arputha79

103 POSTS 0 COMMENTS

ENE–EPI 39

அத்தியாயம் 39

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

“வேணு”

“சொல்லுடா வைட்டு. உன் பிரெண்டு இப்பத்தான் நீ கிளம்ப போறேன்னு கண்ணை கசக்கிட்டு போனா. சமாதானம் பண்ணி படுக்க வச்சிருக்கேன்.  இப்ப நீ வந்து நிக்கிற. நாளைக்கு கிளம்புற ஐடியா இருக்கா இல்லையா?”

இரவில் ஆபிஸ் ரூமில் கொஞ்சம் கணக்கு வழக்குகளைப் பார்த்து கொண்டிருந்த விபாவை தேடி வந்திருந்தான் டேனி.

“ஏன் கிளம்பாட்டி கழுத்தப் புடிச்சு தள்ளிருவியா?”

“தள்ளனும்னு ஆசைதான். அதுக்கு அப்புறம் நடக்கிற பின்விளைவுகள் பயங்கரமா இருக்குமே. அதை நினைச்சுதான் பேசாம இருக்கேன்.”

“அப்போ டான்யாவுக்காக என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடிவு பண்ணிட்ட?”

அவள் பெயரை கேட்டதும் முகம் மிருதுவாக, புன்னகையுடன்,

“அவளுக்காக எதையும் செய்வேன். உன் முகரைய சகிச்சுக்க மாட்டேனா?”

“குட் டிசிஷன் வேணு. ஏன்னா இனிமே இந்த முகரைய நீ அடிக்கடி பார்க்க நேரும்.”

“உன் கிட்ட சொல்லுறதுக்கு என்னடா. முதல்ல அவ மட்டும் தான் வேணும்னு நினைச்சேன். எங்க நடுவுல யாரும் இருக்க கூடாதுன்னு ஒரு வெறியே இருந்தது. அவ குடும்பத்தோட பழகும் போதுதான், அவளோட சேர்த்து அவங்களும் எனக்கு வேணும்னு தோணுது. பரிவா பார்த்துக்கிற அவ அம்மா, சந்தேக கண்ணோட பார்க்கிற அவ அண்ணன், முறைச்சு முறைச்சு பார்க்கிற அவ தாத்தா, அன்பை அள்ளி குடுக்குற பாட்டி, அவ மாமா, அத்தை என் செல்லக்குட்டி தானு, என் நண்பன் பிரபு, லெச்சும்மா எல்லாரும் எனக்கு வேணும்டா. குடும்ப அமைப்பை அனுபவிச்சி பார்த்திராத எனக்கு இனி தானு குடும்பம்தான் என் குடும்பம்.”

“பாட்டி வீட்டுல இருக்குற ஆடு மாடேல்லாம் லிஸ்டுல காணோம்?”

“அடங்குடா வைட்டு. நக்கல் பண்ணாலும் உனக்கும் உள்ளுக்குள்ள என்னை பிடிக்கும்னு தெரியும். சரி சொல்லு. என்ன விஷயம்?”

“ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆவாது வேணு சார். என் டான்யாவ பத்தி கொஞ்சம் பேசனும்”

“டேய்! எத்தனை தடவை சொல்லுறது என் தான்யான்னு சொல்லாதேன்னு? ஒரு நேரம் மாதிரி இருக்க மாட்டேன்டா. அடிச்சு வச்சிர போறேன்”

கோபத்துடன் இரைந்தவனைப் பார்த்து புன்னகைத்த டேனி,

“இப்பத்தான் எல்லோரும் வேணும்னு சொன்ன, அதுக்குள்ள என் கிட்ட சண்டை பிடிக்கிற. நான் சொந்தம் கொண்டாடுறதையே உன்னால தாங்கிக்க முடியலை. நாளைக்கு அவ பேமிலி அவளை சொந்தம் கொண்டாட விடுவியா? இல்ல கைப்பிடியிலே இருக்கி வச்சுக்குவியா? கயிற்றை இருக்கி பிடிக்கிறப்ப அது நம்ம கைய வெட்டிரும் வேணு. அந்த கயிறு மாதிரிதான் டான்யா. அவளை நீ பொத்தி வைக்க முடியாது. அவளுக்கு மூச்சு முட்டிரும். எல்லாத்தையும் சுயமா செஞ்சி பழகனவ அவ. காதல்கிற பேருல அவளை உன் பிடியில இருக்காத. வெட்டிட்டு போயிருவா”

நாற்காலியில் இருந்து எழுந்த விபா, தலையைக் கோதியவாறே ஜன்னல் ஓரம் போய் நின்று இருட்டை வெறித்தான்.

“உன் போஸ்சேசிவ்னஸ என்னால புரிஞ்சுக்க முடியுது வேணு. ஆனா அது அளவு கடந்து கொஞ்சம் ஓவரா போகுதோன்னு ஒரு டவுட்டு. நீ டான்யாவை எங்க எல்லாரையும் விட நல்லா பாத்துக்குவன்னு இங்க இருந்த ரெண்டு வாரத்துல தெரிஞ்சுகிட்டேன். அவ உன் மேல எவ்வளவு உயிரா இருக்கான்னும் புரிஞ்சுகிட்டேன். உங்க காதல் இதே மாதிரி எப்பவும் நிலைச்சு இருக்கனும்கிறது தான் என்னோட ஆசை. அவ சந்தோஷம் உன் கிட்ட தான் இருக்கு, அதை நீயே கெடுத்துக்காத. கிவ் ஹெர் சம் ஸ்பேஸ்”

“என்னை என்னடா செய்ய சொல்லுற?” குரல் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வந்தது.

“கோபப்படாம கேளு,அப்பத்தான் எனக்கு தெரிஞ்ச சில டிப்ஸ குடுத்துட்டு போவேன். உன்னைவிட எனக்கு தான் அவளை பத்தி நல்லா தெரியும்”

“சரி சொல்லு”

“சொல்லுங்க டேனி சார்ன்னு கேளு”

“வைட்டு, பிரிச்சு மேஞ்சிருவேன் பாத்துக்க. என் பேபிக்காக பொறுத்து போனா என்னையே சீண்டி பார்க்கறீயா?”

“யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் வேணு டியர். சரி, பாவம் பொழச்சு போ. டிப்ஸ் நம்பர் ஓன், அவ எங்க போனாலும் முந்திரி கொட்டை மாதிரி பின்னால போய் நிக்காத. சரி தெரியாம தான் கேக்குறேன், எப்படி கரேக்டா மோப்பம் பிடிச்சு போற? ஸ்பை வச்சிருக்கியா?”

“அது உனக்கு தேவை இல்லாத விஷயம்”

“சரி விடு. டிப்ஸ் நம்பர் டூ, அவ பழக்க வழக்கங்களை மாத்த நினைக்காத. அப்புறம் உன்னை மாத்து மாத்துன்னு மாத்திருவா. நம்பர் த்ரீ, ஆடம்பர செலவு செய்யாதே. கஸ்டப்பட்டு வளர்ந்ததனாலே பணக்கணக்கு ரொம்ப பார்ப்பா. என் கிட்ட தான் இருக்கே, நான் செலவு செய்வேன்னு ஆடுனினா, அப்புறம் உன்னைப் பிடிச்சு ஆட்டிருவா. நம்பர் போர், சுய மரியாதை ரொம்ப பார்ப்பா.அதுக்கு மதிப்பு குடு. அவ சுயமரியாதை சீண்டப்பட்டா சிங்கமா மாறிருவா. லாஸ்ட் டிப்ஸ் ரொம்ப இம்போர்டன்ட் டிப்ஸ், எவ்வளவு அடிச்சாலும் சத்தம் போடாம வாங்கிக்க. அப்புறம் அவளே சமாதானம் ஆகி ஒத்தடம் குடுப்பா. ஊடல்ல தானே காதல் ஸ்ட்ரோங்கா ஆகும். எனிவே பெஸ்ட் ஆப் லக் வேணு”

டேனியை அணைத்துக் கொண்ட விபா,

“தேங்க்ஸ்டா வைட்டு. உன் டிப்ஸ கண்டிப்பா போலோ பண்ணுறேன்.”

“வேணு, கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன். அவள கண் கலங்க வச்ச, அப்புறம் என் கூடவே கூட்டிட்டு போயிருவேன். அதுக்கு அப்புறம் உன் கண்ணுலயே பட விடமாட்டேன். பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்க.”

“அதையே உன் பிரெண்டு கிட்ட சொல்லிட்டு போடா,என்னை கண் கலங்காம பாத்துக்க சொல்லி. நீ சொன்ன எல்லாம் ஓகே. கடைசியா என் கிட்ட இருந்து கூட்டிட்டு போயிருவேன்னு சொன்ன பாத்தியா? அது என் பிணம் இந்த மண்ணுல விழறப்ப மட்டும்தான் நடக்கும். அதையும் நீ நல்லா ஞாபகம் வச்சுக்க”

“உன்னை திருத்தவே முடியாதுடா. சரி நான் போய் படுக்கிறேன். என்னை பேக்காப் பண்ண காலங்காத்தாலயே ப்ளைட் புக் பண்ணதெல்லாம் ரொம்ப ஓவரு வேணு.”

பலமாக சிரித்த விபா,

“டேனி, உன் கம்பேனி ஷேர்லாம்”

“என்ன? திரும்பவும் எனக்கு பிச்சையா போட போறியா? அது உன் கிட்டயே இருக்கட்டும். என் சொந்த காலுல நிக்கிறப்ப காச குடுத்து திரும்ப வாங்கிக்கிறேன். அப்ப மட்டும் ஏதாச்சும் ஆட்டம் காட்டுன, டான்யாவ விட்டு அடி பின்னிருவேன். குட் நைட் வேணு”

“குட் நைட் வைட்டு”

டேனி ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி ஒரு மாதம் ஆகியிருந்தது. தான்யா மறுபடியும் படிப்பு, வீடு, ஊர் சுற்றல் என பிசியாகி இருந்தாள்.

அன்று வழக்கத்திற்கு மாறாக விபா அவளுக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான்.

“என்ன வேணு? இங்க வந்துருக்க? “

“காருக்குள்ள வா தானு. வீட்டுல ட்ரோப் பண்ணிருறேன். கொஞ்சம் பேசனும்”

கார் பயணத்தின் போது விபா கொஞ்சம் அமைதியற்று இருப்பது போல் இருந்தது தானுவுக்கு. அவன் வாயிலிருந்தே வரட்டும் என காத்திருந்தாள்.

“வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்து வந்திருக்கேன். அபார்ட்மென்ட் போய் சாப்பிட்டுகிட்டே பேசலாம் தானு”

“சரி வேணு”

வீட்டில் நுழைந்தவுடன்,

“வேணு, நான் போய் குளிச்சிட்டு வரேன். ஒரே டேர்ட்டியா இருக்கேன். இன்னிக்கு ஒரு பொணத்தை அறுத்து உள்ளுக்கு என்ன என்ன இருக்குன்னு காட்டுனாங்க. ஆவ்சம் தெரியுமா. குடல் அப்படியே பாம்பு மாதிரி சுத்தி சுத்தி இருக்கு. நான் தொட்டு கூட பார்த்தேன். அப்புறம் அந்த வயித்த வெட்டி காட்டுனாங்க பாரு. பென்டாஸ்டிக்!”

வாந்தி வருவது போல் சைகை செய்தவன், அவளைப் பிடித்து பாத்ரூமுக்குள் தள்ளி விட்டான்.

‘இன்னிக்கு நான் சாப்பிட்ட மாதிரி தான். ஒரு லவ்வரு வீட்டுக்கு வந்தா காதல பத்தி பேசுவாங்க. இவ குடலை பத்தில்ல பேசுறா. ஷப்பா, மத்தியானம் சாப்பிட்டதெல்லாம் வெளிய வந்துரும் போல. இதுல ஆவ்சம், பென்டாஸ்டிக் வேற’

தானு குளித்து விட்டு வருவதற்குள் மேசையை செட் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தான் விபா.

“வாவ், செம்ம லவ் மூட் போல. கேன்டல்லிட் டின்னரெல்லாம் அமர்க்களப்படுது” என தலையை துவட்டியவாறே வந்தாள் தானு.

கவர்ச்சியாக சிரித்தவன், அவள் கைப்பற்றி அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்தான். தட்டை எடுத்து வைத்து உணவை பரிமாறியவன், அவள் எதிரே தானும் அமர்ந்தான். போனில் வையலின் இசையை ஒலிக்க விட்டவன், கிளாசில் ஊற்றி வைத்திருந்த லெமன் ஜீசை தூக்கி,

“சியர்ஸ் தானும்மா” என்றான்.

“வேணு கலக்கறப்போ” என சிரித்தவள் அவளது கிளாசை தூக்கி சியர்ஸ் செய்தாள்.

பின்பு அமைதியாகவே சாப்பிட்டார்கள் இருவரும். சாப்பிட்டு முடித்து ஒன்றாக மேசையை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவிவிட்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்தார்கள்.

அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்ட தானு, அவன் கையை அடுத்து தன் கையினுள் அடக்கி கொண்டாள்.

“ஏன் வேணு, ஒரு மாதிரியா இருக்க? என்ன விஷயம் சொல்லு”

“தானும்மா” மற்றொரு கையால் அவளது தலையை வருடி கொடுத்தவன்,

“உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல, அந்த சிங்கப்பூர் பிரான்ச் ஓபேனிங்? அதோட ஆரம்ப கட்ட வேலையெல்லாம் முடிஞ்சது. “

“அது சந்தோஷமான விஷயம் தானே? அதுக்கு ஏன் உம்முன்னு இருக்க?”

“எதுடி சந்தோஷமான விஷயம்? உன்னை விட்டுட்டு ஒரு மாசம் அங்க இருக்கனும். அது எனக்கு சந்தோஷமான விஷயமா?”

“இதுக்குதான் முகத்தை இப்படி வச்சிருக்கியா? ப்ரோஜேக்ட் ஆரம்பிக்கும்போதே தெரியும் தானே, எப்படியும் இது நடக்கும்னு? அப்புறம் என்ன திடீர் பீலிங்சு இப்போ?”

“இது நீ வரதுக்கு முன்ன நான் ஆரம்பிச்சது தானு. பேச்சுவார்த்தை இழுத்துருச்சு. இப்பத்தான் கூடி வந்துருக்கு. இப்ப என்னால உன்னை விட்டுட்டு போக முடியாது” சின்ன குழந்தை மாதிரி அடம் பிடித்தான் விபா.

திரும்பி அவன் முகத்தைப் பார்க்கும் மாதிரி அமர்ந்த தானு,

“இங்க பாரு வேணு, நான் உன் வாழ்க்கையில வந்த பிறகு உனக்கு முன்னேற்றம் தான் இருக்கனும். என்னால பின்னடைவு ஏற்பட்டுச்சுன்னா அது எனக்கு தான் கேவலம். அதனால நல்ல பையனா கிளம்பி போயிட்டு , நல்லபடி முடிச்சுட்டு வா. என்னிக்கு கிளம்பனும்?”

“இன்னும் ரெண்டு நாளுல. நீயும் வரியாடா?”

“உதை வாங்குவ. எனக்கு எக்சாம் இருக்கு அடுத்த வாரம். தினமும் நாம வீடியோ சாட் பண்ணலாம் வேணு. நினச்சப்ப மேசெஜ் பண்ணு. ஓகேவா? இப்ப சிரிச்ச மாதிரி முகத்தை வச்சிக்க பிளீஸ்”

“போடி! நான் தான் உன்னை விட்டுட்டு போறோம்னு கவலை படுறேன். உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்ல”

அவன் முகத்தைப் பிடித்து தன் புறம் திருப்பியவள்,

“கவலை இல்லைன்னு யாரு சொன்னா? எனக்கும் உள்ளுக்குள்ள இருக்கு தான். அதை காட்டினா நீ என்ன செய்வ? கடையும் வேணாம் மண்ணும் வேணாம்னு இங்கயே இருந்துருவ. அதுக்கு தான் என் மனச கல்லாக்கி வச்சிருக்கேன். ஒரு குடும்பத்துல ரெண்டு பேரும் இமோஷனலா இருக்க கூடாது வேணு. ஒருத்தர் கொஞ்சம் கண்டிப்பா இருக்கனும். புரியுதா? இங்க வா” என அவனை ஒரு அன்னையைப் போல அணைத்து ஆறுதல் படுத்தினாள் அவள்.

“வேணு, அப்படியே தூங்கிட்டியா?”

“இல்ல, உன்னை வாசம் பிடிச்சிகிட்டு இருக்கேன். ஒரு மாசம் பார்க்க முடியாதே, அதான் உன் வாசத்தை எனக்குள்ள நிரப்பிக்கிறேன்.”

“போதும்டா வாசம் பிடிச்சது. பாவமா இருக்கியேன்னு கட்டிப்புடிச்சா அப்படியே உடும்பு பிடியா பிடிச்சுக்கிறது. இப்ப விட போறியா இல்லையா?”

“இருடி. இன்னும் கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சுக்கிறேன். ஒரு மாசம், முப்பது நாள், எழுநூத்தி முப்பது மணி நேரம் வேற யாரை கட்டிப்பிடிப்பேன் சொல்லு.”

கொஞ்ச நேரம் அவளிடம் சத்தமே இல்லை. முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன்,

“ஏன்டி, இப்படி முறைக்கிற?”

“யாரை கட்டிப் பிடிப்பேன்னு என் கிட்டயே கேக்குறியா? ஏன் அங்க எவளாச்சும் அழகா இருக்காளோ ஐயா கட்டிப்பிடிக்க?”

“ஐயோ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வரும்னு எனக்கு தெரியலை தானுக்குட்டி. நான் பேசறதுக்கேல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்டா எப்படிடா?”

“சரி மடக்கி மடக்கி கேள்வி கேக்கல. கைய மடக்கி நாலு குத்து அப்படி பேசுற வாயில மட்டும் குடுக்குறேன். இதுக்கு மேலயாச்சும் ஒழுங்கா பேசுறியான்னு பார்ப்போம்.”

அடிதடியில் ஆரம்பித்து சிரிப்பில் முடிந்தது அவர்களின் செல்லச் சண்டை. வயலின் இசையோடு அவர்களின் சிரிப்பு சத்தமும் அந்த வீட்டுன் மூலை முடுக்குகளை நிறைத்தது.

கோலாலம்பூர், மலேசியா.

அழைப்பு மணி சத்ததில் மதிய உறக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தார் கற்பகம். கடிகாரம் மாலை மணி நான்கை காட்டியது.

‘யாரு இந்த நேரத்துல’

அவசரமாக முகத்தைக் கழுவி துடைத்தவர் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். கேட் வெளியே நின்றவரைப் பார்த்த கற்பகம் கால்கள் வேரோடி போனவராக அப்படியே சமைந்து நின்றார்.

“அத்தான்” வாய் மெல்ல முணுமுணுத்தது. இத்தனை வருடம் கழித்து அவரைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வரவா வரவா என மிரட்டியது. கண்களை சிமிட்டி சமாளித்தவர், நிமிர்வோடு கேட்டை நோக்கி சென்றார்.

“கற்பகம்”

“எப்படி இருக்கீங்க?” மெதுவாக என்றாலும் தெளிவாக வந்தது குரல்.

“உள்ளுக்கு வாங்கன்னு கூப்பிட மாட்டியா கற்பகம்?”

“என்னை மன்னிச்சிருங்க. அத்தை நம்ம கூட இல்லாட்டியும், அவங்க ஆன்மா இங்கதான் சுத்திகிட்டு இருக்கிறதா நான் நம்புறேன். அவங்க இந்த வாசப்படிய நீங்க மிதிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அவங்க வாக்கை ஏன் மீறனும்? நீங்க லெச்சு வீட்டுல வெய்ட் பண்ணுங்க. நான் வரேன்.” லெட்சுமியை கூப்பிட்டு அவரை உள்ளே உட்கார வைக்க சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்ற கற்பகம், மகனுக்கு அழைத்தார்.

“தருண்”

“என்னம்மா? பதட்டமா இருக்கீங்க?”

“அவரு வந்து நிக்கிறாருடா”

“எவருமா?”

“அவருதான் உங்க அப்பா?”

“அந்த ஆளு ஏம்மா தீடீருன்னு வந்துருக்காரு? குடும்பமே சிங்கப்பூருல செட்டில் ஆகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்”

“எனக்கு எப்படிடா தெரியும்? படபடன்னு வருதுடா”

“அம்மா! ரிலேக்ஸ். மூச்சை நல்லா இழுந்து மூனு தடவை விடுங்க.”

சொன்னதை செய்தார் கற்பகம்.

“இப்ப போய் பயப்படாம, பதட்டப்படாம பேசுங்க. நீங்க ஒன்னும் பழைய கற்பகம் இல்ல. எங்க அம்மா பாரதி கண்ட புதுமைப் பெண். ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே, ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருதேன்னு பாடிகிட்டே போங்க. பயமெல்லாம் ஓடி போயிரும்”

மகன் பாடியதை கேட்டு சிரித்தவர்,

“திடீருன்னு பார்க்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். இனிமே சமாளிச்சுக்குவேன். சரிடா, அப்புறம் பேசறேன்”

“சரிமா.”

கற்பகம் பக்கத்து வீட்டை அடைந்த போது, அவருக்கு காப்பி கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தார் லெட்சுமி.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. என்னோட ஹிந்தி சீரியல் போடற டைம் ஆச்சு. கற்பு உன் வீட்டுல பார்த்துகிட்டு இருக்கேன். ஏதாச்சும் வேணுன்னா ஒரு குரலு குடு. ஓடி வந்திருறேன்” என வெளியேறினார் அவர்.

தலை குனிந்து விரல் நகத்தை ஆராய்வது போல் அமர்ந்திருந்தார் சுந்தரம்.

“சொல்லுங்க, என்ன விஷயமா வந்தீங்க?”

நிமிர்ந்து கற்பகத்தின் முகத்தை ஏறிட்டவர்,

“பிள்ளைங்க படிப்பு விஷயமா, இங்க கொஞ்சம் சர்டிபிகேட் கலேக்ட் பண்ணற வேலை இருந்துச்சு. அப்படியே உன்னையும் தானுவையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். வரணும் வரணும்னு நினைப்பேன், ஆனா எந்த முகத்தை வச்சுகிட்டு வரதுன்னு முடிவை மாத்திக்குவேன். இன்னிக்கு தான் கொஞ்சம் தைரியத்தை வரவைச்சு கிட்டு வந்தேன்”

‘இப்ப கூட மகனை பார்க்க வந்தேன்னு வாயில ஒரு வார்த்தை வரல பாரு’ எரிச்சல் வந்தது கற்பகத்துக்கு.

“பார்த்துட்டீங்கல்ல? கிளம்புங்க”

“என்ன கற்பகம் இப்படி பேசற?”

“வேற எப்படி பேசனும்னு நினைக்கறீங்க? நீங்க யாரு எனக்கு? டைவர்ஸ் ஆனவுடனே நமக்குள்ள பந்தம் விட்டு போச்சு. நீங்க கட்டுன தாலிய கூட கழட்டி சாமி படத்துல வச்சிட்டேன்”

அதிர்ச்சியாக பார்த்தார் சுந்தரம்.

“எதுக்கு இந்த அதிர்ச்சி? எப்படி இருந்தாலும் நீங்க இன்னொருத்தி புருஷனா ஆகிட்டீங்க. இன்னொருத்தி புருஷனோட தாலிய நான் ஏன் சுமக்கனும்? ரொம்ப படிச்சவராச்சே ,நீங்களே சொல்லுங்க? அது எனக்கு அவமானம் இல்லையா?”

சுந்தரம் வாயடைத்துப் போனார். பழைய வாயில்லா பூச்சி கற்பகத்தை எதிர்ப்பார்த்து வந்தவருக்கு இந்த கற்பகம் புதுமையாக தெரிந்தார். நன்றாக நிமிர்ந்து தன் முன்னாள் மனைவியை ஆராய்ச்சி பார்வைப் பார்த்தார். முடி அங்கங்கே நரைத்திருந்தாலும், முகத்தில் எந்த சுருக்கமும் இல்லாமல், அதே உடற்கட்டுடன் இருந்த கற்பகம் இப்பொழுதுதான் இவர் கண்களுக்கு தேவதையாக தெரிந்தார். உடல் ஊதி, முகத்தில் சுருக்கம் விழுந்து, முதுமையாக தெரிந்த மோனாவையும் கற்பகத்தையும் ஒப்பிட்டு பார்த்தது அவர் மனம். விட்டில் பூச்சிக்கு ஆசைப்பட்டு அழகிய கிளியின் சிறகை உடைச்சுட்டமே என மனம் வருந்தினார்.

“கற்பகம், உங்களை எல்லாம் விட்டுட்டு போய் நான் சந்தோஷமா இல்லம்மா. ரொம்ப மனக் கஸ்டத்தை அனுபவிச்சுட்டேன். எங்கம்மா சொன்ன மாதிரி அவளுக்கு நான் சம்பாரிச்சு போடும் மிசினா மட்டும் தான் இருக்கேன். ஒரு பாசம் இல்ல, ஒரு பரிவு இல்ல. நான் ரொம்ப நொந்து போயிட்டன்மா”

“உங்களுக்கு அவ கூட பிறந்தது எத்தனை பிள்ளைங்க?”

“மூனு பேர்”

‘நொந்து போனவருதான் மூனு பெத்துக்கிட்டீங்களாக்கும்’ மனதில் நினைத்தவர் வெளியே சொல்லவில்லை.

“இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு என் கிட்ட சொல்லுறீங்க?”

“உன் கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லுவேன் கற்பகம்? தானுவை விட்டுட்டு போன எனக்கு அதுக்கு பிறகு பிறந்த பிள்ளைங்ககிட்டயும் ஒட்ட முடியலை. ரெண்டுங்கெட்டானா தான் வாழ்ந்தேன்”

அதை சொல்லி முடிக்கும் போது, கற்பகம் எழுந்து நின்றிருந்தார். அவரின் முகத்தில் அப்படி ஒரு அருவருப்பு.

“இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல? ரெண்டு பிள்ளைங்கல இங்க கதற விட்டவரு, அந்த பிள்ளைங்களையாச்சும் தாங்கி இருக்கனும். இங்கயும் ஒட்டாம இங்கயும் ஒட்டாம இதெல்லாம் என்னய்யா வாழ்க்கை? இப்படி பெத்த பிள்ளைங்களுக்கு பாசம் காட்டாம உங்க மனநிலைய மட்டும் பெருசா நினைச்சு சுயநலமா வாழ்ந்திருக்கீங்களே? இதெல்லாம் ஒரு பொழப்பா? உங்க மூஞ்ச பாக்கவே பிடிக்கல. தயவு செஞ்சு வெளிய போங்க.”

“கற்பகம், நான் செஞ்சதெல்லாம் தப்பா இருக்கட்டும். இப்ப திருந்தி வந்துருக்கேன். என்னை ஏத்துக்க கூடாதா? நாளைக்கு பிள்ளைங்களுக்கு கல்யாணம் காட்சின்னு வரும் போது ஒரு தகப்பனா நான் முன்னுக்கு வேணும்ல?”

“அடச்சீ! ஒரு மனஷனா உன்னையும் நினைச்சு இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தேன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். புருசன் செத்துப் போன பொம்பளைங்க எல்லாம் சபையில நின்னு பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கல? நானும் அதே போல அவங்களுக்கு பண்ணி வைக்கிறேன். இப்ப வெளிய போடா நாயேன்னு நான் சொல்லுறதுக்கு முன்னாடி, மரியாதையா வெளிய போயிருங்க.”

“கற்பகம்!!” குரல் உயர்ந்திருந்தது அவருக்கு.

“என்ன? கத்தி பேசற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காதிங்க. போலிஸ கூப்பிட்டு ‘ஹாராஸ்மேன்ட்’ கேசுல புக் பண்ணுறதுகுள்ள கிளம்பிருங்க” ஒரே போடாக போட்டவர் கதவைத் திறந்து வீர நடை போட்டு வெளியேறினார்.

அவருக்குப் பின்னால் தலையை தொங்க போட்டுக் கொண்டு கிளம்பி சென்றார் சுந்தரம்.

SST–EPI 26

அத்தியாயம் 26

முள்நாறிப் பழம் (டுரியான்) மலேசியா பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. டுரி என்பது மலாயில் முட்கள் என பொருள்படும்.  இந்தப் பழம் மலேசியாவில் வாழும் எல்லா இன மக்களாலும் விரும்பப்படுகிறது. இந்தப் பழத்தின் வாடை சிலருக்குப் பிடிக்காமல் போனாலும், பலர் விரும்பியே உண்ணுகிறார்கள். டுரியான் கேக், ஐஸ்க்ரீம், பூடிங் என இந்த பழத்தைக் கொண்டு பல வகையான உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இப்பழத்தின்  வாடை பல நாக்டள் ஆனாலும் போகாமல் இருப்பதால், மருத்துவனை, ஹோட்டல் போன்ற இடங்களில் இந்தப் பழத்தை அனுமதிக்க மாட்டார்கள்.

 

பி.எம் மெடிக்கல் செண்டர், கோலாலம்பூரில் மற்றும் அல்ல பல மாநிலங்களிலும் தங்களது கிளையை நிறுவிக் கொடிக் கட்டிப் பறக்கும் மருத்துவமனையாகும். எல்லா விதமான மருத்துவமும் இங்கே வழங்கப்பட்டாலும், காஸ்மடிக் சர்ஜரி தான் அதில் முதன்மையாக இருந்தது. லிப்போசக்‌ஷனில் இருந்து லிப் லிப்ட் வரை இங்கே செய்யப்படுகிறது. மலேசியர்கள் மட்டுமல்லாது, வெளி நாட்டினர் பலரும் இங்குதான் தங்களுக்குத் தேவையான பல வகை ட்ரீட்மெண்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். பெரிய இடத்தை வளைத்துப் போட்டு, ஹோட்டல் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதென்றால் கையில் தாராளமாக பணம் புரள வேண்டும்.

குரு அவ்விடத்தை அடைந்தப் போது காலை மணி ஐந்தடித்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. மிரு போனை மீண்டும் ஆப் செய்து வைத்திருந்ததால் அப்ளிகேஷன் அந்த மெடிக்கல் செண்டரை தான் கடைசி இடமாக காட்டியது. பக்கத்தில் வேறு எந்த பில்டிங்கும் இல்லாமல் அந்த மருத்துவமனை மட்டும் தனித்து இருந்ததால், மிரு கண்டிப்பாக அதன் உள்ளேத்தான் இருப்பாள் என யூகித்தான் குரு.

விடியற்காலை நேரம், வண்ண விளக்குகள் மின்ன மிக அமைதியாக இருந்தது அந்த மருத்துவமனை வளாகம். காரைப் பார்க் செய்து விட்டு, ரிஷப்ஷன் என எழுதி இருந்த இடத்தை நோக்கி நடையை எட்டிப் போட்டான் குரு. அங்கே இரு மலாய் பெண்மணிகள் நின்றிருந்தார்கள்.

ரிஷப்ஷன் அருகே இருந்த இருபத்தி நான்கு மணி நேரம் திறந்திருக்கும் கடைக்குள் நுழைந்தவன், அங்கிருந்த பூங்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டான். அதன் பிறகு முகத்தில் சிரிப்பை ஒட்ட வைத்துக் கொண்டு ரிஷப்ஷன் பெண்களை அணுகினான் குரு.

“ஹலோ லேடிஸ்!” என ஆரம்பித்தவன், வெளி நாட்டில் இருந்து நேராக இங்கே வருவதாகவும், தனது வருங்கால மனைவி இங்கே அட்மிட் ஆகியிருப்பாதாகவும், அவன் போன நாட்டில் நெட்வோர்க் இல்லாததால் மனைவி அனுப்பிய மேசேஜ்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சரளமாக அள்ளி விட்டு தனக்கு வேண்டிய விவரங்களை சில நிமிடங்களிலே பெற்றுக் கொண்டான். செக்குரிட்டி ரீசனுக்காக அவர்கள் கேட்டபடி தனது அடையாள அட்டையைக் அவர்களிடம் கொடுத்து விட்டு விசிட்டர் பாஸ் வாங்கிக் கொண்டான்.

கிடைத்த விவரங்களைக் கொண்டு லிப்ட் ஏறி ஏழாவது மாடிக்கு சென்றவன், ரூம் நம்பர் 708ஐ கண்டுப்பிடித்தான். சிங்கிள் ரூம் புக் செய்திருந்தாள் மிரு. அறை வாயிலில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், மெல்ல கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் மிரு. மெல்ல அவளை நெருங்கியவன், தூங்கும் அவளையே சற்று நேரம் பார்த்தப்படி நின்றிருந்தான். அவள் நலமாக இருக்கிறாளா என ஆராய்ந்தவன், இன்னும் எதுவும் நடக்கவில்லை என்பதில் நிம்மதியடைந்தான். அதன் பிறகே அறையை சுற்றிப் பார்த்தான் குரு. மருந்து வாடை, மருத்துவ உபகாரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்த அறையை பைவ் ஸ்டார் ஹோட்டல் அறை என்றே சொல்லி விடலாம். கட்டிலின் அருகே இருந்த குட்டி டேபிளில் ஒரு ஃபைல் இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஓசை எழுப்பாமல், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் குரு.

அந்த ஃபைலை புரட்டிப் பார்த்தவனுக்கு மனம் பாரமாகிப் போனது. அதில் மிருவின் சொந்த விவரங்கள், மெடிக்கல் டெஸ்ட்கள் எடுத்த விவரங்கள், அவளின் நெஞ்சப் பகுதியின் போட்டோக்கள், அதன் அளவு, ச்சேஸ்ட் எக்ஸ்ரே, எந்த அளவுக்கு குறைக்கக் போகிறார்கள் என்ற வரைபடம் எல்லாம் இருந்தது. நெஞ்சம் கணக்க அவற்றையை சிறிது நேரம் பார்த்தப்படி இருந்தான் குரு. தனது போனை எடுத்து கூகுலை நாடி ‘ப்ரெஸ்ட் ரிடக்‌ஷன்’ என டைப் செய்து, கொஞ்ச நேரம் படித்துப் பார்த்தான் குரு. அந்த சர்ஜரி எப்படி செய்வார்கள், அதன் நன்மை தீமைகள் எல்லாவற்றையும் சற்று நேரம் அலசினான்.

பின் பெருமூச்சுடன் எழுந்தவன், தனது காலணியைக் கழட்டி நாற்காலி அருகே வைத்து விட்டு கட்டிலை நெருங்கினான். மெல்ல கட்டிலில் ஏறி பின்னிருந்து மிருவை அணைத்தப்படி படுத்துக் கொண்டான் குரு.

சில நாட்களாக இருந்த மன உளைச்சலால் தூக்கம் தொலைத்திருந்தவள் முடிவு என்ற ஒன்றை எடுத்து விட்ட தைரியத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். குளிரில் இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு, கட்டிலின் மெல்லிய அசைவும், திடீரென உடலை அழுத்திய பாரமும், பின்னால் உரசிய மூச்சுக் காற்றும் தூக்கத்தைக் கலைத்திருந்தது.

பின்னால் திரும்பிப் பார்க்காமலே,

“பாஸ்!” என அழைத்தாள் மிரு.

“ஹ்ம்ம்” என குரல் கொடுத்தவன் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டான் மிருவை.

படுத்தப்படியே மெல்லத் திரும்பியவள், அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள்.

“இங்க என்ன செய்யறீங்க பாஸ்?”

“என்னோட எக்ஸ் வொர்க்கர், எக்ஸ் ட்ரைவர், எக்ஸ் கேர்ள்ப்ரேண்ட் இங்க என்னவோ சர்ஜரிக்கு வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். பார்த்து பூ குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன் அவள் முன்னுச்சியில் வந்து விழுந்த சுருள் முடி கற்றையை காதின் ஓரம் சொருகினான். அவள் அவன் விழிகளையே ஊடுருவிப் பார்த்திருக்க, இவன் அவள் கண்களைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்தான்.

“யார் தடுத்தாலும் நான் இந்த சர்ஜரிய பண்ணிக்கத்தான் போறேன்!” என அறிவித்தாள் மிரு.

“யார் தடுக்கப் போறாங்க? எல்லாம் உன் இஸ்டம்தான் மிரு! பண்ணிக்கோ! கஸ்டப்பட்டு காசு வேற கட்டியிருக்க, வேஸ்ட் பண்ண வேண்டாம்” என அசால்ட்டாக சொன்னவன் இன்னும் அவளருகில் நெருங்கிப் படுத்துக் கொண்டான்.

பணம் பற்றி அவன் பேசியதும் திரு திருவென விழித்தவள், சட்டென சமாளித்துக் கொண்டாள். தன்னை நெருங்கி அணைத்திருப்பவனை விலக்காமல் ஆராய்ச்சியாக பார்த்தாள் மிரு. இங்கு வரை அவளைத் தேடி வந்திருக்கிறான் என்றால், கண்டிப்பாக கணேவின் உதவியுடன் தான் இருக்கும் என அறியாத முட்டாளில்லை மிரு.

