்த பவிகாவின் ரூம். அதாவது பூட்டி வைத்திருந்த விபாவின் ரூம்.

‘கண்டுபிடிச்சுட்டாளா’ என புலம்பியவாறே அருகில் சென்று கதவைப் பார்த்தான். ஸ்குரு டிரைவர் கொண்டு கதவின் கைப்பிடியை கழட்டி இருந்தாள். கதவை அகலமாக தள்ளி ரூமின் லைட்டை போட்டான். அறை முழுக்க வித விதமான போஸ்களில் தானு சிரித்துக் கொண்டும் , முறைத்துக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தாள். நான்கு பக்க சுவர்களிலும் ஒரு இடுக்கு விடாது அவளது போட்டோக்களை ஒட்டி வைத்திருந்தான் விபா. பெட்சைட் டேபளின் மேல் இருந்த போட்டோவை கையிலெடுத்து சிறிது நேரம் பார்த்தவன் அவளது முகத்தை தடவி கொடுத்தான் . அதில் தானு பைரவாவுடன் விளையாடி கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவாறே சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் கவனத்தை திறந்திருந்த அலமாரியின் கதவு திசை திருப்பியது. அலமாரியஒ நோக்கி சென்றான் விபா, அவன் சேகரித்து வைத்திருந்த அவள் சம்பந்தபட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் அவனைப் பார்த்து சிரித்தன. பாவி என்று அவள் கையால் எழுதி கொடுத்த ஸ்டார்பக்ஸ் கப், சினிமாவில் அவள் குடித்த கோக் கப் ஸ்ட்ரோவுடன், லேக் கார்டனில் அவன் மேல் ஊற்றிய மினரல் வாட்டர் போட்டல், பினாங்கில் அவள் பேக்கில் இருந்து திருடிய ஹேலோ கிட்டி டீ-சர்ட், அவள் சாப்பிட்டு தூக்கி எறிந்த மேக்னம் ஐஸ்கிரீமின் வ்ரேப்பர், இப்படி பலதும் இருந்தன. எல்லாவற்றையும் சுத்தம் செய்து தேதி இட்டு அழகாக அடுக்கி வைத்திருந்தான்.

அலமாரியில் கீழ் அடுக்கில் இருந்த கலைந்த டாக்குமென்டுகளும் அவள் எடுத்து பார்த்திருக்கிறாள் என அறிவித்தது. இந்த வீட்டை வாங்கிய பத்திரம், அவளுக்கு லீஸ் கொடுத்த பத்திரங்கள், காலேஜ் அட்மிஷனுக்கு பணம் கொடுத்த டீடேய்ல்ஸ் எல்லாம் அங்கு இருந்தன. தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான் விபா. இவை எல்லாம் பெரிய வீட்டின் ஆபிஸ் ரூமில் தான் வைத்திருந்தான். அவள் அந்த வீட்டில் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக சுற்றுவதால், அவள் காலேஜ் சென்றிருந்த ஒரு நாளில் இங்கு கொண்டு வந்து வைத்தான். கண்டிப்பாக மற்றவர் அறையை நோண்டி பார்க்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் அப்படி செய்திருந்தான். தன் மேல் சந்தேகம் வராமல் கண்டிப்பாக தானு இந்த கதவைத் திறந்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம்.அந்த டாக்குமென்டுகளில் இரு இடங்களில் சிவப்பு பேனாவில் வட்டம் இட்டிருந்தாள். Vibakar என்ற ஆங்கில எழுத்தில் r ஐ வெட்டி இருந்தாள். பின்பு திருப்பி போட்டு Bavika  என எழுதி பார்த்திருந்தாள். அந்த எழுத்துகளில் தண்ணீர் பட்டது போல் லேசாக அழிந்திருந்தன.

‘பார்த்துட்டு அழுதிருக்கா. இப்படி ஏமாந்து போய்ட்டோமேன்னு துடிச்சிருப்பா. அவளுக்கு தெரிய கூடாதுன்னு தானே பூட்டி வச்சேன். கண்டுபிடிச்சுருவான்னு நினைக்கலியே. இதெல்லாம் பார்த்து அவளை நான் ஏமாத்திட்டேன்னு நினைச்சிருப்பாளே. அதனால தான் நான் சொல்லுவனான்னு முகத்தை முகத்தைப் பார்த்திருக்கிறா. புரியாத முட்டாளா இருந்திட்டனே. அதை விட பழகன இத்தனை நாளுல, அவ புத்திசாலித்தனம் தெரிஞ்சும் இவ்வளவு கேர்லசா இருந்துருக்கேன். நான் அவள முட்டாளடிச்சிட்டேன்னு துடிச்சுப் போயிருப்பா என் தானு.’ அவன் கண்களில் சூடாக கண்ணீர் இறங்கியது.

‘இது உணர்ச்சி வசப்படுற நேரம் இல்லை. அவளை திரும்ப என் கிட்ட கொண்டு வரனும். நான் இல்லாம அவளாலோ, அவ இல்லாம என்னாலோ இருக்க முடியாது.’ கண்ணீரை சுண்டி எறிந்தவன் போனை கையில் எடுத்தான். எப்பொழுதும் தொழில் விஷயமாய் பயன்படுத்தும் லோக்கல் டிடேக்டிவ் ஏஜேன்சி ஹேட்டையே போனில் பிடித்தவன், விஷயத்தை சொல்லி தானுவை தேட சொன்னான். இவர்கள் மூலமாக சென்றால் சீக்கிரம் தகவல் கிடைக்கும் என இந்த ஏற்பாட்டை செய்தான். கண்டிப்பாக டேனியையோ அல்லது அவளது அம்மாவையோ தான் தேடி சென்றிருப்பாள். ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் செல்லும்படியாக உள்ள விமானத்துக்கு டிக்கட் முன் பதிவு செய்து கொண்டான். தகவல் வரும் வரை பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியாமல், டேனிக்கு போனை போட்டான் விபா.

இரண்டாவது ரிங்கிலே எடுத்தவன்.

“என்னடா வேணு, காலங்காத்தாலே எழுப்புற?” என தூக்கக் கலக்கத்தில் கேட்டான்.

“தானு போன் செஞ்சாளா உனக்கு?”

“இல்லையே. ரெண்டு நாளைக்கு முன்னுக்கு செஞ்சதுதான். “

“அப்ப ஏதாவது சொன்னாளா?”’

“ஏன் காலையிலே இந்த குறுக்கு விசாரணை? என்னாச்சு சொல்லு வேணு? டான்யா எங்க?” சட்டென பிரச்சனையின் நூலைப் பிடித்து கேட்டான் டேனி.

“காணோம்டா. என்னை விட்டுட்டு போய்ட்டா”

கொஞ்ச நேரம் அந்த பக்கத்தில் சத்தம் இல்லை.

“வேணு. கால்ம் டவுன். என்ன நடந்தது. கரேக்டா சொல்லு. அப்பத்தான் என்னால உதவி செய்ய முடியும்”

எல்லாவற்றையும் சொன்னான் விபா. கடைசியாக தானு தூக்க மாத்திரை கொடுத்து தன்னை தூங்க வைத்து விட்டு போனதையும் சொன்னான். அந்த கலவரத்திலும் டேனி விழுந்து விழுந்து சிரித்தான்.

“டேய், நான் ரொம்ப பயந்து போய் இருக்கேன். சிரிக்கிறதை நிறுத்திட்டு எனக்கு ஹெல்ப் பண்ணுடா”

“நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்? இவ்வளவு தில்லு முள்ளு பண்ணியிருக்க, அவ எவ்வளவு மனசு ஒடிஞ்சு போயிருப்பா? உனக்கு இதெல்லாம் பத்தாது. கொஞ்ச நாள் பிரிஞ்சே இரு”

“வைட்டு, விடியகாலையிலே போயிருக்காடா. எங்க இருக்கா, எப்படி இருக்கான்னு எனக்கு மனசு அடிச்சுக்கிது. இந்த விஷயத்துல விளையாடதடா” கிட்டதட்ட கெஞ்சினான் விபா.

“ஆஸ்திரேலியா வரமாட்டா. டிக்கட் விலை அதிகமா இருக்கும்னு. கண்டிப்பா மலேசியா தான் கிளம்பியிருப்பா. அன்னிக்கு பேசறப்ப கூட ஓரு மாதிரியா தான் இருந்தா. கேட்டதுக்கு ஒன்னும் இல்ல, கோல்ட்னு சொல்லிட்டா. உன் மேல எவ்வளவு பாசம் இருந்தா இந்த விஷயத்தை என் கிட்ட கூட மறைப்பா. இப்படி மரமண்டையா இருக்கியே வேணு. இதெல்லாம் பிளான் பண்ணி தான் செஞ்சிருக்கா. அதனால பத்திரமா தான் இருப்பா. கவலை படாம சீக்கிரமா தேடு. நானும் என்னால முடிஞ்ச அளவு ட்ரை பண்ணுறேன். அப்புறம் எரியற நெருப்புல எண்ணைய ஊத்துறன்னு நினைச்சுக்காத. இப்ப உனக்கு ஒரு ஈமேயில் அனுப்புறேன். படிச்சுட்டு இன்னும் வேகமா தேடு. ஒகேவா. பாய்” என போனை வைத்திருந்தான் டேனி. அவன் போன் வைத்த ஐந்து நிமிடங்களில், விபாவிற்கு ஈமேயில் வரும் அலர்ட் வந்தது. போனை எடுத்துக் கொண்டு தானுவின் அறைக்கு சென்றவன், அவளது போர்வையை எடுத்து தன் மேல் சுற்றிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து படித்தான். டேனிக்கு தன் காதலை அறிவித்து தானு அனுப்பியிருந்தது தான் அது. டியர் டேனி என ஆரம்பித்த அதை படிக்க ஆரம்பித்தவன், முடிக்கும் போது மனம் கனத்துப் போனது.

‘என்னை நெஞ்சுக்குள்ள சிம்மசனம் போட்டு உட்கார வச்சவ, இப்ப தூக்கி கீழ எரிஞ்சிட்டு போயிட்டாளே. என்னை அவ அப்பாவோட பெருசா நினைச்சிருக்காளே. இதெல்லாம் தெரிஞ்ச உடனே, அவ அப்பா மாதிரியே நானும் ஏமாத்திட்டேன்னு பயந்துட்டாளோ. தானும்மா, நான் செஞ்சதெல்லாம் உன் மேல் உள்ள அளவு கடந்த காதலினால தான்னு ஏன் உனக்கு புரியாம போச்சு. அதை நீ புரிஞ்சுக்கிற அளவுக்கு நான் என் பாசத்தைக் காட்டலியோ. வந்துடு தானு. எங்கிருந்தாலும் வந்துடு’ அவன் மனம் ஓலமிட்டது.

போன் அடிக்கும் ஓசையில் தான் சுற்றுப்புறம் உணர்ந்தான் விபா. மறுமுனையில் அவர்கள் சொன்ன தகவலை பெற்றுக் கொண்டவன், அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

 

கோலாலம்பூர், மலேசியா

பூச்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த கற்பகம் கேட்டில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பி பார்த்தார். அங்கே விபா நின்றிருந்தான். அவசரமாக கேட்டைத் திறந்தவர்,

“வாங்க தம்பி. பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. நல்லா இருக்கீங்களா?” என பேசியவாறே உள்ளே அழைத்துச் சென்றார்.

அமைதியாக உள்ளே வந்தவன்,

“தானு எங்கம்மா? வர சொல்லுங்க” என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்த கற்பகம்,

“தானுவா? அவ அங்க ஊருல தானே இருப்பா? இங்க வந்து கேட்கறீங்க? என்னப்பா ஆச்சு? எங்க தானு? “ என பதறினார் கற்பகம்.

அவரின் பதட்டத்தைப் பார்த்து தடுமாறி போனான் விபா. டிடேக்டிவ் ஏஜேன்சியிலிருந்து அவள் மலேசியாவுக்குத் தான் பிளைட் ஏறியிருப்பதாக தகவல் கொடுத்திருந்தனர். இவர் இப்படி கேட்கவும், அவனுக்கு தலையே சுற்றியது.

‘எங்கடி தானு போன?’

அதற்குள் கற்பகம் பல முறை மகள் எங்கே என கேட்டு உலுக்கி விட்டார். வேறு வழி இல்லாமல், தங்களின் காதலையும், சிறு பிணக்கு ஏற்பட்டு இங்கே வந்து விட்டாள் எனவும் சமாளித்தான் விபா. சந்தேகமாக அவனை நோக்கியவர், அவனை வேறு ஒன்றும் துருவவில்லை.

“இங்க வரல தம்பி. என் கிட்டயும் ஒன்னும் சொல்லல. பத்திரமா தான் இருப்பா. கோபம் குறைஞ்சதும் தானா வருவா. அது வரைக்கும் வேய்ட் பண்ணுவோம்” என சாதாரணமாக சொன்னவர்,

“வாங்க சாப்பிடலாம். பயணம் பண்ணி வந்துருக்கீங்க” என அழைத்தார்.

‘என்னடா இது? மகள காணோம்னு சொல்லுறேன். ரிலேக்கா சாப்பிட வான்னு கூப்பிடறாங்க. முதல்ல பதட்டப்பட்டது கூட என்னமோ ஓவர் டிராமா மாதிரி இருந்தது. நான் கூட பிள்ளைய காணோம்னு இப்படி பிஹேவ் பண்ணுறாங்களோன்னு நினைச்சேனே. இங்க வச்சிகிட்டே இல்லைன்னு சொல்லுறாங்களோ’ என சந்தேகமாக பார்த்தான் விபா.

“சாப்பாடு வேணாம். கோப்பி மட்டும் கலக்கி குடுங்க” என கேட்டான். அவர் கிச்சனுக்குள் நுழைந்ததும் குடுகுடுவென மாடிக்கு ஏறி இரு அறைகளையும் திறந்து பார்த்தான். அவள் வந்த சுவடே இல்லை. போன வேகத்திலேயே இறங்கி வந்தான். படி அருகிலேயே கற்பகம் நின்றிருந்தார்.

“என்ன தம்பி, பாத்ரூம் போய்ட்டு வரீங்களா” என கேட்டார். ஆமாமென அவசர அவசரமாக தலையை ஆட்டினான் விபா.

“சரிதான். வந்து கோப்பி குடிங்க மாப்பிள்ளை” என கப்பை நீட்டினார் அவனிடம்.

“மாப்பிள்ளையா?” என அதிர்ந்தான் விபா.

“அப்புறம்? இப்ப தான் என் பொண்ணை காதலிக்கிறேன், சண்டை போட்டு கிட்டோம்னு சொன்னீங்க. அப்போ நீங்க எனக்கு மாப்பிள்ளை தானே?”

தலை ஆம் என ஆடியது விபாவுக்கு.

‘”நீங்களும் இனிமே என்னை அத்தைன்னே கூப்பிடுங்க. அப்புறம் என்னிக்கு கிளம்புறீங்க?”

‘என்னடா இது? நானே அவளை காணோமேன்னு நொந்து போய் வந்துருக்கேன். இவங்க என்னை துரத்துறதிலேயே இருக்காங்க.’

“அத்தை, தானு எங்கன்னு உங்களுக்கு நெஜமா தெரியாதா?” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான் விபா.

