akila kannan’s Kattangal 1
கட்டங்கள் – 1 நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதி. ஞாயிறு காலை 10 மணி. சூர்ய பகவான் அவர் வேலையை அழகாக செய்துகொண்டிருந்தார். சுள்ளென்று வெயில். வெயில் பெரியவர்களுக்கு மட்டும் தான் போலும்…. கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சில குழந்தைகள், சைக்கிள்ஓட்டிக் கொண்டிருந்த குழந்தைகள் எனஆரவாரமாக இருந்தது அந்த மிகப் பெரிய குடியிருப்பு. பல வீடுகள்… பல குடும்பங்கள்…. நிறைய குழந்தைகள்….. அந்த குடியிருப்பின் ஒரு பகுதியில்பல இளம் பெண்கள் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தனர். “எந்த பெண்ணை ப் பார்த்தாலும் அழகு தான். இறைவனின் படைப்பின் அழகே தனி தான். ” , என்று தங்களுக்குள்முணுமுணுத்தக் கொண்டு அங்கிருந்த திண்டில் அமர்ந்திருந்த கல்லூரி காளைகள். பெரியவர்கள் யாரும் அங்கு இல்லை.மத்திய உணவு தயார் செய்துகொண்டிருப்பதின் அறிகுறியாக ,ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு வாசனை. சாம்பார், அவியல், மோர்க்குழம்பு என பலவித மனமும், சிலர் வீட்டிலிருந்து பிரியாணிமனமும் வருகிறது. ட்ராக்ஸ் , பிங்க் டீ ஷர்ட் அணிந்துகொண்டு டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணிடம் , “நித்யாநோக்கு கல்யாணமாமே?” , என்றுவினவினார் மடிசார் அணிந்திருந்த மாமி. ” ஆமாம் மாமி.. அம்மாவும் அப்பாவும் அப்படிதான் சொல்றாங்க… ” , என்று விளையாட்டில்கவனமாக நித்யா பதில் கூற அவள் அடர்த்தியான நீளமான கூந்தல் அங்கும் இங்கும் அசைந்தது. […]