சர்ஜரி முடிந்து, இரண்டு நாட்களாவது மயக்கம், சோர்வு இருக்கும் என டாக்டர் அறிவித்திருந்தார். அந்த இரு நாட்கள் முடிந்தும் இவள் தன்னிலை அடையாமல் இருந்தால், தன்னைக் கண்டுப்பிடிக்கவே கணேவுக்கு ஃபைண்ட் மை ப்ரேண்ட் ஆப்ளிகேஷன் போட்டுக் கொடுத்திருந்தாள் மிரு. அதோடு இங்கே தான் இருக்கிறாள் என தம்பி தெரிந்து கொள்ளவே தூக்கக் கலக்கத்திலேயே சற்று முன், சிறிது நேரம் போனை ஆன் செய்திருந்தாள். எப்படியும் மூன்று நாட்களில் தான் சொன்னது போல போன் செய்யாவிட்டால் கண்டுப்பிடித்து வருவான் தம்பி என அவள் இருக்க, இன்றே குரு வந்து நின்றது அதிர்ச்சிதான் மிருவுக்கு.

கண்டிப்பாக தான் ஆபரேஷன் செய்வதை குரு ஒத்துக் கொள்ள மாட்டான் என இவள் நினைக்க, அவனோ செய்துக் கொள் என சாதாரணமாக சொன்னது இவளுக்கு நிம்மதியையும் ஆத்திரத்தையும் ஒருங்கே வரவழைத்தது. நிம்மதி, தன் தாராள நெஞ்சத்தைப் பார்த்து தன்னைக் காதலிக்கவில்லை இவன் என்பதால் வந்தது. ஆத்திரம், காதலிப்பவள் மேல் கத்தி வைக்கப் போகிறார்கள் என தெரிந்தும் பதறாமல் சாதாரணமாக அவன் நடந்துக் கொள்வதால் வந்தது.

“அதானே, யார் தடுக்கப் போறாங்க! யாருக்கு அந்த உரிமை இருக்கு!” கோபமா கடுப்பா என அறிய முடியாத குரலில் சொன்னவள், தன் இடுப்பில் கிடந்த குருவின் கையைத் தள்ளிவிட்டாள்.

அவள் தள்ளி விட்டதைக் கண்டுக் கொள்ளாதவன், ஆட்காட்டி விரலால் அவள் கன்னத்தை வருடினான்.

“கையை எடுங்க மிஸ்டர் குரு”

“மிஸ்டர் குரு?”

“ஆமா, மிஸ்டர் குருதான். இப்போ நீங்க என்னோட பாஸ் இல்ல, என் பேசெஞ்சர் இல்ல, என் ப்ரேண்ட் கூட இல்ல. அப்படித்தான் கூப்பிடுவேன்”

“ஹ்ம்ம் சரி! நாளைக்கு எத்தனை மணிக்கு சர்ஜரி மிஸ் மிரு?”

“அது உங்களுக்குத் தேவையில்லாத ஆணி மிஸ்டர் குரு”

“இஸ் இட்! இந்த சர்ஜரிக்காக எனக்குத் தெரியாமலே நான் இன்வெஸ்ட் பண்ணிருக்கேன் மிஸ் மிரு! சோ எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு இத பத்தி தெரிஞ்சிக்க”

“என்னாது? இன்வெஸ்ட் செஞ்சிருக்கீங்களா?”

“ஆமா! இந்த சர்ஜரிக்கு நான் பணம் போட்டுருக்கேன், அதுக்கு ரிடர்னா நீ எனக்கு கிடைக்கப் போற! சோ இது இன்வெஸ்ட்மெண்ட் தானே?”

“இந்தப் பண விஷயம் எ..எப்படி தெரியும்?” கண்டிப்பாக ஆனந்தி வாயைத் திறந்திருக்க மாட்டார் என அறிந்தவள், குருவிடமே கேள்வியைக் கேட்டாள்.

“எல்லாமே எனக்குத் தெரியும் மிஸ் மிரு. கட்டிக்கப் போறவன நீ காசுக்காக வித்தது, பெத்த மகனையே காசு குடுத்து எங்கம்மா வாங்கனது எல்லாம் தெரியும்! செத்து செத்து விளையாடற மாதிரி, வித்து வித்து விளையாட நான் என்ன விற்பனைப் பொருளா? உயிர் உள்ள மனுஷன் மிரு! ஹீயூமன் பீயிங். அதை மை மம்மியும் புரிஞ்சுக்கல, மை மனைவியும் புரிஞ்சுக்கல!” அவன் குரலில் அவ்வளவு வலி.

அவன் சொன்னதைக் கேட்ட மிருவின் கண்கள் கலங்கியது.

ஆனந்தி வந்ததையும், பேசியதையும் எப்படி அறிந்துக் கொண்டான், எப்படி கணேவைப் பிடித்து இங்கு வரை வந்தான் என்பதை மெல்லிய குரலில் பகிர்ந்துக் கொண்டான் குரு.

“சரி இப்போ சொல்லு, நாளைக்கு எத்தனை மணிக்கு சர்ஜரி?”

“காலை பத்து மணிக்கு பாஸ்!”

“ஓ ஓக்கே! குட்!”

“என்ன குட்? இது தப்பில்லையா பாஸ்?” தன்னைத் தடுக்காமல் ஆதரிப்பவனை கொலை வெறியோடு பார்த்தாள் மிரு.

“என்ன தப்பு? இந்த மூக்கு, முழி, லிப்ஸ், காது, கை கால், அப்புறம் உன்னோட ரெண்டு இநோர்மஸ்(பெரிய) ச்செஸ்ட் இதெல்லாம் இயற்கையாகவே உனக்கு அமைஞ்சது மிரு. அப்படி கடவுள் கொடுத்த கண் பார்வை பிரச்சனையானா கண்ணாடி போடறது இல்லையா? அதே மாதிரி காது பிரச்சனையானா மெஷின் வச்சிக்கறது இல்லையா? தட் சேம் கான்சப்ட் இஸ் அப்ளைட் டூ யுவர் ச்சேஸ்ட் டூ. அங்க உனக்கு பிரச்சனைங்கறப்போ, அத குறைச்சிக்கறதுல தப்பில்ல மமிமரு. என்னைப் பொருத்த வரை, வாழப் போறது ஒரு லைப். அதுல எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு நினைச்சு நினைச்சுப் புழுங்கி மனசு நொந்தே சாகறத விட, அத சரி செய்ய முடியும் பட்சத்துல, சரி செஞ்சிக்கறதுல என்ன தப்பு? நீ தாராளமா சரி செஞ்சிக்கோ! யூ ஹேவ் மை ஃபுல் சப்போர்ட்!”

“எனக்கு சப்போர்ட் பண்ணவோ, வேணாம்னு சொல்லவோ நீங்க யாரு? என்னோட பாஸ் கூட இல்ல இப்போ!’

“ஹேய் மிருது! என்ன இப்படி சொல்லற? நானா உன்னைத் தேடி வந்து மிரு, மிருது, மமிமருன்னு கூப்பிட்டா அந்த நிமிஷமே நீ தான் எங்கம்மாவுக்கு மருமகள்னு சொன்ன! நானே உன்னைத் தேடி வந்துட்டேன், மூனு பெயரையும் வச்சுக் கூப்பிட்டுட்டேன். சோ ஆட்டோமட்டிக்கலி ஐம் யுவர் ஹஸ்பென்ட், யூ ஆர் மை வைப். ஒரு கணவனோட கடமை, மனைவி எடுக்கற நல்ல முடிவுக்கு சப்போர்ட் செய்யறது! அதைத்தான் நான் செய்யப் போறேன்!”

“சர்ஜரி செஞ்சா வடு மறையாதாம் பாஸ்”

“வடுவோட இருந்தாலும் என் மிரு என் கண்ணுக்கு அழகாத்தான் இருப்பா! சோ நோ ப்ராப்ளம்!”

“சர்ஜரி செஞ்சா மூனு நாலு மாசம் ஆகுமாம் ரெக்காவர் ஆக! ரொம்ப வலிக்குமாம், அந்த இடத்துல தொடு உணர்ச்சியே கொஞ்ச நாளைக்குத் தெரியாதாம் பாஸ்”

“வலிக்கறப்போலாம் பேய்ன் கில்லர் போட்டுக்கலாம் மிரு. டாக்டர் கண்டிப்பா ப்ரிஸ்க்ரைப் செய்வாங்க! ரெக்காவர் ஆகற வரைக்கும் உன்னைப் பத்திரமா கண்ணாடி பாத்திரம் மாதிரி பார்த்துக்குவேன்! அப்புறம் என்ன சொன்ன? ஹ்ம்ம் தொடு உணர்ச்சி! இப்போ யாரு அங்க தொட போறா? நல்லா குணமாகி, குட் டூ கோன்னு டாக்டர் சொல்லறப்போ கல்யாணம் செஞ்சுக்கலாம். அப்புறம் தொட்டுக்கலாம்.” கண்கள் சிரிக்க முகத்தை மட்டும் சீரியசாக வைத்தப்படி சொன்னான் குரு.

அமைதியாக அவள் பார்த்திருக்க,

“இன்னொரு விஷயத்தை விட்டுட்டீயே மிரு!” என கேட்டான் அவன்.

“என்ன?”

“நமக்கு கல்யாணம் ஆகி பிள்ளைப் பொறக்கறப்போ உன்னால தாய்ப்பால் கொடுக்க முடியாம கூட போகலாம்!”

“ஹ்ம்ம் டாக்டர் சொன்னாங்க” அவள் குரலில் சுரத்தே இல்லை.

“தாய்ப்பால் இல்லைனா போய்ட்டு போது மிரு! அதான் வித விதமா ரகம் ரகம்மா ஃபார்முலா மில்க் வந்துருச்சே! நம்ம ஜீனியர் அதை குடிச்சே வளரட்டும்! நோ பிக் டீல்!”

“உங்களுக்கு எதுவுமே பிக் டீல் இல்ல! நம்ம பிள்ளைய பாசமா அணைச்சுப் பிடிச்சு நெஞ்சோட அழுத்தி பால் குடுக்கனும்! அப்படி அவன் குடிக்கறப்போ, என் விரல் கொண்டு அவன் கன்னத்தை வருடிக் குடுக்கனும்! இந்த மாதிரி எனக்கு எத்தனைக் கனவு இருக்குத் தெரியுமா? உங்களுக்கு எதுவும் பிக் டீல் இல்ல!” என கத்தியவள் உடைந்து அழுதாள்.

இவ்வளவு நாளாக என்ன ஆனாலும் குருவின் முன் தன் கெத்தை விட்டுக் கொடுக்காதவள், வெடித்து அழுதாள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய கதறி அழுதாள் மிரு. தன் நெஞ்சோடு மிருவைக் கட்டிக் கொண்டான் குரு. வாய் வார்த்தையாக எதுவும் சொல்லாமல், முதுகை வருடி, தலையைக் கோதி அமைதியாகவே அவள் அழுது ஓயக் காத்திருந்தான்.

“மிருது, இஸ்டமில்லாம எதுக்கு இந்த சர்ஜரிய செஞ்சிக்கப் போற?”

“உங்கம்மா, நான் இதைக் காட்டித்தான் உங்கள மயக்கிட்டேன்னு சொல்லிட்டாங்க! என்னால தாங்கிக்கவே முடியல!” இன்னும் தேம்பினாள் மிரு.

“உன் தைரியம் எல்லாம் இவ்வளவு தானா மிரு? யார் என்ன சொன்னாலும் கெத்தா போங்கடான்னு நிப்ப! இப்ப மட்டும் என்னாச்சு?”

“வேற யார் சொல்லிருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன் பாஸ்! இத்தனை நாளா இதெல்லாம் கடந்து வந்தவ தானே! ஆனா இப்போ சொன்னது நான் உயிரா லவ் பண்ணற என் குருவோட அம்மா! என்னால இதைக் கடந்து வர முடியல பாஸ்! முடியவே முடியல!” பரிதாபமாக அழுதாள் மிரு. அவள் அழுவதைப் பார்த்து குருவின் கண்களும் கலங்கியது.

“மிரும்மா, அவங்க எனக்கு அம்மா! நான் இல்லைன்னு சொல்லல! ஆனா உன்னை இப்படி பெர்சனலா போடி ஷேமிங் செய்ய அவங்களுக்கு எந்த ரைட்சும் இல்ல. அவங்க பேசனது ரொம்ப தப்பு! என்னோட அம்மாவ இருந்தாலும் தப்புன்னா தப்புத்தான் மிரு! இந்த ஒரு விஷயத்துல நான் அவங்கள என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்!”

“இது இப்படி மத்தவங்க கண்ண உறுத்தற மாதிரி இருக்கவும் தானே, இப்படிலாம் பேசறாங்க! அதான் குறைச்சுக்க முடிவெடுத்தேன். தெரியாம சில பேர் இடிச்சிடறப்போ, தெரிஞ்சே பல பேர் நெரிசலுல இடிச்சிடறப்போலாம் அடிக்கடி என் மனசுல இந்த எண்ணம் வந்து வந்து போகும். ஆனா கடவுள் கொடுத்தத மனுஷன் கெடுக்கக் கூடாதுன்னு மனச அடக்கி வைப்பேன்! உங்கம்மா அந்த வார்த்தைய சொன்னப்போ, அவங்க சொன்னது நிஜமா இருக்குமோன்னு கூட எனக்குத் தோணிருச்சு. இத தவிர என் கிட்ட என்ன இருக்கு நீங்க மயங்கன்னு ரொம்பவே பீல் ஆகிட்டேன் பாஸ்! ரொம்ப கூனி குறுகிப் போயிட்டேன்! மனசுக்குள்ள பல நாளா அடக்கி வச்சிருந்த காம்ப்ளேக்ஸ் வெடிச்சு வெளிய வந்துருச்சு. அதோட விளைவுதான் இந்த சர்ஜரி”

“அதாவது உன்னோட முன்னழக பார்த்துதான் உன்னைக் காதலிக்கறேன்னு தோணிருச்சு?”

அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் மிரு.

“பைத்தியக்காரி! எல்லா ஆம்பளைங்களுக்கும் அத பார்த்துதான் ஆசையோ காதலோ வரும்னு இல்லடி! சிலருக்கு நீளமான கால்கள் உள்ள பெண்ணை பிடிக்கும்! வேறு சிலருக்கு செக்சியான உதடு உள்ள பெண்களைப் பார்த்தா ஆசை வரும். இன்னும் சிலருக்கு பின்னழக பார்த்தா மோகம் பிச்சிக்கும்! இதெல்லாம் அவங்கவங்க ரசனையைப் பொறுத்தது. பெண்களுடைய எந்த உடல் பாகத்துல ஆண்கள் மயங்கி நிக்கிறாங்கன்ற ஆய்வுல என்ன கண்டுப்பிடிச்சிருக்காங்க தெரியுமா மிரு?”

தெரியாது என அவள் தலையாட்ட,

“பெண்களோட கண்களில் தான் பாதி ஆம்பளைங்க தலைக்குப்புற விழுந்துடறாங்கன்னு கண்டுப் பிடிச்சிருக்காங்க” என்றான் குரு.

“என் கிட்ட உங்களுக்கு என்னப் பிடிச்சிருக்கு பாஸ்?”

“எல்லாம் பிடிச்சிருக்கு மிரு! ஆரம்பத்துல உன்னோட வெளி அழகப் பார்த்து எனக்குள்ள ஈர்ப்பு இருந்தது உண்மை மிரு! ஆனா அந்த வகையான ஈர்ப்பை அடக்கத் தெரியாத அளவுக்கு நான் சின்னப் பையன் இல்ல! பழக பழக என்னைக் காந்தம் மாதிரி இழுத்தது உன்னோட அழகான மனசுதான் மிரு. பிலீவ் மீ! உன் கூட இருக்கறப்போ ஐ கெட் பொசிட்டிவ் வைப்ரேஷன்! உன்னோட சிரிப்பு, பட்டுன்னு திருப்பிக் குடுக்கற பேச்சு, குறும்பு, ஐ டோண்ட் கேர் ஆட்டிடியூட், குடும்பத்து மேல நீ வச்சிருக்கற பாசம், பசிச்ச வயித்துக்கு அன்னமிடற காருண்யம் இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சது. பார்த்த உடனே பத்திக்கற உன் அழகை விட, பார்க்க பார்க்க மனச நிறைக்கற உன் குணம்தான் என்னைக் காதலிக்க வச்சது மிரு! ஐ லவ் யூ தே வேய் யூ ஆர் மிருது!”

“அப்போ சர்ஜரி வேணாம்னு சொல்லறீங்களா?”

“வேணுமா வேணாமான்னு நீதான் டிசைட் செய்யனும் மிரு. வேணாம்னு நான் சொன்னா என் அம்மா சொன்னதுதான் நிஜம்னு இன்னிக்கு இல்லைனாலும் என்னைக்காவது நீ நினைக்க வாய்ப்பிருக்கு. சர்ஜரி வேணும்னு சொன்னாலும், என்னை எனக்காக ஏத்துக்காம என் உடல் அமைப்ப மாத்தனதுக்கு அப்புறம்தான் ஏத்துகிட்டாருன்னு நீ வெறுக்கவும் வாய்ப்பிருக்கு! சோ யூ டிசைட்! இடுப்பு வலிக்குது, முதுகு வலிக்குது, ரொம்ப நடந்தா மூச்சு வாங்குது இப்படிலாம் சொல்லறல, அதுக்காக நீ சர்ஜரி செய்யறதுல ஒரு நியாயம் இருக்கு மிரு! அதே இன்னொருத்தங்க வேணும்னே உன் மனச உடைக்கனும்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக இந்த பெயின்புல் ப்ரோசிடர நீ செஞ்சிக்கறது சரியான்னு நீயே யோசி. நீ எந்த முடிவெடுத்தாலும் ஐ வில் பீ வித் யூ!” என சொல்லியவன் நன்றாக சாய்ந்துப் படுத்து, மிருவைத் தன் கைவளைவில் படுக்க வைத்துக் கொண்டான். அப்படியே பல நிமிடங்கள் அமைதியாக கழிய,

“நம்ம பிள்ளைக்கு நானே தாய்ப்பால் குடுக்கறதுன்னு முடிவு எடுத்துட்டேன் பாஸ்” என அமைதியை கலைத்தாள் மிரு. அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் குருவின் முகத்தில் வந்துப் போன குறும்புப் புன்னகையைக் கவனிக்கவில்லை.

“சரி நகரு மிருது! நான் போய் கதவை லாக் பண்ணிட்டு வரேன்”

“எதுக்கு பாஸ்?”

“நீ பால் கொடுக்க பிள்ளை வேணும்ல! அதுக்கு நான் தானே ஏற்பாடு செய்யனும்! அதுக்கு பர்ஸ்ட் ஸ்டேப் கதவ லாக் பண்ணனும். நெக்ஸ்ட் ஸ்டேப் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் லாக் ஆகிக்கனும். அப்ரகடப்ரா!!!!அடுத்த பத்து மாசத்துல பால் குடிக்க ஜீனியர் ரெடி!” என சொல்லி கண்ணால் சிரித்தான் குரு.

“பத்து மாசத்துல பையன் பால் குடிக்கறானோ இல்லையோ, ஆனா அவன் அப்பாவுக்கு இப்போ பால் ஊத்தப் போறா இந்த மிரு!” என சொல்லியவள் குருவின் நெஞ்சிலேயே குத்தினாள். சிரிப்புடன் அவள் கைப்பிடித்து தடுத்தவன், மிருவை தன்னருகே இழுத்து அழுந்த முத்தமிட்டான்.

“மை மிரு இஸ் பேக்! ஐ லவ் திஸ் ரௌடி மிரு!”

(இனி சிக்கிக் கொள்வார்கள்)

 

(இன்னும் சில விஷயங்கள தெளிவு படுத்தல. அதெல்லாம் நெக்ஸ்ட் எபில வரும் ஜி)

ENE–EPI 38

அத்தியாயம் 38

உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்
வலையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

“வேணு! காரை நிறுத்து. ”

“என்ன தானு, என்னாச்சு?” பின்னிருக்கையில் இவ்வளவு நேரம் சுகமாக தூங்கி கொண்டு வந்தவள் திடீரென கத்தவும் கலவரமாகி போனான் விபா. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த டேனியும் அவளை திரும்பி பார்த்தான்.

“ஊட்டிக்கு தானே கூட்டிட்டு போறேன்னு சொன்ன? சைன்போர்டுல உதகமண்டலம்னு எழுதி இருக்கு? யாரை டபாய்க்க பார்க்குற? நான் மலாய் ஸ்கூல் போனாலும் தமிழ் கிளாஸ் அட்டெண்ட் பண்ணியிருக்கேன். தமிழ் எழுத்துகூட்டி நல்லாவே படிப்பேன்”

‘ப்பூ இவ்வளவுதானா? இதுக்குதான் பீதிய கிளப்புனாளா?’

“ஊட்டிய உதகமண்டலம்னும் சொல்லுவாங்கடா. பூவ புய்ப்பம்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி” என சிரித்தான் விபா.

“ஹீஹீ! இவ்வளவு சிரிச்சா போதுமா? இவரு பெரிய செந்திலு, ஜோக்கடிக்கிறாரு. எனக்கு குளிருது வேணு. சூடா ஏதாவது வாங்கி குடு”

வேணுவே கார் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான் இந்த டிரிபுக்கு. அவனுக்கே இந்த ஊட்டி பாதையில் ஓட்டுவது கடினமாக இருந்தது. இந்த லட்சணத்தில் காரை தான் ஓட்டுவதாக அடம் செய்தவளை அதட்டி மிரட்டி அதுவும் செல்லாததால் கெஞ்சி படுக்க சொல்லி இருந்தான். எழுந்தவுடன் மேடத்திற்கு பசியும் எழுந்து விட்டது.

டேனியும் சில நாட்களாக இருவரையும் கவனித்துக் கொண்டுதான் வந்தான். இவள் அடம் பிடித்தாள் அவன் அடங்கி போவதும், அவன் கெஞ்சி கொஞ்சினால் இவள் பணிந்து போவதும். ஒருத்தருடைய வீக் பாயிண்டை மற்றவர் நன்றாக அறிந்து வைத்திருந்தனர்.

நல்ல கடையாக தேடி அவர்களை மதிய உணவுக்கு அழைத்து சென்றான் விபா. இயல்பாக தானு விபாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். டேனி அவள் எதிரே அமர்ந்து கொண்டான். இருவருக்கும் என்ன வேண்டும் என கேட்டு ஆர்டர் செய்து கொடுத்தான் விபா. அவள் தட்டில் குறைவதை விபா நிரப்புவதும், அவன் குவளையில் இவள் தண்ணீர் அருந்துவதும் என அவர்களுக்குள்ளே ஒரு பிணைப்பு அவர்கள் அறியாமலே நிகழ்ந்திருந்தது.

“டேனி, அந்த சட்னி வேணாம்டா. ரொம்ப காரமா இருக்கும். அப்புறம் உன் முகமேல்லாம் சிவந்து போயுரும். இரு நான் வேற கேக்குறேன்” என நண்பனையும் நன்றாக கவனித்துக் கொண்டாள் தான்யா.

“வேணு! அந்த மேஜை பொண்ணை பாரேன். நம்ம டேனிய எப்படி சைட்டடிக்கிறான்னு. இவனையும் பாரேன்! நமக்கு சோறு தான் முக்கியம்கிற மாதிரி அந்த வேலைய மட்டும் பார்க்குறான். ரொம்ப கஸ்டம்”

“எல்லாரும் என்னை மாதிரி இருப்பாங்களா சொல்லு” என கேட்டவனை தீப்பார்வை பார்த்தாள் தானு.

‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பார்க்குறா? ‘ திரும்பி சொன்னதை ரீவைண்ட் செய்து பார்த்தவன்,

“உன்னை சைட் அடிச்சத தான் தானும்மா சொன்னேன். இதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்ல” என சட்டென சரணடைந்தான்.

“கவலை படாதே! அந்த பொண்ணோட எதிர்த்த சீட்டு பொண்ணு உன்னைத் தான் விழி பிதுங்கற அளவுக்கு பாத்துகிட்டு இருக்கா. நான் வேணா வெளிய நிக்கிறேன். போய் பேசிட்டு வா. ”

“தானும்மா, எவ என்னை பார்த்தாலும் உன் கடை கண் பார்வை மட்டும் எனக்கு போதும்மா. இப்படிலாம் இனிமே பேசாதே ! என் செல்லம் இல்ல”

“ரெண்டு பேரும் மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா? சீக்கிரமா கொஞ்சி, கெஞ்சி சமாதானமாகிட்டு வெளிய வாங்க. நான் கார் கிட்ட வெய்ட் பண்ணுறேன்” என எழுந்து சென்றான் டேனி.

‘வைட்டு, தேறிட்டடா. எப்பப்ப எங்களுக்கு பிரைவசி கொடுக்கணும்னு இப்பவாவது தெரிஞ்சுகிட்டியே. உனக்கு கண்ணம்மா பேட்டையிலே ஒரு சிலை வைக்கிறேண்டா’

டேனி கார் அருகில் நின்றுவாறே ஊட்டி குளிர் காற்றை நன்கு அனுபவித்தான். சென்னையிலேயே குளிருக்கு போட்டு கொள்ள ஸ்டைலிஷாக கார்டிகன் வாங்கி கொடுத்திருந்தாள் தான்யா. அவளுக்கு தேவையானதை விபா அவர்கள் “எலெகண்ட்” கடையிலிருந்து வருவித்து தந்திருந்தான். இந்த குளிருக்கும் சாதாரண உடைகளில் நடந்து செல்லும் மக்களை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.

‘இங்கயே உள்ளவங்களுக்கு பழகிரும் போல. இந்த டான்யா தான் என்ன செய்ய போறான்னு தெரியலை. நம்ப ஊரு கேமரன் மலை குளிருக்கே மூக்கை உறிஞ்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பா. இந்த குளிருக்கு என்ன பண்ண போறாளோ? வேணான்னு சொன்னா கேட்டா தானே. ஒரே அடம். வேணு! இந்த டிரிப் முடியறதுகுள்ள மூக்கு வழிக்குது, முதுகு வலிக்குதுன்னு உன்னை ஒரு வழி பண்ணிருவா. ‘ என மனதிற்குள்ளேயே சிரித்து கொண்டான்.

அதற்குள் சமாதானமாகி விபாவும் தானுவும் சிரித்து பேசியபடியே உணவகத்திலிருந்து வெளியே வந்தனர். பிறகு கார் ஹோட்டலுக்கு மெல்ல பயணித்தது.

விபா மூவருக்கும் தனி தனி ரூம் எடுத்திருந்தான். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு வெளியே செல்லலாம் என பிளான் செய்திருந்தார்கள். இன்று முழுக்க சுற்றும் இடமெல்லாம் தானுவின் சாய்ஸ். நாளைக்கு டேனியின் சாய்ஸ் என பிரித்திருந்தனர். விபா ஏற்கனவே வந்திருப்பதால் அவனின் சாய்சை டீலில் விட்டிருந்தனர் இருவரும்.

குளித்து முடித்து, ஜீன்சும் டாப்சும் அணிந்து அதற்கு மேலாக மஞ்சள் நிற ஸ்வேட்டரும், மஞ்சளும் பிங்கும் கலந்த குல்லாவும் அணிந்து பார்பி பொம்மை மாதிரி ஹோட்டல் லாபியில் ஆண்கள் இருவரின் வருகைக்காக காத்திருந்தாள் தானு.

‘நானே கிளம்பி வந்துட்டேன். இவனுங்க ரெண்டு பேரையும் இன்னும் காணோம். அப்படி என்னதான் மேக்காப் போடுறானுங்களோ. யாருப்பா அது பொண்ணுங்க கிளம்பி வரதுக்குள்ள ஆம்பிளைங்க எலும்பு கூடா ஆயிருவாங்கன்னு மீம் போடுறவங்க? கொஞ்சம் இங்க வந்து பாருங்க, அப்புறம் தெரியும் செய்தி. எதுக்கு எடுத்தாலும், பொண்ணுங்க ட்ரைவிங் சரியில்ல, டைம் மேனேஜ்மேன்ட் சரியில்ல, மணி மேனேஜ்மன்ட் சரியில்லைன்னு ஜோக்குங்கற பேருல வறுத்து எடுக்கிறது. நாங்களும் உங்கள பத்தி ஜோக் போட்டோம்னா டப்பா டான்ஸ் ஆடிரும். இனிமே பகுதி நேரமா ஆண்களை துப்பி துப்பி மீம் போடலாமா?’ அவர்கள் இருவரையும் மட்டும் இல்லாமல் மொத்த ஆண்குலத்தையும் கருவி கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். தானுவின் பொறுமையை மேலும் பத்து நிமிடங்கள் சோதித்து விட்டு தான் இருவரும் வந்தார்கள்.

இருவருக்கும் மரண லுக் ஒன்றை கொடுத்தவள், விடுவிடுவென நடந்து சென்று கார் அருகே நின்று கொண்டாள்.

“என்னடா வைட்டு, உன் பிரண்ட் முறைச்சுகிட்டு போறா? என்ன பண்ண நீ?”

“நான் என்ன பண்ணாலும் என்னை ஒன்னும் செய்ய மாட்டா. ஜெல் போட்டு அழகா சீவி வச்சிருக்கிற உன் முடியை தான் புடிச்சு ஆட்ட போறா. 30 நிமிஷம் லேட்டு நீ. அதான் இந்த முறைப்பு.”

“நீயும் தானடா லேட்டா வந்த? “

“மிஸ்டர் வேணு, ப்ரன்ஷிப்ல நேரம் தவறலாம், காதலுல தவறலாமா? என்னவோ போ, இன்னிக்கு உனக்கு நேரம் சரியில்லை” என விசில் அடித்துக் கொண்டே காரை நோக்கி சென்றான் டேனி.

‘காதலில் சொதப்புவது எப்படின்னு படம் எடுத்தாங்களே, சொதப்பாமல் இருப்பது எப்படின்னு எடுத்தாங்களா? ஹ்ம்ம். அப்படி ஒரு படத்தை கூடிய சீக்கிரம் என்னை டைரக்ட் பண்ண வச்சிருவா போல ‘ புலம்பி கொண்டே அவர்களை நோக்கி விரைந்தான் விபா.

காரை ஸ்டார்ட் செய்தவன்,

“சொல்லுமா தானு, முதல் இடம் எங்க போகனும்?”

“தொட்டபேட்டால சூசைட் போய்ன்ட் இருக்காமே? அங்க போ” வார்த்தைகள் சூடாக வந்து விழுந்தது.

டேனி சிரிப்பை அடக்க படாத பாடுபட்டான். அவனை முறைத்த விபா,

“அது இங்க இருந்து 9 கிலோமீட்டர் தூரத்துல இருக்குடா. இன்னொரு நாளைக்கு போகலாம். இப்ப கிட்ட இருக்கிற இடமா பார்த்து கேளுடா குட்டி”

“கவர்மென்ட் மீயூசியம் போ வேணு”

“மீயூசியமா?” டேனி விளக்கெண்ணையை குடித்ததை போல் முகத்தை வைத்துக் கொண்டான்.

“ஏன் மீயூசியத்துக்கு என்ன குறைச்சல்? நீ சொல்லு வேணு?”

“ஆமா ஆமா, அதுக்கு என்ன குறைச்சல். அங்க போனாதான் ஹிஸ்டரி ஜோகிராபி எல்லாம் தெரிஞ்சுக்குலாம். நீ ரொம்ப ஷார்புடா செல்லம்” என அவளுக்கு ஐசை வைத்தான் விபா.

“விபா சொன்னத நல்லா கேட்டுக்க டேனி. புது இடத்துக்கு போகுறப்ப கண்டிப்பா மியூசியம் போய் பாக்கனும். அப்பதான் அந்த ஊரோட பாரம்பரியம், பண்பாடு எல்லாம் தெரிஞ்சுக்கலாம் ”

‘ஹனிமூன் போக இடம் செலக்ட் பண்ணுறப்ப மியூசியம் இல்லாத இடமா பார்க்கணும். என்னடா எனக்கு வந்த சோதனை’ என மனதினில் பேசிக் கொண்டான் விபா.

“சரி வரேன்,என் காதை ஓட்டை போடாத”

சிவப்பு வர்ணத்தில் அழகாக இருந்தது அருங்காட்சியக கட்டிடம். யாரும் இல்லாத கட்டிடத்தில் இவர்கள் மட்டுமே டீ ஆற்றி விட்டு வந்தார்கள்.

“ஏன் வேணு கூட்டத்தையே காணோம்?”

“எல்லாரும் உன்னை மாதிரி புத்திசாலியா இருப்பாங்களா தானும்மா. இந்த மாதிரி இடத்தோட அருமையெல்லாம் அவங்களுக்கு தெரியலை. அற்ப பதர்கள்” என இழுத்து சொன்னான் விபா.

“வேணு உன்னை தான் அற்ப பதர்ன்னு சொல்லுறான் டான்யா. இது கூட புரியலை, நீ என்னதான் டாக்டருக்கு படிக்கிறீயோ போ”

“அய்யோ நான் உன்னை சொல்லல தானு. இவன் சும்மா போட்டு குடுக்குறான்”

“நீ என்னை அப்படி சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியாதா.” சொல்லிக் கொண்டே அவன் அருகில் சென்றவள் அவன் கைகளில் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

“என்ன கை இப்படி ஜில்லுன்னு இருக்கு?” அவள் இரு கைகளையும் பற்றி தேய்த்து விட்டான் விபா.

“ரூமுக்கு போலாமா? அங்க கணப்பு இருக்கு. சாப்பிட்டுட்டு படுத்துக்க தானு”

“அதெல்லாம் முடியாது. போட் ரைடிங் போகலாம் வேணு”

“அங்க இன்னும் குளிரும் தானு. சொன்னா கேளு”

“ஊட்டில கை சில்லுன்னு ஆகாட்டி தான் அதிசயம். இதுக்கு போய் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணாதே.ப்ளீஸ் வேணு. ஒரே ஒரு ரைட். “

“வேணு தான் சொல்லுறான்ல. அப்புறம் ஏன் இந்த அடம்? முகமே ரத்தப் பசை இல்லாம எப்படி வெள்ளையா ஆயிருச்சு பாரு” என கடிந்து கொண்டான் டேனி.

அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை. காரில் அமைதியாகவே வந்தாள்.

விபா காரை ஓர் இடத்தில் நிறுத்தி,

“இறங்கு தானு” என்றான்.

இறங்கி சுற்றிலும் பார்த்தவள் ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள். காரை ஊட்டி லேக் அன்ட் போட் ஹவுஸ்சில் நிறுத்தி இருந்தான் விபா.

“தேங்க்ஸ் வேணு”

“ஒரே ஒரு ரைட் தான். அப்புறம் திரும்பி போறோம். ஓகேவா?”

“ஓகே ரைட்”

அவர்களை, இது ரெண்டும் தேறாத கேஸ் என்பதை போல் பார்த்த டேனி, டிக்கட் எடுப்பதற்கு போய் வரிசையில் நின்றான். மூவரும் ஒன்றாக செல்லலாமென பெரிய படகிற்கே டிக்கட் வாங்கினார்கள்.

தானுவின் சேப்டி ஜேக்கேட் சரியாக இருக்கிறதா என விபா ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து தான் அணிவித்து விட்டான்.

அவர்களோடு படகில் இன்னும் சில குடும்பங்களும் இருந்தார்கள். நீரை கிழித்து கொண்டு செல்லும் படகின் சத்தத்தையும், முகத்தில் அடிக்கும் குளிர் காற்றின் குறும்பையும் ரசித்து அனுபவித்தாள் தானு. ஒன்றும் பேசாமல் விபாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு மோன நிலையில் இருந்தாள் அவள். அவர்களோடு பயணித்த ஒரு குட்டி பாப்பா, டேனியை பார்த்து பார்த்து சிரித்தது. டேனி கை ஆட்டும் போது வெட்கத்தில் முகத்தை அவள் தாயின் மடியில் புதைத்துக் கொண்டாள் அந்த குட்டி. துரு துருவென இருந்த குழந்தையை தானுவும் சிரித்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

பின்னால் அமர்ந்திருந்த தந்தையிடம் செல்வதற்காக ஓடிய அந்த குட்டி தீடீரெனெ படகு ஆடியதில் கால் தவறி ஏறியில் விழுந்திருந்தாள். அவள் பெற்றோர் போட்ட கூச்சலில் என்ன ஏதுவென விபா உணரும் முன்னே தானு குழந்தையை காப்பாற்ற ஏரியில் குதித்து விட்டாள்.