கொஞ்சம் தயங்கியவர், பின்,

“எனக்கு எப்படி மாப்பிள்ளை தெரியும்? அவ காணோம்னு நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும். இங்க வரல அத மட்டும் கன்பர்மா சொல்லுறேன். சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டு எனக்கும் சொல்லுங்க.”

அவருக்கு தெரியும் ஆனால் மறைக்கிறார் போல் தோன்றியது விபாவுக்கு.

‘அவங்க அம்மாவுக்கு சொல்லாம எதையும் செய்ய மாட்டா. எப்படி இவங்க வாயில இருந்து விஷயத்தை வர வைக்கிறது?’ செண்டிமென்டை கையில் எடுத்தான் விபா.

“அத்தை அவ காணோம்னு தெரிஞ்சதில இருந்து நான் இன்னும் ஒன்னும் சாப்பிடலை. தெரியர வரைக்கும் சாப்பிடவும் மாட்டேன். உங்க மக உங்களுக்கு போன் பண்ணா கண்டிப்பா இதை சொல்லுங்க” என எழுந்து கொண்டான்.

கையைப் பிசைந்தார் கற்பகம். செண்டிமென்ட் நன்றாக வேலை செய்தது.

“மாப்பிள்ளை, தொலைச்ச எடத்துல தான் தேடனும்னு சொல்லுவாங்க. இதுக்கு மேல என்னால ஒன்னும் சொல்ல முடியாது” என ஒரு க்ளுவைக் கொடுத்தார்.

தொலைச்ச எடத்துலனா, என் வீட்டுலயா? ஆனா மலேசியாவுக்கு வந்ததா டிடேய்ல்ஸ் எல்லாம் காட்டுதே. மண்டை காய்ந்தது அவனுக்கு. கற்பகத்தின் வீட்டை கண்காணிக்க ஆள் செட் செய்து விட்டு அன்று ஹோட்டலில் தங்கினான். அவளுடன் பழகிய தருணங்களை அசை போட்டுக் கொண்டும், அவள் அனுப்பிய வீடியோவை பார்த்துக் கொண்டும் பொழுதை நெட்டி தள்ளினான். டேனியும் அவள் அம்மாவும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதால், அவள் பத்திரமாக தான் இருக்கிறாள் என புரிந்தது. தன்னிடம் மட்டும் இருப்பிடத்தை அறிவிக்க விருப்பபடவில்லை எனவும் தெரிந்தது. டேனி முன்பே சொன்னது ஞாபகம் வந்தது. கிவ் ஹெர் சம் ஸ்பேஸ் என சொல்லியிருந்தான். அது போல் அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்தான். இப்படியே இரண்டு நாள் சென்றது. அவள் இங்கே இருப்பதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை. மனம் சோர்ந்து இருக்கும் பொழுது தான், சென்னை வீட்டிலிருந்து அவனுக்கு போன் வந்தது.

“ஹலோ”

“தம்பி, சாமிண்ணா பேசுறேன்” சமையல்காரர் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சாமிண்ணா. அங்க ஏதாவது பிரச்சனையா?” எப்பொழுதும் அவர் அப்படி அழைப்பவர் அல்ல.

“இல்ல தம்பி. வந்து” அவர் தயங்குவது போல் இருந்தது.

“சொல்லுங்கண்ணா, என்ன விஷயம்?”

“நம்ப பாப்பா இங்க தான் தம்பி இருக்கு” பட்டென விஷயத்தை உடைத்தார்.

“தானுவா?” அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமா தம்பி. அவங்க தான்”

“எப்ப இருந்து அங்க இருக்காங்க?”

“நீங்க மலேசியாவுக்கு கிளம்புன அன்னிக்கு நைட்டு வந்தாங்க”

‘என்னை கிளப்பட்டு என் வீட்டிலயே இருந்துகிட்டு என்னை மட்டும் டாக் மாதிரி சுத்த விட்டுட்டாளே. இதுதான் தொலைச்ச இடத்துல தேடறதா? அடியே! உனக்கு இவ்வளவு ஏத்தம் கூடாதுடி’

அதற்குள் பேக்ரவுண்டில் அவள் குரல் கேட்டது.

“நான் சொன்னத சொல்லிட்டீங்கல்லே, அப்புறம் ஏன் சாமிண்ணா போனை பிடிச்சுகிட்டு தொங்குறீங்க. அவரு பறந்தடிச்சிகிட்டு வருவாரு. நீங்க போய் நல்லதா சமைங்க” என சொல்லி கொண்டே போனை வைத்திருந்தாள் தானு.

‘வேலைக்காரங்க எல்லாத்தையும் இவ கையில போட்டு வச்சிருக்காளே. இப்ப கூட இவளா தான் தகவல் குடுக்க சொல்லியிருக்கா. மேடத்துக்கு என் மேல கருணை வந்துருக்கு போல.’ மனம் சந்தோஷ வானில் பறக்க, அவசர அவசரமாக அடுத்த பிளைட்டை பிடிக்க ஆவன செய்தான் விபா.

அவன் அவசரத்துக்கு மாலை ஐந்துக்கு தான் பிளைட் கிடைத்தது. ஏர்போட்டிலாவது உட்கார்ந்து இருப்போம் என ரூமை வேகெட் செய்தவனது போன் பாடி அழைத்தது.

“ஹாலோ மாப்பிள்ளை. அத்தை பேசுறேன்பா.”

“சொல்லுங்க அத்தை”

“கிளம்புறீங்கலாமே? அப்படியே வீட்டுப் பக்கம் ஒரு எட்டு வந்துட்டு போங்க. கொஞ்சம் பொருள் கொடுத்து அனுப்பனும். என் மகளை கண்டுபிடிச்சோன அவகிட்ட சேர்த்துருங்க”

‘ட்ராமாவ பாரேன். கிளம்புறது தெரியுது, ஆனா மகள கண்டுபிடிச்சது மட்டும் தெரியாதாம். முடியலைடா சாமி’

“வரேன் அத்தை”

கொஞ்சம் பொருள் என்பது பல பெட்டிகளாக அங்கே உட்கார்ந்திருந்தது. கேள்வியாக நோக்கியவனை,

“தானுவுக்கு பிடிச்ச நொறுக்கு தீனி, அப்புறம் அவளோட புக்ஸ் கலேக்ஷன், துணிங்க, பொம்மை எல்லாம் இருக்கு. இது அவளோட பேர்த் சர்டிபிகேட் ஒரிஜினல். இதையும் எடுத்துட்டு போங்க”

“இது எதுக்குத்தை இப்போ?”

“யாருக்கு தெரியும்? சொன்னத தான் செய்யுறேன்”

“யாரு சொன்னத?”

“யாரும் சொல்லலையே. அடுப்புல பால் கொதிக்குது. இருப்பா வரேன்.” என உள்ளே சென்று விட்டார் கற்பகம்.

ஒரு வழியாக சென்னையை அடைய இரவு ஒன்பது ஆகி விட்டது. தயக்கத்துடனே வீட்டுக்குள் கால் எடுத்து வைத்தான் விபா. அவன் உள்ளே நுழையும் போது மாடியில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தாள் தானு. இருவரின் பார்வையும் சில நிமிடங்கள் மோதிக் கொண்டு நின்றன. பார்வையை விலக்காமலே அவனை நோக்கி வந்தாள் தானு.

“தேவதாஸ்ன்னு நினைப்பா? தாடில்லாம் விட்டுருக்க. இதை எல்லாம் நாங்க ‘நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையான்னு’ மோகன் பாடுவாறே, அந்த படத்திலேயே பார்த்துட்டோம்.இரு இரு, சால்வை ஒன்னு தான் மிஸ்சிங். அதையும் தோள்ல போட்டுக்க. செம பீல் குடுக்கும்.” என நக்கலடித்தவள்,

“போய் ஷேவ் பண்ணி குளிச்சுட்டு டைனிங் ஹாலுக்கு வா” என கட்டளையிட்டு விட்டு சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘மனுஷன் இவள காணோம்னு கவலையில இப்படி ஆயிட்டானேன்னு ஒரு பரிதாபம் கூட இல்லாம எப்படி நக்கலடிச்சுட்டு போறா பாரு. இன்னும் என்ன காத்துகிட்டு இருக்குதோ தெரியலையே. ஏதா இருந்தாலும், இன்னிக்கே எல்லாத்தையும் செட்டல் பண்ணிரனும்’ என்ற உறுதியோடு அவள் சொன்னதை செய்ய சென்றான்.

அவன் கீழிறங்கி வந்த போது டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் தானு. எப்பொழுதும் உட்காரும் இடத்தில் அமைதியாக உட்கார்ந்தான் விபா.

“சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு?” கேள்வி வந்தது அவளிடமிருந்து.

பதில் சொல்லாமல் அமைதியாகவே அவளை நிமிர்ந்து பார்த்தான் விபா. எழுந்து அவன் அருகில் வந்தவள், அவனது தட்டில் உணவை இட்டு நிரப்பினாள். அவன் முன்னே மேசை மேல் ஏறி அமர்ந்தவள், தட்டை கையில் எடுத்து உணவை பிசைந்தாள்.

“வாயை திற வேணு”

கண்கள் கலங்க மெல்ல வாயைத் திறந்தான் விபா.

“இப்ப எதுக்கு கண்ணு கலங்குது?”

“எனக்கு விவரம் தெரிஞ்சு இது வரைக்கும் யாரும் ஊட்டி விட்டதில்ல தானும்மா.”

உணவை அவன் வாயருகே கொண்டு சென்ற தானுவின் கை அப்படியே நின்றது.

“இனிமே நான் ஊட்டி விடறேன். இப்ப சாப்பிடு” என ஊட்டி விட்டாள். கண்கள் பளபளக்க, உதட்டில் விரிந்த புன்னகையோடு அவள் ஊட்ட ஊட்ட சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் விபா. அவள் அம்மா சொன்ன ‘வலியைக் கொடுத்தவங்களே மருந்தா இருப்பாங்க. அது இவளுக்கு அப்படியே பொருந்தும்’ என்ற வார்த்தைகள்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவள் காட்டிய அரவணைப்பில் இத்தனை நாள் உறக்கம் இன்றி அலைந்ததெல்லாம் பின்னுக்கு சென்று விட்டது விபாவுக்கு.

ஊட்டி முடித்து, அவனுக்கு வாயையும் துடைத்துவிட்டாள் தானு. பின் தனக்கு தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

“நான் ஊட்டவா தானு?”

“ஒழுங்கா ஓடி போயிரு. நான் சாப்பிட்டு வரவரைக்கும் வெளிய சிட் அவுட்டுல உட்கார்ந்து என்னா சமாதானம் சொல்லி என்னை ஏமாத்தலாம்னு யோசிச்சிகிட்டு இரு. வரேன்.” என விரட்டினாள். அவள் சாப்பிடும் வரை கோபப்படுத்த வேண்டாமென சிட் அவுட்டில் சென்று அமர்ந்தான்.

பத்து நிமிடத்தில் குட்டி தலையணையுடன் வந்தவள், அதைக் கட்டிக் கொண்டு அவன் முன்னே அமர்ந்து கொண்டாள்.

“சொல்லு வேணு”

‘அய்யய்யோ! ஆயுதத்தை எடுத்துட்டாளே. இப்படி மொட்டையா கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன். இவளுக்கு எதுவரைக்கும் தெரியும்னு தெரியலையே’ என பேய் முழி முழித்தான் விபா.

“என்ன முழிக்கிறே? எத சொல்லலாம், எத மறைக்கலாம்னா? இங்க பாரு வேணு, இது தான் நான் உனக்கு குடுக்குற கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா எல்லா விஷயத்தையும் சொல்லுற. இதுக்கு அப்புறம் நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. புரியுதா?”

தலையை ஆட்டியவன்,

“எல்லாத்தையும் சொல்லறேன் தானு. இந்த போன் விஷயத்தை மட்டும் எப்படி கண்டுபிடிச்சேன்னு சொல்லு. எனக்கு மண்டை வெடிக்குது”

அவனை முறைத்தவள்,

“போன் மக்கரு பண்ணுதுன்னு சொல்லி புதுசு வாங்க போனோம் நானும் தேக்கியும். என் பட்ஜட்குள்ள எதுவும் வரல. நடந்து நடந்து கடுப்பாயிட்டான் தேக்கி. அப்புறம் அவனே போனை பழுது பார்த்து தரேன்னு என் கூடவே வீட்டுக்கு வந்தான். கழட்டி பார்த்து அவன் தான் கண்டு பிடிச்சான். அவன் சொன்னப்ப எனக்கு அதிர்ச்சி தான். யாரு போன் வாங்கி குடுத்தாங்கன்னு கேட்டான். பிரபுன்னு சொல்லுறப்ப தான் எனக்கே ஸ்ட்ரைக் ஆச்சு. எப்பவும் கவர் மட்டும் வாங்கி குடுக்குற பிரபு திடீர்ன்னு ஏன் இவ்வளவு விலை குடுத்து போன் வாங்குனான்னு. அப்புறம்தான் உன் வேலையா இருக்கும்னு கெஸ் பண்ணேன். பிரபு குடுத்த லேப்டோப்பையும் கழட்டி பார்க்க சொன்னேன். அதுலயும் ட்ராக்கர் இருந்தது.” சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.

ஆறுதலாக தொட வந்த விபாவை தடுத்தவள்,

“ஏன் இப்படி செஞ்ச வேணு? நான் அந்த போன்ல என்ன செஞ்சாலும் உனக்கு தெரியுமாமே? என் பிரண்ட்ஸ் கிட்ட பேசறது, மேசேஜ் அனுப்பறது, ஈமெயில், எந்த எந்த வெப்சைட் போறேன், நான் பிடிக்கிற போட்டோஸ், என் சோசியல் நெட்நோர்க், பேங்கிங் எல்லாமே உனக்கு தெரியுமாமே?” கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சுண்டி எறிந்தவள், கையிலிருந்த தலையணையை அவன் மேல் விட்டு அடித்தாள்.

“சொல்லுடா, எதுக்கு என்னை வேவு பார்த்த? உனக்கு வெட்கமா இல்லை, உன் காதலியா இருந்தாலும் நான் ஒரு தனி மனுஷி. என் பெர்சனல் ஸ்பெஸ்ல நீ எப்படி நுழையலாம்? சொல்லு வேணு? தேக்கி முன்னுக்கு எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமா? அப்படியே செத்து போயிரலம்னு இருந்துச்சு”

“தானும்மா!!!”

“வாய மூடு வேணு. நான் இன்னும் முடிக்கல. போன் குடுத்தது பிரபு, லேப்டோப் குடுத்தது பிரபு, இங்க காலேஜ் அப்ளை பண்ண சொன்னது பிரபு. அப்பத்தான் பொறி தட்டுச்சு. தேக்கிய விட்டு காலேஜ் சிஸ்டத்தை ஹேக் பண்ண சொன்னேன். அதுல தெரிஞ்சது உன் வண்டவாளம். எனக்கு சீட்டுக்கு எவ்வளவு டொனேஷன் குடுத்தன்னு விலாவாரியா தெரிஞ்சது.. வந்தது பாரு வெறி. நீ மட்டும் அப்ப என் கையில மாட்டிருந்த, பங்கமாயிருப்ப.” பல்லைக் கடித்தாள் தானு.