நடந்த விபரீதத்தில் விபாவின் இருதயம் ஒரு நிமிடம் வேலை நிறுத்தம் செய்து மீண்டும் துடித்தது. மறுநொடி யோசிக்காமல் அவனும் ஏரியுள் பாய்ந்திருந்தான். தானு நீந்தி சென்று சேப்டி ஜாக்கேட்டினாள் மிதந்த குழந்தையை கைப்பற்றி இருந்தாள். அவளுக்கு பின்னே நீந்து வந்த வேணு அவர்கள் இருவரையும் பற்றி கொண்டான். டேனி தூக்கி போட்ட மிதவையில் குழந்தையை கிடத்திய விபா, மேலே தூக்குமாறு சைகை செய்தான். அவ்வளவு நேரமும் விபாவின் கழுத்தை இருக்கிப் பிடித்துக்  கொண்டிருந்தாள் தானு. நீச்சல் தெரியும் என்ற தைரியத்தில் குதித்திருந்தாலும், ஏரியின் ஆழமும், ஜில்லேன்ற நீரும் அவளின் சக்தியை குறைத்து பயத்தை கொடுத்திருந்தன.

“கழுத்தை விடு தானு. என்னால மூச்சு விட முடியல. நான் உன்னை பத்திரமா பிடிச்சிருக்கேன். பயப்படாதே” அவள் கழுத்தைப் பிடித்து அமுக்கியதால் இரும்பி கொண்டே பேசினான் விபா.

மெல்ல அவளது கை பிடியை தளர்த்தியது. மிதவையிலிருந்த குழந்தையை டேனியும் படகு ஓட்டுபவரும் மெல்ல மேலே தூக்கினார்கள். அதன் பிறகு தானுவையும் கை கொடுத்து டேனி மேலே இழுத்தான். விபாவை படகு ஓட்டுபவரும் படகில் இருந்த மற்றவர்களும் கை பிடித்து மேலே ஏற்றி விட்டார்கள்.

அந்த குழந்தையின் அம்மா, அழும் குழந்தையை அணைத்தவறே தான்யாவின் கையைப் பற்றி கொண்டார். கண்களில் நீர் வழிய அந்த குடும்பம் இவர்களுக்கு நன்றியை தெரிவித்தது. குளிரில் நடுங்கி கொண்டிருந்த தானுவுக்கு இது எதுவும் கருத்தில் படவில்லை. அவளையே பார்த்தபடி நின்றிருந்த விபா மட்டும் தான் கண்ணில் தெரிந்தான். அவன் பார்வையில் இருந்ததென்ன என புரியாமல் நின்று கொண்டிருந்தாள் அவள். டேனிதான் அவனது கார்டிகனை கழற்றி அவளுக்கு போட்டு விட்டான். அந்த சம்பவத்துக்கு பிறகு படகு கரைக்கு திருப்பப்பட்டது.

காரில் இருந்து ஹோட்டல் வரும் வரை விபா வாயைத் திறக்கவே இல்லை.. இவர்களும் அமைதியாகவே வந்தார்கள். அவளுடனே அவளது ரூமிற்கு வந்தவன், கணப்பை அதிக படுத்திவிட்டு, ரூம் சேர்விசுக்கு போன் செய்தான். சூடாக காப்பியும், இரவு உணவும் அவளுக்கு ஆர்டர் செய்தவன் அவளிடம் எதுவுமே பேசாமல் ரூமை விட்டு வெளியேறிவிட்டான்.

ஏதேதோ நினைத்தபடி படுத்திருந்த விபாவுக்கு இரவு இரண்டு மணிக்கு தானுவிடம் இருந்து போன் வந்தது. சுருட்டிக் கொண்டு எழுந்தவன்,

“சொல்லு தானும்மா. நீ இன்னும் தூங்கலியா?”

“வேணு, எனக்கு ரொம்ப குளிருது. கை கால அசைக்க முடியலை. சீக்கிரம் வா” விட்டு விட்டு பேசினாள்.

“இரு நான் லோபிக்கு போய் இன்னொரு சாவி வாங்கிட்டு ஓடி வரேன்”

“பரவாயில்லை வேணு, மெதுவா நடந்து போய் கதவை திறந்து வைக்கிறேன். இங்க வா”

மூன்று நிமிடத்தில் அவள் ரூமில் இருந்தான் விபா.

“என்ன செய்யுது தானும்மா?”

பற்களேல்லாம் டைப் அடிக்க நின்றிருந்தவளை முதலில் இருக்கமாக அணைத்துக் கொண்டவன் ரிஷப்சனுக்கு போன் செய்து பேசினான். சில நிமிடங்களில் கதவு தட்டப்படும் ஓசையில் அவளை நாற்காலியில் அமர வைத்துவிட்டு கதவை சென்று திறந்தான். அவன் திரும்ப வரும் போது கையில் ஒரு தட்டு இருந்தது. அதில் சூடான காப்பி, சூட்டு தைலம் மற்றும் சில மாத்திரைகள் இருந்தன.

அதிலிருந்த மாத்திரையை  சூடான காப்பியில் கலந்து  அவளுக்கு மெல்ல புகட்டினான் விபா.

“எவ்வளவு நேரமா இப்படி இருக்கு?”

“ரொம்ப நேரமா வேணு”

“ஏன் என்னை கூப்பிடல?”

“நீ என் கிட்ட கோபமா இருக்கிற மாதிரி இருந்தது. இதான் முத தடவை உன்னை இப்படி கோபமா பார்க்கிறேன். அதான் பயமா இருந்தது உன்னை கூப்பிட. நல்லா போயிரும்னு நினைச்சேன். அதுக்குள்ள ரொம்ப நடுங்க ஆரம்பிச்சுருச்சு” பற்கள் டைப் அடிக்க நிறுத்தி நிறுத்தி பேசினாள் தானு.

அவள் பேசுவதை கேட்டபடியே அவளது பேக்கை திறந்து மேலும் ஒரு ஸ்வேட்டரை எடுத்து அவளுக்கு அணிவித்தான். மெல்ல நடத்தி சென்று கட்டிலில் படுக்க வைத்தவன், கை கால்களில் சூடு வர தைலத்தை தேய்த்து விட்டான். அவளை திருப்பி முதுகிலும் தேய்த்துவிட்டவன், பின்பு அவள் கைகளில் கொஞ்சம் கொட்டி நெஞ்சில் தேய்த்துகொள்ளுமாறு சைகை செய்தான். அவன் சொன்னதை செய்தவள், கவலையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என் மேல கோபமா வேணு? பாப்பா பாவம்னுதான் சட்டுன்னு குதிச்சுட்டேன்”

பேச வேண்டாமென சைகை செய்தவன், கனமான போர்வையை அவளுக்குப் போர்த்தி விட்டான். பின்பு அவன் திரும்பி கதவு அருகே செல்லவும், கண்ணீர் வழிய கண்களை மூடிக் கொண்டாள் தானு. கதவு லாக் ஆகும் சத்தம் கேட்டது. மெல்ல தேம்பியவள் கண்களின் கண்ணீரை சூடான கரங்கள் துடைக்கும் உணர்வில் கண் திறந்து பார்த்தாள் தானு.

“நீ போய்ட்டன்னு நினைச்சேன்”

“நீ இப்படி இருக்கறப்ப எப்படி விட்டுட்டு போவேன்?”

கட்டிலில் ஏறி அவள் அருகே படுத்துக் கொண்டவன், அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான். குழந்தையை தூங்க வைப்பதுபோல் முதுகில் தட்டி கொடுத்தவன்,

“உன் மேல கோபம் இல்ல தானும்மா. ஆனா திடீருன்னு எனக்குள்ள ஒரு பயம். எங்க உன்னையும் நான் இழந்துருவனோன்னு. தண்ணியில மிதக்குற உன்னை பார்த்ததும் என் உயிரே என் கிட்ட இல்ல தானு. “அவன் அணைப்பு இறுகியது.

“இனிமே இந்த மாதிரி உன் உயிரோட விளையாடுற காரியம் எதையும் செய்யாதே தானு. நான் எதுக்கு இருக்கேன்? நான் காப்பாத்தி இருக்க மாட்டேனா அந்த பாப்பாவ? உனக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுனா நான் எப்படி தாங்கிக்குவேன்? எனக்குன்னு இந்த உலகத்துல நீ மட்டும் தான் இருக்க. நீ இல்லாம என்னால இருக்க முடியாதும்மா. “ குரல் கரகரப்பாக வந்தது.

அவன் நெஞ்சில் இன்னும் ஒண்டி கொண்டவள்,

“இனிமே இப்படி செய்ய மாட்டேன் வேணு”

“தானும்மா, இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு அப்புறம் என் மனசுல உள்ளதெல்லாம் உன் கூட ஷேர் பண்ணிக்கனும்கிற முடிவுக்கு வந்துட்டேன். என் லவ்வ உன் கிட்ட சொல்லி இருக்கேனே தவிர என் கடந்த காலத்தைப் பத்தி நான் உன் கிட்ட எதுவுமே சொன்னதில்ல”

“வேணு, கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும். எதுக்கு அதை இப்ப போட்டு குழப்பிக்கணும்? எனக்கு ஓரளவு உன் கடந்த காலத்தைப் பத்தி தெரியும். நீ அனாதைன்னு சொன்னல்ல, அதுக்கு அப்புறம் பிரபுகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”

“எப்படி தானும்மா? என்னை பெத்தவங்க கதைய கேட்டதுக்கு அப்புறமும் உன்னால என்னை நேசிக்க முடிஞ்சது?”

“அவங்க பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ வேணு? உன் கதைய கேட்டதுக்கு அப்புறம்தான் உன்னைய எனக்கு இன்னும் பிடிச்சது. உனக்கு கிடைக்காத அன்பை நான் மட்டுமே கொட்டி குடுக்கணும்னு ஒரு வேகமே வந்தது. “

“எங்க அப்பா மாதிரியோ எங்க அம்மா மாதிரியோ நான் இருந்துருவேனோன்னு உனக்கு பயமா இல்லையா தானு?”

“எதுக்கு பயம்? நம்பிக்கை தானே வாழ்க்கை. உன் மேல நான் முழு நம்பிக்கை வச்சிருக்கேன் வேணு. தமிழ்ல எனக்கு புடிக்காத ரெண்டே வார்த்தை நம்பிக்கை துரோகம். நீ எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணேன்னு தெரிஞ்சா என் ட்ரீட்மென்ட வேற மாதிரி இருக்கும். ” என செல்லமாக மிரட்டினாள்.

கொஞ்ச நேரம் திரு திருவென முழித்தவன்,

“இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு? என் கதைய நான் இன்னும் முடிக்கல.”

“சரி சொல்லு, என் கிட்ட சொன்னாதான் உனக்கு ரீலீப்பா இருக்கும்னா, கோ அஹேட் வேணு”

சொல்ல ஆரம்பித்தவனின் பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“சின்ன வயசுல அம்மா மடியில சாஞ்சுக்கனும், அவங்க கையால ஒரு வாய் சாப்பிடனும், அப்பா முதுகுல ஏறி விளையாடனும் இப்படி சின்ன சின்ன ஆசைகளுக்கு ரொம்ப ஏங்கியிருகேன் தானும்மா. யாராச்சும் நம்ப கூட உட்கார்ந்து பேசமாட்டாங்களா, சாப்பிட்டியான்னு கேட்க மாட்டாங்களான்னு தவிச்சிருக்கேன். சிவாஜியும் கேஆர் விஜயாவும் நடிச்ச ஒரு படம். பேரு எனக்கு ஞாபகம் இல்ல. அதுல அவங்க பிள்ளைய அவ்வளவு அன்பா பாத்துக்குவாங்க. தூங்குறப்ப அவங்க ரெண்டு பேர் தான் என் நிஜமான அம்மா அப்பான்னு கற்பனை பண்ணி சந்தோஷபட்டுக்குவேன். என்னை பெத்தவங்க இறந்தப்ப கூட நான் கவலை படல தானு. அந்த சம்பவத்த பார்த்த பயம் மட்டும் தான் என் கிட்ட இருந்தது. தூங்க முடியாம எத்தனயோ ராத்திரி தவிச்சிருக்கேன். கெட்ட கனவா வந்து பயமுறுத்தும். பயத்துல கத்துனா எங்க பாட்டி ஐஸ் தண்ணிய மேல ஊத்திருவாங்க. அவங்க கூட இருந்தப்ப வாய்ல இருக்கமா துணிய கட்டிகிட்டு தான் நைட் தூங்குவேன். “

விபா மனம் திறந்து பேசுவதை கேட்டு தானுவுக்கு கண்ணில் நீர் வழிந்தது. அவன் வாயில் கை வைத்தவள்,

“போதும் வேணு. என்னால தாங்க முடியல”

“சொல்லி முடிச்சிருறேன் தானு. அப்பத்தான் நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு புரியும். ஹோஸ்டல்ல சேர்ந்தவுடன் தான் எனக்கு ஒரு நல்ல காலம் பொறந்தது. அங்க பாசம் இல்லாட்டியும், யார் நம்ம என்ன செஞ்சிருவாங்களோன்னு பயம் இல்லாம இருந்தேன். நல்லா படிச்சேன். அப்புறம் என் 18வது வயசுல சொத்து எல்லாம் என் கைக்கு வந்தவுடன் நான் செஞ்ச முத காரியம், அந்த வீட்டை வித்ததுதான். அவங்க ஞாபகம் அறவே வேணாம்னு அவங்க பிஸ்னசையும் வித்தேன். நானா சொந்தமா தொடங்கினது தான் ‘எலெகண்ட்’. அதுக்கு அப்புறம் தொட்டது எல்லாம் வெற்றிதான். வெற்றிக்கு பின்னால என்னோட வெறித்தனமான உழைப்பும் இருக்கு. அப்பவும் என்னால நைட்டு தூங்க முடியாது. ஒரு வாரம் ஸ்ட்ரேய்டா தூங்காம கூட இருந்துருக்கேன். கவுன்சலிங் போனேன் தானும்மா. டாக்டர் தான் எனக்கு பிடிச்ச விஷயத்துல மனச திருப்ப சொன்னாங்க.”

சற்று நேரம் அவனிடத்தில் சத்தம் இல்லை. அடுத்து என்ன வருகிறது என தானுவுக்கு புரிந்தது. சொல்லி முடிக்கட்டும் என அமைதியாகவே இருந்தாள்.

“எனக்கு எப்படி உன் கிட்ட இந்த விஷயத்த சொல்லறதுன்னு தெரியலை தானும்மா. ரொம்ப வெட்கமா இருக்கு. விவரம் தெரிஞ்சும் தெரியாத வயசுல பல கெட்ட பழக்கங்களும் பழகி இருந்தேன் ட்ரக்ஸ், தண்ணி, இப்படி. எதுவும் எனக்கு பிடிக்கல. பெண்கள் எனக்கு குடுக்கிற அட்டேன்ஷன் மட்டும் தான் ஒரு போதை மாதிரி எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அவங்க பணத்துக்காக தான் என் கிட்ட பழகறாங்கன்னு தெரிஞ்சும் ஏனோ அந்த போதையில இருந்து மீண்டு வர முடியலை. உனக்கு புரியலைல? பேஸ்புக்ல ஒரு போஸ்ட் போட்டா, எப்ப லைக் வரும்னு நாம காத்திருப்போம். லைக் அள்ளும்போது வாவ் இது செம்ம போஸ்ட்தான்னு ஒரு பீல் வரும் பாரு, அந்த மாதிரி தான் இந்த போதையும். லைக் கிடைக்கிற மாதிரி நான் ஏங்கி தவிச்ச அட்டேன்ஷன் எனக்கு கிடச்சது. மறைச்சு, ஒளிஞ்சு எதுவும் செய்யலையே. அதுல என்ன தப்புன்னு ஒரு சப்பகட்டு நானே கட்டிக்கிட்டேன்.  அப்புறம் தான் ஒரு நாள் உன்னை சந்தித்தேன். உன் சிரிப்பு சத்ததை கேட்டு தான் நான் உன்னை திரும்பி பார்த்தேன். நமக்குள்ள கெமிஸ்ட்ரி இருக்குங்கற மாதிரி கெமிஸ்ட்ரி புக்க தூக்கி பிடிச்சுக்கிட்டு இருந்த. நீ திடீர்ன்னு எழுந்து வெளிய போகும்போது என்னைத் திரும்பி பார்த்த. ஞாபகம் இருக்கா? அப்போ தான் உன்னை நல்லா பார்த்தேன்.  உன் கண்களில் இருந்த வெறுமை என்னை புரட்டி போட்டுருச்சு. என்னையே நான் பாத்துகிட்ட மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் அடிக்கடி அங்க வந்தேன் உன்னை தேடி. ஆனா கண்டு பிடிக்க முடியலை. அப்புறம் தான் உங்க வீட்டுல உன்னைப் பார்த்தேன். என் கண்ணீரை துடைச்ச நீ என் மனசையும் துடைச்சு எடுத்துகிட்ட. நமக்கு ஒன்பது வயசு வித்தியாசம்கிறது என்னை உறுத்திக் கிட்டே இருந்தது. ஆனாலும் உன்னை விட முடியலை. உனக்காக எதுவும் செய்யலாம்னு தோணுச்சு. நீ எனக்கு மட்டும்தான், எனக்கே எனக்கு மட்டும்தான் தானும்மா. இனிமே இந்த மாதிரி அதிர்ச்சி எல்லாம் எனக்கு குடுக்காதடா. என் சின்ன ஹார்ட் வெடிச்சு சிதறிரும்.”

விபாவை இருக்கி கட்டிக் கொண்டவள்,

“வேணு, நீ சொன்ன பேஸ்புக், போதை கதைய என்னால ஏத்துக்கவே முடியலை. தப்பு செய்யுற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். காரணம் இருக்குங்கறதுனால தப்பு ரைட்டா ஆகிறாது. நீ செஞ்சது தப்புதான். ஆனா என்னால மன்னிக்க முடியாத தப்பு இல்ல. இந்த ஊருல யாரும் புத்தனில்ல, தப்பே செய்யாம வாழறதுக்கு. என்னை கேட்டா புத்தரும் தப்பு செஞ்சவருதான். மனைவிய தவிக்க விட்டு போனது தப்பு இல்லையா? இத நான் கேட்டா சின்ன புள்ள மாதிரியா பேசுற, வாயிலயே போட்டுருவேன்னு கற்பு சத்தம் போடுவாங்க. அதனால நான் சொல்ல வரது என்னன்னா பழச மறந்துட்டு புதுசா என்னை மட்டும் நினை வேணு. ரூட்டு மாறி வேற பாதையில போச்சு, தாத்தாவை விட்டு உன்னை பேன் பார்க்க சொல்லிருவேன்” என கை நீட்டி மிரட்டினாள். அவளது கையைப் பிடித்து முத்தமிட்டவன்,

“எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட தானு. உன் மனசு யாருக்கும் வராது தானும்மா. இந்த கணப்பு சாட்சியாக, இந்த கட்டில் சாட்சியாக, இந்த காத்தாடி சாட்சியாக, இந்த லைட் சாட்சியாக”

“முடிச்சிட்டியா இல்ல இன்னும் இருக்கா? சீக்கிரம் சொல்லி தொலை வேணு. எனக்கு கண்ணை கட்டுது”

இன்னும் ஒன்னுதான்டா. நம் அணைப்பின் சாட்சியாக இந்த ஜென்மத்துக்கு நீ மட்டும் தான் என் லவ்வர், டாவு, மனைவி, பொண்டாட்டி,பார்யா, பத்னி எல்லாமே. தானு? தானும்மா? அடிப்பாவி கஸ்டப்பட்டு வசனம் பேசுனா, இவ இப்படி தூங்கிட்டாளே. “ சிரித்தபடியே அவளை அணைத்து கொண்டு அவனும் தூங்கி போனான்.

SST–EPI 25

அத்தியாயம் 25

மலேசியாவின் கிங் ஆப் பேஷன் என அழைக்கப்படுபவர் பெர்னர்ட் சந்திரன் என்பவராவார். அவரது படைப்புகள் மலாய், சீன, இந்திய பாரம்பரியத்தைக் கலந்து இருக்கும். பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், வெளிநாட்டிலும்  திறமையைக் காட்டி கொடிகட்டிப் பறக்கிறார்.

 

“வாங்க தம்பி! நல்லா இருக்கீங்களா?” என கேட்டார் ரதி.

“நான் நல்லா இல்லைம்மா!”

சம்பிரதாயமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை ரதி கேட்டு வைக்க, அதற்கு வந்த பதிலில் திகைத்துப் போனார்.

“நான் நல்லா இருக்கறது உங்க கையிலத்தான் இருக்கும்மா”

கணேவுடன் தன் அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த குருவை குழப்பத்துடன் பார்த்தார் ரதி. ஹாலில் அவர் அமர்ந்திருக்க, ரதியின் அண்ணனும் அண்ணியும் அவரோடு இருந்தார்கள்.

“என்ன சொல்லுறீங்க தம்பி?”

“நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பலை. உங்க மக மிருவ நான் மனசார விரும்பறேன். அவளைத் திருமணம் செஞ்சு என் கூடவே வச்சிக்க ஆசைப்படறேன்! அதுக்கு உங்க சம்மதம் வேணும்மா”

அதிர்ச்சியாக குருவைப் பார்த்தார் ரதி. குருவிடம் மகள் வேலை செய்கிறாள் என தெரியும் அவருக்கு. அவனை காரில் ஏற்றி இறக்குகிறாள் எனவும் தெரியும். மகள் பேச்சில் அடிக்கடி பாஸ் புராணம் எட்டிப் பார்ப்பதையும் அறிவார். ஆனால் தன் குட்டி மகள் காதலில் விழுந்திருப்பாள் என்பதை நம்பவே அவருக்கு சிரமமாக இருந்தது. ரதிக்கு எப்பொழுதுமே மிரு குழந்தைதான். அந்தக் குழந்தை ரொம்ப நாளாகவே தனக்குத் தாயாய் மாறி இருந்ததையும் உணர்ந்துத்தான் இருந்தார் ரதி.

மெல்ல பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அண்ணனையும், அண்ணியையும் நோட்டமிட்டார் ரதி. அண்ணா முகத்தில் அமைதி தெரிந்தாலும், அண்ணியின் முகம் மலர்ச்சியைக் காட்டியதை குறித்துக் கொண்டார். அண்ணனிடம் அருளை தன் மகளுக்கு மாப்பிள்ளையாக்கக் கேட்டிருந்தார் ரதி. யோசித்து சொல்வதாக அவர் சொல்ல, அண்ணியோ வெளிப்படையாகவே அதிருப்தியைக் காட்டி இருந்தார். தான் நல்ல உடல் நிலையில் இருக்கும் போதே தன் ஆசை மகளுக்கு நல்ல மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆசைப்பட்டவருக்கு, இந்த வீட்டில் அவள் மகிழ்ச்சியாக இருப்பாளா எனும் பெரும் சந்தேகம் முளைவிட்டிருந்தது.

கணேவும் ஜாடைமாடையாக அவர்கள் மிருவிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என சொல்லி இருந்தான். அதைக் கேட்டதில் இருந்து அவருக்கு அந்த வீட்டில் இருக்கவே முடியவில்லை. மகள் ஒரு மாதத்தில் அழைத்துக் கொள்வதாக சொல்லியிருக்க, பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார்.

ஆரம்பத்தில் பிடி கொடுக்காவிட்டாலும், அதற்கு பிறகு அருள் மிருவின் மேல் அக்கறை காட்டுவதுப் போலத்தான் தோன்றியது ரதிக்கு. இவருக்குப் போன் செய்யும் போதெல்லாம், மிருவிடமும் நாலு வார்த்தைப் பேசி விட்டுத்தான் வைத்தான். ஆசையில் மிருவை மணந்தாலும், அவன் அம்மாவின் தேள் போல கொட்டும் பேச்சில் இருந்து அவளைக் காப்பானா என்பது ரதிக்கு சந்தேகமாகவே இருந்தது. பணத்தால் குளிப்பாட்டாவிட்டாலும் பாசத்தால் குளிப்பாட்டித்தானே வளர்த்தார் மகளை. வருபவனும் அவளை கண்ணுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கடவுளை வேண்டாத நாளில்லையே.

மகளின் பாஸ் எனும் கண்ணோட்டத்தில் இருந்து விலகி, மகளின் கணவன் எனும் கண்ணோட்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தவனை ஏற இறங்கப் பார்த்தார் ரதி. கண்ணுக்கு லட்சணமாக, மேல் தட்டு தோற்றத்தில் அவர் முகத்தையேப் பார்த்திருந்தனை கவலையாகப் பார்த்தார் ரதி. கீழிருந்து முன்னேறி வந்த தன் அண்ணன் குடும்பமே மிருவை கேவலமாகப் பார்க்க, பரம்பரை பணக்காரன் போல தோன்றும் இவன் குடும்பம் தன் மகளை எப்படி பார்ப்பார்கள் என கலங்கினார் ரதி.

“எங்க மிரு என் கிட்ட இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலியே தம்பி. அதோட இதெல்லாம் சரி வருமான்னு தெரியலையே!” என இழுத்தார் ரதி.

படக்கென எழுந்தவன், ரதியின் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான். அவர் கையை அடுத்து தன் கையில் வைத்துக் கொண்டவன்,

“மிருக்கு உங்க மேல ரொம்ப பாசம். எனக்கு அம்மா அப்பாலாம் என் ரதி தான்னு அடிக்கடி சொல்லுவா! உங்கள மாதிரியே அதே பாசத்தோட நான் மிருவ பார்த்துப்பேன்! தயவு செஞ்சு அவளை என் கிட்ட குடுத்துருங்க ரதிம்மா” என கெஞ்சும் குரலில் கேட்டான் குரு.

குருவின் கெஞ்சலும், தன் கைப்பிடித்திருந்தவனின் கைகளில் தெரிந்த மெல்லிய நடுக்கமும் ரதியின் மனதை உருக்கியது.

“இன்னிக்கு பாஸ் பச்சை கலர்ல ஷேர்ட் போட்டுட்டு வந்தாரும்மா! செம்ம கலரு தெரியுமா!”

“கணே, அந்த சாக்லேட்ட சாப்பிட்டு முடிச்சிராதடா! என் பாஸ் குடுத்தது. எனக்கும் வைடா, டேய்!”

“அம்மா சோறு போதும், இன்னும் வைக்காதீங்க! நைட்ல நிறைய சாப்பிட்டா ரொம்ப தொந்தி வைக்குமாம். என் பாஸ் சொன்னாரு”

“இந்த ஹீரோ என்னடா சிரிக்கறான்! நல்லாவே இல்லடா கணே! எங்க பாஸ் சிரிக்கறப்போ பல்லு எல்லாம் பளபளன்னு ஜோலிக்கும் தெரியுமா”

“பாஸ் சொன்னாரு, பாஸ் செஞ்சாரு, பாஸ் சிரிச்சாரு, பாஸ் மொறைச்சாரு” இப்படி அடிக்கடி மகள் வாயில் வரும் பாஸ்கள், வேலைக்கு இவன் பாஸ்சாக இருப்பதால் மட்டும்தான் வந்ததா இல்லை மனதுக்கும் பாஸாக ஆகிவிட்டதால் வந்ததா என இப்பொழுதுதான் சந்தேகம் வந்தது ரதிக்கு.

குருவின் கைப்பிடித்துத் தட்டிக் கொடுத்தவர்,

“என்னோட சம்மதம் முக்கியமில்லைப்பா! என் மகளுக்குப் பிடிச்சிருந்தா போதும். அவ சந்தோஷமா இருக்கனும், நிறைவா வாழனும்! அது மட்டும்தான் எனக்கு வேணும். கணே ஆம்பளைப் பையன், அவன பத்தி எனக்கு கவலை இல்ல. என் பயமெல்லாம் இவ மேலதான். எனக்கு மகளா பிறந்ததுல படாத பாடு பட்டுட்டா! இன்னும் பல கேடு கெட்ட ஜென்மங்களோட வாயில விழுந்து எழுந்துகிட்டுத்தான் இருக்கா!” இதை சொல்லும் போது ஜாடையாக தன் அண்ணியைப் பார்த்தார் ரதி. அவர் முகம் சுருங்கிப் போக, ரதிக்கு திருப்தியாய் இருந்தது.

“மிருவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் ரதிம்மா! சில விஷயங்களை நினைச்சுத் தயங்கறா! அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். அவளை கண்டுப்பிடிக்கும் போது, எனக்கு உங்க சைட்ல இருந்து எந்த தடையும் இருக்கக் கூடாது. அதுக்குத்தான் உங்களைத் தேடி வந்தேன்.”

“கண்டுப்பிடிக்கும் போதா? என்ன தம்பி சொல்லுறீங்க? வேலை விஷயமா நீங்கதான் கெடாவுக்கு அனுப்பிருக்கீங்கன்னு சொன்னாளே” பதறினார் ரதி.

“பதட்டமடையாதீங்க ரதிம்மா! கெடால தான் இருக்கா. அவ இருக்கற இடத்துல நெட்வோர்க் ப்ராப்லமா இருக்கு! அதைத்தான் அப்படி சொன்னேன். லைன் கிடைச்சதும், உங்களுக்குப் போன் செய்வா.” என சமாதானப்படுத்தினான் குரு.

மிருவின் வீட்டுக்கு முன் நின்றிருந்த போது கணே அவனுக்குப் போன் செய்திருக்க, உடனே அவனைப் பார்க்க வந்திருந்தான் குரு. வீட்டின் வெளியே காரிலேயே அமர்ந்து கணேவுடன் பேசியவன், அதற்குப் பிறகு தான் ரதியைப் பார்க்க உள்ளே வந்திருந்தான்.

மிரு மருத்துவமனையில் இரவு தங்க, தன்னோடு இருந்த கணேவுடன் குருவுக்கு நல்ல நட்பு உருவாகி இருந்தது. இருவரும் சேர்ந்து ஜிம் போவது, ஒன்றாக அமர்ந்து ஆங்கில சண்டைப் படம் பார்ப்பது, குரு சாப்பிடாவிட்டாலும் கணேவுக்கு நல்ல உணவு வகைகளை வாங்கித் தருவது என இருவரும் நெருங்கி இருந்தார்கள். மிருவைப் போலவே கணேவும் பாஸ் என தான் அழைப்பான் குருவை.

தன் அக்காவுக்கு ஆபத்தில் உதவி, தங்கவும் இடம் கொடுத்திருந்த குருவின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் கணே. குரு அடிக்கடி பேச்சில் மிருவைப் இழுத்து, அவளைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டுவதை கண்டுத்தான் வைத்திருந்தான் கணே. தனது சேகுவுக்கு நோ சொன்ன தமக்கை குருவைத் தான் மனதில் வைத்திருக்கிறாளோ எனும் சந்தேகம் பலமாகவே இருந்தது அவனுக்கு. குருவின் நடவடிக்கைகளில் அது உறுதியாகி இருந்தது அவனுக்கு. அதனால்தான் மிருவின் சந்தேகமான நடவடிக்கையை கண்டுக் கொண்டதும் உடனே குருவுக்கு போன் செய்தான்.

“ஹலோ பாஸ்”

“கணே, உன் நம்பரா இது? இப்ப நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க?” என அவசரமாகக் கேட்டான் குரு.

“ஆமா, என் நம்பர்தான். அக்கா கிளம்பற முன்னுக்கு வாங்கிக் குடுத்தா”

“கிளம்பற முன்னுக்கா? எங்க கிளம்பிட்டா?” பதட்டம் அவன் குரலில்.

“நீங்கதான் வேலை விஷயமா கெடாக்கு அனுப்பறீங்கன்னு சொன்னாளே!”

“வாட்????”

“ஆமா, அப்படித்தான் சொன்னா!”

“மை காட்! கணே மிரு வேலைய விட்டுட்டாடா!”

“வாட்????” இப்பொழுது கத்துவது கணேவின் முறையானது.

“இரு நான் நேருல வரேன், பேசலாம்” என கணேவின் தாய் மாமன் அட்ரஸ் வாங்கிக் கொண்டான் குரு.

வீட்டின் வெளியேவே காரை நிறுத்து கணேவை அழைத்தான் குரு. அவன் வந்து காரில் ஏறிய மறு நிமிடம்,

“கணே உனக்கு நான் வெறும் பாஸ்சா இல்லாம மாமாவா அகனும்னு ஆசைப்படறேன்! உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?” என கேட்டான் குரு.

ஆமென தலையாட்டினான் கணே.

“போகும் போது என்ன சொல்லிட்டுப் போனா மிரு? எல்லாத்தையும் சொல்லு. எங்க போயிருக்கான்னு எதாச்சும் க்ளூ கிடைக்குதா பார்ப்போம்”

“கெடாக்கு போய் வேலைக்கு சேர்ந்துட்டு ஒரு மாசம் கழிச்சு எங்களைக் கூப்பிட்டுக்கறேன்னு சொன்னா! ஒரு மாசம் ஆகுமாடின்னு அம்மா கேட்டதுக்கு, மேடமுக்கு கோபம் வந்துருச்சு. போய் வீடு பார்க்கனும், ஹாஸ்பிட்டல் கிட்ட இருக்கா, கணேக்கு ஸ்கூல் பக்கமா எல்லாம் பார்க்கனும்மா! மந்திரம் போட்ட மாதிரி எல்லாம் நடக்குமான்னு சத்தம் போட்டா. அப்புறம் அவளே அம்மாவைக் கட்டிப் பிடிச்சுகிட்டா! கொஞ்சமா அழுதா! அப்பவே எனக்கு லேசா சந்தேகம் தான்”

“நீ எதுவும் கேக்கலியா கணே?”

“கேட்டேனே! ஆபிஸ் எங்க இருக்கு, என்னிக்கு பஸ் எடுக்கற, வீடு கிடைக்கற வரை எங்க தங்குவ எல்லாம் கேட்டேன். உடனே நீ எனக்கு தம்பியா இல்லை அண்ணனா? இத்தனை நாளு இந்தக் குடும்பத்த நாந்தான் பாத்தேன். இனிமேலும் நாந்தான் பாப்பேன். நீ இதெல்லாம் போட்டு மண்டையக் குழப்பிக்காம படிக்கற வேளைய மட்டும் பாருன்னு கோபமா கத்திட்டா. அதுக்கு மேல அம்மா என்னைப் பேச விடுவாங்களா! சும்மா இருடா கணேன்னு அடக்கிட்டாங்க”

நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் குரு.

“எங்கடா போயிருப்பா? போன் வேற அடைச்சிப் போட்டு வச்சிருக்கா! எனக்கு பயமா இருக்குடா கணே. உன் அக்கா இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லடா. ஷீ இஸ் மை எவிரிதிங்!” குரல் கரகரத்துக் கிடந்தது.

அவன் நிலையைப் பார்த்து மெல்லிய சிரிப்பு மலர்ந்தது கணேவின் முகத்தில்.

“என்னடா சிரிக்கற?”

“நீங்க என் அக்காவ ரொம்பவே லவ் பண்ணறீங்கன்னு தெரியுது மாமா! இந்த மச்சான் இருக்கறப்போ கவலை ஏன்!” என்றவன் தனது புத்தம் புது போனை எடுத்து குருவின் முன் ஆட்டினான்.

“டொட்டொடொய்ங்க்!”

“அக்கா வாங்கி குடுத்தாளா? குடுத்துருப்பா, குடுத்துருப்பா! அவ தான் புது பணக்காரி ஆகிட்டாளே!” சோகத்தையும் மீறி கண்ணில் சிரிப்பு தெரிந்தது குருவுக்கு.

“ஆமா, அவ தான் வாங்கிக் குடுத்தா. அதோட ஃபைண்ட் மை ப்ரேண்ட் ஆப்ளிகேஷனும் போட்டுக் குடுத்துருக்கா! அவ எங்க இருக்கான்னு நானும், நான் எங்க இருக்கேன்னு அவளாலயும் ட்ரேக் பண்ண முடியும். இப்போ போன் அடைச்சு வச்சிருக்கறதுனால லாஸ்ட் லோகேஷன் கோலாலம்பூர் தான் காட்டுது”

குருவுக்கும் முகம் மெல்ல மலர்ந்தது.

“ஆர் யூ திங்கிங் வாட் ஐ அம் திங்கிங் கணே?” சிரிப்புடன் கேட்டான் குரு.

“அதே அதே! அந்த பக்கி நாம அவள கண்டுப்பிடிக்கனும்னு தான் இதெல்லாம் செஞ்சிருக்கா! ஆனா அம்மாகிட்ட மூனு நாள் போன் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கா! அதே மாதிரி போனையும் அடைச்சிருக்கா”

“இட் மீன்ஸ், இந்த மூனு நாளுல உங்கக்கா கேடி என்னமோ பண்ணறதுக்கு திட்டம் போட்டுருக்கா! அந்தக் காரியம் முடியற வரை நாம அவளைக் கண்டுப்பிடிக்கறதெ அவ விரும்பல”

“பெத்தூல் பெத்தூல் பெத்தூல்!(ஆமா, ஆமா, ஆமா)”

“சரி, உள்ளே போய் அம்மா கிட்ட பேசிட்டு அந்த லாஸ்ட் லோகேஷன் போய் பார்ப்போம்” என காரை பூட்டினான் குரு.