“படிப்பு வாங்கி குடுத்த மகராசன், வீட்டை மட்டும் விட்டு வச்சிருப்பியா? தேக்கி போன உடனே, பூட்டி வச்சிருந்த அந்த ரூமை திறந்தேன். அப்படியே ஆடி போயிட்டேன்.”

“அதெல்லாம் என் பொக்கிஷம் தானும்மா.”

“அப்படியே அறைஞ்சிற போறேன். சைக்கோ மாதிரி என் போட்டோவ ரூம் முழுக்க ஒட்டி வச்சிருக்க. நீ என்ன காதல் கொண்டேன் தனுஷா இல்ல மன்மதன் சிம்புவா?” கடுப்பானாள் தானு.

“அவங்களவிட நான் ஒரு படி மேல தானும்மா. அவங்க மத்தவங்க உயிர எடுப்பாங்க, நான் என் உயிர குடுப்பேன்”

சட்டென எழுந்து அவன் அருகில் சென்றவள் அவன் மடியில் அமர்ந்து அவனை கட்டிக் கொண்டாள்.

“தெரியும் வேணு. அதனால தான் உன்னை விட்டு என்னால போக முடியலை. எனக்கு டைம் தேவைபட்டுச்சு இதையெல்லாம் கிரகிச்சுக்க. நீ வேற அன்னிக்கு நைட்டே வந்துட்ட. நீயா சொல்லுவியான்னு ரொம்ப எதிர்பார்த்தேன். அதுக்கு அப்புறம் தான் இந்த முடிவை எடுத்தேன். அவசரப் பட்டு டிக்கட் வாங்குனது நெஜம்தான். ஆனா உன்னை விட்டு போக முடியலை. தேக்கி கிட்ட சொல்லி வேப் செக்கின் பண்ணி உன்னை திசை திருப்புனேன். நீ கிளம்புன உடனே, இங்க வந்துட்டேன். டேனிக்கும், அம்மாவுக்கும் இந்த விஷயம் தெரியும். நீ என்னை தேடி அலைஞ்சதுல எனக்கு ஒரு குரூர திருப்தி. ஏதோ நீ செஞ்சதுக்கெல்லாம் என்னால திருப்பி குடுக்க முடிஞ்ச பரிசுன்னு வெச்சுக்க”

‘டேய் தேக்கி, புள்ள பூச்சி மாதிரி இருந்து கிட்டு என வாழ்க்கையிலே புயலயே அடிக்க வச்சிட்டீயேடா. ‘

அவளை இருக அணைத்துக் கொண்டவன்,

“நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன் தானு. ஆனா என்னை விட்டுட்டு மட்டும் போகாதே. நான் செஞ்சதயெல்லாம் நியாயப்படுத்த நினைக்கல. ஆனா ஏன் செஞ்சேன்னு சொல்லுறதுக்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் குடு தானு”

“கண்டிப்பா வேணு, அதுக்கு முன்னால ஒன்னு கேட்கணும் வேணு”

“சொல்லும்மா”

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”

மின்னாமல் முழங்காமல் வந்த அதிர்ச்சி தாக்குதலில் ஞே என விழித்தான் விபா. அவனது தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்திய தானு,

“வில் யூ மேரி மீ வேணு?” என கேட்டாள்.

SST–EPI 28

அத்தியாயம் 28

மலேசியாவின் தேசிய காராக ப்ரோட்டோன் சாகா 1985ல் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக வளர்ச்சிக் கண்ட ப்ரோட்டோன் நிறுவனம், பல கைகள் மாறி இப்பொழுது வெளி நாடுகளுக்கு கார்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

 

குரு ஹரியிடம் மட்டும் சொல்லி இருந்தான் தான் ஈப்போ வருவதாக. சுல்தான் அஸ்லான் ஷா ஏர்போர்டில் இறங்கியவன், டாக்சி அமர்த்திக் கொண்டு தனது இல்லத்தை நோக்கிப் பயணப்பட்டான்.

அன்று காலையிலேயே கணே குருவின் கொண்டோவுக்கு வந்திருந்தான். வரும் போதே மிருவுக்குப் பிடித்த நாசி லெமாக்வும் வாங்கி வந்திருந்தான். மூவரும் காலை உணவு உண்ண அமர, குரு சொல்லாமலே அவனுக்கு ப்ரேட் டோஸ்ட் செய்துக் கொடுத்தாள் மிரு. தம்பிக்கும் தனக்கும் டீ கலக்கிக் கொண்டவள், குரு அருந்தும் க்ரீன் டீயை செய்துக் கொடுத்தாள். முகம் மலர க்ரீன் டீயை அருந்தி ரொட்டியையும் உண்டான் குரு.

அக்காவும் தம்பியும் யாருக்கு பொரித்த முட்டை நாசி லெமாக், யாருக்கு அவித்த முட்டை நாசி லெமாக் என வாதாடி பின் இரண்டிலும் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கி ஜகஜோதியாய் தங்களின் அன்றைய நாளை ஆரம்பித்தார்கள். அவர்களையே சிரிப்புடன் பார்த்திருந்தவனை, ஓரக்கண்ணால் கவனித்தாள் மிரு.

“கணே, நாசி லெமாக்ல 600 கலோரி இருக்குத் தெரியுமா? இப்படி அடிக்கடி இதெல்லாம் சாப்பிடாத இனி!”

“ஸ்கூல்ல நாலாவது மாடி என் கிளாஸ்! ஒரு நாளைக்கு நாலு முறையாச்சும் ஏறி இறங்கறேன். பந்து விளையாட்டு விளையாடறேன். நான் ரெண்டு நாசி லெமாக் சாப்பிட்டாக் கூட கரைஞ்சிரும் மை டியர் சிஸ்டர். சாப்பிட்டதும் மதமதன்னு இருக்குடான்னு சொல்லிட்டு கால் நீட்டி கப்புன்னு நாற்காலில சாஞ்சி உட்காரற நீயெல்லாம் கலோரி கணக்க பத்திப் பேசக்கூடாது. சாமி குத்தமாகிரும்” என தன் அக்காவுக்கு நோஸ் கட் கொடுத்தவன் கையைக் கழுவி விட்டு ஹாலுக்குப் போய் விட்டான் தனது ஹோம் வோர்க் செய்ய.

மிரு முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பு வர, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான் குரு. அவன் அருகில் வந்தவள்,

“என்ன பாஸ் ஆணவ சிரிப்பா இல்ல அகங்கார சிரிப்பா?” என கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும்..” இல்லை என சொல்ல வந்தவன் வாயில் பாதி முட்டையைத் திணித்திருந்தாள் மிரு.

“அவிச்ச முட்டைத்தான் பாஸ்! ஃபுல் ஆப் ப்ரோட்டின்! அம்மா கிட்ட வாதாட எனர்ஜி வேணும்ல, அதுக்குத்தான்” என கண் சிமிட்டினாள்.

கிண்டல் தொனியில் சொன்னாலும், அவள் முகத்தில் உள்ள கலக்கத்தைக் கண்டுக் கொண்டவன்,

“பயப்படாதே மிருது! எல்லாம் நல்லபடியா நடக்கும்” என சமாதானப்படுத்தினான். என்னதான் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாலும், ஆனந்தியின் ஆசியும் வேண்டும் என அவள் எதிர்ப்பார்ப்பது குருவுக்குப் புரிந்தே இருந்தது. தனது அம்மாவின் பிடிவாதத்தை அறிந்திருந்தவன், அதற்கு மேல் மிருவுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்க விரும்பவில்லை.

அவன் கிளம்பிக் கொண்டிருக்கும் போது ரூமுக்கு வந்தவள், அவனிடம் ஒரு செக்கை நீட்டினாள்.

“என்னதிது மிரு?”

“மீதப் பணம். நான் செலவு செஞ்சது போக மிச்சத்த உங்கக்கிட்டயே திருப்பிக் குடுக்கறேன் பாஸ். உங்களையும் எடுத்துக்கிட்டு உங்க பணத்தையும் எடுத்துக்கறது ரொம்ப தப்பு”

“என்னை நீ இன்னும் எடுத்துக்கவே இல்லையே மமி மரு!”

முறைத்தவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் குரு.

“கல்யாணம் ஆகப் போற பொண்ணுங்களுக்குன்னு ஒரு புதுமொழி இருக்குத் தெரியுமா மிரு?”

“என்னது பாஸ்?”

“வாட் யுவர்ஸ் இஸ் மைன், வாட் மைன் இஸ் மைன்! அதனால பணத்த நீயே வச்சிக்கோ. அதோடு சேர்த்து என்னையும் வச்சிக்கோ!”

“இப்படி பேசி பேசி கொல்லற ஆளையெல்லாம் வச்சிக்கத்தான் முடியும்! கட்டிக்க முடியாது பாஸ்!”

“அப்படிலாம் சொல்லக் கூடாது மிருஜி! வச்சிக்கனும்னா முதல்ல கட்டிக்கனும்! ஐ மீன் தாலிய சொன்னேன்!” என வம்பிழுத்தவன், பின் சீரியசாக,

“என் கிட்ட உள்ளது எல்லாம் இனி உன்னது மிரு. உன் கிட்ட உள்ள உன்னைத் தவிர, மத்தது எல்லாம் உன்னதுதான்” என குழப்பி விட்டு நெற்றியில் அழுந்த முத்தமிட்டுக் கிளம்பி விட்டான்.

டாக்சிக்கு செட்டில் செய்து விட்டு வீட்டில் நுழையும் முன்னே வாசலிலே எதிர்ப்பட்டார் ஆனந்தி. மகனைப் பார்த்து முகம் மலர புன்னகைத்தவர்,

“வாப்பா குரு! வா, வா!” என அழைத்தார்.

முகம் மலர நின்றிருந்தாலும், சிவந்திருந்த கண்களும் அதை சுற்றி இருந்த கரு வளையமும், தொண்டைக் கட்டியது போல இருந்த குரலும் குருவை நிதானிக்க வைத்தது. மிரு மீண்டும் தன்னிடம் வந்துவிட்ட விஷயம் அவருக்குத் தெரிந்திருக்கிறது என புரிந்துக் கொண்டான் குரு. தன்னை வேவு பார்க்கும் தன் தாயின் குணத்தை அறவே வெறுத்தாலும், இது கோபப்படும் நேரம் இல்லை என அமைதிக்காத்தான் குரு.

குருவின் கைப்பற்றி அழைத்துப் போய் சோபாவில் அமர்த்தியவர்,

“உனக்குப் பிடிச்ச ஐட்டம்லாம் சமைச்சு வச்சிருக்கேன் குரு! இன்னும் லஞ்ச் டைம் ஆகலியே! இப்போ ஜீஸ் குடி” என்றவர் சமையல் அறையை நாடிப் போனார். குருவுக்குப் பிடித்த வாட்டர்மெலன் ஜீஸ்சை தன் கையாலேயே தயாரித்தவர், மகனிடம் கொண்டு வந்துக் கொடுத்தார். வந்ததில் இருந்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அமைதியாக இருக்கும் மகனை பார்த்தப்படியே அவன் முன் அமர்ந்திருந்தார் ஆனந்தி.

குரு பழச்சாறைக் குடித்து முடிக்கும் வரை மகனையே உச்சி முதல் பாதம் வரை அளவிட்டவர், கிளாசை அவன் மேசையில் வைத்ததும் வாயைத் திறந்தார்.

“கல்யாணம் நான் செஞ்சு வைக்கனுமா? இல்லை நீயே செஞ்சிக்கப் போறியா குரு?”

குரல் கோபமாக வந்தாலும் அதில் இருந்த நடுக்கத்தைக் கண்டுக் கொண்டான் மகன்.

அம்மா என அழைக்க வந்தவனை கை நீட்டி பேச வேண்டாம் என தடுத்தவர்,

“எனக்கு லேசா தலைவலியா இருக்கு! அப்புறம் பேசலாம் குரு” என சொல்லியவர் அவசரமாக எழுந்து தனதறைக்குள் சென்று கதவடைத்தார். அவர் செல்லும் முன் கலங்கி இருந்த கண்களைக் கண்டுக் கொண்டான் குரு.

கண்ணீர்!!!! அவன் பயப்படும் ஆயுதம். அதுவும் தன் அம்மாவிடமும், மிருவிடமும் அதனைக் கண்டால் ஆடிப் போய்விடும் அவன் மனம். தலையைப் இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் குரு. ஹாலில் மாட்டி இருந்த தன் அப்பாவின் புகைப்படத்தை சற்று நேரம் வெறித்தப்படி அமர்ந்திருந்தவன், மனம் மெல்ல சாந்தி அடைய தனது ரூமுக்குள் புகுந்துக் கொண்டான். ஈப்போ வந்து விட்டதாக மிருவுக்கு மேசேஜைத் தட்டி விட்டான். சில நாட்களாக சரியாக தூங்காமல் இருந்ததன் பலன், கண்கள் எரிச்சலைத் தர, மனம் வேறு சோர்ந்திருக்க கட்டிலில் சாய்ந்தவன் அப்படியே தூங்கி விட்டான். மாலையில் பேபிம்மா வந்து தான் அவனை எழுப்பினாள்.

“குருப்பா! வென் டிட் யூ கம்?” என கேட்டவாறே அவன் முதுகில் ஏறி குதித்தாள் ரேஷ்மி.

குட்டியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், ஆசைத்தீர முத்தமிட்டான். அவளுடன் பேசிய படியே கட்டிலில் இருந்து எழுந்தவன், கதவோரம் சாய்ந்தபடி தன்னைப் பார்த்திருக்கும் ஹரியை பார்த்து புன்னகைத்தான்.

“பேபி, கோ ட்ரிங்க் யுவர் மைலோ!” என தன் மகளை வெளியே அனுப்பி வைத்தான் ஹரி.

“போய் முகம் கழுவிட்டு வாங்க ப்ரோ, பேசனும்”

முகம் கழுவியது மட்டுமில்லாமல் குட்டி குளியலையும் முடித்துக் கொண்டு வந்தவன், அலமாரியில் வைத்திருக்கும் தனது டீ ஷர்டையும் ஷார்ட்சையும் அணிந்துக் கொண்டான். அவன் உடுத்தி முடிக்கவும், கையில் டீயுடன் அவனை எதிர் கொண்டான் ஹரி. கட்டிலில் அமர்ந்து டீயை உறிஞ்சியவன், தம்பியியைப் பார்த்து சொல் என்பது போல சைகை செய்தான்.