ரதியிடம் பேசி சம்மதம் வாங்கியவன், கணேவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான். காரை இவன் ஓட்டி வர, கணே தன் புது போனில் கேம் விளையாடியபடியே வந்தான். அவன் போனை பார்க்கவும் மீண்டும் குருவின் நினைவுகள் சீசீடீவியில் பார்த்த காட்சிகளை அசைப்போட்டது.

மிரு உடலை குறுக்கி கால்களைக் கட்டி அமர்ந்திருந்தவள், சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர போராடியபடி இருந்தாள். அவளின் நிலையைப் பார்த்த ஆனந்தி நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார்.

“இங்க பாரும்மா! இந்த மாதிரி என்னை நீதான் பேச வைக்கற! இவ்ளோ லோவா இறங்கிப் பேசக் கூட எனக்குப் பிடிக்கல. நான் கேட்கறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். என் மகன விட்டுட்டுப் போயிரு! ஹீ இஸ் சோ ப்ரீஷீயஸ் டூ மீ! உன்னை மாதிரி ஜாதி பூ…ம்ப்ச்! உன்னை மாதிரி ஒருத்திய கட்டிக்கிட்டு அவனால சோசியலைஸ் பண்ண முடியுமா? எங்க சொந்தபந்தங்கள் முன்ன தலை நிமிர்ந்து அவனால நிக்க முடியுமா? மனைவின்னு ஒருத்தி கணவனோட முன்னேற்றத்துக்கு ஏணியா இருக்கனும். நீ கண்டிப்பா அவனோட வீழ்ச்சிக்குத் தான் துணையா இருப்பே! ப்ளீஸ் அவன விட்டுரு”

வாய் வார்த்தையாக எதையும் சொல்லாவிட்டாலும், முடியாது என அழுத்தமாகத் தலையை ஆட்டினாள் மிரு.

படக்கென எழுந்தார் ஆனந்தி. மிருவின் முன்னே குறுக்கும் நெடுக்கும் நடந்தவர்,

“ஐம்பதாயிரம் தரேன்! வாங்கிட்டு ஓடிரு” என அவள் கண்களைப் பார்த்து சொன்னார்.

கலகலவென சிரித்தாள் மிரு.

“பிசாத்து ஐம்பதாயிரம் தானா? உங்க குருப்பா அவ்ளோ தான் வோர்த்தா?”

“ஏய்! வார்த்தைய அளந்துப் பேசு!”

“நீங்க காச அளந்து குடுக்கறீங்களே அத்தை! அள்ளிக் குடுத்தா நானும் அளந்துப் பேசுவேன்”

“1 லட்சம்!”

“நோ..உங்க மகன நீங்க ச்சீப்பா வாங்கப் பார்க்கலாம். ஆனா நான் என் குருவ ச்சீப்பா விக்க மாட்டேன். இன்னும் ஏத்திக் கேளுங்க அத்தை”

பல்லைக் கடித்தார் ஆனந்தி.

“2 லட்சம்!”

“உங்களுக்கும் வேணா எனக்கும் வேணா! அஞ்சு லட்சம் குடுங்க! உங்க மகன் கண்ணுலயே படாம ஓடிப் போயிடறேன்”

“அஞ்சா?”

“ரொம்ப கேட்டுட்டேனோ? உங்க குருப்பாட்ட கேளுங்க கண்டிப்பா குடுப்பாரு! இவ்ளோ காசு எதுக்குமான்னு கேட்டா, உன் உயிர புடுங்கி வெளியே போடன்னு சொல்லுங்க! ரொம்ப சந்தோஷப்படுவாரு!”

அவள் அப்படி சொன்னதில் சில நொடிகள் வாயடைத்து நின்ற ஆனந்தி, மீண்டும் அகங்காரத்துடன் நிமிர்ந்தார்.

“நாளைக்கு உன் அக்கவுண்ட்ல காசு இருக்கும். இப்போ இங்கிருந்து கிளம்பு”

“அஸ்க்கு புஸ்க்கு! கையில காசு, வாயில தோசை மை டியர் அத்தை. காசு முதல்ல வரட்டும், அப்புறம் உங்க மகனுக்கு கண்டிப்பா டாட்டா பாபாய் சொல்லிருவா இந்த மிரு! ட்ரஸ்ட் மீ. ஆனா ஒன்னு! காசு வாங்கிட்டு நான் போனதும், உங்க மகன அடக்கி வைங்க. அதுக்கு அப்புறமும் உங்க குருப்பா, மிரு, மிருது, மமி மருன்னு என்னைத் தேடி வந்தான்… சத்தியமா  இந்த ஜென்மத்துல நான் தான் உங்க மருமக. மைண்ட் இட்! இப்போ இடத்தை கழுவுங்க! எனக்கு மூச்சு முட்டுது” என அலட்சியமாக சொன்னாள் மிரு.

“யார் வீட்டுல இருந்து யாரடி வெளியே போக சொல்லுற?”

“ஷப்பா! மறுபடியும் முதல்ல இருந்தா!!! போங்கத்தை போங்க! போய் காசு ஏற்பாடு பண்ணற வழிய பாருங்க! காசு கைல வர வரைக்கும் இது என் குரு வீடு!” என்றவள் ஆனந்தியின் அருகே நெருங்கினாள்.

அவர் எதிர்பாரா நிமிடம் சட்டென ஆனந்தியைக் கட்டிக் கொண்டாள் மிரு. ஆனந்தி திகைத்து நிற்க,

“தோற்றம் குரு மாதிரி இல்லைனானும், மேனரிஷம்லாம் அப்படியே என் குருதான். ஐ லவ் யூ அத்தை! வெளிய போறப்போ கதவை நல்லா பூட்டிட்டுப் போங்க! வரட்டா!” என்றவள் ரூமில் நுழைந்துக் கொண்டாள்.

அதிர்ச்சியில் நின்றிருந்த தன் அம்மாவின் முகத்தை திரையில் பார்த்த குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்பொழுது கூட அதை நினைக்கும் போது சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

‘என் கிட்ட பணம் வாங்கி என் ஆளுக்கே குடுத்துருக்காங்க எங்கம்மா! இவ என்னான்னா என் பணத்தை எனக்கே ஐம்பதாயிரத்துக்கு செக்கா திருப்பிக் குடுத்துட்டுப் போயிருக்கா! மொத்தத்துல என்னை வச்சி போத் ப்ளே பாஸ்கேட்பால் இன் மை லைப்’ மிரு சொல்லும் வடிவேலு வசனம் போல தன் நிலை ஆனதை நினைத்து அழுவதா சிரிப்பதா எனும் நிலையில் இருந்தான் குரு.

ஆப்ளிகேஷன் காட்டிய இடத்தில் மூன்று பட்ஜேட் ஹோட்டல்கள் இருந்தன. இவர்கள் போய் விசாரிக்கும் போது செக்குரிட்டி ரீசன் என சொல்லி விவரம் தர மறுத்து விட்டார்கள். கணேவின் அடையாள அட்டையைக் காட்டி மிரு அவனின் அக்கா, தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் பாட்டிக்கு சீரியஸ் என வாயில் வந்ததை எல்லாம் அள்ளி விட்டார்கள் இருவரும். அதற்கும் மசியாத இடங்களில் லேசாக பணத்தைத் தள்ளி விவரம் அறிந்தான் குரு. ஆப்ளிகேஷன் குத்துமதிப்பாக இங்கே என காட்டியதே தவிர, கரேக்டான விவரம் தரவில்லை. கடைசியாக விசாரித்த ஹோட்டலில், அரை மணி நேரத்துக்கு முன் தான் மிரு செக் அவுட் செய்ததாக சொன்னார்கள்.

மீண்டும் இருவருக்கும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்ட உணர்வு.

போன் ஆன் செய்திருந்தால் பல வழிகளில் ஒருத்தரைக் ட்ரேக் செய்ய முடியும். அதுவே அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் மிகவும் சிரமம்தான்.

“என்ன மாமா செய்யறது?”

“உங்க அக்கா போன் ஆன் பண்ணற வரைக்கும் வேய்ட் பண்ண வேண்டியதுதான். அவ பத்திரமாத்தான் இருப்பா! நீ கவலைப்படாதே” என கணேவைத் தேற்றியவன் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான். அவனுக்கு மிலோ ஷேக் செய்து கொடுத்து, சின்னவனை படுக்க சொல்லியவன், அவன் போனை எடுத்து வைத்துக் கொண்டான். இரவு முழுக்க உறங்காமல் , ஆப்ளிகேஷனையே ரிப்ரெஷ் செய்து பார்த்தப்படியே இருந்தான் குரு. சரியாக விடியற்காலை நான்கு முப்பதுக்கு, மிருவின் போன் நம்பர் அருகே பச்சை நிறம் காட்டியது. படக்கென துள்ளி எழுந்த குரு, ரூமுக்கு ஓடினான்.

“கணே, நான் வெளிய போறேன்! அவசரம்னா வீட்டுப் போன் யூஸ் பண்ணிக்க” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு ஓடினான்.

காரில் அமர்ந்து மீண்டும் ஆப்ளிகேஷனைப் பார்த்தான். அது காட்டிய இடம் பி.எம். மெடிக்கல் சென்டர்.

‘இது காஸ்மெடிக் சர்ஜரிக்கு புகழ் பெற்ற இடமாச்சே! இங்க இவ என்ன செய்யறா?’ (கமேண்ட்ல சொல்லிட்டுப் போங்கப்பா அங்க மிரு என்ன செய்யறான்னு)

 

(தவிப்பார்கள்)

SST–EPI 24

அத்தியாயம் 24

கெடா என மலாயிலும் கடாரம் என தமிழிலும் அழைக்கப்படும் மாநிலம் மலேசிய தீபகற்பத்தின் வடக்கே அமைந்த மாநிலமாகும். பச்சைப் பயிர் மாநிலம் என அழைக்கப்படும் இங்கே தான் பரந்த வயல் வெளிகள் இருக்கின்றன. தென் கிழக்காசியாவிலே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரிகம் இருந்திருப்பதாக பல ஆய்வுகள் சொல்லுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் இங்கே ஆட்சி செய்திருக்கிறார்கள் எனவும் வரலாறு கூறுகிறது.

 

“பைத்தியமா உனக்கு? கொஞ்ச நாள் நான் ஊருல இல்ல! அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனையை இழுத்து வச்சிருக்க”

பார்வை எங்கோ வெறித்திருக்க, அமைதியாக அமர்ந்திருந்தாள் மிரு.

“மிரு! உன் கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன்” குரலை உயர்த்தினான் காசிம், மிருவின் நண்பன்.

“நல்லா கேட்குது!”

“இப்போ ஏன் எங்கள எல்லாம் விட்டுட்டு வேற ஊருக்குப் போற ப்ளான்? அதுவும் தூரமா கெடாவுக்கு? சொல்லு மிரு”

“இந்த ஊரு போர் அடிச்சிருச்சு காசிம்! எந்த ஊருக்குப் போனா என்ன! எல்லாமே மலேசியா உள்ளதானே இருக்கு! என்னமோ அண்டார்டிக்கா போற மாதிரி குதிக்கற!” குரலில் அலட்சியம் காட்டிக் கேட்டாள் மிரு.

அமைதியாக கைக்கட்டி மிருவை முறைத்துப் பார்த்தான் காசிம். காரணம் சொல்லாமல் இனி உன்னிடம் ஒரு வார்த்தைப் பேச மாட்டேன் என அவன் உடல் மொழி சொன்னதை சரியாக மொழிப் பெயர்த்துப் புரிந்துக் கொண்டாள் மிரு.

இருவரும் மாமாக் கடைக்கு வந்திருந்தார்கள். மிரு தே தாரேக் ஆர்டர் செய்திருக்க, காசிம் தே ஓ(பால் போடாத டீ) ஆர்டர் செய்திருந்தான். கடை ரேடியோவில் பாடல் கதறிக் கொண்டிருந்தது.

“திறம் கொண்டான்

தீரம் கொண்டான்

அறம் கொண்டான்

ஆரம் கொண்டான்

கடாரம் கொண்டான் ஓவ்வ்வ்வ்” என கடையே அதிர்ந்தது.

பக்கத்து மேசையில் இளசுகள்,

“பாட்ட மட்டும் தெறிக்க விடுவானுங்க! ஆனா படத்த ஃபேன் பண்ணி நம்மள தவிக்க விடுவானுங்க!” என கருவிக் கொண்டிருந்தார்கள்.

“மிரு, மிரு! உன் கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன்! நீ என்னான்னா வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க!” கோபமாக பேசினான் காசிம்.

“இப்ப எதுக்கு சவுண்ட் விடற? பொண்டாட்டி வந்ததும் ப்ரேண்ட கழட்டி விட்டுட்ட ஆளுதானே நீ! போ போ, கிளம்பி போ! மனசு சரியில்லைன்னு உன்னைக் கூப்பிட்டேன் பாரு! என்னை சொல்லனும்” அவனை கிளம்ப சொல்லிவிட்டு இவள் நாற்காலியில் இருந்து எழுந்தாள்.

பட்டென கைப்பிடித்து அவளை மீண்டும் அமர்த்தினான் காசிம்.

“சரி உட்காரு! நான் ஒன்னும் கேக்கல! இப்படியே ஒருத்தர ஒருத்தர் பார்த்துட்டே உட்கார்ந்திருக்கலாம்”

தலையைக் குனிந்துக் கொண்டாள் மிரு. காசிமும் டீயை அருந்தியவாறே அமைதியாக அமர்ந்திருந்தான். சில நிமிடங்களில் நிமிர்ந்தவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

“சாரி காசிம்! நான் பேசனது ரொம்பத் தப்பு! மன்னிச்சிரு.”

“விடு மிரு! என்னை நீ திட்டறதும், ஏசறதும் என்ன புதுசா! அதெல்லாம் எனக்கு பழகிப் போச்சு. நானும் காதல், கல்யாணம், புது வீடு ஷிப்டிங் அப்படி இப்படின்னு உன் கூட டைம் ஸ்பேண்ட் பண்ணவே இல்ல. ஐம் ரியலி சாரி மிரு”

“இன்னிக்கு என்ன சாரி டேவா! நாம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாரி கேக்கறோம்! சரி சொல்லு, வைப் உன்னை கண் கலங்காம பாத்துக்கறாங்களா?”

“ரொம்ப நல்லா பாத்துக்கறா! ரெண்டு பேரும் வேலைக்கும் போக ஆரம்பிச்சிட்டோம்!” பேசும் போதே அவன் கண்கள் மின்னியது. நண்பனின் மகிழ்ச்சியில் இவளும் மகிழ்ந்துப் போனாள். மனைவியைப் பற்றி வாய் ஓயாமல் அவன் புகழ, இவளும் புன்னகையுடன் கேட்டிருந்தாள்.

“நீயும் வாழ்க்கையில நல்ல படி செட்டில் ஆகனும் மிரு. நம்மைப் பார்த்துக்க ஒரு ஆள் இருக்காங்கன்றதே எவ்வளவு சூப்பர் பீலிங் தெரியுமா!”

‘தெரியும்!’ மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டாள் மிரு.

“நம்மள பார்க்கறப்போ அவங்க கண்ணுல தெரியற ‘நீ என்னுடையவன்’ற பார்வையே கோடி சுகம் தெரியுமா?”

‘தெரியும், தெரியும், தெரியும்!’ அவள் மனம் கதறியது. வெளியே மட்டும் அமைதியாக அவன் பேசுவதைக் கேட்டிருந்தாள் மிரு.

“மிரு, எனக்கு எப்பவுமே ஒரு ஃபீல் இருக்குத் தெரியுமா?”

“என்ன?”

“நான் மட்டும்தான் உன்னை பெஸ்ட் ப்ரேண்டா நினைச்சு எல்லாத்தையும் சொல்லறேன்! நீ என்னை எப்பவுமே மூனு அடி தள்ளித்தான் வைக்கறே! பெத்தூல் கான்? (நெஜம்தானே)”

அவள் மனதை திசைத் திருப்ப அதையும் இதையும் பேசியவன், கடைசியில் செண்டிமெண்டை கையில் எடுத்திருந்தான்.

“அறைஞ்சிருவேன் பாத்துக்கோ! மெனெங்கா(இடைநிலை பள்ளி) ஸ்கூலுல என்னை ஆம்பளைப் பசங்க எல்லாம் ஒன்னு கூடி பூலி(bully) பண்ணப்போ நீ தான் காப்பாத்துன! அப்போ இருந்து, இப்போ வரை நீ தான் என் பெஸ்ட் ப்ரேண்ட். உனக்கு மறைச்சி என் குடும்பத்துல என்ன ரகசியம் இருக்கு?”

“அப்போ இல்ல, ஆனா இப்போ என்னவோ இருக்கற மாதிரி இருக்கே!”

பெருமூச்சொன்றை விட்டவள்,

“அம்மாவும், கணேவும் பெரிய மாமா வீட்டுக்குப் போயிட்டாங்க!” என்றாள்.

“என்னாது?”

“ஆமா! அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ பாட்டிக்கு ரொம்ப முடியாம போயிருச்சு! எத்தனைப் புள்ளைங்க கூட இருந்தாலும், விட்டுட்டுப் போனவங்க மேல தானே மனசு அடிச்சுக்கும். பாட்டிக்கும் ரொம்ப நாளா அம்மாவப் பார்க்கனும், அவங்க கூட இருக்கனும்னு ஆசை. என் தாய் மாமன் விடல. இப்போ பாட்டியோட கடைசி ஆசை அதுன்னு தெரியவும் அம்மாவ வந்து ஹாஸ்பிட்டல்ல பார்த்தாங்க! ரதியப் பத்தி தெரியாதா! அண்ணாவ பாத்ததும் கண்ணீர் விட்டு கதற, அவரும் கண் கலங்கன்னு ஒரே சீனா போச்சு! இனி என் கூடத்தான் இருக்கனும் நீ! அம்மா கடைசி காலத்துலயாச்சும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னா இருக்கலாம்னு சொல்ல, இவங்களும் தலைய ஆட்டிட்டாங்க”

“ஹ்ம்ம்ம்! பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேர்துருச்சு! அப்புறம் என்ன கவலை? ஏன் ஊர விட்டுப் போகனும்?”

“இப்ப நான் எங்க தங்கிருக்கேன் தெரியுமா?”

“எங்க?”

“ஹோட்டல்ல!”

“வாட்?”

“பல்ல கடிச்சுக்கிட்டு அம்மாவுக்காக அந்த வீட்டுக்குப் போனேன்டா! அங்கிருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிக்கற மாதிரி தகிக்குது! என்னால முடியல” கண்கள் லேசாக கலங்க, தலையை மீண்டும் கீழே குனிந்துக் கொண்டாள் மிரு. குரலை செறுமியவள்,

“என் தாய் மாமன் இருக்காரே, என் முகத்தக் கூட நிமிர்ந்துப் பார்க்கறது இல்ல. அந்த அத்தையம்மா யாரும் பக்கத்துல இல்லாத டைம்ல நீக்ரோகாரிச்சி, பீடை, சனியன் அப்படின்னு முணுமுணுக்குது. பாட்டி கூட கணேவ கைப்பிடிச்சி தடவிக் குடுக்கறாங்க. என்னை கண்டுக்கவே இல்லைடா! ஒரு வாய் தண்ணீ இறங்கலடா எனக்கு. ஆனா அம்மாவையும் தம்பியையும் நல்லா வச்சிப் பார்க்கறாங்க! அது போதும்டா எனக்கு!”

“அம்மா எப்படி உன்னை ஹோட்டல்ல இருக்க விட்டாங்க?”

“அவங்களுக்குத் தெரியாது!”

“வாட்?”

“ஹ்ம்ம்! ஆபிஸ்ல பெர்மனேண்ட் ப்ராஜேக்ட் வோர்க்குக்காக கெடாக்கு போக சொல்லிருக்காங்கன்னு பொய் சொல்லி வச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாளுல அவங்களையும் அங்க கூட்டிக்கறேன்னு சொல்லிருக்கேன்! அவங்க நான் எத சொன்னாலும் நம்புவாங்க! கணே தான் ஒரு மாதிரி பார்த்தான். அவனையும் சமாளிச்சிட்டேன்!”

“ஏன் மிரு இப்படி? அம்மாகிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டியது தானே?”

“என்ன சொல்ல சொல்லுற? ஜாடை மாடையா என்னை பேசறாங்க, நான் சாப்பிட்ட தட்டையும் குவளையையும் பிரிச்சு தனியா வைக்கிறாங்க, அவங்க வீட்டு குட்டிப் பிள்ளைங்க என்னைப் பார்த்து சிரிச்சா அடிச்சுபுடறாங்கன்னு காம்ப்ளேய்ண்ட் பண்ண சொல்லுறியா? எனக்கு தெரிஞ்சு ரதி முகத்துல இப்போத்தான் சந்தோஷத்தப் பார்க்கறேன். அம்மா, அம்மான்னு அவங்க அம்மா ரூமே கதியா கிடக்காங்க! அந்த சந்தோஷத்த துடைச்சி எறிய சொல்லறியா? விடுடா! அவங்க சந்தோசத்துக்காக நான் கொஞ்ச நாள் தனிமைல இருந்துட்டுப் போறேன்! எப்படியும் கொஞ்சம் மாசத்துல கிழவி போய் சேர்ந்துரும். அப்போ போஉ அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துருவேன். அதுக்கு முன்னயே கூட ரதி, மிரு, மிரும்மா அம்மா உன் கூட வரேன்னு புலம்ப ஆரம்பிச்சிருவாங்க பாரேன்!”

“எல்லாருக்கும் பார்க்கறியே தவிர, உன்னை நினைச்சுப் பார்த்தியா? உன்னை மாதிரி ஒரு முட்டாள நான் பார்த்ததே இல்ல! போடோ(முட்டாள்)” என திட்டினான் காசிம்.

“இருந்துட்டுப் போறேன்”

“கிளம்பு! என் கூட வந்து இரு, கண்ட ஹோட்டல்ல எல்லாம் தங்க வேண்டாம்”

“இப்போ நீதாண்டா போடோ! உன் பொண்டாட்டி என்னை செருப்பால அடிச்சு துரத்தவா? என்னைப் பார்த்தாலே அடுத்தவ புருஷன அடிச்சிட்டுப் போக வந்தவ மாதிரிதான் பொண்ணுங்க பார்ப்பாங்க! எதுக்குடா வம்பு!”

“அவளுக்கு நம்ம ப்ரேண்ட்ஷிப் பத்தி தெரியும். ஒழுங்கா வா”

“இதுக்குத்தான் உன் கிட்ட சொல்ல தயங்கனேன்!. இன்னும் ஒரு மூனு வாரம்தான் இப்படி பட்ஜேட் ஹோட்டல்ல தங்குவேன்! அப்புறம் கெடாக்கு போயிருவேன்.”

எதற்காக அங்கே போகிறாள், யார் அங்கே வேலை வாங்கிக் கொடுத்தது, இந்த இடைப்பட்ட மூன்று வாரங்கள் கோலாலம்பூரில் என்ன செய்யப் போகிறாள் என அனைத்தையும் அவனிடம் மட்டும் அல்ல தன் குடும்பத்தினரிடமும் இருந்து மறைத்தாள் மிரு. வேலையை விட்டு விட்டதை மட்டும் காசிமிடம் பகிர்ந்துக் கொண்டவள், வேலைக் கொடுத்தவனிடம் மனதை விட்டதை மட்டும் மறைத்தாள்.

“எல்லாம் சொன்னியே, எதுக்கு இடம் மாற்றம்னு சொன்னியா மிரு?”

“மன மாற்றத்துக்கு இடம் மாற்றம் தேவைடா”

அவன் எவ்வளவு கெஞ்சியும் அவன் வீட்டுக்குப் போக மறுத்தவள், விடைப்பெற்றுக் கிளம்பினாள். நாள் ஒன்றுக்கு என்பது ரிங்கிட் வசூலிக்கும் அந்த பட்ஜேட் ஹோட்டலுக்கு வந்தாள் மிரு. தனது ரூமுக்குள் நுழைந்து கதவடைத்தவள், கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள். குட்டியான அறை பாத்ரூம் வசதியுடன். முகம் பார்க்க சின்ன கண்ணாடி, உட்கார ப்ளாஸ்டிக் நாற்காலி ஒன்று, சிங்கிள் பெட், வெள்ளை விரிப்பு, ஒரு தலையணை, சுவற்றில் என்ன படம் என்றே அறிய முடியாத ஒரு மாடர்ன் ஆர்ட். அவ்வளவுதான் இருந்தது அந்த அறையில். செண்ட்ரல் ஏர்கோன் வசதி அந்த ஹோட்டலில். டெப்ம்ரெச்சரை நம்மால் ஏற்றவோ இறக்கவோ முடியாது. இன்று பார்த்து குளிர் எலும்பைத் துளைத்தது மிருவுக்கு. மெல்லிய வெள்ளை கம்போர்டரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் மிரு. இருந்தும் குளிர் அடங்கவில்லை.

குருவின் சூடான அணைப்பு வேண்டும் போல மனம் ஏங்கியது. காய்ச்சல் அன்று அவன் அணைத்துப் படுத்திருந்ததை எண்ணிக் கொண்டாள் மிரு. மருந்தின் மயக்கத்தில் இருந்தாலும், அவன் அணைத்துப் பிடித்ததை அவளால் உணர முடிந்தது. அந்த அணைப்பில் சுகம் காணவில்லை அவள். ஒரு பாதுகாப்பைத்தான் உணர்ந்தாள். அந்த பாதுகாப்பு வாழ்க்கை முழுமைக்கும் வேண்டும் போல இருக்க, அசையாமல் அவன் கையணைப்பில் கிடந்தாள் மிரு. கொஞ்ச நேரத்திலேயே அவன் விலகி விட, ஏமாற்றமாகிப் போய் விட்டது அவளுக்கு. அதன் பிறகு அவன் பாடிய பாடல், அதில் இருந்த பாவம் இவளுக்கு அழகை வரும் போல இருந்தது. அவன் முன் அழுது வைத்து விடுவோமோ எனும் பயத்தில் தான் புரண்டுப் படுத்தாள். இவள் நினைத்தது போலவே, எகிறி குதித்து ஓடிவிட்டான் குரு. ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், இன்னொரு பக்கம் அவன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தோமே என தன் மேலேயே கோபமும் வந்தது.

குருவை சந்தித்ததில் இருந்து ஒவ்வொன்றையும் அசைப்போட்டப்படி படுத்திருந்தவள், அந்த பொல்லாத நாளையும் நினைத்துப் பார்த்தாள். அதே நேரம் குருவும் அந்த காட்சிகளை பல முறை ஓட விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று சமைத்து பேக் செய்து வைத்தவள், அவசரமாகக் குளிக்க செல்லலாம் என கிச்சனுள் இருந்து வெளி வந்த போது, வாசல் கதவு திறக்கக் கண்டாள். இன்றும் குருதான் வந்து விட்டானோ என எண்ணியவள், புன்னகையுடன் அவனை எதிர் கொள்ள நின்றிருந்தாள். உள்ளே வந்ததோ ஒரு பெண்ணுருவம். மிருவுக்கு முதலில் தோன்றிய கேள்வி,

‘எத்தனைப் பேருடா இந்த வீட்டு சாவிய கையில வச்சிருக்காங்க?’ என்பதுதான்.

உள்ளே வந்த உருவத்தை இவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. டீவி மாட்டி இருந்த சுவற்றின் கீழ் இருந்த நீள் மேசையில் பலவித கலைப் பொருட்களை வைத்திருந்த குரு, அழகான ஒரு போட்டோ ப்ரேமையும் வைத்திருந்தான். அதில் அவன் அம்மாவைப் பின்னிருந்து அணைத்தப் படி கன்னத்தில் முத்தமிடும் படம் இருந்தது. அவன் அம்மா அதில் சிரித்த முகத்துடன், கண்கள் மின்ன இருந்தார். அந்த மின்னிய கண்கள் இப்பொழுது இவளை மேலிருந்து கீழ் வர எடைப் போட்டப்படி இருந்தன.

“வாங்கம்மா! பாஸ் ஆபிசுக்குப் போயிருக்காரு”

பதில் ஏதும் பேசாத ஆனந்தி, மெல்ல நடந்து வந்து ஹால் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். கலவரத்துடன் அவரைப் பார்த்தாள் மிரு. பட்டுத் துணியில் தைத்திருந்த நீல நிற சுடிதார் அணிந்திருந்தார் ஆனந்தி. அது அவருக்குப் பொருத்தமாகவும், பாந்தமாகவும் இருந்தது. கருப்பு நிறத்தில், வெள்ளை கற்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த குட்டிக் கைப்பையை மேசை மேல் வைத்தவர்,

“நான் என் மகன பார்க்க வரல” என அவளை நேராகப் பார்த்து சொன்னார்.

“ஓஹோ!”

தனது லேசர் விழிகளால் மிருவை அங்குலம் அங்குலமாக அளவிட்டார் ஆனந்தி. அவர் பார்வையில் தைரியமான மிருவே நெளிய ஆரம்பித்தாள்.

“இருங்கம்மா குடிக்க தண்ணி எடுத்துட்டு வரேன்” என கிச்சனுக்கு நழுவி ஓடினாள் மிரு. கிளாசில் ஆப்பிள் ஜீஸ் ஊற்றி, ஹாலுக்கு எடுத்து வந்தாள் அவள். அங்கே ஆனந்தியோ அவரும் குருவும் சிரித்தப்படி எடுத்திருந்த போட்டோவில் பார்வையை நிலைக்க விட்டப்படி அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் மெல்லிய புன்னகை. மிரு வந்த அரவம் கேட்டு நிமிர்ந்த அவர் முகம், மீண்டும் கடினத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

அவர் முன்னே இருந்த டேபிளில் பானத்தை வைத்தவள்,

“குடிங்கம்மா!” என மரியாதையாக சொன்னாள்.

கிளாசையும் மிருவையும் மாறி மாறிப் பார்த்தவர்,

“நீ கைப்பிடிச்சு எடுத்து வந்த இந்த கிளாசைத் தொடவே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அப்படி இருக்க, என் மகன நீ தொட்டு எனக்கு ஒரு பேரப்பிள்ளையக் கொடுக்கனும்னு நினைக்கறத என்னால எப்படி சகிச்சுக்க முடியும்?” என ஆசிட்டை அள்ளி ஊற்றினார் வார்த்தைகளில்.

இவ்வளவு நேரம் மரியாதையாக நின்றிருந்த மிரு இந்த வார்த்தைகளில் கொதித்துப் போனாள். முன்னே நடந்து வந்து ஆனந்தியின் எதிர் சோபாவில் அமர்ந்தவள், கிளாசில் இருந்த ஜீசை தானே எடுத்து மடமடவென அருந்தினாள்.

“ஒரு பேரப்பிள்ளைன்னு ஏன் கஞ்சத்தனமா பேசறீங்க அத்தை! உங்க மகன் என் மேல வச்சிருக்கற ஆசைக்குப் பல பேரப்பிள்ளைங்க வரிசையா வருவாங்க உங்களுக்கு!” என எகத்தாளமாகப் பேசினாள் மிரு.

“ஹேய்! யாருடி உனக்கு அத்தை?”

“என்னைக் கட்டிக்கோ கட்டிக்கோன்னு உங்க மகன் என் பின்னாலயே சுத்தறப்போ, அவரோட அம்மாவான நீங்க எனக்கு அத்தை முறையாத்தானே ஆகனும்?”

“சீச்சீ! கண்ட ஜாதி பூக்கான்லாம் என்னை அத்தைன்னு கூப்படறத கேட்கவே கேவலமா இருக்கு”

இங்கே இனம் விட்டு இனம் திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகளை ஜாதி பூக்கான் என அழைப்பார்கள். அவர்களின் கலவையான நிறம், எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என பிரித்தறிய முடியாத தோற்றம் இவற்றைக் கொண்டே இந்த மாதிரி அழைப்பார்கள். அது கொஞ்சம் மரியாதைக் குறைவான வார்த்தையாகும்.

அந்த வார்த்தையில் சட்டென ஒரு துளி கண்ணீர் மிருவின் கண்களில் இருந்து வழிந்தது. பிறந்ததில் இருந்து பலரால் இந்த வார்த்தைக் கொண்டு அழைக்கப்பட்டிருக்கிறாள். கேலி, கிண்டல் செய்யப்பட்டிருக்கிறாள். கேட்டு மரத்துப் போய்விட்டது என நினைத்த வார்த்தை தன் மனம் கவர்ந்தவன் தாய் வாய் வழி வர மனமுடைந்துப் போனாள் மிரு. தன்னை குத்திக் கிழிக்க வந்திருக்கும் அவர் முன் பலவீனத்தைக் காட்டக் கூடாது என நினைத்தவள், மீண்டும் திமிருடன் நிமிர்ந்தாள்.

“கேவலமா இருக்கோ? உங்க அருமை மகனுக்கும் இந்த ஜாதி பூக்கானுக்கும் பிறக்கப் போற உங்க பேரப் பிள்ளைங்களும் ஜாதி பூக்கானுங்க தான். பாருங்க அத்தை, நாம எல்லாம் சேர்ந்து குடும்ப போட்டோ எடுக்கறப்போ நாங்க மட்டும் தனிச்சுத் தெரிவோம்! சத்தியமா போட்டோ அழகா இருக்கும் அத்தை. என்னை நம்புங்க!”

மிரு காட்டிய பிம்பத்தில் ஏகத்துக்கும் கடுப்பானார் ஆனந்தி. நல்லபடி பேசி இவளை குருவின் வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்தலாம் என வந்தவரை தான் மிருவின் தோற்றமும், அவளின் நடை உடையும் கோபப்படுத்தி இருந்தது. தன் மகனின் டேஸ்ட் ஏன் இப்படி தரமிறங்கி போக வேண்டும் என உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.

எப்பொழுதும் குருவைப் பற்றி அறிந்துக் கொள்ள ஹரியைத் தான் அனுப்பி வைப்பார். அண்ணன் தம்பிக்குள் இருக்கும் அந்நியோன்யம் சிலதை தன்னிடம் மறைக்க வைக்கும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார் ஆனந்தி. எதற்கும் இருக்கட்டும் என குருவைப் பார்க்க வரும் போது, பில்டிங் ரிசப்ஷனில் இருக்கும் பையனிடம் நன்றாகப் பேசி பழகி இருந்தார். அன்பளிப்பு போல வரும் போதெல்லாம் பணமும் கொடுப்பார் ஆனந்தி. அந்த விசுவாசித்தான் மிருவும், கணேவும் குருவின் வீட்டில் இருப்பதை போன் வழி போட்டுக் கொடுத்திருந்தான்.

வீட்டிற்கு எந்த பெண்ணையும் அழைத்து வந்திராதவன், இப்பொழுது ஒரு பெண்ணையும் பையனையும் கூடவே வைத்திருப்பது ஆனந்திக்கு உறுத்தியது. அதை என்ன, ஏது என கண்டுக் கொள்ளத்தான், தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்லாமல் அன்று ஹரியை அனுப்பி வைத்தார். அவன் திரும்பி வந்து ஒன்றும் சொல்லாமல் இருந்ததில் இவருக்கு விஷயம் சீரியஸ் என புரிந்துப் போனது. அதனால் தான் அவரே களத்தில் இறங்கி விட்டார். ஸ்பையிடம் அந்தப் பெண் வீட்டில் இருக்கும் டைம் எல்லாம் கேட்டுக் கொண்டவர், மகனைக் காப்பாற்ற வந்துவிட்டார்.

“எந்தக் காலத்துலயும் என் குருப்பா என்னை மீறி உன்னைக் கட்டிக்க மாட்டான்டி”

வார்த்தைகளால் தன்னைக் குத்திக் கிழிக்கும் ஆனந்தியை அப்படியே விட்டுவிட மிரு என்ன பைத்தியக்காரியா? அவரது திமிர் பேச்சுக்கு கொஞ்சமாகவாச்சும் திருப்பிக் கொடுக்காவிட்டால், இத்தனை நாள் ரதி உப்புக் காரம் போட்டு சமைத்துக் கொடுத்ததுக்கு என்ன அர்த்தம்!

“ஆயிரம் பேர நீங்க கொண்டு வந்து நிறுத்தினாலும், உங்க குருப்பா என்னை மட்டும்தான் கட்டிப்பான்” சோபாவில் சப்பளங்காலிட்டு கையைக் கட்டிக் கொண்டு ஆனந்தியின் கண்களை நேராகப் பார்த்து சொன்னாள் மிரு.

ஆத்திரம் மிக,

“அவ்ளோ திமிரா உனக்கு! தரம், தராதாரம், அந்தஸ்த்து எல்லாத்தையும் மீறி உன்னை மாதிரி ஒருத்திய வீட்டுல வச்சிருக்கான்னா என்ன அர்த்தம்? நீ எதையோ காட்டி மயக்கி வச்சிருக்கன்னு தானே!” அவள் கைக்கட்டி அமர்ந்திருக்க, முன்னே துருத்தி நின்ற மிருவின் தாராள நெஞ்சத்தைப் பார்த்தவாறே அருவருப்புடன் சொன்னார் ஆனந்தி.