“வீட்டுல குட்டி சூறாவளி ஒன்னு கரையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருக்கு ப்ரோ! நாங்க எல்லாம், ஈவன் பேபிம்மா கூட நேத்துல இருந்து கப்சிப்னு இருக்கோம். அப்படி இருந்தும் எனக்கு ரெண்டு டோஸ் விழுந்துருச்சு. மேனுக்கு எத்தனை விழுந்துச்சுன்னு தெரியல. அம்மா மேல உள்ள கடுப்ப எல்லாம் என் கிட்ட காட்டுறா! பிரஷா வேற ஒரே அழுகை போன்ல. எப்படி இருக்கீங்க அம்மான்னு போன் அடிச்சா, இன்னும் குழிக்குள்ள போகாம இருக்கேன்னு நினைச்சு சந்தோஷப் படுன்னு பட்டுன்னு சொல்லிட்டாங்களாம். நலம் விசாரிச்சது ஒரு குத்தமான்னு என் கிட்ட அழறா! உங்கம்மா நேத்துல இருந்து ஒழுங்க சாப்பிடல ப்ரோ. ரூம்குள்ளயே அடைஞ்சி கிடக்கறாங்க! கிட்ட நெருங்கினா எங்க டைம் பாம்ப் வெடிச்சிருமோன்னு நாங்களாம் பயந்துட்டே இருக்கோம் ப்ரோ”

“லஞ்ச் சாப்பிட்டாங்களா?”

“சமைச்சது எல்லாம் அப்படியே இருக்கு! உங்கண்ணா சாப்பிடாம தூங்கறான்! எழுப்பி சாப்பிட வை! வேலை வேலைன்னு அங்கயே விழுந்துக் கிடக்காதே! வளர்த்து விட்ட அண்ணன்காரன் வயிறு வாடிக் கிடக்க, உனக்கு அங்க என்ன வெட்டி முறிக்கற வேலைன்னு வாய்ஸ் நோட் போட்டாங்க! அதான் சீக்கிரம் வந்துட்டேன் ப்ரோ. அவங்களும் இன்னும் சாப்பிடல! போய் கூப்பிடுங்க! என்ன கோபம்னாலும் உங்க கிட்ட காட்ட மாட்டாங்க! அதுக்குத்தான் என்னையும் என் குடும்பத்தையும் நேர்ந்து விட்டுருக்காங்களே!” என சலித்துக் கொண்டான் ஹரி.

“பாசம் உள்ளவங்க கிட்டத்தான்டா கோபத்தைக் காட்ட வரும்”

“ஹ்க்கும் நம்பிட்டோம்! போங்க ப்ரோ போங்க! சீக்கிரம் உங்க ச்சார்ம்ம காட்டி உங்கம்மான்ற சூறாவளிய சுருட்டி வைங்க! மிடில”

புன்னகையுடன் எழுந்தவன், கிச்சனுக்குள் புகுந்தான். மேனகாவிடம் ட்ரேயில் இருவர் சாப்பிடுவது போல உணவு எடுத்து வைக்க சொன்னான். அவனுக்காக சப்பாத்தி, க்ரீன் கறி, மிக்ஸ் வெஜிடேபிள் என சமைத்திருந்தார் ஆனந்தி. அதையும், அம்மாவுக்காக சாதமும் எடுத்துக் கொண்டவனுக்கு மெல்ல புன்னகை எட்டிப் பார்த்தது. ஆனந்திக்கும் சாதம் இல்லாமல் இருக்க முடியாது மிருவைப் போலவே!

ஹரி கூட வந்து அறைக் கதவைத் தட்ட, ட்ரேயைப் பிடித்தப்படி நின்றிருந்தான் குரு. கதவைத் தட்டியும் சத்தமே இல்லை.

“அம்மா!” என குரு அழைக்க,

“ஹ்ம்ம்! வரேன். அஞ்சு நிமிஷம் இரு” என பதில் வந்தது.

ஐந்து நிமிடங்களில் கதவைத் திறந்தார் ஆனந்தி. அழுதிருப்பார் போல, முகத்தைக் கழுவி அவசரமாக பவுடரை ஒற்றி இருந்தார்.

ட்ரேயையும் மகன்களையும் மாறி மாறிப் பார்த்தவர், மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டார்.

“பெஸ்ட் ஆப் லக் ப்ரோ” என சொல்லிய ஹரி கழண்டுக் கொண்டான்.

தன் விரல் நகங்களைப் பார்த்தப்படி அமைதியாக அமர்ந்திருந்தார் ஆனந்தி. சாதம் இருந்த தட்டை எடுத்து, அதில் கறி ஊற்றி காய்கறிகளைப் பரிமாறி அன்னையிடம் நீட்டினான் குரு. தட்டை வாங்காமல், அப்படியே அமர்ந்திருந்தார் அவர். பெருமூச்சுடன் தட்டில் இருந்த உணவைப் பிசைந்து, உணவைத் தன் தாய் வாய் அருகே கொண்டுப் போனான் குரு.

“சாப்பிடுங்க அம்மா”

வேண்டாம் என தலையை இடம் வலம் ஆட்டினார் அவர்.

“என் கூட சண்டைப் போடவாச்சும் எனர்ஜி வேணும்ல! சாப்பிடுங்க” என கெஞ்சினான் குரு.

“எனக்கு என்ன தலையெழுத்தா பெத்து ஆசை ஆசையா வளத்தப் புள்ள கிட்ட சண்டைப் போட!”

“சரி, நீங்க சண்டைப் போட மாட்டீங்க! நான் போடற சண்டைய தாங்கிக்கவாச்சும் எனர்ஜி வேணும்ல! அதுக்கு சாப்பிடுங்க”

“ஒன்னும் தேவையில்ல!” சின்னப் பிள்ளைப் போல அடம் பிடித்தார் ஆனந்தி.

“நேத்துல இருந்து நான் சரியா சாப்பிடலம்மா! இப்ப நீங்க சாப்பிட்டு முடிச்சாத்தான் நான் சாப்பிடுவேன்! இல்லைன்னா இன்னிக்கும் பட்டினி கிடப்பேன்” என கெஞ்சலை விடுத்து மிரட்டலைக் கையில் எடுத்தான் குரு. பசி எனும் அஸ்திரம் தன் அம்மாவை மட்டுமல்லாது தனது பொம்மாவையும்(மிரு) என்ன பாடு படுத்தும் என அறியாதவனா குரு! அஸ்திரம் சரியாக வேலை செய்தது.

வாயை ஆவென திறந்தார் ஆனந்தி. புன்னகையை வாயினுள்ளேயே அடக்கியவன், தனக்கு ஊட்டி வளர்ந்த அம்மாவுக்கு தன் கையால் ஊட்ட ஆரம்பித்தான். வீம்புக்காக பசியில் கிடந்திருப்பார் போல. மட மடவென உணவு இறங்கியது. அதோடு தான் சீக்கிரம் சாப்பிட்டால் தானே, மகன் சாப்பிடுவான் என்பதாலும் சீக்கிரமாகவே உண்டார் ஆனந்தி. பின் மகனைக் கட்டிலில் அமர்த்தி தன் கையால் சப்பாத்தியை கறியில் நனைத்து ஊட்டிவிட்டார்.

இனி இந்த கொஞ்சல், ஊட்டல், சீராட்டல் எல்லாம் சாத்தியப்படுமா என மனம் வேறு கலங்கித் தவித்தது. மீண்டும் மிருவை மகன் வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறான் எனும் செய்தியை ஸ்பை மூலம் அறிந்தவருக்கு பூமியே தட்டாமாலை சுற்றியது. விலகிப் போக பணம் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள், தன்னை ஏமாற்றி மீண்டும் மகனிடம் சேர்ந்து விட்டாள் என்றே எண்ணினார். ஒரு சின்னப் பெண்ணால் தான் முட்டாளடிக்கப் பட்டிருக்கிறோம் எனும் செய்தியே அவருக்கு கோபத்தைக் கொடுத்தது. அதோடு தான் பேசிய பேச்சுக்கு இனி மகனைத் தன்னிடம் அண்ட விடுவாளா என மனம் கலங்கித் துடித்தது. தன் குருப்பா இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவன் மேல் கண்மூடித்தனமாக அவ்வளவு அன்பை வைத்திருந்தார் ஆனந்தி. தன் மகனுக்குக் கிடைக்கும் எல்லாமே தெ பெஸ்டாக இருக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர் இது வரை அதை நடத்தியும் வந்திருந்தார். தரமான அணிமணிகள், படிப்பு, என பார்த்து பார்த்து செய்தவர் அவன் தாரமாகப் போகிறவளும் அவ்வாறே இருக்க வேண்டும் என கோட்டைக் கட்டி வைத்திருந்தார்.

அந்தக் கோட்டையை மகன் தகர்த்திருக்க, எல்லா தாய்மார்களைப் போலவே தகர்த்தவனை விட்டுவிட்டு கோட்டையின் ராணியைத் தரம் தாழ்த்திப் பேசி தப்பு செய்திருந்தார் ஆனந்தி. உணவு உண்ட இருவரும் அமைதியாகவே கட்டிலில் அமர்ந்திருந்தனர். அவர் பேசட்டும் என இவனும், மகன் பேசட்டும் என அம்மாவும் அமைதிக் காத்தனர்.

மெல்ல நகர்ந்து தன் அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான் குரு. வளர்ந்ததில் இருந்து ஒரு அடி தள்ளி நின்ற மகன், சின்னப் பிள்ளையில் செய்வதுப் போல தன் மடி சாயவும், கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டது ஆனந்திக்கு. மெல்ல தன் மகனின் சிகையில் கைவிட்டு அளைந்தவர்,

“நான் உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு தெரியுமா குரு?” என கேட்டார்.

“தெரியும்மா!” என பதில் அளித்தான் குரு.

“உங்கப்பா போனதுக்கு அப்புறம் நான் வாழறதே உங்களுக்காகத்தான்டா! என் குரு, என் ஹரி, என் பிரஷான்னு உங்கள முன்னிருத்தியே என் வாழ்க்கை இருக்கு குரு”

“தெரியும்மா!”

“உன் தம்பிக்கு, தங்கைக்கு எல்லாம் பாத்து பாத்து செஞ்ச நான், உசிரையே வச்சிருக்கற உனக்கு கெட்டது நினைப்பேனா குரு?”

“நினைக்க மாட்டீங்கம்மா”

“அவ வேணாப்பா குரு!”

மகனிடம் அதற்கு எந்தப் பதிலும் இல்லை.

“எனக்கு அப்புறம் நீதான் இந்தக் குடும்பத்துக்கு எல்லாமுமா இருந்து செய்யப் போறவன். இப்பவே நீதான் எல்லாம் பார்க்கற, இல்லைன்னு சொல்லல! நான் சொல்ல வரது, சொந்தப்பந்தங்க விஷேசத்துக்குப் போறது, நல்லத்து கெட்டதுல கலந்துக்கறது இதெல்லாம்! உன் கூட உன் சரிபாதியும் இதுல எல்லாம் கலந்துக்கனும் குரு! அந்த இடத்துல என்னால இவள இமேஜின் பண்ணிப் பார்க்கவே முடியலடா குரு!”

“எந்த சொந்த பந்தத்த சொல்லறீங்கம்மா? அப்பா இறந்ததும், எங்க கடன் கிடன்ன்னு நாம வந்துருவோமோன்னு தகனம் பண்ணிட்டு வர முன்னுக்கே இடத்தைக் காலி பண்ணவங்களையா? நான் கஸ்டப்பட்டு எல்லாத்தையும் சரி செஞ்சதும் வந்து ஒட்டிக்கிட்ட பந்தபாசங்களையாம்மா?”

மகன் கேட்ட கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வார் ஆனந்தி!

“சரி அவங்கள விடு! உன்னோட பிஸ்னஸ் சர்க்கிள்ல அவள என்னன்னு அறிமுகப்படுத்துவ? அவளால சோசியலைஸ் பண்ண முடியுமா குரு?”

“என் பிலவ்ட் வைப்னு அறிமுகப் படுத்துவேன்! என்ன சோசியலைஸ் பண்ணனும்மா? வைன் குடிக்கனுமா, இல்ல ஆங்கிலத்துல பேசனுமா? இல்ல பார்ட்டிவேர் போட்டுட்டு வந்து எல்லாருக்கும் காட்சி குடுக்கனுமா? இதை எல்லாம் கொஞ்சம் கைட் பண்ணா என் மிருவாலயும் செய்ய முடியும்மா! அவளுக்கும் இஸ்டம் இருந்தா நானே கைட் பண்ணுவேன்! ஆனா மாசத்துல ஒரு தடவை வரப் போற இந்த மாதிரி நிகழ்வுக்காக என் வாழ்க்கையையே பணயம் வைக்க முடியாதும்மா”

“அவள உனக்கு மனைவியா என்னால ஏத்துக்கவே முடியல குரு! தமிழச்சியா இருந்தா, எந்த ஜாதினாலும் பரவாயில்லன்னு ஒத்துக்குவேன்! அவள பார்த்தாலே தெரியுதேடா கலப்படம்னு! என்னால முடியலயே குரு”

“ஒருத்தரோட பிறப்பு அவங்க கையில இல்லம்மா! உங்களுக்கும் அப்பாவுக்கும் நான் பிறந்தது என்னோட அதிர்ஸ்டம். இப்படி கலப்படமா பிறந்தது அவளோட தலைவிதிம்மா! அவளா ஆசைப்பட்டா அப்படி பிறந்தா? கடவுள் சித்தம் அது. அதுக்காக அவள ஒதுக்கறது எந்த வகையில நியாயம்மா? என் மிருவ பாடி ஷேமிங் செஞ்சிருக்கீங்க! உங்கள தவிர வேறு யாராச்சும் நான் அந்த விஷயத்துல மயங்கிக் கிடக்கேன்னு சொல்லி இருந்தா நான் என்ன செஞ்சிருப்பேன்னே எனக்குத் தெரியாது! உங்களால எப்படிம்மா உங்க மகனையே கேவலப் படுத்தற அளவுக்கு இப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிஞ்சது? என் மனசு சுக்கு நூறா உடஞ்சிப் போச்சும்மா! என் கேரக்டர் இப்படிதான்ற மாதிரி நான் இவ்வளவு நாளா வாழ்ந்துருக்கேன்! அதான் பட்டுன்னு நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க! உங்க மகன் கறை படிஞ்சவன்மா! அவ, என் மிரு ப்யூர் கோல்ட் மா! அவ கிடைக்க நான் தான்மா குடுத்து வச்சிருக்கனும்!”

“நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டாளா?” என குற்ற உணர்ச்சியில் கேட்டார் ஆனந்தி. மகன் மனம் வெதும்பி பேசியது வேறு அவரை பாதித்திருந்தது. கோபத்தில் என்ன பேசுவது என அறியாமல் தன் மகனைத் தானே கேவலப்படித்தி இருப்பதை குரு சொல்லும் போதுதான் உணர்ந்துக் கொண்டார்.

அதற்குள் எப்படி இந்த விஷயத்தைக் கண்டுப்பிடித்து, சர்ஜரிக்குப் போன மிருவை அழைத்து வந்தான் என எல்லாவற்றையும் சொன்னான் குரு.

“நீங்க பேசனதுல மனசு நொந்துப் போய், குறைச்சிக்க சர்ஜரி வரைக்கும் போய்ட்டாம்மா! அப்படி மட்டும் செஞ்சிருந்தான்னா, வாழ் நாள் முழுக்க உங்க மகன் குற்ற உணர்ச்சில குமைஞ்சி குமைஞ்சி செத்துருப்பான்மா! நான் காதலிச்சது அவ மனசதான்மா! நீங்க சுட்டி காட்டன விஷயத்தை இல்லம்மா!”

ஆனந்தியின் மடி நனைய ஆரம்பித்தது. குழந்தையாய் மாறி கண்ணீர் விடும் தன் மகவைப் பார்த்து அதிர்ந்துப் போனார் அவர்.