சட்டென கட்டி இருந்த கைகளை விடுவித்தவளுக்கு, விம்மல் வெடித்து வந்தது. உதட்டைக் கடித்து வாயை இருக மூடிக் கொண்டாள் மிரு. வழிய பார்த்த கண்ணீரை கஸ்டப்பட்டு அடக்கினாள். கோபத்திலும் அவமானத்திலும் சிவந்த முகத்தையும், நடுங்கிய உடலையும் கட்டுக்குள் கொண்டு வர போராடினாள் மிரு.

பவுஸ் பட்டனைத் தட்டிய குரு, டீவியின் அருகே போய் அமர்ந்தான். உடலைக் குறுக்கி கால்களை மேலே ஏற்றி தன் இரு கரங்களால் அவற்றை தழுவியபடி தன் நெஞ்சத்தை மறைத்துக் கொண்டவளை மனம் உருக பார்த்திருந்தான் குரு. தன் மிருதுவை அந்தக் கோலத்தில் அவனால் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. நடுங்கிய உதடுகளை பற்களால் கடித்தப்படி அமர்ந்திருந்த அவள் பிம்பத்தைத் தடவிக் கொடுத்தான் குரு. சொல்லொண்ணா துயரத்தை தாங்கி நிற்கும் அவள் கண்களையும் தடவினான். இருகிப் போய் கிடந்த கன்னத்து சதையையும் தடவிக் கொடுத்தவனின் மனம் படாத பாடு பட்டது.

“சாரி மிரும்மா! சாரிம்மா! என்னை மன்னிச்சிரு” அவன் கண்கள் சிவந்துப் போய் கிடக்க, விரல்கள் திரையை வருடியபடி இருக்க வாய் விடாமல் முணுமுணுத்தப்படியே இருந்தது.

அப்படி அவன் அமர்ந்திருந்தது சொற்ப நிமிடங்கள் தான். பின் உறுதியுடன் எழுந்து நின்றவன், உடனே போனை எடுத்து பேராவுக்கு மறுநாள் செல்வது போல ப்ளைட் புக் செய்தான். இத்தனை நாள் மிருவின் நிராகரிப்பிலும், அவள் விட்டுப் போனதால் கோபத்திலும் இருந்தவன் அவளை தொடர்பு கொள்ள முயன்றான். போன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. மிருவின் வீட்டிற்கே செல்வது என கிரேப் புக் செய்ய முயல, அந்நேரத்தில் எந்த காரும் கிடைக்கவில்லை. மூச்சை இழுத்து விட்டவன், கார் சாவியை எடுத்துக் கொண்டு பார்க்கிங்குக்கு ஓடினான்.

அவன் கையில் கார் சீறி பாய்ந்தது. மிருவின் ப்ளாட் அருகே பார்க், செய்து விட்டு லிப்டுக்குக் கூட காத்திருக்காமல், மூன்று படிகளாய் தாவி ஏறினான். அங்கே மிருவின் வீட்டில் தொங்கிய பூட்டைப் பார்த்து விக்கித்துப் போய் நின்றான் குரு.

மிருவின் மேல் கோபம் இருந்தாலும், அவள் அம்மாவைப் பார்க்கப் போவது போல அவளைப் பார்க்கலாம் என மருத்துவமனைக்கு நேற்று மாலைதான் சென்றிருந்தான். சில நாட்களுக்கு முன்னரே அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டதாக அங்கே தகவல் கிடைக்கவும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி இருந்தான் குரு. இன்று வீடு பூட்டி இருக்க, எங்கே சென்றிருப்பார்கள் என குழம்பி நின்றான்.

அந்த நேரத்தில் தான் அவனுக்கு ஒரு போன் வந்தது. புதிய நம்பராக இருக்க, இவனுக்கு எடுக்கவே இஸ்டமில்லை. ஆனாலும் விடாமல் பல முறை அடிக்கவும், எடுத்து காதில் வைத்தான்.

“ஹலோ!”

“பாஸ், நான் கணே பேசறேன்”

பேசிய சில நிமிடங்களில் அவன் சொன்ன விஷயத்தைக் கேட்ட குருவுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.

“மிருது, எங்கடி இருக்க?”

(தவிப்பார்கள்)

ENE–EPI 37

அத்தியாயம் 37

தாமரையே தாமரையே

நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே

தினம் தினம் ஒரு சூரியன் போல

வருவேன் வருவேன்

அனுதினம் உன்னை ஆயிரம் கையால்

தொடுவேன் தொடுவேன்

போனை கட் செய்து விட்டு தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்தவன் மேல் பூவென வந்து விழுந்தாள் தானு. தன் மடியில் கிடந்தவளை பார்த்து ஆனந்த அதிர்ச்சியானது விபாவுக்கு. சிரிப்புடன் அவள் தலை முடியை கோதியவன், கண்களால் என்ன என்று கேட்டான்.

அவளது பார்வை அவன் முகத்தைத் தாண்டி பின்னால் சென்றது. சட்டேன எழுந்தவள், வேணு என கத்துவதற்கும் டேனி வந்து விபா மேல் விழுவதற்கும் சரியாக இருந்தது. வலியில் ஆவென கத்திய விபா,

“டேய் எருமை மாடே! ஓடி பிடிச்சு விளையாட என் மடி தான் கிடைச்சுதா உனக்கு?” என பொங்கிவிட்டான். மெதுவாக எழுந்த டேனி,

“டான்யா விழுந்தப்ப மட்டும் வலிக்கல. நான் விழுந்தா மட்டும் வலிக்குதா? இது நியாயமே இல்ல வேணு. நீ வா டான்யா, கிச்சனுக்குப் போவோம். பசிக்குது.” என நடந்தான்.

“நீ போ டேனி. நான் இப்ப வரேன்.” என அவனை அனுப்பி வைத்தவள், திரும்பி விபாவிடம்,

“நான் தான் வேணுன்னு கத்துனேன்ல, எழுந்திரிக்க வேண்டியது தானே? அவன் துரத்துறான்னு ஓடி வந்தப்ப, கார்பேட் தடுக்கி உன் மேல விழுந்துட்டேன். எங்கம்மா மடிக்கு இப்படி தான் நாங்க போட்டி போடுவோம். அவன் எங்க சின்ன வயசு விளையாட்டுன்னு நினைச்சுகிட்டு உன் மேல பாஞ்சிட்டான். ரொம்ப வலிக்குதா வேணு? “என கேட்டுக்கொண்டே அவன் காலை அமுக்கிக் கொடுத்தாள் தானு.

‘உங்க அம்மா மடிக்கு போட்டி போட்டீங்க சரி. என் மடிக்கும் போட்டின்னா நான் என்னடி பண்ணுறது. உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியலை?’

பிடித்து விட்டு கொண்டிருந்தவள், மெல்ல நிமிர்ந்து,

“வேணு! உனக்கு கோபம்னா டேனிய எருமைமாடுன்னு திட்டுவியா? என் முன்னுக்கு இப்படி திட்டுற வேலையெல்லாம் வச்சுக்காத. என்னால தாங்க முடியாது” என எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

‘திட்டனதுக்கே முகத்தைத் திருப்பிட்டு போறாளே. மத்ததெல்லாம் தெரிஞ்சா? சேச்சே அதெல்லாம் கண்டிப்பா தெரியாது. இவன் இங்க இருக்கற வரைக்கும் முடிஞ்ச அளவு பொறுமையா இருந்து பழகனும். ‘ என மனதை தேற்றி கொண்டே சாப்பிட எழுந்து சென்றான்.

சாப்பாட்டு மேசையில் இருவரும் அவனுக்காக காத்திருந்தனர். விபா அமர்ந்ததும் தானு எழுந்து அவர்கள் இருவருக்கும் பரிமாறினாள். பிறகு அவளும் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த தானுவை வேண்டுமென்றே வம்பிழுக்க டேனி வாயை திறந்தான்.

“வேணு, டான்யா வாழ்க்கையில நீதான் முத லவ்வுன்னு நினைச்சுகிட்டு மீசைய முறுக்காதே. ஏற்கனவே பல பேருக்கு அவ லெட்டர் குடுத்துருக்கா” என குண்டை தூக்கிப் போட்டு விபாவின் வயிற்றில் புளியை கரைத்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு புரையே ஏறிவிட்டது. தண்ணீரை குடித்து சமாளித்தவள்,

“வேணு! அவனை நம்பாதே. கதையையே மாத்தி சொல்லுறான். நான் யாருக்கும் லெட்டர் குடுக்கல”

“நீ குடுத்தா என்ன, அவனுங்க குடுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்” என்றான் டேனி.

“அதெப்படிடா ஒன்னா ஆகும்? இந்த மாதிரி கதைய மாத்தி என் மானத்த வாங்காதே டேனி.”

“ஸ்டன்டர்ட் ஓன்ல நடந்த வேணுகிட்ட சொல்லட்டா டான்யா?”

“டேனி!!! வாயை மூடுடா. அதெல்லாம் ஒன்னும் இல்ல வேணு. அவன் கிடக்கான்” என சொன்னாலும் முகமெல்லாம் சிவந்து போய் விட்டது தானுவுக்கு.

‘என்னமோ இருக்கு போல இருக்கே. இப்படி வெக்கப்படுறா. அவங்க ஊரு ஸ்டன்டர்ட் ஓன்னா, ஏழு வயசுலேயா?’ விபாவுக்குமே ஆர்வம் வந்துவிட்டது என்ன என அறிந்து கொள்ள.

“வேணுக்கு தெரிஞ்சா என்ன? உனக்கு இருந்த டிமான்ட் தெரிஞ்சாதான் உன்னைய இன்னும் நல்ல பாத்துக்குவான்.”

என்னமோ பண்ணு என்பது போல், சாப்பிடுவது போல தலையை கீழே குனிந்து கொண்டாள் தானு.

“சொல்லு டேனி. சஸ்பென்ச குடுத்துட்டு பேசாம இருக்க.” என டேனியை ஊக்கினான் விபா.

“எங்க கிளாஸ்ல ஒரு சேட்டு பையன் இருந்தான். கொழு கொழுன்னு அழகா இருப்பான். அவனுக்கு நம்ப டான்யா மேல ஒரு இது. பள்ளி முடிஞ்சு போறப்ப, இவ கையில ஒரு லெட்டர குடுத்தான்.”

‘டேய் சேட்டு, அல்பபேட்டே தெரியாதா வயசுல எப்படிடா லவ் லெட்டர் எழுதுன?’ விபாவுக்கு புன்னகை அரும்பியது.

“நாங்க ரெண்டு பேரும் தான் பிரிச்சுப் பார்த்தோம். கலர் பேப்பருல படம் வரைஞ்சி வச்சிருந்தான். ரெண்டு குச்சி மனுசங்க கைய புடிச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க கீழ ஒரு குட்டி குச்சு மனுசன். டான்யான்னு தெரியனுங்கறதுக்காக அவ படத்துக்கு முடிய நீளமா வரைஞ்சி வச்சிருந்தான்.. அவன் பேரு என்ன டான்யா?”

அவனை முறைத்தவள்,

“ஜஸ்வன்” என்றாள்.

“பாரு வேணு! பேரை இன்னும் மறக்காம இருக்கா. என்ன இருந்தாலும் பர்ஸ்ட் லவ்ல. எப்படி மறக்க முடியும் சொல்லு”

“டேய், முழு கதையையும் சொல்லி முடிடா. அதுக்குள்ள லவ்வு ஜவ்வுன்னு இழுத்துகிட்டு” என கடுப்பானாள் தானு.

“எங்களுக்கு புரியலை அவன் வரைஞ்சி வச்சது. மறு நாள் ஸ்கூலுக்கு போய் அவன்கிட்ட விளக்கம் கேட்டோம். அவன் சொன்னான், ரெண்டு குச்சு மனுசங்க வந்து டான்யாவும் அவனுமாம். குட்டியா உள்ளது இவங்க பேபியாம்.”

இப்பொழுது விபா வாய்விட்டே சிரிக்கத் தொடங்கி விட்டான்.

“அதெல்லாம் விடு வேணு, மேடம் அவன் கிட்ட என்ன கேட்டா தெரியுமா? பேபிக்கு என்ன பேரு வச்சிருக்கன்னு கேட்டா” சொல்லிவிட்டு டேனியும் சிரிக்க தொடங்கி விட்டான்.

“என்ன பேருன்னு சொன்னானா?” என விபா எடுத்து கொடுத்தான்.

“ஓ சொன்னானே, நாம ரெண்டு பெயரையும் சேர்த்து ஜன்யான்னு வச்சிருக்கேன்னு .விட்டா ஒரு அறை. பையனுக்கு ஒரு பக்க கன்னமே வீங்கி போச்சு. அடுத்து அவ சொன்ன பஞ்ச் டையலோக்க அவ கிட்டயே கேளு வேணு”

“என்ன தானும்மா சொன்ன?”

“நாம பெத்த பிள்ளைக்கு நல்லதா ஒரு பேரு வைக்க தெரியலை, உனக்கெல்லாம் லவ் ஒரு கேடான்னு கேட்டேன்”

“அப்போ நல்ல பேரு வச்சிருந்தான்னா, சரின்னு சொல்லி இருப்பியா?” என கேட்டான் விபா.

“யாருக்கு தெரியும். சொன்னாலும் சொல்லி இருப்பேன்” என சிரித்தாள்.

“இந்த விஷயம் பெரிய பிரச்சனையாகி, பேரண்ட்ஸ கூப்பிட்டாங்க ஸ்கூலுக்கு. பாட்டி தான் வந்தாங்க. வந்தவங்க அந்த சேட்டு பையனை கட்டிபுடிச்சுகிட்டு என் மருமக பேரன் நல்லா சோக்கா தான் இருக்கான்னு ஒரே கொஞ்சல். அவனோட பேரண்ட்ஸ் இந்த மாதிரி ரவுடி இருக்கிற ஸ்கூல்ல என் பையனை படிக்க வைக்க மாட்டோம்னு, வேற ஸ்கூல் மாத்திட்டாங்க. நீ சொல்லு வேணு, நான் ரவுடியா?” என கேட்டாள் தான்யா.

“சேச்சே, அப்படி சொல்லுறவங்களுக்கு அறிவே இல்லை தானும்மா. உன்னை மாதிரி ஒரு மென்மையான, பாசமான, பரிவான பொண்ணை எங்க தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாதுடா. என் செல்ல கண்ணுக்குட்டி நீ” என கொஞ்சினான்.

“ஹலோ மிஸ்டர் வேணு! நான் இன்னும் இந்த மேசையில தான் உட்கார்ந்து இருக்கேன். கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கிங்க”

‘கொஞ்சறோம்னு தெரியுது இல்ல. அப்படியே எஸ்கேப் ஆக வேண்டியது தானேடா. நந்தி, நந்தி’ என மனதிற்குள்ளாகவே டேனியை திட்டினான் விபா.

“வேணு, டேனி வெளியூருக்கு எங்கயாச்சும் போகலாமான்னு கேக்குறான்”

“எங்கயாச்சும் இல்ல, கோவாவுக்கு போகனும்னு கேக்குறேன்”

“கோவா வேண்டா. நீங்க ரெண்டு பேரும் நல்லா கண்ணு கழுவவா? நோ வே. நாம ஊட்டிக்கு தான் போறோம்”

“நீ இருக்கறப்ப நான் மத்த பொண்ணுங்கள பாப்பேன்னா தானு. பொசுக்குனு இப்படி சொல்லிட்டியே” என சோகமாகி விட்டான் விபா.

“நான் இருக்கறப்ப பார்க்க மாட்டேன்னா, நான் இல்லாதப்ப பார்ப்பியா?” என குறுக்கு விசாரணையை தொடங்கினாள் தான்யா.

“நல்லா கேளு டான்யா. நீ இருக்கிறப்ப மட்டும் தான் மத்த பொண்ணுங்கள பார்க்க மாட்டாராம்” என எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் டேனி.

“அந்த உலக அழகியே வந்து நின்னாலும், என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தானும்மா தெரிவ. இது சத்தியம்”

“எனக்கு என்னமோ இத கேட்டா நம்பற மாதிரி இல்ல டான்யா”

‘அடே வைட்டு. இன்னிக்கு இது போதும்டா. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன். ஏற்கனவே திட்டிட்டா, இப்ப கண்ணகி மாதிரி முறைக்கிறாளே’

“தாமுக்கு  நீ எப்படி வேணும்னாலும் இருந்துருக்கலாம் வேணு. அதைப் பத்தி நான் கேர் பண்ணிக்க மாட்டேன். ஆனா தாபிக்கு அப்புறம் மத்த பொண்ணுங்கள சைட்டடிச்சன்னு தெரிஞ்சது, கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன்”

“அது என்ன தாமு தாபி? மலாய் வோர்டா?” மண்டை காய்ந்தது விபாவுக்கு.

“தாமுன்னா தானுவுக்கு முன், தாபின்னா தானுவுக்கு பின். இந்த விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன் வேணு. பொண்ணுங்க உன்னை சைட் அடிச்சாலும் என் கிட்ட அடி உதை வாங்க போறது என்னமோ நீதான். யாரும் உன்னை சைட் அடிக்காத மாதிரி நீ நடந்துக்கனும். புரியுதா?”

சிரித்துக் கொண்டே சரி என்றான் விபா.

“இப்படி மிரட்டுறா, சிரிச்சுகிட்டே இருக்க. சுத்த வேஸ்டு வேணு நீ.” என துப்பினான் டேனி.

‘அடப்போடா! இந்த மாதிரி என்னை மிரட்டி உருட்ட ஒருத்தி வர மாட்டாளான்னு ஏங்கி போய் கிடக்கறவன்டா நானு. கோபத்துல என் செல்லம்  அடிச்சா கூட ஹேப்பியா வாங்கிக்குவேன்டா.’

“சரி நீ கதைய மாத்தாதே டேனி. ஊட்டிக்கு போலாம் ப்ளீஸ். நீயும் வேணுவும் ஒரு ரூம் எடுத்துக்குங்க. நான் ஒரு ரூம் எடுத்துக்கிறேன். ஜாலியா இருக்கும்” என்றாள் தானு.

‘கல்யாணமாகி உன் கூட ஹனிமூன் போக வேண்டிய இடத்துக்கு, இவன் கூட சேர்ந்து சனி மூன் போக சொல்லுறியே பேபி. ஹ்ம்ம் எல்லாம் என் நேரம்’ என மனதில் புலம்பிய விபா,

“சரி நான் அரேஞ் பண்ணுறேன். ஒரு டிரிப் போய்ட்டு வரலாம்.”

“ஐ! ஜாலி ஜாலி. தேங்கஸ் வேணு. டேனி நீ வரவும் தான் என்னை சென்னைய விட்டே வெளிய கூட்டிட்டு போறான். உனக்கும் தேங்க்ஸ்”

‘எப்படி கதைய திருப்புறா பாத்தியா. எங்கயாச்சும் வெள்ளி கிளம்பி போய்ட்டு சன்டே வந்துரலாம்னு எத்தனை தடவை கெஞ்சி இருக்கேன். ஒவ்வொரு தடவையும் அம்மாவ கேட்கனும் ஆட்டுகுட்டிய கேட்கனும்னு சாக்கு சொல்லிட்டு, நான் கூட்டி போகலைன்னு கோம்ப்ளேன் பண்ணுற. இதுக்கு இந்த வைட்டு ஏதாச்சும் சொல்லுவானே’ என நினைத்து முடிப்பதற்குள் டேனி வாயை திறந்திருந்தான்.

“இப்படி வெளியூர்லாம் கூட்டி போய் செலவு செய்யற அளவுக்கு நீ வொர்த் இல்லைன்னு நினைச்சுருப்பாரு”

‘அடேய்! ஆப்படிச்சுட்டானே’ டேனியை முறைக்க மட்டும் தான் முடிந்தது அவனால்.

“அப்படியெல்லாம் வேணு நினைக்கமாட்டான். நீ உன் நாரதர் வேலைய கொஞ்சம் நிப்பாட்டு” என டேனிக்கு ஒரு திட்டை கொடுத்தாள்.

“வேணு எங்களுக்கு எந்த ரூம்? நான் குளிக்கணும். கொஞ்சம் படிக்கிறது வேற இருக்கு. “

“நீ எந்த ரூம் வேணும்னாலும் எடுத்துக்க தானு. இவன் கீழ இருக்குற கெஸ்ட் ரூம் பயன் படுத்திக்கட்டும்.”

“எந்த ரூம்னாலும்னா, உன் ரூமை கேட்டா என்ன பண்ணுவ?”

“உனக்கு இல்லாததா? எடுத்துக்க தானு. நோ ப்ராப்ளம்”

“ஓவரா சீன் போடாம ஆபிஸ் வேலை ஏதாச்சும் இருந்தா போய் பாரு. நீ வாடா டேனி. உன் ரூம்ல எல்லாம் இருக்கான்னு பார்த்துட்டு நான் என் ரூமுக்கு போறேன்”

அவனுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தவள்,

“முதல்ல குளி. அப்புறம் போர் அடிச்சா மேல கேம் ரூம் இருக்கு. பிளே ஸ்டேஷன் லேட்டஸ்ட் மோடேல் வாங்கி வச்சிருக்கான் வேணு. போய் விளையாடு. வேற ஏதாச்சும் வேணும்னா என் கிட்ட கேளு. நான் செஞ்சு குடுக்குறேன். குட் நைட் டா”

“இந்த வீட்டை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க டான்யா.”

“நான் வாழ போற வீடு இல்லையா.” என சொல்லி புன்னகைத்தவள்.

“ஒரு செட் கீ கூட என் கிட்ட குடுத்து வச்சிருக்கான். எப்ப வேணும்னாலும் வரலாம்னு”

“நீ சந்தோஷமா இருக்கியா டான்யா?”

“யெஸ் டேனி. வேணு இஸ் மை வோர்ல்ட். அவன் கூட இருக்கறப்ப நான் தான் இந்த உலகத்துலேயே சந்தோஷமான ஆளுன்னு தோணுது.” மின்னிய அவள் முகத்தைப் பார்க்க டேனிக்கும் திருப்தியாக இருந்தது. அதற்குள் வேணு தான்யாவை அழைக்கும் சத்தம் கேட்டது.

“உன் கூட கொஞ்ச நேரம் பேச விடமாட்டான். அவனுக்கு உன் மேல லேசா பொறாமை டேனி. அவன் நம்மை சந்தேகமா பார்க்கல. ஆனா அவனை விட்டுட்டு மத்தவங்க கிட்ட நான் டைம் ஸ்பென்ட் பண்ணுறது ஐயாவுக்கு பிடிக்காது. எந்நேரமும் நான் அவன் கூடவே இருக்கணும்னு எதிர்ப்பாக்குறான். கொஞ்ச நாளுல நம்ம நட்ப புரிஞ்சுக்குவான். நான் புரிய வைப்பேன். கிவ் ஹிம் சம் டைம் டேனி. அவன் கடுப்புல ஏதாச்சும் சொல்லிட்டான்னா, கோவிச்சுக்காத. எனக்காக மன்னிச்சுரு ப்ளிஸ்”

“இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்மா டான்யா. உன் சந்தோசம் தான் என்னோடதும். உனக்காக நான் வேணுவை அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன்.”

அதற்குள் இன்னொரு முறை விபா அழைத்திருந்தான்.

“இவனை!!! அப்புறம் பேசலாம்டா” என வெளியே சென்றவள், பேசிக்கிட்டு இருக்கறப்ப கூப்பிடுவியா? கூப்பிடுவியா என அவனை மொத்துவதை கேட்டு சிரித்துக் கொண்டே கதவை சாத்தினான் டேனி.

எப்பொழுதும் போல் இரவில் பிரபு போன் செய்தான் விபாவுக்கு. இருவரும் அந்த நேரத்தில் தான் கடையின் வரவு செலவு மற்றும் சொந்த விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.

“மச்சி. எப்படி இருக்க?”

“இருக்கன்டா” என சலித்துக் கொண்டான் விபா.

“என்ன சுருதி குறையுது? டேனி ரொம்ப படுத்துறானா? இல்ல என் தங்கச்சி மொத்தி எடுக்கறாளா?”

“உன் தங்கச்சி மொத்துறது எல்லாம், எனக்கு பஞ்சால வருடி விட்ட மாதிரி தான்டா இருக்கும். இவன் தொல்லை தான் தாங்க முடியலைடா”

“நீ என்ன பண்ணு, நாளைக்கு சாப்பாட்டுல அவனுக்கு உறைப்பை அள்ளி போட்டிரு. நாக்கு போய் மேல ஒட்டிகிட்டு நாலு நாளைக்கு பேச மாட்டான்”

“அப்படி மட்டும் செஞ்சேன், உன் தங்கச்சி மிளகாய எடுத்து என் கண்ணுல தூவிருவா”

“தெரியுதுல. அப்ப பொறுத்து போடா. கொஞ்ச நாள் தானே”

“என் கதைய விடு. உன் ஜிமிக்கி கம்மல் எப்படி இருக்கா?”

“யாரு பானுஜாவை தானே கேக்குற? நானும் என்னன்னமோ பண்ணி பார்த்துட்டேன்டா. குரங்கு மாதிரி இன்னும் பல்டி தான் அடிக்கலை. யூ டியூப்ல போய் மலையாளம் கூட நாலு வார்த்தை கத்துகிட்டேன். வேலைக்கு வெள்ளையும் சொள்ளையுமா போறேன். ஹ்ம்ம் மசிய மாட்டிக்கிறாடா”

“ஏன் மச்சி, வெள்ளையும் சொள்ளையுமா போனியே, பல்லை விளக்கிட்டு போனியா?”

“டேய், இதானே வேணாங்கிறது. காதல் வந்த உடனே நாங்கள்லாம் நாலு தடவ குளிக்கிறோம், ஐந்து தடவ பல்லு விளக்குறோம், ஆறு தடவை தலை சீவுறோம். ஏழு தடவ சட்டை மாத்துறோம்”

“முடியலைடா. என்னை விட்டுரு.”

“அந்த பயம் இருக்கட்டும். நீ எப்படிடா என் தங்கச்சிய கவுத்த? கொஞ்சம் டிப்ஸ் குடேன்”

“ஒரு அண்ணன்காரன் பேசுற மாதிரியா பேசுற? இருந்தாலும் சொல்லுறேன். மனசுல உண்மையான அன்பு இருந்தா போதும்டா. மத்ததெல்லாம் தானா வரும்”

“அன்பு! அன்பு! அதை எந்த கடையில வாங்குவேன்? நம்ப கடையில கண்டிப்பா விக்கல. வேற கடைய தான் தேடனும்”

விபா அவனை திட்ட ஆரம்பிக்கும் முன் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சுவரை பார்த்தான், மணி பத்து என காட்டியது.

“கம் இன்” என குரல் கொடுத்தான்.

“போன் உள்ள எப்படிடா வரது?”

“உன்னை இல்லடா. கதவ யாரோ தட்டுறாங்க. யாரோ இல்ல உன் தங்கச்சி தான்”

“டேய், இந்த அர்த்த ராத்திரியில ஏன்டா உன் ரூமுக்கு வரா? விபா என்னை சீக்கிரமா மாமா ஆக்கிறாதடா”

“அடச்சீ, போனை வையுடா” என லைனை கட் பண்ணினான். கட்டிலில் இருந்து எழுந்தவன்,

“என்னடா? ஏதாச்சும் வேணுமா?” என கேட்டான்.

“உன் கிட்ட கொஞ்சம் பேசனும் வேணு” என உள்ளே நுழைந்தாள் தானு.

“வா தானும்மா. என்ன விஷயம்?”

“வேணு கட்டில் என்ன இவ்வளவு பெருசா இருக்கு. நாலு பேர் தூங்கலாம் போல. புதுசா?”

“புதுசு தான்.”

கட்டிலில் ஏறி நின்றாள் தானு.

“என்ன தானு? குதிச்சு விளையாட போறியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்படி ஏறி நின்னா தான் உன் கண்ண பார்த்து பேச முடியுது. உன்னை நிமிர்ந்து பாத்து பேச கழுத்து வலிக்குது வேணு”

சிரிப்பு வந்து விட்டது விபாவுக்கு. அவளை நெருங்கி நின்றவன்,

“இப்ப கண்ணைப் பார்த்து பேச முடியுதா?” என கேட்டான்.

“ஆமா, பார்க்க முடியுது. சரி, இப்ப எதுக்கு என் இடுப்ப புடிச்சுகிட்டு இருக்க?”

“கட்டில் மேல நிக்கறீயே, விழுந்துற கூடாதுன்னு தான் முட்டு குடுத்து இடுப்பை பிடிச்சிருக்கேன்.”

நம்பாத மாதிரி அவனைப் பார்த்தவள்,

“ இப்ப பேசலாமா? நீ ஏன் டேனிய முறைச்சு முறைச்சு பார்க்கிற?”

“நான் எப்ப அப்படி பார்த்தேன்? இல்லை தானும்மா”

“பொய் சொல்லாத. நான் உன்னை கவனிச்சுகிட்டு தான் இருந்தேன். இங்க பாரு வேணு” என அவன் தாடையை தொட்டு நிமிர்த்தியவள்,

“அவன் எனக்கு பெஸ்ட் பிரண்ட். ஆனா நீ எனக்கு பிரண்ட், லவ்வர், டாவு, பிரேமா, பிரேமம், ச்சிந்தா(மலாய்), ஓஹாய்னி(மேன்டரின்), சராங்(கொரியன்) எல்லாமே” என கூறி மூக்கின் நுனியில் முத்தமிட்டாள்.

“அவனை பார்த்து நீ பொறாமை பட ஒன்னுமே இல்லை. புரியுதா? அவன் எனக்கு ஒரு மூக்கோட ஓட்டைன்னா நீ வந்து இன்னொன்னு”

“ஏன்டி, உனக்கு உவமை சொல்ல வேற ஒன்னுமே கிடைக்கலியா?” என முகத்தை சுளித்தான் விபா.

“ஏன், இந்த உவமைக்கு என்ன குறைச்சல்?மூக்குல ஓட்டை இல்லாட்டி மூச்சு விட முடியாது தெரியுமா? அப்புறம் ஏன் இந்த கவிஞர்கள் எல்லாம் அதை பத்தி ஒன்னும் பாடலைன்னு எனக்கு ஒரு பெரிய ஆதங்கமே இருக்கு.”

தானுவை இருக அணைத்துக் கொண்டு வாய் விட்டு சிரித்தான் விபா. இவ்வளவு நேரம் டேனியால் வந்த டென்ஷன் எல்லாம் காற்றோடு கரைந்தது போல் இருந்தது அவனுக்கு.

“சாபம் நிறைந்த என் வாழ்க்கைக்கு கிடைச்ச அழகிய வரம் நீ தானும்மா. நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பார்க்க முடியலம்மா. ஐ லவ் யூ சோ மச் தானு.” அவன் அணைப்பு இன்னும் இருகியது.

அவனது தோளில் முகம் சாய்த்து கொண்டவள்,

“வேணு” என மென்மையாக அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“விடுடா”

“முடியாது”

“வேணு, சொன்னா கேளு.”

“ஒன்னும் பண்ண மாட்டேன்டி. கொஞ்ச நேரம் இப்படியே இரு ப்ளீஸ்”

“எனக்கு தூக்கம் வருது வேணு.”

“அப்படியே என் மேல சாஞ்சிகிட்டே தூங்கு. நான் தூக்கிட்டு போய் படுக்க வைக்கிறேன்”

“நான் என்ன சின்ன குழந்தையா?”

“எனக்கு நீ சின்ன குழந்தைதான். என்னோட பேபி”

முகம் பூவாய் மலர்ந்தது அவளுக்கு.

“இந்த சிட்டுவேஷனுக்கு ஏத்த மாதிரி ஒரு பாட்டு பாடு வேணு”

“நான் பாடுனா உனக்கு பிடிக்குதா தானும்மா?”

“ரொம்ப பிடிக்கும். உனக்கு செக்சியான வொய்ஸ் தெரியுமா?”

“ஆமாவா? சரி செய்யுற வேலைய விட்டுட்டு பாட்டு பாட போயிறவா?”

“விளக்கமாறு பிஞ்சிரும். இந்த செக்சி வோய்ஸ நான் மட்டும் தான் கேட்டு ரசிக்கனும்.”

மெல்ல நகைத்தவன், அவளை அணைத்த நிலையிலே பாடினான்.

“தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்”

விபாவின் குரலில் தெரிந்த உருக்கத்தில் தானுவுக்கு கண்களில் மடை திறந்தது. தோள் நனையும் உணர்ச்சியில் தானுவின் முகத்தை நிமிர்த்தினான் விபா.

“அழாதே தானு” என சொன்னவன் குரலிலும் கரகரப்பு. அவளை தூக்கி கொண்டவன், மெல்ல நடந்து பக்கத்து ரூமுக்கு சென்றான். கட்டிலில் படுக்க வைத்து,

“ஒன்னும் நினைக்காம நிம்மதியா தூங்கனும். குட் நைட் தானும்மா” என சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றான்.

“ஐ லவ் யூ டூ வேணு” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள் தானு.

 

ENE–EPI 36

அத்தியாயம் 36

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

ஓ வெண்ணிலா இரு வானிலா நீ!!!!

டியர் டேனி,

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை. ஆனா முதன் முதலா உன் கிட்ட தான் இதை பகிர்ந்துக்கனும்னு தோணுது. சம்பந்தப்பட்ட ஆளுகிட்ட கூட நான் இதையெல்லாம் இன்னும் சொல்லலை.

எங்கிருந்து ஆரம்பிக்கட்டும்?

ஐம் இன் லவ். யெஸ்! காதல் என்னை பாடா படுத்துது. இன்னேரம் நீ கெஸ் பண்ணிருப்ப யாருன்னு. ஆமா, அவனே தான், நம்ம வேணு. நான் அவனை லவ் பண்ணுறேன். சாதாரண லவ் இல்லை. மரண மாஸ் லவ். சொல்லுறப்பவே எனக்கு சிரிப்பு வருது.

என்னை மன்னிச்சிரு டேனி. நம்ப நட்புல ஒளிவு மறைவு இல்லைன்னு நீ நினைக்கலாம். ஆனா காதல் வந்தவுடனே என் மனசுல கள்ளமும் வந்துருச்சு. சில விஷயங்களை உன்கிட்ட இருந்து மறைச்சிட்டேன். மறைச்சிட்டு நான் பட்ட பாடு, என்னால முடியலைடா. மூச்சு முட்டுது.  அதான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

எப்ப எனக்குள்ள லவ் ஸ்டார்ட் ஆச்சுன்னு எனக்கு சரியா சொல்ல தெரியலைடா. முதன் முதலா மேக்டோனல்ட்ல அவனை பார்த்தப்பவா? இருக்கலாம். அப்ப அவன் பேசுன பேச்சு எனக்கு கடுப்பை கிளப்பினாலும், அவன் அந்த குட்டிய பார்த்துகிட்ட அழகுல நான் மயங்கினது உண்மை. அவனை பார்ர்கிறப்பவே தெரிஞ்சது செம்ம பிளேபாய்ன்னு. அப்படி இருந்தும் எப்படி எனக்குள்ள இந்த சலனம்? உனக்கு தான் என்னைப் பத்தி நல்லா தெரியுமே. நீ சொல்லு பார்க்கலாம். முடியலையா? எனக்கே புரியாதப்ப உனக்கு எப்படி தெரியும். மேபி இதை படிச்சு முடிக்கிறப்ப உனக்கு புரிஞ்சாலும் புரியலாம்.

எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அப்பா தான் ஹீரோன்னு சொல்லுவாங்க. எனக்கும் அப்படிதான் இருந்தது அவரு என்னை தூக்கி வீசிட்டு போகிற வரைக்கும். ஆனா வேணுவ பார்க்கிறப்ப, அவனுக்குள்ள என் அப்பாவ பார்க்கிற மாதிரியே ஒரு பீல். என்ன இது அபத்தம்னு கேக்கிறியா? முக்கால் வாசி பொண்ணுங்க அவங்க புருஷன் கிட்ட தன் அப்பாவோட சாயல் இருக்கான்னு தேடுவாங்க. எதனால? தன் அப்பா மாதிரியே புருஷனும் நம்மள தாங்கோ தாங்குன்னு தாங்குவான் என்கிற நப்பாசைதான். அப்படி கிடைக்க பெற்றவங்க தான் இந்த பூமியிலே அதிர்ஷ்டசாலின்னு நான் சொல்லுவேன். என் முதல் ஐந்து வயசு வரைக்கும் என்னை கண்ணின் மணியா பார்த்த என் அப்பாவை அவனுகுள்ள மறுபடியும் பார்த்தேன்.

என் அப்பா என் கிட்ட இருந்து பறிச்சுட்டு போன பாசத்தையும், பரிவையையும் வேணு எனக்கு திரும்ப குடுக்கிற மாதிரி எனக்குள்ள ஒரு பீல். அவன் என்னை பார்க்கிற பார்வையிலே, பேசுற பேச்சுல எல்லாத்திலயும் யூ ஆர் மைன்கிற உரிமை அப்பட்டமா இருக்கு. சொல்லவே கூச்சமா இருக்கு. ஆனா அவன் உரிமை உணர்வுக்கு நான் அடிமையாகிட்டேன்.

மத்தவங்க கிட்ட காட்டாத என்னோட ஒரு பக்கத்தை நான் என்னை அறியாமலே அவன் கிட்ட காட்ட ஆரம்பிச்சுட்டேன் டேனி. அடம் பிடிக்கிறது, தொட்டு பேசறது, செல்லம் கொஞ்சுறது, அடிச்சு புடிச்சு விளையாடுறது, பேசி பேசி கொல்லுறது, தூங்கிறவன எழுப்பி போன்ல கிஸ் பண்ணிட்டு சுவிட்ச் ஆப் பண்ணுறது, திட்டறது, கோபப்படறதுன்னு சொல்லிகிட்டே போகலாம். எனக்குள்ள இப்படி ஒரு பக்கம் இருக்குன்னு எனக்கே தெரியாது டேனி. அவன பார்க்கிறப்போ நான் நானா இல்லை. நான் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன், என்னோட உணர்வுகளை அவன் கிட்ட மறைக்க. சில சமயம் ஜெயிச்சுட்டாலும், பல சமயம் பாவமா தோத்து போயிருறேன்.

இவ்வளவு பாசம் வைக்கிறோமே, மறுபடியும் ஹிஸ்டரி ரிப்பிட் ஆனா என்ன செய்யுறதுன்னு ரொம்ப பயந்தேன். அவனை எட்டி நிக்க சொன்னதே அதனால தான். அவன் முடியாதுன்னு சொன்னப்ப தான் உன்னை கூட்டிட்டு போய் மிரட்டுனேன். எதுக்கும் அவன் அசைஞ்சு குடுக்கலியே.

இன்னொரு ஏமாற்றத்தை என்னால தாங்க முடியுமா டேனி? கண்டிப்பா முடியாது. அதனால தான் நேசத்தை மறைச்சு அவனை ஒதுக்கி ஒதுக்கி வச்சேன். நான் போட்ட வேலியை எல்லாம் கொஞ்ச கொஞ்சமா உடைச்சுகிட்டு என் மனசுக்குள்ள வர ஆரம்பிச்சுட்டான்.

பினாங்குல தான் என்னோட முதல் வேலி தகர்ந்தது. என்னோட பேர்த்டேக்கு அவன் குடுத்த சர்ப்ரைஸ் என்னை வானத்துலயே பறக்க வச்சது. ஆரம்பத்துல அவன் செஞ்சது தான் இந்த ஏற்பாடுன்னு தெரியாம, ரொம்ப ஜாலியா அந்த நிமிடங்களை அனுபவிச்சேன். எது தெரியுதோ இல்லையோ, வேணுவுக்கு ஒரு பொண்ணை எப்படி மடக்குறதுன்னு நல்லா தெரியுது. ஹாஹாஹா. கேக் வந்தப்போ உங்ககிட்ட எல்லாம் நான் கோவிச்சுக்கிடேனே, அதை ஏற்பாடு செஞ்சதே அவன் தான் டேனி. எனக்கு ஒரு ஆபத்துன்னு தெரிஞ்ச உடனே அதிரடியா ஆக்சன்ல இறங்கி என்னை காப்பாத்தி இருக்கான். அவன் மட்டும் அங்க இல்லைன்னா, என் நிலமை?

எனக்கு அங்க என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியலை. நான் எவ்வளவு கெஞ்சியும் அந்த விஷயத்தை அவன் வாயில இருந்து வாங்க முடியலை. கஸ்டபட்டு தான் வாய திறக்க வச்சேன்.

அதை சொன்னப்போ அவன் கண்ணுல தெரிஞ்ச வலி, குரல்ல இருந்த நடுக்கம் எதுவும் பொய் இல்லைடா. நான் மயக்கத்துல இருக்கறப்போ அவன் பாடின அந்த பாட்டு, அதுல இருந்த குழைவு, சோகம், காதல் என்னை தாக்கினுச்சுன்னு சொன்னா நம்புவியா? நம்பு டேனி. இது சத்தியமான உண்மை.

என்ன புதுசா ஒரு கதை சொல்லுறான்னு நினைக்கறீயா? உன் கிட்ட மறைச்ச விஷயங்களில இந்த பினாங்கு டிரிப்ல நடந்ததும் ஒன்னு. இதுல எழிதினேன்னா, 50 பக்கம் வேணும். கோல் பண்ணுறப்ப விளக்கமா சொல்லுறேன் டேனி.

இப்படி பிளேபாயா சுத்திகிட்டு இருந்தவன் என் கிட்ட என்னத்தை கண்டான்னு எனக்கு தெரியலை. என் கிட்ட என்ன எதிர்பார்க்கிற? உன் கூட சுத்துற அந்த பொண்ணுங்க மாதிரி நினைக்கிறீயான்னு கூட கேட்டேன். அப்ப அவன் முகத்த நீ பார்த்திருக்கனும். அப்படியே ஜிவு ஜிவுன்னு சிவந்து போய், ரௌத்திரமா நின்னான். நானே பயந்துட்டேன், அடிச்சுருவானோன்னு. ஆனா அவன் கூட பழகன இத்தனை நாளுல, என் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு விரல கூட தூக்க மாட்டான், என்னை காயப்படுத்தன்னு நல்லா புரிஞ்சுகிட்டேன். அவன் எனக்கு அடிமை. மை ஓவ்ன் அடிமை. ஹிஹிஹி. காமெடியா இல்லை. அதுல எனக்கு ஒரு பெருமையும் கூட.

உன்னை மாதிரியே பார்த்து பார்த்து எனக்கு எல்லாமே செய்வான் டேனி. எனக்கு உடம்பு முடியலைனா துடிச்சு போயிருவான். ஒரு தாயாய் என்னை தாங்குவான். பசின்னு சொன்னா பதறி போயிருவான். இப்படி ஒருத்தன் திகட்ட திகட்ட அன்பை எனக்கு குடுக்கணும்னு தான் கடவுள் சின்ன வயசுல என்னை சோதிச்சாறோ?

அவனைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சும் தெரியாத மாதிரி புரியாத மாதிரி நடந்துகிட்டேன். அவன் கிட்ட சாயற என் மனசை நானே எதிர்க்க ஆரம்பிச்சேன். சோலையூர்ல நடந்த இன்சிடென்கு அப்புறம், என்னோட பயம், கலக்கம், சந்தேகம் எல்லாத்தையும் தூக்கி கடாசிட்டு அவனை என் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார வெச்சிட்டேன்.

தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, எனக்கு ஒன்னும் ஆக கூடாதுன்னு பதறி வந்தான் பாரு, அங்க நான் தோத்து போய்ட்டேன் டேனி. நான் தோத்து எங்க காதல ஜெயிக்க வச்சிட்டேன். என்னடா இவ இப்படி பினாத்திகிட்டு இருக்கான்னு நினைக்கறீயா? எல்லாம் காதல் படுத்தும் பாடு. ஒரு நாள் நீயும் காதல்ல விழுவ, அப்ப தெரியும் என் பீலீங்.

இன்னும் நான் அவன் கிட்ட வாய திறந்து ஐ லவ் யூன்னு சொல்லலை டேனி. பயமா இருக்கு. அதான் லவ்வ சொல்லிட்டாளே, இதுக்கு மேல என்ன இருக்குன்னு என்னை அலட்சிய படுத்திட்டான்னா, என்னால தாங்க முடியாது டேனி. ஒவ்வொரு தடவையும் என் முகத்தை எதிர்ப்பார்ப்போட அவன் பார்க்கும் போது, எனக்கு நெஞ்சில ரத்தமே வருது. ஆனா வாய் திறக்க முடியலைடா. ஐ லவ் யூ வேணுன்னு கத்தி சொல்லனும்னு என் ஒவ்வொரு செல்லும் துடிக்குது. ஆனா முடியலைடா.

எதுக்கு இவ்வளவு பெரிய ஈமெயில் உனக்கு அனுப்புறேனு நினைக்கிறியா? உன் கிட்ட என் சந்தோஷத்தை பகிர்ந்துக்கனும்னு தோணுச்சுடா. அதுக்குதான். நீ தானே என் நண்பன், என் ஆசான், என் நலம் விரும்பி, என்னோட முதுகெலும்பு எல்லாமே. எங்க இருந்தாலும், யார் கூட வாழ்ந்தாலும், எத்தனை பெத்துகிட்டாலும் நீதான் எனக்கு முதல்ல. அப்புறம்தான் மத்தவங்க எல்லாம். இதை நீ என்னிக்கும் மறக்க கூடாது டேனி. என் மேல உனக்கு என்ன கோபம்னு தெரியலை. என்னை விட்டு விலகி போயிட்ட. ஆனா என் ஆசி, என் பிரார்த்தனை என்னிக்குமே உனக்காகவே இருக்கும். டோன்ட் போர்கேட் தட். ஐ மிஸ் யூ சோ மச். நான் தெரியாம என்ன செஞ்சிருந்தாலும் என்னை மன்னிசுரு டேனி. என்னை ஒதுக்கிறாதே.

இப்போதைக்கு இந்த ரம்பம் போதும்னு நினைக்கிறேன். பாய்டா. உடம்பை பார்த்துக்க.

என்றும் அன்புடன்,

உன் டான்யா.

பிளேனில் அமர்ந்தபடி மீண்டும் அந்த ஈமேயிலை படித்தான் டேனி. இந்த ஓராண்டில் மனதின் வலி கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. தான்யா வேணுவை அடிமை என்று எழுதியதை நினைத்து சிரிக்கவும் முடிந்தது.

தன் தோழி இப்படி ஒருவனை உருகி உருகி காதலிப்பாள் என்பதை அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. மனதில் வலி இருந்தாலும், அவள் சந்தோஷமே தன் சந்தோஷம் என வாழ்ந்தவனால் அவளை வெறுக்கவோ ஒதுக்கவோ முடியவில்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை என தனது பயத்தை, தயக்கத்தை எல்லாம் மூட்டை கட்டு தூக்கி போட்டு விட்டு மீண்டும் பழைய டேனியாக அவளிடம் பழக ஆரம்பித்திருந்தான்.

ஒவ்வொரு தடவை கோல் பண்ணி பேசும் போதும், அவளது பேச்சுக்கள் விபாவை சுற்றியே இருக்கும். அவள் உளறியதில், அவர்கள் இருவருக்கும் இருக்கும் அந்நியோன்னியத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் நேரில் கண்டு விபாவை எடை போடவே கிளம்பி வந்திருந்தான். இப்பொழுதான் அவனுக்கும் தானுவுக்கும் சேர்ந்து சேமெஸ்டர் பிரேக் அமைந்திருந்தது.

ஒரு வாரத்துக்கு முன் அவன் சென்னை வருவதை அறிந்து போன் செய்து பேசிய விபாவை எப்படி கலங்கடித்தான் என்பதை நினைத்து புன் சிரிப்பு உதிர்ந்தது டேனிக்கு.

“டேய் டேனி? உன்ன இங்க யாருடா பாக்கு வெத்தலை வச்சு அழைச்சாங்க?”

“வணக்கம் வேணு. போன் அடிச்சா முதல்ல ஹேலோ சொல்லனும்னு டான்யா சொல்லி குடுக்கலையா? சென்னைய என்ன நீ குத்தகைக்கு எடுத்துருக்கியா? நாங்க வந்தா உங்க ஊரு தாங்காதா?”

“வைட்டு! இந்த நக்கல் , விக்கல் எல்லாம் என் கிட்ட வச்சிக்காதே. உன் குடுமி இன்னும் என் கையில தான்றத மறந்துட்டு துள்ளுற. ஜாக்கிரதை”

“குடுமில்லாம் நான் வச்சிகிட்டது இல்லை வேணு. எப்பவுமே ஷோர்ட் ஹேர் தான்”

“என் மண்டைக்கு ஏத்தாதடா! நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியல?”

“ஏன் புரியல? நல்லாவே புரியுது வேணு கண்ணா. என்னா இனிமே உன் பாச்சா என் கிட்ட பலிக்காது. உன் பேச்ச கேட்கலைனா என்ன செய்வ? பிஸ்னச கவுப்ப. கேரி ஓன். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. என்னடா இப்படி பேசிறான்னு நினைக்கறீயா? வெளி உலகம் கத்து குடுத்த பாடம் தான், வேற என்ன. நான் இன்னும் ஒன்னும் தெரியாத பழைய டேனி இல்ல நீ மிரட்டி பார்க்கிறதுக்கு. மைண்ட் இட்”

“ஓ! ஐயா பெரிய மனுசனா ஆகிட்டீங்களா? ஆப்பை எடுத்து சொருகினேன், காணாம போயிருவ”

“சொருகிதான் பாரேன். சும்மா பூச்சாண்டி காட்டுறத விட்டுட்டு வேற வேலைய பாரு வேணு. சரி நான் தெரியாம தான் கேக்குறேன், நான் வரதுல உனக்கு என்ன பிரச்சனை? உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? டான்யா உன்னை விட்டுட்டு என் பின்னால வந்துருவான்னு பயப்படுறீயா? என்ன சொல்லு என் அழகுக்கும் அறிவுக்கும் முன்ன, நீ கொஞ்சம் சுமாரா தான் தெரிவ. அது கடவுளா எனக்கு குடுத்த வரம். வயிறு எரிய கூடாது”

“டேய்!!”

“கத்தாதே வேணு, காதுல கொய்யுன்னு சத்தம் கேட்குது. எதுக்கு இந்த கோபம் உனக்கு? டான்யா தான் வா வான்னு கூப்பிட்டுகிட்டே இருக்கா, ரெண்டு பேருக்கும் சேர்த்து செமெஸ்டர் பிரேக் வருதுன்னு. வேணுக்கு பிடிக்கல அதனால வரலன்னு சொல்லட்டா? எப்படி வசதி?”

“வந்து தொலை. என் முன்னுக்கு அவ கூட சீன போட்ட, அப்புறம் நடக்குற விபரீதத்துக்கு நான் பொறுப்பு இல்லை” என பட்டேன போனை வைத்திருந்தான் விபா.

இன்னும் ஐ லவ் யூ சொல்லாமல் விபாவை அலைய விட்டுக் கொண்டிருக்கும் தன் தோழியை நினைக்கும் போது அவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

‘உன் அதிரடிக்கு ஏத்த சரவேடிடா என் டான்யா. உன்னோட பருப்பு எல்லாம் அவ கிட்ட வேகாது.’

‘வரேண்டா வேணு. ஒரு வருஷமா எங்கள பிரிச்சு எப்படி மெண்டல் டார்ச்சர் குடுத்த. அதையேல்லாம் திருப்பி 2 வாரத்துல உனக்கு குடுக்கிறேன். வேய்ட் அண்ட் சீ’

ஏர்போட்டில் தான்யாவுடன் வேணுவும் காத்திருந்தான். டேனியை பார்த்தவுடனே, தாவி சென்று அவனை அணைத்துக் கொண்டாள் தான்யா. கொஞ்சம் நேரம் இருவரும் அணைத்தவாறே நின்றிருந்தனர். பக்கத்தில் விபா கணைக்கும் சத்தம் கேட்கவும் தான் விலகினாள் தான்யா. கண்கள் நீரில் நிறைந்திருக்க உதடு புன்னகையில் உறைந்திருக்க நின்றிருந்தவளை பார்க்க விபாவின் மனம் கலங்கியது.

“எவ்வளவு நாள் ஆச்சு உன்னை நேருல பார்த்து. ஆளே மாறிட்டடா. போயிஷ் லுக் போயி ஆம்பிளையா மாறிட்ட. ” என அவன் தாடையை பற்றி கொண்டு முகத்தை திருப்பி திருப்பி பார்த்தாள் தான்யா.

“நீ மட்டும் என்ன டான்யா. கொஞ்சம் சைஸ் போட்டு இப்பத்தான் பார்க்க ரொம்ப அழகா அம்சமா இருக்க” என அவளை சுற்றி சுற்றி பார்த்தான்.

” சென்னையை சுத்தி பார்க்க வந்தியா, தானுவ சுத்தி பார்க்க வந்தியா? நான் ஒருத்தன் நிக்கிறது உன் கண்ணுக்கு தெரியலை பார்த்தியா? சரி வா. லக்கேஜ் எடுத்தாச்சுனா, கிளம்பலாம்.” என குரல் கொடுத்தான் விபா.

அவனை முறைந்த தானு,

“வேணு! நான் வாங்கி வந்த பொக்கே எங்க? அதை அவன் கையில குடுத்து சிரிச்ச முகமா வெல்கம் டூ சென்னைன்னு சொல்லு. ”

‘உனக்கு பொக்கே ஒன்னு தாண்டா குறைச்சல்’ என நினைத்துக் கொண்டாலும் மறுக்காமல் அவள் சொன்னதை சிரித்த முகமாக செய்தான் விபா.

இந்த ஒரு வருட கேப்பே இல்லாத படி, இருவரும் சிரித்து பேசி கொண்டே வந்தனர். விபாதான் லக்கேஜை எடுத்து வரும்படி ஆனது.

‘மறுபடியும் முதல்ல இருந்தா? ‘ நொந்து கொண்டான் விபா.

விபா ட்ரைவர் சீட்டில் அமர்ந்ததும், டேனி முன்னே உட்காருவான் என்று தானு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். டேனியோ சுற்றி வந்து தானுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

‘கடைசியிலே இதுங்க ரெண்டும் என்னை ட்ரைவர் ஆக்கிருச்சிங்களே’ கண்ணாடி வாயிலாக தானுவை முறைத்தான் விபா. கண்களை சிமிட்டியவள் கோவிச்சுக்காதே என உதட்டை அசைத்தாள். கடுப்பில் கார் சீறி பாய்ந்தது.

“நான் எங்க தங்க போறேன் டான்யா?”

‘மைசூர் பேலஸ நீ தங்குறதுக்காக லீஸ் எடுத்துருக்கோம். ஓகேவா?’ விபாவின் மைன்ட் வொய்ஸ் பேசியது.

“வேணு உனக்காக பைவ் ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணியிருக்கான் டேனி”

“வண்டிய திருப்ப சொல்லு, நான் திரும்பவும் கிளம்புறேன்”

‘தோ, இப்பவே திருப்புறேன்.’

“ஏன்டா? உனக்கு அங்க தங்க பிடிக்கலையா? “

“நான் இங்க வந்ததே உன் கூட டைம் ஸ்பேன்ட் பண்ண தான். நான் ஒரு மூலையிலும் நீ ஒரு மூலையிலும் இருந்தா எப்படி? எனக்கு இந்த அரேஞ்மேன்ட் பிடிக்கல”

“சரி, விடு. என் வீட்டுல வந்து தங்கிக்க. முதல்ல இருந்தே அதான் பிளான். வேணு தான் உனக்கு வசதி பத்தாது, ஹோட்டல் புக் பண்ணலாம்னு சொன்னான்.”

‘அதானே பார்த்தேன். சார் ஐடியாவா இது? இப்ப எப்படி கவுக்கறேன்னு பாரு.’ என யோசித்த டேனி,

“ஆஸ்திரேலியாவுல நான் தங்கி இருக்கற ரூமை நீ பார்க்கணும், அவ்வளவு கேவலமா இருக்கும். அதை விட உன் இடம் நல்லா தான் இருக்கும். சோ ஐ எம் குட். உன் கூடவே தங்கிக்கிறேன்.”

விபாவுக்கு காதில் புகை வராத குறைதான். இந்த நிலைமையை சமாளிக்க வேறு வழி இல்லாமல் தான் தன் திருவாயை திறந்தான்.

“எதுக்கு இந்த ஆர்குமேன்ட்ஸ்? டேனி என் கூட என் வீட்டுலயே தங்கிக்கட்டும்.”

“நெஜமாவா வேணு? ரொம்ப தேங்க்ஸ். இப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. டேனி, வேணு வீடு உன் வீடு மாதிரியே நல்லா வசதியா இருக்கும். உனக்கு காம்பர்டபளா இருக்கும். நீ அங்கயே தங்கிக்க”

“அப்படினா நீயும் என் கூட அங்க தங்கனும், ஒகேவா?” என் கேட்டான் டேனி.

“கற்பு, வேணு வீட்டுல தனியா தங்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்களே. அப்புறம் எப்படி?”

‘ஆ ஊன்னா இதை சொல்ல வேண்டியது. என்னை பார்த்தா எப்படிடி இருக்கு? மேல பாஞ்சு பிராண்டுற கொரில்லா மாதிரியா? மேல பாயாட்டியும் சைக்கிள் கேப்புல கைய புடிக்கிறது, தோளை தொடுறது, கன்னத்தை தடவுறதுன்னு பண்ணுறேன் தான். அது கூட இல்லாட்டி எப்படி? இருந்தாலும் உங்கம்மா என்னை இப்படி கண்டு வச்சிருக்க கூடாதுடி.’ கடுப்பானான் விபா.

விபாவை பார்த்து நக்கலாக சிரித்தான் டேனி.

“போனை குடு. கற்பு சாயாங்கிட்ட நான் பேசுறேன். நீ இல்லாம எப்படி வேணு வீட்டுல நான் தனியா தங்குறது?”

‘ஏன்டா, உன்னை நான் என்ன கடிச்சா சாப்பிட்டுருவேன்? வைட்டு! ஓவரா ஆடுறடா’

அவர்கள் இருவரும் போன் செய்து கற்பகத்திடம் கெஞ்சி கூத்தாடுவதை ரியர்வியூ கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்தான் விபா. போனை வைக்கும் போது இருவர் முகத்திலும் சிரிப்பு. தங்களுக்குள் ஹைபை கொடுத்து கொண்டாடினார்கள் இருவரும்.

“வேணு! என் அபார்ட்மென்டுக்கு போ. எனக்கு வேண்டிய பொருளேல்லாம் எடுக்கணும்.”

விபாவுக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

‘ரெண்டு வாரம் என் கூட ஒரே கூரையில இருக்க போறா. என்ன, இடைஞ்சலா இவனும் இருப்பான். இருந்துட்டு போகட்டும். இவன சமாளிக்கவா நமக்கு தெரியாது’ என குதூகல மனநிலையோடு காரை தானுவின் அபார்ட்மென்டுக்கு திருப்பினான்.

 

 

பத்துமலை திருத்தலம், மலேசியா

தருணும் கற்பகமும் முருகனை தரிசிப்பதற்காக காலையிலேயே பத்துமலைக்கு வந்திருந்தார்கள். அப்பொழுதுதான் தானு அம்மாவுக்கு போன் செய்து பேசினாள்.

“யாரும்மா போனுல? தானுவா?”

“ஆமாண்டா,  அவதான்.”

உலகிலே மிக உயரமான, தங்கமென மின்னிய முருகன் சிலைக்கு கீழே அமர்ந்தபடி புறாவுக்கு தீனி போட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்.

“என்னவாம்? டேனி, விபான்னு பேரு அடிப்பட்டது பேச்சுல.”

“லீவுக்கு டேனி வந்திருக்கானாம். அதான் டேனி கூட போய் விபா வீட்டுல தங்கவான்னு கேட்டா. நானும் சரின்னு சொன்னேன்”

“ஏன்மா சரின்னு சொன்னீங்க? ஒரு பொம்பளை பிள்ளைய தனியா எப்படி அங்க விட்டு வைக்கிறது?” என எகிறினான் தருண்.

“டேய் அடங்குடா. உன்னை விட உன் தங்கச்சியயும் எனக்கு தெரியும், அந்த பையனையும் எனக்கு தெரியும். அதோட நம்ப டேனி அங்க இருக்கறப்ப என்ன கவலை.”

“அம்மா, உங்க கிட்ட ஒரு விஷயத்தை ரொம்ப நாளா சொல்லாம மறைச்சிட்டேன்மா”

“என்னடா? யாரையாவது காதலிக்கிறீயா? சொல்லுடா. அதுக்கேல்லாம் நான் தடையா இருக்க மாட்டேன்டா”

“நீங்க வேறம்மா. அதெல்லாம் ஒன்னும் இல்ல”

“ஹ்ம்ம். அதானே பார்த்தேன். ஏன்டா, உன் வயசு பசங்க எல்லாம் பேஸ்புக்ல ஒரு லவ்வு, ட்வீட்டர்ல ஒரு லவ்வு, இன்ஸ்தாகிராமுல ஒரு லவ்வுன்னு பொழந்து கட்டுறானுங்க. நீ இப்படி சாமியாரா என் முந்தானைய புடிச்சுகிட்டு சுத்துறியேடா.” என சலித்துக் கொண்டார் கற்பகம்.

“அம்மா! முதல்ல நம்ப பாப்பா படிச்சு முடிக்கட்டும். அவ வாழ்க்கை செட்டலானா தான் என்னைப் பத்தியே யோசிப்பேன். அதுவும் இந்த காதல் எல்லாம் எனக்கு செட் ஆகாது. நீங்களே நல்ல பொண்ணா பாருங்க. கழுத்தை நீட்டிருறேன்”

அவன் சொன்ன விதத்தில் சிரித்த கற்பகம்,

“உன்னை மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க என் மக குடுத்து வச்சிருக்கணும் கண்ணா.” கண்கள் கலங்கி விட்டது கற்பகத்துக்கு.

அவரது கண்களை துடைத்துவிட்டவன்,

“நல்ல விஷயம் பேச போறப்ப கண்ணை கசக்கிகிட்டு. இங்கயே இருங்க, டீ வாங்கிட்டு வரேன். கொஞ்சம் குளிரா இருக்கு” என எழுந்து போனான்.

‘நான் கட்டிகிட்ட புருஷன் தான் சரியில்லை. ஆனா என் புள்ளைங்க ரெண்டும் வைரக்கட்டிங்க. பத்துமலை முருகா, என் புள்ளைங்கள கண் கலங்காம நீதான்பா நல்லா பாத்துக்கணும்’ என மனமுருகி வேண்டினார் அவர்.

“இந்தாங்கம்மா, குடிங்க. “ கப்பை நீட்டியவன் மீண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.

“சொல்லுப்பா, என்ன விஷயம்?”

“ஒரு தடவை டேனியோட அப்பா எனக்கு கோல் பன்ணி இருந்தாருமா. அவர் என் கிட்ட ஒரு விஷயத்தை கேட்டாரு. நான் மெதுவா யோசிச்சி சொல்லுறேன்னு சொல்லிட்டேன்”

“ஓங் அப்படி என்னப்பா கேட்டாரு?”

“தானுவ டேனியோட ஒன்னா படிக்க அனுப்ப முடியுமான்னு கேட்டாரு. செலவு எல்லாத்தையும் அவரே பார்த்துக்கிறேன்னு வேற சொன்னாரு”

“நீ உடனே முடியாதுன்னு சொல்லி இருப்பியே”

“ஆமாம்மா. அப்படியே ரெண்டு பேரும் படிச்சு முடிச்சோன அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு வேற கேட்டாருமா. அதுக்கு மட்டும் யோசிச்சு சொல்லுறேன்னு சொன்னேன் மா”

“ஹ்ம்ம், இது சரி வராது தருண். இந்த பேச்சை இதோட விட்டுரு”

“ஏன்மா சரி வராது? வேற இனம் வேற மதம்னு பாக்குறீங்களா?” அவன் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“அட போடா! வாழ போறது ஒரு வாழ்க்கை. அதுல என்னடா மதம் , இனம், ஜாதின்னு பாகுபாடு. நான் அந்த அளவுக்கு பிற்போக்குவாதி இல்லடா. எனக்கு என் பிள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம். ஜாதி பார்த்து, ஜாதகம் பார்த்து கட்டி வச்ச என் வாழ்க்கை என்ன சிரிப்பா சிரிக்குதுன்னு தெரியலை” என கசந்த முறுவல் ஒன்றை வெளியிட்டார் கற்பகம்.

“அப்புறம் ஏன்மா சரி வராதுன்னு சொல்லுறீங்க?”

“உன் தங்கச்சி மனசு வேற இடத்துல லாக் ஆகி நிக்குதுடா தருண். என் கிட்ட அவ மறைச்சு வச்சாலும், தாய் அறியாத சூல் உண்டா சொல்லு”

“என்னம்மா சொல்லுறீங்க? நம்ப தானுவா?” அதிர்ச்சியில் வாயைப் பிளந்தான் தருண்.

மகனின் ரியாக்சனில் கற்பகத்துக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஏன்டா? உன் தங்கச்சி பொம்பளை இல்லையா? அவளுக்கு காதல் கத்தரிக்காய்லாம் வராதா? வாயை கொஞ்சம் மூடு. புறா உள்ள போயிர போது” என மகனை கிண்டல் அடித்தார் கற்பகம்.

“சும்ம விளையாடாதீங்கம்மா. அவ காதலிக்கிறானு தெரிஞ்சவுடனே ஒரு அம்மாவா நீங்க என்ன செஞ்சிருக்கணும்?”

“என்ன செஞ்சிருக்கணும்? முடிய இழுத்துப் போட்டு அடிக்க சொல்லுறீயா? இந்த காலத்து யூத் மாதிரி பேசுடா. பழைய பஞ்சாங்கம்மா இருக்க. அவ காதலிச்சவன் சரி இல்லைன்னா நாம தலையிடலாம். அவன் தான் நம்ப தானுதான் உலகம்னு சுத்திகிட்டு இருக்கானே. அப்புறம் என்ன பண்ண சொல்லுற? நம்ப ரெண்டு பேர விட அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துகுவான்டா. ஒரு அம்மாக்கு என்ன வேணும் சொல்லு, கட்டுன இடத்துல தன் மக ராணி மாதிரி வாழாட்டியும் ஒரு வேலைக்காரி மாதிரி நடத்தபட கூடாதுங்கறதுதான். மாப்பிள்ளை தானுவ மகாராணி மாதிரி பார்த்துக்குவாருடா”

“மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணீட்டீங்களா? அப்புறம் ஒரு அண்ணன்னு நான் எதுக்கு இருக்கேன்”

“தருண் ! உன் கிட்ட ஒன்னே ஒன்னு கேக்குறேன். உன் தங்கச்சி சந்தோஷமா இருக்கனுமா இல்லையா?”

“இருக்கணும்மா”

“அப்ப உன் ஈகோவெல்லாம் தூக்கி போட்டுட்டு, அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுடா. கல்யாணம் பண்ணி அவ ஒரு சொட்டு கண்ணீர் விட்டா உன்னாலயும் என்னாலயும் தாங்க முடியுமா சொல்லு?” கண் கலங்கினார் கற்பகம்.

“கண்டிப்பா முடியாதுமா. அவ தானே நம்ப உயிர் நாடி”

“அப்படின்னா, அவ விருப்பத்துக்கு மதிப்பு குடு. மேடம் இன்னும் நம்ப கிட்ட ஒன்னும் சொல்லல. அவளா சொல்லுற வரைக்கும் தெரிஞ்ச மாதிரி நாமளும் காட்டிக்க கூடாது. அவளுக்கே அவ்வளவு அதுப்பு இருந்த அவள பெத்த எனக்கு எவ்வளவு இருக்கும்.”

“அம்மா, அந்த அவரு உங்க மாப்பிள்ளை யாருன்னு கொஞ்சம் எனக்கும் சொல்லலாமில்ல?”

“உன் தங்கச்சிய எங்க கொத்திகிட்டு போயிருவான்னு முறைச்சு முறைச்சு பாப்பியே, அதே விபா தான்” சொல்லிவிட்டு சிரித்தார் கற்பகம்.

கூட சேர்ந்து கலகலவென சிரித்தான் தருண்.

அங்கே சென்னையில் விபாவின் வீடே ரணகளமாகி இருந்தது இந்த இருவரின் அட்டகாசத்தில்.

செக்கரட்டரிக்கு போன் செய்த விபா,

“ரெண்டு வாரத்துக்கு எனக்கு ஒரு பெரிய அசைன்ட்மென்ட் இருக்கு. எல்லா வேலையும் நீங்க டெலிகேட் பண்ணிருங்க. ரொம்ப முக்கியம்னா மட்டும் என்னை கான்டேக்ட் பண்ணுங்க” என்றவன் இன்னும் என்ன செய்ய வேண்டும் என கட்டளைகளை பிறப்பித்தான். போனை கட் செய்து விட்டு தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்தவன் மேல் பூவென வந்து விழுந்தாள் தானு.

 

SST– EPI 23

அத்தியாயம் 23

மலேசியாவிலிருந்து முதன் முதலாக எவரெஸ்ட் மலையில் கால் பதித்தவர்கள் தமிழர்கள் தான். டத்தோ எனும் உயரிய விருதையும் அதற்காகப் பெற்றார்கள் நமது மகேந்திரன் மற்றும் மோகன்தாஸ் இருவரும். 23 மே 1997ல் மதியம் 2.10க்கு (மலேசிய நேரம்) மகேந்திரன் மலை உச்சியைத் தொட, அவருக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் கடந்து மேகன்தாஸ் எவரெஸ்ட் உச்சியில் கால் பதித்தார்.

 

அதிர்ச்சியில் கன்னத்தில் கைத்தாங்கி மலங்க விழித்தாள் மிரு. அதற்குள் கோபத்துடன் பாய்ந்து வந்திருந்தான் குரு.

“ஹேய்! ஹௌ டேர் யூ ஹிட் மை கேர்ள்?” என உள்ளே வந்த உருவத்தின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அவன்.

அவன் அறைந்ததில் ஆவேசம் அடைந்த அருளும் குருவின் சட்டைக் காலரைப் பற்றி இருந்தான்.

“அவள அடிப்பேன், கொல்லுவேன்! அதுக்கு முழு உரிமையும் எனக்கு இருக்கு! நீ யாருடா அதக் கேட்க?” உஷ்ணம் பறந்தது அருளின் குரலில்.

“மைண்ட் யுவர் வோர்ட் யூ…………..” ஆத்திரம் வந்தால் குருவுக்கு ஆங்கிலம் தானாக வந்து விடும்.

நெஞ்சு இரண்டும் மோதிக்கொள்ள ஒருத்தர் கழுத்தை ஒருத்தர் பிடித்தவாறு இவன் ஆங்கிலத்திலும் அவன் தமிழிலும் சண்டையிட்டுக் கொள்ளுவதைப் பார்த்த மிரு, அவசரமாக வாசல் கதவை அடைத்தாள்.

பின் அவர்கள் இருவரின் நடுவில் வந்து நின்றவள்,

“ரெண்டு பேரும் கத்தறத கொஞ்சம் நிறுத்துறீங்களா? எனக்கு காது கொய்யுன்னு கேக்குது” என இவளும் குரலை உயர்த்தினாள்.

அவள் சத்தத்தைப் புறம் தள்ளியவர்கள், கத்துவதை நிறுத்தி கைக்கலப்பில் இறங்கினார்கள்.

“நீ எப்படிடா என் மிருவ கை நீட்டி அடிக்கலாம்?” என குரு அருளைத் தாக்க அவனோ,

“அவ என்னோட பொண்டாட்டிடா! உன் பொண்டாட்டி இன்னொருத்தன் வீட்டுல போய் உட்கார்ந்திருந்தா நீ சும்மா இருப்பியா? உதடு சிவந்து தடிச்சு, முடிலாம் கலைஞ்சி ஏடாகூடமா வந்து கதவ திறந்தா நீ சும்மா நிப்பியா? சொல்லுடா, நிப்பியா?” என கேட்டுத் திரும்ப தாக்கினான்.

பொண்டாட்டி எனும் பதத்தில் அதிர்ந்து நின்றான் குரு. அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அருள், ஓங்கி அவன் முகத்தில் குத்த ரத்தம் குபுக்கென உதட்டை கிழித்துக் கொண்டுக் கொட்டியது குருவுக்கு.

“ஐயோ ரத்தம்!’ என கத்திய மிரு, அருளின் கைப்பிடித்து ஆவேசமாகத் தடுத்தாள்.

“என்ன பண்ணறீங்க அத்தான்? விடுங்க அவர!” என கத்தியவள் தன் பலம் கொண்ட மட்டும் அருளைத் தள்ளி விட்டாள். இரண்டடி பின்னால் நகர்ந்தவன் மிருவை உறுத்து விழித்தான்.

குருவை நெருங்கியவள், அவசரத்தில் எந்த துணியும் கிடைக்காததால் அவளது டீசர்டை உயர்த்தி அவன் உதட்டு ரத்தத்தைத் துடைக்க முயன்றாள். அவள் கைப்பிடித்து சட்டென தடுத்த குரு,

“அவன் சொல்லறது உண்மையா மிரு? நீ அவன் பொண்டாட்டியா?” என குரலில் கோபம் கொப்பளிக்கக் கேட்டான்.

“இல்ல பாஸ்! முழு பொண்டாட்டி இல்ல!  நான் அருள் அத்தானுக்கு ஹால்ப் பொண்டாட்டித்தான். எங்களுக்கு என்கேஜ் ஆகிருச்சு!  இன்னும் கல்யாணம் ஆகல! எப்படியும் ஓன் மந்த்ல கல்யாணம் வச்சிருவாங்க” என அசராமல் குண்டைத் தூக்கிப் போட்டாள் மிரு.