“குருப்பா!”

கண்களில் நீருடன் அவரை நிமிர்ந்துப் பார்த்தவன்,

“எனக்கு மிரு வேணும்மா! உங்களுக்கு அப்புறம் அவ தான்மா எனக்கு எல்லாம்! அவள என்னால விட முடியாதும்மா! உங்க சம்மதத்தோட அவள கரம் பிடிக்கனும்! ப்ளீஸ்ம்மா!” என கெஞ்சினான்.

சிறுவனாக இருந்தப் பொழுது, குருவுக்கு ரிமோட் கார்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்குப் பார்த்தாலும் வாங்கிக் கொடுக்க சொல்லி அடம் பிடிப்பான். அவன் அப்பா பல தடவை வாங்கிக் கொடுத்தாலும், சில தடவைகள் மறுத்து விடுவார். அந்த சமயங்களில் கண்ணில் நீருடன் இப்படித்தான் ஆனந்தியைப் பார்ப்பான் குரு. இவருக்கு உடனே உருகி விடும். தனது பணத்தில் இருந்து அப்பொழுதே வாங்கிக் கொடுத்து மகனை சிரிக்க வைத்து விடுவார்.

ரிமோட் கார் வேண்டும் என கண்ணிர் விடும் குட்டி குருவை மீண்டும் பார்த்ததில் அவருக்கும் கண்கள் கலங்கியது.

“என் சந்தோஷமே உன்னை சுத்திதான் குருப்பா! உனக்கு நல்லது செய்யறேன்னு நான் நினைக்க, நீ அப்படி இல்லைன்னு புரிய வச்சுட்ட. உனக்காக ஒத்துக்கறேன்! என் மகன் சந்தோஷத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்! ஆனா…”

கேள்வியாக நோக்கிய மகனை,

“என்னால உன் மிருகிட்ட ஒட்ட முடியுமான்னு தெரியல! நான் அந்தஸ்து, பாரம்பரியம் அப்படி இப்படின்னு வாழ்ந்துட்டேன்! என் இடத்த விட்டு என்னால இறங்கி வர முடியுமான்னு தெரியல. ஆனா மனசு நோக ஒன்னும் சொல்ல மாட்டேன்! ஒதுங்கிப் போயிருவேன்” என தன் மனநிலையை தெளிவாக சொன்னார் ஆனந்தி.

எப்படி மிருவைத் தன் தாயிடம் நீ அட்ஜஸ்ட் செய்துதான் போக வேண்டும் என வற்புறுத்தவில்லையோ, அதே போல தன் தாயிடமும் தன் மனைவியை அட்ஜஸ்ட் செய்துதான் ஆக வேண்டும் என கேட்கவில்லை குரு. இருவரையும் தான் ஒருவனே அட்ஜஸ்ட் செய்து போய்விட முடிவெடுத்தான் அவன். தாயையும் தாரத்தையும் வாழ்க்கை எனும் தராசில் சரிசமமாய் நிறுத்தி வைக்க முடிவெடுத்தான் குருப்ரசாத். ஆனந்தியும் அவன் ஆனந்தமும் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார்களா, அல்லது தீராத மண்டை வலியைக் கொடுப்பார்களா????

(திருமணத்தில் சிக்கிக் கொள்வார்கள்)

ENE–EPI 40

அத்தியாயம் 40

என்னவளே என்னை மறந்ததும் ஏனோ

எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள் பின்பு அணைத்தவள்

இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

 

சிராங்கூன் சாலை, சிங்கப்பூர்

கடை திறப்புவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. விபா நிற்க நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தான். ஆரம்ப கட்ட உதவிக்கு பிரபுவும் சிங்கப்பூர் வந்திருந்தான்.

“மச்சி, ரிப்பன் கட் பண்ண ஏதாவது நடிகைய அரெஞ் பண்ணியிருக்கலாம்லே. கூட்டம் அள்ளிரும். அதை விட்டு போட்டு, யாரோ பேர் தெரியாத ஆளா கூப்பிட்டுருக்க” என பொருமினான் பிரபு.

“ஏன்டா, இந்த ஊருல கடை திறக்கறோம். இங்க உள்ள மினிஸ்டர கூப்பிட்டா தான் நல்லா இருக்கும். ஏதாவது பிரச்சனைன்னு வரும் போது , சுலபமா அவங்க கிட்ட இருந்து ஹெல்ப் கிடைக்கும்.”

“எல்லாத்தையும் பிஸ்னஸ் மைன்ட்லயே பார்க்காதடா. கொஞ்சம் என்டேர்டேய்ன்ட்மெனும் வேணும்டா. ஹ்ம்ம்ம் உன் புண்ணியத்துல ஒரு சினிமா ஸ்டாரை பார்க்கலாம்னு நினைச்சேன். எதுக்கும் ஒரு அதிர்ஸ்டம் வேணும்டா.”

“அலையாதடா. ஊருக்கு வரும் போது, அவார்ட் பங்சன் எதாவது வரும் , கண்டிப்பா கூட்டிட்டு போறேன்”

“நெஜமாவா மச்சான்? அதுக்கெல்லாம் உன்னை கூப்பிடுவாங்களா?”

“உன் தங்கச்சி தான் என்னை அரை காசுக்கு மதிக்க மாட்டிக்கிறா. நீயுமாடா? நாமளும் அந்த மாதிரி பங்ஷனுக்கு ஸ்போன்ஷர் பண்ணுறதால என்னையும் அவார்ட் குடுக்க கூப்பிடுவாங்கடா. நம்பு பிளிஸ். நானும் ரவுடிதான்ற மாதிரி நானும் செலெபிரிட்டி தான்னு சொல்லிகிட்டே திரியனும் போல.”

“கோவிச்சுக்காதே மச்சான். சிம்பிளா பழகறியா, அதான் மறந்து மறந்து போயிருது. அவ்வளவு அழகு அழகா பிகர பார்த்தும், என் தங்கச்சி பின்னால சுத்துற பாத்தியா, அவ குடுத்து வச்சவ”

“அப்போ என் தானு அழகு இல்லைன்னு சொல்லுறியா? பிச்சுருவேன். அவ கிடைக்க நான் தான் குடுத்து வச்சிருக்கணும்” கண்களில் கனவு மின்ன சொன்னான்.

“விபா டேய், தானு கூட ட்ரீம் போய்ட்டு வந்துட்டீயா? என்ன சாங்? வெள்ளை டிரஸ் போட்ட நம்ம ஊரு பொண்ணுங்க ஆடுனாங்களா? இல்லை லேட்டஸ்ட் ட்ரேன்ட்ல வெள்ளைக்காரிங்களே ஆடுனாங்களா?” என கேட்டு விபாவை உலுக்கினான் பிரபு.

“உன்னை பக்கத்துல வச்சிகிட்டு கக்கூஸ் கூட போக முடியாது. இந்த லட்சணத்துல கனவுக்கு போறாங்களா? போய் வேலைய பாருடா. பேப்பர் வோர்க் எல்லாம் பக்காவா இருக்கணும். அப்புறம் வோர்க்கர்ஸ் பெர்மிட் எல்லாம் வந்துருச்சான்னு செக் பண்ணனும். இதெல்லாம் முடிச்சுட்டு ராத்திரி  ஒன்பது மணிக்கு எல்லாம் ஹோட்டலுக்கு போயிரனும். தானு கோல் பண்ணுவா.”

“அப்படி என்னதான்டா தினத்துக்கும் பேசுவா? “

“வேற என்ன, இன்னிக்கு எந்த போடி பார்ட்ஸ அறுத்தாங்க, அது உள்ளுக்கு என்ன என்ன இருந்தது அப்படின்னு டீடெய்லா சொல்லுவா. சில சமயம் படம் புடிச்சு வேற அனுப்பி வைப்பா. ஏன் மச்சி, மனுசன் வாயை பாத்திருக்கியே, வாய்க்கு உள்ள வர டான்சிலை(tonsil) பாத்திருக்கியா? நேத்து தான்டா க்ளோஸ் அப் போட்டோ பிடிச்சு அனுப்புனா. என்னால முடியலை மச்சி”

“ஆயிரம் பேர கொன்னா தான் அரை வைத்தியனாமே. அதுல உன்னைதான் முதல்ல கொல்ல போறா பாத்துக்க” என சொல்லி விட்டு சிரித்தான் பிரபு.

இருவரும் சிரித்த படியே வேலையை கவனிக்க சென்றனர். சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை அடைந்த போது, தானு மேசெஜ் செய்திருந்தாள் விபாவுக்கு.
“வேணு , இன்னும் கொஞ்ச நேரத்துல வீடியோ ஒன்னு அனுப்புறேன். குளிச்சிட்டு வந்து பாரு. அதுக்கு அப்புறம் போன் பண்ணுறேன்”
“ ஓகே “ என தட்டி விட்டவன்,
‘இப்ப என்னத்த வீடியோ எடுத்து வச்சிருக்கான்னு தெரியலையே. கண்ணா, வாயா, மூக்கா இல்ல காதா? எதா இருந்தாலும், இந்த இதயம் தாங்கும்’ என நினைத்துக் கொண்டே குளித்து விட்டு வந்தான்.

மேசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டு போனை கையில் எடுத்து வீடியோவை திறந்து பார்த்தான். பார்த்தவன் அப்படியே வாய் பிளந்து நின்றான். பின்பு கட்டிலில் அமர்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை ஓட விட்டுப் பார்த்தான்.

தொலைபேசியை ட்ரெசிங் டேபிலில் வைத்து எடுத்திருந்தாள் அந்த வீடியோவை. முதலில் படம் கொஞ்சம் ஆடி பிறகு கட்டிலை போக்கஸ் செய்தது. கட்டிலின் மேல் இடது காலை வைத்து அதன் மேல் கிட்டாரை வைத்து கொண்டு நின்றிருந்தாள் தானு. அவனுக்கு முதலில் கையை ஆட்டியவள் பின் கிட்டாரில் சுருதியைக் கூட்டினாள்.

தொலைபேசியைப் பார்த்து,

“வேணு!!! ரெடியா? இந்த பாட்டை உனக்காக டெடிகேட் பண்ணுறேன். எஞ்சாய்” என சொல்லி கிட்டாரை வாசித்துக் கொண்டே பாடினாள்.

“ தூக்கங்களை தூக்கிச் சென்றான்
தூக்கி சென்றான்..
ஏக்கங்களை தூவிச் சென்றான்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே

“நீ பூ வைக்க மாட்டல்ல, அப்புறம் எப்படி மாத்தி படிக்கிறது? கொஞ்சம் இரு யோசிக்கிறேன்” என தலையை தட்டி கொஞ்சம் நேரம் யோசித்தவள்,

“வந்துருச்சு,

நீ போடும் ஷேர்ட்டெல்லாம் ஒரு போதும் கசங்காதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலைா

ஆணே உன் மேல் பிழை”

“நல்லாயிருக்கா வேணு?” என கேட்டவாறே சிரித்தாள். வீடியோ அதோடு நின்றிருந்தது.

அசந்து போய் விட்டான் விபா. பாடியது சுமாராக இருந்தாலும் அவளது கிட்டார் வாசிப்பு பிரமாதமாக இருந்தது. ஸ்டைலாக தலையை ஆட்டி ஆட்டி அவள் வாசிக்கும்போது, அவன் நெஞ்சம் சென்னைக்கு பறந்து சென்று அவள் காலடியில் சரணடைந்திருந்தது.

‘இன்னும் என்னென்ன வித்தைகள் கையில வச்சிருக்கான்னு தெரியலையே. இப்பவே இருக்கி கட்டி பிடிச்சுக்கனும் மாதிரி இருக்கே. ஏன்டி, கடல் கடந்து வந்த இடத்தில என்னை இந்த பாடு படுத்துற? தானும்மா!!!! ஐ லவ் யூ !!!” என அவன் மனம் கதறியது.

வீடியோவை நிறுத்திவிட்டு அவளுக்கு வீடியோ கோல் செய்தவன், அவள் எடுப்பதற்காக காத்திருந்தான். அவள் முகம் ஸ்கிரினில் தெரிந்தவுடன், இச் இச் இச்சென முத்தமிட்டான்.

“போதும் வேணு. நிப்பாட்டு” என அந்த பக்கம் சிரித்தாள் தானு.

“ஏன்டி என் கிட்ட சொல்லல?”

“எதை? கிட்டார் வாசிக்க தெரியும்னா? இதெல்லாம் போய் எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிக்க சொல்லுறியா? சுய விளம்பரம் எனக்கு பிடிக்காது வேணு”

“இப்ப ஒழுங்கு மரியாதையா இன்னும் என்னேன்ன தெரியும்னு வரிசையா சொல்லுற. இப்படி திடீர் திடீர்னு எனக்கு அதிர்ச்சி குடுக்காத குட்டி. அதுக்கு முன்னுக்கு, நான் குடுத்த மாதிரியே நச்சு நச்சுன்னு முத்ததைத் திருப்பி குடுக்குற. கமான் தானு”

“அதேல்லாம் முடியாது. நான் கேட்காமலேயே நீதானே குடுத்த. அதே மாதிரி நீ கேட்காதப்ப நான்  குடுக்குறேன்.” என போக்கு காட்டினாள் அவள்.

“அங்க வந்து வட்டியும் முதலுமா வாங்கிக்கிறேன். இப்ப சொல்லு”

“உனக்கு தான் என் சின்ன வயசு கதை தெரியுமே. கவுன்சலிங் போகும்போது மியூசிக் கத்துக்கிட்டா மனசு ரிலாக்ஸ் ஆகும்னு சொன்னாங்கன்னு கற்பு பியானோ கிளாஸ்ல சேர்த்தாங்க. எனக்கு பிடிக்கல. பசங்க எல்லாம் பக்கத்து கிளாசுல கிட்டார் கத்துக்கறத பார்த்து அது தான் வேணும்னு அடம் பிடிச்சு சேர்ந்தேன். அப்புறம் தற்காப்பு முக்கியம்னு பாட்டி கராத்தே கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. டேனி வீட்டுக்கு போகும் போது, நீச்சல் குளமே கதிய கெடக்கிறேன்னு அவன் அம்மா நீச்சல் சொல்லி குடுத்தாங்க. அப்புறம் ட்ரைவிங், பைக் ஓட்டுறது எல்லாம் டேனி சொல்லி குடுத்தான். இப்போதைக்கு இவ்வளவு தான் ஞாபகம் இருக்கு. ஆம் மறந்துட்டேன் பாரு, தமிழ், மலாய், ஆங்கிலத்தோடு மேன்டரின்னும் பேசுவேன்”

வாயைப் பிளந்த விபா,

“அப்புறம் ஏன் டேனிகிட்ட ஆங்கிலத்திலேயே பேசுற?”

“அது அவன் கொழுப்பு. மேன்டரின் எனக்கு வந்த மாதிரி ஐயாவுக்கு தமிழ் வாயில நுழையல. அதனால அவன் கத்துகிட்டு பேசுற வரைக்கும் ஆங்கிலத்துல தான் பேசனும்னு சொல்லிட்டான். அவன் கத்து முடிக்கிறதுக்குள்ள நான் பேரன் பேத்தி எடுத்துருவேன் போல”

“முதல்ல நிறைய பிள்ளை குட்டி பெத்துக்குவோம்டா. அப்புறம் பேரன் பேத்திக்கு போவோம்”

“இந்த ஜோக்குக்கு நான் சிரிக்கனுமா?”

“இது ஜோக்கு இல்ல செல்லம். சீரியசா தான் சொல்லுறேன்” அவள் முறைக்கவும் சிரித்தவன்,

“சரி சொல்லு, ஏன் திடீர்ன்னு போய் கிட்டார் வாங்குன?”

உதட்டைக் கடித்தவள்,

“நீ இல்லாம எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு வேணு. எக்ஸம் எழுதுன டென்ஷன் வேற. டிப்ரஸா இருக்கு, எனக்கு யாருமே இல்லாத மாதிரி. அந்த மாதிரி நினைக்க கூடாதுன்னு தான், மனச திசை திருப்ப கிட்டார் வாங்குனேன். என்னோடது அங்க வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்” முகத்தில் தெரிந்த சோகத்தை மறைக்க வேறு புறம் திரும்பி கொண்டு பேசினாள்.

“தானும்மா, என்னைப் பாரு.”

திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த சோகம் விபாவின் மனதை பலமாக தாக்கியது. ‘என்னை விட்டுட்டு இருக்க முடியலை, இருந்தும் போக சொல்லியிருக்கா. இவ இருக்காளே, மனசுல என்னதான் இருக்குன்னு என்னால இன்னும் சரியா கணிக்கமுடியலை’

“நாளைக்கே நான் கிளம்பி வரேன்.”

“வேண்டா வேணு. இதுக்கு தான் உன் கிட்ட ஒன்னும் சொல்ல கூடாது. இன்னும் சில நாள் தான் இருக்கு ஒப்பேனிங்க்கு. இருந்து முடிச்சுட்டே வா. நான் சமாளிச்சுக்குவேன்” சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வீடியோ கோல் நின்று விட்டது.

விபா பல முறை முயன்றும் லைன் போகவில்லை. பதினைந்து நிமிடம் கழித்து அவளே அழைத்தாள்.

“என்னாச்சு தானு?” பதற்றம் விபாவின் குரலில்.

“போன் வர வர மக்கர் பண்ணுது வேணு. அடிக்கடி இப்படி நின்னு போயிருது”

“சரி, நாளைக்கு புதுசு வாங்கி செக்ரட்டரிகிட்ட குடுத்துவிட சொல்லுறேன்.”

“ஏன் எனக்கு வாங்க தெரியாதா? நாளைக்கு தேக்கி கூட வெளிய போறேன். அப்ப வாங்கிக்கிறேன்.”

“சரி, பத்திரமா போ. ஒன்னும் நினைக்காம நிம்மதியா தூங்கு. ஒபேனிங் முடிஞ்ச கையோட உன் முன்னுக்கு இருப்பேன். இப்ப அழகா சிரிச்ச படியா ஒரு ஐ லவ் யூ சொல்லு பார்ப்போம்”

“ஐ மிஸ் யூ வேணு, குட் நைட்” என பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு போனை அடைத்துவிட்டாள் தானு.

‘பிடிவாதம் பிடிச்ச கழுதை’ என செல்லமாக திட்டிக் கொண்டே மீண்டும் அந்த வீடியோவை பார்த்தவாறே தூங்கி போனான் விபா.

நாட்கள் இறக்கையைக் கட்டிக் கொண்டு பறந்தன. நாளை விடிந்தால் திறப்பு விழா. இரவுக்கே சென்னை திரும்பி செல்ல டிக்கேட் புக் செய்திருந்தான் விபா.

“என்ன மச்சி இவ்வளவு அவசரமா கிளம்பனுமா?”

“எனக்கு மனசே சரியில்லைடா பிரபு”

“ஏன்டா என்ன ஆச்சு?”

“நேத்து தானுக்கு போன் பண்ணப்ப அவ முகமே சரியில்லைடா. சிவந்து வீங்கி போய் இருந்தது. என்னை நினைச்சு அழுதுகிட்டு இருக்காளோ என்னமோ தெரியலை. கேட்டா லேசா காய்ச்சலுன்னு மழுப்புறா. இன்னிக்கு முழுக்க மேசேஜையும் காணோம். என்னமோ நடக்க போற மாதிரி படபடப்பா இருக்குடா”

“இதுக்கெல்லாம் ஏன்டா பயப்படுறே? உண்மையா காய்ச்சலா இருக்கும். ஒரு டாக்டருக்கு தன் உடம்பை பாத்துக்க தெரியாதா?” நண்பன் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு,

“சரி நாளைக்கு முடிச்சுட்டு கிளம்பு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

“தேங்க்ஸ்டா மச்சி”

“நமக்குள்ள என்னடா தேங்க்ஸ்.” விபாவின் முதுகை தட்டிக் கொடுத்தான் பிரபு.

மறுநாள் எந்த ஒரு தங்கு தடையுமின்றி ‘எலெகண்ட்’ திறப்புவிழா சிறப்பாக நடைப்பெற்றது. நிறைய விளம்பரப்படுத்தி இருந்ததால் கூட்டம் அலை மோதியது. இருந்த பிசியிலும் மறக்காமல் தானு எப்படி இருக்கிறாள் என மேசேஜ் செய்து கேட்டுக்கொண்டான்.

இரவு டேக்சி எடுத்து சாங்கி விமான நிலையத்துக்கு வந்தான் விபா. பிளைட் எடுப்பதற்கு முன் தானுவுக்கு கோல் செய்தான்.

“ஹலோ தானு”

“ஹ்ம்ம்”

“எப்படிடா இருக்க”

“ஓகே. அங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?’

“ஆமாடா. நினைச்சதோட கூட்டம் அதிகமாவே கூடியிருச்சு. திணறிட்டோம்”

“சரி”

“இப்ப எங்க இருக்கேன்னு சொல்லு பார்க்கலாம்?”

“ஹோட்டல்?”

“ஏர்போர்ட். இன்னும் 4 மணி நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன்”

கொஞ்ச நேரம் அங்கே சத்தம் இல்லை.

“தானு? தானு லைன்ல இருக்கியா?”

“ஹ்ம்ம்”

“நேரா உன் அபார்ட்மெண்ட் வந்துருறேன். உன்னை இப்பவே பார்க்கணும் மாதிரி இருக்கு”

“நான் உன் வீட்டுல தான் இருக்கேன்”

“ஆமாவா. ரொம்ப சந்தோஷம். என்ன இது உன் வீடுன்னு சொல்லிகிட்டு. நம்ப வீடுன்னு சொல்லு”

“ஹ்ம்ம்”

“என்னடா, ஒத்தை வார்த்தையாவே பேசுற?”

“ஒன்னும் இல்ல. மருந்து போட்டது மயக்கமா இருக்கு. படுக்கவா?”

“சரி படு. என் கிட்ட கீ இருக்கு. நான் வந்துருவேன். குட் நைட் தானும்மா, ஐ லவ் யூ”

“குட் நைட்” லைனை கட் செய்திருந்தாள்.

போனை பாக்கேட்டில் போட்டவன் பிறகு தான் உணர்ந்தான் பேசும்போது ஒரு தடவை கூட அவள் வேணு என அழைக்கவில்லை என்று.

‘என்ன ஆச்சு இவளுக்கு? அங்க வீட்டுக்கு போனதையும் சொல்லல. பேசறதும் சரியில்லை. சரி நேருல போய் பாத்துக்குவோம்.’ என எண்ணியவாறே பிளைட் புறப்படுவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

சென்னையில் இறங்கி வீட்டை அடைந்த போது விடிகாலை நான்கு மணி ஆகி இருந்தது. வீட்டைத் திறந்து நேராக தானு வந்தால் தங்கும் அறைக்கு சென்றான். கட்டில் காலியாக இருந்தது.

‘எங்க இவ? திரும்ப அபார்ட்மேன்ட் போயிட்டாளா? சரி குளிச்சுட்டு போய் பார்க்கலாம்’ என தனது ரூமுக்குள் நுழைந்தான். அங்கே லைட்டை எரியவிட்டுக் கொண்டு, தானு அவனது கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தாள். சத்தம் செய்யாமல், மெதுவாக கதவை சாத்தியவன், அருகில் வந்து நின்று அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘தூங்குறப்ப அப்படியே குழந்தை மாதிரியே இருக்கா.’ உதடுகள் லேசாக பிரிந்திருக்க, அந்த சின்ன இடைவெளியில் நாக்கை லேசாக துருத்திக் கொண்டு க்யூட்டாக தூங்கி கொண்டிருந்தாள் தானு. அப்படியே அள்ளிக் கொஞ்ச வேண்டும் என பரபரத்த கையை அடக்கி கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் விபா. சத்தமில்லாமல் குளித்து விட்டு, ரூமில் இருந்த சோபாவிலேயே படுத்துக் கொண்டான். அவள் கையேட்டும் தூரத்தில் இருக்கிறாள் எனும் நினைவே நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்தது அவனுக்கு.

காலையில் பத்து மணிவாக்கில் தானுதான் அவனை எழுப்பினாள் கையில் காப்பியுடன்.

“குடிச்சுட்டு வா, சாப்பிடலாம்” என வெளியேறிவிட்டாள்.

சாப்பிட்டுக் கொண்டே இருவரும் நார்மலாக பேசிக் கொண்டார்கள்.

“உங்கம்மா இப்ப மட்டும் எப்படி இங்க வர விட்டாங்க? என கேட்டான் விபா.

“அவங்க கிட்ட சொல்லலை”

புருவத்தைத் தூக்கி வியந்தவன் வேறு ஒன்றும் கேட்கவில்லை அவளிடம். வெளியே எங்காவது செல்லலாமா என கேட்டதுக்கு வேண்டாம் என்றவள், அன்று முழுக்க அவனை ஒட்டிக் கொண்டே அலைந்தாள். அவனுக்கும் அவள் அருகாமை தேவையாக இருந்ததால் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான்.

விபாவுக்கு அவள் தன்னிடம் எதையோ எதிர்ப்பார்ப்பது போலவே இருந்தது. என்ன என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. வாயைத் திறந்து கேட்டுவிட முடிவு செய்தவன்,

“தானும்மா, ஏன் ஒரு மாதிரியா பிஹேவ் பண்ணுற? ஏதாச்சும் வேணுமாடா?”’

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் ஒன்றும் இல்லை என தலையாட்டினாள். அவள் கண்கள் மட்டும் அவன் கண்களையே ஆழ்ந்து நோக்கியது.

“என்னடி இருக்கு மனசுக்குள்ள? சொன்னாதானே எனக்கு தெரியும்” மனம் தாளாமல் கேட்டு விட்டான் விபா.

“நீ ஏதாவது என் கிட்ட சொல்லனுமா வேணு?” அவனையே திருப்பி கேள்வி கேட்டாள் அவள்.

“உன் கிட்ட சொல்லறதுக்கு எனக்கு ஒன்னே ஒன்னு தான் இருக்கு.” அவளது மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டியவன்,

“நான் உன்னை உயிரா காதலிக்கிறேன் தானு. அன்ட் ஐ மிஸ்ட் யூ சோ சோ சோ மச்” என நெற்றியில் முத்தமிட்டான்.

மெல்ல விலகி கொண்டவள்,

“நாம ஏதாச்சும் படம் பார்க்கலாமா ?”

“சரி சொல்லு, என்ன படம் பார்க்கலாம்”

“இதயத்தை திருடாதே வச்சிருக்கியா வேணு”

மெல்ல சிரித்தவன்,

“அவரு மகனுங்க நடிச்ச படங்களே வந்துருச்சு. இப்ப அந்த படம் கேட்கறீயே தானு”

“எனக்கு அந்தப் படம் ரொம்ப பிடிக்கும்.”

“சரி இரு, பழைய கலேக்ஷன்ல இருக்கும் தேடி எடுத்துட்டு வரேன். பார்க்கலாம்”

அவன் டிவிடியுடன் திரும்பி வரும் போது, பாப்கார்னுடன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் தானு. படத்தை ஓட விட்டவன் அவளை தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டே படத்தைப் பார்த்தான். படம் முடியும் வரை இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். பின் தானு உள்ளே செல்ல எழுந்தாள். கலங்கிய அவள் கண்களைப் பார்த்த விபா, அவளது கையைப் பிடித்து இழுத்தான். தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள் தானு. அவள் முகத்தை தன் நெஞ்சில் அழுத்தியவன், தலையை கோதிவிட்டான்.

“இப்ப என்ன விஷயம்னு என் கிட்ட சொல்ல போறியா இல்லையா?” குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

அவன் அணைப்பில் இருந்து திமிறியவள்,

“ஒன்னும் இல்லைன்னு சொன்னா உனக்கு புரியாது? நான் ரூமுக்கு போறேன். பின்னாடியே வந்து டிஸ்டர்ப் பண்ணாதே” என வெடித்தவள் விடு விடுவென ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

என்ன செய்வது என புரியாமல் அமர்ந்திருந்தான் விபா. பழகிய இத்தனை நாட்களில் அவள் இப்படி நடந்து கொண்டதே இல்லை. மாதந்திர பிரச்சனையோ என் நினைக்கவும் வாய்ப்பில்லையே. அதற்கு இன்னும் நாள் இருந்தது. அந்த மாதிரி நேரங்களில், அவனிடம் எரிந்து விழுவாள் தான். சாக்லேட் வாங்கி கொடுத்து தான் தாஜா செய்வான் விபா. இந்த அழுகை , ஆத்திரம் எல்லாம் புதுமையாக இருந்தது. சரி விட்டு பிடிப்போம் என படுக்க சென்றான். அவள் சாப்பிடாமல் அவனுக்கும் சாப்பிட பிடிக்கவில்லை.

தூக்கம் வராமல் ஒரு புத்தகத்தை எடுத்து அமர்ந்தவன் கதவு தட்டி திறக்கப் படும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தான். தானுதான் கையில் பால் கிளாசுடன் வந்து கொண்டிருந்தாள்.

“ஒன்னும் சாப்பிடலையாமே? இந்தா பாலை குடி” என நீட்டினாள்.

“நீ சாப்பிட்டியா?”

“ஹ்ம்ம்”

கையில் கிளாசை வாங்கியவன்,

“நீ கொஞ்சம் குடிக்கிறீயா தானும்மா?”

“வேணா. எனக்கு பால் பிடிக்காது”

ஒரே மடக்கில் குடித்து முடித்தவன் கிளாசை மேசையில் வைத்தான். கலைந்த ஓவியம் போல் களைப்பாக தெரிந்த தானுவை நெருங்கி நின்றான்.

“ஆர் யூ ஆல்ரைட் டியர்?”

தலையை மட்டும் ஆட்டினாள். பின் அவனை நெருங்கி அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள். அவளை கட்டிக் கொண்டு நின்றவன், அவள் தலை மேல் கன்னத்தை வைத்துக் கொண்டான்.

திடீரேன தள்ளாடியவன் அவள் கையை இருக்கி பிடித்துக் கொண்டான்.

“தானு!!!!! சொல்லுடி, பாலுல என்ன கலந்த?”

மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்தவள், மூன்று விரல்களைக் காட்டி,

“தூக்க மாத்திரை”

“ஏன்டி, ஏன் இப்படி செஞ்ச?” பாத்ரூமுக்கு செல்ல முயன்றவனை இருக்கிக் கட்டிக் கொண்டாள் தானு.

“இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறு வேணு. தூக்கம் சொக்கிரும்”

“தானு, தானு, ஏன்மா?” இருக்கி கொண்டான் அவளை.

“என்னை விட்டுட்டுப் போகாதே தானு”

“கரேக்டா கண்டு பிடிச்சிட்டியே. நீ தூங்கி காலை பத்து மணிக்கு எழுந்திருக்கிறதுகுள்ள நான் உன்னை விட்டு தூரமா போயிருப்பேன் வேணு. என்னை நீ எப்படியும் தடுப்பேன்னு தெரியும். அதுக்கு தான் இந்த மூனு மாத்திரை.”

“வேண்டாம் தானும்மா. என்னை விட்டு போகாதே. என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஏதா இருந்தாலும் பேசிக்கலாம். தானு!!!!” குரல் குழறியது.

தடுமாறியவனை மெல்ல நகர்த்தி கட்டிலில் தள்ளினாள் தானு.

தானு தானு என அரற்றி கொண்டே இருந்தான் விபா. அவனுக்குப் போர்த்திவிட்டவள், அவன் காதருகில்,

“எப்படி வேணு உன்னால இப்படி நடந்துக்க முடிஞ்சது? உன்னை நான் எவ்வளவு நம்பினேன். என் உயிரே நீ தான்னு நினைச்சேனே. இப்ப கூட என் கிட்ட உண்மைய சொல்லனும்னு தோணல இல்லை?” தேம்பிக் கொண்டே பேசினாள்.

“நான் போறேன் வேணு. அப்புறம் ரொம்ப நாளா சொல்லு சொல்லுன்னு கேட்டியே, இப்ப சொல்லுறேன். ஐ லவ் யூ வேணு!!!! ஐ லவ் யூ சோ மச். பாய் வேணு”

தூக்கத்திலும் அவன் கை உயர்ந்து அவளது கையைப் பற்றியது. அழுகையோடு புன்னகைத்தவள், அவன் கையை விடுவித்துக் கொண்டு அழுதபடியே வெளியே ஓடினாள். விடிகாலை ஐந்து மணிக்கு சிரமப்பட்டு கண்களைத் திறந்தவன், பட்டேன எழுந்து உட்கார்ந்தான். மூன்று மாத்திரை கொடுத்தும், அவள் மேல் உள்ள காதலாலும் தன் மன உறுதியாலும் எழுந்து அமர்ந்திருந்தான் விபா. தடுமாறியபடி வீடு முழுக்க தேடியவன், அவள் எங்கும் இல்லாததால் பாரமாய் அழுத்திய தலையை தாங்கியவாறு,

“தானும்மா!!!!!!!!!!!!!!!!!!” என கதறினான்.

அவன் கத்திய சத்தம் அந்த அமைதியான நேரத்தில் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பட்டு எதிரொலித்தது.

 

“என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவு தானையா சாமி
ஒன்றை உந்தன் மனம் கெட்டது
அந்த ஒன்றும் வேறு இடம் போனது
கையில் வரும் எனப்பார்த்தது
இன்று கை நழுவி ஏன் போனது”

SST–EPI 27

அத்தியாயம் 27

புலாவ் டாயாங் புந்திங்(Pulau Dayang Bunting) கெடா மாநிலத்தில் இருக்கும் ஒரு தீவாகும். புந்திங் என்றால் கர்ப்பம் என பொருள்படும். இந்த தீவின் அமைப்புக் கூட ஒரு கர்ப்பிணி பெண் படுத்திருப்பது போலவே இருக்கும். இந்த தீவின் நீரில் முழுகி அந்த தண்ணீரைப் பருகினால் கர்ப்பம் அடையாத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் எனும் ஐதீகம் உள்ளது. இது இன்று வரை நிரூபிக்கப் படாவிட்டாலும் பலர் இதை இன்னும் நம்புகிறார்கள்.

 

ஒருவரை ஒருவர் அணைத்தப்படி அப்படியே படுத்திருந்தனர் மிருவும் குருவும். விடிந்த உடனேயே முதல் வேலையாக டாக்டரை சந்திக்க வேண்டும் என போய் நின்றான் குரு. அவர் வரும் வரை காத்திருந்து, மிருவின் இடுப்பு மற்றும் முதுகு வலிக்கு என்ன செய்வது என ஆலோசனைக் கேட்டுக் கொண்டான். அவர் சொன்ன உடற்பயிற்சி, பேக் சப்போர்ட் கொடுக்கும் சரியான உள்ளாடைகள், ரொம்பவும் வலி இருந்தால் எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டான் குரு.

பின்பு நிதி நிர்வாக அறைக்கு சென்று டிஸ்சார்ஜ் பிராசிடரைப் பற்றி பேசினார்கள். கட்டிய பணம் கட்டியதுதான், திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என நிர்வாகம் சொல்லிவிட, வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனாள் மிரு. அவளைக் கோழி அமுக்குவது போல அமுக்கி தன் கைவளைவிலேயே அழைத்து வந்தான் குரு.

“அஞ்சாயிரம் கட்டியிருக்கேன் பாஸ்! அப்படியே விட்டுட்டு வர சொல்லுறீங்க?” இவனிடமும் ஆத்திரப்பட்டாள்.

“மொத்த அஞ்சு லட்சத்தையும் நீ இங்கயே கட்டி இருந்தா கூட, நான் அவங்க கிட்ட திருப்பிக் கேட்டுருக்கப் போறது இல்ல மிரு. நீ எடுத்த முடிவுல நான் அந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கேன். உன் மேல அவங்க கத்தி வைக்காம விட்டதுலயே என் மொத்த சொத்தையும் எழுதி வைப்பேன் இந்த ஹாஸ்பிட்டலுக்கு”

“போதும் பாஸ்! ஏற்கனவே நம்ம அஞ்சாயிரத்த ஆட்டைய போட்டுட்டானுங்க! இதுல மொத்த சொத்துமா? அப்புறம் நீங்க பூவாக்கு என்ன பண்ணுவீங்க?”

“நீ கிரேப் ஓட்டி எனக்கு ரப்பாத்தி போட மாட்டியா மிரு?”

“மிருவ நம்பி வந்துட்டா ரப்பாத்தி என்ன, ரசை(ரசம்+தோசை), ரட்லி(ரசம்+இட்லி), ரப்மா(ரசம்+உப்புமா) இப்படி விதம் விதமா போடுவா”

“அதுல ரமிருவையும் சேர்த்துக்கோ மிரும்மா”

பேசியபடியே காரின் அருகே வந்திருந்தார்கள்.

“ரமிருவா? யூ மீன் ரசம் ப்ளஸ் மிரு?”

“ஆமா! உன் உள்ளங்கையில ரசம் ஊத்தி அப்படியே குடிச்சிக்குவேன். சைட் டிஸ்கு அப்படியே உன் விரல கட்டிச்சுக்குவேன்! பசி கப்புன்னு அடங்கிரும். யூ க்நோ மிரு, நாக்குக்கு அப்புறம் விரல் நுனிதான் நம்ம உடம்புல சென்சிடிவ் ஆன பாகமாம்! சோ எனக்கு தினமும் ரமிரு மட்டும் போதும். வயிறு மனசு எல்லாம் நிறைஞ்சிரும்” என கண்ணடித்தான்.

“இதுல டபூள் மீனிங் எதாச்சும் இருக்கா பாஸ்?”

“இவ்ளோ நாளா என் கூட பழகனதுல ரீடிங் பிட்வீன் லைன்ல எக்ஸ்பேர்ட் ஆகிருப்பன்னு நினைச்சேன்! அப்படி இல்லையா மிரு?”

“அதாவது விரல கடிச்சா ஷாக் அடிக்கும்! ஷாக் அடிச்சா தீ பத்திக்கும்! உடனே நீங்க ஷாக் அடிக்குது சோனான்னு பாட, நான் ஐயோ ஐயோயோனு பதில் போட, ஒரே ஜில்பான்ஸா இருக்கும்! அப்படித்தானே பாஸ்?”

“கரேக்டா கண்டுப்புடிச்சுட்டியே கள்ளி! இத்தனை நாளா நான் குடுத்த ஹிண்ட்லாம் புரிஞ்சுகிட்டே புரியாத மாதிரி நடிச்சிருக்க! வெல் ப்ளேய்ட் மிரு, வெல் ப்ளேய்ட்! நானும் என் மிருது பச்சைப் பாப்பா, அவள நீல பாப்பாவா மாத்த என்னலாம் கஸ்டப்படனுமோன்னு ரொம்ப கவலைப்பட்டுட்டு இருந்தேன் தெரியுமா?” என சிரித்தான் குரு.

“இப்ப நீங்க பேசறதுக்குப் பேருதான் வண்ண வண்ணமா பேசறதா பாஸ்? இதுக்கும் மேல இப்படி பேசுனா வாய் சிவப்பு கலர்ல வெத்தலைப் பாக்குப் போட்டுக்கும். ஓகேவா?” என மிரட்டியவளை புன்னகையுடன் தோளோடு அணைத்துக் கொண்டான் குரு.

“கீ குடுங்க, நான் கார் ஓட்டறேன்” என்றாள் மிரு.

“பரவாயில்ல மிரு! ஐ கென் மேனேஜ். நீ பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியற! பேசாம சாஞ்சு படுத்துக்க!” என்றவன் அவளை வசதியாக அமர்த்தி காரை ஓட்ட ஆரம்பித்தான்.

பாதி வழியில் தொடையில் ஏற்பட்ட குறுகுறுப்பில் மிருவைத் திரும்பிப் பார்த்தான் குரு. அவன் தொடையை சுரண்டிக் கொண்டிருந்தாள் அவள்.

“என்னம்மா?”

“இப்போ பேசலாமா பாஸ்?”

ஏற்கனவே இதே மாதிரி சுரண்டலும் அதற்கு பிறகு வாக்குவாதமும் நடந்ததை நினைத்து இருவருக்குமே சிரிப்பு வந்தது.

“பசிக்கிது பாஸ்! கொஞ்ச நாளாவே கவலைல சரியா சாப்பிடல. சர்ஜரி போறதுக்கு நேத்து நைட்ல இருந்து புவாசா (உண்ணாவிரதம்) வேற போட்டுட்டாங்க” என பாவமாக சொன்னாள் மிரு.

“டெலிப்ரான்ஸ் போகலாம்டா மிரு! காலை உணவு அங்க ருசியாவும் ஹெல்த்தியாவும் இருக்கும்”

“ஹ்கும்! எனக்கு வேணா! காலாங்காத்தாலேயே இலைதலைலாம் ப்ரேப்கஸ்டா சாப்பிட நான் என்ன ஆடா மாடா? மிரு பாஸ், தி கிரேட் மிரு!”

“அங்க ப்ரேக்பஸ்ட் சமர்த்தா சாப்பிட்டா, கடைசில பேஸ்ட்ரிஸ் வாங்கி தரேன் மிரு! ரொம்ப நல்லா இருக்கும்” என ஆசைக் காட்டினான் குரு.

“நான் தானே ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டு பசியோட வரேன்! சோ இன்னிக்கு என் சாய்ஸ் தான். நாளைக்கு உங்க சாய்ஸ்”

“சாப்பாட்டு விஷயத்துல இந்த டீல் பக்காவா இருக்கு மிரு! ஆனா மத்த விஷயத்துல எல்லாம் ஒரு நாளைக்கு என் சாய்ஸ், மறு நாளைக்கு மை சாய்ஸ்னு வச்சிக்கலாம். சிறப்பா போகும் நம்ம வாழ்க்கை”

மிரு முறைக்கவும் அழகாக புன்னகைத்தான் குரு.

“சரி சொல்லு மிரு, என்ன வேணும் சாப்பிட?” என விட்டுக் கொடுத்தான் அவன்.

“முட்டை ரொட்டி(முட்டை பரோட்டா) வேணும்”

“ஆவ்வ்வ்வ் மிரு! எண்ணெய்மா அது! 414 கலோரி இருக்கு அதுல!”

“இருந்துட்டுப் போகுது பாஸ்”

“சரி, சாப்பிடு. நைட் அந்த கலோரிய குறைக்க நாலரை ஹவர் கிஸ் குடுக்கறேன்! சரியாப் போயிரும்”

“நாலரை ஹவரா? அப்படிலாம் யாராலயும் குடுக்க முடியாது! போங்க பாஸ்!”

“ஹேய்! கின்னஸ் வோர்ல்ட் ரெக்கார்ட்ல 58 ஹவர் கிஸ் அடிச்சிருக்காங்க தாய்லண்ட் கப்பிள்! நம்மாளால அட் லீஸ்ட் 4 ஹவர் குடுத்துக்க முடியாதா மிரு?”

“முட்டை ரொட்டி கான்சல்! சாதா ரொட்டியே சாப்பிடறேன் நான்!”

சிரித்தப்படியே அவள் முன்பு கேட்ட முட்டை ரொட்டியையே வாங்கிக் கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் குரு.

வீட்டிற்கு வந்தவளை கணே பிடிபிடியென பிடித்துக் கொண்டான். அக்காவும் தம்பியும் சண்டைப் போட்டுக் கொள்வதை இனி இதுவும் தன் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான் என்பது போல பார்த்த குரு, சிரிப்புடன் குளிக்கப் போய் விட்டான்.

அவன் திரும்பி வந்தப் போது, மிரு அவள் அறையில் தூங்கி இருந்தாள்.

“கணே, இன்னிக்கு நான் ஈப்போ போக வேண்டியது! அக்காவுக்காக டிக்கேட் கான்சேல் பண்ணிட்டேன்! நாளைக்குக் கண்டிப்பா போகனும். நீ இங்க இருந்து அக்காவ பத்திரமா பார்த்துக்கறியா?” என அவனைப் பெரிய மனிதனாக்கிப் பொறுப்பை ஒப்படைத்தான்.

ஆனந்தியை சந்திக்கப் போகும் போது, மிருவை அழைத்துப் போவது உசிதமாகப் படவில்லை அவனுக்கு. அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அம்மா என்பதால் எதையும் இவன் தாங்கிக் கொள்வான். தனக்கு மனைவியாய் ஆவதால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள் என மிருவிடம் கேட்பதில் நியாயமே இல்லை எனும் முடிவில் இருந்தான் குரு. மிரு இருக்கும் மனநிலையில் அவளைத் தனித்து விடவும் பயம் அவனுக்கு.

“நான் பத்திரமா பாத்துப்பேன் மாமா! நீங்க போய்ட்டு வாங்க! அக்கா கெடால இருக்கான்னு அம்மா நம்பிட்டு இருக்காங்க. இப்போத்தான் அவங்களுக்குப் போன் பேசிட்டுப் படுத்தா அக்கா! நாங்க எதையும் சொல்லி அவங்கள கலவரப் படுத்தல. இப்போ நானும் அம்மா பக்கத்துல இல்லைனா அவங்க லோன்லியா பீல் பண்ணுவாங்க! இன்னைக்கு நைட் நான் அம்மா கூட இருக்கேன். காலைல வந்துருவேன். அக்கா எழுந்ததும் அவ கிட்ட சொல்லிருங்க”

“ஓகே கணே! இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நீ, நான், அக்கா, ரதிம்மா எல்லாம் ஒரே வீட்டுல இருக்கலாம்!” என சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தான் குரு.