உதட்டில் வழிந்த ரத்தத்தைத் தன் புறங்கையால் துடைத்தவன்,

“இத என்னை நம்ம சொல்லுறியா மிரு? நீ அவன் பொண்டாட்டின்னா, இவ்வளவு நேரம் என் கையில உருகி கரைஞ்சது யாரு? சொல்லு, யாருடி அது? யூ ஆர் மை ப்ரோபர்ட்டி மிருது! என் வைப்! இந்த குருப்ராசாத்தோட வைப்” என சொல்லியவன் அவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

“விடுடா அவள!” என எகிறினான் அருள்.

“இருங்க அத்தான், நான் பேசறேன்!” என அருளை அடக்க முயன்றாள் மிரு.

“நோ!!! டோண்ட் கால் ஹிம் அத்தான். மிரு ப்ளிஸ், அப்படிலாம் யாரையும் என் முன்னால கூப்பிடாதே!” இன்னும் இறுக்கினான் தன் பிடியை. தோள் இரண்டும் கலண்டு விழும் போல வலித்தது மிருவுக்கு.

“கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருக்கிங்களா ப்ளிஸ்! இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கலாம்!” என்றவள் குருவை சோபாவின் புறம் நகர்த்தினாள். அவன் அசையாத கருங்கல்லாய் நின்றிருந்தான்.

“பாஸ் ப்ளீஸ்!” என மிரு கெஞ்சவும் தான் நகர்ந்துப் போய் சோபாவில் அமர்ந்தான். அவன் விழிகள் அருளையே முறைத்திருந்தது. அவன் அமர்ந்ததும், அருளை நெருங்கி கையைப் பிடித்தாள் மிரு.

“தொடாதே அவன!” என சோபாவில் இருந்து படக்கென எழுந்தான் குரு.

“நீ யார்டா எங்க அத்தைப் பொண்ணு என்னைத் தொடக் கூடாதுன்னு ஆர்டர் போடறது? இன்னும் ஓன் மந்த் டைம்ல தொட்டால் பூ மலரும்னு நான் பாட, தொடாமல் நான் மலர்வேன்னு அவ பாடுவாடா! ஓ சாருக்கு தமிழ் வராதாமே, சரி பீட்டர்ல பாடிக் காட்டறேன் உனக்காக! டச்சு பிளாவரு ப்ளூம், நோ டச்சு ஐஐஐஐ ப்ளூம்” என ஐயை இழுத்துப் பாடிக்காட்டி  குருவை சீண்டினான் அருள்.

மிருவுக்காக கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் தலைக்கு ஏற மீண்டும் அருளை நோக்கிப் பாய்ந்தான் குரு. இந்த தடவை குரு காட்டிய காட்டில் அருளின் மூக்கில் ரத்தம் கொட்டியது.

“சபாஷ், சரியான போட்டி! சண்டை முடிஞ்சதும், யாரு உயிரோட இருக்கீங்களோ அவங்க வந்து என்னைக் கூப்பிடுங்க! இப்போ நான் படுக்கப் போறேன்” என ரூமுக்கு நகர்ந்தாள் மிரு.

குருவின் உதட்டில் ரத்தம் வந்ததுக்கு பதறி வயிறு தெரிகிறது எனும் பிரக்ஞை கூட இல்லாமல் டீசர்டைத் தூக்கித் துடைக்க வந்தவள், தன் மூக்கில் ஒழுகும் ரத்தத்தைக் கண்டு கொள்ளாமல் சென்றது ஆத்திரத்தைக் கிளப்பியது அருளுக்கு.

“அங்கயே நில்லுடி! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா, தனியா இருக்கற ஒரு ஆம்பளை வீட்டுல இத்தனை நாள் ஸ்டே பண்ணியிருப்ப? எங்கத்தை ஓடிப் போனாலும், கல்யாணம் கட்டிக்கிட்டுத்தான் போனாங்க. எங்க அத்தை வளர்த்த நீயும் தப்புத்தண்டா எதுவும் பண்ணியிருக்க மாட்டேன்னு நம்பறேன். என்ன, நம்பலாம் தானே?” என தெனாவெட்டாகக் கேட்டான் அருள்.

மிருவின் தலை தானாக ஆம்மென ஆடியது.

“அப்போ சரி! இவன் குடுத்த கிஸ்சு கருமாந்திரம் எல்லாம் மறந்து, உன்னை மன்னிச்சு விடறேன். இப்போ போய் கிளம்பு! அஞ்சு நிமிஷத்துல வரனும். போ, போ!” என அதிகாரமாக சொன்னான் அருள்.

அவன் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவளாக அமைதியாக ரூமுக்குள் நுழையப் போனாள் மிரு.

“நில்லு மிரு! நீ எங்கயும் போகத் தேவையில்ல! எதுக்குப் போகனும்? இது உன் வீடு, நம்ம வீடு! உன்னையும் உன்னை சார்ந்தவங்களையும் நான் பார்த்துப்பேன். ஸ்டே வித் மீ மிருதும்மா!” என்ற குருவின் குரலுக்கு லேசாகத் தயங்கி நின்றவள், பின் வேகமாக ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

குருவை நக்கல் பார்வைப் பார்த்த அருள்,

“பாஸ், ஊரான் நிலத்துக்கு நீங்க பட்டா போட பார்க்கக் கூடாது பாஸ்! என் வைப்புக்கு பட்டப் பேருலாம் நல்லா வைக்கறீங்க! மிருதுவாம் மிருது! அவ மிருதுவா இல்லையான்னு கண்டுப்பிடிக்கற சான்சை கடவுள் உங்களுக்குத் தரலியே பாஸ்! சோ சேட், சோ சேட்” என உச்சுக் கொட்டினான்.

“டேய்!” ஹை கிளாஸ் குரு அருளின் அட்டகாசத்தால் லோ கிளாசாக மாறி இருந்தான்.

கை நீட்டி ரத்தம் வரும் அளவுக்கு குரு யாரையும் அடித்ததில்லை. சண்டை, சச்சரவு என்றாலே முகம் சுளித்து ஒதுங்கிப் போய் விடுவான். அவன் வளர்ந்த சூழ்நிலையில் இப்படி அடிதடி, தரக் குறைவான வாய் சண்டை எல்லாம் அவன் பார்த்தது கூட கிடையாது. அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை என்பது கூட ஆனந்தியின் பேரமைதியிலும், தன் தந்தை சமைத்து உணவு பரிமாறுவதிலும் தான் தெரிந்துக் கொள்வான். அது கூட மிஞ்சி மிஞ்சி இரண்டு நாட்கள் தான் நீடிக்கும். மறுபடியும் ஆனந்தியின் சிரிப்பு சத்தம் வீட்டை நிறைக்க ஆரம்பித்து விடும்.

குடும்பத்துப் பிரச்சனைகளைப் பேசியோ, அல்லது பேசாமல் சைலண்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்தோ கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வரலாம் என தன் அருமைத் தந்தையால் போதிக்கப்பட்டு வளர்க்கப் பட்ட குரு, அருளின் அட்டகாசத்தால்தான் அந்நியனாக மாறி இருந்தான். பிறப்பிலேயே ஊறி இருந்த பண்பாடு தலைத்தூக்க, சண்டையைக் கைவிட்டவன் அருளை ஏறிட்டுப் பார்த்தான்.

“உட்காருங்க! என் மிரு உங்கள என்னவோ பேர் சொல்லி கூப்பிட்டாளே, ஹ்ம்ம் அருள்! உட்காருங்க மிஸ்டர் அருள்” என்றவன் கிச்சனுக்கு சென்று ஈர டவலில் ஐஸ் கட்டிப் போட்டு எடுத்து வந்தான்.

“மூக்குல வச்சிக்குங்க! ரத்தம் நிக்கும்” என்றவன் தானும் ஒரு துண்டால் உதட்டை அழுத்திக் கொண்டு அவன் எதிரே அமர்ந்தான்.

“இப்போ சொல்லுங்க மிஸ்டர் அருள், இத்தனை நாள் மிரு கஸ்டப்பட்டப்போ எங்கப் போனீங்க? அவ வீட்டுக்குள்ள அந்த தறுதலைங்க நுழைய ட்ரை பண்ணப்போ என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? இப்போ திடீர்னு என்ன அவ மேல அக்கறை?”

“அந்த எருமைங்கள தான் போலீஸ் அடிப்பின்னி எடுத்து அள்ளிப் போட்டுட்டு போயிட்டாங்கல்ல! அப்புறம் அவனுங்கள பத்தி என்னப் பேச்சு?”

“அவங்களா அள்ளிப் போட்டுட்டுப் போகல, நான் போக வச்சேன்!”

அறையில் இருந்து அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மிருவுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அந்தப் படிக்கட்டு கூஜாக்களை கஞ்சா கேசில் போலீஸ் பிடித்ததை கணேவின் மூலம் அறிந்து வைத்திருந்தாள் அவள். ஆனால் அதற்கு குருதான் காரணம் என்பது இப்பொழுதுதான் அவளுக்கேத் தெரியும். குருவின் மேல்தட்டு பழக்க வழக்கங்களையும், அலட்டாத தோரணையும் இத்தனை நாளாக கண் கூடாக கண்டிருந்த மிருவுக்கு, தனக்காக அவன் கஞ்சா, போலீஸ், குடிமகன்கள் என கீழ்மட்டத்துக்கு இறங்கியது மிக வருத்தமாக இருந்தது. பல்லைக் கடித்து அழுகையை அடக்கியவள் பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தாள். அவசரமாக அங்கிங்கே இறைந்துக் கிடந்த கணேவின் உடைகளை சேகரித்தவள், தன் சீப்பு, பவுடர், பிரஸ் எல்லாவற்றையும் எடுத்து பேக்கில் வைத்தாள்.

அருளோ,

“ஓ! நீங்க பண்ண வேலையா அது? ஆனா பாருங்க நான் இங்க இருந்திருந்தா இந்த மாதிரி நடக்க விட்டுருக்க மாட்டேன்! நான் ஆஸ்திரேலியால இருக்கவும் தான் எங்க மிரு உங்க வீட்டுக்கு அடைக்கலம் தேடி வந்தா! பாதுகாப்பு தேடி வந்த பச்ச மண்ணு அவ. நீங்க இப்படி அட்வாண்டேஜ் எடுத்துருக்க கூடாது அவ கிட்ட! குழந்தை பாஸ் அவ. அவள போய் கிஸ் பண்ணிருக்கீங்களே! ஏதோ நானா இருக்கப் போய் மன்னிச்சு விடறேன்! எனிவே, கோபத்துல கை நீட்டிட்டேன்! ஐம் சாரி! இனிமே எங்க வழிய நாங்க பார்த்துக்கறோம். ஒதுங்கிப் போயிருங்க! அதுதான் எல்லோருக்கும் நல்லது”

“முடியாது!”

“என்ன, என்ன முடியாது?”

“ஒதுங்கிப் போகிற ஸ்டேஜ்லாம் நான் தாண்டிட்டேன்! நீங்க ஒதுங்கிப் போயிருங்க மிஸ்டர் அருள்! என் மிருது என்னைத்தான் லவ் பண்ணறா! நடுவுல நீங்க வராதீங்க”

“அந்தப் பரதேசிங்களுக்கு தண்டனை வாங்கிக் குடுத்தீங்கன்ற ஒரே காரணுத்துக்காகத்தான் ஒழுங்கா பேசறேன் பாஸ்! அதுக்குன்னு என் வீட்டு மாங்காய நீங்க ஊறுகாய் போட்டுக்குங்கன்னு விட்டுக் குடுக்கற அளவுக்கு நான் கேணையன் இல்ல” என எள்ளலாக மொழிந்தவன்,

“மிரு சீக்கிரம்டி!” என இங்கிருந்து கத்தினான்.

“வரேன் அத்தான்!” என அவள் பதில் கொடுத்ததில் கொந்தளித்தான் குரு. வேகமாக எழுந்தவன், மிரு இருந்த ரூமுக்குள் நுழைந்து கதவடைத்தான்.

அவன் பின்னால் ஓடிய அருள்,

“டேய், கதவ திறடா” என கதவைப் படபடவென தட்டியப்படியே கத்தினான்.

“பத்து நிமிஷம் குடுங்க ப்ரோ! பேசத்தான் போறேன், உங்கள வெளிய வச்சிக்கிட்டு அவசர ஊறுகாய்லாம் போட மாட்டேன்!”

பேக்கை அணைத்துப்பிடித்தப்படி கட்டிலில் அமர்ந்திருந்த மிருவின் அருகே போய் நின்றான் குரு. மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் மிரு.

“வொய் மிரு?” இரண்டே சொல்லில் தன் மனக்குமுறலை வெளியிட்டான் குரு.

“எங்கம்மாவ எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாஸ்”

“சோ?”

“அவங்களுக்கு அருள் அத்தான ரொம்பப் பிடிச்சிருக்கு”

பொத்தென அவள் அருகில் அமர்ந்தவன்,

“அப்போ நான், நம்ம காதல்?” என கோபமாகக் கேட்டான் குரு.

“என்ன நம்ம காதல்? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல! நீங்கத்தான் காதல், காதல்னு பினாத்தறீங்க! நான் என்னைக்குமே காதல சொன்னது இல்ல பாஸ்”

“சொல்லலைனா என்னால உணர முடியாதா மிரு? ஐ க்னோ தட் யூ லவ் மீ டூ! இப்படி நம்ம வாழ்க்கையில விளையாடாதே மிரு! கடைசியிலே தவிக்கப் போறது நாம ரெண்டு பேர்தான்!” அவளை நெருங்கி அவள் கன்னத்தை வருடியபடியே கண்களால் வசியம் செய்தான் குரு. பட்டென குனிந்துக் கொண்டாள் மிரு.

“என் வாழ்க்கை இனி அருள் அத்தான் கூடத்தான்! நான் போறேன் பாஸ்”

“மிரு!!!” அதட்டினான் குரு. பின் கஸ்டப்பட்டு கோபத்தைக் கட்டுப்படுத்தியவன்,

“நான் அம்மா கிட்ட வந்து பேசறேன் மிரு! நம்ம காதல எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க மிரும்மா! டோண்ட் கிவ் அப் விதவுட் அ ஃபைட்” என குழந்தைக்கு சொல்வது போல சொன்னான்.

பட்டென எழுந்தவள்,

“காதலே இல்லைன்னு சொல்லுறேன், அம்மாட்ட பேசறேன் ஆட்டுக்குட்டிட்ட பேசறேன்னு உளறாதீங்க பாஸ்!” என கத்தினாள்.

“காதல் இல்லாமத்தான் என் உதட்டுல கபடி ஆடனியா?” அவள் முத்தமிட தெரியாமல் தடுமாறியதை கிண்டல் அடித்தான் குரு.

பதில் சொல்ல தடுமாறி கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டவள்,

“அது வந்து பாஸ்…தனிமை, இரவின் இனிமை, ஹார்மோன்லாம் சேர்ந்து நாட்டியம் ஆடிருச்சு எனக்குள்ள. அதான் குடுத்துட்டேன்! உடனே அது காதல்னு எப்படி நீங்க நினைச்சுக்கலாம். ப்ராக்டிஸ்னு நினைச்சுக்குங்க”

“ப்ராக்டிஸ்?”

“ஆமா அதுவேத்தான்! நீங்க மட்டும் கல்யாணத்துக்கு முன்ன எத்தனைப் பொண்ணுங்க கூட அப்படி இப்படின்னு ப்ராக்டீஸ் பண்ணிருக்கீங்க! அதே நாங்க பண்ணா மட்டும் தப்பா?” என வேண்டும் என்றே அவனைக் கோபமூட்டினாள் மிரு.

“ஹ்ம்ம் சரி! முத்த ப்ராக்டிஸ் மட்டும் போதுமா மிரு? மத்த ப்ராக்டிசும் என் கிட்டயே முடிச்சுட்டே போ” என அவள் சுதாரிப்பதற்குள் இழுத்து அணைத்திருந்தான் குரு.

“விடுங்க பாஸ்! வேணா விடுங்க!” என அவள் சொல்ல சொல்ல அழுந்த முத்தமிட்டான் அவன்.

அவனைப் பிடித்துத் தள்ளியவள்,

“உங்களுக்கும் நான் கடந்து வந்த மத்த ஆம்பளைங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவனுங்களும் என் கிட்ட இதைத்தான் எதிர்பார்த்தாங்க! நீங்களும் காதல்னு சொல்லி அதையேத்தான் என் கிட்ட இருந்து எதிர்பார்க்கறீங்க பாஸ்! மத்தவங்களுக்கு பல விதத்துல நான் மறுப்பைக் காட்டிருக்கேன்! ஆனா நீங்க எனக்கு நெறைய செஞ்சிருக்கீங்க! உங்க கிட்ட இந்த மிரு நன்றி கடன் பட்டிருக்கா! இப்போ என்ன? உங்களுக்கு 69 கலோரிய இறக்கனும் அவ்வளவுதானே! வாங்க பாஸ், ஐம் ரெடி” என மெல்லிய குரலில் அவன் கண்களை நேராகப் பார்த்து உரைத்தாள் மிரு.

அவள் சொன்னதில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது குருவுக்கு.

“ஓன் ஹவர் கிஸ்சிங்ல இறங்கற கலோரியோட ஓன் டைம் பலான ப்ராக்டிஸ்ல இன்னும் வேகமா கலோரி இறங்கும்னு கண்டுப்பிடிச்சி வச்சிருக்க போலிருக்கு மிரு! குட் கேர்ள்! ஆனா எனக்கு உன்னோட நன்றி உணர்ச்சி வேணா மிருதுளாஸ்ரீ! உன் நன்றிய எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல! எவ்வளவுக்கெவ்வளவு என்னையும் என் காதலையும் கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப் படுத்திட்ட நீ. ஃபைன்! என்னை விட்டுட்டுப் போறதுனா, பை ஆல் மீன்ஸ்!” கதவை சுட்டிக் காட்டியவன் கண்கள் மட்டும் போகாதே என இறைஞ்சியது.

“பாஸ்! என்னை மறந்துட்டு உங்கள மாதிரி சம அந்தஸ்த்துல யாரையாச்சும்..” என அவள் சொல்லி முடிக்கவில்லை, கத்தாமல் கடினமான குரலில்,

“ஜஸ்ட் ஷட் அப் அண்ட் கெட் லோஸ்ட்!” என வார்த்தைகளை கடித்துத் துப்பினான் குரு.

கோபத்தில் சிவந்திருந்த அவன் முகத்தைப் கடைசி முறையாக மனப்பாடம் செய்வது போல பார்த்தவள், விடு விடுவென அவனை விட்டும் அவன் வாழ்க்கையை விட்டும் வெளியேறிவிட்டாள். அவளை தொடர்வதற்கு முன்,

“போதும் பாஸ்! அடுத்தவன் வாங்கன கோக்ல நாம ஸ்ட்ரோ போட்டு உறிஞ்சக் கூடாது பாஸ்” என சொன்னான் அருள்.

“இங்க ஒரு கொலை விழுறதுக்குள்ள ஓடிப்போயிரு!”

“போறோம்! இனிமே திரும்பி வர மாட்டோம்” என வெளியேறினான் அவன்.

மிரு பயன்படுத்திய கட்டிலில் அமர்ந்த குரு, தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“போய்ட்டா! விட்டுட்டுப் போய்ட்டா! மை ஆனந்தம் இஸ் கோன்!” வாய் விட்டுப் புலம்பியவன் கண்ணில் இருந்து அவனையும் அறியாமல் வழிந்தது ஒற்றை நீர் துளி.

ஒரு வாரம் அப்படியே ஓடிப்போனது. மெடிக்கல் லீவ் என குருவின் வீட்டில் இருந்து கிளம்பிய மறுநாள் மோனிக்காவுக்கு இமேயில் அனுப்பி இருந்த மிரு, சரியாக ஒரு வாரத்தில் ராஜினாமா கடித்தையும் அக்ரிமேண்டை ப்ரேக் செய்ததற்கு உரிய பண காசோலையையும் அனுப்பி இருந்தாள். ஐம்பதாயிரத்துக்கு உரிய காசோலையை கையில் வைத்து வெறித்தப்படி இருந்தான் குரு.

மிரு அக்ரிமெண்டில் சைன் வைத்ததும், பின் தான் வம்பிழுத்ததும், அதற்கு அவளின் ரியாக்‌ஷனும் என அன்று நடந்தது எல்லாம் கண் முன் வந்துப் போனது குருவுக்கு. லாப்டாப்பை மூடி வைத்தவன், வீட்டுக்குக் கிளம்பி விட்டான். அமைதியாக வரவேற்ற ஆளில்லாத வீடு அவனை என்னவோ செய்தது. நேராக ப்ரிட்ஜிக்குப் போனவன், அங்கிருந்த பீர் போட்டல் ஒன்றை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். தொப்பென சோபாவில் அமர்ந்தவன் நினைவெல்லாம் தன் மிருதுவையே சுற்றி வந்தது. அவளைப் பார்க்க வேண்டும் போல வெறியே வந்தது அவனுக்கு. தான் அவ்வளவு இறங்கி கெஞ்சியும் ‘இல்லை, வேண்டாம்’ என போனவளை மறக்கவும் முடியவில்லை, வெறுக்கவும் முடியவில்லை அவனால்.

“ஐ மிஸ் யூ மிரும்மா! மஐ மலவ் மயூ மமி மரு!” என புலம்பிக் கொண்டிருந்தவன் கருத்தைக் கவர்ந்தது ஹாலின் ஒரு மூலையில் இன்ஸ்டால் செய்திருந்த சிசிடிவீ கேமரா!

“சே! இத்தனை நாள் இது தோணாமா போச்சே” என தன்னையேத் திட்டிக் கொண்டவன், டிவியில் சிசிடீவி ஆப்ளிகேஷனைத் திறந்தான். அன்று மிருவாக தன்னை முத்தமிட்ட தினத்தை செலேக்ட் செய்து ஓட விட்டான். அவள் வந்தது, அவன் அருகில் அமர்ந்தது, பேசியது, முத்தமிட முயன்றது எல்லாம் திரையில் ஓடியது. மீண்டும் மீண்டும் அதை ஓட விட்டுப் பார்த்தான் குரு. மிருவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது காதல்.

அன்று முத்த சுகத்தில் உணராமல் போனது எல்லாம் திரையில் தெரிந்த பிம்பத்தைப் பார்த்து உணர்ந்துக் கொண்டான் குரு. ஆனந்தத்தில் அவள் கண்ணில் வழிந்த கண்ணீர் துளி, கண்கள் காட்டிய பாவம், அவள் கைகள் தடவிய தடவல் எல்லாவற்றிலும் காதலை மட்டும்தான் கண்டான் குரு. எத்தனை தடவை அதையே ஓட விட்டுப் பார்த்தானோ அவனுக்கேத் தெரியாது. இன்னும் இன்னும் தன்னவளைப் பார்க்க வேண்டும் என தோன்ற, அவள் மருத்துவமனையில் இருந்து வரும் நேரத்தைக் கணக்கிட்டு எல்லா நாட்களின் கவரேஜ்ஜையும் பார்த்தான் குரு. அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் ரசித்துக் களித்தான். அவள் கிளம்பிப் போன நாளுக்கு முதல் நாள் வீடியோ கவரேஜைப் பார்த்தவனின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக் குத்தி நின்றன. பவுஸ் பட்டனை அழுத்தியவன், விழிகள் தெறிக்க திரையை வெறித்தான். அவன் உதடுகளோ,

“ஓ மை குட்னஸ்!” என முணுமுணுத்தன.

(தவிப்பார்கள்)

 

 

 

 

 

 

 

 

 

 

SST–EPI 22

அத்தியாயம் 22

மலேசியாவில் கலப்புத் திருமணம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். சீனர்களும் இந்தியர்களும் மணம் புரிந்து பிறக்கும் குழந்தைகளை இங்கே சிண்டியன் என அழைப்பார்கள். இவர்கள் வாழ்வு முறை இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியோ, அல்லது சீன கலாச்சாரத்தைப் பின்பற்றியோ அல்லது இரண்டும் கலந்தோ இருக்கும்.

 

வாயைப் பிளந்தபடி ஹரி இருப்பதைப் பார்த்து, குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மிருவுக்கோ அந்நிய ஆணின் எதிரே குருவின் கைப்பிடியுள் இருப்பது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஒருங்கே கொடுத்தது. அவன் பிடியில் இருந்து விலக முயல, அவளால் அது முடியவேயில்லை. எவ்வளவுக்கெவ்வளவு இவள் விலக முயன்றாளோ அதே அளவு பிடிவாதத்துடன் இறுக்கிப் பிடித்திருந்தான் குரு.

“டேய், விடுடா!” மெல்லிய குரலில் அதட்டினாள் மிரு.

சுவாரசியத்துடன் அவளைப் பார்த்தவன்,

“டேய்?” என கேட்டான்.

“விடுடான்றேன்!”

“டா?”

“அடேய்! டா, டேய், டோய் எல்லாம் நீதான். இப்ப விடப்போறியா இல்லையா?” குரலில் கோபம் ஏறிக்கொண்டே இருந்தது மிருவுக்கு.

“மரியாதை மிரு, மரியாதை! லவ் பண்ணறேன் சொன்னதும், மரியாதை ரொம்பவே தேயுதே! எப்ப நீ லவ்வ அக்சேப்ட் பண்ணிக்கறியோ, அப்ப போடா குரு, வாடா குரு, தோடா குருன்னு என்ன வேணா சொல்லு, ஒன்னுமே சொல்லாமே கேட்டுக்குவேன். அண்ட்டில் தென் எனக்கு ரெஸ்பேக்ட் குடுக்கனும் மிரு!”

தன்னைக் கண்டு கொள்ளாமல், அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே குசுகுசுவென பேசிக் கொண்டிருப்பது ஹரிக்கு கடுப்பைக் கிளப்பியது.

‘இங்கொருத்தன் நிக்கறான்னு கூட பார்க்காம, ரோமாண்ஸ பாரேன். இப்போ போய் ஆட்டத்தைக் களைச்சி விடறேன்!’

அவர்களை நெருங்கியவன்,

“என்ன ப்ரோ! இந்த வீட்டுக்குள்ள எந்த லீலையும் வச்சிக்கிறது இல்லைன்னு நினைச்சேனே! இப்போ இது என்ன புதுசா?” என கேட்டான்.

குருவின் அணைப்பில் இருந்த மிருவின் உடல் ஆத்திரத்தில் விறைத்தது. குருவை ஒரே தள்ளில் விலக்கியவள், கோபத்துடன் ஹரியை உறுத்து விழித்தாள்.

“சேத்தான் பெத்துல்!(சரியான சைத்தான்டா நீ) என்ன லந்தா? எவ்ளோ தெனாவெட்டு இருந்தா, என்னையும் உங்க ப்ரோ கூட்டிட்டு சுத்தன பொண்ணுங்களையும் சேர்த்து வச்சுப் பேசுவ? உன் ப்ரோ மன்மதனுக்கு மருமகன், அவர் பின்னால நாங்க லோலோன்னு சுத்தறோம்! இன்னொரு தடவை இப்படி எதாச்சும் பேசி வச்ச, மூக்கிருக்கும் முகரை இருக்காது! பீ கேர்பூல்” என கத்தினாள்.

ஹரி பேவென முழிக்க, குருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எட்டி நின்றவள் தோள் மேல் கைப்போட்டு அருகே இழுத்தவன்,

“ஹரி, மீட் யுவர் அண்ணி மிருதுளாஸ்ரீ! மிரும்மா, அவன விட்டுரு பாவம்! அழுதுருவான்” என சொல்லி வாய் விட்டு சிரித்தான்.

“அண்ணியா????”

“ஆமா, அண்ணிதான்!” அழுத்தமாக சொன்னான் குரு.

“அண்ணியா????” இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை ஹரி.

“அண்ணின்னு தானே சொன்னாரு! என்னமோ பன்னின்னு சொன்ன மாதிரி என்ன ரியாக்சன் இது? ஷாக்க குறை, ஷாக்க குறை!” என்றவள் குருவின் பிடியில் இருந்து விலகி, ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து வந்து ஹரியிடம் கொடுத்தாள்.

அதை வாங்கி மடமடவென குடித்தவன் மீண்டும்,

“அண்ணியா?” என்றான்.

“டேய் ஹரி, போதும்டா. கேட்டதையே மறுபடி கேட்காதே! முதல்ல உட்காரு!” என தம்பியை அமர சொன்னவன், டைனிங் டேபிளில் தானும் அமர்ந்தான்.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த மிரு, ஒன்றும் பேசாமல் தான் விட்ட சமையலை மீண்டும் தொடர ஆரம்பித்தாள்.

“அம்மா, மேனகா, பேபிம்மா எல்லாம் நலமாடா?”

“ஹ்ம்ம் ஹ்ம்ம்”

“அப்பா கார் சர்வீஸ் விட்டுட்டியா?”

“ஹ்ம்ம்”

“ஹரி!!”

“அம்மா உன்னைக் கொல்லப் போறாங்க ப்ரோ!”

“பரவாயில்ல விடு! அவங்கத்தானே பெத்தாங்க, என்னைக் கொல்லறதுக்கும் அவங்களுக்கு உரிமை இருக்கு” என புன்னகைத்தான் குரு.

“வோர்ல்ட் வார் வெடிக்கும் ப்ரோ!’

“கண்டிப்பா வெடிக்கும். வெடிக்கறப்போ தண்ணிய ஊத்தி அணைச்சுக்கலாம்! யூ டோண்ட் வோரி”

“ஹ்ம்ம்! சரி, எப்போ கல்யாணம்?”

“உங்க அண்ணி என் லவ்வ அக்சேப்ட் பண்ணதும்”

“என்னாது? அப்போ வெறும் ஓன் சைடா?”

அடுப்பு பக்கமாக திரும்பி நின்றிருந்த மிருவுக்கே ஹரியின் அதிர்ச்சி சிரிப்பை வரவைத்தது.

“ஆமா, ஓன் சைடுதான்! நீ கொஞ்சம் அண்ணிகிட்ட பேசேன்! எங்கண்ணா புத்திமான், பக்திமான், சக்திமான் இப்படிலாம் சொல்லி ப்ரோபோசல கொஞ்சம் ரீகன்சிடர் பண்ண சொல்லேன்”

“புத்திமான், சக்திமான் ஒத்துக்கறேன்! அதென்ன பக்திமான்? வீட்டுல ஒரு சாமி படம் கூட இல்ல” என திரும்பி பார்க்காமலே குரல் கொடுத்தாள் மிரு.

“பக்தி சாமி கிட்ட மட்டும் இல்ல, வர போற பொண்டாட்டி கிட்டயும் வைக்கலாம்! அந்த வகைல எனக்கு பக்தி முத்திப் போச்சு மிரு” என சிரித்தான் குரு. திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள் மிரு.

அவர்கள் மீண்டும் தாங்கள் இருவருக்குமான கூட்டுக்குள் புகுந்துக் கொண்டதை ஆச்சரியமாகப் பார்த்தான் ஹரி. சிரித்த முகத்துடன் கலகலவேன பேசும் இந்த குரு அவனுக்குப் புதுமையாகத் தெரிந்தான்.

“ஓன் சைட் லவ்வுன்னு சொல்றீங்க! அப்புறம் எப்படி லீவிங் டூகேதர்?” என ஆச்சரியமாகக் கேட்டான் ஹரி.

சுருக்கமாக தங்கள் கதையை சொன்ன குரு,

“உங்கண்ணிய கண்ணால பாத்தே சில நாள் ஆச்சுடா! அதுக்குத்தான் சீக்கிரம் வந்தேன் இன்னிக்கு. நீ பேசிட்டு இருடா, நான் முகம் கழுவிட்டு வரேன்!” என உள்ளே போனான்.

மிருவும் ஹரியும் மட்டும் தனித்து இருக்க, அங்கே மௌனமே ஆட்சி செய்தது. தன் அண்ணாவின் காதல் மிகு பார்வை மிருவைத் நொடிக்கொரு தடம் தீண்டுவதை பார்த்திருந்த ஹரி, மிருவிடம் சாதாரணமாக பேசிப் பழகலாம் என முடிவெடுத்தான்.

“சாரிங்க! உங்கள பத்தித் தெரியாம அப்படி பேசிட்டேன்” என மன்னிப்பைப் கோரினான்.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதவளாயிற்றே மிரு, கோபம் தீர அவனை ஏசிய பிறகு எதற்கு முகத்திருப்பல் என சமாதானமானாள்.

“பரவாயில்ல ஹரி சார்! திட்டனதுக்கு நானும் சார்”

“ஹரின்னே சொல்லுங்க”

“நீங்க எப்படியும் என்னை விட பெரியவரா இருப்பீங்க! சோ ஹரி சார்னே சொல்லுறேன்! வந்து..” தயங்கினாள் மிரு.

“என்ன? சொல்லுங்க!” என கேட்டான் ஹரி.

“சாப்படறீங்களா ஹரி சார்? நான் இன்னும் சாப்பிடல, உங்களைப் பார்க்க வச்சு எப்படி சாப்பிடறது!”

“நீங்க சமைச்சது நல்ல வாசனையா இருக்கு! என்ன மெனு?”

“சிம்பிள் மெனுதான். ரசம் வச்சேன். மீன் பொரிச்சேன்! அவ்வளவுதான். உங்களையும் பாஸையும் பார்த்ததும், சாதம் கொஞ்சம் அதிகமா வடிச்சிருக்கேன்! ப்ளிஸ் சாப்பிடுங்க”

“எனக்கும் பசிதான்! போடுங்க சாப்பிடறேன்” என பந்தா பண்ணாமல் சரியென்றான் ஹரி.

ஒரு தட்டில் அவனுக்கு சாதம் வைத்தவள், மீன் துண்டையும் வைத்து ரசம் ஊற்றிக் கொடுத்தாள். கிளாசில் தண்ணீரும் பிடித்து வைத்தாள்.

“நீங்க சாப்பிடல?”

“பாஸ் வரட்டும்! அவருக்கு சாப்பாடு வேணுமா கேட்டுட்டு சாப்பிடறேன்”

“ஓ, சரி” என்றவன் சாப்பிட ஆரம்பித்தான்.

முகம் துடைத்தபடியே வந்தான் குரு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தன் தம்பியைப் பார்த்தவனுக்கு நிறைவாக இருந்தது. தன் உடன் பிறந்தானுக்கு அன்னமிட்டவளை அன்புடன் பார்த்தான் குரு.

“பாஸ் சாப்பிடறீங்களா?” என கேட்டாள் மிரு.

“உன் கையால சாப்பிட ஆசையா இருக்கு. ஆனா ரைஸ் வேணா மிரு”

“ரைஸ் இல்லாம வெறும் ரசம் மட்டும் குடிப்பீங்களா?” என கிண்டலாகக் கேட்டாள் மிரு.

“சாப்பிட்டா சரில! எப்படியோ சாப்பிடுவேன்! நீ முதல்ல உட்காந்து சாப்பிடு” என்றவன் ப்ரீசரில் இருந்த ப்ரோஷன் சப்பாத்தியை வெளியே எடுத்தான். அடுப்பில் ஒரே ஒரு சப்பாத்தியை வைத்து சூடு செய்தவன், அதை தட்டில் இட்டு மிருவின் அருகில் அமர்ந்தான்.

தன் அண்ணனைப் பற்றி தெரியுமாதலால், எதையும் கண்டுக் கொள்ளாமல் சாப்பிட்டான் ஹரி. மிருவோ வெறும் சப்பாத்தியை சாப்பிடுவானோ என நினைத்தப்படியே பார்த்திருந்தாள். சப்பாத்தியின் மேல் ரசத்தை ஊற்றி அதை குளிப்பாட்டி சாப்பிட்டான் குரு.

மிருவுக்கு முகம் அஷ்டகோணலாக மாறியது!

“என்ன காம்பினேஷன் இது பாஸ்?”

“ரசம் ப்ளஸ் சப்பாத்தி இஸ் ரப்பாத்தி” என சொன்னவன் அதை சுருட்டி வாயில் திணித்துக் கொண்டான்.

“கொஞ்சமா சோறு சாப்பிட்டா என்ன பாஸ்? இப்படி சாப்பிடறவங்கல எல்லாம் கொண்டு போய் மியூசியத்துல வைக்கனும்”

மெல்ல புன்னகைத்தான் குரு.

“நான் இப்படி சாப்பிடறதே உனக்காகத்தான் மிரு”

“வாட்?”

சுவாரசியமாக இருவரையும் கவனித்தான் ஹரி.

“என்னோட அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு மிரு! பரம்பரையா மூத்தப் புள்ளைக்கு வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காரு! அதனாலத்தான் ஹெல்த்தி லைப்ஸ்டைல் ஃபோலோ பண்ணுறேன்! ஓன்ஸ் இன் அ வைல் தானேன்னு சாப்பிட ஆரம்பிச்சா, அடிக்கடி சாப்பிட சொல்லும் மிரு! விடாது கருப்பு போல, சாப்பாட்டு விஷயத்துல நமக்கு என்னிக்குமே விடாது ஆசை! ஆரம்பத்துல ஆரோக்கியமா இருக்கனும்னு இந்த லைப் ஸ்டைல் அடாப்ட் பண்ணேன்! இப்போ உனக்காக ரொம்ப நாள் இருக்கனும் போல இருக்கு. நம்ம பிள்ளைங்களுக்காக ரொம்ப நாள் வாழனும்னு தோணுது! சோ சாப்பாட்டு விஷயத்துல என்னை கம்பள் பண்ணாத மிரும்மா”

மிரு வாயடைத்துப் போயிருக்க, ஹரியோ அதிர்ந்துப் போனான். இந்த மாதிரி விஷயங்கள் எதையும் குரு அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டதில்லை.

“எங்க கிட்ட இதெல்லாம் சொல்லவே இல்லையேண்ணா! ஏன் இப்படி சாப்பிடறான்னு அம்மா எவ்ளோ கவலைப்படறாங்க!”

“ரீசன் சொன்னா இன்னும் கவலைப் படுவாங்களே ஹரி! அதான் சொல்லல! ஆனா என் கூட மீதி நாட்கள கழிக்கப் போற மிருவுக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரியனுமே! அதான் சொன்னேன். ரீசனா போன மெடிக்கல் செக் அப் வரைக்கும், ஐம் இன் டிப்டாப் கண்டிஷன் மிரு! சோ டோண்ட் வொரி” என அவளைப் பார்த்து கண்ணடித்தான் குரு.

“மணியாச்சு, நான் கிளம்பறேன்! கணே வெய்ட் பண்ணுவான்” என சொல்லியவள், மீதி இருந்த உணவை அவசரமாக அள்ளி முழுங்கினாள். கையை கழுவி விட்டு, வேகமாக தனக்கு ஒதுக்கி இருந்த ரூமுக்குப் போனாள் மிரு. பத்து நிமிடத்தில் கிளம்பி வந்தவள், கட்டி வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டாள்.

“பாய் பாஸ், பாஸ் ஹரி சார்”

“பாய் மிரும்மா”

“பாய்ங்க” என்றான் ஹரி.

“என்னடா ங்க! அண்ணி சொல்லு” என மிரட்டினான் குரு.

“இல்லல்ல! ங்கவே இருக்கட்டும்” என சொன்னவள், வேகமாக வெளியேறிவிட்டாள்.

அவள் கிளம்பியதும், நீண்ட பெருமூச்சொன்றை விட்டான் குரு.

“ஏண்டா ஹரி! நான் குடும்பஸ்த்தன் ஆகற அறிகுறி அதாச்சும் உன் கண்ணுக்குத் தெரியுதாடா?” என சோகமாக கேட்டான்.

“ரொம்ப கஸ்டம்தான் ப்ரோ”

“அந்த கஸ்டத்துல நீயும் எண்ணெயை ஊத்தப்போறியாடா?” என சூசகமாகக் கேட்டான் குரு.

“ரைட்டு, புரியுது! ஆனந்திக்கு தெரிய வேணாம்னு சொல்லுறீங்க?”

“இப்போதைக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கறேன் ஹரி! மிரு இன்னும் தயங்கறாடா! என் மேல சத்தியமா அவளுக்குக் காதல் இருக்கு! ஆனாலும் முரட்டுத்தனமா மறுக்கறா! முதல்ல அவள ஒத்துக்க வைக்கிறேன்! அப்புறம் நானே அம்மாட்ட பேசறேன்! ஒரே டைம்ல ஆனந்தியையும், என்னோட ஆனந்தத்தையும்(மிரு) என்னால சமாளிக்க முடியாதுடா ஹரி. ஐ ஹோப் யூ அண்டெர்ஸ்டேண்ட்”

“காதல் வந்ததும் நல்லா பேசறீங்க ப்ரோ! எங்கண்ணா குருப்ரசாத்தா இதுன்னு டவுட்டே வருது ப்ரோ”

“ஷீ இஸ் மை ஹெப்பி பில். என் சந்தோசத்துக்கான மாத்திரை அவ! ஐ லவ் ஹேர் சோ மச் ஹரி” கண்கள் மலர, முகம் பளபளக்க சொன்னான் குரு.

‘ஐயோ ப்ரோ! மம்மி அந்த மாத்திரையை இடிக் கல்லுல போட்டு இடிச்சி கரைச்சி குடிச்சிருவாங்களே! சும்மாவே உங்க மேல அவங்களுக்கு பொசெசிப்பான அன்பு. இப்போ அவங்க பார்த்த பொண்ண ரிஜேக்ட் பண்ணிட்டு, கண்ணெல்லாம் காதலோட நின்னீங்கன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலையே! கடவுளே, சேவ் மை ப்ரோ!’

“என் வாயால விஷயம் வெளியாகாது ப்ரோ! ஆனாலும் அவங்க கிட்ட ரொம்ப காலம் மறைக்க முடியாது! உங்களுக்கேத் தெரியும், பாத்து செய்யுங்க! என்னோட முழு சப்போர்ட் உங்களுக்கு இருக்கு. எங்களுக்காக வாழ்ந்த நீங்க, இனிமே உங்க சந்தோசத்துக்காக வாழுங்க ப்ரோ” என உணர்ச்சிப் பூர்வமாக சொன்னான் ஹரி.

அன்புடன் தன் தம்பியை ஆரத் தழுவிக் கொண்டான் குரு.

அங்கே மருந்துவமனைக்கு மார்க்கஸ் வந்திருந்தான் ரதியைப் பார்க்க. அவனைப் பார்த்ததும், உற்சாகமாக சிரித்தாள் மிரு. ரதியிடம் நலம் விசாரித்த மார்க்கஸ், என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க சொல்லி வலியிறுத்தினான்.

“கணே, நீயும் அம்மாவும் சாப்பிடுங்க! நான் ச்சேகு கூட பேசிட்டு வரேன்” என கிளம்பினாள் மிரு.

மிருவும் மார்க்கஸ்சும் மருத்துவமனை காபிடேரியாவில் அமர்ந்திருந்தனர். டீயுடன் சூச்சூர் உடாங்கும்(இறால் போட்டு செய்யப்படும் ஒரு வகை பஜ்ஜி) வாங்கி வந்திருந்தாள் மிரு.

“சாப்பிடுங்க மார்க்கஸ்”

அவனும் சிரித்த முகத்துடன் பேசியபடியே சாப்பிட்டான். பாதி பேச்சில் மிரு அவனிடம் புத்தகம் ஒன்றை நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்தவனுக்கு பெரிதாக புன்னகை வந்தது.

“அப்போவே நினைச்சேன்! உன் பதில் இப்படித்தான் இருக்கும்னு” என சொல்லி புன்னகைத்தான்.

காதலை சொல்லி அவன் புத்தகம் தந்திருக்க நட்பை சொல்லும் ‘காவான் பாயேக் ஃபோரேவெர்’(என்றென்றும் நல்ல நட்புடன்) புத்தகத்தை அவள் திருப்பித் தந்திருந்தாள்.

“என் மேல கோபம் வரலியா மார்க்கஸ்?”

“எதுக்குக் கோபம்? நான் விருப்பத்த சொன்னேன், அத ஏத்துக்கவும் மறுக்கவும் முழு உரிமை உனக்கு இருக்கு மிரு. எப்பவுமே உன் கண்ணுல நட்ப மட்டும்தான் நான் பார்த்தேன். இந்தப் புத்தகத்த குடுத்தாலாச்சும் அந்த நட்பு காதலா மாறுதான்னு பார்க்கலாம்னு தான் குடுத்தேன். ஆனா நட்பு மட்டும்தான் வேணும்னு என் வழியிலயே பதில் சொல்லிட்ட! ஐ லைக் இட் மிரு” என்றவன் புன்னகையை மட்டும் விடவில்லை.

“எனக்கு கில்ட்டியா இருக்கு மார்க்கஸ்”

“ஹேய்! நோ நீட், ஓகே! காதல ஃபோர்ஸ் பண்ணி வாங்க முடியாது. அது தானா வரனும். என் மேல உனக்கு வரலன்ற போது என்ன செய்ய முடியும் சொல்லு? எதிர்மறையான பதில தான் எதிர்ப்பார்த்திருந்தேன். அதுக்கு மனச தயராவும் வச்சிருந்தேன் மிரு. சோ ஐம் ஆல்ரைட். என்னிக்குமே உனக்கு ஒரு நல்ல நண்பனா நான் இருப்பேன்”

‘இவ்வளவு கரிசனையாகவும், அக்கறையாகவும் இருக்கும் இவன் மேல் ஏன் எனக்கு காதல் வரவில்லை?’ கண்கள் லேசாக கலங்குவது போல இருந்தது மிருவுக்கு.

“கண்டிப்பா நான் ஒரு இந்தியனத்தான் கட்டிப்பேன் மிரு. அது என்னவோ உங்க க்லச்சர் மேல அப்படி ஒரு ஈடுபாடு எனக்கு. எங்களுக்கு கண்டிப்பா சிண்டியன் குழந்தைக்க பிறக்கும். நீ தான் அவங்களுக்கு நேம் செலேக்ட் பண்ணனும்”

“இன்னும் கேர்ல்ப்ரேண்டே கிடைக்கல! அதுக்குள்ள நேம் வேணுமா உனக்கு?” என கலகலவென சிரித்தாள் மிரு. அவள் சிரிப்பதையே பாசத்துடன் பார்த்திருந்தான் மார்க்கஸ்.

இரண்டு நாட்கள் இப்படியே போனது. மருந்துகளினாலேயே ரதிக்கு உடல் நிலை நல்ல முன்னேற்றம் காண்பதால் சர்ஜரி தேவையில்லை என சொல்லி விட்டார்கள். எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்குப் போய் விடலாம் என சொல்லி இருந்தார் டாக்டர். தினம் மருத்துவமனை நாற்காலியில் அமர்ந்து, கட்டிலில் தலையை மட்டும் வைத்து குனிந்து தூங்குவதால் மிருவுக்கு தலைவலியாக இருந்தது. கண்கள் வேறு சிவந்துப் போய் கிடந்தன.

“இன்னிக்கு நைட் நீ போய் வீட்டுல படுத்துக்கக்கா! நான் இங்க இருக்கேன். பார்க்கவே பேய் மாதிரி இருக்க நீ” என்றான் கணே. மறுத்துப் பேசாமல் குருவின் வீட்டுக்குக் கிளம்பினால் மிரு. கார் ஓட்டும் போதெல்லாம் ஒரே யோசனையாகவே இருந்தாள்.

வீட்டைத் திறந்து உள்ளே வந்த மிருவை ஆச்சரியமாகப் பார்த்தான் குரு.

“என்னாச்சு மிரு? நீ வந்துருக்க! சாப்பிட்டியா?” என கேட்டான்.

“சாப்பிட்டேன் பாஸ்! ரொம்ப டயர்டா இருக்கு, அதான் வந்துட்டேன்” என்றவள் அதற்கு மேல் பேசாமல் ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள். குளித்து டீசர்ட், லாங் பேண்டுடன் வெளியே வந்தவள், குருவைத் தேடிப் போனாள். அவன் ஹாலில் அமர்ந்து ஏதோ ஆங்கிலப் படம் பார்த்தப்படி அமர்ந்திருந்தான். அங்கே போனவன், குருவின் அருகில் நெருங்கி அமர்ந்தாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அவள் தோளில் தன் கையைப் போட்டுக் கொண்டான்.

“என்னம்மா?”

“ஒன்னும் இல்ல பாஸ்”

“முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு! மறுபடி காய்ச்சம் வர மாதிரி இருக்கா?” என கேட்டவன் அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவள் நிமிர்ந்து அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தாள்.

“என்ன மிருது?”

ஒன்றும் இல்லையென தலையை இடம் வலம் ஆட்டியவள்,

“உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் பாஸ்!”

“என் கூடத்தானே இருக்க! இனிமே இருக்கவும் போற! சோ மிஸ் பண்ண வேண்டிய அவசியம் எல்லாம்” எல்லை என அவன் சொல்ல வருவதற்குள் எக்கி அவன் உதட்டில் தன் உதட்டைப் பொருத்தினாள் மிரு.

ஆச்சரியத்தில் கண்கள் விரிய, தன்னை முத்தமிடுபவளைப் பார்த்திருந்தான் குரு. எப்படி முத்தமிடுவது என கூட தெரியாமல் அவள் சொதப்ப, புன்னகையுடன் அவள் செயலை தனதாக்கிக் கொண்டான் குரு. இப்பொழுது அதிர்வது அவளின் முறையானது.

மிருவின் கன்னத்தில் இரு கைகளைஉம் வைத்திருந்தவன், நாளை உலகம் இல்லையென்பது போல ஆசையாக, ஆனந்தமாக, அன்பாக, அருமையாக, அடக்கி வைத்திருந்த காதலையெல்லாம் காட்டும் விதமாக முத்தமிட்டே மிருவைக் கொன்றான். கண்கள் மெல்ல கலங்க, அவனின் ஆக்ரோஷமான இதழ் ஒற்றலை அப்படியே அனுமதித்தாள் மிரு. எல்லாம் கொஞ்ச நேரம் தான். வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க, குருவை மெல்ல விடுவித்தாள் மிரு.

“யாரோ வந்திருக்காங்க பாஸ்”

“விடு மிரு, மணி அடிச்சுப் பார்த்துட்டுப் போயிருவாங்க”

“இல்ல நான் போய் பார்க்கறேன்!” என்றவள் மீண்டும் அவனை முத்தமிட்டு விட்டே எழுந்துப் போனாள்.

கதவைத் திறந்தவள், அதிர்ச்சியாக நின்றாள்.

உள்ளே நுழைந்த அந்த உருவம், மிருவை ஓங்கி அறைந்திருந்தது.

(தவிப்பார்கள்)

ENE–EPI 35

அத்தியாயம் 35

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமாதடுமாற்றமா..
என் நெஞ்சிலேபனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

 

“போடா” அழுகையினூடே கத்தினாள். உள்ளே என்னவோ உடையும் சத்தம் கேட்டது.

“தானு, என்ன நடக்குது உள்ள? கதவ திறம்மா. ப்ளீஸ். ஐ எம் சோரி. இனிமே இப்படி நடக்காது. கதவை திற தானு”

“தானு!!! ஓப்பன் தே டோர். நாம உட்கார்ந்து பேசலாம். நான் ப்ராமிஸ் பண்ணுறேன், இனி நீ சரின்னு சொல்லாம உன்னை டச் பண்ண மாட்டேன். திற தானு” உள்ளே என்ன செய்கிறாளோ என விபாவுக்கு பதைப்பாக இருந்தது.

“இப்ப நீ திறக்கலைன்னா, கதவை உடைச்சு நான் உள்ள வருவேன் தானும்மா” கெஞ்சல் செல்லாததால் மிரட்டலில் இறங்கினான்.

கதவு படீரேனெ திறந்தது.

“எங்கே உடைச்சு பாரு பார்ப்போம்” என இடுப்பில் கை வைத்தபடி நின்றாள் தானு. கண்களும், மூக்கு நுனியும் சிவந்து போய் , அவன் கொடுத்த முத்ததில் உதடுகள் சற்று வீங்கி அழகு பதுமையாய் நின்றிருந்தாள் அவள். விபா கஸ்டப்பட்டு பார்வையை அவள் முகத்திலிருந்து விலக்கினான்.

அந்த நேரத்திலும், நைட்டியை மாற்றி சுடிதார் அணிந்திருந்தாள். அதைப் பார்த்த விபாவுக்கு கன்னத்திலேயே அவள் அறைந்தது போல் இருந்தது.

‘அவ நம்பிக்கையை நான் குலைச்சிட்டேனே. என்னைப் பார்த்து பயந்து வேறு உடை மாற்றி கொண்டு வந்திருக்காளே’ அழுத்தமாக தலையை கோதியவன் ரூம் உள்ளே பார்வையை செலுத்தினான். ட்ரெசிங் டேபிள் கண்ணாடி உடைந்து சில்லு சில்லாக கீழே சிதறி கிடந்தது. அவன் பார்வையை தொடர்ந்து அவளும் அங்கே பார்த்தாள். தோளை அலட்சியமாக குலுக்கியவள், நடந்து சென்று ஹாலில் உள்ள சோபாவில் கையைக் கட்டி கொண்டு அமர்ந்து கொண்டள்.

தானு ஆத்திரத்தில் அலாரம் வைக்கும் கடிகாரத்தை விட்டு அடித்து கண்ணாடியை நொறுக்கி இருந்தாள்.

‘நம்ப தலைய உடைக்க வேண்டியது, நல்ல வேளை கண்ணாடிய உடச்சிருக்கா. ‘ பிறகு தான் கவனித்தான், அவள் நடந்து சென்ற கால் தடம் ரத்தமாக இருந்ததை. ஓடி சென்று அவள் முன் மண்டியிட்டவன், கால்களை தூக்கிப் பார்த்தான். சில கண்ணாடி சில்லுகள் காலை பதம் பார்த்திருந்தன.

“தானு!! உனக்கு என்ன சின்னதம்பி குஷ்புன்னு நினைப்பா? பார்த்து நடக்க தெரியாது?பாரு கால்ல ரத்தம் எப்படி வருது” என கடிந்து கொண்டான்.

எந்த ரியாக்சனும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் தானு. கிச்சனுக்கு விரைந்தவன், திரும்பி வரும் போது மெடிக்கல் கிட் கையில் இருந்தது. கீழே அமர்ந்து, அவளது காலை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். டுவீசர் மூலமாக கண்ணாடி சில்லுகளை அகற்றியவன், டெட்டோல் கொண்டு பாதத்தைத் துடைத்தான். பின்பு மருந்திட்டு பெரிய கட்டாக கட்டி விட்டான். பொறுமையாக அவளுக்கு வலித்துவிடுமோ என்பது போல் மென்மையாக காயத்திற்கு மருந்திட்டவனை, இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் தானு.

‘காதலில மட்டும் தான் அதிரடி ஆக்சன் எல்லாம் போல. மத்த விஷயத்துல நீ ரொம்ப மென்மையானவன்டா வேணு.’ மனதில் உள்ளதை வெளியில் காட்டாது கெத்தாக அமர்ந்திருந்தாள் அவள்.

“கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு தானு. இப்ப வரேன்” என மறுபடியும் கிச்சனுக்குள் சென்றான் விபா. துடைப்பம் கொண்டு கண்ணாடி துண்டுகளை கூட்டி அள்ளியவன், எங்கே சின்ன துகள்கள் அவளது காலை மீண்டும் குத்தி விடுமோ என வேகியும் கிளினர் கொண்டு அறையை சுத்தம் செய்தான். பின்பு ரத்தம் சொட்டி இருந்த இடங்களை துணி கொண்டு துடைத்தான்.

அவன் செய்வதை திரும்பி பார்க்காவிட்டாலும், கேட்ட சத்ததில் என்ன செய்கிறான் என்ன அறிந்து கொண்டாள் தானு. அன்று அவன் வீட்டில் கண்ட அத்தனை வேலைக்காரர்களும் அவள் கண் முன்னே வந்து போயினர். மனது கேட்காமல்,

“விடு, நாளைக்கு நான் செஞ்சிக்குறேன்” என குரல் கொடுத்தாள்.

“முடிஞ்சது தானு. கிவ் மீ பைவ் மினிட். கை கழுவிட்டு வரேன்.”

வரும் போது அவன் கையில் இரண்டு தட்டுக்களும், கரண்டிகளும் இருந்தது. காபி டேபிளில் வைத்திருந்த பையை திறந்தவன், உள்ளே இருந்த ப்ரைட் ரைசை இருவருக்கும் தட்டில் இட்டான். ஒரு தட்டை அவளிடம் நீட்டியவன்,

“சாப்பிடு. அங்க சரியா சாப்பிட்டுருக்க மாட்ட. அதான் குடுத்துட்டு, பேசிட்டு போலாம்னு வந்தேன். அதுக்குள்ள என்னனமோ நடந்துருச்சு. சோரி தானு”

“எனக்கு பசிக்கல.” தட்டை வாங்காமல் முகத்தைத் திருப்பி கொண்டாள் அவள்.

“வேலை முடிஞ்சு, உன் விஷயத்தை கேள்வி பட்டவுடனே அவசர அவசரமா வந்தேன். லன்ச் டைமுல சாப்பிட்டதுதான். உன் கூட சாப்பிடலாம்னு நினைச்சு தான் வாங்கிட்டு வந்தேன். சரி விடு. நான் கிளம்புறேன்.” என அவனது தட்டை மேசை மேல் வைத்துவிட்டு எழுந்தான் விபா.

சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள் தான்யா. மணி பின்னிரவு ஒன்று என காட்டியது.

‘இன்னும் சாப்பிடலையா? இப்படி பாவமா பேசி என்னை மடக்குறதே பொழப்பா போச்சு இவனுக்கு’

அவனை முறைத்தவள், தட்டை எடுத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். மீண்டும் அவள் எதிரில் உள்ள சோபாவில் உட்கார்ந்தவன், வேகமாக சாப்பிட ஆரம்பித்தான். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை கடிகாரம் முள் நகரும் சத்தம் மட்டும்தான் கேட்டது. சாப்பிட்ட தட்டுக்களை எடுத்து சென்றவன், கிச்சனுக்குள் பண்ட பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.

‘சொந்த வீடு மாதிரி எல்லாத்தையும் நோண்டுறது. நான் ஒருத்தி இங்க உட்கார்ந்து இருக்கனே, எந்த பொருளை எங்க வச்சிருக்கன்னு கேட்க வேண்டி தானே. உடம்பு முழுக்க கொழுப்பு’ மனதிற்குள்ளே திட்டிக் கொண்டாள்.

இரண்டு கப்புகளில் டீயுடன் திரும்பி வந்தான் விபா. ஒன்றை அவளிடம் நீட்டினான். பிகு பண்ணாமல் வாங்கி கொண்டாள் தான்யா.

டீயை குடித்தபடி அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான் விபா.

‘அமைதியாகவே இருக்கா. புயலுக்கு முன் வர அமைதியோ? வாயை திறந்து கத்திட்டாலும் பரவாயில்லை. கம்முன்னு இருந்து பீதியை கிளப்புறாளே’

டீயை குடித்து கப்பை மேசை மேல் வைத்தவள், அவன் கண்களை நேராக நோக்கி,

“சொல்லு” என்றாள்.

‘இப்படி மொட்டையா கேட்டா நான் என்னன்னு சொல்லுறது? எதை பத்தி கேக்குறா?’

“வந்து தானும்மா. நான் ப்ளான் பண்ணி முத்தம் குடுக்கலை. அதுவே ப்ளோல நடந்துருச்சு” என மென்று முழுங்கியவனை, முறைத்தவாறே நிறுத்துமாறு சைகை செய்தாள்.

“நான் அதைப் பத்தி கேக்கல.”

‘அப்பாடா! அதைப் பத்தி கேக்கலியாம். தப்பிச்சன்டா சாமி.’

“வேற எதைப் பத்திடா கேக்குற செல்லம்?”

“செல்லம் கில்லம்னு கூப்பிட்ட, எனக்கு இருக்கிற ஆத்திரத்துல தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க”

‘அவங்க வீட்டுல பாத்த அன்னிக்கு ராமராஜனை கோட் பண்ணா, இன்னிக்கு விஜயகாந்த கோட் பண்ணுறா. இவ டேஸ்டையே புரிஞ்சுக்க முடியலையே’

“கார்த்திக்கை என்ன பண்ண? அதுக்கு முன்னுக்கு கரேக்டா அந்த இடத்துக்கு எப்படி வந்தன்னு சொல்லு”

“அவனை ஒன்னும் பண்ணல தானும்மா”

அவள் எழுந்து உள்ளே செல்ல எத்தனிக்கவும்,

“சரி சரி, உட்காரு தானு. சொல்லுறேன்”

அது! என்பதுபோல் பார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்தாள்.

“அன்னிக்கு பீச்சுல நாம பேசுனப்பவே, எனக்கு ஒரு சந்தேகம் தான், எதையோ என் கிட்ட மறைக்கிறன்னு. நீயா சொல்லாம உன்னை நோண்டி கேட்க பிடிக்கலை. அதுக்கு அப்புறம் தான் தேக்கிய புடிச்சேன். ஒரு மிரட்டுலலே எல்லாத்தையும் சொல்லிட்டான். என்ன தைரியம் இருந்தா அந்த கார்த்திக் உன் கையை புடிச்சு தீயை அணைக்கனும் மாதிரி இருக்குன்னு டபுள் மீனிங்ல பேசி இருப்பான்? உன்னை பிடிச்ச கைய லேசா பிடிச்சு திருப்பி விட்டேன். படக்குன்னு சத்தம் கேட்டுச்சு. அவ்வளவுதான் தானும்மா. அதுக்கே அந்த கத்து கத்திட்டான். இவனுங்க வீரமெல்லாம் பொம்பளைங்க கிட்ட தான்.”

‘அடப்பாவி! கைய உடச்சிட்டு எவ்வளவு கூலா பேசுறான் பாரு. ஒரு பக்க கண்ணு அவுட்டுன்னு பார்த்தா, கையையும் அவுட்டா ஆக்கிட்டானே. பாவம்டா கார்த்திக் நீ’ என நினைத்தவள்,

“அதோட விட்டுருக்க மாட்டியே?” என கேட்டாள்.

ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்த விபா,

“அவனோட வருங்கால மாமனார் பிஸ்னஸ் மூலமா எனக்கு பழக்கம் தான். அவருக்கு போனை போட்டு, உங்க மாப்பிள்ளை வேற பொண்ணோட திருட்டுத்தனமா ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய ஏற்பாடு செஞ்சி கிட்டு இருக்கான்னு போட்டு குடுத்தேன். உன்னோட டீடெய்ல்ஸ் எல்லாத்தயும் கிழிச்சுட்டு அவன் பேரை மட்டும் போட்டோ புடிச்சு அனுப்பினேன். கொஞ்ச நேரத்துல அவன் அப்பனும், மாமனாரும் வந்துட்டாங்க. என் கண்ணு முன்னுக்கே துவச்சு காய போட்டுட்டாங்க. அவன் பேச வந்தப்பா, நான் வாயில ஒன்னு போட்டு, அப்பா நல்லத சொல்லுறாரு நீ எதிர்த்து பேசுறீயான்னு எடுத்து கொடுத்தேன். அவங்க அப்பா எனக்கு நன்றி சொல்லிட்டு அவரும் வாயிலே ரெண்டு போட்டாரு. இன்னிக்கே டிக்கேட் போட்டு அவனை நாடு கடத்தறாங்க. அதுக்கும் ஐயா தான் காரணம். இங்கயே இருந்த திரும்பவும் இப்படி செய்யுவான், சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிருங்கன்னு சொன்னேன். அவன் மாமனார், என் கைய புடிச்சுகிட்டு, உங்க உதவியா என் வாழ்நாளில மறக்கவே மாட்டேன்னு கண்ணுல தண்ணிய வச்சிகிட்டாரு” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான் விபா.

தானுவுக்கும் சிரிப்பு வந்தது. சிரிச்சா இவனுக்கு இன்னும் வச்சி போயிரும்னு நினைத்துக் கொண்டே சிரிப்பை அடக்கி கொண்டாள்.

“அதாவது, எனக்கு நண்பனா இருந்த தேக்கிய இப்ப எனக்கு துரோகியா மாத்திட்ட?”

‘ஏன்டி! இவ்வளவு விஷயம் சொல்லி இருக்கேன். இத மட்டும் கவனிச்சு கேக்குற பார்த்தியா?’

“முதல்ல சொல்ல மாட்டேன்னு தான் அடம் புடிச்சான். அவன் பேசாம இருக்குற ஒவ்வொரு நொடியும் உனக்கு தான் ஆபத்துன்னு ஒரு பிட்ட போட்டேன். பய புள்ள அப்படியே கக்கிட்டான்”

சுற்றும் முற்றும் பார்த்தவள், காபி டேபளில் இருந்த டீவி ரிமோட் கோண்ட்ரோலை எடுத்து அவனை நோக்கி விட்டு அடித்தாள். அழகாக கேட்ச் பிடித்தவன்,

“தானும்மா! நோ வயலன்ஸ். மீ பாவம். சரி இப்ப சொல்லு, இந்த மொக்க பிளானை போட்டு குடுத்தது யாரு? அந்த வைட் கொசுதானே?”

“எது மொக்க பிளான்? நீ வராட்டி இந்நேரம் எல்லாம் சுமூகமா முடிஞ்சிருக்கும். அதோட என் டேனிய வைட் கொசுன்னு சொல்லுறத நிறுத்து”

“அப்படிதான் சொல்லுவேன். அது என்ன என் டேனி? என் வேணுன்னு மட்டும் தான் இந்த அழகான வாயில இருந்து வரணும். முத்தம் கொடுத்து என் முத்திரையை உன் மேல பதிச்சுருக்கேன். என்னைத் தவிர வேற யாரையும் நீ சொந்தம் கொண்டாட கூடாது. புரியுதா தானும்மா?” அவனது குரலில் பொசெசிவ்னஸ் வந்திருந்தது.

அவனை உற்றுப்பார்த்தவள்,

‘யாரு கிட்ட உன் திமிரை காட்டுற? இத்தனை நாளுல என்னைப் பத்தி இன்னுமா உனக்கு தெரியல. இருடா வரேன்’

நாற்காலியில் இருந்து எழுந்தவள், நொண்டிக்கொண்டே அவன் முன் போய் நின்றாள்.

“கால் வலிக்குதா தானு?” என தன் முன்னே நின்றவளை நிமிர்ந்து பார்த்து கேட்டான் விபா.

“இல்ல, ரொம்ப சுகமா இருக்கு” என்றவள் அவன் எதிர்பாக்காத தருணத்தில் பட்டேன அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“ஏய்! என்னடி பண்ணுற? இப்படி ஏதாவது செய்யுறது. அதுக்கு நான் ரியாக்ட் பண்ணா, பெரிய சீனை போடுறது. இது நியாயமே இல்ல தானு”

“இனிமே இப்படி முத்தம் குடுப்பியா? குடுப்பியா?” என கேட்டுக்கொண்டே, கொத்தாக இரு கைகளாலும் அவன் முடியைப் பிடித்தவள் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டாள்.

“ஆ!!! விடுடி, வலிக்குது. முன்ன சொன்ன மாதிரி இனிமே உன் சம்மதம் இல்லாம எதையும் செய்ய மாட்டேன் தானு. காட் ப்ராமிஸ்” என அவளது இரு கரங்களையும் பிடித்துக் கொண்டான்.

“இனிமே இப்படி எசகு பிசகா நடந்து கிட்ட, ஒரு வருஷத்துக்கு உன் கூட பேச மாட்டேன். புரிஞ்சுதா?”

“நல்லாவே புரியுது”

“சரி, இப்ப என்னை தூக்கிட்டு போய் கட்டில்ல படுக்க வை. எனக்கு கால் வலிக்குது, நடக்க முடியலை. வேற எதாவது ட்ரிக்ஸ் பண்ண குடலை உறுவிருவேன்”

“சரி தூக்கிட்டு போறேன். இப்ப இறங்கி கீழ நில்லு.”

“தூக்கிட்டு போறப்ப கையில் மிதக்கும் கனவா நீன்னு பாட்டு பாடு. ஓகேவா?”

இறங்கி நின்றவளை தூக்கி கொண்டவன்,

“யப்பா! என்ன கணம். அப்புறம் எப்படிம்மா கையில் ஏந்தியும் கணக்கவில்லையேன்னு பாடுவேன். எனக்கு பொய் சொல்ல வராது.”

“பிச்சுருவேன் வேணு. பிப்டி கிலோ தான் இருக்கேன். ஒழுங்கு மரியாதையா பாடு” என மிரட்டினாள்.

பாடி கொண்டே தூக்கி சென்று அவளை கட்டிலில் கிடத்தினான். போர்வையை போர்த்தியவன், அவள் முகத்தைப் பார்த்து,

“நான் கிளம்பறேன் தானு. உள்ளுக்கு பட்டனை அமுக்கிட்டு கதவை சாத்திருறேன். யூ டேக் ரேஸ்ட்” என்றான்.

அவன் கையை பிடித்தவள்,

“மணி ரெண்டு ஆகுது. இதுக்கு மேல நீ கார் ஓட்ட வேணாம். ஹோல் சோபால படுத்துக்கோ. குளிக்கிறதுனா கிச்சன்ல இருக்குற பாத்ரூம் யூஸ்பண்ணிக்க. அங்க செல்ப்ல புதுசா பேஸ்ட், சோப், பிரஸ் எல்லாம் இருக்கு. துண்டு அதோ அந்த அலமாரில இருக்கு. நீ பாவிச்சதெல்லாத்தையும் நாளைக்கு ஒழுங்கா எடுத்துகிட்டு போயிரு.”

“நெஜமா தங்கலாமா தானு?” அவன் முகம் பல்ப் போட்டது போல் மலர்ந்தது.

“இப்ப எதுக்கு முகம் இப்படி ஒளி வீசுது? பின்னிருவேன். போய் படு. இதுதான் முதலும் கடைசியுமா நீ இங்க தங்குறது. இதுக்கு மேல இந்த சலுகையெல்லாம் எதிர்பார்க்காதே. நாளைக்கு காலையிலே நான் எழுந்திருக்கும் முன்னுக்கு ஓடி போயிரனும். புரிஞ்சுதா?” என மிரட்டினாள்.

‘தன் மேல் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் இவளை இனி எக்காரணம் கொண்டும் மனம் வருந்த வைக்க கூடாது என முடிவெடுத்தவன்,

“நல்லா புரிஞ்சது தானும்மா” என்றவாறே லைட்டை அணைக்க சென்றான்.

“லைட்டை அடைக்காதே வேணு. எனக்கு பயத்துல தூக்கம் வராது. அப்படியே விட்டுட்டு போ”

‘இது வேறயா? இனி நானும் லைட்டை போட்டு தூங்க பழகணும்.’ என எண்ணியவாறே குளிக்க சென்றான் விபா.

அங்கே ஆஸ்திரேலியாவில், விடிகாலை 4.30 மணி. போன் செய்தும் தான்யா எடுக்காமல் இருக்கவும் போனை வெறித்துப் பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான் டேனி. பின்பு சில நாட்களுக்கு முன் அவள் அனுப்பிய ஈமெயிலை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தான். ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் நெஞ்சில் பாரம் ஏறிக் கொண்டே போனது.

‘என் டான்யாவுக்காக முதன் முதலா மனசுல பூத்த காதலை விட்டுக் கொடுப்பேன் வேணு. ஆனா என் ப்ரன்ஷிப்பை மட்டும் விட்டு கொடுக்க மாட்டேன். நீ என் குடும்பத்தை நடு தெருவுல நிறுத்தினாலும், டான்யாவுக்கு ஒன்னுன்னா உன் கழுத்தைப் பிடிக்க முத ஆளா நான் அங்க இருப்பேன். வாட்ச் அவுட் மேன்’ என நினைத்துக் கொண்டே ஜன்னலில் தெரிந்த இருளை வெறித்தான் அவன்.

மறுநாள் காலையில் எழுந்து வந்த தானு விபா இன்னும் இருக்கிறானா என தேடினாள்.

‘நாம சொன்ன மாதிரியே கிளம்பிட்டான்’

டைனிங் டேபிளில் ப்ளாஸ்க்கும், உணவை மூடி வைக்கும் கூடையும் கண்ணில் பட்டது. கூடையை திறந்து பார்த்தவள், சந்தோஷ சிரிப்பொன்றை உதிர்த்தாள். ரொட்டி வாட்டி வைத்திருந்தான் விபா. ஸ்கரம்பள்ட் ஏக்கும் இருந்தது. தக்காளியை சிறிது சிறிதாக வெட்டி அழகாக அடுக்கி இருந்தான். சில்லி சாஸில் ஐ லவ் யூ தானும்மா என எழுதி வைத்திருந்தான் அந்த காதலன். ப்ளாஸ்கிலிருந்து டீயை கப்பில் ஊற்றி கொண்டு , ருசித்து காலை உணவை உண்டாள் தானு. போனை எடுத்து,

“சாப்பாடு கன்றாவியா இருக்கு. எனிவே தெங்க்ஸ்” என மேசேஜை அனுப்பியவள், சிரித்தபடியே குளிக்க சென்றாள்.

அவளது மேசேஜை படித்தவன், ஸ்மைலி ஒன்றை அனுப்பிவிட்டு,

‘அடி கத்ரீனா கைப்பே

நீதான் என் வைப்பே

என்னோட நீ இருந்தா

நல்லா இருக்கும் லைப்பே

மாட்டிக்கிச்சு மாட்டிகிச்சு

மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு’

என பாடியபடியே குளியலறையே நோக்கி போனான்.

error: Content is protected !!