குரு ஹாலில் அமர்ந்து வேலைப் பார்க்க மிரு தூங்கினாள், தூங்கினாள், தூங்கிக் கொண்டே இருந்தாள். முதல் முறை சாப்பிட அழைக்க, இன்னும் கொஞ்ச நேரம் என்றவள் எழவேயில்லை. மணி மூன்றாக மறுபடியும் எழுப்ப, அவன் மேலேயே சரிந்துத் தூங்கினாள் அவள். இத்தனை நாளாய் இருந்த கவலை, பயம், பிரிவு எதுவும் இல்லையென ஆக மனம் லேசாகி இருக்க அவளால் எழவே முடியவில்லை. நிம்மதியாக தூங்கும் அவளையே மனதில் வலியுடன் பார்த்திருந்தான் குரு. இனிமேலாவாது எந்த துன்பமும் அவளை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சத்யப்ரமாணமே மனதில் எடுத்துக் கொண்டான். தூக்க மயக்கத்தில் திட உணவு எதுவும் அவளுக்கு இறங்காது என முடிவெடுத்தவன், கொஞ்சமாக பம்ப்கின் சூப் செய்து, அவளை தன் தோளில் சாய்த்தப்படியே புகட்டி விட்டான்.

தன் தாயையும் தம்பியையும் இவள் எப்படி கவனித்துப் பார்த்துக் கொள்வாள் என கணே வாய் வழியாக அறிந்திருந்தவன், தன்னிடம் குழந்தையாய் மாறி நிற்கும் மிருவை தாயாய் அரவணைத்துக் கொண்டான். வாய் துடைத்து மறுபடியும் படுக்க வைத்தவன், அவள் அருகிலேயே அமர்ந்து சற்று நேரம் பார்த்திருந்தான்.

பின் எழுந்து தனது விட்ட ஆபிஸ் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். இரவில் ஹால் சோபாவிலேயே படுத்துக் கொண்டான் குரு. மிரு எழுந்து வந்தால் அவளுக்குத் தேவையானதை செய்து கொடுக்க வெளியே படுப்பது தான் வசதி.

நடுநிசியில் சோபாவில் தன்னை இடித்துக் கொண்டு படுத்த உருவத்தை தூக்கத்திலும் உணர்ந்து கைப்போட்டு அணைத்துக் கொண்டான் குரு.

“எழுந்துட்டியா ஸ்லீப்பிங் பியூட்டி?”

“ஹ்ம்ம்! ஸ்லீப்பீங் பியூட்டிக்கு கிஸ் குடுத்து முன்னயே எழுப்பிருக்கலாம் பாஸ்! பாருங்க எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்”

“ரெண்டு தடவை குடுத்தனே! அப்பவும் எழுந்துக்கல நீ!” ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தவனின் குரல் கரகரப்பாக இருந்தது.

“நெஜமாவா? கிஸ் குடுத்தும் நான் எழுந்துக்கலியா? நீங்க ப்ரின்ஸ் பிலிப் மாதிரி குடுக்காம, பிப்டி இயர்ஸ் கிழவன் மாதிரி குடுத்துருப்பீங்க! அதான் எழாம தூங்கிருப்பேன்” என குருவைக் கலாய்த்தாள் மிரு.

“ஓஹோ! தேட் டே அங்கிள் கேட்டகரின்னு சொன்ன, இன்னிக்கு பிப்டி இயர்ஸ் கிழவன்னு சொல்லுற! அங்கிள் ஆங்கிரியான என்னாகும் தெரியுமா?” என சொல்லியவன் அவளை மூச்சுமுட்ட முத்தமிட்டான்.

“போதும் விடுங்க பாஸ்! நீங்க அங்கிள் இல்ல யங்கிள்னு(யங்) ஒத்துக்கறேன்! ப்ளீஸ், ப்ளீஸ் விடுங்க” என தன்னை விடுவித்துக் கொண்டவள், அவன் நெஞ்சிலேயேப் படுத்துக் கொண்டாள். பின் அமைதியான குரலில்,

“உங்கம்மா நம்ம காதல ஒத்துக்குவாங்களா பாஸ்?” என கேட்டாள். அந்தக் குரலில் இருந்த வலி குருவை அசைத்துப் பார்த்தது. அவளை நகர்த்தி சோபாவில் அமர வைத்தவன்,

“இரு மிருது வரேன்” என தனதறைக்குப் போனான்.

திரும்பி வரும் போது அவன் கையில் சின்ன வெல்வெட் பெட்டி இருந்தது. சோபாவில் அமர்ந்தவன், மிருவை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“பிரிச்சுப் பாரு மிரு” என பெட்டியை அவளிடம் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன. அதில் ப்ளாட்டினத்தில் இரு மோதிரங்கள் குரு லவ் மிரு என எழுத்துப் பொரிக்கப்பட்டு இருந்தன. ஒரு மோதிரத்தில் பாதி ஹார்ட்டும் இன்னொரு மோதிரத்தில் மறுபாதி ஹார்ட்டும் இருந்தன.

“நீயும் என்னை லவ் பண்ணறன்னு தெரிஞ்சப்ப ஆர்டர் குடுத்து செஞ்சேன் மிரு.”

“நான் லவ் பண்ணறேன்னு எப்படி தெரியும்?”

“இதுக்கு என்ன மைப்போட்டா பார்ப்பாங்க? ஆரம்பத்துல நான் எது சொன்னாலும் எகிறுவ! போக போக அப்படியே குறைஞ்சிருச்சு. நான் எதாச்சும் வம்பிழுத்தா சிரிச்சு, ரசிக்க ஆரம்பிசிட்ட! நான் பார்க்காதப்போ அப்படியே என்னையும் என் பல்லையும் சைட்டடிச்ச! பிரச்சனைன்னு வந்தப்போ என்னைத்தானே கூப்பிட்ட! கேம்ப் அப்போ கைப்பிடிச்சப்பவும் சரி, கிஸ் பண்ணப்பவும் சரி உன் கிட்ட நடுக்கம் இருந்துச்சே தவிர மறுப்பு வரல! அப்பவே எனக்கு உன் மனசு நல்லா புரிஞ்சுருச்சு. ஆனா கல்யாணத்துக்கு அது மட்டும் போதாதே! வாய் வார்த்தையா உன் சம்மதம் வேணுமே! அதுக்கு நான் வெய்ட் பண்ணறதுக்குள்ள அந்த அருள் வந்து கெடுத்துட்டான்”

அருள் பெயரைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது மிருவுக்கு.

“நல்லா சிரி! அவன நீதான் வர வச்சன்னு எனக்குத் தெரியும்”

“கண்டுப்பிடிச்சிருவீங்கன்னு தெரியும்! ஆனா இவ்ளோ லேட்டா கண்டுப்பிடிப்பீங்கன்னு நான் நெனைச்சுப் பார்க்கல பாஸ்”

“உடம்பு முழுக்க கொழுப்புடி உனக்கு! அப்போ இருந்த ஸ்ட்ரேஸ்ல கண்டுப்பிடிக்கல. ஆனா அம்மா வந்த விஷயம் தெரிஞ்சப்போ, எல்லாத்தையும் கனேக்ட் பண்ணி யோசிச்சப்போ புரிஞ்சுகிட்டேன். நீதான் கீழ செக்குரிட்டி கிட்ட சொல்லி, அவன் மேல வர பர்மிஷன் குடுத்துருக்கன்னு. இல்லைனா அக்சேஸ் கார்ட் இல்லாம லிப்ட்ல மேல நம்ம அபார்ட்மெண்டுக்கு வர முடியாதே”

“ஆமா, அந்த நேபாள் செக்குரிட்டி அண்ணாட்ட எனக்கு அருள்னு கெஸ்ட் வருவாங்கன்னு சொல்லி மேல அனுப்பி விட சொன்னேன்”

“அம்மா சொன்னாங்கன்னு பிரிய முடிவெடுத்த, ஆனா வேற ஆளே கிடைக்கலியா உனக்கு! பாவி! உன்னை அவன் அறைஞ்சதும் நான் எப்படி பதறிட்டேன் தெரியுமா?”

“ஆக்சுவலி எங்கம்மாட்ட பேசறப்பலாம் என் கிட்டயும் பேசுவாங்க அருள்! அவருக்கு என் மேல ஒரு இது போல. ஆனா எனக்குத்தான் உங்க மேல ஒரு இதுவாச்சே! நம்ம ரெண்டு பேரோட அந்தஸ்த்து வேற்றுமையப் பார்த்து நான் என்னை அடக்கி வச்சிருந்தேன். அம்மாக்கு உடம்பு முடியலன்னு பார்க்க வந்தவர் கிட்ட உண்மைய சொல்லி ஹெல்ப் கேட்டேன்! எனக்கு ஹேல்ப் பண்ண ஒத்துக்கிட்டார். உங்கள பிரிஞ்சி கொஞ்ச நாளுல மனச தேத்திக்குவேன். அதுக்குப் பிறகு அவருக்கு சான்ஸ் இருக்குன்னு நினைப்பு அவருக்கு. அதான் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம்னு அவர் வர நேரம் பார்த்து உங்கள கிஸ் பண்ணேன்! என்னை அந்த மாதிரி கோலத்துல பார்த்தா அவர் விலகிடுவாருன்னு திட்டம் போட்டேன்.  நீங்க வேற கிஸ் பண்ணறேன்னு என் முடியெல்லாம் கலைச்சு விட்டுடீங்க! அந்த கோபத்துல தான் ஓவரா பேசி உங்கள அடிச்சிட்டாரு அருள். தன் பொருள் கைவிட்டுப் போச்சுன்னு கடுப்பு அவருக்கு! சாரி பாஸ்”

“கெடால வேலை வாங்கிக் குடுத்ததும் அந்தப் பெரிய மனுஷன் தானா?”

“ஆமா பாஸ்”

“இந்த ஆபரேஷன் பத்தி தெரியுமா?”

“சீச்சீ இல்ல பாஸ்! உங்களுக்கே சொல்லல! அவருக்குப் போய் சொல்லுவனா!” என யார் தனக்கு முக்கியம் என அந்த வார்த்தைகளில் நிரூபித்தாள் மிரு.

முகம் மலர்ந்துப் போனது குருவுக்கு.

“சரி, மோதிரம் பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கு பாஸ்!” மெல்லிய நீர்ப்படலம் மிருவின் கண்களில்.

“நீ என் கிட்ட காதல ஒத்துக்கறப்போ போட்டு விடனும் நினைச்சேன்! ஆனா அது மட்டும் இன்ன வரை நடக்கவே இல்லை” பெருமூச்சு விட்டான் குரு.

“காதல் இல்லாமத்தான் இப்படி மடியில உட்கார்ந்து இருக்கனா பாஸ்?”

“உன் காதல என் கண் தெரிஞ்சுகிச்சு, என் வாய் அறிஞ்சுகிச்சு, என் மூக்கு முகர்ந்துகிச்சு, கை  உணர்ந்துகிச்சு! காது மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு மிரும்மா? அதுக்கு முக்தி குடுக்க மாட்டியா?”

மெல்லிய புன்னகை மலர்ந்தது அவள் முகத்தில். அவன் காதருகே நெருங்கியவள்,

“மஐ மலவ் மயூ மகு மரு” என தவிப்புடன் சொன்னாள்.

அவள் சொல்லி முடித்த நொடி குருவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் மிரு.

“மஐ மலவ் மயூ மமி மரு” என சந்தோஷமாக ஆர்ப்பரித்தவன்,

“லெட்ஸ் கெட் ஹிட்ச்ட்(hitched)”(திருமணம் செய்து கொள்ளலாம்) என அவள் கையைப் பற்றினான்.

அவள் கலக்கத்துடன் பார்க்க,

“மிரும்மா! நாளைக்கு என் அம்மா எந்த மாதிரியான முடிவும் எடுக்கலாம். என்னை மகனே இல்லைன்னு சொன்னாலும் சொல்லலாம்! இல்ல நம்ம கல்யாணத்த எந்த மறுப்பும் இல்லாம கூட ஒத்துக்கலாம்! அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் மிரு. அம்மா நோ சொல்லி நான் உனக்கு மோதிரம் போட்டா, நம்மால தானே பாஸ் அம்மாவ எதிர்த்துகிட்டாங்கன்னு உனக்கு ஒரு உறுத்தல் இருக்கும். அதே யெஸ் சொல்லி நான் மோதிரம் போட்டா, அவங்க சொல்லித்தான் நான் உன்ன ஏத்துக்கிட்டதா தோணும். அதனால எந்த முடிவும் தெரியாத இன்னைக்கு, நாம ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணத்த நிச்சயம் செஞ்சுக்கலாம். அதுக்குப் பிறகு அம்மாவோட முடிவைப் பொறுத்து எப்படி கல்யாணம் செஞ்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம். என்ன நடந்தாலும் நான் உனக்கு ஹஸ்பண்ட் நீ எனக்கு வைப். காட் இட்?”

ஆமென தலையாட்டினாள் மிரு.

“இந்த பியூட்டிபுல் மோமெண்ட்கு நான் ஒரு பாட்டு செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் மிரு”

“பீட்டர் பாட்டா?”

“இல்லடி, தமிழ் பாட்டுத்தான். இப்போலாம் நெறைய தமிழ் சாங் கேக்கறேன். அதுதான் யூ டியூப்ல ஒரு சாங் செலெக்ட் பண்ணா அதுப்பாட்டுக்கு ஓடுமே! அதுல உனக்கு ஏத்த பாட்டு ஒன்னு கேட்டேன். தமிழ்ல நான் பாடனா கேவலமா இருக்கும். சோ போட்டு விடறேன் அந்த சாங்” என்றவன் டீவியை ஆன் செய்து பாடலை ஒலிக்கவிட்டான்.

“கூந்தல் முடிகள் நெற்றிப்பரப்பில்

கோலம் போடுதே அதுவா

சிரிக்கும் போது கண்ணில் மின்னல்

தெறித்து ஓடுதே அதுவா

கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு

மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ உன்னிடம் இருக்கிறது…”

என பாடலுடன் சேர்ந்து பாடியவனின் ஆங்கிலேய தமிழில் சொக்கிப் போனாள் மிரு.

பாடல் முடிவில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.

“வெல்கம் டூ மை லைப் மிசஸ் குரு”

“வெல்கம் டூ மை லைப் மிஸ்டர் மிரு”

என இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள். நாளை வருவதை நாளைப் பார்ப்போம், இன்று இந்த நிமிடம் தங்களுக்கானது என உணர்ந்து விடிய விடிய(நோ, நோ , நோ தப்பா நினைக்கக் கூடாது) முத்தமிட்டு முத்தமிட்டுப் பேசித் தீர்த்தார்கள்.

நாளைய தினம் ஆனந்தி ஆனந்தம் தருவாரா?

(சிக்கிக் கொண்டார்கள்)

error: Content is protected !!